தாயுமான சுவாமிகள் அருளிய பாடல்கள்
';" aria-label="breadcrumb"> Home Tamil Literary நீதிநெறி நூல்கள் தாயுமான சுவாமிகள் அருளிய பாடல்கள் நீதிநெறி நூல்கள் Back தாயுமான சுவாமிகள் அருளிய பாடல்கள் தாயுமான சுவாமிகள் அருளிய பாடல்கள் 1. திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் [பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்] அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாந் தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந் தந்தெய்வம் எந்தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய் என்றைக்கு முள்ள தெதுஅது கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது கருத்திற் கிசைந்ததுவே கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங் கருதிஅஞ் சலிசெய்குவாம். 1. ஊரனந் தம்பெற்ற பேரனந் தஞ்சுற்றும் ...