மெய்யியல்


மெய்யியல்

மெய்யியல் இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த அறிவியலே மெய்யியல் எனப்படும். மெய்யியலானது இருப்பு, அறிவு, விழுமியம், காரணம், மனம், மொழி தொடர்பான பொதுவானதும், அடிப்படையானதுமான பிரச்சனைகள் பற்றிய படிப்பு என வரையறுக்கப்படுகிறது

இயற்கை விஞ்ஞானம் மிக வேகமாய் முன்னேறிச் செல்கிறது. எல்லாத் துறைகளிலும் அவ்வளவு ஆழ்ந்த புரட்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாகி வருகிறது. அது தத்துவவியல் (Philosophy) அனுமானங்களின்றி இருக்கலாமென நினைக்க முடியவே முடியாது.

மெய்யியல் அல்லது மெய்க்கோட்பாட்டு இயல் அல்லது தத்துவம் (philosophy) என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், எது அழகு, கடவுள் என்று ஏதும் உண்டா, என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆராயும் துறை ஆகும். தத்துவம் என்றால் உண்மை, உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள். மெய்யியல் துறையில் கருத்துக்கள் எவ்வாறு ஏற்கப்படுகின்றன என்பதும், காரணம், ஏரணம், விவாதம் (தருக்கம்) முதலியன யாவை என்றும் கூர்ந்து நோக்கி ஆராயப்படும்.

மெய் என்ற உடலில் உணர்வு என்ற உண்மையைப் புத்தியால் தேட அறிவு என்ற ஆற்றல் வெளிப்படும் பொழுது தத்துவம் என்ற உண்மை உணர்வை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்துக்களின் விளக்கதை உணர்வு பூர்வமாக அறியவைப்பது மெய்யறிவு. - (சுபஸ்ரீ ஸ்வாமிகள்)


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Vāḻkkaiyiṉ arttam