அந்திம காலம்
';" aria-label="breadcrumb"> Home Tamil Novel Love Stories அந்திம காலம் காதல் கதைகள் Back அந்திம காலம் ரெ.கார்த்திகேசு Notes on the Author: ரெ.கார்த்திகேசு ஓய்வு பெற்ற தொடர்புத் துறை (mass communication) பேராசிரியர். இந்நாவல் தவிர "வானத்து வேலிகள்"; "தேடியிருக்கும் தருணங்கள்"; "காதலினால் அல்ல" என்ற மூன்று நாவல்கள் மற்றும் "புதிய தொடக்கங்கள்"; "மனசுக்குள்"; "இன்னொரு தடவை" என்னும் சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். அந்திம காலம் (நாவல்) (ரெ.கார்த்திகேசு) அந்திம காலம் - 1 மழைத் தாரைகள் காரின் முன் கண்ணாடியில் வீசி அடித்துக் கொண்டிருந்தன. காரின் கூரையில் விழுந்த மழை நீர் கண்ணாடியில் ஆறாக வழிந்து கொண்டிருந்தது. இடை விடாத பொழிவு. அகலமான கண்ணாடியெங்கும் மழை வரைகின்ற ஓவியங்கள். காரின் வைப்பர் அந்த ஓவியங்களை இடை விடாது அழித்துக் கொண்டிருந்தது. டடக்...டடக்...டடக்... டடக். அழிக்க அழிக்கப் புதிது புதிதாக ஓவியங்கள்....