ஞானரதம்
எனது ஞானத் தேரை நோக்கி "இந்த க்ஷணமே என்னை, துக்கமில்லாத பூமி எங்கேனும் உளதாயின், அங்கு கொண்டு போ" என்று ஏவினேன். ஆகா! இந்த ரதத்தை வைத்துக்கொண்டிருந்தும், இத்தனை நாள் எனக்குக் கவலையும், மன உளைச்சலும் இல்லாதிருக்க வழி தெரியாமல் போய்விட்டதே! எத்தனை நாள் எனது மனம் தூண்டிற் புழுவைப் போலத்துடித்துக் கொண்டிருக்க, அதை நிவிருத்தி செய்வதற்கு யாதொரு உபாயமும் அறியால் பரிதபித்திருக்கின்றேன். அம்மம்மா! இந்த உலகத்துக் கவலைகளை நினைக்கும்போதே நெஞ்சம் பகீரென்கிறது...
கருத்துகள்
கருத்துரையிடுக