ஆதி மனிதன்
வரலாறு
Back
ஆதி மனிதன்
ந.சி. கந்தையா
ஆதி மனிதன்
1. ஆதி மனிதன்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
ஆதி மனிதன் (PRE - HISTORIC MAN)
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : ஆதி மனிதன்
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
ஆதி மனிதன் (PRE - HISTORIC MAN)
முன்னுரை
ஆதி மனிதன் என்னும் இச் சிறிய நூல் மிக மிகப் பழங்காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் எவ்வாறு கீழ் நிலையிலிருந்து படிப்படியே மேல் நிலையை அடைந்தார்கள் என்பவை போன்ற பழைய செய்திகளை சிறுவரும் எளிதில் கற்றறியும் வகையில் கூறுகின்றது. மனிதனுடைய வரலாறே மக்கள் தொடர்பான வரலாறுகள் எல்லாவற்றுக்கும் அடிப்படை. மனிதனைப் பற்றிய வரலாறுகளை ஆதி முதல் அறிந்து கொள்ளாது பிற வரலாறுகளைக் கற்பது தளமிடாது கட்டிடம் அமைக்கத் தொடங்குவது போன்றதாகும். இந் நூல் ஆங்கிலத்தில் எழுதப் பட்டுள்ள பெருநூல்கள் சிவற்றின் கருத்துக்களை சுருங்கக் கூறி விளங்க வைப்பது.
சென்னை
15.3.48
ந.சி. கந்தையா
ஆதிமனிதன்
தோற்றுவாய்
மனிதனுடைய வரலாறு மிக வியப்பானது. பிற வரலாறுகளைப் பயில்வதன்முன் நாம் மனிதனைப்பற்றிய வரலாற்றையே அறிதல் வேண்டும். மனித வரலாறே மற்றைய வரலாற்றுக் கல்விகளுக்குத் துணை புரிவது. அவனுடைய வடிவமும் இன்றைய மனிதனைவிட வேறுபட் டிருந்தது. இப் பூமியில் வாழத் தொடங்கிய பல்லாயிரம் ஆண்டுகளில் அவனுடைய வடிவம் சிறிது சிறிதாகப் பண்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது. அவனுடைய வாழ்க்கை முறைகளும் அவ்வாறே பண்பா டடைந்துள்ளன. இன்றைய மக்கட் கூட்டத்தினரின் முன்னோனான ஆதி மனிதனின் வியப்பான வரலாற்றை இச் சிறிய நூல் கூறுகின்றது.
மனிதத் தோற்றம்
இவ்வுலகில் மக்கள் எக்காலத்தில் தோன்றினார்கள் எனக் கூறமுடி யாது. இக்கால விஞ்ஞானிகள் தமது யூகையினால் மக்கள் இவ்வுலகில் தோன்றி வாழத் தொடங்கிய காலத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வுலகில் மக்கள் தோன்றி வாழத்தொடங்கிப் பத்து இலட்சம் அல்லது இருபது இலட்சம் ஆண்டுகள் ஆகலாம் என அவர்கள் கூறுகின்றனர். இவ்வுலகின் பல வேறு இடங்களில் மிக மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் மண்டை ஓடுகளும் எலும்புகளும் கண்டு எடுக்கப்பட்டன. அவைகளை வைத்து அம் மக்களின் வடிவங்களை விஞ்ஞானிகள் அமைத்துள்ளார்கள். கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகளுக்கும் எலும்புகளுக்கும் அருகில் கல்லாயுதங்களும், விலங்குகளின் எலும்புகளும் கிடந்தன. இவைகளை ஆதாரமாகக் கொண்டு ஆராய்ச்சியாளர் ஆதிகால மக்களின் வரலாறுகளை எழுதியுள்ளார்கள். மக்கள் நாகரிகமடைந்து எழுதப் பயின்று வரலாறுகளை எழுதிவைக்கத் தொடங்குவதற்கு முற்பட்ட மனித வரலாறு இவ்வகையி லேயே எழுதப்பட்டுள்ளது. மேல் நாட்டார் மனித வரலாற்றை ஓர் கலை யாகக்கொண்டு அதனை ஊக்கத்தோடு கற்கின்றனர்; பற்பல புதிய நூல்களை வெளியிடுகின்றனர். மனித வரலாறு மனிதனின் பகுத்தறிவைத் தூண்டி வளர்க்கத்தக்கது; தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கைகள், பழக்கங்கள், வழக்கங்கள், பழங்கதைகள் போன்ற பலவற்றைத் தக்கவாறு விளக்கத்தக்கது.
ஆதிமனிதன்
துர்போயிஸ் (Durbois) என்னும் டச்சுக்காரர் 1891இல் ஜாவாவிலே மிகப் பழங்கால மனிதனின் மண்டை ஓட்டையும் எலும்புகளையும் கண்டு எடுத்தார். இவை ஆறு வாரிக்கொண்டு வந்து குவித்த மணற்படைகளுள் கிடந்தன . இவை கிடந்த இடத்தின் அருகில் விலங்குகளின் எலும்புகளும் காணப்பட்டன. துர்போயிஸ் கண்டு எடுத்த மண்டை ஓட்டுக்கும் எலும்பு களுக்கும் உரிய மனிதனுக்கு விஞ்ஞானிகள் ஜாவா மனிதன் எனப் பெய ரிட்டுள்ளார்கள். இவனுடைய வடிவு குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப் பட்டது. ஆகவே நிமிர்ந்து நிற்கும் வாலில்லாக் குரங்கு மனிதன் எனவும் அவன் அறியப்படுவான். அம் மனிதனின் மூளை இன்றைய மனிதனின் மூளையில் மூன்றில் இரண்டு பங்கு அளவினது. மந்திரவாதி ஒருவன் ஜாவா மனிதன் எனப்பட்ட பழங்கால மனிதனுக்கும், வேறு கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளுக்குரிய பழங்கால மனிதனுக்கும் உயிர் கொடுத்து அவர்களை எழுப்பினான் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அம் மனிதர் தம்முடைய வரலாற்றைப் பின்வருமாறு கூறுவர்.
ஜHவா மனிதன் எழுந்து தனது வரலாற்றைச் சொல்லுகின்றான்:
இன்றைய மக்கள் என்னை வாலில்லாக் குரங்கு மனிதன் என்று அழைக்கிறார்கள் என நான் அறிவேன். இதை அன்றி அவர்களுக்கு என்னைப் பற்றி அதிகம் தெரியாது. எனது மயிர் மூடிய உடலையும், தொங்கும் தோள்களையும், பெரிய உறுப்புகளையும், முன்புறம் தள்ளிய தாடையையும் நோக்குகின்றவர்களுக்கு நான் வாலில்லாக் குரங்குபோல் தோன்றலாம் ; ஆனால் நான் மனிதனே.
குரங்குகள் தவழ்ந்து செல்லும். நடக்கத் தொடங்கியபின் நான் ஒரு போதும் நாலு கால்களில் சென்றதில்லை. இன்று காணப்படுவது போன்ற தல்லாத அழகிய ஓர் இடத்தில் நான் பிறந்தேன்; மரத்தில் கட்டப்பட்ட ஒரு கூட்டில் இருந்து வளர்ந்தேன்; பால்குடி மறந்தபின் தோற்றத்தில் கிட்டத் தட்ட எங்களைப் போன்ற ‘ஓராங் ஊத்தாங்’ என்னும் குரங்குக்குட்டி களோடு விளையாடினேன். நான் மனிதக் குரங்கு அல்லன் என்று நான் அறிவேன். மனிதக் குரங்குகள் செய்யும் ஒலிக் குறிகளின் பொருளை நான் அறிந்திருந்தேன். நானும் அவைகளைப் போலவே சத்தமிட்டேன். நான் சிறிது வளர்ந்தவனானேன். அப்பொழுது எனது தந்தை தனது கையினால் என்னைப் பலமுறை அடித்து “குடும்பத்தவர்களுக்கு உணவு தேடிவா” என்று கூறியதை நான் அறிந்துகொண்டேன். உண்ணக் கூடிய பழம், நத்தை, பூச்சிகள் போன்றவைகளை நான் தேடிக்கொண்டு வந்தேன். சில சமயங் களில் பறவைகளையும் பிடித்து அவைகளின் இறைச்சியையும் உண்டேன். குரங்குகளிடம் காணப்படாத சில குணங்கள் எங்களுக்கு உண்டு. நானும் பெற்றோரும் ஆகிய மூவரும் தேடிய உணவை நாம் இருக்கும் மரத்தடிக்குக் கொண்டு வந்தோம்; அதனைத் தந்தை சமமாகப் பிரித்துத் தந்தார். வாலில்லாக் குரங்குகளோ தமக்கு வேண்டிய உணவைத் தாமே தேடி உண்டன. காட்டிலே தாயோடு இருக்கும் குட்டியின் தந்தைக் குரங்கு மாத்திரம் தாய்க்கும் குட்டிக்கும் உணவு கொண்டு வந்தது.
எங்கள் இனத்தில் பத்து அல்லது பன்னி ரண்டு குடும்பங்கள் வரையில்தான் இருந்தன. நாங்கள் வாலில்லாக் குரங்குகளுள் திருமணம் செய்து கொள்ளவில்லை. எங்களுள் வயது வந்த ஓர் ஆண், பெண்ணைத் தேடும் பொருட்டு நூற்றுக்கணக்காண மைல்கள் திரிந்தான். என்னைப் போல் உடம்பு முழுவதும் மயிருள்ள ஒரு இளம் பெண் எனக்குக் கிடைத்தாள். நாங்கள் உறுமிச் சத்தமிட்டு ஒருவர் கன்னத்தோடு ஒருவர் கன்னத்தை உரைஞ்சினோம். உடனே இருவரும் திருமணம் செய்துகொள்வதென நிச்சயம் செய்துகொண்டோம். இருவரும் உயர்ந்த மரம் ஒன்றின் மீது கூடுகட்டத் தீர்மானித்தோம். அவ்வாறே கூடுகட்டி இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தோம். மரம் ஆற்றங்கரையில் நின்றது. அதன் கிளைகள் ஆற்றுக்கு மேலே தொங்கின.
ஒருநாள் பூமி வெடித்தது போலப் பெரிய சத்தம் கேட்டது. நான் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஆற்றில் ஐம்பதடி உயரமுள்ள ஒரு அலை எழுந்தது. அது என்னையும் எனது மனைவியையும் ஆற்றில் அடித்து விழுத்தி வாரிக்கொண்டுபோய் விட்டது. அவ்வலை எரிமலைக் குழப்பத் தினால் உண்டாயிற்று.
ஹெய்டில்பர்க் 2மனிதன்
ஜாவா மனிதன் தனது வரலாற்றைச் சொல்லி முடித்ததும் ஹெய்டில்பர்க் மனிதன் தனது வரலாற்றைக் கூறுகின்றான் :
எனக்கு ஒரு சகோதரனும் இரண்டு சகோதரிகளும் இருந்தார்கள். நாங்கள் நான்கு பேரும் ஒரு மரத்தில் கூடுகட்டி வாழ்ந்தோம். நீண்டு வளைந்த பற்களையுடைய கொடிய புலி இரை தேடுவதற்கு இரவில் உலாவித் திரிந்தது. நாங்கள் அக்கொடிய விலங்குக்குப் பயந்து வாழ்ந்தோம். அப் புலி இராக்காலத்தில் மரங்களை முன்னங்கால்களால் உதைத்து ஆட்டும். மரக்கிளைகளில் இருக்கும் குரங்குகள் பழங்களைப் போலப் பொத்தென்று கீழே விழும். எங்கள் கூடு மரத்தின் உச்சிக் கிளையில் இருந்தது. ஆகவே நாங்கள் கீழே விழாமல் பிழைத்தோம். ஒருநாட் காலையில் நாங்கள் கீழே இறங்கினோம். உடனே பெரிய புலி ஒன்று பக்கத்தேயிருந்த புதரிலிருந்து அம்பு போல் பாய்ந்தது. மறு நொடியில் அது எனது சகோதரனைச் சதை சதையாகக் கிழித்தது. அதைக் கண்டு நான் பதைபதைத்தேன்.
ஒருமுறை சிம்பன்சி என்னும் மனிதக் குரங்கின் மனைவியைப் புலி பிடித்தது. அப்போது அம் மனிதக் குரங்கு ஆத்திரங்கொண்டு பெரிய கல்லை எடுத்துப் புலியின் மண்டையில் அடித்தது. புலி அக் குரங்கைத் தனது முன்னங்கால்களால் வாரி எடுத்துக் கிழித்தெறிந்துவிட்டது. பின்பு அம் மனிதக் குரங்கின் சகோதரனைப் புலி சதை சதையாகக் கிழிப்பதைக் கண்டு எனது மனம் வேலை செய்து கொண்டிருந்தது. நான் உடனே எனது சகோதரிமாரோடு ஓடி மறைந்துவிட்டேன். எனது உயிர் போக நேர்ந் தாலும் அப் புலியைக் கொன்று விட வேண்டுமென நான் எண்ணினேன். தொலை வில் நின்றபடியே புலியைக் கொல்லலாம் என எனது மூளையில் தோன்றிற்று.
எனது தந்தை ஒரு தண் டாயுதத்தைச் செய்து வைத்திருந் தார். அதுமுதல் நாங்கள் பறவை களைக் கல்லால் எறிவதை நிறுத்தி விட்டோம். கற்கள் நிச்சயமாகப் பறவைகள் மீது படமாட்டா. பறவைகளுக்குக் கிட்டச் சென்று அவைகளை எறிவதும் கடினம், எறிவதில் தடிகள் பயனளிக்கத்தக்கன. ஆனால் அவை புலியைக் கொல்வதற்குப் பயன்படமாட்டா. பல நாட்களாக நான் தனியே யிருந்து இதைக் குறித்து ஆலோசனை செய்தேன். எனது சகோதரிமார் தினமும் வெளியே சென்று உணவு கொண்டுவந்தார்கள். பழங்கள், குருவி களின் முட்டைகள், தவளைகள், முயல், இலைகள் என்பவை அவர்கள் கொண்டுவரும் உணவு வகைகள். நான் உணவு தேடும் பொருட்டு ஒரு விரலைத்தானும் அசைக்கவில்லை. கடைசியில் ஒரு எண்ணம் தட்டிற்று; உடனே மகிழ்ச்சியினால் ஆரவாரஞ் செய்து எழுந்து கூத்தாடினேன். உடனே சிம்பன்சி என்னும் மனிதக்குரங்குகளும் ஓடிவந்து நான் ஆடுவது போலக் கூத்தாடின.
நான் தோலைப் பிளந்து அதனால் ஒரு கவண் செய்தேன். நான் ஆற்றங்கரைக்குச் சென்று அங்குக் கிடக்கும் அழுத்தமான கூழாங்கற் களைக் கவணில் வைத்துச் கழற்றி எறிந்து பழகினேன்; நாளடைவில் கல் இலக்கில் படும்படி எறியும் பழக்கம் உண்டாயிற்று. பின்பு, பறக்கும் பறவை களின் இறக்கைகள் மீது கல் படும்படி எறியப் பழக்கம் அடைந்தேன். ஒரு நாள் மத்தியான நேரம் ; வெய்யில் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்தது. நான் புதர்களைப் பார்த்துக் கற்களை எறிந்தேன். சடுதியாகப் புதர் அசைந்தது. உடனே புலியொன்று வெளியே வந்தது. அதன் வால் நிலத்தை அடித்துக் கொண்டிருந்தது. வெய்யில் படுதலால் அதன் கண்கள் வெளிச்சமாகத் தோன்றின. உடனே நான் இரண்டு கற்களை அக் கண்கள் மீது விரைவாக வீசி எறிந்தேன். ஒரு கல் அதன் மூளையின் ஆழத்தில் புதைந்து சென்றது. புலி உடனே விழுந்து இறந்து போயிற்று.
நான் இருந்த தீவிலே எனது இனத்தவர்கள் பலர் வாழ்ந்தார்கள். அவர்கள் கவண் செய்யும் வகையைத் தமக்கு அறிவிக்கும்படி என்னைக் கேட்டார்கள். அவர்கள் வரும்போது முயல்களையும் பிறஉணவுப் பொருள்களையும் கொண்டு வந்தார்கள். கவணின் துணையைக்கொண்டு நன்றாக வேட்டையாடலாம். நான் புலியைக் கொல்லும் போது சிம்பன்சிக் குரங்குகள் பார்த்துக் கொண்டிருந்தன. அதன்பின் அவை எனக்குக் கிட்ட வருவதில்லை.
உணவு சமித்து உடல் செழுமையுறுவதற்கு மனிதன் பலவகை உணவுகளை உட்கொள்ள வேண்டும். எறிதடி, கவண் என்பவைகளின் உதவியாலும் அவைகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களின் வாய்ப்பினாலும் எங்களுக்கு ஊன் உணவு எப்பொழுதும் கிடைத்தது. நான் முதலாவது உறை பனிக் காலத்துக்குப் பின் தோன்றி இரண்டாவது வெப்பக் காலத்தில் ஐரோப்பிய சமவெளிகளில் வாழ்ந்தேன். எல்லா வகை உணவு களையும் உண்ண அறியாமலிருந்தால் நாங்கள் விலங்குகள் சென்ற வழியே போயிருப்போம். நானும் எனது இனத்தவர்களும் மரங்களில் கூடுகட்டி வாழ்ந்தோம். விலங்குகள் மலைக் குகைகளில் வசிப்பதையும், குகைகள் மழைக்கும் வெய்யிலுக்கும் அவைகளுக்குப் பாதுகாப்பு அளிக் கின்றன என்பதையும் நான் கவனித்தேன். எனக்குக் கீழ்ப்பட்ட விலங்குகள் குகையில் சேமமாக வாழ நாங்கள் மரக்கிளைகளில் கூடுகட்டி வாழ வேண்டுமோ என்று எண்ணினேன். பெரிய மலைக் குகை ஒன்றுக்குக் சென் றேன். அங்கு கழுதைப்புலி ஒன்று தனது குடும்பத்தோடு வாழ்ந்து கொண் டிருந்தது. தந்தை, தாய், குட்டிகள் என்னும் அப் புலிக் குடும்பத்தை நான் அக் குகையினின்றும் துரத்தினேன். அவை பற்களைக் காட்டிக் கொண்டு வெளியேறின. இதற்குப் பிறகு நாங்களும் எங்களினத்தவர்களும் மரத்திற் கூடிகட்டி ஒருபோதும் வாழவில்லை; குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்தோம்.
நிண்டேர்தல்1 மனிதன்
நிண்டேர்தல் மனிதன் இப்பொழுது எழுந்து நின்று தனது வரலாற்றைச் சொல்லு கிறான்:
ஹெய்டில்பர்க் மனிதனுக்கும் எனக்கு மிடையில் இரண்டு இலட்சம் ஆண்டுகள் கழிந்தன. இக்காலத்தில் உறைபனி மூன்று முறை மனிதரையும் விலங்குகளையும் தனக்கு முன்னால் துரத்திக் கொண்டு பூமியைச் சுற்றிவந்தது. நான் நாலாவது குளிர்காலத்தில் வாழ்ந்தேன். எனக்கு முன்னமே நமது இனத்தவர் முன்னேற்ற வழிகளில் செல்ல ஆரம்பத் திருந்தார்கள். மனித இறைச்சியை உண்ணும் 2மக்களும் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு நாடி(chin) எலும்பு இருக்கவில்லை. ஆகவே அவர்கள் அதிகம் பேசமாட்டாதவர்களா யிருந்தனர். அவர்கள் தமது கைகளால் காட்டும் சைகைகளோடு இருபது ஒலிக் குறிகளையும் பேச்சாகப் பயன் படுத்தினர்.
மனித இறைச்சியை உண்ணும் குணம் பசிக்கொடுமையால் உண்டாக வில்லை. எலும்புகளை உடைக்கும்போது அவைகளினுள் உள்ள ஊன் மிகச் சுவையுடையதாயிருந்தது. சுவை காரணமாக மனித எலும்பையும் உடைத்து ஊனை உண்ட மக்கள் மனித இறைச்சியையும் உண்ணத் தொடங்கினார்கள். இன்றும் தென் கடல் தீவுகளில் வாழும் மக்கள் நீளப்பன்றியைச் சிறந்த உணவாகக் கொள்கிறார்கள். நீளப்பன்றி என்பது மனிதனைக் குறிக்கும். வீரமுள்ளவனைக் கொன்று தின்பதால் அவனுடைய வீரம் உண்பவனைச் சேர்கின்றதென்னும் நம்பிக்கையும் இருந்து வந்தது.
எனக்கு முன்பு மக்கள் நெருப்பைப் பற்றி அறிந்திருக்கவில்லை. நாங்கள் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் நடுங்கிக்கொண்டிருந்து உணவைப் பச்சையாகப் புசித்தோம். எங்களை ஓநாய்களிடமிருந்தும் புலி களிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள எங்களிடம் மிகக் கீழ்த்தரமான ஆயுதங்கள் மாத்திர மிருந்தன. நாட்கள் கழிந்தன. எங்களின் உடல்கள் வயிரமடைந்தன. இளைஞர், இருபது பேர் அல்லது முப்பது பேர் சேர்ந்து கூட்டங்களாகத் திரிந்தார்கள். வயது முதிர்ந்த நாங்கள் அவர்களோடு செல்ல முடியாமலிருந்தது. தம்மைப் பின் தொடர்ந்து செல்லமுடியாதவர்களை வலி யுள்ள ஒருவன் தனது தண்டாயுதத்தால் மண்டையிலடித்துக் கொன்றான். நெருப்புக் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது முன்னேற்றம் விரைந்து சென்றது.
ஒருநாள், குகைக்கு வெளியே இரவு முழுதும் புயல் அடித்தது. மின்னல் இடைவிடாமல் நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்தது. காலையில் காட்டுமரங்கள் புகைந்து கொண்டிருந்தன. எரிந்து சிந்திக் கிடக்கும் சாம்பலில் நெருப்பில் வெந்து கிடக்கும் விலங்குகளையும் பறவைகளையும் பார்த்தேன். அவைகளுள் ஒன்றை எடுத்துக் கரியைத் துடைத்துவிட்டுப் பல்லாற் கடித்துப் பார்த்தேன். இவ்வகை உருசியான உணவை நான் முன் ஒருபோதும் உண்டதில்லை. நெருப்புத் தணலைக் கல் ஒன்றின்மீது வைத்து அதனை விலங்கின் குடல் ஒன்றால் தூக்கிக்கொண்டு எனது குகைக்குச் சென்றேன். நான் எனது மனைவியர் பலருள் ஒருத்தியைச் சுள்ளிகள் பொறுக்கி வரும்படி சொன்னேன்; சுள்ளிகள் மீது தணலை வைத்து நெருப்பை மூட்டி எரித்தேன்.
என்னினத்தவர்கள் என்னிடமிருந்து நெருப்பைப் பெற்றுச் சென் றார்கள். நெருப்பு இராப்பகல் எரியும்படி விறகிட்டு எரிக்கப்பட்டது. நெருப்பு அவிந்துபோகுமாயின் மறுபடி மின்னலும் புயலும் உண்டாகும் காலத்தைப் பார்த்திருக்க வேண்டும். நெருப்பு இல்லாவிடில் குளிர் காயவும், சமைக்கவும் முடியாது. குகையிலுள்ள பெண்களுக்கும் வளர்ந்த பிள்ளைகளுக்கும் இப்பொழுது புதுக் கடமை ஒன்று உண்டாயிற்று. அக் கடமை விறகுகளை இட்டு நெருப்பை அணைந்து போகாதபடி பார்த்துக் கொள்வதாகும்.
நெருப்பு எப்பொழுதாவது அணைந்து விடுமோ என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். ஒருமுறை நாங்கள் வேட்டையாடச் சென் றோம். இன்னொரு வேட்டையாடும் கூட்டத் தினர் எங்களைச் சந்தித்தார்கள். இரு கூட்டத் தாரும் எதிர்த்துக் கடுமையாகச் சண்டை செய்தோம். எங்களை எதிர்த்தவர்கள் எங்களினும் பலராயிருந்தனர். அவர்கள் எங்களைத் துரத்தி விட்டு எங்கள் நெருப்பைப் பிடித்துக் கொண்டார்கள். நாங்கள் ஓடிச் சென்று தங்கிய குகைகளில் நெருப்பு இல்லை; ஆகவே நாம் குளிரால் வருந்திக் கொண்டிருந்தோம். உணவைச் சமைக்க முடியாமலும் துயரப்பட்டோம். எனக்குப் புதல்வர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் சோம்பேறியும் பலங் குறைந்தவனுமாயிருந்தான். அவன் வேண்டும்போது நெருப்பை உண்டாக்கக் கண்டுபிடித்தான். அவன் தீத்தட்டிக்கல் ஆயுதத் தால் வேலை செய்வதில் கெட்டிக்காரன். அவன் முரடான கல்லாயுதத்தால் மரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது மரம் சூடேறுவதை அவன் கண்டான். அவன் பின்பு ஒருநாள் இரண்டு மரத்துண்டுகளை எடுத்து நீண்ட நேரம் உரைஞ்சினான். சடுதியில் புகை யுண்டாயிற்று. பின்பு மரத்தின் துளையில் நெருப்புத் தோன்றிற்று. அவன் உடனே பெருங்கூச்சசலிட்டான். நான் ஓடிச் சென்று என்ன நடந்தது என்று அறிந்தேன். இதன் பின்பு நாங்கள் ஒரு போதும் எங்களோடு நெருப்பைக்கொண்டு திரியவில்லை. நெருப்பைச் சுற்றிச் சிறு குடிசைகள் எழுந்தன. நாங்கள் நெருப்பின் உதவியால் ஆயுதங் களை நன்றாகக் கூராக்கவும் வயிரப்படுத்தவும் அறிந்தோம். நெருப்பைக் கண்டுபிடித்தபின் குடும்ப உணர்ச்சியும் நெருங்கி வளர்ந்தது.
நெருப்பு எங்களையும் விலங்குகளையும் பிரித்து வைத்தது. குளிர் மிகுந்த இராக் காலத்தில் சிம்பன்சி என்னும் மனிதக் குரங்குகள் நமது குகைமுன் எரியும் நெருப்பண்டை வந்தன; தமது கைகளை நெருப்பில் காய்ச்சிக் குளிர் காய்ந்து மகிழ்ச்சியினால் சத்தமிட்டன. ஒரு மனிதக் குரங்குக் காவது நெருப்பின்மேல் விறகை இட்டு எரிக்கத் தெரியாது. நெருப்பு அணைந்தவுடன் அவை மறுபடியும் குளிரால் நடுங்கின.
வாழத் தகுதியுள்ளது நிலைபெறுதல், தகுதியற்றது மறைந்துபோதல் என்பதே அன்று முதல் இன்று வரையும் உள்ள இயற்கை விதி. இவ் விதிக்கமைய இன்னொரு மயிரதிகமில்லாதவரும், உயரமுடையவருமாகிய ஒரு சாதியினர் எங்களை வேட்டையாடி அழித்தார்கள். விரிவளர்ச்சி (evolution) விதி தகுதியுள்ளதற்கு அல்லது வலியதற்கு இடங்கொடு என்பதே. நாங்கள் இவ்விதிக்கு மாறாக நிற்க முடியவில்லை.
பெண்கள்
விலங்குகள் போன்ற மக்களிடையே பெண்களின் நிலை எவ்வா றிருந்ததது? பெண்கள் மிகவும் கவனிக்கப்படாதவர்களாகவும் அடிமை போன்றவர்களாகவு மிருந்தனர்; பெண் புனிதமானவள், இரக்கமுள்ளவள், மனிதனின் இனிய பாதியாயுள்ளவள் என்னும் கருத்துகள் தோன்ற வில்லை.
அக்காலத்தில் மனிதன் அரை விலங்காகவே இருந்தான். பெண்கள் அடர்ந்த மயிருள்ளவர்களாகவும், முகம் அதிக விறைப்பு ஏறாதவர்களாகவும், சாந்தமான தோற்ற முடையவர்களாகயும் இருந்தனர். அவர்களிற் பலர் வட்டமாகக் குந்தியிருப்பார்கள். அவர்களுட் சிலர் கல்லாயுதங்களால் கிழங்குகளைச் சுரண்டிச் சுத்தஞ் செய்வர்; சிலர் விதைகளைக் கல்லின்மேல் வைத்துக் கல்லால் அடித்து உடைத்துக் கொண்டிருப்பர். சிலர் மான் முதலிய விலங்குகளின் தோல்களை பல்லினால் சப்பி மிருதுவாக்கிக் கொண் டிருப்பர். சிலர் தமது குழந்தைகளுக்கும், பன்றி, நாய்க் குட்டிகளுக்கும் பால் கொடுத்துக் கொண்டிருப்பர். நெருப்பைச் சுற்றியிருந்து அவர்கள் பல வகைக் கதைகளைப் பேசுவார்கள்.
இருபதாம் நூற்றாண்டாகிய இன்று நன்கு வளர்க்கப்படும் பெண்கள், பெண்ணினத்தினர் ஆண்களை விலங்கு நிலையினின்றும் எப்படி மேலே வரச்செய்தார்கள் என்பதை அறியமாட்டார்கள். சமீப காலத்திலேயே பெண்கள் ஆண்களை ஒத்த உரிமைகளைப் பெற்று அவர்களோடு சம வாழ்க்கை நடத்துகின்றனர். இன்று ஆண்களைப் போலவே பெண்களும் வேலை செய்து கூலி பெறுகிறார்கள்; அவர்கள் தங்கள் உழைப்பைக் கொண்டே வாழ்கின்றனர். ஆடவனின் சம்பந்தமில்லாமலே பெண் சுதந்தர மாக வாழ்கின்றாள்.
குரோமக்நன் மனிதன்
நிண்டேர்தல் மனிதருக்குப் பின் குரோ மக்நன் மனிதர் தோன்றினார்கள். இவர்கள் துருவமான் மனிதர் (Reindeer-men) எனவும் அறியப்படுவர். இவர்கள் நிண்டேர்தல் மக்களை ஈவு இரக்கமின்றி வேட்டையாடிக் கொன்றனர். இவர்கள் ஆசிய நாடுகள் முதல் ஐரோப்பிய நாடுகள் வரையில் பரவி வாழ்ந்தார்கள். இவர்கள் நெட்டையான வர்களாயும் குறைந்த மயிர் அடர்த்தி உடையவர்களாயுமிருந்தனர். இவர்கள் சிறு குடிசைகளில் வாழ்ந்தனர். ஒரு பெரிய குடிசையைச் சுற்றிப் பல சிறிய குடிசைகள் இருந்தன. குரோமக்நன் மக்கள் குடும்பம் என்னும் சமூக நிலையை அடைந்தனர். இவர்களிலிருந்தே சமூக வாழ்க்கை தோன்றிற்று. குடும்ப நெருப்பைச் சுற்றிக் குடும்பம் வளர்கின்றது. குடும்பத்திலிருந்தே சமூகம் வளர்ந்ததென்று விரிவளர்ச்சிக் கொள்கை (Evolution Theory) கூறுகின்றது. மற்றவர்களின் மனத்தோடு பழகுவதால் இவர் மனம் வளர்ச்சியடைகின்றது. இவர்கள் பிரிந்து சென்று வெவ்வேறு கூட்டங்களாக வாழ்ந்தபோதும், தாம் எல்லோரும் ஒரு பெரிய கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கலந்து கொள்கிறார்கள்.
இவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று துருவ மான்களை வேட்டை யாடினர். துரத்தப்படும் விலங்குகள் எங்குச் சென்றனவோ அங்கெல்லாம் இவர்களும் சென்றார்கள். துருவ மான், காட்டுக் குதிரை, கஸ்தூரி மாடுகள் மேய்ச்சல் நிலங்களைத் தேடிச் சென்றபோது இவர்களும் அவைகளை வேட்டையாடும் பொருட்டு அவைகளைப் பின்தொடர்ந்து சென்றனர்.
வரலாறு ஆரம்பிப்பதன் முன் மத்திய ஐரோப்பிய புல்வெளிகளில் புல் முழங்கால் உயரமாயிருந்தது. அங்கு மேயும் துருவ மான்களும் காட்டுக் குதிரைகளும் வேட்டைக்காரரை மோப்பம் பிடித்தற்கு அடிக்கடி தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்த்தன. வேட்டைக்காரர் தவழ்ந்து அம்பு பாயக்கூடிய அண்மையில் சென்றனர். காட்டின் தொலைவில் ஒரு பக்கத்தில் பெண்கள் நின்றார்கள். மூன்று மான்களும் ஒரு குதிரையும் மேலே துள்ளிக் கீழே விழுந்தன. உடனே மற்றைய விலங்குகள் காட்டுக்கு ஊடாகப் பாய்ந்து வேகமா யோடி மறைந்தன. பெண்கள் ஓடி வந்தனர். வேட்டையாடப்பட்ட விலங்குகளைத் தோள்களிலிட்டுச் சுமந்துசென்றனர். இறைச்சி பொரிக்கவோ, சமைக்கவோ அல்லது அவிக்கவோ படவில்லை. அக்காலப் பெண்கள் பானை செய்ய அறிந்திருக்கவில்லை. இப் புல்வெளியில் வேட்டையாடு வோர் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள். பின்பு இன்னொரு கூட்டம் விலங்குகள் அவ்விடம் வந்தன. அங்கு மம்மத்து என்னும் யானை வந்து கொண்டிருக்கும் செய்தியை இளைஞன் ஒருவன் வந்து சொன்னான். பின்பு எல்லோரும் சேர்ந்து பொறிக் கிடங்கு ஒன்று தோண்டினார்கள். மம்மத்தின் முன்நின்று அதனை வேட்டையாட அவர்கள் அஞ்சினார்கள். மம்மத்து யானைக் கூட்டம் வந்தது. அக் கூட்டத்திலுள்ள யானையொன்று கிடங்கின் மேலே பரப்பியிருந்த தடிகள் மீது காலை வைத்தது. அது உடனே குழியில் விழுந்து அகப்பட்டுக் கொண்டது. அது எக்காளமிட்டுச் சத்தஞ் செய்தது. மற்ற யானைகள் அதனை மீட்பதற்குக் குழி அண்டை வந்தன. அவை களால் அதற்கு உதவி அளிக்க முடியவில்லை. அவைகள் அதனைக் குழி யிடத்திலேயே விட்டுச் சென்றன. வேட்டைக்காரர் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் குழியைச் சுற்றி நின்று கூத்தாடினார்கள். விலங்கு இறந்து போகும் வரையில் தமது ஈட்டிகளை அதன் மீது பாய்ச்சினார்கள். ஈட்டிகளை நக்கி இரத்தத்தைச் சுவைத்தார்கள்.
மக்கள் வேட்டை விலங்குகளோடு வெளியிலேயே வாழ்ந்தார்கள். அங்கும் இங்கும் குகைகள் இருந்தன. இவை நிலையானவும் உறுதியான வும் குடிசைகளாகப் பயன்பட்டன. வேட்டை விலங்குகள் கிடைப்பது அருமையான காலங்களில் வேட்டை யாடுவோர் அவைகளில் தங்கியிருந் தார்கள். ஆண்டில் ஒரு முறை அல்லது இரண்டு முறை எல்லோரும் ஓரிடத் தில் கூடினார்கள். இவ்வழக்கம் 40,000 ஆண்டுகளின் முன் தொடங்கியது. இது எங்கள் காலம் வரையில் இருந்து வருகின்றது.
நிண்டேர்தல் மனிதனிடத்தில் காணப்படாத பொருள்கள் குரோமக்நன் மனிதனிடத்தில் இருந்தன. குரோமக்நன் மனிதரிடத்தில் குகைகளில் வாழும் கரடி, வாள் போன்ற பல்லுடைய புலி களை எதிர்த்துப் போராடத்தக்க ஆயு தங்கள் இருந்தன. வில்லையும் அம்பை யும் அவர்கள் பயன்படுத்தினார்கள். இவர்கள் ஆடை உடுக்கவில்லை. தம்மை அழகுபடுத்தும் பொருட்டுத் தோல் அணிந்திருந்தார்கள். இவர்கள் புல்வெளிகளில் வாழ்ந்தார்கள். சிறிது சிறிதாக இவர்களின் எண் குறையத் தொடங்கிற்று.
பேச்சு
பேச்சு என்றால் என்ன? “மன நிறைவினால் வாய் பேசுகிறது” என விவிலிய வேதத்தில் ஓர் இடத்தில் கூறப்பட்டுள்ளது. முற்கால மனிதனுக்குத் தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளியிட வேண்டும் என எழுந்த தூண்டுதலால் அல்லது மன நிறைவால் அவனது நா பேசப் பழகிற்று. பேச்சு சடுதியில் தோன்றவில்லை. மற்றவைகளைப் போலவே, பேசும் பேச்சும் பேச்சு எனப்படும் நிலையை அடையப் பல நூற்றாண்டுகளாயின.
மனிதன் பேசுவதற்கு நெடுங்காலத்தின் முன்னரே விலங்களும் பறவைகளும் பேசின. எல்லா உயிர்களுக்கும் சொந்தமாகிய பேச்சு உண்டு. பழைய கால மம்மத்து என்னும் சடை யானை எக்காளஞ் செய்தும், தும்பிக் கையால் சைகை செய்தும் தனது கருத்துக்களை உணர்த்தும் பேச்சை அறிந்திருந்தது. நம்மைச் சுற்றி வாழும் உயிர்களைக் கூர்ந்து நோக்கினால் நாம் அவை பேசுவதைக் காணலாம். நாய் வாலினால் பேசுகின்றது. அது கோபம் முதல் அன்பு வரையிலுள்ள எல்லா வகையான உணர்ச்சிகளையும் உணர்த்த முடியும். எறும்புகள் தமது மீசைகளால் பேசுகின்றன. குருவிகள் பல வகையான ஒலிகள் செய்கின்றன; சில ஒலிகள் மகிழ்ச்சியையும், சில அபாயத்தையும், சில வெவ்வேறு கருத்துகளையும் தெரிவிக்கின்றன. குதிரைகளும் மாடுகளும் மூக்குகளை உரைஞ்சியும், அழுதும், கனைத்தும் பேசுகின்றன. அவை இருபத்திரண்டு வெவ்வேறு ஒலிக் குறிகளையும் சைகைகளையும் பயன்படுத்துகின்றன.
கோழிகளும் புறாக்களும் தனித்தனி பன்னிரண்டு வெவ்வேறு ஒலி களால் பேசுகின்றன. நாய்கள் வாலைக்கொண்டு கருத்துகளை உணர்த்துவ துடன் பதினைந்து வெவ்வேறு ஒலிகளால் பேசுகின்றன. மிகத் தாழ்ந்த காட்டு மக்கள் முந்நூற்றுக்குக் குறையாத சொற்களைப் பயன்படுத்து கின்றனர்.
கொரிலா, சிம்பன்சி என்னும் மேலினக் குரங்குகள் இருபது ஒலிக் குறிகளைப் பேசப் பயன்படுத்துகின்றன. அவை இவைகளோடு சைகை களையும் உபயோகிக்கின்றன. குரங்குகளுள் பாடக்கூடியது கிபன் ஒன்று தான். இவ்வாறு பாடும் குரலே பேசும் குரலாக மனிதனிடத்தில் மாறுபட்ட தென ஆராய்ச்சி அறிஞர் கருதுகின்றனர்.
பாட்டிலிருந்து பேச்சு வளர்ச்சியடைந்தது எனக் கூறுவது நியாய மற்றதாகத் தோன்றமாட்டாது. ஆரம்பத்தில் மனிதன் உரத்தும் தனித்தும் பாடுவது போன்று எழுப்பிய ஒலிகளே சொற்களாகத் துணிக்கப்பட்டுச் சொல் மூலங்களாயினவாகலாம். உடற்குறிகளும் சைகைகளும் ஒலி முறையான பேச்சுக்கு முற்பட்டவை.
பேசும் மொழி நீண்ட காலமாக வளர்ந்தது. அது மக்கட் குலம் அல்லது கூட்டத்தின் வாழ்க்கையிலிருந்து மிக மிக மெதுவாக வளர்ந்தது. பழைய மனிதன் கருத்துகளைச் சொற்களிலும் பார்க்கச் சைகைகளால் அறிவித்தமையின் பேசப்படும் மொழி மெதுவாக வளர்ந்தது. அவனுடைய வாழ்க்கைச் செயல்கள் குலம் அல்லது கூட்டத்துக்குரிய கூத்தாக ஆடப் பட்டது. வேட்டைக் கூத்தில், அவன் மொழியால் சொல்வதிலும் பார்க்க நடிப்பினால் தான் வேட்டையாடி விலங்குகளைக் கொன்றதை விளக்கி னான். கலியாணக் கூத்துகள், இழவுக் கூத்துகள், சமயக் கூத்துகள் எனப் பல வகைக் கூத்துகள் இருந்தன.
முன் உள்ள சொற்களோடு மேலும் மேலும் சொற்கள் சேர்க்கப் பட்டன. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருளையோ செயலையோ குறித்தது. மொழி, அறிவினால் அல்லது நினைக்கும் வகையினால் உண்டாவது. ஒரே இரத்தத்துக்குரிய சாதியினரின் மொழி ஒரே வகையா யிருப்பதற்குக் காரணம் அவர்கள் ஒரே வகையாக நினைத்து ஒரே வகை யாக எண்ணங்களை உணர்த்தினமையினாலாகும்.
இதிலிருந்து இலக்கணம் தோன்றுகின்றது. எழுத்துகளின் ஒலி, எண்ணங்களை ஒழுங்குபடுத்திக் கூறும் வகை, எண்ணங்களைக் குறிக்கும் சொற்களை வைக்கும் ஒழுங்கு, சொல்லின் வகைகளை ஒன்றோடு ஒன்று சேர்க்கும் வகை போல்வன பெரிய மொழிக் கூட்டங்களில் ஒரே வகையா யிருக்கக் காணலாம். இது பற்றியே ஆரிய மொழிகளின் இலக்கணம் ஒரு வகையாகவும், திராவிட மொழிகளின் இலக்கணம் மற்றொரு வகையாகவும், இவையல்லாத பிறமொழிகளின் இலக்கணம் வேறுவகையாகவும் காணப்படுகின்றன.
சைகைகளால் பேசும் பேச்சு முற்றுப் பெறாதது. சொற்களால் எவற்றையும் உணர்த்தலாம். உலகில் எல்லாம் எங்கிருந்தோ வருவதுபோல மொழிகளுக்கும் ஒரு வேர் வேண்டுமென்பது நியாயமானதே. அவை ஒரு மக்கட் குலம் அல்லது குழுவின் மொழியாகிய வேரினின்றே வளர்ந்திருக்க வேண்டும். எக் கூட்டத்தாரிடையே அது தொடங்கிப் பின் பிரிந்து பலவாறு சென்றதென எவராலும் கூறமுடியாது.
மாயமான பாஸ்க்குக் 1குலத்தினர் ஸ்பெயின் நாட்டில் காணப்படு கின்றனர். இவர்கள் காக்கேசிய மலைகளில் வாழ்ந்தார்கள் என்று கருதப் பட்டார்கள். இவர்கள் பழைய இந்திய மக்களுக்கு இனமானவர்கள் ஆகலாம். பழைய எகிப்தியரும் மற்றைய ஹமித்தியச் சாதியினரும் தமது போக்கான மொழிகளை அமைப்பதன்முன், இவர்களே புதிய கற்காலத்தின் ஆரம்பத்தில் மொழியைத் தோற்றுவித்தவர்களாகலாம். அவர்களின் மொழி அமெரிக்கப் பழங்குடி மக்களின் மொழிக்கு இனமுடையதாகலாம். குலத்தைப் போலவே மொழியின் அடையாளங்களும் பின்னிக் கிடக் கின்றன.
மனிதனுடைய எண்ணங்களின் நிறைவால் மொழி உண்டாயிற்று. பின்பு விரிவளர்ச்சிச் சட்டத்தின்படி (Law of Evolution) அது வளர்ச்சியடைந் தது. ஊர்வனவிலிருந்து குட்டிக்குப் பாலூட்டி வளர்க்கும் விலங்குகள் தோன்றியமை போல சாதாரண ஒலிக்குறிகளான பேச்சிலிருந்து ஒலிமுறை யான சொற்கள் தோன்றின. பின்பு மனிதன் நாலு ஐந்து குலங்களாகப் பிரிந்த போது மொழியும் அவ்வாறு பிரிந்தது. பின்பு ஒவ்வொரு குலத்தினரும் சிறு சிறு கூட்டத்தினராகப் பிரிந்தபோது மொழிகளும் அவ்வக் கூட்டத்துக்குரிய கிளைமொழிகளாகப் பிரிந்தன; பின்பு ஒவ்வொரு பேசும் மொழியும் மற்றவருக்குப் பயன்படாதபடியும் விளங்கிக்கொள்ள முடியாதபடியும் மாறுதலடைந்தன. சாதிகளுக்கிடையில் கலப்பு மணங்கள் உண்டாவது போல மொழிகளும் கலப்பு அடைகின்றன. பின்பு இருவகைப் பெற்றோரி லிருந்தும் புது மொழிகள் பிறக்கின்றன. சில விலங்கினங்கள் மக்களினங்கள் மறைந்து போதல் போல மொழிகள் மறைந்து விடவும் படுகின்றன.
இறந்துபோன மொழிகளின் வேர்கள் சில உயிர்மொழிகளில் காணப்படுகின்றன. கிரேக்க, உரோமன் மொழிகளின் மூலங்கள் இன்றைய பிரெஞ்சிய, உருமேனிய, இத்தாலிய மொழிகளில் காணப்படுகின்றன.
உயிரோடு உலவும் மொழிகளைப் பயில்வதால் இக்கால மனித னுக்குப் பல வாய்ப்புகள் உண்டு. அம் மொழிகள் வழங்கும் நாடுகளுக்குச் செல்லுமிடத்து அவனுக்கு நன்மைகள் உண்டாகின்றன. அம் மொழிகளை வழங்கும் அறிஞர் எழுதிய நூல்களைக் கற்று அறியவும் கூடும். இன் னொரு சாதியாரின் உள்ளம் எவ்வாறு செல்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். ஒருவன் எத்தனை மொழிகளை அறிகிறானோ அவன் அத்தனை அதிக அறிவைப் பெறுகின்றான்.
பழைய மொழிகளின் கலப்பு, இன்று வழங்கத் தகுதியுள்ள அழகிய மொழிகளாக மாறியுள்ளன. எண்ணங்கள் வளர வளர அவைகளை உணர்த்தும் புதிய சொற்களும் தோன்றுகின்றன.
எழுத்து
முற்கால மனிதன் எவ்வாறு எழுதினானென்று உங்களுக்குத் தெரியுமா? அவன் இக்கால முறையான எழுத்துகளை அறிந்திருக்கவில்லை. தான் எழுத விரும்பியவைகளைப் படமாக எழுதினான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கத்தியால் வெட்டினான் என்பதை எழுதிக்காட்ட விரும்பினால் அவன் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் வெட்டுவது போன்ற படத்தை எழுதிக் காட்டினான். விலங்குகள், பறவைகள், ஆறுகள், மலைகள் போன்றவைகளைக் குறிக்கவும் அவைகளின் வடிவங்கள் எழுதப்பட்டன. ஆதி மனிதன் இவ்வாறு எழுதிய படங்கள் நாளடைவில் சுருங்கிக் கோடுகள் கீறுகள் ஆயின. கீறுகளும் கோடுகளும் தனித்தனி எழுத்து ஒலிகளைக் குறி யாமல் ஒரு முழுச் சொல்லையே குறிப்பனவாயிருந்தன. பின்பு ஒரு முழுச் சொல்லையே குறிக்கும் அடையாளத்தின் ஒலி முறையான உச்சரிப்பைத் தனித்தனி ஒலிக்குறிகளால் எழுதக்கூடிய முறையில் எழுத்துகள் கண்டு பிடிக்கப்பட்டன. இன்று இவ் வுலகின் எல்லா மொழிகளில் வழங்கும் எழுத்து களும் இவ் வகையினவே. சீன தேச மக்கள் வழங்கும் எழுத்துகள் பழங்கால எழுத்துகள் போன்றவை. சீன மொழியில் ஒரு சொல்லைக் குறிக்க ஒரு எழுத்து வழங்குகின்றது . சீன மொழியில் எத்தனை சொற்கள் இருக்கின்றனவோ அத்தனை எழுத்துகள் உண்டு. இது நமக்கு வியப்பாகத் தோன்றுகின்றது.
புதிய கற்கால மக்கள்
குரோமக்நன் மக்கள் மறைந்து ஐயாயிரம் ஆண்டுகளின் பின் புதிய கற்கால மக்கள் தோன்றினார்கள். மக்கள் எழுத்துகளைப்பற்றி அறியுமுன் வரலாறு தோன்றவில்லை. கற்காலமக்கள் பயன்படுத்திய பொருள்கள் எல்லாவற்றையும் ஓரிடத்தில் வைத்து நோக்கும்போது அவர்களின் வரலாறு புலப்படுகின்றது. இம் மக்கள் இருள் அல்லது கபில நிறமுடைய வர்களாயிருந்தனர். இவர்கள் உலகம் முழுமையிலும் சென்று பரந்து தங்கி வாழ்ந்தார்கள். வெப்பநிலை, உணவு, பழக்க வழக்கங்கள், சமய வழக்கம் போன்றவை காலின் வளர்ச்சி, தாடை எலும்புகளின் நீளம், உடலின் உயரம் அல்லது குறுக்கம், மண்டையின் பருமை, பாதத்தின் அளவு போன்ற மாற்றங் களை உண்டுபண்ணின. வாழத் தகுதியுடையவர்கள் நிலை பெற்றார்கள்; தகுதியற்றவர் மறைந்து போயினர். தகுதியுடைய ஒரு சாதியார் தோன்றும் போது தகுதியற்றவர் மறைந்து போகின்றனர்.
வரலாறு தொடங்கும்போது மங்கிய நிறமுள்ள மக்கள் வட ஆப்பிரிக்கா மத்திய தரைக் கடல் ஓரங்கள் முதல் இந்தியாவரையில் வாழ்ந்தார்கள். புதிய கற்கால மக்கள் குடிசை கட்டி வாழ்ந்தார்கள். மரங்கள் தோப்புகள் போல் வளர்ந்திருந்தன. சோலைக்கு வெளிப் புறத்தில் நாற்புறத்தும் பயிர் செய்யும் நிலங்கள் இருந்தன. பெண்கள் உணவு தேடும் பொருட்டுக் காட்டுக்குள் வெகுதூரம் சென்று அலைய வில்லை. அவர்கள் தானியத்தை நிலத்தில் விதைத்தார்கள். ஆண்டுதோறும் அவை விளைவு அளித்தன. அவர்களின் கணவர் ஓரிடத்தில் தங்கியிருந்தார்கள். வீடு இன்றி அலைந்து திரிந்த அவர்கள் இப்பொழுது வீட்டில் இருந்தார்கள். வீடுகளில் நாய்கள் நின்று குரைத்தன. நாய் அவர்களுக்கு உதவியாக விருந்தது. மாலை நேரத்தில் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலத்தில் நின்றும் ஓட்டிக்கொண்டு வர அது உதவி புரிந்தது. காட்டில் வாழும் துருவ மான், பன்றி, குதிரை, மாடு, ஆடுகளை அவர்கள் பிடித்துப் பழக்கி அவை உணவின் பொருட்டுத் தம்மிடம் தங்கி வாழும்படி செய்தார்கள். அவர்கள் வேட்டை நாய்களுடன் வேட்டையாடவும் சென்றார்கள். இப்பொழுது வேட்டையாடாமலே உணவு கிடைத்தது. ஆகவே அவர்கள் வேட்டை யாடுவதைப் பொழுதுபோக்காக மாத்திரம் கொண்டனர்.
கொல்லன் செம்பை நெருப்பில் காய்ச்சி அடித்து வேட்டையாடப் பயன்படும் ஈட்டிகளைச் செய்தான். புதிய கற்கால மனிதனே முதன் முதல் செம்பில் வேலை செய்தான். பின்பு பொன்னிலும், அதன்பின் வெண்கலத் திலும் வேலை செய்தான். நாள் ஏற ஏற வேலை திறமையடைந்தது. வயலில் நிற்பவள் பெண்ணே. அவள் மண்வெட்டியோடு நின்று வயலில் வேலை செய்தாள். முதல் முதல் மண்வெட்டியினால் வேலை செய்தவள் அவளே யாவள். நிலத்தை மண்வெட்டியால் கொத்திப் பயிரிடுவது பெண்ணுக்குரிய வேலையாகக் கொள்ளப்பட்டது. பெண் மண்வெட்டியினால் வேலை செய்யும் வலு உடையவளாயிருந்தாள். ஆடவன் அவள் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மாடுகள் பழக்கி வளர்க்கப்பட்டபோது மாற்ற முண்டாயிற்று. பெண்கள் மண்வெட்டியால் கொத்திப் பயிரிட்ட நிலத்தில் மாடுகள் கலப்பையை இழுத்துச் சென்றன. புதிய கற்கால மனிதன் கலப்பையைச் செய்ய அறிந்து, மாடுகள் அதனை இழுத்து உழும்படி பழக்கி னான். பெண்கள் கலப்பையில் மாட்டைப் பூட்டி உழும் வலு இல்லாதிருந் தனர். ஆகவே உழுவது ஆடவனின் வேலையாக மாறிற்று. மனிதன் உழ அறிந்ததும் பெண்ணின் நிலை உயரத் தொடங்கிற்று.
அங்குமிங்குமாகக் கிடந்த குடிசைகளிலிருந்து ஆடவர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் மட்பாண்டங்களைச் செய்தனர். அவர்கள் பானை சட்டி செய்யும் சக்கரத்தை யறிந்திருந்தனர். சிலர் கல்லாயுதங்களால் பானை சட்டிகள் மீது ஓவியங்களை வெட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் இவர்களின் முன்னோர் பயன்படுத்தியவை களைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவை; அழுத்தமும் அழகும் வாய்ந்தவை.
கிராமத்திலிருந்து சிறு தொலைவில் இறந்தவர்களைப் புதைக்கும் திடர்கள் காணப்பட்டன. அவர்களின் தலைவன் பெரிய குடிசையில் வாழ்ந் தான். அவன் அடுத்து வரும் ஞாயிற்றுக் கடவுளின் விழாவைக் குறித்துத் சிந்தித்துக் கொண்டிருந்தான். ஞாயிற்றுக் கடவுளுக்குப் பையன்களைப் பலியிடுவது வழக்கம். ஞாயிற்றுக் கடவுள் மனித பலியை விரும்புகின்றா ரென நினைப்பது மூடத்தனம் என அவன் உணர்ந்தான். அடுத்த நாள் அவன் சூழ உள்ளவர்களை அழைத்து இரவில் ஞாயிற்றுக் கடவுள் தோன்றித் தனக்கு மனிதபலி வேண்டாமென்று மூன்றுமுறை கூறியதாகச் சொன்னான். பின்பு மனித பலிகள் நின்று போயின.
புதிய கற்காலத் தலைவனின் மகள் கழுத்தில் ஓடுகள் கோத்த மாலையை அணிந்திருந்தாள். முற்காலப் பெண்களைவிட இவள் வாழ்க்கை பத்திர மாயிருந்தது. முற்கால இளம் பெண்களை வாலிபர் மண்டையில் அடித்து விழுத்தி மயிரைப் பிடித்து இழுத்துக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. இப்பொழுது அவ்வாறு நிகழவில்லை. அவர்கள் பெண்ணின் தந்தையிடம் வந்து அவளை விலை கொடுத்து வாங்கிச் சென்றார்கள். தந்தை, தனது பெண்ணைத் தான் எவ்வளவு மேலாக மதிக்கிறான் எனக் காட்டுவதற்கும், அதிகப் பொருளைப் பெறும் பொருட்டும் அதிக விலை கூறினான். அடுத்த கூட்டத்திலுள்ள ஒருவன் மற்று எவரும் இதுவரை கொடாத அளவு ஆடு மாடுகளைப் பெண்ணின் தந்தைக்கு அவளின் விலையாகக் கொடுத்தான். பெண் மிகவும் மனப் பூரிப்பு அடைந்தாள். கணவனின் வேறு இரண்டு அல்லது மூன்று மனைவியர்களோடு வாழவேண்டுமென்பதைப் பற்றி அவள் கவலை கொள்ளமாட்டாள். அவ்வாறு வாழ்தல் பொதுவான வழக்கம்; இது நேரான முறை எனக் கொள்ளப்பட்டது.
பலர் நீர்நிலைகளில் கிராமங்களைக் கட்டி வாழ்ந்தார்கள். சுவிட்சர் லாந்து, ஸ்காட்லாந்து முதலிய இடங்களில் நீர்நிலைகளில் மரத் தூண்களை இறுக்கி அவைமீது கட்டப்பட்ட பழைய கிராமங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இக் குடியிருப்புக்களிலிருந்து கரைவரையும் ஒடுங்கிய பாலம் இடப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடிசைக்கும் சொந்தமான படகொன்று மரத்தூணில் கட்டப்பட்டிருந்தது.
புதிய கற்கால மனிதனின் குடிசைகளில் பன்றிகளும் மக்களோடு இருந்து வளர்ந்தன. இப்பொழுது அவர்கள் ஆடையை அலங்காரத்தின் பொருட்டு அணியவில்லை. உடையின் பொருட்டே அணிந்தனர். கிறித்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளின் முன் கோழிகள் ஐரோப்பாவில் காணப்படவில்லை. பிற்பாடே கோழிகள் அந் நாடுகளிற் பெருகின. ஆடு மாடுகளின் பால் உணவாகக் கொள்ளப்பட்டது. மந்தைகளை வளர்ப்போர் அவைகளைக் கொல்லவில்லை. அவை கொடுக்கும் பால் அளவில் திருப்தி அடைந்திருந்தார்கள்.
குயவர் பானை சட்டிகள் செய்தார்கள். மக்கள் செம்பையும் தகரத்தை யும் கலந்து வெண்கலம் செய்ய அறிந்தார்கள். அக்காலத்தில் பொன், வெண்கலம், பளிங்கு முதலியவைகளால் செய்த ஏனங்கள் பயன்படுத்தப் பட்டன. மதுச் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் தேனைப் புளிக்கவிட்டு மதுவைச் செய்தார்கள். சிலர் கோதுமையிலிருந்து அதனைச் செய்தார்கள். பின்பு திராட்சைச் சாற்றிலிருந்து மதுச் செய்யும் முறை கண்டு பிடிக்கப்பட்டது. கம்பளியிலிருந்து நூல் முறுக்கலாமென மனிதன் அறிந் தான். அப்பொழுது நூல் நூற்கும் கதிர் கண்டுபிடிக்கப்பட்டது. பெண்கள் நூல் நூற்றார்கள். சணலுடை தோலுடைகளுக்குப் பதில் புதுவகையான உடைகள் பயன்படுத்தப்பட்டன. தாவரங்களிலிருந்து கிடைக்கும் சாயங்கள் உடைகளுக்கு ஊட்டப்பட்டன. கற்கோடாரிகளுக்குப் பதில் வெண்கலக் கோடாரிகள் பயன்படுத்தப்பட்டன. வெண்கல ஈட்டி வெண்கல ஆபரணங் களைத் தலைவர்களே தொடக்கத்தில் பயன்படுத்தினார்கள்.
பழைய மக்களின் ஓவியக்கலை
குகைகளில் வாழ்ந்த மக்கள் ஓவியக்கலையில் திறமையடைந் திருந்தார்கள். உண்பது, குடிப்பது, திருமணஞ் செய்வது என்பவைகளை ஒழிந்த சிலவற்றைக் குகைகளில் வாழ்ந்த மக்கள் கண்டுபிடித்திருந்தார்கள். அழகை வெளியிடும் விருப்பு உண்டாயிருந்தது. இதனாலேயே ஓவியக் கலை உலகில் தோன்றிற்று. தான் கண்ட அழகுகளை வெளியிடுவது மனிதனின் முதல் கடமையாக விருந்தது.
மனிதன் குகைகளில் வாழ்ந்த காலமே ஓவியக் கலை யின் பொற்காலமாகும். உலகில் முதல் தோன்றிய ஓவியரிடம் தூரிகைகளும், மசியும், துணி யும், பலகைகளும் இல்லை. அவர்கள் வாழ்ந்த குகைகளின் சுவர்கள் அழுத்தமாக விருந்தன அவர்களிடம் அழுத்தமான சுண்ணாம்புக் கற்களும், எலும்பு களும், தந்தங்களும் இருந்தன.
அவர்கள் தீட்டிய படங்களைப் பாருங்கள். அவை அவர்கள் வாழ்ந்த இருண்ட குகைகளுள் 20,000 ஆண்டுகளின் முன் எழுதப்பட்டவை. அக் காலப் படங்கள் இன்றைய படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கன. இவ் வகையான படங்களை வரையக் கூடியவர்கள் ஒரு கூட்டத்தில் ஒருவர் இருவர் மாத்திரம் இருந்தனர்.
அவர்கள் மனித உருவை வரைதலிலும் பார்க்க விலங்குகளை எழுதுவதில் அதிக திறமை பெற்றிருந்தார்கள். அவர்கள் வரைந்துள்ள மனித ஓவியங்கள் ஒன்றுக்கும் உடை காணப்படவில்லை. சில மனித ஓவியங்கள் உடம்பில் மயிரின்றியும், சில மயிருள்ளனவாகவும் காணப்படு கின்றன. இதனால் அக் காலத்தில் மனிதனின் உடம்பில் மயிர் உதிரத் தொடங்கிவிட்டதென்றும், சிலருக்கு இன்னும் மயிர் இருந்ததென்றும் தெரிகின்றன. பெண்களின் வடிவங்கள் மிகவும் கொழுப்பு ஏறினவையாகக் காணப்படுகின்றன. அக் காலத்தில் மிகவும் கொழுத்துப் பருத்த பெண்ணே அழகுடையவளாகக் கருதப்பட்டாள். இன்றும் கிழக்குத் தேசங்கள் சிலவற்றில் பெண்களின் அழகு அவளின் கனத்தைக் கொண்டு கணிக்கப்படுகின்றது.
சுவர்களில் மக்கள் விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்படவில்லை; வெட்டப்பட்டுள்ளன. மக்கள் அலங்காரத்தில் பிரியமுடையவர்களாயிருந் தார்கள். அவர்கள் ஆயுதங்களை அழகாகச் செய்தார்கள். கத்திகள், ஈட்டிகள், ஆயுதங்களின் பிடிகளை வட்டம், விலங்கு முதலிய ஓவியங்களால் அழகுபடுத்தினார்கள்.
மக்கள் குகைகளில் வாழ்ந்த காலத்தில் உணவு பாத்திரங்களில் இட்டுச் சமைக்கப்படவில்லை. குகை மனிதருக்குப் பின் வாழ்ந்த புதிய கற்கால மக்களே பானை சட்டிகளைச் செய்ய அறிந்திருந்தார்கள். அக் காலத்தில் வழங்கிய பானை சட்டி போன்ற மட்பாண்டங்களின் வடிவங்கள் அவர்கள் பயன்படுத்திய கத்தி, ஈட்டிப் பிடிகளிலும் பிற பொருள்களிலும் தீட்டப்பட்டுள்ளன. அவர் தாம் வரைந்த விலங்குகள் பறவைகளை உயிருள்ளன போல் தோன்றும்படியாக வரைந்தார்கள்.
பிற்காலத்து வாழ்ந்த புதிய கற்கால மக்கள் குகை மனிதரைப்போல் ஓவியந் தீட்டுவதில் திறனை யடைந்திருக்கவில்லை. புதிய கற்காலம், வரலாற்றுக் காலத்தை அணுக அணுக ஓவிய, சிற்பக் கலைகள் வாணிக சம்பந்தமாக மாறின. மட்பாண்டங்கள், செம்பு வெண்கல ஏனங்கள், ஆயுதங்கள், அணிகலங்கள், தையல் வேலைப்பாடுடைய தோல்கள், உடைகள் என்பன ஒரு சாதியாரிடமிருந்து இன்னொரு சாதியாருக்குக் கை மாறின. ஓடுகள் அல்லது தீத்தட்டிக் கற்களைக் கட்டிச் செய்த மாலைகளை, அல்லது விலங்குகளின் மயிருள்ள பாதத்தை அழுக்கு நிறைந்த கழுத்தில் தொங்கவிடுதல் போன்ற முற்காலக் காட்டுமனிதனின் சிறிய அலங்கரிக்கும் தொடக்கத்திலிருந்தே சிற்பக்கலை வளர்ச்சியடைவதாயிற்று.
மக்கட் குலங்கள்
ஆதியில் மக்கள் அலைந்து திரிபவர்களாக விருந்தனர். ஆகவே அவர்கள் உலகின் பல பகுதிகளிற் சென்று பரவினர். உலகின் பல பாகங்கள் வெப்பநிலையால் மாறுபட்டுள்ளன. ஒவ்வொரு வெப்பநிலையிலுள்ள நாட்டிலும் வெவ்வேறு வகையான உணவுப்பொருள்கள் கிடைக்கின்றன. ஆகவே மக்கள் உணவுகளில் வேறுபாடுகள் உண்டாயின. அவர்கள் வெவ் வேறு வகையான பகைகளாலும் தாக்கப்பட்டார்கள். ஆகவே ஒவ்வொரு இடங்களிலும் வாழ்வோர் இடங்களுக்கேற்ப மாற்றமடைந்தனர். ஒவ்வொரு உயிர்களிலும் பற்பல இனங்கள் தோன்றுதல் போலவே மக்களுள்ளும் பல இனங்கள் உண்டாயின. ஒரு மக்கட் கூட்டத்தினர் மற்றவர்களிலிருந்து கடல், மலை, வனாந்தரங்கள் போன்றவைகளாற் பிரிக்கப்பட்டிருந்தால் அவர்களின் வாழ்க்கை முறைகள் இடங்களுக்கேற்றவாறு மாற்றமடை கின்றன. மனிதன் எப்பொழுதும் அலைந்து திரிபவனாயிருந்தமையால் தடைகளால் அவன் பெரிதும் தடுக்கப்படமாட்டான். மனிதர் மனிதரைப் பார்த்து நடக்கின்றனர்; ஒருவரோடு ஒருவர் போர் செய்து வெற்றி கொள் கின்றனர். ஒரு கூட்டத்தினர் இன்னொரு கூட்டத்தினருடன் கலக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இரண்டு பெரிய ஆற்றல்கள் தொழிற் பட்டு வருகின்றன. ஒரு ஆற்றல் மக்களைச் சிறு சிறு கூட்டங்களாகப் பிரிப்பது; மற்றது பிரிந்து வேறுபட்ட மக்களைக் கலக்கச் செய்து புதிய இனங்களைத் தோற்றுவிப்பது.
குகைகளில் வாழ்ந்த பழைய கற்கால மக்கள் உலகின் விசாலமான பரப்புகளில் உலாவித் திரிந்தார்கள். புதிய கற்கால மனிதனிடத்தில் சில பொருள்கள் இருந்தன. அதனால் அவன் பழைய கற்கால மக்களைவிடக் குறுகிய இடங்களில் அலைந்து திரிந்தான். வேட்டையாடுவோனா யிருந் தமையின் அவன் விலங்குகள் செல்லும் இடங்களுக்கு அவைகளைப் பின் தொடர்ந்து சென்றான். பருவகாலம் வாய்ப்பா யில்லாதபோது அவன் பல நூறு மைல்கள் கடந்தும் சென்றிருக்கலாம். பயிர்ச் செய்கை உண்டான போதே மக்கள் ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங்கினார்கள். மக்கள் இனங்களாக வளர்ச்சியடைய இவ் வாழ்க்கை வாய்ப்பளித்தது. நாகரிகத்தின் மிகக் கீழ்நிலையிலும், மிக உயர்நிலையிலும் கட்டுப்பாடின்றி மக்கள் அலைந்து திரிகிறார்கள்.
பழைய கற்கால மக்கள் உலகம் முழுமையிலும் அலைந்து திரிந்து நெருக்கமின்றி வாழ்ந்தார்கள். உலகம் முழுமையிலும் காணப்பட்ட பழைய கற்கால ஆயுதங்கள் எல்லாம் ஒரே வகையின. ஒருகாலத்தில் கடல், மலைகளால் பிரிக்கப்பட்டிருந்த மக்கள், கடல் மலைகள் மறைந்து போதல் போன்ற இயற்கை மாறுபாடுகளால் மறுபடியும் மற்றைய மக்களோடு கலக் கிறார்கள். இவ் வகையான கலப்புகள் உண்டானபோது ஒரு இனத்தவரை இன்னொரு இனத்தவரிலிருந்து பார்த்த மாத்திரத்தில் அறியக்கூடிய பெரிய மக்கட்கூட்டங்கள் காணப்படுகின்றன. சிலர் மஞ்சள் நிறத்தினராகவும், சிலர் வெண்ணிறத்தினராகவும், சிலர் கரிய நிறத்தினராகவும் சிலர் மங்கிய நிறத்தினராகவும் உளர். ஆப்பிரிக்காவிலே வனாந்தரத்துக்குத் தெற்கிலுள்ள மக்கள் கறுப்பு நிறமும், தடித்த உதடுகளும், சுருண்ட மயிரும் உடையராவர். வட, வடமேற்கு ஐரோப்பாவிலுள்ள மக்கள் நீலமான கண்ணும், சிவந்த நிறமும், வெளுத்த மயிருமுடையர். மத்திய தரையைச் சூழ்ந்து வெண் ணிறமும், கறுத்த விழியும், கறுத்த மயிருமுடைய மக்கள் காணப்படு கின்றனர். மங்கிய வெண்ணிறமுள்ள மக்களின் மயிர் நேரானது; வளைவில் லாதது; மஞ்சட் சாதியினரின் மயிர் போன்று வயிரமில்லாதது. தென்னிந்தியா வில் மங்கிய கபில நிறமுள்ளவர்களும் நேரிய மயிருள்ளவருமாகிய மக்கள் காணப்படுகின்றனர். நியூகினி, பாப்புவா முதலிய தீவுகளில் சுருண்ட மயிருடைய கறுப்பு, மங்கிய நிறம், கபில நிறமுடைய மக்கள் காணப்படு கிறார்கள்.
இற்றைக்குப் பத்தாயிரம் அல்லது பன்னீராயிரம் ஆண்டுகளின் முன் இவ்வாறு வேறுபடுத்தி அறியக்கூடிய மக்கள் வாழ்ந்தார்கள். இற்றைக்கு அறுபது அல்லது எழுபது ஆண்டுகளின் முன்னிலிருந்தே 1இன்றைய முறையான மக்களின் குலப்பிரிவுகளைக் குறிப்பிடும் வழக்கு உண்டா யிற்று. அதற்குமுன் கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டில் சொல்லப் படும் பழங்கதைகளை ஆதாரமாகக் கொண்டே மக்கட் குலங்கள் குறிப் பிடப்பட்டன. நோவாவையும், பேழையையும் பற்றிய வரலாற்றில் நோவா வுக்கு சம்(Sham), ஹாம்(Ham), யபெத்(Japhet) என்னும் மூன்று மக்கள் இருந்தனர் எனச் சொல்லப்பட்டுள்ளது. சமின் சந்ததியினர் என்று கருதப் படும் அராபிய மக்கள் செமித்தியர் எனவும், ஹாமின் சந்ததியினர் எனக் கருதப்பட்ட ஆப்பிரிக்கர் ஹாமித்தியரென்றும், ஐரோப்பாவிற் குடியேறிய வராகக் கருதப்படும் யபெத்தின் சந்ததியினர் ஆரியர் என்றும் கொள்ளப் பட்டார்கள். இப் பிரிவு, மக்கள் இன ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதன்று.
மனிதன் முன்னேறிய வகை
ஆதியில் மனிதன் விலங்குகளை ஒப்ப உணவு ஒன்றை மாத்திரம் தேடி அலைந்து திரிந்தான். அக் காலத்தில் ஒருவகை முன்னேற்றமும் உண்டாகவில்லை. மனிதனைச் சூழ்ந்து நாற்புறத்தும் பகைகள் இருந்தன. அவன் சிறிது அயர்ந்துவிடுவானாயின் சூழவிருந்த விலங்குகள் அவனைக் கொன்று தின்றுவிடும். அவன் உணவின் பொருட்டுப் போராடுவதோடு தனது பகைகளையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. வேட்டை யாடுவதிலும் பார்க்கத் தனது பகைகளை எதிர்த்துப் போராடுவதற்கே அவனுக்கு ஆயுதங்கள் அவசியம் வேண்டியிருந்தன. முரடான கற்களும் மரக்கிளைகளுமே அவனுடைய ஆயுதங்களாக விருந்தன. நாள் ஏற ஏற அவன் ஆயுதங்களை அழகாகச் செய்ய அறிந்தான். ஆதிகால மனிதன் கல்லில் செய்து பயன்படுத்திய கத்தி, வாள், உளி, கோடாரி போன்ற வைகளின் வடிவைப் பின்பற்றியே இன்றைய ஆயுதங்களும் உலோகங் களாற் செய்யப்படுகின்றன. முரடான கல்லாயுதங்களை மனிதன் பயன்படுத்திய காலம் பழைய கற்காலம் எனப்படும்.
பழைய கற்காலத்துக்குப்பின் வந்த மனிதன் ஆயுதங்களைப் பாறைகளில் தீட்டி அழுத்தமாகவும் அழகாகவும் செய்ய அறிந்தான். அழுத்தமான கல்லாயுதங்களை மனிதன் பயன்படுத்திய காலம் புதிய கற்காலம் எனப்படும். புதிய கற்காலத்திய மனிதன் விலங்குகளைப் பழக்கி வளர்க்க அறிந்திருந்தான். ஆடு, மாடு முதலியவை பால், தயிர் முதலிய உணவுகளைக் கொடுத்தன. ஆகவே புதிய கற்கால மனிதன் உணவின் பொருட்டு ஓய்வின்றி அலைந்து திரியவில்லை. தனது மந்தைகளுடன் சில காலம் ஓரிடத்தில் தங்கியிருந்தான். பின்பு மேய்ச்சல் நிலத்தைத் தேடி வேறோரிடத்துக்குத் தனது மந்தைகளுடன் சென்றான். இப்பொழுது நாகரிகம் தோன்றி வளர ஆரம்பித்தது. மக்கள் ஆற்றோரங்களில் தங்கிப் பயிரிடத் தொடங்கினார்கள். ஒரு முறையில் கிடைக்கும் விளைவு பலருக்கு நீண்டகால உணவுக்குப் போதியதாக இருந்தது. இப்பொழுது அவர்கள் உணவின் பொருட்டு அலைந்து திரியவில்லை; ஓர் இடத்திலேயே தங்கி யிருந்தார்கள்; போதிய ஓய்வு இருந்தது. இக் காலத்திலேயே பலவகைக் கலைகள் தோன்றி வளர்ந்தன. நாகரிகம் என்பது ஒழுங்கான உணவு பெறுதலேயாகும்.
எகிப்து, மேற்கு ஆசியா, சீனா, இந்தியா முதலிய நாடுகள் பழமையே நாகரிகம் பெற்று விளங்கின. இந் நாகரிகங்கள் எல்லாம் ஆற்றோரங்களிலேயே தோன்றி வளர்ச்சியடைந்தன. எங்கு மக்களுக்கு அதிக உணவு கிடைக்கின்றதோ அங்கு நாகரிகமும் செல்வமும் ஓங்கி வளர்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக