ஔவையார் நூல்கள்


ஔவையார் நூல்கள்

காலந்தோறும் வாழ்ந்த ஔவையார் என்னும் புலவர்களில் இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்.

அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார். ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால், சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.

பலரது உள்ளப் பதிவில் இருக்கும் கிழவிப் பருவம் சங்ககால ஔவைக்கு இல்லை. அதியமான் தன்னை அழைத்ததாக இவரது பாடலில் உள்ள தொடர் இவரது இளமை எழிலைக் காட்டுகிறது. ஔவை ஒரு விறலி. மடப்பத்தன்மை பொருந்திய மடவரல். மை தீட்டிய கண்களும், வாட்டமான நெற்றியும் கொண்டவள். எடுப்பான இடுப்பில் அழகிய அணிகலன்களை அணிந்திருந்தாள்.

  • ஔவையார் அதியமான் போன்றோரைப் பாடியது மட்டுமன்றி, அவரது காலத்தில் அல்லது அவரது காலத்திக்கு முன் வாழ்ந்த இரண்டு புலவர்களைத் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
  • வெள்ளிவீதியார் என்னும் பெண் புலவர் தன் காதலனைத் தேடிக்கொண்டு சென்றது போலத் தலைவி ஒருத்தி தன் தலைவன் இருக்குமிடத்துக்கே செல்ல விரும்பினாளாம்.
  • அதியமான் அன்று ஒருநாள் எழுவரை வென்று அவர்களது ஏழு முடிகளை மார்பில் அணிந்துகொண்டதை ஔவையால் பாட முடியவில்லையாம். இன்று அதியமான் கோவலூரை அழித்ததைப் பரணர் பாடினாராம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Vāḻkkaiyiṉ arttam