பெருங்கடல்


பெருங்கடல்

பெருங்கடல் (ocean) என்பது முக்கியமான உப்பு நீர் நிலை ஆகும். இது நீர்க் கோளத்தின் முக்கியமான கூறும் ஆகும். ஏறத்தாழ 71% புவி மேற்பரப்பு (361 மில்லியன் சதுர கிலோமீட்டர்) தொடர்ச்சியாக அமைந்துள்ள பெருங்கடல்களினால் மூடப்பட்டுள்ளது. இது பல பெருங்கடல்களாகவும், பல சிறிய கடல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% மற்றும் பூமியின் உயிர்க்கோளத்தில் 90% அடங்கியது கடல் ஆகும். புவியில் உள்ள நீரில் 97% கடலில் உள்ளது, மேலும் கடல்சார் அறிஞர்கள் உலக சமுத்திரத்தில் 5% க்கும் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். புவியின் கடலானது ஏறக்குறைய 3,700 மீட்டர் (12,100 அடி) சராசரி ஆழத்துடன், 1.35 பில்லியன் கனசதுர கிலோமீட்டர் (320 மில்லியன் க்யூ) நீரைக் கொண்டது ஆகும். இதன் பரப்பளவின் அரைப் பகுதிக்கு மேல் 3,000 மீட்டருக்கு (9,800 அடி) மேற்பட்ட ஆழம் கொண்டது. சராசரி உப்புத்தன்மை ஆயிரத்தில் 35 பகுதி (35%) ஆகும். பொதுவாக முழுக் கடல்நீரும் சராசரியாக ஆயிரத்துக்கு 30 - 38 பகுதிகள் உப்புத்தன்மை கொண்டது.!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Vāḻkkaiyiṉ arttam