இலக்கிய இன்பம்


அறிவு நூல்கள் நமக்கு நம்முடைய வாழ்வின் லட்சியத்தைக் காட்டும், அதை அடைவதற்கு வேண்டிய சாதனங்களையும் செய்து தரும். லட்சியம் தெரிந்தாலும் போதாது, சாதனங்களைப் பெற்றாலும் போதாது. லட்சியத்தை அடைந்து தீர வேண்டுமென்ற அடங்காத ஆர்வம் உண்டானால் தான் லட்சியத்தை அடைவோம். அத்தகைய ஆர்வத்தை உண்டாக்குவது தான் இலக்கியத்தின் தனிப்பெரும் நோக்கம். ஆயினும் அதன் அற்புத லட்சணம் யாதெனில் லட்சியம் இது என்று அறிவு நூல் கூறுகிறது போல் அதைக் குறித்து விவரித்துக் கூறாமலே நம்முடைய மனத்தில் ஆசையை எழுப்புவதேயாகும். இப்படி அறிவு மூலமாக எதையும் கூறாமல் நம்மை உயர்த்துவதனாலேயே இலக்கியத்தை வாழ்வின் ஜீவ நாடி என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்...

இலக்கிய இன்பம்

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

Read Books

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Tirukkural - English Translation

பாண்டிமாதேவி