அறிவுக் கனிகள்
உலகில் செல்வம் நிலை நிற்பதில்லை. அதிகாரமும் இதர மேம்பாடுகளும் நம்முடன் அழிந்து வருகின்றன. ஆனல் உயர்ந்தோர் கூறும் உறுதி மொழிகள் பல ஆயிர ஆண்டுகளுக்குப் பின்னும், என்றும் அழியாதனவாய், பின்வரும் மக்கள் அனைவருக்கும் சுடர் விளக்காய் இருந்து வருகின்றன. இவைகளே மனித வர்க்கத்தின் இணையற்ற பொக்கிஷங்களாகும். கோடிக்கணக்கான மக்களுக்கு இவை அறிவும் ஆற்றலும் கொடுத்து, அவர்கள் மனதை மலரச் செய்கின்றன...