இந்திய இலக்கியச் சிற்பிகள்: ஔவையார்


ஒளவையார் உலகப் பெண்பாற் புலவர்களில் தலைசிறந்தவர். தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீங்கா இடம் பெற்றவர். சங்ககால ஒளவையாரும் இடைக்காலத்தில் சோழப் பேரரசு சிறந்து விளங்கிய போது தோன்றிய நீதிநூல் ஒளவையாரும் ஆகிய இருவருமே மிகுந்த சிறப்புக்குரியவர்கள். நீதிநூல் ஒளவையார் புகழ் தமிழகம் முழுவதும் பரவி, கற்றோரேயன்றி மற்றோரும் நினைவில் வைத்துக் கொண்டாடும்படி அமைந்தது. அதற்கு அவர் பாடிய எளிமைமிகுந்த ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் போலும் நீதி நூல்களே காரணமாகும். அவர் பாடல்களில் அமைந்த நெஞ்சில் ஆழப் பதியும்படியான கருத்தும் வடிவமும் நிறைந்த சிறுசிறு தொடர்களே அவரை அடிக்கடி நினைப்பூட்டுகின்றன. அதனுடன் அவர் பாடிய தனிப்பாடல்களும் மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றன. அவரது புலமை, பாப்புனையும் திறன், எளியோரிடமும் கலந்து பழகி மக்கள் கவிஞராக விளங்கியமை என்பனவற்றால் பல கதைகளும் கற்பனை நிகழ்ச்சிகளும் மக்களால் சொல்லப்பட்டு வாய்மொழியாக வழங்கலாயின. அவர் இயற்றியன வல்லாத சில பாடல்களும் நூல்களும் அவரோடு தொடர்பு படுத்தப்பட்டும் காலப்போக்கில் கதைகள் பல வழங்கலாயின...

இந்திய இலக்கியச் சிற்பிகள்: ஔவையார்

(வரலாறு)

தமிழண்ணல்

Read Books

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்