சிறுவர் கதைக் களஞ்சியம்


நில உலகத்தைவிடக் கடலுலகம் மும்மடங்கு பெரிது, ஆழ் கடலுலகம் இன்னும் பல மடங்கு இடமகன்றது. அதில் எண்ணற்ற அழகுக் காட்சிகள் இருந்தன. எல்லையற்ற அருள்பொருட் செல்வங்கள் கொட்டிக்கிடந்தன. இந்த ஆழ்கடலுலகின் தலைநாயகமாய் அமைந்தது குமரிக்கடல், முத்தும் சங்கும் அதையே தம் தாயகமாகக் கொண்டிருந்தன. அங்கேயே அவை கருவீன்று செழித்துக் கொழித்தன. குமரிக்கோடு - பன்மலை போன்ற மலைத்தொடர்களும் கடலடியும் பவளப் பாறைகளுமாகவே அமைந்திருந்தன. ஆறுகள் போன்ற கடல் நீரோட்டங்கள் கடலுலக மெங்கணுமிருந்து வந்து, இவ்விடத்தில் பிணைந்து கலந்தன. பலவகை மணிக்கற்கள், ஆமைத் தோடுகள், திமிங்கில எலும்புகள், பாசிகள், சிப்பிகள் ஆகியவற்றை அவை அடித்துக் கொணர்ந்தன. மலைகள் அவற்றைத் தேக்கித் தம் அருகே படியவைத்தன...

சிறுவர் கதைக் களஞ்சியம்

(Childrens)

கா. அப்பாத்துரையார்

Read Books

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்