நன்னூல் யாப்பு
இலக்கண நூல்கள்
Back
நன்னூல்
பவணந்தி முனிவர்
திருச்சிற்றம்பலம்
பவணந்தி முனிவர்
சிறப்புப்பாயிரம்
மலர்தலை உலகின் மல்கிருள் அகல இலகொளி பரப்பி யாவையும் விளக்கும் பரிதியி னொருதா னாகி முதலீறு ஒப்பளவு ஆசை முனிவிகந் துயர்ந்த அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின் | 5 |
மனஇருள் இரிய மாண்பொருள் முழுவதும் முனிவற அருளிய மூஅறு மொழியுளும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள் அரும்பொரு ளைந்தையும் யாவரும் உணரத் | 10 |
தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார் இகலற நூறி யிருநில முழுவதும் தனதெனக் கோலித் தன்மத வாரணம் திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் | 15 |
திருந்திய செங்கோற் சீய கங்கன் அருங்கலை விநோதன் அமரா பரணன் மொழிந்தன னாக முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் | 20 |
பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னு நாமத் திருந்தவத் தோனே |
1 பொதுப்பாயிரம்
பாயிரத்தின் பெயர்கள்
முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
| 1 |
பாயிர வகை பாயிரம் பொதுச்சிறப் பெனஇரு பாற்றே | 2 |
பொதுப்பாயிரம் இன்னதென்பது
நூலே நுவல்வோன் நுவலுந் திறனே | 3 |
1. நூலினது வரலாறு
நூல் இன்னதென்பது
நூலின் இயல்பே நுவலின் ஒரிரு | 4 |
மூவகை நூல் முதல்வழி சார்பென நூல்மூன் றாகும் | 5 |
முதனூல் இன்னதென்பது
அவற்றுள் | 6 |
வழிநூல் இன்னதென்பது
முன்னோர் நூலின் முடிபுஒருங் கொத்துப் | 7 |
சார்புநூல் இன்னதென்பது
இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித் | 8 |
வழிநூலுக்குஞ் சார்புநூலுக்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதி
முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும்
| 9 |
நாற்பொருட் பயன் அறம்பொரு ளின்பம்வீ டடைதல்நூற் பயனே | 10 |
எழுமதம்
எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் | 11 |
பத்துக் குற்றம்
குன்றக் கூறல் மிகைபடக் கூறல் | 12 |
பத்தழகு
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் | 13 |
முப்பத்திரண்டு உத்தி
நுதலின் புகுதல் ஓத்துமுறை வைப்பே
| 14 |
உத்தி இன்னதென்பது
நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
| 15 |
ஓத்து இன்னதென்பது
நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு | 16 |
படலம் இன்னதென்பது
ஒருநெறி யின்றி விரவிய பொருளாற் | 17 |
சூத்திரம் இன்னதென்பது
சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச் | 18 |
சூத்திர நிலை
ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப்
| 19 |
சூத்திரங்களுக்குக் காரண வகையால் வரும் பெயர் வேறுபாடு
பிண்டந் தொகைவகை குறியே செய்கை | 20 |
உரையினது பொது இலக்கணம்
பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள் | 21 |
காண்டிகையுரை இன்னதென்பது
கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் | 22 |
விருத்தியுரை இன்னதென்பது
சூத்திரத் துட்பொருள் அன்றியும் ஆண்டைக்கு | 23 |
நூலென்னும் பெயர்க் காரணம்
பஞ்சிதன் செல்லாப் பனுவல் இழையாகச் | 24 |
உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு | 25 |
2 ஆசிரியனது வரலாறு
நல்லாசிரியர் இலக்கணம்
குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை
| 26 |
தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும் பருவம் முயற்சி யளவிற் பயத்தலும் மருவிய நன்னில மாண்பா கும்மே | 27 |
அளக்க லாகா அளவும் பொருளும் துளக்க லாகா நிலையுந் தோற்றமும் வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே | 28 |
ஐயந் தீரப் பொருளைப் யுணர்த்தலும் மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே | 29 |
மங்கல மாகி யின்றி யமையாது யாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் பொழுதின் முகமலர் வுடையது பூவே | 30 |
ஆசிரியராகாதார் இலக்கணம்
மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும் | 31 |
பெய்தமுறை யன்றிப் பிறழ உடன்றரும் செய்தி கழற்பெய் குடத்தின் சீரே | 32 |
தானே தரக்கொளின் அன்றித் தன்பால்
மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை | 33 |
அரிதிற் பெயக்கொண் டப்பொருள் தான்பிறர்க்கு
எளிதீ வில்லது பருத்திக் குண்டிகை | 34 |
பல்வகை யுதவி வழிபடு பண்பின் அல்லோர்க் களிக்கும் அதுமுடத் தெங்கே | 35 |
3 பாடஞ்சொலல்லின் வரலாறு
ஈதல் இயல்பே இயம்புங் காலைக் காலமும் இடனும் வாலிதின் நோக்கிச் சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை யறிந்துஅவன் உளங்கொளக் கோட்டமில் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப | 36 |
4 மாணாக்கனது வரலாறு
மாணாக்கர் இலக்கணம்
தன்மகன் ஆசான் மகனே மன்மகன் | 37 |
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே இல்லிக் குடம்ஆடு எருமை நெய்யரி அன்னர் தலையிடை கடைமா ணாக்கர் | 38 |
மாணாக்கராகாதார் இலக்கணம்
களிமடி மானி காமி கள்வன்
| 39 |
5 பாடங்கேட்டலின் வரலாறு
கோடல் மரபே கூறுங் காலைப் பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்து இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவன் அன்னஆர் வத்த னாகிச் சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச் செவிவா யாக வெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போதல் என்மனார் புலவர் | 40 |
நூல்பயில் இயல்பே நுவலின்வழக் கறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசாற் சார்ந்தவை அமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடம்நனி யிகக்கும் | 41 |
ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற் பெருக நூலிற் பிழைபா டிலனே | 42 |
முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும் | 43 |
ஆசா னுரைத்த தமைவரக் கொளினும் காற்கூ றல்லது பற்றல னாகும் | 44 |
அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற்
செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும் | 45 |
அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி
நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு எத்திறத் தாசான் உவக்கும் அத்திறம் அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே | 46 |
6. சிறப்புப் பாயிரத்திலக்கணம்
சிறப்புப் பாயிரத்துக்குப் பொதுவிதி
ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை | 47 |
காலங் களனே காரண மென்றிம் மூவகை யேற்றி மொழிநரு முளரே | 48 |
நூற்பெயருக்குச் சிறப்புவிதி
முதல்நூல் கருத்தன் அளவு மிகுதி | 49 |
வழியின்வகையாகிய நூல்யாப்புக்குச் சிறப்புவிதி
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு | 50 |
சிறப்புப்பாயிரஞ் செய்தற்குரியார் இவரென்பது
தன்னா சிரியன் தன்னொடு கற்றேன் | 51 |
சிறப்புப்பாயிரம் பிறர் செய்ததற்குக் காரணம்
தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் | 52 |
தற்புகழ்ச்சி குற்றமாகாத இடங்கள்
மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும் | 53 |
பாயிரம் நூலுக்கு இன்றியமையாச் சிறப்பின தென்பது
ஆயிர முகத்தா னகன்ற தாயினும் | 54 |
மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல் - நாடிமுன் ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது | 55 |
2. எழுத்ததிகாரம்
1 எழுத்தியல்
கடவுள் வணக்கமும் அதிகாரமும்
பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த | 56 |
எழுத்திலக்கணத்தின் பகுதி
எண்பெயர் முறைபிறப்பு உருவம் மாத்திரை | 57 |
1. எண்
எழுத்து இன்னதென்பதும் அதன்வகையும்
மொழிமுதற் காரணம் ஆம்அணுத் திரளொலி | 58 |
முதலெழுத்தின் விரி உயிரும் உடம்புமாம் முப்பது முதலே | 59 |
சார்பெழுத்தின் வகை
உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
| 60 |
சார்பெழுத்தின் விரி
உயிர்மெய் இரட்டுநூற் றெட்டுஉய ராய்தம் | 61 |
2. பெயர்
பெயர்க்கெல்லாம் பொது இலக்கணம் இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின | 62 |
எழுத்தின் பெயர்
அம்முதல் ஈறாறு ஆவி கம்முதல் | 63 |
அவற்றுள் அ இ உ எ ஒக்குறில் ஐந்தே | 64 |
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள நெடில் | 65 |
அ இ உம்முதற் றனிவரிற் சுட்டே | 66 |
எ யா முதலும் ஆ ஓ ஈற்றும்
ஏ யிரு வழியும் வினாஆ கும்மே | 67 |
வல்லினம் க ச ட த ப ற வெனவாறே | 68 |
மெல்லினம் ங ஞ ண ந ம ன வெனவாறே | 69 |
இடையினம் ய ர ல வ ழ ள வெனவாறே | 70 |
இன எழுத்து
ஐஒளஇ உச் செறிய முதலெழுத்து
| 71 |
இனம் என்பதற்குக் காரணம்
தானம் முயற்சி அளவு பொருள்வடிவு
| 72 |
3. முறை
சிறப்பினும் இனத்தினுஞ் செறிந்தீண் டம்முதல் நடத்தல் தானே முறையா கும்மே | 73 |
4 பிறப்பு
பிறப்பின் பொதுவிதி
நிைறுயுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப | 74 |
முதலெழுத்துக்களுக்கு இடப்பிறப்பு
அவ்வழி | 75 |
முதலெழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு
அவற்றுள் | 76 |
இ ஈ எ ஏ ஐ அங் காப்போடு அண்பல் முதல்நா விளிம்புற வருமே | 77 |
உ ஊ ஒ ஓ ஒள இதழ் குவிவே | 78 |
கஙவுஞ் சஞவும் டணவு முதலிடை நுனிநா அண்ண முறமுறை வருமே | 79 |
அண்பல் லடிநா முடியுறத் தநவரும் | 80 |
மீகீழ் இதழுறப் பம்மப் பிறக்கும் | 81 |
அடிநா வடியண முறயத் தோன்றும் | 82 |
அண்ணம் நுனிநா வருட ரழவரும் | 83 |
அண்பல் முதலும் அண்ணமு முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும் | 84 |
மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே | 85 |
அண்ண நுனிநா நனியுறிற் றனவரும் | 86 |
சார்பெழுத்துக்கு இடமுயற்சி
ஆய்தக் கிடந்தலை அங்கா முயற்சி | 87 |
பிறப்புக்குப் புறனடை
எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் | 88 |
உயிர்மெய்
புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும் | 89 |
முற்றாய்தம்
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
| 90 |
உயிரளபெடை
இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில் | 91 |
ஒற்றளபெடை
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம் | 92 |
குற்றியலிகரம்
யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும்
| 93 |
குற்றியலுகரம்
நெடிலொடு ஆய்தம் உயிர்வலி மெலியிடைத்
| 94 |
ஐகார ஒளகாரக் குறுக்கங்கள்
தற்சுட்டு அளபொழி ஐம்மூ வழியும் | 95 |
மகரக் குறுக்கும் ண ன முன்னும் வஃகான் மிசையுமக் குறுகும் | 96 |
ஆய்தக் குறுக்கம் ல ள வீற் றியைபினாம் ஆய்தம் அஃகும் | 97 |
5. உருவம்
தொல்லை வடிவின எல்லா எழுத்தும்ஆண்டு எய்தும் எகர ஒகரமெய் புள்ளி | 98 |
6. மாத்திரை
எழுத்துக்களின் மாத்திரை
மூன்றுஉயி ரளபுஇரண் டாம்நெடி லொன்றே
| 99 |
மாத்திரை இன்னதென்பது இயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை | 100 |
மாத்திரைக்குப் புறனடை
ஆவியும் ஒற்றும் அளவிறந் திசைத்தலும் | 101 |
7. முதனிலை
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்
பன்னீ ருயிருங் க ச த ந ப ம வ ய
| 102 |
பொதுவிதியுட் சிறப்புவிதி உ ஊ ஒ ஒ வலவொடு வம்முதல் | 103 |
அ ஆ உ ஊ ஓ ஒள யம்முதல் | 104 |
அ ஆ எ ஒவ்வோ டாகும் ஞம்முதல் | 105 |
சுட்டியா எகர வினாவழி அவ்வை
ஒட்டி ஙவ்வு முதலா கும்மே | 106 |
8. இறுதிநிலை
மொழிக்கிறுதியில் வரும் எழுத்துக்கள்
ஆவி ஞணநமன யரலவ ழளமெய் | 107 |
சிலவற்றிற்குச் சிறப்புவிதி
குற்றுயி ரளபி னீறாம் எகரம் | 108 |
எழுத்தினது முதலும் ஈறும் நின்றநெறி யேஉயிர் மெய்முத லீறே | 109 |
9. இடைநிலை மயக்கம்
க ச த ப ஒழித்தஈ ரேழன் கூட்டம்
மெய்ய்மயக்கு உடனிலை ரழஒழித் தீரெட் டாகுமிவ் விருபான் மயக்கும் மொழியிடை மேவும் உயிர்மெய் மயக்கள வின்றே | 110 |
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்குச் சிறப்புவிதி ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே | 111 |
ஞநமுன் தம்மினம் யகரமொ டாகும் | 112 |
டறமுன் கசப மெய்யுடன் மயங்கும் | 113 |
ணனமுன் னினங்கச ஞபமய வவ்வரும் | 114 |
மம்முன் பயவ மயங்கு மென்ப | 115 |
யரழ முன்னர் மொழிமுதல் மெய்வரும் | 116 |
லளமுன் கசப வயஒன் றும்மே | 117 |
உடனிலை மெய்மயக்கத்தின் சிறப்புவிதி
ரழஅல்லன தம்முன் தாம்உடன் நிலையும் | 118 |
தனிமெய்யுடன் தனிமெய்யாய் மயங்குவன இவை மொழிக்கு உறுப்பாக மயங்காதன இவை
யரழவெற் றின்முன் கசதப ஙஞநம | 119 |
செய்யுளில் ஈரொற்றாய் நிற்கும் எழுத்துக்கள்
லளமெய் திரிந்த னணமுன் மகாரம் | 120 |
முதனிலை இறுதிநிலை இடைநிலைகளுக்குப் புறனடை
தம்பெயர் மொழியின் முதலு மயக்கமும்
| 121 |
10 போலி
மொழியிறுதிப் போலி
மகர இறுதி அஃறிணைப் பெயரின் | 122 |
மொழிமுதற் போலியும் மொழியிடைப் போலியும் அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன் | 123 |
மொழியிடைப் போலி
ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
| 124 |
சந்தியக்கரம்
அம்முன் இகரம் யகர மென்றிவை | 125 |
எழுத்தின் சாரியைகள்
மெய்க ளகரமும் நெட்டுயிர் காரமும்
| 126 |
இவ்வியலுக்குப் புறனடை மொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே | 127 |
2. பதவியல்
பதம் இன்னதென்பதும் அதன் வகையும்
எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருள்தரிற் | 128 |
ஓரேழுத்தொரு மொழி
உயிர்மவி லாறும் தபநவி லைந்தும்
| 129 |
தொடரெழுத்தொரு மொழி
பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும் | 130 |
பகாப்பதம்
பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி | 131 |
பகுபதம்
பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின்
| 132 |
பகுபத உறுப்புக்கள்
பகுதி விகுதி இடைநிலை சாரியை
| 133 |
2. பகுதி
பகுதி இன்னதென்பது
தத்தம் | 134 |
பண்புப் பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
செம்மை சிறுமை சேய்மை தீமை | 135 |
ஈறு போதல் இடையுகரம் இய்யாதல் ஆதி நீடல் அடியகரம் ஐயாதல் தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல் இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே | 136 |
தெரிநிலைவினைப் பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
நடவா மடிசீ விடுகூ வேவை
| 137 |
ஏவற்பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
செய்யென் வினைவழி விப்பி தனிவரிற் | 138 |
வினைப்பகுதிக்குப் புறனடை விளம்பிய பகுதிவே றாதலும் விதியே | 139 |
3. விகுதி
அன்ஆன் அள்ஆள் அர்ஆர் பம்மார்
அஆ குடுதுறு என்ஏன் அல்அன் அம்ஆம் எம்ஏம் ஓமொ டும்மூர் கடதற ஐஆய் இம்மின் இர்ஈர் ஈயர் கயவும் என்பவும் பிறவும் வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே | 140 |
4. இடைநிலை
பெயரிடைநிலை
இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பலிற்
| 141 |
இறந்தகாலவினை இடைநிலை
தடறவொற் றின்னே யைம்பால் மூவிடத்து | 142 |
நிகழ்கால இடைநிலை
ஆநின்று கின்று கிறுமூ விடத்தின் | 143 |
எதிர்கால இடைநிலை
பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழுது | 144 |
காலங்காட்டும் விகுதி
றவ்வொ டுகர வும்மைநிகழ் பல்லவுந் | 145 |
5. வடமொழியாக்கம்
ஆரியமொழி தமிழில் வடமொழியாதல்
இடையில் நான்கு மீற்றி லிரண்டும் | 146 |
ஆரியமொழி வடமொழியாதற்குச் சிறப்புவிதி
அவற்றுள்
| 147 |
ரவ்விற் கம்முத லாமுக் குறிலும்
லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற் கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே | 148 |
இணைந்தியல் காலை யரலக் கிகரமும்
மவ்வக் குகரமு நகரக் ககரமும் மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற | 149 |
தமிழெழுத்திற் சிறப்பெழுத்தும் பொது எழுத்தும்
றனழஎ ஒவ்வு முயிர்மெய்யு முயிரளபு | 150 |
3. உயிரீற்றுப் புணரியல்
1. புணர்ச்சி
புணர்ச்சி இன்னதென்பது
மெய்யுயிர் முதலீ றாமிரு பதங்களும் | 151 |
அல்வழி வேற்றுமை இவையென்பது
வேற்றுமை ஐம்முத லாறாம் அல்வழி
| 152 |
இயல்பு புணர்ச்சி விகார மனைத்தும் மேவல தியல்பே | 153 |
விகாரப் புணர்ச்சி
தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம் | 154 |
செய்யுள் விகாரம்
வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் | 155 |
ஓருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே | 156 |
புணர்ச்சி விகாரத்தில் வருவதோரையம் ஓழித்தல்
ஓருபுணர்க் கிரண்டு மூன்றும் உறப்பெறும் | 157 |
2. பொதுப்புணர்ச்சி
எல்லா ஈற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்
எண்மூ எழுத்தீற் றெவ்வகை மொழிக்கும்
| 158 |
பொதுப்பெயர் உயர்திணைப் பெயரீறு
பொதுப்பெய ருயர்திணைப் பெயர்க ளீற்றுமெய் | 159 |
வினாப்பெயர் விளிப்பெயர் முன் வல்லினம் ஈற்றியா வினாவிளிப் பெயர்முன்வலி இயல்பே | 160 |
முன்னிலை வினை ஏவல்வினைமுன் வல்லினம்
ஆவி யரழ இறுதிமுன் னிலைவினை | 161 |
3. உயிறீற்றுச் சிறப்புப் புணர்ச்சி
உயிர்முன் உயிர் புணர்தல்
இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
| 162 |
வினாச்சுட்டின்முன் நாற்கணமும் புணர்தல்
எகர வினாமுச் சுட்டின் முன்னர் | 163 |
குற்றியலுகரமுன்னுஞ் சில முற்றியலுகர முன்னும் உயிரும் உகரமும் புணர்தல்
உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும் | 164 |
4. உயிரீற்றுமுன் வல்லினம்
உயிரீற்றின்முன் வல்லினம் புணர்தல்
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் | 165 |
உயிரீற்றுச் சிலமரப்பெயர்முன் வல்லினம் புணர்தல்
மரப்பெயர் முன்னர் இனமெல் லெழுத்து | 166 |
அகர ஈற்றுச் சிறப்புவிதி
செய்யிய என்னும் வினையெச்சம் பல்வகைப் | 167 |
வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய் ஏகலும் உரித்தஃ தேகினு மியல்பே | 168 |
சாவஎன் மொழியீற் றுயிர்மெய் சாதலும்விதி | 169 |
பலசில எனுமிவை தம்முன் தாம்வரின் இயல்பு மிகலும் அகரம் ஏக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலு முளபிற | 170 |
ஆகார ஈற்றுச் சிறப்புவிதி அல்வழி யாமா மியாமுற்று முன்மிகா | 171 |
குறியதன் கீழ்ஆக் குறுகலும் அதனொடு
உகர மேற்றலும் இயல்புமாந் தூக்கின் | 172 |
இகர ஈற்றுச் சிறப்புவிதி
அன்றி இன்றிஎன் வினையெஞ்சு இகரம்
| 173 |
உரிவரின் நாழியி னீற்றுயிர் மெய்கெட மருவும் டகரம் உரியின் வழியே உகரஉயிர் மெய்யாம் ஏற்பன வரினே | 174 |
சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும் | 175 |
இகர ஐகார ஈற்றுச் சிறப்புவிதி
அல்வழி இ ஐம் முன்ன ராயின் | 176 |
ஈகார ஈற்றுச் சிறப்புவிதி
ஆமுன் பகரவீ அனைத்தும்வரக் குறுகும் | 177 |
பவ்வீ நீமீ முன்னர் அல்வழி
இயல்பாம் வலிமெலி மிகலுமா மீக்கே | 178 |
முற்றுகர ஈற்றுச் சிறப்புவிதி
மூன்றாறு உருபெண் வினைத்தொகை சுட்டீறு
| 179 |
அதுமுன் வரும்அன்று ஆன்றாந் தூக்கின் | 180 |
குற்றுகர ஈற்றுச் சிறப்புவிதி வன்றொட ரல்லன முன்மிகா அல்வழி | 181 |
இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின்
மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை | 182 |
நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்
டறஒற் றிரட்டும் வேற்றுமை மிகவே | 183 |
மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையில் தம்மின வன்றொட ராகா மன்னே | 184 |
ஐஈற் றுடைக்குற் றுகரமு முளவே | 185 |
திசையொடு திசையும் பிறவுஞ் சேரின் நிலையீற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னலவாத் திரிதலும் ஆம்பிற | 186 |
தெங்குநீண்டு ஈற்றுயிர் மெய்கெடுங் காய்வரின் | 187 |
எண்நிறை யளவும் பிறவும் எய்தின்
ஒன்று முதலெட் டீறா மெண்ணுள் முதலீ ரெண்முதல் நீளும் மூன்றாறு ஏழ்குறு கும்ஆறு ஏழல் லவற்றின் ஈற்றுயிர் மெய்யும் ஏழ னுயிரும் ஏகும் ஏற்புழி யென்மனார் புலவர் | 188 |
ஒன்றன் புள்ளி ரகர மாக இரண்ட னொற்றுயி ரேகஉவ் வருமே | 189 |
மூன்றனுறுப்பு அழிவும் வந்தது மாகும் | 190 |
நான்கன் மெய்யே லறவா கும்மே | 191 |
ஐந்தனொற் றடைவதும் இனமுங் கேடும் | 192 |
எட்ட னுடம்புணவ் வாகும் என்ப | 193 |
ஒன்பா னொடுபத்து நூறும் ஒன்றின் முன்னதி னேனைய முரணி ஒவ்வொடு தகரம் நிறீஇப்பஃ தகற்றி னவ்வை நிரலே ணளவாத் திரிப்பது நெறியே | 194 |
முதலிரு நான்காம் எண்முனர்ப் பத்தின் இடையொற்று ஏக லாய்த மாகல் எனஇரு விதியு மேற்கு மென்ப | 195 |
ஒருபஃ தாதிமுன் னொன்றுமுத லொன்பான் எண்ணும் அவையூர் பிறவும் எய்தின் ஆய்தம் அழியஆண் டாகுந் தவ்வே | 196 |
ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி எண்நிறை யளவும் பிறவரிற் பத்தின் ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னும் இற்றும் ஏற்ப தேற்கும் ஒன்பது மினைத்தே | 197 |
இரண்டு முன்வரிற் பத்தினீற் றுயிர்மெய்
கரந்திட ஒற்று னவ்வாகு மென்ப | 198 |
ஒன்ப தொழித்தஎண் ஒன்பது மிரட்டின் முன்னதின் முன்னல வோட உயிர்வரின் வவ்வு மெய்வரின் வந்தது மிகல்நெறி | 199 |
ஊகார ஈற்றுச் சிறப்புவிதி பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும் | 200 |
ஏகார ஓகார ஈற்றுச் சிறப்புவிதி இடைச்சொல் ஏஓ முன்வரி னியல்பே | 201 |
ஐகார ஈற்றுச் சிறப்புவிதி
வேற்றுமை யாயின் ஐகா னிறுமொழி | 202 |
பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின்
ஐபோ யம்மும் திரள்வரி னுறழ்வும் அட்டுறின் ஐகெட்டந் நீள்வுமாம் வேற்றுமை | 203 |
4. மெய்யீற்றுப் புணரியல்
மெய்யீற்றின்முன் உயிர் உடல்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே | 204 |
தனிக்குறில் முன்னொற் றுயிர்வரின் இரட்டும் | 205 |
மெய்யீற்றின்முன் மெய்
தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரந் | 206 |
ஞணநம லவளன ஒற்றிறு தொழிற்பெயர்
ஏவல் வினைநனி யவ்வன் மெய்வரின் உவ்வுறும் ஏவ லுறுசில சில்வழி | 207 |
நவ்விறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை | 208 |
ணகர னகர ஈறு
ணனவல் லினம்வரட் டறவும் பிறவரின் | 209 |
குறிலணைவு இல்லா ணனக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே | 210 |
சாதி குழூஉப்பரண் கவண்பெய ரிறுதி இயல்பாம் வேற்றுமைக்கு உணவுஎண் சாண்பிற டவ்வா கலுமாம் அல்வழி யும்மே | 211 |
னஃகான் கிளைப்பெய ரியல்பும் அஃகான் அடைவு மாகும் வேற்றுமைப் பொருட்கே | 212 |
மீன்றவ் வொடுபொரூஉம் வேற்றுமை வழியே | 213 |
தேன்மொழி மெய்வரி னியல்பும் மென்மை மேவி னிறுதி யழிவும் வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி | 214 |
மரம்அல் எகின்மொழி யியல்பும் அகரம் மருவ வலிமெலி மிகலு மாகும் | 215 |
குயின்ஊன் வேற்றுமைக் கண்ணு மியல்பே | 216 |
மின்பின் பன்கன் தொழிற்பெய ரனைய கன்னவ் வேற்று மென்மையோ டுறழும் | 217 |
தன்என் என்பவற் றீற்றுனவ் வன்மையோடு
உறழும் நின்னீ றியல்பா முறவே | 218 |
மகர ஈறு
மவ்வீ றொற்றழிந்து உயிரீ றொப்பவும்
| 219 |
வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும் அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள | 220 |
நுந்தம் எம் நம் மீறா மவ்வரு ஞநவே | 221 |
அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும் | 222 |
ஈமுங்
கம்மும் உருமுந் தொழிற்பெயர் மானும் முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே | 223 |
யரழ ஈறு
யரழ முன்னர்க் கசதப அல்வழி
| 224 |
தமிழவ் வுறவும் பெறும்வேற் றுமைக்கே
தாழுங் கோல்வந் துறுமே லற்றே | 225 |
கீழின்முன் வன்மை விகற்பமு மாகும் | 226 |
லகர ளகர ஈறு
லளவேற் றுமையிற் றடவும் அல்வழி | 227 |
குறில்வழி லளளத்தவ் வணையின் ஆய்தம் ஆகவும் பெறூஉம் அல்வழி யானே | 228 |
குறில்செறி யாலள அல்வழி வந்த தகரந் திரிந்தபிற் கேடுமீ ரிடத்தும் வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின் இயல்புந் திரிபும் ஆவன வுளபிற | 229 |
லளஇறு தொழிற்பெய ரீரிடத்தும் உவ்வுறா வலிவரி நல்வழி இயல்புமா வனவுள | 230 |
வல்லே தொழிற்பெயர் அற்றுஇரு வழியும் பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம் | 231 |
நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்
அல்வழி யானும் றகர மாகும் | 232 |
இல்லெ னின்மைச் சொற்குஐ அடைய வன்மை விகற்பமும் ஆகா ரத்தொடு வன்மை யாகலு மியல்பு மாகும் | 233 |
புள்ளும் வள்ளுந் தொழிற்பெயரு மானும் | 234 |
வகர ஈறு
சுட்டு வகரம்மூ வினமுற முறையே | 235 |
தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே
மவ்வரின் வஃகான் மவ்வு மாகும் | 236 |
வருமொழித் தகர நகரத் திரிபு
னலமுன் றனவும் ணளமுன் டணவும்
| 237 |
வேற்றுமைப் பொருட்புணர்ச்சியை உருபு புணர்ச்சியோடு மாட்டெறிதல் உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும் | 238 |
புணரியல்களுக்குப் புறனடை
இடைஉரி வடசொலின் இயம்பிய கொளாதவும்
| 239 |
5. உருபு புணரியல்
எட்டுருபுகளும் சாரும் இடவகையால் இத்தனையாம் என்பது
ஒருவ னொருத்தி பலரொன்று பலஎன | 240 |
வேற்றுமை உருபுகள் வருவதற்குக் காரணமும் வருமிடமும் பெயர்வழித் தம்பொருள் தரவரும் உருபே | 241 |
ஐம்முதலிய ஆறுருபும் நிலைமொழி வருமொழியோடு புணருமாறு
ஒற்றுயிர் முதலீற் றுருபுகள் புணர்ச்சியின்
| 242 |
2. சாரியை
சாரியை வருமாறு
பதமுன் விகுதியும் பதமும் உருபும் | 243 |
சாரியைகள் இவையென்பது
அன் ஆன் இன் அல் அற்றுஇற்று அத்துஅம் | 244 |
உருபு புணர்ச்சிக்குச் சிறப்புவிதி
எல்லாம் என்பது இழிதிணை யாயின்
| 245 |
எல்லாரும் எல்லீரும் எனபவற் றும்மை
தள்ளி நிரலே தம் நும் சாரப் புல்லும் உருபின் பின்ன ரும்மே | 246 |
தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம்பிற குவ்வின் அவ்வரும் நான்காறு இரட்டல | 247 |
ஆமா கோனவ் வணையவும் பெறுமே | 248 |
ஒன்று முதலெட் டீறா மெண்ணுர் பத்தின்முன் ஆன்வரிற் பவ்வொற் றொழியமேல் எல்லா மோடும் ஒன்பது மிற்றே | 249 |
வவ்விறு சுட்டிற்கு அற்றுறல் வழியே | 250 |
சுட்டின்முன் ஆய்த மன்வரிற் கெடுமே | 251 |
அத்தின் அகரம் அகரமுனை யில்லை | 252 |
3. புறனடை
சாரியைக்குப் புறனடை
இதற்குஇது சாரியை யெனின்அளவு இன்மையின் | 253 |
நான்கு புணர்ச்சிக்கும் புறனடை
விகுதி பதஞ்சா ரியைஉருபு அனைத்தினும் | 254 |
வேற்றுமைப் புணர்ச்சிக்குப் புறனடை
இயல்பின் விகாரமும் விகாரத் தியல்பும் | 255 |
புள்ளியும் உயிரும் ஆயிறு சொல்முன்
தம்மி னாகிய தொழில்மொழி வரினே வல்லினம் விகற்பமு மியல்பு மாகும் | 256 |
எழுத்ததிகாரத்துக்குப் புறனடை
இதற்குஇது முடிபென் றெஞ்சா தியாவும் | 257 |
3 சொல்லதிகாரம்
1. பெயரியல்
கடவுள் வணக்கமும் அதிகாரமும்
முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை | 258 |
1. சொல்லின் பொது இலக்கணம்
சொல் இன்னதென்பது
ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி யென்றா | 259 |
மூவகை மொழி
ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி
| 260 |
இருதிணை
மக்கள் தேவர் நரகர் உயர்திணை | 261 |
ஐம்பால் ஆண்பெண் பலரென முப்பாற்று உயர்திணை | 262 |
ஒன்றே பலஎன் றிருபாற்று அஃறிணை | 263 |
திணைபால்களுக்குப் புறனடை
பெண்மைவிட்டு ஆணவா வுவபேடு ஆண்பால் | 264 |
மூன்றிடத்துஞ் சொற்றன்னையும் பொருளையும் உணர்த்துதல்
படர்க்கை வினைமுற்று நாமங் குறிப்பிற்
| 265 |
மூவிடம் தன்மை முன்னிலை படர்க்கைமூ இடனே | 266 |
வழக்கு இன்னதென்பது
இலக்கணம் உடையது இலக்கணப் போலி
| 267 |
செய்யுள் இன்னதென்பது
பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல | 268 |
குறிப்பும் வௌிப்படையும்
ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி
| 269 |
2. சொற் பாகுபாடு
சொல் இத்தனை வகைப்படுமென்பது
அதுவே
| 270 |
இயற்சொல்
செந்தமி ழாகித் திரியா தியார்க்கும் | 271 |
திரிசொல்
ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும் | 272 |
திசைச்சொல்
செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
| 273 |
வடசொல்
பொதுஎழுத் தானும் சிறப்பெழுத் தானும் | 274 |
3. பெயர்ச்சொல்
பொயரின் பொது இலக்கணம்
இடுகுறி காரணம் மரபொடு ஆக்கம் | 275 |
உயர்திணை ஆண்பாற் பெயர்
அவற்றுள் | 276 |
உயர்திணைப் பெண்பாற் பெயர்
கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள் | 277 |
உயர்திணைப் பலர்பாற் பெயர்
கிளந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவும்
| 278 |
அஃறிணை ஒன்றன்பாற் பெயர்
வினாச்சுட் டுடனும் வேறு மாம்பொருள் | 279 |
அஃறிணைப் பலவின்பாற் பெயர்
முன்ன ரவ்வொடு வருவை யவ்வும் | 280 |
அஃறிணை இருபாற் பொதுப்பெயர் பால்பகா அஃறிணைப் பெயர்கள்பாற் பொதுமைய | 281 |
இருதிணைப் பொதுப்பெயர்
முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்கும் | 282 |
முதற்பெயர் முதலிய நான்கையும் வகுத்தல்
ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின்
| 283 |
திணைப்பொதுப்பெயர் பாற்பொதுவாதல்
அவற்றுள்
| 284 |
தன்மை முன்னிலை படர்க்கைப் பெயர்கள்
தன்மை யான்நான் யாம்நாம் முன்னிலை
| 285 |
தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் இடம் வகுத்தல்
வினையின் பெயரே படர்க்கை வினையால் | 286 |
பன்னிரண்டு பொதுப்பெயர்
தான்யான் நான்நீ ஒருமை பன்மைதாம் | 287 |
எண்ணால்வரும் உயர்திணைப் பெயருக்குப் புறனடை ஓருவ னொருத்திப் பெயர்மே லெண்ணில | 288 |
ஒருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப் பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப | 289 |
ஆகுபெயர்
பொருள்முத லாறோடு அளவைசொல் தானி
| 290 |
4. வேற்றுமை
வேற்றுாம இனைய என்பதும் இத்துணைய என்பதும்
ஏற்கும் எவ்வகைப் பெயர்க்குமீ றாய்ப்பொருள் | 291 |
வேற்றுமையின் பெயரும் முறையும்
பெயரே ஐஆல் குஇன் அதுகண் | 292 |
எழுவாயுருபு மற்ைறுயுருபுகளை ஏற்றல் ஆற னுருபும் ஏற்குமவ் வுருபே | 293 |
ஐ முதலிய உருபு ஏலாப் பெயர்கள் நீயிர் நீவிர் நா னெழுவா யலபெறா | 294 |
பெயர் வேற்றுமை
அவற்றுள் | 295 |
இரண்டாம் வேற்றுமை
இரண்டா வதனுருபு ஐயே அதன்பொருள் | 296 |
மூன்றாம் வேற்றுமை
மூன்றா வதனுருபு ஆலா னோடொடு
| 297 |
நான்காம் வேற்றுமை
நான்கா வதற்குரு பாகுங் குவ்வே
| 298 |
ஐந்தாம் வேற்றுமை
ஐந்தா வதனுருபு இல்லும் இன்னும் | 299 |
ஆறாம் வேற்றுமை
ஆற னொருமைக் கதுவும் ஆதுவும் | 300 |
ஏழாம் வேற்றுமை
ஏழ னுருபுகண் ணாதி யாகும் | 301 |
கண்முதலிய உருபுகள்
கண்கால் கடையிடை தலைவாய் திசைவயின்
| 302 |
எட்டாம் வேற்றுமை
எட்ட னுருபே எய்துபெய ரீற்றின் | 303 |
விளிக்கப்படு பெயர்கள்
இ உ ஊவோடு ஐ ஓ ன ள ர ல | 304 |
பொதுவாகிய விளியுருபு
இம்முப் பெயர்க்கண் ணியல்பும் ஏயும்
| 305 |
விளியுருபுக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
ஐயிறு பொதுப்பெயர்க்கு ஆயும் ஆவும்
| 306 |
ஒருசார் னவ்வீற் றுயர்திணைப் பெயர்க்கண் அளபீ றழிவுஅயல் நீட்சி யதனொடு ஈறு போத லவற்றோடு ஓவுறல் ஈறழிந்து ஓவுறல் இறுதியவ் வாதல் அதனோடு அயல்திரிந்து ஏயுறல்ஈ றழிந்து அயலே யாதலும் விளியுறு பாகும் | 307 |
ளஃகா னுயர்பெயர்க் களபுஈ றழிவுஅயல் நீட்சி யிறுதி யவ்வொற் றாதல் அயலில் அகரம்ஏ யாதலும் விளித்தனு | 308 |
ரவ்வீற் றுயர்பெயர்க் களபெழ லீற்றயல் அகரம் இ ஈ யாத லாண்டைஆ ஈயாத லதனோடு ஏயுற லீற்றே மிக்கயல் யாக்கெட் டதனயல் நீடல் ஈற்றி னீருற லிவையுமீண் டுருபே | 309 |
லகாரயீற் றுயர்பெயர்க்கு அளபயல் நீட்சியும் யகார வீற்றிற் களபுமா முருபே | 310 |
னவ்வீற் றுயர்திணை யல்லிரு பெயர்க்கண் இறுதி யழிவத னோடுஅயல் நீட்சி | 311 |
லளவீற் றஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க்கண்
ஈற்றயல் நீட்சியும் உருபா கும்மே | 312 |
விளியுருபுகளுக்குப் புறனடை
அண்மையி னியல்பும்ஈ றழிவும் சேய்மையின்
| 313 |
விளியுருபு ஏலாப் பெயர்கள்
நுவ்வொடு வினாச்சுட் டுற்ற ன ள ர
| 314 |
முதல்சினைத் தொடர்பின்கண் அவ்விரண்டினும் இரண்டனுருபு வாராதெனல்
முதலை ஐயுறிற் சினையைக் கண்ணுறும் | 315 |
ஐயுருபு முதல் சினையிரண்டினும் வாராமைக்குக் காரணமும் மேலைச் சூத்திரப் பொருளோடு இப்பொருளைப் பிண்டப்பொருளுக்கும் ஏற்பித்தலும்
முதலிவை சினையிவை யெனவே றுளவில | 316 |
உருபு மயக்கம்
யாத னுருபிற் கூறிற் றாயினும் | 317 |
சில வேற்றுமையுருபு செய்யுளிடத்துத் திரிந்துவருதல்
ஐஆன்குச் செய்யுட்கு அவ்வு மாகும் | 318 |
எட்டுவேற்றுமைக்கும் முடிக்குஞ்சொல்
எல்லை யின்னும் அதுவும் பெயர்கொளும் | 319 |
2. வினையியல்
தெரிநிலை வினைச்சொல்லின் பொது இலக்கணம்
செய்பவன் கருவி நிலஞ்செயல் காலம்
| 320 |
குறிப்பு வினைச்சொல்லின் பொது இலக்கணம்
பொருள்முத லாறினுந் தோற்றிமுன் னாறனுள்
| 321 |
வினைச்சொற்களின் பகுப்பு
அவைதாம்
| 322 |
2. வினைமுற்று
வினைமுற்று இனையவென்பது
பொதுஇயல்பு ஆறையுந் தோற்றிப் பொருட்பெயர் | 323 |
தெரிநிலைவினைமுற்றின் பாகுபாடு
ஒருவன்முத லைந்தையும் படர்க்கை யிடத்தும் | 324 |
ஆண்பாற் படர்க்கை வினைமுற்று அன்ஆ னிறுமொழி ஆண்பாற் படர்க்கை | 325 |
பெண்பாற் படர்க்கை வினைமுற்று அள்ஆ ளிறுமொழி பெண்பாற் படர்க்கை | 326 |
பலர்பாற் படர்க்கை வினைமுற்று
அர்ஆர் பவ்வூ ரகரமா ரீற்ற
| 327 |
ஒன்றன்பாற் படர்க்கை வினைமுற்று
துறுடுக் குற்றிய லுகர ஈற்ற
| 328 |
பலவின்பாற் படர்க்கை வினைமுற்று
அஆ ஈற்ற பலவின் படர்க்கை
| 329 |
இருதிணைப் பொதுவினை
தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை
| 330 |
தன்மை ஒருமை வினைமுற்று
குடுதுறு என்னுங் குன்றிய லுகரமோடு | 331 |
தன்மைப் பன்மை வினைமுற்று
அம்ஆம் என்பன முன்னிலை யாரையும்
| 332 |
வினையுடனு முடியுந்தன்மை வினைமுற்றுக்கள்
செய்கெ னெருமையுஞ் செய்குமென் பன்மையும்
| 333 |
உளப்பாட்டுப் பன்மை முன்னிலை முன்னிலை கூடிய படர்க்கையு முன்னிலை | 334 |
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஐயா யிகர ஈற்று மூன்றும் | 335 |
முன்னிலை முன்ன ரீயும் ஏயும் அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே | 336 |
முன்னிலைப் பன்மை வினைமுற்று
இர்ஈ ரீற்ற இரண்டும் இருதிணைப் | 337 |
வியங்கோள் வினைமுற்று
கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள் | 338 |
வேறு இல்லை உண்டு வேறில்லை யுண்டைம் பால்மூ விடத்தன | 339 |
3. பெயரெச்சம்
பெயரெச்சம் இனையவென்பது
செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற் | 340 |
செய்யுமென் எச்சத்திற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
செய்யுமென் எச்சஈற் றுயிர்மெய் சேறலுஞ்
| 341 |
4. வினையெச்சம்
வினயெச்சம் இனையவென்பது
தொழிலுங் காலமுந் தோன்றிப் பால்வினை | 342 |
வினையெச்ச வாய்பாடுகள்
செய்து செய்பு செய்யாச் செய்யூச் | 343 |
வினையெச்சங்களுக்கு முடிபு வேறுபாடு
அவற்றுள் | 344 |
வினைமுதல் கொள்ளுமென்றவற்றிற்கு ஒரு புறனடை சினைவினை சினையொடும் முதலொடுஞ் செறியும் | 345 |
சொல்திரி யினும்பொருள் திரியா வினைக்குறை | 346 |
5. ஒழிபு
வினைக் குறிப்பு ஆக்க வினைக்குறிப்பு ஆக்கமின்று இயலா | 347 |
செய்யுமென் முற்று
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற் | 348 |
பாற் பொதுவினை யாரென் வினாவினைக் குறிப்புஉயர் முப்பால் | 349 |
எவனென் வினாவினைக் குறிப்புஇழி இருபால் | 350 |
இருவகை முற்றிற்கும் ஒரு புறனடை
வினைமுற் றேவினை யெச்ச மாகலும் | 351 |
3. பொதுவியல்
பாற்பொதுமை நீங்குநெறி
இருதிணை ஆண்பெணுள் ஒன்றினை ஒழிக்கும்
| 352 |
பெயர் வினையிடத்து ஈற்றயல் திரிதல்
பெயர்வினை யிடத்து ன ள ர ய ஈற்றயல்
| 353 |
உருபும் வினையீறும் எதிர்மறையினுந் திரியாமை
உருபும் வினையும் எதிர்மறுத்து உரைப்பினுந் | 354 |
உருபும் வினையும் அடுக்கிமுடிதல்
உருபுபல அடுக்கினும் வினைவே றடுக்கினும் | 355 |
இடைப் பிறவரல்
உருபு முற்றுஈ ரெச்சங் கொள்ளும் | 356 |
முடிக்குஞ் சொல் நிற்குமிடம் எச்சப் பெயர்வினை எய்தும் ஈற்றினும் | 357 |
ஒருமொழி வேறொன்றை அமைத்தல் ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே | 358 |
திணைபாலிடப் பொதுமை நீங்கு நெறி
பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும் | 359 |
எச்சங்களின் முடிபு
பெயர்வினை உம்மைசொற் பிரிப்பென ஒழியிசை | 360 |
2. தொகைநிலைத் தொடர்மொழி
தொகைநிலைத் தொடர்மொழி இனையவென்பது
பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை | 361 |
தொகைநிலைத் தொடர்ப் பாகுபாடு
வேற்றுமை வினைப்பண்பு உவமை உம்மை | 362 |
வேற்றுமைத் தொகை
இரண்டு முதலா மிடையா றுருபும் | 363 |
வினைத் தொகை காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை | 364 |
பண்புத் தொகை
பண்பை விளக்கும் மொழிதொக் கனவும்
| 365 |
உவமத் தொகை உவம உருபிலது உவமத் தொகையே | 366 |
உவம உருபுகள்
போலப் புரைய ஒப்ப உறழ | 367 |
உம்மைத் தொகை
எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
| 368 |
அன்மொழித் தொகை ஐந்தொகை மொழிமேற் பிறதொக லன்மொழி | 369 |
தொகைநிலைத் தொடர் மொழிகளிற் பொருற்சிறக்கும் இடங்கள்
முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி
| 370 |
இடத்தொகை பெயர்த்தொகைகட்கு வேறுபாடறிகுறி
வல்லொற்று வரினே யிடத்தொகை யாகும்
| 371 |
உம்மைத்தொகைக்கு புறநடை உயர்திணை உம்மைத் தொகைபல ரீறே | 372 |
தொகைநிலைத் தொடர் மொழிகள் பலபொருள் படுதல்
தொக்குழி மயங்குந இரண்டு முதலேழ்
| 373 |
3. தொகாநிலைத் தொடர்மொழி
முற்றுஈ ரெச்சம் எழுவாய் விளிப்பொருள் ஆறுரு பிடையுரி யடுக்கிவை தொகாநிலை | 374 |
4. வழாநிலை வழுவமைதி
வழு விகற்பங்கள்
திணையே பாலிடம் பொழுது வினாஇறை
| 375 |
திணையோடு வினாவிடையும் பாலோடு வினாவிடையும் வழுவாமற் காத்தல்
ஐயந் திணைபா லவ்வப் பொதுவினும் | 376 |
திணை வழுவமைதி
உயர்திணை தொடர்ந்த பொருள்முத லாறும் | 377 |
திணைபால்மரபு வழுவமைதி
திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும் | 378 |
திணைபால் வழுவமைதி
உவப்பினும் உயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும் | 379 |
பாலிட வழுவமைதி
ஒருமையிற் பன்மையும் பன்மையி னொருமையும் | 380 |
இடம் வழுவாமற் காத்தல்
தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை | 381 |
காலம் இறப்புஎதிர்வு நிகழ்வெனக் கால மூன்றே | 382 |
கால வழுவமைதி
முக்கா லத்தினும் ஒத்தியல் பொருளைச்
| 383 |
விரைவினு மிகவினுந் தௌிவினும் இயல்பினும் பிறழவும் பெறூஉமுக் காலமும் ஏற்புழி | 384 |
அறுவகை வினா
அறிவுஅறி யாமை ஐயுறல் கொளல்கொடை | 385 |
எண்வகை விடை
சுட்டு மறைநே ரேவல் வினாதல் | 386 |
வினாவிடைகளின் முதல்சினை வழுவாமை வினாவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல் | 387 |
மரபு
எப்பொரு ளெச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
| 388 |
மரபு வழாநிலை
வேறுவினைப் பல்பொருள் தழுவிய பொதுச்சொலும்
| 389 |
வினைசார்பு இனமிட மேவி விளங்காப் பலபொரு ளொருசொற் பணிப்பர் சிறப்பெடுத்தே | 390 |
எழுத்தியல் திரியாப் பொருள்திரி புணர்மொழி இசைத்திரி பாற்றௌிவு எய்து மென்ப | 391 |
மரபு வழாநிலையும் வழுவமைதியும்
ஒருபொருள் மேற்பல பெயர்வரி னிறுதி | 392 |
திணைநிலஞ் சாதி குடியே யுடைமை குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோடு இயற்பெய ரேற்றிடிற் பின்வரல் சிறப்பே | 393 |
படர்க்கை முப்பெயரோடு அணையிற் சுட்டுப் பெயர்பின் வரும்வினை யெனிற்பெயர்க் கெங்கும் மருவும் வழக்கிடைச் செய்யுட் கேற்புழி | 394 |
அசைநிலை பொருள்நிலை யிசைநிறைக் கொருசொல் இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும் | 395 |
மரபு வழாநிலை இரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந்து இசையா | 396 |
ஒருபொருட் பல்பெயர் பிரிவில வரையர் | 397 |
மரபு வழுவமைதி ஒருபொருட் பன்மொழி சிறப்பினின்வழா | 398 |
மரபு வழுவாமற் காத்தல்
இனைத்தென் றறிபொரு ளுலகின்இலாப் பொருள்
| 399 |
மரபு வழுவமைதி
செயப்படு பொருளைச் செய்தது போலத்
| 400 |
மரபு வழுவாமற் காத்தலும் மரபு வழுவமைதியும்
பொருள்முத லாறாம் அடைசேர் மொழியினம்
| 401 |
மரபு வழுவாமற் காத்தல் அடைமொழி யினமல் லதுந்தரும் ஆண்டுறின் | 402 |
மரபு வழுவாமற்காத்தலும் மரபு வழுவமைதியும்
அடைசினை முதல்முறை யடைதலு மீரடை | 403 |
மரபு வழுவமைதி இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் | 404 |
மரபு வழுவாமற் காத்தலும் வழுவமைதியும்
காரண முதலா ஆக்கம் பெற்றும் | 405 |
மரபு வழுவாமற் காத்தல்
தம்பா வில்லது இல்லெனி னினனாய் | 406 |
ஈ தா கொடுஎனும் மூன்றும் முறையே இழிந்தோ னொப்போன் மிக்கோ னிரப்புரை | 407 |
மரபு வழுவமைதி முன்னத்தி னுணருங் கிளவியு முளவே | 408 |
கேட்குந போலவும் கிளக்குந போலவும் இயங்குந போலவும் இயற்றுந போலவும் அஃறிணை மருங்கினும் அறையப் படுமே | 409 |
உருவக உவமையில் திணைசினை முதல்கள் பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே | 410 |
5. பொருள் கோள்
பொருள்கோளின் பெயருந் தொகையும்
யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண் | 411 |
யாற்றுநீர்ப் பொருள்கோள்
மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்
| 412 |
மொழிமாற்றுப் பொருள்கோள்
ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை
| 413 |
நிரனிறை பொருள்கோள்
பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளையும்
| 414 |
பூட்டுவிற் பொருள் கோள்
எழுவா யிறுதி நிலைமொழி தம்முள் | 415 |
தாப்பிசைப் பொருள்கோள்
இடைநிலை மொழியே ஏணையீ ரிடத்தும் | 416 |
அளைமறிபாப்புப் பொருள்கோள்
செய்யு ளிறுதி மொழியிடை முதலிலும் | 417 |
கொண்டுகூட்டுப் பொருள்கோள்
யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை | 418 |
அடிமறிமாற்றுப் பொருள்கோள்
ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறும் அடியவும் | 419 |
4. இடையியல்
இடைச் சொல்லின் பொது இலக்கணம்
வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள் | 420 |
இடைச்சொற் பொருட்கள்
தெரிநிலை தேற்றம் ஐயம்முற்று எண்சிறப்பு | 421 |
ஏகார இடைச்சொல்
பிரிநிலை வினாஎண் ணீற்றசை தேற்றம்
| 422 |
ஓகார இடைச்சொல்
ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை
| 423 |
என என்று இடைச்சொற்கள்
வினைபெயர் குறிப்பிசை எண்பண் பாறினும்
| 424 |
உம்மை இடைச்சொல்
எதிர்மறை சிறப்பையம் எச்சமுற் றளவை
| 425 |
முற்றும்மைக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி முற்றும்மை ஒரோவழி எச்சமு மாகும் | 426 |
எச்ச உம்மைக் காவதோர் விதி செவ்வெண் ஈற்றதாம் எச்ச வும்மை | 427 |
சில எண்ணிடைச்சொற்களுக் காவதோர் இலக்கணம்
பெயர்ச்செவ் வெண்ஏ என்றா எனாஎண்
| 428 |
சில எண்ணிடச்சொற்களுக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
என்றும் எனவும் ஒடுவும் ஒரோவழி | 429 |
பெயரொடு வரும்இடைச்சொற்கள் வினையொடும் வருமாறு வினையொடு வரினுமெண் ணினைய ஏற்பன | 430 |
தில்லிடைச்சொல் விழைவே காலம் ஒழியிசை தில்லே | 431 |
மன்னிடைச்சொல்
மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கங் | 432 |
மற்றென்னும் இடைச்சொல் வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே | 433 |
முன்னதற்கோர் புறனடை மற்றைய தென்பது சுட்டிய தற்கினம் | 434 |
கொல்லிடைச்சொல் கொல்லே ஐயம் அசைநிலைக் கூற்றே | 435 |
ஒடு தெய்ய ஒடுவுந் தெய்யவும் இசைநிறை மொழியே | 436 |
அந்தில் ஆங்கு அந்திலாங் கசைநிலை யிடப்பொரு ளவ்வே | 437 |
அம்ம இடைச்சொல் அம்ம உரையசை கேண்மினென் றாகும் | 438 |
வியங்கோளசை மாஎன் கிளவி வியங்கோ ளசைச்சொல் | 439 |
முன்னிலையசைச்சொல்
மியாஇக மோமதி அத்தை இத்தை
| 440 |
எல்லா இடத்தும் வரும் அசைச்சொல்
யாகா பிறபிறக்கு அரோபோ மாதுஇகும் | 441 |
5. உரியியல்
உரிச்சொல்லின் பொது இலக்கணம்
பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி | 442 |
பண்பிது என்பது உயிருயி ரல்லதாம் பொருட்குணம் பண்பே | 443 |
உயிர்ப்பொருள்
மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின் | 444 |
ஓரறிவுயிர் புல்மரம் முதலஉற்று அறியுமோர் அறிவுயிர் | 445 |
ஈரறிவுயிர் முரள்நந்து ஆதிநா அறிவொடீ ரறிவுயிர் | 446 |
மூவறிவுயிர் சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர் | 447 |
நாலறிவுயிர் தும்பிவெண் டாதிகண் ணறிவின்நா லறிவுயிர் | 448 |
ஐயறிவுயிர்
வானவர் மக்கள் நரகர் விலங்குபுள் | 449 |
உயிரில்லாத பொருள்
உணர்விய லாமுயி ரொன்று மொழித்த | 450 |
முன்னதற்கு ஒரு புறனடை
ஒற்றுமை நயத்தின் ஒன்றெனத் தோன்றினும் | 451 |
உயிர்ப்பொருள்களின் குணப்பண்பு
அறிவுஅரு ளாசை யச்சம் மானம் | 452 |
உயிர்ப் பொருள்களின் தொழிற்பண்பு
துய்த்தல் துஞ்சல் தொழுத லணிதல் | 453 |
உயிரல் பொருள்களின் குணப்பண்பு
பல்வகை வடிவுஇரு நாற்றம்ஐ வண்ணம் | 454 |
இருபொருள்களுக்கும் பொதுவாகிய
தொழிற்பண்பு
தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல் | 455 |
ஒருகுணந் தழுவிய உரிச்சொல் சால உறுதவ நனிகூர் கழிமிகல் | 456 |
பலகுணந் தழுவிய உரிச்சொல்
கடியென் கிளவி காப்பே கூர்மை | 457 |
ஒருகுணந் தழுவிய உரிச்சொல்
மாற்றம் நுவற்சிசெப் புரைகரை நொடியிசை | 458 |
முழக்குஇரட் டொலிகலி இசைதுவை பிளிறிரை இரக்கழுங் கியம்ப லிமிழ்குளி றதிர்குரை கனைசிலை சும்மை கௌவை கம்பலை அரவ மார்ப்போ டின்னன ஓசை | 459 |
இவ்வியலுக்குப் புறனடை
இன்ன தின்னுழி யின்னண மியலும்
| 460 |
இவ்வதிகாரத்துக்குப் புறனடை
சொற்றொறு மிற்றிதன் பெற்றியென் றனைத்தும் | 461 |
இந்நூலுக்குப் புறனடை
பழையன கழிதலும் புதியன புகுதலும் | 462 |
கருத்துகள்
கருத்துரையிடுக