மதுரைக் காஞ்சி - மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்


சங்க கால நூல்கள்

Back

மதுரைக் காஞ்சி
மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்



பத்துப்பாட்டில் ஆறாவதான
மதுரைக் காஞ்சி

Source:
பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்.
இவை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி உத்தமதானபுரம், வே. சாமிநாதையரால் பரிசோதித்து, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்
சென்னை : கேசரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன.
(மூன்றாம் பதிப்பு) பிரஜோத்பத்தி வருடம் ஆவணி மாதம்.
Copyright Registered] - 1931 [விலை ரூபா. 5
--------------

மதுரைக் காஞ்சி -மூலம்

    ஓங்குதிரை வியன்பரப்பி
    னொலிமுந்நீர் வரம்பாகத்
    தேன்றூங்கு முயர்சிமைய
    மலைநாறிய வியன்ஞாலத்து
    வலமாதிரத்தான் வளிகொட்ப         5
    வியனாண்மீ னெறியொழுகப்
    பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறு
    மிரவுச்செய்யும் வெண்டிங்களு
    மைதீர்ந்து கிளர்ந்துவிளங்க

    மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்கத்         10
    தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய
    நிலனு மரனும் பயனெதிர்பு நந்த
    நோயிகந்து நோக்குவிளங்க
    மேதக மிகப்பொலிந்த
    வோங்குநிலை வயக்களிறு         15
    கண்டுதண்டாக் கட்கின்பத்
    துண்டுதண்டா மிகுவளத்தா
    னுயர்பூரிம விழுத்தெருவிற்
    பொய்யறியா வாய்மொழியாற்
    புகழ்நிறைந்த நன்மாந்தரொடு         20
    நல்லூழி யடிப்படரப்
    பல்வெள்ள மீக்கூற
    வுலக மாண்ட வுயர்ந்தோர் மருக
    பிணக்கோட்ட களிற்றுக்குழும்பி

    னிணம்வாய்ப்பெய்த பேய்மகளி         25
    ரிணையொலியிமிழ் துணங்கைச்சீர்ப்
    பிணையூப மெழுந்தாட
    வஞ்சுவந்த போர்க்களத்தா
    னாண்டலை யணங்கடுப்பின்
    வயவேந்த ரொண்குருதி         30
    சினத்தீயிற் பெயர்புபொங்கத்
    தெறலருங் கடுந்துப்பின்
    விறல்விளங்கிய விழுச்சூர்ப்பிற்
    றொடித்தோட்கை துடுப்பாக
    வாடுற்ற வூன்சோறு         35
    நெறியறிந்த கடிவாலுவ
    னடியொதுங்கிப் பிற்பெயராப்
    படையோர்க்கு முருகயர
    வமர்கடக்கும் வியன்றானைத்
    தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற்         40
    றொன்முது கடவுட் பின்னர் மேய
    வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந
    விழுச்சூழிய விளங்கோடைய
    கடுஞ்சினத்த கமழ்கடாஅத்தளறுபட்ட நறுஞ்சென்னிய         45
    வரைமருளு முயர்தோன்றல
    வினைநவின்ற பேர்யானை
    சினஞ்சிறந்து களனுழக்கவு
    மாவெடுத்த மலிகுரூஉத்துக
    ளகல்வானத்து வெயில்கரப்பவும்         50
    வாம்பரிய கடுந்திண்டேர்
    காற்றென்னக் கடிதுகொட்பவும்
    வாண்மிகு மறமைந்தர்
    தோண்முறையான் வீறுமுற்றவு
    மிருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்         55

    பொருதவரைச் செருவென்று
    மிலங்கருவிய வரை நீந்திச்
    சுரம்போழ்ந்த விகலாற்ற
    லுயர்ந்தோங்கிய விழுச்சிறப்பி
    னிலந்தந்த பேருதவிப்         60
    பொலந்தார் மார்பி னெடியோ னும்பன்
    மரந்தின்னூஉ வரையுதிர்க்கு
    நரையுருமி னேறனையை
    யருங்குழுமிளைக் குண்டுகிடங்கி
    னுயர்ந்தோங்கிய நிரைப்புதவி         65
    னெடுமதி னிரைஞாயி
    லம்புமி ழயிலருப்பந்
    தண்டாது தலைச்சென்று
    கொண்டுநீங்கிய விழுச்சிறப்பிற்

    றென்குமரி வடபெருங்கல்         70
    குணகுடகட லாவெல்லைத்
    தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
    வெற்றமொடு வெறுத்தொழுகிய
    கொற்றவர்தங் கோனாகுவை
    வானியைந்த விருமுந்நீர்ப்         75
    பேஎநிலைஇய விரும்பௌவத்துக்
    கொடும்புணரி விலங்குபோழக்
    கடுங்காலொடு கரைசேர
    நெடுங்கொடிமிசை யிதையெடுத்
    தின்னிசைய முரசமுழுங்கப்         80
    பொன்மலிந்த விழுப்பண்ட
    நாடார நன்கிழிதரு
    மாடியற் பெருநாவாய்
    மழைமுற்றிய மலைபுரையத்
    துறைமுற்றிய துளங்கிருக்கைத்         85
    தெண்கடற் குண்டகழிச்
    சீர்சான்ற வுயர்நெல்லி
    னூர்கொண்ட வுயர்கொற்றவ
    நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர்

    பாடுசிலம்பு மிசையேற்றத்         90
    தோடுவழங்கு மகலாம்பியிற்
    கயனகைய வயனிறைக்கு
    மென்றொடை வன்கிழா அ
    ரதரி கொள்பவர் பகடுபூண் டெண்மணி
    யிரும்பு ளோப்பு மிசையே யென்று         95
    மணிப்பூ முண்டகத்து மணன்மலி கானற்
    பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப
    ஒருசார், விழவுநின்ற வியலாங்கண்

--------
@வீடு பேறு நிமித்தமாகச் சான்றோர் பல்வேறு நிலையாமையை அறைந்த மதுரைக்காஞ்சி காஞ்சித்திணைக்கு உதாரணமென்பர்; தொல். புறத். சூ. 23, ந.

1. நேர்புநிரையாகிய ஆசிரியவுரிச்சீர் வஞ்சியுள் வந்ததற்கும் (தொல். செய். சூ. 14, பேர்.), குறளடிக்கும் (தொல். செய். சூ. 40. ந.) இவ்வடி மேற்கோள்.

1-2. வழிமோனைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். செய். சூ. 94, பேர்.

3. (பி-ம்.) 'தூங்கியவுயர்'

தேன் தூங்குமுயர்சிமையம் : "பிரசந் தூங்கு மலைகிழவோற்கே" (குறுந். 392:8) ; "பிரசந் தூங்கு சேட்சிமை, வரை" (அகநா. 242 : 21-2)

4. "மாமலை ஞாறிய ஞாலம்" (பரி. "வானாரெழிலி") ; "கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே" (பு. வெ. 35)

3-4. இவ்வடிகள் பதினெட்டெழுத்தான் வந்தனவென்பர் ; தொல். செய். சூ. 50, இளம்.

1-4. யா. வி. செய். சூ. 2, மேற்.

5. "வளிவலங் கொட்கு மாதிரம் வளம்படும்" (மணி. 12 : 91) சிந்தடியென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். செய். சூ. 38, ந.

7-8. பெரும்பாண். 442-இன் உரையையும் குறிப்புரையையும் பார்க்க. முரணிரனிறைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; யா. வி. சூ. 95, உரை

6-10. "மீன்வயி னிற்ப வானம் வாய்ப்ப" (பதிற். 90: 1)

11. தொடுப்பு : "தொடுப்பே ருழவ ரோதைப் பாணியும்" (சிலப். 27: 230)

ஆயிரம் : "வேலி யாயிரம் விளையுட் டாக" (பொருந. 246-7)

10-11. "வான மின்னுவசிவு பொழிய வானா, திட்ட வெல்லாம் பெட்டாங்கு விளைய" (மலைபடு. 97-8)

12. (பி-ம்.) 'எதிர்புந்த'

14. (பி-ம்.) 'மேதகப் பொலிந்த'

17. (பி-ம்.) 'தண்டாவிகு'

16-7. ஆறெழுத்து இருசீரடி வஞ்சிப்பாவிற்கு இவ்வடிகள் மேற்கோள் ; யா. வி. சூ. 95, உரை.

18. (பி-ம்.) 'பூரிய விழுத்தெரு'

21. "நல்லூழி யாவர்க்கும் பிழையாது வருதனின்" (கலித். 99:5-6) ; "முத லூழியின்பம், வரவிப் படிதன்னை வாழ்வித்த வாணன்" (தஞ்சை. 286) ; "வேதமு மெய்ம்மையு மாதியுகம்போலத் தலைசிறப்ப வந்தருளி" (விக்ரம. மெய்க். "பூமாலை") ; "ஆதியுகங் கொழுந்து விட்டுத் தழைத்தோங்க" (இரண்டாம் இராசஇராச. மெய்க். "பூமருவிய பொழில்")

22. "ஆயிர வெள்ளம் வாழிய பலவே" (பதிற். 21:38)

24. பிணக்கோட்ட களிறு : "வேலாண் முகத்த களிறு" (குறள், 500)

25. (பி-ம்.) 'பேஎய்'

26. துணங்கை : பெரும்பாண். 235-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

25-6. "நிணந்தின் வாய டுணங்கை தூங்க" (முருகு. 56) என்பதையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

28. (பி-ம்.) 'வந்ந்த'

34. "தோளுங் கொண்டு துடுப்பெனத் துழாவிக் கொள்ளீர்" (தக்க. 748)

34-5. "பிடித்தாடி யன்ன பிறழ்பற்பே யாரக், கொடித்தானை மன்னன் கொடுத்தான் - முடித்தலைத், தோளொடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக, மூளையஞ் சோற்றை முகந்து" (பு. வெ. 160)

34-6. தக்க. 748, உரை, மேற்.

29-35. "முடித்தலை யடுப்பாகப், புனற்குருதி யுலைக்கொளீஇத், தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியி, னடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய" (புறநா. 26:8-11)

37. "பிறக்கடி யொதுங்காப் பூட்கை" (பதிற். 80:8)

38. (பி-ம்.) 'படையோர் முருகயர'

29-38. "முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித், தொடித் தோட்டுடுப்பிற் றுழைஇய வூன்சோறு, மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்ட" (சிலப். 26:242-4)

40-42. "மறைமுது முதல்வன் பின்னர் மேய, பொறையுயர் பொதியிற் பொருப்பன்" (சிலப். 12 : இறுதிப்பகுதி)

44. யானைமதம் கமழ்தல் : "குதிபாய் கடாம், மதகோடி யுல கேழு மணநாற" (தக்க. 3) என்பதன் விசேடக்குறிப்பைப் பார்க்க ; "மாவ தத்தினை யிழைத்திடும் பூட்கையின் மதநீர், காவ தத்தினுங் கமழ்தரு கலிங்கநாடு" (கந்த. மார்க்கண்டேயப். 114)

45. (பி-ம்.) 'அயறுபட்டநறுஞ்'; புறநா. 22:7

46. பெரும்பாண். 352 ; புறநா. 38:1, 42:1.

47. "தொழினவில்யானை" (பதிற். 84:4)

44-7. கடுஞ்சினத்த யானை: "கடுஞ்சினத்த களிறு" (மதுரைக். 179); "கடுஞ்சினத்த களிற்றெருத்தின்" (யா. வி. சூ. 56, மேற். "தாழிரும்")

48. (பி-ம்.) 'உழக்க'

44-8. "செல்சமந் தொலைத்த வினைநவில் யானை, கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி, வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந்தியல" (பதிற். 82:4-6)

50. (பி-ம்.) 'வெயிற்கரப்ப'

51. (பி-ம்.) 'வாப்பரிய'

52. (பி-ம்.) 'காற்றெனக்'

51-2. "காலெனக் கடுக்குங் கவின்பெறு தேரும்" (மதுரைக். 388)

55-6. "கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழிய, னாலங்கானத் தகன்றலை சிவப்பச், சேரல் செம்பியன் சினங்கெழு திதியன், போர்வல் லியானைப் பொலம்பூ ணெழினி, நாரறி நறவி னெருமை யூரன், தேங்கம ழலகத்துப் புலர்ந்த சாந்தி, னிருங்கோ வேண்மா னியறேர்ப் பொருநனென், றெழுவர் நல்வல மடங்க வொருபகல், முரைசொடு வெண்குடை யகப்படுத் துரைசெலக், கொன்று", (அகநா. 36:13-22) ; "எழுவர் நல்வலங் கடந்தோய்", "புனைகழ லெழுவர் நல்வல மடங்க, வொருதா னாகிப் பொருதுகளத் தடலே" (புறநா. 19 : 17, 76:12-3)

58. (பி-ம்.) 'மலைநீந்தி'

இலங்கருவிய வரை : "இலங்கு மருவித்தே யிலங்கு மருவித்தே, வானி னிலங்கு மருவித்தே தானுற்ற, சூள்பேணான் பொய்த்தான் மாலை" (கலித். 41:18-20)

61. தார்மார்பு : "வண்ண மார்பிற்றார்" (புறநா. 1:2) ; நெடியோன் : "முந்நீர் விழவி னெடியோன்" (புறநா. 9:10) ; "உரைசால் சிறப்பி னெடியோன்" (சிலப். 22:60)

60 - 61. நிலந்தந்த பேருதவி நெடியோன் : "நிலந்தரு திருவி னெடியோன் போல" (மதுரைக். 763) ; "நிலந்தரு திருவிற் பாண்டியன்" (தொல். பாயிரம்)

63. "அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச், செருமாண் பஞ்சவ ரேறே" (புறநா. 58:7-8)

67. "அம்புமிழ்வ வேலுமிழ்வ" (சீவக. 103)

64 - 7. "கடிமிளைக் குண்டுகிடங்கி, னெடுமதி னிரைஞாயி, லம்புடை யாரெயில்" (பதிற். 20:17-9)

70 - 71. மு. புறநா. 17:1-2.

72. மு. ஒ. மதுரைக். 124 ; பதிற். 90:8.

70 - 72. "வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும், குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும், குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்", "தென்குமரி வடபெருங்கற், குணகுடகட லாவெல்லை, குன்றுமலை காடுநா, டொன்றுபட்டு வழிமொழிய" (புறநா. 6:1-4, 17:1-4)

80. கப்பலில் முரசம் முழங்குதல் : "ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன், றீடுபடச் செய்திளைய ரேத்தவிமிழ் முந்நீர்க், கோடு பறை யார்ப்ப ................ ஓடியதை யன்றே" (சீவக. 501)

82. (பி-ம்.) 'நாடாரக்கரைசேர நெடுங்கொடிமிசை நன்கிழி தரும்'

89. (பி-ம்.) 'நீர்தெவுநிரை'

தெவ்வுகொள்ளுதலாகிய குறிப்புப்பொருளை யுணர்த்து மென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி, சூ. 49, சே ; 47, ந ; இ-வி. சூ. 290.

90. (பி-ம்.) 'ஏத்தத்'

92. (பி-ம்.) 'கயமகைய'

91-3. ஆம்பி, கிழாஅர் : "ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேற்றமும்" (சிலப். 10:110)

89-93. கிழார் பூட்டைப்பொறி யென்னும் பொருளில் வருமென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; சிலப். 10:110, அடியார்.

94. (பி-ம்.) 'அதரிகொள்பவரிசை'

96. சிறுபாண். 148-ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

98. "விழவுநின்ற வியன்மறுகில்" (மதுரைக். 328)
--------------

    முழவுத்தோண் முரட்பொருநர்க்
    குருகெழு பெருஞ்சிறப்பி         100
    னிருபெயர்ப் பேராயமொ
    டிலங்குமருப்பிற் களிறுகொடுத்தும்
    பொலந்தாமரைப் பூச்சூட்டியு
    நலஞ்சான்ற கலஞ்சிதறும்
    பல்குட்டுவர் வெல்கோவே         105

    கல்காயுங் கடுவேனிலொ
    டிருவானம் பெயலொளிப்பினும்
    வரும்வைகன் மீன்பிறழினும்
    வெள்ளமா றாது விளையுள் பெருக
    நெல்லி னோதை யரிநர் கம்பலை         110
    புள்ளிமிழ்ந் தொலிக்கு மிசையே யென்றுஞ்
    சலம்புகன்று சுறவுக்கலித்த
    புலவுநீர் வியன்பௌவத்து
    நிலவுகானன் முழவுத்தாழைக்
    குளிர்ப்பொ தும்பர் நளித்தூவ         115
    னிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
    யிருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொ
    டொலியோவாக் கலியாணர்
    முதுவெள்ளிலை மீக்கூறும்
    வியன்மேவல் விழுச்செல்வத்         120
    திருவகையா னிசைசான்ற
    சிறுகுடிப் பெருந்தொழுவர்
    குடிகெழீஇய நானிலவரொடு
    தொன்றுமொழிந்து தொழில்கேட்பக்
    காலென்னக் கடிதுராஅய்         125
    நாடுகெட வெரிபரப்பியாலங்கானத் தஞ்சுவரவிறுத்
    தரசுபட வமருழக்கி
    முரசுகொண்டு களம்வேட்ட
    வடுதிறலுயர் புகழ்வேந்தே
    நட்டவர் குடியுயர்க்குவை         130
    செற்றவ ரரசுபெயர்க்குவை
    பேருலகத்து மேஎந்தோன்றிச்
    சீருடைய விழுச்சிறப்பின்
    விளைந்துமுதிர்ந்த விழுமுத்தி
    னிலங்குவளை யிருஞ்சேரிக்         135
    கட்கொண்டிக் குடிப்பாக்கத்து
    நற்கொற்கையோர் நசைப்பொருந
    செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்
    றஞ்சுவரத் தட்கு மணங்குடைத் துப்பிற்
    கோழூஉன்குறைக் கொழுவல்சிப்         140
    புலவுவிற் பொலிகூவை
    யொன்றுமொழி யொலியிருப்பிற்
    றென்பரதவர் போரேறே
    யரியவெல்லா மெளிதினிற்கொண்         145
    டுரிய வெல்லா மோம்பாது வீசி
    நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து
    பனிவார் சிமையக் கானம் போகி
    யகநாடு புக்கவ ரருப்பம் வௌவி
    யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து         150
    மேம்பட மரீஇய வெல்போர்க் குருசி
    லுறுசெறுநர் புலம்புக்கவர்
    கடிகாவி னிலைதொலைச்சி

    யிழிபறியாப் பெருந்தண்பணை
    குரூஉக்கொடிய வெரிமேய         155
    நாடெனும்பேர் காடாக
    வாசேந்தவழி மாசேப்ப
    வூரிருந்தவழி பாழாக
    விலங்குவளை மடமங்கையர்
    துணங்கையஞ்சீர்த் தழூஉமறப்ப         160
    வவையிருந்த பெரும்பொதியிற்
    கவையடிக் கடுநோக்கத்துப்
    பேய்மகளிர் பெயர்பாட
    வணங்குவழங்கு மகலாங்க
    ணிலத்தாற்றுங் குழூஉப்புதவி         165
    னரந்தைப் பெண்டி ரினைந்தன ரகவக்
    கொழும்பதிய குடிதேம்பிச்
    செழுங்கேளிர் நிழல்சேர
    நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்
    குடுமிக் கூகை குராலொடு முரலக்         170
    கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக்

    களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர
    நல்லேர் நடந்த நசைசால் விளைவயற்
    பன்மயிர்ப் பிணவொடு கேழ லுகள
    வாழா மையின் வழிதவக் கெட்டுப்         175
    பாழா யினநின் பகைவர் தேஎ
    மெழா அத்தோ ளிமிழ்முழக்கின்
    மாஅத்தா ளுயர்மருப்பிற்
    கடுஞ்சினத்த களிறுபரப்பி
    விரிகடல் வியன்றானையொடு         180
    முருகுறழப் பகைத்தலைச்சென்
    றகல்விசும்பி னார்ப்பிமிழப்
    பெயலுறழக் கணைசிதறிப்
    பலபுரவி நீறுகைப்ப
    வளைநரல வயிரார்ப்பப்         185

    பீடழியக் கடந்தட்டவர்
    நாடழிய வெயில்வௌவிச்
    சுற்றமொடு தூவறுத்தலிற்
    செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
    வியன்கண் முதுபொழின் மண்டில முற்றி         190
    யரசியல் பிழையா தறநெறி காட்டிப்
    பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது
    குடமுதற் றோன்றிய தொன்றுதொழு பிறையின்
    வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றங்
    குணமுதற் றோன்றிய வாரிருண் மதியிற்         195
    றேய்வன கெடுகநின் றெவ்வ ராக்க

    முயர்நிலை யுலக மமிழ்தொடு பெறினும்
    பொய்சே ணீங்கிய வாய்நட் பினையே
    முழங்குகட லேணி மலர்தலை யுலகமொ
    டுயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்         200
---------

99-102. பொருந. 125-7ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க ; "தெருவி னலமருந் தெண்கட் டடாரிப், பொருவில் பொருநநீ செல்லிற்-செருவில், அடுந்தடக்கை நோன்றா ளமர்வெய்யோ னீயும், நெடுந்தடக்கை யானை நிரை" (பு. வெ. 218)

99-103. பொருநருக்குப் பொற்றாமரைப் பூச்சூட்டல் : பொருந. 159-60-ஆம் அடிகளையும் அவற்றின் குறிப்புரைகளையும் பார்க்க.

105. "பலராகிய சான்றீரென்பது, பல்சான்றீரெனத் தொக்கது, 'பல்குட்டுவர்' என்பதுபோல" (புறநா. 195, உரை)

106. "மலைவெம்ப", "விறன்மலை வெம்ப", "இலங்குமலை வெம்பிய", "கல்காய்ந்த காட்டகம்" (கலித். 13:5, 20:5, 23:3, 150:11)

114. நிலவு மணலுக்கு உவமை : பொருந. 213-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

115. (பி-ம்) 'குளிர்ப் பொதும்பு'

116. திமில் வேட்டுவர் : "வன்கைத் திமிலர்" (மதுரைக். 319) ; "பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே" (குறுந். 123 : 5)

124. மு. ஒ. மதுரைக். 72

126. "இழிபறியாப் பெருந்தண்பணை, குரூஉக்கொடிய வெரிமேய, நாடெனும்பேர் காடாக" (மதுரைக். 154-6) ; "முனையெரி பரப்பிய", "ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப், போர்சுடு கமழ் புகை மாதிர மறைப்ப" (பதிற். 15:2, 71:9-10) ; "வாடுக விறை வநின் கண்ணி யொன்னார், நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே",

"பகைவ, ரூர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக், கொள்ளை மேவலை" "பெருந்தண்பணை பாழாக, வேம நன்னா டொள்ளெரி யூட்டினை" (புறநா. 6:21-2, 7:7-9, 16-7) ; அயிலென்ன கண்புதைத் தஞ்சியலறி, மயிலன்னார் மன்றம் படரக்-குயிலகவ, வாடிரிய வண்டிமிருஞ் செம்ம லடையார்நாட், டோடெரியுள் வைகின வூர்" (பு. வெ. 49)

129. முரசுகொள்ளல் : "முரசுகொண், டாண்கட னிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு" (பதிற். 31:13-4) ; "முரைசொடு வெண்குடை யகப்படுத் துரைசெலக், கொன்றுகளம் வேட்ட ஞான்றை" (அகநா. 36:21 - 2) ; "பிணியுறு முரசங் கொண்ட காலை", "அருஞ் சமஞ்சிதையத் தாக்கி முரசமொ, டொருங்ககப் படேஎ னாயின்" "விசிபிணி முரசமொடு மண்பல தந்த, திருவீழ் நுண்பூட் பாண்டியன் மறவன்" (புறநா. 25:7, 72:8 - 9, 179:4 - 5)

களம் வேட்டல் : முருகு. 99 -100-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

127- 9. மதுரைக். 55 - 6-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

128 - 30. "அரைசுபட வமருழக்கி, உரைசெல முரசுவௌவி, முடித்தலை யடுப்பாகப், புனற்குருதி யுலைக்கொளீஇத், தொடித்தோட்டுடுப்பிற் றுழந்தவல்சியின், அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய" (புறநா. 26:6-11)

131 - 2. "மலைந்தோர் தேஎ மன்றம் பாழ்பட, நயந்தோர் தேஎ நன்பொன் பூப்ப" (பெரும்பாண். 423-4) ; "இகழுநர்ப் பிணிக்கு மாற்றலும் புகழுநர்க், கரசுமுழுது கொடுப்பினு மமரா நோக்கமொடு ............. வீயாது சுரக்குமவ னாண்மகி ழிருக்கையும்" (மலைபடு. 73-6) ; "செற்றோரை வழிதபுத்தன, னட்டோரை யுயர்புகூறினன்" (புறநா. 239 : 4 -5); "நட்டாரை யாக்கிப் பகைதணிந்து" (பழமொழி, 398; சிறுபஞ்ச, 18) ; பெரும்பாண். 419-குறிப்புரையையும், 424 - குறிப்புரையையும் பார்க்க.

135. "முதிர்வா ரிப்பி முத்தம்" (புறநா. 53 :1)

137 - 8. பாக்கமென்பதற்கு அரசனிருப்பென்று பொருள்கூறி இவ்வடிகளை மேற்கோளாகக் காட்டினர் ;பதிற். 13 : 12, உரை.

135 - 8. கொற்கை முத்தம் : "முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை" (நற். 23 : 6) ; "பொறையன் செழியன் பூந்தார் வளவன், கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை, பாவை முத்த மாயிதழ்க் குவளை" (யா. வி. சூ. 95, மேற்.) ; சிறுபாண். 57 - 62-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

140. (பி-ம்.) 'அஞ்சுவரக்கடக்கும்'

141. "புகழ்படப் புண்ணிய கோழூன் சோறும்" (மதுரைக். 533) ; "ஊன்சோற் றமலை", "பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள்ளமலை" (புறநா. 33 : 14, 177 : 14) ; "ஊன்களோடவைபதஞ் செய்ய" (கந்த. மகேந்திர. நகர்புகு. 29)

143. ஒன்றுமொழி : "ஒன்றுமொழிக் கோசர்" (குறுந். 73 : 4)

146. ஓம்பாதுவீசி : "ஓம்பா வள்ளல்" (மலைபடு. 400) ; "ஓம்பா வீகையின் வண்மகிழ் சிறந்து" (பதிற். 42 : 13) ; "ஓடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக், கடந்தடு தானைச் சேர லாதனை", "ஓம்பா தீயு மாற்ற லெங்கோ" (புறநா. 8 : 4 - 5, 22 : 33); "ஓம்பா வீகையும்" (பு. வெ. 189)

145 - 6. "கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ, மறங்கலங்கத் தலைச்சென்று, வாளுழந்ததன் றாள்வாழ்த்தி, நாளீண்டிய நல்லகவர்க்குத் தேரோடு மாசிதறி" (மதுரைக். 220 - 24) ; "நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து, நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ, யருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு, பெருவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி", "பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற, வரிய வென்னா தோம்பாது வீசி", "வென்றுகலந் தரீஇயர் வேண்டுபுலத் திறுத்து" (பதிற். 2-ஆம் பத்தின் பதிகம், 44 : 3 - 4, 53 : 1) ; "அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண், வெங்கட்கு வீசும் விலையாகும்-செங்கட், செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி, வரிச்சிலையாற் றந்த வளம்" (பு. வெ. 16) ; சிறுபாண். 247 - 8-ஆம் அடிகளையும் அவற்றின் குறிப்புரைகளையும் பார்க்க.

149. "அம்புமி ழயிலருப்பம் ............. கொண்டு", "நாடழிய வெயில்வௌவி", "நாடுடை நல்லெயி லணங்குடைத் தோட்டி" (மதுரைக். 67 - 9, 187, 693)

அகமென்பதற்குப் பொருள் மருதமென்பதற்கும் (சீவக. 1613, ந,), மதில் பெரும்பான்மையும் மருதநிலத்திடத்தென்பதற்கும் (தொல். புறத். சூ. 9, ந.) இவ்வடி மேற்கோள்.

150, மு, "யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து" (பதிற். 15 : 1)

152 - 3. பகைவர்களுடைய காவன்மரங்களை அழித்தல் : "பலர் மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின், வடியுடை முழுமுத றுமிய", "வயவர் வீழ வாளரின் மயக்கி, இடங்கவர் கடும்பி னரசுதலை பனிப்பக் கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே", "பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின், முழாரை முழுமுத றுமியப் பண்ணி" (பதிற். 11 : 12 - 3, 12 : 1 - 3, 5-ஆம் பத்தின் பதிகம்); "வடிநவி னவியம் பாய்தலி னூர் தொறும், கடிமரந் துளங்கிய காவும்", "நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து, வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும், கடிமரந்தடியு மோசை", "கடிமரந் தடிதல்" (புறநா. 23 : 8 - 9, 36: 7 - 9, 57 : 10) ; "பழையன் காக்குங் குழைபயி னெடுங்கோட்டு, வேம்பு முதறடிந்த ........... பொறைய" (சிலப். 27 : 124 - 6)

153. (பி - ம்.) ' கடிகாவு '

இகரவீற்று உரிச்சொல்லின் முன் வல்லினம் இயல்பாக வந்ததற்கு, 'கடிகா' என்பது மேற்கோள் ; தொல். தொகை. சூ. 16. ந.

154 - 5. மதுரைக் 126-ஆம் அடியின் குறிப்புரையைப்பார்க்க.

159 - 60. மகளிர் துணங்கையாடல் : "துணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி " (மதுரைக். 329) ; "விழவயர் துணங்கை தழூஉகஞ் செல்ல" (நற். 50 : 3) ; "மகளிர் தழீஇய துணங்கை யானும்", "வணங்கிறைப் பணைத்தோ ளெல்வளை மகளிர், துணங்கை நாளும் வந்தன" (குறுந். 31 : 2, 364 : 6) ; கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்" "முழாவிமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை யாக" (பதிற். 13 : 5, 52 : 14) ; "தளரிய லவரொடு, துணங்கையாய்", "தமர்பாடுந் துணங்கையு ளரவம்வந் தெடுப்புமே ", " நிரைதொடி நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ள " (கலித். 66 : 17 -8, 70 : 14, 73 : 16) ; " முழுவிமிழ் துணங்கை தூங்கிய விழவின் " (அகநா. 336 : 16) துணங்கைக் குரவையும், "துணங்கையர் குரவையர்" (சிலப். 5 : 70)

162 - 3. கவையடிப்பேய் : சிறுபாண். 197-ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

170. " துய்த்தலைக் கூகை, கவலை கவற்றுங் குராலம் பறந்தலை" (பதிற். 44 : 18 - 19)

172. (பி - ம்.) ' சண்பமன்று '

" களிறுமாய்க்குங் கதிர்க்கழனி " (மதுரைக். 247)

கண்பு : பெரும்பாண். 220 ; மலைபடு. 454 ; பெருங். 2. 19 : 187.

174. பன்மயிர்ப்பிணவு : " பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது " (பெரும்பாண். 342)

175 - 6. "செய்யார் தேஎந் தெருமரல் கலிப்ப" (பொருந. 134)

179. கடுஞ்சினத்த களிறு : " கடுஞ்சினத்த கொல்களிறு " (புறநா. 55 : 7) ; மதுரை. 44 - 7-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

170. தானைக்குக்கடல் : முல்லை. 28-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

180 - 81. " செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக், கடற்படை குளிப்ப மண்டி " (புறநா. 6 : 11 - 2)

183. "விடுங்கணை யொப்பிற் கதழுறை சிதறூஉ" (பரி. 22:5) ; "காலமாரியி னம்புதைப்பினும்" (புறநா. 287:3) ; "பாயமாரிபோற் பகழி சிந்தினார்", மால்வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னைக், காலிரைத் தெழுந்து பாறக் கல்லெனப் புடைத்த தேபோல், மேனிரைத் தெழுந்த வேடர் வெந்நுனை யப்பு மாரி, கோனிரைத் துமிழும் வில்லாற் கோமகன் விலக்கினானே" (சீவக. 421, 451) ; "நாற்றிசை மருங்கினுங் கார்த்துளி கடுப்பக், கடுங்கணை சிதறி" (பெருங். 3. 27 : 98 : 9)

185. முருகு. 120-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

187. (பி - ம்.) ' நாடுகெட வெயில்'

மதுரைக். 149 - ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க ; "அருங்கடி வரைப்பி னூர்கவி னழிய" (பட்டினப்.269)

189. " பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்ப " (மதுரைக். 229) ; " எய்யாத் தெவ்வ ரேவல் கேட்ப " (பொருந. 133)

192. "முன்றிணை முதல்வர் போல நின்று " (பதிற். 85 : 5) ; " தொல்லோர் சென்ற நெறிய போலவும் " (புறநா. 58 : 25)

193. பிறை தொழப்படுதல் : "தொழுதுகாண் பிறையிற் றோன்றி", "பலர்தொழச், செவ்வாய் வானத் தையெனத் தோன்றி, இன்னம் பிறந்தன்று பிறையே " (குறுந். 178 : 5, 307 : 1 - 3) ; " ஒள்ளிழை மகளி ருயர்பிறை தொழூஉம், புல்லென மாலை " (அகநா. 239 : 9 - 10) ; " அந்தி யாரண மந்திரத் தன்புட னிவனை, வந்தி யாதவர் மண்ணினும் வானினு மில்லை " (வி. பா. குருகுலச். 6)

194. மு. சிலப். 25 : 92.

193 - 4. " வளர்பிறை போல வழிவழிப் பெருகி " (குறுந். 289 : 1) ; " சுடர்ப்பிறை போலப், பெருக்கம் வேண்டி " (பெருங். 2. 6 : 35 - 6)

195 - 6. " நீள்கதி ரவிர்மதி நிறைவுபோ னிலையாது, நாளினு நெகிழ்போடு நலனுட னிலையுமோ " (கலித். 17 : 7-8) ; " குறைமதிக் கதிரென மாய்கவென் றவமென்றான் " (கந்த. மார்க்கண்டேயப். 59)

இவ்வடிகள் சிலப். 10:1-3, அடியார். மேற்.

193 - 6. "ஆநா ணிறைமதி யலர்தரு பக்கம்போ, னாளினாளின் ............. நீர்நிலம் பரப்பி .......... வெண்மதி நிறையுவா போல, நாள்குறை படுதல் காணுதல் யாரே " (பரி. 11 : 31 - 8) ; " பெரியவர் கேண்மை பிறைபோல நாளும், வரிசை வரிசையாக நந்தும் - வரிசையால், வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே, தானே சிறியார் தொடர்வு" (நாலடி. 125) ; " நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப், பின்னீர பேதையார் நட்பு " (குறள், 782)

197. "அரும்பெற லமிழ்த மார்பத மாகப், பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை " (குறுந். 83 : 1 - 2)

199. மலர்தலையுலகம் : மதுரைக். 237.

கடலேணி யுலகம் : "நளியிரு முந்நீ ரேணி யாக, ............ வானஞ் சூடிய, மண்டிணி கிடக்கை " (புறநா. 35 : 1 - 3)
------------

    பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே
    தென்புல மருங்கின் விண்டு நிறைய
    வாணன் வைத்த விழுநிதி பெறினும்
    பழிநமக் கெழுக வென்னாய் விழுநிதி
    யீத லுள்ளமொ டிசைவேட் குவையே         205
    யன்னாய் நின்னொடு முன்னிலை யெவனோ
    கொன்னொன்று கிளக்குவ லடுபோ ரண்ணல்
    கேட்டிசின் வாழி கெடுகநின் னவலங்
    கெடாது நிலைஇயர்நின் சேண்விளக்கு நல்லிசை

    தவப்பெருக்கத் தறாயாண         210
    ரழித்தானாக் கொழுந்திற்றி
    யிழித்தானாப் பலசொன்றி
    யுண்டானாக் கூர்நறவிற்
    றின்றானா வினவைக
    னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப்         215
    பயனற வறியா வளங்கெழு திருநகர்
    நரம்பின் முரலு நயம்வரு முரற்சி
    விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
    பாண ருவப்பக் களிறுபல தரீ இக்
    கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ         220
    மறங்கலங்கத் தலைச்சென்று
    வாளுழந்ததன் றாள்வாழ்த்தி
    நாளீண்டிய நல்லகவர்க்குத்

    தேரோடு மாசிதறிச்
    சூடுற்ற சுடர்ப்பூவின்         225
    பாடுபுலர்ந்த நறுஞ்சாந்தின்
    விழுமிய பெரியோர் சுற்ற மாகக்
    கள்ளி னிரும்பைக் கலஞ்செல வுண்டு
    பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்பப்
    பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார்         230
    பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப்
    படுகண் முரசங் காலை யியம்ப
    வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த
    பணைகெழு பெருந்திறற் பல்வேன் மன்னர்

    கரைபொரு திரங்குங் கனையிரு முந்நீர்த்         235
    திரையிடு மணலினும் பலரே யுரைசெல
    மலர் தலை யுலக மாண்டுகழிந் தோரே
    அதனால், குணகடல் கொண்டு குடகடன் முற்றி
    யிரவு மெல்லையும் விளிவிட னறியா
    தவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக்         240
    கவலையங் குழும்பி னருவி யொலிப்பக்
    கழைவளர் சாரற் களிற்றின நடுங்க
    வரைமுத லிரங்கு மேறொடு வான்ஞெமிர்ந்து
    சிதரற் பெரும்பெயல் திறத்தலிற் றாங்காது
    குணகடற் கிவர் தருங் குரூஉப்புன லுந்தி         245
    நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக்
    களிறுமாய்க்குங் கதிர்க்கழனி
    யொளிறிலஞ்சி யடைநிவந்த

    முட்டாள சுடர்த்தாமரை
    கட்கமழு நறுநெய்தல்         250
    வள்ளித ழவிழ்நீல
    மெல்லிலை யரியாம்பலொடு
    வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கைக்
    கம்புட் சேவ லின்றுயி லிரிய
    வள்ளை நீக்கி வயமீன் முகந்து         255
    கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
    வேழப் பழனத்து நூழி லாட்டுக்
    கரும்பி னெந்திரங் கட்பி னோதை
    யள்ளற் றங்கிய பகடுறு விழுமங்
    கள்ளார் களமர் பெயர்க்கு மார்ப்பே         260
    யொலிந்த பகன்றை விளைந்த கழனி
    வன்கை வினைஞ ரரிபறை யின்குரற்

    றளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற்
    கலிகொள் சும்மை யொலிகொ ளாயந்
    ததைந்த கோதை தாரொடு பொலியப்         265
    புணந்துட னாடு மிசையே யனைத்து
    மகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக்
    குருகுநரல மனைமரத்தான்
    மீன்சீவும் பாண்சேரியொடு
    மருதஞ் சான்ற தண்பணை சுற்றி யொருசார்ச்         270
    சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்
    கருங்கால் வரகி னிருங்குரல் புலர
    வாழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர
    வெழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப்
    பெருங்கவின் பெற்ற சிறுதலை நௌவி         275
    மடக்கட் பிணையொடு மறுகுவன வுகளச்
    சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற்
    பாஅ யன்ன பாறை யணிந்து
    நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும்
    வெள்ளி யன்ன வொள்வீ யுதிர்ந்து         280
    சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்

    மணிமரு ணெய்த லுறழக் காமர்
    துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர
    வல்லோன் றைஇய வெறிக்களங் கடுப்ப
    முல்லை சான்ற புறவணிந் தொருசார்         285
    நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
    குறுங்கதிர்த் தோரை நெடுங்கா லையவி
    யைவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடி
    யிஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும்
    பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித்         290
    தினைவிளை சாரற் கிளிகடி பூசன்
    மணிப்பூ வவரைக் குரூஉத்தளிர் மேயு
    மாமா கடியுங் கானவர் பூசல்
    சேணோ னகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
    வீழ்முகக் கேழ லட்ட பூசல்         295
    கருங்கால் வேங்கை யிருஞ்சினைப் பொங்கர்
    நறும்பூக் கொய்யும் பூச லிருங்கே

    ழேறடு வயப்புலிப் பூசலொ டனைத்து
    மிலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்டக்
    கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்         300
---------

201. (பி - ம்.) ' பகைவரஞ்சி '

" வலியரென வழிமொழியலன் " (புறநா. 239 : 6) ; " உற்ற விடத்திலுயிர்வழங்குந் தன்மையோர், பற்றலரைக் கண்டாற் பணிவரோ (மூதுரை. 6)

202. புலமென்பதற்கு நிலமென்று பொருள்கூறி இவ்வடியை மேற்கோள் காட்டினர் ; சீவக. 28, ந.

204. (பி - ம்.) ' பழிநமக்கொழுக '

203 - 4. " வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ, சங்கம் போல் வான்மையார் சால்பு " (பு. வெ. 185)

205. ஈதலால் இசை உறுதல் : குறள், 231 - 2.

203 - 5. " புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனி, னுலகுடன் பெறினுங் கொள்ளலர் " (புறநா. 182 : 5 - 6)

208. ஒ. பெரும்பாண் 38.

209. சேண்விளங்கு நல்லிசை : " சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ " (பதிற். 88 : 36)

210. அறாயாணர் : " அறாஅ யாண ரகன்றலைப் பேரூர் " (பொருந.1)

215. " நிலந்தினக் கிடந்த நிதியம் " (மலைபடு. 575) ; " நிலம் பொறுக்க லாத செம்பொ னீணிதி " (சீவக. 402) ; "நிலம் பொறுக்க லாச் செம்பொனா னிறைகுடி" (பிரமோத். உருத்திரா. 50)

216. " பயனற வறியா யவன ரிருக்கையும் "(சிலப். 5 : 10)

217 - 8. " யாழ் ... ... ... ... இன்குரல் விறலியர்" (மலைபடு. 543 - 6) ; " இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ, நரம்பொடு வீணை நாவி னவின்றதோ வென்று நைந்தார் " (சீவக, 658); "அங்கையு மிடறுங் கூட்டி நரம்பளைந் தமுத மூறும், மங்கையர் பாடல்" (கம்ப. வரைக். 39); " யார்க்கும், நசைதரு நரம்பு கண்ட மொற்றுமை நயங்கொண் டார்ப்ப " (திருவிளை. விறகு. 28)

218. விறலியர்பேறு : பொருந.159 - 62-ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க.

219. பாணருக்கு யானையைத்தருதல் : பொருந. 126 - 7, சிறுபாண். 142 - 3-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

222. " அசைவி னோன்றா ணசைவள னேத்தி " (புறநா. 148 : 2)

224. பரிசிலர்க்குத் தேர்தருதல் : சிறுபாண். 142-3-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க ; "தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை, ஓம்பா வள்ளல்" (மலைபடு. 399 - 400) ; " நயந்தோர்க்குத், தேரீயும் வண்கை யவன்்" (கலித். 42 : 20-21) ; " தேர்வீ சிருக்கை யார நோக்கி ", " தேர்வீ சிருக்கை நெடியோன் " (புறநா. 69 : 18, 114 : 6)

223 - 4. இரப்போர்க்கு மா சிதறல் : " இரப்போர்க், கீத றண்டா மாசித றிருக்கை " (பதிற். 76 : 7 - 8)தேரோடு குதிரைகளைக்கொடுத்தல் : பொருந. 163 - 5 ; பெரும்பாண். 487 - 90.

220 - 24. மதுரைக் 145 - 6-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

228. பெரும்பாண். 380 - 82, குறிப்புரையைப் பார்க்க.

229. மதுரைக். 189.

231. " பருந்துயிர்த், திடைமதிற் சேக்கும் புரிசை " (புறநா. 343 : 15 - 6)பார்வல் : " பார்வற் பாசறை " (பதிற். 84 : 5) ; " பார்வலிருக்கை " (புறநா. 3 : 19)

232. " தழங்குரன் முரசங் காலை யியம்ப " (ஐங். 448 : 1) ; " நாண்முர சிரங்கு மிடனுடை வரைப்பில் " (புறநா. 161 : 29) ; " காலை முரசக் கனைகுர லோதையும் " , " காலை முரசங் கனைகுர லியம்ப", காலை முரசங் கனைகுர லியம்பும் ", " காலை முரசங் கடைமுகத் தெழுதலும்" (சிலப் . 13 : 140, 14:14, 17: 6, 26 : 53) ; " காலை முரச மதிலியம்ப ", " கடிமுரசங் காலைச் செய " (பு. வெ. 117, 202)

233. வேண்டுபுலத்திறுத்த : " யாண்டுதலைப் பெயர மேண்டுபுலத்திறுத்து" (பதிற். 15 : 1)

234. பல்வேன் மன்னர் : " பல்வேற் கட்டி " (குறுந். 11 : 6) ; " பல்வேற் பூழியர் கோவே ", " பல்வே லிரும்பொறை" (பதிற். 84 : 5 - 6, 89 : 9)

235. " கரைகொன் றிரங்குங் கடல்" (சீவக. 1063) ; கரை கொன் றிரங்கு கடல் புகைய" (கூர்ம. இராவணன்வதை. 5)

236. மணலைப்பன்மை சுட்டற்கு உவமித்தல் : " வடுவா ழெக்கர் மணலினும் பலரே " (மலைபடு, 556) ; புறநா. 9 : 11, 43 : 23, 55 : 21 , 136 : 26, 198 : 19, 363 : 4) ; " எத்துணை யாற்று ளிடுமணல் ............ அத்துணையும்பிற ரஞ்சொல்லி னார்மனம், புக்கனம்" (வளையாபதி) ; " தொல்லைநம் பிறவி யெண்ணிற் றொடுகடன் மணலுமாற்றா", " தருமண லலகை யாற்றா" (சீவக. 270, 3048) ; " பரவைவெண்மணலினும் பல புரவியின் பந்தி" (வி.பா.கிருட்டினன். 65)

237. மலர்தலையுலகம் : மதுரைக். 199.

235 - 7. திருவாய்மொழி 4. 1 : 4.

244. (பி - ம்.)'சிதரற் பெயல் கான்றழிதலிற்'

247. "களிறுமாய் கழனி", " களிறுமாய் கதிர்ச்செநெற் கழனி" (சீவக. 54, 1617) ; " களிறு மாய்க்குஞ் செந்நெ லங்குலை " (நைடதம், சுயம்வர. 138) ; "யானை மறையக் கதிர்த்தலைச் சாலி நீடி " (பிரபு. மாயையுற். 11) ; " களிறு மாய்ப்ப கதழ்ந்தெழு பூம்பயிர்" (தணிகை. நாட்டு. 114) " களிறுமாய் செருந்தியொடு " (மதுரைக். 172)மாய்தல் - மறைதலென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; சிலப். 9 : 2, அடியார் ; சீவக. 453, ந.

249. சிறுபாண். 183 - ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

248 - 9. " அடையிறந் தவிழ்ந்த வள்ளிதழ்த் தாமரை " (பரி. 13 : 50)

249 - 53. முருகு. 73 - 6.

255 - 6. " இனமீன் முகந்து, துணைபுண ருவகையர் பரத மாக்கள் .................. கொள்ளை சாற்றி " (அகநா. 30 : 2 -10)

255 - 7. நூழில், கொன்று குவித்தலென்னும் பொருளில் வருமென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். புறத். சூ. 17, ந.

259 - 60. " அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப, நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்துச், சாகாட் டாளர் கம்பலை " (பதிற். 27 : 12 - 4), " ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கு, முரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன் ", "அச்சொடு தாக்கிய பாருற் றியங்கிய, பண்டச் சாகாட் டாழ்ச்சி சொலிய, வரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும், பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ" (புறநா. 60:8-9, 90:6-9), " மடுத்தவா யெல்லாம் பகடன்னான்" (குறள், 624), "நிரம்பாத நீரியாற் றிடுமணலு ளாழ்ந்து, பெரும்பார வாடவர்போல் ................... புல்லுண்ணா பொன்றும்" (சீவக. 2784), "குண்டுதுறை யிடுமணற் கோடுற வழுத்திய, பண்டிதுறை யேற்றும் பகட்டிணை போல" (பெருங். 1. 53:53-4) என்பவற்றால், எருதுகள் விழுமமுறுதலும், அதனை ஏற்றுக்கொண்டே வருந்தி யுழைத்தலும் அறியலாகும்.

262. அரிபறை : "அரிச்சிறு பறையும்" (பெருங். 1. 37:90)

263 - 4. கலி, செருக்கினை யுணர்த்துதற்கும் (தொல். உரி. சூ. 51, ந.) ; சும்மை அரவமாகிய இசைப்பொருண்மையை உணர்த்துதற்கும் (தொல். உரி. சூ. 51, ந ; இ - வி. சூ. 285 - 6) இவ்வடிகள் மேற்கோள்.

267. அகலிருவானத்து : மணி. 19 : 91.

268. மனைமரம் : "மனைமரத் தெல்லுறு மௌவ னாறும்" (குறுந். 19:3-4); "மனைமர மொசிய" (அகநா. 38:13)

271. " தினைகொய்யக் கவ்வைகறுப்ப" புறநா. 20-10.

275. சிறுதலை நௌவி : புறநா. 2 : 21.

275 - 6. முல்லை. 99-ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

278. " படுத்துவைத் தன்ன பாறை " (மலைபடு. 15) ; " பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கல் " (அகநா. 5 : 13)

279. " நீலத் தன்ன விதைப்புனம் " (மலைபடு. 102)

281. (பி - ம்.) ' சுரிமுக ' " சுரிமுகிழ் முசுண்டை " (அகநா. 235 : 9) முசுண்டை : சிறுபாண். 166 ; நெடுநல். 13 ; மலைபடு. 101.

282. நெய்தற்பூவிற்கு மணி : " மாக்கழி மணிப்பூ " (குறுந். 55 : 1) ; " மணிநிற நெய்தல் " (ஐங். 96 : 2) ; " மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தல்" (பதிற். 30 : 2)

279-84. பலமலர் வீழ்ந்த இடத்திற்கு வெறிக்களம் : " பல்லிதழ் தாஅய், வெறிக்களங் கடுக்கும் வியலறை " (மலைபடு. 149 - 50); " எறிசுறாக் கலித்த விலங்குநீர்ப் பரப்பி, னறுவீ ஞாழலொடு புன்னை தாஅய், வெறியயர் களத்தினிற் றோன்றுத் துறைவன்" (குறுந். 318 : 1 - 3) ; " வெறிக்களங் கடுப்ப வீதியு முற்றமு, நிறைப்போது பரப்பி " (பெருங். 2. 2 : 104 - 5)

285. " முல்லை சான்ற முல்லையம் புறவின்" (சிறுபாண். 169)

288. வெண்ணெல் : மலைபடு. 471 ; நற். 7 : 7, 350 : 1 ; அகநா. 40 : 13, 201 : 13, 204 : 10, 211 : 6, 236 : 4, 340 : 14, புறநா. 348 : 1, 399 : 1.

289. இஞ்சி மஞ்சள் : " மஞ்சளு மிஞ்சியுஞ் செஞ்சிறு கடுகும் " (பெருங். 3. 17 : 142) ; " வளரும் வாழையு மிஞ்சியு மஞ்சளு மிடை விடாது நெருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் " (திருப்புகழ்)

294 - 5. பெரும்பாண். 108 -10-ஆம் அடிகளையும் அவற்றின் குறிப்புரைகளையும் பார்க்க.

296 - 7 வேங்கைப்பூக்கொய்யும் பூசல் : " தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை, மலைமா ரிடுஉ மேமப் பூசல் " (மலைபடு. 305 - 6) ; " மன்ற வேங்கை மலர்பத நோக்கி, ஏறா திட்ட வேமப் பூசல் " (குறுந். 241 : 4 - 5) ; " ஒலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப், புலிபுலி யென்னும் பூச றோன்ற ", " கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப், பொன்னேர் புதுமலர் வேண்டிய மகளி, ரின்னா விசைய பூசல் பயிற்றலின் " (அகநா. 48 : 6 - 7, 52 : 2 - 4)

299. " அருவிமாமலை " (பொருந. 235) ; மதுரைக். 42, 57-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

300. தொல். அகத். சூ. 5, ந. மேற்.
-----------

    தருங்கடி மாமலை தழீஇ யொருசா
    ரிருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப
    நிழத்த யானை மேய்புலம் படரக்
    கலித்த வியவ ரியந்தொட் டன்ன
    கண்விடு புடையூஉத் தட்டை கவினழிந்         305
    தருவி யான்ற வணியின் மாமலை
    வைகண் டன்ன புன்முளி யங்காட்டுக்
    கமஞ்சூழ் கோடை விடரக முகந்து
    காலுறு கடலி னொலிக்குஞ் சும்மை
    யிலவேய் குரம்பை யுழையதட் பள்ளி         310
    யுவலைக் கண்ணி வன்சொ லிளைஞர்
    சிலையுடைக் கையர் கவலை காப்ப

    நிழலுரு விழந்த வேனிற்குன் றத்துப்
    பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்
    முழங்குகட றந்த விளங்குகதிர் முத்த         315
    மரம்போழ்ந் தறுத்த கண்ணே ரிலங்குவளை
    பரதர் தந்த பல்வேறு கூல
    மிருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
    பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
    கொழுமீன் குறைஇய துடிக்கட் டுணியல்         320
    விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர்
    நனந்தலைத் தேஎத்து நன்கல னுய்ம்மார்
    புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்
    வைக றோறும் வழிவழிச் சிறப்ப
    நெய்தல் சான்ற வளம்பல பயின்றாங்         325
    கைம்பாற் றிணையுங் கவினி யமைவர
    முழவிமிழு மகலாங்கண்

    விழவுநின்ற வியன்மறுகிற்
    றுணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி
    யின்கலி யாணர்க் குழூஉப்பல பயின்றாங்குப்         330
    பாடல் சான்ற நன்னாட்டு நடுவட்
    கலைதாய வுயர்சிமையத்து
    மயிலகவு மலிபொங்கர்
    மந்தி யாட மாவிசும் புகந்து
    முழங்குகால் பொருத மரம்பயில் காவி         335
    னியங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற்
    கான்பொழி றழீ இய வடைகரை தோறுந்
    தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்
    கோதையி னொழகும் விரிநீர் நல்வர
    லவிரறல் வையைத் துறைதுறை தோறும்         340
    பல்வேறு பூத்திரட் டண்டலை சுற்றி
    யழுந்துபட் டிருந்த பெரும்பா ணிருக்கையு
    நிலனும் வளனுங் கண்டமை கல்லா
    விளங்குபெருந் திருவின் மான விறல்வே
    ளழும்பி லன்ன நாடிழந் தனருங்         345

    கொழும்பல் பதிய குடியிழந் தனருந்
    தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த
    வண்ணல் யானை யடுபோர் வேந்த
    ரின்னிசை முரச மிடைப்புலத் தொழியப்
    பன்மா றோட்டிப் பெயர்புறம் பெற்று         350
    மண்ணுற வாழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
    விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
    தொல்வலி நிலைஇய வணங்குடை நெடுநிலை
    நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
    மழையாடு மலையி னிவந்த மாடமொடு         355
    வையை யன்ன வழக்குடை வாயில்

    வகைபெற வெழுந்து வான மூழ்கிச்
    சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
    யாறுகிடந் தன்ன வகனெடுந் தெருவிற்
    பல்வேறு குழாஅத் திசையெழுந் தொலிப்ப         360
    மாகா லெடுத்த முந்நீர் போல
    முழங்கிசை நன்பணை யறைவனர் நுவலக்
    கயங்குடைந் தன்ன வியந்தொட் டிமிழிசை
    மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை
    யோவுக்கண் டன்ன விருபெரு நியமத்துச்         365
    சாறயர்ந் தெடுத்த வுருவப் பல்கொடி
    வேறுபல் பெயர வாரெயில் கொளக்கொள
    நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
    நீரொலித் தன்ன நிலவுவேற் றானையொடு
    புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப்         370
    புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி
    கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல
    பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப

    பெருவரை மருங்கி னருவியி னுடங்கப்
    பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின்         375
    வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக்
    கூம்புமுதன் முருங்க வெற்றிக் காய்ந்துடன்
    கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ
    நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
    விருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து         380
    கோலோர்க் கொன்று மேலோர் வீசி
    மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக்
    கந்துநீத் துழிதருங் கடாஅ யானையு

    மங்கண்மால் விசும்பு புகையவளிபோழ்ந்
    தொண்கதிர் ஞாயிற் றூ றளவாத் திரிதருஞ்         385
    செங்கா லன்னத்துச் சேவ லன்ன
    குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து
    காலெனக் கடுக்குங் கவின்பெறு தேருங்
    கொண்ட கோலன் கொள்கை நவிற்றலி
    னடிபடு மண்டிலத் தாதி போகிய         390
    கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்
    வேழத் தன்ன வெருவரு செலவிற்
    கள்ளார் களம ரிருஞ்செரு மயக்கமு
    மரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற்
    றீம்புழல் வல்சிக் கழற்கான் மழவர்         395
    பூந்தலை முழவி னோன்றலை கடுப்பப்
    பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர்
    பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர்
    பலர்தொகு பிடித்த தாதுகு சுண்ணத்தர்
---------

302. எரிநைப்ப : " கோடெரி நைப்பவும்" (பொருந. 234) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.

303. நிழத்தலென்பது நுணுக்கமாகிய குறிப்பை யுணர்த்துமென்றற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ. 34, சே ; 32, ந ; இ - வி. சூ. 281.

310. இலைவேய் குரம்பை : பெரும்பாண். 88 ; " கொன்னிலைக் குரம்பையின்" (குறுந். 284 : 7)

உழையதட்பள்ளி : பெரும்பாண். 89-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க ; "அதளுண் டாயினும் பாயுண் டாயினும், யாதுண்டா யினுங் கொடுமின் " (புறநா. 317 : 3 - 4)

311. உவலைக்கண்ணி : பெரும்பாண். 60-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

313 " நிழலான் றவிந்த நீரி லாரிடை " (குறுந். 356 : 1) ; " நிழறேய்ந் துலறிய மரத்த ...................காடு ", "நிழலறு நனந்தலை " " மரநிழ லற்ற வியவிற் சுரன்", " நிழன்மா யியவு " (அகநா.1 : 11 - 9, 103 : 1, 353 : 15, 395 : 7) ; " நிழலு மடியகத் தொளிக்கு மாரழற்கானத்து" (பதினோராந். திருவாரூர். மும். 3) ; " முருகு நாறு பொன் னிதழியார் முண்டகப் பதத்தி, னொருவு மாருயிர் பருவத்தின் மீளவுற் றிடல்போற், பருதி வானவ னுச்சமாம் பதத்துமென் மலர்ப்பூந், தருவி னீங்கிய நிழலெலாந் தருவடி யடைந்த" (காஞ்சிப். பன்னிரு. 340)

314. " பாலை நின்ற பாலை நெடுவழி " (சிறுபாண். 11)
பாலைத்திணைக்கும் நிலமுண்டென்பதற்கு இவ்வடி மேற்கோள் : நம்பி . சூ. 6, உரை ; இ - வி. சூ. 382.

316. " கோடீ ரிலங்குவளை" (குறுந்.11 : 1, 31 : 5, 365 : 1) ; " அரம்போ ழவ்வளை ", " கடற்கோ டறுத்த வரம்போ ழவ்வளை ", " கோடீ ரெல்வளை " (ஐங். 185 : 3, 194 : 1, 196 :1 ) ; " அரம் போ ழவ்வளைப் பொலிந்த முன்கை", " வாளரந் துமித்த, வளை", " அரம்போ ழவ்வளை தோணிலை நெகிழ ", "அரம்போ ழவ்வளை செறிந்த முன்கை " (அகநா. 6 : 2, 24 : 12, 125 : 1, 349 : 1)

320. "வராஅற், றுடிக்கட் கொழுங்குறை" (அகநா. 196 : 2 -3) ; கொழுமீன் : (பெரிய, திருக்குறிப்பு, 35 ; திருச்சிற். 188)

324. வழி வழிச் சிறப்ப : மதுரைக். 194.

326. பெருங். 4-2 : 70.

328. விழவு நின்ற மறுகு : மதுரைக் 98 ; " விழவறா வியலா வணத்து " (பட்டினப். 158) ; " விழவ றாதவம் பொன்மணி வீதிகளில் " , " வீதி நாளு மொழியா விழாவணி ", "விழவறாதன விளங்கொளி மணிநெடு வீதி " (பெரிய. திருக்குறிப்புத். 98, 104 ; ஏயர்கோன். 3) . ' விழவறா வீதிவள நாடு 'என்ற நாட்டின் பெயர் இங்கே அறிதற்பாலது.

329. மதுரைக். 159 - 60 ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

339 - 40. " கோதைபோற் கிடந்த கோதா விரி " (கம்ப. ஆறு செல். 27)

342. அழுந்துபட்டிருந்த : "அழுந்துபட் டலமரும் " (மலைபடு. 219)
பெரும்பாணிருக்கை : " அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும்" (சிலப். 5 : 37)

344. (பி - ம்.)' வானவிறல்வேள் '

மானவிறல்வேன் : மலைபடு. 164

அழும்பில் : " பெரும்பூட் சென்னி, யழும்பி லன்ன வறாஅ யாணர்" (அகநா. 44 : 14 - 5) ; " ஊழ்மாறு பெயரு மழும்பில்" (புறநா. 283 : 4 - 5) ; " அறைபறை யென்றே யழும்பில்வே ளுரைப்ப ", "அழும்பில் வேளோடு " (சிலப். 25 : 177, 28 : 205)

349 மதுரைக். 129.

" இரங்கிசை முரச மொழியப் பரந்தவர், ஓடுபுறங் கண்ட ஞான்றை " (அகநா. 116 : 17 - 8) ; " உரைசால் சிறப்பின் முரை சொழிந் தனவே", " முரசம், பொறுக்குந ரின்மையி னிருந்துவிளிந்தனவே " (புறநா. 62 : 9, 63 : 7 - 8); " அமர ரிட்ட முரசுள" (தக்க. 745) ; " இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட, கடப்ப முதுமுர சங் காணீர்" (இராச.உலா)

இடைப்புலத் தொழிய : " இடைப்புலத் தொழிந்த வேந்துகோட்டியானை " (மதுரைக். 688)

351. மணிநீர் : சிறுபாண். 152-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க; "மணிநீர் நிறைந்தன்று" (பரி.12 : 93) ; " மணிமரு டீநீர் " (அகநா.368 : 10) ; " மணிநிறத் தெண்ணீர்", " மணிதெளித் தன்ன வணிநிறத் தெண்ணீர் " (பெருங். 1. 55 : 2. 3. 4 : 39) ; " மணிநீர்ப் பொய்கை" (பொருளியல்)

352. பல்படைப்புரிசை : " படைமதில்" (பெருங். 3. 4 : 3) ; "படையார் புரிசைப் பட்டினம்" (தே. திருஞா.பல்லவனீச்சரம்)

354. போர்க்கதவு : பட்டினப். 40 ; கலித். 90 : 12 ; பெருங். 3. 3 : 25, 6 : 145

353 - 4. " புரைதீர்ந், தையவி யப்பிய நெய்யணி நெடுநிலை" (நெடுநல். 85 - 6) ; "நெய்யோ டிமைக்கு மையவித் திரள்காழ், விளங்கு நகர் விளங்க" (நற். 370 : 3 : 4)

355. "மலைபுரை மாடத்து " (மதுரைக். 406)

356. "வளிமறையு மின்றி வழக்கொழியா வாயில்" (பு.வெ. 278)

358.(பி - ம்.) ' சில்காற்றசைக்கும்'

359. மு. நெடுநல். 30 ; நற் 200 : 3 ; " யாறெனக் கிடந்ததெரு" (மலைபடு. 481) ; "யாறுகண் டன்ன வகன்கனை வீதியுள்", " நீத்தியாற் றன்ன நெடுங்கண் வீதி " (பெருங். 2. 7 : 7, 5. 7 : 23)

363. " குடைதொறும், தெரியிமிழ் கொண்டநும் மியம்போ லின்னிசை" (மலைபடு, 295 - 6) ; " தண்ணுமை முழவ மொந்தை தகுணிச்சம் பிறவு மோசை, யெண்ணிய விரலோ டங்கை புறங்கையினிசைய வாங்கித், திண்ணிதிற் றெறித்து மோவார் கொட்டியுங் குடைந்து மாடி" (சீவக. 965)

365." ஓவத் தன்ன விடனுடை வரைப்பின்" (புறநா. 251 : 1) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.

365 - 6. " விழவறா வியலா வணத்து, மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய, மலரணி வாயிற் பலர்தொழு கொடியும்" (பட்டினப். 158 - 60)

368 - 9. முருகு. 67-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

369 - 71. முல்லை. 90 - 91.

372. பெரும்பாண். 337-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

365 - 73. அங்காடியிற் பலவகைக் கொடிகளுளவாதல் : "கூலமறுகிற் கொடியெடுத்துநுவலு, மாலைச் சேரி "(சிலப். 6:132-3) ;

"கொடியணி கூலம்" " பகலங் காடியிற் பல்லவ ரெடுத்த, பல்வேறு கொடியும் படாகையும் நிரைஇ " (பெருங். 1. 35 : 152, 2. 6 : 20 - 21)

373 - 4. "வேறுபஃ றுகிலி னுடங்கி.................... இழிதரு மருவி " (முருகு. 296 - 316)

376. (பி - ம்.)'வீக்குபிணி நோன்கயிறு'

380. " மறவோன் சேனை வேழச் சங்கமும் " (பெருங். 1. 33 : 78)

381." கீழு மேலுங் காப்போர் நீத்த, வறுந்தலைப் பெருங்களிறு", (நற். 182 : 8- 9) ; " நெடுவேயும் பாகுஞ் சுளிந்துவரு கடகளிறு", " வேயொடு பாகடர் கம்ப நிகள மதாசலம்" (வி. பா. வசந்த.11, பதினேழாம். 66) மேலோர் : மணி. 19 : 20.

375 - 83. களிற்றிற்கு நாவாய் :" நிறையப் பெய்த வம்பி காழோர்,சிறையருங் களிற்றிற் பரதவ ரொய்யும்" (நற். 74 : 3-4) ; " கூம்புமுதன் முறிய வீங்குபிணி யவிழ்ந்து, கயிறுகால் பரிய............. மயங்குகா லெடுத்த வங்கம் போலக், காழோர் கையற மேலோ ரின்றி, ..................ஒருவழித் தங்காது, பாகும் பறையும் பருந்தின் பந்தரும்............... விளிப்ப............... கால வேகங் களிமயக் குற்றென" (மணி. 4 : 30 - 44) ;"ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன், றீடுபடச் செய்திளைய ரேத்தவிமிழ் முந்நீர்க், கோடுபறை யார்ப்பக்கொழுந் தாட்பவழங் கொல்லா ஓடுகளி றொப்பவினி தோடியதை யன்றே", "மாக்கடற் பெருங்கலங் காலின் மாறுபட், டாக்கிய கயிறரிந் தோடி யெங்கணும், போக்கறப் பொருவன போன்று தீப்படத், தாக்கின வரசுவாத் தம்மு ளென்பவே"," பண்ணார் களிறேபோற் பாயோங் குயர்நாவாய் " (சீவக. 501, 2231, 2793) ; பரி. 10 : 42-55. " களிறுங் கந்தும் போல நளிகடற், கூம்புங் கலனுந் தோன்றும்" (தொல். உவம். சூ.37,மேற்.) ;" அங்கட் கடலி னெடுங்கூம் பகநிமிர்ந்த, வங்கத் தலையுய்க்கு மீகான்றனைமானத், திங்கட் குறைநிழற்றத் தீந்தே மதங்கவிழ்க்கும், வெங்கட்களிற்றின் மிசைப்பவனி போந்தணைந்தான்" (திருவிளை. வெள்ளையானை. 7) ; "மதலை நிரையின் வரிசை யெனத்திண், மதமைக் களிறு மருவ" (ஆனந்த. வண்டு. 212)

360 - 83. பொருந. 171 - 2ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

384. " அங்க ணிருவிசும்பு" (அகநா. 136 : 4) ; (அங்கண் விசுப்பின் " (நாலடி. 151, 373)

385 - 7. குதிரைக்கு அன்னப்புள் உவமை :" விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப், பொலம்படைப் பொலிந்த வெண்டேர்" (குறுந். 205 : 2 - 3) ; "நிரைபறை யன்னத் தன்ன விரைபரிப், புல்லுளைக் கலிமா", " வயங்குசிறை யன்னத்து நிரைபறை கடுப்ப, நால்குடன் பூண்ட கானவில் புரவி" (அகநா. 234 : 3 -4, 334 : 10 - 11) ;"பானிறப் புரவி யன்னப் புள்ளெனப் பாரிற் செல்ல " (கம்ப.எழுச்சி.69)

388. தேருக்குக் காற்று : மதுரைக் 51-2 ; "காலுறழ் கடுந்திண்டேர்", " வளியி னியன்மிகுந் தேரும்" (கலித். 33 : 31, 50 : 15) ; " காலிய னெடுந்தோர்" (பொருளியல்)

397. " மடவரன் மகளிர் பிடகைப் பெய்த, செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து" (நெடுநல். 39 - 40)

399."தாதுபல வமைத்துச்,சுண்ணப் பெருங்குடம் பண்ணமைத் திரீஇ " (பெருங். 2. 2 : 73 - 4)

398 - 9." சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ........... இடித்த சுண்ணத்தர் " (சிலப். மங்கல. 56 - 7)

397 - 9." வண்ணமுஞ் சாந்து மலருஞ் சுண்ணமும் ............ பகர்வோர்" (சிலப். 6 : 134 - 5)
-----------

    தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய்         400
    நீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றின
    ரிருதலை வந்த பகைமுனை கடுப்ப
    வின்னுயி ரஞ்சி யின்னா வெய்துயிர்த்
    தேங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப்
    பல்வேறு பண்ணியந் தழீஇத்தரி விலைஞர்         405
    மலைபுரை மாடத்துக் கொழுநிழ லிருந்தர
    விருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்
    பெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர்
    நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்
    செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை         410
    செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன
    செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்க

    ணைஇய கலுழு மாமையர் வையெயிற்று
    வார்ந்த வாயர் வணங்கிறைப் பணைத்தோட்
    சோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத்         415
    தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை
    மையுக் கன்ன மொய்யிருங் கூந்தன்
    மயிலிய லோரு மடமொழி யோருங்
    கைஇ மெல்லிதி னொதுங்கிக் கையெறிந்து
    கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப்         420
    புடையமை பொலிந்த வகையமை செப்பிற்
    காம ருருவிற் றாம்வேண்டு பண்ணியங்

    கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக
    மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
    கரைபொரு திரங்கு முந்நீர் போலக்         425
    கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
    கழுநீர் கொண்ட வெழுநா ளந்தி
    யாடுதுவன்று விழவி னாடார்த் தன்றே
    மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூட
    னாளங் காடி நனந்தலைக் கம்பலை         430
    வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்
    செக்க ரன்ன சிவந்துநுணங் குருவிற்
    கண்பொரு புகூஉ மொண்பூங் கலிங்கம்
    பொன்புனை வாளொடு பொலியக் கட்டித்
    திண்டோப் பிரம்பிற் புரளுந் தானைக்         435
    கச்சந் தின்ற கழறயங்கு திருந்தடி

    மொய்ம்பிறந்து திரிதரு மொருபெருந்தெரியன்
    மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை
    யணிகிளர் மார்பி னாரமொ டளைஇக்
    காலியக் கன்ன கதழ்பரி கடைஇக்         440
    காலோர் காப்பக் காலெனக் கழியும்
    வான வண்கை வலங்கெழு செல்வர்
    நாண்மகி ழிருக்கை காண்மார் பூணொடு
    தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழற்
    றாவற விளங்கிய வாய்பொ னவிரிழை         445
    யணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர்
    மணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழ
    வொண்குழை திகழு மொளிகெழு திருமுகந்
    திண்கா ழேற்ற வியலிரு விலோதந்
    தெண்கடற் றிரையி னசைவளி புடைப்ப         450
    நிரைநிலை மாடத் தரமியந் தோறு
    மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய
    நீரு நிலனுந் தீயும் வளியு
    மாக விசும்போ டைந்துட னியற்றிய
    மழுவா ணெடியோன் றலைவ னாக         455

    மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சுடர்
    வாடாப் பூவி னிமையா நாட்டத்து
    நாற்ற வுணவி னுருகெழு பெரியோர்க்கு
    மாற்றரு மரபி னுயர்பலி கொடுமா
    ரந்தி விழவிற் றூரியங் கறங்கத்         460
    திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
    யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
    தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
    தாமு மவரு மோராங்கு விளங்கக்
    காமர் கவினிய பேரிளம் பெண்டிர்         465
    பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
    சிறந்துபுறங் காக்குங் கடவுட் பள்ளியுஞ்
    சிறந்த வேதம் விளங்கப்பாடி
    விழுச்சீ ரெய்திய வொழுக்கமொடு புணர்ந்து
    நிலமமர் வையத் தொருதா மாகி         470
    யுயர்நிலை யுலக மிவணின் றெய்து
    மறநெறி பிழையா வன்புடை நெஞ்சிற்
    பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
    குன்றுகுயின் றன்ன வந்தணர் பள்ளியும்

    வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்         475
    பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
    சென்ற காலமும் வரூஉ மமயமு
    மின்றிவட் டோன்றிய வொழுக்கமொடு நன் குணர்ந்து
    வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
    சான்ற கொள்கைச் சாயா யாக்கை         480
    யான்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
    கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப்
    பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
    கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்
    செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து         485
    நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி
    யிறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங்
    குன்றுபல குழீஇப் பொலிவான தோன்ற
    வச்சமு மவலமு மார்வமு நீக்கிச்
    செற்றமு முவகையுஞ் செய்யாது காத்து         490
    ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச்

    சிறந்த கொள்கை யறங்கூ றவையமு
    நறுஞ்சாந்து நீவிய கேழ்கிள ரகலத்
    தாவுதி மண்ணி யவிர் துகின் முடித்து
    மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல         495
    நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி
    யன்பு மறனு மொழியாது காத்துப்
    பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
    செம்மை சான்ற காவிதி மாக்களு
    மறநெறி பிழையா தாற்றி னொழுகிக்         500
---------

400. 'பூமாண்டதீந்தேன்றொடை - பொலிவு மாட்சிமைப் பட்ட தேன்போல இனிய நீரையுடைய தாறு ; 'தகைசெய் ......... காய்' என்றார் பிறரும்" (சீவக. 31,ந.)

400 - 401." பழுக்காய்க் குலையும் பழங்காய்த் துணருங், களிக்காய்ப் பறியுந் துவர்க்கா யும்பலும், ............. தளிரிலைவட்டியொடு ...............எண்ணா தீயுந ரின்மொழிக் கம்பலும்" (பெருங். 2. 2 : 70 - 75)

405." பண்ணியப் பகுதியும் பகர்வோர்" (சிலப். 6 : 135)

406.மலைபுரைமாடம் : மதுரைக். 355.

407 - 8.முருகு. 127.

410." செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த" (புறநா. 9 : 9)

411." பசந்தென்றார், மாலைக்காலத்துப் பரந்த பச்சை வெயிலை ;' செல் .............. யன்ன ' என்றார்மதுரைக்காஞ்சியிலும். இக்காலத்து இதனைக் காடுகிழாள் வெயிலென்ப " (சிலப். 4 : 5 - 8, அடியார்.)

410 - 12." பாவை,விரிகதி ரிளவெயிற்றோன்றி யன்னநின்" (நற். 192:8-10) ; "தாவி னன்பொன் றைஇய பாவை, விண்டவ ழிள வெயில் கொண்டுநின் றன்னமிகுகவின் " (அகநா. 212 : 1 - 3)

413.ஐஇய ............. மாமையர் :"அங்கலுழ் மாமை, நுண்பூண் மடந்தை " (குறுந். 147 : 2 - 3) ; "அங்கலுழ் மாமை கிளைஇய, ............... மாஅ யோளே","அங்கலுழ் மாமை யஃதை " (அகநா. 41 : 15 - 6,96 : 12)

414. வணங்கிறைப் பணைத்தோள் :"வணங்கிறைப் பணைத்தோளெல்வளை மகளிர் " (குறுந். 364 : 5) ;"வணங்கிறையா ரணைமென்றோள் " (பரி. 17 : 33 -4 ) ;"வணங்கிறைப் பணைத்தோள் ............. விறலியர்" (புறநா. 32 : 3 -4)

413 - 4.வையெயிற்று வார்ந்த வாயர் :" வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையை " (குறுந். 14 : 2)

416. குறுந்.276 : 3 - 4 ; கலித்.97 - 12, 117 : 4, 125 : 8; அகநா. 117 : 19 - 20.

417."அஞ்சனம் புரைபைங்கூந்தல் " (பாகவதம். 10. 30 : 4) ;"ஓதி யவிழ்த்து வார்மைக் குழம்பின், மறைவுறு மணிப்பொற் பாவை போலுடன் மறைய விட்டாள்" (பிரபு.மாதேவி. 51)

418.மயிலியலோர் : ப. 64,3-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க ;பொருந. 47 ; சிறுபாண். 16 ;"புனமயில்போன் - மன்னி ........ இயங்குகின்ற தாயத் திடை " (கிளவி விளக்கம்) ;"ஊச றொழிலிழக்கு மொப்பு மயிலிழக்கும் ............... பூங்குழலி நீங்க" (கண்டனலங்.)

419.(பி - ம்.) ' தைஇ மெல்லிதின்'

420.நகுவனர் திளைப்ப : " விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே","துறைவனொ டொருநா, ணக்கதோர் பழியும்" (குறுந். 226 : 7, 320 : 4 - 5)

421 - 3.செப்பிற் பூ :"பாதிரி குறுமயிர் மாமலர், நறுமோ ரோடமொடுடனெறிந் தடைச்சிய, செப்பு" (நற். 337 : 4 - 6) ;"மடைமாண் செப்பிற் றமிய வைகிய, பொய்யாப்பூ" (குறுந். 9 : 2 - 3) ;"வகைவரிச் செப்பினுள் வைகிய கோதையேம் "(கலித். 68 : 5) ;" செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை, நறுமலர் " (சிலப். 22 : 121 - 2) ; வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல்" மணி. 4 : 65) ;"பித்திகைக் கோதை செப்புவாய் மலரவும்","பூத்தகைச் செப்பும்" (பெருங். 1. 33 : 76, 3. 5 : 78) ; "வேயாது செப்பினடைத்துத் தமிவைகும் வீயினன்ன" (திருச்சிற், 374)

424 - 5."மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது ................ முழுங்குதிரைப் பனிக்கடல்", "கொளக்குறை படாமையின் முந்நீரனையை" (பதிற். 45:19 - 22, 90 : 16)

426 - 7.கொளக் ........... நீர் : "கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து" (அகநா. 162 : 1)," தைஇத் திங்கட் டண்கயம் போலக், கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்" (புறநா. 70 : 6 - 7)

429." நீண்மாடக் கூடலார்"(கலித். 35 : 17) ;முருகு. 71-ஆம் அடியின் குறிப்பிரையைப் பார்க்க.

430. நனந்தலை : முல்லை. 1.

433.பொருந. 82-3-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க ;"இழையறி வாரா, வொண்பூங் கலிங்கம்" (புறநா. 383 : 10 - 11)

440 குதிரையின் வேகத்திற்குக் காற்றின் வேகம் : "காற்கடுப் பன்ன கடுஞ்செல லிவுளி", "வளிபூட் டினையோ." (அகநா. 224 : 5, 384 : 9) ;"காலியற் புரவி","வளிநடந் தன்னவாச்செல லிவுளியொடு" "வளிதொழி லொழிக்கும் வண்பரிப் புரவி", "வெவ்விசைப் புரவிவீசுவளியாக" (புறநா. 178 : 2, 197 : 1, 304 : 3, 369 :7);"காலியற் புரவியொடு" , "காலியற் செலவிற், புரவி" (பெருங். 1. 38:349, 2. 18:95-6)

442.வானவண்கை : சிறுபாண். 124-6 ; "மழைசுரந் தன்ன வீகை" (மலைபடு. 580) ; "மழைதழீஇய கையாய்" (சீவக. 2779) ; "வருமால் புயல்வண்கை மான்றேர் வரோதயன்", "மழையும் புரை வண்கைவானவன்" (பாண்டிக்கோவை) ; "புயல்போற் கொடைக்கை" (தண்டி. மேற்.) ; "கார்நிகர் வண்கை" (நன்.சிறப்.)

444. "தெள்ளரிச் சிலம்பார்ப்ப" (கலித். 69:8)

448.(பி-ம்.) 'குழையிருந்த வொளிகெழு'

450. பெருங். 2. 6:20-23.

454.மாகவிசும்பு : பரி. 1:47 ; அகநா. 141:6,253:24 ; புறநா. 35:18.

456. முருகு. 128,

457-8. "வாடாப் பூவி னிமையா நாட்டத்து, நாற்ற வுணவினோரும்" (புறநா. 62:16-7)

461-3. குழந்தைகளுக்குத் தாமரைப்போது : "போதவிழ் தாமரை யன்னநின், காதலம் புதல்வன்" (ஐங். 424) ; "நீரு, ளடைமறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட, குடைநிழற் றோன்றுநின் செம்மலை" (கலித். 84:10-11) ; "பொய்கையுண் மலரென வளர்ந்து" (சீவக. 2756)

466. "பூவும் புகையும் சாவகர் பழிச்ச" (மதுரைக். 476)

470. (பி-ம்) 'ஒரு திரமாகி'

474. மதுரைக். 488, 501-2.

455-74. "நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலு, முவணச்சேவ லுயர்த்தோ னியமமு, மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமுங், கோழிச் சேவற் கொடியோன் கோட்டமு, மறத்துறை விளங்கிய வறவோர் பள்ளியும்" (சிலப். 14:7-11) ; "நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப், பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக" (மணி. 1:54-5)

481. (பி-ம்.) 'செறிநர் நோன்மார்'

477-81. முக்காலமுமறியும் அறிஞர் : "புகழ்நுவல முக்காலமு, நிகழ்பறிபவன்", "இம்மூ வுலகி னிருள்கடியு மாய்கதிர்போ, லம்மூன்று முற்ற வறிதலால்" (பு. வெ. 167, அறிவன் வாகை)

482-3. கரண்டை, சிமிலி : "சிமிலிக் கரண்டையன்" (மணி. 3:86)

484. "நிழற்கயத் தன்ன நீணகர் வரைப்பின்" (அகநா. 105:7) ; "பனிக்கயத் தன்ன நீணகர்" (புறநா. 378:7)

485. "செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்" (நெடுநல். 112) ; “செம்புறழ் புரிசை" (அகநா. 375:13) ; "செம்புறழ் புரிசை", "செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை" (புறநா. 37:11, 201:9) ; "செம்பைச் சேரிஞ்சி", "செம்படுத்த செழும்புரிசை", "செம்புகொப் புளித்த மூன்று மதில்"; (தே.) "செம்புகொண்டன்ன விஞ்சித் திருநகர்" (சீவக. 439) ; "செம்பிட்டுச் செய்த விஞ்சி" (கம்பகும்ப. 159)

488. மதுரைக். 474

491. "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற், கோடாமை சான்றோர்க் கணி" (குறள், 118)

492. அறங்கூறவையம் : "மறங்கெழு சோழ ருறந்தை யவையத், தறங்கெட வறியா தாங்கு" (நற். 400:7-8) ; "அறங்கெழு நல்லவை", (அகநா. 93:5) ; "உறந்தையாவையத், தறநின்று நிலையிற்று" (புறநா. 39:8-9) ; "அறங்கூறவையம்" (சிலப். 5:135) ; "அறநிலை பெற்ற வருள்கொ ளவையத்து" (பெருங். 1. 34:25)

491-2. "நவைநீங்க நடுவுகூறு, மவைமாந்தர்" (பு.வெ. 173)

489-92. "காய்த லுவத்த லகற்றி யொருபொருட்க, ணாய்தலறிவுடையார் கண்ணதே-காய்வதன்க, ணுற்றகுணந் தோன்றா தாகுமுவப்பதன்கட், குற்றமுந் தோன்றா கெடும்" (அறநெறிச். 22)

493. "நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பில்" (முருகு, 193)

கெழுவென்னும் உரிச்சொல் நிறப்பண்பை உணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ. 5, ந ; இ-வி. சூ. 283

494. மண்ணுதலென்பதற்குப் பண்ணுதலெனப் பொருள்கூறி இவ்வடியை;
மேற்கோள் காட்டினர்; சீவக. 202, 735, 1808.

497. "அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை, பண்பும் பயனு மது";
(குறள், 45)

499. காவிதி மாக்கள் : "கடிநாட் செல்வத்துக் காவிதி மாக்கள்", "கணக்கருந் திணைகளுங் காவிதிக் கணமும் (பெருங். 3. 22 : 282, 5, 6 : 90)

500. "ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை" (குறள், 48)
-------------

    குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன
    பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லிற்
    பல்வேறு பண்டமோ டூண்மலிந்து கவினி
    மலையவு நிலத்தவு நீரவும் பிறவும்
    பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு         505

    சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரு
    மழையொழுக் கறாஅப் பிழையா விளையுட்
    பழையன் மோகூ ரவையகம் விளங்க;
    நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
    தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவுங்         510
    கோடுபோழ் கடைநருந் திருமணி குயினருஞ்
    சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
    பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நருஞ்
    செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும்
    பூவும் புகையு மாயு மாக்களு         515
    மெவ்வகைச் செய்தியு முவமங் காட்டி
    நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற்
    கண்ணுள் வினைஞரும் பிறருங் கூடித்
    தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பல்
    குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச்         520
    சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ
    நால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக்
    கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துந்
    தண்கட னாட னொண்பூங் கோதை
    பெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ         525
    விழைவுகொள் கம்பலை கடுப்பப் பலவுடன்
    சேறு நாற்றமும் பலவின் சுளையும்;
    வேறுபடக் கவினிய தேமாங் கனியும்

    பவ்வே றுருவிற் காயும் பழனுங்
    கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி         530
    மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகு
    மமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
    புகழ்படப் பண்ணிய பேரூன் சோறுங்
    கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவு
    மின்சோறு தருநர் பல்வயி னுகர         535
    வாலிதை யெடுத்த வளிதரு வங்கம்
    பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத்
    தொல்லெ னிமிழிசை மானக் கல்லென
    நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப்
    பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோத         540
    மிருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்
    துருகெழு பானாள் வருவன பெயர்தலிற்
    பல்வேறு புள்ளி னிசையெழுந் தற்றே
    யல்லங் காடி யழிதரு கம்பலை
    யொண்சுட ருருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து         545
    சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு
    குடமுதற் குன்றஞ் சேரக் குணமுத

    னாண்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு
    பகலுரு வுற்ற விரவுவர நயந்தோர்
    காத லின்றுணை புணர்மா ராயிதழ்த்         550
    தண்ணறுங் கழுநீர் துணைப்ப விழைபுனையூஉ
    நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய
    நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக
    மென்னூற் கலிங்கங் கமழ்புகை மடுப்பக்
    பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர்         555
    நெடுஞ்சுடர் விளக்கங் கொளீஇ நெடுநக
    ரெல்லை யல்லா நோயொடு புகுந்து
    கல்லென் மாலை நீங்க நாணுக்கொள
    வேழ்புணர் சிறப்பி னின்றொடைச் சீறியாழ்
    தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து         560
    வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழ
    நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்
    டாய்கோ லவிர்தொடி விளங்க வீசிப்
    போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ
    மேதகு தகைய மிகுநல மெய்திப்         565
    பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்;
    திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்
    கொண்டன் மலர்ப்புதன் மானப்பூ வேய்ந்து
    நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி

    மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து         570
    சேயரு நணியரு நலனயந்து வந்த
    விளம்பல் செல்வர் வளந்தப வாங்கி
    நுண்டா துண்டு வறும்பூத் துறக்கு
    மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர்
    நெஞ்சே மாப்ப வின்றுயி றுறந்து         575
    பழந்தேர் வாழ்க்கைப் பறவை போலக்
    கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய
    மணம்புணர்ந் தோங்கிய வணங்குடை நல்லி
    லாய்பொன் னவிர்தொடிப் பாசிழை மகளி
    ரொண்சுடர் விளக்கத்துப் பலருடன் றுவன்றி         580
    நீனிற விசும்பி லமர்ந்தன ராடும்
    வானவ மகளிர் மானக் கண்டோர்
    நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்
    யாம நல்யாழ் நாப்ப ணின்ற
    முழவின் மகிழ்ந்தன ராடிக் குண்டுநீர்ப்         585
    பனித்துறைக் குவவுமணன் முனைஇ மென்றளிர்க்
    கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர
    நெடுந்தொடர்க் குவளை வடிம்புற வடைச்சி

    மணங்கமழ் மனைதொறும் பொய்த லயரக்
    கணங்கொ ளவுணர்க் கடந்த பொலந்தார்         590
    மாயோன் மேய வோண நன்னாட்
    கோணந் தின்ற வடுவாழ் முகத்த
    சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
    மறங்கொள் சேரி மாறுபொரு செருவின்
    மாறா துற்ற வடுப்படு நெற்றிச்         595
    சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர்
    கடுங்களி றோட்டலிற் காணுந ரிட்ட
    நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்
    கடுங்கட் டேறன் மகிழ்சிறந்து திரிதரக்
    கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து         600
----------

501-2. குன்று கண்டன்ன இல் : மதுரைக். 474, 488

504-6. "மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉம்...................... ஓடாவம் பலர்" (பெரும்பாண். 67-76)

508-9. "பெரும்பெயர்மாறன் றலைவ னாகக், கடந்தடு வாய்வாளிளம்பல் கோச, ரியனெறி மரபினின் வாய்மொழி கேட்ப" (மதுரைக். 772-4)

516, (பி-ம்.) 'எண்வகைச் செய்தியும்'

518. கண்ணுள்வினைஞர் : சிலப். 5:30.

516-8. "எவ்வகை யுயிர்களு முவமங் காட்டி, வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய, கண்கவ ரோவியம்" (மணி. 3:129-31)

524. (பி-ம்.) 'தெண்கடனாடன்';

525. பெருநாளிருக்கை : "திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை" (சிலப். 23 : 56)

531. (பி-ம்.) 'குறிமுறி யடரும்'

533. ஊன்சோறு : மதுரைக் 141, குறிப்புரையைப் பார்க்க.;

534. வீழ்ந்த கிழங்கு : "விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை" (மலைபடு. 128) ; "கிழங்குகீழ் வீழ்ந்து" (நற். 328:1) ; "வள்ளிகீழ் வீழா" (கலித். 39:12) ; "கொழுங்கடி வள்ளிக் கிழங்கு வீழ்க் கும்மே" (புறநா. 109:6)

540. கடற்குட்டம் ; "கடற்குட்டம் போழ்வர் கலவர்" (நான்மணிக். 16)

543-4. "பழுமரத் தீண்டிய பறவையி னெழூஉ, மிழுமென் சும்மை" (மணி. 14:26-7) ; "முட்டிலா மூவறு பாடை மாக்களாற், புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய, மட்டிலா வளநகர்", "சீர்கெழுவளமனை திளைத்து மாசனம் ...................... பார்கெழு பழுமரப் பறவை யொத்தவே" (சீவக. 93, 828) : "களனவி லன்னமே முதல கண்ணகன், றளமலர்ப் புள்ளொடு தயங்கி யின்னதோர், கிளவியென் றறிவருங் கிளர்ச்சித் தாதலான்,
வளநகர்க் கூலமே போலு மாண்பது" (கம்ப. பம்பை. 7)

548-9. நிலாவிரிபு பகலுருவுற்ற இரவு : "பகலுரு வுறழ்நிலாக் கான்று விசும்பி, னகல்வாய் மண்டில நின்றுவிரி யும்மே" (அகநா. 122:10-11)

551. "யான் போது துணைப்ப" (அகநா. 117:11)

554. "பூந்துகில் கழும வூட்டும் பூம்புகை" (சீவக. 71)

555-6. மகளிர் மாலையில் விளக்கேற்றுதல் : "பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி" (குறிஞ்சிப். 224) ; "பைந்தொடி மகளிர் பலர் விளக் கெடுப்ப" (மணி. 5:134) ; "மாலை மணிவிளக்கங் காட்டி ....................... கொடையிடையார் தாங்கொள்ள" (சிலப். 9:3-4)

558 (பி-ம்.) 'நாணுக் கொளீஇ'

560. (பி-ம்.) 'தாழ்பெயல்'

562. "மார்விற்றார் கோலி மழை" (பு . வெ. 204)

563. "செறிதொடி தெளிர்ப்ப வீசி" (நற். 20:5)

570. (பி-ம்.)'கவவுக் கவர்ந்து' "கோதை மார்பினை, நல்லகம் வடுக்கொள முயங்கி" (அகநா. 100:2-3)

572-5. பரத்தையர்க்கு வண்டு : "நறுந்தா துண்டு நயனில் காலை, வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்", "பயன்பல வாங்கி, வண்டிற் றுறக்குங், கொண்டி மகளிரை" (மணி. 18:19-20, 108-9)

576. பொருந. 64-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. பெருங். 3.1 : 169-74.

581. நீனிற விசும்பு : முருகு. 116-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.;

582. (பி-ம்.) 'வானரமகளிர்'

583. (பி-ம்.) 'நடுக்குறூஉங்கொண்டி' கொண்டி மகளிர் : மணி. 18:109.

584. யாமநல்யாழ் : "விரல்கவர்ந் துழந்த கவர்வி னல்யாழ், யாமமுய் யாமை" (நற். 335:9-10) ; "விளரிப்பாலையிற் றோன்றும் யாமயாழ்" (பரி. 11:129, பரிமேல்.) ; "யாமயாழ் மழலையான்" (கம்ப. நாடவிட்ட. 34)

588. "குறுஞ்சுனைக் குவளையடைச்சி", "நீலமடைச்சி" (நற். 204:3, 357:8) ; "கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சி" (குறுந். 80:1)

591. "ஓணத் தானுல காளுமென் பார்களே", "நீ பிறந்த திருவோணம்" (திவ். பெரியாழ். 1. 1:3, 2. 4:2) ; "ஓணன் பொரக்கருணை யூக்கினார்" (ஆனந்த. வண்டு. 491)

600. நீதிநெறி. 100
------------

    பணைத்தேந் திளமுலை யமுத மூறப்
    புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
    வளமனை மகளிர் குளநீ ரயரத்
    திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
    குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி         605
    நுண்ணீ ராகுளி யிரட்டப் பலவுட
    னொண்சுடர் விளக்க முந்துற மடையொடு
    நன்மா மயிலின் மென்மெல வியலிக்

    கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது
    பெருந்தோட் சாலினி மடுப்ப வொருசா         610
    ரருங்கடி வேலன் முருகொடு வளைஇ
    யரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்
    கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
    சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ
    மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறு         615
    முரையும் பாட்டு மாட்டும் விரைஇ
    வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
    பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாட்
    சேரி விழவி னார்ப்பெழுந் தாங்கு
    முந்தை யாமஞ் சென்ற பின்றைப்         620
    பணிலங் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து
    நொடைநவி னெடுங்கடை யடைத்து மடமத
    ரொள்ளிழை மகளிர் பள்ளி யயர
    நல்வரி யிறாஅல் புரையு மெல்லடை
    யயிருருப் புற்ற வாடமை விசயங்         625
    கவவொடு பிடித்த வகையமை மோதகந்
    தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவன ருறங்க
    விழவி னாடும் வயிரியர் மடியப்
    பாடான் றவிந்த பனிக்கடல் புரையப்
    பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப்         630

    பானாட் கொண்ட கங்கு லிடையது
    பேயு மணங்கு மிருவுகொண் டாய்கோற்
    கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப
    விரும்பிடி மேஎந்தோ லன்ன விருள்சேர்பு
    கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத்         635
    தொடலை வாளர் தொடுதோ லடியர்
    குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
    சிறந்த கருமை நுண்வினை நுணங்கற
    னிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
    மென்னூ லேணிப் பன்மாண் சுற்றினர்         640
    நிலனக ழுளியர் கலனசைஇக் கொட்குங்
    கண்மா றாடவ ரொடுக்க மொற்றி
    வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
    துஞ்சாக் கண்ண ரஞ்சாக் கொள்கைய
    ரறிந்தோர் புகழ்ந்த வாண்மையர் செறிந்த         645
    நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி
    யூர்காப் பாள ரூக்கருங் கணையினர்
    தேர்வழக்கு தெருவி னீர்திரண் டொழுக
    மழையமைந் துற்ற வரைநா ளமயமு
    மசைவில ரெழுந்து நயம்வந்து வழங்கலிற்         650
    கடவுள் வழங்குங் கையறு கங்குலு
    மச்ச மறியா தேம மாகிய

    மற்றை யாமம் பகலுறக் கழிப்பிப்
    போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத்
    தாதுண் டும்பி போது முரன்றாங்         655
    கோத லந்தணர் வேதம் பாடச்
    சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி
    யாழோர் மருதம் பண்ணக் காழோர்
    கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப
    பணைநிலைப் புரவி புல்லுணாத் தெவிட்டப்         660
    பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக்
    கள்ளோர் களிநொடை நுவல வில்லோர்
    நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப்
    புலர்ந்துவிரி விடிய லெய்த விரும்பிக்
    கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய         665
    வொண்பொ னவிரிழை தெழிப்ப வியலித்
    திண்சுவர் நல்லிற் கதவங் கரைய
    வுண்டுமகிழ் தட்ட மழலை நாவிற்
    பழஞ்செருக் காளர் தழங்குகுர றோன்றச்
    சூதர் வாழ்த்த மாகதர் நுவல         670

    வேதா ளிகரொடு நாழிகை யிசைப்ப
    விமிழ்முர சிரங்க வேறுமாறு சிலைப்பப்
    பொறிமயிர் வாரணம் வைகறை யியம்ப
    யானையங் குருகின் சேவலொடு காம
    ரன்னங் கரைய வணிமயி லகவப்         675
    பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்
    கூட்டுறை வயமாப் புலியொடு குழும
    வான நீங்கிய நீனிற விசும்பின்
    மின்னுநிமிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்து
    மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த         680
    பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடு
    பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன
    வம்மென் குரும்மைப் காய்படுபு பிறவுந்
    தருமணன் முற்றத் தரிஞிமி றார்ப்ப
    மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப         685
    விரவுத்தலைப் பெயரு மேம வைகறை
    மைபடு பெருந்தோண் மழவ ரோட்டி

    யிடைப்புலத் தொழிந்த வேந்துகோட் டியானை
    பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவி
    வேல்கோ லாக வாள்செல நூறிக்         690
    காய்சின முன்பிற் கடுங்கட் கூளிய
    ரூர்சுடு விளக்கிற் றந்த வாயமு
    நாடுடை நல்லெயி லணங்குடைத் தோட்டி
    நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
    நாடர வந்த விழுக்கல மனைத்துங்         695
    கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாஅங்
    களந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
    புத்தே ளுலகங் கவினிக் காண்வர
    மிக்குப்புக ழெய்திய பெரும்பெயர் மதுரைக்
    சினைதலை மணந்த சுரும்புபடு செந்நீ         700
-----------

602-3. "புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கந், தீர்வினை மகளிர் குளனா டரவமும்" (மணி. 7:75-6) என்பதையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

604. "சேக்கை நல்யாழ் செவ்வழி பண்ணி" (பெருங். 1. 33:89). செவ்வழி மாலைக்குரிய பண் : புறநா. 149.

605-6. "நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி" (புறநா. 64:1 ; குழல்வழி நின்றதி யாழே யாழ்வழித், தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப், பின்வழி நின்றது முழவே முழவொடு, கூடிநின்றிசைத்த தாமந் திரிகை" (சிலப். 3:139-42)

608. மயிலின் இயலி : முருகு. 205 ; பெரும்பாண். 330-31-ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க. மென்மெலவியலி : "மென்மெலம்மலர் மேன்மிதித் தேகினாள்" (சீவக. 1336) ; "சொல்லு மாடுமென்மெல வியலும்" (தொல். களவு. சூ. 10, ந. மேற்.) "மென்மெல வியலி வீதி போந்து" (பெருங்4. 17:99)

612. அரிக்கூடின்னியம் : "அரிக்கூடு மாக்கிணை" (புறநா. 378:8)

614. நெடுவேள் : முருகு. 211, பெரும்பாண். 75-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

614-5. தழூஉப் பிணையூஉ நின்ற குரவை : மதுரைக். 159-60-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

618. (பி-ம்.) 'பெரும்பெயர்'

624. அடைக்கு இறால் : "மெழுகு மெல்லடை" (புறநா. 103:10); "தேனி றாலன தீஞ்சுவை யின்னடை" (சீவக. 2674)

628. புறநா. 29:22-3, 629-30 : நற். 18:6-7.

636. தொடுதோலடியார் : "தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி" (பெரும்பாண். 169)

635-6. "குன்று துகளாக்குங் கூர்ங்கணையான்" என்பது பாரதம் (தொல். புறத். சூ. 21, ந. மேற்.) ; "வேறிரண் டனவும் வில்லுமிடைந்தவும் வெற்பென் றாலுங், கூறிரண் டாக்கும் வாட்கைக் குழுவையுங் குணிக்க லாற்றேம்" (கம்ப. பாச. 6)

642. "அகன்றுகண் மாறி" (மணி. 3:40)

639-42. "நிலனக ழுளிய னீலத் தானையன், கலனசை வேட்கையிற் கடும்புலி போன்று" (சிலப். 16:204-5) சிலப். 16 : 204. 11, அடியார், மேற்.

643-4. கள்வர்க்குப்புலி : கலித். 4 : 1-2.

645. (பி-ம்.) 'ஆண்மையிற் சிறந்த'

635. "பகுக்கப்படுதலிற் பகல் ; 'மற்றை யாமம் பகலுறக்கழிப்பி' என்பதுமது" (சிலப். 4:81, அரும்பத. அடியார்.)

655. சீவக. 893, ந. மேற்.

656. விடியலில் வேதம் பாடல் : "பூவினுட் பிறந்தோ னாவினுட் பிறந்த, நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப, ஏம வின்றுயி லெழுதலல்லதை, வாழிய வஞ்சியுங் கோழியும் போலக், கோழியி னெழாதெம் பேரூர் துயிலே" (பரி. தி. 27:7-11)

655-6. வில்லைப் புராணம், 257.

658. மருதப்பண் காலைக்குரியது : புறநா. 149 ; சீவக. 1991.

659. (பி-ம்.) 'கவழ மகைப்ப'

"கல்லா விளைஞர் கவ்ளங் கைப்ப" முல்லை. 36.

660. (பி-ம்.) 'தெவிட்டிப்'

"பணைநிலைப்புரவி : மணி 7:117.

662. (பி-ம்) 'கள்கொடை நுவல நல்லோர்'

665. (பி-ம்) 'கண்பொரு பெறிக்கும்'

666. (பி-ம்) 'ஒன்ப லவிரிழை தெளிர்ப்ப வியலி'

669. பழஞ்செருக்கு : மலைபடு. 173

670. (பி-ம்) 'சூதரேத்த'

671. (பி-ம்) 'வேதாளியர்' நாழிகையிசைத்தல் : முல்லை. 55-8, குறிப்புரையைப் பார்க்க.

670-71. சூதர், மாகதர், வேதாளிகர் : சிலப். 5:48 ; மணி. 28:50. சிலப். 5:49, அடியார். மேற்.

673. பொறிமயிர் வாரணம் : மணி. 7:116

673-4. யானையங்குருகு : "யானையங் குருகின் கானலம் பெருந்தோடு" (குறுந். 34:4-5) ; "களிமயில், குஞ்சரக் குரல குருகொ டாலும் (அகநா. 145:14-5) ; "கீசுகீ சென்றெங்கு யானைச் சாத்தன் கலந்து" (திருப்பாவை, 7)

678. நீனிற விசும்பு : முருகு. 116, குறிப்புரையைப் பார்க்க.

682. (பி-ம்) 'நிலம்படுபுக்க' 680-82. சீவக. 72.

683. (பி-ம்) 'குருப்பைக்காயும்'

684. தருமணன் முற்றம் : நெடுநல். 90 ; நற். 143:2 ; அகநா. 187:9 ; பெருங். 1. 34:40.

686. ஏமவைகறை : "ஏமவைகல்" குறுந். கடவுள் ; பரி. 17:53. சிலப். 4.:80.

687. மழவரோட்டி : "உருவக் குதிரை மழவ ரோட்டிய" (அகநா. 1:2)

688. இடைப்புலத்தொழிந்த : மதுரைக். 349

692. ஊர்சுடுவிளக்கு : புறநா. 7:8

691-2. "அரவூர் மதியிற் கரிதூர வீம, இரவூ ரெரிகொளீஇக் கொன்று-நிரைநின்ற, பல்லான் றொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர், கொல்வார்ப் பெறாஅர் கொதித்து" (தொல். புறத். சூ. 3, ந. மேற்.) ; மதுரைக். 126-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

694. கைதொழூஉப் பழிச்சி : பெரும்பாண். 463

695-7. மலைபடு. 526-9

693-7. மதுரைக். 149-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

698. "வானத் தன்ன வளநகர்" (மதுரைக். 741) ; "மாந்தரஞ் சேர லிரும்பொறை யோம்பிய நாடே, புத்தே ளுலகத்தற்று" (புறநா. 22:34-5)

699. "மலிபுகழ்க்கூடல்" (மதுரைக். 429)
--------

    யொண்பூம் பிண்டி யவிழ்ந்த காவிற்
    சுடர்பொழிந் தேறிய விளங்குகதிர் ஞாயிற்
    றிலங்குகதி ரிளவெயிற் றோன்றி யன்ன
    தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை
    நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து         705
    மயிலோ ரன்ன சாயன் மாவின்

    தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்
    தீர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற்
    றொண்குழை புணரிய வண்டாழ் காதிற்
    கடவுட்கயத் தமன்ற சுடரிதழ்த் தாமரைத்         710
    தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத்
    தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து
    கோதையிற் பொலிந்த சேக்கைத் துஞ்சித்
    திருந்துதுயி லெடுப்ப வினிதி னெழுந்து
    திண்கா ழார நீவிக் கதிர்விடு         715
    மொண்கா ழாரங் கவைஇய மார்பின்
    வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்ப
    வெருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற்
    பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம்
    வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச்         720
    சோறமை வுற்ற நீருடைக் கலிங்க
    முடையணி பொலியக் குறைவின்று கவைஇ
    வல்லோன் றைஇய வரிப்புனை பாவை
    முருகியன் றன்ன வுருவினை யாகி
    வருபுணற் கற்சிறை கடுப்ப விடையறுத்         725
    தொன்னா ரோட்டிய செருப்புகன் மறவர்

    வாள்வலம் புணர்ந்தநின் றாள்வலம் வாழ்த்த
    வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின்
    மாதாங் கெறுழ்த்தோண் மறவர்த் தம்மின்
    கல்லிடித் தியற்றிய விட்டுவாய்க் கிடங்கி         730
    னல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின்
    கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த
    மாக்கண் முரச மோவில கறங்க

    வெரிநிமிந் தன்ன தானை நாப்பட்
    பெருநல் யானை போர்க்களத் தொழிய         735
    விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
    புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை
    நீர்யா ரென்னாது முறைகருதுபு சூட்டிக்
    காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப்
    பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து         740
    வானத் தன்ன வளநகர் பொற்ப
    நோன்குறட் டன்ன வூன்சாய் மார்பி
    னுயர்ந்த வுதவி யூக்கலர்த் தம்மி
    னிவந்த யானைக் கணநிறை கவர்ந்த
    புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற்         745
    பெருஞ்செ யாடவர்த் தம்மின் பிறரும்
    யாவரும் வருக வேனோருந் தம்மென
    வரையா வாயிற் செறாஅ திருந்து

    பாணர் வருக பாட்டியர் வருகயாணர்ப்
    புலவரொடு வயிரியர் வருகென         750
    விருங்கிளை புரக்கு மிரவலர்க் கெல்லாங்
    கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக்
    களந்தோறுங் கள்ளரிப்ப
    மரந்தோறு மைவீழ்ப்ப
    நிணவூன்சுட் டுருக்கமைய         755
    நெய்கனிந்து வறையார்ப்பக்
    குரூஉக்குய்ப்புகை மழைமங்குலிற்
    பரந்துதோன்றா வியனகராற்
    பல்சாலை முதுகுடுமியி
    னல்வேள்வித் துறைபோகிய         760
    தொல்லாணை நல்லாசிரியர்
    புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பி
    னிலந்தரு திருவி னெடியோன் போல
    வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர்
    பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி         765
    யரியதந்து குடியகற்றிப்
    பெரியகற் றிசைவிளக்கி

    முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
    பன்மீ னடுவட் டிங்கள் போலவும்
    பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப்         770
    பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
    பெரும்பெயர் மாறன் றலைவ னாகக்
    கடந்தடு வாய்வா ளிளம்பல் கோச
    ரியனெறி மரபினின் வாய்மொழி கேட்பப்
    பொலம்பூ ணைவ ருட்படப் புகழ்ந்த         775
    மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன
    ரவரும் பிறருந் துவன்றிப்
    பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த
    விலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
    மணங்கமழ் தேறன் மடுப்ப நாளு         780
    மகிழ்ந்தினி துறைமதி பெரும
    வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே.
------------------

706. (பி-ம்) 'மயிலோடன்ன'

மயிலோரன்னசாயல் : முருகு. 205-ஆம் அடியின் குறிப்புரையையும், சிறுபாண். 16-ஆம் அடியின் குறிப்புரையையும் பார்க்க.

706-7. மகளிர்மேனிக்கு மாந்தளிர் : முருகு. 143-4-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

707-9. "ஈன்றவ டிதலையோ லீரீப்பெய்யுந் தளிரோடும்" (கலித். 32-7)

715-6. (பி-ம்) 'கதிர்விடுபொண்காழ்' "தன்கடற் பிறந்த முத்தி னாரமு, முனைதிறை கொடுக்குந் துப்பிற் றன்மலைத், தெறலரு மரபிற் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தி னாரமு, மிருபே ராரமு மேழில்பெற வணியுந், திருவீழ் மார்பிற் றென்னவன்" (அகநா. 13:1-6); "கோவா மலையாரங் கோத்த கடலாரம் ........................ தென்னர் கோன் மார்பினவே" (சிலப். 17 : உள்வரி. 1)

718. விரவுப்பூந்தெரியல் : மதுரைக். 745.

720-21. (பி-ம்) 'சுடர, வுறையமைவுற்ற சோறுடைக்கலிங்கம்'

723. "வல்லோன் றைஇய பாவைகொல்" (கலித். 56:7)

727. (பி-ம்) 'தாள்வலம் பழிச்ச'

726-7. சிறுபாண். 212-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

725-8. "அவர்படை வரூஉங் காலை நும்படைக், கூழை தாங்கிய வகல்யாற்றுக், குன்றுவிலங்கு சிறையி னின்றனை", "வேந்துடைத்தானை முனைகெட நெரிதர, வேந்துவாள் வலத்த னொருவ னாகித், தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற், காழி யனையன்" (புறநா. 169:3-5, 3301 -4) ; "பொருபடையுட் கற்சிறைபோன், றொருவன் றாங்கிய நிலையுரைத்தன்று", "செல்கணை மாற்றிக் குருசில் சிறை நின்றான்" (பு. வெ. 54, 263)

730. "கல்லகழ் கிடங்கின்" (மலைபடு. 91) ; "கல்லறுத் தியற்றிய வல்லுவர்ப் படுவில்" (அகநா. 79:3) ; "பாருடைத்த குண்டகழி" (புறநா. 14:5) ; "பாரெலாம் போழ்ந்தமா கிடங்கு" (கம்ப. நகரப். 17)

731. கலித். 92:62, ந, சீவக. 906, ந. மேற்.

733. (பி-ம்) 'மயிர்க்கண் முரச மோவாது சிலைப்ப'

732-3. "ஓடா நல்லேந் றுரிவை தைஇய, பாடுகொண் முரசம்" (அகநா. 334:1-2) ; "விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்", "மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பி, னண்ண னல்லே றிரண்டுடன் மடுத்து, வென்றதன் பச்சை சீவாது போர்த்த, திண்பிணி முரசம்" (புறநா. 63:7, 288:1-4) : "மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி", "மயிர்க்கண் முரசு" (சிலப். 5:88, 91) "ஏற்றுரி போர்த்த முரசு" (மணி. 1:29-31) : "ஏற்றுரி முரசம்", "ஏற்றுரி போர்த்த வள்வா ரிடிமுரசு", "புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற, கனைகுர லுருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த, துனைகுரன் முரசத் தானை" (சீவக. 2142, 2152, 2899) ; "ஏற்றுரியி, னிமிழ்முரசம்" (யா. வி. செய், சூ. 40, மேற். "தாழிரும்") ; "சாற்றிடக் கொண்ட வேற்றுரி முரசம்" "ஏற்றுரி முரசி னிறைவன்", "ஏற்றுரி போர்த்த ............... முரசம்" (பெருங். 1. 38:100, 43:195, 2.2:26-9) "மயிர்க்கண் முரச முழங்க" (பு. வெ. 171)
"மயிர்க்கண் முரசு" என்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் (சிலப். 5:88, அடியார்.)

734, (பி-ம்) 'எரிபரந்தன்ன', 'எரி நிகழ்ந்தன்ன' படைக்கு நெருப்பு : "கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினும்" (பு. வெ. 55)

737. பொலம்பூந்தும்பை : பதிற். 45:1 ; புறநா. 2:14, 22:20, 97:15.

739. காழ்மண்டெஃகம் : காழ்மண் டெஃகங் களிற்றுமுகம் பாய்ந்தென" (மலைபடு. 129) ; "காழ்மண் டெஃகமொடு காற்படை பரப்பி" (பெருங். 3. 29:212)

740. (பி-ம்) 'வளங்கெழு நகர்நோன்' வானத்தன்ன நகர் : மதுரைக் 698-ஆம் அடியின் குறிப்புரையைப்பார்க்க.

742. "எஃகா டூனங் கடுப்பமெய் சிதைந்து" (பதிற். 67:17) ; "கார்சூழ் குறட்டின் வேனிறத் திங்க", "தச்ச னடுத்தெறி குறட்டினின்றுமாய்ந் தனனே" (புறநா. 283:8, 290:4-5) ; "வீரவேலுடம்பெலாஞ் சூழ வெம்புலால், சோருஞ்செங் குருதியுண் மைந்தர் தோன்றுவார், ஒருமே லொண்மணிச் சூட்டு வைக்கிய, வாரமே யமைந்த தேர்க் குழிசி யாயினார்" (சீவக. 790)

747. பொருந. 101, ந. மேற்.

752. கொடுஞ்சி நெடுந்தேர் : பெரும்பாண். 416-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

பரிசிலர்க்குத் தேர் கொடுத்தல் : மதுரைக். 223-4-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

தேரோடுகளிறுதருதல் : சிறுபாண். 142-3-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

களிறுதருதல் : பொருந. 125-6-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

755. (பி-ம்) 'ஊன்சூட்டு'

758. 'தோன்றிய வியன்சாரல்'

759-60. (பி-ம்) 'முதுகுடுமிநல்'

760-61. "பல்கேள்வித் துறைபோகிய, தொல்லாணை நல்லாசிரியர்" (பட்டினப். 169-70)

763. மதுரைக். 60-61. "நிலந்தரு திருவி னெடியோய்" (பதிற். 82:16) ; "நிலந்தரு திருவின் ................. கௌரியர்", "நிலந்தரு திருவி னெடியோன் றனாது" (சிலப். 15:1-2, 28:3)

768. பொருந. 135-6 ; பெரும்பாண். 441-2.

769. சிறுபாண். 219-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

769-70. சிறுபாண். 219-20-ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க.

773. கோசர் : புறநா. 169:9-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

775. (பி-ம்.) 'உளப்பட'

779-81. பொருந. 85-8-ஆம் அடிகளின் கீழ்க்குறிப்பைப் பார்க்க ; "ஓண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய, தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந், தாங்கினி தொழுகுமதி பெரும" (புறநா. 24:31-3) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.

782. நல்லூழி : மதுரைக். 21.
----- --------------- ---------

இதன் பொருள்


இப்பாட்டிற்கு மாங்குடிமருதனார் மதுரைக்காஞ்சியென்று துறைப் பெயரானன்றித் திணைப்பெயராற் பெயர் கூறினார். இத்திணைப் பெயர் பன்னிருபடல முதலிய நூல்களாற் கூறிய திணைப்பெயரன்று, தொல்காப்பியனார் கூறிய திணைப்பெயர்ப் பொருளே இப்பாட்டிற்குப் பொருளாகக் கோடலின். வஞ்சி மேற்செல்லலானும், காஞ்சி எஞ்சாதெதிர் சென்றூன்றலானும், "வஞ்சியுங் காஞ்சியுந் தம்முண் மாறே" எனப் பன்னிருபடலத்திற்கூறிய திணைப்பெயர் இப்பாட்டிற்குப் பொருளன்மையுணர்க. அவர் முதுமொழிக்காஞ்சி முதலியவற்றைப் பொதுவியலென்று ஒரு படலமாக்கிக் கூறலின், அவை திணைப்பெயராகாமை யுணர்க.
இனி, மதுரைக்காஞ்சியென்றதற்கு மதுரையிடத்து அரசற்குக் கூறிய காஞ்சியென விரிக்க. இஃது உருபும்பொருளும் உடன்றொக்கது. "காஞ்சி தானே பெருந்திணைப் புறனே" (தொல். புறத். சூ 22) என்பதனாற் காஞ்சி பெருந்திணைக்குப் புறனாயிற்று. அது, "பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானு, நில்லா வுலகம் புல்லிய நெறித்தே" (தொல். புறத். சூ. 23) என்பதாம். இதன்பொருள் : பாங்கு அருசிறப்பின்-தனக்குத் துணையில்லாத வீடுபேறு நிமித்தமாக, பல ஆற்றானும்-அறம் பொருள் இன்பமென்னும் பொருட்பகுதியானும், அவற்று உட்பகுதியாகிய உயிரும் யாக்கையும் செல்வமும் இளமையு முதலியவற்றானும், நில்லா உலகம் புல்லிய நெறித்து-நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை உடைத்து அக்காஞ்சியென்றவாறு. எனவே, வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமை சான்றோரறையுங் குறிப்பினது காஞ்சித்திணையென்பது பொருளாயிற்று.

இச்செய்யுட்புலவர் இப்பொருளே கோடலின், யாம் இப்பொருளே தர உரை கூறுகின்றாம்

1-2. [ஓங்குதிரை வியன்பரப்பி, னொலிமுந்நீர் வரம்பாக :] வியல்பரப்பின் ஓங்கு திரை ஒலி முந்நீர் வரம்பு ஆக - அகலத்தையுடைத்தாகிய நீர்ப்பரப்பின்கண்ணே ஓங்குதிரை ஒலிக்குங்கடல் எல்லையாக,

3-4. தேன் தூங்கும் உயர் சிமையம் மலை நாறிய வியல் ஞாலத்து-தேனிறால் தூங்கும் உயர்ந்த உச்சியையுடைய மலைகள் தோன்றிய அகலத்தையுடைய ஞாலத்தின் கண்ணே,

5. வலம் மாதிரத்தான் வளி கொட்ப-வலமாக ஆகாயத்தின் கண்ணே காற்றுச் சுழல,

6. வியல் நாண்மீன் நெறி ஒழுக-அகலத்தையுடைய நாண்மீன்கள் தாம் நடக்கும் நெறியின்கண்ணே நடக்க,

7, பகல் செய்யும் செ ஞாயிறும்-பகற்பொழுதை உண்டாக்கும் சிவந்த பகலோனும்,

8. இரவு செய்யும் வெள் திங்களும்-இராப்பொழுதை உண்டாக்கும் வெள்ளிய மதியும்,

9. மை தீர்ந்து கிளர்ந்து விளங்க-குற்றமற்றுத் தோன்றிவிளங்க,

10. மழை தொழில் உதவ-மேகம் தானே பெய்தற்றொழிலை வேண்டுங்காலத்தே தர,

@உழவுத்தொழிற்கு உதவவென்றுமாம்.

மாதிரம் கொழுக்க-திசைகளெல்லாம் தழைப்ப,

மலைகள் விளைந்துகொழுக்க வென்றுமாம்.

11. [தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய :] தொடுப்பின் வித்தியது ஆயிரம் விளைய-ஒருவிதைப்பின்கண்ணே விதைத்தவிதை ஆயிரமாக விளைய,

12. நிலனும்-விளைநலங்களும்,

மரனும்-மரங்களும்,

பயன் எதிர்பு தந்த-பல்லுயிர்க்கும் தம்பயன்கொடுத்தலை #ஏறட்டுக்கொண்டு தழைப்ப,

13. நோய் இகந்து &நோக்கு விளங்க-மக்கட்குப் $பசியும் பிணியும் நீங்கி அழகு விளங்க,

14-5. [மேதக மிகப்பொலிந்த, வோங்குநிலை வயக்களிறு :] மிக பொலிந்த ஓங்கு நிலை வய களிறு மே தக-அறவும் பொலிவுபெற்ற %உலகத்தைத் தாங்குதல் வளருந் தன்மையையுடைய வலியையுடையவாகிய திக்கயங்கள் இவர் தாங்குதலின் வருத்தமற்று மேம்பாடுதக,
------
    @ "காலை மாரி பெய்துதொழி லாற்றி" (பதிற். 84:21) ; "ஏரினாழஅ ருழவர் புயலென்னும், வாரி வளங்குன்றிக் கால்" (குறள், 14)
    # ஏறட்டுக்கொள்ளல்-மேற்கொள்ளல் ; மதுரைக். 147, ந.
    & நோக்கு-அழகு : "பெரிய நோக்கின-பெரிய அழகையுடைய" (சீவக. 1461, ந.)
    $ "நோயொடு பசியிகந் தொரீஇப், பூத்தன்று பெருமநீ காத்த நாடே", "நீபுறந் தருதலி னோயிகந் தொரீஇய, யாணர்நன் னாடும்" (பதிற். 13:27-8, 15:33-4) ; "பசியும் பிணியும் பகையு நீங்கி" (சிலப். 5:72, மணி. 1:70) ; "பசிபகை யானதுந் தீங்கு நீங்க" (இரண்டாங் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி)
    % "கூறொன்றத், தாங்கிப் பொறையாற்றாத் தத்தம் பிடர்நின்றும், வாங்கிப் பொது நீக்கி மண்முழுதும்-ஓங்கிய, கொற்றப் புயமிரண்டாற் கோமா னகளங்கன், முற்றப் பரித்ததற்பின் முன்புதாம்-உற்ற, வருத்த மறமறந்து மாதிரத்து வேழம், பருத்த கடாந்திறந்து பாய" (விக்கிரம உலா) ; கம்ப. 2. மந்திரப், 16-ஆஞ் செய்யுளைப் பார்க்க.
--------

@சுருளும் படியுமாகப் பண்ணினவிடத்துப் பண்ணிநிற்கும் யானையென்றுரைப்-பாருமுளர்.

16-7. [கண்டுதண்டாக் கட்கின்பத், துண்டுதண்டா மிகுவளத்தான் :]

#உண்டு தண்டா மிகு வளத்தான்-உண்டு அமையாத உணவுமிகுகின்ற செல்வத்தோடே,

கண்டு தண்டா கட்கு இன்பத்து-நோக்கியமையாத கட்கு இனிமையினையும்,

18. உயர் பூரிமம் விழு தெருவில்-உயர்ந்த &சிறகுகளையுமுடைய சீரிய தெருவிலிருக்கும் மாந்தர் (20),

பூரிமம்-சாந்திட்ட தொட்டிகளென்பாருமுளர்.

19-20. [பொய்யறியா வாய்மொழியாற், புகழ்நிறைந்த நன்மாந்தரொடு :] வாய் மொழியால் புகழ் நிறைந்த பொய் அறியா நல் மாந்தரொடு- %4மெய்ம்மொழியே எக்காலமும் கூறுதலாற்பெற்ற புகழ் நிறைந்த $பொய்யைக் கேட்டறியாத நல்லஅமைச்சருடனே,

21. @@நல் ஊழி அடி படா-நன்றாகிய ஊழிக்காலமெல்லாம் தமக்கு அடிப்பட்டு நடக்க.

22. பல் வெள்ளம் மீ கூற-பல ##வெள்ளமென்னும் எண்ணைப் பெற்ற காலமெல்லாம் அரசாண்டதன்மையை மேலாகச் சொல்லும்படி,

23. உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக-உலகத்தையாண்ட உயர்ச்சி பெற்றோர் குடியிலுள்ளவனே,

மாதிரம் கொழுக்க (10) வித்தியதுவிளைய (11) நிலனும் மரனும் நந்த (12) வளிகொட்கையினாலே (5) மழை தொழிலுதவ (10) என முடிக்க.
-------
    @ இவ்வாறமைந்த படியினைக் களிற்றுப்படி யென்று வழங்குவர்.
    # உண்டு-நுகர்ந்து எனலும் பொருந்தும்.
    & சிறகு-தெருவின் இருபுறத்துமுள்ள வீடுகளின் வரிசை ; 'தென்சிறகு வடசிறகு' எனவரும் வழக்கினையுணர்க.
    % "பொய்யாமை யன்ன புகழில்லை" (குறள், 296)
    $ "பொய்ச்சொற் கேளா வாய்மொழி மன்னன்" (கம்ப. கைகேசி. 31)
    @@ "நல்லூழியென்றார், கலியூழியல்லாத ஊழியை" (மதுரைக். 781-2, ந.) என்பர் பின்.
    ## வெள்ளம்-ஒருபேரெண் ; "வெள்ள வரம்பி னூழி" (ஐங். 281:1) ; "வெள்ளமு நுதலிய, செய்குறி யீட்டம்" (பரி. 2:14-5) ; தொல். புள்ளி, சூ, 98, உரையைப் பார்க்க.
------

வியன்ஞாலத்திடத்தே (4) மழைதொழிலுதவ (10) நாண்மீன் நெறி யொழுக (6) ஞாயிறும் (7) திங்களும் (8) விளங்க (9) நோக்கு விளங்கக் (13) களிறு (15) மேதக (14) நன்மாந்தரோடே (20) ஊழி அடிப்பட்டு நடக்கும்படி (21) மீக்கூற (22) முந்நீர்வரம்பாக (2) உலக மாண்ட உயர்ந்தோர்மருக (23) என முடிக்க.

1இவர்கள் தருமத்தில் தப்பாமல் நடத்தவே இக்கூறியவையும் நெறிதப்பாமல் நடக்குமென்றார்.

24-5. பிணம் கோட்ட களிறு 2குழும்பின் நிணம் வாய் பெய்த பேய் மகளிர் - பிணங்களையுடைய கொம்புகளையுடையனவாய்ப் பட்ட ஆனையினுடைய திரளின் நிணத்தைத்தின்ற பேய்மகளிருடைய துணங்கை (26)

26. இணை ஒலி இமிழ் 3துணங்கை சீர்-இணைத்த ஆரவாரம் முழங்குகின்ற துணங்கைக்கூத்தின் சீர்க்கு,

27. பிணை யூபம் எழுந்து ஆட-செறிந்த குறைத்தலைப்பிணம் எழுந்து நின்று ஆடுகையினாலே,

28. அஞ்சு வந்த போர்க்களத்தான்-4அஞ்சுதலுண்டான போர்க்களத்திடத்தே,

29. ஆண் 5தலை அணங்கு அடுப்பின்-ஆண்மக்கள் தலையாகிய நோக்கினாரை வருத்தும் அடுப்பின்கண்ணே,
--------
    1 "இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட, பெயலும் விளையுளுந்தொக்கு" (குறள், 545) ; "கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும், கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்" (மணி. 7:8-9) ; "கோணிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி, நீணில மாரியின்றி விளைவஃகிப் பசியு நீடிப், பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந்தறங்கண் மாறி, யாணையிவ் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்" (சீவக. 255)

    2 குழும்பு : இக்காலத்துக் கும்பு என மருவிவழங்கும்.

    3 துணங்கையின் இயல்பை, முருகு. 56-ஆம் அடியின் உரையினால் அறியலாகும்.

    4 பேய் ஆடியயரும் இடங்கள் அச்சம் தருவனவாதலை மணிமேகலையில், "கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துத், தண்டாக் களிப்பினாடுங் கூத்துக், கண்டனன் வெரீஇக் கடுநவை யெய்தி, விண்டோர் திசையின் விளித்தனன் ............... பேய்க்கென் னுயிர்கொடுத் தேனென" (6:125-30) எனவரும் பகுதியிற் கூறப்படுஞ் செய்தியாலறியலாகும்.

    5 தலையைப் பேய்கள் அடுப்பாகக் கோடல் ; "அரக்கர் முடிகளையடுப்பு வகிர்வன", "முடித்தலை யொப்ப வடுப்பென வைத்து" (திருவகுப்பு, பொருகளத், செருக்களத்.)
---------

30-31. வய வேந்தர் ஒள் குருதி சினம் தீயின் பெயர்பு பொங்க-வலியினையுடைய வேந்தருடைய ஒள்ளிய 1குருதியாகிய உலை சினமாகிய தீயின் மறுகிப் பொங்குகையினாலே,

32-8. [தெறலருங் கடுந்துப்பின், விறல்விளங்கிய விழுச்சூர்ப்பிற், றொடித்தோட்கை துடுப்பாக, வாடுற்ற வூன்சோறு, நெறியறிந்த கடிவாலுவ, னடியொதுங்கிப் பிற்பெயராப், படையோர்க்கு முருகயர :]

தொடி தோள் 2கை துடுப்பு ஆக (34) ஆடு உற்ற ஊன் சோறு (35) 3வீரவளையை உடையவாகிய தோளையுடைய கைகள் துடுப்பாகக் கொண்டு துழாவி அடுதலுற்ற ஊனினாகிய சோற்றை,

நெறி அறிந்த கடி வாலுவன்-இடுமுறைமையறிந்த பேய் 4மடையன்.

தெறல் அரு கடு துப்பின் (32) விறல். விளங்கிய விழு சூர்ப்பின் (33) அடி ஒதுங்கி பின் பெயரா (37) படையோர்க்கு முருகு அயர (38)-பகைவராற் கோபித்தற்கு அரிய கடிய வலியினையும் வெற்றிவிளங்கிய சீரிய கொடுந்தொழிலினையுமுடையராய் இட்ட அடிவாங்கிப் பின்போகாத வீரர்க்கு வேள்விசெய்யும்படி,

39. அமர் கடக்கும் வியல் தானை-போரைவெல்லும் அகலத்தையுடைய படையினையுடைய,
போர்க்களத்தே (28) ஆடுற்றசோற்றை (35) வாலுவன் (36) அடிபெயரா (37) வீரர்க்கு முருகயரக் (38) கடக்குந்தானையென்க.

40-42. [தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற், றொன்முது கடவுட் பின்னர் மேய, வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந :]

வரை தாழ் அருவி பொருப்பின் கடவுள்-பக்க மலையிலே விழுகின்ற அருவியினையுடைய பொதியின்மலையிலிருக்கும் கடவுள்,

தென்னவன் பெயரிய துன் அரு துப்பின் தொல் முது கடவுள் பின்னர் மேய பொருந-5இராவணனைத் தமிழ்நாட்டையாளாதபடி
------
    1 குருதியை உலையாகப் பெய்தல், "அவற்றி னுலையென விரத்தம் விடுவன" (பொருகளத்தலகை வகுப்பு.)
    2 கைகளைத் துடுப்பாகக்கொள்ளல் : "அவர்கரவகப்பை யவைகொடு புகட்டி யடுவன" (பொருகளத்தலகை வகுப்பு)
    3 தொடி-வீரவளை ; மதுரைக். 720, ந.
    4 மடையன்-சோறாக்குவோன்.
    5 தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்தி வந்த இராவணனை, அகத்தியர் பொதியின்மலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினரென்பது பண்டை வரலாறு ; அவர் இசையிலே வல்லுநரென்பது, "மன்னு மகத்தியன்யாழ் வாசிப்ப" (திருக்கைலாய ஞானவுலா), "தமிழ்க்குன்றில் வாழுஞ் சடாதாரி பேர்யாழ் தழங்குத் திருக்கை" (தக்க. 539) என்பவற்றாலும் பொதியில் உருகியது, "இனிய பைந போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழமைமுதிர்ந்த அகத்தியன் பின்னே எண்ணப்பட்டுச் சான்றோனாயிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே,
-----------

"திசைநிலைக் கிளவியி னாஅ குநவும்" (தொல். எச்ச. சூ. 53) என்றதனால், இராவணன் தென்றிசை யாண்டமைபற்றித் 1தென்னவனென்றார் ; இப்பெயர் பாண்டியற்கும் 2கூற்றுவற்கும் ஏற்றுநின்றாற்போல. அகத்தியனைத் தென்றிசையுயர்ந்த நொய்ம்மைபோக இறைவனுக்குச் சீரொப்ப இருந்தா னென்பதுபற்றிக் கடவுளென்றார். இராவணனாளுதல் பாயிரச்சூத்திரத்து 3உரையாசிரியர் கூடிய உரையானுமுணர்க.

இனி, "முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கா, லிப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய, வக்கடவுண் மற்றக் கடவுள்" (கலித். 93:11-3) என 4இருடிகளையும் கடவுளென்று கூறியவாற்றானும் காண்க.

இதனால், 5அகத்தியனுடன் தலைச்சங்கத்துப் பாண்டியனிருந்து தமிழாராய்ந்த சிறப்புக்கூறினார்.
6 கூற்றுவனையுதைத்த கடவுளென்று இறைவனாக்கி, அவன்பின் னரென்றது அகத்தியனையென்று பொருள்கூறின், இறைவனுக்குத்

தமிழின் பொதியமால் வரைபோ லிசைக்குருகாது" (சோணசைல. 26) என்பதனாலும், அகத்தியர் அதனையுருக்கியது, "மலை, முன்னாளுருக்கு முனிநிகர்வை" (வெங்கையுலா, 319) என்பதனாலும், இராவணனை இசைபாடி அடக்கியது, "பொதியிலின்கண் இருந்து இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி" (தொல். பாயிரம். ந.), "இசைக்குருகப் படுசிலை-இராவணனைப்பிணிக்கக் குறுமுனிபாடும் இசைக்கு உருகப்பட்ட பொதியின்மலை" (தஞ்சை. 345, உரை) என்பவற்றாலும் உணரப்படும்.
----------
    1 "தென்னவன் மலையெடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு" (தே. திருநா. திருக்கச்சிமேற்றளி)
    2 தென்னவனென்னும் பெயர் கூற்றுவனுக்காதல் "சட்டத் தென்னவன் றன்கடா வேந்தனை, வெட்டி" (தக்க. 684) ; "காலத் தென்னவன் மகிடமேறான்" அருணாசல. பாகம்பெற்ற. 4 ; பெரியாழ். 4.5:7.
    3 உரையாசிரியரென்னும் பெயர்க்குரியராக இப்பொழுது கருதப்படும் இளம்பூரணர் உரையில் இச்செய்தி காணப்படாமை ஆராய்ச்சிக்குரியது.
    4 இருடிகளைக் கடவுளென்றல் : சிலப். 11:5. சீவக. 96, 1124 ; பெருங். 2. 11:150, 4. 10:153.
    5 இச்செய்தியை இறையனாரகப் பொருள் முதற்சூத்திர உரையினாலறியலாகும்.
    6 "மறைமுது முதல்வன் பின்னர்" (சிலப். 12) என்பதற்கு, மறைமுது முதல்வன்-மாதேவன் ;
------

இவன் பின்னர் அகத் தம்பியென்றல் சாலாமையானும், 1அப்பொருடருங்காலத்து, முன்னவன் பின்னவன், முன்னோன் பின்னோனென்றல்லது அச்சொல் நில்லாமையானும் அது பொருந்தாது. "முன்னரே சாநாண் முனிதக்க மூப்புள, பின்னரும் பீடழிக்கு நோயுள" (நாலடி. 92) எனப் பிறாண்டும் முன்னர் பின்னரென்பன இடமுணர்த்தியே நிற்குமென்றுணர்க.

2பொருநனென்றது தான் 3பிறர்க்கு உவமிக்கப்படுவானென்னும் பொருட்டு.

43. விழு சூழிய-சீரிய முகபடாத்தையுடையவாய்,

விளங்கு ஓடைய-விளங்குகின்ற பட்டத்தையுடையவாய்,

44. கடு சினத்த-கடிய சினத்தையுடையவாய்,

44-5. கமழ் கடாத்து அளறு பட்ட நறு சென்னிய-கமழுகின்ற மதத்தாலே சேறுண்டான நறிய தலையினையுடையவாய்,

46. வரை மருளும் உயர் தோன்றல-வரையென்றுமருளும் உயர்ந்த தோற்றத்தினையுடையவாய்,

47. வினை நவின்ற பேர் யானை-போர்த்தொழிலிலே பயின்ற பெரிய யானை, இச்செய்தெனெச்சக்குறிப்பரகிய வினையெச்சமுற்றுக்கள் அடுக்கி வந்தனவற்றை நவின்றவென்னும் பெயரெச்சத்தோடு முடிக்க.

48. சினம் சிறந்து களன் உழக்கவும்-சினமிக்குக் களத்துவீரரைக் கொன்றுதிரியவும்,

49-50. மா எடுத்த மலி குரூஉ துகள் அகல் வானத்து வெயில் கரப்பவும்-குதிரைத்திரள் பகைவர்மேற் செல்லுதலாலுண்டான மிக்க நிறத்தையுடையவாகிய தூளி அகலுதற்குக் காரணமான ஆகாயத்திடத்தே வெயிலைமறைக்கவும்,

51-2. வாம் பரிய கடு திண் தேர் காற்று என்ன கடிது கொட்பவும்-தாவும் குதிரைகளையுடைய செலவுகடிய திண்ணியதேர் காற்றுச் சுற்றியடித்ததென்னக் கடிதாகச் சுழலவும்,

தியனாகிய கடவுள்' என்றெழுதிய அரும்பத உரையாசிரியரது உரை, இங்கே கூறப்படுவனவற்றோடு முரணுதல் காண்க.
----------
    1 "பின்னர்-பின்னோன்" (சிலப். 12) என்னும் அடியார்க்கு நல்லாருரையை ஓர்க.

    2 "பொருந-உவமிக்கப்படுவாய்" (முருகு. 276, ந.), "பொருநாகு-ஏனையவற்றிற்கு ஒப்புச் சொல்லப்படும் நாகு" (கலித். 109:4) எனப் பிறாண்டும் இதனை யொத்தே இவ்வுரையாசிரியர் பொருளெழுதுதல் அறிதற்குரியது.

    3 "பிறர்க்குநீ வாயி னல்லது நினக்குப், பிறருவம மாகா வொரு பெரு வேந்தே" (பதிற். 73:2-3) ; "பிறர்க்குவமந் தானல்லது, தனக்குவமம் பிறரில்லென" (புறநா. 377:10-11)
--------

53-4. [வாண்மிகு மறமைந்தர், தோண்முறையான் வீறுமுற்றவும் :] வாள் மிகு மறம் மைந்தர் தோள் வீறு முறையான் முற்றவும்-வாட்போரான் மிகுகின்ற மறத்தையுடைய வீரருடைய தோள் வெற்றி முறையாக வெட்டுதலான் முற்றுப்பெறவும்,

"விருந்தாயினை யெறிநீயென விரைமார்பகங் கொடுத்தாற், கரும்பூணற வெறிந்தாங்கவ னினதூழினி யெனவே" (சீவக. 2265) என்றார் பிறரும்.

55-6. இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய பொருது அவரை செரு வென்றும்-சேரன்சோழனாகிய இருவராகிய பெரிய அரசருடனே 1குறுநில மன்னரும் இளைக்கும்படி பொருது அவரைப் போரைவென்றும் அமையாமல்,
உம்மை : சிறப்பும்மை.

57-9. [இலங்கருவிய வரைநீந்திச், சுரம்போழ்ந்த விகலாற்ற, லுயர்ந்தோங்கிய விழுச்சிறப்பின் :]

உயர்ந்து இலங்கு அருவிய வரை நீந்தி ஓங்கிய விழு சிறப்பின்-உயர்ந்து விளங்குகின்ற அருவிகளையுடைய மலையிற் குறிஞ்சிநிலமன்னரையெல்லாம் கவன்று உயர்ந்த சீரிய தலைமையினாலே,

இகல் ஆற்றல் சுரம் போழ்ந்த சிறப்பின் - மாறுபாட்டை நடத்துதலையுடைய பகைவர்காடுகளைப் பலவழிகாகப்பிளந்த சிறப்பினாலே,

60. நிலம் தந்த பெரு உதவி-நாட்டிலிருக்கின்ற அரசர் நிலங்களையெல்லாங் கொண்ட பெரிய உதவியையும்,

2மலையும் காடும் அரணாக இருந்த அரசரை அழித்தவலியாலே நாட்டிலிருக்கின்ற அரசர் தத்தம் நாடுகளைவிட்டாரென்றதாம்.

61. பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்-பொன்னாற் செய்த தாரையணிந்த மார்பினையுமுடைய 3வடிம்பலம்பநின்ற பாண்டியன் வழியில் வந்தோனே,
---------
    1 குறுநிலமன்னர்-திதியன் முதலாயினோர் ; மதுரைக். 128-9-ஆம் அடிகளின் உரையைப் பார்க்க.
    2 "உண்டாகிய வுயர்மண்ணும், சென்றுபட்ட விழுக்கலனும், பெறல்கூடுமிவ னெஞ்சுறப்பெறின்" (புறநா. 17:24-6) என்பதன் கருத்து இவ்விசேடவுரையுடன் ஒப்புநோக்கற்பாலது.
    3 'முந்நீர்க்கண் வடிம்பலம் நின்றானென்ற வியப்பால், நெடியோனென்றாரென்ப' (புறநா. 9:10, உரை), "அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி, வடிவே லெறிந்த வான்பகை பொறாது .................... கடல் கொள்ள" (சிலப். 11:17-20), "ஆழி வடிம்பலம்ப நின்றானும்" (நள. சுயம். 137), "கடல்வடிம் பலம்ப நின்ற கைதவன்" (வி. பா. 15-ஆம் போர். 18) என்பனவும், "மன்னர்பிரான் வழுதியர்கோன் யானை (47) களனுழக்கவும் (48) துகள் (49) வெயில்கரப்பவும் (50) தேர் (51) கொட்பவும் (52) மைந்தர் (53) முற்றவும் (54) பொருது செருவென்றும் அமையாமல் (56) விழுச்சிறப்பின் (59) நிலந்தந்த உதவியினையும் (60) மார்பினையுமுடைய நெடியோன் (61) என்க.
----------

62-3. மரம் தின்னூஉ வரை உதிர்க்கும் நரை உருமின் ஏறு அனையை-மரங்களைச் சுட்டு மலைகளைநீறாக்கும் பெருமையினையுடைய உருமேற்றை ஒப்பை,
"கருநரைநல்லேறு" (குறுந். 317:1) என்றார் பிறரும். இன் : அசை.

64. அரு குழு மிளை-பகைவர் சேர்தற்கரிய திரட்சியையுடைய காவற்காட்டினையும்,

குண்டு கிடங்கின்-ஆழத்தினையுடைய கிடங்கினையும்,

65. உயர்ந்து ஓங்கிய நிரை புதவின்-உயர்ந்துவளர்ந்த கோபுரங்களிடத்து வாயில்களையும்,

நிரை : ஆகுபெயர். உயர்ச்சி ஓங்குதலை விசேடித்துநின்றது.

66. நெடுமதில்-நெடிய மதிலினையும்,

நிரை ஞாயில்-நிறைந்த சூட்டினையுமுடைய,

அஃது எய்தால் மறைதற்கு உயரப்படுப்பது.

67. [அம்புமி ழயிலருப்பம் :] அயில் அம்பு உமிழ் அருப்பம்-கூர்மையையுடைய அம்புகளையுமிழும் அரண்களை,

மிளை (64) முதலியவற்றையுடைய அருப்பமென்க.

68-9. தண்டாது தலை சென்று கொண்டு நீங்கிய விழு சிறப்பின்-அமையாமல் அவ்விடங்களிலே சென்று கைக்கொண்டு அவ்விடங்களினின்றும் போன சீரிய தலைமையினையுடைய கொற்றவர் (74),

70-71. [தென்குமரி வடபெருங்கல், குணகுடகட லாவெல்லை :] தென்குமரி எல்லை ஆ வட பெரு கல் எல்லை ஆ குண குட கடல் எல்லை ஆ-தென்றிசைக்குக் குமரி எல்லையாக வடதிசைக்குப் பெரியமேரு எல்லையாகக் கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்கும் கடல் எல்லையாக இடையில் வாழ்வோரெல்லாம்,

வடிம்பலம்ப நின்றருளி" (பராந்தகதேவர்மெய்க்.) என்பதும், இப்பெயராற் பெறப்படும் செய்தியைக் கூறுவதுகாண்க ; "வென்றிபடச் சிவந்தெறியக்கருங்கடல்வெவ் வலிதொலைந்து, முன்றெறுமம் புடைந்து பங்கப்பட்டலறி மோதிவிழா, நின்றபடி வடிம்பலம்ப நின்றதுகண் டேனோரு, மின்றிதுகண் டனம்புதுமை யெனம்பயம்விட் டெழத்துதித்தார்", "மாலைமுடி யோன்வேலை வடிம்பலம்ப நின்றதனால், வேலை வடிம்பலம்பநின்றா னென்றெங்கும் விளங்கியதால்" என்பனவற்றால், இச்சிறப்புப் பெயரையுடையார் உக்கிர குமார பாண்டியரென்று கூறுவார் ; திருவால. 21:6, 7

72. தொன்று மொழிந்து தொழில் கேட்ப-தம்முடன் பழமையைச்சொல்லி ஏவல் கேட்கும்படி,

73. வெற்றமொடு வெறுத்து ஒழுகிய-வெற்றியோடே செறிந்து நடந்த,

74. கொற்றவர்தம் கோன் ஆகுவை-வெற்றிடையோர் தம்முடைய தலைவனான தன்மையையுடையை,

75-6. வான் இயைந்த இரு முந்நீர் பேஎம் நிலைஇய இரு பௌவத்து-மேகம்படிந்த பெரிதாகிய 1மூன்று நீர்மையையுடைய அச்சம் நிலைபெற்ற கரிய கடலிடத்து,

77-9. [கொடும்புணரி விலங்குபோழக், கடுங்காலொடு கரைசேர, நெடுங்கொடிமிசை யிதையெடுத்து :]

கடு காலொடு கொடு புனரி விலங்கு போழ இதை எடுத்து-கடிய காற்றாலே வளைகின்ற திரையைக் குறுக்கே பிளந்தோடும்படி பாய்விரிக்கப்பட்டு,

80. இன்னிசைய முரசம் முழங்க-இனிய ஓசையையுடைய முரசம் முழங்காநிற்க,

81-2. பொன் மலிந்த விழு பண்டம் நாடு ஆர-பொன்மிகுதற்குக் காரணமாகிய சீரிய சரக்குகளை நாட்டிலுள்ளார் நுகரும்படியாக,

[நன்கிழிதரும் :] கரை சேர (78) நன்கு இழிதரும்-கரையைச் சேர வாணிகம் வாய்த்துவந்து இழிதலைச்செய்யும்,

83. [ஆடியற் பெருநாவாய் :] நெடு கொடி மிசை (79) ஆடு இயல் பெரு நாவாய்-நெடிய கொடி பாய்மரத்தின்மேலே ஆடும் இயல்பினையுடைய பெரிய மரக்கலம்,

இதையெடுத்து (79) முழங்க (80) ஆர இழிதரும் (81) நாவாயென்க.

84-5. மழை முற்றிய மலை புரைய துறை முற்றிய துளங்கு இருக்கை-கருமேகஞ்சூழ்ந்த மலைபோலக் கடல்சூழ்ந்த அசைகின்ற இருப்பினையும்,

துறை : ஆகுபெயர். சரக்குப்பறித்தற்குக் கடலில் நின்றமரக்கலங்கள் அக்கடல் சூழ நின்றதற்கு மழைமுற்றிய மலை உவமமாயிற்று.

நாவாய் துளங்கிருக்கையென்க.

86. தென் கடல் குண்டு அகழி-தெளிந்த கடலாகிய ஆழத்தையுடைய கிடங்கினையுமுடைய.

87-8. சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ-தலைமையமைந்த உயர்ந்த நெல்லின்பெயரைப்பெற்ற சாலியூரைக் கொண்ட உயர்ந்த வெற்றியையுடையவனே,
---------
    1 மூன்று நீர்மை-நிலத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்பன ; பெரும்பாண். 441, குறிப்புரையைப் பார்க்க.
--------

இதனால், தனக்குநடவாததோர் ஊர்கொண்டானென்றார்.

இன்னை அசையாக்கி நெல்லூரென்பாருமுளர்.

இருக்கையினையும் (85) கிடங்கினையும் (86) உடைய ஊரென்க.

89-92. [நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர், பாடுசிலம்பு மிசையேற்றத், தோடுவழங்கு மகலாம்பியிற், கயனகைய வயனிறைக்கும் :]

வயல் அகைய நிறைக்கும் கயன் நீர் (92) 1தெவ்வும் நிரை 2தாழுவர் (89) பாடு சிலம்பும் இசை (90)-வயல் தழைக்கும்படி நீரை நிறைத்தற்குக்காரணமான குளங்களில் நீரை 3இடாவான் முகந்துகொள்ளும் நிரையாகநின்று தொழில்செய்வாரிடத்தே ஒலிக்குமோசை,

ஏற்றத் (90) தோடு வழங்கும் அகல் ஆம்பியின் (91) இசை (90) -ஏற்றத்துடனே உலாவும் அகன்ற பன்றிப்பத்தரின் ஓசை,

93. மெல் தொடை வல் கிழாஅர் இசை (95)-மெத்தென்ற கட்டுக்களையுடைய வலிய 4பூட்டைப்பொறியினோசை.

94. அதரி கொள்பவர் இசை (95)-கடாவிடுகின்றவர் ஓசை,

பகடு பூண் தெள் மணி இசை (95)-எருதுகள் பூண்ட தெள்ளிய மணியின் ஓசை,

95. இரு புள் ஒப்பும் இசையே-பயிர்களிற் பெரிய கிளி முதலியவற்றை ஓட்டும் ஓசை,

ஏகாரம் : ஈற்றசை.

என்றும்-எந்நாளும்,

96-7. மணி பூ முண்டகத்து மணல் மலி கானல் பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப-நீலமணிபோலும் பூக்களையுடையவாகிய கழிமுள்ளிகளையுடைய மணற்குன்றுகள் மிக்க கடற்கரையிலிருக்கும் பரத
-------------
    1 'தெவ்வு' என்றபாடமே நேரானது : "எடுத்தல் படுத்தல்" (பிரயோக. 40) என்பதன் உரையைப் பார்க்க; "சோணாடுதெவ்வுதலும்" என்றார், ஸ்ரீகச்சியப்பமுனிவரும் ; காஞ்சி. நகரேற்று. 142.

    2 தொழில் செய்வாரென்னும் பொருளில் தொழுவரென்பது (மதுரைக். 122) என்புழியும், "நெல்லரியு மிருந்தொழுவர்" "நெல்லரி தொழுவர்" (புறநா. 24:1, 209:2) என்புழியும் வந்துள்ளது.

    3 இடா-இறைகூடை ; "பேரிடாக் கொள்ளமுன் கவித்து" (பெரிய. இளையான்குடி. 17)

    4 "காலை யங்கதிற் பூட்டையங் கடமதொன் றமிழ, மேலெ ழுந்து செல் கின்றதோர் கடமென மேலை,வேலை வெங்கதி ரமிழ்ந்துற முழுமதி விண்ணின், பாலெ ழுந்தது விரிகதி ருலகெலாம் பரப்பி" (சீகாளத்தி. கன்னியர். 119) என்பதனால், பூட்டைப்பொறியினியல்பை அறிந்து கொள்க. இது காஞ்சீபுரத்தின் பக்கத்திலுள்ள ஊர்களிற் பெரும்பாலும் காணப்படும்.
------

வருடைய மகளிராடும் குரவைக்கூத்தின் ஓசையோடேகூடி ஆரவாரியா நிற்ப,

98. ஒருசார் விழவு நின்ற வியல் ஆங்கண்-ஒருபக்கம் விழாக் கொண்டாடுதலாற் பிறந்த ஓசைகள் மாறாமல் நின்ற அகலத்தையுடைய ஊர்களிடத்தே யிருந்து,

பாடுசிலம்புமிசை (90) முதலியன குரவையொடு (97) என்றும் (95) ஒலிப்ப (97) ஒருசார் விழவுநின்ற ஊரென்க.

99. முழவு தோள் முரண் பொருநர்க்கு-முழவுபோலும் தோளினையுடையராய்க் கல்வியால் மாறுபடுதலையுடைய 1தடாரிப் பொருநர்க்கு,

100-102. உரு கெழு பெரு சிறப்பின் இரு பெயர் பெரு ஆயமொடு இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும் - அச்சம் பொருந்திய பெரிய தலைமையையுடைய 2கன்றும்பிடியுமென்னும் இரண்டுபெயரையுடைய பெரிய திரளுடனே விளங்குகின்ற கொம்பினையுடைய களிறு களைக்கொடுத்தும்,

இருபெயர்க்கு ஆடும் மாடுமென்பாருமுளர்.

103. பொலந்தாமரை பூ சூட்டியும்-பொன்னாற்செய்த தாமரைப் பூவைச் சூட்டியும்,

104-5. [நலஞ்சான்ற கலஞ்சிதறும், பல்குட்டுவர் வெல்கோவே :]

நலம் சான்ற கலம் சிதறும்கோவே-நன்மையமைந்த பேரணிகலங்களை எல்லார்க்குங்கொடுக்குங்கோவே,

ஊர்களிடத்தே யிருந்து (98) பொருநகர்க்குக் (99) கொடுத்தும் (102) சூட்டியும் (103) அமையாது கலஞ்சிதறுங்கோவேயென்க.

பல் குட்டுவர் வெல்கோவே-பலவாகிய குட்டநாட்டிலுள்ளாரை வெல்லுங்கோவே,

என்பது 3அடை.

இதனால், தன்னாட்டிலூர்களிலிருந்து கொடுக்கின்ற சிறப்புக் கூறினார்.

106. கல் காயும் கடு வேனிலொடு-மலைகள் காய்தற்குக் காரணமாகிய கடிய முதுவேனிலாலே,

107. இரு வானம் பெயல் ஒளிப்பினும்-பெரியமேகம் மழையைத் தன்னிடத்தே மறைத்துக்கொள்ளினும்,
--------
    1 தடாரி-கிணைப்பறை; பு. வெ. 218, உரை.

    2 "கன்றொடு, கறையடி யானை யிரியல் போக்கும், ....................... ஆய்" (புறநா. 135:11-3), "கன்று டைப்பிடி நீக்கிக் களிற்றினம், வன்றொடர்ப்படுக் கும்வன வாரி" (கம்ப. நாட்டு. 32) என்பன இங்கே ஆராயத்தக்கவை.

    3 'அடை' என்றது 'பல்குட்டுவர் வெல்' என்றதனை.
-----

108. [வரும்வைகன் மீன்பிறழினும் :] வைகல் வரும் மீன் பிறழினும்-தான் தோன்றுதற்குரிய நாளிலே தோன்றும் 1வெள்ளி தென்றிசையிலே எழினும்,

109. வெள்ளம் மாறாது விளையுள் பெருக-யாறுகள் வெள்ளம் மாறாமல் வந்து விளைதல் பெருகுகையினாலே,

110. நெல்லின் ஓதை-முற்றின நெல்லுக் காற்றடித்து அசைதலாலே எழுந்த ஓசை,

அரிநர் கம்பலை-அதனை அறுப்பாருடைய ஓசை,

111. புள் இமிழ்ந்து ஒலித்கும் இசை-பறவைகள் கத்துகையினாலே ஆரவாரிக்கும் ஆரவாரம்,

என்றும்-எந்நாளும்,

112-3. சுலம் புகன்று சுறவு கலித்த புலவு நீர்வியல் பௌவத்து-தம்முள் மாறுபாட்டை விருப்பிச் சுறாக்கள் செருக்கித்திரிகின்ற புலால் நாற்றத்தையுடையதாகிய நீரையுடைய அகற்சியையுடைய கடலிடத்துத் துவலை (115)

114-5. நிலவு கானல் முழவு தாழை குளிர் பொதும்பர் நளிதூவல்-நிலாப்போலும் மணலையுடைய கரையினிற் குடமுழாப்போலுங்காயை (பி-ம். தாளை) யுடைய தாழையை வேலியாகவுடைய குளிர்ச்சியையுடைய இளமரக்காவின்கண்ணே வந்து செறிதலையுடைய துவலையின் ஓசை,

116. நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை-நிரைத்த மீன் படகாலே வேட்டையாடுவார்வந்து கரையைச்சேரும் ஆரவாரம்,
---------
    1 வெள்ளிக்கோள் தென்றிசையில் எழுதல் தீயநிமித்தம் ; இது, "வசையில்புகழ் வயங்குவெண்மீன், றிசைதிரிந்து தெற்கேகினுந், தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயன்மாறி, வான்பொய்ப்பினுந் தான் பொய்யா, மலைத்தலைய கடற்காவிரி" (பட்டினப். 1-6), "வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வென்ளி, பயங்கெழு பொழுதோ டாநிய நிற்ப", "நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப், பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப" (பதிற். 24:24-5, 69:13-4), "மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினுஞ், தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும், ................. பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே", "வெள்ளி தென்புலத்துறைய விளைவயற், பள்ளம் வாடிய பயனில் காலை" (புறநா. 117:1-7, 388:1-2), "கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும், ................ காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை" (சிலப். 10:102-8) என்பனவற்றால் அறியலாகும்.
----------

117. இரு கரு செறுவின் வெள் உப்பு பகர்நரொடு - பெரியகழியிடத்து உப்புப்பாத்தியிலே வெள்ளிய உப்பைவிற்கும் 1அளவர் ஒலியோடே,

118-24. [ஒலியோவாக் கலியாணர், முதுவெள்ளிலை மீக்கூறும், வியன்மேவல் விழுச்செல்வத், திருவகையா னிசைசான்ற, சிறுகுடிப் பெருந்தொழுவர், குடிகெழீஇய நானிலவரொடு, தொன்றுமொழிந்து தொழில்கேட்ப :]

சிறு குடி பெரு தொழுவர் (122) ஒலி ஓவா கலி யாணர் (118) முதுவெள்ளிலை (119)-சிறிய குடிகளாய்ப் பெரிய தொழில்களைச் செய்வாருடைய ஆரவாரமும் ஒழியாத பெருக்கினையுடைத்தாகிய புதுவருவாயினையுடைய முதுவெள்ளிலை யென்னுமூர்,

இது குறுநிலமன்னரிருப்பு.

பகர்நரொலியோடே (117-8) நெல்லினோதை (110) முதலிய ஒலி என்றும் (111) ஓவாத முதுவெள்ளிலையென்க.

மீ கூறும் (119) இருவகையான் (111) வியல் மேவல் விழு செல்வத்து (120) இசை சான்ற (121) குடி கெழீஇய நானிலவரொடு (123)-உலகத்துத் தொழில்களில் மேலாகச்செல்லும் உழவு வாணிகமென்கின்ற இரண்டுகூற்றாலே அகலம் பொருந்துதலையுடைய சீரிய செல்வத்தாலே புகழ்நிறைந்த குடிமக்கள் பொருந்தின நான்குநிலத்து வாழ்வாருடனே,

தொன்று மொழிந்து தொழில் கேட்ப (124)-பழமைகூறிநின்று ஏவலைக் கேட்கும்படியாக,

125-7. கால் என்ன கடிது உராஅய் நாடு கெட எரி பரப்பி ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து-காற்றென்னும்படி கடிதாகப்பரந்து சென்று பகைவர் நாடுகெடும்படி நெருப்பைப்பரப்பித் 2தலையாலங்கான மென்கின்ற ஊரிலே பகைவர்க்கு அச்சந்தோன்றும்படி 3விட்டு,

"எரிபரந்தெடுத்தல்" (தொல். புறத். சூ. 8) என்னுந் துறை கூறிற்று.
-------
    1 அளவர்-நெய்தனிலமாக்களுள் ஒருவகையார் ; உப்பளத்திற்குரிய தொழில் செய்வோர்.
    2 இவ்வூர் தலையாலங்காடென்று வழங்கும் ; இது தேவாரம்பெற்ற ஒரு சிவதலம் ; சோழநாட்டிலுள்ளது ; இவ்வூரிற் பகைவரெழுவரையும் வென்றதுபற்றியே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழிய னென்று இப்பாண்டியன் கூறப்படுவான்; சிலப்பதிகாரத்திற் கூறப்படுபவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.
    3 விட்டு-தங்கி ; விடுதலென்பது பகைமேற்சென்றோர் தங்குவதற்கே பெரும்பாலும் வழங்கும் ; பு. வெ. உரை.
----------

128-9. அரசு பட அமர் உழக்கி முரசு கொண்டு கனம்வேட்ட-நெடுநில மன்னரிருவரும் குறுநிலமன்னரைவரும் படும்படி போரிலே வென்று அவர் முரசைக் கைக்கொண்டு களவேள்விவேட்ட,

எழுவராவர் : 1சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநனென்பார்.

130. அடு திறல் உயர் புகழ் வேந்தே- 2கொல்லுகின்ற வலியுயர்ந்த புகழையுடைய வேந்தேயென்க.
நானிலவரோடே (123) முதுவெள்ளிலை (119) தொழில் கேட்பத் (124) திறலுயர்ந்த வேந்தனே.

இது 3தலையாலங்கானத்து வென்றமை கூறிற்று.

131. நட்டவர் குடி உயர்க்குவை-நின்னுடனே நட்புக்கொண்டவருடைய குடியை உயர்த்தலைச்செய்வை ;

132. செற்றவர் அரசு பெயர்க்குவை-நீசெறப்பட்டவர் அரசுரிமையை வாங்கிக்கோடலைச் செய்வை ;

133-4. பெரு உலகத்து மேஎந்தோன்றி சீர் உடைய விழு சிறப்பின்-பெரிய நன்மக்களிடத்தே மேலாய்த்தோன்றுகையினாலே புகழையுடைய விழுமிய தலைமையினையும்,

135. விளைந்து முதிர்ந்த விழு முத்தின்-சூல்முற்றி ஒளிமுதிர்ந்த சீரிய முத்தினையும்,

136. இலங்கு வளை இரு சேரி-விளங்குகின்ற சங்கினையுமுடைய பெரிய சங்குகுளிப்பாரிருப்பினையும்,
முத்தினையும் சங்கினையுமுடைய சேரியென்க.

137. கள் கொண்டி குடி பாக்கத்து-கள்ளாகிய உணவினையுடைய இழிந்த குடிகளையுடைய சீறூர்களையுமுடைய,

கொண்டி-கொள்ளப்படுதலின் உணவாயிற்று ; கொள்ளையுமென்ப.
--------
    1 மதுரைக். 55, 56-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.
    2 "மறம்வீங்குபல்புகழ்" (பதிற். 12:8) என்பதும் அதனுரையும் ஈண்டு அறிதற்பாலன.
    3 நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்றமை பின்னுள்ள செய்யுட்களாலும் விளங்கும். "கலிய னெடுந்தேர்க் கைவண் செழிய, னாலங் கானத் தமர்கடந் துயர்த்த, வேலினும் பல்லூழ் மின்னி", "தென்னர் கோமா, னெருவுறழ் திணிதோ ளியறேர்ச் செழிய, னேரா வெழுவ ரடிப்படக் கடந்த, வாலங் கானத் தளர்ப்பினும் பெரிது" (அகநா. 175:10-12, 209:3-6) ; "இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத், தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து, மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையு, நின்னொடு தூக்கிய வென்வேற்செழிய" (புறநா. 19:1-4)
-------

138. நல் கொற்கையோர் நசை பொருந-நன்றாகிய கொற்கையென்னும் ஊரிலுள்ளோர் நச்சுதலைச் செய்யும் பொருநனே,

இதனாற் கொற்கைக்குரியோனென்றார்.

சிறப்பினையும் (134) சேரியினையும் (136) பாக்கத்தினையு (137) முடைய கொற்கை.

139-40. செற்ற தெவ்வர் கலங்க தலைசென்று அஞ்சு வர தட்கும் அணங்கு உடை துப்பின்-தாங்கள்செறப்பட்ட பகைவர்மனம் கலங்கும்படி அவரிடத்தே சென்று அவர்க்கு அச்சந்தோன்றத்தங்கும் வருத்தத்தையுடைத்தாகிய வலியினையும்,

141. கொழு ஊன் குறை கொழு வல்சி-கொழுத்த இறைச்சியையுடைய கொழுத்திருக்கின்ற சோற்றினையும்,
ஊனைக் கூட இட்டு ஆக்குதலிற் கொழுவல்சியென்றார். கொழுவல்சி-கொழுவினாலாகிய வல்சியென்றுமாம் ; இஃது 1ஆகுபெயர்.

142. புலவு வில் -2எய்த அம்புதன்னை மீண்டும் தொடுத்தலிற் புலானாற்றத்தையுடைய வில்லினையும்,

பொலி கூவை-பொலிந்த 3கூவைக்கிழங்கினையும்,

கூவை-திரளுமாம்.

143. ஒன்றுமொழி வஞ்சினங்கூறுதலையும்

ஒலி இருப்பின் - ஆரவாரத்தையுடைய குடியிருப்பினையுமுடைய,

144. தென்பரதவர் போர் ஏறே-தென்றிசைக்கண் வாழும் பரதவர்க்குப் போர்த்தொழிலைச் செய்யும் ஏறாயவனே,

இதனாற் பரதவரைத் தனக்குப் படையாக அடிப்படுத்தினமை கூறினார்.

துப்பு (140) முதலியவற்றையுடைய பரதவரென்க.

பரதவர்-தென்றிசைகட்குறுநிலமன்னர். அது, "தென்பரதவர் மிடல்சாய, வடுவடுகர் வாளோட்டிய" (புறநா. 378:1-2) என்னும் புறப்பாட்டானுமுணர்க.

145. அரிய எல்லாம் எளிதினின் கொண்டு-பிறர்க்கு அரிய நுகர் பொருள்கலெல்லாம் எளிதாக நின்னூரிடத்தேயிருந்து 4மனத்தாற் கைக்கொண்டு,
--------
    1 ஆகுபெயரென்றது கொழுவென்பதனை ; அது கொழுவினாலாகிய வேளாண்மைக்காயிற்று. கொழுவல்சி யென்பதனோடு, "பகடு நடந்த கூழ்" (நாலடி. 2) என்பதனை ஒப்பு நோக்குக.
    2 அம்பு புலால் நாறுதல் இதனாற் பெறப்படும் ; "புலவுநுனைப்பகழி"
    (பெரும்பாண். 269) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.
    3 மலைபடு. 137 ; புறநா. 29:19.
    4 "ஒன்னோர், ஆரெயி லவர்கட் டாகவு நுமதெனப், பாண்கட னிறுக்கும் வள்ளியோய்" (புறநா. 203:9-11); இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையுமது; தொல். புறத், சூ. 12. ந.
---------

146. உரிய எல்லாம் 1ஓம்பாது வீசி-அப்பொருளையெல்லாம் 2நினக்கென்று பாதுகாவாது ஊரிடத்தேயிருந்து பிறர்க்குக்கொடுத்து,

என்றது, "கொள்ளார் தேஎங் குறித்த கொற்றம்" (தொல். புறத். சூ. 12) கூறிற்று.

147. நனி புகன்று உறைதும் என்னாது ஏற்று எழுந்து-மிக விரும்பி ஊரின் கண்ணேயிருந்து உறையக்கடவேமென்றுகருதாதே பகைவர்மேற் செல்லுதலை ஏறட்டுக் கொண்டு போக்கிலே ஒருப்பட்டு,

இது 3வஞ்சிகூறிற்று.

148. பனி வார் சிமையம் கானம் போகி-பனியொழுகுகின்ற மலையிடத்தனவாகிய காடுகளைக் கடந்து,

சிமையம் : ஆகுபெயர்.

149. அகம் நாடு புக்கு-அவர்கள் உள்நாடுகளிலே புகுந்து,

இதனால், "தொல்லெயிற்கிவர்தல்" (தொல். புறத். சூ. 12) கூறினார்.

அவர் அருப்பம் வௌவி-அப்பகைவர் அரண்களைக் கைக்கொண்டு அதனுலுமமையாமல்,

இது 4குடுமிகொண்ட மண்ணுமங்கலங் கூறிற்று. இதனால் அரசர் அரண்களை அழித்தமை கூறினார்.

150. [யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து :] வேண்டு புலத்து பல யாண்டு கழிய இறுத்து-நீ அழித்தநாடுகளிற் கொள்ள வேண்டும் நிலங்களிலே பலயாண்டுகளும் போம்படி தங்கி,

151, மேம்பட மரீஇய வெல் போர் 5குருசில்-அந்நிலங்கள் பண்டையின் மேலாதற்கு அடிப்படவிருந்த வெல்லும் பேரினையுடைய தலைவனே,

6இது பகைவர்நாட்டைத் தன்னாடாக்கினமை கூறிற்று.

152. உறு செறுநர் புலம் புக்கு-தொன்றுதொட்டுவந்த பகைவர் நிலத்தே விட்டு,

152-3. அவர் கடி காவின் நிலை தொலைச்சி-அவர் காவலையுடைய பொழில்களின் நிற்கின்ற நிலைகளைக் கெடுத்து,

என்றது வெட்டி யென்றவாறு.
---------
    1 "ஓம்பாத வீகை-சீர்தூக்காது கொடுக்கும் கொடை" என்பர் புறப்பொருள் வெண்பாமாலை உரையாசிரியர் ; 164.
    2 புறநா. 122-ஆம் செய்யுள் இக்கருத்தை விளக்குதல் காண்க.
    3 வஞ்சி-மண்ணசையாற் பகைமேற் சேறல்.
    4 பெரும்பாண். 450-52, ந. மதுரைக். 349-50, ந.
    5 குருசில்-உபகாரியென்பர், பு. வெ. உரையாசிரியர்.
    6 மதுரைக். 60, ந. பார்க்க.
-------

154-5. இழிபு அறியா பெருதண்பணை குரூஉ கொடிய எரிமேய- வளப்பங்குன்றுதலை ஒருகாலத்துமறியாத பெரிய மருதநிலங்களை நிறத்தையுடைய ஒழுங்கினையுடைய நெருப்புண்ண,

156. நாடு எனும் பேர் காடு ஆக-நாடென்னும் பெயர்போய்க் காடென்னும் பெயரைப்பெற,

157. ஆ சேந்த வழி மா சேப்ப-பசுத்திரள் தங்கின இடமெல்லாம் புலி முதலியன தங்க,

158. ஊர் இருந்த வழி பாழ் ஆக-ஊராயிருந்த இடங்களெல்லாம் பாழாய்க்கிடக்க,

ஊராரிருந்த இடமென்றுமாம்.

159-60. இலங்கு வளை மடம் மங்கையர் துணங்கை அம் சீர்தழூஉ மறப்ப-விளங்குகின்ற வளையினையும் மடப்பத்தினையுமுடைய மகளிர் துணங்கைக்கூத்தினையும் அழகினையுடைய தாளஅறுதியையுடைய, 1குரவைக்கூத்தினையும் மறப்ப,

2தழூஉ : ஆகுபெயர்.

161-3. அவை இருந்த பெரு 3பொதியில் கவை அடி கடு நோக்கத்து பேய் மகளிர் பெயர்பு ஆட-4சான்றோரிருந்த பெரிய அம்பலங்களிலே இரட்டையான அடிகளையும் கடியபார்வைகளையுமுடைய பேயாகிய மகளிர் உலாவியாட,

164. அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்-இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்து,
-----------
    1 முருகு. 217, குறிப்புரை.

    2 தழூஉ வென்பதற்குக் குரவையென்று இங்கே பொருளெழுதியவாறே, "ஆங்க ணயர்வர் தழூஉ" (கலித். 104:62) என்றவிடத்தும் எழுதுவர்.

    3 முருகு. 226, ந.

    4 சான்றோர்-குடிப்பிறப்பு முதலிய எண்குணங்களமைந்தோர் ; "எட்டுவகை நுதலிய அவையத் தானும்" (தொல். புளத்திணை. சூ. 21) என்பதனுரையாலும், "குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி, விழுப்பேரொழுக்கம் பூண்டு நாளும், வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையின், காதலின் பத்துத் தூங்கித் தீதறு, நடுவுநிலை நெடுநகர் வைகிவைகலு, மழுக்கா றின்மை யாவாஅ வின்மையென, விருபெரு நிதியமுமொருதா மீட்டுந், தோலா நாவின் மேலோர் பேரவை" (ஆசிரியமாலை) என்னும் அதன் மேற்கோளாலும், "குடிப்பிறப்புக் கல்வி" (பு. வெ. 173, மேற்) என்பதனாலும், "அழுக்கா றிலாமை யவாவின்மை, தூய்மை, யொழுக்கங் குடிப்பிறப்பு வாய்மை-இழுக்காத, நற்புலமையோடு நடுவு நிலைமையே, கற்புடைய வெட்டுறுப்புக் காண்" (வீர, மேற்.) என்பதனாலும் அக்குணங்களை யறியலாகும்.
--------

165. நிலத்து ஆற்றும் குழூஉ புதவின்-நிலத்திலுள்ளாரையெல்லாம் போக்கும் வாசல்காப்பாரையுடைய வாசலின்கண்ணேயிருந்து,

குழூஉ : ஆகுபெயர்.

இனிக் 1குடுமிதேய்ந்துபோதலின் மண்ணைக் கொழித்துவருமென்பாருமுளர்.

166. அரந்தை பெண்டிர் இனைந்தனர் அகவ-மனக்கவற்சியையுடைய பெண்டிர் வருந்திக் கூப்பிட,

167-8. கொழு பதிய குடி தேம்பி செழு கேளிர் நிழல் சேர-வளவிய ஊர்களிடத்தனவாகிய குடிகளெல்லாம் பசியால் உலர்ந்து புறநாட்டிலிருக்கும் வளவிய சுற்றத்தார் தமக்குப் பாதுகாவலாகச் சென்று சேர,

169-70. நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளி குடுமி கூகை குராலொடு முரல - பெரிய மாளிகைகளிலே வெந்துவீழ்ந்த கரிந்த குதிரிடங்களிலே சூட்டினையுடைய கூகைச்சேவல் பேட்டுடனேயிருந்து கதற,

171-2. கழுநீர் பொலிந்த கண் அகல் பொய்கை களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர-செங்கழுநீர்மிக்க இடமகன்ற பொய்கைகளிடத்தே யானை நின்றால்மறையும் வாட்கோரையுடனே சண்பங்கோரையும் நெருங்கிவளர,

செருந்தி-நெட்டிக்கோரையுமாம்.

173-4. நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் பல் மயிர் பிணவொடு கேழல் உகள-நன்றாகிய எருதுகளுழுத நச்சுதலமைந்த விளைகின்ற வயலிடத்தே பலமயிரினையுடைய பெண்பன்றியுடனே ஆண்பன்றி ஓடித்திரிய,

பிணவென்னும் அகரவீற்றுச்சொல் வகரவுடம்படுமெய்பெற்றது ;

"பன்றி புல்வாய் நாயென மூன்று, மொன்றிய வென்ப பிணவென் பெயர்க்கொடை" (தொல். மரபு. சூ. 58) என்றார்.

175. [வாழா மையின் வழிதவக் கெட்டு :] தவ வழி வாழா மையின் கெட்டு-மிக 2நின் ஏவல்செய்து வாழாமையினாலே கெட்டு,

இனித் தவக்கெட்டெனக்கூட்டி மிகக்கெட்டென்றலுமாம்.

176. பாழ் ஆயின-பாழாய்விட்டன,

நின் பகைவர் தேஎம்-நின்னொடு பகைத்தலைச் செய்தவருடைய நாடுகள் ;
----------
    1 குடுமி-கதவைத்தாங்கி நிற்பதாயுள்ள ஓருறுப்பு ; "தாய ரடைப்ப மகளிர் திறந்திடத், தேயத் திரிந்த குடுமியவே ..................... கதவு" (முத்.) ; "திருகுங் குடுமி விடிவளவுந் தேயுங் கபாடம்" (கலிங்க. கடை. 49)

    2 "தொன்றுமொழிந்து தொழில் கேட்ப" (மதுரைக். 72) என்பது இங்கே கருதற்பாலது.
--------

177-9. [எழாஅத்தோ, ளிமிழ்ழுழக்கின், மாஅத்தா ளுயர்மருப்பிற், கடுஞ்சினத்த களிறுபரப்பி :]இமிழ் முழக்கின் மா தாள் உயர் மருப்பின் கடு சினத்த களிறு பரப்பி-முழங்குகின்ற ஓசையையும் பெருமையையுடைய கால்களையும் தலைகளேந்தின கொம்புகளையுமுடைய கடியசினத்தவாகிய யானைகளை எங்கும்பரப்பி,

180. [விரிகடல் வியன்றானையொடு:] 1எழா தோள் (177) விரிகடல் வியல் தானையொடு-2முதுகிட்டார்மேற் செல்லாத தோளினை யுடைய விரிகின்ற கடல்போலும் அகற்சியையுடைய படையோடே,

181. முருகு உறழ பகை தலை சென்று-முருகன் பகைவர்மேற் செல்லுமாறுபோலத் தடையறப் பகைவரிடத்தே சென்று,

முருகு-தெய்வத்தன்மை ; ஆகுபெயராய் நின்றது.

182. அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ-அகன்ற ஆகாயத்தின் கண்ணே படையெழுந்த ஆரவாரமொலிப்ப,

விசும்பெனவே ஆகுபெயராய்த் தேவருலகை யுணர்த்திற்று.

183. பெயல் உறழ கணை சிதறி-மழையோடே மாறுபடும்படி அம்புகளைத் தூவி,

184. பல புரவி நீறு உகைப்ப-3பல குதிரைத்திரள் ஓடுகின்ற விசையால் துகள்களை எழுப்ப,

185. வளை நரல-சங்கம் முழங்க,

வயிர் ஆர்ப்ப-கொம்பு ஒலிப்ப,

186. பீடு அழிய 4கடந்து அட்டு-பெருமைகெடும்படி வென்று கொன்று,
----------
    1 "எழாஅத்துணைத்தோள்-போரில் முதுகிட்டார்மேற் செல்லாத இணை மொய்ம்பு" (பதிற். 90:27, உரை) எனப் பிறரும் இவ்வாறே பொருள் கூறுதல் காண்க.
    2 "இகலே கருதிச் சேர்ந்தார் புறங்கண்டு செந்நிலத் தன்றுதிண்டேர்மறித்துப். பேர்ந்தான்", "செந்நிலந் தைச்செருவில், மறிந்தார், புறங்கண்டு நாணியகோன்" (பாண்டிக்கோவை) ; "அழிகுநர் புறக்கொடை யயில்வா ளோச்சாக், கழிதறு கண்மை" (பு. வெ. 55)
    3 "மாவெடுத்த மலிகுரூஉத்துகள்" (மதுரைக். 49)
    4 "கடந்தடு முன்பு" (கலித். 2:4) என்பதற்கு, "வஞசியாது எதிர்நின்று அடுகின்ற வலி" என நச்சினார்க்கினியரும், "கடந்தடுதானை" (புறநா. 8:5) என்பதற்கு, 'வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் படை' என்று அந்நூலுரையாசிரியரும் எழுதிய உரைகள் இங்கே கோடற்குரியன,
-------

186-7. அவர் நாடு அழிய எயில் வௌவி-அவருடைய நாடுகளழியும்படியாக அவரிருக்கின்ற மதிலைக்கொண்டு,

188. சுற்றமொடு தூ அறுத்தலின்-அலர்களுக்கு உதவிசெய்யும் சுற்றத்தாரோடே கூட அவர்கள் வலியைப் போக்குதலாலே,

189. செற்ற தெவ்வர் நின்பழி நடப்ப-நின்னாற் சிறிதுசெறப்பட்ட பகைவர் நின் ஏவல்கேட்டு நடக்கையினாலே,

190. வியல் கண் முது பொழில் மண்டிலம் முற்றி-அகலத்தை இடத்தேயுடைய பழைய நாவலந்தீவின்கணுளவாகிய சோழமண்டலம், தொண்டைமண்டல மென்கின்ற மண்டலங்களை நின்னவாக வளைத்துக் கொண்டு,

மண்டலம் மண்டிலமென மருவிற்று.

191. அரசு இயல் பிழையாது-நூல்களிற் கூறிய அரசிலக்கணத்தில் தப்பாமல்,

191-2. [அறநெறி காட்டிப், பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது :] பெரியோர் சென்ற அடி விழி பிழையாது அறம் நெறி காட்டி-நின்குலத்திற் பெரியோர்நடந்த அடிப்பாட்டின்வழியைத் தப்பாமல் அறநெறியிருக்கும்படி இதுவென்று அவர்களுக்கு விளக்கி,

நனிபுகன்றுறைதுமென்னாது ஏற்றெழுந்து (147) களிறுபரப்பித் (179) தானையோடே (180) தலைச்சென்று (181) அரசமண்டிலமுற்றிச் (190) செற்றதெவ்வர் நின்வழிநடக்கையினாலே (189) நீ நட்டவர் குடியை யுயர்க்குவை (131) யாகையினாலே அவர்களுக்கு அறநெறி காட்டிப் (191) பின்னர் அம்மண்டலங்களைச் சூழவிருந்த குறுநிலமன்னர் அரண்களி லுள்ளனவற்றை எளிதிற்கொண்டு (145) வீசிப் (146) போகிப் (148) புக்கு அவரருப்பங்களை வௌவிப் (149) பின்னர் உறுசெறுநர் (152) நின்வழி வாழாமையினாலே (175) அவர்புலம் புக்கு (152) நீநரை யுருமே றனையை (63) யாகையினாலே அரசியல் பிழையாமல் (191) ஆரப்பிமிழ (182) நீறுகைப்ப (184) நரல ஆர்ப்பக் (185) கணைசிதறித் (183) தொலைச்சி (153) அவரைக்கடந்து அட்டு (186) அவரெயிலை வௌவி (187) அவரைத் தூவறுத்தலின் (188) அப்பகைவர்தேஎம் (176) எரிமேயக் (155) காடாக (156) மா சேப்பப் (157) பாழாக (158) மறப்ப (160) ஆட (163) அகவச் (166) சேர (168) முரல (170) ஊர்தர (172) உகளக் (174) கெட்டுப் (175) பாழாயின (176) அங்ஙனம் பாழாயின பின்பு நீ செற்றவரரசு பெயர்க்குவை (132) யாகையினாலே வேண்டுபுலத்திறுத்து (150) அந்நாடுகள் மேம்படுதற்குமருவின் குருசில் (151) என வினை முடிக்க.

193-4.[குடமுதற் றோன்றிய தொன்றுதொழு பிறையின், வழி வழிச் சிறக்கநின் வலப்படு கொற்றம் :] குடமுதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் நின் வலம் படு கொற்றம் வழிவழி சிறக்க-மேற்றி சைக்கட்டோன்றிய 1நின்குலத்திற்குப் பழைதாகிய எல்லாரும் தொழும் பிறை நடோறுஞ்சிறக்குமா போல நின்னுடைய வெற்றியாலே நின்பின் னுள்ளோர்க்கு உண்டாங்கொற்றம் அவர்கள் வழிவழியாக மிகுவதாக ;

195-6. [குணமுதற் றோன்றிய வாரிருண் மதியிற், றேய்வன கெடுகநின் றெவ்வ ராக்கம் :] குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின் நின் தெவ்வர் ஆக்கம் தேய்வன கெடுக-கீழ்த்திசைக்கட்டோன்றிய நிறைந்த இருளைத்தருமதி நாடோறும் தேயுமாறுபோல நின்பகைவருடைய ஆக்கம் நாடோறும் தேய்வனவாய்க் கெடுவனவாக ;

197-8. உயர் நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே-ஒரு பொய்யாலே உயர்ந்த நிலையையுடைய தேவருலகை அவர்நுகரும் அமுதத்தோடே பெறுவையாயினும் அவற்றைத்தருகின்றபொய் நின்னைக் கைவிட்டு நீங்க மெய்யுடனே நட்புச்செய்தலையுடையை ;

இனி, 'பொய்சே ணீங்கிய வாய்நடப் பினையே' என்று பாடமாயின் மெய்யை நடத்தலைச் செய்தனையென்க.

199-201. முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் பகைவர்க்கு அஞ்சி பணிந்து ஒழுகளையே-முழங்குகடலாகிய எல்லையையுடைய அகன்ற இடத்தையுடைய உலகத்துள்ளாருடனே உயர்ந்த தேவருலகத்துத்தேவரும் பகைவராய் வரினும் பகைவர்க்கு அஞ்சித் தாழ்ந்து ஒழுகலைச்செய்யாய் ;

202-4. தென்புலம் மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக்கு எழுக என்னாய்-தென்றிசைநிலத்தின் மலைகளெல்லாம் நிறையும்படி வாணனென்னும் சூரன் வைத்த சீரிய பொருட்டிரள்களினைப் பெறுவையாயினும் பிறர் கூறும்பழி நமக்கு வருவதாகவென்று கருதாய் ;

204-5. விழு நிதி ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே-சீரிதாகிய பொருளைக் கொடுத்தலையுடைத்தாகிய நெஞ்சுடனே புகழை விரும்புவை;

206. அன்னாய் - அத்தன்மையை யுடையாய்,

[நின்னொடு முன்னிலை யெவனோ :] முன்னிலை நின்னொடு எவனோ-ஐம்பொறிகளுக்கும் நுகரப்படுவனவாய் முன்னிற்கப்படுவனவாகிய இந்நுகர் பொருள்கட்கு நின்னோடு என்ன உறவுண்டு ;
நின்னென்றது சீவான்மாவை. முன்னிலை : ஆகுபெயர்.
-------------
    1 "செருமாண் டென்னர் குலமுத லாகலின், அந்தி வானத்து வெண்பிறை தோன்றி" (சிலப். 4:22-3) ; "செந்நிலத் தன்றுதிண்டேர் மறித்துப், பேர்ந்தான் றனது குலமுத லாய பிறைக்கொழுந்தே" (பாண்டிக்.)
---------

207-8. [கொன்னொன்று கிளக்குவ லடுபோ ரண்ணல், கேட்டிசின் வாழி கெடுகநின் னவலம் :]

நின் அவலம் கெடுக-நின்னிடத்துண்டாகிய மாயை இனிக்கெடுவதாக ;

அடு போர் அண்ணல்-அம்மாயையைக்கொல்கின்ற போர்த்தொழில் வல்ல தலைவனே,

கொன் ஒன்று கிளக்குவல்-பெரிதாயிருப்பதொரு பொருளை யான் கூறுவன்; அஃது; என்னாற் 1காட்டுதற்கரிது;

என்றது 2கந்தழியினை.

கேட்சின்-அதனைத் 3தொல்லாணை நல்லாசிரியரிடத்தே கேட்பாயாக;

வாழியென்பதனைச் சுற்றமொடு விளங்கி (770) என்பதன்பின்னே கூட்டுக.

209. [கெடாது நிலைஇயர்நின் 4சேண்விளங்கு நல்லிசை :] சேண்விளங்கு நின் நல் இசை கெடாது நிலைஇயர்-சேட்புலமெல்லாம்ம சென்று விளங்கும் நின்னுடைய நல்லபுகழ் ஒருகாலமும் கெடாதே நிலைபெறுவதாக;

210-16. [தவாப்பெருக்கத் தறாயாண, ரழித்தானாக் கொழுந்திற்றி, யிழிந்தானாப் பலசொன்றி, யுண்டானாக் கூர்நறவிற், றின்றான வினவைக, னிலனொடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப், பயின்ற வறியா வளங்கெழு திருநகர் :]

தவா பெருக்கத்து அறா யாணர் (210) வளம் கெழு திருநகர் (216)-கெடாத பெருக்கத்தினையுடைய நீங்காத புதுவருவாயாலே செல்வம் பொருந்தின திருமகளையுடைய நகர்,

அழித்து ஆனா கொழு திற்றி (211) தின்று (214)-அழிக்கப்பட்டு விருப்பு அமையாத கொழுவிய தசையைத்தின்று,

"ஆடழிக்க" என்ப.

ஆனா பல சொன்றி இழித்து (212) ஆனா கூர் நறவின் உண்டு (213)-விருப்பமையாத பலவகைப்பட்ட சோற்றைத் தீதென்றுகூறிக் களிப்பமையாத மிக்க கள்ளை உண்டு,

ஆனா இனம் (214) பாணர் (219)-அவ்விரண்டிலும் விருப்பமையரத திரட்சியையுடைய பாணரென்க.

தின்று (214) உண்டு (213) ஆனா இனப் (214) பாணர் (219) என்க.

வைகல் (214)-நாடோறும்,

நிலன் எடுக்கல்லா ஒள் பல் வெறுக்கை (215)-நிலஞ்சுமக்கமாட்டாத ஒள்ளிய பலவாகிய பொருட்டிரள்களையும்,

என்றது பூண்களையும் பொன்னையும்

பயன் அறவு அறியா நகர் (216)-எக்காலமும் பயன்கெடுதலறியாத நகர்.
----------------
    1 கிளக்குவலென்றமையாற் காட்டுதற்கரிது என்றார்.
    2 கந்தழியைப்பற்றிய செய்தியைத் திருமுருகாற்றுப்படை யுரையின் இறுதிப் பகுதியாலறிந்து கொள்ளலாம்.
    3 மதுரைக். 761 ; பட்டினப். 170.
    4 "சேணார் நல்லிசைச் சேயிழை கணவ" (பதிற். 88:36) ; "வீண் பொருபுகழ்" (புறநா. 11:6) ; "வானேற நீண்ட புகழான்" (சீவக. 6)
-------

217-8. நரம்பின் முரலும் நயம் வரும் முரற்சி விறலியர் வறுகை குறு தொடி செறிப்ப-யாழ்வாசித்தாற்போலப் பாடும் நயப்பாடுதோன்றும் 1பாட்டினையுடைய விறல்பட ஆடுதலையுடையார் தம்முடைய பூணணியாத கைகளிலே குறிய தொடிகளையிட,

"நரம்பொடு வீணை நாவி னவின்றதோ வென்று நைந்தார்" (சீவக. 658) என்றார் பிறரும்.

219. பாணர் உவப்ப களிறு பல தரீஇ-பாணர்மகிழும்படி யானைகள் பலவற்றையுங்கொடுத்து,

நகரிலே யிருந்து (216) நாடோறும் (214) விறலியர் தொடிசெறியா நிற்பப் (218) பாணருவப்ப (219) வெறுக்கையையும் (215) யானையையுங் கொடுத்தென்க.

'தரீஇ' என்றதனை, "செலவினும் வரவினும்" (தொல். கிளவி. சூ. 28) என்னும் பொதுச் சூத்திரத்தாற் கொள்க.

220. கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ-தம்முடன் நட்புக் கொண்டோர் மனமகிழும்படி, அழித்த அரண்களிற்கொண்ட பல பொருள்களையும் அவர்க்குச் செலுத்திக்கொடுத்து,

என்றது, அவர் 2வேண்டாவென்று மறுக்கவும் தாம் வலியப் போக விட்டென்றவாறு.

221. மறம் கலங்க தலை சென்று-பகைவர்மறம் நிலைகுலையும்படி அவர்களிடத்தே சென்று,

222. வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி-அவர்க்கு வாட்போரிலே வருந்தினபடியாலே அவ்வருத்தத்தினாற் பின்பும் அதன்கட் பிறக்கின்ற முயற்சியை வாழ்த்தி,

என்றது, 3வாட்போரின்கட்பெற்ற இனிமையைப் பின்னும்விரும்பி அதிலே முயல்கின்றாரென வீரச்சிறப்புக் கூறிற்றாம்,

'விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள், வைக்குந்தன் னாளையெடுத்து" (குறள், 776) என்றார் பிறரும்.

உழந்தென்னுஞ் செய்தெனச்சம் காரணப்பொருட்டு, உழந்த தன்னெனப் பெயரெச்சமாயின், தன்னென்னுமொருமை மேல்வருகின்ற மன்னர் (234) என்னும் பன்மைக்காகாமையுணர்க.
--------------
    1 "பாடனல் விறலியர்" (பரி. 17:15)

    2 "கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று" (புறநா. 204:4)

    3 முல்லை. 67-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
----------

223-4. நாள் ஈண்டிய நல் அகவர்க்கு தேரோடு மா சிதறி-விடியற்காலத்தே வந்து திரண்ட அரசர்விரும்பப்பட்ட சூதர்க்குத் தேருடனே குதிரைகளையும் பலவாகக் கொடுத்து,

என்றது, "தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச், சூத ரேத்திய துயிலெடை நிலையும்" (தொல். புறத். சூ. 36) என்னும்விதியாற் சூதர் இருசுடர்தொடங்கி இன்று காறும் வருகின்ற தம் குலத்துள்ளோர் புகழை அரசர் கேட்டற்கு விரும்புவரென்று கருதி விடியற்காலத்தே பாசறைக் கண்வந்து துயிலெடை பாடுவரென்பது ஈண்டுக் கூறிற்றாம்.

அகவரென்றார், குலத்தோரெல்லாரையும் அழைத்துப் புகழ்வரென்பதுபற்றி ; ஆகுபெயர், 1"அகவல்" போல.

இனி வைகறைபாடும் பாணரென்பாருமுளர்.

வாழ்த்தித் திரண்ட அகவரென்க.

225-8. [சூடுற்ற சுடர்ப்பூவின், பாடுபுலர்ந்த நறுஞ்சாந்தின், விழுமிய பெரியோர் சுற்ற மாகக், கள்ளி னிரும்பைக் கலஞ்செல வுண்டு :] கள்ளின் இரு பைக்கலம் செல உண்டு சூடு உற்ற சுடர் பூவின் பாடு புலர்த்த நறு சாந்தின் விழுமிய பெரியோர் சுற்றம் ஆக-கள்ளினையுடையவாகிய பெருமையினையுடைய பச்சைக்குப்பிகள் வற்றும்படியாகக் 2கள்ளினையுண்டு சூடுதலுற்ற விளக்கத்தையுடைத்தாகிய வஞ்சியினையும் பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தினையுமுடைய சீரிய படைத்தலைவரைத் தமக்குச் சுற்றத்தாராகக்கொண்டு,

உண்டென்னுஞ் செய்தெனெச்சம் உடையவென்னும் வினைக்குறிப்போடு முடிந்தது.

229. பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப-தம்மை வழிபட்டோருடைய தேசங்கள் தம் ஏவலைக்கேட்டு நடக்கையினாலே,

230. பணியார் தேஎம் பணித்து திறை கொண்மார்-தம்மை வழி படாதோருடைய தேசங்களைத் தம் ஏவல் கேட்கும்படி பண்ணி அவர்களைத் திறை வாங்குதற்கு,
----------
    1 "அகவிக்கூறலின் அகவலாயிற்று ............................. அதனை வழக்கினுள் அழைத்தலென்ப" (தொல். செய். சூ. 81, ந.)
    2 கள்ளுணல் இங்கே வீரபானம் ; சீவக. 1874, ந. பார்க்க.
--------


231. பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை - உயரப்பறக்கும் பருந்துகளும் பறத்தலாற்றாத உயர்ச்சியையுடைய அரண்களையுடைய பாசறைக்கண்ணே,

1பார்வல் : ஆகுபெயர்.

232. படு கண் முரசம் காலை இயம்ப-ஒலிக்கின்ற கண்ணையுடைய பள்ளியெழச்சி முரசம் நாட்காலத்தே ஒலிப்ப இருந்து,

233. வெடி பட கடந்து-பகைவர் படைக்குக் கேடுண்டாக வென்று,

வெடி-ஓசையுமாம்,

வேண்டு புலத்து இறுத்த-பின்னும் அழிக்கவேண்டுமென்ற நிலங்களிலே சென்று விட்ட,

234. பணை கெழு பெரு திறல் பல் வேல் மன்னர்-வெற்றிமுரசு பொருந்தின பெரிய வலியினையும் பலவேற்படையினையுமுடைய அரசர்கள்,

235-6. [கரைபொரு திரங்குங் கனையிரு முந்நீர்த், திரையிடு மணலினும் பலரே :] கனை இரு முந்நீர் கரை பொருது இரங்கும் திரை இடு மணலினும் பலரே-செறிதலையுடைய கரிய கடலிற் கரையைப் பொருது ஒலிக்கும் திரைகுவிக்கின்ற மணலினும் பலரே,

ஏகாரம் : பிரிநிலை.

236-7. உரை செல மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே-புகழ் எங்கும் பரக்கும்படி அகன்ற இடத்தையுடைய உலகங்களைத் தமது ஏவல்களை நடத்தி மக்கட்குரிய மனனுணர்வின்மையிற் பிறப்பறமுயலாது பயனின்றி மாண்டோர் ;

ஏகாரம் : ஈற்றசை. "மக்க டாமே யாறறி வுயிரே" (தொல். மரபு. சூ. 33) என்றதனால், மனனுணர்வின்மையினென்றாம்.

தரீஇக் (219) கடைஇச் (220) சிதறிப் (224) பணிந்தோர் தேஎம் தம்வழி நடக்கையினாலே (229) பணியார்தேஎம் பணித்துத் திறை கொள்ளுதற்குப் (230) பெரியோர் சுற்றமாகக்கொண்டு (227) பாசறையிலே (231) முரசியம்ப இருந்து (232) கடந்து இறுத்த (233) மன்னர் (234) உலகமாண்டு கழிந்தோர் (237) திரையிடு மணலினும்பலர் (236) என முடிக்க.

இது, "மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை" (தொல். புறத். சூ. 24) அன்றிப் பிறவியற முயலாமையிற் கழிந்தமை கூறிற்று.

238. அதனால்-பயனின்மையாலே,
--------
    1 பார்வல்-அரசர், தம் பகைவர் சேய்மைக்கண் வருதலைப் பார்த்திருத்தற்குரிய உயர்ச்சியையுடைய அரண்.
----------

238-44. [குணகடல் கொண்டு குடகடன் முற்றி, யிரவு மெல்லையும் விளிவிட னறியா, தவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக் கவலையங் குழும்பி னருவி யொலிப்பக், கழைவளர் சாரற் களிற்றின நடுங்க, வரைமுத லிரங்கு மேறொடு வான்ஞெமிர்ந்து, சிதரற் பெரும்பெயல் சிறத்தலின் :]

வான் (243) குணகடல் கொண்டு 1குடகடல் (238) வரைமுதல் (243) முற்றி (238) மேகம் கீழ்த்திசைக் கடலிடத்தே நீரைமுகந்து மேற்றிசைக் கடலருகின் மலையிடத்தே தங்கி,

இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது (239)-இரவும் பகலும் ஒழிந்த இடத்தை அறியாது,

அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டு (240) கவலை அம் 2குழும் பின் அருவி ஒலிப்ப (241)-பள்ளமும் மேடுமாகிய பலநிலத்துண்டாகிய நீரினாலே திரண்டு சேரக்குவிந்து கவலைக்கிழங்கு கல்லின அழகிய குழியிலே வீழ்ந்து அருவியொலிக்கும்படி,

கழை வளர் சாரல் களிறு இனம் நடுங்க (242) இரங்கும் ஏறொடுஞெமிர்ந்து (243)-மூங்கில் வளர்ந்த மலைப்பக்கத்திலே யானைத்திரள் நடுங்கும்படி ஒலிக்கும் உருமேற்றோடே பரந்து,

சிதரல் பெரு பெயல் (244)-சிதறுதலையுடைய பெருமழை,

சிறத்தலின் (244)-மிகுகையினாலே,

வான் (243) முற்றி (238) ஞெமிர்ந்து (243) அருவியொலிக்கும்படி (241) பெரும்பெயல் (244) விளிவிடனறியாது (239) சிறத்தலின் (244) என முடிக்க.

244-6. [தாங்காது, குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி, நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றி :] தாங்காது உந்தி நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி குணகடற்கு இவர்தரும் குரூஉ புனல்-யாறுகள் தாங்காமல் யாற்றிடைக்குறையிலே ஓங்கிச்செல்கின்ற பெருக்கைக் குளங்கள் கொள்ளும்படி நிறைத்துக் கீழ்த்திசைக் கடலுக்குப் பரந்துசெல்லும் நிறத்தையுடைய நீராலே,

247. களிறு மாய்க்கும் கதிர் கழனி-யானைகள் நின்றால் அவற்றை மறைக்கும்படி விளைந்த கதிரையுடைய கழனியிலும்,

248. ஒளிறு இலஞ்சி-விளங்கும் மடுக்களினும்,

248-9. அடை நிவந்த முள் தாள சுடர் தாமரை-இலைக்கு மேலான, முள்ளையுடையதாள்களையுடையவாகிய ஒளியினையுடைய தாமரைப்பூவினையும்,
--------
    1 "மேன்மலைமுற்றி" (பரி. 12:2) ; "பெருமலை மீமிசை முற்றின" (அகநா. 278:6)
    2 குழும்பு-குழி ; மதுரைக். 273, ந.
--------


250. கள் கமழும் நறு நெய்தல்-தேன் நாறும் நறிய நெய்தற் பூவினையும்,

251. வள் இதழ் அவிழ் நிலம்-1பெருமையையுடைய இதழ் விரிந்த நீலப்பூவினையும்,

252. மெல் இலை அரி ஆம்பலொடு-மெல்லிய இலையினையும் வண்டுகளையுமுடைய ஆம்பற்பூவோடே,

அரி-மென்மையுமாம்.

253. வண்டு இறை கொண்ட கமழ் பூ பொய்கை - வண்டுகள் தங்குதல் கொண்ட மணநாறும் பிற பூக்களையுமுடைய பொய்கைகளிலும்,

254-5. கம்புள் சேவல் இன் துயில் இரிய வள்ளை நீக்கி 2வயமீன் முகந்து-கம்புட்கோழி இனிய உறக்கங்கெடும்படி வள்ளைக் கொடிகளைத் தள்ளி வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு,

256. கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர்-விலைகூறிவிற்ற கொடிய முடிகளையுடைய வலையால் மீன்பிடிப்பார்,

கழனியிலும் (247) இலஞ்சியிலும் (248) பொய்கைகளிலும் (253) மீன்முகந்து (255) சாற்றிய வலைஞரென்க.

257. வேழம் பழனத்து நூழிலாட்டு ஓதை (258)-கொறுக்கைச்சியையுடைய மருதநிலத்து மீனைக் கொன்று குவித்தலாற் பிறந்த ஓசை.

258. கரும்பின் எந்திரம் ஓதை-கரும்பிற்கு இட்ட ஆலையிடத்து ஓசை,

கட்பின் ஓதை-களைபறிப்பிடத்து ஓசை,

259-60. அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே-மூத்தலான் அள்ளலிலே வயிற்றுத்தங்கிய எருதுற்ற வருத்தத்தைக் கள்ளையுண்ணுங்களமர் பெயர்க்கும் ஆரவாரம்,

261-2. ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வல் கை வினைஞர் அரிபறை-தழைத்த பகன்றையினையுடைய நெல்லுமுற்றிய கழனியில் அந்நெல்லை வலிய கையினாலே அறுப்பாருடைய அரித்தெழுகின்ற பறையோசை,
---------
    1 பெருமையையுடைய நீலம் : நெய்தல் நீலம் என்னும் இருவகை மலர்களுள் நீலம் சிறப்படையதாகலின் இவ்வாறு உரையெழுதினார் ; "பல்லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்கும்" (ஐங். 2-4) என்பதன் விசேட வுரையிலே அதன் உரையாசிரியர், 'சிறப்புடைய கருங்குவளையுடனே சிறப்பில்லாத நெய்தல் நிகர்க்கு மூரனென்றது ................ ' என்றெழுதியிருத்தல் இதனை வலியுறுத்தும்.

    2 "வய வலியாகும்" (தொல். உரி. சூ. 68)
-----------


262-4. இன் குரல் தனி மழை பொழியும் தண் பரங்குன்றில் கலி கொள் சும்மை-இனிய ஓசையினையுடைய துளிகளையுடைய மேகந்தங்கும் குளிர்ந்த திருப்யரங்குன்றில் விழாக்கொண்டாடும் ஆரவாரம்,

"வயிரியர், முழவதிர்ந் தன்ன முழக்கத் தேறோடு" (அகநா. 328:1-2) என்றார் பிறரும்

264-6. ஒலி கொள் ஆயம் ததைந்த கோதை தாரொடு பொலிய புணர்ந்து உடன் ஆடும் இசையே-புதுநீர்விழவின் ஆரவாரத்தைத் தம்மிடத்தே கொண்ட 1மகளிர்திரள் தம்மிடத்து நெருங்கினகோதை தம் கணவர் மார்பின் மாலையுடனே அழகுபெறக் கூடி அவர்களுடனே நீராடும் ஓசை,

266-7. அனைத்தும் அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப-அவ்வோசை முழுவதூஉம் 2தன்னையொழிந்த பூதங்கள் விரிதற்குக்காரணமாகிய பெருமையையுடைய ஆகாயத்தேசென்று முழங்கி ஆண்டுவாழ்வார்க்கு இனிதாக ஒலிப்ப,

268-9. குருகு நரல மனை மரத்தான் மீன் சீவும் பாண் சேரியொடு-குருகென்னும் பறவைகள் கூப்பிடும்படி மனையிடத்து மரங்கடோறும் மீனைத்திருத்தும் பாணர்குடியிருப்பிற் பாடலாடலால் எழுந்த ஓசையோடே,

270. மருதம் சான்ற-ஊடலாகிய உரிப்பொருளமைந்த,

தண்பணை சுற்றி-மருதநிலஞ் சூழப்பட்டு,

ஒருசார்-ஒருபக்கம்,

ஒருசார் (270) சேரியிலோசையோடே (269) ஓதை (258) ஆர்ப்புப் (260) பறையோசை (262) சும்மை (264) இசையாகிய அவ்வோசை முழுவதும் (266) இசைக்கும்படி (267) தண்பணை சுற்றப்பட்டு (270) என்க.

271. சிறு தினை கொய்ய-சிறியதினையையறுக்க,

3கவ்வை கறுப்ப-எள்ளிளங்காய் முற்ற,

272. கரு கால் வரகின் இரு குரல் புலர-கரியதாளினையுடைய வரகினது கரிதாகிய கதிர் முற்ற,
---------
    1 "மைந்தர் கண்ணி மகளிர் சூடவும், மகளிர் கோதை மைந்தர் மலையவும்" (பட்டினப். 109-10) ; "மகளிர் கோதை மைந்தர் புனையவும், மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும்" (பரி. 20:20-21)
    2 பெரும்பாண். 1, உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.
    3 கவ்வை-எள்ளிளங்காய் ; மலைபடு, 105, ந.
--------

273. ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர-ஆழ்ந்தகுழியிலே திருவினையுடைய மணிகிடந்து விளங்க,

274-6. [எழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப், பெருங்கவின் பெற்ற சிறுதலை நௌவி, மடக்கட் பிணையொடு மறுகுவன வுகள :] பெரு கவின் பெற்ற சிறுதலை நௌவி எழுந்த கடற்றில் நல் பொன் கொழிப்ப மடம் கண் பிணையொடு மறுகுவன உகள-பெரிய அழகைப்பெற்ற சிறியதலையினையுடைய நௌவிமான் வளர்ந்தகாட்டில் மாற்றற்ற பொன் மேலேயாம்படி மடப்பத்தையுடைத்தாகிய கண்ணினையுடைய பிணையோடே சுழல்வனவாய்த் துள்ள,

277. சுடர் பூ கொன்றை தாஅய நீழல்- ஒளியினையுடையவாகிய பூக்களையுடைய கொன்றைபரந்த நிழலிடத்தே,

278. பாஅயன்ன பாறை அணிந்து-பரப்பினாலொத்த பாறை அழகுபெற்று,

279-81. [நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும், வெள்ளியன்ன வொள்வீ யுதிர்ந்து, சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய் :] நீலத்து அன்ன பைம்பயிர் மிசைதொறும் சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து தாஅய்-நீலமணியையொத்த பசிய பயிர்களினிடங்டோறும் முறுக்குண்ட அரும்புகளையுடைய முசுண்டையுடனே முல்லையினுடைய வெள்ளியினிறத்தையொத்த ஒள்ளியபூக்கள் உதிர்ந்து பரந்து,

282-4. [மணிமரு ணெய்த லுறழக் காமர், துணிநீர் மெல்லவற்றொய்யிலொடு மலர, வல்லோன் றைஇய வெறிக்களங் கடுப்ப :] வல்லோன் தைஇய வெளி களம் கடுப்ப காமர் துணி நீர் மெல் அவல் மணி மருள் நெய்தல் தொய்யிலொடு உறழ மலர-இழைத்தல்வல்லவன் இழைத்த வெறிக்கூத்தையுடைய களத்தையொப்ப விருப்பத்தையுடைய தெளிந்த நீரையுடைத்தாகிய நெகிழ்ந்த பள்ளத்திலே நீலமணியென்று மருளும் நெய்தல் தொய்யிற்கொடியோடே மாறுபட மலர,

285. முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார்-1இருத்தலாகிய உரிப்பொருளமைந்த காடுசூழ்ந்து ஒருபக்கம்,

ஒருசார் (285) அணிந்து (278) தாஅய்க் (281) கொய்யக் கறுப்பப் (271) புலரக் (272) கிளர (273) உகள (276) மலரப் (283) புறவுசூழப் பட்டு (285) என முடிக்க.

"பன்முறையானும்" (தொல். வினை. சூ. 36) என்பதனாற் பலவினையெச்சம் விராஅய் அடுக்கி அணிந்தென்னும் வினைகொண்டன.
---------
    1 சிறுபாண். 169 குறிப்புரையைப் பார்க்க.
--------

286-7. நறு காழ் கொன்று கோட்டின் வித்திய குறு கதிர் தோரை- 1நறியஅகிலையும் சந்தனத்தையும்வெட்டி மேட்டுநிலத்தே விதைத்த குறிய கதிர்களையுடைய தோரைநெல்லும்,

287. நெடு கால் ஐயவி-நெடியதாளினையுடைய வெண்சிறுகடுகும்,

288. 2ஐவனம் வெள் நெல்லொடு அரில் கொள்பு நீடி-ஐவன நெல்லென்னும் வெள்ளிய நெல்லோடே பிணக்கங்கொண்டு வளரப்பட்டு,

289-90. இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் பல்வேறு தாரமொடு கல் அகத்து ஈண்டி-இஞ்சியும் மஞ்சளும் பசுத்த மிளகுகொடியும், ஒழிந்த பலவாய் வேறுபண்ட பண்டங்களும் கற்றரையிடத்தே குவியப்பட்டு,

291. தினை விளை (பி-ம். தினைவளர்) சாரல் கிளி கடி பூசல் -தினையும் விளையப்படுகின்ற மலைப்பக்கத்திற் படியும் கிளியை ஓட்டும் ஆரவாரம்,

நீடி ஈண்டியென்னுந் செய்தெனெச்சங்கள் விளையுமென்னும் பிறவினை கொண்டன, 3"அம்முக் கிளவி" என்னும் சூத்திரவிதியால்.

292-3. மணி பூ அவரை குரூஉ தளிர் (பி-ம். குரூஉத்திரள்) மேயும் ஆமா கடியும் கானவர் பூசல்-பன்மணிபோலும் பூவினையுடைய அவரையினது நிறவிய தளிரைத் தின்னும் ஆமாவையோட்டுங் கானவருடைய ஆரவாரம்,

294-5. சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் வீழ் முகம் (பி-ம். விழுமுகக்) கேழல் அட்ட பூசல்-மலைமிசையுறையுங் குறவன் கல்லப்பட்ட மூடின வாயையுடைய பொய்க்குழியிலே விழும் பக்குவத்தினையுடைய ஆண்பன்றியைக் கொன்றதனாலுண்டான ஆரவாரம்,

சேணோன் அகழ்ந்த பயம்பு-இழிகுலத்தோனாகியவன் அகழ்ந்த பயம்பென்பாருமுளர்.
----------
    1 "நறைபடர் சாந்த மறவெறிந்து நாளால், உறையெதிர்ந்து வித்தியவூ ழேனல்" (திணைமாலை. 1)
    2 ஐவனமும் வெண்ணெல்லும் ஒன்றென்பது தோன்ற, "ஐவன வெண்ணெல்" (கலித். 43:4) என்பதற்கு, 'ஐவனமாகிய வெண்ணெல்லை' என்று இங்கே கூறியவாறே நச்சினார்க்கினியர் உரையெழுதியுள்ளார் ; ஆயினும், "ஐவனம் வெண்ணெல்" (மலைபடு. 115) என்ற அடியும் அதற்கு இவர், 'ஐவனநெல்லும் வெண்ணெல்லும்' என உரை கூறியிருப்பதும் அவ்விரண்டும் வேறென்று பொருள் கொள்ளச் செய்கின்றன ; இவை ஆராய்ச்சிக்குரியன.
    3 "அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற், சினையொடு முடியா முதலொடு முடியினும், வினையோ ரனைய வென்மனார் புலவர்" (தொல். வினை. சூ. 34)
------

296-7. கரு கால் வேங்கை 1இரு சினை பொங்கர் நறு பூ கொய்யும் கானவர் (293) பூசல்-கரியதாளினையுடைய வேங்கையிடத்துப் பெரிய கவடுகளில் தோன்றிய சிறிய கொம்புகளிற்பூத்த நறியபூவைப் பறிக்குமகளிர் புலிபுலி யென்று கூறும் ஆரவாரம்,

297-8. இரு கேழ் ஏறு அடு வய புலி பூசலொடு-கரியநிறத்தையுடைய பன்றியைக்கொல்லுகின்ற வலியினையுடைய புலியினது ஆரவாரத்தோடே, ஏறு-2ஆனேறுமாம்.

298. அனைத்தும்-முழுவதும்,

299-301. [இலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்டக், 3கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந், தருங்கடி மாமலை தழீஇ :]

இலங்கு வெள் அருவியொடு கரு கால் வெற்பு அணிந்து-விளங்குகின்ற வெள்ளிய அருவி வீழ்கின்றவாற்றாலே கரிய நீரோடுங்கால்களையுடைய பக்கமலைகள் சூழ்ந்து,

சிலம்பு அகத்து இரட்ட-மலையிடத்தே மாறிமாறி யொலிப்ப,

4குறிஞ்சி சான்ற-புணர்ச்சியாகிய உரிப்பொருளமைந்த,

அரு கடி மா மலை தழீஇ-பெறுதற்கரிய சிறப்பினையுடைய பெரிய மலை தழுவப்பட்டு,

301. ஒருசார்-ஒருபக்கம்,

ஒருசார் (301), அருவியாற் (299) கருங்காலையுடையவெற்பணிதலாலே (300)

நீடி (288) ஈண்டி (290) விளையுஞ் சாரலிற் கிளிகடி பூசல் (291), கானவர் பூசல் (293), அட்டபூசல் (295),

கொய்யும்பூசலாகிய (297) அனைத்துப்பூசலும் புலிப்பூசலோடே (298) சிலம்பகத்து இரட்டக் (299) குறிஞ்சிசான்ற (300) அருங்கடியினையுடைய மலை தழுவப்பட்டு (301) என முடிக்க.

302. [இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப :] இரு வெதிர்கூர் எரி பைந்தூறு நைப்ப-5பெரிய மூங்கிலிற்பிறந்த மிக்கநெருப்பு பசிய தூறுகளைச் சுடுகையினாலே,
-----------
    1 (பி-ம்.) 'பெருஞ்சினைப்'
    2 (பி-ம்.) 'ஆனையுமாம்'
    3 (பி-ம்.) 'கருங்கோற்குறிஞ்சி'
    4 "புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின் புணர்தற் பொருட்டாகிய குறிஞ்சியை அதன்பின் வைத்தார். இதற்குதாரணம் இறந்தது ; 'கருங்காற் குறிஞ்சி சான்றவெற் பணிந்து' என்பது கரு" (தொல். அகத். சூ. 5, ந.) என்றவிடத்து இவ்வுரையாசிரியர் இவ்வடிக்குக்கொண்ட பொருளும், இங்கே அந்வயஞ்செய்து கொண்ட பொருளும் மாறுபடுதல் ஆராய்தற்குரியது.
    5 "வான்றொடர் மூங்கி றந்த வயங்குவெந் தீயி தென்னத், தான் றொடர் குலத்தை யெல்லாந் தொலைக்குமா சமைந்து நின்றாள்",
------


303. நிழத்த யானை மேய் புலம் படர-ஓய்ந்த யானைகள் தமக்கு மேயலாமிடங்களிலே போக,

304. கலித்த இயவர் இயம் 1தொட்டன்ன-மகிழ்ந்த வாச்சியக்காரர் தம் வாச்சியத்தை வாசித்தாலொத்த,

305. கண் விடுபு உடையூ தட்டை கவின் அழிந்து-மூங்கிலின் கண் திறக்கப்பட்டு உடைந்து இயம் தொட்டன்ன (304) ஓசையையுடைய தட்டை அழகு அழிகையினாலே,

தட்டப்படுதலிற் றட்டையென்றார்.

நெருப்பு நைக்கையினாலே (302) பயிரின்றித் தட்டை கவினழிகையினாலே (305) ஓய்ந்தயானை மேய்புலம் படரும்படி (303) அருவியான்ற மலை (306) யென்க.

கவினழியவெனத் திரித்துமுடித்தலுமாம்.

306. அருவி ஆன்ற அணி இல் மா மலை-அருவிகளில்லையான அழகில்லாத பெரிய மலையிடத்து விடரகம் (308),

307. வை கண்டன்ன புல் முளி அம் காட்டு-வைக்கோலைக் கண்டாற் போன்ற 2ஊகம்புல்லுலர்ந்த அழகிய காட்டிடத்தில்,

308. கம சூழ் 3கோடை விடர் அகம் முகந்து-நிறைவினையுடைய 4சூறாவளியை முழைஞ்சிடங்கள் முகந்துகொள்கையினாலே,

309. கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை-காற்றுமிகுந்த கடல் போல் ஒலிக்கும் ஆரவாரத்தையுடைய வேனிற்குன்றம் (313),

310-11. இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி உவலை கண்ணிவல் சொல் 5இளைஞர்-குழையாலேவேய்ந்த குடிலிலிருக்கும் மான்றோலாகிய படுக்கையினையும், தழைவிரவின கண்ணியினையும் கடியசொல்லினையுமுடைய இளையோர்,

312. சிலை உடை கையர் கவலை காப்ப-வில்லையுடைய கையையுடையராய்ப் பலவழிகளில் ஆறலைகள்வரைக் காக்கும்படி சுரஞ்சேர்ந்து (314) என்க.

"அமைத்தரு கனலென" (கம்ப. கரன்வதை.66, திருவடி. 40) ; "மூங்கிலிற் பிறந்து முழங்குதீ மூங்கின் முதலற முருக்குமா போல" (உத்தர. இலவணன். 29); "தீக்குப் பிறந்தவில் லென்னும், வேய்க்குச் சிறப்பென்கொல் வேறே" (தக்க. 304) ; "கிளை தம்மிலுற்ற செம்மைக்கனலான் முடிவுற்றிடுஞ் செய்கையேபோல்" (கந்த. மகாசாத்தாப். 17)
---------
    1 (பி-ம்.) 'தொட்டென்ன'
    2 ஊகம்புல் : பெரும்பாண். 122.
    3 (பி-ம்.) 'கொட்டை'
    4 சூறாவளி-சுழல் காற்று ; "சூறாவளி வைகிய சூழலின்வாய்" (கந்த. காமதகனப். 2)
    5 (பி-ம்.) 'இளையர்'
---------

313. நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து-நிழல் தன்வடிவையிழத்தற்குக் காரணமான முதுவேனிற்காலத்தையுடைய மலையிடத்துச் சுரம் (314),

314-பாலை சான்ற-பிரிவாகிய உரிப்பொருளமைந்த,

சுரம் சேர்ந்து-அருநிலஞ் சேரப்பட்டு,

ஒருசார்-ஒருபக்கம்,

ஒருசார் (314), மலை (306) விடரகம் கோடையை முகக்கையினாலே (308) கடலினொமக்குஞ் சும்மையையுடைய (309) வேனிற்குன்றத்துப் (313) பாலைசான்ற சுரஞ்சேரப்பட்டு (314) என்க.

பாலைக்கு 1நடுவணதென்னும் பெயர்கூறியவதனால், அது தத்தம் பொருளானும், "முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து, நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்" (சிலப். 11:64-6) என 2முதற் பொருள்பற்றிப் பாலை நிகழ்தலானும் பாலையையும் வேறோர் நிலமாக்கினார்.

315. முழுங்கு கடல் தந்த 3விளங்கு கதிர் முத்தம்-ஒலிக்குங்கடல் தந்த விளங்குகின்ற ஒளியினையுடைய முத்து,

316. அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை-4வாளரம் கீறியறுத்த இடம் நேரிதாகிய விளங்கும்வளை,
நேர்ந்தவளையுமாம்.

317. பரதர் தந்த பல் வேறு கூலம்-செட்டிகள் கொண்டுவருதலால் மிக்க பலவாய் வேறுபட்ட பண்டங்கள்,
தந்ததென்றும் பாடம்.
-----------
    1 நடுவணதென்னும் பெயர் பாலைக்குண்மையையும் அப்பெயர்க் காரணத்தையும், "அவற்றுள், நடுவ ணைந்திணை நடுவண தொழிய" (தொல். அகத். சூ. 2) என்பதன் உரையாலுணரலாகும்.
    2 முதற்பொருளென்றது ஈண்டு நிலமாகிய முதற்பொருளை.
    3 கடல்முத்து, சிறந்ததாகலின் 'விளங்கு கதிர் முத்தம்' என இங்கே அதனைச் சிறப்பித்தார் ; "தலைமை பொருந்திய வெள்ளிய முத்துக்கள்..................... கடலினிடத்தே பிறந்தனவாயினும்" (கலித். 9:15-6, ந.), "உவரிமுத்தென்றது எட்டிடத்திலும் சிறப்புடையவிடம் கடலாகையாலெனவுணர்க" (தக்க. 181, உரை) என்பன இக்கருத்தை வலியுறுத்தும்.
    4 "விலங்கரம் பொருத சங்கின் வெள்வளை" (சீவக. 2441) என்பதனையும், 'வளைந்த வாளரமறுத்த சங்கவளை ' (ந.) என்ற அதன் உரையையுங் காண்க; "வாளரந் துடைதத கைவேல்" (சீவக. 461) என்ற விடத்து, 'வாளரம்-அரவிசேடம்' என்றெழுதியுள்ள உரை இங்கே கோடற்குரியது.
--------

318. [இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்பு :]

இரு கழி செறுவின் வெள் உப்பு-கரிய கழியிடத்துப் பாத்தியில் விளைந்த வெள்ளிய உப்பு,
தீ புளி-கருப்புக்கட்டி (கரும்பின் வெல்லக்கட்டி) கூட்டிப் பொரித்த புளி,

319. பரந்து ஓங்கு வரைப்பின்-மணற்குன்று பரந்துயருங் கானலிடத்தே,

319-20. வல் கை திமிலர் 1கொழு மீன் குறைஇய துடி கண் துணியல்-வலிய கையினையுடைய திமிலர் கொழுவிய மீன்களையறுத்த துடியின் கண்போலுருண்ட துணிகள்,

என்றது கருவாடுகளை.

தீம்புளியினையும், உப்பினையும், கருவாட்டினையுமேற்றின நாவா (321) யென்க.

321. விழுமிய நாவாய்-சீரிய மரக்கலம

பெருநீர் ஓச்சுநர்-மரக்கல மீகாமர்,

322. நன தலை தேஎத்து-அகன்ற இடத்தையுடைய யவனம் முதலிய தேயத்தினின்றும்

நல் கலன் உய்ம்மார்-இவ்விடத்துண்டாகிய பேரணிகலங்களை ஆண்டுச் செலுத்துதற்கு,

323. புணர்ந்து-பலருங்கூடி,

உடன் கொணர்ந்த புரவியொடு-சேரக்கொண்டுவந்த குதிரைகளோடே,

அனைத்தும்-முழுவதும்,

324. வைகல் தோறும் வழி வழி சிறப்ப-நாடோறும் முறைமையே முறைமையே மிகுகையினாலே வளம்பல பயின்று (325) என்க.

325. நெய்தல் சான்ற-இரங்கலாகிய உரிப்பொருளமைந்த,

வளம் பல பயின்று-பல செல்வமும் நெருங்கப்பட்டு,

ஒருசார் (314), பெருநீரோச்சுநர் (321) கலனுய்ம்மார் தேஎத்துக் (322) கொணர்ந்த புரவியோடே (323) முத்தம் (315) வளை (316) கூலமானவை (317) அனைத்தும் (323) வழிவழிச்சிறப்ப (324) வளம்பல பயிலப்பட்டு (325) என்க.

நெய்தல்சான்ற (335) பரந்தோங்குவரைப்பின் கண்ணே (319) வளம் பல பயிலப்பட்டு (325) எனமுடிக்க.
----------
    1 "கொழுமீனுண்ட வன்னங்களே" (திருச்சிற். 188) என்பதன் உரையில், 'கொழுமீனென்பது ஒருசாதி' (பேர்.) என எழுதியிருத்தலால் இப்பெயரமைந்த ஒருவகை மீன் உண்மை பெறப்படுகின்றது ; "கொழுமீன் குறைய வொதுங்கி" (சிறுபாண். 41) ; "நெய்த்தலைக் கொழுமீன்" "கொழுமீன் சுடுபுகை" (நற். 291:2. 311:6) ; "நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்" (பெரிய. திருக். குறிப்புத். 35)
--------

325-6. ஆங்கு 1ஐம்பால் திணையும் கவினி-அம்மண்டலத்தின் கண்ணே ஐந்து கூற்றினையுடைய நிலங்களும் அழகுபெற்று,

அமை வர-பொருந்துதல்தோன்ற,

327-8. [முழுவிமிழு மகலாங்கண், விழவுநின்ற வியன்மறுகின் :]

முழவு இமிழும் விழவு நின்ற வியல் மறுகின்-முழவுமுழங்குந் திருநாள் நிலைபெற்ற அகற்சியையுடைய தெருவினையும்,

329. துணங்கை-துணங்கைக்கூத்தினையும்,

அம் தழூஉவின்-அழகினையுடைய குரவைக்கூத்தினையும்,

மணம் கமழ் சேரி-மணநாறுகின்ற பரத்தையர் சேரியினையும்,

330. 2இன் கலி யாணர்-இனிய செருக்கினையுடைத்தாகிய புது வருவாயினையுமுடைய,

அகல் 3ஆங்கண் (327)-அகன்ற ஊரிடத்தே,

330. [குழூஉப்பல பயின்று:] பல குழூஉ பயின்று-பலகுடித்திரள் நெருங்கி,

ஆங்கு-அந்நாட்டில்,

331. பாடல் சான்ற நல் நாட்டு நடுவண்-புலவராற் பாடுதல் முற்றுப் பெற்ற நல்லநாட்டிற்கு நடுவணதாய்,

ஒருசார் தண்பணை சுற்றப்பட்டு (270) ஒருசார் மலைதழுவப்பட்டு (301) ஒருசார் காடுதழுவப்பட்டு (285) ஒருசார் சுரஞ்சேரப்பட்டு (314) ஒருசார் நெய்தல்சான்ற (325) வரைப்பின்கண்ணே (319) வளம்பல பயிலப்பட்டு ஆங்கு (325) ஐம்பாற்றிணையுங்கவினி (326) அந்நாட்டிடத்து (330) அகலாங்கட் (327) குழூஉப்பலபயின்று (330) அமைவரப் (326) பாடல்சான்ற நன்னாட்டு நடுவணதாய் (331) என்க.

332-7. [கலைதாய வுயர்சிமையத்து, மயிலகவு மலிபொங்கர், மந்தியாட மாவிசும் புகந்து, முழங்குகால் பொருத மரம்பயில் காவி, னியங்கு புனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற், கான்பொழில் :]

கலை தாய (332) மலி பொங்கர் (333) மந்தி ஆட (334) மரம் பயில் கா-(335) முசுக்கலைகள் தாவின் மிக்ககொம்புகளிலே அவற்றின் மந்திகள் விளையாடும்படி மரம் நெருங்கினசோலை,

மா விசும்பு உகந்து (334) -பெரிய ஆகாயத்தே செல்ல உயர்கையினாலே,

முழங்குகால் பொருந, மரம் (335)-முழங்குகின்ற பெருங்காற்றடித்த மரம்,

மயில் அகவும் (333) காவின் (335)-மயில் ஆரவாரிக்குங் காவோடே,

உயர் சிமையத்து (332) இயங்கு புனல் கொழித்த வெள் தலை குவவு மணல் (336) கான் பொழில் (337)-உயர்ந்த மலையுச்சியிடத்து நின்றும் வீழ்ந்தோடுகின்ற நீர் கொழித்து ஏறட்ட வெள்ளிய தலையினையுடைத்தாகிய திரட்சியையுடைய மணற்குன்றிடத்து மணத்தையுடைய பொழில்,
-------------
    1 பாண்டிநாடு ஐவகை நிலங்களும் அமையப்பெற்றதாதலின் பாண்டியனுக்குப் பஞ்சவனென்னும் பெயர் உண்டாயிற்று என்பர்.
    2 (பி-ம்.) 'இன்கண்'
    3 ஆங்கணென்பதற்கு ஊரிடமென்று இங்கு எழுதியவாறே, "அகலாங்க ணளைமாறி" (கலித். 108:5) என்னுமிடத்தும் இவ்வுரையாசிரியர் எழுதுதல் அறியத்தக்கது.
-------

337. தழீஇய அடை கரை தோறும்-காவோடே (335) பொழில் (336) சூழ்ந்த நீரடையும் கரைகள்தோறும்,

338-42. [தாதுசூழ், கோங்கின் பூமலர் தாஅய்க், கோதையினொழுகும் 1விரிநீர் நல்வர, லவிரறல் வையைத் துறைதுறை தோறும், பல்வேறு 2பூத்திரட் டண்டலை சுற்றி, யழுந்துட் டிருந்த பெரும்பாணிருக்கையும் :]

தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் (338) கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல் (339) வையை (340) தாதுக்கள் சூழ்ந்த கோங்கினுடைய பூவும் ஏனைமலர்களும் பரந்து மாலையொழுகினாற்போல ஓடும் பெருநீர் நன்றாகி வருதலையுடைய வையையிடத்து,

அவிர் அறல் துறை துறை தோறும் (340) பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றி (341) அழுந்து பட்டு இருந்த 3பெரும்பாண் இருக்கையும் (342)-விளங்குகின்ற அறலையுடைய துறைகடோறும் துறைகடோறும் பலவாய் வேறுபட்ட பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழப்பட்டு நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரியபாண்சாதியின் குடியிருப்பினையும்,

343-5. நிலனும் வளனும் கண்டு அமைகல்லா விளங்கு பெருதிருவின் மானவிறல்வேள் அழும்பில் அன்ன நாடு இழந்தனரும்-நிலத்தையும் அதிற் பயிர்களையும் 4பார்த்தபார்வை மாறுதலமையாத விளங்கும் பெரிய செல்வத்தினையுடைய மானவிறல்வேளென்னும் குறுநில மன்னனுடைய அழும்பிலென்னும் ஊரையொத்த நாடுகளை யிழந்தவர்களும்,
--------------
    1 (பி-ம்.) 'விரிநீ ரவிரற னல்வரல் வையை'
    2 (பி-ம்.) 'பூவின்றண்டலை'
    3 பெரும்பாணச்சாதியினிலக்கணத்தை இப்புத்தகம் 179-ஆம் பக்கத்தின் தொடக்கத்திற் காண்க.
    4 "கண்வாங் கிருஞ்சிலம்பின்-பார்த்தவர்கள் கண்ணைத்தன்
-------

346. கொழு பல் பதிய குடி இழந்தனரும்-செல்வத்தினையுடைய பல ஊர்களிடத்தனவாகி குடிகளையிழந்தவர்களும்,

347. தொன்று கறுத்து உறையும் துப்பு தர வந்த-பழையதாய 1செற்றங்கொண்டு தங்கும்வலி தம்மைக் கொண்டுவருகையினாலே எதிராய்வந்த,

348. அண்ணல் யானை அடுபோர் வேந்தர் - தலைமையினையுடைய யானையினையும் பகைவரைக் கொல்லும் போர்த்தொழிலையுமுடைய வேந்தரை,

பல் மாறு ஓட்டி (350)-பலவாய் நெஞ்சிற்கிடந்த மாறுபாடுகளை முதற்போக்கிப் பின்னர்,

349-50. [இன்னிசை முரச மிடைப்புலத் தொழியப், பன்மாறோட்டிப் பெயர்புறம் பெற்று :]
இன் இசை முரசம் இடைபுலத்து ஒழிய பெயர் புறம் பெற்று-இனி ஓசையினையுடைய முரசம் 2உழிஞைப்போர்க்கு இடையே கிடக்கும்படி மீளுகையினாலுண்டான முதுகைப்பெற்று,

என்றது, உழிஞைப்போர் செய்யவந்த அரசர் 3குடுமிகொண்ட மண்ணுமங்கலமெய்தாது இடையே மீளும்படி காத்தகிடங்கு (351) என்றவாறு.

351. 4்உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின்- 5மண்ணுள்ள வளவுமாழ்ந்த நீலமணிபோலும் நீரையுடைய கிடங்கினையும்,

352. விண் உற ஓங்கிய பல் படை புரிசை-தேவருலகிலே செல்லும்படி உயர்ந்த பல கற்படைகளையுடைய மதிலினையும்,

353. தொல் வலி நிலைஇய வாயில் (356)-பழையதாகிய வலி நிலை பெற்ற வாயில்,

அணங்கு உடைநெடு நிலை-தெய்வத்தையுடைத்தாகிய நெடிய நிலையினையும்,

னிடத்தே வாங்கிக்கொள்ளுங் கரிய மலையிடத்து" (கலித். 39:15, ந,) என்னும் பகுதி இதனுடன் ஒப்புநோக்கற்பாலது.
-------------
    1 செற்றம்-பகைமை நெடுங்காலம் நிகழ்வது ; முருகு. 132, உரை.
    2 உழிஞைப் போரென்றது இங்கே புறத்துழிஞைப்போரை ; தொல். புறத்திணை. சூ. 10.
    3 தொல். புறத்திணை. சூ. 13, பார்க்க ; மதுரைக். 149-ஆம்அடியின் உரையைப் பார்க்க.
    4 (பி-ம்.) 'மண்ணுறவீழ்ந்த'
    5 "நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி" (புறநா. 21:2)
-------


354. நெய் பட கரிந்த திண் போர் கதவின்-நெய் பலகாலுமிடுதலாற் கருகின திண்ணிய செருவினையுடைய கதவினையும்,

1வாயிலில் தெய்வமுறையுமாகலின், அதற்கு அணியும்நெய்யுமாம் ; "ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை" (நெடுநல். 86) என்பதனானுணர்க.

355. மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு-மேகமுலாவும் மலைபோல ஓங்கினமாடத்தோடே,

கோபுரமின்றி வாசலை மாடமாகவும் சமைத்தலின், மாடமென்றார்.

356. வையை அன்ன வழக்கு உடை வாயில்-2வையையாறு இடைவிடாது ஓடுமாறுபோன்ற மாந்தரும் மாவும் இடையறாமல் வழங்குதலையுடைய வாயில்,

மாடத்தோடே (355) நிலையினையும் (353) கதவினையும் (354) வழக்கினையுமுடைய வாயில் (356)

பெரும்பாணிருக்கையினையும் (342) கிடங்கினையும் (351) புரிசையினையும் (352) வாயிலினையு (356) முடைய மதுரை (699) என்க.

357-8. வகை பெற எழுந்து வானம் மூழ்கி சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல்-கூறுபாடாகிய பெயர்களைத் தாம்பெறும்படியுயர்ந்து தேவருலகிலே சென்று தென்றற்காற்று ஒலிக்கும் பலசாளரங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,

மண்டபம் கூடம் தாய்க்கட்டு அடுக்களையென்றாற் போலும் பெயர்களைப் பெறுதலின், வகைபெறவெழுந்தென்றார்.

359. யாறு கிடந்தன்ன அகல் நெடு தெருவில்-யாறுகிடந்தாற்போன்ற அகன்ற நெடிய தெருக்களிலே,
இருகரையும் யாறும்போன்றன, இரண்டு பக்கத்தின்மனைகளும் தெருவுகளும்.

360. பல் வேறு குழாஅத்து இசை எழுந்தும் ஒலிப்ப-3நாளங்காடியிற் பண்டங்களைக்கொள்ளும் பலசாதியாகிய பாடைவேறுபாட்டையுடைய மாக்கள் திரளிடத்து ஓசைமிக்கொலிக்கும்படி இருத்தர (406) என்க.
--------
    1 "ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை" (நெடுநல். 86) என்பதன் விசேடவுரையில், 'அதில் தெய்வத்திற்கு வெண்சிறுகடுகும் நெய்யு மணிந்தது' என்று எழுதியிருப்பது இதனோடு ஒப்பிடற்பாலது.
    2 "வையை யென்ற பொய்யாக் குலக்கொடி" (சிலப். 13:170); "வருபுனல்வையை-இடையறாது பெருகும் "புனலையுடையவையை யாற்றுத்துறை", "நீடுநீர் வையை-ஒழுக்கறாத நீரையுடைய வையையாறு" (சிலப். 14:72, 18:4, அடியார்.)
    3 நாளங்காடி-காலைக்கடை : மதுரைக். 430 ; "நடுக்கின்றி நிலைஇய நாளங்காடியில்", "நாண்மகிழிருக்கை நாளங்காடி" (சிலப். 5:63, 196)
--------

361-2. மா கால் எத்த முந்நீர் போல முழங்கு இசை நல் பணை அறைவனர் நுவல-பெருமையையுடைய காற்றெடுத் கடலொலிபோல முழங்கும் ஓசையையுடைய நன்றாகிய முரசைச் சாற்றினராய் விழவினை நாட்டிலுள்ளார்க்குச் சொல்லுகையினாலே நாடார்த்தன்றே (428) என்க.

'அறைவன நுவல' என்று பாடமாயின், அறையப்படுவனவாய் விழாவைச் சொல்லவென்க.

363-4. கயம் குடைந்தன்ன இயம் தொட்டு இமிழ் இசை மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை-கயத்தைக் கையாற்குடைந்து விளையாடுந் தன்மையவாக வாச்சியங்களைச் சாற்றலான் முழங்கின ஓசையைக் கேட்டு மகிழ்ந்தவர்களாடுஞ் செருக்கினைக்கொண்ட ஆரவாரத்தினையு முடைய தெரு (359) என்க.

366. 1ஓவு கண்டன்ன இரு பெரு நியமத்து-சித்திரத்தைக் கண்டாற்போன்ற கட்கு இனிமையையுடைய இரண்டாகிய பெரிய அங்காடித்தெருவில்,

நாளங்காடி, 2அல்லங்காடியாகிய இரண்டு கூற்றையுடைத்தென்றார்.

366. சாறு அயர்ந்து எடுத்த உருவம் பல் கொடி-கோயில்களுக்கு விழாக்களை நடத்திக் கட்டின அழகினையுடைய பல கொடிகளும்,

இதனால் அறங் கூறினார்.

367-8. வேறு பல் பெயர ஆர் எயில் கொள கொள நாள் தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி-வேறுபட்ட பல பெயர்களையுடையவாகிய அழித்தற்கரிய அரண்களைத் தண்டத்தலைவர் அரசனேவலாற் சென்று கைக்கொள்ளக் கைக்கொள்ள அவர்கள் அவ்வெற்றிக்கு நாடோறுமெடுத்த நன்மையைப்பெற்ற சயக்கொடியும்,

இதனாற் 3புறத்துழிஞைப்போர் கூறினார்.

369-71. நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு புலவு பட கொன்று மிடை தோல் ஒட்டி புகழ் செய்து எடுத்த விறல் சால் நல் கொடி-கடலொலித்தாற்போன்ற நிலைபெறுதலையுடைய வேற்படையோடே சென்று பகைவரைப் புலனாற்றமுண்டாகக்கொன்று பின்னர்
------------
    1 ஓவு - ஓவியம் ; "ஓவுக்கண் டன்னவில்" (நற். 268:4), "ஓவுறழ் நெடுஞ்சுவர்" (பதிற். 68:17)
    2 அல்லங்காடி-மாலைக்கடை ; மதுரைக். 544.
    3 புறத்துழிஞைப்போர்-வேற்றுவேந்தருடைய மதிலின்புறத்தைச் சூழ்ந்து செய்யும்போர்.
---------


அணியாய்நின்ற யானைத்திரளையுங் கெடுத்துத் தமக்குப் புகழையுண்டாக்கி எடுத்த வெற்றியமைந்த நன்றாகிய கொடியும்,

இது தும்பைப்போர் கூறிற்று.

372. கள்ளின் களி 1நவில் கொடியொடு-கள்ளினது களிப்பு மிகுதியைச் சாற்றுகின்ற கொடியும்,

372-3. நல் பல பல் வேறு குழூஉ கொடி-நன்றாகிய பலவற்றினாலே பலவாய் வேறுபட்ட திரட்சியையுடைய கொடிகளும்,

நன்பலவென்றார், 2கல்வி 3கொடை தவம் முதலியவற்றை.

373-4. பதாகை 4நிலைஇ பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க-பெருங்கொடிகளும் நிலைபெற்றுப் பெரிய மலையிடத்து அருவியசையுமாறு போல அசைய, இக்கொடிகள் அருவியினுடங்கும்படி வகைபெற எழுந்து (357) என முன்னே கூட்டுக.

375. பனை மீன் வழங்கும் வளை மேய் 5பரப்பின்-6பனைமீனென்னுஞ் சாதி உலாவுஞ் சங்கு மேய்கின்ற கடலிடத்தே,

376-7. வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ கூம்பு முதல் முருங்க எற்றி-இறுகும் பிணிப்பினையுடைய வலியினையுடைய பாய் கட்டின கயிற்றையறுத்துப் பாயையும்பீறிப் பாய்மரம் அடியிலே முறியும்படி அடித்து,
-----------
    1 (பி-ம்.) 'நுவல்', 'துவல்'
    2 கல்விக்குக்கொடி கட்டல் : பட்டினப். 169-71-ஆம் அடிகளையும் அவற்றின் குறிப்புரைகளையும் பார்க்க.
    3 கொடைக்குக் கொடி கட்டல் : இக்கொடி தியாகக்கொடி யெனப்படும் ; "தியாகக் கொடியொடு மேற்பவர், வருகென்று நிற்ப" (வீரராஜேந்திர தேவர் மெய்க்கீர்த்தி) ; "தியாகக் கொடியே தனிவளரச் செய்து" (திருவாரூருலா, 421)
    4 (பி-ம்.) 'நிலைஇய'
    5 (பி-ம்.) 'பரம்பின்'
    6 "ஒள்ளிய பனைமீன் றுஞ்சுந் திவலைய" "பனைமீன் றிமிலோடு தொடர்ந்து துள்ள" (கம்ப. கடறாவு. 23, 50) ; யானையை விழுங்கும் மீன்கள் இக்கடலிலுமுள ; அவை பனைமீனென்றும் யானைமீனென்றும் மோங்கிலென்றும் அனுவிஷமென்றும் பெயருடையன" (தக்க. 384, உரை) ; "உள்வளைந் துலாய சின்னை யொண்சுறாப் பனைமீ னூறை, தெள்விளித் திருக்கை தந்தி திமிங்கில மிரிந்து பாய்ந்த" (கந்த. கடல்பாய். 11); இம்மீன், பனையனென்றும் வழங்கும் ; "பனையன்றேளி" அருணைக்கலம்பகம், 45)
-------

377-8. [காய்ந்துடன், கடுங்காற் றெடுப்ப :] கடு காற்று உடன் காய்ந்து எடுப்ப-கடியகாற்று நாற்றிசையினும் சேரக்கோபித்தெடுக்கையினாலே,

378. கல் பொறாது உரைஇ-நங்குரக்கல் கயிற்றுடனே நின்று பொருது உலாவி,

379. நெடு சுழி பட்ட நாவாய் போல-நெடியசுழியிம் அகப்பட்டுச் சுழலாநின்ற மரக்கலத்தையொக்க,

380. இருதலை பணிலம் ஆர்ப்ப-முன்னும்பின்னுஞ் சங்கொலிப்ப,

யானைமீண்டாற் பின்னின்றவன் ஊதுதற்குப் பின்னுஞ் சங்கு செல்லும்.

380-81. சினம் சிறந்து 1கோலோர் கொன்று மேலோர் வீசி-சினம்மிக்குப் பரிக்கோற் காரரைக்கொன்று பாகரைவீசிப் போகட்டு,

382. மெல் பிணி வல் தொடர் பேணாது காழ் சாய்த்து-மெல்லிய பிணிப்பினையுடைய வலிய நீர்வாரியென்று காலிற்கட்டுஞ் சங்கிலியை நமக்குக் காவலென்று பேணாதே அதுகட்டின தறியைமுறித்து.

383. கந்து நீத்து உழிதரும் கடாம் யானையும்-கம்பத்தைக் கைவிட்டுச்சுழலும் கடாத்தையுடைய யானையும்,
சிறந்து (380) கொன்று வீசிச் (381) சாய்த்து (382) நீத்து (383) ஆர்ப்ப (380) உழிதருங்கடாமெனக் கடாத்தின்றொழிலாகவுரைக்க.

காற்றிற்குக் கடாம் உவமிக்கப்படும்பொருள்.

384. அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து-அழகிய இடங்களைத் தன்னிடத்தேயுடைய பெரிய ஆகாயம் மறையக் காற்றைப் பிளந்து,

தேவருலகம் முதலியவற்றைத் தன்னிடத்தேயுடைமையின் அங்கண்மால் விசும்பென்றார்.

385-6. ஒள் கதிர் ஞாயிறு ஊறு அளவா திரிதரும் செ கால் அன்னத்து சேவல் அன்ன-ஒள்ளிய கிரணங்களையுடைய ஞாயிற்றைத் தாம் சேர்தலை நெஞ்சாலே கருதிக்கொண்டு பறக்குஞ் சிவந்தகாலையுடைய அன்னத்தினது சேவலையொத்த.

387-8. குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து கால் என கடுக்கும் கவின் பெறு தேரும்-நிறவிய பலமயிர்களையுடைய குதிரைகளோடுதலிற் செலவுமிக்குக் காற்றெனக் கடுக ஒடும் அழகினைப்பெறுகின்ற தேரும்,
-------------
    1 (பி-ம்.) 'காலோர்'
---------

389. கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்-கையிலேயெடுத்த மத்திகையையுடைய 1வாசிவாரியன் 2ஐந்துகதியையும் பதினெட்டுச் சாரியையும் பயிற்றுகையினாலே,

390. அடி படு மண்டிலத்து ஆதி போகிய-குரங்களழுந்தின வட்டமான இடத்திலும் 3ஆதியென்னுங் கதியிலும் ஓடின,

391. கொடி படு சுவல 4இடு மயிர் புரவியும்-ஒழுங்குபடும் 5கேசாரியையுடையனவாக இட்டவாசங்களையுடைய குதிரைகளும்,

392-3. [வேழத் தன்ன வெருவரு செலவிற், கள்ளார் களம ரிருஞ்செரு மயக்கமும் :] வெருவரு வேழத்து அன்ன செலவின் கள்ஆர் களமர் இரு செரு மயக்கமும்-அச்சந்தோன்றுகின்ற யானையை யொத்த போக்கினையுடைய கள்ளினையுண்ணும் வீரர் தம்மிற் பெரிய போரைச்செய்யும் கலக்கமும்.

களத்தே சேறலிற் களமரென்றார்.
---------------
    1 வாசிவாரியன்-குதிரையைத் தன்வயப்படுத்தி நடத்துவோன் ; "வாய்ந்தமா வுகைத்த வாசி வாரியப் பெருமானெங்கே" (திருவால. 29:17) ; "தாமென்றது, இவற்றின் மேலேறின வாசிவாரியர்களை" (தக்க. 263, உரை)

    2 "ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும்" (பு. வெ. 355-6); "இசைத்தவைங் கதியுஞ் சாரி யொன்பதிற் றிரட்டி யாதி, விசித்திர விகற்பும்" (திருவிளை. 59:77): "அரிதரி தெனவி யப்ப வைந்து தாரையினுந் தூண்டி" (திருவால. 39:35); "சதியைந்துமுடைத்திக் குதிரை" (தொல். கிளவி. சூ. 33, சே. ந. மேற்.) ; "சுற்று நீளமு முயரமு நிகர்ப்பன சழியின்மிக்கன தீமை, யற்று மேதகு நிறத்தன கவினுடைய யவயவத்தன வாகி, யெற்று மாமணி முரசமுஞ் சங்கமு மெனுங்குரல் மிகுத்திப்பார், முற்று மாதிரத் தளவுமைங் கதியினான் முடிப்பன விமைப்போதில்", "யாளி குஞ்சரம் வானர முதலிய வியக்கினால் விசும்பெங்கும், தூளி கொண்டிட மிடைந்துவந்தன நெடுந்துர கதம்பல கோடி" (வி. பா. சூதுபோர். 81-2); விக்கிதம், வற்கிதம், உபகண்டம், ஜவம், மாஜவமென்னுமிப் பஞ்சதாரையையு மென்பர் பு. வெ. உரையசிரியர்.

    3 ஆதி-நெடுஞ்செலவு : ஆதிமாதி யென்பவற்றுள் ஆதிநெடுஞ்செலவென்பர் (கலித். 96:20) இவ்வுரையாசிரியர். "ஆதிவரு கதிப்பரியும்" (வி. பா. இராசசூயச். 131)

    4 "ஓங்கன் மதிலு ளொருதனிமா-ஞாங்கர், மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றா, ருயிருணிய வோடி வரும்" (பு. வெ. 90) என்பதும், 'மலைபோன்ற புரிசையிடத்து ஒப்பில்லாததொரு குதிரை பக்கத்தே கவரியிட எழுந்து மேகத்தை யொத்துப் பகைவருயிரை யுண்பான் வேண்டிக் கடுகி வரும்' என்னுமதனுரையும், "முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு, மூட்டுறு கவரி தூக்கி யன்ன" (அகநா. 156:1-2) என்பதும் இங்கே அறியற்பாலன.

    5 "பலவாகிய கேசாரியையுடைய குதிரைகள்" (நெடுநல். 93, ந.) இப்பெயர் கேதாரியெனவும் வழங்கும் ; கலித். 96:8, ந.
--------

394. அரியவும் பெரியவும்-ஈண்டுப் பெறுதற்கரியனவுமாய் அவைதாம் சிறிதின்றி மிகவுள்ளனவுமாய்ப் பலவாய் வேறுபட்ட பண்ணியம் (405) என மேலே கூட்டுக.

வருவன பெயர்தலின்-யானையும் (383) தேரும் (388) புரவியும் (391) களமர் செருமயக்கமும் (393) பல்காலும் வருவனவாய் மீளுகையினாலே,

395-6. [தீம்புழல் வல்சிக் கழற்கான் மழவர், பூந்தலை முழவி னோன்றலை கடுப்ப :]1தீ புழல் வல்சி பூ தலை கழல் கால் மழவர் முழவின் நோன் தலை கடுப்ப-இனிய பண்ணியாரங்களாகிய உணவினையும் பொற்பூக்களையுடைய தலையினையும் விரக்கழலணிந்த காலினையுமுடைய மழவர் முன்கொட்டும் வீரமத்தளத்தினது வலிய கண்ணையொக்க உருண்ட,

2தீம்புழல்-இருப்பைப்பூவுமாம். பூத்தலை : விகாரம். 3மழவர்-சிலவீரர். "உருவக் குதிரை மழவ ரோட்டிய" (அகநா. 1:2) என்றார் பிறரும். கடுப்வென்னுஞ் செயவெனச்ச உவமவுருபிற்கு உருண்டவென சொல்வருவிக்க.

397. பிடகை பெய்த கமழ் நறு பூவினர்-பூந்தட்டிலே இட்டு வைத்த மிகவும் நாறுகின்ற நறிய பூவினையுடையாரும்,

398. பல வகை 4விரித்த எதிர் பூ கோதையர்-பலவகையாக விரித்து வைத்த ஒன்றற்கொன்று மாறுபட்ட பூமாலைகளையுடையாரும்,

399. பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்-இடிக்க வல்லார் பலரும் திரண்டு இடித்த பூந்தாதுக்கல்போலப் 5பரக்குஞ் சுண்ணத்தை யுடையாரும்,
-----------
    1 (பி-ம்) 'தீம்புலவல்சி'
    2 "இருப்பை.............. இழுதி னன்ன தீம்புழல்", "தீம்புழ லுணீஇய, கருங்கோட் டிருப்பை யூரும், பெருங்கை யெண்கு" (அகநா. 9:3-5, 171:13-5)
    3 மதுரைக் 687. உரை.
    4 (பி-ம்.) 'விரிந்த வெதிர்ப்பூங் கோதையர்'
    5 "சுண்ணம்போலச் சிதராய்ப் பரந்து கிடத்தலிற் சுண்ணமென்றார்" (தொல். எச்ச. சூ. 10. சே) என்பதனாற் சுண்ணம் பரந்திருத்த லுணரப்படும்.
    6 "செம்பொற் சுண்ணஞ் சிதர்ந்த திருநுதல்", "அனிச்சக் கோதையு மாய்பொற் சுண்ணமும்........சுந்தரப் பொடியுஞ் சுட்டிச
-------

தாது-நீறுமாம். ந வமணிகளும், 6பொன்னும், சற்தனமும், கருப்பூரம் முதலியனவும் புழுகிலும் பனிநீரிலும் நனையவைத்திடித்தலின், இடிக்கவல்லவர் 1பலரும் வேண்டிற்று.

400-401. தகை செய் 2தீ சேறு இன் நீர் பசு காய் நீடு கொடி இலையினர்-உடம்பிற்கு அழகைக்கொடுக்கும் இனிய 3கருங்காலி சீவிக் காய்ச்சின களிக்கலந்த இனிய நீரினையுடைய பசியபாக்குடனே வளர்ந்த கொடியீன்ற வெற்றிலையினையுடையாரும்,

"அங்கருங் காலி சீவி யூறவைத் தமைக்கப் பட்ட, செங்களி விராய காயும்" (சீவக. 2473) என்றார். இளங்களி 4யன்னம் நீராயிருத்தலின் இன்னீரென்றார்.

401. கோடு சுடு நூற்றினர்-சங்கு சுடுதலாலுண்டான சுண்ணாம்பையுடையாரும்,

402-4. [இருதலை 5வந்த பகைமுனை கடுப்ப, வின்னுயி ரஞ்சியின்னா வெய்துயிர்த், தேங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றை :]

இரு தலை வந்த பகை முனை கடுப்ப இன் உயிர் அஞ்சி ஏங்குவனர் இருந்து-இரண்டுபக்கத்தானும் படைவந்த பகைப்புலத்தை யொக்கத்தம்முடைய இனியவுயிருக்கு அஞ்சி ஏங்குவாராயிருந்து,

அவை நீங்கிய பின்றை இன்னா வெய்துஉயிர்த்து-அந்நாற்படையும் போனபின்னர் அவற்றானெய்திய பொல்லாவெப்பத்தைப் போக்கி,

எனவே அச்சத்தால் நெஞ்சிற்பிறந்த வருத்தத்தைப்போக்கி யென்றார்.

405. பல் வேறு பண்ணியம் 6தழீஇ திரி விலைஞர்-பலவாய் வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிகின்ற விற்பாரும்,

கொள்ளக்கொள்ளக் குறையாமல் தரத்தர மிகாமல் (426) அரியவும் பெரியவுமாய்ப் (394) பலவாய் வேறுபட்ட பண்ணியமெனக் கூட்டுக.
----------
    1 திருவா. திருப்பொற்சுண்ணமென்னும் பகுதியைப் பார்க்க.
    2 (பி-ம்.) 'தீஞ்சோற்று'
    3 "பைங்கருங் காலிச் செங்களி யாளைஇ, நன்பகற் கமைந்த வந்துவர்க் காயும்" (பெருங். 3. 14:81-2)
    4 அன்னம்-தேங்காய் முதலியவற்றிலுள்ள வழுக்கை,
    5 (பி-ம்.) 'வேந்தர்'
    6 (பி-ம்.) 'தரீஇயதிரிவினைஞர்'
---------

406. மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர-மலையையொக்கும் மாடங்களிடத்துக் குளிர்ந்த நிழலிலே இருத்தலைச்செய்ய,

சுண்ணமும்", "பொற்குறு சுண்ணமும் (பெருங். 1. 33:120, 42:71-3, 92) ; "சுந்தரப்பொடி தெளித்த செம்பொற் சுண்ணம் வாணுதற், றந்து சுட்டியிட்ட சாந்தம்" (சீவக. 1956)
வணங்கு இறை பணை தோள் வயக்குறு வந்திகை-வளைந்த சந்தினையுடைய மூங்கில் போலும் தோளினையும் விளக்கமுற்றிய 1கைவந்தியினையும்,

தொய்யில் பொறித்த சோர்ந்து உகுவன்ன சுணங்கு எதிர் இளமுலை-தொய்யிலால் வல்லியாக எழுதின நெகிழ்ந்து சிந்துமாறுபோன்ற சுணங்குதோற்றிய இளைய முலையினையும்.

2தொய்யில்-எழுதுங்குழம்பு.

417. மை உக்கன்ன 3மொய் இரு கூந்தல்-மையொழுகினாற் போன்ற செறிந்த கரியமயிரினையுமுடைய,

418. மயில் இயலோரும் மடமொழியோரும்-மயிலின் தன்மையையுடையோரும் மடப்பத்தையுடைய வார்த்தையினையுடையோரும்,

419. 4கைஇ மெல்லிதின் ஒதுங்கி கையெறிந்து-தம்மைக் கோலஞ்செய்து மெத்தெனநடந்து கையைத் தட்டி,

420. கல்லா மாந்தரொடு நகுவனர். திளைப்ப-5காமநுகர்ச்சியினையன்றி

வேறொன்றையுங்கல்லாத இளையோருடனே மகிழ்ந்தனராய்ப் புணரும்படி,

421. [புடையமை பொலிந்த 6வகையமை செப்பில்:]

புடைஅமை செப்பில்-புடைபடுதலமைந்த செப்பிடத்தில்,

பொலிந்த வகை அமை செப்பில்-பொலிவுபெற்ற கூறுபாடமைந்த செப்பிடத்திற் பண்ணியம் (422) என்க.

422. 7காமரு உருவின் தாம் வேண்டும் பண்ணியம்-விருப்பமருவிய வடிவினையுடைய நுகர்வார் தாம் விரும்பும் நுகர்பொருள்களை,

423. கமழ் நறு பூவொடு மனை மனை மறுக-மிகவுநாறும் நறிய பூவுடனேயேந்தி 8மனைகடோறும் உலாவிநிற்க,
------------
    1 வைந்தி-கையில் தோளின்கீழ் அணியப்படும் ஆபரணம்; இப்பெயர் வழக்கிலுமுள்ளது.
    2 "தொய்யில்-பத்திக்கீற்றென்பர்" (சிலப். 2:69-70, அடியார்.)
    3 (பி-ம்.) 'ஐம்பாற் கூந்தல்'
    4 (பி-ம்.) 'தைஇ'
    5 பொருந. 100, சிறுபாண். 33, முல்லை. 36 என்பவற்றிலுள்ள, 'கல்லா' என்பதற்கு இங்கே கூறுயதுபோலவே உரை கூறுதல் அறியற்பாலது.
    6 (பி-ம்.) 'மடையமை செப்பிற் காமவுருவிற்'
    7 முருகு. 75, குறிப்புரையைப் பார்க்க.
    8 (பி-ம்) 'மனைகடோறு மனைகடோறும்'
-----------

நலத்தராய்ச் (409) செய்யராய் நோக்கினராய் (412) மாமையராய் (413) வாயராய்த் தோளினையும் (414) வந்திகையினையும் (415) முலையினையும் (416) கூந்தலினையுமுடைய (417) மயிலியலோரும் மடமொழி

வணங்கு இறை பணை தோள் வயக்குறு வந்திகை-வளைந்த சந்தினையுடைய மூங்கில் போலும் தோளினையும் விளக்கமுற்றிய 1கைவந்தியினையும்,

தொய்யில் பொறித்த சோர்ந்து உகுவன்ன சுணங்கு எதிர் இளமுலை-தொய்யிலால் வல்லியாக எழுதிண நெகிழ்ந்து சிந்துமாறுபோன்ற சுணங்குதோற்றிய இளைய முலையினையும்.

2தொய்யில்-எழுதுங்குழம்பு.

417. மை உக்கன்ன 3மொய் இரு கூந்தல்-மையொழுகினாற் போன்ற செறிந்த கரியமயிரினையுமுடைய,

418. மயில் இயலோரும் மடமொழியோரும் - மயிலின் தன்மையையுடையோரும் மடப்பத்தையுடைய வார்த்தையினையுடையோரும்,

419. 4கைஇ மெல்லிதின் ஒதுங்கி கையெறிந்து-தம்மைக் கோலஞ்செய்து மெத்தெனநடந்து கையைத் தட்டி,

420. கல்லா மாந்தரொடு நகுவனர். திளைப்ப-5காமநுகர்ச்சியினையன்றி

வேறொன்றையுங்கல்லாத இளையோருடனே மகிழ்ந்தனராய்ப் புணரும்படி,

421. [புடையமை பொலிந்த 6வகையமை செப்பில் :]

புடைஅமை செப்பில்-புடைபடுதலமைந்த செப்பிடத்தில்,

பொலிந்த வகை அமை செப்பில்-பொலிவுபெற்ற கூறுபாடமைந்த செப்பிடத்திற் பண்ணியம் (422) என்க.

422. 7காமரு உருவின் தாம் வேண்டும் பண்ணியம்-விருப்பமருவிய வடிவினையுடைய நுகர்வார் தாம் விரும்பும் நுகர்பொருள்களை,

423. கமழ் நறு பூவொடு மனை மனை மறுக-மிகவுநாறும் நறிய பூவுடனேயேந்தி 8மனைகடோறும் உலாவிநிற்க,

நலத்தராய்ச் (409) செய்யராய் நோக்கினராய் (412) மாமையராய் (413) வாயராய்த் தோளினையும் (414) வந்திகையினையும் (415) முலையினையும் (416) கூந்தலினையுமுடைய (417) மயிலியலோரும் மடமொழியோரும் (418) கைஇ ஒதுங்கி எறிந்து (419) மாந்தரொடு திளைக்கும் படி (420) தொன்முதுபெண்டிர் (409) பண்ணியத்தைப் (422) பூவோடே ஏந்தி மனைமனைமறுக (423) எனக்கூட்டுக.
-------------
    1 கைவந்தி-கையில் தோளின்கீழ் அணியப்படும் ஆபரணம் ; இப்பெயர் வழக்கிலுமுள்ளது.
    2 "தொய்யில்-பத்திக்கீற்றென்பர்" (சிலப். 2:69-70, அடியார்.)
    3 (பி-ம்.) 'ஐம்பாற் கூந்தல்'
    4 (பி-ம்.) 'தைஇ'
    5 பொருந. 100, சிறுபாண். 33, முல்லை. 36 என்பவற்றிலுள்ள, 'கல்லா' என்பதற்கு இங்கே கூறுயதுபோலவே உரை கூறுதல் அறியற்பாலது.
    6 (பி-ம்.) 'மடையமை செப்பிற் காமவுருவிற்'
    7 முருகு. 75, குறிப்புரையைப் பார்க்க.
    8 (பி-ம்) 'மனைகடோறு மனைகடோறும்'
----------

424-5. மழை கொள குறையாது புனல் புக 1மிகாது கரைபொருது இரங்கும் முந்நீர் போல-மேகம் முகக்கக் குறைவுபடாமல் யாறுகள் பாய்தலின் மிகுதலைச் செய்யாமற் கரையைப் பொருது ஒலிக்குங் கடல்போல,

426. கொள கொள குறையாது தர தர மிகாது-பலரும்வந்து கொள்ளக்கொள்ளக் குறையாமற் பலரும் மேன்மேலுங் கொண்டுவரக் கொண்டுவர மிகாமல்,

427-8. [கழநீர் கொண்ட வெழுநா ளந்தி, யாடுதுவன்று விழவினாடார்த் தன்றே :]

கழநீர் கொண்ட அந்தி-தீவினையைக் கழுவுதற்குக்காரணமான தீர்த்தநீரைத் தன்னிடத்தேகொண்ட அந்திக்காலம்,

ஆடு துவன்று விழவின் எழுநாள் அந்தி-வேறோரிடத்தில்லாத வெற்றி நெருங்குந் திருநாளினைத் தன்னிடத்தேயுடைய ஏழாநாளந்தியில்,

2கால்கொள்ளத்தொடங்கிய 3ஏழாநாளந்தியிலே தீர்த்தமாடுதல் மரபு.

நாடு-அவ்விழவிற்குத்திரண்ட நாட்டிலுள்ளார்,

ஆர்த்தன்றே-ஆர்த்தஆரவாரம்,

அற்றேயென்பது அன்றேயெ மெலிந்ததாக்கி உவமவுருபாக்கலுமொன்று

429. [மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் :] பிறங்கிய மாடம் மலிபுகழ் கூடல்-பெரிய 4நான்மாடத்தாலே மலிந்தபுகழைக் கூடுதலையுடைய மதுரை (699) என மேலேகூட்டுக.
-------------
    1 (பி-ம்.) 'நிறையாது'
    2 "கால்கோள் விழவு" (சிலப். 5:144)
    3 ஏழுநாளிற் செய்யப்பெறுந் திருவிழா, 'பவுநம்' எனப்படும் ; திருப்பெருந்துறைப்புராணம், புரூரவன் திருவிழாச்செய்த படலம், 50-ஆம் பாடலைப் பார்க்க ; "ஆத்தமா மயனு மாலு மன்றிமற் றொழிந்த தேவர், சோத்தமெம் பெருமா னென்று தொழுதுதோத் திரங்கள் சொல்லத், தீர்த்தமா மட்ட மீமுன் சீருடை யேழு நாளும், கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே" (திருக்குறுக்கை. திருநா. தே.) என்பதும் ஈண்டு ஆராயத்தக்கது.
    4 "நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும் (கலித். 92:65) என்பதும், 'நான்குமாடம் கூடலின் நான்மாடக்கூடலென்றாயிற்று;
----------

430. [ நாளங் காடி நனந்தலை :] நன தலை நாள் அங்காடி-அகற்சியையுடைத்தாகிய இடத்தினையுடைய நாட்காலத்துக் கடையில்,

கம்பலை-ஆரவாரம்,

உருவப்பல்கொடியும் (366) புனைகொடியும் (369) நன்கொடியும் (371) களிநவில்கொடியும் (372) குழூஉக்கொடியும் பதாகையும் நிலைஇ (373) அருவியினுடங்கும்படி (374) வகைபெறவெழுந்து மூழ்கி (357) இசைக்கும் பல் புகழையுடைய நல்ல இல்லினையும் (358) சும்மை யினையுமுடைய (364) தெருவுகளில் (359) பெருநியமத்து (365) நாளங்காடியிலே (430) பூவினர் (397) முதலியோர் இருத்தருகையினால் (406) மறுகுதலினால் (423) எழுந்த கம்பலை (430) நன்பணையறைவனர் நுவலுகையினாலே (362) அதற்குத் திரண்டநாடு (428) அந்தியில் (427) ஆர்த்ததே (428) யென வினைமுடிக்க.

'ஆர்த்தன்று என்னும் முற்றுச்சொல் படுத்தலோசையாற் பெயர்த்தன்மையாய்த் தேற்றேகாரம் பெற்றுநின்று.

431-2. வெயில் கதிர் 1மழுங்கிய படர் கூர் ஞாயிறு செக்கர் அன்ன-வெயிலையுடைய கிரணங்கள் ஒளிமழுங்கிய செலவுமிக்க ஞாயிற்றையுடைய செக்கர் வானத்தையொத்த,

432-3. சிவந்து நுணங்கு உருவின் கண் பொருபு 2் ஒள் பூ கலிங்கம்-சிவந்து நுண்ணிதாகும் வடிவாலே கண்களை 3வெறியோடப்பண்ணிச் சிந்திவிழுமாறு போன்ற ஒள்ளிய 4பூத்தொழிலையுடைய சேலைகளை.

434. பொன் புனை வானொடு பொலிய கட்டி-பொன்னிட்ட உடை வாளோடே அழகுபெறக் கட்டி,

435-40. [5திண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானைக், கச்சந் தின்ற கழயறங்கு திருந்தடி, மொய்ம்பிறந்து திரிதரு மொருபெருந் தெரியன்,

அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ; இனி, கன்னி, கரியமால், காளி, ஆலவாயென்றுமாம்' என்னும் அதன் விசேடவுரையும், "அம்புத நால்களா னீடுகூடல்" (திருநள்ளாறும் திருவாலவாயும், திருஞான. தே.) என்னும் திருவாக்கும், "ஈசனார் மகிழ்ந்த தானம்" (திருவால. நகர. 12) என்பது முதலிய திருவிருத்தங்கள் நான்கும், "கன்னிதிரு மால்காளி யீசன் காக்குங் கடிமதில் சூழ் மாமதுரை" (ஷெ பயன்முதலியன, 5) என்பதும் நான்மாடங்கள் இன்னவென்பதைப் புலப்படுத்தும்.
------------
    1 (பி-ம்.) 'மழுகிய'
    2 (பி-ம்) 'கூடும்'
    3 வெறியோடப்பண்ணி-மயங்கி.
    4 முருகு. 15. குறிப்புரையைப் பார்க்க.
    5 (பி-ம்.) 'திண்டேரப்பிற்'
------

மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை, அணிகிளர் மார்பி னாரமொடளைஇக், காலியக் கன்ன கதழ்பரி கடைஇ :]

புரளும் தானை (435)-தோளிலே கிடந்தசையும் 1ஒலியலினையும்,

கச்சம் தின்ற கழல் தயங்கு 2திருந்து அடி (436)-கோத்துக் கட்டிய கச்சுக்கிடந்து தழும்பிருந்த வீரக்கழலசையும் 3பிறக்கிடாத அடியினையும்,

மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரு தெரியல் (437)- உலகத்துள்ளார் வலிகளைக்கடந்து புகழ்ச்சியால் எங்குந்திரியும் ஒன்றாகிய பெரிய வேப்பமாலையினையும்,

அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ (439) மணி தொடர்ந்தன்ன ஒள் பூ கோதை (438)-அழகு விளங்கும் மார்பிற்கிடக்கின்ற ஆரத்தோடேகலந்து மாணிக்கம் ஒழுகினாலொத்த ஒள்ளிய செங்கழுநீர் மாலையினையுமுடையராய்,

பிரம்பின் திண் தேர் (435) கால் இயக்கன்ன கதழ் பரி கடைஇ (440)-விளிம்பிலே வைத்த பிரம்பினையுடைய திண்ணிய தேரிற்பூண்ட காற்றினுடைய செலவினையொத்த விரைந்த குதிரைகளைச் செலுத்தி,

441. காலோர் காப்ப கால் என கழியும்-காலாட்கள் சூழ்ந்து காப்பக் காற்றென்னும்படி கடிதிற்செல்லும்,

442-3. [வான வண்கை வளங்கெழு செல்வர், நாண்மகி ழிருக்கை :] நாள் மகிழ் இருக்கை வானம் வள் கை வளம் கெழு செல்வர்- 4நாட்காலத்து மகிழ்ந்திருக்கின்ற இருப்பிலே மேகம்போலே வரையாமற் கொடுக்கும் வளவிய கையினையுடையராகிய வளப்பம் பொருந்தின செல்வர்,

தானை (435) முதலியவற்றையுடையராய்க் கட்டிக் (434) கடைஇக் (440) கழியும் (441) செல்வரென்க.

443-4. காண்மார் பூணொடு தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப-விழாவைக் காண்டற்குப் பூண்களோடே தெள்ளிய உள்ளின் மணிகளை யுடைய பொன்னாற்செய்த சிலம்புகளொலிக்கும்படி மேனிலத்துநின்றும் இழிதலால்,

சிலம்பொலிப்பவென்பதனால் இழிதல்பெற்றாம்.
-----------
    1 ஒலியல்-இங்கே மேலாடை ; "உடையு மொலியலுஞ் செய்யை" (பரி. 19:97)
    2 "கழலுரீஇய திருந்தடி" (புறநா. 7:2) என்பதன் உரையில் 'வீரக்கழலுரிஞ்சிய இலக்கணத்தாற் றிருந்திய அடியினையும்" என்றும், 'திருந்தடி யென்பதற்குப் பிறக்கிடாத அடியெனினும் அமையும்' என்றும் அதன் உரையாசிரியர் எழுதியிருத்தல் இங்கே அறியற்பாலது.
    3 பிறக்கு-பின் ; பிருதக்கென்னும் வடமொழிச் சிதைவென்பர்' சிலப். 5:95-8, அடியார்.
    4 "நாட்கள் ளுண்டு நாண்மாகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீதல்லே" (புறநா. 123:1-2)
---------

444-6. [ஒள்ளழற், றாவற விளங்கிய வாய்பொ னவிரிழை, யணங்கு 1வீழ் வன்ன பூந்தொடி மகளிர் :] அணங்கு வீழ்வு அன்ன ஒள் அழல்தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை பூ தொடி மகளிர்-வானுறை தெய்வங்களின் வீழ்ச்சியையொத்த ஒள்ளியநெருப்பிலே வலியற விளங்கிய அழகிய பொன்னாற்செய்த விளங்கும் பூண்களையும்

பூத்தொழிலையுடைய தொடியினையுமுடைய மகளிர்,

இவர் 2நாயன்மார் கோயில்களிற் சேவிக்கும் மகளிர்.

447. மணம் கமழ் நாற்றம் தெரு உடன் கமழ-புழுகுமுதலியன நாறுகின்ற நாற்றம் தெருவுகளெல்லாம் மணக்க,

மணம் : ஆகுபெயர்.

448. ஒள் 3குழை திகழும் ஒளி கெழு திருமுகம்-ஒள்ளிய மகரக் குழையை உள்ளடக்கிக் கொண்ட ஒளிபொருந்திய அழகினையுடையமுகம்,

449-50. [திண்கா ழேற்ற வியலிரு விலோதம், தெண்கடற் றிரையினி னசைவளி புடைப்ப :] திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் அசைவளி தெள் கடல் திரையின் புடைப்ப-திண்ணிய கொடித்தண்டுகளிலேற்ற அகத்தினையுடைய பெருங்கொடிகளை அசைகின்ற காற்றுத்தெளிந்த கடற்றிரை போல எழுந்துவிடும்படி அடிக்கையினாலே,

451. நிரை நிலை மாடத்து அரமியம் தோறும்-ஒழுங்குபட்ட நிலைமையினையுடைய மாடங்களின் நிலாமுற்றங்கடோறும்,

452. மழை மாய் மதியின் தோன்றுபு மறைய-மஞ்சிலே மறையுந் திங்களைப்போல் ஒருகால் தோன்றி ஒருகால் மறைய,

அரமியந்தோறுமிருந்து (451) விழாக்காணும் மகளிர் முகம் (448) விலோதத்தை (449) வளிபுடைக்கையினாலே (450) தோன்றுபுமறைய வென்க.

நாயன்மார் எழுந்தருளுங்காற் கொடியெடுத்தல் இயல்பு.
-------------
    1 (பி-ம்.) 'வீழ்பன்ன'
    2 நாயன்மார்-தெய்வங்கள் ; பண்டைக்காலத்தில் சிவாலயத்தி லெழுந்தருளியுள்ள மூர்த்திகளை நாயன்மாரென்றும் நாயனாரென்றும் வழங்குதல் மரபு. இது சிலாசாஸனங்களால் அறியப்படும் ; "இராஜராஜேச்வரமுடைய நாயனார்" என்பது போல் வருவன காண்க ; "திருக்கோயில் திருவாயில் என்றவற்றிற்கு நாயகராகிய நாயனாரைத் திருநாயனாரென்னாதது போல" திருச்சிற். 1, பேர்.) என்பதும் ஈண்டறியற்பாலது.

    3 (பி-ம்.) 'குழையிருந்த'
-------

453-5. [நீரு நிலனுந் தீயும் வாளியு, மாக விசும்போ டைந்துட னியற்றிய மழுவா ணெடியோன் றலைவ னாக :] மாகம் 1விசும்பொடு வளியும் தீயும் நீரும் நிலனும் ஐந்து உடன் இயற்றிய 2மழு வாள் நெடியோன்

தலைவன்ஆக-திக்குக்களையுடைய ஆகாயத்துடனே காற்றும் நெருப்பும் நீரும் நிலனுமாகிய ஐந்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளையுடைய பெரியோன் ஏனையோரின் முதல்வனாகக்கொண்டு,

456. மாசு அற விளங்கிய யாக்கையர்-3தீர்த்தமாடிய வடிவினையுடையராய்,

456-8. 4சூழ் சுடர் வாடா பூவின் 5இமையா நாட்டத்து 6நாற்றம் உணவின் உரு கெழு பெரியோர்க்கு-தெய்வத்தன்மையாற் சூழ்ந்த ஒளியினையுடைய வாடாத பூக்களையும் இதழ்குவியாத கண்ணினையும் அவியாகிய உணவினையுமுடைய அச்சம்பொருந்திய மாயோன் முருகன் முதலாகிய தெய்வங்கட்கு,

459. மாற்றரு மரபின் உயர் பலி கொடுமார்-விலக்குதற்கரிய முறைமையினையுமுடைய உயர்ந்த பலிகளைக் கொடுத்தற்கு,

460. அந்தி விழவில்-7அந்திக்காலத்துக்கு முன்னாக எடுத்த விழாவிலே,

தூரியம் கறங்க-வாச்சியங்கள் ஒலிப்ப,

செல்வர் (442) மாசறவிளங்கிய (யாக்கையராய்க் (456) கமழ (447) மறைய (452) நெடியோன் தலைவனாகப் (455) பெரியோர்க்குப் (458) பலி கொடுக்கைக்கு (459) அந்தியிற்கொண்ட விழவிலே தூரியங்கறங்க வென்க.
-----------
    1 "நிலந்நீ நீர்வளி விசும்போட டைந்தும்" (தொல். மரபு. சூ. 89)
    2 மழுவாணெடியோனென்றது சிவபிரானை ; இக்கருத்தை, "ஏற்றுவல னுயரிய " (புறநா. 56.) என்னும் செய்யுள் வலியுறுத்தும்.
    3 "மாசற விமைக்கு முருவினர்" (முருகு. 128) என்பதற்கு 'எக்காலத்தும் நீராடுதலின் அழுக்கற விளங்கும் வடிவினையுடையர்' என்றுரையெழுதினார் முன்.
    4 (பி-ம்.) 'தூசுடை'
    5 "இமைத்தல்-கண்களின் இதழ்களிரண்டினையும் குவித்தல்" என்றார் முன் ; முருகு. 3, ந.
    6 (பி-ம்.) 'கொற்றவுணவின்'
    7 இதனை அந்திக்காப்பென்பர்.
-------

461-5. [திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை, யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித், தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத், தாமு மவரு மோராங்கு விளங்கக், காமர் கவினிய பேரிளம்பெண்டிர் :]

திண் கதிர் மதாணி (461) காமர் கவினிய பெரு இள பெண்டிர் (465)-திண்ணி ஒளியினையுடைய பேரணிகலங்களையுடையராய் விருப்பம் அழகுபெற்ற1பெரிய இளமையினையுடைய பெண்டிர்.

தாம் முயங்கி புணர்ந்து ஓம்பினர் தழீஇ-(462)-தாம் முயங்கு தலைச்செய்து கூடிப் பாதுகாக்குங் கணவரையுங் கூட்டிக்கொண்டு,

2தாது அணி தாமரை போது பிடித்தாங்கு (463) ஒள் குறு மாக்களை (461) தழீஇ (462)-தாதுசேர்ந்த செவ்வித்தாமரைப்பூவைப் பிடித்தாற் போல் ஒள்ளிய சிறுபிள்ளைகளையும் எடுத்துக்கொண்டு,

தாமும் அவரும் ஓராங்கு விளங்க (464)-தாமும் கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே விளங்கும்படியாக,

466-7. [பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச், சிறந்து :] பூவினர் புகையினர் தொழுவனர் சிறந்து பழிச்சி-பூசைக்குவேண்டும் பூவினையுடையராய்த் தூபங்களையுடையராய் வணங்கினராய் மிகுத்துத் துதித்து,

467. புறங்காக்கும் கடவுள் பள்ளியும்-பாதுகாத்து நடத்தும் பௌத்தப் பள்ளியும்,

468. சிறந்த வேதம் விளங்க பாடி அதர்வவேதம் ஒழிந்த முதன்மைப்பட்ட 3வேதங்களைத் தமக்குப் பொருள் தெரியும்படியோதி,

அதர்வம் 4தலையாயவோத்தன்மை 5பொருளிற்கூறினாம்.
---------
    1 பேரிளம்பெண்பருவமென்பது மகளிருடைய பேதைப்பருவம் முதலிய ஏழுபருவங்களுளொன்று.
    2 (பி-ம்.) 'தாதவிழ்'
    3 வேதங்கள் மூன்றே யென்பதும் அதர்வவேதம் மந்திரசாகை யென்பதும் இங்கே அறியற்பாலன ; "மும்முறை யாலும் வணங்கப்படுகின்ற முக்கணக்கன்" (பொன்வண்ணத். 87) என்பதும், "த்ரிவேத போத காரணன்" (தக்க. 380) என்பதும், அதன் உரையாசிரியர் அதற்கு, 'திரிவேதமென்றது : மூற்றேவேதம் ; நாலாவது மந்திரசாகையான அதர்வவேதம் ; திரைவேதா என்பது ஹலாயுதம்'என்றெழுதிய விசேட உரையும் இங்கே உணரத்தக்கவை.
    4 "இருக்கும் யசுரும் சாமமும் : இவைதலையாய ஓத்து. இவைவேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தாற் காரியப்படுதலின் இலக்கியமுமாயின. அதர்வம் ஆறங்கமும் தருமநூலும் இடையாய ஓத்து. அதர்வமும் ஒழுக்கங்கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுசூழும் மந்திரங்களும் பயிறலின் அவற்றோடு கூறப்படாதாயிற்று" (தொல். புறத். சூ. 20, ந.)
    5 (பி-ம்.) 'பொருளியலில்'
---------

469. விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து-விழுமிய தலைமையோடு பொருந்தின யாகங்கள் முதலிய தொழில்களோடே1சிலகாலம் பொருந்தி,

470. நிலம் அவர் வையத்து-நால்வகைநிலங்களமர்ந்த உலகத்தே

ஒரு தாம் ஆகி-ஒன்றாகிய பிரமம் தாங்களேயாய்,

471. உயர் நிலை உலகம் இவண் நின்று எய்தும்-உயர்ந்த நிலைமையையுடைய தேவருலகத்தை இவ்வுலகிலே நின்றுசேரும்,

472. அறம் நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின்-தருமத்தின் வழி ஒருகாலமுந்தப்பாத பல்லுயிர்கட்கும் அன்புடைத்தாகிய நெஞ்சாலே,

473. பெரியோர் மேஎய்-சீவன்முத்தராயிருப்பாரிடத்தே சில காலம் பொருந்திநின்று,

2இனிதின் உறையும்-ஆண்டுப்பெற்ற வீட்டின்பத்தாலே இனிதாகத் தங்கும் பள்ளி (474),

474. [குன்றுகுயின் றன்ன வந்தணர் பள்ளியும் :]

குன்று குயின்றன்ன பள்ளியும்-மலையை உள்வெளியாகவாங்கி இருப்பிடமாக்கினாற் போன்ற பிரமவித்துக்களிருப்பிடமும்,

3அந்தணர்-வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார்,

அந்தணர் (474) பாடி (468) அன்புடைநெஞ்சாலே (472) தேவருலகத்தையெய்தும் (471) ஒழுக்கத்தோடே சிலகாலம் நின்று (469) பின்னர் வேதாந்தத்தை யுணர்ந்துபெரியோரை மேஎய் (473) வையத்தே ஒருதாமாகி (470) உறையும் (473) பள்ளியும் (474) என முடிக்க.
-----
    1 "ஒழுக்கத்து நீத்தார்" (குறள், 21) என்பதன் உரையிற் பரிமேலழகர், 'தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தார்' என்றும், விசேட உரையில், 'தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது : தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாதொழுக அறம் வளரும் ; அறம் வளரப் பாவந்தேயும் ; பாவந்தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டுணர்வும், அழிதன் மாலையவாய இம்மை மறுமையின்பங்களினுவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின்கண் ஆசையுண்டாம் ; அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய யோக முயற்சியுண்டாம்; அஃதுண்டாக மெய்யுணர்வு பிறந்து புறப்பற்றாகிய எனதென்பதும் அகப்பற்றாகிய யானென்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம்முறையே உவர்த்து விடுதலெனக்கொள்க' என்றும் எழுதியவை இங்கே அறிதற்குரியன.
    2 (பி-ம்.) 'இனிதினிது'
    3 முருகு. 95, குறிப்புரையைப் பார்க்க.
--------

475-6. வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து பூவும் புகையும்1சாவகர் பழிச்ச-வண்டுகள் படியும்படி பருவமுதிர்ந்த தேனிருந்த தோற்றத்தையுடைய பூக்களையும் புகையினையுமேந்தி விரதங்கொண்டோர் துதிக்க,

477-83. [சென்ற காலமும் 2வரூஉ மமயமு, மின்றிவட் டோன்றிய வொழுக்கமொடு நன்குணர்ந்து, வானமு நிலனுந் தாமுழு துணரும், சான்ற கொள்கைச் சாயா யாக்கை, யான்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார், கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப், பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவர :]

சென்ற காலமும் வரூஉம் அமயமும் (477) இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து (478) நல்குவர (483)-சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும் இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே மிகவுணர்ந்து உலகத்தார்க்குச் சொல்லுதல் வரும்படி,

வானமும் நிலனும் தாம் முழுது உணரும் (479) அறிஞர் (481)-தேவருலகையும் அதன் செய்கைகளையும் எல்லாநிலங்களின் செய்திகளையும் தாம் நெஞ்சால் அறிதற்குக் காரணமான அறிஞர்,

இஃது எதிர்காலங்கூறிற்று.

சான்ற கொள்கை (480)-தமக்கமைந்த விரதங்களையும்,

சாயா யாக்கை (480)-அவ்விரதங்களுக்கு இளையாத மெய்யினையும் உடைய அறிஞர் (481),

ஆன்று அடங்கு அறிஞர் (481)-கல்விகளெல்லாம் நிறைந்து களிப்பின்றி அடங்கின அறிவினையுடையார்,

3செறிந்தனர் (481)-நெருங்கினவருடைய சேக்கை (487) என்க.

நோன்மார் (481)-நோற்கைக்கு,

கல் பொளிந்தன்ன இட்டு வாய் கரண்டை (482) பல் புரி சிமிலி நாற்றி (483)-கல்லைப் பொளிந்தாற்போன்ற இட்டிய வாயையுடைய 4குண்டிகையைப் பல வடங்களையுடைய தூலுறியிலே தூக்கிச் செறிந்தன (481) ரென்க.
----------
    1 சாவகர்-சைனரில் விரதங்காக்கும் இல்லறத்தார் ; இவர் உலக நோன்பிகளெனவும் கூறப்படுவர் ; சிலப். 15:153.
    2 (பி-ம்.) 'வரூஉஞ்சமயமும்'
    3 (பி-ம்.) 'செறிநர்'
    4 "உறித்தாழ்ந்த கரகமும்" (கலித். 9:2); "உறித்தாழ் கரகம்" (சிலப். 30:64, 90)
----------

484. கயம் கண்டன்ன-1குளிர்ச்சியாற் கயத்தைக் கண்டாற் போன்ற,

வயங்கு உடை நகரத்து-விளங்குதலையுடைய கோயிலிடத்துச் சேக்கை (487) என்க.

485. செம்பு இயன்றன்ன செ சுவர் புனைந்து-செம்பாற் செய்தாலொத்த செவ்விய சுவர்களைச் சித்திருமெழுதி,

486. நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து-கண் பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி மேல்நிலமுயர்ந்து,

486-8. [ஓங்கி, யிறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும், குன்று பல குழீஇப் பொலிவன தோன்ற :]

குன்று பல குழீஇ பொலிவான தோன்ற ஓங்கி-மலைகள் பலவும் திரண்டு பொலிவனபோலத் தோன்ற உயர்ந்து வயங்குடை நகரம் (484) என்க.

இறும்பூது சான்ற நறு பூ சேக்கையும்-அதிசயம் அமைந்த நறிய பூக்களைச் சூழவுடைய அமணப்பள்ளியும்,

சேக்கப்படும் இடத்தைச் சேக்கை யென்றார். இவர்கள் வருத்த மறப்பறித்து வழிபடுதற்குப் பல பூக்களைச் சூழ ஆக்குதலின் நறும்பூஞ் சேக்கை யென்றார்.

புனைந்து (485) உயர்ந்து (486) தோன்ற (488) ஓங்கிச் (486) சாவகர் பழிச்ச (476) வயங்குதலையுடைய நகரத்திடத்துக் (484) கொள்கையினையும் யாக்கையினையுமுடைய (480) அறிஞர் (481) உணர்ந்து (478) நல்குவர (483) நோன்மார் (481) சிமிலியிலேநாற்றிச் (483) செறிந்தனருடைய (481) சேக்கையுமெனக் கூட்டுக.

489. அச்சமும்-நடுவாகக்கூறுவரோ கூறாரோவென்று அஞ்சி வந்த அச்சத்தையும்,

அவலமும்-அவர்க்குத் தோல்வியால் நெஞ்சிற்றோன்றும் வருத்தத்தையும்,

ஆர்வமும் நீக்கி-அவர்தம் நெஞ்சுகருதின பொருள்கண் மேற்றோன்றின பற்றுள்ளத்தினையும் போக்கி,

என்றது, அவர்கள் நெஞ்சுகொள்ள விளக்கியென்றவாறு.

490. செற்றமும் உவகையும் செய்யாது காத்து-ஒரு கூற்றிற் செற்றஞ் செய்யாமல் ஒருகூற்றில் உவகை செய்யாமல் நெஞ்சினைப் பாதுகாத்து,
----------
    1 "கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல்" (மலைபடு. 47) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.
---------

491. ஞெமன் கோல் அன்ன செம்மைத்தாகி-துலாக்கோலையொத்த1நடுவுநிலைமையையுடைத்தாய்,

492. சிறந்த கொள்கை 2அறம் கூறு அவையமும்-இக்குணங்களாற் சிறந்த விரதங்களையுடைய தருமநூலைச் சொல்லுந்திரளும்,

493. நறு சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து பெரியோர் (495)-நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினயுடைய பெரியோர்,

யாகத்திற்குச் சந்தனம்பூசுதல் மரபு.
-----------
    1 "நடுவுநிலையென்பது ஒன்பது சுவையுள் ஒன்றெனநாடாக நிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை ; அஃதாவது, 'செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினும், நெஞ்சோர்ந் தோடா நிலைமை' ; அது காம வெகுளி மயக்கம் நீங்கினோர் கண்ணே நிகழ்வது" (தொல். மெய்ப். 12, பேர்)

    2 "அறங்கூறவையம்-தருமநூன் முறைமையின் அறங்கூறும் தருமாசனத்தார்"(சிலப். 5:135, அடியார். )

    3 யாகஞ்செய்து சுவர்க்கம்புகுதல், "பாடிப் பெற்ற பரிசில் : "நீர் வேண்டியது கொண்மின்' என 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர்" (பதிற், மூன்றாம்பத்தின் இறுதிவாக்கியம்) என்பதிற் குறிப்பிடப்பட்ட பாலைக்கௌதமனார் சரிதையாலும் உணரப்படும்.
----------

494-8. [ஆவுதி மண்ணி யவிர்துகின் முடித்து, மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல, நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி, யன்பு மறனு மொழியாது காத்துப், பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த :]

ஆவுதி மண்ணி (494) மா விசும்பு வழங்கும் பெரியோர் போல(495)-3யாகங்களைப் பண்ணிப பெரிய சுவர்க்கத்து ஏறப்போம் அந்தணர் அரசனை அடக்குமாறு போல,

நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி (496)-அரசனிடத்துள்ள நன்மையும் தீமையும் நெஞ்சத்தாலேகண்டு அத்தீங்குகளையாராய்ந்து அவற்றிலே ஒழுகாமலடக்கி,

அன்பும் அறனும் ஒழியாது காத்து (497)-சுற்றத்திடத்துச் செல்லும் அன்பும்எவ்வுயிர்க்கண்ணும் நிகழும் தருமமும் ஒருகாலமும்போகாமல் தம்மிடத்தே பரிகரித்து,

பழி ஒரீஇ உயர்ந்த (498)-பழி தம்மிடத்துவாராமல் நீக்கி அதனானே ஏனையோரினும் உயர்ச்சியெய்தி,

பாய் புகழ் நிறைந்த (498)-பரந்த புகழ்நிறைந்த,

அவிர் துகில் முடித்து (494)-விளங்குகின்ற1மயிர்க்கட்டுக்கட்டி,

499. செம்மை சான்ற காவிதி மாக்களும்-தலைமையமைந்த2காவிதிப்பட்டங்கட்டின அமைச்சரும்,

500. அறன் நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி-இல்லறத்திற்குக் கூறிய வழியைத்தப்பாமல் இல்லறத்திலே நடந்து,

501. குறு பல் குழுவின் குன்று கண்டன்ன-அண்ணிய பல திரட்சியையுடைய மலைகளைக் கண்டாற்போன்ற,

502. பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல்-பருந்து இளைப்பாறியிருந்து பின்பு உயரப்பறக்கும் பலதொழிலின் மாட்சிமைப்பட்ட நல்ல இல்லில்,

503. பல் வேறு பண்டமொடு ஊண் மலிந்து கவினி-பலவாய் வேறுபட்ட பண்டங்களோடே பலவுணவுகளும் மிக்கு அழகுபெற்று,

504. மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்-மலையிடத்தனவும் நிலத்திடத்தனவும் நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய பண்ணியம் (506),

505. பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு-பலவாய் வேறுபட்ட அழகினையுடைய மணிகளையும் முத்தினையும் பொன்னையும் வாங்கிக்கொண்டு,

506. சிறந்த தேஎத்து-மணிகளும் முத்தும் பொன்னும் பிறத்தற்குச் சிறந்த தேசத்தினின்றும் வந்த,

பண்ணியம் பகர்நரும்-பண்டங்களை விற்கும் வணிகரும்,

ஊண்மலிந்து கவினிக் (503) குன்றுகண்டன்ன (501)நல்லஇல்லிலே யிருந்து (502) ஆற்றினொழுகிச் (500) சிறந்ததேஎத்துவந்த (506) திருமணி முத்தமொடு பொன்கொண்டு (505) பிறவுமாகிய (506) பண்டங்களை விற்பாருமென்க.

507. [மழையொழுக் கறாஅப் பிழையா விளையுள் :] அறாஅ ஒழுக்கு மழை பிழையா விளையுள்-இடைவிடாமற் பெய்கின்ற மழையால் தவறாத விளைதலையுடையதாகிய மோகூர் (508),
-----------
    1 மயிர்க்கட்டு-தலைப்பாகை ; முல்லை. 53, ந ; சீவக. 1558, ந.
    2 காவிதிப்பட்டம் : "பாண்டிநாட்டுக் காவிதிப்பட்டம் எய்தி னோரும் ............... முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்கு உரிய வேளாளராம்" (தொல். அகத். சூ. 30, ந.) என்பதனால் இப்பட்டம் உயர்ந்த வேளாளர் பெறுவதென்பதும், "காவிதிப்பூ" (தொல். தொகை. சூ. 12, ந. மேற்.) என்பதனால் இப்பட்டத்தினரணியும் பூவொன்றுண்டென்பதும், "எட்டி காவிதிப் பட்டந்தாங்கிய, மயிலியன் மாதர்" (பெருங். 2. 3:144-5) என்பதனால் இப்பட்டம் மகளிரும் பெறுதற்குரியதென்பதும் அறியப்படுகின்றன.
--------

508. பழையன் மோகூர்-பழையனென்னும் குறுநிலமன்னனுடைய மோகூரிடத்து,

508-9. [அவையகம் விளங்க, நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன :] அவை அகம் விளங்க நாற்கோசர் மொழி தோன்றி அன்ன-நன்மக்கள் திரளிடத்தே விளங்கும்படி அறியக்கூறிய நான்குவகையாகிய கோசர் வஞ்சினமொழியாலே விளங்கினாற்போன்ற,

510. தாம் மேஎந்தோன்றிய நால் பெரு குழுவும்-தமது மொழியால் தாம் மேலாய்விளங்கிய நால்வகைப்பட்ட பெரிய திரளும்,

ஐம்பெருங்குழுவில் அமைச்சரைப்பிரித்து முற்கூறினமையின், ஈண்டு ஏனை நாற்பெருங்குழுவையுங்கூறினார். ஐம்பெருங்குழுவாவன: "அமைச்சர் புரோகிதர் சேனா பதியர், தூத ரொற்ற ரிவரென மொழிபே"; இளங்கோவடிகளும்,1"ஐம்பெருங் குழுவு மெண்பே ராயமும்" என்றார்.

511. [கோடுபோழ் கடைநரும் :] போழ் கோடு கடைநரும்-2அறுத்த சங்கை வளை முதலியனவாகக் கடைவாரும்,

திருமணி குயினரும்-அழகிய மணிகளைத் துளையிடுவாரும்,

512. சூடு உறு நல் பொன் சுடர் இழை புனைநரும்-சுடுதலுற்ற நன்றாகிய பொன்னை விளங்கும் பணிகளாகப்பண்ணுந் தட்டாரும்,

513. பொன் உரை காண்மரும்-3பொன்னையுரைத்தவுரையை அறுதியிடும்
பொன்வாணிகரும்,

கலிங்கம் பகர்நரும்-புடைவைகளை விற்பாரும்,

514. செம்பு நிறை கொண்மரும்-செம்பு நிறுக்கப்பட்டதனை வாங்கிக் கொள்வோரும்,

வம்பு நிறை முடிநரும்-கச்சுக்களைத் தம் தொழின்முற்றுப்பட முடிவாரும்,

515. பூவும் புகையும் ஆயும் மாக்களும்-பூக்களையும் 4சாந்தையும் நன்றாக ஆராய்ந்து விற்பாரும்,
--------------
    1 சிலப்பதிகாரம், 5:157.
    2 மதுரைக் 316, பார்க்க.
    3 "பொலந்தெரி மாக்கள்" (சிலப். 14:203) என்பதன் உரையில், 'பொற்பேதத்தைப் பகுத்தறியும் பொன்வாணிகர்' (அடியார்.) என்று எழுதியிருத்தல் பொன்வாணிகர் இயல்பை விளக்கும்.
    4 சாந்து-சந்தனக்கட்டை ; புகை என்ற மூலத்திற்குப் புகைக்கப்படும் உறுப்பாகிய சாந்தென்று இவ்வுரையாசிரியர் பொருள் கொண்டவாறே, "பூவும் புகையும்" (சிலப். 5:14) என்ற விடத்துப் புகையென்பதற்கு, "மயிருக்குப் புகைக்கும் அகில் முதலாயின" (அரும்பத.), 'புகையுறுப்பு' (அடியார்.) என்று பிறரும் பொருள் கூறுதல் இங்கே அறியத்தக்கது.
---------

516-7. [எவ்வகைச் செய்தியு முவமங் காட்டி, நுண்ணிதினுணர்ந்த :] எ வகை நுண்ணிதின் உணர்ந்த செய்தியும் உவமம் காட்டி-பலவகைப்பட்ட கூரிதாகவுணர்ந்த தொழில்களையும் ஒப்புக் காட்டி,

சித்திரமெழுதுவார்க்கு வடிவின்றொழில்கள் தோன்ற எழுதுதற்கரிதென்பதுபற்றிச் செய்தியுமென்றார்.

517-8. 1நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞரும்-கூரிய அறிவினையுடைய சித்திரகாரிகளும்,
நோக்கினார்கண்ணிடத்தே தம் தொழிலைநிறுத்தலிற் கண்ணுள் வினைஞரென்றார்.

பிறரும் கூடி-யான் கூறப்படாதோரும் திரண்டு,

519-20. தெள் திரை அவிர் அறல் கடுப்ப ஒள் பல் குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து-தெளிந்த திரையில் விளங்குகின்ற அறலையொப்ப ஒள்ளிய பலவாகிய சிறியனவும் நெடியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டு வந்து விரித்து,

மடித்தது அறலுக்குவமை.

521. சிறியரும் பெரியரும் 2கம்மியர் குழீஇ-சிறியோரும் பெரியோருமாகிய நெய்தற்றொழிலைச் செய்வார் திரண்டு,

522. நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர-நான்காய் வேறுபட்ட தெருவுகடோறும்3ஒருவர்காலோடு ஒருவர்கால் நெருங்க நிற்றலைச்செய்ய,

கம்மியர் (521) விரித்துக் (520) குழீஇ (521) நிற்றலைச்செய்ய,

இஃது அந்திக்கடையில் தெருவிற் புடைவைவிற்பாரைக் கூறிற்று.

கோயிலைச்சூழ்ந்த ஆடவர்தெரு நான்காதலின்,4நால்வேறு தெருவென்றார். இனிப் பொன்னும் மணியும் புடைவைகளும் 5கருஞ்சரக்கும் விற்கும் நால்வகைப்பட்டவணிகர்தெருவென்றுமாம்.
---------
    1 "நுழைபுலம்-பல நூல்களினுஞ்சென்ற அறிவு" (குறள், 407, பரிமேல்.) என்பதை ஆராய்க.
    2 கம்மியர் : கர்மியர் என்பதன் சிதைவென்பர் ; தொழில் செய்வோரென்பது அதன் பொருள்.
    3 "தாளொடு தாண்முட்ட ................... நீளொளி மணிவீதி நிரந்தரித் தனசனமே" (விநாயக. நகரப். 95)
    4 "நால் வேறு தெருவும்-அந்தணர் அரசர் வணிகர் வேளாளரெனச் சொல்லப்பட்டாரிருக்கும் நான்காய் வேறுபட்ட தெருக்களும்" (சிலப். 14:212, அடியார்.) என்பர்.
    5 கருஞ்சரக்கு-கூலங்கள்; சிலப். 5:23, அரும்பத.
----------

523-5. கொடு பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் தண் கடல் நாடன் ஒள் பூ கோதை பெரு நாள் இருக்கை-கண்கள்வளைந்த பறையினையுடைய கூத்தருடைய சுற்றம் சேரவாழ்த்தும் குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையவனாகிய ஒள்ளிய பனந்தாரையுடைய சேரனுடைய பெரியநாளோலக்க இருப்பிலே,

525-6. விழுமியோர் குழீஇ விழைவு கொள் கம்பலை கடுப்ப கல்லென (538) எல்லாக்கலைகளையுமுணர்ந்த சீரியோர் திரண்டு அவன் கேட்பத்1தருக்கங்களைக்கூறி விரும்புதல்கொண்ட ஆரவாரத்தையொப்பக் கல்லென்ற ஓசை நடக்க,

பலசமயத்தோரும் தம்மிற்றாம் மாறுபட்டுக்கூறுந் தருக்கத்தைச் சேரக் கூறக் கேட்டிருக்கின்ற2கம்பலைபோலவென்றார்.

526. பலவுடன்-கூறாதன பலவுற்றுடனே,

527. சேறும் நாற்றமும் பலவின் சுளையும்-தேனும் நாற்றமும் உடையவாகிய பலாப்பழத்தின் சுளையும்,

சேறென்றார், சுளையிலிருக்கின்ற தேனை.

528. வேறு பட கவினிய 3தேம் மா கனியும்-வடிவு வேறுபட அழகுபெற்ற இனிய மாவிற்பழங்களையும்,

'சேறு நாற்றமும் வேறுபடக் கவினிய, பலவின் சுளையுந் தேமாங் கனியும்' என்றும் பாடம்.

529. பல் வேறு உருவிற் காயும்-பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய பாகற்காய் வாழைக்காய்4வழுதுணங்காய் முதலியகாய்களையும்,

பழனும்-வாழைப்பழம் முந்திரிகைப்பழமுதலிய பழங்களையும்,

530-31. கொண்டல் வளர்ப்ப கொடி விடுபு கவினி மெல் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்-மழை பருவத்தே பெய்து வளர்க்கையினாலே கொடிகள்விட்டு அழகுபெற்று மெல்லிய சுருள்விரிந்த சிறிய இலைகளையுடைய இலைக்கறிகளையும்,

கொடியென்றார், ஒழுங்குபட விடுகின்ற கிளைகளை.

532. [அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும் :] தீ சேறு அமிர்து இயன்றன்ன கடிகையும்-இனிய பாகினாற்கட்டின அமிர்தம் தேறாகநீண்டாற்போன்ற கண்டசருக்கரைத் தேற்றையும்,

533. புகழ் படி பண்ணிய பெரு ஊன் சோறும்-புகழ்ச்சிகள் உண்டாகச்சமைத்த பெரிய இறைச்சிகளையுடைய சோற்றையும்,
----------
    1 சேரனவையுந் தருக்கமும் : மணி. 26:63-4.
    2 "கல்வியிற் றிகழ்கணக் காயர் கம்பலை" என்றார் கம்பரும்.
    3 தேமாவென்பது மாவில் ஒரு சாதியென்பர்.
    4 வழுதுணங்காய்-கத்தரிக்காய் ; "வழுதுணங்காய் வாட்டும்" (தனிப்.)
----------

534. கீழ் செல 1வீழ்ந்த கிழங்கொடு-பார் அளவாகவீழ்ந்த கிழங்குடனே,

534-5. [பிறவு, மின்சோறு தருநர் பல்வயி னுகர :] பல் வயின் நுகர இன் சோறு பிறவும் தருநர்-பலவிடங்களிலும் அநுபவிக்க இனிய பாற்சோறு பால் முதலியவற்றையுங் கொண்டுவந்து இடுவாரிடத்து எழுந்த ஓசையும்,

என்றது, சோறிடுஞ்சாலைகளை.

536-44. வாலிதை யெடுத்த வளிதரு வங்கம், பல்வேறு பண்டமிழிதரும் பட்டினத், தொல்லெ னிமிழிசை மானக் கல்லென, நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப், பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரையோத, மிருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந், துருகெழு பானாள் வருவன பெயர்தலிற், பல்வேறு புள்ளி னிசையெழுந் தற்றே, யல்லங்காடி யழிதரு கம்பலை :]

நன தலை வினைஞர் கலம் கொண்டு மறுக (539)-அகன்ற இடத்தையுடைய தேசங்களில் வாணிகர் ஈண்டுச்செய்த பேரணிகலங்களைக் கொண்டுபோதல் காரணமாக,

வால் இதை எடுத்த வளி தரு வங்கம் (536)-நன்றாகிய பாய்விரித்த காற்றுக்கொண்டு வருகின்ற மரக்கலம்,

பெரு கடல் குட்டத்து புலவு திரை ஓதம் (540) இரு கழி மருவிய பாயபெரிது எழுந்து (541) உரு கெழு பால்நாள் வருவன (542)-பெரிய கடல்சூழ்ந்த இடத்தினின்றும் புலானாறுந் திரையையுடைய ஓதம் கரிய கழியிற் புகார்முகத்தேயேறிப் பரக்கின்ற அளவிலே மிக்கெழுந்து அச்சம்பொருந்திய

நடுவியாமத்தே வருகின்றவற்றின் பண்டம் (537) என்க.

2 பெரிதெழுந்தென்றார், பாயும்வாங்கிச் சரக்கும்பறியாமல் வருகின்றமை தோன்ற ஓதமருவிப்பாயவென்றார், அவ்வோதவேற்றத்திலே கழியிலே வருமென்பதுணர்த்தற்கு.

பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து (537) ஒல்லென் இமிழ் இசை மான (538)-வங்கம்வருகின்றவற்றிற் பலவாய் வேறுபட்ட
-----------
    1 வீழ்ந்த-கீழே வளர்ந்த ; "வீழ்ந்தன-கீழே வளர்ந்தன" (மலைபடு. 128, ந.); "வீழ்க்கும்மே-தாழவிருக்கும்" (109:6) என்பர் புறநானூற்றுரையாசிரியர்.
    2 "மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது, புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்" (புறநா. 30:11-2) என்பதும், 'பாய் களையாது பரந்தோண்டதென்பதனால் துறை நன்மை கூறியவாறாம்' என்ற அதன் விசேட உரையும் இங்கே அறிதற்குரியன.
---------

சரக்கு இறங்குதலைச் செய்யும் பட்டினத்து ஒல்லென முழங்குகின்ற ஓசையையொக்க,

மறுகுதற்குவந்த வங்கம் குட்டத்தினின்றும் வருவனவற்றிற் பண்டமிழியும் பட்டினத்து ஓசைமானவென்க.

பெயர்தலின் (542) பல் வேறு புள்ளின் இசை எழுந்தற்று (543)1இரையை நிறைய மேய்ந்து பார்ப்பிற்கு இரைகொண்டு அந்திக்காலத்து மீளுதலிற் பலசாதியாய் வேறுபட்ட பறவைகளினோசை எழுந்த தன்மைத்து,

அல் அங்காடி 2அழி தரு கம்பலை (544)-அந்திக்காலத்துக் கடையில் மிகுதியைத்தருகின்ற ஓசை,

கடவுட்பள்ளியிடத்தும் (467) அந்தணர் பள்ளியிடத்தும் (474) சேக்கையிடத்தும் (487) அவையத்திடத்தும் (492) காவிதிமாக்களிடத்தும் எழுகின்ற வோசை (499) கோதை (524) யிருக்கையில் (525) விழைவுகொள் கம்பலை கடுப்பக் (526) கல்லென (538) எனமுடிக்க.

பண்ணியம் பகர்நரிடத்தோசையும் (506) நாற்பெருங்குழுவிடத்தோசையும் (510) பல்வயினுகர இன்சோறு (535) பிறவும் (534) தருநரிடத்தெழுந்த வோசையும் (535) கோடுபோழ்கடைநர் (511) முதலாகக் கண்ணுள்வினைஞரீறாகவுள்ளாரும் பிறருங்கூடிக் (518) கம்மியருங்குழீஇ (521) நிற்றர (522) எழுந்தவோசையும் பட்டினத்து (537) ஒல்லெனிமிழிசை மானக்கல்லென (538) என முடிக்க.

இங்ஙனமுடித்தபின், நியமத்து (365) அல்லங்காடியில் அழிதரு கம்பலை (544) தூரியங்கறங்குகையினாலும் (460) கம்பலைகடுப்பக் (526) கல்லென்கையினாலும் (538) ஒல்லெனிமிழிசைமானக்கல்லென்கையினாலும் (538) பல் வேறுபுள்ளின் இசையெழுந்தற்றே (543) எனச்சேர வினைமுடிக்க.

கல்லெனவென்பதனை இரண்டிடத்திற்குங்கூட்டுக.

3இவ்வோசைகளின் வேறுபாடுகளை நோக்கிப் பல்வேறுபுள்ளோசைகளைஉவமங்கூறினார்.
-----------
    1 "ஞாயிறு பட்ட வகல்வாய் வானத், தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை, யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த, பிள்ளை யுள்வாய்ச் செரீஇய, விரைகொண் டமையின் விரையுமாற் செலவே" (குறுந். 92)
    2 அழியென்பது மிகுதியைக் குறித்தல், "அழியும்-பெருகும்" (சீவக. 1193, ந.) "அழிபசி-மிக்கபசி" (குறள், 226, பரிமேல்.) என்பவற்றாலும் உணரப்படும்.
    3 "பாய தொன்மரப் பறவைபோற் பயன்கொள்வான் பதினெண், டேய மாந்தருங் கிளந்தசொற் றிரட்சி" (திருவிளை. திருநகரப். 67)
------

545-6. [ஒண்சுட ருருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து சென்ற ஞாயிறு :] ஒள் சுடர் உருப்பு ஒளி சினம் தணிந்து மழுங்க சென்ற ஞாயிறு-ஒள்ளிய கிரணங்களையுடைய வெப்பத்தையுடைய ஒளி சினம் மாறிக் குறையும்படி ஒழுகப்போன ஞாயிறு,

546-7. நல் பகல் கொண்ட குடமுதல் குன்றம் சேர-பின்னர் நன்றாகிய பகற்பொழுதைச் சேரக்கொண்டு மேற்றிசையிடத்து அத்த கிரியைச் சேருகையினாலே,

547-9. குணமுதல் நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு பகல் உரு உற்ற இரவு வர-கீழ்த்திசையிடத்தே பதினாறுநாட்சென்று முதிர்ந்த நிறைமதி எழுந்து நிலாப்பரக்கையினாலே பகலின்வடிவையொத்த இராக்காலம் வரும்படி,

549. நயந்தோர்-கணவர்பிரிதலிற் கூட்டத்தை விரும்பியிருந்தார்க்கு,

550. காதல் இன் துணை புணர்மார்-தம்மேற் காதலையுடைய தமக்கு இனிய கணவரைக்கூடுதற்கு,

550-51. ஆய் இதழ் தண் நறு கழுநீர் துணைப்ப-ஆராய்ந்த இதழ்களையுடைய குளிர்ந்த நறிய செங்கழுநீர்களை மாலைகட்டும்படியாக,

551. இழை புனையூஉ-அணிகளை யணிந்து,

552. நல் நெடு கூந்தல் நறு விரை குடைய-நன்றாகிய நெடிய மயிரிற் பூசின நறிய மயிர்ச்சந்தனத்தை அலைத்து நீக்கும்படியாக,

553. நரந்தம் அரைப்ப-கத்தூரியை அரைக்கும்படியாக,

நறு சாந்து 1மறுக-நறிய சந்தனம் அரைக்கும்படியாக,

554. மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப-மெல்லிய நூலாற் செய்த கலிங்கங்களுக்கு மணக்கின்ற அகிற்புகையை ஊட்டும்படியாக,

555-6. பெண் மகிழ்வு உற்ற பிணை நோக்கு மகளிர் நெடு சுடர் விளக்கம் கொளீஇ-குணச்சிறப்பால் 2உலகத்துப்பெண்சாதி விருப்பமுற்ற மான்பிணைபோலும் நோக்கினையுடைய மகளிர் நெடிய ஒளியினையுடைய விளக்கினையேற்றி,
----------
    1 மறுக -அரைக்க ; நெடுநல். 50, ந.
    2 "பெண்டிரு மாண்மை வெஃகிப் பேதுறு முலையினாளை", "ஆண் விருப் புற்று நின்றா ரவ்வளைத் தோளி னாரே" (சீவக. 587, 2447) என்பவற்றின் குறிப்புரைகளைப் பார்க்க.
---------

556-8. [நெடுநக, ரெல்லை யெல்லா நோயொடு புகுந்து, கல்லென் மாலை நீங்க :]

நெடு நகர் எல்லை எல்லாம்-பெரிய ஊரினெல்லையாகிய இடமெல்லாம்,
கல்லென் 1மாலை நோயொடு புகுந்து நீங்க-கல்லென்னும் ஓசையையுடைய மாலை நயந்தோர்க்கு (549) நோயைச்செய்தலோடே புகுந்து போகையினாலே முந்தையாமஞ்சென்றபின்றை (620) என்க.

நெடுநக (556) ரெல்லையெல்லாம் (557) மகளிர் (555) விளக்கங் கொளீஇக் (556) காதலின்றுணைபுணர்தற்குப் (550) புனையூஉத் துணைப்பக் (551) குடைய (552) அரைப்ப மறுக (553) மடுப்ப (544) இரவு வரும்படி (549) ஞாயிறு (546) குன்றஞ்சேருகையினாலே (547) மாலை (558) நயந்தோர்க்கு (549) நோயொடு புகுந்து (557) பின்னர் நீங்க (558) முந்தையாமஞ்சென்றபின்றை (620) எனக்கூட்டுக.

558. நாணு கொள-புணர்ச்சிநீங்கிற்றாகத் தமக்கு உயிரினுஞ் சிறந்த நாணை தம்மிடத்தே தடுத்துக்கொள்ள,

559-61. [ஏழ்புணர் சிறப்பி னின்றொடைச் சீறியாழ்,2தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து, வீழ்துணை தழீஇ.]

ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சிறு யாழ் பண்ணு பெயர்த்து-இசையேழும்தன்னிடத்தேகூடின தலைமையினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழைப் பண்களை மாறிவாசித்து,

வீழ் துணை தழீஇ-தம்மைவிரும்பின கணவரைப் புணர்ந்து நாணுக்கொள (558)

3பாட்டுக் காமத்தைவிளைவித்தலின், யாழைவாசித்து வீழ்துணை தழீஇ யென்றார்.

561-2. [வியல்விசும்பு கமழ நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்டு :] நீர் திரண்டன்ன கோதை வியல் விசும்பு கமழ, பிறக்குஇட்டு- நீர்திரண்டாற்போன்ற வெள்ளியபூக்களாற்செய்த மாலைகளை அகற்சியையுடைய விசும்பிலேசென்று நாறும்படி கொண்டையிலே முடித்து,
-----------
    1 மாலை நோயொடு புகுதல் : "மாலை ................. நோயே மாகுதல்", (குறுந். 64:2-4) ; "மாலைநோய் செய்தல்", "மாலை மலமிருந்தநோய்" (குறள், 1226-7)
    2 தொல். புள்ளிமயங். சூ. 11, ந. மேற்.
    3 "இசையுங் கூத்துங் காமத்திற்கு உத்தீபனமாகலின்" (சீவக. 2597, ந.); "கிளைநரம் பிசையுங் கூத்துங் கேழ்த்தெழுந் தீன்ற காம, விளைபயன்" (சீவக. 2598) ; "நஞ்சுகொப் புளிக்கும் பேழ்வாய் நாகணை துறந்த நம்பி, கஞ்சநாண் மலர்வாய் வைத்த கழையிசை யமிழ்த மாரி, அஞ்செவி தவழ்த லோடு மாய்ச்சியர் நிறத்து மாரன், செஞ்சிலை பழுத்துக் கான்ற செஞ்சரந் தவழ்ந்த மாதோ" (பாகவதம். 10. 12:6) ; "அவ்விய மதர்வேற் கண்ணா ரந்தளிர் விரன டாத்துந், திவ்விய நரம் புஞ் செவ்வாய்த் தித்திக்கு மெழாலுந் தம்மிற், கவ்விய நீர் வாகிக் காளையர் செவிக்கா லோடி, வெவ்விய காமப் பைங்கூழ் விளைதர வளர்க்கு மன்றே" (திருவிளை. திருநகரப். 52)
--------

563. ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி-அழகிய திரட்சியையுடைய விளங்குகின்ற தொடி மிகவிளங்கும்படி கையைவீசி மனை தொறுஞ் சென்று பொய்தலயர (589) என்க.

564. போது அவிழ் புது மலர் தெரு உடன் கமழ-அலரும்பருவமாக மலர்ந்த புதிய விடுபூக்கள் தெருவுகளெங்கும் நாற,

565. மே தகு தகைய மிகு நலம் எய்தி-முற்படப் பலருடன் புணர்ந்த புணர்ச்சியாற்குலைந்த ஒப்பனைகளைப் பின்னும் பெருமைதருகின்ற அழகினையுடைய மிகுகின்ற நன்மையுண்டாக ஒப்பித்து,

566-7. [பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர், திறந்துமோந்தன்ன சிறந்துகமழ் நாற்றத்து :]

திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்து-அலர்கின்ற பருவத்தே1கையாலலர்த்தி மோந்துபார்த்தாலொத்த மிக்குநாறுகின்ற நாற்றத்தினையுடைய,

பெரு பல் குவளை சுரும்பு படு பல் மலர்-பெரிய பலவாகிய செங்கழுநீரிற் சுரும்புகளுக்கு அலர்கின்ற பலபூக்களையும்,

568. [கொண்டன் மலர்ப்புதன் மானப் பூவேய்ந்து :]

கொண்டல் மலர் புதல் மான வேய்ந்து-மழைக்குமலர்ந்த மலரையுடைய சிறுதூற்றையொக்கச் சூடி,

பூ-ஏனைப்பூக்களையும்,

பலநிறத்துப்பூக்களை நெருங்கப்புனைதல்பற்றிச் சிறுதூற்றை உவமை கூறினார்.
-----------
    1 முருகு. 198-9, குறிப்புரையைப் பார்க்க.
---------

569-72. [நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி, மாயப் பொய்பல கூட்டிக் கவவுக் கரந்து, சேயரு நணியரு நலனயந்து வந்த, விளம்பல் செல்வர் வளந்தப வாங்கி :]

சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த (571) இள பல் செல்வர் (572)-புறமண்டலத்தாரும் உள்ளூரிலுள்ளாருமாய்த் தம்முடைய வடிவழகை விரும்பிவந்த இளையராகிய பல செல்வத்தையுடையாரை,

பல மாயம் பொய் கூட்டி (570) நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கி (569)-பல வஞ்சனைகளையுடைய பொய்வார்த்தைகளாலே முதற்கூட்டிக்கொண்டு அவருடைய நுண்ணிய பூண்களையுடைய மார்பைத் தம்மார்பிலே வடுப்படும்படியாக முயங்கிப் பின்னர்,

கவவு கரந்து (570) வளம் தப வாங்கி (572)-அங்ஙனம்1அன்புடையார்போலே முயங்கினமுயக்கத்தை அவர்பொருள் தருமளவும் மறைத்து அவருடைய செல்வமெல்லாம் கெடும்படியாக வாங்கிக்கொண்டு,

573-4. நுண் தாது உண்டு வறு பூ துறக்கும் மெல் சிறை வண்டு இனம் மான-பூ அலருங்காலமறிந்து அதன் நுண்ணிய தாதையுண்டு தாதற்ற வறுவியபூவைப் பின்னர் நினையாமல் துறந்துபோம் மெல்லிய சிறகையுடைய வண்டின்றிரளையொப்ப,

இது தொழிலுவமம்.

574-5. புணர்ந்தோர் நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து-தம்மை நுகர்ந்தோருடைய நெஞ்சு கலக்கமுறும்படி அவரிடத்து இனிய கூட்டத்தை நேராகக் கைவிட்டு,

576. பழம் தேர் வாழ்க்கை பறவை போல-பழுமரமுள்ள இடந்தேடிச் சென்று, அவற்றின் பழத்தையே ஆராய்ந்து வாங்கி நுகர்தலைத் தமக்குத் தொழிலாகவுடைய புள்ளினம்போல,

தம்முயிரைப் பாதுகாக்கின்ற வாழ்க்கைத்தொழிலை வாழ்க்கையென்றார்.

577-8. [கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய, மணம்புணர்ந்தோங்கிய வணங்குடை நல்லில் :]

கொழு குடி செல்வரும் பிறரும் மேஎய அணங்கு உடை நல் இல்-வளவிய குடியிற்பிறந்த செல்வரும் அவர்களாற்றோன்றிய பிறசெல்வரும் மேவப்பட்ட இல்லுறை தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களில்,

2குடிச்செல்வரென்றார், நான்குவருணத்தை ; பிறரென்றார், அவர்களாற் றோன்றிய ஏனைச்சாதிகளை.

578-9. மணம் புணர்ந்து ஓங்கிய ஆய் பொன் அவிர் தொடி பசு இழை மகளிர்-வரைந்து கொள்ளப்பட்டு உயர்ச்சிபெற்ற ஓடவைத்த பொன்னாற்செய்த விளங்குகின்ற தொடியினையும் பசியபூணினையுமுடைய மகளிர்,

580. ஒள் சுடர் விளக்கத்து-ஒள்ளிய விளக்கினுடைய ஒளியிலே,

பலர் உடன் துவன்றி-பலருஞ் சேரநெருங்கி,

581-2. நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் வானவமகளிர் மான-நீலநிறத்தையுடைய ஆகாயத்தே நெஞ்சமர்ந்துவிளையாடும் தெய்வ மகளிர் வருத்துமாறுபோல,
---------
    1. "மெய்படு மன்பி னார்போல விரும்பினார்க் கருத்துந் தங்கள், பொய்படு மின்பம்" (திருவிளை. திருநகரப். 47)
    2. பெரிய. திருக்குறிப்பு. 99-103 ; திருவிளை. திருநகரங்கண்ட. 45, பார்க்க.
-------

582-3. கண்டோர் நெஞ்சு நடுக்கு உறூஉ கொண்டி மகளிர்-தம்மைக் கண்டோருடைய நெஞ்சை வருத்தமுறுவித்துப் பொருள் வாங்குதலையுடைய பரத்தையர்,

584-5. [யாம நல்யாழ் நாப்ப ணின்ற, முழவின் மகிழ்ந்தன ராடி :] யாமம் நல் யாழ் நாப்பண் தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப (560) நின்ற முடிவின் மகிழ்ந்தனர் ஆடி-முதற்சாமத்தில் வாசித்தற்குரிய நன்றாகிய யாழ்களுக்கு நடுவே அவற்றிற்கேற்பத் தாழ்ந்து தம் வயிற்செறிந்த ஓசையையொக்க நின்ற முழவாலே மனமகிழ்ந்தாடி,
தாழ்பயற் கனைகுரல் கடுப்ப (560) என்று முன்னர்வந்ததனை இவ்விடத்துக் கூட்டுக.

585-6. குண்டு நீர் பனி துறை குவவு மணல்-ஆழ்ந்த நீரினையுடைய குளிர்ந்த துறையிடத்துக் குவிந்த மணலிலே,

முனைஇ-வெறுத்து,

586-7. [மென்றளிர்க். கொழுங்கொம்பு கொழுதி :] கொழுகொம்பு மெல் தளிர் கொழுதி கொழுவிய கொம்புகளினின்ற மெல்லிய தளிர்களைப் பறித்து,

587-8. [நீர்நனை மேவர, நெடுந்தொடர்க் குவளை வடிம்புற வடைச்சி :] குவளை நீர் நனை மேவர நெடு தொடர் வடிம்பு உற1அடைச்சி-குவளையை 2நீர்க்கீழரும்புகளோடே பொருந்துதல்வரக் கட்டின நெடியதொடர்ச்சியை வடிம்பிலே விழும்படி உடுத்து,

589. மணம் கமழ் மனை தொறும் பொய்தல் அயர-மணநாறுகின்ற மனைதோறும் சென்று பொருள் தருதற்குரிய இளையரோடு விளையாடுதலைச்செய்ய,

அங்ஙனம் விளையாடி வசிகரித்து உறவுகொண்டு பொருள்வாங்குதல் அவர்க்கு இயல்பு.

வானவமகளிர்மான (582) நெஞ்சுநடுக்குறூஉக் கொண்டிமகளிர் (583) பலருடன்றுவன்றிக் (580) குவவுமணலிலே (586) முழவின் மகிழ்ந்தனராடி (585) அதனைமுனைஇக் (586) குவளையையடைச்சிக் (588) கோதையை (562) விசும்புகமழப் (561) பிறக்கிட்டு (562) இளம் பல்செல்வரைக் (572) கூட்டி (570) முயங்கிப் (569) பின்னர்க் கவவுக் கரந்து (570) வளந்தபவாங்கித் (572) தாதுண்டு துறக்கும் (573) வண்டினமான (574) இன்றுயில்துறந்து (575) பின்னரும் மிகுநலமெய்திச் (565) சுரும்புபடுபன்மலரையும் (566) ஏனைப்பூக்களையும் புதன்மான வேய்ந்து (568) புதுமலர் தெருவுடன் கமழத் (564) தொடியைவீசி (563) மணங்கமழ் மனைதொறும் (589) பறவைபோலச் (576) சென்று பொய்தலயர (589) எனக்கூட்டுக.

செல்வரும் பிறரும் மேவப்பட்ட (577) அணங்குடைநல்ல இல்லிலே மணம் புணர்ந்தோங்கிய (578) பாசிழைமகளிர் (579) ஒண்சுடர் விளக்கத்தே (580) சீறியாழைப் (559) பண்ணுப்பெயர்த்து (560) வீழ்துணைதழீஇ (561) நாணுக்கொள (558) எனக்கூட்டுக.
----------
    1. அடைச்சி -செருகி ; சிலப். 14:77, அடியார்.
    2. "கீழ்நீர்ச் செவ்வரும்பு" (முருகு. 29)
--------

590-91. கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓணம் நல் நாள்-திரட்சியைக்கொண்டஅவுணரை வென்ற பொன்னாற்செய்த மாலையினையுடைய மாமையை யுடையோன் பிறந்த ஓணமாகிய நன்னாளில் ஊரிலுள்ளாரெடுத்த விழவிடத்தே,

592-5. [கோணந் தின்ற வடுவாழ் முகத்த, சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை, மறங்கொள் சேரி மாறுபொரு செருவின், மாறா துற்ற வடுப்படு நெற்றி :]

மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் (594) மாறாது உற்றவடு படு நெற்றி (595)-இற்றைநாட் போர்செய்துமென்றுகருதி மறத்தைக் கொண்டிருக்கின்ற தெருவுகளில் தம்மிற்றாம் மாற்றாய்ப்பொருகின்ற போரின் கண்ணே நின்ற அடிமாறாமையாற்பட்ட 1வடுவழுவந்தின நெற்றியினையும்,

596. சுரும்பு ஆர் கண்ணி பெரு புகல்மறவர்-சுரும்புகள் நிறைந்த 2போர்ப்பூவினையும் பெரிய விருப்பத்தினையுமுடைய மறவர்,

அத்திருநாளிற்பொரும் 3சேரிப்போர் கூறினார், அவ்வூர்க்கு இயல்பென்று.

597. [கடுங்களி றோட்டலின் :] 4கோணம் தின்ற வடு ஆழ் முகத்த (592) சாணம் தின்ற சமம் தாங்கு தட கை (593) கடு களிறு ஓட்டலின்-தோட்டி வெட்டின வடு அழுந்தின முகத்தையுடையவாய்க் கொலைபழக்கும் போர்யானை பலகாலுமெடுத்தலால் தழும்பிருந்த

போரைத்தாங்கும் பெரிய கையினையுடைய கடிய களிற்றை ஓட்டுகையினாலே,
-----------
    1. "துள்ளிவரு செங்கையொடு முன்கைபிடர் நெற்றியோடு சூட மென வெண்ணுபடையால் ............ மல்லமர் தொடங்கி யுறவே" (வி. பா. அருச்சுனன் தவநிலை. 110) என்பதனால் நெற்றி வடுப்படுதலின் காரணம் உணரப்படும்.
    2. போர்ப்பூ-தும்பை ; "தும்பை-போர்ப்பூ"(பு. வெ. 241, உரை)
    3. சேரிப்போர் : "கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரி தனிற், கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தா, னார்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்" (தே. திருஞா.)
    4. கோணம்-தோட்டி ; மணி. 18:163.
-------

597-8. [காணுந ரிட்ட, நெடுங்கரைக் 1காழக நிலம்பரலுறுப்ப :] காணுநர் நெடு கரை காழகம் இட்ட பரல் நிலம் உறுப்ப-அவ்வியானைக்கு முன்னேயோடி அதன் விசையைக்காணும் பரிக்காரர் அவ்வியானை பிடித்துக்கொள்ளுங்காலத்து மேல்வாராமல் அஞ்சி மீளுதற்குச் சமைப்பித்து நெடிய கரையையுடைய நீலநிறத்தையுடைய புடைவைகளிலே வைத்துச் சிந்தின கப்பணம் நிலத்தேகிடந்து கால்களைப்2பொதுக்கும்படி,

நெருஞ்சிமுள்ளுப்போல முனைபட இரும்பால் திரளச்சமைத்துத்தூவதற்கு யானையஞ்சுமென்று அவர்மடியிலேவைத்த கப்பணத்தைப்பரல் போறலிற் பரலென்றார் ; "வேழங் காய்ந்தனன் கடுக வுந்திக் கப்பணஞ் சிதறி னானே" (சீவக. 285) என்றார் பிறரும்.

599. கடு கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர - கடிய கட்டெளிவையுண்டு மகிழ்ச்சிமிக்குத் திரிதலைச் செய்ய,

ஓணநாளிற் (591) பொருது வடுப்படும் நெற்றி (595) முதலியவற்றையுடைய மறவர் (596) மகிழ்சிறந்து (599) பரலுறுப்பத் (598) திரிதர (599) எனக்கூட்டுக.

600. கணவர் உவப்ப புதல்வர் பயந்து-தம்கணவர் 3இம்மை மறுமையிற் பெரும்பயன் பெற்றேமென்று மகிழும்படி பிள்ளைகளை பெற்று,
-----------
    1. காழகம்-நீலநிற உடை ; இது காளகமெனவும் வழங்கும் ; "காளக வுடையினள் காளி கூறுவாள்" (பாகவதம், 10. 1:81)
    2. பொதுத்தல்-துளைத்தல், "அண்டத் தைப்பொதுத் தப்புறத் தப்பினா லாடும்" (கம்ப. இரணியன். 4); இச்சொல் பொதிர்த்தலெனவும் வழங்கும் ; "கழைப்பொதிர்ப்பத் தேன்சொரிந்து" (சீவக. 2778).
    3. "இம்மை யுலகத் திசையொடும் விளங்கி, மறுமை யுலகமு மறுவின் றெய்துப, செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப், பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம், வாயே யாகுதல்" (அகநா. 66:1-6) என்பதும், "உரிமை மைந்தரைப் பெறுகின்ற துறுதுயர் நீங்கி, இருமை யும்பெறற் கென்பது பெரியவரியற்கை" (கம்ப. 2. மந்திரப். 63) என்பதும், "இவையிரண்டுபாட்டானும் நன்மக்களைப்பெற்றார் பெறும் மறுமைப்பயன் கூறப்பட்டது", "இவை மூன்றுபாட்டானும் இம்மைப்பயன் கூறப்பட்டது" (குறள், 63, 66, பரிமேல்.)என்பனவும் இங்கே அறியத்தக்கன.
-------

601. பணைந்து ஏந்து இள முலை அமுதம் ஊற-பாலால் இடங்கொண்டேந்திய இளைய முலை1பால்சுரக்கும்படி,

602-3. [புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு, வளமனை மகளிர் குளநீ ரயர:]

புலவு புனிறு தீர்ந்து குளம் நீர் அயர - புலானாற்றத்தையுடைய ஈன்றணிமைநீங்கித் தெய்வத்தினருளால் ஓரிடுக்கணுமற்றுக் குளத்து நீரிலே குளிக்கையினாலே,

2கடு சூல் மகளிர் பேணி (609)-முதற்சூல்கொண்டமகளிர் இவ்வாறே இடுக்கணின்றிப் புதல்வரைப் பயத்தல் வேண்டுமென்று தெய்வத்தைப் பரவிக் குறை தீர்ந்தபின்,

பொலிந்த சுற்றமொடு - மிக்க சுற்றத்தாருடனே,

வளம் மனை மகளிர் - செல்வத்தையுடைய மனை மகளிர்,

இல்லிருக்குங் குடிப்பிறந்த மகளிர்.

604. திவவு மெய் நிறுத்து செவ்வழி பண்ணி-வலிக்கட்டினை யாழிற்றண்டிலே கட்டிச் செவ்வழியென்னும் பண்ணை வாசித்து,

திவவுக் கூறவே அதினரம்பும் கூறினார்.

605. குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி-குரலென்னுநரம்பு கூடின வன்னம் நன்றாகிய யாழுடனே முழவும் பொருந்தி,

606. நுண் நீர் ஆகுளி இரட்ட - மெல்லிய நீர்மையினையுடைய சிறுபறை யொலிப்ப,
பலவுடன்-பூசைக்குவேண்டும் பொருள்கள் பலவற்றுடனே,

607. ஒள் சுடர் விளக்கம் முந்துற - ஒள்ளிய சுடர்விளக்கம் முற்பட,

மடையொடு - பாற்போனகமுதலிய சோறுகளை,

608. நல் மா மயிலின் மென்மெல இயலி - நன்றாகிய பெருமையையுடைய மயில்போலே மெத்தென நடந்து,

609. [கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது :]

கை தொழுது-கையாற்றொழுது.

610. [பெருந்தோட் சாலினி மடுப்ப வொருசார் :] பெரு தோள் சாலினி மடுப்ப-பெரிய தோளினையுடைய1தேவராட்டியோடே மடுப்ப,

வளமனைமகளிர் சிலர் (603) புதல்வர்ப்பயந்து (600) புனிறுதீர்ந்து (602) குளநீராடுதலாலே (603) அதுகண்டு கடுஞ்சூன்மகளிர் பேணிக் (609) குறைதீர்ந்தபின் பொலிந்தசுற்றத்தோடே (602) பலவுடன் (606) சாலினியோடே (610) பண்ணி (604) ஒன்றி (605) இரட்ட (606) இயலிச்சென்று (608) கைதொழுது (609) மடையை (607) மடுப்ப (610) எனக்கூட்டுக.
----------
    1. பால்சுரக்கும்படி நீரயர்ந்தாரென்றார், ஈன்றவுடன் மகளிர்க்குப் பால் சுரவாதாதலின் ; இது, "பால்சொரியும் பருவத்தளவும் பொறாளாய்ப் பாலை வலிய வாங்கியென்க ; என்றது மகப்பயந்தோர்க்குப் பயந்தபொழுதே பால் சுரவாதாதலால்" (சீவக. 305, ந.) என்பதனால் உணரப்படும்.
    2. சிறுபாண். 148, ந. குறிப்புரையைப் பார்க்க.
----------

610. ஒருசார்-ஒருபக்கம்,

611. அரு கடி வேலன் முருகொடு வளைஇ-அரிய2அச்சத்தைச் செய்யும் வேலன் இவ்விடுக்கண் முருகனால்வந்ததெனத் தான்கூறிய சொல்லின்கண்ணே கேட்டோரை வளைத்துக்கொண்டு, பிள்ளையார்வேலை யெடுத்தலின், 3வேலனென்றார். என்றது,4கழங்கு வைத்துப் பிள்ளையாரால் வந்ததென முற்கூறிப் பின் வெறியாடுவனென்று ஆடும்முறைமை கூறிற்று.

612. 5அரி கூடு இன் இயம் கறங்க-அரித்தெழும் ஓசையையுடைய 6சல்லி கரடி முதலியவற்றோடேகூடின இனிய ஏனைவாச்சியங்கள் ஒலியா நிற்க,
---------
    1. தேவராட்டி-தெய்வமேறப் பெற்றவள் ; "காடுபலி மகிழ வூட்டத், தலைமரபின் வழிவந்த தேவ ராட்டி தலையழைமின் " (பெரிய. கண்ணப்ப. 47)
    2. அச்சத்தைச் செய்யுமென்றது தலைவிக்கு அச்சத்தைச் செய்தலைக் குறிப்பித்தபடி; "தலைவி அஞ்சவேண்டியது இருவரும் ஒட்டிக்கூறாமல் தெய்வந்தான் அருளுமென்று கோடலின்" (தொல். களவு. சூ. 24, ந.) என்பதை உணர்க.
    3. வேலனென்றும் பெயர்க்காரணம், முருகு. 222-ஆம் அடியின் உரையிலும் இவ்வாறே கூறப்பட்டது.
    4. கழங்கு-கழற்கொடிக்காய் ; வேலன்கழங்குவைத்துப் பார்த்தலும் பிறவும், "கட்டினுங் கழங்கினும்வெறியென விருவரும், ஓட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்" (தொல். களவு. சூ. 24) என்பதனாலும், அதன் உரையாலும், "பெய்ம்மணன் முற்றங் கவின்பெற வியற்றி, மலைவான் கொண்டசினைஇய வேலன், கழங்கினா னறிகுவ தென்றால்" (ஐங். 248) என்பதனாலும் உணரப்படும்.
    5. அரி "அரிக்குரற்றட்டை" (மலைபடு. 9)
    6. சல்லி-இது சல்லிகையெனவும் வழங்கும் ; சல்லென்ற ஓசையுடைத்தாதலால் இப்பெயர் பெற்றதென்பர். கரடி-இது கரடிகையெனவும் வழங்கும் ; கரடி கத்தினாற்போலும் ஓசையுடைமையின் இப்பெயர் பெற்ற தென்பர். இவ்விரண்டும் உத்தமக்கருவிகளைச் சார்ந்தவை ; சிலப். 3:27, அடியார். பார்க்க.
---------

612-4. [நேர்நிறுத்துக், கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின், சீர்மிகு நெடுவேட்பணி :]

கார் மலர் குறிஞ்சி சூடி-கார்காலத்தான் மலரையுடையவாகிய குறிஞ்சியைச் சூடி,

கடம்பின் சீர் மிகு நெடுவேள் நேர் நிறுத்து பேணி-கடம்பு சூடுதலால் அழகுமிகுகின்ற முருகனைச் செவ்விதாகத் தன்மெய்க்கண்ணே நிறுத்தி வழிபடுகையினாலே,

தழூஉ பிணையூஉ-மகளிர் தம்முட்டழுவிக் கைகோத்து,

615. மன்றுதொறும் நின்ற குரவை-மன்றுகடோறும் நின்ற குரவைக் கூத்தும்,

சேரிதொறும்-சேரிகடோறும் நின்ற,

616. உரையும் -புனைந்துரைகளும்,

பாட்டும்-பாட்டுக்களும்,

ஆட்டும்-பலவகைப்பட்ட கூத்துக்களும்,

விரைஇ-தம்மிற் கலக்கையினாலே,

617. வேறு வேறு கம்பலை-வேறுவேறாகிய ஆரவாரம்,

வெறி கொள்பு மயங்கி-ஒழுங்குகொண்டு மயங்கப்பட்டு,

618. பேர் இசை 1நன்னன் 2பெறும் பெயர் நன்னாள்-பெரிய புகழையுடைய நன்னன் கொண்டாடுகின்ற பிறந்தநாளிடத்து,

அவன்பெயரை அந்நாள் பெறுதலின், பெயரைப்பெற்ற நன்னாளென்றார்.

619. சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு-சேரிகளிலுள்ளார் கொண்டாடுகின்ற விழாவாலே ஆரவாரமெழுந்தாற்போல,

620. முந்தை யாமம் சென்ற பின்றை-முற்பட்டசாமம் நடந்த பின்பு,

கொண்டிமகளிர் (583) பொய்தலயரப் (589) பாசிழைமகளிர் (579) வீழ்துணைதழீஇ (561) நாணுக்கொள (558) மறவர் (596) மகிழ்சிறந்து திரிதரக் (599) கடுஞ்சூன்மகளிர் கைதொழுது (609) மடுப்ப ஒருசார் (610) நெடுவேட் பேணுகையினாலே (614) மன்றுதொறுநின்ற குரவையும் சேரிதொறுநின்ற (615) உரையும் பாட்டும் ஆட்டும் விரவுகையினாலே (616) வேறுவேறுபட்ட கம்பலை (617) சேரிவிழவின் ஆர்ப்பெழுந்தாங்கு (619) வெறிகொள்பு மயங்கப்பட்டு (617) முந்தையாமஞ் சென்றபின்றை (620) எனக்கூட்டுக.

ஒருசார் (610) விரைஇ (616) என்க.
------------
    1 நன்னன்-ஒரு குறுநிலமன்னன்.
    2 சில பிரதிகளில், 'பெரும்பெயர் நன்னாள்' என்று இருந்தது.
--------

621. பணிலம் கலி அவிந்து அடங்க-சங்குகள் ஆரவாரமொழிந்து அடங்கிக்கிடக்க,

621-2. காழ் சாய்த்து நொடை நவில் நெடு கடை அடைத்து-சட்டக்காலை வாங்கிப் பண்டங்களுக்கு விலைகூறும் நெடியகடையையடைத்து,

622-3. மட மதர் ஒள் இழை மகளிர் பள்ளி அயர-மடப்பத்தினையும் செருக்கினையும் ஒள்ளிய அணிகலங்களையுமுடைய மகளிர் துயிலுதலைச்செய்ய,

624-6. [நல்வரி யிறாஅல் புரையு மெல்லடை, யயிருருப் புற்ற வாடமை விசயங், கவவொடு பிடித்த வகையமை மோதகம் :]

விசயம் ஆடு அமை நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை-பாகிலே சமைத்தலமைந்த நல்லவரிகளையுடைய தேனிறாலையொக்கும் மெல்லிய அடையினையும்,

கவவொடு அயிர் பிடித்த வகை அமை உருப்பு உற்ற மோதகம்-பருப்பும் தேங்காயுமாகிய உள்ளீடு (உள்ளே இடப்பெற்ற பொருள்கள்) களோடே1கண்ட சருக்கரை கூட்டிப்பிடித்த வகுப்பமைந்த வெம்மை பொருந்தின அப்பங்களையும்,

627. தீ சேறு 2கூவியர் தூங்குவனர் உறங்க-இனிய பாகோடு சேர்த்துக்கரைத்த மாவினையுமுடைய அப்பவாணிகரும் அவற்றோடேயிருந்து தூங்குவனராயுறங்க,

628. விழவின் ஆடும் வயிரியர் மடிய-திருநாளின்கண்ணே கூத்தாடுங் கூத்தர் அதனையொழிந்து துயில்கொள்ள,

629. பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய-ஒலிநிறைந்தடங்கின

குளிர்ந்த கடலையொக்க,

630. பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப-படுக்கையிலே துயில்கொள்ளவோர் கண் இனிதாகத் துயில்கொள்ள,

631. [பானாட் கொண்ட கங்கு லிடையது :]

பால் நாள் கொண்ட கங்குல்-பதினைந்தாநாழிகையை முடிவாகக் கொண்ட கங்குல்,

632-3. [பேயு மணங்கு முருவுகொண் டாய்கோற், கூற்றக்கொஃறேர் கழுதொடு கொட்ப :]

பேயும் அணங்கும் உருவு கொண்டு கழுதொடு கொட்ப-பேய்களும் வருத்துந் தெய்வங்களும் வடிவுகொண்டு கழுதுடனே சுழன்றுதிரிய,

கழுது-பேயில் ஒருசாதி.

ஆய் கோல் கூற்றம் கொல் தேர் அச்சம் அறியாது ஏமமாகிய (652) மதுரை (699) யெனக்கூட்டி, யாக்கை நிலையாதென்றறிந்து மறுமைக்கு வேண்டுவன செய்து கொண்டமையின், அழகிய கோலையுடைய கூற்றத்தின் கொலைக்கு அஞ்சாமற் காவலுண்டாயிருக்கின்ற மதுரை யென்க.

"கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார், துரும்பெழுந்து வேங்காற் றுயராண் டுழவார், வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம், வருங்காற் பரிவ திலர்" (நாலடி. 35) என்றார் பிறரும். கொஃறேர்-காலசக்கரம்.
-------
    1. கண்டசருக்கரை-கற்கண்டு; ஒருவகைச் சருக்கரையுமாம்.
    2. கூவியர்-அப்பவாணிகர்; பெரும்பாண். 377, ந.
----------

634. இடி பிடி மேஎந்தோல் அன்ன இருள் சேர்பு - கரியபிடியின் கண்ணேமேவின தோலையொத்த கருமைதமக்கு இயல்பாகச் சேரப்பட்டு,

இருள் - கருஞ்சட்டையுமாம்.

635. கல்லும் மரனும் துணிக்கும் கூர்மை நிலன் அகழ் உளியர் (641)-கல்லையும் மரத்தையுமறுக்கும் கூர்மையையுடைய நிலத்தையகழும் உளியையுடையராய்,

நிலத்தை அகழுங்காலத்து இடைப்பட்டகற்களுக்கும் மரங்களுக்கும் வாய் மடியாதென்றார்.

636. தொடலை வாளர்-தூக்கிட்ட வாளினையுடையராய்,

தொடுதோல் அடியர்-செருப்புக்கோத்த அடியினையுடையராய்,

637-41. [குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச், சிறந்த கருமை நுண்வினை நுணங்கற, னிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர், மென்னூ லேணிப் பன்மாண் சுற்றினர், நிலனக ழுளியர் :]

சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல் (638)-மிக்க கருமை யினையுடைய நுண்ணிய தொழில்களையுடைய நுண்மை தன்னிடத்தே பற்றுதலையுடையது,

என்றது இறைமுடிந்த சேலையென்றவாறு ; ஆகுபெயர்.

குறங்கிடை பதித்த கூர் நுனை குறு பிடி (637)-அச்சேலைகட்டின மருங்கிற் குறங்கிடைத் தெரியாமற் கிடக்கும்படியழுத்தின கூரிய முனையினையுடைய1சிலசொட்டை,

நிறம் கவர்பு புனைந்த நீலம் கச்சினர் (639)-பலநிறங்களைத் தன்னிடத்தே கைக்கொண்டு கைசெய்யப்பட்ட நீலநிறத்தையுடைய கச்சினையுடையராய், என்றது, கட்டின சேலையிடத்தே செருகித் துடையுடனே சேர்ந்து கிடக்குஞ் சொட்டையின்மேலே கட்டின நீலக்கச்சினரென்றவாறு. அது தெரியாமல் துடையுடனே சேர்ந்துகிடத்தலிற் குறங்கிடைப் பதித்தவென்றார்.

மெல் நூல் ஏணி பல் மாண் சுற்றினர் (640)-மெல்லிய நூலாற் செய்த ஏணியை அரையிலே பலவாய் மாட்சிமைப்படச்சுற்றிய சுற்றினையுடையராய்,

மதிற்றலையிலே உள்ளேவிழவெறிந்தாற் கைபோல மதிலைப்பிடித்துக் கொள்ளும்படி இரும்பாற்சமைத்ததனைத் தலையிலேயுடைய நூற்கயிற்றை உள்ளே விழவெறிந்து அதனைப் புறம்பேநின்று பிடித்துக் கொண்டு அம்மதிலை ஏறுவாராகலின், ஏணியென்றார்.
-----------
    1.சில சொட்டை-ஒருவகை வளைவுக்கத்தி ; உடைவாளுமாம் ; "சொட்டைவாள் பரிசை", "உகிரெ னும்பெரும் பெயர்பெற்ற சொட்டைகளும்" (வி. பா. கிருட்டின. 101, பதினேழாம்போர். 156)
----------

641. கலன் நசைஇ கொட்கும்-பேரணிகலங்களை நச்சுதலாலே அவற்றை எடுத்தற்கு இடம்பார்த்துச் சுழன்றுதிரியும்,

642. கண் மாறு ஆடவர் ஒடுக்கும் ஒற்றி-விழித்தகண் இமைக்கு மளவிலே மறைகின்ற கள்வர் ஒதுங்கியிருக்கின்ற இடத்தை1வேய்த்து,

செருப்பைத் தொட்டுக் (636) கச்சைக்கட்டி (639) நூலேணியைச் சுற்றி (640) உளியையெடுத்து (635) வாளைப்பிடித்துக் (636) கொட்குங் (641) கள்வரென வினையெச்ச வினைக்குறிப்புமுற்று வினையெச்சமாய் நிற்குமாறு, "முன்னத்தி னுணருங் கிளவியு முளவே" (தொல். எச்சவியல், சூ. 63) என்னுஞ் சூத்திரத்தானுணர்க.

643. வய களிறு பார்க்கும் வய புலி போல ஒற்றி (642)-வலிய களிற்றை இரையாகப்பார்க்கும் வலிய புலியைப்போல வேய்க்கையினாலே,

644. துஞ்சா கண்ணர்-துயில்கொள்ளாத கண்ணையுடையராய்,

அஞ்சா கொள்கையர்-பேய்முதலியவற்றிற்கு அஞ்சாத கோட்பாட்டை யுடையராய்,

645. அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் - களவிற்றொழிலையறிந்த வர்களாலே புகழப்பட்ட2களவிற்றொழிலை ஆளுந்தன்மையுடையராய்,

645-7. [செறிந்த, நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி யூர்காப் பாளர் :] நுணங்கு செறிந்த நூல் வழி பிழையா நுண் தேர்ச்சி ஊர் காப்பாளர்-நுண்மைசெறிந்த நூலின்வழியைத்தப்பாத நுண்ணிய ஆராய்ச்சியையுடைய ஊரைக் காத்தற்றொழிலை ஆளுதலையுடையராய்,
--------
    1. வேய்த்து-பிறர்தெரிந்து கொள்ளாதபடி அறிந்து.
    2. காவலர் களவினை யறிந்திருந்தாரென்பது இதனாற் புலப்படும் ; "களவுங் கற்று மற"என்னும் பழமொழி இங்கே அறியத்தக்கது.
----------

1களவுகாண்டற்கும் காத்தற்குங்கூறிய நூல்கள் போவாரென்றார்.

2நூல்வழிப்பிழையா ஊரெனக்கூட்டி நூலிற்சொன்னபடி சமைந்த வூரென்றுமாம்.

ஊக்க அரு கணையினர்-தப்பக்கருதிமுயல்வார்க்குத் தப்புதற்கரிய அம்பினையுடையராய்,

648-9. தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக மழை அமைந்துற்ற அரை நாள் அமயமும்-தேரோடுந்தெருவின்கண்ணே நீர்திரண்டொழுகும்படி மழைமிகப்பெய்த நடுநாளாகிய பொழுதிலும்,

650. அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின்-காவலில் தப்பிலராய்ப்போந்து விருப்பந்தோன்றி உலாவுகையினாலே,

651. [கடவுள் வழங்குங் கையறு கங்குலும் :] இடையது (631) கடவுள் வழங்கும் கை அறு கங்குல்-இரண்டாஞ் சாமத்திற்கும் நான் காஞ் சாமத்திற்கும் நடுவிடத்ததாகிய தெய்வங்களுலாவுஞ் செயலற்ற கங்குல்,
உம்மையை யாமமுமெனப் பின்னேகூட்டுக.

652-3. [அச்ச மறியா தேம மாகிய, மற்றை யாமம் பகலுறக் கழிப்பி :]

மற்றையென்பதனை முந்தையாமஞ் சென்றபின்றை (620) யென்பதன் பின்னும் மூன்றாஞ்சாமத்தினோடுங் கூட்டுக.

அச்சமறியாதேமமாகிய என்றும், மற்றையென்றும் யாமமென்றும் பிரித்து முன்னே கூட்டுக.

பகல் உற கழிப்பி-இங்ஙனம் பகுத்தலுறும்படி போக்கி,

முந்தை யாமஞ் சென்ற பின்றை (620) மற்றைப் (653) பானாட்கொண்ட கங்குல் (631) யாமத்தையும் மற்றை (653) இடையதாகிய (631) கடவுள் வழங்குங் கங்குல் (651) யாமத்தையும் (653) கலியவிந்தடங்கப் (612) பள்ளியயர (623) உறங்க (627) வயிரியர்மடியப் (628) பேயும் அணங்கும் உருவுகொண்டு (632) கழுதொடுகொட்ப (633)ஊர் காப்பாளர் (647) புலிபோலக் (643) கண்மாறாடவர் ஒடுக்கம் ஒற்றுகையினாலே (642) கண்ணராய்க் கொள்கையராய் (644) ஆண்மையராய்க் (645) கணையராய் (647) அரைநாளமயமும் (649) எழுந்து நயம்வந்து வழங்கலிற் (650) பனிக்கடல்புரையப் (629) பாயலில்வளர்வோர் கண்இனிதுமடுப்பப் (630) பகலுறக்கழிப்பி (653) எனமுடிக்க.

இங்ஙனம் கழிக்கின்றது, இராப்பொழுதென்றுணர்க.
---------
    1. களவு காண்டற் குரியநூலைக் கரவடசாத்திரமென்பர் தக்க யாகப்பரணி உரையாசிரியர். இந்நூல் தந்திர கரணமென்றும் ஸ்தேய சாஸ்திரமென்றும் வழங்கப்படும். இதனைச் செய்தவர் கர்ணீஸுதரென்பவர்.
    2. நூல்-சிற்பநூல் ; "நூலறிபுலவோர்-சிற்பநூலை யறிந்த தச்சர்" (நெடுநல். 76, ந.); "நுண்ணிதி னுணர்ந்தோ ருணர்தருஞ் சிற்ப நூலறி புலவனை" (வி. பா. இந்திரப். 10) ; "நூலோர் சிறப்பின்மாடம் .........." (சிலப். 14:97) என்பதன் உரையில் அரும்பதவுரையாசிரியர், 'மயமதம் அறிவாராற் புகழ்ச்சியையுடைய மாடமென்றுமாம்' என்றெழுதியதனால் மயமதமென்னும் நூலொன்றுண்மை பெறப்படும்.
--------

654. [போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கை :] பிணி விட்ட போது கமழ் நறு பொய்கை-தளையவிழ்ந்த பூக்கள் நாறும் நறிய1பொய்கைகளிலே,

655. [தாதுண் டும்பி போதுமுரன் றாங்கு :] போது தாது உண் தும்பி முரன்றாங்கு-அப்பூக்களில் தாதையுண்ணுந்தும்பிகள் பாடினாற் போல,

656. [ஓத லந்தணர் வேதம் பாட :] வேதம் ஓதல் அந்தணர் பாட-வேதத்தை முற்ற ஓதுதலையுடைய அந்தணர் வேதத்தில் தெய்வங்களைத் துதித்தவற்றைச் சொல்ல,

657-8. [சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி, யாழோர் மருதம் பண்ண :] யாழோர் சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி மருதம் பண்ண-யாழோர் தாளவறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத்தெறித்து2மருதத்தை வாசிக்க.

658-9. காழோர் கடு களிறு கவளம் கைப்ப-பரிக்காரர் கடிய களிற்றைக் கவளத்தைத்3தீற்ற,

659-60. நெடு தேர் பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட-நெடிய தேரிலே பூணும் பந்தியில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவைக் குதட்ட,

661. பல் வேறு பண்ணியம் கடை மெழுக்கு உறுப்ப-பண்டம் விற்பார் பலவாய் வேறுபட்ட பண்டங்களையுடைய கடைகளை மெழுகு தலைச்செய்ய,

662. கள்ளோர் களி நொடை நுவல-கள்ளைவிற்போர் களிப்பினையுடைய கள்ளிற்கு விலைசொல்ல,
களி : ஆகுபெயர்.
-----------
    1. பொய்கை-மானிடராக்காத நீர்நிலை ; சீவக. 337, ந.
    2. மருதம் காலைப்பண் என்பது, புறநானூறு, 149-ஆம் செய்யுளாலும், சீவக. 1991-ஆம் செய்யுளாலும் அறியப்படும்.
    3. தீற்ற-உண்பிக்க; "தீற்றாதோ நாய்நட்டா னல்ல முயல்" (பழ. 14) ; தீற்றென்பது காரிததாது வென்பர் ; (வீரசோ. தாதுப். சூ. 6)
----------

662-3. இல்லோர் நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி-கற்புடை மகளிர் தாங்கள் விரும்பின கணவருடைய முயக்கத்திற் பிணிப்பாலே துயில்கொண்டு,

664. புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பி-இருள்மாய்ந்து கதிர் விரிகின்ற விடியற்காலத்தைப் பெறுகையினாலே அக்காலத்து இல்லத்திற் செய்யத் தகுவனவற்றைச் செய்தற்குவிரும்பி,

665. கண் பொரா எறிக்கும் மின்னு கொடி புரைய-கண்ணை வெறியோடப்பண்ணி விளங்கும் மின்னொழுங்கை யொப்ப,

666. ஒள் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி-ஒள்ளிய பொன்னாற் செய்துவிளங்குஞ் சிலம்புமுதலியன ஒலிப்பப் புறம் போதுகையினாலே,

667. திண் சுவர் நல் இல் கதவம் கரைய-திண்ணியசுவர்களையுடைய நல்ல அகங்களிற் கதவுகள் ஒலிப்ப,

668-9. உண்டு மகிழ் தட்ட மழலை நாவில் பழ செருக்காளர் தழங்கு குரல் தோன்ற-கள்ளையுண்டு களிப்பினைத் தம்மிடத்தே தடுத்துக்கொண்ட மழலைவார்த்தையையுடைய நாவினையுடைய பழையகளிப் பினையுடையாருடைய முழங்குகின்ற குரல்கள் தோன்ற,

670. சூதர் வாழ்த்த மாகதர் நுவல-நின்றேத்துவார்வாழ்த்த இருந்தேத்துவார் புகழைச்சொல்ல,

671. வேதாளிகரொடு நாழிகை இசைப்ப-வைதாளிகர் தத்தம் துறைக்குரியனவற்றையிசைப்ப நாழிகை சொல்லுவார் நாழிகைசொல்ல,

நாழிகை : ஆகுபெயர்.

672. இமிழ் முரசு இரங்க-ஒலிக்கின்ற1பள்ளியெழுச்சிமுரசு ஒலிப்ப,

ஏறு மாறு சிலைப்ப-ஏறுகள் தம்முள் மாறுபட்டு முழங்க,

673. பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப-பொறியினையுடைய மயிரினையுடைய கோழிச்சேவல் விடியற்காலத்தை அறிந்துகூவ,

674-5. யானையங்குருகின் சேவலொடு காமர் அன்னம் கரைய-வண்டாழ்ங்குருகினுடைய சேவல்களோடே விருப்பத்தையுடைய அன்னச் சேவல்களும் தமக்குரிய பேடைகளை யழைக்க,

அணி மயில் அகவ-அழகியமயில்கள் பேடைகளை யழைக்க,

676. பிடி புணர் பெரு களிறு முழங்க-பிடியோடேகூடின பெரிய யானைகள் முழங்க,

676-7. [முழுவலிக், கூட்டுறை வயமாப் புலியொடு குழும :] வய மா கூடு உறை முழு வலி புலியொடு குழும-கரடிமுதலிய வலிய விலங்குகள் கூட்டிலேயுறைகின்ற மிக்கவலியையுடைய புலியுடனே முழங்க,
--------
    1. மதுரைக். 232-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
----

678. வானம் நீங்கிய நீல் நிறம் விசும்பின்-1ஆகாயம் தனக்குவடிவின்றென்னும் தன்மை நீங்குதற்குமேகபடலத்தால்

நீலநிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே,

இனிச் செக்கர்வானம்போன விசும்பென்பாருமுளர்.

679. மின்னு நிமிர்ந்தனையர் ஆகி-மின்னு நுடங்கின தன்மையினை யுடையராய்,
நறவு மகிழ்ந்து-மதுவையுண்டு,

680-81. மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த பரூஉ. காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு-மாட்சிமைப்பட்ட பேரணிகலங்களையுடைய மகளிர் கணவரோடே புலந்தனராய் அறுத்த பருத்தலையுடைய வடமாகிய ஆரஞ்சொரிந்த முத்தத்தோடே,

மகளிர் மகிழ்ந்து புலர்ந்தனராய்ப் பரிந்த முத்தமென்க.

682. [பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன :] பொன் சுடு நெருப்பு உக்க நிலம் என்ன-பொன்னையுருக்குகின்ற நெருப்புச் சிந்தின நிலம்போல,

என்றது, கரியும் தழலும் பொன்னுஞ் சிந்திக்கிடந்தாற்போல வென்றதாம்.

683. [அம்மென் குரும்பைக் காய்படுபு பிறவும் :]

பிறவும்-முத்தொழிந்த மாணிக்கமும் மரகதமும் பொன்னும் மணிகளும்,

அம் மென் குரும்பை காய்-அழகிய மெத்தென்ற இளைதாகிய பச்சைப் பாக்கும்.

படுபு-விழுந்து,

684. தரு மணல் முற்றத்து-கொண்டுவந்திட்ட மணலையுடைய முற்றத்தே,

அரி ஞிமிறு ஆர்ப்ப-வண்டுகளும் மிஞிறுகளும் ஆரவாரிப்ப,

685. மெல் பூ செம்மலொடு நல் கலம் சீப்ப-மெல்லிய பூவாடல்களுடனே நல்லபூண்களையும்

பெருக்கிப்போகடும்படி,

முத்தத்தோடே (681) பிறவும் காயும் (683) முற்றத்தே விழுகையினாலே (684) அவற்றையும் செம்மலோடே கலங்களையும் (685) அரி ஞிமிறார்ப்பச் (684) சீப்ப (685) வென்க.
---------
    1.அருக் கனப் பரப்பு" (தக்க. 474) என்பதும், 'மகாதேவர்க்குப் பின்புலோகத்தில் உயர்ந்த பொருளாயுள்ளது ஆகாசமொன்றுமே ; அஃது அரூபியாகும் ; இஃது எல்லாச் சமயிகளுக்கும் ஒக்கும்'என்ற அதன் உரையும் இங்கே அறிதற்குரியன.
---------

686. இரவு தலை பெயரும் ஏமம் வைகறை-இராக்காலம் தன்னிடத்தில் நின்றும் போகின்ற எல்லாவுயிர்க்கும் பாதுகாவலாகிய விடியற்காலத்தே,

பாடப் (656) பண்ணக் (658) கைப்பத் (659) தெவிட்ட (660) உறுப்ப (661) நுவலக் (662) கரையத் (667) தோன்ற (669) வாழ்த்த நுவல (670) இசைப்ப (671) இரங்கச் சிலைப்ப (672) இயம்பக் (673) கரைய அகவ (675) முழங்கக் (676) குழுமச் (677) சீப்பத் (685) தலைப்பெயருமென முடிக்க.

687-8. மை படு பெரு தோள் மழவர் ஓட்டி இடை புலத்து ஒழிந்த ஏந்து கோடு யானை - பிறர்தோள் குற்றப்படுதற்குக் காரணமான பெரியதோளையுடைய மழவரைக்கொடுத்து அவர் விட்டுப்போகையினாலே போர்க்களத்தே நின்ற ஏந்தின கொம்பினையுடைய யானைகளும்,

1மழவர்-சிலவீரர்.

689. பகை புலம் கவர்ந்த பாய் 2பரி புரவி-பகைவர்நாட்டிலே கைக்கொண்டுவந்த பாய்ந்துசெல்லும் செலவினையுடைய குதிரைகளும்,

690-92. [வேல்கோ லாக வான்செல நூறிக், காய்சின முன்பிற் கடுங்கட் கூளிய, ரூர்சுடு விளக்கிற் றந்த வாயமும் :] காய் சினம் முன்பின் கடுங்கண் கூளியர் ஊர் சுடு விளக்கின் ஆள் செல நூறி வேல் கோல் ஆக தந்த ஆயமும்-எரிகின்ற சினத்தையுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையினையுமுடைய ஆயக்கரையிலிருந்த வேட்டுவர் பகைவரூரைச் சுடுகின்ற விளக்கிலே நிரைகாத்திருந்த வீரரைமாளவெட்டி வேல்கோலாக அடித்துக்கொண்டுவந்த பசுத்திரளும்,

693. நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி - அகநாட்டைச் சூழவுடைத்தாகிய 3முழுவரண்களிலிட்ட வருத்தத்தையுடைய கதவுகளும்,

694-5. நாள் தொறும் விளங்க கை தொழூஉ பழிச்சி நாள் தரவந்த விழு கலம்-நாடொறும் தமக்குச் செல்வமிகும்படியாகக் கையாற்றொழுதுவாழ்த்தி நாட்காலத்தே திறையாகக்கொண்டுவர வந்த சீரிய கலங்களும்,

அனைத்தும்-அத்தன்மையனபிறவும்,

696-7. கங்கை அம் பெரு யாறு கடல் படர்ந்தாங்கு அளந்து கடை அறியா மதுரை(699)-4கங்கையாகிய அழகிய பெரியயாறு
----------
    1. மதுரைக். 395, ந,
    2. பரி-செலவு; "காலே பரிதப் பினவே" (குறுந். 44:1)
    3. முழுவரண்-முழுமுதலரணம்.
    4. "இறுவரை யிமயத் துயர்மிசை யிழிந்து, பன்முகம் பரப்பிப் பௌவம் புகூஉம், நன்முகக் கங்கையி னகரம்" (பெருங். 2. 17:33-4)
--------

1ஆயிரமுகமாகக் கடலிலேசென்றாற்போல அளந்து முடிவறியாத மதுரை,

வளம் கெழு தாரமொடு-வளப்பம்பொருந்தின அரும்பண்டங்களோடே,

698. [புத்தே ளுலகங் கவினிக் காண்வர :] புத்தேள் உலகம் காண்வர கவினி-தேவருலகம்வந்து காணுதலுண்டாகத் தான் அழகைப் பெற்று,

699. மிக்கு புகழ் எய்திய பெரு பெயர் மதுரை-மிகுத்துப் புகழைப் பெற்ற பெரும்பொருளையுடைய மதுரை,

பெரும்பொருளென்றது, வீட்டினை : "பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய" (பதிற். 90:23) என்றார் பிறரும்.

கூற்றக் கொஃறேர் (633) அச்சமறியாதேமமாகிய (652) மிக்குப் புகழெய்திய மதுரை (699) யென்க.

பாடல்சான்ற நன்னாட்டு நடுவணதாய் (331) இருபெருநியமத்து (365) நாளங்காடிக்கம்பலை (430) நாடார்த்தன்றேயாய் (428) அல்லங்காடி அழிதருகம்பலை (544) புள்ளின் இசையெழுந்தற்றேயாய் (543) ஞாயிறு (546) குன்றஞ் சேருகையினாலே (547) மாலை (558) புகுந்து (557) பின்னர்நீங்க (558) முந்தையாமஞ்சென்றபின்றை (620) மற்றைப் (653)பானாட்கொண்டகங்குல் (631) யாமத்தையும் மற்றை (653) யிடையதாகிய (631) கடவுள் வழங்குங்கங்குல் (651) யாமத்தையும் பகலுறக் கழிப்பிச் (653) சீப்ப (685) இராக்காலந் தன்னிடத்தினின்றும் போகின்றவைகறையிலே (686) வளங்கெழுதாரத்தோடே (697) யானையும் (688) புரவியும் (689) ஆயமும் (692) தோட்டியும் (693) கலமும் அனைத்தும் (695) கங்கையாறுகடற்படர்ந்தாற்போல (696) அளந்து முடிவறியாத (697) மதுரை (699) என்க.

கவினிப் (698) புகழெய்திய (699) பெரும்பாணிருக்கை (342) முதலியவற்றையுடைய மதுரை (699) என்க.

700-701. [சினதலை மணந்த சுரும்புபடு செந்தனை யொண்பூம் பிண்டி யவிழ்ந்த காவில் :] சினை தலை மணந்த பிண்டி சுரும்பு படு செ தீ ஒள் பூ அவிழ்ந்த காவில்-கொம்புகள் தம்மிற்றலைகூடின அசோகினுடைய சுரும்புகளுண்டாஞ் செந்தீப்போலும் ஒள்ளியபூவிருந்த பொழிலிடத்தே,
---------
    1."கங்கை, துறைகொ ளாயிர முகமுஞ் சுழல" (கல்.) ; "ஐயமிலமர ரேத்த வாயிர முகம தாகி, வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை" (தே. திருநா.) ; "அந்தரத் தமர ரடியிணை வணங்க வாயிர முகத்தினா லருளி, மந்தரத் திழிந்த கங்கை" (பெரிய திருமொழி. 1. 4:7)
---------

702-3. சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிறு இலங்கு கதிர் இளவெயில் தோன்றி அன்ன-ஒளியைச்சொரிந்து அத்தகிரியிலே போக விளங்குகின்ற கிரணங்களையுடைய ஞாயிற்றினுடைய விளங்குங் கிரணங்களின் இள வெயில் தோன்றினாலொத்த மகளிர் (712),

என்றது, பூத்த அசோகம்பொழிலிடத்தே இளவெயில் எறித்தாற் போலப்1புணர்ச்சியாற்பெற்ற நிறத்தையுடைய மகளிரென்க.

704. [தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை :] தாவு இல் தமனியம் வளைஇய விளங்கு இழை-ஓட்டற்ற பொன் நடுஅழுத்தின மணிகளைச் சூழ்ந்த விளங்குகின்ற பேரணிகலங்களையும்,

705. நிலம் விளங்கு உறுப்ப மேதக பொலிந்து - நிலத்தையெல்லாம் விளக்கமுறுத்தும்படி கற்புமேம்படப் பொலிவுபெற்று,

706. மயில் ஓர் அன்ன சாயல்-மயிலோடு ஒருதன்மைத்தாகிய மென்மையினையும்,

706-7. மாவின் தளிர் ஏர் அன்ன மேனி - மாவின்தளிரினது அழகையொத்த நிறத்தினையும்,

707-8. தளிர் புறத்து ஈர்க்கின் அரும்பிய திதலையர் - தளிரினது புறத்தில் ஈர்க்குப்போலத் தோன்றிய திதலையையுடையராய்,

கூர் எயிறு-கூரிய எயிற்றினையும்,

709. ஒள் குழை புணரிய வள் தாழ் காதின்-ஒள்ளிய மகரக்குழை பொருந்திய வளவிய தாழ்ந்த காதினையும்,

710-11. [கடவுட்கயத் தமன்ற சுடரிதழ்த் தாமரைத், தாதுபடு பெரும்போது புரையும்வாண் முகத்து :] கயத்து அமன்ற கடவுள் சுடர் இதழ் தாமரை தாது படு பெரு போது புரையும் வாள் முகத்து-குளத்திலே நெருங்கின2தெய்வங்கட்குரிய நெருப்புப்போலுமிதழ்களையுடைய தாமரையினது தாதுண்டாம் பெரிய பூவை ஒக்கும் ஒளியினையுடைய முகத்தினையும்,

712. ஆய் தொடி மகளிர்-நன்றாக ஆராய்ந்த தொடியினையுமுடைய மகளிருடைய,

பொலிந்து (705) திதலையராய் (708) இழையினையும் (704) சாயலினையும் (706) மேனியினையும் (707) எயிற்றினையும் (708) காதினையும் (709) முகத்தினையும் (711) தொடியினையுமுடைய மகளிர் (712) என்க.
---------
    1."தேசு மொளியுந் திகழ நோக்கி" (பரி. 12:21) என்பதன் உரையைப்பார்க்க; "மதம்-காமக்களிப்பாலுண்டாகிய கதிர்ப்பு" (திருச்சிற். 69, பேர்.) ; "அந்தி யாரழ லெனப்பரி தியினொளி யடைந்த பின் " "குந்தித் தெரிவை ................. அந்தித் தெரிவை நிகரென்ன வழகின் மிக்காள்" (வி. பா. சம்பவச்சருக்கம், 38, 66)
    2.பெரும்பாண். 289-90-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
---------

712. நறு தோள் புணர்ந்து-நறிய தோளைமுயங்கி,

713. கோதையின் பொலிந்த சேக்கை துஞ்சி -1தூக்குமாலைகளாற் பொலிவுபெற்ற படுக்கையிலே துயில்கொண்டு,

புணர்ந்து பின்னைத் துயிலுங்காலத்துத் தனியேதுயிலுதல் இயல்பென்பது தோன்றப் புணர்ந்து துஞ்சியென்றார்.

"ஐந்துமூன் றடுத்த செல்வத் தமளியி னியற்றி" (சீவக. 838) என்றார் பிறரும்.

714. திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து-செல்வத்தை நினைந்து இன்புறுகின்ற பற்றுள்ளம்,

உறக்கத்தையுணர்த்துகையினாலே அது நினைத்து இனிதாகப் பின் எழுந்து,

என்றது, தன்செல்வம் இடையறாதொழுகுதற்கு வேண்டுங் காரியங்களை விடியற்காலத்தே மனத்தானாராயவேண்டுதலின், துயிலெடுப்புக்கு இது காரணமாயிற்று ; "வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யு, நல்லறனு மொண்பொருளுஞ் சிந்தித்து" (4) என்றார் ஆசாரக் கோவையில்.

இனி நன்றாகிய துயிலென்றுமாம்.

715-24. [திண்கா ழார நீவிக் கதிர்விடு, மொண்கா ழாரங் கவைஇய மார்பின், வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்ப, வெருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற், பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம், வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச், சோறமை வுற்ற நீருடைக் கலிங்க, முடையணி பொலியக் குறைவின்று கவைஇ, வல்லோன் றைஇய வரிப்புனை பாவை, முருகியன் றன்ன வுருவினை யாகி :]

2வல்லோன் தைஇய வரி புனை பாவை (723) முருகு இயன்றன்ன உருவினை ஆகி (724)-சித்திரகாரி பண்ணப்பட்ட எழுதிக்கைசெய்த பாவையிடத்தே தெய்வத்தன்மை நிகழ்ந்தாற்போன்ற வடிவினையுடையையாய், என்றதனால், நாட்காலையில் அரசர் குரிய கடன்கள் கழித்துத் தெய்வ வழிபாட்டோடிருந்தமை கூறினார்.
-------
    1."தொங்கல் சுற்றுந் தாழுமின் பஞ்சணை" (அழகரந்தாதி, 44)
    2.எழுதப்பட்ட பாவையிடத்தே தெய்வத்தன்மை நிகழ்தல், "கோழ்கொள், காழ்புனைந் தியற்றிய வனப்பமை நோன்சுவர்ப், பாவையும் பலியெனப் பெறாஅ" (அகநா. 369:6-8) ; "வழுவறு மரனு மண்ணுங் கல்லு, மெழுதிய பாவை பேசா வென்ப, தறிதலு மறிதியோ" "கொடித்தேர் வீதியுந் தேவர் கோட்டமு, முதுமர விடங்களு முதுநீர்த் துறைகளும், பொதியிலு மன்றமும் பொருந்துபு நாடிக், காப்புடை மாநகர்க் காவலுங் கண்ணி, யாப்புடைத் தாக வறிந்தோர் வலித்து, மண்ணினுங் கல்லினு மரத்தினுஞ் சுவரினுங், கண்ணிய தெய்வதங்காட்டுநர் வகுக்க, வாங்கத் தெய்வத மவ்விட நீங்கா", "தொன்று முதிர் கந்தின், மயனெனக் கொப்பா வகுத்த பாவையி, னீங்கேன்யான்" (மணி. 21:115-7, 120-27, 131-3) என்பவற்றாலும் விளங்கும்.
-------

திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும் (715) ஒள் காழ் ஆரம் கவைஇய மார்பின் (716)-திண்ணிய வயிரத்தையுடைய சந்தனத்தைப் பூசி ஒளி விடும் ஒள்ளிய வடமாகிய முத்துச்சூழ்ந்த மார்பிலே,

நீவியென்னுஞ் செய்தெனெச்சம் பிறவினைகொண்டது.

வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப (717)-வரியையுடைத்தாகிய பின்னையுடைய தேனினமும் மற்றும் மொய்க்கப்படுவனவாகிய வண்டு முதலியனவும் மொய்ப்ப,

எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல் (718)-கழுத்திடத்தினின்றுந் தாழ்ந்த விரவுதலையுடைய பூமாலையையுடைத்தாகிய மார்பென (716) முன்னே கூட்டுக.

பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம் (719) வலி கெழு தடகை தொடியொடு சுடர்வர (720)-பொன்னாற்செய்கையினாலே பொலிவு பெற்ற மணிகளழுத்தின மோதிரம் வலிபொருந்தின பெரிய கையில்1வீர வளையோடு விளக்கம்வர,

சோறு அமைவு உற்ற நீர் உடை கலிங்கம் (721)-சோறு தன்னிடத்தே பொருந்துதலுற்ற நீரையுடைய துகில்
என்றது 2கஞ்சியிட்ட துகிலை.

உடை அணி பொலிய குறைவு இன்று கவைஇ (722)-உடைக்கு மேலணியும் அணிகலங்களாலே அது பொலிவுபெறும்படி தாழ்வின்றாக வுடுத்து,

புணர்ந்து (712) துஞ்சி (713) எழுந்து (714) உருவினையாகி (724) மார்பிலே (716) பிரசமும் மூசுவனவும் மொய்ப்ப (717) விளக்கம் (719) தொடியொடு சுடர்வரக் (720) கலிங்கத்தைக் (721) கவைஇ (722) யென முடிக்க.

725-6. 3வரு புனல் கல் சிறை கடுப்ப இடை மறுத்துஒன்னார்
--------
    1. மதுரைக். 34-ஆம் அடியின் உரையைப் பார்க்க.
    2. "காடி கொண்ட கழுவுறு கலிங்கம்" (நெடுநல். 134) ; "நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத், தலைப்புடை போக்கித் தண்கயத்திட்ட, நீரிற் பிரியாப் பரூஉத்திரி" (குறுந். 330, 1-3) ; "பசைவிரற் புலைத்தி நெடிதுபிசைந் தூட்டிய, பூந்துகில்" (அகநா. 387:6-7) ; "காடி யுண்ட பூந்துகில்" (சீவக. 71) ; "காடி கலந்த கோடிக் கலிங்கம்" (பெருங். 1. 54:9)
    3. "தனிச்சேவகமாவது வருவிசைப் புனலைக் கற்சிறைபோல ஒருவன் றாங்கிய பெருமை" (வீர. பொருள். 16, உரை)
----------

ஓட்டிய செரு புகல் மறவர்-மிக்குவருகின்ற யாற்றுநீரிடத்துக் கல்லணை நின்று தாங்கினாற்போலத் தம்படையைக்கெடுத்து1மிக்குவருகின்ற பகைவர்படையை நடுவேதவிர்த்து அவரைக்கெடுத்த போரைவிரும்பும் படைத்தலைவர்,

"வருவிசைப் புனலைக் கற்சிறை போல, வொருவன் றாங்கிய பெருமை யானும்" (தொல். புறத். சூ. 8) என்னும் வஞ்சித்துறை கூறினார். இதுகூறவே முன்னர்2மாராயம் பெற்றவர்களே இப்போரைச் செய்வரென்பது ஆண்டுப் பெற்றாமாகலின், இவர்கள்3ஏனாதிப்பட்டம் முதலிய சிறப்புப் பெற்ற படைத்தலைவரென்பது பெற்றாம்.
----------
    1."தன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்" (பு. வெ. 11)
    2.மாராயம்-வேந்தனாற் செய்யப்பெறுஞ்சிறப்பு : அவையாவன, ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதல் ; "கால மாரியி னம்பு தைப்பினும் ............... ஓடல் செல்லாப் பீடுடை யாளர், ................ தண்ணடை பெறுதல் யாவது" (புறநா. 287:3-10)
    3.ஏனாதிப்பட்டம் : இஃது அரசரால் வீரர்க்கு அளிக்கப்படும் ஒரு பட்டம் ; இதனை, "மாராயம் பெற்ற நெடுமொழி யானும்" (தொல். புறத். திணை. சூ. 8) என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதிய வுரையாலும், "போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக், கார்க்கடல் பெற்ற கரையன்றோ-போர்க்கெல்லாந், தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே, ரேனாதிப் பட்டத் திவன்" என அவர் எடுத்துக் காட்டிய பழம்பாட்டாலும் உணர்க. இப்பட்டத்திற்குரிய மோதிரமொன்றும் அரசரால் அளிக்கப்படுமென்பது மேலேயுள்ள பாடலாலும், "என்னை? ஏனாதிமோதிரஞ் செறிந்த திருவுடையா னொருவன் ஏனாதி மோதிரஞ் செறிக்கும் அத்திரு அவன் செறிக்கின்ற பொழுதே உண்டா. யிற்றன்று" (இறை. சூ. 2, உரை) என்பதனாலும், "ஆழி தொட்டான்" (சீவக. 2167) என்பதற்கு 'ஏனாதி மோதிரஞ் செறித்த சேனாபதி' என்று எழுதியிருப்பதனாலும் விளங்கும். இப்பாட்டின் 719-ஆம் அடியில் வரும் விளக்க மென்பதற்குப் பொருளாகக் கூறிய மோதிர மென்பது இவ்வேனாதி மோதிரமே. இச்சிறப்புப் பெற்றோர் மந்திரிகளாகவும் இருத்தல், மணி. 22-ஆங்காதைத் தலைப்பிலுள்ள, "மந்திரியாகிய சோழிகவேனாதி' யென்பதனால் விளங்கும். "சேனாதிபதி ஏனாதியாயின சாத்தன் சாத்தற்கு" (வேள்விக்குடிச் சாஸனம்) "ஏனாதிநல்லுதடன்" (தொல். கிளவி. சூ. 41, சே. ந.), "ஏனாதி திருக்கிள்ளி" (புறநா. 167) ; "ஏனாதி ஏறன்" (நன். சூ. 392, மயிலை. மேற்.) ; ஏனாதி நாத நாயனாரென்பன இக்காரணம்பற்றி வந்த பெயர்கள் போலும்.
---------

727. 1வாள் வலம் புணர்ந்த நின் தான் வலம் வாழ்த்த-வாள் வெற்றியைப் பொருந்தின நினது முயற்சியின்வெற்றியைவாழ்த்த,

728-9. வில்லை கவைஇ கணை தாங்கும் மார்பின் மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்மின்-வில்லை நிரம்பவலிக்கையினாலே தன்னுள்ளேயடக்கிக் கொண்ட அம்பின் விசையைத்தாங்கு மார்பினையும்2குதிரைனயச்செலுத்தி வேண்டுமளவிலே பிடிக்கும் வலியையுடைய தோளினையுமுடைய வீரரைக்கொணர்மின் ;

தம்மின் : முன்னிலை முற்றுவினைத்திரிசொல். இது தும்பையிற்3குதிரைநிலைகூறிற்று. கணைதாங்குமார்பு கூறவே4கணை துணையுற மொய்த்தலுங் கூறிற்று.

730-31. கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின் நல் எயில் உழந்த செல்வர் தம்மின்-கற்றரையைப் பொளிந்துபண்ணின இட்டிதாகிய நீர்வரும்வாயையுடைய கிடங்கினையுடைய முழுமுதலரணத்தேநின்று வருந்தின வீரச்செல்வத்தையுடையாரைக் கொணர்மின் ;

இஃது, "ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும்" (தொல். புறத். சூ. 13) என்னும் புறத்துழிஞைத்துறை கூறிற்று.

732-3. கொல் ஏறு பைந்தோல் சீவாது போர்த்த மா கண் முரசம் ஓவு இல கறங்க-மாறுபாட்டையேற்றுக் கோறற்றொழிலையுடைய5ஏற்றினது செவ்வித்தோலை மயிர் சீவாமற்போர்த்த பெரிய கண்ணையுடையமுரசம் மாறாமல் நின்று ஒலியாநிற்க.

734-6. எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண் பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய விழுமிய வீழ்ந்த குரிசிலர் தம்மின்-நெருப்பு நடந்தாற்போன்ற பகைவர்படைக்கு நடுவேசென்று பெரிய நல்ல யானையைப் போர்க்களத்தே பட வெட்டிச் சீரிய புண்ணினால்வீழ்ந்த தலைவரைக் கொணர்மின்;

இது, "களிறெதிர்ந் தெறிந்தோர்பாடு" (தொல். புறத். சூ. 17) என்னும் தும்பைத்துறை கூறிற்று. பாடு, பெருமையாகலின் அது தோன்ற ஈண்டுக்குருசி லென்றார்.

முறைகருதுபு (738)- 1முன்னுளோர்காத்தமுறைமையை நாளும் உட்கொண்டு,
------------
    1.வாள்வெற்றியை வாழ்த்துதற்கு வீரரே உரியரென்பது சிறுபாணாற்றுப்படை, 210-12-ஆம் அடிகளாலும் அறியப்படும்.
    2."நிமிர் பரிய மாதாங்கவும்-மிகைத்த செலவினையுடைய குதிரையைக் குசைதாங்கி வேண்டுமளவிலே பிடிக்கவும்" (புறநா. 14:7, உரை)
    3.தொல். புறத்திணை. சூ. 17.
    4.ஷெ ஷெ சூ. 16.
    5."மயிர்க்கண்முரசு-புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக் கோடுமண்கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர் சீவாமற் போர்த்த முரசு" (சிலப். 5:88, அடியார்.)
---------

737. புரையோர்க்கு-நட்பிற் குற்றந்தீர்ந்தோர்பொருட்டு,

நான்காமுருபு ஈண்டு அதற்பொருட்டு ; (தொல்.வேற்றுமை. சூ. 15)

737-8. [தொடுத்த பொலம்பூந் தும்பை,நீர்யா ரென்னாது முறை கருதுபு சூட்டி :]

தொடுத்த பொலம் பூ தும்பை சூட்டி-கட்டப்பட்டபொன்னாற் செய்த பூவினையுடைய தும்பையைச்சூட்டிஏவுகையினாலே,

739. காழ் மண்டு எஃகமொடு கணை அலைகலங்கி-காம்பு குழைச் சினுள்ளே செருகின வேல்களுடனேஅம்புகளுஞ்சென்று நிலைகுலைத்தலின் நிலைகலங்கி,

740-43. [பிரிபிணை யரிந்த நிறஞ்சிதைகவயத்து, வானத்தன்ன வளநகர் பொற்ப, நோன்குறட்டன்ன வூன்சாய் மார்பி, னுயர்ந்த வுதவி யூக்கலர்த்தம்மின் :]

பிரிபு இணை அரிந்த நிறம் சிதை 2கவயத்து(740) ஊன் சாய் (742)-பலவாய்ப் பிரிந்து இணைந்த சந்துவாய்களற்றபழையநிறங்கெட்ட கவயத்தோடே ஊன்கெட்ட,

நோன் குறடு அன்ன மார்பின்(742)-வலிய சகடையிற்குறட்டையொத்த மார்பினையுடையராகியஊக்கல (743) ரென்க.

வேலும் அம்பும் பட்டு எங்கும்உருவிநிற்றலிற் குறடும் அதிற்றைத்த 3ஆர்களும்போன்றன மார்புகள் ; 4குறடு பட்டடைமரமுமாம்.

வானத்து அன்ன வளம் நகர் பொற்ப(741) உயர்ந்த உதவி ஊக்கலர் தம்மின் (743)-5தேவருலகையொத்தசெல்வத்தையுடைய ஊர்கள் முன்புபோலே நட்புக்கொண்டஅகத்துழிஞையோராளும்படி உயர்ந்த உதவியைச் செய்தமுயற்சியையுடையாரைக் கொணர்மின் ;
--------
    1."அறநெறி காட்டிப்,பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது" (மதுரைக்.191-2)
    2கவயம்-கவசம் ; "வயக் கவயந் தண்டவணோர்,மாமகனுக் காக மகிழ்சிறந்தார்" ஆனந்த. வண்டு.)
    3 (பி-ம்) 'உருளிகளும்'
    4 சீவக. 2281
    5 "மீக்கூறுதல், இவன்காக்கின்ற நாடு பசிபிணி பகை முதலியவின்றியாவர்க்கும் பேரின்பந் தருதலிற் றேவருலகினும் நன்றென்றல்"(குறள், 386, பரிமேல்.) என்றதனோடு இக்கருத்து ஒத்துள்ளது.
---------

என்றது, தமக்குநட்பாய் முற்றகப்பட்டோரைமுற்றுவிடுவித்தற்குத் தாமே உதவலின், 1மைந்துபொருளாகச்சென்று அம்முற்றுவிடுவித்து அவ்வூரை அவர்க்கு மீட்டுக்கொடுத்தமைகூறிற்று. இதனானே 2உழிஞைப்புறத்துத் தும்பைகூறினார் ;என்னை? "கணையும் வேலுந்துணையுற மொய்த்தலிற், சென்றவுயிரி னின்ற யாக்கை" (தொல். புறத். சூ. 16)கூறுதலானும் வளநகர் பெறும்படி

உயர்ந்த உதவிசெய்தமை கூறுதலானும்.

744-6. நிவந்த யானை கணம் நிரை கவர்ந்தபுலர்ந்த சாந்தின் விரவு பூ தெரியல் பெரு செய்ஆடவர் தம்மின்-உயர்ந்த யானைத்திரளினொழுங்குகளைக்கைக்கொண்ட பூசிப்புலர்ந்த சாந்தினையும்,விரவுதலையுடைய வியன்பூ மாலையினையும், பெரியசெய்கைகளையுமுடையமண்டலங்களை ஆள்கின்றவரைக் கொணர்மின் :

746-8. [பிறரும், யாவரும் வருக வேனோருந்தம்மென, வரையாவாயிற் செறாஅது :]

ஏனோரும் தம்மென வரையா- 3மண்டபத்தாரையும்,அறங்கூற வையத்தாரையுங் (மதுரைக். 492) கொணர்மினெனவரைந்துகூறி,

வாயில் செறாது பிறரும் யாவரும்வருக என-வாயிலிடத்துத் தகையாமல் இவர்களைப்போல்வாரும் படையாளர் முதலியோரும் வருவாராக வெனக்கூறி,

748. இருந்து-இங்ஙனம் எளியையாயிருந்து,

749-50. [பாணர் வருக, பாட்டியர் வருக,யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென :] யாணர்புலவரொடு பாணர் வருக பாட்டியர் வருக வயிரியர் வருகஎன-கவியாகிய புதுவருவாயினையுடைய புலவரோடே பாணர் வருவாராக,பாணிச்சியர் வருவாராக, கூத்தர் வருவாராகவெனஅழைத்து,
---------
    1."மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச்,சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப" (தொல்.புறத். சூ. 15)

    2."முற்றகப்பட்டோனை முற்றுவிடுத்தற்கு வேறோர் வேந்தன் வந்துழி, அவன்புறம்போந்து களங்குறித்துப் போர் செய்யக்கருதுதலும் அவன் களங்குறித்துழிப் புறத்தோனும் களங்குறித்துப்போர் செய்யக் கருதுதலும் உழிஞைப்புறத்துத்தும்பையாம்"(தொல். புறத். சூ. 16, ந.)

    3இங்கே மண்டபத்தாரென்றது, பட்டிமண்டபத்தாரைப்போலும் ; பட்டி மண்டபம்-கல்விக்கழகம் ;"பட்டி மண்டபத்துப் பாங்கறிந்தேறுமின்" (மணி.1:61) ; பட்டி மண்டப மேற்றினை யேற்றினை" (திருவா.சதகம். 49) ; "பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்"என்றார் கம்பரும். மதுரையில், இப்பொழுது புதுமண்டபமெனவழங்கும் இடத்தில் முன்பு பழைய மண்டபமொன்றுஇருந்திருத்தல் கூடுமென்றும், அஃது இப்பட்டிமண்டபம்போலுமென்றும்சிலர் கருதுவர்.
--------

751-2. [இருங்கிளை புரக்கு மிரவலர்க்கெல்லாங், கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி :]

இரு கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்நீர் யார் என்னாது (738) கொடுஞ்சி நெடு தேர்களிற்றொடும் வீசி-அவர்கள் சுற்றத்தாராய் அவர்கள்பாதுகாக்கும் பெரிய இரவலர்க்கெல்லாம் நீர்யாவரென்றுஅவர்களைக் கேளாதே அவர்கள் காட்டின அளவைக்கொண்டுகொடுஞ்சியையுடைய நெடியதேர்களை யானைகளோடுங்கொடுத்து,

கொடுஞ்சி-தாமரைப்பூவாகப்பண்ணித்தேர்த்தட்டின் முன்னே நடுவது.

753. களம் தோறும் கள் அரிப்ப - இடந்தோறுங்கள்ளையரிப்ப,

754. மரம் தோறும் மை வீழ்ப்ப - மரத்தடிகள்தோறும்செம்மறிக் கிடாயைப்படுப்ப,

755. நிணம் ஊன் சுட்டு உருக்கு அமைய-நிணத்தையுடையதசைகள் சுடுதலாலே அந்நிணம் உருகுதல்பொருந்த,

756. நெய் கனிந்து வறை ஆர்ப்ப - நெய்நிறையப்பெற்றுப் பொரிக்கறிகள் ஆரவாரிப்ப,

757-8. குருஉ குய் புகை மழை மங்குலின்பரந்து தோன்றா - நிறத்தையுடைய தாளிப்பிலெழுந்தபுகை மழையையுடைய திசைகள் போலப் பரந்து தோன்றப்பட்டு,

758. வியல் நகரால்-அகற்சியையுடையவீடுகளாலே மிக்குப்புகழெய்திய மதுரை (699) என முன்னேகூட்டுக.

நகர்-வீடுகள்.

அரிப்ப (753) வீழ்ப்ப (754) அமைய(755) ஆர்ப்பத் (756) தோன்றப்பட்டு (758) அகற்சியையுடையஎன உடைமையொடு முடிக்க.

759-62. [பல்சாலை முதுகுடுமியி, னல்வேள்வித்துறைபோகிய, தொல்லாணை நல்லாசிரியர், புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் :]

நல் வேள்வி துறை போகிய-நல்ல யாகங்கட்குக்கூறியதுறைகளெல்லாம் முன்னர் முற்றமுடித்துவிட்ட,

தொல் ஆணை நல் ஆசிரியர் (761)புணர் கூட்டு உண்ட (762)-பழைய ஆணைகளையுடைய நல்ல ஆசிரியர்தாங்கள் பின்புகூடின 1கந்தழியாகிய கொள்ளையை அவரிடத்தே பெற்று அனுபவித்த,

புகழ் சால் சிறப்பின் (762)பால்சாலைமுதுகுடுமியின் (759)-புகழ்ச்சியமைந்த தலைமையினையுடைய 2பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப்போலே நீயும் நல்லாசிரியரிடத்தே கேட்சின் (208) என முன்னே கூட்டுக.
-------
    1.திருமுருகாற்றுப்படை உரையின்இறுதிப் பகுதியைப் பார்க்க.
    2.பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி : இவ்வரசன் பலயாகங்
--------

என்றது, 1அந்தணர்க்குக்கூறியமுறையே முன்னுள்ள கருமங்களை முடித்துப் பின்னர்த்தத்துவங்களை யாராய்ந்து மெய்ப்பொருளுணர்ந்துவீட்டின்ப மெய்திய ஆசிரியரிடத்தே தானும் அம்முறையேசென்று வீட்டின்பத்தைப் பெற்ற குடுமியென்றவாறு.

763. நிலம் தரு திருவின் நெடியோன் போல - எல்லா நிலங்களையும் தன்னிடத்தே காட்டினபெருஞ்செல்வத்தையுடைய மாயோனைப் போலத் தொல்லாணையையுடைய நல்லாசிரியர் (761) என முன்னேகூட்டுக.

என்றது, கண்ணன் எப்பொருளும் தானாயிருக்கின்ற படியைக் காட்டி ஸ்ரீ கீதை யருளிச்செய்து எல்லாரையும் போதித்தாற்போல எல்லாரையும் போதிக்கவல்லராகிய ஆசிரியரென்றவாறு.

ஆணை - ஆக்கினை.

764-5. [வியப்புஞ் சால்புஞ் செம்மைசான்றோர், பலர்வாய்ப் புகரறு சிறப்பிற்றோன்றி :] வியப்பும் - நீ அவ்வாசிரியரிடத்துப்பெற்ற கந்தழியின் அதிசயமும், சால்பும்-பின்பு பெற்றமைந்த அமைதியும், களைச் செய்து சிறப்புற்றமையின் இப்பெயர் பெற்றான் ; "நற்பனுவனால் வேதத்,தருஞ் சீர்த்திப் பெருங்கண்ணுறை, நெய்ம்மலியாவுதி பொங்கப் பன்மாண், வீயாச் சிறப்பின்வேள்வி முற்றி, யூப நாட்ட வியன்களம் பலகொல்"(புறநா. 15:17-21) என்பதனால் இவன் வேள்வி பல செய்ததறியப்படும்."கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குலந்தவிர்த்த, பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி யென்னும்பாண்டியாதிராஜ(னா)ன், நாகமா மலர்ச்சோலை நளிர்சினை மிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும்பழனக் கிடக்கை நீர்நாட்டுச், சொற்கண்ணாளர் சொலப்பட்ட ஸ்ரீ திமார்க்கம் பிழையாத, கொற்கைக்கிழான் நற்கொற்றன் கொண்ட வேள்வி முற்றுவிக்கக்,கேள்வியந்த ணாளர் முன்பு கேட்கவென்றெடுத்துரைத்து,வேள்விச்சாலை முன்பு நின்று வேள்விகுடி யென்றப்பதியைச், சீரோடு திருவளரச் செய்தார் வேந்தனப் பொழுதே நீரோடட்டிக் கொடுத்தமையான்" (வேள்விக்குடிச் சாஸனம், Epigraphia Indica Vol. 17, No. 16) என்ற சாஸனப் பகுதியினால் இவன் வேள்வி செய்தார்க்குத் தானம் பல செய்தானென்பது அறியப்படுகின்றது. இவனைப் பற்றிய பிற செய்திகள், புறநானூற்றுப் பதிப்பிலுள்ள பாடப்பட்டோர் வரலாற்றால் அறியலாகும்.

புகார் அறு சிறப்பின் செம்மைசான்றோர் பலர் வாய் தோன்றி-குற்றமற்ற சிறப்புக்களையுடையதலைமைகளெல்லாம் அமைந்தோர் பலரும் தம்மிலிருந்துசொல்லப்பட்டு, பலர்வாயென்பதனோடும் பின்வரும்புகரறுசிறப்பைக் கூட்டுக. புகரறு சிறப்பிற் செம்மையாவன :-1"நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்"என்புழிக் கூறப்பட்டவை.
-------
    1.மதுரைக். 469 குறிப்புரையைப்பார்க்க.
---------

766. அரிய தந்து-இவ்விடத்திற்குஅரியவாய் வேற்றுப்புலத்திலுள்ள பொருள்களைக்கொணர்ந்து எல்லார்க்குங் கொடுத்து, குடி அகற்றி-நின்னாட்டில் வாழும்குடிமக்களைப் பெருக்கி, என்றது, செல்வமுண்டாக்கி யென்றதாம்

767. பெரிய கற்று - நற்பொருள்களை விளங்கக்கூறிய நூல்களைக் கற்று, இசை விளக்கி - நின்புகழே எவ்வுலகத்தும் நிறுத்தி,

768. முந்நீர் நாப்பண் ஞாயிறுபோலவும்-கடனடுவேதோன்றுகின்ற ஞாயிற்றையொக்கவும்,

769. பல் மீன் நடுவண் திங்கள்போலவும் - பல மீன்களுக்கு நடுவே தோன்றுகின்ற நிறைமதியைப் போலவும்,

770. பூத்த சுற்றமொடு பொலிந்து இனிதுவிளங்கி - நீ பொலிவு பெற்ற சுற்றத்தாருடனே பொலிவு பெற்று இனிதாகவிளங்கி,

2மண்டிலமாக்கள் தண்டத்தலைவர் முதலிய சுற்றத்தோர்க்கு நடுவே ஞாயிறு போலவிளங்கி, பலகலைகளைக் கற்றோரிடத்தே 3மதிபோலவிளங்கி யென்க.
---------
    1.தொல். புறத். சூ. 20 ; இங்கேகூறப்பட்ட நாலிரு வழக்கினை, "நீஇ ராட னிலக்கிடைகோட, றோஒ லுடுத்த றொல்லெரி யோம்ப, லூரடை யாமையுறுசடை புனைதல், காட்டி லுணவு கடவுட் பூசை, யேற்ற தவத்தினியல்பென மொழிப" (தொல். புறத். சூ. 16, இளம்.சூ. 20, ந. மேற்.) என்பதனாலும். "ஊணசையின்மை,நீர் நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல்,இடையிட்டு மொழிதல், வாய்வாளாமை ; இனி யோகஞ் செய்வார்க்குரியன இயமம் ................ சமாதியென வெட்டும்" (தொல்.புறத். சூ. 20, ந.) என்பதனாலும் அறியலாகும்.
    2.சுற்றத்திடையே இருக்கும் பொழுதுசூரியனை உவமை கூறுதலை, பெரும்பாண். 441-7-ஆம்அடிகளும், 'கடலைச் சுற்றத் திரட்சிக்கு உவமையாக்கலும்ஒன்று' (பெரும்பாண். 443-50, விசேடவுரை) என்ற நச்சினார்க்கினியர்உரையும் அறிவித்தல் காண்க.
    3.கலை நிறைந்தமைபற்றி மதியைஉவமை கூறுதல் மரபென்பது இவ்வுரையாசிரியர் பிறஇடங்களி லெழுதிய உரையினாலறியப் படுகின்றது; முருகு.968 குறிப்புரையைப் பார்க்க.
----------

771-2. பொய்யா நல் இசை நிறுத்தபுனை தார் பெரு பெயர் மாறன் தலைவனாக-உண்மையானநல்ல புகழை உலகிலே நிறுத்தின கைசெய்த மாலையினையும்பெரிய பெயரினையுமுடைய மாறன் முதலாக,

மாறன்-இவன் குடியிலுள்ள பாண்டியன் ;அன்றி ஒரு குறுநில மன்னனென்றலு மொன்று.

773. கடந்து அடு வாய் வாள் இள பல்கோசர்-பகைவரை வென்று கொல்லும் தப்பாதவாளினையுடைய இளைய பலராகிய கோசரும்,

774-7. [இயனெறி மரபினின்வாய்மொழி கேட்பப், பொலம்பூ ணைவ ருட்படப்புகழ்ந்த, மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன, ரவரும்பிறரும் :]

புகழ்ந்த பொலம் பூண் ஐவர் உட்பட(775)-எல்லாராலும் புகழப்பட்ட பொன்னாற் செய்த பேரணிகலங்களையுடையஐம்பெருங்கேளிருமுட்பட,

மறம் மிகு சிறப்பின் குறுநிலமன்னர்(776) அவரும் (777)-மற மிக்க நிலைமையினையுடைய குறுநில மன்னராகிய அவரும்,

பிறரும் (777)-கூறாதொழிந்தோரும்,

இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப (774)-நடக்கின்ற நெறிமுறைமையினாலே நின்னுடைய உண்மையானமொழியைக் கேட்டு அதன்வழியேநடக்க,

777-8. [துவன்றிப், பொற்புவிளங்குபுகழவை நிற்புகழ்ந்தேத்த] பொற்பு விளங்கு புகழ்அவை துவன்றி நின் புகழ்ந்து ஏத்த-பொலிவுவிளங்குகின்ற புகழினையுடைய அறங்கூறவையத்தார் நெருங்கி நின்னுடைய அறத்தின் தன்மையைப் புகழ்ந்துவாழ்த்த,

779-81. [இலங்கிழை மகளிர் பொலங்கலத்தேந்திய, மணங்கமழ் தேறன் மடுப்ப நாளு, மகிழ்ந்து :]

இலங்கு இழை மகளிர் பொலம் கலத்துஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப மகிழ்ந்து - விளங்குகின்றபூணினையுடையமகளிர் பொன்னாற் செய்த வட்டில்களிலே யெடுத்த மணநாறுகின்ற @காமபானத்தைத்தர அதனையுண்டுமகிழ்ச்சியெய்தி மகளிர் தோள்புணர்ந்து (712) எனமுன்னேகூட்டுக.

நாளுமென்பதனைப் பின்னேகூட்டுக.

மணங்கமழ்தேறலென்றதனாற் காமபானமாயிற்று.
--------
    @. பானம், காமபானம் வீரபானமெனஇருவகைத்து ; "மட்டு-காமபானம்" (சீவக. 98, ந.),"நறவு கொண் மகளிர்-காமபானம் செய்யும் வாமமார்க்கப்பெண்காள்" (தக்க. 24, உரை) என உரையாசிரியர்கள்இதனைக் கூறலும், "காம வருத்திய பயிர்க்கு நீர் போலருநற வருந்து வாரை" (கம்ப. ஊர்தேடு.107) என்று கம்பர் குறிப்பித்தலும் இங்க அறியற்பாலன.
----------

781-2. [இனிதுறைமதி பெரும, வரைந்துநீபெற்ற நல்லூழியையே:] பெரு நல் ஊழியை வரைந்து நீ பெற்றநாளும் இனிது உரைமதி-பெருமானே! நன்றாகிய ஊழிக்காலத்தை இத்துணைக்கால மிருத்தியெனப் @பால்வரை தெய்வத்தாலே வரையப்பட்டு நீ அறுதியாகப்பெற்ற நாள்முழுதும் இனிதாகஇருப்பாயென்க.

நல்லூழியென்றார், கலியூழியல்லாதஊழியை.

உம்மை : முற்றும்மை.
------
    @."பால்வரை தெய்வமென்றார்இன்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையும்வகுத்தலின்" (தொல். கிளவி. சூ. 58, ந. )
------

உயர்ந்தோர் மருகனே (23) நெடியோனும்பலே(61) பொருநனே (42) கொற்றவனே (88) வெல்கோவே (105)புகழ்வேந்தே (130) நசைப்பொருநனே (138) போரேறே (144)குருசிலே (151) நீகொற்றவர்தங்கோனாகுவை (74) வாய்நட்பினை(198) பணிந்தொழுகலை (201) பழிநமக்கெழுகவென்னாய்(204) இசைவேட்குவை (205) அன்னாய் (206) நின்கொற்றம்(194) பிறையிற் (193) சிறக்க (194) நின்தெவ்வராக்கம்(196) மதியிற் (195) கெடுக (196) நின்நல்லிசை கெடாதுநிலைஇயர்(209) இனி நீ பாடல்சான்ற நன்னாட்டு நடுவணதாய் (331)இருபெருநியமத்து (365) நாளங்காடிக்கம்பலை (430)நாடார்த்தன்றேயாய் (428) அல்லங்காடி அழிதருகம்பலை(544) புள்ளினிசை யெழுந்தற்றேயாய் (543) ஞாயிறு (546)குன்றஞ்சேருகையினாலே (547) மாலை (558) புகுந்து (557)பின்னர் நீங்க (558) முந்தையாமஞ் சென்றபின்றை(620) மற்றைப் (653) பானாட்கொண்டகங்குல் (631) யாமத்தையும்மற்றை (653) இடையதாகிய (631) கடவுள்வழங்குங்கங்குல்(651) யாமத்தையும் பகலுறக்கழிப்பிப் (653) பாடப் (656)பண்ணக் (658) கைப்பத் (659) தெவிட்ட (660) உறுப்ப (661) நுவலக்(662) கரையத் (667) தோன்ற (669) வாழ்த்த நுவல (670) இசைப்ப(671) இரங்கச் சிலைப்ப (672) இயம்பக் (673) கரைய அகவ(675) முழங்கக் (676) குழுமச் (677) சீப்ப (685) இராக்காலம்தன்னிடத்தினின்றும்போகின்ற வைகறையிலே (686)வளங்கெழு தாரத்தோடே (697) யானையும் (688) புரவியும்(689) ஆயமும் (692) தோட்டியும் (693) கலமுமனைத்தும் (659)கங்கையாறுகடற்படர்ந்தாங்கு (696) அளந்து கடையறியாத(697) கவினிப் (698) புகழெய்திய (699) பெரும்பாணிருக்கையினையும்(342) கிடங்கினையும் (351) புரிசையினையும் (352)வாயிலினையு (356) முடைய நான்மாடத்தான் மலிந்தபுகழைக்கூடுதலையுடைய (429) மதுரையிலே (699) மகளிர் தேறன்மடுப்ப (780)மகிழ்ந்து (781) மகளிர்நறுந் தோளைப்புணர்ந்து (712)சேக்கைத்துஞ்சி (713) எழுந்து (714) உருவினையாகி (724)மார்பிலே (716) பிரசமும் மூசுவனமொய்ப்ப (717) விளக்கம்(719) தொடியொடுசுடர்வரக் (720) கலிங்கத்தைக் (721)கவைஇ (722) மறவர் (726) தாள்வலம் வாழ்த்த (727) மாறன்முதலாகக்(772) கோசரும் (773) ஐவருமுட்படக் (775) குறுநிலமன்னராகிய(776) அவரும்பிறரும் (777) நின்வாய்மொழிகேட்ப (774)நிற்புகழ்ந்தேத்த (778) மறவர்த்தம்மின் (729), செல்வர்த்தம்மின்(731), குரிசிலர்த்தம்மின் (736), ஊக்கலர்த்தம்மின்(743), பெருஞ்செயாட வர்த்தம்மின் (746), ஏனோருந் தம்மெனச்(747) சிலரை வரைந்துகூறி வாயிலிடத்துத் தகையாமற்(748) பிறரும் (746) யாவரும் வருகவெனப் பொதுப்படக்கூறி(747) நாளோலக்கமிருக்குமண்டலத்தேயிருந்து (748)புலவரொடு (750) பாணர்வருக, பாட்டியர்வருக (749), வயிரியர்வருக வெனவழைத்து (750) அவர்காட்டின இரவலர்க்கெல்லாம்(751) நீர்யாரென்னாதே (738) தேரைக் களிற்றொடும்வீசி(752) அரியதந்து குடியகற்றிப் (766) பெரியகற்று இசைவிளக்கி(767) ஞாயிறுபோலவுந் (768) திங்கள்போலவுஞ் (769) சுற்றமொடுபொலிந்து விளங்கி (770) வாழி (208) ; அங்ஙனம்வாழ்ந்து பிறப்பற முயலாது பயனின்றிக்கழிந்தோர்(237) திரையிடுமணலினும் பலரேகாண் (236), அப்பயனின்மையாலே(238) அண்ணலே (207) நீயும் அவ்வாறுகழியலாகாதென்று இவ்வாழ்விற்பெரிதாயிருப்பதொரு பொருளையான்கூறுவேன் (207) ; அஃதுஎன்னாற்காட்டுதலரிது; அதனை நெடியோன்போலத் (763) :தொல்லாணையினையுடைய நல்லாசிரியர் (761) புணர்கூட்டுண்டசிறப்பினையுடைய (762) பல்யாகாசாலைமுதுகுடுமியைப்போல(759) நல்லாசிரியரிடத்தே கேட்டிசின் (208) ; கேட்டுஅதனை நீகண்டவியப்பும் சால்பும் (764) புகரறுசிறப்பிற்(765) செம்மைசான்றோர் (764) பலர் தம்மிலிருந்துசொல்லப்பட்டுப் (765) பெருமானே, (781) நன்றாகிய ஊழிக்காலத்தைஇத்துணைக்காலமிருத்தியெனப் பால்வரைதெய்வத்தாலேவரையப்பட்டு நீஅறுதியாகப்பெற்ற (782) நாண்முழுதும்(780) இனிதாகப் பேரின்பத்தை நுகர்ந்திருப்பாய்(781) ; அதனை நுகராது ஐம்பொறிகட்கும் முன்னிற்கப்படுவனவாகியஇந்நுகர் பொருள்கட்கு நின்னொடு என்ன உறவுண்டு(206) ; இனி நின்னிடத்துண்டாகிய மாயைகெடுவதாக (208)என மாட்டுறுப்பானும் எச்சவுறுப்பானும் வினை முடிக்க.

"அகன்றுபொருள் கிடப்பினு மணுகியநிலையினு, மியன்று பொருள் முடியத் தந்தன ருணர்த்தன்,மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின" (தொல்.செய்யுளில், சூ. 210), "சொல்லொடுங் குறிப்பொடுமுடிவுகொ ளியற்கை, புல்லிய கிளவி யெச்ச மாகும்"(தொல். செய்யுளியல், சூ. 207) என்னுஞ் சூத்திரங்களாற்கூறிய இலக்கணம், "நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பு" (தொல். செய். சூ. 1.) எனத் தொல்காப்பியனார் கூறினமையின், இவரும் நல்லிசைப்புலவராதலின், இங்ஙனம் செய்யுள் செய்தாரென்றுணர்க.
----------

@தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய மதுரைக்காஞ்சிக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று.
-------
    @ (பி-ம்.) 'பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்'
----

வெண்பா

பைங்க ணிளம் #பகட்டின் மேலானைப் பான்மதிபோல்
திங்க ணெடுங்குடையின் கீழானை- &அங்கிரந்து
%நாம்வேண்ட நன்னஞ்சே நாடுதிபோய் நானிலத்தோர்
தாம்வேண்டுங் கூடற் றமிழ். (1)

$சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்
நல்லிருந் தீந்தாது நாறுதலால்-மல்லிகையின்
வண்டார் கமழ்தாம மன்றே @@மலையாத
தண்டாரான் கூடற் றமிழ். (2)
--------
    # (பி-ம்.) 'பகட்டுமேலானை'
    & (பி-ம்.) 'தங்காது'
    % (பி-ம்.) 'நாம்வேண்டு'
    $ "பழுதகன்ற நால்வசைச்சொன் மலரெடுத்து" (திருவிளை. பாயிரம், 12)
    @@ மலையாத தண்தாரன்-ஏனையோர்களாலணியப்படாத ஆரத்தைப் பூண்டவன் ; என்றது இந்திரனால் தரப்பட்ட ஆரமணிந்ததைக் குறிப்பித்தபடி ; "செங்கணா யிரத்தோன் றிறல்விளங் காரம், பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி", "தேவ ரார மார்பன்" (சிலப். 11:24-5, 29 : "கந்துகவரி")
--------




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்