செய்யுளிலக்கணம் - கத்தியரூபம்
இலக்கண நூல்கள்
Backசெய்யுளிலக்கணம் - கத்தியரூபம்.
பூவை - கலியாணசுந்தர முதலியார்
-
Source:
செய்யுளிலக்கணம் - கத்தியரூபம்.
அஷ்டாவதானம் பூவை - கலியாணசுந்தர முதலியாரால் இயற்றப்பட்டு,
பிருங்கி மாநகரம் இராமசாமி முதலியாரவர்களால்
சென்னை: நிரஞ்சனவிலாசவச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
1893.
Registered Copyright.
---
கடவுள் துணை.
சிறப்புப்பாயிரம்
இந்நூலாசிரியர் போதகாசிரியா தசாவதானம்
பேறை - ஜெகநாதப்பிள்ளையவர்கள் இயற்றியது.
பட்டாங்கி ஒளவறிஞரியாவருமே யெளிதாகப் படித்துப் பாடக்
கட்டாய யாப்பின் வகை யனைத்தினையுந் தெளிவாகக் காட்டி மேற்கோள்
சுட்டாரச் செய்யுளிலக் கணமெனுநூ னவரசமுஞ் சொட்டப் பூவை
யட்டாவ தானகலி யாணசுந் தரக்கவிஞ னறைந்திட்டானால்.
-----------
Preface.
A t the present day, when books are multiplying without even a shadow of satisfying the well-known Leibnitzian Principle of Sufficient Reason for their coming into existence, a few words of mine by way of preface will not be out of place heie. My object in this little Manual of Tamil Prosody is to give a clear and comprehensive explanation of the rules and priociples of Tamil Poetic Diction for the use of beginners in the study. The Treatises on Tamil Prosody of ancient date, which are the ground works upon which all later Tamil poetical productions are based, are in the form of sutras, i e., blank or rhyming verses. Manuals of Tamil Prosody of recent recent date, written in prose, are either too compendious or sadly wanting in right order and classification. Hence, the author intended, that, by paying due attention to order and classification and to clearness and simplicity of style in explanation, be will be enabled to place in the hands of beginners in Tamil Prosody what is usually styled by the ordinary role of book makers, a long felt wanted real and not imaginary long-felt want. The points of improvement which the author modestly claims for this little book are among many, chiefly the following : (1) a new and intelligible classification of the Tamil Metrical forms, (2) a simpler and more accurate explanation of the Principles of Tamil versification and (3) an explanation of the most difficult form of Tamil Poetic composition வண்ணம் which is for the first time to be found in prose in this little book.
With these words of preface, I leave the book to the judgmeut of the learned and the learners, with the hope that it will meet with indulgent treatment from my critics. I shall consider myself amply repaid for what little trouble I may have taken in the preparation of this book, if I find that to any the least extent it proves a useful guide in the hands of the students of Tamil Prosody.
MADRAS,
15th Feb. 1893. P. CULLEAUNASUNDROM.
----------
Opinions
From
RAI BAHADUR P. RANGANATHA MUDR. AVL., M.A.,
Professor, Presidency College, Madras.
Sir,
I have perused with pleasure the contents of your செய்யுளிலக்கணம் or Prosody. It seems to me to contain much useful matter. Thoso who care to enjoy the metrical beauty and harmony of Tamil Poetry will do well to study your Manual.
22-12--92.
-----------
From
M. SESHAGRI SASTRIAR, Esq., M.A.,
Professor, Presidency College, Mudras.
My Dear Sir,
Many thanks to you for your Tamil Prosody called செய்யுளிலக்கணம். The treatise is one of best books hitherto published on the subject, The rules are very clear and the examples are well chosen. I am quite sure that the book will be very useful to those who study Tamil poetry and deserves to be in the band of every Tamil student in colleges and soliools.
6-2-93,
----------
From
P, SUNDARAM PILLAI, Esq., M.A.,
Professor, Maharajah's College, Trevandrum,
My Dear Sir,
As desired by you, I have gone through your neat and concise work on Tamil Prosody called செய்யுள் இலக்கணம். I think you have brought out the main points of this very difficult subject with great clearness and force. The examples you have chosen are simpler and more attractive than those generally used in old text books on the subject. I believe you have rendered by this volume considerable service to students who seek to master this branch of our Tamil Grammar. Your notice of வண்ணம் is surely a desirable addition.
26-12-92
-----------
From
C. W. THAMOTHARAM PILLAI, Esq., B.A. L.L.,
Late Judge, Chief Court, Pudukota.
Your Cheyyul ilakkanam has been well written. Concise as it is, it gives in plain prose all that is required for a student to know in Prosody with sufficient illustrations, so that the average student can learn it in half the time he may have to devote to get through Karikai, the present popular work on the subject.
16-1. 93.
--------
From
P. V. RAMASWAMY RAJU, Esq. L.A
Barrinter-at-Law, High Court, Madras,
Dear Sir,
I am happy to inform you that your "செய்யுளிலக்கணம்” has been carefully perused by me and that I find at a concise and useful exposition of the rules of Tamil Prosody. The chief merit about it seems to me to be this--that it will induce its readers to study the higher works on the subject by the very clear and simple manner in which it explains the principles which are more elaborately discussed in the former. It is a source of extreme gratification to me to see your effort in this direction, as unfortunately works of this kind are growing fewer day by day. Wishing your work every success, &c, &c.
5-2-93.
------
From
T. VEERABADRA MUDALIAR, Esq., B.A. L.L.,
Vakeel, High Court of Madras,
Sir,
I have persued your book Seyyal ılakunnm with very great pleasure and interest. It is the first complete work on Prosody of its kind that I have seen, embodying in prose, in a lucid and concise form not only the excellent rules of Prosody contained in Karigai with commentary, but also a variety of very valuable information ou such allied subjects as Porutham, Mangalachol, Prabhandam, &c.
I have no doubt that the book will be appreciated by many readers of Tamil Poetry who ought to be thankful to you for saving them the trouble of wading through annotated Karigai aud Venbapattial which are all, again, out of print now.
15-12-92
------
From
T. T. KANAKASUNDARAM PILLAI, ESQ., B.A.,
Educational Clerk, Govt. Secretariat, Madras.
Dear Sir,
I have perused portions of your book on Tamil Prosody and think it well adapted for use in the school room. To most of the students in our schools and colleges, Tamil Prosody has hitherto been a sealed book, and I am glad to think that your book will obviate all the difficulties in understanding that fourth part of Tamil Grammar and awaken the interest of all students.
28-12-92
--------
From
T. BALASUNDARA MUDALIAR, Esq.,
Munshi to Tamil Translator to Gort. of Walras.
Sir,
Many thanks for the copy of செய்யுளிலக்கணம் you bave kindly sent me. I need only express the pleasure I felt in going over the excellent quotations from eminent Tamil poets, which very well illustrate some of the otherwise inexplicable points in Tamil Prosody. I have read your Manual with a peculiar interest partly because it appears to be an imitation of one of my most favorite books சிதம்பர செய்யுட்கோவை, and partly because it is a work proceeding from an old friend of mine. I feel sanguine that your Manual which displays considerable labour and rosearch on your part cannot but prove useful to those for whom it is intended. Allow me to say that your Manual, the explanatory portions of which, are written in clear and accurate prose deserves to find a place in the hands of every student of Tamil Prosody, as it is sure to save him the laborious task of poring over the pages of காரிகை.
I sincerely hope that your Manual will win for you a fitting recognition at the hands of the Tamil reading public, and that you will be an example to many a learned man who allows his knowledge to get rusty, forgetful of the Poet's remark:
-
“Who reads
Incessantly, and to his readings brings not
A spirit and genius equal or superior,
Uncertain and unsettled still remains
Deep persed in books and shallow in himself."
-------
From
T. SARAVANAMUTTU PILLAI, EsQ, BAR
Librarian, Presidency College, Madras.
Dear Sir
When I began to learn Tamil Prosody I felt very much the want of a book that would bave placed before me in brief compass the elementary principles of Tamil Prosody. After I have seen your Manual I feel quite assured that no such want will be felt by students in the fature. And, moreover, the examples you have throughout given are in themselves a source of true delight to the students of Tamil Literature.
4-1-93
--------
From
N. BALASUBRAMANYA MUDALIAR, Esq, B.A.,
Lale Ag. Mathematics Professor, St Joseph's College, Bangalore.
Sir,
Kindly accept my best thanks for the copy of your செய்யுளிலக்கணம் you kindly sent me. I find it on carefal reading a most excellent Manual of the Principles of Tamil Prosody and the best of its kind I have ever come across. In comparison with those that can be found in any existing treatises on Tamil Prosody, your explanations are real models of lucidity and clearness. Besides, your illustrations are just such as are fitted to exhibit the varied beauties of Tamil Metrical Composition. In my humble opinion, I know of no other book than yours that deserves so well to be in the hands of every student of Tamil Prosody.
With sincere wishes for the success of your Manual, &c., &c.
26-12-92
---------
From
T. RAMAKRISHNA PILLAI, Esq., B.A.,
Bench Clerk, High Court, Madras.
My Dear Sir
I have read with very great pleasure your செய்யுளிலக்கணம் and am glad to state that it is good and supplies a want.
10-1--93.
-----------
செய்யுளிலக்கணம்.
தெய்வ வணக்கம்.
எண்கலைவண்ணப்பா.
குழிப்பு
தனனா தனத் தனனா தனத் தனனாதன
தய்ய தனந்தனனா.
தானார் பதிப் பொருளியாதெனத் தடுமாறிமிர்
குள்ளமயர்ச்சியரார்
சதுமாமறைக்கரிதாகியுத்தமமாமனம்
தைய மொழித்தருள்சேர்
உரனார் விழுத் தகையாளர் பெற் றுளதாய் நிலைத்
தெவ்வயின் முற்றுறைவாய்
ஒருவாதுநித் திய மேன்மையுற் றொளிரோர்முதற்
றெய்வமதைப் புகழ்வாம்
அரனார் துடித் தொனியாலுதித் தழகார் தமிழ்க்
கல்வி வளர்ச்சியினால்
அருணாடிநற் கவிபாடு நற் கதியாவலுட்
கொள்ளுநர்கைக்கொள்நேர்
திரனார் முழுப் புலவோர் மகிழ்ச் சியின் மேவுறச்
செய்யுளிலக்கணமே
திசையாவுமுற்றவிர்வான் மிகத் தெளிவாமெனச்
சொல்வளனைப்பெறவே.
----------
உள்ளடக்கம்
-
1. உறுப்பியல்
2. செய்யுளியல்
3. ஒழிபியல்
4. பாட்டியல்
செய்யுளிலக்கணம் - நூல்.
1. உறுப்பியல்.
எழுத்து, அசை, சீர், தளை, ஓசை, அடி, எதுகை, மோனையென்னுமுறுப் புக்களாற் செய்யப்படுவது.
உயிர், குறில், நெடில், குர்ரியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஆய்தம் , வல்லினம், மெலனம் , இடயினம், உயிரமெய், உயிரளபெடை, ஒற்றளபெடை யெனபனவாம்.
------
எழுத்தானது தனிரோம், இணைந்தேனுரிற்பது. இது நேரசை, நிரை யசையென விருவனகப்படும்.
1.2.1 நேரசை.
குற்றெழுததுக் சனித்தேதும் ஒற்றடுத்தேனும், நெட்டெழுத்துத் தனித்தேனும் ஒற்றடுத்சேனும் கருவது.
க = குற்றெழுத்து தனித்து வந்த ரோசை.
மன = ஞாயிறழ க இத்துவந்த நேரசை.
தா = நெட்டெழு கனத் தயார் நேரசை
பால் = நெட்டெழுத் ஒற்றடுத்துவந்த நோசை.
1.2.2 நிரையசை
குறிலிணைந்தேனும் ஒத்தடுத்தேனும், குயினெடி லிணைந்தேனும் ஒற்ற டுத்தேனும் வருவது.
அரி = குறில்ணைந்து வந்த நிரையசை
மாம் - குறிலிணைந்து ஒற்றடுத்துவந்த நிரையசை
நிலா = குறினெடி வீணைந்துவந்த நிரையசை
வரால் - குறினெடி விணைந்து ஒற்றடுத்து வந்த நிரையசை
------------------
அசையுடன் அசை சேர்ந்து வருவது. இது இயற்சீர், வெண்சீர் , வஞ்சிச் சீர், பொதுச்சீர், அசைச்சீர் என வைந்துவகைப்படும்.
1.3.1. இயற்சீர்.
இரண்டசைகளா வாக்கப்படுவது. இது ஆசிரிய வரிச்சிரென்றும் முதற் ஓரென்றும் சொல்லப்படும்.
வாய்பாடு.
நேர் நேர் = தேமா
நிரைநேர் = புளிமா.
நிரைநிரை கருவிளம்
நேர்நிரை = கூவிளம்
(உ-ம்.) காண்டற் கரிய கடவுளைப் போற்றிட
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
வேண்டிய யாவும் விளையும்
ஈண்டிய வலகி வெம்ம நோக்கே.
1.3.2 வெண்சீர்.
இயற்சீர் நான்கினுக்கும் ஒவ்வொன்றிற்குப்பின் காய் என்னு நேரசை யைக்கூட்ட மூன்று அசைகளாகி வெண்சீர் எனவும், காய்ச்சீரெனவும், இடைச் சீரெனவும் படும்.
வாய்பாடு.
நேர் நேர் நேர் = தேமாங்காய்
நிரை நேர்கோ = பரிமாங்காய்.
நிரை நிரை நேர் = கருவிளங்காய்.
நேர் நிரை நேர் = கூவிளங்காய்,
(உ-ம்.) கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
புளிமாங்காய் தேமாங்காய் கூடயிளங்காய் தேமா
அவையல்ல நல்ல மரங்கள் - சமைாடுவே
புளிமாங்காய் தேமா புளிம கருவிளங்காய்
நீட்டோலை வாசியா நான் குறிப்பறிய
தேமாங்காய் கூவிளம் தேமா கருவிளங்காய்
மாட்டா தவனே மரம்.
தேமா புளிமா மலர்.
1.3.3. வஞ்சிச்சீர்
இயற்சீர் நான்கினுக்கும் ஒவ்வொன்றுக்குப்பின் கனி என்து நிரையசை யைக்கூட்ட மூன்று அசைகளாக வஞ்சிச்சா, கனிச்சீர், கடைச்சரெனவும் வழங்கும்.
வாய்பாடு.
நேர் நேர் நிரை= தேமாங்கனி.
நிரை நேர் நிரை = புளிமாங்கனி
நிரைநிரைநிரை = கருவிளங்கனி
நேர்நிரைநிரை = கூவிளங்கனி
(உ-ம்.) பூந்தாமரைப் போதலமரத்
தேமாங்கனி கூவிளங்கனி
தேம்புனலிடை மன்றிரிதரும்
கூவிளங்கனி கூவிளங்கனி
வளவயலிடைக் களவயின் மகிழ்
கருவிளங்கனி கருவிளங்கனி
வினைக்கம்பலை மனைச் சிலம்பவும்
புளிமாங்கனி கருவிளங்கனி
1.3.4. பொதுச்சீர்
இயற்சீர் நான்கினும் ஒன்றொன்றிற்குப்பின் தண்பூ நறும்பூ , தண்ணிழல் நறுநிழல் என்று மிரண்டசைகூடி வருவன.
வாய்பாடு
தேமாந்தண்பூ தேமாந்தண்ணிழல்,
தேமா கறம்பூ தேமாநறுநிதல்.
பரிமாந் தண்பூ புளிமாந் தண்ணிழல்
புளிமா நறும்பூ புளிமாநறுநிழல்.
கருவிளந்தண்பூ கருவிளந்தண்ணிழில்,
கருவிளநறும்பூ கருவிளநறுநிழல்.
கூவிளந்தண்பூ கூவிளந்தண்ணிழல்.
கூவிளநறும்பூ கூவிளநறுநிழல்.
(உ-ம்.) இந்நூலின் செய்யுளியலில் காட்டியுள்ள குறளடி வஞ்சிப்பாவிற் காண்க.
1.3.5 ஓரிச்சைசீர்
நேரசையும், நிரையசையும், தனித்தனியே சிராகி , நாள் மலர் என்று வழங்குவதுடன், இவற்றுடன் குற்றியலுகாஞ்சேர்த்து காசு , பிறப்பு எனவும் வரும் இவை வெண்பாவின் கடையில் வழங்கும்.
(உ-ம்.) ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கெட்ட காய் = நான்
தன்னூன் பெருக்கக்குத் தான்பிறிதூனுண்பா
னெங்ஙன மாளு பாருள். மலர்
அவிசொரிந் தாயிரம் வேட்டலினொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று. = காசு.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு . = பிறப்பு.
--------------
நின்றசீரின் ஈற்றசையும், வருஞ்சீரின் முதலசையும் விதிப்படி ஒத்திருப் பதாகப் பார்ப்பது தளையாம்.
மா + நேர்நேரொன்சிரியத்தளை
விளம்+ நிரை நிரையொனாசிரியச்னை -- அகவலுக்குரியன்,
மா + நிரை இயந் வெண்டளை, வெண்பாவிற்குரியன.
காய் + நேர் வெண்சீர் வெண்டளை.
காய் + நிரைக் கலித்தளை கலிப்பாவுக்குரியது.
கனி + நிரை = ஒன்றியாங்சித்தளை
கனி + நோ ஒன்று திவஞ்சித்தளை வஞ்சிப்பாவிற்குரியன.
------------
சீர்களின்புணர்ச்சியாங் தோன்றித் தளைகளா வமைந்த செய்யுட்களின் குணமாய் இசைப்பது இது செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசையென நால்வகையாம்.
---------
1.5.1. செப்பலோசை.
இது ஏந்திசைச்செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பலென மூவகையாம், இவை வெண்பாவிற் குரியன.
ஏந்திசைச்செப்பல்
வெண்சீர் வெண்டளையால் முற்று முடியும் வெண்பா
(உ-ம்.) யாதானுங்டாமா ராமா லென்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
துங்கிசைச்செப்பல்
இயற்சீர் வெண்டளையால் முற்று முடியும் வெண்பா
(உ-ம்.) இருமை வகைதெரிந் திண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.
ஓழுகிசைச் செப்பல்.
இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் விரவி முடியும் வெண்பா (உ-ம்) கொல்லான் புலாலை மறுந்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும்.
-----
1.5.2 அகவலோசை.
இது ஏந்திசையகவல், தூங்கிசையகவல் , ஒழுகிசையகவலென மூவகை யாம். இவை அகவலுக்குரியன.
ஏந்திசையகவல்
நேரொன்றாசிரியத்தளையால் முற்று முடிந்த அகவல்.
(உ - ம்.) போது சாந்தம் பொப்பா வேந்தி
யாதி நாதற் சேர்வோர்
சோதி வானந் துன்னு வோரே.
தாங்கிசையகவல்.
நிரையொன்றாசிரியத்தளையால் முற்ற முடிந்த அகவல்.
(உ-ம்.) அணிநிழ லசோகாக் கருணெறி நடாத்திய
மணிதிக விரொளி வரானைப்
பணியவர் பவானி பரிசறுபவரே
ஓகிசையகவல்
நேரொன் றாசிரியத்தளையும் நிரைபொன்முரியாதவையும் விரவி முடியும் அகவல். (உ-ம்.) தானே முத்தி கருதவன் அனைவ
னடியின் வாந் ஆரணைக்
கடிவின் மனத்தாற் கட்டவல் கார்க்சே.
1.5.3. துள்ளலோசை.
இது ஏந்திசைத்துள்ளல், பிரிந்திசைத் துள்ளல், அகவற்றுள்ளல் என மூவகையாம். இவை கலிப்பாவினுக் குரியன.
ஏந்திகைத்துள்ளல்,
கலித்தளையால் முற்று முடிந்த கலிப்பா
(உ - ம்.) திருவனைய கருநெடுங்கட் சிலைநுதலார் மயல்வலையி
லிருநிலக்கண் விழுந்துழலு மெளியவனை யெடுத்தன்பிற்
பொருவரிய நினடியார் புகழுரைத்துத் தினமகக்கட் பரவவருள் புரிவாய்கொல் பசுபதியெம் பெருமானே.
பிரிந்திசைத்துள்ளல்.
கலித்தளையும், வெண்சீர் வெண்டளையும் விரவி முடியுங் கலிப்பா
(உ-ம்) கொரிந்திட்ட மார் பொழிலுட் சூழ்ந்திட்ட வாவியெல்லா
நெரித்திட்ட மணங்கமழு திறையொற்றி யூர்நாட்டில்
விரிந்திட்ட பெருங்கடலே போய்வளையே கம்புள்ளே
பிரிந்திட்ட வென்பலைவன் பெயர்ந்த திசை பேசுவிரே.
அதவாறுள்ளல்.
கலித்தளையும், வெண்சீர் வெண்டளையும், பிறதளைகளும் விரவி வருங் கலிப்பா.
(உ-ம்) நேரலர் போரேறே டோகார்கோமானே
யாரவரை மார்பா வடியேனுயிர்க்குயிரே
காரிருளில் யான்புலம்பக்கானகத்தில் விட்டகன்று
சாலையாயின்னுமிதுனோதின் தண்ணளியே.
--------
1.5.4. தூங்கலோசை
இது எந்திசைத்துங்கல், பிரிந்திசைத் தூங்கள், அவற்றூங்கலென மூல கையாம், இவை வஞ்சிப்பாவிற் குரியன.
ஏந்திசைத்தங்கல்.
ஒன்றிய வஞ்சித்தளையால் முற்று முடியும் வஞ்சிப்பா
(உ-ம்.) வினைத்திண்பகை விழச் சொற்றவன்
வனப்பங்கய மலர்த்தாளினை.
பிரிந்திகைத் தூங்கல்.
ஒன்றாதவஞ்சித்தளையால் முற்று முடிந்த வஞ்சிப்பா.
(உ-ம்.) வானோர்தொழ வண்டாமரைத்
தேனார்மலர் மேல்வந்தரு -
அகவற்றுங்கள்.
ஒன்றிய வஞ்சித்தளையும், ஒன்றாத வஞ்சித்தளையும் விரவிவரும் வஞ் சிப்பா .
செய்யுளிலக்கணம்
(உ-ம்.) பூந்தாமரைப் போதலமரப்
தேம்புனலிடை மீன்றிரிதரு
வளவயலிடை களவையின்மகிழ்,
--------
சீர்களின் தொடர்ச்சியாகும். இருசிரால் வருவது குறளடி. முச்சீரால் வருவது சிந்தடி. நாற்சீரால் வருவது அளவடி. ஐந்து சீரில் வருவது நெடிலடி. ஐந்து சீரில் மிகுந்து எனைத்துச் சீரானும் வருவது கழிநெடிலடியாம்.
1.6.1. குறளடி
(உ-ம்.) மனைதீர்த்து நாயேன்
சினை தீர்ந்த லானே
னனை தீர்த்த பாடே
வினை தீர்த்த தேவே.
1.6.2. சிந்தடி.
நரக வாதையில் வன்பியர்
தரணி மீதொடு கொன்பெரார்
பாரு லோகமு மின்புறார்
அருணை நாயகரன்பறார்.
1.6.3 அளவடி
திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.
1.6.4. நெடிலடி.
முன்னநின் னன்னை முலையூட்டி மையிட்டு மூக்குச் சிந்தி
கன்னமுங் கிள்ளிய நாளல்ல வேயென்னைக் காப்பதற்கே
அன்னமு மஞ்ஞையும் போலிரு பெண்கொண்ட வாண்பிள்ளை
இன்னமுஞ் சின்னவன் நானோ செந்தூரிலிருப்பவனே.
1.6.5. கழிநெடிலடி.
கற்பூரப்பாத்தி கட்டிக் கத்தூரியெருப்போட்டுக் கமழ் நீர்பாச்சிப்,
பொற்பூரவுள்ளியினை விகார்காலு மதின் குணத்தைப் பொருத்தக்கா ட்டும்,
சொற்பேதை யருக்கறிவிக் கினிதாக வருமெனவே சொல்லி னாலு,
நற்போதம் வாராதாங் கவர்குணமே மேலாக நடக்குந்தானே.
இதனின் மிக்க சீர்க்கழிநெடிவடிகள் இந்நூல் செய்யுளியலிற் காண்க.
-----------
அடிகளின் முதலெழுத்துக்கள் மாத்திரை யளவாயொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒத்து வருவது.
(உ-ம்.) அகரமுதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
இதில் அக என்பதற்குப் பக என்பது எதுகையாம்.
சிறுபான்மை வருக்கவெதுகை, நெட்டெழுத்தெதுகை , இனவெழுத்தெகை, ஆசெதுகையெனவும் வரப்பெறும்.
1.7.1 வல்லினவருக்கவெதுகை.
(உ-ம்.) தக்கார் தகவில ரென்ப தவாவ
ரெச்சத்தாற் காணப் படும்.
1.7.2 மெல்லினவருக்கவெதுகை
(உ-ம்.) அன்பீனு மார்வ முடமையதுவினு
நண்பென்று நாடார் சிறப்பு.
1.7.3 இடையினவருக்கவெதுகை
(உ-ம்.) எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கும்
பொய்யா விளக்கே விளக்கு.
1.7.4. நெடிலெதுகை.
(உ-ம்.) ஆவாவென்றே யஞ்சினராழ்ந்தா ரொரு சாரார்
கூகூவென்றே கூவினர் கொண்டாரொருசாரார்.
1.7.5. இனவெதுகை.
(உ-ம்.) அறத்தா றிதுவென வேண்டா சிவிகைப்
பொறுத்தானோ டூர்ந்தா னிடை
1.7.6. ஆசெதுகை
ய்-ர்-ல்-ழ் --- என்னு நான்கு மெய்களுள் யாதானு மொன்று எதுகைக்கிடை யில் வருவது.
(உ-ம்.) காய்மாண்ட தெங்கின் பழம் விழக் கமுகினெற்றிப்
பூமாண்ட தீந்தேன் றொடைக்கீறிவருக்கையொழிய -
மாக்கொடி யானையு மௌவற் பந்தரும்
கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகை –
ஆவே றுருவின வாயினு மாபயந்த
பால்வே றுருவின் வல்லவாம் பால்போல் -
வாழ்கின்றே மென்று மகிழன்மின் வாழ்நாளும்
போகின்ற பூளையே போன்று.
மற்றுஞ்சில் வெதுகைகளுளவாயினும் அத் துணைச்சிறப்பன்று - சொன்ன வற்றுள்ளும் இரண்டாமெழுத்து ஒத்து வரும் எதுகையே மிகச்சிறப்பு.
---------
முதற்சீர் முதலெழுத்துடன் பின்வருஞ்சீர்களில் ஒன்றிலேனும் பலவற்றிலேனு முதலெழுத்தொன்றி வருவது.
உயிரினுள்
அ-ஆ- ஐ -ஒள - இவை தம்முளின மாம்.
இ-ா-ஏ - ஏ - இவை தம்முளினமாம்.
உ --ஓ-ஓ- இவைதம்முளினமாம்.
இவையேறிய உயிர்மெய்களுக்கு மிவ்வாறே கொள்க.
ஒற்றினுள்
ச- த - இவை தம்முளினமாம்.
ரூ - ந.இவை தம்முளினமாம்.
ம -வ - இவை தம்முளினமாம்.
மற்றைய வெழுத்துக்களுக்கு அவ்வவ் வெழுத்துக்களே யினமாம். இம் மோனை யெழுவகையாம் வருமாறு.
பொழிப்பு மோனை.
அளவடிச்செய்யுளில் முதற்சீர்க்கண்ணு மூன்றாஞ்சீர்க்கண்ணு மோனை வருவது.
(உ-ம்.) அரிற்குரற் கிண்கினி யாற்றுஞ் சீரடி
இணைமோனை.
முதலிருசீர்க்கண்ணு மோனைவருவது.
(உ-ம்.) அணிமலா சோகின் றளிர் நலங் கவற்றி -
ஒரு உமோனை.
முதற்சீர்க் கண்ணும் இறுதிச்சீர்க்கண்னுமோனைவருவது.
(உ-ம்.) அம்பொற் கொடிஞ்சி நெடுந்தே ரகற்றி -
கூழைமோனை.
முதல் மூன்று சீர்க்கண்னு மோனை வரத்தொடுப்பது.
(உ-ம்.) அகன்ற வல்கு லந்துண் மருங்குல்.
மேற்கதுவாயமோனை .
இரண்டாஞ்சீரன்றி மற்றைய சீர்களில் மோனை வருவது.
(உ-ம்.) அரும்பிய பொங்கை யன்வளை யமைந்தோள் --
கீழ்க்கதுவாய் மோனை.
மூன்றாஞ்சீரன்றி மற்றையசீர்களில் மோனை வருவது.
(உ - ம்.) அவிர்மதி யனைய திருநுத லரிவை -
மற்றுமோனை.
எல்லாச்சீர்க்கண்ணு மோனை வருவது.
(உ-ம்.) அயில்வே லனுக்கியம்பலந் தமர்ந்த
வேறு சில மோனையுளவேனு மத்துணைச் சிறப்பன்று, அன்றியும் இணை மோனை, இணையியைபு, இணையெதுகை, இணைமுரண் , இணையளபெடை முத லிய இக்காலத்து மிக வருகி வழங்கலால் இவன் விரித்திடாது இந்நூலின் ஒழி பியலிற் காட்டப்பட்டிருக்கிறன.
---------------
2. செய்யுளியல்.
ஈற்றடி முச்சீராய் மற்றையவடி நாற்சீராய் காய்ச்சீரும், இயற் ரும் விரவி ,
இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையுங்கொன்டு,
இரண்டடிக்குக் குறையாமல் செப்பலோசை யுற்று,
ஓரசைச்சீர்கள் நான்கிலொன்றை ஈற்றில் பெற்று முடிவது.
இது குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிலை வெண்பா, சவலைவெண்பா, பஃறொடைவெண்பா, [#] கலிவெண்பா வெனவே ழுவகையாம்.
---
[#] கலிவெண்பாவை வெண்பாவகையிற் சேர்த்துச் செப்பியதற்குக் காரணம் இந்நூலின் ஒழிபியலிற்காண்க.
-----
2.1.1 குறள் வெண்பா .
இரண்டேயடியாய் முதலடி நாற்சிராய் இரண்டாமடி முச்சீராய்வருவது
(உ-ம்) அகா வுயிர்போ லறிவாகி யெங்கு
நிகரிலிடை நிற்கு நிறைந்து.
2.1.2. சிந்தியல் வெண்பா.
இதுநேரிசைச் சிந்தியல் வெண்பாவென்றும், இன்னிசைச் சிந்தியல் வென் பாவென்று மிருவகையாம்.
நேரிசைச்சிந்தியல் வெண்பா
மூன்றடியாய் இரண்டாமடி யிறுதிச்சீர் தனிச்சொல் பெற்று வருவது.
(உ-ம்.) கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை
செங்குவளை பூத்தாள் செயலென்னே - யெங்கோமான்
பங்குற்றுந் தீராப் பசுப்பு.
இன்னிசைச்சிந்தியல்
வெண்பா தனிச்சீர் பெறாதுவருவது.
(உ-ம்) போற்றுமின் போற்றுமின் போற்றுமின் போற்றுமின்
கூற்றங் குமைக்க வருமுன் னமரங்காள்
ஏற்றுவந்தான் பொற்றா ளினை.
2.1.3 நேரிசை வெண்பா.
நான்கடியாய் இரண்டாமடி இறுதிச்சீர் தனிச்சொல்லாய் முன்னிரண்டடி ஒரெதுகையும், பின்னிரண்டடி மற்றோரெதுகையுமாக வரும். முதலிரண் ட்டியிலுள்ள வெதுகை தனிச்சீரிலும் பொருந்தவேண்டும்.
(உ-ம்.) வாக்குண்டா நல்ல மனமுண்டா மாமலரா
ணோக்குண்டா மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதந் தப்பாமற் சார்வார் தமக்கு.
நான்கடியு மொரே யெதுகை பெற்று வரினும் வரும்.
2.1.4. இன்னிசை வெண்பா
இரண்டாமடியி னிறுதிச்சீர்தனிச்சொலின்றி வருவது.
(உ-ம்.) துகடீர் பெருஞ் செல்வந் தோன்றியக்காற் றொட்டுப்
பகடு நடந்த கூழ் பல்லாரோ டுண்க
வகடுற யார்மாட்டு நில்லாது செல்வஞ்
சகடக்காற் போல வரும்.
முன்னிரண்டடி யோரெதுகையாயும் பின்னிரண்ட்டியோரெதுகையாயும் வரும்.
மூன்றாமடியில் தனிச்சீர்பெற்றும், அடிக்டோறுந் தனிச்சீர்பெற்றும் வரும்
(உ - ம்.) காதன் மகளிர் கலக்கக் கலக்குண்டு
பேதுற்றார் நெஞ்சம் பிழைத்தகன்றார் நன்னெஞ்சும்
போதம் படரும் புலியூரோ - தாதுண்டு வண்டுறங்கு பூஞ்சடையோன் வைப்பு.
மழையின்றி மாநிலத்தார்க்கில்லை - மழையுந்
தவமிலா ரில்வழி யில்லைத் - தவமும்
அரசிலா ரில்வழி யில்லை - யாசனும்
இல்வாழ்வா ரில்வழி யில்.
2.1.5. சவலைவெண்பா
இரண்டு குறட்பாப்போன்று நாலடியு மோரெதுகையைப் பெற்று வருவது.
(உ-ம்.) வேலங்கைக் கொண்டு சென்னை விறுபெற நின்றோனே
காலங் கடந்த கதியளிப்பான்
ஞாலங் கருதிடினு நல்குவா னென்கை மறை
மூலங் கழறு மொழி
2.1.6. பஃறெடை வெண்பா.
நான்கடியின் மிகுந்து ஏழடி யிறுதியாக நிரம்பி எதுகை பொருந்தியும் பொருந்தாமலும் வரும்.
(உ-ம்.) வானே நிலனே கனலே மறி புனலே
ஊனே யவ்வூனி லுயிரே யுயிர்த்துணையே
ஆனேறு மேறே யரசே யருட்கடலே
தேனே யமுதே யளியோங்கள் செல்வமே
யானே புலனு நலனு மிலனன்றே
ஆனாலு மென்போன்மற் மூர்பெற்றாாம்பலத்துள்
மாநாட கங்காணும் வாழ்வு.
2.1.7. கலிவெண்பா.
நேரசை வெண்பாவே போன்று எண்ணிறந்த வடிகளை யுடைத்தாய்த் தனிச்சொற் பெற்றுவருவது.
(உ-ம்.) சுடர்த்தொட் கேளாய் தெருவினா மாடு
மணற்சிற்றில் காலிற் சிதையா - வடர்ச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யுஞ் சிறுபட்டி - மேலோர் நா
என்னையும் யானு மிருந்தேமா லில்லிலே
யுண்ணுநீர் வேட்டே னெனவந்தாற் - கன்னை
யடற்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழா
யுண்ணுநீ ரூட்டிவா வென்றா - னெனயானுந்
தன்னை யறியாது சென்றேமற் றென்னை
வளை முன் கைபற்றி நலியாத் - தெருமந்திட்
டன்னா யிவனொருவன் செய்தது கா ணென்றேனுக்
கன்னை யலறிப் படர் ரசத் - தன்னையா
னுண்ணுநீர் விக்கினா னென்றேனா என்னையுந்
தன்னைப் புறம்பழித்து நீவமற் - றென்னைக்
கடைக்கண்ணாற் கொல்வான்போ னோக்கி நகைக்கூட்டஞ்
செய்தானக் கள்வன் மகன்
-------
வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என மூவகையாம். வெண்டாழிசையானது குறட்டாழிசை, வெண்டாழிசை யென விருவகை யாம், வெண்டுறையானது குறள் வெண்செந்துறை வெண்டுறையென விரு வகையாம்.
[§] குறட்டாழிசை.
இரண்டடியாய் நாற்சீரின்மிக்கு எத்துணைச்சிரானும் அமைந்து முதலடி யளவிற்கு ஈற்றடி ஒரு சீரேனும் சில சீரேனும் குறைந்து செப்பலோசை கெட்டுவருவது .
(உ-ம்.) கம்பைமாந்தியின் கரைச்சிறுகன்னிபாத முலைத்தழும்பணி
உம்பர்கோன்விடையொன் றுலகேழுமுண்டதுவே.
இரண்டடியாய்த் தம்முள்ளளவொத்துச்செந்துறைச் சிதைவும் குறட்டா ழிசையாம்.
(உ-ம்.) முன்புலகீன்ற முகிண்முலைக் கன்னியோ
டின்புறும் யோகி யெழுபுவிக் காசே.
குறட்பாவிற்குரிய தளைகெட்டு ஓசை சிதைந்து வரினும் குறட்டாழிசை யாம்.
(உ-ம்.) பின்றாழ் நறுங்கூந்தற் பிடிதழீஇ மால்யானைக்
கன்றீனு முக்கட் களிறு,
----
[§] தாழிசைக்குறளெனினுமாம்.
-----------
[#] வெண்டாழிசை.
மூன்றடியாய் முதலிரண்டடியும் நன்னான்கு சீராய் நாற்றடி முச்சீராய்ச் சிந்தியல் வெண்பா போன்று தளைகொட்டுவருவது.
(உ-ம்.) கனக மார்க வின்செய் மன்றில்
அனக நாட கற்கெம் மன்னை
மனைவி தாய்தந்தை மகள்.
சிந்தியல் வெண்பா மூன்று ஒரு பொருண்மே லடுக்கி வரினும் வெண்டாழி சையாம்.
(உ-ம்.) அம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே
கொம்பே றுடையாள் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வம்பே யிறந்து விடல்.
வாணேருண் கண்ணாரக் கழிந்த மடநெஞ்சே
நீணாகம் பூண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வீணே யிறந்து விடல்.
கோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே
ஆளாகியாண்டான் கழலிறைஞ்சா நென்கொலியாம்
வாளா விறந்து விடல்.
[$] செந்துறை
அளவொத்த அளவடியிரண்டாய் விழுமிய பொருளும் ஒழுகிய வோசை யுமாய் வருவது.
(உ - ம்.) கொன்றை வேந்தன் செல்வ னடியினை
யென்று மேத்தித் தொழுவோ மியாமே.
வெண்டுறை
மூன்றடி முத லேழடியீறாகப் பின்பு நின்ற சிலவடிகளில் சிலசீர் குறைந் துவரும். இவற்று ளெல்லாவடியு மோரோசையாயும் பின்பிற் சிலவடிக்கண் மற்றோ ரோசையாயும் வருதலுமுண்டு.
------
[#] வென்ளொத்தாழிசை யெனினுமாம்.
[$] செந்துறை வெள்ளை அல்லது குறள் வெண்செந்துறை யெனினுமாம்.
-------
முதலடியறு சீராய் ஏனையடி நாற்சீராய்வந்த மூன்றடி வெண்டுறை.
(உ-ம்) பாசிருக்குந் தமிழ் மூவர் பாட்டிருக்குந் திருமன்றிற் பாசொன்
அரசிருக்கும் பெருமானார்க்காட் செய்யாரென் செய்வார் றேந்தி
முரசிருக்கும் படை நமனார் முன்னாகுமந்தாளே.
முதலடியிரண்டும் அறுசீராய் ஒரோசைத்தாய் ஏனையடி நாற்சீராய் வந்த வேறோரோசைத்தாய் ஏழடி வேற்றொலி வெண்டுறை.
(உ-ம்) கூற்றிருக்குமடலாழிக்குரிசின் முத லோரிறைஞ்சக் கொழுந் தேன்பில்கி
ஊற்றிருக்குந்தில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன்மன்றத் கொருதாரூன்றி
வண்டுபாடச்சுடர் மகுடமாடப்பிறைத்
துண்டமாடப்புலித் தோலுமாடப்பாகி
ரண்டமாடக்குலைந் தகிலமாடக்கருங்
கொண்டலோடுங்குழற் கோதையோடுங்கறைக்
கண்டராடுந்திறங் காண்மினோகாண்மினோ.
[@] வெளிவிருத்தம்.
மூன்றடியாலேனும், நான்கடியாலேனு முற்றுப்பெற்று அடிதோறு மிறுதியில் ஒரேதன்மையான சொல்லைப் பெற்று வருவது.
மூன்றடியால் வருவது.
(உ-ம்) அங்கட்கமலத் தலர்க்கமல் மேயிரு நீரேபோலும்
வெங்கட் சுடிகை விடவாவின் மேயீருநீரேபோலும்
திங்கட்சடையீருந்தில்லைவனத்துள்ளீருநீரே போலும்.
நான்கடியால் வருவது.
(உ-ம்) வெஞ்சமன்வஞ்ச வேலொடெதிர்ந்தானமாங்காள்
அஞ்சலெனுஞ் சொல்லார் சொல்வல்லார் நமாங்காள்
மஞ்சிவரிஞ்சி மன்றமிறைஞ்சீர்நமரங்காள் நஞ்சமயின்றார் நல்குவர்மாதோநமாங்காள்.
----
[@] வெளிவிருத்தம், வெண்பாவிருத்தம், வெள்ளை விருத்தம் என்பன ஒரு பொருட்கிளவி.
-------
அடி யொன்றுக்கு நான்குசிராய் இயற்சீர்பயின்றும், வெண்சீர்விரவியும், மூன்றடிக்குக் குறையாமல் பலவடிகளால் அகவலோசையுற்று இறுதியில் [§] ஏயென்னும் சையுடன் முடிவது.
இவ்வாசிரியப்பா நேரிசையாசிரியப்பா, நிலைமண்டில வாசிரியப்பா, இணைக் குறளாசிரியப்பா, அடிமறி மண்டில வாசிரியப்பா வெனரான் குவகையாம்.
----
[§] ஆ- ஏ -ஓ- என்னே என்கிற அசைகளையும் இறுதியிற்பெறும். ஆயினும் நிலைமண்டில வாசிரியம் - என்னே - என்னும் இறுதியையும், மற்றையவை - ஏ - என்னும் இறுதியையும் பெறுதல் சிறப்பு.
-----
நேரிசையாசிரியப்பா
எல்லாவடிகளுநாற்சீராய் நாற்றுக்கயலடி முச்சீராய் முடிவது.
(உ-ம்) செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி
பாதம் போற்றும் வாதவூரன்ப
பாவெனப் படுவதுன் பாட்டுப்
பூவெனப் படுவது பொறிவாழ் பூவே.
நிலைமண்டில வாசிரியப்பா
எல்லாவடிகளுநான்கு சீராலேயே முடிவது.
(உ-ம்) கடம்பணி தொடையன் மிடைந்த தடந்தோள்
வன்றிற லெஃக மேந்திய வலவன்
கொன்றையன் சடிலத் தாசான் மன்ற
பற்றினர் பைய்யுட் பற்றி தென்னே.
இணைக்குறளாசிரியப்பா.
முதலடியும் கடையடியும் நான்கு சீராய் இடையில் வருமடிகள் இரண்டு சீராயும், மூன்று சிராயும் வருவது.
(உ-ம்) தண்ணென் கடுக்கை கண்ணீர் கலுழ்தர
வெண்மதி கண்ணி சூடும் கண்ணுதற் கடவுள்
புண்ணியப் பொதுவி லாடும் பூங்கழ லிறைஞ்சுதும்
விண்மிசை போகிய வீடுபெறற் பொருட்டே.
அடிமறி மண்டில்வாசிரியப்பா
எல்லாவடிகளையு முதலாகவும், ஈறாகவும், நடுவாகவு மாறிமாறி வைத்துப் படிக்கினும் பொருள் கெடாது வருவது.
(உ-ம்) தீர்த்த மென்பது சிவகங் கையே
யேத்த ருந்தல மெழிற்புலி யூரே
மூர்த்தி யம்பலக்கூத்தன துருவே.
ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்த மென மூன்றாம்.
2.4.1 ஆசிரியத்தாழிசை
மூன்றே யடியாய் அளவொத்துத் தனித்தாயினும், ஒருபொருண்மேன் மூன்றடுக்கியாயினும் வருவது.
(உ-ம்) என்றுஞ் சென்று மியைவரு முச்சியா
ரின்றுந் துன்று மெழின்மகி ழொற்றியூ
ரொன்றும் பொன்று முயிரடர் மிச்சையே.
மூன்றடுக்கி வருவது. (உ-ம்)
சிற்றம்பலத்து நடிக்குஞ் சிவபெருமான்
கற்றைச் சடைக்கு முடிக்குஞ்சுடர்த்திங்கள்
மற்றப் புனன் மங்கை வாணுதலை யொக்குமால்.
பேரம்பலத்து நடிக்குஞ்சிவபெருமான்
வார்செஞ்சடைக்கு முடிக்குஞ்சுடர்த்திங்கள்
நீர்மங்கை கொங்கைக்கு நித்திலக்கச்சொக்குமால்.
பொன்னம்பலத்து நடிக்குஞ் சிவபெருமான்
மின்னுஞ் சடைக்கு முடிக்குஞ் சுடர்த்திங்கள்
அந்நங்கை செங்கைக் கணிவளையு மொக்குமால்.
2.4.2 ஆசியத்துறை
எனைத்துச் சீரானும் வருமடி நான்குடையதாய் ஈற்றயலடி குறைந்தேனும் முதலடியு மூன்றாமடியுங் குறைந்தேனும் வருவது. வருமிடத்து இடைம் டங்கியு மடங்காதும் வரும்.
(உ-ம்.) நாகம் பொதிசடைமேனாண்மதியும் வாண்மதிபோனங்கைகங்குல்
மேகஞ்செய் கூந்தன்மிலைச்சுந்தலைக்கலனும் விளங்குந்தோற்றம்
ஆகம் பகுந்தளித்த வந்தாளி லம்பலத்தான்
மாகம்பதியு மதியும் பகுந்தளித்த வண்ணம் போலும்.
இடைமடக்காய் வருவது,
(உ - ம்.) மாயிரு ஞாலத்து மன்னுயிர்கள் கண்களிப்பமன்றுளாடு
நாயகன் கண்டங் கறுத்தன்றே பொன்னுலகை நல்கிற்றம்மா
நாயகன் கண்டங் கறாதே லந்நாட்டமரர் சேயிழைமாதருக்குச்செங்கைகளுங்கொங்கைகளுஞ்சிவக்கும் போலும்
2.4.3 ஆசிரிய விருத்தம்.
கழிநெடிலடி நான்கு தம்முள் ளளவொத்து வருவது.
அறுசீர் விருத்தம்
மண்டலத்தின் மிசையொருவன் செய்தவித்தை யகோவெனவும் வாரனாதி,
யண்டமவையடுக்கடுக்காயந்தரத்தினிறுத்தும் வதானம் போல ,
வெண்டரு நல்லகிலாண்டகோடியைத் தன்னருள் வெளியிலிலக வைத்துக்
கொண்டு நின்றவற்புதத்தையெவராலுநிச்சயிக்கக்கூடாவொன்றை
இது முதல் நாற்சீர் காய்ச்சீர்களாகவும் கடை இருசீர் இயற்சீராகவு முடிந்தது .
வேறு.
நேற்றுளா ரின்று மாளா நின்றன ரதனைக் கண்டும்
போற்றிலே னின்னை யந்தோ போக்கினேன் வீணே கால
மாற்றிலேன் கண்டா னந்த வண்ணலே யளவில் மாயைச்
சேற்றிலே யின்னம் வீழ்ந்து திரைக்கவோ சிறிய னேனே.
இது அறுசீரும் இயற்சீராலேயே முடிந்தது.
வேறு,
சொல்லற் கரிய பரம்பொருளே சுகவா ரிதியே சுடர்க்கொழுந்தே
வெல்லற் கரிய மயலிலெனை விட்டெங் கொளித்தா யாகெட்டேன்
கல்லிற் பசிய நாருரித்துக் கடுகிற் பெரிய கடலடைக்கு
மல்லிற் கரிய வந்தகனார்க் காளாக் கினையோ வறியேனே.
இது மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீராய் மற்றைய இயற்சீரால் முடிந்தது.
வேறு.
கண்டு நின்றனை யைம்புல னேமகிழ் காமக் கைதவத்தில்
தொண்டு செய்கிலை யொற்றி யூர்வளர் தொன்மை யடியவர்பால்
விண்டு பேசிலை நால்வ ரின் புகழ் வியந்து நாடோறுங்
கொண்டு போதர வென்ன வோதடை கொடிய கூற்றுவற்கே.
இது முதலைந்துசீர் இயற்சீராயும் கடையொருசீர் காய்ச்சீராயு முடிந்தது.
எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
ஆரண மார்க்கத் தாகம வாசியற்புத மாய் நடந்தருளுங்
காரண முணர்த்துங் கையுதின் மெய்யுங் கண்கண்மூன்றுடைய வென் கண்ணே
பூரணவறிவிற்கண்டிலமதனாற்போற்றியிப் புத்தியோடிருந்து
தாரணி யுள்ள மட்டுமே வணங்கத் தமியனேன் வேண்டிடத் தகுமே.
இது முற்று மியற் சீராலேயே முடிந்தது.
வேறு.
அல்லையொத்த சூர்மேல் வில்லெடுத்த கூர்வே
லையனுக்கு வாழ் தாதையுமாவார்,
வல்லி யொத்தபூணார்ரையலுக்குமாலாம்
வள்ளலுக்கு வாழ்வாகிய மூதூர்
செல்லுழக்கி வேள் போர் வில்லொடித்துமீனார்
செய் யழித்து வாடா வயல்வாளை ,
புல்லொதுக்கிலே போய் நெல்வாப்பி லேசேர்
புள்ளிருக்கு வேரூர்நகர் தானே.
இது காய்ச்சீரும் இயற்சீரு மாறிமாறி வந்து முடிந்தது.
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
அருள் பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே
யாரமிர்தேயென்கண்ணே யரிய வான
பொருளனைத்துந் தரும் பொருளே கருணை நீங்காப்
பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே
கருதரிய கருந்ததனுட் கருத்தாய் மேவிக்
காலமுந்தே சமும் வகுத்துக் கருவியாதி
விரிவினையுங் கூட்டியுயிர்த் திரளை யாட்டும்
விழுப்பொருளே யான் சொலும் விண்ணப்பங் கேளே.
இது அரையடிக்கு இரண்டு காய்ச்சீரும் இரண்டு இயற்சீருமா யிரட்டித்து வருவது,
வேறு.
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந் தேடி
நலமொன்று மறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வெழுகின்ற புற்றீசல்போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவு மாட்டீர்
கவட்டுத்தொன் மரத்திடுக்கிற் கானுழைந்துக் கொண்டே
யாப்பதனைப் பிடித்தசைத்த பேய்க்குரங்கைப் போல
வகப்பட்டீர் கிடந்துழல் வகப்பட்டீர் நீரே
இது அரையடிக்கு முதல் மூன்று சீர் காய்ச்சீராயும், கடைச்சீர் மாச்சீராயு மிரட்டித்து வருவது.
வேறு.
வற்கலை கொண்டும் வலியவந் தண்டும்
வனசரு குண்டும் வளியது தின்றுங்
கற்களி லென்றுங் கனலிடை நின்றுங்
கனபசி விண்டுங் கதிபெற விலையா
னற்கலை தேர்ந்த வொற்றியை யார்ந்து
நவமனை வேய்ந்து மனைவியை வாய்ந்து
பொற்பணி சார்ந்து மகவுடன் வாழ்ந்தும்
புகழ்தரு சிவகதி நிகழ்வது நிசமே.
இது எல்லாச்சீரும் இயற்சீராலேயே முடிந்தது.
---------
ஒன்பதின் சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
வளங்கு லாவரு மணங்க னார்விழி மயக்கி லே முலை
முயக்கி லேவிழு மாந்தர்காள்
களங்கு லாமுட லிறந்து போயிடு காடுசேர்முனம்
விடு சேர்வகை கேண்மினோ
துளங்கு நீள்கழ லறங்க வாடல் செய் சோதி யானணி
பூதியானுமை பாதியான்
விளங்கு சேவடி யுளங்கொளீரெமன் விடுத்த பாசமு
மடுத்த பாசமு விலக்குமே.
பதின் சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
கைத்தலத் தழற்க ணிச்சி வைத்திடப் புறத்தொருத்தி
கட்கடைப் படைக்கிளைத்த திறலோரா
முத்தலைப் படைக்க ரததெ மத்தர்சிற் சபைக்கு ணிற்கு
முக்கணக் கருக்கொருந்தர் மொழியாரோ
நித்திலத் திளைப்ப தித்த கச்சறுத் தடிக்க னத்து
நிற்கு மற்புதத் தனத்தி னிடையேவே
ளத்திரத் தினிற்றொடுத்து விட்டு நெட்டயிற்களித்தி
லக்கனுற் றிடச்செய்விக்கு மது தானே.
பதின் சீரின் மிக்கு வரும் ஆசிரியவிருத்தங்கள் பிள்ளைத்தமிழ் முதலிய பிரபந்தங்களிற் காண்க.
--------
நேரீற்று இயற்சீரும் , நிரைநடுவாகிய கனிச்சீரும் பெறாது, நிரை முதலாகிய வெண்பாச்சீர் மிகுந்து தன்தளையும் பிறகளையும் தழுவி தரவு[#], தாழிசை அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறுறுப்பு முடைத்தாய் வருவது.
இது ஒத்தாழிசைக்கலிப்பா, வெண்கலிப்பா, கொச்சகக்கலிப்பா, கட்ட ரைக்கலிப்பா வென நான்காம்.
ஒத்தாழிசைக்கலிப்பாவான துவண்ணகவொத்தாழிசைக்கலிப்பா, அம்போ தரங்க வொத்தாழிசைக் கலிப்பா, நேரசையொத்தாழிசைக் கலிப்பா வெனமூன்றாம்
--------
[#] தரவு என்ற பொருண்மையென்னவெனின் முகத்துத்தரப்படுவதென்ப. தாழிசையென்ற தென்னையெனின் பெரும்பாலுந் தாழப்பட்ட ஓசையுற்ற வாகலினென்பது.
அராகமென்பது அறாதுக்கடுகிச் சேரல் மாத்திரை நீண்டும் துணிந்தும் வாராது குற்றெழுத்துப் பயின்று வந்து நடைபெறுவது.
அம்போதரங்கம் - அம்போதி = கடல், தரங்கம் = நீர்த்திரை , நாற்சீரடி முச் சீரடி இருசீரடி ஆகிய அசையடிகள் கடலின் கண் அலைகள் கரைச்சாரசாரமுறை முறையே சுருங்கி வருகின்ற தன்மைபோல, தனிச்சொல்லைச்சாரசாரமுறையா கக்குறைந்து வருவது.
சுரிதகமென்பது நீர்ச்சுழி போல நின்று சுரிந்து இறுவது,
------------
வண்ணகவொத்தாழிசைக்கலிப்பா
தரவு, தாழிசை , அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் ஆகிய ஆறுறுப்புக்களும் பெற்று வருவது.
2.5.1. தரவு.
(உ-ம்.) தொல்லுலகம் படுசுடிகைச் சுடர் மணிவிளக்கேந்தும்
பல்பொறிய படவரவு மடுபுலியும் பணி செய்ய
அந்தரதுந் துபிமுழங்க வமரர்மலர் மழைசிந்த இந்திரனு மலரவனுங் கரியவனு மேத்தெடுப்பச்
சூடகத்த ளிர்ச்செங்கைத் துணைவி துணைக் கண்களிப்ப
ஆடகத்திருமன்றத் தனவாத நடஞ்செய்வோய்,
2.5.2 தாழிசை
முன்மலையுங் கொலைமடங்க லீருரியு மும்மதத்த
வன்மலையுங் கடமலையின் முடையுடலின் வன்றோலும்
பொன்மலையின் வெண்முகிலுங் கருமுகிலும் போர்த்தென்ன வின்மலையும் புயமலையின் புறமலைய விசித்தனையே.
கடநாக மெட்டும் விடங் கானாக மோரெட்டுந்
தடநாக மோரெட்டுந் தரித்துளபூந் துகிலொன்றும்
உடனாக வடல் புரியுங் கொடுவரியி னுடுப்பொன்றும்
அடனாக வரவல்குற் கணிகலையா யசைத்தனையே.
வருநீலப் புயன்மலர மலரிதழிக் கண்ணியையும்
அருநீல முயற்களங்க மகன்றமதிக் கண்ணியையும்
கரு நீலக் கண்ணியுமை செங்கைவரு கங்கையெனும்
திருநீலக் கண்ணியையுஞ் செஞ்சடைமேற் செறித்தனையே.
2.5.3 அராகம்.
கறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர்
பிறையெயி றொடுமுடல் பெறுபக டொடுமடல்
எறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு
மறலிய துயிர்கொள் மலர்தரு கழலினை.
உலகமொ டுயிர்களு முலைதர வலம் வரும்
மலர்மகள் கொழுநனு மகபதி முதலிய
புலவரு மடிகளொர் புகலென முறையிட
அலைகடல் விடமுண மமுது செய் தருளினை.
விசையிலெம் மிறைவியும் வெருவா விரசித்
அசலம் தசைதா வடல் புரி சாமுக
நிசிசான் மணிமுடி நெறுநெறு நெறுவென
வசையில் பொன் மலரடி மணிவிர னிறுவினை
இலவிதழ் மதிநுத லிரதியொடிரதம்
துலைவற நடவிடு மொருவனும் வெருவர
அலைகட னெடுமுர சதிர்தர வெதிர்தரு
சிலைமத னணையடல் செய்து நல் விழியினை.
--------
2.5.4 ஈரடி யம்போதரங்கம். (2)
அருவமு முருவமு மாகிநின்றுமவ்
அருவமு முருவமு மகன்று நின்றனை
சொல்லொடு பொருளுமாய்த் தோன்றிநின்று மச்
சொல்லையும் பொருளையுந் துறந்துநின்றனை
ஓரடியம்போதரங்கம். (3)
அந்நலம் விழைந்தவர்க் கறமு மாயினை
பொன்னலம் விழைந்தவர் பொருளுமாயினை
இன்னலம் விழைந்தவர்க் கின்பமாயினை
மெய்ந்தலம் விழைந்தவர் விடுமாயினை.
முச்சீரோரடி யம்போதரங்கம். (3)
முத்தொழிலின் வினைமுதனீ மூவர்க்கு முழுமுதனீ
எத்தொழிலு மிறந்தோய் நீ இறவாத தொழிலினை நீ
இருவிசும்பின் மேலோய் நீ எழின்மலரின் மிசையோய் நீ
அரவணையிற் றுயின்றோய் நீ ஆலின் கீழமர்ந்தோய் நீ.
இருசீரோரடியம்போதரங்கம். (16)
பெரியை நீ சிறியை நீ பெண்ணுநீ ஆணுநீ
அரியை நீ எளியை நீ அறமு நீ மறமு நீ
விண்ணு நீ மண்ணுநீ வித்து நீ விளைவு நீ
பண்ணு நீ பயனுநீ பகையுநீ உறவு நீ.
எனவாங்கு - இது தனிச்சொல்.
-----------
2.5.5 சுரிதகம்.
கற்பனை கழன்றநின் பொற்கழ லிறைஞ்சுதும்
வெண்மதிக் கடவுண் மீமிசைத் தவழ்தரத்
தண்முகிற் குலங்க டாழ்வுறப் படிதலிற்
செங்கா லன்னமும் வெண்மருப் பேனமும்
கீழ்மே லுருவ வாரழற் பிழம்பாய்
நின்றநின் றன்மையை யுணர்த்தும்
பொன்றிகழ் புலியூர் மன்றுகிழ வோனே .
அம்போதரங்கவொத்தாழிசைக் கலிப்பா
இதில் அராகம் நீங்கலாகத் தரவு, தாழிசை, அம்போதரங்கம், தனிச் சொல், சுரிதகம் என்னு மைந்துறுப்பினைப் பெற்று வருவது.
நேரிசையொத்தாழ்சைக்கலிப்பா
இதில் அராகமும், அம்போதரங்கமும் நீங்கலாக, ஒருதரவும் மூன்று தாழி சையும், தனிச்சொல்லும், சுரிதகமும் ஆக நான்கு உறுப்பினைப் பெற்று வருவது.
வெண்கலிப்பா
கலித்தளை நிறைந்து கலியோசையும், வெள்ளோசையும் தழுவி நான்கடி முதல் எத்தனையடியாயினும் வந்து ஈற்றடி மூன்று சீரால் முடிவது.
(உ-ம்.) சேல் செய்த மதவேற்கட சிலை செய்த சுடிகைநுதன்
மால் செய்த குழற்கோதை மகிழ் செய்ய நடஞ்செய்யும்
தருணவிளம் பிறைகண்ணித் தாழ்சடையெம் பெருமானின்
கருணை பொழி திருநோக்கிற் கனியாத கன்னெஞ்சம்
வாமஞ்சான் மணிக்கொங்கைக் கொசிந்தொல்கு மருங்குலவர்
காமஞ்சால் கடை நோக்கிற் கரைந்துருகா நிற்குமால்
அவ்வண்ண மாறிநிற்ப தகமென்றா லகமகம்விட்
டெவ்வண்ண மாறி நிற்ப தின்று.
---------
தரவு கொச்சகக்கலிப்பா, தரவினைக் கொச்சகக்கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என வைந்தாம்.
2.6.1 தாவு கொச்சகக் கலிப்பா
கலிப்பாவிற்குரிய வறுப்புகளெல்லா மின்றி ஒருதாவுமாத்திரம் மூன்றடி யானும், நான்கடியானும், ஐந்தடியானும் வருவது தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்று வருவதுமுண்டு.
மூன்றடித்தாவு கொச்சகம்.
வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய
கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாங்
கொடிபடு வரைமார்பிற் கூடலார் கோமானே.
நான்கடித்தரவு கொச்சகம்.
அடி கொண்ட குறிப்பன்றே யரிபிரமர் முதலானோர்
முடி கொண்ட தலைவணக்கின் குனிப்பெல்லா முறைமுறை போய்க்
கடிகொண்ட பொழிற்றில்லை நடராஜன் கழற்காவில்
குடி கொண்ட படிபோலு மிடத்தாறிற் குஞ்சிரமே.
ஐந்தடித்தரவு கொச்சகம்
நாட்டும் புகழ்வாய்ந்த நம்பலகை நாதனா
கூட்டிவைக் குந்தூது கொண்டனர் கா ணம்மானை
கூட்டிவைக் குந்தூது கொண்டனரே யாமாயி
னாட்டினர்க ளெல்லா நகையாரோ வம்மானை
நகைப்பரென வூரொற்றி நண்ணினர்கா ணம்மானை
தனிச்சொற்சுரிதகம் பெற்று வந்ததாவு கொச்சகம்
மல்லாண்ட திரடிண்டோ ணடுமுதலு மணிநாவிற்
சொல்லாண்ட மறை முதலும் பலராங்குத் துலைவெய்த
பல்லாண்டு செலச்செல்லா வினையோடும் பனிப்பெய்த
அல்லாண்ட நல்லிருளி லழகாடுந் தொழிலினையே.
அதனால்.
பல்பேரூழி செல்லினுமடிகட்
கொல்லையுஞ்செல்லாதாமாகலின்
அளவில் கால மலக்கணுற்றுழலுமென்
தளர்வு நோக்காய் போலுநோக்கில்
கருணை செய் தருளாயல்லை அருணலம் பழுத்த வாடல்வல்லோயே
----------
2.6.2 தரவினைக் கொச்சகக்கலிப்பா.
இரண்டு தாவுமாத்திரம் வருவது (தனிச்சொல் சுரிதகத்துடன் வருவது முண்டு)
(உ - ம்.) குழைதூங்கு கழைமென்றோட் கோமாரி கொலைக்கண்கள்
இழை தூங்கு முலைக்கண்வைத் தேயெய்தா நானெய்த
உழை தூங்கு குயிலேங்க வுருமுத்தீ யுகநக்கு
மழைதூங்கு பொழிற்றில்லை மணிமன்று ண்டஞ் செய்வோய்.
மீனேற்றின் றுவசந்தான் மனிதுஞ்ச விழித்தோய்நின்
ஆனேற்றின் றுவசமோ வடலேற்றி னூர்தியோ
கானேற்ற பைங்கூழின் கவளமா கணத்தின்கண்
வானேற்ற பகிரண்டம் வாய்மடுக்க வல்லதே.
2.6.3 சிஃறாழிகைக் கொதிக்கக்கலிப்பா.
ஒரு தாவும் சில தாழிசையும் இடையிடை தனிச்சொல்லும் சுரிதகமும் வர முடிவது.
தரவு.
மறைதங்கு திருமன்றி னடங்கண்டு மகிழ்பூத்துக்
கறை தங்கு கலை நிறையிற் கோளிழைக்குங் கொல்லென்று
நிறைதங்கு தலையுவவு நிரம்பாது நிரப்பெய்தும்
பிறை தங்கு சடைக்கற்றைப் பெரும்பற்றப் புலியூரோய்.
எனவாங்கு.
தாழிசை . (ங)
வெள்ளெருக்குங் கரும்பாம்பும் பொன்மத்து மிலைச்சியெம்
துள்ளிருக்கும் பெருமானின் றிருமார்பி னுறவழுத்தும்
கள்ளிருக்குங் குழலுமையாண் முலைச்சுவட்டைக் கடுவொடுங்கு
முள்ளெயிற்ற கறையாவ முழையென்று நுழையுமால்.
அதாஅன்று,
சிலைக் கோடி பொருமருப்பிற் புகர்முகனின்றிருமார்பின்
முலைக்கோடு பொருசுவட்டைக் கண்டுநின் முழவுத்தோள்
மலைக்கோடி விளையாடு பருவத்து மற்றுந்தன்
கொலைக்கோடு பட்டவெனக் குலைந்து மனங் கலங்குமால்.
--------
அதா அன்று,
விடமார்ந்த சுடரிலைவேல் விடலைகின் மணிமார்பில்
வடமார்ந்த முலைச்சுவட்டைக் கண்டு தன் மருப்பெந்தை
தடமார்பம் விடர் செய்யச் சமர் செய்தான் கொல்லென்று
கடமாவெங் கவுட்சிறு கட் கயாசுரனை வியக்குமால்.
அதனால்,
சுரிதகம்.
சிலை முகங் கோட்டுமர் சில்லரித் தடங்கண்
முலைமுகங் கோட்டிணைகுமால்
மலைமுகங் போட்டுகின் மற்புய மறைந்தே
2.6.4 பஃறழிசைக் கொச்சகக்கலிப்பா.
ஒருத்தரவும் பலதாழிசையும், தனச்சொல்லும், சுரிதகமும் வர முடிவது.
காவு.
ஒருநோக்கம் பகல் செய்ய வொரு நோக்க மிருள் செய்ய
இருநோக்கிற் றொழில் செய்துந் துயில் செய்து மினைத்துயிர்கள்
கருநோக்கா வகைகருணைக் கண்ணோக்கஞ் செய்ஞ்ஞானத்
திருநோக்க வருநோக்க மிருநோக்குஞ் செயச்செய்து
மருநோக்கும் பொழிற்றில்லை மணியன்று னடஞ் செய்வோய்.
தாழிசை (கூ)
கடிக்கமலப் பார்வைவைந்துங் கண்ணனார் காணாகின்
அடிக்கமல முடிக்கமல மறியாதே மறிதுமே
முத்தொழிலின் முதற்றொழிலோன் முடியிழந்தான் றலையிழந்த
அத்தொழிலிற் கெனிற்றமியே மறிதொழிற்கும் வல்லமே.
இருக்கோல மிட்டுமின்னு முணராதா லெந்தைநின்
திருக்கோல மியாமுணர்ந்து சிந்திக்கக் கடவமே.
நான்மறைக்குந் துறை கண்டார் தோளிழந்தார் நாவிழந்திங்
கூன்மறைக்க மறைப்புண்டே முய்த்துணர்வு பெரியமே.
பலகலையுங் குலமறையும் பயின்றுணர்ந்தும் பயன் கொள்ளா
துலகலையுஞ் சிலகலையு முணராதே முணர்துமே.
அதனால்,
சுரிதகம்.
அம்மநின் றன்மை யெம்மனோ ருணர்தற்
கரிதே யெளிதே யாதல்
பெரிதே கருணை சிறியே மாட்டே.
2.6.5 மயங்கிசைக் கொசகக்கலிப்பா.
ஆறு உறுப்பும் பெற்று முறைமாறிப் பலதரவும் பல தாழிசையும் பொருந்தி வருவது .
(உ-ம்.) கலம்பகமுதலிய பிரபந்தங்களிற் காண்க
கட்டளைக்கலிப்பா.
முதலில் மாச்சீர்பெற்று நாற்சீரான் வருவது அரையடியாகவும், அது இரட்டித் தோரடியாகவும், அவ்வடி நான்கு கொண்டு வருவது. அரையடிக் கெழுத்து முதலசை நேராயின் பதினொன்றும், நிரையாயின் பன்னிரண்டுமாம்.
நேரிசைக்கட்டளைக்கலிப்பா
பன்னகத்துரு மாதவனும் புலிப்
பாதநாதனும் பார்த்திடத்தில்லையிற்
பொன்னதாற் செயுமன்றிடத்தாடிய
பொற்பு மேயபுராதனத் தெய்வமே
யன்னவாகனத் தன்றுணையாகும்வே
ளைந்து பூவு மடுக்கடுக்காவிடுங்
கன்னல்விற் கைச்சாமர்த்திறத்தால் வருங்
காமவாரிகடந்திடச் செய்திடே
நிரையசைக் கட்டளைக்கலிப்பா.
அனகவானவ ரும்பலதேவரு
மம்பலத்தி லநுதினங்கை தொழப்
பனகபூடண மாடிட வாடுவாய்
பத்தரெண்ணப் படியருள் பண்பனே
தினகான்றனைச் சீறியெந்நேரமுஞ்
சித்தசன்கரியைப் புகழ்சிந்தை சேர்
கனகமேனிபடந்தையார் கண்டருங்
காமவாரி கடந்திடச் செய்திடே.
கலித்தாழிசை, கலித்துறை, கட்டளைக்கலித்துறை, கலிவிருத்தமென நான்கு வகையாம்.
2.7.1. கலித்தாழிகை.
எத்தனை சீரானும் இரண்டடியாய் ஈற்றடி மிக்கு வந்து முடிவது.
(இது ஒரு பொருண்மேன் மூன்றடுக்கி வருவது சிறப்பு )
(உ-ம்.) செல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள்
பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்.
முத்தேவர் தேவை முகிலூர்தி முன்னான
புத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்
ஆங்கற் பகக்கன் றளித்தருளுந் தில்லைவனம்
பூங்கற் பகத்தைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்.
இரண்டடியின் மிக்குப் பலவடிகளாய் அளவொத்து ஈற்றடி மிக்கு வருவது முண்டு.
(உ-ம்.) இருகூற் றுருவத் திருந்தண் பொழிற்றில்லை
ஒருகூற்றின் கூத்தை யுணராய் மடநெஞ்சே
ஒருகூற்றின் கூத்தை யுணரா யெனின் மற்றப்
பொரு கூற்றந் தோற்றப் புலம்போல் வாழி மடநெஞ்சே.
நற்றடி மிகுந்து ஏனையடிகள் மிக்குங் குறைந்து வருதலுமுண்டு.
(உ-ம்.) காளியாட கனலுமிழ் கண்ணுதல்
மீளி யாடுதல் பாடுமே
மீளியாடல் வியந்தவ டோற்றெனக்
கூளி பாடிக் குறைப்பதும் பாருமே.
--------
2.7.2 கலித்துறை (கலிநிலைத்துறை)
ஐஞ்சீரடி நான்காய்த் தம்முள் அளவொத்து வருவது.
பானற் கருங்கட் பசுந்தோகையேமெய்ப் பயன்றுய்ப்பவத்
தேனக் கலர் கொன்றை சாரூப்பியந்தந்த செயலோர்கிலார்
ஊனக்க ணிதுபிளை யொழுகும் புறக்கண் ணுளக்கண்ணதாம்
ஞானக்க ணேயாத னல்கும் பிரான்றில்லை நடராசரே.
2.7.3 கட்டளைக்கலித்துறை
முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாமல் கடையொருசீர் பெரும்பான்மை விளங்காயாகி வரு மைஞ்சிரடி நான்குகொண்டு முடிவது. ஓரடிக்கெ ழுத்து முதலசை நேராயின் பதினாறும் நிரையாயின் பதினேழுமாம்.
நேரசைக்கட்டளைக்கலித்துறை.
செவ்வாய்க் கருங்கட்பைத் தோகைக்கும் வெண்பாதிச் சென்னியற்கு
மொவ்வாத் திருவுரு வொன்றே யுளதல் வருவினைமற்
றெவ்வாச் சியமென் றெடுத்திசைப்பேமின் னருட்புலியூர்ப்
பைவாய்ப் பொறியர வல்குலெந்தாயென்று பாடுதுமே.
நிரையசைக்கட்டளைக்கலித்துறை
கரும்புஞ் சுரும்பு மரும்பும் பொரும்படைக் காமர்வில் வேள் இரும்புங் கரைந்துரு கச்செய்யு மாலிறும் பூதிதன்றே
விரும்பும் பெரும்புலி யூரெம்பி ரானருண் மேவிலொரு
துரும்பும் படைத்தழிக்கும் மகிலாண்டத் தொகுதியையே.
இக் கலித்துறைகள் கோவைக் கலித்துறையென்றும், திலதக் கலித்துறை யென்று மிருவகையாம். மேற்காட்டிய இரண்டு செய்யுளுக்கும் கோவைக் கலித்துறைகளில், திலதக் கலித்துறையாவது ஈற்றடியிலுள்ள மூன்றாம் இர ண்டாஞ் சீராகத் தம்மிலே யாதல் தமது அயற்சீர்களோடாதல் ஓசைபிரிந்து மொழி பக்கு விட்டுப் பக்குவிட்ட மொழி முதற் சீரோடொன்றி ஒழுகிய ஓசைத்தாகிய சிறப்பினை யுடைத்தாய் வருவது.
வண்கொடி யேய்மதின் மாறை வரோதயன் வாணனென்னார்
எண்கொடி யேனெய்த விவ்வண்ண நீயிரங் கேலிரங்கேல்
நுண்கொடி யேகிடை வண்டிமிர் பூங்குழனூபுரத்தாட்
பெண்கொடியே பிரியேன் றரியேன் நிற்பிரியினுமே.
சிறுபான்மை கட்டளைக் கலித்துறைகளின் அடிகளில் கடையொருசீர் கனிச்சீரும் வரப்பெறும்.
(உ-ம்.) "இனித்தமுடைய வெடுத்தபொற்பாதமுங் காணப்பெற்றான்''
"கயிலைச்சிலம்பிற்பைம்பூம் புனங்காக்குங் கருங்கட்செவ்வாய்''
''அன்றதென்னா ரள்ளற்பள்ளத்தினோடங் கணவாணத்துமே''
"கள்ளக்கயலு மிராசியின் மீனுங் கடைப்பட்டதே"
ஒற்றைத் தள்ளி விளங்காயாகக் கொள்ளலாமெனின் - தன்ன சய்ய - சந்த ங்களைத் - தன - சந்தமாக்கி அங்ஙனங் கொள்ளலாமேயன்றித் - தத்த - சந்தத்தைக் கொள்ளுதல் யாண்டையதென்பதாம்.
2.7.4 கலிவிருத்தம்.
நாற்சீரடி நான்காய் அளவொத்து வருவது
(இதுபதினோரெழுத்து முதற் பன்னிரெண்டெழுத்தின் காறும் வரும் )
(உ-ம்.) கூகா வென்றுகுரைப்பதல் லாற்சமன்
வாவா வென்னில் வரேமென வல்லிரே
தேவே சன்பயி றில்லையி னெல்லையில்
சேர்வீ போலது செய்யவும் வல்லீரே.
பெரும்பாலுங்கனிச்சீரும் சிறுபான்மை அயற்சீரும் பெற்றுத்தன்றளையும் பிறதளையும் தழுவி இருசிரானாயினும் முச்சிரானாயினும் மூன்று முதலிய பலவடிகளால் நிரம்பித் தனிச்சொல் பெற்று ஆசிரியச்சுரிதகத்தான் வருவது.
2.8.1 குறளடி வஞ்சிப்பா
(உ-ம்.) வையமீன்ற மறைக்கிழவனும்
கொய்துழாய் மவுலிக் குணக்கொண்டலும்
தருவார் நீழற்றார் வேந்தனும்
வான் முறை தாழ்ந்து வாழ்த்திசைப்ப
மை தீருணர்வின் மழமுனிவனும்
பையரவரசும் பணிந்திறைஞ்ச
விமையம் பயந்து விளங்கொடியொடும்
தமனியப் பொதுவிற் றாண்டவம்புரி
தில்லைவாணநின் றிருவடிக்கீழ்
சொல்லுவதொன்றிது சொல்லக்கேண்மதி
கமலலோசனன் கண்படுக்கு
மமளியைநின் மருங் காதரித்தனை
செங்கேழ்நறுநுதற் றிருமகளோடு
மங்கவனுறைதருமாழிச் சேக்கையைப்
புலிக்கான் முனிவான் புதல்வனுக்கு
நல்லதரு கருணையி னயந்தளித்தனை, அவன்
அதனால்
பாயலு மமளியுமின்றி மன்ற நின்
வாயிலி னெடுநாள் வைகி னனையவத்
திருமனை யனையவற் களித்தநின்
மெய்த்தொழி லன்றே விடுநல் குவதே.
இதனடி தோறும் முதற்கண்ணே பொதுச் சீர் பதினாறும் காண்க
------
2.8.2 சிந்தடி வஞ்சிப்பா.
(உ-ம்.) கடித்தாமரைக்கண்ணன் விழிக்கமலந்தர
வடித்தாம் ரைச்சுடர்பபரிதியளித்தருளினை
அதனால்,
புதுமலர்ப் பொழிற் றில்லைவாண
உதவியின் வரைத்தோள் வடிகள் கைம்மாறே.
2.9 வஞ்சிப்பாவினம் .
வஞ்சித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தமென மூன்றாம்.
2.9.1 வஞ்சித் தாழிசை.
இருசீரடி நான்காய் ஒரு பொருள்மேல்மூன்றடுக்கி வருவது.
(உ-ம்.) பிணியென்று பெயராமே
துணிநின்று தவஞ்செய்வீர்
அணிமன்ற லுமைபாகன்
மணிமன்று பணியீரே.
என்னென்று பெயராமே
கன்னின்று தவஞ் செய்வீர்
நன்மன்ற லுமைபாகன்
பொன்மன்று பணியீரே .
அரிதென்று பெயராமே
வரைநின்று தவஞ் செய்வீர்
உருமன்ற லுமைபாகன்
திருமன்று பணியீரே.
-------
2.9.2 வஞ்சித்துறை
இருசீரடி நான்காயொரு செய்யுளே வருவது
(இதில் எழுத்து ஓரடிக்கு ஐந்து முதல் ஒன்பது வரையில் வரும்.)
(உ-ம்.) பொன்செய் மன்றில் வாழ்
கொன்செய் கோலத்தான்
மின்செய் தாடொழார்
என்செய் கிற்பரே.
2.9.3. வஞ்சிவிருத்தம்.
முச்சீரடி நான் காய் வந்து முடிவது
(உ-ம்) ஒன்றி எம்பர லோகமே
ஒன்றி னம்பர லோகமே
சென்று மேவருந் தில்லையே
சென்று மேவருந் தில்லையே.
---------
புறநிலைகைக்கிளை வாயுறைவாழ்த்து செவியறிவுறூஉ ஆகிய பொருள்களைக் கொண்டு வெண்பாமுதலில் வந்து அகவல் பின்னாக வருவது.
2.10.1 கைக்கிளை மருட்பா
ஒருதலைக் காமத்துக்குரிய காட்சி ஐயம், துணிவு, குறிப்பறிவு முதலாகிய பொருள் பெற்றுவருவது.
(உ-ம்.) பருந்தளிக்கு முத்தலைவேற் பண்ணவற்கேயன்றி
விருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்குந் திருந்த
வலனுயர் சிறப்பின் மன்ற வாணனக்
குலமுனி புதல்வனுக் கீந்த
அலைகட லாடுமிவ் வாயிழை நோக்கே.
----------
2.10.2. புறநிலை மருட்பா.
புலவோர்கள் பிறரை வாழ்த்தும் பொருளுக்கிடனாய் வருவது.
(உ - ம்.) அரசியல் கோடா தரனடியார்ப் பேணும்
முரசிய றானை வேன் மன்னர் - பாசோன்
கழலிணைப் பொதுவில் காப்பாக
வழிவழி சிறந்து வாழியோ பெரிதே.
2.10.3. வாயுறைவாழ்த்து மருட்பா
அறிஞர் பிறருக்குச் சொல்லும் உறுதிசாதனப் பொருளால் வருவது. (உ-ம்.) வம்மினமரங்காண் மன்றுடையான் வார்கழல் கண்
யம்மி னுறுதி பிறிதில்லை - மெய்ம்மொழிமற்
றென்மொழி பிழையா தாகும்
பின்வழி நுமக்குப் பெரும் பயன் றருமே.
2.10.4. செவியறிவுறுஉ மருட்பா.
ஆன்றமேலோர் அரசர்க்குணர்த்தும் நீ திமுறையின் நிலைமைப் பொருளால் வருவது.
(உ-ம்) வாழ்த்துமின் றில்லை நினைமின் மணிமன்றம்
தாழ்த்துமின் சென்னி தலைவற்கு - வீழ்த்த
புறநெறி யாற்றா தற்நெறி போற்றி
நெறிநின் றொழுகுதிர் மன்ற
துறையறி மாந்தர்க்குச் சூழ்கடனிதுவே.
நூற்பா (சூத்திரம் )
சில்வகை யெழுத்துக்களாளாகிய சொற்றொடராய்ப் பல்வகைப்பொருள் களை விளக்கித்திட்பமுநுட்பமுமமைத்துச் சீர் அடி தொடை முதலியவரைய றையின்றி வருவது.
(உ-ம்.) அவனவளது வெனவவைமூ வீனமையின்
தோற்றியதிதியே யொடுங்கி மலத்துளதா
மந்தமாதி யென்மனார் புலவர்.
--------
சந்தக்குழிப்புக்களை யாதாரமாக்கொண்டு வருவன. அவையாவன
தத்த - தாத்த - தந்த - தாந்த- தன - தான - தன்ன - தய்ய - எனவெட்டாம்.
இவ்வெட்டும் - தத்தா - தாத்தா-தந்தா - தாந்தா- தனா - தானா-தன்னா-தய்யா -
என அந்தம் நீண்டு ஆகப்பதினாறாம்.
(உ-ம்.) தத்த பத்தி, ஒற்றர், சிட்டன், கொய்த்து, மெய்ச்சொல்
கர்த்தன்.
தாத்த - காற்று பாட்டர் கூத்தன் பார்ப்பு, தூர்த்தன்,
காழ்த்தல்.
தந்த - மஞ்சு, கொண்கர், சுந்தன், மொய்ம்பு, மொய்ம்பர்,
மொய்ம்பன்.
தாந்த - வேந்து, வேந்தர் பாங்கன் பாய்ந்து சார்ங்கர்,
சார்ங்கம்.
தன் - குரு, தவர், சுதன்.
தான - காது, சூதர் , பாதம், கேள்வி சார்கண், கூர்முள்,
மான்மி, தேன்வி, மாண்மன், கூன்வில், மான்மர் மாண்விண்.
தன்ன - கண்ணி, மென்வி, அண்ணன், பொன்வில்,
முன்னர், என்வென்.
தய்ய - வள்ளி, செய்தி, வள்ளல், செய்தல், மெய்யன்,
செய்கண்.
தத்தா- அத்தா- கற்றார். தெட்டான், பொய்க்கோ, நெய்க்கோல்,
மெய்க்கோன்.
தாத்தா- சாத்தா, ஆற்றார், மாற்றான் , வேய்ப்பூ,வாய்த்தோர்,
சீர்க்கோன்.
தந்தா - அந்தோ, தங்கார், வந்தேன் , மொய்ம்பா, மொய்ம் போர்,
மொய்ம்போன்.
-------
இவ்வண்ணப்பா ஆசிரியப்பாவினினமே. விரிவு பற்றிக்கடையிற் சேர்க்கப்பட்டது.
----
தாந்தா - சேந்தா, வாங்கார்,நான்றான் நேர்ந்தோ , சார்ந்தார். மாய்ந்தான்.
தனாகுசா, சிறார், கவான். தானா- தாதா, போகார், மேவான், ஓர்பு , கூர்வேல், சேர்மான்,
கேண்மோ, ஆன்மா, ஆண்மான், கூன்வாள் , வான்மேல்,
தேன்வீண்.
தன்னா அண்ணா, மன்வா, முன்னோன், அன்னோர், பொன்வேல்,
தண்வான்.
தய்யா - மெய்யே, கொய்தோ, தள்ளார், செய்தார், வல்லோன்,
ஒல்கேன்.
அரைச் சந்தம்
இப்பதினாறன் மேல் - ன -னா - உயிர்மெய்வரினும், இவவுயிர்மெய்யோடு - த - ம - ஒற்றுவரினும் - -ம் - தனியே அப்பதினாறடன்வரிலும் அரைச்சங்தமாம்.
(உ-ம்) தந்தன - தந்தனா தந்தனத் - தந்தனாத் - தந்தனம் - தந்தனாம் - தந்தத், தந்தம்.
--------
வலித்தல் மெலித்தல்களால் தய்ய வென்பது தன்ன - தனவாம்.
வலித்தல். மெலித்தல்.
நெய்தி - தய்ய தொய்வு தய்ய
நெய் - தன்ன தொய்வு - தன
வர்ம - தய்ய செய்கை - தய்ய
வரம்ம - தன்ன செய்கை - தன
தன்னச்சந்தமானது மெலிவால் தனவாம்.
(உ-ம்) சண்மு - தன்ன
சண்மு - தன
மன்வில் - தன்ன
மன்வில - தன.
----------
வண்ணக்குறளடி.
(உ-ம்.) தானா தனதன
பாணார் மொழிநிறை
சோணா சலாடி
பேனா தவனுறு
மாணா நரகமே.
வண்ணச் சிந்தடி.
தனன தானன தந்தனா
நரக வாதையில் வன்பிறார்
தாணி மீதொரு கொன்பெறார்
சுரருலோகமு மின்புறா
ரருணை நாயக ரன்பறார்.
வண்ண வளவடி
தானத் தானன தானத்தானன
தேனைப் போல்கவி மாலைச் சீரியர்
வானைச் சீயென வாழ்விட்டாள் பவன்
மானைச் சீறுகண் மாதர்க் கோரிறை
யானைக் காவுடை யானிற் பாதியே.
வண்ணக்கட்டளைக்கலித்துறை
தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதானா
பொலிவற்றுத் தினமற்பக் கலைகற்றுந்தெருளற்றுப் பொருண்மாலே
சொலிவைத்துப் புகழ் கெட்டுப் புவனத்திற் றளர்வுற்றுச் சுழலாமே
புலியக்கத் ததளைச்சுற் றரைபொற்பத் திருவொற்றிப் புணர்வார்பா
லொலி முற்றுத்துதிசொற்றுக் கதிபெற்றுப் பயன்மிக்குற்றுயர்வாயே.
----
அறுசீர்வண்ணவிருத்தம்.
தனதன தனதன தய்யன தய்யன தனதன தனதனனா
முதலிடை கடையள வில்லவ ருள்ளவர் முழுவது நிறைபவரா
மிதமுறு மிசைவளர் தய்யலை மெய்யினி லியனுடனணைபவரா
நுதலினி லொருசுத னிவ்வுல குய்வகை நொடியினி லருள்பவராம்
விதபிர மபுரியி னல்லவர் நள்ளிட விழைவுடனுறைபவரே
---------
எழுசீர் வண்ண விருத்தம்
தானதன தானதந்த தானதன தானதந்த
தானதன தானதந்த தனதானா
பாவையரை யேவிரும்பி நாளுமவ ரோடுறைந்து
பாழுமன மேமெலிந்து நலியாதே
பூவலய மேலனந்தவலாபிகளை யேபுகழ்ந்து
போதவறி லேயகழ்ந்து மெலியாதே
நாவலர் ககேளாடுகந்து பூதிமணி யேயணிந்து
இச்சிவ யோகமென்று புரிவேனோ
வாவலுடன் மாமுகுந்த னோடுமய னார்வணங்கு
மாதிபுரி வாழவந்த பெருமானே.
------
சந்தங்களில் சிலபலசேர்ந்து ஒரு துள்ளலாம். துள்ளல் மூன்று கொண்டது ஒரு குழிப்பாம். குழிப்பொன்றும் ஒரு சிறு தொங்கல் துள்ளலுஞ் சேர்ந்து ஒருகலை யாம். கிலையெட்டுக் கொண்டதுவண்ணம்.
இந்துள்ளல் கொண்டகலையால் வந்தவண்ணம்.
மின்னலையொத் தேயுற் றிருக்கின்ற வாழ்விலே
வெம்மையுறத் தான்மிக் கிளைப்புண்டிடாமலே
யின்னலறுத் தேசிற் சுகத்தின்கண் மேவுமா
யென்னையெடுத் தாணற்றமிழ்ச்சந்த மோதுவேன்
வன்னமலர்ச்சோலைத் திருந்செந்தினாயகா
வண்ணமிசைப்பாரைப் புரக்குந்தயாபரா
தென்னணிவெற் பானுக் குவப்பொன்று தேசிகா சென்னைநகர்க் கோயிற்றிருத்தண்ட பாணியே.
---------
என்நலை வண்ணம்.
தன்தரானன தனதன தனதன
கஞ்சமாமலர்மனையென வளர்கனி
பஞ்சவாகன முதுகினில் வரும் விதி
கன்றியே பலவுடலினிலலைகா விதியாதே.
நாங்குலே யெனுநிறமு பெகடரில்
வெம்புதாதுவரெறிரவனலும்
கண்களானவைசினமிருதமனி ணெதிராதே
யஞ்சுவாள் விழியரிவையர் படையொடு
தென்றலேறியொர்கணமதிலெனின்
ரம்பினாடை சமர்புரிதரம் நடையமகே
யந்தவானுறையரியயப் பலதின்
நின்று தேடிடவழிபடுமிருமுனி
யன்று காணுறவருளிய திருவடி தருவாயே
செஞ்சொலார் தருகவுணியமதலைமை
யெங்கடேசிகமணியெனவருள்ரை
சிங்கவாகனிபகவதி திரிபுரை மணவாளா
செங்கைவேல் கொடுநரிமுகனரிமுகன்
மிண்டு சூருயிர்கடல் வரையடு முயர்
செந்தில்மேவியார வணகுரன்வருந்து விழியானே
மஞ்சுமாமதிவாந்திக்குகலை
கொன்றைதாதகியறுகணை வபுனை
மங்களாகாமில் கியாடைழிசை வண் படையானே
கொண்மாமறையுயிர்திகர்பசுநிரை
கொம்புமே விடும் வரமதையு தவிட
வந்துமாதையில் வதிதருமழகிய பெருமானே.
---------
இவ்வண்ணமிக்கு வருங்கால் அடிக்கு நாலு கலையாகவும், எட்டுக்கலையாகவும், பதினாறுகலையாகவும் வரும். இவற்றின் விரிவை அபரவருணகிரிநாதரருளியவ ண்ணத்தியல்பிற் காண்க.
-------------
3. ஒழிபியல்.
சீருந் களையும் கெட வந்தவிடத்துக் குற்றியலிகாமும், குற்றியலு காமும், உயிரளபெடையும் அங்குராரியம் பெறாவாம்.
குற்றியலுகரம்.
கொன்று கோடுக்குருகி பாயவும்
சென்று நிடு செயலை பொரு
இவ்வஞ்சிப்பாவினுள் குற்ற காம்எந் ஐந்தகை வாணரால் குற்றசாங் களைக்கழித்து இருசீரடிவஞ்சிப்பா வாசுக் கொள்க
குற்றியலிகரம்.
சிறுநன்றி யின்றியர்க்கியாம் செய்கக்காயைம்
பெருநன்றி பின்ன பெரிதென்
இதனுள் - இன்றிவர்க்கியா - என்புழி கூவிளங்கனிபோன் வந்து வெண் கெட்டமையால் குற்றியலிகாத்தை நீக்கிக் கூவிளங்காயாகக் கொள்க.
குழவினி நியாழினி தென்பாகும் மக்கள்
மழலை சொற் கேரை தவர்
இதனுள் - யாழினி என் புழி விளமுன் நிரைந்து களை கெட்டமையால் குற்றியலிகரத்தைக்கழித்து விளமுன்ரோரைச் கொங்க.
உயிரளபெடை
நாறோ நாறென்பா னுடங்கிடைக்கு நென்முலைக்கு
மாறோமா என்றளந்த மண். இதனுள் - நூறோ நூ- என் புழி நாலசைச்சீர் வெண்பாவில் வந்தமையால் உயிரளபெடையை நீக்கி மூவசைச் சீராகக் கொள்க.
ஒற்றளபெடை ஆய்தம்.
சீர்தளை கெடவரின் ஒற்றும், ஆய்தமும் அளபெடுத்துத் தனிக்குறில் போல நேரசையாம்.
(உ-ம்.) கண்ண் கருவிளை காமுகலை கூரெயிது
பொன்ன்பொரிசுணங்கு பொழ்வா யில்வம்
எஃஃகிலங்கிய கையாா யின் பயி வெஃஃகுவார்க்கில்லை விடு.
இரண்டு மாத்திரையினையுடைய கெட்டெடத்தாகிய - செய்யுட்களில் குற்றெழுத்தாகிக்கும் போடும் , நெடியோடும் கூடி நியாயாம்.
(உ-ம்) அன்னையை யானோவதனா னியார்
புன்னையையா நோன்புலத்து.
அசை
செய்யுளில் முன்னுமபின்னும் அசை முதலாகய உறுப்புகள் நிற்புழிய றிந்து குற்றப்படாமல் வாணமறுத்தல் போடும்
(உ-ம்.) கடியார் பூங்கோதை கடாயினான்றிண்டேர்
சிரியாக்ரஞ்சிற்றில் சிதைந்து.
இதனை, கடியார் பூங்கோதை சடாயினான என அலகிடின் ஆசிரியத்தளையும், கலித்தளையுந்தட்டு, வெள்ளைத்தன்மை குன்றுமாதலால், கடியார்பூ கோதை - கடாயினான் என்று அலடயவேண்டும்.
மலர்மிரையேகினான் மாண்டிரேந்தர்
நிலமிசை நீடுவாழ்வார்.
இதனை , நிலமிசை - நீடு வாழ்வார் என்று அலகிடின் ஆசிரியத்தளை தட்டு வெண்பாவினிறுதிக்கண் அசைச்சீராகற்பாலது இயற்சீராய் முடியும், ஆதலால் நிலமிசை நீடுவாழ் வார்னே அலகிடல் வேண்டும்.
பாடுநர்க்கு மாடுநர்க்கும் பண்டுதாங் கொண்டவர்க்கும்
ஊடுநர்க்குங் கூடுநர்க்கு மொத்தலால் நடுநீர் நல்வயலூர குறுஞ்சாந்தணியகம்
புல்லலினூடலினிது.
இதனுள் -டுகர நகரங்கள் பிரிந்திசைத்தன வாயினும் இரண்டினையுங்கூட் டிநிரையசையாக அலகிடச் சீருந்தளையுஞ்சிதையாவாம் அல்லாவிடின், நால் சைச்சீராய் வண்ணமழிந்து ஓசையுண்ணாது கெடும்.
---------------
சீர்
தேமா, புளிமா, வென்று நோற்றியற்சீரிரண்டும், கருவிளங்கனி, கூவிளங் கனி என்னுகிறைநடுவாகிய வஞ்சிவரிச்சி ரிரண்டுங்கலிப்பாவினுள்வாரா. கரு விளங்கனி கூவிளங்கனி என்னுமிரண்டும் ஆசிரியப்பாவினில்வாரா ஒழிந்தசீர் களெல்லாம் பாவினுள்ளும் பாவினத்துள்ளும் மயங்கும் ஆயினும் வஞ்சியுரிச்சீர் நான்கும் வெண்பாவில் வாரா.
----------
தளை.
எல்லாத்தளையும் எல்லாப்பாலினுள்ளும், பாவினத்துள்ளும் மயங்கப்பெ ரினும் வெண்பாவில் இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையு மல்லது வேறுதளைவராது
---------
அடி.
இயற்சீர் வெண்டளையால் வந்த வெண்பா வடியும் வஞ்சியடியும் ஆசிரியப் பாவினுள் வந்து மயங்கும். ஆசிரிய வடியும் கலியடியும் வஞ்சிப்பாவினுள்விரவி வரும், வெண்பாவடியும் ஆசிரிய வடியும் கலிப்பாவினுள் புக்கு மயங்கும்.
-------
தொடை
அடிமோனைத்தொடை
அடிதோறு முதலெழுத் தொன்றிவரத்தொடுப்பது.
(உ-ம்.) மாவும் புள்ளும் வதிவயிற் படா
மாநீர் விரிந்த பூவுங் கூம்ப
மாலை தொடுத்த கோதையுங் கமழ
மாலை வந்த வாடை மாயோளின்னுயிர்ப் புறத்திறுத் தற்றே.
இயைபுத் தொடை
அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவருவது.
(உ-) இன்னதைத் துவர்வாய்க் கிளவிய மணங்கே
நன்மா மேனி சுணங்குமா ரணங்கே
ஆடமை கொவிகூடலு மணங்கே
அரிமத மழைக்கணு மனாதே
திருநா பொறித்த்திலாமுமணங்கே.
அடிமாகபெடை
அடிதோற முதறகானே தலைப்பட தொடுப்பது.
(உ-ம்) இருப்பரந் தன்ன மா நீர் மருங்கிய
இலகுவிந் தன்ன வெண்மண பொருசிறை
இரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னை
பொன்னி என்ன துண்ட திரைக்குஞ்
சிற்கும் மடமகள்
பெருமை முடையவனங்கே.
அடியளபெடைத்தொடை
அடிதோறு முதற்கனனே யளபெடுத தொன்றிவருவது
(உ-ம்) ஆஅவளிய வலவன்றன் பார்பயினோ
டி இரையும் கொண்டாளைப் பள்ளியுட்
உந்தியைளைப் பத்துஞா திறைவன்றேன்
மே ஏவலையாட்ட நமபோ ன்றுதாம்
ஒரு வழக்கும் துயர்
அந்தாதித் தொடை
ஓரடியினந்தத்திலுள்ள எழுத்தாவது சீராவது அடியாவது மற்றோரடிக்கு ஆதியாய் வருவது,
(உ-ம்) உலகுடன் விளக்கு மொளிதிக ழவிர்மதி
மதிநல னழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழற் பொற்புடை யாசனம்
ஆரனத் திருந்த திருந்தொளி யறிவன்
ஆரனத் திருந்த திருந்தொளி யறிவனை
அறிவுசே ருள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தரிதெனப்
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை யுலகே.
----
இரட்டைத்தொடை
அடிமுழுது மொருசொல்லே வரத்தொடுப்பது.
(உ-ம்.) ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும்
விளக்கினிற் றெறி யொக்குமே யொக்கும்
குளக்கொட்டிப் பூவி னிறம்.
செந்தொடை
மோனை முதலாகிய தொடையும் தொடை விகற்பமும் போலாது வேறு படத் தொடுப்பது.
(உ-ம்) பூத்த வேங்கை வியன்கினையேறி
மயிலின் மகவு நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத்தானே.
இயைபு.
இணையியைபு முதலிய எழுவிகற்பமும் வருமாறு,
(உ-ம்.) மொய்த்துடன் றவழு முகிலே பொழிலே
மற்றத னயலே முத்துறழ் மணலே
நிழலே யினியத னயலது கடலே
மாதர் நகிலே வல்லே யியலே வில்லே
நுதலே வேற்கண் கயலே ப
ல்லே தளவம் பாலே சொல்லே
புயலே குழலே மயலே யியலே அதனால்
இவ்வயி னிவ்வுரு வயங்கலின்
எவ்வயி னோரு மிழப்பர்தந் நிறையே.
------
* இணை பொழிப்பு, ஒரூஉ கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்று என்பன.
-----
எதுகை.
இணை எதுகை முதலிய வேழுவிகற்பமும் வருமாறு.
(உ-ம்.) பொன்ளி னன்ன பொறிசுணங் கேந்திய
பன்னருங் கோங்கினன்னலங் கவற்றி
மின்னிவ சொலி வடந் நாங்கி மன்னிய
நன்னிற மென்முலை மின்னிடை பகுதி
என்னையு மிடுக்கண்டுன்னு தின்னடை
அன்ன மென்படை போல பன்மாக்
கன்னியம் புன்னையின்னிழ யன்னிய
மயிலே சாயல் வாணுதல்
அயில்னே லுண்கணம் மறியதொலைந்தனனே.
முரண்.
இணைமான் முதலாகிய வேழுவிகம்பமும் வருமாது.
(உ-ம்) பேரால்குகொலகுபு
ஈருங்கிய நாப்பிற் பெருருவடந்தாங்க
குவித்து நாணங் கரும்பிய கொங்கை விரிந்து
சிறிய பெரிய நிகரான கோதைநன் வெள்ளைத்தோளுஞ் சேயக்கருங்கணும்
இருக்கைய நிலைய மேந்தோழி வியக்கமுந்
துவர்வாய் இஞ்ரொலு முவந்தெனை முனியாது
என்று மின்னன் பாகுமதி
பொன்றிகழ் நெடுவேற் போர்வல் லோயே
----------
அளபெடை
இணையளபெடை முதலாகிய வேழுவிகற்பமும் வருமாறு.
(உ-ம்) தாஅட்டாஅ மரைமல் ருழக்கிப்
பூஉக்குவளைப் போன தருந்திக்
காஅய்ச் செந்நெற் கறிந்துப் போய்
மாஅத்தா அண் மோட் டெருமை
தேஎம் புனலிடைச் சோஓர் பாஅல்
மீஇனாஅர்ந் துகளுஞ் சீஇர்
ஏஎனாஅ நீ இணீர்
ஊரன் செய்த கேண்மை
ஆய்வளைத் தோளிக் கலரானாவே
ஆசிரியப்பா - கலிப்பா
இவைகளில் தமக்குரிய நார்சீரடியினுமிருந்து ஐஞ்சீரடியும் அரிதாய் வரும்
ஆரிரியப்பா
(உ-ம்.) உமணர்ச் சேர்ந்து கழிந்த மருங்கினான்ரலை
யூர் பாழ்த் தன்ள வோரையர் பெருங்க -
டின்னா வென்றி ராயின்
இனியவோ பெரும் தமியேங்கு மனையே
கலிப்பா
(உ-ம்) நானாரென் னுள்ளபார் ஞானங்களாரென்னையாரிவார்
வானோர் பிரானென்னை யாண்டனென் மதிமயங்கி
யூனா ருடைாலையி லுண்டவிரேம்பாவன்
றேனார் கமலமேரென்றூரார்க் கோத்தும்பி
கூன்.
வெண்பா, கலிப்பா ஆசிரியப்பா இவைகளில் முதலிலும், கஞ்சிப்பாவின் இடையிலும் கடையிலும் ஒருசீர் வருவது.
வெண்பா
(உ-ம்.) உதுக்கான் - சுரந்தானா வண்ரைக்க வானமாப் புகன்
பரந்தானா பல் புரழைப்பாடிட - வியந்தார்மாம்
டின்மையகல்னது போல விருணீங்கி
மின்னு மளிசேர் மறை
ஆசிரியப்பா
(உ-ம்.) அவரே - கேடில் விழுப்பொருடருரார் பாதி,
வாடா வல்லியங் காடிறந் தோரே,
யானோ - நோடா ரெல்வளை நெகிழ வேங்கிப்
பாடமைசேச்கையுட் படர்கூர்ந்திசினே.
கலிப்பா .
(உ-ம்) உலகினுள் - பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாலேயிறழினு
மிருந்தகையவிறுவரை மேலெரிபோலக் சுடர்விடுமே
சிறுநகையார் சிறுதகைமை சிறப்பெனினும் பிறழ்வின்றி யுறுதகைமையுலகினுக்கோரொப்பாகித்தோன்றாவே.
வஞ்சிப்பா. (உ-ம்.) மாவயவங்களின் மயக்குற்றன - வழி
கலங்கழாலித் - துறை - கலக்குற்றன
------------
கலிவெண்பாவும் - வெண்கலிப்பாவும்
இவையிரண்டினையும் ஒன்றெனக்கொண்டு கலிப்பா வினத்திற்சேர்த்துள் ளார் பலயாப்பாசிரியர். கலிவெண்பாவானது வெண்டளைபிழையாது தனிச் சீர்பெற்றுப் பலவடிகளால் வருவது. வெண்கலிப்பாவானது கலித்தளையும் வெ ண்டனையும் விரவித்தனிச்சொற்பெறாது பலவடிகளால் வருவது. கலிவெண்பா வில்கலித்தளை விரவின் இன்னாவோசைப்பயத்தலை எஃசெவியுநுண்ணுணர்வுமு டையாரறிவர். கலியெனவிசேடித்தலின் கலித்தளை விரவு வேண்டுமென்பாரா யின், வெண்பாவிருத்தத்தில் வெண்டளை விரவாமையை யறிவாராக , கலியென்ப து இங்குமிகுதியைக்குறித்தது. ஆகலின்கலிவெண்பாவினை வெண்பாவினத்தி ற் சேர்த்துள்ளேம். அக்காலத்து வீரசோழியவாசிரியர், இக்காலத்து முத்துவீ ரியவாசிரியர் சம்மதமு நம்மதே.
தாவு - தாழிசை
அம்போதரங்க வொத்தாழிசைக்கலிப்பாவும், வண்ணகவொத்தாழிசைக்க லிப்பாவும் நீங்கலாக மற்ற கலிப்பாக்களுக்குத் தரவு மூன்றடியேசிறுமை, பெருமை பாடுவோனது பொருண்முடிபுகுறிப்பே.
அம்போதரங்கவொத்தாழிசைக்கலிப்பாவிற்கும், வண்ணக வொத்தாழிசை க்கலிப்பாவிற்கும், பெருக்கஞ் சுருக்கமில்லை. ஆறடியேதரவு, பொதுவகையால்தா ழிசைச்சொல்லிப் போந்தாராயினும் தாழிசைக்கிரண்டடி சிறுமை, நான்கடிபெருமைமூன்றடியானும் வரும்.
வண்ணப்பா
இப்பாக்களில் குழிப்புச் சிதைவும், கொடுந்தமிழ்ப்புணர்ப்பும், அளபெடைச் சேர்க்கையுமாகாவாம், வடமொழி மரூஉச் சொற்கள் புணரின் சுவை குன்றும்.
குறுக்கல்.
(உ-ம்.) யானை யெருத்தத்திருந்த விலங்கிலைவேற் றென்னன்
திருந்தார் நன்றென்றேன்றியேன். இதில் தியேனென்பது தியேனெனக்குறுக்கும் வழிகுறுக்கலாம்.
குறை
தலைக்குறை, இடைக்குறை, கடைக்குறையென மூன்றாம்.
தலைக்குறை
(உ-ம்.) மரையிதழ் புரையுமஞ் செஞ்சீறடி
இதில் தாமரையென்பது மரையென முதற்குறைந்தது.
இடைக்குறை.
(உ-ம்.) வேதினவெரிநினோதி முதுபோத்து.
இதில் ஓந்தியென்றது ஓதியென இடை குறைந்தது
கடைக்குறை.
(உ-ம்.) நீலுண்டுகிலிகை கருப்ப
இதில் நீலமென்பது நீல்எனக்கடை குறைந்தது.
---------
ஆனந்தம்.
எழுத்தானந்தம், சொல்லானந்தம், பொருளானத்தம், யாப்பானந்தம், அணியானந்த மெனவைந்தாம்.
எழுத்தானந்தம்.
(உ-ம்.) ஆழியிழைப்பப்பசல் போமிறவெல்லாந்
தோழி துணை யாய்த்துயர் திரும் - வாழி
நறுமாலைத்தரராய் திரையவோது வென்றுஞ்
செறுமாலை சென்றடைந்தபோது.
இதனுள் திரையனென்றது திறையவோது என எழுத்து நிலையிறழ்ந்து அள பெடையெடுத்தது எழுத்தானந்தம்.
சொல்லானந்தம்.
(உ-ம்.) என்னிற் பொலிந்த திவண்முக மென்றெண்ணியே
தன்னிற் குறைபடுப்பான் றண்மதிய-மின்னி
விரிந்திலங்குவெண்குடைச்செங்கோல் விசய
னெரிந்திலங்கு வேலினெழும்.
இதனுள் விசயனென்ற சொல்லையடுத்து எரிந்து என்று சொன்னிலை பிறழ்ந் துவந்த சொல்லானந்தம்.
பொருளானந்தம்.
(உ-ம்.) வலிக்குமாம் மாண்டார் மனம்.
இதனுள் மாண்டாரென்பது மாட்சிமைப்பட்டாரெனவும், இறந்தாரென வும் பொருள்பட பொருணிலை பிறழ்ந்த பொருளானந்தம்,
யாப்பானந்தம்.
(உ-ம்) றுக்கு முதல்வ னிதிவாழ் வான் சிலைரா
மனுக்கு நிகாயாரை வகுப்பாம்.
இதனுள் இராயனென்றது முதலடியிற்றிலும் இரண்டாமடி தலையிலுமாகப் பிறழ்ந்து வந்த யாப்பானந்தம்.
அணியானத்தம்.
(உ-ம்.) இந்திரனே போலுமிளஞ் சாத்தன் சாத்தற்கு
மந்திரமே போன் விலங்கு மல்லாகம்.
இதனுள் சாத்தனாகிய கீழ்மகனை யாசனைப்போலுவமித்து அணியிறழ்ந்த அணியானந்தம்
குறிப்பிசை.
எழுத்தோசை பலலாத முக்கு விாை இவகை அனு கரண முதலியன செய் யுளசத்து வந்தால் அவற்றையும் அசையுஞ்சீருமாக அலகிட்டுத்தளையும் அடியும் தொடையும் பிறையாமற் கொண்டு நிரப்புதல்.
(உ-ம்) மன்றலங் கொன்றை மலவேய்ந்து மஃஃபற
வென்று திரிய மிடைாகனே - சென்று
மறியாட்டை பண்ணாமல் வண்கையால் வி
பறிபாயோ வண்ணாகு மாது.
ஒப்பு .
சீர்களை முதலியனவரையறுக்கப்பட்ட செய்யுளுட்சில சொன்ன பெற் றியிற் திரிந்துமிக்குங்குறைந்து வந்தாலும் ஒருபுடையொப்புமைநோக்கிச் சார்த் தி அங்ஙனந் தவறிய செய்யுட்களையும் இலக்கண நெறியால் முன்னோதிய செய்யுட்களின் பால் படுத்திக் கொள்ளுதல்.
(உ-ம்) கோழியுங் கவின் குக்கில் குரலியாம் புந்
தாழியுணீலந் தடங்கணீர் போதுமினோ
வாழிசூழ் வையந் தறிவனடியேந்திக்
கூழை நனையக் குடைந்து குளிர்புன
லூழியு மன்னுவாமென்றேலோரெம்பாவாய்
நாற்சீர் நாவடியான் வருவது கலிவிருத்தமென்று வரையறுக்கப்பட்டிருப்பி னும் இந்துஐந்தடி யால் வந்தமையின் ஒருபுடையொப்புமை நோக்கிக் கலிவி ருத்தத்தின் பாற்படுத்தும். இதனைத்தரவு கொச்சக வெனினுமிழுக்காது.
பிறவும் புராணகவிஞராற்பாடப்பட்ட இலக்கியங்கள் மிக்குங் குறைந்தும் வரினும் இவ்விலக்கணத்தால் ஒன்றன் பாற் படுத்திக்கொளவேண்டும்.
-----------
4. பாட்டியல். [#]
[#] பாட்டியலென்பது பாட்டின் கண்ணவாகிய இலக்கணமுணர்த்தித்தன் னோடியையின்மை நீக்கித்தலைமை பற்றிய பெயராய் நின்றது. இவ்வியலோடு செய்யுளியற்கு வேற்றுமை யென்னையெனின் அது செய்தல் செய்யுளெனநின் செய்யுட் செய்தலிலக்கணமாயிற்று.
--------
பாவுறுப்பு மேற்கொண்டொலிக்கும் பாட்டு ஆசுகவியென்றும், மதுரகவி யென்றும், சித்திரகவியென்றும், வித்தாரகவியென்று நான்குவகைப்படும்.
ஆசுகவி.
ஒரு புலவனிவ்வெழுத்தானாதல், இச்சொல்லானாதல், இப்பொருளானாதல். இவ்வணியானாதல், இப்பாட்டானாதல், இவ்வெழுத்தாதி இவ்வெழுத்தந்தம், இச் சொல்லாதி இச்சொல்லந்தமாகப் பாடுவாயென்று கூற , அப்பொழுதே அவனக ருத்துக்கு ஒப்பப்பாடுவோன்.
மதுரகவி.
தொடையும் தொடை விகற்பமும் செறியச் சொற்சுவையும் பொருட்சு லையும் விளங்க உருவகவணி முதலிய முப்பத்தைந்தணிகளோடு அலங்காரம் பெறப்பாடுவோன்.
சித்திரக்கவி.
ஏகபாதமும் எழுகூற்றிருக்கையுங் காதைக்காப்பும் கரந்துறைச்செய்யுளும் கூடச்சதுக்கமும் கோமுத்திரியும் இவை முதலிய வறிந்து பாடுவோன்.
வித்தாரகவி.
மறம் கலிவெண்பா மடலூர்தல் இயல் இசை பாசண்டத்துறை பன்ம ணிமாலை மும்மணிக்கோவை கிரீடை இவைமுதலியன பிறவும் விரித்துப்பா டுவோன்.
கவி, கமகன், வாதி, வாக்கி இவை நான்கும் புலமைக்கியல்பு
கவி.
ஆசுகவி மதுரகவி சித்திரகவி வித்தாரக்கவி அறிந்து பாடவல்லவன்.
கமகன்.
ஞான விசேடத்தாலேயாதல் கல்விப் பெருமையாலேயாதல் ஒருவன் சொல் லிய நூல்விகற்பத்தைத்தான் பயிலாதிருந்தும் பொருள் விரிக்கவல்லவன்.
வாதி.
எடுத்துக் கொண்டகோளுக்குப் பொருந்தினமேற்கோளும் காரணமும் அவையிரண்டிற்குப் பொருந்தினவெடுத்துக்காட்டும் சொல்லி முடிக்கவல்லவன்.
வாக்கி.
அறம் பொருள் இன்பம் வீடென்பனதம்மில்விரவாமற்கேட்டோர் விரும்ப இலக்கணத்தையாதல் இலக்கியத்தையாதல் செஞ்சொல்லால் விளங்கச்சொல்லவல்லவன்,
--------
மங்கலப் பொருத்தம்.
திரு, யானை, தேர், பரி, கடல், மலை, மணி, பூ, புகழ், சீர், மதி, நீர், எழுத் து, பொன், ஆரணம், சொல், புயல், நிலம், கங்கை , உலகம், பரிதி, அமிழ்தம் இவற்றின் பரியாயப் பெயரும் பிறவுமாம்.
சொற்பொருத்தம்.
முதலெடுத்துக்கொண்ட மூவசைச் சீரியவாகிய சொற்கள் மங்கலத்தவா யினும் வகையுளி சேர்ந்தனவும் சிறப்பில் சொல்லும் பல பொருட் கேற்ற சொல்லும் பொருளில் சொல்லும் தோன்றல் திரிதல் கெடுதலென்னும் விகார விறுதிச் சொல்லும் வைக்கப்படா.
எழுத்துப் பொருத்தம்.
ஒற்றுட்பட மூன்றும் ஐந்தும் ஏழும் ஒன்பதுமாகியவெழுத்தால் முதன் மொழிக்கு வருவது நன்று. [$] நான்கும் ஆறும் எட்டுமாகிய வெழுத்தால் முதன் மொழிக்கு வருவது தீது.
----------
[$] உலகம் அமுதம் ஆரணம் எழுத்து எனப்பிறழ்ந்து வருமேனும் மங்கலத் பால் அமைவுடைய என்க.
-------
தானப்பொருத்தம்.
குற்றெழுத்தைந்தோடும் தமக்கொத்த நெடிலைச் சேர்த்து இகரம் உகர தின்றதானத்து முறையே ஐகார ஒளகாரங்களைச் சேர்த்தால் உயிரும் உயிரு மெய்யுமென்று சொல்லப்பட்ட தொகையெல்லாம் ஐந்து கூறாயடங்கும், இவற்றைப் பாட்டுடைத் தலைமகன் இயற்பெயரின் முதலெழுத்தின் கூற்றைத் தொ டங்கிப் பாலன் குமரன் இராசன் மூப்பு மரணமென வருவித்தால் கடையிர ண்டும் ஆகா.
பாப்பொருத்தம்.
குற்றெழுத்தெல்லாம் ஆண்பால், நெட்டெழுத்தெல்லாம் பெண்பால், ஆய் தமும் மெய்களும் பேடு, பெண்பாற்குப் பெண்பாலெழுத்தும் ஆண்பாற்கு ஆண் பாலெழுத்தும் ஆம் இருமையுமயங்கிப் புணரிற் குற்றமாம்.
உணாப் பொருத்தம்.
அ இ உ எ ஆகிய நான்குயிரும், சதாபமவ ஆகிய எழுமெய் யும் அமுதவெழுத்தாம் , யாயோ ராரோ லாலோ இவ்வாறு மெய்யும் யால ஆகிய மூன்று மெய்யும் உயிரளபெடையும் ஒற்றளபெடையும், மகரக்குறுக்கமும் ஆய்தமும் நஞ்செழுத்தாம்.
வருணப் பொருத்தம்
பனிரண்டுயிரும் வல்லெழுத்தாறும் பார்ப்பாருக்காகும்தநயரபம இவ் வாறு மெய்யும் அரசருக்காகும் லவறன இந்நான்கு பெய்யும் வணிகருக்கா கும் . ழ ள இவ்விரணடுமெய்யும். சூத்தியருக்காகும்
நாட்பொருத்தம்.
அ ஆ இ கார்த்திகை, உ ஊ எ ஏ ஐ பூராடம், ஒ ஓ ஒள உத்திராடம், க கா கி கீ திருவோணம், கு கூ திருவாதிரை, கெ கே கை புனர்பூசம், கொ கோ கௌ பூசம் , ச சா சி சீ இரேவதி, சு சூ செ சே சை அச்சுவினி சொ சோ சௌ பரணி , ஞ ஞா ஞெ ஞொ அவிட்டம், ததா சோதி, திதிது தூ தெ தே தை விசாகம், தொ தோ தௌ சதயம் , ந நா நி நீ நு நூ அனுடம், நெ நே நை கேட் டை, நொ நோ நௌ பூரட்டாதி, பா பி பீ உத்திரம், பு பூ அத்தம், பெ பே பை பொ போ பௌ சித்திரை, ம மாமி மீ மு மூ மகம், மெ மே மை ஆயிலி யம் , மொ மோ மௌ பூரம், ய யா உத்திரட்டாதி, யு யோ மூலம், வ வா வி வீ உரோகணி, வெ வே வை வௌமிருகசீரிடம்,
பாட்டுடைத்தலைவன் பெயரின் முதலெழுத்திற்கு உரியநாள் தொடங்கி, உறுகின்ற இருபத்தேழு நாளினையும் ஒன்பதொன்பதாகப்படுத்துச் சென்மம் அனுசென்மம், உபசென்மமென்ற கூடப்பட்ட முப்பகுதியிலும் ஒன்று மூன்று ஐந்து ஏழு எண்ணின் வந்த நாட்கள் பொருத்தமுடையனவல்ல வெனக்கொண்டு இரண்டு நான்கு ஆற எட்டு இவைகளினின்ற நாட்களைப் பொருத்தமு டையவாக முதற்சீரை யெடுத்துச் சொல்லவேண்டும்.
கதிப்பொருத்தம்.
அஇ எகசடதப ஆகியவொன் தெழுத்தும் தேவர்கதி, ஆரஊ எஙஞணந ம ஆகிய வெண்பதும் மக்கட்கதி , ஓ ஓயாலழற ஆகிய வேழெழுத்தும் விலங்கினகதி, ள ஒளவளன ஆகிய ஐந்தெழுத்தும் நாகர்க தி, இவற்றுள் தேவகியும் மக்கள் கசியும் நல்லாவாம் விலங்கின் கதி நரகர்கதி [§] தீயனவாம்.
-----
[§] மங்கல மொழிக்கண் நஞ்செழுத்துவரின் குற்றமுடையனவல்ல.
-------
கணப்பொருத்தம்.
தேமாங்காய் இந்தி, கனம், புளிமாங்காய் சந்திரகணம், கருவிளங்கனி நிலக்கணம், கூவிளங்கனி சீர் (Wம் இவைால்லனவாம், கருவிளங்காய் அந்த ரகணம், கூவிளங்காய் சூரிப்டம், தோளங்களி வாயுக்கணய், புளிமாங்கனி தீக்கணம் இவையகாராம்,
தானம் பொருத்தமும், நாட்பொரு சமும், பொருத்தமும் குற்றம் வரலாகா; தலைவன் இயற்பெயரைக் குறித்து மங்கல சொற்கக் குற்றப்பாடுளதா யின் அம்மங்கலச் சொற்கு அடை கொடுத்து கூறு காலம், பரியாயச்சொற்கூறு கலும் உரியனவாம், அமாங்கலக் சொல் முதற்கணன்றி நடுவிலும் இறுதியிலும் நிற்கவும் பெறும்.
மங்கலத்தை காத்தும்பசாற்பொருத்தமும், உண்டிப் பொருத்தமும், எழுத்துப்பொருக்கமும், வேறுபடினும் அமையுமெனவும் , கானத்தினையும், நா ளினையும், கனத்தினையு ளித் மங்கலச்சொல் வேறுபடினும் அமையுமென வங் கொள்க.
வெண்பா வெண்மை, ஆசிரியப்பா செம்மை, கலிப்பா பொன்மை, வஞ்சிப்பாகருமை.
சூலம்
வெண்பா பிராமண குலம், ஆசிரியப்பா சத்திரிய குலம், கலிப்பா வணிக்கு லம், வஞ்சிப்பா சூத்திரகுலம்.
நாள்
வெண்பா கார்த்திகை முதலியவேழும், ஆசிரியப்பா மகமுதலியவேழும், கலிப்பா அனுட முதலிய மாறும் , வஞ்சிப்பா அவிட்ட முதலிய வேழும்.
இராசி
வெண்பா விருச்சிகம் மீனம், ஆசிரியப்பாமேடம் சிங்கம் தனுசு, கலிப்பா, மி துனம் கும்பம் துலாம், வஞ்சிப்பா இடபம் கன்னி மகரம்
--------
* எடுத்த மங்கலச்சொல்முதலெழுத்தாமாயின் குற்றமுடையவல்ல.
--------
கிரகம்.
வெண்பா சந்திரன் வியாழம், ஆசிரியப்பா சூரியன் செவ்வாய், கலிப்பா புதன் சனி, வஞ்சிப்பா வெள்ளி இராகு.
நீலம்.
வெண்பா முல்லை, ஆசிரியப்பா குறிஞ்சி, கலிப்பா மருதம், வஞ்சிப்பா நெய்தல்
சீர்
க கா, கி, கீ, சொ, சோ, ந, நா, நி, நீ , யா,வ,வா, வி, வீ என்னும் எழுத் துகளை முதலாகவுடைய பெயர்களுக்குச் சீரென்றெடுத்துப்பாடுக.
எழுத்து
ங , நூ, என்னும் பெயர்களுக்கு எழுத்து என்றெடுக்க
பொன்.
கு, கூ, சௌ ,து, தூ, தெ, தே, நெ, நே, பு, பூ, மே, மே, மோ, மோ மௌ, என்னும் பெயர்கட்குப் பொன் என்றெடுக்க
பூ
கௌ, சை, ம, மா, மி, மீ, மு,மூ, வை, வௌ, என்ற பெயர்கட்குப், பூ வென்றெடுக்க,
திரு-திங்கள் கொ, கோ என்ற பெயர்கட்குத்திரு அல்லது திங்கள் என்றெடுக்க.
மணி.
கெ, கே, என்றபெயர்கட்கு மணி என்றெடுக்க
நீர்
கை, சி, சீ, தீ, தை, நொ, நோ, பை என்னும் பெயர்கட்கு நீர் என்றே டுக்க.
சொல்.
ஒள, சு, சூ, செ, சே, தௌ, நௌ என்னும் பெயர்கட்குச் சொல் என்றே டுக்க,
கங்கை .
அ, ஆ, ஒ, ஓ, த, தா, தொ, தோ, யோ என்னும் பெயர்கட்குக் கங்கையென் றெடுத்த
வாரணம்.
ஞெ, ஞொ என்ற பெயர்கட்கு வாரணம் என்றெடுக்க
குஞ்சரம்.
இ, ஈ, ஞா , என்னும் பெயர்கட்குக்குஞ்சரம் என்றெடுக்க,
உலகம்
ப, பா,என்றபெயர்கட்கு உலகம் என்றெடுக்க.
பார்
ச, ரா, பெ, பே, பெ- போ, வெ.வே என்னும் பெயர்கட்குப்பாரான் நெடுக்க .
தேர்
உ, எ, எ, ஏ, 3, கை, மை என்னும் பெயர்கட்குத் தேர் என்றெடுக்க.
இம்மங்கலச் சொல்லுகட்குப் பரியாயமான சொற்களைக் கொண்டுபாடினுமி முக்காது.
பாட்டுடைத் தலைவன் இயற்பெயரையும் நார்ப்பெயரையும் உகந்து எது கையினிலையுளவாகப் பாடுவது சிறப்பு.
கவிக்குவழு.
பலரானும் உடன்பட்ட வழக்கோடு நூற்பயன் பயக்கும் இன்பத்தினை விட் மெறுதலையாற் புணர்த்தலும் வடவெழுத்தே மிகப்புணர்த்தலும், பழையோர் கூறிய இலக்கண சொற்களை விட்டுக் காலத்தாற் கூறும் வழஉச்சொற்புணர்த்தலும், வினாவின்றி மயங்கக் கூறுதலும் வழுவாம்.
வெண்பா அந்தணருக்கும் ஆசிரியப்பா அரசருக்கும், கலிப்பாவணிகருக்கும் வஞ்சிப்பா சூத்திரருக்கும் உரியவாம்.
திணை .
வெண்பாமுல்லைக்கும், ஆசிரியப்பா குறிஞ்சிக்கும், கலிப்பா மருதத்திற்கும், வஞ்சிப்பா நெய்தலுக்கும், மருட்பாபாலைக்குமுரியவாம்.
நிறம்.
வெண்பாவிற்கு வெண்மையும், ஆசிரியப்பாவிற்குச் செம்மையும், கலிப்பா விற்குக்கருமையும், வஞ்சிப்பாவிற்குப் பொன்மையுமுரியவாம்.
நாள்.
வெண்பாவிற்குக்கார்த்திகை முதல் ஆயிலியமீறாகவும், ஆசிரியப்பாவிற்கு மகமுதல்விசாசுமீறாகவும், கலிப்பாவிற்கு அனுடமுதலவிட்ட மீறாகவும், எஞ்சிப் பாவிற்குச் சதயமுதல்பரணியீறாகவுமுரியவாம்.
இராசி.
வெண்பாவிற்குக் கர்க்கடகம் விருச்சிகம் மீனமும், ஆசிரியப்பாவிற்கு மே டம் சிங்கம் தனுசும், கலிப்பாவிற்கு மிதுனம் துலாம் கும்பமும் , வஞ்சிப்பா விற்கு இடபம் கன்னி மகரமுமுரியவாம்.
கோள்
வெண்பாவிற்குச் சந்திரனும் பிரகஸ்பதியும், ஆசிரியப்பாவிற்கு ஆதித்த லும் செவ்வாயும், கலிப்பாவிற்குப் புதனும் சனியும் வஞ்சிப்பாவிற்கு சுக்கரனும் பாம்புமுரியோர். இன்னும் பாக்களுக்குரிய புஷ்பமும் சந்தனமும் வஸ்திரமும் ஆ பரணங்களும் முன் சொன்ன நிறப்பகுதியினாலே கொள்க.
----
சாதகக்கவி
ஓரை நிலையும், நிதிநிலையும், யோகநிலையும், நாண்மீனிலையும், வாரநிலையும் கரணநிலையும், கிரகநிலையும் ஆகயவேழுறுப்புகளினிலைகளையும், சோதிட நூலால் நன்குணர்ந்து அவற்றையமைத்து அவற்றால் தலைமகனுக்கு அடைவன கூறல்.
பிள்ளைக்கவி.
காப்பு செங்சீரை தால் சப்பாணி முத்தம் வாரானை அம்புலி சிறுபறை சிற்றில் சிறுதேர் இவற்றை முறையே ஆசிரிய விருத்தத்தால் பத்துப் பத்தா கக்கூறுவது ஆண்பாற் பிள்ளைக்கவி. இவ்வுறுப்பினில் கடை மூன்றொழித்துக் கழங்கு அம்மனை ஊசல் என்றிவற்றைக் கூட்டிக் கூறுவது பெண்பாற் பிள்ளைக்கவி.
பிறந்த மூன்றாந்திங்கள் முதல் இருபத்தொரு திங்கள் காறும் ஒற்றித் த் திங்களில் நிறைமதி பக்கத்திற் பிள்ளைக்கவியை விரும்புக . மூன்றாமாண்டி னும் ஐந்தாமாண்டினும் ஏழாமாண்டினும் கொள்ளவும் பெறும். காப்பு ஒன் பது பாட்டானும், பதினொரு பாட்டானும் பாடுக . நிலங்கள் பத்துந்தம்மில் ஒப்பக்கொண்டு பாடுமிடத்து ஒற்றைப்பட்டாடுதல் சிறப்புடைத்து; இர ட்டிக்கப் பாடுமிடத்தும் ஓசை பெயர்த்துப்பாடுக. காப்பு முதற்கணெடுத்த ஆசிரிய விருத்தம் நான்கடிக்கும் எழுத்தொப்பப் பாடுதல் வேண்டுமெனக் கொள்க.
கலம்பகம் .
வெண்பா கலித்துறை ஒருபோகு முதற்கவி யுறுப்பாக முற்கூறி, புயவ குப்பு மதங்கு அம்மனை காலம் சம்பிரகம் கார் தவம் குறம் மறம் பாண் களி சித்து இரங்கல் கைக்களை துது வண்டு தழை சல் என்னும் பதினெட்டு றுப் பியைய மடக்கு மருட்பா அகவற்பா கலிப்பா வஞ்சிப்பா ஆசிரியவிருத் தம் கலிவிருத்தம் கலித்தாழிசை வஞ்சிவிருத்தம் வஞ்சித்துறை வெண்நிறை யென்னுமிவற்றால் இடையே வெண்பா கலித்துறை விரலி அந்தாதித்தொ
டையான் முற்றுறக் கூறுவது.
காலத்தான் மருவிய பிச்சியார் கொற்றியார் இடைச்சியார் முதலியவுங் கொள்க. தேவர்க்கு நூறும் அந்தணர்க்குத் தொண்டாற்றைந்தும் அரசர்க்குத் தொண்ணாறும் அமைச்சருக்கு எழுபதும் வணிகர்க்கு ஐம்பதும் வேளாளருக் குமுப்பதுமாகப்பாடுக . அந்தணரைத் தேவருக் கொப்பாகவும், குறுநில மன்ன வரை அரசர்க் கொப்பாகவும் பாடுதலுண்டு
பரணி.
போர்முகத்து ஆயிரம் யானையைக் கொன்ற வீரனைத்தலைவனாகக்கொண் டு, கடவுள் வாழ்த்து கடைகிறப்பு பாலைநிலம் காளிகோயில் பேய்களோடுகா ளி காளியோடு பேய்கள் கூறத் தான் சொல்லக்கருதிய தலைவன் கீர்த்திவிளங் க அவன்வழியாகப் புறப்பொருள் தோன்ற, வெம்போர் வழங்கவிரும்பல், இவை யெல்லாம் இருசீரடி, முச்சீரடி யொழிந்து ஒழிந்த மற்றடியாகாரடி பலதா ழிசையாற் பாடுவது. வெண்கலிப்பாவாற்பாடினுமிழுக்காது.
கோவை.
இருவகையாகிய முதற்பொருளும், பதிநான்குவகையாகிய கருப்பொரு ளும், பத்து வகையாகிய உரிப்பொருளும் பெற்றுக் கைக்கிளை முதலுற்ற அன்பு டைக்காமப்பகுதியவாம் களவொழுக்கமும் கற்பொழுக்கமும் கூறலேயெல்லை யாகக் கட்டளைக்கலித்துறை நானூற்றால் திணை முதலாக துறையீறாகக் கூறப்ப ட்ட பன்னிரண்டகப் பாட்டுறுப்பும் வழுவின்றித் தோன்றப்படுவது. இது அக் வல் வெண்பா கலிப்பா வஞ்சிப்பா வண்ணம் இவற்றாலும் வழங்கப்படும்
வருக்கக்கோவை.
அகரமுதலாகிய வெழுத்துவருக்க மொழிக்கு முதலா மெழுத்துக்கட்ட ளைக் கலித்துறையாகப் பாடுவது.
மும்மணிக்கோவை
ஆசிரியப்பாவும், வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் முறைமுறை தொகை முப்பது பெற அடுக்கி அந்தாதி தொடையாற் பாடுவது.
ஒபா ஒருபஃது.
அகவல், வெண்பா, கலித்துறை இவற்றொன்றினால் அந்தாதித்துப் பத்து பாடுவது .
இருபாவிருபஃது.
பத்து வெண்பாவும் பத்தகவலும் சந்தாதித் தொடையாக இருப்பது இணை ந்து வருவது.
அட்டமங்கலம்.
கடவுளைப்பாடி அக்கடவுள் காக்கவென ஆசிரிய விருத்தமெட்டு அந்தாதித் துப்பாடுவது.
அங்கமாலை.
ஆண்மகனுக்கும் பெண்மகளுக்கும் மிக்கன வெடுத்துக் கூறு மயைவங்க ளை வெண்பாவாலாயினும், வெளிவிருத்தத்தாலாயினும் பாதாதிகேசம், கேசாதி பாதமுறைபிறழாது தொடர்வுறப்பாடுவது
அனுராகமாலை
தலைவன் கனவின்கணொருத்தியைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து இனிமையுறப் புணர்ந்ததைத் தன்னுயிற்பாங்கற்குரைத்ததாக நேரிசைக்கலிவெ ண்பாவாற் கூறுவது.
இரட்டைமணிமாலை.
முறையானே வெண்பாவுங் கலித்துறையும் இருபது அந்தாதித்தொடை யான் வருவது.
இணைமணிமாலை.
வெண்பாவும் அகவலும் வெண்பாவும் கவித்துறையுமாக இரண்டிரண்டாக இணைத்து வெண்பாவக வலிணைமணிமாலை, வெண்பாக் கலித்துறை யிணைம் ணிமாலையென நூறுநூறு அந்தாதியாகப் பாடுவது.
நவமணிமாலை.
வெண்பா முதலாக வேறுபட்ட பாவும் பாவினமுமாக வொன்பது செய்யுளந்தாதித்துப் பாடுவது.
மும்மணிமாலை.
வெண்பாவும், கலித்துறையும், அகவலுமந்தாதியாக முப்பது பாடுவது.
நான்மணிமாலை
வெண்பாவும், கலித்துறையும், அகவலும், விருத்தமும் அந்தாதியாய் நாற் பது வருவது .
நாமமாலை.
அகவலடியும் கலியடியும் வந்து மயங்கியவஞ்சிப்பாவால் ஆண்மகனைப் புக ழ்ந்து பாடுவது.
பலசந்தமாலை
பத்துப்பத்துச் செய்யுள் வெவவறு சத்தமாக நாறு செய்யுட் கூறுவது.
பன்மணிமாலை
கலம்பகத்திற்குக் குறித்த ஒருபோரும், அம்மானையும் ஊசலுமின்றி எனை யுறுப்புக்களெல்லாம் வரப்பானது.
மணிமாலை
எந்தப்பொருண்மேலும், வெண்பாவிருபதும், கலித்துறை நாற்பதும் விர வப்பாடுவது.
பாழ் சீசியாலை, அகவலடியும், 1 லியடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் பெண்களின் சிறப்பைக் கூறுவது
பெருமகிழ்ச்சிமாலை.
பெண்கள் அழகும், குணமும், ஆக்கமும், சிறப்பு முதலியன கூறுவது.
வருக்கமாலை.
மொழிக்கு முதலாகும் வருக்கவெழுத்தினுக்கு ஒவ்வொரு செய்யுட் கூறு
மெய்க்காத்திமாலை. சொற்சீரடியென்னும் கட்டுரைச் செய்யுளால் குலமுறையிற் செய்த கீர்த்தியைக் கூறுவது.
காப்புமாலை.
தெய்வங்காத்தலாக மூன்று செய்யுளாலும் ஐந்து செய்யுளாலும் பாடுவது .
வேனின்மாலை.
வேனிலையும் முதிர்வேனிலையும் சிறப்பித்துப்பாடுவது .
வசந்தமாலை.
தென்றலை வருணித்துப் பாடுவது.
தாரகைமாலை
அருந்ததிக்கற்பின் மகளிர்க்குள்ள இயற்கைக் குணங்களை வகுப்பிற்கூறுவது
உற்பவமாலை.
திருமால் பிறப்புப் பத்தையு ஆசிரிய விருத்தத்தால் கூறுவது.
தானைமாலை.
அகவலோசையிற் பிறழாது ஆசிரியப்பாவால் முன்னரெடுத்துச்செல்லும் கொடிப்படையைக் கூறுவது.
தண்டகமாலை.
வெண்பாவினால் முன்னூறு செய்யுட்கூறுவது.
வெட்சிமாலை
சுத்த வீரன் பகைவ ரூரிற் சென்று பசுநிரை கவர்ந்து வருவதை மிகுத்துக்கூறுவது.
வெற்றிக்கரந்தைமஞ்சரி
பகைவர் கொண்டதந்நிரை மீட்போர் கரந்தைப் பூமாலைச்சூடிப் போய் மீட்டதைக் கூறுவது.
போர்க்கெழவஞ்சி
பகைவர் மேல் போர்க்குறித்துப் போகின்ற வயவேந்தர் வஞ்சிப்பூமாலை சூடப்புறப்படும் படையெழுச்சிச்சிறப்பை யாசிரியப்பாவாற் கூறுவது.
வரலாற்றுவஞ்சி
குவமுறை பிறப்புமுதலிய மேம்பாட்டின் பலசிறப்பையும் கீர்த்தியையும் வஞ்சிப்பாவாற் கூறுவது.
செருக்களவஞ்சி.
போர்க்களத்தில் இறந்தகுதிரை யுடலையும் யானையுடலையும் மனிதருடலை யும் நாயும் பேயும் பிசாசமும் காகமும் கழுகும் தின்றுகளித்துப்பாடிய சி தப்பைப் பாடுவது.
காஞ்சிமாலை.
பகைவரூர்ப்புறத்துக் காஞ்சிப்பூமாலை சூடியூன்றலைக் கூறுவது.
-----------
நொச்சிமாலை
புறத்தூன்றிய பகைவர் கோடவின்றி நொச்சிப் பூமாலை சூடித் தன்மதில் காக்குந்திறங் கூறுவது.
அழிகைமாலை
பகைவர் ஊர்ப்பாஞ்சூடி உழினைப்பூமாலை சூடிப்படை வளப்பத்தைக் கூறுவது
தும்பைமாலை
பகைவரொடு தும்பைப் பூமாலை சூடிப்பொருவதைக் கூறுவது.
வாகைமாலை.
பகைவரை வென்று புகழ்படைத்து வாகைப் பூமாலை சூவேதையாசிரியப் பாவாற் கூறுவது
வாதோரணமஞ்சரி
யானையை வயப்படுத்தி அடக்கனவருக்கும் எதிர்த்தயானையை வெட்டிய டக்கினவருக்கும் பற்றிப் பிடித்துச் சேர்த்தவருக்கும் வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப்பாவால் தொடுத்துப் பாடுவது.
எண்செய்யுள்
பாட்டுடைத்தலைவன் கனரையும் பெயரையும் பத்து முதல் ஆயிரமளவும் பாடி எண்ணாந்பெறுவது.
தொகை நிலைச்செய்யுள்
நெடிலடிச் செய்யுளால் தொகுத்தது நெடுந்தொகை, குறளடிச் செய்யு ளால் தொகுத்தது குறுந்தொகை, கலிப்பாவால் தொருத்தது கலித்தொகை போல்வன.
ஒலியலந்தாதி
பதினாறு கலையோ ரடியாகவைத்து, இங்ஙனம் நாலடிக்கறுபத்து நாலுக லைவகுத்து, பலசந்தமாக வண்ணமும் , கலைவைப்பும், தவறாமலந்தாதித்துமு ப்பது செய்யுட்பாடுவது. சிறுபான்மை யெட்டுக்கலையானும் வரும், வெண்பா அகவல், கலித்துறை ஆகிய இம்மூன்றையும் பத்துப்பத்தாக அந்தாதித்துப் பா டுவதுமுண்டு.
பதிற்றந்தாதி.
பத்துவெண்பா பத்துக்கலித்துறை பொருட்டன்மை தோன்ற அந்தாதித் தப்பாடுவது.
நூற்றந்தாதி .
நூறு வெண்பாவிலேனும் நூறுகலித்துறையிலேனும் அந்தாதித்துக் கூறுவது.
உலா
இளமைப்பருவ முற்றதலைவனைக் குவத்தாது ஙகுடி பிறப்பானும் மங்கலங்க ளாலும் பரம்பரையானும் இன்னானெனபது தோன்றக் கூடி அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு முதன்மையெய்தியமான நெருங்கிய அழகிய வீ தியிடத்து அன்னோன்பவனிவரப்பேதை முதலிய எம் பருவமானார் கண்டுதொ ழ உலாவந்ததாக நேரிசைக் கலிவெண்பாவாற் கூறுவது
ஐந்துமுதலேழளவும் பேதை, எட்டுமுதற்பதினொன்றளவும் பெதும்பை, பன்னிரண்டு முதற்பதினமூன்றளவுமங்கை , பதினான் குமுதல் பத்தொன்பதளவு மடந்தை, இருபது முதலிருபத்தைந் தளவுமரிவை, இருபத்தாறு முதல் முப்பத் தொன்றளவுந்தெரிவை, முப்பத்திரண்டு முதல் நாற்பதளவும் பேரிளம் பெண்.
உலாமடல்
கனவிலொரு பெண்ணைக் கண்டு கலவியின் பங்காந்தோன் விழித்தபின் அவள் பொருட்டு மடவார்வேனெனபதைக் கலிவெண்பாவால் முற்றுவிப்பது,
வளமடல்.
அறம், பொருள், இன்பமாகிய பயனை நித்திதது, மங்கையர் காமவின்பத் தைப் பயனெனக்கொண்டு பாட்டுடைத்தலை மகன் இயற்பெயருக்குத்தக்கதை எதுகையாக நாட்டிக்கூறி அவ்வெதுகைப்பட தனிச்சொல்லின்றி இன்னிசைக் கலிவெண்பாவால் தலைமகனிரந்து குறைபெறாது மடலேறுவதாய்ச்சாரடியெ துகையாக வரப்பாடுவது.
ஆற்றுப்படை
அகவற்பாவால் விற, பாணா, கூத்தா, பொருதா , இந்நால்வரிலொருவர் பரிசுக்குப்போவாரைப் பரிசுபெற்று வருவோர் ஆற்றிடைக்கண்டு தலைவன் கீர்த் தியும், கொடையும், கொற்றமும் கூறுவது
கண்படைநிலை,
அரசரும் அரசரைப்போல் வாரும் அவைக்கண் நெடிது வைகியவழி மருத் துவரும் மந்திரிமாரும் முதலியோருக்கும் கண்டுயில் கொடலைக்கருதிக்கூறுவது.
பெயான்னிசை
பாட்டுடைத்தலைவன் பெயரைச்சார இன்னிசை வெண்பாவால் தொண்ணூ றேனும் எழுபதேனும் ஜம்பதேனும் பாடுவது.
-----------
ஊரின்னிசை.
பாட்டுடைத்தலைவ னூரைச்சார இன்னிசை வெண்பாவால் தொண்ணூ றேனும் எழுபதேனும் ஐம்பதேனும் பாடுவது.
பெயர் நேரிசை
பாட்டுடைத்தலைவன் பெயரைச்சார நேரிசை வெண்பாவால் தொண்ணூ றேனும் எழுபதேனும் ஐம்பதேனும் பாடுவது.
ஊர் நேரிசை .
பாட்டுடைத்தலைவன் கவரைச்சார நேரிசை வெண்பாவால் தொண்ணூறே னும் எழுபதேனும் ஐம்பதேனும் பாடுவது.
ஊர் வெண்பா
வெண்பாவால் ஊரைச்சிறப்பித்துப் பத்துச் செய்யுள் பாடுவது.
விளக்குநிலை.
வேலும் வேற்றலையும் விலங்காதோங்கியவாறு போலக் கோலொடுவிளக்குமொன்று பட்டோங்குமா றோங்குவதாகக் கூறுவது.
புறநிலை.
நீவணங்குந் தெய்வம் நின்னைப் பாதுகாப்ப கின்வழிவழிமிகுவதாகவெனக் கூறுவது.
கடைநிலை
சான்றோர் தூரத்தில் வருதலால் பிறந்த வருத்தர் தீர வாயில் காக்கின்றவ னுக்கு என்வரவைத் தலைவற்கிசையெனக் கடைக்கணின்று கூறுவது.
கையறுநிலை.
கணவனோடு மனைவி கழிந்துழி , அவர்கண்பட்ட வழிவுப் பொருளெல்லாம் பிறர்க்கறிவுறுத்தி, தாமிறந்துபடாதொழிந்தவாயத்தாரும், பரிசில் பெறும் விற லியரும் தனிப்படருழந்து செயலறு நிலையைக் கூறுவது.
தசாங்கப்பத்து.
நேரிசை வெண்பாவால் அரசன் படைத்த தசாங்கத்தினைப் பத்துச்செய்யுட்கூறுவது.
தசாங்கத்தியல்.
அரசன் தசாங்கத்தை யாசிரிய விருத்தத்தால் பத்துச் செய்யுட் கூறுவது
அரசன் விருத்தம்.
பத்துக்கலித்துறையும், முப்பது விருத்தமும் கலித்தாழிசையுமாக மலை கடல், நாடுவருணனையும், நிலவருணனையும் , வாண்மங்கலமும், தோண் மங்கல மும் பாடி முடிப்பது.
----------
நயனப்பத்து.
கண்களைப் பத்துச்செய்யுளால் கூறுவது.
பயோதரப்பத்து.
முலையைப் பத்துச்செய்யுளால் கூறுவது.
பாதாதிகேசம்.
கலிவெண்பாவால் அடிமுதல் முடியளவும் கூறுவது.
கேசாதிபாதம்.
கலிவெண்பாவால் முடிமுதல்டியளவும் கூறுவது.
அலங்காரபஞ்சகம்.
வெண்பா, கலித்துறை, அகவல், ஆசிரியவிருத்தம், சந்த விருத்தம் இவ்வகையே மாறி மாறி நூறு செய்யுளந்தாதித்துப் பாடுவது.
கைக்கிளை . ஒருதலைக் காமத்தை ஐந்து விருத்தத்தால் கூறுவது. முப்பத்திரண்டு செய் யுளால் கூறுதலுமாம்.
மங்கலவள்ளை.
உயர் குலத்திற்பிறந்த மடவாலை வெண்பா வொன்பதாலும், வகுப்பொன்பதாலும் பாடுவது.
தூது
ஆண்பாலும் பெண்பாலும் அவரவர்காதலை பாணன் முதலிய உயர்திணை யோடும், கிளி முதலிய வஃறினையோடும் சொல்லித்தூது போய் வாவெனக்கலி வெண்பாவாற் கூறுவது.
[#] நாற்பது.
இடமும், பொருளும், காலமும், ஆகியவற்றுளொன்றினை நாற்பதுவெ ண்பாவாற் கூறுவது.
------
# காலம்பற்றிவருவது கார்நாற்பது இடம்பற்றி வருவது களவழி நாற்பது பொருள் பற்றி வருவது இன்னாநாற்பது இனியா நாற்பது
----------
குழமகன்.
கலிவெண்பாவால் பெண்கள் தங்கையிற்கண்ட இளைமைத்தன்மையுடை ய குழமகனைப்புகழ்ந்து கூறுவது.
தாண்டகம்.
இருபத்தேழெழுத்து முதலாக வுயர்ந்தவெழுத்தடியினவாய் எழுத்தும் கு ருவும் இலகுவும் ஒத்துவருவன அளவியற்றாண்டகமெனவும் எழுத்தொவ்வாதும் எழுத்தல கொவ்வாதும் வந்தன அளவழித்தாண்டகமெனவும் ஒரு பொருளைக் குறித் துப் பத்துச்செய்யுளாகக் கூறுவது.
பதிகம்.
ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுளாகக் கூறுவது.
சதகம்.
அகப்பொருளொன்றன் மேலாதல், புறப்பொருளொன்றன் மேலாதல் கற்பித்து நூறு செய்யுட்கூறுவது.
செவியறிவுறாஉ
பொங்குதலின்றிப் புரையோர் நாப்பணிக்கூறல கடனென அவையடக்கி யற் பொருளும் மருட்பாவாற்பாடுவது
வாயுறை வாழ்த்து.
வேம்புங்கடுவும் போல்வனவாகிய வெஞ்சொற்கள் முன்னர்த் தாங்கக்கூ டாவாயினும், பின்னர்ப் பெரிதும் பயன்றருமென, மெய்ப்பொருளுற மருட் பாவாற் கூறுவது.
புறநிலை வாழ்த்து.
வழிபடு தெய்வ நின்னைப் புறங்காப்பக் குற்றமில்லாத செல்வத்தோடு ஒரு காலைக்கொருகால் சிறந்து பொலிவாயெனறு மருட்பாகா வறைவது.
பவனிக்காதல்.
உலாக் காட்சியாலெய்திய காமமிக்கால், அவை பிறரொடு முரைத்து வருந் துவது,
ஊசல்.
ஆசிரிய விருத்தத்தானாதல், கலித்தாழிசையானாதல் சுற்றத்தோடும் பொ லிவதாக ஆடிருசல், ஆடாமோவூசல் என்றிறக் கூறுவது.
எழுகூற்றிருக்கை.
கோதிலேழறை யாக்கிக்குறு மக்கண் முன்னின்றும், புக்கும் போந்தும் வி ளையாடும் பெற்றியால் வழுவாமை ஒன்று முதலேழிறுதியாக முறையானே பாடுவது.
கடிகை வெண்பா.
தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழுங்காரியம் கடிகையளவிற் றோன்றி நடப்பதாக, முப்பத்திரண்டு நேரிசை வெண்பாவாற் கூறுவது.
சின்னப்பூ .
நேரிசை வெண்பாவால் அரசனது சின்னமாகிய தசாங்கத்தைச் சிறப்பித்து, நூறு, தொண்ணூறு , எழுபது, ஐம்பது, முப்பது என்னுந் தொகைபடக் கூறவது.
விருத்தவிலக்கணம்.
வில், வாள், வேல், செங்கோல், யானை, குதிரை, நாடு, ஊர் , குடை இவ்வொன்பதையும் பத்துப்பத்து அகவல் விருத்தத்தால் ஒன்பது வகையுற ப்பாடுவது.
முதுகாஞ்சி.
இளமை கழிந்து அறிவின்மிக்கோர், இளமை கழியாத அறிவின் மாக்கட் குக் கூறுவது.
இயன் மொழிவாழ்த்து.
இக்குடியிற் பிறந்தோர்க் கெல்லாம் இக்குறையியல் பென்றும், அவற்றை நீயும இயல்பாகவுடையை யென்றும், இன்னோ பலநீயும் இயல்பாக வீயென்று ம , உயர்ந்தோரவனை வாழ்த்துவதாகக் கூறுவது.
ஒலியலந்தாதி.
பதினாறு கலையோரடியாக வைத்து, இங்ஙனம் நாலடிக்கறுபத்து நான்கு கலை வகுத்துப், பலசந்தமாக வண்ணமும், கலைவைப்புந் தவறாமலந்தாதித்து முப் பது செய்யுட் பாடுவது, சிறுபான்மையெட்டுக்கலையானும் வரும், வெண்பா, கலி த்துறை ஆகிய இம்மூன்றையும் பத்துப்பத்தாக அந்தாதித்துப் பாடுவதுமுண்டு.
குறத்திப்பாட்டு.
தலைவன் பவனிவரவு, மகளிரகாமுறல் , மோகினி வரவு, உலாப்போந்த தலைவனைக்கண்டு மயங்கல், திங்கள் தென்றன் முதலியவுவாலம்பனம் பாங்கி யுற்ற தென்னெனவினவல், தலைவிபாங்கியோடுற்றது கூறல், பாங்கிதலைவனைப் பழித்துக்கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல் தலைவிபாங்கியைத் தூதுவே ண்டல் தலைவிபாங்கியோடு தலைவனடையாளங்க. றல், குறத்திலாவு, தலைவிகு றத்தியை மலைவள முதலிய வினவல், குறத்திமலைவள நாட்டு வளமுதலிய கூற ல், தலைவன்றலவளம் கிளை வள முதலிய கூறல், குறிசொல்லிவந்தமை கூறல், த லைவிகுறிவினவல், குறத்திதெய்வம்பராவல குறிதோந்து நல்வரவுகூறல், தலை விபரிசிலுதவிவிடுத்தல், குறவன் வரவு , புள்வரவுகூறல், கண்ணி குத்தல், புட்ப இத்தல் குறத்தியைக் காமுற்றுத்தேடல், குறவன்பாங்கனொடு குறத்தியடையாள ங்கூறல், குறவன் குறத்தியைக் கண்ணுறல், குறவனணி முதலிய கண்டையுற்று வினவலு மாண்டாண்டு குறத்திவிடை கூறலுமாகக்கூறல், பெரும்பான்மையு மிவ்வகை யுறுப்புக்களால் , அகவல், வெண்பா, தாவு கொச்சகம், கலித்துறை, கழிநெடில் விருத்தம் கலிவிருத்தம் இச்செய்யுளிடைக் கிடைக்கூறிச் சிந்துமு தலிய நாடகத்தமிழாற்பாடுவது.
உழத்திப்பாட்டு
கடவுள் வணக்கமுறையே மூத்தபள்ளி இளைய , பள்ளி, குடும்பன் வரவோ டவன் பெருமை கூறல் முறையே யவர் வரலாறு நாட்டுவளன் குயிற்கூக்கேட்டல், மழைவேண்டிக் கடவுட்பரவல், மழைக்குறியோர்தல், ஆற்றின் வாவு, அதன் சிறப்புக்காண்ட லிவற்றின் கிடையிடையகப் பொருட்டுறையுங் கூறிப்பண் ணைத்தலைவன் வரவுபள்ளிகலிருவர் முறையீடு இளையாளையவானுப்பல், பள்ள ன் வெளிப்படல் பண்ணைச்செயல்வினவல், அவனது கூறல், ஆயரை வருவித்த ல், அவர்வரல் , அவர்பெருமை கூறல் மூத்தபள்ளி முறையீடு, குடும்பன் கிடை யிலிருந்தான் போலவரல், அவனைத்தொழுவில் மாட்டல் அவன் புலம்பல், மூ த்தபள்ளி யடி சிற்கொடுவரல் , அவனவளோடு கூறல் அவனவனை மன்னித்தல் கேட்க வேண்டல், அவண்மறுத்தல் அவன் சூளுறல் அவனவளை மீட்கவேண்டி பண்ணைத் தலைவனைப்பரவல், விதைமுதலிய வளங்கூறல், உழவருழல், காளை வெருளல் அதுபள்ளணைப்பாய்தல், பள்ளிகள் புலம்பல் அவனெழுந்துவித்தல் அதைப் பண்ணைத்தலைவற்கறிவித்தல், நாறு நடல், விளைந்தவிர் செப்பஞ்செயல் நெல்லளத்தல், மூத்தப்பள்ளி முறையீடு பள்ளிகளுளொருவாக் கொருவரேசலெ ன விவ்வுறுப்புக்களுறப் பாட்டுடைத்தலைவன் பெருமையாங்காங்கு தோன் றச்சிந்தும் விருத்தமுய விரவிவர விவற்றாற்பாடுவது.
பெருமங்கலம்.
நாடோறுந் தான் மேற்கொள்கின்ற சிறை செய்தான் முதலிய செற்றங்களை க்கை விட்டுச் சிறைவிடுகன் முதலிய சிறந்த தொழில்கள் பிறந்ததற்குக் காரண மான நாளிடத்து நிகழும் வெள்ளணயைக்கூறுவது.
பெருங்காப்பியம்.
தெய்வணக்கமுஞ் செயப்படுபொருளு மிவற்றிற்கியைய வாழ்த்து முன் னுளதாயறம் தெய்வ வணக்கமுஞ் செயப்படுபொருளுமிவற்றிற் கியைய வாழ்த் துமுன்னுளதாயறம் பொருளின பம் வீடென்னு நாற்பொருளும் பயக்குநெறியுள தாய நிகரிலாத்தலைவனையுடைத்தாய மலையுங்கடலு நாடுநகரும் பருவமுமிருசு டர்த்தோற்றமு மென்றிவற்றின் வளங்கூறுதலுமணமு முடிகவித்தலும் பொ ழில்விளையாட்டு நீர்விளையாட்டு உண்டாட்டு மகப்பேறும் புலவியுங்கலவியுமெ ன்றி வற்றைப் புகழ்தலும் மந்திரமுந்து கஞ் செலவும் போரும் வென்றியுமென் றிவற்றைத் தொடர் துதி கூறலுமாகியவிலைமுறையே தொடர்வுறச் சருக்கமில ம்பகம் பரிச்சேதமென்றும் பகுப்புடைத்தாய் வீரமுதலிய சுவையும் வந்றை வி ளக்குங் கருத்து விளங்கக்கற்றோரானியற்றப்படுவதாம் நாற்பய னொழிந்தேனை யவுறுப்புக்களுட்சில குறைந் தியலினுங்குற்றமின்று.
சிறுகாப்பியம்.
அறம் பொருளின்பம் வீடெனு நான்கனுளொன்றும் பலவுங்குறைந்தே னையவுறுப்புக்கண் மேற்கூறியவாறியல்வது.
வேறுபெயர்கள் .
பொருளானும், இடத்தானும், தொழிலானும், உறுப்பானும், அளவானும் செய்தோன் பெயரானும் செய்வித்தோன் பெயரானும் பெயர்பெறும். பொரு ள்பற்றி வந்தது ஆசாரக்கோவை, இடம்பற்றி வந்தது மதுரைக்காஞ்சி, காலம் பற்றிவந்தது வேனில விருத்தம், தொழில் பற்றி வந்தது யானைத்தொழில், உறுப் புப்பற்றி வந்தது நயனப்பத்து எல்லைப்பற்றி வந்தது கேசாதிபாதம், செய்தோ ன் பெயர்பற்றி வந்தது அகத்தியம், செய்வித்தோன் பெயரால் வந்தது பாண்டி க்கோவை முதலியன பிறவுமன்ன.
அரங்கேற்றுங்காலம்.
அகா ஆகாரமும், இகராகரா ஐகாரமும், உகர ஊகார ஒளகாரமும், எக ர ஏகரமும், ஓகர ஓகாரமும் முறையே உதயாதி அவ்வாறு நாழிகையுதிக்கும். இவற்றுள் முதன்மூன்று நாழிகையும் உத்தமம், பின மூன்று நாழிகையுமாகா து, இவ்வைந்து கூற்றெழுத்துக்களை முதலிலுடைய பாக்களுக்குச் சொன்ன கா லத்தில் முற்கூற்றிலரங்கேற்றுக.
செய்யுளிலக்கணம் முற்றிற்று.
------------
கருத்துகள்
கருத்துரையிடுக