தேவநேயம் - 4
கட்டுரைகள்
Back
தேவநேயம் - 4
இரா. இளங்குமரன்
1. தேவநேயம் - 4
2. ஏமம்
3. ஏமார்த்தல்
4. ஏறுதழுவல்
5. ஐ, ஔ
6. ஐஞ்சுட்டுகள்
7. ஐந்திணைத் தெய்வம்
8. ஐந்திணைக்கும் பொதுவான சில வழிபாடுகள்
9. ஐந்திணைப்பெயர் மூலம்
10.ஐம்படைத்தாலி
11. ஐம்பொருத்தம்
12. ஐயர்
13. ஐயன் என்னும் பெயர்
14. ஐயுறவிற் கிடமான சில சொற்கள்
15. ஒட்டகம் = வ. உஷ்ட்ரக
16. ஒட்பம்
17. ஒப்பியல் இலக்கணம்
18. ஒப்புமைப் பெயர்
19. ஒப்புரவறிதல்
20. ஒப்பொலி
21. ஒருகுடம் தண்ணீர் ஊற்றி விளையாட்டு
22. ஒரு பொருட் பல சொற்கள்
23. ஒரு பொருள் பல பெயர் பெறல்
24. ஒல் என்னும் வேர்ச்சொல்
25. ஒலிக் குறிப்பும் சொல்லும்
26. ஒலியழுத்தம்
27. ஒலிவகை
28. ஓகாரச்சுட்டு
29. ஓடம்
30. ஓடு
31. ஓம்
32. ஓரும்
33. ககர சகரப் பரிமாற்றம்
34. கச்சக்காய்ச் சில்லி விளையாட்டு
35. கச்சு - கச்சம்
36. கச்சை - கக்ஷ்யா
37. கசடு
38. கஞ்சி
39. கட்கம்
40. கட்சி
41. கட்டம்
42. கட்டாயம்
43. கட்டுத்தாலி
44. கட்டை
45. கடகம்
46. கடகன்
47. கடப்பாடு
48. கடம்பு
49. கடவுள்
50. கடவுள் உண்டா?
51. கடாகம்
52. கடி
53. கடிகை1
54. கடிகை2 -
55. கடிசொல்
56. கடிமரம்
57. கடு
58. கடுகு
59. கடைக்கழகம்
60. கடைகால்
61. கண்
62. கண்டக
63. கண்டகம்
64. கண்டகி
65. கண்டம் (1)
66. கண்டனம்
67. கண்டி (1)
68. கண்டிக்கும் வகைகள்
69. கண்டு
70. கண்டை
71. கண்ணாம்பொத்தி விளையாட்டு
72. கணக்கன்
73. கணம்
74. கணவன் மனைவியர் இயல்பு
75. கணி
76. கணிகை
77. கணிதம்
78. கத்தரி
79. கத்தொலிகளும் ஒலியடிச் சொற்களும் - Imitatives
80. கதம்ப
81. கதலி
82. கதை
83. கந்தன்
84. கந்து
85. கந்துகம்
86. கந்தை
87. கப்பரை
88. கம்
89. கம்பலம்
90. கரணம்
91. கரிசு
92. கரு
93. கருப்பும் கறுப்பும்
94. கரும்புவகை
95. கருமம்
96. கருவி வகை
97. கருள்
98. கரை
99. கரையேறுதல்
100.கல்
101. கல்2 - கன் (kh) - இ. வே.
102. கல் (கருமைக் கருத்து வேர்)
103.கல்லை
104.கல்வி (Culture)
105. கலகம்
106. கலம்பகம்
107. கலவம்
108. கலித்தல்
109. ª, to be born, RV, AV.; to grow, AV. to generate, beget, produce, create, cause, RV, AV.; to be grown or prod
110. Ãâ(ta), engendered, begetting, produced, occasioned.
111. கலுவம்
112. கலுழம்
113. கலுழன்
114. கலை
115. கலைச்சொல்லாக்க நெறிமுறைகள்
116. கலையுங் கல்வியும்
117. கவ்வை
118. கவரி
119. கவளம்
120. கவான்
121. கவுள்
122. கழகம்
123. கழஞ்சு
124. கழியல் விளையாட்டு
125. கழிவு வகை
126. கள்
127. கள் உண்ணாமை
128. கள்மயக்கு
129. கள்வன்
130. களங்கம்
131. களச் செயல்
132. களப்பாளர் (களப்பிரர்)
133. களம்
134. களி
135. களை
136. கற்காலம் (Stong Age)
137. கற்கால மாந்தரிடை வகுப்பு வேறுபாடின்மை
138. கற்பு
139. கற்புடை மனைவியின் கண்ணியம்
140. கன்னடம்
141. கன்னம்
142. கன்னி
143. கன்னிகை
144. கா
145. காக்கை
146. காசா
147. காஞ்சி
148. காட்டுவகை
149. காண்
150. காண்டம்
151. காணிக்கை
152. காதல்
153. காதல் பொருத்தம்
154. காதல்மணம்
155. காந்தி
156. காந்து
157. காப்பு நாண்
158. காமம்
159. காமவின்ப நிலை
160. காய்
161. காய்கனிக் கேட்டு வகைகள்
162. காய்ந்த அடியும் கிளையும்
163. காய்ந்த இலைவகை
164. காய்ந்த பயிர் வகை
165. காய் நிலைகள்
166. காயம்
167. காயா பழமா விளையாட்டு
168. காயின் காம்பிதழ் வகை
169. $காரணம்
170. காரம்
171. காரம், காரன், காரி
172. கால்
173. கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள்
174. கால்டுவெல் கண்காணியாரின் காட்சியுரைகள்
175. கால்டுவெலார் கண்ட வுண்மை
176. காலம்
177. காலன்
178. காவியம்
179. காவிரி
180. காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கியமை
181. காளகம்
182. காளம்
183. காளம் - கால
184. காளி
185. காற்று வகை
186. கானம்
187. கிட்டம்
188. கிண்கிணி
189. கிழவன் கிழத்தி
190. கிளித்தட்டு விளையாட்டு
191. கிளை
192. கிறித்தவ விடையூழியர் (Missionaries) தொண்டு
193. குக்கல்
194. குகை
195. குச்சி விளையாட்டு
196. குச்சு
197. குஞ்சு விளையாட்டு
198. குட்டம்
199. குட
200. குடங்கர்
201. குடம்
202. குடல்
203. குடவம் (பித்தளை - Brass)
204. குடி (t)
205. குடிகள் அரசுக்குச் செலுத்திய செலுத்தம்
206. குடிகை
207. குடிசெய்தல்
208. குடில்
209. குடிலம்
210. குடிலை
211. குடும்ப நிலைப் பொருத்தம்
212. குடும்பம்
213. குண்டம்
214. குண்டலம்
215. குண்டலி
216. குண்டிகை
217. குணம்
218. குதிரைச் சில்லி விளையாட்டு
219. குதிரையேறல்
220. குதிரை வகை
221. குந்தம்
222. குந்தாலம்
223. குப்பாயம்
224. கும்பம்
225. கும்மல்
226. கும்மி விளையாட்டு
227. குமரன்
228. குமரி
229. குமரிக் கண்டம்
230. அறிவியல்
231. மொழிநூல்
232. உளநூல்
தேவநேயம் - 4
இரா. இளங்குமரன்
நூற்குறிப்பு
நூற்பெயர் : தேவநேயம் - 4
தொகுப்பாசிரியர் : புலவர். இரா. இளங்குமரன்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதற்பதிப்பு : 2004
மறுபதிப்பு : 2015
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
பக்கம் : 8 + 312 = 320
படிகள் : 1000
விலை : உரு. 300/-
நூலாக்கம் : பாவாணர் கணினி
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன்
அச்சு : வெங்கடேசுவரா
ஆப்செட் பிரிண்டர்
இராயப்பேட்டை, சென்னை - 14.
கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
மொழி மீட்பின் மீள் வரவு
தனித் தமிழ் வித்தை ஊன்றியவர் கால்டுவெலார். அதை முளைக்கச் செய்தவர் பரிதிமால் கலைஞர்; செடியாக வளர்த்தவர் நிறைமலையாம் மறைமலையடிகள்; மரமாக வளர்த்து வருபவன் யானே என்ற வீறுடையார் பாவாணர்.
கிறித்து பெருமான் சமய மீட்பர்; காரல்மார்க்கசு பொருளியல் மீட்பர்; மொழிமீட்பர் யானே என்னும் பெருமித மிக்கார் பாவாணர்.
ஆரியத்தினின்று தமிழை மீட்பதற்காக யான் அரும்பாடு பட்டு இலக்கிய இலக்கண முறையோடு கற்ற மொழிகள் முப்பது என்று எழுதிய பெருமிதத் தோன்றல் பாவாணர்.
மாந்தன் தோன்றியது குமரிக் கண்டத்திலேயே; அவன் பேசிய மொழியே உலக முதன்மொழி; ஆரியத்திற்கு மூலமும், திரவிடத்துக்குத் தாயும் தமிழே என்னும் மும்மணிக் கொள்கைளை நிலை நாட்டிய மலையன்ன மாண்பர் பாவாணர்.
அவர் சொல்லியவை எழுதியவை அனைத்தும் மெய்ம்மையின் பாற்பட்டனவே என இன்று உலக ஆய்வுப் பெருமக்களால் ஒவ்வொன்றாக மெய்ப்பிக்கப்பட்டு வருதல் கண்கூடு.
இருபதாம் நூற்றாண்டைத் தம் ஆய்வு மதுகையால் தேவநேய ஊழி ஆக்கிய புகழும் வேண்டாப் புகழ் மாமணி தேவநேயப் பாவணர்.
அவர் மொழியாய்வுச் செய்திகள் ஒரு நூலில், ஓர் இதழில், ஒரு மலரில், ஒருகட்டுரையில், ஒரு கடிதத்தில், ஒரு பொழிவில் ஓர் உரையாடலில் அடங்கியவை அல்ல. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக அவற்றையெல்லாம் தொகுத்து அகர நிரலில் தொகுக்கப்பட்ட அரிய தொகுப்பே தேவநேயம் ஆகும்.
நெட்ட நெடுங்காலமாகத் தேவநேயத்தில் ஊன்றிய யான் அதனை அகர நிரல் தொகையாக்கி வெளியிடல் தமிழுலகுக்குப் பெரும்பயனாம் என்று எண்ணிய காலையில், தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் தாங்கிப் பிடித்து ஊக்கும் - வளர்க்கும் - வண்மையராய் - பாவாணர்க்கு அணுக்கராய் - அவரால் உரையும் பாட்டும் ஒருங்கு கொண்ட பெருந்தொண்டராய்த் திகழ்ந்த சிங்க புரிவாழ் தமிழ்த்திரு வெ. கோவலங்கண்ணனார் அவர்கள் தமிழ் விழா ஒன்றற்காகச் சென்னை வந்த போது யானும், முனைவர் கு. திருமாறனாரும் சந்தித்து அளவளாவிய போது இக்கருத்தை யான் உரைக்க உடனே பாவாணர் அறக்கட்டளை தோற்று விப்பதாகவும் அதன் வழியே தேவநேயம் வெளிக் கொணரலாம் எனவும் கூறி அப்பொழுதேயே அறக்கட்டளை அமைத்தார்.
தேவநேயர் படைப்புகள் அனைத்திலும் உள்ள சொல்லாய்வுகளைத் திரட்டி அகர நிரல் படுத்திப் பதின்மூன்று தொகுதிகள் ஆக்கினேன். பதிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது; அச்சிடும் பொறுப்பு, பாவாணர் பல காலத்துப் பலவகையால் வெளியிட்ட நூல்களையும் கட்டுரைகளையும் ஒருங்கே தொகுத்து ஒரே நேரத்தில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் நாடு மொழி இனப் போராளி கோ. இளவழகனாரிடம் ஒப்படைக்கப்பட்டு வெளி யிடப்பட்டது. அத்தேவநேயம் தமிழ் ஆய்வர், தமிழ் மீட்பர் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டும் என்னும் வேணவாவால் மீள்பதிப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது.
பாவாணர் அறக்கட்டளை நிறுவிய கோவலங்கண்ணனார் புகழ் உடல் எய்திய நிலையில், அவர் என்றும் இறவா வாழ்வினர் என்பதை நிலைப் படுத்தும் வகையில் அவர்க்குப் படையலாக்கி இப்பதிப்பு வெளிப்படுகின்றது.
மொழி இன நாட்டுப் பற்றாளர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல், பல் பதிப்புகள் காண வேண்டும். வருங்கால இளைஞர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அதற்குத் தூண்டலும் துலக்கலுமாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் மீட்டெடுப்புப் பற்றுமையரும் தொண்டரு மாவர்.
வெளியீட்டாளர்க்கும் பரப்புநர்க்கும் பெருநன்றியுடையேன்.
வாழிய நலனே! இன்ப அன்புடன்
வாழிய நிலனே! இரா. இளங்குமரன்
பதிப்புரை
20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வின் முழுப் பொழுதையும் செலவிட்டவர்.
திராவிட மொழிகளுக்குத் தாய்மொழித் தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமொழித் தமிழ், உலக மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என்பதைத் தம் பன்மொழிப் புலமையால் உலகுக்கு அறிவித்தவர்.
இவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சேர தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டதைத் தமிழ் உலகம் அறியும்.
முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பாவாணர் வழி நிலை அறிஞர். வாழும் தமிழுக்கு வளம் பல சேர்ப்பவர். பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேவநேயம் என்னும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்கொள்ளும் வகையில் தொகுத்துத் தந்துள்ளார். இத்தேவநேயத் தொகுப்புகள் தமிழர்களுக்குக் கிடைத்த வைரச்சுரங்கம். இத் தொகுப்புகளை வெளியிடு வதில் பெருமைப் படுகிறோம்.
அறிஞருலகமும், ஆய்வுலகமும் இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை வாங்கிப் பயன் கொள்வீர்.
பதிப்பாளர்
கோ. இளவழகன்
ஏமம்
ஏமம் - வ. க்ஷேம (இ.வே.)
உ - இ - எ - ஏ.
ஏ = 1. உயர்ச்சி. ஏபெற்றாகும் (தொல். சொல். 305).
2. மேனோக் குகை.
கார்நினைந் தேத்தரும் மயிற்குழாம் (சீவக. 87)
ஏக்கழுத்தம் = தலையெடுப்பு.
ஏண், ஏத்து, ஏந்து, ஏப்பம், ஏர், ஏல், ஏவு, ஏறு முதலிய சொற்களின் ஏகாரமுதல், எழுச்சி அல்லது உயர்ச்சிக் கருத்தைத் தாங்கி நிற்றலையும், எகர முதலும் இங்ஙனமே பல சொற்களில் உணர்த்தி நிற்றலையும், நோக்குக.
இருதிணை யுயிரிகளும், நெருங்கிவந்த பகைக்கும் பகைவர்க்கும் தப்பியோடிப் பாதுகாப்பிற்குத் தேடுவது, பெரும்பாலும் மறை விடம் அல்லது உயரிடமே. இவற்றுட் பின்னது மிகச் சிறப்பாம்.
அரிமாவிற்குத் தப்பி மரத்தின் மேலேறுவதும் அரசிற்குத் தப்பி மலையின்மேலேறுவதும், இன்றும் வழக்கம். சிற்றரசரும் கொள்ளைத் தலைவரும் பண்டைக்காலத்தில் மலைகளையே அரணாகக் கொண்டிருந்தனர். இதனால், உயர்ச்சியைக் குறிக்கும் ஏகாரத்தை அடியாகக் கொண்டு பாதுகாப்புக் கருத்துச் சொற் பிறந்தது.
ஏ - ஏம் = 1. காப்பு. எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி (திருமுரு. 97). 2. இன்பம்.
ஏமுற இனிதி னோம்பி (கம்பரா. விபீட. 114)
ஏம் + உறு = ஏமுறு. ஏமுறுதல் = காப்படைதல்.
ஏம் + ஏமை - யாமை = பாதுகாப்பான ஓடுள்ள ஊருயிரி.
யாமை யெடுத்து நிறுத்தற்றால் (கலித். 94)
யாமை - ஆமை, ஒ.நோ: யானை - ஆனை.
ஏம் - மரு = ஏமரு. ஏமருதல் = காக்கப்படுதல்.
இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன் (குறள். 448)
ஏம் - ஏமா. ஏமாத்தல் = அரணாதல்.
இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே (பழ. 306)
எழுமையு மேமாப் புடைத்து (குறள். 126)
ஏம் + ஆர் = ஏமார். ஏமார்த்தல் = வலுப்படுத்தல்.
சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல் (குறள். 660)
ஏம் + மாறு = ஏமாறு. ஏமாறுதல் = காப்பழிதல், வஞ்சிக்கப் படுதல். ஏமாறு - ஏமாற்று (பி.வி.)
ஏம் - ஏமம் = 1. காப்பு, பாதுகாப்பு. ஏமப்பேரூர் (தொல். 983).
2. காவல்.
எல்லா வுயிர்க்கும் ஏமமாகிய (புறம். 1. 11)
ஏம முரசம் இழுமென முழங்க (புறம். 3:3)
3. வைப்புச் சொத்து (திவா.)
4. பாதுகாப்பான இராக்காலம், நள்ளிரவு, இரா.
புறங்காட்டி லேமந்தோறு மழலாடுமே (தேவா. 965:7)
5. இன்பம் (திவா.)
ஏமம் - சேமம். ஒ.நோ: ஏண் - சேண்.
சேமம் = பாதுகாப்பு, நலம், இன்பம், நல்வாழ்வு, அரண், சிறைச் சாலை, புதைபொருள், சுவடிக்கட்டு, கவசம், சவக்காப்பு.
சேமம் = வ. க்ஷேம (இ.வே.)
தங்குதலை அல்லது குடியிருத்தலைக் குறிக்கும் க்ஷி என்னும் முதனிலையை வடவர் மூலமாகக் காட்டுவது பொருந்தாமை காண்க. (வ.வ. 99-100).
ஏமார்த்தல்
ஏமமார்த்தல் என்பது ஏமார்த்தல் என அகரம் கெட்டு நின்றது. ஏமம் - பாதுகாப்பு. ஆர்தல் - பொருந்துதல். ஆர்த்தல் - பொருத்துதல் (குறள் 660)
ஏறுதழுவல்
பண்டைக் காலத்தில் முல்லை நிலத்திலிருந்த ஆயரிடை, ஏறு தழுவி மணப்பதே குலமரபாக இருந்து வந்தது. ஓர் ஆயர்பாடியில் அல்லது சேரியில், ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் அதன் பெயருக்கு ஒரு சேங்கன்றைப் பெற்றோர் ஒதுக்கி வைப்பர் அக் கன்றைக் காயடியாமலும், வேலையில் வயக்காமலும், கொழுத்த ஊட்டங் கொடுத்துக் கொம்பு சீவிக் கூராக்குவர். ஆண்டு தோறும், குறித்த நன்னாளில், மணப்பருவமடைந்த மங்கையர்க் குரிய காளைகளையெல்லாம் ஒரு தொழுவத்தில் அடைத்து வைத்து, ஒவ்வொன்றாகத் திறந்து விடுவர். மக்கள் ஆரவாரத்தை யும் ஏறுகோட்பறை முழக்கத்தையும், கண்டும் கேட்டும், மருண்டோடும் ஒவ்வொரு கொல்லேற்றையும் மாணியரான ஆய இளைஞர் பிடித்து நிறுத்த முயல்வர். பலர் கொல்லேறுகளாற் குத்திக் கொல்லப் படுவதுமுண்டு. ஒரு கொல்லேற்றை எவன் பிடித்தடக்கி நிறுத்துகின்றானோ அவன் அவ் ஏற்றிற்குரிய ஆய மகளை மணப்பான். (த.தி. 4)
ஐ, ஔ
நெடுங்கணக் கமைப்பு (உயிரெழுத்து 12)
ஆ - அ (சேய்மைக்சுட்டு)
ஈ - இ (அண்மைச்சுட்டு)
ஊ - உ (முன்மைச்சுட்டு)
இம் மூன்றே முதன்முதல் மாந்தன் வாயிலும் தமிழன் வாயிலும் பிறந்த உயிரெழுத்துகள். இவையே, ஆரியமொழிக ளெல்லா வற்றிலுமுள்ள சுட்டுச் சொற்களின் அடிவேர்கள்.
ஈ - ஏ, இ-எ.
ஊ - ஓ. உ - ஒ.
அ + இ = ஐ. அ + உ = ஔ.
ஐ. ஔ இரண்டும் புணரொலிகள் (diphthongs)
அகர இகரம் ஐகார மாகும் (தொல். 21)
அகர உகரம் ஔகார மாகும் (தொல். 22)
ஆஈ ஊஏ ஐஓ ஔஎனும்
அப்பால் ஏழும்
ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப (தொல். எழுத்து 4)
இவை தொல்காப்பியர் வகுத்தன வல்ல. நூன்மரபு என்னும் இயற்பெயரை நோக்குக. மொழிமரபு, தொகைமரபு என்னும் இயற்றலைப்புகளையும் நோக்குக.
நூன்மரபு முதல் மரபியல் வரை தொல்காப்பியம் முழுதும். முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தவையே.
ஐவியப் பாகும் (தொல். சொல். 385)
ஈரள பிசைக்கும் இறுதியி லுயிரே
ஆயியல் நிலையுங் காலத் தானும்
அளபெடை நிலையுங் காலத் தானும்
அளபெடை யின்றித் தான்வருங் காலையும்
உளவென மொழிப பொருள்வேறு படுதல்
குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும் (தொல். சொல். 766)
(சேனா. உரை) ஔஔ வொருவன் றவஞ்செய்தவாறு என்றவழிச் சிறப்புத் தோன்றும். ஒரு தொழில் செய்வானை ஔஔ வினிச்சாலும் என்றவழி மாறுபாடு தோன்றும் ஔஉ வொருவ னிரவலர்க் கீந்தவாறு, ஔஉ வினிவெகுளல் எனவும்; ஔவவன் முயலுமாறு, ஔவினித் தட்டுப்புடையல் எனவும்; அளபெடுத்தும் அளபெடாதும் வந்த வழியும். அப்பொருள் தோன்றியவாறு கண்டுகொள்க. இதனை இக்காலத்து ஓகாரமாக வழங்குப.
இதனால். குமரிநாட்டு வழக்குகள் மட்டுமன்றி. இற்றைத் தமிழ் நாட்டுப் பண்டை வழக்குகளும் பல இறந்தொழிந்தன என அறிந்துகொள்க.
வடவர். குமர + ஈசன் = குமரேசன். குல + உத்துங்கன் = குலோத் துங்கன் என்னும் புணர்ச்சிகளை யடிப்படையாகக் கொண்டு, ஏகார ஓகாரங்களையும் புணரொலி களாகக் கொள்வர். அவை ஈகார ஊகாரத் திரிபுகளேயன்றிப் புணரொலிகளல்ல.
இனி, ஐகார ஔகாரங்கள் வடமொழியினின்று தமிழுக்கு வந்தன வென்று கூறும் தமிழ்ப் புலவரும் உளர். இது பழைய பாண்டியன் தமிழ்க் கழகம் போன்ற ஓர் அறிவரவையின் தேவையையே வலிதாய் உணர்த்துகின்றது.
வேத ஆரியரின் முன்னோர் எழுத்தறியாத முல்லை நாகரிக மக்க ளாய் இந்தியாவிற்குட் புகுந்தனர். முதன்முதலாகத் தோன்றிய ஆரிய இலக்கியமான இருக்கு வேத மந்திரங்கள், எழுதாக் கிளவி யாகவே செவிமரபாக நீண்டகாலம் வழங்கிவந்தன. இதனைச் சுருதி (கேள்வி) என்னும் வேதப் பெயரே தெரிவிக்கும். ஆரியப் பூசாரியர் தமிழரொடு தொடர்புகொண்டு வேதமொழி விரிவடைந்த பின், தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றியமைக்கப் பட்ட ஆரிய வண்ணமாலையொடு சமற்கிருதந் தோன்றிற்று.
வடமொழி வண்ணமாலை பின்மையது. குறிலுக்குக் கரச் சாரி யையும், நெடிலுக்குக் காரச் சாரியையும், ஐகார ஔகாரங்கட்குக் கான்சாரியையும், மெய்யெழுத்திற்கு அகரச் சாரியையும் (அ) ஆய்தவெழுத்திற்கு அஃகேனச் சாரியையும், தமிழிலேயே தோன்றின.
வடமொழியிற் கான்சாரியையும் அஃகேனச் சாரியையும் இல்லை; காரச் சாரியையைக் குறிலுக்குங் கொடுப்பர். தமிழில் தாமினிது பிறக்கும் தகார நகாரம் (தொல். பிறப். 11) என்று செய்யுளில் இசைநிறைக்க வன்றி, வேறுவகையில் வராது.
ட, ட்ட, ண என்னும் வருடொலிகளும் (Linguals or Cerebrals) ளகரமும் வடமொழி தமிழினின்று கடன் கொண்டவை. இவை ஆரிய மொழிக் குடும்பத்திற் குரியனவல்ல.
பிராதிசாக்கியங்கள் என்னுங் கிளை வேத இலக்கணங்களும். ஐந்திரம் என்னும் வடமொழி முதற்பேரிலக்கணமும், தமிழிலக் கணத்தைப் பின்பற்றி யெழுந்தவையே. ஐந்திரம் தமிழகத்திலேயே தோன்றித் தமிழகத்திலேயே அழிந்ததாகத் தெரிகின்றது.
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர் (11:98-9)
என்னும் சிலப்பதிகார அடிகள் கவனிக்கத் தக்கன.
ஐந்திரத்திற்கு முந்தியது அகத்தியம் என்னும் முத்தமிழிலக்கணம். அகத்தியரே தென்னாடு வந்து தமிழ் கற்ற முதல் ஆரியர். அவர் வந்த காலத்தில் மகேந்திரம் என்னும் மாவேந்தமலை கடலில் முழுகிக் கிடந்தது. அது குமரியாறு தோன்றிய மலையா யிருந்திருக்கலாம். அகத்தியர்க்கு முந்திய காலமெல்லாம் தனித்தமிழர் காலமென்றும், அவரொடு தொடங்கியது ஆரியத் தொடர்பு காலமென்றும் அறிதல் வேண்டும்.
ஐகார ஔகாரங்கள் தமித்து நில்லாது சொல்லுறுப்பாக வரும்போது. முறையே அய் அவ் என்றொலித்துத் தனித்தனி ஒன்றரை மாத்திரை கொள்ளும்.
அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் (மொழி. 23)
அகரத் திம்பர் வகரப் புள்ளியும்
ஔஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்
ஐகாரம் சொல்லிடையில் யகரத்தை யடுத்து வரும்போது. ஒரு மாத்திரையாகவுங் குறுகும்.
ஓரள பாகும் இடனுமா ருண்டே
தேருங் காலை மொழிவயி னான. (தொல். மொழி. 24)
எ-டு: இடையன், அரையன்.
தமிழிற் போன்றே பிறமொழிகளிலும் புணரொலிகள் உள.
எபிரேயம் (Hebrew) - ai, au
அரபி (Arabic) - ai, au
இலத்தீனம் (Latin) - ae, oe, au, ei, eu, ui
கிரேக்கம் (Greek) - ai, au, ei, eu, oi, ou, ui (முதலெழுத்துக் குறில்) - ai, ei, oi (முதலெழுத்து நெடில்)
சமற்கிருதம் - (ஏ.ஓ). ஐ. ஔ.
பழையாங்கிலம்
(Old English) - ea, eo, ie, io (குறும்புணரொலி)
- ea, eo, ie, io (நெடும்புணரொலி)
ஆங்கிலம் (English) - i (ai), u (i+o#o#) - ஒருவரிப் புணரொலிகள்)
- oi, ou - இருவரிப் புணரொலிகள்.
இந்த மொழிகளிலெல்லாம் புணரொலிகளை நீக்க ஒருவரும் கருதவில்லை. உயிர்மெய்யெழுத்திற்குத் தனிவடிவு வகுத்தது போன்றே, புணரொலிகட்கும் தனிவடிவு வகுத்தனர் தமிழர். இது அவரது மேனிலைப்பட்ட மெய்ப் பொருளறிவையே காட்டுகின்றது. மேலையர் இற்றை அறிவியல் கம்மியத்தில் உயரியரேனும். மொழித்துறையிற் குமரித் தமிழருக்குச் சமமானவரல்லர். ஓரொலிக்குப் பல வரியும் ஒரு வரிக்குப் பல வொலியும் வகுத் திருப்பதும், ஒலிக்காத வரியை நீக்காதிருப்பதும், இடையிட்ட இரு வரிகளைக் கொண்டு ஓரொலி புணர்ப்பதும். எத்துணை கற்பினும் ஆசிரியனுதவியின்றி ஒரு சொல்லைப் பலுக்க முடியாவாறு மொழியமைத்திருப்பதும், இவ்வுண்மையை எளிதாய் மெய்ப் பிக்கும். ஆதலால், இனிமேலாயினும், ஆங்கில முறையில் தமிழைக் கெடுக்க முனையாதிருக்க. மேலும், மெய்முன்னும் உயிர் பின்னும் வரும்போதெல்லாம் எல்லா மொழியிலும் இணைந்தே யொலிக்குமென்றும் எழுத்தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரியன்றென்பதும், உயிர் மெய்யை உயிரும் மெய்யுமாகப் பிரிப்பது ஓர் உயிரியை (பிராணியை), உயிர் வேறு மெய் (உடம்பு) வேறாகப் பிரிப்ப தொத்ததென்றும், ஆங்கில எழுத்துமுறை விரும்பியர் தம் அறியாமையை யுணர்ந்து அமைந்திருப்பாராக.
ஈ - ஏ, இ - எ. எ - டு: ஈனொரு - இன்னொரு. ஈன் - ஏன்.
ஏனோர் = மற்றோர். ஏன் - ஏனை. சீ - சே. சிவப்பு - செவப்பு.
ஊ - ஓ. உ - ஒ. எ-டு:: ஊது - ஓது (காதில் மெல்லச் சொல்). உய் - ஒய். குத்து - கொத்து. - செந்தமிழ்ச் செல்வி பெப்பிரவரி 1979.
ஐஞ்சுட்டுகள்
முந்தியல் தமிழன் முதலாவது கைகாற் சைகையையும் (Gesture) கண்சாடையை யும் முகக்குறிப்பையும் (Grimace) கருத்து வெளியிடும் வாயில்களாகக் கொண்டி ருந்து, பின்பு, வாய்ச்சைகை காட்டு முறையில் சில ஒலிகளைப் பிறப்பித்தான்.
சேய்மைச்சுட்டாக வாயைப் படுக்கையாய் அகலித்தபோது ஆ என்னும் ஒலியும், அண்மைச்சுட்டாக வாயைக் கீழ்நோக்கி விரித்தபோது ஈ என்னும் ஒலியும், முன்மைச்சுட்டாக வாயை முன்னோக்கிக் குவித்தபோது ஊ என்னும் ஒலியும், உயரச்சுட்டாக வாயை ஒடுக்கி நட்டுக்கு அகலித்தபோது ஓ என்னும் ஒலியும் பிறந்தன. இவை வாய்ச்சைகை யொலிகள்.
பின்னர், வயிறார வுண்டபின் அடிவயிற்றினின்று மேனோக்கி யெழும் காற்று ஏகார வடிவாய் வெளிப்பட்டதினின்று, ஏ என்னும் ஒலி எழுகைச்சுட்டாகக் கொள்ளப்பட்டது. உண்டபின் வயிற்றினின்று எழும் ஒலியை ஏப்பம் என்று தமிழிலும் Erutcation என்று ஆங்கிலத்திலும் ஏகார எகர முதற்சொல்லாகக் கூறுதல் காண்க. ஏப்பம் விடும்போதே சிலர் ஏவ் என்றும் சிலர் ஏப்பம் என்றும் ஒலிப்பது வழக்கம்.
இங்ஙனம் ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் தனியொலிகளான ஐந்நெடில் களும் சுட்டொலிகளாக முதலாவது தோன்றின. (சு.வி)
ஐந்திணைத் தெய்வம்
குறிஞ்சித் தெய்வம்
குறிஞ்சி நில மக்கள் தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு, சேந்தன் (சிவந்தவன்) என்று பெயரிட்டு வணங்கினர். சேயோன், சேய் என்பன இலக்கிய வழக்கு.
செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
………………………. செச்சைக் கண்ணியன் (திருமுரு. 206-208)
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கு முடுக்கை ………………….
…………………………………………….
சேவலங் கொடியோன் ……………………….. (குறுந். கடவுள்)
உடையு மொலியலுஞ் செய்யைமற் றாங்கே
படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும்
உருவு முருவத்தீ யொத்தி முகனும்
விரிகதிர் முற்றா விரிசுட ரொத்தி (பரிபா. 19: 97-100).
வேட்டைத் தொழிலாற் குறவர் மறஞ் சிறந்திருந்ததனால், தம் தெய்வத்தையும் மறவனாகக் கருதி, அதற்கேற்றவாறு அவனை முருகன் (இளைஞன்) என்றனர்.
முள் - முளை - முளையன் = சிறுவன். முள் - முர் - முரு - முருகு. இளமை (திவா.) அழகு (பிங்.). இளமையிலேயே அழகிருப்பதால், அழகு என்பது வழிப்பொருளே. KUF - KUf‹ f£osik nah‹ (âth.), முருகத் தெய்வம். முருகன் என்னும் பெயர், இலக்கிய வழக்கில் ஆண்பாலீறு குன்றியும் வரும்.
அருங்கடி வேலன் முருகொடு வளைஇ (மதுரைக். 611)
குமரன் என்னும் பெயரும் இளைஞன் என்னும் பொருளதே. குறிஞ்சிநிலக் கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என்றும், வேலைப் படையாக்கியதனால் வேலன் என்றும், முருகனுக்குப் பெயர்கள் தோன்றின. முருகனுருவம் பொறித்த தூண்களை அம்பலங்களில் நிறுத்தினதனால், அவனுக்குக் கந்தன் என்னும் பெயரும் தோன்றிற்று. கந்து - தூண், கந்தம் = தூணம் (பெருந்தூண்).
கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
என்று புறப்பாடல் (52) கூறுதல் காண்க. கற்றூண்களில் தெய்வ வுருவம் பொறிப்பதை, கந்திற் பாவை என்னும் மணிமேகலைச் சொல்லாலும் (21) அறிக.
கந்து - கந்தம் - கந்தன்.
குறிஞ்சிநிலப் பறவையாகிய மயிலை முருகனூர்தியாகக் கொண்டமையால், மயிலூர்தி, மயிலேறும் பெருமாள் என்னும் இலக்கிய வழக்கும் எழுந்தன. போர்மறஞ் சிறந்த சேவல் அவனுக்குக் கொடியாயிற்று.
குறிஞ்சிநிலத் தலைவி கொடிச்சி யெனப்பட்டதனால், அதற் கேற்ப, முருகன் தேவி வள்ளி (கொடி) எனப்பட்டாள்.
தேனும் தினைமாவும் கள்ளும் இறைச்சியும், முருகனுக்குத் தொண்டகப் பறையறைந்து படைக்கப்பட்டன. முருகத் தெய்வ மேறி யாடுபவன், வேலேந்தியதனால் வேலன் எனப்பட்டான். அவன் கள்ளுண்டாடிய ஆட்டு வெறியாட்டு எனப்பட்டது. முருகன் கோவில்கட்குக் காவடி யெடுத்தல், அவனடியார்க்கே சிறப்பாக வுரிய நேர்த்திக் கடன்.
முல்லைத் தெய்வம்
முல்லை நிலத்தில், ஆடுமாடுகட்குப் புல் வளரவும், ஆயருணவிற்கு வானாவாரிப் பயிர்கள் விளையவும், மழை வேண்டியதாயிற்று. மழை கரிய முகிலினின்று விழுவதால், முகிலையே தெய்வமாகக் கொண்டு மால் என்று பெயரிட்டு வணங்கினர்.
இன்னிசை யெழிலியை யிரப்பவு மியைவதோ (கலித். 16)
என்பதால், முகில் தெய்வமாக வணங்கப்பட்டமை அறியப்படும்.
மால் - 1. கருமை. மால் கடல் (பெரும்பாண். 487). 2. கருமுகில். சிலைமா லுருமு (தஞ்சைவா. 164). 3. கரியவனான திருமால். நீர்செல நிமிர்ந்த மாஅல் போல (முல்லைப். 3).
மால் என்னும் தெய்வப் பெயர், உலகவழக்கில் என்றும் திருமால் என்று அடைபெற்றே வழங்கும். மாலை மாயோன் என்னுஞ் சொல்லாலுங் குறிப்பது இலக்கிய வழக்கு. மாயன் மாயவன் என்பன மாயோன் என்பதன் மறு வடிவங்கள். மால் மாயன் என்னும் இரண்டும் ஒரே மூலத்தினின்று தோன்றிய ஒருபொருட் சொற்கள். மால் - மா - மாயோன் = கரியவன்.
மருதத் தெய்வம்
குமரி நாட்டு மருதநில மக்கள், முதன் முதலாக மறுமையைப் பற்றிக் கருதி, இவ்வுலகில் தீவினையை விட்டு நல்வினை செய்து வாழ்பவன் மறுமையில் மேலுலகத்தில் தேவனாய்ப் பிறப்பா னென்றும், தீவினை செய்பவன் எரிநரகில் வீழ்வானென்றும், விண்ணுலகக் கொள்கையும் எரிநரகக் கொள்கையுங் கொண்டனர்.
நல்வினைகளுட் சிறந்த விருந்தோம்பற்கு ஏராளமாக உணவுப் பொருள் வேண்டுமாதலால், அதை விளைக்கக்கூடிய உழவர்க்கே அவ்வினை சிறப்பாகவுரிய தென்றுங் கருதப்பட்டது. உழவனே விருந்தோம்பி வேளாண்மை செய்து வந்ததனால், அவன் வேளாளன் என்னப்பட்டான். இவ் விருந்தோம்பற் பண்பு வழிவழி வளர்ந்து வந்ததனால், வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான். என்னுங் கொள்கை நிலைத்துவிட்டது.
இம்மையில் இல்லத்திலிருந்து அறஞ்செய்து வாழ்பவன், மறு மையில் தேவனாய்ப் பிறப்பது திண்ணம் என்பதை உணர்த்தற்கே,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (குறள். 50)
என்றார் திருவள்ளுவர்.
இல்லறத்தைச் சிறப்பாக நடத்தும் பொதுமக்களான வேளாளர், மறுமையில் தேவருலகில் தேவராகத் தோன்றுவாரெனின், இம்மையில் வேந்தனாக விருந்து அற வாழ்க்கை நடத்தினவன், மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்னும் கொள்கையும் எழுந்தது. அதனால், தேவர் கோனைத் தேவர் வேந்தன் என்றனர். அப் பெயர் பின்னர் வேந்தன் என்றே குறுகி வழங்கிற்று.
வேந்தன் மேய தீம்புன லுலகமும் என்று தொல்காப்பியம் (951) கூறுதல் காண்க.
வேந்தன் வணக்கம் குமரி நாட்டிலேயே தோன்றிவிட்டதனால், முதற் பாண்டியனே வேந்தனாகக் கொள்ளப்பட்டிருத்தல் வேண் டும். அவனுக்குப் படை வயிரவாள்; ஊர்தி வெள்ளை யானை.
தேவ நிலையங்கட்குக் கோட்டம் என்று பெயரிருப்பினும், கோவில் என்னும் பெயரே உலக வழக்காகவும் பெரும்பான்மை யிலக்கிய வழக்காகவும் வழங்கற்கு, வேந்தன் வணக்கமே கரணியமா யிருந்திருத்தல் வேண்டும். கோ = அரசன். இல் = மனை. கோ + இல் = கோவில் - கோயில்.
உழவுத் தொழிற்கு இன்றியமையாத மழை விண்ணிலிருந்தே பெய்வதால், விண்ணுலக வேந்தன் மழைக்கு அதிகாரியானான். ஆண்டு தோறும் வேந்தன் விழா மூவேந்தர் நாட்டிலும் கொண் டாடப்பட்டது. அதை வேந்தரே நடத்தி வந்தனர். சிவமதமும் திருமால் மதமும் தோன்றியபின், வேந்தன்விழா படிப்படியாகக் கைவிடப்பட்டது. இறுதியாக அதை நடத்திவந்தவர் புகார்ச் சோழரே. ஆரியர் (பிராமணர்) தென்னாடு வந்தபின், வேந்தன்விழா வடநாட்டிற் போன்றே இந்திரவிழா எனப்பட்டது.
அரசன் செங்கோலாட்சி செய்தால், ஆண்டுதோறும் தப்பாது மழை பெய்யும் என்பது பண்டையோர் நம்பிக்கை. செங்கோ லாட்சியிலும் மழை பெய்யாது பயிர்கள் தீயின், அதற்குக் கொடுந் தீயவனா யிருந்தவனே கரணியமென்று அவனைக் கட்டியிழுத்து எரிப்பது வழக்கம். இன்று அஃதியலாமையால், கந்து கட்டியிழுத் தெரிக்கின்றனர் பாண்டி நாட்டுழவர்.
நெய்தல் தெய்வம்
நெய்தல் நில மக்கள், கடல் மீன் பிடித்தும், உப்பு விளைத்தும், முத்தும் பவழமுங் குளித்தும், நீர் வாணிகஞ் செய்தும், கடலாலேயே வாழ்ந்ததனால், தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு, அதற்கு வாரணன் என்று பெயரிட்டனர்.
வள் - வர் - வார். வார்தல் வளைதல். வார் + அணம் = வாரணம். நிலத்தை வளைந்து அல்லது சூழ்ந்து இருப்பதால், கடல் வாரணம் எனப்பட்டது. வலம்புரியும் இடம்புரியுமான சங்கு வாரணம் எனப் பெயர் பெற்றதும், உள் வளைந்திருப்பதனா லேயே. வாரணம் - வாரணன் = கடலோன்.
வாரணன் - வ. வருண.
தொல்காப்பியர் ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய காலத்தவரா தலின், வருணன் (தொல். 951) என்று வட சொல்வடிவிற் குறித்தார்.
இந்திய வாரியிலும் அமைதி (Pacific) வாரியிலும் பெரியதும் வலியதும் கொடியதுமான மீன் சுறாவாதலால், அதன் முதுகந் தண்டை வாரணன் சின்னமாக நட்டு, நெய்தல் வாணரான பரதவர் வணங்கியும் விழாவெடுத்தும் வந்தனர்.
சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்
மடற்றாழை மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை யிரும்பரதவர்
… … … … … …
உவவுமடிந் துண்டாடியும்
… … … … … …
தீதுநீங்கக் கடலாடியும் (பட்டினப். (86-99)
சுறவ முள்மருப் பணங்கயர் வனகழிச் சூழல் (பெரிய பு. 25: 7)
பாலைத் தெய்வம்
நீர்நிலைகளெல்லாம் வற்றி வறண்டு பெரும்பாலும் மக்கள் வழக்கற்ற பாலை நிலம், போர்க்களங்களும் ஆறலைப்பால் விழுந்த பிணங்களும் நிறைந்த பாழ்ங் காடாதலால், பிணந் தின்னும் பேய்கட்குத் தலைவியாகிய காளியே அதற்குத் தெய்வ மானாள். இதைத் சிலப்பதிகார வேட்டுவ வரியாலும், காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது என்னும் கலிங்கத்துப் பரணிப் பகுதிகளாலும், தெளிய அறிக.
பேய் நிறங் கருப்பாதலால், கருப்பு என்பதே பேயைக் குறிக்கும் பண்பாகு பெயராயிற்று. பேய்கட்குத் தலைவியாகிய காளியும், அக் கரணியம் பற்றியே அப் பெயர் பெற்றாள். அதனால் நீலியென்றும் அவட்குப் பெயர். கள் - காள் - காளம் - காளி = கருப்பி. நீலம் (கருப்பு) - நீலி. கருப்பி என்றும் நீலி என்றும், பெண்டிர்க்கு இடும் பெயரெல்லாம் காளி பெயரே. காளி பாலையாகிய காட்டிற்குத் தெய்வமானதனால், காடு கிழவோள் (- காடுகிழாள் - காடுகாள்) என்று சொல்லப்பட்டாள். அவள் என்றும் இளமையானவள் என்னுங் கருத்துப் பற்றி, கன்னி, குமரி யென்றும் பெயர் பெற்றாள். எல்லார்க்குந் தாய் போன்றவள் என்று கருதி, அம்மை என்றும் அவளைக் குறித்தனர். கருப்பாய், நீலம்மை, அங்காளம்மை என்னும் பெயர்கள் அக் கருத்துக் கொண்டன. ஏராளமாகப் பிணங்கள் விழும் போருக்குத் தலைவி என்பது பற்றி, அமரி, சமரி என்றும், சூலத்தைப் படையாகக் கொண்டமையாற் சூலியென்றும், காளிக்குப் பெயர்கள் தோன்றின. போர் வெற்றியும் அவளால் தரப்படுவதென்று கருதி, அவளைக் கொற்றவை என்றனர். கொற்றம் வெற்றி. அம்மை - அவ்வை = தாய். கொற்றம் + அவ்வை = கொற்றவ்வை - கொற்றவை.
காளி மாபெரு மறத்தி யாதலால், அவளுக்கு அரிமாவும் விரைந்து பாய்ந்தோடுங் கலைமானும் ஊர்தி யாயின. அவள் மறத்தினா லேயே, அம்மை யென்னும் பெயர் அம்மன் எனத்திரிந்தது.
பாலை வாணரான எயினரும் வேட்டுவரும் மறவரும், தமக்கு நில விளைச்ச லின்மையால், ஆறலைத்தற்கு வழிப்போக்கரை வருவிப்பது காளியருளென்று நம்பினர்.
பாலை நிலத்திற்குரிய வேனிற் காலத்திற் காணுங் கொப்புள நோய், அம்மையாகிய காளியின் சினத்தால் நேர்வதென்று கருதி, அதற்கு அம்மை நோய் என்றே பெயரிட்டனர்.
அம்மைநோய் மக்களெல்லார்க்கும் பொதுவாதலால், அதை நீக்குமாறு காளி வணக்கம் நாளடைவில் நானிலத்திற்கும் பொதுவாயிற்று; ஊர்தொறும் காளிகோயில் தோன்றிற்று.
மூவேந்தரும் போர் வெற்றியை விரும்பினதினாலும், பாலைவாணர் படையாகிய காட்டுப் படையைத் துணைக்கொண்டிருந்த தனாலும், போர்த்தொடக்கத்திற் கொற்றவை வழிபாடு இன்றியமை யாததாயிற்று.
மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே (புறத். 4)
என்று, தொல்காப்பியம் கூறுதல் காண்க. இங்ஙனம் காளி வணக்கம் பொதுவியலும் வேத்தியலு மாயிற்று.
தெய்வ மேறி யாடுபவர், ஆடவராயின் தேவராளன், மருளாளி யென்றும்; பெண்டிராயின் தேவராட்டி, சாலினி என்றும், பெயர் பெறுவர். காளி பெண்தெய்வமாதலின், அணங்காடுபவள் பெரும் பாலும் சாலினியே யென்பது, வேட்டுவ வரி யால் அறியக் கிடக் கின்றது. மருளாளியும் சாலினியும், ஆடுகளின் அல்லது ஆட்டுக் குட்டிகளின் பச்சை யரத்தத்தைக் குடிப்பது முண்டு.
சேவல், ஆட்டுக்கடா, எருமைக் கடா ஆகியவை, காளிக்குக் காவு கொடுக்கப்பட்டன.
ஆரியர் வருமுன்னரே தமிழர் வடநாட்டிற் போய்ப் பரவியிருந்த தனால், வங்கநாட்டிற் காளிக் கோட்டம் கட்டப்பட்டது. அதன் பெயரே அஃதுள்ள நகருக்கு மாகி, இன்று ஆங்கில வழியாய்க் கல்கத்தா என்று திரிந்து வழங்குகின்றது.
காளி கடுஞ் சினத் தெய்வமாகக் கருதப்பட்டதனால், அலகு குத்துதல், உருமத்தில் உருண்டு வலம் வரல், தீ மிதித்தல், செடிற் குத்துதல் (Hook swinging) முதலிய அஞ்சத்தக்க முரட்டு வினைகள் பத்திச் செயல்களாக நேர்ந்து கொள்ளப்பட்டன.
காவல் தெய்வம்
ஒவ்வொரு தீவிற்கும் ஊருக்கும் ஒரு காவல் தெய்வம் இருந்தது. நாவலந் தீவிற்குச் சம்பாபதி என்னும் நாவல் மகளும், மதுரைக்கு மதுராபதியும் காவல் தெய்வம். நாவல் தெய்வ இருக்கை காவிரிப் பூம்பட்டினமென்று மணிமேகலை கூறுவதால், சோழநாடு முதற்காலத்திற் பனிமலை வரை பரவியிருந்தமை உய்த்துணரப் படும்.
அரசர் சிலர் ஒவ்வொரு பூதத்தைத் தமக்குக் காவல் செய்ய அமர்த்தியிருந்தனர். முசுகுந்தச் சோழன் காவற் பூதப் படிமை, புகார் நடுச் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. முனியன் என்பது காவற் பூதங்களுள் ஒன்று.
எல்லம்மன், எல்லைக் கறுப்பன் என்பன சிற்றூர்க் காவல் தெய்வங்கள்.
பாராட்டுத் தெய்வம்
மதுரை வீரன், மாடன், கறுப்பண்ணன் முதலியவை நடுகல் தெய்வங்கள்.
கண்ணகி, ஒச்சாண்டம்மை முதலியன பத்தினித் தெய்வங்கள்.
கருதுகோள் தெய்வம்
திரு என்னும் செல்வத்திற்குத் திருமகளும், கல்விக்கு நாமகளும், சாவிற்குக் கூற்றுவனும், தெய்வங்கள்.
ஞாலம் நாடு மலை ஆறு முதலிய இடங்களைத் தெய்வங்களாக அல்லது தாயராக உருவகித்துக் கொள்வது, கருதுகோள் தெய்வ வணக்கத்தின் பாற் படுவதே.
இல்லுறை தெய்வம்
குடும்பத் தெய்வமாகவோ தனிப்பட்டவர் தெய்வமாகவோ கருதிக்கொண்டு, இல்லத்தில் உருவம் வைத்து வழிபாடு செய்யும் தெய்வம் இல்லுறை தெய்வமாம்.
அணங்குடை நல்லில் (மதுரைக். 578)
தொழிற்குலத் தெய்வம்
பண்டை நில வாணிகர், கோவேறு கழுதைச் சாத்தாகவும் குதிரைச் சாத்தாகவும் நெடுந் தொலைவு சென்று வாணிகம் செய்து வந்ததால், தம் தெய்வத்திற்குச் சாத்தன் என்று பெயரிட்டதாகத் தெரிகின்றது. அவனுக்கு ஐயனார் என்றும் பெயர்.
நெடுஞ்சாலை வழியெல்லாம், ஆங்காங்கு ஊருக்குப் புறம்பாகச் சாத்தன் கோவில் அமைந்திருப்பதால், அவன் புறம்பணையான் (சிலப். 9:12) எனப்பட்டான். அவன் கோவிலில் உள்ள சுடுமண் குதிரைகள், குதிரைச் சாத்தை நினைவுறுத்தும்.
தலைநகர்களிலுள்ள பெருவணிகச் சாத்தினர், விழா நாட்களில் யானை யூர்ந்து செல்வதும் வழக்கமாதலால், சாத்தனுக்கு யானையுங் குதிரையும் ஊர்தியாகச் சொல்லப்பட்டன.
யானை யெருத்தத் தணியிழையார் மேலிரீஇ
மாநகர்க் கீந்தார் மணம். (சிலப். 1:44)
ஒரு சோழன் சாத்தனிடம் செண்டு பெற்றுச் சென்று, பொன் மலையிலுள்ள பெரும்புதையலை எடுத்ததாகக் கூறுங் கதை, வணிகச் சாத்தினரின் பெருஞ் செல்வத்தைக் குறிக்கும்.
பெருநில முழுதாளும் பெருமகன் றலைவைத்த
வொருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான்
இருநிதிக் கிழவன் ….. (1:31-34)
என்று சிலப்பதிகாரங் கூறுதல் காண்க.
வண்ணார் வணங்கும் தெய்வம் மயிலார் எனப்படும். (த.ம)
ஐந்திணைக்கும் பொதுவான சில வழிபாடுகள்
(1) தீவணக்கம்
மலையில் மூங்கில்கள் ஒன்றோடொன்று தேய்வதனாலும், சக்கிமுக்கிக் கற்களை ஒன்றோடொன்று தேய்ப்பதனாலும் தீ உண்டாகிறது. தீக்கடை கோலால் நெருப்புண்டாக்கும் வழியை மூங்கிலுரசித் தீப்பற்றுவதிலிருந்து, அல்லது கல்லைச் செதுக்கும் போது தீப்பொறி தோன்றுவதிலிருந்தே, முதன்மாந்தர் கண்டு பிடித்திருக்க வேண்டும்.
பொருள்கள் தேய்வதால் உண்டாகும் நெருப்பு, தேய் எனப்பட்டது. தேய் - தேயு (வ.).
தேய் - தே - தீ. ஒ. neh.: தேன் - தே(த்தட்டு) - தீ(ம் பால்). தே + உ = தேய்வு - தேவு. தேய்வு - தெய்வு. தெய்வு + அம் = தெய்வம். தேவு + அன் = தேவன்.
மாந்தனால் முதன்முதல் வணங்கப்பட்டது தீயாதலால், அதன் பெயர்கள் பிற்காலத் தெய்வங்கட்கெல்லாம் பொதுப் பெய ராயின. தீவணக்கமும் பேய் வணக்கமும் சேர்ந்தே, சேயோன் வணக்கம் முதன்முதல் தோன்றிற்று.
தெய்வம், தேவு, தேவன்.
Skt. deva; L. deus, Gk. theos, god; Ice tivi; W. duw; Gael, Ir. dia; A.S. tiw; E. deity.
திவ், திவ்ய என்பவை தேவு என்பதன் திரிபேயாதலால், திவ் என்பதைத் தெய்வப் பெயர்க்கு மூலமாகக் காட்டுவது தவறாகும். இங்ஙனம் முதன்முதற் காட்டியது வடமொழியாரியர். வட மொழிக்குப் பிறமொழியை மூலமாகக் காட்டக் கூடாதென்பதே அவர் நோக்கம். ஆகையால், அவர் கூற்றைப் பின்பற்றுவோ ரெல்லாம், ஒப்பியன் மொழிநூலியல்பைச் செவ்வையாயுணரார். வடமொழி வழக்கற்ற மொழியாதலின், அதன் சொற்கட்குப் பொருந்தப் புகலல் என்னும் முறையில், எதையும் மூலமாகக் காட்டலாம். எப்பொருளையும் மூலப் பொருளாகக் கூறலாம்.
தீயானது பொருள்களை அழித்துவிடுவதால் அஞ்சத்தக்கது; சமையலுக்கும் குளிர் நீக்கவும் உதவுவதால் நன்மை செய்வது. அச்சமும் நன்மைப் பேறுமே, முதன்முதல் தெய்வ வழிபாடு தோன்றியதற்குக் காரணம்.
தீவணக்கம் பண்டு எல்லாநாட்டிலு மிருந்தது. இன்றும், விளக்கு வடிவில் அதன் அடையாளம் இருந்துவருகின்றது.
(2) நாகவணக்கம்
இந்தியாவிலுள்ள 380 வகைப் பாம்புகளுள், அரச நாகம் (king cobra), நல்ல பாம்பு, விரியன் முதலியவை பெரு நஞ்சுடையன. இவற்றுள், அரச நாகம் உலகத்திலேயே மிகக் கொடியது. நச்சுப் பாம்புகளுள் பருமனிலும் இதுவே பெரியது. இதற்கடுத்ததே தென் கண்டத்திலுள்ள செம்பூதப்பாம்பு (giant brown snake). இவற்றின் நீளம் முறையே 18 அடியும் 12 அடியுமாகும்.
அரச நாகம் அசாம், பர்மா, தென்சீனம், மலேயா, பிலிப்பைன் தீவுகள் முதலிய இடங்களிலும் வதிகின்றது.
பாம்புகளுன் மிகப் பெரியவை தென் அமெரிக்காவிலுள்ள அனக்கொண்டாவும் (anaconda) இந்தியாவிலும் மலேயாவிலு முள்ள பாந்தளுமே (python). இவை 30 அடிக்கு மேற்பட்டவை; மாந்தனையும் விலங்குகளையும் பிடித்துச் சிறிது சிறிதாய் விழுங்குபவை.
கடற்பாம்புகளும், அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், அமைதிப் பெருங்கடல் ஆகிய இடங்களில்தான் மிகுதியாய் வாழ்கின்றன. ஆகையால், குமரிநாடு பாம்பு நிறைந்த இடமாகும்.
திருநெல்வேலிக் கோட்டகையின் கீழ்ப்பாகத்தில், இன்றும், நல்ல பாம்பினாலும் விரியனாலும் கடியுண்டு மக்கள் அடிக்கடி யிறக் கின்றனர். ஆகையால், தமிழர் நாகத்தை வணங்கினமை வியப்பன்று.
இன்றும் தமிழ்நாட்டிலும் மலையாள நாட்டிலும் சில வீடுகளில் நாகவணக்கம் இருந்து வருகின்றது.
நகர்வது நாகம். நகர் - நாகர் - நாகம்.
E. snake; A.S. snaca from snican, to creep; Ice. snakr. snokr; Dan. snog; Swed. snok; Skt. naga.
நகத்தில் (மலையில்) உள்ளது நாகம் என்று வடநூலார் கூறுவது சரியன்று. நாகம் - snake (முதல்விரி - prosthesis).
கீழுலகத்தில் பாந்தள் மிகுதியாயிருப்பதால், கீழ் என்பதை அடியென்று நினைத்துக்கொண்டு, ஞாலத்திற்கடியில் ஆதிசேடன் (=முதற் பாம்பு) இருந்து தாங்குவதாகக் கூறினர் பழமையர்.
கீழ்நாட்டில் நாக வணக்கம் மிகுதியாயிருந்தமையால், பிற்காலத் தில் அதைச் சைவத்திலும் திருமாலியத்திலும் உட்படுத்த வேண்டி, நாகம் சிவபெருமானுக்கு அணியாகவும் திருமாலுக்குப் பாயலாகவுங் கூறப்பட்டது.
சிவபெருமான் நாகத்தைத் தலையி லணிந்திருப்பதாகக் கூறுவது. நாகவணக்கத்தின் பண்டைப் பெருமையைக் காட்டும்.
பண்டை எகிப்தியரின் நாக வணக்கமும், கௌ-என்-அத்தென் (Khou-en-Aten) என்னும் எகிப்திய வரசன் நாகவுருவைத் தன் முடியிலமைத்ததும் (The Funeral Tent of an Egyptian Queen. p. 96) இங்கு ஒப்புநோக்கத்தக்கன.
தாருகா வனத்து முனிவர் சிவபெருமான்மேற் பாம்பையேவிய தாகக் கூறுவது பழமைக்கட்டு.
(3) பேய்வணக்கம் - (DEMONOLATRY)
பே என்பது அச்சத்தினால் உளறும் ஒலி. பேம் = அச்சம்.
பேநாம் உரும்என வரூஉம் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள (உரி. 69)
என்பது தொல்காப்பியம்.
பேபே என்று உளறுகிறான் என்பது வழக்கு. ஒ.நோ: E. babble.
பே-பேய். ஒ.நோ: E. fay; Fr. fee.
பே-பேந்து. பேய், பேந்து என்பவை இடைச்சொல்லாகவும் வழங்கும். கா: பேயப்பேய (விழிக்கிறான்). பேந்தப் பேந்த (விழிக்கிறான்).
ngªJ : x.neh.: Ger. feind; Dut. vijand; A.S. feond; E. fiend.
சேம்பர் அகராதியில் A.S. feond, pr. p. of feon, to hate என்று கூறப் பட்டுள்ளது; feon என்பதற்கு அஞ்சு என்பதே மூலப் பொருளா யிருக்கலாம்.
பேய் = அச்சம். அச்சத்தைத் தரும் ஆவி பேய் எனப்பட்டது. பேய்கள் அகாலமாய் இறந்தோரின் ஆவிகளென்றும், அவற்றிற் பல வகையுண்டென்றும் சொல்லப்படுகிறது.
பேய்களை மனவுறுதியாற் கட்டுப்படுத்தி, அவற்றாற் பயன் கொள்வது மந்திரம். மந்திரம், மாந்திரிகம், மாந்திரிகன் என்பன முறையே மந்திரமொழிக்கும் வினைக்கும் வினைஞனுக்கும் வழங்கும் பெயர்கள். மந்திரம் வாய்மொழி என்னும் பெயர்களுள், முன்னது கடவுள் பேய் இரண்டையும் பற்றியது; பின்னது கடவுளையே பற்றியது.
பேய்களுக்குத் தலைவி காளியாதலால், அவளை வழிபடுதல் ஐந்திணைக்கும் பொதுவும் மாந்திரிகர்க்குச் சிறப்பும் ஆயிற்று. மாந்திரிகர் அவளை வாலை (= இளையள், கன்னி) என்பர்.
கட்டுவைப்பித்தல், வேலன் வெறியாட்டு, தேவராளன், தேவராட்டி என்பவை மாந்திரிகம் பற்றிய பழங் குறிப்புகளாகும்.
பேய்களில் ஒருவகை பூதம். பூதம் பெருஞ்செயல் செயவல்லது. காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த சதுக்கப்பூதத்தைப் பற்றிச் சிலப்பதிகாரத்திற் காண்க.
பூதவணக்கம் பண்டைக்காலத்தில் சிறப்பாயிருந்ததினாலேயே, சிவபெருமான் பூதகணங்களுக்குத் தலைவர் எனப்பட்டார்.
பூதம் என்னும் பெயர் பெருமைப் பொருளது. பொதுபொது (இரட்டைக் கிளவி). பொதுக்கு, பொந்து என்னும் சொற்களை நோக்குக. பொந்து - பொந்தன் - மொந்தன். x.neh: c-C., பொது - (புது) - பூது. இரும்பூது - இறும்பூது. பூது + அம் = பூதம். பேய்களிற் பெரியது பூதம். உலகின் ஐம்பெருங் கருவிப் பொருள்கள் ஐம்பூதம் எனப்பட்டன.
இந்தியா, எகிபது, சீனம் ஆகிய நாடுகள் பண்டைக் காலத்தில் மாந்திரிகத்திற் சிறந்திருந்தன.
பேய்களைத் தெய்வம் என்பது, இருவகை வழக்கிலும் தொன்று தொட்டு இன்றுவரையுள்ளது.
(4) நடுகல் தெய்வம்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தரு மரபிற் பெரும்படை வாழ்த்தல் (புறத். 5)
என்பது தொல்காப்பியம்.
மதுரைவீரன், மாடசாமி, கருப்பசாமி முதலியவை நடுகல் தெய்வங்களே.
(5) கற்புத் தெய்வம்
கண்ணகி வரலாறு காண்க.
(6) தென்புலத்தார் வணக்கம் - (ANCESTOR WORSHIP)
பண்டைத் தமிழர், இறந்துபோன தம் முன்னோரைத் தென்புலத் தார் என்று பெயரிட்டுச் சமையம் வாய்க்கும்போதெல்லாம் வணங்கி வந்தனர். இது முன்னோரை நினைவுகூர்வதும் பெரியோர்க்குச் செய்யும் மதிப்புமாகும். இது சீனநாட்டில் மிகுதியாகவுள்ளது.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை (குறள் 43)
என்றார் திருவள்ளுவர்.
(7) நிலா வணக்கம்
நிலாவும் ஒரு காலத்தில் வணங்கப்பட்டதைப் பிறைதொழு கென்றல் என்னுங் கோவைத்துறையா லறியலாம்.
நால்வேள்வி
வேள் + வி = வேள்வி. வேட்டல் விரும்பல். விருப்பத்தோடு பிறரை யுண்பிப்பது வேள்வி.
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன் (குறள். 87)
என்னுங் குறளில், விருந்தைத் திருவள்ளுவர் வேள்வியென்றமை காண்க.
வேந்தன், வாரணன் முதலியோர்க்குச் செய்யும் தேவ வேள்வியும், பேய்கட்குச் செய்யும் பூதவேள்வியும், முன்னோர்க்குச் செய்யும் தென்புலத்தார் வேள்வியும், விருந்தினர்க்குச் செய்யும் மாந்தர் வேள்வியுமெனத் தமிழர் செய்துவந்த வேள்வி நான்கு. இவற்றொடு மறை யோதுதலைப் பிரமயாகம் என்று சேர்த்து, பஞ்ச மகாயக்ஞம் என்றனர் ஆரியர். இதன் பொருந்தாமையை அறிஞர் அறிக. ராஜ சூயம், அசுவமேதம் முதலிய ஆரிய வேள்விகள் தமிழர்க்குரியவை யல்ல. தமிழரசர் அவற்றை வேட்டது பிற்காலமாகும். (ஒ.மொ.நூ)
ஐந்திணைப்பெயர் மூலம்
குறிஞ்சி
குறி = அடையாளம், காலம், அளவு, தடவை.
குறி - குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்கால அளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச் செடி இயற்கையாக வளரும் மலை, மலை, மலையும் மலை சார்ந்த இடமும், மலைநாடு.
ஒ.நோ. நெரி - நெரிஞ்சி - நெருஞ்சி.
கோடைக்கானல் மலையிலும் நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள், பன்னீராண்டிற் கொருமுறை பூக்கின்றன. நீல மலையி லுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந் தடவையைக் கொண்டே தம் அகவையைக் கணக்கிட்டு வந்தனர். குமரி நாட்டுக் குறிஞ்சி நிலவாணரும் இங்ஙனமே செய்திருத்தல் வேண்டும்.
ஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ள குறிஞ்சிச்செடிகளையெல் லாம் ஆய்ந்து, குறிஞ்சி வகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும் காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறு அளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர். குமரிநாட்டில் எத்தனைவகை யிருந்தனவோ அறியோம்.
முல்லை
முல் - முன் - முனை = கூர்மை, கடலிற்குள் நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.
முல் - முள் = க. கூர்மை. முள்வாய்ச் சங்கம் (சிலப். 4:78). 2. கூரிய நிலைத்திணையுறுப்பு. இளைதாக முண்மரங் கொல்க (குறள். 879) 3. ஊசி. 4. பலாக்காய் முனை.
முள் - முளை = கூரிய முனை. முள்ளுறழ் முளை யெயிற்று
(கலித்.4).
முல் - முல்லை = கூரிய அரும்பு வகை, அஃதுள்ள கொடி, அக்கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்த இடமும்.
முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு (அகம். 4:1).
என்பதில், முல்லையரும்பை வைந்நுனை என்று அதன் கூர்மையைச் சிறப்பித்திருத்தல் காண்க. வை கூர்மை.
பாலை
பால் - பாலை = இலையிற் பாலுள்ள செடியுங்கொடியும் மரமுமான பல்வேறு நிலைத்திணை யினங்கள், அவை (முது) வேனிலில் தழைக்கும் நிலப்பகுதி, குறிஞ்சி நிலத்திற்கும் முல்லை நிலத்திற்கும் இடைப்பட்ட வறண்ட காடு, மாரியில் தழைத்தும் கோடையில் வறண்டும் இருக்கும் வன்னிலம்.
பகல் (பகுப்பு) என்னும் சொல்லின் மரூஉத் திரிபான பால் என்னும் வகைப்பெயர்க்கும், பாலை என்னும் நிலைத்திணைப் பெயர்க்கும், தொடர்பில்லை.
மருதம்
மல் = வளம். மற்றுன்று மாமலரிட்டு (திருக்கோ. 178)
மல் - மல்லல் = 1. வளம். மல்லல் வளனே (தொல். 788). 2. அழகு. மல்லற்றன் னிறமொன்றில் (திருக்கோ. 58, பேரா.). 3. பொலிவு. (சூடா).
மல் - மல்லை = வளம். மல்லைப் பழனத்து (பதினொ. ஆளுடை. திருவுலா. 8).
மல் - (மர்) - மருது = ஆற்றங்கரையும் பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்க நிலத்தில் வளரும் மரம்.
ஒ.நோ: வெல் - வில் - (விர்) - விருது = வெற்றிச் சின்னம்.
பருதி ….. விருது மேற்கொண்டுலாம் வேனில் (கம்பரா. தாடகை. 5)
மருது - மருதம் = பெரிய மருது, மருது, மருத மரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்த இடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு.
அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத்
துறை யணி மருது தொகல்கொள வோங்கி (அகம். 97).
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின் …. (புறம். 52).
பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின்
காமரு காஞ்சி துஞ்சும்
ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே. (புறம். 351)
மருதுயர்ந் தோங்கிய விரிபூம் பெருந்துறை (ஐங். 33)
கரைசேர் மருத மேவி … (ஐங். 74)
திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை (கலி. 27)
மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு (பதிற்றுப். 23)
வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை (சிலப். 14:72)
……………………………………………. காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த (குறுந். 258)
இம் மேற்கோள்களிலெல்லாம், மருதமரம் ஆற்றையும் பொய்கை யையும் வயலையுமே அடுத்திருந்ததாகக் கூறப்பட்டிருத்தல் காண்க.
நெய்தல்
நள்ளுதல் - 1. அடைதல். உயர்ந்தோர் தமை நள்ளி (திருவானைக். கோச்செங். 25). 2. செறிதல். நள்ளிருள் யாமத்து (சிலப். 15:105).
3. கலத்தல், பொருந்துதல். 4. நட்புச்செய்தல். நாடாது நட்டலின் கேடில்லை (குறள். 791). நள்ளார் = பகைவர்.
நள் - நண். நண்ணுதல் = 1. கிட்டுதல். நம்பனையுந் தேவனென்று நண்ணுமது (திருவாச. 12:17). 2. பொருந்துதல். 3. நட்புச்செய்தல். நண்ணுநர் = நண்பர். (பிங்.). நண்ணார் = பகைவர். நண்ணாரும் உட்குமென் பீடு (குறள். 1088).
நள் - நளி. நளிதல் = 1. செறிதல். நளிந்து பலர் வழங்காச் செப்பந் துணியின் (மலைபடு. 197). 2. ஒத்தல். நாட நளிய நடுங்க நந்த (தொல். 1232).
நள் - நெள் - நெய். நெய்தல் = 1. தொடுத்தல். நெய்தவை தூக்க (பரிபா. 19:80). 2. ஆடைபின்னுதல். நெய்யு நுண்ணூதல் (சீவக. 3019). 3. ஒட்டுதல்.
நெய் = ஒட்டும் பொருளாகிய உருக்கின வெண்ணெய். நீர்நாண நெய்வழங்கியும் (புறம். 166:21). 2. வெண்ணெய். நெய்குடை தயிரி னுரையொடும் (பரிபா. 19:3). 3. எண்ணெய். நெய்யணி மயக்கம் (தொல். பொ. 146). 4. புனுகு நெய். மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப (சிலப். 4:56). 5. தேன். நெய்க்கண் ணிறாஅல் (கலி. 42)
6. அரத்தம். நெய்யரி பற்றிய நீரெலாம் (நீர்நிறக். 51). 7. கொழுப்பு. நெய்யுண்டு (கல்லா. 71). நேயம், நட்பு. நெய்பொதி நெஞ்சின் மன்னர் (சீவக. 3049).
நெய் - நேய் - நேயம் = 1. நெய். (பிங்.). 2. எண்ணெய். (பிங்.). 3. அன்பு. நேயத்ததாய் நென்னலென்னைப் புணர்ந்து (திருக்கோ. 39).
7. தெய்வப் பற்று. நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி (திருவாச. 1:13).
நேயம் - நேசம் = 1. அன்பு. நேசமுடைய வடியவர்கள் (திருவாச. 9:4). 2. ஆர்வம். வரும்பொருளுணரு நேசம் (இரகு. இரகுவு. 38).
நேசம் - நேசி. நேசித்தல் = 1. அன்பு வைத்தல். நேசிக்குஞ் சிந்தை (தாயு. உடல்பொய். 32). 2. மிகவிரும்புதல்.
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் (தாயு. பரிபூர. 13)
நெய் - நெய்தல் = நீர்வற்றிய காலத்திலும் குளத்துடன் ஒட்டி யிருக்கும் செடிவகை, அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல் சார்ந்த இடமும்.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு. (மூதுரை, 17)
என்பதை நோக்குக.
பண்டைக்காலத்தில், இடப்பெயர்கள் பெரும்பாலும் நிலைத் திணைச் சிறப்புப் பற்றியே ஏற்பட்டன.
எ-டு:
ஊர்ப்பெயர் - தில்லை, ஆலங்காடு, பனையூர், நெல்லூர், விராலிமலை, காஞ்சிபுரம்.
நாட்டுப்பெயர் - ஏழ்தெங்கநாடு, ஏழ்குறும்பனைநாடு.
பெருந்தீவுப்பெயர் - நாவலந்தீவு, இலவந்தீவு, தெங்கந் தீவு.
ஒவ்வொரு பெருந்தீவும் பொழில் (சோலை) என்றும் பொதுப் பெயர் பெற்றது. இதனால், உலகமும் பொழிலெனப்பட்டது.
ஏழுடையான் பொழில் (திருக்கோ. 7)
குறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணை நிலப்பெயர்களும், அவ்வந் நிலத்திற்குரிய கருப்பொருளும் தட்பவெப்பமும் பற்றிய நிலைமையையும், உரிப்பொருள் என்னும் புணர்தல் இருத்தல் முதலிய மக்கள் காதலொழுக்க வகையையும், இருமடி ஆகு பெயராய்க் குறிக்கும். இவ்வகையிலேயே.
பாலை நின்ற பாலை நெடுவழி (சிறுபாண். 11)
முல்லை சான்ற முல்லையம் புறவின் (சிறுபாண். 169)
மருதஞ் சான்ற மருதத் தண்பணை (சிறுபாண். 186)
என்னும் அடிகளில், முன்னிற்கும் திணைப்பெயர்கள் அமைகின்றன. குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் என்பன, பண்ணுப் பெயர்களாய் அமைவதும் இம் முறையிலேயே.
மேற்காட்டிய சிறுபாணாற்றுப்படை யடிகட்கு, பாலைத் தன்மை நிலைபெற்றமையாற் பிறந்த பாலை நிலமாகிய தொலை யாத வழி; பாலைத் தன்மையாவது, காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமைகூடிச் சோலை தேம்பிக் கூவல்மாறி, நீரும் நிழலுமின்றி நிலம்பயந் துறந்து, புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெறுவதொரு காலம். என்றும்;
கணவன் கூறிய சொற்பிழையாது இல்லிருந்து நல்லறஞ் செய்து ஆற்றியிருந்த தன்மையமைந்த முல்லைக்கொடி படர்ந்த அழகினையுடைய காட்டிடத்து என்றும்;
ஊடியுங் கூடியும் போகநுகருந் தன்மையமைந்த மருத நிலத்திற் குளிர்ந்த வயலிடத்து என்றும்;
நச்சினார்க்கினியர் உரை கூறியிருத்தலைக் காண்க.
இங்ஙனமே, மதுரைக்காஞ்சியிலும், ஐந்திணை நிலப்பெயர்களும் அவற்றிற்குரிய உரிப்பொருளை ஆகுபெயராக உணர்த்துகின்றன.
மருதஞ்சான்ற = ஊடலாகிய உரிப்பொருளமைந்த.
முல்லைசான்ற = இருத்தலாகிய உரிப்பொருளமைந்த.
குறிஞ்சிசான்ற = புணர்ச்சியாகிய உரிப்பொருளமைந்த.
பாலைசான்ற = பிரிவாகிய உரிப்பொருளமைந்த.
நெய்தல்சான்ற = இரங்கலாகிய உரிப்பொருளமைந்த.
குறிஞ்சி முதலிய ஐந்திணைப் பெயர்களும் நிலைத்திணையைக் குறிக்கும்போது, மருதம் பாலை என்பன இயற்பெயரும், குறிஞ்சி முல்லை என்பன சினையாகு பெயரும், நெய்தல் என்பது தொழிலாகுபெயரும், ஆகும். ஐந்தும் முன்பு நிலத்தைக் குறித்துப் பின்பு நிலவொழுக்கத்தைக் குறிக்கும்போது, மருதம்பாலை என்பன இருமடியாகு பெயரும் ஏனைய மும்மடியாகு பெயரும் ஆகும்.
இடத்தின் பெயர் இடவொழுக்கத்தைக் குறிப்பது, கும்பகோணம் பண்ணிவிட்டான் என்னுங் கொச்சை வழக்குப் போன்றது.
நில வொழுக்கத்தின் பெயரே நிலத்தைக் குறித்தது என்று சொல்வது, தோகை என்னும் பெயர் முதலிற் பெண்ணையே குறித்துப் பின்னர் மயிலுக்காயிற்று என்று சொல்வ தொத்ததே.
காதலர் இருவரின் மணவாழ்க்கை, தெய்வ ஏற்பாட்டால்,
ஒரோவழி பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் தெரியாத களவொழுக்கமாகத் தொடங்குவது முண்டு. அது
இருமாதத்திற்குள் வெளிப்பட்டு விடும். அதன் பிற்பட்ட வெளிப்படை யொழுக்கம் கற்பெனப்படும். மணவாழ்க்கை ஆயிரங் காலத்துப் பயிராதலால், தமிழர் களவொழுக்கம் ஆரியர் கூறும் அற்றைப் புணர்ச்சியான யாழோர் (கந்தருவர்) மணமன்று; நல்லாசிரியரிடம் கல்லாதவரும், அயல் நாட்டாரும் கருதுகின்றவாறு, இல்வாழ்க்கை யேற்படாத அநாகரிகக் காலத்துக் காமப் புணர்ச்சியு மன்று.
கற்பில் தொடங்கும் மணவாழ்க்கையே பெரும்பான்மை; களவில் தொடங்குவது மிகமிகச் சிறுபான்மை. கற்பாகத் தொடராத களவு இழிந்தோ ரொழுக்கமெனப் பழிக்கப்படுவது. இறைவன் ஏற்பாடும் இன்பமிகுதியும் களவின் சிறப்பியல்புகள்.
காதலர் வாழ்க்கை தொடக்கம் முதல் முடிவுவரை நானூறு துறை களாக வகுக்கப்பட்டு, கோவை என்னும் நாடகமாகக் கூறப் பெறும். இது வடவர் கூறும் காமநூலன்று. இம்மை யின்ப விருப் பினர்க்கு நுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப் பற்றற்ற வர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச் செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்கு வழிப்படுத்த வேண்டுமென்பதே, முதனூலாசிரியர் நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தே இறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.
ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின்
காரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே.
என்னும் மதிப்புரைத் தனிப்பாடலை நோக்குக.
திருவள்ளுவரும், நடவாமுறை அறத்தைக் கூறாது நடைமுறை யறத்தையே கூறுவதால், கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புல வின்பமும் ஒருங்கே தரும் ஒண்டொடி, அருள் நிறைந்த இறைவனால் ஆடவனுக்கு அளிக்கப்பெற்ற வாழ்க்கைத் துணை யென்று கண்டு, அவளோடு கூடி அறவழியில் இன்பம் நுகர்ந்து, ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செய்யின், இம்மைச் சிற்றின்பமும் மறுமைப் பேரின்பமும் அடையலாம் என்பதை யுணர்த்தற்கே, இன்பத்துப் பாலை இறுதியிற் கூறினார். இதை யுணராது, துறவறத்தினாலேயே வீடுபேறுண்டாம் என்னும் ஆரியக் கொள்கையை நம்புபவர், இன்பத்துப்பாலைப் பழிக்கவும் திருவள்ளுவரைக் கண்டிக்கவும் துணிவர்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன் (46)
என்னுங் குறளை நோக்குக.
இனி, அகப்பொருள் போன்றே புறப்பொருளும் அரசனையே தலைமையாகக் கொண்டு, அவன் மறவாழ்க்கைக்குரிய போர்த் தொழிலை எழுதிணையாக வகுத்துக் கூறுகின்றது. அவற்றுள், வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை என்னும் நான்கும் போர் வகைகளையும், வாகை போர் வெற்றியையும், காஞ்சி போரால் விளங்கித் தோன்றும் உலகநிலையாமையையும், பாடாண் போர் வெற்றியால் ஏற்படும் புகழையும், பற்றியனவாம்.
தமிழ்ப் பொருளிலக்கணம் காதலையும் போரையுமே பற்றிக் கூறுவதால், மற்றப்பொருள்களெல்லாம் விடப்பட்டுள்ளன வென்றும், அரசனும் படைமறவருமே போர்புரிவதால் பிறர் தொழில்களை யெல்லாம் அது தழுவவில்லை யென்றும், சிலர் கருதிக் குறை கூறாவாறு, வாழ்க்கைப் போராட்டத்தில் மக்கள் மேற்கொள்ளும் எல்லாத் தொழில் வெற்றிகளும் வாகைத் திணையுள் அடக்கப்படுகின்றன. அது,
அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்
பாலறி மரபின் பொருநர் கண்ணும்
அனைநிலை வகையோ டாங்கெழு வகையின்
தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர் (1021)
என்று தொல்காப்பியமும்.
பார்ப்பன வாகை, வாணிகவாகை, வேளாண்வாகை, பொருநவாகை, அறிவன்வாகை, தாபத வாகை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதின்முல்லை, கிணைநிலை, என்று வாகைப் படலத்திலும்; மல்வென்றி, உழவன்வென்றி, ஏறுகொள்வென்றி, கோழிவென்றி, தகர்வென்றி, யானைவென்றி, பூழ்வென்றி, சிவல்வென்றி, கிளி வென்றி, பூவைவென்றி, யாழ்வென்றி, சூதுவென்றி, ஆடல் வென்றி, பாடல்வென்றி என்று ஒழிபிலும், புறப்பொருள் வெண்பா மாலையும், கூறுவதால் அறியப்படும்.
சிலர், சிறப்பாக ஆரிய வழியினர், பொருளிலக்கணம் பாட்டியலே (Poetics) யன்றி வேறன்று என்று, அதன் சிறப்பை இறப்பக் குறைத்தும் மறைத்தும் கூறுவர். பிராமணனைத் தலையாக வுயர்த்தியும் தமிழனைக் கடையாகத் தாழ்த்தியும், எழுத்து, சொல், பா, பனுவல் முதலியவற்றிற்கு நால் வகை வரணம் வகுப்பதே பாட்டியல். பொருளிலக்கணமோ, மாந்தன் இதுவரை அறிந்ததும் இனிமேல் அறியப்போவதுமான எல்லாப் பொருள்
கட்கும் புலனெறி வழக்கப்படி இலக்கணம் வகுக்கும் ஈடிணை யற்ற அறிவியம்.
காஞ்சித்திணையுள், இளமை நிலையாமை செல்வநிலையாமை, யாக்கை நிலையாமை, உடல்நலநிலையாமை ஆகிய பல்வேறு நிலையாமைகளை எடுத்துக் கூறுவதை, மக்களை நன்னெறிப் படுத்தற்கு வாய்ப்பாகக் கொள்வதும், தமிழப் பண்பாட்டுக் கூறாம். மக்களெல்லாரும் இறப்பையும் வாழ்நாட் குறுக்கத்தையும் எண்ணி, சொல்லைச் சுருக்கிச் செயலைப்பெருக்கி, செந்தமிழிற் பேசி, காதல் மனையாளொடு கூடி இன்பம் நுகர்ந்து, இயன்ற வரை அறஞ்செய்து, தத்தம் தொழிலில் வெற்றிபெறுமாறு மேன் மேல் திறம் மிகுத்து இறுதியில் இறைவனையடைய வேண்டு மென்பதே, முதனூலாசிரியர் நோக்கமாகும். (த.வ. 114-122)
ஐம்படைத்தாலி
திருமாலின் ஐம்படையாகிய சங்குசக்கர வில் வாள் தண்டவடிவிற் செய்யப்பட்டு, சிறுவர் கழுத்தில் பாதுகாப்பாக அணியப் பெறுவது. (த.தி. 82)
ஐம்பொருத்தம்
(பதின் பொருத்தத்துடன்) வாழ்நாள், குறிப்பு (பாவகம்) மரம், புள், குலம் என்னும் ஐம்பொருத்தம் பார்ப்பதுமுண்டு. (த.தி.20)
ஐயர்
ஆரியர் வருமுன் ஐயரென்றும் பார்ப்பாரென்றும் சொல்லப்பட்ட இருவகை அந்தணரும் தமிழரே. அவருள் முன்னவர் துறவியர். பின்னவர் ஆசிரியர், புலவர், பண்டாரம், உவச்சர், குருக்கள், திருக்கள், நம்பியர், போற்றியர் எனப் பல்வேறு பெயர் பெற்ற இல்லறத்தார். (தி.ம. 63).
ஐயன் என்னும் பெயர்
ஐ = 1. வியப்பு. ஐவியப் பாகும் (தொல். 868).
2. வியக்கத் தக்க பெரியோன், அரசன், தலைவன். என்னைமுன் நில்லன்மின் (குறள். 771). 3. குடும்பத் தலைவனான தந்தை. தன்னை சேவடித் தாமரை (சீகாளத். பு. நான்முக. 124). 4. மணமான பெண்ணின் தலைவனான கணவன். என்னைக்கு முதவாது (குறுந். 27).
ஐ - ஆய் = அன்னை.
ஐ - ஐது = வியப்பானது. ஐதே யம்ம (தொல். சொல். 385, உரை).
ஐ - ஐயன் = 1. பெரியோன். 2. ஐங்குரவர் என்னும் ஐந்து பெரியோரின் பொதுப் பெயர். தாய், தந்தை, அண்ணன், அரசன், ஆசிரியன் என்னும் ஐவரும் ஐம்பெரியோர். தாயைக் குறிக்கும் போது ஐயை என்று ஈறு திரியும். தம் ஐயன் தமையன் (அண்ணன்). தந்தைக்குப் பின் தமையன். 3. பெரியோனான முனிவன். ஐயர் யாத்தனர் கரணம் என்ப. (தொல். 1091). பிங்கல நிகண்டின் முனிவர் பகுதி ஐயர் வகை என்று பெயர் பெற்றிருத்தல் காண்க. 4. எல்லார்க்கும் எல்லாவற்றிற்கும் தலைவனான இறைவன். 5. சாத்தன் என்னும் தெய்வம். ஐயன் - ஐயனார். 6. தலைவன்.
ஐயன் என்னும் சொல் பறையரும், ஐயா என்னும் விளி வடிவம் பாண்டி நாட்டு வெள்ளாளர் முதலியார் முதலிய பல குலத்தாரும், தந்தையைக் குறிக்க ஆளும் சொல்லாகும்.
ஐயன் - ஐயர் (உயர்வுப்பன்மை) = பெரியோர், உயர்ந்தோர். இறை வனடியார் பெரியோராதலின், சேக்கிழார் கண்ணப்பரையும் திருநாளைப் போவாரையும் திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் ஐயர் என்னுஞ் சொல்லாற் குறித்தார்.
சார்வலைத் தொடக்கறுக்க ஏகும்ஐயர் தம்முனே (கண்ணப். 70)
ஐயரே அம்பலவர் அருளாலிப் பொழுதணைந்தோம். (திருநாளைப். 30)
அளவிலா மகிழ்ச்சியினார் தமைநோக்கி ஐயர் நீர் (திருஞான. 133)
ஐ - ஐயள் = வியக்கத்தக்கவள். (ஐங். 255)
ஐயன் - ஐயை = 1. தாய். 2. காளி (அம்மை). 3. தலைவி. 4. தவப்பெண். 5. ஆசிரியன் மனைவி.
ஐயன் - ஐயா! = எல்லாப் பெரியோரையும் விளிக்கும் விளி.
ஐயன் - ஐயே! - 1. கீழ்மக்கள் தலைவனை விளிக்கும் விளி. ஐயே! நானுங் கொன்றவ னல்லேன் (திருவிளை. பழியஞ். 24) 2. வியப்புக் குறிப்பு (வ. ஆ. மா.)
ஐயையே! (ஐயே ஐயே) - அருவருப்புக் குறிப்பு.
ஐயன் - ஐயோ! = 1. இரக்கக் குறிப்பு. 2. வருந்தற்குறிப்பு.
ஐயன் - ஐயவோ - ஐயகோ! = வருந்தற்குறிப்பு.
ஐயையோ! (ஐயோஐயோ) = மிக வருந்தற் குறிப்பு.
ஐயன் - அய்ய (பாலி).
ஐயர் என்பது சுமார்த்தப் பிராமணரும், ஐயங்கார் என்பது வைணவப் பிராமணரும், தமக்கு ஆண்டுகொண்ட குலப் பட்ட மாகும். ஐயர் அவர் - ஐயவாரு (தெ.) - ஐயகாரு - ஐயங்கார்.
ஐயன் என்னும் அடிப்படைத் தென்சொல்லை, ஆர்ய என்னும் இனப்பெயரின் திரிபாகச் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகரமுதலி காட்டியிருப்பது, அதைத் தொகுத்த பிராமணத் தமிழ்ப்புலவரின் துணிச்சலையும், மானமிழந்த தமிழத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரின் அடிமைத்தனத்தையுமே, காட்டும்.
பிராமணர் ஏனை மூவகுப்பார்க்கும் தொழில்களை வரையறுத்து விட்டு, தமக்குமட்டும் சமையத்திற் கேற்றவாறு எத்தொழிலையும் மேற்கொள்ளும் உரிமையை வைத்துக்கொண்டனர். துரோணாச் சாரி கிருபாச்சாரி என்னும் இரு பிராமணரும், பாரதக்காலத்தில் வில்லாசிரியரா இருந்தனர். புத்தர் காலத்தில் தேவேந்திரநாதன் என்னும் பிராமணன் பயிர்த்தொழிலை மேற்கொண்டான். ஆயினும், அவர் பிராமண வரணம் மாறவில்லை. இற்றைப் பிராமணர் தோட்டிவேலை தவிர எல்லா வேலையுஞ் செய்கின்றனர். ஆயினும், பிராமணர் என்றும் பிராமணரே. இங்ஙனமே, ஏனை வகுப்பாரும் கல்வியல்லாத மற்றத் தொழில்களையெல்லாஞ் செய்துகொண்டு, உலகுள்ளவரையும் உடனுண்டலும் மணவுறவு மின்றி, வெவ்வேறு இருப்புக் கூண்டுக் குலங்களாக இருந்துவர வேண்டுமென்று, அவர் விரும்புகின்றனர். இதனால், நாட்டுமக்கள் முன்னேற்றமும் ஒற்றுமையுமின்றி, வந்தேறிகளான பிராமணர்க்கே என்றும் அடிமைத் தொண்டு செய்துவருமாறு, வரணாச்சிரம தருமம் என்னும் குலவொழுக்கத் திட்டம் வகுக்கப்பட்ட தென்பது தெளிவாகின்றது.
ஐயுறவிற் கிடமான சில சொற்கள்
கலியாணம் - வ. கல்யாண (இ.வே.)
கலித்தல் = ஆரவாரித்தல், மிக்கெழுதல், பெருகுதல், செருக்குதல், தருக்குதல், செருக்கி வளர்தல். தழைத்தல், மகிழ்தல்.
கலி = ஆரவாரம், பெருக்கு, செருக்கு. தழைத்தல், மகிழ்ச்சி. யாணம் = அழகு.
யாணஞ் சான்ற அறிவர் கண்டோர் (தொல். 1446)
ஏண் - ஏணம் (எழுச்சி, அழகு) - யாணம் = அழகு.
யாணம் - யாணர் = புதுமை, புதுவருவாய்.
கலியாணர் = மனச்செருக்கு எழுதற்குக் காரணமான புது வருவாய் (பட்டினப். 32)
கலிகொள்யாணர் = தழைத்தலைக் கொண்ட புதுவருவாயை யுடைய (புறம். 66)
கலியாணர் = ஓசையையுடைய புதுப்பெயல் (புறம். 205)
கலியாணர் = செருக்கினையுடைத்தாகிய புதுவருவாய் (மதுரைக். 330)
கலியாணர் - பெருக்கினை யுடைத்தாகிய புது வருவாய் (மதுரைக். 118.)
யாணர் என்பது யாணம் என்பதன் திரிபாதலின், கலியாணம் என்பதே முன்னை வடிவாம்.
கல்யாண என்னும் வடசொற்கு, அழகிய, மனத்திற்கேற்ற (இ.வே.) சிறந்த, உயர்ந்த, நல்ல, நலமான, மங்கல, மகிழ்ச்சியான, ஆக்கமான என்னும் பொருள்களும், அதன் கல்யாணம் என்னும் வடிவிற்கு ஆகூழ், மகிழ்ச்சி, ஆக்கம், தழைப்பு, நல்லொழுக்கம், அறப்பண்பு என்னும் பொருள்களும் கூறுப்பட்டிருப்பதால், அது கலியாணம் என்னும் தென்சொல்லின் திரிபோ என ஐயுறக் கிடக்கின்றன.
அதன் மூலமாகக் காட்டும் கல்ய என்னும் சொற்கு நல்ல, நலமான என்னும் பொருள்களும், அதன் கல்யம் என்னும் வடிவிற்கு உடல் நலம் என்னும் பொருளும் கூறப்பட்டுள. ஆயினும், இச் சொல் கல்யாண என்பதன் சிதைவாகவு மிருக்கலாம். யாண என்னும் பிற்பகுதியை ஈறாகக் கொள்ளாது கிளவியாகக் கொள்வதே பொருத்தமாம்.
வடசொல்லாகக் கருதப்படும் கல்யாணம் என்னும் சொற்கு உலகவழக்குத் தமிழில் திருமணம் என்னும் பொருளுண்டு; வட மொழியில் அஃதில்லை. மங்கலம் என்னும் பொருளே இரு மொழிக்கும் பொதுவாம். ஆகவே, திருமணப் பொருள் தென் னாட்டிலேயே வடசொற்குக் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். மங்கலம் என்னுஞ் சொல் வடமொழியில் நன்மை என்று பொருள்படுமேயன்றித் திருமணத்தைக் குறிக்காது. கல்யாண குணம் = நல்ல பண்பு. கலி என்னும் சொல் இசைக் கருவி முழக்கத்தையும்; யாணம் என்னுஞ் சொல் பந்தற் சுவடிப்பும் மணமக்கள் கோலமுமாகிய அழகையும், வரிசை வைத்தலும் மொய்யெழுதுதலும் சீர் செய்தலுமாகிய புதுவருவாயையும்; குறிப்பது கவனிக்கத்தக்கது.
கப்பி - கபி (இ.வே.)
கப்பு = கிளை. கப்பி = மரக்கிளையில் தங்கும் குரங்கு. கப்பி - கபி.
கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப. (தொல். 1512)
வடமொழியார் காட்டும் கம்ப் (நடுங்கு) என்பது மூலமாகாது.
சோம்பு - வ. ஸோம (இ-வே.)
சோம்புதல் = தூக்க மயக்கமாயிருத்தல், வேலை செய்யா திருத்தல். L. somnus = தூக்கம்.
ஸோமச்சாறு மயக்கந்தரும் கள்ளாதலால், அப் பெயர்
பெற்றிருக் கலாம். மயக்கந் தருவதாகப் பண்டைக்காலத்திற்
கருதப்பட்ட திங்களும் வடமொழியில் ஸோம என்று பெயர் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
வடவர் காட்டும் ஸு (பிழி) என்னும் மூலத்தினின்று ஸுத (சோமச்சாறு) என்னும் சொல் திரிந்துள்ளது. அதுவே ஸோம என்பதற்கும் மூலமென்பது பொருந்தாது.
வானரம் - வ. வாநர
வால் + நரம் = வாலுள்ள மாந்தன் போன்ற விலங்காகிய குரங்கு.
வடவர் வனர் (வனம்) என்னும் சொல்லை மூலமாகக்கொண்டு காட்டு விலங்கு என்றும், நர ஏவ என்பதை மூலமாகக்கொண்டு மாந்தனைப் போன்றது என்றும், பொருள் கூறுவர். முன்னதற்குப் பொருட் பொருத்தமும் பின்னதற்குச் சொற்பொருத்தமும் இன்மை காண்க.
வடமொழியில் இச்சொற்கு மூலமில்லை.
Gk. ane#r, stem - ner, OL. nero, skt. nero#n, L.nero, S. nard, npu, Z. nar, OE. wer.
நரம் அல்லது நரன் என்னும் சொல் நரல் என்பதினின்று திரிந்திருக்கலாம். நரலுதல் = ஒலித்தல். மாந்தனுக்கு மொழி சிறப்பான ஒலியமைப்பாயிருத்தல் காண்க. (வ.வ.)
ஒட்டகம் = வ. உஷ்ட்ரக
ஒட்டுதல் = வயிறு உள்ளொடுங்குதல். ஒட்டப்போடுதல் = பட்டினியிருக்கச் செய்தல்.
ஒட்டு - ஒட்டகம் = நீண்ட நாள் உண்ணாதிருக்கக் கூடிய விலங்கு.
ஒட்டகம் குதிரை கழுதை மரைஇவை
பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய (தொல். 1552)
வடவர் வெப்பத்தைக் குறிக்கும் உஷ் என்னும் அடிச்சொல்லை மூலமாகக் காட்டுவர். ஒட்டகம் சுடுகின்ற பாலை நிலத்திற்குரிய தாயினும், அதன் வடசொற் பெயர் தென்சொல்லை ஒத்திருந்ததால், அதினின்றே திரிந்திருத்தல் வேண்டும்.
மேலும், உஷ் என்னும் வடசொல்லும் உள் என்னும் தென் சொல்லின் திரிபே.
ஒட்டகம் - ஒட்டகை. ம. ஒட்டகம், க. bj., து. ஒண்டெ. (வ.வ.100)
ஒட்பம்
ஒட்பம் = அறிவொளி.
ஒள் - ஒட்பு - ஒட்பம்
ஒள் - ஒளி.
ஒட்பம் = ஒண்கருத்து, உண்மையறிவு. (தி.ம. 240).
ஒப்பியல் இலக்கணம்
ஒப்பியல் இலக்கணமாவது, மொழிகளின் இலக்கணங்களை ஒன்றோடொன்று ஒப்புநோக்கி, அவற்றின் ஒற்றுமை வேற்றுமை களை அறிதல்.
ஒப்பியற் சிறப்பு
ஒப்பியல் என்பது, எல்லாக் கலைத் துறைகளிலும் உண்மையைக் காண்பதற்கு இன்றியமையாத முறையாம். ஆகவே, ஒப்பியல் என்று பெயரும் வாய்ந்த, கலைகட்கும் நூல்கட்கும் அதன் இன்றியமையாமையைச் சொல்ல வேண்டுவதில்லை. கால்டுவெல் ஐயர் ஒப்பியலின் தேவையைத் தம் இலக்கண முகவுரையில் (ப.10) பின்வருமாறு வற்புறுத்துகின்றார்.
அவர்கள் (திரவிடர்) தங்கள் மொழிகளைப் பிறவற்றுடன் ஒப்புநோக்க ஒருபோதும் முயன்றதில்லை; தங்கள் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிறமொழிகளுடன்கூட ஒப்புநோக்கிய தில்லை. மொழிக்குடும்பம் என ஒன்றுண்டு என்னும் கருத்தைக் கூட அவர்கள் மனம் பற்றியதில்லை. இதனால், அவர்கள் தங்கள் மொழியைப் படிப்பதில் எடுத்துக்கொண்ட அக்கறையானது, மதிநுட்பத்தோடும் பகுத்துணர்வோடும் கூடியதாயிராமல், நேர்மையாக எதிர்பார்த்த அளவிற்கு மிகக் குறைவான பயனை விளைத்துள்ளது. அவர்கள் மொழிநூல் அப் பெயராற் குறிக்கப் படக் கூடுமாயின், நம் காலம் வரையும், ஊழிகட்கு முன்னிருந்த வாறே தொடக்க நிலையிலும் துண்டு துணிக்கையாகவும் இருந்து வந்திருக்கின்றது. ஒப்பியல் தன்மையில்லாமையால் அது அறிவியல் திறமும் முன்னேற்றமும் அடையவில்லை. ஒப்பியற் கல்வி ஒவ்வோர் அறிவியல் துறையிலும் ஐரோப்பாவில் பெருநலம் பயத்திருக்கின்றது. இந்தியாவிற்கும் அது பெரிதுதவும் என்று எதிர்பார்க்கக் கூடாதா? தென்னிந்திய மக்கள், தங்கள் சொந்த மொழிகளை ஒப்புநோக்கிப் படிப்பதிலும் பொதுவாக ஒப்பியல் மொழிநூலிலும் விருப்பங் கொள்வாராயின் அது, அவர்களின் தனியிலக்கணக் கல்வி இதுவரை பயன்பட்டதைவிட மிகமிகப் பல்வேறு வகைகளிற் பயன்படும் என்பதைக் காண்பார்கள். அவர்கள் செய்யுள் நடைப்பட்ட பிதிர்களையும் இன்னோசைப் பட்ட வெற்றெனத் தொடுப்புகளையும் உருப்போட்டுப் படித்துப் பொந்திகை (திருப்தி) கொள்வதை விட்டு விடுவார்கள்.
வரலாற்றடிப்படை
எல்லாக் கலைகளும் நூல்களும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளனவென்பது, எவரும் அறிந்த வுண்மை.
வரலாற்றொடு முரணும் எந்நூலும் நூலாகாது. ஆதலால், மொழிநூலும் அதனை அடிப்படையாகக் கொள்ளல் வேண்டும்.
தென்னாட்டு வரலாறு உண்மையான முறையில் இதுவரை எழுதப் பெறவில்லை. இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து தொடங்க வேண்டுமென்று சென்ற நூற்றாண்டே சுந்தரம் பிள்ளையும் வின்செண்டு சிமித்தும் கூறிப்போயினர். ஆயினும். இன்னும் அம் முறை கையாளப்பெறவில்லை. இதற்கு மாறாகத் தென்னாட்டு வரலாறு திறமையுடன் மறைக்கப்பட்டே வருகின்றது. இதனால் மகன் தந்தைக்கும் பேரன் பாட்டனுக்கும் முந்தியவர் என்பதுபோல் தலைகீழாகத் தமிழ் வரலாறும், தமிழ்நாட்டு வரலாறும், இருந்து வருகின்றன.
இந்து மாவாரியில் மூவேறு கடல்கோளால் முழுகிப்போன குமரி (Lemuria) நாட்டுச் செய்தியே தென்னிந்திய அல்லது தமிழக வரலாற்றுத் தொடக்கம். குமரி நாட்டுண்மை,
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (9.9-11)
என்னும் புறநானூற் றடிகளாலும்.
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (11.19-22)
என்னும் சிலப்பதிகார அடிகளாலும்.
மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் (104)
என்னும் முல்லைக்கலித் தரவாலும்.
அக்காலத்து அவர் தலைச்சங்கப் பாண்டியர் நாட்டுத் தென் பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னு மாற்றிற் கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவத வாறும் - நாற்பத்தொன்பது நாடும் - பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல்கொண் டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க என்னும் அடியார்க்கு நல்லார் உரைப் பகுதி யாலும் (சிலப். சாமிநாதையர் பதிப்பு. ப. 230).
… தலைச்சங்க மிருந்தார் … தமிழாராய்ந்தது கடல் கொள்ளப் பட்ட மதுரையென்ப என்றும்.
… இடைச்சங்க மிருந்தார் … தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்ப. என்றும், இறையனாரகப் பொருளுரை கூறுவதாலும் (பக். 6,7) பிறவற்றாலும் அறியப்படும்.
திரவிடரெனப் படுவார் தென்னாட்டுப் பழங்குடி மக்களே யென்று, இராமச்சந்திர தீட்சிதர் எழுதியுள்ள வரலாற்று முன்னைத் தென்னிந்தியா (Pre-Historic South India), தமிழரின் தோற்றமும் பரவலும் (Origin and Spread of the Tamils) என்னும் நூல்களிலும் P.T. சீனிவாசையங்கார் எழுதியுள்ள இந்தியக் கற்காலம் (Stone Age of India) என்னும் நூலிலும் பரக்கக் கூறியிருத்தல் காண்க.
குமரிநாட்டு உண்மையை அறிந்தால்தான், தமிழர் தெற்கே தோன்றி வடக்கே சென்று திரவிடராய்த் திரிந்தாரென்ற வுண்மை யையும், திரவிடர் மீண்டும் வடமேற்கே சென்று ஆரியராய்த் திரிந்தாரென்ற வுண்மையையும், தமிழ் திரவிடத் திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்ற வுண்மையையும் உணர்தல் இயலும்.
தென்னாட்டு மொழிகளுக்குள் தமிழ் மிகத் தொன்மையான தென்றும், என் கருத்தின்படி அது திரவிடத் தாய் என்றும் நம்புவதற்கு ஒரு பாணிப்பும் தேவையில்லை என்று தமிழரின் தோற்றமும் பரவலும் என்ற நூலிலும்.
தமிழேனும் வேறு எத் தென்னிந்திய மொழியேனும் சமற்கிருதத் தினின்று தோன்றியதன்று என்பது மட்டுமன்று; நாம் நெருங்கி ஆயுங்கால், திரவிட மொழிகள் சமற்கிருதத்திடத்தும் வேதமொழிக் கிளைகளிடத்துங்கூட மிகுந்த அளவு செல்வாக்குச் செலுத்தியிருக் கின்றன என்னும் எம் கொள்கையை வலியுறுத்த மிகுந்த ஒப்புமைகள் காண்கின்றோம் என்று திரவிட முன்னைத் தென்னிந்தியா என்னும் நூலிலும். இராமச்சந்திர தீட்சிதர் கூறியிருப்பதைக் கவனிக்க.
திரவிட மொழிகள் ஆரிய மூலமொழிக்கு மிக நெருங்கியவை என்று கால்டுவெல் தம் ஒப்பியல் இலக்கணத்தில் ஆங்காங்குக் கூறியிருப்பது, ஆழ்ந்து நோக்கத்தக்கது.
திரவிட மொழிகளின் உறவியல் வரிசை
திரவிட மொழிகள்
1. தமிழ் 3. தெலுங்கு 5. துளு (துளுவம்)
2. மலையாளம் 4. கன்னடம் 6. குடகு (குடகம்)
எனத் திருந்தியவை ஆறும்.
1. தோடா (தொதுவம்) 4. கூ
2. கோட்டா 5. ஓராஒன்
3. கோண்டு (கோண்டி) 6. அரசமகால் (ராஜ்மஹால்)
எனத் திருந்தாதவை ஆறும்.
ஆக மொத்தம் பன்னிரண்டு எனக் கூறினர் கால்டுவெல் ஐயர். இவற்றுடன் பிராகுவீ, பர்சி (பர்ஜி) என்னும் இரு திருந்தா மொழிகளும் சேர்க்கப்பெறும்.
திருந்திய திரவிட மொழிகள் ஆறும், தூய்மை பற்றிய இறங்கு வரிசையிற் பின் வருமாறு அமையும்.
1. தமிழ் 3. கன்னடம் 5. குடகம்
2. மலையாளம் 4. துளுவம் 6. தெலுங்கு
திரவிடம் எனப்பெறும் எல்லா மொழிகளும் இன்று ஒரே பெயரால் வழங்கினும், தமிழொழிந்தவையெல்லாம் சிறிதும் பெரிதும் ஆரியத்தன்மை யடைந்துவிட்டமையால், அவற்றைத் தமிழும் திரவிடமும் எனப் பிரித்துக் கோடலே தக்கதாம். அவ்விருபாற்கும் தமிழியம் (Tamulic) என்பதைப் பொதுப் பெயராகக் கொள்ளலாம்.
தமிழினின்று திரிந்த திரவிட மொழிகளுள் மலையாளமும் ஒன்றாகக் கொள்ளப்பெறினும். அது நெருக்கத்திலும் தூய்மை யிலும் பிற திரவிட மொழிகளிலும் வேறுபட்டு தமிழுக்கும் திரவிட மொழிகட்கும் இடைப்பட்ட நிலையிலுள்ளதாகக் கொள்ளல் வேண்டும். தொன்றுதொட்டுப் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை சேரநாட்டுச் செந்தமிழாகவும், அதன்பின் 16 ஆம் நூற்றாண்டு வரை கேரளநாட்டுக் கொடுந்தமிழாகவும், இருந்து வந்த மொழியைப் பிற திரவிட மொழிகளோ டொப்பக் கொள்வது எவ்வகையினும் பொருந்துவதன்று.
பொதுவாக, திரவிடம் தெற்கே செல்லச் செல்லத் திருந்தி விரியும் என்றும், வடக்கே செல்லச் செல்லத் திரிந்து சுருங்குமென்றும் அறிதல் வேண்டும்.
திரவிடமெல்லாம் ஒரு மொழி
திரவிட மொழிகள் இன்று பதினான்கெனக் கணக்கிடப்பட் டிருப்பினும், அவையனைத்தும் ஒரு காலத்தில் ஒரே மொழியாய் வழங்கியமை பின்வரும் சான்றுகளால் உணரப்பெறும்.
1. திரவிட மொழிகளெல்லாம், முதற்காலத்தில், வேறுபாடின்றி அல்லது வேறுபடுக்கப்படாது தமிழம் அல்லது திரவிடம் என ஒரே பெயரால் அழைக்கப்பெற்றமை.
2. திரவிட மொழிகட் கெல்லாம் அடிப்படைச் சொற்றொகுதி பெரும்பாலும் ஒத்திருத்தல்.
3. எல்லாத் திரவிட மொழிகட்கும் இலக்கண அமைதி ஒன்றாயிருத்தல்.
4. திரவிட மொழிகளுள் ஒவ்வொன்றையும் செவ்வையாய் அறிய ஏனையவற்றின் அறிவு இன்றியமையாமை.
5. தெலுங்கு கன்னடம் மலையாளம் முதலிய திரவிட மொழிகள் ஒவ்வொன்றாய்த் தமிழினின்று பிரிந்து போனமை வரலாற்றாலும் மொழிநூலாலும் அறியப்பெறுதல்.
6. தமிழல்லாத பண்டைத் தாய்மொழிகளும் பிற்காலத்துப் பல்வேறு கிளைமொழிகளாய்ப் பிரிந்து போனமை.
திரவிடத்தாய்
திரவிட மொழிகட்கெல்லாம் தாய் தமிழே. இதற்குச் சான்று களாவன :
1. தமிழின் தொன்மையும் அது குமரிநாட்டில் தோன்றியமையும்.
2. தமிழின் ஒலியெளிமை.
3. வடமொழியும் பிற மொழியும் கலவாத் தூய்மையில் தமிழ் சிறந்திருத்தல்.
4. தமிழின் சொல்வளம்.
5. தமிழின் சொற் செம்மை.
6. திரவிடத்திற்குச் சிறப்பான இலக்கியம் தமிழிலேயே இருத்தல்.
7. தமிழம் என்னும் பெயரே (த்ரமிளம்-த்ரமிடம்-த்ரவிடம்) திரவிடம் எனத் திரிந்தமை.
8. கடைச்சங்கக் காலத்தில் வேங்கடத்திற்குத் தெற்கில் தமிழே வழங்கியமை.
தமிழின் திரவிடத் தாய்மையை அதனின்று மிகமிகப் பிரிந்து போனதும் பெருநிலத்தில் வழங்குவதும் திரவிட மொழிகட்குள் பிறங்கித் தோன்றுவதுமான தெலுங்கொன்றன் வாயிலாய் அறியலாம்.
எ-டு:
1. மூவிடப் பெயர்
தமிழ் தெலுங்கு
யான்-நான் நேனு
யாம் மேமு
நாம் மனமு
நீன்-நீ நீவு
நீம், நீர் மீரு
அவன் வாடு
அவள் அதி
அவர் வாரு
அது அதி
அவை அவி
2. ஆகு என்னும் வினைச்சொற் புடைபெயர்ச்சி
தமிழ் தெலுங்கு
பகுதி - ஆ, ஆகு அவு
ஏவல் ஒருமை - ஆ, ஆகு கா, கம்மு
ஏவல் பன்மை - ஆகுங்கள் கண்டி
தன்மையொருமை
இ. கா முற்று - ஆயினேன் அயினானு
இ. கா. பெயரெச்சம் - ஆன அயின, ஐன
இ. கா. வினையெச்சம் - ஆய் அயி, ஐ
நி. கா. வினையெச்சம் - ஆக கா, அவ
எ. கா. வினையெச்சம் - ஆயிற்றேல் அயித்தே
படர்க்கை எதிர்கால
வினைமுற்று - ஆகும், ஆம் அவுனு
உடன்பாட்டிடைச்சொல் - ஆம் அவுனு
ஒன்றன்பால் எதிர்மறை
வினைமுற்று - ஆகாது காது
தொழிற்பெயர் - ஆதல், அவுட்ட, காவடமு
ஆகுதல் (முதலியன)
(முதலியன)
தமிழுக்குத் திரவிடத் துணை
பண்டைத் தமிழகத்தின் பெரும் பகுதியைக் கடல்கொண்டமை காரணமாக, அப் பகுதியில் சிறப்பாக வழங்கிய உலக வழக்குச் சொற்களும் தொல்காப்பியத்திற்கு முந்திய இலக்கண இலக்கியக் கலைநூல்களும் மறைந்து போனமையாலும், அதன் பின்னரும் இயற்கையாகவும் செயற்கையாகவும் தமிழுக்கு நேர்ந்துள்ள பல இன்னல்களின் விளைவாகவும். பல தமிழ்ச் சொற்களும் சொல் வடிவுகளும் இன்று தமிழல்லாத திரவிட மொழிகளிலேயே வழங்கிவரக் காண்கின்றோம்.
எ-டு:
சொல் சொல்வடிவு
(தெலுங்கு) எச்சரிக்கை நன் (நான் என்பதன் வேற்றுமையடி)
இற்றைத் தமிழிலில்லாது பிற திரவிட மொழிகளிற் சிறப்பாக வழங்கும் தென்சொற்கள், திசைச்சொல்லின் பாற்படும்; சொல்வடிவுகள் குடியேற்றப் பாதுகாப்பு (Colonial Preservation) என்னும் நெறிமுறைக் கெடுத்துக்காட்டாம்.
திரவிட மொழிகளுள், தமிழை வளம்படுத்தற்கும் தமிழ் இலக்கணச் சொல்லுறுப்புகளின் பண்டை நிலையை அறிதற்கும் மலையாளம் போல் உதவுவது பிறிதொன்றுமில்லை.
எ-டு:
(1) கின்று என்னும் நிகழ்கால இடைநிலை
கின்று என்னும் நிகழ்கால இடைநிலை, குந்நு - உந்நு என்று மலையாளத்திலும், (குந்நு) - குந் - உந் - ந் என்று தமிழிலும் திரியும். செய்கின்று - செய்குந்நு - செய்யுந்நு (மலை).
எ-டு:
செய்கின்றான் - செய்குந்நான் - செய்குநன் - (தமிழ்)
செய்குந்நான் - செய்யுந்நான் - செய்யுநன் - செய்நன் - (தமிழ்)
மகிழ்நன், வாழ்நன் (வாணன்) முதலியன இங்ஙனம் திரிந்தவையே.
2. செய்யாதே என்னும் எதிர்மறை ஏவல்வினை
செய்யாதே என்னும் எதிர்மறை ஏவல், மலையாளத்தில் செய்யருது என்னும் வடிவு கொண்டு நிற்கும் செய்யருது என்பது செய்யரிது என்பதன் திரிபு. செய்யரிது என்பது முறையே. செய்ய முடியாது, செய்யக்கூடாது என்னும் பொருளது. அருது (அரிது) என்பது மலையாளத்தில் தனிவினையாகவும் வரும்.
எ-டு:
ஈ ஆள்க்கு வேறே பணி அருது = இவ் ஆட்கு வேறுவேலை கூடாது.
ஆர்க்கானும் கொடுக்கும் போழ் அருதென்னு விலக்கருது (பழமொழி)
(3) யகரமெய்யீற்று இறந்தகால வினையெச்சம்
தமிழ் வினைமுற்றுகள் முதற்காலத்தில் எச்ச வடிவில் வழங்கிப் பின்பு முற்றீறு புணர்ந்தனவாதலின், அவற்றைப் பகுக்கும்போதும் எச்சமும் ஈறுமாகவே பகுத்தல் வேண்டும்.
எ-டு: வந்து + ஆன் = வந்தான்
உறங்கி + ஆன் = உறங்கியான் - உறங்கினான்.
ய-ந போலி ஒ.நோ. : யான்-நான். யமன்-நமன்.
ஆய் போய் முதலிய யகர மெய்யீற்று இறந்த கால வினை யெச்சங்கள் மலையாளத்தில் ஆயி. போயி என இகரவீற்று வடிவில் நிற்கும்.
ஆயி + ஆன் = ஆயியான் - ஆயினான்.
ஆயி - ஆய் + ஆன் = ஆயான் - ஆனான்.
இனி வடநாட்டு மொழியாகிய இந்தியிலும் பிற ஆரிய மொழி களிலும் எழுவாயையும் பெயர்ப் பயனிலையையும் இணைக்கும் இரு என்னும் புணர்ப்புச்சொற்கும் (copula), மலையாளம் அடிகோலியது என்னலாம்.
எ-டு:
மலையாளம் இந்தி ஆங்கிலம்
இது எந்தாகுன்னு? யஃ கியா ஹை? What is this?
இது ஒரு மரமாகுன்னு யஃ பேட் ஹை This is a tree.
வடநாட்டு ஆரியமொழிகளின் திரவிட அடிப்படை
ஆரியமொழிகளாகக் கூறப்படும் வடநாட்டு மொழிகளில், திரவிடச் சொற்கள் மட்டுமன்றித் திரவிட மொழியமைதியும் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. இதை இந்தி வாயிலாற் காட்டுவல்.
1. ஆயா, போலா என ஆவீறுகொண்டு இறந்தகாலம் காட்டும் இந்தி வினைமுற்றுகள் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தை யொத்தன.
2. ஆயியே, போலியே என இயே ஈறுகொள்ளும் இந்தி வேண்டுகோள் வினைகள், செய்யிய என்னும் வாய்பாட்டு வியங்கோள் வினையொத்தன.
3. படே படே, சல்த்தே சல்த்தே என அடுக்கிவரும் இந்திச் சொல்லிரட்டைகள், பெரிய பெரிய நடந்து நடந்து என வரும் அடுக்குத் தொடரை முற்றும் ஒத்தன.
4. வஃ கியா கர்த்தா ஹை? (அவன் என்ன செய்கிறான்?) ராமா பாத் காத்தா ஹை (இராமன் சோறு உண்கின்றான்) என அமையும் இந்திச் சொற்றொடர்கள் முற்றும் தமிழொழுங்கைப் பின்பற்றின.
ஆங்கிலத் தமிழமைதி யொப்புமை
1. தனிக்குறில் முன்னொற் றுயிர்வரின் இரட்டல்.
எ-டு: thin + er = thinner, sit+ing = sitting.
2. நிகழ்கால வினையெச்சம் எழுவாயாதல்
எ-டு: to err is human.
எனக்குப் பாடத் தெரியும்
3. வினைக்காலங்களின் நால்வேறுபாடு.
எ-டு: நிகழ்காலம்
வருகிறான் - தனிப்பு (Indefinite)
வந்து கொண்டிருக்கிறான் - தொடர்ச்சி (Continuous)
வந்திருக்கிறான் - நிறைவு (Perfect)
வந்துகொண்டிருந்திருக்கிறான் - நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous).
தமிழின் பொது வியல்பு
தமிழ் உலக முதற்றாய் மொழியாதலால் சீன மொழியின் அசைநிலைத் தன்மையையும், ஆரிய மொழிகளின் விகுதி நிலைத் தன்மையையும், சித்திய மொழிகளின் கொளுவநிலைத் தன்மையையும், சேமிய மொழிகளின் உயிர்த்திரிவுத் தன்மை யையும். ஆப்பிரிக்க மொழிகளின் பாலிசைவுத் தன்மையையும், அமெரிக்க மொழிகளின் தொகுதிநிலைத் தன்மையையும் ஒருங்கே கொண்டுள்ளது. - மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர் 1956.
ஒப்புமைப் பெயர்
காடைக் கண்ணி
குதிரை வாலி - ஈறுபெற்றன.
ஆனைக் கால்
மாட்டுப் பல் - ஈறுபெறாதன. (சொல். 16)
ஒப்புரவறிதல்
இல்லறத்தாருள் பெருஞ் செல்வரானவர் செல்வருள் உயர்ந்தோ
ரான வள்ளல்களைப் பின்பற்றி ஒழுகுதலின்கண் வளவன் ஆயினும் அளவறிந் தளித்துண் என்ற நெறிமுறைப்படி தத்தம்
அளவறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுதல். உயர்ந்தோரான
வள்ளல்களை ஒத்தொழுகுதலும் அவரவர் செல்வத்தின் அளவறி தலும் பற்றி ஒப்புரவறிதல் எனப்பட்டது. (தி.ம.129.)
ஒப்பொலி
இருதிணைப் பொருள்களும் இயற்கையாகவும் செயற்கை யாகவும் பிறப்பிக்கும் ஒலிகளைப் போன்ற ஒலிக்குறிப்புகளும், அவற்றை அடியாகக் கொண்ட சொற்களும், ஒப்பொலிச் சொற்களாகும்;
எ-டு:
(1) உயர்திணை யொலிகள்
ஒலிக்குறிப்பு சொல்
சப்(பு) சப்பு-சப்பிடு-சாப்பிடு-சாப்பீடு
சாப்பாடு
சவ(க்கு) சவை - சுவை, சுவண்டை
கறு கறி (கறித்தல் = மெல்லக் கடித்தல்)
கடு கடி
இக்(கு) விக்கு - விக்கல்
ஏவ் ஏப்பம்
இஇ, இசி இசி - சிரி
கெக்கக் கெக்க கெக்கரி
ஏ ஏங்கு (ஏங்குதல் = பெருமூச்சு விடுதல்)
து துப்பு
கார் காறு
ஆ ஆவலி-அவலி-அவலம்(=அழுகை, துன்பம்)
குறட்டு குறட்டை
துறட்டு துறட்டை
சீ சீழ்க்கை, சீத்தை
வீள் வீளை (மு.தா.)
ஒருகுடம் தண்ணீர் ஊற்றி விளையாட்டு
ஆட்டின் பெயர் : ஒருகுடம் தண்ணீர் ஊற்றி என்று தொடங்கும் பாட்டைப் பாடி ஆடும் விளையாட்டு, அம் முதற் குறிப்பையே பெயராகக் கொண்டது.
ஆடுவார் தொகை : இதை ஆட நால்வர்க்குக் குறையாது வேண்டும்.
ஆடிடம் : இது தெருவில் ஆடப்பெறும்.
ஆடுமுறை : இருவர் கைகோத்து உயர்த்தி வைத்துக் கொண்டிருக்க அவருக்கிடையே வேறிருவர் அல்லது பலர் ஒருத்தி பின் ஒருத்தி யாக ஒருத்தி யரையாடையை இன்னொருத்தி பற்றிக்கொண்டு நுழைந்து சென்று. ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரே பூப் பூத்த தாம், இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி இரண்டு பூப் பூத்ததாம் என்று பத்துக்குடம் தண்ணீர் வரையும் பாடிக் கொண்டு கை கோத்து நிற்கும் இருவரையும் மாறி மாறிச் சுற்றிக் கொண்டே யிருப்பர்.
பத்துக்குடம் தண்ணீர் ஊற்றி என்று அடி முடிந்தவுடன், அல்லது அதற்குச் சற்று முன்பே, கைகோத்து நிற்கும் இருவரும் கையைத் தாழ்த்தி இரண்டாவது அல்லது கடைசிப் பிள்ளையைப் பிடித்துக் கொள்வர் அல்லது சிறைசெய்வர். அப்போது வரிசை முதல்விக்கும் கைகோத்து நிற்பவருக்கும் பின்வருமாறு உறழுரை யாட்டு நிகழும்.
வ : விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
t : (fiz¡fhȉ ifit¤J) ï«kh« ï«kh« bgh‹ jU»nw‹ (‘bgh‹ jU»nw‹’ v‹gJ ‘bgh‹D jhnw‹’ v‹W bfh¢ir toɉ brhšy¥gL«.), விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (முழங்காலில் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (இடுப்பிற் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (தோளிற் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (தலையிற் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (தலைக்குமேற் கைதூக்கி) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (தலைக்குமேற் கைதூக்கிக் குதித்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
இங்ஙனம் உறழ்ந்துரையாடியபின், ஆட்டுக் கறியும் சோறும் தருகிறேன், விடடா துலுக்கா! என்று வரிசை முதல்வி கூறியவுடன், சிறைசெய்யப்பட்ட பிள்ளை விடுதலை செய்யப்படும். அதோடு விளையாட்டு முடியும்.
விடடா துலுக்கா ! என்னும் ஏவலும், விடமாட்டேன் மலுக்கா என்னும் மறுப்பும், ஒருமை குறித்தனவேனும், கைகோத்து நிற்பவர் இருவரும் ஒருங்கே ஏவப்படுவதும் ஒருங்கே மறுத்துரைப்பதுமே மரபாம்.
ஆட்டுத் தோற்றம் : அரண்மனைப் பூந்தோட்டத்திற்குக் காவலா யிருந்த ஒரு மகமதியன், தன் காவல் தோட்டத்தில் பூப்பறித்த தொரு பிள்ளையைப் பிடித்துக்கொண்டு, அவள் பெற்றோர் எவ்வளவு பணந் தந்தும் ஏற்காமல் கடைசியில் புலவு அல்லது கறிச்சோறு தருவதாகச் சொன்னவுடன், அப்பிள்ளையை விட்டு விட்ட செய்தியை, நடித்துக் காட்டுவதுபோல் உள்ளது இவ் விளையாட்டு.
ஒரு பொருட் பல சொற்கள்
எம்மொழியிலும் ஒரு பொருட்குப் பலசொற்கள் இருப்பின், அவை யாவும் பருப்பொருளில் ஒத்திருப்பினும் நுண்பொருளில் ஒத்திரா. ஆகவே, ஒரு பொருட் பல சொற்களெல்லாம் நுண் பொருள் வேறுபாட்டையுடையன. (சொல் 38.)
ஒரு பொருள் பல பெயர் பெறல்
எ-டு: வாளவரை, பாடவரை, சாட்டையவரை, தம்பட்டவரை. (சொல் 73.)
ஒல் என்னும் வேர்ச்சொல்
ஒல் (பொருந்தற் கருத்து வேர்)
உல் - ஒல்.
ஒல்லுதல் = பொருந்துதல், ஒத்தல், உடன்படுதல், இயலுதல்.
ம. ஒல்லு.
ஒல்லுநர் = நண்பர். ஒல்லார் = பகைவர்.
ஒல் - ஓர் = ஒரு. ஒர் - ஒராங்கு.
ஒர் - ஒரான். ஒரானொரு = ஏதோ ஒரு, a certain.
ஒர் - ஒரி. ஒரித்தல் = ஒற்றுமையாயிருத்தல்.
ஒர் - ஒரு. க. ஒர், ம. ஒரு.
ஒரு - ஒருக்கு. ஒருக்குதல் = ஒன்றுசேர்த்தல்.
ஒருக்கு - ஒருக்க = ஒருமுறை, ஒன்றுபோல், என்றும்.
ஒருக்கு - ஒருக்கம் = ஒரு தன்மை.
ஒரு - ஒருங்கு.
ஒரு + அந்தம் = ஒருவந்தம் (ஒருதலை).
ஒரு + கணி = ஒருக்கணி - ஒருக்களி.
ஒரு + சரி = ஒருச்சரி - ஒஞ்சரி.
ஒரு - ஒருத்தன். குரு. ஒர்த்.
ஒரு - ஒருத்தி. தெ. ஒர்த்தி.
ஒரு - ஒருத்து = மனவொருமைப்பாடு.
ஒருதலை = உறுதி, தேற்றம்.
ஒரு + படு = ஒருப்படு.
ஒரு - ஒருமை. ம. ஒரும, தெ. ஒரிம.
ஒருமை - ஒருமி. ம. ஒருமி.
ஒரு - ஒரே. ஒரு - ஒரோ. ஒரோவொரு = ஏதோவொரு.
ஒர் - ஓர். ஓர்தல் = உற்றுநோக்குதல், ஆராய்தல்.
ஓர் - ஓரட்டும் = எல்லாம்.
ஓர் - ஓரான். ஓரானொரு = ஏதோவொரு.
ஓர் - ஓராம் = முதலாம்.
ஓர் - ஓர்மை = ஒற்றுமை, துணிவு .
ஓர்மை - ஓர்மி. ஓர்மித்தல் = மனந்திடப்படுதல்.
ஓர்மி - ஓர்மம் = மனத்திடம், திடாரிக்கம்.
ஓர் - ஓராங்கு = ஒருசேர.
ஓர் - ஓரம் = பொருந்திய பக்கம், ஒருபக்கம், விளிம்புப் பக்கம்.
ம. ஓரம், தெ. ஓர, க. ஓர.
ஓர் - ஓரை = விண்மீன் கூட்டம்.
ஓர்படியாள் - ஓர்ப்படியாள் (இராசி)
ஒல் - ஒன், ஒன்னுதல் = பொருந்துதல்.
ஒன்னார் = பகைவர்.
ஒன் - ஒன்று. ஒன்றுதல் = பொருந்துதல்.
ஒன்றார் = பகைவர்.
க. ஒந்து, தெ. ஒனரு.
ஒன்று = 1 (முதலெண்) ம. ஒன்னு, தெ. ஒண்டு க. ஒந்து, து. ஒஞ்சி
L. unus, E. one.
ஒன்றுக்கு (இடக்கரடக்கல்) = சிறுநீர் கழிக்க.
ஒன்று - ஒன்றி. ஒன்றித்தல் = பொருந்துதல், ஒற்றுமைப்படுதல்.
ஒன்றி = தனிமை. க. ஒண்ட்டி, தெ. ஒண்டு.
ஒன்று + மை = ஒற்றுமை. ஒன்று - ஒற்றை.
ஒன்று - ஒற்று. ஒற்றுதல் = பொருந்தச் சேர்த்தல் அல்லது தாக்குதல், அல்லது பார்த்தல்.
தெ. ஒத்து, க. ஒத்து.
ஒற்று - ஒற்றன்.
ஒற்று - ஒற்றடம். ஒற்று - ஒத்து - ஒத்தடம் - ஒத்தணம்.
தெ. ஒத்தடமு, க. ஒத்தட.
ஒற்று - ஒத்து = ஊமைக் குழல்.
ஒற்று - ஒற்றி - ஒற்றித்தல் = ஒற்றையாயிருத்தல், ஒற்றுமைப்படுதல்.
ஒற்றிக்கிரட்டி = ஒன்றிற்கிரண்டு.
ஒற்றி = பொருந்த வைக்கும் அடைவு.
ஒல் - ஒள் - அள். அள்ளுதல் = செறிதல். ம. அள்ளு.
அள் - அள்ளல் = நெருக்கம்.
அள் - அள்ளை = பக்கம்.
அள் - அள - அளவு. அளவுதல் = கலத்தல். அளவு - அளாவு.
அளத்தல் = 1. கலத்தல். 2. அளவளாவுதல் (கல்லா. 18 : 36)
3. அள விடுதல்.
ம. அள, க. அள.
அள - அளவி.
அள - அளவு. ம. அளவு, க. அளவு, து. அல.
அள - அளவை.
அளவு - அளபு - அளபெடை.
அள் - (அய்) - அயல் = அருகு, பக்கம், புறம்பு. ம. அயல்.
அயல் - அசல் = புறம்பு.
அள் - அளை. அளைதல் = கலத்தல், கூடியிருத்தல்,
ஆர்வமோ டளைஇ (தொல். பொ. 146)
அள் - அளி. அளிதல் = கலத்தல்.
சிறியார்களோ டளிந்தபோது (கம்பரா. ஊர்தே. 154)
அள் - அண் - அண்ணு. அண்ணுதல் = கிட்டுதல்.
அண் - அண்மை, அண்ணிமை, அணிமை, அணுமை.
அண் - அண்மு. அண்முதல் = கிட்டுதல். அண்மு - அண்பு.
அண் - அணன் = பொருந்தியவன்.
சீரணனை (திவ். இயற். நான். 67)
அண் - அணவு. அணவுதல் = அணுகுதல், தழுவுதல் தட்டுதல்.
அணவு - அணாவு. அணாவுதல் = கிட்டுதல்.
அருக்கன் மண்டலத் தணாவும் (தேவா. 693:1)
அண் - அணுகு - அணுக்கம் = நெருக்கம்.
அண் - அணை. அணைதல் = சேர்தல். அணைத்தல் = தழுவுதல்.
அணை = அணைக்கட்டு. ம. அண. க. அணெ.
அண் - அண்டு. அண்டுதல் = கிட்டுதல்.
தெ. அண்ட்டு, து. அண்ட்டு, க. அட்டு.
அண்டு - அண்டை = பக்கம். தெ. அண்ட, க. அண்டெ.
அண் - அடு. அடுத்தல் = நெருங்குதல். ம. அடு.
அடு - அடுக்கு - அடுக்கம் = வரிசை.
அடுக்கு - அடுக்கல் = பக்கமலை.
அடு - அடர் - அடர்த்தி.
அடு - அடர் - அடவி = மரம் செறிந்த காடு.
அடவி - அட்டவி (வ.).
mL - mL¤j (bg.v.), அடுத்து (வி.எ.).
அடு - அடை - அடைவு - அடவு - அடகு. அடை - அடைமானம்.
ஒள் - ஒண்ணு. ஒண்ணுதல் = பொருந்துதல்.
ஒண்ணார் = பொருந்தார், பகைவர்.
ஒண்ணு = ஒன்று.
அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு (பழமொழி)
ஒண் - ஒண்டு. ஒண்டுதல் = சார்தல்.
ஒண்டுக்குடி = ஒட்டுக்குடி.
ஒண்டு - ஒண்டி = தனிமை.
ஒண்டியாள், ஒண்டிக்காரன், ஒண்டிக்கடை, ஒண்டிசண்டி முதலிய வழக்குகளை நோக்குக.
ஒண்டு - ஒட்டு, ஒட்டுதல் = பொருந்துதல்.
ம. ஒட்டு, க. ஒட்டு. து. ஒட்டு.
ஒட்டார் = பகைவர்.
ஒட்ட = நெருங்க, ஒக்க, அடியோடு.
ஒட்டுக்குடி = ஒண்டுக்குடி.
ஒட்டுக்கும் = முழுதும்.
ஒட்டல் = 1. சேர்தல். 2. உடன்பாடு (திவா.) 3. உள்ளொடுங்குதல்.
ஒட்டற் கவுள் (கோயிற்பு. நடரா. 30)
ஒட்டப்போடுதல் = வயிறு ஒட்டுமாறு பட்டினியிருத்தல் அல்லது இருக்கச் செய்தல்.
ஒட்டு - ஒட்டை = ஒத்த அகவை அல்லது உயரம்.
ஒட்டை - ஓட்டை = ஒத்த அகவை அல்லது உயரம்.
இவன் அவனொட்டை, இவன் அவனோட்டை என்னும் வழக்குகளை நோக்குக.
ஒட்டு - ஒட்டம் = கவறாடலில் எதிரியுடன் ஒட்டிக் கூறும் பந்தயம்.
ஒட்டு - ஒட்டாரம் = முற்கூறியதையொட்டியே இறுதி வரை மாறாது நிற்றல் (பிடிவாதம்).
ஒட்டு = ஒன்றையொட்டியிடும் சூள் (ஆணை).
ஒட்டு வைத்தேனும் மேல்வாரீர் (அருட்பா, 6, வருக்கமாலை, 89)
ஒட்டு என்பது பிறர் ஒன்றைச் செய்யவிடுவதைக் குறிக்கும் துணைவினை. இது பெரும்பாலும் எதிர்மறையிலேயே வரும்.
எ-டு: தூங்கவொட்டார் = தூங்கவிடார்.
இதில் ஒட்டுதல் என்பது உளம்பொருந்துதலை அல்லது இசைதலை உணர்த்தும்.
ஒட்டு - அட்டு. அட்டுதல் = ஒட்டுதல்.
ஒ - அ. ஒப்புநோக்க : கொம்பு - கம்பு, மொண்டை - மண்டை, தொண்டையார் பேட்டை - தண்டையார் பேட்டை.
அட்டு என்னும் திரிபும் அதன் மூலமான ஒட்டு என்பது போன்றே (அதே பொருளில்) துணைவினையாம். ஆயின், இது முன்னிலை யிடத்திற்குரிய உடன்பாட்டு ஏவல் வினையாகவே வரும். ஒட்டு என்பதோ மூவிடத்தும் பெரும்பான்மை எதிர் மறையிலும் சிறுபான்மை உடன்பாட்டிலும் வரும்.
எ-டு: அவன் வரட்டு = அவனை வரவிடு (ஒருமை)
அவன் வரட்டும் = அவனை வரவிடும் (பன்மை)
அவன் வர வொட்டேன், அவன் வர வொட்டோம் - தன்மை
அவன் வர வொட்டாய், அவன் வர வொட்டீர் - முன்னிலை
அவன் வர வொட்டான், அவன் வர வொட்டார் - படர்க்கை
அவன் வர வொட்டுவேன், அவன் வரவொட்டுவோம் என்பன உடன்பாடு.
ஒல் - ஒ. ஒ.நோ: நல் - ந. பொல் - பொ. ந = நல்ல.
எ-டு: நக்கீரன். பொத்தல் = துளைத்தல்.
ஒத்தல் = போலுதல், பொருந்துதல். ம.ஒ.
ஒ - ஒக்க = ஒருசேர, போல, ம. ஒக்க.
ஒ - ஒக்கல் = இனம், இனத்தார்.
ஒக்கல் - ஒக்கலி. ஒக்கலித்தல் = இனத்தாருடன் உறவாடுதல்.
ஒக்கல் = பொருந்திய பக்கம், மருங்குல், இடுப்பு.
ஒக்கல் - ஒக்கலை = இடுப்பு.
ஒக்க (தெ.) = ஒரு.
ஒக்க + இடு = ஒக்கிடு.
ஒ - ஒத்து (வி.எ.) - ஒத்துக்கொள், ஒத்துக்கொடு.
ஒ - ஒத்து- ஒத்தாசை.
ஒ - ஒத்து - ஒத்திகை = ஒத்துப்பார்க்கும் நாடகப் பயிற்சி, ஒத்திகை - ஒத்திக்கை.
ஒ - ஒப்பு - ஒப்பனை = உவமை, சமம், அழகு.
ஒப்பு - ஒப்பம். ம. ஒப்பம், க. ஒப்ப.
ஒப்பு - ஒப்பந்தம் தெ. ஒப்பந்தமு, க. ஒப்பந்த, து. ஒப்பந்த.
ஒப்பு - ஒப்பாரி = ஒப்பு. க. ஒப்பாரி.
ஒப்பு - ஒப்பிதம் = பொருத்தம். தெ. ஒப்பிதமு.
ஒப்பு - ஒப்படி = அறுவடை. தெ. ஒப்பிடி (Obbidi).
ஒப்பு - ஒப்பன் = மெருகிடப்பட்டது.
ஒப்பன் திருவடிக்காறை (S.I.I.ii, 7)
ஒப்பு - ஒப்புரவு = உயர்ந்தோரோடொத்தொழுகல்.
ஒப்பு - ஒப்புவி - ஒப்பி.
ஒப்பு - ஒப்புக்கொள், ஒப்புக்கொடு.
ஒ - ஒம்பு. ஒம்புதல் = இசைதல், உளம் பொருந்துதல்.
ஒ - ஒவ்வு. ஒவ்வுதல் = ஒத்தல், பொருந்துதல்.
ஒ - ஓ - ஓவு = சித்திரம்.
ஓவுறழ் நெடுஞ்சுவர் (பகிற். 68 : 17)
ஓவு -ஓவி = சித்திரம்.
ஓவி நல்லார் (திவ். பெரியதி. 2, 8, 7)
ஓவு - ஓவம் = சித்திரம்.
ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர் (பதிற். 88:28)
ஓவு - ஓவியம் = சித்திரம்.
ஒட்டு - ஒடு - ஓடு. ஓடுதல் = ஒத்தல், பொருந்துதல்.
ஓடு - ஓடாள்வி - ஓடாவி = சித்திரக்காரன்.
ஓடு - ஓட்டம் = ஒப்பு.
ஓட்டம் - ஆட்டம் = ஒப்பு.
எ-டு: குரங்காட்டம் ஓடுகிறான். (வே.சொ.க.ப. 106 - 112)
ஒலிக் குறிப்பும் சொல்லும்
1. ஒலிக்குறிப்புகள், இத்துணையவென்றும் இத்தகைய வென் றும் அறியப்படாவாறு, எண்ணிறந்தன; பல்திறத்தன.
2. ஒலிக்குறிப்பெல்லாம் இடைச்சொல்லாம். சொல்லென்று விதந்து சுட்டப்பெறுவன பெயரும் வினையுமாகிய இரண்டே. சொற்றன்மை நிரம்பிய வொலி சொல்லும், நிரம்பாவொலி ஒலிக்குறிப்பும், ஆகும். மண்ணும் மரமும் போலக் கருவி நிலைப்பட்டவை ஒலிக்குறிப்புகள்; குடமும் பெட்டியும் போலச் செய்பொருள் நிலைப்பட்டவை சொற்கள்.
3. ஒரேயொலி வெவ்வேறு செவிக்கு வெவ்வேறு வகையாய்க் கேட்பதால், ஓர் ஒலிக்குறிப்பு வெவ்வேறு வடிவிலும் அமைய லாம்.
எ-டு:
குறட்டு, துறட்டு (குறட்டையொலி)
(சலக்கு) - சளக்கு, சளப்பு (துப்பொலி)
வீர்வீர், வீரா வீரா (குழவி கதறொலி)
(4) சிலவொலிகள் ஒரே செவிக்கு வெவ்வேறு வகையாய்க் கேட்கலாம்.
எ-டு: குய், சுய் (சொய்) = தாளிப்பொலி.
ஓ. உவா - கக்கலொலி.
(ஓ - ஓக்களி, ஓங்களி; உவா - உவட்டு - உமட்டு - குமட்டு) (வழக்கில், ஒக்களித்தல் என்பது கக்கலுக்கு முந்திய வாயசை வையும், உமட்டல் (குமட்டல்) என்பது வாயசைவிற்கு முந்திய வயிற்றுணர்ச்சியையும், குறிக்கும்.)
5. சில வொலிகள் வாயடைத்த நிலையில் மூக்கு வழிப் பிறக்கும் மூச்சொலிகளாதலின், அவை சரியாய் ஒத்தொலித்தற்கரியன. அவற்றினின்று பிறக்கும் ஒலிக் குறிப்புகளும் சொற்களும், அவற்றின் மூல வொலிகளை ஒருமருங்கே அல்லது இயன்ற அளவே ஒத்திருக்கும்.
ஒலிக்குறிப்பு சொல்
எ-டு: முக்(கு) முக்கு-முற்கு
மூங் முனங்கு
முக்குதல் கனமான பொருள்களைத் தூக்கும்போதும், முனங்குதல் கடுநோய்ப்பட்டிருக்கும்போதும், நிகழ்வன.
6. சில வொலிக் குறிப்பினின்று பிறந்த சொற்கள், மூலவொலி யில்லாத எழுத்தையும் கொண்டிருக்கும்.
ஒலிக்குறிப்பு சொல்
எ-டு: லுலுலுலு / லலலல குலவை / குரவை
கடைசியர் மங்கல அமங்கல வினைகளில் வாயால் நிகழ்த்தும் ஒலி குலவை.
7. ஒலிக் குறிப்புகளிற் சில தாமே சொல்லாவன; சில தம்மினின்று சொற்களைப் பிறப்பிப்பன; சில இரண்டுமன்றி ஒலிக்குறிப் பாகவே நின்றுவிடுவன.
ஒலிக்குறிப்பு சொல்
எ-டு: கூ கூ(கூவு)
காகா காகம்
சலக்கு -
இங்குக் கூறப்பட்ட மூவியல்புகளும் மக்கள் செயலால் நேர்வனவே யன்றி, ஒலிக்குறிப்புகட்கு இயல்பாகவுரியன வல்ல. மக்கள் செயல் ஒலிக்குறிப்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்ட தென்றே அறிக.
சில ஒலிக் குறிப்புகள் துணைவினையேற்று வினையாகும்.
எ-டு:: ஓ - ஓக்களி. வீர் (வீறு) - வீரிடு (வீறிடு)
8. இருதிணை யுயிரிகளும் இயல்பாகக் கத்துவதைக் குறிக்கும் வினைச்சொற்கள், ஒலித்தல், கூப்பிடுதல் என்னும் இரு பொருட்கும் ஏற்கும்.
எ-டு: கத்துதல் = ஒலித்தல், கூப்பிடுதல்.
கரைதல் = ஒலித்தல், கூப்பிடுதல்.
கூவுதல் = ஒலித்தல், கூப்பிடுதல்.
விளித்தல் = ஒலித்தல், கூப்பிடுதல்.
அழைத்தல் = கத்துதல், கூப்பிடுதல்.
இவற்றுட் கரை, அழை என்னுஞ் சொற்கள் அழுதலையுங் குறிக்கும்.
9. தமிழிலக்கணத்திற் கொவ்வா ஒலிக் குறிப்புகள் இலக் கணத்திற் கேற்ப மாற்றப்பெறும்.
எ-டு: லொட்டு - நொட்டு, லலல - தலல.
10. ஒலியெழும் வினைகளைக் குறிக்கும் சொற்களில், மெல் லோசை யுணர்த்த மெல்லொலி யெழுத்துகளும் வல்லோசை யுணர்த்த வல்லொலி யெழுத்துகளும் வரும்.
எ-டு: கறி-கடி.
கறித்தல், மெல்லக் கடித்தல்.
11. ஒலிக் குறிப்புகளைப் பின்வருமாறு ஐவகையாய் வகுக்கலாம்.
வகை எடுத்துக்காட்டு
1. ஒற்றைக் கிளவி கிண், மடார், கடக்கு
2. இரட்டைக் கிளவி சலசல, நெருநெரு
3. அடுக்குக் கிளவி கிண்கிண், சல்சல், துடும்துடும்
4. எதுகைக் கிளவி தொப்புத்திப்பு, கிய்யா மிய்யா
5. மோனைக் கிளவி கிண்கிணீர், மடமடார்.
ஒருவர் அல்லது பலர் பொருளில்லாது வாயில் வந்தவாறு பேசுவதையும் கத்துவதையுங் குறித்தற்கு, ஆட்பெயரும் பொருட் பெயரும் அடுக்குக் கிளவியாக வருவதுண்டு.
எ-டு: ஆலே பூலே, காமா சோமா, கன்னா பின்னா.
12. இரட்டைக் கிளவிகள் அசைநிலைக் காலத்தில் தனித்தும் வழங்கின. தொடர்ச்சி குறிக்கவே அவை அக்காலத்தில் அடுக்குக் கிளவிகள் போல் இரட்டின. அவை தனித்து வழங்கிய அசை நிலைக்காலம் கடந்து கழிபல வூழிகளாய்விட்டமையின், அவை தனித்து வருந் தன்மை இன்றுணரப்படவில்லை.
13. சில அடுக்குச் சொற்களும் தனிச்சொற்களும், என அல்லது என்று என்னும் சொற் சேர்க்கையால், ஒலிக்குறிப்புப் போலத் தோன்றும்.
எ-டு: மினுமினு வென்று மின்னுகிறது.
குறுகுறு நடந்து
சுள்ளென்று வெயிலடிக்கிறது.
வெள்ளென விளர்த்தது.
மினு என்பது மின்னு என்பதன் தொகுத்தல். குறு என்பது குறுகிய எட்டுவைத்தலைக் குறிக்கும் சொல். சுள் என்பது சுடுதலைக் குறிக்கும் பழைய வினைச்சொல். மினுமினு வென்று மின்னுகிறது என்பது அடியடியென்று அடித்தான் என்பது போன்ற வழக்காகும்.
14. சில ஒலிக் குறிப்புகள் சுட்டொலியொடுங் கலந்துள்ளன.
15. சில வொலிக் குறிப்புச் சொற்களினின்று ஒன்றும் பலவுமான வழிமுறைக் கருத்துச் சொற்கள் பிறக்கும்.
எ-டு:: ஈ - ஈயல் - ஈசல். ஈ போன்றது ஈசல்.
ஒருவன் இருண்ட வேளையில் ஒரு தோற்றத்தைக் கண்டு அரண்டு குழறும் ஒலியினின்று, பே (பேபே) என்னும் ஒலிக்குறிப்புத் தோன்றியுள்ளது. பேபே என்று உளறுகிறான் என்பது வழக்கு. ஓர் அதிகாரியிடம் அல்லது கொடியோனிடம் ஒன்றை உரைக்கும்போது ஒருவன் அஞ்சிக் குழறுதலையும், பேபே என்று உளறுதல் என்பர். ஆகவே, பே என்பது ஓர் அச்சக் குறிப்பொலியாகும். இதனின்று பின்வருஞ்சொற்கள் தோன்றியுள்ளன.
பே-பேம் = அச்சம்.
பேநாம் உருமென வரூஉங் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள (உரி. 67)
என்பது தொல்காப்பியம்.
பேதல் = அஞ்சுதல். பே - பேய் = அஞ்சப்படும் ஆவி அல்லது தோற்றம்,
பேய்தல் = அஞ்சுதல். பேயப்பேய விழிக்கிறான் என்பது உலக வழக்கு.
பேய் - பேயன் = பேய் பிடித்தவன், பேயாடி, பேய் பிடித்தவனைப் போன்ற பித்தன், பித்தனைப் போன்ற மூடன்.
பே - பேக்கு = பேதை, மூடன். பேக்கு - பேக்கன். பேக்கு - பேக்கல். பேக்கல் + ஆண்டி = பேக்கலாண்டி.
பே - பேது = பேய் பிடித்தாற்போன்ற மருள், மயக்கம், அறியாமை. பேது + உறு = பேதுறு.
பேதுறுதல் = மயங்குதல், பேது -பேதை = மூடன், அறிவிலி, வெள்ளை (கள்ளமிலி) பேதை - ஏதை.
பேது - பேத்து. பேத்துதல் = அஞ்சி உளறுதல், உளறுதல்.
பேத்து - பேந்து. பேந்துதல் - அஞ்சுதல். பேந்தப் பேந்த விழிக்கிறான் என்பது உலக வழக்கு.
பேந்து = பேய். பேந்து - பேந்தான் =பேய்ப் பந்து என்னும் விளையாட்டு.
பேத்து - பீத்து. ஒ.நோ: தேஞ்சுவை - தீஞ்சுவை. பீத்துதல் = உளறுதல், தற்புகழ்ச்சியாய் உளறுதல்.
பீத்து - பித்து. ஒ.நோ: தீம் - தித்தி.
பித்து = மயக்கம், மதிமயக்கம், மூளைக்கோளாறு, தலைக்கிறுக்கு, தலைச்சுற்றை யுண்டாக்கும் நீர் (Bile). அந்நீரைக்கொண்ட வுறுப்பு (Gall**ladder), மயக்க நிலைப்பட்ட காதல் அல்லது அவா.
பித்து - பித்தன் = கிறுக்கன், கழிபெருங் காதலன் அல்லது பற்றினன். பித்து - பிச்சு - பிச்சன்.
பித்து - பித்தம் = பித்து. நீர், பித்தநாடி பித்தநீர் மிக்கநோய். அந்நோயால் உண்டாகும் தலைச்சுற்று. மூளைக்கோளாறு. மயக்கம், மயக்கக் காதல்.
பித்தம் - பித்தல். பித்தலாட்டம் = மாறாட்டம், ஏமாற்று.
பித்து - பிதற்று. பிதற்றுதல் = உளறுதல். பிதற்று - பினற்று - பினத்து - பினாத்து. பினாத்துதல் = நோய் நிலையில் உளறுதல். (மு.தா.)
ஒலியழுத்தம்
ஏதேனும் ஒரு காரணம்பற்றி, சொற்களின் அசைகள் அல்லது எழுத்தொலிகள் எடுத்தல், படுத்தல், நலிதல் என்னும் மூவேறு வகையாய் ஒலிப்பது, எல்லா மொழிகட்கும் பொதுவாம். எடுத்தல் என்பது. ஒலிப்பு அல்லது பலுக்க (உச்சரிப்பு) முயற்சி வன்மையாய் அழுந்துதல்; படுத்தல் என்பது, அது மென்மையாய் அழுந்துதல்; நலிதல் என்பது, அது அவ்விரண்டிற்கும் இடைத்தரமாய் அழுந்துதல், இவற்றை, முறையே Acute, Grave, Circumflex என்பர் ஆங்கிலேயர்; உதாத்தம், அனுதாத்தம், சுவரிதம் (வரிதம்) என்பர் வடநூலார்.
ஒலியழுத்தம் வேறுபடுங் காரணங்கள், இயல்பு அல்லது வழக்கம் (Usage), அளவு (Quantity), ஒலி வடிவு, (Quality of sound) ஓசை (Rhythm), அலகுமட்டம் (Musical pitch), வன்புறை (Emphasis), பொருள் வேறுபாடு, சொற்பிரிப்பு (Open Transition or Juncture) எனப் பல திறத்தன. இவற்றுள் ஓசை செய்யுட்குரியது; அலகு மட்டம் பெரும்பாலும் இசைக்குரியது; ஏனையவெல்லாம் உரைநடைக்கும் செய்யுட்கும் பொதுவாகும்.
இயற்றமிழ் உரைநடையில் இயல்பு, பொருள் வேறுபாடு, சொற் பிரிப்பு என்னும் மூவகையில் ஒலியழுத்தம் நிகழும். இவற்றுள், இயல்பு தமிழ் இலக்கண நூல்களிற் கூறப்பட்டில. ஆயினும், மேலையிலக்கணத் துணைக்கொண்டு இலக்கியங் கண்டதற் கிலக்கணங் காணும் முறையில் அதனை அறிந்து கொள்ள முடியும். வன்புறையைப் பொதுவாக ஒலியழுத்தத்திற் சேர்ப்ப தில்லை.
இயல்பு
இயல்பு என்பது இயல்பாக அல்லது வழக்கமாக ஒலிக்கும் முறை. பொதுவாக, எவ் வினையிலும் தொடக்கத்தில் முயற்சி மிக்கிருப்பது, அனைவரும் அறிந்ததொன்று. ஒலிப்பு முறையிலும், சொற்களின் முதலசையில் அல்லது முதல் எழுத்தில் முயற்சி மிக்கழுந்து கின்றது. இவ் வுண்மையை எச் சொல்லையும் ஒலித்துக் காண்க. அழகன், வந்தான் முதலிய தனிச் சொற்களில் மட்டுமன்றி. ‘brªjÄœ’, ‘kiwkiyaofŸ’, ‘jiyahy§fhd¤J¢ brUbt‹w beLŠbrÊa‹’, ‘MáÇa® v‹d brh‹dh®? முதலிய தொடர்ச்சொற்களிலும், முதலசையிலேயே அல்லது முதலெழுத்திலேயே முதன்மையாக ஒலியழுந்துவதைக் காண்க. ஒலியழுத்தம் மூவகைப்படும் என மேற்கூறப்பட்டிருப்பினும், சிறப்பாக, அது எடுத்தல் வகையையே உணர்த்தும். அண்ணா மலையரசர் என்னுஞ் சொல்லில் முதலசையில் அழுத்தம் எனின், முதலசையில் எடுப்பொலி என்பது பொருளாகக் கொள்க. பொருள் விளங்குமிடமெல்லாம், ஒலியழுத்தம் என்னுங் குறியீட்டை அழுத்தம் எனச் சுருக்கியும் வழங்கலாம்.
தமிழில் ஒலியழுத்தம் இயல்பாக முதலெழுத்தைத் தாக்குவதனா லேயே கசதபக்கள் சொன்முதலில் ஏனையிடத்தினுஞ் சற்று வலிதாக ஒலிக்கின்றனவென அறிக.
வன்புறை
வன்புறை என்பது பொருள்பற்றி அழுத்தி அல்லது வற்புறுத்திச் சொல்லும் முறை. அது மகன் வரவே வருவான் எனத் தனி அசையையேனும் அவன் என்ன செய்தான்? அவன் என்ன செய்தான்? அவன் என்ன செய்தான்? என முழுச் சொல்லையுமேனும். மாணவர் எல்லாரும் நாளைக் கூட்டத்திற்கு வரவேண்டும் என முழுச் சொற்றொடரையுமேனும் தழுவும். மகனா, மகளா என எழும் ஐய வினாவிற்கு விடையாக மகன் என ஆண்பால் உணர்த்தும் அன் னீற்றை அழுத்திக் கூறுங்கால், னகர வொற்றே அழுத்தத் திற்குரியதேனும், ஒலியழுத்தம் தனி மெய்யின்மேல் விழுதல் கூடாமையின், மகன் எனக் குறிக்கப்பெறாது மகன் எனக் குறிக்கப் பெற்றதென்க. ஒலியழுத்தத்திற்கும் (Accent) வன்புறைக்கும் (Emphasis) வேறுபாடுள்ளதேனும், ஒருபுடை யொப்புமைபற்றி, தனியசை வன்புறையை மட்டும் ஒலியழுத்தத்தின் பாற்படுத்திக் கொள்ளலாம்.
பொருள் வேறுபாடு
உப்ப காரம் ஒன்றென மொழிப
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே (76)
என்பது தொல்காப்பியம். இதற்கு நச்சினார்க்கினியர் உரை வருமாறு:
இஃது ஒரு சொல் வரையறையும் அஃது ஓசை வேற்றுமையால் இருபொருள் தருமெனவுங் கூறுகின்றது.
உகரத்தோடு கூடிய பகரம் ஒரு மொழிக்கல்லது பன்மொழிக்கு ஈறாகாதென்று கூறுவர் புலவர். அதுதான் தன்வினை பிறவினை யென்னும் இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மைத்தாம் என்றவாறு.
(எ-டு): தபு என வரும். இது படுத்துக்கூற, நீ சா வெனத் தன்வினையாம். எடுத்துக் கூற நீ ஒன்றனைச் சாவப்பண் ணெனப் பிறவினையாம். உப்பு சப்பு என்றாற் போல்வன குற்றுகரம். உகரத்தோடு கூடிய பகரம் ஒன்றெனவே ஏனை யுயிர்களோடு கூடிய பகரம் பன்மொழிக்கு ஈறாய்ப் பல பொருள் தருமென்றா ராயிற்று. மறந்தப துப்பா என எச்சமாயும், நம்பி செம்பூ பே பெதும்பை எனப் பெயராயும், போ என ஏவலாயும் வரும். இவற்றைப் பிற சொற்களோடும் ஒட்டுக. ஏனை ஈகார பகரம் இடக்கராய் வழங்கும்.
இவ் வுரையால், தபு என்பது தன்வினையா யிருக்குங்கால் முதலெழுத்தில் (தகரத்தில்) அழுத்தமென்றும், பிறவினையா யிருக்குங்கால் இரண்டாம் அல்லது இறுதியெழுத்தில் (புகரத்தில்) அழுத்தம் என்றும், அறியப்படும். பிறவினை நிலையில் ஈரெழுத்தும் (அதாவது சொல் முழுதும்) எடுத்தொலிப்பின், அது சினத்தாலெழுந்த உச்ச அலகுநிலையென அறிக.
இனி, ஒட்டு, கட்டு, தட்டு, முட்டு, ஓட்டு, காட்டு, பூட்டு, மூட்டு முதலிய குற்றுகர வீற்றுச் சொற்கள், ஏவலாயிருக்குங்கால் ஈற்றிலும் சிறிது அழுத்தம் பெறுமென்றும். முதனிலைத் தொழிற் பெயராயிருக்குங்கால் அதனைப் பெறாதென்றும் அறிதல் வேண்டும்.
ஆயின், காது என்னுஞ் சொல்லை இதழ் குவித்துச் சொல்லு மிடத்து முற்றியலுகரமாம். அதற்குப் பொருள் கொல் என்பது. அதனை இதழ் குவியாமற் சொல்லுமிடத்துக் குற்றியலுகரமாம். அதற்குப் பொருள் காது என்னும் உறுப்பு. முருக்கு என்னுஞ் சொல் இதழ் குவித்துச் சொல்லுமிடத்து அடி எனவும். இதழ் குவியாமற் சொல்லுமிடத்து முருக்காகிய மரம் எனவும் பொருள் தரும். பிறவும் இவ்வாறே பொருள் வேற்றுமை உடையவாதல் அறிந்துகொள்க. குற்றியலுகரத்துக்கும் முற்றியலுகரத்துக்கு முள்ள பொருள் வேற்றுமை இவையே என்று திரு. சி. கணேசையர் தொல்காப்பிய இரண்டாம் நூற்பாவிற்கு அடிக்குறிப்பு எழுதி யிருப்பது பொருந்தாது.
என்னை?
ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன் (தொல். 406)
என்றார் தொல்காப்பியராதலின்
அறுவகைத் தொடரின் ஈற்றில் நிற்கும் உகரமெல்லாம் குற்றியலு கரமேயென்றும். அவை எக்காரணத்தையிட்டும் ஒருபோதும் இதழ்குவித் தொலியாவென்றும், திட்டமாயறிந்து கொள்க. ஒலியழுத்தம் வேறு; இதழ் குவிவு வேறு.
இனி, முற்றியலுகர, குற்றியலுகரங்கள் பொருள் வேறுபடுவதும், அளவு, அளபு; உருவு, உருபு முதலிய ஒரு சில சொல்லிணை களிடத்தே யென்க. உருவு என்பதன் ஈற்றிலுள்ளது முற்றியலு கரம்; அச் சொற்பொருள் வடிவம் என்பது. உருபு என்பதன் ஈற்றிலுள்ளது குற்றியலுகரம்; அச் சொற்பொருள் வேற்றுமை வடிவம் என்பது. இங்ஙனமே அளவு என்பதன் ஈற்றிலுள்ளது முற்றியலுகரம்; அச் சொற்பொருள் பொதுவகையான அளவு என்பது. அளபு என்பதன் ஈற்றிலுள்ளது குற்றியலுகரம்; அச் சொற் பொருள் எழுத்தை ஒலிக்கும் கால அளவு என்பது. இடு, சுடு, பகு, விடு, உறு. பெறு முதலிய முற்றுகர வீற்று வினைப்பகுதிகள். முதல் நீண்டு, முறையே ஈடு, சூடு, பாகு, வீடு, ஊறு, பேறு எனக் குற்றுகர வீறாங்கால் தொழிற் பெயரும் தொழிலாகு பெயரு மாவதும், முற்றுகர குற்றுகரப் பொருள் வேறுபாடு குறிப்பதே. மறு, மாறு; நடு, நட்டு முதலிய சொல்லிணைகளும், இயற் சொல்லும் திரிசொல்லுமாய் நின்று உகர வேறுபாடுபற்றிப் பொருள் வேறுபாடு குறிப்பனவே. இனி, இதற்கு மாறாக, அது, ஆது; ஒடு, ஓடு முதலிய வேற்றுமையுருபுகளும், இது, ஈது; கொசு, கொசுகு; நாவு. நாக்கு முதலிய தனித்து வருசொற்களும், முற்றுகர குற்றுகர வேறுபாடுபற்றிப் பொருள் வேறுபடாததனை அறிக. வீடு என்னும் வினைச்சொல் விடு எனப் பொருள்படுவதுங் காண்க.
சார்பெழுத்துகளின் தொகை கூறும் தொல்காப்பிய நூற்பா வுரையில்; இகர உகரங் குறுகி நின்றன, விகார வகையாற் புணர்ச்சி வேறுபடுதலின், இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் பற்றி வேறோர் எழுத்தாக வேண்டினார் என நச்சினார்க்கினியர் கூறியதில் பொருள் வேற்றுமை என்பது இத்தகையதேயெனத் தெற்றெனத் தெரிந்து கொள்க.
சொற்பிரிப்பு
சில சொற்கள் புணர்ந்து நிற்கும் நிலையில், இரட்டுறலும் கவர்படு பொருளுங் கொண்டு பல்வேறு சொற்களாகப் பகுத்தற் கிடந்தரும். சொல் வேறுபாட்டிற்கேற்ப அழுத்தநிலை மாறும். புணர்ந்து நிற்கும் சொற்கள் இன்னவென அறிதற்குப் புணர்ச்சி யிடத்து ஒரு குறிப்புமில்லை. இடம் நோக்கியும் சொல்வான் குறிப்பறிந்துமே இன்ன சொற்கள் எனத் துணிதல் வேண்டும்.
இவற்றை,
எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி
இசையில் திரிதல் நிலைஇய பண்பே (தொல். 141)
அவைதாம்
முன்னப் பொருள புணர்ச்சி வாயின்
இன்ன வென்னும் எழுத்துக்கடன் இலவே (தொல். 142)
என எடுத்தோதினார் தொல்காப்பியர்.
இவற்றிற்கு நச்சினார்க்கினியருரை வருமாறு :
எழுத்து ஒரு தன்மைத்தான பொருள் விளங்க நிற்கும் புணர் மொழிகள். எடுத்தல், படுத்தல், நலிதல் என்கின்ற ஓசை வேற்றுமை யாற் பொருள் வேறுபடுதல் நிலைபெற்ற குணம் என்றவாறு.
செம்பொன்பதின்றொடி, செம்பருத்தி, குறும்பரம்பு, நாகன்றேவன் போத்து. தாமரைக்கணியார், குன்றேறாமா என இவை இசையிற் றிரிந்தன.
பல பொருட்குப் பொதுவென்ற புணர்மொழிகள்தாம், குறிப்பான் உணரும் பொருண்மையினையுடைய, புணர்ச்சி யிடத்து இத்தன்மைய வென்னும் எழுத்து முறைமையை உடைய வல்ல என்றவாறு.
செம்பொன் பதின்றொடி என்றுழிப் பொன்னாராய்ச்சி யுளவழிப் பொன்னெனவும், செம்பாராய்ச்சியுளவழிச் செம்பெனவும், குறிப்பான் உணரப்பட்டது. இசையிற் றிரிதலென்றது ஒலியெழுத் திற்கெனவும். எழுத்துக் கடனில வென்றது வரிவடிவிற்கெனவும், கொள்க
செம்பொன்பதின்றொடி முதலிய எடுத்துக்காட்டுப் புணர் மொழிகளை அல்லது தொடர்மொழிகளைப் பின்வருமாறு பல்வேறு வகையிற் பகுக்கலாம்.
செம்பொன்பதின்றொடி = 1. செம்பு - ஒன்பதின்றொடி
2. செம்பொன் - பதின்றொடி (தொடி-பலம்)
செம்பருத்தி = 1. செம் - பருத்தி
2. செம்பு - அருத்தி (அருத்தி = விருப்பம்)
குறும்பரம்பு = 1. குறு - பரம்பு
2. குறும்பர் - அம்பு
நாகன்றேவன் போத்து = 1. நாகன் - தேவன் – போத்து
2. நாகன்றே – வன்போத்து
3. நாகன் - தே – அன்போத்து
4. நாகு - அன்று - ஏவு - அன்பு - ஓத்து.
(போத்து - ஆண்விலங்கு; ஓத்து - ஓதப்பெறும் நூல். நாகு - பெண்விலங்கு).
தாமரைக்கணியார் = 1. தாமரை - க(ண்)ணியார்
2. தாம் - அரைக்கு - அணியார்.
3. தா-மரைக்கு - அ(ண்)ணியார்
(தா. தாவுகின்ற; மரை - ஒரு வகை மான்)
குன்றேறாமா = 1. குன்றேறு – ஆமா
2. குன்றேறா – மா
(ஆமா - காட்டுப் பசு. மா - விலங்கு)
செம்பொன்பதின்றொடி என்னும் சொற்றொடர் செம்பின் நிறையைக் குறிப்பின். ஒன் (பொன்) என்னும் இரண்டாம் அசையிலும், பொன்னின் நிறையைக் குறிப்பின் பதின் என்னும் மூன்றாம் அசையிலும் அழுத்தம் விழும். இங்ஙனமே பிறவும்.
இனித் தொடர்ச்சொற்களில் மட்டுமன்றி, தனிச்சொல் தொடர்ச் சொல் ஆகிய இரண்டிற்கும் பொதுவான பொதுச் சொற்களிலும், அவை தொடர்ச்சொல்லாங்கால் அழுத்தநிலை மாறும் என அறிக.
எ-டு:
1. பெருமான் 1. பெரியோன் (தனிச்சொல்)
2. பெரிய மான் (தொடர்ச்சொல்)
2. ஔவையார் 1. ஒரு புலத்தியார் (தனிச்சொல்)
2. ஔவை யார்? (தொடர்ச்சொல்)
பெருமான் என்பது தனிச்சொல்லாயின், இயல்பான முறையில் பெ என்னும் முதலெழுத்திலும் அது தொடர்ச்சொல்லாயின் மான் என்னும் இரண்டாம் அசையிலும் அழுத்தம் விழுவதைக் காண்க. இங்ஙனமே இத்தகைய பிறவும்.
இதுகாறுங் கூறியவற்றால், இயல்பு, பொருள் வேறுபாடு, சொற் பிரிப்பு ஆகிய மூவகையிலும் தமிழிலும் ஒலியழுத்தம் உண்டென் றும் இயல்பு வகையான ஒலியழுத்தம் நுண்மாண் நுழைபுலம் மிக்க முற்காலத்து மாணவர்க்கு வேண்டாவெனக் கூறப்படாது விடப்பட்டிருப்பினும் இக்கால நிலைக்கேற்ப அதனையுஞ் சேர்த்துக்கொள்ளல் வேண்டுமென்றும், ஐயந்திரிபற அறிந்து கொள்க. - முல்லை மே 1958.
ஒலிவகை
அரவம் - பொதுவான ஒலி.
குரல் - தொண்டை ஒலி.
ஆரவாரம் - பெரிய ஊர்வலத்தில் கேட்கும் பல்லியவொலி.
இரைச்சல் - மழையருவி சந்தைக் கூட்டம் முதலியவற்றின் பேரொலி.
ஆர்ப்பு. மாபெரும் கூட்டத்தின் வாழ்த்து அல்லது கண்டன ஒலி.
சிலம்பு - எதிரொலி.
சிலை - பாடும்போது கலகலவென்றிலங்கும் ஒலி (அவன் பாடுகையில் சிலையோடும் என்பது தென்னாட்டு வழக்கு)
சந்தடி - விழா நிகழிடத்திலும் மாநகர வீதியிலும் பல்வேறு கவனமுள்ள மக்கள் தொழிலால் உண்டாகும் ஒலி.
கூச்சல் - பலர் கூடிக் கத்தும் ஒலி.
பூசல் - சண்டையிலும் போரிலும் கேட்கும் ஒலி.
முழக்கம் - இடியாலும் பறையாலும் உண்டாகும் பேரொலி.
இசை - இனிய ஒலி.
ஒலிவகை
ஒலி - எழுத்தொலி.
ஓசை - சொற்றொடர் அல்லது பாட்டொலி.
சந்தம் - அசை ஒத்த அடிகளைக் கொண்ட பாட்டொலி.
வண்ணம் - எழுத்தொத்த அடிகளைக் கொண்ட பாட்டொலி. - சொல்.
ஓ என்னும் ஒலிக்குறிப்பு வேர்ச்சொல்
ஊ - ஓ.
உரத்த ஓசையைக் குறிக்கும் எழுத்தொலி அல்லது ஒலிக் குறிப்பு ஓ என்பதாகும்.
ஓவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே (சீவக. 18.3)
ஓ - கோ, ஓ - சோ.
கோவென்றலறினான், சோவென்று மழை பெய்தது என்பன உலக வழக்கு.
சேய்மை விளிக்குச் சிறந்த ஒலி ஓகாரமே.
v-L: m©nzh!, ஓ அண்ணா !
ஓல் என்பது ஈற்று விளியுருபாகும்,
எ-டு:: சாத்தா வோல் !
இலக்கணஞ் சாரா உலக வழக்கில், ஓகார அடிப்பிறந்த ஓர் அசையும் அதன் திரிபும் தனி விளியொலிகளாகும். அவையாவன:
ஓய் - வேய் - வே.
கதிர் முற்றிய நிலங்களிற் படிந்துண்ணும் பறவைகளை ஓவென்று கத்தி ஓட்டுவதால், பறவையோட்டுதல் ஓப்புதல் எனப்பட்டது.
கழனிப் படுபுள் ஓப்புநர் (புறம். 29:13)
ஓ என்பது ஓர் ஒலிக்குறிப்பாதலால், ஓல் என்பது ஒலிப் பெயராயிற்று.
ஓலுறுதல் = ஒலிபெறுதல்.
ஓலுறு பெருக்கின் (இரகு. நகர. 42)
ஓல் - ஓலம் = 1. ஓசை (பிங்.)
2. என்றும் ஓசையிடும் கடல்.
3. அடைக்கலம் வேண்டும் கூக்குரற்சொல்.
ஞானநாயகனே ஓலம் (கந்தபு. சூர. வதை. 400)
தெ. ஓல ம. ஓலம்
ஓலோலம் - ஆலோலம் = ஓவெனக் கத்திப் பறவைகளைத் துரத்தும் குறிப்புச் சொல்.
பூவைகாள் செங்கட் புள்ளினங்காள் ஆலோலம் (கந்தபு. வள்ளி. 51)
லோலோ எனப் பாடிக் குழவியைத் தூங்கவைத்தல், இலக்கணஞ் சாரா உலக வழக்கில் லோலாட்டு எனப்படும்.
லோலாட்டு - ஓலாட்டு = தாலாட்டு.
ஓல் = தாலாட்டு.
ஓலுடனாட்டப் பாலுட னுண்டு (இறை 2 உரை)
ஒ.நோ: ரோரோ - ரோராட்டு - ராராட்டு - ஆராட்டு = தாலாட்டு.
லாலாட்டு - தாலாட்டு. லால் - தால்.
ஓ - சோ. சோ என்பது விலங்கு பறவைகளைத் துரத்தும் குறிப்பசை.
ஓப்பு - சோப்பு. சோப்புதல் = ஈயோட்டுதல்.
ஈச்சோப்பி = ஈயோட்டும் கருவி.
அரசன் கொலுவீற்றிருப்பைக் குறிக்கும் ஓலக்கம் என்னும் சொல், ஒல்லகம் (=கூடுமிடம்) என்பதன் திரிபன்றாயின் ஓலகம் (=ஆரவாரமான இடம்) என்பதன் திரிபாகவே யிருத்தல் வேண்டும்.
ஓல் - ஓலகம் - ஓலக்கம்.
தெ. ஓலகமு க.து. ஓலக. ம. ஓலக்கம்
ஒட்டோலக்கம் = 1. பேரவை.
2. ஆரவாரம்.
தெ. ஒட்டோலகமு க. ஒட்டோலக
ஒட்டோலக்கம் - அட்டோலக்கம் = 1. ஆரவாரம். 2. உள்ளக் கிளர்ச்சி
ஓல் - ஓது. ஒ.நோ: மெல் - மெது.
க. து. ம. ஓது
ஓதுதல் = 1. படித்தல்.
ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் (குறள். 834)
x.neh.: படுதல் = ஒலித்தல். படு - படி.
2. சொல்லுதல்.
ஓதரிய சுகர் போல (தாயு. ஆகார. 32)
3. மன்றாடுதல்
இயல்போ டஞ்செழுத்தோதி (திருவா. 41-7)
ஓது - ஓதை = 1. பேரோசை (திவா).
2. எழுத்தொலி (பிங்.).
ஓதை - ஓசை. ம. ஓச.
ஓசை - ஓசனி. ஓசனித்தல் = பறவை சிறகடித்தல்.
ஓசனிக்கின்ற வன்னம் (சீவக. 2652)
ஓல்-ஒல். ஒல் என்பது ஓர் ஒலிக்குறிப்பு.
ஒல்லென வொலித்தல் என்பது இலக்கிய வழக்கு.
ஆய ரொல்லென வொலிப்ப (சீவக. 438)
ஒல் - ஒலி, ஒலித்தல் = 1. ஓசையிடுதல்.
ஒலித்தக்கா லென்னாம் உவரி (குறள். 763)
2. வெளுத்தல்
ஊரொலிக்கும் பெருவண்ணார் (பெரிய பு. திருக்குறிப்பு. 113)
வண்ணார் ஏதேனும் ஓர் ஒலியிட்டு வெளுப்பது வழக்கமாதலால், ஒலித்தற் சொல் வெளுத்தற் பொருள் கொண்டது.
3. துப்புரவாக்குதல்.
உதிர்துகளுக்க நின்னாடை யொலிப்ப (கலித். 81,31)
ஒலி = 1. இசை (திவா.) 2. காற்று (திவா.) 3. சொல்.
நின்னுருவமு மொலியும் ஆகாயத்துள (பரிபா. 4, 31)
ஒலி - ஒலியல் = 1. ஆடை (பிங்.)
2. ஆறு.
அவ்வொலியிற் கொப்பாகுவதோ வுவராழியதே (கந்தபு. காளிந்தி. 6)
ஒலி - ஒலியன் = 1. ஆடை (கோயிலொ. 88)
2. தனியுயிரொலி - (Phoneme.) (இக்காலைப்பொருள்)
ஒலி - ஒலிசை = மணமகனுக்கு மணமகள் சுற்றத்தார் திருமணத்தின் நான்காம் நாள் கொடுக்கும் வரிசை.
ஒல்லென = ஒல்லென்று சொல்லும் அளவில் விரைவாக, சுருக்காக, சட்டென.
வல்வினை … ஒல்லென வொப்ப (ஞான. 1,33)
ஒல் - ஒல்லே = சுருக்காக, விரைவில்.
நங்கை யென்னோ டுரையாய் நனியொல்லே (சீவக. 898)
ஒல் - ஒல்லை = 1. சுருக்காய் (திவா.)
2. உடனே.
ஒல்லைக் கெடும் (குறள். 563)
ஒல் - வல் = விரைவு (சூடா.)
வல்லெனல் ஒரு விரைவுக் குறிப்பு.
ஒல்லே - வல்லே = விரைவாக.
ஒன்றின ஒன்றின வல்லே செயிற்செய்க (நாலடி. 4)
ஒல்லை - வல்லை = விரைவாக
வளவரை வல்லைக் கெடும் (குறள். 480)
ஓ - ஒ - ஒய்.
ஒய்யென = விரைவாக.
ஒய்யென வந்தே யெடுத்தனன் (கலித். 37)
ஒல் - கொல் = ஓர் ஒலிக்குறிப்பு.
கொல்லென்று சிரித்தார்கள் என்பது உலக வழக்கு.
கொல் - கல். கல்லெனல் = பேரோசைக் குறிப்பு.
கல்லென் பேரூர் (சிலப். வேட்டுவவரி. 12)
கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலற (நாலடி. 25)
கல் - கல.
கலகலவென்று சிரித்தல் என்பது உலக வழக்கு.
கலகலவெனல் - கலகலெனல்.
கல் - கலி. கலித்தல் = ஒலித்தல்.
கடவுட் பராவி நமர்கலிப்ப (திருக்கோவை, 279)
கலி = 1. ஒலி. (தொல். சொல். 349)
2. கடல் (பிங்.)
ஆர்கலி = 1. ஓசை நிறைந்த கடல். (திருவாச, 18:2)
2. வெள்ளம் (நெடுநல், 3)
கலின், கலீர் முதலியன ஒலிக்குறிப்புச் சொற்கள்.
ஒல் - சொல் = 1. ஒலி. 2. ஒலிவடிவான பேச்சு. 3. மொழியுறுப்பான கிளவி.
சொல் ஒலி வடிவாயிருத்தலையும், ஒலி என்னும் சொற்குச் சொல் என்னும் பொருளும், ஓதை யென்னும் சொற்கு எழுத்தோசை யென்னும் பொருளும் உண்மையையும் நோக்குக.
ஒலி, ஓசை என்னும் இரு சொற்களும் ஓகார அடிப்படையிற் பிறந்திருப்பினும் ஒலி என்பது எழுத்தொலி போன்ற மெல் லோசையையும் ஓசை என்பது இடியோசையும் கடலிரைச்சலும் போன்ற வல்லோசையையும் குறிக்கும் வழக்காற்றை அறிதல் வேண்டும்.
கொல் என்னும் ஒலிக்குறிப்பு கல், கல, கலி எனத் திரிதல் போன்றே, சொல்லென்னும் ஒலியும் சல், சல. சள எனப் பலவாறாகத் திரியும்.
சொல்லுதல் என்னும் வினை பேசுதல் அல்லது உரைத்தல் என்னும் சிறப்புப் பொருளில் வழங்கிய பின், அதன் அடிப்படையான ஒலிப்புப் பொருள் மறைந்துவிட்டது; ஆயினும், பல்லி சொல்லுதல், பல்லி சொல்லிற்குப் பயன் என்னும் வழக்குண்மையை நோக்கித் தெளிக. (வே.க)
ஓகாரச்சுட்டு
உயரக் கருத்து. உயரக் கருத்துச் சொற்கள் ஓகார வேரினின்றும் அதன் திரிபான உகர வேரினின்றும் பிறக்கின்றன. ஆங்கிலத்திலும் over, hover, soar முதலிய உயரக் கருத்துச் சொற்கள் ஓகார முதலவாயிருத்தல் காண்க. E. origin, Fr. origine, L. origo, originis - orior, to rise.
Xif = ca®¢á, k»œ¢á, x.neh.: ஏம்பல் = எழுச்சி, மகிழ்ச்சி. ஓங்கு - ஓக்கம் = உயர்ச்சி, எழுச்சி, பெருமை. ஓங்கல் = மலை, யானை. ஓச்சு = உயர்த்திப்பிடி. ஓ - ஓம் = உயர்த்து, வளர். பாதுகா. ஓ = உயர், முடி, நீங்கு. ஓ - ஓவு. ஓவற = நீங்காமல். ஓ - ஓய். ஓய்தல் = முடிதல், பருவம் முடிதல், நீங்குதல், வேலை நீங்கி யிளைப் பாறல், வலிநீங்குதல், குன்றுதல்.
ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல். 814)
ஓ - ஒ. ஒட்டை - ஒட்டகை - ஒட்டகம் = உயரமான விலங்கு. ஒய்யாரம் = உயரம், பெருமை, செருக்கு. ஒயில் = உயரம், செருக்கு, உயரக் குதித்தாடும் கும்மி.
ஒ - உ. உக = உயர். உகள் = உயரக் குதி, துள்ளு.
உகப்பே உயர்தல் உவப்பே உவகை (தொல். 789)
உச்சி - உச்சம். உச்சி - உச்சிதம் - உசிதம் = உயர்ந்தது. சிறந்தது. உட்(இ.) = எழுந்திரு.
உதி = உயர், கீழிருந்து தோன்று, தோன்று. உதி + அயம் = உதயம் > உதய (வ.). உதி > உத் (வ.). உத் என்பது வடமொழியில் உயர்வு எழுச்சி, ஊக்கம், முயற்சி முதலிய பொருள்களைக் குறிக்கும் முன்னொட்டாகும். எ-டு: உத்தம, உத்பவ, உத்சாக.
உத்தரம் = உயரத்திற் குறுக்கேயிடும் பெருமரம், உயர்ந்த வடதிசை, பின்னே கூறும் பதில். உயரக் கருத்தில் பின்மைக் கருத்துத் தோன்றும். மேலே மேலும் மேலும் மேலும், அதன்மேல், அதன் மேற்பட்டு என்பவை தமிழிலும், ‘on’ ‘upon’ ‘over’ என்பவை ஆங்கிலத்திலும் பின்மைப் பொருள் தருதல் காண்க. ஒரு குறித்த காலத்தின் உச்சிக் கப்பாற்பட்டது பின்மை யென வறிக. உத்தரம் - உத்தரவு = பதில், விடை, ஆணை, உத்தரம் = மேற்பகுதி, பிற்பகுதி. உத்தர காண்டம் = பிற்காண்டம். உப்பக்கம் = பின்பக்கம், முதுகுப்பக்கம், முதுகு.
முன்மைப் பொருள் தரும் உகரச்சுட்டும் உயரப் பொருளும் பின்மைப் பொருளும் தரும் உகரச்சொல்லும் வெவ்வேறாகும். இவற்றுள் பின்னது ஓகாரத்தின் திரிபு என அறிக.
உப்பு = (வி.) எழும்பு, பரு, வீங்கு; (பெ.) எழும்பும் உவர்மண், உவர்க்கல். உப்பசம் = வீக்கம், உம் = உயரம், பின்மை. உம்மை = பிற் பிறப்பு, மறுமை. உம்மை - யெரிவாய் நிரயத்து வீழ்வர் கொல்.
உம் - உம்பு - உம்பர் = உயரம், உயர்ந்த தேவருலகு, தேவர்.
உம்பர் - இ. ஊப்பர், Skt. upari, E. up, upper, Gr. hyper, L. super, Fr. sur. உம்பல் = உயரம், யானை, பின்னோன் (வழித்தோன்றல்), உம்பன் = உயர்ந்தோன்.
உப்பு + அளம் = உப்பளம் - உம்பளம் - உம்மளம் - உம்மளன் - உம்மணன் - உமணன்.
உயர் - உயரம். உவண் = மேலிடம் (சீவக. 2853). உல்லாசம் = உயர்ச்சி, களிப்பு. உவணம் = உயர்ச்சி, உயரப் பறக்கும் கருடன். உவணை = தேவருலகம். உவர் - மேலெழும்பும் உப்பு நிலம், உப்பு, உவர் - உவரி = கடல். உன்னு = உயரக் குதி, எழு. உன்னதம் = உயர்ச்சி, உயர்ந்த இடம்.
கொதி, குதி, துள்ளு, பொங்கு முதலிய பல சொற்கள் ஒகர அல்லது உகர வடிவாய்ப் பிறந்து, மேலெழுதலைக் குறிப்பன.
உம்மை யிடைச்சொல். பொருள்களை மேன்மேல் அடுக்கிக் கூறுதல் உயர்ச்சியை அல்லது பின்மையைக் காட்டுதலின், உகர வடியாய்க் கூட்டிணைப்புச் சொல் பிறந்தது. எ-டு: அழகனும் நம்பியும், உம் உந்தாகும் இடனுமாருண்டே (தொல். 776).
உந்து: Cf. E. and.
செய்யும் என்னும் வாய்பாட்டு எதிர்கால வினைமுற்றிலும் எதிர்காலப் பெயரெச்சத்திலும் உம் ஈறு மேல் என்னும் பின்மைப் பொருள் பற்றி எதிர்காலங் காட்டும். செய்ததும் (செய்தவுடன்) என்பதில் உம் ஈறு மேல் உடன் என்று பொருள்படும்.
செலவுக் கருத்து: ஓடு = உயர்வாய் அல்லது வேகமாய்ப் போ.
ஓடு - ஓடம் = நீர்மேலோடும் தோணி. ஓடு - ஓடை = ஓடும் நீர்நிலை. (சு.வி.)
ஓடம்
ஓடம் - வ. ஹோட
ஓடு - ஓடம். ம. Xl«, f., bj., து. ஓட.
வடவர் காட்டும் ஹோட் (ho@d), ஹௌட் (haud@) என்னும் மூலங்கள் இயங்கு என்னும் பொருளனவே. (வ.வ.101)
ஓடு
ஓடு - வ. ஹோட் (hod@)
k., f., bj., து. ஓடு.
வடசொல் ஹுட், ஹ்ரூட், ஹூட், ஹோட், ஹௌட் எனப் பல வடிவங்கொள்ளும். (வ.வ. 101)
ஓம்
இது தமிழரது என்பது அதன் வரிவடிவே காட்டும். இது பகுக்கப் படாதது. ஆயின் ஆரியப் பூசாரியர் அ+உ+ம் என்று பகுத்துப் பிரணவ என்று பெயரிட்டு ஆரிய மந்திர அசைமொழியாகக் காட்டுவர். இதன் மருமப் பொருளைத் தமிழ் வாயிலாக அன்றி வேறெம் மொழி வாயிலாகவும் உணர இயலாது. (பிரணவம் - முளைமந்திரம்) (த.இ.வ. 207.)
ஓம்2
ஓம்1 - வ. ஓம்
ஆம் - ஓம் (yes)
துரத்தல், தூண்டுதல், விரும்புதல், பொந்திகைப்படுதல், காத்தல், ஆள்தல் முதலிய பல பொருள்களில் ஆளப்பெறும். அவ் என்னும் சொல்லை வடவர் மூலமாகக் காட்டுவது பொருந்தாது. (வ.வ.)
ஓரும்
அசைநிலை. ஆயினும் முற்காலத்தில் ஆராய்ந்தறியும் என்று பொருள்படும் ஏவற்பன்மை அல்லது பெயரெச்சமாகவே அது வழங்கியிருத்தல் வேண்டும். (தி.ம.58.)
கஃசு - கர்ஷ
கால் - கஃசு = காற்பலம். (வ.வ: 101)
கக்கட்டம் - கக்கட்ட (!)
கக்கக் கக்க (ஒலிக்குறிப்படுக்கு) - கக் கட்டம் = உரத்த குரற் சிரிப்பு. kakk, kakh, kakkh, khakkh என வடசொன் முதனிலை நால் வடிவில் உளது.
மா. வி. அகர முதலியில் இச் சிறப்புப்பொருள் குறிக்கப் பெறவில்லை; சென்னைப் ப.க.க.த. அகர முதலியில் தான் குறிக்கப்பட்டுள்ளது.
கக்கரி - கர்க்கடீ (!)
கள் = முள். கள் = (கட்கரி) - கக்கரி = முள்வெள்ளரி. (வ.வ: 101)
ககர சகரப் பரிமாற்றம்
இற்றை மேலை மொழி நூல் வல்லார் சிலர். ககரம் சகரமாய்த் திரியுமேயன்றிச் சகரம் ககரமாய்த் திரியாதென்றும். சேரன் என்பது கேரன் என்பதன் திரிபே யென்றும். தேற்றப்படுத்திக் கூறி வருகின்றனர். இது, மாண வரையும் ஆராய்ச்சியில்லா ஆசிரியரையும் மயக்குவதாயுள்ளது.
மேலையாரியத்தில் மட்டுமன்றித் தமிழிலும் திரவிடத்திலுங்கூட. ககரம் சகரமாய்த் திரியக் கூடியதே.
எ-டு: முழுகு - முழுசு (தமிழ்)
கீரை - சீரை (மலையாளம்)
கெடு - செடு (தெலுங்கு)
இங்ஙனம் திரிவது அருகிய வழக்கே. இதற்கு எதிரான சகர ககரத்திரிபே தமிழிலும் திரவிடத்திலும் பெருவழக்காம். தமிழ் என்பது வடமொழித் துணை வேண்டாத தூய தென்மொழி யென்றும், திரவிடம் என்பது தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் போல வடமொழி கலந்த தென்மொழியென்றும், வேறுபாடறிதல் வேண்டும்.
சகரம் ககரமாய்த் திரிவது, தமிழிலும் திரவிடத்திலும் மட்டு மன்றி, கீழையாரியத்திலும் மேலையாரியத்திலும் இயல்வதே.
தமிழ்
செய் - (கெய்) - கை (hand)
செம்பு - கெம்பு.
கெம்பு என்பது தமிழிலும் மலையாளத்திலும் கன்னடத்திலும், தெலுங்கிலும் பதுமராகத்தின் பெயராதலாலும், செம்பு நிறையக் கெம்பு என்பது தமிழச் சிறார் விடுகதையாதலாலும், கன்னடத்திலும் செம்பு என்பது தாமிரத்தின் பெயராதலாலும், கெம்பு என்பதைத் தமிழ்ச்சொல்லொப்பவே கொள்க.
திரவிடம்
தமிழ் கன்னடம் துளு
சாண் கேண்
சிதலை கெத்தளெ, கெதலு
சிரங்கு கெரசு கிர்ம்பு
சிரட்டை கெரத்தெ
சில்லி கெல்லு கெல்லு
சிலும்பு(களிம்பு) கிலுபு
சிலை(ஒலி) கெலெ
சிறிது கிறிது
சிறை(சிறகு) கறி கேரி
சினம் கினிசு கினுக்க
சீ, சீழ் கீவு கீவு
சுவர் கேர்
சுறண்டு கெரண்ட்டு
செங்கண் கெங்கண்
செங்கல் கெங்கல் கெங்கல்
செங்காய் கெங்காய்
செங்குடை கெங்கொடை
செஞ்சுடர் கெஞ்சொடர்
செஞ்சோளம் கெஞ்சோளம்
செடி கிட
செத்து கெத்து
செத்தை கெத்தெ கெத்தெ
செந்தணல் கெந்தணலு
செந்தாமரை கெந்தாவரெ
செந்தூள் கெந்தூள்
செந்நீர் கெந்நீர்
செம்பருத்தி கெம்பத்தி
செம்மண் கெம்மண்ணு
செய் கெய் கெல்
செருக்கு கெச்சு
brU¤jš(udder) கெச்சல் கெர்ந்தெல்
தமிழ் கன்னடம் துளு
செருப்பு கெர்ப்பு
செம்மு கெம்மு
செருமு கெம்மு
செவ்வகத்தி கெம்பகசெ
செவ்வகில் கெம்பகிலு
செவ்வட்டை கெபட்டே
செவ்வரக்கு கெம்பரகு
செவ்வரி கெம்பரி
செவ்வவரை கெம்பவரே
செவ்வாம்பல் கெம்பாவல்
செவ்வாழை கெம்புபாளெ
செவ்விள நீர் கெம்பௌநீர்
செவி கிவி கெவி
செவிடு கிவிடு
செளிம்பு (களிம்பு) கிலுபு
செறும்பு (செற்றம்) கறும்பு
சென்னி கென்னெ
சே(தங்கு) கே
சேர்
(சேங்கொட்டை) கேரு கேரு
சேம்பு கெசு
சேரை
(செம்பாம்பு) கேரெ
சேனை கேனெ கேனெ
தமிழ் ஆரியம்
சீர்த்தி கீர்த்தி (வடமொழி)
சோழமண்டலம் (Coromandel) கோரமெண்டல் (டச்சு)
செல் (Kel) கெல் (கிரேக்கம்)
செப்பு (gepo) கெப்போ (கிரேக்கம்)
இங்ஙனம், ககர சகரம், தமிழ், திரவிடம், கீழையாரியம், மேலை யாரியம் ஆகிய நால்வகை மொழிகளிலும் தம்முள் பரிமாற்றஞ் செய்யவும், அதைக் கவனியாது, ககரம்தான் சகரமாகுமென்றும், சகரம் ககரமாகாதென்றும், ஒருவரிப் போக்காகக் கூறுவது பொருந்தாதென்பதை மேற் காட்டிய எடுத்துக்காட்டுகளின்று தெற்றெனத் தெரிந்துகொள்க. ஒருகால் கன்னடத்திலுள்ள ககரமுதற் சொற்களையே அவற்றிற்கு நேரான சகரமுதல் தமிழ்ச் சொற்கட்கு மூலமாக ஒருசாரார் கொள்ளலாம். அதன் புரைமையை, அச்சொற்களின் வேர் நோக்கியும்; செங்கதிர (செங்கதிர்), செந்தெங்கு, செம்பு, செம்புகுட்டிக (செம்பு கொட்டி), செம்பொன், செம்போத்த (செம்போத்து) முதலிய சொற்கள் கன்னடத்திலும் தமிழிற் போன்றே சகரம் முதலா யிருப்பதை நோக்கியும் தெரிந்து தெளிக.
கால்டுவெலாரும் இற்றை மேலை மொழிநூலார் சிலரும், தமிழ் குமரிக்கண்டத்திலும் தென்பால் தோன்றி வளர்ந்து வடக்கு நோக்கிச் சென்று திரிந்ததென்றும், ஆரியத்திற்கு முந்திய தென்றும், ஈரடிப்படை வரலாற்றுண்மைகளை அறியாமை யாலேயே, மகன் தந்தையையும் பேரன் பாட்டனையும் பெற்றார் என்பது போல், கேரன் என்பது சேரன் என்பதன் மூலமென்றும், வ்ருத்த என்னும் வடசொல் தமிழில் வட்டம் எனத் திரிந்த தென்றும், கொள்ளத் துணிந்தனர். இனி, அவர் மட்டுமன்றி, ஆராய்ச்சியில்லாது நூற்கல்வியொன்றேயுடை யாரும். ஆட்சி யிலும் அதிகாரத்திலுமிருப்பவர் கருத்திற்கு மாறாகச் செல்லுதல் கூடாதென்னும் கொள்கையுடை யாரும். ஆகிய இருசார் தமிழ்ப் பேராசிரியரும் அக் கொள்கையே கொண்டிருப்பது மிக மிக வருந்தத்தக்க செய்தியாகும்.
சேரன் என்னும் சகர முதல்வடிவே முந்தியதென்றும், அது தூய தென் சொல்லேயென்றும் கொள்ளின், அதன் பேரும் பொருட் காரணமும் என்னையெனின், கூறுவேன்:
சேரன் என்னும் பெயர் சேரல், சேரலன் என்னும் வேறிரு வடிவு களிலும் தமிழில் வழங்கும். இவற்றுள், சேரல் என்பதே முன்னை வடிவாம். சேரல் என்பது சாரல் என்பதன் திரிபு. சாரல் என்பது மலையும் மலைப்பக்கமும் மலையடிவாரமும், முத்தமிழ் வேந்த ருள் சேரனே நெடுமலைத் தொடரைச் சிறப்பாகவுடையவன். அதனால், அவனுக்குப் பொறையன், மலையன், மலையமான், மலைநாடன், வானவன், வானவரம்பன் என்பன குடிப்பெயர் களாய் வழங்கின. ஒரு பொருட்கு அதன் சிறப்புக் கூறுபற்றிப் பெயர் அமைவதே இயல்பாம். இம் முறைப்படி, பெருமலைத் தொடரையுடைய சேரனுக்கு மலைத் தொடர்பான பெய ரமைந்தது பொருத்தமே. ஒரு மலைநாட்டில் மக்கள் பெரும் பாலும் வாழ்வது மலையடிவாரத்திலாதலின், மலை நாடனைச் சாரல் நாடன் என்பது ஒரு செய்யுள் வழக்காம்.
எ-டு:
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட (குறுந். 18))
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்குஞ்
சாரல் நாட (குறுந். 69)
ஆரிருள் நடுவாள் வருதி
சாரல் நாட. (குறுந். 141)
பரு - பெரு. சத்தான் - செத்தான். அல்லி - எல்லி (இரவு) முதலிய திரிபுகளில் அகரம் எகரமாகத் திரிவதால், அதன் நீள வடிவமான ஆகாரம் ஏகாரமாகத் திரிவதும் இயல்பாம்.
எ-டு: சாறு - சேறு (திருவிழா)
சார் - சேர்
சாரல் - சேரல்
சாண் - சேண் (கன்னடம்)
சாரல் நாடனைச் சாரல் என்றது ஓர் இடவாகு பெயர். அது முன்னரே வழக்கிறந்து, பின்பு அதன் திரிபான சேரல் என்னும் வடிவமே வழங்கலாயிற்று, எனக் கொள்க.
லகரமெய் யீறு சில சொற்களில் னகரமெய் யீறாகத் திரிதல் இயல்பு.
எ-டு: மேல – மேன
வெல் - வென் (வெற்றி)
கல் - கன் (தோண்டு)
ஆல் - ஆன் (3ஆம் வேற்றுமையுருபு).
இம் முறைப்படி, சேரல் என்பது சேரன் எனத் திரிந்தது. சேரல் என்பது அன்னீறு பெறின் சேரலன் என்றாகும். அது வடமொழி யிற் கேரல(ன்), கேரள(ன்) எனத் திரியும். கேரலன் என்பது கேரன், கேலன் எனத் தொகும். இவற்றுள், கேரன் என்பதைக் கால்டுவெல் அறிஞரும் கேலன் என்பதை ரா. இராகவையங் காரும் சேரன் என்னும் பெயர்க்கு மூலமாகக் கொண்டனர். இது தலை காலாகக் கொண்ட தடுமாற்றம்.
இனி, சார்தல் என்பதற்குச் சாய்தல் என்றும், சார் என்பதற்குத் தாழ்வாரம் என்றும் பொருளிருத்தலால். மலைச்சாரலை அல்லது அடிவாரத்தைக் குறிக்கும் சார் என்னும் சொல்லே சேர் எனத் திரிந்து, வள்ளல் என்பது போல் அல்லீறு பெற்றுச் சேரல் என்றாயது எனக் கொள்ளலும் ஒன்று.
இதுகாறுங் கூறியவற்றால், வரலாற்றடிப்படையிலே மொழி களை ஆய்தல் வேண்டுமென்றும் ஒருவழிப்போக்கான ககர சகர மாற்றமன்றி இருவழிப் போக்கான ககர சகரப் பரிமாற்றமே உண்மையாகக் கொள்ளுதற்குரிய தென்றும், சேரன் என்னும் குடவேந்தன் குடிப் பெயர் தூய தென் சொல்லேயென்றும், கேரன், கேலன், கேரளன் என வடமொழியில் வருபவையெல்லாம் சேரல் என்பதன் திரிபேயென்றும், ஐயந்திரிபற அறிந்துகொள்க.
சேரன் என்னும் பெயரின் மூலம் அல்லது வரலாறு வேறு வகையாகவும் இருந்திருக்கலாம். இற்றை அறிவு நிலையில் நாம் காட்டக்கூடிய மூலம் சாரல் என்பதே. உண்மை எங்ஙன மிருப்பினும். மூவேந்தர் குடிகளும் தூய தமிழ்க் குடிகளா யிருந்தது போன்றே. அக் குடிப்பெயர்களும் தூய தமிழ்ச் சொற்களாகவே இருத்தல் வேண்டும் என்பதை மட்டும் உளத்தில் உறுதியாய் இருத்(து)தல் வேண்டும். மேலையாரிய மொழிகளில் ககரம் சகரமாவதே இயல்பு.
எ-டு: birk - birch, Kirk - church, whilk - which - sik - such, bik bitch, caster - chester, particle - parcel, kenotopion - cenotaph.
இவ் வாரிய மொழியியல்பை அடிப்படையாகக் கொண்டே, தமிழிலும் அவ்வாறு ககரமே சகரமாகுமெனக் கொள்கின்றனர். மேலை மொழி நூலார், தமிழ் வடக்கினின்று வந்ததென அடிப் படையில் அவர் தவறினதே இதற்குக் காரணம். தமிழ் ஆரியத் திற்கு முந்தியதும் மூலமுமாதலின் மொழிநூல் திறவுகோல் தமிழி லேயே உள்ளது. இதை அவர் அறியார். அறியுங்காலம் அணுகி வருகின்றது. (இரா.பி. சேதுப்பிள்ளை மணிவிழா மலர் 1961)
கச்சக்காய்ச் சில்லி விளையாட்டு
ஆட்டின் பெயர்:
கச்சக்காயைச் சில்லியால் அடித்து ஆடும் ஆட்டு கச்சக்காய்ச் சில்லி.
ஆடுவார் தொகை:
பலர் இதை ஆடுவர்.
ஆடுகருவி:
ஆளுக்குப் பத்திற்குக் குறையாத பல கச்சக்காய்களும், அகன்ற சில்லியும், ஓரடி விட்டமுள்ள ஒரு வட்டமும், இதை ஆடு கருவி யாம். சில்லிக்கு வடார்க்காட்டு வட்டத்தில் சப்பாத்தி என்று பெயர்.
ஆடிடம்:
பொட்டலில் இது ஆடப் பெறும்.
ஆடுமுறை:
ஆடகர் நாற்கசத் தொலைவிலுள்ள உத்தியில் நின்று கொண்டு, வட்டத்திற்குள் தத்தம் சில்லியை எறிவர். யாருடையது வட்டத் திற்கு அல்லது வட்டத்தின் நடுவிற்கு மிகநெருங்கி யிருக்கின் றதோ, அவர் முந்தியாடல் வேண்டும். ஏனையோ ரெல்லாம் தத்தம் அண்மை முறைப்படி முன் பின்னாக ஆடுவர்.
ஆடகரெல்லாரும் தத்தம் கச்சக்காய்களை வட்டத்திற்குள் இட்ட பின், ஒவ்வொருவரும் உத்தியில் நின்று கொண்டு, வட்டத் திற்குள் பரப்பி அல்லது குவித்து வைக்கப்பட்டிருக்கும் கச்சக் காய் களைத் தத்தம் சில்லியால் அடித்தல் வேண்டும். வட்டத்திற்கு வெளிச் சென்ற காய்களையெல்லாம் ஆடுவோர் எடுத்துக் கொள்ளலாம்.
சில்லி வட்டத்திற்குள் செல்லாவிடினும், வட்டத்திற்குள் சென்றும் காய்களை அடித்து வெளியேற்றாவிடினும், காய்களை வெளியேற்றியக்காலும் சில்லியும் உடன் வெளியேறாவிடினும், தவறாம். தவறிவிடின் அடுத்தவர் ஆடல் வேண்டும்; தவறாவிடின் தொடர்ந்து ஆடலாம்.
இறுதியில், மிகுதியான காய்களை வைத்திருப்பவர் கெலித்தவராவர்.
சேலம் வட்டாரத்தில் கச்சக்காய்க்குப் பதிலாகச் சிறு சுருட்டுப் பெட்டியையும் வைத்து ஆடுவதுண்டு. அது சிகரெட்பாகுச் சில்லி எனப்படும். (த.நா.வி.)
கச்சு - கச்சம்
கக்ஷ என்னும் அரையிற் கட்டுவது என்று பொருட் காரணங் கூறுவர் வடவர். (வ.வ: 101.)
கச்சை - கக்ஷ்யா
கட்டு - கச்சு - கச்சை = கட்ட வுதவும் நாடாப் பட்டை. (வ.வ: 101.)
கசடு
கசளுதல் = கலத்தல், கலங்குதல், கலவையாதல் மண்டியாதல், கசள் - கசண்டு = அடிமண்டி. கசண்டு - கசடு = மண்டி, கோது, குற்றம், கசடு - கசட்ட (வ.).
கஞ்சி
கஞ்சி - காஞ்சீ காஞ்சிக, காஞ்சீக. கஞ்சு = நீர்ப்பதமான அல்லது குழைந்த சோற்றுணவு. ம. fŠÁ, f., bjh., து. கஞ்சி (ப).
வடமொழியில் மூலமில்லை. புளித்த கஞ்சி என்பதும் பொருந் தாது. இளம்பதத்தைக் குறிக்கும் கஞ்சி என்னும் சொல் இளமையைக் குறிக்கும் குஞ்சு (குஞ்சி) என்னும் சொல்லொடு தொடர்புடையது. (வ.வ: 101)
கட்கம்
கட்கம் - கக்ஷ (வே.)
கள் - கட்கு - கட்கம் = அக்குள் (மறைவான இடம்).
கதிர்மணி கட்கத்துத் தெறிப்ப (பெருங். உஞ்சைக். 38:333),
கட்கம் - கக்கம்.
கட்டிச் சுருட்டித் தம் கக்கத்தில் வைப்பர் (பட்டினத். பொது, 30).
கஷ் (தேய்), கச் (ஒலி) என்பவற்றை வடவர் மூலமாகக் காட்டுவது பொருந்தாது.
மறைவிடம் என்னும் பொருளில் இருக்கு வேதத்திலும், அக்குள் என்னும் பொருளில் அதர்வ வேதத்திலும், கக்ஷ என்னும் சொல் ஆளப்பெற்றிருப்பதாக மா.வி.அ. கூறும். (வ.வ: 101)
கட்சி
கட்சி - கக்ஷ
கட்சி = காடு. கள் - கடு - காடு. கள் + சி = கட்சி.
கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினும் (மலைபடு. 235).(t.t: 101)
கட்டம்
கட்டம் - கஷ்ட
கடு - கடுமை = வன்மை, வருத்தம், செயற்கருமை.
கடு - கட்டம். ஒ.நோ: அடு - அட்டம், கொடு - கொட்டம், அறு - அற்றம், செறு - செற்றம்.
வடமொழியில் மூலமில்லை. ஒரு கால் கஷ் என்பதன் இறந்த கால வினையெச்சமாயிருக்கலாமென்று மா.வி.அ. கூறும். fZ = njŒ, R w©L; nrj¥gL¤J (gh.); சேதப்படுத்து, கொல், அழி (தாது.).
கட்டாயம்
ஒன்றைக் கண்டிப்பாய்ச் செய்து தீர வேண்டுவதைக் கட்டாயம் என்பர். கட்ட வேண்டிய ஆயம், கட்டாயம். கட்டுதல் செலுத்துதல்
ஆயம் - வரி. வரிகட்டுவது. பொதுவாக மக்கள் விரும்பாததும் தவறாது செய்ய வேண்டுவதுமான காரியம். வரிகட்டுவது போன்ற கண்டிப்பு, கட்டாயம். (சொல். 15.)
கட்டில்:
கட்டில் - கடவா (kh) (வ.வ.101.)
கட்டு – கட்டில்
கட்டுத்தாலி
ஒரு முறை மணக்கப்பட்டவளை மறுமணஞ் செய்தல் சிறப்பில் லாததாகக் கருதப்படுவதால், கட்டுப்பட்டவள் மணத்தில் மணமுழா (கலியாண மேளம்) இன்றியே தாலி கட்டப்படுவது முண்டு. அது கட்டுத் தாலியென்றும் மண முழவு உள்ளது கொட்டுத் திருமணம் என்றும் பெயர் பெறும் கைம்பெண் மணம் பெரும்பாலும் கட்டுத் தாலியாகவே யிருக்கும். (த.தி.15.)
கட்டை
கட்டை - காஷ்ட
கள்- கட்டு - கட்டை = திரண்ட மரத்துண்டு, திரண்ட விறகு. வட மொழியில் திரட்சி என்னும் சிறப்புப் பொருளில்லை. (t.t.: 101.)
கடகம்
கடகம் - கடக (t)
குடா = வளைவு. குடங்குதல் = வளைதல். குடந்தம் = வணக்கம். குட - குடம் - (குடகம்) - கடகம் = வளையல், தோள்வளை, வட்டம், வட்டமான பெருநார்ப் பெட்டி, நண்டு, நகர் சூழ்ந்த மதில், மதில் சூழ்ந்த ஒட்டர நாட்டுத் தலைநகர். (t.t.: 101-102.)
கடகன்
கடகன் - கடக (gh, t)
கடத்தல் = மிஞ்சுதல், தேர்தல், வெல்லுதல், கட - கடகன் = கடந்தவன், தேர்ந்தவன். (t.t.: 103.)
கடப்பாடு
கடப்படுவது கடப்பாடு; கடமையாகக் கொண்டு ஒழுகுவது.
கடம்பு
கடம்பு - கதம்ப
கடம்பு - கடம்பம் - கதம்ப (வ.). அம்மீறு பெற்ற வடிவே ஈறுகெட்டு வடமொழியிலுள்ளது. அதோடு, கடம்பம் என்னும் மரப்பெயரும் கதம்பம் என்னும் கலவைப் பெயரும் ஒன்றாக மயக்கப்பட்டுள்ளன. (t.t.: 103.)
கடவுள்
மாந்தன் இயற்ற முடியாத இயற்கையை இயற்றிய ஒரு தலைவன் இருத்தல் வேண்டும் என்றும் அவன் எல்லாவற்றையும் கடந்தவன் என்றும் கண்டு அல்லது கொண்டு அவனைக் கடவுள் என்றனர் முதற்றமிழர்.
(கடவுள் என்னும் பெயர்க்கு எல்லாவற்றையும் இயக்குபவன் அல்லது செலுத்துபவன் என்றும் பொருளுரைக்கலாம். கடவுதல் - செலுத்துதல்) சொல். 33
கடவுள்
சிறு தெய்வம் - இம்மைப் பயனையே அளிப்பவனாகக் கருதப் பெறும் இடத்தெய்வங்களும், பூதத் தெய்வங்களும், நடுகல் தெய்வங்களும்.
பெருந்தேவன் - இம்மையில் இவ்வுலக இன்பத்தோடு மறுமையில் வீட்டையும் அருளும் இறைவன். எல்லாவற்றையும் கடந்து நிற்கும் கடவுள். (தி.ம.14.)
கடவுள் உண்டா?
கடவுள் உண்டென்பாரும் இல்லை யென்பாரும், தொன்று தொட்டு உலகில் இருந்து வருகின்றனர். உண்டென்பாரே இன்றும் பெரும்பாலரேனும், இல்லை யென்பார் தொகை வரவர வளர்ந்து வருகின்றது.
கடவுள் உண்டென்பதற்குச் சான்றுகள்
(1) கதிரவக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள் எல்லாம், இடையறாது ஓர் ஒழுங்காக இயங்கி வருகின்றன.
ஓர் ஊரில் ஊர்காவலோ அரசியலாட்சியோ சிறிது நேரம் இல்லாவிடினும், கலகமுங் கொள்ளையும் கொலையும் நேர்கின்றன. உயிரற்ற நாளும் கோளும் பாவையாட்டுப் போல் ஒழுங்காக ஆடிவரின், அவற்றை ஆட்டும் ஓர் ஆற்றல் இருத்தல் வேண்டும். அவ் வாற்றல் அறிவற்ற தாயிருக்க முடியாது. அவ் வறிவே இறைவன்.
2. இவ் வுலகம் முழுவதற்கும், கதிரவன் பகல் விளக்காகவும் திங்கள் இரா விளக்காகவும் எண்ணிற்கும் எட்டாத காலத்திலிருந்து விளங்கி வருகின்றன.
ஒரு வீட்டில் விளக்கேற்றி வைப்பது அதிற் குடியிருக்கும் மக்கட்கே. மக்களில்லா வீட்டில் விளக்குத் தானாகத் தோன்றி எரியாது. பல வுலகங்கட்கும் இரு சுடரையும் விளக்காக ஏற்படுத்தியவன் ஒருவன் இருத்தல் வேண்டும்.
வேலை செய்யாத தூக்க வேளையாகிய இராக்காலத்திற்கு, வெப்பமான நெருப்பொளி விளக்காகாது குளிர்ந்த நிழலொளி விளக்காக விருப்பதும், கவனிக்கத்தக்கது.
3. பிற கோள்களைப் போற் சுற்றாது ஒரே யிடத்திலிருக்கும் கதிரவன், பத்துத் திசையும் ஒளி சமமாகப் பரவுமாறு உருண்டையா யிருப்பதும், அளவிடப் படாத நீள் பெருங் காலம் எரிந்து வரினும் அதன் எரியாவி குன்றி யணை யாதிருப்பதும், இயற்கைக்கு மாறான இறும்பூதுச் செய்தி யாதலால், அதை யியக்கி யாளும் ஒரு பரம் பொருள் இருத்தல் வேண்டும்.
4. கோள்கள் ஒன்றோடொன்று முட்டாது தன் தன் பாதை வட்டத்தில் இயங்குமாறும், இவை சுழலுங்கால் அவற்றின் மேலுள்ள பொருள்கள் நீங்காவாறும், ஒவ்வொன்றையுஞ் சூழ ஒரு கவர்ச்சி மண்டலம் அமைந்திருப்பதும், இயற்கைக்கு அப்பாற் பட்ட ஓர் ஆற்றலின் அமைப்பே.
5. காலமும் இடமும் தொடக்கமும் ஈறும் இல்லாதவை யாதலால், இற்றை மக்களுலகந் தோன்றுமுன், எண்ணிக்கை யற்ற உயிருலகங்கள் தோன்றி யழிந்திருத்தல் வேண்டும். இதைத் தான்,
படைத்து விளையாடும் பண்பி னோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
தன்னில் வேறு தானொன் றிலோனும்
அன்னோன் இறைவ னாகும்என் றுரைத்தனன்
- மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியத் தருக்கி (சைவவாதி).
6. மாந்தன் தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டாயிற்றென வைத்துக் கொள்ளினும், நூற்றுக்கணக்கான தலை முறைகள் கழிந்திருத்தல் வேண்டும். பத்துக்கணக்காகத் தொடங்கிய மக்கட் தொகை இன்று நூறு கோடிக் கணக்காகப் பெருகியுள்ளது. ஒவ்வொரு தலை முறை யிலும் எத்தனையராயினும், அத்தனையரும் அடையாளங் காணுமாறு வெவ்வேறு முகவடிவிலுள்ளனர். கை வரையும் வேறுபட்டுள்ளது. இது அறிவு நிரம்பிய ஒரு பேராற்றலின் செயலே யாகும்.
7. கடவுளை நம்பினோர் கைவிடப் படார். என்பது, இன்றும் சிலர் வாழ்க்கையில் மெய்ப்பிக்கப்படுகின்றது.
8. உடல்நலம், மனநலம், மதிநலம் முதலிய நலங்கள் உள்ளாரும் இல்லாரும் படைக்கப்பட்டிருத்தல்.
9. பஞ்சம், கொள்ளைநோய், பெரு வெள்ளம், நில நடுக்கம் முதலிய இயற்கை அழிவு நிகழ்ச்சிகள் நேர்தல்.
கடவுள் இல்லை யென்பதற்குக் காட்டப்படும் சான்றுகள்
(1) கடவுள் புறக் கண்ணிற்குப் புலனாவதில்லை.
2. ஒன்றோடொன்று முரண்பட்ட பல்வேறு மதங்கள் உலகில் வழங்கி வருகின்றன.
3. நல்லோர் பலர், வறுமை, நோய், பிறரால் துன்பம் முதலிய வற்றால் வருந்திக் குறுவாழ்க்கையராய்ச்சாக, தீயோர் பலர் எல்லா வகையிலும் இன்புற்று நீடு வாழ்கின்றனர்.
4. பல அஃறிணை உயிரினங்கள் பிறவற்றைக் கொன்று தின்பனவாகவே படைக்கப்பட்டுள்ளன.
5. சிலர் எத்துணை உருக்கமாய் இறைவனை வேண்டினும், தாம் விரும்பியதைப் பெறுவதில்லை.
இங்ஙனம், கடவுள் உண்டென்பதற்கும் இல்லை யென்பதற்கும் காட்டப்படும் சான்றுகளுள் உண்டென்பதற் குரியவையே மிகுந்தும் வலிமையுள்ளனவாகவும் இருக்கின்றன. காட்சி யளவை போன்றே கருத்தளவையும் உண்மையறியும் வழியாகும்.
கடவுள் எங்கும் நிறைந்து ஆவி வடிவிலிருப்பதால், அவரை ஒருவனும் புறக்கண்ணாற் காண முடியாது. முரண்பட்ட மதங்கள் மாந்தர் படைப்பு. நல்லோர்க்கு மறுமையில் நல் வாழ்விருக்கலாம். பல் பிறவி நம்பிக்கையாளர் நல்லோர் துன்பத்தைப் பழவினைப் பயன் என்பர்.
மாந்தன் மதியாற்றல் மட்டிட்டதாதலின், இறைவன் ஆட்சி யிலுள்ள எல்லாவற்றையும் அறிய முடியாது.
ஆழ வமுக்கி முகக்கினும் ஆழ்கடலில்
நாழி முகவாது நானாழி. (மூதுரை. 19).
நல்லோர்க்கு நேரும் தீங்குகட்கு, அவர் பழம்பிறப்பிற்செய்த தீவினைகளைக் கரணியமாகக் காட்டுவர் கொண் முடிபாளர்.
எங்ஙன மிருப்பினும், இரு சாராரும் தத் தம் கொள்கையை எதிர்க் கொள்கையார் நம்புமாறு நாட்டமுடியா திருப்பதால், கருத்து வேறுபாட்டிற் கிடந் தந்து, ஒரு சாராரை யொரு சாரார் பழிக்காதும் பகைக்காதுமிருப்பதே உண்மையான பகுத் தறிவாம்.
மேலும், கடவுள் உண்மையாக இல்லையெனின், நம்பாத வனுக்குக் கேடில்லை. ஒருகால், உள்ளாரெனின் அவனுக்குக் கேடுண்டாம். ஆதலால், நம்பா மதத்தினரும் நம்பு மதத்தைக் கடைப்பிடிப்பதே சாலச் சிறந்ததாம்.
கடாகம்
கடாகம் - கடாஹ
கடகம் - கடாகம் = வட்டமான கொப்பரை, பெருவெளிக் கோளகை. (வ.வ: 103)
கடி
கடி-காத் (khad) - இ.வே.
கடித்தல் = பல்லால் வெட்டுதல், கடித்துத் தின்னுதல். (வ.வ: 103)
கடிகை1
கடிகை1 - கட, கடீ, கடிகா (gh, t)
குள் - குண்டு = குழி, ஆழம். குண்டு - குண்டான் = குழிந்த அல்லது குண்டான கலம். குண்டான் - குண்டா.
குண்டு - குண்டிகை - குடிகை - குடுக்கை - குடுவை.
குடிகை = நீர்க்கலம் (கமண்டலம்).
அரும்புனற் குடிகை மீது (கந்தபு. காவிரி. 49)
குடிகை - கடிகை = நீர்க்கலம், நாழிகை வட்டில், நாழிகை, மங்கல நாழிகை குறிக்கும் கணியன், மங்கலப் பாடகன்.
கடிகை - கடிஞை. வடவர் காட்டும் கட (gh) என்னும் மூலம் குடம் என்னும் தென்சொல்லின் திரிபே.
கடிகை + ஆரம் = கடிகையாரம் - கடிகாரம்.
ஆரம் என்பது ஓர் ஈறு.
ஒ.நோ: கூடாரம், கொட்டாரம், வட்டாரம்.
கடீயந்திர, கடிகா யந்திர என்னும் வடசொற் புணர்ப்பினின்று கடிகாரம் என்னும் தென்சொல் வந்ததன்று.
கடிகை2 -
கட, கடா (gh, t) குடி = குலம், கூட்டம். குடி - குடிகை - கடிகை = சிறு கூட்டம், ஊரவை.
இங்குக் கை என்பது சிறுமைப்பொருட் பின்னொட்டு (dim.)
வடவர் காட்டும் கட் (gh) என்னும் மூலம் தொடர்பற்ற பல்வேறு பொருள்கொண்ட சொல். கூடுதல் என்னும் பொருளில் அது குட என்னும் தென்சொற்றிரிபாகும்.
குல் - குள் - குழு - குழ - குட - குடம் = திரட்சி. குடத்தல் = கூடுதல், திரளுதல். (வ.வ: 103-104)
கடிசொல்
கடிசொ லில்லை காலத்துப் படினே (எச்ச. 56)
என்பது ஒரு தொல்காப்பியச் சூத்திரம்.
இதற்குச் சேனாவரையர் உரை வருமாறு
இதன் பொருள்: இவை தொன்றுதொட்டன வல்லனவென்று கடியப்படுஞ் சொல்லில்லை; அவ்வக் காலத்துத் தோன்றி வழங்கப்படு மாயின் என்றவாறு.
உதாரணம்: சம்பு, சள்ளை, சட்டி, சமழ்ப்பு என வரும். இவை தொன்றுதொட்டு வந்தனவாயின். முதலாகாதனவற்றின்கண்
சகரக் கிளவியு மவற்றோ ரற்றே
அ ஐ ஔவெனு மூன்றலங் கடையே (தொல். எழுத்து. 62)
என விலக்கார் ஆசிரியர்: அதனான் அவை பிற்காலத்துத் தோன்றிய சொல்லேயாமென்பது.
இஃது எழுவகை வழுவமைதியுள் ஒன்றாகாது ஓர் பாதுகாவ லாதலிற் கிளவியாக்கத் தியைபின்மையான் ஈண்டுக் கூறினா ரென்பது.
இனி ஒரு சாராருரை: இன்ன அநுவதிக்குங் காலமா மக்காலத்து, அவை வழுவன்மை எல்லா ஆசிரியர்க்கும் உடம்பாடாகலின், அதனைத் தழுவிக் கொண்டவாறென்க. இவை யிரண்டும் இச் சூத்திரத்துக்குப் பொருளாகக் கொள்க.
இனி ஒன்றென முடித்தலாற் புதியன தோன்றினாற் போலப் பழையன கெடுவனவும் உளவெனக் கொள்க. அவை அழான் புழான் முதலியனவும், எழுத்திற் புணர்ந்த சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம்.
தன்னுரையும் மன்னுரையுமாகச் சேனாவரையர் கூறியஈருரை களுள், முன்னுரையே சூத்திரத்திற்குப் பொருந்திய உண்மை யுரையாம்.
சம்பு சள்ளை சட்டி சமழ்ப்பு என்னுஞ் சொற்கள், தொல் காப்பியராற் கொள்ளப்படாவிடினும் அல்லது தொல்காப்பியர் காலத்து வழங்கவேயில்லை யென்று (ஒருசாரார் கொள்கைப்படி) கொள்ளினும். அவை தூய தென்சொற்கள் என்பதை எவரும் மறுக்கமுடியாது.
சம்பு என்பது ஒருவகைக் கோரை. சம்புதல் என்பது எரிதல். சம்பு - சாம்பு - சாம்பல். சாம்பன் - சாம்பான் = பிணத்தைச் சுடுபவன்.
அவ்வக் காலத்தில் தோன்றும் புதுச் சொற்களைத் தழுவிக் கொள்ள வேண்டுமென்னும் விதியைக் கூறும் வேறொரு தொல்காப்பியச் சூத்திரம்.
குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்
மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும்
செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும்
குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்
இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்
எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்
முடிய வந்த அவ்வழக் குண்மையின்
கடிய லாகா கடனறிந் தோர்க்கே (மரபு. 69)
என்பது இதன் பொருள் வெளிப்படை இதன் உரையில். பேராசிரியர்,
கடனறிந்தோர் என்றதனான், வழக்கினுஞ் செய்யுளினும் அவை வந்தமையிற் கடப்பாடறிவோர்க்குக் கடியலாகாதென்ற வாறு. இன்னும் இப்பரிகாரத்தாலே கோழியை வாரணமென்ற லும், வெருகினை விடையென்றலும் போல்வன பலவுங் கொள்க. அவை,
கான வாரண மீனுங்
காடாகி விளியு நாடுடை யோரே (புறம். 52)
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ (திருமுருகு. 20)
வெருக்கு விடையன்ன வெருணோக்குக் கயந்தலை (புறம். 324)
என வரும், எனக் கூறியுள்ளார்.
இச் சூத்திரத்திலும் இதனுரையிலும் காட்டப்பெற்ற சொற்கள் யாவும் தூய தமிழ் என்பது வெளிப்படை.
கடுவன் = கடுமையானது. கோட்டான் = கோட்டில் வசிப்பது.
கோடு = மரக்கிளை. தத்தை = இலை காய் கனியொடு தொத்திக் கொண்டு கிடப்பது.
தொத்துதல் = ஒட்டுதல். உடுமீன் தொத்தப் பொலிகன கக்கிரி (கம்பரா. பிரமாத். 117)
தொத்துதல் = தொங்குதல். செச்சைக் கண்டத் தொத்தூன் போல (ஞானா. பாயி. 5, 12)
இவ் விரு பொருளும் தத்தைப் பெயர்க்குப் பொருந்தும். தொத்து - தொத்தை - தத்தை.
பூசை என்பது வீட்டுப்பூனை. பூசு - பூசை - பூனை - பூஞை. நிலத்திற் பூசினாற்போல மெத்தென்று நடப்பது பூசை. பூனையைப் பூசு பூசு என்றழைப்பது நெல்லை வழக்கு.
சேவல் என்பது பொதுவாய் ஆண்பறவையைக் குறிப்பினும், ஆண் விலங்கையும் குறிப்பதற்குச் சிறிதும் விலக்கில்லை. சேவல் என்பதன் மூலமான சே என்னுஞ் சொல் விலங்கின் ஆணைக் குறித்தல் காண்க.
சே = காளை. சேங்கன்று = காளங்கன்று. ஆண்கன்று. சே - சேவு - சேவல்.
ஏனம் = கரிய விலங்கு. பன்றி. இருமை = கருமை. இரு - எரு - எரு மை - கரிய மாடு. இரு - இனு - எனு - ஏனு - ஏனம். ஏனு - ஏனை யானை. தெலுங்கில் எருமையை எனுமு என்றும், யானையை ஏனுக என்றும் கூறுதல் காண்க. யானையை ஏனையென்று இன்றும் தென்னாட்டுக் குடியானவர் கூறுவர்.
கண்டி = கடுமையானது. கண்டம் = கடுமை, கொடுமை. கண்டன் = கொடியவன். ஆணெருமை மிகக் கொடியது. அதன் கொடு மையை இயற்கைநிலையில்தான் காணமுடியும். புலியினும் மடங்கலினும் காட்டெருமை கொடிதா யிருத்தல்பற்றியே. அது கூற்றுவனுக்கு ஊர்தியாகக் கூறப்பட்டதென்க. எருமைமறம் என்று புறப்பொருள் வெண்பா மாலையும் (7: 13).
ஒருவ னொருவனை யுடைபடை புக்குக்
கூழை தாங்கிய எருமையும் (பொருள். 72)
என்று தொல்காப்பியமும் கூறும் புறத்துறையை நோக்குக.
வாரணம் = நிலத்தையும் குப்பையையும் வாரிக் கிளைப்பது. கோழி என்னும் பெயரும் இப் பொருளுடையதே.
விடை = பருத்தது. பருத்த ஆண்விலங்கு. விடைத்தல் = பருத்தல். விலங்கிலும் பறவையிலும் ஆண் பருத்திருத்தலைக் காண்க.
இச்சொற்களெல்லாம் தூய தென்சொற்களாயிருத்தலாலேயே கடிய லாகா கடனறிந் தோர்க்கே என்றார் தொல்காப்பியர். இதனால், அவ்வக் காலத்துத் தோன்றும் புதுப்புது சொற்களெல் லாம் தூய தென் சொற்களாயிருந்தால், அவற்றை விலக்குதல் கூடாது என்பதே. கடிசொ லில்லை காலத்துப் படினே என்னும் சூத்திரத்தின் பொருளாகும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே (நன். 452)
என்னும் பொருளும் இதுவே.
இக்காலத்துத் தோன்றிக் கடியலாகாச் சொற்கள். மளிகை (பலசரக்குக் கடை). செயலாளன், சொற்பொழிவு, மாநாடு, தேர்வு (பரீட்சை) முதலியன.
மாந்தர் என்னும் சொல்லின் ஒருமை வடிவம் வழங்கிய பண்டை நூல்கள் இறந்துபட்டமையின், சில புலவர் மாந்தன் என்னும் சொல்லை ஏற்றுக் கொள்கின்றிலர். பலர்பாற் சொல்லினின்று ஒருமைச் சொல்லை வகுத்துக் கொள்வதற்குப் புலமை வேண்டுவ தில்லை; பகுத்தறிவே போதியதாகும்.
சிலர் புலவர். அல்லது புலவர் சிலர் என்று வழங்கிய பண்டை வழக்கு வீழ்ந்து. இன்று சில புலவர் என்னும் வழக்கு எழுந் துள்ளது. சில என்னும் சொல் அஃறிணை வடிவின தென்னுங் காரணத்தினால், அறிஞர் சிலர் அதனை ஏற்கின்றிலர். ஆயினும், நல்ல, பெரிய, வந்த, போன முதலிய அகரவீற்றுக் குறிப்புப் பெயரெச்சங்களும் தெரிநிலைப் பெயரெச்சங்களும் போல, சில பல முதலிய அகரவீற்றுக் குறிப்புப் பெயரெச்சங்களும் கொள்ளப் படுவதற்குத் தடை யில்லை யென்க.
இவையும் இன்னோரன்ன பிறவுமே கடிசொ லில்லை காலத்துப் படினே என்னும் சூத்திரத்தால் தழுவப்படுமேயன்றி, சபாஷ்,சலாம் என்ற சொற்களும் இவைபோன்ற பிறவுமல்ல என்பது, தமிழரும் தமிழ் மாணவரும், தமிழ்ப் புலவரும் கவனித்தறி வாராக.
சபாஷ் சலாம் என்ற உருதுச் சொற்கள் இற்றைக்கு 300, 400 ஆண்டுகட்கு முன்னரே சிறந்த தமிழிலக்கியங்களில் இடம் பெற்றுவிட்டன என்று சில புலவர் கருதுகின்றனர். தமிழில் சொற்கள் தழுவப் பெறுதற்கு அவற்றின் தகுதியும் தூய்மையும் காரணமாகுமேயன்றி, அவை வழங்கும் 300, 400 ஆண்டுக்காலம் காரணமாகாது. அங்ஙனம் காலம் காரணமாயின். 23 ஆம் நூற்றாண்டில் தழுவப்படுமாறு இன்று எவரும் எத்துணை அயன்மொழிச் சொற்களையும் தமிழிற் புகுத்தலாமே!
இனி, சபாஷ் சலாம் என்ற உருதுச் சொற்களைத் தமிழிற் புகுத்தியவர் புலவர் பெருமக்கள் (அருணகிரிநாதரும், குமர குருபரரும்) என்று ஒரு காரணங் காட்டுகின்றனர். அவற்றைத் தழுவ விரும்பும் தமிழ்ப்புலவர்.
இத்தகைய இடர்ப்பாட்டு நிலைகளில், தமிழ் சிறந்ததா, தமிழில் வீணாக அயற்சொற்களைப் புகுத்தி அதன் தூய்மையைக் குலைக்கும் புலவர் சிறந்தவரா என்று நோக்குதல் வேண்டும். தமிழ்ப்புலவரினும் தமிழ் சிறந்தது என்பதை எவரும் மறுக்கார்.
மேலும், அருணகிரிநாதரும் குமரகுருபரரும் இருந்த காலம் சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் இல்லாத காலம். வட மொழி உண்மையில் தேவமொழி யென்றும், தமிழ் அதன் கிளை மொழியென்றும், வடசொற்கள் கலப்பது தமிழுக்குப் பெருமை என்றும் கருதப்பட்ட காலம்; பல துறைகளில் பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தாது தமிழன் தன்மான மற்றிருந்த காலம். இத் தகைய நிலையில் வேண்டாது புகுத்தப் பெற்ற அயற்சொற்களை அளவையாகக் கொள்வது, தமிழறிஞர்க்குச் சற்றும் பொருந்தாது.
எம்மொழியிலாயினும் ஒருபொருட்கு அல்லது கருத்திற்குச் சொல்லிருக்கும்போது, அதை நெகிழவிட்டு அதற்கீடாக அயற் சொல்லை மேற் கொள்வது அறிவுடைமையாகாது. தமிழுக்கோ இவ் வரம்பு மிகக் கண்டிப்பானது.
அயற்சொற்களால் மட்டுமன்றி, அயன்மொழிகளாலும் அள விறந்து நெருக்குண்டு. இருப்பதா இறப்பதா என்னும் நிலையில் தமிழ் தத்தளிப்பது இக்காலம். இத்தகைய நெருக்கடியான நிலையில், பொறுப்பு வாய்ந்த புலவர் தமிழின் தூய்மையையும் நிலையை யும் காக்கவேண்டியது கடன்.
தமிழுக்குக் கேடான பல அயல்நாட்டுக் கருத்துகள் தமிழரின் உள்ளத்திற் குடிகொள்ளத் தொடங்குங்கால், அவற்றைப் பெயர்த் தெறிவது தமிழ்ப் புலவர் கடமையாயிருக்க, அங்ஙனம் செய்யாது அவற்றை மேன்மேலும் வேரூன்றச் செய்வது அவர்க்குத் தகுமா? எது தமிழ் என்றும், எங்ஙனம் தமிழை வளர்த்தல் வேண் டும் என்றும், அறியாது மாணவர் இடர்ப்படும் இக்காலத்தில், தமிழ்ப் புலவரே தமிழைத் தளர்த்தற்கு அடிகோல்வது எத்தகைய கேடான செயல்.
தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமை முதலிய பண்பு களை அறிதற்குப் பிற்காலத் தமிழாகிய புராணத் தமிழும் கல் வெட்டுத் தமிழும் உறுதுணை செய்யா; மேற்கணக்கு நூல்களை யும் உழவர் தமிழையும் நோக்குதல் வேண்டும். இங்ஙனம் நோக் காது மனம் போனவழி பேசுவதும் எழுதுவதும். ஒருவனுக்குப் பகைவர் அவன் வீட்டாரே என்னும் மறை மொழியையே மெய்ப்பிக்கின்றது.
ஏதேனும் ஒரு புதுக்கருத்துத் தோன்றினால் அல்லது கொள்ளப் பட்டால். அதற்கு ஏற்கெனவே உள்ள பழஞ்சொல்லினின்றே புதுச்சொல் திரித்துக் கொள்ள வேண்டும். இதுவே திருந்திய மொழியிற் கையாள வேண்டிய நெறிமுறையாகும்.
Radius என்னும் பழஞ் சொல்லினின்று Radio என்னும் புதுச்சொல், ஆங்கிலத்தில் திரிக்கப்பட்டிருத்தல் காண்க.
புதிய மேலைக் கலைக்கருத்துகளை யுணர்த்தத்தக்க புதுச் சொற்களை ஆக்கிக்கோடற்கு வேண்டிய கருவிச் சொற்கள், தமிழில் நிரம்பவுள. புதுக்கருத்துகளை யுணர்த்தும் புதுச்சொற் களைப் புனைதற்கே தமிழ் வளம்பெற்றிருக்கும்போது. பழங் கருத்துகளை யுணர்த்தும் பழஞ்சொற்களைத் தள்ளிவிட்டு அவற்றுக்குப் பதிலாக அயற்சொற்களைப் புகுத்தித் தமிழின் தூய்மையைக் குலைத்தற்குத் தமிழ் எங்ஙனம் இடந்தரும்!
ஆகவே, சபாஷ் சலாம் என்ற அயற்சொற்களால் தமிழுக்குப் பெருந்தீங்கேயன்றிச் சிறு நன்மையுமில்லை யென்றுகொள்க. (செந்தமிழ்ச் செல்வி மே 1949)
கடிமரம்
பண்டைத் தமிழரசர் ஒவ்வொரு மரத்தைக் கடிமரம் அல்லது காவல் மரமாகக் கொண்டு அதைப் பகைவர் அண்டாதபடி கருத்தாய்க் காத்து வந்ததனாலும், கா என்னும் சோலைப் பெயர்க்குக் காத்தற்பொருளும் இருப்பதாலும், ஒவ்வொரு திருப்பதியிலும் கடவுள் உருவிற்கு நிழல் தந்து நிற்கும் மரம் தலமரம் எனப் போற்றப்படுதலினாலும், முற்காலத்தில் மக்கள் அடிமுதல் முடிவரை கிழங்கும் பாலும் கீரையும் பூவும் காயும் கனியும் நிழலும் உறையுளுமாகப் பலவகைப் பயனுதவிக் காத்த மரங்களையும் சோலைகளையும் தெய்வங்களாக வழிபட்டு வந்தனர் என ஊகிக்க இடமுண்டு. (சொல். 19.)
கடு
கடு 1 - கட் (dd)
கடு = வன்மை (கடினம்), கடுமை. கட்டெனல் = வன்மையா யிருத்தல்.
கடுக்கெனல் = வன்மையாயிருத்தல்.
கடு2 - கடு (t)
கள் = முள். கள்ளி = முட்செடி. கள் - கடு = முள் (திவா).
கார்ப்பு, கைப்பு, மிகுதி, வெம்மை, கொடுமை.
கடு - கடி = கூர்மை, மிகுதி, கார்ப்பு.
வடமொழியில் மூலமில்லை. க்ருத் (வெட்டு) என்னும் வட சொல் கத்து (வெட்டு) என்னும் தென்சொற் றிரிபாதலின், மூலமாகாது. (t.t.: 104)
கடுகு
கடுகு - கடுக (t) - இ.வே.
கடு - கடுகு = காரமுள்ள பொருள்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது. என்பது பழமொழி. கடுகு - கடுகம்.
அம்மீறு பெற்ற வடிவே ஈறுகெட்டு வடமொழியிலுள்ளது. (t.t.: 104)
கடைக்கழகம்
கடைக்கழகக் காலக் குறுநில மன்னர்
அகுதை, அத்தி, அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, அதியமான் நெடுமானஞ்சி, அதியமான் நெடுமானஞ்சி மகன் பொகுட்டெழினி, அந்துவஞ் சாத்தன், அந்துவங்கீரன், அம்பர் கிழான் அருவந்தை, அவியன், ஆதனழிசி, ஆதனுங்கன், ஆந்தை, ஆமூர் மல்லன், ஆய் அண்டிரன், இயக்கன், இருங்கோவேள், இளங்கண்டீரக்கோ, இளங்குமணன், இளவிச்சிக்கோ, இள வெளிமான், ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன், எயினன், எழினி, ஏற்றை, ஏறைக்கோன், ஏனாதி திருக்கிள்ளி, ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன், ஓய்மான் நல்லியக் கோடன், ஓய்மான் வில்லியாதன், கங்கன், கட்டி, கடிய நெடுவேட்டுவன், கண்டீரக் கோப்பெரு நள்ளி, கந்தன் (நாஞ்சிற் பொருநன்), கரும்பனூர் கிழான், குமணன், கொண்கானங் கிழான், சிறுகுடிகிழான் பண்ணன், சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ் சாத்தன், சோழியவேனாதி திருக்குட்டுவன், தந்துமாறன், தரும புத்திரன், தழும்பன், தாமான் தோன்றிக் கோன், தென் பரதவர், தேர்வண் மலையன், தொண்டைமான், நம்பி நெடுஞ் செழியன், நன்னன், நன்னன் சேய் நன்னன், நாஞ்சில் வள்ளுவன், நாலைகிழவன்
நாகன், நெடுவேளாதன், பழையன், பிட்டங் கொற்றன், புல்லி, பூந்துறை (புன்றுறை), பொறையாறு கிழான், மல்லி கிழான் காரியாதி, மலையமான் சோழியவேனாதி திருக்கண்ணன், மலையமான் திருமுடிக்காரி, முக்காவல் நாட்டு ஆமூர் மல்லன், முதியன், மூவன், மையற்கோமான் மாவன், மோகூர்ப் பழையன், வல்லார் கிழான் பண்ணன், வல்வில் ஓரி, வாட்டாற்றெழினி யாதன், விச்சிக்கோன், வெளிமான், வேங்கை மார்பன், வேள் எவ்வி, வேள் பாரி, வையாவிக்கோப் பெரும் பேகன் முதலியோர்.
இவருள், தொண்டைமான் நன்னன் முதலிய சிற்றரசரும், வள்ளல் களும் முடியணிந்தவராவர். கடைக் கழகக் காலத்திற்பொதுவாக மூவேந்தர் கைகளும் தாழ்ந்துவிட்டதனால், குறு நில மன்னர் தலையெடுத்து முடியணிந்து கொண்டனர். சேரன் செங்கட்டுவன் ஏழரசரை வென்று, அவர் முடிகளை மாலையாக அணிந்திருந் தான். அவ்வெழுவருள் ஐவர் குறுநில மன்னர்.
வில்கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை (குறுந். 328)
என்பது, குறுநில மன்னன் வேந்தரை எதிர்த்ததைக் கூறுதல் காண்க .
குறுநில மன்னருட் பெரு வள்ளல்கள்
அதியமான், ஆய், ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், குமணன், நல்லியக்கோடன் என்பவர் பெருவள்ளல்கள். இவருள் முதலெழுவர் இலக்கியப் புகழ் பெற்றவர். அவருள்ளும் பாரி பெரும் புகழ் பெற்றவன். அவ்வெழுவர் கொடைப் பொறையை யும் அவருக்குப்பின் நல்லியக்கோடன் ஒருவனே தாங்கினா னென்று, நல்லூர் நத்தத்தனார் பாடுவர் (சிறுபாண்: 113 - 15). தம் தம்பியால் நாடுகொள்ளப்பட்டு காடு போந்திருந்த குமணன், பெருந்தலைச்சாத்தனார்க்குக் கொடுக்கத் தன்னிடம் பொருளின் மையால், தன் தலையை வெட்டிக்கொண்டு போய்த் தன் தம்பி யிடங் கொடுத்துப் பெரும் பொருள் பெறுமாறு தன் வாளைக் கொடுத்து,
சாதலி னின்னாத தில்லை யினித தூஉம்
ஈத லியையாக் கடை. (230)
என்னுங் குறளுக்கு எடுத்துக்காட்டானான்.
இனி, எவ்வி, நன்னன், பண்ணன் முதலிய வேறுபல வள்ளல்களு மிருந்தனர்.
ஓம்பா வீகை மாவே ளெவ்வி (புறம். 24.)
இசைநல் லீகைக் களிறுவீசு வண்மகிழ்
பாரத்துத் தலைவன் ஆர நன்னன் (அகம். 152).
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
பண்ணன் சிறுகுடி (அகம். 54)
இவ்வள்ளல்கள் இன்றேல், கடைக் கழகக் காலத்திற் புலவர் பாணர் கூத்தர் பொருநர் முதலிய இரவலர் வாழ்ந்திருக்கவும், தமிழும் இசையும் கூத்தும் வளர்ந்திருக்கவும், முடியாதென்றே கூறலாம். மாபெருஞ் செல்வரான மூவேந்தரும், பிராமணர்க்குத் தொண்டுந் தானமுஞ் செய்வதிலும், அவர் ஏவிய வேள்விகளை யெல்லாம் இயற்றுவதிலுமே, காலத்தையும் குடிகள் பணத்தை யும் செலவிட்டு, ஏழைப் புலவர்க் கெல்லாம் எட்டாக் கையராகவே யிருந்து வந்தனர்.
ஆரியத் தொல் கதைஞர், தமிழ் வள்ளல்களின் தலைத்திறக் கொடைச் சிறப்பையும் பொன்றாப் புகழையும் மறைத்தற் பொருட்டு, வரையாது கொடுப்பவன் தலைவள்ளல் என்றும், கேட்கக் கொடுப்பவன் இடைவள்ளல் என்றும், புகழக் கொடுப் பவன் கடைவள்ளல் என்றும், வள்ளல்களை மூவகைப்படுத்தி, செம்பியன் முதலிய எழுவர் தலையெழு வள்ளல்களும், அக்குரன் முதலிய எழுவர் இடையெழு வள்ளல்களும், ஆய் முதலிய எழுவர் கடையெழுவள்ளல்களும், ஆவர் என்று பொருத்தமின்றி உண்மைக்கு மாறாக வகுத்துள்ளனர். இருந்த வூர்களையெல் லாம் இரவலருக்குக் கொடுத்த ஆயும் பாரியும், புலவனுக்குத் தலையையுங் கொடுத்த குமணனையும், ஒத்த கொடையாளிகள் வரலாற்றிற்குத் தெரிந்தவரை ஒருவருமில்லை.
செம்பியனை ஆரியனென்று கருதிக் கொண்டு, அவனைத் தலை யெழுவள்ளல்களுள் ஒருவனாகக் கூறியுள்ளனர். அவன் தமிழ கத்துச் சோழருள் ஒருவன் இடையெழுவள்ளல்களுள் ஒருவ னாகக் கொண்ட கன்னனைப் பெருமைப்படுத்த, கொடைக்குக் கன்னன் என்றும், கார்த்திகைக் கப்பால் மழையு மில்லை, கருணனுக் கப்பால் கொடையுமில்லை என்றும், கூறுவர். `கொடுக்கனுக் கப்பால் மழையுமில்லை, குமணனுக் கப்பால் கொடையுமில்லை. என்றே பழமொழி வழங்கல் வேண்டும். கொடுக்கன் = தேள், நளி (கார்த்திகை) மாதம். கடைக்கழகக் கால வள்ளல்களின் தொகையை அடிப்படை யாகக் கொண்டே, ஏனைக்காலத்தார் தொகையையும் ஏழேழாக வகுத்திருத்தல் காண்க.
அண்டிரன் என்பது கண்டீரன் என்பது போன்ற ஓர் இயற்பெயர். தமிழகத்தின் தென்கோடியிலுள்ள பொதியமலை நாட்டை ஆண்ட ஆய் அண்டிரன் தெலுங்கனல்லன். அண்டிரன் என்னுஞ் சொற்கு ஆந்திரன் என்னுஞ் சொல்லொடு தொடர்பில்லை.
வடபாற் குறுநில மன்னர்
எருமையூரன்
இற்றை மைசூர் நாட்டின் பழம்பெயர் எருமை நாடு என்பது. எருமைகள் மிக்கிருந்ததனால் அந்நாடு அப்பெயர் பெற்றது. அதன் தலைநகர் எருமையூர். அதிலிருந் தாண்டவன் எருமையூரன். தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி யனால் வெல்லப்பட்ட எழுவருள் எருமையூரனும் ஒருவன்.
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத் தகன்றலை சிவப்பச்
சேரல் செம்பியன் சினங்கெழு திதியன்
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி
நாரரி நறவின் எருமையூரன்
தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன் என்
றெழுவர் நல்வலம் அடங்க ஒருபகல்
முரசொடு வெண்குடை அகப்படுத் துரைசெலக்
கொன்றுகளம் வேட்ட (அகம். 36)
என்று நக்கீரர் பாடுதல் காண்க.
நேரா வன்தோள் வடுகர் பெருமகன்
பேரிசை எருமை நன்னாட் டுள்ளதை (அகம். 253)
என்பதில், எருமை என்பது வடுகர் தலைவன் ஒருவனின் பெயரைக் குறித்ததேயன்றி, அவனை எருமை நாட்டொடு தொடர்பு படுத்திய தன்று.
எருமைக்கு வடமொழியில் மகிசம் (மஹிஷ) என்று பெயர். அதனால் எருமையூர் என்பதைப் பிராமணர் மகிசபுரி என மொழி பெயர்த்தனர். அச்சொல் அதன் ஆங்கில வடிவை யொட்டி இன்று மைசூர் என வழங்குகின்றது.
மாவா ராதே (273) என்னும் புறப்பாட்டைப் பாடிய எருமை வெளியனார் என்னும் புலவர், எருமையூரினராவர். இருள் கிழிப் பதுபோல் என்னும் 72-ஆம் அகப் பாட்டைப் பாடிய கடலனார் இவர் மகனார் ஆவர்.
நன்னன்
எருமை நாட்டிற்கும் குடமலைக்கும் மேற்கிலுள்ள தென் கன்னடப்பகுதி, கொண்கானம் என்னும் பெயர்கொண்ட தாகும். கொண்கு துறைமுகம் அல்லது கடற்கரை. கொண்கன் நெய்தல் நிலத்தலைவன். கொண்கானம் கடற்கரை நிலமாதலால் அப் பெயர் பெற்றது போலும்!
கடைக்கழகக் காலத்தில் கொண்கானத்தை ஆண்டவன் நன்னன். அவன் தலைநகர் கடம்பின் பெருவாயில் என்பர். ஏழிற் குன்றம் என்னும் பெருமலையையும்; பாழி, பாரம், வியலூர், பிரம்பு என்னும் பேரூர்களையும், உடையது கொண்கானம். அவ்வூர் களுள் பாழி ஒரு வல்லரண் நகர். அது ஏழில் மலையின் எழு குவடுகளுள் ஒன்றான பாழியை அரணாகக் கொண்டதாகத் தெரிகின்றது. நன்னன் ஒரு கொடையாளியாகவும் இருந்தான்.
பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்
டேழிற் குன்றம் பெறினும் (நற். 391).
இசைநல் லீகைக் களிறுவீசு வண்மகிழ்
பாரத்துத் தலைவன் ஆர நன்னன்
ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில் (அகம். 152).
சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்
பாழி அன்ன கடியுடை வியனகர் (அகம். 15).
நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூ ரன்ன (அகம். 97).
நன்னன் வேளிர் மரபைச் சேர்ந்தவன் என்பது, வேண்மான் என்னும் பெயராலும்,
நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்
தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன் (அகம். 258)
என்பதனாலும் அறியப்படும். பாழிப் பொன் கவர அடிக்கடி போர் நிகழ்ந்ததனால் அந்நகர் செருப்பாழி எனப் பெயர் பெற்றது போலும்!
ஏழில்மலை என்பதைப் பிராமணர் சத்த சைலம் (ஸப்த சைல) என மொழிபெயர்த்தனர். பின்னர் ஏழில்மலை என்பது எலிமலை எனத் திரிந்தபோது, ஏழில்மலை நாட்டை அவர் மூசிகநாடு என்றனர். மூசிகம் (மூஷிக) என்பது எலியைக் குறிக்கும் வடசொல். பாழிச்சிலம்பு என்பது பாழிக்கல் என்றும் வழங்கும். அது இன்று பாட்கல் எனத் திரிந்துள்ளது. வியலூர் என்பது, இன்று கன்னடமொழி யியல்பிற்கேற்பப் பெயிலூர் (Bailur) என்று வழங்குகின்றது.
கொண்கானத்தின் கடலோர வடபகுதி துளுநாடு எனப்படும். அங்குத் தோகைக்கா என்ற ஊருள்ளது. மயில்கள் நிறைந்த சோலையினால் அவ்வூர் அப்பெயர் பெற்றது.
………………… பறைக்கண் பீலித்
தோகைக் காவின் துளு நாட் டன்ன (அகம். 15).
பாழிச் சிலம்பும் மயிலுக்குப் பெயர் பெற்றதென்பது,
ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற்
களிமயிற் கலாவத் தன்ன (அகம். 152)
என்பதனால் அறியப்படும். தோகைக்கா என்பது தோக்கா என மருவி, இன்று சோக்கு (ஜோக்) எனத் திரிந்துள்ளதாகப் பேரா. ஔவை. சு. துரைச்சாமிப் பிள்ளையார் கூறுவார்.
கொண்கானம் என்பது கடைக்கழகக் காலத்திலேயே கொங் கணம் எனத் திரிந்து விட்டது. கொக்கென்று நினைத்தனையோ கொங்கணவா? என்று திருவள்ளுவர் மனைவியார் கூறியதாகக் கதையுண்மையும், கொங்கணர் கலிங்கர் கொடுங் கருநாடர் என்று சிலப்பதிகாரம் கூறுவதையும் (25: 156), காண்க.
வெளியன் வேண்மான் ஆய் எயினன்
கொண்கானத்தின் தென்கீழ்ப் பகுதி புன்னாடு எனப்பட்டது. அதை ஆண்ட வெளியன் வேண்மானர் மரபில் வந்தவன் வெளியன் வேண்மான் ஆய் எயினன். அவன் தலைநகர் வாகை.
வண்கை எயினன் வாகை யன்ன (புறம். 351).
யாம விரவின் நெடுங்கடை நின்று
தேமுதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண்கோ லகவுநர் வேண்டின் வெண்கோட்
டண்ணல் யானை யீயும் வண்மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் (அகம். 208)
என்பதனால், அவன் கொடைத்திறம் விளங்கும்.
பதிற்றுப்பத்தின் 2-ஆம் பதிகம், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனை, உதியஞ் சேரற்கு வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன் என்கின்றது. அவ்வேண்மாள் வெளியன் மரபினள் போலும்.
பிட்டங் கொற்றன்
கொண்கானத்திற்குக் கிழக்கில், குடமலைத் தொடரிலுள்ள குவடுகளுள் ஒன்று குதிரை மலை. அம்மலைநாட்டை யாண்டவன் பிட்டங் கொற்றன்.
அருவி யார்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கட் கேழ லுழுத பூமி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றிற்
செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ கூர்வேல்
நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும
கைவள் ளீகைக் கடுமான் கொற்ற
வையக வரைப்பில் தமிழகங் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
பாடுப என்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே. (புறம். 168),
என்னும் கருவூர்க் கந்தப் பிள்ளை சாத்தனார் பாட்டும்
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க் கீத்து
நார்பிழிக் கொண்ட வெங்கட் டேறல்
பண்ணமை நல்யாழ்ப் பாண்கடும் பருத்தி (புறம். 170)
என்னும் உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாட்டும்,
இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலுஞ் செலினும் பொய்யல னாகி
யாம்வேண்டி யாங்கெம் வறுங்கலம் நிறைப்போன்
தான்வேண்டி யாங்குத் தன்னிறை யுவப்ப
அருந்தொழில் முடியரோ திருந்துவேற் கொற்றன்
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
அருங்கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே (மேற்படி 170)
என்னும் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாட்டும், குதிரைமலைக் குறவர் வாழ்க்கையையும் கொற்றன் கொடைத் திறத்தையும் தெளியக் காட்டும்.
குதிரைமலைப் பகுதியிலுள்ள வடகரை மேற்கரை என்னும் இடப்பெயர்கள், இன்று படகரா மர்க்கரா என்று உருமாறி வழங்குகின்றன.
குதிரைமலை நாட்டுத் தலைநகர்ப் பெயரான கொற்றன் கருவூர் என்பது, இன்றும் கொத்த கனவூர் என்று வழங்கி வருவதாகப் பேரா. ஔவை. சு.து. கூறுவர்.
இருங்கோவேள்
கொண்கானத்தின் வடபாலிருந்தது கடம்பரின் பங்களநாடு. அவ்விரு நாடுகட்கும் கிழக்கில் குடமலைத் தொடரின் கீழ்பால் இருந்தது வேளிரது வேணாடு. அந்நாட்டுத் துவரை நகரைத் தலைநகராகக் கொண்டு இருங்கோவேள் ஆண்டு வந்தான்.
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே (புறம் 201)
என்று கபிலர் பாடுதல் காண்க.
துவரை (JthurK¤âu«) இன்று எருமையூர் நாட்டைச் சேர்ந்தது.
வேம்பாய்ப் (Bombay) பைதிரம் (பிரதேசம்) முழுதும் முன் காலத்தில் வேணாடா யிருந்தது. முன்னர் நைசாம் அரையத்தைச் சேர்ந்திருந்த எல்லோரா (Ellora), பழைய பட்டையங்களில் (சாஸனங்களில்) வேளூர் என்றும் வேளூரகம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. வேம்பாய்ப் பைதிரத்துச் சோழாபுரம் (Sholapur) மாவட்டத்தில் ஒரு நகர் வேளாபுரம் (Velapur) என்ற பெயர் கொண்டுள்ளது. அகமது நகர் வட்டத்தில் வேளாபுரம் என்றும், பூனா மாவட்டத்தில் வேளகம் என்றும், பல நகரங்கள் உள்ளன. அப்பைதிரத்தைச் சேர்ந்த வேளகம் (வேள் கிராமம் (?)) என்னும் மாவட்டத் தலைநகர் பெல்காம் (Belgaum) என்றும், வேள்பட்டி என்னும் ஊர் பேல்ஹூட்டி (Bel hutti) என்றும், வழங்குகின்றன. ஒய்சள மன்னரின் பட்டப்பெயரான பெல்லாள என்பது வேளாளன் என்பதன் திரிபாகவே கருதப்படுகின்றது.
தொடக்கக் காலத்தில், வேணாடு மராட்டிய நாட்டில் மட்டுமன்றி கூர்ச்சரத்தில் பரவியிருந்தது. கத்தியவார் கச்சுப் (Cutch) பைதிரங்களில், இன்றும் பலவூர்கள் வேளா என்பதன் திரிபான பேலா (Bela) என்னும் பெயர் கொண்டுள்ளன. அகத்தியர் துவாரபதிப் போந்து பதினெண்குடி வேளிருள் ளிட்டாரைக் கொண்டுவந்தார் என்னும், நச்சினார்க்கினியர் கூற்றும், வேதக்காலத்தில் மராடமும் குச்சரமும் பஞ்ச திரவிடத்துள் அடக்கப்பட்டதும், இங்குக் கவனிக்கத்தக்கன.
பிற்காலத்துத் தோன்றிய சளுக்கியர் வேணாட்டை ஆண்டத னாலேயே, வேள்புல வரசர் சளுக்கு வேந்தர். என்று திவாகரமும் பிங்கலமும் கூறுகின்றன.
கங்கர்
இற்றை எருமையூர் (மைசூர்) நாட்டின் ஒரு பகுதியை, அதாவது, பண்டைக் குணகொங்கின் வடபாகத்தில் ஒரு பகுதியை, கங்கர் என்னும் மரபினர் கடைக் கழகக் காலத்திலேயே ஆண்டு வந்தனர்.
துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி
என்று அகப்பாட்டும் (44),
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
என்று சிலப்பதிகாரமும் (25: 157), கூறுதல் காண்க.
கொங்கன் என்னும் பெயரே கங்கன் என்று திரிந்திருக்கலாம்.
கட்டியர்
கங்கநாட்டிற்குக் கிழக்கிலிருந்து பண்டைக் குணகொங்குப் பகுதியைக் கங்கர் ஆண்டுவந்ததாகத் தெரிகின்றது.
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
என்னுங் குறுந்தொகைப் பாட்டை (11) நோக்குக.
வடக்கிற் பல்லவர் தலையெடுத்த பின்பும், தெற்கில் அதியமானர் கை தாழ்ந்த பின்புமே, கங்கநாடும் கட்டிநாடும் தெற்கே தள்ளி வந்திருத்தல் வேண்டும்.
கடைக்கழகக் காலத் தொழிற் குலங்கள்
அகவர் (சூதர்), அங்காடிவணிகர் (நாளங்காடி வணிகர், அல்லங்காடி வணிகர்), அச்சுக்கட்டிகள், அடியோர், அண்டர் (இடையர்), அரசர் (கிழவர்,வேளிர், மன்னர், கோக்கள், வேந்தர்), அளவர், ஆட்டு வாணிகர், ஆயர் (கோவலர், கோவர்), ஆறலைகள்வர், இராக்கடைப் பெண்டிர் (தெருப்பொது
மகளிர்), இயவர் (இசைக்கருவியாளர்), இலையமுதிடுவார்
(இலை வாணியர்), உமணர், உழவர் (கடையர்), உறைகாரர், எயினர், எலிமயிர்நெசவர், ஓசுநர் (மீகாமர்), ஓவர் (மாகதர்), கடம்பர், கடிகையர் (நாழிகைக் கணக்கர்), கண்ணுளர், கண்ணுளாளர் (சித்திரக் காரர்), கணிகையர், (நாடகக்
கணிகையர், கோவிற் கணிகையர்), கணியர், காலக் கணிதர், கம்மியர் (கம்மாளர்), களமர் (கருங்களமர், வெண்களமர்), கன்னார் (செப்புக் கன்னார், வெண்கலக் கன்னார்), காழியர் (பிட்டு வாணிகர்), கானவர், கிணைவர் (கிணைப்பொருநர்), கிழியினும் கிடையினும் பல தொழில் செய்வார், குயிலுவர் (தோலிசைக் கருவிகள் செய்வோர்), குறவர், குன்றவர், குறும்பர், கூத்தர், கூலவாணிகர், கூவியர் (அப்ப வாணிகர்), கொல்லர், கோடியர் (கழைக்கூத்தர்), சங்கறுப்போர், சாக்கையர், சாலியர் (நெசவர்), தச்சர், துடியர், தேர்த்தச்சர், தையற்காரர் (துன்னகாரர், சிப்பியர்), நுண்வினைக் கம்மியர், நுளையர், பட்டினவர் (மீன்வலைப் பரதவர்), பட்டுச் சாலியர், படையுள்படுவோன் (சின்னமூதி), பரதர் (செட்டிகள்), பரதவர் (பரவர்), பரத்தையர் (இற்பரத்தையர், சேரிப்பரத்தையர்), பழையர் (கள் விற்கும் வலையர்), பறம்பர் (தோலின் துன்னர்), பறையர் (பறையறைந்து விளம்பரஞ் செய்வோர்), பாசவர் (ஊன் விற்போர்), பாணர் (இசைப் பாணர், குழற்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப் பாணர்), பார்ப்பார், புலையர், பூ விற்பார், பொருநர் (ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர்), பொன் வாணிகர், மணவர் (வாசவர்), மணிகோப்பார், மணிநகைத் தட்டார், மரக்கலக் கம்மியர், மழவர் (மழநாட்டு மறவர்), மறவர் (பாலை வாணர்), மாலைக்காரர், வண்ணார், வயிரியர் (ஒருவகைக் கூத்தர்), வலைஞர், வள்ளுவர் (அரசர் விளம்பரப் பறையர்), விலை மகளிர் (சிறுவிலை மகளிர், பெருவிலை மகளிர்),
ஈமுங் கம்மும் உருமென் கிளவியும் (தொல். 328),
மின்னும் பின்னும் பன்னும் கன்னும் (மேற்படி 345)
என்று தொல்காப்பியங் கூறுவதால், அக்காலத்திலேயே ஐங்கம்மும் செம்பும் வெண்கலமுமாகிய இரு கன்னும் நடைபெற்றமை பெறப்படும். இளங்கோவடிகள்,
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் (சிலப். 5: 28)
என்று, இரு கன்னையும் வேறாகப் பிரித்து, வெண்கலக்கன்னை வடசொல்லாற் குறித்தார்.
பார்ப்பார் என்னும் தமிழ்ச்சொல், கடைக்கழகக் காலத்தில் இல்லறத்தாரான பிராமணர்க்கே வரையறுக்கப்பட்டுவிட்டது. சிறப்பாகத் துறவியரைக் குறிக்கும் அந்தணர் என்னும் தமிழ்ச் சொல்லும், முதற்கண் பிராமணப் போலித் துறவியர்க்கு வழங்கி, பின்னர் இல்வாழ் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுவிட்டது.
கடைக்கழகக் காலப் பார்ப்பனர் நிலை
கடைக்கழகக் காலத்தில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் நிலை பூசாரியமாகும்.
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது…. (சிலப். 1: 51-3)
என்று கூறதல் காண்க.
கடைக்கழகக் காலத்தில் தமிழ்நாட்டுத் தலைமைபூண்ட சேரன் செங்குட்டுவனுக்கு, அழும்பில்வேள், வில்லவன் கோதை என்னும் இரு தமிழர் முறையே, அமைச்சனும், படைத் தலைவனுமா யிருந்தனர். உழவு, கைத்தொழில், வாணிகம், அரசு, கல்வி முதலிய பல தொழிலும், தமிழராலேயே (தமிழில்) நடத்தப்பட்டு வந்தன. ஆகையால், பார்ப்பனர் துணை அற்றைத் தமிழர்க்குச் சிறிதும் வேண்டியதாயில்லை.
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின் (புறம். 9: 1-5)
என்னும் அடிகள், பார்ப்பனர் மறமும் (வீரமும்) வலிமையும் அற்றவர் என்றும், களங்கமற்றவரென்றும் இரங்கத்தக்க வரென்றும், சிலரால் கருதப்பட்டதைக் குறிக்குமேயன்றித் தூயரென்று எல்லாராலும் கருதப்பட்டதாகக் குறியாது. பார்ப்பனர் தூயரென்று எல்லாராலும் கருதப்பட்டிருப்பின். மாணிக்கவாசகரை அரிமர்த்தன பாண்டியன் சிறையிட்டுக் கடுந்தண்டம் செய்திருக்கமாட்டான். 17ஆம் நூற்றாண்டில், வடமலையப்பப் பிள்ளையின் கீழதிகாரியால் நாராயண தீட்சி தரும் சிறை செய்யப்பட்டிருக்கமாட்டார்.
ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முள (புறம். 34: 1-4)
எனவரும் அடிகளும் மேற்கூறிய கருத்தையே தெரிவிக்கும். பார்ப்பார்த் தப்பினவர்க்கும் கழுவாயுளது என்று கூறியிருத் தலைக் கவனிக்க. முரட்டுக் குணமின்றி அமைதியாயிருக்கும் எல்லா உயிர்ப் பொருள்களையும் தமிழர் ஒருதிறமா யெண்ணிக் காப்பர். பூனையையும் கழுதையையும் கொல்வது பெருந்தீவினை என்று கருதப்படுவதை நோக்குக. பார்ப்பனர் அக்காலத்தில் மிகச் சிறிய தொகையினராயும், எளியவராயும், ஆட்சியில் இடம் பெறாதவராயும் இருந்ததினால், தம்மைக் களங்கமற்ற சான்றோராகக் காட்டிக் கொண்டனர்.
பாண்டியன் பல்வேள்வி(யாக)ச் சாலை முதுகுடுமிப் பெருவழுதி யின் செயலாலும், பல்யானைச் செல்கெழு குட்டுவன் செயலா லும், ஆரிய வேள்விகளை வேட்கும் வழக்கம் கடைக்கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டில் வேரூன்றிவிட்டதை யறியலாம்.
பாலைக் கௌதமனார் என்னும் பார்ப்பனர், பல்யானைச் செல்கெழு குட்டுவன் உதவியால், தாமும் தம் மனைவியும் துறக்கம் (சுவர்க்கம்) புகவேண்டுமென்று, ஒன்பது பெருவேள்வி வேட்டுப் பத்தாம் வேள்வியில் தம் மனைவியுடன் மறைந்து போனார் என்னும் பதிற்றுப்பத்துச் செய்தி ஆராயத்தக்கது.
கடைக்கழகக் கால வாணிக வளர்ச்சி
நிலவணிகமும் நீர்வணிகமும் கடைக்கழகக் காலத்திற் பெரு வளர்ச்சி யடைந்திருந்தது.
சட்டையணிந்தவரும் பாதக்கூடு (boots) மாட்டியவருமான மேலையாசியரும் மேனாட்டாரும், மிளகுப் பொதிகள் கொண்டு செல்லும் கோவேறு கழுதைச்சாத்தொடு கூடி, மலைபடு செல்வமுங் கடல்படுசெல்வமுமான பல அரும் பொருள்களை, அரசன் நிறுத்திய விற்படைஞர் இரவும் பகலுங் காத்திருக்கும் சுங்கப் பெருவழிகளிற் சென்று, விற்றுத்திரிந்தனர்.
மயைவுங் கடலவு மாண்பயந் தரூஉம்
அரும்பொரு ளருத்துந் திருந்துதொடை நோன்றாள்
அடிபுதை யரணம் எய்திப் படம்புக்கு
…………………
உடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
………………..
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவின் (பெரும்பாண்: 67 - 82).
கடாரம் (பர்மா) மலையா முதலிய கீழைநாடுகட்கும் சுமதுரை சாலி (சாவகம்) முதலிய கீழைத்தீவுகட்கும், நீர்வாணிகர் சென்று வணிகம் செய்து வந்தனர். அவர் இக்காலத்து நாட்டுக் கோட்டைச் செட்டிமார் போல் தங்கள் குடும்பங்களை இங்கேயே விட்டுச் சென்றனர். இவ்வழக்கம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே இருந்ததென்பது,
முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை.
என்னும் தொல்காப்பிய நூற்பாவால் (980) அறியப்படும்.
கீழ்கரையிலிருந்த கொற்கை தொண்டி புகார் முதலிய துறை நகரங்களுள், புகார் மிகப் பெரிதாகவும் உலகிலேயே தலைசிறந்த தாகவும் இருந்தது. அது காவிரிக் கயவாயில் அமைந்த அழகிய துறை நகரமாதலால் காவிரிப்பூம்பட்டினம் என்றும், அவ்வாறு கடலிற்புகும் இடத்திலிருந்ததனால் புகார் என்றும், பெயர் பெற்றது. துறை நகரைப் பட்டினம் என்பது பண்டை வழக்கு. பதி - பதனம் - பத்தனம் - பட்டனம் (பட்டணம்) -பட்டினம்.
கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும் (சிலப். 5: 9-12)
மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும் (மேற்படி 6: 143)
என்பவற்றால், உலகெங்கணுமுள்ள பல்வேறு நாட்டுமக்கள், காவிரிப்பூம்பட்டினத்தில், தங்கள் நாட்டுப் பொருள்களுடன் தங்கியிருந்தமை அறியப்படும். யவனரென்பார் கிரேக்கரும் உரோமரும்.
மேல்கரையிலிருந்த முசிறி தொண்டி மாந்தை முதலிய துறை நகர்களுள், சுள்ளியம் பேரியாற்றுக் கயவாயிலிருந்த முசிறி சிறந்ததாயிருந்தது.
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி (அகம். 149).
கடைக்கழகத் தொடக்கம்
(கி.மு. 5 - ஆம் நூற்றாண்டு)
மதுரை மாநகர் அமைக்கப்பட்டவுடன், மூன்றாம் புலவர் கழக மும் தோற்றுவிக்கப்பட்டது. நாற்பத்தொன்பதின்மர் உறுப்பின ராயினர். முக்கழகத்திலும் உறுப்பினர் தொகைக்கு வரையறை இல்லை. அவ்வக்காலத்தில் தலையாய புலவர் அல்லது சிறந்த புலவர் எத்தனைவரோ அத்தனைவரும் இடம் பெற்றனர். புதிதாக யாரேனும் சிறந்த புலவர் வரினும் சேர்க்கப்பட்டனர். இதனையே, தகுந்த புலவர் வரின் கழகப்பலகை தானே ஒரு முழம் நீண்டு இடந்தரும், என்னும் மரபுரை குறிக்கும். நாற்பத் தொன்பது என்னுந் தொகை ஏழே ழென்று வகுக்கப்படுவதால், மொழிப் பற்றும் மூப்பும் புலமைத்திறமும் நோக்காது, மதம் பற்றியோ குலம் பற்றியோ நிலம் பற்றியோ ஏழெழுவர் தொகுக்கப் பட்டனர் எனக் கருதற்க. எத்தனைவர் வரினும் ஏற்றுப் போற்றற் கேற்ற செல்வம் பாண்டியனிடத்திருந்தது. முக்கழகத்திலும் புலவர் தொகையை ஒன்பதென்னும் எண்ணில் முடித்தது, ஓரிடத்தை இறைவனுக்கு ஒதுக்கவேண்டுமென்னுங் கொள்கை பற்றியே.
சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தை யுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலி லாய்ந்தவொண்டீந்தமிழ்
என்று மாணிக்க வாசகர் பாடியது இக்கருத்துப் பற்றியே. அகத்தியமும் தொல்காப்பியமும் கடைக் கழக இலக்கண நூல்களாயிருந்தன.
இடைக் கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் ஈராயிரத்தைந் நூறாண்டிற்கு மேல் இடையீடுபட்டுவிட்டதனால், இடைக் கழகத் திறுதிப் பாண்டியனான முடத்திரு மாறனே கடைக்கழக முதற் பாண்டியனானான் என்பது பொருந்தாது. கழக இருக்கையை இறையனாரகப் பொருளுரை உத்தர மதுரை யென்று கூறியது, தென்மதுரை யொடு ஒப்புநோக்கியென் றறிக.
கழகத்திற்குத் தொகை யென்றும் கூடல் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. அதன்பின், இடவனாகு பெயராக, மதுரையும் கூடலெனப் பட்டு, மாடச் சிறப்பால் மாடக்கூடல், நான்மாடக் கூடல் என்னும் வழக்கெழுந்தது. மாடங்கள் முகில்படியுமாறு வானளாவ வுயர்ந்திருந்ததனால், நான் முகின் மாடக் கூடல் என்றும் புலவர் புகழ்ந்து பாடினர். அத்தொடரைத் தொல்கதை யாளர் பயன்படுத்திக்கொண்டு, மதுரைமேற் கடுமழை பொழிந்த நான்முகில்களை நான்மாடங்கள் கூடித்தடுத்தன வென்று கதை புனைந்துவிட்டனர்.
மதுரைக் கோட்டை வாயில் ஒன்றன் முன், ஒரு மூதால மரம் படர்ந்தோங்கியிருந்ததனால், அவ்விடம் ஆலவாய் என்று பெயர் பெற்றிருந்திருக்கலாம். அப்பெயரையும் பொருள் திரித்து, பாம்பினால் எல்லை காட்டப்பட்டவிடமென்று கதை கட்டி விட்டனர். ஆலவாய் என்பது முதலில் நான்மாடங்களுள் ஒன்றன் பெயராகவே யிருந்தது. நான்மாடப் பெயர்களை, அவை திருவாலவாய் திருநள்ளாறு திருமுடங்கை திருநடுவூர். இனிக் கன்னிகரியமால் காளி ஆலவாய் என்றுமாம் என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. (கலி. 92 உரை).
கடைக்கழக முடிவு
கி.பி. 3ஆம் நூற்றாண்டில், உக்கிரப் பெருவழுதி காலத்தில், பாண்டிய வரசும் கடைக் கழகமும் குலைந்தன.
10-ஆம் நூற்றாண்டினரான பட்டினத்து அடிகள் கழகத்தைக் குறிக்கும் சங்கம் என்னும் வடசொல்லும் பெரிய சங்கைக் குறிக்கும் சங்கம் என்னும் தென்சொல்லும் வடிவொத்திருப் பதால், சங்கைப் பயன்படுத்தும் காலம் நோக்கி அதை மூன்றாக்கி,
முதற்சங் கமுதூட்டும் மொய்குழலா ராசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுவூதும் அம்மட்டோ இம்மட்டோ
நாம்பூமி வாழ்ந்த நலம். (பொது)
என்னும் வெண்பாவில், பண்டைத் தமிழ்க் கழகம் மூன்றென் பதைக் குறிப்பாக வுணர்த்துதல் காண்க.
நல்விலங்கு பூட்டும் என்றது திருமணத்தன்று ஊதப்பட்டதை. அக்காலத்தில் மங்கல வினைக்கும் சங்கூதப்பட்டது. ஆம்போது என்றது இறந்தபின் ஊதப்படும் வேளையை. மூவிடத்தும் சங்கம் என்னும் வடிவே அமையுமாறு, முதற்சங்கம் பாலூட்டும் என்று பாடியிருக்கலாம். ஆயின், பாலூட்டுவது சிறு சங்காதலால், அதைச் சங்கு என்று குறித்தார்.
கடைகால்
கடைகால் - கடீ, கடிகா (gh, t)
கடைகால் - கடகால் (கொச்சை) - நீரிறைக்கும் வாளி, நீர்ச்சால்.
கண்
கள்1 கள்ளுதல் = கலத்தல், பொருந்துதல், கூடுதல்.
கள் - களம் = 1. கூட்டம்; அவை. களம் - களன்.
காலங் களனே காரண மென்று (நன். 48)
2. கூடுமிடம். ஏர்க்களம், போர்க்களம், அவைக்களம்.
3. உடம்பையும், தலையையும் கட்டும் உறுப்பாகிய கழுத்து, தொண்டை. பாடுகள மகளிரும் (சிலப். 6: 157). களம் - வ fy(g). `கள் பன்மை யுருபு, பல பொருள்கள் கூடியதை யுணர்த்துவது.
களம் - களர் = 1. கூட்டம். 2. கழுத்து. (சூடா.)
கள் - கண் - கணு = பொருத்து, மரக்கணு.
கள்2 கள் - கள்வன் = 1. கரியவன். (பிங்.). 2. யானை. (பிங்.) 3. கருநண்டு. புள்ளிக் கள்வன் (ஐங்குறு. 21). நண்டு வடிவான கடகவோரை (திவா.).
கள் - கள = கரிய களாப்பழம். கள - களா. களவு - களவம்.
கள் - களம் = 1. கருமை. (திவா.). 2. முகில். கனைக்களமென (அரிசமய. பரகா. 44). 3. களா. (சூடா).
களம் - களர் = கருப்பு (சூடா.). களம் - காளம் - வ. கால. காளம் - காளி (கருப்பி) - வ. காலீ.
கள்3 கள் - கள - கண - கணப்பு = 1. குளிர் காயுந் தீ. 2. உடம்புக் காங்கை.
கணத்தல் = 1. எரிதல். 2. சுடுதல்.
கள் - காள் - காளம் = சுடுகை, சூடு. காளவனம் = சுடுகாடு. காளவாய் = சுண்ணாம்புச் சுள்ளை.
காள் - காய். காய்தல் = எரிதல், ஒளிர்தல், சூடாதல், உலர்தல்.
கள்4 கள் = முள். கள் - கள்ளி = முட்செடி வகை. ஒ.நோ: முள் முள்ளி.
கள் - கண்டு = முள், கண்டங் கத்தரி.
கண்டு - கண்டம் = முட்கத்தரி. கள் - கடு = முள்.
கடு - கடி = கூர்மை (திவா.).
கண் எல்லாப் பொருள்களொடும் பார்வையாற் கலப்பதனாலும், கருமையாயிருப்பதனாலும், உடம்பிற்கு விளக்காயிருப்பத னாலும், இரு கடையும் கூர்மையா யிருப்பதனாலும், மேற்கூறிய நாற்பொருளும் அதன் பெயருக்குப் பொருந்து மேனும், ஒருவர் பார்த்தமட்டில் தெளிவாகப் புலனாவது கண்ணின் கருவிழியே யாதலாலும், சில சிற்றுயிர்கட்கும் பறவைகட்கும் கருவிழியே யன்றி வெள்விழியின்மையாலும், கருமைக் கருத்தே கண் என்னுஞ் சொல்லின் பொருட் கரணிய மாகும். பெண்களின் கண்ணிற் குவமையாகக் கருங்குவளை மலரைச் சிறப்பாகக் குறித்தலையும் நோக்குக.
கள் - கண் = கருமணி கொண்ட பார்வை யுறுப்பு.
ஒ.நோ: உள் - உண், நள் - நண், பெள் - பெண்.
கண் = 1. விழி. கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை (தொல். எழுத். 7). 2. கண்ணோட்டம். கண்ணின்று பெயர்ப் பினும் (தொல். பொ. 130). 3. பீலிக்கண். ஆயிரங் கண்ணுடை யாய்க்கு (கம்பரா. பம்பை. 27). 4. தேங்காய் பனங்காய்களின் கண். 5. முலைக்கண். 6. புண்ணின் கண். 7. துளை. கால்வாய்த் தலையின் கண்கள் (பாரத. முதற். 72). சல்லடைக்கண், வலைக்கண். 8. தோலிசைக் கருவிகளின் அடிக்கும் பக்கம். கண் மகிழ்ந்து துடிவிம்ம (பு.வெ. 2: 8, கொளு). 9. நல்லறிவு (ஞானம்). கள் ளொற்றிக் கண்சாய்பவர் (குறள். 927). 10. உணர்த்துவது. சொன்ன சிவன் கண்ணா (சி.போ. 5: 2: 1). 11. முன்பு. கண்ணின் றிரப்பவர் (குறள். 1056).
ம. கண், கண்ணு = விழி, பீலிக்கண், முலைக்கண், அரும்பு.
க. கண் = விழி, சிறுதுளை, திறப்பு.
து. கண்ணு = விரி, பீலிக்கண், முலைக்கண், பிளவு, கிழிவு.
தெ. கனு, கன்னு = விழி, பீலிக்கண், சிறுதுளை, வலைக்கண், திறப்பு.
துடவம்: கொண் = விழி. கண்ணி (loop).
கோத்தம்: கண் = விழி.
கோலாமி: கன் = விழி, சிறுகுழி, குகை.
நாய்க்கி: கன் = விழி, பீலிக்கண்.
பர்சி: கன் = விழி,
கடபா: (ஒல்) கண், (சாலூர்) கனு = விழி.
கோண்டி: கன் = விழி
கொண்டா: கண் = விழி.
குய்: கனு = விழி.
குவீ: கன்னு, கன்னூ = விழி.
குருக்கு: கன்ன (khann) = கிழங்குக் கண்.
மாலத்தோ: கனு = விழி.
பிராகுவீ: கன் (khan) = விழி, கரணை, அரும்பு.
கண் - கண்ணு. கண்ணுதல் = அகக் கண்ணாற் காணுதல், கருதுதல். கண்ணிய துணர்தலும் (மணி. 2: 25).
கண் - கணி. கணித்தல் = கண்ணாற் பார்த்தல்.
கடைக்கண் - கடைக்கணி. கடைக்கணித்தல் = 1. கடைக் கண்ணாற் பார்த்தல். கருமலர்க் கூந்தலொருத்தி தன்னைக் கடைக்கணித்து (திவ். பெருமாள் 6: 3). 2. அருள் நோக்கு நோக்குதல். கருவெந்து வீழக் கடைக் கணித்து (திருவாச. 11: 5).
சிறங்கணித்தல் = 1. கண்ணைச் சுருக்கிப் பார்த்தல். குவளை மாலைப்போது சிறங்கணிப்பப் போவார் (சிலப். கானல்வரி, 1: 7). 2. அவமதித்தல். (W.).
சிறங்கணி - சிறக்கணி. சிறக்கணித்தல் = 1. கண்ணைச் சுருக்கிப் பார்த்தல். சிறக்கணித்தாள் போல நகும் (குறள். 1095). 2. கடைக்கண்ணாற் பார்த்தல். (சூடா.).
புறக்கணித்தல் = 1. கவனியாதிருத்தல், பொருட்படுத்தாதிருத்தல். உருகா மனத்தார்களைப் புறக்கணித்திடும் (தேவா. 612:2). 2. அவ மதித்தல். புறக்கணித்திடம் பட்டீர்க்கும் (சீவக. 2376). அளவிடு தலைக் குறிக்கும் கணித்தற் சொல்லும், கண்ணாற் காணுதலைக் குறிக்கும் கணித்தற் சொல்லும், வெவ்வேறென அறிக.
கண்-காண். காணுதல்=(செ. குன்றாவி). 1. பார்த்தல். காணிற் குடிப் பழியாம் (நாலடி. 84). 2. தெய்வத்தை அல்லது பெரியோரைக் காண்பு, காணல். திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் (திவ். இயற். 3: 1). 3. கண்டறிதல். காணாதாற் காட்டுவான் தான் காணான் (குறள். 849). 4. அறிதல், யாவருங் கண்ட நெறி (ஆசாரக். 17) 5. அறிந்தியற்றுதல். முனைவன் கண்டது முதனூ லாகும் (தொல். பொ. 649). 6. பொறியாலறிதல், அவன் பேச்சைக் கண்டு (திருவாலவா. 16: 28) 7. பட்டறிவா லறிதல். 8. ஆராய்தல். அறம் பொருள் கண்டார்க ணில் (குறள். 141). 9. மதித்தல். தானெனக் கண்டும் (கல்லா. 51: 7) 10. பெறுதல். முற்றுமிடங் கண்டபின் (குறள். 491). 11. ஒத்திருத்தல். மழைகாணு மணிநிறத் தோய் (கம்பரா. குகப். 26).
(செ.கு.வி.) 1. நிகராதல். என்ன இருந்தாலும் அவருக்குக் காணுமா? 2. பொருந்துதல். மற்காணுந் திரடிண்டோள் (கம்பரா. குகப். 26). 3. கண்ணிற்குத் தெரிதல். காண்கின்ற நிலமெல்லாம் யானே யென்னும் (திவ். திருவாய். 5: 6: 3). 4. சேர்தல். இவ்வாண்டு சாகுபடி எவ்வளவு காணும்? 5. போதியதாதல். இவ்வரிசி எத்தனை நாளைக்குக் காணும் ?
காண் = (பெ.) 1. காட்சி. காண்பிறந் தமைந்த காதல் (கம்பரா. திருவடி தொழு. 80). 2. அழகு. காண்டக முந்துநீ கண்டுழி முகனமர்ந்து (திருமுரு. 250 - 1).
(இடை.) முன்னிலை யுரையசை. துவ்வாய் காண் (குறள். 1294).
காண்கை = அறிவு. பொய்யா மாக்கள் தொழுது காண்கையர் (முல்லைப். 56).
காட்சி = அறிவு. மருடீர்ந்த மாசறு காட்சி (குறள். 199). காண் - காணம்.
கண் காணம் = மேற்பார்வை, அறுவடை மேற்பார்வை, ஒப்படி மேற்பார்வைச் சம்பளம்.
கண்காணி = 1. மேற்பார்வலன். 2. ஒப்படியலுவலர். 3. கூலியாட்க ளை மேற்பார்ப்பவன். 4. காப்பி தேயிலைத் தோட்டங்கட்குக் கூலியாட்களைச் சேர்ப்பவன்.
கண்காணியார் = கிறித்தவ சபையை மேற்பார்க்குங் குரவர்.
கண் காணித்தல் = 1. மேற்பார்த்தல். 2. மேற்பார்த்துப் பாதுகாத்தல்.
கண்காணிப்பு = மேற்பார்வை. கண் காணிப்பாளர் = மேற்பார்க்கும் அதிகாரி. கண்காணிக்கை = கண்காணிப்பு.
காணி - காணிக்கை = தெய்வத்திற்கும் திருவடியார்க்கும் படைக்கும் பொருள். வேதாளநாதன் மகிழுங் காணிக்கையாகி (சேதுபு. வேதாள. 34).
ம. fh¡f, f., து. காணிகெ, தெ. காணுக.
காண் என்னுஞ் சொல் ஆங்கிலத்திலும் அதன் இன மொழி களிலும் கன் (cun), கான் (con), கென் (ken) கெ அன் (can) என்று திரிந்துள்ளது. கீன் (keen) என்று திரிந்துள்ளதாகவும் கீற்று (Skeat) கூற்றினின்று தெரிகின்றது.
காணுதல் என்னுஞ் சொல், தமிழில், புறக்கண்ணாற் காணுதலை யும் அகக் கண்ணாற காணுதலையும், குறிக்கும். முன்னது பார்த்தல்; பின்னது அறிதல், தியூத்தானிய மொழிகளிற் காண் என்பதன் திரிசொற்களெல்லாம் பின்னதையே உணர்த்துகின்றன.
Cun: AS. cunnan, to know, ME. cunnen, to know, ON. cunna, to know, Ice. kunna, to know, Sw. kunna, to know, Dan. kunde, to know, M Goth. kunnan, to know.
செய்வான் (செய்ய) என்னும் எதிர்கால வினையெச்சத்தின் (முற்றெச்சத்தின்) வான் ஈறு மலையாளத்தில் ஆன் ஈறாகத் திரியும். அதுவே அன் என்று குறுகியும் பின்னர் என் என்று திரிந்தும் பழைய ஆங்கிலத்தில் நிகழ்கால வினையெச்ச (Infinite) ஈறாக வழங்கினதாகத் தெரிகின்றது. ஆங்கில இன மொழிகளில் அவ்விரண்டும் அ, எ எனக் கடைக்குறைந்துள்ளன.
E cunning, 1. Knowing, skilful, ME. cunning, conning, Northern form cunnand, Ice. kunnandi.
2. Knowledge. knowledge, skill. ME. conninge, Ice. cunnandi, AS cunnung, temptation, trial.
E. con, A secondary verb, formed from AS cunnan, to know; it signifies accordingly ‘to try to know’ and may be regarded as the desiderative of ‘to know’ - Skeal’s. Etymological Dictionary of the English Language, p. 126. con, 1. to learn, learn to know, study. 2. to commit to memory. - The Random House Dictionary, p. 303. To con (the passage) (Shakespeare) = to learn by heart.
E. ken, to know. Every man kens (knows) best where his own shoe pinches, (prov). ME kennen, to make known, see, know, discern. OE cennen to make known, declare, Ice. kenna, to know, Sw. kanna, Dan. kjende, Du. kennen, G. kennen.
E. can, to know, to know how to, to be able.
G., Ice., Goth. kann.
Cf. AS cunnan, to know, to know how to do, to be able.
Ice. kunna, to know, to be able.
Sw. kunna, to know, to be able.
Dan. kunde to know, to be able.
முதற்கண், கான் (con, kon) என்னும் தியூத்தானியச் சொல் முதலெழுத்துயிர் முன் பின்னாக முறைமாறி க்னா (cna, kna) என்றும் க்னோ என்றும் திரிந்தது.
AS cnawan, Ice. kna, ON. kna, ME. knowen, E. Know, OHG. chnaan, cnahan.
ககரம் சில மொழிகளில் ‘ga’ என்னும் எடுப்பொலியாக (voiced sound) மாறுகின்றது.
L. gna: gnarus, knowing, having knowledge of, acquainted with; O. Irish gnath, known, accustomed, W. gnawd, a custom.
கிரேக்கத்தில் இவ் வெடுப்பொலிக் ககரம் (ga) இரட்டிக்கின்றது.
Gk. gignnosko.
சமற்கிருதத்தில் எடுப்பொலிக் ககரம் (ga) ஜகரமாகத் திரிகின்றது. Skt. jna (ஜ்ஞா). g - j, ந - ஞ, போலித்திரிபு.
வ. ஜ்ஞான - இந். ஜான்.
ஜகரம் சில மொழிகளில் ஸகர எடுப்பொலியாக (za) மெலிந்து விடுகின்றது.
Russ, znate, to know; Pers. far-zan, knowledge.
இவ் வெல்லாத் திரிபுகட்கும் மூல வேர் GEN (கென்) எனக் குறிக்கின்றார் கீற்று (Skeat).
மேலையர் இன்னும் மொழிகளைச் சரியாய் ஆராயவில்லை. இற்றை அறிவியல்களெல்லாம் மேலையர் கண்டவையே. ஆயின், மொழிகள் வரலாற்றிற்கு முந்திய பண்டைக் காலத்தன வாதலால், அவர்களின் ஆராய்ச்சிக்குட்பட்டதன்று. பொறிக் கருவிகள் எத் துணைச் சிறந்தனவாயினும் மாந்தன் கையாளாவிடின் இயங்கா; இயக்கிய பின்பும் இறுதிவரை மாந்தன் உடனிருத்தல் வேண்டும். துலையுங் கணிப்பானும் கெட்டிருப்பின் தவறான நிறையுங் கணக்குங் காட்டும். தவறான வழியைக் கையாளின் எவ் வினை யும் வெற்றியாய் முடியாது.
பல அடிப்படைத் தமிழ்ச் சொற்கள் தியூத்தானியத்தில் தமிழுக்கு நெருங்கியும், இலத்தீனில் சற்றுத் திரிந்தும், கிரேக்கத்தில் அதினும் மிகத் திரிந்தும், வேதமொழியிலும் சமற்கிருதத்திலும் மிகமிகத் திரிந்தும், உள்ளன.
எ-டு:
தமிழ் ஆங்கிலம் இலத்தீன வேதமொழி
கிரேக்கம் அல்லது
சமற்கிருதம்
அகரம் OSax.akkar
(மருத நிலம், ME. aker L. ager
மருத நிலத்தூர்) E. acker Gk. agros ajras (field)
உகை - அகை G. ago aj (to drive)
(செலுத்து)
கும் (கூடு) L. cum
Gk. sum sam
மன் man - manu
முழுகு L. mergo majj
வலி (வலம்) - L. valeo bala
வல்லின மெய்யெழுத்துக்களுள், எடுப்பிலா (voiceless) வொலிகளே எடுப்பொலிகளினும் முந்தியவை. தமிழில் தனி அல்லது இயற்கை யெடுப்பொலிகள் இல்லை. மெல்லின மெய் யொடு கூடிய செயற்கை யெடுப்பொலிகளே யுள. தமிழ் எடுப் பிலா வொலிகள் திரவிடத்திலேயே எடுப்பொலிகளாகத் திரிந்து விடுகின்றன.
எ-டு: தமிழ் தெலுங்கு
குடி (வீடு,கோயில்) gudi
கும்பு (கூடு) gumpu
ஆதலால், ஆரியத் திரிபைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
காண் என்பதன் திரி சொற்கள், இலத்தீன கிரேக்கத்தில் எடுப் பொலியொடும் தியூத்தானியத்தில் எடுப்பிலா வொலியொடும் இருத்தல், முன்னவற்றினும் பின்னவை தமிழுக்கு நெருக்க மாயிருத்தலை யுணர்த்துதல் காண்க.
கால்டுவெலார், தொல்காப்பியமும் பத்துப்பாட்டு எட்டுத் தொகைகளும் தமிழர்க்கும் தெரியாது மறைந்து கிடந்த காலத்தில், வழி காட்டியுமின்றித் தன்னந் தனிமையாய் ஆராய்ந்த போதும், தமிழின் தொன்மை முன்மைகளையும் மூலத் தன்மை யையும் உணர்ந்து, தம் திரவிட ஒப்பியலிலக்கண நூலின் இறுதி யில், சொல்லியல் உறவுகள் (Glossarial Affinities) என்னும் பகுதி யில், கீழ் வருமாறு வரைந்துள்ளார்.
“kan, the eye; kan (in the preterite kandu), to see; also secondarily, to mark, to consider, to think. In the latter sense it comes kannu in Tamil, but the base remains unchanged. In (kanu, kannu) Telugu, the ordinary n, he nasal of the dental row, is used instead of n, the cerebral nasal. Comp. the Welsh ceniaw, to see; English ken, view, power of reach of vision, to ken, to know by sight. In Webster’s “English - Dictionary” kanna was said to be `an eye’ in Sanskrit; whereas it is exclusively a Dravidian word. This error may be compared with Klaproth’s representing kuruta, blind, as a Sanskrit word, instead of referring it to the Dravidian languages, to which alone it belongs. There is a curious word in Sanskrit kana, one-eyed, which seems to have some Dravidian relationship. It becomes in Bengali kana, blind which, in form at least, is identical with the Dravidian negative kana, that sees not. Possibly the Dravidian kan, to see, kannu, to consider, may have some ulterior connection with the Gothic kunn-an, to know: Greek gno-nai; Sans. na; Latin gna (gnarus); Old High German chann. The different shades of meaning which are attributed to Greek to gno-nai and eide-nai; seem to corroborate this supposition; for the latter is represented as meaning to know by reflection, to know absolutely, whereas the former means to perceive, to mark, and may therefore have an ulterior connection with the Dravidian root.” (Caldwell’s Dravidian Comparative Grammar, University Edition, p. 591.)
தமிழ் வளர்ச்சி தடுக்கப்பட்டிருந்த கடந்த மூவாயிரமாண்டுக் காலத்தில், ஆரியப் பூசாரிகளான வடமொழியாளர். ஜ்ஞா என்னுந் திரி சொல்லினின்று பின்வருமாறு ஏராளமான சொற் களை ஆக்கிக் கொண்டனர்.
(1) முன்னொட்டுப் பெறாதவை.
ஜ்ஞாத்வ, ஜ்ஞாப்தி, ஜ்ஞாதி, ஜ்ஞாத்ரு, ஜ்ஞாதேய, ஜ்ஞாதர, ஜ்ஞாந, ஜ்ஞாநி, ஜ்ஞாபக, ஜ்ஞேய முதலியன.
(2) முன்னொட்டுப் பெற்றவை.
அஜ்ஞா, அஜ்ஞாதி, அஜ்ஞாந, அஜ்ஞாநி, அஜ்ஞேய, அநுஜ்ஞப்தி, அனுஜ்ஞா, அநுஜ்ஞாந, அநுஜ்ஞாபக, அநுஜ்ஞாபந, ஆஜ்ஞா, ஆஜ்ஞப்தி, அஜ்நாத்ரு, அஜ்ஞாபந, ப்ரஜ்ஞா, ப்ரஜ்ஞ, ப்ரஜ் ஞாத்ரு, ப்ரஜ்ஞாந, ப்ரஜ்ஞாபந, ப்ரதிஜ்ஞா, ப்ரதிஜ்ஞாந, பரதிஜ் ஞேய, விஜ்ஞா, விஜ்ஞாந, விஜ்ஞாநி, விஜ்ஞாபக, விஜ்ஞாபந, விஜ் ஞாப்தி, விஜ்ஞேய, ஸம்ஜ்ஞா, ஸமஜ்ஞாபந, ஸமஜ்ஞாந, ஸமஜ் ஞாநி முதலியன.
இவை ஒரு பருக்கை அல்லது ஓரரிசிப் பதம். இவற்றினின்று ஏனைச் சொற்பெருக்கத்தையும் உய்த்துணர்ந்து கொள்க. இங்ஙனம் வடமொழியை வளர்த்துக் கொள்ளுதற்கு ஊணுடை முதலிய வாழ்க்கைப் பொருள்களெல்லாம் வரையாது வழங்கிய வள்ளல்கள், மேலையாரியத் திரிபாகிய வேதமொழியையும் அதனொடு தமிழைச் சேர்த்து வளர்த்த சமற்கிருதத்தையும் தேவ மொழியென்றும், அதனைப் போற்றுவதால் மண்ணுலகமே வீட்டுலகமாய் மாறி விடுமென்றும், குருட்டுத்தனமாய் நம்பிய பேதை மூவேந்தரே.
தமிழகத்திற்கு வேதமொழியோ சமற்கிருதமோ எள்ளளவுந் தேவையில்லை. ஆயினும் சமற்கிருதத்தை வளர்த்தது. தமிழை வீழ்த்தற்கும் நாளடைவில் அதனை ஒழித்தற்குமே என்பதை அறிதல் வேண்டும். தமிழகம் சிவ மதமும் திருமால் மதமும் தோன்றிய நாடாயிருந்தும், இன்னும் திருக்கோயில் வழிபாடு வடமொழியிலேயே நடைபெறல் வேண்டுமென்றிருப்பது, தமிழரின் மடமையையும் அடிமைத் தனத்தையுமே வலியுறுத்திக் காட்டும்.
கரணம் அல்லது காட்சி யென்னும் மூலச்சொல் சிறவாது, ஞானம் என்னும் அதன் திரிசொல்லே சிறந்து தோன்றுவது, உண்மையான ஒளிக்கல்லினும் போலிக்கல்லே பொலிந்து தோன்றுவது போலும்! எனினும், சமற்கிருதத்திற்கு ஞானத்தைத் தந்தது தமிழே என்னும் புகழ் நிலைத்து நிற்கும். (செ.செ.)
கண்டக
கண்டக - கண்ட (kh)
கண்டு = துண்டு, கட்டி, சருக்கரைக் கட்டி, நூற்பந்து.
கண்டு - கண்டம் = துண்டு, மாநிலப்பிரிவு,
ஒ.நோ: துண்டு - துண்டம். கண்டு - கண்டிகை = நிலப்பிரிவு. உப் புக்கண்டம், கண்டங்கண்டமாய் நறுக்குதல் என்பன உலக வழக்கு.
அம் என்பது இங்குப் பெருமைப் பொருட் பின்னொட்டு. (வ.வ: 105)
கண்டகம்
கண்டகம் - கண்டக (nt)
கள் - கண்டு - கண்டகம் = முள், நீர்முள்ளி, உடைவாள், வாள்,
ஒ.நோ: முள் - முண்டு - முண்டகம் = முள், முள்ளி, முள்தூறு, தாழை , கருக்குவாய்ச்சி. (வ.வ: 105)
கண்டகி
கண்டகி - கண்டகி, கண்டகின் (nt)
கண்டகம் - கண்டகி = தாழை, மூங்கில், இலந்தை, முதுகெலும்பு.
கண்டு - கண்டல் = தாழை, முள்ளி, நீர்முள்ளி.
வடமொழியிலும் கண்டக, கண்டகி என்னும் சொற்கள் முள்ளையும் முட்செடிகளையும் முட்போன்ற பொருள்களையுங் குறிக்கும். கண்டங்கத்திரி அதிற் கண்டகாரீ என வழங்கும். (வ.வ: 105)
கண்டம் (1)
சுண்டம் - சுண்டா - கள்
சுள் - சுண்டு - சுண்டம் = கள். சுண்டு - சுண்டை = கள். சுண்டுதல் = சுண்டக்காய்ச்சுதல், சுடுவதுபோற் கடுமையாயிருத்தல். (வ.வ: 156.)
கண்டம் (2)
கண்டம் - கண்ட (tt) = முள்.
கள் = முள். கள் - கள்ளி. ஒ.நோ: முள் - முள்ளி. கள் -
கண்டு = கண்டங்கத்தரி (முட் கத்தரி.)
கண்டு - கண்டம் = கள்ளி, கண்டங்கத்தரி, எழுத்தாணி, வாள், வடமொழியில் மூலமில்லை. (வ.வ: 105)
கண்டனம்
கண்டனம் - கண்டன (kh)
கண்டி+அனம் = கண்டனம். x.neh.: முண்டி-முண்டனம். (வ.வ: 106)
கண்டி (1)
சுண்டி - சுண்டி (th)
சுள் - சுண்டு. சுண்டுதல் = காய்தல், நீர்வற்றுதல். சுண்டு - சுண்டி = சுக்கு. (வ.வ: 156)
கண்டி (2)
கண்டி - கண்ட் (kh)
கண்டு - கண்டி. ஒ.நோ: துண்டு - துண்டி.
கண்டித்தல் = துண்டு துண்டாய் வெட்டுதல், வெட்டுவது போற் கடிந்து கூறுதல். முகத்தை முறித்தல் வெட்டிப்பேசுதல் என்னும் வழக்குக்களை நோக்குக.
கண்டி - கடி - கடிதல் = கழறுதல், கண்டி - கண்டிப்பு.
கண்டிதம்-கண்டித (மா) கண்டி-கண்டிதம் = கண்டிப்பு. (வ.வ:105)
கண்டிக்கும் வகைகள்
தெழித்தல் விலங்குகளை அதட்டி ஓட்டுதல்;
அதட்டுதல் மக்களை உரத்த குரலால் அல்லது ஒரு சில அசை களால் கடிதல்;
கடிதல் குற்றஞ் செய்தவனைக் கோபித்தல்.
கண்டித்தல் குற்றஞ் செய்தவன் திருந்துமாறு கோபித்தல்.
எச்சரித்தல் குற்றம் செய்தவன் திருந்துமாறு அச்சுறுத்தல்.
கழறுதல் மென்மையாகக் கண்டித்தல். (சொல்: 58)
கண்டு
சுண்டு - சுண்ட் (th)
இதுவே மேலதன் மூலம். இவற்றிற்கு வடமொழியில் மூலம் இல்லை (வ.வ: 157)
கண்டை
கண்டை - கண்டா (gh, nt)
குண்டு - குண்டலம் = வட்டம், வளையம், குண்டு - குண்டை = உருண்டு திரண்ட காளை.
குண்டை-கண்டை=வட்டமான அல்லது திரண்டமணி. (வ.வ: 106)
கண்ணாம்பொத்தி விளையாட்டு
ஆட்டின் பெயர்: ஒருவர் ஒரு பிள்ளையின் கண்ணைப் பொத்திக் கொண்டிருக்கும்போது, பிற பிள்ளைகள் ஓடி ஒளியும் விளையாட்டு கண்ணாம்பொத்தி எனப்படும்.
ஆடுமுறை: முதியார் ஒருவர், ஆட விரும்பும் பிள்ளைகளை யெல்லாம் ஒருங்கே இருத்திக்கொண்டு, ஒவ்வொருவரையும் சுட்டி ஒரு மரபுத் தொடரைச் சொல்லி, அத் தொடரின் இறுதிச் சொல்லாற் குறிக்கப்பெறும் பிள்ளையின் கண்ணைப் பொத்துவர். இனி, முதியார் ஒருவர் மீது எல்லாப் பிள்ளைகளும் படபடவென்று கையாலடிக்கும்போது, அம்முதியவரின் கையில் அகப்பட்டுக் கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்துவது முண்டு. பொத்தும் போது, மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடி ஒளிந்து கொள்வர்.
முதியார் அகப்பட்டுக் கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்திக் கொண்டிருக்கும்போது, அவ்விருவருக்கும் பின் வருமாறு விளையாட்டு நிகழும்.
முதியவர்: கண்ணாம் பொத்தியாரே, கண்ணாம் பொத்தியாரே1
பிள்ளை: என்ன?
மு: எத்தனை முட்டையிட்டாய்?
பி: மூன்று முட்டையிட்டேன்
மு: அவற்றுள் ஒரு முட்டையைப் பொரித்துத் தின்றுவிட்டு, ஒரு முட்டையைப் புளித்த தண்ணீருக்குள் போட்டுவிட்டு, ஒரு முட்டையைப் பிடித்துக் கொண்டுவா.
புலாலுண்ணாதாராயின், இவ்வுரையாட்டில் விளிக்குப் பிற்பட்ட வினா, விடை, ஏவல் பின்வருமாறிருக்கும்.
மு: எத்தனை பழம் பறித்தாய்?
பி: மூன்று பழம் பறித்தேன்.
மு:அவற்றுள் ஒரு பழத்தைப் பிள்ளையாருக்குப் படைத்து விட்டு, ஒரு பழத்தை அறுத்துத் தின்றுவிட்டு, ஒரு பழத்தைப் பிடித்துக் கொண்டுவா.
இனி, மேற்கூறியவாறு உரையாட்டின்றி,
கண்ணாங் கண்ணாம் பூச்சி!
காட்டுத்தலை மூச்சி
ஊளை முட்டையைத் தின்றுவிட்டு
நல்ல முட்டை கொண்டுவா
என்று ஏவுங் கொங்குநாட்டு வழக்கும் உளது.
இங்ஙனம் ஏவப்பட்ட பிள்ளை, உடனே ஓடிப்போய் அங்கு மிங்கும் பார்த்து, ஒளிந்து கொண்டிருக்கும் பிள்ளைகளுள் ஒருவரைத் தொடமுயலும். முதலாவது தொடப்பட்ட பிள்ளை அடுத்தமுறை கண் பொத்தப்படும். தொடப்படுமுன் ஓடிவந்து முதியாரைத் தொட்டுவிட்டால், பின்பு தொடுதல் கூடாது. ஒரு வரும் தொடப்படாவிடின், முன்பு கண்பொத்திய பிள்ளையே மறுமுறையுங் கண்பொத்தப்படும்.
ஆட்டுத் தோற்றம்: பள்ளிக்குச் செல்லாது ஒளிந்து திரியும் திண்ணைப்பள்ளி மாணவரைச் சட்டநம்பிப் பிள்ளை பிடித்து வருவதினின்றோ, சிறைக்குத் தப்பி ஒளிந்து திரியும் குற்றவாளி களை ஊர்காவலர் பிடித்துவருவதினின்றோ, இவ்விளையாட்டுத் தோன்றியிருக்கலாம்.
கணக்கன்
கணக்கன் - கணக்க (g) - வே.
கள்ளுதல் = கூடுதல், பொருந்துதல், ஒத்தல், கள்ள = போல.
கள்ளக் கடுப்ப ஆங்கவை எனாஅ (தொல். 1232).
கள் - கள - கண. கணத்தல் = கூடுதல், ஒத்தல்.
கள் - களம் = கூட்டம், அவை. களம் - கணம் = கூட்டம். கணவன் மனைவியொடு கூடுபவன்.
கண - கணக்கு = கூட்டு, மொத்த அளவு, அளவு. கணக்கு என்னுஞ் சொல் முதன்முதற் கூட்டற்கணக்கையே குறித்தது. அதற்குக் கணக்கில்லை, கணக்கு வழக்கில்லாமல், அது கணக் கன்று, என்பவற்றில் கணக்கு என்பது அளவு அல்லது கூட்டு என்றே பொருள் படுதல் காண்க.
கணக்க = போல. குரங்கு கணக்க ஓடுகிறான் என்னும் உலக வழக்கை நோக்குக. அந்தக் கணக்கில் (கணக்காய்) = அதைப் போல.
கணக்கு - கணக்கன் = கணக்குப் பார்ப்பவன், கணக்கத் தொழிற் குலத்தான்.
வடவர் காட்டும் கண் (g) என்னும் மூலம் இதற்குரியதன்று. கணம் கண (g) இ.வே. (t.t.:106)
கணம்
கணம்: கல் - கல, கல் - கள். கள்ளுதல் கலத்தல். கள் - களம் = கூட்டம், அவை.
கள - கண - கணம் = கூட்டம். கணத்தல் - கூடுதல். கணம் - கண (வ.). (தி.ம: 739)
கணவன் மனைவியர் இயல்பு
கணவனும் மனைவியும் ஓருயிரும் ஈருடலுமாக ஒருவர்க்கொரு வர் உரிமை பூண்டிருப்பதனால், இருவர்க்கும் முறையே கிழவன் கிழத்தி என்று பெயர். கிழமை பூண்டவன் கிழவன்; கிழமை - உரிமை. கணவன் மனைவியர் காதல் உரிமையெனப் பட்டமைக் கும் இதுவே காரணம். இருவரும் ஒருவர்க்கொருவர் கண்போற் சிறந்தவராதலின் கண்ணாளன் கண்ணாட்டி எனவுங் கூறப்படுவர்.
மனைவிக்கு வாழ்க்கைத் துணை என்றும், இல் இல்லாள் மனை மனைவி குடி என்றும் பெயரிருப்பதால், மனைவி கணவனுடன் ஒத்துழைத்து அவனுக்கு அடங்கி நடத்தல் வேண்டுமென்பதும், ஆடவன் பெண் துணையின்றி வாழ்க்கை நடத்துதல் இயலா தென்பதும், ஆடவன் வெளியேறிப் பொருளீட்டிக் கொணர்ந்து கொடுக்க மனைவி இல்லத்திலிருந்து கொண்டே தன்னையும் தன் கணவனையும் தன் மக்களையும் பேண வேண்டுமென்பதும் பெறப்படும். (த.தி.)
கணி
கணி - கண் (g)
கண் - கணி. கணித்தல் = புறக்கண்ணாற் காணுதல், அகக் கண்ணாற் காணுதல், மதித்தல், அளவிடுதல், கணக்கிட்டு வகுத்தல்.
கடைக்கணித்தல், சிறக்கணித்தல், புறக்கணித்தல் என்பன புறக்கண்ணாற் காண்டலைக் குறித்தல் காண்க. (வ.வ: 106)
கணி - கணி (g)
கணி = கணிப்பவன், கணியன் (சோதிடன்)
கணிகன், கணியன், கணிவன் என்னும் வடிவங்கள் வடமொழி யில் இல்லை. (வ.வ: 107)
கணிகை
கணிகை - கணிகா (g)
கணி - கணிகை = தாளங்கணித்தாடுபவள். (வ.வ: 107)
கணிதம்
கணிதம் - கணித (g)
கணி - கணிதம் = கணிப்பு, பல்வகைக் கணக்கு.
கணிதம் - கணிசம் = மதிப்பு (உத்தேசம்). கணிசம் என்னும் வடிவம் வடமொழியில் இல்லை.
குழம்பிற்குக் கணிசமாய் உப்புப்போடு என்னும் வழக்கை நோக்குக.
கணிதம் - கணிதன் = கணியன், கணக்கறிஞன். (வ.வ: 106 - 107)
கத்தரி
கத்தரி - கர்த்தரி
கத்துதல் = வெட்டுதல். இவ்வினை பிற்காலத்து வழக்கற்றது.
கத்து - கத்தி = அறுக்கும் அல்லது வெட்டுங்கருவி.
ஒ. நோ: கொத்து - கொத்தி, வெட்டு - வெட்டி.
கத்து + அரி = கத்தரி. கத்தரித்தல் = வெட்டி நறுக்குதல்.
அரிதல் = சிறிதாய் நறுக்குதல். அரித்தல் = அராவித்தேய்த்தல்.
கதக்குக் கதக்கென்று வெட்டுதல் என்பது உலகவழக்கு.
கத்தரிகை - கர்த்தரிகா (வ.வ: 107)
கத்தொலிகளும் ஒலியடிச் சொற்களும் - IMITATIVES
உயர்திணை யொலிகள்
ஒலியடி வினைகள்: முனங்கு. (A.S. moenan, E. moan.), விக்கு (E. hiccough), முறு, முறுமுறு (E. - Fr. - L. murmur), சிரி, சப்பு - சப்பிடு - சாப்பிடு. சவை - சுவை. E. savour. Fr. saveur, L. sapor. - sapio, to taste. தூ - துப்பு, உளறு, குழறு, (ஓதை) - ஓது, படி, ஊம் - ஊங் கொட்டு, மெச்ச(க் கொட்டு), குதப்பு - உதப்பு.
ஒலியடிப் பெயர்கள்: ஏப்பம், குலவை, சீழ்க்கை, சீத்தை, லா - நா - நாவு - நாக்கு. லாலாட்டு - ராராட்டு - ரோராட்டு. லாலம் - தாலம் தாலாட்டு. E. Lull, Scand - Sw. lulla, Ger. lallen, Gr. laleo. E. Lullaby, a song to lull children.
அஃறிணையொலிகள்
ஒலியடிவினைகள்: தழங்கு, முழங்கு, உரறு (E. roar), இடி, உறுமு, இமிழ், குமுறு, குலை - குரை, பிளிறு (E. blare), அதிர், கனை (E. neigh, A.S. hnoegan, Ice. hneggja, Scot. nicher. கரை, (E. crow).
ஒலியடிப் பெயர்கள்: ஊளை, (E. howl), காகா - காக்கா - காக்கை - காகம். (கூ) - குயில். ஒ.நோ: E. (கூக்கூ) - (குக்கூ) cuckoo, குர் - (குரம்) - குரங்கு. காள் - காழ் - (காழ்தை) கழுதை தெ. காடிதெ. கழுதைக் குபதேசங் காதில் ஓதினாலும் காழ் காழ் என்கிற புத்தி போகாது என்னும் பழமொழியை நோக்குக. மா - ஆ - ஆன். மா. - மான்.
மத்து - மத்தளம், சல் - சல்லரி, கறம் - கறங்கு, கிண்கிண் கிண்கிணி, சல - சலங்கை - சிலங்கை. சலங்கை - சதங்கை. சல் - சாலர். குடகுட -குடாக்கு. சிங்-சிங்கி, டம்-டங்கா, டமாரம், ம்ருதங்கம் - மிருதங்கம்.
கதம்ப
கதம்ப - கதம்ப
கல - கலம்பு - கலம்பம் - கதம்பம் = பல்வேறு வகை மலர்கள் கலந்த மாலை.
ல - த, போலித்திரிபு. ஒ.நோ: சலங்கை - சதங்கை.
வடவர் காட்டும் கத் என்னும் மூலம் கல்லென்னும் தென்சொல் வேர்த்திரிபே. (வ.வ: 107)
கதலி
கதலி - கதலி, கதலீ
கதலி = சிறுவாழைப்பழம், கதலி - கசலி = மீன்குஞ்சு.
இச்சொல் குதலை என்பதனொடு தொடர்புடையது.
மிக இனிக்கும் சிறு வாழைப் பழவகை தேங்கதலி எனப்பெறும்.
வடசொல் சிறுமை என்னும் சிறப்புப் பொருளிழந்து, பொது வாய் எல்லா வாழைப்பழ வகைகளையுங் குறிக்கும். (வ.வ: 107)
கதை
கதை - கதா (th)
கத்துதல் = உரக்கச் சொல்லுதல்.
கத்து - கதை. ஒ. நோ: நச்சு - நசை. நொடித்தல் = சொல்லுதல். நொடி = கதை.
வடசொன்மூலம் கத் என்பதே. கத்து - கத். (வ.வ: 108)
கந்தன்
கந்தன் - ஸ்கந்த (dh)
கந்து = தூண், பற்றுக்கோடு. கந்து - கந்தன் = தூணிற் பொறிக் கப்பட்டவன் அல்லது பற்றுக்கோடானவன், முருகன். (வ.வ: 108)
கந்து
கந்து: கும்முதல் - திரளுதல், கும் - கம் - கந்து = திரண்ட தூண்.
ஒ. neh.: உம் - உந்து. கந்து - ஸ்கந்த (வ.). (தி.ம: 739)
கந்துகம்
கந்துகம் - கந்துக
கள் - கண்டு = நூற்பந்து. கண்டு - கந்து - கந்துகம் = பந்து. இனி, கும் - கம் - கந்து - கந்துகம் என்றுமாம். (வ.வ: 168)
கந்தை
கந்தை - கந்தா (nt)
கத்து - கந்து - கந்தல், கந்தை. கொந்து - கொந்தல் - கந்தல் (?) (வ.வ: 108)
கப்பரை
கப்பரை - கர்ப்பர
கொப்பரை - கப்பரை. (வ.வ: 108)
கம்
கம் - க (நீர்)
அம் - கம் = நீர். (வ.வ: 108)
கம்பலம்
கம்பலம் - கம்பல
கம்பலம் - கம்பளம் - கம்பளி (வ.வ: 108)
@கம்ப விளையாட்டு
நால்வர், ஒரு மண்டபத்தின் அல்லது சதுர இடத்தின் நான்கு மூலைக் கம்பத்திலும், கம்பத்திற்கொருவராக நின்றுகொண்டு, எதிரும் வலமும் அல்லது எதிரும் இடமுமாக, மாறி மாறி அல்லது சுற்றிச்சுற்றி வேறுவேறு கம்பத்திற்கு இயங்கிக் கொண்டிருக்க, இன்னொருவர் அவரைத் தொடல்வேண்டும். முன்னரே ஏதேனு மொருவகையில் தோற்றவர் அல்லது தவறியவர் தொட வேண்டியவராவர்.
ஒருவர் கம்பத்தைவிட்டு விலகியிருக்கும்போதும், ஏற்கனவே ஆளுள்ள இன்னொரு கம்பத்தைச் சேர்ந்திருக்கும்போதும், அவரைத் தொடலாம். தொடப்பட்டவர் தொட்டவர் வினையை யும், தொட்டவர் தொடப்பட்டவர் வினையையும், மேற்கொள்ள வேண்டும்.
தொடுகிறவர், பால் மோர் தயிர் விற்பவர்போல், பாலோ பால்! அல்லது மோரோ மோர்! அல்லது தயிரோ தயிர்! என்று சொல்லிக்கொண்டு திரிவது, சோழ கொங்கு நாட்டு வழக்கம், உச்சந்தலையைக் கையால் தட்டிக்கொண்டு தொண்டான் தொண்டான் தொடுபிடி தொண்டான் என்று சொல்லித் திரிவது, பாண்டிநாட்டு வழக்கம் ஆகும். பாண்டிநாட்டில் இவ் விளையாட்டிற்குத் தொண்டான் தொண்டான் தொடுபிடி தொண்டான் என்றே பெயர்.
தீட்டுள்ள அல்லது தீண்டப்படாத ஒருவர் தம்மினின்று விலகி யோடிய பிறரை, விளையாட்டிற்கோ குறும்பிற்கோ தொட்ட செயலை, நடித்துக் காட்டுவதாகவுள்ளது இவ் விளையாட்டு.
கரணம்
திருமணத்திற்குரிய ஒப்பந்த அல்லது தாலிகட்டுச் சடங்கு கரணம் எனப்படும். கரணம் செய்கை. அது ஆட்சி பற்றி சடங்கை உணர்த்திற்று. கரணத்தோடு கூடிய திருமணத்தை வதுவை மணம் என்பது இலக்கிய வழக்கு. (த.தி. முன் V)
மணமகன் மணமகளைத் தன் நிலையான வாழ்க்கைத் துணை யாகக் கொள்வதாக, பலரறியக் கடவுள் திருமுன் சூள் (ஆணை) இடுவதே கரணமாம். (த.தி. முன் V)
கரண முறை
பெருமானரே! பெருமாட்டியரே
அல்லது
பெரியோரே! தாய்மாரே!
அல்லது
உடன்பிறப்பாளரே! உடன் பிறப்பாட்டியரே! என விளித்து
இன்று…………………………. என்னும் மணமகனுக்கும்,……………………… என்னும் மணமகளுக்கும், இறைவன் திருமுன்பும் இங்குள்ள பெரியோர் முன்னிலையிலும், (இங்குள்ள பெரியோர் முன்னிலையில்) திருமணக் கரணம் நிகழவிருக்கின்றது. அனைவரும் அமைதியா யிருக்கக் கேட்டுக்கொள்கின்றேன்; என்று அவையமர்த்தி,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு
என்னும் முதற் குறளையேனும்,
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்கள்
என்னும் கம்பவிராமாயணக் கடவுள் வணக்கச் செய்யுளை யேனும்,
உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்
என்னும் பெரியபுராணக் கடவுள் வணக்கச் செய்யுளையேனும்,
துங்க இல்லறத் துணைமையை நாடியே
இங்க மர்ந்துள இம்மண மக்களை
மங்க லம்மிகு மணவினைப் படுத்தவே
எங்குந் தங்கிய இறையடி பணிகுவாம்
என்னும் திருமண இறைவணக்கச் செய்யுளையேனும், பத்தி யுணர்ச்சியுடன் ஓதி, பின்வருமாறு கரணம் நடத்திவைத்தல் வேண்டும்.
கடவுள் நம்பிக்கையில்லாவிடத்தில் கடவுள் வணக்கத்தை விட்டு விடலாம்.
கரண ஆசிரியர் (மணமகனை நோக்கி)………….. நீ(நீர்)………….v‹D« இவளை (இவரை) உன் (உம்) வாழ்க்கைத்துணையாகக் கொள்ள இசைகின்றாயா? (இசைகின்றீரா?)
மணமகன் - இசைகின்றேன்.
க.ஆ. (மணமகளை நோக்கி) ………… நீ (Ú®)……….. என்னும் இவனை (இவரை) உன் (உம்) வாழ்க்கைத் துணையாகக்கொள்ள இசைகின்றாயா? (இசைகின்றீரா?)
மணமகள் - இசைகின்றேன்.
க.ஆ. (மணமகன் குரவரை நோக்கி) ……. உங்கள் மகன் (kfdh®)……. என்பவன் (என்பவர்) ………… என்னும் இந் நங்கையை (நங்கையாரை) வாழ்க்கைத் துணையாகக்கொள்வது, உங்கட்கு இசைவுதானா?
மணமகன் குரவர் - இசைவுதான்.
க.ஆ. (மணமகள் குரவரை நோக்கி) உங்கள் மகள் (kfsh®)…….. என்பவள் (என்பவர்) ……. என்னும் இந் நம்பியை (நம்பியாரை) வாழ்க்கைத் துணையாகக் கொள்வது, உங்கட்கு இசைவுதானா?
மணமகள் குரவர் - இசைவுதான்.
க.ஆ. (மணமகன் தன் வலக்கையால் மணமகள் வலக்கையைப் பிடிக்கச் செய்து, பின்வரும் உறுதிமொழியைத் தாம் தொடர் தொடராகச் சொல்லி, மணமகனைச் சொல்வித்து, அது முடிந்தபின், மணமகளையும் அவ்வாறே சொல்வித்தல்வேண்டும்).
மணமகன் : ……. ஆகிய நான், ……. ஆகிய உன்னை, இன்று என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டு, என் உயிர் உடல் பொருள் மூன்றையும் உனக்கே ஒப்புவித்து, என் வாழ்நாள் முழுதும், உன் காதற் கணவனா யிருப்பேனென்று, இறைவன் திருமுன்பும், இங்குள்ள பெரியோர் முன்னிலையிலும் (இங்குள்ள பெரியோர் முன்னிலையில்) உறுதி கூறுகின்றேன்.
மணமகள்:…………………M»aeh‹…………………………. ஆகிய உம்மை, இன்றுஎ‹வாழ்க்கை¤துணையாfஏற்றுக்கொண்டு,எ‹உயி®உடšபொருŸமூன்றையும்,உமக்fஒப்புவித்து,எ‹வாழ்நாŸமுழுதும்,உ«காதšமனைவியhயிருப்பேனென்று,இறைவ‹திருமுன்பும்,இங்குள்sபெரியோ®முன்னிலையிலும்,(இங்குள்sபெரியோ®முன்னிலையில்)உறுâகூறுகின்றேன்.
க.ஆ. (உறுதி கூறல் முடிந்தவுடன், மணமகன் மணமகள் fழுத்தில்kங்கலநாணைக்fட்டச்bசய்து,mšலதுமzமகள்kதிரவிuலில்kதிரத்தைச்rறிக்கச்rய்து,இUவரையும்மhலைமhற்றுவிக்கவேண்டும்.அj‹ பின், மணமக்கள் இருவரையும், பின்வருமாறு வாழ்த்த வேண்டும்).
மணமக்களாகிய நீங்கள் இருவீரும், ஓருயிரும் ஈருடலுமாக ஒன்றி, பகுத்தறிவு பாங்கிருக்க, தன்மானந் தழைத்தோங்க, குன்றாச் செல்வமுங் குறையா நலமுங்கொண்டு. உற்றோர் மகிழவும் மற்றோர் புகழவும் (எல்லாம் வல்ல இறைவன் அருளால்) நிலவுலகில் நீடூழி வாழ்ந்திருக்க.
(குரவர் - தந்தை, தாய், தமையன், தமக்கை, காப்பாளர், பெரியோர் ஆகியவருள் ஒருவர்). (த.தி.)
கரிசு
கரிசு (பாவம்) கரிசன் (ஆண்பால்) கரிசி (பெண்பால்) (தி.ம. 114)
கரு
கரு - கப்ப (g, bh) - இ.வே.
குருத்தல் = தோன்றுதல். குரு - கரு - (கருப்பு) கருப்பம்.
கரு = சூல், பீள், முட்டை, சேய், குட்டி.
வடமொழியாளர் க்ரு (விளி) என்றும் grabh = grah (பற்று) என்றும் மூலங்காட்டுவது பொருந்தாது. (வ.வ: 108)
கருப்பும் கறுப்பும்
கருமை குறித்த சொல்லின் கருப்பு, கறுப்பு என்னும் இருவடிவு களுள். முன்னதே முன்னதாம். இம் முடிவிற்கு ஏதுக்கள் மூன்று, அவையாவன:
1. கள் எனும் வேர்ச்சொல்லினின்று கரு என்னும் வடிவே முந்தித் தோன்றல்.
கள் - கர் - கரு - கறு.
ஒ.நோ: குள் - குர் - குரு - குறு:
முள் - முர் - முரு - முறு (வளை)
தெள் - தெறு. வெள் - வெறு, என்பவற்றில் றகரவடிவு நேரடியாகத் தோன்றியிருப்பினும், அவை ரகர வடிவாகிய இடைநிலை யில்லாதன. கறு என்பதோ அவ் இடைநிலையை உடையது. ரகரத்தின் வன்மையே றகரமாதலால், ரகரமே முந்தியதாம். நெடுங்கணக்கிலும் ரகரம் முன்னும் றகரம் பின்னும் வைக்கப் பட்டிருத்தல் காண்க.
ஒளிர் - ஒளிறு, முரி - முறி (வளை) என்பனவும் றகரத்தின் பின்மையைக் காட்டும்.
2. கருமை குறித்த சொற்களுள், மாபெரும்பாலனவும் இரு வகைப் பண்டை வழக்கும் ரகரத்தையே கொண்டிருத்தல்.
எ-டு:
தனிச்சொற்கள்:
கரம்பை, கரி, (அடுப்புக்கரி) கரிசல், கரிச்சான், கரியவன் (திருமால்), கருக்கம் (கருமுகில்), கருக்கல், கருக்கு, கருகல், கருப்பை, (கருப்பெலி) கார், காரி (கருங்காளை)
கூட்டுச் சொற்கள்:
கரிக்குருவி, கரிக்கோடு, கரிச்சட்டி, கரித்துணி, கரிமா, கரியடுப்பு, கரியமால், கரியமான், கருகுமணி, கருங்கடல், கருங்கரப்பான், கருங்கல், கருங்களமர், கருங்காடை, கருங்காணம், கருங்காந்தள், கருங்காலி, கருங்காவி, கருங்கிளி, கருங்குட்டம், கருங்குதிரை, கருங்குரங்கு, கருங்குருவி, கருங்குவளை, கருங்குளவி, கருங் குறுவை, கருங்கொண்டல், கருங்கொல், கருங்கொள், கருங் கோழி, கருங்கோள், கருஞ்சம்பா, கருஞ்சாந்து, கருஞ்சாமை, கருஞ்சாரணை, கருஞ்சாரை, கருஞ்சிவப்பு, கருஞ்சீரகம், கருஞ் சுரை, கருஞ்செவப்பு, கருஞ்சேரா, கருஞ்சோளம். கருந்திருக்கை, கருந்தேள், கருநந்து, கருநாகம், கருநாடு, கருநார், கருநாரை, கருநிமிளை, கருநெய்தல், கருநெருஞ்சி, கருநெல்லி, கருநொச்சி, கரும்படை, கரும்பலகை, கரும்பிள்ளை, கரும்பிறை, கரும் பளிங்கு, கரும்புடையன், கரும்புல் (பனை), கரும்புள், கரும் புள்ளி, கரும்புற்று, கரும்புறா, கரும்பூனை, கரும்பேன், கரும் பொன், கருமணித் தக்காளி, கருமணல், கருமணி, கருமருது, கரு மலை, கருமா, கருமுகில், காரரிசி, காராடு, காராளர் காரெலி, காரெள், காரொக்கல்.
3. றகரங் கொண்ட வடிவு வழிப்பொருட்கே ஏற்றமை. இற்றைத் தமிழ் நூல்களுள் முதலதான தொல்காப்பியத்தில், கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள (855) என்று, கறுப்பு என்னும் சொல் சினப்பொருளைக் குறிப்பதாகவே கூறுப்பட்டுள்ளது. கறுத்தவரும் சிவந்தவருமாக இருவகை நிறத்தார் தமிழகத்துத் தொன்றுதொட்டுளர். சிவப்பு என்றது பொன்னிறத்தையும் செம்பொன்னிறத்தையும், சினத்தினால், கரியர் முகம் மிகக் கருக்கும்: சிவப்பர் முகம் மிகச்சிவக்கும்: கண் இருநிறத்தார்க் கும் சிவக்கும்.
செறுவர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே (புறம்: 100)
என்னும் புறப்பாட்டடியைக் காண்க.
பொருள் மாறும்போது சொல்வடிவம் மாறவேண்டுமென்பது சொல்லாக்க நெறிமுறையாதலால். கருப்பு என்னும் சொல் சினத்தைக் குறிக்கும் போது கறுப்பு என்றாயிற்று.
வசையுநர்க் கறுத்த பகைவர் (பதிற்றுப். 32: 15)
கறுத்தோர் = பகைவர்.
கறுத்தோ ருறுமுரண் தாங்கிய. (பதிற்றுப். 66: 9)
கறு - கறுவு = நீள்சினம், மனவயிரம்.
கறுவி வெகுண்டுரைப்பான் (திரிகடு. 46)
கறுத்தல் = மங்கிச் சிறிது கருத்தல். எ.டு: கறுக்கண் வெள்ளி.
கறுப்பு = கறை, குற்றம், தழும்பு, கருமேகநோய்.
கறு - கறை = கருத்த களங்கம். கறைமிடறு (புறம். 1:5)
கறை = களங்கம், மாசு, குற்றம், உறைந்து கருத்த அரத்தம்.
கறுப்புக் கட்டுதல் = பயிர்முதிர்ந்து இருண்ட பச்சைநிறங் கொள்ளுதல்.
கறுத்தல் = முற்றுதல். கெளவை கறுப்ப (மதுரைக். 371)
கறுப்புவெற்றிலை = இருண்ட பச்சை வெற்றிலை.
பச்சை, நீலம், கருப்பு மூன்றும் ஓரின நிறங்களாதலால், பயிர் முற்றி இருண்டபசுமை யடைதல் கறுத்தல் எனப்பட்டது.
இங்ஙனம் வழிப்பொருள்கட்கே கறுப்பு என்னும் வடிவம் உரியதாம். ஆயினும், 10ஆம் அல்லது 11ஆம் நூற்றாண்டினதான பிங்கலந்தையில் கறுப்பு என்னுஞ் சொற்குக் கருமைப் பொருள் குறிக்கப்பட்டுவிட்டதனால், அதற்குப் பிற்பட்ட இலக்கியத்தில் அது அம் முதற்பொருளிலும் வழங்கலாயிற்று.
கம்பராமாயணம், நகர் நீங்கு படலம் 58ஆம் செய்யுளில், கறுத்தாய் என்னும் வடிவம், பொறுத்தாய், இறுத்தாய், வெறுத் தாய் என்னும் ஏனையடி முதற்சீர்கட்கு எதுகையாக வந்ததாகக் கருதலாம். அதே வனப்பில், இலங்கை காண்படலம். 47ஆம் செய்யுளில், நாள் என்னும் சொல், யாழ், வாழ், பாழ் என்பனவற் றிற்கு எதுகையாக நாழ் என்று வந்திருத்தல் காண்க. ஓர் கறுப்பு மில்லாத என்னும் படிக்காசுப் புலவர் பாட்டிலும். ஆர் கறுப்பன் பேர்கறுப்பன் என்பனவற்றிலுள்ள றகரம் எதுகை பற்றியதே.
பொதுவாக, பிற்காலத்திலக்கியத்தில் சொற்கள் சிறப்புப் பொருள் கருதாது மோனையெதுகைத் தொடை யொன்றேபற்றி ஆளப் பட்டுள, ஊடல், புலவி, துனி என்னும் மூன்றும் மூவேறு நிலையைக் குறிப்பனவாயினும், ஒரே பொருளில் ஆளப்பட்டிருத் தலைக் காண்க.
ஆதலால், கறுகறுத்தல் (மிகுந்த கருநிறமடைதல், இலக்கண விளக்கம், 325. உரை), கறுத்த காக்கட்டான் (கருங்காக்கணம், யாழ்ப்பாண அகராதி), கறுத்தகார் (குறுவை நெல்வகை), கறுத்த வன் (கருநிறமுடையவன்) கறுத்தவுப்பு, கறுப்பன் (கரியவன்), கறுப்புக் கட்டுதல், கறுப்புக் கன்னிமார், கறுப்புக் காஞ்சொறி, கறுப்புக் குங்கிலியம், கறுப்புக் கொள், கறுப்புத் தாமர், (ஒரு வகை மரம்). கறுப்புத்தேயிலை, கறுப்புப்பயறு, கறுப்புப்புள்ளி, கறுப்புப்பூலா, கறுப்பு மட்டிவாய், கறுப்பு மணித்தக்காளி, கறுப்புவரால், கறுப்பு வவ்வால், கறுப்பு வீரம் (விளக்குக்கரி) முதலிய பிற்கால இலக்கிய வழக்கும் அகர முதலி வழக்கும் கொள்ளத்தக்கனவல்ல.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில், வரச்சூலை, வரட்சி, வரட்சுண்டி, வரட்சூலை, வரட்சொறி, வரட்டடைப் பான், வரட்டி, வரட்டுதல், வரட்டு, வரட்டுச் சோகை, வரட்டுப் பசு, வரள், வரள்வாயு என றகரம் வரவேண்டிய சொற்களையெல் லாம் ஒழுங்காய் ரகரமிட்டுக் குறித்திருக்கின்றனர். இத்தகைய அகரமுதலிகளைப் பின்பற்றாது. தூய கருநிறத்தைக் குறிக்கும் சொல்லெல்லாம் ரகரத்தைக் கொண்டவையென்றும், சினம், கறை, முதிர்ச்சி முதலிய வழிப்பொருளைக் குறிப்பனவெல்லாம் றகரத்தைக் கொ ண்டவையென்றும், தெரிந்துகொள்க. மர வயிரம் கருத்தும் சிவந்தும் இருக்குமாதலால், கருத்ததைக் கருப்பு என்றும் சிவந்ததைச் சேகு என்றும் சொல்லல் வேண்டும்.
இனி, கருப்பு என்னும் சொல் பஞ்சம் என்னும் பொருட்கேயுரிய தாகச் சிலர் கருதுவர். கருப்பு இருளையும், இருள் துன்பத்தையும் நாட்டுத் துன்பங்களுட் கொடிய பஞ்சத்தையும் குறிக்கும். அதனாலேயே. அத்தமிக்கும் போதில் என்னும் காளமேகம் பாட்டுச் சொற்றொடர்க்கு. பஞ்சகாலத்தில் என்றும் பொருள் கூறப்படும். இங்ஙனம் அணிவகைப் பொருள்கள் எல்லா நிறப் பெயர்கட்குமுண்டு.
எ-டு:
கருப்பு = பேய், வயிரம், சாராயம்.
வெள்ளை = வெளுத்த ஆடை, சுண்ணாம்பு, வெள்ளாடு, வெண்பா, கள்ளமின்மை, தெளிவு.
பச்சை = இழவு வீட்டிற் கொடுக்கும் பயறு. இடக்கர், பச்சை மையிற் குத்திய தொய்யில், மொழியின் இயல்பு நிலை.
சிவப்பு = மாணிக்கம் (சிவப்புக்கல்), சினம்.
மஞ்சள் = காமாலை.
இனி, பொதுமக்கள் என்னும் சொல் புதியதென்றும், பொருந்தாத தென்றும், சில புலவர் கருதுகின்றனர்.
10 ஆம் நூற்றாண்டினதான பழமொழியில்,
புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புன லூர! பொதுமக்கட் காகாதே
பாம்பறியும் பாம்பின கால்
என்னும் 7ஆம் செய்யுளில் பொதுமக்கள் என்னும் சொல் வந்திருத்தல் காண்க.
இனி, இக்கால அகரமுதலிகளில் (அகராதிகளில்) சில சொற் கட்குத் தவறான பொருள் குறிக்கப்பட்டிருப்பதால் அவற்றை ஆய்ந்து உண்மையைக் கடைப்பிடித்தல் வேண்டும். ஓரை என்னும் சொல்லிற்கும் ஹோரா என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் யாதொரு தொடர்புமில்லை. அங்ஙனமே அதற்கும் அவர் (hour) என்னும் ஆங்கிலச் சொல்லிற்கும், கடகவோரை, கன்னியோரை எனக் கணிய நூல்கள் கூறுவது சரியே, ஓரை என்பது கூட்டத்தைக் குறிக்கும் சொல்: அது சிறப்பாக மகளிர் ஓரையை யும் உடுக்களின் ஓரையையும் குறிக்கும். மகளிரைக் குறிக்கும் சொல், அவர் விளையாட்டையும் விளையாடும் இடத்தையும் ஆகுபெயராக உணர்த்தும்.
ஒல்லுதல் = பொருந்துதல், கூடுதல். ஒல் - ஒர் - ஓர் - ஓரை.
ஓரையைக் குறிக்கும் இராசி என்னும் வடசொல், கூட்டம் என்னும் பொருளதே. அது பின்னர் இனத்தை உணர்த்தும் இப் பொருளில் அது race என்னும் ஆங்கிலச் சொற்கு இனமாகும். Constellation என்னும் ஆங்கிலச் சொல்லும் உடுக்கூட்டம் என்னும் பொருள்பற்றியே ஓரையைக் குறிக்கும். Con = together stella = star. ஓரை என்னும் தூய தமிழ்ச் சொல்லை ஆரியச் சொல் லாகக் காட்டற்கு. அதைக் கிரேக்கச் சொல்லோடும் ஆங்கிலச் சொல்லோடும் வலிந்து தொடர்புபடுத்தினர். ஆதலால், இனிக் கடகவோரை, கன்னியோரை என்றே குறிப்பிடுக. (தமிழ்ப்பாவை எழுத்தாளர் மன்றச் சிறப்பு மலர் 1964 - 65)
கரும்புவகை
கரும்பு கரியது; வேழம் வெளியது; இராமக் கரும்பு வெண்மை யும் செம்மையுங் கலந்தது. (சொல் 71)
கருமம்
கருமம் - கர்மன் (இ.வே.)
கருமம், கர்மன் என்னும் இருசொல்லும் செய்கை, வினை, தொழில் என்று பொருள்படும் ஒரே சொல்லின் இருவேறு வடிவு களே. கருமம் என்பதனொடு தொடர்புடைய கருவி என்னும் சொல் வடமொழியிலில்லை. காரணம் காரியம் என்னும் வட சொல்லிணை யொத்ததே கருவி கருமம் என்னும் தென்சொல் லிணையும்.
மூன்றா குவதே
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே. (தொல். 557).
கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு
உரிமையும் உடைத்தே கண்என் வேற்றுமை (மேற்படி 568). (வ.வ.)
இங்ஙனம் கருவி கருமம் என்னும் இரு சொல்லும், தொன்று தொட்டுத் தமிழில் வழங்கி வருவதுடன், இலக்கணக் குறியீட்டு-றுப்புக்களாகவும் அமைகின்றன. இவ்விரண்டும் கரு என்னும் ஒரே முதனிலையினின்று பிறந்தவை. ஆதலால், கருவி என்னும் சொற் போன்றே கருமம் என்னும் சொல்லும் தென்சொல்லாதல் தெளிவு.
கரு என்னும் முதனிலை இன்று வழக்கற்றது. கருத்தல் செய்தல். கருங்களமரும் வெண்களமரும் போலப் பல்வகைப்பட்ட கரியரும் பல்வகைப்பட்ட பொன்னருமென, இருவேறு நிறவகை யினராகத் தமிழர் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றனர். வருந்தியுழைப்பதன் விளைவாக, கரியர் கை மிகக் கருப்பதும் பொன்னர் கை சிவப்பதும் இயல்பு. (வ.வ.)
கருங்கை வினைஞருங் களமருங் கூடி (சிலப். 10: 125).
செய்தகை சேவேறும், செய்யாத கை நோவேறும். (பழமொழி)
கை கருத்தல் பற்றிக் கரு என்னும் வினைச் சொல்லும் சிவத்தல் பற்றிச் செய் என்னும் வினைச் சொல்லும், தோன்றியதாகத் தெரிகின்றது. இவற்றிற்குப் பிறவினை வடிவம் வேண்டியதில்லை.
ஒ.நோ: வெளுத்தல் = வெள்ளையாதல் (த.வி.) துணியை வெள்ளை யாக்குதல் (பி.வி.)
கருமம் - கம்மம் - கம்.
கம்மம் = முதற்றொழிலாகிய பயிர்த்தொழில்.
கம்மவர் - கம்மவாரு = பயிர்த்தொழில் செய்யும் தெலுங்கர்.
கம் = பல்வேறு கனிய (உலோக)த் தொழில். ஈமுங் கம்மும் (தொல். 328) (வ.வ.)
கம்மாளன் = பொற்கொல்லன், ஐங்கொல்லருள் ஒருவன்.
கம்மியன் = கற்றச்சன் (சிற்பி).
கரு + வி = கருவி. கரு + அணம் = கரணம் = செய்கை, திருமணச் சடங்கு, கருவி, அகக்கருவி.
கற்பெனப் படுவது கரணமொடு புணர (தொல். 1088).
இதிற் கரணம் என்பது திருமணவினையாகிய சடங்கைக் குறித்தது.
வடவர் கரு என்னும் முதனிலையைக் க்ரு எனத் திரித்துள்ளனர். இங்ஙனம் சொன்முதல் உயிர்மெய்யில் உயிரை நீக்குவது ஆரிய மரபு. (வ.வ.)
ஒ.நோ: பொறு - ப்ரு (bh), திரு - ச்ரீ, வரி - வ்ரீஹி.
கரை - E cry, துருவு - E through, புருவம் - E brow.
வடவர் கரணம் என்னும் சொல்லைக் காரண என நீட்டி, அதற்கேற்பக் கார்ய என்னும் சொல்லையுந் திரித்துள்ளனர். காரணம் என்னும் நீட்டம் தமிழுக்கேற்கும். ஆயின், கார்ய என்னும் திரிப்பு ஏற்காது.
ஏற்கெனவே கரணம் என்பதினின்று கரணியம் என்னும் சொல் திரிந்துளது. அதற்கேற்பக் கருமம் என்பதினின்று கருமியம் (காரியம்) என ஒரு சொல்லைத் திரித்துக் கொள்ளலாம்.
செய், பண்(ணு), புரி முதலிய பல பிற ஒருபொருட்சொற்கள் தமிழில் இருப்பதனாலும், கரு என்பது வழக்கற்றுப் போனதி னாலும், பின்னது வடசொல்லென மயங்கற் கிடந்தருகின்றது. தமிழ் வடமொழிக்கு முந்தியதென்றும் பெருஞ் சொல்வள மொழியென்றும் அறியின், இம்மயக்கந் தெளிந்துவிடும். தமிழ் திரவிட மொழிகட்குரிய இல் மனை வீடு முதலிய சொற்களை மட்டுமன்றி, ஆரிய மொழிகட்குரிய குடி என்னுஞ் சொல்லையுந் தன்னகத்துக் கொண்டுள்ளதென்று, கால்டுவெலார் கூறியிருப் பதைக் கூர்ந்து நோக்குக. (வ.வ.)
கருவி வகை
கருவி பருப்பொருள் ஆய்தப்பொது (Instrument) ஆயுதம். ஒரு தொழிற்குரிய கருவி (Tool); படை போர்க்கருவி (weapon); கரணம் அறிவுக் கருவி அல்லது உறுப்புக் கருவி; காரணம் காரியத்தை விளைவிப்பது (cause); ஏது வாதக்காரணம் (Reason); முதல் வணிக முதல் போன்ற முதனிலை; அடிமரத்தின் அடிபோன்ற முதனிலை; மரத்தின் வேர்போன்ற முதனிலை; வித்து மரம் முளைத்த விதை போன்ற முதனிலை; தலைக்கீடு போலி ஏது (pretext) (சொல்: 45)
கருள்
கருள் - க்ருஷ்
கள் - கர் - கரு - கருள் = இருள் (பிங்), கருமை.
கருடரு கண்டத்து ….. கைலையார் (தேவா. 337: 4).
கருள் - க்ருஷ் - க்ருஷ்ண (இ.வே.) = கருமை.
க்ருஷ்ணபக்ஷ = கரும்பக்கம், தேய்பிறை, க்ருஷ்ண ஸர்ப்ப = கரும்பாம்பு. (வ.வ: 108)
கரை
கரை: கரைதல் = அழைத்தல், சொல்லுதல், விளம்புதல், கரை க்ரு (வ.வ.) (தி.ம: 741)
கரையேறுதல்
இவ்வுலக வாழ்க்கை ஓர் ஆற்றை அல்லது கடலைப் போன்றது. இவ்வுலக இன்பமாகிய சிற்றின்பத்தில் பற்று வைத்து வாழ்வது அந்நீர் நிலையில் மூழ்கி இறப்பதையும், பற்றற்று வாழ்வது அதை நீந்திக் கரையேறி உய்வதையும் நிகர்க்கும். இதனால் உலகப் பற்றொழித்துப் பேரின்ப வீட்டை அடைவதற்குக் கரையேறுதல் என்றும், வீட்டுலக வாசிகளுக்கு அக்கரையர் என்றும் பெயர்.
பிறவிக் கடலினின்று ஆன்மாக்களைக் கரையேற்றுபவர் என்னும் கருத்தை யுட்கொண்டே சமய குரவரைத் தீர்த்தங்கரர் என்பர் சமணர். தீர்த்தம் என்பது நீர்நிலையைக் குறிக்கும் வடசொல். (சொல் . 5)
கல்
கல்1 - கல்
கல்லெனல் = ஆரவாரித்தல். கல் - கலி. கலித்தல் = ஒலித்தல். கலி = ஒலி (தொல். 832).
கல்2 - கன் (KH) - இ. வே.
கல்லுதல் = தோண்டுதல். கல் - கன் - கன்னம் = சுவரைத் துளைத்தல், சுவர்த்துளை, துளைக்குங்கோல்.
கன் (வ.) = தோண்டு.
f‹d« (k.), f‹dK(bj.), கன்ன(க.) என்பன சுவர்த்துளையைக் குறிக்கும். (வ.வ: 109)
கல் (கருமைக் கருத்து வேர்)
அடிக்கருத்து (கருமை)
குல் - குலவு. குலவுதல் = கூடுதல், கலத்தல். கலத்தற் கருத்தினின்று மயக்கக் கருத்தும், மயக்கக் கருத்தினின்று இருண்மைக் கருத்தும், இருண்மைக் கருத்தினின்று கருமைக் கருத்துந் தோன்றும்.
கல் + து = கஃறு - கருமைக் குறிப்புச் சொல்.
கஃ றென்னுங் கல்லத ரத்தம் (தொல். எழுத். 40, உரை).
கல் - கன் - கன்னல் = கரிய வகையான கரும்பு (திவா.)
கன்னங்கரிய, கன்னங்கறேல் (கன்னங்கரேர்) என்னும் வழக்கு களை நோக்குக.
கல் - கால் = கருநிறம். கால்தோய் மேனிக் கண்டகர் (கம்பரா. உயுத். வானர. 21)
கல் - கள் - கள்வு - கள்வன் = 1. fÇa ahid (ã§.); 2. fÇat‹ (ã§.); 3. கருநண்டு. புள்ளிக் கள்வன் (ஐங். 21); 4. நண்டு வடிவான (கடக) ஓரை.
கள்வன் - களவன் = கருநண்டு. புள்ளிக் களவன் (கலித். 88: 10).
கள் - கள (நன். 165, மயிலை.) - களா (திவா.) - களவு (ம. களவு. க. களவெ.) - களவம் = கரிய கனிவகை, அதையுடைய செடி. கள - களம்.
காக்கையிற் கரிது களாம்பழம் (தொல். சொல். 79, உரை)
fst« - fsf« = fÇa bgU¢rhË (âth.), காரோதிமம் (Black Swan).
திவ்வியப் பிரபந்தம் பெரிய திருமொழி 6, 9, 10 வியாக்கியானத்திற் குறிக்கப்பட்டுள்ள களகம் என்னும் ஓதிமப் பெயர், காரோ திமப் பெயராகவே யிருத்தல் வேண்டும்.
கள் - களம் = 1. fUik (âth.), 2. முகில். கனைக் களமென (அரிசமய. பரகா. 44).
களம் - களர் = கறுப்பு (சூடா.)
களவு - (களகு) - களங்கு = கருப்பு, கரும்புள்ளி, கறை.
திங்கள்…. உடற்களங்கால் (பிரபுலிங். கைலாச. 6).
களங்கு - களங்கம் = 1. fW¥ò (âth.), 2. கரிய மறு (திவா.) 3. கரும்புள்ளியாகிய வயிரக் குற்றம். காக பாதமுங் களங்கமும் விந்துவும் (சிலப். 14: 180), 4. குற்றம் (பிங்.) 5. துரு. (Nlh.), 6. (கரிய) அடையாளம். களங்கமொன்றிட்டு மண்ணுறுத்தி (கந்தபு. மார்க்கண். 133). 7. (கருமைக்கு இனமான) நீலம் (சங். அக). களங்கம் - Skt. Kalanka.
களங்கம் - களங்கன் = 1. kWîŸs kâ (âth.), 2. குற்றமுள்ளவன்.
கள்-காள்- காளி- 1. கூளித்தலைவியாகிய கரிய பாலை நிலத் தெய்வம். 2. கரிய மணித்தக்காளி (இராசவைத்)
காள் - காளம் - = 1. கருமை. காளமாகிருளை (சீவக. 2245). 2. முகில் (சது.) 3. பெருமழை (உவின்சிலோ அகர முதலி). காளம் வ. கால.
காள் + ஆம்பி = காளாம்பி (கருங்காளான்).
காள் + ஆன் = காளான் (காளாம்பி, ஆம்பி).
முதலிற் கரிய ஆம்பியையே குறித்த காளாம்பி, காளான் என்னும் இருபெயர்களும், பின்னர் வெள்ளாம்பிக்கும் காராம்பிக்கும் பொதுப்பெயராகிவிட்டன.
ஆவுதை காளாம்பி போன்ற (களவழி. 36). இதிற் `காளாம்பி வெள்ளாம்பியைக் குறித்தது. காளான் என்று இருவகை யாம்பியையுங் குறிப்பது இற்றைய யுலகவழக்கு. காராம்பியைப் பேய்க் காளான் என்பர்.
அம் + காளி = அங்காளி.
அம் + காளி + அம்மை = அங்காளியம்மை - அங்காளம்மை அங்கம்மை.
அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூர்வழியாய் வரும்
அங்காளம்மை - தெ. அங்காளம்ம.
காளம் - காளகம் = கருமை. காளக வுடையினள் (சீவக. 320). காளம் - வ. காலக்க.
காளி - காளிமை = கறுப்பு. காளிமைப் பிழம்பு போத (கம்பரா. உயுத். நாகபா. 217).
காளிமை - வ. காலிமா.
காளிமை = காளிமம் = கறுப்பு. தனது காளிமங் கழிப்ப. (கந்தபு. திருநகரப். 72), காளிமம் - வ. காலிமன்.
காளி - காளிகம் = கரிய மணித்தக்காளி. (மலை.).
காளிகம் - காளிக்கம் = கருஞ்சாயம் (யாழ். அக.). காளிக்கம் வ. காலிக்க.
காள் - காழ் = 1. கருமை. கதுப்பு விரித்தன்ன காழக நுணங்கறல். (சிறுபாண். 6). 2. கரிய மரமாகிய இரும்பிலி (மலை.). 3. குற்றம். எக்காழு மிகந்துல கின்பமுற (காஞ்சிப்பு. கழுவாய். 300).
காழ் - காழகம் = கருமை. காழக மூட்டப்பட்ட (சீவக. 1230).
கள் - (கர்) - கர - கரந்தை = நீல நிறமுள்ள பூவகை, அதையுடைய பூடு.
(கர்) - கரம் - கரம்பு = கரிசல் நிலம்.
கரம்பு - கரம்பை = 1. fÇa gHKŸs áWfsh (kiy.), 2. வறண்ட களிமண். 3. கரிசல் நிலம். இருநிலக் கரம்பைப் படுநீறாடி (பெரும்பாண். 93). 4. பயிரிடாத கரிசல் நிலம். விடுநிலக் கரம்பை விடரளை நிறைய. (பதிற்றுப்.. 28). 5. வண்டற் களிமண்ணிலம்:
கர் - கரி = 1. கரிந்தது. 2. அடுப்புக்கரி. 3. யானை.
4. கண்ணிலிடு மை. கரி போக்கினாரே. (சீவக. 626).
5. மரவைரம்.
கரி - கரியன் = கரிய திருமால்.
fÇ - bj., j., k., J., கரி.
கரி - கரிது - கரிசு = 1. கருமையானது. 2. குற்றம்.
வினைகரிசறுமே (தேவா. 129: 1). 3. தீவினை (பாவம்).
கரிசினை மாற்றி (சைவச. பொது. 568).
கரிதல் = 1. கருமையாதல். கரிந்த நீள்கயல் (திருவிளை. விருத்தகு. 20.) 2. கரியாதல். கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை (அகநா. 75). 3. தீய்தல். காயெரிக் கரியக் கரிய (கம்பரா. மிதிலை. 81.)
கரி - கரிச்சான் = கரிக்குருவி.
கர் - கரு. கருத்தல் = கறுப்பாதல். கருமா = 1. யானை (பிங்.) 2. பன்றி. கருமாலுங் கருமாவாய் (பெரியபு. திருஞான. 1003).
கரு - கருகு. கருகுதல் = 1. நிறங்கறுத்தல். 2. இருளுதல், கருகு கங்குலிற் போதரும் (உபதேசகா. கைலை. 46) 3. பயிர் தீதல்.
கருகு - கருக்கு = மருந்துச் சரக்கைக் கருக்கிக் காய்ச்சிய சாறு (Decoction)
கருகு - கருகல் = 1. தீந்து போகை. 2. கருகின பொருள், 3. இருள் என்னும் பச்சைக் கற்குற்றம். (சிலப். 14: 184. உரை), 4. மங்கலொளி, 5. பொருட்டெளிவின்மை.
கருக்கு - கருக்கம் = கார்முகில்.
கருக்கமெல்லாங் கமழும் பொழில் (தேவா. 884: 8)
கருக்கு - கருக்கல் = 1. காரிருள், 2. மங்கிருட்டு, விடியற்கருக்கல், 3. வானத்தில் முகில் படிதல். வானம் கருக்கலிட்டிருக்கின்றது என்பது உலக வழக்கு. கருக்கல் ம. கருக்கல்.
கரு - கருப்பு = கருமை, இருள், இருண்டு தோன்றும் பேய், இருட்காலம் போன்ற பஞ்சம்.
கருப்பு - தெ. கருவு.
கருப்பு - கருப்பை = 1. காரெலி, எலி. அணிலொடு கருப்பை யாடாது (பெரும்பாண். 85) 2. கருங்காய்ப்பனை (யா.)
கரு - கரும்பு = முதிர்ச்சியால் இருண்ட செங்கரும்பு. நாணற் கரும்பு, வேழக் கரும்பு, வரிக் கரும்பு (இராமக் கரும்பு) என்னும் வழக்குகளில், கரும்பு என்பது பொதுப்பெயர்.
கரும்பு - து. கரும்பு, ம. கரிம்பு, க. kabbu.
கரு - கருள் = 1. கறுப்பு, கருடரு கண்டத்து….. கைலையார் (தேவா. 337: 4), 2. ïUŸ (ã§.), 3. குற்றம். கருடீர் வலியால் (சேதுபு. முத்தீர்த்.5). கருள் - க்ருஷ் (வ)
கர் - கறு. கறுத்தல் = கருநிறமாதல். கறுகறுத்தல் = 1. மிகக் கருத்தல், 2. மிகச் சினத்தல்.
கறுகறு - ம. கறுகறு.
கறு - கறுப்பு = 1. fUik (ã§.), 2. கறுப்புப் புள்ளி, 3. கறை, 4. தழும்பு. கைத்தலத் துணை கறுப்புற (உபதேச. சிவபுண்ய. 315), 5. குற்றம். உள்ளக் கறுப்பினையறுத்து (சிவதரு. சிவதரும. 25), 6. பேய். கறுப்பென்னிலோ போய்ப் பணிகுவார் (அறப். சத. 30). 7. ïuhF (Nlh.), 8. கரு வைரம், 9. வெகுளி.
கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல். சொல். 372)
சினக்கும் போது, கருநிற மக்கள் முகம் மிகக் கருத்தலும் செந்நிற அல்லது பொன்னிற மக்கள் முகம் மிகச் சிவத்தலும் பற்றி, கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள் பெற்றன. முகத்தினுங் கண் சிவத்தல் விளங்கித் தோன்றுவதாம்.
கறுப்பு - ம. கறுப்பு.
கறுப்பு - கறுப்பன் = 1. கரியவன், 2. மும்மாதத்தில் விளையும் கார்நெல்வகை. கறுப்பன் - ம. கறுப்பன்.
கறுப்பி = 1 கரியவள், 2. கறுப்பாய் என்னும் காளி, 3. கருவண்டு. கறுப்பி - ம. கறும்பி.
கறுத்தை = 1. கரியவள், 2. கருங்காளை.
கருவல் = 1. கருமை, 2. fÇa-t‹-tŸ-J., 3. சினப்பு.
கறுவு = 1. சினம் (திவா), 2. வயிர்த்த பகை.
கறுவு - கறுமு. கறுமுதல் = சினத்தல்.
கறு - கறை = 1. கருநிறம். கறைமிடறு (புறநா. 1: 5) 2. இருள். கறைபடு பொழில் (தேவா. 624: 8), 3. மாசு. பற்கறைகள் மாற்றல் (காசிக. இல்லொழுக். 27), 4. குற்றம். பிறக்கப் பிறக்கக் கறையேறுகை (திவ். திருப்பா. 21, வியா) 5. கருங்காலி வகை.
கறை - ம. கற, தெ. கர, க. கறே.
கறு - கறள் = கறை. க. கறள்.
கரு - கார் = 1. கருமை, 2. கரியது. களங்கனியைக் காரெனச் செய்தாரு மில். (நாலடி. 103), 3. முகில். கார் கலந்த மேனியான் (திவ். இயற். பெரிய திருவந். 86), 4. மழை. கார்பெற்ற புலமே போல் (கலித். 38), 5. நீர் (பிங்.) 6. கார்ப் பருவம். காரு மாலையும் முல்லை தொல். பொ. 6) 7. கார் நெல், காரரிசி. (பதார்த்த. 799), 8. fU§Fu§F (ã§.), 9. வெள்ளாடு என்னுங் காராடு (பிங்.) 10. kÆ® (ã§.), 11. கருங்குட்டம். காரக்குறைந்து (கலித். 65), 12. இருள். காரடு காலை (பரிபா. 12: 85), 13. அறிவு மயக்கம். களவென்னுங் காரறிவாண்மை (குறள். 237), 14. பசுமை. காரார் குருந்தோடு (திணைமாலை. 1, 2). 15. அழகு (பிங்), 16. கார்க்குவளை காலுங் கனல். (பு.வெ. 12, பெண்பாற். 11), 17. ஆறாச் சினம். (பிங்.).
fh® - k., J., க. கார், தெ. காரு.
கார் - காரி = 1. fUik (ã§.), 2. fUÃwKilaJ (âth.), 3. fh¡if (âth.), 4. கரிக்குருவி. கட்சியுட்காரி கலுழ்ம். (பு.வெ . 1: 3), 5. கரிய எருது. சுரி நெற்றிக்காரி (கலித் 101: 21), 6. காரீயம் (சங். mf.), 7. வாசுதேவன், செங்கட் காரி (பரிபா. 3: 81), 8. வேந்தன் (தேவர்கோன்), 9. கருங்கோள் (சனி). காரிவாரத்தில் (குற்றா. தல. மூர்த்தி 30).
fŸ - (f©) - (f©F) - f§F = fU¤âid (ã§.), கங்கு - வ. கங்கு.
கங்கு - கங்குல் = கரிய இரவு.
கங்குலும் பகலுங் கண்டுயி லறியாள் (திவ். திருவாய். 7: 2.)
கள் - (கய்) - கயம் = கரிக்குருவி.
கோக்கயம் (திருவாலவா. 60; 13)
கயம் - கயவு = கரிக்குருவி (பிங்.).
கயம் - கசம். காரிருளை இருட்டுக்கசம் என்பது நெல்லை வழக்கு.
காள் - காய் = காயம் = 1. கரிய வானம்.
விண்ணென வரூஉங் காயப்பெயர் (தொல். எழுத். 305)
காயம் - காசம் = வானம்.
காசமாயின வெல்லாங் கரந்து (கம்பரா. மருத்து. 40)
காசம் - ஆகாச (வ.) 2. கரிய மலர்வகை.
காய மலர்நிறவா (திவ். பெரியாழ். 1: 5: 6)
காய் - காயா. காயாம்பூ = காயமலர். காயாம்பூ வண்ணனிவை கழறுமன்றே (கூர்மபு. இராமனவதா. 1.) காயா - காசா = 1. காயாம்பூ. காசா கடன்மழை யனையானை (கம்பரா. கங்கை. 53). 2. எருமை (பிங்.)
காய் - காயல் = 1. fÇa c¥g§fÊ (Nlh.), fÊKf« (ã§.), 2. பொருநை (தாம்பிரபரணி) முகத்திலுள்ள ஓர் ஊர். தென்காயற் பதியானே (தனிப் பாடல்).
காயல் - ம. காயல்.
**கிளைக் கருத்துக்கள்
1. கன்னலமுது
f‹dš = fU«ò (âth.), rU¡fiu (âth.), f‰f©L (âth.), kz‰ghF (ã§.), கன்னலமுது (பாயசம்). மூவகைக் கரும்புள் கரிய செங்கரும்பே இனிமை மிக்கும் பெருவழக்காகவும் இருத்தல் காண்க.
2. வயிரம் (வைரம்) அல்லது முதிர்ச்சி.
ஒருசார் மரவயிரம் கருநிறத்தது. வெள்ளை சூவை (வெளிறு), கறுப்பு வயிரம் என்பது ஒரு மரபுச் சொலவு. கரி = மரவைரம். கருங்கரி = முதிர்ந்த இறைச்சி. கருங்காய் = முற்றிய காய்.
காழ்த்தல் = 1. வயிர்த்தல், முற்றுதல். காழ்த்த மரம் (திரிகடு. 75). 2. மனவைரங் கொள்ளுதல். காழ்த்த பகைவர் வணக்கமும் (திரிகடு. 24). காழ் = 1. மரவைரம் (திவா.) 2. மனவுறுதி. காழிலா மம்மர்கொள் மாந்தர் (நாலடி. 14).
காழ்ப்பு = 1. வைரம் (பிங்.) 2. மனவைரம். காழ்ப்பு மாட்கை மதத் தோடு (சேதுபு. மங்கல. 15. காய்த்தல் = 1. முற்றுதல், முதிரலிளை தல் காய்நெல்லறுத்து (புறநா. 184). 2. தழும்புண்டாதல். காய்ப்பு = 1. தோலின் தடிப்பு. 2. தழும்பு. கறுப்பு = தழும்பு. கறுத்தல் = முற்று தல். கெளவை கறுப்ப (மதுரைக் 271. கறுவு = வயிர்த்த சினம். கறுவொடும் பிரகலாதன் கதழ்சினம் (கூர்மபு. அந்தகா. 86).
கறு = மனவைரம். அரக்கன்……. கறுவுடையான் (கம்பரா. கும்பக. 357). கறம் = வயிர்த்த பகை.
3. நஞ்சு.
பாம்பின் நஞ்சுகலந்த அரத்தம் கருநிற மடைந்துவிடுவதாலும், சில நச்சுப் பொருள்கள் கருநிறமாயிருப்பதாலும், கருமைக் கருத்தில் நச்சுக் கருத்துத் தோன்றிற்று.
களம் = நஞ்சு (பிங்.) களம் - கரம் = நஞ்சு. கரம் போலக் கள்ளநோய் (சிறுபஞ். 62). கரம் - Skt. gara. களங்கம் = ஒரு வகை இயற்கை நஞ்சு. கறை = நஞ்சு. கறையுறு பகுவாயுரகம் (ஞானா. பாயி. 7: 5). காரி = நஞ்சு. காரியுண்டிக் கடவுள தியற்கையும் (மலைபடு. 83). காளம் = நஞ்சு (திவா). கரி = நஞ்சு (மூ.அ.)
4. கறை.
ஆடையிற் பற்றுங் கறை பெரும்பாலும் கருநிறமாயிருப்பதால், கறுப்பு, கறை, களங்கம் முதலிய கருமைப் பெயர்கள் மாசும் மறுவுமான புள்ளிகளையும் பொட்டல்களையுங் குறித்தன.
களங்கம் - களங்கன் = திங்கள் (திவா.)
5. குற்றம்.
ஒரு கறை அதையுடைய பொருட்குக் குற்றமாதலாலும், கறுப்பு நிறம் பெரும்பாலும் மக்களால் வெறுக்கப்படுவதாலும் கறைக் கருத்திலும் கறுப்புக் கருத்திலும் குற்றக் கருத்துத் தோன்றிற்று.
கள்ளம் = குற்றம். களங்கம் - களக்கம் = குற்றம். களக்க மில்லாதோன் (திருவாலா. 50: 8). கரில் = குற்றம். கரில் - அரில் = குற்றம். அதங்கோட்டாசாற் கரிறபத் தெரிந்து (தொல். பனம். சி. gh.,
6. சினம்.
கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள என்று தொல்காப்பியம் (855) கறுப்புச் சொல்லைச்சிவப்புச் சொல்லொடு சேர்த்துக் கூறுவதால், கறுப்பு என்பது இதில் நிறம் பற்றிய சொல்லாகவே யிருத்தல் வேண்டும். வெண்களமர், கருங்களமர்; வெள்ளாளர், காராளர். வெள்ளொக்கல், காரொக்கல் என்று தொன்றுதொட்டு வழங்கிவரும் எதிரிணைச் சொற்கள், பண்டை நாளிலும் இன்று போன்றே தமிழருட் பொன்னருங் கரியரும் இருந்தமையை உணர்த்தும்.
7. பஞ்சம்.
உணவின்றியும் ஒரு தொழிலும் நடைபெறாதும் உள்ள பஞ்சக் காலம் இருண்ட இராக்காலம் போன்றிருத்தலால், பஞ்சம் கருப் பெனப்பட்டது.
8. மறைப்பு.
கரிய நிறமும் கரிய இருளும் பொருள்களையும் அவற்றின் வடிவங்களையும் மறைப்பதால். கருமைக் கருத்தில் மறைவு அல்லது மறைப்புக் கருத்துத் தோன்றிற்று.
கர் - கர. கரத்தல் = 1. மறைதல். கரந்துறை கணக்கும் (மணி. 2: 26), 2. மறைத்தல். தன்னுளடக்கிக் கரக்கினுங்கரக்கும் (புறநா. 1: 8). கரப்பான் = பகலில் மறைந்து திரியும் பூச்சி. கரவு = மறைவு. Gk. Kruptos (hidden, secret.)
9. கொற்றொழில்.
இரும்பு கருநிறமாயிருப்பதால், அக்கனியத்தின் பெயரும், ஐவகைக் கொல்லுள் ஒன்றான இரும்படிப்புத் தொழிலின் பெயரும், அத்தொழிலைச் செய்வோன் பெயரும், கரு என்னுஞ் சொல்லை அடைமொழியாகப் பெற்றன.
கரும்பொன் = இரும்பு. கரும்பொனியல் பன்றி (சீவக. 104.) கருந்தாது = இரும்பு. கருந்தாது கொட்கு மிருஞ்சிலை (ஞானா. 57: 29). கருங்கொல் = இரும்பு (சூடா). கருங்கொல்லன் = இரும் படிப்போன், கருமகன் - கருமான் - கருமன் (பிங்.) = இருப்புக் கொல்லன், கருமகக் கம்மியன் (கம்பரா. பம்பா. 37) ம. கருமான். E. Blacksmith.
10. கருமம்
வினைசெய்து காய்ப்பேறும்போது, செந்நிறத்தார் அல்லது பொன்னிறத்தார் கை மிகச் சிவந்தும், கருநிறத்தார் கை மிகக் கறுத்தும் தோன்றுவது இயல்பு. செய்தகை சேவேறும், செய்யாத கை நோவேறும் என்பது பழமொழி. இது செந்நிறத்தார் கையைக் குறித்தது. கருநிறத்தார் கை கருங்கையெனப்படும்.
கருங்கை வினைஞர் (பத்துப். 4: 223).
கொன்றுவாழ் தொழிலினும் வன்பணித் தொழிலினும்
கன்றிய தொழிற்கை கருங்கை யெனப்படும் (திவா.)
கருங்கை என்பதற்கு வலிய கை என்று பொருளுரைப்பர் அடியார்க்கு நல்லார்: அப்பொருள் இருவகை நிறத்தார்க்கும் பொதுவாகும். கருநிறத்தாராயின், கருங்கை என்பது கருமையை யும் வலிமையையும் ஒருங்கே உணர்த்தும். கருநிறத்தாரின் பெரும்பான்மை பற்றியே, கருங்கை யென்பது செங்கையையும் தழுவிற்றென அறிக.
கருத்தல் = கை கருக்க வினை செய்தல், வினை செய்தல், செய்தல்.
ஒ.நோ: செய்தல் = கை சிவக்க வினை செய்தல்; வினை செய்தல், செய்தல்.
கரு - கரும் - கருமு - கருமம் - கம்மம் - கம் - கம்மாளன். கம் கம்மியம் - கம்மியன் கருமம் - வ. கர்மன்.
கரு - கருவி. கரு - கரணம் = செய்கை, கருவி. கரணம் - வ. கரண.
கருத்தல் என்னும் வினை வழக்கிறந்தது.
11. இழிவு
கருங்குலம் (கருஞ்சாதி) = கீழ்மக்கள். கருங்கூத்து = இழிந்த வகையான நாடகம். கருநிலம் = பண்படாத நிலம். கருமகள் = சண்டாளி .
12. தீமை
கருங்கண் = கண்ணேறு (Evil eye.). கருந்தொழில் = கொலை வினை. கருநாள் = கரிநாள்.
13. சிறப்பு
கருந்தனம் = சிறந்த செல்வம். கருஞ்சரக்கு = கூலம், பல சரக்கு.
14. கடை
கருந்தலை = தொடக்கம், முடிவு.
சிறுகிளைக் கருத்துக்கள்
1. குற்றக் கருத்தின் கிளை
களக்கம் - களக்கர் = 1. கீழோர், 2. ஒரு வேட்டுவக் குலத்தார்.
கீழ்மக்களும் ஆறலைக்கும் வேட்டுவரும் குற்றவாளிகள் என்னும் வகையில் ஒரு வகுப்பாராவர்.
2. மறைவுக் கருத்தின் கிளைகள்
3. களவு
களவென்பது ஒருவன் பொருளை இன்னொருவன் மறைவாகக் கவர்தல். கள் - கள்ளம் = திருட்டு. கள்ளம் = கள்ளன்.
கள் + தல் = கட்டல் (திருடுதல்), கட்போ ருளரெனின் (சிலப். 5: 115). கள்வு - கள்வம் = திருட்டுச் செயல். கள்வன் = திருடன். கள்வு - களவு - களவன். களவு - களவாளி - களவாணி. களவு - கயவு (பிங்.).
கள்ளம் - ம. கள்ளம், தெ. கல்ல.
கள்வன் - ம. கள்வன், து. கள்வே, வ. fyk, fsî - k., f., து. களவு. Gk. Klepto (to Steal), L. clam (Secretly).
கரத்தல் = கவர்தல். கரவு = களவு (திவா). கரவர் = கள்வர் (பிங்.) கரவடம் = களவு (திவா.) கரவடர் = திருடர் (திவா.) கரவடநூல் = களவுநூல். (சிலப். 16: 180, அரும்.)
2. வஞ்சனை
வஞ்சனை யென்பது ஒன்றை உள்ளத்தில் மறைத்து வைத்தல்.
கள்ளம் = வஞ்சனை. கள்ளம் பிறவோ பசப்பு (குறள். 1184). களவு = வஞ்சனை, நங்களவ றுத்துநின் றாண்டமை (திருவாச. 5: 35). கரவு = வஞ்சனை. களவறிந்தார் நெஞ்சிற்கரவு (குறள். 288). கரவடம் = வஞ்சகம். மனத்திலே கரவடமாம் வேடம் (தண்டலை. சத. 29.)
3. பொய்
பொய்யாவது சொல்லால் ஒன்றை மறைத்தல். கள்ளம் = பொய். கள்ளமே பேசி (தேவா. 1115: 6). கரவு = பொய். கரவெனு முன்ற னூலில் (திருவாத. பு. புத்த. 55).
4. ஈயாமை
ஈயாமையாவது ஒருவன் தன் பொருள் நுகர்ச்சியைப் பிறருக்கு மறைத்தல்.
கரத்தல் = கொடாதிருத்தல் (பிங்.) கரு - கரும் - கருமு. கருமுதல் = பிசினித்தனம் பண்ணுதல். கருமி = கஞ்சன்.
5. கரைதல்
கரைதலாவது ஒரு பொருள் சிறிது சிறிதாய் மறைதல்.
கர - கரை. கரைதல் = சிறிது சிறிதாய்க் கரத்தல், உருகுதல். கர - ம. fu¡F, bj., க.து. karagu.
6. நீக்குதல்
நீக்குதலென்பது ஒன்றை ஓரிடத்தில் இல்லாவாறு மறைத்தல்.
கள் + தல் = கட்டல் (களை பறித்தல்). கள் - களை. களைதல் நீக்குதல். fŸ - k., க. கள்.
7. கள்
கள் என்பது உணர்ச்சியை அல்லது புலனை மறைப்பது.
fŸ = kJ, fŸ - k., க. கள். தெ. கல்லு, து. கலி. களித்தல் = கட்குடித்தல், மதுவுண்டல், களி = கட்குடியன்.
கட்கருத்தின் கிளை.
கள் - களி. களித்தல் = 1. கட்குடித்து மகிழ்தல். 2. கள்ளுண்டு வெறி கொள்ளுதல். களித்தானைக் காரணங்காட்டுதல் (குறள். 929). 3. மகிழ்தல்.
களி = 1. கள்ளுண்டு மகிழ்கை. 2. கள்ளுண்டு வெறி கொள்கை. சான்றோர் முகத்துக் களி (குறள். 923) 3. உள்ளச் செருக்கு, 4. மகிழ்ச்சி, 5. மதிமயக்கம் (திவா), 6. யானை மதம். கால வேகங் களிமயக் குற்றென (மணி 4: 44) கள் = 1. கள்ளிற்கினமான தேன், கள்ளார்ந்த பூங்கொன்றை (தேவா. 158: 1), 2. தேனுண்ணும் வண்டு. கள்ளின மார்த் துண்ணும் வண்கொன்றையோன் (திருக்கோவை, 295).
களி - களிறு = 1. மதங் கொண்ட ஆண் யானை. வேழக் குரித்தே விதந்துகளி றென்றல் (தொல். 1533). 2. ஆண்பன்றி. கேழற் கண்ணும் கடிவரை யின்றே (தொல். 1534.) (வே.க.)
கல்லை
கல்லை - கல்ல (kh)
கல் - கல்லை = தொன்னை (தொளையுள்ளது, குழிவுள்ளது).
சருகிலை யிணைத்த கல்லை (பெரியபு. கண்ணப்ப. 118) (வ.வ. 110)
கல்வி (CULTURE)
மக்கள் நாகரிகமில்லாத மாண்முது பழைமையிற் குறுந்தொகை யராய்க் குறிஞ்சி நிலத்து வாழ்ந்தபோது காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருள்களையே உண்டு வந்தனர். உண்பதும் உறங்குவதுமே அவர்க் கிருபெருந்தொழில். மக்கட்டொகை மிக மிக, இயற்கை விளைவு போதாதாயிற்று. விதைகள்தாவர வர்க்கத் தினின்றும் கீழே விழுந்து நிலத்தில் முளைப்பதை முன்னமே உற்று நோக்கி ஊகித்திருந்தனர். அஃதன்றி வள்ளிக் கிழங்கைப் பன்றிகள் உழுதவிடத்து விழுந்த விதைகள் விரைவில் முளைத்து, அடர்ந்தோங்கி, விழுமிய பலன்றந்தமையுங் கண்டிருந்தனர். ஆதலால் அவரே அத்தகை யிடங்களிற் செயற்கையிற் பயிர் பச்சைகளை விளைக்கத் தொடங்கினர்.
பன்றியுழுதவிடத்துப் பயிர்விளைப்பதை.
அருவி யார்க்குங் கழைபயி னனந்தலைக்
கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கட் கேழ லுழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவ
ருழா அது வித்திய பரூஉக்குரற் சிறுதினை (புறம். 168)
என்பதாற் காண்க.
ஆகவே, முதன்முதல் மக்கள் கற்ற கல்வி உழவுத்தொழில் என்பதே புலனாகின்றது. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு அதனாற் பெறப்படுதலின், கல்வி என்னும் சொல்லும் உழவுத் தொழிலையே முதன் முதற் குறித்தது. கல், பகுதி; வி, விகுதி. கல்லல் தோண்டல். கல்லென்னுஞ் சொல்லே இல்லென்று திரியும். பயிர்த்தொழில் வினைகள் பலவற்றுள்ளும் உழவே முதலதும் முதன்மையது மாதலின், அவ் வுழவென் பெயரே ஒருவகை ஆகுபெயராய்ப் பயிர்த்தொழில் முழுமைக்குமாயிற்று. அன்றியும் வானாவாரிப் பயிர்கட்கு உழவொன்றே யமையும். உழவாவது நிலத்தை அகழ்தலும் நிலைபெயர்த்தலும் பூழியாக்க லும், ஏருமெருதுங்கொண்டுழவறியாத பழங்காலத்துக் கல்லுங் கழியுங் கருவியாக நிலத்தை அகழ்தலே உழவாயிற்று. அக்காலத் தும் குறிஞ்சி நிலத்தும் மழைக்குக் குறையின்மையின் நீர்பாய்ச்ச வும் வேண்டாதாயிற்று.
கல்லல், தோண்டல், உழுதல் என்பன ஒருவினை குறித்தலின் ஒரு பொருட் கிளவி. ஆகவே, கல்வி என்பது முதன்முதல் உழவு குறித்த கிளவியே யென்பது பெற்றாம். உழவிற்குப் பின் கற்கப்பட்டது கைத்தொழில். கைத்தொழிற்குப் பின்னது கலையறிவு அல்லது நூற்கல்வி. ஆகவே, தொழிற்கல்வி, நூற்கல்வி யெனக் கல்வி இரு வகைத்தாயிற்று. உழவும் கைத்தொழிலும் தொழிற்கல்வி, கலை யறிவு நூற்கல்வி. இவ்விரண்டனுட் டலைமையும் இன்றியமை யாமையும் பற்றி நூல்கல்வியே கல்வியென விதந்தோதப்பட்டது.
வடநூன் முறையில் வழங்கும் அறுபானாற் றொழில்களும் தொழிற் கல்வியாகும்; ஏனை நான்மறை யறுகலைகள் நூற்கல்வி யாகும்.
இருவகைக் கல்வியிலும் எந்நூலையும் மறை யென்பது பண்டை வழக்கு. இசைநூலை நரம்பின் மறை என்றார் தொல்காப்பியர். மருத்து நூலை ஆயுர்வேதமென்பர் வடமொழியாளர். கண்கருவி யாகக் கைகற்கும் தொழிற்கல்வியும் சிறுபான்மை நுண்மாண் நுழைபுலத்தை நூல்வாயிலாயுணர்த்து மென்க.
ஒவ்வொரு நூலும் ஒரு சார் மறைபொருளை யுடைமையின் மறை யெனப்பட்டது. இனி, எல்லா நூல்கட்கும் முடிவு வீடுபேறு கூறும் கடவுண்மறையாதலின், அம் மறையுணர்ச்சிக்கு ஒருசார் கருவியாகும் பிற நூல்களும் அவ் வியைபானே மறையெனப் பட்டன வென்னலு மொன்று.
நூற்கல்வியும் உலகநூல், அறிவுநூல் என இருவகைத்தாம். அறிவு நூல் வீட்டுநூலெனவும் படும். கடவுள் வழிபாடும் வீடுபேறும் கூறும் மறையாகமக் கதைகளும், இலக்கண தருக்க தத்துவ நூல் களும் வீட்டு நூல்களாகும். உலக வாழ்க்கைக்குரிய வெல்லாம் உலக நூல்களாகும். ஆன்மவுணர்ச்சி சிறந்தகாலத்து வீட்டுநூலே நூலெனப்பட்டது. தமிழிலக்கண விலக்கியங் களெல்லாம் வீடுபேற்றிற்கே வழிகாட்டுவன.
அறம்பொரு ளின்பம் வீடடைத னூற்பயனே
…….. தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும்
பித்தரிற் பேதையா ரில்
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா
துலகநூ லோதுவ தெல்லாங் - கலகல
கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்
போஒந் துணையறிவா ரில்
என்றார் பெரியோர்.
இக்காலத்துக் கற்கப்படும் ஆங்கிலக் கல்வி தமிழ்முறைப்படி உலக நூலின் பாற்படுவதே.
எழுத்தறியும்போதே அரி ஓம் நம: என்று தொடங்குவதும், எழுத்துகளே மந்திரவடிவாயிருப்பதும், எழுத்துக்கூட்டி வாசிக்கப் புகு மாத்திரையே அறஞ்செய விரும்பு, ஆலயந் தொழுவது சாலவு நன்று என்பன போன்ற அறிவுரைகளை அறிவிப்பதும், இலக்கண முழுமையும் மெய்யுணர்ச்சி யிலகுவதும், இலக்கியமெல்லாம் வீடுபேற்றை யிலக்காக் கொள்வதும் தமிழுக்கே சிறந்த தகைமை களாம்.
ஆகவே, கல்வியென்னுங் குறியீடு தமிழில் முதன்முதல் உழவிற் கியற்பெயரா யிருந்து, பின்னர்க் கைத்தொழிற்கும் நூற்கல்விக்கும் இன விலக்கணமாய் இறுதியில்…. நூலுக்கே சிறப்பாக வரையறுக் கப்பட்டதென்க.
நிலத்தைக் கல்லுவதினால், ஆழத்தின் மறைந்திருக்கும் கனி (Mine)íª தாவரமுமாகிய இருவகை விளைபொருள்களு மாராயப்படும்: விதைகளினின்றுங் கிளர்ந்தெழும் பயிர்பச்சை களும் வளர்ச்சியடையும்: காய்கதிர்களும்முற்றி மக்கட்கு நுகர்ச்சியுண்டாகும். அதுபேலக் கல்வியினாலும் ஐம்பூதப் பகுதி யான எல்லாப் பொருள்களு மாராயப்படும் ; மனத்தின் ஆற்றல் களும் வளர்ச்சியடையும். (cf. educate - to draw out the powers of mind); ஆன்ம நுகர்ச்சியாகிய வீடுபேறும் சித்திக்கும்.
கல்வியென்னுந் தமிழ்ச்சொற்குச் சமமான ஆங்கிலச்சொல் Culture என்பதாகும். அது கல் என்னும் பகுதியடியாய்ப் பிறந்த வினைப் பெயரே. கல்வி என்பதில் வி விகுதி: Culture என்பதில் தரம் (ture) விகுதி. கல்வியென்னுஞ் சொற்குறிக்கும் பொருள்களையே Culture என்பதுங் குறிக்கின்றது. அவையாவன:
1. Culture - n. Cultivation
L. colo - to till. கல் = தோண்டு, உழு. பயிரிடு.
இஃதன்றி ஆங்கிலத்தில் உழவு குறிக்கும் ஏனைச் சொற்களில் இன்றியமையாத சிலவும் தமிழேயாத லறியப்படும்.
தொள் - till; தொள் - தொடு - தோண்டு. தொள்ளல் = தோண்டல் அல்லது உழுதல்.
ஏர் - n. E. ear, L. aro, GK. aroo. adj. E. arable.
அகரம் - n. E. acre, Gk. agros, L. ager, a field.
அகரம் மருதநிலத்தூர் - சூடாமணி நிகண்டு. மருதம் = வயல். காறு (கொழு) - share.
Culture என்னுஞ் சொல் கல்வியாலான ஒழுக்கத்தை அல்லது திருத்தத்தை உணர்த்திய பின்னர், உழவு ஆங்கிலத்தில் Agriculture என அடைகொடுக்கப்பட்டது.
2. Culture-n. refinement
கல்வியாலறிவும் அறிவா லொழுக்கமும் பயனாதலின் கல்வி யென்பது காரணவாகுபெயராய்த் திருத்தத்தையுங் குறிக்கு மென்க.
கல்வி தொடர்பான சொற்கள்
கழகம் - college, n. (orig.) any collection or community of men with certain privileges or a common pursuit as a college of heralds or the college of cardinals: a seminary of learning; a literary, political, or religious institution. - Chambers Etymological Dictionary
N.B. orig. ‘g’ was pronounced as ‘g’ in god and the final ‘e’ was not silent.
கல் +அகம் = கல்லகம் - கழகம்.
கல்லகம் வினைத்தொகை
Pedagogue - n. a teacher.
L. - Gk. paidos (பைதல்), a boy; ago - (உகை) to lead.
pedantry - n. vain display of learning (same)
Cyclopeadia - n. the circle of human knowledge.
Gk. kyklos (சக்கரம்), a circle; paideia (from the root - go) learning.
3. Cult - n. worship
L. colo - to worship.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றா டொழாஅ ரெனின். (குறள். 21)
இதுகாறுங் கூறியவற்றால் உழவே உலக முதற்கல்வி யென்றும் கல்வி யென்னுஞ் சொல் முதன்முதல் உழவு குறித்த சொல்லே யென்றும், பிற்காலத்து நூற்கல்வியை வரையறுத்தமையின் உழவுப்பொருளில் வழக்கற்றதென்றும், உலகில் முதன்முதல் நாகரிகமெய்தி உழவுங் கல்வியு மறிந்தார் தமிழ்மக்களேயென் றும் அவரானேயே அவ் விருதொழிலும் மேனாடுகளிற் பரவிய தென்றும். இவ் விருதொழிலையுங் குறிக்கும் மேனாட்டுச் சொற் களில் இன்றியமையாத வெல்லாம் செந்தமிழ்த் திரிபே யென்றும் தெற்றெனத் தெரிந்துகொள்க. (செந்தமிழ்ச் செல்வி சுறவம் 1933)
கலகம்
கலகம் - கலஹ
கலத்தல் = பொருந்துதல், பொருந்திப் போர் செய்தல்.
ஒ.நோ: பொரு - போர். சமம் - சமர்.
கை கலத்தல் = சண்டையிடுதல். கல - கலாம் = போர், கலகம்.
கல - கலவு - கலகு - கலகம் = கூட்டச் சண்டை. கலகு - கலகி. கலகித்தல் = கலகஞ்செய்தல்.
வடமொழியில் மூலமில்லை. (வ.வ: 109)
கலம்பகம்
கலம்பகம் - கதம்பம்.
பரியகம் நூபுரம் பாடகஞ் சதங்கை (சிலப். 6: 84, உரை). (வ.வ.)
கலவம்
கலவம் - கலாப
கல - கலவு. கலவுதல் = கலத்தல்.
கலவு - கலவம் = 1. கற்றையான மயில் தோகை.
கலவம் விரித்த மஞ்ஞை (பொருந. 212). 2. மயில் (சினையாகு பெயர்).
கலவஞ்சேர் கழிக்கானல் (தேவா. 532: 4)
கலவு - கலாவு. கலாவுதல் = கலத்தல். கலவம் - கலாவம் = மயில் தோகை.
கலிமயிற் கலாவம் (புறம். 146: 8)
மயில் தென்னாட்டுக் குறிஞ்சி நிலத்திற்குரிய பறவை; குறிஞ்சித் தெய்வமாகிய முருகன் ஊர்தி.
வடமொழியிற் கலா (சிறுபகுதி) + ஆப் (கொள், to obtain) என்று பிரித்து, பலபகுதிகளை ஒன்றுசேர்ப்பது கற்றை (“that which holds single parts together, abundle” என்று காரணங் கூறுவது, வட்டஞ்சுற்றி வலிந்தும் நலிந்தும் பொருள் கொள்ளுவதா யிருத்தல் காண்க. (வ.வ: 109 - 110.)
கலித்தல்
கலித்தல் என்பது பிறப்புக் கருத்து வேர்ச்சொல்.
உல் - உல்லரி = தளிர். (அக. நி.)
உல்லரி - வ. வல்லரி.
உல் - குல் - குள் - குள - குளவு - குளகு = இளந்தழை. மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி (நாலடி. 16).
குளவு - களவு - களவம் - களபம் = யானைக் கன்று. மதகரிக் களபமும் (சிலப். 25: 49).
ஒ.நோ: OS calf, AS cealf, OE coelf, ME kalf, calf, E. calf, OHG chalb, ON kalfr, Du. kalf, Icel kalfr, Swed, kalf, Dan, kabr, Goth kalbo, G. kalb Skt. kalabha.
குள - குழ - குழம் = இளமை.
குழ = இளமையான. மழவுங் குழவும் இளமைப் பொருள (தொல். உரி. 14). குழமகன் = இளந்தலைவன். குழமகனைக் கலி வெண்பாக் கொண்டு…… விளக்கவுரைத்தாங்கு (இலக். வி. 858).
குழ - வ. குட.
குழ - குழவு = இளமை. குழவு - குழகு = 1. குழந்தை. குழகென வெடுத்துகந்த வுமை (திருப்பு. 106). 2. இளமைச் செவ்வி. கொம்மைக் குழகாடுங் கோலவுரை மார்பர் (சீவக. 2790). 3. அழகு - கொன்றை சூடிக் குழகாக …. விளையாடும் (தேவா. 468:7).
குழகு - குழகன் = 1. இளையோன். நின்மணக் குழகன் (திருவிளை. திருமண. 44). 2. முருகன். (பிங்.). 3. அழகன். கொட்கப் பெயர்க்குங் குழகன் (திருவாச. 3: 12).
குழகன் - க. ஹுடுக.
குழம் - குழந்து - குழந்தை = கைப்பிள்ளை. குழந்தையையுயிர்த்த மலடிக்கு (கம்பரா. உருக்கா. 65). 2. இளமைப் பருவம். குழந்தை வெண்மதி (கம்பரா. ஊர்தேடு. 209).
ஓ.நோ: ME, E. child, OE cild, Gothr kilthei, womb (கருப்பை).
குழந்து - கொழுந்து = 1. இளந்தளிர். 2. இளமையானது. 3. மென்மையானது. 4. மருக்கொழுந்து. 5. படையின் முன்னணி. சேனையின் கொழுந்து போய்க் கொடிமதின் மிதிலையி னெல்லை கூடிற்றே (கம்பரா. எழுச்சி. 24). 6. எரி நெருப்பின் நாவு. 7. கவரிநுனி. 8. கரும்புநுனி, கொழுந்தாடை. ம. கொழுந்து.
குழவு - ஒ.நோ: L. dim. suf. culus, culum, cula, cule - cle - cel, cillus - cil.
Ex. fasciculus, vasculum, Auricula, arimalcule, particle, parcel, L. codicillus - E. codicil.
குட்டியப்பன், குட்டிக்கிழங்கு, குட்டித் தொல்காப்பியம், குட்டித் தக்காளி, குட்டிப்பல், குட்டிவிரல் முதலிய சொற்களில், குட்டி என்பது சிறுமைப் பொருள் முன்னொட்டாக வழங்குதல் காண்க. குழவித் திங்கள் என்பதையும் நோக்குக.
குழவு - குழவி = 1. கைக்குழந்தை. ஈன்ற குழவி முகங்கண்டிரங்கி ( மணி. 11: 114). 2. சில விலங்குகளின் குட்டிப் பெயர். (தொல். மர. 19-23). 3. ஓரறிவுயிரின் இளமைப் பெயர். (தொல். மர. 24). வீழில் தாழைக் குழவி (தொல். மா. 24, உரை).
குழம் - குழன் - குழல் - குழலை - குதலை.
ஒ.நோ: மழலை - மதலை.
குதலை = 1. குழந்தை. 2. குழந்தையின் மழலைச் சொல். இதழ் குவித்துப் பணித்த குதலையுந் தெரியாது (கல்லா. 5). 3. இனிய சொல். குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர் (சிலப். 30:114).
குழல் - குதல் - கதல் - கதலி = சிறுவாழை. மொந்தன் என்பது பெருவாழை.
கதலி - கசலி - கசளி = சிறு கெண்டைமீன். கெண்டைக் கசளி என்பது வழக்கு.
கதல் - கசல் - கச்சல் = 1. வாழைப் பிஞ்சு, இளம்பிஞ்சு, க, கச்ச. 2. ஒல்லி. ஆள் கச்சலாயிருப்பான் (உ.வ.)
கதலி - வ. கதலீ = வாழைப் பொது.
சிறு வாழையைக் குறிக்கும் கதலி யென்னும் தென்சொல், வடமொழியில் தன் சிறப்புப் பொருளை யிழந்து, வாழைப் பொதுவைக் குறித்தலை நோக்குக.
பேரா. பரோ (Burrow) இதை அறியாது, தம் சமற்கிருத மொழி (The Sanskrit Language) என்னும் நூலின் இறுதியதிகாரத்தில்.
“kadale, banana’: cf. Sakai telui, kelui, Nicobar talui, Khmer tut taloi, Palaong kloaplantain’; Savara kin-ten `banana’ என்று, கதலி யென்னும் சொல்லிற்கு மூலங்காட்டியுள்ளமை சிறிதேனும் பொருந்துமா வென்று அறிஞர் கண்டு கொள்க.
குள் - குட்டு - குட்டன் = 1. சிறுவன், சிறுபிள்ளை. என் சிறுக் குட்டன் (திவ். பெரியாழ். 1: 4: 2), குயிலெனப் பேசுமென் குட்டனெங் குற்றது (திருக்கோ. 224). 2. ஆட்டுக் குட்டி. (திவா).
ம. குட்டன், க. குட்ட (gudda).
குட்டு - குட்டி = 1. மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல் ஆகியவற்றின் இளமைப் பெயர். (தொல். மர. 6, 8). 2. விலங்கின் இளமைப் பொதுப் பெயர். 3. சிறு பெண் அது நல்லகுட்டி. 4. கடைசிப் பிள்ளை. இவன் என் கடைக்குட்டி. 5. சிறுமைப் பெயர் எ-டு. குட்டித் தொல்காப்பியம்.
ம. குட்டி, க. குட்டி (guddi). த. பிள்ளைகுட்டி = பிள்ளைகள்.
குட்டி - E. kid, a young goat, kid, kiddy (sl), child; ME kid, kidde, Dan. kid, Swed, kid, Norw. kid, Icel, kid, ON kith, OHG kizzi, chizzi, MHG., G. kitze.
kid - fox, a young fox.
குள் - குய் - குய்ஞ்சு - குஞ்சு = 1. பறவைக் குஞ்சு 2. அணில் எலி முதலியவற்றின் குட்டி.
ம. குஞ்ஞு. க. கூசு = குழவி.
குஞ்சு - குஞ்சி = 1. பறவைக்குஞ்சு. 2. சிறியது. எ-டு. குஞ்சியப்பன், குஞ்சிப் பெட்டி.
குல் - குர் - குரு. குருத்தல் = தோன்றுதல். அதினின்று மொரு புருடன் குருத்தான் (விநாயகபு. 72: 4).
குரு = 1. குழந்தை. 2. தோன்றுங் கொப்புளம், வேர்க் குரு வெப்பு நோயுங் குருவுந் தொடர (சிலப். உரைபெறு கட்டுரை). 3. மயிர் சிலிர்ப்பு. 4. கொட்டை, பலாக்குரு. 5. புல்லியது. குருநகை = புன்சிரிப்பு. LG. gor, child.
குரு - குருத்து = 1. ஓலைக் கொழுந்து, பனங்குருத்து. 2. கொழுந் தாடை, கரும்புநுனி. குருத்திற் கரும்புதின்றற்றே (நாலடி. 211). 3. இளமை. 4. மெல்லிய உட்புறம், காதுக் குருத்து. 5. மெல்லிய உட்பொருள். மருப்பு (தந்தம்) மூளையிவற்றின் குருத்து. ஆளி நன்மான்….. வேழத்து வெண்கோடு வாங்கிக் குருத்தருந்தும் (அகநா. 381).
ம. கருத்து.
குரு - குருகு = 1. இளமை குருகுக் கிழங்கு. 2. விலங்கின் குட்டி. சிங்கக் குருகு (திவ். திருப்பா. 1, வ்யா.) 3. குருத்தோலை. குருகு பறியா நீளிரும் பனைமிசை (பரிபா. 2: 43).
k., bj., து. குரு.
குரு = குரும்பை = தெங்கு பனைகளின் இளங்காய். குன்றுங் குரும்பையும் வெறுத்தநின் னிளமுலை (கல்லா. 52).
குரு - குருள் - குருளை = 1. குழந்தை. அருட் குருவாங் குருளை (சி.சி. பரபக். பாயி. 4). 2. சில விலங்கின் குட்டி. (தொல். மர. 8, 9). 3. பாம்பின் குட்டி. சிறுவெள்ளரவினவ்வரிக் குருளை (குறுந். 119).
“Girl, a female child, young woman, (E.) ME. girle, girle, gyrle, formerly used of either sex and signifying either a boy or girl….. N Fries. gor, a girl; Pomeran. goer, a child; O Low G. gor, a child…. Swiss gurre, gurrli, a depreciatory term for a girl…. Norw. gorre, a small child; Swed. dial. garra, gurre (the same). Root uncertain.” - E.D.E.L. by Skeat, p. 240.
“girl, n. ME. gurle, gurl, gerle, gerle, gerl, boy, girl, rel to LG. gore, gor a child; of uncertain origin.” - Klein’s C.E.D.E.L., p. 312.
சிறுமியைக் குட்டி யென்னும் வழக்குத் தமிழிலுண்மையாலும், குரு என்னும் மூலத்தினின்றே குருளை யென்னுஞ் சொல் திரிந்திருப்பதனாலும், ‘girl’ என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ்ச் சொல்லே மூலமென்பது தெள்ளத் தெளிவாம்.
குரு - குருப்பு = தோன்றும் பரு. தெ. குருப்பு.
குருமா - குருமான் - குருமன் = குட்டி விலங்கு. குட்டி குருமான் என்பது உலக வழக்கு.
குரு - குருவி = 1. சிறு பறவை வகை. 2. சிறுமை. எ-டு. குருவிக்கண், குருவித்தலை, குருவித் தேங்காய்.
குரு - கரு = 1. பீள், மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் (புறநா. 34). 2. முட்டைக்கரு. புறவுக் கருவன்னபுன்புல வரகின் (புறநா. 34). 3. முட்டை. 4. உடம்பு. கருவுள் வீற்றிருந்து (திவ். திருவாய். 5: 10: 8). 5. பிறப்பு. கருவைத் துடைப்ப (பிரபுலிங். கொக்கி. 15). 6. குழந்தை. சோரர்தங் கருவைத் தங்கள் கருவெனத் தோளிலேந்தி (பாரத. நிரை. 116). 7. குட்டி. காசறைக் கருவும் (சிலப். 25: 52). 8. அச்சுக்கரு. திருவுருவினைக் கருவினாற் கண்டு (திருவிளை. இரச. 9). 9. வினைமுதற் கரணியம். கருவாயுல கினுக்கு (திருவாச. 10: 14). 10. நடு. உள்ளூர்க் கருவெலாமுடல் (கம்பரா. கிங்கரர். 44). 11. உட்பொருள். 12. கருப்பொருள். தெய்வ முணாவே…. கருவென மொழிப (தொல். அகத். 18). 13. எண் கருமக் கரு. 14. நுண்ணணு கருவளர் வானத்து (பரிபா. 2: 5). ம. கரு.
கரு - கருந்து = மரக்கன்று. (கோடை. வ.).
கரு - கருப்பு - கருப்பம் - வ. கருப்ப (garbha).
குல் - கல் = கலி. கலித்தல் = 1. உண்டாதல். களியிடைக் கலித்த தென்ப (ஞானா. 11). 2. பிறத்தல். இவ் வெள்ளத்தில் மீன் நிறையக் கலிக்கும். (நெ.வ.)
குல் - குன் - குன்னி = மிகச் சிறியது. நன்னியுங் குன்னியும் என்பது எதுகை மரபிணைச் சொல். கூட்டத்திற்கு ஒருவராவது பெரியவர் வரவில்லை; வந்தவை யெல்லாம் நன்னியுங் குன்னியும். (நெ.வ.). ஒ.நோ: kin, a dim suf, E. manikin. ken, a dim suf. Du. manneken. G. chen.
குன்னி - கன்னி = 1. சிறுமி. 2. குமரி. கன்னி தன்னைப் புணர்ந் தாலும் (சிலப். 7. மன்னுமாலை). 3. இளமை. கன்னிப் புன்னை (திருக்கோ. 177), கன்னிக்கோழி (உ.வ.). 4. என்றும் இளமையா யிருக்குங் காளி. கன்னி செங்கோட்டம் (கல்லா. 58). 5. புதுமை. கன்னி நீலக்கட் கன்னி (சீவக. 900). 6. முதனிகழ்ச்சி; கன்னி வேட்டம். 7. அழிவின்மை. கன்னிமா மதில்சூழ் கருவூர் (திவ். பெரியதி. 2: 9: 7). 8. குமரியாறு. கன்னியழிந்தனள். கங்கை திறம் பினள் (தமிழ்நா. 81). 9. கன்னியோரை. (பிங்.).
கன்னி - கன்னிகை = இளங்குமரி. கை சிறுமைப் பொருட் பின் னொட்டு. ஒ.நோ: குடி (வீடு, கோயில்) - குடிகை (சிறுவீடு, சிறு கோயில்).
சிறுமையும் இளமையும் குறிக்கும் வடசொற்கள்.
கந = 1. சிறிய. 2. இளமையான.
கநய, to make less, smaller, diminish.
கநா, a girl, maid. RV. (இருக். வே.)
கநிஷ்ட, the youngest
கநீ, a girl, maiden.
கநீந, young, youthful, R.V.
கநீநக (k), a boy, youth R.V.
கநீயஸ், younger, a younger brother or sister, younger son or daughter, R.V.
கநீயஸ, younger.
கந்ய, the smallest, Zd. kainin, Hib. cain, ehaste, undefiled.
கந்யக (k), the smallest.
கந்யகா (k), a girl, maiden, virgin, daughter.
கந்யநா, a maiden, girl, R.V.
கந்யஸ, younger
கந்யா, a girl, virgin, daughter, RV, AV. (அதர். வே.)
கந்யிகா (k), see கந்யக. (மானியர் உவீல்லியம்சு ச - ஆ. அகரமுதலி, பக். 248-9.)
கல் - கன் - கன்று = 1. பல விலங்குகளின் இளமைப் பெயர். (தொல். மர. 15 - 18). 2. மரத்தின் இளமைப் பெயர். வாழைக்கன்று, வேப்பங் கன்று. 3. சிறியது. 4. அணிவகைச் சொல்லிற் சிறுபிள்ளை. இரண்டு கன்று கயந்தலை யானபின் இந்தச் சம்பளம் எப்படிப் பற்றும்? (உ.வ.).
ம. f‹D, f., து. கந்து, க. கன்னெ = மரக்கன்று. க. கந்த = குழந்தை, சிறுபிள்ளை.
கன் - தெ. கனு = பிள்ளைபெறு (to bring forth young) ஆபிரகாமு ஈசாக்குனு கனெனு = ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.
பிரா. (பிராகுவீ). கன் (khan), to give birth to; KGad, karr, to yean: Kur. (Kurukh), kharj, to be produced, to bear fruit.
LATIN WORDS
தெ. கனு - L. geno, to beget.
genero, to beget, produce, create, cause to exist, bring to life, generate.
gener, a son-in-law.
generosus, of nobel birth.
genesis, the constellation which presides over one’s birth.
genetivus, genativus, inborn, innate.
genetrix, one who brings forth or bears, a mother.
genitabilis, relating to production or birth.
genitalis, belonging to birth.
genitura, a begetting, genitor, a begetter.
gens, a clan, a number of families connected together by a common discent and the use of the same gentile name.
genus, birth, descent, origin.
GREEK WORDS
Gk, genos, race,
genomai, gignamai, I am born.
genea, race.
genes, born, of, produced by.
gennan, to beget.
Teutonic words derived from Latin and Greek
E. gen, Gk. suf. forming nn. in Scientific use.
1. in the sense ‘that which produces.’
Ex. oxygen, hydrogen, nitrogen.
2. in the sense ‘growth’.
Ex. undogen, acrogen, thallogen.
gender, ME f. OF gon(d)re, f.L. genus.
gene, modern formation of GEN.
geneology, ME f. OF (gie) f. LL. f. Gk. genealogia.
general ME f. OF f. L. generalia
generate of L. generare, to beget.
generic f. F. generique or mod. L, genericus.
generous, f. L. genereux or L. generosus.
genesis, L. f. Gk. gen, to become.
genetic f. L. genesis.
genial, generative, f. L. genialis.
genital f. OF genital or L. genitalis, genitalia (genit, to beget).
genitive ME f. OF genitif or L. genitivus.
genius f. root of L. gignere, to beget.
genscide f. GK. genos, race (cide, killing).
gens, clan. f. L. gignere, to beget.
genteel re-adoption of F. gentil.
gentile, ME f. L. gentilis.
gentle, well**orn, ME f OF gentil f.L. gentilis.
gentry, prob. f. obs. gentrice f. OF genterise
genuine pure - bred, f. L. genuinus, innate, authentic.
genus, group of species f. L. genus - aris.
geny, suf. forming nn. indicating mode of production f. F. genie (gen).
Ex. monogeny, anthropogeny.
gony, suf. signifying creation.
E. cosmogony f. Gk. cosmogonia, cosmos, universe gonia f. gonos, begetting.
சமற்கிருதச் சொற்கள்
(சன் - gan - #ª)
ª, TO BE BORN, RV, AV.; TO GROW, AV. TO GENERATE, BEGET, PRODUCE, CREATE, CAUSE, RV, AV.; TO BE GROWN OR PROD
uced, come into existence, RV, AV.
ஜந, generating, creature, living being, man, person, race, RV.
ஜநக (k), generative, generating, begetting, producing, causing; a progenitor, father.
ஜநந, generating, begetting, producing, causing, a progenitor, creator; birth.
ஜநநீ, mother.
ஜநயதி (ti), generation
ஜநி, a woman, wife.
ÃÂ(TA), ENGENDERED, BEGETTING, PRODUCED, OCCASIONED.
ஜநித்ர, a birth place, place of origin, home, origin.
ஜநீ, a daughter-in-law.
ஜந்து, a child, off-spring, a creature, living being, man, person.
ஜந்ம, birth
ஜந்மந், birth, production.
ஜந்ய, born, produced; born or arising or produced from, occasioned by.
ஜந் - ஜ.
ஜ, born or descended from, produced or caused by, born or produced in or at or upon, growing in, living at.
எ-டு. அக்ரஜ (g), அண்டஜ, அநுஜ, கிரிஜ (g), த்விஜ நிஜ, பங்கஜ (nk), ஸஹஜ.
ஜ - ஜா.
ஜா - born, produced, Ex. agraja, adrija.
#hj(ta), born brought into existence by, engendered by, grown, produced, arisen, caused, appeared, appearing on or in, destined for
ஜாதக (taka), engendered by, born under as asterism, a new**orn child; nativity, astrological calculation of a nativity, the story of a former child of Gautama Buddha.
ஜாதி (ti), birth, production, re**irth, the form of existence fixed by birth, position assigned by birth, rank, causte, family, race, lineage kind, genus, species, the generic properties, the character of a species.
ஜாந, birth, origin, birthplace.
ஆங்கிலச் சொல்லாராய்ச்சியாளர், kind, king என்னுஞ் சொற்களையும் kin என்னுஞ் சொல்லினின்று திரிக்கின்றனர்.
“Kind, n. ME kinde, kund, kende, fr. OE. cynd. ge-cynd, kind, nature, quality, manner, origin, generation, offspring, rel. to OE cyn, kind, kin.
“Kindergarten, n. G. Kindergarten, lit. `garden of children’…. kinder, pl. of kind, child, and garten, garden, kin-kind.
“Kinchin, n. child - Corrupted fr. G. kindchen, `little child’, dimin. of kind, child, which is rel. to ON kundr, son. (Kleins)
சமற்கிருதம் உட்பட்ட ஆரிய மொழிகளையெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்த, கீற்று (Skeat), கிளேன் முதலிய பேரறிஞரெல்லாம், மேற்காட்டிய சொற்கட்கு GEN, (KEN) என்பதே வேர் என்று திட்ட வட்டமாய்க் குறித்துள்ளனர்.
க-ச, ga-#. ஆதலால், gan (kan) என்பது மூலமும் jan என்பது அதன் திரிபுமாகும் என்று தெற்றெனத் தெரிந்து கொள்க.
கலுவம்
கலுவம் - கல்வ, (kh) கல்ல (kh)
கல் - கலுவம் - கல்வம் = மருந்தரைக்கும் சிற்றுரல்.
கல்லுதல் = தோண்டுதல், குழித்தல். (வ.வ: 110)
கலுழம்
கலுழம் - கலுஷ
கலுழ்தல் = கலங்குதல். கலுழ் = நீர்க்கலக்கம். கலுழ் தேறி (கலித்.31.)
கலுழ் - கலுழி = கலங்கல் நீர் (திவா.) கலுழ் - கலுழம் - கலுடம் = கலங்கல் நீர்.
வடவர் காட்டும் கல் (துண்டு) என்னும் மூலம் பொருந்தாது.
(வ.வ: 110)
கலுழன்
கலுழன் - கருட (g) - இ. வே.
கல் - கலுழ். கலுழ்தல் = கலத்தல். கலுழ் - கலுழன் = வெண்மையும் செம்மையும் கலந்த பருந்தினம்.
கலுழன்மேல் வந்து தோன்றினான் (கம்பரா. திருவவ. 13).
வடமொழியார் க்ரு (g) என்பதை மூலமாகக் காட்டி, எல்லாவற் றையும் விழுங்குவது என்று பொருட் காரணங் கூறுவர். (வ.வ:110)
கலை
கலை - கலா
கல் - கலை.
வடமொழியில் மூலம் இல்லை. (வ.வ: 110)
கலைச்சொல்லாக்க நெறிமுறைகள்
தற்காலக் கல்விக் கலைகளிற் பல. மேனாட்டினின்றும் நமக்கு வந் தமையால், அவற்றைப்பற்றிய பெருநூல்களும், குறியீடுகளும் இன்றும் பெரும்பாலும் மேலை மொழிகளிலேயே உள்ளன. தற்போது குடியரசுக்கான வழிதுறைகளை வகுக்குங்கால், தாய்மொழியிற் கல்வி கற்பிக்க வேண்டியிருத்தலின் தமிழ்நாட்டுக் கல்விக்குத் தமிழிற் கலைச்சொற்களையும், குறியீடுகளையும் மொழி பெயர்த்துக் கொள்ளுதலும் ஆக்கிக் கொள்ளுதலும் இன்றியமையாததாகும். இதற்காகப் பல சார்பில் பல முறைகள் பல குழுக்கள் பலவிடத்திற் கூடியாராய்ந்தும் ஓரளவு வேலை செய்தும் வந்திருக்கின்றன; வருகின்றன. ஆனால், கலைச் சொற் களை ஆக்கிக்கொள்ளும் நெறிமுறைகளை இன்னும் அக் குழுக்கள் சரியாய் உணராதிருப்பது பெரிதும் வருந்தத்தக்கது.
தமிழிற் கலைச்சொற்களை ஆக்குவார் ஆங்கிலம் தமிழ் இரண் டையும் நன்றாயறிந்தவராயும் சொல்லாராய்ச்சியுடையவராயும் தமிழ்ப்பற்று நிரம்பியவராயு மிருத்தல் வேண்டும்.
தமிழறியாத பெருமாளர் கலைச்சொல்லாக்குவது குருடர் வழிகாட்டுவதையும், சொல்லாராய்ச்சியில்லாதார் ஆக்கும் கலைச்சொல் இளஞ்சிறார் ஓவியத்தையுமே ஒக்கும். தமிழ்ப்பற் றில்லாதவரிடம் கலைச்சொல்லாக்கத்தை ஒப்புவிப்பதோ பெற்ற தாயைப் பற்றலரிடம் ஒப்புவிப்பதேயன்றி வேறன்று. மேற்கூறிய மூவியல்புகள் உள்ளவர் குழுமிய பின்பும் ஆத்திரப்படலாகாது. பலநூற்றாண்டுகளாய் மேலை மொழிகளில் தோன்றிய குறியீடு களுக்கு ஓரிரு நாளில் அல்லது மாதத்தில் நேர்சொல் காண முடியாது. பதறிய காரியம் சிதறிக் கெடும்; பதறாத காரியம் சிதறாது. விரைந்து செய்வது மறைந்துபோம். நீடித்துச் செய்வது நிலைத்து நிற்கும்.
ஐதராபாத்திலுள்ள உசுமானியாப் பல்கலைக்கழகத்தார். பட்டத் தேர்வுகட்குரிய கல்லூரிக் கல்வியை உருதுமொழியிற் புகுத்து முன், நாலாண்டாகப் பொறுமையுடன் உழைத்துக் கலைச் சொற்களையெல்லாம் அம் மொழியில் ஆக்கிக் கொண்டனர். நாமும் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.
தமிழிலுள்ள சொற்களெல்லாம் இன்னும் தொகுக்கப்பட வில்லை. நூல்வழக்கிலுள்ள சொற்களே பல்கலைக்கழக அகராதி
யில் (University Lexicon) முற்றும் இடம்பெறவில்லையாயின், உலக வழக்குச் சொற்களைப் பற்றிச் சொல்லவேண்டுவதே யில்லை. உழவு, கைத்தொழில், உலகியல் முதலியன பற்றிய பல உலக வழக்குச் சொற்கள் கலைச்சொல்லாக்கத்திற்குப் பெரிதும் பயன் படுவன. ஆகையால், முதலாவது நூல்வழக்கு, உலக வழக்கு, கல்வெட்டு இம் மூன்றினின்றும் இதுகாறும் அகராதியிற் புகாத சொற்களை யெல்லாம் தொகுத்துக் கொள்ளல் வேண்டும். இது செய்யாமற் கலைச்சொல்லாக்குவது கருவியில்லாமற் கருமஞ் செய்வதே போலும்.
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (குறள். 401)
இரண்டாவது, செந்தமிழ்ச் சொல்லியல் நெறிமுறைகளில், கலைச் சொல்லாக்கத்திற்கு வேண்டியவற்றை யெல்லாம் தெரிந்துகொள் ளல் வேண்டும். அதாவது, முன்னொட்டுகள், பின்னொட்டுகள், இடையொட்டுகள், ஈறுகள் என்ற நாற்றிறப்பட்ட சொற்களின் அல்லது குறைச்சொற்களின் பொருள்கள் பயன்களெல்லா வற்றையும் தெரிந்து கொள்ளல் வேண்டும்.
மூன்றாவது, அவ்வக் கலையில் தேர்ச்சிபெற்ற ஆங்கில அறிஞரைக் கொண்டு மொழிபெயர்க்கவேண்டும். ஆங்கிலக் குறியீடுகளை யெல்லாம் கலைவாரியாக எழுதுவித்துக் கொள்ளல் வேண்டும்.
நாலாவது, முற்கூறிய மூவகைத் திறனும் ஒருங்கமைந்த திறவோர், ஒருங்கே யமர்ந்து தீர ஆய்ந்து, கலைவாரியாக மொழி பெயர்க் கவோ சொற்புனையவோ வேண்டும்.
ஒரு மொழியிலுள்ள சொற்கள் அசைநிலை, புணர்நிலை, பகுசொன்னிலை, தொகைநிலை, பல்தொகைநிலை, பிரிநிலை என அறு நிலைகளையடையுமேனும், அவையாவும் தனிநிலை, புணர்நிலை என இரண்டா யடங்கும். தனிநிலையாவது சொற்க ளெல்லாம் தனித்தனியாக அமைந்து கிடக்கும் நிலை: புணர் நிலையாவது அச் சொற்கள் இரண்டும் பலவும் கூடிப் பகுசொற் களாயும் தொடர் மொழிகளாயும் புணர்ந்து நிற்கும் நிலை: தனிநிலையாக்கம் பெரும்பாலும் பண்டைக் காலத்திலேயே முற்றுப் பெற்றது. புணர்நிலையாக்கம் எக்காலத்திற்கும் உரியது. ஆதலால், சொற்களைப் பகுத்தாய்ந்து சொல்லாக்க முறைகளைக் கண்டு பிடித்து அவற்றைக் கையாளின் எக்காலத்தும் இயற்கை முறைப்படியே வேண்டுமளவு புதுச்சொற் புனைந்து கொள்ள லாம்.
தமிழின் சொல்வளத்தை அறியாத சிலர், தமிழிற் போதிய சொல் இல்லையென்றும், அதில் மொழிபெயர்த்தற்கு ஆங்கிலம் அல்லது வடமொழி போன்ற அயன்மொழித் துணை இன்றி யமையாததென்றும் கூறுகின்றனர். இவர், கிரேக்கு இலத்தீன் முதலிய ஆரிய மொழிகளில் செந்தமிழ் வேர்கள் செறிந்து கிடப்பதையும், ஆங்கிலக் கலைச்சொற்களின் வேர்ப் பொருள் எளிமையையும், சொல்லமைப்பு நெறிமுறைகளையும், தமிழ் நிகண்டுகளையும் அறிந்திருந்தால் இங்ஙனம் கூறார்.
ஆங்கிலக் குறியீடுகளின் அமைப்பெளிமையை விளக்குதற்கு, சேம்பரார் (Chambers) ஆங்கிலச் சொல்லியல் அகராதி யினின்றும் சில சொல் விளக்கங்களை எடுத்துக்காட்டுகிறேன்.
(1) Alum: a mineral salt (cf. அளம் = c¥ò)
L. alumen
Alumina: one of the earth. L. alumen, alum.
Aluminium: the metalic base of alumina.
(2) Candidate: so called because at Rome, the applicant used to dress in white.
L. candidus, white-candeo (cf. fhªJ), to shine.
(3) Chancellor: Low L. cancellarius, orig. an officer that had charge of records, and stood near the cancelli (L.) the crossbars that surrounded the judgement-seat.
(4) Electric: having the property of attracting and repelling light bodies when rubbed.
L. electram-Gk. electron, amber (cf. m«g®) in which the above property was first observed.
(5) Protein: the common radical of the most essential articles of food.
Gk. protos, first, and suffix-in.
கலைச்சொற்களைத் தனித்தமிழிலேயே யாத்தல் வேண்டும். அவ் யாப்புக்கூடாத ஒரோ வழி மட்டும் அயன்மொழித் துணை வேண்டப்படும். இது எல்லா மொழிக்கும் பொது.
மொழிபெயர்ப்புத் திறனில் தமிழ் எம்மொழிக்கும் இளைத்த தன்று. தனித்தமிழில் குறியீட்டுக்காகப் புனைதற்கு, வழக்கற்ற சொற்களை வழக்கிற்குக் கொணர்தல் வேண்டும். வழங்காமலே சொற்கள் வழக்கறுகின்றன. தமிழ்நாட்டின் வடபாகத்தில் வழங்காத துப்புரவு (=சுத்தம்) என்னும் தென்சொல் தென்பாகத் திலும், தென்பாகத்தில் வழங்காத நூக்கு (=தள்) என்னும் தென்சொல் வடபாகத்திலும், தமிழில் வழங்காத நெய்த்தோர் என்னும் தென்சொல் தெலுங்கில் நெத்துரு என்றும் வழங்கு வதை நோக்குக. அன்றியும் தமிழ்ச்சொல்லிருக்க அயற்சொல் நாடல். கையில் வெண்ணெயிருக்க நெய்க் கலை வதும், ஏதிலார் ஆரத் தமர் பசிக்க விடுதலுமாகும்.
தமிழிற் கலைச்சொற்களாக்கும்போது, ஏற்கெனவே ஆங்கில நேர் தென்சொற்களிருக்குமாயின் எளிதாய் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். இங்ஙன மில்லாவிடத்துமட்டும் புதுச்சொற்கள் புனையப்படும். அப்புனைவுக்கான நெறிமுறைகளாவன:
1. ஒரு பொருளுக்கு ஏதேனும் ஒரு காரணம்பற்றிப் பெயரிட லாம். அக் காரணம், ஒரு சிறிதே பொருந்துமேனும் அமையும். அதே காரணம் பிற பொருளுக்கு ஏற்குமா என்று கவனிக்க வேண்டுவதில்லை.
அல்வியன்மை (அவ்வியாப்தி), மிகுவியன்மை (அதிவியாப்தி) என்னுங் குற்றங்கள் வரையறைக்கே (definition) யன்றிச் சொற்கில்லை.
2. பல பொருளுக்கு ஒரே காரணம் ஏற்பின் அவற்றின் பெயர்கள் வெவ்வேறா யமையும்படி, ஒரு பொருட் பலசொற்கள் ஆளவேண்டும்.
எ-டு: வளையல் = வளைந்த அணி.
கொடுக்கு = வளைந்த உறுப்பு.
புரிசை = வளைந்த மதில்.
குனிவு = முதுகு வளைதல்.
பரிதி = வட்டமான சூரியன்.
3. ஒரே சொல்லைப் பல பொருட்கு வழங்கின், பொருள்தொறும் திரித்துக்கொள்ளவேண்டும்.
எ-டு: கள் - கர் (வேர்) = கருப்பு, மறைவு.
கர, கரம்பு, கரடி, கரந்தை (பூ), கரி, கரிசல், கரிச்சான், கரிசு, கரு, கருகு, கருக்கு, கருத்தை, கருப்பை (எலி), கரும்பு, கருவல், கார், காரி முதலிய சொற்களெல்லாம் கருமை என்னும் ஒரே கருத்தை அடிப்படையாகக் கொண்டு விகுதி வேறுபாட்டால் வெவ்வேறு பொருளைக் குறிப்பன.
4. ஒரே பொருளின் அல்லது கருத்தின் நுட்ப வேறுபாட்டைக் குறிக்கவும் சொல்லைத் திரித்துக்கொள்ளலாம்.
எ-டு: பரிசு = இகலி (போட்டியிட்டு)ப் பெறுவது.
பரிசில் = இகலாது பெறுவது.
பரிசம் = பெண்ணுக் களிப்பது.
5. சொற்றிரிப்புப் பல வகைப்படும்.
ஒன்பான் திரிபு, முக்குறை, மும்மிகை, போலி, இலக்கணப்போலி, திரிபாகுபெயர் (தத்திதாந்தம்), மரூஉ முதலிய வெல்லாம் திரிபின் வகைகளாம். இவை தனித்தும் கலந்தும் வரும்.
எ-டு:
கள்-(=கருப்பு)-களி (=கருமண், களிமண் போன்ற உணவு) -
களிம்பு (=களிபோன்ற மருந்து - (ஈற்றுமிகை.)
நந்து - நத்தை - (வலித்தலும் ஈற்றுமிகையும்)
இர்-இரா, இரும், இருள், இரும்பு
இறடி, இறுங்கு பல்வகைத் திரிபு
ஏனல், ஏனம்.
யானை, (ஏனை)
6. ஈறுகளைப் பொருண்மரபறிந்து புணர்க்கவேண்டும்.
ஒவ்வோர் ஈறும் ஒவ்வொரு அல்லது சிற்சில பொருள்களை மரபாகக் காட்டும்.
எ-டு: அல்.
செம்மல், கருவல், வள்ளல் - உடையோனை உணர்த்திற்று.
வறுவல், நொறுவல் - செய்பொருளை உணர்த்திற்று.
ஆடல் - தொழிலை உணர்த்திற்று.
தோன்றல் - செய்வோனை உணர்த்திற்று.
ஒரே பொருட்குப் பல ஈறும் ஏற்கும். ஈறு பெறுஞ் சொல்லின் இறுதிக்கேற்ப ஓர் ஈற்றைச் சேர்க்க வேண்டும்.
எச்சம், தோன்றல், ஓதுவான், விறகுவெட்டி, வெந்தை என்பவற்றி லுள்ள அம், அல், ஆன், இ, ஐ என்னும் ஈறுகள் செய்வோனையே குறித்தன.
குற்றியலுகரச் சொற்ளெல்லாம் செய்வோன் பொருளில் இகரவீற்றை ஏற்கும்.
எ-டு: தோன்றி, ஓதி, வெட்டி, இடுக்கி.
7. ஒரு பொருள் இன்னொன்றின் பெருமைப்பாடாயிருந்தால், பெருமையடைகளையும் ஈறுகளையும் பொதுமையான பொருட்பெயரோடு சேர்த்துக்கொள்ளலாம்.
எ-டு: நெருஞ்சில் - ஆனைநெருஞ்சில்
நாவல் - பெருநாவல் அடை
குன்று - குன்றம் - ஈறு.
பெருமைப்பாட்டுப் பெயர்களைப் பெருமைப்பொருள் வேர்களி னின்றும் திரிக்கலாம்.
எ-டு: கடல், கடப்பான் படாகை.
8. ஒரு பொருள் இன்னொன்றின் குறுமைப்பாடாயிருந்தால், குறுமையடைகளையும் ஈறுகளையும் பொதுமையான பொருட்பெயரோடு சேர்த்துக்கொள்ளலாம்.
எ-டு: அறை - கண்ணறை
அகத்தி - சிற்றகத்தி அடை
முறம் - (முற்றில்) - முச்சில் - ஈறு.
குறுமைப்பாட்டுப் பெயர்களைக் குறுமைப்பொருள் வேர்களி னின்றும் திரிக்கலாம்.
எ-டு: குணில், குக்கல், குன்றி, சிறுக்கன்.
9. ஒப்புமைபற்றிச் சில பெயர்களை அடைசேர்த்தும் சேரா மலும் உவமையாகுபெயராகவும் திரித்தும் வழங்கலாம்.
எ-டு: ஈப்புலி, கரடிகை, பெருச்சாளி, மணிப்பவளம்.
cf. Lens, so called from its likeness to a lentil seed.
ஒப்புமை ஏதேனும் ஓர் இயல்புபற்றி இருக்கலாம்.
எ-டு: தோணிப்பாலம், ஆமைவடை.
இவற்றில், தோணி ஆமை என்னும் பெயர்கள் முறையே concave, convex, என்னும் பொருள்படல் காண்க.
10. ஓரினப் பொருள்களை, அவற்றின் நன்மையும் தீமையும் பிறதன்மையும் குறித்த ஆடைகளைப் பொதுப்பெயருடன் சேர்த்துப் பிரித்துக் கூறலாம்.
எ-டு: நல்துளசி, நாய்த்துளசி.
நன்செய், புன்செய்.
கரும்பு, பேய்க்கரும்பு.
கடலை - கொண்டைக் கடலை, வேர்க்கடலை. பட்டாணிக் கடலை.
11. ஓரினப் பொருள்களைக் குறிக்க ஒருபொருட் சொற்களையும் பயன்படுத்தலாம்.
எ-டு: காற்று = wind, வளி = gas.
ஆங்கிலச் சொற்களை யொத்த தமிழ்ப் போலியொலிகள், ஆங்கிலத்தோடொத்த பொருள்தரின் கொள்ளப்படலாம்.
எ-டு: parliament - பாராளுமன்று.
bracker - பிறைக்கோடு.
12. ஆங்கிலச் சொற்களின் வேர்ப்பொருளை யறிந்து அதற்கேற்ப மொழிபெயர்க்கலாம்.
எ-டு: colemn - பிழம்பு.
colonel, (the leader of a column of soldiers) பிழம்பர்.
phenamenon (an appearance) - தோற்றரவு.
அம் ஈறுபெற்ற தோற்றம் என்னும் சொல் பொதுவான தோற்றத்தைக் குறிக்க வழங்கதலின், அரவு ஈறுபெற்ற தோற் றரவு என்னும் சொல் ஒரு விதப்புத் தோற்றத்தைக் குறித்தற் கேற்ற தாதல் காண்க.
13. சில ஆங்கிலச் சொற்களுக்குச் செம்மொழிபெயர்ப்புச் (literal) செய்துகொள்ளலாம்.
எ-டு: inspect - உண்ணோக்கு
inspection: உண்ணோக்கம்.
inspector: உண்ணோக்காளர்.
14. சில சொற்கள் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் பொதுவா யிருப்பதால், அவற்றை அங்ஙனமே வைத்துக்கொள்ளலாம்.
எ-டு: note - நோட்டு.
நோடு = பார், கவனி, நோடுவது நோட்டு, நோட்டம், நோட்டம் என்னும் தொழிற்பெயர் தமிழிலும், நோடு என்னும் பகுதி அல்லது ஏவல் கன்னடத்திலும் வழங்குதல் காண்க.
15. ஓர் ஆங்கிலச் சொற்கு நேரான தமிழ்ச்சொல்லை அவ் வாங்கிலச் சொல் குறிக்கும் பல பொருளிலும் வழங்கலாம்.
எ-டு: article = உருப்படி =
1. பொருள் (சாமான்)
2. பண்டம்
3. செய்திப் பகுதி.
16. ஒரு பொருளின் பல கூறுகளைக் குறித்தற்கு ஒரு பொருட் பல சொற்களை ஆளலாம்.
எ-டு: pork - பன்றிக்கறி. L. porcus, a pig.
தும்பிக்கை = யானைக்கை, தும்பி = யானை.
17. சில ஆட்பெயர்களையும், அவ் வாள்களைப் பற்றிய விதப்புச் செய்திகளைக் குறிக்கும் சொற்களாக வழங்கலாம்.
எ-டு: Boycott, from Captain Boycott who was excommunicated by his neighbours in Ireland in 1881.
18. சொற்களை இயன்றவரை பொருள் மயக்கமின்றி அமைக்க வேண்டும்.
19. அயல் நாட்டினின்று வந்த பொருளுக்கு, அதன் அயன் மொழிப் பெயரே அமையவேண்டுமென்பது யாப்புறவின்று.
எ-டு: ostrich = தீக்கோழி.
cycle = மிதிவண்டி.
20. தமிழுக்கில்லாது பிறமொழிகட்குள்ள சொல்லாக்க முறை களில், செந்தமிழ் இயல்பிற் கேற்றவற்றைத் தமிழிலும் தழுவிக் கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் பெயர்ச்சொற்களை வினைச்சொற்களாகப் பயன் படுத்துவது பெரும்பான்மை, தமிழிலும், கரும்பு என்னும் சொல், கரும்பை அல்லது அது போன்றதைத் தின்பதைக் குறிக்கும் வினைச் சொல்லாகவும் வழங்குகின்றது.
தொடர்பினால், வழிவழி வெவ்வேறு பொருள்களைக் குறிக்கும் ஆகுபெயர்போன்றே, வெவ்வேறு வினைகளை அல்லது கருத்து களைக் குறிக்கும் ஆகுவினைகளுமுண்டு. ஆங்கிலத்திலுள்ள focus ன்னும் சொல் இலத்தீனில் அடுப்பு என்னும் பொருளது. அது ஆங்கிலத்தில் நெருப்பைச் செலுத்தல், ஒரு பொருளைத் திருப்பல் என்னும் பொருள்களில் வினையாகவும் வழங்கு கின்றது. இம் முறையில் தமிழிலும் சொற்களை வழங்கிக் கொள்ளலாம். (செ.செ. 1941)
கலையுங் கல்வியும்
பண்டைத் தமிழகத்தில் கல்வி இக்காலத்திற்போல் அரசியல் திணைக்களங்களுள் ஒன்றாக இருந்ததில்லை. ஆசிரியரின் முயற்சியினாலும் பொதுமக்களின் போற்றரவினாலுமே, பொதுக் கல்வி நாட்டிற் பரப்பப்பெற்று வந்தது. கற்றுவல்ல புலவரையே அரசர் ஓரளவு போற்றிவந்தனர்.
பொதுக்கல்வி: எழுத்தும் எண்ணும் கற்பித்த துவக்கக்கல்வி யாசிரியர்க்கு இளம்பாலாசிரியர் என்றும், சிற்றிலக்கணமும் நிகண்டும் கணக்குங் கற்பித்த நடுத்தரக் கல்வியாசிரியர்க்குக் கணக்காயர் என்றும், ஐந்திலக்கணமும் அவற்றிற்குரிய இலக்கி யமுங் கற்பித்த மேற்றரக் கல்வியாசிரியர்க்கு ஆசிரியர் என்றும், பெயர். ஆசிரியர், நூலாசிரியர் நுவலாசிரியர் (போதகாசிரியர்) உரையாசிரியர் என மூவகையர்.
துவக்கக்கல்வி மாணவர்க்கும் நடுத்தரக் கல்வி மாணவர்க்கும், பள்ளிப்பிள்ளைகள் என்றும், மாணியர் என்றும் மாணவர் (மாணவகர், மாணாக்கர்) என்றும், சட்டர் என்றும், பெயர். அவருள் தலைமையானவன் சட்டநம்பி அல்லது சட்ட நம்பிப் பிள்ளை (சட்டாம் பிள்ளை) எனப்பட்டான். மேற்றரக் கல்வி மாணவர்க்கு மாணவர் என்றும் மழபுலவர் என்றும், கற்றுச் சொல்லியர் என்றும், பெயர்.
துவக்கக்கல்வி நிலையிலும் நடுத்தரக்கல்வி நிலையிலும் மாண வரின் பெற்றோரும், மேற்றரக்கல்வி நிலையில் மாணவரும், ஆசிரியர்க்குச் சம்பளம் இறுத்து அவரைப்போற்றி வந்தனர். ஏழையாயிருந்து ஆசிரியனுக்குத் தொண்டு செய்யும் மாண வனுக்கு முத்தரக் கல்வியும் இலவசமாய்க் கற்பிக்கப்பட்டது.
சிறப்புக் கல்வி: மாணவர் பொதுக்கல்வி கற்றபின், இசை நாடகம் கணியம் மருத்துவம் முதலிய சிறப்புக் கலைகளை, அவ்வக்கலையாசிரியர் வாயிலாய்க் கற்றனர். அக் காலத்து நூல்களெல்லாம் செய்யுள் வடிவிலிருந்தமையின், எவ்வகை நூற்கல்விக்கும் சிறந்த இலக்கணக்கல்வி இன்றியமையாததா யிருந்தது.
பொருள் கொடுப்போர்க்கும் பணிவிடை செய்வோர்க்கும் கலைப்பயிற்சி யளிக்கப்பட்டது.
மெய்ந்நூற்கல்வி: பொதுக்கல்வி கற்றபின், அல்லது பொதுக் கல்வியுஞ் சிறப்புக் கல்வியுங் கற்றபின், மெய்ப் பொருளறிவு பெற விரும்பினவர், காட்டகத்துள்ள முனிவரிடம் அல்லது யோகியரிடம் சென்று மூவாண்டு மெய்ந்நூற்கல்வி கற்றதாகத் தெரிகின்றது.
வேண்டிய கல்வியாண்டுமூன் றிறவாது
என்பது தொல்காப்பியம் (1134).
செய்யுளியற்றும் திறம்: எண்ணும் எழுத்தும் தவிர எவ்வகைக் கல்வியும் செய்யுள் வாயிலாகவே கற்றமையாலும், இளமையி லிருந்து செய்யுள் செய்தும் செய்யுளிற் பேசியும் பயின்றமை யாலும், பண்டைப் புலவரெல்லாம் செய்யுளியற்றுந் திறம் சிறக்கப்பெற்றிருந்தனர்.
அரசர் தமிழை வளர்த்தலும் புலவரைப் போற்றலும்: பாண்டியர் தொன்று தொட்டுக் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை கழகம் (சங்கம்) இருத்தி, நூல் நிலையம் போற்றி, (இடைச்சங்க நூல் நிலையத்தில் மட்டும் எண்ணாயிரத்தெச்சம் நூலிருந்ததாக வழிமுறைச் செய்தி கூறும்.) முதுநூலாராய்ச்சியும் புது நூலாக்கமும் நிகழ்வித்து, முத்தமிழை வளர்த்து வந்தனர். கழகங் குலைந்தபின், முத்தமிழரசரும் தத்தம் அவையில் ஓரிரு சிறந்த புலவரை யமர்த்திப் போற்றிவந்தனர். அவைக்களப் புலவர்க்கும், நூலரங்கேறியவர்க்கும், அரசரைப் புகழ்ந்து பாடியவர்க்கும், முற்றூட்டும் சிறந்தபரிசும் அளிக்கப்பட்டன. ஆடல் பாடல் வல்லாரும் அரங்கேறி ஆயிரத்தெண் கழஞ்சுபொன் பெற்றனர். அரங்கேற்றம் அரசன் முன்னிலையிலும் அவ்வத்தமிழிற் சிறந்த அதிகாரியின் தலைமையிலும் நடைபெற்றது. அரங்கேறிய நூலாசிரியரை வெண்பட்டணிவித்து யானைமேலேற்றி நகர்வலம் வருவிப்பது வழக்கம்.
இலக்கியப் புலவரும் சமயநூற் புலவரும் சொற்போர் நிகழ்த்தி உண்மை நாட்டற்குத், தலைநகர்தொறும் பட்டிமண்டபம் என்னும் தருக்கமண்டபம் இருந்தது. புலவரிடைத் தெய்வப் புலமையையும் பிறருள்ளக் கருத்தறியும் ஆற்றலையும் வளர்த்தற் பொருட்டு, அரசர் அவ்வப்போது தம் உள்ளத்திலுள்ள கிளர்ச்சி மிக்க கருத்தைப் பற்றி அவரைப் பாடச்சொல்வதுண்டு. அங்ஙனம் பாடப்படுவது கண்டசித்தி எனப்பட்டது. அரச ருடைய உள்ளக்கருத்தை அறிவிப்பதும் ஐயுறவைத் தெளிவிப்பதுமான பாடற்குப் பொற்கிழியளிக்கப்பட்டது. இத்தகைய சமையங் களில், இங்ஙனம் பாடினார்க்கிதுவென்று விளம்பி முன்னரே பொற் கிழியைச் சங்கமண்டபத்தில் தூக்கிவிடுவது பாண்டியர் வழக்கம்.
குறிக்கை (சமசியை) பாடலும், அரிகண்டம் எமகண்டம் போன்ற கடும்பா (ஆசுகவி) பாடலும், அரசர் அவ்வப்போது நல்லிசைப் புலவர்க்கும் கடும் பாவலர்க்கும் நடத்திவந்த செய்யுட் போட்டி வகைகளாகும்.
தக்க புலவர் தலைமை யமைச்சராகவும், தூதராகவும் அமர்த்தப் பெற்றனர். அவைக்களத் தலைமைப் புலவர்க்கும், அரங்கேறிய புலவர்க்கும், பட்டிமண்டபத்தில் வென்ற புலவர்க்கும், சிவிகை குடை கொடி முதலிய கொற்றச் சின்னங்கள் அளிக்கப்பட்டன. புலவரின் பரிந்துரைக்கும் வேண்டுகோட்கும் இணங்குவதும், அவரது அறிவுரையையும் அறவுரையையும் இடித்துரையையும் ஏற்றுக்கொள்வதும், அவரது புலந்துரையையும் பழிப்புரையை யும் பொறுத்துக் கொள்வதும், செவ்வியறி யாதும் விடை பெறாதும் எச்சமயத்திலும் ஓலக்க மண்டபத்திற்குள் அவரைப் புகவிடுவதும், அவருக்குப் பணிவிடை செய்வதும், அவரை வழிவிடுக்கும்போது ஏழடி பின்போய் மீள்வதும், அக்காலத் தரசர் பலர் செயல்களாகும்.
பரிசளியாவிடத்தும் தம்மை அவமதித்தபோதும் புலவர் அரசரைச் சாவிப்பதுமுண்டு.
கல்வித் தரவுயர்வு: அக்காலப் புலவர் கடுத்துப் பாடும் ஆற்றலுடையராயிருந்து செய்யுளிலேயே தம்முள் உரையாடி வந்தனர். நிகண்டு என்னும் அகராதியுட்பட அனைத்திலக்கிய மும் செய்யுள் வடிவிலேயே யிருந்தன. மதுரைச் சங்கத்திலும் பிற புலவரவையிலும் அரங்கேறிய பின்னரே நூல்கள் நாட்டில் உலவலாயின.
கல்வி வளர்ச்சி: தலைச்சங்கத்தில் இருந்த புலவர் ஐந்நூற்று நாறபத்தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டுப் பாடியவர் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் என்றும், அவரைப் போற்றிய பாண்டியருள் கவியரங்கேறியவர் எழுவ ரென்றும்; இடைச்சங்கத்தில் இருந்த புலவர் ஐம்பத்தொன்பதின் மர் என்றும், அவருள்ளிட்டுப் பாடியவர் மூவாயிரத்தெழு நூற்று வர் என்றும், அவரைப் போற்றிய பாண்டியருட் கவியரங்கேறிய வர் ஐவர் என்றும்; கடைச் சங்கத்தில் இருந்த புலவர் நாற்பத் தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டுப் பாடியவர் நானூற்று நாற்பத்தொன்பதின்மர் என்றும், அவரைப் போற்றிய பாண்டி யருள் கவியரங் கேறியவர் மூவர் என்றும், முச்சங்க வரலாறு கூறும்.
இதுபோதுள்ள கடைச்சங்க இலக்கியத்திலிருந்து அறியப்படும் புலவர் ஏறத்தாழ எழுநூற்றுவர் ஆவர். அவருள் மகளிர் இருபத்திருவரும் அரசர் பன்னிருவர்க்கு மேற்பட்டவரும் ஆவர்.
அறுவைவாணிகன், ஓலைக்கடைக்காரன், கணியன், கூத்தன், கூலவாணிகன், பாணன், பொருநன், மருத்துவன், வண்ணக்கன் முதலிய பல்வகைத் தொழிலாளரும்; காவற்பெண்டு, அரசி, குற மகள், பேய்மகள் முதுலிய பலதர மகளிரும்; புலவராயிருந்தனர்.
கடைச் சங்கத்திற்குப் பிற்காலத்திலும், சேரமான் பெருமாள் நாயனாரும் குலசேகராழ்வாரும் கண்டராதித்தரும் அதிவீரராம பாண்டியனும் போலும் அரசரும், திருவெண்காடர்போலும் வணிகரும், 2 ஆம் ஔவையாரும் காரைக்காலம்மையாரும் போலும் மகளிரும், பலர் புலவராயிருந்தனர்.
வரலாற்றிற் கெட்டாத புலவர், சங்ககாலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் எத்துணையரோ அறியோம்.
ஆசுகவிகள் காசு என்று பிற்காலத்தில் வாங்கப்பட்ட வரி, அரச வொப்பம் பெற்று அவர் வாழ்க்கைச் செலவிற்கு வாங்கப்பட்டது போலும்!
அரசர் இலக்கியத் தொண்டு: அரசர் புலவரை நூலியற்றுமாறு ஊக்கியும் தாமும் நூலியற்றியும் வந்ததுடன், பல தனிப்பாடல் களையும் பாவும் பொருளும் அளவும் பற்றித் தொகுத்தும் தொகுப்பித்தும் உள்ளனர். நற்றிணை தொகுப்பித்தோன் பாண்டியன் பன்னாடு தந்த மாறன்வழுதி. குறுந்தொகை தொகுத்தோன் பூரிக்கோ. ஐங்குறுநூறு தொகுப்பித்தோன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை, அகநானூறு தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி.
கவ்வை
கவை - கவ்வை = பிளப்பு, பிரிவு, மலர்வு அலர்.
கவ்வை - கவ்விது. (தி.ம. 1144)
கவரி
கவரி - கவரம் = சினம். கவரம் - கவரி = சினம் மிக்க காட்டெருமை, எருமை.
படித்து சேடெறியுஞ் செங்கட் கவரியும் (கல்லாடம், 59: 90)
கவரி = நீண்ட மயிரடர்ந்த திபேத் தெருமை,
கவரி மயிர்போல் அடர்ந்து வளரும் சம்பா நெற்பயிர்வகை
கவரி - சவரி - சவரம் - சமரம் - சாமரம்.
சவரி - சமரீ (வ,). சாமரம் - சாமர (வ.). (தி.ம: 739-740.)
கவளம்
கவளம் - கவல
கவ்வு - கவள் - கவளம் = கவ்வும் அளவான உணவு.
வடமொழியில் மூலமில்லை. (வ.வ: 110)
கவான்
கவான்: கவீனீ, கவீனிகா (g) - அ. வே.
கவை - கவான் = கவைத்த தொடைச்சந்து, அதுபோன்ற மலைச்சந்து.
வடமொழியில் மூலமில்லை. (வ.வ: 111)
கவுள்
கவுள் - கபோல
கவ்வு - கவுள் = குறடுபோற் கவ்வும் அலகு, கன்னம்.
வடவர் காட்டும் க்ரப் - கப் (இரங்கு) என்னும் மூலம் இம்மியும் பொருந்தாது. (வ.வ: 110)
கழகம்
கழகம் என்பது சிறப்பாகவும் பெரும்பான்மையாகவும் கற்றோர் கூட்டத்தையே குறிக்குமேனும், சிறுபான்மை சூதாடு மிடத்தையும் குறிக்குமாறு இலக்கியத்தில் ஆளப்பட்டுளது.
கழகம் என்னும் சொல்லின் வேரும் வரலாறும் தெரியின். (பொருள் தெளிவாம்)
குல் - குல - குலவு. குலவுதல் = கூடுதல்.
குல - கல.
கல - கலவி.
கல - கலவை, கலப்பு - கலம்பு - கலம்பும் - கதம்பம்.
கலம்பு - கலம்பகம்
கல - கலங்கு - கலக்கு - கலக்கம்
கல - கலகம், கலாம், கலாபம், கலாபனை.
இருவர் அல்லது இரு கட்சியார் கலந்தே பொருவதால், கலத்தற் கருத்திற் போர்க்கருத்துத் தோன்றிற்று. கை கலத்தல் என்னும் வழக்கையும், பொரு, சமர் என்னும் சொற்களின் வேர்ப் பொருளையும் நோக்குக.
மேற்காட்டிய சொற்றிரிவுப் பட்டியினின்று, கலத்தற்சொற்கு, இருபாற் கூட்டம், கலப்பு, கலக்கம், கலகம் என்னும் நாற் பொருள்கள் தோன்றியுள்ளமை காண்க. நீரும் மண்ணும் போலப் பல பொருள்கள் அல்லது கருத்துகள் கலப்பதே கலக்கம்.
குல் - குள் - கள். கள்ளுதல் = கூடுதல். பொருந்துதல், ஒத்தல்.
கள் - களம் = ஏர்க்களமும் போர்க்களமும்போலப் பலர் கூடுமிடம்.
களம் - களன் = அவைக்களம்
களன் - கழனி = ஏர்க்களம் உள்ள வயல்.
களம் - களர் = அவை.
களர் - களரி = அவை, கல்வி நாடகம் மல் வில் பயிலும் அரங்கு, வழக்குமன்றம், தொழில் செய்யும் இடம்.
கள்ள = போல.
கள்ள மதிப்ப வெல்ல வீழ (தொல். 1235)
குள் - குழு - குழம்பு - குழப்பு - குழப்பம்.
குழவி = திரண்ட அரை கல்.
கூடுதற் கருத்தில் திரட்சிக் கருத்துத் தோன்றும்.
சேரே திரட்சி (தொல். 846)
என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க.
குழு - குழூஉ
குழு - குழாம்.
குழு - குழம்பு.
குழு - குழுமு - குழுவு. குழுமு - குழுமல், குழுமம்.
குழுவு - குழுவல், குழுமுதல் = கூடுதல், குழுவுதல் = கூடுதல், திரளுதல்.
குழுமு - கழுமு - கழுமல் = மயக்கம், நிறைவு, மிகுதி.
குழு - கெழு - கெழுமு - கெழுவு.
கெழுமுதல் = பொருந்துதல், கெழுவுதல் = பொருந்துதல், மயங்குதல்.
கெழுவு = நட்பு, கெழுவ ஓர் உவமவுருபு
கெழு - கெழி = நட்பு
குழு - குழை = திரண்ட காதணி.
குழு - (குழகு) - கழகு - கழகம் = ஓலக்கம் (Durbar), புலவரவை, கலை பயிலிடம், படைக்கலம், மல் பயிலிடம், சூதாடுமிடம்.
குள் - (கூள்) - கூடு.
கழகம் என்னும் சொல். கூடுதல் என்னும் பொருள்கொண்ட குழு என்னும் வேரடியாகப் பிறந்திருத்தலால், பொதுவாகக் கூட்டம் என்றே பொருள்படுவதாகும். அது, முதற்கண், சிறந்த கூட்ட மாகிய புலவரவைக்குப் பெயராய் வழங்கிற்று.
கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.
என்னும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணச் செய்யுளில் , கழகம் புலவரவையைக் குறித்தது. சங்கம் என்னும் வட சொற்கு நேர் தென்சொல் கழகம் என்பதே.
பழம் பாண்டி நாட்டு முத்தமிழ்க் கழகங்களும் தமக்கு முந்திய தமிழிலக்கியத்தை ஆராய்ந்து வந்ததினால், கற்றோர் பயிலும் இடத்தைக்குறித்த கழகம் என்னும்சொல், நாளடைவில், கற்போர் பயிலும் இடத்தையும் குறிக்கத் தலைப்பட்டது. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்து கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை யென்ப. என்று இறையனாரகப் பொருளுரை முறையே முத்தமிழ்க் கழகங்களையும் பற்றிக் கூறுதல் காண்க. இதனால், இளைஞர் கல்வி பயிலுமிடத்தை.
கந்தனை யனையவர் கலைதெரி கழகம் (கம்பரா. நாட்டுப். 48)
என்றார் கம்பர்.
இனி, ஈண்டைக் கழகம் என்னும் சொற்கு, விற்கலை மற்கலை முதலி ய போர்த்துறை பயிலும் இடம் எனவும் பொருளுரைப்பர். அதுவே கம்பர் கருத்தாயின் போர்க்கலையையும் கல்வித் துறை களுள் ஒன்றாக அடக்கிக் கொள்க. திவாகரம், படைக்கலம், மற்போர் முதலியன பயிலும் இடத்தையும் கழகம் எனக் குறிக்கும்.
ஏர்க்களத்திலும் அவைக்களத்திலும்போல் போர்க்களத்திலும் மக்கள் கூடுவதால், களம் என்னும் சொல் அம் மூன்றிடத்தையும் குறித்தது. சூதாடுதற்கும் மக்கள் கூடுவ தாலும், சூதும் ஒருவகைப் போராதலாலும் கழகம் என்னும் சொல் மூன்றாவதாக அல்லது இறுதியாகச் சூதாடுமிடத் தையும் குறித்தது. சூதும் ஒருவகைப் போர் என்பதைச் சூது பொருதல் என்னும் வழக்கினாலும், சூது போர்ச் சருக்கம் என்னும் வில்லி பாரதச் சருக்கப் பெயராலும், உத்தியாலும், அறியலாம், வேத்தவையிலுள்ளாரெல்லாம் ஒவ்வொரு துறையில் தேர்ச்சி பெற்றிருப்பராதலின், ஓலக்கமும் புலவரவையின் அடங்கும். ஆகவே, புலவரவை, கல்வி பயிலிடம், சூதாடுமிடம் ஆகிய மூவேறு பொருளைக் கழகம் என்னும் சொல் குறிக்கும் என்பது தெளிவாம்.
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். (937)
என்னுங் குறளில், சூதாடுமிடத்தையும்,
கழகத் தியலுங் கவற்றி னிலையும் (358)
என்னும் புறப்பொருள் வெண்பாமாலைத் தொடரில், சூதாட்டையும், கழகம் என்னும் சொல் குறித்தது.
இங்ஙனங் குறிப்பினும் இது அருகிய வழக்கே. இற்றை உலக வழக்கிலும், நாட்டாண்மைக் கழகம், செந்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மாணவர் கழகம், எனக் கழகம் என்னும் சொல் சூதாடுகளமல்லாத பிற களரிகளையே குறித்தல் காண்க.
குழு என்னும் வேரினின்றே குழாம், குழுமம் முதலிய பல்வேறு தொகுதிப் பெயர்கள் தோன்றியிருப்பினும், அவை யாவும் பருப்பொருளிலன்றி நுண்பொருளில் ஒத்தன வல்ல.
குழு = சிறுகூட்டம் (committee).
குழூஉ = மறைபொருட் குறியீடு வழங்கும் தொழிற் குலம் அல்லது வகுப்பு.
குழாம் = குழுவினும் சற்றுப் பெரிய கூட்டம் (party).
கோஷ்டி என்னும் வடசொற்கு நேரான தென்சொல் குழாம்.
பஜனைக் கோஷ்டி என்பதைத் திருப்பாட்டுக் குழாம் என்னலாம்.
குழுமல், குழுவல் = குழாத்தினும் பெரிய கூட்டம் (gathering).
குழுமம் = வணிகர் சங்கமும் தொழிலாளிகள் சங்கமும் போன்ற கூட்டம் (guild).
குழும்பு = யானை நிரை, தோழமைக் கூட்டம் (herd, company).
களிற்றுக் குழும்பின் (மதுரைக். 24).
கழகம் = சங்கம் (society, association).
ஆகவே, குழு, குழூஉ, குழாம், குழுமம் என்பன முறையே ஒன்றினொன்று பெரிய தொகுதிகளாம். கழகம் என்பது உயர்திணைக்கே யுரியதாய்ப் பெரும்பாலும் கல்விபற்றியதும் நிலையானதும் குழுமத்திற்குச் சமமானதுமான கூட்டத்தையே குறிக்கும். இதனாலேயே, பண்டைத் தமிழ்ச் சங்கத்தைக் கழகம் என்றார் பரஞ்சோதி முனிவர். தலைக்கழகப் புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர்: இடைக்கழகப் புலவர் ஐம்பத்தொன் பதின்மர்: கடைக் கழகப் புலவர் நாற்பத் தொன்பதின்மர். ஆகவே, கழகம் என்பது சிறு குழுவைக் குறிப்பதன்று.
இனி சூதாடு கருவிக்குக் கழங்கு, கழங்கம் எனப் பெயரிருப்ப தால், கழங்கம் அல்லது கழங்ககம் என்னுஞ் சொல் கழகம் எனத் தொக்குச் சூதாடு மிடத்தைக் குறித்ததோவென ஐயுறவும் இட முண்டு. ஆயினும், ஆய்ந்து நோக்குவார்க்கு, மேற்காட்டிய வரலாறே உண்மையான தென்பது புலனாம்.
இதுகாறுங் கூறியவற்றால், கழகம் என்பது குழு என்னும் வேரடி யாய்ப் பிறந்ததென்றும், கூட்டம் அல்லது கூடுமிடம் என்பதையே அடிப்படைப் பொருளாகக் கொண்டதென்றும், முதற்கண் கற்றோரவையை அல்லது கற்போர் கூட்டத்தைக் குறித்தே பின்னர்ச் சூதாடுமிடத்தைக் குறித்ததென்றும், சங்கம் என்னும் வட சொற் பொருளில் தொன்று தொட்டு வழங்கிய தூய பழந் தமிழ்ச் சொல்லென்றும், பண்டையிலக்கியம் முற்றும் இறந்து பட்ட இக்காலத்தில் திருக்குறளைக் கொண்டு சொற் பொருள் வரிசையைக் காணமுடியாதென்றும் சொல்லாராய்ச்சி யின் துணையினாலேயே அதைத் துணிதல் கூடுமென்றும், தெற் றெனத் தெரிந்துகொள்க. (தென்மொழி)
கழஞ்சு
கழஞ்சு - கலஞ்ச
கழங்கு - கழஞ்சு = ஒருநிறை. கழங்கு = கழற்சிக்காய். (t.மூ.ï.) (வ.வ: 111)
கழியல் விளையாட்டு
ஒரு குறிப்பிட்ட தொகையினர், குறிப்பிட்ட இடங்களில் நெருங்கி நின்றுகொண்டு, ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு குறுங்கழி ஏந்தி அவற்றைப் பிறர் கழிகளோடு தாக்கியடித்து, பின்னிப் பின்னியும் சுற்றிச் சுற்றியும் வரும் ஆட்டு, கழியல் எனப்படும்.
இது பகலிலும் ஆடற்குரியதாயினும், பொதுவாக இரவிலேயே ஆடப்பெறும். இதற்கும் கும்மிக்குப் போல் ஒரு தனிவகைப் பாட்டுண்டு. அது,
தன்னன தன்னன தன்னான - தன
தன்னன தானன தன்னான
- என்னும் வண்ணம் பற்றியதாகும்.
கழிவு வகை
சக்கை முந்திரி எலாமிச்சை முதலியவற்றின் கழிவு;
கொதக்கு புளியின் கழிவு;
கூந்தை பனங்காயின் கழிவு;
கோது கரும்பின் கழிவு. (சொல்: 69)
கள்
கள் என்னும் முதனிலை முற்காலத்தில் களவு செய்தலைக் குறித்ததே. கள்ளம், கள்ளத்தனம், கள்ளன், களவு என்னும் சொற்களை நோக்குக. பிற்காலத்தில் கள் என்னும் முதனிலை தன் பொருளை இழந்தபின், தொழிற் பெயரொடு துணைவினை சேர்த்த களவு செய் என்னும் கூட்டுச் சொல் முதனிலை தோன் றிற்று. கட்குவான் பரிக்கில் ஞேலுவான் பரிக்கேணம் என்னும் மலையாளப் பழமொழியையும் நோக்குக. (தி.ம. 166.)
கள் உண்ணாமை
நீராகவோ கட்டியாகவோ புகையாகவோ இருந்து, வெறியினால் உணர்வை மறைக்கும் பொருள்களை உண்ணாமை.
கள்ளுதல் மறைத்தல். இவ்வினை இன்று வழக்கற்றது.
கள் - கள்ளம் = மறைப்பு. கள் - களவு = மறைப்பு.
கள் என்னும் பெயர் முந்நிலைப் பொருட்கும் (நீர், கட்டி, புகை) பொதுவேனும், பெருவழக்குப் பற்றி நீர்வடிவான பொருளையே குறிக்கும். அது இயற்கையும் செயற்கையும் என இருவகைத்து முன்னது பனை தென்னை முதலிய மரங்களினின்று இறக்குவது, பின்னது அரிசி காய்கனி முதலியவற்றைப் புளிக்க வைத்துக் காய்ச்சியும் எடுப்பது. (தி.ம. அதி. 93.)
கள்மயக்கு
ஐம்புலனும் அடங்கி அடியோடு உணர்வு இழத்தலும், வாய்கா வாது மறைவெளிப்படுத்தலும், பித்தர் போற்பிதற்றலும், ஆடை விலகலும், அற்றம் மறையாமையும், தீ நாற்றம் வீசுதலும், வாய் நுரை தள்ளுதலும், வழியில் கிடத்தலும், வழிப் போக்கர் பழித்த லும், ஈமொய்த்தலும், இளஞ்சிறார் சிரித்தலும் (கள்மயக்கம் ஆக்கும்). (தி.ம. 923)
கள்வன்
கள்வன் - கலம்
கள்ளுதல் = திருடுதல். கள் - களவு - கள்வு - கள்வன். (வ.வ: 111)
களங்கம்
களங்கம் - கலங்கம்
கல் - கள் = கருமை. கள் - களம் = கருமை. களம் - களங்கு = கரு மை, குற்றம். களங்கு - களங்கம் = கருமை, கறை, மறு, குற்றம். களங்கன் = மறுவுள்ள மதி.
மா.வி.அ. மூலம் ஐயுறவிற்கிடமானது (“etym. doubtful”) என்று, குறித்திருப்பது கவனிக்கத்தக்கது. (வ.வ: 111)
களச் செயல்
கண்ணைத் தோண்டி விடுவேன் மூளையை உறிஞ்சி விடுவேன்
தோலை உரித்து விடுவேன் ஈரலைத் தின்றுவிடுவேன்
குடலை மாலையாகப் போட்டுவிடுவேன் என்பன போன்ற அச்சுறுத்துக்கள், அநாகரிகக் காலப் போர்க்களங்களில் செயலள வாய் நிகழ்ந்தவையே. (சொல். 25.)
களப்பாளர் (களப்பிரர்)
(தோரா. கி.பி. 300 - 590)
கடைக்கழக முடிவிற்குப்பின் பாண்டி நாட்டை முந்நூற்றாண்டு ஆண்ட, களப்பாளர் வடநாட்டினின்று வந்தவரென்றும், பல் வகுப்பினரென்றும், பலவாறு சொல்லப்படுகின்றது. அவர் பல்வேள்விச்சாலை முதுகுடுமிப் பெருவழுதி பிராமணர்க்கு அளித்த வேள்விக்குடிப் பட்டையத்தை மறுத்ததனாலும், முருக வழிபாட்டினர் என்று சொல்லப்படுவதனாலும், தமிழராகவும் இருந்திருக்கலாம். களப்புதல் காடு வெட்டித் திருத்துதல், நெல்லை மாவட்டத்திற் சங்கரநயினார் கோவில் வட்டத்தில், களப்பாளர் குளம் என்று ஓர் ஊர் உள்ளது. களப்பிலார் என்பது கள்ளர் வகுப்பாரின் பட்டங்களுள் ஒன்றாக, பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் குறித்துள்ளார்.
களம்
களம்1 - கல (kh) - இ.வே.
கள்ளுதல் = கூடுதல். கள் - களம் = உழவர் கூடி வேலை செய்யுமிடம் .
களம் - களமர் = உழவர். ஏர்க்களம், போர்க்களம் (போரடிக்கு மிடம்) என்னும் வழக்குக்களை நோக்குக. களம் - களன் - கழனி = வயல்.
களம்2 - கள (g)
கள்ளுதல் = கலத்தல், பொருந்துதல். கள் - களம் = தலையை உடலுடன் பொருத்தும் கழுத்து, தொண்டை.
பாடுகள மகளிரும் (சிலப். 6: 157).
களம் - (களத்து) - கழுத்து.
வடவர் கல் என்னும் செயற்கையடியை க்ரு (விழுங்கு) என்னும் சொல்லின் திரிபாகக் கொண்டு, கல என்பதற்கு விழுங்கும் உறுப்பு என்று பொருட்காரணங் காட்டுவர். (வ.வ: 111 - 112)
களி
களி(ம.) - கேல் - விளையாடு.
களித்தல் = விளையாடுதல். களி = விளையாட்டு. களி - கீல் (பிரா.) - கேல். (வ.வ: 112)
களை
களை - க்லம் = களை.
களைத்தல் = அலுத்தல், அயர்தல், இளைத்தல்.
க்லம் = ச்ரம் என்று பொருந்தாவாறு பொருத்திக் காட்டுவர் வடமொழியாளர். (வ.வ: 112)
கற்காலம் (STONG AGE)
(தோரா. கி.மு. 5,00,000 - 50,000.)
முந்தியல் தமிழரான அநாகரிக மாந்தர் கல்லாற் பல்வேறு கருவி களைச் செய்து கொண்ட காலம் கற்காலமாகும். அது பழங்கற் காலம், புதுக்கற்காலம் என இரு பிரிவினது.
1. பழங் கற்காலம் (Old Stone Age)
(தோரா. கி.மு. 5,00,000 - 1,00,000.)
தமிழரின் முதற்கால முன்னோரான குமரிநாட்டு மாந்தர், பொன்னம் (metal) ஒன்றும் கண்டுபிடிக்கு முன், கில்லி (கல்லி), வெட்டி, குத்தி, கத்தி, உளி, சுத்தி (சுத்தியல்), சமட்டி (சம்மட்டி), குந்தம், கூந்தாலம், கோடரி, குத்துக் கோடரி முதலிய கருவி களைக் கல்லால் முரட்டு வேலைப்பாடாகச் செய்து, பயன்படுத்தி வந்த காலம் பழங்கற்காலமாகும்.
அவர் வாழ்ந்த இடம் குமரிமலைத் தொடரின் அடிவாரமான குறிஞ்சி நிலம்.
அவர் செய்த தொழில் காய்கனி பறித்தல், கிழங்ககழ்தல், தேனெடுத்தல், வேட்டையாடல் என்பன. கிழங்கு தோண்டற்குக் கோணலில்லாத கொம்பையும் கூராகச் செதுக்கிய வன்குச்சை
யும், வேட்டையாடற்குக் கல்லையும் குறுந்தடியையும் நெடுந்தடியையும் பயன்படுத்தியிருத்தல் வேண்டும்.
அவர் உண்டவுணவு பச்சையும் சுட்டனவுமான இயற்கை விளைவு களும் வேட்டைக் கறியும் ஆகும். வேனிற் காலத்தில் மூங்கிலும் மரங்களும் உராய்ந்து பற்றிய நெருப்பில் அகப்பட்டுச் செத்த விலங்கு பறவையூன், சுவையாகவும் மெதுவாகவும் இருந்தது கண்டு, வேட்டைக்கறியைச் சுட்டுத் தின்னும் பழக்கத்தை மேற்கொண்டிருத்தல் வேண்டும்.
அவர் உடுத்திய உடை, கோரை தழைத் தொடையும் தையிலை யும், மரப்பட்டையும் விலங்குத்தோலுமாகும். ஆப்பிரிக்க அநாகரிக மாந்தர், இந்நூற்றாண்டு முற்பகுதியிலும், சில மரப்பட்டைகளை ஊறவைத்துத் தட்டி விரிவாக்கி ஆடையாக அணிந்தனர். குமரிநாடு தென்னாப்பிரிக்காவுடன் இணைந் திருந்ததனால், குமரிநாட்டு மாந்தரும் அநாகரிக நிலையில் அத்தகைய மரவுரியை அணிந்திருத்தல் வேண்டும்.
அவர் உறையுள் (தங்குமிடம்) மலைக்குகை, பல்கவர் மரக்கவடு, பரண், கல்லால் அமைத்த வளிமறை (காற்றை மறைக்கும் சிறு குடில்) ஆகியவை.
அவர் அணிந்த அணிகள், மருக்கொழுந்து போலும் நறுந்தழை, மணமுள்ள அல்லது அழகிய மலர், மயிற்பீலி, சேவலிறகு, புலிப்பல் தாலி முதலியன.
அவர் புழங்கிய நீர்க்கலம் மூங்கில் நாழியும் சுரைக் குடுக்கை போன்ற நெற்றுக் கூடும்.
அவர் மணமுறை, பருவம் வந்தபின், பெரும்பான்மை ஆண் பாலார், ஒரோவிடத்துப் பெண்பாலார், இணைவிழைச்சு வேட்கை நேர்ந்த போதெல்லாம் எதிர்ப் பாலாரை இசைவித்தோ இசையுமாறு வற்புறுத்தியோ வலிந்தோ புணரும் பொதுமணம் (Promiscuity) ஆகும். கூடிவாழும் குடும்ப வாழ்வு அவரிடை யில்லை. அதனால், ஒரு தலைவனுக்குக் கட்டுப்பட்ட வாழ்வும் (Community Life) அவரிடையில்லை. விலங்குகளும் பறவைகளும் போல், பகலில் உணவுதேடியுண்பதும், உறைவிடத்தில் இராத்தங்குவதுமே அவர் இயல்பாயிருந்தது.
கொடிய விலங்குகள் எதிர்ப்பட்டபோது அல்லது இருப்பிடம் வந்து தாக்கியபோது, அவர் தம்மிடமுள்ள கற்கருவியுந் கந்த மரமுங் கொண்டு சிலவற்றை எதிர்த்துக் கொன்றிருத்தல் வேண் டும்; கொல்லமுடியாத வலியவற்றிற்கு மரத்தின் மீதேறியோ புதருள்ளும் பொதும்பருள்ளும் மறைந்தோ தப்பியிருத்தல் வேண்டும்; அரிமாவும் யானையும் போன்றவற்றை இரவுக் காலத்தில் தீ வளர்த்து விரட்டியிருத்தல் வேண்டும். விலங்குக ளொடும் பகைவரொடும் போரிட நாகரைப் போல் தலையிலுங் கொம்புகளை அணிந்திருக்கலாம்.
முதற்காலத்தில் தீயைக் கண்டு மிகமிக அஞ்சினாரேனும், பின்பு மெல்ல மெல்ல அதன் பல்வகைப் பயன்பாட்டைக் கண்டு, விலங் காண்டி மாந்தரும் அதைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அணுகாதும் அகலாது மிருந்து, குளிர்காய்தல், இறைச்சி சுடுதல், இருள் நீக்கல், குளவியைக் கலைத்துத் தேனெடுத்தல், கொடு விலங்கு வெருட்டல் முதலியன தீயின் பயன்கள். நிமிர்ந்த குரக்கு மாந்தன் (Pithecanthropus Erectus), என்னும் சாலி (சாவக) மாந்தனினும் முந்தியவனான பீக்கின் மாந்தன் என்னும் சீன மாந்தன் (Sinanthropus Pekinensis), நெருப்பைத் தன் குகையில் வைத்துப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுவதால், சாலிமாந் தனை யொத்த குமரிமாந்தன் நெருப்பைப் பயன்படுத்தியதில் வியப்பொன்றுமில்லை.
நன்மையோ தீமையோ இரண்டுமோ செய்தவற்றையும் செய்வ தாகக் கருதப்பட்டவற்றையும், முதற்கால மாந்தர் தெய்வமாக வணங்கி வந்தனர். அவை தீ, கதிரவன், திங்கள், இறந்தோர் ஆவி பேய், நாகம் முதலியன. தெய்வம் என்னும் பெயர் தீயைக் குறிக்குஞ் சொல்லினின்று தோன்றியதே. மரங்களின் உராய்வு, இடி, மின்னல் ஆகிய மூவகைகளில் இயற்கைத் தீ உண்டா யிருத்தல் வேண்டும். தீப்பற்றி எரியுங் கிளைகளினின்று, கொள்ளிக் கட்டைகளைப் பிரித்தெடுத்துக் கொண்டுபோய்ப் பழங்கற் கால மாந்தர் பயன்படுத்தியிருத்தல் வேண்டும்.
மரந்தொறும், மலைதொறும், நீர்நிலைதொறும் ஆவி அல்லது பேய் குடிகொண்டிருந்ததாகவும், பழங்கால மாந்தர் நம்பினர்.
இறந்தவருடம்பைக் குடியிருப்பிற்குச் சற்றுத் தொலைவான இடத்திலுள்ள குழியிலிட்டு, காகங்கழுகும் நரியோரியும் தின்னா வாறு மண்ணால் மூடிவிடுவது அவர் வழக்கம்.
மொழித்துறையில், இயற்கை மொழி (Natural Language) அல்லது முழைத்தல் மொழி (Inarticulate Speech) என்னும் முந்து மொழிக் குரிய.
1. உணர்ச்சி யொலிகள் (Emotional Sounds)
2. விளியொலிகள் (Vocative Sounds)
3. ஒப்பொலிகள் (Imitative Sounds)
4. குறிப்பொலிகள் (Symbolic Sounds)
5. வாய்ச்செய்கை யொலிகள் (Sounds produced with oral gestures)
6. சுட்டொலிகள் (Deictic Sounds)
ஆகிய அறுவகை யொலிகளும், பழங்கற்காலத்திலேயே முறையே தோன்றியிருத்தல் வேண்டும். அதன் இறுதிக் காலத்தில் ஆத்திரேலியா நோக்கியும் தென்னாப்பிரிக்கா நோக்கியும் குமரி மாந்தர் படர்ந்திருத்தல் வேண்டும். நால்வகை யெழுத்தில் முதலதான படவெழுத்து (Picture writing or Pictograph) பழங்கற் காலத்தில் தோன்றியிருத்தல் வேண்டும்.
இயற்கையுணவு தேடத் தெரிந்ததும், எளிய உறையுள் அமைத்த தும், அற்றம் மறைத்ததும், அழகுணர்ச்சி தோன்றியதும், தீயைப் பயன்படுத்தியதும், இயற்கைமொழி வளர்த்ததும், படவெழுத் தைப்பயன் படுத்தியதும் பழங்கற்கால மாந்தரின் அறிவுநிலை யென்னலாம்.
2. புதுக் கற்காலம் (New Stone Age)
தோரா. கி.மு. 1,00,000 - 50,000
முந்தியல் குமரி மாந்தர், பழங் கற்காலக் கருவிகளைத் திண்கனக் கருங்கல்லால், வழவழப்பாகவும் மிகக் கூரியனவாகவும் செய்து கொண்ட காலம்புதுக் கற்காலமாகும்.
அவர் வாழ்ந்த இடம் குறிஞ்சியும் அதையடுத்த முல்லையுமாகும். வாழ்க்கைத் திருத்தத்தாலும் மாந்தர் தொகைப் பெருக்காலும், இயற்கையாகவே அவர் முல்லை நிலத்திலும் பரவியிருத்தல் வேண்டும்.
அவர் செய்த தொழில், பெரும்பான்மை கால்நடை வளர்ப்பும் வானாவாரிப் பயிர் விளைப்பும்; சிறுபான்மை பழங்கற்கால மாந்தர் செய்தன.
மலையடி வாரங்களிலும் மலைமேலும் வாழும் ஆடு மாடு எருமை ஆகிய மூவிலங்கினங்களையும், அவர் பிடித்துப் பழக்கி வீட்டு விலங்காக்கினர். மூன்றும் பால் தந்தன. ஆடு பால் தருவ தொடு ஊனுணவுமாயிற்று. காளைமாடும் கடாவெருமையும் ஏருழவிற்குப் பயன்பட்டன. மானையும் ஆமானையும் காட்டுப் பன்றியையும் முயலையும் உடும்பையும் பிடித்து ஊனுணவிற்குப் பயன்படுத்தினர். இன்று பன்றியிறைச்சி யுண்பவர் ஒருசாராரே. அவரினுஞ் சிறுதொகையினர் மாட்டிறைச்சி யுண்பவர். பறவை களுள், கோழி, புறா, குயில், காடை, கதுவாலி ஆகியவற்றின் ஊனை விரும்பியுண்டனர். காட்டுக்கோழியைப் பழக்கி வீட்டுக் கோழியுமாக்கினர்.
வானாவாரிப் பயிர்கள் என்பன, ஏர்க்காடும் கொத்துக்காடு மாகிய நிலத்தில் மழையினாலேயே விளைந்த, தினை வரகு போன்ற சிறுதவசங்களும் அவரை துவரை போன்ற பயறு வகை களுமாகும். புல்வெளிகளாயுள்ளவற்றைக் கால்நடை மேய்ச்ச லுக்கு விட்டுவிட்டு, குறுங்காடும் பெருங்காடுமா யுள்ளவற்றைத் தீயினாற் சுட்டெரித்துக் கொன்று விளை நிலமாக்கிய விடம், பிற்காலத்திற் கொல்லை யெனப்பட்டது. அடர்ந்த மரஞ்செடி கொடிகளால் இருண்டு கிடவாது வெட்டவெளியான நிலமெல் லாம், கண்ணிற்குப் புலனான தினால், புலம் எனப்பட்டது.
புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும் (புறம், 10, மேற்படி ; 12)
புலங்கெட விறுக்கும் வரம்பில் தானை (மேற்படி 16-9)
என்னும் அடிகளை நோக்குக.
விளை நிலத்திலும் வீட்டிலுமுள்ள கூலங்களை எலிகள் தின்று கெடுத்ததனால், அவற்றைக் கொல்லக் காட்டுப் பூனையையும்; ஆடுகளை நரிகள் பிடித்துத் தின்றதனால், அவற்றை விரட்டி மந்தையைக் காக்கக் காட்டு நாயையும்; வீட்டிற் பழக்கினர்.
நிலத்திற் பூசிப்பூசி மெத்தென்று நடப்பதால், பூனை பூசையெனப் பட்டது. பூசு - பூசை - பூனை - பூஞை. நாய்க்கு ஆட்பற்றுப்போல் பூனைக்கு இடப்பற்று மிகுந்திருப்பதால், தொல்வரவுணர்ச்சி மிக்க ஆண்பூனை பருத்துக் கொழுத்த நிலையில் இன்றும் காட்டிற்குச் சென்று, கண்டார் அஞ்சத்தக்க வெருகாகி விடுகின்றது.
வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் (தொல். மர. 69)
வெருக்கு விடையன்ன வெருணோக்கு (புறம். 324)
பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரைய (மேற்படி 117)
என்பவற்றால், தமிழகத்திற் காட்டுப்பூனை தொன்றுதொட்டு இருந்துவருவதை அறியலாம்.
இனி, மேலையாரியப் பூனைப் பெயர்கள் தமிழ்ச்சொல்லின் திரிபாயிருத்தலால், தமிழகத்தினின்றே பூனை ஐரோப்பாவிற்குச் சென்றதாகத் தெரிகின்றது.
பூசை - E. puss - pussy. MLG. pus, Norw. puse, Du. pces இதன் மூலம் தெரியவில்லை யென்றும், ஒருகால் முதற்காலத்தில் இது ஒரு பூனைவிளிச் சொல்லாயிருந்திருக்கலாமென்றும், எருதந் துறை (Oxford) ஆங்கில அகரமுதலி கூறுகின்றது. நெல்லை வட்டாரத் தில் இன்றும் பூனையைப் பூசுபூசு என்று அழைப்பதைக் காணலாம்.
கொத்தி (க.) - E. cat, OE. catte, ME, catt(e), LL. cattus, catta, ONF, cat, F. chat, ON. kottr, OHG. kazza. கொத்தை = குருடு குருடன். பூனைக்குப் பகலிற் சரியாகக் கண் தெரியாமையாற் கொத்தி யெனப்பட்டது.
முல்லை நிலத்தை உழக் கலப்பையையும், வேட்டையாடற்கு வளரி - வணரி (வளை தடி), கவண், வில் முதலிய கருவிகளையுங் கையாண்டனர். கல்லோடு, மரம், கொம்பு, மருப்பு (தந்தம்), எலும்பு முதலியனவும் முதற்கருவியாகப்பயன் படுத்தப்பட்டன. மாட்டுக் கொம்பும் எருமைக் கொம்பும் யானை மருப்புமே முதற்கண் வளைதடியாகப் பயன்பட்டிருத்தல் வேண்டும். அவை கிடையாவிடத்தே அவை போன்ற வளைதடிகளைப் பயன் படுத்தியிருப்பர்.
முல்லை நிலப் பாறைகளிலுள்ள பள்ளங்களிலும் குழிகளிலு முள்ள நீர், கதிரவன் வெம்மையாலும் காட்டுத் தீயாலும் காய்ந்த போது, அதிற்கிடந்த உணவுப் பொருள்கள் சுட்டவுண வினும் பருத்தும் மென்மையாகியும் சுவைமிக்கும் இருந்ததைக் கண்ட மாந்தர், கற்கலங்களில் வரகு தினை முதலியவற்றின் அரிசியைச் சோறாக்கவும், அவரை துவரை முதலிய பயறுகளை அவிக்கவும், கற்றுக்கொண்டனர். பட்ட மரங்கள் உராய்ந்து அடிக்கடி நெருப்பெழக் கண்டதினால், இயற்கை நெருப்பில்லாத போது ஞெலிகோலாற் கடைந்து செயற்கை நெருப்பையும் உண்டாக்கிக் கொண்டனர். வீடுதொறும் நாள்தொறும் வேளை தொறும் தீக்கடையத் தேவையில்லாவாறு, ஊர் முழுவதற்கும் பொதுவாக ஓர் இடத்தில் இரவும் பகலும் கட்டையெரிய விட்டு அவியா நெருப்பைப் பேணியிருத்தலும் வேண்டும்.
உடுக்க மரவுரி போன்ற நாராடையும், போர்த்திக்கொள்ள ஆட்டு மயிர்க் கம்பளியும், முதற்கண் கைப்பின்னலாகவும் பின்னர்த் தறிநெசவாகவும், அவர் செய்து கொண்டனர். படுக்க மூங்கிற் பாயும் ஓலைப்பாயும் முடைந்து கொண்டனர்.
சந்தனச் சேற்றாலும் வண்ணச்சாந்தாலும், இருபாலாரும், சிறப்பாகப் பெண்டிர், மேனிமுழுதும் பல்வேறு ஓவியம் வரைந்து கொள்வதும், நிலையாயிருக்குமாறு பல்வகை யுருவங்களைப் பச்சை குத்திக் கொள்வதும், பெருவழக்காயிருந்தது.
குடியிருக்க வட்டமான கூரை வீடுகளைக் கட்டிக் கொண்டனர். முதலில் மரத்திலும் மரத்தடியிலும் வதிந்ததனால், வட்டமாகக் கிளைகள் படர்ந்தும் நிலத்திற்படிந்துமுள்ள மரத்தின் போங்கைப் பின்பற்றி, வீட்டின் வடிவை அமைத்ததாகத் தெரிகின்றது. சுற்றுச் சுவரைக் கல்லுள்ள விடத்தில் மட்சாந்துபூசிக் கல்லாலும், அஃதில்லாவிடத்தில் மண்ணாலும், அமைத்தனர்.
கூலங்களும் காய்கறிகளும் போன்ற கெட்டிப் பொருள்களை இட்டுவைப்பதற்கு, பனைநார்ப் பெட்டிகளும் மூங்கிற் கூடைகளும் முடையப்பட்டன. நீரையும் நீர்ப்பொருள்களையும் வார்த்து வைப்பதற்கு, மூங்கில் நாழியும் மரத்திற் கடைந்து கொண்ட கடைகாலும் ஆட்டுத் தோற்பையும் பயன்படுத்தப் பட்டன. சமைப்பதற்குக் கற்கலம் உதவிற்று. கல்லுதல் தோண்டு தல், அல்லது குடைதல். கல்லப்பட்ட ஏனம் கலம் என்னப் பட்டது.
ஆடுமாடு உடும்பு முதலியவற்றின் தோலை மரத்திலும் கலத்தின் வாயிலும் கட்டி உலர்த்தியபோது, குச்சுங்கையும் பட்டு இன்னோசை யெழுந்ததைக் கண்டு துடிதொண்டகம் முதலிய தோலிசைக் கருவிகளும்; வண்டினால் துளைக்கப்பட்ட மூங்கிற் குழாயிலும் நாணல் தட்டையிலும் காற்றுப்புகுந்தபோது, இனிதாய் ஒலித்ததைக் கண்டு புல்லாங்குழலும்; முறுகக்கட்டிய வில்லின் நாண் தெறித்தபோது, இன்னிசை பிறந்ததைக் கண்டு வில் யாழ் என்னும் நரப்பிசைக் கருவியும்; நாளடைவிற் புதுக் கற்கால மாந்தர் புனைந்து கொண்டனர்.
இன்பத்திற்கு மட்டுமன்றி, வேளைக்குவேளை உண்டி சமைக்க வும், தொழிலுக்குத் துணையாயிருக்கவும், உடைமைகளைப் பாதுகாக்கவும், நோய்நிலையில் நலம் பேணவும், ஒரு பெண் நிலையாக வீட்டிலிருக்க வேண்டியிருந்ததால்; வீட்டு வாழ்க்கை ஏற்பட்டபோதே, ஓர் ஆடவனும் பெண்டும் கூடிவாழும் கூட்டு வாழ்க்கையும் ஏற்பட்டது. அது இல்வாழ்க்கையென்று பொது வாகச் சொல்லப்படினும், கூட்டு வாழ்க்கைக்கும் குமுகாய வாழ்க்கைக்கும் உரிய இன்றியமையாத அறங்களைத் தழுவிய தால், இல்லறம் எனச் சிறப்பித்துச் சொல்லப்பெறும்.
அக்காலம் இல்வாழ்க்கைத் தொடக்கக் காலமாதலால், பன்மனை மணமும் (polygamy) தீர்வை (divorce) முறையும் பெருவழக்கா யிருந்தன. பெற்றோரும் பெண்ணும் இசையாத விடத்து வன்கவர் வும் கள்ளக்கடத்தமும், சூளுரைத்துப் பெண்ணொடு களவாகக் கூடியபின் சூளை மறுத்தலும் நிறைவேற்றாமையும், பலரறியக் கூடியபின் ஒரு பெண்ணைக் கைவிடுதலும், அடிக்கடி நிகழ்ந்தன.
கணவனும் மனைவியுங் கூடியே மகப்பெறினும், வெளிப்படை யாகச் சூல்கொண்டு பத்து மாதம் இடர்ப்பட்டுச் சுமந்து பெருநோவொடு பிள்ளை பெறுவதால், பிள்ளைகளின் மீதுள்ள உரிமையும் அதிகாரமும், நெடுங்காலம் தாய்க்கே இருந்து வந்தது. இதில் தந்தைமார் தமக்கும் பங்குகோடற்கு, ஈனியற்படுக்கை (Couvade) என்னும் ஒரு வலக்காரத்தைக் கையாண்டனர். அதாவது, மனைவி பிள்ளை பெற்றவுடன், கணவனும் அவளைப் போல் நோவுற்றதாக நடித்துப்படுத்துக்கொண்டு. தனக்கு மகப்பேற்று மருத்துவம் பார்க்கச் சொல்வது. குறத்திபிள்ளை பெற, குறவன் காயந் தின்றானாம். என்னும் தமிழ்ப் பழமொழி, இன்றும், பண்டை ஆப்பிரிக்க மாந்தரின் வழக்கத்தை யொத்த வினை குமரி நாட்டிலும் இருந்ததைக் குறிப்பாக உணர்த்து கின்றது.
இல்வாழ்க்கையும் நிலையான கூட்டுக்குடியிருப்பும் ஏற்பட்ட தனால், ஆங்காங்குப் பற்பல வூர்கள் தோன்றிப் பெருகின. ஒவ்வோர் ஊரிலும் குடிவாணர் பெரும்பாலும் பல்தலைமுறைப் பட்ட ஒரே மாபெருங் குடும்ப வுறவினராயிருந்ததனால், அக்குடும்ப முதியோனே தலைவனாயிருந்து, குற்றவழக்குத் தீர்த்துத் தண்டித்தும் முறை செய்தும் வந்தான். அக்காலத்தில் மக்கள் வாழ்வு நீண்டிருந்ததனால், மகன், தந்தை, பாட்டன், பூட்டன், ஓட்டன் (சேயான்) என்னும் ஐந்தலைமுறையினரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தனர்.
ஆடுமாடுகட்குப் புல்விளையவும் வானாவாரிப் பயிர்களை விளைவிக்கவும் மழை இன்றியமையாததா யிருந்ததனால், மழைத் தெய்வம் அல்லது முகில் தெய்வம் பழங்கற்காலத் தெய்வங் களுடன் புதிதாகவும் சிறப்பாகவும் வணங்கப்பெற்றது. குமரி மொழி, முழைத்தல்மொழி நிலையினின்று இழைத்தல் மொழி யில் (Articulate Speech),
1. அசைநிலை (Isolating or Monosyllabic Stage)
2. புணர்நிலை (Compounding Stage)
3. கொளுவுநிலை (Agglutinative Stage)
4. பகுசொன்னிலை (Inflexional Stage)
என்னும் நால்நிலைகளைப் புதுக்கற்காலம் முடியுமுன் கடந் திருத்தல் வேண்டும். அன்று கருத்தெழுத்துத் (Ideograph) தோன்றியிருத்தல் வேண்டும்.
அசைநிலைக்காலத்திற் சீனரின் முன்னோரும், கொளுவு நிலைக் காலத்திற் சித்தியரின் முன்னோரும், பகுசொன்னிலைக் காலத் தொடக்கத்திற் சுமேரியரின் முன்னோரும், குமரி நாட்டினின்று பிரிந்து போயிருத்தல் வேண்டும்.
சுமேரியர் பிரிந்துபோனதை இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய தமிழரின் தோற்றமும் பரவலும் (Origin and Spread of the Tamils) என்னும் நூலிற் கண்டு தெளிக, நகர் என்று பொருள்படும் ஊர் என்னும் பாபிலோனிய நகர்ப் பெயர் தமிழாயிருப்பதையும், அப்பன் என்னும் முறைப் பெயர் கல்தேயர் (Chaldees) அல்லது பாபிலோனியர் மொழியில் ஆப் என்று திரிந்திருப்பதையும், நோக்குக.
தீயுண்டாக்கல், சமைத்தல், வானாவாரிப் பயிர் விளைத்தல், கால் நடை வளர்ப்பு, நெசவு, இல்வாழ்க்கை, ஊராட்சி, இழைத்தல் மொழியமைத்தல், கருத்தெழுத்தைப் பயன்படுத்தல் என்பன புதுக்கற்கால மாந்தரின் அறிவு நிலையைக் காட்டும்.
கற்கால மாந்தரிடை வகுப்பு வேறுபாடின்மை
கற்கால மாந்தர் பழங்கற்காலத்திற் குறிஞ்சி நிலத்திலும் புதுக்கற் காலத்திற் குறிஞ்சியிலும் அதையடுத்த முல்லை நிலத்திலும் வதிந்தாரேனும், திணை நிலம் பற்றியோ தொழில் பற்றியோ தெய்வ வணக்கம் பற்றியோ, அவரிடை எவ்வகை வகுப்பு வேறு பாடும் இருந்ததில்லை. எல்லாரும் எல்லாத் தொழிலும் செய்து ஒரே வகையாய் வாழ்ந்து ஒரே வகுப்பாயிருந்தனர். பழங்கற்காலத் தாழ்வு நிலையும் புதுக்கற்கால உயர்வு நிலையும் எல்லார்க்கும் பொதுவாகும்.
நீலமலையிலுள்ள கோத்தர் பல் தொழிலும் தெரிந்தவராய் ஒரே வகுப்பாராக வாழ்கின்றனர். ஆடவர் ஒவ்வொருவரும் உழவு, கால்நடைவளர்ப்பு, நெசவு, வணிகம், தச்சு, கொல், தட்டார வேலை, சலவை, மஞ்சிகம் (முடிதிருத்தம்) ஆகிய வாழ்க்கைப் பணிகள் அனையவும் செய்து வருகின்றனர். தொகை பற்றியன்றித் தொழில் பற்றி ஒருவர்க்கும் இன்னொருவர் உதவி வேண்டி யதில்லை. இங்ஙனமே கற்கால மாந்தரும் வாழ்ந்திருத்தல் வேண்டும்.
கற்காலங் கழிந்து மருத நில வாழ்வு தொடங்கிய பின்னரே, தொழிற் பிரிவும் அதுபற்றிய வகுப்பு வேறுபாடுந் தோன்றின.
கற்பு
கற்பு என்பது கற்போல் உறுதியான இருபாலிடைக் காதற் பண்பு. கல் - கற்பு. அது மணப்பருவம் வரை தோன்றாதிருந்து பின்பு ஒருவரையே காதலிப்பது. இருபாற்கும் பொதுவானது. ஆதலின் மனைவியையன்றி அணங்கையும் நோக்காத ஆண் கற்பும், கணவனையன்றிக் காவலனையும் நோக்காத பெண்கற்பும் எனக் கற்பு இரு திறப்பட்டதாம்.
கற்புடை மனைவியின் கண்ணியம்
ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்வரை எல்லா வுயிர்களும் பெரும் பாலும் ஆண் பெண் என்னும் இருபாலின. இவ் விருபாலுள் எது சிறந்தது என்னும் வினாவிற்கு விடையிறுப்பது அரிதாகும். ஆணும் பெண்ணுமாகப் படைக்கப்பட்ட எல்லா வுயிர்களும் இருபாலுங் கூடிவாழ்வதே இறைவன் திருநோக்க மாதலானும், அக் கூட்டு வாழ்க்கையானேயே உலகம் இடை யறாது இயங்கி வருதலானும், அவ் வாழ்க்கையில் இருபாலும் ஒன்றுக்கொன்று துணையாய் ஒத்த உரிமைய வாதலானும், ஒவ்வொன்றும் ஏனைய தாற் செய்யப்படாத ஒருசார் கடமையை மேற்கொண்டுள்ளமை யானும், இருபாலும் சமம் என்பதே கொள்ளத்தக்கதாம். இக் கருத்துப் பற்றியே, முதற்றாயான ஏவாள், முதற்றந்தையான ஆதாமின் (அடியு முடியு மல்லாது இடைப்பட்ட) விலாவெலும்பி னின்று உண்டாக்கப்பட்டதாகக் கிறித்தவமறை கூறும்.
பெருமையும் உரனும் ஆடுஉ மேன
அச்சமும் நாணும் மடனுமுந் துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப (தொல். களவு. 7, 8)
என்று கூறியது. களவொழுக்கத்தில் தலைவன் தலையிடத்துச் சிறந்துதோன்றும் குணங்களேயன்றி, இருபாலுக்குமுள்ள ஏற்றத் தாழ்வன்று. இக் குணங்கள் என்றுமுள்ளனவாயின், களவியலிற் கூறப்படாது இருகை கோளுக்கும் பொதுவான அகத் திணை யியல் அல்லது பொருளியலிற் கூறப்பட்டிருத்தல் வேண்டும்: அங்ஙனம் கூறப்படாமை காண்க.
களவு வெளிப்பட்டு மணநிகழு மட்டும் பகற்குறி இரவுக்குறி ஆகிய இருவகைக் குறியிலும் தலைவன் சிறிதும் அஞ்சாது பெருமையோடும் உரனோடும் சென்று மீள்வதும், தலைவிக்குத் தலைவன் மீதுள்ள அன்பு காரணமாக ஆற்றருமைபற்றி அச்சந் தோன்றுவதும், காமக்குறிப்பு அல்லது களவு வெளிப்பாடுபற்றி நாணம் பிறத்தலும், செவிலியர் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய அறியாமடமும், கூட்டத்தை நிகழ்த்தியிருந்தும் அறியாதது போன்ற அறிமடமும் நிகழ்வது முண்டு. தலைவனுக்கு மக்களும் விலங்கும் நச்சுயிரும் ஆகியவற்றால் நேரக்கூடிய சேதத்துடன். அவன் தெய்வத்தை நோக்கியிட்ட சூளுரைப் பொய்ப்பால் வரக்கூடிய ஊற்றுக்கும் தலைவி அஞ்சியிருந்தமை.
அந்தரத் தெழுதிய எழுத்தின் மான
வந்த குற்றம் வழிகெட ஒழுகலும் (கற்பியல். 5)
என்னுந் தொல்காப்பிய அடிகளால் உணரலாம்.
மேற்கூறிய இருபாற் குணங்களுடன் இரண்டொன்று கூட்டி, அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்னும் நான்கும் ஆண்பாற் குணமென்றும், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் நான்கும் பெண்பாற் குணமென்றுங் கூறினர் பின்னோர்.
அறிவொடு நிறையே யோர்ப்புக்
கடைப்பிடி குணநான் காமே
நாணமே மடமே யச்ச நாட்டிய
பயிர்ப்பு நான்கும்
மாணிழை மடநல்லார்க்கு வைத்த
நாற்குணங்களாகும் (சூடாமணி நிகண்டு. 12: 16, 17)
அவ்வையும் காக்கைபாடினியும்போலும் புலவியரும், தடாதகை யும் மங்கையும்போலும் அரசியரும், கண்ணகியும் திலகவதியும் போலும் கற்புடையாரும். கவுந்தியும் மணிமேகலையும் போலும் துறவியரும் இந்நாட்டிலும் இருந்திருக்க, அறிவு முதலிய நற் குணங்களை ஆண்பாற்கே சிறப்பாகக் கூறியது, இந்நாட்டுப் பெண்டிர்க்கு இற்செறிப்பு காரணமாக அறிவுக் குறைவும் பெண்டிர்க்கெல்லாம் இயல்பாகவுள்ள மென்மையும் பற்றியே யாம்.
இற்செறிப்பு பெண்டிரின் ஒழுக்கக்காப்பும் உயிர்க்காப்பும் நோக்கியது. பெரும்பாலும் வெளியேறாது வீட்டுக்குள்ளேயே யிருப்பவர்க்கு. அல்லது, அயலிடஞ் செல்லாது உள்ளூரிலேயே வதிபவர்க்கு அறிவு மட்டாயிருத்தல் மிகுதி. நம்நாட்டிற் பெண்டிர் சிற்றிளம் பருவத்திலேயே இல்லறத்திற் புகுத்தப்பட்டு வந்தமையின், அவர்க்கு உயர்தரக் கல்விக்குப் போதிய வாய்ப்பு மிருந்ததில்லை. இதனால், ஒப்புநோக்கிய முறையில், பெரும்பான் மைபற்றி மடத்தைப் பெண்பாற்குரித்தாக்கிப் பேதை மடந்தை மடவரல் முதலிய பெயர்களை வழங்கினர்.
பொதுவாகப் பெண்டிர்க்குப் பூப்படைந்தவுடன் மண நிகழ்ந்த மையின் பெரும்பாலும் பதினெட்டு அல்லது இருபதாண்டிற்கு மேற்பட்ட கணவன், தன் இளமனைவியைப் பேதை அல்லது மடந்தை யென்றதனாற் குற்றமில்லை. அது. அஞ்சன் மடவனமே என்றாற் போல இளமை நோக்கிய அருமைவிளியேயன்றி, அறியாமை நோக்கிய இழிப்பு விளியன்று. மேலும், நம்நாட்டில் ஆடவரின் மணப்பருவத்திற்கு வரையேயில்லை; மணத் தொகைக்கும் எல்லையில்லை. பெண்டிர்க்கோ கைம்பெண் ணாயின் மறுமண மில்லை யென்றும், வாழ்நாள் முழுதும் ஒருவனையே மணக்க வேண்டும் என்றும் வரம்புளது. இதனால் கணவனின் மூப்பும் மனைவியின் சிற்றிளமையும் பெருவழக்காம், மடம் என்னுஞ் சொல்லுக்கு இளமை யென்றும் பொருள். இளமையில் அறிவு முதிராமையின், எழுதிற இளம்பெண் பருவங்களில் முதலதான பேதைப் பருவம் ஐந்து முதல் ஏழாண்டு வரைப்பட்டதாதலையும் நோக்குக. இதனால், இளமையும் இற்செறிப்பும் அறிமடமும் பற்றியதே பெண்டிர் மடம் எனவும். அது எத்துணையும் இழிவு குறித்த தன்றெனவும், ஆடவரும் அறிவில்லாக்கால் பேதைப் பெயர்க்குரியர் எனவும். ஆன்மாவை ஆணவமலம் பிணித்திருப்பதுபோலப் பெண் பாலையே பேதைமைக்குணம் இயல்பாய்ப் பற்றிக் கொண்டிருப்பதன் றெனவும் அறிந்து கொள்க.
ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில் (குறள். 834)
என இருபாற் பொதுவாயும்.
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில் (குறள். 142)
என ஆடவரையே சுட்டியும் திருவள்ளுவர் பேதையென்னும் பெயரை வழங்கியமை காண்க. இனி பெண்டிர்க்கு மென்மைத் தன்மை சிறக்க, ஆடவர்க்கு இன்பஞ் சிறப்பதாம். அம்மென்மைத் தன்மைக்கு அணிகலமாயிருப்பது பேதைமையாம். பேதைமை யென்பது மாதர்க்கணிகலம். பெண்டிர்க்கு இயல்பாகவுள்ள மென்மைத் தன்மையால் இரக்கம் சிறந்து. துன்பங் கண்ட விடத்துப் பிறர்பொருட்டு அச்சந் தோன்றும் ஏனை நாணமும் பயிர்ப்பும் சிறந்த குணங்களென்று கூறவேண்டா.
இனி, ஆடவர்க்கு வன்மையும் பெண்டிர்க்கு மென்மையும் சிறப்பியலாதலானும், மென்மையிலும் வன்மையே சிறந்ததா தலானும், ஆடவரே சிறந்தவர் எனின். அவ் வன்மை மென்மை யாகிய இரண்டும் ஒன்றையொன்று இன்றியமையாமையானும், பயன்பாட்டளவில் இரண்டும் ஒத்திருத்தலானும் மென்மையைத் தழுவித் தாங்குவதே வன்மையின் பயனாதலானும், மென்மையே இன்பந் தருவதா யிருத்தலானும். இரு பாலரும் ஒருபாலரே யெனக் கூறி விடுக்க.
இங்ஙனம் இருபாலரும் ஒருபால ரல்லரெனின்.
ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனுங் கிழத்தியும் காண்ப. (தொல். களவு. 2)
அதுவே, தானே யவளே தமியர் காணக்
காமப் புணர்ச்சி யிருவயி னொத்தல். (இறையனாரகப் பொருள் . 2)
என்னும் நூற்பாக்கள் பொருளற்றன வென்க.
மேற்கூறிய அச்சம் முதலிய நாற்குணங்களுடன் மணாளன் அல்லது கணவன் மீதுள்ள அன்புஞ் சேர்ந்தது காதல். காதல் வேறு. கற்பு வேறு. காதலில் கற்புண்டு; கற்பில் காதலிருப்பது யாப்புறவின்று. வாழ்நாள் முழுதும் மணம் விரும்பாதவளுக்கும் துறவியாயிருப்பவளுக்கும் கற்பிருக்கலாம்; ஆனால் காதலிராது. அச்ச முதலிய நாற்குணங்களுள். நாணம் பயிர்ப்பு என்னும் இரண்டும் கற்பா யமையும்; ஆனால் காதலாயமைவது ஒன்று மில்லை. ஆகவே, அச்ச முதலிய நான்கும் (ஒழுக்கமுள்ள) பெண் பாற் பொதுக்குணமும், காதலொன்றும் (அன்புள்ள) மனைவி யின் சிறப்புக் குணமுமாகும்.
கணவன் மனைவியாகிய இருவர்க்கும் காதல் ஒரு படித்தாய் இன்றியமையாதது. அது இல்லற வாழ்க்கைக்குரிய நற்குணங்க ளெல்லாந் திரண்டு முழுநிறைவானது. அது இரு கைகோளுக்கும் பொது. சிலர்க்குக் களவிலேயே தொடங்கலாம்; சிலர்க்குக் கற்பில் மட்டும் தொடங்கலாம். கற்பெல்லாம் காதலற்றதென்று கொள்வது தவறு. களவில் வெளிப்பட வாய்ப்பில்லாத காதல், கற்பில்தான் வெளிப்படும். அத்தகைக் காதல், கரணமும் வாயிலும் பெற்றதேனும், காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போன்றதே. களவிலும் சூளுறவாகிய கரணமும், பாங்கனும் பாங்கியுமாகிய வாயில்களுமுண்டே! களவிற்கு அல்லது காதலுக்கு மெய்யுறு புணர்ச்சி இன்றியமையாது வேண்டுவ தின்று; உள்ளப் புணர்ச்சியே போதும்.
உள்ளப் புணர்ச்சியு மெய்யுறு புணர்ச்சியுங்
கள்ளப் புணர்ச்சியும் காதலர்க் குரிய. (நம்பியகப்பொருள். 34)
உள்ளப் புணர்ச்சியையும் மெய்யுறுபுணர்ச்சியோ டொப்பக் கொண்டமையானேயே, திலகவதியார் போன்ற பண்டைக் கற்புடை மாதர், மணப்பேச்சு நிகழ்ந்து மணம் நிகழாதவழியும் கணவ னிறந்தவிடத்து உயிர் நீக்கவும் கைம்மை நோற்கவும் தலைப்பட்டனர். உயர்ந்தோர் உள்ளப் புணர்ச்சியாலும் இன்பம் நுகர்வர்; தாழ்ந்தோரே மெய்யுறு புணர்ச்சியினாய இன்பமே வேண்டுவர்.
இனி மணமக்கள் இருவரும் மணப்பேச்சிற்கு முன் ஒருவரை யொருவர் ஒருவகையாலும் அறியாதவரா யிருப்பினும், மணப் பேச்சுவழி அறிந்தவரேயாவர். அவரிடைக் காதல் தோன்று மாயின் இரும்பைக் காந்தமிழுப்பது போலும், கட்டையில் தீப்பற்றுவதுபோலும் ஒருவர் மனத்தை ஒருவர் மனம் இழுத்துப் பற்றிக்கொள்ளும். வேட்டஞ்சென்ற தலை மகனும் புனங்காத்த தலைமகளும் காட்டில் ஒருவரை யொருவர் கண்டது போன்றே. மணப்பேச்சிற்குரிய மணமக்களும் வீட்டில் ஒருவரையொருவர் காண்கின்றனர்; கண்ணாற் காணும் வாய்ப்பின்றேல் கருத்தா லேனுங் காண்கின்றனர். காதலுக்குக் காணுவதுங் கண்ணுவதும் ஒன்றே. உள்ளத்தால் மட்டும் கலக்கும் நட்பிற்கே புணர்ச்சியும் பழகுதலும் வேண்டாது உணர்ச்சியே போதுமெனின், உள்ளத் தாலும் உடலாலும் இரண்டறக் கலக்கும் காதலுக்கு உணர்ச்சி போதுமெனச் சொல்லவும் வேண்டுமோ?
காதல் வாழ்க்கைக்கு அல்லது உண்மையான மணவாழ்க்கைக்கு, வாயிலும் கரணமும் இன்றியமையாது வேண்டுப வல்ல.
கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில (குறள். 1100)
என்றார் திருவள்ளுவர்.
கோவையில் முதலாவது கூறப்படும் இயற்கைப் புணர்ச்சி, தலைவனுந் தலைவியும் கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தாமே தமியராய்க் கூடிப் புணரும் தெய்வப் புணர்ச்சியே. அதன்பின் அத்தகைப் புணர்ச்சிக்கு இடமின்மையானேயே, பாங்கனும் பாங்கியுமாகிய வாயில்கள் வேண்டப்படுகின்றன. அவ் வாயில் களாலும் இயலாதவழி கற்பு அல்லது கரணம் வேண்டப் படுகின்றது.
உண்மையான கற்பாவது களவு வெளிப்பாடே யன்றிக் கரண மன்று. முதற்காலத்தில் கரணமில்லாமலே மக்கள் இல்லறம் நடாத்தி வந்தனர். மகப்பேறு காதலை வெளிப்படுத்திவிடு மாதலின், வாழ்நாள் முழுதும் களவொழுக்கம் இயலுவதன்று. ஆகையால், முன்பு களவும் பின்பு கற்புமாக மணவாழ்க்கை இரு பகுதிப்பட்டது.
பருவ மகனும் மகளும் முதலாவது கூடுங் கூட்டம், காமப் புணர்ச்சி, காதற் புணர்ச்சி என இரு வகைப்படும். இவற்றுள் முன்னது காமத்தால் மட்டும் நிகழ்ந்து பின்பு தீர்வது; பின்னது காமத்தோடு கூடிய அன்பால் நிகழ்ந்து காலமெல்லாம் நீடுவது. இது எண்ணாது (தெய்வத்தால்) நிகழ்வதும் எண்ணி நிகழ்வதும் என இருவகைத்து, இவ் விருவகையிலும் காதல் கரை புரண்டோடி எத்துணைத் தடைகளையுந் தகர்த்தெறிந்து இறுதிவரை இன்பஞ் சிறப்பதே. முதற்காலத்தில் நடந்த களவெல்லாம் காதற் புணர்ச்சியாகவேயிருந்தது. பின்பு, இடைக்காலத்தில் சில பல களவுகள் காமப் புணர்ச்சியா யொழியவே. முனிவரால் கரணம் விதிக்கப்பட்டது.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரண மென்ப (தொல். பொருள். கற். 4)
ஆயினும், கரணத்தால் மட்டும் பொய்யும் வழுவும் தீர்ந்துவிடாது. உண்மையான காதல் வாழ்க்கை கரணமற்றதேனும் பழிக்கப் படாது. அலங்காரமும் மக்கட் கூட்டமும் இன்னிசையும் உண்டாட்டும் ஊர்வலமும் வரிசையளிப்பும் ஆகிய ஆரவாரமே கரணத்தைச் சிறப்பிப்பது, இவ் வாரவாரம் சற்றும் அற்றதாயின் கரணமும் பொதுமக்களால் சிறிது பழிக்கப்படுவதே. கரணத்தின் வழிப்பட்ட வாழ்க்கையிலும் பொய்யும் வழுவும் தோன்றுமாயின் அதுவுங் கரணமற்றதே. கரணவழிப்பட்ட பல இல்லற வாழ்க்கை யில் பொய்யும் வழுவும் இன்றும் கண்கூடாகக் காண்கிறோம். கரணமற்றதாயினும் உண்மையான காதல் வாழ்க்கை யாயின் இன்றும் பழிக்கப்படாது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.
மக்கள் இம்மையில் அடையக்கூடிய இன்பங்களுள் தலை சிறந்தது பெண்ணால் வருவது.
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள. (குறள். 1111)
அதுவுங் காதலோடு, கூடியதாயின் சிற்றின்பமேனும் பேரின் பத்திற் கிணையாகக் கூறத்தக்கதாம்.
தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு (குறள். 1103)
என்றார் திருவள்ளுவரும்,
எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வருஉ மேவற் றாகும் (தொல். பொருளியல். 28)
இக் காதலின்ப வாழ்க்கையில் வறுமையில்லை. நோயில்லை, துன்பமில்லை, கவலையில்லை, ஒரு குறையுமில்லை. இல்லதென் இல்லவள் மாண்பானால் என்றார் திருவள்ளுவர். எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம். காதலனும் காதலியும் தானென்-றும் அவளென்றும் வேற்றுமையின்றி ஓருயிரும் ஈருடலுமாக ஒன்றி நுகரும் இன்பம் இருவர்க்கும் பொது வேனும், காதலனே மிகுதியாக நுகர்கின்றான்.
இதனாலேயே,
விலங்கலைக் கால்விண்டு மேன்மே லிடவிண்ணு மண்ணு முன்நீர்க்
கலங்கலைச் சென்ற வன்றுங் கலங்காய் (திருக்கோ. 24)
தில்லைச்சிவன்றாளாம் பொற்றடமலர் சூடும் (திருக்கோ. 21)
ஆற்றலகற்றப் பெற்று,
மடுக்கோ கடலின் விடுதிமி லன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் றில்லைமுன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க் காயகுற்றேவல் செய்கோ
தொடுக்கோ பணியீ ரணியீர் மலர்நுஞ் சுரிகுழற்கே (திருக்கோ. 63)
என எளிவந்தும் இழிவந்தும் குற்றேவல் செய்யவும்.
முழங்கா ரரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்யிருள்வாய்
வழங்கா வதரின் வழங்கு (திருக்கோ. 157)
மடலேறியும் ஏறுதழுவலும் புலிப்பால் கறத்தலும் கோளரியைக் கொல்லுதலும் முதலிய மறச்செயல் செய்தும் மணக்கவும், கரணத்தின் பின் புதல்வனைப் பெற்றபின்பும் மனைவியைக் காலுங் கையும் பிடித்து வேண்டவும் (திருக்கோ. 390) துணிவது.
இங்ஙனம் காதலி அல்லது கற்புடை மனைவி முதலாவது தன் காதலனுக்கு இணையற்ற, இன்பம் பயக்கின்றாள்.
இரண்டாவது, கணவன் களவில் கூட்டந் தடைப்பட்டவழி மட லேறியும் பிதற்றியும், நிறையழிந்து பெருமையிழந்த விடத்தும், காதலி நிறை யழியாது அடக்க வொடுக்கமாயிருக் கின்றாள்.
கடலன்ன காம முழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில். (குறள். 1137)
என்றார் திருவள்ளுவர்.
எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மை யான (அகத்திணை இயல். 38)
செறிவு நிறைவுஞ் செம்மையுஞ் செப்பு
மறிவு மருமையும் பெண்பா லான (பொருளியல். 15)
என்பன தொல்காப்பியம்.
ஆகவே, அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்னும் நான்கும் ஆண்பாற்கேயுரியவையல்ல என்பது வெளியாம். அறிவுள்ள விடத்தில் ஏனை மூன்றும் அமையும். பெண்பாற்கும் அறிவுண் டென்பது இருவகை வழக்கிலும் கண்டதே. காதலன் தன்னைக் கைப்பற்றியவிடத்துக் கத்தினும், தாய் வந்தபோது அவனுக்குத் தண்ணீர் விக்கியதென்று சொல்வது. அறிவோ? அறிவின்மையோ? பெண்டிரிடைக் கல்வி பரவின் அவரும் ஆடவர்போல் அறிவு பெறுதல் திண்ணம்.
மூன்றாவது, கரணத்தின்பின் கணவன் தன்னைக் கைவிட்டுப் பரத்தையிற் பிரிந்தவிடத்தும் மறுமணஞ் செய்தவிடத்தும், காதல் மனைவி அவன் மாட்டு கடுகளவுங் காதல் குன்றாதிருக்கின் றாள். அவன் ஆணை பொய்த்தனிமித்தம் அவனுக்குத் தீங்கு நேராதபடி தெய்வத்தையும் இரவும் பகலும் வேண்டுகின்றாள். தன் பெற்றோரையும் விட்டுவிட்டு, எத்துணைச் சிறந்தவனா யினும் வேறொருவனையும் கனவிலும் கருதாது. தன்னையே தெய்வமாக இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் மெல்லியலை மறந்து அவள் உயிரோடிருக்கும்போதே அவள் கண்ணெதிரே வேறொருத்தியை மணக்கும் ஆடவன் வன்மைதான் என்னே!
நான்காவது, தலைவன் தனக்கு எத்துணைத் தீங்கு செய்யினும் அதைப் பொருட்படுத்தாதும் தன்னலங் கருதாதும் அன்னையும் அடியாளும் அமைச்சியும்போலப் பல்வகையிலும் அவனுக்குப் பணிவிடை செய்கின்றாள். கற்புடை மனையாள்தான் கணவனுக் கென்றே வாழ்ந்து அவனில்லாதபோது அலங்கரிப்பதும், சிறக்க உண்டுடுத் துறங்குவதும் ஒழிகின்றாள். கணவன் தனக்குச் செய்யுங் கொடுமையைத் தாய் கூறினும் கடிந்து அவன் இயற்பட மொழி கின்றாள்.
ஐந்தாவது, இரப்போர்க் கீந்தும் அடியார்ப் பேணியும் விருந்தோம்பியும் பிறர்க்குத் தொண்டு செய்கின்றாள் கற்புடை யில்லாள்.
ஆறாவது, பஞ்ச காலத்தும் மழை பொழிவிக்கவும், தேவையான விடத்து ஆக்கவும் அழிக்கவும் ஆற்றலுடையவளாயிருக்கின் றாள் கற்புடைப்பெண். இவ் வாற்றல், இல்லறம் துறவறம் மண வாழ்க்கை ஆகிய முந்நிலைக் கற்புடைப் பெண்டிர்க்கும் பொது வாம். இல்லறத்திலிருந்து கொண்டே தெய்வத்தன்மை பெறவும், துறவியையும் வெகுளவும் வல்ல கற்புடையாளரின் பெருமை கட்டுரைக்குந் திறத்ததோ!
ஏழாவது கற்புடை மனைவி தன் கணவனிறந்ததும் உயிர் நீக்கிறாள் ; இல்லாவிடின் கைம்மை நோற்கிறாள். இத்தகைக் கற்புடைப் பெண்ணை மனைவியாகப் பெறுவதே உலகில் ஒருவர் பெறத்தக்க பேறுகளில் தலைசிறந்ததாம்.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை யுண்டாகப் பெறின் (குறள். 154)
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
ஏறுபோற் பீடு நடை (குறள். 59)
என்றார் திருவள்ளுவர்.
என்னொடு பொருது மென்ப அவரை
ஆரம ரலறத் தாக்கித் தேரொ
டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக! (புறம். 71)
என்பது ஒல்லையூர் தந்த பூதபாண்டியன் வஞ்சினம்.
கற்புடைப் பெண்ணை யுடைமைபற்றிப் பலவரசர் புலவராற் பாராட்டப் பெற்றனர்.
செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ (புறம். 31)
ஓடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ
ஆன்றோள் கணவ
புரையோள் கணவ (பதிற்றுப்பத்து. 14, 55, 70)
கற்புடை மனைவியை இங்ஙனம் கணவனுக்கு விழுச்செல்வ மாகப் பாராட்டியதோடு நில்லாது. அவளை இறந்தபின் தெய்வ மாகவும் வணங்கினர் முன்னோர்.
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் (சிலப்.)
என்றார் இளங்கோவடிகளும், குமரி முதல் பனிமலைவரை தன் ஆணையைச் செலுத்திய செங்குட்டுவனும் பிறவரசரும் கண்ண கிக்குக் கோயிலெடுத்து வழிபட்டனர். துரோபதை யம்மன் ஒச்சாண்டம்மை முதலிய தெய்வங்களும் கற்புத் தெய்வங்களே. மறச்செயல் புரிந்த கற்புடைப் பெண்ணைத் தெய்வமாக வணங் கும் வழக்கமே. கடவுளின் ஆற்றலைப் பெண் பாலாக உருவகிக் கவும் போர்த் தெய்வத்தைப் பெண்பாலாகக் கொள்ளவுங் காரணமாயிருந்திருக்கலாம்.
போரிலிறந்த சிறந்த மறவரும் வணங்கப்பட்டனரேனும், அவரைத் தாழ்ந்தோரன்றி உயர்ந்தோ ரேத்த இதுகாறுங் கண்டிலம். ஆகையால் பெண்பால் எந்நிலையினும் ஆண் பாலிலுந் தாழ்ந்த தன் றென்பதும் கற்புடை மனைவியே ஒருவனுக்கு இம்மையில் தலைசிறந்த பேறென்பதும் மறக் கொணாத முடிபுகளாம்.
பட்டினத்தாரும் சிவப்பிரகாசரும் போன்ற அறிஞர் பெண்டிரைப் பழித்துக் கூறியதெல்லாம், விலைமகளிரின் தீயொழுக்கமும் வீடுபேற்றிற்குத் தடையான உலகக் கவர்ச்சியும்பற்றியே யன்றிப் பெண்பாலின் இழிவுபற்றி யன்று.
இதுகாறுங் கூறியவற்றால், ஆண் பெண்ணாகிய இருபாலும் ஓரன்ன நிலையவென்றும் இருபாலுக்கும் இயற்கையிலேயே பெருமையில்லை யென்றும், பெண்பாலரிற்போல் ஆண் பாலரினும் இழிந்தாருண் டென்றும், கற்புடை மனைவியே மனைவியென்றும், காதல் வாழ்க்கையே வாழ்க்கையென்றும், இல்லறவின்ப வாழ்க்கையை நடாத்துபவர் கணவன் மனைவி யாகிய இருவருமே யாதலின் அவர்க்குப் பிறர் துணை இன்றி யமையாத தன்றென்றும், மனப்பொருத்தமே மணப் பொருத்த மென்றும், உண்மையான மணம் கூட்டமேயன்றிக் கரணமன் றென்றும், காதல் கூடியபின் இறப்பினாலன்றிப் பிரிப்பில்லை யென்றும், காதல் வாழ்க்கை மண்ணுலகை விண்ணுலகாக்குவ தென்றும், இதுவே முன்னைத் தமிழர்கண்ட அன்பு நெறி அகப்பொருளின்ப வாழ்க்கை யென்றும் அறிந்து கொள்க!
குறிப்பு: கற்புள்ள மனைவியும் கணவனிறந்தபின் மறுமணஞ் செய்யலா மென்பது இக்காலக் கருத்தாம். மனைவி யிறந்தபின் கணவன் மறுமணஞ் செய்யும் போது, மனைவிக்கு மட்டும் என்னோ தடை! நாவலந்தேயத்தில் ஆடவராற் பெண்டிர்க்குச் செய்யப்படுங் கொடுமை அளவற்றதாகும். பெண்டிரின் அடிமைத்தனத்தைப் போக்கியபின்பே ஆடவர் தம் அடிமைத் தனத்தைப் போக்கற்பாலர். தொன்றுதொட்டு வரும் பெண்டிரின் அடிமைத்தனமே பெண்பாலைத் தாழ்வாகக் கருதக் காரண மாகும். ஆனால் உண்மையில் இருபாலரும் ஒன்றே. மென்மை யாலாகும் இன்பத்தை யெல்லாம் நுகர்ந்துகொண்டு அதை வன்மையால் ஒடுக்குவது முறையோ? கணவனிறந்தபின் கற்புடை மனைவி உயிரைத் துறப்பது அளவுக்கு மிஞ்சியதாகக் கருதப்படு கின்றது. கபிலரும், பிசிராந்தையும் பொய்யாமொழியும் போன்ற வன்மைபெற்ற ஆடவரே நட்புரிமை காரணமாகத் தம் நண்பர் இறந்தவுடன் உயிரைத் துறப்பாராயின், மென்மையிற் சிறந்த கண்ணகியும் பூதப்பாண்டியன் றேவியும் போன்ற மெல்லியலார் தம் கணவரிறந்தவுடன் உயிரைத் துறவாது வேறேன் செய்வர்? ஆயினும், புலவரெல்லாம் தம் நண்பரிறந்தால் உயிர்விடு வாரல்லர்; அதுபோன்று கற்புடைய மனைவி யாரெல்லாம் தன் கணவரிறந்த பின் உயிர்விடுவா ரல்லர். ஈரிடத்தும் உயிர் விடுவ தற்குக் காரணம், உணர்ச்சி மிகுதியே. அஃதுள்வழி போற்றப் படினும், இவ்வழி இகழப்படாது. (சகுந்தலா நினைவு மலர்.)
கன்னடம்
கன்னடம் என்னும் பெயர்
மலையாளத்திற்கு அடுத்துத் தமிழோடு தொடர்புள்ளது கன்னடம், கன்னடம் என்பது கருநாடம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. இது முதலாவது கன்னட நாட்டைக் குறித்துப் பின்பு அங்கு வழங்கும் மொழியைக் குறித்தது. இதன் பழைய வடிவங்கள் கருநாடு, கருநாடகம் என்பன. கன்னட நாட்டார் கருநாடர் என்றும், கருநடர் என்றும் அழைக்கப்பட்டார்.
கருநடம் அல்லது கருநாடகம் என்னும் சொல்லுக்கு இரு பொருள்கள் கூறப்படுகின்றன. அவை (1) கரிய நாடு, (2) கருங்கூத்து என்பன.
கன்னட நாட்டிற் பெரும்பகுதி கரிசல் நிலமாயிருப்பதால், கரிய நாடு என்று பொருள் கொண்டனர் குண்டெட் பண்டிதரும் (Dr. Gundert) கால்டுவெல் கண்காணியாரும்.
கூத்துகளில் இழிந்த வகைக்குக் கருங்கூத்து என்று பெயர்.
முதுபார்ப்பான் வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து (கலித். 65: 29)
நடம் = கூத்து. நடன் = கூத்தன்
வளிநடன் மெல்லிணர்ப் பூங்கொடி மேவர நுடங்க (பரிபா. 22: 42)
நடர் = கூத்தர்.
விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட (குறள். பரிமே. உரை)
நாடகம் = கதை தழுவிவரும் கூத்து. மிகப் பழைமையான அநாகரிக அல்லது கண்மூடிப் பழக்கத்தைப் பழைய கரு நாடகம் என்பர்; இங்குக் கருநாடகம் என்பது பழைமை யான அநாகரிகத்தைக் குறிக்கலாம். ஆகவே, கருநடம் அல்லது கருநாடகம் என்னும் பெயர் கருங்கூத்து நிகழும் நாடு என்னும் பொருள் கொண்டதாயிருக்கலாம்.
சிலப்பதிகாரத்தில் கருநாடர் குறிக்கப்படும் போதெல்லாம் திருந்தாமையைக் குறிக்கும் கொடு என்னும் அடை கொடுத்தே குறிக்கப்படுகின்றனர்.
கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் (சிலப். 25: 156)
கொங்கணக் கூத்தருங் கொடுங்கரு நாடரும் (சிலப். 26: 106)
இன்றும் யக்ஷகானம் என்னும் கருங்கூத்து கன்னட நாட்டில் நடிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
ஆயினும் கருநடரைக் கருநாடர் என்னும் வழக்கும் உண்மை யானும், கூத்தாகிய காரணத்தினும் நிலவகையாகிய காரணம் பெயர்ப்பேற்றிற்குச் சிறத்தலானும், கரிசற்பாங்கான நாடு என்று பொருள் கொள்வதே பொருத்தமாம். கரை நாடு என்பது கருநாடு என மருவிற்றென்பர் சிலர்.
கன்னடநாட் டெல்லை
தெற்கே நீலமலை (நீலகிரி) யிலிருந்து வடக்கே பீடார்ப் (Bidar) பகுதி வரை. மைசூர் கன்னடம் தென்மராட்டம் (மகாராஷ்டிரம்) ஐதராபாத்தின் தென்மேற்குப் பகுதி ஆகிய சீமைகளிற் பெரும் பாலும் தாய்மொழியாகப் பேசப்படுவது கன்னடம்.
நீலமலையிலுள்ள படகர் (வடகர்), என்னும் மலைவாணர் கன்னடத்தின் திரிபான ஒரு மொழியைப் பேசுகின்றனர்.
16ஆம் நூற்றாண்டில் தென்னாட்டிற்கு வந்த மகமதிய மன்னர், அற்றைத் தமிழ்நாட்டின்மேற் கருநட மன்னர் ஆணை செலுத்தி யமை காரணமாகத் தமிழ்நாட்டையும் கன்னட நாட்டோடு சேர்த்துக் கர்நாட்டக் (கருநாடகம்) என்றனர். அதை ஆங்கி லேயர் கர்நாட்டிக் (Carnatic) என்று திரித்தனர்.
கன்னட நாட்டு வரலாறு
கன்னட நாட்டிற் சிறந்த பகுதி மைசூர்ச் சீமையாகும். மைசூரில் தற்போது ஹளெபீடு (Helebid) என வழங்கும் துவரை நகா (துவார சமுத்திரம்) கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்னர்ச் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்ததாயிருந்தது. இது துவராபதி எனவும் வழங்கும்.
நச்சினார்க்கினியர், அகத்தியனார்….. துவராபதிப் போந்து நிலங் கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடுகெடுத்து நாடாக்கி எனத் தொல் காப்பியப் பாயிரவுரையிலும், மலைய மாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண் வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் என அகத்திணை யியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்.
பண்டைச் சேரநாட்டில் மைசூர்ச் சீமையின் தென் பகுதியும் சேர்ந்திருந்தது.
கடைக்கழகக் காலத்தில் மைசூர்த் துவரைநகரை ஆண்டவன் இருங்கோவேள் என்னும் தமிழச் சிற்றரசன். அவன் வடபக்கத் தில் ஒரு முனிவரின் ஓம குண்டத்தில் தோன்றித் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டு வந்த வேளிர்களுள் ஒருவன் என்றும், ஒரு முனிவர் தவஞ்செய்து கொண்டிருக்கையில் அவர்க்கு இடையூறு செய்யவந்த ஒரு புலியை அவர் ஏவற்படி கொன்றமையால் புலிகடி மால் எனப் பட்டானென்றும் கூறப்படுவன்.
பிற்காலத்தில் 11ஆம் நூற்றாண்டில் துவாரசமுத்திரத்தில் (Halebid) நிறுவப்பட்ட ஹொய்சள பல்லாள மரபு கடைக்கழகக் காலப் புலிகடி மாலின் வழியதே. பல்லாளன் என்னும் பெயர் வல்லாளன் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. வ-ப, போலி, ஓ. நோ: வண்டி - பண்டி, வகு - பகு, வல்லாளன் = வலிய ஆண்மையை யுடையவன். ஒரு மறவனுடைய இல்லையும் ஊரையும் இயல்பையும் சொல்லி அவன் ஆண்மைத் தன்மையை மிகுத்துக் கூறும் புறத்துறைக்கு வல்லாண்முல்லை (பு.வெ. 177) என்று பெயர்.
நள்ளாதார் மிடல்சாய்த்த
வல்லாளநின் மகிழிருக்கையே (புறம். 125)
எனத் தேர்வண் மலையனும்,
விசைத்தெறி கூடமொடு பொரூஉம்
உலைக்கல் லன்ன வல்லா ளன்னே (புறம். 170)
எனப் பிட்டங்கொற்றனும்,
அடி பொலியக் கழறைஇய
வல்லாளனை வயவேந்தே (புறம். 40)
எனச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும் பாடப்பட்டனர்.
கடுந்திறமையுள்ள இருபாலாரையும் வல்லாள கண்டன் வல்லாள கண்டி எனப் புகழ்வது இன்றும் தமிழ்நாட்டுலகவழக்கு.
திருவண்ணாமலையில் வல்லாள மகாராசன் என்னும் ஓர் அரசன் இடைக்காலத்தில் ஆண்டதாக அருணாசலபுராணம் கூறும்.
மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கும் அரபிக் கடலுக்குக் கிழக்கும் கூர்ச்சரத்திற்குத் தெற்கும் கோவாவுக்கு வடக்குமாக வுள்ள கொங்கண தேசம் பண்டைக் காலத்தில் கொடுந்தமிழ நாடுகளுன் ஒன்றாயிருந்ததாக இலக்கண நூல்கள் கூறும்.
கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்
துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடுநில வாட்சி
அரசு மேம்பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப் பிருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொன்னய முடையவும்
என்றார் அகத்தியனார் என்பது நன்னூல் மயிலை நாதர் உரை. (ப. 161.) இவ் அகத்திய நூற்பாவிற் கூறப்படும் பெயர்கள் முதலாவது நாட்டைக் குறித்தவை யென்றும் பின்பு மொழி திரிந்தபின் மொழியைக் குறித்தனவென்றும் அறிதல் வேண்டும்.
சேரநாடு கடைக்கழகக் காலத்திலேயே குட (மேற்குத் தொடர்ச்சி) மலைக்கு மேற்பால் வேறும் கீழ்ப்பால் வேறுமாகப் பிரிந்து போயிற்று. கீழ்ப்பால் நாடு மீண்டும் தெற்கில் கொங்கு நாடும் வடக்கில் கங்கநாடும் இடையில் அதிகைநாடு துவரைநாடு முதலி யனவுமாகப் பிரிந்துவிட்டது. அதிகைநாடு தகடூரை (இற்றைத் தர்மபுரியை)த் தலைநகராகக் கொண்டு அதிகமான் மரபினர் ஆண்டு வந்தது, கங்கநாடு, அதன் வடக்கில் கங்கமரபினர் குவளால புரத்தை (கோலார்)த் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தது. இது கங்கபாடி என்று கல்வெட்டுகளிற் கூறப்படும்.
வேங்கை நாடுங் கங்க பாடியம் (S.S.I. I. 94)
கங்க மரபினரான சிற்றரசர் கடைக்கழகக் காலத்திலே, மறத்திற் சிறந்து பெயர் பெற்றவராயிருந்தனர்.
நன்ன னேற்றை றறும்பூ ணத்தி
துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி (அகம். 44)
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் (சிலப். 25: 157)
எனப் பழைய நூல்கள் கூறுதல் காண்க.
இக் கங்க மரபைச் சேர்ந்தவனே, 12ஆம் நூற்றாண்டில் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தனும், அமராபரணன் ஸ்ரீமத் குவளாலபுர பரமேசுவரன், கங்ககுலோற்பவன் என்று தன் மெய்க்கீர்த்திகளிற் பாராட்டப்பெறுபவனும், பவணந்தி முனி வரைக் கொண்டு நன்னூலை ஆக்குவித்தவனுமாகிய சீயகங்கன் என்பவன். இவன் ஒரு தமிழிலக்கணத்தை இயற்று வித்ததி னாலும், நன்னூற் சிறப்புப்பாயிரம்,
குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்
என்று கூறுவதாலும், மைசூர் நாட்டின் வேங்கட நேர் எல்லை வரை 12 ஆம் நூற்றாண்டு வரையுமாவது தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை யென்பது அறியப்படும்.
ஆகவே, பம்பாய் மாகாணமும் ஐதராபாத்துச் சீமையும்
சென்னை மாகாணமும் கூடுகின்ற இடத்துக் கொடுந்தமிழ் வழக்கு, வடசொற் கலப்பால் 6 ஆம் நூற்றாண்டிற்குப் பின் கன்னடமென வேறு மொழியாகப் பிரிந்து, பின்பு சிறிது சிறி தாகத் தெற்கே தள்ளிவந்து தற்போது நீலமலை வரை பரவியுள்ள தென்க.
கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
கொங்கணக் கூத்தருங் கொடுங்கரு நாடரும்
என்று சிலப்பதிகாரங் கூறுவதால் கொங்கண நாட்டைச் சேர்ந்த கருநட நாட்டிலேயே கன்னடம் முதலாவது தோன்றியிருத்தல் வேண்டும். இப்போது கொங்கண நாட்டிற்கும் மலபாருக்கும் இடைப்பட்ட மேல்கரை நாடே, தென் கன்னடம் வடகன்னடம் என இரு பகுதியாய்ப் பகுக்கப்பட்டுக் கன்னடம் (kannada) என் னும் பெயரால் வழங்கி வருகின்றது. வடகன்னடம் கொங்கண நாட்டுப் பகுதியே, இதனால், கரைநாடு என்பதே கருநாடு என மருவிற்று என்று கொள்ளவும் இடமுண்டு.
கொங்கணம் என்பது கொண்கனம் என்னும் சொல்லின் திரிபு. கொண்கன் என்பது நெய்தல்நிலத் தலைவன் பெயர். கொங் கணம் ஒரு நெய்தல் நாடாதலால், கொண்கு (நெய்தல்நிலம்) என்னும் பெயர் முறையே கொண்கனம் - கொங்கணம் என்று திரிந்திருக்கலாம். கொங்கண நாட்டினர், கொங்கணர் என்றும் கொங்கணவர் என்றும் கொங்கணியர் என்றும் கூறப்படுவர். கொங்கணர் என்று ஒரு பண்டைத் தமிழ்ச் சித்தர் இருந்தார்.
மைசூர்ச் சீமையிலுள்ள பலவூர்கள் இன்றும் தமிழ்ச் சொற் களையே தம் பெயரீறாகக் கொண்டுள்ளன.
(எ-டு): ஊர் (மைசூர்), புரம் (குவளாலபுரம்), பள்ளி அல்லது ஹள்ளி (சிக்னவகன் ஹள்ளி), பட்டினம் (சீரங்கபட்டினம்), கர (அரிசிக்கரை), பேட்டை முதலியன. கன்னட நாட்டிலுள்ள கௌடர் (கவுண்டர்), திகழர் (தமிழர்), குறும்பர், உப்பாரர், கொரகர் (குறவர்), ஹொலியர் (புலையர்), பேடர் (வேடர்) முதலிய குலத்தினர் தமிழ் மரபினரே. கன்னடியர் என்னும் பெயரும் மொழிபற்றிக் குலங்குறித்த தமிழ்ச்சொல்லே, மைசூர் அரசரின் இற்பெயரான உடையார் என்பது தனித் தமிழ்ச் சொல்லாயிருப்பது மிக மிக மகிழத்தக்கது.
கொங்கண முனிவர் வாசுகியம்மையாரால் கடிந்து கொள்ளப் பட்டதினாலோ, கொங்கண நாட்டாரின் இயல்பான பேதமை யாலோ, கொங்கணன் கொங்கணவன் கொங்கணியன் என்னும் பெயர்கள் பேதைமை குறித்த பெயர்களாக வழங்கி வருகின்றன.
கன்னடம் திரிந்ததற்குக் காரணங்கள்
(1) கன்னடச் சீமையில் தமிழ் மன்னராட்சி ஒழிந்தமை.
(2) அங்குத் தமிழ் நூல்கள் வழங்காமை.
(3) தமிழர் விழிப்பின்மை.
(4) தட்பவெப்ப நிலையால் தமிழ் ஒலியும் சொல்லும் திரிந்தமை.
(5) வடசொற் கலப்பும் வடமொழியிலக்கண வமைப்பும்.
**கன்னடம் திரிந்த முறைகள்
(1) ஒலித்திரிபு
எ-டு: ப-ஹ, பள்ளி - ஹள்ளி, பாடு - ஹாடு.
(2) உயிரீற்றுப் பேறு
எ-டு: எதிர் - எதுரு, இருந்தேன் - இருத்தெனெ.
(3) தொகுத்தல் திரிபு
எ-டு: இருந்தேன் - இத்தேன், இருவர் - இப்பரு.
(4) புணர்ச்சியின்மை
எ-டு: நினக்கு - நினகெ, ஓலைக்காரன் - ஓல்கார.
(5) சொற்றிரிபு
எ-டு: மொதலானய, மத்தொந்து (மற்றொன்று) இல்ல.
(6) வேற்றுமையுருபு மாற்றம்
ËŪj (3M« nt.), நின்னல்லி (7ஆம் வே.)
(7) போலி
எ-டு: ப-வ, வேடர் - பேடரு, ச-க, சில-கெலவு.
8) எதிர்மறை யிடைநிலைக் குறுக்கம்
எ-டு: இராதே - இரதெ, இரேன் - இரெனு.
(9) பொருட் பொதுப்பித்தல்
எ-டு: நோடு (த.) = கவனித்துப் பார் (க.) = பார்
மாட்டுதல் (த.) செய்ய முடிதல் - மாடுதல் (க.) = செய்தல்.
(10) இனப்பொருள் வழக்கு
எ-டு: சிக்கு (த.) = சிக்கற்படு (க.) அகப்படு.
(11) வழக்கற்ற சொல் வழக்கு
எ-டு: திங்கள் (மாதம்), தெகு (தெவு-கொள்.)
(12) நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை
எ-டு: ஈ ஹண்ணுகளு.
(13) இயற்கை தெரிப்பு
எ-டு: மனெ (மனை)
(14) புதுச்சொல் புனைவு
எ-டு: படவனு ஏழையன் கிசி (பற்காட்டு)
(15) பெயரீற்றுப்பால் விகுதிக் கேடு
எ-டு: குருட (குருடன்), மக (மகன்).
(16) ஓசைப்பேறு
எ-டு: மக (g), அஜ்ஜி (அச்சி)
(17) ற் ழ அருகினமை
(18) வடசொற் கலப்பு.
**கன்னடச் சொல் வரிசைகள்
1. மூவிடப் பெயர்
தன்மை முன்னிலை படர்க்கை தற்சுட்டு
ஒருமை: நானு நீனு அவனு, இவனு தானு
அவளு, இவளு
அது, இது
பன்மை: நாவு நீவு அவரு, இவரு, தாவு
நாவுகளு நீவுகளு அவு, இவு
அவுகளு, இவுகளு
குறிப்பு: நாம் - நாமு - நாவு, வ-ம, போலி, இங்ஙனமே நீவு, நாவு என்பனவும். நாவுகளு = நாங்கள்.
மூவிடப் பொதுப்பெயர்: எல்லாம்.
2. வினாப் பெயர்
ஆண் பெண் பொது அஃறிணை
ஒருமை: யாவனு யாவளு யாருஆரு யாவது
யாவுது,
எணு
பன்மை யாரு யாவுவு
3. முறைப் பெயர்
தமிழ் கன்னடம் தமிழ் கன்னடம்
தாதை தாத்த அத்தன் அச்ச
அப்பன் அப்ப அம்மை அம்ம
ஐயன் அய்ய அவ்வை அவ்வெ
தந்தை தந்தெ தாய் தாயி
அண்ணன் அண்ண அக்கை அக்க
தம்பி தம்ம தங்கை தங்கி
மாமன் மாவ அத்தை அத்தெ
கணவன் கண்ட பெண்டாட்டி ஹெண்டதி
நல்லள் நல்லள்
(மனைவி)
மகன் மக மகள் மகளு
மகவு, மக, மகு எல்லா எலெ
திசைச் சொற்கள்
முத்தப்ப அல்லது முத்தாத்த = பூட்டன் (பாட்டன் தந்தை), முத்தம்ம அல்லது முத்தஜ்ஜி = பூட்டி (பாட்டிதாய்), அஜ்ஜ = பாட்டன், அஜ்ஜி = பாட்டி, தொட்டப்ப = பெரியப்பன். தொட்டம்ம அல்லது தொட்டவ்வ = பெரியம்மை, சிக்கப்ப = சிற்றப்பன், சிக்கம்ம அல்லது சிக்கவ்வ = சிறிய தாய்.
குறிப்பு: முது + அப்ப = முத்தப்ப, அச்சன் - அஜ்ஜன், அச்சி - அஜ்ஜி, தொட்ட (தோடு) = பெரிய, சிக்க = சிறிய.
4. மக்கட் பெயர்
ஆளு, மக்களு, அரசு, தோட்டகாரனு, கும்பார (கும்பாகாரன் = குயவன்), ஒலெகார (கடிதம் கொண்டு போகிறவன்), மாத்தாளி (பேச்சாளி, மாற்றம் = சொல்), மாறாளி (விற்கிறவன். மாறு = வில்), சமர்த்த, மந்தி (மாந்தர்), குண்ட்ட (முடவன்), குருட, மூட, ஊமெ, முதுக (கிழவன்), சோமாரி (சோம்பேறி), சிக்கவனு (சிறியவன்), சண்ணவனு (சின்னவன்), ஹொசெயனு (புதியன்), எளெகவனு (இளையவன்), கரியவனு, கரியனு, நெரெயவனு (நெருங்கியவன்), பிளியவனு (வெளியவன்), ஹளெபனு (பழை யன்), கள்ளனு, ஒடெய தூத, கம்மார, காவலுகார, அர மகள், நாணிலி, அம்மண்ணி, ஆண்டி ஒட்ட (ஒட்டன்), கன்னெ (கன்னி), குதுரெகார, கொரவ (குறவன்), செம்பு குட்டிக (செம்பு கொட்டி), தலாரி (தலையாரி), திண்டிப் போத்த (தின்றிப்போத்து - ஆகுபெயர்).
5. விலங்குப் பெயர்
ஆவு, ஆனெ (ஆனை), எத்து (எருது), ஒண்ட்டெ (ஒட்டை), கரு (கன்று), குதுரெ, ஆடு, குரி (கொறி = ஆடு), நரி, நாயி, சிரத்தெ (சிறுத்தை) மரி, (மறி=குட்டி), ஹுலியு (புலி), கழ்தெ (கழுதை), கடசு (கிடாரி), தகரு (தகர்), மேக்கெ (மோத்தை = வெள்ளாட்டுக் கடா), கூளி, ஹோத்து (போத்து), மொலவு (முயல்), குணி மொலவு (குழி முயல்), ஹந்தி (பன்றி), பெக்கு (வெருகு), எய், எம்மெ (எருமை), கடவெ (கடமை), கரடி, கந்து (கன்று), குட்டி, குரங்கி.
6. பறவைப் பெயர்
ஈச்சல் (ஈசல்), அந்தி (அந்து), கிளி, கிணி (கிளி), கோளி (கோழி), காகி (காக்கை), பைரி (வைரி), கூகெ (கூகை), கடல் காகி, நீரு கோளி, நவில் (மயில்), பர்து (பருந்து), பாவல், (வாவல்), ஆந்தெக (ஆந்தை), குகில் (குயில்), குளவி, கொக்கரே (கொக்கு).
7. ஊர்வனவற்றின் பெயர்
அணில், உடு (உடும்பு), இறும்பு (எறும்பு), ஹாவு (பாம்பு), ஹுளு (புழு), ஹேனு (பேன்), எலி, ஹல்லி (பல்லி), அரணெ, ஹசுருஒதி (பச்சோந்தி), கெத்தல் (சிதல்), ஓதி (ஓந்தி), உடுத்தெ (உறுத்தை = அணில்), கீர (கீரி), சுண்டிலி, தேள்.
8. நீர்வாழ்வனவற்றின் பெயர்
மீனு, Vo>v©£Ç (நண்டு), அட்டெ (அட்டை), ஆமை (ஆமை), சொற (சுறா), தவள (தவளை).
9. மரஞ்செடிப் பெயர்
மரவு (மரம்), மாவு (மா), ராகி (இராகி), களெ (களை), ஹூல்லு (புல்), பிளி (விளை), பாளி (வாழை), தெங்கு, கோதி (கோதுமை), சணபு (சணல்), சாமெ (சாமை), பாதாமி (வாதுமை), தாளிம்பர (மாதுளை), அவரெ (அவரை), பிதிர் (வெதிர்), பேவு (வேம்பு), கீரெ (கீரை), ஆட்சோகெ (ஆடாதோடை), அகசெ (அகத்தி), ஆல (ஆல்), அரசு, அத்தி, இப்பெ (இலுப்பை), ஹூளி (புளி), பனி (பனை), ஹூவர்சி (பூவரசு), பாகே (வாகை), பேல் (வேல்), கரி மருது, பிளிமத்தி (வெள்ளை மருது), தேகு (தேக்கு), நுக்கே (முருங்கை), எலச்சி (இலந்தை), கடம்ப (கடம்பை), சப்பாத்திக் கள்ளி, முள்ளு, கள்ளி, மாகாளி, நரவள்ளி, நெல்லி, நொச்சி, ஹொங்கெ (புங்கை), சம்பகி (சண்பகம்), துளசி, சீத்தா, பெண்டெ (வெண்டை), அடிகே (அடைக்காய் = பாக்கு), காடு மல்லிகெ (காட்டு மல்லிகை), கொன்னெ (கொன்றை), ஆனெய நெக்குலு (ஆனை நெருஞ்சி), அடும்பு (அடம்பு), கரி (அறுகு), ஆதலு (ஆதனை), ஆபல் (ஆம்பல்), ஆரெ (ஆர்), ஈருள்ளி, உத்து (உழுந்து), இலிமிஞ்சி, (எலிமிச்சை), எள், கப்பு (கரும்பு), கல்வெ (களவு = களா), கொத்துமரி (கொத்துமல்லி), கிட (செடி), கொம்பவரெ (செவ்வவரை), கெம்பாவல் (செவ்வாம்பல்), கெம்பு பாளெ (செவ்வாழை), ஜோள (சோளம்), தக்காளி, தக்கோல (தக்கோலம்), தாழெ (தாழை), தும்பெ (தும்பை), தொண்டெ (தொண்டை), கெம்பத்தி (செம்பருத்தி).
10. கருவிப் பெயர்
ஓரகல் (உரைகல்), ஒலக்கெ (உலக்கை), உளி, ஏரு (ஏர்), கம்பி, கவணெ (கவண்), கிட்டி, கொழல் (குழல்), கூனி (கூனை), கொக்கெ (கொக்கி), கோல், சட்டுக (சட்டுவம்), சாட்டி (சாட்டை), சீப்பு, செக்கு, செண்டு (பந்து), தடி, தப்பட்டெ (தப்பட்டை), தப்பள (தப்பணம்), தப்பெ (தப்பை), தவட்டெ (தவண்டை), தாவு (தாம்பு), தாப்பாலு (தாழ்ப்பாள்), தாழ், தித்தி, திருகாணி, துடுப்பு, தொறடு (துறடு), அர (அரம்), அம்பு, இக்களள் (இடுக்கி), சிமட்டி (சிமிட்டி), பலெ (வலை), ஜல்லடி (சல்லடை), கோடலி (கோடரி), பள்ள (வள்ளம்), ஒரல் (உரல்), நேகில் (நாஞ்சில்), கக்தி, ஹலிவெ (பல்லி), ஈட்டி, அகப்பெ (அகப்பை), ஆபு (ஆப்பு).
11. ஐம்பூதப் பெயர்
நெல (நிலம்), நீரு, பொனல் (புனல்), காலி (கால் = காற்று), தீ, ஆகாசம் (காயம்).
12. கனிய (உலோக)ப் பெயர்
பெள்ளி வெள்ளி, ஹித்தாளி (பித்தளை), உர்க்கு (உருக்கு), செம்பு, தகர (தகரம்).
13. ஊர்திப் பெயர்
அம்பி, ஓட (ஓடம்), நாவெ (நாவாய்), ஹடகு (படகு), தேரு, அம்பாரி, தெப்ப (தெப்பம்), தேர்.
14. உணவுப் பெயர்
அப்ப (அப்பம்), அப்பள (அப்பளம்), ஹாலு (பால்), உப்பு, மர்து (மருந்து), பிர்து (விருந்து), அக்கி (அரிசி), பெண்ணெ (வெண் ணெய்), எளநீரு (இளநீர்), ஊட்ட (ஊட்டம்), அக்கி (அக்கம் = தானியம்), அவல், அள (அளை = தயிர்), இட்டலி, எரெ (இரை), உண்ணி (உண்டி), ஊட்ட (ஊட்டு), எண்ணெ (எண்ணெய்), கஞ்சி, கள், கறி, கூழ், தவுடு, திண்டி (தின்றி), தீனி.
15. ஆடையணிப் பெயர்
உடுபு (உடுப்பு), தேகா (தெழ்கு) தாலி, மணி, அட்டிகெ (அட்டிகை), இண்டெ (இண்டை), உடெ (உடை), கழல், குச்சு, கொப்பு, சட்டெ (சட்டை), சேல (சேலை), கட்டி, செர்ப்பு (செருப்பு), தண்டெ (தண்டை), தலகுட்டெ (தலைக்குட்டை).
16. தட்டுமுட்டுப் பெயர்
பெட்டகெ (பெட்டகம்), மேஜு (மேசை), பட்லு (வட்டில்), தொட் டிலு, கூடெ (கூடை), செம்பு, அடப்ப (அடைப்பம்), உறி, கல (கலம்), குட (குடம்), குப்பி, சட்டி, ஜாடி (சாடி), ஜோளிகெ (சோளிகை), தட்டெ (தட்டம்), தடிக்கெ (தடுக்கை), தபலே (தவலை), தளிகெ (தளிகை), தொட்டி.
17. இடப்பெயர்
இடெ (இடம்), இடுகு (இடுக்கு), ஊட்டெ (ஊற்று), ஹொல (புலம்), அடவி, தோப்பு, தோட்ட, மூலெ (மூலை), பாகிலு
(வாசல்), குணி (குழி), கடல், பெட்டெ (பொற்றை = மலை), அறெ (அறை), கேரி (சேரி), மலெ (மலை), பிந்தில் (இல்லின் பின்னிடம்), கழனி, புத்து (புற்று), மனெ (மனை), கோடெ (கோட்டை =
மதில்), ஊரு, அரமனெ, பட்டண (பட்டினம்), ஹள்ளி (பள்ளி), படக (வடக்கு), தெங்க (தெற்கு), குடிசலு (குடிசை, குடி, செரெமனெ (சிறைமனை), அங்காடி, சீமெ (சீமை), பேட்டெ (பேட்டை), ஹள்ள (பள்ளம்), கட்டட, கடெ (கடை), காடு, பேலி (வேலி), அடவி, ஒலெ (உலை = சூளை), கூடாரம், ஆகெ (அகம்), அகழ் (அகழி), அண்டெ (அண்டை), அணெ (அணை), அம்பல (அம்பலம்), அருகு, உக்கட (உக்களம்), உம்பளி (உம்பளம்), எல்லெ (எல்லை), குட்ட (குன்றம்), கேணி, கொட்டகெ (கொட்டகை), கொட்டார (கொட்டாரம்), கொத்தள (கொத்தளம்), கொனெ (கொனை), கோட்ட (கோட்டை), சில்லி, சுடுகாடு, தொணெ (சுனை), திட்டி, திட்டு, தொள (துளை), ஏரி, ஓட்டெ (ஓட்டை), ஓரம் கரெ (கரை), கன (கனம்), கன்ன (கன்னம்), கா, காணி, குழி, கொள (குளம்).
18. காலப் பெயர்
சமய, ஹகலு (பகல்), சாயங்கல, ராத்ரி (இராத்திரி), இருள் (இரவு), திங்களு (மாதம்), வார, ஹொத்து (பொழுது), வேளி (வேளை), பிடுவு (விடுவு = ஓய்வு), கடு (தவணை), கோடெ (கோடை.
19. தினைப் பெயர்
அடி, எலுபு (எலும்பு), மூகு (மூக்கு), ரத்த (அரத்தம்), எலெ (இலை), தலெ (தலை), முள்ளு, தொகலு (தோல்), பலெவு (பழம்), பாயி (வாய்), தொட (தொடை), நடு (இடை), கண்ணு (கண்), ஹல்லு (பல்), ரெக்கெ (இறக்கை), கொம்பெ (கிளை), ஹூவு (பூ), கொப்பு (கொழுப்பு), பாலவு (வால்), பேரு (வேர்), அலர், காலு, கெய் (கை), நொசல் (நுதல்), மொலெ (முலை), பெரல் (விரல்), பெந் (வெ > வெரிந்=முதுகு), அணல் (தாடி), சோகெ (தோகை), நுதி (நுதி), நெத்தர் (நெய்த்தோர் = இரத்தம்), முக (முகம்), ஓல (ஓலை), மனசு (மனம்), கிவி (செவி), பக்கெ (பக்கம் = விலா), கொம்பு, கதிர் அம்மி (அம்மம்), எசள் (இதழ்), இமெ (இமை), எறகெ (இறகு), ஈர், உகுர் (உகிர்), உச்சி, ஒதடு (உதடு), உம்மி (உமி), எஞ்சல் (எச்சில்), ஓடு, கவல் (கவை), கத்து (கழுத்து), கன்ன (கன்னம், காவு (காம்பு), காய், கால், குண்டெ (குண்டி), குதி, கொலெ (குலை), கொளக (குளம்பு), கூதல் (கூந்தல்), கொட்டெ (கொட்டை), கொண்டே (கொண்டை), கொத்து, கொம்பு, கெம்பரி (செவ்வரி), தவடெ (தவடை), தாடி, தாட.
20. பண்புப் பெயர்
குண, எத்தரவு (ஏத்தம்), தாள்ளி (பொறுமை), அகங்கார, பல (வலம்), செம்பு (செம்பு = சிவப்பு), ஆழ, பிளிப்பு (வெளுப்பு), இர்ப்பு (கருப்பு), செச்சனவு (செக்கெனவு), அகல, மட்டு, ஹாடு (பாழு), ஹசிவு (பசி), அக்கெற (அக்கறை), அகத்ய (அகத்யம்), அசடு, அற (அறம்), ஆழாக்கு, இக்கட்டு, இன் (இனிமை), ஈர (ஈரம்), ஒடமெ (உடைமை), உருப்பு, ஒவர் (உவர்), உழ்கெ (உழுவல்), உறுபு (உறுதி), ஊமெ (ஊமை), எத்து, (எடை), எதிர் ஹேராள (ஏராளம்), ஒண்ட்டி (ஒண்டி), ஒப்பாரி, ஒய்யார, களவள (கலவரம்).
காதல், கார், கார (காரம்), காவி, ஹுளி (புளி), கஹி (கசப்பு), செம்பு (சிவப்பு), மொள (முழம்), அகல (அகலம்), நீலி (நீலம்), நாண் (நாணம்), பல்மெ (வல்லமை), கட்டி (கெட்டி), கொஞ்ச (கொஞ்சம்), கோல (கோலம்), சப்படி (சப்பட்டை), சப்பெ (சப்பை), சேண் (சாண்), சிட்டு, சுட்டி, த்சவி (சுவை), சுள் (உறைப்பு), கறுக்கு (விரைவு), சேரு (-8 பலம்), சொக்கு, சொத்த (சொத்தை), சொந்த (சொந்தம்), தட்டெ (தட்டை), தடய (தடியம் = 2 வீசை), தப்பித (தப்பிதம்), தப்பு, தளுக்கு, திட்ட (திட்டம்), துடுக்கு.
21. எண்ணுப் பெயர்
1 ஒந்து 11 ஹன்னொந்து 21 இப்பத்தொந்து 200 இன்னூறு
2 எரடு 12 ஹன்னெரடு 30 மூவத்து 300 முன்னூறு
3 மூரு 13 ஹதிமூரு 40 நால்வத்து 400 நானூறு
4 நால்கு 14 ஹதிநால்கு 50 ஐவத்து 500 ஐநூறு
5 ஐது 15 ஹதினைது 60 அரவத்து 600 ஆருநூறு
6 ஆரு 16 ஹதினாரு 70 எப்பத்து 700 ஏளுநூறு
7 ஏளு 17 ஹதினேளு 80 எம்பத்து 800 எண்ட்டுநூறு
8 எண்ட்டு 18 ஹதினெட்டு 90 தொம்பத்து 900 ஒம்பைநூறு
9 ஒம்பத்து 19 ஹத்தொம்பது 100 நூறு 1000 சாவிர
10 ஹத்து 20 இப்பத்து 101 நூறாஒந்து 1001 சாவிர
தொந்து
2000 எரடு சாவிர 10,00,000 ஹத்து லக்ஷ
10,000 ஹத்து சாவிர 1,00,00,000 கோட்டி
1,00,000 லக்ஷ
கீழிலக்கம்
1/16 வீசெ 1/2 அரெ
1/8 அரெகாலு 3/4 முக்காலு
1/4 காலு 1 1/2 ஒந்தூவரே
எண்ணடி உயர்திணைப் பெயர்
x¥gD (xUt‹), x¥gS (bg.gh.), ஒப்பரு (ஒருவர்), இப்பரு (இருவர்), மூவரு, நால்வரு, ஐவரு, நால்குமந்தி (நான் மாந்தர்), கெலவரு (சிலர்), ஹலவரு (பலர்),
22. நோய்ப் பெயர்
ஹுண்ணு (புண்), பனி, சுளுக்கு, ரூரு, துறி (சொறி)
23. உறுப்பறைப் பெயர்
குருடி (குருடு), கூன், கிவிடு (செவிடு)
24. பல்பொருட் பெயர்
உண்டெ (உண்டை), அஞ்செ (அஞ்சல் = தபால்), அடயாள (அடையாளம்), மஞ்சு, மண்ணு, உசுரு (உயிர்ப்பு = சுவாசம்), சவ (சவம்). நூலு, துண்டு, ஹொகெ (புகை), ஹெசரு (பெயர்), தூள் (தூளி), கோலு (கோல்), பூதி (புழுதி), குருது (குறி), காணிக்கெ (காணிக்கை), கம்ப (கம்பம்), ப்தரெ (திரை), கொண்டி ஹலிகெ (பலகை), நொர (நுரை), உய்யல் (ஊசல்), சொடர் (சுடர்), சுத்தம் (சுற்றம்), சேல (சாளி), புடி (பொடி), பாடிகெ (வாடகை), ஹொரெ (பொறை), கத (கதவு), மிஞ்ச்சு (மின்னல்), ஒடம் படிக்கெ, மரளு (மணல்), கடியார, சம்பள, மழெ, கல்லு, ஹணவு (பணம்), கும்ப, துட்டு, ஒடவெ (உடைமை), அட்டி, கூடு சரக்கு, பிளக்கு (விளக்கு), காசு, கொள்ளி, ஹருகு (பலுகு), பளெ (வளை), வாடிக்கெ (வாடிக்கை), கூடு, அச்சு, அலெ (அலை), ஆகி (ஆலங்கட்டி), ஆவி, ஒடம்பி (உடம்பு), ஒடல் (உடல்), உசிர் (உயிர்), உருளி, இருள், எருபு (எரு); இடரு, எகுமதி (ஏற்றுமதி ), ஔ (ஒளி), ஒலக (ஒலக்கம்), கட்டெ (கட்டி), கடவள் (கடவுள்), கதவு, கருடி (கரடி = சிலம்பம்), கரி, கழு, காப்பு, காரெ (காரை = சாந்து), குடிக்கெ (குடுக்கை), குண்ட (குண்டு), குத்திகெ (குத்தகை), குப்பெ (குப்பை), கொரல் (குரல்), கூலி, கூறு, கொள்ளி, கோழெ (கோழை), சட்ட (சட்டம்), சிட்டிகெ (சிட்டிகை), சில்லறெ (சில்லறை), சிள்ளு (சீழ்க்கை), சீட்டி (சீட்டு), சுட்டி (சுருட்டு), கேர் (சுவர்), சூடு (அரிக்கட்டுக் குவியல்), சூல், சூருள் (சூள்), செத்தெ (செத்தை), கெம்பரகு (செவ்வரக்கு), தொட்டு (சொட்டு), ஜொண்டு (சொண்டு), நேசறு (ஞாயிறு), தக்கு, தகடு, தத்து, தணல், தளெ (தளை), தொளெ (திரளை), தெரெ (திரை), தீவட்டி, தூசு, தூம்பு, ஹெண்ணு (பெண்),
25. தொழிற்பெயர்
(1) முதனிலைத் தொழிற்பெயர்
எ-டு: கள், ஹகெ, தப்பு.
2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
எ-டு: கேடு, ஈடு.
3. முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர்
எ-டு: தாஹ (தாகம்).
4. முதனிலை வலி யிரட்டித்த தொழிற்பெயர்
எ-டு: ஊட்டெ (ஊற்று, ஆகுபெயர்).
5. முதனிலை திரிந்து வலி யிரட்டித்த தொழிற்பெயர்
எ-டு: குதி - கூத்து
6. முதனிலை வலி யிரட்டித்து விகுதி பெற்ற தொழிற் பெயர்
எ-டு: ஆட்ட (ஆட்டம்).
7. விகுதிபெற்ற தொழிற்பெயர்
எ-டு: விகுதி பெயர் பொருள்
கெ (கை) அடிகெ (அடுகை = சமைத்தல்)
தெ (தை) நடத்தெ (நடத்தை)
ஊ (உள்) பெளெயு (விளையுள்)
அலு (அல்) பிக்கலு (விக்கல்)
வு (உ) அடவு (அடைவு), சாவு.
பு அதிர்ப்பு
அண (அணம்) கட்டண (கட்டணம்)
பி (வி) கல்பி (கல்வி)
8. முதனிலை வலித்து விகுதிபெற்ற தொழிற்பெயர்
எ-டு: பழக்கெ (வழக்கம்), அடக்க (அடக்கம்).
9. பகுதி வழக்கற்ற தொழிற்பெயர்
எ-டு: கட்டளை.
சில தொழிற்பெயர்கள்
ஒணகிலு (உணக்கம்), ஔவு (உளவு), ஏலாம் (ஏலம்), ஒட்ட (ஒட்ட ம்), ஒப்பிடி (ஒப்படி = அறுவடை), ஒப்பந்த, ஒப்ப (ஒப்பம்), ஒக்கரி (ஒக்காளம்), ஜூது (சூது), தப்படி (தவறு) தாட்டவாட்ட (தாட்டோட்டம்), தீர்ப்பு, தீர்மான (தீர்மானம்), அம்மாலெ (அம்மானை).
வினையாலணையும் பெயர்
நோடிதவனு (பார்த்தவன்), நோடுவவனு (பார்க்கிறவன்), (பார்ப்பவன்) முதலியன.
வேற்றுமைப் பெயர்
S நான் மரம் குதிரை அரசு
1. நானு மரவு குதுரெயு அரசு
2. நன்னன்னு மரவன்னு குதிரெயன்னு அரசன்னு
3. நன்னிந்த மரதிந்த குதிரெயிந்த அரசினிந்த
4. நனகெ மரக்கெ குதுரெகெ அரசிகெ
5. நன்னிந்த மரதிந்த குதுரெயிந்த அரசினிந்த
6. நன்ன மரத குதுரெய அரசின
7. நன்னல்லி மரதல்லி குதுரெயல்லி அரசினல்லி
8. மரவே குதுரெயே அரசே
முக்கிய வினைகள்
அகல், அகழ், அசர் (அயர்), அஞ்சு, அடி, அடு (சமை), அடெ (அடை), அண்டிசு (அண்டு), அண்ணெ (அண்ணா), அணுங்கு (அணங்கு), அணெ (அணை), அதட்டு, அதிர், அப்பு, அப்பளிசு (அப்பளி), அமர், அரள், அரெ (அரை), அல்லாடு, அலம்பு, அல (அலு), அலெ (அலை), அழி, அழு, அள, அறி, அறெ (அறை), ஆகு, ஆடு, ஆயு (ஆய்), ஆர் (ஒலி), ஆராயு, ஆரு (ஆர் = நிறை), ஆளு, ஆறு, ஆனு, இடறு, இடி, இடிகு (இடுக்கு), இடு, இரு, இழ் (இழு), இழி (இறங்கு), இழகு (இழுக்கு), இறுகு, ஈ, ஈஜு (நீந்து), ஈழ் (ஈர்), ஈன், உகு, உசிர் (உயிர்), உடு, உண்ணு, உதிர், உப்பு, உய, உரி (எரி), உரிசு (உரி), உருள், உலி (ஒலி), உழு, உளி (ஒளி), உளுக்கு, உறி (உறிஞ்சு), உறு, ஊது, எக்கு, எசெ (எறி), எட்டு, எணிசு (எண்), எத்து (எடு), எதிரிசு (எதிர்), எரெ (இர), எழு, எறகு (இறங்கு), எறச்சு (இறை), ஏய் (எய்), என், ஏறு, ஒசர் (சுர), ஒட்டு, ஒடி, ஒடெ (உடை), ஒணகு (உணங்கு), ஒணர் (உணர்), ஒத்து (ஒற்று), ஒதவு (உதவு), ஒதறு, ஒதுக்கு, ஒதெ (உதை), ஒப்பு, ஒரெ (உருவு), ஓரெ (உரை = தேய்), ஒரெ (உரை = சொல்), ஒழ்கு (ஒழுகு), ஒறங்கு (உறங்கு), ஒடு, ஒது, ஒயு, ஒவு (ஒம்பு),
கக்கு, கட்டு, கடி, கடெ (கடை), கசி, கத்தரிசு (கத்தரி), கத்து, கரகு (கரை = தேய்), கரெ (கரை = அழை), கல், கலங்கு, கலசு (கல), கவர், கவலு, கவி, கழல், கழி, கழுஹு (கடவு), கள், களெ (களை), கற, கனல், கா, காண், காய், கிட்டு, கீளு (கிள்), கீறு, குட்டு, குடி, குத்து, குதி, குதுரு (குதிர்), குந்து, குன்று, குளிர், குறி, குனி, கூகு (கூவு), கூடு, கெடு, கெதறு (சிதறு), கெய் (செய்), கெரண்டு (சுரண்டு), கெலு (கெலி), கௌர் (கிளறு), கேளு, கை, கொடு, கொக்கரிசு (கொக்கரி), கொத்து, கொயு, கொல், கொழெ (குழை), கொள், கொளெ (குலை), கொறெ (குறை), கொறுக்கு (கொறி), கோ, சல் (செல்), சவி (சவை), சளி (சலி), சாயு (சா), சார், சாலு, சாறு (சாற்று), சிக்கு, சிமுட்டு, சிமிட்டி, சீறு, சுடு, சுட்டு, சுண்டு, சுத்து, சுற்று, சுர்கு (சுருங்கு), சுரி (சொரி), சுருள், சுழி, செர்கு (செருகு), சேர், சொல், சோர், சோலு (தோல்).
தகு (தங்கு), தட்டு, தடெ (தடு), தத்தளிசு, தணி, தப்பு, தரு (தா), தவழ், தழு (தழுவு), தள, தளர், தளிரு, தறி, தாகு (தாக்கு), தாண்டு, தாளிசு (தாளி), தாழ், தாளு, தித்து (திருந்து), திட்டு, திரி, திருகு (திரும்பு), தின்னு, திளி (தெளி), தீர், துறிக (சொறி), துடி, துண்டிசு (துண்டி), துள்ளு, தூகு (தூங்கு), தூறு, தெகு (தெவு), தெறெ (திற), தெரு (தீர்), தே (தேய்), தேகட்டு (தெவிட்டு), தொங்கு, தொடர், தொடங்கு, தொடெ (துடை), தொலகு (துலங்கு), தொழசு (துழவு), தோயு, தொறெ (துற), தோறு (தோன்று).
நகு, நடு, நடுகு (நடுங்கு), நடெ (நட), நம்பு, நரெ (நரை), நரக்கு (நறுக்கு), நாட்டு, நாறு, நிமிர், நில்லு, நீகு (நீங்கு), நூலு, நெகழ் (நிகழ்), நெய், நேல் (நால்), நென (நினை), நோ, நோடு, நோனு (நோல்).
பகெ (பகை), பசி, படு, படெ (படை), பத்து (பற்று), பய் (வை = திட்டு), பரு (வா), பரெ (வரை), பழி, பளகு (வழங்கு), பளெ (வளை), பளி (வழி), பளகு (வழக்கு) பறி, பாடு (வாடு), பாய், பிக்கு (விக்கு) பிசுடு (விசிறு), பிடி, பிடு (விடு), பித்து (வித்து), பிதிரு (விதிர்), பிந்து, பிரி (விரி), பில் (வில்), ழிமி, பீகு (வீங்கு), பீசு (வீசு), பீழு (வீழ்), புரி (பொரி), புழ்கு (புழுங்கு), பூசு, பூண், பெயரு (வெயர்), பெரெ (விறை), பெள்கு (வெள்கு), பௌகு (விளங்கு), பௌர் (வளர்), பெளெ, (விளை), பெர்சு (பெருரு), பெறு, பேடு (வேண்டு), பே (வே = வேகு) பொகழ் (புகழ்), பொணர் (புணர்), பொன்மு (பொருமு), பொதிசு (பொதி), பொரள் (புரள்), பொருது (பொருந்து), பொறு.
மக்கு (மங்கு), மடலு (படர்), மடி, மருன், மறெ (மற), மலெ (மலை), மாறு, மாய், மிகு, மிஞ்சு, மீறு, முக்கு (மொக்கு), முகி (முடி), முங்கு (விழுங்கு), முச்சு (மூடு), முட்டு, முடுகு, முணுகு, (முழுகு), முரி, மூசு (மொ), மூது (மூ), மெச்சு, மெத்து, மேயு, மோது, மொள (முளை) வாழ், வீஹதுகு (பதுங்கு).
ஹலும்பு (புலம்பு), ஹாடு (பாடு), ஹாயு (பாய்), ஹாறு (பாறு), ஹிடி (பிடி), ஹுதுக்கு (பிதுக்கு), ஹெணகு (பிணங்கு), ஹெறு (பெறு), ஹேலு (பேல்), ஹேளு (கிள), ஹொகு (புகு), ஹொடி (அடி), ஹொயு, பெய், ஹொரு (பொறு), ஹொளி (பொலி), ஹொறடு (புறப்படு), ஹொகு (போகு), ஹோல் (போல்).
வினைப் புடைபெயர்ச்சி
கரெ (கரை = அழை) என்னும் வினை
முற்று: இ.கா. நி.கா. எ.கா.
தன்மை: ஒ. கரெதெனு கரெயுத்தேனே கரெயுவெனு
ப. கரெதெவு கரெயுத்தேவெ கரெயுவெவு
முன்னிலை: ஒ. கரெதி கரெயுத்தீ கரெயுவீ
ப. கரெதிரி கரெயுத்தீரி கரெயுவிவு
படர்க்கை: ஆ. கரெதனு கரெயுத்தானெ கரெயுவனு
பெ. கரெதளு கரெயுத்தாளெ கரெயுவளு
பலர் கரெதரு கரெயுத்தாரெ கரெயுவரு
ஒ. கரெயித்து கரெயுத்தரெ கரெயுவுது
ப. கரெதவு கரெயுத்தாவெ கரெயுவுவு
ஏவல்: ஒ. கரெ ப. கரெயிரி
பெயரெச்சம் வினையெச்சம்
இ.கா. கரதெ கரெது
நி.கா. கரெயுவ கரயெ
எ.கா. கரெயுவ கரெயதெ
எதிர்மறை: கரெயுத
தொடர்ச்சி வினையெச்சம்: கரெயுத்தா
செயப்பாட்டு வினை: கரெயல்படு
பிறவினை: கரெயிசு
கலவைக் கால வினை
கரெது இத்தெனு = கரைந்திருந்தேன்
கரெது இருந்தேனெ = கரைந்திருக்கிறேன்
கரெது இருவெனு = கரைந்திருப்பேன்
கரெயுத்தா இத்தெனு = கரைந்துகொண்டிருந்தேன்
கரெயுத்தா இருத்தென = கரைந்துகொண்டிருக்கிறேன்
கரெயுத்தா இருவெனு = கரைந்துகொண்டிருப்பேன்
எதிர்மறை வினை
(1) பாலிடச் சிறப்பு ஒருமை பன்மை
தன்மை கரையெனு கரெயெவு நி.கா.
முன்னிலை: கரெயெ கரெயரி எ.கா.
படர்க்கை: ஆ. கரெயனு கரெயது
பெ. கரெயளு
ஒ. கரெயது கரெயவு
2. பாலிடப் பொது
இ.கா. கரெயலில்ல = நி.கா.வி.எ. + இல்ல.
கரெதுதில்ல = இ.கா.தொ.பொ. + இல்ல.
கரெதில்ல = இ.கா.வி.எ. + இல்ல.
நி.கா. கரெயுவுதில்ல = எ.கா.தொ.பெ. + இல்ல.
எ.கா. கரெயலிக்கில்ல = 4 ஆம் வே.தொ.பெ. +
இல்ல
துணைவினைகள்
அல்ல : இது மரவல்ல = இது மரமல்ல.
ஆகு : அரசனாகி, கட்டியாகி, தானாகி, ஹோயித்து=
தானாகப் போயிற்று, நோடுவதக்காகி =
பார்ப்பதற்காக, ஊட்ட வாயித்து = உணவாயிற்று, நன்னிந்தாவகுவதில்ல =
என்னாலாகுவதில்லை, பரெயலாயித்து =
வரையலாயிற்று (வரையப்பட்டது)
ஆடு : மாத்தாடு = மாற்றமாடு (உரையாடு).
ஆறு (ஆற்று): ஆறெனு = ஆற்றேன் (என்னால் முடியாது).
இல்ல : பரலில்ல = வரலில்லை (வரவில்லை), இல்ல
(No).
இரு : நோடியிரு = பார்த்திரு,
மரவிருத்ததெ = மரமிருக்கின்றது.
உண்டு : நனகெஹொலவுண்டு = எனக்குப் புலம் (நிலம்)
உண்டு.
ஒல் : ஒல்லெனு = ஒல்லென் (இசையேன்).
கூடு : கூடது = கூடாது (தகாது).
கொள் : நித்துகொள் = நின்றுகொள்.
தகு : பரத்தக்கது = வரத்தக்கது.
பல் : பல்லெனு = வல்லேன் (என்னால் முடியும்).
பேக்கு : கொடபேக்கு = கொடுக்க வேண்டும்.
பேடு : தின்னபேடு = தின்னவேண்டும்.
பேட : தின்னபேட = தின்னவேண்டாம்.
ஹொகு : ஒடது ஹோயித்து = உடைந்து போயிற்று.
சிக்கதெ ஹோதரு = சிக்காது (அகப்படாமல்)
போயினர்.
புனர்வினை
பெயரொடுவினை: கைக்கொள்ளு, காப்பாடு (காப்பாற்று), மாத்தாடு, ஈடேரு, நெறவேறு, எதுருகொள்ளு, மேல்படு, புரயேறு, செண்டாடுசு முதலியன.
வினையாகுவினை
ஆகிரு (= ஆகியிரு), உண்டாகு, கொண்டாடு, இல்லாதே
ஹோகு, பிட்டுபிடு, ஓடி ஹோகு, தெளுகொள் ஒப்பிக்கொள், கொண்டு பரு (கொண்டுவா), கொண்டு கொள்ளு, வாங்கு, பீசாடு (வீசாட்டு) முதலியன.
குறிப்புப் பெரெச்சம்
கெல (சில), ஹல (பல), கொஞ்ச, எல்லா, சன்ன (சின்ன), தொட்ட (=பெரிய), எளய (இளைய), ஹளே (பழ = பழைய), ஹொச (புது).
குறிப்பு வினையெச்சம்
தண்ணகெ (தட்பமாய்), நெட்டனெ, பக்கென (பொக்கென), பேகனெ (வேகமாய்), மெல்லனெ முதலியன.
இடைச்சொல்
கட்டிடச் சொற்கள்
ஆ, அகோ, அதோ, ஆக = அன்று, ஹாகெ (அப்படி), அந்து (அன்று), அந்த்த (அனைய), அந்த்து (அப்படி).
வினாவடிச் சொற்கள்
ஏ, ஏகெ (ஏன்), ஏன் எந்த்த (எனைய). எந்த்து (எப்படி), ஓ.
குறிப்புச் சொற்கள்
அய்யோ (ஐயோ), குய்யோ, மொர்ரோ (முறையோ), சீ, அம்மம்ம, ஜலஜல (சலசல), சும்மனெ, சுரீரென, சுறுசுறென, தளதள.
தொடர்புச் சொற்கள்
குறித்து, ஔகெ (உள்ளே), கெளகெ (கீழே), முந்தெ, ஹிந்தெ (பின்பு), ஹொரத்தெ (புறத்தே), எதுரு (எதிர்), மேலே, மேகெ, கூட, நடுவெ, பெளிகெ (வெளுக்க), முஞ்ச்செ (முந்தே), சுத்தலு (சுற்றிலும்), மொதலு, உள, கீழ், முந்தெ (முன்பு), ஹிந்தெ (பின்பு), ஹொறகெ (புறகே).
காலம்பற்றிய சொற்கள்
இன்னு (இன்று), மொன்னெ (மூன்றாம் நாள்), நின்னெ (நெருநல்), நாளெ (நாளை), நாளித்து (நாளைநின்று), ஒடனெ (உடனே).
அளவுபற்றிய சொற்கள்
மட்டி கெ (மட்டுக்கு), வரெ, வரிகூ (வரைக்கு), இன்னு (இன்னும்), மத்து (மற்று), பேரெ (வேறெ), கூட.
இணைப்புச் சொற்கள்
ஆதரெ (ஆனால்), அகலி (அகல் = அல்லது), ஆதரு (ஆனாலும்), ஆதுதரிந்த (ஆதலினாலே), உம், அல்லதெ (அல்லாதே), இல்லதெ.
விளிபற்றிய சொற்கள்.
ஓயி, ஓ, எலே.
பால்காட்டும் விகுதிகள்
ஆ.பா: அன் > அனெ, அனு, அ. காரன் > கார > ஆர.
பெ.பா: அள் > அளெ, அளு.
இ, இதி, இத்தி > வித்தி > கித்தி. அனி > இனி
பலர்பால்: அர் > அரெ, அரு. கள் > களு.
ஒ.பா: அது > து, இது, உது.
ப.பா: கள் > களு, அவை > அவெ. அவு.
தொடர்ச்சொல்
காடஜேனு (காட்டுத்தேன்), திக்கில்லாத, கண்ணீரு, நெலமட்ட, மொதலாத (முதலான), மொதலுகொண்டு…. வரெகூ, இல்லவே யில்ல, நம்பத்தக்கது, துண்டுதுண்டாகி, பேரெபேரெ (வேறே வேறே), நட்டநடுவே, ஆட்ட பாட்டகளு, ஒந்தொந்து (ஒவ் வொன்று), இன்னெந்து, மத்தொந்து (மற்றொன்று), பேரொந்து (வேறொன்று), ஒந்துவேளி (ஒரு வேளை), நடவளிக்க (நட படிக்கை), கண்ணாரெ, தலெகட்டு, அட்டுப்பு, எளநகெ (இள நகை), கடஹுட்டு (கடைக்குட்டி), கும்பட்டெ (கும்பு கட்டி), சுத்முத்த (சுற்றுமுற்றும்), கெங்கண் (செங்கண்), கெந்தளிர் (செந்தளிர்), கெந்தூள் (செந்தூள்), மழெகால, தொடெவாழை (தொடைவாழை), நாடாடி (நாடோடி), பச்சகல்லு, பட்டசாலெ, ஹலசரக்கு, ஹள்ளத நாலெ (பள்ளநாலி), ஹள்ளமட (பள்ள மடை), பன்னாடெ, பன்னீர், ஹாவாடிசு (பாம்பாட்டு), ஹாழூரு, பாளெயப்பட்டு, ஹிங்கட்டு முரிகட்டு (பின்கட்டு மறிகட்டு), பீக்காலட்ட, பெர்பசிறு (பெருவயிறு), மாலுகண் (மாறுகண்), மோடாமோடி, பிளிநரி (வெள்நரி), பச்செல, பெள்ளானெ (வெள்ளானை), பெர்படெ (பெரும் படை), பெந்நீர் (வெந்நீர்), ஹுலிதொகலு (புலித்தோல்), தாயிதந்தெகளு, அண்ண தம்மந் திரு, எந்தெந்திகூ (என்றென்றைக்கும்).
சொற்றொடர்கள்
அது யாரு? கள்ளரு ஓடி ஹோதரு (போனார்), கோலு முரிது ஹோயீத்து (முறிந்து போயிற்று), மனெகெ ஹோகுவ ஹொத் தாயித்து = மனைக்குப் போகிற பொழுதாயிற்று.
ஈ ஊரினல்லி நனகெ ஒந்து மனெயு இதே = இவ்வூரில் எனக்கு ஒரு மனை இருக்கிறது. ஹுடு கரு தோட்டதல்வி திருகாடுத்தா மரகளன்னு ஹத்தூத்தா ஹண்ணு தின்னுத்தா ஒப்பரனொப்பரு கூகுத்தா ஹெகரன்னு ஹிடிது கரையுத்தா நகுத்தா ஆடுத்தா இத்தரு = பையன்கள் தோட்டத்தில் திரிந்து கொண்டும் மரங் களில் ஏறிக்கொண்டும் பழங்கள் தின்று கொண்டும் ஒருவரை யொருவர் கூவி (கூப்பிட்டு)க் கொண்டும் பெயரிட்டுக் கரைந்து (அழைத்துக்) கொண்டும் நகைத்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர். ஹுடுகரு = பொடியர் அல்லது பிடுகர்.
நீவாகலி நானாகலி ஹோகுவதில்ல = நீங்களாகல் நானாகல் போகுவதில்லை. ஆகல் = ஆவது. நீவு ஆ கதெயன்னு ஓதிதி புஸ் தவன்னு நனகெ தோறிசிரி = நீங்கள் அக் கதையை ஓதின (படித்த) புத்தகத்தை எனக்குக் காட்டுங்கள். தோறு > கிதான்று. தோறிசிரி (பி.வி.)
நன்ன ஊரன்னு சேரிதகூடலெ நிமகெ ஒந்து காதகவன்னு பரெயுவெனு = என் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் உமக்கு ஒரு காகிதம் வரைவேன்.
மக்களெல்லரு பாடசாலெயன்னு பிட்டு, தம்ம தம்ம மன களிகெ ஹொறட்டு ஹோத பளிக்க ஜவானனு பாகிலுகளன்னு முச்சி பிடுவன்னு = மக்க (பிள்ளைக), ளெல்லாரும் பாடசாலையை விட்டுத் தம்தம் மலைகளுக்குப் புறப்பட்டுப் போன பிறகு சேவகன் வாசல்களை மூடிவிடுவான்.
நாளெவார ஊரினல்லி இருவிரோ எம்புதாகி அவரன்னு கேளு = நாளை (அடுத்த) வாரம் ஊரில் இருப்பீரோ என்பதாக அவரைக் கேள்.
மழெயு பாரதித்தரெ பெளெ யாகுவவுதில்லை = மழை வராதிருந் தால் விளை (விளையுள்), ஆகுவதில்லை.
விதைக்கிறவன் உவமை
இகோ, பித்துவவனு பித்த ஹொரட்டனு, அவனு பித்துவாக கெலவு மார்கத ஹத்தர பித்து. பஷிகளு பந்து அதன்னுதிந்து பிட்டவு. பேரெ கெலவு பஹள வண்ணு இல்லாத பண்டெஸ்தள களல்லி பித்து; அதக்கெ ஆளவாத மண்ணு இல்லத காரண, சங்கடலே மொளியித்து; ஆதரெ சூர்யனு மூடிதாக அது பெந்து அதக்கெ பேரு இல்லாததரிந்த ஒணகி ஹோயித்து. பேரெ கெலவு முள்ளுகள மேலே பித்து, முள்ளுகளு பெளெது, அணகிசிதவு, பேரெ கெலவு ஒள்ளே பூமிய, மேலே பித்து, ஒந்து நூ, ரஷ்டு, ஒந்து அரவத்தஷ்டு, ஒந்து மூவத்தஷ்டு பல கொட்டத்து, கேளுவதற்கெ கிவிகளுள்ளவனு கேளலி.
இதோ, வித்துகிறவன் வித்தப் புறப்பட்டான். அவன் வித்துகையில் சில வழியருகே விழுந்து, பறவைகள் வந்து அதைத் தின்றுவிட்டன. வேறே சில மிகுந்த மண் இல்லாதபாறை யிடங்களில் விழுந்தது. அதற்கு ஆழமான மண் இல்லாத காரணமாய் விரைந்து முளைத் தது; ஆனால் வெயில் ஏறினபோது அது வெந்து, அதற்கு வேரில் லாததால் உணங்கிப் போயிற்று, வேறெ சில முட்கள் மேலே விழுந்தது. முட்கள் வளர்ந்து அதை நெருக்கி விட்டன. வேறே சில நல்ல நிலத்தில் விழுந்து ஒன்று நூறாகவும் ஒன்று அறுபதாக வும் ஒன்று முப்பதாகவும் பலன் கொடுத்தது. கேட்கிறதற்குச் செவிகளுள்ளவன் கேட்கக்கடவன்.
குறிப்பு: மெய்மறை (சத்திய வேதம்) என்னும் கிறித்தவ மறையின் மொழிவடை விடைத்தொண்டராதலால், மேற்கூறிய உவமை யில் அஃறிணைப் பன்மையெழுவாய்கள் ஒருமை வினையொடு முடிந்தன; பன்மைச் சொற்கு ஒருமைச் சொல் வந்தது. (தி.தா.)
கன்னம்
கன்னம் - கர்ண
கல் - கன் = துளை. கன் - கன்னம் = 1. துளையுள்ள காது, 2. யானைச் செவி (திவா.). 3. காதையடுத்த அலகுப் பக்கம். ம. கன்னம், க. கன்ன.
வடவர் காட்டும் க்ருத், க்ரூ என்னும் மூலங்கள் பொருந்தா.
க்ருத் = 1. செய்துகொண்டு, 2. சிதைவு, 3. திருகு, சுற்று.
க்ரு = 1. கொட்டு, எறி, சிதறு. 2. சிதை, 3. அறி, அறிவி. (வ.வ: 112)
கன்னி
கன்னி - கன்யா (இ.வே.)
கன்னுதல் = பழுத்தல். கன் - கன்னி - கனி = பழுத்தது, பழம்.
கன்னி = பழுத்தவள், பூப்படைந்தவள். Mature என்னும் ஆங்கிலச் சொல்லை நோக்குக.
கன்னி - கன்னிகை = பூப்படைந்த இளைஞை.
கை என்பது இங்குச் சிறுமைப் பொருட் பின்னொட்டு. (வ.வ: 112)
கன்னிகை
கன்னிகை - கன்யகா
வடவர் காட்டும் கன் என்னும் மூலம் பல பொருளொரு சொல்லும் பொருத்தாப் பொருட் சொல்லும் ஆகும்.
கனம் - கன (gh)
கல் - கன் = 1. fš (Nlh.), 2. உறுதிப்பாடு (ஈடு, 5: 8: 3).
கன் - கன. கனத்தல் = பளுவாதல், மிகுதியாதல், பருத்தல், குரல் தடித்தல்,
பெருமையுறுதல். (வ.வ:)
கன - கனம் = பளு, பருமன், பெருமை, செறிவு, திரட்சி, உறுதி, மிகுதி, கூட்டம்,
மும்மான வடிவு.
பொதுவாகக் கனத்திற்கு எடுத்துக் காட்டாகச் சொல்வது கல்லே. கல்லைப்போற் கனக்கிறது என்பது உலக வழக்கு. பண்டை நாளிற் கனத்த எடைக்கெல்லாம் கல்லையே பயன்படுத்தியதால், படிக்கல் என்னும் வழக்கெழுந்தது. இங்கிலாந்திலும் அவ்வழக்க மிருந்ததை stone (14 பவுண்டு) என்னும் சொல் உணர்த்தும்.
வடமொழியில் கனத்தல் என்னும் வினையில்லை. மா.வி. அகர முதலி காட்டியிருக்கும் ஹன் (கொல்) என்னும் மூலம், வட மொழியிற் கன என்னும் சொற்குள்ள பல்வேறு பொருள்களுள் ஒன்றற்குத் தான் ஏற்கும். (வ.வ. 121-113)
கனி வகைகள்:
காய் தெங்கு பூசணி முதலியவற்றின் கனி;
கனி முந்திரி நெல்லி முதலியவற்றின் கனி; (கனிவாயிருப்பது);
பழம் மா வாழை முதலியவற்றின் கனி (பழுப்பு நிறமானது);
நெற்று வேர்கடலை போன்றதின் முதிர்வு;
காயப்பழம் பழுக்கத் தொடங்கிய காய்;
ஓதப்பழம் புளியின் காய்ப் பழம். (சொல்: 68)
கா
கா - கா (இ.வே.)
கவ - கவர்தல் = விரும்புதல், கவர்வு விருப்பமாகும். (தொல் 845). கவ - கா - காதல் = விருப்பம், அன்பு.
கா (வ.) = விரும்பு, அவாவு, அன்புகூர்
வடமொழியார் கன் என்பதை மூலமாகக் காட்டுவர்
காம் - கம் - கன் என்று திரிந்திருக்கலாம். (வ.வ: 112)
காக்கை
காக்கை - காக்க
காகா - காக்கா - காக்கை. காகா - காகம்
ஆரியம் தோன்றுமுன்பே காக்கை என்னும் சொல் குமரிக் கண்டத்தில் தோன்றிவிட்டது. (வ.வ: 112) (தி.ம. 740)
காசா
காசா - காசர
காசா = எருமை.
காய் (ஒளிவீசு) என்னும் தென்சொல்லின் திரிபான காச் என்னும் வட சொல்லோடு ஆ என்னும் முன்னொட்டுச் சேர்த்து, ஆ - காச என்றமைத்து, விளங்குவது, தெரிவது, வெற்றிடமாயிருப்பது என்று பொருட் காரணங் கூறி, வானத்தைக் குறிப்பர் வடவர். முன்னொட்டிற்குப் பொருளேயில்லை. (வ.வ. - 116)
காஞ்சி
காஞ்சி = காஞ்சீ
காஞ்சி = ஆற்றுப் பூவரசு, அம்மரம் சிறந்த பழந்தொண்டை நாட்டுத் தலைநகர்.
காஞ்சி - கஞ்சி - கச்சி
காஞ்சிபுரம் = கோபுரமுள்ள காஞ்சிநகர். புரம் என்பது பண்டைத் தமிழகத்திற் கோபுரமுள்ள நகர்ப் பெயரீறு.
காஞ்சி2 - காஞ்சீ
காஞ்சி = எழுகோவையுள்ள மாதர் அரைப்பட்டிகை.
எண்கோவை மேகலை காஞ்சி யெழுகோவை
பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள்
பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு
விரிசிகை யென்றுணரற் பாற்று
என்பது பழைய மேற்கொள் வெண்பா.
காஞ்சி
ஐவகை அரைப்பட்டிப் பெயர்களுள், காஞ்சி, மேகலை, கலாபம் என்னும் மூன்றும் வடநூலுட் புகுந்துள்ளன. அதனால் அவை வட சொல்லென்று காட்டப்படுகின்றன. ஆயின், அங்குச் சிறப்புப் பொருளையிழந்து அரைப்பட்டிகை என்னும் பொதுப் பொருளே தருகின்றன. (வ.வ. : 113-114)
காட்டுவகை
மிளை அல்லது இளை காவற்காடு;
இறும்பு குறுங்காடு;
வல்லை பெருங்காடு;
முதையன் பழங்காடு;
பொச்சை கரிந்த காடு. (சொல் 73.)
காண்
காண் - ஜ்ஞா (இ.வே.)
தமிழ் பழைய ஆங்கிலம் இலத்தீனம் கிரேக்கம் வேத ஆரியம் கண், கான், கன், கென் க்னோ (g) க்னோ (g) ஜ்ஞா கொன், க்னோ
இவ்வொரு சொல்லே, தமிழ் எங்ஙனம் ஆரியத்திற்கு மூலமென் றும், வேத ஆரியம் எவ்வளவு திரிந்துள்ளதென்றும், காட்டப் போதியதாம். (வ.வ. - 114)
காண்டம்
காண்டம் - காண்ட (வே.)
கண்டு - கண்டம் = பெருந்துண்டு, பெருநிலப்பிரிவு.
கண்டம் - காண்டம் = நூற்பெரும் பிரிவு.
கண்டம் என்னும் சொல்லை hkanda என்றும், காண்டம் என்னும் சொல்லை kanda என்றும், முதலெழுத்தை வேறுபடுத்தி வடமொழியாளர் மயக்கியிருக்கின்றனர். (வ.வ. - 114)
காணிக்கை
குன்றக்குறவர் செங்குட்டுவனுக்கு முன் படைத்தவை போன்றவை காணிக்கை. (குறள் 756)
காதல்
காதல் என்பது, ஒருவரையொருவர் இன்றியமையாக் கழிபெரு நேயமாய் இருவரிடை நிகழ்வது. அது, கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் போலும் நண்பரிடத்தும், பெற்றோரும் பிள்ளையும் போலும் உறவினரிடத்தும், பூத பாண்டியனும் அவன் தேவியும் போலும் கணவன் மனைவிய ரிடத்தும் அமைவது, அது அரிய பிறவிக் குணம். (த.தி.முன் VII)
காதல் பொருத்தம்
மணமக்கட்கு முதன்மையாக வேண்டும் பொருத்தம் இதுவே. இஃதில்லாவிடின், ஏனைச் சிறப்பெல்லாமிருந்தும் ஏதும் பயனில்லை. ஆதலால், மணமக்கள் இசைவு பெற்றே அவர் பெற்றோர் அவர்க்கு மணஞ் செய்து வைத்தல் வேண்டும். (த.தி. 43)
காதல்மணம்
காதல் மணமாவது, ஓர் ஆடவனும் ஒரு பெண்டும் பெற்றோரைக் கேளாதும் பிறருக்குத் தெரியாதும் ஒருவரையொருவர் காதலித்து, தாமே கணவனும் மனைவியுமாகக் கூடிக் கொள்வது. (த.தி.6)
காந்தி
காந்தி - காந்தி (nt)
காள் - காய் - (காய்ந்து) - காந்து. காந்துதல் - எரிதல்போல் நோதல், ஒளிவிடுதல், மிகச்சுடுதல், சோறு முதலியன பற்றிக் கருகிப் போதல், எரிதல்போல் உறைத்தல், மிளகாய் போன்ற காரமான பொருள் உடம்பிற்பட்டு எரிச்சலெடுத்தல்.
காந்து - காந்தி - கடுவெப்பம், ஒளி. (வ.வ. - 114)
காந்து
காந்துதல் - எரிதல். எரிதல் நெருப்பின் தொழில். சுடுதல், விளங்குதல், ஒளி வீசுதல், சிவத்தல், எரித்தல், எரிவெடுத்தல், உலர்தல், உறைத்தல், சினத்தல் முதலியன எரிதற் கருத்தினின்று கிளைக்குங் கிளைக் கருத்துகளாம்.
உல் - குல் - குல - குலவு, குலவுதல் = விளங்குதல். குலவு கோலத்த கொடி நெடு மாடங்கள் (தேவா. 794:7)
குல் - கல் - கன் - கனல். கனலுதல் = 1. எரிதல். வேமிருந்தையெனக் கனலும் (கம்பரா. சூர்ப்ப. 118). 2. கொதித்தல். தீப்போற் கனலுமே (நாலடி. 291). 3. சுடுதல். வயிற்றகங் கனலுஞ் சூலை (பெரியபு. திருநா. 62). 4. சினத்தல். மாமுனி கனல மேனாள் (கம்பரா. நீர்விளை. 2). 5. சிவத்தல். கண்கனன்று……neh¡FjY«” (பு. வெ. 6 :23).க. கனல், தெ. கனலு.
கனல் = நெருப்பு. உழிதரு காலுங் கனலும் (திருவாச. 5 : 8).
k., க. கனல்.
கன் - கனம் = விளங்கும் பொன். கனங்குழாய் (கலித். 57).
கனல் - கனலி = 1. நெருப்பு. (திவா). 2. கதிரவன். வெங்கதிர்க் கனலி (புறநா. 41 : 6).
கனன் மரம் = இரவில் ஒளிர்வதாகச் சொல்லப்படும் ஒளி மரம் (சங். அக).
fdÅw¡fš = kh¡f« (W)., செந்நிற ஒளிக்கல்.
கனல் - கானல் = 1. வெப்பம். இங்கே கானலடிக்கிறது. 2. கதிரவன் கதிர். (திவா). 3. ஒளி. தேங்கு கானற் கிளிச் சிறை (இரகு. நகர. 67). 4.ngŒ¤nj®. (திவா).
கன் - fன்று.f‹Wjš = 1. வெÆy‰ கருகுதல். க. கந்து. 2. சினக் Fறிப்புக்bfள்ளுதல்.(திவா.). 3. மனமுருகுதல். கலையின்ãணைfன்றிடுமென்று(Óவக.1188). 4.tUªJjš “நெஞ்சுf‹றக்கÉgடுகிற (பி.டு.3: 9 : 6). 5.thLjš. “த‹Dl«ò கன்றுங் கால் (திரிகடு. 91).
குன் - கும் - கும்மட்டி = நெருப்பு வைக்குஞ் சட்டி. (திவ் திருக்குறுந். 5, வ்யா.). ம. கும்மட்டி.
கும்மாயம் = 1. குழைய வெந்த பருப்பு. பயற்றுந் தன்மை கெடாது கும்மாய மியற்றி (மணி. 27 : 185). 2. நீற்றின சுண்ணாம்பு. ம. கும்மாயம்.
குமஞ்சம் = நறும்புகைச் சரக்கு. (W). குமஞ்சான்
கும் = கும்பு. கும்புதல் = சமைக்கும் உணவு தீய்ந்து போதல். சோறு கும்பிவிட்டது.
கும்பனாற்றம் = தீய்ந்து போன உணவின் வீச்சம்.
கும்பு = கும்பி = 1. சுடுசாம்பல். தெ. கும்மு. 2. நரகம் கும்பி நரகர்கள் (திவ். திருவாய். 3 : 7 : 9).
கும்பிடு சட்டி = 1. கணப்புச் சட்டி. 2. தட்டார் நெருப்பு வைக்குஞ் சட்டி. (W).
தெ. கும்பட்டி. க. கும்பட்டே.
குல்-குள்-கொள்-கொள்ளி = 1. நெருப்பு. கைக் கொள் கொள்ளியர் (நெடுநல். 8). 2. கொள்ளிக் கட்டை. புனவர் கொள்ளியில் (ஐங்குறு. 295). 3. பொறாமையும் முன் சினமு முள்ளவன். 4. கலக மூட்டுபவன். 5. கொள்ளி வைக்கும் மகன் (திருநெல்).
k., க.து. கொள்ளி.
கொள்ளாக் கொள்ளி = அடங்காப் பசியன், யானைத் தீயன்.
கொள்ளிக் கண் = தீய கண்.
கொள்ளிக் கால் = 1. ஒரு கால் வெளுத்திருக்குங் குதிரைக் குற்றம். நஞ்சபரதம் கொள்ளிக்கால் வெள்ளிக் கண் (திருவாத. பு. குதிரையிட். 35). 2. ஆக்கங்கெட்ட (துரதிட்டமுள்ள) கால். அவன் கொள்ளிக் காலன்.
கொள்ளித்தேள் - கடுமையாகக் கொட்டுந் தேள்வகை. வெங் கொள்ளித் தேள் போன்ற வினை (அருட்பா, II, எழுத்தறி. 28).
கொள்ளி வைத்தல் = ஈமக் கட்டையில் எரி மூட்டுதல்.
கொள் - கொளுந்து. கொளுந்துதல் = எரிதல். தீக் கொளுந் தினவுந் தெரிகின்றலர் (கம்பரா. இலங்கையெரி. 5).
கொளுந்து - கொளுத்து (பி.வி.). கொளுத்துதல் = எரித்தல். ஊர் முழுவதையுங் கொளுத்திவிட்டார்கள்.
விளக்குக் கொளுத்துதல் = விளக்கை எரிய வைத்தல்.
குள் - குர் - குரு. குருத்தல் = சினத்தல்.
குரு - வ. குருத் (Krudh) - க்ரோத - குரோதம் = சினம்.
குரு = 1. ஒளி. குருமணித்தாலி (தொல். சொல். 303, உரை). 2. நிறம். குருவுங் கெழுவும் நிறனா கும்மே (தொல்.உரி. 5). 3. சிவப்பு. 4. மாழைகளை (உலோகங்களை) மாற்றும் சிந்துரம்.
குரு - குருதி = 1. சிவப்பு. குருதித் துகிலின் னுறையை (சீவக. 926). 2. அரத்தம் (திவா.). 3. செவ்வாய். (திவா). ம. குருதி.
குருதிக் காந்தள் = செங்காந்தள். (சீவக. 1651, உரை).
குருதிக் கிழமை = செவ்வாய்க் கிழமை. புதிய சீலை…. குருதி வாரந் தனக்குக் கொஞ்ச நாளிற் கிழியும். (அறப். சத. 61).
குரு - குருந்து = குருந்தக்கல். (W).
குருந்து - குருந்தம் = குருந்தக்கல், மாணிக்க வகையுள் ஒன்று.
குருந்தம் - குருவிந்தம் - வ. குருவிந்த.
குரு வெறும்பு - செவ்வெறும்பு, முசிறு.
குள் - குழு - கெழு = நிறம். குருவுங் கெழுவும் நிறனாகும்மே (தொல். உரி. 5).
ஒ.நோ. : குழு (குழுவு) - குழுதகை - கெழுதகை.
கெழு - கேழ் = 1. ஒளி. நயங்கேழ் பெருவள நல்குநல்லூர (தஞ்சைவா. 392). 2. நிறம். ஒண்கேழ் நூற்றிதழலரி (புறநா. 27).
கேழ் - கேழ்ப்பை = கேழ்வரகு . கேழ்வரகு = செந்நிற வரகு வகை.
குள் - கள் - காள் - காளம் - சுடுகை.
காளவனம் = சுடுகாடு. (சூடா.)
காளவாய் = சுண்ணாம்புக்கல் சுடும் சுள்ளை.
காளவாய் - காளவாயல் - காளவாசல். காளவாய்க்கல் = சுள்ளையி னின்று வந்த புதுச் செங்கல்.
L. Calor, hear, E. Caloric, heat.
காள் - காழ் = 1. ஒளி. (திவா.). 2. ஒளிக்கல். பருக்காழுஞ் செம்பொன்னும் (பு. வெ. 9 : 14). 3. முத்து. பரூஉக்காழாரம் (சிலப். 4 : 41). 4. பளிங்கு. (பிங்). 5. மணிவடம். முப்பத்திரு காழ் (சிலப். 6 : 87).
காழ் - காசு = 1. பொன். (ஆ. நி.) 2. பொற்காசு. 3. காசுமாலை. காசும் பிறப்புங் கலகலப்ப (திவ். திருப்பா. 7) 4. ஒரு பழைய பொற்காசு. 5. சிறு செப்புக் காசு. நெஞ்சேயுனையோர் காசா மதியேன் (தாயு. உடல் பொய். 72). 6. காசுப்பொது. எப்பேர்ப்பட்ட பல காசாயங்களும் (S.I.I. i. 89). 7. மணி. நாண்வழிக் காசு போலவும் (இறை. 2, உரை). 8. மேகலை. பட்டுடை சூழ்ந்த காசு (சீவக. 468). 9. வெண்பாவின் இறுதிச் சீர் வாய்பாடுகளுள் ஒன்று. ஓரசைச் சீரும் ஒளிசேர் பிறப்புமொண் காசு மிற்ற சீருடைச் சிந்தடியே முடிவாம் (யாப். காரிகை. நூற். 7).
கள் - கண் - கண - கணம் = சூடு, கணைநோய்.
கணமாந்தம் = காய்ச்சலோடு கூடிய மாந்த நோய்.
கண - கணப்பு = 1. குளிர்காயுந் தீ. 2. கணப்புச் சட்டி.
கண - கணத்தி = செங்கடம்பு.
கண கணத்தல் = உடம்பு சூடாயிருத்தல். உடம்பு கண கணக்கிறது.
கண - கணை = 1. சூட்டுநோய். 2. கால்நடை நோய்களுள் ஒன்று.
கள் = கடு. கடுத்தல் = 1. உறைத்தல். 2. வயிற்றுளைச் சலிற் காந்து தல். வயிற்றுக் கடுப்பு. 3. சிறுநீர் துளி துளியாகச் சிறுத்து மிகச் சுடுதல், நீர்க்கடுப்பு. 4. நோவுத்திறம் மிகுதல். தேட்கடுப்பு (புறநா. 392).
கடு - கடுப்பு = 1. எரிநோவு. கடுப்புடைப் பறவைச்சாதி (பெரும் பாண். 229). 2. வெகுளி. கடுநவை யணங்குங் கடுப்பும் (பரிபா. 4: 49).
கடு - கடுமை = 1. வெம்மை (கலித். 12 : 5, உரை). 2. சினம். (சிலப் . 5: 55, உரை). 3. கண்டிப்பு. 4. கொடுமை (சூடா). 5. முரட்டு வெறித் தனம்.
கடு = 1. கார்ப்பு. (சூடா.) 2. துவர்ப்பு (மூ.அ.). 3. கடுக்காய். கடுக் கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பில் (மலை படு 14). 4. கடுநோவு, கடுத்திற வாலி.
கடு - கடுகு = காரமுள்ள விதை. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? (பழ).
கடுகு - கடுகம் = 1. கார்ப்பு. (திவா.) 2. சுக்கு மிளகு திப்பிலி யென்னும் காரமுள்ள முச்சரக்குள் ஒன்று. 3. முக்கடுகம் போன்ற மூவறநெறிகளைப் பாட்டுத் தோறுங் கூறும் நூல். கடுகங் கோவை பழமொழி மாமூலம் (தனிப்பா.) ஒ.நோ. : உலகு உலகம்.
கடுகம் - வ. கடுக. (katuka).
கடுகு - கடுக்கு. கடுக்குதல் = சினக் குறிகாட்டுதல். ராம தூதனா னென்று கடுக்கி (இராமநா. உயுத். 62).
கடுக்கெனல் - கடுமைக் குறிப்பு. கடுக்கெனச் சொல்வற்றாம் (நாலடி. 348).
கடு கடுத்தல் = 1. சினக்குறிப்புக் காட்டுதல். முகங் கடுகடுத்தான் (பிரபோத. 11 : 46). 2. மிகவுறைத்தல். 3. விறுவிறுப்போடு வலித்தல்.
கடுமான் = அரிமா (சிங்கம்). கடுமான் கீழ்ந்த கடமலை (கல்லா. 67 : 16).
கடுவன் = கடுமையான ஆண் விலங்கு. குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும் (தொல். மர. 69); fLt‹ óid (âth.); கடுவன் பன்றி (குறவர் வழக்கு).
கடு - காட்டம் = உறைப்பு. தெ. காட்டு (gatu).
கடு - கடி = 1. விளக்கம். அருங்கடிப் பெருங்காலை (புறநா.
166: 24). 2. சிறப்பு. அருங்கடி மாமலை தழீஇ (மதுரைக். 301).
3. காவல். கடியுடை வியனக ரவ்வே (புறநா. 95 : 3). கடிமரத்தாற் களிறணைத்து (பதிற்றுப் 33 : 3). 4. கார்ப்பு. கடிமிளகு தின்ற கல்லா மந்தி (தொல். சொல். 394, உரை.)
கடி - கரி. கரித்தல் = 1. உறுத்தி வலித்தல். எண்ணெய்பட்டுக் கண் கரிக்கிறது. 2. வெறுத்தல். கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை (திருமந். 2431).
கரி - கரிப்பு = காரம். ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே (தொல். உரி. 86).
கரி - கார் - காரம் = 1. உறைப்பு (சூடா). 2. கார்ப்புப்பு. (W). 3. சாம்பலுப்பு. 4. சீலைக்காரம். 5. சாயக்காரம். 6. சீனிக்காரம். 7. வெண்காரம். 8. அக்கர காரம். (தைலவ. தைல. 112). 9. ஒரு செயற்கை நஞ்சு (கோளக பாடாணம்). (சங். அக.) 10. திருநீறு. காரமென்றுரைப்பர் (திருக் காளத். பு. 26 : 4). 11. சினம். அவன் என்மீது காரமாயிருக்கிறான்.
காரசாரம் = 1. வேண்டிய அளவாக அமைத்த காரச்சுவை. காரசாரஞ் சேர் சாற்றிலே கலந்த சோற்றிலே (அருட்பா. vi. அவாவுறுப்பு. 2). 2. வினைத்திறமை. அவன் பேச்சில் ஒன்றுங் காரசாரமில்லை.
கார மருந்து = 1. பிள்ளை பெற்ற பெண்களுக்குக் கொடுக்கும் காரமருந்து. 2. தோலை எரித்துத் தின்னும் மருந்து.
கார் - கார்த்தல் = உறைத்தல் (பிங்).
கார் - கார்ப்பு = உறைப்பு (சூடா).
காரம் - வ. க்ஷார. இத் திரிவைப் பல்கலைக்கழக அகர முதலி (Lexicon) தலை மாற்றிக் குறிக்கின்றது.
ம. காரம். தெ. காரமு. f., து. கார.
காள் - காய். ஒ.நோ. : மாள் - மாய்.
காய்தல் (செ.கு.வி) = 1. வெயில் எறித்தல். கதிரவன் எரிதல். வெயில் காய்கிறது. 2. நீர் முதலியன காய்ச்சப்படுதல். வெந்நீர் காய்கிறது. 3. சுடுதல். அவனுக்கு உடம்பு காய்கிறது. 4. ஒளி வீசுதல். நிலாக் காய்கிறது. 5. பசித் தீயால் வருந்துதல். காலையிலிருந்து எனக்கு வயிறு காய்கிறது. 6. விடாய்த்தல். காய்தலு முண்டக் கள்வெய் யோனே (புறநா. 258). 7. பொருள் உலர்தல். புழுங்கல் காய்கிறது. 8. புண் ஆறுதல். புண் காய்ந்து வருகிறது.
(செ. குன்றாவி). 1. எரித்தல். மதவேள் தன்னுடலங் காய்ந்தார். (தேவா. 15 : 6), காமனைக் காய்ந்த கண்ணன் 2. அழித்தல். கஞ்சனைக் காய்ந்தானை (திவ். பெரியதி. 7 : 6 : 5). 3. விலக்குதல். கோப முதலிய குற்றங்காய்ந்தார் (பெரியபு. அப்பூதி. 2) 4. வெகுளு தல். காய்தலு முவத்தலும் தொல். கற்பியல், 6). 5. கடிந்து கூறுதல். கறுத்தெழுந்து காய்வாரோடு (நாலடி. 315). 6. வெறுத்தல். காய்தலுவத்த லகற்றி யொரு பொருட்க ணாய்தல் (அறநெறி. 22). 7. வருந்துதல். காய்கின்ற பழவினை போம் (குற்றா. தல. நூற்பய. 15).
k., க. காய், தெ. காயு. து. காயி.
காய் - காய்கை - காகை - காங்கை = வெப்பம், சூடு. திருச்சியைவிட மதுரை காங்கையான இடம்.
தெ. காக (kaka), க. காங்கெ (kanke)
காய் - வ. காச் (kas)
ய - ச, போலி, எ-டு: இயை - இசை, நெயவு - நெசவு, நேயம் நேசம், வாயில் - வாசல்.
இங்ஙனம் யகர சகரப் போலியால், ஒளி வீசுதலைக் குறிக்கும் காய் என்னும் தென்சொல் வடமொழியில் காச் (kas) என்று திரிந் துள்ளது. வடமொழியில் இச் சொல்லிற்கு வேரில்லாம லிருப்பத் துடன், இதிலுள்ள சகரம் தமிழ்ச் சகரமாயிருப்பதும், கவனிக்கத் தக்கது. ப்ர என்னும் முன்னொட்டுப் பெற்று, இச்சொல் ப்ரகாச் என்று பெரிதும் வழங்குகின்றது.
காய் - காய்ச்சல் = 1. வெயில், வெப்பம். 2. சுரநோய். 3. உலர்ச்சி. புதுநெல்லை இரண்டு காய்ச்சல் போட்டுக் குத்த வேண்டும். 4. மனவெரிச்சல், பொறாமை.
காய்ச்சுக் கட்டி = இளநீரிற் பாக்கு நறுமணச் சரக்குகள் முதலியன சேர்த்துக் காய்ச்சிய துவர்க்கட்டி.
காய்ச்சுக் கட்டி - காசுக் கட்டி.
காய் - காயம் = 1. குழம்பில் வெந்த கறித்துண்டு. நெய்கனி குறும்பூழ் காயமாக (குறுந். 389). 2. உறைப்பு. (பிங்). 3. மிளகு. காயத்தின் குழம்பு தீற்றி (சீவக. 788). 4. கறிக் கூட்டுச் சரக்கு. காயங்களான் இனிய சுவைத்தாக்கி (குறள். 233, பரி. உரை). 5. வெள்ளுள்ளி. காயமுங் கரும்பும் சிலப். 23 : 45). 6. பெருங்காயம். 7. கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம் ஆகிய ஐங் காயம் (தைலவ. தைல. 135) 8. காய மருந்து.
ம. காயம். தெ. காயமு.
காய மருந்து = கருவுயிர்த்தவளுக்குக் கொடுக்கும் காரமருந்து.
காய் - காய்து - காய்ந்து - காந்து. ஒ.நோ : வேய் - வேய்ந்தான் - வேய்ந்தன் - வேந்தன் = முதற் காலத்தில் முடியணியும் உரிமையைச் சிறப்பாகக் கொண்ட பேரரசன். கொன்றை வேய்ந்தான் - கென்றை வேய்ந்தன் - கொன்றை வேந்தன் = கொன்றை மாலை யணிந்த சிவன்.
காந்துதல் = (செ.கு.வி.) 1. திகழ்தல் (பிரகாசித்தல் பரம்பிற் காந்து மினமணி (கம்பரா. நாட்டுப். 7). 2. வெப்பங் கொள்ளுதல்.
3. கருகுதல். சோறு காந்திப் போயிற்று. 4. எரிவெடுத்தல். புண் மருந்து காந்துகின்றது. 5. மனங்கொதித்தல். புத்திபோய்க் காந்து கின்றது (கம்பரா. சடாயுகா. 37). 6. பொறாமை கொள்ளுதல். மூத்த குடியாள் இளைய குடியாளைக் கண்டு காந்துகிறாள். - (செ. குன்றாவி). 1. சுடவைத்தல். (யாழ்ப்). 2. சுவறச் செய்தல். (யாழ்ப்). 3. சினத்தல். காந்தி மலைக்குத்து மால்யானை) (வள்ளுவமாலை,11).
காந்து - காந்தல் - காந்தள் = விளக்கெரிவது போல் விளங்கித் தோன்றும் கோடற்பூ (கார்த்திகைப் பூ). 2. காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடுதலைக் கூறும் புறத்துறை. வேலன் வெறியாட்ட யர்ந்த காந்தளும் (தொல். புறத். 5). 3. முருகனுக்குச் சிறப்பாக வுரிய காந்தளைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை.
கருங் கடலுள் மாத்தடிந்தான்
செழுங் காந்தட் சிறப்புரைத்தன்று (பு.வெ. 6 : 9)
காந்து - காந்தாளம் = சினம். (W).
காந்து - காந்தாளிகம் = சின்னி (Indian shrubby copper leaf).
காத்து - காந்தி = 1. ஒளி (சூடா). 2. அழகு. (பிங்). 3. ஒளிக்கதிர். (W). 4. வெப்பம். (மூ.அ.). 5. காவிக்கல் (W).
காந்த - காந்துகம் = வெண் காந்தள்.
காந்தள் என்பது முதலிற் செங்காந்தளைக் குறித்துப் பின்னர் இரு காந்தட்கும் பொதுவாகி யிருக்கலாம். சேயோனான முருகனுக்குச் செங்காந்தளே சிறப்பாக ஏற்கும்.
fhªJ - L. Candeo, to glow with heat, to shine, glitter, to be of a shining white.
இலத்தீன் வினைச் சொற்களைத் தன்மை யொருமையீறாகிய ‘o’ அல்லது நிகழ்கால வினையெச்ச வீறாகிய ‘re’ சேர்த்துக் குறிப்பது மரபு. இவற்றை நீக்கின், எஞ்சி நிற்பது வினை முதனிலையென அறிக.
L. candela, a wax or tallow candle, AS. candel OE. candel, AN, OF, candel (I)e E. candle (f. candere, to glow), cylinder of wax, tallow spermaceti, cte., enclosing wick, for giving light.
L. candidus, shining white, white, candidum, n. white colour, a. honest, straight forward. E. candid, white, fair, sincere, honest, E. candescent, glowing with white heat, f. L. candeseere, f. candere, be white.
L. candidatus, clothed in white; a candidate for office, who among the Romans was always clothed in white, for the consulship. E. candidate, one who offers himself or is put forward to be elected to an office, orig. white-robed.
L. Candor, whiteness, sincerity, E. candour, openmindedness, frankness, impartiality.
E. chandler, dealer in candles, M.E., AF. chandeler, OF. chandelier f. L. candela.
இலத்தீனில் தகர முதற் சொல்லாயிருந்தது, பிற்காலத்தில் ஆங்கிலப் பிரெஞ்சு மொழியிலும் இடையாங்கிலத்திலும் சகர முதற் சொல்லாகத் திரிந்து விட்டமையை நோக்குக. இச் சகர முதற் சொல்லே வேத மொழியிலும் சமற்கிருதத்திலும் முதலுயிர் குறுகியும் குறுகாதும் உள்ளது.
Skt. cand, to shine, be bright; to gladden.
canda. the moon, L.
candaka, pleasing, W; the moon W., moon light W.
candira, the moon, Bham, ii, 120.
canddra, glittering, shining (as gold), having the brilliancy or hue of light (said of gods, of water [R.V. x. 121, 9; TS. vi] & of Soma), RV.; VS., TS. vi; TBr. 1; m. the moon.
candra, lunar.
scand, to shine.
scandra, shining, radiant.
இங்ஙனம் திகழ்தலையும் திகழும் திங்களையும் குறிக்கும் வட சொற்கள், காந்து என்னும் தென்சொல்லை அடிமூலமாகவும், இலத்தீன் வழியாக வந்த திரிசொல்லை நேர்மூலமாகவும், கொண்டனவாயிருத்தல் காண்க.
ஒ. நோ : திகழ் - திங்கள், தகம் - தங்கம், திகள் என்னும் வடிவம் இறந்துபட்டது. புரள் - பிரள் - பிறழ் என்னும் திரிபில் இடைப் படுசொல் இறந்து பட்டமை காண்க.
தகுதல் - எரிதல், விளங்குதல், தகதக வென்று சொலிக்கிறது என்னும் வழக்கை நோக்குக. (செ.செ.)
காப்பு நாண்
மண வினைகள் தொடங்கு முன்பே, மணமகனுக்கும், மண மகளுக்கும், முறையே, வலக்கையிலும் இடக்கையிலும் காப்பு நாண் கட்டப்பட்டிருக்கும். மணவிழா முடியும் வரை மண மக்கட்குப் பேயாலும் பிறவற்றாலும் எவ்வகைத் தீங்கும் நேரக் கூடாதென்பதே, அதன் நோக்கம். காப்பு தீங்கு வராமற் காத்தல். முதற்காலத்தில் குளிசம்போற் கட்டப்பட்ட காப்பு நாணே, பிற் காலத்தில் அப்பெயருள்ள அணியாக மாறிற்று. (த.தி. 22, 23.)
காமம்
காமம் - காம (இ.வே.)
கவ - கவர்வு = விருப்பு. கவ - கா – காதல்
கா + அம் = காம் = விருப்பம், காமம். காம் + உறு = காமுறு. காமுறுதல் = 1. விரும்புதல்.
காமுறுவர் கற்றறிந்தார் (குறள். 399) 2. வேண்டிக் கொள்ளுதல்.
கனைகதிர்க் கனலியைக் காமுறுத லியைவதோ (கலித். 16).
ஒ.நோ: வேள் - வேண்டு. 3. புணர்ச்சி விரும்புதல். காமுற்றாரேறு மடல் (குறள். 1133).
காம் + மரு (மருவு) = காமரு = விருப்பம் பொருந்துகின்ற, விரும்பத்தக்க.
காமரு குவளைக் கழுநீர் மாமலர் (சிலப். 4 : 40)
காமரு - காமர் = 1, விரும்பத்தக்க காமர் கடும்புனல் (கலித். 39). அழகிய.
காமர் வண்ண மார்பில் (புறம் 1:1)
காமரு என்பதைக் காம்வரு என்று பிரிப்பதினும், காம் மரு என்று பிரிப்பதே சிறந்ததாம். காம் - காமி - காமமுள்ளவன் - ள் காமித்தல் = விரும்புதல், காமங்கொள்ளுதல்.
காம் + அம் = காமம் = 1. விருப்பம்.
காமம் வெகுளி மயக்கம் (குறள். 360). 2. ஓரம் (பக்கபாதகம்)
காமஞ்செப்பாது கண்டது மொழிமோ (குறுந். 2) 3. கணவன் மனைவியர் காதல், காமத்துப்பால் 4. புணர்ச்சி விருப்பம்.
காமஞ்சாலா இளமையோள் (தொல். 996). 5. புணர்ச்சியின்பம். காமத்திற் செம்பாகமன்று (குறள். 1092).
வடவர் காட்டும் கம் என்னும் மூலம் காம் என்பதன் குறுக்கமே. (வ.வ. 114 : 115)
காமவின்ப நிலை
காம வின்பம் ஊடல் புலவி துனி என்னும் மூவகைச் சடைவு நிலையிலும் முறையே கன்னற்காய், பழம், அளியல் என்னும் மூவகைப் பதன் கொள்ளும். பழுக்காத கன்னற்காய்ப்பழம், மிகப் பழுத்த அளியற் பதமும் சுவையின்றி வலுத்தும், சுவைகெட்டு அளிந்தும், இருக்குமாதலின் இடைநின்ற கனிப்பதமே மென்மை யும் இனிமையும் கொண்டு இன்பந் தருவதாம். (தி.ம. 1306.)
காய்
காய் - காச்
காள் - காளம் = சுடுகை. காளவனம் = சுடுகாடு.
காளவாய் - சுண்ணாம்புச் சுள்ளை.
காள் - காய். காய்தல் = எரிதல், சுடுதல், ஒளி வீசுதல். உலை காய்தல், நிலாக் காய்தல் என்னும் வழக்குக்களை நோக்குக.
காய் - காய்ச்சு. காய்ச்சுதல் = சுடவைத்தல், சமைத்தல்.
காய் - காச் (வ). வடசொல் ப்ர என்னும் முன்னொட்டொடு கூடிப் ப்ரகாச் என்று வழங்குவதே பெரும்பான்மை.
ய-ச, போலி. (வ.வ: 115)
காய்கனிக் கேட்டு வகைகள்
சூம்பல் நுனியில் சுருங்கிய காய்; சிவியல் சுருங்கிய பழம்; சொத்தை புழுபூச்சியரித்த காய் அல்லது கனி; வெம்பல் சூட்டி னால் பழுத்த பிஞ்சு. அளியல் குளுகுளுத்த பழம்; அழுகல் குளு குளுத்து நாறிய பழம் அல்லது காய்; சொண்டு பதராய்ப் போன மிளகாய்.
கோட்டான் காய் அல்லது கூகைக்காய் கோட்டான் உட்கார்ந்த தினால் கெட்ட காய்; தேரைக்காய் தேரையமர்ந்ததினால் கெட்ட காய்; அல்லிக்காய் தேரையமர்ந்ததினால் கெட்ட தேங்காய்; ஒல்லிக் காய் ஒருவர் தமித்து இளநீர் குடித்த தென்னையிற் கெட்ட காய். (சொல் : 68.)
காய்ந்த அடியும் கிளையும்
சுள்ளி காய்ந்த குச்சு;
விறகு காய்ந்த சிறு கிளை;
வெங்கழி காய்ந்த கழி;
கட்டை காய்ந்த கொம்பும் கவையும் அடியும். (சொல் : 66.)
காய்ந்த இலைவகை
சண்டு காய்ந்த தாளும் தோகையும்;
சருகு காய்ந்த இலை. (சொல் : 66.)
காய்ந்த பயிர் வகை
வைக்கோல் காய்ந்த நெல் வரகு முதலிய பயிர்;
செத்தை காய்ந்த செடி;
தட்டு அல்லது தட்டை காய்ந்த சோளம் கரும்பு முதலிய பயிர்;
மாறு காய்ந்த துவரை மிளகாய் முதலிய பயிர்;
உலவை காய்ந்த மரம்;
சாவி பட்டுப்போன நெல் வரகு முதலியவற்றின் இளம் பயிர். (சொல் : 71.)
காய் நிலைகள்
பழக்காய் பழுத்தற்கேற்ற முற்றிய காய்; கடுக்காய் முற்றிய பனங் காய்; காலக்காய் அல்லது பருவக்காய் உரிய காலத்திற் காய்ப் பது; வம்பக்காய் காலமல்லாக் காலத்திற் காய்ப்பது; கருக்காய் முற்றிய காய். (சொல் : 67.)
காயம்
காயம் - ஆகாச (வே.)
கள் - களம் - கயம் = கருமை, கரிக்குருவி. கயம் - கசம் = கருமை. இருட்டுக் கசமா யிருக்கிறது என்பது உலக வழக்கு.
கயவாய் = கரிக்குருவி, எருமை.
கயம் - காயம் = 1. கரிய காயா மலர்.
காய மலர்நிறவா (திவ். பெரியாழ். 1 : 5 : 6)
காயம் - காயா. காயாம்பூ வண்ணனிவை கழறுமன்றே (கூர்மபு. இராமனவதா.)
2. கரிய வானம்
விண்ணென வரூஉங் காயப்பெயர் (தொல். எழுத். 305).
காயம் - காசம் = கரிய வானம்.
காசமா யினவெல்லாங் கரந்து (கம்பரா. மருத்து. 40)
காயா - காசா = 1. காயா மலர்.
காசா கடன்மழை யனையானை (கம்பரா. கங்கை. 53).
3. எருமை (பிங்).
காசா - காசை = காயா மலர். (வ.வ. : 115-116)
காசைக் கருங்குழலார் (பதினொ. ஆளு. திருவுலா. 180).
காயா பழமா விளையாட்டு
ஆட்டின் பெயர் : நீந்தத் தெரியும் சிறுவர் நீரில் நின்று காயா பழமா? என்று கேட்டு ஆடும் ஆட்டு, அக் கேள்வியையே பெயராகக் கொண்டது.
ஆடுவார் தொகை : இருவர் முதற் பலர் இதை ஆடுவர். இருவர்க்கு மேற்படின் இன்பஞ் சிறக்கும்.
ஆடிடம் : ஆறுங் குளமும் போலும் நீர்நிலைகள் இதை ஆடுமிடமாம்.
ஆடுமுறை : ஆடுவாரெல்லாம் நீரில் நின்று கொண்டு, ஒவ் வொருவனாய்க் காயா பழமா? என்று கேட்டு நீருட் சுண்டுவர். சுண்டும் விரல் நீர்மேல்படின் தளார் என்னும் ஒசை யெழும்; நீருள் முற்றும் முழுகின் ஓசையே கேளாது : பாதி முழுகின் டபக்கு என்னும் ஓசை பிறக்கும். இவற்றுள், முன்னவை யிரண்டும் காயாம்; பின்னதொன்றும் பழமாம், காயாயின் காய் என்றும் பழமாயின் பழம் என்றும், பிறர் கூறுவர். பலர் காயா யின் மீண்டும் சுண்டுவர். ஒருவனே காயாயின், அவன் பிறரை நீருட் பிடித்தல் வேண்டும். அவர் சிறிது தொலைவு சென்ற பின், தம்மைப் பிடிக்கச் சொல்வார். அவன் விரைந்து சென்று, நடந்து செல்பவரை நடந்து சென்றும், நீந்திச் செல்பவரை நீந்திச் சென் றும், முழுகிச் செல்பவரை முழுகிச் சென்றும், பிடிக்க முயல்வான். யாரேனும் தொடப்படின், அவனே பின்பு பிறரைப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து விருப்பமுள்ளவரை பிடித்து ஆடப்பெறும்.
ஆட்டுத் தோற்றம் : உள்ளான் என்னும் நீர்ப்பறவை நீருள் மூழ்கிச் சென்று மீன் பிடிப்பதினின்று, இவ் ஆட்டுத் தோன்றி யிருக்கலாம்.
ஆட்டின் பயன் : நீருள் மூழ்கிய பொருளை யெடுத்தற்கும் முத்துக் குளித்தற்கும் ஏற்ற பயிற்சியை, இவ்விளையாட்டு அளிக்கும்.
காயின் காம்பிதழ் வகை
இதக்கை தேங்காய் பனங்காய் முதலியவற்றின் காம்பிதழ்;. சொங்கு சோளத்தின் காம்பிதழ்; (சொல் : 69.)
$காரணம்
கருத்தல் = கை கருக்குமாறு வினை செய்தல். இவ்வினை இன்று வழக்கற்றது. கரு - கருவி. கரு - கரணம் = செய்கை; செய்யும் கருவி, கரணம் - காரணம் (வ). (தி.ம.பின்.)
காரம்
காரம் - க்ஷார
கடு - கடி - கரி - கார். கார்த்தல் = உறைத்தல் (பிங்). கார்ப்பு = உறைப்பு (சூடா). கார் - காரம் = உறைப்பு (சூடா). கார் காரம் = உறைப்பு, எரிச்சல், பிள்ளை பெற்ற பெண்டிர்க்குக் கொடுக்குங் கார மருந்து, கடுஞ்சுவை, எரிக்கும் பொருள், காரவுப்பு, சாம்ப லுப்பு, சலவைக்காரம், சாயக்காரம், வெண்காரம், சீனிக்காரம், அக்கரகாரம், கோளக நஞ்சு, அழிவு, சினம். (வ.வ : 116)
காரம், காரன், காரி
மொழியாராய்ச்சியில்லாதார் வடசொல்லென மயங்கும் தென் சொற்களுள், காரன், காரி ஈறுகளும் அடங்கும். இவை காரம் என்னும் தென் சொல்லடியாகப் பிறந்த ஆண்பால் பெண்பாற் பெயரீறுகள். செய் என்னும் ஏவற்பொருள்படும் க்ரு என்னும் வட சொல்லினின்று, காரன், காரி யீறுகள் பிறந்திருப்பதாக, வடமொழியாளரும் அவர் வழியினரும் கொள்வர். இதன் புரைமையை விளக்கிக் காட்டுவல்.
காரன், காரி யீறுகட்கு அடியான காரம் என்னும் தென்சொல். கடு என்னும் அடிவேரினின்று பிறந்ததாகும். கடுத்தல் மிகுதல். மிகுதற் கருத்தினின்று கடுமை, வன்மை, வலி, எரிவு, வெம்மை, விறைப்பு, சினம் முதலிய கருத்துகள் முறையே தோன்றும். உப்புக் கடுத்தல், கடுங்காற்று, வயிற்றுக் கடுப்பு, கடுவெயில், காட்டமா யிருத்தல், முகங்கடுத்தல் முதலிய வழக்குகளை நோக்குக.
கடு என்னும் சொல்லே கடி என்னும் உரிச்சொல்லாகத் திரியும். குற்றுகரமும் முற்றுகரமுமான பல ஈற்றெழுத்துகள் இகரமாகத் திரிதல் இயல்பு. எ-டு: பஞ்சு-பஞ்சி, வடு - வடி (மாம்பிஞ்சு). கடி என்னும் உரிச்சொற்குத் தொல்காப்பியமும் நன்னூலும் கூறும் பொருள்களெல்லாம் கடு என்னுஞ் சொல்லுக்கும் இருத்தல் அல்லது பொருந்துதல் காண்க.
கடி என்னும் சொல்லும் பின்னர்க் கரி என்று திரியும். டகரம் ரகரமாதல் பன்மொழிக்குப் பொதுவான போலித்திரிபாம்.
தமிழ் தமிழ் தமிழ் ஆங்கிலம்
படவன் - பரவன் குடகு - coorg
அடுப்பங்கடை - அடுப்பங்கரை கவடி -coory
கடு என்னும் சொற்குப் போன்றே அதன் திரிவுகளான கடி கரி என்பவற்றிற்கும், மிகுதல் என்பதே அடிப்பொருளாம். உப்புக் கரித்தல் என்னும் உலக வழக்கில், கரித்தல் என்பது மிகுதற் பொருள் தருதல் காண்க. கரித்தல் என்பது, தன்னளவில் மிகுதற் பொருளுணர்த்துமேயன்றி, சென்னைப் பல்கலைக்கழக அகராதியிற் குறித்துள்ளது போன்று உப்புக் கரித்தல் என்று பொருள்பட்டுவிடாது. அவ் அகராதியிற் குறிக்கப்பட்டுள்ள முதற்பொருள் வருமாறு:
“To be saltish to the taste; உப்புச் சுவை மிகுதல்
இந்தக் கறி உப்புக்கரிக்கிறது.
இதில் விளக்க எடுத்துக்காட்டு, இந்தக் கறி கரிக்கிறது என்றிரா மல் இந்தக் கறி உப்புக்கரிக்கிறது என்றிருப்பதே. கரித்தல் என்ப தற்கு மிகுதற்பொருளே உண்மையைக் காட்டுதல் காண்க.
கரி என்னும் வினைப்பகுதி, முதனிலை திரிந்து விகுதியேற்கும் முறையில் காரம் என்று தொழிற்பெயராம்: படி என்பது பாடம் என்றாவது போல். காரம் என்னும் சொற்கு, மிகுதி, வன்மை, கடு மை, உறைப்பு, சினம் முதலியன பொருளாம். அவற்றுள், வன்மைக் கருத்தினின்று, முறையே வலிமை, ஆள்வினைத்திறன் (அதிகாரம்), உரிமை முதலிய பக்கக் கருத்துகள் தோன்றும்.
எந்தப் பொருளும் அளவில் மிகுவதாலேயே வலிமையடையும்
நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
வளிமிகின் வலியு மில்லை (புறம்.50)
என்று புறங்கூறுதல் காண்க.
அகக்கரண வாற்றலாகிய உளவலி புறக்கரண வாற்றலாகிய உடல் வலி ஆகிய இரண்டனுள், முதலில் தோன்றியது உடல் வலியே. பொதுவாக, உடற்பருமனே உடல்வலிக்குக் காரணமாகும். உடல் வலியால் ஒருவன் ஒரு பொருளைக் கைப்பற்றி யாளலாம். அவ் ஆட்சியே அவனுக்கு அப் பொருள்மேல் அதிகாரத்தைக் காட் டும். அவ் அதிகாரமே உரிமையாம். ஒருவன் தன் வலிமை மிகுதி யால் இன்னொருவன் பொருளிற்குக் கூட அதிகாரியாகலாம். வலிமைக்கு வழக்கில்லை என்பது இன்றும் உண்மையான பழமொழியாகும்.
அகக்கரண வாற்றலும், அறிவின் அல்லது ஊக்கத்தின் மிகுதியே யன்றி வேறன்று. ஆகவே, இருகை வலியுள் எதுவாயினும் ஒன்றன் மிகுதியே. அம் மிகுதியினாலேயே அதிகாரம் அல்லது உரிமை யுண்டாம். வலிய பகையை எளியவன் வெல்லுதற்குக் காரண மான சூழ்ச்சிவலியும் மதித்திற மிகுதியே.
ஓர் இடத்திற்கு அல்லது பொருட்கு எங்ஙனம் ஒருவன் தன் உடல் வலிமிகுதியால் அதிகாரியாவனோ, அங்ஙனமே ஒரு நூலிற்கும் அல்லது அறிவுச் செய்திகளுக்கும் ஒருவன் தன் அறிவு மிகுதியால் அதிகாரியாவன்.
இங்ஙனம், மிகுதிக் கருத்தினின்று உரிமைக் கருத்துத் தோன்றி யிருப்பதால், அவ் விரு பொருளையும் முறைப்படி யுணர்த்தும், காரம் என்னும் சொல்லினின்று, ஓர் இடத்திற்கோ பொருட்கோ தொழிற்கோ நிலைமைக்கோ அதிகாரம் அல்லது உரிமை யுணர்த்தும் காரன், காரி இருபாற் பெயரீறுகள் தோன்றி யுள்ளன.
அம்பலகாரன், அருமைக்காரன், ஆட்டுக்காரன், ஆப்பக்காரி, ஆனைக்காரன், எண்ணெய்க்காரன், எழுத்துக்காரன், ஓடக் காரன், கட்சிக்காரன், கடன்காரன், கடைக்காரன், கப்பற்காரன், கறிகாரன், காட்டுக்காரன், காய்ச்சற்காரன், காரியக்காரன், காவற் காரன், காவடிக்காரன், குச்சுக்காரி, குடிகாரன், குடிசைக்காரன், குடைகாரன், குதிரைக்காரன், குப்பைக்காரன், குழற்காரன், குறி காரன், குறும்புக்காரன், கூலிக்காரன், கெட்டிக்காரன், கொட்டுக் காரன், கொடுமைக் காரன், கொத்துக்காரன், கொல்லத்துக் காரன், கொல்லைக்காரன், கொலைகாரன், கொள்ளைக்காரன், கோடரிக்காரன், கோபக்காரன், கோழிக்காரன், சட்டைக்காரன், சண்டைக்காரன், சவாரிக்காரன், சாணைக்காரன், சிரங்குக் காரன், சுண்ணாம்புக் காரன், செய்கைக்காரன், சேலைக்காரன், சொந்தக்காரன், தட்டுக்காரன், தடிகாரன், தண்டற்காரன், தண்ணீர்க்காரன், தயிர்க்காரி, தீட்டுக்காரன், துன்னகாரன், தையற்காரன், தொந்தரவுக்காரன், தொள்ளைக்காரன், தோட்டக் காரன், நாடகக்காரன், நிலத்துக்காரன், நுங்குக்காரன், நோவுக் காரன், பகைக்காரன், பட்டக்காரன், பண்ணைக்காரன், பணக் காரன், பன்றிக்காரன், பாற்காரன், பிள்ளைக்காரி, புள்ளிக்காரன், புளியங்காரன், புன்செய்க்காரன், பூக்காரன், பெரியதனக்காரன், பெருமைக்காரன், பேராசைக்காரன், பொடிக்காரன், பொறா மைக்காரன், மருந்துக்காரன், மாட்டுக்காரன், மீசைக்காரன், முட்டைக்காரன், முறைகாரன், மேளக்காரன், வண்டிக்காரன், வயிற்றுவலிக்காரன், வளையற்காரன், வாத்துக்காரன், வீட்டுக் காரன், வீணைக்காரன், வெள்ளைக்காரன், வேட்டைக்காரன், வேலைக்காரன், வேளைக்காரன் முதலிய நூற்றுக்கணக்கான பழம் பெயர்களும், இனிமேற் புதிது புதிதாகத் தோன்றும் இத்தகைய பிற பெயர்களும், ஒன்றற்குரிமை பூண்டவரை யுணர்த் துவனவே யன்றி, ஒன்றைச் செய்பவரை யுணர்த்துவன வாகா.
ஆப்பக்காரி, எண்ணெய்க்காரன், காரியக்காரன், சண்டைக் காரன், தையற்காரன், பெரியதனக்காரன், மருந்துக்காரன், வேட்டைக்காரன் முதலிய தொழில்பற்றிய பெயர்கள் ஒரு பொருளைச் செய்பவரை யுணர்த்துதற்குப் பொருந்தினும்; ஆட்டுக்காரன், காய்ச்சற்காரன், கோழிக்காரன், சிரங்குக்காரன், தண்ணீர்க்காரன், நிலத்துக்காரன், பாற்காரன், மீசைக்காரன், முட்டைக்காரன், வண்டிக்காரன், வீட்டுக்காரன் முதலிய பல பெயர்கள் அப் பொருட்கு எள்ளளவும் பொருந்தாமை காண்க. மேலும், ஆளின்றியிருக்கும் ஒரு பொருளை ஒருவன் கண்ட வுடன், அப் பொருட்பெயரோடு காரன் அல்லது காரியீறேற்றி, அப் பொருட்கு உரியவரைப் பற்றி வினவுவதேயன்றி, அதனைச் செய்பவரைப் பற்றி வினவுவது இயல்பன்று. செய்பவரைப்பற்றி அறிய விரும்பின் செய்பவர் என்னும் வினையாலணையும் பெயரேயன்றி, காரன் அல்லது காரியீற்றை அப் பொருட் பெயரொடு சேர்த்துக் கூறார். மேலும் காலன் காலி, காதன் காதி, நாகன் நாகி, மருதன் மருதி என்பன போலக் காரன் காரி என்பனவும், தமிழ்ப் பாலீறை ஏற்று நிற்றல் காண்க.
வண்டிக்காரன், வீட்டுக்காரன் முதலிய பெயர்கள், சில விடத்து உண்மையான அல்லது நிலையான உரிமையாளரைக் குறியா விடினும், வேலைக்காரனும் வாடகைக் குடித்தனக்காரனும் போல்வார் சிறு போதைக்கேனும் ஆட்சியளவில் உரிமையாளர் போன்றிருப்பதால், உரிமைக் கருத்தை விட்டவையாகா.
கரி என்னும் வினைச்சொல், அதி என்னும் முன்னொட்டுப் பெற்று அதிகரி என்றும் நிற்கும். அதி என்னும் முன்னொட்டு வடசொல்லாகவே தோன்றினும். அதிகன் என்றொரு கடை வள்ளல் பெயரிருந்தமையும், அதனம் என்னும் வடிவம் வட மொழியிலில்லாமையும், அதுங்குதல் (மொய்த்தல்), அதைத்தல் (வீங்குதல், பருத்தல்) முதலிய தொடர்புச் சொற்கள் தமிழிலிருத் தலும், அதிநுட்பம் என வள்ளுவரால் ஆளப் பெற்றமையும் சற்றுக் கவனிக்கத்தக்கன.
கரி என்னும் தனிச்சொற்போன்றே அதிகரி என்னும் கூட்டுச் சொல்லும், மிகுதிப் பொருளையே அடிப்படையாகக் கொண்ட தாகும். அதிகரித்தல் - மிகுதல். அதிகாரம் என்பது, அதிகரித்தல் என்னும் தொழிற் பெயரின் ஏனைய வடிவம்.
பண்டை வழக்கில், ஒரு நூலின் பெரும் பகுதிபடலம் என்றும், அதன் உட்பிரிவு ஓத்து என்றும் கூறப்பட்டன.
இனமொழி கிளந்த ஓத்தி னானும்
பொதுமொழி கிளந்த படலத் தானும் (தொல்.செய். 1424)
என்பது தொல்காப்பியம். இதனையே நன்னூலாரும்.
நேரின மணியை நிரல்பட வைத்தாங்
கோரினப் பொருளை யொருவழி வைப்ப
தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர் (நன். 16)
ஒருநெறி யின்றி விரவிய பொருளாற்
பொதுமொழி தொடரினது படல மாகும் (நன். 17)
என மேற்கொண்டனர்.
தொல்காப்பியர் காலத்திலிருந்து, படலம் என்னும் பெரும் பகுதி அதிகாரம் என்றும், ஓத்து என்னும் சிறு பகுதி இயல் என்றும், வழங்கி வருகின்றன. அதிகாரம் என்பது அதிகரித்தல் என்னும் அதன் அடிப்படைப் பொருள் பற்றியே படலம் என்னும் பெரும் பிரிவைக் குறிப்பதாகும். அதிகரித்த பகுதி அதிகாரம், சிலப்பதி காரம் என்பதும், சிலம்பு காரணமாக அதிகரித்த செய்தியைக் கூறுவது என்னும் பொருளதே.
காரம் என்னும் சொற்போன்றே அதிகாரம் என்னும் சொல்லும், மிகுதிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு. இருதிணைப் பொருள்களுள்ளும் ஒன்றையோ பலவற்றையோ ஆளுமுரி மையை அல்லது திறத்தை உணர்த்துவதாகும். வடமொழி யில், அதிகாரம் என்னும் சொற்கு, ஆட்சி உரிமை முதலிய வழிப் பொருள்கள் கூறப்படுகின்றனவே யொழிய, மிகுதல் அல்லது அதிகரித்தல் என்னும் அதன் அடிப்படைப் பொருள் கூறப்படு கின்றிலது. அதோடு, மகனிலிருந்து தந்தை வந்தான் என்பது போல், அதிகாரம் என்னும் தொழிற் பெயரினின்று அதிகரி என்னும் வினைப் பகுதியைத் திரிப்பர் வடநூலார்.
இங்ஙனம் பின்னோக்கிய முறையிலேயே, அகங்கரி, இளக்கரி என்பனவும், சென்னைப் பல்கலைக்கழக அகராதியில், முறையே அகங்காரம் இளக்காரம் என்னும் தொழிற்பெயர்களினின்று திரிக்கப்பட்டுள. அகங்கரித்தல் என்பது மனங்கடுத்தல் அல்லது தருக்குதல்; அகம் - மனம், கரித்தல் - மிகுதல். அகங்கரிப்பது அகங் காரம். வடமொழியில், அகங்காரம் என்பது நான் என்னும் அகப் பற்று. அகம் நான், காரம் செயல். எனது என்னும் புறப் பற்றை மமகாரம் என்பது போல, நான் என்னும் அகப்பற்றை அகங்காரம் என்பர். மம - எனது. இங்ஙனம் வடமொழி யகங் காரமும் தென்மொழி யகங்காரமும் சொல்லாலும் பொருளா லும் வேறுபட்டிருக்க, அவற்றை வடிவொப்புமை பற்றி ஒன்றெனக் கொள்வது அறியாமையே யாம். இளக்கரி என்பது இளம் கரி என்னும் இருசொற் கூட்டாகும். இளக்கரிப்பது இளக்காரம், இளம் - மென்மை, கரித்தல் மிகுதல், உப்புக்கரித்தல் என்னும் கூட்டுச் சொல்லிலுள்ள வருமொழியே, அகங்கரித்தல் இளக்கரித்தல் என்பவற்றிலுள்ளதும் என அறிக. இளக்காரம் போன்றதே வலக்கரமும். வலக்கரிப்பது வலக்காரம். வலம் - சூழ்ச்சி, வலிமை.
அதிகாரம் அதிகாரி என்னும் பொருளிலேயே காரம் காரி என்பனவும் பண்டைக்காலத்தில் வழங்கிப் பின்பு வழக்கற்றுப் போனதாகத் தெரிகின்றது. காரன் அல்லது அதிகாரன் என்பது ஆண்பாற் பெயராகவும், காரி அல்லது அதிகாரி என்பது பெண்பாற் பெயராகவும் இருந்திருக்கலாம். காரன் காரி என்பன அதிகாரப் பொருளை இழந்தபின், இருபாற் பெயரீறுகளாக வழங்கி வருகின்றன.
இதுகாறுங் கூறியவற்றால், காரன் காரி என்னும் உயர்திணைப் பெயரீறுகள், உரியவரை யுணர்த்தும் தென்சொல்லே யன்றிச் செய்யப்படுவதை யுணர்த்தும் வடசொல்லல்ல வென்பதைத் தெற்றெனத் தெரிந்து கொள்க.
காரம் என்னும் சொல், கடு என்னும் வினையின் திரிவான கரி என்னும் பகுதியடியாய்ப் பிறந்த தொழிற்பெயராய், வன்மை, அதிகாரம், வலி, எரிவு, வெம்மை, உறைப்பு, சினம் முதலிய கடுங்குணங்களை யெல்லாம் உணர்த்தும் தூய தென்சொல்லா யிருந்தும், க்ஷார என்னும் வடசொல்லின் திரிவென்று சென்னைப் பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளது.
வரி (tax) என்னும் தென்சொல்லைப் பலி (sacrifice) என்னும் வட சொல்லின் திரிவாகக் காட்டுவதோடமையாது. அதைத் தன் சிறப்புகளுள் ஒன்றாகத் தன் முகத்திலேயே எடுத்துக்காட்டிப் பெருமைக் கொள்ளும் அகரவரிசைக் களஞ்சியம் வேறெதைத் தான் கூறாதென்க. - செந்தமிழ்ச் செல்வி திசம்பர் 1956
#காரிகை
காரிகை - காரிகா
கரு - கார் = 1. கருமை. 2. கரியமுகில்
3. மழை. கார்பெற்ற புலமே போல் (கலித். 38)
4. நீர் (பிங்). 5. அழகு (பிங்)
நீர்வளத்தினாலேயே கண்ணிற்கினிய இயற்கைக் காட்சிகள் தோன்றுவதால், நீரைக்குறிக்கும் சொற்கட்கு அழகுப் பொருள் தோன்றிற்று.
ஒ.நோ: அம் = நீர், அழகு.
கார் - காரிகை = 1. அழகு.
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்கு (குறள். 1272).
2. அணி
கழல்யாப்புக் காரிகை நீர்த்து (குறள். 777)
3. பெண்
காலை யெய்தினிர் காரிகை தன்னுடன் (சிலப். (11 : 67)
வடவர் காட்டும் பொருந்தாப் பொருட்காரணம் வருமாறு:
க்ரு = செய். காரக (ஆ.பா.) = செய்பவன். காரிகா (பெ.பா.) செய்பவள், நடிப்பவள்.
மக்களினத்தில் அழகிற்குச் சிறந்தது பெண்பாலாதலின், அழகின் பெயர் பெண்ணிற் காயிற்று. (வ.வ. : 116-117)
கால்
தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துவரும் திருமண உறவைக் கால் என்பது தொடர்ச்சி பற்றியே. கால் என்பது வாய்க்கால்.
பழங்காலைத் தூர்க்காதே புதுக்காலை வெட்டாதே என்பது பழமொழி. சொல். 4.
கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள்
கால்டுவெல் கண்காணியார், தமிழை ஆய்ந்து கற்றுத் தமிழுக்கு அரும்பெருந்தொண்டு செய்த மேலையருள் தலைசிறந்தவரா யிருந்தும் அவர்தம் அயன்மையாலும், ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழிலக்கிய மனைத்தும் அழிக்கப் பட்டுப் போனமை யாலும், இற்றைத் தமிழர் எல்லா வகையிலும் பிராமணருக்கு கீழ்ப்பட்டிருப்பதனாலும், தொல்காப்பியப் பயிற்சியும் கழக (சங்க) நூற்கல்வியும் தனித் தமிழுணர்ச்சியும் குமரிக்கண்டக் கொள்கையும் அவர் காலத்தின்மையாலும் தமிழரே வட மொழியைத் தேவ மொழியென நம்பிப் பல தென்சொற்கு வடசொன்மூலங் காட்டியமையாலும், தமிழையும் தமிழரையும் பற்றிய பலவுண்மைகளை அறியவியலாது போயினர். ஆதலால், தம் ஒப்பியலிலக்கணத்தில் பலவிடங்களில் மிகத் தவறான செய்திகளைக் கூறியுள்ளனர். அவையாவன :-
1 சேரர், சோழர், பாண்டியர்கள் என்னும் பெயர்கள் முத்தமிழ் நாட்டுக் குடிகளின் பெயர்கள் என்பது.
2 தமிழ் நாகரிகம் கொற்கையில் தொடங்கிற்று என்பது.
3 தமிழரை (அல்லது திராவிடரை) உயர்நாகரிகப் படுத்தியவர் ஆரியர். ஆரியர் வருகைக்கு முன், வீடு (மோட்சம்), அளறு (நரகம்), புலம்பன் (ஆன்மா), கரிசு (பாவம்) என்பவற்றைப் பற்றித் தமிழருக்கு ஏதேனுங் கருத்திருந்ததாகத் தெரியவில்லை. வழக்கறிஞரும் நடுவரும் அவர்கட்கில்லை. அறிவனும் (புதனும்) காரியும் (சனியும்) தவிர. மற்றப் பழங்காலத் தாருக்குப் பொதுவாகத் தெரிந்திருந்த கோள் களையெல்லாம் அவர் அறிந்திருந்தனர். ஆயிரத்திற்கு மேல் அவர்கட்கு எண்ணத் தெரியாது. மருத்துவ நூலும் மருத்துவரும் மாநகரும் வெளிநாட்டு வணிகமும் அவர்கட்கில்லை. இலங்கையைத் தவிர, வேறெந்தக் கடற்கப்பாலை நாட்-டோடும் அவர்கட்குப் பழக்கமில்லை. தீவு அல்லது கண்டம் என்னும் கருத்தைத் தெரிவிக்கக்கூடிய சொல் அவர்கட்கில்லை. படிமைக்கலை, கட்டிடக்கலை, வானநூல், கணியம், பட்டாங்கு நூல் துறைகள், இலக்கணம் ஆகிய வற்றைப் பற்றி அவர்கட்குத் தெரியாது. அவர்கள் அகக்கரண வளர்ச்சியடையாதிருந்ததி னால், மனம், நினைவு, மனச்சான்று, வேள்வு (Will) ஆகிய வற்றைக் குறிக்க அவர்கட்குச் சொல்லில்லை* என்பது.
4 தமிழ் நெடுங்கணக்கு சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவி யமைந்தது. தமிழர் வடவெழுத்துகளுள் வேண்டியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, வேண்டாதவற்றை விட்டுவிட் டனர். என்பது.
5 தமிழ்ப் பெயர்ச்சொல்லின் வேற்றுமையமைப்பு முற்றும் சமற்கிருத வேற்றுமையமைப்பைப் பின்பற்றியது என்பது.
6 தமிழில் சரியானபடி, செயப்பாட்டு வினையே இல்லை, என்பது.
7 அரசன், ஆயிரம், உலகம், கணியம், சேரன், சோழன், திரு, நாழி, பாண்டியன், மனம், மாதம் என்பன வடசொற்கள் என்பது.
இனி, கால்டுவெலார் சில புலனங்களை (விஷயங்களை) முன்னுக்குப் பின் முரணாகவும் கூறியுள்ளார். எ-டு : மலையாளம் தமிழின் கிளைமொழி (oldest offshot) என ஓரிடத்தும், உடன் பிறப்பு மொழி (sister dialect) என மற்றோரிடத்தும் கூறியிருத்தல், அண்ணன், தம்பி, அக்கை, தங்கை என்னும் முறைப்பெயர் கட்குப் பொதுச் சொல் இல்லையென்று கூறியிருப்பதும் வழுவாம். உடன்பிறந்தான் உடன் பிறந்தாள்.
மேற்காட்டிய எழுவகைச் சறுக்கற் கூற்றுக்களும் உண்மைக்கு மாறானவை. தமிழைக் காய்தலின்றி முதன் முதல் மொழி நூன் முறையில் ஆராய்ந்து ஓரளவு பெருமைப்படுத்திய கால்டு வெலாரே இங்ஙனம் கூறியிருப்பதனாலும், இவர் கருத்தே உலக முழுவதும் பரவியுள்ள ஆங்கிலக் கலைக் களஞ்சியத்தில் இடம் பெற்றிருப்பதனாலும், அயலாரும் வெளிநாட்டாரும் தமிழின் பெருமையை அறியமுடியாது போயிற்று. இவர் நூல் முழுதும் நோக்கின், தமிழ் நாகரிகத்திற்கு ஆரியம் அடிப்படை என்னும் தவறான கருத்து, இவர் உள்ளத்தில் ஏற்கனவே ஆழ வேரூன்றி யிருந்ததைக் காணலாம். சமற்கிருதத்தில் திரவிடச் சொற்கள் உள என முதன்முதல் இவர்க்குக் கண்திறந்தவர், மலையாள மொழியாராய்ச்சியில் ஈடும் எடுப்புமற்ற குண்டர்ட்டு என்னும் செருமானியக் கிறித்துவக் குரவரே.
ஆயினும் கால்டுவெலார் பகைமைக் கண்கொண்டு தமிழை நோக்கியவரல்லர் என்பது, அனைவர்க்கும் ஒப்ப முடிந்த உண்மையாம். எனினும். அவர் ஆராய்ச்சியின் குணமுங் குற்றமும் நாடின், குற்றமே மிகுந்ததென்பது தெளிவு. ஆதலால் அஃது எக்காலத்திற்கும் ஏற்குமென்பது அறியார் கூற்றே. அது இன்று பழமைப்பட்டும் பழுதுபட்டும் போயிற்று.
கால்டுவெல் கண்காணியாரின் காட்சியுரைகள்
கால்டுவெல் கண்காணியார் தமிழரை அல்லது திரவிடரை வடக்கினின்று வந்தவராகக் கருதியிருந்தும், தம் நுண்மாண் நுழைபுலத்தினால் தென்மொழியின் தொன்முதுமுன்மையைக் கண்டு, பின்வருமாறு தம் திரவிட ஒப்பியல் இலக்கணத்திற் கூறி யுள்ளார்.
திராவிடமொழிக் குடும்பத்தை, இந்தோ-ஐரோப்பிய மொழித் தொகுதிக்கும் சித்திய மொழித் தொகுதிக்கும் இடைப்பட்ட இணைப்பு அண்டாக மட்டுமன்றி சிலவகைகளில், சிறப்பாகப் பகரப் (பதிற்) பெயர் பற்றிய வகையில் மாந்தன் மொழி வரலாற் றில் இந்தோ - ஐரோப்பிய நிலைக்கு முற்பட்டதும், சித்திய நிலைக் கும் முற்பட்டதுமான, ஒரு காலத்தின் நிலைமையைக் காட்டும் சான்றுகளுள் இறவாது எஞ்சி நிற்பவற்றுள் தலைசிறந்ததாகக் கருத இடமில்லையா? (சென்னை பதிப்பு, முகவுரை, பக்கம் 10.)
இதற்கு அப்பாற்பட்டதும் இதனினும் கடினமானதுமான ஒரு வினா சிலவிடங்களில் உலாவப் பெறுவதைக் காணலாம். அது இது. திரவிட மொழிகட்குப் பிறமொழிகளோடுள்ள உறவு பற்றிய கொள்கைகளைக் கருதாது அம் மொழிகளின் பொருட்டே அவற்றிற்கு இனக் கலப்பினை - ஒன்றோடொன்று ஒப்பு நோக்குவதனால் அம் மொழிகளை இன்றுள்ளதிலும் சிறந்த முறையிலும் அறிவியல் வகையிலும் கற்குமாறு தூண்டுவதால் இந்நூல் செழுமையும் ஓர் நோக்கமாக இருந்திருக்கின்றது. இதை என் முதன்மையான நோக்கமாகக் கொள்வார் ஒருபோதும் கூறிட்டு விட முடியும். அதே சமயத்தில் ……..
2. சில திரவிடச் சொல்வடிவங்களும் வேர்களும், மக்க ளினத்தின் முதற்பெற்றோர் மொழியினின்று வழிவழி வந்து முந்து திரவிடருக்கு மொழியியலுரிமையாகச் சேர்ந்துள்ளவற்றுள் ஒரு பகுதியாய் இருக்கக் கூடாதாவென்பது, மற்றொரு வினா? (மேற்படி, பக். 17)
3. பகரப்பெயர்கள், மொழிகளின் உறவையும் மொழிக் குடும்பங்களின் உறவையும் மிக விளக்கிக் காட்டுகின்றன. ஏனெனின், மூவிடப்பகரப் பெயர்கள் சிறப்பாகத் தன்மை முன்னிலை யொருமைப்பெயர்கள், வேறெச்சொல் வகையினும் மிகுந்த நிலைப்புத் திறனை காட்டுவனவாகவும், பல்லூழிக் கடப்பிலும் மிகச்சிறிதே திரிவதாகக் காணப்படுவனவாகவும் உள்ளன. அவை எண்ணுப் பெயர்களையும் வேற்றுமை யுருபு களையும் வினையீறுகளையும் விட மிக நிலைப்புத்திறன் பெற் றுள்ளன. அவை, வேறெதையும் போல வேறுபாட்டிற் கிடமான வையேயாயினும், அவற்றின் தொடர்புகளையும் கிளைப்புக் களையும் காலத்தாலும் இடத்தாலும் எத்துணைச் சேய்மைப்பட் டிருப்பினும், ஏறத்தாழ மாந்தர் மொழிகள் எல்லாவற்றிலும் துருவிக் காணலாம். முதற்கண் ஒரே குடும்பத்தைச் சேர்ந்திருந்து. பின்பு காலக்கடப்பினாலும் வேறுபாட்டு வளர்ச்சியினாலும் பிறப்புத் தொடர்பற்றுப்போன, சில மொழிகளின் தொடர்புக் குறியாக அல்லது உறவுக்கூறாக அறியக்கூடிய ஒரே சான்று மூவிடப்பகரப் பெயர்களே. இக்கருத்துக் குறிப்பு, எல்லாச் சொல் வகைகளுள்ளும் மிக நிலைப்புத் திறனுள்ளனவாகத் தோன்றும். தன்மைப் பகரப் பெயர்களையே, சிறப்பாகத் தழுவும். (மேற்படி, நூல். பக். 359)
(இது திரவிட ஒப்பியல் இலக்கணத்தில் பகரப்பெயர்கள் (Pronouns) என்னும் பகுதியின் முகவுரையாகவுள்ளது. தமிழ் மூவிடப்பெயர்கள்,ஈ திரிந்தும் திரியாமலும் ஏறத்தாழ உலக மொழிகள் எல்லாவற்றிலும் பரந்து கிடக்கின்றன என்பதை, இது குறிப்பாக வுணர்த்துகின்றது).
4. திரவிட மொழிக்குடும்பம் சமற்கிருதத்திற்கு முற்பட்ட சில முது பழங்கூறுகளைப் போற்றி வைத்திருக்கின்றதென்றும், சிறப்பாக அதன் சுட்டுப்பெயர்கள். சமற்கிருதத்தினின்று கடன் கொள்ளப்படாமல் சமற்கிருதச் சுட்டுச் சொற்கட்கும் இந்தோ - ஐரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந்து வேறுபட்ட பிறமொழிச் சுட்டுச் சொற்கட்கும் மூலமான, அந்தப் பழைய யாப்பெத்தியச் சுட்டடிகளை நிகர்த்து நிற்கின்ற வென்றும், யான் முன்னமே ஒரு கருதுகோளை வெளியிட்டிருக்கின்றேன் (மேற்படி, பக். 422)
5. பின்வருஞ் சொல்வரிசைகள், நாம் இலக்கண வொப்பீட்டி னால் வந்த முடிபிற்கே, தனிப்பட்ட முறையில் தமக்குரிய அளவில் சான்று பகர்கின்றன. அம்முடிபாவது, திரவிட மொழிகள், சமற் கிருதத்திற்கு முற்பட்டதும் இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும் பத்திற்குத் தாயாகக் கருதப்படுவதுமான அந்த இறந்துபட்ட மொழியோடு கொண்டுள்ள தொன்மையான மிக நெருங்கிய தொடர்புக் குறிகளைக் காட்டுகின்றன என்பதே. (மேற்படி, பக்கம் 565).
கால்டுவெலார் கண்ட வுண்மை
கால்டுவெலார் காலத்தில், தொல்காப்பியம் கடைக் கழகப் பனுவல் களும் தலைமைத் தமிழ்ப் புலவர்க்குந் தெரியாது மறைந்து கிடந்தன. மறைமலையடிகள் போலும் தனித்தமிழ்ப் புலவரும் ஆராய்ச்சியாளரும் அக்காலத்தில்லை. இனவிழிப் புறுத்தப் பெரியாரியக்கமும், இனத்தை முன்னேற்ற நயன்மைக் கட்சி யாட்சியும், தமிழின் பெருமை யுணர்த்தச் சுந்தரம் பிள்ளையும், அன்றில்லை. குமரி நாடென்ற பெயரும் ஒருவரும் அறியார். எல்லாத் துறையிலும் தமிழர் ஆரியருக் கடிமைப்பட்டு ஊமைய ராயிருந்த காலத்தில், கால்டுவெலார் வழிகாட்டு வாரின்றித் தாமே ஆராய்ந்ததனால், நெடுங்கணக்கும் எண் வேற்றுமையும் சமற் கிருதத்தினின்று வந்தவை யென்றும், உயரிய கலைகளும் அறிவியல்களும் ஆரியர் கண்டவை யென்றும், இலங்கைக் கப்பால் எத்தீவுந் தமிழர்க்குத் தெரியா தென்றும், தவறாகக் கூற நேர்ந்தது. ஆயினும் மொழித் துறையில் ஓர் உண்மையைத் தெளிவாகக் கண்டார். அது, தமிழ் ஆரியத்திற்கும் சித்தியத்திற் கும் முந்தியதும் மாந்தன் முதன்மொழிக்கு நெருக்கமானது மாகும், என்பதே. இவ்வுண்மை விளங்கித் தோன்றிய சொற் றொகுதிகள், சுட்டுச் சொற்களும் மூவிடப் பெயர்களுமாகும்.
சுட்டெழுத்துக்கள் ஆ இ ஊ என மூன்றே. அவை பின்னர் அ இ உ எனக் குறுகின. இழைத்தல் மொழி (Articulate Speech) தோன்றுமுன், அதாவது எழுத்துஞ் சொல்லுஞ் சொற்றொடரும் ஆகிய மூவகையுறுப்புக்களைக் கொண்டதாக மொழி அமையுமுன், ஆ இ ஊ என்பன சுட்டொலிகளாகவேயிருந்து, பின்னர்ச் சுட்டெழுத்துக்களாயின. எழுத்து நிலையிலும், உண்மையில் அவை ஓரெழுத்துச் சுட்டுச் சொற்களே. ஓரெழுத் தாயினும் பலவெழுத்தாயினும், பொருள் தருவன வெல்லாம் சொல்லேயாம்.
முதற்காலக் குமரிமாந்தர், இதழகற்றிச் சேய்மை சுட்டியும், இதழைப் பின்வாங்கி அண்மை சுட்டியும், இதழ் குவித்து இடைப்பட்ட முன்மை சுட்டியும், ஒலித்த ஒலிகளே, முறையே ஆ இ ஊ என்பனவாம். அவை சுட்டுச் சைகைகளோடு கூடியத னாலேயே, இன்றும் தவறாது மூவிடத்தையுங் குறிக் கின்றன. ஆரியமக்கள் இதை யுணராமையால், அவர் வாயிற் சுட்டொலி கள் பலவாறு திரிந்துள்ளன. அதனால், அவர் மொழிகளிற் சுட்டுச் சொற்களேயன்றி, அவற்றிற்கு அடி மூலமான சுட் டெழுத்துக்களில்லை. தமிழர் குமரிமாந்தரின் நேர் வழியின ராதலால், முச்சுட்டொலிகளும் தமிழில் தம் இயல்பு மாறா திருக்கின்றன.
முச்சுட்டொலிகளினின்றே மூவிடப் பெயர்கள் தோன்றியுள்ளன. படர்க்கைச் சுட்டுப் பெயர் போன்றே, தன்மை முன்னிலைப் பெயர்களும் சுட்டுப் பெயர்களேயாம். தன்மையிலும் முன்னிலை யிலும் சுட்டுப் பெயரன்றி வேறின்மையால், தன்மைச் சுட்டுப் பெயரும் முன்னிலைச் சுட்டுப் பெயரும் தன்மைப் பெயரென் றும் முன்னிலைப் பெயரென்றும் சுருக்கிச் சொல்லப்படுகின்றன.
#மூவிடச் சுட்டுப் பெயர்கள்
ஒருமை பன்மை
முதல்நிலை : படர்க்கை - ஆன் ஆம்
தன்மை - இன் - ஏன் இம் - ஏம்
முன்னிலை - ஊன் ஊம்.
குறிப்பு : ஒருமை குறிக்கும் னகரமெய் ஒன் (ஒன்று) என்பதன் முதற்குறையும், பன்மை குறிக்கும் மகர மெய் உம் என்பதன் முதற்குறையும், ஆகும். உம்முதல் கூடுதல்.
இரண்டாம் நிலை : படர்க்கை - தான் தாம்
தன்மை - யான் யாம்
முன்னிலை - நூன் நூம்
மூன்றாம் நிலை : படர்க்கை - அவன்
அவள் அவர்
அது அவை
தன்மை - நான் நாம்
முன்னிலை - நீன் நீம்
குறிப்பு : அவன் அவள் முதலிய ஐம்பாற் படர்க்கைச் சுட்டுப் பெயர்கள் தோன்றியபின், தான் தாம் என்பன படர்க்கைத் தற்சுட்டுப் பெயர்கள் (Reflexive Pronouns) ஆயின.
தன்மைப் பன்மைப் பெயரின் இரு வடிவுகளுள், யாம் என்பது தனித்தன்மைப் பெயரும் நாம் என்பது உளப்பாட்டுத் தன்மைப் பெயரும் ஆயின.
நீன் என்பது நீ என்று ஈறு குன்றி வழங்கி, இர் ஈறு சேர்ந்து நீயிர் - நீவிர் - நீர் என்னும் பன்மை வடிவுகளையும் தோற்றுவித்தது.
நகரம் மகரமாகத் திரியும். v-L : eh« - kdK (bj.),
தென்பு - தெம்பு.
மகரம் வகரமாகத் திரியும் : எ-டு : அம்மை - அவ்வை,
குமி - குவி.
நகரம் தகரமாகத் திரிவதுமுண்டு.
எ-டு : நுனி - நுதி. நேரம் - தேரம் (நாட்டுப்புற வழக்கு).
தேரம் - தேர் (இந்தி).
நீங்கள் என்பது மலையாளத்தில் நிங்ஙள் என்று குறுகியது போல், நூன் என்பது நுன் என்றும் நூம் என்பது நும் என்றும் குறுகும்.
நூன் - நுன் - துன் - து (இந்தி).
நூம் - நும் - தும் (இந்தி).
நான் நாம் என்னும் தன்மைப் பெயர்களின் முந்திய வடிவம் யான் யாம் என்றிருப்பது போல், நூன் நூம் என்னும் முன்னிலைப் பெயர்களின் முந்திய வடிவமும் யூன் யூம் என்றிருந்தன.
தகரம் சகரமாகத் திரிவது பெரும்பான்மை. எ-டு : மதி - மசி, மாதம் - மாஸ (வ.).’
தமிழ் பிராகிருதம் சமற்கிருதம் தியூத்தானியம் இலத்தீன் கிரேக்கம்
நான் மைன் அஹம் இக் எகொ எகோ
நாம் ஹம் வயம் வீ நோஸ் ஹெமெயிஸ்
நூன் து த்வம் தௌ தௌ ஸு
நூம் தும் யூயம் யூ வோஸ் ஹூமெயிஸ்
மேற்காட்டிய திரிபுகளை யெல்லாம் உளத்திற் கொண்டு ஒப்பு நோக்கின், தன்மை முன்னிலைத் தமிழ்ப்பெயர்கள் பிராகிருதம் முதலிய ஐம்மொழிகளில் எங்ஙனந் திரிந்துள்ளன என்பது விளங்கும். பாலிலிருந்தே நெய் தோன்றினும், உருக்கின நெய் பாலினின்று எத்துணை வேறு பட்டுத் தோன்றுகின்றதோ, அத்துணை கிரேக்கச் சொல்லும் தமிழ்ச் சொல்லினின்று வேறுபட்டுத் தோன்றும் என அறிக. ஆரிய மொழிகளிலுள்ள எல்லாச் சுட்டு வினாச் சொற்களும் தமிழடியின என்பதையும் அறிதல் வேண்டும்.
நோஸ் வோஸ் என்னும் வடிவுகளின் இற்றை, மனம் - மனஸ் (வ.) என்னும் திரிபொடு ஒப்புநோக்குக.
அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்றுள்
ஒன்றே யாயினுந் தனித்தமி ழுண்டோ?
என்று வினவின சாமிநாத தேசிகர், இன்றிருப்பின்,
அன்றியும் வடநூற் களவிலை யவற்றுள்
ஒன்றே னுந்தனி வடமொழி யுண்டோ?
என்று மாற்றியே பாடுவர்.
கால் தூக்குகிற கணக்கப் பிள்ளை விளையாட்டு
ஆட்டின் பெயர் : ஒரு முதலாளியின் காலைத் தூக்கிய கணக்கப் பிள்ளைபோல், ஒருவன் இன்னொருவன் காலைத் தூக்கி ஆடும் ஆட்டு, கால் தூக்குகிற கணக்கப் பிள்ளையாம்.
ஆடுவார் தொகை : இதை ஆட நால்வர் வேண்டும்.
ஆடிடம் : இது பொட்டலிலும், தெருவிலும் ஆடப்பெறும்.
ஆடுமுறை : ஒருவன் வலக்கையும் ஒருவன் இடக்கையுமாக இருவர் கை கோத்துக் குடங்கையாகக் கீழே தொங்கவிட்டு முன் னோக்கி நிற்க, மூன்றாமவன் அவ்விருவருள் இடவன் கழுத்தை இடக்கையாலும் வலவன் கழுத்தை வலக்கையாலும் அணைத்துக் கொண்டு, தன் வல முழங்காலை அவருடைய கோத்த குடங் கையில் வைத்த பின், அவனது இட முழங் காலை நாலாமவன் நிலத்தில் ஊன்றாதவாறு இரு கையாலும் தாங்கிப் பிடித்துக் கொள்வான். இந்த நிலையில் மூன்றாமவனைத் தூக்கிக் கொண்டு முதலிருவரும் நாலாமவனும் அங்கும் இங்கும் இயங்கிக் கொண் டிருப்பர். அங்ஙனம் இயங்கும் போது, முதலிருவரும், கால் தூக்குகிற கணக்கப் பிள்ளைக்கு மாதம் ஐந்து ரூபா என்று மடக்கி மடக்கிச் சொல்லிக் கொண்டே செல்வர்.
ஆட்டுத் தோற்றம் : நோய்ப்பட்ட அல்லது நடக்க வியலாத முதலாளி யொருவர், வீட்டிற்குள் இடம் பெயர வேண்டிய விடத்தும், வெளியே சென்று வண்டியேறிய விடத்தும், அவரைத் கைத்தாங்கலாக இருவர் தாங்கிச் செல்ல, அவருடைய கணக்கப் பிள்ளை அவரது காலொன்றைத் தூக்கிச் சென்றதாகவும், அத்தொண்டுபற்றி அவருக்கு மாதம் ஐந்து ரூபா சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகின்றது. இச் செய்தியை நடித்துக் காட்டுவதே இவ்விளையாட்டு. பண்டைக் காலத்தில் ஐந்து ரூபா நல்ல சம்பளம் என்றறிதல் வேண்டும்.
காலம்
தமிழுக்கு அடிப்படையானதும் இன்றியமையாததுமான சொற்களுள் ஒன்று காலம். ஆயின், ஆராய்ச்சியில்லாதவர் அனைவரும் நம்புமாறு, இதை வடசொல்லென்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி குறிக்கின்றது. ஆயினும்,
காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம்
ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் உரூஉங் கிளவி யெல்லாம்
பால்பிரிந் திசையா வுயர்திணைமேன
என்று தொல்காப்பியங் கூறுகின்றது. (சொல். கிளவி. 58)
இனி, இதுவுஞ் சான்றாகாவாறு,
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே
என்னுந் தொல்காப்பிய நூற்பாவையே (சொல். எச்ச. 1)
ஒருவர் எடுத்துக்காட்டலாம்.
ஆதலால், இதைத் தென்சொல்லேயென்று நாட்டற்குத் தொன்று தொட்ட ஆட்சியொடு அறிவியன் முறைப்பட்ட வேர்ச்சொல்லா ராய்ச்சியும் இன்றிமையாததாகின்றது.
தமிழில், குறுங்காலத்தைக் குறிக்க, அமையம், ஏல்வை, கால், சமையம், செவ்வி, ஞான்று, நேரம், பொழுது. வேளை முதலிய பல சொற்கள் உள்ளன. ஆயின் நெடுங்காலத்தைக் குறிக்கக் காலம் என்னும் ஒரே சொல் உள்ளது. இதற்கு அடி மூலம் கோல் என்பதே; இதன் அடிப்பொருள் திரட்சி என்பதே. உருட்சி, கூடல் என்னும் இரு கருத்தினின்றும் திரட்சிக் கருத்துப் பிறக்கும். இவ்விரு வழியும் கோற்சொல்லிற் கேற்கும்.
குல் - குல - குலவு. குலவுதல் = கூடுதல், வளைதல்
குல் - கொல் - கோல் = திரட்சி.
கோனிற வளையினார்க்கு (சீவக. 209)
âu©l F¢irí« (“nfhyhl¡Fu§fhL«.”), திரண்ட தடியையும் கோற்கண்ணளாகுங் குனிந்து (நாலடி. 17), திரண்ட கம்பையும் (கோல் வலித்தல் = தண்டால் ஓடந் தள்ளுதல்), திரண்ட கழுவையும் (வேன் மழுக்கடைத்தலைக் கழுக்கோல் திருவாலா. 39 : 19), கோல் என்னுஞ் சொல் குறிக்கும்.
பந்தலைத் தாங்கும் கால்களாகக் கம்புகளான கோல்களையே நடுவர். தூண்போலத் தாங்கியாகும்போது பொருள் மாறுவதால், அம் மாற்றத்தைக் குறிக்கக் கோல் என்பது கால் என்று திரியும் சொல்லாக்கத்தில் ஆகாரம் ஓகாரமாகத் திரிவது பன்மொழிப் பொதுநெறி. எ-டு; ஓட்டம் (ஒப்பு) - ஆட்டம், கோணம் (வளைந்த காய்ப்பயறு) - காணம், நோடு - நாடு (நோட்டம் - நாட்டம்)
E. holy day - holy day, fourteen night fortnight, co-relation - correlation.
கால் = (பெ.) 1. பந்தல் தாங்குங் கம்பு. வந்த வேலையை விட்டு விட்டுப் பந்தற்காலைப் பிடித்தானாம் (பழ.) 2. மண்டபந் தாங்கும் தூண். நூற்றுக் கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம். 3. விழாத் தொடக்கத்திற்கு அடையாளமாகப் பந்தற்கால் போல் நாட்டுங் கோல் : (கம்பு) கடல்கோள் விழவின் கடைநிலை சாற்றி (சிலப். 5 : 144). 4. இவர் கொடிகள் பற்றும் பற்றுக் கோடு. (சூடா.) 5. மண்டபக் கால்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு. மாந்தன் இரு காலுயிரி, 6. முழங்கால். 7. உடம்பில் நாலிலொரு பங்கான முழங்கால் போன்ற காற்பகுதி.
ஒ.நோ : அரு - அரை = கழுத்திற்குக் கீழ்ப்பட்ட வுடம்பில் அருகிய (சிறுத்த) இடம், உடம்பில் அரைபோற் பாதியளவு.
இடு - இடை = கழுத்திற்குக் கீழ் இடுகிய (ஒடுங்கிய) இடம், உடம்பில் இடைபோல் நடுவிடம்.
8. பாதம். காலிற்குப் போடச் செருப்பில்லையென்பார்க்கும் (தனிப்பா). 9. நெசவுத்தறியின் கான்மிதி. காஞ்சிபுரம் போனால் காலாட்டிக் கொண்டு சாப்பிடலாம். (பழ.) 10. காலால் நடக்கும் நடை. காறூய்மை யில்லாக் கலிமாவும் (திரிகடு. 46) 11. நடை யால் அமையும் பாதை. (பிங்). 12. கால்போற் கட்டிலைத் தாங்கும் உறுப்பு. கட்டிற் கால்போல நால்வர். 13. வண்டிக்குக் கால்போன்ற சக்கரம். 14. சக்கரமுள்ள வண்டி. கலத்தினுங் காலினும் (சிலப். 2 : 7). 15. தேர்ச் சக்கரம். கடலோடா கால்வ னெடுந்தேர் (குறள். 496). 16. பூவின் தாள். திரள்கால்… அலரி (நாலடி. 199). 17. குடையைத் தாங்கும் பிடி. குடைக் கால்போல் (நாலடி. 368). 18. கால்போல் தாங்கும் வாசல்நிலை. வாசற்கால். 19. வாசற்கால் போன்ற எழுத்து வரி. புள்ளியை இக் காலத்தார் காலாக எழுதி னார் (தொல். எழுத். 17, உரை). 20. கால் போன்ற அடிப்பாகம். களைகால் கழாலின் (புறநா. 120 : 5). 21. மூலம், பிறப்பிடம். மணிக்காலறிஞர் (கல்லா. முரு). 22. வில்லின் அடி, குதை, முனை. ஒருதனு விருகால் வளைய (தேவா. 142 : 14).23. அடி நிலம். நாற்றங்கால், பள்ளக் கால். 24. இடம். புனல் கால் கழீஇய பொழில் (பெரும்பாண். 380). 25. இடப் பொருளுருபு. கண்கால் கடை இடை தலைவாய் திசைவயின் (நன். 302). ஊர்க்கால் நிவந்த 26. கால் போன்ற சடைப்பிரிவு. இரண்டுகாற் பின்னல், இரட்டைகாற் சடை. பிரிவு. தேசிக்குரிய கால்களும் (சிலப்.இ 3 : 16, உரை). 27. இனமுறை, இரண்டாங் கால்முறை. 28. குடும்பம், சரவடி, இனவழி, பழைய காலைத் தூர்க்காதே, புதுக்காலை வெட்டாதே (பழ). 29. கால்போல் ஊன்றும் ஆலவிழுது, கான் மாம் (திவா.) 30. கால்போல ஊன்றும் மழைப்பெயல். மழைக் கால் ஊன்றி விட்டது. 31. கால்போல் நீண்டு விழும் சுடர்க்கதிர். நிலாக்கால் விழுந்தனைய (மீனாட். பிள்ளைத். ஊசற். 1). 32. கால் போல் நீண்டு செல்லும் நீர்க்கால். சரயுவும் பலகாலினோடியும் (கம்பரா. நாட்டுப். 60). வாய்க்கால், கால்வாய், கழிக்கால், ஆற்றுக்கால், வெள்ளக்கால், பள்ளக்கால் 33. நீண்டு வீசுங்காற்று. கால்கடிப் பாகக் கடலொலித்தாங்கு (பதிற்றுப். 68 : 1). 34. ஊதை நோய் (வாத ரோகம்) காற்கானோய் காட்டி (372). 35. ஐம்பூதம். காலெனப் பாகனெ (பரிபா. 3 : 77). 36. எல்லையின்றி நீண்டு செல்லும் நேரம். (பிங்.) 37. செவ்வி. கான்மலியும் நறுந்தெரியல் (பு.வெ. 8 : 18). 38. தடவை. சென்றே யெறிப வொருகால் (நாலடி. 24). 39. ஒரு வினையெச்சவீறு. பழவினை வந்தடைந்தக்கால் (நாலடி. 123).
கால் (leg) - ம, க. fhš, bj., து. காலு ஒ.நோ : Gk. Skelos, leg.
கால் (காற்று) - தெ. காலி (g) - E. gale, very strong wind. Norw. galen, lead weather. கால் - காற்று.
கால் (நேரம்) - ம. கால்.
கால் (வி.) காலுதல் = 1. (செ. கு. வி.) கால் நீளுதல் அல்லது ஊன்று தல் போற் சிந்துதல். 2. வெளிப்படுதல். உருமு கான்றென்னப் பல்லியங்களு மார்த்தன (கந்தபு. முதனாட். 3). 3. பாய்தல் விடர்கா லருவி வியன்மலை - (சிறுபாண். 170) - (செ. குன்றாவி). 1. கக்குதல் (திவா.) ம. கால்குக. (2. தோற்றுவித்தல் பகல் கான்றெழுதரு பல்கதிர்ப் பரிதி (பெரும்பாண். 2)
கால் = கான்றல் = 1. கக்குதல். (திவா.) 2. இருமிக் கோழை துப்பு தல். வெண்ணரை பொரக்கான்று (வேதாரணி வீரசேன. 24).
கால் = 1. வெளிப்படும் அல்லது தோன்றும் முளை (பிங்.) 2. மரக்கன்று (பிங்.) 3. கன்று போன்ற மகன் (பிங்.) 4. முனை போன்ற குறுந்தறி (சூடா).
கன்று என்னும் இளமைப் பெயர் நிலைத்திணைக்கும் விலங் கினத்திற்கும் பொதுவாயிருத்தலையும், சிறு பிள்ளைகளைக் கன்று கயந்தலை என்னும் உலக வழக்கையும், கன்று குட்டி பிள்ளை யென்னும் மூவிளமைப் பெயர் இரு திணைக்கும் பொதுவாக வழங்குதலையும், நோக்குக.
கான்முளை = குடும்பத்தில் தோன்றும் குழந்தை, மகன், பின்னர்க் கான்முளை மன்னுத லிலரே (ஞான, 21 : 12).
குடைகால் = மரத்திற் குடைந்து செய்யப்பட்ட கலம். ஒ.நோ: குடைகரி (பொன்னுருக்குங் கரிக்குகை). குடைகால் - கடைகால் = 1. வாளிபோற் பயன்படும் மரக்கலம். 2. பால்கறக்குங் கடைகால் போன்ற மூங்கிற் குழல். 3. கட்டிட அடிப்படைக்குத் தோண்டும் நீண்ட குழி அல்லது அகழி.
மரக்கால் - முதற்கண் மரத்தாற் செய்யப்பட்ட முகவைக் கலம்.
மரக்கால் - கால் = 1. மரக்கால். கால் பெருத்தும் பொலி சிறுத் தாலும், (திருவிருத். 58, வியா. பக். 324). 2. அளவு (கருவியாகு பெயர்).
கால் (தூண்) - காலம் = பெருந்தூண். ஓ.நோ : தூண் - தூணம் = பெருந்தூண். பசும்பொற் றூணத்து (மணி. 1 : 48).
கால் என்பதினின்று திரிந்த காலம் என்னுஞ் சொல், காலத்தை யுணர்த்துதல் போன்றே தூணத்தையும் உணர்த்துதல் வேண்டும். ஆயின், அப் பொருள் இன்று வழக்கற்றது. பண்டை வழக்கைக் காட்டும் இலக்கியமும் இறந்துபட்டது.
ஒ.நோ : L. columna, pillar, F. colompne, It. colonna, E. Column, (1) a pillar, support.
It. colonnata, F. colonnade, E. colonnade, a row of columns.
E. column (2) a vertical cylindrical mass of water mercury, smoke etc. அழற்பிழம்பு என்னும் வழக்கை நோக்குக.
(2) Vertical division of page in newspapers. செய்தித்தாட் கட்டங்கள் தூண்கள் போல் தோன்றுவதைக் காண்க.
(3)
4. A body of troops resembling a column.
ஒ.நோ : தண்டு = படை. தண்டு = தண்டம் = படை. படை, வகுப்பு வடிவம்.
E. colonel, highest regimental officer. L. columna - It. colonna - colonello F. colonel - E., colonel.
கீற்று (Skeat), கிளேயின் (Klein) முதலிய ஆங்கிலச் சொல்லியல் அதிகாரி களெல்லாம் column என்னுஞ் சொல்லை, உயரத்தையும் மலையையுங் குறிக்கும் columen என்னும் இலத்தீன் சொல்லினின் றும், எழுதல் அல்லது உயர்தல் என்னும் கருத்தை யுணர்த்தக் கூடிய qel என்னும் கருதுகோள் வேர்ச் சொல்லினின்றும், திரிக் கின்றனர். அதுவும் பொருத்தமாகத் தோன்றுகின்றது. ஆயின், தூண்கள் இயற்கையாகத் தோன்றியவையல்ல. தாங்குதல் என்னும் அடிநிலைக் கருத்தும் நீண்டிருத்தல் என்னும் வழி நிலைக் கருத்தும் தூணியியல்பிற்கு மிகப் பொருந்தும்.
கால் - காலை = (பெ.) 1. நேரம், பொழுது. (பிங்.) 2. தக்க சமையம். காலைய தறிந்தனை (கந்தபு. திருவவ. 14). 3. தடவை முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர் (நாலடி. 24). 4. துயிலெழும் அல்லது வேலை தொடங்கும் விடியற்காலம், காலையி லெழுந்தவுடன் காகத்தைப் பார்த்தல் கூடாது. (பழ.)
காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல் யான்
மாலைக்கு செய்த பகை. (குறள் - 1225)
5. பள்ளியெழுச்சி முரசம். மேல்வந்தான் காலைபோல் …… துயி லோ வெழுப்புக. (கலித். 70) 6. விடிகாலை யெழுங் கதிரவன். காலை யன்ன சீர்சால் வாய்மொழி (பதிற்றுப். 21 : 4). 7. பகல் முதற்பத்து நாழிகை, சிறுபொழுது ஆறனுள் ஒன்று. 8. முற்பகல். காலைப்பள்ளி. 9. பகற்காலம் எல்லியிது காலையிது வென்ப தறிகல்லா (சீவக. 1877) 10 வாழ்நாள் நோகோ யானே தேய்கமா காலை (புறநா. 234). 11. வாழ்நாட் காலத்தின் முற்பகுதி.
கு.பெ.எ. (adv.) பொழுதில். அடுங்காலை நீர் கொண்ட வெப்பம் போல் (நாலடி. 68)
கால் - காலம் = 1. காலப் பொழுது. கால முலக முயிரே யுடம்பே (தொல். கிளவி. 58). 2. விடியற்காலம். அவர் காலத்தாலே யெழுந்து போய்விட்டார். (ஆம்பூர் உ.வ.) காலமே தேவனைத் தேடு (வே.சா.) 3. தக்க சமயம்.
காலங் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர் (குறள். 485)
4. நற்காலம். தமிழுக்கு இன்னுங் காலம் வரவில்லை. 5. குறித்த காலம். அக்காலத்துப் போலும் பாண்டியநாட்டைக் கடல் கொண்டது (இறை, 1. உரை). 6. தீக்காலம். கேடு காலம். அவனுக் கும் ஒரு காலம் வரும். 7. இளமைக் காலம் சென்றது காலம் சிதைந்த திளமை நலம் (திருக்கருவை வெண்) 8. வாழ்நாள். மறைமலையடிகள் கால முழுதும் தமிழுக்கே பாடுபட்டார், அவர் காலமாகி விட்டார். 9. இறப்புக் காலம். அவனுக்குக் காலம் நெருங்கி விட்டது. 10. இளவேனில், முதுவேனில், கார், கூதல், முன்பனி, பின்பனி என்னும் அறுவகை இயற்கைக் காலம். 11. உழவுத் தொழிற்குச் சிறந்த மழைக் காலம் அல்லது கோடை யல்லாக் காலம். காலச் சோளம். காலக் கேழ்ப்பை, காலப் பயிர். இவை முறையே கோடைச் சோளம், கோடைக் கேழ்ப்பை, கோடைப் பயிர் என்பவற்றிற்கு எதிர். 12. இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்று இலக்கணங் கூறும் மூவகைத் தொடர்ச்சிக் காலம். 13. வெயில், மழை, பனி என்னும் மூவகை இயற்கை வேறுபாட்டுக் காலம். (தொல். புறத். 20, சோ, சு. பா. உரை) 14. சவுக்கம் (விளம்பம்) முடுக்கம் (துரிதம்), நடுப்பம் (மத்திமம்) என்னும் மூவகைப் பாட்டியக்கக் காலம். 15. ஒரு முரலிற்கு (சுவரத்திற்கு) இரு மாத்திரையும் ஒரு மாத்திரையும் அரை மாத்திரையும் கால் மாத்திரையும் எடுக்கும் முதற்காலம், இரண்டாங் காலம், மூன்றாங் காலம், நாலாங் காலம் என்னும் நால்வகை முரற் பயிற்சிக் காலம்.
5. கழகக் காலம் பிற்காலம் என்றும், கற்காலம் இருப்புக் காலம் என்றும், பல்வேறு வகையிற் பகுக்கப்படும் வரலாற்றூழிக் காலம். 17. கால மெய்ப்பொருள் (தத்துவம்).
காலம் - வ. கால.
சமற்கிருத ஆங்கில அகரமுதலி தொகுத்த மானியர் உவில்லியம்சு, தென் சொல்லை வடசொல்லாகக் காட்டும் கலையிலும், அதற் கேற்றவாறு பொருந்தப் பொய்த்தலிலும் பொருந்தாப் பொய்த்த லிலும் வடமொழியாளரை விஞ்சும் வகையில்,
வடமொழித் தாது பாடத்தில் (Dhatupatha) உள்ளவாறு kal. to souund, to count என்று எடுத்துக் கூறி, cf. L. calculo என்று இன மொழிச் சொல்லோடு ஒப்புநோக்கச் சொல்கின்றார்.
ஒலித்தலுக்கும் எண்ணுதல் அல்லது கணக்கிடுதலுக்கும் யாதொரு தொடர்புமில்லை.
calculus என்பது சிறுகல் என்று பொருள் படும் இலத்தீன் சொல். பண்டைக் காலத்திற் சிறு கூழாங்கற்களைக் கொண்டு எண்ணிப் பழகியதனால், calculate என்னும் வினைச் சொல் தோன்றிற்று. L. calx = கல். Gk. khalis. L. culus என்பது சிறுமைப் பொருளீறு (dim. suf.) இஃது எல்லா ஆங்கில அகர முதலிகளிலும் கூறப்பட் டுள்ளது. ஆகவே, காலம் என்னும் சொல்லிற்கு calculate என்னுஞ் சொல் மூலமாகாது.
கூழாங்கற்களைக் கொண்டு எண்ணிப் பழகிய காலத்திற் கணிக் கப்பட்டவை, காய்கறிகளும் காசும் போன்ற காட்சிப் பொருள் களேயன்றி, காலமும் நாளும் போன்ற கருத்துப் பொருள்களல்ல.
தமிழிற்போல், கால், காலை, என்ற சொற்கள் வட மொழியில் இல்லை. இவ்விரு சொற் போன்றே காலம் என்னும் சொல்லும் தமிழில் அடிப்படைச் சொல்லாகத் தொன்றுதொட்டு இருவகை வழக்கிலும் வழங்கி வருகின்றது. கால் - காலம். ஒ. நோ : வால் வாலம்.
உலக வழக்கு
காலக் கொடுமை, காலங் கண்டவன், காலங் கடத்தல், காலங் கடத்துதல், காலங்கழித்தல், காலங்காட்டி, காலங்காலத்தாலே, காலங்கிட்டுதல், காலங் கூடுதல் காலங் கூடி வருதல், காலங் கெடுதல், காலஞ்செய்தல், காலஞ்செல்லுதல், காலஞ்சொல்லி, காலத்தாலே, காலத்தின் கோலம், காலந்தள்ளுதல், காலந்தாழ்தல், காலந்தாழ்த்தல், காலப் பயிர், காலம் பண்ணுதல், காலம் பார்த் தல், காலம் பெற, காலம் போதல், காலம் போக்குதல், காலமல் லாக் காலம், கால மழை, காலமறிதல், காலமாதல், காலம் மாறு தல், காலமெல்லாம், கால வரம்பு, காலவரையறை, கால வழக்கம்;
அந்தக்காலம், இந்தக் காலம், எந்தக் காலம், ஆங்காலம், போங் காலம், வருங்காலம், ஆயிரங்காலத்துப் பயிர், ஊறுகாலம், நல்ல காலம், கெட்ட காலம், கேடுகாலம், நீண்ட காலம், பஞ்ச காலம், பனிக் காலம், பேறுகாலம், போனகாலம், வந்த காலம், மழை காலம், வெயிற்காலம்.
பழமொழிகள்
காலஞ் செய்கிறது ஞாலஞ் செய்யாது.
காலத்திற் கேற்ற கோலம்.
காலத்திற் கேற்றபடி பெருச்சாளி காவடியெடுத் தாடினதாம்.
காலமல்லாக் காலத்திற் காய்த்ததாம் பேய்ச்சுரைக்காய்.
காலமறிந்து ஞாலம் ஒழுகு.
காலமறிந்து பிழையாதவன் வால மறுந்த குரங்காவான்.
காலம்போம் சொல் நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.
காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டது.
மரபுக் கூற்று
காலமெல்லாம் பாடுபட்டும் கையில் கால் துட்டைக் காணோம்.
செய்யுள் வழக்கு (இலக்கணம்)
இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், முக்காலம், காலப் பெயர், கால மயக்கம், கால மலைவு, கால வழு, கால வழுவமைதி, கால வாகுபெயர், கால விடைநிலை.
தொல்காப்பிய நூற்பாக்கள்
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும். (வினை - 1)
காலந் தாமே மூன்றென மொழிப. (மேற்படி .2)
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளும்
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே. (மேற்படி.3)
குறிப்பினும் வினையினும் நெறிபடத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொ லெல்லாம்
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன வுரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே. (மேற்படி 4)
மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியும் என்ப. (மேற்படி 10)
அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானும்
… … … … …
அப்பால் காலங் குறிப்பொடு தோன்றும். (மேற்படி.16)
அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
… … …. …. …. …
என்ன கிளவியுங் குறிப்பே காலம். (மேற்படி 17)
… காலக் கிளவி யுயர்திணை மருங்கில்… (மேற்படி.18)
… காலக் கிளவி யஃறிணை மருங்கில்… (மேற்படி.24)
அன்ன மரபின் காலங் கண்ணிய… (மேற்படி. 32)
நிலனும் பொருளுங் காலமுங் கருவியும்
… … … … …
செய்யும் செய்த என்னுஞ் சொல்லே. (மேற்படி.37)
செய்தென் எச்சத் திறந்த காலம்
எய்திடன் உடைத்தே வாராக் காலம்.
முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை
எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும். (மேற்படி. 43)
வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள என்மனார் புலவர்.
…brŒtதில்வÊநிகழுங்காலத்து… (மேற்படி. 45)
வாரா¡காலத்Jவினைச்சொ‰கிளவி… (மேற்படி48)
இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்… (மேற்படி 50)
ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். (மேற்படி.51)
தொல்காப்பியம் கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டில் தோன்றிய தாயினும் மொழிப, என்ப, என்மனார் புலவர் ,“வரையார், என்னும் ஆசிரியர் கூற்றுகளாலும், செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தோடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
என்னும் பனம்பாரனார் கூற்றாலும், அதில் (தொல்காப்பியத் தில்) கூறப்பட்டுள்ள பண்டை யிலக்கணமெல்லாம் தலைக் கழகக் காலத்தின வென்றும், இந்திய ஆரியரின் முதல் நூலாகிய இருக்கு வேதத்திற்கு முற்பட்டதும், வேத ஆரியரின் முன்னோர் இந்தியா விற்கு வருதற்கும் முந்தியதுமான, முதுபழந் தொன்மை யன வென்றும், தெற்றெனத் தெரிந்து கொள்க.
இதுகாறுங் கூறிய இருவகை வழக்குச் சொற்களே போது மாதலின், இலக்கணமல்லாத செய்யுட் சொற்கள் இங்குக் காட்டப்படவில்லை.
இருபத்தாறு செய்யுளுறுப்புக்களைக் கூறும் செய்யுளியல் முதல் நூற்பாவில்,
கேட்போர் களனே காலவகை எனாஅ
என்று தொல்காப்பியர் கூறியிருப்பதை ஊன்றி நோக்குக.
காலன்
காலன் - கால
காலன் - காலத்தை முடிவு செய்யும் அல்லது காலமுடிவில் வருங் கூற்றுவன். காலனென்னுங் கண்ணிலி யுய்ப்ப (புறம் - 240 : 5). (வ.வ: 118)
காவியம்
வடமொழி முதற்காவியம் வான்மீகி யிராமாயணம். அது மகாபாரதத்திற்கு முந்தியது.
கவியினாற் செய்யப் பெற்றது காவியம் (காவ்ய)
ஆயினும் வடமொழியாளர் பத்யம் (செய்யுள்), கத்யம் (உரை நடை), சம்பு (செய்யுளும் உரைநடையுங் கலந்த கலவை) என மூவகையாகக் காவிய நூல்களை வகுத்திருக்கின்றனர்.
இனி, படிக்கப்பட்டுக் காதால் மட்டும் கேட்கப் பெறுவது சிரவியம் (ச்ரவ்ய) என்றும், படிக்கப்படுவதுடன் நடிக்கவும்பட்டு கண்ணாலுங் காணப்பெறுவது திருச்சியம் (த்ருச்ய) என்றும், வேறும் இருவகையாகக் காவியங்களை வகுத்துள்ளனர். திருச்சியம் என்பது நாடகக் காவியம்.
காளிதாஸன் முதல் நாகராஜ கவிவரை 54 காவிய வாசிரியர் பெயர்களும், அவர்களியற்றிய நூற்றுக்கணக்கான பத்திய காவியங்களும், P.S. சுப்பிரமணிய சாத்திரியார் இயற்றிய வட மொழி நூல் வரலாறு என்னும் நூலிற் குறிக்கப் பெற்றுள.
பத்திய காவியம் என்னும் வனப்பியற்றிய பாவலருள் தலை சிறந்தவர் காளிதாசர். அவரியற்றிய குமாரஸம்பவம், மேக ஸந்தேஸம், ரகுவம்சம், ருதுஸம்ஹாரம் என்னும் கேள்வி வனப் புக்களும், மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசீயம், சாகுந்தலம் என்னும் காட்சி வனப்புக்களும், உலகப் புகழ்பெற்றவை. காளிதாசன் காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டா யிருக்கலாம்.
காவிரி
காவிரி (காவேரி) - காவேரி
காவிரி - காவேரி.
இவ்விருவடிவுள் எது முந்தியதேனும், இரண்டும் தமிழக ஆற்றுப் பெயராதலானும் இருவகை வழக்கிலும் தொன்றுதொட்டு வழங்கி வருதலானும், தமிழ்ப் பெயராகவே யிருத்தல் வேண்டும். (வ.வ. : 118)
காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கியமை
சேரன் செங்குட்டுவன் பத்தினித் தெய்வத்திற்குப் படிமை நிறுவி விழா வெடுத்தபின், காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டது. அன்றோ அதற்குச் சற்றுமுன்போ குமரியாறும் கடலுள் மூழ்கிற்று. அதன்பின் தமிழகத்தின் தென்னெல்லையும் கடலாயிற்று. அதனால்,
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் (சிலப். 8:1)
என்று பாடினார் இளங்கோவடிகள்.
காளகம்
காளகம் - காலக
காளம் - காளகம் = கருமை. காளக வுடையினன் (சீவக. 320.)
காளகம் - காழகம் = கருமை. காழக மூட்டப்பட்ட (சீவக. 1230.) (வ.வ : 119)
காளம்
காளம் - கால
கல் - கஃறு = கருமை, கருமைக் குறிப்பு.
கஃஃறென்னுங் கல்லத ரத்தம் (தொல். எழுத். 40, உரை)
கல் - கால் = கருமை.
கால்தோய் மேனிக் கண்டள் (கம்பரா. வானர. 21)
கல் - கள் - களம். கால் - காள் - காளம் = கருமை. காள் - காழ் - காழகம் = கருமை. (வ.வ : 111)
காளம் - கால
கள் - காள் - காளம் = கருமை.
காளம்2 - காஹல
எக்களித்தல் = கெந்தளித்தல், பெருமகிழ்ச்சி கொள்ளுதல்.
எக்களி - எக்காளம் = கெந்தளிப்பு. கெந்தளிப்பாய் ஊதும் கொம்பு அல்லது குழற்கருவி. எக்காளம் - காளம் - காளகம். (வ.வ: 118)
காளி
காளி - காலீ
கள் - காள் - காளி = கரியவள், பேய்த்தலைவி, பாலை நிலத் தெய்வம்.
கருப்பி, கருப்பாய், மாரி என்னும் உலக வழக்கையும் மாயோள் என்னும் செய்யுள் வழக்கையும் நோக்குக.
மால் - (மார்) - மாரி = கருமுகில், மழை, கரியவள் (காளி).
மரணத்தை உண்டாக்குபவள் என்று பொருள் கூறி மாரி என்பதை வடசொல்லாகக் காட்டுவது பொருந்தாது.
மா = கருமை. மா - மாயோள் = கரியவள் (காளி).
பண்டைத் தமிழகத்திற் போர் பெரும்பாலும் பாலை நிலத்தில் நிகழ்ந்தமையால், காளி போர்த் தெய்வமும் வெற்றித் தெய்வ மும் (கொற்றவை) ஆனாள். பின்பு தாயாகக் கருதப் பெற்றதனால் அம்மையெனப் பெயர்ப் பெற்றாள்.
வேனிற்காலத்திற்குரிய கொப்புள நோய் காளியால் வருவதாகக் கருதப்பட்டதினால், அது அம்மை யெனப்பட்டது. போர் வெற்றி நோக்கியும் அம்மை நோய்ப்பற்றியுங் காளி நாளடைவில் ஐந்திணைக்கும் பொதுத் தெய்வமானாள்.
ஆரியர் வருமுன்பு தமிழர் பனிமலைவரை சென்று பரவியிருந்த தினால், வங்கத்திற் காளிக் கோட்டம் ஏற்பட்டது.
காளி ஆரியத் தெய்வ மன்மையின் வேதத்தில் இடம்பெறவில்லை. ஆரியர் சிந்து வெளியினின்று கிழக்கு நோக்கிச் சென்று வங்கத்தையடைந்த பின்னரே, காளி வணக்கத்தை மேற்கொண் டனர்.
குமரிக் கண்டத்தில் தோன்றிய, குமரி, கன்னி என்னும் மலைப் பெயரும் ஆற்றுப் பெயரும் காளியின் பெயர்களே.
கயற்கண்ணியை அங்கயற்கண்ணி என்றதுபோல், காளியையும் பிற்காலத்தில் அங்காளி, அங்காளம்மை, என்றழைத்தனர். அங்கம்மா என்பது அங்காளம்மை என்பதன் சிதைவாகும்.
காற்று வகை
வேற்றலம் (வாதம்)
வளி - Wind.
சூறாவளி - Tempest.
சுழல் - Whirlwind.
காற்று - Gas.
அன்றமை - Air.
ஆவி - Spirit, vapour.
வெம்பாவி - Mist.
நீராவி - Stream.
புயல் - Cyclone.
உயிர் - Life.
கொண்டல் - கிழக்கினின்று வீசும் மழைக்காற்று.
தென்றல் - தெற்கினின்று வீசும் இனிய மென்காற்று.
கோடை - மேற்கினின்று வீசும் வெப்பமான வன்காற்று.
வாடை - வடக்கினின்று வீசும் குளிர்க் காற்று.
கானம்
கானம் – கானன
கடு - காடு - கா - கான் - கானம், கானகம். கான் - காடு (திவ .)
கானம் - காடு. கானக் கோழியும் (சிலப். 10 : 116)
கானகம் = 1. காடு. கானகத்தே நடக்குந் திருவடி (திருவாச. 40:8).
2. மலங்காடு. கானக நாடன் (ஐங்குறு. 217).
வடவர் கன் என்னும் பொருந்தாச் சொல்லை மூலமாகக் காட்டு வதை மா. வி. அகரமுதலி ஒப்புக் கொள்ளவில்லை. (வ.வ : 120)
கிச்சுக் கிச்சுத் தம்பலம் விளையாட்டு
ஆட்டின் பெயர் : திரியை மண்ணுள் வைத்து மறைத்துக் கிச்சுக் கிச்சுத் தம்பலம் என்று சொல்லியாடும் ஆட்டு, அச் சொல் லையே பெயராகக்கொண்டது. இது பாண்டி நாட்டில் திரித்திரி பொம்முதிரி என வழங்கும்.
ஆடுவோர் தொகை : இரு சிறுமியர் இதை ஆடுவர்.
ஆடு கருவி : ஒரு முழுநீளமும் நால்விரல் உயரமுமுள்ள ஒரு சிறுமண் அல்லது மணற்கரையும், ஒருவிரல் அகலமும் இருவிரல் நீளமுமுள்ள ஒரு துணித்திரியும், இதை ஆடுகருவியாம். திரிக்குப் பதிலாகச் சிலவிடத்துக் குச்சையும் வைத்துக்கொள்வதுண்டு. பொதுவாக, பாண்டி நாட்டில் திரியும் சோழகொங்கு நாட்டில் குச்சும் வைத்துக் கொள்ளப்படும்.
ஆடிடம் : மண்ணும் மணலும் உள்ள இடமெல்லாம் இதை ஆடுமிடமாம்.
ஆடு முறை : ஒருத்தி, திரியைப் பற்றிக்கொண்டிருக்கும் தன் வலக்கைப் பெருவிரல் ஆட்காட்டிவிரல்களை மண்கரையின் வலப்பக்கத்திலும், வெறுமனே பொருத்தியிருக்கும் இடைக் கைப் பெருவிரல் ஆட்காட்டி விரல்களை அதன் இடப் பக்கத்தி லும், வைத்து உட்புகுத்தி அதன் ஒரு கோடியினின்று மறு கோடிவரை முன்னும் பின்னுமாகப் பலமுறை நகர்த்தியியக்கி, திரியை மறைவாக ஓரிடத்தில் வைத்துவிட்டுப் பிறிதோரிடத்தில் வைத்ததாக நடித்துக் காட்டி, திரியுள்ள விடத்திற் கைவைக்கும் படி தன் எதிரியைக் கேட்பாள். எதிரி தன் இருகைகளையும் கோத்துத் தான் ஐயுற்றவிடத்திற் கரையின் குறுக்கே பொத்தி வைப்பாள். அவள் சரியான இடத்திலும் வைத்திருக்கலாம்; தவறான இடத்திலும் வைத்திருக்கலாம். சரியான இடத்தில் வைத்திருந்தால் பொத்தினவளும், தவறான இடத்தில் வைத் திருந்தால் திரியை வைத்தவளும், வென்றவராவர். ஒவ்வொரு வெற்றிக்கும் அடையாளமாக ஒவ்வொரு சிறுமண் குவியல் வைக்கப்படும். யாராயினும், வென்றவளே அடுத்தமுறை ஆட வேண்டும்.
திரியை மண்ணுக்குள் வைத்து மறைக்கும்போது, கிச்சுக் கிச்சுத் தம்பலம் கீயாக் கீயாத் தம்பலம், மச்சு மச்சுத் தம்பலம் மாயா மாயாத் தம்பலம் என்று பாடுவதுண்டு. பாண்டி நாட்டிற் கீழ்வருமாறு பாடப்படும் :
திரித்திரி பொம்முதிரி
திரி காலடி பொம்முதிரி
காசு கொண்டும் பொம்முதிரி
கடையிலே கொண்டும் பொம்முதிரி
நாலு கரண்டி நல்லெண்ணெய்
நாற்பத் தொரு தீவட்டி
கள்ளன் வருகிறான் கதவலடை
வெள்ளச்சி வருகிறாள் விளக்கேற்று
வருகிறார் ஐயா சுப்பையா
வழிவி டம்மா மீனாட்சி
இதில், வருகிறான் வருகிறாள் வருகிறார் என்னுஞ் சொற் கள், முறையே, வாறான் வாறாள் வாறார் எனக் கொச்சை வடிவிற் பாடப்படும்.
பத்துமுறை முந்தி வென்றவள், எதிரியின் கூட்டுக் கை நிரம்ப மண்ணள்ளி வைத்து அதனுள் திரியை (அல்லது குச்சை) வைத்து மறைத்து, மண்நடுவில் எச்சைத் துப்பி அதில் ஒரு சிற் றெறும்பைப் பிடித்துப் போட்டு, எதிரியின் கண்பட்டைமயிர் அல்லது தலைமயிர் ஒன்றை அவளைப் பிடுங்கச் சொல்லி அதை யும் அவ்வெச்சின்மேல் இட்டு, அவள் கண்ணை இறுகப்பொத்தி ஐம்பது கசத்தொலைவு கொண்டு சென்று மண்ணைக் கீழே கொட்டுவித்து, பின்பு புறப்பட்ட இடத்திற்குக் கொண்டுவந்து, கண்ணைப் பொத்தின கையை எடுத்துவிட்டு, மண் கொட்டின இடத்திற்குப் போய்த் திரியை (அல்லது குச்சை) எடுத்துக் கொண்டு வரச்சொல்வாள். எதிரி எடுத்துக் கொண்டு வந்துவிட் டால் தண்டனையில்லை; இல்லாவிடின் அவள் தலையில் ஒரு குட்டுக் குட்டப்படும். எதிரி மண் கொட்டிய இடத்தை எளி தாய்க் கண்டுபிடிக்க முடியாதபடி, அவளைக் கண்பொத்திக் கொண்டுபோகும்போதும் கொண்டு வரும் போதும், நேராகச் சென்று நேராக வராமல் வளைந்து வளைந்து பல திசையில் போய்வருவது வழக்கம். வென்றவள் தோற்றவளைக் குட்டும் போது, பக்கத்திலிருக்கும் பிள்ளைகளும் ஆளுக்கொன்று குட்டுவது சிலவிடத்துண்டு.
ஆட்டுத் தோற்றம் : ஒருசால் இது கொள்ளைத் தொழிலினின்று தோன்றியிருக்கலாம்.
ஆட்டின் பயன் : நினைவாற்றலும் திசையறியுந் திறனும் இதனால் வளர்க்கப் பெறலாம். (த.நா.வி.)
கிட்டம்
கிட்டம் - கிட்ட
கிட்டு - கிட்டி - கிட்டம். கிட்டித்தல் = இறுக்குதல், கிட்டம் = இறுகிய கட்டி, இறுகிய வண்டல், அதுபோன்ற இருப்புத்துரு.
கிழம் - ஜரஸ் (இ.வே.)
தமிழ் கிரேக்கம் வேதமொழி
கிழம் கெரோன் (g) ஜரஸ்
வடவர் மூலமாகக் காட்டும் ஜுர், ஜ்ரு என்பவையெல்லாம் கிழ என்பதன் திரிபே. (வ.வ: 120)
கிண்கிணி
கிண்கிணி - கிங்கிணி
தவளைவாய பொலஞ்செய் கிண்கிணி (குறுந். 148).
கிண்கிணி - கிங்கிணி = 1. பாத சதங்கை (பிங்.). 2. சதங்கை யரை க் கோவை.
மாணிக்கக் கிங்கிணி தன்னரை யாட (திவ். பெரியாழ். 1: 8: 2). (வ.வ: 120)
கிழவன் கிழத்தி
தலைவன் தலைவி, தலைமகன் தலைமகள், கிழவன் கிழத்தி (நாடு கிழவோர்) என்பன, அரசக் குலத்தார்க்குரியனவாய், இல்லறம் நெடுகலும் வழங்கும் இலக்கிய வழக்காம். இவற்றுள் கிழவன் கிழத்தி என்பன மனைக் கிழவன் மனைக் கிழத்தி என்னும் வழக் கில் பொதுமக்கட்கும் வழங்கும். மனைக்கிழத்தியை வாழ்வரசி என்பது நெல்லை நாட்டு வழக்கு. (த.தி. முன் VI)
கிளித்தட்டு விளையாட்டு
முகவுரை : தமிழ்நாட்டில் பெருவாரியாக விளையாடப்படும் விளையாட்டுகளில் இரண்டாவது கிளித்தட்டு. இது கிளியந் தட்டு எனவும் வழங்கும். இஃது ஆடவர் விளையாட்டு.
தோன்றிய வகை : நன்செய் புன்செய்களிலும் போர் அடிக்கும் களங்களிலும் அறுவடைக் காலத்தில், சிந்திச் சிதறிக் கிடக்கும் கூல (தானிய) மணிகளை எறும்புகள் ஈர்த்துக் கொண்டுபோய், நிலத்தின் கீழும் மண் சுவரடியிலும் தங்கள் வளைகளில் படிக் கணக்காகவும் மரக்காற் கணக்காகவும் மழைக்கால உணவாகச் சேர்த்து வைப்பது இயல்பு. இங்ஙனம் சேர்த்து வைக்கப்பட்ட கூலத்திற்கு அடிபுல் அல்லது அடிப்புல் என்று பெயர். பஞ்சக்காலத்திலும் உணவில்லாத போதும் ஏழையெளியவர் இந்த அடிப்புல்லைத் தேடி அகழ்ந்தெடுப்பது வழக்கம்.
அடிப்புல் போன்றே ஏழை பாழைகட்கு வேறொரு வருவாயு முண்டு. அது கிளியீடு. அதாவது, கிளிகள் கழனிகளிலும் கொல்லை களிலும் பயிர் பச்சைகள் விளைந்த பின்பு அவற்றின் கதிர்களைக் கொத்துக் கொத்தாய்க் கொத்திக்கொண்டு போய் அண்மையிலுள்ள மரப்பொந்துகளில் இட்டு வைத்திருப்பது. இதைக் கண்டவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இது அருமையாய் வாய்ப்பதெனினும் எளிதாக வும் ஏராளமாகவும் கிடைப்பதால், திடுமென ஓர் இரவலன் பெற்ற பெரும் பரிசிற்காவது எதிர்பாராது கிட்டிய பெருவருமானத்திற்காவது இதை உவமை கூறுவது வழக்கம். இதனால் கிளியீடு வாய்த்தாற் போல என்னும் உவமைப் பழமொழியும் எழுந்தது. இப் பழமொழிக் கருத்தையமைத்தே,
ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளிமரீஇய வியன்புனத்து
மரனணி பெருங்குரல் அனையன் ஆதலின்
நின்னை வருதல் அறிந்தனர் யாரே (புறம் : 138)
என்று மருதனிளநாகனார், நாஞ்சில் வள்ளுவனைப் பாடினார்.
பாரியின் பறம்புமலை மூவேந்தரால் முற்றுகையிடப் பட்டிருந்த போது, கபிலர் பல கிளிகளைப் பழக்கி அவற்றால் மலையடி வாரத்துக் கழனிகளிலுள்ள நெற்கதிர்களைக் கொணர்வித்து அவற்றைக்கொண்டு நொச்சிமக்களை உண்பித்தனர் என்றொரு செய்தி வழங்கி வருகின்றது.
கிளிகள் சில சமயங்களில் வெட்டுக்கிளிகள் போலப் பன்னூற்றுக் கணக்கினவாய்ப் படலம் படலமாய் விளைபுலங்களில் வந்து விழுந்து கதிர்களை யெல்லாம் கொய்து தாமே அறுவடை செய்துவிடுவதுண்டு. இதனாலேயே,
விட்டில் கிளிநால்வாய் தன்னரசு வேற்றரசு
நட்டம் கடும்புனல்கால் எட்டு
என்று நாட்டுக்குக் கேட்டை விளைப்பவற்றுள் கிளியையும் ஒன்றாகக் கூறினர் முன்னோர்.
விளைபுலங்களில் வந்து விழும் பறவைகளுள் பெருங்கேட்டை விளைப்பது கிளியாதலின், விளை புலத்திற் பறவை யோட்டு தலுக்குக் கிளி கடிதல் அல்லது கிளியோப்புதல் என்றும், அதனை ஓட்டுங் கருவிக்குக் கிளிகடி கருவி அல்லது கிளிகடி கோல் என்றும் பெயர்.
கிளிகள் பெருந்தொகையாய் விளைபுலங்களில் வந்து வீழ்ந்த போது, உழவர் அப் புலங்களிற் புகுந்து தட்டுத் தட்டாய் நின்று அக்கிளிகளை அடித்துத் துரத்தியும் அவை கொய்து கொண்டு போகும் கதிர்களைக் கவர்ந்தும் வந்தனர். இவ் வழக்கத்தினின்றே கிளித்தட்டு என்னும் விளையாட்டுத் தோன்றியது. தட்டு என்பது ஒரு தவணையின் உறுப்பாகும் பாத்தி வரிசை.
விளையாடு முறை : ஊருக்கருகிலுள்ள ஒரு பொட்டலில் அல்லது வெளிநிலத்தில் சுமார் முப்பது அடி அகலமுள்ள ஒரு நீள் நாற்கோண வரப்புக்கோடுகள் பாதத்தால் இழுத்தமைக்கப் படும். அதன் ஓர் அகலப் பக்கத்தினின்று மற்றோர் அகலப் பக்கத் திற்கு நண்ணடுவில் நெடுக்காக ஒரு தவணைக்கோடு இழுக்கப் படும். அதன்பின் பாத்திகள் நாற்கோணமாய் அமையுமாறு அத் தவணைக் கோட்டிலிருந்து குறுக்காகத் தட்டுக்கோடுகள் இழுக்கப்படும். தட்டுக் கோட்டின் தொகை விளையாடுவாரின் தொகையைப் பொறுத்தது. அது ஒரு கட்சியினரின் தொகைக்கு ஒன்று குறைந்திருக்கும். தட்டின் தொகைக்குத் தக்கபடி கிளித்தட்டின் நீள் வரப்புக் கோடுகள் நீண்டிருக்கும்.
கிளித்தட்டுக் கோடு கீறு முன்பாவது கீறிய பின்பாவது, ஆடுவார் சமத்தொகையாக இரு கட்சியாய்ப் பிரிந்து கொள்வர். கட்சித் தலைவனுக்கு இவ் விளையாட்டில் கிளி என்று பெயர்.
விளையாடத் தொடங்குமுன், எந்தக் கட்சி தட்டுக் கட்டுவது என்றும், எந்தக் கட்சி தட்டிற்குள் இறங்குவது என்றும், தீர்மானிக் கப்படும். தட்டிற்குள் இறங்குவது தட்டிற்குள் புகுதல். தட்டிற்குள் இறங்கியவரை மேற்செல்லவிடாது தடுத்தல் தட்டுக்கட்டுதல்; இது தட்டு மறித்தல் என்றுங் கூறப்படும். ஒரு காசையாவது ஓட்டாஞ் சல்லியையாவது எடுத்து, அதன் இருபக்கத்தையும் தனித்தனி இன்ன கட்சியாரது என்று வரையறுத்துப் பின் மேலெறிந்து அது கீழ்விழுந்ததும், அதன் மேற்பக்கத்திற்குரிய கட்சியார் இறங்குவர்; மற்றக் கட்சியார் மறிப்பர்.
முதலாவது, மறிக்கின்ற கட்சியார் ஒவ்வொரு தட்டுக் கோட்டி லும் ஒருவராகப் போய் நின்றுகொள்வர். கிளித்தட்டின் இரு குறும்பக்கங்களில் ஒன்று புகும் பக்கமாகவும் இன்னொன்று புறப்படும் (வெளியேறும்) பக்கமாகவும் வசதிக்கேற்பக் குறிக்கப் படும். புகும் பக்கம் ஊர் நோக்கியும் புறப்படும் பக்கம் ஊர்ப்புறம் நோக்கியும் இருப்பது பெரும்பான்மை. புறப்படும் பக்கத்து வரப்புக் கோட்டில் கிளி நிற்பான். அவனுக்குத் தன்கோட்டிலும் மற்ற வரப்புக் கோடுகளிலும் செல்ல உரிமையுண்டு. பிறர்க்கு அவரவர் தட்டுக் கோட்டிலேயே செல்ல முடியும். புகும் பக்கத்து வரப்புக்கோடு வெறுமையாய்விடப் படும்.
இயங்கும் கட்சியார் ஒவ்வொருவராய் அல்லது மொத்தமாய்த் தட்டிற்குள் புகுந்து, தட்டுக்காரனாலாவது கிளியினாலாவது தொடப்படாதபடி எட்டி நின்று, இருபுற நெடுவரப்புக் கோட் டிற்கப்பால் கால் வையாது, மேற் சென்று வெளியேற முயல்வர். மறிக்கும் கட்சியார் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை மறித்துக் கொள்வர். ஒருவர் பலரை மறிக்க முடியாதாதலின், ஒவ்வொரு தட்டிலும் இயங்கியவருள் ஒருவருக்கு மேற்பட்டவர் மேல் தட்டிற்கு ஏறிவிடுவது எளிது. இங்ஙனம் முதல் தட்டுக் காரன் முதல் கிளிவரையில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை மறித்துக் கொண்டிருக்க நேரும். இறங்கியவர் ஒவ்வொருவரும் தம்மை மறிப்பவரை இடமும் வலமுமாக இடைவிடாது மறுக்காட்டிச் சிறிய இடை நேர்ந்தாலும் மேற் செல்லப் பார்ப்பர். இம்முயற்சி யில் யாராவது தொடப்பட்டு விட்டால் அவர் கட்சி தோற்று விடும். உடனே ஆட்டம் நிறுத்தப் பட்டு மறுபடியும் தொடங் கும்; வென்ற கட்சியார் இறங்குவர். இறங்கின கட்சியாருள் யாராவது ஒருவர் கிளிக்கும் தப்பியோடிக் குறிக்கப்பட்ட எல்லையை மிதித்துவிட்டால், அவர் கட்சியார் வென்றவராவர்; அடுத்த ஆட்டையிலும் அவரே இறங்குவர். கிளிக்குத் தப்பி ஒருவர் ஓடிவிட்டதைக் கிளி போய்விட்டது என்னும் மரபுத் தொடராற் குறிப்பர்.
சோழநாட்டு முறை : சோழநாட்டில், இறங்கின கட்சியாருள் ஒருவன் ஒருமுறை கிளிக்குத் தப்பி ஓடினவுடன் ஆட்டை முடிந்து விடாது. அங்ஙனம் ஓடினவன் குறித்த எல்லையிற் குவித்துவைத் திருக்கும் மண்ணிற் சிறிது ஒரு கையில் அள்ளிக் கொண்டு, மீண்டும் அரங்கிற்குட் புகுந்து, முன்பின்னாகத் திசைமாறித் தட்டுக்கட்டி நிற்கும் எதிர்க் கட்சியார் எல்லார்க்குந் தப்பித், தான் முதலிற் புகுந்த வழியாய் வெளியேறி விடவேண்டும். அல்லாக் கால் தோல்வியாம்.
விளையாட்டு விளக்கம் : கிளித்தட்டு விளைபுலம்; கிளித் தட்டின் வரப்பு தவணை தட்டு பாத்தி என்பவை, விளைபுலத்தின் வரப்பு தவணை தட்டு பாத்தி என்பவையாம். இறங்குபவர் கிளிகள்; மறிப்பவர் உழவர். இறங்குபவர் வெளியேற முயலுதல் கிளிகள் தாம் கொய்த கதிர்களைக் கௌவிக்கொண்டு பறந்து போதல். மறிப்பவர் தடுத்தல் அக்கிளிகளைத் துரத்துதலும் அவை கௌவிச் செல்லும் கதிர்களைக் கவர்தலும், கிளி ஓடிப்போதல் கொய்த கதிரைக் கௌவிக்கொண்டு கிளிகள் எட்டாத உயரத்தில் பறந்து விடுதல்.
விளையாட்டிற்கேற்பச் சில செய்திகள் மாற்றவும் கூட்டவும் பட்டுள்ளன.
விளையாட்டின் பயன்
1. பகைவருக்குப் பிடிகொடாமல் தப்பப் பழகுதல்.
2. பகைவனையும் திருடனையும் ஓடும்போது படைக்கலத்தால் தாக்கப் பயிலுதல்.
3. வேகமாய் ஓடுந்திறனை அடைதல்.
4. கிளிகளால் விளையுளுக்குக் கேடு வராதவாறு முன்விழிப்பாக இருத்தல். (த.நா.வி.)
கிளை
பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு குடியை ஒரு மரமாகக் கொள்ளின் அக்குடும்பங்கள் அதன் கிளைகளைப் போன்றிருத்தலால் இனத்திற்குக் கிளை என்றும் இனத்தார்க்குக் கிளைஞர் என்றும் பெயர். (சொல். 3)
கிளைப் பிரிவுகள்
கவை அடிமரத்தினின்று பிரியும் மாபெருங்கிளை;
கொம்பு அல்லது கொப்பு கவையின் பிரிவு;
கிளை கொம்பின் பிரிவு;
சினை கிளையின் பிரிவு;
போத்து சினையின் பிரிவு;
குச்சு போத்தின் பிரிவு;
இணுக்கு குச்சின் பிரிவு. (சொல். 65)
கிறித்தவ விடையூழியர் (MISSIONARIES) தொண்டு
இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில், முகவை மாவட்டத் திருவில்லி புத்தூர் வட்டத் தென் எல்லையிலுள்ள சீயோன்மலை என்னும் திருக்குளிப்புத் (Baptist) திருச்சவை நிலையத்தில், மேனாடு துரையிருந்த காலத்தில், அருள்புத்தூரிலிருந்து வந்த தேவதாசன் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறித்தவ ஆசிரியர், கல்பட்டியிற் பிராமண ஊராளி (கிராம முனிசீபு) யிருந்த தெரு வழியாக வந்தாரென்று, அவரேவலால் அடிக்கப் பட்டார். அதை அவர் மேனாடு துரையிடம் முறையிட்டார். உடனே துரை வண்டி கட்டிக் கல்பட்டி சென்று, ஊராளியில்லத்தையடைந் தார். அவர் வருகை யறிந்து, ஊராளியார் வீட்டிற்குள் சென்று தலைவாயிற் கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டனர். துரை கதவைத் தட்டிவிட்டுத் தெருத் திண்ணையில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து, ஊராளியாரின் மனைவியார் கதவைத் திறந்து, ஊராளியார் ஊரிலில்லை யென்று சொல்லி விட்டார். துரை நடந்ததைச் சொல்லி, ஒரு கிழமைக்குள் ஊராளியார் தம்மிடம் வந்து மன்னிப்புக் கேளாவிடின் அவர் வேலை போய் விடும் என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டார். ஏழாம் நாள், ஊராளி யார் தேவதாசன் ஆசிரியரை அழைத்துக் கொண்டு துரையிடம் வந்து மன்னிப்புக் கேட்டுச் சென்றார்.
குல வேற்றுமைக் கொடுமையினின்று தப்பவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பலர் முகமதியராயினர்.
குக்கல்
குக்கல் - குக்குர
குள் - (குட்கு) - குக்கு. குக்குதல் = குறுகுதல், ஒடுங்குதல், சிறுத்தல்.
குக்கு - குக்கல் = சிறுத்த நாய், குள்ள நாய்.
வடமொழியில் மூலமில்லாதிருப்பதுடன், குள்ளநாய் என்னும் சிறப்புப் பொருளிழந்து நாயென்னும் பொதுப்பொருளே வடசொல் தருகின்றது. (வ.வ: 120-121)
குகை
குகை - குஹா (g, h).
குழை - குகை. ஒ.நோ : முழை - முகை. வ. மூலம் குஹ் (மறை). (வ.வ: 121)
குச்சி விளையாட்டு
ஆட்டின் பெயர் : ஒரு குச்சைத் தலைக்குமேற் பிடித்து அதைத் தட் டி விளையாடுவது குச்சி விளையாட்டு.
ஆடுவார் தொகை : இதைப் பொதுவாய் ஐவர்க்கு மேற்பட்ட பலர் ஆடுவர்.
ஆடுகருவி : ஆடகன் ஒவ்வொருவனுக்கும் ஏறத்தாழ இருமுழ நீளமுள்ள ஒரு குச்சு வேண்டும்.
ஒரு முழச் சதுரமான ஓர் அரங்கு நிலத்திற் கீறி அதனுள் ஒரு சிறு வட்டத்திற்குள் நான்கு கற்கள் வைக்கப்படும்.
ஆடிடம் : பொட்டலிலும் திறந்த வெளி நிலத்திலும் இதை ஆடலாம்.
ஆடுமுறை : முதலாவது, ஆடகரெல்லாரும் ஓர் உத்திக் கோட்டின் மேல் ஒவ்வொருவனாய் நின்றுகொண்டு, அவனவன் தன்தன் குச்சை இடக்காற் கவட்டையூடு இயன்ற தொலைவு எறிவன். உத்திக்குக் கிட்ட எறிந்தவன் குச்சுப் பிடித்தல் வேண்டும்.
அவன் சதுர அரங்கிற்கு வெளியே பக்கத்திற்கொன்றாக ஈரெதிர்ப் பக்கத்தில் இரு காலையும் வைத்து, குச்சைத் தலைக்குமேல் இரு முனையையும் இருகையாற் பற்றிக் கொண்டு, நிற்றல் வேண்டும். யாரேனும் ஒருவன் அவன் குச்சைத் தன் குச்சால் தட்டிவிடுவான். இன்னொருவன் அக் குச்சைச் சற்றுத் தொலைவிற்குப் போக்கு வான். இங்ஙனம் பிறரெல்லாம் அதைத் தம் குச்சால் தள்ளித் தள்ளி நெடுந் தொலைவிற்குக் கொண்டு போவர்.
குச்சுப் பிடித்தவன், தன் குச்சு விழுந்தவுடன் வட்டத்துள்ளிருக் கும் நாற்கல்லையும் எடுத்துச் சதுரத்தில் மூலைக்கொன்றாக வைத்துவிட்டு, பிறருள் ஒருவனைப் போய்த் தொடல் வேண்டும். நாற் கல்லையும் மூலைக்கொன்றாக வையாது போய்த் தொடின், அது கூட்டன்று. குச்சைத் தள்ளுபவர், குச்சுப் பிடித்தவன் தம்மைத் தொடுமுன், அரங்கு மூலைக் கல்லின்மேலேனும் ஆங்காங்குள்ள பிற கருங்கல்லின் மேலேனும் தம் குச்சை வைத்துக்கொண்டால், அவரைத் தொடல் கூடாது.
யாரேனும் ஒருவன் தொடப்பட்டுவிடின், அவன்தான் தொடப் பட்டவிடத்தி லிருந்து சதுர அரங்கு வரையும், தன் குச்சை வாயிற் கௌவிக்கொண்டும், அல்லது வலக்கையிற் பிடித்துக் கொண்டும், இடக்கையை மடக்கி முதுகில் வைத்துக் கொண்டும்,
எங்கள் வீட்டு நாயி எலும்பு கடிக்கப் போச்சு
கல்லால் அடித்தேன் காலொடிந்து போச்சு
என்று இடைவிடாது பாடிக்கொண்டு, நொண்டியடித்து வரல் வேண்டும். இங்ஙனம் நெடுகலும் வரத் தவறின், மீண்டும் புறப்பட்ட இடத்திலிருந்து அவ்வாறு வரல்வேண்டும். அங்ஙனம் வந்த பின், தொடப்பட்டவன் குச்சுப்பிடிப்பான். அதன் பின், முன் போன்றே திரும்புவும் ஆடப்பெறும். (த.நா.வி.)
குச்சு
குச்சு - கூர்ச்ச
குச்சு = வண்ண ஓவியன் தூரிகை (paninter’s brush), பாவாற்றி.(வ.வ: 121)
குஞ்சு விளையாட்டு
ஆடுவார் இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு, ஒரு கட்சியார் பஞ்சாரம் அல்லது ஆட்டுக் கூண்டளவுள்ள ஒரு வட்டக் கோட்டின் அருகும், இன்னொரு கட்சியார் சற்றுத் தொலை விலும் நிற்பர். தொலைவில் நிற்பவர், தம்முள் ஒருவரைக் குஞ்சு என விளம்பி, எதிர்க் கட்சியில் தத்தம் உத்தியைப் பிடிக்கச் செல்வர். எதிர்க் கட்சியார் குஞ்சினைப் பிடிக்க முயல்வர். குஞ்சு கூடுவந்து சேர்ந்துவிடின் (அதாவது பிடிபடாது வட்டக் கோட் டிற்குள் புகுந்து விடின்), அதே கட்சியார் மீண்டும் குஞ்சுவைத்து ஆடுவர்; பிடிபட்டுவிடின், கூட்டினருகு நின்றவர் குஞ்சுவைத்து ஆடல்வேண்டும்.
கோழிக்குஞ்சு பருந்திற்குத் தப்பிக் கூட்டிற்குள் அல்லது வீட்டிற்குள் புகுவதை, இவ்விளையாட்டுக் குறிப்பதுபோலும்! (த.நா.வி.)
குட்டம்
குட்டம் - குஷ்ட
குள் - குட்டு - குட்டம் = குட்டை, குட்டி.
குட்டம் = 1. சீர் குறைந்து குறுகிய அடி.
குட்டமும் நேரடிக் கொட்டின என்ப. (தொல். 1372).
2. விரல்களும் மூக்கும் அழுகிக் குட்டையாகும் நோய். குட்டநோய் (சீவக. 253).
வடவர் கு + ஸ்த என்று பிரித்து, குறைந்து நிற்பது என்று பொருட் காரணங் கூறுவர். அதிலும் கு என்பது தென்சொல்லே. குள் - கு. ஒ.நோ : நல் - ந, அல் - அ.
குட்டை = வெண்குட்டநோய். (வ.வ: 121)
குட
குட - குட் = வளை (to bend)
குட = வளைந்த. குடம் = வளைவு. (வ.வ: 121)
குடங்கர்
குடங்கர் - குடங்க (t) = குடிசை.
குடம் - குடங்கு - குடங்கர் = 1. குடம், 2. வளைந்த அல்லது வட்டமான குடிசை. குடங்கருட் பாம்போ டுடனுறைந்தற்று (குறள். 890)
குடங்குதல் = வளைதல். (வ.வ: 121) (தி.ம. 741)
குடம்
குடம்1 - குட (t)
குடம் = நீர்க்குடம். வ. குட = நீர்க்குடம். குடம் - t. கட (gh, t).
குடம் 2 - குட (g)
குளம் - குடம் = வெல்ல வுருண்டை.
வ.குட (g) = வெல்லம். (வ.வ: 122)
குடல்
குடல் - குத (g) - வே.
குழல் - குடல் = குழல்போன்ற உறுப்பு.
வ. குத - குடல். (வ.வ: 122)
குடவம் (பித்தளை - BRASS)
மூன்றில் இருபங்கு செம்பும் ஒருபங்கு துத்தநாகமுங் கலந்தது குடவமாகும். உரோம நகரில் கி.மு. 20 - இல் குடவக்காசு வழங்கிற்று. தமிழகத்தில் ஏனமும் எளியார் அணிகலமும் செய்யக் குடவம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
குடி (T)
குடி1 - (குடி t) = வளைவு.
குட - குடி = வளைவு. வ. குடி - குடீ = வளைவு.
குடி2 - குடி (t)
குடி = இல், குடியிருப்பு. குடியிருத்தல் = இல்லிருத்தல், நிலையாகத் தங்குதல். குடிக்கூலி = வீட்டுவாடகை.
குடியானவன் = இல்வாழ்வான், உழவன்.
குடிகள் = நாட்டிற் குடியிருக்கும் மக்கள்.
வ. குடி = குடிசை, கொட்டகை, கூடம், கடை.
குடீ = குடிகை, கொட்டகை, வீடு, கூடம், கடை.
முதற்காலத்தில் வீடுகளெல்லாம் வட்டமாய்க் கட்டப்பட்டிருந்த தால், வீடு குடியெனப்பட்டது.
ஒ. நோ : வளவு = வீடு. வளவிற் கமைந்த வாயிற்றாகி (பெருங். இலாவண. 8 : 77).
குடி3 - குட் (d) = உண். (வ.வ: 122)
குடி 2
குடி என்னும் சொல் தலைக்கட்டு, குடும்பம், சரவடி (கோத்திரம்), குலம், குடிகள் (நாட்டினம்) என்னும் ஐவகை மக்கட் கூட்டத்தையும் குறிக்கும். (தி.ம. 102)
குடி 3
குடி : குடி - வளைவு, வட்டமான குடியிருப்பு.
குடி - குடி (வ.)
குடி = இல், இல்லத்தில் வாழும் மனைவி; மனைவியொடு கூடிய குடும்பம், கூட்டுக் குடும்பம், பல குடும்பஞ்சேர்ந்த இனம், பல தலைமுறையாக வந்த குடும்பத் தொடர்ச்சி குடும்ப அல்லது இன மரபுப் பண்பு, பல வீடுகள் சேர்ந்தவூர். (தி.ம: 741).
குடிகள் அரசுக்குச் செலுத்திய செலுத்தம்
இறையென்றும், புரவு என்றும், கடமை என்றும், வரி என்றும் பெயர் பெற்றிருந்தன. (குறள் : 754)
குடிகை
குடிகை - குடீகா (t) = சிறுவீடு.
குடி - குடிகை = சிறுவீடு, சிறுகோயில், இலைக்குடில். கை என்பது ஒரு சிறுமைப் பொருட் பின்னொட்டு. ஒ. நோ : கன்னி - கன்னிகை.
குடிகை - குடிசை - குடிஞை. தூசக் குடிஞையும் (பெருங். இலாவாண 12 : 43).
வடவர் கை என்பதைக் கா என்று திரித்திருக்கின்றனர்.
கைக்குள் அடக்கமானது அல்லது கையிலிருப்பது சிறிதாயிருக்கு மாதலால், கை என்னும் சினைப்பெயர் சிறுமைப் பொருட் பின்னொட்டாயிற்று.
ஒ.நோ : கைக்குட்டை, கைக்குடை, கைத்தடி, கைப்பிள்ளை, கைவாள். (வ.வ: 122 - 123.)
குடிசெய்தல்
தன் குடியைச் செல்வம் இன்பம், அறிவு, ஒழுக்கம், ஆட்சி, வலிமை முதலிய எல்லா வகையிலும் மேம்படச் செய்தல்.(குறள். 608)
குடில்
குடில் - குடீர (t) = குடிசை.
குடி + இல் = குடில் = குடிசையினுஞ் சிறிய இல், குற்றில் (குச்சில்).
ஆட்டுக்குடில் என்னும் வழக்கை நோக்குக.
இங்கு இல் என்பது ஒரு சிறுமைப் பொருட் பின்னொட்டு.
ஒ. நோ : தொட்டி - தொட்டில், புட்டி - புட்டில். (வ.வ: 123)
குடிலம்
குடிலம் - குடில (t) = வளைவு.
குடி - குடில் - குடிலம் = வளைவு.
கூசும் நுதலும் புருவமுமே குடில மாகி யிருப்பாரை (தனிப் பாடல்). (வ.வ: 123)
குடிலை
குடிலை - குடிலா (t)
குடி - குடில் - குடிலை = 1. ஓங்காரம். 2. தூய மாயை. (வ.வ: 123)
குடும்ப நிலைப் பொருத்தம்
ஊரில் ஒருவனே தோழன், ஆருமற்றதே தாரம் என்பதாலும், மணமகள் செல்வ மிக்கவளாயின் மணமகனுக்கு நன்றேயா தலாலும், செல்வப் பொருத்தம் சிறப்பாய்க் கவனித்தற்குரிய தொன்றன்றாம். ஆயினும், இளவரசனும் கூலிக்காரியும் போல், அல்லது கூலிக்காரனும் இளவரசியும் போல், மணமக்கள் செல்வ நிலை அளவிறந்து வேறுபடின், அவர் ஒருவருக்கொருவர் வாழ்க் கைத் துணையாய் இணைத்து வைக்கப்படற்குரிய வராகார். குடும்ப நிலையைப் பிறப்பு என்று கூறினும் ஒக்கும். (த.தி. 48.)
குடும்பம்
குடும்பம் - குடும்ப (t)
குடி = வீடு, வீட்டிலிருக்கும் மனைவி, மனைவியும் மக்களும் சேர்ந்த கூட்டம், கூட்டுக் குடும்பம், குலம், குலத்தார் குடியிருப்பு, ஊர், கொடிவழி.
ஒ.நோ : மனை = வீடு, மனைவி. இல் = வீடு, மனைவி, குடும்பம், சரவடி. ஊர்.
மனைவியைக் குடி என்பது உலக வழக்கு.
எ.டு : இருகுடி = இருமனைவியர்.
குடி = (குடிம்பு) - குடும்பு.
ஒ.நோ : குழி - (குழிம்பு) - குழும்பு = குழி.
ஆழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர (மதுரைக் 273).
இகரம் உகரமாயது உயிரிசைவு மாற்றம் (Harmonic Sequence of Vowels) .
குடும்பு = குடும்பம், உறவினர் கூட்டம், ஊர்ப்பிரிவு (ward).
குடும்பன் = குடும்பத்தலைவன், ஊர்த்தலைவன், பள்ளர் தலைவன்.
குடும்பு = குடும்பம் = மனைவி. (வ.வ.)
பாகத்தார் குடும்ப நீக்கி (சீவக. 1437).
2. கணவன் மனைவி மக்கள் கூட்டம்.
குடும்பத்தைக் குற்ற மறைப்பான் (குறள். 1029).
3. உறவினர் கூட்டம்
குடும்பந் தாங்குங் குடிப்பிறந் தாரினே (கம்பரா. சேதுப. 53).
காய்க் குலையைக் குறிக்கும் குடும்பு என்னுஞ் சொல் குழும்பு என்பதன் திரிபாகும்.
குடும்பு என்னும் வடிவம் வடமொழியில் இல்லை.
குடும்பி - குடும்பின் (t)
குடும்பம் - குடும்பி = பெருங் குடும்பத் தலைவன். (வ.வ : 123 - 124.)
குண்டம்
குண்டம் - குண்ட = குழி
குள் - குண்டு = குழி, சிறுகுட்டை, குண்டுங் குழியும் என்பது உலக வழக்கு.
குண்டு - குண்டம் = குழி, குட்டை, பானை, குடுவை.
வடமொழியிற் குண்டு என்னும் வடிவமும் இல்லை; குள் என்னும் மூலமும் இல்லை. (வ.வ : 124.)
குண்டலம்
குண்டலம் - குண்டல
குள் - குண்டு = உருண்டை. குண்டு - குண்டலம் = வட்டம், சுன்னம், வானவட்டம், ஆடவர் காது வளையம்.
குண்டல மொருபுடை குலாவி வில்லிட (சீவக. 1009). (வ.வ : 124)
குண்டலி
குண்டலி - குண்டலின்
குண்டலம் - குண்டலி = மூல நிலைக்கள வட்டம், தூய மாயை. (வ.வ : 124)
குண்டிகை
குண்டிகை - குண்டிகா = துறவியின் நீர்க்கலம்.
குண்டு - குண்டிகை = 1. குண்டான நீர்க்கலம்.
நான்முகன் குண்டிகை நீர் பெய்து (திவ். இயற். நான். 9).
2. குடுக்கை.
பருத்திக் குண்டிகை (நன். 31).
குண்டிகை - குடிகை = நீர்க்கலம்.
அரும்புனற் குடிகை மீது (கந்தபு. காவிரி. 49).
குடிகை - குடுக்கை - குடுவை. (வ.வ : 124 - 125.)
குணம்
குணம் - குண (g)
கொள்ளுதல் = கொண்டிருத்தல், உடையனாயிருத்தல்.
கொள் - கொள்கை = இயல்பு.
கொம்பினின்று நுடங்குறு கொள்கையார் (கம்பரா. கிளை. 10)
கொள் - கோள் = தன்மை. யாக்கைக் கோளெண்ணார் நாலடி. 18).
கொள் - (கொண்) - (கொணம்) - குணம் = கொண்ட தன்மை, தன்மை.
வடமொழியிற் கிரஹ் (பற்று) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். கிரஹ் என்னும் சொல்லினும் கொள் என்னும் சொல்லே வடிவிலும் பொருளிலும் பொருத்தமா யிருத்தலையும், கொள் என்பதும் பற்று என்று பொருள்படுதலையும், நோக்குக. (வ.வ: 125) (தி.ம. 24, 741)
குத்து (1)
குத்து - குச்ச (g)
குத்து - கொத்து. குத்து - குச்சு - குச்சம்.
குத்ஸ = குச்ச (g) = குத்துச்செடி, கொத்து.
வடவர் காட்டும் குத் (gudh) என்னும் மூலம், சுற்றுதல், மூடுதல் என்றே பொருள் தருதலாற் பொருந்தாது. (வ.வ : 121)
குத்து (2)
குத்து - குட் (tt) - வே.
குட் = குத்து, to pound.
குத்து - சத் (ஸ) - உட்கார்.
குத்தவை = புட்டத்தை நிலத்திற் குத்தும்படிவை, குந்தியிரு (நெல்லை வழக்கு).
குண்டிகுத்து = குந்து (நாகை வழக்கு).
குத்து - குந்து, to squat. (வ.வ : 125)
குத்து
குதி : குத்து - குதி, குதித்தல் = நேராக மேலெழுதல், குதித்துத் தாண்டுதல், தாண்டிக் கடத்தல், வெல்லுதல். குதி - கூர்த் (வ.).
கூத்து : குத்து - குதி - கூத்து - கூர்த்த (t.). (தி.ம. 741.)
குதிரைக்குக் காணங்கட்டல் விளையாட்டு
ஆட்டின் பெயர் : குதிரைக்குக் காணங்கட்டி அவற்றின்மேல் ஏறுவதாகப் பாவித்துக்கொண்டு, ஒரு கட்சியார் இன்னொரு கட்சியார்மேல் ஏறி விளையாடுவது குதிரைக்குக் காணங் கட்டல். காணங்கட்டுதலாவது கொள்வைத்தல்.
ஆடுவார் தொகை : பொதுவாக, எண்மர்க்கு மேற்பட்ட சிறுவர் இதை ஆடுவர்.
ஆடு கருவி : ஓர் ஆடைத்துண்டை முறுக்கிப் பின்னிய திரி இதற்குரிய கருவியாம். ஏறத்தாழ ஐந்து கசம் இடையிட்ட இரு சமதூரக் கோடுகளைக் கீறி, அவற்றை எதிரெதிராக நின்று ஆடும் இரு கட்சியாரும் தத்தம் மனையெல்லை என்பர்.
ஆடிடம் : ஊர்ப் பொட்டலும் அகன்ற தெருவும் இதை ஆடுமிடமாம்.
ஆடு முறை : ஆடுவார் எல்லாரும் முதலாவது உத்தி கட்டிச் சமத்தொகையான இருகட்சியாகப் பிரிந்து கொள்வர்.
முந்தியாடவேண்டுமென்று துணியப்பட்ட கட்சியாருள் ஒருவன், திரியின் ஒரு முனையைத் தன் வலக்காற் பெருவிரற்கும், அடுத்த விரற்கும் இடையில் இடுக்கி, இருகையையும், நிலத்தில் ஊன்றி, கரணம் போடுவதுபோற் காலைத்தூக்கித் திரியை எதிர்க் கட்சியாரின் மனைக்குள் காலால் எறிவான். அதை எதிர்க் கட்சியார் அந்தரத்திற் பிடித்துவிட்டால், எறிந்தவன் தொலை வான். அதன்பின் எதிர்க்கட்சியாருள் ஒருவன் அவ்வாறு ஆடல் வேண்டும். திரி பிடிக்கப்படாவிடின், ஒருவன் எத்தனை முறையும் ஆடலாம். திரி மனைக்குட் புகாமல் எல்லைக்கு வெளியே வீழினும் எறிந்தவன் தொலைவான்.
தவறாத ஒவ்வோர் எறிவும், காணம் விளைத்துக் குதிரைக்குக் கட்டற்குரிய ஒவ்வொரு வினையாக முறையே தொடர்ந்து கூறப் படும். முதல் எறிவில், உழுதாயிற்று என்றும்; இரண்டாவதில், விதைத்தாயிற்று என்றும்; மூன்றாவதில், முளைத்துவிட்டது என்றும்; இங்ஙனமே தொடர்ந்து மேற்பட்டவற்றில் முறையே, ஓர் இலக்கு விட்டிருக்கிறது, ஈர் இலக்கு விட்டிருக்கிறது, மூவிலக்கு விட்டிருக்கிறது, நாலிலக்க விட்டிருக்கிறது, ஐலிலக்கு விட்டிருக்கிறது, ஆறிலக்கு விட்டிருக்கிறது, ஏழிலக்கு விட்டிருக்கிறது, எட்டிலக்கு விட்டிருக்கிறது, ஒன்பதிலக்கு விட்டிருக்கிறது, பத்திலக்கு விட்டிருக்கிறது, கொடியோடி யிருக்கிறது, பூப்பூத்திருக்கிறது, பிஞ்சுவிட் டிருக்கிறது, காய் காய்த்து விட்டது, காணத்தை அறுத் தாயிற்று, களத்தில் அடித் தாயிற்று, வீட்டிற்குக் கொண்டு வந்தாயிற்று, அடுப்பில் வேகிறது, குதிரைக்கு வைத்திருக் கிறது, என்றும் கூறப்படும். அடுத்த எறிவில், எதிர்க்காட்சியார் குனிய, வென்ற கட்சியார் அவனவன் உத்திப்படி அவர் மேல் ஏறிக்கொள்வர். குறித்த தொலைவாவது, குறித்த தடவை ஓரிடத்தைச் சுற்றியாவது, தோற்ற கட்சியார் வென்ற கட்சி யாரைச் சுமந்து செல்லவேண்டும். அதோடு ஓர் ஆட்டை முடியும்.
ஆட்டுத் தோற்றம் : இவ்விளையாட்டு ஒருகால் உழிஞைப் போரினின்று தோன்றியிருக்கலாம்.
ஒரு நகர் அல்லது தலைநகர் நீண்டகாலமாக முற்றுகையிடப் பட்டிருக்கும்போது, நொச்சியார் (அதாவது அடைபட்டுள்ள நகரத்தார்) தமக்கும் தம் கால்நடைகட்கும் வேண்டும் உணவுப் பொருட்களை, நகரக் குடியிருப்பிற்கும் புறமதிற்கும் இடைப் பட்ட நிலத்திலேயே விளைத்துக்கொள்ள வேண்டியிருந் திருக்கும்.
நாடுகண்டன்ன கணைதுஞ்சு விலங்கல் என்னும் பதிற்றுப் பத்துத் தொடருக்கு (16 : 2) நெடுநாட்பட அடைமதிற் பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு, வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்தமையாற் கண்டார்க்கு நாடு கண்டாற்போன்ற… இடைமதில் என்ற அந்நூலின் பழையவுரையாசிரியர் விளக்க வுரை கூறியிருப்பது, இங்கே கவனிக்கத்தக்கது.
காலில் திரியெறிதல், உழிஞையார் (அதாவது முற்றுகையிட் டிருப்பவர்) நகரத்துள் எறியும் எரிவாணத்தைக் குறிக்கலாம். இப்போது வேடிக்கைக்காக விடப்படும் எரிவாணம் (வாணக் கட்டு) பழங்காலத்தில் நொச்சி நகருள் எரியூட்டுவதற்கு விடப்பட்டதாகத் தெரிகின்றது.
விளையாட்டிற் காணங் கட்டியபின் குதிரையேறுவது, நொச்சி மறவர் காணம் விளைத்துத் தம் குதிரைகட்கு வைத்த பின், அவற்றின் மேலேறி நகருக்கு வெளியே போருக்குப் புறப்பட்டு வருவதைக் குறிக்கலாம்.
ஆட்டின் பயன் : காலால் ஒரு பொருளைப் பற்றுவதும் கரணம்போட்டுத் தாண்டுவதுமாகிய வினைப்பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும். (த.நா.வி.)
குதிரைச் சில்லி விளையாட்டு
ஆட்டின் பெயர் : ஒருவன்மேலொருவன் குதிரையேறிச் சில்லியெறிந்தாடுங் ஆட்டு குதிரைச் சில்லி.
ஆடுவார் தொகை : இதை ஆட இருவர் வேண்டும்.
ஆடிடம் : முற்றத்திலும், தெருவிலும் பிற வெளியிடங்களிலும் இது ஆடப்பெறும்.
ஆடுகருவி : ஆளுக்கொன்றாக இரு கற்கள் அல்லது ஓடுகளே இதற்குத் தேவை. அவை சில்லியெனப்படும்.
ஆடுமுறை : இருவர் ஒரு சிறு குழி கில்லி அதனின்று ஐந்தாறு கசத்தொலைவிற் கீறப்பட்ட உத்தியில் நின்று கொண்டு, ஒவ்வொருவனாய்த் தன்தன் சில்லியை எறிவர். குழிக்குப் பக்கமாக எறிந்தவன் முந்தியாடுவான்.
முந்தியாடுகிறவன் இன்னொருவன் முதுகின்மேல் ஏறிக் கொள் வான். சுமக்கிறவன் தன் சில்லியை முன்னால் சற்றுத் தொலை விற்கு எறிவான். ஏறியிருப்பவன் அதைத் தன் சில்லியால் அடித் தல் வேண்டும். அடித்துவிடின், மேலிருந்துகொண்டே அடுத்த முறையும் அடிக்கலாம். அடியாவிடின், கீழே இறங்கி விடல் வேண்டும். அதோடு ஓர் ஆட்டை முடியும். ஒவ்வோர் ஆட்டைக் கும் சில்லி எறிந்து, யார் முந்தியாடுவதென்று துணியப்படும்.
மேலேயிருக்கிறவன், தானே யடிக்காமல், தன்னைச் சுமந்து கொண்டிருக்கிறவனையும் அவன் எறிந்த சில்லியை அடிக்கச் சொல்லாம், அன்றி நீ அடிக்கின்றாயா? நானே அடிக்கட்டுமா? என்று கேட்பான். சுமக்கிறவன் நீயே அடி என்றால், மேலிருக் கிறவன் அடிப்பான்; அன்றி, நான் அடிக்கிறேன் என்றால், மேலிருக்கிறவன் சுமக்கிறவனிடம் தன் சில்லியைக் கொடுத்து விடல் வேண்டும். சுமக்கிறவன் பின்பு அடிப்பான். அடிபட்டு விடின், மேலிருக்கிறவன் கீழே யிறங்கிவிடல் வேண்டும்; படா விடின், தான் கெலிக்கும்வரை அல்லது மேலிருக்கிறவன் தோற்கும் வரை, சுமக்கிறவன் சுமந்து கொண்டே யிருத்தல் வேண்டும். மேலிருக்கிறவன் கீழிறங்க ஆட்டை முடியும். (த.நா.வி.)
குதிரையேறல்
புல்லார்தல் குதிரையேறுதல் என்னும் வழக்கங்களால் மற்போரில் தோற்றுப் போனவன் சிறிது புல்லைத் தின்ன வேண்டும் என்றும் , அதோடு வென்றவனைக் குறிப்பிட்ட இடம் அல்லது கால எல்லை வரையும் சுமக்க வேண்டும் என்றும் இருந்ததாகத் தெரியவருகின்றது. (சொல் . 25)
குதிரை வகை
குதிரை - குதிப்பது அல்லது தாண்டுவது.
பாடலம் - விரிந்த கழுத்தும் மார்பும் உடையது.
கோணம் அல்லது கோடகம் - முக்கோணக் கழுத்துடையது.
இவுளி - எதிர்த்துப் போர்புரிவது.
வன்னி - வெண்ணிறமானது.
பரி - வேகமாக ஓடுவது.
கந்துகம் - கடைந்த தூண்போன்ற கால்களையுடையது.
கனவட்டம் - கனமும் உருட்சியும் உடையது.
கோரம் - கொடுமையானது.
புரவி - மதில் தாண்டுவது. (சொல். 40.)
குந்தம்
குந்தம் - குந்த (nt) = வேல், ஈட்டி.
குந்து - குந்து - குந்தம் = 1. குத்துக்கோல்.
பூந்தலைக் குந்தங் குத்தி (முல்லைப். 41).
2. வேல்
குந்த மலியும் புரவியான் (பு.வெ. 4 : 7).
3. எறிவேல் (javelin)
வைவா ளிருஞ்சிலை குந்தம் (சீவக. 1678). (வ.வ : 125)
குந்தாலம்
குந்தாலம் - குத்தால (dd)
குந்தாலம் = குத்தித் தோண்டுங் கருவி வகை.
குந்தாலம் - குந்தாலி. குந்தாலிக்கும் பாரை வலிது (திருமந். 2909).
ம. குந்தாலி.
குந்தாலம் - கூந்தாலம். குந்தாலி - கூந்தாலி. (வ.வ: 126)
குப்பாயம்
குப்பாயம் - கூர்ப்பாஸ = கவசம், சட்டை.
குப்பி = குடுவை, மாட்டுக் கொம்புப் பூண்.
குப்பா = தூரிவலையிற் சேர்த்துள்ள பை.
குப்பாயம் = சட்டை, வெங்க ணோக்கிற் குப்பாய மிலேச்சனை (சீவக. 431).
குப்பாயம் - குப்பாசம் = 1. மெய்ச்சட்டை.
குப்பாசமிட்டுக் குறுக்கே கவசமிட்டு (தமிழ் நா. 192).
2. பாம்புச் சட்டை (சி.சி. பாயி. பக். 42). (வ.வ: 126)
கும்பம்
கும்பம் - கும்ப (bh) - இ. வே.
கும்முதல் = குவிதல். கும் - குமி - குமிழ் - குமிழி.
கும் - கும்பு - கூம்பு. கூம்புதல் - குவிதல். கும்புதல் = குவிதல்.
கும்பு - கும்பம் = குடம், தேர் முடி, யானைத் தலைக் குவவு, கட்டிடக் குவி முகடு (dome)
கும்பச்சுரை = குவிந்த சுரைக்காய்.
கும்பம் - கும்பா = கீழ் நோக்கிக் குவிந்த உண்கலம்.
கும்பு - கும்பிடு. கும்பிடுதல் = கைகுவித்தல்.
வடவர் காட்டும் கும்ப் (b, bh) என்னும் மூலம் கும்பு என்பதன் சிதைவே. ஆயின், அவர் கொள்ளும் பொருள் கவிதல்; தென்னவர் கொள்ளும் பொருள் குவிதல். முன்னது கீழ்நோக்கியதென்றும், பின்னது மேல் நோக்கியதென்றும், வேறுபாடறிக. (வ.வ : 126)
கும்மல்
உம் - கும். கும்முதல் = கூடுதல், மிகுதல், திரள்தல், நிறைதல்.
கூடுதற் கருத்தினின்று குவிதற் கருத்தும்; குவிதற் கருத்தினின்று கூம்புதல், மூடுதல், மறைதல், அடக்கமாதல், அமைதியாதல், குறைதல் முதலிய கருத்துக்களும்; பிறக்கும்.
இக் கருத்துக்களில் தோன்றும் வினைச் சொற்கள், செயப்படு பொருள் குன்றிய வினையாகவும் குன்றா வினையாகவு மிருக்கும்.
கூடுதல் வினை, காட்சிப் பொருளதும் கருத்துப் பொருளது மாகப் பல திறத்தது.
கும் - கும்மல் = 1. அரிசி, உப்பு, காய்கறி முதலிய பொருள்களின் குவியல். சந்தையிற் காய்கறிகளைக் கும்மல் கும்மலாகக் குவித்து வைத்திருப்பார்கள். 2. மக்கட் கூட்டம், கும்பல்.
கும்மலி - கும்மல் = பருத்தவள். (யாழ்ப்.)
கும்மிருட்டு = திணிந்த இருட்டு, காரிருள்.
கும் - கம - கமம் = நிறைவு. கமம்நிறைந் தியலும் (தொல். உரி.57).
கம் - கம. கமத்தல் = நிறைதல். கமந்த மாதிரக் காவலர் (கம்பரா. மிதிலைக். 132).
கும் - குமு - குமுக்கு = 1. கூட்டம் (இ.வ.). 2. பெருந்தொகை. (W.) 3. மொத்தம். பண்டங்களை யெல்லாம் குமுக்காய் வாங்கினான். (W.)
கும்மெனல் = மணம் வீசுதல்.
கொண்டைமலரேகும் கும்கும் என்னக்
கோயம்புத்தூர்நாடி நடந்துவா பின்கூடி (நாடோடிப்பாட்டு)
குமுகு மெனல் = மணம் வீசுதற் குறிப்பு.
மனந்தான் குமுகுமென் றடிக்க வில்லை (தனிப்பா. 1, 189 : 44)
குமுகுமுத்தல் = மணம் வீசுதல். பசுமஞ்சள் குமுகுமுக்கு (அழகர்கல . 10).
கும் - கம். கம்மெனல் = மணம் வீசுதற் குறிப்பு.
ஒருங்குபிணி யவிழக் காடே கம்மென் றன்றே (அகநா. 23).
பூக்கடைக்குப் போனால் மணம் கம்கம்மென் றடிக்கும். கம் - கம. கமகமத்தல் = மிகமணத்தல்.
கம - கமழ். கமழ்தல் = நறுமணம் வீசுதல். தேங்கமழ் நாற்றம் (நாலடி. 199).
சமையலறையில் தாளிக்கிறது இங்கே கமகமவென்று கமழ்கிறது.
மணம் காற்றொடு அல்லது ஒரு பொருளொடு கலக்குந் தன்மையது . ஆதலால், கலத்தற் சொல்லாற் குறிக்கப்பட்டது.
பூவொடு சேர்ந்த நாரும் மணம் பெறும் (பழ.)
ஒ.நோ : மணத்தல் = கலத்தல், கமழ்தல், மன்றல் = கலத்தல், கமழ்தல், வெறுத்தல் = செறிதல். வெறு - வெறி = மணம்.
கும் - கும்பு. கும்புதல் = கூடுதல்.
கும்பு = திரள், கூட்டம். தெ. கும்பு (gumpu), வ. கும்ப (gumpha).
அங்கே ஒரு கும்பு கூடியிருக்கிறது.
கும்பு - கும்பல் = கூட்டம். ஆட்கள் கும்பல் கும்பலாகக் கூடி நிற்கிறார்கள்.
கும்பு - கும்பை = குடிசைத் திரள், சேரி. பறைக்கும்பை. (உ.வ.) தெ. கொம்ப (kompa).
கும்பு - குப்பு. குப்பம் = 1. கூட்டம். குப்பமந்திரங்களெல்லாம் (குற்றா. தல. கவுற்சன. 8). 2. குவியல். 3. செம்படவர் குடிசைத் திரள், நெய்தல் நிலச்சிற்றூர். எ-டு : தாழங்குப்பம், மஞ்சக் குப்பம். 4. நாட்டுப்புறச் சிற்றூர். குப்பக்காடு = பட்டிக்காடு. 5. அடவி, காடு. (பிங்.). மரா. கும்ப (kumpa).
குப்பம் (கூட்டம்) - தெ. குப்ப, க. குப்பெ.
குப்பம் (சிற்றூர்) - தெ. குப்பமு.
குப்பம் - குப்பல் = 1. கூட்டம் (w). 2. குவியல். 3. திரண்ட மேடு (திவா.).
குப்பு - குப்பை = 1. குவியல், உப்பின் பெருங்குப்பை (திரிகடு. 83). 2. நெற்குவியல். குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை (பொருந. 244). 3. திரள். மன்பெரும்பவழக் குப்பை வாலணி கலஞ்செய் குப்பை (சீவக. 114). 4. கூட்டம். கோட்சுறா வினத் தொடு முதலைக் குப்பைகள் (சீவக. 95). 5. உரக் குவியல். 6. வீட்டி லும் தெருவிலும் கூட்டி வாரவேண்டிய கழிவுப் பொருட்கள். 7. மலம் (இடக்கரடக்கல்).
k., தெ. குப்ப, க. குப்பெ.
குப்பை - (குவியல்) - AS, heap, OS. hop, OE. heap ME. heep, E. heap, Du. hoop, Ice. hopr, Dan. hob. Swed. hop, G. haufe, OHG. hufo, Russ, kupa, Lith. kaupas.
கும் - குமி. குமிதல் = குவிதல், திரள்தல்.
ம. குமி, தெ. குமி (g).
குமித்தல் = திரளச் செய்தல்.
குமி - குமிழ் = 1. நீர்க்குமிழி. 2. பாதக்குறட்டின் உருண்டு திரண்ட புடைப்பு அல்லது முளை. 3. எருத்தின் திமில்.
குமிழ் - குமிழி = 1. நீர்க்குமிழி. குமிழிவிட் டுமிழ்குருதி (சீவக. 2239). 2. பாதக் குறட்டின் குமிழ்.
குமிழ்த்தல் = குமிழியிடுதல். குமிழித்தல் = குமிழி கொள்ளுதல்.
கும் - குமர் = 1. திரண்ட இளமை. ஒ. நோ : விடைத்தல் = வீறு கொண்டு விறைத்தல். விடை = வலிமையுள்ள இளம் பருவ வுயிரி. 2. கன்னிமை. குமரிருக்குஞ் சசி போல்வாள் (குற்றா. தல. தருமசாமி. 47). 3. அழியாத் தன்மை. குமருறப் பிணித்த பைம் பொற் கொடி (பாரத. இந்திரப். 32.)
குமர் - குமரன் = 1. இளைஞன். இருந்தகுலக் குமரர்தமை யிருகண்ணின் முகத்தழகு பருகநோக்கி (கம்பரா மிதிலை. 10.). 2. இளைஞனான முருகன். குன்றுதோறாடிய குமரர்ப் போற்று வாம் (கந்தபு. கடவுள். 16).
குமர் - குமரி = 1. பூப்படைந்த இளம்பெண், இளைஞை, குமரி மணஞ் செய்து கொண்டு (திவ். பெரியாழ். 3 : 8 : 3). 2. பூப் படைந்து மணவாத பெண்டு. 3. அழியாத் தன்மை, அழிவின்மை. குமரிக்கூட்டிற் கொழும்பல் லுணவு (சிலப். 10 : 123). 4. என்றுங் கன்னியா யிருப்பவளாகக் கருதப்படும் காளித் தெய்வம். விழிநுதற் குமரி (சிலப். 11 : 214). 5. காளி பெயர் கொண்ட (பழம்பாண்டி நாட்டு) மலைத் தொடர். குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள (சிலப். 11 : 20). 6. அவள் பெயர் கொண்ட ஆறு. வடவேங்கடந் தென்குமரி (தொல். பாயி.) 7. குமரி மலையைத் தென்னெல்லையாகவும் குமரியாற்றை வட வெல்லையாகவுங் கொண்ட பழம்பாண்டி நாடு, குமரிக்கண்டம்.
குமரிருட்டு (குமரியிருட்டு), குமரிவாழை என்பன இளமையை யும்; குமரி வேட்டம், குமரிப்போர் என்பன முதல் நிகழ்ச்சியை யும்; குமரிப்படை, குமரிமதில் என்பன அழியா நிலைமையையும் உணர்த்தும்.
குமர், குமரன், குமரி, என்னுஞ் சொற்கட்குத் திரண்ட இளமை என்பதே அடிப்படைப்பொருள். ஒ. நோ : முருகு = இளமை, முருகு - முருகன் = இளைஞன், குமரன், வள்ளிமணாளன், குறிஞ்சி நிலத்தெய்வம்.
வடமொழியாளர், குமர குமரியரை ஆரியத்தெய்வமாகவும், அவர் பெயரை ஆரியச் சொல்லாகவுங் காட்டல் வேண்டி, குமரன் என்பதைக் குமார என்றும் குமரி என்பதைக் குமாரீ என்றும் ஈற்றயலுயிர் நீட்டி, மகன் மகள் என்று முறையே பொருள் குறித்து, குமார என்பதைக் கு + மார என்று சிதைத்து, எளிதில் இறப்பது (“easily dying”) என்று பொருட் கரணியங் கூறுவர்.
குமரன் குமரி என்னுஞ் சொற்கட்குத் தமிழில் இளைஞன் இளைஞை என்றே யன்றி, மகன் மகள் என்னும் பொருளில்லை. இவ்விரு சொற்கட்கும் கும் என்பதே மூலம் என்றும், ஆரியத் தொன்மக் கதைப்படி முருகன் சிவனுக்கு மகன் எனினும், காளி அவனுக்கு மகளாகாள் என்றும், எளிதிலிறப்பது குழப் பருவத்திலும் கிழப்பருவத்திலுமன்றி மழப்பருவத்திலில்லை யென்றும், அறிதல் வேண்டும்.
இந்தச் சுமையைத் தூக்கமுடியாத நீ ஒரு குமரன் என்று இருக்க லாமா என்று பெண்டிர் வினவுவதையும், கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை, குமரிப்பெண்ணிற்கு ஒரு பிள்ளை என்னும் பழமொழியையும், நோக்குக. கும் - கும்மை - கொம்மை = இளமை. (திவா.).
மணமாகாத இளைஞனையும் இளைஞையையும் செல்வன் செல்வி என்று அடைகொடுத்துப் பெயர் குறிப்பது, குமரன் குமரி என்பன வடசொல்லென்னும் அறியாமையை அடிப்படையாகக் கொண்டது. செல்வன் செல்வி என்று மணமக்களைக் குறிப்பதே மரபாதலால், Master, Miss என்னும் அடைகளை இனிக் குமரன் குமரி என்றே தமிழிற் குறிக்க.
கும் - கும்மி = 1. கை குவித்தடித்தல். 2. அங்ஙனம் அடித்தாடும் விளையாட்டு. 3. அவ் விளையாட்டுப் பாட்டு.
ம. கும்மி, தெ. கொப்பி (gobbi.)
கும் - கொம் - கொம்மை. கொம்மை கொட்டுதல் = கை தட்டி யழைத்தல்.
கும் - கும்பு - கும்பிடு. கும்பிடுதல் = கைகுவித்து வணக்கஞ் செய்தல். ம. கும்பிடு.
கும்பிடு - கும்பீடு = கைகுவிக்கும் வணக்கம்.
கும்பு - கூம்பு. கூம்புதல் = 1. குவிதல். செய்ய கமல மலர் கூம்ப (நைடத. சந்திரோ. 2.). 2. ஒடுங்குதல். 3. ஊக்கங் குறைதல். வடவர் வாடக் குடவர் கூம்ப (பட்டினப். 276).
ம. கூம்பு.
கூம்பு = 1. பூமொட்டு. தாழைக் கூம்பவிழ்ந்த வொண்பூ (ஐந். ஐம். 49). 2. தேர்மொட்டு (திவா.). 3. கப்பற் பாய்மரம். கூம்பு முதன்முறிய வீங்குபிணி யவிழ்ந்து (மணி. 4 : 30).
ம. கூம்பு, க. கூவே.
கூம்பு - கூப்பு. கூப்புதல் = குவித்தல். காலையு மாலையுங் கைகூப்பிக் கால்தொழுதால் (தனிப்பா.).
கும் - குமுது - குமுதம் = கதிரொளியிற் கூம்புவதாகச் சொல்லப் படும் ஆம்பல். கும்முதல் = கூடுதல். குவிதல்.
குமுதம் - வ. குமுத.
வடமொழியாளர் குமுதம் என்னும் சொல்லை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, அதைக் கு + முத என்று பிரித்து, என்ன மகிழ்ச்சி! என்னும் உணர்ச்சி யூட்டுவதாகப் (exciting what joy!”) பொருட்கரணியங் கூறுவர். அவர் சொற்பொருள் கொண்ட வகை வருமாறு :
கூ (ஒரு வினாச்சொல்) - கு = எவ்வாறு (how), முத = மகிழ்ச்சி (joy).
குமுதத்தின் மறுபெயரான ஆம்பல் என்னுஞ் சொல்லும், தமிழ்ப் பொருட்கரணியத்தையே வலியுறுத்தும்.
அம்பல் = பேரரும்பு. அம்பல் - ஆம்பல் = கதிரொளியிற் பேரரும்புபோற் குவியும் மலர்.
கும்முதல் = குவிதல், மூடுதல், அடைத்தல், ஒலிகுறைதல், ஒளி குறைதல். கும் - கம்.
கம்மெனல் = ஓசையடங்கற் குறிப்பு. கானமுங் கம்மென்றன்றே (நற். 154).
கூடத்திலுள்ள வாசல் பலகணிகளை யெல்லாம் அடைத்து விட்டால், உள்ளே கம்மென்றிருக்கும் (உ.வ.).
கம்மென்றிரு = பேசாது அமைதியாயிரு.
கம்முதல் = 1. குரல் குன்றுதல். மென்குரல் கம்மாமே (குமர. பிர. முத்துக். 18) 2. ஒளி குறைதல்.
கம் - கம்மல் = 1. குரலடைப்பு, தொண்டைக்கம்மல். 2. விளைச்சற் குறைவு. பயிர் கம்மலாய்ப் போயிற்று. 3. விலைக் குறைவு. விலை கம்மலாயிருக்கிறது. (W).
கம் - கம்மி = குறைவு. பத்துரூபா கம்மியாயிருக்கிறது. கம்மி - உ. கமீ.
மூடுதற் கருத்தினின்று மறைப்பு, அடக்கம், மருமம் ஆகிய கருத்துக்கள் தோன்றும்.
கும் - குமு - குமுக்கு - கமுக்கு - கமுக்கம் = மரும வடக்கம். மூடிக் கொண்டிருந்தால் கமுக்கம், திறந்தால் வெட்டவெளி. (பழ.)
கமுக்கக்காரன் = அடக்கமுள்ளவன்.
அவரை அந்தப் பதவிக்கு அமர்த்தினதைச் செய்தித் தாளில் வெளிவரும்வரை கமுக்கமாய் வைத்திருந்தார்கள்.
கும் - கும்பு = கும்பம் = குவிந்து திரண்டிருக்கும் கலம். 2. கும்ப வடிவான மேற்கட்டிடம் (dome). 3. கும்பம் போன்ற யானை மண்டை. 4. கும்ப வோரை. 5. கும்பமாதம் (மாசி). கும்பம் - வ. கும்ப (kumpha).
கும்பாபிஷேகம் என்னும் வடசொல்லைக் கும்பமுழுக்கு என்றே சொல்லலாம்; குடமுழுக்கு என்று சொல்ல வேண்டியதில்லை. கும்பம் - கும்பா = அரைக் கும்ப வடிவான மாழையுண்கலம்.
கும்பக் குடம் = தேரின்முடி.
கூடு என்னும் வினையின் நிகழ்கால வெச்சம் (Infinitive mood), உடன் ஒடு ஓடு என்னும் கருவி (3 ஆம்) வேற்றுமை யுருபுகள் போல் உடனிகழ்ச்சிப் பொருள் தரும்.
எ-டு : நாய்கூட (நாயொடு) நம்பி வந்தான்.
தந்தைகூட (தந்தையொடு) மகனும் பாடினான்.
கும் என்னும் வினை கூடு என்பதன் ஒருபொருட் சொல் (synonym) லாதலால், கும்ம என்னும் நிகழ்கால வினையெச்சம் கூட (with, together, together with) என்பதுபோல் உடனிகழ்ச்சிப் பொருள் தரல் வேண்டும்.
கும்மல் (குவியல்) - L. cumulus, a heap, pile, mass.
L. cumulo, to heap up.
ஆங்கிலம் cumulus என்னும் இலத்தீன் சொல்லினின்று cumulate (கும்மலிடு) என்னும் வினைச் சொல்லைத் தோற்றுவிக்கும். அதினின்று accumulate (ad+cumulate) என்னும் வினைச்சொல் எழும்.
cumulus என்னுஞ் சொல்லின் அடியான cum என்பது, இலத்தீனில் உடனிகழ்ச்சிப் பொருள் முன்னொட்டாகப் (pref.) பெருவழக் காய் வழங்குகின்றது.
எ-டு : cum bona venia = with your kind indulgence.
cum grana salis = with a grain of salt.
cum multis aliis = with many other things.
cum notis variorum = with notes of various. (critics).
cum privilegio = with privilege.
cum என்னும் இலத்தீன் முன்னொட்டு, முதற்கண் com என்று திரிந்து, பின்னர் வருஞ்சொல் முதலெழுத்திற்கேற்ப con, col, cor என்றும் வேறுபடுகின்றது.
எ-டு : combustum, commodus,
communico, compenium;
concretus, condemno, confero, conservus;
collabor, collega; corrector, corruptus.
ஆங்கிலத்தில் நூற்றுமேனி நாற்பான் சொற்கள் இலத்தீனாத லால், com, con, col, cor என்னும் முன்னெட்டுக்களைக் கொண்ட சொற்கள் ஏராளமாய் வழங்குவதைக் காணலாம்.
எ-டு: combine, commence, compos, communicate;
concord, condole, confuse, console;
collect, college; correspond, corrode
com என்னும் இலத்தீன் முன்னொட்டு, co என்றும் குறுகி, இலத்தீனிற் சில குறிப்பிட்ட எழுத்துக்கட்கு முன்னும், ஆங்கிலத்தில் எல்லா எழுத்துக்கட்கு முன்னும், வழங்கும்.
“co -, pref. L short form of com - (cum prep. with), used in - L only before vowels, h, gr, and (in the correct classical form) n, but in E as living pref. before any letter.” என்று The Concise Oxford Dictionary கூறுதல் காண்க.
எ-டு : இலத்தீன்.
coarguo, cognosco, cohabitare.
ஆங்கிலம்
co-adjust, co-oeducation, co-operate, cheir, co-partner, co-religionist, co-tenant, co-worker.
உடனிகழ்ச்சிப் பொருளுணர்த்தும் கும் (cum) என்னும் இலத்தீன் முன்னொட்டு, கிரேக்கத்தில் சும் (sum) என்று திரிந்துள்ளது. அதை ஆங்கிலர் சிம் (sym) என்று திரித்து வழங்கி வந்திருக் கின்றனர். அத்திரிபும், syn, syl என்று வருஞ்சொன் முதலிற்கேற்ப வேறுபடும்.
எ-டு : symbol (sumbolon), sympathy (sumpatheia), symphony (sumphonia), symposium (sumposion), symptom sumptoma);
synagogue (sunagoge), syndic (sundikos), synonym (sunonumon), syntax (suntaxis), synthesis (sunthesis);
syllable (sullabe), syllepsis (sullepsis), syllogism (sullogismos).
சும் (ஸும்) என்னும் கிரேக்க உடனிகழ்ச்சிப் பொருள் முன் னொட்டு, கிரேக்க நாட்டிற்குக் கிழக்கில் தோன்றிய கீழை யாரியத்தில் ஸம் (sam) என்று திரிந்துள்ளது.
இங்குக் கீழையாரியம் என்றது, வேத ஆரியரின் முன்னோர், இந்தியாவிற்கு வருமுன் ஈரானுக்கும் காந்தாரத்திற்கும் இடைப் பட்ட நிலப்பகுதியில் வதிந்திருந்தபோது வழங்கிவந்த மொழி யாகும்.
உடன் (கூட), உடன் கூடிய, கலந்த, கலந்து, நிறைவாக என்று பொருள்படும் ஸம் என்னும் முன்னொட்டைப் பெற்ற முதன்மை யான சொற்கள், இன்று சமற்கிருதத்தில் நூற்றுக்கணக்காக வுள்ளன.
எ-டு : ஸம்க்யா, ஸம்க்ரக, ஸம்க்ராந்தி, ஸம்க்ருத, ஸம்க, ஸம்கட, ஸம்கதி, ஸம்கம, ஸம்கர, ஸம்கல்ப, ஸம்கீத, ஸம்கீர்ததந, ஸம்கீரண, ஸம்சர், ஸம்சித, ஸம்ஜீவிந், ஸம்தர்ப, ஸம்தாந, ஸம்தோஷ, ஸம்ந்யாஸ, ஸம்பத், ஸம்பந்த, ஸம்பவ, ஸம்பந்த, ஸம்பார, ஸம்பாவந, ஸம்பாஷண, ஸம்ப்ரத, ஸம்ப்ரதாய, ஸம்ப்ரதாந, ஸம்ப்ரோக்ஷண, ஸம்பூர்ண, ஸம்போக, ஸம்போதந, ஸம்மதி, ஸம்மேளந, ஸம்யுத்த, ஸம்யோக, ஸம்ரக்ஷண, ஸம்வத்ஸர, ஸம்வாத, ஸமஷ்டி, ஸமய, ஸமர்ப்பண, ஸமஸ்த, ஸமாஸ, ஸமாச்சார, ஸமுச்சய, ஸமுதாய, ஸமூஹ, ஸமேத, ஸம்ஸ்க்ருத, ஸம்ஸ்கார, ஸம்ஜ்ஞா, ஸம்ஸ்தாந, ஸம்ஸர்க, ஸம்ஸார, ஸம்ஹார, ஸம்ஹிதா.
ஸம் என்னும் முன்னொட்டு ஸஹ என்றும் திரியும்.
ஒ.நோ : ஸஹகமந, ஸஹோதர.
ஸம் என்னும் முன்னொட்டு ஸ என்றும் குறுகும்.
எ-டு. ஸகல (சகளன்) = உருவத் திருமேனி.
இங்ஙனம், கும் என்னும் தென்சொல், ஆரிய மொழிகளில் முறையே, கும் - கம். கம் - கன் - கோ. கும் - ஸும், ஸும் - ஸம் - ஸ என்று திரிந்துள்ளது.
ஆங்கிலம் கும் என்பதைக் கம் என்று ஒலி திரித்தும் வரி (எழுத்து) திரிக்காது, இன்றும் இணைப்புச் சொல்லாக (conjuction) வழங்கி வருகின்றது.
எ-டு : pension-cum-provident fund.
agriculture-cum-industry.
ஸம் என்னும் முன்னொட்டு சமற்கிருதத்திற் போன்றே வேத மொழியிலும் பெருவழக்காக வுள்ளது. மேலையாரியமும் பிராகிருதமுங் கலந்தது வேதமொழி யென்றும், வேதமொழியும் தமிழுங் கலந்தது சமற்கிருத மென்றும், வேறுபாடறிதல் வேண் டும். இவ்விரு மொழியும் ஒருகாலும் வழங்கியிராத இலக்கிய மொழிகளே.
ஸம் என்னும் முன்னொட்டை நீக்கிவிடின், நூற்றுக்கணக்கான முதன்மைச் சொற்கள் வடமொழியி லிரா. அவை நீங்கின், வேதமொழியும் சமற்கிருத மொழியும் மொழி யென்னுந் தகுதி யின்றி, இருபெருஞ் சொற்றொதிகளாகவே முடியும்.
ஸம்ஸ்க்ருதம் என்னும் பெயரே, ஸம் என்னும் முன்னொட்டால் ஏற்பட்டதே. வேதமொழியுந் தமிழுங் கலந்து செய்யப்பட்டது என்னும் பொருளில், அம் மொழி அப்பெயர் பெற்றது. ஸம் = உடன், கலந்து. க்ருத = செய்யப்பட்டது. தமிழையும் ஒரு பிராகிருதமாகக் கொண்டு, அதைத் த்ராவிடீ ப்ராக்ருத் என்பர் வடமொழியாளர். ப்ரா = முந்தி. முந்திச் செய்யப்பட்டது பிராகிருதம்; பிந்திக் கலந்து செய்யப்பட்டது சமற்கிருதம். ஸம்க்ருத என்றாலே போதும். பிற்காலத்தில் ஸ் என்னும் எழுத்தை இடைச்செருகி ஸம்ஸ்க்ருத என்றனர்.
மேல் வரைந்த கும் என்னுஞ் சொல் வரலாற்றினின்று தென் மொழியின் (தமிழின்) முன்மையையும் வடமொழியின் பின்மை யையும் தெற்றெனத் தெரிந்து கொள்க.
கும்மி விளையாட்டு
பல பேதையரும்1 பெதும்பையரும், வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்து அடிக்கும் கூத்து கும்மி எனப்படும். வடார்க் காட்டு வட்டாரத்தார் இதைக் கொப்பி என்பர்.
கும்முதல் கைகுவித்தல் அல்லது கைகுவித் தடித்தல். கைகுவித் தடிக்கும் விளையாட்டாதலால், இது கும்மியெனப்பட்டது.
கும்மி யாட்டத்திற்கென்று தனிவகைப் பாட்டுண்டு. அது கும்மி யடி என்று தொடங்குவதோடு, அத்தொடரையே ஒவ்வோர் உருவிலும் (சரணத்திலும்) மகுடமாகவுங் கொண்டிருக்கும்.
எடுத்துக்காட்டு :
கும்மியடி பெண்ணே கும்மியடி - நல்ல
கொன்றை மலர்சூடிக் கும்மியடி
நம்மையாளும் தனி நாயகம் நம்மிடம்
நண்ணிய தென்றுநீ கும்மியடி
ஆட்சிமொழியிங்கே ஆங்கிலமாய் - என்றும்
ஆகிவிடின் அது கேடாகும்
மாட்சி மிகுந்தமிழ் மாநிலத் தாளுகை
மாதரசே வரக் கும்மியடி.
இக்காலை, ஒற்றைத் தாளத்திற்கும் அடித்தாளத்திற்கும் ஏற்கும் எல்லாப் பாட்டுக்களும் கும்மிக்கும் பாடப்படுகின்றன. ஒற்றை = ஏகம். அடி = ஆதி. (த.நா.வி.)
குமரன்
குமரன் - குமார (இ.வே.)
கும் - கும்மல் = கும்பல், கூடுதல். கும்மலி = பருத்தவள்.
கும் - கொம் - கொம்மை = 1. பருமை (பெருங். உஞ்சைக் 40 : 210). 2. திரட்சி (சூடா). 3. இளமை (திவா.).
கும் - குமர் = 1. திரண்ட இளைஞை, கன்னி.
2. கன்னிமை. குமரிருக்குஞ் சசிபோல்வாள் (குற்றா. தல. தருமசாமி. 47).
3. அழியாமை. குமருறப் பிணித்த (பாரத. இந்திரப். 32). மணப் பருவத்தில் ஆணும் பெண்ணும் திரள்வது இயல்பு.
ஒ.நோ : விடை - விடலை = இளைஞன். விடலி = இளைஞை.
விடை = இள ஆண் விலங்கு, பறவையின் திரண்ட இளமை. விடைத்தல் = பருத்தல்.
குமர் - குமரன் = இளைஞன், முருகன். குமர் - குமரி = இளைஞை. கன்னியாகக் கருதப்பெறும் காளி.
ஆரியர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, குமரிக் கண்டமாகிய பழம்பாண்டி நாட்டில் குமரி (காளி) பாலைநிலத் தெய்வமும் வெற்றித் தெய்வமும் குரு (அம்மை) நோய்த் தெய்வமுமாயிருந்தாள். அவள் பெயரால் ஒரு மலைத் தொடரும் ஒரு பேராறுமிருந்தன.
வடவர் குமர என்னும் வடிவைக் குமார என்று நீட்டி அதற்கு மகன்மைப் பொருள் சேர்த்ததுடன், கு + மார என்று சொற் சிதைத்து, எளிதாயிறப்பவன் (easily dying) என்று பொருந்தாப் பொருட் காரணமுங் காட்டுவாராயினர்.
இனி, உணாதி சூத்திரம் கம் (விரும்பி, காபி) என்பதை மூலமாகக் காட்டும்.
குமரன், குமரி, என்னும் இரண்டும் தூய தென்சொற்களாதலின், மணமாகாத இளைஞன் பெயர்க்குமுன் குமரன் (Master) என்றும், மணமாகாத பெண்ணின் பெயர்க்குமுன் குமரி (Miss) என்றுமே, அடைகொடுத்தல் வேண்டும். செல்வன், செல்வி என்பன மணமக்கள் பெயர்க்கே பொருத்தமானவை.
மகன், மகள் என்று முறையே பொருள்தரும் குமார(ன்), குமாரீ என்னும் வடிவுகளே வடசொற்கள்.
எளிதாயிறப்பது குழவிப் பருவத்திலும் கிழப்பருவத்திலு மாதலின், கட்டிளங்காளைப் பருவத்தைக் குறிக்குஞ் சொற்கு அப்பொருட் காரணம் பொருந்தாது. காமுறுவதும் காளைப் பருவமே. ஆயின், கும் என்னும் சொற்கும் கம் என்னுஞ் சொற்கும் தொடர்பில்லை. கம் என்பது காம் என்பதன் குறுக்கம்.
கு + மார என்னும் தவற்றுப் பிரிப்புச் சொற்களும் தென் சொற்றிரிபே. குள் - கு. மடி - மரி - ம்ரு = மார (வ.வ: 126 - 127.)
குமரி
தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டி நாடும் தென் மாவாரியில் முழுகிப்போன பெருநிலமான குமரிக் கண்டத்தின் தென்கோடி யடுத்து, பனிமலை (இமயம்) போலும் ஒரு மாபெரு மலைத் தொடர் இருந்தது. அதன் பெயர் குமரி. அதனாலேயே முழுகிப்போன நிலமும் குமரிக் கண்டம் எனப்பட்டது.
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள (சிலப். 11:19-20)
குமரி என்பது காளியின் பெயர். காளி தமிழர் தெய்வங்களுள் ஒன்று . இறவாதவள் அல்லது என்றும் இளமையாயிருப்பவள் என்னும் கருத்தில், காளியைக் குமரி என்றனர்.
கும்முதல் திரள்தல். கும்மல் - கும்மலி = பருத்தவள் கும் - குமல் குமர் = திரட்சி, திரண்ட கன்னிப்பெண், கன்னிமை.
குமர் - குமரன் = திரண்ட இளைஞன், இளைஞனான முருகன். குமர் - குமரி = திரண்ட இளைஞை (கன்னி).
மணப்பருவமான இளமை வரும்போது உடல் திரளுதல் இயல்பு. பொலியும் பருவ விலங்குகளையும் முட்டையிடும் பருவப் பறவைகளையும் விடை என்று கூறுதல் காண்க. விடைத்தல் பருத்தல்.
இளமைக்குப்பின் மூப்பும் சாக்காடும் நேர்வதால் இளமைக் கருத்தினின்றே அழியாமைக் கருத்துத் தோன்றும். எவ்வளவு உடலுரம் பெற்றவராயினும், நகைச்சுவையும் உவமையும் பற்றியன்றிக் கிழவன் கிழவியைக் குமரன் குமரியென்னும் வழக்க மின்மை காண்க.
குமரிக் கண்டத்தின் வடகோடியில், குமரி என ஒரு பேரியாறு மிருந்தது.
மதுரை
மதுரை என்பது குமரி மலைத் தொடரிற் பிறந்து கிழக்கு முகமாய் ஓடிக் கீழ் கடலிற் கலந்ததும், கங்கை போலும் பெரியதுமான பஃறுளி யாற்றங்கரையில் அமைந்த பாண்டியரின் முதல் தலைநகரும் தலைக்கழக இருக்கையுமாகும்.
பாண்டியர் மதிக் குலத்தாராகலின், தம் குல முதலாகக் கருதிய மதியின் பெயரால், தம் முதல் தலைநகர்க்கு மதிரை எனப் பெயரிட்டனர். அது பின்னர் மதுரை எனத்திரிந்தது.
ஒ.நோ: குதி-குதிரை, எதிர்கை-எதுகை
குமரிமலை முழுகுமுன்போ முழுகிய பின்போ, குமரி நாட்டி னின்று வடக்கே சென்ற தமிழர் வழியினரே, கண்ணபிரான் வாழ்ந்த மதுரையையும் அமைத்தனர். அதற்கு அப்பெயரிட்டது, அவர் தம் முன்னோர் இடத்தை நினைவு கூர்தற் பொருட்டாகும். கண்ணபிரான் ஒரு திரவிட மன்னனே.
கண்ணபிரான் காலமாகிய பாரதக் காலத்தில் வைகை மதுரை யில்லை. ஆதலால், நாவலந் தேயத்தில் இரண்டாவது ஏற்பட்ட தும் வடமதுரை யெனப் பட்டதும் கண்ணன் மதுரையே. அதன் பெயர் அந்நாட்டு மொழிக்கேற்ப மத்ரா எனப் பின்னர்த் திரிந்தது.
சிவபெருமான் தன் சடைமுடியிலுள்ள மதியினின்று மதுவைப் பொழிந்த இடம் மதுரை என்பது. தொல்கதைக்கட்டு.
வைகை மதுரையைச் சார்ந்த திருமருத முன்றுறையால் மதுரைப் பெயர் வந்த தென்பது, பேரன் பெயரால் பாட்டன் பெயர் பெற்றான் என்னும் கூற்றை ஒக்கும். மதுரையென்று முதலிற் பெயர் பெற்றது பஃறுளி யாற்றங்கரையது, என்பதை மறந்து விடல் கூடாது.
கன்னி
வடவேங்கடம் தென்குமரி என்னும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிர அடியிற் குறிக்கப்பட்டது குமரியாறே.
.பரதன் என்னும் மாவேந்தனின் மகளாகிய குமரியின் பெயரால், பெயர் பெற்றது குமரிக் கண்டம் என்பதும், தொல்கதைக் கட்டே.
குமரி கன்னி என்பன ஒரு பொருட் சொற்களாதலால், குமரியாறு கன்னியெனவும்படும்.
மன்னு மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோ லதுவோச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
என்னும் சிலப்பதிகாரக் கானல் வரிப்பாடல், குமரியாற்றைக் கன்னியெனக் குறித்தல் காண்க. கன்னி என்பதும் காளியின் பெயரே.
கன்னி என்னும் சொல், மக்களினத்துப் பெண்ணைக் குறிக்கும் போது , பூப்படைந்து மணமாகாத பெண்ணைக் குறிக்கும். ஒரு பெண் வாழ்நாள் முழுதும் மணமாகாதிருக்கலாமாதலால், இளங்கன்னி கன்னிகையெனப்படுவாள். கை என்பது ஒரு குறுமைப் பொருள் பின்னொட்டு (Diminutive suffix.)
ஒ. நோ : குடி (வீடு) - குடிகை (சிறு வீடு) - குடிசை.
பூப்படையாத சிறுமியையும் மணமான பெண்ணையும், கன்னியென்று சொல்லும் வழக்கமில்லை. கன்னி கழிதல், கன்னியழிதல், கன்னியழித்தல் என்னும் வழக்குகளை நோக்குக.
கன்னி என்னும் சொல்லைக் கன்யா என்றும், கன்னிகை என்னும் சொல்லைக் கன்யகா என்றும், வடமொழியாளர் திரித்து, சிறுமி, மகள் என்ற பொருள்களிலும் வழங்குவர். அதற்கேற்ப, கன் (திகழ்), கன (சிறு) என்பவற்றை வேராகக் காட்டுவர்.
திகழ்தலைக் குறிக்கும் கன்னெனும் சொல் வலிந்து பொருத்து வதாகும். சிறுமையைக் குறிக்கும் கன என்னும் சொல் பூப் படைந்த பெண்ணிற்குப் பொருந்தாது. மிகச் சிறியதைக் குன்னி யென்பது தமிழ்மரபு. குல் - குன் - குன்னி. குல் - குள் - குறு, நன்னி யும் குன்னியும் என்பது பாண்டி நாட்டு வழக்கு. குன் - கன் - கன (kana).
கன்னுதல் என்பது பழுத்தலைக் குறிக்கும் ஓர் அருந்தமிழ்ச் சொல். வெப்பத்தினாலாவது அழுத்தத்தினாலாவது உள்ளங்கை யிலும் உள்ளங்காலிலும் அரத்தங்கட்டிச் சிவந்துவிட்டால், அதை அரத்தங் கன்னுதல் என்பர். கனி (பழம்) என்னும் சொல் கன்னி (பழுத்தது) என்பதன் தொகுத்தலே. நகு என்னும் முதனிலை வழக்கற்றுப் போனபின், நகை என்னும் தொழிற் பெயர் முதனிலையாய் வழங்குவது போன்றதே கனி என்னும் முதனிலையும். பூப்பு என்னும் சொற்போன்றே, கன்னுதல் என்பதும் நிலைத்திணைக்குரியதாயிருப்பதும், Mature என்னும் ஆங்கில வழக்கும், இங்குக் கருதத்தக்கன.
குமரிக் கண்டம்
1. மறைந்த குமரிக் கண்டம் (The Lost Lemuria)
நம் ஞாலத்தின் மேற்பரப்பில், இன்று காய்ந்த நிலமாயிருப்பது ஒரு காலத்திற் கடலடி நிலமாயும், இன்று கடலடி நிலமா யிருப்பது ஒரு காலத்திற் காய்ந்த நிலமாயும், இருந்த தென்று அறிவியலாற் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட் டுள்ளது. நிலநூலார் சிலவிடங்களில், இந்த நிலமூழ்கல்களும் எழுச்சிகளும் நேர்ந்துள்ள நிலப்பரப்பின் திட்டவட்டமான பகுதிகளைக் குறித்துக்காட்டக் கூடியவராய் இருந்திருக்கின்றனர். மறைந்த அற்றிலாண்டிசுக் கண்ட வுண்மை இதுவரை அறிவியலுலகிற் சிற்றளவே ஒப்பம் பெற்றிருப்பினும். இலெமுரியா என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு பரந்த தென்கண்டம் வரலாற்றிற்கு முந்தியதொரு காலத்தில் இருந்ததுபற்றி அறிவியலாரின் பொதுக் கருத்தொற்றுமை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. (The Lost Lemuria by Scott Elliot. p. 1)
குமரிக் கண்டமே மாந்தன் பிறந்தகம் (தோரா. கி.மு. 1,00,000)
இந்துமாவாரி முன்பு ஒரு கண்டாயிருந்தது. அது சந்தாத் தீவு களிலிருந்து ஆசியாவின் தென்கரை வழியே ஆப்பிரிக்காவின் கிழக்குக்கரைவரை பரந்திருந்தது. இப்பழங்காலக் கண்டத்திற்கு, அதில் வாழ்ந்திருந்த மாந்தன் போன்ற விலங்குகள் பற்றி, கிளேற்றர் (Sclater) என்னும் ஆங்கிலேயர் இலெமுரியா (Lemuria) என்று பெயரிட்டிருக்கின்றார். அதோடு, அது மாந்தன் பிறந்தக மாயிருந்திருக்கக் கூடுமென்பது பற்றி, மிகுந்த முதன்மை வாய்ந்த தாகும். (History of Creation by Earnst Haeckel, Vol. 1, p. 361).
இலெமுரியரே வரலாற்றிற்குத் தெரிந்த முதல் திட்டவட்டமான மாந்தன் வகுப்பாரென்பதையும், இலெமுரியாக் கண்டமே மாந்தன் நாகரிகத்தின் உண்மையான பிறப்பிடம் என்பதையும், கருதிப் பார்க்கும்போது, இலெமுரியாவினின்றும் அதன் மக்களி னின்றுமே மாந்தனின் இற்றை வகுப்பினங்களெல்லாம் தோன்றி யுள்ளன என்னும் இன்புறுத்தும் உண்மையைக் காண்கிறோம். (Lemura - The Lost continent of the Pacific, p. 181)
இன்றுள்ள ஐங் கண்டங்களுள், ஆத்திரேலியாவேனும் அமெரிக்காவேனும் ஐரோப்பாவேனும் (மாந்தனின்) இம்முந்தக மாகவோ பரதீசு என்று சொல்லப்படும் விண்ணுலகமாகவோ மாந்த இனத்தின் பிறந்தகமாகவோ இருந்திருக்க முடியாது. பெரும்பாற் சூழ்நிலைகள் தென்னிந்தி யாவையே நாடுமிடமாகக் காட்டுகின்றன. இன்றுள்ள கண்டங்களுள், தென்னாசியா வல்லாது இவ்வகையிற் கருதக்கூடிய ஒரே கண்டம் ஆப்பிரிக்காவே. ஆயின், மாந்தனின் முந்தகம், கிழக்கில் அப்பாலை யிந்தியாவும் சந்தாத் தீவுகளும் வரையும், மேற்கில் மடகாசுக்கரும் ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கரை வரையும், ஆசியாவின் தென்கரை யொட்டி, அது இன்று உள்ள அளவு (ஒருகால் அதனொடு ஒன்றாக இணைந்து) பரந்திருந்ததும், இன்று இந்துமாவாரியின் கீழ் மூழ்கிக் கிடப்பதுமான ஒரு கண்டமாயிருந்த தென்று உன்னுவிக் கும் சூழ்நிலைகள் (சிறப்பாக வட்டாரவியல் உண்மைகள்) பல வுள்ளன. விலங்குகளும் நிலைத்திணையும் பற்றிய பல ஞால நூலுண்மைகள், அத்தகைய தென்னிந்தியக் கண்டத்தின் முன் னுண்மையைப் பெரிதும் நம்பத்தக்க தாக்குகின்றன என்று, முன்பே கூறியுள்ளோம்…………. இந்த இலெமுரியா மாந்தனின் முந்தகமா யிருந்ததென்று கொள்வதனால், மக்களினங்களின் நாடுபெயர்வா லேற்பட்ட ஞாலவியற் பாதீட்டின் விளக்கத்திற்கு மிகத் துணை செய்கின்றோம். (History of Creation, Vol. II, pp. 125-6)
மாந்தன் தோன்றி வாழ்தற்கும் படிப்படியாக நாகரிக வளர்ச்சி யடைதற்கும் ஏற்ற நானில அமைப்பு, தென்னாட்டிலேயே இன்றும் சிறப்பாகவுள்ளது.
இயற்கை அல்லது அநாகரிக மாந்தன், இயற்கையாக விளையும் காய்கனி கிழங்குகளையும் வேட்டையாடிப் பெறும் விலங்கு பறவை யிறைச்சியையும், உண்டு வாழ்வதற்கேற்ற இடம், குறிஞ்சி என்னும் மலைநிலம்; அதற்கடுத்தபடியாக, ஆடுமாடுகளைச் சிறப்பாக வளர்த்தும் வானவாரிப் பயிர்களை விளைத்தும் வாழ்வதற்கு ஏற்ற இடம், புல்வெளியுங் குறுங்காடுமுள்ள முல்லை நிலம்; அதற்கடுத்தபடியாக, நன்செய்ப் பயிர்களையும், புன்செய்ப் பயிர்களையும் நன்றாக விளைவித்து, நிலையாக வாழ்ந்து, நாளடைவிற் சிற்றூர் பேரூரும் பேரூர் மூதூரும் ஆகி, கைத்தொழிலும் வாணிகமும் வளர்ந்து, கல்வியும் அரசும் நகரும் நகரமும் தோன்றி, மக்கள் நாகரிகம் அடைதற்கேற்ற இடம், நிலவளமும் நீர்வளமும் மிக்க மருத நிலம்; அதற்கடுத்தபடியாக, பலவகை மரக்கலங்கள் புனைந்து கடல் கடந்து நீர்வாணிகஞ் செய்து பல்வகைப் பண்டங் கொணர்ந்து நாட்டை வளம்படுத்து தற்கு ஏற்ற இடம், கடல் சார்ந்த நெய்தல் நிலம். இந்நால் வகை நிலமும் அடுத்தடுத்திருந்ததும் இன்றும் இருப்பதும் முறையே, முழுகிப்போன குமரிக்கண்டமும் இற்றைத் தமிழகமுமே.
பாலை யென்பது, முல்லையும் சிறுமலைக் குறிஞ்சியும் முதுவேனிற் காலத்தில் நீர்நிலைகளெல்லாம் வற்றி வறண்டு நிலமுஞ் சுடும் நிலை. பின்னர் மழைக்காலத்திற் பாலை நிலம் தளிர்த்தும் நீர் நிரம்பியும் மீண்டும் முல்லையுங் குறிஞ்சியுமாக மாறிவிடும். ஆதலால், ஐந்திணைகளுட் பாலைக்கு நிலையான நிலமில்லை. அதனால் ஞாலத்தை நானிலம் என்றனர்.
இற்றைத் தமிழ்நாட்டிற் போன்றே, பண்டைத் தமிழகமாகிய குமரி நாட்டிலுள்ள மேல் கோடியிலேயே ஒரு பன்மலை யடுக்கத்துப் பெருமலைத் தொடரிருந்தது. அது குமரி யென்னும் காளியின் பெயராற் குமரிமலை யெனப்பட்டது. அதன் தென் கோடியிற் பஃறுளி யென்னும் கங்கை போலும் மாபேரியாறும், வட கோடியிற் குமரியென்னும் காவிரி போலும் பேரியாறும், தோன்றிக் கிழக்கு முகமாய்ப் பாய்ந்தோடின. நிலம் மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்ததனால் குடதிசை மேல்திசை (மேல் - மேற்கு) யென்றும், குணதிசை கீழ்த் திசை யென்றும் (கீழ்-கீழ்க்கு-கிழக்கு), பெயர் பெற்றன. இற்றைத் தமிழகத்திலும் ஒருவன் மேற்றிசையினின்று கீழ்த்திசை வரின், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என்னும் நால்வகை நிலமும் முறையே ஒன்றினொன்று தாழ்ந்து அடுத்தடுத்திருக்கக் காண் பான். நண்ணிலக்கடல் (Mediterranean Sea) ஒரு காலத்தில் ஆசியாவை ஊடறுத்துச் சென்று அமைதி மாவாரியிற் (Pacific Ocean) கலத்ததாகத் தெரிவதால், விவிலியத் தொடக்கப் பொத்தகத்திற் கூறியுள்ளவாறு, ஏதேன் தோட்டம் என்னும் மாந்தன் பிறந்தகம், மெசொப்பொத்தாமியா நாட்டில் இருந் திருக்க முடியாது. ஏனெனின், அந்நிலப்பகுதி பண்டு கடலா யிருந்திருக்கும்.
நிலநூலியல் ஊழிகளுள் (Geological Eras) இறுதியதான புத்திய லுயிர் ஊழியைச் (Cainozoic Era) சேர்ந்த நான்காம் மண்டலத்துக் (Quarternary Period) கழிபல்லண்மைக் (Pleistocene) காலப்பிரிவில் கி.மு. 4,75,000 முதல் கி.மு. 50,000 வரை நான்முறை பனிக்கட்டிப் படல முற்படர்ச்சி (Glacial Advance) வட கோளத்தில் நிகழ்ந்த தாகச் சொல்லப்படுகின்றது. ஆகவே, ஐரோப்பாவிலேனும் வட அமெரிக்காவிலேனும் மாந்தன் பிறந்தகம் இருந்திருக்க முடியாது.
முதற்கால மாந்தனுக்கேற்ற வெப்பமும், இயற்கை வளமும், நண்ணிலக் கோட்டைச் (Equator) சார்ந்த வெப்ப நாட்டிலேயே இருக்க முடியும். அத்தகைய நாடு முழுகிப்போன குமரிநாடே.
மாந்தன் தோன்றியது அல்லது படைக்கப்பட்டது எண்ணிற் கெட்டாத தொன்மைக் காலமாதலால், அத்தகைய தொன்மை வாய்ந்ததும் குமரிநாடே.
இற்றை நில அமைப்பின்படி, இருதிணையுயிரிகளும் பாரெங் கும் பரவியிருக்கும் நிலைமை, குமரிக்கண்டத்தின் தென் கோடியை மாந்தன் பிறந்தகமாகக் கொண்டால்தான் விளங்கும்.
குமரிநாடே தமிழன் பிறந்தகம் (தோரா. கி.மு. 50,000)
1. இந்தியாவிற்குள்ளேயே வழங்கும் தமிழ் உள்ளிட்ட திரவிட மொழிகள் அல்லது தென்னிந்திய மொழிகள், தெற்கில் வரவரத் திருந்தியும் சொல்வளம் மிக்கும் தூய்மைப்பட்டும் இலக்கிய விலக்கணமுற்றும் செறிந்தும் உள்ளன.
திராவிடச் சொற்கட்கெல்லாம் பெரும்பாலும் மூலமும் முந்திய வடிவும் தமிழிலேயே உள்ளன.
2. பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டுள்ள முதல் கரு என்னும் இருவகைப் பொருள்களும், இன்றும் தென் னாட்டிற்குரியவாகவே உள்ளன.
3. பண்டைத் தமிழர் இறந்து போன தம் முன்னோரைத் தென்புலத்தார் என்றே குறித்தனர்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை. (குறள். 43)
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர் பெறாஅ தீரும். (புறம்-6)
4. பண்டைத் தமிழ்க் கழகங்கள் மூன்றனுள், முதலிரண்டும் முழுகிப்போன குமரிநாட்டிலேயே இருந்தன.
5. கி.பி. 2ஆம் நூற்றாண்டிலிருந்தவரும், செங்குட்டுவன் இளவலாரும், பல்கலைப் பெரும்புலவரும், முற்றத் துறந்த முழுமுனிவரும், நடுநிலை திறம்பாதவருமான இளங்கோ வடிகள்
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி. (சிலப். 11 : 19-22)
என்றும், கடைக்கழகக் காலப் புலவருள் ஒருவரான நெட்டி மையார்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறம்.9)
என்றும், தலைக்கழகத் தென்மதுரையைத் தன் கரைமேற் கொண் டிருந்த குமரி நாட்டுப் பஃறுளியாற்றையும், அக்காலத்துப் பாண்டியரையும் பாடியுள்ளார்.
6. நடவரசன் தில்லை மன்று, தமிழ் ஞாலத்தின் நெஞ்சத் தாவாகிய நடுவிடமாகவே பாண்டியனால் அமைக்கப் பெற்றது.
தில்லைமன்று வடபாற் பனிமலைக்கும் தென்பாற் குமரி மலைக்கும் நடுவிடத்தில் அமைந்ததனாலேயே, பேருலகத்தின் நெஞ்சத்தாவை நிகர்த்தாயிற்று.
7. சிலப்பதிகார வேனிற்காதை முதலடிக்கு வரைந்த வுரையில்,
தொடியோள் - பெண்பாற் பெயராற் குமரியென்ப தாயிற்று. ஆகவே, தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென் னாது பௌவமுமென்றது என்னையெனின், முதலூழியிறுதிக் கண் தென்மதுரையகத்துத் தலைச் சங்கத்து ……… நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையு முள்ளிட்ட வற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு இரீஇயனார் காய்சின வழுதி முதற் கடுங்கோன் ஈறாயுள்ளார் எண்பத்தொன்பதின்மர் ……….. அக் காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லை யாகிய பஃறுளி யென்னுமாற்றிற்கும் குமரி யென்னுமாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடு என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரிகொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும், கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றா ரென்றுணர்க. என்று அடியார்க்கு நல்லார் சிறப்புக் குறிப்பு வரைந்துள்ளார். இது அவர் கட்டிக் கூறிய செய்தியாக இருக்க முடியாது.
இவற்றால், குமரிநாடே தமிழ் தோன்றிய இடம் அல்லது தமிழன் பிறந்தகம் என்பது, தெரிதரு தேற்றமாம்.
குமரிக்கண்டப் பரப்பு
ஒரு முதன்மையான இனவியல் உண்மையும் சிறந்த பொருட் பாடுள்ளதும் எதுவெனின், போர்னியோவிலுள்ள தயக்கர் என்னும் மரபினர் மரமேறுவதைப் பற்றி உவாலேசு வரைந் துள்ள வரணனை, தென்னிந்திய ஆனைமலை வாணரான காடருக்கு ஒவ்வொரு நுண்குறிப்பிலும் முற்றும் பொருந்து மாதலால் அம்மலையிலும் எழுதப்படலாம் என்பதே. இந்தியத் தீவக் குறையில், (Peninsula) எனக்குத் தெரிந்தவரை, காடரிடை யும் திருவாங்கூர் மலைவேடரிடையும் மட்டும் பெருவழக்காய் வழங்கும் வழக்கம், வெட்டுப் பற்கள் எல்லாவற்றையும் அல்லது அவற்றுட் சிலவற்றை மட்டும், அரம்பம் போலன்றிக் கூர் நுனைக் குவியமாகச் சீவிக் கொள்வதாகும். இந்தச் சீவல், காடரிடையே பையன்களுக்குப் பதினெட்டாம் அகவையிலும் பெண்பிள்ளை கட்குப் பத்தாம் அகவையில் அல்லது அதை யடுத்தும். உளிகொண்டோ அறுவாள் கொண்டோ அரங்கொண்டோ செய்யப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. கீற்றும் (Skeat) பிளாகுதனும் (Blagden) மலையாத் தீவக்குறை சாக்குனர் (Jakuns) தம்பற்களைக் கூராக்கிச் சீவிக் கொள்ளும் வழக்கத்தைக் கவனித்திருக்கின்றனர். திரு. கிராபோர்டு (Crawford) மலையாத் தீவகணத்தில் பல்லை அராவுவதும் கறுப்பாக்குவதும் திருமணத் திற்கு முந்தி நிகழவேண்டிய சடங்கென்றும், பல்லையராவியிருப் பது ஒருபெண் மூப்படைந்திருப்பதைக் காட்டும் பொதுவான வகையென்றும் நமக்குத் தெரிவிக்கின்றார் பர். (Dr.) கே.தி. (K.T.) பிரெயசு (Preuss) ஒரு கட்டுரையில் மலாக்காவிலுள்ள சிறுநீக ரோவரின் மூங்கிற் சீப்புகளிலுள்ள கோலங்களை நுட்பமாக வரணித்து, அவற்றைத் தென்னிந்தியக் காடர் அணியும் மூங்கிற் சீப்புகளிலுள்ள வியக்கத்தக்கவாறு ஒத்துள்ள கோலங்களுடன் ஒப்பு நோக்குகின்றார். அந்தக் கோலம், நான் சொன்னவாறு அணியியல் வடிவளவைக் கோலமன்றென்றும், படவெழுத்துக் களின் தொடரென்றும், ஒரு கொள்கையை நுண்ணிதாக விளக்கிக் காட்டுகின்றார். கீற்றும் பிளாகுதனும் செமங்குப் (Semang) பெண்டிர் தம் முடியில் அணியும் வியப்பான சீப்புவகை, முற்றி லும் நோய்க்காப்பாகவே அணிவதாகத் தோன்றுகின்றதென்று கவனித்துக் கூறுகின்றனர். இந்தச் சீப்புகள் பெரும்பாலும் மூங்கிலாலேயே செய்யப்பட்டு, கணக்கற்ற கோலங்களால் அணி செய்யப்பட்டிருந்தன. அவற்றுள் எந்த இரண்டும் என்றேனும் முற்றும் ஒத்ததில்லை. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு சிறப்புக்கோலம் உரியதாகச் சொல்லப்பட்டது. அத்தகைய சீப்புகள் பெரக்கி லுள்ள பங்கன் (Pangan) செமங்கு சாக்கை (Sakai) மரபினராலும், செமங்குசாக்கைக் கலப்புமரபினருள் மாபெரும்பான்மை யராலும், அணியப்படுகின்றன. திரு. வின்சென்று (Vincent) அவருக்குத் தெரிந்தவரை, காடர் சீப்புகள் நோய்க்காப்பாகக் கருதப்பட வில்லையென்றும், அவற்றிலுள்ள வரைவுகள் மந்திரக் குறிப்புக் கொண்டனவல்லவென்றும், எனக்குத் தெரிவித்திருக் கின்றார். ஒரு காடன் எப்போதும் ஒரு சீப்புச் செய்து. தன் மனைவிக்குத் திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணச் சடங் கின் இறுதியில், கொடுத்தல் வேண்டும். இளங்காளையர் தம்முள் யார் இந்தச் சீப்புச் செய்ய முடியுமென்று, ஒருவரோ டொருவர் இசலிக் கொண்டு செய்கின்றனர். சில சமையங்களில் அவர்கள் சீப்புக்களிற் புதுமையான உருவங்களைப் பொறிக் கின்றனர். எடுத்துக்காட்டாக, திரு. வின்சென்று ஒரு சுவர்க் கடிகார முகப்பை மிக நன்றாகப் பொறித்த ஒரு சீப்பைப் பார்த்திருக் கின்றார்.
குமரிக்கண்டம் கிழக்கில் ஆத்திரேலியாவையும் மேற்கில் தென்னாப்பிரிக்காவையும் வடக்கில் இந்தியாவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த பெருநிலப்பரப்பாதலாலும் மாந்தன் தோன்றியதிலிருந்து தமிழர் முழுநாகரிகம் அடைந்தது வரை, ஏறத்தாழ ஈரிலக்கம் ஆண்டு மக்கள் அதிற் குடியிருந்த னாலும், அந்நிலவாணர் பல்வேறு நாகரிக நிலைப்பட்டவராயும் பல்வேறு மொழியினராயும் இருந்தனர். ஆயினும், மேற்பாகத்தினர் பெரும் பாலும் தமிழரும் கீழ்ப்பாகத்தினர் பெரும்பாலும் நாகரும் ஆவர். நாகரிகரும் அநாகரிகருமாக நாகர் இருசாரார். நாகரிக நாகருள் ஒரு வகுப்பாரே குமரிக்கண்டத்தின் பெரும்பகுதி மூழ்கிய பின் அமெரிக்காவையடைந்து மாயா நாகரிகத்தை வளர்த்தாகத் தெரிகின்றது.
குமரிநாட்டுத் தமிழ் (தோரா. 1,00,000-50,000)
உலகில் முதன் முதல் தோன்றிய திருந்திய மொழி தமிழே
மொழியமைப்பு
உணர்ச்சி யொலிகள் (Emotional Sounds) விளியொலிகள் (Vocative Sounds) குறிப்பொலிகள் (Symbolic Sounds) வாய்வினை யொலிகள் குழவிவளர்ப்பொலிகள் (Nursery Sounds) சுட்டொலிகள் (Deictic Sounds), என்னும் எழுவகை யொலிகளைக் கொண்ட இயற்கை மொழி (Natural Language) அல்லது முழைத்தல் மொழி (Inarticu-late Speech) முழுவளர்ச்சி யடைந்தபின், பண்பட்டமொழி (Cultivated Language) அல்லது இழைத்தல் மொழி (Articulate Speech) தோன்றிற்று. முறையே சேய்மையண்மை முன்மையுணர்த் தும் ஆ, இ, ஊ என்னும் முச்சுட்டுக்களினின்றே, இழைத்தல் மொழி பெரும்பாலும் உருவாயிற்று. அம்மூன்றனுள்ளும் முன்மைச்சுட்டாகிய ஊகாரமே, தமிழ்ச் சொற்களுள் முக்காற் பங்கிற்கு மேற்பட்ட பகுதியைப் பிறப்பித்துள்ளது.
ஈகாரத்தினின்று ஏகாரமும் ஊகாரத்தினின்று ஓகாரமும், மோனைத் திரிவாகத் தோன்றின. முதற்கண் நெடிலாகவே தோன்றிய உயிர்கள் பின்னர்க் குறிலாகக் குறுகின. அகரமும் இகரமுஞ் சேர்ந்து ஐ என்றும், அகரமும் உகரமுஞ் சேர்ந்து ஔ என்றும், இரு புணரொலிகள் (Diphthongs) எழுந்தன. அவை ஒலியளவில் முறையே அய், அவ் என ஒலித்தன.
கொச்சை வழக்கில், இலை என்பது எலை என்றும் உனக்கு என்பது ஒனக்கு என்றும் ஒலிப்பதினின்று, ஏகார ஓகாரம் அல்லது எகர ஒகரம் மோனைத் திரிவாகத் தோன்றியமை அறியப் படும்.
இதழ் குவிந்தொலிக்கும் முன்மைச் சுட்டான உ என்னும் விதை யெழுத்து, லகரமெய்யீறு பெற்று உல் என்னும் மூலவேரையும் அதனொடு சொன்முதல் மெய்கள் சேர்ந்த குல், சுல், துல், நுல், புல், முல் என்னும் வழிவேர்களையும் தோற்றுவிக்க, அவ் வெழுவேரினின்றும் மூலவடியும் வழியடிகளும் திரிந்து, முன்மை, முன்வருதல் (தோன்றுதல்), முன்செல்லல் (செல்லல்), நெருங்குதல் (கூடுதல்) பொருந்துதல், வளைதல், துளைத்தல், துருவல் ஆகிய எண்பெருங் கருத்துக்களையும், அவற்றினின்று தோன்றும் நூற்றுக்கணக்கான கிளைக் கருத்துக் களையும், ஆயிரக்கணக்கான நுண்கருத்துக்களையுங் கொண்டு, மாபெரும் பால் தமிழ்ச் சொற்களைப் பிறப்பித்துள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும், உலக வழக்குமொழி பொதுமக்கள் அமைப்பும், இலக்கியம் புலமக்கள் அமைப்பும் ஆகும். குமரி நாட்டு மக்கள் நாகரிகம் முதிர்ந்து பண்பட்டவரும் நுண்மதி யினருமாயிருந்ததனால், எல்லா எழுத்தொலிகளையும் செவ்வை யாக ஒலித்தும், எல்லாப் பொருள்களையும் வினைகளையும் நுட்பமாக வேறுபடுத்தி அவற்றிற் கேற்பச் சிறப்புச் சொற்களை வழங்கியும், பகுத்தறிவடிப்படையிற் பொருள்களைப் பாகு படுத்தியும், தம் மொழியை வளர்த்தும் வழங்கியும் வந்தனர்.
ஒலியெளிமை
அவர் உலகமுதல் மாந்தனினத்தாராதலின், அவர் வாயிற் பிற்காலத்திலும், பிறமொழிகளிலும் தோன்றிய வல்லொலிகள் எழவேயில்லை. தமிழிலுள்ள க ச ட த ப வும் சமற்கிருதம் என்னும் வட மொழியிலுள்ள க (க்க) ச (ச்ச) ட (ட்ட) த (த்த) ப (ப்ப) வும், வன்மையில் ஒத்தனவல்ல. தமிழ்க்ககரம் இரட்டித்தால் தான் வடமொழித்தனிக்ககரத்தை ஒத்தொலிக்கும். ஆங்கிலத்திலும் அங்ஙனமே maker என்னும் சொல், மேக்கர் என்றே இரட்டித்த ககரவொலி கொண்டிருத்தல் காண்க. இங்ஙனமே ஏனை வல்லினமும்.
மூச்சொலியும் (Aspirate Sound) தனித்த எடுப்பொலியும் தமிழுக் கின்மையால், மூச்சொலி கொண்ட வல்லெழுத்தோ எடுப்பொலி (Voice Sound) கொண்ட தனி வல்லெழுத்தோ தமிழில் இல்லவே யில்லை. மெல்லின மெய்களின் பின் அடுத்து வரும் வல்லின மெய்களே, தமிழில் எடுப்பொலி கொள்ளும்.
மூச்சொலியும் தனியெடுப்பொலியுங்கொண்ட தெலுங்கு கன்னடம், முதலிய திராவிட மொழிகள், குமரிநாட்டுத் தமிழி னின்றே திரிந்தனவேனும், மிகமிகப் பிற்காலத்தன வாதலின் அவ் வாரியத் தன்மை யடைந்தனவென அறிக.
இவ்வுண்மையறியாதார், தமிழிலும் முதற்காலத்தில் எடுப்பொலி கள் (g, j, d, d, b,) இருந்து, பின்னர் எடுப்பிலாவொலிகளாக மாறின எனப் பிதற்றுவர். தமிழ் தோன்றியது குமரி நாடென்னும் உண்மை யறியின், அங்ஙனங் கூறார். எடுப்பிலாவொலி எடுப் பொலியாக மாறுமேயன்றி, எடுப்பொலி எடுப்பிலாவொலி யாகத் திரியாது. பிஞ்சு முற்றிக் காயாவதேயன்றி, காய் இளந்து மீண்டும் பிஞ்சாவதில்லை. மாந்தன் வரலாற்றில் தமிழன் சிறு பிள்ளை போன்றவனாதலின், அவன் வாயிற் பிற்கால மாந்தரின் வல்லொலிகள் எழவில்லை.
தமிழிலுள்ள சகரம், சமற்கிருதக் கிசுகிசுப்பொலிகளுள் (Sibilants) முதலதையே ஒத்ததாகும். அதை எடுப்பும் மூச்சொலியுமுள்ள (Voiceless Unaspirate) சமற்கிருத அண்ண வல்லெழுத்திற்குச் (Pala-tal Surd) சமமாகக் கொள்வது, தமிழியல்பை அறியாமையேயாம்.
ழ, ற பொதுமக்களே தோற்றுவித்த ஒலிகளாதலால், அவை தமித்தும் சொல்லுறுபாகவும் வரும்போதெல்லாம், அவற்றை அவர்கள் முழுச் செவ்வையாகவே ஒலித்து வந்தனர்.
சொற்புணர்ச்சியும் பொதுமக்கள் செயலே. தெற்குத்தெரு கற்றாழை, முதுமக்கட்டாழி, பாற்சோறு, ஆட்டை வாரியம், அற்றைக் கூலி, கருமக்குறை என மூவகைத் திரிபுப் புணர்ச்சி யையும், பேச்சிலும் எழுத்திலும் இறுகக் கடைப்பிடித்தனர்.
பொருட்பாகுபாடு
எல்லாப் பொருள்களையும் உயிர், மெய், உயிர்மெய் (உயிரோடு கூடிய மெய்) என மூன்றாகப் பகுத்தும்; அவற்றுள் உயிரை நிலைத் திணை இயங்குதிணை என இரண்டாக வகுத்தும்; அவற்றுள் நிலைத்திணையைப் புல், பூண்டு, செடி, கொடி, மரம் எனப் பலவாகப் பாகுபடுத்தியும்; அவற்றின் உறுப்புக்களை வேர், தூர், அடி, கவை, (கொம்பு, கிளை, போத்து, குச்சு) இலை, பூ, காய் எனப் பிரித்தும்; அவற்றுள் இலையைத் தாள், தோகை, ஓலை, தோடு, இலை, அடை என்றும்; பூவை அரும்பு, போது, மலர், வீ செம்மல் என்றும், காயைப் பிஞ்சு, பிருக்கு, காய், கனி, நெற்று, வற்றல் என்றும்; நுண்ணிய வகையில் வேறுபடுத்தியும்; பிஞ்சை யும் கச்சல் (வாழை), வடு (மா), மூசு (பலா) குரும்பை (தென்னை, பனை) எனத் தனித்தனிச் சிறப்புப் பெயரிட்டும்; வழங்கினர்.
வினைவேறுபாடு
பொருள்களைப் போன்றே வினைகளையும் நுண்ணிதாக வேறுபடுத்தி, சிறப்புச் சொற்களால், அவற்றைக் குறித்தனர்.
எ-டு :
விழித்தல் = கண் திறத்தல், கண் திறந்து மருளுதல்
பார்த்தல் = மனக் குறிப்பின்றி இயல்பாகப் பார்த்தல், பார்த்ததைப் பார்த்தல்
கண்ணுறுதல் = குறிப்பொடு பார்த்தல்
நோக்குதல் = கூர்ந்து அல்லது கவனித்துப் பார்த்தல்
நோங்குதல் = வீட்டுத் திசை நோக்கி
விருப்பொடு பார்த்தல்
நோடுதல் = ஆய்ந்து பார்த்தல்
காணுதல் = தேடினதை அல்லது விரும்பியவரைப்
பார்த்தல்.
தன்மை முன்னிலைப் பெயர்களெல்லாம் தன்வேற்றுமைப் பட்டே (Orthoclite) அக்காலத்து வழங்கின.
சொல்லொழுங்கு தன்மைப் பெயர்கள்
ஒருமை பன்மை இரட்டைப் பன்மை
1. ஏன் ஏம் ஏங்கள்
2. என்னை எம்மை எங்களை
3. என்னால், எம்மால், எங்களால்,
என்னொடு எம்மொடு, எங்களொடு
4. எனக்கு எமக்கு எங்களுக்கு,
எங்கட்கு
5. என்னிலிருந்து, எம்மிலிருந்து, எங்களிலிருந்து,
என்னினின்று எம்மினின்று எங்களினின்று
6. என் எம் எங்கள்
(எனது, என) (எமது, எம) (எங்களது, எங்கள)
7. என்னிடம் எம்மிடம் எங்களிடம்
உலக வழக்கில், இழிந்தோன், ஒத்தோன், உயர்ந்தோன் என்னும் முத்திறத்தைக் குறிக்க, நீ, நீம், நீங்கள் என்னும் முன்னிலைப் பெயர்கள் ஏற்பட்டுவிட்டதனால், அவற்றுள் நீங்கள் என்பதை யொட்டித் தன்மையிலும் ஏங்கள் என்னும் இரட்டைப் பன்மைச் சொல் தோன்றிவிட்டது.
ஏன், ஏம் என்பன இற்றைத் தமிழில் எழுவாயாக வழங்கா விடினும், வினைமுற்றீறுகளாக வழங்குதல் காண்க.
எ-டு : வந்தேன், வந்தேம்.
இல்லிருந்து. இனின்று என்னும் 5-ஆம் வேற்றுமை யுருபுகள், இக்காலத்திற்போல் இடத்திலிருந்து இடத்தினின்று என்றும் வழங்கியிருக்கலாம்.
ஏ என்னும் அடி யா என்று திரிந்தபோது, யான், யாம், யாங்கள் என்னும் வடிவுகள் தோன்றின. ஆயின், அவை வேற்றுமை யேற்காது எழுவாயளவில் நின்றுவிட்டன. ஆதலால், அவற்றிற்கும் ஏம், ஏங்கள் என்பவற்றின் வேற்றுமை வடிவுகளே உரியவாயின.
யா என்னும் திரிவடி நா என்று திரிந்தபோது, நான், நாம், நாங்கள் என்னும் வடிவுகள் தோன்றின. அவை பின்வருமாறு வேற்றுமையேற்றன.
ஒருமை பன்மை இரட்டைப்பன்மை
1. நான் நாம் நாங்கள்
2. நன்னை நம்மை நங்களை
3. நன்னால், நம்மால், நங்களால்
நம்மொடு நங்களொடு,
நன்னொடு நங்களுக்கு.
4. நனக்கு நமக்கு, நங்கட்கு
5. நன்னிலிருந்து நம்மிலிருந்து நங்களிலிருந்து
நன்னினின்று நம்மினின்று நங்களின்று
6. நன் நம் நங்கள்
(நனது, நன) (நமது, நம) (நங்களது, நங்கள)
7. நன்னிடம் நம்மிடம் நங்களிடம்
நா என்னும் திரிவடியால் ஒருமைப்பெயர் வடிவிற் பொருள் வேறுபாட்டிற்கு இடமின்றேனும், பன்மைப் பெயர் வடிவிற் சிறந்த பொருள் வேறுபாட்டிற்கு இடமுண்டாயிற்று. நாம், நாங்கள் என்பன. தன்மையோடு முன்னிலையை உளப்படுத்தும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப் பெயர்களாயின.
எ-டு: நாம் = நானும் நீயும், யாமும் நீமும் (நீரும்)
ஏங்கள் என்பதற்குச் சொன்ன குறிப்பை நாங்கள் என்பதற்குங் கொள்க.
நாங்கள் என்பது, இற்றைத் தமிழில் முன்னிலையை உளப்படுத்தாது தவறாக யாங்கள் என்பதற்குப் பகரமாக (பதிலாக) வழங்குகின்றது.
நாம் என்னும் பெயர், வினைமுற்றீறாகும்போது ஆம் என்று முதன்மெய் நீங்கும்; அம் என்று குறுகவுஞ் செய்யும்.
எ-டு : நடந்தாம், நடந்தம்
ஏம் என்னும் பன்மைப் பெயர், தனித் தன்மைப் பெயராயிருப்ப தொடு, படர்க்கையை உளப்படுத்தும் உளப்பாட்டுத் தன்மைப் பெயராகவும் ஆளப்பெறும்.
எ-டு ; ஏம் 1. யாம் (தனித் தன்மை)
2. நானும், அவனும், யாமும், அவரும் (உளப்பாட்டுத் தன்மை)
ஏம் என்பது வினைமுற்றீறாகும்போது, எம் என்று குறுகவுஞ் செய்யும்.
எ-டு : நடந்தேம், நடந்தெம்.
முன்னிலைப் பெயர்கள்
ஒருமை பன்மை உயர்வுப் பன்மை
1. ஊன் ஊம் ஊங்கள்
2. உன்னை உம்மை உங்களை
3. உன்னால், உம்மால், உங்களால்
உன்னொடு உம்மொடு, உங்களோடு
உங்களுக்கு
4. உனக்கு உமக்கு உங்கட்கு
5. உன்னிலிருந்து உம்மிலிருந்து உங்களிலிருந்து
உன்னினின்று உம்மினின்று உங்களினின்று
6. உன் உம் உங்கள்
(உனது, உன) (உமது. உம) (உங்களது, உங்கள)
7. உன்னிடம் உம்மிடம் உங்களிடம்
ஊகார வடி பின்னர் நகரமெய்யூர்ந்தும் வழங்கிற்று.
ஒருமை பன்மை உயர்வுப்பன்மை
1. நூன் நூம் நூங்கள்
2. நுன்னை நும்மை நுங்களை
3. நுன்னால் நும்மால் நுங்களால்
நுன்னொடு நும்மொடு நுங்களொடு
4. நுனக்கு நுமக்கு நுங்களுக்கு, நுங்கட்கு
5. நுன்னிலிருந்து, நும்மிலிருந்து. நுங்களிலிருந்து,
நுன்னினின்று நும்மினின்று நுங்களின்று
6. நுன் நும் நுங்கள்
(நுனது, நுன) (நுமது, நும) (நுங்களது, நுங்கள)
7. நுன்னிடம் நும்மிடம் நுங்களிடம்
நூ அடி பின்னர் நீ என்று திரியவுஞ் செய்தது.
ஒருமை பன்மை உயர்வுப்பன்மை
8. நீன் நீம் நீங்கள்
9. நின்னை நிம்மை நிங்களை
10. நின்னால் நிம்மால், நிங்களால்
நின்னொடு நிம்மொடு நிங்களொடு
11. நினக்கு நிமக்கு நிங்களுக்கு, நிங்கட்கு
12. நின்னிலிருந்து நிம்மிலிருந்து, நிங்களிலிருந்து.
நின்னினின்று நிம்மினின்று நிங்களினின்று
13. நின் நிம் நிங்கள்
(நினது, நின) (நிமது, நிம) (நிங்களது, நிங்கள)
14. நின்னிடம் நிம்மிடம் நிங்களிடம்
நீன் என்னும் ஒருமைப் பெயர், பின்னே நீ என ஈறுகெட்டு, உலக வழக்கிற் பெருவழக்காகவும் இலக்கிய வழக்கில் முழு வழக்காக வும் வழங்கத்தலைப்பட்டது. நீன் என்னும் பெயர் வழக்கை, இன் றும் பாண்டி நாட்டு நாடார்குல வழக்கிற் காணலாம். கன்னடத் தில் அப்பெயர் உகரவீறு பெற்று நீனு என வழங்குகின்றது.
நீம் என்னும் பன்மைப் பெயரும், இருவகை வழக்கிலும் அருகிய வழக்காயிற்று. அதனால் நீ என்னும் ஈறுகெட்டபெயர் இர் என்னும் படர்க்கைப் பலர்பாலீறு பெற்று நீயிர் என்றாகி நீம் என்பதற்குத் தலைமாறாக (பதிலாக) வழங்கி வருகின்றது.
நீம் என்னும் பெயர் வழக்கை, இன்றும் பாண்டி நாட்டுச் சிற்றூர்ப் பகுதிகளிற் காணலாம்.
நீயிர் என்பது. நாளடைவில் நீவிர் எனத் திரிந்து பின்னர் நீர் எனத் தொக்கது.
நீ, நீர் (நீயிர், நீவிர்) என்னும் இருவடிவுகட்கும் தன் வேற்றுமை யில்லை. அதனால், முன்னதற்கு ஊன் என்னும் பெயரின் வேற் றுமையும், பின்னதற்கு நூம் அல்லது ஊம் என்னும் பெயரின் வேற்றுமையும், வழங்கி வருகின்றன. நீர் என்னும் வடிவிற்குச் சொன்னதே, நீயிர், நீவிர் என்னும் வடிவுகட்கும் ஒக்கும்.
தெற்கில் ஏறத்தாழ ஈராயிரங்கல் தொலைவு பரந்திருந்த குமரி நாடு முழுகிப்போனமையால், அதில் வழங்கிய ஆயிரக்கணக்கான உலக வழக்குச் சொற்கள் இறந்துபட்டன. முதலிரு கழகத்தாலும் இயற்றப்பட்டும் போற்றப்பட்டும் வந்த ஆயிரக்கணக்கான தனித் தமிழ் நூல்களும் அழிக்கப்பட்டு விட்டமையால், அவற்றில் வழங்கிய ஆயிரக்கணக்கான இலக்கிய வழக்குச் சொற்களும் இறந்துபட்டன. ஆதலால், மேற்காட்டிய தன்மை முன்னிலைப் பெயர்கள் சிலவற்றிற்கும், அவற்றின் வேற்றுமை வடிவுகட்கும், இன்று எடுத்துக்காட்டில்லையென அறிக.
எட்டிற்குமேல் அடுத்த எண்ணின் பெயர் அக்காலத்தில் தொண்டு என்றே வழங்கிற்று.
தொண்டு = 9
தொண்பது = 90
தொண்ணுறு = 900
தொள்ளாயிரம் = 9,000
தொண்பதினாயிரம் = 90,000
தொள்ளிலக்கம் = 900,000
தொண்பதிலக்கம் = 9,000,000
தொண்கோடி = 90,000,000
ஒன்று முதல் பத்துவரை எண்ணுப்பெயர்கள் தனிச் சொல்லாக வும் உகர வீறு கொண்டுமே இருந்தன.
பலுக்கற் செம்மை :
கண், மான், ஊர், கல், கூழ், ஆள் என்பன போன்ற பெயர்களும் எண், ஈன், பார், சொல், உமிழ், கேள் என்பன போன்ற வினை களும், உகர வீற்றைத் துணைக்கொள்ளாமலும், தாய், வாய் என்பன போன்ற பெயர்களும், செய், சாய் என்பன போன்ற வினைகளும், இகர வீற்றைத் துணைக்கொள்ளாமலும் ஒலித்தன.
மரம், அவன் என்பன போன்ற பெயர்களும், வந்தான், போனான் என்பன போன்ற வினைகளும், இறுதி மெல்லினமெய் மூக்கொலி யளவிலன்றி முற்றும் செவ்வையாக ஒலித்து வழங்கின.
அவள், மகள் என்பனபோன்ற பெயர்களும், வந்தாள், போனாள் என்பன போன்ற வினைகளும், இறுதி ளகரமெய் ஒலித்தே வழங்கின.
இலக்கண நடை
இருக்கிறது, இருந்தது என்பன போன்ற படர்க்கை யொன்றன் பால் வினைகளெல்லாம், கொச்சைவடிவிலன்றி இலக்கண வடிவிலேயே வழங்கின.
எல்லா வினைமுற்றுக்களும் எழுவாய்க் கேற்ற ஈறு பெற்றே வழங்கின.
எ-டு : நான் (யான்) அல்லேன்
யாம், நாம் அல்லேம், அல்லோம்
நீ அல்லை
நீம் அல்லீம்
நீர் (நீயிர், நீவிர்) அல்லீர்
நீங்கள் அல்லீங்கள்
அவனல்லன், அவளல்லள், அவரல்லர், அவர்களல்லர்கள், அதுவன்று, அவையல்ல.
அன்மை யின்மைப் பொருட் சொற்கள் தெளிவாக வேறுபடுத்தப் பட்டன.
எ-டு : அவன் வீட்டில் இல்லை.
அவன் புலவன் அல்லன்.
இருதிணைப் பகுப்பு
குமரிநாட்டுத் தமிழர் பண்பாட்டிலும் பகுத்தறிவாற்றலும் தலைசிறந்திருந்ததனால், பகுத்தறி வடிப்படையிலேயே உயர் வகுப்பு தாழ் வகுப்பு என எல்லாப் பொருள்களையும் இருவகுப் பாக வகுத்து. பகுத்தறிவுள்ள உயிர்மெய்களைக் குறிக்குஞ் சொற் கட்கே பாலீறு கொடுத்தும், அஃதில்லாத உயிர் மெய்களைக் குறிக்குஞ் சொற்கட்கு எண்ணீறே கொடுத்தும், சொற்றொடர் அமைத்தனர்.
எ-டு : உழவன் உழுகின்றான்
உழத்தி களையெடுக்கின்றான் உயர் வகுப்பு
அவன் வந்தான்
அவள் போனாள்
காளை உழுகின்றது
ஆவு மேய்கின்றது
ஆண்பனை வளர்கின்றது தாழ் வகுப்பு
பெண்பனை காய்க்கின்றது.
அது வந்தது.
அவை போயின.
இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்பல் என்னும் முறை யில், இலக்கண நூலார் பகுத்தறிவுள்ள மக்களை உயர்திணை யென்றும், அவரல்லாத உயிருள்ளனவும் இல்லனவு மான எல்லா வற்றையும் அஃறிணை யென்றும், குறித்தனர்.
மக்களைப் படைத்தவரும் எல்லாம் அறிந்தவருவமான, இறைவன் உயர்திணையென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.
இவ்விருதிணைப் பகுப்பு தமிழுக்கே சிறப்பாம். தெலுங்கில் இத்தகைய தொன்றிருப்பினும், அது தமிழைப் பின்பற்றியதே.
சொல்வளம்
குமரிநாட்டு ஆயிரக்கணக்கான உலக வழக்குச் சொற்களும், இலக்கிய வழக்குச் சொற்களும், இறந்துபட்ட பின்பும், தமிழ் ஒப்புயர்வற்ற சொல்வளம் மிக்க மொழியாக உள்ளது.
எடுத்துக்காட்டாக, இன்றும், சொல்லுதலைக் குறிக்க அறை இயம்பு, இசை, உரை, என், ஓது, கிள, கிளத்து, கூறு, சாற்று, செப்பு, சொல், நவில், நுதல், நுவல், நொடி, பகர், பறை, பன்னு, பனுவு, புகல், பேசு, மாறு, மிழற்று, மொழி, விள், விளத்து, விளம்பு முதலிய சொற்களும்.
ஓடுதலைக் குறிக்க, ஓடு, கிண்ணு, தொங்கு, பரி முதலிய சொற்களும்,
யானையைக் குறிக்க, ஆம்பல், உம்பல், உவா, எறும்பி, ஓங்கல், கடமா, கரி, கறையடி, குஞ்சரம், கைம்மலை, கைம்மா, தும்பி, தூங்கல், தோல், நால்வாய், பூட்கை, பொங்கடி, மறமலி, மாதிரம், மொய், வழுவை, வாரணம், வேழம் முதலிய பொதுச் சொற்களும்; சிந்துரம் பிணிமுகம், புகர்முகம் முதலிய சிறப்புச் சொற்களும் உள்ளன.
அறை முதல் விளம்பு ஈறாகக் குறிக்கப்பட்ட சொற்க ளெல்லாம், சொல்லுதல் என்னும் பொதுப்பொருளில் ஒத்தன வேனும், சொல்லுதல் வகையான சிறப்புப் பொருளில் வேறு பட்டனவாம். இங்ஙனமே ஏனையவும்.
குமரிநாட்டுத் தமிழே திராவிட மொழிகட் கெல்லாந் தாயாத லால், முன்னதன் ஒருபொருட் சொற்களினின்றே, பின்னவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சொல்லைத் தெரிந்தெடுத்தாளு கின்றது. இது தாய் வீட்டிலுள்ள ஒரு வினைக்குப் பயன்படும் பல்வகைக் கலங்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு மகளும் எடுத்துப் பழங்குவது போன்றது.
எ-டு: செப்பு - செப்பு (தெலுங்கு)
கிள - ஹேளு (கன்னடம்)
பறை - பற (மலையாளம்)
செப்பு என்னும் வினைச் சொல், தமிழில் விடை சொல்லுதல் என்னும் சிறப்புப் பொருளிலும், தெலுங்கிற் சொல்லுதல் என்னும் பொதுப் பொருளிலும், வழங்கும். இங்ஙனமே ஏனைச் சொற்களும் தன்தன் சிறப்புப் பொருளை இழக்கும்.
பறைதல் என்னும் சொல், ஏதம்பறைந் தல்ல செய்து (திவ். திருவாய். 4; 6; 8) என்று இலக்கிய வழக்கிலும், சொல்லாமற் பறையாமல் ஓடிப் போய்விட்டான் என்று உலக வழக்கிலும் வழங்குதல் காண்க.
வீட்டைக் குறிக்குஞ் சொற்களுள், இல் என்னும் தெலுங்குச் சொல்லும் மனை யென்னும் கன்னடச் சொல்லும் மட்டுமன்றி, சமற்கிருதத்திலும் பின்னிய (Finnish) மொழிகளிலும் வழங்கும் குடி யென்னும் சொல்லும் தமிழிலுள்ளதென்று, தமிழின் ஒரு பொருட் சொல்வளத்தைக் கால்டுவெலார் வியந்திருத்தலை நோக்குக.
சமற்கிரும் பிராகிருத மொழிகளினின்றும் தமிழினின்றும், ஆங்கிலம் உலக மொழிகளுட் பலவற்றினின்றும், ஏராளமாகக் கடன் கொண்டிருப்பதால், அவற்றிலுள்ள ஒரு பொருட் சொல் வளத்தை வியத்தற்கில்லை.
திராவிட மொழிகளிலுள்ள சில சொற்கள் இற்றைத் தமிழில், இல்லையெனின், அவை குமரி நாட்டுத் தமிழில் வழங்கி இறந்து பட்டன என்றறிதல் வேண்டும். சொல்லிற்குச் சொன்னதே சொல் வடிவிற்கும்.
சொல்வடிவுகளுள் முன்னதைப் பின்னதினின்று வேறுபடுத்தி யறிதற்கு, மொழியாராய்ச்சியொடு கூடிய சொல்லாராய்ச்சி வேண்டும்.
நால் - நால்கு - நான்கு
தெ. நாலுகு (g) க. நால்கு (k)
வாலுளைப் புரவி….. நால்குடன் பூட்டி (பெரும்பாண். 489)
நால்கு என்பது தமிழ்வடிவே.
தூய்மை
முதலிரு கழகக் காலத்திலும் ஆரியர் தென்னாடு வராமையால், அக்கழகங்கள் இருந்த குமரிநாட்டுத்தமிழ், ஒலியிற் போன்றே சொல்லிலும் பொருளிலும் இலக்கியத்திலும் கருத்திலும் முழுத் தூய்மை பெற்றிருந்தது. இலக்கியத்துள் இலக்கணமும் அடங்கும்.
குமரிநாட்டுத் தமிழர் (தோரா. கி.மு. 50,000 - 10,000)
குமரிநாட்டுத் தமிழர், பெரும்பாலும் ஐந்திணைப்பட்ட நாட்டுப் புறத்தாரும், சிறுபான்மை திணைமயக்குற்ற நகரவாணருமாக, இருவகை வாழ்ச்சியராய் இருந்து வந்தனர்.
குறிஞ்சிநிலை மாந்தர், கொல்லியும் பறம்பும் போன்ற மலை களையடுத்துக் கூட்டங்கூட்டமாகக் குடிசைகளில் தங்கி, வேட்டையாடியும் கிழங்ககழ்ந்தும் தேனெடுத்தும் தினை விளைத்தும், முரட்டுக் கம்பளியுடுத்தும் முருகனை வணங்கியும், வாழ்ந்து வந்தனர். உணவுப் பொருள்களைச் சுடுவதற்கும் எளிய முறையிற் சமைப்பதற்கும், இரவிற் கொடிய விலங்குகளை ஓட்டுவதற்கும், தீக்கடை கோலால் தீயுண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் குடியிருப்பு குறிச்சியென்றும் சிறுகுடியென்றும் பெயர் பெற்றன.
குறிஞ்சிநில மகளிர் குறிசொல்வது குறம் எனப்பட்டது. அதனாற் குறவர் என்றும், வேட்டையாடுவதால் வேட்டுவர் என்றும், குறிஞ்சி நில மாந்தர்க்கு இருபெயர்கள் உண்டாயின.
முல்லை நில மாந்தர், புல்வெளியுள்ள காடுகளையண்டி, ஆடுமாடெருமையாகிய முந்நிரைகளையும் வளர்த்து பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் ஆகிய ஆனைந்தை மருத நிலத்தும் பாலை நிலத்தும் விற்றும், வரகு, சாமை அவரை துவரை முதலிய வானவாரிப் பயிர்களை விளைத்தும், பஞ்சாடையும் மென் கம்பளியும் உடுத்தும், புல்வளர்ச்சிக்கு இன்றியமையாத மழை பொழியும் முகில் வண்ணங்கொண்ட மாயோன் (கரியோன்) என்னும் தெய்வத்தை வணங்கியும், வாழ்ந்து வந்தனர். அவர்கள் குடியிருப்பு, பாடியென்றும் சேரியென்றும் பெயர் பெற்றன.
ஆயர், இடையர், பொதுவர், தொழுவர், தொறுவர், கோவர், கோவலர் என்பன முல்லை நிலத்தார் பெயர்கள்.
கோ (ஆன்) மேய்ப்பதில் வல்லவர் கோவலன் ஆன் வல்லோர் என்று திவாகரத்திலும், ஆன்வல்லவர் என்று சூடா மணியிலும், குறிக்கப்பட்டிருத்தல் காண்க.
கண்ணகி கணவனாகிய கோவலன் பெயரே கோபால என்னும் வடசொல்லின் திரிபாகும். அதிலும் கோ என்பது தென்சொல்லே.
காட்டுமாடுகளைப் பிடிப்பதற்கும் வீட்டுமாடுகளை அடக்குதற் கும் மறவலி வேண்டியிருந்ததனால், ஆயர் தம் மகளிரைக் கொல் லேறு பிடித்தடக்கிய இளைஞர்க்கே மணஞ்செய்து கொடுத் தனர். கொல்லேறடக்கல் ஏறுதழுவல் எனப்பட்டது. ஆட்டிடை யர் (புல்லினத்தாயர்) என்றும் மாட்டிடையர் (நல்லினத்தாயர்) என்றும், ஆயர் இருவகையராய்ப் பிரிந்தனர்.
மருதநில மக்கள் நிலவளமும் நீர்வளமும் மிக்க இடங்களில் தங்கி, நெல் கரும்பு வாழை முதலிய நன்செய்ப் பயிர்களையும் சோளம் கேழ்வரகு முதலிய புன்செய்ப் பயிர்களையும் விளைத்து, பஞ்சாடையும் பட்டாடையும் கம்பளியாடையும் அணிந்து வேந்தன் (இந்திரன்) என்னும் வானவர் கோனை வணங்கி, மண் ணாலுங் கல்லாலுஞ் செங்கலாலும் கட்டிய மச்சு வீடுகளிலும் ஓட்டு முகட்டு வீடுகளிலும் கூரை வீடுகளிலும் வதிந்து. நிலை யாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் குடியிருப்பு மட்டும் ஊர் என்று பெயர்பெற்றது.
உர்-உறு. உறுதல் = பொருந்துதல், நிலத்தோடு பொருந்துதல், நிலையாகக் குடியிருத்தல். உர் - உறு. உர்-ஊர் ஒ.நோ; உண் ஊண்.
பயிர்த்தொழிலில் முதல்வினை உழவாதலால், அத்தொழிலும் உழவெனப்பட்டது. அதைச் செய்தவர் உழவர் எனப்பட்டனர். போரடிக்குங் களத்தில் வேலை செய்வது பற்றி களமர் என்றும் பெயர் பெற்றனர்.
பெருநிலக்கிழாரெல்லாரும் பிறரைக் கொண்டே வினை செய்து, வீட்டிலிருந்து நிழலில் வாழ்ந்ததனால், சற்று வெளுத்துப் போய் வெள்ளாளரென்றும் வெண்களமரென்றும்; சிறு நிலக்கிழாரும் நிலமிலிகளும் கடுவெயிலிலுங் காட்டிலும் வேலை செய்து கருத்துப் போனதினால், காராளரென்றும் கருங்களமரென்றும்; சொல்லப்பட்டனர். இங்ஙனம், உழுதுண்பார், உழுவித்துண்பார் என உழவர் இரு வகுப்பாராயினர்.
மருதநில மக்கள் நிலையாக வாழ்ந்ததனால், அவர்கள் குடியிருப் புக்கள் நாளடைவிற் பேரூரும் மூதுருமாயின. அவற்றுட் சில நகரும் நகரமும் ஆயின. நகரம் மாநகர்.
உழவருக்குப் பக்கத்துணையாக, நெயவர், குயவர், தச்சர், கொல் லர், பறம்பர் (தோல்வினைஞர்) மயிர்வினைஞர், வண்ணார், செக்கார் முதலிய பதினெண் தொழிலாளரும், பிற நுண்வினைஞ ரும்; படிப்படியாகத் தோன்றினர். நகரத்தில் நாகரிகந் தோன்றி வளர்ந்தது.
கடல் நீரால் உப்பு விளைத்தற்கும், ஆறு குளங்கள் நீர் வற்றியபின் கடல் மீன் பிடித்தற்கும், முத்துக் குளித்தற்கும், சில கூட்டத்தார் நெய்தல் நிலத்தில் வதிந்தனர். அவர்கள் குடியிருப்பு, குப்பம், கரை, துறை, காயல், கானல் எனப் பல்வேறு பெயர் பெற்றன.
நெய்தல் நிலத்தார், இடத்திற்கும் கருவிக்கும் தொழிலுக்கும் ஏற்ப, கரையார் என்றும், படவர் - பரவர் என்றும், முக்குவர் என்றும், அளவர் என்றும், பெயர் பெற்றனர். அவர் வணங்கியது வாரணன் என்னும் கடல் தெய்வம்.
முல்லையுங் குறிஞ்சியும் கடுங்கோடைக் காலத்திற் சிலவிடங் களில் வற்றிவறண்டு விளைச்சலின்றிப் பஞ்சநிலை ஏற்பட்ட போது, பாலையெனப்பட்டன. அத்தகைய சமையங்களில், அந் நில வாணர் வழிப்பறிக்கவும் அக்கம் பக்கங்களிற் கொள்ளை யடிக்கவும் நேர்ந்தது. மூவேந்தரும் அவரைத் தம் படை மறவராக் கியும், தாம் பகைத்த அரசரின் நாடுகளினின்று ஆநிரைகளைக் கவர்ந்து வர ஏவியும், வந்தனர்.
பாலைநிலவாணர், கள்ளர், மறவர், எயினர், வேட்டுவர் எனப் பலவகுப்பினர். அவர்கள் குடியிருப்பு, குடிக்காடு, நத்தம், பறந்தலை, சேரி எனப்பட்டன. அவர்கள் தெய்வம் காளி.
வணிகம்
மருதநிலப் பேரூர்களில், முதற்கண் ஒவ்வொரு தொழிலாளரும் தத்தம் விளைபொருட்களையும் செய்பொருட்களையும் நெல்லிற்கும் பிறவற்றிகும் பண்டமாற்றுச் செய்து வந்தனர்.
பின்னர் எல்லாப் பொருள்களையும் வாங்கிவிற்கும் வணிகர் தோன்றினர். முதலில் உள்ளூர்ப் பொருள் விற்பனையும், பின்னர் வெளியூர்ப் பொருள் விற்பனையும், அதன்பின் வெளிநாட்டுப் பொருள் விற்பனையுமாக, வணிகம் வளர்ந்து வந்தது. நில வாணிகத்தின் பின் நீர்வாணிகம் தோன்றிற்று. நிலவாணிகர் சாத்துவர் என்றும், நீர்வாணிகர் நாவிகர் (நாய்கர்) என்றும், பெயர் பெற்றனர்.
மக்கள் தொகை பெருகியபின் களவுங் கவர்வும் மிகுந்ததனால் பொருட்காப்பிற்கும் வழக்குத் தீர்ப்பிற்கும் ஆட்சிக்கும் காவலன் ஏற்பட்டான். குடும்பத்தலைவன் நிலைமையில் தொடங்கிய ஆட்சிப் பதவி, ஊர்த்தலைவன், வேள் (குறுநிலமன்னன்), கோ (பெருநில அரசன்), வேந்தன், மாவேந்தன் (பேரரசன்) எனப்படிப் படியாக வுயர்ந்தது. வேந்தன் ஏற்பட்டபின் அவனுக்கடங்கிய சிற்றரசர்க்கு மகுடம் அணியும் உரிமை இல்லாது போயிற்று. இயல்பாகவே பண்டமாற்றினால் ஏற்பட்ட திணைமயக்கம், ஐந்திணை நிலங்களையும் சேர்த்தாண்ட வேந்தன் காலத்தில், மிக விரிவடைந்தது. வேய்ந்தான் - வேய்ந்தன் - வேந்தன் = முடியணிந் தவன் வேய்தல் = தலைமேலணிதல். இங்ஙனம் குறுநில அரசர், பெருநில அரசர் என ஆள்வார் இருவகையராயினர். பாண்டியன் சோழன் சேரன் என்ற முறையில் முக்குடி வேந்தர் தோன்றி, ஆட்சிக்கு மருத நிலத்தில் ஒன்றும், நீர் வாணிகத்திற்கு நெய்தல் நிலத்தில் ஒன்றுமாக, இரு மாநகரமைத்து ஆண்டனர். மருத நிலைத்தலை நகரெல்லாம் பேராற்றங்கரை மேலேயே அமைந் திருந்தன.
நாகரிகம் வளர்ந்து பாதுகாப்பும் ஏற்பட்டபின், உழுவித் துண் ணும் உழவரான வெள்ளாளர் தம் ஒழிவு நேரங்களிற் கல்வியை வளர்த்து வந்தனர். இம்மைக்குரிய உலகியற் கல்விக்குப்பின், மறுமைக்குரிய மதவியற் கல்வி தோன்றிற்று. உலக வாழ்க்கையில் வெறுப்புற்றவர் துறவை மேற்கொண்டனர். கற்றோருள் இல்லறத்தார் நூல்களைப் பார்ப்பதனாற் பார்ப்பார் அல்லது பார்ப்பனர் என்றும், துறவறத்தார் எல்லாவுயிர்களிடத்தும் அருள் பூண்டமையால் அந்தணர் என்றும், பெயர் பெற்றனர். இங்ஙனம், கற்றோர் பார்ப்பாரும் அந்தணரும் என இருதிறத்தாராயினர்.
சிலர் பார்ப்பனர் என்னும் சொல் பிராமணன் என்னும் வடசொல்லின் திரிபென்றும், துறவு நிலை பிராமணனுக்கே யுரிய தென்றும், பிதற்றிப் பேதையரை ஏமாற்றுவர். குமரி நாட்டுத் தமிழர் காலம் ஆரியர் என்னும் இனக் கருவே தோன்றாத காலம். பாட்டனைப் பெற்ற பூட்டன் மணவாத இளமைக் காலத்தில் கொட்பேரன் எங்ஙனம் தோன்றவில்லையோ, அங்ஙனமே குமரி நாட்டுத் தமிழன் காலத்திலும் ஆரியன் தோன்றவில்லை. அதனால் அவன் திரிமொழியும் தோன்றவில்லை.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
என்னுங் குறளினின்று (33), பார்ப்பான் என்னும் பெயர்க் கரணியத்தையும்,
அந்தணர் என்போர் அறவோர்மந் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
என்னுங் குறளினின்று (30), அந்தணன் என்னும் பெயர்க் கரணியத்தையுங் கண்டு கொள்க.
சிலர், பார்ப்பனன் என்னும் சொல்வடிவு பிராமணன் என்பதைப் பின்பற்றிய தென்பர். ஆன் அனன் என இருவகையீறுகளைப் பெறுவது தமிழ்வினை முற்றுக்களின் இயல்பே.
எ-டு:
இ. கா. நி. கா. எ. கா.
பார்த்தனன் பார்க்கின்றனன் பார்ப்பனன்
பார்த்தனள் பார்க்கின்றனள் பார்பபனள்
பார்த்தனர் பார்க்கின்றனர் பார்ப்பனர்
பார்த்தன்று பார்க்கின்றதன்று
பார்த்தன பார்க்கின்றன பார்ப்பன
அனது - அன்று (அன் + து). பார்த்தன்று = பார்த்தது.
மருதநிலத்தில், உழவர், வணிகர், அரசர், பார்ப்பார், என்னும் நால்வகுப்பாரும் தோன்றியபின். வேளாண்மை செய்து விருந்தோம்புவதில் வெள்ளாளரும் காராளருமான இருவகையுழ வரும் தலைசிறந்ததனால், வேளாளர் எனப்பட்டனர்.
திணைமயக்கம்
மருத நிலத்துக் கோநகர்களும் தலைநகர்களும் நகரங்களாக (மாநகர்களாக) விரிவடைந்தபோது, முல்லை நிலமும் சில விடத்துக் குறிஞ்சி நிலமும் படிப்படியாக அடுத்து வந்தன. காவிரிப்பூம்பட்டினம் போன்ற நெய்தல் நகரங்களில், மருதமும் முல்லையுங் கலந்தன. சேரநாட்டு வஞ்சி போன்ற நகரங்களில் ஐந்திணையுங் கலந்தன.
நெய்தல் நகரங்களெல்லாம் பட்டினம் என்றும், அவற்றின் பிரிவுகள் பாக்கம் என்றும், பெயர் பெற்றன.
மருத நிலத்தூர்கட்கு, முதற்கண், நெய்தல் நில மாந்தர் உப்பும் மீனும் சங்கும் பவளமும் போன்ற கடல்படு பொருள்களையும், முல்லை நிலமாந்தர் ஆனைந்தையும், குறிஞ்சி நிலமாந்தர் தேனும் இறைச்சியும் மருப்பும் (தந்தமும்) காசறையும் (கஸ்தூரியும்) போன்ற மலைபடு பொருள்களையும், கொணர்ந்து நெல்லிற்கும் ஆடைக்கும் மாற்றினர். பின்னர், பிழைப்பிற்காகச் சிலர் நகர் தொறும் வந்து குடியேறினர். பாலை நில மறவரும் காவல் தொழிற்கமர்ந்தனர்.
திருநாள், பெருநாள், பொருநாள் ஆகிய முந்நாட்களிலும், ஐத்திணை மக்களும் கலந்தனர். அங்ஙனங் கலந்து உரையாடும் போது, மருத வாணனை நோக்கி உன் ஊர் எதுவென்றும், முல்லை வாணனை நோக்கி உன் பாடி (அல்லது சேரி) எது வென் றும், குறிஞ்சி வாணனை நோக்கி உன் குறிச்சி எதுவென்றும், நெய்தல் வாணனை நோக்கி உன் குப்பம் (அல்லது துறை) எது வென்றும், பாலை வாணனை நோக்கி உன் குடிக்காடு எதுவென் றும், வினவுவதே இயல்பும் வழக்கமும். பேரூர்களிலும் மூதூர்களி லும் பல தொழிலாளரும் நிலத்தாரும் கலந்து. திணைமயக்கம் மிகுதியாக ஏற்பட்டபோது, ஐந்திணைக் குடியிருப்பும் ஊர் என்னும் பொதுப்பெயர் பெற்றன.
குலவகுப்பு
முதற்கண், நிலந்தொறும் ஒரு வகுப்பாக ஐந்திணைக் குலங்கள் தோன்றின.
பின்னர் மருத நிலத்தில், உழவர்க்குப் பக்கத் துணையாகப் பதினெண் கைத்தொழிற் குலங்கள் தோன்றின.
அதன்பின், வணிகர், அரசர், பார்ப்பார் என்னும் குலங்கள் அல்லது குடிகள் தோன்றின. அரசர் என்றது, வேந்தரும் வேளிரும் போல வழிவழியாக வந்த அரசர் குடும்பங்களையே.
கல்விச் சிறப்பும் ஒழுக்க வுயர்வும் பற்றிப் பார்ப்பாரும் சில விடத்து அந்தணர் எனப் பெற்றனர்.
ஒவ்வொரு குலமும் நாளடைவில் இரண்டும் பலவுமாகக் கிளைத்துப் பல்கிற்று.
எல்லாக் குலங்களும் தொழிலடிப்படையிலேயே தோன்றி யியங்கின. ஒருவன் எத்தொழிலையும் மேற்கொள்ளலாம். செய்யுந் தொழில் பற்றியே ஒருவன் குலம் அமைந்தது. ஆயின், தந்தை யறிவும் ஆற்றலும் மனப்பான்மையும் இயல்பாகவே மகனுக்கு அமைந்துவிட்டதனாலும், ஒவ்வொருவனும் பிள்ளைப் பருவத்தி லேயே பெற்றோனைப் பின்பற்றி ஒரு தொழிலிற் பயிற்சி பெற்று விட்டதனாலும், தலைமுறை தொறும் மரபுத் தொழிற்றிறமை வளர்ச்சியடைந்து வந்ததனாலும், மக்கள் தொகை பெருகப் பெருக எல்லாத் தொழிலாளர்க்கும் பிழைப்பு ஏற்பட்டதனா லும், பெரும்பாலும் பெற்றோர் தொழிலையே மக்கள் வழிவழி செய்து வருவாராயினர்.
ஊர்க்கிழவன் (ஊரன்), ஊராளி, ஊர்க்குடும்பன், ஊர்க்கா மிண்டன் (கவுண்டன்), நாட்டாண்மைக்காரன், நாடன், நாடான், நாட்டான், பெரியதனக்காரன், அம்பலகாரன், சேர்வைகாரன், மூப்பன், மன்றாடி, பண்ணையாடி, முதலி, தலைவன், தேவன் என இடத்திற்கும் குலத்திற்கும் ஏற்பப் பலபெயர் பெற்றிருந்த ஊர்த்தலைவன் பதவி போன்றே, அரசர் பதவிகளும் தொல் வரவாகத் தொடர்ந்து வந்தன.
இயல்பான உறவன்பும் பொருளுதவியும் பாதுகாப்பும் நோக்கி, பொதுமக்கள் பெரும்பாலும் உறவினர்க்குள்ளேயே கொள் வனையுங் கொடுப்பனையுஞ் செய்து வந்தனர். அரசர்க்கோ எவ்வகை விலக்கும் தடையும் இருந்ததில்லை. வேளிர் மகளிரை யும் மறக்குடி மகளிரையும் அயல் நாட்டரசர் மகளிரையும் அவர் மணந்து வந்தனர்.
எக்குலத்தாராயினும், துப்புரவும் ஒழுக்கமுமே உண்டாட்டுற விற்குக் கவனிக்கப்பட்டன. கல்வி, ஒழுக்கம், தவம், அதிகாரம், செல்வம், ஈகை, மறம், ஆற்றல் என்பவற்றா லன்றிப் பிறப்பாற் சிறப்பில்லை.
அத்தி, மத்தி, ஆதன், பூதன், உதியன், திதியன், கண்ணன், பண்ணன், காடன், கோடன், சாத்தன், கூத்தன், நாகன், பேகன், நன்னன், பொன்னன், நாணன், வாணன், வேந்தன், சேந்தன், நள்ளி, கிள்ளி, பாரி, காரி, பிட்டன், வட்டன், தத்தன், தித்தன், மூலன், வேலன், இறையன், பொறையன், மூவன், தேவன், கொற்றன், வெற்றன், மருதன், விருதன், சேரன், கீரன், வங்கன், கொங்கன், வெள்ளையன், பிள்ளையன், கருப்பன், பொருப்பன், பச்சை, செச்சை, மலையன், கலையன், மாறன், வீறன், நல்லன், செல்லன், நம்பி, தம்பி, அப்பன், குப்பன், வேட்டன், சேட்டன் முதலியன வாகத் தனித்தும் புணர்ந்தும் அடையடுத்தும் வரும் பெயர்கள் எத்தொழிலாருடையனவாயினும், இக்காலத்து வழங்கும் குலப்பட்டமின்றி, ஏனை நாட்டார் பெயர்கள் போன்றே அக்காலத்து வழங்கி வந்தன.
வண்ணார், அடுத்தோர் (மயிர்வினைஞர்) முதலிய ஊர்க்குடி மக்கள், பறம்பர் (தோல்வினைஞர்) போன்றே, ஒரே வகுப்பாராய் எல்லா வகுப்பார்க்கும் பொதுவாயிருந்தனர்.
மேனாடுகளிற் போன்றே, உணவுவகையினால் ஏற்றதாழ்வில்லா திருந்தது.
எல்லாத் திருக்கோவில்களிலும் தமிழ் ஒன்றே வழிபாட்டு மொழியாயிருந்தது. உவச்சர், குருக்கள், திருக்கள், புலவர், பண்டாரியார், நம்பிமார், போற்றிமார், சாத்துவார் முதலிய தமிழ்ப் பூசாரியரே, சிவன் திருமால் காளி என்னும் முத்தெய்வக் கோவில்களிலும் வழிபாடு நடத்தி வந்தனர். கோவிற் புகவுரிமை யும் வழிபாட்டுரிமையும் எல்லா வகுப்பார்க்குஞ் சமமாயிருந்தது. கோவிலை யடுத்திருந்த திருக்குளத்தில் குளித்த பின் அல்லது கைகால் கழுவிய பின், எல்லாரும் காணிக்கை யொடு கோவிற்குட் புகுந்தனர்.
திருவிழாக்களிலும் புனலாட்டு விழாக்களிலும் எல்லா வகுப் பாரும் கலந்தே கொண்டாடினர். ஆறுகுளங்களில் வகுப்பிற் கோரிடமாக வரையறுக்கப்பட வில்லை.
இடுகாடு எல்லா வகுப்பார்க்கும் பொதுவாயிருந்தது. பிணத்தைச் சுடுவது தமிழர் வழக்கமன்று.
வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்பதே இயற்கை முறை யாயினும், பொருளிலக்கண நூலார், ஆக்கவழிப்பாற்றல் பற்றி யும் முக்கால அறிவுபற்றியும் முழுத்தூய்மை பற்றியும் அந்தணரை முன்னும், இறைவன் போல் எல்லாரையும் முறைசெய்து காத்தல் பற்றி அரசரை இரண்டாவதும், நாட்டை வளம்படுத்தியும் போர்க்காலத்தில் அரசர்க்குப் பொருள் கொடுத்தும் உதவும் வணிகரை மூன்றாவதும், வைத்து, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் எனத் தலைகீழாகச் செயற்கை முறைப்படுத்தினர்.
குமரி நாட்டு நாகரிகம்
நாகரிகம் என்பது திருந்திய பழக்க வழக்கம். அது முதன் முதல் நகரத்தில் அல்லது நகரியில் தோன்றினதனால் நாகரிகம் எனப்பட்டது.
ஒ.நோ : L. civis = citizen, civil = polite, civil - civilize - civilization = advanced stage in social development.
L. urbis = city, urbane = courteous, urbanity = polished manners,
அகநாகரிகம் புறநாகரிகம் என நாகரிகம் இருவகைப்படும். அக நாகரிகமாவது திருந்திய ஒழுக்கம்; புறநாகரிகமாவது திருந்திய உலக வாழ்க்கை. இவற்றுள் முன்னது பண்பாடு என்றும், பின் னது அடையின்றிப் பொதுவாக நாகரிகம் என்றும், சொல்லப் படும்.
**நாகரிகம்
உறையுள்
வேந்தரும் கோக்களும் மாபெருஞ்செல்வரும் வதியும் நகரங் களும், வேளிரும் மண்டிலத் தலைவரும் வதியும் நகர்களும், கல்லாலும் செங்கல்லாலும் சுண்ணாம்புக் காரையிட்டுக்கட்டிச் சிப்பி நீற்றுச் சுதையால் தீற்றிய, மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் கொண்டு, மாட்சியான காட்சியளித்தன.
சிப்பிச் சுதையின் வெண்மைச் சிறப்பை,
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்.
என்னும் திருக்குறளாலும் (714),
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்து
என்னும் புறநானூற்று அடியாலும், (378),
வருங்குன்ற மொன்றுரித் தோன்தில்லை யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் கனங்குழையே.
என்னுந் திருக்கோவைச் செய்யுளாலும் (15), அறியலாம்.
மாடங்களிலெல்லாம் கண்கவர் வண்ண வோவியங்கள் தீட்டப் பட்டிருந்தன.
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை யுயிர்களும் உவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியம்.
என்று மணிமேகலையும் (3: 127-131)
மாடக்குச் சித்திரமும் என்று நன்னூற்பாயிரமும், கூறுதல் காண்க.
நகரந்தொறும் வானளாவும் எழுநிலைக் கோபுரமும் கட்டப் பட்டிருந்தது. முதற்கண் அரசர்வதியும் அரண்மனைக் காவற் கோபுரமாக இருந்த கட்டிடம், பிற்காலத்தில் வானளாவுந் திருக்கோவிற் கோபுரமாக வளர்ந்தது.
கோ = அரசன், புரம் = உயர்ந்த கட்டிடம்.
புரையுயர் வாகும். (தொல், உரி. 4)
கோநகருந் தலைநகரும் கோட்டை மதிலாலுஞ் சூழப்பட் டிருந்தன. கோட்டையுள்ள நகரங்கள் புரி என்றும், கோபுர முள்ள நகரங்கள் புரம் என்றும், பெயர் பெற்றன.
புரிதல் = வளைதல். புரி = வளைந்த (சூழ்ந்த) கோட்டையுள்ளது. புரி - புரிசை = கோட்டை மதில்.
மதில், எயில், இஞ்சி, சோ என மதிலரண் நால்வகைப்பட் டிருந்தது. மிக உயரமானது மதில்; முற்றுகையிடும் பகைவர் மீது அம்பெய்யும் ஏவறைகளையுடையது எயில்; செம்பை யுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டியிறுகியது இஞ்சி; அரிய கடும் பொறிகளையுடையது சோ.
கோநகர்களில் அங்கண நீரைக் கண்ணிற் படாமற் போக்கு வதற்கு, கரந்துபடையென்னும் புதைசாலகம் இருந்தது. அது மறுகு (பெருந்தெரு) நடுவிற் கட்டப்பட்டு யானைக்கூட்டம் மேற் செல்லும்படி, கருங்கல்லால் மூடப்பட்டி ருந்தது. அதிற் சென்றநீர் யானைத் துதிக்கை போன்ற தூம்பின் வாயிலாய் அகழியில் விழுந்தது.
அரசர் குடும்பத்துடன் போர்க்காலத்தில் தப்பிக் கொள்வதற்கு, அரண்மனை யின் கீழும் கோநகர்களிடையும், சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆடை
பஞ்சு, பட்டு, மயிர் ஆகிய மூவகைக் கருவிப்பொருளாலும் இழைக்கப்பட்ட நுண்ணூலினால், பூவிதழ் போன்ற மென்மை-யும், இழை பிரித்தறியாச் செறிவும், பாம்புச்சட்டையும் மூங்கிற் சொலியும் நீராவியும் நறும்புகையும் ஒத்த நனிதவ நொய்ம்மை-யும், கண்கவர் பல்வண்ணப் பூத்தொழிலும், உடைய பல்வகை ஆடைகள் அறுவகைப் பருவத்திற்கும் ஏற்றவாறு நெய்யப் பட்டன.
மயிர் என்றது, ஆட்டுமயிரையும் ஒருவகை எலிமயிரையும்.
ஊண்
உலகில் முதன்முதல் உணவை நாகரிகமாய்ச் சமைத்துண்டவன் தமிழனே.
உண்ணல் தின்னல் நக்கல் பருகல் என்னும் நால்வகை ஊண் வினையும் ஒருங்கே சேர்ந்தது சாப்பிடுதல்.
உணவைச் சோறும் குழம்பும் கறியும் என மூன்றாகப் பகுத்து, நெல்லரிசியைச் சோறாகச் சமைத்து, குழம்பையும் கறியையும் கண்ணிற்கு அழகும் மூக்கிற்கு நறுமணமும் நாவிற்கு இன்சுவை யும் உணர்த்துவனவும், உடம்பை வலுப்படுத்துவனவும், நோய் வராது தடுத்து வாழ்நாளை நீட்டிப்பனவுமான பலவகை மருந்துச் சரக்குகளைச் சேர்த்து ஆக்கி, முதலிற் குழம்பும் இடையில் மிளகு நீரும் இறுதியில் தயிர் அல்லது மோரும் ஊற்றி, இயற்கையான மெல்லிய வாழையிலையில் அறுசுவையுண்டி தொன்றுதொட்டு இன்பமாகச் சாப்பிட்டு வருபவன் தமிழனே.
அரிசி வகையில், நெல்லரிசி தலை; வரகுதினை சாமை குதிரை வாலி காடைக் கண்ணி ஆகியவற்றின் அரிசி இடை; கஞ்சி களி கூழுக்கு மட்டும் உதவும் சோளம் கம்பு கேழ்வரகு கடை.
நெல்லரிசியில் சீரகச்சம்பா சிறுமணிச்சம்பா என்பவை தலை பிற சம்பா இடை; மட்டையரிசி கடை.
சோளம் கம்பு கேழ்வரகுண்ணும் பாட்டாளி மக்களும் சுவை யான குழம்பும் தொடுகறியும் விரும்புவர்.
குழம்பிற் குதவும் பயிற்று வகைகளுள், துவரை தலை; அவரை மொச்சை பச்சை இடை; உழுந்து தட்டான் கல் கரம்பை கொள் (காணம்) இடை.
(மிளகு) நீர், நீட்டாணம் (soup), சாறு, குழம்பு கூட்டு என்பன குழம்பு வகையில் முறையே ஒன்றினொன்று திண்ணியவை.
பல்வகைக் காய்களும் மீனும் இறைச்சியும், வாட்டல், வதக்கல், வறுவல், பொரியல், துவட்டல், புரட்டல், அவியல், ஒடியல் எனப் பல்வேறு முறையில் கறியாக்கப்பட்டன.
குழம்பிற்கும் கறிக்கும் இறுதிவினை தாளிப்பு (உசிலிப்பு). அதற்கு எண்ணெயும் ஆநெய்யும் பயன்படுத்தப்பட்டன.
இறைச்சி வகையில், முழுவுடும்பு, முக்கால் காடை, அரை கோழி, கால் ஆடு. என்பது பழமொழி.
அணி
பொன்னும் முத்தும் மணியும் குமரிநாட்டில் ஏராளமாய்க் கிடைத்தன. நுண்ணிய ஓவிய வேலைப்பாடுள்ள அணிகளும் கலங்களும் தட்டுமுட்டுக்களும் உருவங்களும் செய்யப்பட்டன.
கைத்தொழில்
எல்லாத் தொழில்களையுஞ் செவ்வையாகச் செய்தற்கு, இரும்பி னாலும் செம்பினாலும் வெண்கலத்தினாலும் சிறந்த கருவிகள் செய்யப்பட்டன. இரும்பு முதன்முதல் தமிழகத்திலேயே கண்டு பிடிக்கப்பட்ட தென்பதற்கு, அதன் தமிழ்ப் பெயர் ஆரிய மொழி களில் வழங்குவதே சான்றாம்.
E. iron, OE. iren, isen, Ger. eisen, Skt. ayas.
மக்கட் கருத்துக்கள் :
ஒவ்வொருவரும் பால் வகுப்பு வேறுபாடின்றி அறம் பொரு ளின்பம் வீடு அடைதல் வேண்டும். எந்தவூரும் சொந்தவூர். எல்லாரும் ஓரினம். அறிவாற்றல் குணஞ்செயல்களாலன்றிப் பிறப்பாற்சிறப்பில்லை. ஒருவனுக்குப் பெருமையும் சிறுமையும் தன்னாலேயே வரும். இன்பமும் துன்பமும் வருதற்கு அவரவர் பழ வினையே காரணம்; பிறரல்லர். பிறந்தவையெல்லாம் இறக்கும். அதற்கு அஞ்சல் கூடாது. அது ஒரு நிலைமையினின்று இன்னொரு நிலைமைக்குப் புகுவாயிலே. ஒவ்வொருவர்க்கும் வாழ்க்கையில் ஒரு கடமையுண்டு. அது நிறைவேறியபின் இறப்பு வரும்.
உடலுழைப்பிற்கும் மனவுழைப்பிற்கும் உயர் பதவிக்கும் தாழ் பதவிக்கும் ஏற்றவாறு, குணங்களும் திறமைகளும் பிறப்பிலேயே அமைந்து விடுகின்றன. ஆதலால், பெரியோரைப் புகழ்தலும் சிறியோரை இகழ்தலும் தக்கதன்று. ஒவ்வொருவரும் தம்மைப் போற் பிறரைக் கருதுதல் வேண்டும். இறந்தபின் உடன் வருவன அவரவர் செய்த இருவகை வினைகளே.
அரசியல்
அரசர் தம்மை உயிராகவும் தம் குடிகளை உடம்பாகவும் கருதி, ஐம்பெருங்குழு, எண்பேராயம், ஐவகை உறுதிச், சுற்றம், நால்வகைப் படை, நால்வகையரண் ஆகியவற்றைத் துணைக் கொண்டு, நடுநிலையாக முறைசெய்து செங்கோலாட்சி செய்து வந்தனர்.
பொதுக்கல்வி
இக்காலத்திற்போல் அரசியலுறுப்பான பொதுக்கல்வித் திணைக் களம் அக்காலத்தில் இல்லையேனும், ஏறத்தாழ எல்லாரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவராயிருந்தனர். பாட்டாளியுட் படப் பல தொழிலாரும் பாவலராகவுமிருந்தனர்.
செய்யுள்
அக்காலத் திலக்கிய மெல்லாம் செய்யுளாகவேயிருந்தது. அது வெண்பா, ஆசிரியப்பா (அகவற்பா), கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களாக வழங்கிற்று. செய்யுள் நூலிற்குப் பொருள் கூறும் உரையும் எளிய செய்யுளாகவேயிருந்தது வெண்பாவிற்கும் கலிப்பாவிற்கும் இணையான யாப்புவகை வேறெம்மொழியிலும் காணவியலாது.
மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம் எனச் செய்யுளுறுப்புக்கள் இருபத்தாறாகக் கொள்ளப்பட்டன.
அறிவியல்
இலக்கணம்
எத்துணைச் சிறந்தனவேனும், ஏனை யுயர்தனிச் செம்மொழிகளி லெல்லாம், எழுத்து, சொல், யாப்பு, அணி என மொழியிலக் கணம் நால்வகைப்பட்டதே. தமிழிலக்கணம் மட்டும், உலகில் முதன்முதல் இயற்றப்பட்டதேனும், சொற்றொடரும் செய்யுளும் நூலும் கூறும் பொருளுக்கும் இலக்கணங் கண்டதாகும்.
அகம், புறம் எனப் பொருள் இருபாற்படும். அவற்றுள் ஒவ் வொன்றும் எவ்வேழு திணைகளைக் கொண்டது. பொதுவாக அகம் காதல் வாழ்க்கையையும், புறம் போர்வினையையும், கூறும். இவை யிரண்டுமல்லாத எல்லாப் பொருள்களும், வாகை யென்னும் புறத்திணைக்குள் அடக்கப்படும்.
கணக்கு
குமரிநாட்டுத் தமிழர் கணக்கில் மிகத் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
ஒன்றிலிருந்து மேற்பட்டது மேல்வாயிலக்கம் என்றும், ஒன்றிற்கு கீழ்ப்பட்டது கீழ்வாயிலக்கம் என்றும், சொல்லப்பட்டன.
கும்பம் = நூறு கோடி
சங்கம் (சங்கு) = இலக்கங் கோடி
தாமரை = கோடா கோடி
வாரணம் = நூறு கோடா கோடி (கோடா கோடி?)
இவற்றின் மதிப்பு வேறுவகையாகவுஞ் சொல்லப்படும். குவளை, வெள்ளம், ஆம்பல், நெய்தல் என்பனவும் அடுக்கிய கோடி களைக் குறிக்கும் பேரெண்களாகும். கீழ்வாயிலக்கம் முக்கால், அரை, கால், அரைக்கால், மாகாணி (வீசம்), மா(1/20), காணி (1/80), முந்திரி (1/320), கீழ்முந்திரி (முந்திரியில் 1/320) என்பன.
சிற்றிலக்கத்திற்கும் பேரிலக்கத்திற்கும் பெருக்கல் வாய்பாடிருந் தது போன்றே, சதுர வாய்பாடும் இருந்தது. அது குழிக்கணக்கு எனப்பட்டது. சிற்றிலக்கக் குழிப்பு சிறுகுழி யென்றும், பேரிலக்கக் குழிப்பு பெருங்குழி யென்றும், பெயர் பெற்றன.
கணியம்
குமரிநாட்டுத் தமிழக் கணியர் நுழை மதியருங் கூர்ங் கண்ணருமா யிருந்ததனால், புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, கொடிறு, அரவு, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, முற்குளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி என்னும் இருபத்தெழு நாட்களையும்; மேழம், விடை, ஆடவை, அலவன், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம், என்னும் பன்னீரோரைகளையும்; ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன் (புதன்), வியாழன், வெள்ளி, காரி (சனி) என்னும் ஏழு கோள்களையும், கண்டு, கணிய நூலை வளர்த்து வந்தனர்.
எழுகோள்களின் பெயரால் எழுநாட்கிழமை (வாரம்) வகுக்கப் பட்டது. அது உலக முழுதும் பரவி இன்றுவரை வழங்கி வரு கின்றது.
கிழமைப் பெயர்கள் சமற்கிருதத்திலும், ஓரைப் பெயர்கள் சமற்கிருதத்திலும் இலத்தீனிலும், மொழி பெயர்க்கப்பட்டுள.
இன்னிசை
முரல் (சுரம்), பண், மெட்டு, தாளம் என்னும் நாற்கூறு கொண்ட இன்னிசை முழுவளர்ச்சி யடைந்திருந்தது.
பண் (எழுமுரல்), பண்ணியல் (அறுமுரல்), திறம் (ஐம்முரல்) திறத் திறம் (நான்முரல்) என நால்வகைப்பட்ட பண்கள் நரப்படை வால் 11,991 ஆகக் கணிக்கப்பட்டிருந்தன. ஆயப்பாலை, வட்டப் பாலை, சதுரப்பாலை, முக்கோணப்பாலை (திரிகோணப்பாலை) என்னும் நால்வகை முறையில், எழுபெரும்பாலைகளும் அவற் றின் கிளைகளும் திரிக்கப்பட்டன. அத்திரிவு முறைகள், முறையே, முழுமுரல், அரைமுரல், கால்முரல், அரைக்கால் முரல் ஆகிய முரல் நிலைகளைத் தழுவியன என்பர். இந்நுட்பங்கள் இற்றை இசைவாணர்க்குத் தெரியாவாறு, ஆரியத்தால் மறையுண்டு போயின.
தோல் துளை நரம்பு உறை (கஞ்சம்) என்னும் நால்வகை இசைக் கருவிகளுள் சிறந்தது நரப்புக் கருவி. நரப்புக் கருவிகளுள் சிறந்தது யாழ் என்னும் வீணை. யாழ்களுட் சிறந்தது செங்கோட்டி யாழ். அதன் வழியினதே இற்றை வீணை. விண்ணெனல் = நரம்பு தெறித்தல். விண் - வீணை. தோலிற் சிறந்தது மத்தளம் (பெரியது) அல்லது மதங்கம் (மிருதங்கம்). துளையிற் சிறந்தது புல்லாங்குழல்.
நாடகம்
இசையொடு நடமும் நடிப்பும் சேர்ந்தது நாடகம். நடி + அகம் = நாடகம்.
நடம் என்பது, கதை தழுவியதும் தழுவாததும் என இருவகைத்து. நாடகம் என்பது, பொதுவாக உலக வழக்கிற் கதை தழுவி வரும் நடிப்பையே குறிக்கும். கூத்து என்னும் பெயர் நடத்திற்கும் நாடகத்திற்கும் பொது. நடம் (நடனம்) என்பது ஆடல் என்றும் பெயர் பெறும்.
ஆடல்கள், நிலைத்தனவும் அவ்வப்போது ஆடலாசிரியனாற் புதிதுபுதிதாய்ப் பயிற்றப்படுவனவும் என இருபாற்படும். நாடக மெல்லாம் புதிதுபுதிதாய்த் தோன்றுவனவே.
ஆடல்கள், வேத்தியல், பொதுவியல், தேவியல் என முத்திறப்படும். கடையம், மரக்கால், குடை, துடி, அல்லியம், மல், குடம், பேடு, பாவை, பாண்டரங்கம், கொட்டி என்னும் பதினோராடலும், பிற்காலத்தில் தெய்வங்கள் ஆடினவாகக் கதைகள் கட்டப்பட்டு விட்டன. குரவை, வரி என்பனவும் தேவியலின் பாற்படும்.
நடக் கரணங்கள் அறுபத்து நான்கு. நடவினைக் கை, ஒற்றைக் கை (பிண்டிக்கை) இணைக்கை என இருவகைப்படும். ஒற்றைக் கை முப்பத்துமூன்று; இணைக்கை பதினைந்து.
நடிப்பிற்குரிய நளிநயம் (அபிநய) முப்பத்திரண்டு.
செய்யுட்கும் இன்னிசைக்கும் நாடகத்திற்கும் உரிய சுவைகள்; நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டு.
இன்னிசையிலும் நாடகத்திலும் குமரிநாட்டுத் தமிழர், ஆழ்ந்து ஈடுபட்டும் சிறந்த தேர்ச்சி பெற்றும் நிரம்ப இன்புற்றும் வந்தத னால், இன்னிசை நாடகத்தையும் தமிழொடு சேர்த்து, இயற் றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முக்கூற்றதாக்கி முத்தமிழ் என்றனர். இத்தகைப் புணர்ப்பு வேறெந்த நாட்டிலுமில்லை.
மருத்துவம்
ஊதை பித்துக் கோழை யென்னும் முந்நாடியியல்பை, தெய்வத் தன்மையான நுண்மாண் நுழைபுலத்தா லறிந்து, எல்லா நோய் கட்கும் மருத்துவம் அறுவை என்னும் இருவகைப் பண்டுவம் செய்வது தமிழ் மருத்துவம். அதன் தலைசிறந்த மருந்து இரும்பு செம்பு முதலிய பொன்னங்களைத் தூய பொன்னாக்குவதும், கழி நெடுங்காலம் (1,00,000 ஆண்டு?) வாழச் செய்வதுமான முப்பு (மூவுப்பு) என்னும் ஒருவகைக் கலவையுப்பு. அது செய்யும் வகை மறையுண்டு போயிற்று.
மதவியல்
குறிஞ்சி நிலத்திற்குரிய சேயோன் (முருகன்) வணக்கத்தினின்று சிவனியமும், முல்லை நிலத்திற்குரிய மாயோன் (கரியவன், மால்) வணக்கத்தினின்று மாலியமும், ஆகிய பெருந்தேவ மதம் இரண்டும் வளர்க்கப்பட்டன.
ஓகப்பயிற்சியாலும் உள்ளத்தூய்மையாலும் எண்ணத்திண்மை யாலும் இறைப்பற்றாலும், நுண்மை, பருமை, நொய்ம்மை, கனதி, கருதியது பெறுதல், கருதியவிடஞ் செல்லுதல் கருதிய வடி வெடுத்தல், கூடுவிட்டுக் கூடுபாய்தல் ஆகிய எண்வகைப் பெற்றி களைப் பெற்ற பெற்றியர் (சித்தர்), இரு பெருந்தேவ மதத்திற்கும் பொதுவான கடவுள் மதத்தைக் கண்டனர். கடவுள் மதமாவது, காலம் இடம் வடிவு குணம் முதலிய எல்லா வற்றையுங் கடந்து இயல்பான முற்றறிவும் முழுவல்லமையுள்ள ஒருதனிப் பரம் பொருளை, உள்ளத்தில் தொழுதல்.
குமரிநாட்டுத் தமிழர் இங்ஙனம் உலகியலிலும் மதவியலிலும் உயர்நிலையடைந்திருந்ததற்குக் கரணியம், அவர் நெற்றியிற் பெற்றிருந்த ஒருவகை அறிவுக்கண் என்றும், அது கண்ணாற் காணாததைக் காணவும் காதாற் கேளாததைக் கேட்கவும் வல்லது என்றும், அதைப் பின்னோர் நெடுங்காலம் பயன்படுத்தாமை யால் அதை இழந்துவிட்டனர் என்றும், ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர். இக்கருத்தை, சிவபெருமானுக்கு நெற்றிக் கண் உண்டென்னுங் கூற்று ஓரளவு வலியுறுத்துகின்றது.
#பண்பாடு
1. வேளாளர் பண்பாடு
புதிதாக இல்லத்திற்கு வந்தவர்க்கும் வழிச் செல்லும் அயலார்க் கும் சிறந்த வுணவளிப்பதும், இரப்போர்க்கு இல்லையென்னாது ஈவதும், வேளாளர் பண்பாடு.
2. வணிகர் பண்பாடு
பொருள்களை வாங்கும்போது அளவைக் கூட்டிப் பெறாமலும், விற்கும்போது குறைத்துக் கொடாமலும், நேர்மையாக வணிகஞ் செய்வதும்; உறுப்பிலிகட்கு ஊட்டுப்புரையும், அயலார் தங்கச் சத்திரஞ் சாவடியும், கட்டி வைப்பதும்; வழிப்போக்கர்க்குச் சோலையொடு கூடிய குளம் வெட்டிவைப்பதும்; நீர் நிலை யில்லாக் காட்டு வழிகளில் நெல்லி மரங்கள் வளர்த்து வைப்ப தும்; வணிகர் பண்பாடு.
அரசர் பண்பாடு
காட்சிக கெளியாரையும் கடுஞ் சொல்லரல்லராயு மிருப்பதும், நடுநிலையாக முறைசெய்து செங்கோலாட்சி செலுத்துவதும், வழக்கிழந்தவர் தம்மிடம் முறையிட அரண்மனை வாயிலில் ஆராய்ச்சிமணி கட்டிவைப்பதும், வறட்சிக் காலத்தில் வரிநீக்குவ தும், திருநாள் பெருநாட்களில் சிறைஞரை விடுதலை செய்வதும், மதம்பற்றிய உண்மையை மக்களறிதற்குப் பட்டிமன்றம் நடத்து வதும், கூனர் குறளர் முதலிய எச்சப் பிறவிகளை அரண்மனைக் குற்றேவற் கமர்த்துவதும், போர் தொடங்குமுன் பெண்டிர் பிள்ளைகள் பிணியாளர் முதியோர் முதலியோரைப் பாதுகாப் பான இடத்திற்கு அகற்றி விடுவதும் படைக்கலமிழந்தவனும் எளிய படைக்கலமுள்ளவனும் கீழே விழுந்தவனும் முடிகுலைந்த வனும் ஆடையவிழ்ந்தவனும் தோற்றோடுகின்றவனும் ஆகியோர் மீது படைக்கலம் ஏவாமை யும், தோற்ற அரசனைத் திறைகட்டச் செய்து அவனொடு மணவுறவு கொள்வதும், போரில் முதுகிற் புண்பட்ட போதும் வாழ்க்கையில் மானங்கெட நேர்ந்தபோதும் உண்ணா நோன்பிருந்து உயிர்துறப்பதும், அரசர் பண்பாடாம்.
புலவர் பண்பாடு
அரசர் மதியாது தரும் பரிசிலைப் பெறாது போவதும், வறுமை யிற் செம்மையாய் ஒழுகுதலும், பேராசையின்மையும், அரசர் தீங்குசெய்யின் தடுப்பதும், அவர்க்கு அஞ்சாது அறிவுரை கூறுவ தும் பொதுநலம் பேணுவதும், சொற்பொழிவரங்கிற்குச் செல் லின் இறுதிவரையிலிருந்து கேட்பதும் புலவர் பண்பாடாம்.
அகுமரிநாட்டு இலக்கியம்
இலக்கியம் (1) எழுதப்பட்ட இலக்கியம், (2) எழுதப்படா இலக் கியம் என இருவகைப்படும். எழுதப்பட்ட இலக்கியமும், (1) உரை நடையிலக்கியம் (2) செய்யுளிலக்கியம் என்றும், (1) பொது விலக்கியம் (2) சிறப்பிலக்கியம் என்றும், நடை பற்றியும் பயன் படுத்தும் மக்கள் பற்றியும் இவ்விருவகைப்படும்.
குமரிநாட்டுத் தமிழிலக்கியம், நடைபற்றிச் செய்யுளிலக்கியமும் பயன்படுத்துவார் பற்றிப் பொதுச்சிறப் பிலக்கியமுமாகும்.
பொதுவிலக்கியம்
பாட்டு, உரை நூல், வாய்மொழி அல்லது மந்திரம், பிசி அங்கதம், முதுசொல் என்னும் எழுவகை நிலைக்களத்திற் செய்யுளிலக்கியம் தோன்றிற்று. நிலைக்களம் யாப்பு வகை,
அவற்றுள் : பாட்டு எண்வகை வனப்பாகப் பகுக்கப்பட்டது.
எண்வகை வனப்புக்கள்
1. அம்மை
சின்மென் மொழியாற் சீர்புனைந் தியாப்பின்
அம்மை தானே அடிநிமிர் பின்றே. (தொல். செய். 233)
2. அழகு
செய்யுள் மொழியாற் சீர்புனைந் தியாப்பின்
அவ்வகை தானே அழகெனப் படுமே. (தொல்.செய். 234)
3. தொன்மை
தொன்மை தானே
உரையோடு புணர்ந்த பழைமை மேற்றே (தொல்.செய். . 235)
4. தோல்
இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும்
தோல்என மொழி தொன்மொழிப் புலவர். (தொல்.செய். 236)
5. விருந்து
விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே (தொல்.செய். 237)
6. இயைபு
ஞகார முதலா னகார வீற்றுப்
புள்ளி யிறுதி இயைபெனப் படுமே. (தொல்.செய். 238)
7. புலன்
சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
புலன்என மொழிப புலனுணர்ந் தோரே. (தொல்.செய். 239)
8. இழைபு
ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது
குறளடி முதலா ஐந்தடி யொப்பித்
தோங்கிய மொழியான் ஆங்ஙனம் ஒழுகின்
இழைபின் இலக்கணம் இயைந்த தாகும். (தொல்.செய். 240)
இவற்றுள் ஒன்று கூட இக்காலத்தில்லை. சிலப்பதிகாரமும் மணி மேகலையும் னகரமய்யீற்றுப் பாட்டுக்களைக் கொண்டிருப்ப தால், இயைபு என்னும் வனப்பிற்கு எடுத்துக்காட்டாகும். ஆயின், அவை தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டவை யல்ல. தொல்காப் பியக் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு அல்லது 7-ஆம் நூற்றாண்டு; சிலப்பதிகார மணிமேகலைக் காலமோ கி.பி. 2-ஆம் நூற்றாண்டு.
தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டுள்ள ஆரியமல்லாத இலக்கண விலக்கியங்களும் மொழிச் செய்திகளும், முதலிரு கழகக் காலத் திற்குரியனவே யன்றித் தொல்காப்பியர் காலத்திற் குரியனவல்ல.
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்.
என்று பனம்பாரனாரும், என்ப, என்மனார் புலவர், நுண் ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே, எனமொழிப ஒத்த தென்ப வுணரு மோரே, செல்வி தென்ப சிறந்திசி னோரே என்றும், பிற வாறும், சார்பு நூலாசிரியர் முறையில் தொல்காப்பியனாரும், கூறியிருத்தல் காண்க.
இயைபு
வனப்புப் பாட்டுக்கள் ஞ, ண், ந், ம், ன் என்னும் ஐம் மெல்லின மெய்களுள் ஒன்றில் இறும். சிலப்பதிகார மணிமேகலையாகிய இரட்டை வனப்புப் பாட்டுக்கள் ன் என்னும் ஒரே மெய்யில் இறுகின்றன. ஒரு மெய்க்கு ஒருவனப்பு என்று வைத்துக் கொள்ளி னும், ஐம்மெய்க்கும் ஐவனப்பாவது இருந்திருத்தல் வேண்டும். ஒன்றுகூட இன்றில்லை. இங்ஙனமே ஏனை வனப்புக்களும்.
விருந்து
என்பது, அவ்வப்போது புதிதுபுதிதாகத் தோன்றும் பல்வகைப் பனுவல்கட்டும் பொதுப்பெயர். தொல்காப்பியத்தில் விருந்துப் பனுவலென்று ஒன்றும் விதந்து குறிக்கப்பெறவில்லை.
குழவி மருங்கினுங் கிழவ தாகும்.
என்பது (தொல். புறத். 29) பிள்ளைத்தமிழ் என்னும் பனுவலையும்,
ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப.
என்பது (தொல்.செய். 30) உலா அல்லது ஊரின்னிசையையும் குறிக்கலாம்.
உரை என்பது, விளங்காத நூன் மூலத்திற்குப் பொருள் கூறுவது. அதுவுஞ் செய்யுளாகவே இயற்றப்பட்டது; ஆயின், அல்லியர சாணிமாலை பவளக் கொடிமாலை என்பன போல எளிய நடையில் அமைந்திருந்தது. உரைநடையில் இருக்கவேண்டிய உரையும் செய்யுளில் இயன்றமை, அக்காலத்துத் தமிழ் மக்களின் செய்யுள் திறத்தைச் சிறப்பக் காட்டும்.
நூல் என்பது அறிவியல். இலக்கணம் ஓர் அறிவியல். ஒவ்வொரு கலையிலும் தெரிவியல் (Theory) பற்றிய தெல்லாம் இலக்கணம் போன்ற அறிவியலே.
வாய்மொழி அல்லது மந்திரம் என்பது திருமூலர் திருமந்திரம் போல்வது.
பிசி யென்பது விடுகதை
அங்கதம் என்பது கண்டனநூல் அல்லது மறுப்புநூல். அது எதிர்நூல் எனவும்படும்.
முதுசொல் என்பது பழமொழி.
பாட்டுப்போன்றே, ஏனையறுவகை யாப்புச் செய்யுளும் இன் றில்லை பண்ணத்தி யென்னும் ஒருவகை யாப்பும் இன்றில்லை. எழுவகை யாப்பும் வெண்பா, அகவற்பா (ஆசிரியப்பா) கலிப்பா, வஞ்சிப்பா, என்னும் தூய பாக்களும், மருட்பா, பரிபாடல் என்னும் கலவைப் பாக்களும் ஆகிய அறுவகைப் பாக்களால் இயன்றன.
பாக்கட்குரிய வண்ணங்கள் : பாஅ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுசீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப் பாட்டு வண்ணம், ஒழுகுவண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்புவண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் என இருபது.
வண்ணம், சித்திரம் என்பன தென்சொற்களே.
வள்ளுதல் = வளைத்தல், வளைத்தெழுதல். வள்-வண்-வண்ணம்= எழுதும் எழுத்து அல்லது வரையும் படம், எழுத்தின் நிறம், நிறம் போன்ற செய்யுளொலி வகை, வகை.
வள்-வர்-வரி - வரணம் = எழுத்து, நிறம், வகை, வகுப்பு, இசைப்பாவகை.
ஒ.நோ : திள்-திண்-திண்ணை. திள்-திர்-திரள் - திரளை - திரணை.
செத்தல் = ஒத்தல். செ + திரம் = செத்திரம் - சித்திரம் = ஓவியம்.
ஒ.நோ : செந்திரம் - சிந்திரம் = சிவப்பு, செந்தூள், செந்நீறு, செம்பொறிமுக யானை.
#சிறப்பிலக்கியம்
இசையும் நாடகமும்
தொல்காப்பியத்திற்கு முந்தியது அகத்தியம். அது முத்தமிழிலக் கணம்
இலக்கிய மின்றி இலக்கண மின்றே
எள்ளின் றாகில் எண்ணெயு மின்றே
எள்ளினின் றெண்ணெ யெடுப்பது போல
இலக்கி யத்தினின் றெடுபடும் இலக்கணம். (அகத்.)
இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலின். (நன். 141)
என்றார் பவணந்தியார்.
அகத்தியம் முத்தமிழிலக்கணம் என்பதால், இயற்றமிழிலக்கியம் போன்றே இசைத்தமிழ் நாடகத்தமிழிலக்கியங்களும் அவ்விலக் கண நூற்கு முன்பிருத் திருத்தல் வேண்டுமென்பது பெறப்படும். அகத்தியம் தொல்காப்பியத்திற்குச் சிலபல நூற்றாண்டு முந்திய தேனும், இடைக்கழகத் திற்குப் பிற்பட்ட தென்பதை அறிதல் வேண்டும்.
அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர். (தொல். எழுத். 33)
தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப. (தொல். அகத். 18)
என்பவற்றால் இன்னிசையிலக்கியமும்,
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம். (தொல். அகத். 53)
என்பதனால் நாடகவிலக்கியமும், குமரிநாட்டிலிருந்தமை அறியப்படும்.
கணக்கு
ஐ அம் பல் என வரூஉம் இறுதி
அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும். (புள்ளி. 98)
என்னும் தொல்காப்பிய நூற்பாவில்
குவளை, தாமரை, சங்கம், வெள்ளம், ஆம்பல் என்னும் மா பேரெண்கள் குறிக்கப்பட்டுள்ளன.
சங்கம் = இலக்கங்கோடி
தாமரை = கோடா கோடி
இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர்
வழங்கியன் மாவென் கிளவி தோன்றின்
என்னும் தொல்காப்பிய நூற்பா (குற்றிய. 76) மா என்னும் அளவைக் குறிப்பதால், கீழ்வாயிலக்கத்தைச் சேர்ந்த ஏனையளவு களும் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வழங்கின வென்றே கொள்ளப்படும்.
கணியம்
திங்களு நாளு முந்துகிளந் தன்ன. (தொல். உயிர். 84)
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம். (தொல். கிளவி. 58)
மறைந்த வொழுக்கத்து ஓரையும் நாளும். (தொல். கள. 44)
என்னுந் தொல்காப்பிய அடிகள் கணியக் குறிப்பைக் கொண்டன.
மருத்துவம்
பொதிய மலையில் வதிந்த அகத்தியர் ஒரு மருத்துவ நூலாசிரியர் என்று சொல்லப்படுவதனாலும், பெற்றிய (சித்த) மருத்துவம் தொன்றுதொட்டு வழங்கிவரும் தமிழ மருத்துவமாதலாலும், ஒரு சில மருந்துப் பெயர்கள் அகத்தியர் பெயரை அடையாகப் பெற்றிருப்பதனாலும்,
வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்புங் கடுவும் போல வெஞ்சொல்
தாங்குத லின்றி வழிநனி பயக்குமென்
றோம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே.
என்னும் தொல்காப்பிய நூற்பாவிலுள்ள (செய். 111) மருத்துவக் குறிப்பினாலும், குமரிநாட்டில் மருத்துவ இலக்கிய மிருந்தமை உய்த்துணரப்படும்.
மொழிநூல்
செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் மொழிப் பகுப்பும் இயற்சொல் திரிசொல் என்னும் செந்தமிழ்ச் சொற்பகுப்பும்,
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.
என்னும் (தொல். எச். 4) கொடுந்தமிழ்ச் சொல் விளக்கமும் வலித்தல் மெலித்தல் விரித்தல் தொகுத்தல் நீட்டல் குறுக்கல் என்னும் சொற்றிரிவு முறைகளும், மொழிநூலின் கருநிலையே யாயினும், உலகில் முதன்முதற் சொல்லப்பட்டதனால், மொழி நூலின் தொடக்கமேயாம்.
உளநூல்
எள்ளல் இளமை பேதைமை மடனென்
றுள்ளப் பட்ட நகைநான் கென்ப. (தொல். மெய்ப். 4)
இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே. (தொல். மெய்ப்.5)
மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே. (தொல். மெய்ப்.6)
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே. (தொல். மெய்ப்.7)
அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே. (தொல். மெய்ப்.8)
கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே. (தொல். மெய்ப்.9)
உறுப்பறை குடிகோள் அலைகொலை யென்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே. (தொல். மெய்ப்.10)
செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென்
றல்லல் நீத்த உவகை நான்கே. (தொல். மெய்ப்.11)
இவையும் பிற மெய்ப்பாட்டியல் நூற்பாக்களும் உளநூற் கருவாம் ஏரணம் (logic)
கருத்துகள்
கருத்துரையிடுக