வலிப்போக்கன் சிறுகதைகள்
சிறுகதைகள்
Back
வலிப்போக்கன் சிறுகதைகள்
வலிப்போக்கன்
வலிப்போக்கன் சிறுகதைகள்
வலிப்போக்கன்
உள்ளடக்கம்
அறிமுகம்
ஆசிரியர் அறிமுக உரை
1. குடைக்குள் முத்தம்(நேரில் கண்டவை)
2. ஒரு சாமானியனின் கையெழுத்து பிச்சை!!!
3. பாதுகாப்பா இருந்தாரு? பாதுகாப்பா இருக்காரு.......!
4. ரோட்டிலும், தரிசு இடங்களிலும் மலம் கழித்தது அந்தக்காலம்? இப்போ ஆத்துபக்கம் ஓடுவது இந்தக்காலம்!!
5. சிற்றரசை ஆளும் பேரரசியின் குட்டிக்கதை!!!
6. அங்கீகாரம் பெற்ற கொள்ளையரும், அங்கீகாரம் பெறாத கொள்ளையரும்.
7. அறம்,பொருள், இன்பம் இன்றி குடியிறுக்கும் வீட்டிற்க்காக வாழ்நாள் போராட்டம்
8. அறம், பொருள், இன்பம் இன்றி குடியிறுக்கும் வீட்டிற்க்காக வாழ்நாள் போராட்டம் (2)
9. தீபாவளி கொண்டாடிய டாஸ்மாக் குடிமகன்களும், சாதியை கேட்ட உதவி ஆய்வாளர் போலீசும்
10. ஆசையே.... அலை.. போலே..., நாமம்தான் அதன் வேலே.....
11. நிழல் கதையும் ஒரு நிஜக்கதையும்
12. மடியாத,மறையாத ஒரு கட்டுக்கதை..........
13. மடியாத,மறையாத கட்டுக்கதைகள்.........(2)
14. தலைக்கவசம் உயிர் கவசமா ????...
15. கனவில் வந்த “ டோக்” கதை...............
16. தனி மரம் தோப்பாகுமா .....????
17. பவர் இல்லாத சாமி.............
18. ஒலக அறிஞரும் ஒலக அழகியும்
19. மகானின் உப... தேசமும், மக்களின் வேண்டு.... கோலும். (சிறுகதை)
20. அப்பப்பா...., இந்த சட்டதிட்டம் எதுவும் எனக்கு சரியில்லப்பா.......... (சொந்தக் கதைங்கோ)
21. ஆண்டாள், மீனாட்சி,, ரங்கநாயகி வீடுகளில் சோதனை.....................
22. மூக்கு இருந்தா................. சளி இருக்குமாம்..............
23. கொஞ்சுனு போதையும்... அதிகமான போதையும்.....
24. கழுத்தை அறுப்பவர்களை நம்பும் ஆடுகள்.........
25. இப்படியும் ஒரு மூடப்பழக்கம்.....
26. ஒரு வேள.......... கேட்கலைன்னா.....................!!!!
27. நிணைவோடு ……………………. (சிறுகதை)
28. ”ஆமான்னுதான் சொல்லு மாமா”............!!!
29. திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதினால் குடல் தள்ளிப் போனதாக உதார்விட்ட சொரக்கட்டை...........
30. திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதினால் குடல் தள்ளிப் போனதாக உதார்விட்ட சொரக்கட்டை...... கதை.. (2)...
31. நானில்லாமல் நீ(ங்க)யில்லை....
32. பின்னாலே மீசை வச்சவரு................. சிறுகதை..
33. ஏமாந்த போலீஸ் உதவி ஆணையரின் ரைட்டரும், ஏமாற்றிய போலீஸ் உதவி ஆணையரும்
34. பன்றிகளின் கூச்சல் கூக்குரலினால் சலனமற்றுப்போன மரங்கள்..... உருவகக் கதை..
35. வலிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்....
36. இறையச்சம் கொண்ட மக்கள்........
37. ஒரு பொறுக்கி சாமியார்ஆன கதை........
38. முப்பரிமாணப்புரட்சி (3D பிரிண்டிங்) - பாமரனுக்கு எப்படி இருக்கும்......
39. சொர்க்கத்தின் வாசலில் நடந்த வினோத வழக்கு.....
40. பஞ்சத்துக்கு காரணமானவர்கள் ----- சிறுகதை
41. வலைக்குள் சிக்கிய கொசுவும் மனிதனும்....
42. வலிப்போக்கன் ஒன்பதாம் வகுப்பில் பெயிலான கதை....
43. மாநகராட்சி பாதையை தனது பாதையென பக்கத்து வீட்டுக்காரன் மீது வழக்கு தொடுத்த ஒரு தெருநில மன்னன்
44. டீ குடிக்காதற்கு இதுவும் ஒரு காரணம்........
45. நான் நிணைத்தேன்.நீ தும்மிவிட்டாய்.........
அறிமுகம்
வணக்கம். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் பனிரெண்டாக இருந்து நான் படித்த,கேட்ட,பார்த்த சமூக அவலங்களையும் அந்த அவலகங்களினுடே நான் பட்ட இம்சைகளின் அனுபவங்களை சிறுகதைகளாக இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற என் பிளாக்கரில் என் அறிவு மட்டத்தில் எழுதி வந்ததை மின்நூலாக கிரியேட்டீவ் காமன்ஸ் உரிமையின் மூலமாக FreeTamilEbooks குழுவினரால் இந்த குப்பையும் தங்களுக்கு படிக்க உதவும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுத்து ,வடிவமைத்து வெளியீட்டுள்ளார். இந்த மின் நூலுக்கான உழைப்பும் அந்த உழைப்பிற்க்கான உரிமையும் FreeTamilEbooks குழுவினரையே சேரும்..
இவற்றை மெனக்கெட்டு படிப்பதும் படித்து முடித்தப்பின் தோன்றும் கருத்துகளில் வாழ்த்துக்கள் என்றால் திரு.த.சீனிவாசன் மற்றும் அவருக்கு துனை புரிந்த நண்பர்களுக்கே சேரும்… திட்டுகள்,மற்றும் வசவுகள் போன்றவைகள் என்க்கு மட்டுமே உரிமையானவை..
ஆசிரியர் அறிமுக உரை
எனக்கு சொல்லிக் கொள்ளும்படியான சில நிகழ்வுகள் என் வாழ்க்கையில் இருப்பதனால்தான். அவற்றை பதிவுகளாக பதிவுட்டுள்ளேன். என்னுடைய படிப்பு, வளர்ப்பு, பழக்கவழக்கங்கள் போன்றவை பாராட்டும் படியாகவோ, வெறுத்து ஒதுக்கும்படியாக எதுவுமில்லை.
நான் என்னுடைய 50வது வயதில்தான் இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற பிளாக்கர் வலைப்பதிவை 23.3.2011 ல் தொடங்கினேன். ஜனவரியில்தான் பிஎஸ்என்எல் இணைய இணைப்பும் பெற்றேன்.29.3.2011ல் தமிழ்மணத்தில் இணைத்து நானும் ஒரு தமிழ் பதிவர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றேன்
அதுமுதல் எனது வலிகளையும் சமூகத்தின் வலிகளையும் எனது கண்ணோட்டத்தில் பதிவிடத் தொடங்கினேன.
மேலும் என்னைப்பற்றி தெரிய அறிய விரும்பினால் என் வலைதள்த்தில் அனுபவம் குறிச்சொல்லில் உள்ள பதிவில் படித்துக் கொள்ளலாம்.
FreeTamilEbooks குழுவினருக்கு என் நன்றியை யும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!!!
1. குடைக்குள் முத்தம்(நேரில் கண்டவை)
ஞாயிற்றுக கிழமை.மாலை வேளையில் கொட்டி தீர்த்த மழை ஓய்ந்து சாரலாக பெய்து கொண்டுயிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் குறைந்திருந்தது.
துாறல் மழையில் நனைந்தபடி பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தேன்.பஸ் நிறுத்தத்தில் நான் போய் நின்ற சமயம் நடுத்தர வயதை உடைய ஒருவரும் என்னருகே வந்து நின்றார்.
எவ்வளவு வெயில் அடிச்சாலும் மக்கள் போய்கிட்டும் வந்துகிட்டும் இருக்கிற சனங்க, ஒரு மழைக்கு சிட்டா ஓடி ஒளிஞ்சுருதுகளே!.
அவர் பேசியதைக்கேட்டு புன்னகைத்தேன். மழை சாரலாகத்தான் பெய்து கொண்டு இருந்தது.
பின்,அவராகவே பேசினார்.ஆமா,இன்னும் பஸ் வரலியே?
மழைக்கு ஒதுங்கியிருக்கும் .மழை நின்றவுடன் வந்துடும்.”
என்னை மேலும் கீழும் பார்த்தவர் சிரிக்க ஆரம்பித்தார். நான் அவரை பார்க்காமல் வானத்தை அன்னாந்து பார்த்தேன்.
ஆமாமா, சனங்களே! மழைக்கு ஒதுங்கயில்லே, பஸ்சும் ஒதுங்கத்தானே செய்யும். கொஞசம் சத்தமிட்டு சிரித்தார்
அவரு மட்டும் சிரிக்கிறாறே.—பொறாமையில் அவரைப் பார்த்தேன்.
அப்போது,இளம் பென்னோருத்தி குடை பிடித்தபடி வந்து நின்றார். எங்கள் இருவர் கண்களும் பார்த்தன.. இதே சமயத்தில் அந்தப் பொன்னும் எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு வெடுக்கென்று தலையை திருப்பிக் கொண்டாள். எனக்கு புரிந்தது
நான் பார்ப்பதற்கு அழகாகயில்லை.அவரும் அப்படித்தான ஈரத்துடன் நின்றுயிருந்தோம்.
சிறிது இடைவெளிக்குப்பின் அழகான கதாநாயகன் ஒருவன் அந்தப் பெண்னருகே வந்து நின்றான். நாங்கள் இருவரும் அவனைத்தான் கவனித்தோம்.
துாரத்தில் பஸ் வருகிறதா?ன்னு பார்த்தேன்.மழை கொஞ்சம் பெரிய சொட்டாக பெய்ய ஆரம்பித்தது.யுவனும் யுவதியும் ஒரே குடைக்குள் நின்றனர். எங்களுக்கு .ஒதுங்க இடமில்லாததால்
மழையில் நனைந்தவாரே நின்றோம்
அவரைக் கவனித்தபோது கண்கள் விரிய குடைக்குள் இருப்பவர்களை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்படி என்னத்த வாய திறந்து பார்க்கிறாரு -நானும் குடைக்குள் இருந்தவர்களைப் பார்த்தேன் எனக்கு என்னவோபோல் ஆகிவிட்டது.எப்படி சொல்வதென்று தெரியவில்லை.கை கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
அந்த பஸ் நிருத்தத்தில் நான்கு பேரைத்தவிர யாருமில்லை முக்கால்வாசி நனைந்துவிட்டேன் மழை சிறிது குறைந்தது.
இந்த கூத்தத்தான் கண்டேங்களா! நாடு எங்க போகுதுன்னு பாத்தீங்களா!
நா……ன்….எங்க பாத்தேன்.நீங்கதான் கண்ண அசைக்காம பாத்தீங்க…..
அப்பவாச்சும்,ஒருத்தன் நம்மல பாக்குறானே ன்னு வெட்கப்படுவாங்கன்னு பாத்தா,வெட்கம் என்னவிலன்னு கேட்பாங்க போலிறுக்கு.
“சின்னஞசிறுசுக,தைரியம் அதிகம்தான்”
“அதுக்காக இப்படி வெட்டவெளியிலா”.
இப்பவாச்சும் ,பரவாயில்லீங்க, பேருக்காக குடைய மறச்சுகிட்டு முத்தம் குடுத்து கிட்டாங்க.நம்ம நாடு வல்லரசாக மாறியிடுச்சுன்னா குடையோ முக்காடோ எதுவுமே தேவைப்படாது..எங்கெங்க சந்திக்கிறாங்களோ அங்கங்கே உதடடோடு உதடாக முத்தம் கொடுத்துக்கலாம்..
நிஜமாகவா?……
பின்னே,பொய்யா சொல்றேன்.
எப்ப வல்லரசா மாறும்,,,,
அவசரப்படாதிங்க…இப்பத்தானே, பஸ் ஸ்டாப்புல பாத்துயிருக்கீங்க சீக்கிரமாகவே வல்லரசாயிடும்.
மழை விட்டதும் பஸ்வருமுன்னு சொன்னமாதிரி பஸ் வந்து நின்றது எங்களுடன் யுவதியை முத்தமிட்ட யுவனும் பஸ்ஸில் ஏறினான் பஸ் மறையும்வரை முத்தமிட்ட பெண் முத்தமிட்ட இளைஞனுக்கு காற்று முத்தமிட்டவாறே, கையை ஆட்டி விடைகொடுத்துகொண்டு இருந்தாள்.
முத்தமிட்ட இருவரும் காதலர்களா? கனவன்மனைவியா? இப்பவரைக்கும்
எனக்கு தெரியவில்லை..
2. ஒரு சாமானியனின் கையெழுத்து பிச்சை!!!
அது பெயர் பெற்ற வங்கி. எப்பொழுதும் ஒரே கூட்டம்தான்.அந்த வங்கியில் நுழைந்தால் சட்டுபுட்டுன்னு வேலையை முடிச்சுட்டு வரமுடியாது.
பண எடுப்பு வாங்குவதற்கு ஒர வரிசை,எடுப்பு சீட்டில் எழுதியதை சரி பார்க்க ஒரு வரிசை,பணம் பெருவதற்கு ஒரு வரிசை, கடைசியாக கணக்கு புத்தகத்தில் பதிவு செய்வதற்கு ஒரு வரிசை.இப்படி ஒவ்வொரு வரிசையாக நின்று வேலை முடித்து வருவதற்கு போதும் போதும் என்றாகிவிடும்.
புதிதாக இந்த வங்கி அந்த ஏரியாவில் தொடங்கும்போது,ஒவ்வொரு இடமாகச் சென்று புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்தினார்கள் அப்போது வங்கி ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதம் இந்த புனையும் பால் குடிக்குமா? என்ற அர்த்தத்தில் இருக்கும்.அப்போது அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கு இருப்பிடச்சான்றாக ரேஷன் கார்டு, மின்சாரபில், போன்பில், இப்படி ஏதாவது ஒரு சான்றை சமர்ப்பித்தால்அந்த வங்கியில் வாடிக்கையாளராக சேர்த்துக்கொள்வார்கள். அப்போது கைநாட்டு பேர்வழிக்கு எந்தவித சிக்கலும் இருந்த்தில்லை.சேமிப்புபுத்தகத்தில் ஒட்டப் பட்டுருக்கும் புகைப்படத்தைக் கொண்டு அவர்கள் முன் கைரேகை பதிவு செய்து பணத்தை பெற்று வந்தார்கள்.
இப்போது அதே வங்கி அதிக வாடிக்கையாளரைக் கொண்ட அதிக வருவாயுடன் இருப்பதால், புதிதாக ஒருவர் சேமிப்பு கணக்கு தொடங்க முனையும்போது வங்கி அதிகாரிகள் கொழுத்த மப்புடனும் வேண்டா வெறுப்புடன் நடந்து கொள்வதோடு விதிமுறைகளையும் மாற்றி விட்டுருப்பார்கள்
வசதிவாய்ப்பு,செல்வாக்கு உள்ள வர்களுக்கு வங்கியின் விதிமுறைகள்
வளைந்து கொடுக்கும் அல்லது விதிமுறையே இல்லாமல் இருக்கும்
ஆங்கில அறிவு அறவே இல்லாத அரைகுறை தமிழ் படிப்பு உள்ள ஒரு சாமனியனை வங்கி அதிகாரிகள் எப்படியெல்லாம் அலைக் கழித்தார்கள். என்று பார்க்கும்போது,கைநாட்டு பேர்வழிகளைஅவர்கள் எந்தளவுக்கு அலைகழிப்பார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். ஆத்திரமும் வேதனையும் ஏற்ப்பட்டபோது.ஆத்திரம் பிரச்சினைக்குஅறிகுறி! வேதனை நோய்க்கு அறிகுறியாக தெரிந்தது.
ஒரு கைநாட்டுப்பேர்வழி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத் திருந்தால்,. தற்போது நடைமுறைகளும், விதிமுறைகளும் மாற்றி விட்டதால், தன் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்குஅஅதே வங்கியில் கணக்கு வைத்துள்ளஒருவர் பண எடுப்பு சீட்டில் கையெழுத்தையும் கணக்கு என்னையும் பதிய வேண்டும்
பண எடுப்பு சீட்டில் எழுதியதை சரி பார்க்கும் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.அதிகாரி வங்கி கணக்கு புத்தகத்திலுள்ள போட்டோவை சரி பார்ப்பதோடு அத்தாட்சி கையெழுத்து போட்ட நபரின் கையெழுத்தையும் கணக்கு எண்ணையும் சரிபார்த்து முத்திரையிடுவார்அதை வாங்கி காசாளரிடம் கெர்டுத்தால் அவரும் கணனியில் சரிபார்த்த பின ஒவ்வொருத்தராக அழைத்து பணத்தை பட்டுவாடா செய்வார்.
இந்த கைநாட்டுப்பேர்வழிக்கு அத்தாட்சி கையெழுத்து போட வில்லை யென்றால். என்ன அவசரத்துக்கும் தேவைக்கும் இழுத்துக் கெடந்தாலும் படுத்துக்கெடந்தாலும் அவரவரின் சேமிப்பு பணத்தை வாங்கமுடியாது.
கைநாட்டு நபர் ,வங்கிக்கு வருபவர்களிடம் .தெரிந்தவர்கள் என்றால் உரிமையுடனும் தெரியாதவர் என்றால் கெஞ்சியும் கையெழுத்து பிச்சை கேட்கும் நிலையே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படிபட்ட கையெழுத்து பிச்சை எல்லா வங்கிகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த கையெழுத்து பிச்சை ஒவ்வொரு வங்கி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தெரிந்து இருந்தும். இந்த பிச்சையைப.பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை.
இப்படித்தான்.அவரின் தாயார் கைநாட்டுடன் அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார்.ஆரம்பத்தில் அந்தத்தாயாருடன் மகள் வயிற்றுப் பேரன் சென்று. அந்தத்தாயாரின் பென்சன் பணத்தைப் பெற்று வந்தார்.அடிக்கடி வங்கிக்கு சென்று வந்ததாலும் பேரனின் வங்கி அதிகாரியின் பழக்கவழக்க நட்பினாலும் பிரச்சினையில்லாமல் பெற்று வந்தார்.
ஒருநாள் தெரிந்த வங்கி அதிகாரி மாறினார்.பேரனும் டூவீலர் விபத்தில் கால் அடிபட்டு மருத்துவ மனையில் கிடக்க
அந்தத் தாயாரின் மகன் வங்கிக்கு சென்ற போது முதல் நாளே கையெழுத்து பிச்சை தொடங்கியது. அவருக்கு தெரிந்தவர் யாருமில்லை.நாலைந்து பேர்களிடம் கேட்டு கையெழுத்துஅபிச்சை கிடைக்கவில்லை.. அவருடைய தாயாரோ வங்கிக்கு வரும் நபர்களை ஒவ்வொருத்தராக பார்த்து அவரிடம் கேள்,இவரிடம் கேள் என்று சொல்லி,அவருக்காக கேட்டும் மழுப்பலாகவும், நழுவுதலுமாக பதில் இருந்தது. இப்படி மூன்றுமாதமாக கையெழுத்து பிச்சை கிடைக்காததால் பணம் எடுக்கமுடியவில்லை..
ஒருவழியாக இவரும் முயற்சி செய்தும் பலன் கிடைக்காததால் வங்கி மேலாளாரை போய் பார்த்தார்.
“வணக்கம் சார்,இவுங்க என்னுடைய அம்மா, இவுருடைய வங்கி பென்சன் பணத்தை எடுக்க முடியவில்லை.வங்கி கணக்கு புத்தகத்திலுள்ள போட்டோவையும் இவரையும் ஒப்பிட்டு பார்த்து, உங்கள் முன் கைரேகை பதிவு செய்து பணம் கிடைக்க உத்திரவிடுங்கள் சார்.”
அப்படி,நான் உத்திரவு இடமுடியாது.வங்கியில் கணக்கு வைத்துள்ள நபர் அத்தாட்சி கையெழுத்து வாங்கி சமர்பித்தால்தான் பணம் வழங்கமுடியும்.” என்றார்
“யாரும் கையெழுத்து போட மறுக்கிறார்களே? சார்”.
“அதற்கு நான் என்ன செய்ய முடியும்.” என்றார் மேலாளார்
“நீங்கள் பார்த்து எதுவும் செய்யலாம் சார். தயவு செய்து மாற்று வழி எதாவது சொல்லுங்க சார்,”
மதிய உணவு இடைவேளை வந்ததால் ,சாப்பாட்டு நேரமாச்சு போயிட்டு நாளைக்கு வாங்க.” என்றார் மேலாளார்.
தெரிந்தவர்களிடம் வங்கி கையெழுத்து பிச்சையைப் பற்றி பகிர்ந்த பொழுது. ஒருவர் சொன்னார்.
“தலகீழா நின்றாலும் ஒருத்தர்க்கிட்டகூட கையெழுத்து வாங்க முடியாது. பேசாம,உங்க பேர்ல ஒரு கணக்க தொடங்குறதுதான் நல்லது.நீங்க அத்தாட்சி கையெழுத்துக்கு மாதம்மாதம் பிச்சை எடுக்கறதைவிட. ஒரே தடவை அறிமுக கையெழுத்து பிச்சை வாங்கிட்டா, அப்புறம் கையெழுத்து பிச்சைக்கு வழியே இருக்காது எதற்கும் அந்த வங்கி மேலாளாரை கேட்டுக்குங்க”
மறுநாள்,வங்கி மேலாளரிடம் சென்று. சேமிப்பு பாரம் ஒன்னு கேட்டு வாங்கினார். ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ள பாரத்தை ஆங்கிலம் தெரிந்த ஒருவரின் உதவியால் பூர்த்தி செய்தார். இருப்பிடச் சான்றாக தேர்தல் அடையாள அடடையைடிநகல் எடுத்துக் கொண்டு தெரிந்த நபர்கள் யாராவது வருகிறார்களா? என்று பார்ப்பதற்க்காக? முன்கூட்டியே வங்கிக்கு சென்று காத்திருந்தார்
நெடுநேரம் கழித்து ஒருவர் வநதார். அவரிடம் விபரத்தைச் சொல்லி கையெழுத்து பெற்றார். கையெழுத்திட்ட முத்து குமாருக்கு நன்றி சொல்லி விட்டு, வங்கி மேலாளரிடம் பாரத்தை நீட்டினார்.
அவர் மனுவை வாங்கி சரிபார்த்துவிட்டு போட்டோவையும் அவரையும் ஒப்பிட்டு பாரத்து, போட்டோவில் இருப்பது நீங்கதானே? என்று கேட்டபடியே. பாரத்தில் இரண்டு இடங்களில் கையெழுத்திட்டார்.
“ஆமா சார்,என்றபோது,பாரத்தை இவரிடமே தந்து “பண எடுப்பு சீட்டு” கொடுக்கும் மேடத்திடம் கொடுக்குமாறு பணித்தார்.
மேடம், பாரத்தை வாங்கி பார்த்துவிட்டு, போட்டோ பழசா இருக்கு, புதுசா கலரில் எடுத்து ஒட்டி நாளைக்கு வாங்க என்றார்
இல்லீங்க,மேடம், மூனு நாளுக்கு முன்னதான் போட்டோ எடுத்தது.கருப்புல எடுத்ததுல, அப்படி பழசா தெரியுது .
மேடம், தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். பாரத்தை மறுபடியும் பார்வையிட்டார்.
“ஆமா,ஜாயின்ட் கையெழுத்து போட்டது யாரு? எனறார்.
“எங்க வீட்டுக்கு பக்கதில் இருக்கிறவர். என்றபோது.
“அவர கூப்பிடுங்க”,
“வீட்டுக்கு போயிட்டாருங்க மேடம்!”.
அப்போ, நாளைக்கு அவர கூட்டிகிட்டு வாங்க, வரும்போது கலர் போட்டோ ஒட்டிவாங்க.”
அதிகாலையில் கையெழுத்திட்ட முத்துக்குமாரை தேடி போன போது,அவர் குடியிருந்த வீடு பூட்டியிருந்தது. பக்கத்தில் விசாரித்ததில்.வீடு மாறியிருந்த விபரம் தெரிந்தது. புது முகவரியும் கிடைக்கவில்லை. பாரத்தில் புது போட்டோஒட்டி ,இனி யாரிடம் கையெழுத்து பிச்சை வாங்கலாம் என்று
சிந்தித்தபடி மெதுவாக நடந்து வந்தார். அப்போதுஇவருக்கு வேலை கொடுத்து வேலையும் கற்று தந்த முன்னால் ஓனர் இவரின் பாஷையில் முன்னால் பாஸ் மாதிரி ஒருவரைக் கண்டதும், அவரின் பாஸ் நினைவுக்கு வந்ததும். அப்பொழுதே அவரைத்தேடிச் சென்றார்.
அவரின் பாஸை சந்தித்து விபரத்தை சொன்னார். பாஸ் இவரையும் தாயாரையும் உடல்நலம் விசாரித்து பாரத்தில் கையெழுத்திட்டு முத்திரை போட்டு அனுப்பி வைத்தார்.
மறுநாள் புதுத்தெம்பாக முகக் களையுடன் மேடத்திடம் பாரத்தை கொடுத்தார். கொடுக்கும் போது.
“மேடம், முத்துக்குமார்,ஊரு்க்கு சென்றுவிட்டார்.அதனால் வேறு கையெழுத்து வாங்கியுள்ளேன். மேடம்,.”
பாரத்தை வாங்கிய மேடம், சிறிது நேரம் காத்திருக்குமாறு பணித்தார் . எழுந்து சென்ற ஒருவரின் இருக்கையில் நிம்மதியுடன் அமர்ந்தார். சிறிது நேரத்தில் சைகையால் அழைத்த மேடம்.
“இவர் கையெழுத்து போடக்கூடாது. வேறு நபரிடம் கையெழுத்து வாங்கி வாருங்கள் -என்றார்
இவருக்கு கோபம் வந்துவிட்டது.“என்னம்மா….என்ன? ………ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொன்னா ….சொல்லிகிட்டு இருக்கீங்க….சத்தம் போட்டார்.
சத்தத்தைக் கேட்டதும் வங்கி செக்யுரிட்டி ஓடிவந்தார்.
“சத்தம் போடாதிங்க,”மேலாளரை பாருங்க என்றார்.
மேலாளர் பாரத்தை வாங்கிப்பார்த்தவிட்டு.தன்க்கு அருகிலுள்ள அதிகாரியிடம் நீட்டினார். கணனியில் பார்த்துவிட்டு மேடம் சொன்ன பதிலையே சொன்னார்.
“இவர் போடக்கூடாதுங்க, வேறு கையெழுத்து வாங்கி வாங்க,
சத்தமா சொல்லுங்க, ஒன்னும் கேடகல சார்,“
“நல்லா சாப்பிட்டு வரவேண்டியதுதானே?”
“நீங்க சாப்பிட்டுதானே வந்தீருப்பீங்க, கொஞ்சம் சத்தமா?
சொல்லுங்க,“
சிரித்தபடியே,பாரத்தை இவரிடமே திருப்பிக் கொடுத்தார்கள் இதனை கவனித்த வங்கி செக்யுரிட்டி வேறு ஒரு நபரிடம் இவரின் பிரசனையை சொல்லி அறிமுகப்படுத்தினார்.அவர் இவரிடம்.
“இந்த வங்கியின் மெயின் ஆபிஸ் உள்ளது.அங்க போயி உங்க பிச்சினையை சொல்லுங்க உடனே பைசலாகும்.”என்றார்.
இவர் வங்கியை விட்டு வெளியே வந்து..கையெழுத்திட்ட அவரின் பாஸ்க்கு போன்செய்து விபரத்தை சொன்னார்
அவரின் பாஸ்-ம் ஏன்? எதற்கு என்று கேட்டார்.
தெரியவில்லை சார்? சொன்னா என்க்கு புரியாதுன்னு சொல்லிட்டாங்க சார்.”
“எங்கேயிருந்து பேசுறிங்க?”
“ வங்கிக்கு அருகில் இருந்துதான் சார்.”
அஙகயே இருங்க ,எங்கயேயும் போயிறாதிங்க,சீக்கிரத்தில் அங்க நா….ன் வந்திடுறேன்.”
வங்கியிக்குள் நுழைந்த போது.செக்யுரிட்டி கேட்டார். விபரத்தை சொன்னவுடன் இருக்கை கொடுத்து உட்காரச் சொன்னார்.
பாஸ் வந்தார்.வங்கி மேலாளாரைப் பார்த்தார். அவர் சொன்னதை கேட்டுவிட்டு, பாரத்தில் வேறு ஒரு கணக்கு எண்னை எழுதி கையெழுத் திட்டார். பாரத்தை திரும்பவும் மேடத்திடம் கொடுக்கும்போது. பாஸ் உடனிருந்ததால்.தாயாரின் பென்சன் பணத்திற்காக கையெழுத்து பிச்சைக்காக அலைந்ததையும் முத்துகுமார் கையெழுத்து பற்றியும் ,சத்தம்போட்டதையும் விலாவாரியாக ஒப்புவித்தார்.
பிறகு பாஸ., .இவரின் முதுகை தட்டிக்கொடுத்து, இனி ஒன்னும் பிரச்சினை யில்லை முடித்து விட்டு வாருங்கள் என்று கூறிச்சென்றுவிட்டார்.
அதன்பின் அவரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு மேடத்திலிருந்து மேலாளாருக்கும். மேலாளாரிடமிருந்து வேறு ஒரு மேடத்திற்கும் அந்த மேடத்திடமிருந்து மேலாளாருக்கும்,திரும்பவும் மேலாளாரிடமிருந்து மாடியில் உள்ள ஒரு மேடத்திற்கும் மாடியிலுள்ள மேடத்திடமிருந்து மேலாளாருக்கும்.மேலாளாடமிருந்து பழைய மேடத்திற்கும் அவரின் பாரம் சென்றது.
இறுதியாக.கவுண்டரில் பணம் கட்டப்பட்டு அவருக்கு வங்கி பாஸ் புத்தகம் வழங்கப்பட்டது.
இப்படியாக, விடாப்பிடியாக,போராடியதன் விளைவாக அவருடைய வங்கியின் னையெயழுத்துப் பிச்சை முடிவுக்கு வந்தது்.
3. பாதுகாப்பா இருந்தாரு? பாதுகாப்பா இருக்காரு.......!
வந்துங்க,அது உயர்தரமான காது,மூக்கு தொண்டைக்கான மருத்துவ மனைங்க,அவருடைய காது கேளாத குறைபாட்டை தீர்க்கவேண்டும் என்ற ஆசையில்அந்த மருத்துவ மனைக்கு போனாருங்க.
மருத்தவமனையின் முன் தோற்றமே,சினிமாவில வர்ரமாதிரி இருந்துச் சுங்க,இதுவரைக்கும் அவரு எந்த ஆஸ்பத்திரிக்கும் போன தில்லைங்க,ஓமியோபதிவைத்தியம் பார்த்ததுகூட ,அவரு வேலை செய்த நிறுவன்த்தின் ஓனரு,ஓமியோபதி வைத்தியத்தை அறிமுகப்படுத் தினாருங்க,அதோடு ஓமியோபதியை பரப்பும் சங்கத்தில் ஓனரு,தலைவராக இருந்ததினால் ஓமியோபதி வைத்தியம்அவருக்கு பரிச்சயமானதுங்க,
இருக்க,இருக்க, அவருக்கு கேட்கும் திறன் குறைந்ததினாலும், ஓமியோபதியில் மருந்து சாப்பிட்டும் பலன் ஒன்னும் கிடைககலிங்க, அவருடன் நடுநிலைப்பள்ளியில் படித்த நண்பரின் அனுபவத்தின் பேரில் அந்த மருத்துவ மனைக்கு போனாருங்க,
வாசல பக்கம் போககையில நிறைய செருப்பா கெடந்துச்சுங்க,அதுகளோட தன்னுடைய பிஞ்ச செருப்ப போடாமா தனியா போட்டாருங்க,ஏன்னுகேட்டா, உயர்வகை செருப்போட பிஞ்ச செருப்பு கிடந்த யாராவது ஒரு சீமான் துாக்கி வீசிவிடுவாங்களாம். போனா போகட்டுமே என்றால் அடுத்தச் செருப்பு வாங்குற வரைக்கும் வேணுமில்லன்னு சொன்னாரு.
உள்ளே போனதும் ,வேலை பார்ப்பவர்கள் அனைவரும் பெண்களாக இருந்தனர் ஒரே சீரடையில் இருந்தனர்.ஒருசில பெண்கள் அவருடைய நிறத்தில் இருந்தனர்.அவரைவிட அழகாய் இருந்தனர்.
வரவேற்ப்பறையை நெருங்கி காதை காட்டினார்.வரவேற்பறைப் பெண்
மெல்லிய குரலில் ஒப்பித்தது.அந்தப்பெண் ஒப்பித்தது அவருக்கு கேட்கவில்லை.உடனே,ஒரு கையால் காதை பிடித்துக்கொண்டு. வலது கையால் வால்யும் ஏற்றிச் சொல்லுங்கள் என்று சைகை
செய்தார்.
பக்கத்தில் நின்ற இன்னொரு பெண் சிரித்துக்கொண்டே,கன்சல்பீஸ் இரு நுாறு ரூபா,மருந்து, மாத்திரைக்கு தனி என்று ஒப்பித்தார்.
எனக்கு, மருந்து,மாத்திரையெல்லாம் வேண்டாம்ப்பா?செக்கப்பன்னி என்ன கோளாறுன்னு சொன்னா போதும்பா? என்றார்.
இருநுாறு பணத்தை கட்டி பதிவு செய்து உட்கார இடமில்லாமல் எல்.சி டிவியை பாரத்தபடி நின்று கொண்டு இருந்தார். நீண்டநேரத்துக்குப்பிறகு அவர்முறை வந்தது.
டாக்டர் அறைக்குள் உள்ளே நுழைந்தார், டாக்டரும் அழகாகத்தான் இருந்தார். டாகடருக்கு உயரம் கம்மி. டாகடர் வாயில் துணியை கட்டியிருந்தார் டாக்டர் வாயில் துணியை கட்டியிருந்ததைப் பார்த்ததுமே, இவருக்கு “பகிரென்று இருந்தது. சும்மாவே,டாக்டருங்க பேசுவது கேட்காது.இதுல, இவரு துணியக் கட்டிகிட்டு பேசினா சுத்தமா நமக்கு கேட்காதே ,நிணைத்து கொண்டு இருக்கும்
போது ஸ்டூலில் அமரும்படி சைகையால் பணித்தார்.
பராவாயில்லை,தப்பித்தோம்.நிணைத்த சிறிது நேரத்தில் டாக்டர் எதோ சொன்னார்.
குறைபாட்டைதான் கேட்கிறார் என்று தன்னுடைய குறைபாட்டை கூறினார்
டாக்டர்,அவருடைய குறையை கேட்விட்டு,ஏததோ,சொன்னார், துணிக்குள் மூடியிருந்த வாய் அசைவும், டாகடர் பேசும் சத்தமும் கேட்டது ஒழியசொன்னது ஒன்றுமே அவருக்கு கேட்கவில்லை. சிலதுக்கு சும்மா தலையை ஆட்டினாரே தவிர, டாக்டர் என்ன சொல்கிறார்,என்ன சொன்னார் என்று ஒன்றும் தெரியவில்லை.
சிறிது தயக்கத்துடன்,வலது கையை கெஞ்சுவது போல் நீட்டி,சார், வாயில் துணியில்லாம,பேசினாலே, எனக்கு கேட்காது, நீங்க வேற வாயில துணியகட்டி கட்டிகிட்டு பேசினா எனக்கு எப்படி சார்,கேக்கும். என்னுடைய வாயிலிருந்து எச்சில் தெரிக்காது சார்,உங்க திருப்திக்காக எச்சில் தெரிக்காம பேசிறேன் சார்,என்றார்
சிறிது நேரம் டாக்டர் அமைதியாக இருந்துவிட்டு,லெட்டர் பேடில் மாத்திரைய எழுதிக்கொடுத்தார்.அவரு மருந்துசீட்டை வாங்காமல்,
மாத்திரையெல்லாம் வேண்டாம், டெஸ்ட் பண்ணி என்ன கோளாறுன்னு
சொன்னா, போதும் சார்,அப்பிடித்தான் சார்,ரிசப்பசன்ல்ல இருக்கிற பொண்ணு கிட்ட சொன்னேன்.என்றார்
மெதல்ல மாத்திரையை சாப்பிட்டு வாங்க,அப்புறம் டெஸ்ட் பண்ணலாம்
என்றார்.
ஏன்?சார், இப்ப பன்னமுடியாதுங்களா? அவர்.
ஏய்ய…….. சொன்னா,கேளுங்கய்யா? பெரிய இவரு மாதிரி………
மேஜையிலிருந்த காலிங் பெல்லை அழுத்தினார்.பாடிகாட் மாதிரி
இரு ஆட்கள் வந்தனர்
வந்தவர்கள்,அவரிடம். மாத்திரையை சாப்பிட்டு வாங்க,அப்புறம் டெஸ்ட் பண்ணிக்கிலாம் என்றனர்.
அப்புறம் வந்தாலும் இருநுாறு பீஸ் கட்டனுமா?
ஆமாமம், என்றபடி உடகார்ந்து இருந்த அவரின் தோள்பட்டையில் கையை வைத்து இழுத்தார் ஒருவர்.
புரிந்துகொண்ட அவரு.தோள்பட்டையில் கை விழுந்தததுமே, வேண்டாமய்யா, உஙகளுக்கு சிரமம் கொடுக்கலைய்யா, நானே போயிறேன்.என்றுவிட்டு வெளியே வந்தார்.
வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் ”என்னம்மா, டெஸ்ட்க்கு தானம்மா?பணம் கட்டினேன். உங்க டாக்டரு மாத்திரையை கொடுக்குறார்ம்மா? என்றார்
அந்தப்பெண்,வேலையில் முழ்கியிருப்பது மாதிரி வேறு இடத்திற்கு நகன்றது.
அவருடைய முதல் அனுபவமே,மோசமாக இருந்தது. பள்ளியில் படித்த நண்பரிடம் சொன்னபோது கேட்டு கேட்டு சிரித்தார்.பிறகு டாக்டரின் ஒருசில குறைகளைச் சொன்னார்
மற்ற டாக்டரிடம் செல்ல மனதில்லாமல் இவரைப்போன்று குறை பாடுள்ளவர்கள் சொன்ன அக்குடச்சு பயிற்சியை விடாமல் செய்து கொண்டு காலத்தை கடத்தி வந்தார்.
ஒருநாள்,செய்திப் பேப்பரில் டாக்டரின் படத்தைப்போட்டு. வெளி நாட்டிலுள்ள ஒருவரின் மனைவியை மிரட்டி,மருத்துவமனையை அபகரித்துக் கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டதாக இருந்ததது.
அடடா, டாக்டரு ரெம்ப பாதுகாப்பா இருந்தாரு!!இப்ப பாதுகாப்பா இருக்காரு??? என்று சிரித்துக் கொண்டு சொன்னார்.
4. ரோட்டிலும், தரிசு இடங்களிலும் மலம் கழித்தது அந்தக்காலம்? இப்போ ஆத்துபக்கம் ஓடுவது இந்தக்காலம்!!
முன்னுரை,தெளிவுரைமற்றும் பதவுரை.
இக்கதை நாயகர்க்கு கழிப்பரையே கோயில் மலமே சாமி.கெட்டியான மலம் கருப்பசாமி,வயிற்றாலைமற்றும்தண்ணியானமலம் காளியாத்தா,மற்றும்
மாரியாத்தா,திறந்த வெளிகழிப்பிடமே பெரிய கோயில் அடுத்த தெளிவுரைகள் தங்கள்மடல் கண்டு
இது இட்டுக்கட்டிய கதையல்ல.நடந்தவை. நடந்து கொண்டு இருப்பவை. ………..
காலை பொழுது விடிந்து சற்றுவெளிச்சம் வந்தாலும் தெருவிலுள்ள ரோட்டிலுள்ள விளக்குகள் அனைக்கப்படாமல் இருந்தன. மக்கள் நடமாட்டம் இல்லையென்றாலும், டீக்கடையில் அய்ந்தாரு மனிதர்கள் இருந்தனர்
ஒருசில பெண்கள் தத்தம் வீடுகளின் வாசல்களை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுயிருந்தனர்.
அவருக்கு காலையில்தான் நன்றாக துாக்கம் வரும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரோ,அல்லது பின்னரோ, தாமதமாக துாங்கினாலும் காலை துாக்கம்தான் நிம்மதியான துாக்கமாக இருந்தது.
அந்த நிம்மதியான துாக்கத்தை கெடுப்பதறக்காக இயற்கையும் அவரின் தெருவிலுள்ள மக்கள் இடைஞ்சல் கொடுப்பது போல் தன் பங்குக்கு இடைஞ்சல் கொடுத்தது. அது அவரை சாமி கும்பிடுவதற்கு அதிகாலையில் எழுப்பி விடும்.ஓரளவு சமாளித்து பார்ப்பார் முடியாது. அருள் வந்துவிடும்
கட்டியிருக்கும் கையிலியால் கண்களை துடைத்துக் கொண்டு முகம் கழுவுவதற்குகூட தாக்கு பிடிக்க முடியாமல் அவசரமாக அவசரமாக எழுந்து சைக்கிளை. எடுத்துக் கொண்டு உருட்டிக்கொண்டு தெருவைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்த பின் சைக்கிளில் ஏறி ஒருசில தெருவை கடந்து விவசாயம் இல்லாமல் காய்ந்து பொட்டலாக கிடக்கும் இடத்தைத் தேடி ஓடி.,அந்த
பொட்டல் வெளியில் சாமியை கும்பிட்ட பிறகுதான் அவருக்கு பரபரப்பும். கைகால் சோர்வும் அருளும் குறைந்து சகஜ நிலமைக்கு வருவார்
இவர் சைக்கிளில் வேகமாக வயற்காட்டு பக்கம் வருகிறார் என்றால் சாமி கும்பிடுவதற்குத்தான் என்று தெரிந்து சட்புட்னுன்னு ஒதுங்கி கொள்வார்கள். சில நாட்களில் நன்றாக துாக்க கலக்கத்தில் தாமதமாக எழுந்திருக்கும் நேரத்தில் என்னதான் வேகமாக சென்றாலும் அருள் முற்றி உள்ளாடைகளிம்.
கைலிகளிலும் சாமி கும்பிட்டுவிடுவார்
உடம்புக்கு முடியதா நாட்களில் காளியாத்தா,மாரியாத்தா நிலைமை இதைவிட மோசமாகிவிடும். அவரின்மேல் அவருக்கே ஆத்திரம் வந்துவிடும்.தன் இயலாமையை எண்ணி தன்னைத்தானே மோசமாக திட்டிக்கொள்வார்
காளியாத்தா-மாரியாத்தா சாமி கும்பிட்ட நாட்களில் ஓடும்பம்பு செட்டைத்தேடி நாயாய் அலைந்து அதில் ஓடும் பம்ப் செட்டில் சாமிகும்பிட்ட துணிகளை அலசி குளித்துவிட்டுதான் வீட்டுப்பக்கம் வருவார்.
இப்படி பலமுறை நடந்துள்ளதால் பலமுறை எச்சரிக்கையாக இருந்து வந்தார். அவர் குடியிருக்கும் வழக்கிடைச்சொத்தில் அவருடைய தந்தைவழி பங்காளிகளுடனும்தெருநாட்டாமைகளிடமும் அடிதடியில் இறங்கி போலீஸ்
வழக்கு என்று அழைந்து சென்று விடாப்பிடியாக போராடிபணக்கஷ்டத்துடன் உறுதியாக நின்று வீட்டுக்கருகில்கோயில் கட்டி முடிக்கிற வரைக்கும் காளியாத்தா மாரியாத்தாவுக்கு பயந்து எச்சரிக்கையாகவே இருந்து வந்தார்.
அவர் குடியிருக்கும் தெருப்பகுதி மாநகராட்சியின் கடைசி வார்டாக இருந்தாலும் ,நகரத்தை ஒட்டிய கிராமாமாகத்தான் இருந்தது. அவருக்கு பதிணைந்து வயதிற்குமேல் இருக்கும்போது,அவரின் வீட்டைச்சுற்றி குட்டி ப னைமரங்கள் நிறைந்த பனங்குட்டிகளும் தென்னை மரங்கள் நிறைந்த தென்னந்தோப்புகளும் இருந்தன.
அனறைய காலங்களில் ஆண்களும் பெண்களும் சாமி கும்பிடுவதற்கு பகலில் பனங்குட்டியையும் இரவில் தென்னந்தோப்புக்கு நடுவே செல்லும் ரோட்டைத்தான் பயன்படுத்தி வந்தார்கள.அப்போதெல்லாம் எந்த சாமி வந்தாலும் கும்பிடுவதற்கு எந்தவித சிரமும் ஏற்ப்பட்ட தில்லை. இரவில் சாமி கும்பிடும்போதுகூடசினிமா பார்த்துவிட்டு ஆட்கள் வீதி வழியாக வரும்போதுகூட எழுந்நின்று ஆட்கள் சென்றபின் சாமி கும்பிடுபதில் சிரமம் ஏற்ப்பட்டதில்லை
இரவில் சாமி கும்பிட்ட இடத்தை பகலில் பார்த்தால் ஒரே சாமி குவியல்களாத்தான் இருக்கும். அந்த ரோட்டில் லாரி வந்தால் சனங்கள் கும்பிட்ட சாமிகள் எல்லாம் லாரி டயரில் ஒட்டி சிறிது துாரத்துக்கு
ஒரே சாமியாகத்தான் இருக்கும். செருப்பில்லாமல் நடக்கமுடியாத அளவுக்கு இருக்கும் .இதில் வாசனை வேறு துாக்கியடிக்கும்.
மக்கள் கூட்டம் வளர வளர, பனங்குட்டியும், தென்னந்தோப்பும் அழிக்கப்பட்டு பிளாட்டாக மாறி காந்திதெரு,முத்துதெருநேதாஜி தெரு என்று பல தெருவாக மாறிவிட்டன. இப்படி மாறின பிறகுதான் சாமி கும்பிடுவதற்காக கோயிலின்
அவசியம் தெரிந்தது.
அந்தத் தெருவின் ஆம்பிள நாட்டாமை மின்சார வாரியத்திலும் பொம்பள நாட்டாமையின் கனவர் பென்னரிலும்வேலை யில் இருந்ததினால் அவர்கள் மட்டுமே சொந்த மாக கோயில் கட்டியிருந்தார்கள். மற்றவர்களுக்கு சாமி
கும்பிட வழியில்லை.
அந்த தெருவைச்சுற்றி குடியிருப்பு கட்டிட வீடுகள் வந்ததினால் அவர் குடியிருக்கும் தெரு சேரியாக்கப்பட்டது.அந்த சேரி மக்களுக்காக இலவசமாக பொதுக்கோயில் (பொது கழிப்பறை) மாநகராட்சியால் கட்டப்பட்டது இந்தக் கோயில் சேரியிலுள்ள தெருமக்களுக்கு மட்டும்தான் என்பதால் கிரில்கதவு டன் சாவிபோடடு சாவிதெரு நாட்டாமைவசம் ஒப்படைக்கப்பட்டது.
தெரு நாட்டாமைக்கும் அவருக்கும் இடப்பிரச்சினையில் தெருநாட்டாமை அவருடைய வழக்கிடைச் சொத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்தோடு அவர் பயன்படுத்தவும் நாட்டமை தடை போட்டுஇருந்தார் நாட்டமை.. அதனால்
முன்பகையை காரணம்காட்டி அவருக்கும் அவரின் குடும்பத்தார்க்கும் பொது கோயிலை (கழிப்பறையை) பயன்படுத்த மறுக்கப்பட்டது.
அவருடைய சகோதரியின் மகள்கள் கழிப்பறையின் சாவியைக்கேட்டால் சாவியை மறைத்து வைத்து விட்டு காணவில்லை என்பார்கள்.தெருவிலுள்ள
மற்றவர்களிடம் உண்மையா கவாக என்று கேட்டால் ஆம்பிள நாட்டாமை,பொம்பள நாட்டாமையின் வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து வருவதால் தங்களுக்கு பிரச்சினை வரும் என்பதால் சொல்லமாட்டார்கள்
.இரு நாட்டாமைகளுக்கு சொந்தமாக கோயில் இருந்தாலும் டேங்கு நிரம்பி விடும் என்று பொதுக்கோயிக்குதான் சாமி கும்பிட வருவார்கள்.
இரண்டு மூன்று வருஷம்தான் அந்த பொதுக் கோயிலை பயன்படுத்தியிப்பார்கள். தண்ணீர் இல்லாததாலும் போதிய பராமரிப்பு இல்லாதாலும்.சாமிகளும் மலை போல குவிந்து நாற்றம் ஏற்பட்டதாலும் யாருக்கும் பயன் படாமல் போய்விட்டது..தற்போது அந்தக் கோயில்
இடிக்கப்பட்டு பாதாள சாக்கடைதிட்டத்தின் கழிவு நீரேற்று நிலையமாக ஆக்கப்பட்டது.
இப்போது அவர் அறைநுாற்றாண்டு வயதை நெருங்கிக் கொண்டு இருக்கிறார்.சமிபத்தில்தான் நாண்கு தொட்டிகள் கொண்ட கழிவறையை கட்டி யள்ளார். அந்தக் கோயிலை கட்டவிடாமல் அவரின் பங்காளிகளும் தெரு நாட்டாமையும் அவர்களின் வாரிசுகளும் கொடுத்த இம்சைகளுக்கு ஆள்பலமும் பணபலமும் இல்லாமல் போராடினார்
பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் கட்டி அனுமதி பெற்று இணைப்பு கொடுக்க முயன்ற போது இரு தெரு நாட்டாமைகளும் வாரிசுகளும் கூட்டமாக வந்து இணைப்பு கொடுப்பதை தடுத்துவிட்டனர் வேலையாட்களை மிரட்டிவிட்டனர். மநகராட்சியிடம் கேட்டபோது அது பொது பாதையென்று சான்று அளித்தனர்..ஆண் நாட்டாமையோ பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க கூடான்னு அவர்மேல் வழக்கு போட்டுள்ளார்.வழக்கும்ஒன்றோடு மூன்றாக நிலுவையில்……….
பல்வேறு இன்னல் தொல்லைகளுக்கிடையில்சொந்தமாக கோயில் கட்டிய பிறகும் பரபரப்பும் அருளும்தீர்ந்தபாடில்லை. காலையில் எழுந்து கோயிலுக்கு
போனால் அவரின் தாயாரோ,சகோரதரியோ யாரவது கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டு இருப்பார்கள்
திறந்வெளி கோவிலும் வீடுகளாக மாறிவிட்டதால் இருபது நிமிட வாக்கில் சைக்கிளில் ஆற்றுக்கு சென்று இயற்கையின் அவஸ்தையை போக்கி
விட்டு ஆற்றினிலே குளித்துவிட்டு நிதகமாக பரபரப்புஇல்லாமல் வீடுவந்து சேருவார். தெரு நாட்டாமைகளும் நாட்டாமையின் வாரிசுகளும் இயற்கையும் தனித்தனியாக தொடர்ந்து அவஸ்தையை கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. இயற்கையோடும் இவன்களோடும் சண்டையிட்டுக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறார்.
5. சிற்றரசை ஆளும் பேரரசியின் குட்டிக்கதை!!!
ஈரோட்டு பாசறையில் தோன்றிய அண்ணாவும் அண்ணாவின் தம்பிகளும் மேடைப்பேச்சினிடையே கதை சொல்வார்கள். அப்படிக் கதையை சொல்லி கூட்டத்திலிருந்து நெளிபவர்களை உற்சாக பானம் அருந்தியவர்களைப்போல
வாய் பிளக்க வைப்பார்கள்.கூடவே விழுந்து விழுந்து சிரிக்க வைப்பார்கள்.
இந்த வழியில் அண்ணாவின் இதயக்கனியும் அந்த இதயக்கனியின் வழிவந்த புரட்சி செல்வியும் மேடைபேச்சின்ஊடாக கதை சொன்னார்கள். கதையின்
தலைப்பு என்ன தெரியுமா? “வாயைக் கொடுத்து வாங்கிக் கொ்ண்டவர்கள்.. இதற்கு இன்னொருபெயரும் உண்டு. நுனலுாந்தன்(தவளை) தன் வாயால் கெடும் என்பதுதான். இந்தக் கதையானது யார் யாருக்கு பொருந்தும் என ஆராய்ச்சியில் இறங்க போவதில்லை.
ஆனால்.சிற்றரசை ஆளும் பேரரசியர்க்கு கன்னடமும் ஆங்கிலமும் பிறவி மொழியாக இருந்தாலும் கூட்டத்திலுள்ள பாசத்தொண்டர்களுக்கும் இலவசத்தை வாங்கவந்த வந்தவர்களுக்கும் தமிழரின் நலன் கருதி தமிழி
லேயே கதை விடுத்தார்கள்.
கதையைக் கேட்காதவர்கள் அன்னதாயின் புகழ் பரப்பும் தினசாரிகளை பார்த்து படித்து தெரிந்து கொள்க.
பரிசு,கார்,டாஸ்மக்,திருட்டு, போன்ற உவமைகளைச்சொல்லி கதையைச் சொல்லி முடித்தார்கள். அமைச்சர்களும் அதிகாரிகளும் அடிமைகளும் பேரரசியரின்அறிவுத்திறமையையும் கதை சொல்லிய பாங்கையும்
கண்டு ஆரவாரமாக,எட்டுதிக்கும் கேட்கும்படியாக(கூச்சல்) கரகோஷம் போட்டார்கள்.
சிற்றரசை ஆளும் பேரரசியும் தன் முன் அனுபவத்தையே உவமைக்கதையாக குட்டிக்கதையாக பொருத்தமாகவே
சொன்னார்.
இலவசம் வாங்க வந்தவர்கள் முகத்திலோ பகட்டுக்கூட சந்தோசததைக காணவில்லை.எப்படா.பங்ஷன் முடியும் ஆட்டையும் மாட்டையும் ஓட்டிகிட்டு போறப் போறோம் என்பதிலே கவனம் இருந்ததால் கூட்டத்
தோடு கூட்டமாக அரகொரா கோஷம் மாதிரி கரகோஷம எழுப்பினார்கள்.அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பொங்கி வந்த சிரிப்பாக தெரியவில்லை. பாவம் பேரரசியின் பாதுகாவலர் எப்பத்தான் சிரிப்பார் என்று தெரியவில்லை.
6. அங்கீகாரம் பெற்ற கொள்ளையரும், அங்கீகாரம் பெறாத கொள்ளையரும்.
இருபது வருடத்துக்கு முன்னால் நிகழ்ந்த ஒரு குட்டிக்கதை
பஸ்ஸையும்,காசையும் நம்பாமல் சைக்கிள்ல அலைந்த எனக்கு சொந்த தொழில் தொடங்கிய பின் சைக்கிளைவிட வேகமாக செல்லக்கூடிய வாகனம் தேவைப்பட்டது.
அன்றைய தினத்தில் டீவியில் டீ.வி.எஸ் 50 தான் அதிகம் விளம்பரம் செய்யப்பட்டது. விளம்பரத்தின் தாக்கத்தினால் மிகக் குறைந்த முன்பணம் செலுத்தி லோனில் வண்டியை வாங்கி ஓட்டிக்கொண்டு இருந்தேன்.
நான் வண்டி வாங்கியது என் தெருக்காரங்களுக்கு பொறாமையையும் எரிச்சலையும் ஏற்ப்படுத்தியது.என்னைவிட அவர்கள் வசதி வாய்ப்புடன் இருந்தாலும் ஒன்னுக்கு ரெண்டு வண்டி வாங்குவதற்கு வசதி இருந்தாலும் வண்டி ஓட்டுவதற்கு தேவை இருந்தது இல்லை. நேற்று வரை அவர்கள் பாசையில் கஞ்சிக்கு செத்தவன் இன்றைக்கு வண்டி வாங்கி ஓட்டுவதென்றால் எரிச்சலும் ஆத்திரமும் வறாமல் இருக்குமா?
பாப்பாபட்டி,கீரிப்பட்டி மாதிரி ஆயிரம் தடைகள் விதித்தும் அந்தத் தடைகளை எதிர்க்கொண்டும் போராடிக்கொண்டும்தான் என் வாழ்க்கை பயணத்தை ஓட்டிக் கொண்ட இருக்கிறேன்.
ஒருநாள் என் தொழில் நிமித்தமாக கிராமத்துப்பக்கம் சென்றுவிட்டு வரும்வழியில் பச்சைபசும வயல்வெளிகளையும் நீர்நிறைந்த கண்மாய்களையும் கண்டு அந்த பரவசத்தில் கண்மாய்க்கரையில் வண்டியை நிறுத்திவிட்டு கண்மாயில் ஒரு ஆனந்த குளியல் போட்டேன்.
ஆனந்த குளியல் போட்டதுதான் எனக்கு வினை என்று நினைக்கிறேன். ஆனந்தமாக குளித்து விட்டு கரைமேட்டில் வந்து வண்டியை பார்த்தால் வண்டியைக் காணவில்லை. மந்திரமில்லாமல் மாயமாகிவிட்டது.
எப்படி மாயமாகிவிட்டதன்று தெரியவில்லை. எனக்கு இருந்த மூளையை பயன்படுத்தியும் ஒன்றும் புலனாகவில்லை.
பட்டப்பகலில் கண்ணுக்கு எட்டிய துாரம் வரையில் ஆள் நடமாட்டம் இல்லை துாரத்தில் ஒருசிலர் வயலில் வேலை செய்து கொண்டு இருந்தனர்..வேறு ஆட்கள் வந்த சுவடும் தெரியவில்லை. வண்டிச்சாவியும் என் பையில் வயல்வெளி, பள்ளம், வாயக்கால் மறைவிடம் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் பார்த்தாகிவிட்டது.வண்டியை கண்மாய் கரையில் நிறுத்தியிருந்தது நன்றாக நினைவிருந்தாலும் சற்தேகத்திற்கு கண்மாய்
தண்ணிரிலும் முங்கி தேடியாகிவிட்டது வண்டி கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
நெடுநேரமாகத்தவித்தும் மனதிற்குள் தெம்பு எதுவம் இழந்துவிடவில்லை. எப்படி காணாமல் போனதென்று தெரியததால் ஆச்சரியமாகவும் பிரமிப்பு ஊட்டுவதாகவும் இருந்தது. கண்கட்டு மற்றும் மாயாசல வேலை , மிரட்டல் வழிப்பறி இல்லாமல் முழிச்சுகிட்டு இருந்த நேரத்தில் வண்டி காணாமல் போய்விட்டது
இருட்டிவிட்டது. பகலிலே ஒன்னும் புலப்படவில்லை இருட்டில்லா புலப்படப்போகுது.பக்கத்து கிராமத்தாரிடம் எந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று தெரிந்து கொண்டு வீட்டுக்கு வந்தேன் .வீட்டுக்கு வந்த பிறகு சாப்பிடவும் துாங்கவும் மனம் செல்லவில்லை எப்படி காணாமல் போனது குறித்த சிந்தனைதான்.
காலையில் ரெடியாகிக் கொண்டு வண்டியின் ஆவணங்களை எடுத்துக் கொண்டு காவல்நியைத்துக்குசென்று வண்டி காணாமல் போன விபரத்தை புகார் மனுவாக கொடுத்துவிட்டு. வண்டிவாங்கிய வட்டி கடைக்கு சென்று தகவலை தெரிவித்து அவர்கள் சொன்ன சில வழிமுறைகளின்படி சில வேலைகளை செய்து முடித்தேன்.
வேலைகள் முடங்கிப்போய் இருந்த நேரத்தில் ரெண்டுநாட்கள் கழித்து ஒரு அனாமநேய தகவல் கிடைத்தது. என் வண்டி பத்திரமாய் பாதுகாப்பாய் இருக்கிறது என்றும்,வண்டி வேண்மேன்றால் பத்தாயிரம் கொடுத்து வண்டியை மீட்டிக்கொள்ளவும். என்றிருந்தது.
அதே ரெண்டு நாள் கழித்து காவல்நிலையத்திலிருந்தும் என்னை வரச்சொன்னார்கள். போனபோது காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சொன்னார் வண்டி கிடைத்துவிட்டது வண்டியை எடுக்க வேண்டுமானால் பத்தாயிரம் கொடுக்க வேண்டும் என்றார்
அந்த வண்டியின் கடன் பாக்கியும் பத்தாயிரம்தான் மூன்று பத்தாயிரம் என்னே வல்லமை என்று வியக்க மனதில்லை வண்டி பத்திரமாக இருக்கிறது என்ற செய்தி கிடைத்தாலும் சந்தோசம் ஏற்ப்படவில்லை.எப்படி? அபேஸ் பன்னினார்கள் என்பதை பற்றிய அறிவதிலே ஆர்வம் மிகுதியாக இருந்தது.
நான் எப்படி கவனிக்காமல் இருந்தேன் என்பதை அறிவதிலும் ஆர்வம் ஏற்ப்பட்டது.
சில நாட்கள் கழித்து தெரிந்தது. நான் குளித்துக்கொண்டுருந்த நேரத்தில் கண்மாய் கரையில் மினி லாரி ஒன்று வந்துள்ளது. அந்தக்குறுகிய ரோட்டில் செல்வதற்கு இடைஞசலாக என் வண்டி நின்றுள்ளது. இருதடவை ஒலிஎழுப்பி பார்த்துள்ளார்கள் எடுக்க யாரும் வராததால் வண்டியை துாக்கி லாரியில் போட்டு விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சிட்டாய் மறைந்து விட்டார்கள்
ஒலிபெருக்கி அடித்த நேரத்தில் நான் காதைப்பொத்தி தண்ணிருக்குள் முங்கி முங்கி எழுந்ததால்ஆர்வமாய்குளித்ததினால் வண்டி வந்ததும் ஒலி அடித்ததும் என் கவணத்துக்கு படாமல்போய்விட்டது. அதோடு வண்டியை
சீட்டிங் செய்பவர்கள் இந்தத் தொழிலில் கொட்டை போட்டவர்கள் என்பதால் என் வண்டி சீட்டிங் கனகச்சிதமாக முடிக்கப்பட்டதாம்
சீட்டிங் பார்ட்டியிடமிருந்து பத்தாயிரம் செலுத்தப்பட்டால் வண.டி பத்திரமாக கிடைப்பதற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டது.போலீசு,மற்றும் வேறு வழிகளில் முயல வேண்டாம் என்றும் அப்படி மீறி முயன்றால் வண்டிக்கு உத்திரவாதம் கிடையாது என்றும் எனக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பத்தா யிரம் எந்த வழியிலும் குறைக்கப்படமாட்டாது என்றும் தெளிவு படுத்தப்பட்டது.
போலீஸ் தரப்பில் வண்டி கிடைத்தாலும் பத்தாயிரம் கொடுத்தாலும் வண்டி உத்திரவாதமாய் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தவில்லை.ஆனால் பத்தாயிரத்தை குறைப்பதற்கு எந்தமுகாந்திரம் இல்லை என்றுவிட்டார்கள். பணத்தை கொடுங்க ரெண்டு நாள்ல வண்டிய எடுத்துட்டு போங்க என்று சொல்கிறார்களே ஒழிய எப்ப எடுத்துக்கிலாம் என்று சொல்லவில்லை.
இந்நிலையில் பெரும்பாடுகளுக்கிடையில் பத்தாயிரத்தை புரட்டினால் கூட எந்த வழியில் சென்று வண்டியை மீட்பது என்பதில் தயக்கமும் பயமும் இருக்கிறது்
என்னைப் பொருத்தவரையில் இருவரும் மகா கொள்ளை யர்களக தெரிகின்றனர்.ஒருவர் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர், மற்றெருவர் சட்டத்தின் அங்கீகாரம் பெறாத கொள்ளையர். இரு கொள்ளையர்களுமே. தொகையை குறைப்பதில் சம்மதிக்கவில்லை. இரு கொள்ளையர்களுமே, இரக்கமற்றவர்களாக,எதற்கும் அஞ்சாதவர்களாக இருக் கிறார்கள்.
அங்கீகாரம் பெற்ற கொள்ளைக்காரரைவிட அங்கீகாரம் பெறாத கொள்ளைக்காரர் வண்டிக்கு உத்திரவாதம்அளிக்கிறார்.
நான் யாரிடம் சென்று வண்டியை மீட்பது உத்திவாதமாய் இருக்கும் என்பதை மேற்படி சம்பவத்தைப் படித்துப் பார்த்து நீங்களே நன்றாக யோசித்து அவசர குடுக்கை தனமில்லாமல் ஒத்தையா,ரெட்டையா பிடிக்காமல் சரியான முடிவைச் சொல்லுங்கள்.
7. அறம்,பொருள், இன்பம் இன்றி குடியிறுக்கும் வீட்டிற்க்காக வாழ்நாள் போராட்டம்
என் தாயாரும் என் தகப்பனாரும் சேர்ந்து கட்டிய வீட்டைபக்கத்து ஏரியாவுல இருக்கிற முன்னால் பஞசாயத்து அதலைவரும் இன்னால் காந்தி மன்ற தலை வருமான அய்யணன் அம்பலம் என்பவரு, என் அப்பா பெயரிலிந்த வீட்டுவரி யைதன் பெயருக்கு தன் செல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக மாத்திட்டாருங்க,அப்ப எனக்கு இருபது வயசு இருக்குமுங்க அப்போ, எனக்கு வீட்டுவரி அது சம்பந்தமான விபரங்கள் ஒன்னுமே தெரியலைங்க.என் அம்மாவோ என்னைய விட சுத்தமுங்க.
என்அப்பா,நான்பிறந்து நாலு அய்ந்த வருசத்துலஇறந்துட்டாருங்க. 1980-ல வீட்டுவரிய மாத்திபுட்டு ரெண்டு வருசம் கழித்துஎன் அம்மாவுக்கு கோர்ட் லிருந்து சம்மன் அனுப்புனாருங்க
கோர்ட்லிருந்து சம்மன் வந்தப்பிறகுதாங்க,வீடு நமக்கு சொந்தமானதுக்கு ஆதாரம் வீட்டு வரிதான் என்று தெரிஞ்சது. எங்கவீடு நாகரீகமானவர்களின் பாஷையில் சொல்வதென்றால் அது சேரிங்க. அந்தச் சேரியில் இருப்பவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களெல்லாம் ஒரே வந்தே மாதரமுங்க்
வந்தேமாதமுன்னா என் பாஷையில் ஒரேசாதிக்காரங்கன்னு அர்த்தமுங்க. நான்குடியிருந்த வீடு ஆயிரம் கண்ணுடையாலுங்க வானத்திலே விமானம் பறந்தாலும், காக்கை குருவி பறந்தாலும் வீட்டிற்குள்ளயே சிரமமில்லாம உட்கார்ந்தபடியே பார்க்கலாமுங்க வெயில் காலத்தில் நார்மல்ங்க, மழைக்காலத்தில் எங்க வீட்டிலயே மீன் புடிக்கலாமுங்க.
அந்த வீட்டில் என் அக்காவை கட்டி கொடுத்த பிறகு நானும் என் தாயாரும் மற்றும் கோழி, நாயி, பல்லி , எலி, சாம்பிரானி, கொசு, மூட்டைபுச்சி காப்பான்பூச்சி கன்னுக்கு தெரியாத ஜீவனுடன்தாங்கஇருந்து வந்தோம்.
பாம்பு,பல்லிகளுடன் அஞ்சாமல் வாழ்ந்து வந்தவங்க யாருன்னா அது நாங்க தாங்க. வீட்டுக்கு கிழக்கு பக்கத்தில் கொஞ்சம் காலி இட முண்டுங்க மொத் ததில் வீட்டையும் காலி இடத்தையும் சேர்த்தால் 6 செண்ட் வருமுங்க தாத்தா வழி பூர்வீக சொத்து அதாவது ரயத்துவாரி சொத்து என்பதால பத்திரம் எதுவும் இல்லீங்க நம்மாலால அடகு,ஒத்தி என்பன போன்று வச்சா தாங்க பத்திரம் என்று பின்னாடி எனக்கு புரிஞசதுங்க.
பக்கத்து ஏரியா அய்யணன் அம்பலம் அனுப்பிய கோர்டடு சம்மன் வந்த பிறகு தானுங்க வீட்டு வரி ரசீதைப் பற்றி தெரிஞ்சதுங்க. என் அம்மாகிட்ட பழைய ரசீதுகளைப் பற்றி கேட்டபோது ஊராட்சி,பஞ்சாயத்து, நகராட்சி மாநகராட்சி வரைக்கும் என் அப்பா பெயரில் கட்டிய இரசீ தெல்லாம் வழக்கு போட்ட அய்யணன்அம்பலத்திடம்தான் கொடுத்து வச்சுருந்தோம் என்று சொன்னங்க
அய்யணன் அம்பலம் என்பவரு, பெரிய பண்னை யாருங்க,கள்ளர் சாதியை சேர்ந்தவருங்க..முன்னால் பஞ்சாயத்து தலைவருங்க.. தற்போது எங்கஏரியா மாநகராட்சியா மாறியி ருச்சாஅதுவும் அவருக்கு வயசாயிருச்சா எங்க ஏரியா காந்தி மன்றத் தலைவரா இருக்காருங்க. இவர்கிட்ட தாங்க என் அப்பு பண்னைக காரனா வேலை பார்த்தாரு.பண்ணையாரின் வயலுக்கு தண்ணி பாய்ச்சுவதற்கு கண்மாயிலிருந்து பிரிந்துவரும மடையை திறப்பதற்கு தண்ணிரில் முழ்கிதான் மடையை திறக்க வேண்டும்.அப்படி பல நாளில் ஒரு நாள் முழ்கி மடையை திறக்கும் போது மூச்சு திணறி செத்துபோனாருங்க.அந்தப் பண்ணையாரு,அத மறைத்து ,பன்னிக்கறி சாப்பிட்டு போனதால மடையில இருக்கிற முனி அடிச்சதனால செத்துப் போனாருன்னு சொல்லிட்டாரு.
எங்க அம்மாவும் நம்பி குறி கோடாங்கி அடித்து, மந்திரித்து என்னனென்ன மூடநம்பிக்கை இருக்கோ அத்தனையும் பாத்து என் அப்பன பிழைக்க வைக்க
முடியலங்க. அரசாங்க ஆசுபதிதிரின்னு ஒன்னு இருந்ததே தெரியலைங்க
………………….(2)தொடருவேன்
8. அறம், பொருள், இன்பம் இன்றி குடியிறுக்கும் வீட்டிற்க்காக வாழ்நாள் போராட்டம்
எங்க வீட்டு வரி ரசீத வீட்ல வைக்க இடமில்லை என்று அய்யா. பன்னையாரு வீட்டுல கொடுத்து வச்சுருந்தாரு என் அப்பு பன்னையாரும் பெருந்தன்மையா சேரி பொம்பளய வளைச்சு போடுவது மாதிரி என் ஆறு சென்ட் இடத்தையும் வளைச்சு போட என் அப்பு காலத்திலேயே முடிவு பன்னிட்டாரு.
வரி வசூலிக்கும் மாநகராட்சி ஆபிஸ்ல போயி கேட்டா வரி கட்டியாச்சுன்னு சொன்னாங்க, யாரு பேருல வரி இருக்கு என்று கேட்டா பன்னையாரு பெயரிலதான் இருக்குன்னு தெரிஞசதது.
அப்போ, மறுப்பு, எதிர்ப்பு மனு ஒன்னு கொடுக்கனும்னு எதுவும் எனக்கு தெரியல, என் அம்மா வீட்டு வேல செய்யும் முதலாளி அம்மா மூலம் அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் பேரு பெற்ற பெரிய வக்கிலைப் புடுச்சு ஏழை எளியவர் களுக்கு குறைந்த பீஸ் வாங்கும் அவர்மூலமா பன்னையாருக்கு பதில் கொடுத்த முங்க. 1980 வரை என் அப்பா பெயரில் வீட்டுவரி பதிவாகி இருக்குங்கஇ1981க்கு பின்னாடி பன்னையாரு தன் பெயர்க்கு வீட்டுவரியை மாத்தின பிறகு இரன்டு வருஷங்கள் கழித்து வீடு அவரின் கைவசம் இருந்தது என்ற ஆதாரத்தை ஏற்ப்படுத்தின பிறகே,அவர் வீட்டில் நாங்கள் வாடகைக்கு குடியிருந்ததாகவும் கடந்த ஒரு வருடமாக வாடகை கொடுக்காமல் இருந்ததாகவும் மேலும் வீடானது இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும் அதை இடித்துவிட்டு காங்கிரிட் வீடு கட்ட இருப்பதாகவும் பலமுறை பிரதிவாதியை காலி பண்ணச்சொல்லியும் மறுத்து வருவதால் மேற்படி பிரதிவாதியை வீட்டை காலி செய்ய உத்திரவிடுமாறும் நஷ்டஈடு வழங்கமாறும் வேண்டி தாலுகா கோர்டடில் வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தின் மூலமாக சம்மன் வந்ததுங்க…..
அந்த சம்மன் தமிழ்ல இல்லாம இங்கிலீசுல இருந்ததினால என்ன விவர முன்னு எனக்கு அப்போ தெரியலைங்க.என் அம்மா நம்ம மகனத்தான் படிக்க வச்சுட்டோம். என்ற சந்தோஷத்தில் என்னடா எழுதியிருக்குன்னு கேட்டாங்க நானும் முன்ன வந்த வக்கில் நோட்டிசில் இருந்த விவரத்தை சொல்லி எங்க அம்மாகிட்ட பேரு வாங்கிட்டேனுங்க. இங்கிலிசுல இருக்கிறத மகன் படித்து சொல்லிட்டானுன்னு என் அம்மாவும் பெருமை பட்டாங்க.
தெரிந்தவர்களின் ஆலோசனை பிறகாரம் என் அப்பா பெயரில் இருந்த வீட்டு வரி எப்படி அய்யணன்அம்பலம் என்பவர்க்கு மாறியதுன்னு கேட்டு பல தடவை மனுபோட்டேனுங்க.ஒரு வெண்ணையும்,வெளக்கெண்ணையும் பதில் சொல்லலங்க, நானும் விக்கிரமாதித்தன் மாதிரி விடாம் மனுபோட்டு மனு போட்டு ஓயமா முயற்சி செய்துகிட்டே வந்தேன். அப்படி, ஒரு முயற்சியின் பயனாக வீட்டிலுள்ள மண்பானை,நெல் போட்டு வைக்கும் குழுமை ,பிற இடங்களில் நோண்டியதில் (இணையத்தில் தேடுவது மாதிரி) என் அப்பா பெயரில் இருந்த வெவ்வேறு காலகட்டத்தில் கட்டிய ரசீதுகள் மூன்று கிடைத்தன.கடைசியாக கட்டிய மாநகராட்சி ரசீதும் கிடைத்தது
அந்த ரசீதால் வாடகை கட்டுப்பாட்டு கோர்ட்டில் பண்ணையாரு போட்ட வழக்கு தள்ளுபடியாச்சு இந்த தீர்ப்பும் பத்து வருடத்துக்கு மேல கிடைச்சதுங்க.
இந்த தீர்ப்பு கிடைப்பதற்கு முன் என்னனென்ன துன்பங்கள் துயரங்கள ,பண்ணையாரும் அவரது எடுபிடிககளும் தெருவிலுள்ள நாட்டாமைகள் நாட்டாமையின் சின்னவீடு
தொடரும்-3
9. தீபாவளி கொண்டாடிய டாஸ்மாக் குடிமகன்களும், சாதியை கேட்ட உதவி ஆய்வாளர் போலீசும்
தீபாவளி தீபாவளின்னு தீபாவளியை புத்தாடை உடுத்தி வெடி வெடித்து மத்தாப்பு கொளுத்தி பொரும்பாண்மை மக்கள் மக்கள் கொண்டாடி இருந்திருப்பார்கள் ஒவ்வொரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி யிருப்பார்கள் அதில் டாஸ்மாக் குடிமக்களும் தீபாவளியை கொண்டாடி யிருப்பார்கள்
தீபாவளியை கொண்டாடாமல் புறக்கணித்த சிறு பாண்மையினருள் நானும் ஒருவர். என் தெருவில் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த இரண்டு டாஸ்மாக குடிமகன்கள் கொத்தனார் வேலை பார்க்கிறார்கள். அண்ணன் தம்பிகள் இருவரும் நான் வீட்டில் இல்லாத தீபாவளியன்று என் வீட்டு சிமெண்ட் தண்ணீர் தொட்டி, பட்டியக்கல்,ஒதுங்குவதற்க்காக தட்டியால் கட்டப்பட்ட மறைவிடம் போன்றவற்றை நாசமாக்கி எனக்கு வலியை ஏற்படுத்தி னார்கள ..
தண்ணீர் தொட்டியை சுக்கு சுக்கலாக உடைத்தும் பட்டியக்கல்லை பெயர்த்து எடுத்தும் மறைவிடத்தட்டியை பிய்த்து எறிந்தும் ஒளிவு மறைவற்ற சுத்தமான
தமிழ் வார்த்தைகளால் அறிந்தவர் அறியாதவர் அனைவரையும் ஏகவனத்தில் வசைபாடியும் என்னை குறிப்பிட்டு,சுத்த ஆம்பிளையென்றால் வெளியே வாடா,நான் இல்லாததை தெரிந்துகொண்டு வீர வசனம் பேசியும் அன்றை தீபாவளியை ரெம்ப ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார்கள். தனியாக இருந்த என் மருமகளும் பேத்தியும் பயந்து போய் வீட்டிற்குள முடங்கிவிட்டனர்.
டாஸ்மாக் குடிமகன்களின் தீபாவளி கொண்டாட்டம் சற்று தணிந்த பின் தெருவின் நான்கு ரோட்டின் சந்திப்பில் அம்பேத்கர் சிலைபாதுகாப்புக்கு இருந்த போலீசிடம் என்மருமகள் இரு டாஸ்மாக்களின் தீபாவளி கொண்டாட்டத்தைப் பற்றி புகார் கூறியபோது, பாதுகாப்புக்கு வெளியில் நின்ற போலீசும் வேனுக்குள் இருந்த போலீசும் புகார் மனு எழுதி கொடுத்தால்தான் நாங்கள்வருவோம் என்றனர். போலீஸ் ஸ்டேசனில் போயி சொல்லுமாறும் ஸ்டேசனிலிருந்து சொன்னால்தான் நாங்கள் வருவோம் என்றனர்.
இந்த விபரத்தை செல்போனில் எனக்கு தெரிவித்தவுடன். 100க்குபோன் அடித்து சொல்லுமாறு கூறிவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்த மருமகனிடம் சொல்லிவிட்டு அடைமழையாய் பெய்த பெருமழையில் நனைந்தபடி போலீஸ் ஸ்டேசனுக்குஸ்கூட்டியில்சென்றேன்.செல்லும்வழியின்பாதியிலே தெப்பமாக முழுவதும் நனைந்துவிட்டேன்.
ஈரத்துடன் நெடு நேரமாக இருந்ததால் கை விரல்கள் பெருத்து பற்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. மழையும் பட் பட்டென்று தலையில் அடிக்க,தீபாவளியன்று உலக அதிசியமாகஇரவு 7மணியளவில் திறந்திருந்த பெட்டிக்கடையின்முன வண்டியை நிறுத்திபுகார் மனு எழுத பேப்பர் வாங்கினேன்..50பைசா இல்லாததால் பேப்பர்க்கு நனைந்திருந்த பத்து ரூபாயைக் கொடுத்தேன்.சில்லரை இல்லையென்று பேப்பர் கொடுக்க மறுத்தார்.
பத்து ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பேப்பரை வாங்கி புகார் மனு எழுத ஆரம்பித்தேன். மழையினால் விரல்கள் மரத்துப் போயிருந்தன. நடுக்கமும் ஏற்பட என்னால் சரியாக எழுதமுடியவில்லை..குப்பையை கிளரிய கோழி மாதிரி எழுதி எழுத்து பிழையுடன் கழுத்தைச் சுற்றி மூக்கை தொட்டகதையாக எழுதி முடித்தேன். எழுதியதை நனையாமல் இருக்க வண்டியின் சீட்டின் அடியில் வைத்து போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று சேர்ந்தேன்
வாசலில் நின்ற போலீசு, சப்இன்ஸ்பெக்டர் அம்மாவிடம் மனுவை கொடுக்க சொன்னார்.அந்த அம்மாவிடம் மனுவை கொடுத்தபோது கைகள் குளிரால் நடுங்கின். அந்த அம்மா. மனுவை வாங்கும் போது. குளிரால் கைகள் நடுங்கியதால் அதனால் சரியாய் எழுத முடியவில்லை என்றேன்.
அந்த அம்மாவோ,போதும் போதும் என்றுவிட்டு மனுவில் செல் நம்பரை எழுது என்றார். கூடவே எந்த ஏரியா என்றார்.
நான்,ஏரியாவையும் அம்பேத்கர் சிலைக்கு பாரவுக்கு இருக்கும் போலீசையும் சொன்னேன். நான் சொல்வதை அந்த அம்மா,கேட்காமல் மேஜையின் மேல் தலையை கவிழ்ந்து கொண்டு இருந்தார்கள். அந்த அம்மாவுக்கு அருகில் பேன்
ஓடியதால் மேலும் குளிரால் நடுங்கினேன்.
தலையை கவிழ்ந்து கொண்டியிருந்த மேடம், செல் போனை நோண்டிவிட்டு “நீங்க என்ன சாதி ” என்று கேட்டார். சொல்வதா,வேண்டாமா? தர்க்கம் செய்யலாமா? என்று அமைதி காத்தேன்
மீண்டும் அந்த காவல்நிலைய உதவி ஆய்வாளர் மேடம்,“என்ன சாதின்னு கேட்டார்கள். சட்டென்று மாட்டுகறி தின்ற சாதின்னு சொன்னேன்.
“இந்தா ,இந்த மாதிரியெல்லாம் பேசக்கூடாது.” என்று மனுவை என்னிடமே நீட்டினார். சாதியை சொன்னால்தான் நடவடிக்கை எடுப்பார்கள் போலிருக்கிறது. ஒவ்வொரு போலீசுக்கும் ஒவ்வொரு சாதி சிந்தனை போலிருக்கிறது. பாதாள சாக்கடை பிரச்சினைக்காக பொது இடத்தை தனது இடம் என்று சொல்லி சாக்கடை இனைப்பு கொடுப்பதை தடுத்த தெரு நாட்டாமை சாதியை மனுவில் குறிப்பிட்டதை அன்று பதவியில் இருந்த ஆய்வாளர் ,.யாருய்யா சாதிய கேட்டா என்று சத்தம் போட்டார்.
இப்போ,இந்த அம்மா சாதிய கேட்குது. சாதிய சொல்லாமல்..ஏரியாவை சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டதும் திரும்பவும் மேஜையில் தலையை கவிழ்த்தது.
இரண்டு காவலர்கள் வந்தார்கள்.. என்னை விசாரித்தார்கள். புகார் கொடுக்க வந்துள்ளேன் என்று சொன்னதும் எந்த ஏரியா,என்ன தொழில் செய்றாய் என்று விலாவாரியாக கேட்டார்கள்.. முடிந்தபின் தனியாக உட்கார்ந்து இருந்த இரு வரிடம் சென்றனர்.அவர்கள் ஏதோ சொன்னதும் லத்தியால் இரு காவலரும் சரமரியாக அடித்தனர். இந்நிலையில்
வயர்லெஸ்ஸிருந்து ஒலிஎழும்பி,கரகரன்னு ஒருகுரல் ஏதோ சொல்லியது உதவி ஆய்வாளர் மேடம்,100க்கு போன் செய்தீர்களா? எனகேட்டார். ஆமாங்க என் மருமகள் போன் செய்தார்கள் .அவர்கள் வந்து பார்த்துவிட்டு ஸ்டேசனில்
சொல்லுங்கள் என்றுவிட்டு போய்விட்டார்கள் என்றேன்.இரு காலர்களை கூப்பிட்டு ஏதோ சொன்னார்.அந்த மேடம்
அதில் ஒருவர்,தொட்டியை உடைத்தவர்கள் இருக்கிறார்களா? ஓடிவிட்டார்களா? என்று கேட்டார். தெரியவில்லையே! நீங்க ஸ்பாட்டுக்கு சென்று பார்த்தால் தெரியும் என்றேன்.
சாதி கேட்ட உதவி ஆய்வாளர் மேடம்,நீங்க. என்ன செஞசீங்க, அவிங்க உடைக்கிறதுக்கு ”என்றார்.
மேடம், என் மருமகன் விபத்தில் ஆஸ்பத்திரியில் இருப்பதால், ஆஸ்பத்திரியிலிருந்து நேராக இங்கு வந்துள்ளேன். அவர்களைப்பற்றி நான் எதுவும் கூற வில்லை. மேடம்.
மூனு,பட்டை வாங்கிய ஏட்டையா போலீசு, செல்போனை ஆப் செய்துவிட்டு ஸ்பாட்டை பார்த்தாச்சு. உடைத்தவர்கள் போதையில் இருப்பதால் இரவில் அழைத்து வரக்கூடாது. ஆகையால் காலை பத்து மணிக்கு வாருங்கள் என்று
அனுப்பி வைத்தார்.
என்ன சாதின்னு கேட்ட உதவி ஆய்வாளரை பார்த்து .வர்ரேன் மேடம் என்று சொல்ல பார்த்த போது “செல்போனில் கத்திக் கொண்டு இருந்தார்.
10. ஆசையே.... அலை.. போலே..., நாமம்தான் அதன் வேலே.....
பஜாஜ் ஆலியன்ஸ் இன்ஸ்சுரன்ஸ் கம்பெனிக்கு உழைத்த பணத்தையெல்லாம் கட்டி. அக்கம்பெனிபோடும் நாமத்தைப்பெற்று கவலையின்றி வாழ்வீர்என்று பணம் கட்டி ஏமாந்த அன்பர்களுக்கு பஜாஜ் அலியன்ஸ் நிறுவனம் கூறும் அறிவுரை.
எனக்கு தெரிந்த ஒருவரு, அவரு, அவருக்குதெரிந்தஒருவரின் மூலம் பாஜாஜ் ஆலியன்ஸ்முகவர் மூலம் அந்த முகவர் சொன்னதில் ஆசை கொண்டு.
வருடத்திற்குபணிரெண்டாயிரம் வீதம் எட்டு வருடத்திற்கு கட்டினால் முதிர்வு தொகைஒருலட்சத்து அய்ம்பது ஆயிரம் கிடைக்கும் என்றார்.
எனக்கு தெரிந்தவரும் உழச்சு என்னத்த கண்டோம்இதையாவது சேமிப்போம்.
ஆசையில் அடித்துசெல்லப்பட்டு, கஷ்டத்தோடு மூன்றுவருட்ம்தொடர்ச்சியாக பாலிசி
பணத்தை கட்டிட்டு வந்திருக்காரு.
இடையில் விலைவாசி ஏற்றம் ,வருமானம் குறைவு போன்ற காரணங்களால் இரண்டு வருடம் பாலிசி தொகையை கட்டாமல் விட்டுட்டாரு, குடும்பத்தில் செலவும் வறுமையும் அதிகரித்த
படியால். கட்டியவரையில் உள்ள பணத்தை வச்சு சமாளிக்கலாம் என்ற திட்டத்துடன் பஜாஜ் அலியன்ஸ் நிறுவனத்தை அனுகி இருக்கிறார். பாலிசி எடுத்த பாண்டு பத்தரத்தை சரண்டர் செய்தார். காசோலை வீட்டிற்கு வரும் என்று சொல்லியதைக்கேட்டு காசோலையை எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஒரு நாள் காசோலையும் வந்தது. மகிழ்ச்சிடன் வாங்கிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி.பண்ணிரெண்
டாயிரம் வீதம் மூனறு வருடத்திற்கு கட்டிய தொகைமுப்பத்தியாறாயிரம். காசோலையில் வந்ததோ.பத்தாயிரம். அதிர்ந்து போயி,நிறுவனத்தில் கேட்டபோது தொடர்ச்சியாக கட்டாததாலும். உங்க சேமிப்பு பணம் சேர் மார்கெட்டில் டவுணாகி விட்டபடியாலும். அதெல்லாம் போக மீதியை அனுப்பி யிருக்காங்க என்றார்கள் இவரும் விடாமல் சேர்மார்கெட்டப்பத்தி
புரிந்து கொண்டதால் பஜாஜ்ஆலியன்ஸ் தமக்கு நாமம் போட்டதை புரிந்து கொண்டார்
பாலிசியில் சேரும் பணம் சேர்மார்கெட்டில் இறக்கி விடப்படும்போது வீழ்ச்சியடைந்தால் நிறுவனம் பொருப்பேற்காது என்றும் அந்த விதிமுறையை ஏற்றுக்கொண்டு கையெழுத்தும் போட்டுள்ளதால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டார்.
நாமம் பெற்ற விபரத்தை என்னிடம் கூறி எதுவும் செய்யமுடியாத என்று கேட்டார்.
போலீஸ் நிலையத்தில் அடித்து உதைத்து பெற்ற வாக்குமூலமே செல்லாது என்று நீதீ மன்ற சட்த்தில் இருந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை சட்டமே இப்படிபட்ட கம்பெனிகளுக்கதான் இருக்கிறது என்றும் அரசு துறையான எல்.அய்.சி கொள்ளைக்காரன் என்றால் தனியார் துறைகள் பகல் கொள்ளைக்காரர்கள் என்று எடுத்துரைத்தேன்.
தாராளமயமும், தனியார்மயமும் எப்படியெல்லாம் ஏழை, எளிய,நடுத்தர மக்களை ஆசை வலையில்சிக்க வைத்து ஏமாற்றி கொள்ளையடிக்கின்றன.
நாமும் எவ்வளவுதான் விழிப்புடன் இருந்தாலும் ஏமாறாமல் இருக்க முடியாது.. ஒரு தடவை
ஏமாந்து அனுபவப்பட்டவுடன் சுதாரிக்கமுடியும் நீங்கள் மட்டும் ஏமாறவில்லை.பலர் ஏமாந்திருக்
கிறார்கள். அதைக்கண்டு ஆறுதல் அடையலாம் என் சொந்த பிரச்சினைகளில் நான் ஏமாந்த
விபரத்தை கூறினேன்.
முகவரரை தேடி விசாரித்தபோது முதலில் சேர் மார்கெட் பற்றி எனக்கு எதுவும். தெரியாது
பின்னர்தான் தெரிந்து கொண்டேன் என்றார் நான் எதுவும் பாலிசி போட்டு ஏமாந்திருக்கனா
என்று கேட்டார்.
நான் பிறந்ததலிருந்து என் வாழ்க்கையே போராட்டம் தான். நாளைய வாழ்க்கையை எண்ணி என்னால் சேமிக்க முடியுமா? என் பிரச்சனையெல்லாம் உங்களுக்கு தெரியுமே! எப்படிடா சமாளிக்கிற என்று எத்தனை தடவை என்னை கேட்டு இருப்பீங்க என்றேன்.
அவர் எதிர் கேள்வி எதுவும் கேட்காமல் தன் நெற்றியை
பலமாக துடைத்துக்கொண்டார்….
11. நிழல் கதையும் ஒரு நிஜக்கதையும்
நதியை கடப்பதற்காக படகு ஒன்று நதியில் சென்று கொண்டு இருக்கிறது. திடிரென்று ஒரு பெரும் புயல் வீசுகிறது. படகு த்ததளிக்கிறது.
யாரோ ஒருவர் கடவுளுக்கு ரிய நேர்த்திக்கடனை செலுத்தாதால் புயலில்படகு தத்தளிக்கிறது. அதைச்செய்தால் நாமெல்லாம் உயிர் பிழைக்க முடியும் என்றார் படகோட்டி.
படகு நதியில் சென்ற போது துவக்கத்தில். ஒரு பெண் தன் குழந்தையின் சுட்டி தனத்தை அடக்குவதற்காக.தண்ணிரில் துாக்கிபோட்டுவிடுவதாக மிரட்டுகிறாள்.
அந்தப் பெண்,தான் குழுந்ததை மிரட்டுவதற்காக சொன்னதை கேட்ட பிற பயணிகள் தாங்கள் உயிர் பிழைப்பதற்க்காக குழந்தயை தண்ணிரில் வீசச் சொல்கிறார்கள்.
தன் குழந்தையின் மீதான பாசத்தை வெளிப்படுத்தி தன்நிலையைக்கூறி பரிதவிக்கிறாள் அந்தத்தாய்.
இப்படித்தான் நிஜ கதையில் படகோட்டி மண்மோகன் மின்சார பற்றாக்குறையை தீர்க்க அனு உலைதான் தீர்வு என்று சொல்ல பயணிகளான
காங்கிரசு.பிஜேபி,மற்றும்அரசும், அரசு அதிகாரிகளும் அனு உலையை நிறுவி திறப்பதற்கு இருக்க,
பரிதவிக்கும் தாயாக கூடங்குளம் அனுஉலையை எதிர்க்கும் மக்கள்.
நிழலையே நம்பி ஏமாந்த மக்கள், நிழலை புறந்தள்ளி நிஜத்தை நம்பும்
காலம் எல்லாம் அழிந்த பிறகுதான் வருமா????…….
12. மடியாத,மறையாத ஒரு கட்டுக்கதை..........
புரட்டு புராணத்தில்…இலங்கையில் இராவணனை அழித்து சீதையை மீட்ட ராமன். அயோத்தி செல்வதற்குமுன் . இராவணனைக்கொன்ற தோஷத்தைநீக்கவேண்டும்வேண்டுமென்பதற்க்காகராமேஸ்வரத்துக்குவந்தான். அப்போது அவன் பொண்டாட்டிக்கும் அவனது அய்ந்தாவது தம்பியான குகன்மற்றும் ராமனுக்கு துனையாக வந்த குரங்குகளுக்கும் தண்ணீர் தாகம் எடுத்தது
அப்போது,அவர்களின் தாகத்தை தணிப்பதற்க்காக… வில்லன் ராமன் கடலை நோக்கி ஒரு அம்பை எய்தானாம். எய்தஅம்பு தங்க்கிமடம் அருகேகடலில் விழுந்து ஆர்டிசியன் ஊற்று போல தண்ணீரை பீய்ச்சியடித்தாம்.
கடலுக்குள் இருந்து வந்த அந்தத் தண்ணீர் உப்புக்கரிக்காமல் அமிர்தம்போல் இருந்ததாம். அதை அனைவரும் பருகி தாகத்தைதீர்த்துக்கொண்டார்களாம். ராமன் கடலுக்குள் அம்புவிட்ட இடம்.இப்போது வில்லுாண்டிதீர்த்தம் என்றுஅழைக்கப்படுகிறதாம். இன்னும் அந்த கடல் தண்ணீர் இனிக்குதுன்னு அங்குபோய்வந்தவர்கள் சொல்லுகிறார்களாம். கேப்பையில் நெய் வடிகிறது என்றுஎன்ற கதைதான்.
இருபத்தி ஒன்னாம் நுாற்றாண்டில் கடல் குடி நீராக்குவதற்கும், நிலத்தடிநீரை பெருக்குவதற்கும் தகடு தத்தம் வேலையே வேண்டாம் போலிருக்கிறது.பேசாம “ராமன் ரிட்டன்ஸ்” ல ,ராமன வரச்செய்து நல்ல தண்ணிர கொண்டு வந்தா.. ஒரே அம்புல தண்ணீ கஷ்டமெல்லாம் தீரும்ல்ல. கோக்கோ-கோலா,பெய்ஸி,அக்குவா.போன்ற தாகம் தீர்க்கும் கம்பெனிக்கெல்லாம் நல்லா கல்லா கட்டும்ல
கொக்கா மக்கா, போகிற போக்க பாத்தா…
செவ்வாய் கிரகத்துல தண்ணீர கண்டுபிடுச்சாலும் வில்லன் விட்ட அம்புலதான் தண்ணீ வந்துச்சுன்னு பிலிம் காட்டுவானுக……..
நாமதாப்பா, கஷ்டப்பட்டு மண்டையில இருக்கிறல மூளையில் இவிங்க காட்டுறல பிலிம்ல… புசணம்
பிடிக்காம பாதுகாக்கனும்
குறிப்பு், வில்லை எடுத்தவன் வில்லன்னு முன்னால் நடிகர் சுருளி ராஜன்சொல்லியிருக்காரு… அதான் நானும்
வில்லன்னு எழுதிட்டேன். ராமனுடைய அடிமைகள்……சே…..சே……. ராமனுடைய ரசிக கர்கள் தெரிந்து கொள்க!!!!!!
13. மடியாத,மறையாத கட்டுக்கதைகள்.........
ஒருவர் தனக்கு கல்யாணமாகி இரண்டு வருடமாகிறது. தனக்கு குழந்தை பாக்கியம் எப்போது கிட்டும். அதற்கு நான் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை கூறுங்கள் என்று ஒரு வேத விற்பன்னரிடம் கேட்டாராம். நல்ல வேளையாக, டெக்ஸ்பேபி, விந்து தான கருத்தரிப்பு, வாடகைத்தாய் போன்றவிபரங்கள் தெரிந்த வேத விற்பனரான அந்த ஆன்மிக டாக்டரோ, அவரின் மனைவியை பார்த்துதான் பரிகாரங்களை கூறுவேன் என்று கூறாமல் குழந்தை பிறப்பதற்கான பரிகாரவழிவகைகளை கூறினார்.
செத்துப்போனவர்களின் நேர்த்திக் கடனை காலம் தாழ்த்தி செய்வதில்தான் குழந்தை பிறப்பு நிறுத்தி விடுவதற்கு காரணமென்று கண்டுபிடித்து, அதை சாஸ்திரம் சொல்வதாக சொன்னார். அந்த வேத விற்பன்னர்.
அதனால்.உங்கள் வீட்டில் முன்னோர்களின் நேர்த்திக்கடனை அமாவாசை தர்ப்பணம் முதல் வருடாவருடம் கொடுக்கப்படும் திதிவரை உங்கள் மனைவியை செய்யச் சொல்லுங்கள். அதையும் சிரத்தையோடு செய்யவேண்டும் என்றார். அப்படியும் பிறக்கவில்லையென்றால் சிரத்தையோடு செய்யவில்லை என்று தப்பித்து கொள்வா? என்று வாசகர்கள் நிணைக்கக்கூடாது.
அவரின் மனைவியின் சாதகப்படி புத கிரகபரிகாரத்தை செய்யவேண்டும். இதோடு ஈயப்பாத்திரத்தில்சுத்தமான நெய்யும்
பித்தளை பாத்திரத்தில் சுத்தமான பசும்பாலையும்விட்டு புதன்கிழமையன்று அந்தனருக்கு தானம் செய்யவேண்டும். ராமாயணத்திலுள்ள சுந்தர காண்டத்தை பாராயணமாக படிக்கச் சொல்லி கேட்கவேண்டும் என்றார். அந்த தவிற்பன்னர்.
இந்த பரிகாரங்கள் குழந்தையில்லாத குடும்பத்தின் ஆம்படையானுக்கு இல்லை,பிறந்த வீட்டிலிருந்து வரதட்சனையும் கொடுத்து,அவன் கூப்பிடுகிற நேரத்துக்கெல்லாம் அவனுடன் படுத்து இருந்து அவன் துணிமணிகளை துவைத்து, வக்கனையாக சமைத்து போட்டு அவனுடைய சொத்துக்கும் வாரிசாக, அவனுடைய ஆன்மைக்கு சான்றாக ஒரு பிள்ளையையும் கொடுக்கனுமாம்.
பிள்ளை பெத்து கொடுக்காவிட்டால் மொத்த பழியும் சுமந்து பிள்ளை பிறப்பதற்கான பரிகாரங்களையும் அந்தப்பென்தான் செய்யனுமாம்
போதும்டாசாமி? உலகமே சுறுங்கினாலும் இப்படிபட்ட பித்தலாட்மும் அயோக்கிய தனங்களும் பரந்து விரியும்மாப்பா சாமி!!!
செல்போன் மாதிரி,பிள்ளை பெக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்தால்……………. பிள்ளை பெக்கும் இயந்திரம் ஒன்றை கண்டபிடிக்க அதற்கும் ஏதாவது ஒரு பரிகாரம். இல்லாமலா? இருக்கும்!
தமிழகத்தில் பத்து மணிநேரம் மின்வெட்டை போக்க அதற்கும் ஒரு பரிகாரம் சொல்லுங்கப்பா வேத விற்பனையாளர்களே!!!! கூடங்குளத்தகாட்டதீங்கப்பா!அதுக்கு பரிகாரம் சொல்ல! நால்வர் மற்றும் அய்வர் குழு ஒன்னு வந்துகிட்டு இருக்குப்பா!!!!
தமிழ்நாட்டை ஆளும் ஆத்தா, பரிகாரம் செய்ததினால்தான் மூன்றாவது தடவையாக ஆட்சி நாற்காலியில் உட்கார்ந்து இருக்காங்கலாம்….!!!!!! இந்த மாதிரி தஞ்சாவுரு தலையாட்டி மாதிரி ஒரு பரிகாரம் சொல்லுங்கப்பா வேத விற்பனை
ஆளர்களே!!
14. தலைக்கவசம் உயிர் கவசமா ????...
புானையை வெட்ட முடியாத நாய் கதை தெரியுமா? உங்களுக்கு…
நாயும் புானையும் எஜமானர் விட்டில் சிநேகமாய் இருந்து வந்தள்ளன.சில நேரங்களில் நாய்க்கும் புானைக்கும் கருத்து மோதல் வரும் போகும். இது மாதிரி ஒரு நாள் நாய்க்கும் புானைக்கும் தங்களின் எஜமான் விசுவாசத்தை
நிருப்பிப்தற்க்காக போட்டி ஏற்ப்பட்டு ,அது குத்து வெட்டு அளவுக்கு போயிருச்சு கோபம் கொண்ட நாயி அருவாளை துாக்கிகிட்டுபுானையை வெட்டுவதற்கு விரட்டியது.
நாயிடமிருந்து மிரண்டு தப்பித்து ஓடிய புானை அருகிலிருந்த பனை மரத்தில் ஏறிக்கொண்டது.விரட்டி சென்ற நாயால் மரத்தில் ஏறமுடியாததால்,கோபம் அடங்காமால் தப்பித்துவிட்ட புானையை பார்த்து நாயி கூறியதாம்..
தப்பித்துவிட்டோம் என்று நிணைக்காத புான உன்ன வெட்ட முடியாவிட்டாலும் உன் பிய்ய வெட்டுவெண்டீ……என்று கூறி புானை பிய்ய தேடி தேடி வெட்டச்சாம்……..
இந்தக் கதை கணக்கா, தமிழகத்து போலீசு,உயிர காக்க தலைக்கவசம் போடு, இல்லையா பில்லக்கட்டுன்னு நாலு முக்கு சந்திப்பு போன்ற முக்கியமான சந்திப்புகளில் பில்புக்கு பையுமாக நின்று கொண்டு இருக்கிறார்கள்.சினிமா கதாநாயகர்கள் மாதிரி எவரும் தப்பித்துவிடமுடியாத படி வசூலில் அக்கறையுடன் இருக்கிறார்கள்
சட்டம் என் கையில் என்பதை நிருப்பிப்தற்கும், ஏற்கனவே
சுட்ட,கணக்கில்வராத கருப்பு கணக்கை வெள்ளையாக்கி
கணக்கை நேர் செய்வதற்கும்.எஜமான விசுவாசத்தை
நிருபிப்பதற்கும் ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்ற
கணக்கில் களத்தில் குதித்துள்ளது.
ஆட்சிக்கு வரும் எந்த கட்சிக்கும் ,எந்த ஆட்சியளார்க்கும்
சமூகத்தைப்பற்றியசமூகத்தின் அங்கமான மக்களைப் பற்றிய, தொலைநோக்கோ,நேர்மையோதிறமையோ எதுவுமில்லை, அப்பவும் சரி,இப்பவும்சரி,இனி எப்பவும்சரிசமூக அக்கறை, பொதுநலன், போன்றவை எதுவும் வரப்போவதில்லை.
தங்களைப் போலவே,மக்களுக்கும், பேராசை, சுயநலம், கட்டுப்பாடுன்மை,அடங்காதன்ம் போன்றவற்றை இழுத்து
விடும் மூச்சு காற்றைப்போல் பரப்பி விட்டுட்டு சத்தியம். தர்மம்,கச்சாமி, என்றால் நடக்குமா?…………..
ஒரு காலத்தில்,ஒரு லாட்டரிகாரன் இப்படித்தான். ஆசையை விதைத்தான்.நீங்கள் நடந்து போகலாமா? காரில் போகலாமே!, பைக்கில் சர்ரென்று போகலாமே! என்றான். அதுக்கு ஒரு லாட்டரி சீட்டு வாங்கினால் லட்சாதிபதி ஆகலாம் என்றான்.
அன்றைய லாட்டரிகாரனைப்போலவே, தனியார் முதலாளிகளின் வளர்ச்சிக்காக,பொது போக்குவரத்தைக் குறைத்து பைக்குகளையும் கார்களையும் சினிமா.தொலைக்காட்சி மூலமாக,ஆசையை ஏற்ப்படுத்திவிட்டு, அதுஇல்லாநிலைமையை உண்டாக்கி
விட்டார்கள்.
கார்ப்பரேட் முதலாளிமார்களின் சரக்கு வாகனங்கள் தொல்லையின்றி சென்று வர நான்கு வழிக்சாலைகளை உருவாக்கிவிட்டு்ட்டு, மக்கள் அன்றாடம் பயனிக்கும் .பயன்படுத்தும் சாலைகளை பல்லாங்குழியாக்கிவிட்டு நிதியில்லை என்ற காரணத்தை சொல்லிக்கொண்டு விபத்துக்கான பல வழிகளை உருவாக்கிவிட்டு. அதை களைவதற்க்கான ஒரு துறும்பைக்கூடசெய்யாமல் தலைக்கவசம் உயிர்கவசம் என்பது பித்தலாட்டமின்றி வேறு என்னவென்று சொல்லுவது.
செல்போன் கம்பெனி,இருசக்கர,நாலு சக்கர கம்பெனி இப்படி பல தரப்பட்டகம்பெனிகளின் வளர்ச்சிக்கு உதவியாக
இருந்துவிட்டு, தலைக்கவசம் தயாரிக்கும் கம்பெனியை அம்போன்னு விட்டுவிடமுடியுமா? இல்ல அந்தக்கம்பெனிதான் சும்மாதான் இருந்திடுமா??? அந்தக் கம்பெனி வளர்ச்சிக்குத்தான் “தலைக்கவசம் உயிர்கவசம்” விற்பனைக்கு விற்பனையுமாச்சு, கலெச்சனுக்கு கலெச்சனுமாச்சு …எப்படி!!
மதுரையில் ஒருநாள் கலெச்சன் மட்டும் 1.49 லட்சம் வசூலாயிருக்கிறது. இதுமாதிரி மற்ற நகரங்களிலும் போலீசின் கல்லா பெட்டி நிரம்பாமலா இருக்கும்தலைக் கவசம் விற்ற கணக்கெல்லாம் தலைக்கவசம் விற்று முடிந்தபின் அறிவிப்பார்கள்.
தலைக்கவசம் வாங்கியவர்களிடம் விசாரித்தபோது. “ என்னங்க சார், தலைக்கவசம் உயிர் கவசம்தானே? என்று கேட்டபோது.” போய்யர்,நீ வேறஆத்திரத்த உண்டு பண்ணாத… தலைக்கவசம் மயிறுக் கவசமுன்னு”- போலீசுமீதுள்ள கோபத்தை என்னிடம் காட்டிவிட்டார்.
மற்றெருவர், போலீசின் பில் கலெச்சனிடமிருந்து தப்பிக்கத்தான் என்றார். யாரும் தலைக்கவசம் உயிர்கவசம் என்று உணர்ந்து வாங்கியதாக தெரியவில்லை.
இருவர். அவர்களுக்கள் பேசிக் கொண்டது,மாப்பிள. உன் ஆபிசிலதான் கல்லாகட்டறியே, அதுல போலீகுக்கு
பில்லக் கொடுக்குறதுக்கு என்னப்பா….
ஒருதடவக் கொடுத்து பழக்கிட்டா போச்சுடா மாப்பிள………..
நீ……எப்படி வாங்கிப் பழகிட்டயோ…..அதுமாதிரியா..ஆகிறுமா?,,,,,,,,,
அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பிச்சதுமே…இருவரும் பேச்சை நிறுத்திவிட்டனர்.
இந்தக் தலைக்கவசம் வேண்டாத சுமையாக சுமந்து அலைய வேண்டியுள்ளதுஎன்றார்கள் பெரும்பாலோர்.
பல நாதாரி சல்லிப் பயல்களால, ஒழுங்கானவர்களும் சேர்ந்து பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.ஒருவர்.அதற்குஅவரே
ஒரு தீர்வையும் சொன்னார்.
நடக்காது. இருந்தாலும் சொன்னார். என்னதான் நாயாக கத்தினாலும் வேகமாக போறவனை தடுக்கமுடியாது. தலைக்கவசத்தக்குப் பதிலா ஒவ்வொரு வண்டியின் தரத்தக்கு ஏற்றாற்போல் வேகக் கட்டப்பாடு கருவியை பொருத்தச் செய்யலாம். இப்படிச்செய்தால் எந்தச் சல்லிப் பயலும்பறக்க முடியாது நாலு வீல்காரன்மெதுவா வந்து ஏத்துனா இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு பொழைச்சுக்கலாம் போலீசு அக்கறையை கொஞ்சும் குறைச்சுக்கலாம். குடிக்கறவனை குடிக்காதேன்னு தடுக்க முடியாது.குடிச்சிபுட்டு ஓட்டி ஆளு மேல ஏத்துரவனையும் தடுக்க முடியாது.புானையை வெட்ட
முடியாத நாய் கதைதான்.
தலைக்கவசம் இன்னொரு சிரமக்கவசம். தலைக்கவசம் தயாரிப்பு கம்பெனிக்கு உயிர்கவசம், போலீசுக்கு பில் கலெச்சனும் அவசியமானது.கணக்கில்லாதததை கணக்கில் காட்ட அவசியமானது.ஆக ,புாவோடு நாறும்வீசுவது போல
, தலைக்கவசமும் வாங்கித்தான் ஆக வேண்டும்.. இது சாபமல்ல. இது தனியார்மயம்–தாராளமயத்தின் விதி…
15. கனவில் வந்த “ டோக்” கதை...............
ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு உறவுன்னு சொல்லிக்க யாருமில்லை.சித்தம் போக்காக அலைந்து திரிந்து கொண்டு இருந்தான்.
அப்படி அலைந்து திரிந்தும் ஒரு வேலையும் கிடைத்த பாடில்லை.ரௌடியாக மாறவும் தைரியமில்லை.பசியால் அலைந்து திரிந்து காட்டுப்பக்கம் வந்து விட்டான்.சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்து திரிந்தவனுக்கு காட்டின் பசுமையைக் கண்டவுடன் பசி தொந்தரவு கொடுக்காமல் இருந்தது.
காட்டிலுள்ள மரங்களிலாவது தின்ன ஏதாவது கிடைக்குமான்னு மரத்தை தேடியபடியே நடு காட்டுக்குள் வந்தவிட்டான்.திரும்பி போகவும் வழி தெரியவில்லை. வழிதெரியவில்லை என்பதைவிட மனித உருவில் மிருகங்கள் வாழும் ஊரைவிட காடே ரெம்ப சிறந்தது என்று நிணைத்தான்
அந்த அடர்ந்த காட்டுக்குள் சித்தர் ஒருவர் தியானம் செய்து கொண்டு இருந்தார் சித்தர் தியானம் முடிந்து கண் திறக்கும் வரை அவர் முன் அமர்ந்து இருந்தான் வெகு நேரமாகியும் சித்தர் கண் திறப்பதாக தெரியவில்லை. உயிருடன் இருக்காறா?ன்னு சந்தேகப்பட்டு . ரெண்டு கற்களை எடுத்து டோக்கு, டோக்குன்னு ஒலி எலுப்பினான்
வேண்டா வெருப்பா கண்விழித்த சித்தர்,என்னப்பா” என்றார்
“சோறு திண்டு நாளாச்சு”ன்னு சைகையால் ஏதாவது கிடைக்குமா?
என்றான்
“
“நீ…சோறு திண்டு நாளாச்சு” நான் சோற பாத்தே நாளச்சு” இதை அறிந்துதான்வீம்புக்கு கண்ண மூடிக்கிட்டு இருந்தேன். பொருமையிழந்து அப்பவாச்சும் நீ.. போவேன்னு”………. சோத்த பாத்து நாளச்சுன்னுதான் இந்தக்காட்டுக்கு வந்தேன். தன் கதையைச் சொன்னார்…..
நீங்க. இருப்பது எனக்கு தெரியாது, பசிக்கு இல்லையென்று சொல்லாமல் எதையாவது கொடுங்கள். என்றான்
சித்தரும்,சிறிது யோசித்தவிட்டு, “என்னால் உன் பசியை போக்க உணவு தர முடியாது. மந்திரத்தில் மாங்காயையும் வரவழைக்க முடியாது.உயிரை போக்கடிக்லாம்.“கூடங்குளத்து மாதிரியா”ன்னு கேட்கக்கூடாது, ஒரு வரம் தருகிறேன் அந்த வரத்தைக்கொண்டு “நீ யாரை “டோக் என்று சொல்கிறாயோ அவர்கள் உடனே சாவார்கள் என்றார். ஆனால் ஒரு நிபந்தனை“ இந்த வரத்தைக்கொண்டு ஊரிலுள்ள போலிஸ்காரன்கள் மாதிரி லாக்அப் கொலைசெய்தால் வரம் பலிக்காது என்று சொல்லி வரத்தை தந்தார்.
சோறு போட வக்கு இல்லாத வரத்தை வச்சு என்னா பன்னுறதுன்னு ,சிறிதுயோசித்தான்.சரி கொடுப்பதை வேணாண்டு சொல்லக்கூடாதுன்னு வாங்கிக் கிறேன் என்றான்.
உனக்கு கொடுத்த வரத்தை பரிசோதிக்க நானே ஒரு வழியைச் சொல்கிறேன் நீ….பசியால் துடித்த நேரத்தில் கண்மூடி இருந்தேன். கண் திறந்து பார்த்த போதும் உன் பசியை போக்க நான் முயற்சிக்கவில்லை.அதற்கு வழியும் சொல்லவில்லை.என் சுயநலத்தையும் ஒதுங்கும் எண்ணத்தை கொண்டியிருந்த என்னை முதலில் ஒரு டோக் என்று சொல்லி என்னைச் சாகடி என்றார் சித்தர்.
அய்யோ, என்னது, அவனவன்(ள்) உண்டவீட்டுக்கு (நாட்டுக்கு) இரண்டகம் செய்து கொண்டு இருக்கிற நேரத்தில் . உண்ணாமல் எப்படி என்று தயங்கினான்.
தயங்காதே, தயங்கினால் வரம் பலிக்காது. அதை மனதில் கொள். கொல் என்றார்
பசிக்கு உணவளிக்காத சித்தர் ஒரு டோக் என்றான். சித்தர் சமாதினார்.சித்தரை அடக்கம் செய்துவிட்டு நாட்டுப்பக்கம் வந்தான்.
நகரத்தில் ஒரு இடத்தில் கல்யாண விசேசம் நடந்து கொண்டு இருந்தது.இவன் அருகிலுள்ள குப்பை மேட்டில் அமர்ந்து கொண்டு
யோவ்……யோவ்…..சோறு கொண்டு வாய்யா? என்று கத்தினான்.
அவன் கத்தினதை. யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை .மின்சாரம் இல்லாததால் குழாய் ஒலிபெருக்கி தன் சத்தத்தை இவனுக்காக நிறுத்தி
இருந்தது. திரும்பவும் மூன்று தடவை “சோறு கொண்டு வாய்யா” என்று கத்தினான்.
மொய் எழுதிக்கொண்டு இருந்த கூட்டத்தில் ஒருவன்.“ யார்ர அவன் குப்பை மேட்டுல ஓக்காந்துகிட்டு சோறு கொண்டு வாய்யா, சோறு கொண்டு வாய்யா?
என்று கத்துறவன். என்று பதிலுக்கு சத்தம் போட்டான்.
ஒருவரும். அவனுக்கு சோறு கொண்டு வந்தபாடில்ல “ ஏண்டா,
இங்க ஒருத்தன் பசியால சாகுறேன், உங்களக்கு அவ்வளவு பகுமானமாடா?என்று கூறியபடி. கல்யாண வீட்டில் உள்ள அணைவரும் “டோக் என்றான்
செர்னோபில் அனுஉலை வெடிப்பு மாதிரி எரிந்து சாம்பலானர்கள்.
இந்த மாதிரி. இவனுக்கு சோறு போடாத அணைவரையும் நைட்ரஜன் ,போபால் விசவாயு எதுவும் வெளியிடாமல் “டோக்” என்று சொல்லியே கொன்றான்.
சோறு போட வக்கத்தவர்கள் எல்லாம் சோறு இல்லாததால் ஏற்கனவே அவர்களகவே சமாதியானர்கள். வக்குள்ளவர்களும் சோறு போடாததால் அவர்கள் எல்லோரையும் கொன்று ஒழித்ததால்….. “சோறு கொண்டு வாங்கய்யா?என்று சொல்வதற்குகூட ஆட்கள் இல்லாமல் வெட்டவெளியாய் இருந்தது.
சோர்ந்து போயி ஒரு இடத்துல உட்கார்ந்து இருந்தான் “இவன் அருகில் வந்து ஒரு காக்கா கத்தியது.
இந்தா….நானே. சோத்துக்கு வழியில்லாம உட்காந்து இருக்கேன். உனக்கு எங்கிட்டு சோறு போடுவேன். காக்காவுக்கு சோறு வேணுமாமுல்ல, போ,.போ… கத்தினான்.
உடம்பெல்லாம் வேர்த்து கொட்டியது, அந்த வேர்வைகளை பார்த்தபடியே“ பசியெடுத்த காக்கைக்கு சோறு போடமுடியாத இவன் ஒரு “டோக்” என்றான் மறுவினாடியே டோக்கும் செத்தான்.
அவன் உடலைச் சுற்றி ஒரே காக்கக்கூட்டம். ஓரே காக்கா சத்தம். அந்த சத்தமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது..
(அந்தச் காக்கா சத்தத்தினால் என் துாக்கம் கலைந்தது. விழித்து பார்த்தபோதுநன்றாக விடிந்து வெயிலும் மத்தியான வெயிலு மாதிரி சுட்டெரித்தது.. காக்கைகள் சத்தமும் குறைவதாகஇல்லை. ஒரு காக்கா செத்து போச்சாம்அதான் எல்லா காக்கா துக்கம் விசாரிச்சுகிட்டு இருக்குதுக)
16. தனி மரம் தோப்பாகுமா .....????
வழக்கமாக காலை வேளையில் குளிப்பதற்ககாக ஆற்றுப்பக்கம் சென்று இருந்தேன். நான் வழக்கமாக குளிக்கும் இடத்தில் மூன்று பேர்கள் குளித்துக் கொண்டு இருந்தார்கள்.அவர்கள் குளித்து முடிக்கும் வரை அருகில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டு இருந்தேன். அவர்கள் எனக்கும் கேட்கும் விதமாக சிறிது சத்தத்துடன் பேசிக் கொண்டு இருந்தார்கள்அதில் ஒருவர் சொன்னார், இந்த அம்மா எப்போ ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி பிரச்சினையைத்தான் எதிர் கொள்ளும். ஆட்சி நிர்வாகமும் ஒழுங்கா போகும். முன்பு. பால்விலை, பஸ்கட்டணவிலை. இப்போது மின்கட்டணம்,பத்திரபதிவு கட்டணம் போன்றவை.மத்தியரசு ஏற்றிய ரயில் கட்டணம், கேஸ்சிலிண்டர் கட்டணம், போன் சேவைக்
கட்டணம் போன்றவை ஏற்றியது சரியான நடவடிக்கைதான். என்றார் ஆமாமா,எல்லாம் சரிதான் கூலி உயர்வுக்கு தகுந்தமாதிரிதான் விலைவாசிஉயர்வையும் ஏத்தினாதானே. அரசாங்கமும் தாக்கு பிடிக்கமுடியும்ஒரு கொத்தனாரும்,சித்தாளும் பத்து மணிக்கு வாராங்க,அப்படியும் இப்படியும் ஆட்டுநாங்க ஆறு மணியானவுடனே கொத்தனாருக்கு அய்ந்துறுாறும் சித்தாளுக்கு முன்னுாறும் வாங்கிடுறாங்க. சாதாரன அரசுஊழியரே கொஞ்சமா வாங்குறாங்க. அவுகளுக்குகெல்லாம் படியளக்குறதுக்கு வேனாம்மா என்றார்.
என்ன கொஞ்ச நாளைக்கு இந்த சிவப்பு சட்டைகாரங்க போஸ்டர் ஒட்டுவாங்க, உனண்ணாவிரதம். தர்னான்னு
கத்துவாங்க.அப்புறம் அவுங்களும்அமைதியாயிடுவாங்க. என்றார் வேறெருவர்.
நான் அமைதியாக அவர்கள் பேசுவதையே கேட்டுக் கொண்டே இருந்தேன் அவர்கள் மூவறும் முரண்பாடாக பேசிக்கொள்வில்லை .விலை உயர்வு சரிதான் என்பதற்கான காரணங்களை அவர்களுக்கு தெரிந்த விசயங்களை
பகிர்ந்து கொண்டாதாகவே எனக்கு பட்டது.
அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டு சொன்னவைகள் சில வகைகள் உண்மையாகத்தான் தெரிந்தது. எல்லாக் கட்சித்தலைவர்களும் கட்டண உயர்வைஎதிர்த்து அறிக்கை விடுவதும் கட்சியின் பெயரால் ஆர்ப்பாட்டம் .உண்ணா போராட்டம்.நடத்திவிட்டு ஓங்ந்தவிடுவதுமாகத்தான் நடந்து கொண்டு இருக்கிறது
அரசாங்கமும் ஒரு பொருட்டாகவும் எடுத்துக்கொள்வதில்லைபணம் இருப்பவர்களுக்கு எந்தப்பிரச்சிணையும் இருப்பதில்லை. இல்லாதவர்களுக்கும் பிரச்சினையில்லை. ரெண்டுங் கெட்டான் பேர்வழிகளுக்குதான் பிரச்சினை. அவர்களும் சிறிது நாட்களுக்கு ஒப்பாரி வைத்து அழுதுவிட்டு நிலைமைக்கு எற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள்.
கட்டணத்தைஏற்றிய அரசை பணியவைக்கவோ, ஏற்றின கட்டணத்தை வாபஸ் வாங்கவைக்கும்படியான விரமிக்க போராட்டமோ நடைபெற போவதில்லை.யாராவது போராடாடுவார்கள் என்று தொன்னாந்து இருப் பார்கள் அவர்கள் .சிற்சில வினாக்களை என்னைப்பார்த்து கேட்டபோது .என்னசொல்வது என்று முழித்தேன்.அவர்கள் பேசியதிலிருந்து இப்படியும் புரிந்து கொண்டேன்
சிறை.கோர்ட என்று படைகட்டி ஆளும் அரசாங்க கூட்டத்தை. படைஇல்லாத கூட்டம் வென்றுவிடுமா?
இடிந்தகரை போராட்டத்தை படையைக் கொண்டு முறியடித்தார்கள்.நவீன அரசாங்க கோயாபல்சை யெல்லாம் வைத்துதானே புளுகித்தள்ளினார்கள் அவர்களின் வாயைத்தான் மூடத்தான் முடிந்ததா?? அந்த உண்மையை பாதுகாக்க முடியவில்லையே!!
பஸ் கட்டணம் ஏறிய போது பஸஸில் போகமால்தான் இருந்தார்களா? டீ,காபி குடிக்காமல் இருந்தது யாரு? மின்கட்டணம் ஏறும்போது பயன்படுத்தாமல் இருந்திடுவார்களா? பொட்ரோல் விலை ஏறியபோது வணடி ஓட்டாமல்தான் விட்டார்களா? பத்திர பதிவு கட்டணம் உயர்ந்ததினால்விடு,இடத்தை விற்காமல் வாங்காமல் இருக்கமுடியுமா? போன் பேசாமல் தவிர்த்துதான் விடுவார்களா? கேள்வி கேட்டார்கள் அவர்களே பதிலையும்சொன்னார்கள் அப்படியெல்லாம் எதுவம் நடக்காது. என்று!!!!
கல்யாணமாகி புது வீட்டுக்கு வந்த புதுப்பொன்னு , கொஞ்சநாளைக்குபரபரப்பா இருக்கும். அப்புறம் சோர்ந்து போயிடும். அது மாதிரிதான் இந்த மக்களும் கட்டண உயர்வு என்றவுடன் பரபரபரப்புடன் கத்துவார்கள்தாவி குதிப்பார்கள்
அப்புறம்………. அப்புறம்… அடுத்த தேர்தல் வந்துடும் எல்லாத்தையும் முடடைகட்டி கடாசிவிட்டு ஓட்டு போடாம இருக்கமுடியுமா?ன்னு கேள்வி கேட்டு இருக்கிற பதிலை உள்வாங்கிக் கொள்ளாமல். ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டு வருவார்கள்.
ஆற்றில் குளித்தவர்கள் இப்படித்தான் ஸனநாயகக் கடமையை செய்பவர்களை கிண்டலடித்தார்கள்.என்க்கும் சத்தமில்லாமல் சிரிப்புவந்தது. ஆனால் அவர்கள் சசிகலாவின் அக்கா விசுவாசிகள் அல்ல என்பது தெரிந்தது.
அண்ணன் இருக்கும்போது அண்ணி என்று விட்டு, அண்ணன் செத்த பிறகு பதவிக்கு வந்த அண்ணியை அம்மா. அஆத்தா, தாயே . பேயே, என்று துதி பாடுபவர்களா? இம்புட்டு பேச்சு பேசியிருப்பார்கள் ?????
எந்தவொரு மக்கள் விரோத சட்டங்கள் தோல்வி அடையாமல் இருப்பதற்கு காரணம் எது?
கஷ்டப்படவும்,கட்டுப்பாட்டை உடைத்தெறியவும் உயிரை இழக்கவும்தயாராக இல்லாதவர்களால் எந்தக் காரியத்திலும் வெற்றி அடைய முடியாது என்று பெரியார் சொன்னதுதான் என் நிணைவுக்கு காரணமாக வருகிறது
முன்பு இண்டர் நெட்டால் உலகமே சுருங்கி விட்டதாக ஆராவாரம் செய்தது போல் மக்களின் மனமும் சுருங்கித்தான் போய்விட்டது.
இப்போது தனியார்மயமும,தாராளமயமும் சேர்ந்து மக்களின் பேராட்ட உணர்வையும் தனியார் மயமாக்கி விட்டது
என் சிறு வயதில் இல்லாமையால் இல்லாதிருந்த தேநீர் பழக்கத்தினனாலும் ,சைக்கிளிலே நகரை வலம்வந்த பயிற்சியினால் கேஸ்.குளிர் சாதனம்பய்னபாடு இல்லாததால் அரசாங்ககொளைளைக்காரியிமிருந்து ஓரள்வு தப்பிக்கமுடிந்தாலும் மின் கட்டணம் போன் கட்டணம் போன்றவற்றில் முழுமையாக என்னால் தப்பிக்க முடியவில்லை!!!!.
கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன், கட்டுப்பாட்டை நாளும் உடைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். உயிரை விடவும் தயாராகத்தான் இருக்கிறேன். என்ன செய்வது….தனிமரம் தோப்பாகுமா………????????????
17. பவர் இல்லாத சாமி.............
கூடங்குளம் அருகிலுள்ள சிற்றுரில் ஒருவர் குளித்துவிட்டு போவோர் வருவோரை வாடச்பண்ணும் லத்தியுடன் நிறபவரை மிரட்சியுடன் கடந்து. நட்ட கல்லு ஒன்று தெய்வமாக காட்சியளிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நட்டகல்லாய் நிற்கும் சாமியிடம் மனமுருக வேண்டினார்.பக்தர் மிக சத்தமில்லாமல் வேண்டியதால் சில வேண்டுதல்கள் அவர்க்கு கேட்கவில்லை, சிலதுகள்மட்டும் கேட்டன. சாமி.தப்பெ செய்யாத என்னை போலிசுகிட்ட இருந்து என்ன காப்பாத்து மூனு வேளை கஞ்சி இல்லாட்டியும் பரவாயில்லை. நோய் நொடி இல்லாம காப்பாத்து என்று பக்தர் கேட்டதும்.சற்று எரிச்சல் அடைந்த சாமி…. பக்தரிடம் நேரிடையாக பேசினால் போலீசு போராட்டத்தை துாண்டியதாக கேஸ் போட்டு இருக்கும் நிலையை ஆட்டி விடுவார்கள்என்று எண்ணி… மரப்பல்லி மூலமாக பேசினார் சாமி.
பக்தரும் மரப்பல்லி மூலமாக சாமி பேசியதைக் கேட்டுவிட்டு, மரப்பல்லிஜோசியம் பார்ப்பவரிடம் சென்று சாமி என்னா
சொல்லுச்சு என்று கேட்டார்.
பல்லி ஜோசியர் சாமி பேசியதை சொன்னார்.
அடச் சண்டாளா,அனுஉல வேணுன்றவன் ஒனக்கு முன்னாடி வேண்டிட்டு போறான். அனுஉல வேனான்னு சொல்லுறவனு என் ஆயுளை கெட்டிப்படுத்துங்கிறான். பிறந்த எல்லோரும் ஒருநாள் இறப்பது உறுதி. அதுபோல் அனுஉலயும் வெடிப்பது உறுதி. என்னுடைய ஆயுசே கெட்டியாக இல்லாதபோது. நான் எப்படிடா? உன்ஆயுச கெட்டிப்படுத்த முடியும்..அட,போடா போக்கத்தவனே………………
இதைக் கேட்டதும் பக்தனுக்கு கோபம் வந்துவிட்டது. சே….. போயும் போயும “பவர் இல்லாத சாமி ”யிடம் வேண்டினேன என்ன செருப்பால அடிக்கனுமுன்னு சொல்லிக்கொண்டு “பவர் உள்ள சாமி”யைத் தேடி புறப்பட்டான் .
18. ஒலக அறிஞரும் ஒலக அழகியும்
ஒலக அறிஞரும்,ஒலக அழகியும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து கொண்டனர்.அப்போது ஒலக அழகிக்கு ஒலக அறிஞர் பேசிய
பேச்சின் போது ஒலக அறிஞர் மீது காதல் வந்தது.
அந்தக் காதலை ஒலக அறிஞரிடம் வெளிப்படுத்தும் விதமாக ஒலக அழகி .ஒலக அறிஞரிடம் சொன்னார்.
ஒலக அறிவுள்ள நீங்களும்.ஒலக அழகி நானும்.ஆக நாம் இருவரும் திருமணம் புரிந்து கொண்டால்.பிறக்கும் குழந்தை
ஒங்க அறிவும் என் அழகும் சேர்ந்து இருக்கும்.இதனால் ஒங்க அறிவும் என் அழகும் இந்த ஒலகத்தில் அழியாமல் இருக்கும். அதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். என்ன சொல்கிறிர்கள் என்று கேட்டார்
ஒலக அழகி.
ஒருகணம்.மயங்கி.திகைத்து.சுதாரித்தக்கொண்ட ஒலக அறிஞர்.ஒலக அழகியிடம் சொன்னார்.
அப்படியா! …அழகில்லாத என் அழகும் .அறிவில்லாத உன் அழகும் சேர்ந்து பிறந்தால். பிறக்கும் குழந்தை“ உலகத்துல
அழியாத அவமானச் சின்னங்களில் ஒன்றாக இருந்துவிட்டால் என்ன செய்வது……
ஒலக அறிஞரின் இந்தப் பதிலைக்கேட்ட ஒலக அழகி பதிலேதும் சொல்லாமல் சென்றுவிட்டார். அதிலிருந்து ஒலக அறிஞரை சந்திப்பதையே தவிர்த்துவிட்டராம்.
ஒலக அறிஞரின் அறிவும் ஒலக அழகியின் அழகும் சாமானிய மக்களுக்கு பயன் பட்டதாக வரலாறே இல்லை.
(குறிப்பு. அறிவும்.அழகும்உள்ள விந்துதானம்.மற்றும் இதே ஒலக அழகி வழியில் சிந்திப்பவர்கள் கவனிக்கவும்)
19. மகானின் உப... தேசமும், மக்களின் வேண்டு.... கோலும். (சிறுகதை)
மகான் என்ற சொல்லிக் கொள்கிற ஒருவர் தன் பணிஆடகளான சிடர்களுடன் வேற்று நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்திருந்தார் வந்த மகான் முதல் காரியமாக தமிழ்நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்தார்.தமிழ் நாட்டு மக்களும். ஆட்சியாளரின் வரிவசூல்.கொள்ளை போன்றகெடுபிடிகளால். விலைவாசி ஏற்றத்தாலும்,வேலை
வாய்ப்பு குறைவாககிடைப்பதாலும் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு வாழ்ந்துவந்தார்கள். இந்தக் கஷ்டங்களால் அவதிப்பட்டுவந்தவர்களுக்கு மகான்வந்தது சற்று மகிழ்ச்சியாக இருந்தது. கஷ்டங்களை தாங்கிக் கொள்வதற்குஏதாவது வழியும். பரிகாரமும் சொல்வாருன்னு மகானின் உபதேசத்தை கேட்க குழுமிவிட்டனர். பெருங்கூட்டத்தைக்கண்டு ஆட்சி யாளர்களின்படை அதிகாரிகளும் வீரர்களும் கூட்டமாக சேர்ந்துவிட்டனர்.
கூடியிருந்த கூட்த்தைக்கண்ட மகான் பிரமித்துப்போனார் ஆ…..நம்உப தேசத்தை கேட்க இவ்வளவு கூட்டமா………என்று.
……மாகனுக்குஅருகில் வந்த ஆட்சியாளரின் படை அதிகாரி , அவரிடம் குசுகுசுத்தார் மகான் உப தேசத்தை தொடங்கினார். அரியின் புதல்வர்களே! பெருங்குடி மக்களே!
நீங்கள் இந்த லோகத்தில் வாழ்கின்ற வாழ்க்கையில் காணப் படும் துன்பங்களும் துயரங்களும் முற்ப்பிறப்பில் உங்கள் முன்னோர்கள்செய்த தீவிணையின் பயனைத்தான் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். எவ்வளவுஎவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொண்டு , தேவைகளை சுறுக்கிகக்கொண்டு சாந்த சொருபியாக – எதையும் தாங்கும் இதயமாக இருக்குறிர்களோ, அவ்வளவுக்கு நீங்கள் சாகாவரம்பெற்றவர்களாக சொர்க்கத்தில் வாழ்வீர்கள என்றார்.
அப்போது. கூட்டத்திலிருந்து ஒரு விடலைப்பெண் எழுந்து மகானைவணங்கி, “ எங்க நாட்டிலுள்ள ஆட்சியாளர்களும்,
பணக்காரர்களின்பெண்கள் எப்போதும் அழகாக இருக்கிறார்களே,அவர்கள் குழந்தைகள் அமுல் பேபியாக இருக்குதெ. அதன் காரணமென்ன சாமி……..தெரிந்தால் நாங்களும் ……இழுத்தாள்.
மகான்.புன்னகைத்து நல்ல சந்தேகம் என்றுவிட்டு மக்களைப் பார்த்துபேசினார். ஆட்சியிலுள்ளவர்கள்.பணக்கார வீட்டுப்
பெண்களும்குழந்தைகளும் அழுகாக இருப்பதற்கு,அவர்களின் முன்னோர்களின்நற்பண்புள்ள கிர்த்திகளால் அவர்கள் இந்த லோகத்தில் அழகுள்ளவர்களாக,கவலையற்றவர்களாக வாழ்கிறார்கள். இந்த அழகும்சந்தோஷம் நிலைப்பதற்கு அவர்கள். நாட்டிலுள்ள எல்லா கோயில்குளத்திற்கும் சென்று வழிபடுகிறார்கள். கோயில் குளத்தை படைவீரர்களை நிறுத்தி பாதுகாக்கிறார்கள்.மக்களை காப்பாற்றி வழி நடத்திச்செல்வதற்கு ஆடசியாளர்கள் அல்லும் பகலும் சிந்திக்கிறார்கள் என்றார்.
சீடர்ஒருவர், பெப்ஸி அக்வுவா வாட்டர் கேனை நீட்டியவுடன் மகான் அதை வாங்கிமூனு,நாலு மடக்கு தண்ணீரை பருகினார்.
கூட்டம் அமைதிப்பூங்கவா இருந்தது. மஞ்சள்,காவி, பச்சை, கருப்பு நிற ஆடைகள் அணிந்த பெண்களும்,ஆண்களுமாக சிலர் வரிசையாக எழந்து நின்றனர்.பெண்கள் பேச ஆரம்பித்தனர்.
நீங்க சொல்கிறபடிதான் சாமி நாங்க இருந்து வருகிறோம் சாமி, ஆட்சியில இருக்கும். புர்ர்ர்ட்சி தலைவி அம்மாவின் சதானை
யாக பால்வில.பஸ்டிககெட் வில, கரண்ட் பில்லெல்லாம் ஏத்து னாங்க,அதுக்கெல்லாம் பொறுமையாகத்தான் இருக்கோம் சாமி அதுக்கு பரிகாரமா, விலையில்லா அரிசீ.மேய்க்க ஆடுமாடு, மேய்ச்ச களைப்பு தீற பேன், அரைக்க மிக்ஸி. ரைண்டர் கொடுத்தாங்க சாமி.என்றபோது…… கூட்டத்தின் கடைசியில் சலசலப்பு ஏற்ப்பட்டது.
மகானின் சீடர்களும் படைவீரர்களும் விரைவாக சென்று திரும்பினர் ஆடசியில் இருக்கும் புர்ர்ர்ட்சி தலைவி அம்மாவுக்கு தானாம் ஓட்டு போட்டார்களாம். அவுகளுக்கு இன்னும் ஆடுமாடு,பேன் மிக்ஸி
எதுவும் தரலியாம் என்றார் சீடர் ஓருவர்.
இடையில் நிறுத்திய பெண்களை இடைமறித்து ஆண்கள் பேசினர்.
ரெண்டு நாளைக்கு முன்னாடி பெட்ரொல் விலையையும் ஏத்தின போது எங்களிடமும் வண்டிகள் இருந்தபோதும் எந்தவித போராட்டத்திலும் கலந்துக்காம.எங்க முன்னொர்கள் செய்த கரும தீவின பலன்களே, இதற்கெல்லாம் காரணமுன்னு ஒதங்கிய வருகிறோம் சாமி, போதா குறைக்கு கஷ்ட நஷடங்களுக்கு விடிவு பிறப்பதற்க்காக, ஆண்டுதோறும்பெண்கள் விரதமிருந்து. அக்னிசட்டி, மாவிளக்கு, மண்சோறு, பூக்குளி, நி். பூஜை. அங்கப்பூசைகளும் ,ஆண்கள்காவடி, வேல்குத்துவது,இருமுடி என்ற அணைத்துவித வேண்டுதல்களையும் மரபு மாறாமல் செய்துவருகிறோம்சாமி.இந்தப்பிறவில் அனுபவிக்காத கொடுமையெல்லாம்ஆனுபவிச்சுட்டோம் சாமி….. இதோடு விரதம் இல்லாத நாட்களில், விரதம் இருந்த நாட்களுக்கம் சேர்த்து ஆட்சி யாளர்களின் டாஸ்மாகபானத்தை பருகி நாட்டுக்கு அதிகமான வருமானத்தையும் கொடுத்துஓட்டாண்டிகளாகி வருகிறோம் சாமி….. சொர்க்கத்தில் சாகாவரம்பெற்று பெரு வாழ்வு வாழ உதவி பரியனும் சாமி…. என்று ஆள்ஆளுக்கு ஒருவழியாக பெசி முடித்தனர்.
மகான்.தன் இடுப்பில் இருந்த கடிகாரத்தை ஒருமுறைக்கு இருமுறை யாக பார்த்துக்கொண்டு சீடரிடம் குசுகுசுசத்தார்
உங்கள் விரதங்களும், வேண்டுதல்களம், ஆடசியாளர்க்கு செய்கின்ற வருவாய் பெருக்கத்தையும். பகவான் நன்கு அறிவார். நானும் சொர்க்கத்தில் இடம் கிடைப்பதற்க்காக பகவானிடம் சிபாரிசு செய்கிறேன்என்றார்
படை அதிகாரி மணியைப்பார்த்தவாறே மகானிடம் வந்து நின்றார். மக்கள் கூட்டமும் கொஞ்சமாக கலைவதற்கு முன்னமே மகானும் சீடர்களும் சிட்டாய் பறந்துவிட்டார்கள்..
20. அப்பப்பா...., இந்த சட்டதிட்டம் எதுவும் எனக்கு சரியில்லப்பா.......... (சொந்தக் கதைங்கோ)
அப்பா தினத்தை ஒவ்வொரும் ஒவ்வொரு விதமாக சொல்லிஇருக்காங்க, நானும் முகம் தெரியாத என் அய்ந்தோ,ஆறோ வயதில் பேய் அடித்து இறந்து விட்டதாக,எங்கப்பாவின் பண்ணையாரு சொல்லி. எங்க அம்மா சொன்னாங்க, எங்கப்பா பேய் அடிச்சு சாகல பண்ணையாரு வயலுக்கு தண்ணி பாச்ச போயி கண்மாயிலுள்ள மடயை திறக்க தண்ணிக்குள்ள
முழ்கி மூச்சு திணறிசெத்துப்போனாருன்னு நான் உண்மையை சொல்ற வரைக்கும்,பேய் அடிச்சுதான் தன் கணவரு செத்துட்டாருன்னு நம்பிகிட்டு இருந்தாங்க
அப்படி செத்துப்போன எங்கப்பா,எனக்கு எந்த சொத்தும் வச்சுட்டுப்போகல,அவர் குடியிருந்த கூரை வீட்டைத தவிர. அந்த வீட்டுக்கே,என் இருபதாவது வயசிலிருந்து அம்பத்திஇரண்டு வயசுவரைக்கும் அதாவது முப்பது வருடமாக நீதிமன்றதுக்கும்,வக்கீலு ஆபிசுக்குமாக அலைந்து கொண்டு இருக்கிறேன். சாவு வருகிற வரை க்கும் அலைவேன்னு நிணைக்கிறேன்.ஏன்னா? வழக்கு போட்ட வரும்செத்து போயிட்டாரு, வழக்கு போட்டவரின் மூத்த மகனும் டாஸ்மாக் போதையில போயிட்டாரு, அடுத்து அவுகளுக்குஆதரவா. வழக்கு நடத்திய வக்கீலும் போய் சேர்ந்திட்டாரு, அதனாலதான் சொன்னேன்.
வழக்கு போட்டவரு யாருன்னு?கேட்கலியே, யாரு வயலுக்காக எங்கப்பா பேய்அடிச்சு இறந்ததா சொன்னாரோ அந்த பண்ணையாருதான்.எங்கப்பா குடியிருந்த வீடு அந்தப் பண்ணையாருக்குசொந்தமென்றும் எங்கப்பாவும் அம்மாவும் வாடகைக்குகுடியிருந்ததாகவும், வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்ஒருவருடமாக வாடகை கொடுக்கவில்லையென்றுவிட்டை காலி பண்ணி வசம் ஓப்படைக்க வேனுமாய்வழக்கு போட்டு இருந்தாரு
பண்ணையாரு. அப்போஎனக்கு வயசு இருபதுங்க,…………………
வயித்து பாட்டுக்கும்,தெருவில இருக்கிற பேராசை. பொறாமை பிடித்த கருப்பு பாரப்பனர்கள்,மற்றுமொரு ஆதிக்க வெறியர்களிடம் சண்டையிட்டுதனால போலீசு நிலையத்துக்கும் வீட்டுக்கும் அலைஞ்சதிலும் பாதி வருசம் ஓடிப்போயிருச்சுங்க.
வழக்கும் இன்னும் முடியாம வாய்தாவுக்கு வாய்தாவா போய்கிட்டு இருக்கு, இந்தா வாய்தா காலத்துல செவ்வா கிரகத்துக்கே போயிட்டு வந்திருக்கலாமுன்னு தோனுதுச்சங்க போறதுக்கு ராக்கெட்டு இல்லிங்க…
இந்தநிலையில் 2005ல தகவல் அறியும் உரிமைச் சட்டமுன்னு வந்தச்சு, வந்துச்சா, அதப்பத்தின விபரம் எனக்கு 2010லுதானுங்க தெரிஞ்சது. அப்ப,என்வீட்டுவரி ரசிதைப் பற்றி மாநகராட்சியிடம் தகவல் கேட்க, என் அப்பன் பெயரில் இருந்த விட்டுவரி முறைகேடாக அய்யா பண்ணையாரு பெயர்க்குமாறியிருக்கிற விபரம் தெரிய வர மேலும் தகவல்கேட்டு மாநில ஆணையத்துக்கு மனுபோட மனுதாரர் கேட்ட தகவலை தர உத்திரவு போட, இப்படியாக பதினொரு தடவை மனு போட்டு பத்து தடவை தோத்து ஒரே தடவையாக ஜெயித்தேனுங்க, பண்ணையாரு பெயரில்முறைகேடாக மாற்றப்படடு இருந்த விட்டு வரியானது திரும்ப எங்கப்பன் பெயருக்கே, மாற்றித் தந்துவிட்டார்கள்.
அந்த விட்டு வரியை வைத்து என்விட்டுக்கு கரண்ட இழுக்க முயற்சிக்க, செத்தப்போன ஒங்கப்பா பெயருல இழுக்க முடியாது விட்டுவரிய ஓங் பெயருக்கு மாத்தினாதான் இழுக்க முடியுமுன்னு சொல்லிட்டாங்க, இதத் தொடர்ந்து, தினசரி கல்லா கட்டும் கிராம அலுவலரைச் சந்திக்க… அவரோ.ஒங்கப்பா செத்த சான்றிதழ் வேணுமுன்னாரு, அந்த சான்றிதழ் எங்கப்பா இருக்குன்னு தேடிமாநகராட்சி செல்ல, ஒங்கப்பா.செத்தப்போ, பஞ்சாயத்தா இருந்துச்சு இப்போ மாநகராட்சியில பதிவு இல்லேன்னு சொல்ல, பிறகு என்ன செய்யுறதுன்னு யோசிக்க…….
எங்கப்பன் செத்த சான்றிதழ கோர்ட்டுல போயிதான் வங்கனு முன்னு சொல்ல, அதுக்கு ஒரு வக்கில பிடிக்க, அவரு கோர்ட்டுலதாக்கல் செய்ய,சிறிது காலத்துக்குப்பின் மாநகராட்சி தலைமை ஆபிசக்கு போயி கேக்க.,அவுக. ஏரியா வார்டு சுகாதார ஆய்வா ளரை பார்க்கச் சொல்ல, சுகாதார ஆய்வாளரை பார்க்க போக
சுகாதர ஆய்வாளரான அல்லா பிச்சையை வெறுங்கையோடு பார்க்கச் சென்றதுக்கு தண்டனையாக மூன்று மாதம் கழித்து
வரச்சொல்ல, இதப்பற்றி வக்கில் அய்யாவிடம் சொல்ல அவரோ,வெறுங்கையோடு போனா அப்படித்தான் சொல்லு
வாங்கே, 200ரூபா கொண்டு போயி கொடுத்தினா, உடனே விசாரிக்கம .விசாரிச்சோம்ன்னு சீட்டு தருவாங்கே,அத
வாங்கிட்டு வான்னு, சொல்ல..
அந்த இருநூறு ரூபாய வச்சுக்கிட்டு.ஒரு வாரமா அலைய கடைசியாக, சுகாதார ஆய்வாளரைப்பார்த்து 200 ரூபாயை கொடுக்க எண்ணயா ,சுத்த விபரம் தெரியாத ஆளா இருக்க, அண்ணிக்கே கொடுத்து இருக்கவேணாமா? என்று கேட்டு இன்னும் இருநூறு கேட்க……..
நானு.பதறிப்போயி.அய்யா.சாமி. பாத்து செய்யுங்க. என்று கெஞ்ச, நாளைக்கு. இருநூறுயை கொண்டுவந்து கொடுத்
துட்டு சீட்டை வாங்கிட்டு போன்னு சொல்ல…
ஒருவழியா படியளந்து, சீட்டை வாங்கிப்போயி கொடுக்க அங்கிருந்த டெச்பாச் அம்மா. கவனிக்கச் சொல்ல, மொத்தமா சுகாதார ஆய்வாளரே வாங்கிட்டாருன்னு சொல்ல, அந்தம்மா, கண்ணாடியை ஏத்தி எனனைய பார்க்க, அது அவரு செய்த வேலைக்கு .இது நான் செய்யிற வேலைக்கு என்று சொல்ல.. .வக்கில் அய்யா.சொன்னது “அவனின்றி(பணம்) அணு அளவும் நகலாது ”ஞாபகத்துக்கு வர, கடைசியாக ஒரு மாதம் கழித்து வந்துடெத் சர்பிகேட் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்ல…
கோர்ட்டு மூலமா போயி, மாநகராட்சியிடமிருந்து அலஞ்சு எங்கப்பா சொகமில்லாம செத்தாருன்னு சான்றிதழ் வாங்குவது உறுதியாடுச்சுங்கோ…..
சாரிங்க….ஏங் சொந்தக் கதய படித்து சோர்ந்து போயிருப்பீங்க, பொழுது போக்க உலாவரும் சீமான் மாருங்க.“ இதெல்லாம் ஒரு பதிவாக்கும்” என்று எழும்பில்லாத நாக்காலவார்த்தைய வீசுவாங்க… என் அனுபவத்த எழுதுறேனுங்க…
. ரிலாக்ஸ்………..ரிலாக்ஸ் ………..ரிலாக்ஸ்.
21. ஆண்டாள், மீனாட்சி,, ரங்கநாயகி வீடுகளில் சோதனை.....................
விருதுநகர் மாவட்டம் திரு வில்லிபுத்தூரை சேர்ந்த ஆண்டாள்என்ற பெண்மணி வழக்கமாக தன்னை தேடிவரும் பக்தகேடிகளு க்கு வேண்டும் வரங்களை அருள்பாவிக்கும்வேலைகளை முடித்தவிட்டு இரவு ஒன்பது மணிக்கெல்லாம் கதவை தாழ்போட்டுவிட்டு தூங்க சென்றாள்.இந்த ஆண்டாள் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில்…கதவை திறக்கும் பெரும்ஓசையில் தூக்கம் கலைந்து விழித்து “யாரது இன்னநேரத்துல” எனன கேட்டபோது,
ஆண்டாளின் மொய்காப்பாளர் தக்காரும், எஜமான, எஜமானி மற்றும் அவுகஅல்லக்கைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கும்
காவலர்களும் மெட்டல் டிடெகடர் கருவியுடன். ஆண்டாளின்பெட்ரூம்,ஆண்டாளின் பாத்ரூம் போன்ற இடங்களிலும்அடுத்த அறையில் தங்கியிருந்த பெத்த பெருமாள்,சக்கரத்தாழ்வர்களின் அறைகளிலும் தீவிர
சோதனை செயதார்கள்.
தூங்குதா,முழிச்சிருக்கா என்று தெரியாத ஆண்டாளிம் ஓன்னுமில்லேங்கம்மா, உங்க வீட்டுக்கு வெடிகுண்டு வச்சுயிருக்கிறதாக? சென்னையிலுள்ள காவல் தலைமை அலுவலகத்துக்கு ஈஈஈஈ-மெயில் வந்துச்சும்மா, அதான் உங்க பாதுகாப்புக்காக சோதனை செய்தோம்மா, வெடிகுண்டு இல்லேம்மா, நீங்க தூங்குங்கம்மா என்றனர்.இதேப்போல,மதுரைமாவட்டத்திலுள்ள மீனாட்சிஅம்மா வீட்டிற்கும் சென்று சோதனை செய்தனர். வெடிகுண்டு எதுவும் சிக்காததாலும் ஏற்பாடு செய்ய முடியாததாலும் மீனாட்சிஅம்மாவின் வீட்டுக்கு வருகிறவர்களின் பைகளில் ஏதாவது கிடைக்கமா? என்று சோதனை செய்தனர்.
தொடர்ந்தார்போல் தமிழகத்து தலைநகராமாம் சென்னை போயசு தோட்டத்திலும் கொலு விற்றியிருக்கும் ரங்கநாயகி
யின் பங்களாவிலும், கக்கூஸ், பாத்ரூம், பெட்ரூம், என அனைத்து இடங்களிலும் துருவித் துருவி சோதனை இட்டனர்
ஒரே நேரத்தில் இந்த மூவருக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நள்ளிரவிலிருந்து சோதனை மேற்ககொண்டதாக இண்டர்டர்போல் ரேஞ்சு தமிழக போலீசார் தெரிவித்தனர்.
ஆண்டாளும்,மீனாட்சியும் எதுக்கு வம்புன்னு பதினெட்டு முழம் சேலையால் உடல் அங்கங்கள் வெளிய தெரியாமல் இருக்க உடல்முழுக்க போர்ததி ,மூச்சு விடாமல் எதையும் கண்டு கொள்ளாமல்நேராக வெறித்த வண்ணம் இருந்தனர்.
.
22. மூக்கு இருந்தா................. சளி இருக்குமாம்..............
தந்தைமார்கள் தினத்தில் பேப்பருடன் இணைப்பாக வந்த புத்தகத்தில்பிரபலங்களான சின்மா நடிகர்கள் மற்றும் சின்ன தல.பெரிய தலைக தங்களுடைய தந்தைமார்களைப் பற்றி சொல்லியிருந்ததை படித்துவிட்டு என் நண்பர் ஒருவர் அவருடைய தந்தையைப் பற்றி என்னிடம் கூறி விட்டு என் தந்தையைப் பற்றி கூறுமாறு கேட்டார்.நான்,, என் தந்தையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.அவருடைய முகம் கூட எனக்கு தெரியாது.என் தந்தை என்னுடைய சிறு வயதிலே துபாய் ஆகிவிட்டார் என்றேன். (துபாய் என்றால் இறந்து விட்டார்அர்த்தம்) அதனால் என் தந்தையைப்பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை என்றேன்.நண்பரோ, விடாமல் எப்படி இறந்தார் என்று உன் அம்மா சொல்லி இருப்பாங்கள்ல… அதச் சொல்லு………… என்றார்.கண்மாயில் மடை திறக்கும்போது ,முனி அடித்து இறந்தவிட்டார் என்றேன்.நாணும் நண்பரும் பேசிக் கொண்டு இருப்பதை பின்னால் இருந்த ஒருவர் சிரித்தார்……யார்ர……. சிரிக்கிரார்……. இருவரும் திரும்பி பார்த்தபோது்…… கடையில் எங்கள மாதிரி டீ குடிக்க வந்தவர்.நண்பர்,அவரைப்பார்த்து ..“ எதுக்கு சார்”, சிரிச்சிங்க…… என்றார். கையிலிருந்த டீயை ஒரு மொடக்கு, குடித்துவிட்டு சொன்னார்.
சுடுகாட்டிலேயும், கண்மாயுலேயும் வீடுகள கட்டி அவனவன் ஜெகஜோதியாய் இருக்குறானுக………… இப்போ. விண்வெளியில பிளாட் போடுவதற்கு ரெடியா இருக்கானுங்க…….. நீங்க என்னாடான்னா…………… எங்க அப்பாவே முனி அடிச்சிருச்சுன்னு ……… உளரிகிட்டு இருக்கிங்க……..
சார் அம்பது வருசத்துக்கு முன்னாடி நடந்ததுசார்……. நா…. சின்ன பயலா இருந்தபோது இந்த டீக்கடையெல்லாம் வெளிக்கு போற இடம் சார்…………..
அப்ப……இப்ப..எப்ப……… இருந்தாலும் என்னப்பா……………… முனியாவது பேயாவது………… உளராதிங்கப்பா……………..
“ சாமி இருக்குல்ல சார்………………….
“ சாமி. இருக்கு, ஆனா முனி,பேயி,பிசாசு.. அதெல்லாம் இல்ல”………
நாங்க, மூவரும் பேசிக்கிட்டு இருந்ததை கவனிச்சுகிட்டு இருந்த டீ… கடைக்காரரு……. அதெப்படி பேய்.பிசாசு இல்லேங்குறிங்க…. கேள்வி…… கேட்டுவிட்டு……… பேயையும்.முனியையும் பார்த்ததையும் அதனிட
மிருந்து தப்பித்த அனுபவத்தையும் பகிர்ந்தார்.
நண்பருக்கு அவர்களுடைய கோதாவில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்காததால், என்னை இழுத்துக் கொண்டு நகர்ந்தார்.
மறுநாள் காலையில், நண்பர் பேப்பருடன் வந்தார். காதில் கிசு கிசுத்தார். காதில் விழவில்லை முழித்தபோது, பேப்பரை காட்டினார்.
“வாய் பேச்சு முற்றி…டீக் கடை அடித்து நொறுக்கபட்டதில் இரண்டு பேர் காயம், நாண்கு பேர் கைது!..”….……….
..
23. கொஞ்சுனு போதையும்... அதிகமான போதையும்.....
டாஸ்மாக்குக்கு அருகே உள்ள தெருவிலிருந்த ஒருவன். ஒரு பெக் மட்டும் அடித்துவிட்டு,போதை தலைக்கு ஏறியது மாதிரி தள்ளாடி தள்ளாடி ஆக்ஸனுடன் நடந்து வந்தான். தெருவின் முச்சந்தியில் நின்று கொண்டு கத்த ஆரம்பித்தான்.
அவன் கத்தலை.தெருவிலுள்ளவர்கள் கண்டுக்கொள்ளாமல் போவதும் வருவதுமாக தங்கள் வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்தனர். இது கொஞ்சுனு அடித்த போதை குடிமகனுக்கு பெரிய அவமானமாக போயிருச்சு…………….. போவோர்வருவோரை….ங்கோத்தா…..ங்கொம்மா……..
அவனே… இவனேன்னு திட்டிக்கொண்டே தன்னுடைய அருமை பெருமைகளை கடை விரித்து கொண்டு இருந்தான்.
அப்போதும் தெருவாசிகள் அவன் கத்தலையும் வசவுகளையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஏனென்று கேட்கவுமில்லை. எதற்கு வம்பு தும்புன்னு காது இருந்தும் செவிடர்களாக இருந்தனர்.
இதற்கிடையில் இன்னொரு புல்அடித்த குடிமகன், ஒரு பெக் அடித்த குடிமகன் போலவே தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து சேர்ந்தான். முதல் குடிமகனும் இரண்டாவது குடிமகனும் தங்களுக்குள் கைகுலுக்கிக்கொண்டு இரு குடிமகன்களும் சேர்ந்து கத்த ஆரம்பித்தனர்.
திடிரென்று இரண்டு குடிமகன்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. இரண்டாம குடிமகனுக்கு,முதல்குடிமகன் கத்தியது பிடிக்கவில்லை.
“ ஏணடா.ங்கொக்கா மக்கா, ஒரு பெக்க அடிச்சுகிட்டு இம்புட்டு மப்ப காட்டுறியே, புல் அடிச்சுயிருக்கிற ஏ…ன் மப்ப பாருடா…ன்னு சொல்லிய படி. பக்கத்தில் கிடந்த செங்கலை எடுத்து ஒரே போடா… முதல் குடிமகனின்
தலையில் போட்டுட்டான். நான்தான் மூத்த குடிமகன் என்று அவன் மட்டும் கத்த ஆரம்பித்தான்
அப்போதும் அந்த தெரு வாசிகள் அதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளவில்லை.
24. கழுத்தை அறுப்பவர்களை நம்பும் ஆடுகள்.........
ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தார்.அவர் சின்னதும் பெரியதுமாக நாலு ஆடுகளை வளர்த்து வந்தார். அந்த நாலு ஆடுகளுக்கு வேளா வேளைக்கு நல்ல தீனியும் நல்ல தண்ணீரும் கொடுத்து வந்தார்.அவருடைய வாழ்க்கை சீரான நிலையில் சென்று கொண்டு இருந்த வேளையின்….. இடையில்
தனியார்மயம்,தாராளமயம், உலகமயம் என்ற வளர்ச்சி என்ற பெயரில் விளை நிலங்களும் கருவக்காடுகளும்.மரங்களும் அழித்தொழிக்கப்பட்டு.பிளாட்டாக மாறின.. கொஞ்ச நஞ்ச நிலங்களு மழையுமில்லாம , தண்ணியும் இல்லாம வறண்டு தரிசுசா கிடந்தன.
இதனால்.விவசாயமும் இல்லாம வேலையுமில்லாம தவியாய் தவித்து வந்த காரணத்தினால், வளர்த்து வந்த ஆடுகளுக்கு முன்னப்போல் தீணியும் தண்ணீரும் அவரால் கொடுக்க முடியவில்லை.
இதைத் தெரியாத , வேளா வேளைக்கு திண்டு வந்த ஆடுகள்.அந்த விவசாயி யை திட்டித்த்தீர்த்தன.“தீணி போட வக்குஇல்லாதவன் எதுக்கு நம்மல்ல கட்டி ஆளுறான். வெங்கம்பய..வளக்க துப்பு இல்லேன்னா நாக்கப் புடுங்கி சாக வேணாம்.என்று மாறி மாறி திட்டி வந்தன.
ஒருநாளு அந்த விவசாயி வீட்டுக்கு லேவாதேவிக்காரன் வந்தான். வாங்கின பணத்துக்கு வட்டி எதுவும் கட்டவில்லை என்று அவனும் பதிலுக்கு திட்டினான். வட்டியும் முதலுமாக கொடுக்கச் சொல்லி கெடு விதித்துவிட்டு
போனான்.
பல பிரச்சினைகளால் சிக்குண்டு தவித்த அந்த விவசாயி.தான் வளர்த்து வந்த ஆடுகளை மனமில்லாமல்.கறிக்கடை வியாபாரிக்கு விலை பேசி விற்று விட்டான்.
ஆடுகளை வாங்கிய கறிக்கடை வியாபாரி. அந்த நாலு ஆடுகளுக்கு கொழுப்பும் கறியும வளர்வதற்க்காக ,அனுதினமும் நல்ல தீனியும் .கோகோலா தண்ணியும் போதாத குறைக்கு டாஸ்மாக் தண்ணியும் கொடுத்து வந்தான்.
நல்லா தீனியும், கோலா தண்ணியும் பருகி வந்த ஆடுகள்.ஆகா…..ஆகா……. இவனல்லவோ மனுசன்.நம்மல கண்னும் கருத்துமாக பேணி பாதுகாத்து வருகிறான். என்று புளகாங்கிதம் அடைந்து மெச்சி வந்தன.
அன்று ஞாயிற்றுக்கிழமை. கறிக்கடை வியாபாரி. நாலு ஆடுகளில் ஒன்றை பிடித்து, மூன்று ஆடுகளின் முன்னால். அதன் கழுத்தறுத்து இரத்தத்தை சட்டியில் பிடித்து . தோலை உரித்து தொங்கவிட்டான்..
புளகாங்கிதம் அடைந்து வியாபாரியை புகழ்ந்து பேசிய மற்ற மூன்று ஆடு கள் இதை பார்த்து அதிர்ச்சியில் வெலவெலத்து போயின.
அடடா…..நம்லேயும் இப்படித்தானே கழுத்தறுத்து தொங்கவிடப்போறான் என்பதை உணர்ந்தன. உணர்ந்து என்ன பயன்…தப்பிக்க வழியில்லால் பரிதாபமாக தவித்துக்கொண்டு இருந்தன. மற்ற மூன்று ஆடுகள்.
25. இப்படியும் ஒரு மூடப்பழக்கம்.....
நகராட்சியில் அது பறச்சேரியாக இருந்தது. மாநகராட்சியில் அது பறய தெருவாக அழைக்கப்பட்டது. அந்தப்பறயத் தெருவுக்கு ஒரு நாட்டாமை அந்த நாட்டாமைக்கு பல வைப்பாட்டிகளில் ஒரு வைப்பாட்டியின் மகள் அவள்.அவள் பார்ப்பதற்கு அழகில்லாதவள். சுமார் என்றும் சொல்வதற்கும் லாயயிக்கில்லாதவள். தமிழ்நாட்டு அத்தாவைவிட சற்று குண்டானவள் பெருத்த மார்பகங்களை கொண்டவள். அதோடு வயிறும் அதன் பங்குக்கு முட்டி மோதிதள்ளிக் கொண்டு இருக்கும். அவளுடைய மாறாப்பு மார்பகத்தையும்.வயிற்றையும் எப்போதாவதுதான் மூடியிருக்கும். அந்த பறயதெருவிலுள்ள ஆம்பிள பொம்பிள அனைவருக்கும் ஆம்பிள பொம்பள நாட்டாமையைவிட அவள்தான் பவரானவள். இவளுடன் சண்டையிட்டு மோதி ஜெயிக்க முடியாத அளவுக்கு பராக்கிரமம் பெற்றவள்.
இவள் கம்பெடுத்து சண்டையிட்டு வெற்றி வாகை சூடும் விராங்கனையல்ல ஒலக வாயி, ஒலக ஒலிப்பெருக்கி என்று பெயரெடுத்தவள் அந்த பறய தெருவில் குடியிருக்கும் சீமான் சிமாட்டிகளின் கள்ளக்காதல்.களவாணிக் காதல் திருட்டுக்காதல் போன்றஎல்லாதிரை மறைவு அயோக்கியங்களும், களவானி தனங்களையும் தெரிந்து வைத்திருந்ததால்……..
இவள் சண்டையிடும் போது சண்டையிடுபவர்களின் அத்தனை கயவாளி தனங்களையும் ஒலிபெருக்கியாய் நேரடி வர்னனையுடன் ஒளிவு மறைவு இன்றி தேனாறும் பாலாறுமாக ஓடும். தன்னை மதிக்காமல் இருககும் நேர்மையாளர்களின் வீட்டில் இரவில் கல்லெறிவாள். பொய்யாக அவதூறாக அவர்கள் மீது போலீஸில் புகார் செய்து அலைய வைப்பாள். இதனால் அவள் அந்தத் தெருவில் பொம்பள தாதாவாக வலம் வந்தாள்.
வாழ்க்கை சக்கரத்தில் ஒரு நாள் இவள் மண்ணெண்னெயில் வெந்து இறந்து போனால். எப்படி இறந்தாள் என்பது மர்மாகத்தான் இருக்கிறது.இவள் ஒரு டாஸ்மாக் குடிமகள். இதோடு போதை மாத்திரை பழக்கமுள்ளவள்.
இவள் இறந்த சிலநாட்கள் கழித்து இவள் வீட்டிற்குள் கழுதை ஒன்றை விட்டு கதவை பூட்டு போட்டு பூட்டி விட்டார்கள். மூன்று நாட்கள் கழித்து கதவை திறந்து கழுதையை தெரு வழியேஇழுத்துச்சென்றார்கள்-
அவளின் கனவனும் தம்பியும்………………….
கழுதையை வீட்டுக்குள்ளே பூட்டியது எதுக்குஎன்றால். மூன்று நாட்களாக அடைக்கப்பட்ட கழுதை கத்தியிருந்தால் அவள் பேயாக அந்தவீட்டிலே இருக்கிறாளாம், கழுதை கத்தாதினால் அவள் பேயாக இல்லையாம்……….
தற்கொலையோ, கொலையோ நடந்த வீட்டில் இறந்தவர்கள் பேயாக இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிய கழுதை மூலம் கண்டுபிடித்த அந்த மகா விஞ்ஞானியின் பேரும் ஊரும் தெரிவில்லை. தெரிந்திருந்தால்
அவருக்கு கோயில் கட்டி சுவத்தில சாத்தி வச்சுருக்கலாம்……………….
26. ஒரு வேள.......... கேட்கலைன்னா.....................!!!!
எனக்கு காது கேட்பதில் பிரச்சினை. ஆங்கில மருத்துவ சிகிச்சையில்
ஸ்கேன்,டெஸ்ட்,லொட்டு.லொடுக்கு எல்லாம் முடித்தப்பின் வலது காது அவுட் என்றும் இடது காதும்சீக்கிரமே அவுட்டாகிவிடும் என்று பயமுறுத்தி சில ஆயிரங்களை செலவழித்துவிட்டு ஒன்னும் செய்ய முடியாதுன்னு கைகழுவி விட்டனர்.
நானும் விக்கிரமாதித்தனாக சளைக்காமல் ஒவ்வொரு முயற்சியாக மேற்ககொண்டு வந்தேன்.காதில் காதொலி வைத்துக்கொண்டால் கேட்கும் என்ற சந்தேகத்தின் பேரில் டெஸட் செய்து காதொலி விற்கும் கடைக்குச் சென்றேன்.
காதொலி துல்லியமாக கேட்கும் ஆனால் பத்திரமாக தண்ணி
கிண்ணி படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.(கிண்ணி என்பது டாஸ்மாக்கை குறிப்பது.டாஸ்மாக் குடிமகனாக எண்ணை நிணைத்து சொல்லிவிட்டார்.
நான் அசல் இந்திய பாட்டாளி வர்க்கத்தின் குடிமகன் என்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை) அதோடு காதொலி விலை பதிணைந்து ஆய்யிரத்துக்கும் மேல் ஆகும் என்று என்றார்கள் கடன்பட்டு காதொலி வாங்கினாலும் அதை கவனமாக பாதுகாப்பது முடியாத காரணம்.
ஏற்கனவே வயிற்றுவலி. சுற்றி இருக்கிற மக்களின அன்புத்(சண்டைச்ச்சரவு) தொல்லை. அந்த அன்பினால் காதொலியை பதம் பார்த்துவிட்டால் என்னாவது. இது சரிப்பட்டு வராதுன்னு நானே முடிவு கட்டிவிட்டேன்
காது செவிடானவர்களின் அனுபவத்தைக் கேட்டால் அதி பயங்கரமாக இருந்தது. எங்காவது எதாவது வெடித்து நாசவேலை நடந்தால் அது நக்சலைட் வேலையாக.சதியாக இருக்குமோ என்று போலீஸ் கக்கியதை வாந்தியெடுக்கும் ஊடகங்கங்கள்.பத்திரிக்கைகள் மாதிரி இருந்த்து. செவிடானவர்களின் சொன்ன அனுபவம் அய்யோ! போதும்ய்யா!!! என்று திலிருந்து அவர்கள் அனுபவத்தை கேட்பதை விட்டுவிட்டேன்.
தோழர் ஒருவர் சொன்ன அக்குபிரஷர் முறையை விட்டு விட்டு செய்து வந்தேன் (மறதியால்).ஒருநாள் பேப்பரில் பொண்டாட்டி செத்த துக்கம் தாளாமல் செத்து போன கோவை சாமிகிரி சித்தரின் வாரிசுகள் நடத்தும் காதொலி சிகிச்சை மையம் கிளை பற்றிய செய்தியை படித்தேன். வேலை இல்லாத நாட்களில் ஒரு நாள் சிகிச்சை மைய்யத்துக்கு சென்றேன்.
வரவேற்பு பலமாக இருந்த்து. மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். என்முறை வந்த்து……“அய்யா என்…பெயர்………………எனக்கு வயது 52 ஆகுது…எனக்கு ஒலிஅளவை நார்மலாக கூட்டி வைத்து பேசினால்தான் மனிதர்கள் பேசுவது கேட்கும்.ரகசியமாகவோ, பல நாள் கஞ்சிக்கு குடிக்காதவர்கள் போல் பேசினாலோ, திருடர்கள் மாதிரி பேசினாலோ கேட்காது,
அதே சமயத்தில் மேடையில கூச்சலிடும் கட்சிகாரர்கள் மாதிரி கத்தி பேசினால் விளங்காது..காதுக்காக .ஆங்கில மருத்துவ முறையில் எல்லா சோதனையும் செய்தாகிவிட்டது. நீங்கள் சோதனை செய்ய வேண்டுமென்றால் சோதனை செய்து கொள்ளலாம் என்று முதலிலே எல்லாவற்றையும் ஒப்பிவித்துவிட்டேன்.
காதொலி சித்தர் வாரிசும் என்னை பரிசோதித்தார். பல கேள்விகளை கேட்டார்.பல வற்றுக்கு உண்மையான காரணங்களையும்.சில வற்றுக்கு பொய்யான தகவலையும் கூறினேன். எதனால் காது கேட்கவில்லை என்ற கேள்விக்கு சுதந்தரம் வாங்கி தந்த அகிம்சா மூர்த்தி பிறந்த நாட்டிலே “போலீஸ்காரனுங்க பொய் கேசுல புடுச்சுட்டு போயி. செவுள பேத்த கதைய சொல்லல… சொன்னால்…ஏன்? அடிச்சாங்கன்னு கேள்வி வரும். அதுக்கு பதில் சொன்னால்.அதிலிருந்து இன்னொரு கேள்வி வரும்….. இப்படியே………..இப்ப…. அதுவா…. முக்கியம்… காது கேட்க வைக்கிறதுல முக்கியம்………ஒருவழியாக சாமிகிரி சித்தரின் வாரிசும் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
“உங்களக்கு காது கேட்க வைத்துவிடலாம்”…….
“சந்தோசம்”….. அதுக்கு எவ்வளவு செலவாகும்…….
“ஒரு பதிணைந்தாயிரம் செலவாகும்.”..
என்னையறியாமல் பொளந்த வாயை கையால் மூடிக்கொண்டேன்.
சித்தரின் வாரிசே பேசினார்..
“பணத்தை மொத்தமாக கட்டிவிடவேண்டும். பணத்தை கட்டிவிட்டு
கோவையிலுள்ள தலைமை மருத்துவமனையில் ஒரு வாரம் தங்க
வேண்டும். உங்களுக்கு காதில் மருந்து விட்டவுடனே. காது கேட்க
ஆரம்பித்துவிடும் என்றார்.
“பணத்தைப்பற்றி ஒன்றும் கவலையில்லை, பணத்தை பொரட்டி விடலாம்”
ஆனா…… ஒரு சின்ன சந்தேகம்………கேட்கட்டுமா?……….
கேளுங்க…என்பதற்கு அறிகுறியாக தலையை ஆட்டினார்.
“ஒருவேள………… கேட்கலைன்னா”
.“கேட்கும்”………….
நல்லது கேட்கும்..“ ஒருவேள ………கேட்கலைன்னா,”…….இழுத்தேன்”
கேட்கும்”………
இடையில் சிறிது நேரம் பேச்சு நின்றது
”நான் எதுக்கு கேட்கிறேன்னா…….. ஆங்ங்கிலமருத்துவரு. கேட்காத காதை
கேட்க வச்சுரும்லாம்ன்னு சொல்லி செலவ இழுத்துவிட்டுட்டு கைய விரிச்சுட்டாரு..அந்தக்கடனே இன்னும் அடைபடல…,அதனலதான்……
ஒரு வேள கேட்க…….லைன்னா”……..
“கேட்கும்”……-ஒரே பல்லவியையே சொன்னாரு….
அடுத்தாக.கேளாத ஒருவர் அவர் முறைக்காக என்னை உரித்துவிடுவது
போல் பார்த்தபடி கண்ணாடி போட்ட வாசல் அருகில் தயராக நின்று கொண்டு இருந்தார்.
நிலமையை. உணர்ந்த நான் பணத்தை ரெடி பண்ணிவிட்டு வறுகிறேன்
என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு விடை பெற்றேன்
ஒரு…… வேள………..கேட்கலைன்னா…………………..
திரும்பவும் ஏமாறுவதுதான் என்று எனக்கு புரிஞ்சு போச்சு.
27. நிணைவோடு ……………………. (சிறுகதை)
அவர் அழகானவரும் இல்லை, அழகில்லாதவருமில்லை, அவர்கள் பேசிக் கொண்டது என் காதில் விழுந்ததுமே எனக்குள்ஒருபரவசம் அவரை கண் இமைக்காமல் பார்த்தேன். அவர் அரைநூற்றாண்டை கடந்துவிட்டதாக சொன்னார்.ஆனால் பார்ப்பதற்கு முப்பது முப்பத்தைந்து இளைஞராக தெரிந்தார். என் ஆசைகள் சிறகடித்தது.
பேசிக் கொண்டு இருந்த அவரிடம் அவர் நண்பர் கேட்டார்.
“எப்படிடா, நான் கிழட்டாவா ஆயிட்டேன், நீ எனக்கு மகன் போல் இருக்கிறாய்
எல்லாம்,“ ரேஷன் அரிசியின் மகிமையிடா” என்று அவர் சொன்னபோது நண்பர் அதிர் வேட்டு போல சிரித்தார்.நானும்”சத்தமில்லாமல் சிரித்தேன்”.
ஒவ்வொரு கேள்விக்கும் சந்தேகத்திற்கும் சிரிக்காமல் பதில் சொன்னார். அவரின் நண்பரோ அதிர் வேட்டுபோட்டு சிரித்தார். அந்த அதிர் வேட்டுடன் நானும் மத்தாப்பு வேட்டுடன் சரித்தேன.. சுற்றியிருந்தவர்கள் அதிர்வேட்டு சத்தம்கேட்டு அவரை பார்த்தபோது அவர்களும் கம்பி மத்தாப்பாக சிரித்து வைத்தார்கள்.
அன்று ஏக்கமும் சோகமும் நிராசையுமான என் மனம் உற்சாகத்தால் நிரம்பியது.அவரைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என என் மனம் பரபரத்தது. துறு துறுத்தது.
“ நான் எப்படி?…… அறிமுகமில்லதா அவருடன் அறிமுகமாவது. என் பென்மை என்னை பின்னுக்கு இழுத்தது. படித்திருந்தாலும் பெண்களை அடிமைபடுத்தி வைத்திருத்த அடிமை புத்தியும் தயக்கமும் பயமும் என்னுள்ளும் மேலோங்கி நின்றது.
அவர் தனியாக இருந்தால் தைரியமாக அவரிடம் அறிமுகமாகி விடுவேன்.
நான் வந்த வேலை முடிந்தும் அவரைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையினால் காத்து இருந்தேன். சிறு துப்பு கிடைத்தால் போதும் மனம் நிம்மதி அடைந்துவிடும் பிறகு எல்லாம் நிதானமாக……………………
அவரை, அவருடைய வழுக்கை தலை நண்பர் விட்டபாடில்லை, அவர் எப்படி விடுவார். பால்ய நண்பர், அதுவும் தொடக்கப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளி வரை ஒன்றாக படித்தவர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொள்கிறார்கள்..
எனக்கே இப்படியென்றால்………………….அவர்களுக்கு…………………
என்னை அறியாமல் வழக்கை தலை மீது கோபம் வந்தது.
“அதற்கு இப்படியா?………….. இவ்வளவு நேரமா”?……………..
பெண் என்பவள் பொறுமைக்காரி என்று என்னைப் பார்த்துதான் சொல்லியிருப்பார்கள்….. பொறுமையாக அவரின் திரு உருவத்தை படம் பிடித்து மனதிற் பதிவேற்றிக்கொண்டேன.
பேசிய களைப்புகள் தீர இருவரும் தேநீர் கடைக்கு சென்றார்கள். நானும் அவர்களை பின் தொடர்ந்து தேநீர் கடைக்கு சென்றேன். கடையில் அவர் என்னை பார்க்கும்படியாக நின்றேன். ஒரு கனம் அவர் என்னைப்பார்த்தார்.
மறுகனம் என் கண்கள் அவரின் கண்களுக்குள் ஊடுருவிச் சென்றது. மெய் மறந்து போனேன்.
சில விநாடிகளா?…… நிமிடங்களா? தெரியவில்லை. நிதானித்தபோது அவரும் இல்லை. பேசிப்பேசயே வறுத்தேடுதத வழுக்கை தலை ந்ந்தியையும் காணவில்லை.
அய்யோ!!!…….. ஒரே பரிதவிப்பு…….. தவறவிட்ட படபடப்பு…. ஏக்கமும் கவலையும் துக்கமும் மீண்டும் என்னை பற்றிக் கொண்டது. சுற்றிலும் தேடினேன். தேநீர் கடைக்காரரிடம் விசாரித்தேன். அவரைப்பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. சோர்ந்து போன மனதுடன்………………….
அடிக்கடி தினமும் அந்த இடத்திற்கும் தேநீர் கடைக்கும் வந்து சில நேரங்கள் காத்துக் கிடப்பேன் அவரை பார்த்து விடமுடியாத ……..என்ற நம்பிக்கையுடன்.
நாட்கள் மாதங்களாக வருடங்களாக கடந்து விட்டன. அவரை பற்றி …
எந்த தகவலுமின்றி தனி மரமாக காலத்தை கடத்துகிறேன். பகலில் விட்டுவைத்திருக்கும் அவர்…………… இரவில் என் நிணைவோடு இருக்கிறார்.
28. ”ஆமான்னுதான் சொல்லு மாமா”............!!!
(ஒலகத்த சுத்தி பார்க்க புறப்பட்ட காக்கா!!!..)………..
சிங்காரம் என்ற காக்கைக்கு சிங்காரி என்ற காக்கை பொண்டாடியாக இருந்தது. இருந்தாலும் சிங்கார காக்கைக்கு சபல புத்தி அதிகமாக இருந்த்தினால் பிங்காரி என்ற காக்கையை வைப்பாட்டியாக வைத்துக்கொண்டது.
சிங்கார காக்காவுக்கு இருக்கிறத விட்டுட்டு இல்லாத்திலே ஆசை அதிகம். அந்த ஆசையினாலே,சிங்காரி காக்காவை சரிவர கவனிப்பதில்லை. பிங்காரி உடனே அதிக நேரத்தை கழித்தது..
ஒருநாள் பிங்காரி காக்காவுக்கு ஒரு ஆசை ஏற்ப்பட்டது. தன் ஆசையை
சிங்காரகாக்காவிடம்சொல்லியது.“மாமா,மாமா,ஒங்களுடைய ஆசையெல்லாம் நான் நிறைவேத்துறமாதிரி ”என் ஆசையை நீங்க நிறைவேத்தனும் மாமான்னு கொஞ்சி குலாவியது. பிங்காரிமேல் மோகம் தீராத சிங்காரம் அந்த ஆசை என்னவென்று சொல்லு.அதை உடனே நிறைவேத்துறேன் என்றது.
இந்த ஒலகத்த ஒரு தடவ சுத்தி பார்க்கனும் மாமா, அதுதான் என்
ஆசை மாமான்னு சொல்லுச்சு,…
சிங்காரமும் பிங்காரியும் ஒலகத்த சுத்தி பாக்க போற விசயம் சிங்காரத்தின் பொண்டாட்டி சிங்காரி காக்காவுக்கு தெரிஞ்சது. .உடனே, சிங்காரி, சிங்காரத்திடமும், பிங்காரியிடம், என்னையும் சேத்து கூட்டிட்டு போங்க ஒலகத்த சுத்தி பாத்ததிலாவுது நான் கால்த்த ஓட்டிடுறேன் என்று கெஞ்சி கூத்தாடி கேட்டுக் கொண்டது. சிங்காரம் பிங்காரிய பார்க்க, பிங்காரி வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்டது.
நல்ல நாளில். சிங்காரம்காக்கா, சிங்காரியை முதுகிலும் பிங்காரியை வாயிலும் கவ்விய படி ஒலகத்த சுத்திப்பாக்க கிளம்பியது. ஒலகத்த சுத்திக் கொண்டு மகாசமுத்திரத்தின் மேல் பறந்து கொண்டு வந்தபொழுது.
சிங்காரி காக்கா, நான் அப்படி இருந்தேன். இப்படி இருந்தேன் என்று முன்பு இருந்ததை சிங்காரத்திடம் சொல்லியது. சிங்காரம் காக்காவோ.. சிங்காரியை வாயில் வைத்திருந்ததால் பதில் எதுவும் சொல்லாமல் வெறுமனமே ம்ம்ம…………… ம்ம்ம்……………. ம்ம்ம்…….என்றே சொல்லி வந்தது.இதைப் பொறுக்காத பிங்காரி காக்கா“ஆமான்னு தான் சொல்லு மாமா”ன்னு சொல்லியது. பிங்காரியின்னு சொல்லுக்கு மறு பேச்சு சொல்லாத சிங்காரம் காக்கா , வாய தெறந்து “ஆமான்னு ”சொன்னுதான் தாமதம்… சிங்காரத்தின் வாயிலிருந்து நழுவி மகா சமுத்திரத்தில் விழுந்தது பிங்காரிகாக்கா .. வைப்பாட்டிய இழந்த சிங்கார காக்கா சிங்காரியிடமே மீதி வாழ்நாளை கழித்து வந்தது.
இந்த கதை பட்சி களுக்கு மட்டுமே உரித்தானது. மனிதர்களுக்கு அல்ல.
நீதி–பட்சி சாதி நீங்க. எங்க பகுத்தறியாவதவர்களை பார்க்காதீங்க……..
29. திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதினால் குடல் தள்ளிப் போனதாக உதார்விட்ட சொரக்கட்டை...........
முன்னுரை….. ஆதிக்கசாதி சாதி வெறிக் கூட்டம் என்ன செய்யும் தனக்கு கீழ் உள்ள சாதிகளை அடக்கி ஒடுக்குவதோடு. தன்சொந்த
சாதியைச்சேர்ந்த வறியவர்களையும் ஆதிக்க சாதிவெறியுடனே அடக்கி ஒடுக்கி ஆண்டுவரும்
அந்த ஆதிக்கசாதிவெறி கூட்டம் மாதிரியே, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிக்குள்ளும் இருக்கும் சாதிவெறி.ஆதிக்க
கூட்டமும் தனக்கு கீழ் உள்ள சாதியையும் தன் சாதியைச் சேர்ந்த வறியவர்களையும் அடக்கி ஒடுக்கி தன்னை
மேலானவாக காட்டிக் கொள்ளும்.ஆனால் இந்தக் கூட்டம் தனக்கு மேல் ஆதிக்கம் செய்யும் கூட்டத்தை மயிரளவுக்குக்
கூட எதிர்த்தது கிடையாது. அவர்களின் காலை நக்கும். நக்குவதற்கு வாய்ப்பு இல்லையென்றால் வலியச் சென்று
பல்ளிலிக்கும் ரெம்ப ஒட்டி உறவாடும். உதாரணமாக சொல்வதென்றால். தருமபுரியில் நடந்த நிகழ்ச்சிக்குப்பின் திருகுமாவளவன் ராமதாசுவிடம் பவ்வியமாக நடந்து
கொளவது மாதிரி……………
திருகுமாவளவன் சாதியைச் சேர்ந்த ஒரு கூட்டம், சிறுசுகளைத்தவிர ஆண்பெண்களைச் சேர்த்து அறுபது பேர் கொண்ட உறவினர்,மற்றும் குடும்ப உறுப்பினர்களை கொண்ட கூட்டம் ஒன்று., எட்டு பேர் கொண்ட ஒருகூட்டு குடும்பத்தை பல தொல்லைகளக்கு ஆளாக்கி தன்னுடைய ஆதிக்கத்தை நிறுவிக் கொண்டு வருகிறது.. ஆனால் இந்த அறுபது பேர் கொண்ட கூட்டம், அதே தெருவில் வசிக்கும் ஒரே ஒருஆதிக்க சாதியைச் சேர்ந்தவரைக்கண்டு, வாய்பொத்தி.மெய்பொத்தி எது நடந்தாலும் தெரியாதமாதிரி நடித்துக் கொண்டு கூலைக் கும்பிடு போடுகிறது.
ஒரே தெருவில் ஒரே சாதியாக வசித்து வரும் அந்தக் கூட்டத்தின் ஆட்டம் பாட்டம் அதிகாரம் அந்த தெருவுக்குள்
மட்டும்தான். வெளியில் , வேறு தெருக்களில் மூச்சு விடுவதுக்கூட தெரியாது.
பல குடும்ப உறுப்பினர்களை கொண்ட அறுபது பேர் கொண்ட கூட்டம் அவர்களுக்கு நெருங்கிய உறவு கொண்ட, ஒரு
குடும்பத்துக்கு எண்ணிலடங்கா தொந்தரவு கொடுத்து சின்னபின்னமாக்கியது அந்த ஒரு குடும்பத் தலைவர் மாடு வளர்த்து பால் கறந்து வளர்ந்து வருவதை பிடிக்காமல், அந்த அறுபது பேர் கொண்ட கூட்டம், மாட்டு சானம் வீசுது, மாடு வளர்ப்பதால் கொசு கடி தாங்கமுடியவில்லை, மாட்டுத்தண்ணி என் விட்டுக்கு வருது என்று இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி அடிதடி சண்டையிட்டு போலீஸ் ஸ்டேசன் புகாரில் அறுபதுபேரும் கையெழுத்து
போட்டு அவரை தொழில் செய்து வாழ விடாமல் செய்து விட்டார்கள்.
அறுபது பேர்களை எதிர்க்க முடியாத அவர் தன் வீட்டையும் மாட்டையும் உசிலம்பட்டி வகையாறாவைச் சேர்ந்த ஒரு
ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவருக்கு அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு செத்துப்ப்போனார்.அதை வாங்கிய ஆதிக்கச்சாதிக்காரோ வித்தவரின் மாட்டுத் தொழுவத்திலே தன் மாட்டையும் கட்டி மாட்டுத் தொளுவமாக்கினார். வித்தவர் மாட்டைவிட வாங்கியவர் மாடு தண்ணீராக கழியும் ஒவ்வொரு வீட்டின் முன்னும் பேளும் மூத்திரம் கழியும். பாதையில் படுத்துக்கொண்டு நகராமல் சண்டித்தனம் செய்யும். இரவு வேளையில் ஒவ்வொரு விட்டுக்குள்ளும் புகும்.
இன்னொரு ஆதிக்க சாதி வாரிசாக காட்டிக் கொள்ளும் அந்த அறுபது பேர் கொண்ட கூட்டம் சிறிய மூச்சுகூட
விடுவது கிடையாது. ஆதிக்கசாதிக்காரரிடம் யாராவது ஒருத்தர் பவ்வியமாக சொன்னால் என்னாங்கடா……….. ன்னுதான கேட்பார் அடுத்து அறுபதுபேர் கூட்டம் ஒன்னுமில்ல ஒன்னுமில்ல என்று மழுப்புவார்கள் பிறகு அதப் பத்தி மூச்சே விடமாட்டார்கள்…….
ஒரு ஞாயத்துக்காககூட அவரை எதிர்த்துப்பேச துப்பில்லாத முதுகெலும்பு இல்லாத அறுபது பேர் கூட்டம் ஒரே சாதியைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை ஆதிக்கம் செய்து வீரத்தை காட்டிக் கொண்டு இருக்கிறது. எட்டு பேர்கள் கொண்ட குடும்பத்தலைவரோ தெருவைவிட்டு ஓடிப்போகாமல் இடத்தை அடிமாட்டு விலைக்கு விற்காமல் திருகுமாவளவனின் கூட்டம் கொடுக்கும் இம்சைகளுக்கு-இன்னல்களுக்கு வருத்தப்பட்டு சோர்ந்து போகாமல் களத்திலே நின்று அந்தக் கூட்டத்தை எதிர்த்து நேர்மையான வழியிலே போராடிக்கொண்டு வருகிறார்.
ஆதிக்கசாதி வெறியர்கள் தன்சாதி வறியவர்களிடமும் தனக்கு கீழுள்ள சாதிகளிடம் சாதிவெறிகாட்டி தனக்கு மேல் மற்றவர்களை வளரவிடாமல் தடுப்பது மாதிரி, தாழ்த்தப்பட்ட சாதிக்குள்ளும் சாதிவெறி, அடக்கி ஒடுக்கும் வெறித்தனமும் இருப்பதும், மேல் சாதிகளை சேர்ந்தவர் ஒருவர் எவ்வளவுதான் தார்க்குச்சியை. கொண்டு குத்தினாலும்
பெரிசு படுத்தாமல் பொய்யாக மற்றவர்களிடம் தன்வீர பராமக்கித்தை புளுகி தள்ளும் திருகுமாவளவனின் கூட்டத்தை அம்பலப்படுத்த்தான் இந்த“ .திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதால் குடல் தள்ளிப் போனதாக உதார்விட்ட சொரக்கட்டை கதை” சொரக்கட்டை என்பது அது ஒரு வகையான தவளை…திருகுமாவளவனின்கட்சிக் கொள்கையைப் போல
தொடரும்.—
30. திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதினால் குடல் தள்ளிப் போனதாக உதார்விட்ட சொரக்கட்டை...... கதை..
சொரக்கட்டை ஒன்று, பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு செல்வதற்க்காக, தன் பொண்டாட்டி சொரக்கட்டையிடம்…….
அடியே. அடியே…….. நான் திருவிழாவுக்கு போயிட்டு வர்ரேன்டி.. எனக்கு சோறு கட்டி கொடுடீன்னு சொல்லிட்டு சோத்து பொட்டலத்துடன் திருவழாவுக்கு புறப்பட்டு சென்றது சொரக்கட்டை…….
சொரக்கட்டை போகும்போது. வழியில் சரியான மழை, மழையானமழை, பேஞ்சு ஊத்திபிடுச்சு.. ஊத்தி. மழையில் நணைந்த சொரக்கட்டைஒதுங்குவதற்கு வழியில்லாமல், மாட்டு வண்டி செல்லும் வழிதடத்துப்பாதையில் அதாவது மாட்டுவண்டிப்பாதையிலுள்ள மணலில் புதைந்துகொண்டு இளப்பாறியது.
ஒருவழியாக மழையும் நின்றுவிட்டது. மழை விட்டதும் அந்த வழியாகவந்த மாட்டு வண்டி ஒன்று வந்தது. மாடு
களின் கால்களுக்குள் சிக்கி மிதிபடாமல் தப்பித்த தவளை, மாட்டு வண்டியின் சக்கரத்துக்கு தப்பிக்க முடியாமல்
வண்டி சக்கரம் ஏறி குடல் தள்ளிப்போயி கிடந்தது
அந்த நேரம் உணவுக்காக அலைந்து திரிந்த கொக்கு ஒன்று குடல் தள்ளிப் போயி கிடந்த தவளையைக் கண்டு அதன் அருகில் வந்தது.
கொக்கு அருகில் வந்ததை, கண்ட குடல் தள்ளிப்போயி கிடந்த சொரக்கட்டைஅண்ணா, கொக்கு அண்ணா……………
மன்னர் திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேலே கையைப் போட்டேன்.மன்னர் அம்பால குத்தியதால்
குடல் தள்ளிப்போயி கிடக்கிறேன்.அண்ணா, என்னய ஒன்னும் செஞ்சிறாதிங்க அண்ணா……….. எனக்கு ஒரு உதவிமட்டும் செய்யுங்கண்ணாஎன்று கேட்டது சொரக்கட்டை,கொக்கும், மன்னர் பொண்டாட்டி மேல கையப்போட்ட சொரக்கட்டய பெருமையாகவும் கொஞ்சம் பயந்தும் இருந்ததை காட்டிக்கொள்ளாமல்
என்ன, உதவிப் பன்ன்னுமுன்னு கேட்டுச்சு…………….
மாட்டுவண்டி சக்கரம் ஏறி குடல் தள்ளிப்போயி கிடப்பதை மறைச்சு..“ திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல கையைப் போட்டதால் மன்னர் அம்பால குத்தி குடல் தள்ளிப்போயி கிடக்குறேன்னு, என் பொண்டாட்டிகிட்ட சொல்லி என்னய பார்க்க வரச் சொல்லுங்கண்ணா…. என்றது.
கொக்கும் பறந்து போயி சொரக்கட்டையின் பொண்டாட்டிகிட்டே, இப்படி சொல்லியது. “ ஓம் புருஷன் திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல கையை போட்டதால…. மன்னர் அம்பால குத்த்துப்பட்டு குடல் தள்ளிப்போயி கிடக்காரும்மா”………..
ஒன்னையும் ஒங்க கூட்டத்தையும் பார்க்க வரச்சொன்னாரும்மா………… என்றது கொக்கு.
மாட்டு வண்டி சக்கரம் ஏறி குடல் தள்ளிப்போனதை மறைச்சு ரெம்ப பெருமையாக திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல கையைப் போட்டதால குடல் தள்ளிப்போனதாக உதார்விட்ட சொரக்கட்டை போல்தானுங்க,…….. ஆதிக்கச்சாதி வெறிப்பிடித்தலையும் கூட்டம் நாங்க ஆண்ட பரம்பரை என்று உதார் விடுவதும், அடக்கப்பட்ட. ஒடுக்கப்பட்ட. திருகுமாவளவன் போன்ற சாதிக்காரர்கள். ஆதிக்கச்சாதிவெறிக் கூட்டத்த எதிர்க்க துப்பின்றி….. நாங்களும் ஆண்ட பரம்பரை. ஆளும் பரம்பரை என்று சொரக்கட்டை மாதிரி உதார் விடுவதும், தன்க்கு கீழ் உள்ள சாதிக்காரர்களையும்.
ஒரே சாதியிலுள்ள வரியவர்களையும் அடக்கி ஒடுக்கி எல்லா சாதிக்காரர்களும் இந்த சொரக்கட்டை மாதிரிதான் உதார்
விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
31. நானில்லாமல் நீ(ங்க)யில்லை....
ஒரு ஊரில் கோழி ஒன்று இருந்தது.ஒரு நாள் அந்தக் கோழியானது முதன்முதலாக ஒரு முட்டை ஒன்றை இட்டது. சிறிது நேரத்தில் கோழியிலிருந்து வெளி வந்த முட்டையானது. கோழியைப்பார்த்து“ நானில்லாமல் நீயில்லை” என்றது.கோழிக்கு பொசுக்கென்று கோபம் வந்தது “என்னாது நீயில்லாமல் நான் இல்லையா?.” அட,“ பாதகத்த முட்டையே, கொஞ்ச நேரத்துல நான்தானே உன்னையே இட்டேன.,” அதனால, “நானில்லாம நீயில்ல அத மொதல்ல புரிஞ்சுக்கோ” –என்றது. கோழி சொன்னதைக் கேட்டதும் முட்டைக்கும் கோபம் வந்தது, நான் சொன்னதை எனக்கே சொல்றியா? “நான் இல்லாம நீ வந்திருக்கவே மாட்டேயே”. சும்மா, குப்பைய கிளறாதே” என்றது முட்டை.
“ நான் குப்பைய கிளறலேன்னா.”.? நீ முட்டையாக வந்திருக்கவே மாட்ட- கோழி.
இப்படியாக, கோழியும் முட்டையும் மாற மாறி தர்க்கமசெய்து இருந்தனஇருட்டு நேரம் நெருங்கியவுடன், சேவல் ஒன்று
அடைவதற்க்காக வந்தது கோழியும் முட்டையும் வாக்குவாதம் செய்து கொண்டு இருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்தது.
“கோழியிலிருந்துதானே முட்டை வரும், அத..கூமுட்டைக்கு சொல்லு”என்றது கோழி
அதெப்படி, “முட்டையிலிருந்துதானே கோழி வருமுன்னு,கூறுகெட்ட கோழிகிட்ட சொல்லு”, என்றது முட்டை
கோழியும் முட்டையும் சொன்னதைக்கேட்ட சேவல்,“ கெக்கக்க்கே.. கெக்கக்க்கே…. சிரித்த்து. கோழியும்.முட்டையும் சேவல் சிரிப்பதை பார்த்து,“நீ என்னத்துக்கு இப்படி வாயப் பொளந்து இந்த சத்தம் போடுறே.. எனறது.
அதுக்கு ,சேவல் சொல்லுச்சு, அடகூமுட்டை, அடகூறுகெட்ட கோழியெ நீங்க ரெண்டு பேருமே சொல்றது தப்பு….. நானில்லாமல் கூமுட்டையும் வந்திருக்காது. அந்தக்கூமுட்டைய கூறுகெட்ட கோழியும் போட்டுயிருக்க முடியாது . அதனால… “நானில்லாமல் நீங்கயில்லை“ இல்லேன்னு ஒரே போடா போட்டு மீண்டும்..கெக்கக்..கக்கே……….கெக்கக்..கக்கே என்று கத்தியது
அட,நாசமா போறவனே என்று கோழி கத்தி திட்டியது
முட்டையோ, இத ஒருக்காலும் ஒத்துக்க மாட்டேன்னு அங்குமிங்கும் உருண்டது.
சேவல்,கோழி,முட்டை மூவரின் சத்த்த்தைக்கேட்ட நாயோன்று அங்கே என்ன சத்தம் என்றவாறு பதிலுக்கு ஊளையிட்டது
இப்படித்தானப்பா….. கூமுட்டைகளும் கூறுகெட்டதுகளும் நாசமா போறததுகளும் நக்கி பிழைப்பதுகளும், காச்சுமூச்சுன்னு கத்திகிட்டும் ஊளையிட்டு இருக்குதுங்க……………….
32. பின்னாலே மீசை வச்சவரு................. சிறுகதை..
பஸ்ஸை விட்டு இறங்கியதும் மண்ணுமுட்டிக்கு தெக்கு வடக்கு எதுவும் தெரியவில்லை. சிறிது நேரம் சூரியனையும் தரையையும் பார்த்தான் ஒன்னும் திசை தெரிகிறமாதிரி தெரியவில்லை.
இருக்கி கட்டிய வேட்டியை அவிழ்த்து திரும்பவும் கட்டிக்கொண்டான். வேட்டியின் முனையில் கட்டி இடுப்பில் சொருகியிருந்த தாளை எடுத்து காற்றில் பறக்கா வண்ணம்பிடித்துக்கொண்டு,ஒவ்வொரு கடையாக, கடையில் நிற்கும் ஒவ்வொரு மனிதராக பார்த்துக்கொண்டே வந்தான்.
நகரத்தைப்பற்றி நரகத்தில் இயங்கும் மனிதர்களைப்பற்றி அவன் புரிந்து கொண்டது இது.“ பொல்லாப் பயல்க…, கொஞ்சம் அசந்தா கோவணத்தை உருவி, அந்தக் கொவணத்தையே அம்மணமாக்குற பயல்க…… நரகத்து சனங்களிடம் எச்சரிக்கையாக………… இருப்பதற்க்காக……. பார்ப்பதற்கு சுமராகவும் பேசும்போது அமைதியாக கேட்டு பதில் சொல்பவராக இருப்பவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று கிராமத்து பெரியவர்கள் சொன்னதை நிணைத்துக கொண்டே ……… வந்தான்.
அவன் நிணைத்ததுபோல் மாட்டுத்தீவணம் விற்கும் கடையில் ஒருவர். அவரிடம் அருகில் சென்று கையெடுத்து கும்பிட்டு துண்டுச் சீட்டை நீட்டி வழி கேட்டான்.
அவர்,அந்த சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு எந்த ஊருன்னு கேட்டார்.
“ இவன் தன் ஊரைச் சொன்னான்”..
”இவன் பெயரைக்கேட்டார்”.
இவன் தன் பெயரைச் சொன்னான். “என்பேரு மண்ணுமுட்டிங்க”!
“ஒங்கப்பேரு என்னங்க”? அவர் பெயரைக்கேட்டான்.
“ புன்னாக்கு ” என்று சொன்னதும் நல்லதுங்க- என்றபடி தலையாட்டினான்.
“ புன்னாக்குகாரர் , வழியைச் சொன்னார்.
வடக்குப்பக்கம் கையை காட்டி,“அந்தா……….அங்க…தலயில உருமா கட்டி நாற்காலியில ஒக்காந்து இருக்காருல…………..
“ஆமா, ஒக்காந்து இருக்காரு……..
அவருக்கு பின்னால,மீசை வச்சவரு இருப்பாரு…..அவர்கிட்ட இந்த சீட்ட காண்பிங்க……….அவருதான் சீட்டுல குறிப்பிடப்பட்டதுக்கு சொந்தக்காரரு..ஃ
“நல்லதுங்க, அப்படியே! செய்றேன்ங்க”
தலையில் உருமா கட்டியவரை நோக்கி வந்தான். அவருக்கு அருகில் வந்ததும் சற்று தயங்கி உருமாகாரர்க்கு பின்னால் பார்த்தான் பின்னால் மீசை வச்சவரை காணவில்லை. வழி சொன்ன புண்ணாக்குவைப் பார்த்தான். புன்னாக்கு அங்கு இல்லை.
சிறிது நேர தயக்கத்துக்குப்பின் தலையில் உருமா கட்டியவரிடம் கேட்டான். அய்யா……ஒங்களுக்குப்பின்னால மீசை வச்சவரு இருந்தாரே அவரு……….. என்று இழுத்தான்.
உருமா,இவரைப் பார்க்காமல் பேசா…மடைந்தையாக இருந்தார்.
மண்ணுமுட்டி. திரும்பவும் முயற்சித்தான்.” அய்யா,ஒங்களுக்கு பின்னாடி மீசை வச்சவரு……………”
அப்போதும்,உருமா பேசாமல் அமைதி காத்தார்.
சுற்றும் முற்றும் பார்த்த மண்ணாங்கட்டி, “ அய்யா………. ஒங்களுக்கு பின்னால மீசை வச்சவரு இருந்தாருல, அவரு எங்கங்கய்யா……உரத்தக் குரலில் கேட்டதுதான்.
உருமா, கோபம் கொண்டது. “யோவ், ஒனக்கு அரிவு இறக்கா,எவனாவது பின்னால மீசை வப்பானா…………மீசை என்னா பின்னாலியா மொழைக்கும் அவனவன் முன்னால மொளைக்குற மீசையை வலுச்சுவிட்டுட்டு மழுக்குன்னு திரியுறானுங்க………………… இந்த லட்சனத்துல நீ………..வேற ,பின்னால மீசை வச்சவன கேட்க வந்துட்ட………
மண்ணுமுட்டியால் பேசமுடியவில்லை…
33. ஏமாந்த போலீஸ் உதவி ஆணையரின் ரைட்டரும், ஏமாற்றிய போலீஸ் உதவி ஆணையரும்
மதுரை திடீர் நகர காவல் சரகத்தில் போலீஸ் உதவி ஆணையாளராக பணிபுரிந்தவர் பேச்சிமுத்து பாண்டியன். அவரிடம் ரைட்டராக பணிபுரிந்தவர் ஏட்டு முகம்மது அம்ஜத்.
போலீஸ் ஏட்டு அம்ஜத் தன் மகனுக்கு சென்னையில் உள்ள தனியார் பல்கலை கழகத்தில் பி.டெக் படிப்பதற்கு சீட் வாங்கி கொடுப்பதற்க்காக தன் மேலதிகாரியான போலீஸ் உதவி ஆணையாளரை அணுகியிருக்கிறார்.
போலீஸ் உதவி ஆணையாளரோ, தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் செல்வம் என்பவர் மூலம் ஏற்ப்பாடு செய்வதாகவும், அதற்கு
7 லட்சம் செலவாகும் என்றும் முன்பணமாக தன்னிடம் ரூ50 ஆயிரத்தையும் மீதியை செல்வத்தின் வங்கி கணக்கில் செலுத்துமாறும் கூறி செல்வத்தின் வங்கி கணக்கையும் கொடுத்துள்ளார்.
உதவி ஆணையாளரின் எல்லைக்குள்ள போலீஸ நிலையத்தின் பிரச்சனை மற்றும் வழக்குகளையெல்லாம் தீர்த்து வைக்கும் பணிகளை கூடவே இருந்து பணி புரிந்து வந்த ரைட்டர்அம்ஜத்
தன் மகனக்கு பி.டெக் சீட் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் உண்மை நிலையை அறியாமல் ரூ50 ஆயிரத்தை போலீஸ் உதவி ஆணையாளர் பேச்சிமுத்து பாண்டியனிடம் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை செல்வத்தின் வங்கிக் கணக்கில் செலுத்த முயன்ற போது.
முதல்வரின் தனிப்பிரிவு செல்வத்தின் வங்கிக் கணக்கும் போலீஸ் உதவி ஆணையரின் வங்கிக் கணக்கும் ஒரே எண்ணாக இருந்ததை, போலீஸ் உதவி ஆணையரிடம் ரைட்டராக பணி புரிந்து குப்பை கொட்டிய அம்ஜத்துக்கு அப்போதுதான் லேசாக பொறி தட்டியது.. ஆகா… தான் சேவகம் புரிந்த போலீஸ் அதிகாரியே தன்னை ஏமாற்றியது அவருக்கு தெரிந்தது.
யானை வாய்க்குள் போன பழாப்பழம் திரும்ப கிடைக்கவா போகிறது. என்ற அனுபவம் இருந்தாலும் ,ரைட்டர் அம்ஜத் தன் அதிகாரிதானே என்ற மிதப்பில் தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.
முன்பெல்லாம் வாங்கிய பணத்துக்கு வஞ்சகம்இல்லாமல் வேலையை செய்து முடிக்கும் நேர்மை ஓழிந்து போய் , வாங்கிய லஞ்சப் பணத்தையே க்வா செய்யும் திறமை அதிகரித்து விட்ட காரணத்தால்…
போலீஸ் உதவி ஆணையாளரும். தன் பங்க்குக்கு, மகா ஜனங்களிடம் பேசும் முறையில், எல்லா ஏற்ப்பாடும் செய்துவிட்டேன். பணத்தை திருப்பி தர முடியாது. பேசியபடி மீதிப் பணத்தை செட்டில் செய்து விடும்படியும். தன் ரைட்டரையே,ஏமாற்றினால் நடப்பதே வேறு என்று மிரட்டியுள்ளார்.
போலீஸ் ரைட்டரோ, ஒரு முறை ஏமாந்ததே போதுமய்யா, இனியும் ஏமாற மாட்டேன் என்று போலீஸ் உதவி ஆணையாளர் மீது மதுரை போலீஸ் கமிஷனர், தென் மண்ட ஐ.ஜி , டி.ஜி.பி. என ஒவ்வொருக்கும் புகார் மனு கொடுத்தார். அவர்களும் உதவி ஆணையர் வருங்கால போலீஸ் உயர் அதிகாரி என்ற பார்வையாலும் அதிகாரி என்ற பாசத்தாலும் நாளைக்கு நமக்கும் பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்ற ரீதியில் பகைத்து கொள்ள விரும்பததால் ரைட்டர் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. சோர்வடையாத ஏட்டு அம்ஜத். கடைசியாக வாய்ப்பாக மதுரை உயர்நீதி மன்றத்தை அணுகி வழக்கை தாக்கல் செய்துள்ளார். மதுரை உயர் நீதீ மன்றமும். இதென்னடா . வில்லங்கமா இரக்குன்னு நெனச்சு, அந்த அதிகாரிக்கு மனு கொடு, இந்த அதிகாரிக்கு மனு கொடுன்னு ஏட்டு அம்ஜத்தை சுத்த வைக்க முடியாமல்… ரைட்டர் ஏல்லாவற்றையும் மனு கொடுத்து சுற்றி வந்துள்ளதால். வேறு வழியின்றி கழித்து கட்ட முடியாததால்லும் அதிகாரிகளை பகைத்து கொள்ள விரும்பததாலும் மதுரை உயர்மன்ற நீதிபதி வாசுகி அம்மையார். கழுத்தை சுற்றி மூக்கை தொடும் கதையாக, போலீஸ் ஏட்டுவான ரைட்டரின் மனுவை விசாரித்து…
உதவி ஆணையரின் சரகத்துக்குள்ள எஸ்.எஸ் காலனி போலீஸ நிலைய ஆய்வாளரிடம் வழக்கை தள்ளிவிட்ட்டார். ஒரு மாத்தத்துக்குள்ன்னு சொல்லாமல் நாலு வாரத்துக்குள் விசாரித்து முடித்து. அதன் முடிவைப் பொறுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இதையே, போலீஸ் ரைட்டர் போலீஸ் உயர் ஆணையாளரை ஏமாற்றி இருந்து வாங்கிய பணத்தை மொங்கா போட்டு இருந்தால் உடனே அனைத்து மட்டத்திலும் நடவடிக்கையே வேறு மாதிரியாக இருந்திருக்கும் புதுப்புது கண்டுபிடிப்பகளை புகுத்தி பரப்பரபாக்கி சட்டம் தன் கடமையை செய்திருக்கும்.ஏமாந்தது ஏட்டு அம்ஜத் ஆச்சே……..
இந்த விபரங்களை தினத்தந்தியிலும் தினகரனிலும் படித்த மகா ஜனங்கள் சூடான டீத்தண்ணிய மடக்மடகென வேகமாக குடித்துவிட்டு மிக ஆவலாக படித்தனர். இத்தகைய அரும் பெரும் விபரங்கள் அய் கிளாஸ் பத்திரிக்கையான தினமணியில் வரவே இல்லை. தினமணியின் வாடிக்கையாளர்கள் இந்த லோ கிளாஸ் செய்திகள் எல்லாம் திணமணியில வாரதுப்பா அவுக எல்லாம் அய் கிளாஸ்ப்பா என்றார்கள்
ஓவர்………… ஓவர்………..
குறிப்பு……ஒவர் என்பதை முடிந்தது என்றும், ரெம்ப ஓவராகீது என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்……..ஓவர்.
34. பன்றிகளின் கூச்சல் கூக்குரலினால் சலனமற்றுப்போன மரங்கள்..... உருவகக் கதை..
மனிதர்களை தவிர்த்து மற்ற எல்லா விதமான விஷஜந்துகள் நிறைந்த காடு அது. அந்தக் காட்டிலே. சிறிய உருவமான கொசுவிலிருந்து பெரிய உருவமான யானை வரை அதிகாரம் செய்வதில் பஞ்சமே இருந்ததில்லை.தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அந்தக் காட்டில் ஒரே கூச்சலும் குழப்பமுமாய் இருந்தது. அந்த காடு தோன்றியதிலிருந்து அமைதியாக இருந்ததாக வரலாறே கிடையாது.அப்பேர்பட்ட பெருமையுடைத்த கூச்சலும் கூக்குரலும் குழப்பமும் உள்ள அந்தக் காட்டில் வாழும் பன்றிகூட்டத்திலுள்ள ஒரு பன்னிக்கு கல்யாண ஆசை ஊற்றேடுக்க.. அந்தப் பன்னிக்கு ஏற்ற ஜோடி பார்க்கப்பட்டது.பன்னியின் கல்யாண நாளைப் பற்றி கூச்சலிட்ட பன்னிகள்,தீடிரென்று வேறு ஒரு பிரச்சனையில் கூச்சலிட்டன. அந்தக் கூச்சலுக்கு காரணகர்த்தாவான பன்னியின் கூட்டாளி குள்ள நரி ஒனறு. கல்யாணத்துக்கு முந்தி பன்னியின் ஜோடி முகத்தை ஒருவாட்டி பார்த்த பிறகுதான். நான் மாப்பிள்ளை பன்னிக்குதோழனாக இருப்பேன்.னு சொல்லிச்சு…….
உடனே, பன்னியின் குடும்ப தலைவராக இருக்கும் இன்னொரு பன்னி கூக்குரலும்,கூச்சலுமாய் இருந்த நேரத்திலும் புதிய ஜோடி பன்னியை காட்டும் முடிவை காட்டிலுள்ள ஆட்சி மன்ற குழு முடிவு செய்யும் என்று அறிவித்தது.
பன்றியின் கூட்டாளி குள்ளநரியும்,மற்றும் காட்டிலுள்ள மற்ற விஷஜந்துகளும் தனித்தனியாக கூட்டம் அமைத்து கூச்சலும் கூக்குரலும் குழப்பமாய் ஓலமிட்டன. காடும்,காட்டிலுள்ள மரங்களும் இந்த பன்னிமற்றும் விஷஜந்துகளின் கூச்சல் குழப்பங்களை கண்டு அசராமல் எனக்கென்ன என்று சலனமற்று இருந்தன.
நகைச்சுவை,அரசியல்,சமூகம்,அனுபவம்,சிறுகதை,பொது,செய்திகள்,உருவகக்கதை,
35. வலிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்....
15வது ஆண்டைக்கடந்து 16 வது ஆண்டில் மெதுவாக அடி எடுத்து வைக்கும் என் வீட்டு வழக்குக்காக மாவட்ட கோர்ட்டுக்கு சென்றால் என்வழக்கை விசாரிக்கும் கோர்ட்டு அறைக்கதவு பெரிய பூட்டால் பூட்டியிருந்த்து வாய்தா தேதிக்கு அரிய வழியில்லாமல்…. பஸ்பிடித்து இறங்கவேண்டிய நிறுத்தத்தில் இறங்கி நடந்து வரும்போது,
டீக்கடையில் நின்ற ஒருவர் என்பெயரைச்சொல்லி அழைப்பது எனக்கு கேட்காததால்,கைளை தட்டி அழைத்தவாறு என் அருகில் வந்து என்னுடனே நடந்து வந்தார்.
அவர் வாய்க்குள் ஒன்றை மென்றவாறே,நான் போய்வரும் விபரத்தை கேடக, வீட்டுப்பிரச்சனை,கோர்ட்டு பிரச்சனை,என்வீட்டை சுற்றியுள்ள இம்சை அரசன் அரசிகளின் பிரச்சினையை சொல்ல,…….
அதுக்கு அவரும்.அவரு வீட்டுப்பிரச்சனை,கூடவே நாட்டுப்பிரச்சனையை சொல்ல,இருவரும் பேசிக்கொண்டே நடந்து செல்ல……
அவர் தின்று கொண்டுயிருந்த மசால்கடலைபொட்டலத்தை நீட்ட. நான் வேண்டாம் மறுக்க, இப்படியாக மூன்று தடவை அவர்நீட்ட,நான் மறுக்க,
கடைசியாக, அவர் கொஞசுன்னு தின்னுப்பா…….. என்று நாலஞ்சு கடலையை கையில் திணிக்க, பேச்சு பேச்சா இருந்ததினால், மறுத்ததை மறந்து கைகைளில் வைத்ததை. பார்க்காமல் வாயில் போட்டு மெல்ல………..
கடுக்கென்று சத்தம் அவருக்கு கேட்க, மசால்கடலைக்குள் கல்லா, பாத்து தின்னக்கூடாதுன்னு பதற……………
மசால் கடலை உருவில் கல்லாக, எனக்கு தொடர்ந்த இம்சை, என்வலது பக்க மேல கடவாய்பற்களில் ரெண்டு பிளாப்பாகிவிட்டது. மசால்கடலை கொடுத்தவர் என்னை சமாதனம் படுத்த, ஒன்னுமில்லேன்னு அவர சமாதனப்படுத்தி அனுப்பி வச்சு வீட்டுக்கு வந்தால் என்னால் பற்களில் வலியை தாங்க முடியவில்லை, எப்பாடா? சாயந்தரமாகுமுன்னு காத்திருந்து பக்கதில் உள்ள பல் கிளினிக்கு சென்றால் ,டாக்டரு வர
நேரமாகும் என்று சொன்னார்கள்.
சற்று தூரத்திலுள்ள அமெரிக்கவில் படிச்ச டாகடரின் கிளினிக் சென்றால்
அவரு என்பற்களில் நிலமையை ஒலி-ஒளியாக காட்டி பற்களை புடுங்க வேண்டாம் வேர் சிகிச்சை செய்தால் பற்களை காப்பாத்தி விடலாம் என்றார்.
பல்வலியில் என்னால் எதுவும் பேசாமல் வலியை நிறுத்துவதற்க்காக டாக்டர் பேசிய 6000-ல் ஆயிரத்தைக் குறைத்து, வேறு வேலைக்காக என்மறுமகன் வைத்திருந்த 2000த்தை கொடுத்து மீதியை அடுத்த சிகிச்சையின் போது கொடுப்பதாக பேசி வேர்சிகிச்சை செய்யப்பட்டது.
வேர் சிகிச்சையின்போது பல்வலியோடு,பல்கூச்சமும் சேர்ந்து என்னை படாய் படுத்திவிட்டது.
ஆங்கில மருந்தே சாப்பிடாத எனக்கு டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரகளை சாப்பிட்டதால் வாய்புராவும் கொப்பளித்து புண்ணாக வெடித்து விட்டது. அடுத்த வேர் கிசிச்சையும் செய்யமுடியாமல் போய்விட்டது.
தலவலி,காதுவலி,கண்வலி,தாடைவலி,வயித்துவலி,பல்வலி, முதுகுவலி, கைகால்வலி, எலும்புவலி இப்படி எத்தனையோ வலிகள் இந்த உடம்புக்குள்ளே………
இப்படிபட்ட வலிகளை அனுபவிச்சாத்தான்…….. வலிகள்
பலவிதம்.அவைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று புரியவரும்.
36. இறையச்சம் கொண்ட மக்கள்........
ஒரு ஊருக்கு ஒரு சாமியார் அவரது சீடர்களுடன் வந்தார். அந்த ஊருக்க வெளியே உள்ள தென்னந்தோப்பில் டேரா போட்டார். காலையில் தியாணமும் உடற்பயிற்சியும் மாலையில் அவ்வூர் மக்களுக்கு ஞான உபதேசமும் ஆசீர்வாதமும் செய்து வந்தார்.மாலையில் நடந்த உபதேசத்தில், கோபத்தைப்போலவே அச்சத்துக்கும் நாம் பயப்படவேண்டும் என்று ஊர் மக்களுக்கு அருள் பாவித்தார். நம்மைப் படைத்து பரிபாலித்து காக்கும் கடவுளுக்கு மட்டும் பயந்தால் போதுமானது என்றார். கடவுளுக்கு பயப்படாமல் போனதால்தான் நாட்டில் வன்முறையும் சீர்குலைவும் தலைவிரித்தாடுகிறது என்றார்.
சாமியாரின் கூட்டத்தில் அமர்திருந்த அவ்வூர் மக்களில் பலர்
“சாமி, நீங்கள் சொன்னபடியேதான் நாங்களும் எங்கள் முன்னோர்களும் இறைவனுக்கும் ஊரில் உள்ள பெரிய மேன்மக்களான பணக்காரர்களுக்கும் பயந்து இறை அச்சத்துடனே வாழ்ந்து வருகிறோம். அப்படியிருந்தும் இறைவன் எங்களை ஏறேடுத்தும் பார்ப்பதில்லை எங்களுக்கு எந்த ஆசியும் வழங்குவதில்லை. பணக்காரர்களை மட்டும்தான் அவர் பார்த்துக் கொள்கிறார். நீங்கள்தான், கடவுளிடம் சொல்லி, எங்களையும் பணக்காரர்கள் ஆக்க ஒரு வழி காட்ட வேண்டும் என்றனர்.
பணக்காரர்களுக்கு இறையச்சம் இல்லாமல் போனதினால்தான் இவ்வளவு விளைவு என்றுவிட்டு இருந்தாலும் பணக்காரர்கள் செய்யும் தான தருமங்களில் கடவுள் மயங்கி விடுகிறார். ஆனாலும் நீங்கள் எப்பொழுதும் இறையச்சத்துடன் இருந்தால் கடவுள் உங்களுடனே துணையிருந்து உங்களுக்கும் அருள் காப்பார் அதற்கு நான் கேரண்டி என்றார்.
அந்த ஊர் மக்களும், சாமியார் சொன்னதை அருள்வாக்காக நிணைத்து கொண்டு,அச்சம் என்பதை அறிவுடமையாக்கி, தனக்கு மேல் இருப்பவர்களுக்கு பணிவு காட்டி மனதில் அச்சம் கொண்டு தனக்கு கீழ் உள்ளவர்களிடம் கோபம் கொண்டு மிரட்டி அடக்கி ஒடுக்கி வந்தனர்.
இப்படி ஒவ்வொரு மக்களும் தங்களுக்கு கீழ் உள்ளவர்களை மிரட்டியும் அடக்கியும் அதிகாரம் செலுத்தி ஆண்டான் அடிமை என்ற அச்சத்தை விதைத்து இறைவனிடம் இறையச்சம் கொண்டவர்களாக வாழையடி வழையாக வாழ்ந்து வந்தனர்.
37. ஒரு பொறுக்கி சாமியார்ஆன கதை........
ஒரு ஊரில் ஒரு பொறுக்கி இருந்தான். எந்தப் பெண்களானலும் தன்வலையில் வீழ்த்தி விடுவான். அவனைத் தட்டிக்கேடக ஊரில் உள்ள ஒரு ஆம்பிளைக்கும் தகிரியம் இல்லை. அதனால் அந்த பொறுக்கியும் தன்னுடைய பொறுக்கி தனங்களை தொடர்ந்து இடையூறு இல்லாமல் பாலோ செய்து வந்தான்.
ஒருநாளில் அவ்வூர்க்கு ஒரு சாமியார் வந்தார். ஊரிலுள்ள ஆம்பிளைகளெல்லாம் அந்த பொறுக்கியை பற்றி சாமியாரிடம் முறையிட்டனர். அந்த பொறுக்கிக்கு ஏதாவது தண்டனை வழங்கி, மனைவி மார்கள் தங்களைவிட்டு பிரியாதவாறு ஏதாவது செய்யுமாறும் வேண்டினர்.
அந்தச் சாமியார் அந்தப் பொறுக்கியை சந்தித்தார்.அவனோ,அந்தச் சாமியாரை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்தான்.சாமியாரே அவனிடம் பேசினார்.
“காமும் காதலும் வருகிறதா” ?.. என்றார்.
“ஆமாம்” என்றான்.
அதற்கு வடிகால் உண்டு,..என்றார்.
பொறுக்கிசொன்னான்..அந்த வடிகாலைத்தான் எனக்கு தெரிந்த வழிகளில் தீர்த்து கொண்டு இருக்கிறேன்.
“ அந்தக் கமாத்தையும், காதலையும் உன் மனைவிடம்தான் காண்பிக்க வேண்டும்”, ஊரில் உள்ள பெண்களிடம் அல்ல,” என்றார் சாமியார்.
பொறுக்கி சிரித்தான்.
“நீ சரிப்பதற்க்கான காரணம் என்ன? ”என்றார் சாமியார்
“ நானோ,வெளிப்படையாக பொறுக்கியா இருக்கிறேன்.என்னால் பெண்களுக்குத்தான் ஆதாயமே தவிர, நட்டம் எதுவுமில்லை. ஆனால் நீயோ, சாமியார் வேடத்தில் பொறுக்கியாய் அலைகிறாய். முதலில் உன் காமத்தையும் காதலையும் உன் மணைவிடமா செலுத்துகிறாய்…..
“நான் முற்றும் துறந்தவன்.எனக்கு மணைவி குடும்பம் என்று இருக்கக்கூடாது”
அதனால்தான் வடிகால் இல்லாமல் சாமியார் வேடத்தில் தீர்த்துக் கொள்கிறாயா…..என்றான் பொறுக்கி…………
“யாரோ என்னைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமாக உன்னிடம் பரப்பி விட்டு இருக்கிறார்கள்” என்றார்..சாமியார்.
முற்றும் துறந்த சாமியார்களின் லீலைகள்தான் அம்மணத்தில் ஆட்டம் போடுகிறதே……… சாமியார் என்ற பாதுகாப்பில் வருவாயோடு ஏமாற்றி தீர்த்துக் கொள்கிறீர்கள். நான் பாதுகாப்பு இல்லமால் செலவு செய்து நேர்மையாக தீர்த்துக்கொள்கிறேன். நமக்கு இடையிலான வேறுபாடு இதுதான்.என்றான் பொறுக்கி..
ஒருகணம் சாமியார் மவுணமாக இருந்தார். பிறகு சாமியார். சொன்னார்.
ஒனக்கு நான் சிஷ்யனாக இருக்கிறேன். என் ஆசிரமத்தில் சேர்ந்துவிடு, நான் உன்னை திருத்திவிட்டதாக இந்த ஊரில்லுள்ள ஆண்கள் நம்பட்டும். எனக்கு பவர் இருப்பதாக பலருக்கு தெரியட்டும், நீயும் வழக்கப்போல் சாமியார் வேடத்தில் வடிகாலை தீர்த்துக்கொள்ளலாம். நாமிறுவரும் ஆசிரத்தில் காமத்தையும் காதலையும் வெல்லலாம்.
பொறுக்கி எதுவும் பேசாமல் தயங்கினான்.
சாமியார் சொன்னார். உனக்கு பாதுகாப்பானது சாமியார் வேஷமும் ஆசிரமும்தான். உன் லீலைகள் அம்பலத்துக்கு வந்தாலும் ஒனக்கு எந்த தீங்கும் வரப்போவதில்லை, நம் சிஸ்யர்களும் பக்தர்களும்தான் இந்நாட்டை பரிபாலணம் செய்கிறார்கள்.
ஊரில் சாமியாரின் அற்புதங்கள் பற்றி பெருமையாக பேசப்பட்டது. பொம்பள பொறுக்கியை சாமியார் ஆட்கொண்டுவிட்டார். சாமியாரின் பெருமைகள் எந்தச் செலவுமில்லாமல் பரவியது. ஆசிரமும் நாளுக்கு நாள் விரிவடைந்து. பக்தர்களின் கூட்டமும் பெருகியது.
38. முப்பரிமாணப்புரட்சி (3D பிரிண்டிங்) - பாமரனுக்கு எப்படி இருக்கும்......
அமெரிக்க கல்லூரி மாணவன் ஒருவன் 3டி பிரிண்டரில் உருவாக்கிய கைத்தூப்பாக்கியை வெற்றிகரமாக இயக்கி பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கானாம். இதனால் ஏற்ப்படபோகும் தாக்கம் எந்த நாட்டையும்.எந்தத் தொழிலையும் விட்டு வைக்காதாம்.டிஜிட்டல் அமைப்பை முப்பரிமாணத்துக்கு நீட்டிப்பதால் எந்தப் பொருளையும் இருந்த இடத்திலே அதிவேகமாக உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப்பாக முப்பரிமாணப்புரட்சியானது செல்வத்தில் கொழிக்கும் மிதக்கும் பண முதலைகளுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த முயந்சியின் பயனாக ஆஸ்திரேலிய இஞ்சினியர் ஒருவர் உடல் உறுப்பகளை 3டி பிரிண்டரில் உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
எந்தக் கண்டுபிடிப்பாக இருந்தாலும் பெரும்பாலான கடைக்கோடி பாமரமக்களுக்கு அது பயன்படப்போவதில்லை.
இந்த முப்பரிணாம புரட்சியின் பலன் கடைக்கோடி மக்களுக்கு அதன் பலன் எப்படியிருக்கும்…….
நடை வழி பயணம் சென்ற கணவன் மனைவியும் இரவானதால் சத்திரத்தில் தங்கியிருந்த போது உல்லாசமாக இருந்தார்களாம். உல்லாசத்தில் கணவன் மனைவியிடம் சொன்னானாம், “ உலகமே இதில்தாண்டி இருக்குதுண்டு….
அதைக்கேட்ட, அருகில் படுத்திருந்த ஒருவன் அந்தக் கணவனிடம், “காணாமல் போன என்ஆடு இருக்குதான்னு, கொஞ்சம் பாத்து சொல்லுங்க” என்று கேட்டானாம்.
கடைக்கோடி பாமரனுக்கு முப்பரிமாண புரட்சி பயன்பாடு இப்படித்தான் இருக்கும்,,
39. சொர்க்கத்தின் வாசலில் நடந்த வினோத வழக்கு.....
சிவனும் பார்வதியும் இரு அமர்வு நீதிபதிகளாக அமர்ந்திருக்க, மனுதாரர் தரப்பு வழக்குரைஞராக வடபழனி முருகனும் அவருககு சீனியராக சிறிரெங்கத்து ரெங்கநாதனும் மனுதாரர்க்கு எதிராக வழக்குரைஞர் எமதர்மராஜாவும் அவருக்கு உதவியாக சித்ரப்குப்தனும்
ஆஜராக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வடபழனி முருகன் தன் வாதத்தை முன் வைத்தார்.
மை லார்ட் ,என் கட்சிக்காரர் ஆதியில் பணமும் புகழும் படைத்தவர். அவரின் திருவுரும் அனைத்து மக்களுக்கும் பிரசித்தமானது. அவர் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். சிறந்த நிர்வாகத்தை வழங்கவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். அப்பேர்ப்பட்டவரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று வீண்பழி சுமத்தப்பட்டுள்ளார். இந்த வீண்பழியானது.என் கட்சிக்காரர் சொர்க்கத்துக்கு செல்வதை தடுப்பதற்க்காக புனைந்து போடப்பட்டவை,
இந்தப் பழியைத்தீர்க்கத்தான் விலையில்லாஅரிசியும், விலையில்லா,மின்விசிறி, மிக்ஸிகிரைண்டர் போன்றவை
வழங்கப் படுகின்றன்.
முன்பு ஆட்சி புரிந்தவர்களால் கொடுக்கப்பட்டஇலவச தொலைக்காட்சியில் மக்கள் மயங்கிவிடக்கூடாது என்பதற்க்காக, தேவ பானக் சரக்கு அதிக எண்ணிக்கையில் விற்க உத்தரவிடப்பட்டுள்ளன. இது போதான்று என்
கட்சிக்காரரினசார்பில் என்னுடைய திருத்தலங்களில் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடனும் செய்யப்படுகின்றன
இடையில் சீனியர் ரங்கநாதன் எழுந்து வடபழனி முருகனின் காதில் கிசுகிசுத்தார். முருகன் தலையாட்டி புன்முறுவல்பூத்தார்.
யெஸ்,மை லார்ட் என் சீனியர் ரங்கநாதன் திருத்தலத்திலும் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். இவைகளை
இணைத்தும் நிணைத்தும் பார்த்து , சொர்க்கத்துக்கு செல்வதில் விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்ளுமாறு பிராஸ்திக்கப்படுகிறது.
தேங்க் யூ மைலார்ட்.— மூன்று முறை தலைவணங்கி தன் இருக்கையை நோக்கி அமர்திருந்த சீனியர் ரங்கநாதனை
பார்த்து தலையசைத்தார்.
பதிலுக்கு சீனியர் ரங்கநாதனும் தலையசைத்தார்.
அமர்வு நீதிபதிகள் இருவரும் எதிர்தரப்பை பார்த்தார்கள்.
கணத்த தொந்தியை மறைத்தவாறு எழுந்தார் எமதர்
மனுதாரரின் பணமும் புகழும் பற்றிய கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யப் படவில்லை.நல்ல நிர்வாகத்தையும், வழங்க
செய்வதற்கு முன் மனுதார் சொத்து 2கோடியாக இருந்தது. அவர் தொண்டு செய்தபின் அவரின் சொத்து 66கோடியாக
உயர்ந்தது. இந்த அதிசியத்தின் காரணமாகத்தான். மனுதார் சொர்க்கத்துக்கு செல்ல தகுதியற்றவரனார். அதன் பேரில்தான் அவருக்கு தடையானை பிறப்பிக்கப்பட்டது. .
இடையில் அமர்வு நீதிபதியில் ஒருவரான பார்வதி குறுக்கிட்டார்.
“அந்த 2கோடியப்பத்தி இங்கு பேச வேண்டாம் அது முடிந்து போன கதை” என்றுவிட்டு அடுத்த அமர்வு நீதிபதியான சிவனை பார்த்தார்.
அவரும்,“ஆமாம், அது தொடர்பான வழக்கிற்கு சம்பந்தமில்லாத விபரங்களை இங்கு பேச வேண்டாம் என்றார்.
“எஸ் மை லார்ட் என்றுவிட்டு, எம்தர்மர் தன்னிலை விளக்கமளித்தார்.
மனுதார் தான் பெற்ற பணத்தையும் புகழையும் கொண்டு தானுண்டு தன்வீடுன்னு இருந்தாரென்றால். அவர் சொர்க்கத்துக்கு நேரா செல்வதற்கு தடையேதுமில்லை, வாதி நல்ல நிர்வாகத்தையும். தொண்டயும் வழங்குவதற்கு
வந்துள்ளதால் 2கோடி எப்படி வந்தது என்று கேட்க வேண்டி வந்தது என்றார்.
இரண்டு அமர்வுகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
அந்த இடைவெளியில் சித்ரகுப்தன் சில குறிப்புகளை எமதர்மரிடம் கொடுத்தார்.
எமதர்மர் தன்வாதத்தை தொடர்ந்தார்
.மை லார்ட், சொர்க்கத்துத்துக்கு செல்பவர்கள் தங்களுடைய கரும பாவங்களை தீர்க்க.பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
அவற்றில் ஒன்று தங்கத்தேர் இழத்தல், உண்டியலில் காணிக்கை செலுத்துதல் என்பன.
சொர்க்கத்தின் சட்ட ஆகம விதிகளின்படி சொர்க்கத்துக்கு செல்பவர்கள்தான் தங்கத்தேர் இழுக்க வேண்டும், அவரேதான் உண்டியலில் காணிக்கையிட வேண்டும்,விதிவிலக்காக, ஒருவர் பிறந்த நாளில் அவருக்காக மற்றவர்கள்,தான தருமங்கள், பரிசலிப்புகள், திருத்தலங்களில் அபிசேக ஆராதனை செய்யலாம்.
தங்கத்தேர் இழுத்தல், உண்டியலில் காணிக்கை செலுத்துதல் போன்றவை சம்பந்தப்பட்டவர்களைத்தவிர மற்றவர்கள் செய்தால் சம்பந்தபட்டவர் சொர்க்கத்துக்கு செல்ல முடியாது என்பதை அடிப்படையாக வைத்தே தடையாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சொர்க்கத்துக்கு செல்வதற்கு வாதி தன் பாவ கருமங்களை தொலைப்பதற்கு உண்டான பரிகாரங்களை வாதியே செய்யாததால், வாதிக்கு சொர்க்கத்துக்கு செல்ல தகுதியில்லை ஆகவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து குறுக்கு வழியில் சொர்க்கத்துக்கு செல்ல முயலும் மனுதாரர்க்கு வாழ்நாள் தடையாணை விதிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் என்று எமதர்மரும் தன் தொந்தியை தாங்கியவாறு முனு முறை தலை வணங்கி நிமிர்ந்தார்
இரு அமர்வு நீதிபதிகளில் பார்வதி மண்டையை சொரிந்தார், சிவன் அண்ணாந்து மொகட்டை பார்த்தார்.
பின் இருவரும் தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர். பின் அவர்களுக்குள் கிசுகிசுத்தனர்.
பின் சிவன் தொண்டையை செருமியவாறு சொன்னார். “ஆகம விதிகளில் சொல்லப்பட்டு இருக்கிற சட்டப்பிரிவுகளை விளக்கி சொர்க்கத்தை நிர்வாகிக்கும் பிரம்மன் நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்படுகிறது.
அடுத்த அமர்வு நீதிபதி பார்வதி, அடுத்த அஜென்டாவை படித்தார் “மறு தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கு ஒத்தி
வைக்கப்படுகிறது என்றார்.
40. பஞ்சத்துக்கு காரணமானவர்கள் ----- சிறுகதை
ஊரை கொள்ளையடித்து உண்டு களிக்கும் ஒரு குண்டனும்,
ஊரிலுள்ள பொதுச் சொத்தை பட்டாபோட்டு விற்பனை செய்து செல்வத்தை பதுக்கி வைத்த ஒரு ஒல்லியனும்.
பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவில் கலந்து கொண்டார்கள்.
குண்டனும், ஒல்லியனும் பணக்கார பிரபலங்களாக இருந்ததால். விழா கொண்டாடும் முக்கியஸ்தர்கள் குண்டனையும் ஒல்லியனையும் ஒருவருக்கொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.
அந்த அறிமுகத்தின்போது குண்டன்,ஒல்லியனை பார்த்து
” என்னப்பா, உங்க ஊருல அவ்வளவு பஞ்சமா……..? அநியாயத்துக்கு இப்படி ஒல்லியா இருக்கயே” என்று கிண்டலாக கேட்டான்.
குண்டனின் கிணடலால் கோபம் கொண்ட ஒல்லியன் பதிலுக்கு, ”அத ஏன்? கேக்ரப்பா, எங்க ஊரு பஞ்சத்துக்கே காரணம் நீதானப்பா, எல்லாத்தையும் நீயே சாப்பிட்டு இப்படி பெருத்து போயி இருக்கிறயேப்பா…? என்றான்.
கிண்டலுக்கு பதில் கிண்டல் கிடைத்தவுடன். சிரித்து மழுப்பிய குண்டன். ஊரு மக்களுக்கு நாம வேறு வேறானவர்கள் என்று காட்டிக் கொள்ளத்தானப்பா? நான் உன்ன கிண்டல் அடிச்சேன் என்றான்.
நானும்,அந்த அர்த்த்த்தில் தானப்பா பதிலுக்கு கிண்டல் அடிச்சேன் என்றான் ஒல்லியன்.
ஆக,ரெண்டு கொள்ளையர்களும், உள்ளுக்குள் கூட்டு சேர்ந்து ஊரை கொள்ளையடிப்பதுதான் பஞ்சத்துக்கு காரணம் என்று, . அந்த ஊரு மக்களுக்கு கடைசி வரைக்கும் தெரியவேயில்லை………..
41. வலைக்குள் சிக்கிய கொசுவும் மனிதனும்....
தமிழகத்தில் பவர்கட் அதிகமாக இருந்த நேரம். ஃபேன் ஓட மின் சாரம் இல்லாததால் புழுக்கமும் கொசுவும் சேர்ந்து ருத்ரதாண்டம் ஆடிய காலம் அது.
கொசுவுக்கு பயந்து கொசுவலைக்குள் பதுங்கிக் கொண்ட காலம் அது. அப்படிபட்ட காலத்தில் ஒரு சராசரி மனிதன். பகலில் தன் வேலைமுடிந்து கொசுவலைக்குள் பதுங்கி கொண்டியிருந்த நேரத்தில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தான்.
சார்ஜ்சில் எரிந்து கொண்டு இருந்த 15வாட்ச் சிஎல் பல்ப்பை அணைக்க்கூட முடியாதவனாக படுத்திருந்தான். பக்கவாட்டில் பார்வையை செலுத்தியபடி தலைக்கு மேலே கொசுவலையை பார்த்தான்.
ஆ…………… கொசு…………எப்படியோ……. உள்ளே வந்துவிட்டது…
கொசுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.
கொசுவால் டெங்கு,சிக்குன்குனியா,போன்ற மர்மக்காய்ச்சல்கள் இந்தியா வெங்கும் பரவி ஏராளமானவர்களை பலிகாடாக்கியது அவனின் நிணைவுக்கு வந்து போனது.
கொசுவும் இவனுக்கு போட்டியாக எங்கும் பறக்காமல் ஒரே இடத்தில் குத்துக்கல் சாமியாராட்டம் அமர்ந்திருந்த்து. கொசுவும் மனிதனும் வைத்த கண் மாறாமல் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர்.
ஒரு கட்டத்தில் கொசு மனிதனைப் பார்த்து சிரித்தது.
என்னாது! கொசு,மனுசனை பார்த்து சிரிச்சதா? என்று சந்தேகம் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில ”நான் ஈ……….ன்னு ஒரு பட்த்திலே ஈ…….தன் காதலியிடம் தன்னை வெளிப்படுத்தி வில்லனை பழி தீர்க்கும்போது சந்தேகமா கொண்டீர்கள்.
ஆனால், இந்த சம்பவத்தில்.கொசுவுக்கு மனிதன் வில்லனா அல்லது மனிதனுக்கு கொசு வில்லனா என்பது பற்றி நீங்களே தீர்மாணித்துக்கொள்ளுங்கள்.
படுத்திருந்த மனிதன் மெதுவாக கையை அசைத்தான். கொசு சிரிப்பதை நிறுத்திவிட்டு. கிங்காங் படத்தில் வரும் குரங்ங்கைப்போல,முகத்தை உம்மென்று வைத்து முறைத்தது. அடிக்கொருதரம் தன் ஊசி முனையை சரிபார்த்து கொண்டது.
தூக்கம் கெட்ட மனிதன் மீண்டும் ஆடாமல் அசையாமல். கொசுவை பார்த்தபடியே நிதனாமாக மூச்சை இழுத்து வெளியே விட்டுக்கொண்டு இருந்தான்.
சிறிய இடைவேளைக்குப்பின், உம்மென்ற முகத்தை மாற்றிக்கொண்டு.கொசு ஏதோ சொல்லியது.
மனிதர்கள் பேசுவதே,அந்த மனிதனுக்கு கேட்காது. இதுல, கொசு பேசினது கேட்டுச்சாக்கும் என்று நக்கல் பன்னக்கூடாது.
கொசு பேசியது அந்த மனிதனுக்கு கேட்டது……
எங்களால் பரப்படும் நோய்களும் சரி, நாங்களும் சரி, ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடே பார்ப்பதில்லை, ஆனால் மனிதர்களால் செய்யப்படும் மருத்துவ சிகிச்சையில்தான் இருப்பவன் இல்லாதவன் என்ற பாகுபாடு பார்க்கப்படுகிறது. இது ஏன்? என்பது தெரியுமா?
அந்த மனிதன் பேசாமல் இருந்தான். வலைக்குள் சிக்கிய கொசுவே மீண்டும் பேசியது.
நாங்கள் பாகுபாடு பார்க்காததற்கு ஏகப்பட்ட சான்று இருக்கு. அதில் ஒன்று எம்புட்டு பெரிய இந்திப்பட தயாரிப்பாளர் யாஷ்சோப்ரா நாங்கள் பரப்பிய டெங்குவால்தான் போய் சேர்ந்தார்..
அந்த மனிதன் மெதுவாக கிசு கிசுத்தான்…
கொசு தலையை ஒரு சிலிப்பிக் கொண்டு ”ஓ………..அதுவா………. , ஆசிய டைகர் என்னும் புதியரக கொசுவான நாங்கள் ஏடி எஜிப்டி கொசுவுடன் கூட்டணி அமைத்துதான் கொள்ளை நோய்களை பரப்புகிறோம். என்றது.
ஒன்னும் புரியவில்லையே என்கிற மாதிரி கண்களை கேள்விக் குறியாக்கினான் மனிதன்.
உன் மரமண்டைக்கு,இன்னும் விளக்கமா சொல்லுவதென்றால்…..
காங்கிரசும் பாரதிய ஜனதாவும். ஊழலிலும்,களவானித்தனத்திலும்.நாட்டை கூறுபோட்டு விற்பதிலும் ஒற்றுமையாய் இருந்து.வெளியில் வேற்றுமையாய் காட்டிக்கொண்டு இருப்பது போல.
மனிதன் வியந்தான், “அட்டா, இந்த கொலகார கொசுவுக்குகூட நாட்டுப் பற்று இருக்குதுபோல”………..ஆனால் மக்கள் பற்று இருந்திருந்தால்,
“எம்மை இப்படி பயமுறுத்துமா?”.
நிணைத்த மறுநிமிடத்தில்………..
திடிரென்று. சிஎல் பல்ப் அணைந்தது, சுதாரித்த மனிதன் கண் இமை நேரத்தில் தன் இரு கைகளை குவித்த வண்ணம் கொசு உடகார்ந்த இடத்தை ஒரே அடியாக அடித்தான்.
பிறகு, வலைக்கு வெளியே வந்து,திரும்பவும் கொசுவலையை உதறி சரி பண்ணி,திரும்பவும் கொசுவலைக்குள் படுத்தான்.
கொசுவு என்னாவாகியது என்று .அந்த மனிதன் நிணைக்கவில்லை. அவன் தூங்கவில்லையேன்றால் நாளை வேலை செய்யமுடியாது என்ற நிணைப்பே மேலோங்கி இருந்தது.
42. வலிப்போக்கன் ஒன்பதாம் வகுப்பில் பெயிலான கதை....
அரையாண்டு தேர்வு முடிந்த சில நாட்களிலே,டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். அவன் வீட்டில் போதிய சுகாதாரமும் வைத்தியம் செய்வதற்க்கான வசதியும் இல்லாத்தால். அவன் அம்மாவின் கை பக்குவ மருத்துவ சிகிச்சையில் ஒரு மாதத்திற்கு மேல் படுத்த படுக்கையாய் கிடந்து ஒரு வழியாய் சாவின் வளிம்பில் இருந்தும் நோயின் கொடுமையிலிருந்தும் மீண்டு விட்டான். உடல் மெலிவும் சொர்வும் இருந்தாலும், பள்ளிக்கு சென்று நீணட நாட்கள் ஆனதால் பள்ளிக்கு செல்ல ஆவல் ஏற்ப்பட்ட காரணத்தால் கையில் ஒரு நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டான்.
அவன் பள்ளி சர்ச்சை கடந்து வாசலில் நுழைந்தபோதே பிரேயர் முடிந்துவிட்டுயிருந்தது. லேட்டாக சென்ற மாணவர்கள் பீட்டீ வாத்தியாரின் விசில் சத்தத்தால் புத்தக சுமையுடன் அலறி அடித்து ஓடிக் கொண்டு இருந்தனர்.
வலிப்போக்கனோ, பீட்டி வாத்தியாரின் விசில் சத்தத்தை பொருட் படுத்தாமல்,மெதுவாக லைபரேரியை கடந்து மாரியப்ப அண்ணனின பெட்டிக் கடையை கடந்து கொண்டு இருக்கும்பொழுது ……….
பீட்டீ வாத்தியாரின் விசில் சத்தம் பயங்கரமாக அருகில் கேட்க பதற்றட்டத்துடன் திரும்பவதற்க்குள் பீட்டீ வாத்தியாரின் விசிலின் வயரின் அடி குண்டியில் சுரீர்.என்று விழுந்தது.
காய்ச்சலால் தோல் வத்திப்போன உடம்பில் அடி தீய்யா சுட்டது. சுதாகரிப்பதற்குள் அடுத்த அடி,“ஓடுறான்னு சொன்னா, அன்ன நடையா நடக்குறன்னு அடுத்த அடி……
ரெண்டு,மூணு அடி விழுந்ததில்.வலி பொறுக்க முடியாமல் பீட்டீ வாத்தியாரை பலம் கொண்டு ஓங்கி குத்தியும் சரமரியாக அடித்தும் துவைத்துவிட்டான்.
மாணவன் அடித்ததால் கோபம் கொண்ட பீட்டீ வாத்தியான் திரும்ப அடிக்க, வலிப்போக்கனும் அடிக்க, மாணவனும், வாத்தியானும் மல்லுகட்டி தரையில்புரண்டனர்.
வலியின் வேகத்தால் மாணவன் கீழே கைக்கு கிடைத்ததை எடுத்து வாத்தியானை பதம் பார்த்துவிட்டான். வாத்தியானும் மாணவனை விட்ட பாடில்லை,
பீட்டீ வாத்தியானும் மாணவனும் கட்டிப்புரண்டு உருளுவதைக் கண்ட பெட்டிக்கடை மாரியப்ப அண்ணன் கடையை விட்டு ஓடோடி வந்து சண்டயை விலக்கிவிட முயற்ச்சித்தார். இன்னொரு பீட்டீ வாத்தியாரும் வந்துவிடவே, இருவரும் சேர்ந்து சண்டயை விலக்கினர்.
வலிப்போக்கன் பேச முடியாமல்.கைகால்கள் நடுங்கிய வண்ணம் மேல்மூச்சு,கீழ்மூச்சு வாங்கியபடி நின்று கொண்டு இருந்தான்
பீட்டீ வாத்தியானோ,கோபம் அடங்காமல், மாணவனை திரும்பவும் அடிக்க பாய்ந்தான்.
மாரியப்ப அண்ணே, காய்ச்சல்ல ஒரு மாசமா,பள்ளிக்கூடத்துக்கே வரலைண்ணே, இன்னிக்குதானே சுகமாகி வந்தேன். ஓட முடியாம, நடந்து வந்ததை நீங்களும் பாத்துகிட்டுதானண்ணே இருந்தீங்கே, அடி வாங்கி வீங்கிப்போன உடல் பகுதியை காட்டினான்.
செம்மன் தரையாதலால் உடலில் உராய்வு காயங்களும் ஏற்ப்பட்டு இருந்தது.
———————–
ஹெட் மாஸ்டர் ரூம். பெட்டிக்கடை மாரியப்ப அண்ணன் மல்லு கட்டிய பீட்டீ வாத்தியானுடன் பள்ளியில் பணியாற்றிய அத்துனை பீட்டீ வாத்தியானும் உடனிருந்தனர். வலிப்போக்கனின் கிளாஸ் வாத்தியார், மற்றும் சயின்ஸ் வாத்தியார்களும் உடன் இருந்தனர்.
வலிப்போக்கன் முதலிலே,ஹெட் மாஸ்டரிடம் தன் தரப்பு நியாயத்தை சொல்லி விட்டான்
சார், எங்கவீட்டுல யாரும் வரமாட்டாங்க,சார், எங்க அப்பா, நான் சின்ன புள்ளயா இருக்கறப்பவே. செத்துப்போயிட்டாரு, எங்க அம்மாவுக்கு எதுவும் தெரியாது. எல்லாமே நான்தான். காய்ச்சலுக்கு வைத்தியம் பாக்க்கூட வசதி இல்லாததால்தான் ஒரு மாசமா படுக்கயில இருந்து பொழச்சு வந்திருக்கேன். எனக்கும் வாத்தியாருக்கும் முன்பகை எதுவுமில்லை, வாத்தியார அடிச்சத்து தப்புதான், வாத்தியாரு அடிச்ச அடி தாங்க முடியாமல் கோபத்தில் அடித்து விட்டேன். அவரும் இப்படி வெறிகொண்டு நோஞ்சனாகிவிட்ட என்னை இந்த வெளு வெளுத்திருக்க வேண்டாம். நீங்க பாத்து என்ன சொன்னாலும் ஏத்துக்கிறேன் சார்..
கிளாஸ் வாத்தியார், வலிப்போக்கனின் கையை இருக பிடித்து விட்டார். பியுன் வந்து கொடுத்த ஆயுள்மெண்டை வாங்கி வீங்கிப் போன இடங்களில் தேய்க்கச் சொன்னார்.
சிறிது நேரம் வலிப்போக்கனை ,வெளியில் இருக்கச் சொன்னார் ஹெட்மாஸ்டர். கதவு அடைக்கபட்டு, உள்ளே போர்டு மீட்டிங் நடந்து கொண்டு இருந்தது.
பீட்டீ வாத்தியாரு குலாம் எல்லாரும் மொத்தமாக வெளியேறினர். கடைசியாக கிளாஸ் வாத்தியார் சொர்ந்து போன முகத்துடன் காணப்பட்டார்.
ஹெட்மாஸ்டர்.மாணவனை அழைத்து கிளாஸ் வாத்தியார் சொல்றபடி நடந்துக்க என்றார். சரிங்க சார் என்றுவிட்டு கிளாஸ் வாத்தியாரை பார்த்தான். வீட்டுக்கு போயி ரெஸ்ட எடுத்துட்டு நாளைக்கு வாடா? என்றார்.
முடிவு சொல்லுங்க சார் என்றபோது தயங்கியபடி சொன்னார்
வீட்டுக்கு வந்தபோது அன்று மாலையில் திரும்பவும் காய்ச்சல வந்தவிட்டது. அது முதற்க் கொண்டு அந்த பள்ளி கூடத்து பக்கம் போவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை, டீ.சி வாங்க போனதைத்தவிர……………..
43. மாநகராட்சி பாதையை தனது பாதையென பக்கத்து வீட்டுக்காரன் மீது வழக்கு தொடுத்த ஒரு தெருநில மன்னன்
ஆள்பலமும் பணபலமும் இல்லாதவன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து தன்கூத்தியாளுக்கும் தான் வாடகைக்கு விட்டுள்ள வீட்டிற்க்கான வழி நடை பாதையாக்கி பயன்படுத்தி வருவதோடு, இடத்துக்காரன் எதிர்க்காதவாறு பல இம்சைகளை கொடுப்பதோடு,புதிய இம்சையாக, அந்த இடத்தை விட்டுக் கொடுத்தால் மாநகராட்சி பாதையை உனக்கு விட்டுக் கொடுப்பேன் என்று மிரட்டியும், இடத்தை பறி கொடுத்தவன் பணியாததால் வீம்புக்கு மாநகராட்சி பாதையை தனது பாதையென்றும்,இதில் குழாய் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கக்கூடாதென்று வழக்கு போட்டு,அந்த வழக்கிலும் ஆஜராகமல் இழுத்து அடித்து கைதேர்நத கிரிமினல் புத்தியுடன தாழ்த்தப்பட்ட சமூகத்திற்க்குள் உள்ள ஒரு அயோக்கியனை பற்றிய உண்மைக் கதைகளின் ஒரு சிறு துளி இது.
அந்தப் பறைய தெருவுக்கு அவன்தான் தலைவன்,நாட்டாமை,தெரு சந்திப்பில் கட்டியுள்ள காளி கோயிலுக்கும் பூசாரி,காளிகோயிலின் முதல் சாமியாடி.இத்தனை பதவிகளுடன் அந்தத்தெருவுக்கு அவன்தான் மன்னன்.
அந்த தெரு நில மன்னனக்கு நாலு இளவரசர்களும்,இரண்டு இளவரசிகளும் நான்கு இளவரசர்களின் மனைவிமார்கள்மற்றும்பிள்ளைகளை சேர்த்தாலே ,தெரு நிலமன்ன்னின் குடும்ப உறுப்பினர்களே எண்ணிக்கையில் இருபது பேர்களுக்கு மேலாக இருப்பார்கள்..இதோடு அந்தத் தெருவின் சமூகத்தில் நாட்டாமையாகவும் கோயில் பூசாரியாகவும் சாமியாடியாகவும் இருப்பதால் சமூக அஸ்தஸதுக்கு தக்கப்படி,சின்னவீடுகளும்,அதுகளுக்கு பிறந்த பிள்ளைகளின் எண்ணிக்கை மற்றும் இளவரசிகளின் வழி உறுப்பினர்களின் எண்ணிக்கையை மொத்தமாக கூட்டினால் ஐம்பதை தாண்டும்..
அந்தத் தெருவிலே முதன்முதலாக அரசாங்க உத்தியோகமான மின்சார வாரியத்தில் வேலை பார்த்து பென்சன் வாஙகுபவன் என்ற பெருமையும் முதல் ஆளாக அந்தத் தெருவில் கழிப்பறை கட்டியவன் என்ற சிறப்பும் இவனுக்கு உண்டு..
பெருமை வாய்ந்த அந்த தெரு நில மன்னனை அதே தெருவில்வசிக்கும் ஒருவன் எதிர்த்துவிட்டான். ஏற்கனவே. அந்தத் தெருநில மன்னரால் பல தடவை இவனுக்கு ஆப்பு வைக்கப்பட்ட்டு மூலையில ஒக்கார வைக்கப்பட்டாலும் பயந்து கொண்டு பின் வாங்கி விடாமல் எதிர்த்து வந்தவன் அவன்
தெரு நில மன்னன் கண்சாடை காட்டினால் அவனின் பக்தர்கள் மட்டுமல்ல தெருவில் உள்ளவர்களும் பத்தடி பாதையை பாதாள சாக்கடை போடுவதற்க்காக அய்ந்து அடி ஆக்கிய மாநகராட்சி மாதிரி,அய்ந்து அடி பாதையையும் பயன்படுத்த முடியாதவாறு,பழைய சைக்கிள்களையும் பழைய டப்பா தட்டுமுட்டு சாமான்களையும் போட்டும் ,போதா குறைக்கு பாதையை மறைத்து உட்கார்ந்து கொண்டு வீட்டுப்பாத்திரம் கழுவுகிற, துணிகள் துவைக்கிற சாக்கில் பாதையை மறைத்து விடுவார்கள். அதோடு தெருவை விட்டும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். யாரவது எதிர்த்தவனை வந்து கேட்டால் அப்படிபட்டவன் இங்கே இல்லை என்று சாதித்துவிடுவார்கள். பொதுக்குழாயில் குடிதண்ணியும் எடுக்க முடியாதவாறு பக்காவா பிளான் போட்டு தடுப்பார்கள் தொடர்ச்சியாக சண்டையிடச்செய்து,போலீஸ் ஸ்டேசன்,அபதாரம் என்று செலவையும் மன உளச்சலையும் ஏற்ப்படுத்துவான். தெருநில மன்னனை எதிர்த்தவன் நோயால் வந்து படுத்துவிட்டால் சண்டை ஓய்ந்து அமைதியாக இருக்கும்
சண்டை ஓய்ந்து அமைதியாக இருக்கும் நாளில்.,அதாவதுஉள்ளுர் காவல் நிலையத்தில் ஆய்வாளர்கள் மாறிய பின், புதிய ஆய்வாளர் வந்தபின் ஏற்கனவே. மூத்த இளவரசனின் தொடர்புள்ள உதவி ஆய்வாளர் உதவியுடன் தெருநிலமன்னன்,தன்னை எதிர்த்தவன் மீது ஒரு பொய்ப் புகார் செய்வான்
புதிய ஆய்வாளரே, தெரு நில மன்னனுக்கு விட்டு கொடுக்கச் சொன்னார், அவனோ,தெரு நில மன்னன் தன் வீட்டில வாடகைக்கு இருப்பவர்களுக்கு நடப்பு விலைக்கு விட்டுக்கொடுத்தால் தங்கள் உத்தரவுப்படி நான் விட்டுக்கொடுக்கத்தயார் என்பான். ஆய்வாளர் மிரட்டி பார்ப்பார். மிரட்டிலின் ஒரு பகுதியாக காவல்நிலையத்தில் பிடித்து வந்தவர்களை இவன் கண் எதிரில் நாயடி பேயடியாக அடித்து மிரட்டிப்பார்ப்பார். இவன் மிரளமாட்டான்.
பகுதி காவல் நிலையத்தில் அடி வாங்க வைத்தல், அபதாரம் கட்டவைத்தல் ,இப்படி பல வகையான மிரட்டல்களுக்கும் பயந்தும் சோர்வுற்றும் இடத்தின் சொந்தக்காரன் பின் வாங்காமல் தெரு நில மன்னனை எதிர்த்து நின்றான்
தெரு நில மன்னனாக இருக்கும் மப்பில் ,இவனை எதிர்த்தவனுக்கு பாத்தியமான இடத்தை வளைத்து போட்டு, வழி நடைபாதையாக்கி,பயன்படுத்தியதோடு, அந்த ஏரியாவின் சர்வேயருக்கு.ஒரு தொகையை செட்டில் செய்து நகரப்புலப்படத்தில் பொதுப்பாதையாவும் மாற்றிவிட்டான். இதை தக்க வைப்பதற்க்காக
மாநகராட்சிப் பாதையை தனது பாதையென்றும், அந்தப்பாதை தனக்கும் தன் உறவுக்காரர்க்கும் பாத்தியப்பட்டது என்றும்,அந்தப்பாதையில் தெருநிலமன்னனை எதிர்த்தவன். நடக்கவோ,பாதாள சாக்கடை குழாய் பதிக்கவோ,இணைப்பு கொடுக்கவோ,கூடாது என்று நிரந்தர உறுத்து கட்டளை வேண்டி மாவட்ட கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்தான்.
வழக்கும் நம்பராகி நிரந்தர உறுத்து கட்டளை எதுவும் வழங்கப்படாமல் வழக்கும் வாய்தாவாகி நகர்ந்து கொண்டு இருந்து இரண்டரை ஆண்டு கழித்து வழக்கு தொடுத்த தெரு நில மன்னன் முதல் விசாரணைக்கு ஆஜராகும நாள்.
அன்று தெரு நில மன்னன் தொடுத்த வழக்கு இரண்டரை ஆண்டுகளுக்குபின் விசாரனைக்கு வந்தது. தெருநில மன்னன்தான் முதலில் விசாரிக்கப்படவேண்டியவன், அவனுக்கு தன்வழக்கு நிற்காது என்று தெரியும் இருந்தாலும், வழக்கை இழுத்தடிக்க வேண்டும் நாட்களை கடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் தெருவில் தன் அருமை பெருமையை நிலை நாட்டும் பொருட்டும் , வழக்கு விசாரணைக்கு
புறப்படும் நேரத்தில், (கெளலி) பல்லி ஒன்னு ஆகாத மூலையில் இருந்து கத்தியது.என்றும் காளி அம்மனின் பூசாரியும்,முதல் சாமியாடியும் பல்லி சத்தம் கேட்டு சற்று தயங்கி நின்றேன என்றும்,.ஆகாத திசையில் பல்லி ஒன்று கத்தியதாலும்,குறுக்காக பூனை ஒன்று ஓடியதாலும், சகுனம் சரியில்லை என்று தெருநிலமன்னன்,தெருவில் உள்ளவர்களுக்கு கதை பரப்பி விட்டு வழக்கில் ஆஜராவதிலிருந்து தவிர்த்துவிட்டான்
.
தெருநில மன்னனை எதிர்த்து நின்றவனோ, நீதி மன்றத்தில் காத்து கிடந்தான். குருசாமி,குருசாமி,குருசாமி என்று மூன்று தடவை நீதி மன்றத்தில் கூப்பிட்டபோது எந்த ஆசாமியும் ஆஜராகவில்லை,தெரு நில மன்னனின் நாற்பது வருட சட்டஅனுபவரான வழக்குரைஞரோ, தன்வாதியைப்பற்றி பதில் எதுவும் சொல்லாமல் திட்டமிட்டபடி மௌனமாக நடந்து கொண்டார்.
தெருநில மன்னன் தொடுத்த வழக்கில்.வாதி விசாரனைக்கு ஆஜராகததாலும், வாதியின் வழக்குரைஞர் எந்தப்பதிலும் சொல்லாததாலும் வழக்கு (எக்ஸ்பார்ட்டி) தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
தெருநில மன்ன்னும் விடாமல் பழைய புதிய வழிமுறைகளை கையாண்டு கொண்டே வந்தான். அதில் ஒரு யுக்தியை கையாண்டான்,
கைதேர்நத கிரிமினல்களின் வழிகாட்டல்படி, தெரு நில மன்னன், தள்ளுபடியான வழக்கை திரும்பவும் நடத்தும்படி மனு போட்டான்
தான் உடம்புக்கு முடியாமல் படுத்த படுக்கையாகி மருத்துவ மனையில் கிடந்த்தாகவும், தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால்,காதும் கேட்கவில்லை, கண்ணும் தெரியவில்லை. அதனால் முதல் விசாரனைக்கு ஆஜராக முடியாமல் போய்விட்டதென்றும், இந்த வழக்கை நடத்தாவிட்டால் தனக்கு பாரிய இழப்பு ஏற்ப்படும் என்று முறையீடு செய்தான்.
நீதி மனறமும் தெரு நில மன்னனின் முறையீட்டை ஏற்றது.
தெருநில மன்னனை எதிர்த்தவனோ, பத்து தடவை தனக்கு ஆப்பு வைத்தபேதும் ஒரு தடவையாவது ஆப்பு வைக்கலாமா போய்விடுவேன் என்று அடுத்த சட்டத்தின் ரவுண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறான்.
தெருநிலமன்னனோ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மீண்டும் ஆப்பு வைப்பதற்க்காக கழுத்தில் செயினும் கையில் மைனர் செயினுடனும் இளைஞானட்டம் அவனும் அடுத்த ரவுண்டை கடத்துவதற்க்காக காளிக்கு விழா எடுக்குறான்.
44. டீ குடிக்காதற்கு இதுவும் ஒரு காரணம்........
375 பதிவுகளுக்கு ஒரு லட்சம் பார்வையாளர்கள் வந்து எட்டி பார்த்து போனதற்கு என்னை பாராட்டி ஒரு நண்பர்.டீ கடைக்கு கூட்டிட்டு போயி டீ வாங்கிக் கொடுத்தார். அவரிடம் நான் டீ குடிப்பதில்லை என்றும், கடைகளில் பஜ்ஜி,நொச்சி எதுவும் சாப்பிடுவதில்லை என்றும் என் நிலமையை விளக்கினேன்.
அதிலிருந்து ஒரு கிளாஸ் .
எனக்கு டீ குடிக்க காசு கிடைக்காத காலத்திலிருந்து இப்ப வரைக்கும் டீ குடிப்பதையே விட்டுவிட்டேன்.. சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்ற ஒரு காரணம் இருந்தாலும். வேறு ஒரு காரணமும் இருக்கிறது அதனால இனியும் இப்பழக்கம் தொடரும்.
இன்னொரு காரணம் இதுதான். அதாவது டீக் கடையில் ஒரு மில்லி பாலில் அரை கிளாஸ் தண்ணீர் கலந்து அதில் காக்கிளாசக்கும் குறைவாக டீக கசாய கலரை கலந்து , ஆணாயிருந்தால் இந்தா டா டீ என்றும், பெண்ணா இருந்தால் இந்தா டீ என்று தருவதுதான்.
வெண்மை புரட்சி என்று பீத்திக் கொண்ட காலத்திலே, ஒரு மில்லி பாலுல அரை கிளாஸ் தண்ணிய கலந்துதான் கொடுத்தானுக..
இப்ப, பைக்கு,ஸ்கூட்டி,காருஃசெல்லு,நெட்னு நாகரிகம் வளர்ந்த இந்தக் காலத்திலே கறக்கிற, கலக்குற பாலெல்லாம் எங்கடா போகுதுண்ணு பார்த்தா
வெள்ளிக்கிழமையன்று அருணாசாலஸ்வரருக்கு 1008 லிட்டர்ல பால்பிசேகம் நடைபெறுகிறதாம். இப்படி ஒவ்வொரு கோயிலில்ல மூலையில இருக்கிற மூலவருக்கு பாலா அபிசேகமுன்னு பாலை எல்லாம் கீழே ஊத்துறானுங்க
அன்றைய காலத்திலிருந்து இன்றயவரைக்கும் பால கீழே ஊத்துற பொழப்பா இருக்கு,போதாக்குறைக்கு இவனுகளோட சினிமாக்கார்ர்களின் ரசிக கூட்டமும் சேர்ந்துகிட்டு, அவனுங்களும் பால கீழே ஊத்துராணுங்க….
எப்போ, என்னைக்கு அரை கிளாஸ் பாலில்.கால்கிளாசுக்கு குறைவாக தண்ணிய கலந்து அரை ஸ்பூன் டீத்தூளை போட்டு இந்தாங்க டீ என்று தரும் காலம் வருகிறதோ, அதுவரைக்கும் நான் டீ யே குடிப்பதில்லை
பின் குறிப்பு. கடையிலதான் அப்பிடித் தருவாங்க, வீட்டுல போடுற டீ,காபிய குடிங்கன்னு சொல்றவங்களுக்கு,, உலகத்தோட நானும் சேர்ந்து சுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் என்னால் தாய்குலத்துக்கு டீ போடும் வேலை ஏற்படும் என்பதாலும் வீட்டுல போடுற டீ,காபியும் குடிப்பதில்லை,
45. நான் நிணைத்தேன்.நீ தும்மிவிட்டாய்.........
பகல் வெயிலின் கொடுமையைப் போக்க நண்பர் மூவர் மாலை வேளையில் பை-பாஸ் ரோட்டிலுள்ள பாலத்தின் திண்டின் மேல் அமர்ந்து. தங்கள் ரசித்த.மனதை பாதித்த உலக விஷயங்களை அசைபோட்டும் அரட்டை அடித்து சிரித்தும் தங்களை மறந்து பேசிக் கொண்டு இருந்தனர்
அந்த மாலை வேளையில் நாயைப்பிடித்துக்.கொண்டு வாக்கிங் போவோர்மற்றும்பஸ்களிலும்.டூவீலர், போர் வீலர்களில் செல்வோர் பற்றி கண்டுக்கொள்ளாமல் மூன்று நண்பர்களும் பேசி மகிழ்திருந்த வேளையில் மாலை மயங்கி இருள் பரவத் தொடங்கியது. ரோட்டிலுள்ள மின்கம்பங்களிலுள்ள மின்விளக்குகளும் இங்கொன்றும் இங்கோன்றுமாக எரியத்தொடங்கியது.
சிரித்து மகிழ்திருந்த மூன்று நண்பர்களும் திடீரென்று பதறி அடித்து எழுந்து நின்றனர்.
நாங்க ஸ்டுடன்ஸ் சார்,வீடு பக்கதில்தான் சார்,2வது தெருசார் என்பேரு சேகர்,இவன் பேரு மணி, அவன்பேரு வெங்கட்சார்
ரிலாகஸ்க்காக பேசிக்கிட்டு இருந்தோம் சார்.சரிசார். இனிமேல் இங்கே உட்காரமாட்டோம்சார்.
மூன்று நண்பர்களும் அமைதியாக தங்கள் வீடுகளை நோக்கி நடையை கட்டினார்கள். சிறிது தூரம் வந்தபிறகு வெங்கிடு
சொன்னான். போலீஸ்காரனிடம் ஒரு முஸ்லிம் பேர சொல்லி இருந்தேன்னு வைய்யி.மாப்பிள்ள நம்மல கம்பி என்ன
வச்சுருப்பான்டி என்றான்.
ஏண்டா என்றான்.சேகர்
பாரதீயஜா காரங்க சங்குமம் மாநாடு நடத்துறாங்கடா, அதுக்கு சதி செய்ததாக வழக்கு போடுவாங்கடா….என்றுவிட்டு தும்மினான்
மணி சொன்னான். நான் நிணைத்தேன். நீ தும்மிவிட்டாய் என்றான். மூவரும் சிரித்தபோது.“டேய், பேசாம போங்கடா”ன்னு பைக்கில் வந்த போலீஸ் கத்தினான்.
மூவரும், திரும்பி பார்க்காமல். பேசாமல்,“நீ நிணைத்தாய்.அவன் தும்மிவிட்டான்”. மனதிற்க்குள் சிரித்தவாறு எட்டு வைத்தார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக