சமூக விரோதி
நாடகங்கள்
Back
சமூக விரோதி
தமிழில் : சி. சிவசேகரம்
சமூக விரோதி
தமிழில் : சி. சிவசேகரம்
----------------------------------
சமூக விரோதி
நாடகமேதை ஹென்றிக் இப்சன் (Henrik Ibsen) எழுதிய மூலத்தைத் தழுவி அமெரிக்காவின் பிரதம நாடகாசிரியர்களுள் ஒருவரான ஆதர் மிலர் (Arthur Miller) எழுதிய An Enemy of the People நாடகத்தின் தமிழ் வடிவம் இது.
தமிழில் : சி. சிவசேகரம்
தேசிய கலை இலக்கியப் பேரவை
-------------------------------------------------------
தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு - 94
நூற்பெயர் : சமூக விரோதி
பதிப்பு : ஓகஸ்ட், 2002
வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவை
அச்சிட்டோர் : கௌரி அச்சகம்
முகப்பு ஓவியம் : இரா. சடகோபன்
விநியோகம் : சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிறைவேற்) லிமிடட், 44, மூன்றாம் மாடி,
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி,
கொழும்பு -11.
தொலைபேசி : 335844.
விலை: ரூபா. 100/=
-------------------------------------------------
Title : Samooga Virothy
Edition : August, 2002
Publishers : Theshiya Kalai Ilakkiyap Peravai
Printers : Gowry Printers
Cover Design : R. Shadagopan
Diustributors : South Asian Books,
Vasantham (Pvt) Ltd,
No. 44, 3rd Floor,
C.C.S.M. Complex,
Colombo -11.
Tel : 335844
ISBN No : 955-8637-07-6
Price: Rs. 100/=
---------------------------------------------------------------------
பதிப்புரை
கவிஞர் சிவசேகரம் தமிழிற் தழுவிய ‘அபராதி நானல்ல’ என்ற தலைப்பிலான நாடகநூலுக்குப் பிறகு அவரது தழுவல்களில் அதி நீளமான நாடகச் சுவடியான இந்த நூலை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த நூலின் மொழிநடை‘அபராதி நானல்ல’ நூலினது போல சமகாலப் பேச்சுத் தமிழ்நடையே எனினும் முன்னையதிலும் சிறிது பழமையானது. இதற்கான காரணம், நாடகம் நடக்கும் காலம் சில தசாப்தங்கள் முந்தியது என்றே நினைக்கிறோம். பேச்சுத்தமிழ், நாடகங்களில் நகைப்புக்குரிய முறையிலேயே பயன்படுத்தப்பட்டுப், பேராசிரியர் கணபதிப்பிள்ளை போன்றோரால் நம்மிடையே செம் மொழிக்குரிய தகுதியைப் பெற்றது. அந்த வழியிலேயே கவிஞர் சிவசேகரமும் தனது நாடக உரையாடல்களை அமைத்து வருகிறார். நகர வயப்பட்ட வட இலங்கைப் பேச்சு மொழியைச் சார்ந்து அமைந்துள்ள இந்தச் சுவடி, தெளிவான கருத்துப் பரிமாறலில் பேச்சுத்தமிழின் ஆற்றலைப் புலப்படுத்துகிறது என்பது இதன் சிறப்பு.
மூலக்கதை சமூக யதார்த்தமான அறக் கருத்துக்கள் யாவற்றையும் உள்ளடக்கியது என்பதாலும், இதன் தமிழாக்கம் நூல்வடிவு பெறுவது சமூகப்பயன் மிக்கதாகிறது. நாடக மாந்தரில் இலட்சியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், சமூகக் கோட்பாடு உள்ளோர், இல்லாதோர் என்று பலர் வந்தாலும் எல்லாரும் குறை நிறைகள் உடைய மனிதர்களாயே நாடகத்தின் மூலம் விருத்தி பெறுகின்றனர். இது சுவடியின் யதார்த்தப் பண்புக்கு உரமூட்டுவது.
நாடகமேடை பற்றிய பல நுணுக்கங்கள் இந்தச் சுவடியில் தரப்பட்டுள்ளன. எனினும் மேடை வடிவ வசதிகட்கேற்ப அவை மாற்றிப் புனையக்கூடியன. அதேவேளை இந்தச் சுவடி வாசிப்புக்குரிய ஒரு ஆக்க இலக்கியமாகவும் பரவலான வாசிப்புக்கு உகந்தது என்பது எமது எண்ணம். இது பரவலான வாசிப்புக்கு உள்ளாவது இலக்கிய நோக்கில் மட்டுமன்றி நமது சமுதாய விழுமியங்களின் உயர்வின் நோக்கிலும் பயனுள்ளது என்பதும் எமது எண்ணம்.
அட்டைப்படம் வரைந்த கவிஞரும் ஓவியரும் பத்திரிகையாளரும் சட்டத்தரணியுமான இரா. சடகோபன் அவர்களுக்கும் கணனி வடிவமைத்த சோபனா, சிந்தியா ஆகியோருக்கும், இந்நூலை அச்சிட்டு வழங்கிய கௌரி அச்சகத்தினருக்கும், திரு.எஸ்.இராஜரட்ணம் அவர்களுக்கும் எமது நன்றிகள்.
என்றும் போல இப்போதும் விமர்சனங்களை மனமார வரவேற்கிறோம்.
தேசியகலை இலக்கியப் பேரவை,
இல. 44இ 3-ம் மாடி,
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி,
கொழும்பு - 11
தொலைபேசி : 335844.
---------------------------------------------------------------------
உண்மைகளைக் கூறத் துணிதல்
இந்த நாடகத்தின் மூலம், நவீன உலகின் நாடகமேதைகளுள் ஒருவராகக் கருதப்படும் ஹென்றிக் இப்சன் எழுதிய “மக்களின் எதிரி’ என்ற நோர்வீஜிய நாடகமாகும். இதன் சமூக-அரசியல் முக்கியத்துவம் கருதி, அமெரிக்காவின் முற்போக்குச் சிந்தனையாளரும் முக்கியமான நாடகாசிரியர்களுள் ஒருவருமான ஆதர் மிலர் இதை ஆங்கிலத்திற் தழுவினார். அந்தச் சுவடியை ஒட்டி வங்காள மொழியில் “புண ஷத்ரு” என்ற பேரில் சத்யஜித் ராய் ஒரு திரைப்படம் எடுத்ததாக அறிகிறேன். அதை நான் பார்க்கவில்லை. இச் சுவடி மிலரின் சுவடியின் தழுவலாகும். இதைத் தமிழ்ப் படுத்துவதில் அதிகம் சிக்கல் இருக்கவில்லை. பேர்களில் மாற்றங்கள் செய்ததற்கு மேலாகச் சம்பவங்களில் அதிகம் கைவைக்க வேண்டிய தேவை இல்லாமலே இத் தழுவலை என்னாற் செய்ய முடிந்தது.
பெண்ணுரிமைக்காகத் தனது நாடகமான “பொம்மை வீடு” (A Doll's House) மூலம் குரல் கொடுத்த முதலாவது நாடகாசிரியர் என்ற பெருமைக்குரிய இப்சனின் இந்த நாடகம் எழுதப்பட்ட சூழ்நிலை பற்றிய ஒரு குறிப்பு மிலரால் தரப்பட்டுள்ளது. “பேய்கள்” என்ற நாடகத்தை வழங்கத் துணிந்ததற்காக, கல்லெறிவாங்காத குறையாக மேடையிலிருந்து விரட்டப்பட்டதன் பின்னணியில் இந்த நாடகம் உருவானது என்றும் ஊர்க் கிணறு ஒன்றில் நச்சுத் தண்ணீர் இருந்ததாகக் கண்டறிந்து சொன்னதற்காகக் கடுமையாகத் தாக்கப்பட்ட ஒரு ஹங்கேரிய விஞ்ஞானி பற்றிய செய்தியே இதன் அடிப்படை என்றும் கூறப்படுவதாக மிலர் தெரிவிக்கிறார்.
இவை காரணமாக, மூலச் சுவடியில் வரும் சில பகுதிகளுக்கு குசூஸிஸத் தன்மையுடைய வாசிப்புக்கள் இயலும் எனக் கருதி அவற்றை விலக்கியதாகவும் மிலர் கூறியுள்ளார். இடீசனின் அரசியலைத் தெளிவாக அறிந்த காரணத்தினாலேயே அவர் அவ்வாறு செய்தார் என்பதையும் அதற்கான நியாயத்தையும் விவரமாக மிலர் விளக்கியுள்ளார். எனினும் இச்சுவடி மிலர் எழுதியதன் தழுவல் என்பதால் அவ்விளக்கம் இங்கு அவசியமில்லை என நினைக்கிறேன். இது மிலர் எழுதியதற்கு விசுவாசமானது என்று என்னால் உறுதி கூற இயலும்.
நாடகத்தின் கதை மிக எளிமையானது. ஒரு விஞ்ஞானி மனிதருக்குத் தீங்கான ஒன்றைக் கண்டறிகிறார். அதை உலகறியச் செய்வதன் மூலம் தான் மனித இனத்திற்கு நன்மை செய்வதாகவும் அதற்காகத் தனக்கு நன்றியாவது கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார். மாறாக, ஊரில் உள்ள சிலரது நலன்கட்கு அந்த உண்மை பாதகமாக உள்ளதன் விளைவாகத் தனது கண்டுபிடிப்பைத் ‘திருத்தி’ எழுதுமாறு விஞ்ஞானி கட்டாயப் படுத்தப்படுகிறார். அதை அவர் ஏற்க மறுத்து அதன் விளைவுகளை எதிர்கொள்கிறார்.
இதன் மூலம் வலியுறுத்தப்படுவன இரு விடயங்கள்: உண்மைகள் பங்கப்படுத்தக் கூடாதன. உண்மையைத் திரிப்பதற்கு முற்படுகிறவர்கள் தவிர்க்க இயலாமல் வக்கிர நடத்தை உள்ளவர்களாகிச் சீரழிகின்றனர்.
உண்மை என்பது பெரும்பான்மை வலிமையால் நிறுவப்படுவதல்ல என நாம் அறிவோம். எந்தச் சரியான கருத்தும் முதலில் சிறுபான்மைக் கருத்தாகவே தொடங்கிக் காலப்போக்கில் பெரும்பான்மையினரைத் தன் வசமாக்குகிறது. இதற்கு மனித இன வரலாற்றில் நிறைய ஆதாரங்களைக் காட்டலாம். இதைத் தனிநபர்வாத நியாயங்களுடன் நாம் குழம்பிக் கொள்ள அவசியமில்லை. எந்த ஒரு உண்மையின் பெறுமதியும் அதன் சமூகச் சார்பாகவே தீர்மானிக்கப்படுகிறது என்பதுஇ சமூகத்தின் உடனடியான அங்கீகாரத்தை ஒரு உண்மையினதோ அதன் பெறுமதியினதோ அளவுகோலாக்கி விடாது.
இந்த நாடக் சுவடி லண்டனில் நான் வாழ்ந்த காலத்தில், ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் முன்பு, நண்பர் பாலேந்திரா கேட்டுக்கொண்டதற்கமைய அவைக்காற்றுக் கலைக் கழகத்தினருக்காகத் தமிழிற் தழுவியது. இரண்டு ஆண்டுகட்கு முன்பு மேடையேறும் என அறிவிக்கப்பட்டும் அங்குள்ள பலவேறு சிரமங்கள் காரணமாக மேடையேறவில்லை.
இச் சுவடியின் உரையாடல்களிலும் ஈழத்தின் வடக்கின் நகர் சார்ந்த நவீனத் தமிழ்ப்பேச்சு வழக்குக்கு இசைவான மொழிநடை பாவிக்கப்பட்டுள்ளது. அயற் சொற்களை எழுத ஆங்கிலத்திற் புழக்கத்தில் உள்ள வரிவடிவங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளேன். சிங்கள அடையாளம் ஒன்று இம் முன்னுரையிலும் உள்ளது. இந்த நடைமுறை பற்றிய விவாதங்களுக்கு என் நியாயத்தை விளக்க இங்கு இடம் போதாது. எனினும் என் நிலைப்பாட்டை இங்கு மீளவும் கூறுகிறேன்.
பேச்சுத் தமிழ் இன்று ம-ப-h, ள-உh-த, வ-ன, வா-னா, p-டி எனும் ஒலி வேறுபாடுகளையும் க, ண எனும் ஒலிகளையும் பழந் தமிழ் மரபிற்குப் புறம்பான முறையில் ஏற்றுப் பிரயோகிக்கிறது. சில உயிரோசைகளையும் அது உள்வாங்கியுள்ளது. இது தமிழின் தூய்மை பற்றிய பிரச்சனை அல்ல. வாழும் தமிழ் எவ்வாறு எழுதப்படக்கூடும் என்ற பிரச்சனை. இதுவரை பலர் இப்பிரச்சினையை ஏற்றாலும் தீர்வுகள் பற்றிய தயக்கங்களும் அச்சங்களும் அதிகம். வழங்கப்பட்டுள்ள தீர்வுகளில் குறைந்தளவு சிக்கல் கொண்டதும் விளக்கங்களின்றியே பெருமளவுஞ் சரியாக வாசிக்கக் கூடியதுமான தீர்வாகவே, பு, வு, னு, P, டீ, கு, ணு ஆகிய எழுத்து வடிவங்கள் ஒவ்வொன்றையும் ஒரு கிரந்த வரிவடிவம் (ஷ,ஸ போன்று) எவ்வாறு கையாளப்படுமோ அவ்வாறே பயன்படுத்தி வருகிறேன்.
இது இறுதியான தீர்ப்பல்ல என்பதிலும் எப்போதும் தெளிவாகவே உள்ளேன். தமிழுக்கு வேண்டிய புதிய தனி வரிவடிவங்களும் இன்றைய எழுத்து முறையும் இணைந்த ஒரு முறையில் புதிய வடிவங்களை இன்னொரு அயல் மொழியினின்றோ வழக்கில் இருந்து போன கிரந்த எழுத்து முறையில் இருந்தோ பெறவும் புனையவும் இயலும். மாறாக, இன்னும் ஒரு படி மேலே சென்று, முழுத் தென் ஆசியாவுக்கும் பயன்படக் கூடியதும் ஆங்கில, கிரேக்க, ரஷ்ய மொழிகட்கு உள்ளது போன்ற எழுத்து முறையை ஒட்டியதுமான ஒரு முறையை வகுக்க முடியும். இவ்வாறான முயற்சிகளாற் தமிழ் வளருமே ஒழியத் தேயாது. தமிழின் அழிவுக்குத் துணை போவன பத்தாம் பசலித்தனமான சிந்தனைகளும் நவீன உலகின் தேவைகட்குத் தமிழ் முகங்கொடுப்பதற்கு நாமே விதித்துக் கொள்ளும் தடைகளுமே தாம்.
நான் பயன்படுத்தியுள்ள அயல் எழுத்து வடிவங்கள் சமகாலத் தமிழின் தேவையொன்றையும் எதிர்கால வளர்ச்சிக்கான ஒரு திசைக்காட்டலையும் மனதிற் கொண்டே உருவானவை. அவற்றை ஏற்பதோ விடுவதோ என்பதல்ல நமது பிரச்சினை. அவை போன்ற புதிய வடிவங்களை உருவாக்கிப், புதிய சூழலில் பதிய பண்புகளை உள்வாங்கியுள்ள ஒரு மொழியை முறையாக எழுதுவதற்கான ஒரு தீர்வு பற்றிய பொது உடன்பாட்டை நாம் வந்தடைவதே நம் முன்னுள்ள சவால்.
எனது ஆலோசனையைத் தேசிய கலை இலக்கியப் பேரவை ஏற்பது என்றால் அது ஒரு விரிவான விவாதத்தின் பின்னரே இயலுமாகும். அதே வேளை எனது நடைமுறையை ஒரு கருத்து என்ற மட்டத்தில் மதித்து அதை நூல் வடிவில் நடைமுறைப்படுத்த உடன்பட்ட தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கு என் நன்றி. இதற்கும் மேலாக எந்த வெளியீட்டாளரிடமும் எதையும் நான் எதிர்பார்ப்பது நியாயமாகாது.
இந்தச் சுவடி தமிழ் நாடகத் துறைக்குப் பயனுள்ள ஒரு பங்களிப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இது நூல் வடிவம் பெறுவதற்குக் காரணமாயும் துணையாயும் இருந்த பாலேந்திரா, தேசிய கலை இலக்கியப் பேரவையினர்,தேவராஜா ஆகியோருக்கு எனது நன்றிகள்.
சிவசேகரம்
30-03-2002.
---------------------------------------------------------------
அங்கம் 1 : காட்சி 1
(மாலை நேரம். டொக்வுர் நல்லதம்பியின் வரவேற்பறை. எளிமையாக, ஆனால் மனோரம்யமாக, அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையின் வலது உட்புறத்தே உள்ள ஒரு வாயில் நுழைவதற்கு வழி விடுகின்றது. நுழைவறையின் மறுபுறம், வரவேற்பறைக்குப் பின்னால் மறைவாக உள்ள சாப்பாட்டு அறையுடன் சேர்ந்துள்ளது. இடது புறத்தே ஒரு கதவு டொக்;வுரின் அலுவலறைக்கும் பிற அறைகட்கும் வழிவிடுகிறது. மேடையின் உட்புற இடது மூலையில் ஒரு அடுப்பு உள்ளது. இடது புறத்தே ஒரு ஸோகுhவும் அதன் பின் ஒரு மேசையும் உள்ளன. வலது முன்புறத்தே இரு கதிரைகளும் இடையே ஒரு மேசையும் அதன் மேல் ஒரு விளக்கும் வட்டிலில் பழங்களும் உள்ளன. பின்பக்கத்தே இடது புறமாக, ஒரு திறந்த கதவு சாப்பாட்டறைக்கு வழி விடுகிறது. அதில் ஒரு பகுதி தெரிகிறது. யன்னல்கள் வலது சுவரில் உள்ளன. அவற்றுக்கு முன் ஒரு வாங்கு உள்ளது.)
(திரை விலக, விநாயகமும் ஐயாத்துரையும் சாப்பாட்டறையில் உணவு அருந்துகின்றனர். விநாயகம் ‘தினப் புதினம்’ பத்திரிகையின் துணை ஆசிரியர். ஐயாத்துரை கொஞ்சம் அலங்கோலமான தோற்றமுடைய கிழவர். அவசர அவசரமாக உண்கிறார். கடைசி வாயை விழுங்கிக் கொண்டு வரவேற்பறைக்கு வருகிறார். வந்துஇ பழைய குடையை எடுத்துக் கொண்டு சால்வையையும் அணிகிறார். விநாயகம் உதவிக்கு வருகிறான்.)
வி : நீங்கள் கெதியாத்தான் சாப்பிடுகிறியள் ஐயா. (விநாயகத்தின் உற்சாகம் முட்டாள்த் தனத்தின் விளிம்பில் உள்ளது.)
ஐ : சாப்பிட்டு ஏதேன் ஆகப் போகுதோ தம்பி. எங்கட மோளிட்ட நான் வெளிக்கிட்டுட்டன் எண்டு சொல்லு.
(ஐயாத்துரை முன்வாசலுக்குப் போகிறார். விநாயகம் தனது உணவை முடிக்கப் போகிறான். வழியில் ஒரு பழத்தை எடுத்துக் சுவைக்கிறான். நன்றாக இருந்ததால், இன்னொன்றை எடுத்துச் சட்டைப் பொக்கற்றில் போட்டபடி கதவு வரை செல்கிறான். நின்று, திரும்பி வந்துஇ இன்னொரு பழத்தைப் பொக்கற்றில் போடுகிறான். மேசையில் பெட்டியில் சிகரெட் இருப்பதைக் காண்கிறான். ஐயாத்துரைக்குத் தெரியாமல், மோந்து பார்த்து, மறைவாகச் சிலதை எடுத்துச் சட்டையின் உள்ளே வைக்கிறான். பெட்டியை மூடும் போது திருமதி புனிதம் நல்லதம்பி சாப்பாட்டறையிலிருந்து வருகிறார்.)
பு : அப்பா! நீங்கள் நிக்கிறியள் தானே என்ன?
ஐ : வேலை இருக்குப் பிள்ளை.
பு : உங்களுக்குத் தெரியும் உங்கட அறைக்குத்தான் போறியளெண்டு. நில்லுங்களன். விநாயகம் நிக்கிறார். துரைசாமியும் வாறார். உங்களுக்கும் முசுப்பாத்தியாயிருக்கும்.
ஐ : பல வேலையும் இருக்கு. ஏன் வந்தனானெண்டா, இறைச்சிக் கடையில சொன்னவன் நீங்கள் கோழி வாங்கினியளெண்டு. நல்ல ருசியா இருந்தது பிள்ளை.
பு : அவர் வருந்தனைக்கேன் நில்லுங்களன். உலாத்தத்தான் போனவர்.
ஐ : (மேசையைக் காட்டி) அவற்ற சிகரெட்டில எடுத்தாக் கோவிப்பாரோ?
பு : சீ, எடுங்கோ. இங்க, கொஞ்சம் பழமும் எடுங்கோ. உங்கட அறையில எப்பவும் கொஞ்சம் பழம் வைச்சிருந்தா நல்லந்தானே.
ஐ : இல்லைஇ இல்லை, அதெல்லாம் வேண்டாம். (வாசல் மணி ஒலிக்கிறது.)
பு : துரைசாமியாத்தான் இருக்கும். (போய்க் கதவைத் திறக்கிறார்.)
(மாநகர மேயர் திரு. ராசலிங்கம் கைத்தடி, தொப்பி சகிதம் வருகிறார். அறுபது வயதுள்ள அவர் கலியாணமாகாதவர். கப்பல் கரை புரளாமல் தளத்தின் நடுவில் நின்று சமன் படுத்துவதையே தம் வாழ்வின் பிரதான சாதனையாகக் கருதுகிறவர்களில் இவர் ஒருவர், இந்தக் குடும்பத்தின் இணக்கமான வாழ்க்கையைப் பார்க்கும் போது சிறிது ஏக்கமாக இருந்தாலும், இங்கு வரும் போது வீடு தேடி வந்ததை ஒத்துக் கொள்ளாத பாவனையில் தலையில் வைத்த தொப்பியைக் கழற்றாமலே உட்காருவார்.)
பு : அண்ணையோ! என்னஇ அத்தி பூத்தாப் போல!
ரா : இதால போனாப் போல ... ( ஐயாத்துரையைக் கண்டு சிரிப்பு வர, முறுவலிக்கிறார்.) மிஸ்;;வுர் ஐயாத்துரை!
ஐ : (நக்கலாக) வணக்கம் மேயர் ராசலிங்கம் அவர்களே!
(பழத்தைக் கடித்தபடி வெளியேறுகிறார்.)
பு : அண்ணாஇ நீங்கள் அவரைக் கவனியாதையுங்கோ, அவருக்கு அறளை பெயருது. ஏதேன் சாப்பிடுவியளோ?
ரா : தாங்க்ஸ். ஒண்டும் வேண்டாம். (விநாயத்தைக் காண்கிறார். சாப்பட்டறையில் இருந்தபடி அவருக்குத் தலையசைக்கிறான்.)
பு : (பதற்றப்பட்டு) அவன் தற்செயலா வந்தவன்.
ரா : அதில என்ன. பின்னேரத்தில நான் சூடாச் சாப்பிடமாட்டன். வயித்துக்கு ஒத்துக் கொள்ளுதில்லை.
பு : இங்க வேற எதையேன் சாப்பிடக் கூடியதாத் தரட்டோ?
ரா : அவதிப்படாதையுங்கோ. நான் என்ட Nவுhஸ்ற்றும் தேத்தண்ணி யோடையும் நிண்டிருவன். உடம்புக்கும் நல்லது. சிலவுங் குறைய.
பு : (முறுவலித்தபடி) நீங்கள் சொல்லிறதைக் கேட்டா, நானும் இவரும் காசைத் தூக்கிக் காத்தில எறியிறம் போல எல்லோ இருக்கு.
ரா : உங்களைச் சொல்லயில்லை. தம்பி இல்லையோ?
பு : அவர் பெடியங்களோட உலாத்தப் போயிட்டார்.
ரா : சாப்பிட்ட கையோட போறது கொஞ்சம் பயமெல்லோ. என்ன சொல்லுறீங்கள்? (கதவு உரக்கத் தட்டப்படுகிறது.) அதெண்டா என்ட தம்பியார் போலத்தான் இருக்கு.
பு : நான் நினைக்கேல்லை, இவ்வளவு கெதியா... வாங்கோ. வாங்கோ.
(துரைசாமி வருகிறார். வயது 30க்குச் சற்று அதிகம். அதிகாரத்தையும், செல்வத்தையும் ஒரு புறம் வெறுத்தாலும், அவற்றை அடையவும் ஆசை சிறிது உள்ளவர். அவரது சங்கடம் ஏதென்றால், எல்லாவற்றிலும் மேலாகத் தன் சமுதாயச்சூழலைச் சார்ந்தவராக இருக்க விரும்புகிறார். ஆயினும் சமுதாய மாற்றத்தை வேண்டும் ஒருவரைப் பொறுத்த வரை, அது சாத்தியமாகாமலே துவண்டுவிடக் கூடிய ஒரு ஆசை.)
பு : மிஸ்வுர் துரைசாமி...
து : வரக் கொஞ்சம் பிந்திப் போச்சு. கோவிக்காதயுங்கோ. பிறெஸ்ஸில கொஞ்சம் சுணக்கிப் போட்டினம். (அதிசயத்துடன்) மேயர் ஐயா, வணக்கம்.
ரா : (விறைப்பாக) துரைசாமி, என்ன, அலுவலாத்தானே வந்தனீ.
து : அதுவுந்தான். பேப்பருக்கு ஒரு கட்டுரை விஷயமா.
ரா : (நக்கலாக) ஓ! அதெண்டாத் தெரிஞ்சதுதானே. என்ட தம்பியார் எழுதுறாராம். அதென்ன பேப்பர்?... பணப் புதினமோ?
து : (சிரித்தபடி, பிடி கொடாமல்) தினப் புதினம் ஐயா. சில வேளையில டொக்வுர் உண்மை எதையேன் அம்பலப்படுத்த நினைச்சால் புதினத்துக்கு எழுதிக் கவுரவிப்பார்.
ரா : உண்மை! ஓ, அதுதான் பாத்தன்.
பு : (கலக்கத்துடன்இ துரைசாமியிடம்) நீங்கள் ஏதேன்... (சாப்பாட்டு அறையைச் சுட்டிக் காட்டுகிறார்.)
ரா : உங்கட பேப்பரைப் பாவிக்கிறதுக்கு டொக்வுரில பிழை சொல்லுறன் எண்டு நினையாத. ஒவ்வொரு கூத்தாடிக்கும் நல்லாக் கைதட்டுற சபையிலதானே விருப்பம். உங்கட பேப்பரோடையும் எனக்குக் கோவமில்லைத் துரைசாமி.
து : நானும் அப்படி நினைக்கேல்லை ஐயா.
ரா : உண்மையில இந்த நகரத்துச் சனங்கள் எவ்வளவு பொறுமையானதுகள் எண்டு அறிஞ்சு அதுகள மதிக்கிறன். எவ்வளவு நல்லது கண்டியோ. நாங்கள் எல்லாம் ஒரே விஷயத்தில நம்பிக்கையுள்ள ஆக்கள் எண்டதை மறந்திராத. அதுதான் எங்களை ஒத்துமைப் படுத்துது.
து : ஆம்பல் வயல் நீரூற்றைத் தானே சொல்லுறியள்.
ரா : நீரூற்று. துரைசாமி, எங்களுக்குக் கிடைச்ச வரம் இந்த நீரூற்று. எங்கட நகரத்தின்ட ஆத்துமாவையே மாத்திப் போட்டுது. நான் சொல்லுறதைக் கவனிச்சுக் கேள், ஆம்பல்வயல் நீரூற்று எங்கட நகரத்தின்ட பேரை உலகப்படத்தில பொறிக்கப் போகுது. அதில ஒரு ஐமிச்சமுமில்லை.
பு : அப்படித்தான் அவருஞ் சொல்லுறவர்.
ரா : எல்லாம் முன்னேறுது. காணி பூமி விலை ஏறுது, காசு நல்லாப் புழங்குது, யாவாரம் எக்கச்சக்கமா நடக்குது.
து : வேலையில்லாப் பிரச்சினையும் இல்லை.
ரா : சரியாச் சொன்னாய்இ மழை காத்து இல்லாத ஒரு ஸீஸன் எண்டா, உள்ள வருத்தக் காறரெல்லாம் வண்டில் வாகனம் நிறைய வருவினம். அதுக்குப் பிறகு, நீரூற்று ஒரு நுவரெலியா மாதிரித்தான். நகரத்தில காசுக்காறர் மட்டும் தான் வரி குடுக்கிற நிலமையும் மாறிவிடும்.
து : முன்கூட்டியே ஆக்கள் அனுமதிக்கு விண்ணப்பஞ் செய்யினம் எண்டு கேள்விப்பட்டன்?
ரா : ஒவ்வொரு நாளுமல்லோ விண்ணப்பம் வருகுது. மெத்த நம்பிக்கையா இருக்கு. மெத்த நம்பிக்கையா.
து : நல்லதுதானே. (திருமதி நல்லதம்பியிடம்) அப்பிடியெண்டா டொக்வுரின்ட கட்டுரையும் பிரயோசனப்படும்.
ரா : டொக்வுர் இன்னொருக்காலும் ஏதேன் எழுதுறாரோ?
து : சீ. மழைக் காலந் தொடங்கேக்க அவர் எழுதின ஒரு விஷயம் - நீரூற்றுத் தண்ணி விஷேசமெண்டு சொல்லி. அந்த நேரம் நான் போடாமல் வச்சனான்.
ரா : ஏதேன் பிரச்சனையோ?
து : அப்படியொண்டுமில்லை. இந்த மழைக்காலம் போகவிட்டுத்தான் ஆக்கள் விடுமுறையில கிளம்புவினம். அதுவரைக்கும் விட்டனான்.
ரா : அதெண்டாக் கெட்டித்தனந்தான் துரைசாமி. வலுங்கெட்டித்தனம்.
பு : அவர் இந்த நீரூற்றைப் பற்றிப் பலவிதமான யோசனை சொல்லுறவார். ஒவ்வொரு நாளும் அவர்...
ரா : செய்வார் தானே. அங்கையிருந்து தானே அவற்ற சம்பளம் வருகுது.
து : அம்மட்டுமில்லை. எண்டு நினைக்கிறன். டொக்வுர் தான் அந்த நீரூற்றையே உண்டாக்கினவர் எண்டு சொல்லலாம். என்ன சொல்லுறியள்?
ரா : அப்படிக் கதையாத! இந்தமாதிரிக் கிட்டடியில கனக்கக் காதில விழுகுது. ஏன் நானும் அதில கொஞ்சம் செய்தனான் தானே!
பு : ஓ! அவர் எப்பவுஞ் சொல்லிறவர்...
து : நான் சொன்னது என்னெண்டா, யோசனைய முதல்ல...
ரா : என்ட தம்பிக்கு யோசனையளுக்குத் தட்டுப்பாடில்லை. பலமாதிரி யோசனையளுஞ் சொல்லுவான். அதுகளை நடைமுறைப் படுத்திறதுக்கு வேற ஆள் வேணும். இந்த வீட்டில உள்ளவையேன் அதை உணருவினம் எண்டு...
பு : அண்ணை, நாங்கள் ஆரும் அந்த மாதிரி - துரைசாமி, போய் ஏதேன் சாப்பிடுங்கோ. அவர் இப்ப வந்திடுவார்.
து : தகூங்க்ஸ். கொஞ்சமா ஏதேன்... (விநாயகத்துடன் சாப்பாட்டு மேசையருகே அமர்கிறார்).
ரா : (குரலைத் தாழ்த்தி) கவனிச்சீரோ! ஏன் இந்த எளிய பரம்பரையளுக்கு கொஞ்சம் நயமாகக் கதைக்கத் தெரியாதோ?
பு : அதைப் பற்றி ஏன் யோசிக்கிறியள்? நீங்களும் அவரும், சகோதரங்கள் மாதிரி அந்தப் பெருமையில பங்கு பாராட்டேலாதோ.
ரா : இங்க பாரும் புவனம். சில பேருக்குப் பங்கு போடுறதில திருத்தியில்லை.
பு : விசர்க்கதை கதையாதேங்கோ. நீங்கள் இரண்டு பேரும் நல்லா ஒத்துப் போவியள். அவராகத்தான் இருக்க வேணும்.
(முன் வாசலுக்குப் போய்த் திறக்கிறார். நல்லதம்பி வெளியே கந்தசாமியுடன் சிரித்துப் பேசுகிறார். அவர் தனது வாழ்க்கையின் உச்சநிலையில் உள்ளார். எல்லாவற்றையும் எப்போதுமே சுயவிருப்பிற்காகச் செய்பவர் எனலாம். பொருட்களை, மனிதரை, வாழ்க்கையை நேசிப்பவர். அவரைப் பொறுத்தவரை, நாட்களில் மணித்தியாலங்கள் போதாது. எதிர்காலம் உன்னதமானது. இத்தனைக்கும், பலருக்கு அவரைப் பிடிக்காது. ஏனென்றால், அவர் இயற்கை விதித்த பங்கிற்கு கீழாக எதையும் ஏற்கமாட்டார். மற்றவர்களோ, மனிதர் விதித்த பங்கிற்கு கீழாகவே ஏற்கப் பழகி விட்டவர்கள்.)
ந : (நுழைவாயிலில் நின்றபடி) புவனம்! உமக்கு இன்னுமொரு விருந்தாளி வந்திருக்கிறார். கப்வுன் இப்பிடி உள்ளுக்க வாங்கோ. பிள்ளையள், உள்ளுக்கை ஓடுங்கோ, உங்களுக்கு இப்ப இன்னொருக்காப் பசி கிளம்பியிருக்கும். கப்வுன் கந்தசாமி, இந்த றோஸ்ற் சிக்கினை ஒருக்கா வந்து ருசி பாருங்கோ.
(கப்வுனை அழைத்தபடி மண்டபத்து வழியே சாப்பாட்டறைக்குப் போகிறார். முத்துவும் இரத்தினமும் தொடர்கிறார்கள்.)
பு : இஞ்சாருங்கோ (வரவேற்பறையிலுள்ள ராசலிங்கத்தைக் காட்டுகிறார்.)
ந : (வாசலடியிற் திரும்பி, வரவேற்பறையில் ராசலிங்கத்தைக் காண்கிறார்.) ஓ, அண்ணா. (அறைக்குட் சென்று தோளிற் கையைப் போடுகிறார்.) கண்டு கனகாலம்.
ரா : நான் உடன வெளிக்கிட வேணும்.
ந : திறமான விஸ்கி மேசையில எடுத்து வைச்சிருக்கேக்க, இதென்ன போறகதை சொல்லுறீங்கள். புனிதம் விஸ்கியை மறக்கேல்லைத் தானே.
பு : நானொண்டும் மறக்கேல்லை. அங்க தண்ணி கொதிக்குது. (சாப்பாட்றைக்குப் போகிறார்.)
ரா : விஸ்கியுமோ?
ந : சும்மா கதிரையில கொஞ்சம் ஆறுதலா இருங்கோவன்.
ரா : அதொண்டும் வேணாம். நான் உந்தத் தண்ணிப் பாட்டியளுக்கு ஒரு நாளும் போறேல்ல.
ந : இது பாட்டி இல்லை, அண்ணை.
ரா : இல்லாட்டி வேறென்ன? (சாப்பாட்டறைக்குள் எட்டிப் பார்க்கிறார்.) நீங்களெல்லாம் இந்தளவையுஞ் சாப்பிட்டு எப்படிச் சீவிக்கிறியள் எண்டு விளங்கேல்லை.
ந : (கைகளை உராசியபடி) ஏன்? இளம்பிள்ளையள் சாப்பிடுறதைப் பாக்கிறதை விடப் பெரிசா என்ன சந்தோசம் இருக்கு? இவர்கள் தான் முழு எதிர்காலத்தையும் உலுக்கப் போறவங்கள்.
ரா : (சற்று அதிர்ச்சியுடன்) அப்பிடியோ? என்னத்த உலுக்கப் போறாங்கள்? (இடப்புறமுள்ள கதிரையில் அமர்கிறார்.)
ந : (உலாவியபடி) யோசிக்காதையுங்கோ. நேரம் வரேக்க சொல்லுவாங்கள். எங்களைப் போல கிழட்டு மடையர் ...
ரா : என்னை ஒருவனும் இற்றை வரையில அப்பிடிச் சொல்லேல்லை.
ந : சும்மா எடுத்ததுக்கெல்லாம் ஏன் அண்ணா என்னில பாயிறியள். உங்கட பிரச்சினை என்னெண்டா, உங்கட புலன்கள் மழுங்கிப் போச்சு. எங்கையேன் போய்த் தியானத்தில இருந்து போட்டுஇ இவங்கள் புது உலகம் படைக்கிறதைப் பாக்க வாங்கோ.
ரா : இங்க!
ந : எழுப்பவும் எதிர்க்கவும் எத்தனை இருக்கு! அதில்லாம, அண்ணா, மனிசர் செத்தமாதிரித்தான். புவனம், தபாற்காரன் வந்தவனோ?
பு : (சாப்பாட்டறையிலிருந்து) இண்டு ஒரு தபாலும் இல்லை.
ந : இன்னொரு விஷயம் அண்ணா, நல்ல வருமானம். வயிறு காஞ்சு சீவிச்ச பிறகுதான் அதின்ட அருமை தெரியும்.
ரா : நீ எப்ப பட்டினி கிடந்தனீ.
ந : கிட்டத்தட்ட! அங்க வடக்கில கனகாலமா வலுங் கஷ்டமான சீவியம். இப்ப ராசா மாதிரிச் சீவியம். இண்டைக்கு றோஸ்ற் சிக்கின். கடவுள் புண்ணியத்தில நாளைக்கும் மிச்சமிருக்கு. ஒரு துண்டு எடுங்களன்- வாங்கோ.
ரா : வேண்டாம், வேண்டாம். ஒண்டும் வேண்டாம்.
ந : அதை உங்களுக்கும் காட்ட வேணும். விடுங்களன். உள்ளுக்கு வாங்களன் - எங்கட மேசைக்கு ஒரு விரிப்பும் இருக்கு. (தமையனைச் சாப்பாட்டு அறைக்குள் இழுக்கிறார்.)
ரா : நான் கண்டனான் எண்டா.
ந : வாழ்க்கைய அனுபவிக்கிறது. அதுதான் என்ட கொள்கை! எண்டாலும் புவனஞ் சொல்லுறா, நான் இப்ப சிலவழிக்கிற அளவுக்குக் கிட்ட சம்பாதிக்கிறனாம்.
ரா : (ஒரு பழத்தை வேண்டாமென்று மறுத்தபடி) அப்ப நீ கொஞ்சம் முன்னேறுறாய்தான்.
ந : அண்ணாஇ அது பகிடி! அதுக்குச் சிரிக்கவெல்லோ வேணும்!
(இடது புறத்திலுள்ள மற்றக் கதிரையில் அமர்கிறார்.)
ரா : அடுத்தடுத்து றோஸ்ற் சிக்கின் தின்னுறது பகிடி இல்லைக் கண்டியோ!
ந : என்னைச் சுத்தி மனிசர் இருக்கிற சந்தோசத்தை நான் அனுபவிக்கக் கூடாதோ? எதையாவது செய்ய வேணும் எண்ட துடிப்புள்ள உசாரான, சந்தோசமான, சுதந்திரமான இளம் ஆக்களைக் காணவேணும் எண்டு எனக்கொரு தேவை இருக்கு. நீங்கள் பாருங்கோ. துரைசாமி வந்தவுடன கதைப்பம்.
ரா : ஓ! துரைசாமி! இப்ப தான் நினைவு வருகுது. உன்ட கட்டுரை ஒண்டைப் போடப் போறானெண்டு சொன்னான்.
ந : என்ட கட்டுரையையோ?
ரா : ஓ, இந்த நீருற்றைப் பற்றி - மழை காலத்தில நீ எழுதினதாம்.
ந : ஆ, அதையோ! முதலாவதா, அதை இப்ப அச்சடிக்கிறதை நான் விரும்பேல்ல.
ரா : என்ன? நான் நினைச்சன், இதுதான் சரியான தருணம் எண்டு.
ந : வழமையான நிலைமையள்ள அப்பிடி இருக்கலாம். (மேலும் கீழும் நடக்கிறார்.)
ரா : (அவரைப் பார்த்தபடி) நிலைமையளுக்கு இப்ப என்ன நடந்திட்டுது?
ந : (தயங்கியபடி) எனக்கு உடன சொல்லேலாது. எப்பிடியும் இண்டைக்கு ஏலாது. சிலவேளை, பாரதூரமான நிலவரமா இருக்கலாம். சிலவேளை, ஒண்டுமில்லாமலும் இருக்கலாம்.
ரா : குழப்பிறதை மட்டும் நீ சரியாச் செய்து போட்டாய். ஏதேன் பிழையோ? என்னட்ட இருந்து எதையேன் ஒளிக்கிறியோ? அந்த நீருற்று நிர்வாக சபைக்கு நான் தான் தலைவர் எண்டு உனக்கு நினைப்பு வந்தாப் பிழையில்லை எண்டு நினைக்கிறன்.
ந : உங்களுக்கும் ஒண்டு நினைப்பிருந்தா நல்லமெண்டு நினைக்கிறன் அண்ணா. சும்மா நாங்கள் ஏன் ஆளோடை ஆள் கொழுவ வேணும்?
ரா : ஆக்களோட கொழுவிற பழக்கம் என்னட்ட இல்லை! ஒண்டு மட்டுஞ் சொல்லுறன். ஆம்பல் வயல் நீருற்று அலுவல்ல எல்லாம் முறைப்படி ஒழுங்கா அந்தந்த அதிகாரியளுக்குள்ளால செய்யப்பட வேணும். என்ட முதுகுக்குப் பின்னால எதையேன் செய்ய நான் விடமாட்டன்.
ந : அண்ணா, உங்கடை முதுகுக்குப் பின்னால எப்ப போனனான்.
ரா : தம்பி, நீ எப்பவும் நினைச்ச காரியம் செய்யிற தரவழி. ஒரு கட்டுப்பாடான சமூகத்தில அது சரிவராது. தனி மனிசர் முழுச் சமூகத்துக்கும் கீழ்ப்படிய வேணும். எப்பிடியெண்டா (வார்த்தைக்குத் தட்டுத்தடுமாறியபடி, தன்னைக் காட்டி) பொது நன்மைக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய வேணும். (எழுகிறார்.)
ந : இருக்கலாம். அதுக்கும் எனக்கும் என்ன தொடசல்?
ரா : இங்கதான் தம்பி நீ ஒரு நாளும் பாடம் படிக்கமாட்டாய். கவனமா இரு. இல்லாட்டி, எப்பவேன் ஒரு நாள் துக்கப்படுவாய். சொல்லிப் போட்டன். இனி நான் வாறன்.
ந : உங்களுக்கு என்ன விசரோ? நீங்கள் பிழையான லைனில போறியள்.
ரா : நான் வழமையாப் பிழை விடுறேல்ல. நான் வெளிக்கிடட்டோ?
(சாப்பாட்டறையை நோக்கித் தலையசைத்து) வாறன் புவனம்.
(மற்றவர்களை நோக்கி) வாறன். (புறப்படுகிறார்.)
பு : (வரவேற்பறைக்குள் வந்தபடி) போட்டாரோ?
ந : எரிஞ்சல்லோ போட்டார்!
பு : அவரை என்ன செய்தனியள்?
ந : அவருக்கு என்னட்ட என்ன வேணும்? நான் ஆயத்தமா இல்லாமல் நான் சொல்லிற செய்யிற ஒவ்வொண்டையும் அவருக்கு ஞாயப்படுத்திக்; கொண்டிருக்கேலுமோ?
பு : ஏனாம்? அவருக்கு நீங்கள் என்னத்தை ஞாயப்படுத்த வேண்டியிருக்கு?
ந : புவனம் அதை என்னட்ட விடும். தபாற்காரன் இண்டைக்கு வராதது புதுமையாத்தான் இருக்கு.
(விநாயகமும் கந்தசாமியும் துரைசாமியும் சாப்பாட்டு மேசையருகிலிருந்து எழுந்து வரவேற்பறைக்கு வருகின்றனர். முத்துவும், இரத்தினமும் சிறிது நேரம் பின்னர் வருகின்றனர். புவனம் வெளியேறுகிறார.;)
வி : (கைகளை அகல விரித்தபடி) இப்படி ஒரு சாப்பாட்டுக்குப் பிறகு, முருகா, நான் ஒரு புது மனிசன் மாதிரி எல்லோ இருக்கிறன். இந்த வீடு.
த : (குறுக்கிட்டு) மேயர் இண்டைக்கு நல்ல குணத்தில இல்லை.
ந : அது அவற்ற வயிறு. அவருக்கு அவ்வளவாச் செமியாது.
து : தினப் புதினத்தில இருந்து ரண்டு ஆசிரியர்மார் வந்ததும் அதைக் கொஞ்சம் மோசமாக்கி இருக்கும்.
ந : அண்ணர் எப்பவும் தனிச்ச ஆள். பாவம். அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் கந்தோர் அலுவலும் கடமையும் குடங்குடமாக் குடிக்கிற வெறுந் தேத்தண்ணியுந்தான். புவனம் எங்களுக்குக் கொஞ்சம் விஸ்கி கொண்டு வாறீரே?
பு : (சாப்பாட்டு அறையிலிருந்து) இப்ப தான் எடுக்கிறன்.
ந : கப்வுன் இதில என்னோட செற்றியில இருங்கோ. எப்பாகிலும் அருமையா வாற விருந்தாளி எல்லோ நீங்கள். இருங்கோ.
க : முந்திஇ இந்த வீடு பார்க்க வடிவே இல்லை. இப்ப நல்ல லட்சணமா இருக்கு.
(துரைசாமியும் விநாயகமும் வலப்புறமாக அமர்கிறார்கள். புவனம் பானங்களைக் கொண்டு வந்து செற்றிக்குப் பின்னாலுள்ள மேசையில் வைக்கிறார்.)
வி : (கந்தசாமியிடம், நெருக்கமான தோரணையில் நல்லதம்பியைச் சுட்டி) உயர்ந்த மனுசன்.
பு : இந்தாங்கோ. விரும்பினதை எடுத்துக் கொள்ளுறீங்களோ?
ந : (ஒரு கிளாசை எடுத்;தபடி) நாங்கள் பாத்துக் கொள்ளுறம். (விஸ்கியை ஊற்றுகிறார்.) சுருட்டு... முத்து, சுருட்டுப் பெட்டி எங்கையெண்டு தெரியுந்தானே. ரத்தினம், என்ட சுங்கானை எடு. (பிள்ளைகள் இடப்புறமாகப் போகிறார்கள்.) எனக்கு இவன் முத்து இடையில என்ட சுருட்டுகள்ளை ஒண்டு ரண்டை எடுக்கிறவன் எண்டு ஒரு ஐமிச்சம் எண்டாலும், தெரிஞ்சமாதிரி நான் காட்டிக் கொள்ளுறேல்லை. புவனம் எங்க வைச்சனாணெடு தெரியுமோ? ஆ, கொண்டு வந்திட்டான். நல்ல பிள்ளையள்! (பிள்ளைகள் கேட்டவற்றைக் கொண்டு வருகிறார்கள்.) எல்லாரும் வேண்டியதை எடுங்கோ. நான் சுங்கானைக் கொளுத்துறன். எத்தனை காத்திலையும் மழையிலையும் இந்தச் சுங்கான் காடு வழிய என்னோட அலைஞ்சிருக்கு. ச்சியர்ஸ்!
(பிள்ளைகள் யன்னலருகே ஒரு வாங்கோடு அமர்கிறார்கள்.)
பு : (உட்கார்ந்து துணியில் பூவேலை செய்தபடி) கப்;வுன் நீங்கள் சுறுக்காக் கடலுக்குப் போயிருவீங்களோ?
க : அடுத்த கிழமை வெளிக்கிடுவமெண்டு நினைக்கிறன்.
பு : அதுக்குப் பிறகு, அமெரிக்காவுக்கோ?
க : அப்பிடித்தான் யோசினை.
வி : அப்ப அடுத்த தேர்தலுக்கு நிக்க மாட்டியள்.
க : என்னஇ தேர்தல் நடக்கப் போகுதோ?
வி : உங்களுக்குத் தெரியாதோ?
க : சீ, நான் இதுகள்ளை கனக்க ஈடுபடுறேல்லை.
வி : என்ன. உங்களுக்குப் பொது விசயங்கள்ளை நிறைய அக்கறை இருக்குத்தானே?
க : உண்மையா, எனக்கு இதொண்டும் விளங்காது.
(அவருக்கு விளங்கும், ஆனால் அதிகம் ஈடுபாடில்லை. அதிகம் பேசாத ஒருவர் அவர். ஆனால் அவருக்குக் குணவியல்புகள் இல்லாமல் இல்லை. தைரியமான அமைதியான நண்பர் இருப்பது இப்போதெல்லாம் மவுசான விசயம் இல்லை. என்றாலும் அதில் ஒரு கேடும் இல்லை.)
பு : (அனுதாபமாக) எனக்குத்தான், கப்வுன், அதுதான் உங்களைக் காண எனக்குச் சந்தோசமா இருக்கிறது.
வி : என்னெண்டாலும் கப்டன் நீங்கள் வோட்டுப் போடவேணும்.
க : ஒண்டும் விளங்காவிட்டாலுமோ?
வி : விளங்கிறதோ! என்ன சொல்லுறியள்? கப்டன், சமுதாயம் ஒரு கப்பல் மாதிரி. கப்பலைச் செலுத்த ஒவ்வொருத்தனும் ஏதேன் செய்ய வேணும்.
க : கரையில அது சரிவரேலும், ஆனாக் கப்பலில அவ்வளவா வேலை செய்யாது.
(தோளிற் பையும், கையிற் புத்தகங்களுமாக பவளம் நுழைவறைக்குள் வருகிறாள். நாம் எதிர்காலத்தின் நம்பிக்கைச் சுடராகக் கருதும் பெண் அவள். நேர்மையான மனவுறுதியுடைய அவளுக்குத் தொழிலின் பொருள் தெரியும். தொழிலை உலகின் நலன்களின் ஆக்க சக்தி என நினைப்பவள்.)
ப: (நுழைவாயிலிருந்து) ஹலோ!
ந : (அன்பாக) வா பவளம்.
வி : (கந்தசாமியிடம்) உயர்ந்த இளம் பெண்!
(பரஸ்பர வணக்கங்கள். பவளம் பையைத் தோளாற் கழற்றிப் புத்தகங்களை நுழைவறையில் ஒரு கதிரையில் வைக்கிறாள்.)
ப : (அறைக்குள் வந்தபடி) நான் பாடுபட்டு வேலை செய்திட்டு வாறன். இங்க எல்லாரும் சாக்குகள் மாதிரிச் சரிஞ்சு கிடக்கிறியள்.
ந : நீயும் வந்து ஒரு சாக்கா மாறுறதுதானே. வா, பவளம். வந்து பக்கத்தில இரு. இவளைப் பாத்திட்டு, “எப்பிடி இவள் எனக்கு வாய்ச்சாள்” எண்டு நினைக்கிறனான்.
(பவளம் தகப்பனருகே சென்று ஆதரவாகத் தடவிச் செல்கிறாள்.)
வி : உங்களுக்குக் குடிக்க ஏதேன் ஊத்தித் தரட்டோ?
ப : (மேசையருகே வந்து) உங்களுக்கேன் கரைச்சல். நானே எடுக்கிறன், அப்பா, மறந்தே போனன், உங்களுக்கு ஒரு கடிதம் இருக்கு. (புத்தகங்கள் இருக்கும் கதிரைக்குப் போகிறாள்.)
ந : (திடுக்குற்று) ஆரிட்டயிருந்து?
ப : கொலேஜூக்குப் போற வழியில காலம தபாற்காரரைக் கண்டன். உங்கட கடிதத்தையும் தந்தார். வீட்ட திரும்பி வர நேரம் இருக்கேல்லை.
ந : (எழுந்து அவளை நோக்கி நடந்து) இம்மட்டு நேரமா நீ அதை என்னட்டைத் தரேல்லை!
ப : அப்பா எனக்குத் திரும்பி வர நேரம் இருக்கேல்லை.
பு : அவளுக்கு நேரமில்லாட்டி...
ந : சரி, தா பிள்ளை பாப்பம்! (கடிதத்தை வாங்கி உறையைப் பார்க்கிறார்.) ஆ! இதுதான்.
பு : இதுக்கோ காத்துக் கொண்டிருந்தனியள்?
ந : நான் உடன வந்திடுவன். என்ட அறையில மேசை விளக்கு இருக்குதோ?
ப : ஓ, மேசையில எரிஞ்சபடி இருக்கு.
ந : ஒரு நிமிஷம் மன்னியுங்கோ. (அறைக்குட் போய் விரைவாகவே திரும்புகிறார். புவனம் அவரது கண்ணாடியைக் கொடுக்கிறார். திரும்பிப் போகிறார்.)
ப : அதென்ன, அம்மா?
பு : எனக்குத் தெரியாது. போன ரெண்டு மூண்டு நாளாத் தபாற்காரன் வந்தவனோ எண்டு திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்.
வி : ஒரு வேளை வெளியூரில இருக்கிற ஆரேன் நோயாளியாயிருக்கும்.
ப : பாவம் அப்பா, வேலை மெத்திப் போச்சு. (பானத்தை அருந்தியபடி) ஆ!
து : நீங்கள் எங்களுக்காகத் தமிழாக்கப் போறதாகச் சொன்ன அந்த ஆங்கில நாவலுக்கு என்ன நடந்தது?
ப : துவங்கினனான், பிறகு வேற வேலையள்.
து : பின்னேரப் பள்ளியில படிப்பிக்கத் துவங்கிவிட்டியளோ?
ப : ஒரு நாளைக்கு ரெண்டு மணித்தியாலம்.
வி : அதை விடக் கொலேஜ் படிப்பும்?
ப : (ஸோகுhவில் அமர்ந்தபடி) ஓ அஞ்சு மணித்தியாலம். அதோட, ஒவ்வொரு நாளும் இரவில ஊரிற்பட்ட பாடங்களைத் திருத்த வேணும்!
பு : அவள் ஒரு நாளும் போகாம விடாள்.
து : (பவளத்திடம்) அதுதான் உங்களை ஓடிக் களைச்ச ஆள் மாதிரி நினைவு வாறது. அதோடஇ ஓஇ ஓடிக் களைச்ச மாதிரி.
ப : எனக்கு அப்படித்தான் விருப்பம். ஒரு கலாதியான களைப்பு.
வி : (துரைசாமியிடம்) ஆள் நல்லாத்தான் களைச்சுப் போயிட்டா.
ர : நீ ஒரு பொல்லாத பொம்பிளையா இருக்க வேணும் அக்கா?
ப : (சிரித்தபடி) பொல்லாதவளோ?
ர : நீ கடுமையாய் வேலை செய்யிறாய். என்ட வாத்தியார் சொல்லுறவர்இ பாவஞ் செய்த ஆக்களுக்குத்தான் கடவுள் தண்டனையா வேலை தாறவராம்.
மு : நீயும் அதை நம்பிறியோ?
ப : முத்து! அவன் வாத்திமார் சொல்லுறதை நம்பிறவன் தான்.
வி : (முறுவலுடன்) அவனை மறியாதையுங்கோ...
து : ரத்தினம்இ உமக்கு வேலை செய்ய விருப்பமில்லையோ?
ர : வேலையோ? சீ!
து : அப்ப நீர் உலகத்தில என்னவா வரப்போறீர்.
ர : நானொரு கடற் கொள்ளைக்காரனா வரப்போறன்.
மு : உன்னால ஏலாது! அதுக்கு நீ ஒரு நாத்திகனா இருக்க வேணும்.
ர : அப்ப நானொரு நாத்திகனா இருப்பன்.
பு : பிள்ளயைள்இ நேரஞ்செண்டு போகுது.
வி : ரத்தினம் நீர் சொல்லிறது சரியெண்டுதான் நான் நினைக்கிறன்.
பு : (விநாயகத்துக்குச் சைகை செய்தவாறு) நீங்கள் அப்பிடியொண்டும் நினைக்கயில்லைஇ என்ன விநாயகம்?
வி : கடவுளாணைஇ நினைக்கிறன். நானொரு முழு நாத்திகன் எண்டு பெருமைப்படுறன். இருந்து பாருங்கோஇ கொஞ்ச நாளில நாங்கள் எல்லாரும் நாத்திகராய் போயிடுவம்.
ர : அப்ப நாங்கள் நினைச்ச எல்லாஞ் செய்யேலும்!
வி : ஓ! ரத்தினம்இ இங்க பாரும்.
பு : (இடைமறித்து) பிள்ளையள் உங்களுக்குப் பள்ளியல வீட்டுவேலை தரேல்லையோ? உள்ளுக்குப் போய் அதைக் கவனியுங்கோ.
மு : அம்மாஇ நாங்கள் கொஞ்ச நேரம் நிக்கேலாதோ?
பு : இல்லைஇ ரெண்டு பேரும் ஓடுங்கோஇ ம்...
(இரு பிள்ளைகளும் மற்றவர்கட்கு வணக்கம் சொல்லி இடப்புறமாக வெளியேறுகின்றனர்.)
து : இந்தக் கதையளைப் பிள்ளையள் கேக்கிறது கூடாதெண்டு நினைக்கிறியளோ?
பு : தெரியாதுஇ எண்டாலும் எனக்குப் பிடியாது.
(நல்லதம்பி தன் அலுவலறையிலிருந்து வருகிறார். கையிற் கடிதத்தை விரித்தபடிஇ வியப்புடன்இ எங்கோ நினைவில் மூழ்கி நித்திரையில் நடப்பவர் போலஇ முன் வாயிலை நோக்கி நடக்கிறார்;.)
பு : இஞ்சாருங்கோ!
(நல்லதம்பி திடீரென அவர்கள் இருப்பதை உணர்ந்தது போற் திரும்புகிறாhர்.)
ந : தம்பிமாரே ஊருக்கு ஒரு புதினம் வருகுது.
வி : புதினமோ?
பு : என்ன மாதிரிப் புதினம்?
ந : ஒரு பாரதூரமான கண்டு பிடிப்புப் புவனம்.
து : மெய்யாவோ?
பு : நீங்கள் கண்டு பிடிச்சதோ?
ந : நான் கண்டு பிடிச்சதுதான். (மேலும் கீழுமாக நடக்கிறார்.) இனி நகரசபையை நடத்துகிற வானரங்கள் எனக்கு விசரெண்டு சொல்லட்டும். இனி அவை கவனமா இருக்க வேணும். கோபுரத்தில ஏறி இருந்தவை எப்பிடிக் கீழ விழுகினம் எண்டு பாருங்களன்.
ப : அப்பா! என்ன சொல்லிறியள்?
ந : ஓ! அண்ணர் இப்ப இங்க இருந்தா! மனிசர் எப்பிடி ஓடித் திரிஞ்சு குருட்டுப் பூனையள் மாதிரி முடிவுகளுக்கு வருகினம் எண்டு பாப்பியள்.
து : டொக்வுர்இ என்ன நடந்திட்டுதெண்டு சொல்லுங்கோவன்.
ந : (மேசையருகே நின்று) எங்கட ஊர் ஒரு உருப்படியான ஆரோக்கியத் தலம் எண்டுதானே எல்லாரும் நினைக்கிறம்.
து : இல்லாமலென்ன?
பு : என்ன நடந்திட்டுது?
ந : ஒரு விஷேசமான ஆரோக்கியத் தலமெல்லோ! கடவுளே! சும்மா ஆக்களுக்கு மாத்திரமில்லாமஇ வருத்தக்காரருக்குமெல்லோ தக்கதெண்டு சொல்லிறம்.
பு : இஞ்சாருங்கோஇ நீங்கள் என்ன...
ந : நாங்கள் எல்லாரும் பெரிசா விளம்பரம் பண்ணினாங்களெல்லோ! நானும் எல்லோ தினப் புதினத்தில் துண்டுப் பிரசுரங்கள் எழுதினனான்.
து : ஓம்இ ஓம்இ அதுக்கு...
ந : எக்கச்சக்கமாச் சிலவழிச்சுக் கட்டியெழுப்பின அற்புத நீருற்றும் முழுச் சுகாதார நிலையமும் ஒரு நோய்க் கிடங்காயெல்லோ போச்சு.
ப : அப்பாஇ நீருற்றோ?
பு : (ஏககாலத்தில்) எங்கட நீருற்றோ?
வி : நம்பேலேல்லை!
ந : அங்கால சாம்பல் மடுவில கிடக்கிற அழுகலைக் கண்டிருக்கிறியள் தானே! தாங்கேலாத நாத்தம். அங்கால கொஞ்சம் தள்ளி இருக்கிற மேட்டிலஇ தோல் பதனிடுற ஆலையிலிருந்து வாற கழிவுதான் அது. அந்த நஞ்சுக் கழிவெல்லாம் இந்த அற்புதங்கள் செய்யிற தண்ணிக்குள்ள வந்து சேருது. இந்தத் தண்ணியெல்லோ ஆக்களின்ட வருத்தங்களை மாத்துது எண்டு சொல்லிறம்.
க : எங்கட கடற்கரை இருக்கிற இடத்தில எண்டுறியளா?
ந : சரியா அங்க தான்.
து : டொக்வுர் நிச்சயமா இதைப்பற்றித் தெரியுமோ?
ந : கனகாலமா எனக்கொரு ஐமிச்சம் இருந்தது. போன வருஷம் உல்லாசப் பிரயாணியள் கனபேருக்கு வயிற்றுளைவும் நெருப்புக் காய்ச்சலும் வந்ததெல்லோ!
பு : வந்ததுதான். மணிமேகலையின்ட மருமகளுக்கும்...
ந : ஓம்இ புவனம். அப்ப நாங்கள் உல்லாசப் பிரயாணியள் தான் வருத்தத்தைக் கொண்டந்தினம் எண்டு நினைச்சம். போன மழைகாலத்தில எனக்கொரு யோசினை வந்தது. தண்ணியைப் பரிசோதனை பண்ணத் துவங்கினன்.
பு : இவ்வளவு காலமும் அதையோ விழுந்து விழுந்து செய்தனியள்?
ந : தண்ணியில கொஞ்சம் சாம்பிள்கள் எடுத்துப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினன்.
து : அதோ இப்ப வந்து சேர்ந்தது?
ந : (கையில் இருந்த கடிதத்தை அலைத்தபடி) அதே தான்! தண்ணியில நோய்க்கிருமியள் இருக்கெண்டு இது ஒப்புவிக்குது.
பு : கடவுளே! நல்லவேளைஇ நேரத்துக்குக் கண்டுபிடிச்சம்.
ந : அப்பிடித்தான் சொல்ல வேணும்.
பு : கடவுள் புண்ணியம்!
து : டொக்வுர்இ இப்ப என்ன செய்ய யோசிக்கிறியள்?
ந : வேற என்னஇ பிழையைத் திருத்திறது.
து : எப்பிடிச் செய்யப் போறியள்?
ந : ம்... சும்மா விட்டா முழு நிலையமும் அநியாயமாப்போம். கவலைப்பட ஒண்டும் இல்லை... என்ன செய்ய வேணுமெண்டு எனக்கு வடிவாத் தெரியும்.
பு : அப்ப ஏன் இவ்வளவு நாளா ரகசியமா வைச்சிருந்தனீங்கள்?
ந : என்னை வேற என்ன செய்யச் சொல்லிறீர்? ஒண்டும் நிச்சயமாத் தெரியாம நான் வளவளக்கிறதோ? (கைகளைப் பிசைந்தபடி நடக்கிறார்.) புவனம் உமக்கு விளங்கேல்லைஇ இது எதில கொண்டு போய் விடுமெண்டு - தண்ணீர் விநியோகம் முழுவதையும் மாத்த வேணும்.
பு : முழுவதையுமோ?
ந : முழுவதையும்! தண்ணியை எடு;கிற குழாய் ஆகலும் பதிவா இருக்கு. அதை உச்தி வைக்க வேணும். முழுக் கட்டிட வேலையையும் பிரிச்செடுக்க வேணும்.
ப : கடைசியாஇ இப்பவேனும்இ நீங்கள் சொன்னதை அப்பவே கேட்டிருக்க வேணும் எண்டு அவையளுக்கு நீங்கள் நிரூபிக்கேலும். இல்லையோ?
ந : ஆஇ அவளுக்கு நினைப்பிருக்கு!
பு : மெய்தான்இ நீங்கள் அவையளை எச்சரிச்சனியள் தான்.
ந : நான் எச்சரிச்சனான் தான். அந்த இழவைக் கட்ட வெளிக்கிடேக்க அங்கினைக்க கட்டாதையுங்கோ எண்டனான். எங்க கட்டிறதெண்டு அரசில்வாதியளுக்குச் சொல்ல நானார்? வெறும் விஞ்ஞானி! இப்ப அவையள் வள்ளிசா வாங்கிக் கட்டப் போயினம்.
வி : இதெண்டா அருமையான கதைதான். (கப்வுனிடம்) இவரெண்டா உயர்ந்த மனிசன் தான்!
ந : அருமையான கதையை விடப் பெரிய விஷயமிது. (அலுவலறை நோக்கி நடக்க முனைகிறார்). முதல்ல இதை அவை காணட்டும். (நிற்கிறார்.) பவளம். என்ட மேசையில என்ட அறிக்கை இருக்குது... (பவளம் அறைக்குட் போகிறாள்.) ஒரு தபால் உறைக்குள்ள. (அவள்அதை எடுக்கப் போகிறாள்.) கேளுங்கோஇ இதுதான் பல்கலைக் கழகத்தில இருந்து வந்திருக்கிற கடைசி அத்தாட்சி. (பவளம் அறிக்கையுடன் அறைக்குள்ளிருந்து வந்து அவரிடம் கொடுக்கிறாள்.) இது என்ட அறிக்கை (பக்கங்களைப் புரட்டுகின்றார்.) அஞ்சு முழு விளக்கமான பக்கங்கள்...
பு : (அவரிடம் ஒரு பெரிய உறையைக் கொடுத்தபடி) இது போதுமோ?
ந : நல்லாப் போதும். உடனையே நிருவாக சபைக்கு அனுப்பிறன். (அறிக்கையை உறைக்குள் இட்டுப் புவனத்திடம் கொடுக்கிறார்.) இதை வேலைக்காரப் பெட்டையிட்டக்; குடும். அவளின்ட பேரென்னஇ மறந்திட்டன்.
பு : தங்கம்.
ந : எங்கட தங்கத்தைக் தன்ட மூக்கைத் துடைச்சுப் போட்டு உடனயே மேயரிட்ட ஓடிப் போகச் சொல்லும்.
(புவனம் அவரையே அசையாமற் பார்த்தபடி நிற்கிறார்.)
ந : என்ன புவனம்?
பு : தெரியேல்லை.
ப : பெரியப்பா இதுக்கு என்ன சொல்லுவாரோ தெரியேல்லை.
பு : அதுதான் நானும் யோசிக்கிறன்.
ந : அவர் என்ன சொல்லிறது! ஒரு தொற்று நோய்ப் பீடை பரவ முன்னால இவ்வளவு முக்கியமான ஒரு உண்மையை வெளியில கொண்டு வந்திட்டம் எண்டு அவர் சந்தோசப்படவெல்லோ வேணும்.
(புவனம் இடப்புறமாக வெளியேறுகிறார்.)
து : இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிச் சின்னனா ஒரு செய்தி புதினத்தில போட யோசிக்கிறன்.
ந : நல்லாச் செய்யுங்கோ! உண்மையில நான் அதுக்குக் கடமைப்பட வேணும்.
து : சனங்களுக்கு இதைப்பற்றி நேரத்தோட தெரிய வேணுந்தானே.
ந : உடன தெரிய வேணும்.
வி : கடவுளறியஇ இந்த ஊரில நீங்கள் தான் தலைமையான ஆளா இருப்பியள் டொக்வுர்.
ந : (திருப்தியுடன் உலாவிவாறு) இதில என்ன கெட்டித்தனம்? துப்பறியிறவனுக்கு அதிட்டத்தில ஒரு நல்ல தடயங் கிடைக்கிறேல்லையோ? அதுமாதிரித்தான் எனக்கும் எண்டு சொல்லுங்கோவன்.
வி : துரைசாமி அண்ணைஇ ஊரால டொகவுர் நல்லதம்பிக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தாலென்ன?
ந : சீஇ சீஇ சீ...
து : நாங்கள் எல்லாம் இதைப்பற்றி ஒரு சொல்லு.
வி : நான் தயாநிதியாரிட்டப் போய்க் கதைக்கிறன்!
(புவனம் வருகிறார்.)
ந : இங்கஇ சும்மா சேட்டையாக்கிப் போடாதையுங்கோ! எனக்கிந்த ஆரவாரமெல்லாம் சரிவராது. நிர்வாக சபை எனக்குச் சம்பளத்தைக் கூட்டித்தர வெளிக்கிட்டாலும் நான் வாங்க மாட்டன். புவனம்இ நான் வாங்கவே மாட்டன்.
பு : (வெறுப்புடன்) நீங்கள் சொல்லிறதுதான் முறை.
ப : (கிண்ணத்தை உயர்த்தி) ச்சியர்ஸ்இ அப்பா!
அனைவரும்: ச்சியர்ஸ் டொக்வுர்!
து : டொக்வுர் இது உங்களுக்கு மனத் திருத்தி எண்டு நம்பிறம்.
ந : எல்லாருக்கும் மெத்த உபகாரம். எல்லாத்திலையும் பாக்க மேலானது ஒண்டு என்னெண்டா அயலாரின்ட மதிப்பைப் பெறுகிறதுதான் - புவனம். எனக்கிப்ப ஆடவேணும் போல இருக்கு.
(எல்லோருமாக இசைக்கு ஆடுகிறார்கள். பிள்ளைகள் ஆரவாரம் கேட்டு வலது கதவிடுக்கால் எட்டிப் பார்க்கிறார்கள். புவனம் அவர்களை மேல் வீட்டுக்கு விரட்டுகிறார்.)
- திரை -
----------------------------------------------------------
அங்கம் 1: காட்சி 2
ஜடொக்வுர் நல்லதம்பி வீட்டு வரவேற்பறையில் மறு நாட்காலை. திரை உயரப் புவனம் சாப்பாட்டறையினின்று கையில் சீல் வைக்கப்பட்ட உறையுடன் வருகிறார். அலுவலறைக்குள் எட்டிப் பார்க்கிறார்.ஸ
பு : இங்கையோ இருக்கிறீங்கள்?
ந : (உள்ளே இருந்தபடி) இப்ப தான் வந்தனான். (வரவேற்பறைக்குள் வருகிறார்.) என்ன விஷயம்?
பு : அண்ணரிட்டையிருந்து இப்பத்தான் வந்துது. (உறையைக் கொடுக்கிறார்.)
ந : ஆஇ என்னெண்டு பாப்பம். (உறையைத் திறந்து கடிதத்தைப் படிக்கிறார்.) “நீவிர் அனுப்பிய அறிக்கையை இத்துடன் திருப்பி அனுப்பியுள்ளேன்...” (மிகுதியை முணுமுணுப்hபக வாசிக்கிறார்).
பு : என்னவாம்? சும்மா அப்பிடி நில்லாதையுங்கோ!
ந : (கடிதத்தைச் சட்டைப் பையிற் போட்டவாறு) மத்தியானம் இங்க வாறாராம்.
பு : ஓஇ அந்நேரம் வீட்டில நிக்க மறந்து போகாதையுங்கோ!
ந : காலமை போக வேண்டிய இடமெல்லாம் போயாச்சு. நான் நிப்பன்.
பு : அவர் இதைப்பற்றி என்ன நினைக்கிறார் எண்டு அறிய அவதியாயிருக்கு.
ந : வேறென்னெண்டு நினைக்கிறீர்? அதை நானில்லைத்இ தான் தான் கண்டு பிடிச்சனெண்டு காட்டப் பாப்பார்.
பு : அதைப் பற்றி உங்களுக்கும் யோசினையா இல்லையோ?
ந : உள்ளுக்க அவருக்குத் திருத்தியாகத்தான் இருக்கும் புவனம். எண்டாலும் அவரை விட வேற ஆரேன் ஊருக்கு நன்மை செய்திடுவினம் எண்டு அவருக்குப் பயம்.
பு : நீங்களும் அவருக்குக் கொஞ்சம் விட்டுக்குடுத்து மரியாதை சேர்க்கிறது நல்லந்தானே. அவர்தான் உங்களுக்குச் சரியான வழியைக் காட்டினார் எண்டு சொல்லேலாதோ?
ந : ஓ அதில என்ன - அவர் சந்தோசப்பட்டா எனக்கென்ன நட்டம்!
(ஐயாத்துரை கதவினூடு தலையை நீட்டுகிறார். சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத் தனக்குட் சிரிக்கிறார். வீட்டை விட்டுப் போகும் வரை தனக்குட் சிரிக்கிறார். வீட்டை விட்டுப் போகும் வரை தனக்குட் சிரித்தபடியே இருப்பார். இடீஸனுடைய நாடகங்களில் வந்து போகும் ஒளிருங் கண்களையுடைய பாத்திரம். தனக்குட் சிரித்தபடியே உங்களை மலையுச்சியிலிருந்து புரட்டி விடுவார். ஒரு எலியின் கூர்மையான அவதானமுடைய மூளையைக் கொண்ட வியாபார புத்தியுள்ள மனிதர். ஆயினும் சில நேரங்களில் இவர் விரும்பத்தக்க ஒருவராக இருப்பார். ஏனெனில் இவருக்கு ஒழுக்க நெறி என்பது ஏதும் இல்லையென்பது இவர் தனக்குட் சிரிக்கும் முறையிலேயே தெரிந்துவிடும்).
ஐ : (தந்திரமாக) மெய்யாத்தானோ?
பு : (அவரை நோக்கி நடந்தபடி) அப்பா!
ந : வாங்கோஇ வாங்கோ!
பு : உள்ளுக்கு வாங்களன்.
ஐ : அந்தக் கதை மெய்யில்லாட்டி நான் வெளிக்கிட்டிருவன்.
ந : எந்தக் கதை மெய்யில்லாட்டி?
ஐ : தண்ணீர் விநியோகத்தப் பற்றின இந்த விசர்க் கதைதான். மெய்யாகத்தானே?
ந : மெய்யில்லாம என்ன? உங்களிட்ட ஆர் சொன்னது?
ஐ : கொலேஜூக்குப் போற வழியிலை பவளம் எட்டிப் பாத்தவள்.
ந : அப்பிடியோ?
ஐ : ஓஇ நான் நினைச்சன் என்னோட பகிடி விடுறாளெண்டு.
பு : அவள் ஏன் அப்பிடிச் செய்ய வேணும்.
ஐ : இந்த நாளை இளம் பிள்ளையளுக்குக் கிழவரோட சேட்டை பண்ணிறதை விடப் பெரிய சந்தோசம் என்ன? என்ன சொல்லிறியள்?
ந : அந்தக் கதை மெய்தான். இங்க இருங்கோவன். ஊரின்ட நல்ல காலம்இ என்ன?
ஐ : (சிரிப்பை அடக்கிக் கொண்டு) நல்ல காலமோ?
ந : நானென்ன சொல்லிறனெண்டாஇ ஆகலும் பிந்திப் போக முந்திஇ நான் அதைக் கண்டுபிடிச்சிட்டன் எண்டு.
ஐ : நல்லதம்பிஇ கொண்ணருக்கு இப்பிடிப் பேப் பட்டங் கட்டுற அளவுக்கு நீர் கெட்டிக்காரனெண்டு நான் நினைச்சிருக்கேல்லை.
ந : பேப் பட்டங் கட்டினனோ?
பு : ஐயாஇ அவர்...
ஐ : என்ன நடந்திட்டுது எண்டு எனக்கு விளம்பரமாச் சொல்லும். தண்ணிப் பைப்பில கரப்பொத்தான் பூச்சி.
ந : (சிரித்தபடி) கரப்பொத்தான் இல்லை.
ஐ : அப்ப வேறேதேன் சின்னப் பூச்சி பிராணி ஆக்கும்.
பு : பற்றீரியாஇ அப்பா.
ஐ : (சிரிப்பிற்கு நடுவே தடுமாறும் சொற்களால்) அப்ப எக்கச் சக்கமான தொகை என்ன?
ந : கோடி கோடியா இருக்கும்.
ஐ : ஆனா ஆற்ற கண்ணிலையும் தெரியாது. அப்பிடித்தானே?
ந : ஓ அது. இல்லை எவரிட்டையேன் ஒரு நுண்காட்டி மைக்ரோ... (நிறுத்துகிறார்.) இப்ப என்னத்துக்குச் சிரிக்கிறியள்?
பு : (ஐயாத்துரையைப் பார்த்து முறுவிலத்தபடி) அப்படி உங்களுக்கு விளங்காது. ஆரும் பற்றீரியாக்களைப் பாக்கேலாது. அதால அதுகள் இல்லையெண்டு போயிடாது.
ஐ : நல்ல பெண்சாதி மாதிரி அவற்ற கதைக்குத் தாளம் போடு. கடவுளறிய நான் என்ட சீவியத்தில கேட்ட திறமான கதையெண்டா இதுதான்.
ந : (முறுவலுடன்) அப்பிடியெண்டா?
ஐ : உம்மட அண்ணரை எப்பிடி இதை நம்பப் பண்ணுவீர் எண்டு ஒருக்காச் சொல்லும்.
ந : கொஞ்ச நேரத்தில தெரியவரும்!
ஐ : நீர் அந்தாளுக்கு விசர் எண்டு நினைக்கிறீரோ?
ந : முழு ஊருக்கும் அந்தளவு விசரா இருந்தா நல்லதெண்டுதான் நினைக்கிறன்.
ஐ : இருக்கும். அவைக்கு அது நல்லா வேணும். எங்களைப் போல பழைய நாளை ஆக்களை விடத் தாங்கள் கெட்டிக்காறரெண்டு எண்ணம். உம்மட நல்ல அண்ணரின்ட கதையைக் கேட்டு என்னை நகரசபையிலையிருந்து நாயைக் கலைக்கிற மாதிரிக் கலைச்சினம். இப்ப அவர் எல்லாரையுங் கோவேறு கழுதையளாக்கிப் போட்டார்.
ந : ஓம் மாமா.
ஐ : நீட்டுக் காதும் கட்டை வாலும் வைச்ச கோவேறு கழுதையள்! (எழுகிறார்). நல்லதம்பிஇ இந்தக் கதையை மேயரும் அவற்ற பரிவாரங்களும் நம்புமெண்டாஇ பத்தாயிரம் ரூவா தருவன். இப்பஇ உடனஇ மேசையில வைப்பன்.
ந : தந்தால் மெத்த உபகாரம் மாமா. நான்...
ஐ : எனக்குப் பகிடி விட நேரமில்லை. நீர் மட்டும் உந்தக் கரப்பொத்தான் கதையைச் சொல்லி அவற்ற காலை வாரி விட்டீரெண்டா ஆயிரம் ரூவா சிலவளிச்சுக் கோயிலில ஏழையளுக்கு அன்னதானமுங் குடுப்பிப்பன். அதுக்குப் பிறகேனும் நகரசபையிலை நாலு மூளைசாலியளைப் போட வேணுமெண்டு இதுகளுக்கு அறிவு வரும்!
(துரைசாமி நுழைவறைக்குள் வருகிறார்.)
து : ஹலோ! ஓஇ மன்னிச்சு; கொள்ளுங்கோ...
ஐ : (தனது கருத்துக்குக் கிடைத்த இந்த ஆதாரத்தால் மிக மகிழ்ந்து) ஓஇ உவருக்கும் உந்த அலுவல்ல பங்கு இருக்கோ?
து : என்னையா சொல்லுறீங்கள்?
ந : இல்லாம வேறென்னஇ இவருந்தான் இருக்கிறார்.
ஐ : அதுதானே பாத்தன்! கதை பேப்பரில வரப்போகுது எண்டு நினைக்கிறன். பிசிறில்லாமல் வேலையை நடத்திறியள். நல்லம். வடிவாச் செய்யுங்கோ. நான் இனி வெளிக்கிட வேணும்.
ந : அந்த மாதிரி ஒண்டும் இல்லை மாமா. கொஞ்சம் நிண்டு நான் சொல்லிறதைக் கேட்டுப் போட்டுப் போங்கோ.
ஐ : ஓஇ விளங்குது. யோசியாதையும்! உமக்கு மட்டுந்தான் அதுகள் கண்ணில தெரியும். இவ்வளவு காலமும் நான் அறிஞ்ச திறமான யோசினை எண்டா இதுதான். இப்பிடி வேலையள ஒரு நயமில்லாமச் செய்யக் கூடாது. (நுழைவறைக்குப் போகிறார்.)
பு : (சிரித்தபடி அவரைத் தொடர்ந்து) அப்பாஇ உங்களுக்குப் பற்றீரியா எண்டா விளங்காது.
ஐ : (சிரித்தபடி) பிள்ளை இந்தக் கிழட்டு நரி உதில ஒரு சொல்லை நம்பாது.
து : (நல்லதம்பியிடம்) நீங்கள் என்ன செய்யிறியளெண்டு அவர் நினைக்கிறார்?
ந : அண்ணரைப் பேயனாக்கப் பார்க்கிறனெண்டு - யோசிச்சுப் பாரும்!
து : உங்களிட்டைக் கொஞ்சங் கதைக்கலாமோ?
ந : ஓ நல்லாக் கதைக்கலாமே?
து : மேயரிட்டையிருந்து கேள்விப்பட்டனியளோ?
ந : கொஞ்ச நேரத்தால வாறார் எண்டுதான் தெரியும்.
து : நேத்துக் துவக்கம் நான் உதைப் பற்றி நல்லா யோசிச்சனான்.
ந : மாறிட்டியள் எண்டு சொல்லாதையுங்கோ!
து : உங்களைப் போல ஒரு டொக்வுர்இ விஞ்ஞானிக்கு உந்த அலுவல் ஒரு அருமையான வாய்ப்பு எண்டாலும்இ உதில வேற விஷயங்களும் சம்மந்தப்பட்டிருக்கெண்டு யோசிச்சன்.
ந : எப்பிடியெண்டு சொல்லுங்கோ? இருங்கோவன். (வலப்புறமாக அமர்கிறார்கள்.) என்ன சொல்லப் பாக்கறியள்?
து : நிலத்திலயிருந்து அசுத்தம் வருகுதெண்டுதானே சொன்னீங்கள்.
ந : ஓஇ சாம்பல் மடுவிலையிருக்கிற நச்சுக் குப்பையிலையிருந்து.
து : வேறோரு இடத்திலயிருந்து எண்டு நான் சொல்லிறன்?
ந : என்ன சொல்லிறியள்?
து : (பெருகும் உற்சாகத்துடன்) இந்த நகரத்தின்ட சமுதாய வாழ்க்கையை மாசுபடுத்திற குப்பை மேட்டில இருந்துதான் இதுவும் வருகுது எண்டிறன்.
ந : கடவுளறிய! துரைசாமி என்ன உளம்பிறியள்?
து : இந்த நகரத்தில முக்கியமான எல்லா அலுவலும் சில நிருவாகியளின்ட கையில தான் இருக்கு.
ந : அவை எல்லாரும் நிருவாகியளில்லையே.
து : அவையிட்டைக் காசிருக்கு. பேர் போன குடும்பங்களில இருந்து வருகினம். அவைக்குத் தேவையான எல்லாம் அவையின்ட உள்ளங்கையில கிடக்குது.
ந : அதில என்ன? அவை கெட்டிக்காரர். விஷயந் தெரிஞ்சவை தானே.
து : அவையின்ட கெட்டித்தனமும் அறிவும் நீர் விநியோகத்தைக் கட்டேக்க எங்க போட்டுது?
ந : பிழை விட்டவை தான். அதையெல்லாம் இனிச் சரி பண்ணிப் போடலாம்.
து : அவ்வளவு லேசில முடியுமெண்டு நினைக்கிறியளோ?
ந : லேசோஇ இல்லையோஇ செய்;ய வேண்டிய காரியம்.
து : டொக்வுர். இந்த ஊழலை ஒரு பிரட்டுப் பிரட்டிற எண்டு முடிவு பண்ணிப் போட்டன்.
ந : கொஞ்சம் பொறுங்கோ. இதை இன்னம் ஊழல் எண்டு சொல்ல ஏலாது.
து : டொக்வுர்இ தினப் புதினத்தில நான் பொறுப்பெடுக்கேக்க இந்தக் கிழட்டுப் பிடிவாதம் பிடிச்ச றாங்கிக்காற கூட்டத்தைத் தூக்கியெறியிறதெண்டு சபதம் எடுத்தனான். இந்தக் கதையோட என்ட சபதம் நிறைவடையும்.
ந : என்னெண்டாலும்இ நீருற்றைக் கட்டியெழுப்பினதுக்கு நாங்கள் அவைக்குக் கடமைப்பட்டிருக்கிறம்.
து : மேயர்இ உங்கட அண்ணர். வழக்கமாக எண்டாஇ நான் அதைத் தொட விருப்பப்படமாட்டன். ஆனா எனக்கு நல்லாத் தெரியும்இ அந்த மாதிரி விசயங்கள் உண்மைக்குக் குறுக்க வர நீங்கள் விடமாட்டியளெண்டு.
ந : விடமாட்டன் தான்இ எண்டாலும்...
து : என்னை நீங்கள் சரியா விளங்கிக் கொள்ள வேணும் எண்டு நினைக்கிறன். நான் ஒரு சாதாரணமான குடும்பத்தில பிறந்தவன். கீழ் நிலையில உள்ளவனுக்கு என்ன தேவையெண்டு ஆரும் சொல்லாமலே எனக்குத் தெரியும். அவனுக்கு சமுதாய நிருவாகத்திலை ஒரு உரிமை இருக்க வேணும். அப்பதான் மனிசற்ற திறமைஇ அறிவுஇ சுயமரியாதை எல்லாம் முன்னுக்கு வரும்.
ந : எனக்கு அது விளங்குதுஇ எண்டாலும்...
து : கீழ் நிலையில உள்ளவனை உசத்தி விட ஒரு வாய்ப்பிருக்கேக்கஇ அதைத் தட்டிக் கழிக்கிற பத்திரிகைக்காரரின்ட சுமை எனக்குத் தேவையில்லை. சனங்களைத் தூண்டி விடுற வேலை எண்டு நாகரிகமானவை சொல்லுவினம் எண்டு எனக்கு நல்லாத் தெரியும். அவை எதையேன் சொல்லட்டன். எனக்கு என்ட மனச்சாட்சி இருக்கு.
ந : (குறுக்கிட்டு) துரைசாமி உங்களோட எனக்கு ஒரு மறுப்புமில்லை. ஆனா இது வெறும் நீர்விநியோகப் பிரச்சினை. (கதவில் யாரோ தட்டுகிறார்கள்.) என்ன அறுப்பு! வரலாம்!
(பிரசுரகர்த்தா தயாநிதி நுழைவாயிலிலிருந்து தலையிற் தொப்பியும் கையிற் குடையுமாக வருகிறார். களைத்த வயக்கெட்ட தோற்றம். அவரைப் பற்றி அதிகம் சொல்ல அவசியமில்லை.)
த : திடீரெண்டு வந்திட்டன் எண்டு கோவியாதையுங்கோ. டொக்வுர்...
து : (எழுந்து) என்னைத் தேடியோ வந்தனீங்கள்?
த : நீர் இங்க நிப்பீர் எண்டு எனக்குத் தெரியவும் மாட்டுது. நான் டொக்வுரிட்டைக் கதைக்க வேணும்.
ந : தயாநிதி அண்ணைஇ உங்களுக்கு நான் என்ன செய்யலாமெண்டு சொல்லுங்கோ.
த : மெய்யோ டொக்வுர்இ விநாயகம் சொன்னான்இ நீங்கள் நீர் விநியோகத்தைத் திருத்த வேணுமெண்டு பிரசாரம் செய்ய யோசிக்கிறியளாம்.
ந : ஓஇ சுகாதார நிலையத்தின்ட நீர் விநியோகம். அதை யார் பிரசாரமெண்டது?
த : நான் என்ட முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கெண்டு சொல்லத்தான் வந்தனான்.
து : (நல்லதம்பியிடம்) பாத்தியளோ!
ந : அண்ணை உங்கட ஆதரவுக்கு என்ட மனதார உபகாரம். ஆனா...
த : நாங்கள் முக்கியமான ஆக்களா இருக்கலாம் டொக்வுர். ஆனாச் சின்ன யாவாரி எதையேன் ஆதரிக்க நினைச்சாஇ அவன் தான் பெரும்பான்மைஇ கண்டியளோ. பெரும்பான்மையை எப்பவும் உங்கட பக்கத்தில வைச்சிருக்க வேணும்.
ந : அதெண்டா மெய்தான்இ ஆனா என்ன சொல்லப் பார்க்கிறியள் எண்டுதான் விளங்கேல்லை. எனக்கெண்டா இது ஒரு நெளிவு சுழிவில்லாத அலுவல். தண்ணீரில...
த : நாங்கள் கவனமாயும்இ நிதானமாயுந்தான் நடக்க யோசிக்கிறம் டொக்வுர். நான் எப்பவும் கவனமான நிதானமான மனிசனாத் தான் இருக்கப் பாக்கிறன்.
ந : அது ஊரறிஞ்ச விஷயந்தானே அண்ணைஇ ஆனா...
த : எங்களைப் போல சின்ன டீஸினஸ்காரருக்கு நீர் விநியோகம் ஒரு முக்கியமான விஷயம். ஆம்பல் வயல் நீருற்றுஇ ஊருக்கு ஒரு பொன்வயல் மாதிரி வருகுது. விஷேசமாக் காணி பூமிக்காறருக்கு. காணிச் சொந்தக்காரர் சங்கத்தின்ட தலைவர் எண்ட முறையில.
ந : ஓ.
த : அதைவிடஇ நான் மது ஒழிப்புச் சங்கத்தின்ட பிரதிநிதியாகவும் இருக்கிறன். டொக்வுர்இ நான் மது ஒழிப்புக்காகக் கடுமையா உழைக்கிறனான் எண்டு தெரியுந்தானே.
ந : கேள்விப்பட்டனான்.
த : அதால பலமாதிரி ஆக்களையும் எனக்குத் தெரியும். அதை விட நான் சட்டம் ஒழுங்கு மீறாத ஒரு நல்ல பிரசை எண்டும் ஆக்களுக்குத் தெரியும். அதால எனக்கு இந்த ஊரில கொஞ்சஞ் செல்வாக்கிருக்கு. அதிகாரம் எண்டு வேணுமெண்டாச் சொல்லுங்கோ.
ந : அது எனக்கு நல்லாத் தெரியுமையா.
த : அதாலதான்இ ஒரு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யிறதுஇ எனக்கொரு சின்ன விஷயம்.
ந : ஆர்ப்பாட்டமோ? எதைப்பற்றி?
த : இந்த முக்கியமான அலுவலை எல்லாற்ற கவனத்துக்குங் கொண்டு வந்ததுக்கு உங்களைப் பாராட்டிறதுக்கு அதிகாரத்தில உள்ளவையைப் பகைச்சுக் கொள்ளாம வலும் நிதானமாத்தான் செய்வம்.
து : தொந்தி வயிறுகள் எல்லாம் போய்க் குப்பiயில விழும்.
த : துரைசாமிஇ தேவையில்லாம அதிகாரியளோட கொழுவக் கூடாது கண்டியோ. எனக்கு உந்தப் புரட்சி கிரட்சி ஒண்டும் வேணாம். என்ட இளம் வயதில நான் அதெல்லாம் போதியளவு பாத்திட்டன். அதுகளால ஒண்டும் வரப்போறேல்லை. ஒரு நல்ல நிதானமான பிரசை தன்ட எண்ணத்தை அமைதியாச்இ சுதந்திராமாத்இ துணிவாச் சொன்னாஇ ஆரேன் அதை மறுக்கேலுமோ!
ந : (தயாநிதியின் கையைக் குலுக்கி) தயாநிதி அண்ணை. உங்கட ஆதரவையிட்டு எனக்கு வலுஞ் சந்தோசம். மெய்மெய்யா வலுஞ் சந்தோசம். கொஞ்சம் விஸ்கி தரட்டோ?
த : நான் மது ஒழிப்புச் சங்கத்தில ஒரு ஆளெண்டு தெரியாதோ.
ந : அப்ப ஒரு டீயர்?
த : (யோசித்துவிட்டு) அதுவுஞ் சரிவராது டொக்வுர். நான் ஒரு குடிவகையும் பாவிக்கிறேல்லை. நான்; வாறன். சின்ன மனுசன் உங்களுக்குப் பின்னாலதான் நிற்கிறானெண்டு மறந்திடாதையுங்கோ.
ந : தகூங்க்ஸ்
த : பெரும்பான்மை உங்களுக்கு பின்னால நிக்குது. சின்ன மனுச...
ந : (தயாநிதியின் கதையை நிறுத்து முகமாக) அதுக்கு மெத்த உபகாரம் அண்ணை. அப்ப போட்டு வாங்களன்.
த : துரைசாமிஇ பிறெஸ்ஸ{க்குத் தானே போறாய்?
து : எனக்கு இங்க ஒண்டு ரெண்டு அலுவல் இருக்கு.
த : அப்பிடியோ? (புறப்படுகிறார்.)
து : (நல்லதம்பியிடம்) இந்தமாதிரி மதில் மேல் பூனையளுக்கு ஒரு ஊசி போடுறதைப் பற்றி என்ன சொல்லிறியள்?
ந : (ஆச்சரியத்துடன்) என்னப்பா? தயாநிதி மனச்சுத்தமான ஆளெண்டுதான் நான் நினைக்கிறன்.
து : இவையளைப் போல சீர்திருத்தவாதியளுக்கு நாங்கள் கொஞ்சம் மனத் தென்பையுங் குடுக்க வேணும். எல்லா நீதி ஞாயமுங் கதைச்சுப் போட்டுக் கடைசியில அதிகாரியள விழுந்து கும்பிடுவினம். இதை நாங்கள் விட்டு வைக்கக் கூடாது. நீர் விநியோகத்தில ஏற்பட்ட பிழையை ஒவ்வொரு வாக்காளரும் அறியப் பண்ண வேணும். உங்கட அறிக்கையை என்னைப் பிரிசுரிக்க விடுங்கோ.
ந : நான் அண்ணரோட கதைச்ச பிறகு பாப்பம்.
து : அதுக்குள்ள நான் ஒரு தலையங்கம் எழுதுறன்இ மேயர் ஒத்;துப்போக மாட்டார் எண்டா...
ந : நீங்கள் ஏன் அப்பிடி யோசிக்கிறியள் எண்டு எனக்கு விளங்கேல்லை.
து : டொக்வுர்இ நான் சொல்லிறதை நம்புங்கோ. அது நடக்கக்கூடும். பிறகு...
ந : கேளுங்கோஇ இது என்ட வாக்குறுதி. அவர் ஒத்துப்போவார். பிறகு நீங்கள் ஒரு எழுத்துத் தவறாமல் என்ட அறிக்கையைப் பேப்பரில போடலாம்.
து : சொன்னது தவறமாட்டியள் தானே?
ந : (துரைசாமியிடம் அறிக்கையை நீட்டி) இந்தாங்கோ. எடுங்கோ. நீங்கள் இதைப் பாக்கிறதில உங்களுக்கு ஒரு தீங்குமில்லை. பேந்து திருப்பித் தாங்கோ.
து : வாறன் டொக்வுர்.
ந : போட்டு வாங்கோ துரைசாமிஇ நீங்கள் நினைக்கிறதை விட லேசா இதை வெல்லுவம்.
து : எனக்கும் அப்பிடிச் சரிவந்தாச் சந்தோஷம். மேயரிட்டையிருந்து கேள்விப்பட்டவுடன என்னட்டைச் சொல்லுங்கோ. (போகிறார்.)
ந : (சாப்பாட்டறைக்குப் போய் எட்டிப் பார்க்கிறார்.) புவனம்! ஓஇ பவளம் நீ வந்திட்டியோ?
ப : (உள்ளே வந்தபடி) கொஞ்சத்துக்கு முதல் நான் கொலெஜால வந்தனான்.
பு : (வந்தபடி) அவர் இன்னம் வரேல்லையோ?
ந : அண்ணரோ? இல்லைஇ துரைசாமியோட தான் கன நேரங் கதைச்சனான். அவருக்கு என்ட கண்டு பிடிப்பைப் பற்றிப் பெரிய பிரமிப்பு. அதில முதல் நான் எண்ணினதை விடப் பல விஷயங்கள் இருக்குத் தெரியுமோ? எனக்கு ஆதரவா என்ன இருக்கெண்டு தெரியுமோ?
பு : கடவுளுக்குத்தான் தெரியும். உங்களை என்ன ஆதரிக்குதெண்டு.
ந : முழுப்பெரும்பான்மை!
பு : அப்பிடியெண்டா நல்லதோ?
ந : நல்லதோவோ? விஷேசமெல்லோ! புவனம் முழு ஊரும் தன்ட சகோதரம் போல ஒரு உணர்வு எப்பிடியிருக்குமெண்டு உம்மால கற்பனை பண்ணவும் ஏலாது. நான் ஒரு பெடியனா இருந்த காலத்துக்குப் பிறகு இந்த ஊரில ஒருவன் மாதிரி உணர்வு இப்ப தான்; ஏற்பட்டிருக்குது. (ஓசை கேட்கிறது.)
பு : முன் கதவாத்தான் இருக்க வேணும்.
ந : அப்ப அண்ணர்தான். வாருங்கோஇ வாருங்கோ.
ரா : (நுழைவாயிலிருந்து வந்தபடி) ஹலோ.
ந : நீங்கள் வந்தது சந்தோசம்.
பு : இண்டைக்குச் சுகமோ?
ரா : சும்மாஇ பிழையில்லை. (நல்லதம்பியிடம்) நீரூற்றைப் பற்றி நீ எழுதின கட்டுரை கிடைச்சது.
ந : ஓஇ உங்கட கடிதம் வந்தது. வாசிச்சீங்களோ?
ரா : வாசிச்சனான்.
ந : அப்ப என்ன சொல்லிறியள்?
(பெண்களைப் பார்த்தபடி ராசலிங்கம் செருமுகிறார்.)
பு : வா பவளம். (இருவரும் இடது புறமாய் வெளியேறுகின்றனர்.)
ரா : (ஒரு கணம் தாமதித்து) நீ என்ட முதுகுப் பின்னால தான் இந்த ஆராய்வு வேலையைச் செய்ய வேணுமோ?
ந : ஓமண்ணா. ஏனெண்டா எனக்கு நிச்சயமில்லாமல் இதைத் தொடரிறதில -
ரா : இப்ப நிச்சயமோ?
ந : இப்பெண்டா நிச்சயந்தான்! உங்களுக்கு நம்பிக்கையில்லையோ அண்ணா?(சிறு தாமதம்) பல்கலைக்கழக ரசாயனப் பகுதி யாக்களும் ஒத்துழைச்சவை...
ரா : இந்த ஆவணத்தை நீ நிருவாக சபைக்கு மருத்துவ அதிகாரி எண்ட தோரணையில அதிகாரப் பூர்வமாக் குடுக்கப் போறியோ?
ந : குடாமல் என்ன செய்யிறது? சுணக்காமல் ஏதேன் செய்ய வேணுந்தானே.
ரா : உன்ட வாயில எப்பவும் இப்பிடிக் கடுமையாக பாஷைதான் வரும். அதோடஇ உன்ட அறிக்கையில நாங்கள் எங்கட அதிதியளுக்கும்இ விருந்தினருக்கும் நஞ்சூட்டுவமெண்டு உத்தரவாதம் தரமுடியுமெண்டு எழுதியிருக்கிறாய்.
ந : அண்ணாஇ வேறென்ன விதமா அதை விளங்கப்படுத்திறது. யோசிச்சுப் பாருங்கோ? உள்ளுக்கும் வெளியிலையும் விஷம்!
ரா : அப்பஇ நீ வலுஞ் சுகமா கழிவுச் சுத்திகரிப்பு நிலையமொண்டைக் கட்டிப் புத்தம் புதிசா ஒரு நீர் விநியேக வசதியையும் உண்டாக்க வேணும் எண்டு தீர்ப்;புச் சொல்லிப் போட்டாய்.
ந : உங்களுக்கு வேறேதேன் வழி தெரியுமோ? எனக்கெண்டாத் தெரியேல்லை.
ரா : நான் இண்டைக்குக் காலமை ஒருக்கா எங்கட நகரசபை எஞ்சினியரிட்டைப் போனனான். கதையோடஇ கதையாப்இ பகிடி மாதிரிஇ இந்த மாற்றங்களை நாங்கள் எதிர்காலத்தில செய்யவேண்டி வரலாம் எண்டு சொன்னன்.
ந : உங்கட எதிர்காலம் ஆகலும் பிந்திப் போயிடும்.
ரா : எஞ்சினியர் என்ட ஊதாரித்தனத்தைக் கேட்டுச் சிரிச்சுப்போட்டுக் கொஞ்சம் விவரங்களைத் தந்தார். உன்ட ஆலோசனையின்படி செய்யிற சிலவு கணக்கை யோசிச்சனியோ?
ந : நான் அதைப் பற்றி யோசிக்கேல்ல.
ரா : நினைச்சனான். உன்ட திட்டத்துக்கு முப்பது லட்சம் ரூவா சிலவழியும்.
ந : (வியப்புடன்) அவ்வளவு சிலவோ?
ரா : வெருண்டு போயிட்டாய் போல! அது காசு விஷயம். அதைவிடப் பெரிய பிரச்சினை என்னெண்டா அதைச் செய்து முடிக்க ரெண்டு வருஷம் எடுக்கும்.
ந : ரெண்டு வருஷமோ?
ரா : குறைஞ்சது. அம்மட்டுக்கும் நீரூற்றைப் பற்றி என்ன செய்யிற தெண்டு யோசினை? இழுத்து மூடுறதாக்கும்! எங்களுக்கு வேற வழியிராது. தெரியுமோ. தண்ணியில விஷமெண்டு கதை பரவிச்சுதெண்டா அங்க ஒருவரும் வரமாட்டினம். நிலவரம் இப்ப விளங்குதோ. தம்பிஇ நீ நினைச்சால் உன்ட ஊரையே பாழாக்கிறதுக்கு ஏலும்.
ந : இஞ்சாருங்கோ அண்ணாஇ நான் எதையும் பாழாக்க யோசிக்கேல்லை.
ரா : ஆம்பல் வயல் நீரூற்றுத்தான் இந்த ஊரின்ட உயிர்மூச்சுஇ அதை விட்டா எங்களுக்கு எதிர்காலம் இல்லை. கொஞ்சம் நிதானமா யோசிச்சுப்பார்.
ந : என்ட கடவுளே! என்னை இப்ப என்ன செய்யச் சொல்லிறியள்?
ரா : நீ சொல்லிறமாதிரி நிலைமையள் மோசமெண்டு இந்த அறிக்கையை வைச்சு என்னால சொல்லேலாது.
ந : கொஞ்சங் கவனியுங்கோ! நிலைமையள் அறிக்கையில உள்ளதை விட மோசமெண்டு தான் நான் சொல்லுவன். வெய்யில் காலம் வரஇ நோய்க் கிருமியளும் கடுமையாப் பரவும்.
ரா : இது உன்ட சோடினை எண்டுதான் நான் நினைக்கிறன். ஒரு கெட்டிக்கார வைத்தியனுக்குஇ என்ன விதமான பாதுகாப்பு நடவடிக்கையள் தேவை எண்டு தெரியாதோ?
ந : அதுக்கென்ன?
ரா : நீரூற்றின்ட நீர் விநியோகம்இ இருக்கிற ஒரு சாமான். அதுக்கேத்த படிதான்இ நீரைச் சுத்தப்படுத்தேலும். நீயும் நியாயமாப்இ பொறுப்பா நடந்தாஇ நிலையத்தின்ட நிருவாக சபை தேவையான முன்னேற்றங்களை நியாயமாகவும்இ பொருள் நட்டமில்லாமலும் செய்ய யோசிப்பினம்.
ந : அண்ணாஇ இந்த ஏமாத்து வேலைக்கு நான் ஓம்படுவன் எண்டு நினைச்சியளோ?
ரா : ஏமாத்து வேலையோ?
ந : பின்னஇ ஏமாத்துஇ ஊழல்இ பொய் இல்லாமல் வேறென்ன? இது சனத்துக்கும் சமூகத்துக்குமெதிரான ஒரு துரோகம். ஒரு பெரிய குற்றம்!
ரா : நான் முதல்லையே சொன்னனான் அங்க எந்த விதமான அபாயமும் இருக்கிறதா நான் நம்பேல்லை எண்டு.
ந : நீங்கள் நம்பேல்லையோ? வேற விதமா ஒண்டும் இருக்க இடமில்லை. என்ட அறிக்கையில இருக்கிறது முழு உண்மை. உங்களுக்கும் உங்கட அதிகாரியளுக்கும் உள்ள பிரச்சினை என்னெண்டாஇ நீங்கள் தான் பிடிவாதமா நீரூற்றை இப்ப இருக்கிற இடத்தில கட்டுவிச்சனியள். இப்பஇ பிழையை ஒப்புக் கொள்ளப் பயப்பிடுறியள். வெக்கக்கேடு! உதெல்லாம் எனக்குத்தெரியாதெண்டு நினைச்சியளோ?
ரா : சரிஇ நீ சொல்லிறதெல்லாம் மெய்யெண்டு வைச்சுக் கொள்ளுவம். எனக்கும் என்னைப் பற்றின பொது அபிப்பிராயத்தைக் காப்பாற்ற விருப்பம் எண்டும் சொல்லுவமே. அப்பவும்இ நான் செய்யிற காரியத்தை ஊரின்ட நன்மைக்காக்தான் செய்யிறன் எண்டு சொல்லுவன். ஒழுக்க விதியள் இல்லாம அரசாங்கம் இல்லை. அதால தான் உன்ட அறிக்கையை நிர்வாக சபையிட்டக் குடுக்காமல் மறிக்கிறன். பிறகொரு நேரம் அதைப் பற்றிப் பேசலாம். அம்மட்டும் சனங்களுக்கு அதில ஒரு வரி தெரியக் கூடாது.
ந : அண்ணாஇ உங்களால அதை மறிக்கேலும் எண்டு நினைக்கிறியளோ?
ரா : அது மறிபடும்.
ந : ஏலாது. ஏனெண்டா வெள்ளெணவே கனபேருக்கு கதை போய்விட்டுது.
ரா : (கோபமாக) ஆரெண்டிறன்? உந்த புதினப் பேப்பர்க்காறரெண்டு சொல்லாதை.....
ந : அவையே தான்! தாராளமானஇ சுதந்திரமானஇ கட்டுப்பாடில்லாத பத்திரிகையள் துணிஞ்சு நிண்டு தங்கட கடமையைச் செய்யும்.
ரா : ஆரும் நம்பேலாதளவுக்கு நீ பொறுப்பீனமா நடக்கிறாய்! இது உன்னை எப்பிடிப் பாதிக்கப் போகுதெண்டு நினைச்சுப்பாத்தியோ?
ந : என்னையோ?
ரா : ஓஇ உன்னையும் உன்ட குடும்பத்தையும்.
ந : என்ன விசர்க்கதை கதைக்கிறியள்இ அண்ணா.
ரா : நான் ஒரு அக்கறையான தமையனெண்டு நினைக்க எனக்கு ஞாயமிருக்கெண்டு நம்பிறன்.
ந : நீங்கள் அப்பிடித்தான் இருந்தனியள். அதை நான் மறக்க மாட்டன்.
ரா : அதைவிடு. என்னால பொதுவா வேற விதமா நடந்திருக்கேலாது. உன்ட பொருளாதாரத்தை முன்னேற்றினாஇ நீ மோட்டுத்தனமா நடக்கிறதை என்னால கட்டுப்படுத்தலாம் எண்டு நினைச்சன்.
ந : அப்பிடியெண்டாஇ உங்கட நன்மைக்காத்தான் செய்தனியளோ?
ரா : கொஞ்சம் அப்பிடியுந்தான். ஒரு அதிகாரியின்ட சொந்தக்காரர் திரும்பத் திரும்பக் கரைச்சலில மாட்டிக் கொண்டாச் சனம் என்ன நினைக்கும்?
ந : அப்ப நான் அப்பிடிச் செய்து போட்டனோ?
ரா : உன்னை அறியாமச் செய்து போட்டாய். நீ ஒரு மெஷின் மூளைக்காரன். உன்ட தலைக்குள்ள ஏதேன் யோசனை பூந்துதெண்டா அது எவ்வளவு மொக்குத்தனமானதெண்டாலும் நித்திரையில நடக்கிறவன் மாதிரி அதை வைச்சு ஒரு நோட்டீஸ் எழுதிப் போடுவாய்.
ந : அண்ணாஇ எவருக்கேன் புதுசா ஒரு யோசனை வந்தால் அதைச் சனங்களோட பகிர வேண்டியது ஒரு கடமை எண்டு நீங்கள் நம்பேல்லையோ?
ரா : தம்பிஇ சனத்துக்குப் புது யோசனையள் தேவையில்லை. அதுகளுக்குஇ இருக்கிற பழைய யோசனையள் தான் நல்லம்.
ந : உங்களுக்கு இப்பிடிக் கதைக்க வெக்கமா இல்லையோ?
ரா : இஞ்ச பார்இ இதுஇ முதலுங் கடைசியுமாச் சொல்லுறன். நீ அதிகாரத்தைப் பற்றி எப்பவும் ஏறி விழுகிறாய். உன்னை ஏதேன் செய்யச் சொல்லி ஆரேன் கட்டளை போட்டா உன்னைப் பழிவாங்கினான் எண்டு சொல்லுவாய். உன்ட மேலதிகாரியளோட மோதுறதெண்டு நீ முடிவு பண்ணிப் போட்டாயெண்டா உன்ட மதிப்புக்குத் தக்கதெண்டு ஒண்டும் மிஞ்சாது. சரி. பின்னஇ நான் இதைக் கைகழுவி விடுறன். உன்னை நான் இனித் திருத்த முயற்சி எடுக்கேல்லை. இந்த விளையாட்டில எதைப் பணயம் வைக்கிறாயெண்டு சொல்லிப் போட்டன். இப்ப நான் உனக்குச் சொல்லிறதுஇ ஒரு கட்டளை. உன்னை எச்சரிக்கிறன். உன்ட தொழிலில உனக்கு விருப்பமிருந்தால்இ கீழ்ப் படிஞ்சு நட.
ந : என்ன மாதிரிக் கட்டளை?
ரா : இந்த வதந்தியளை நீ அதிகார பூர்வமா மறுக்க வேணும்.
ந : எப்பிடி?
ரா : தண்ணியை இன்னொருக்காக் கவனமா ஆராஞ்ச பிறகு நீ அதில இருந்த ஆபத்தை அதிகமா மதிப்பிட்டுப் போட்டாய் எண்டு கண்டுபிடிச்சாயெண்டு சொல்லு.
ந : அப்பிடியோ?
ரா : தேiவாயன திருத்த வேலையளையெல்லாம் நிருவாகம் செய்யும் எண்டு பூரணமா நம்பிறாய் எண்டுஞ் சொல்லு.
ந : (சிறிது தாமதத்தின் பின்) தண்ணியின்ட நிலைமையை வைச்சுத் தான் நான் என்ட அபிப்பிராயத்தைச் சொல்லிறன். தண்ணியின்ட நிலைமை மாறினா நானும் என்ட அபிப்பிராயத்தை மாத்தலாம்.
ரா : என்ன அபிப்பிராயக் கதை கதைக்கிறாய்? நீ ஒரு உத்தியோகத்தன். உன்ட அபிப்பிராயத்தை உன்னோட வைச்சுக் கொள்ளு.
ந : என்னோடையோ?
ரா : உத்தியோகத்தன் எண்ட முறையில எண்டு சொல்லுறன். தனிப்பட்ட முறையில அது வேற கதை. ஒரு நிறுவனத்துக்குக் கீழ்ப்பட்ட ஊழியன் எண்ட முறையில அதனுடைய கொள்கைக்குச் சம்மந்தமா உன்ட நம்பிக்கையளையும்இ அபிப்பிராயங்களையுஞ் சொல்ல உனக்கு உரிமையில்லை.
ந : இப்ப நான் சொல்லிறதைக் கேளுங்கோ. நான் ஒரு டொக்;வுர்இ ஒரு விஞ்ஞானி -
ரா : இதுக்கும் விஞ்ஞானத்துக்கும் ஒரு தொடசலும் இல்லை. கண்டியோ!
ந : அண்ணாஇ உலகத்தில எதைப் பற்றியும் அபிப்பிராயஞ் சொல்ல எனக்கு உரிமை இருக்கு.
ரா : நிலையத்தைப் பற்றி ஏலாது - அதை நான் தடை செய்யிறன்.
ந : நீங்கள் தடை செய்வியளோ!
ரா: உன்ட மேலதிகாரி எண்ட முறையிலை தடை செய்யிறன். நான் கட்டளை போட்டா நீ கீழ்ப்படிய வேணும்.
ந : நீங்கள் என்ட அண்ணராஇ இல்லாட்டி -
ப : (இடது புறக் கதவைத் தள்ளித் திறந்தபடி) அப்பா! இதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்கப் போறியளோ? (வருகிறாள்.)
பு : (பின்னால் வருகிறார்.) பவளம்இ பவளம்!
ரா : நீங்கள் ரெண்டு பேரும் என்ன செய்து கொண்டிருந்தியள். ஒட்டுக் கேட்டியளோ?
பு : நீங்கள் சத்தம் போட்டுக் கதைக்கேக்கை எங்களால....
ப : நான் ஒட்டுக் கேட்டனான் தான்!
ரா : வலுஞ் சந்தோஷம்.
ந : (ராசலிங்கத்தை அணுகி) என்னைத் தடைசெய்யிறதைப் பற்றி என்னவோ-
ரா : நீ என்னை அப்பிடிச் சொல்லப் பண்ணிப் போட்டாய்.
ந : நான் அதிகாரப் பூர்வமா என்ட முகத்திலையே துப்ப வேணும் எண்டு சொல்லிறியள்இ வேறென்ன?
ரா : நீ ஏன்இ எப்பவும்இ இப்பிடி அலங்கார வசனங் கதைக்கிறாய்?
ந : நான் கீழ்ப்படியாவிட்டால்?
ரா: சனங்களை அமைதிப்படுத்த நாங்கள் எங்கடை அறிக்கையைப் பிரசுரிப்பம்.
ந : நல்லம்இ நான் மறுத்து எழுதுவன். நான் முதல்ல சொன்னதையே சொல்லுவன். நான் சொன்னது சரியெண்டும் நீங்கள் சொல்லிறது பிழையெண்டுங் காட்டுவன். பிறகென்ன செய்வியள்?
ரா : பிறகு உன்னை வேலையால நிப்பாட்டிறதை நான் தடுக்க ஏலாது.
ந : என்ன?
ப : அப்பா!
ரா : சுகாதார நிலைய வேலையில இருந்து நிப்பாட்ட வேண்டி வருமெண்டன். ஆம்பல் வயல் நீரூற்று நிர்வாகத்தோட நீ போர்தொடுக்கப் போறாயெண்டா அதின்ட நிர்வாக சபையில இருக்க உனக்கு ஒரு உரிமையுமில்லை.
ந : (சிறிது தாமதித்து) நீங்கள் அப்பிடிச் செய்யத் துணிவீங்களோ?
ரா : சீஇ உலகத்தில நீ மட்டுந்தானே துணிஞ்சவன்.
ப : அப்பா மாதிரி ஒரு ஆளை இப்பிடி நடத்திறது வலுங் கேவலம்இ பெரியப்பா.
பு : நீ பேசாமலிரு பவளம்.
ரா : முளைச்சு மூண்டு இலைவிட முதல் உவளுக்குத் தன்ட அபிப்பிராயங்கள் - வேற என்ன மாதிரி இருப்பள். (புவனத்திடம்) புவனம். நீர் மட்டுந்தான் இந்த வீட்டில நிதானமான ஆள். என்ட தம்பியின்ட தலையில கொஞ்சம் புத்தியை ஏறப் பண்ணமாட்டீரோ? உவன் தன்ட குடும்பத்துக்கு என்ன செய்யப் பாக்கிறான் எண்டு விளங்கப்படுத்தும்.
ந : என்ட குடும்பம்இ என்ட அலுவல்
ரா : உவற்ற குடும்பம்இ உவற்ற ஊர்!
ந : அண்ணாஇ இந்த ஊரை ஆர் நேசிக்கினம் எண்டு காட்டத்தான் போறன்இ சனங்கள் இந்த ஊழலின்ட நாத்தத்தை முழுதா அறியத்தான் போகினம். அதுக்குப் பிறகு ஆர் இந்த ஊரை நேசிக்கினம் எண்டு அறிவம்.
ரா : உன்ட நேசமெல்லாம் ஊரின்ட முக்கியமான தொழிலைக் குருட்டுத்தனமா மூர்க்கன் மாதிரி அறுத்துக் கொட்டப்
பாக்கிறதுதானே.
ந : அந்த ஊற்று நஞ்சாப் போட்டுது. அறியாத சனங்களுக்கு அழுகலையும் ஊழலையும் வித்து நாங்கள் கொழுக்கிறம்.
ரா : தம்பிஇ இது அபிப்பிராய வித்தியாசம் எண்ட நிலைமையைத் தாண்டிப் போச்சு. இந்த மாதிரிக் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிறவன் சமூக விரோதியில்லாம வேறென்ன!
ந : (ராசலிங்கத்தை நோக்கி வேகமாய் நகர்ந்தபடி) என்ன துணிவிருந்தா -
பு : (இருவருக்கும் இடையே புகுந்து) இஞ்சாருங்கோ!
ரா : (மிடுக்குடன்) நான் என்னை அடிதடிக்குள்ள விழுத்த மாட்டன். உனக்கு எச்சரிச்சுப் போட்டன். உன்னையும் உன்ட குடும்பத்தையும் பற்றி யோசிச்சு நட! நான் வாறன்! (போகிறார்.)
ந : (மேலும் கீழும் நடந்தபடி) அவமானப் பட்டிட்டார்! அவர் அவமானப் பட்டிட்டார்!
பு : இதென்ன வெக்கக்கேடு!
ப : ஆஇ நானும் அவருக்கு ஒரு குடுவை குடுத்திருக்க வேணும்.
ந : எல்லாம் என்ட பிழை! முதல்லையே நான் கடுமையா நிண்டிருக்க வேணும். அவர் என்னைச் சமூக விரோதி எண்டெல்லே சொல்லிறார்! நானோ? இதையும் ஆரேன் நம்புவினமோ?
பு : தயவு பண்ணி யோசிச்சுப் பாருங்கோ! அவரோடதான் அதிகாரம் எல்லாம் இருக்குது.
ந : ஓஇ ஆனாஇ உண்மை என்னோட இருக்குது.
பு : அதிகாரம் இல்லாம உண்மையால என்ன பிரயோசனம்?
ந : புவனம் இதென்ன விழற் கதை. சுதந்திரமான பத்திரிகையள் என்னோட நிக்குது. பெரும்பான்மையும் என்னோட நிக்குது. இது அதிகாரம் இல்லாட்டிஇ வேறென்ன அதிகாரம்?
பு : கடவுளாணைஇ நீங்கள் -
ந : நான் என்ன?
பு : உங்கட அண்ணரோட சண்டை பிடிக்காமல் விடமாட்டியளோ?
ந : வேறென்ன செய்யச் சொல்லுறீர்?
பு : அதால ஒரு நன்மையும் வராது. அவைஇ கடைசியா ஒண்டுஞ் செய்யாயினம். கடைசியா உங்கட வேலைதான் பறிபோகும்.
ந : நான் என்ட கடமையைச் செய்யப் போறன் புவனம்! அந்த ஆள் என்னைச் சமூக விரோதி எண்டெல்லே சொல்லிப் போட்டுது!
பு : உங்கட குடும்பத்துக்குஇ உங்களை நம்பியிருக்கிற ஆக்களுக்கு ஒரு கடமைப்பாடில்லையோ?
ப : அம்மாஇ நீங்கள் எப்பவும் எங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கேலாது.
பு : (பவளத்திடம்) நீ கதைப்பாய்! ஆக மிஞ்சிப் போனாஇ நீ உன்பாடு பாத்துக் கொள்ளுவாய். (நல்லதம்பியிடம்) இஞ்சாருங்கோஇ பெடியங்கட பாடென்ன? நானும்இ நீங்களும் எங்க போறது?
ந : உமக்கென்ன! என்னை அந்த நாசகாரக் கூட்டத்தின்ட காசில விழுந்து நக்கிற நாய்ச் சீவியமோ நடத்தச் சொல்லிறீர்? என்ட சுயமரியாதையை இழந்து நான் சீவிய பரியந்தம் மன அவதிப்படுறதைப் பாக்க விரும்புறீரோ?
பு : இஞ்சஇ உலகத்தில எத்தினை அநியாயம் நடக்குது! நாங்கள் எல்லாத்தோடையுஞ் சீவிக்கப் பழகவேணும். நீங்கள் போற திசையில போனா எங்களிட்ட இனிக் காசே புழங்காது. நாங்கள் வடக்கில எவ்வளவு கஷ்டப் பட்டனாங்கள் எண்டு மறந்து போனீங்களோ? அவ்வளவு கஷ்டமும் போதாதெண்டோ சொல்லிறியள்? (பையன்கள் வருகிறார்கள்.) இதுகளின்ட கதி என்ன? உங்கட வேலை போனால் எங்களுக்கு ஒண்டும் இல்லை!
ந : பேசாம இரும்! (பையன்களைப் பார்த்து) பள்ளியில இண்டைக்கு என்ன படிச்சனீங்கள்?
ர : (குழப்பத்துடன் அவர்களை நோக்கி) புழுக்களைப் பற்றிப் படிச்சனாங்கள்.
ந : மெய்யாகவோ!
ர : இங்க என்ன நடந்தது? ஏன் எல்லாரும் -
ந : ஒண்டுமில்லைஇ ஒண்டுமில்லை. பிள்ளையள் இனி நான் என்ன செய்யப் போறன் எண்டு தெரியுமோ? மனிசன் எண்டா என்னெண்டு உங்களுக்குச் சொல்லித்தரப் போறன். (புவனத்தைப் பார்க்கிறார். புவனம் அழுகிறார்.)
- திரை -
-----------------------------------------------------------
அங்கம் 2 காட்சி 1
ஜதினப் புதினம் ஆசிரிய அலுவலகம். அறையின் பின்புறத்தில் இடதுபக்கமாக ஒரு கதவு அச்சியந்திரக் கூடத்துக்கு வழிகாட்டுகிறது. அதற்கு அருகே இடது சுவரில் இன்னொரு கதவு. மேடையின் வலப்புறத்தே நுழைவாசல் உள்ளது. அறையின் மத்தியிலே காகிதங்களும்இ புத்தகங்களும்இ பத்திரிகைகளும் நிறைந்த ஒரு பெரிய மேசை. அதைச் சூழச் சில கதிரைகள். ஒரு எழுதும் மேசை வலது சுவரோரம் உள்ளது. அறை நெருக்கமாகவும்இ சோர்வாகவும் உள்ளது. தளவாடங்கள் அலங்கோலமாக உள்ளன.ஸ
(திரை விலகுகிறது. விநாயகம் மேசையடியில் கையெழுத்துப் பிரதியை வாசித்தவாறு அமர்ந்திருக்கிறார். துரைசாமி அச்சியந்திர கூடத்துள்ளிருந்து வருகிறார். விநாயகம் நிமிர்ந்து பார்க்கிறார்.)
வி : டொக்;வுரை இன்னங் காணேல்ல?
து : ஓஇ இன்னும் இல்லை. முடிச்சிட்டீரோ?
(“ஒரு நிமிஷம்” என்னும் தோரணையில் விநாயகம் கையெழுத்துப் பிரதியில் கடைசிப் பந்தியை வாசிக்கிறார். அதை மூடிவிட்டுத் துரைசாமியைச் சிறிது விசனத்துடன் மேனோக்கிப் பார்க்கிறார். துரைசாமி அவரைப் பார்த்தபடி சில அடிகள் விலகி நடக்கிறார்.)
து : என்ன? என்ன நினைக்கிறீர்?
வி : (சிறிது தயக்கத்துடன்) பயங்கரமா இருக்குது. டொக்;வுர் வலுங் கெட்டிக்காரர் தான். சத்தியமாஇ மேல இருக்கிற தொந்தி வயிறுகள் இவ்வளவு தகுதியில்லாததுகளெண்டு நான் உண்மையா நினைக்கேல்லை. (கையெழுத்துப் பிரதியைத் தூக்கி சற்றே அலைந்து) இதில புரட்சியின்ட உறுமல் கேக்குது.
து : (கதவைப் பார்த்தபடி) ஷ்இ ஷ் ...... தயாநிதியார் உள்ளுக்க.
வி : தயாநிதியார் ஒரு கோழை. அவற்ற மிதவாதக் கதையளைக் கேட்டா அவர் ஒரு பயந்தாங்கொள்ளி எண்டு நல்லா விளங்கும். நீங்கள் இதைப் போடத்தானே போறியள்.
து : இல்லாமஇ நான் டொக்;வுர் வந்து ஒரு சொல்லுச் சொல்லுமட்டும் நிக்கிறன். அவற்ற அண்ணர் விட்டுக் குடுக்காட்டிப்இ பேப்பரில போடுறதெண்டு தீர்மானம்.
வி : மேயர் பாடெண்டா வலுங் கஷ்டமாத்தான் இருக்கும். தெரியுந்தானே உங்களுக்கு?
து : திருத்திக் கட்டிறதை அவர் ஏலுமெண்டா மறிச்சுப் பாக்கட்டும்- சின்ன யாவாரிமாரும் முழு ஊரும் அவரைக் கூண்டோட கைலாசத்துக்கு அனுப்பிப் போடும். தயாநிதியார் அதைக் கவனிச்சுக் கொள்ளுவார்.
வி : (குதூகலமாக) பங்குகாரர் நல்லாக் கஷ்டப்படப் போகினம்.
து : இதோட அவை முடிஞ்சினம் எண்டுதான் நினைக்கிறன். நீரூற்று டீஸினஸ் முடங்கிப் போனவுடன இந்த ஊரை நடத்தினவையின்ட கெட்டித்தனம் சனங்களுக்குத் தெரிய வரும். இந்த அஞ்சு நாளும் முதலுங் கடைசியுமா இந்த ஊர் நிர்வாகத்தைச் சீர்த்திருத்த வாதியளின்ட கையில கொண்டந்து விடும்.
வி : இது ஒரு புரட்சிஇ தெரியுதோ? (நம்பிக்கையுடனும் அச்சத்துடனும்) நாங்கள் ஒரு உண்மையான புரட்சியின்ட விளிம்பில நிக்கிறம் எண்டு நினைக்கிறன்!
ந : (வந்தபடியே) பேப்பரில போடலாம்.
து : (பதற்றத்துடன்) அடி சக்கை! என்னவாம் மேயர்?
ந : அவர் போர் தொடங்கி விட்டார். அப்ப இனிப் போர்தான்;. (கையெழுத்துப் பிரதியை மேசையிலிருந்து எடுத்து) இது துவக்கம் மாத்திரந்தான்! என்ன செய்யப் பாத்தார் தெரியுமோ?
வி : (அச்சுக் கூடத்துள் நோக்கி) ஐயாஇ டொக்;வுர் வந்திட்டார்.
ந : (தொடர்கிறார்.) அவர் உண்மையாகவே என்னை மிரட்டவெல்லோ பாத்தவர்! அவற்ற துணிவு! அவற்ற அனுமதியில்லாமல் நான் நினைச்சதை நான் சொல்லேலாதாம்! யோசிச்சுப் பாருங்கோ இந்த மானங்கெட்ட சண்டித்தனத்தை!
து : மெய்யாத்தான் சொன்னவரோ?
ந : என்ட முகத்துக்கு நேரையெல்லே சொன்னவன்! நான் விடுற பிழை என்னெண்டா அவைய எங்களைப் போல மனிசர் மாதிரி மதிக்கிறதுதான். அவையள் சர்வாதிகாரியள். தாங்கள் அதிகாரத்தில இருக்க வேண்டிஇ முழு ஊருக்கும் நஞ்சு பருக்குவினம்.
(அவர் பேசிமுடியுமுன்பு தயாநிதி வருகிறார்.)
து : அவதிப்படாதையுங்கோ டொக்வுர்இ நீங்கள் அவசரப்பட்டுக் குற்றஞ் சுமத்தக் கூடாது. நான் உங்கட பக்கம் எண்டு தெரியுந்தானே. எண்டாலும் கொஞ்சம் நிதானமா -
ந : (இடை மறித்து) கட்டுரையைப் பற்றி என்ன நினைக்கிறியள். துரைசாமி.
து : விசேஷமான கட்டுரை. எங்களைக் கொண்டு நடத்திற ஆக்கள் எப்பிடிப்பட்டவை எண்டு ஐமிச்சத்துக்கிடமில்லாம விளாசித் தள்ளிப் போட்டியள்.
த : நாங்கள் அதை இனி அச்சடிக்கலாமோ?
ந : அப்பிடித்தான் நினைக்கிறன்!
து : நாளைப் பேப்பருக்கு ஆயத்தமாக வைச்சிருப்;பம்!
ந : கேளுங்கோ தயாநிதி அண்ணைஇ எனக்கொரு உதவி செய்வியளோ? நீங்கள் ஒரு நல்ல பேப்பர் நடத்திறியள். தயவு செய்து அச்சு வேலையை நீங்களே கண்காணிக்க வேணும். என்ட கட்டுரைக்;கு நடுவில கிரக பலன் பகுதி வந்து சேர்ந்தா வடிவாயிராது.
த : (சிரித்தபடி) யோசியாதையும். இந்த முறை அப்பிடி நடக்காது!
ந : திறமாச் செய்வியள் என்ன? காசு அச்சடிக்கிற மாதிரி. அதைப் பேப்பரில காண நான் எப்பிடித் தவிக்கிறன் எண்டு உங்களுக்கு விளங்காது. பேப்பரில வாற முழுப்பொய்கள்இ அரைப்பொய்கள்இ காற்பொய்களுக் கெல்லாம் பிறகு கடைசியா இப்ப முக்கியமான ஒரு அலுவலைப் பற்றிப் பூச்சுவேலை இல்லாத சுத்தமான உண்மை வரப்போகுது. இது துவக்கம் மட்டுந்தான். இனிஇ வேற அலுவல்களிலையுங் கை வைச்சு நாங்கள் நம்பின ஒவ்வொரு பொய்யையும் உடைச்செறிவம். என்ன சொல்லிறியள் அண்ணை?
த : (உடன்பாடாகத் தலையை அசைத்து) ஆனாலும் ஒரு விஷயம்...
(துரைசாமியும்இ விநாயகமும்இ தயாநிதியுடன் ஏக காலத்தில்) நிதானமாக
த : (துரைசாமியையும் விநாயகத்தையும் நோக்கி) அதில என்ன பகிடி எண்டு விளங்கேல்ல.
வி : (உற்சாக மிகுதியுடன்) டொக்;வுர்இ எனக்கென்னவோ பெரியதொரு வரலாற்று ஓவியத்தில நானும் இருக்கிற மாதிரி ஒரு உணர்வு! வேறென்னஇ இது ஒரு சரித்திர முக்கியமான நாளெல்லோ! ஒரு காலத்தில இதை “உண்மையின் உதய தினம்” எண்ட தலைப்பில எவரேன் படமாக் கீறி மியூசியத்தில வைப்பினம்.
ந : (திடீரென) மறந்தாப் போல! டீசூன்டேஜ் அரைவாசி சுத்தினாப் போல ஒரு நோயாளியை இந்த ரோட்டில விட்டுப் போட்டு வந்தனான்.; (போகிறார்.)
து : (தயாநிதியிடம்) இவர் எங்களுக்கு எவ்வளவு பிரயோசனப் படுவார் எண்டு உங்களுக்கு விளங்குமெண்டு நினைக்கிறன்.
த : “இது தான் துவக்கம்” எண்டிற கதைதான் எனக்குப் பிடிக்கேல்ல. அவர் நீரூற்றோட நிண்டிட்டா நல்லது.
வி : எதைப்பற்றி நீங்கள் எப்பவும் இப்படிப் பயப்படுறியள்?
த : நான் இங்கை சீவிக்க வேண்டியனான். அவர் அரசாங்கத்தையோஇ வேறெதையுமோ தாக்கினா அது வேற அலுவல். நான் முழு நகர நிருவாகத்தோடையும் மல்லுக்கு நிப்பன் எண்டு அவர் நினைப்பாரெண்டா-
வி : என்ன வித்தியாசம்? பிழை எண்டாப் பிழைதானே.
த : ஓம் தான். எண்டாலும் ஒரு வித்தியாசமிருக்குது. அரசாங்கத்தைத் தாக்கினா என்ன நடக்கும்? ஒண்டும் நடவாது! அவை போற வழியிலையே போவினம். நகர சபையில கை வைச்சா - நிர்வாகம்; கவிண்டு ஏதேன் பிழையாப் போம். நான் ஊரில உள்ள காணிச் சொந்தக்காரர் சங்கத்தின்ட -
வி : ஓஇ எப்பவும் அதே கதைதான்! ஒருத்தனுக்குக் கொஞ்சஞ் சொத்தைக் குடுத்துப் பாருங்கோஇ பிறகு உண்மை என்ன கேடு கெட்டாலும் கவலையில்லை.
த : தம்பிஇ விநாயகம்இ நான் உன்னை விட மூத்த ஆள். இதுக்கு முதலும் நெருப்பு விழுங்கியளைக் கண்டவன்இ உனக்கு முதல் உன்ட மேசையில வேலை செய்தது ஆரெண்டு தெரியுமே? நகரசபை மெம்பர் பஞ்சாட்சரம் - நகரசபை மெம்பர்!
வி : ஒரு தொப்பி திருப்பி இருந்த மேசையில நான் வேலை செய்யிறனெண்டபடியாஇ நீங்கள் என்னையும் -
த : நீ ஒரு அரசியல்வாதி. அரசியல்வாதி எங்க போறனெண்டு ஒரு நாளுந் தெரியாது. அதோட நீதவானுக்கு உதவியாள் வேலைக்கும் எழுதிப் போட்டனீயெல்லோ?
து : (ஆச்சரியத்துடன் சிரித்தபடி) விநாயகம்.
வி : (துரைசாமியிடம்) ஓஇ அதுக்கென்ன? எனக்கந்த வேலை கிடைச்சா என்னால சில நல்ல காரியங்கள் செய்யேலும். சில பெரிய கைகளைச் சந்தியில நிறுத்தேலுமாயிருக்கும்.
த : சரிஇ சரி. நான் ஒரு கதைக்குத்தான் சொன்னனான். (அச்சியந்திரகூட வாயிலுக்குப் போகிறார்.) மனிசர் மாறுறது வழக்கம். நினைச்சுப் பார். நீ முந்தி என்னை ஒரு கோழை எண்டு சொன்னதை. நான் கனல் தெறிக்க மேடை வழிய பேசிற ஆளில்லை. எண்டாலும் என்ட நம்பிக்கையளை நான் மாத்தேல்லை. இங்க உள்ள சில பெரிய புரட்சிக்காரர் மாதிரி நான் மாறேல்லை. மெய்யா நான் அவiயிலுங் கொஞ்சம் நிதானமானஆள். எண்டாலும் நிதானமா -
து : கடவுள் காக்க!
த : அதில என்ன பகிடி எண்டு எனக்கு விளங்கேல்லை.
(துரைசாமியை முறைத்தபடி வெளியேறுகிறார்.)
வி : உவரை விலத்தி விடேலுமெண்டா நாங்கள்-
து : அவதிப்படாதை. அச்சுச் சிலவெல்லாம் அவர்தான் குடுக்கிறவர். அவர் அவ்வளவு பிழையில்லை. (கையெழுத்துப் பிரதியை எடுக்கிறார்.) இதை அச்சுக் கோக்கக் குடுக்கப் போறன். (போக முற்படுகிறார்.)
வி : அண்ணைஇ டொக்வுரைப் பிடிச்சுப் பத்திரிகையை ஆதரிக்கக் கேப்பமோ? அப்ப நாங்களே உண்மையாப் பேப்பரை நடத்தலாம்!
து : அவர் காசுக்கு எங்க போவார்?
வி : அவற்றை மாமனார் தரமாட்டாரோ?
து : ஐயாத்துரையாரோ? அவரிட்டை எப்ப தொட்டுக் காசிருக்குது!
வி : ஞாயமா வைச்சிருக்கிறாரெண்டு நம்பிறன்.
து : சீ! நானறிய அந்தப் பழைய குடையோடதான் எப்பவுந் திரியிறார்.
வி : ஓஇ வலது கையிலையும் அதே மோதிரந்தான். அந்தக் கல்லைக் கண்டனியளோ? (தனது விரலைக் காட்டுகிறான்.)
து : இல்லை. நான் ஒரு நாளும் -
வி : வருஷம் முழுதுங் வைரக்கல்லை உள்ளங்கைப் பக்கமா வெச்சுக் கொண்டு திரிவார். விசேஷ நாளெண்டாக் கல்லு வெளியில வரும். யோசிச்சுப் பாருங்கோ- ஒரு வரும்படியுமில்லாம ஒரு மனுசன் என்னத்தில சீவிக்கிறது? காசுஇ வேறென்ன?
(பவளம் ஒரு புத்தகத்துடன் வருகிறாள்.)
ப : ஹலோ!
து : உங்களை இங்க காணுறது புதினமா இருக்கு. இருங்கோ. என்ன.
ப : (துரைசாமியை நோக்கி நடந்தவாறு) நான் உங்களிட்ட ஒண்டு கேக்க வேணும்.
(கையிலுள்ள புத்தகத்தைத் திறக்கிறாள்.)
து : இதென்ன?
ப : நீங்கள் தமிழாக்கச் சொன்ன புத்தகம்.
து : செய்யமாட்டீங்களோ?
ப : (கனதியாகவும் விளக்கந்தேடும் முனைப்புடனும்) எனக்கெண்டா விளங்கேல்லை.
து : என்ன விளங்கேல்லை?
ப : இந்தப் புத்தகம் நீங்கள் நம்பிற ஒவ்வொண்டுக்கும் முழு மாறானது.
து : ஆஇ அவ்வளவு மோசமில்லை.
ப : இதன்படிஇ மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒண்டு எல்லாத்தையுங் கவனிச்சுக் கொள்ளும். மனிசர் தங்கடை பாட்டில சந்தோஷமா இருக்கலாம். பிழை செய்யிறவை தண்டிக்கப்படுவினம். எப்ப துவங்கி உலகம் இப்பிடி இருக்குது?
து : பவளம்இ இங்க பாருங்கோ. இந்த ஒரு பத்திரிகையால சனத்தைத் திருப்ப ஏலாது.
ப : (வியப்புற்றுக் கோபப்படத் தொடங்குகிறாள்.) என்ன சொல்லிறியள்! (புறப்படுகிறாள்.)
து : (அவளை வேகமாகத் தொடர்ந்து) ஒரு நிமிஷம் நில்லுங்கோ. நீங்கள் அப்பிடி நினைச்சுக் கொண்டு போறது சரியில்லை. (கையெழுத்துப் பிரதியைப் பவளத்திடம் நீட்டி) இங்கஇ இதைப் பிறெஸ்ஸில குடுக்கிறியளே?
ப : (கையெழுத்துப் பிரதியை எடுத்து) ஓ! (போகிறாள்.)
து : உங்களிட்ட ஒண்டு மட்டுஞ் சொல்ல வேணும். நான் அந்தப் புத்தகத்தை வாசிக்கவுமில்லை. அது விநாயகத்தின் யோசினைதான்.
ப : (அவரை உற்று நோக்கி) அவர் ஒரு புரட்சி வாதி எண்டு நினைச்சன்.
து : புரட்சிவாதிதான். ஆனாலும் அவன் -
ப : (கேலியாக) ஒரு பத்திரிகைக்காறன்.
து : அதுவுந்;தான். நான் சொல்ல வெளிக்கிட்டதென்னெண்டால்இஅவன் நீதவானுக்கு உதவியாள் வேலைக்கும் தெண்டிக்கிறான்.
ப : என்ன?
து : மனிசர்இ மனிசர் தான். பவளம்!
ப : நீதவானோ? ஊரில முற்போக்கான அலுவல் எல்லாத்தையும் கடைசி முப்பது வருஷமா எதிர்த்தவரெல்லோ.
து : அதைப் பற்றி ஏன் நாங்கள் சண்டை பிடிக்க வேணும். நீங்கள் என்னைப் பற்றியும் பிழையா நினைச்சுக் கொண்டு வாறதைத்தான் நான் விரும்பேல்லை. உங்களுக்குத் தெரியுமெண்டு நம்புறன். நான் - நான் உங்களைப் போல பெண் பிள்ளையளை மதிக்கிறன். இதுக்கு முதல் அதைச் சொல்ல ஒரு தருணங் கிடைக்கேல்லை. ஆனாலும் நான்... ம்இ உங்களுக்கு அது தெரிய வேணும் எண்டு விரும்புறன். பிழையா நினைக்க மாட்டியள்தானே. (முறுவலிக்கிறார்.)
ப : எனக்குக் காரியமில்லை. எண்டாலும் - அந்தப் புத்தகத்தை வாசிக்க எரிச்சல் தான் வந்தது. உண்மையா எனக்கு விளங்கேல்லை. நீங்கள் ஏன் அப்பாவை ஆதரிக்கிறியளெண்டு சொல்லேலுமோ?
து : அதில என்ன வில்லங்கம்? அது கொள்கை சம்மந்தமான அலுவல்.
ப : இப்படி ஒரு புத்தகத்தைப் பிரசுரிக்கிற ஒரு பத்திரிகைக்;கு என்ன கொள்கை!
து : ஏன் இப்பிடி அந்தங்களுக்குப் பாயிறியள்? நீங்களும்....
ப : நானும் என்ன?
து : நான் என்ன சொல்ல வெளிக்கிட்டனானெண்டா....
ப : (அவரிடமிருந்து விலகி) என்ட அப்பாவைப் போல எண்டு. உங்களுக்கு உண்மையில அவரால ஒரு பிரயோசனமுமில்லைஇ என்ன?
து : ஒரு நிமிஷம் பொறுங்கோ!
ப : என்ன செய்யப் பாக்கிறியள்? சும்மா என்னோட விழற்கதை கதைச்சுக் கொண்டு இருக்கப் பாக்கிறியளோ?
து : எனக்கு உங்கட அப்பாவோட இதில உடன்பாடு. அதால தான் அதை அச்சடிக்கிறன்.
ப : உங்களுக்கு வேற நோக்கமும் இருக்குதெண்டு நினைக்கிறன். நீங்கள் ஏன் இதில சம்மந்தப்பட்டியள்?
து : நீங்கள் ஆரில பிழை பிடிக்கிறியள்? நானோ உங்களிட்டைப் புத்தகம் தந்தனான்? விநாயகமெல்லோ தந்தவன்.
ப : எண்டாலும் அதை வெளியிடுறதில உங்களுக்கு ஒரு தயக்கமுமில்லை. என்ன? என்ட அப்பாவை வைச்சு எல்லாரும் என்ன செய்யப் பாக்கிறியள்?
(தயாநிதி கையெழுத்துப் பிரதி சகிதம் அச்சுக்கூடத்தினின்று அவசர அவசரமாக வருகிறார்.)
த : கடவுளே! துரைசாமி! (பவளத்தைக காண்கிறார்.) பவளம்.
ப : (துரைசாமியை நோக்கி) என்ட வாழ்க்கையில இதுக்கு முதல் நான் இவ்வளவு பயப்பிடேல்லை எண்டு நினைக்கிறன். (வெளியேறுகிறாள்.)
து : (பவளத்தைத் தொடர்ந்தவாறு) தயவு செய்துஇ நீங்கள் என்னை-
த : (துரைசாமியை மறித்து) நீ எங்கை போறாய்? மேயரெல்லோ வந்து நிற்கிறார்.
து : மேயர்!
த : உன்னோட கதைக்க வேணுமாம். பின் கதவால வந்தவர். ஆரும் அவரைக் காணக் கூடாதாம்.
து : அவருக்கு என்ன வேணுமாம்?(அச்சியந்திர கூட அறை வாசலுக்குப் போய்க்இ கதவைத் திறந்துஇ ஓரளவு தாழ்மை குரலிற் தொனிக்க) மேயர் ஐயாவோஇ வாருங்கோ.
ரா : (வந்தபடி) தகூங்க்ஸ்.
(துரைசாமி கவனமாகக் கதவைச் சாத்துகிறார்.)
ரா : (உலாவியபடி) துப்புரவா இருக்கு. நான் எப்பவும் இந்த இடம் ஊத்தையாத்தான் இருக்கும் எண்டு நினைச்சிருந்தன். துப்புரவாத்தான் இருக்கு. (பாராட்டும் தொனியில்) வலும் நல்லம்இ மிஸ்;வுர் தயாநிதி (மேசையிற் கண்ணாடியையும்இ கைத்தடியையும் தொப்பியையும் வைக்கிறார்.)
த : அதில என்ன ஐயா - நான் சொல்வதென்னெண்டாஇ நான் எப்பவுமே-
து : மேயர் ஐயாவுக்கு நான் என்ன செய்ய வேணும்? இருங்கோவன்.
ரா : (அமர்ந்தபடி கைத்தடியை மேசையில் வைக்கிறார்.) துரைசாமி இண்டைக்கு எனக்குச் சினமூட்டுற விதமா ஒரு காரியம் நடந்திட்டுது.
து : அப்பிடியோ?
ரா : என்ட தம்பி ஏதோ ஒரு - அறிக்கை எழுதியிருக்கிறானாம் நீரூற்றைப் பற்றி
து : சும்மா சொல்லாதையுங்கோ.
ரா : (ராசலிங்கத்தை நோக்கி) உம்மட்ட.... அவன் அதைப் பற்றிச் சொல்லேல்லையோ?
து : ஓஇ ஏதோ சொன்னவர்தான்.
த : (கையெழுத்துப் பிரதியை மறைக்க முயன்றவாறு வெளியே நழுவ முயல்கிறார்.) நான்அப்ப வெளிக்கிடட்டே...
ரா : (கையெழுத்துப் பிரதியைக் காட்டி) அது தான்இ இல்லையா?
த : இதா? எனக்குத் தெரியாது. இதைப் பார்க்க இன்னும் நேரமே கிடைக்கேல்லை. அச்சடிக்கிறவன் என்னட்ட இப்பத்தான் தந்தவன்...
து : இதிலதானே எழுத்தும் பிழை பார்க்கச் சொன்னவன்?
த : ஓஇ இதிலதான். எழுத்துப்பிழை பாக்கிறது மட்டுந்தான். திரும்பிப் போயிடும்.
ரா : நான் நல்லா எழுத்துப்பிழை திருத்துவன். (கையை நீட்டி) என்னால உதவ ஏலுமெண்டு நினைக்கிறன்.
து : இல்லை மேயர் ஐயாஇ அதில கொஞ்சம் விஞ்ஞானக் கலைச் சொல்லுகள் இருக்குது. உங்களுக்கு அதுகள் பழக்கமிராது.
ரா : எனக்கும் சயன்ஸ் தெரியும். தம்பிக்குச் சின்னனிலை நான் தான் சயன்ஸ் படிப்பிச்சனான். என்னட்டைத் தாங்கோ. (தயாநிதி கையெழுத்துப் பிரதியை அவரிடம் கொடுக்கிறார். ராசநாயகம் முதற்பக்கத் தலைப்பைப் பார்த்து விட்டுத் துரைசாமியை ஏளனமாக நோக்குகிறார். துரைசாமி தலையைத் திருப்பி அவரது பார்வையைத் தவிர்க்கிறார்.)
ரா : இதைப் போடத்தான் போறீரோ?
து : கையொப்பமிட்டு வந்த கட்டுரையை நான் மறுக்க ஏலாது தானே. அதை எழுதினவர் தான் அதுக்கு முழுப்பொறுப்பு.
ரா : மிஸ்;வுர் தயாநிதி, நீங்கள் இதைப் போடுறதை அனுமதிக்கப் போறியளோ?
த : ஐயாஇ நான் வெளியீட்டாளன். பேப்பரின்ட ஆசிரியர் இல்லை. பத்திரிகை ஆசிரியரின்ட சுதந்திரத்தில தலையிடுறேல்லை எண்டது தான் என்ட கொள்கை.
த : (கையெழுத்துப் பிரதியை நோக்கிக் கை நீட்டி) உங்களுக்குக் காரியமில்லையெண்டா....
ரா : எனக்கொண்;டுமில்லை. (கையெழுத்துப் பிரதியைக் கைவிடாமல்இ சிறிது தாமதித்து) நீரூற்றைத் திருத்திக் கட்டுறதெண்டால்....
த : எனக்கு விளங்குது ஐயா - பங்குகாறர் எக்கச்சக்கமா நட்டப்படப் போயினம்.
ரா : அதுக்கு மனங் குழம்பாதையும். ஒரு மேயர் அறியவாற முதல் விஷயம் என்னெண்டாக்இ குறைஞ்ச காசுள்ளவை பொது நன்மைக்கெண்டு கேட்டாத் தியாகம் செய்வினம் எண்டதுதான்.
த : உங்களுக்கு அது விளங்குதெண்டு எனக்கு வலுஞ் சந்தோஷம்.
ரா : பின்னை என்னஇ அதுவும் காசுக்காறர்தான் எல்லாத் தியாகத்தையும்இ செய்யேக்க. மிஸ்வுர் தயாநிதிஇ உங்களுக்கு விளங்காததெண்டாஇ நான் மேயரா இருக்குந்தனைக்கும் நீரூற்றிலை என்ன திருத்த வேலை எண்டாலும் அதுக்கு நகரசபைக் கடனில தான் காசு வரும்.
த : நகரசபைக் - இதுக்குச் சனங்களிட்ட வரி விதிப்பியள் எண்டு சொல்லுறீங்களோ.
ரா : சரியாச் சொன்னியள்.
த : நீரூற்று ஒரு தனியார் கூட்டுத்தாபனமல்லோ?
ரா : கூட்டுத்தாபனம் தன்ட காசைச் சிலவழிச்சு ஆம்பல் வயல் நீரூற்றைக் கட்டிச்சுது. அதில எதையேன் சனங்கள் மாத்த விரும்பினாஇ அவைதான் சிலவழிக்க வேணும். கூட்டுத் தாபனத்துக்கு இன்னஞ் சிலவழிக்கக் காசில்லை. அவை செய்ய மாட்டினம்.
த : (துரைசாமியிடம்) இதென்ன மாதிரி! சனங்கள் அதிகம் வரிக்கு ஓம்படாயினம். (ராசலிங்கத்திடம்) இது உண்மையான நிலைமையோஇ இல்லாட்டி உங்கட அபிப்பிராயமோ?
ரா : உண்மையான நிலைமை தான். அதைவிட- உண்மையளைப் பற்றி ஒரு பத்திரிகை அலுவலகத்தில கதைக்கிறதுக்கு என்னோட கோவிக்க மாட்டியள் எண்டு நம்பிறன். நீரூற்றை முழுதாயப் பழுது பாக்கக் குறைஞ்சது ரெண்டு வருஷமெடுக்கும். உங்கட சின்ன பிஸினஸ்காரருக்கு வருமானமில்லாத ரெண்டு வருஷம். அதோட மிஸ்வுர் தயாநிதிஇ பெரிய வரிச்சுமையும். இதெல்லாம் ஏனெண்டா (அவரது தனிப்பட்ட உணர்ச்சி மேலெழக் கையிலுள்ள கையெழுத்துப் பிரதியை நெரிக்கிறார்.) இந்தக் கனவாலஇ நாங்கள் ஒரு நோய்க் கிடங்கிலை சீவிக்கிறோமெண்ட மனப் பிராந்தியால!
து : அது விஞ்ஞான ரீதியான முடிவு.
ரா : (கையெழுத்துப் பிரதியைக் குத்துகிறார்.) எங்கட வாழ்க்கை முறையை முடிவு கட்ட யோசிக்கிற ஒருவன்ட விசர்க் கனவு! இதுக்கும் விஞ்ஞானத்துக்கும் சீர்த்திருத்தத்துக்கும் வேறெதுக்கும் ஒரு தொடசலும் இல்லை. சும்மா வெறும் அழிவு வேலை. நான்; சனங்களுக்கு இதை வடிவா விளங்கப் பண்ணத்தான்; போறன். த : (இதனால் அதிர்ந்து) கடவுளே! (துரைசாமியிடம்) ஒரு வேளை... துரைசாமிஇ நீ இதை நிச்சயமா ஆதரிக்கத்தான் போறியோ?
து : (பதற்றத்துடன்) நான் மெய்யா இந்த மாதிரி யோசிச்சுப் பாக்கேல்லத்தான்இ நான்... என்ன நினைச்சன் எண்டா... (ராசலிங்கத்திடம்) மனோதத்துவ ரீதியா யோசிச்சாஇ அப்பிடியும் இருக்கலாம் தான். அந்த ஆள் சும்மா வேணுமெண்டு - மேயர் ஐயாஇ எனக்கு என்ன சொல்லிறதெண்டு தெரியேல்லை. நான் எந்த வழியிலையும் ஊருக்குக் கெடுதல் செய்யக் கனவிலையும் விரும்பமாட்டான். புதுசா ஒரு வரி விதிக்க வேண்டி வருமெண்டு நான் எண்ணியும் பாக்கேல்ல.
ரா : அதை நீங்கள் ஆதரிக்கிறதெண்டா இதையெல்லாம் பற்றியும் யோசிச்சிருக்க வேணும் - புரட்சிக்காரப் பத்திரிகைக்காறர் கூடஇ வரிகுடுக்க விருப்பப்பட்டாலொழிய. அதைப்பற்றி என்னை விட நீங்களெல்லாம் நல்லா அறிவியள். உண்மையான தகவல்களைப் பற்றின ஒரு சுருக்கமான கதை என்னட்ட இருக்குது. கொஞ்சங் கவனம் எடுத்தாத் தண்ணீரால ஒருத்தருக்கும் ஒரு தீங்கும் வராது எண்டு அதிலையிருந்து தெரியவரும். (ஒரு நீண்ட உறையை எடுக்கிறார்.) நாட் போக்கில கட்டிடத்தில சில திருத்தங்கள் செய்ய வேண்டி வரும். அதுக்கு நாங்கள் சிலவழிப்பம்.
து : அதை நான் பாக்கேலுமா?
ரா : பாக்காதையும் துரைசாமிஇ கவனமாப் படியும்! அதுக்குப் பிறகும் என்னோடை நீர் உடன்படேல்லையெண்டா -
வி : (வேகமாக உள் நுழைந்து) நீங்கள் டொக்வுரை எதிர்பார்க்கிறியளோ?
ரா : (அதிர்ந்து) இங்க வந்திட்டானோ?
வி : றோட்டைக் கடந்து வாறார்.
ரா : நான் அவனை இங்க காண விரும்பேல்லை. என்னால எப்பிடி...
வி : இந்தப் பக்கமாக் கெதியாப் போங்கோ ஐயா!
த : (முன் வாயிலில் எட்டிப்பார்த்தபடி) கெதியாப் போங்கோ.
ரா : (விநாயகத்துடன் இடது கதவால் போனவாறு) அவனை ஏலுமான சுறுக்கா இங்கினைக்கையிருந்து கழட்டி விடுங்கோ! (போகிறார்கள்.)
து : எதையேன் செய்யுங்கோஇ எதையேன் செய்யுங்கோ!
(தயாநிதி மேசையிலுள்ள காகிதங்களுட் தேடுகிறார். துரைசாமி மேசையில் அமர்ந்து எழுதுவதாகப் பாவனை செய்கிறார். நல்லதம்பி வருகிறார்.)
ந : புறூவ் ஏதேன் ஆயத்தமோ? (அவர்கள் அவர் பக்கம் திரும்பாததை அவதானித்து) இல்லைப் போலஇ என்ன?
த : (திரும்பாமல்) இப்போதைக்கு வராது.
ந : வருமட்டும் நான் நிண்டாக் காரியமில்லையோ?
து : அப்பிடியில்லை டொக்வுர்இ நியாயமாப் பிந்தும்.
ந : (சிரித்தபடிஇ துரைசாமியிடம்இ தோள்மீது கைபோட்டு) கோவியாதையுங்கோ துரைசாமிஇ எனக்கு அதை அச்சில பாக்க அவதியாத்தான் இருக்கு.
து : நாங்கள் அலுவலா இருக்கிறம் டொக்வுர்இ நீங்கள்...
ந : (வாயிலை நோக்கி நடக்க முற்பட்டு) நான் உங்களை மினக்கெடுத்த விரும்பேல்லை. ஓயாத அலுவல். அப்பிடித்தான் மனிசர் இருக்க வேணும். நாங்கள் இந்த ஊரை ஒரு வைரம் மாதிரி மின்ன வைப்பம்! (கதவைத் திறந்து விட்டுத் திரும்பி வருகிறார்.) ஒரு விஷயம்இ நான்-
து : நாங்கள் இன்னொரு நேரங் கதைக்கேலாதோ? நாங்கள் வலும்-
ந : ரெண்டு சொல்லு. இப்ப றோட்டால நடக்கேக்க ஆக்களைப் பாத்தன். கடை வழியஇ கார்களிலஇ இருந்தாப் போல நான் - உருகிப் போயிட்டன். விளங்குதோ அதுகளின்ட அறியாமையை நினைச்சு. நான் என்ன சொல்ல வெளிக்கிடுறனெண்டாஇ இந்தக் கதை வெளியில வந்தாப் பிறகு சனங்கள் என்னை ஒரு முனிவர் மாதிரிக் கொண்டாடப் பாப்பினம். எனக்கு தயாநிதி அண்ணைஇ பாராட்டுஇ விருந்துபசாரம் எண்டு ஒண்டும் நீங்கள் செய்யக் கூடாது. செய்ய -
த : (நல்லதம்பியை நோக்கித் திரும்பி) டொக்;வுர் இனியும் ஒளிச்சு வேலையில்ல -
ந : எனக்குத் தெரியும்இ இஞ்ச பாருங்கோஇ என்னைக் கவுரவிக்கிற விருந்துக்கு நான் வரமாட்டன்.
து : (எழுந்தவாறு) டொக்;வுர். நான் நினைக்கிறன் இனி -
(புவனம் வருகிறார்.)
பு : நினைச்சன். இஞ்சாருங்கோஇ நீங்கள் வீட்ட வந்தா நல்லம். உடனையே வாங்கோ. பவளத்தோட ஒரு சொல்லுக் கதையுங்கோ.
து : ஏதேன் பிரச்சினையோ அக்கா?
பு : (குற்றஞ் சாட்டும் முறையில் துரைசாமியை நோக்கி) துரைசாமிஇ டொக்;வுர் மூண்டு பிள்ளையளுக்குத் தகப்பன்.
ந : புவனம்இ அது எல்லாருக்குந் தெரியும்இ இப்ப என்ன -
பு : (நல்லதம்பியிடம் பொரிந்து தள்ள இருந்ததை மறந்து) நீங்கள் இந்த அழிவுக்கு எங்களை இழுக்கிறதைப் பாத்தா ஆரும் அப்பிடி நினையாயினம்.
ந : என்ன அழிவு?
பு : மிஸ்;வுர் துரைசாமி உங்களை அவர் தன்ட மகன் மாதிரி நடத்திறவர். நீங்கள் அவரைப் பேயனாக்கப் பாக்கிறியள்!
து : நான் அவரைப் -
ந : புவனம்! (துரைசாமியைக் காட்டி) நீர் இவரை எப்பிடி -
பு : (துரைசாமியிடம்) அவருக்கு நீரூற்றில இருக்கிற வேலை போப்போகுதென்டு விளங்கேல்லையே. அந்தக் கட்டுரையை நீங்கள் போட்டா அவை அவரைக் கீரைஅரியிற மாதிரி அரிஞ்சி தள்ளிடுவினம்!
ந : புவனம்இ நீர் கதைச்சு எனக்குச் சங்கடமாக்கிப் போடுறீர்! (மற்றவர்களிடம்) கோவியாதையுங்கோ...
பு : மிஸ்வுர் துரைசாமிஇ என்ன செய்யப் பாக்கிறியள்?
ந : புவனம்இ நீர் துரைசாமியில சீறிப்பாய நான் விடமாட்டன்!
பு : நீங்கள் வீட்ட வந்தாப் போதும். இந்த ஆள் உங்கட சினேகிதனில்லை!
ந : இவர் என்ட தோழன்! என்னோட சேர்ந்து தன்னைப் பணயம் வைக்கிற எவனும் என்ட தோழன்! இந்த ஊரில உள்ளவை இந்தக் கதை வெளியில வந்த பிறகு என்ன செய்வினம் எண்டு உமக்கு விளங்கேல்லை. எல்லாருந் தெருவில இறங்கி இந்தக் கள்ளக் - (மேசையில் இருந்து மேயரின் கைத்தடியை எடுக்கிறார். அதை அடையாளங் கண்டு திடுக்குறுகிறார். துரைசாமியையும்இ தயாநிதியையும் நோக்கி) இதென்ன? (அவர்கள் பதில் பேசவில்லை. தொப்பியைக் காண்கிறார். அதைத் தடி நுனியாற் தூக்குகிறார். அவர்களை மீண்டும் பார்க்கிறார். நம்ப இயலாதுஇ கோபம் பொங்கும் குரலில்) அவருக்கு இங்க என்ன அறுந்த வேலை?
த : சரி டொக்;வுர். நாங்கள் கொஞ்சம் ஆறுதலா -
ந : (நடக்கத் தொடங்கியவாறு) எங்க அவர்? என்ன செய்தவர்? உங்களையும் பிரசுரிக்க வேணாமெண்டு வெருட்டிப் போட்டாரோ? துரைசாமி! (துரைசாமி அசையாதிருக்கிறார்.) இப்படிச் செய்து அவர் தப்ப ஏலுமோ! அவரை எங்க ஒளிச்சு வைச்சியள்?
(இடப்புறக் கதவைத் திறக்கிறார்).
த : கவனம் டொக்வுர்!
(நல்லதம்பி திறந்த கதவினூடு ராசலிங்கமும் விநாயகமும் வருகை. ராசலிங்கம் தனது இக்கட்டான நிலையை மழுப்ப முனைகிறார்.)
ந : என்னண்ணாஇ தண்ணிய விஷமாக்கினது போதாதெண்டு பேப்பரிலையுங் கைவைச்சிட்டீங்களாஇ என்ன? (முன் கதவுக்குச் செல்கிறார்.)
ரா : என்ட தொப்பியுந் தடியும். (நல்லதம்பி மேயரின் தொப்பியைத் தன் தலையில் வைக்கிறார்.) இதென்ன சேட்டையெண்டிறன்! உது மேயரின்ட அதிகாரச் சின்னம் பதிச்ச தொப்பி. கழட்டெண்டிறன்!
ந : அண்ணாஇ நான் உங்களுக்கு என்னத்தை விளங்கப்படுத்தப் பாக்கிறனெண்டா - (தொப்பியைக் கழற்றி அதைப் பார்த்தபடி) ஒரு சனநாயகத்தில எவரும் இதைப் போடலாம். ஒரு சுதந்திரமான பிரசை இதைத் தொடப் பயப்பிட மாட்டான். (தொப்பியைத் திருப்பிக் கொடுக்கிறார்.) அதிகாரத்தின்ட கைப்பிரம்பும்இ மேயர் ஐயாவேஇ ஆளுக்காள் கைமாறின சாமான் தான். (கைத்தடியைக் கொடுக்கிறார்.) கனக்கத் துள்ளாதையுங்கோ. சனங்கள் இன்னங் கதைக்கேல்ல. (துரைசாமியையும் தயாநிதியையும் நோக்கி) என்னோட சனங்கள் நிக்கினம். ஏனெண்டா, உண்மை என்னோட இருக்கு.
த : டொக்வுர். நாங்கள் விஞ்ஞானியளில்லை. கட்டுரை மெய்யா பொய்யா எண்டு எங்களால சொல்லேலாது.
ந : அப்ப என்ட பேரில அச்சடியுங்கோ. நான் அதுக்கான மறுமொழி சொல்லிறன்.
து : நான் அச்சடிக்க மாட்டன். நான் இந்தப் பேப்பரை வீணாப் பலிகுடுக்க மாட்டன். முழுக் கதையுஞ் சனங்களிட்டப் போனாஇ அவை நீரூற்றில ஒரு திருத்தத்தையும் விரும்பாயினை!
த : டொக்வுர்இ மேயர் எங்களிட்டக் கொஞ்சம் முந்தித்தான் சொன்னவர் - புதிசா வரி போட வேண்டி-
ந : ஆஇ ஆ! ஓஇ விளங்குது. அதுதான் நீங்களெல்லாம் இருந்தாப் போல விஞ்ஞானிகள் இல்லாமப் போய் நான் சொல்லிறது மெய்யோ பொய்யோ எண்டு சொல்லேலாமலிருக்குது. நல்லதுஇ நல்லது!
து : இப்பிடிக் கதையாதையுங்கோ. விஷயம் என்னெண்டா -
ந : விஷயம்இ விஷயம் என்னெண்டாஇ விஷயம் குறிவைச்ச அம்பு மாதிரி ஊருக்குள்ள பாயப்போகுது! (தயாநிதியிடம்) இதை நீங்கள் ஒரு துண்டுப் பிரசுரமா அடிக்கிறியளா? நான் காசு தாறன்!
த : நான் இந்தப் பேப்பரையுங் கெடுத்துஇ ஊரையுங் கெடுக்க ஆயத்தமில்லை. டொக்வுர்இ உங்கட குடும்பத்துக்காகவெண்டாலும்-
பு : இவற்ற குடும்பத்தை ஆளின்ட பாட்டில விடுங்கோ மிஸ்வுர் தயாநிதி. கடவுளறியஇ நீங்கள் வலுங்கூடாத தரவழியள்!
ந : என்ட கட்டுரையைத் தாங்கோ!
த : (கொடுத்தவாறு) டொக்;வுர் இந்த ஊரில ஆரும் இதை அடியாயினம்.
ரா : இதை மறந்து போமாட்டியோ? (துரைசாமியையும் தயாநிதியையுங் காட்டி) எல்லோரும் இதுக்கு மாறெண்டு -
ந : மேயர் ஐயாஇ என்னால மறக்கேலாது. நீங்கள் உள்ளவரைக்கும் உங்களாலையும் மறக்கேலாது. நான் ஒரு பொதுக்கூட்டங் கூட்டப் போறன். நான் -
ரா : உனக்கு ஆர் மண்டபம் வாடகைக்குத் தருவினம்?
ந : அப்ப நான் ஒரு மெபுhNகுhணை எடுத்துக் கொண்டு றோட்டு றோட்டா நீரூற்று நஞ்சாப் போயிட்டுதுஇ நிர்வாகமும் நஞ்சாப் போயிட்டுது எண்டு சொல்லித்திரிவன். (வாசலுக்குப் போகிறார்)
ரா : உனக்கு அவ்வளவு விசரெண்டு நான் நம்பத்தான் வேணும்!
ந : விசரோ? அண்ணாஇ நான் குரலை ஓங்கிக் கதைச்சு நீங்கள் கேக்கேல்லை. புவனம். (கையை நீட்டுகிறார். இருவரும் ஒன்றாக வெளியேறுகின்றனர்.)
(ராசலிங்கம் வருத்தத்துடன் வாயிலைப் பார்க்கிறார். தனது கையெழுத்துப் பிரதியைத் துரைசாமியிடம் கொடுக்க அவர் அதை விநாயகத்திடங் கொடுக்க அவன் அதைத் தயாநிதியிடங் கொடுக்கிறான். ராசலிங்கம் தொப்பிஇ தடி சகிதம் வாசலுக்குப் போக மேடையில் இருள் சூழ்கிறது.)
- திரை -
--------------------------------------------------------
அங்கம் 2 காட்சி 2
ஜகப்;;வுன் கந்தசாமி வீட்டில் ஒரு அறை நெடுங்காலம் பாவிக்கப்படாதது போல வெறுமையாக உள்ளது. இடப்புறத்தே ஒரு பெரிய கதவு. பின்னால் கதவு வைத்த யன்னல்கள் இரண்டு. வலப்புறத்தே இன்னொரு கதவு. மேடையின் உட்புறம், வலத்தே ஒரு பீடம் போலப் பலகைப் பெட்டிகள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. அதன்மேல் ஒரு கதிரையும் சிறு மேசையும். அந்தப் பீடத்துக்கருகாய் வலத்தே இரு கதிரைகள். மேடையின் முன் பகுதியில் ஒரு கதிரை. அறை கோணவடிவில் உள்ளது. இதன் மூலம் இடதுபக்கக் கிளையில் ஒரு பெரிய கூட்டம் நிற்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்த இயலுமாகிறது. பீடம் அவையோரை ஒரு கோணத்தில் நோக்குகிறது. இதன் மூலம், பேசுவோர் அவையோரை நோக்கி நேராகப் பேசும் அதேவேளை, ஒரு கூட்டத்திடம் பேசும் தோற்றத்தை உருவாக்க முடிகிறது. திரை விலக, அறை வெறுமையாக உள்ளது. கப்;;வுன் கந்தசாமி கையில் தண்ணீர்க் கூசா, கிளாஸ், மணி சகிதம் வருகிறார். மேசையில் இவற்றை வைக்கையில் விநாயகம் வருகிறான். வீதியில் ஒரு கூட்டம் பேசுவது கேட்கிறது.ஸ
வி : கப்;வுன், இருக்கிறியளா?
க : (திரும்பி) ஓ, வரலாம். கனபேர் இருக்க என்னட்டைக் கதிரையள் இல்லை. அதால கதிரையளே தேவையில்லை எண்டு விட்டிட்டன்.
வி : என்ட பேர் விநாயகம். டொக்;வுர் வீட்டில என்னைக் கண்டிருப்பியள்.
க : (சற்று விறைப்பாக) ஓ, ஓ நான் வேலையா இருந்ததில உன்னைக் காணேல்லை. (யன்னலருகே போய் எட்டிப் பார்க்கிறார்.) அவை ஏன் உள்ள வர மாட்டினம்?
வி : தெரியேல்லை. ஒரு வேளை மேயர் மாதிரி முக்கியமான எவருக்கேன் காத்திருக்கினமாக்கும். அவர் தரவழி உள்ளுக்க வந்தா, இந்த இடத்துக்க வாறது மரியாதையா இருக்குமெண்டு நினைக்கின மாக்கும். துவங்க முதல் உங்களிட்ட ஒண்டு கேக்க நினைச்சன். கப்வுன், உங்கட வீட்டை ஏன் இதுக்கு விடுறியள்? வழக்கமா நீங்கள் அரசியலில கைவைக்க மாட்டியளே!
க : (நிலையாக நின்றபடி) சொல்லிறன். வருஷத்தில பெரும்; பகுதி நாள் பிரயாணஞ் செய்யிறனான். நீ எப்பவேன் பிரயாணஞ் செய்திருக்
கிறியா?
வி : வெளிநாட்டுக்காஇ இல்லை!
க : வரவேற்பில்லாத விஷயங்களைக் கதைக்க ஆக்களுக்கு உரிமை இல்லாத பல இடங்களுக்குப் போயிருக்கிறன். உனக்கு அதைப் பற்றித் தெரியுமோ?
வி : ஓஇ வாசிச்சிருக்கிறன்.
க : (அடித்தாற் போல) எனக்கு அது பிடியாது. (வெளியேற முற்படுகிறார்.)
வி : இன்னொரு விஷயம். நீரூற்றை முழுதாத் திருப்பிக் கட்ட வேணுமெண்டு டொக்;வுர் சொல்லிறதையிட்டு என்ன நினைக்கிறியள்?
க : (திரும்பிஇ யோசித்துப்இ பின்னர்) அதில ஒண்டும் எனக்கு விளங்கேல்லை.
(மூன்று பிரசைகள் வருகை)
க : வாங்கோஇ வாங்கோ! என்னட்டப் போதிய கதிரையள் இல்லை. நீங்களெல்லாம் நிக்கத்தான் வேணும். (போகிறார்).
பிரசை 1:குழலை ஊதிப் பார்
;பிரசை 2:முதல்ல அவர் கதைக்கட்டும்.
பிரசை 3:(ஆள் நல்ல தடியன். ஒரு குழலை எடுக்கிறான.;) அவை இதைக் கேட்ட பிறகு பார்இ இதால உன்ட மீசையை ஊதித் தள்ளிப் போடுவன்.
(கந்தசாமி மீள்கிறார். குழலைக் கண்டதும் திடீரென நிற்கிறார.;)
க : எனக்கு ஒரு சண்டித்தனமும் பிடியாது. நான் சொல்லிறது கேட்டுதோ?
(புவனமும் பவளமும் வருகின்றனர்.)
க : வாங்கோஇ உங்களுக்கு மட்டுங் கதிரையள் இருக்கு.
பு : (நடுக்கத்துடன்) அங்க பேவ்மென்ற் வழிய சரியான கூட்டமா யிருக்கு. அவை வரமாட்டினமோ?
க : அவை மேயருக்குப் பாத்துக் கொண்டு நிக்கினமாக்கும்.
ப : அவையெல்லாம் மேயரின்ட பக்கமோ?
க : ஆருக்குத் தெரியும்? சனங்கள் துணிவில்லாததுகள். லேசில இப்பிடியொரு கூட்டத்துக்கு வராதுகள். ஒரு வேளை -
வி : (இவர்களிடம் சென்று) ஹலோ! (அவர்கள் அவனை வெறுமே பார்க்கின்றனர்.) நீங்கள் கதையாததுக்கு நான் கோவிக்கேல்லை. இண்டைக் கூட்டம் பொம்பிளயள் நிக்கிறதுக்கு ஒத்தது என்டு
நான் நினைக்கேல்ல. எண்டு சொல்ல நினைச்சன்.
பு : விநாயகம்இ நான் உன்னட்ட ஆலோசனை கேட்டனானோ?
வி : அம்மாஇ நீங்கள் நினைக்கிற அளவு நான் பிழையான ஆளில்லை.
பு : அப்படியெண்டா மேயரின்ட அறிக்கையைப் பேப்பரில போட்டிட்டு ஏன் டொக்வுரின்ட கட்டுரையைப் பற்றி நீ ஒரு சொல்லும் போடேல்லை? அவர் என்ன சொல்லப் பார்க்கிறாரெண்டு ஒருவரேனும் அறிய இடமில்லாமப் போயிட்டுது. தெருவில நிக்கிற எல்லாரும் ஏன் அவருக்கு மாறா நிக்கினம்?
வி : அவற்ற அறிக்கையைப் போட்டாஇ அவருக்குத்தான் கேடு எண்டு எண்ணித்தான் போடாம விட்டனாங்கள்.
பு : விநாயகம்இ நான் சீவியத்தில ஆரிட்டையும் இதுவரைக்கும் இப்பிடிச் சொல்லேல்லை. இப்ப சொல்லிறன். நீ ஒரு பொய்யன்.
(திடீரென மூன்றாவது பிரசை குழலை உரக்க ஊதுகிறான். பெண்கள் அதிர்கின்றனர். விநாயகமும்இ கந்தசாமியும் வேகமாகத் திரும்புகின்றனர்)
க : இன்னொருக்கா ஊது. உன்னைத் தூக்கி வெளியில போடுவன்.
(ராசலிங்கம் வருகிறார்;. அவர் பின்னாற் கூட்டம் வருகிறது. அவர்இ அவர்களுடன் தொடர்;பு இல்லாததுபோல பாவனை செய்கிறார். புவனத்திடம் சென்று வணக்கஞ் செலுத்துகிறார்)
ரா : புவனம்? பவளம்?
ப : வணக்கம்.
ரா : ஏனிப்பிடி முறைப்பாக? அவன் கூட்டம் வேணுமெண்டான், இந்தா கூட்டம் இருக்குது. (கந்தசாமியிடம்) வந்திட்டானோ?
க : டொக்வுர் நல்ல கூட்டம் வருமெண்டு நிச்சயம் பண்ண ஊருக்குள்ளை போய்த்திரியிறார்.
ரா : ஞாயந்தான்! மறந்தாப்போலஇ பவளம் நீயோ அந்தப் போஸ்;வுரை வரைஞ்சனீ? ஆரோ நகர மண்டபத்தில ஒட்டியிருக்கிது?
ப : அதைப் படமெண்டு நீங்கள் நினைச்சா, நான் தான்!
ரா : உன்னை நான் பொலிஸிலை பிடிச்சுக் குடுத்திருக்கேலும் தெரியுமோ? நகரசபையில போஸ்வுர் ஒட்டிறது சட்ட விரோதம்.
ப : பிடியுங்கோ. (கைகளை இணைத்து நீட்டுகிறாள்.)
பு : (அதைப் பாரதூரமாகக் கருதி) அவளைப் பிடிச்;சுக் குடுத்தியளெண்டா நான் உங்களோட இனிக் கதைக்கவும் மாட்டன்.
ரா : (சிரித்தபடி) புவனம்இ ஒரு நாளும் உங்களுக்குப் பகிடி விளங்காது!
(குறுக்கே நடந்து போய் இடப்புறத்தே அமர்கிறார். அவர்கள் வலப்புறத்தே அமர்கின்றனர். கூட்டத்துள்ளிருந்து ஒரு குடிகாரன் வருகிறான்)
கு : டாய்இ வல்லிபுரம்;இ ஆர்ரா கேக்கிறான்? ஆர்ரா வேட்பாளன்?
க : ஏய்இ நீ குடிச்சிப் போட்டு நிக்கிறாய். போ வெளியால.
கு : குடிச்சுப்போட்டு வோட்டுப் போடேலாதெண்டு சட்டமோ?
க : (குடிகாரனை வாயிலை நோக்கித் தள்ளுகிறார். கூட்டத்தினர் சிரிக்கின்றனர்.) போ, வெளியால! போ!
கு : நான் வோட்டுப் போடப் போறன்! எனக்கு வோட்டுரிமை இருக்கு!
(தயாநிதி வருகிறார். ராசலிங்கத்தைக் கண்டதும் அவரிடம் ஓடுகிறார்.)
த : ஐயா.... (வாசலைக் காட்டி) அவர்....
ந : (மேடைக்குப் புறத்திருந்து) இந்த வழியால உள்ள போங்கோ. எல்லாரும் வாங்கோ.
(துரைசாமி வருகிறார். முதலில் ராசலிங்கத்தையும், தயாநிதியையும் பின் நல்லதம்பியையும் பார்க்கிறார். அவருக்குப் பின்னால் இன்னொரு கூட்டம் உள்ளே வருகிறது.)
ந : மன்னிச்சுக் கொள்ளுங்கோ. இங்க கதிரையளில்ல. மண்டபம் ஒண்டுங் கிடைக்கேல்ல. அமைதியா இருங்கோ. கனநேரம் எடாது. (மேடைக்குப் போகிறார். ராசலிங்கத்தைக் கண்டு) நீங்களும் வந்தது நல்லது.
ரா : வராம விடுவனா.
ந : புவனம்இ என்ன சொல்லிறீர்?
பு : (நடுக்கத்துடன்) என்னட்டச் சத்தியம் பண்ணுங்கோஇ கோவப்பட மாட்டியளெண்டு...
க : (கதவிடுக்கினூடு குடிகாரனைக் கண்டு) போ வெளியால எண்டெல்லோ சொன்னனான்.
ரா : (குடிகாரனிடம்) உன்னை வெளியாலை போ எண்டு கட்டளை போடுறன். போய் வெளியில நில்லு!
கு : உம்மட கதைமாதிரியள் எனக்குப் பிடிக்கேல்லை! நீர் கவனமா இல்லாட்டி நான் போய் மேயரிட்டச் சொல்லிப் போடுவன்! அவர் உங்களையெல்லாம் தூக்கிக் குளத்தில போட்டிடுவார்! (அனைவரிடமும்) என்ன, நீங்களெல்லாம், புரட்சியோ?
(கூட்டம் ஆரவாரமாகச் சிரிக்கிறது. குடிகாரனுஞ் சிரிக்கிறான். அவர்கள் அவனை வெளியே தள்ளுகின்றனர். நல்லதம்பி பீடத்தில் ஏறுகிறார்.)
ந : (கூட்டத்தை அமைதிப்படுத்தி) கனவான்களே வணக்கம். காரியத்தைத் தொடங்குவோம். தயவு செய்து அமைதி! (தொண்டையைக் கனைத்து) இது மிகவும் எளிதான ஒரு கருமம் -
த : டொக்வுர்இ நாங்கள் ஒரு தலைவரைத் தெரிவு செய்யேல்லை.
ந : திருவாளர் தயாநிதி மன்னிக்க வேண்டும். இது ஒரு கூட்டமல்ல. இது ஒரு விரிவுரை என்றே அறிவித்தேன் -
பிரசை 1:டொக்வுர்இ நாங்கள் ஒரு தலைவரைத் தெரிவு செய்யேல்ல.
ந : திருவாளர் தயாநிதி மன்னிக்க வேண்டும். இது ஒரு கூட்டமல்ல. இது ஒரு விரிவுரை என்றே அறிவித்தேன்.
பிரசை 1:டொக்வுர்இ நான் கூட்டத்துக்குத்தான் வந்தனான். இங்க கொஞ்சங் கட்டுப்பாடு தேவைப்படுது.
ந : என்ன கட்டுப்பாடு? என்னத்தைக் கட்டுப்படுத்திறது?
பிரசை 2:அவரைக் கதைக்க விடுங்கோ. இது கூட்டமில்லையே.
பிரசை 3:மேயர் ஐயாஇ நீங்கள் பொறுப்பெடுக்க வேணும்-
ந : ஒரு நிமிஷம் பொறுங்கோ!
பிரசை 4:நம்பிக்கையான எவரேன் பொறுப்பெடுக்க வேணும். இங்க பெரிய கருத்து வித்தியாசம் இருக்குது.
ந : உங்களுக்கு எப்பிடி அதைச் சொல்லேலும்? உங்களுக்கு நான் என்ன சொல்லப்போறன் எண்டுந் தெரியாது.
பிரசை 4:நீ என்ன சொல்லப் போறாயெண்டு எனக்குத் தெரியும். எனக்கு அது பிடியாது! எவனுக்கேன் இந்த இடம் பிடிக்கேல்லையெண்டா விருப்பமான வேற எங்கையேன் போறது தானே. எங்களுக்கு இங்கின குழப்பங் காய்ச்சியள் தேவையில்லை!
(கூட்டத்திலிருந்து அதற்கு ஆதரவு வருகிறது. நல்லதம்பி ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்க்கிறார்.)
ந : இங்க பாருங்கோஇ உங்களுக்கு என்னைப்பற்றி ஒண்டுமே தெரியாது.
பிரசை 4:டொக்வுர் நல்லதம்பியாரே உம்மைப்பற்றி எங்களுக்கு நிறையத் தெரியும்!
ந : எங்கையிருந்து? பேப்பரைப் பாத்தோ? எனக்கிந்த ஊர் பிடியாதெண்டு எப்பிடிக் கண்டு பிடிச்சனியள்? (தனது கட்டுரையின் பிரதியை எடுத்து) இந்த ஊரைக் காப்பாத்தத்தான் இங்க வந்திருக்கிறன்.
ரா : (விரைவாக) டொக்வுர், ஒரு நிமிஷம்! ஜனநாயகமுறை ஏதெண்டாஇ ஒரு தலைவரைத் தெரிவு செய்கிறது தான் எண்டு நினைக்கிறேன்!
பிரசை 5:நான் மேயரைப் பிரேரிக்கிறேன்.
(ஆமோதிப்புக்கள் கேட்கின்றன.)
ரா : இல்லைஇ இல்லைஇ இல்லை! அது நியாயமில்லை. நடுநிலையான ஒருவரே தேவை. நான் திருவாளர் தயாநிதியை -
பிரசை 2:நான் ஒரு விரிவுரைக்குத்தான் வந்தனான்.
பிரசை 3:(2வது பிரசையிடம்) நீ எதுக்குப் பயப்பிடுறாய்? முறையான போட்டிக்கோ? (மேயரிடம்) திருவாளர் தயாநிதியை ஆமோதிக்கிறேன். (கூட்டம் உடன்படுகிறது.)
ந : அதுதான் உங்கள் விருப்பம் என்றால். எனக்கு மறுப்பில்லை. நான் இந்தக் கூட்டத்தைக் கூட்டிய நோக்கம் ஏதென்றால் உங்களுக்குச் சொல்ல வேண்டிய முக்கியமான ஒரு செய்தி என்னிடம் உள்ளது. அதைப் பிரசுரிக்க என்னால் முடியவில்லை. எவரும் எனக்கு ஒரு மண்டபத்தை வாடகைக்குத் தர ஆயத்தமாக இல்லை.
ரா : எனக்கும் பேச வாய்ப்புக் கிடைக்குமென நம்புகிறேன். தயாநிதி அவர்களே?
(தயாநிதி பீடத்தில் ஏறுகிறார். நல்லதம்பி இறங்குகிறார். ஐயாத்துரை வருகிறார். குள்ளத்தனமாகச் சுற்றும் முற்றும் பார்க்கிறார்.)
த : தொடங்க முதல் நான் ஒன்று சொல்ல வேண்டும். இன்று என்ன பேசப்பட்டாலும் தயவு செய்து நிதானமே முக்கியமான சமுதாய சீலம் என்பதை மறவாதீர்கள். (தவிர்க்க முடியாதுஇ நல்லதம்பியின் பக்கம் திரும்பி விட்டுக் கூட்டத்தை நோக்கி) யாராவது பேச விரும்பினால் - (குடிகாரன் திடீரென வருகிறான்.)
கு : (தயாநிதியைச் சுட்டி) எனக்குக் கேட்டுது! எப்ப தொட்டு உன்னைத் தேர்தலில வோட்டுக் கேக்க விட்டவை? (பிரசைகள் சிரித்தபடியே அவனை வாசலுக்குத் தள்ளுகின்றனர்.) நான் இதை மேயரிட்டச் சொல்லப் போறன். அறுவான்கள்! (அவனை வெளியே தள்ளிக் கதவை மூடுகின்றனர்.)
த : அமைதி! அமைதி! யாராவது பேசப் போகிறீர்களா?
(நல்லதம்பி கையை உயர்த்தியபடி முன்னே வருகிறார். அதற்குள் ராசலிங்கமும் கையுயர்த்துகிறார்.)
ரா : தலைவர் அவர்களே!
த : (விரைவாக ராசலிங்கத்தை அடையாளம் கண்டு) மதிப்புக்குரிய மேயர் அவர்கள் இப்போது உரையாற்றுவார்கள்!
(நல்லதம்பிஇ நின்று ராசலிங்கத்தைப் பார்த்துவிட்டுசஇ; சொல்ல நினைத்ததை அடக்கிக்கொண்டு தன் இடத்துக்கு மீள்கிறார். ராசலிங்கம் மேடையேறுகிறார்.)
ரா : கனவான்களேஇ இந்தப் பிரச்சினையை விரைவாகத் தீர்த்துவிட்டு இன்றிரவே நமது எளிமையானஇ அமைதியானஇ சாந்தமான வாழ்க்கை முறைக்கு மீள அதிக நேரம் எடுக்காது. பிரச்சினை இதுதான். இளைய சகோதரர் டொக்வுர் நல்லதம்பி - இதைச் சொல்வது எனக்கு இலேசான காரியமில்லை. அவர் எங்கள் ஆம்பல் வயல் நீரூற்றையுஞ் சுகாதார நிலையத்தையும் அழிக்கப் போவதாகத் தீர்மானித்து விட்டார்.
ந : அண்ணா!
த : (மணியை அடித்து) மேயரைத் தொடர்ந்து பேசவிடுங்கள். தயவுசெய்து யாரும் குறுக்கிடாதீர்கள்.
ரா : அவர் அதைச் சுற்றி வளைத்து ஏதோ விதமாகச் செய்யப் பார்க்கிறார். ஆனாலும் அதுவே அவரது நோக்கம்... நான் சொல்வதை நம்புங்கள்.
பிரசை 3:என்னத்துக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறியள் எல்லாரும். அவனை ஊரைவிட்டுத் துரத்துவம். (மற்றவர்களும் சேர்ந்து கூக்குரலிடுகின்றனர்.)
ரா : பொறுமையாக இருங்கள். நான் இங்கே வன்முறையை விரும்ப வில்லை. அவருடைய உள்நோக்கங்களை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகாரத்தை நச்சரிக்காமல், அதிகாரத்தைக் கேலிசெய்யாமல், அதிகாரத்தை அழிக்காமல் இருந்தால் அவருக்குத் திருப்தி இல்லை. அவர் நீரூற்றைத் தாக்கும் நோக்கம், அதைக் கட்டும் அலுவலில் நிர்வாகம் பெரும் பிழை செய்து விட்டது என்று நிரூபிப்பதே.
ந : (தயாநிதியிடம்) நான் பேசலாமா? நான் -
த : இன்னும் மேயர் பேசிமுடியவில்லை.
ரா : நன்றி;இ இங்கே சிலபேர் டொக்வுர் தான் விரும்பியபடி எதையும் பேசலாம் என்று எண்ணுகிறார்கள் போல் தெரிகிறது. இது சனநாயக நாடு தானே. வழமையான சூழ்நிலைகளில்இ எவரும் எதையும் பேசுவதை நான் நூறு சதவீதம் ஆதரித்திருப்பேன் என்று தெய்வம் அறியும். ஆனால் வழமையான சூழ்நிலை இப்போது இல்லை. தேசங்கள் நெருக்கடிக்கு உட்படுகின்றன. நகரங்களுக்கும் அப்படி நடக்கிறது. உலகு முழுதும் தேசங்கள் அழிந்து சிதைந்துள்ளன. நகரங்களும் அழிந்து சிதைந்துள்ளன. அவற்றை எல்லாம் யார் அழித்தார்கள்? சீர்திருத்தத்தின் பேராலும் நீதி கோரியும் பிறவழிகளிலும் அதிகாரத்தை முறியடித்துப் புரட்சியையுங் குழப்பத்தையும் உண்டாக்கின மனிதர்களே செய்தார்கள்.
ந : என்ன விசர்க் கதை இது?
த : டொக்வுர் நான் கண்டிப்பாகச் சொல்கிறேன்.
ந : நான் ஒரு விரிவுரைக்கு ஏற்பாடு செய்தேன். என்னைத் தாக்க நான் அவரை அழைக்கவில்லை. அவரிடம் எல்லாப் பத்திரிகைகளும் உள்ளன. நகரில் உள்ள சகல மண்டபங்களும் என்னைத் தாக்குகின்றன. இன்றிரவு இந்த அறையை விட எனக்கு வேறு இடமில்லை!
த : டொக்வுர் நீங்கள் நடக்கும் முறைஇ பார்க்க அழகாக இல்லை!
(ஆதரவான முறையிற் சிரிப்பும் ஊளைகளும். நல்லதம்பி இதனால் மீண்டும் அதிர்ச்சியடைகின்றார்.)
த : தொடர்ந்து பேசுங்கள்இ மேயர் அவர்களே.
ரா : இது தான் நமது நெருக்கடி. நிலையம் இல்லாது நமது ஊர் எவ்வாறிருந்தது என நாம் அறிவோம். வீதிகளைத் துப்புரவாக வைத்திருப்பதே அசாத்தியமாக இருந்தது. இது ஒரு களை யிழந்த மூன்றாந்தரமான கிராமமாக இருந்தது. இப்போது சர்வதேசப் பிரசித்தி பெறக்கூடிய நிலையின் விளிம்பிற்கு வந்து விட்டோம். இன்னும் ஐந்தே வருடங்களில் இந்த அறையில் உள்ள ஒவ்வொருவரதும் வருமானம் பன்மடங்கு அதிகமாகி விடும். நமது பாடசாலைகள் அளவிலும்இ தரத்திலும் ஓங்கி விடும். நாளடைவில் ஆடம்பரமான கார்கள் நகர வீதிகளை நிரப்பும.; பிரதான வீதி நெடுகிலும் உயர்தரக் கடைகள் திறக்கப்படும். எம்மை யாரேனும் அவதூறு செய்து விஷமத்தனமாத் தாக்கினானொழியஇ ஒரு நாள் இந்த நகரம் முழு உலகிலும் உள்ள அழகான செல்வம் மிகுந்த ஒரு நகரமாகத் திகழும். இவைதான் உங்கள் முன்னுள்ள தெரிவுகள். இப்போது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். நீரூற்றில் உள்ள அற்பக் குறைபாடுகளைத் தூக்கிப் பிடித்து மிகச்சிறிய பிரச்சினைகளைப் பூதாகரமாக்க நம்மில் எவருக்கும்“ஜனநாயக உரிமை” இருக்க முடியுமா? (“இல்லைஇ இல்லை”என்ற கூக்குரல்.) இந்த அவதூறுகளை உலகறியப் பிரசுரிக்க உரிமை இருக்க முடியுமா? உலகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதேஇ நாம் வாழ்வதா சாவதா என்பதைத் தீர்மானிக்கிறது. நாங்கள் எதற்கும் ஒரு எல்லை வகுக்க வேண்டும். எவரேனும் அதை மீறினால் அவரது சட்டையைப் பிடித்து உலுக்கி “நீ இப்படிப் பேச இயலாது!” என்று சொல்ல வேண்டும்.
(ஆதரவாகப் பெரும் ஆரவாரம். தயாநிதி மணியை அடிக்கிறார்.)
ரா : (தொடர்ந்து) அப்படியானாற் சரி. நமக்கு ஒருவரை ஒருவர் விளங்குகிறது. தயாநிதி அவர்களே டொக்வுர் நல்லதம்பி இக்கூட்டத்திற் தனது அறிக்கையை வாசிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று பிரேரிக்கிறேன். (தனது கதிரைக்கு மீள்கிறார். அதில் ஐயாத்துரை அமர்ந்துள்ளார்.)
(தயாநிதி உற்சாகத்தை தணிக்குமுகமாக மணியை அடிக்கிறார். கையில் அறிக்கையுடன் பீடத்தில் ஏற நல்லதம்பி தாவுகிறார்).
த : அமைதி, அமைதி! தயவு செய்து பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடுவோமா?
ந : என்னைப் பேச அனுமதிக்க மாட்டீர்களா?
த : டொக்வுர்இ அதைப்பற்றித்தான் வாக்கெடுப்புக்குப் போகிறோம்.
ந : இதென்ன அநியாயம். எனக்கு பேச உரிமை -
ப : (எழுந்து) அப்பாஇ ஒழுங்குப் பிரச்சினை -
ந : (அவள் சொன்னதை விளங்கிக் கொண்டு) தலைவரேஇ ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை நான் எழுப்புகிறேன்.
த : (அவர் பக்கம் திரும்பி) ஓம்இ டொக்;வுர்இ (நல்லதம்பி வழியறியாமல் பவளத்திடம் திரும்புகிறார்.)
ப : பிரேரணை பற்றி நீங்கள் பேசப் போகிறீர்கள்.
ந : அதுதான். பிரேரணை பற்றி நான் பேச வேண்டும்.
த : ஆ... (ராசலிங்கத்தின் பக்கம் திரும்புகிறார்) சரிஇ பேசலாம்.
ந : (கூட்டத்தினரிடம்) தயவுசெய்து கேளுங்கள். (ராசலிங்கத்தைச் சுட்டி) அவர் பேசுகிறார். பேசுகிறார். விஷயங்களைப் பற்றி அதிலே ஒரு சொல்லும் இல்லை. (அறிக்கையை உயரப் பிடிக்கிறார்.)
பிரசை 3: நீர் எல்லாத்தையும் நாசமாக்க பாக்கிறீர்!
ந : கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள். முதலில் என்னை இதை வாசிக்க -
(“இல்லைஇ இல்லை” என்று கூக்குரல். மூன்றாம் பிரசை குழலை ஊதுகிறான். தயாநிதி மணியை அடிக்கிறார். நல்லதம்பி அதிர்ந்து போகிறார். சினமிகுந்த முகங்களை வியப்புடன் பார்க்கிறார். கையில் உயரப்பிடித்த அறிக்கையைத் தாழ்த்தித் தோல்வியுடன் பின்வாங்குகிறார்.)
த : தயவு செய்து அமைதியாக இருங்கள்! இந்த மாதிரி ஆரவாரம் சரியில்லை! (அமைதி மீள்கிறது.) டொக்வுர்இ நீங்கள் பேசுவதற்கு முதல் ஒரு வாக்கெடுப்பை நடத்துவதைத் தான் பெரும்பான்மை விரும்புகிறது. அவர்கள் அனுமதித்தால் நீங்கள் பேசலாம். அல்லது அவர்களது விருப்பப்படி நடக்கும். நீங்கள் இதை மறுக்க மாட்டீர்கள்.
ந : (திரும்பிஇ கையெழுத்துப் பிரதியைத் தரையில் வீசிஇ மீண்டும் தயாநிதியை நோக்குகிறார்.) வாக்கெடுக்கச் சிரமப்படாதேயுங்கோ. எனக்கெல்லாம் விளங்குது. நான் சில நிமிஷம் -
ரா : தலைவர் அவர்களே!
ந : (ராசலிங்கத்திடம்) நிலையத்தைப் பற்றிக் குறிப்பிட மாட்டன். உலகத்தில இருக்கிற எல்லா நிலையங்களையுங் காட்டிலும் ஆயிரம் மடங்கு முக்கியமான ஒண்டை நான் கண்டுபிடிச்சிருக் கிறன். (தயாநிதியிடம்) நான் மேடை ஏற இயலுமா?
த : (கூட்டத்தினரிடம்) இதை நான் மறுக்க இயலாது. அவர் தன்னுடைய பேச்சை-
ந : நீரூற்றுப் பற்றி நான் பேசவில்லை. (பீடத்தில் ஏறி கூட்டத்தைப் பார்த்து) விஷயத்துக்கு வருமுன் நம்மிடையே உள்ள சீர்திருத்தவாதிகளையும், புரட்சிவாதிகளையும் பாராட்ட விரும்புகிறேன். உதாரணமாகத் திரு. துரைசாமி -
து : புரட்சிவாதியோ? எந்தச் சாட்சியத்தை வைத்து என்னை நீங்கள் அப்படிச் சொல்லலாம்?
ந : நீங்கள் அங்கே என்னை மடக்கி விட்டீர்கள். சாட்சியம் எதுவும் இல்லை. எப்போதுமே இருந்ததில்லை என்று தான் நினைக்கிறேன். இத்தனை வருடங்களாகப் பேச்சுச் சுதந்திரம் பற்றி ஒவ்வொரு இடத்திலும் போராடி வந்த உங்களால் இன்று காட்டப்பட்ட கட்டுப்பாடான செயலைப் பாராட்டவே விரும்பினேன்.
து : எனக்குச் சனநாயகத்தில் நம்பிக்கை உண்டு. எனது வாசகர்கள் ஏகோபித்து நிராகரிக்கும் ஒன்றை நான் அவர்கள் மீது திணிக்க முடியாது.
ந : நான் குறிப்பிட நினைத்ததை நீங்களே தொடக்கி விட்டீர்கள். (கூட்டத்தை நோக்கி) கனவான்களேஇ திருமதி நல்லதம்பிஇ செல்வி நல்லதம்பி அவர்களே! இன்றுஇ என்னைத் திடீரென ஒரு மின்னல் தாக்கியது போலஇ எதையும் விட முக்கியமான ஒன்றைக் கண்டு பிடித்தேன். அதை உங்களுக்குச் சொல்லுமுன்- ஒரு சிறிய கதை. நமது நாட்டின் வடபகுதியில் காட்டுப் பிரதேசத்தில் நான் பல காலம் வேலை பார்த்தேன். அங்கே மிருகங்கள் ஆட்சி செலுத்தின. மனிதர் குகைகளில் வாழ்ந்தனர். அவர்களது வாழ்வு உணவுக்கு அலைவது மட்டுமே. வேறெதுவு மில்லை. அவர்களுக்கு மொழியே சரியாக வராது. ஒரு நாள் எனக்குத் திடீரென்று ஞானம் வந்தது. இவ்வளவு படித்த நான் அவர்கட்கு வைத்தியம் செய்வது ஒரு கற்பனாவாதக் கனவென்று உணர்ந்தேன். அவர்கட்கு வைத்தியர் தேவையான நிலையை அவர்கள் எட்டவில்லை. அவர்கட்கு ஒரு மிருக வைத்தியரே போதும் என்பதே உண்மை.
வி : கண்ணியமான உழைக்கும் மக்களை இப்படித்தான் அழைப்பீர்களோ?
ந : நண்பரேஇ இது நான் எதிர்பார்த்த வசனந்தான். மக்கள் என்ற மந்திர வார்த்தையால் என் மூளையை இருளில் ஆழ்த்த முடியாது. இனிமேல் முடியவே முடியாது. மனித உருவங் கொண்ட பிராணிகளின் கூட்டம் ஒன்று தானாகவே மக்கள் என்றாகிவிடாது. அந்தக் கௌரவம்இ சம்பாதிக்கப்பட வேண்டியது. மனித உருவமும் வீட்டில் வசிப்பதும்; வாயில் உணவை வைப்பதும் - அயலாருடன் உடன்படுவதும் ஒருவனை மனிதனாக்கி விடாது. அந்தப் பேரும் சம்பாதிக்கப்பட வேண்டியது. இனிஇ நீரூற்றுப் பற்றிய என் முடிவுக்கு வருகிறேன்.
ரா : உமக்கு அதற்கு உரிமையில்லை.
ந : இது மிகவுஞ் சின்னத்தனமான காரியம். என்னை ஒரு சொல்லை வைத்து மட்டந்தட்டுவது. நான் நீரூற்றுப் பற்றிப் பேசவில்லை. (கூட்டத்திடம்) நீர் பற்றிய எனது கொள்கை சரியென்று நான் நிச்சயமாக அறிந்த பின்இ அதிகாரிகள்இ துரிதமாகவே காரியத்தில் இறங்கி விட்டனர். அப்போதே என் முடிவு வரை போராடுவேன் என்று எனக்குள் முடிவுசெய்து கொண்டேன்.
பிரசை 3 : நீ என்ன செய்யப் பாக்கிறாய்? புரட்சியோ? இவன் ஒரு புரட்சிக்காறன்!
ந : என்னைப் பேச விடும்! நான் எனக்குள் யோசித்தேன். பெரும்பான்மைஇ பெரும்பான்மை என்னுடன் நிற்கிறது! நண்பர்களேஇ அது ஒரு அற்புதமான உணர்வு. ஏனென்றால் அந்தக் காரணத்தினாலேயே நான் என் பிறந்தவூருக்குத் திரும்பி வந்தேன். நான் கற்றதை இந்த ஊருக்குத் தர விரும்பினேன். இந்த ஊரை நேசித்ததாலேயே சம்பளமில்லாமலும், ஊக்குவிப் பில்லாமலும் மாதக்கணக்காகச் செயற்பட்டு நீரூற்றுத் திட்டத்தை யோசித்து அறிந்தேன். ஏன்? எனது சகோதரர் சொல்வது போல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட அல்லஇ நோயாளிகளின் துன்பம் போக்க! உலகு முழுதும் இருந்து மக்களை வரவழைக்க! அவர்களிடமிருந்து கற்க! மேலும் பரந்த மனமும் பண்பாடும் பெற! வேறு வகையிற் சொன்;னால்இ மேலும் மனிதர் போலாக! மக்களாக!
ஒரு பிரசை: உமக்கு இந்த ஊரில ஒண்டையும் பிடியாதோ?
வேறொரு பிரசை: ஒப்புக்கொள்ளும். நீர் ஒரு புரட்சிவாதிதானே! இல்லையோ? ஒப்புக்கொள்ளும்!
ந : நான் ஒப்புக் கொள்ள மாட்N;டன்! நான் அதைப் பிரகடனஞ் செய்வேன்! நான் புரட்சிவாதிதான்! பெரும்பான்மையோர் சொல்வதே எப்பொழுதுஞ் சரி என்ற பழைய பொய்யை எதிர்த்துக் கிளர்ச்சியில் இறங்கியுள்ளேன்!
து : இருந்தாப் போல இவர் ஒரு அரச வம்சத்தவராகப் போயிட்டார்!
ந : அதற்கும் மேலே! நான் சொல்லுகிறேன். பெரும்பான்மை எப்போதுமே தவறானது. இந்த முறையில்!
ரா : உனக்கென்ன மூளை பிசகிவிட்டுதோ? ஏதேன் நடக்க முன்னம் கதையை -
ந : யேசுவைச் சிலுவையில் அறைந்த போது சும்மா நின்ற பெரும்பான்மை சரியானதா? (அமைதி.) பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று ஏற்க மறுத்து கலிலியோவை ஒரு நாய் மாதிரி முழங்காலில் நிற்க வைத்த பெரும்பான்மை சரியானதா? பெரும்பான்மை சரியானதை ஏற்க ஐம்பது வருஷம் எடுத்தது. சரியானதைச் செய்யும் வரை பெரும்பான்மை என்றுமே சரியானதில்லை.
து : நான் இப்போதே சொல்ல விரும்புகிறேன். நான் இந்த மனிதரின் சினேகிதனாக இருந்து இவர் வீட்டு மேசையில் பலமுறை உணவு அருந்தினேன். இன்றோடு இவரது உறவு முற்றாக முடிந்து விட்டது.
ந : இதற்குப் பதில் சொல்லுங்கள்! தயவு செய்து ஒரே ஒரு நிமிஷம்! ஒரு படைப்பிரிவினர் எதிரியை நோக்கி ஒரு வீதி வழியே செல்கின்றனர். அதில் ஒவ்வொருவனும் தான் போகும் பாதை சரியானது என்று மனமார நம்புகிறான். இரண்டு கல் தொலைவில் காவல் நிலையத்தில் ஒருவன் தனியே நிற்கிறான். பாதை ஆபத்தானது என அவன் காண்கிறான். தன் தோழர்கள் அபாயத்திற் சிக்கப் போகின்றனர் என்று அவன் உணர்கிறான். பின்னோக்கி ஓடிப்போய்த் தன் படைப்பிரிவைக் காண்கிறான். தான் அறிந்தது உண்மை என அவன் நம்பினால்இ பெரும்பான்மையுடன் வாதிக்கப்இ பெரும்பான்மையுடன் சண்டையிடஇ அவனுக்கு உரிமை இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லையா? பலருக்கு ஒரு விஷயம் தெரிய வருமுன் ஒருவனுக்குத் தெரிய வருகிறது. (அவரது உத்வேகம் கூட்டத்தை அமைதிப்படுத்துகிறது.) எப்போதும் இதே கதைதான். ஒருவர் தன் உரிமைகளைப் பயன்படுத்துவது நம்மை வருத்தும் வரையில் உரிமைகள் புனிதமானவை. உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன். செலவு அதிகம் என்று நான் அறிவேன். இடைஞ்சல்கள் அதிகம் என்று நான் அறிவேன். நாம் புனர்நிர்மாணத்தில் இறங்குகையிற் பிற ஊரார் நம்மை முந்த முனையும் வாய்ப்பு அதிகம் எனவும் அறிவேன்.
ரா : தயாநிதி இவர் இது பற்றிப் -
ந : நிரூபிக்க என்னை அனுமதியுங்கள்! நீர் நஞ்சாகி விட்டது!
பிரசை 3: (பீடத்தில் ஏறி நல்லதம்பி முகத்தின் முன் முஷ்டியைக் குலுக்கி) நஞ்சைப் பற்றி இன்னும் ஒரு சொல்லுக் கதைஇ நான் உன்னை வெளியிலை கொண்டு போயிடுவன்!
(கூட்டம் ஆரவாரிக்கிறது. சிலர் பீடத்தில் ஏறித் தாக்க முனைகின்றனர். குழல் ஒலிக்கிறது. தயாநிதி மணியை ஒலிக்கிறார். ராசலிங்கம் கைகளை உயர்த்தி முன் வருகிறார். ஐயாத்துரை நழுவுகிறார்.)
ரா : போதும் இது! அமைதி! இங்கே வன்முறைக்கு இடமில்லை. (அமைதி மீள்கிறது.) டொக்வுர் கீழே இறங்கித் திருவாளர் தயாநிதியை மேடையேற விடுங்கள்.
ந : (புதிய பார்வையுடன் கூட்டத்தை உற்று நோக்கி) நான் இன்னும் பேசி முடியவில்லை.
ரா : கீழே வாரும் அல்லது நடப்பதற்கு நான் பொறுப்பில்லை.
பு : நான் வீட்ட போவேணும்இ வாருங்கோ.
ரா : பேச்சாளரை Nமைடையிலிருந்து இறக்குமாறு நான் தலைவரைக் கோருகிறேன்.
குரல்கள்: இரு ஓய்! மேடையால இறங்கு!
ந : சரி. நாடு முழுதும் இந்த அலுவலை அறியும்படி அயலூர்ப் பத்திரிகைகட்கு இதைக் கொண்டு போகிறேன்.
ரா : அவ்வளவுக்குத் துணிவியோ?
து : நீங்கள் ஊரை நாசமாக்கப் பாக்கிறியள்- அம்மட்டுந்தான். நாசமாக்கப் பாக்கிறியள்.
ந : அழுகி நாறிப் போன ஒரு ஒழுக்க நெறியின்ட அடிப்படையில ஒரு ஊரைக் கட்டியெழுப்பப் பாக்கிறியள். அந்த அழுகல்இ நாட்டையும் உலகத்தையும் தொற்றப் போகுது! நீங்கள் நல்லாயிருக்கஇ உண்மையுஞ் சுதந்திரமும் சாக வேணுமெண்டாஇ நான் மனசாரச் சொல்லக் கூடியதுஇ “அது அழிக்கப்படட்டும்! சனங்கள் அழியட்டும்!” (கீழிறங்குகிறார்.)
பிரசை 1 : (மேயரிடம்) அவனைக் கைது செய்யுங்கள்இ கைது செய்யுங்கள்.
பிரசை 2 : அவன் ஒரு துரோகி
(‘எதிரி’இ ‘துரோகி’இ ‘புரட்சிக்காரன்’ என்ற கூக்குரல்கள்)
த : (அமைதிக்காக மணியை ஒலித்து) நான் பின்வரும் தீர்மானத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இங்கு இன்றிரவு கூடியுள்ள கண்ணியமான நாட்டுப்பற்றுள்ள மக்கள் தமது ஊரையும்இ நாட்டையும் காக்கும் நோக்குடன் ஆம்பல் வயல் நீரூற்று மருத்துவ அதிகாரியான டொக்வுர் நல்லதம்பியை மக்களதும்இ சமூகத்தினதும் விரோதி என்று பிரகடனஞ் செய்கின்றனர்.
(அங்கீகரிக்கும் தொனியில் ஆரவாரம்)
பு : (எழுந்தபடி) இது மெய்யில்லை! அவர் இந்த ஊரை நேசிக்கிறார்!
ந : மூடர்களே! மூடர்களே!
(நல்லதம்பியும் குடும்பத்தினரும் ஒன்றாக எழுந்து வலது பக்கமாகஇ நெருக்கமாக ஒரு குழுவாக நிற்கின்றனர்.)
த : (கூச்சலுக்கும் மேலாகஇ உரத்தக் குரலில்) யாராவது இப் பிரேரணைக்கு மாறாக இருக்கிறார்களா? மாறாக யாராவது?
க : (கையை உயர்த்தி) நான் இருக்கிறேன்.
த : ஒன்று? (சுற்று முற்றும் பார்க்கிறார்.)
குடிகாரன்: (திரும்பி வந்தவன் தன் கையை உயர்த்தி) நானுந்தான்! ஒரு டொக்வுர் இல்லாமைச் சமாளிப்பியளோ? எவரேனும்... அறிவினம்....
த : வேறு யாராவது? இரண்டு பேர் நீங்கலாக முழுச் சபையும் டொக்வுர் சிவபாதம் நல்லதம்பியைச் சமூகவிரோதியென்று சம்பிரதாய பூர்வமாகப் பிரகடனம் செய்கிறது. எனவே எதிர்காலத்தில் இந்த ஊரின் சகல கண்ணியமான நாட்டுப் பற்றுள்ள பிரசைகளும் அவருடன் அந்த அடிப்படையிலேயே தமது தொடர்புகளை வைத்திருப்பார்கள். கூட்டம் இத்துடன் முடிவு பெறுகிறது.
(கூச்சல்இ கைதட்டல்இ சனங்கள் வெளியேறல்இ நல்லதம்பி கந்தசாமியிடம் போகிறார்.)
ந : கப்வுன் அமெரிக்கா போற உங்கடை கப்பலில எங்களுக்கு இடமிருக்குமோ?
க : எந்த நேரமும்!
ந : புவனம்? பவளம்?
(மூவரும் வாயிலை நோக்கி நகர்கின்றனர். ஆனால் ஒரு அபாயகரமான நிசப்தமான அரண் ஒன்று உருவாகி விட்டது.)
சூ 3 : டாக்குத்தன்இ சுறுக்கெனக் கப்பல்ல ஏறு!
பு : பின் கதவால போவமா?
க : இப்பிடி வாங்கோ.
ந : இ;ல்லை. பின் கதவு வேண்டாம். (கூட்டத்திடம்) நான் யாரையும் அணாப்பப் பாக்கேல்லை. சமூக விரோதி இன்னம் இந்த ஊரை விடேல்லை-இண்டைக்கும் இல்லை. எவரேன் அப்பிடி நினைச்சால்-
(பேச்சை மறித்துக் குழல் ஒலிக்கிறது. கூட்டம் வெறியுடன் கூக்குரலிடுகிறது. “எதிரி!” “துரோகி!”இ “ஆளைக்கடலில தள்ளு!” “வாடா கடலில தள்ளுவம்!” “எதிரி!” “எதிரி!” “எதிரி!” நிமிர்ந்தபடி நல்லதம்பி குடும்பத்தினர் கந்தசாமியுடன் வெளியேறுகின்றனர். கூட்டத்தில் ஒரு பகுதியினர் கூச்சலிட்டபடி தொடர்கின்றனர்)
(மேடையின் முற்புறத்தே ராசலிங்கமும் விநாயகமும் தயாநிதியும் துரைசாமியும் பார்த்தபடி நிற்கஇ மேடை “எதிரிஇ எதிரிஇ எதிரி!” என்ற கூக்குரலாற் குலுங்குகிறது.)
-திரை-
----------------------------------------------------------------------
அங்கம் 3
ஜநல்லதம்பியின் வீட்டு வரவேற்பறையில் மறு நாள். யன்னல்கள் உடைந்துள்ளன. மிகவும் ஒழுங்கீனமான நிலையில் அறை உள்ளது.ஸ
(திரை விலகஇ சாரத்துடனும்இ சட்டையுடனும் நல்லதம்பி வருகிறார். தரையிலிருந்து ஒரு கல்லை எடுத்து மேசை மீது வைக்கிறார்.)
ந : புவனம்! அவளின்ட பேரென்ன? அவளிட்ட இன்னம் இங்க கல்லுக் கொஞ்சம் பொறுக்கக் கிடக்கெண்டு சொல்லும்.
பு : (உள்ளிருந்து) அவள் இன்னங் கண்ணாடி பொறுக்கி முடியேல்லை. (இன்னுமொரு கல்லைக் கதிரையடியிலிருந்து எடுக்க நல்லதம்பி குனியும்போதுஇ மிஞ்சியுள்ள ஒரு யன்னல் கண்ணாடியூடு ஒரு கல் விழுகிறது. யன்னலுக்கு ஓடி எட்டிப்பார்க்கிறார். புவனம் ஓடி வருகிறார்.)
பு : (பயத்துடன்) உங்களுக்கு ஒண்டுமில்லையே?
ந : (வெளியே பார்த்து) சின்னப் பெடியன். பாரும் அவன் ஓடுறதை! (கல்லை எடுக்கிறார்.) விஷம் எப்பிடிப் பரவி விட்டுதெண்டுறன். சின்னப் பிள்ளையள் கூட -
பு : (யன்னலூடு வெளியே பார்த்து) அதே ஊர்தானெண்டு நம்ப ஏலாமலிருக்கு.
ந : (மேசையிலுள்ள கற்குவியலில் புதியதையும் வைத்து) இதையெல்லாம் புனித சின்னங்களாக வைச்சிருக்கப் போறன். அதுகளையும் என்ட உறுதியில சேர்க்கப் போறன். என்ட பிள்ளையள் வளர்ந்த பிறகு தங்கட வீடுகளில இதுகளை வைச்சு ஒவ்வொரு நாளும் பாக்க வேணும். அவளின்ட பேரென்ன? அவளேன் கண்ணாடி திருத்திற ஆளை இன்னங் கூப்பிடேல்லை.
பு : கூப்பிடப் போயிருக்கிறாள்.....
ந : ரெண்டு மணித்தியாலமாக் கூப்பிடுறாளோ?
ப : (தயக்கத்துடன்) ஆள் வரமாட்டுதாம்!
ந : (அசைவை நிறுத்தி) என்ன? கண்ணாடி திருத்திறவன் என்ட யன்னலைத் திருத்தப் பயப்பிடுறானோ?
பு : உங்களுக்கு விளங்கேல்லை- ஆக்களுக்குத் தங்களை மற்றவை அடையாளங் காட்டுறது பிடியாது. அவனுக்கும் அயல் அட்டை இருக்குத்தானே. (எதையோ கேட்டு) வாசல்ல ஆரதுஇ தங்கம்?
(வாசலுக்குப் போகிறார். நல்லதம்பி கற்களைப் பொறுக்குகிறார். புவனம் திரும்புகிறார்.)
பு : உங்களுக்கு ஒரு கடிதம்.
ந : (வாங்கித் திறந்து) இப்ப என்னவாம்?
பு : (தனது கற் பொறுக்கலைத் தொடர்ந்தபடி) எல்லாரும் என்ட தலையைத் தின்னக் காத்திருப்பினம். இனி நாங்கள் கடை கண்ணிக்குப் போனாப் போலத்தான் -
ந : புதினம் தெரியுமோ? எங்களை வீட்டால எழும்பட்டாம்.
பு : என்னவாம்?
ந : அவருக்கு மனமில்லையாம். எண்டாலும் ஊரைப் பகைக்க ஏலாததால....
பு : (பயந்து) நாங்கள் இண்டைக்குப் பெடியங்களைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பியிருக்கக் கூடாதோ தெரியேல்லை.
ந : சும்மா இப்பிடி நடுங்காதையும்.
பு : வீட்டுக்காறன் எவ்வளவு நல்ல மனுசன். அந்தாளே எங்களைப் போ எண்டாஇ ஊர் எங்களைக் கொண்டு போடக் காத்திருக்கும்.
ந : கொஞ்சம் அமைதியா இருக்க மாட்டீரோ? பேசாம. அமெரிக்காவுக்குப் போனா நடந்ததெல்லாம் கனவு மாதிரிப் போயிடும்.
பு : எனக்கு அமெரிக்காவுக்குப் போக விருப்பமில்லை. (அவரது சட்டையைப் பார்த்து) இதெப்ப கிழிஞ்சது?
ந : (கிழிசலைப் பார்த்து) நேற்றிரவா இருக்க வேணும்.
பு : உங்கட நல்ல சட்டை.
ந : இப்ப விளங்குது அவ்வளவுந்தான். உண்மைக்காகப் போராடப் போறவன் தன்ட நல்ல சட்டையைப் போட்டுக் கொண்டு போக்கூடாது. (புவனத்தைத் தேற்றுகிறார்.) நீர் யோசியாதையும் அதைத் தைச்செடுக்க உமக்கு ரெண்டு நிமிஷம் எடாது. கண்ணை வெட்ட முதல் நாங்கள் அமெரிக்காவில நிப்பம்.
பு : அங்க வித்தியாசமா இருக்குமெண்டு எப்பிடித் தெரியும்?
ந : உண்மையா எனக்குத் தெரியாது. எண்டாலும் அப்பிடி ஒரு நாட்டில மனங்கள் கொஞ்சம் விசாலமா இருக்குமெண்டு நினைக்கிறன். எண்டாலும் ஓடி ஒளிக்கக்இ கூட இடமேனும் இருக்கும்.
பு : அதைப்பற்றி இன்னங் கொஞ்சம் யோசிக்கிறியளோ? உலகத்தை அரை வட்டஞ் சுத்திப் போய்இ அங்கையும் இதே மாதிரி இடமெண்டு அறிய எனக்கு விருப்பமில்லை.
ந : புவனம்இ நேத்துப் பாத்த கூட்டத்தின்ட தோற்றத்தை நான் எண்டைக்கும் எப்பவும் மறப்பனெண்டு எண்ணேல்லை!
பு : அதைப் பற்றி யோசிக்காதையுங்கோ.
ந : சிலபேர் காட்டு மிருகக் கூட்டங்கள் மாதிரிப் பயங்கரமாப்இ பல்லுத் தெரிய நிண்டினம். ஆர் அவையின்ட தலைவர்மார்? தங்களைச் சீர்த்திருத்தவாதியளெண்டிறவை! புரட்சி கதைக்கிறவை! (புவனம் தளவாடங்களைச் சுற்று முற்றும் பார்க்கிறார்.) கூட்டம் ஒரு உறுமல் உறுமினாஇ எங்கட சீர்த்திருத்தவாதியள் எங்கை நிப்பினம்? இப்ப நான் றோட்டால நடந்து போனா அவை ஒருத்தரும் என்னை அறிஞ்சதாயுங் காட்டிக் கொள்ளாயினம்! நான் சொல்லுறதைக் கேக்கிறீரோ?
பு : அமெரிக்காவுக்குப் போனா இந்தத் தளவாடத்தையெல்லாம் என்ன செய்யிறதெண்டு யோசிச்சன்.
ந : நான் சொல்லிறதை ஒரு நாளுங் கவனிச்சுக் கேக்க மாட்டீர்இ என்ன?
பு : நானேன் கேக்க வேணும்? நீங்கள் சொல்லிறது சரியெண்டு எனக்குத் தெரியுந்தானே.
(பவளம் வருகிறாள்.)
பு : பவளம்! ஏன் பள்ளிக்குப் போகேல்லை?
ந : என்ன நடந்திட்டுது?
ப : (மிகுந்த உணர்ச்சியுடன் நல்லதம்பியை நோக்கிஇ ஆதரவாக) என்னை நிப்பாட்டிட்டினம்.
பு : இல்லை!
ப : ரெண்டு கிழமை நோட்டீஸ் தந்தினம். ஆனா எனக்கு அங்க நிக்கப் பிடிக்கேல்லை.
ந : மிஸிஸ் மகேஸ்வரன் உன்னை வேலையால நிப்பாட்டினவவோ?
பு : அவ இப்பிடிச் செய்வா எண்டு ஆரும் நினைச்சிருப்பினமோ?
ப : அவ பாவம். பொதுவா என்னோட நல்லா ஒத்துப் போவா. அவவுக்கும் வேற வழியில்லை.
ந : கண்ணாடி திருத்திறவன் யன்னலைத் தொடமாட்டானாம்இ வீட்டுக்காறன் தங்கவிட மாட்டானாம்.
ப : வீட்டுக்காறரோ!
ந : போகச் சொல்லிப் போட்டார். மகள்இ கடவுளறிய உலக நாகரிகம் ஒவ்வொன்டின்டையுஞ் சிதைவிலை பெரிசா ஒரு பலகையிலை இப்பிடி எழுதி வைக்க வேணும். “இவர்கள் துணியவில்லை!”
ப : அப்பாஇ அவவில பிழை சொல்ல ஏலாது. காலம அவ தனக்கு வந்த கடிதங்களைக் காட்டினா -
ந : ஆரிட்டையிருந்து?
ப : மொட்டைக் கடிதங்கள் தான்.
ந : இல்லாமல் என்ன! அநாமதேயக் கற்பனைக்காறர் பெரிய தேசபக்தர்மார். அவையட மன இருட்டை எல்லாம் ஊத்தைக் கடுதாசித் துண்டுகளில கிறுக்குவினம். அது ஒழுக்கம்இ நான் தான் துரோகி! கடிதங்களில என்ன சொல்லினம்?
ப : ஒண்டு ஆரோ தான் வெளியில சந்திச்ச ஒருவர் இங்க வாறவராம். அவரின் படி நான் சில விஷயங்களைப் பற்றிப் புரட்சிகரமா யோசிக்கிறானாம்.
ந : நல்ல கதை! ஆரோ கேட்டதைஇ ஆரோ கேட்டதைஇ எவளோ கேட்டதை எவனோ கேட்டதா....! புவனம் பெட்டியளை அடுக்கத் துவங்கும். எனக்கு மேல எல்லாம் பூச்சி பூரான் ஊருற மாதிரிக் கிடக்குது.
(கந்தசாமி வருகை)
க : ஹலோ!
ந : கப்;வுன்! உங்களைத்தான் நினைச்சுக் கொண்டிருந்தன்.
க : எல்லாரும் எப்பிடியிருக்கிறியள் எண்டு பாத்திட்டுப் போக நினைச்சன்.
பு : உங்களுக்கு நல்ல இரக்கமான குணம் கப்வுன். அந்தக் கூட்டத்துக்குள்ளையும் இரவு எங்களைக் கவனிச்சுக் கொண்டியள்.
ப : பத்திரமா வீட்டை போய்ச் சேந்தீங்களோ? அந்தக் கூட்டத்தோட உங்களை விட்டுட்டுப் போக யோசனையாத்தான் இருந்தது.
க : அதில என்ன! புயல் அடிக்கேக்க ஒண்டுதான் நினைவிருக்க வேணும். புயல் எப்பிடியும் ஓயும்.
ந : அது ஆளைக் கொல்லா விட்டால்.
க : இம்மாதிரி விரக்தியாக் கதைக்கக் கூடாது. டொக்வுர்.
ந : தெண்டிக்கிறன்இ தெண்டிக்கிறன். துரோகி எண்டு என்ட நெத்தியிலை முத்திரை குத்திக் கொண்டு றோட்டால நடக்கேக்க எனக்குள்ளை எப்படியிருக்கும் எண்டு என்னால உத்தரவாதந் தர ஏலாது.
பு : அதைப்பற்றி யோசியாதையுங்கோ.
க : ஒரு சொல்லில என்ன இருக்கு?
ந : ஒரு சொல்லால நெஞ்சில முள்ளு மாதிரிக் குத்திக் கொண்டு நிக்கேலும். அதாலை திராவகம் மாதிரித் துளைச்சுஇ அரிச்சு அவை விரும்பிற மாதிரி ஒருத்தனைச் சமூக விரோதி ஆக்கேலும்.
க : டொக்வுர்இ நீங்கள் உங்களுக்கு எப்பவேனும் அப்பிடி நடக்க விடக்கூடாது.
ந : சத்தியமாஇ எனக்குச் சீ எண்டு போச்சுது. வெய்யில் காலம் வரட்டும் தொற்றுநோய்ப் பீடை பரவட்டும்இ அப்ப அவைக்கு விளங்கும் ஆரைத் துரத்தினவையெண்டு. நீங்கள் எப்ப கப்பலேறுறியள்?
ப : அப்பாஇ போறதா முடிவு பண்ணிப் போட்டியளா?
க : அதைப்பற்றிக் கதைக்கத்தான் வந்தனான்.
ந : ஏன்? கப்பலுக்கு ஏதேன் நடந்திட்டதோ?
பு : (மகிழ்வுடன் நல்லதம்பியிடம் திரும்பி) பாத்தியளோ! நாங்கள் போகேலாது!
க : இல்லை கப்பல் போகுது. நான் அதில ஏற மாட்டன்.
ந : இல்லை!
ப : உங்களையும் நிப்பாட்டிப் போட்டினமோ? ஏனெண்டாஇ என்னைக் காலமைதான் நிப்பாட்டினம்.
பு : கப்வுன்இ நீங்கள் உங்கட வீட்டைத் தந்திருக்கக் கூடாது?
க : எனக்கு வேற கப்பல் கிடைக்கும். கப்பற் சொந்தக்காரர் வீரசிங்கம் மேயரின்ட கட்சி ஆள். ஒரே கட்சி எண்டாச் சில அலுவல்களில ஒரே மாதிரி நிக்க வேணும்.... ஏனெண்டாஇ வீரசிங்கம் ஒரு மரியாதையான மனுசன்.
ந : எல்லாரும் மரியாதையான மனுசர் தான்!
க : இல்லைஇ அவர் மற்றவை மாதிரி இல்லை.
ந : இருக்கத் தேவையில்லை. கட்சி எண்டிறது இறைச்சி அரைக்கிற மெஷின் மாதிரி. அது நல்ல தலை. நீண்ட தலைஇ உருண்ட தலைஇ விறைச்ச தலை எல்லாத்தையும் அரைச்சுத் தள்ளும். - வெளியால வாறதென்ன? இறைச்சித் தலை!
(நுழைவறையிற் கதவு தட்டல் கேட்கிறது- பவளம் கதவடிக்குப் போகிறாள்.)
பு : கண்ணாடி திருத்திறவையாக்கும்!
ந : கப்வுன்இ நினைச்சுப் பாருங்கோ! (யன்னலைக் காட்டி) காலமை முழுதும் வரமாட்டனெண்டவன.; (ராசலிங்கம் கையிற் தொப்பியுடன் வருகிறார். நிசப்தம்.)
ரா : வேலையாயிருந்தா......
க : உடைஞ்ச கண்ணாடியைப் பொறுக்கிறன். வாங்கோ. இந்த அருமையான பகல் நேரம் உங்களுக்கு என்ன செய்யலாம். (ஷேட்டை நேராக்கிக் கழுத்தடியில் கொலரை இணைத்து அபிநயித்து நிற்கிறார்.)
பு : கப்வுன் உள்ளுக்கு வாங்களன்.
க : ஓம் டொக்வுர். நான் உங்களோட கதைச்சு முடியேல்ல.
ந : ஒரு நிமிஷத்தில வந்திடுவன். கப்வு;ன் (புவனத்தையும் பவளத்தையும் தொடர்ந்து கந்தாமி சாப்பாட்டு அறைக்குப் போகிறார். ராசலிங்கம் எதுவும் பேசாமல் சேதத்தைப் பார்வையிடுகிறார்.)
ந : வேணுமெண்டாத் தொப்பியைப் போடுங்கோ. இண்டு கொஞ்சங் குளிர் காத்தா இருக்குது.
ரா : தகூ ங்க்ஸ். போடத்தான் போறன.; (அணிகிறார்.) எனக்குத் தடிமன் பிடிச்சிட்டுது. அந்த வீட்டுக்குள்ள கொஞ்சங் குளிர் கூட.
ந : நான் நினைச்சன்இ கொஞ்சம் வெக்கையா - உண்மையில புழுக்கமா இருந்ததெண்டு. உங்களுக்கு என்ன வேணும்?
ரா : நான் இருக்கலாமோ? (யன்னலருகே ஒரு கதிரையைக் காட்டுகிறார்).
ந : அங்க வேணாம். உறுதியான பெரும்பான்மை சிலவேளை உங்கட மண்டையைப் பிளந்து போடும். இங்க இருங்கோ.
(இருவரும் ஸோகுhவில் அமர்கின்றனர். ராசலிங்கம் ஒரு நீண்ட உறையை எடுக்கிறார்.)
ந : மெய்யாத்தான்?
ரா : ஓம்! (உறையை நல்லதம்பியிடம் நீட்டுகிறார்.)
ந : என்னை விலக்கியாச்சு!
ரா : நிர்வாக சபை காலமை கூடினது. பொதுசன அபிப்பிராயத்தை யோசிக்கேக்க வேறை வழி இருக்கேல்ல.
ந : (சிறிது தாமதித்து) பயந்தாப் போல இருக்கிறியள்.
ரா : நான்.... நான். நீ என்ட தம்பியெண்டதை முற்றா மறந்து போகேல்லை.
ந : எனக்கெண்டா ஐமிச்சம்.
ரா : உனக்கு இந்த ஊரிலை இனித் தொழில் இல்லை.
ந : சனங்களுக்கு எப்பவும் டொக்வுர்மார் தேவை.
ரா : வீடு வீடா ஒரு பெட்டிசம் போகுது. எல்லாரும் கையெழுத்துப் போடுகினம். இனி ஒரு நாளும் உன்னைக் கூப்பிடுறேல்ல எண்டு சத்தியம் வாங்குகினம். ஒரு குடும்பமும் மறுக்கத் துணியாது.
ந : நீங்கள் தான் துவக்கி விட்டனியளாக்கும்?
ரா : இல்லை. உண்மையா நானில்லை. விஷயம் கன தூரம் போயிட்;டுது. நான் ஒரு நாளும் உன்னைப் பாழாக்க விரும்பேல்லை. இது உன்னைப் பாழாக்கப் போகுது.
ந : மாட்டுது.
ரா : உன்ட சீவியத்தில ஒரு முறைக்கு நீ பொறுப்போட நடக்கப் போறியா?
ந : ஏன் சொல்லத் தயங்குகிறியள் அண்ணா? நான் ஊருக்கு வெளியால போய் நீரூற்;றைப் பற்றி எழுதிப் பிரசுரிப்பனெண்டு பயப்பிடுறியள். என்ன?
ரா : அதை நான் மறுக்கேல்லை. தம்பிஇ உனக்கு ஊரின்ட நன்மையில அக்கறையெண்டாஇ அதை உனக்கும் தீங்கில்லாமல் மற்றவைக்குந் தீங்கில்லாமல் செய்ய வழி இருக்கு.
ந : இப்ப என்ன சொல்லிறியள்?
ரா : ஊருக்கு நன்மை செய்ய வேணும் எண்ட உற்சாகம் மிஞ்சிப் போய்ப் பிரச்சினையைக் கொஞ்சங் கூட்டிச் சொல்லிப் போட்டாயெண்டு ஒரு அறிக்கை எழுதிக் கையெழுத்துப் போட்டுத்தா. தண்ணியைப் பற்றிக் கவலைப்படுறவையைக் கொஞ்சம் ஆறப்பண்ணத் தக்கினதா உனக்கு விருப்பமான மாதிரி எப்பிடியேன் எழுது. அதை என்ட கையில தந்த கையோட உன்ட வேலையும் வந்திடும். நீ சொல்லிற திருத்தங்களை எல்லாம் படிப்படியா நாங்கள் செய்வம் எண்டு நான் வாக்குறுதி தாறன். அப்ப உனக்கு வேண்டியது இம்மட்டுந்தானே....
ந : அண்ணாஇ கொஞ்சம் பதட்டப்படுறியள்.
ரா : (பதட்டமாக) நான் பதட்டப்படேல்லை!
ந : மனிசருக்கு நஞ்சு குடுக்கேக்க நான் பொறுப்பில இருப்பனெண்டு நம்பிறியளோ? (எழுகிறார்.)
ரா : நாட் போக்கில உன்ட திருத்தங்களைச் செய்யேலுந்தானே?
ந : எப்ப? அஞ்சு வருஷம் பத்து வருஷமோ? அண்ணா உங்கடை பிரச்சினை என்னெண்டா உங்களுக்கு ஒரு அலுவலும் விளங்கேல்லை. - இன்னமுந்தான் - உங்களால வாங்கேலாத சிலபேர் இருக்கினம்.
ரா : எனக்கு அதை விளங்கேலும். ஆனா அப்பிடி ஆக்களிலை நீ ஒருத்தனில்;லை!
ந : (சிறிது தாமதித்து) அதுக்கு என்ன கருத்து?
ரா : உனக்கு நல்லாத் தெரியும் என்ன சொல்லிறனெண்டு. ஐயாத்துரையைத் தான் சொன்னன்.
ந : மாமாவோ?
ரா : உன்ட மாமனார் ஐயாத்துரையாரே தான்!
ந : சத்தியமா அண்ணாஇ எங்களில ஒருத்தருக்கு விசரா இருக்க வேணும்! என்ன சொல்லிறியள்?
ரா : இந்த ஒரு பாவமுமறியாத பாவனையைக் காட்டி நீ என்னை அணாப்பேலாது.
ந : என்ன கதைக்கிறியள்?
ரா : உன்ட மாமனார் காலமை முழுதும் ஓடியாடித் திரிஞ்சு ஆம்பல் வயல் நீரூற்றில பங்குகள் வாங்கினாரெண்டு உனக்குத் தெரியாதெண்டிறியோ?
ந : (விளங்காமல்) பங்குகளா?
ரா : தன்ட கையில அகப்படக்கூடிய ஒரு பங்கு விடாம வாங்கிப் போட்டார்.
ந : எனக்கு இன்னமும் விளங்கேல்லை. அதுக்கும் எனக்கும் -
ரா : (கிளர்ச்சியுற்றுச் சுற்றி நடந்தவாறு) கதை விடாதஇ சும்மா கதை விடாத!
ந : இதெண்டா எனக்குக் கொதியைத்தான் கிளப்புது. சும்மா சுத்திச் சுத்திக்இ கதை விடாதஇ கதை விடாத எண்டு உளம்பாதையுங்கோ. என்ன சொல்ல வெளிக்கிடுறியள்?
ரா : அப்பிடி மொக்கனுக்கு விளையாடுறியெண்டாக் கேள்இ சொல்லிறன். ஒரு கூட்டுத்தாபனத்தில ஒருத்தனுக்கு நம்பிக்கை இல்லை எண்டு அதுக்கு மாறாப் பிரசாரஞ் செய்யிறான். காணாதெண்டு அதுக்கெதிரா ஒரு கூட்டமும் கூட்டுறான். அதுக்கடுத்த நாள் அவன்ட மாமன் ஊரில உள்ளவையின்ட பங்குகளை அரைவாசி விலைக்கு வாங்குறான்.
ந : (விஷயத்தை விளங்கிக் கொண்டு வேறு புறம் திரும்பி) கடவுளே! சுவாமி!
ரா : அதுக்குள்ளஇ கொள்கை கதைக்கிறதுக்கு உன்ட துணிவு.
ந : நீங்கள்இ உண்மையா நான்....
ரா : எனக்கு மனோதத்துவத்தில அக்கறையில்லை! நான் காணுறதை நம்பிறவன்! நான் காணுறதெல்லாம் ஐயாத்துரைக்காக எளிய கிலிசை கெட்ட வேலைகளைச் செய்யிற ஒரு ஆளைத் தான். ஒண்டு மட்டுஞ் சொல்லிறன். இண்டு ராவுக்கு முதல் ஊரில எல்லாருக்கும் அப்பிடித்தான் தெரியும்.
ந : அண்ணா நீங்கள்இ நீங்கள்.....
ரா : உன்ட மேசைக்குப் போய் நான் சொன்ன மாதிரி நீ சொன்ன எல்லாத்தையும் மறுத்து ஒரு அறிக்கையை எழுதுஇ இல்லாட்டி...
ந : ஒரு கேவலமான பிறவி!
ரா : அப்பிடியெண்டாச் சரிஇ ஒண்டை மட்டும் விளங்கிக் கொள்ளு. நீ எங்கேன் போய் வெளியிலையிருந்து ஊரைத் தாக்க யோசிச்சியேர் இதை மறவாத. அது வெளிவாற அந்த நாளே நான் உனக்கு எதிரா விறாந்து அனுப்பிச் சதி வேலை செய்ததுக்கு வழக்குப் போடுவன். உன்னை மரியாதையான ஆளாக்க இவ்வளவு காலமுந் தெண்டிச்சுப் பாத்தன். நீ பாய்ஞ்சு விழப் போறியெண்டா ஆரும் மறிக்க மாட்டினம்;. இப்ப எங்களுக்கு ஆளையாள் விளங்குதோ?
ந : நல்லா விளங்குது! (ராசலிங்கம் வாசலுக்குப் போகிறார்.) பெட்டையைக் கூப்பிடு. அவளின்ட பேரென்ன? - நிலம்இ சிவர் எல்லாத்தையுங் கழுவச் சொல்லு. ஒரு பீடை இங்கை வந்து இருந்தது.
(ஐயாத்துரை வருகிறார். ராசலிங்கம் அவருடன் மோதாத குறை. நல்லதம்பியை நோக்கித் திரும்புகிறார்.)
ரா : (ஐயாத்துரையைச் சுட்டி) ஆ! (திரும்பி வெளியேறுகிறார்.)
(ஐயாத்துரை மெல்ல ஒரு பாடலை முணுமுணுத்தபடி கதிரைக்குப் போகிறார்.)
ந : மாமா என்ன செய்தீங்கள்? உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கு? இதால என்ட நிலமை என்னவெண்டு விளங்குதோ?
(ஐயாத்துரை தனது சட்டைப் பையிலிருந்து சில காகிதங்களை எடுக்கிறார். நல்லதம்பி அதைக் கண்டு அதிர்கிறார். ஐயாத்துரை அவற்றை மேசை மீது வைக்கிறார்.)
ந : இது - அதுகளா?
ஐ : அதுகளே தான். நீரூற்றில பங்குகள். இண்டு காலமை வலுஞ் சுகமா வாங்கிப் போட்டன்.
ந : மாமா என்னோட விளையாடாதையுங்கோ- இதெல்லாமென்ன?
ஐ : என்ன பதட்டப்படுறீர்? ஒரு மனிசனுக்கு பங்குகள் வாங்க ஆரேன்...?
ந : மாமா எனக்கு இதுக்கு விளக்கந் தேவை!
ஐ : நல்லதம்பி. அவை நேற்று உம்மோட கோவப்பட்டினம் -
ந : அதை நீங்கள் சொல்லித் தான் தெரிய வேணுமே?
ஐ : எண்டாலும் நீர் சொன்னதையும் நம்புகினம். உம்மைச் சாக்காட்ட விரும்பினம் எண்டாலும் உம்மை நம்புகினம். (சிறிது தாமதம்.) அவைக்கு விளங்கின மட்டில ஆம்பல் மடுவில இருந்து வாற ஓடை வழியதான் அசுத்தம் வருகுது.
ந : அப்பிடித்தான் வருகுது.
ஐ : ஒ. அங்க தான் என்ட தோல் பதனிடுகிற ஆலை இருக்கு.
(சிறிது தாமதம். நல்லதம்பி மெல்ல அமருகிறார்).
ந : மாமா அங்கையிருந்துதான் அசுத்தம் வருதெண்டதில என்னளவில ஒரு இரகசியமும் இல்லையே.
ஐ : நான் உம்மைப் பிழை சொன்னனானோ? அது என்ட பிழைதான். நான் ஆலையைப் பற்றி கனக்கக் கவனிக்கேல்லை. இப்ப விஷயம் முத்திப் போச்சுது. நல்லதம்பிஇ அது என்ட அப்புவிட்ட இருந்து எனக்கு வந்தது. அவருக்கு என்ட பாட்டன் குடுத்தவர். அவருக்கு அவற்ற பூட்டன் குடுத்தவர். மூண்டு பரம்பரையாத் தண்ணியில நஞ்சு கலந்தவை எண்ட பழியை விட்டு வைக்க நான் விரும்பேல்ல.
ந : நானுங் கனகாலமா உங்களிட்ட இந்தக் கதையைக் கேக்கத்தான் விருப்பப்பட்டனான். ஆனாலும் அப்பிடி நடக்கிறதை உங்களால மறிக்கேலாது.
ஐ : என்னால ஏலாது. எண்டாலும் உம்மால ஏலும்.
ந : நானோ?
ஐ : (பங்குகளைத் தள்ளியபடி) நான் இதுகளை ஏன் வாங்கினனெண்டா -
ந : மாமாஇ காசைக் கரியாக்கிப் போட்டியள். நீரூற்று இனி முடிஞ்சுது.
ஐ : நான் என்ட காசை ஒரு நாளுங் கரியாக்கேல்ல. இதுகள் உம்மட காசில வாங்கினது.
ந : என்ட காசா? என்ன?
ஐ : நீர் ஒருவேளை எண்ணியிருந்திருப்பீர். நான் புவனத்துக்கும் பிள்ளையளுக்கும் ஏதேன் விட்டு வைப்பனெண்டு?
ந : ஓ! நினைச்சனான்இ சிலவேளை நீங்கள்....
ஐ : (பங்குகளைத் தொட்டு) இண்டைக்குக் காலமை அந்தக் காசில பங்கு கொஞ்சம் வாங்க நினைச்சன்.
ந : (மெல்ல எழுந்தவாறு). புவனத்தின்ட காசில அந்தக் குப்பையை வாங்கினீங்கள்!
ஐ : ஆக்கள் என்னை ஒரு பெருச்சாளி எண்டிறவை. அது தனக்கெண்டு சேர்த்து வைக்கிற ஒரு மிருகம். ஆனா அது பண்டி மாதிரியுந்தான். நான் சுத்தமான ஆளாச் சீவிச்சனான். சுத்தமான ஆளாகவே சாகவும் விரும்பிறன். நீர் என்ட பேரைச் சுத்தமாக்கப் போறீர்....
ந : மாமா.....
ஐ : நான் இப்ப நீர் ஒரு விசரனோ எண்டு பாக்கப் போறன்.
ந : நீங்கள் எப்பிடி இந்த மாதிரிச் செய்யலாம்? உங்களுக்கு என்ன பிடிச்சிருக்குது?
ஐ : சும்மா அவதிப்படாதையும். வலுஞ் சுகமான வேலை. நீர் தண்ணீரைப் பற்றி இன்னொரு பரிசோதனை செய்தால் -
ந : எனக்கு இண்னொண்டு தேவையில்லை. நான் -
ஐ : கொஞ்சம் யோசிச்சுப் பார்த்து தண்ணியைப் பற்றி உம்மட முடிவை மாத்துறதோ இல்லையோ எண்டு -
ந : தண்ணி நஞ்சாப் போச்செண்டா நஞ்சாப் போச்சுது தான்!
ஐ : நீர் விடாப் பிடியாத் தண்ணி நஞ்சாப் போயிட்டுதெண்டு சொல்லிக்கொண்டிருக்கிறீர் - (பங்குப் பத்திரங்களைக் கையிற் தூக்கியபடி) இதுகளை உம்மடை வீட்டிலை வைச்சுக் கொண்டு நீர் அப்பிடிக் கதைக்கில் - உமக்கு முழுவிசராத்தான் இருக்க வேணும். (பங்குப் பத்திரங்களை மீண்டும் மேசையில் வைக்கிறார்.)
ந : நீங்கள் சொல்லுறது சரி! எனக்கு விசர்! எனக்குப் பைத்தியம்!
ஐ : (மேலும் உத்வேகத்துடன்) நீர் உம்மட குடும்பத்தைக் காயப் போடப் பாக்கிறீர்! ஒரு விசரன் தான் அப்பிடிச் செய்வான்.
ந : மாமாஇ மாமா. என்னட்டச் சதக் காசில்லை! இந்தக் குப்பையை வாங்க முன்னம் ஏன் என்னட்டச் சொல்லேல்ல?
ஐ : வாங்கிப் போட்டுச் சொன்னாத்தான் உமக்கு விளங்கும். (நல்லதம்பியை நெருங்கி அவரது சட்டைக் கொலரை இறுகப் பற்றிக் கண்கள் தொடர்ந்தும் மின்ன) கறுமம்! இப்பவேணும் விளங்கியிருக்குமெண்டு நினைச்சன். விளங்கேல்லையோ! கோடி கலன் கணக்கிலை தண்ணி ஓடை வழிய வருகுது. நீர் தண்ணியில ஏதோ பிழையெண்டு எப்ப சோதிச்சுக் கண்டு பிடிச்சீரெண்டு உம்மால நிச்சயமாச் சொல்லேலுமா?
ந : ஓம். (அவரைப் பார்க்காமல்) ஓம்இ ஆனாலும்....
ஐ : உமக்கு எப்பிடி நிச்சயமா இருக்கேலும்? சில வேளை இந்தப் பூச்சியள் தண்ணியில ஒரு பகுதியில குவிஞ்சிருக்கலாம். மிச்சத் தண்ணி சுத்தமில்லை எண்டு உமக்கு எப்பிடிச் சொல்லேலும்?
ந : அப்பிடி இருக்க வாய்ப்பில்லை. போன வெய்யிற் காலத்தில இங்கை வந்த ஆக்கள்....
ஐ : அவை வரேக்கையே வருத்தத்தோடையல்லோ வந்தவை. இல்லாட்டி வந்திருப்பினையோ?
ந : (எழுந்து நடந்தபடி) வயிற்றோட்டமும்இ சிரங்கும் இருக்கேல்லை.
ஐ : (அவரைத் தொடர்ந்து) ஆக இங்க மட்டுமே மனிசருக்கு வயித்துக் குத்து வாறது? நாட்டில வேற ஊர்வழிய நோய் நொடி வாறேல்லையோ? சிலவேளை சாப்பாட்டில ஏதேன் பிழையா இருக்கலாம். சாப்பாட்டைப் பற்றி நினைச்சுப் பாத்தீரோ?
ந : (அவருடன் உடன்படும் விருப்புடன்) நான் சாப்பாட்டைச் சோதிக்கேல்லத்தான்....
ஐ : அப்ப தண்ணி தான் எண்டு எப்பிடி உமக்கு நிச்சயம்?
ந : நான் தண்ணியைச் சோதிச்சனான் -
ஐ : (அவரைப் பிடித்துக் கொண்டு) உண்மையை ஒத்துக் கொள்ளும்! நாங்கள் தனியாத்தான் இருக்கிறம். உமக்குங் கொஞ்சம் ஐமிச்சம் இருக்குது தானே?
ந : ம்இ எல்லாத்துக்கும் ஒரு....
ஐ : அப்ப உம்மட கண்டுபிடிப்பில கொஞ்சங் கற்பனை எண்டுறீர்.
ந : ம்இ உலகத்தில நூறு வீதம் எண்டு சொல்லக் கூடியது ஒண்டுமில்லை. எண்டாலும் -
ஐ : அப்ப உமக்கு மற்ற மாதிரி யோசிக்கவும் இடமிருக்குத்தானேஇ நீர் ஓர் விஞ்ஞானி எண்ட முறையில! அதோட ஏதேன் பூச்சி மருந்து போடுறதைப் பற்றி ஏன் நீர் யோசிக்கேல்லை? என்ன பந்தயமும் பிடிப்பன். அதைப் பற்றி நீர் யோசிக்கேல்லை.
ந : அந்தளவு தண்ணியையுமா? ஏலாத காரியம்....
ஐ : எல்லாத்தையுமே சாகக் கொல்லலாம்! அதுதான் விஞ்ஞானம்! நல்லதம்பிஇ எனக்கும் உம்மட அண்ணரைப் பிடியாது. நீரும் அவரை வெறுக்கிறதில பிழையில்லை.
ந : அண்ணாவோட கோவிச்சுக் கொண்டு நான் அதைச் செய்யேல்லை.
ஐ : கொஞ்சம் அப்பிடிக்இ கொஞ்சம் இப்பிடி. இல்லையெண்டாதையும்! தண்ணியைப் பற்றி ஐமிச்சத்துக்கு இடமிருக்கெண்டு. அதுக்குப் பூச்சி மருந்து போடலாமெண்டு நீரே ஒப்புக்கொள்ளுகிறீர். பிறகு எல்லாமே நிச்சயம் எண்ட மாதிரி அண்ணரோட கொழுவுறீர். ஏதோ முழு நிலையத்தையும் இடிச்சுத் தள்ளாம வேற வழியில்லை எண்ட மாதிரி! இதிலை கறுப்பிக்குது. இல்லை என்னாதையும். (பங்குப் பத்திரங்களைச் சுட்டி) இதெல்லாம் உமக்குச் சொந்தமாகலாம் எண்டபடியா நிச்சயமா இரும். மனதில இருக்கிற வெறுப்பை ஒழிச்சுப் போட்டு உம்மையே நீர் கேளும் - நிச்சயமாச் சொல்லுறீரா?
ந : என்ட நம்பிக்கையின்ட வலிமையை வைச்சு என்ட குடும்பத்தின்ட எதிர்காலத்தைப் பணயம் வைக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்குது?
ஐ : ஓ! அப்ப உம்மட நம்பிக்கையள் அவ்வளவு பெலமானதில்லைப் போல?
ந : நான் என்ட நம்பிக்கையளுக்காகத் தூக்கிலையுந் தொங்க ஆயத்தம்! மற்றவையைப் பலி குடுக்க ஒரு மனிசருக்கும் உரிமை இல்லை. என்;ட குடும்பம் பாவமறியாது. பங்குகளை வித்துப் போட்டு அவவுக்குரிய காசைக் குடுங்கோ. நான் கையில சதக் காசில்லாதனான்!
ஐ : ஐயாத்துரை இந்த ஊரைக் கெடுத்தானெண்டு ஆரேன் சொல்ல நான் விடன். (பங்குப் பாத்திரங்களைச் சேகரித்தபடி) நீர் உம்மட நம்பிக்கையைக் கைவிடும். இல்லாட்டி இவ்வளவும் தருமத்துக்கு போகுது.
ந : முழுதுமோ?
ஐ : புவனத்துக்குக் கொஞ்சம் ஏதேன் விடுவன். கனக்க இல்லை. எனக்கு நல்ல பேர் வேணும். அது எனக்குப் பெரிசு.
ந : (கசப்புடன்) அப்ப தருமம்.....
ஐ : தருமம் அதைத் தேடித்தரும். இல்லாட்டிஇ நீர் தேடித் தாரும். ஒரு ஊரை அழிக்கிறது பொல்லாத அலுவல்.
ந : மாமா எனக்கு உங்களைப் பாக்கப் பாரதத்தில வாற சகுனியைத் தான் நினைவு வருகுது!
(கதவு திறக்கிறது. அங்கு யாரென்று நாம் காணு முன்பே...)
ந : நீங்கள்!
(தயாநிதி கையைச் சரணாகதி பாவணையில் உயர்த்தியவாறு வருகிறார்)
த : வீணாப் பதட்டப்படாதையும்! தயவு செய்து!
(துரைசாமி வருகிறார். அவரும் தயாநிதியும் ஐயாத்துரையைக் கண்டதும்இ ஒரு கணம் தரித்து முறுவலிக்கின்றனர்.)
ஐ : புத்திமான்கள் மெத்திப் போயிட்டினம். நான் வெளிக்கிடுறன்.
த : (மன்னிப்புக் கோரும் தோரணையில்) டொக்வுர்இ ஒரு அஞ்சு நிமிஷம் தாறியளோ!
ந : உங்களோட எனக்குக் கதை இல்லை.
ஐ : (வாசலுக்குப் போனபடி) எனக்கு உடன மறுமொழி வேணும். கேட்டுதோ? நான் காத்திருப்பன். (போகிறார்.)
ந : சரிஇ கெதியாச் சொல்லலாம். என்ன வேணும்?
து : கூட்டத்தில நாங்கள் நடந்த மாதிரியை நீங்கள் மன்னிக்கப் போறியள் எண்டு நாங்கள் நினைக்கேலாது தான்இ எண்டாலும்....
ந : (வார்த்தைகட்குத் தடுமாறி) உங்கட நடத்தைஇ நாசத்தனம்.... நீசத்தனம்.... வேசைத் தனம்!
து : சரிஇ என்ன வேணுமெண்டாலுஞ் சொல்லுங்களன் -
ந : என்ட மனதில பலதும் இருக்கு. விஷயத்துக்கு வரலாம். என்ன வேணும்?
த : உங்கட அடி மனத்தில என்ன இருந்ததெண்டு முன்னமே ஏன் சொல்லேல்லை. அப்ப தினப் புதினம் முழுத்தூரமும் உங்களோட வந்திருக்கும்.
து : இப்ப பொதுசன அபிப்பிராயம் உங்களோட நிக்குது. நீங்கள் ஏன் எங்களிட்டச் சொல்லேல்லை?
ந : இஞ்சஇ எனக்குக் களைப்பாயிருக்கு. சும்மா சுத்தி வளைக்க வேண்டாம்!
து : (ஐயாத்துரை போன வழியைச் சுட்டி) அவர் ஊர் முழுதும் அலைஞ்சு நீரூற்றில பங்குகளை வாங்கினவர். அது இப்ப பரகசியம்.
ந : (சிறிது தாமதித்து) ஓஇ அதுக்கென்ன?
து : (சினேகமான தோரணையில்) என்னை விளக்கமாச் சொல்லச் சொல்லிறியளா?
ந : சொல்லுவியள் எண்டுதான் பாக்கிறன். நான் -
து : சரி எல்லாத்தையும் அவிட்டு வைக்கிறன். (தயாநிதியிடம்) நீங்கள் சொல்ல...
த : சேஇ நீர் சொல்லும்.
து : டொக்;வுர்இ முதலில நாங்கள் உங்களை ஆதரிச்சனாங்கள். எண்டாலுஞ் சனங்கள் வெறியோட இருக்கேக்க தொடர்ந்தும் உங்களை ஆதரிச்சமெண்டா -
ந : உங்கட பேப்பர் தானே வெறியைக் கிளப்பி விட்டது?
து : ஒரு நேரத்தில ஒரு விஷயத்தைக் கதைப்பமா? (மெதுவாகஇ நல்லதம்பியின் மூளையில் ஏறும் விதமாக) சுத்தி வளைக்காமைச் சொன்னாஇ உங்களை ஆதரிச்சால் பேப்பர் விற்பனை குறையும். அதால வாற நட்டத்தை எங்களால பொறுக்க ஏலாது. அதால தான் நாங்கள் உங்களை ஆதரிக்க ஏலாமப் போனது. உங்களை ஆக்கள் பகிஷ்கரிக்கினம். உங்களோட நிண்டிருந்தா பேப்பருக்கும் அதுதான் நடந்திருக்கும்.
த : டொக்வுர்இ உங்களுக்கு இது விளங்குந்தானே!
ந : ஓமோம். ஆனாஇ இப்ப உங்களுக்கு என்ன தேவை?
து : புதினம் மட்டுங் கடுமையாப் பிரசாரஞ் செய்தா ரெண்டு மாதத்தில இந்த ஊர் உங்களை ஒரு மாவீரரெண்டு கொண்டாடும்.
த : நாங்கள் அதுக்கு ஆயத்தம்.
து : நிர்வாகம் பொதுச் சுகாதாரத்துக்குத் தேவையான திருத்தங்களைச் செய்ய மாட்டினம் எண்டு தான் நீங்கள் பங்குகளை வாங்கினியள் எண்டு நாங்கள் சனங்களுக்கு ஒப்புவிப்பம். நீங்கள் செய்ததெல்லாம் விஞ்ஞான ரீதியான பொது நன்மைக்கான காரியங்களெண்டு காட்டுவம். டொக்வுர்இ என்ன சொல்லிறியள்?
ந : உங்களுக்கு என்னட்டைக் காசு தேவைப்படுகுதுஇ என்ன?
த : இங்கஇ டொக்வுர்....
து : (தயாநிதியிடம்) சுத்தி வளைக்காதையுங்கோ. (நல்லதம்பியிடம்) உங்கள ஆதரிக்கத் துவங்கிறதெண்டா டொக்வுர்இ கொஞ்ச நாளைக்கு விற்பனை விழும். அம்மட்டும் நீங்கள் - உண்மையில உங்கட மாமனார் - நட்டத்தைப் பொறுக்க வேணும். (விரைவாக) இப்ப எல்லாம் வெளியில அவிட்டு வைச்சிட்டம். எனக்கு இதில ஒரு பிழையுந் தெரியேல்லை. நீங்கள் என்ன சொல்லிறியள்?
(சிறு தாமதம். நல்லதம்பி அவரைப் பார்க்கிறார். பின்னர் ஆழ்ந்த யோசனையில் திரும்பி யன்னலுக்கு நடக்கிறார்.)
த : டொக்வுர்இ மறந்து போகாதையுங்கோ. உங்களுக்குப் பேப்பர் தேவை. வலும் அந்தரமாத் தேவை.
ந : (மீண்டு வந்தபடி) அதில ஒரு பிழையுமே இல்லை. எனக்கு - எனக்கு என்ட நல்ல பேரைக் காப்பாத்திறதைப் பற்றி ஒரு தயக்கமுமில்லை - என்னளவில எண்டைக்கும் எனக்கு நல்லபேர் தான். ஆனாலும் வெறுக்கப் படுறதைப் பற்றி எனக்கொரு சந்தோஷமும் இ;ல்லை. நான் சொல்லுறது விளங்குதோ?
த : மெய்தான்.
து : வரவு சிலவுக் கணக்கை டொக்வுரிட்டைக் காட்டுறியளா....
(தயாநிதி சட்டைப் பைக்குள் இருந்து எடுக்கிறார்.)
ந : கொஞ்சம் பொறுங்கோ. ஒரு விஷயம். திரும்பத் திரும்ப ஒரே கதையைக் கதைக்க எனக்கு விருப்பமில்லை. தண்ணி எண்டா நஞ்சாப் போயிட்டுது.
து : டொக்வுர்இ இது...
ந : கொஞ்சம் பொறுங்கோ. மேயர் சொல்லிறார். என்னை ஆதரிக்கிற அதே நேரம் நீங்கள் வரியையும் ஆதரிக்கிறியளெண்டு நம்பிறன்.
த : வரிக்கெண்டாக் கடுமையான எதிர்ப்பிருக்கும்.
து : டொக்வுர்இ குளியலறைக்கு நீங்கள் பொறுப்பாயிருந்தாஇ எனக்குப்இ பிழை ஏதேன் வருமெண்ட பயமில்லை.
ந : நீங்கள் என்ன சொல்லிறியளெண்டாஇ நீங்கள் என்ட நல்ல பேரைக் காப்பாத்த நான் கள்ள வேலைக்குப் பொறுப்பாயிருக்க வேணும்.
து : எல்லாத்தையும் ஒரு நேரத்தில செய்யேலுமோஇ டொக்வுர். புதுசா ஒரு வரியெண்டா - பெரிய குழப்பம் கிளம்பும்.
ந : அப்பஇ தண்ணியைப் பற்றி எதுவுஞ் செய்யிற யோசினை இல்லை.
து : டொக்வுர்இ ஒருத்தருக்கும் நோய் நொடி வராம நீங்கள் பாத்துக் கொள்ளுவியள் எண்டு நாங்கள் நம்பிறம்.
ந : அப்பிடியெண்டாஇ நீங்கள் உங்கட அச்சுச் சிலவைக் குடுக்க வெருட்டிக் காசு பறிக்க ஆள் தேடுறியள்.
து : (வளைந்து கொடுக்காமல்) நாங்கள் உங்கட நல்ல பேரை மீட்கப் பாக்கிறம் டொக்வுர். நீங்கள் மாட்டனெண்டாஇ இதுதான் உங்கட எண்ணமெண்டா.....
ந : ஓ? சொல்லுங்கோ. என்ன செய்வியள்?
து : (தயாநிதியிடம்) வெளிக்கிடுவமெண்டு நினைக்கிறன்.
ந : (அவர்கள் வழியிற் குறுக்கிட்டு) என்ன செய்வியள் எண்டதைச் சொல்லிப் போட்டுப் போங்களன். ரெண்டு நிமிஷத்துக்கு முதல் நீங்கள் மாவீரனாக்கப் போன ஆளெல்லோ நான். நான் காசு தராவிட்டால் என்ன செய்வியள்?
த : டொக்வுர்இ சனம் வெறிபிடியாத குறையா இருக்குது....
ந : என்ட முகத்துக்கு நேர சொல்லுங்கோஇ என்ன செய்யப் போறியள் எண்டு!
து : ஒரு கூட்டுத்தாபனத்தை அழிக்கச் சதி செய்தியளெண்டு மேயர் வழக்குப் போடுவார். உங்களை ஆதரிக்க ஒரு பேப்பர் இல்லாம நீங்கள் சிறைக்குப் போவியள்.
ந: நீங்கள் அவரை ஆதரிப்பியள். இல்லையா? வாயைத் திறந்து சொல்லலாமேஇ துரைசாமி. (துரைசாமி வாயிலுக்குப் போக முனைகிறார். நல்லதம்பி வழியில் வந்து நிற்கிறார்.) துரைசாமிஇ மாவீரரிட்டைச் சொல்லுங்கோ நீங்கள் கடைசி மட்டும் மாவீரரைச் சிலுவையிலை அறையப் போறியள்இ இல்லையோ? என்னட்டச் சொல்லலாமே! உங்கட வாயால நான் இதைக் கேளாம இங்கையிருந்து போமாட்டியள்!
து : (நல்லதம்பியை நேரே நோக்கி) உங்களுக்கு விசர். உங்களுக்கு ஆணவம் மிஞ்சிச் சித்தங் குழம்பிப் போச்சு. உந்;த மனிதாபிமானக் கதையள் கதைச்சுக் கழரப் பாக்காதையுங்கோ. தன்ட முழுக் குடும்பத்தையும் சீவிய பரியந்த அவமானத்துக் குள்ளால இழுத்தடிக்கிற ஒருத்தன்ட மனத்தில பேய் பிசாசு தான் இருக்கும்! (நல்லதம்பியை நெருங்கி) கேக்குதோ? தன்ட பெண்சாதி பிள்ளையளை விடக் குளியலறைத் தண்ணியைப் பற்றிக் கவலைப்படுற ஒரு பிசாசு. டொக்வுர்இ உங்களுக்கு வாற எல்லாம்இ உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தான்!
(நல்லதம்பி துரைசாமியின்ஆக்ரோஷமான கருத்துக்களால் அதிர்ந் துள்ளார். தயாநிதி தன் சட்டைப் பையிலிருந்து வரவு செலவுக் கணக்கை எடுத்துக் கொண்டு நல்லதம்பியிடம் வருகிறார்).
த : (நடுக்கத்துடன்) டொக்வுர்இ யோசிச்சுப் பாருங்கோ. கனக்கக் காசில்லை. ரெண்டு மாதத்தில உங்கட முழுச் சீவியமும் மாறிப்போமெண்டு என்னால உத்தரவாதம் தரலாம்....
(மேடைக்கு அப்பாலிருந்து புவனம் பயந்த குரலில் “என்ன நடந்தது? கடவுளேஇ என்ன விஷயம்?” என்று குழறிக் கேட்கிறார். முன் கதவுக்குப் புவனம் ஓடஇ நல்லதம்பிஇ திடுக்குற்றவராய்இ நுழைவறைக்கு வேகமாய்ப் போகிறார். ரத்தினமும் முத்துவும் வருகின்றனர். ரத்தினத்தின் தலையிற் சிராய்த்திருக்கிறது.)
ப : என்னவோ நடந்திட்டுது! இவனைப் பாருங்கோ!
ர : எனக்கொண்டுமில்லை. அவங்கள் சும்மா....
ந : (சிராய்ப்பைப் பார்த்து) இங்க என்ன நடந்தது?
ர : சத்தியமா ஒண்டுமில்லை அப்பா....
ந : (முத்துவிடம்) என்ன நடந்தது? நீங்கள் ஏன் பள்ளிக்குப் போகேல்லை?
மு : மாஸ்வுர் சொன்னார்இ இந்தக் கிழமை பள்ளிக்கு வராட்டி நல்லதாம்.
ந : பெடியள் அடிச்சவங்களோ?
மு : உங்களைப் பற்றி என்னவோ சொன்னாங்கள். இவனுக்குத் தாங்கேலேல்லை. ஒருத்தனோட சண்டைக்குப் போனான். இருந்தாப் போல எல்லாருமா....
பு : (ரத்தினத்திடம்) நீ ஏன் கதைக்கப் போனாய்?
ர : (விடாப்பிடியாக) அவை அப்பாவைத் துரோகி எண்டினம்! என்ட அப்பா துரோகியில்லை.
மு : நீ பேசாம இருந்திருக்கலாம்.
பு : அவங்கள் உன்னில பாய்வான்கள் எண்டு உனக்குத் தெரிய வேணும். அவன்கள் உன்னைக் கொண்டு போட்டிருப்பான்கள்!
ர : எனக்குக் காரியமில்லை!
ந : (அவனையும் தன் மனதையும் அமைதிப்படுத்துமுகமாக) ரத்தினம்....
ர : (தகப்பனிடமிருந்து விலகி) அவங்களைக் கொல்லுவன். அடுத்த முறை அவங்கள் எவரையுங் கண்டா கல்லெறிஞ்;;சு கொல்லுவன்!
(நல்லதம்பி ரத்தினத்தை எட்டிப் பிடிக்கப் பார்க்கிறார். தகப்பன் அடிக்கப் போகிறார் என்ற எண்ணத்தில் ரத்தினம் ஓடுகிறான. நல்லதம்பி அவனைப் பிடித்துக் கையை இறுகப் பற்றுகிறார்.)
ர : என்னை விடுங்கோ! என்னை விடுங்கோ!
ந : ரத்தினம்.... ரத்தினம்.....
ர : (தகப்பனின் கைகளில்இ அழுதபடி) அவங்கள் உங்களைத் துரோகிஇ சமூக விரோதி எண்டு..... (தேம்பி அழுகிறான்.)
ந : ஷ்ஷ். அவ்வளவும் போதும். ஓடிப்போய் முகத்தைக் கழுவு.
(புவனத்திடம் ரத்தினம் போகிறான். நல்லதம்பி தயாநிதியையும் துரைசாமியையும் நோக்கி நிற்கிறார்.)
ந : அப்ப வெளிக்கிடுறியளா?
து : நீங்கள் முடிவு பண்ணினவுடன சொல்லி அனுப்புவியள் தானே-
ந : நான் முடிவு பண்ணியாச்சு. நான் ஒரு சமூக விரோதி.
பு : இஞ்சஇ நீங்கள் என்ன....?
ந : தங்கட பிள்ளையளுக்கும் இறுகப் பொத்தின கைகளால யோசிக்கப் பழக்கிற மனிசரின்ட சமூகத்துக்கு - நான் விரோதி தான். நானும் என்ட பெடியள்..... என்ட குடும்பம் எல்லாரும் எதிரியள் தான் எண்டு வைச்சுக் கொள்ளலாம்.
த : டொக்வுர்இ உங்களுக்கு வேண்டியதெல்லாங் கிடைக்கும்!
ந : உண்மையை விட. தண்ணி நஞ்சாயிப் போயிட்டெண்ட உண்மையை விட - எனக்கு எல்லாங் கிடைக்கும்.
து : நீங்கள் தானே பொறுப்பில இருப்பியள்.
ந : ஊர்ப் பிள்ளையள் நஞ்சாப் போயிட்டுதுகள். சனம் நஞ்சாப் போயிட்டுது! நான் சமூகத்தின்ட சினேகிதனாகிறதுக்கு ஊழலுக்குப் பொறுப்பெடுக்க வேணுமெண்டாஇ நான் எதிரிதான். தண்ணி நஞ்சாயிட்டுதுஇ நஞ்சாயிட்டுது! நஞ்சாயிட்டுது! கதையின்ட தொடக்கமும் முடிவும் அதுதான். இனி இங்கையிருந்து கிளம்புங்கோ!
து : உங்களுக்கு இது எங்க போய் முடியுமெண்டு தெரியுமோ?
ந : இங்கையிருந்து வெளிக்கிடவெல்லோ சொன்னான். (தயாநிதியின் கையிலிருந்து குடையைப் பிடுங்குகிறார்.)
பு : என்ன செய்யிறீங்கள்?
(நல்லதம்பி குடையை ஓங்கத் தயாநிதியும் துரைசாமியும் கதவை நோக்கிப் பின் காட்டி நகர்கின்றனர்.)
த : உங்களுக்கு விசர். உங்கட புத்தி கெட்டுப் போயிட்டுது!
பு : (நல்லதம்பியைப் பிடித்துக் குடையைப் பறிக்கிறார்.) என்ன செய்யிறியள்?
ந : அவைஇ என்னைப் பேப்பரையும் சனத்தையும் நீரூற்றின்ரை அசுத்தத்தையும் எல்லாம் வாங்கட்டாம். அப்ப அவை என்னை ஒரு மாவீரனெண்டு கொண்டாடுவினமாம். (கடுஞ்சீற்றத்துடன்இ தயாநிதியிடமும் துரைசாமியிடமும்) நான் மாவீரனில்லைஇ நான் எதிரி. முதல்ல நீங்கள் நான் என்ன மாதிரி எதிரி எண்டு அறியப் போறியள்! என்ட பேனையைக் கத்தி மாதிரிக் கூராக்கப் போறன். என்ட வேலை முடியமுன்னம் சனங்களின்ட சினேகிதர் உங்களெல்லாருக்கும் ரத்தம் வழியப் போகுது. பெட்டிசத்தில ஒப்பம் போடுற எல்லாரிட்டையும் போய்ச் சொல்லுங்கோ! என்ட பிள்ளையள அடிச்சு நொறுக்குங்கோ! உவளைப் (பவளத்தைச் சுட்டி) பள்ளியில விடாதையுங்கோ. அங்கையிருக்கிற ஆண்மையின்ட வெற்றிடத்தின்ட தூய்மையை அவள் கெடுத்துப் போடுவாள்! தடைச்சுவர்களை எழுப்புங்கோ! மணி அடிச்சு எச்சரிக்கை பண்ணுங்கோ! உண்மைஇ உண்மை வெளியால வந்திட்டுது. சுறுக்கெண அது ஒரு சிங்கம் மாதிரி றோட்டு வழிய உலாவப் போகுது!
து : உங்களுக்கு மூளையில தட்டிட்டுது டொக்வுர்.
(இருவரும் திரும்பிப் போய் வாயிலை அடைந்து விடுகின்றனர்.)
மு : (அவர்களை நோக்கி ஓடி) இந்த மாதிரி அவரிட்டைக் கதைக்கேலாது!
ந : (பவளம் வீரிட்டுக் கத்தக்இ குடையுடன் ஓடுகிறார்.) வெளியால!
(அவர்கள் ஓடுகின்றனர். குடையை அவர்களை நோக்கி வீசி விட்டுக் கதவை அறைந்து சாத்துகிறார். நிசப்தம். முதுகைக் கதவுக்கெதிரே வைத்துக் குடும்பத்தினரைப் பார்க்கிறார்.)
ந : நரகத்தின்ட தூதரெல்லாம் இண்டைக்கு வந்து போயிட்டினம். இனி வராயினம். புவனம்இ பிள்ளையள்இ கேளுங்கோ! நாங்கள் சுத்தி வளைக்கப் பட்டிருக்கிறம். அவை இனி ரத்தம் குடிக்கத் துடிப்பினம். சனங்களை மாடுகள் மாதிரி அடிச்சு உசுப்பி விடுவினம். (மிஞ்சியுள்ள ஒரு கண்ணாடியூடு கல் விழுகிறது.) பையன்கள் யன்னலை நோக்கி ஓடுகின்றனர். அங்கினைக்க போக வேண்டாம்!
பு : கப்வுனுக்கு எங்க கப்பல் கிடைக்குமெண்டு தெரியும்.
ந : கப்பல் கிடையாது.
ப : நாங்கள் நிக்கிறமா?
பு : இவையள் பள்ளிக்குப் போகேலாது! வீட்டை விட்டுப் போக நான் விடன்.
ந : நாங்கள் நிக்கிறம்.
ப : நல்லம்!
ந : நாங்கள் கவனமா இருக்க வேணும். இதுக்கால நாங்கள் சீவிக்க வேணும். பெடியள் இனிப் பள்ளிக்கூடம் இல்லை. இனி நான் உங்களுக்குப் படிப்பிக்கிறன். பவளமும் சொல்லித்தருவாள். உங்களுக்கு ஆரேன் பெடியங்களைத் தெரியுமா? றோட்டால திரியிறவங்கள்இ மட்டையடிக்கிற பெடியள் -
மு : ஓஇ தெரியும். நாங்கள் -
ந : துவக்கிதனுக்கு ஒரு பன்ரெண்டு பேர் போதும். ஆனா நல்லவங்களாப்இ படிப்பறிவில்லாதவங்களாஇ நாகரிகந் தெரியாதவங்களா இருக்க வேணும்! கப்வுன்இ நாங்கள் உங்கட வீட்டைப் பாவிக்கலாம்?
க : நல்லாப் பாவிக்கலாம். நான் அங்க இருந்தாத்தானே!
ந : நல்லம். பவளம் நாங்கள் வேலையைத் துவங்குவம். வரி குடுக்கிறவையும் பேப்பர் வாங்கிறவையுமா இல்லாதஇ உண்மையைத் தேடுற சுயாதீனமான சுதந்திர மனிசர உண்டாக்குவம். கிட்டத்தட்ட மறந்திட்டன்! பவளம்இ தாத்தாவிட்ட ஓடிப் போய்ச் சொல்லு - நான் சொல்லிறதை “இல்லை!”
பு : (விளங்காமல்) அதெண்டா என்ன?
ந : (புவனத்திடம் போய்) அதெண்டா நாங்கள் இனித் தனிச்சுத்தான் இருக்கிறம். இனி விடிய முதல் ஒரு நீளமான இரவு ஒண்டு இருக்குது.
(கண்ணாடி இல்லாத ஒரு யன்னலூடு கல் ஒன்று விழுகிறது. கந்தசாமி யன்னலுக்குப் போகிறார். ஒரு கூட்டம் நெருங்குவது கேட்கிறது.)
க : அரைவாசி ஊர் திரண்டு வந்திருக்குது!
பு : என்ன நடக்கப் போகுது? சொல்லுங்கோவன். என்ன நடக்கப் போகுது?
ந : (அவரைச் சாந்தப் படுத்தக் கையை உயர்த்திஇ அச்சமும் தைரியமான பிடிவாதமுங் கலந்த குரலில்) எனக்குத் தெரியாது. எல்லாரும் ஒண்டை மட்டும் மறந்து போகாதையுங்கோ. நீங்கள் உண்மைக்காகப் போராடுறியள். அதாலதான் தனிமைப்பட்டிருக்கிறியள். அது உங்களைப்; பெலப்படுத்தும். நாங்கள் தான் உலகத்தில பெலமான ஆக்கள்!
(வெளியே கூட்டத்தின் கோபக் குரல் கேட்கிறது. யன்னலூடு இன்னொரு கல் விழுகிறது.)
ந : ம்..... பெலமானவை தனிச்சிருக்கப் பழக வேணும்!
(கூட்டத்தின் சப்தம் அதிகமாகிறது. யன்னலை நோக்கி நடக்கிறார். காற்று எழுந்து திரைகளை அவரை நோக்கி உயர்த்துகிறது.)
கருத்துகள்
கருத்துரையிடுக