இதயரஞ்சனி


இசை நூல்கள்

Back

இதயரஞ்சனி
எஸ். கே. பரராஜசிங்கம்


இதயரஞ்சனி
(சமூக-பண்பாட்டுக் கோலங்கள்)

எஸ். கே. பரராஜசிங்கம்

என். சண்முகலிங்கன்


 இதயரஞ்சனி

(சமூக-பண்பாட்டுக் கோலங்கள்)

எஸ். கே. பரராஜசிங்கம்

என். சண்முகலிங்கன்

834, அண்ணா சாலை 213,

காங்கேயன்துறை வீதி,

சென்னை-600 002,

ITHAYA RANJANI (Socio-Cultural Patterns)

S. K. PARARAJASINGHAM

N. SHANMIUGALINGAN

First Edition: January 1988 (C) Authors

Cover Design : S. Anandamurugan Cover Photograph : K. L. Narayanan

Printed at:

Sri Gomathy Achagam, 41, Soorappa Mudali Street, Triplicane, Madras-600 005.

Cover Printed at :

Sudarsan Graphics

Madras-600 017.

Published by :

Kaanthalakam

Madras-600 002.

எங்கள் பண்பாட்டினைக் காத்தும், காத்திரமான வழியில் வளர்த்தும் வருகின்ற எங்கள் ஆளுமைகளுக்கு

இதயரஞ்சனியின் இந்தப் பண்பாட்டுக் கோலங்கள்.

தேவி! நின் னொளி பெறாத

தேயமோர் தேய மாமோ? ஆவியங் குண்டோ? செம்மை

அறிவுண்டோ? ஆக்க முண்டோ? காவிய நூல்கள் ஞானக்

கலைகள் வேதங்க ளுண்டோ? பாவிய ரன்றோ நின்றன்

பாலனம் படைத்தி லாதார்.

-பாரதியின் சுதந்திர தேவி துதி

. . . . . . . இதயரஞ்சனி.

நாம் காண விழையும் நாளையின் நாயகி. வானொலியூடாக அறிமுகமான ஆளும்ைதான். நூல் வடிவில் இப்பொழுது தரிசனமாகிறாள். '

வெகுஜன தொடர்புச்சாதனங்களின் (Mass media) சமூகச் செல்வாக்கு இன்று பெரிதும் உணரப்படும். இந்த ஊடகங்களைச் சமூக மேன்மைக்குப் பயன் படுத்தலின் இன்றியமையாமையும், இன்றைய சமூக அபிவிருத்தித் திட்டமிடல்களில் முதன்மை பெறும். இந்த வழியில், சக்தி வாய்ந்த தொடர்பூடக மான வானொலியூடாக ஒலித்த இதயரஞ்சனி என்ற கலை இலக்கிய மஞ்சரியின் பண்பாட்டுக் கோலங்கள் என்ற அம்சத்திலிருந்து, இருபத்தைந்து கீற்றுக்கள் இங்கு எழுமாற்றாகத் தேர்ந்து தரப்படுகின்றன. எழு மாற்றாகத் தேர்ந்தபோதிலும் பரந்த நம் பண்பாட்டின் விழாக்கள், வழிபாட்டுமரபுகள், கிராமியக் கலைகள், சடங்குகள், நம்பிக்கைகள், மனவெழுச்சிகள், தொடர்புச் சாதனங்கள், ஆளுமைகள் என வகை களையும் ஒருவித ஒழுங்கினையும் இதிலே காண முடியும்.

பண்பாடு பற்றிய சிந்தனையை ஐந்தாறு நிமிடத் துளிகளில் கால அனுபவமாக மெல்ல விதைக்கும், வளர்க்கும் ஒரு பரிசோதனை முயற்சியாகவும் அது அன்று அமைந்திருந்தது. பெரும்பாலும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளையே தந்து கொண்டிருக்கும் இலங்கை வானொலியின் விளம்பர சேவையே எமது இந்தப் பரிசோதனைக்கான களமாயமைந்தமை குறிப் பிடத்தக்க ஓர் அம்சமாகும். மரபு வழி கலை இலக்கிய நிகழ்ச்சிகளைத்தரும் ஒலிபரப்புச் சேவையினைவிட, அதிக சுவைஞர் கூட்டத்தைக் கொண்ட விளம்பர சேவையின் வழி, அதிக மக்களை எங்களாற் சந்திக்க முடிந்தது. ஒரு வழியான தொடர்புகொளலாகவன்றி, சுவைஞர்களின் கடிதங்கள் வாயிலாக அவர்களது கருத்துக்களை, வளர்ச்சி நிலைகளைக் கணித்து நிகழ்ச்சியை வளம்படுத்த முடிந்தது.

ஜனரஞ்சகப் படுத்தலின் அவசியம் கருதி திரையிசைப் பாடல்களை யும். ஏனைய இசைக் கோலங்களையும் கலந்து நாம் தரவேண்டியிருந்தது. ஒலிபரப்பான வேளையிலேயே எமக்குக்கிடைத்த சுவைஞர்களின் கடிதங்கள்(தமிழகத் திலிருந்தும்) மட்டுமின்றி, கலை இலக்கியச்சஞ்சிகை கள், நாளிதழ்கள் போன்றவற்றின் விமர்சனங்களும் எமது நோக்கில் நம்பிக்கை விளைவிப்பனவாகவே அமைந்திருந்தன. இரண்டாண்டுகளுக்கு மேலாக, நம்பிக்கையுடன் நடை போட்ட இதயரஞ்சனியை 83ல் திடீரென விட்டுவிட வேண்டிய துர்ரதிஷ்டம் எங்களுக்கு.

ஊமைக் குழலூதும் நிலையில், நெஞ்சு வெடிக்கும். ஒரு நிலையிற் கழிந்த, கழிகின்ற காலங்களிடை நாதஸ்வர ஓசையை மீண்டும் தர முடிவது போன்ற உணர்வில் இன்று இந்நூலின் வழி உங்களைச் சந்திக் கின்றோம். அண்மைக் காலங்களில் எங்கள் மண்ணில் நிகழ்ந்த அழிப்புக்களிடை, அழிந்து போன எங்கள் எழுத்துக்களிடை இதயரஞ்சனியைக் காப்பாற்ற முடிந்தபோது, தப்பியதை வாழ வைக்கும் அவசரத் துடன் ஏற்கெனவே தாமதித்த அல்லது தயங்கிய இந் நூலை வெளியிடுகின்றோம். எங்கள் இருப்பைப் பதிந்து கொள்ளும் ஆசையும்கூட இதிலே இணைந் திருக்க வேண்டும். அழிப்புகளிடைதான் ஆக்கமும் என் பார்களே!

B. B. C போன்ற உலக ஒலிபரப்பு நிறுவனங்கள், இவ்வாறான பதிப்புகள் பலவற்றினை வெளியிட்ட போதிலும், தமிழில் இத்தகு முயற்சிகள் அரிதே. இதனால் காற்றோடு காற்றாகப் போய்விட்ட அரிய படைப்புகள் கொஞ்சமல்ல. இந்நிலையில், தமிழில் இம். மரபின் அவசியத்தை இந்நூல் எழுதி நிற்கட்டும்.

வானொலி ஊடகத்தின் பரிமாணங்களை, இந் நிகழ்ச்சியின் நோக்கு, தன்மை ஆகியவற்றினைக் கருத்திற்கொண்டு நூலைப் படிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். இடையிடையே அடைப்புக் குறிக்குள் தரப்பட்டவை-வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பு உதவிக் குறிப்புகள். சொல்லுக்குச் சொல் லாகச் சொல்லிப்பார்த்து எழுதப்பட்ட மொழி நடை. ஆங்காங்கே இன்று?, நாளை என வரும் கால அறிவிப்புகளெல்லாம் அன்று ஒலிபரப்பான வேளை களைக் குறிப்பனவே.

எங்கள் கலை இலக்கியப்பரிசோதனைகளைச்சுதந் திரமாகச் செய்வதில் உதவிய இலங்கை வங்கி,இலங்கை வானொலி, அறிவிப்பாளர்கள் சி. நடராஜசிவம், புவன லோஜனி இன்னும் இதயரஞ்சனியின் முழுமைக் குழைத்த அனைத்துக் கலைஞர்கள், சுவைஞர்கள், விமர்சகர்கள், சஞ்சிகைகள், நாளிதழ்களிற்கும் இந்த இடத்தில் நன்றி சொல்ல விரும்புகின்றோம். இந்நூலாக் கத்தில் துணை நின்ற காந்தளகம் க. சச்சிதானந்தன், பூரீ கோமதி அச்சகம் சி. சரவணகுமார், அட்டை யமைப்பில் உதவிய சோ. ஆனந்தமுருகன், கே. எல். நாராயணன், சுதர்சன் கிராபிக்ஸ் என். சுப்ரமணியன் ஆகியோருக்கு நன்றி. Հ. -

பண்பாட்டு விழிப்புணர்வின் அவசியம் பெரிதும் உணரப்படுகின்ற இந்த வேளையிலே, எங்கள் பண் பாட்டின் தரிசனத்திற்கும், ஆளுமை முழுமைக்கான தேடலுக்கும் இந்நூல் சிறியளவிலேனும் துணையாகும் என்பது எங்களின் நம்பிக்கை. இந்நூல் உங்களில் விளைவிக்கும் அலைகளை அவதானித்து இதயரஞ்சனி யின் ஏனைய கலை, இலக்கியக் கோலங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளக் காத்திருக்கின்றோம்.

மீண்டும் சந்திக்கும் வரை இனிய

வாழ்த்துக்கள் தரும்,

கட்டுவன் அன்பின்,

தெல்லிப்பளை எஸ். கே. பரராஜசிங்கம் யாழ்ப்பாணம் என். சண்முகலிங்கன்

15-1-1988

உள்ளடக்கம்

உழவன் விழா

கோமாதா

அவ்வை நோன்பு கலைமகள் விழா திருவிளக்கு வழிபாடு திரெளபதையம்மன் வழிபாடு

முருக வழிபாடு

கிருஷ்ணமரபுகள் தெய்வம் ஏறிய கலைகள்

காவடி

கரகம்

வசந்தன் வேட்டை நடனங்கள் பூப்பு சேவை மணம் பெயர்கள் அணிகலன்கள் சகுனங்கள் அச்சமும் அஞ்சாமையும் கதாப்பிரசங்கம் சினிமாப்பிரதிமைகள் சித்தர்கள் தாகூர்

விபுலானந்தர்

பாரதி

 

1. உழவன் விழா

மங்கலப் பொங்கல் நினைவுகளின் ஆனந்த முழக்கங்கள் எங்கணும் நிறைவு தருகின்றன.

ஆமாம்! “தைபிறந்தால் வழிபிறக்கும்" என்ற நம்பிக்கை தரும் எதிர்பார்ப்புகளை எதிர் கொள்ளும் காலமல்லவா?

எங்கள் பண்பாட்டின் உயிர்ப்பிற்கும், உறுதி JT60 தொடர்ச்சிக்கும் உறுதுணையாகின்ற கொண்டாட்டங்களிலே முக்கியமான இடத்தி தினைப் பெறுவது தைப்டொங்கல்,

எங்கள் சமுதாய வாழ்விலே அது வரைகின்ற கோலங்களே, இன்றைய எங்களின் பண்பாட்டுக் கோலங்களாகின்றன.

(புல்லாங்குழலில் பூபாளராகம் எழுந்து பின்னணியாக) குரல் 1

உதயப் பொழுதின் இனிய ராகங்கள்.

இதயங்கள் மகிழ இல்லங்கள் தோறும் பொங்கல் விழாவின் பொலிவான காட்சிகள். முற்றத்தில் அழகிய வண்ணவண்ணக் கோலங்கள்நிறைகுடம், புத்தம் புதிய பானையிலே, புதிதாய் விளைந்த செந்நெல் அரிசியின் பொங்கல் அத்தனையும் உதயமாகும் ஆதவனுக்கே அர்ப்பண மாகின்றன. "ஆயிரங்கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி" (கர்ணன் திரைப்பட சூரிய தமஸ்காரப் பாடல்) தன் உழைப்பினுக்கு உதவிநின்ற இயற்கைக் சக்திகளையெல்லாம் வழுத்தி நிற்கின்றான் உழவன்.

மனித வரலாற்றின் பாதையிலே ஒருகால கட டத்தில் தனக்குப் புதிராக இருந்த, அச்சமூட்டிய காரணிகளையெல்லாம் வணக்கத்துக்குரியதாக்கிய மனிதனால், அறிவு வளர்ச்சி கண்டபோதும் குரிய வழிபாட்டினைக் கைவிட முடியவில்லை. மாறாக அது மேலும் வலிமை பெற்றது.

உலக இயக்கத்தில் அதன் முக்கியத்துவத்தினை அவன் மென் மேலும் உணர்ந்து கொண்டான். அறுவடைக்காலப் பாடல்'-நாட்டார் பாடல் இசைத்தட்டு)

அறுவடைகண்ட ஆனந்தக் களிப்புஆடிப்பாடிக் கூடிக்குலவிச் சமுதாய வாழ்வின் நலன்களை அனுபவித்தான் உழவன். *ஏர்முனைக்கு நேரிங்கே-திரைப்படப்பாடலின் முதலடிகள்)

உழவனின் மகிழ்ச்சியிலே பிறந்த பொங்கல் விழா, அவன் பின்ன்ே தொழுதுண்டு பின் செல்லும் உலகினுக்கு அவன் உயர்வினை உணர்த்துவதாகவும் அமைந்து சிறந்தது.

(சித்தார் இசை எழுந்து பின்னணியாக.)

"அசெனடா கணவாய் பகுதியிலுள்ள வயல்வெளிகள்

என் கண்களுக்கு எதிரில் தெரிகின்றன. உள்ளத்து உணர்ச்சிகளை, வளர்க்கும் புறாவைப்போல் பறக்கவிடுகின்றார்களே! கையால் உழைத்த உழைப்பின் பயனாக விளைந்த அந்தத் தானியக் கதிர்களை வீட்டு முற்றத்தில் வந்து விளையாடும் குழந்தைகளை அரவணைப்பது போல, உங்கள் உள்ளங்கைகளால் சேகரிப்பதில்

முனைந்தவர்களே." (சித்தார் இசை மேலெழல்)

வடஇந்திய அசெளடா கிராமத்து மக்களின் உழைப்புத் திருவிழாவான "ஹாச்சியா போல்"-அந்த விழாவின் ஆனந்தத்துப் பிறந்ததுதான் அந்த நாட்டார் பாடல்.

ஆந்திராவில் கேட்பது இந்தப் பாடல்.

(ஆந்திர "சங்கிராந்தி" பாடல்-இசைத்தட்டு) ஆமாம் !

தமிழர் பண்பாட்டிலே மட்டுமன்றிப் பிற இந்தியப் பண்பாடுகளிலும், ஏன் ஏனைய உலக பண்பாடுகள் பலவற்றிலும் கூட பொங்கல் விழா சிறப்பானதோர் இடத்தினைப் பெறுகின்றது.

ஆந்திர மக்களின் வாழ்வில் சங்கிராந்தி தரும் ஆனந்தம் அளவிலாதது. தானியம் விளைந்து வீட்டுக்கு வரும் காலம் உழவனுக்கு இதைவிடப் போகப் பொழுது ஏது?

போகிப் பண்டிகையாக உல்லாசப் பொழுதாக பொங்கல் விழா இனிக்கின்றது.

(சித்தார் இசை எழுந்து பின்னணியாக.)

சங்கிராந்தியில் முக்கிய இடம்பெறுவது கொப்பி பூஜை. ஆமாம்! கோபியர் பூஜை.

மார்கழி மாத பாவை நோன்பின் கூறுகளை இங்கே தரிசிக்கின்றோம்.

அழகிய வண்ணக்கோலங்கள்-கூடவே ஆனந்தக் கும்மியின் கீதங்கள்.

சுப்பண்ணிவ்வாரே ! தாமர பூவண்டடி தம்முண்ணிவ் வாரே !

ஆமாம் !

சுப்பனைக் கொடுங்கள் தாமரைப் பூ தம்பியைக் கொடுங்கள் சாமந்திப் பூ தம்பியைக் கொடுங்கள்.

என விரிகின்ற கும்மிப்பாடல்களில்., கோபியரின் ஆசைக்கனவுகள் நிறைந்திருக்கும்.

(கிராமிய இசையின் பின்னணியில் பசுவின் குரல்)

பொங்கலுக்கு அடுத்த நாள் நிகழ்வது மாட்டுப் பொங்கல்.

ஏர்முனையிலே தனக்கு உறுதுணையாகி நின்ற கால்நடைகளுக்கு உழவன் செலுத்துகின்ற நன்றிக் காணிக்கை.

ஏரிழுக்கவும், பரம்பு அடிக்கவும், அறுவடை காலத்து சூடிழுக்கவும், களத்து நெல்லைக் களஞ் சியத்திற் சேர்க்கவும் மாடுதானே உயிர்த்துணை,

ஆந்திராவில் இது கனுப்பண்டிகை எனப்படுகிறது.

(மேலை இசை பின்னணியில் ரைக்ரர் ஒலி)

அறிவியலின் வளர்ச்சிப் பாதையிலே, புதிய புதிய தொழினுட்பக் கோலங்கள்.

உழவுத் தொழிலிலும் இயந்திரமயமாக்க மாற் றங்கள்.பண்பாடுகள் பலவற்றிலும் பொங்கல் விழாவின் உண்மைத் தத்துவங்கள் பலவும் மறையத் தொடங்கின.

கிறைவுக் குறிப்பு :

இந்த மங்களகரமான வேளையிலே நம் கவனத்துக் குரிய ஒரு குறிப்பு-உழவர் விழாவாக, மக்கள் விழா வாக உருப்பெற்ற பொங்கல்விழா, இன்று வெறும் சடங்காகக் குறுகி விடுகின்ற ஒரு நிலைமை இருக் கிறதே-இது மாறும் நாள் மலராதா? மீண்டும் அந்த மக்கள் விழாவாக உயர்வுகள் தாராதா?

 

 

2. கோமாதா

("கோமாதா எங்கள் குலமாதா '-திரைப்பட பாடலடிகள்)

அறிமுகம் :

குல தெய்வமாகப் பசுவை வழிபடும் எங்கள் பண்பாட்டின் குரல், இன்று இல்லங்கள் தோறும் ஒலித்து நிற்கின்றது. .

('பொங்கலோ பொங்கல்"-பாடலடிகள்)

ஆமாம்! இன்று மாட்டுப் பொங்கலில், நாம் மகிழ்ந்து நிற்கின்றோம். தன் உழைப்பில், உடனுதவி நின்ற மாட்டுக்கு மனிதன் செய்கின்ற நன்றிப் பெருவிழா - இந்தப் பொங்கல் வேளையில் பசு தொடர்பான எங்கள் பண்பாட்டின் கோலங் கள் சிலவற்றை இங்கே மீட்டிக் கொள்கின்றோம்.

(பசுவின் "அம்மா' ஒலிக் குறிப்பு)

குரல் :

உலகின் பண்பாடுகள் பலவற்றிலும் பல்வேறு

விலங்குகள் வழிபாட்டுக்குரியனவாகப் பேணப்படு: கின்ற விடயம் நீங்கள் அறியாததொன்றல்ல. இந்த

வ்ழிபாட்டுச் சின்னங்கள் பலவும் ஒரு பண்பாட்டின்

சவர்கள் பலவற்றை நாமறிந்து கொள்ளப் பெருமள

விற்கு உதவக் கூடியன.

(சித்தாரிசை எழுந்து பின்னணியாக)

தென்னாசியப் பண்பாட்டு மூலங்கள், பலவற்றை

விவசாயத்திற்கு முற்பட்ட மாடுகள் மேய்த்திடும்

காலத்துக் காண்பர் மானுடவியலாளர். பசுவைத்தெய்வ

மென வழிபடும் மரபின் தொடக்கம், Pastaral கால

சமூகத்து தொடர்புடையது என்ற கருத்தினை நாம்

முற்றாக நிராகரித்து விட முடியாதுதான்.

(இடையிசை)

தூய்மைக் கோட்பாடுகளுடன் பசு பெருமளவில் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். தூய தானப் பொருளாகப் பசு கருதப்பட்டமை “பசுதான? நடைமுறையிற் புலப்படும். இநதுமதக் கிரியைகளில் பசுவின் பால், தயிர், நெய், முதலாயன பெறுகின்ற முக்கியத்துவம் இங்கு கருத்திற் கொள்ளத் தக்கது. தூய்மை, குளிர்ச்சி, மச்ச உணவுண்ணாதவர்களுக் கான தூய புரோட்டீன் சத்து என பசுவின் உற்பத்திப்பொருட்களின் பயன்பாடுணர்வு அதிகரிக்க அதிகரிக்கப் பசுவின் முக்கியத்துவமும் அதிகரித்தது.

(இடையிசை)

பஞ்ச கெளவியங்கள்.ஆமாம்! பால், தயிர், நெய், கோமய்ம், கோசலம் ஆகிய ஐந்தும்-தீட்டு தொடர் பான நம்பிக்கைகளில் பரிகாரமாக அமைவன. பசுவின் சாணம் சுடப்பட்டு நீறாகப் பூசப்படும்கோலம், ஆபிரிக்க *கள் கூட்டத்தினரிடையும் காணப்படும். இந்த ஒருமைப் பாட்டின் பின்னணிகள் மேலும் ஆராயப்படும் போது ஆர்வமானபல தகவல்கள் கிடைக்கலாம்.

(இடையிசை)

அன்று மாடு - பணமாகப் பயன்பட்டது. இந்தக் குறியீட்டு மதிப்பும் வழிபாட்டுணர்வை வளர்த்திருக் கலாம்.

*அஹிம்சைத் தத்துவம் பசு வதையைப் பாவமாக்கியது. ஒரு காலத்து மனிதனாக இருந்த உயிர்களின் மறு பிறப்புத்தான் பசு என்ற அச்சமும் இங்கு துணையாகியது. ஆயினும், பசுவைப் பலியிடு கின்ற வழக்கங்களை மத்திய இந்திய ஆதிக்குடிகளிடை காணமுடிகிறது.

(இடையிசை)

கிறைவுக் குறிப்பு :

தென்னாசிய மக்களின் வாழ்வில், குறிப்பாக விவசாய மக்களின் வாழ்வில் பசுவும் எருதும் பெரும்பயன் விளைவிக்கும் செல்வங்கள். இன்றைய நவீனமயமாக் கத்தில் இவற்றின் பாவனை குறைந்து செல்வது என்னவோ உண்மைதான்! இருந்தாலும் மக்கள் நெஞ்சங்களிலிருந்தும், அவர்களின் பண்பாட்டுக் கொண்டாட்டங்களிலிருந்தும் அவ்வளவு சுலபமாக அவை மறைந்து விட முடியாது.

 

3. அவ்வை நோன்பு

அறிமுகம் :

மனித வாழ்வில் நோன்புகள் பெறுகின்ற முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. நோன்பின் இலக்குகள் பல. அவை கடைப்பிடிக்கப்படும் வழி முறைகளும் வேறுபடுவன. ஆயினும் இவை அனைத்தும் சில அடிப்படையான நம்பிக்கைகள், புனைந்துரை கதைகள் எனப்படும் myths ஆகிய வற்றினையே ஆதாரமாகக் கொண்டன. இந்த நம்பிக்கை, புனை கதைகளில் கால மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் இந்நோன்புகளிலும் பிரதி பலிக்கத் தவறுவதில்லை. இந்தப் பண்பாட்டுக் கோலத்தினை அவ்வை நோன்பினூடாக இன்று தரிசிக்கின்றோம்.

(கிராமிய இசை எழுத்து பின்னணியாக)

குரல் :

அங்கை கொண்டு மூணு பிடி. புறங்கை கொண்டு மூணுபிடி. ஏறு பொழுதிலே போட்டு இறங்கு பொழுதிலே வாரி

 

எல்லாரும் உண்டு தின்னு உறக்கமான பிறகு குற்றித் திரிச்சு.

(இசை மேலெழுந்து பின்னணியாக)

ஆமாம்! நோன்புக் கொழுக்கட்டைதான் தயாரா கின்றது. உப்புப் போடாத அவ்வை நோன்புக் கொழுக்கட்டை. கொழுக்கட்டையின் உருவங்கள் பல. மனித உறுப்புகள்-வீட்டின் முக்கிய பாவனைப் பொருள்கள்-இவற்றின் வடிவங்களில் கொழுக்கட்டை அமைக்கப்படுகிறது. கொழுக்கட்டை அவிந்து எஞ்சும் நீரிலேயே கூழ் தயாராகிறது.

கொழுக்கட்டை பல்வேறு உருவங்களிலும் அமைந்து பலியை குறியீடுபடுத்தி நிற்கின்றது என லாம். இந்தக் குறியீடுகள் பற்றிப் பற்பல அபிப் பிராயங்கள். இவை அனைத்துக்கும் ஆதாரங்களாகப் பற்பல புனைகதைகள்.

(இடையிசை)

அவ்வை நோன்பின் நோக்கம், அதன் நடைமுறை கள் பற்றிய பல்வேறு அபிப்பிராயங்கள் நிலவ அந் நோன்பின் சில அம்சங்களே காரணம் எனலாம்.

முழுக்க முழுக்கப் பெண்களே பங்கு பெறுகின்ற நோன்பு இது. பெண்கள் பங்கு பெறுகின்றதென்பதற்கு மேலாக ஆண்களிடமிருந்து மறைக்கப்பட்டு இரகசிய மாகக் கொண்டாடப்படுவது. இந்த இரகசிய நிலையை பேணுதற்கென்றே சிருஷ்டிக்கப்பட்ட சில நம்பிக்கைக்கோலங்கள். ஆமாம் ஆண்களுக்கு இந்நோன்பு பற்றித் தெரிவித்தால் கண் அவிந்துபோகும் என்பது ஒரு நம்பிக்கை.

(இடையிசை)

ஆண்களுக்கு மட்டுமென்ன? இந்நோன்பின் நோக்குப்பற்றி எவருக்குமே சொல்லக்கூடாது. இது பொதுவாக எல்லா நோன்புகளைப் பொறுத்தும் உள்ள ஒரு நிலைதான்.

இந்நிலையில், இந்நோன்பின் அடிப்படை மூலங் களைக் கண்டு கொள்வதிலே ஆய்வறிஞர் பலரும் சிரமப்பட வேண்டிய நிலை

இருந்தும் சில அடிப்படை மானுடவியல் உண்மை கள், கடின ஆய்வுழைப்பின்வழி வெளிப்படுத்தப் பட்டன. மனித நாகரிகத்தின் தொடக்க காலத்து இனக்குழு வாழ்க்கையின்போது, பெண்களின் கைகளி லேயே விவசாயம் இருந்தது. இந்த உண்மை, இன்றைய மானுடவியல் ஆய்வுகளினால் தெளிவுபடுத்தப்படுவது. இதன்வழி, சமூகத் தலைமையும் பெண்களைச் சார்ந்தது.

உலகின் பண்பாடுகள் பலவற்றிலும் செழிப்பின் குறியீடாகத் தாய்த் தெய்வ வழிபாடு அமைந்திட இதுவே காரணம். இந்தச் சமுதாய நோக்கின் தொடர்ச்சியாகவே அவ்வை நோன்பினைக் காண்பர் இன்றைய ஆய்வாளர்.

 

(இடையிசை)

ஆதிச்ச்மூகத்திற்குத் தேவையான உணவைவேண்டி, அது அதிகரிக்க வேண்டிக் கடைப்பிடிக்கப்பட்ட இந் நோன்பு,பொன்மீனை அடையும் நோக்கினதாகின்றது. படிப்படியாக உயர்ந்து ஈற்றிலே உயர் செல்வத் தினை அடையும் இலக்கினைப் பெறுகின்றது.

கிறைவுக் குறிப்பு

எங்கள் பண்பாட்டு வரலாற்றினை, சமூக-வாழ்க்கை உருவாக்கங்களை அறிந்து கொள்வதில் 'அவ்வை நோன்பு பற்றிய ஆய்வுகள் பெருமளவிற்கு உதவி நிற்கின்றன. தை, மாசி மாதங்கள்தான் இந்நோன்பு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்ற காலங்கள். இந்தியாவில் ஆங்காங்கே அனுஷ்டிக்கப்படும் இந் நோன்பு, ஈழத்தில் நேரடியாகக் கைக்கொள்ளப்படாத விடத்தும், பிற நோன்புகளில், பல்வேறு செல்வாக்கு களையும் செலுத்தக் காணலாம்.

இது தொடர்பான ஒப்பியல் ஆய்வுகளின் வழி, புதிய பண்பாட்டின் கூறுகள் துலக்கம் பெறலாம்.

 

4. கலைமகள் விழா

அறிமுகம்:

ஒரு பண்பாட்டின் செழுமைக்கும், அந்தப் பண்பாட்டு மக்களின் வாழ்வு இலக்குகளின் வெளிப்பாட்டிற்கும் உகந்த கண்ணாடிகளாய் அமைவன விழாக்கள்.

இந்த விழாக்களும், கொண்டாட்டங்களும் வெறுமனே சமயச் சடங்குகள் என்ற குறுகிய நிலையுடன் நின்றுவிடுவன அல்ல.

இந்த வகையில் எங்கள் பண்பாட்டுப் பரப் பிலே கலைநயங் காட்டி நிற்கும் விழா - கலைமகள் விழா.

அதன் இனிய வண்ணங்களே, இன்றைய பண்பாட்டுக் கோலங்கள்.

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை-தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்

(பாடல்)

 

 

 

(பாடல் முடிய வீணையில் தானம்)

ஆயகலைகள் அனைத்திற்கும் அதிதேவதை யாக எங்கள் பண்பாடு கண்ட அன்னை கலை வாணிக்கு எடுக்கப்படுகின்ற விழா,

சரஸ்வதி பூஜை

சேரஸ்", நீர் அல்லது ஒளி என்ற பொரு ளினைத் தருவது. வளத்தின் குறியீடாக சரஸ்வதி வழிபாடு நிலைபெற்றிருக்கலாம்.

(வீணை இசை மேலெழுந்து பின்னணியாக)

எங்கள் பண்பாட்டின் சரஸ்வதி வழிபாடு தொன்மையானது

யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்து தேவி சிந்தாவிளக்கு’ என்று சிலப்பதிகாரம் சரஸ்வதி யைக் குறிப்பிடும்.

இந்தக்கலைமகள் வழிபாட்டு மரபு,இன்றுவரை சிறப்பாகப் பேணப்படுவது-எங்கள் பண்பாட்டின் கல்வி வளத்தினையும்-கலை ஞான நாட்டத்தினை யும் வளர்த்து நிற்பது.

("கலைகள் எல்லாம் அள்ளித் தருபவளே’

-சீர்காழி தனிப் பாடல்- முதலடிகள்)

கிராமியக் - கலைகளிலிருந்து, நுண்கலைச் செல்வங்கள் வரை-அனைத்துமே புத்துயிர் பெறு கின்றன. கலைமகள் விழா, கலைவிழாவாகி விடுகின்றது.

 

:*வடுக்கி அல்லது ப்ம்பை ஒலியுடன் சதங்கை-சிலம்பைஒலிகன்)

நவராத்திரி விழாக் காலங்களில் கிராமிய ஆலய அரங்குகளில் கைச்சிலம்பு ஆட்டம் சிறப் ப்ான இட்ம் பெறும். பல்லவ மன்னர்களின் பேராதரவினைப் பெற்ற இந்தக்கல்ைவடிவம், தமிழ் நாட்டிலே-சிறப்பாக செங்கல்பட்டு மாவட்டத் திலே பெரிதும் போற்றப்படுவது.

(ஏய்.ர்ய். மாட்டுவண்டி ஒட்டும் ஒலிக் குறிப்புகள்)

நவராத்திரி காலத்திலே தமிழ்நாட்டின் நெடுஞ் சாலைகளில் இடம்பெறுகின்ற வண்டிப் பந்தயம். ஆமாம் வண்டிச்சவாரி-மனிதனின்வீரஉணர்வின் வழிப்பிறந்தது. இங்குகலைச்சிறப்புக் குறைவுதான் இருந்தபோதும் தன் ஆற்றலை பல வழிகளிலும் வெளிக்கொணர முயலும் மனிதனின் கலையுணர் வின் பயனே இதுவெனலாம்.

(தம்புராவுடன் பாடல்)

நாடிப்புலன்கள் உழுவார்

கரமும் நயவுரைகள் தேடிக் கொழிக்கும் கவிவாணர் காவும்

செழுங்கருணை ஓடிப்பெருகும் அறிவாளர்

கெஞ்சும் உவந்து கடம் ஆடிக் களிக்கும் மயிலே உன் பாதம் அடைக்கலம்

அனைத்து ஆற்றல்களின் விளக்கத்திற்கும், அறிவின் தெளிவினுக்கும் அன்னை கலைவாணி யின் அருள் வேண்டப்படுகின்றது. உலகின் பண்பாடுகள் பலவும் கல்விக்கெனச் சிறப்பான தெய்வங் களைக் கண்டன.

கிரேக்க பண்பாட்டில் சிறப்பிடம் பெறும் அதீனா?, அவர்களின் கலைத் தெய்வமே

எங்கள் பண்பாடுகளிலும் தனியே இந்து பண் பாட்டில் மட்டுமன்றி, பெளத்த பண்பாட்டிலும் சரஸ்வதி வழிபாடு சிறப்பான இடம்பெறும்,

 

மிறைவுக் குறிப்பு:

பெளத்த தந்திர நூல்கள், மேஜ்ஜ"யூரீ? என்று சரஸ்வதியை வர்ணிக்கின்றன. இவ்வாறு உலகின் செழுமையான பண்பாடுகளிலெல்லாம் சிறப்பான இடத்தினைப் பெறும் சரஸ்வதிக்கு எடுக்கப்படுகின்ற விழாவிலே ரஞ்சனியும் முழுமனதோடு இணைந்து நிற்கின்றாள்.

இந்த இடத்தில் தாழ்மையான ஒரு விண்ணப்பத் தினையும் ரஞ்சனி முன் வைக்கிறாள். நவராத்திரிசரஸ்வதி பூசை என்றதும் வெறுமனே பொங்கலும் கடலையும் என்றில்லாமல், உடற்பயிற்சி அப்பியாசங் கள் நிறைந்த அரங்குகளாய் இல்லாமல்

உண்மைக் கலையுணர்வினை வளம்படுத்தும் விழாக் களமாக அதனைப் பயன்படுத்தவேண்டும்

அதன்வழி எங்கள் ஆற்றல்கள் அனைத்தினையும் முழுமையாக வெளிக் கொணர்வோம்.

 

5. திருவினக்கு வழிபாடு

('கார்த்திகை விளக்கு திருக்கார்த்திகை விளக்கு"

-திரைப்படப்பாடல் அடிகள் சில.)

அறிமுகம் :

கார்த்திகை விளக்கீட்டினைத் தரிசிக்கும் இந்த வாரத்திலே, பண்பாட்டுக் கோலத்திலும் ஒளிவிடும் தீபங்கள். மிகத் தொன்மையான இந்த விழா, எங்கள் பண்பாட்டின் ஆதிக்கோலங்களை, அன்றாட வாழ்வின் கோலங்களை எமக்கு உணர்த்தி நிற்பது.சமூக மாற்றங்களுடன் விளக்கு காண்கின்ற மாற்றங்களே இன்றைய பண்பாட்டுக் கோலங்கள்.

(" "அருட்ஜோதி தெய்வம் எனை."-பாடல் அடிகள் சில)

குரல் :

அருட்ஜோதி வடிவாக இறைவனைக் கண்டது நம் பண்பாடு. இந்து, பெளத்த, ஜைன மரபுகள் அனைத்திலும் தீபவழிபாடு சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றது.

ஒளியாய் இறைவனைக் கண்ட வைஷ்ணவர்கள், விளக்கொளிபெருமாள்” என்றே ஒரு தெய்வத்தைக்கண்டார்கள். தீபப் பிரகாசர் கோயில் ஒன்றும் காஞ்சியிலே விளங்கக் காணலாம்.

(சிட்டிபாபு வீணையில்-மந்திர ஒலி) ஆம்.வேதம் “ஓம்’ என்ற ஒலிவடிவாகவும், அடுத்து ஒளிவடிவமாகவும் இறைவனைக் காண் கின்றது. மனிதனுக்கும் கடவுளுக்குமிடையிலான தூதனாக-ஊடகமாக ‘அக்னி’ சிறப்பிக்கப்படுவதை அங்கே காண்கின்றோம்.

வியப்பிற்கும், அச்சத்திற்கும் தன்னை உட் படுத்தியதுடன் பயனையும் தந்த அக்கினியை ஆதி மனிதன் வணக்கத்துக்குரியதாக்கியதில் வியப்பில்லைத் தான்.

மனித நாகரிகத்தின் தொடக்க காலமாக, அவனது அறிவு வளர்ச்சியின் ஆரம்பமாக விளக்கினை அவன் கண்டுபிடித்த வரலாற்றைக் காண்கின்றோம். மரக் குற்றிகளை, ஒலைகளை எரித்து ஒளி கண்ட மனிதன் கற்குழிகளிலும் பிற இடத்தும் எண்ணெய் ஊற்றி எரிக்கக் கற்றுக்கொண்டான்.

(சித்தார் இசை எழுந்து பின்னணியாக) இந்துப் பண்பாட்டின் தொட்டில் எனப்படுகின்ற மொகஞ்சதாரோ நாகரிகத்திலும், ஏனைய எகிப்து, சுமேரிய நாகரிகங்களிலும் எளிய விளக்குகளை மனிதன் பாவித்தமையை இன்றைய அகழ்வாராய்ச்சி கள் சுட்டும். காலப் போக்கில், பல்வேறு வடிவங் களிலும் அவர்களது பண்பாட்டுச் சின்னமாக விளக்குகள் உருவாகின. கைவிளக்கு, அன்ன விளக்கு, லஷ்மி விளக்கு எனப் பலப்பல. இந்த வரிசை யிலேயே இன்றைய எமது குத்துவிளக்கும் பிறந்தது.

(சித்தார் இசை எழுந்து பின்னணியாக)

கூட்டு வழிபாடாகப் பல பெண்கள் வரிசையில் அமர்ந்து அர்ச்சகர் வழிப்படுத்த பூஜிக்கும். இன்றைய திருவிளக்குப் பூசை பற்றி 50 வருடங்களுக்கு முன்னைய ஆதாரம் எதனையும் ஈழத்திற் பெறமுடிய வில்லை. எனினும் கேரளத்தில் தேவியைத் தீபதுர்க்கா வாக வழிபடும் வழக்கம் முன்னிருந்தே நிலைபெற்று வந்துள்ளது. இதிலிருந்தே திருவிளக்கு பூசை முகிழ்ந் திருக்கலாம். எனினும் இதுபற்றி மேலும் ஆராயப்பட வேண்டும். R

(நாதஸ்வரம் இசை எழுந்து பின்னணியாக)

ஈழத்திலும் இன்று பிரபலமாகியுள்ள திருவிளக்கு பூசை மாங்கல்ய பலனை, மாங்கல்ய பலத்தை முதன்மைப் படுத்தியே நிகழ்த்தப்படுதல் அண்மைய ஆய்வுகளில் அவதானிக்கப்படும்.

தமிழ் நாட்டிலும், ஈழத்தில் குறிப்பாக யாழ்ப் பாணத்திலும் திருமணத்துடன் கலந்துள்ள சீதன முறை, சோதிடப் பொருத்தம் பார்த்தல், நல்ல மாப்பிளை? விழுமியங்கள் என்பவற்றால் பெருமளவில் திருமணங்கள் தடைப்படல், தள்ளிப்போடல் என்பன அண்ணமைக் காலங்களில் அதிகரித்துள்ளன.

சமகால நெருக்கடிகளின் விளைவுகளால் நல்ல மாப்பிளைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப் பாட்டு நிலை இதனை மேலும் அதிகரிக்கச் செய்வது.

இந்நிலையில் திருவிளக்குப் பூசை ஒரு வரப் பிரசாதமாக, திருமண அருளைத் தருவதாக நம்பப் படுகிறது.

நிறைவுக் குறிப்பு :

சமூகப் பிரச்சினைகளுடன் வழிபாட்டு மரபுகள்

காணும் இணைவும், பிரபலங்களும் மேலும் நுணுகி நோக்கப்படவேண்டும். அதன்வழி எமது பண்

பாட்டின் வேர்கள் சிலவற்றினையும் இனங்காண முடியலாம்.

 

6. திரெளபதையம்மன் வழிபாடு

அறிமுகம் !

எங்கள் பண்பாடு தாய்த்தெய்வ வழிபாட்

டிற்குச் சிறப்பான இடந்தருவது. தனித்துவமான இலட்சிய சக்தி கொண்ட தாய்த்தெய்வங்களாக பலவற்றினைத் தரிசிக்கின்றோம்.

இத்தகு தாய்த்தெய்வங்களின் தோற்றத்திலும்,

நிலைப்பாட்டிலும் இதிகாச புராணங்களின் பங் களிப்பு, பிரிக்கமுடியாதது.

கூடவே கிராமிய சமூக வாழ்வில் மக்கள் மத்

தியில் இந்தப் பாத்திரங்களின் நிலைப்பாடும் கூட பிரிக்கமுடியாததுதான்.

இந்த வகையில் எங்கள் பண்பாட்டில் திரெள

பதையம்மன் வழிபாடு எழுதி நிற்கும் சில வண் ணங்களே இன்றைய பண்பாட்டுக்கோலங்கள்.

குரல் :

பாரத கதாபாத்திரம் திரெளபதி; கிராமிய வழி

பாட்டில் திரெளபதை அம்மனாக உயர் இடத்தினைப் பெற்றிருக்கிறாள். கண்ணகி முதலாய பிற கிராமியப்பெண் தெய்வங்களின் வரிசையில் திரெளபதிக்கும் கோயில்கள் எழுப்பப்பட்டன. பாரதக் கதை வாழும் களங்களாக இந்தக் கோயில்கள் விளங்கின; விளங்கு கின்றன.

(மகாபாரத உபன்னியாஸத்திலிருந்து -திரெளபதை சார்ந்த ஒரு பகுதி)

பதினெட்டு நாட்கள் வரையில் நடந்த மகாபாரதப் போரினை நினைவுபடுத்துவதாகவும், நிலைநிறுத்துவ தாகவும் 18 நாள் திருவிழாக்கள்.

இந்தியாவிலே தென்ஆர்காடு, வடஆர்காடு, செங் கல்பட்டு மாவட்டங்களில் திரெளபதியம்மன் கோயில் கள் நிறைந்து காணப்படுகின்றன.

ஈழத்திலே கிழக்கு மா கா ண த் துப் பாண் டிருப்புக் கிராமத்து விளங்கும் திரெளபதையம்மன், உடப்பு திரெளபதையம்மன் கோயில்கள் புகழ் பெற்றவை.

இவற்றிலும்கூட பண்டைய கிராமிய மரபுகள் சற்றும் வழுவாது இன்றும் பேணப்படுகின்ற சிறப்பு பாண்டிருப்பு திரெளபதியம்மன் கோயிலுக்குண்டு.

(உடுக்கை ஒலி எழுந்து பின்னணியாக)

ஊரெல்லாங் கூடி உயிர்க்களை கூட்டும் இந்த 18 நாட்களும், பாரதக்கதை ஆலயச்சூழலை நிறைத்து நிற் கும். பாடலை ஒருவர் பாட, மற்றவர் பயனைச் சொல்ல, ஆவலாய் மக்கள் அங்கே அறிவினைப் பெற்று நிற்பார். தலைமுறை தலைமுறையாக பண்பாட்டின் கையளிப்பு.

 

(தாளஒலிகள்.)

இந்த விழாவின் இறுதிப்பகுதி இனிமையான கலை

நயங்காட்டும். வனவாசம், அர்ச்சுனன் தவநில்ை, தீமிதிப்பு எனவரும் இவைகள் நாடகப்பாங்கானவை. நாடகப்பாங்கென்ன? நாடகமேதான்.

பாரத பாத்திரங்கள் உயிர்பெற்றுக் கதை நடத்த, பக்திச் சூழலில் பண்பாட்டு விழுமியங்களின்பரிமாற்றம் நிகழும்.

(உடுக்கை இசை எழுந்து பின்னணியாக)

இந்தப்பாத்திரங்களைத் தாங்கும் உரிமையும், வழிவழியாக வருவது. மட்டக்களப்பின் பெண் வழிச் சமூக அமைப்பினை உறுதிப்படுத்துவதாய்,பெண்ணடி யாகவே இந்த உரிமை தொடரும்.

பதினெட்டு நாள் திருவிழா உரிமைகளும் பல்வேறு குடிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும். சமூக அமைப்பின் இறுக்க நிலையை, ஆலய விழாவும் உறுதி செய்யும்.

(இடையிசை)

ஆலயச் சூழலான சமூகத்துடன் இயைந்ததாக வழிபாட்டு மரபுகளிலும், விழாக் கோலங்களிலும் கூட வேறுபாடுகளைக் காண முடியும்.

தமிழ்நாட்டின் வட ஆற்காடுமாவட்டத்தில் நிகழும் திரெளபதையம்மன் விழாவின் இறுதிநாளில்பாண்டவர் ஒரு புறமும், துரியோதனன் பகுதியினர் மறுபுறமுமாக நின்று ஒரு கயிற்றினை இழுத்துச் சண்டிையிடும் வழக்கினைக் காணலாம்.

கிட்டத்தட்ட 40 அடி உயர துரியோதனன் உருவம் செய்யப்பட்டு வீமன் மூலம் கதாயுதத்தால் தொடையில் அடித்து முறிக்கப்படும். ஏற்கனவே தயாரித்து வைக்கப் ட்ட போலி இரத்தம் வெளிப்படும் காட்சியைப் பொய் ன மக்கள் காண்பதில்லை. நிஜமான தெய்வ அனுபவ மாக, அவர்களைப்பற்றிக் கொள்ளும் காட்சியாய் விழா அமையும்.

தீமையின் மடிவும், நன்மையின் வெற்றியும் இந்த வழிபாட்டு விழாவூடு, நாடகத்தினூடு நிலை நாட்டப்பட்டது.

நிறைவுக் குறிப்பு :

சமூகமயமாக்கற் சாதனமாக விழாக்கள் காட்டும் கோலங்களின் ஒரு கீற்றாகவே திரெளபதையம்மன் வழிபாட்டு விழாக்கீளைக் கண்டோம். இந்த விழாவின் நாடகநிகழ்வுகள் சடங்குகளாகவே அமைந்து நிற்பன. எங்கள் நாடகக் கலையின் மூலங்கள் பற்றிய தேடலில் இந்தச் சடங்குகள் இன்றியமையாத பல செய்திகளைத் தருவதை இன்றைய ஆய்வுகள் சுட்டும். தொடரும் ஆய்வுகளின் வழி மேலும் பல பண்பாட்டுத் துலங்கல் களை காண்போம்.

 

7. முருக வழிபாடு

அறிமுகம் :

தமிழ்த் தெய்வமெனச் சிறப்பாக ஏற்றப்படும் முருகனுக்குரிய வாரம் இது. ஆமாம், இது கந்த ஷஷ்டிகாலம்.

முருகனாலயங்கள் தோறும் கந்தபுராணப் படிப்புகள், விரதநோன்புகள், நாளைய சூரன் போருக்கீான ஆயத்தங்கள் எல்லாம் நடந்துகொண் டிருக்கின்றன. இந்த வேளையில் முருக வழிபாடு காட்டும் பொதுவான மானுடவியற் கூறுகளை நோக்குவது பொருத்தமானது தானே!

("அறுபடை விடு கொண்ட திருமுருகா."- சீர்காழி திரைப்படப் பாடலடிகள்)

குறிஞ்சி நிலக் கடவுளாக முருகனைக் காண் கின்றது நம் பண்பாடு. ஐவகை நிலங்களாகத் தமிழர் பிரித்து நோக்கிய நிலப்பரப்புகளில், புவி யியல் அடிப்படையில் தொன்மையாகத் தோன்றிய தாக ஆய்வாளர்கள் வர்ணிப்பது இந்தக் குறிஞ்சி நிலம். "சேயோன் மேய மைவரை உலகம்’ என்று தொல்காப்பியம் கூறும், 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்" திரைப்படப் பாடலடிகள்) திருப்பரங் குன்றம், பழனி,சுவாமிமலை,திருச்செந்தூர், திருத்தணி என ஆறுபடை வீடுகளை வர்ணிக்கும் திருமுரு காற்றுப்படை. இவற்றிலே திருச்செந்தூர் தவிர ஏனைய ஐந்தும் மலைகள். இன்றைய திருப்பதி முன்னொருகால் முருகனுக்குரிய இடமாக இருந்ததாகவும் ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

இலங்கையிலே முருகனுக்குரிய சிறப்பானஇடம் கதிர் காமத்துச் சுவாமிமலை. (ஒம்முருகா அரோகரா'மாமியார் விடு திரைப்படப்பாடலடிகள்)

மலை உச்சிகளே மனித இனத்தின், ஆதிமனிதனின் வசிப்பிடமாக இருந்திருக்கிறதென்ற உண்மையை மானுட வியலாளர்கள் மேலும்மேலும் வலியுறுத்துகின்றனர்.

மானுட வரலாற்றில் மலைகள் கொண்ட இந்த ஆதியான சம்பந்தம், அதன் மீதான மதிப்புணர்வுகளை அவனுக்குத் தந்ததில் வியப்பில்லைத்தான்.

முருகன் உறையும் மலைகள் அன்றி சிவனுக்குரியதென சிவனொளி பாதம், இமயமலை என மலைகளை வழுத்தி நிற்கும் மரபு எங்கள் பண்பாட்டில் மட்டும் காணப்படும் ஒன்றல்ல.

(ஆபிரிக்க இசை எழுந்து தேய) உயர்ந்த ஜீவிகளின் புனித உறைவிடமாக மலைகளைக் கருதி வழுத்தும் நம்பிக்கையினைக் கறுப்பு ஆபிரிக்க மக்களிடை இன்றும் பெருமளவிற் காண்கின்றோம்.

('முருகா முருகா யாதுமொருமுருகன் பாடலிலிருந்து)

முருங்கு என்ற ஆபிரிக்க மக்களின் கடவுளின் பெயர் எங்கள் பண்பாட்டின் முருகனுடன் பெருமளவில் ஒத்திருப்பதனை இன்றைய பண்பாட்டு மானுடவியல் ஆய்வுகள் சுட்டி நிற்கின்றன. கிட்டத்தட்ட இருபத் தைந்துக்கும் மேற்பட்ட கிழக்காபிரிக்க இனக்குழுக்களின் தெய்வமாக முருங்கு அல்லது முலுங்கு விளங்கக் காண் கின்றோம்.

(இடை இசை)

சேவற்கொடியோனாக முருகனை இங்கு நாம் காணு கின்றோம். முருங்கு வழிபாட்டியற்றும் ஆபிரிக்க மக்கள், மனித உயிரிகள் அனைத்தையும் முருங்குக் கடவுளின் கோழிகளாகவும், சேவல்களாகவும் கருதிநிற்கின்றனர். இந்த முருங்கு கடவுளின் 'முருங்கு” என்ற சொல்லின் பொருள் அடியைச் சரியானபடி அறிந்து கொள்ளும் முயற்சி இன்னும் வெற்றிபெறவில்லை. இதுவரை நடந்த ஆய்வு களின்படி, ஒளி - பிரகாசம் என்ற பொருளில், நாம் முருகன், முருகு, அழகு என காணுதலை ஒத்த ஒரு நிலையிலேயே அங்கும் முருங்கு எனும் வழக்கு வந்திருக் கலாம் என்று சொல்ல முடியும். -

நிறைவுக் குறிப்பு :

தொடரும் ஆழ்ந்த ஆய்வுகளில் மேலும் பல சமூக மானுடவியல் உண்மைகள் வெளிப்படலாம். அசுரத் தனத்தை மடிக்கும் குறியீட்டு நிகழ்வான குரன்போர் உள்ளிட்ட கந்தஷஷ்டி விரதம் குறிப்பாக ஈழத்து இந்து மரபில் மிகவும் ஆழமான முறையில் வேர் விட்டிருக்கிறது எனப் பண்பாட்டுத்துறை ஆய்வாளர் கள் குறிப்பிடுவார்கள்.

கந்தன் இங்கு தமிழர்களின் கடவுளாக மட்டுமன்றி, *கத்திர காம?தெய்வமாகச் சிங்கள மக்களின் கடவுளா கவும் சிறப்புப் பெறுபவன் என்ற குறிப்பினையும் இங்கு

கருத்திலே கொள்ளலாம்,

 

8. கிருஷ்ண மரபுகள்

("கிருஷ்ணா நீ பேகனே" பாடலடிகள்)

 

கிருஷ்ணன் பற்றிய நம்பிக்கைகள்-புனை கதைகளினூடான ஓர் ஒப்பியற் தரிசனமாக இன்றைய ரஞ்சனியின் பண்பாட்டுக் கோலம் அமைகின்றது.

(கிருஷ்ணா நீ பேகனே - பாடலடிகள்)

குரல் :

தேவகி புதல்வனான கிருஷ்ணனைப் பற்றிய ஆதிக் குறிப்புகளை சாந்தோக்கிய உபநிஷத்திலே சந்திக்கின்றோம்.

யாதவ குலத்தைச் சேர்ந்த ஷத்திரிய போர்

வீரனாகவே பாரதத்தில் கிருஷ்ணனைப் பற்றிய ஆரம்ப கால சித்திரிப்புகளைக் காண்கின்றோம்.

("கிதோபதேசம் - கர்ணன் திரைப்படத்திலிருந்து) வரலாற்று ஆய்வுகள் பலவும் பகவத் கீதையைப் பாரதத்தின் இடைச் செருகலாக, பிற்காலத்துக்குரியதாகவே இன்று பெரிதும் முன்  ைவ க் கி ன் றன. ஆகவே கிருஷ்ணனைப் பற்றிய ஆதிக்குறிப்புகளினூடாகவே இந்த ஒப்பு நோக்கலை நாம் செய்ய வேண்டியவர்களாகின்றோம்.

வடநாட்டிலே கண்ணனுக்கு ராதா - தென்னாட்டிலோ அவனிதயத்திற்கு இனியவளாக பின்னையைச் சந்திக் கின்றோம்.

சிலப்பதிகாரம் கிருஷ்ணனை மாயவனாக வர்ணிக் கின்றது.

கிருஷ்ணன் புல்லாங்குழலிசை பற்றியும், யமுனாநதி தீரத்திலே ராதையுடன் அவன் களிநடம் புரிவதைப் பற்றியும், இலக்கியங்களும் ஏனைய நம்பிக்கைக் கதைகளும் அழகுறப் பேசும்.

சந்திரகுப்தமெளரியன் காலத்து கிரேக்க தூதுவரின் கிருஷ்ணன் பற்றிய குறிப்புகள், கிருஷ்ணன் பற்றிய கதை களின் தோற்றம் - பரவுகை பற்றிய பல முக்கிய தகவல் களைப் பெற உதவுவதாக, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்து சமுத்திரத்தில் வர்த்தகத் தொடர்புகளைள்கிப்து, கிரேக்கம், வட ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் வைத் திருந்தன. பரஸ்பர வர்த்தகப் பயணங்களினூடாகவே கிருஷ்ண, நரசிம்ஹ நம்பிக்கைகளின் பரவுகை நிகழ்ந் திருக்கலாம் என நம்பப்படுகிறது.

கிருஷ்ணனுககும் Christக்கும் இடையிற் கூட பல ஒற்றுமைகள். இந்த ஒப்புமைக் கோலத்தினைப் பெயர் உச்சரிப்பு ஒப்புமையிற் கூடக் காண முடிகிறது இல்லையா? இவற்றுக்கு மேலாக கிருஷ்ணனின் குழந்தைப் பருவம், வனுக்கு ஏற்பட்ட உயிராபத்து என்பவற்றினை யேசு கிறிஸ்துவிற்கு ஏற்பட்ட அனுபவங்களுடன் ஒப்பு நோக்கு கையில் மேலும் பல ஒற்றுமைகளை நாம் காணமுடியும்.

நிறைவுக் குறிப்பு:

கம்சனை கிருஷ்ணனின் மாமனாகக் காணும் எங்கள் பண்பாடு, தாய்வழிக் குடும்ப அதிகாரத் தொடர்ச்சியைக்காட்டி நிற்கும். கிருஷ்ணன்,கம்சனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்து விடுவான் என்ற அச்சமே அவனுக்கு எதிரான சதிகளுக்குக் காரணமாகியிருக் கின்றது. தாய்வழிக்குடும்ப அமைப்பைத் திராவிட பண் பாட்டிற்குரியதாக ஆய்வாளர்கள் பலரும் கூறுவதையும் இங்கு மனதிற் கொண்டு நோக்கலாம். கிருஷ்ணனை கோர்மேக வண்ணனாக’க் கண்டமையும் இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கலாம் என்ற கருத்தும் இன்று முன் வைக்கப்படுகின்றது.

தொடரும் ஆய்வுகளின் வழி, கிருஷ்ண வழிபாட்டு மரபின் மூலங்களும் பரவல்களும் மேலும் தெளிவாகலாம்.

 

9. தெய்வம் ஏறிய கலைகள்

அறிமுகம் :

நாட்டாரியல் நடனங்களின் ஊடாக, எங்கள் பண்பாட்டின் கோலங்களைத் தரிசித்துக் கொண் டிருக்கின்றோம்.

மதத்திற்கும் - கலைவடிவங்களுக்கும் - மக்கள் வாழ்விற்கும் இடையிலான பிரிக்க முடியாத உறவின் தன்மைகளை இந்தக் கோலங்களில் இனங் கண்டு கொள்ள முடிகின்றது.

‘தெய்வம் ஏறிய கலைக்ள்” என்று தனித்து வகைப்படுத்தி, ஆய்வாளார்கள் இன்று நோக்கும் ஆடல் வகையின் கோலங்களாக, இன்றைய பண் பாட்டுக்கோலம் அழகு செய்கின்றது. (மாரியம்மன் பாடல்-உடுக்கை ஒலியுடன் எழுந்து பின்னணியாக) குரல் :

‘சாமியாடல்”, “உருவாடல்’ என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்ற இந்தத் தெய்வமேறிய கலைகள் கிராமிய வாழ்வின் உயிர் நிலைகள்.

அவர்களது இன்பம், துன்பம், நோய், எதிர்காலம் எல்லாம் இந்தத் தெய்வ ஆடலுடன் கலந்து நிற்பன. வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுதலைபெற்று, இன் பத்தைக் காண்பதே உயிரின் இயற்கை நாட்டம். இந்த நாட்டத்தின் வெளிப்பாடே இந்த ஆட்டம். இங்கு தெய்வ அருளே ஆதாரம்.

(இசை மேலெழுந்து பின்னணியாக) தெய்வமேறிய ஆடல்கள், மக்கள் மனங்களில் கலைவடிவங்கள் என்ற இடத்தினைப் பெறுவதற்கு மேலாக, தெய்வ அருள் வேண்டுதல்களாகவே சிறப் பிடம் பெற்று நிற்கின்றன.

இன்றைய நாட்டாரியல் ஆடல் வகைகளின் வேர் களைத் தெரிந்து கொள்ளவும், தெளிந்து கொள்ளவும் இந்தச் சாமியாடல்கள் பெரிதும் துணை செய்கின்றன. (சாமியாடற் பாடல்-உடுக்கை ஒலியுடன் எழுந்து பின்னணியாக) தெய்வக் கதைகளைத்தாள லயத்துடன் பாடிப் பாடி, சாமியாடலுக்கான உணர்வுச் சூழல் உருவாக்கப் படுகின்றது.

அந்தந்தச் சாமியின் ஆற்றலும், சிறப்பியல்புகளும் இந்தக் கதைகளின் வழி வெளிப்படுத்தப்படும். ஊருக்கு ஊர், இடத்திற்கு இடம், இந்தத் தெய்வங்கள் வேறுபடலாம். ஒரே தெய்வம் பற்றிய கதைகள், நோக்குகளிற்கூட இடத்துக்கிடம் வேறுபாடுகளை நாம் காணலாம்.

(உடுக்கை ஒலி எழுந்து பின்னணியாக)

பாடல்களின் வழியாகவும், தாளங்களின் வழி யாகவும் உருவாக்கப்படுகின்ற புதிய சூழல் உணர் வூட்டி நிற்க, ஆடல் ஆரம்பமாகின்றது.

 

குறித்த தெய்வசக்தி அல்லது அருளாவி ஆட்டக் காரரில் ஏறி நிற்பதாக மக்களின் நம்பிக்கை.

அந்த நம்பிக்கை ஆட்டக்காரரின் சமூக மதிப் பையும் உயர்த்தி நிற்கின்றது. மதிப்பு, பயத்தின் அடிப்படையிலும் நிலை பெறுகின்றது.

கிராமிய வழிபட்டு நிலையங்களில், இந்தச் சாமி யாடலே உயிர்நிலை என்ற விடயம் நீங்கள் அறியாத தொன்றல்ல. V,

நவீன சமூக மாற்றங்களின்போது இத்தகு சாமி யாடல்களின் முக்கியத்துவங்களிலும் மாற்றங்கள் விளைந்ததாகப் பொதுவாக நம்பப்பட்டபோதிலும் ஆய்வு ரீதியாக இவற்றின் நிலைப்பாடும் வளர்ச்சி நிலைகளும் ஆங்காங்கே காட்டப்படுகின்றன.

கொழும்பு போன்ற நகர்ப்புற சூழல்களிலும்கூட, சேரிகளையண்டிக் காணப்படும், குட்டித் தேவதை கோயில்களும் அவற்றினை நாடி வருகின்ற பெரிய இடத்துக் கார்களும், சமூகவியல் ஆய்வாளர்களின் அவதானங்களிற் சுட்டிக்காட்டப்படுவன. இந்தக் கோயில்களின் சாமியாடல்கள், சாஸ்திரக் குறிப்புகள் மக்கள் மனங்களில் விளைவிக்கும் திருப்தியின் அளவு கொஞ்சமல்லத்தான்.

நிறைவுக் குறிப்பு :

எங்கள் பண்பாடுகள் பலவற்றிலும் இத்தகு சாமி யாடல் நிலைகளைப் பரக்கக் காணலாம்.

சிறப்பாக ஈழத்தின் கிழக்குப் பிரதேசம் இந்த வகையான ஆய்வுகளின் ஆய்வுகூடம் என வருணிக்கத் தக்கது.

ஆய்வுள்ளங்களுக்கு இது சமர்ப்பணம்.

 

10. காவடி

அறிமுகம் :

கோவடி மேளம் கலகலத்துப் பேசும்’ என்று ஒரு பழமொழி. தன் 50வது அரங்கு என்ற ஆனந் தத்தில் ரஞ்சனி மகிழ்ந்து நிற்கும் இந்த வேளை யிலே, இன்றைய பண்பாட்டுக் கோலத்திலும் எங்கள் பண்பாட்டுச் செல்வமான காவடி கல கலத்து நிற்கின்றது.

எங்கள் பண்பாட்டுச் செல்வங்களிற் பலவும், ஆலயங்களை மையமாகக் கொண்டு உருப்பெற்று வளர்ந்த வரலாறு, நீங்கள் அறியாத ஒன்றல்ல.

இன்றும் வாழும் இந்தப் பண்பாட்டுச் செல் வம், மக்கள் வாழ்வின் நம்பிக்கைகளில் பெருமிடம் பெறுகின்றது.

அதன் அழகுக்கோலங்களை, சமூக பண்

பாட்டு முக்கியத்துவங்களை, சுருங்கத் தரிசிக் கின்றது இன்றைய பண்பாட்டுக் கோலம், "

 

குரல் :

தமிழ்ப் பண்பாட்டிலே முருக வழிபாடு பெறும் முக்கியத்துவம் நீங்கள் அறியாததொன்றல்ல.

குறிஞ்சி நிலக் கடவுளாக குமரனை அன்றிலிருந்து இன்றுவரை போற்றி வணங்கி வந்த வரலாற்றினை நம் கிராமிய, சங்க இலக்கியச் செல்வங்களிலும் தரிசிக்க

முடியும்.

காவடி, முருகனை மையமாகக் கொண்டு, அவன் ஆலயங்களைக் களமாகக் கொண்டு வளர்ந்த, வாழ் கின்ற நிலையினை இன்றும் நாம் உறுதி செய்து கொள்ள முடிகிறது.

(கதிர்காம காவடிப்பாடல் ஒன்றில் சில அடிகள்)

ஈழத்துமுருகனாலயங்களான கதிர்காமம், செல்லச் சந்நிதி, நல்லூர், மாவிட்டபுரம் என காவடிகள் நிறைந்து கோலமிடும் களங்களை இங்கு நினைவிற் கொள்ளலாம். தமிழகத்திலும் பல காவடிக் களங்கள். இந்த ஆலயங்களின் முக்கிய திருவிழாக் காலங்களில் மக்கள் கூடி காவடி எடுக்கின்ற காட்சிகளை நாம் காண்கிறோம். தங்கள் விருப்பங்களை நிறைவு செய்ய வேண்டியோ, அவ்வாறான வேண்டுதலின் நிறைவுக்கு நன்றி சொல்லும் முகமாகவோ இன்று காவடி எடுக்கப் படுகின்றது.

(காவடி இசை எழுந்து பின்னணியாக)

காவடியின் தொடக்க நிலையினை ஆய்ந்த அறிஞர் பலரும் காவுதடி" என்ற பிரயோகத்திலிருந்தே காவடி? என்பது பிறந்தது என்ற கருத்தினை முன்வைக்கின் றனர். இங்கு குறிப்பிடப்படும் "காவுதடி என்பது தமது கிராமிய விளை நிலங்களின் செல்வங்களை, இறைவ னுக்கு அர்ப்பணிக்கும் பொருட்டாக எடுத்துச் செல்லும் போது, பயன்படுத்தப்படும் காவுதடிகளையே குறித்து நிற்கிறது.

"வேலா வேலா விறகுதடி

வேலன் பெண்டில் காவுதடி"-என்ற கிராமியப் பாடல் அடிகளில் இந்தக் கருத்து உறுதிபெறக் காண் கின்றோம்.

மயிலாப்பூர் கபாலீச்சுரர் ஆலய தண்டாயுதபாணி சந்நிதியின் இருமருங்கும் விளங்கும் காவுதடி, காவடி பிரதிமைகளும் இதனையே சுட்டி நிற்பன.

('பால்காவடி பன்னீர்க்காவடி"-ரமணியம்மாள் பாடல்)

காலமாற்றத்தில் காவடியில் பலஅழகுக் கோலங்கள் சேர்ந்தன; வகைகளும் பிறந்தன. அடியவரின் பக்தி எல்லைகளுக்கு தக, செதிற் காவடி, பறவைக் காவடி போன்றனவும் தோன்றின. வேறுபாடுகளின் மத்தியி லும் சில பொது நியதிகள் தொடர்ந்தன. காவடிகளின் அளவு, அமைப்பு, பாடல் அமைப்பு, பயன்படுத்தும் முக்கிய வாத்தியங்கள் என இவை நிலைத்தன,

தமிழிலக்கியப் பரப்பில் "காவடிச்சிந்து இனிய தோர் இடத்தினைப் பெற்றது.

 

புள்ளிக்கலாய மயிற் பாகன்-சக்தி புதல்வனான கணயோகன்-மலை போலத்தான் திரண்டு கோலப் பன்னிரண்டு வாகன் கல்விவேகன்" என்பது போலப் பல அழகுதமிழ்ப்பாடல்கள் பிறந்தன

(மாமியார் அல்லது பைலட் பிரேம்நாத் திரைப்பட காவடிப்பாடலடிகள்)

கால ஓட்டத்தில் புதிய புதிய பல பாடல்கள். புதிய புதிய ஊடகங்களின் ஊடாகவும் "காவடியின்காட்சிகள் விரிந்தன. குறிப்பாக நவீன சினிமா ஊடகம் அடிக்கடி கதிர்காமக்காவடியைக் காட்டத் தவறவில்லை. தென் னித்தியாவிலிருந்து வந்து இங்கு எடுக்கப்பட்ட அண் மைக்கால்த்திரைப் படங்களின் மையமாகக் கதிர்காம மும், கதிர்காமக் காவடியும் அமைந்து நின்றமை இதன் ஜனரஞ்சகப் பெறுமதியைக் காட்டிநிற்கும்.

நிறைவுக் குறிப்பு :

கதிர்காமத்தைப் பொறுத்தவரை இன்று இது தமிழர் பண்பாட்டுக்குரியதென்ற எல்லை கடந்து சிங்கள மக்க ளுடனும் கலந்திருக்கிறது. அது மட்டுமின்றி நவீன துள்ளிசையின் மாற்றங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது இவையனைத்துக்கும் மேலான ஒரு முக்கியசமூகத் தேவையையும் அது நிறைவு செய்து நிற்பதனை இன்றைய சமூக மானுடவியலாளர்கள் அவதானிக்கின் றார்கள். சமூகக்கட்டுப்பாடுகளின் பிடியில்லாமல் ஆண் களும், பெண்களும் கலந்து ஆடி மகிழ்ந்திடும் களமாக வும் கூட அங்கே காவடியாட்டம் விளங்கி நிற்கின்றது.

 

11. கரகம்

அறிமுகம் :

இன்று எங்கள் பண்பாட்டின் அழகானதோர் பகுதிக்கு வந்திருக்கின்றோம்.

கிராமிய கலை வடிவமான கரகத்தின் வழி, கிராமியப் பண்பாட்டு அம்சங்களைத் தரிசிக்கப் போகின்றோம். தெய்வ வழிபாடுகளுடனும், சடங்கு ஆசாரங்களுடனும் பின்னிப்பிணைந்தவை எங்கள் கலை வடிவங்கள். தனி மனித திருப்திக்கு மேலாக சமூக கூடல், ஒருங்கிணைவுக்கும் களமாக அவை அமைகின்றன.

இதோ! கரகத்தில் கணிகின்ற கிராமியப் பண்பாடு.

குரல்

இசையும் நடனமும் இணைந்து கலந்த நம் பண்பாட்டின் வடிவம் இது.

நீர் நிறைந்த சிறுகுடம் ஒன்று. அதன் வாயினை மூடி ஒரு தேங்காய். அதனைச் சுற்றிப் பூ அலங்காரம், உச்சியில் எலுமிச்சம்பழம் ஒன்றும் வைக்கப் பட்டிருக்கும்-அதுதான் 'கரகம்?. (கரக இசை மேலெழுந்து பின்னணியாக) கரகம் என்கின்றபோதே அதன் பிறப்பிடமான, பின்னணியான எங்கள் கிராமிய சூழலும் நம் நினைவு களில் விரிகின்றது. கூடவே எங்கள் பண்பாட்டின் செழுமையும் துலங்கி நிற்கின்றது.

மக்கள் கலைகள் என வர்ணிக்கப்படும் கிராமியக் கலைகள், மக்களின் அன்றாட வாழ்விற் பிறந்தவை. அவர்களது நம்பிக்கைகள், சடங்காசாரங்கள், போன்றவைதானே அவர்களின் கலைகளினது ஊற்றுக் கள்; உயிர் மூச்சுக்கள்.

(மாரியம்மன் பாடல்) கிராமத்துத் தேவதைகளிற்கு தலைவி மாரியம்மா - அம்மனுக்குக் கோபம் வந்துவிட்டால்.

ஊரிலே நோயும் நொடியும் பெருகிவிடும் - எல்லாமே அழிந்து விடும்‘அம்மை நோய்? என்று வைசூரி நோய்க்குப் பெயரும் தந்து அவள் கருணையாலேயே அது மாறும் எனவும் கொண்ட நம்பிக்கையிற் பிறந்தது இந்தப் பாடல், உச்சியிலே போட்ட முத்தை - மாரி உடனே எறக்கிடுவாள் முகத்திலே போட்ட முத்தை - மாரி முடிச்சா எறக்கிடுவாள் கழுத்திலே போட்ட முத்தை-மாரி காணாமல் எறக்கிடுவாள் தோளிலே போட்ட முத்தை - மாரி துணிவா எறக்கிடுவாள் கரகமெடுத்து அம்மையின் சினந்தணிய வேண்டி யாடும் மரபினை இன்றும்கூட நம் கிராமங்களில் காண முடியும்.

 

ஈழத்தின் கிராமியப் பகுதிகளிலெல்லாம் இந்தக் கலைவடிவத்தின் உயிர்ப்பினைக் காண்கிறோம். தமிழ்நாட்டிலோ பரந்து சிறந்து நிற்றலைக் காணலாம். கேரளத்தில் இது குட்டத்து ஆட்டம் என புகழ்பெறும்.

(கரக இசை)

உடுக்கை, உருமி, தமுக்கு போன்ற பின்னணி வாத்தியங்கள் ஒலிக்க கரக ஆட்டம் ஆரம்பமாகிறது. பெரும்பாலும் பொது இடம் ஒன்றிலிருந்து புறப்பட்டுக் கோவிலை நோக்கிக் கரகாட்டம் செல்லும். அங்கே கிராமம் முழுவதுமே ஒருங்குகூடி உறவாடும்.

தெய்வ வழிபாட்டுடன் இணைந்த கரகாட்டம் சக்திக் கரகாட்டம் எனப்படுகின்றது.

“ஒண்ணாங்கரகமடி எங்க முத்துமாரி ஒசந்த கரகமடி எங்க முத்துமாரி ரண்டாங் கரகமடி எங்க முத்துமாரி ரெத்தின கரகமடி எங்க முத்துமாரி". சக்திக் கரகாட்டம் பல்வேறு நம்பிக்கைகளின் குறியீடாகக் கிராமத்து இதயங்களில் உறைந்திருப்பது.

(கரக இசை மீண்டும் மேலெழுந்து பின்னணியாக)

கிருஷ்ணன், வனசூரனை வெற்றி கொண்டதன் நினைவாகவே கரகாட்டம் நிகழ்வதாகக் கேரளத்து நம்பிக்கை. இந்நடனத்தின் தொன்மைக்குச் சான்றான பல பண்டைய சிலைகளை கேரளத்தில் நாம் காண (Մ)ւգաւb.

வருணபகவானுக்குரிய கடல்களும் புனித ஆறு களும் கரகத்தில் அடங்கியிருப்பதாக ஐதிகம். ஆட்டத்தின் போது குடத்து நீர் தங்கள் தலைமீது பட்டு விட்டால்.

தலைமுறை தலைமுறையாகப் புனித நீராடிய பயனைக் கண்டதாக நம்பிக்கை.

தெய்வ வழிபாட்டுடன் இணைந்த கரகாட்டத்தினை விட, தனியே கலை வடிவமாக அல்லது வருவாய் தருகின்ற தொழிலாகவும் இது ஆடப்படுகிறது. இது ஆட்டக்கரகம் - எங்கு வேண்டுமானாலும் ஆடக் கூடியது.

ஆண்களுக்குரியதாக ஒரு காலத்தில் கருதப்பட்டு, ஆண்கள் மட்டுமே ஆடி வந்த ஆட்டத்திலே இன்று பெண்களின் பங்குகொளலும் அதிகரித்துள்ளது.

ஆரியக்கூத்தாடினாலும் காரியத்திலே கருத்தாக இருக்கிறான் என்பார்கள். கரகம் விழாதபடி சமநிலை பேணி ஆடும் கரக ஆட்டக்காரனைப் பார்த்துத்தான் இந்தக் கூற்றுப் பிறந்தது போலும்.

ஆனாலும், இந்த ஆட்டத்தின் பக்தி அழகுகள் கலைநயங்களையெல்லாம் குலைத்து, வெறும் வித்தை யாக்கும் அண்மைக்கால முயற்சிகள் மகிழ்ச்சிதரக் கூடியன அல்ல என்பதையும் இங்கு வருத்தத்துடன் குறிப்பிடத்தான் வேண்டும்.

 

12. வசந்தன்

அறிமுகம் :

எங்கள் பண்பாட்டின் அழியாத கோலங் களாய் கிராமங்களின் கலை வண்ணங்கள் ஒளிர் கின்றன. வசந்த நினைவுகளாய் இன்பந்தருகின்ற வசந்தன் பாடல்கள் ஒலிக்கின்றன.

காவடி, கரகம், கும்மி, பொம்மலாட்டம் என அமையும் கிராமிய நடனங்களிலே பழமை மிக்க வசந்தன் பாடல், எங்கள் பாரம்பரிய கலை மரபின் பெரும் சொத்து.

மனித உணர்வுகளின் வேளிப்பாடாகி, வாழ் வின் பிரிக்க முடியாததோர் அம்சமாகி, எங்கள் கிராமங்களுக்கு உயிரூட்டி நிற்கின்றது வசந்தன். எங்கள் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்து அது நிற்கின்றது.

(வசந்தன் பாடல் பின்னணியில்)

குரல் :

தமிழகத்தலே, வசந்தன் கோலாட்டம் என்றே வழங்கப்படுகின்றது. ஈழத்து வசந்தனிலே பெரும்பாலும் ஆண்களே பங்கு கொள்கின்றனர். தமிழ் நாட்டிலோ இது பெண்களுக்குரியதாக, மெல்லியல் பினைப் பெறுகின்றது.

கேரள நாட்டிலே கோல்களி என வழங்கப்படும் வசந்தனானது, ஆந்திரா, கன்னடம் போன்ற பிற மாநிலங்களிலும் கலைநயம் விளங்க வாழ்கின்றது. அந்தந்த பிரதேசங்களுக்கான தனித்துவத்துடன், அடிப்படையான கிராமியக் கலைவடிவின் ஒத்த, இயல்புகள் விளங்க, வசந்தன் சிறப்புப் பெறுகின்றது.

(சிங்கள லீ-கெலிய பாடல்) சிங்கள தமிழ் மக்களின் பண்பாட்டுக்கோலங்கள், ஒன்றினை ஒன்று தழுவிவந்திருக்கின்றன. நீங்கள் கேட்கின்ற இந்தப் பாடல், சிங்கள கிராமிய மக்களின்

லீ - கெலிய.

ஆமாம்! லீ என்றால் - கோல் கெலிய என்றால் - விளையாட்டு.

இந்துக் கடவுளரை வேண்டி ஆரம்பிக்கும் தமிழ் வசந்தன். சிங்கள வசந்தனோ புத்தபெருமானையும், தம்மம், சங்கம் என்பவற்றினையும் வணங்கி ஆரம்பிக் கின்றது. ஆடல் முறையிலும் பாடற் பொருள்மரபிலும் பல ஒற்றுமைகள்.

(இஸ்லாமிய கிராமிய பொல்லடிப் பாடல்)

சிங்கள தமிழ்மக்களிடையே காணப்படும் இந்தக் கலைவடிவ ஒற்றுமைகளில் ஈழத்து முஸ்லிம் மக்களும் கலந்து கொள்கின்றனர். இஸ்லாமிய மக்களின் கலாசார வாழ்விலும் பொல்லடிப் பாடல்கள் என்ற பெயரிலே வசந்தன் வளம் சேர்க்கின்றது.

கிராமிய வாழ்வின் ஒத்த இயல்புகளும், மனித மனங்களின் பொதுவான உணர்வுகளும், ஒன்றுபடும் சமுதாயத்தின் உயர்வான எண்ணங்களும் கலந்து கணிகின்ற பாங்கினை வசந்தன் வடிவிலே காண் கின்றோம். (வசந்தன் பாடல்- அலவத்தை விர பத்திரர் வசந்தன் ஒலிப்பதிவு) கிறைவுக் குறிப்பு:

நேயர்களே! எங்கள் பண்பாட்டின் பல்வேறு அம்சங்களில் இத்தகு ஒருமைப்பாட்டின் சின்னங்களை நாம் காணமுடியும்.

நம்பிக்கை ஒளியாகி நாளை மலரவிருக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம் கூட, இந்நாட்டின் இன இசைவு இனிமையைத்தானே உணர்த்தி நிற்கின்றது. இந்தக் கிராமியக் கலை காட்டும் இனிமை, யதார்த்த, வாழ்விலும் பிரதிபலிக்குமா?

 

13. வேட்டை நடனங்கள்

அறிமுகம் :

*வேட்டை நடனங்கள் அல்லது விலங்குப் போலிகள், வளமை, மந்திரம், நோன்புசார் நடனங்கள், தொழில் நடனங்கள், பருவகால நடனங்கள், இதிகாச நடன, நாட்டிய நாடகங்கள், வழிபாட்டு நடனங்கள், வழி வழி வந்த நாட்டிய் நாடகங்கள்? என எங்கள் பண்பாட்டின் நாட்டாரியல் நடனக் கலையினை வகைப்படுத்து வார் கபில வத்ஸாயன்.

பொதுவான இந்த வகைப்பாட்டிலே, முதலாவ தாக வத்ஸாயன் குறிப்பிடும் வேட்டை நடனங் களை தொழில் நடனங்களிலிருந்து பிரித்து நோக்கமுடியுமா?-அது அவ்வளவு பொருத்தமான தல்ல என்ற கருத்தினை ஆய்வாளர்கள் பலரும் முன்வைக்கிறார்கள். இந்தப் பிரச்சினையை ஒரு புறம் வைத்து,எங்கள் பண்பாட்டின் செழுங்கலைப் பரப்பில், இந்த வேட்டை நடனங்கள் காட்டும் வண்ணங்களை இன்றைய பண்பாட்டுக் கோலங் .களாய்க் காண்போம்.

(வேட்டை நடன இசை)

குரல் :

உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற நடனங்களில் வேட்டை நடனங்களும் எம் சிறப்பான கவனத்தை ஈர்த்து நிற்கின்றன. விலங்குப் போலிகள் என்றும் இது அழைக்கப்படுவதுண்டு. விலங்குகளைப் போல பாவனை செய்தலும், வேட்டைக் குறிப்புகளைக் காட்டி நடித்தலும் இங்கு சிறப்பாக மேற்கொள்ளப் படுகின்றன.

விலங்குகளை மயக்கும் ஆற்றலும், கவரும் உத்தி களும் இந்நடனங்களிலே துல்லியமாக வெளிப்படுத்தப் படுகின்றன. சில வேளைகளில் ஆவிகளை ஆற்றுப் படுத்தும் நம்பிக்கையுடனும் இத்தகு நடனங்கள் ஆடப் படுகின்றன.

மனிதன் தன் சூழலினை வென்று தப்பிக்கொள்ள விலங்குகளுடன் போராடவேண்டிய ஒரு நிலை.ஆமாம்! தன்னைத் தாக்கும் விலங்குகளிலிருந்து தப்பிக் கொள்ள வேண்டும். கூடவே தன் உணவுக்காக அவற்றினைக் கொள்ளவும் வேண்டும். இந்நிலையி லேயே வேட்டையாடலை அவன் மேற்கொள்ள வேண்டி யிருந்தது.

(வேட்டை நடன இசை மேலெழுந்து பின்னணியர்க)

வேட்டையாடலைத் தொடர்ந்து, அது சார்ந்த நடனக்கலைக் கோலங்களும் பிறந்தன. விலங்கு வேட்டைக் காட்சிகள் உலகின் பண்பாடுகள் பல வற்றிலும் சிறப்பானதோர் இடத்தினை பெற்றுக் கொண்டன.

 

(வேடர்களின் அம்பு நடன இசை)

எங்கள் நாட்டு வேடர்களின் அம்பு நடனத்திலே அருமையான காட்சிகளைக் காணமுடியும். எங்கள் குறவஞ்சி நாடகங்களிலும் வேட்டைக்காட்சி சிறப்பாகச் சித்திரிக்கப்படும். பறவை வேட்டையினை அடிப்படை யாகக் கொண்டது குளுவநாடகம்; இது புனிதத்தன்மை கொண்டதாகச் சிறப்பிக்கப்படுவது. இதிலே வருகின்ற குளுவன், சிங்கன் ஆகிய இருவரும் புனிதர்களாக சித்திரிக்கப்படுகின்ற சங்கதியை உங்களில் பலர் அறிந்திருக்கலாம்.

தமிழ் - குளுவ நாடகத்துடன் ஒப்பிடத்தக்கதாக ஆபிரிக்க ‘யாமசெளக்ரோ அன்ரிலோப் நடனத்தைக் காண்கின்றோம். இங்கும் இரு புனித வேட்டையரைச் சந்திக்கலாம். தென்னாபிரிக்க நாடுகளிலும் வேட்டை சிறப்பானதோர் கலை நிகழ்ச்சியாக இடம்பெறு கின்றது.

நிறைவுக் குறிப்பு :

பொழுதினை இனிதாக்கி மகிழ்வூட்டி நிற்கும் அதே வேளையில், வேண்டிய தொழிற் பயிற்சியாகவும் வேட்டை நடனம் அமைந்து சிறக்கின்றது. பல்வேறு இனக்குழு மக்களிடத்தும், அவர்களது விழாக்களில் இது முக்கியத்துவம் பெற, இவையே அடிப்படைகள், தாளமும் அசைவும் இசைந்து உடலுக்குப் பயிற்சிதர, தொழில்நுட்பமும், தொழிற்தேர்ச்சியும் வளர்கின்றன. கூடவே கலையுணர்வும், கலைவளமும் பெருகுகின்றன. வாழும் சூழலுடன் இசைந்து மகிழ்ந்திட மனிதப் பண்பாடு கண்டதோர் மருந்தாய், வேட்டை நடனம் அழகுக் கோலமிடுகின்றது.

 

14. பூப்பு

அறிமுகம்

புதிய பருவத்தின் நுழைவாயிலாக பூப்படை தலைக் காணும் நம் பண்பாடு, அதற்கென அமைத் துள்ள, நிறுவன ரீதியான சடங்குகள், சம்பிர தாயங்கள் பல. பூப்படையும் காலத்து இளமுள் ளங்களில் விளைகின்ற உளவியற் குழப்ப நிலை மைகளை மிக விரிவாக எங்கள் உளவியல் நூல்கள் விவரித்து நிற்கின்றன. ருத் பெனடிக்ற் குறிப் பிடுவதுபோல, குமரப்பருவம் குடும்பத்திலே ஒரு புரட்சியை, மாற்றத்தை விளைவிக்கும் காரணி யாகக் கொள்ளப்படக் காண்கின்றோம். பரு வத்தின் சமூக இயல்பு இன்றைய சமூக மானுட வியல் ஆய்வுகளில் வெளிப்படுத்தப்படும்.

ரஞ்சனியின் பண்பாட்டுக் கோலத்திலும் இன்று பூப்புப் பற்றிய குறிப்புக்களே!

(ஆஸ்திரேலிய புல்றோவர் இசை)

குரல் :

ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் பூப்புச் சடங்குகள்

முற்றிலும் ஆண்களுக்கானதாகவே இருக்கின்ற சங்கதி உங்களிற் பலருக்கு வியப்பைத் தரலாம். இந்தச்சடங்குகளின்போது புல்றோவர் எனும் கருவி முக்கிய இடம் பெறுகின்றது. சடங்கின்போது புல்றோவர் ஒலி எழுப்பப்படுகின்றது. இந்த ஒலி பெண்களுக்கு விலக்கப்பட்டதாக இருக்கின்ற தன்மையை இங்கு முக்கியமாக நாம் நோக்கவேண்டும்.

ஆமாம்! இந்த ஒலியை யாராவது ஒரு பெண் கேட்டுவிட்டால். அவ்வளவுதான்! அவள், உடனே கொல்லப்பட்டு விடுகிறாள்.

உண்மையில் இங்கு புல்றோவர் ஒரு குறியீட்டு வெளிப்பாடுதான். ஆண்களின் தன்னிறைவும், சமு. தாயத்தின் முழுமையான பொறுப்புணர்வும் இங்கு புலப்படுத்தப்படுகிறது. பெண்கள் சடங்குகளை அறியக்கூடாது எனும் நிலை.

(வட அமெரிக்க கிராமிய இசை)

வடஅமெரிக்கச் சடங்குகளிலும்கூட ஆண்களின் முக்கியத்துவம்தான். இங்கு குமரப்பருவச் சடங்கு, போர் சார்ந்த மாயாஜாலக் கோலங்களாக வெளிப் படுத்தப்படுகிறது. தங்களைத் தாங்களே துன்புறுத்தி போர் முறைகளுக்கான ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

அப்படியானால் பிற பண்பாடுகளில் பெண்களுக் கென்றே சடங்குகள் இல்லையா? ஆண்களுக்கு மட்டும் தானா என நீங்கள் உங்களுக்குள் கேட்டுக்கொள்வது எங்களுக்கும் கேட்கின்றது. பருவத்தின் சமூக உரிமைகள் அதிகமாக இருக்கின்ற நிலையில், ஆண்களின் குமரப்பருவத்தில் அதிக கவனம் ச்ெலுத்தப்படுவதுஉண்மைதான். அவ்வாறன்றி ஆண் களுக்கும் பெண்களுக்கும் ஒத்தவிதமான சடங்குகளும்

சமூக முக்கியத்துவமும் வழங்கப்படுகின்ற நிலைமை களும் இல்லாமலில்லை.

கிழக்காபிரிக்க ஏரிக்கரை மக்களான நந்தி? (Nandi) இனத்தாரிடை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒத்த பூப்புச் சடங்குகளைக் காணமுடியும். இங்கு ஏற்கனவே சடங்குகளைத் தாண்டியவர்களினால், ஏனையோர் துன்புறுத்தப்படுகின்றனர். இருபாலாரும் தங்கள் காதலர்களின் ஆடைகளை அணிந்துகொள்வது இங்கு குறிப் பிடத் த க் கது. சடங்கின்போதான துன்புறுத்தலின்போது துயர வெளிப்பாடு தவிர்க்கப்பட வேண்டும். ஆமாம், முகம் மலர இதனைத் தாங்க வேண்டும். அப்பொழுதுதான், வீரமும் திருமணத் தகுதியும் எய்தப்படுகின்றன. பரஸ்பரம் ஆடைகள் மாற்றப்படுகின்றன; திருமணம் இனிதாய் நடக் கின்றது.

நிறைவுக் குறிப்பு :

பல்வேறு பண்பாடுகளிலும் முதிர்ந்தோர் தன் மையை எய்தும் நுழைவாயிலாகவே இந்தச் சடங்குகள் அமைதலை இவற்றிலிருந்து அறியமுடிகிறது. அந்தந்தப் பண்பாடு, முதிர்தன்மையாக எதைக் காண்கின்றது என்பதனைப் பொறுத்துச் சடங்குகளும் வேறுபடும். இவ்வாறான பண்பாட்டின் கோலங்களை அவ்வப்போது பார்ப்போமே!

 

15. சேவை மணம்

அறிமுகம் :

திருமணமும் குடும்பமும் காட்டும் வேறுபடுந் தன்மைகள் பல. திருமண நிறுவனத்தைப் பொரு ளாதார நிறுவனமான சீதனம், ஆட்கொண்டு நிற் கின்றமையை பண்பாட்டுக்கோல வேளையில் அவ்வப்போது பார்திருக்கின்றோம். இன்றும் இந்நிறுவனம் சார்ந்த சேவை மணம் பற்றிய சில கோலங்களே.

குரல் :

பெண், சீதனம் கொடுத்து தன்னையும் கொடுக் கின்ற நமது இன்றைய நிலைமை ஒருபுறமிருக்க, பெண்ணை விலைகொடுத்து வாங்குகின்ற மரபினை உலகின் ஆதிப் பண்பாடுகள் பல காட்டி நிற்பதனை அறியமுடிகிறது.

(ஆபிரிக்க இசைக் கோலம்)

ஆபிரிக்காவில் பெண்கள்அடிமைகளாக-பொருட் களுக்குச் சமானமாகக் கருதப்பட்ட நிலையினையே இது பிரதிபலிப்பது. 1927ம் ஆண்டின் ஆபிரிக்க ஆதிவாசிகள் நிர்வாகச் சட்டம் இவ்வழக்கினை அங்கீகரித்து நின்றமை லெவினின் (Lewin) ஆபிரிக்கச் சட்ட ஆய்வுகளில் சுட்டப்படும்.

 

ஐந்து பெண் பிள்ளைகளையும் ஒரு ஆணையுங் கொண்ட ஒரு குடும்பம், ஐந்து ஆண்களையும் ஒரு பெண்ணையுங் கொண்ட ஒரு குடும்பத்தைவிட அதிஷ்டமானதாக இங்கு அமைந்திருந்தது. ஆமாம்! ஐந்து ஆண்களுக்கும் பெண்களை வாங்கும் நிலை பொருளாதாரத்தைப் பாதிப்பதுதானே.

என்ன? ஆபிரிக்க நீக்கிரோ ஆதிவாசிகள் மத் தியில் பிறந்திருக்கலாம் என்று யோசிக்கின்றீர்களா? பெண்களைப் பெற்ற நம் பெற்றோரிடம்தான் கேட் கின்றோம். நீங்கள் உங்கள் ஆண்பிள்ளைகளுக்காகச் சீதனத்தை வாங்கும் நடைமுறை இருக்கின்றவரை, உங்கள் பெண்பிள்ளைகளுக்காக நீங்கள் சீதனத் தைக் கொடுக்க வேண்டிய நிலையும் தொடரும் என்பது பற்றி நீங்கள் சிந்திப்பதில்லையா?

ஆதிச் சமூகங்களிடை காணப்பட்டதாக மானுட வியலறிஞர்கள் சுட்டிநிற்கும் சேவைமணம் கூட நம் பண்பாட்டில் காணப்பட்டமை இந்த இடத்தில் நம் ஆர்வமான கவனத்தைப் பெறலாம்.

பெண்வீட்டில் உழைத்து, அந்த உழைப்பின் வழி திருமணம் செய்த மரபினை அகநானூற்றின் இந்தப் பாடல் பிரதிபலிக்கும்.

(இசையின் பின்னணியில்)

அசையின எளிருந்த ஆய்தொடிக் குறமகள்

கலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும்

பெறலருங் குரையளாயின் அறங் தெரிந்து

நாமுறை தேஎம் மரூஉப் பெயர்ந்தவனொரு

இருநீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுந்தும்

பொருநீர்க் குட்டம் புனையொடு புக்கும்

படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பில்

தருக்குவன்கொல்லோ தானே விலைகொடுத்துப் பெண்களை வாங்கிய கால கட்டத்திற்கு முன்னைய ஒரு நிலையாகவே இவ் வாறான சேவை மண முறையினை மானுடவிய லாளர்கள் சுட்டுகின்றனர். தென்இந்திய பழங் குடியினர் சிலரிடை இன்றும் இம்மணமுறை நிலவு மாற்றை எல். ஏ. கிருஷ்ணஐயரின் ஆய்வுகள் சில காட்டி நிற்கும்.

நிறைவுக் குறிப்பு:

நவீன வாழ்வில் சில 'உயர் இடங்களில் பெருஞ் சொத்துகள், தொழில் நிறுவனங்கள் இருக்கின்றநிலை யில் அவர்களது குடும்ப வட்டத்தைச் சேர்ந்த அல்லது வெளியிலுள்ள கெட்டிக்கார இளைஞரைத் தமது தொழில் நிறுவனத்திலேயே வேலைக்கு அமர்த்தி பெண்ணை மணம் செய்து கொடுத்துவிடுகின்ற நிலை மைகளில் சேவை மணமுறையின் சில கூறுகளைக் காணமுடியும் என்கிறீர்களா?

எப்படியோ நமது திருமணமுறைகளில் நாம் சிறப்பித்துப் பேசிக்கொள்ளும் மன இணைவு?- 'மன ஒட்டல்’ என்ற அம்சத்தினைவிட பண இணைவு? -பண ஒட்டல்’ என்ற நிலைமைகளே மேலோங்கி நிற்றலைக் காண்கிறோம். அர்த்தமில்லாத இந்த அவலங்கள் என்று முடியும்?

பெயர்கள்

என்ன பேரு வைக்கலாம்’-திரைப்படப்பாடலடிகள்

அறிமுகம்:

குழந்தை பிறப்பதற்கு முன்னரே பெயர் பற்றிய திட்டமிடல்களும் தொடங்கிவிடுகின்றன. சட்டரீதியான அங்கீகாரத்தினை இன்று பெற்று நிற்கும் இந்தப் பெயர்கள், சமுதாய வாழ்விற் காணுகின்ற மாற்றங்கள்-காட்டுகின்ற தோற் றங்கள் எல்லாம் பண்பாட்டின் தனித்துவக் கோலங்கள். இந்தச் சட்ட ரீதியான இயற் பெயர்க் கோலங்களே மறைந்துவிடும் so விற்கு, சமுதாயம் இடுகின்ற காரணப்பெயர்க் கோலங்கள் நிலைத்துவிடுவதுமுண்டு. பண்பாட்டுப் பரப்பிலே பெயர்கள் வரைகின்ற கோலங்கள்.

குரல்:

அப்பாத்துரை, அப்புஹாமி, அப்துல்காதர். என்று சொல்லுகின்ற போதிலேயே அந்தப் பெயர் களுக்குப் பின்னால் திரண்டிருக்கும் பண்பாட்டு வேறுபாடுகள் புலப்படுகின்றன. மக்கள் கூட்டத் திலுள்ள ஒருவரை, வேறு படுத்தி அறிந்து கொள்வதே பெயரிடலின் அடிப்படை. இந்த வேறு படுத்தல் இன-மத-பால் வேறுபாடுகளையெல்லாம் துல்லியமாகக் காட்டிநிற்பது. பண்பாட்டின் குறி யீடுகளாய் அமைந்து சிறப்பது.

(நாதஸ்வர இசை எழுந்து பின்னணியாக)

பிள்ளைக்குப் பெயரிடல் பெருஞ்சடங்காகப் பல்வேறு பண்பாடுகளிலும் இடம்பெறுவதுண்டு. இந்தச் சடங்கின் வழி பிள்ளையின் பெயர் சமு தாயத்திற்கு அறியத்தரப்பட்டது. கூடவே சமூக அங்கத்தினனாக அவனை அறிமுகப்படுத்துதலும் நடந்தது.

சட்டரீதியாக சடங்குகள் ஏதுமின்றியே இன்று பெயர்கள் பதியப் பட்டபோதிலும் சமூக அங்கீகார மென்பது இன்றும் முக்கியமானதுதான். பெயரோடு சார்ந்த சமூக அங்கீகாரம் பல தடவைகளில் சட்ட ரீதியானபெயரையே மாற்றிவிடுமளவிற்குச்சக்தி வாய்ந் ததாகி விடுகின்றது.

ஒரே இயற்பெயரைக் கொண்ட இருவரை வேறு படுத்தி உணர்ந்து கொள்ளவும், ஒருவரை மறைமுக மாகக் குறித்துக்கதைத்துக்கொள்ளவும், இன்னும் கேலி செய்யவும் எனப் பல்வேறு பயன்பாடுகளைச் சமுதாயம் சூட்டி நிற்கும் பெயர்கள் கொண்டிருக் கின்றன. பல்லன், வாக்கன், முழியன், தொப்பையன் என்றெல்லாம் அமைந்து நிற்கும் காரணப் பெயர்கள் உறுப்புகளின் விகாரங்களைக் காட்டி நிற்பன. உறுப்பினைப் போன்றே உருவ வேறுபாடுகளும் பல பெயர்களைச் சிருஷ்டிக்கின்றன. நெடுமி, பீப்பா, குட்டான், பூசணிக்காய், மத்தளக்கட்டை என எத்தனை பெயர்கள். இன்னும் நிற அடிப்படையிலான கறுப்பன், வெள்ளையன், கருப்பாயி, செம் படத்தி, பாப்பாத்தி, வெள்ளைச்சி எனும் காரணப் பெயர்கள்.

மக்களின் நகையுணர்வு, நுணுகி நோக்கும் திறன், ஒப்பிட்டுப் பார்க்கும் ஆற்றல் என்பன எல்லாம் இந்தப் பெயர்களின் வழி துல்லியமாய்ப் புலப்படும். கூடவே, அவர்களது உளம் விரும்பும், இலட்சிய உருவ நியமங் களும் தெரியவரும். (திரைப்பட நடிகர்களின் பெயர்களைப் பிள்ளைக்குவைக்கச் சிபார்சு செய்யும் மனோரமாவின் திரைப்படப்பாடலடிகள்.

பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும் போதே தங்கள் இலட்சிய நாயக, நாயகியர்களின் பெயர்களை வைக் கின்ற சங்கதி நாமறிந்ததே. தெய்வ நாயகர்களாகவோ அன்றி திரைப்பட நாயக நாயகியராகவோ-இன்னும் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களின் பெயர்களா கவோ அவை அமைந்திருக்கும். இது இயற்பெயராகவே வைக்கப்படுவது. பிள்ளை வளரும் போது இந்த இயற் பெயர்கள் அர்த்தமிழந்தனவாய்-சில வேளைகளில் வேடிக்கையானதாய் அமைந்து விடுகின்ற அனுபவங் களையும் நாம் சந்திக்கின்றோம்.

பெயர் 'அரிச்சந்திரன்’ என்றிருக்கும், பிள்ளை வாய் திறந்தால் பொய்யாய் விளைந்திருக்கும். இங்கு பெயருக்கும், அதனூடாக எதிர்பார்க்கப்படும் பண் பிற்குமிடையே பொருத்தமேதுமில்லாதிருக்கும்.

பண்புக்கும் பெயருக்குமிடையிலான உறவு இயற் பெயர்களைக் கேலிக்கிடமாக்குகின்ற அதே வேளையில் புதிய காரணப் பெயர்களின் தோற்றத்திற்குக் காரண மாகின்றது. இயற்பெயர்களாக வைக்கப்படும் இலட்சியப்பெயர்கள் மறக்கப்படலாம்; மறைந்து போகலாம் பண்பு கருதி எழும் சமுதாயம் குட்டும் காரணப் பெயர்கள் மட்டும் மேலும் பிரபலமாகலாம்.

நிறைவுக் குறிப்பு:

புதிய ஒரு சமுதாயச் சூழலுக்குச் செல்கின்ற ஒருவருக்கு, அங்கு வதிகின்ற மக்களைப் பற்றிய சரியான அறிமுகத்தை இத்தகு பண்புசார் பெயர்கள் தந்து நிற்கின்றன. ஒரு சமூகத்தின் விழுமியங்களைஅந்த சமூகம் பாராட்டும், இழிந்துரைக்கும் பண்பு நலன்களைச் சுட்டி நிற்கும் இத்தகு பண்புப்பெயர்கள். தனி மனித விழுமியங்களைச் சமூகச் சார்பாக உருவாக்கிக் கொள்ளவும் துணை நிற்பன.

நியூமரோலொஜி எனப்படும் இன்றைய எண் சாத்திர நம்பிக்கையின் வழி, நம்மவர்கள் அர்த்த மில்லாத சொற் கூட்டங்களில் பெயர்களைச் சிருஷ்டிக் கின்ற சங்கதியைப் பற்றி சிந்திக்கவே மாட்டோமா? எங்கள் தனித்துவம் துலங்கும் பெயர்களின் வரவுக்காய் உணர்வு பூர்வமான பிரசாரம் செய்வோம்.

 

17. அணிகலன்கள்

('சின்னச் சின்ன மூக்குத்தியாம் சிகப்புக் கல்லு மூக்குத்தியாம்" - திரைப்படப் பாடலடிகள்)

அறிமுகம் :

சிகப்புக்கல்லு மூக்குத்தியைப் போல இன்னும் எத்தனை எத்தனை அழகான அணிகலன்கள். உலகின் பண்பாடுகளிலெல்லாம் உயர் செல்வங்க ளாய், அழகின் சின்னங்களாய் விளங்கும் அணி கலன்கள் ஒவ்வொன்றுமே பாரம்பரியச்சிறப்புக்கள் பலவற்றினைக் கொண்டு விளங்குவன. கால ஒட் டத்திலே அவற்றின் முக்கியத்துவத்திலும் மாற்றங் கள் ஏற்படலாம். சில வழக்கொழிந்துகூடப் போய் விடலாம். ஆனாலும், மக்களின் வாழ்வில் அணி கலன்கள் கொண்ட தொடர்பு மட்டும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்கின்ற சங்கதிதான். இந்தவகை யில் எங்கள் பண்பாட்டில் அணிகலன்கள் காட்டு கின்ற கோலங்களை ஆசையோடு தரிசிக்கின்றது இன்றைய பண்பாட்டுக் கோலம்.

("சின்னச் சின்ன மூக்குத்தியாம்' - திரைப்படப் பாடலடிகள்)

 

குரல்

மூக்குத்தி, அட்டிகை, பதக்கம், மாணாப்பதக்கம், கம்மல், பீலி, கடகம், காப்பு, தண்டை, கங்கணம், காலாழி, சிலம்புமிஞ்சி,தாலியெனபலப்பல அணிகலன் களின் அழகுக் கோலங்களை எங்கள் பண்பாட்டிலே தரிசிக்கின்றோம்.

இன்று வழக்கில் பெரிதும் காணமுடியாத சில அணிகலன்களையும் நம் நாட்டாரியற் செல்வங்களின் வழியாக அறிந்து மகிழ்கின்றோம்.

"பாக்கு விலையானால் பதக்கம் செய்து போடுறண்டி

பொகலை விலையானால் பொகிடி செய்துபோடுறண்டி மஞ்சா விலையானால் மாட்டல் செய்து மாட்டுறண்டி" அரிசி விலையானால் அட்டிகை செய்து போடுறண்டி கத்தரிக்காய் விலையானால் கம்மல் செய்து போடுறண்டி கோழி விலையானால் கொப்பு செய்து போடுறண்டி மூடை விலையானவுடன் மூக்குத்தி பண்ணிப்போடுறண்டி தகரம் விலையானவுடன் தாலி பண்ணிப் போடுறண்டி வெங்காயம் ஆனவுடன் வெள்ளிக்காப்பு போடுறண்டி கூடை விலையானால் கொப்பு பண்ணித்தாறேன் சாடு விலையானால் சரடு பண்ணித்தாறேன்"

(இடையிசை)

அந்த வண்டிக்காரன் பாடலில் அழகிய அணி கலன்கள் பல ஒளிரும். அணிகலன்கள் என்றதும் அது விலை மதிப்பில்லாத தங்கம் அல்லது வைரத்திலேதான் ஆகியிருக்கக் வேண்டுமென்றில்லை. பொருள் நிறைந்த வரிடத்து தங்கமும் வைரமும் அந்தஸ்தின் சின்னங்க ளாகி, நகைகளின் வழி புலப்படலாம். ஆனாலும், சாதாரண ஐந்தாறு ரூபாய் மாலையிலும் இனிமை களைக்காணும் உள்ளங்கள் நிறைந்தது நம்முலகம். "அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை-உன் கழுத்துக்குப் பொருத்தமடி"-திரைப்படப்பாடலடிகள்) பண்பாட்டின் சின்னங்களாகிவிட்ட இந்த அணி கலன்களிற் சில சமூகத்திலே பெறுகின்ற இடம், அவற்.றின் பொருட் பெறுமானத்தினால் அமைவதல்ல. தங்கத்தினால் ஆனதனாலேதான் தாலிக்குப் பெருமை என்றில்லை. அதற்கு மேலாக அதற்கென ஒரு. சமூக நிலை.

சமூகச் சின்னமாகத் திருமணத்தினைக். குறித்து நிற்கின்ற சிறப்பினாலேயே அது பெருமை பெறுகிறது. அந்த மஞ்சட் கயிற்றின் சமூகப்பணி பாரியது. அதனிடத்து நம் பண்பாடு கொண்ட நம்பிக்கை வலிமையானது. ("மஞ்சட்கயிறு தாலி மஞ்சட்கயிறு-திரைப்படப் பாடலடிகள்) இல்வாழ்வின் தொடக்கச் சடங்கான திருமணத் தில், தாலி கொள்கின்ற முக்கிய இடத்தினைப்போலவே வாழ்வின் பல்வேறு பருவங்களிலும் பல்வேறு அணி கலன்களும் அழகுக் கோலமிடுகின்றன.

("அக்காவுக்கு வளைகாப்பு-திரைப்படப் பாடலடிகள்) , கருவுற்ற 7ம் அல்லது 9ம் மாதத்திலே கைநிறைய வளையல் அணிவித்து, அழகு செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அழகுக்கோலம்.வளைகாப்பு’ எனப்படும். இந்தச் சடங்கிலும், அணிகலன்களின் அற்புதக் காட்சி கள் தான்.

ஆனந்தமான மணக்கோலத்திலும், பிள்ளைச் செல்வங்களைக் காணப்போகும் பேருவகையிலும், அழகூட்டும் அணிகலன்கள், வாழ்வின் இறுதிச்சடங்கிற் தருகின்ற மனக்கவலை தாங்க முடியாதது.

 

*மாயவரம் சங்குநதி மயிலாட்டம் பார்க்கப்போனேன்

மாறாப்பதக்கம் தோத்தேன் மன்னவனக்கூடத் தோத்தேன்"

 

என்ற இந்த ஒப்பாரிப்பாடல், அந்த உள்ளத்தின் துயரநிலையைக் காட்டும். கணவன் இறந்து விடும் போது தாலி வாங்குதல்’ என்ற சடங்கு இருக்கிறதே! உச்சக்கவலையில் உருவழியும் வேளையல்லவா. தாலி கழற்றப்படும் வேளை, பெண்ணொருத்தி தகப்பனா ரையும் மாமனாரையும்நோக்கிப்புலம்புகின்றகோலமிது.

(சோக இசையின் பின்னணியில்) "மாலை மடிமேலே மாமனாரு திண்ணைமேலே

மாலை கழட்டுறாங்கோ மாமனாரைக் கூப்பிடுங்கோ தாலி தலைமேலே தகப்பனாரு திண்ணை மேலே தாலிகழட்டுறாங்கோ தகப்பனாரைக் கூப்பிடுங்கோ"

நிறைவுக் குறிப்பு :

சமூக மாற்றங்களின் வழியாக இதுபோன்ற சோகங்கள் முன்னைய அளவில் இன்று இல்லாது போகலாம். ஆனாலும், அணிகலன்களை விலை உயர்ந்த தங்கத்திலும், வைரத்திலும் காணும் ஆசை இருக்கிறதே! அது ஆபத்தான ஒரு சங்கதி. அந்த ஆசையின் அழகியல் அம்சம் ஒரு புறமிருக்க பொருளியற் சுமை இலேசானதல்ல. இதனால் நடக் கின்ற சச்சரவுகள், வெடிப்புகள்தான் கொஞ்சமா?

அழகுரசனை என்பதற்கே இடமில்லாமல், பண் பாட்டுச் சின்னமென்ற உயர்வுக்கே உயிரில்லாமல் வெறும் அந்தஸ்துச் சின்னமாக அணிகலன்களைக் காணத் துடிக்கும் இன்றைய நிலைமை மாற வேண்டும் அவற்றின் பண்பாட்டுப் பெருமைகளே வாழ வேண்டும்.

 

18. சகுனங்கள்

("நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி-பாடலடிகள்) அறிமுகம் :

அன்றாட வாழ்வில் சகுனங்கள் கொண்டிருக் கும் இடம் எங்கள் சமூக உளவியலில் முக்கிய மானது. பண்பாட்டின் தொடர்ச்சியிலே பயனான அறிவான சங்கதிகள் மட்டுமா தொடர்கின்றன? நாட்டார் வழக்காக கிராமங்களில் மட்டுமா சகுனங்களின் சாம்ராஜ்யஆளுகைகள்.தலைநகரங் களின் உயர்? இடங்கள் பலவுங்கூட, சகுனக் கணிப்புகளிலும், முழுவியளப் பார்ப்புகளிலும் ஆழ்ந்திருப்பது யதார்த்தம். விரும்பியோ, விரும் பாமலோ நிலைத்து விட்ட இந்த வழக்கினை, அதன் துணையாக நிற்கும் காரணிகளை மெல்ல மீட்டிப் பார்க்கிறது இன்றைய பண்பாட்டுக் கோலம்.

("போகாதே போகாதே என் கணவா"-திரைப்படப் unt Lavigas air)

குரல் :

கட்டபொம்மன் கதையில், வெள்ளையம்மாள்" காணும் அந்தக் கனவிலே, எங்கள் வழக்கில் நிலைத்து விட்ட தீய சகுனங்கள் பலவற்றினதும் தன்மைகள் புலப்படும். பின்னாலே நடக்கப் போகும் தீமையின் முன்னறிவிப்பாக அல்லது முன்னுணர்த்தலாகவே சகுனங்கள் உணரப்படுகின்றன. அவை கனவின் வடிவிலோ, காட்சி நிலையிலோ புலப்படலாம். போருக்குப் புறப்படும் கட்டபொம்மனை, தான் கண்ட தீக்கனவினை, தீய சகுனத்தைச் சொல்லித் தடுக் கின்ற நிலையிலேயே அந்தப் பாடல் பிறந்தது,

("போகாதே போகாதேஎன் கணவா? - திரைப்படப் turtlayugas air) நாட்டார் வழக்காக நமக்குக் கிடைக்கின்ற இலக்கியச் செல்வங்களிலெல்லாம் இந்தச் சகுனம் பார்த்தலின் தொடர்ச்சியும் தொடர்ந்து துலங்கக் காணலாம்.

ஈழத்தின் மட்டக்களப்புப் பிரதேசத்திலே வழங்கப் படும் கண்ணகி வழக்குரையில், அம்மன் கனாக்கண்ட கதையென்றே ஒரு பகுதி.

(ஷெனாயின் பின்னணியில்) சொல்லக்கேள் ஆய்ச்சியம்மே துர்க்கனவு கண்டது கான் நல்ல மான் கிளையோடு நாடிவருங் கானகத்தில் வில்லம்பு தானெடுத்து வேடனொடு கணை தொடுத்தான் வல்லகணை பட்டுருவி மான்பதறி விழவுங் கண்டேன் அழுதுமான் தான் புலம்பி அம்புவியில் விழக்கண்டேன் பழுதல்ல கான் கண்ட கனாப் பலிக்கும் ஆய்ச்சியம்மே எழுதரிய கோவலற்கு ஏதுவருமோ அறியேன் தொழுதேனே மானனையே துணைத்தோளுங் துடிக்குதுகாண். முன்னெச்சரிக்கைகளாக இடம்பெறும் இந்தச் சகுனங்களை, உறுதி செய்வதாகவே கதைகளின் முடிவுகள் அமைந்துவிடுகின்றன. கட்டபொம்மனுக்கும், கோவலனுக்கும் நேர்ந்த கதி மக்கள் மனங்களில் ஆழப் பதிந்து விடுகின்றது. சமூக வழக்காக வருகின்ற சகுனங்களின் நிலைப்பாடும் உறுதிபெறுகின்றது.

(காகம் கரைதல் - ஒலிக்குறிப்பு) விரிச்சி கேட்டல், புள் நிமித்தம் பார்த்தல் என பழந்தமிழ் இலக்கியங்களில் இந்த வழக்கின் தொன்மை யினைக் காண்கிறோம்.

சகுனம் சொல்லுவதில் நம் காக்கையாருக்கு முக்கியமான இடமுண்டு. விருந்தினர் வரவு கூறிக் கரைகின்ற நிலையில் நல்ல சகுனம் சொல்லும் காக்கையார், மரண எச்சரிக்கையாக துர்ச்சகுனங் களையும் முன்வைக்கின்றார். கழுதை, பல்லி, ஆந்தை என்றே சகுனக்காரர்கள் பலர். சில உயிரிகளின் எதிர்ப் படுதலே தீய சகுனமாகக் கொள்ளப்படுவதுண்டு.

(பூனையின் மியாவ் மியாவ்- சத்தம்)

புறப்பட்ட வழியில் பூனையார் குறுக்கிட்டாற் போச்சு! “மடியிலே பூனையைக் கட்டிக்கொண்டு வழி யில் சகுனம் பார்த்தானாம்? என ஒரு பழமொழிகூட வழங்கப்படுகின்றதே!

"கன்னி கழியாப்பெண் கையில் நெருப்பெடுத்தாள் வாழாக் குமரியவள் மீளா நெருப்பெடுத்தாள் ஒரிகுறுக்காச்சு ஒற்றைப் பார்ப்பான் எதிரானான் சாரை குறுக்காச்சு சர்ப்பம் தடையாச்சு காடை இடமாச்சு க்ருங்குருமான் கட்டாச்சு பூனை குறுக்காச்சு புதுப்பானை முன்னாச்சு"

 

என, நல்லதங்காள் கதையிலே, எதிர்ப்படும் தீச். சகுனங்கள் சொல்லப்படும்.

சகுனங்கள் பலவற்றினதும் தோற்றக் காரணிகள் பலவும் இன்று அறியப்படாத இறந்த சங்கதிகள். ஆனாலும் சமூக விழுமியங்களின் தன்மையினைச் சார்ந்தவைகளாகச் சில முக்கிய சகுனங்களை நுணுகி நோக்குவதன் மூலம் உற்பத்தியை உணர முடியலாம். கணவனை இழந்த கைம்பெண் ஒருத்திக்குச் சமூகம் தந்த தாழ்ந்த மதிப்பின் வெளிப்பாட்டினைத் தீச் சகுனத்திற்கான சின்னங்களில் ஒன்றாக அவளைக் காண்பதில் உணரமுடியும்.

(பல்லி சொல்லுதல் - ஒலிக்குறிப்பு)

நிறைவுக் குறிப்பு:

என்ன? பல்லி சொல்கின்றதா? சரி பலனை ஆறுத லாகப் பாருங்கள். சகுனங்களைப் பற்றி ரஞ்சனியின் ஒரு குறிப்பு. சகுனத் தடைகளைப் பார்த்துப் பார்த்து நாம் பின்தங்கிவிட்ட தூரம் கொஞ்சமல்ல. சகுனங் களின் பின்னணியை, அறிவுபூர்வமான காரணங்களை, ஆய்ந்து கண்டுபிடிப்பது பயனான ஒரு முயற்சிதான். அது நமது சமூக உளவியலின் முழுமையான பரிமாணங்களைக் காண உதவும்.

ஆனாலும், பெற்ற தன் அன்புச் செல்வங்களின் திருமண வினையை முன்னின்று நடத்த முடியாதபடி, ஒரு அன்புத்தாயை, முழுவியளத்துக்குதவாதவள்” என்று விலக்கிவைத்து, வதைப்பது போன்ற இரக்க மில்லாத நிலைகளை இனியுந் தொடர்வோமா?

 

19. அச்சமும் அஞ்சாமையும்

கெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் அஞ்சி அஞ்சி சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே. -பாரதி பாடல்.

அறிமுகம்:

நேயர்களே! இன்றைய ரஞ்சனியிலே அச்சம்? என்ற மன வெழுச்சித் துலங்கலுக்கான, சமூக பண்பாட்டுத் தூண்டல்களை நோக்குகின்றோம். சின்ன வயதிலேயே உருப் பெற்று விடும் இந்த அச்ச நடத்தை, மனித வாழ்வின் பாதையெலாம் தொடர்கிறது. பருவங்கள் தோறும் அதன் அளவில் மாறுதல்கள் நேர லா ம், அச்சத் தூண்டிகள் மாறலாம். ஆனாலும் அச்சம் தொடர்கதையாய் பின் தொடரும். வெல்ல முடியாத வாழ்க்கையாய் போய்விட, பொல்லாத இந்த அச்சமும் அடிப்படை. இந்த அச்ச நடத்தைக் கோலத்தின் உருவாக்கத்தினை, அதனை வெல்ல பண்பாடு காட்டும் உறுதி மிக்க குரல்களை இன்றைய ரஞ்சனி தரிசிக்கின்றாள்.

(ஒரு பயங்கர ஒலிக்குறிப்பு ஹிச்ஹொக் திரைப்படத்திலிருந்து)

 

குரல்

எதிர்பாராத இந்தப் பயங்கர ஒலிக் குறிப்பு குழந்தைகளுக்கு மட்டும் அச்சம் தந்து நிற்கவில்லை. ஆனாலும், இதே சத்தத்தை நாமாக அறிந்து எழுப்பும் போது அச்சம் எழுவதில்லை.

உளவியலாளரான வாட்சனும் (Watson), மற்றும் பலரும் சொல்வது போல காப்பின்மையே (Insecurity) அச்சத்தின் அடிப்படை, வாழ்வின் சகல நிலைகளிலும் இது பொருந்தக் கூடியது தான். காப்பின்மை நிலை காட்டி, அச்ச உணர்வூட்டும் கற்பித்தல், சின்ன வயதிலேயே தாராளமாகக் கிடைத்து விடுகிறது. (அச்ச இசை மேலழுந்து பின்னணியில் ஒலிக்க) பபா இருட்டிலை போனா உம்மாண்டி பிடிக்கும் பூச்சாண்டி கடிக்கும் பொக்கான் வரும் இருட்டு, பாம்பு, நெருப்பு என பிள்ளைப் பருவத்து அச்சக்காரணிகள் விரியும். உண்மையில் இவ்வாறான அச்சமூட்டலைத் தன் பண்பாட்டுப் புலத்திற் சந்திக்காத பிள்ளைகள்,

இந்தக் காரணிகளைக் கண்டு அஞ்சுவதில்லை.சமூக மயமாக்கக் கலைத் திட்டத்திலே அச்சமும் முக்கிய இடம் பெற்று விடுவதால், இங்கு அஞ்சி அஞ்சிச் சாகும் மனிதர்களாய் உருவாக வேண்டியிருக்கிறது.சில அச்சங்கள் ஆளுமை வளர்ச்சி யில் அர்த்தமிழந்து போகலாம்.புதியன வந்து சேரலாம். சில இறுதி வரை தொடரலாம்.

பாம்பு பற்றிய அச்சத்தைப் பாருங்கள்.

(மகுடி இசை)

பாம்பு குழந்தைக்கு மட்டுமா அச்சம் தருவது. பாம்பென்றால் படையும் நடுங்கும். ஆனால் இந்தப் பாம்பை வைத்தே பிழைக்கின்ற மனிதர்களையும் பார்க்க முடிகிறதே.

(மகுடி இசை மேலெழுந்து தேய) அச்சத்தைத் தருகின்ற காரணியை வழிபாட்டுக் குரியதாக்கி, அச்சந்தணிக்கும் மார்க்கமாக பண்பாடு கண்ட வழிமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக, உலகப் பண்பாடுகள் பலவற்றிலும் நிலவும் பாம்பு வழிபாட்டு அம்சங்களை இன்றைய சமூக மானுடவியலாளர்கள் சுட்டி நிற்பர்.

(இடையிசை) அச்சம் சில இடங்களில் நல்ல பணியையும் செய்து தான் நிற்கிறது. நெருப்பின் மீதான அச்சம் நல்லது தான். ஆனாலும் நெருப்பையே அண்டமாட்டேன் என்கின்ற அளவிற்குப் போய்விடக்கூடாது.

("வேப்பமர உச்சியில் நின்று பேய் ஒன்று ஆடுதென்று? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரைப்படப்பாடலடிகள்) பட்டுக்கோட்டை சொல்வதுபோல விளையாட் டாகக்கூட பேய் - பிசாசு என்ற அச்சங்களைப்பிள்ளை களிடத்து விதைக்கக்கூடாது. விபரீதமான மன வளர்ச்சியை அது விளைவிக்கும்.

உண்மையின் அடிப்படையில் அவ்வாறு சமூக பண்பாட்டு விழுமியங்களாகத் தரப்படுகின்ற சாதியடிப் படையிலான, பாலடிப்படையிலான, இனரீதியான அச்சத் தூண்டிகளும், அறிவான அடிப்படைகள் இல்லாதவை. அழிவின் காரணிகளான இவை அழிக்கப் படவேண்டியவை.

(இடையிசை)

 

உருவம், பால், இனம், வயது என்ற பிரிப்புகளை யெல்லாம் கடந்து அச்சம் குடி கொண்டிருக்கிறது.

அதுபோலவே அதனை நீக்குதற்கான, மனஉறுதி யும் பகுத்தறிவான நடத்தைக் கோலமும் அமைந் துள்ளன.

(சித்தார் இசையின் பின்னணியில்)

அச்சமில்லை, அமுங்குதலில்லை கடுங்குதலில்லை, காணுதலில்லை பாவமில்லை, பதுங்குதலில்லை எது கேரினும் இடர்ப்படமாட்டோம் அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம் கடல் பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம் யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்

- பாரதி

நிறைவுக் குறிப்பு :

எங்கள் பண்பாட்டின் ஆளுமையான பாரதியின் குரல், அனைவருக்கும் ஆதர்சமாக ஒலித்து நிற்பது. மனதில் உறுதிகொண்டு அர்த்தமில்லாத அச்சங்களை விட்டொழித்து ஆனந்த வாழ்விலே முன்னேறுவோம். அச்சத் தூண்டல்களைக் கண்மூடித்தனமாக அன்றி பகுத்தறிவுடன் பார்த்து விலக்குவோம்; வாழ்வோம்.

 

20. கதாப்பிரசங்கம்

அறிமுகம் :

எங்கள் பண்பாட்டின் செழுமைக்கும், அதன் பண்பட்ட தொடர்ச்சிக்கும் உறுதுணையாக அமையும் ஊடகங்களில் கதாப்பிரசங்கத்திற்கும் முக்கிய இடமுண்டு. மிகவும் சக்திவாய்ந்த ஊடக மான இதனை ஆதரித்து, பிரபலப்படுத்தி, அதன் ஆளுமையை மேலோங்கச் செய்ததில், ஈழத்தவருக் கும் பெரும் பங்குண்டு. இன்றைய பண்பாட்டுக் கோலம், இந்த வடிவத்தின் இனிய நலன்களைச் சுருங்கத் தரிசிக்கின்றது.

குரல்

(நல்லை ஆதீனம் பூரீலபூரீ சுவாமிநாதத்தம்பிரான் சுவாமிகளின் கதாப்பிரசங்க ஒலிப்பதிவுகளிலிருந்து ஒரு பகுதி)

கதாப்பிரசங்கம், கதாகாலட்சேபம் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த ஊடகம், எங்கள்பண்பாட்டிற்கே உரிய தனித்துவமானதோர் வடிவம்.

சாதாரண மக்களின் சமூக மயமாக்கம் இதன்வழி இயல்பாக நடந்தது, இனிதாக நடந்தது. ஆமாம்! இசையோடு இசைந்த இன்சுவைக் கலை வடிவமல்லவா?

(கிருபானந்தவாரியாரின் பாடல் ஒன்று) இசையோடு'இசைந்து அரியபல அறிவு விருந்துகள் வழங்கப்படுகின்றன. கல்வி? என்பது எல்லா நிலை களிலும் வகுப்பறைகளின் வழி சாத்தியமானதல்ல. அத்தகைய வகுப்பறைக் கல்வியின் முழுமைக்குக் கூட கேள்வி இன்றியமையாதது. இந்தக்கேள்வி அனுபவம் கதாப்பிரசங்கத்தின் வழி சிறப்பாகக் கிடைக்கின்றது.

(கதாப் பிரசங்கத்தின் ஒரு பகுதி-சமயச் சார்பானது)

சாதாரண மக்களின் மனங்களில் சமய தத்துவ உண்மைகள், எளிமையான புராண இதிகாசக் கதை களின்வழியாக எடுத்துச்சொல்லப்படுகின்றன. அவற்றி னுாடே சமூக நீதியும் நிலைநாட்டப்படுகின்றது. ஒரு பெரும் தத்துவ ஆராய்ச்சியாகவோ, சொற்பொழிவுத் திணிப்புகளாகவோ அமையும்போது, அவை மக்களால் விரும்பி உள்வாங்கப்படுவதில்லை. இதனை உணர்ந்த நிலையிலேதான், எங்களின் பண்பாட்டிலே பல்வேறு கலைவடிவங்கள் உருப்பெற்றன; பயன்பெற்றன.

(நாடகப் பாங்கிலான கதாப்பிரசங்கப் பகுதி ஒன்று)

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் கலந்து உறவாடும் சிறப்பு இங்கே, இந்தச் சிறப்பே இதன் தனித்துவம். இந்தத் தனித்துவம்தான் பெருமளவு மக்களை இதன்பால் ஈர்க்கக் காரணம்.

(இராமாயண விரிவுரையில் கம்பனின் பாடல் ஒன்று)

வெறுமனே சமய உணர்வை வளர்ப்பதுடன்,சமூக நீதியைச் சொல்வதுடன் இவற்றின் பயன்பாட்டு எல்லை அமைந்து விடவில்லை. இலக்கிய நயமும், கலை நயமும் இதன்வழி வளர்ந்தன; வளர்கின்றன.

(கிருபானந்தவாரியார்-தெய்வம்திரைப்பட அறிமுக உரை)

திருமுருக கிருபானந்தவாரியார் ‘தெய்வம்' படத் துக்குத் தந்த அறிமுக உரையாடலைக் கேட்டோம். சக்தி வாய்ந்த திரைப்பட ஊடகம், இந்த கலையூடகத் தின் சக்திவாய்ந்த ஆளுமையினை இனங்கண்டு கொண்டபோது.

(உரையின் தொடர்ச்சி. சில அடிகள்)

பரஸ்பரம் இரண்டுமே இலாபம் பெற்றன என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவின் வழி இந்த வடி வத்தின் பரம்பலில் மேலும் ஒரு விரிவு. அதனினும் மேலாக இந்த வடிவத்தின் பயன்பாட்டினால் திரைப் படத்துறையிலும் புதிய அனுபவங்கள்-ஏன் பொருளா தார ரீதியான நன்மைகள் கிடைத்தன என்றுகூடச் சொல்லலாம்.

மரபு வழிப்பட்ட சமய இலக்கியம் சார் உண்மை கள் வழங்கப்பட்ட அதே வேளையில் புதிய பொருள் களில், இந்த வடிவத்தில் உயிரோட்டமாக நின்ற நகைச் சுவையம்சத்திற்கு முக்கியத்துவம் தந்தும் பல முயற்சி கள் நடந்தன. இந்த வகையில் கலைவாணர் என். எஸ். கே இன் ஆளுமை கலந்தபோது கிந்தனார் சரித்திரம் பிறந்தது.

புதிய முயற்சிகளின் போதும் கூட பழைய வடிவத் தினை மட்டுமல்ல பாத்திரங்களைக் கூட நவீனப் படுத்தல் நடந்தது.

(தங்கவேலுவின் 'தெய்வப்பிறவி திரைப்பட கதாப்பிரசங்கத்திலிருந்து ஒருபகுதி)

நிறைவுக் குறிப்பு :

ஆலயங்களை மையமாகக் கொண்டு பிறந்த இந்தப் பண்பாட்டின் ஊடகம், இன்று தொடர்புச் சாதனங்களான திரைப்படம், வானொலி ஆகியவற்றினூ டாகவும் பரந்து, மேலும் சக்தி பெற்றிருக்கிறது கூடவே பாமர மக்களின் பல்கலைக்கழகம் என இருந்த நிலைக்கு மேலாக, பலரும் நாடிப் பயன்பெறும் நிலைக்கும் வளர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியும் பரம்பலும், வடிவத்தின் தனித்துவத்தைக் கெடுத்து அழித்துவிடக்கூடாது. அதே வேளை, அரைத்த மாவையே அரைத்தல் என்ற நிலைமாறி புதிய சமூக மாற்றத்துக்கான சாதனமாக தன் உள்ளடக்கத்தில் உரிய மாற்றங்களை காண வேண்டும் என்பதே ரஞ்சனியின் வேண்டுதல்.

 

21. சினிமாப்பிரதிமைகள்

அறிமுகம் :

திரைப்படம் என்கின்ற வெகுஜன தொடர்புச் சாதனம் நம் பண்பாட்டில் விளைவிக்கும் தாக்கங் கள்கொஞ்சமல்ல.வீடியோ சாதன அறிமுகத்துடன் இது மேலும் ஆழவேர்விட்டுள்ளது. திரைப்படங் களினூடாக மீள மீள வார்க்கப்படுகின்ற பாத்திரங் களின் வழி, தனி மனித விழுமியங்களில், பாத்திர உருவாக்கங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண் டிருக்கின்றன. தமிழ்த்திரையுலகில் பெண்களைப் பற்றிய, காதலைப்பற்றிய, பிரதிமைகள் எந்நிலை களில் வெளிப்படுகின்றன? ரஞ்சனியின்அவதானங் களில் எழுந்த சில சிந்தனைகளே இன்று கோல மிடுகின்றன.

நல்ல பெண்மணி-மிக நல்ல பெண்மணி-தாய் நாட்டு நாகரீகம் பேணி கடப்பவள் எவளோ அவளே நல்ல பெண்மணி - மிக கல்ல பெண்மணி

(மதுரம் பாடிய திரைப்படப்பாடலடிகள்)

 

குரல் :

தாய்நாட்டு நாகரிகத்தைப் பேணி நடப்பதில் ஒன்றும் தவறில்லைத்தான். ஆனால் இந்த நாகரிகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒத்த மதிப்பினைத் தந்து நிற்கின்றதா? பின் தூங்கி முன் எழுந்து இவள் மட்டும் அதிகம் உழைப்பது நியாயமானதா? இவை இன்றைய பெண் விடுதலைச் சிந்தனைகள். ஆனால், தாய் நாட்டு நாகரிகமும், அதனை வலியுறுத்தும் திரைப்படமும் என்ன சொல்கின்றன? யாரைச் சிறப்பிக்கின்றன?

'பின் தூங்கி முன் எழுவாள் குல நலப் பொண்ணு."

(துயில் நீங்கி எழுந்திடுவாள்-திரைப்படப்பாடல் அடிகள்)

பின் தூங்கி முன் எழுந்து கடமைகளைச் செய்ய வேண்டும். சரிதான்! அப்படிச் செய்கின்ற வேளை, கணவன்(என்ன சொன்னாலும் நீ எதிர் வார்த்தை பேசக்கூடாது; அதுவே நம்ம பண்பாடு? என்றே சொல்லித்தரப்படும்.

(புருஷன் விட்டில் வாழப் போகும் பெண்ணே --திருச்சி லோகநாதன் திரைப்படப் பாடலடிகள்)

புருஷன் வீட்டுக்குப் போன பின்னால், அவர் அவளை விட்டுப் போகிற மாதிரி சந்தர்ப்பங்களில் நாயகி என்ன செய்ய வேண்டும்?

ஒரு வீணையைக் கையில்எடுத்து, சாமியறையில் இருந்து சோகப் பாடலைப் பாட வேண்டும். அவர் வந்தால் கண்டு கொள்ள வேண்டியது தான்.

(விணையிசையாக சோக ராகம்)

எங்கள் குடும்ப வாழ்வின் சோகங்களில் இந்த திரைப்பட வார்ப்புகளுக்கும் நிச்சயம் பங்குண்டு. குடும்பத்தில் மட்டுமா சோகம்? காதல் எப்படி இருக்கிறது! முதன் முதலாக காதலிக்கும் இவன் மனதில், அவள் பிரதிமை எப்படி இருக்கிறது.

'ஜீனத் என் கனவில் வந்தாள்

உன் போலவே?? -(திரைப்படப்பாடலடிகள்)

நல்லவேளை இந்த நாயகிக்கு கொஞ்சம் திரைப் பட ஞானமும் துணிவும் இருந்ததால்,

"ஒரு நடிகையைப் போலென்னைப்

பார்ப்பது தவறு" (-திரைப்படப்பாடலடிகள்)

என்று மறுத்துபாடி விடுகிறாள்.

ஆனாலும், அதே பாடலில் தன்னை சீதாவாக அவன் வர்ணிப்பதை பெருமையுடன் ஏற்றுக் கொள் வாள். ஜீனத் அம்மன் பாவனை எந்தளவிற்கு, யதார்த்தமற்றதோ அந்தளவிற்கு யதார்த்த மற்றன தான் ராமன்-சீதை, கண்ணன்-ராதா கற்பனைகளும்.

நிறைவுக் குறிப்பு :

கண்ணன்-ராதா கற்பனைகளில் நம் சினிமா நாயக நாயகியர் மிதப்பதை விட, நமது ரசிக உள்ளங்கள் கமலஹாசன்-பூரீதேவி மிதப்பு நிலைச் சிந்தனைகளில் எல்லை கடந்து விடும் ஆபத்துக்களை நாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. அர்த்தமற்ற பிரதிமைப்பாவனை இறுதியில் ஆளுமை உடைவுக்கும்.

வழிவகுப்பது. கமலஹாஸன்களாக, பூறிதேவிகளாக தங்களைப் பாவனை செய்து அதன் யதார்த்த மின்மையை உணரும் கட்டத்தில், அதனை ஏற்க முடியாது முறிந்து விடுகின்ற இளைய உள்ளங்களுக்கு ரஞ்சனியின் அன்பான வேண்டுதல் இந்தச் சினிமாப் போலிகளை இனங்கண்டு விலக் குங்கள். நல்ல வாழ்க்கையை மட்டுமின்றி நல்ல தமிழ்ச் சினிமாவையும் உருவாக்குவதற்கு உதவிய புண்ணியம் கிடைக்கும்.

 

22. சித்தர்கள் அறிமுகம் :

எங்கள் பண்பாடு கண்ட அறிவான செல்வர் களை இன்றைய பண்பாட்டுக் கோலம் காட்டி நிற் கிறது. எங்கள் பண்பாட்டின் உயர்விலே, அதன் அறவியற் பாதையிலே அழியாதஇடத்தைப் பிடித் தவர்கள் சித்தர்கள். இவர்களது பாடல்கள் கற்றறிந்த மாந்தரிடத்து மட்டுமன்றி சாதாரண மனிதரின் வாயிலும் சரளமாக இன்றும் வாழ்வன. அதனால் சித்தர் பாடல்களை நாட்டார் பாடல் களாக நோக்கும் மரபும் உண்டு.

ஆழமான சித்தமரபு ஒன்று ஈழ நாட்டிலும் வேர் விட்டிருக்கிறது. இதன் விளைவான சித்த வைத்திய நலன்களை, இன்றும் நாம் அனுபவித் துக் கொண்டிருக்கிறோம். சிந்தனைச் சுடர் களான சித்தர்களைப் பற்றிய சிந்தனைகளைத் தான் இன்றைய பண்பாட்டுக் கோலம் வரைகின்றது.

குரல் :

கந்தவனத்தி லோர் ஆண்டி-அவன்

காலாறு மாசமாய்க் குயவனை வேண்டிக்

கொண்டு வந்தா னொரு தோண்டி-அதைக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

-சித்தர் பாடல்

 

தத்துவ முத்தான சித்தர் பாடல். வாழ்வின் தத்துவங்களை வடிவாகச் சொல்லுகின்ற நம் பண் பாட்டின் பாடல்கள். அரிதிற் கிடைத்த இந்த மானுட வாழ்வின் பெருமையை உணராமலேயே வீணடித்து விடுகின்ற அவலத்தை அந்தப் பாடல் எவ்வளவு துல்லிய மாகச் சொல்லி நிற்கிறது. உலகமாகிய இந்த நந்த வனத்திலே நாலாறு மாதமாக வேண்டிப் பெற்ற தோண்டியைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்து விட்டானே இந்த மானுடன்.

காய்மே இது பொய்யடா காற்றடைத்த பையடா. (சித்தர்பாடல்)

உளுத்த நரம்பும் வெளுத்த தோலும் இழுத்துக் கட்டிய கூடாக, இங்கும் நிலையாமைத் தத்துவம் அழுத்தப்படும். ஆனாலும் சித்தர்களின் குரல்,

விரக்தியில் விளைந்ததல்ல. அறிவின் தெளிவு அது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான, எமது பண்பாட்டு வளர்ச்சியிலே உறுதியான விஞ்ஞான அறிவின் ஒட்டமும் கலந்தே வந்திருக்கிறது.

சடத்துவத்தின் உண்மைகளை விளங்கவும், விளக்கவும் இயன்ற வரை முயன்ற நம் பண்பாட்டின் சிந்தனைகள் அவர்கள்.

சித்தர்கள்-அறிவுடையவர்கள். நாதர் முடி மேலிருக்கும் நாகபாம்பே -(சித்தர் பாடல்) இது பாம்பாட்டிச் சித்தரின் பாடல். பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகணிச்சித்தர் என்று தமிழ்நாட்டில் பதினெண் சித்தரைப் பற்றிய செவிவழிச் செய்திகள் நிறைய உண்டு. ஈழத்திலும் இத் தகைய ஒரு மரபின் தொடர்ச்சியைக் காண முடியும்.

மாந்திரிகம், வைத்தியம், சாஸ்திரம் என இவர்கள் சார்ந்த துறைகளின் வழியாக சமூகத்தில் இவர்களின் பயன்பாடு இன்றும் உணரப்படும். இந்தச் சமூக நலன் நடவடிக்கைகளின் உச்ச நிலையாக சமுதாயப் புரட்சிக்கே வித்திட்ட வீரர்கள் நம் சித்தர்கள்.

சோதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம்

சந்தை வெளியினிலே கோல் காட்டுவோம்" என்றும்,

சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம் பூதவாசல் ஒன்றலோ? பூதம் ஐந்தும் ஒன்றலோ" என்றும் புரட்சிக் கீதங்களை இசைத்தனர் நம் சித்தர்கள்.

நிறைவுக்குறிப்பு :

உலகின் காதுகளில் அவை விழுந்தனவா? சித்தரை பைத்தியங்களாக்கி ஒதுக்கிவிட்டு, தமது சித்தப்படி சாதியென்றும், இனமென்றும் பேதங்களை ஊதி.ஊதி.எத்தனைஎத்தனை அவலங்கள் இங்கே? சிந்திப்போமா?

 

28. தாகூர்.

அறிமுகம் !

இன்றைய எங்கள் பண்பாட்டுக் கோலத்திலே, எங்கள் பண்பாட்டின் உயர்ந்ததோர் தத்துவக் கீற்றினைத் தரிசிக்கப் போகின்றீர்கள்.

இந்தியப் பண்பாட்டுப் பெரும் பரப்பினைக் கடந்து, உலகப் பொதுமை காட்டி நிற்கும் ஒப்பற்ற கலைஞர் தாகூர். இந்த மானுடப் பொதுமையி னுாடும் தனித்துவம் ஒளிவிடும்.

தாகூரின் நினைவுகள் மீட்டப்படும் இந்த வேளையிலே, அவர் கண்ட, காட்டிய நம் மானுடப் பண்பாட்டின் கோலங்களை இங்கு வழங்கு கின்றோம். கீதாஞ்சலி தந்த அந்தப் பெரும் கலைஞனுக்கு எங்கள் இதயரஞ்சனியின் இதய அஞ்சலியாகவும் இது அமைகின்றது.

(**சத்யம் சிவம் சுந்தரம்." லதா மங்கேஷ்கர்)

குரல் :

சத்யம்.சிவம்.சுந்தரம்.மனித பண்பாடு கண்ட மாபெரும் தத்துவம்.

சத்தியம் - அது அழகினைப் போற்றுவதன்மூலம் பெறப்படுவது. உலகின் உயர் பண்பாடுகள் எல்லாம் நாடி நின்றது ஒன்றையே.கல்வி, கலாசாரம் - எல்லாமே இந்த இனிய தத்துவப் பரப்பிலேதான் விளைந்தன.

(**சத்யம் சிவம் சுந்தரம்." - பாடலடிகள்) *உண்மை, அழகு, நன்மை?? - கிரேக்கமரபும், பிளேட்டோவின் தத்துவமும் இங்கேதான் குவிந் திருந்தன. சத்சித் ஆனந்தமென்று எங்கள் பண்பாடும் இங்கேதான் மலர்ந்திருந்தது. இதோ! நம் பண்பாட்டில் கனிந்த ஓர் இதயம்.

(சித்தார் இசையின் பின்னணியில்) 'நீ புரியும் படியாகவே பேசுகிறாய் எனது தலைவனே! ஆனால் உன்னைப்பற்றிப் பேசுபவர்கள், புரியாத தர்க்கம் செய்கிறார்கள்.

உனது கட்சத்திரங்களின் குரலையும், உனது மரங்களின் மெளனத்தையும் கான் உணர்கிறேன்.

எனது இதயம் ஒரு மலர்போல மலருமென்று எனக்குத் தெரியும் ஒரு ரகஸியச் சுனையில், எனது வாழ்க்கைநிறைந்து,ஆரம்பமானது என்பதும் தெரியும். பனிப்பிரதேசத்தின் தனிமையிலிருந்து பறந்தே வரும் பகதிகள்போல, உனது கீதங்கள் எனது இதயத் தில் கூடுகட்டப் பறந்து வருகின்றன”. புருடத்துவம் என்பது பேரறிசெயல். புருடன் என் கையில்.அவனே சாந்தம்; அவனே சிவம் அல்லது மங்களம்; அவனே சுந்தரம் அல்லது அழகு.

இந்தத் தத்துவ விளைநிலத்தில் தோன்றிய ஒப்பற்ற பெருநிதியம்தான் தாகூர், எங்கள் உயர் பண்பாட்டின் உயிர்ப்பான ஒரு `கவிஞர் . உலகம் முழுமைக்கும் ஒப்பற்ற ஒரு கலைஞர். தாமே ஒரு பண்பாட்டு நிறுவனமாகி,நம் பண்பாடு வளர்த்த பேரறிஞர்.

*அவர் ஒர் ஆலமரம்; தாயாகிய ஜன்ம பூமியிலே ஆழவேரூன்றி நான்கு புறத்தினும் விசாலமாகக் கிளை களைப் பரப்பி எல்லோருக்கும் நிழல் தருகிறார்”என்று மகாகவி தாகூரைப்பற்றிக் குறிப்பிடுவான் மற்றொரு மகாகவியான எங்கள் பாரதி.ஒரு பெரும் பண்பாட்டின் ”உயிர்க் கலைஞர்களாக தாகூரையும், பாரதியையும் காண்கின்றோம்.உயிர்த்துவமான எங்கள்பண்பாட்டின் வெளிப்பாட்டினை இவர்களின் இதய கீதங்களின் வழி யாக அறிந்து கொள்கின்றோம்.

(இசைக் கோலம் - ரவிந்திர சங்கீதம்) இவர்களின் இதய அலைகள் உலகெங்கும் ஓங்கி ஒலித்தது. எங்கள் பண்பாட்டின் பரம்பல் எங்கும் நலம் விளைத்தது. W

(தாகூரின் பேச்சு - இசைத்தட்டிலிருந்து) கவியரசரின் கருத்துச் செறிந்த உயிர்ப்பேச்சு, உலகுள்ளளவும் நின்று நிலவும் நம் பண்பாட்டின் பெரு மூச்சு. சிறந்த பேச்சாளராக, உயர்ந்த இலக்கியச் செல்வராக எங்கள் பண்பாட்டுப் புதையலாக தாகூரைத் தரிசிக்கின்றோம்.

நிறைவுக் குறிப்பு :

தாகூரின் விஸ்வபாரதி, சாந்திநிகேதன் போன்ற நிறுவனங்களின் வழி பண்பாட்டின் சமூகமயமாக்கம் இனிதே தொடர்கின்றது. இவ்வாறான நிறுவமைப்பு களின் பரம்பலிலே எங்கள் பண்பாட்டின் ஆளுமையை நிலைபெறச் செய்ய வேண்டும்.

 

24. விபுலானந்தர்

அறிமுகம் :

ஒரு பண்பாட்டின் வாழ்வும் வளமும், அது காணும் ஆளுமைச் செல்வங்களில் பெரிதும் தங்கி பள்ளன. உள்ளே உள்ள ஆளுமையைத் தோண் டிக்கல்லுகின்ற செயற்பாடாக கல்வியைக் காணும் தத்துவங்களைத் தள்ளி, வெறுமனே சமூக அசை வுக்கான, "சீதன முதலாக அதனைக் கொச்சைப் படுத்துகின்ற இந்தக்காலத்திலே, எங்கள் பண்பாடு கண்ட முழுமையான ஆளுமைகளைப்பற்றிய சிந்தனையின் அவசரத்தை ரஞ்சனி உணர்கின் றாள். அந்த உணர்வலைகளிலேயே விபுலானந்த ஆளுமை பற்றிய இன்றைய கோலங்கள்.

வெள்ளைநிற மல்லிகையோ வெறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளைநிறப்பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

குரல் :

உத்தமனார்க்கு உவந்த மலரை உணர்ந்து, இந்த உலகினை உயர்துதற்கு வேண்டியவாறு தன் உள்ளத் தினைப் பண்படுத்தி நின்றது, விபுலானந்த ஆளுமை.

நீலவானிலே நிசரி-காக-மா நிலவு வீசவே மாம-பாப-தா மாலைவேளையே மபத-நீநி-சா மலைவு தீருவோம்

சாச-ரீரி-சா சால நாடியே சரிக-மாம-பா சலதி நீருளே பாப-தாத-நீ பாலை பாடியே பதநிசாச-ரீ பலரொடாடுவோம்...??

-விபுலானந்தரின் இச்ைப்பாடல்

சப்தஸ்வரங்களின் வடிவிலே ஏழு நீரர மகளிர் தோன்றி இசை நுணுக்கங்களை உணர்த்தி நிற்கின்ற -னர். ஈழத்து மட்டக்களப்பிலே கேட்கின்ற இந்த இன்னிசையை ஒத்ததாய் ஐக்கிய அமெரிக்க கலிபோர்னியாக் கடற்கரையிலும் அவதானிப்புகள்

(வீணையிசை மேலெழுந்து பின்னணியாக)

நீரரமகளிரின் இன்னிசையின் பின்னணியில் வளர்ந்த விபுலானந்த உள்ளம், எமது பண்பாட்டின் தனித்துவமான யாழ் என்ற வாத்தியத்தினை ஆழமாக ஆராய்ந்தது.

இந்தப் புலத்துப் பிறந்ததன் பயனை, விபுலானந்த ஆளுமை கண்டது. ஆமாம்! மட்டக்களப்பு, யாழ்ப் பாணம், கொழும்பு, தமிழகம், இமயமலை என்று பரந்த களமெலாம் திரிந்து, தன் கலை இலக்கிய ஞானத்துடன், பெளதிக விஞ்ஞான அறிவையும் இணைத்து அற்புதமான, புறவயமான ஒரு ஆராய்ச்சி நூலை-அரிய பண்பாட்டுச் செல்வத்தினை-யாழ் நூலை தந்தார் விபுலானந்தர்.

(விணையிசை எழுந்து தேய)

நாங்கள் சயன்ஸ்’, ‘அவையள்தான் ஆட்ஸ்", அல்லது பைன் ஆட்ஸ்" என்று ஆரம்ப நிலையிலேயே தீவுகளாய் வரண்டு போகும் இன்றைய தலைமுறைகள் ஆழ நோக்கவேண்டிய ஆளுமை விபுலானந்தர்.

தமிழ், ஆங்கிலம், வங்காளம், லத்தீன் என பன் மொழிகளில் புலமை,பொறியியல்டிப்ளோமா-பெளதிகத் தில் விஞ்ஞானப்பட்டம், அண்ணாமலை, கொழும்புப் பல்கலைக்கழகங்களின் முதல் தமிழ்ப்பேராசிரியர் பதவி. இத்துணை பன்முகப்பட்ட ஞானங்களிட்ையும் செருக்கில்லாத துறவு வாழ்க்கை, பண்பாட்டின் மீது, அழகுக்கலைகள் மீது கொண்ட ஆராத காதல் என்பனவே அவரை இன்றும் நாம் நினைவு கூரலின் அடிப்படை. ༣

அழகியற் கல்வி ஈடுபாடுபற்றி அவரே ஒருதடவை கூறுவார் -எனது சிங்தை வானிலும் தரையிலும் பரந்து கிடந்த அழகுடைப் பொருளை அனுபவிப்பதோடு அமை யாது பிதற்றித் திரியுமாறு ஏவுகின்றது!

நிறைவுக்குறிப்பு :

சங்கீதமா? வர்த்தகமா? என்ற தெரிவுப் பாடங்களிடை தவிக்க வேண்டியுள்ள இன்றைய கலை திட்ட அவலங்களிடை, விபுலானந்த உச்சங்களை எய்துதல் சாத்தியமா?

இன்றைய தேசிய விழிப்புணர்வுகள் சாத்தியமாக வேண்டுமென்றால் இத்தகு பண்பாட்டு முழுமைக்கான முயற்சிகள் சாத்தியமாக்கப்பட்டேயாக வேண்டும். அந்த முயற்சியும் கூட வெறும் மேல்தட்டு மிதப்புகளாய் அமையாமல், சென்னையின் சேரிக்குழந்தைகளையும் அணைத்து உழைத்த விபுலானந்த உள்ளத்துடன் அமைய வேண்டும்.

 

25. பாரதி

சோதி என்னும் கரையற்ற வெள்ளம்

தோன்றி எங்கும் திரை கொண்டுபாய,

சோதி என்னும் பெருங்கடல் சோதிச் சூறை,

மாசறு சோதி யனந்தம், சோதி என்னும் நிறைவிஃதுலகைச்

சூழ்ந்து நிற்ப, ஒரு தனி நெஞ்சம் சோதியன்றதோர் சிற்றிருள் சேரக்

குமைந்து சோரும் கொடுமையிதென்னே!

அறிமுகம் :

நூற்றாண்டு விழா ஆரவாரங்களிடையேயும் பாரதியின் இந்தப் பாடலின் சோகத்தில் மாற்ற முண்டோ? சமூகத்துக்காக, பண்பாட்டின் மேன்மைக்காக அழுதும் தொழுதும் நின்ற பாரதி யின் சிந்தனைகளினூடாகத்தன் இலட்சியக் கனவுகளையும் தரிசிக்கின்றாள் இன்றைய ரஞ்சனி.

(விணையிசையின் பின்னணியில்)

குரல் :

'இன்று தேவர்களை அழைக்கின்றோம், இந்த மண்ணுலகத்திலே மீளவும் கிருத யுகத்தை நாட்டும் பொருட்டாக, -

அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, கொடுமை, பிரிவு, அதிே, பொய் என்ற ராக்ஷஸக் கூட்டங்களை அழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட்டாக,

கல்வி, அறிவு தூய்மை, பெருமை, இன்பம் செல்வம், நேர்மை, ஒற்றுமை, நீதி, உண்மை என்ற ஒலிகள் எல்லாம் வெற்றியடையும் பொருட்டாக,

இந்த உலகின் கோணல்களை நிமிர்த்தி, அமர இன்பத்தைத் தரும் பொருட்டு ஒலித்த பாரதியின் குரல்.

மானுடத்தின் முழுமையைக் காணத்துடித்த எங்கள் பண்பாட்டின் மனம் அது.

ஜாதிஎன்றும் இனமென்றும் கூறுபட்டு, மனிதனை மனிதனே இழிவுபடுத்தி ஆதிக்கம் செலுத்துதலில் அழிந்து கொண்டிருக்கின்ற இந்த உலகில் பாரதி பேராசைக்காரன்தான்!

(தம்புராவுடன் பாரதிபாடல்)

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்; கேட்கா வரத்தைக் கேட்க கான் துணிந்தேன்;

மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே இன்பமுற்றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் தேவ தேவா!.

தனியனாய்க் குறுகிடாமல் சமூக இயக்கத்தின் விதிகளைத் தேர்ந்து, அனைவருமே ஒன்று படும் போது, நாம் காண விளைகின்ற பண்பட்ட உலகமும் அண்மித்து விடுமல்லவா?

(மெல்லிசையாக பின் வரும் பாடல்)

விடிந்திடுமோ-எங்கள் குடிசையிலும் வெளிச்சம் வந்து விழுந்திடுமோ குப்பி விளக்கினது ஒளி தூர்ந்து போகிறதோ தப்பிதமோ வரலாறு தவறாகிப் போய்விடுமோ இன்னங் துயிலுதியோ. உன் விளக்கைத் தூண்டுதற்கு யாரை நம்பி நீ கிடந்தாய் இன்னங் துயிலுதியோ. நம்பிக்கை குறைவதற்கு ஞாயமில்லை நீ எழுந்தால் சூரியனைக் கண்டிடலாம் எழு.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III