அப்துல் கலாமின் கவிதைகளும், மேற்கோள்களும்
கவிதைகள்
Backஅப்துல் கலாமின் கவிதைகளும், மேற்கோள்களும்
ஏற்காடு இளங்கோ
என்னுரை
இந்தியாவில் உனக்குப் பிடித்த விஞ்ஞானி யார் என்று பள்ளிக்குழந்தைகளிடம் கேட்கும்போது அப்துல்கலாம் என்கின்றனர். 5 வயது குழந்தைகள் கூட அப்துல்கலாமின் பெயரைத் தெரிந்து வைத்துள்ளனர். அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல. அவர் இந்தியாவின் ஜனாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். சிறந்தப் பேச்சாளர், மனித நேயம் மிக்கவர், சுமூகப்பார்வைக்கொண்டவர். அவர் ஒரு எழுத்தாளரும் கூட. அத்துடன் அவர் பல கவிதைகளையும் எழுதியுள்ளார். அவர் பள்ளிக்குழந்தைகளை மிகவும் நேசித்தார். நாடு முழுவதும் சென்று மாணவர்களைச் சந்தித்தார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் மட்டுமே இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்கின்ற எண்ணம் கொண்டவராக இருந்தார். மாணவர்களைச் சந்திக்கும் போது அவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார். அவை சிறந்த மேற்கோள்களாக விளங்குகின்றன.
இந்த புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு E. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப் புத்தகத்தை பிழைதிருத்தம் செய்து கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமிகு S. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த செல்வி ந.மு.கார்த்திகா அவர்களுக்கும் எனது நன்றி. இந்த புத்தகத்தை மின்னூலாக வெளியிட்ட Freetamilebooks.com மிற்கும் எனது நன்றியைத் தெவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துகளுடன்
ஏற்காடு இளங்கோ
அப்துல் கலாம்
டாக்டர் அப்துல் கலாமின் முழுப் பெயர் ஆவுல் பக்கீர் ஜெனுலாபுதின் அப்துல் கலாம் (Abdul Pakir Jainulabdeen Abdul Kalam) என்பதாகும். இவர் தமிழ் நாட்டில் உள்ள ராமேஸ்வரம் என்னும் நகரில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று பிறந்தார் . இவர் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை ராமேஸ்வரத்தில் பயின்றார். தனது பட்டப்படிப்பை திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் முடித்தார். பின்னர் உயர் கல்வியை சென்னை எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் பயின்று விண்வெளி பொறியியல் பட்டத்தைப் பெற்றார்.
அப்துல் கலாம் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அமைப்பில் தனது ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டார். அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்தபோது இந்திய ராணுவத்திற்காக திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் ஆகிய ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டன. இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுணைகளை உருவாக்கியபோது அமெரிக்கா உள்பட பல வல்லரசுகளே பயந்துபோயின இதற்கு காரணமாக இருந்தவர் அப்துல் கலாம். ஆகவேதான் இவரை ஏவுகணை நாயகன் என்று அழைக்கின்றனர்.
விண்வெளி ஆராய்ச்சியிலும் அப்துல் கலாம் சிறப்பான பங்கினை அளித்துள்ளார் 1980 ஆம் ஆண்டு எஸ் எல் வி-3 ராக்கெட் மூலம் ரோகிணி-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவி, இந்தியா விண்வெளியில் சாதனை புரிந்தது. இதன் மூலம் ராக்கெட் தொழில் நுட்பத்தில் உலகளவில் இந்தியா ஆறாவது நாடாக இணைந்தது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாளாக அப்துல் கலாம் இருந்தார். அது தவிர இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள சந்திராயன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட மங்கள்யான் போன்ற விண்வெளித் திட்டங்களிலும் அப்துல் கலாமின் பங்களிப்பு அதிகம் உள்ளது.
இந்தியா பொக்ரானில் அணுகுண்டுச் சோதனையை 1998 ஆம் ஆண்டு மே 11 அன்று நடத்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம் ஆவார். இது தவிர சில அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளார்.
போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு எடை குறைவான காலிபர் ஷூவை உருவாக்கினார். இதற்கான காப்புரிமையை அவர் பெறவில்லை. போலியோவால் பாதிக்கப்பட்ட அனைவரும் பயன்படுத்துவதற்காகவே அவர் காப்புரிமையை பெறவில்லை. இந்த காலிபர் ஷூ கலாம் காலிபர் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இத்துடன் இவர் பேஸ்மேக்கர் கருவியையும் உருவாக்கியுள்ளார். இது இதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்படும் கருவியாகும்.
இப்படி பல்வேறு சாதனைகளை புரிந்ததற்காக அப்துல் கலாமிற்கு இந்தியாவில் உயரிய விருதுகளான பத்ம பூஷண், பத்ம விபூஷண், மற்றும் பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. சுமார் 30 பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கி கெளரவித்து உள்ளன.
அப்துல் கலாம் இந்திய நாட்டின் 11 ஆவது ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய ஜனாதிபதிகளிலேயே மிகமிக எளிமையான ஜனாதிபதி என்ற பெருமைக்கு உரியவர் அப்துல் கலாம் மட்டுமே. மிக எளிமையானவராகவே தனது வாழ்க்கையை நடத்தினார். எந்தவித ஆடம்பரமும் இன்றி மிக எளிமையானவராகவும் வாழ்ந்து காட்டினார்.
அப்துல் கலாம் பல நூல்களை எழுதியுள்ளார். அது தவிர அவர் ஒரு கவிஞர். இசை ஞானம் கொண்டவர். பாடல்களையும் பாடுவார். அவரின் கவிதைகள் என்பது சிறியதுமுதல் மிகப்பெரியதுவரை உள்ளன. அதாவது சில கவிதைகள் இரண்டு பக்கத்திற்கு மேல் கூட இருக்கின்றன. அவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழி காட்டுபவையாகவே உள்ளன. இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவரது கவிதையின் கரு இருக்கும்.
அப்துல் கலாம் மாணவர்களையும் இளைஞர்களையும் அதிகம் நேசித்தார். மாணவர்களை சந்திப்பதற்காக நாடு முழுவதும் பயணம் செய்தார். சுமார் 1.5 கோடி மாணவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றும்போதெல்லாம் கவிதைகள் இல்லாமல் பேசியது கிடையாது. அதுமட்டுமல்லாமல் உலகின் எங்காவது ஒரு கூட்டத்தில் பேசும்போதுகூட கவிதை வரிகள் இடம்பெறும். தன்னம்பிக்கை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழியிலேயே இவருடைய கவிதைகள் இருந்தன என்பதே சிறப்பு.
ஒவ்வொரு மனிதனும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பது இவரின் லட்சியமாக இருந்தது. ஒற்றுமையுடன் வாழ்ந்தால் வளமையான, அமைதியான தேசத்தை உருவாக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இந்தியாவை 2020 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பாடுபட்டார்.
அப்துல் கலாம் எனது பயணம் என்கின்ற நூலையும் எழுதியுள்ளார். அந்த நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. கலாம் மீது அதிக பற்றுகொண்டவர்கள் அவருடைய கவிதைகளையும், மேற்கோள்களையும் தமிழாக்கம் செய்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
அப்துல் கலாம் எழுதிய கவிதைகளில் ஆறு மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இசை ஆல்பம் தயாரித்துள்ளனர். பட்டுப் பாதை (Silk Root) என்ற தலைப்பில் இந்த ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் உள்ள பாடல்களைப் பிரபல கிதார் இசைக் கலைஞர் மோகித் சவுகான் என்பவர் இசை அமைத்து பாடியுள்ளார்.
அப்துல் கலாம் ஆசிரியர் பணியை மிகவும் நேசித்தார். மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று மாணவர்களிடையே அப்துல் கலாம் உரையாற்றும்போது மயங்கி விழுந்தார். அதன்பின்னர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவருடைய உடல் ஜூலை 30 அன்று ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
1. இலட்சிய சிகரம்
நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா?
நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கு இருக்கிறது அறிவுப்புதையல், என் இறைவா?
நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது அமைதித்தீவு, என் இறைவா?
இறைவா, நூறு கோடி மக்கள்
இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும்,
இன்ப அமைதியையும், உழைத்தடைய அருள்வாயாக.
இந்திய பாராளுமன்றத்தில் பேசும்போது இயற்றிய கவிதை இது. இக்கவிதையை அவர் மாணவர்களிடம் வாசித்துக்காட்டி விளக்குவார். நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டிருக்கிறோம் பணி செய்து கொண்டிருக்கிறோம். இவைகளைச் செய்யும்போது நமக்கு வாழ்வில் ஒரு இலட்சியம் வேண்டும்.
•••••
2. நான் பறந்துக்கொண்டேயிருப்பேன்
பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழி வகுக்கும். இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்களை பார்க்கிறேன். நீங்கள் எல்லோரும் வெற்றியடைய, வளமான வாழ்வு பெற ஓர் சிறு கவிதை மூலம் என் கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்த கவிதையின் தலைப்பு “வாழ்வில் நான் பறந்துக்கொண்டிருப்பேன்” என்பதாகும். இதை என்னோடு சேர்ந்து பாடுங்கள் என அப்துல் கலாம் முதுகுளத்தூர் பள்ளி மாணவர்களிடம் பாடினார். மாணவர்களும் அப்துல் கலாமுடன் இணைந்து இப்பாடலை பாடினார்கள்.
நான் பறந்துகொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன்,
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒருபோதும் தவழமாட்டேன்
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்.
3. அறிவின் இலக்கணம்
முதுகுளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் அப்துல் கலாம் மாணவர்களிடையே நீ நீயாக இரு என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அறிவின் இலக்கணத்தைப்பற்றி விளக்கியதோடு ஒரு கவிதையையும் வாசித்தார்.
அறிவைப்பெற்று அறிவார்ந்த சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்றால்
அதற்கான அறிவின் இலக்கணம் என்ன என்று பார்ப்போம்.
அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அது என்னவென்றால் அதற்கு ஒரு
சமன்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
அறிவு = கற்பனை சக்தி + மனத்தூய்மை + உள்ள உறுதி
கற்பனை சக்தி
கற்றல் கற்பனைச் சக்தியை வளர்க்கிறது
கற்பனைச்சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது
சிந்தனை அறிவை வளர்க்கிறது
அறிவு உன்னை என்ன ஆக்குகிறது தெரியுமா?. . .
மகானாக்குகிறது.
4. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அஞ்சலி
தமிழ்நாட்டில் 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மதுரை மாநகரில் மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி பிறந்தார். இவரை எம்.எஸ். சுப்புலட்சுமி என்றே அழைத்தனர். இவர் புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி ஆவார். பல மொழிகளில் பாடும் திறமை கொண்டவர். இவரின் இசைக்கு மயங்காதவர்களே கிடையாது. இவர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று இயற்கை எய்தினார். திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கு காணிக்கையாக அப்துல் கலாம் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று விமானத்தில் பயணம் செய்யும்போது எழுதிய கவிதை.
யாழிசையில் பிறந்த இறையிசை
வானுலகிலும் இசையாய் இருப்பாய்
யாழிசையில் பிறந்த ஏழிசைக் கீதம் நீ
உன்னிசைக் கொடுத்ததோ அமைதியும் இனிமையும்
இசைச்செல்வத்தோடு பொருட்செல்வத்தையும்
எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்தாய்
மானிடக்குரலின் மகத்துவத்தை இறைவனும் வியந்திட வாய்ப்புமளித்தாய்
ஆயிரமாயிரம் மானிடரெல்லாம் உன் காவியக் கருணையில் நனைந்து மகிழ்ந்தோம்
செவியில் செல்வம் மனதில் மகிழ்ச்சி நெஞ்சில் நெகிழ்ச்சி அள்ளிவழங்கிய
உன் சங்கீதக்குரலின் இனியநாதத்தில் கொழித்துமகிழ்ந்தது எங்கள் உள்ளம்
வசந்தபருவமாய் யாழிசைகீதமாய் எண்பது ஆண்டாய் இதயங்கவர்ந்த
ஏழிசைநாதம் நீ நிறைவற்றாலும் எம் நெஞ்சமெல்லாமும் நிறைந்தாய்
மத்தியமாவதியில் மாலைகள் சூடிய மங்கையர் திலகம்
ஸ்ரீராகத்தில் சிறப்புகள் செய்து பக்திகீதத்தில் சாதனைபடைத்த பாரதரத்னம்
தான்சேன் கானத்தை நாங்கள் உணர்ந்திட காலந்தந்திட்ட மாபெரும்கொடை நீ
அன்னமாச்சாரியார் புரந்தரதாசர் அற்புதம் படைத்திட்ட ஏழிசைமூவர்
உள்ளங்கவர்ந்த தமிழிசையெல்லாம் உன்குரலாலே உயிர்பெற்று மலர
வாரி வழங்கிய வள்ளலாறு போல காலக்கடலில் நீ கலந்துவிட்டாலும்
நீ போற்றிவளர்த்த இசைப்பயிர் எம் உள்ளம்,உடல், உதிரத்தில் கலந்து
காலங்காலமாய் உயிர்பெற்று வளம்பெற்று உலகத்தில் வாழும்
இசைக்கு இசைகொடுத்த நீ இவ்வுலகைநீங்கி இறையுலகு ஏகினாலும்
கோடிகோடி உள்ளத்தில் உணர்வாய் வாழ்ந்த நீ வானுலகிலும் இசையாய் இருப்பாய்.
5. மனத்தூய்மை
மாணவர்களிடம் உரையாற்றும்போது எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது மனத்தூய்மையே என்றார். மனத்தூய்மையைப் பற்றி விளக்கியதோடு சம்பந்தமாக எழுதிய ஒரு கவிதையையும் வாசித்தார்.
கற்பனைச் சக்தி உருவாவதற்கு குடும்பசூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும் தான் மிக முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலை உருவாவதற்கு என்ன வேண்டும். ஒவ்வொருவரது உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும். மனத்தூய்மை எங்கிருந்து வரும். மூன்றே மூன்று பேர்களிடம் இருந்து தான் இதை கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யார்? அவர்கள் தான் தாய், தந்தை மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்.
எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால்
நடத்தையில் அழகு மிளிரும்
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால்
நாட்டில் சீர்முறை உயரும்.
நாட்டில் சீர்முறை இருந்தால்
உலகத்தில் அமைதி நிலவும்.
•••••
6. உறுதி
முதுகுளத்தூரில் உள்ள பள்ளி மாணவர்களிடம் உரையாற்றும்போது உள்ளத்தின் உறுதியைப்பற்றியும் பேசினார். உள்ளத்தில் உறுதியானது நல்ல ஆசிரியர்கள், நல்ல புத்தகங்கள், நல்ல மனிதர்கள் மூலமே கிடைக்கின்றன. நாம் எக்காரியத்தையும் செய்யலாம் , செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியும், நம்பிக்கையும் அளிக்கிறது. மனதில் உறுதி இருந்தால் நீங்கள் வெற்றி அடைவீர்கள், நீங்கள் வெற்றி அடைவீர்கள் எனப்பேசும்போது இக்கவிதையை அவர் பாடினார்.
புதிய எண்ணங்கள் உருவாக்கும் உள்ள உறுதி இன்று
என்னிடம் மலர்ந்துள்ளன.
எனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம்
செய்வேன்.
முடியாது என்று எல்லோரும் சொல்வதை என்னால் முடியும்
என்ற மன உறுதி
என்னிடம் உருவாகி விட்டது.
புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை செய்ய முடியும் என்ற உள்ள உறுதி
என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது.
இந்த உள்ள உறுதிகள் எல்லாம் இளைய சமுதாயத்தின்
சிறப்புகளாகும், அஸ்திவாரம் ஆகும்.
இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான் என்
கடின
உழைப்பாலும், உள்ள உறுதியினாலும், தோல்வியை
தோல்வியடையச் செய்து, வெற்றி
பெற்று என் நாட்டை வளமான நாடக்குவேன்.
•••••
7. நாம் எங்கே?
எங்கிருக்கிறோம் நாம், என்னருமை நண்பர்களே,
இந்திய மக்களின் இதய வொலி அழைப்பிற்கு,
வரலாற்று வடிவம்தரும் மகாசபையில் இருக்கின்றோம்.
மக்கள்நமை கேட்கிறார்கள், மக்கள்நமை கேட்கிறார்கள்;
“பாராளு மன்றத்து பாரதத்தாய் சிற்பிகளே,
எங்களது வாழ்விற்கு வளங்கொடுங்கள், ஒளிகொடுங்கள்,
உங்களது நல்லுழைப்பே, எங்களுக்கு ஒளிவிளக்கு
உயர்ந்திடலாம் நாமெல்லாம், உண்மையிலே நீவிர் உழைத்தால்”
அரசன் எவ்வழியோ, குடிகள் அவ்வழியே.
வளருங்கள் எண்ணத்தில், உயருங்கள் செயலில் நீர்.
வாய்மைமுறை உங்களுக்கு, வழித்துணையாய் ஆகட்டும்.
நீவிர் எல்லோரும் வாழ்க! இறைகருணையால் என்றென்றும்.
•••••
8. இளைஞர்கள்
அப்துல் கலாம் இளைஞர்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக மாற்ற முடியும் என்றால் அது இளைஞர்களாலேயே முடியும். துடிப்பான இளைஞர்களால் மட்டுமே இந்தியாவை மறுமலர்ச்சி கொண்ட நாடாக மாற்றமுடியும் என அப்துல் கலாம் கூறிவந்தார். அப்துல் கலாம் இளைஞர்களுக்காக இப்பாடலையும் எழுதியுள்ளார்.
இளைஞர் பாடல்
இளைய உள்ளங்களின் எழுச்சி கீதம்
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே!
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே!
அறிவாற்றலும் தொழில் மாட்சியும்
எங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே
சிறு லட்சியந்தனில் சிந்தனைகள்
வீணாவதை மாபெரும் குற்ற மென்போம்
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே!
பொருள் வளமொடு நன்னெறியோடு
நம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்
கோடிகள் பல நூறாகிலும் இந்த
லட்சியச் சுடரினை பரப்பிடுவோம்
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே!
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே!
•••••
9. கிராமத்தின் உயர்வு நாட்டின் உயர்வு
என்னுடைய உண்மையான உழைப்பு
என் கிராமத்திற்கு உயிர் கொடுக்கும்.
எங்கள் கிராமங்கள் உயர்ந்தால்
எங்கள் குடும்பங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும்.
எங்கள் குடும்பங்கள் சிறப்பாக வாழ்ந்தால்
எங்கள் மாநிலம் உயரும்.
எங்கள் மாநிலம் உயர்ந்தால்
எங்கள் நாடு வளமான நாடாகப் பரிணமிக்கும்.
நாம் உழைத்து
கிராமத்தை, மாநிலத்தை, இந்திய நாட்டை உயர்த்துவோம்.
•••••
10 கனவு
என்றன்று நாம் கணித்த
விமானங்கள், பூமியதிர யதிர
பாரிமா நகர் விண்ணில் இடியிடிந்த
மின்னலென ஏவுவோம்;
கனவுகள் நனவாகும், நம்முள்ளங்கள்
ஒன்றுபட்டு உழைத்து உயர்வு காணில்.
•••••
11. இனிய மரம்
அப்துல் கலாம் வெளிநாடுகள் சென்று உரையாற்றும் போது கவிதைகள் மற்றும் மேற்கோள்கள் இல்லாமல் மாணவர்களிடம் பேசுவது கிடையாது. அவர் அயர்லாந்து பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றும் போது வாசித்த கவிதை இது.
ஓ! என் இல்லத்தின் இனிய மரமே!
எல்லா மரங்களிலும் நீ தான் பெருமைக்குரியவன்!
எத்தனை தலைமுறைகளை நீ வளப்படுத்தி இருக்கின்றாய்!
வருடங்கள் பலப்பலவாய் பாசமுடன் பயன் தருகின்றாய்
உன் அக்கறை கவனிப்பில் இன்றும் வாழ்பவை எத்தனையோ?!
உன் வாழ்வின் கீதத்தை நானும் பாசத்துடன் கேட்கின்றேன்!
ஓ. . . என் நண்பனே! கலாம்!
உன் தாய் தந்தையைப் போல நான் வயது நூறைக் கடந்துவிட்டேன்.
ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு மணி நேரம் நீ நடை பயில்கின்றாய்!
முழு நிலாப் பொழுதுகளிலும் நான் உன்னைக் காண்கிறேன்
சிந்தனையில் ஆழ்ந்தபடி நடக்கின்றாய்
என் நண்பனே.. உன் மன ஓட்டத்தை நான் உணர்வேன்..
“நான் என்ன கொடுக்க இயலும்”
ஏப்ரல் மாதப்பொழுதில், என்னை நீ ஏறிட்டுப் பார்த்தாய்!
மீண்டும் மீண்டும் நீ, மீளாப் பார்வை பார்த்தாய்!
ஆயிரம் ஆயிரமாய் இலைகள் உதிர்ந்திருக்க, நீ என்னைக் கண்டாய்!
என் நண்பனே, என்னிடம் கேட்டாய் நீ…
என் பாரம் எதுவோ?
இலைகளை நான் கழித்தது, புத்திலைகள் பிறப்பெடுக்கின்றன!
மலர்களின் மலர்ச்சி, வண்ணத்துப்பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்கின்றது.
எனவே, கலாம், இது எனக்குப் பாரம் அன்று!
இது என் வாழ்வின் அழகான ஒரு கட்டம்!
கலாம் ... இப்போது நீ என்னைச் சுற்றி வா!
அடர்ந்து செழித்த என் கிளைகளின் வழியே புகுந்து, அகத்தில் ஆழ்ந்து பார்.
தேன் நிரம்பித் ததும்பும் ஒரு தேனடையைக் காண்பாய்.
ஆயிரமாயிரம் வேலைக்காரத் தேனீக்களின் அயராத உழைப்பால் விளைந்தது
அந்தத் தேனடை!
அவற்றின் ஓயாத உழைப்பால் சொட்டுச்சொட்டாகச் சேர்ந்தது.. அங்கே தேன்!
தித்திக்கும் தேன் துளிகள் நிரம்பிய தேனடையின் பாரம் அபாரமானதுதான்!
ஆயிரமாயிரம் தேனீக்களின் காவலால் காக்கப்படுகிறது.
யாருக்காக இந்தத் தேன் சேகரிக்கப்பட்டது? பாதுகாக்கப்பட்டது?
அது உமக்காக, எத்தனையோ ஏழையருக்கு.. சீமான்களுக்கு!
எல்லா உயிர்க்கும் பகிரப்பட வேண்டும் என்பதுதானே நம் நோக்கம்!
கலாம்! நீ பார்த்திருக்கிறாயா?
என் கிளைகளின் பல பாகங்களில் பல பறவைகள்
எத்தனை எத்தனை கூடுகளைக் கட்டியிருக்கின்றன..?
என் பெரும்பாலான நுனிக் கிளைகள் எத்தனை வசீகரமாயிருக்கும்?
நூற்றுக்கணக்கான கிளிகள் அதனைத் தம் வீடுகளாக்கியிருக்கின்றனவே!
எனவே, என்னை நீ கிளிமரம் என்று அழைப்பாய்.
இப்போதும் என்னை நீ தேன் மரம் என்பாய்
என்னைப் பற்றி உன் பேரனிடம் நீ பேசியதைக் கேட்கும்போது
நான் முறுவலிப்பேன்.. புன்னகைப்பேன்.
என் மர பொந்துகளிலும் கிளைகளிலும் பறவைகளின் வீடுகளுக்கு இடமளித்தேன்
நான் பறவைகளின் கீதத்தை செவிமடுத்திருக்கிறேன்....
அவற்றின் பிறப்பிலும் வளர்ச்சியிலும் காதலாகிக் கண்டிருக்கிறேன்.....
அவை என்னைச் சுற்றிச் சுற்றிச் சிறகடித்துப் பறந்து
மகிழ்ச்சிப் பெருக்கை பரிமாறியிருக்கின்றன.
இப்போதெல்லாம் கலாம்… உன் நித்திய நடைப்போதுகளில்
என் அருகே வருவாய் இன்னும் அருகே வந்து என் வேர்ப் பற்றை பரிவோடு பார்ப்பாய்.
வெல்வெட் மெத்தையாய் புல்படுக்கை … சுற்றிலும் அடர்ந்த பூக்காடு!
அங்கே ஓர் அழகுப் பெண்மயில்
அது உள்ளக் களிப்பால் ஈந்த முட்டைக்கு க்தகதப்பைத் தந்தது.
எல்லாப்போதுகளும் … அங்கே தாய்ப்பாசம் மீதுற அரவணைக்கும் அழகுக் காட்சி!
உன் வீட்டின் உள்ளிருந்து நோக்கும் அருமைக்காட்சி!
அந்தப் பெண்மயில் ஏழு குஞ்சுகளுடன் உலவியது
என்னைச் சுற்றிச்சுற்றி கம்பீரமாய் உலா வந்தது…
பகலும் இரவும் தன் குஞ்சுகளைப் பாதுகாத்தபடி!
இப்போது, ஒரு கேள்வி கலாம்…
என் குறிக்கோள்… எனக்கான கட்டளை என் பிறவியின் நோக்கம்.. எது?
நூறு வருடங்கள் உயிர்ப்போடு திகழ்வதா?
நான் பெற்றதை வைத்து ஆனந்தமாகக் கழிக்கிறேன் என் பிறவிப் பயனை!
நான் பரிமாறினேன்.... பூக்கள் மற்றும் தேனை!
இருப்பிடம் தந்தேன், நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு!
நான் கொடுப்பேன் கொடுப்பேன் இன்னும் கொடுப்பேன்....
எனவே, நான் இருப்பேன்...
இன்றும் இளமையாக!
என்றும் இன்பமாக!
(அர்ஜுனா என்ற இந்த மரத்தின் அறிவியல் பெயர் Terminalia arjuna - தமிழில் இதன் பெயர் மருத மரம்)
தமிழில்: செங்கோட்டை ஸ்ரீராம், நன்றி: தினமணி வலைப்பூ
•••••
12. நினைவுகள்
அப்துல் கலாம் எந்த ஊரில் இருந்தாலும், நாட்டில் இருந்தாலும் அவருடைய நினைவுகள் எப்போதும் மாணவர்கள் மீதும், இளைஞர்கள் மீதும், இந்திய நாட்டின் மீதும், தனது குடும்பத்தினர் வாழும் தனது சொந்த ஊரான ராமேஸ்வரத்தின் மீதே இருந்தது. அவர் தான் பிறந்த ராமேஸ்வரத்தை மிகவும் நேசித்தார். தன்னுடைய இளம் பருவத்தில் ராமேஸ்வரத்தில் நண்பர்களோடு பழகியது, விளையாடியது, கடற்கரை ஆகியவற்றை அடிக்கடி நினைவு கூர்வது அவரது வழக்கமாக இருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டே இக்கவிதையை அவர் எழுதியுள்ளார்.
1. இந்த மாபெரும் நாட்டில்
நான் நன்றாகவே இருக்கிறேன்
இதன் கோடிக்கணக்கான
சிறுவர் சிறுமிகளைப்
பார்க்கிறேன்.
எனக்குள்ளிருந்த அவர்கள்
வற்றாத புனிதத்தை முகந்து
இறைவனின் அருளை
எங்கும் பரப்ப வேண்டும்.
ஒரு கிணற்றிலிருந்து
நீர் இறைக்கிற மாதிரி.
2. இனிய எண்ணங்களே, போய்விடுங்கள் !
கவலை கொண்ட நெஞ்சமும்
இனி வேண்டாம் !
விழித்திருக்கும் இரவுகளுக்கு
வேலை காத்திருக்கிறது.
பகற் பொழுதுகள்
பரபரப்பாக இருப்பினும்
எனது நினைவகள் எல்லாம்
ராமேசுவரம் கடற்கரையில்
நிலைகுத்தி நிற்கின்றன !
3. களைப்படையச் செய்யும்
என்றும் ஏறி அறியாத
நெடுந் தொலைவில் –
ராமேசுவரத்தின்
சிவந்த மணல் வெளிகளில்
அலைந்த கால்களால்
கடக்க முடியுமோ ?
( தி இந்து நாளிதழில் ஜூலை 28-2015)
•••••
13. என் அன்னை
அப்துல் கலாம் தனது அன்னையர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அவரின் தாயார் இறந்ததால் மிகவும் மனமுடைந்தார். இருப்பினும் தனக்கு இருக்கும் பணிகளைக் கருத்தில் கொண்டு மனதைத்தேற்றிக்கொண்டார்.தனது தாயார் மறைந்ததை ஒட்டி ஒரு கவிதையையும் எழுதினார். அது மிக நீண்ட கவிதை. 54 வரிகளைக் கொண்டது. அக்கவிதையை தனது புத்தகமான அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத்தில் என் அன்னை என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். அப்புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டதால் அக்கவிதையை இங்கு கொடுக்க முடியவில்லை. இருப்பினும் அக்கவிதை இணைய தளத்தில் உள்ளது. அக்கவிதையை இணையதளத்திலும் மற்றும் அக்னிச் சிறகுகள் புத்தகத்திலும் நீங்கள் படிக்கலாம்.
கடல் அலைகள், பொன் மணல்
எனக் கவிதை தொடங்கி
என் அன்னையே,
நாம் மீண்டும் சந்திப்போம்
அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்!
என கவிதை முடிக்கிறது.
நன்றி ; டாக்டர். அப்துல் கலாம்
(அக்னிச் சிறகுகள்)
•••••
14. அறிவு
கற்றல்
பயன் தரும்போது
கற்பனை வளம்
மலர்கிறது.
கற்பனை வளம்
மலர்கிறபோது
சிந்தனை
மேம்படுகிறது.
சிந்தனை
மேம்படும்போது
அறிவு
ஒளி வீசுகிறது.
அறிவு
ஒளி வீசும்போது
பொருளாதாரம்
வளம் பெறுகிறது.
15. வாழ்க்கையில் வெற்றி பெற . . .
வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும்
சிறு லட்சியம் குற்றமாகும்
லட்சியத்தை அடைய கடுமையாக
உழைக்க வேண்டும்.
விடாமுயற்சி வேண்டும் . . .
தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து,
வெற்றி பெற வேண்டும்.
16. என்னால் முடியும் . . .
நம்மால் முடியும் . . .
நம்மால் முடிந்தால்
நாட்டால் முடியும் .!
•••••
17.ஆங்கில கவிதைகள்
அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது அவருடைய ஆங்கிலக் கவிதைகள் அனைத்தும் தேசிய தகவல் மையம் மற்றும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இக்கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஆகவே ஆங்கிலத்திலேயே இக்கவிதைகள் உள்ளன.
Our mission is water
My mother called me Blue Nile
I am also named by mother White Nile
When we grew and we asked
Oh mother, Oh mother
Tell us, why did you name us Nile
Our mothers said lovingly
Oh our children
You travel and travel
Cross mountains, forests and valleys
Thousands of miles, enriching nine countries
You reach Khartoum
You Blue and white Niles confluence with a mission
God has commanded you to give a message
You give a beautiful message
When we rivers confluence
Oh humanity why not your hearts confluence
And you blossom with happiness.
•••••
18. Indomitable sprit
I was swimming in the sea,
Waves came one after the other
I was swimming and swimming to reach my destination.
But one wave, a powerful wave, overpowered me;
It took me along in its own direction,
I was pulled long and along.
When I was about to lose amidst the sea wave power,
One thought flashed to me, yes, that is courage
Courage to reach my goal, courage to defeat the powerful
Force and succeed;
•••••
19. Song of youth
As a young citizen of India
Armed with technology, knowledge and love for my nation,
I realize, small aim is a crime.
I well work and sweat for a great vision,
The vision of transforming India into a developed nation,
Powered by economic strength with value system
I am one of the citizens of the billion;
Only the vision will ignite the billion souls.
It has entered into me;
The ignited soul comapared to any resource
Is the most powerful resource on the earth,
Above the earth and under the earth.
I will keep the lamp of knowledge burning
To achieve the vision- Developed India
If we work and sweat for the great vision with ignited minds,
The transformation leading to the birth of vibrant developed
India will happen.
I pray the Almighty:
“May the divine peace with beauty enter into our people;
Happiness and good health blossom in our bodies, minds and souls”.
•••••
20.கும்பகோணம் தீ விபத்து
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 முதல் 11 வயதுடையவர்கள். தீ விபத்து நடந்த இடத்திற்கு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் நேரில் சென்று இறந்த குழந்தைகளுக்காக அஞ்சலி செலுத்தினார்.மேலும் குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினார். நெஞ்சை உலுக்கிய இந்தச் சம்பவம் அப்துல் கலாமின் மனதை மிகவும் பாதித்தது. அப்போது எழுதிய கவிதை இது.
Prayer for departed children of Kumbakonam
Oh dear little ones! Oh dear little ones!
For you, parents had glorious dreams!
And you were all immersed in your own dreams
Yet,Agni engulfed you and all of those dreams
Taking you to Almighty’s divine presence
Usually, departed old parents are buried by sons
Whereas, Kumbakonam, saw a sad scene!
Crying parents burying their little ones!!
Oh Almighty! Show Your grace on those little ones
And keep them all in Thy Holiest Presence!!
Oh Almighty! Bless thoe parents wilting in grief
To have the strength to bear this great loss
May Thy compassion and grace pervade all souls
And bring down the pain and wipe away the tears
Oh Almighty! Show your grace on those little ones.
•••••
21. My dear Soldiers
Oh! Defenders of borders
You are great sons of my land
When we are all asleep
You still hold on to your deed
Windy season or snowy days
Or scorching sun’s sweltering rays
You are there guarding all the time awake
Treding the lonely expanses as yogis
Climbing the heights or striding the valleys
Defending the deserts or guarding the marshes
Surveillance in seas and by securing the air
Prime of your youth given to the nation!!
Wind chimes of my land vibrate your feat
We pray for you brave men!!
May the Lord bless you all!!
•••••
22. Rakhi Day is Righteous Day
This full moon day our hearts are in brim
Feeling of faith and serenity in mind.
We light the lamps and our hears glow
Radiance of happiness and peace are in flow.
Harmonious homes are like streams of joy
Flowing and flourishing the landscape on route.
Nobility in heart and character in deed
Righteous homes alone make a beautiful State.
Sisters will tie the thread on the brothers
Abiding them to do only what is right and clean.
Put the Kumkum and blessed rice on the head
Where will dwell right thoughts and noble action.
•••••
23.Guru Prakasham
Many many years ago our Gurus lit the lamp
And the Prakasham was born carrying power of the soul
This light of truth on the lands of five rivers
It orbited and orbited around the sun
Along with the earth that carried it as sindhur
This earthly Prakasham is so powerful
Of human’s universal message of one God
Four hundred orbits gone in no time
The great Prakasham has even out-glowed the Sun
As it orbits all around the sun, even sun bows in enhanced reverence
And salutes the earth, for all that it carries
The Greatest Prakasham of Guru Granth Sahib
•••••
24.Soaring Dream
Febulous air show of Paris in motion
My thought too in flight and yearn for my Nation
When will the planes designed in my land
Pierce the sky as lightening in action
And gracefully land as angels in full boom
All to the envy of spellbound spectators
Yes we can !!
When we are united in action and addictd to deeds
Sky can’t be limit for my nations in action!!
•••••
25. The Vision
I climbed and climbed
Where is the peak, my Lord?
I ploughed an ploughed,
Where is the knowledge treasure, my Lord?
I sailed and sailed
Where is the island of peace, my Lord?
Almighty, bless my nation
With vision and seat resulting into happiness.
•••••
26. I am the Indian Ocean
Surge of my waves and their mystical themes
Embracing Bombay and Dar-es in hold
We all belong to the cradle of earth
Same human civilization pervades us all
Generations of life in these lands were like waves
Rising and falling and melting in time baobabs and
Banyans stood witness to these cycles
Bondage of slavery and foreigners yoke
Are gone with the past and power now to people
Gandhiji and Nyerere’s nobility and soul strength
Got thy the freedom, and now your have a mission
Enlightened youths, now you have to sweat
For making thy people prosperous and happy
For ye are the greatest hope, for this part of globe
•••••
27. மரம்
அப்துல் கலாமும், பேராசிரியர் வித்யாசாகர் ஆகிய இருவரும் ஹைதராபாத் மற்றும் டெல்லிக்கு இடையே விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருந்தனர். விமானம் வானத்தில் பால் போன்ற வெண்மையான மேகக்கூட்டங்களின் ஊடே பறந்து சென்றது. இந்த அற்புதமான அரிய காட்சி அவர் மனதில் பசுமையாக பதிந்தது. பிறகு இருவரும் அசியடு கிராமத்தின் வழியாக நடந்து செல்லும்போது நாகலிங்க மரத்தின் மலர்களும், கிளைகளும் அவரை கவர்ந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த நீளமான கவிதையை அப்துல் கலாம் எழுதினார்.
Tamil Life Tree
Oh, my human race,
How, we were born,
In the Universe of near infinity,
Are we alone?
I was seeking answer for the great
Question of creation, weighing heavy
My mind as I am in seventieth orbit
Around sun, my little habitat, the star
Where my race living, lived billions of years
And will live billions of years, till the sun shines.
This is the millennium question of humanity,
And sought the help of our creator.
On the eventful day, I was flying
The earth below me, the human habitat
Vanished in the white river of cloud,
Silent, turbulent free everywhere the divine
Splendour reflecting.
On the above, the full moon with its magnificent might,
My heart melted, my friend co-passenger
Vidyasagar joined in the heavenly display.
The beauty entered into our soul
And blossomed happiness into our mind and body.
We the humanity bowed to the heavenly answer,
We are not alone, billion of billion lives
Of various forms spring in the planets of
Galaxy after galaxies.
Then the dawn of divine message.
There was the divine echo in the full moon night
From my creator.
Shaken, bewildered and wondered
The echo engulfed me and my race
“You, the human race is the best of my creation
You will live and live.
You give and give till you are united,
In human happiness and pain.
My bliss will be born in you
Love is the mission of humanity,
You will see every day in Life Tree
You learn and learn
My best of creations”.
Beautiful morning it was,
Sun radiating, driving away the clouds
Parrots and kokilas were at their musical flight
We the yellow heaven group entered
Flower garden of Asiad
Roses were in their splendour
Radiating beauty in White and Crimson
Bowing to the dawn of sun
We walked and walked, our feet on the green
Meadow giving velvet touch,
Children somewhere ringing in unison in their innocence
Peacocks in the background giving beautiful display.
There was a majestic scence of Life Tree
Cluster of tall and straight Nag Phali grove
Undaunted to the sun rays direction
Multi layered, each flower plant bubbling with life,
We approached very close to the happy plants
Astonished to see the nature’s wonder.
Bottom layers have shed the flower all around the sand
Whereas mid layer flower blossomed
In number to the magnificence
Perfume radiating, beauty all around
Honey bees filling the flower bed, mutual love flowing
Intoxicated with the scene, we looked at the top layer
Ring of the buds about to blossom
And new layers at ther birth.
Again the great divine echo enters all around us
Flowers blossom, radiate beauty and spread perfume
And give honey. On the eve of life
Flowers silently fall to the earth, they belong.
Oh my creation this is mission of human life
You are born, live life of giving
And bond the human life
Your mission is the Life Tree.
My blessings to you my creation
Oh my human race!
Let’s sing the song of creation.
•••••
28. Earth shining in Glory
Our Milky Way is shinning,
With millions and millions of stars.
Our beloved star sun.
Along with eight other planets around.
Orbits the Milky Way,
Finishes one orbit in two hundred and fifty million years.
Somewhere in the galaxy,
Echoed a voice in surprise
“See there the Earth shining in glory
How come it got its light?”
A sweet and soft reply comes:
“It is not the mere light,
It is the light of knowledge,
It is the light of sevice.
It is the light of peace.
Specillay rading from Prasanthi Nilayalam
When earth completes its eightieth orbit
Carrying a great soul in this bosom”
•••••
29. Where are we?
Where are we now, dear friends,
In the Maha Sabha that shapes as history,
The call of heart beats of Indian people,
People ask us people ask us;
“Oh! parliamentarians. the sculptors of Mother India,
Lead us into light, enrich our lives.
Your righteous toil, is our guiding light,
If you work hard. We all can prosper.”
Like King, so the people.
Nurture great thoughts, rise up in actions,
May righteous methods be your guide;
May you all prosper ever with Almighty’s grace.
•••••
30. Rock walls
Some build rock walls all their lives,
When they die miles of walls divide them.
Others build rock walls, one rock on another,
And: then build a terrace, where they pray for love.
Yet others build walls to enclose orchards,
Endeavouring to find ways to fulfil hunger.
A few others build rock walls – to make a home,
It is their mission to serve humanity and nature.
I build no walls, to confirm to joy or sorrow;
To sacrifice or achieve, or to gain or lose,
I just grow flowers on all open spaces,
And float lilies on ponds and rivers.
I keep planting trees, for birds to have nests,
At the dawn of the sun, when morning breeze blow.
Sun light get filtered through shining tree leaves,
Birds’ flight gives me sense of freedom and pleasure.
Scattered light of colour and treasure,
Fragrance of flowers gives me delight of creator.
Lilies floating over like nature’s dance,
Why should I build walls to confine them all?
I have no house, only open spaces,
Filled with truth, kindness and dreams.
Desire to see my country developed and great,
Dreams to see everywhere happiness and peace.
•••••
31.பீனீக்ஸ்
அப்துல் கலாம் மாஸ்கோ சென்றபோது அங்குள்ள ஒரு கல்லறைக்கும் சென்றார். இரண்டாம் உலக யுத்தத்தின்போது நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்பவர்களின் கல்லறை அது. அந்த நினைவிடத்தில் புதியதாக திருமணம் ஆன ஒரு தம்பதியினர் தங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த கல்லறை யாருடையது என்றே தெரியாது. தன் நாட்டிற்காக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்த அந்த வீரருக்கு அப்துல் கலாம் எழுதிய கவிதை இது.
Phoenix of life
Life is a phoenix, canrise from the ashes
Presents a future at challenging situations
This altar of ashes is fountain of new life
War was thrusted, martyrdom shined
Memories of soldiers ignite beauties of life
Phoenix is a metaphor of life in its action
Ashes remind us to celebrate greatness of those lives
•••••
32.நீவா
அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது ஜெயிண்ட் பீட்டர்ஸ்பர்கிற்கு 2005ஆம் ஆண்டு மே 25 அன்று சென்றார். அந்நகரத்தில் நீவா என்ற நதி ஓடுகிறது. அதனைக் கண்ட அப்துல் கலாம் நீவா பேசுகிறது என்கிற கவிதையை எழுதினார்.
Neva speaks
Flowing for ages and frozen on season
Evocative Neva remembers those days
Pushkin was there pouring his heart
On the very banks of mine, with effortless ease
Fyodor too followed, none too later
Depicting the human natre in details
With masters on flank and landmarks on banks
I got that feeling of knowing the humans
Then there was this misery of nine hundred days
Yonder of times and my meandering ways
Six decades now ever since that blockade
Eight hundred thousands residents perished
Lives were lost but not the courage
I saw newer human dimensions unfold
Heroic humans when challenged in good cause
Bow down not, but put up a fight
Petersbug’s spades digging Piskariovskoye
Burial pits ballooned to mounds
Mothers wept, I also grieved;
Aggressors’ greed met with determined residents
Men with the noble mission won the day
With unrivaled example of courage and strength
Ah! Faith in freedom and nobler causes
Impels humans in earnest actions
Aggressive nations and their fantasticdesigns
All have to bow down to feet of this truth
•••••
33.எனது தோட்டத்தின் சிரிப்புகள்
அப்துல் கலாம் அவர்கள் 2007 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று எழுதி தொகுத்தக்கவிதை இது
My Garden Smiles
My garden smiles,
Welcoming the spring,
Roses, beautiful roses,
With fragrance and beauty,
Ringing tunes of the honey bees
Lovely scene, everywhere
My garden smiles.
The enchanting scene entered into me
blossomed happiness in my body and soul.
Variety of roses,
One lovely family of roses,
Presiding the dynamic scene,
With pleasant fragrant breeze,
My garden smiles.
All the roses fully blossomed towards the sky
It was a miracle to see.
A pleasant beautiful voice
Echoed from rose family,
O’ my friend, look at the sky,
I saw the miracle of
The shining moon in formation
And the powerful venus very close
To each other belonging to the our galaxy.
The scene was indeed rare celebration,
Of heavenly bodies and roses of earth.
I looked above and roses of my garden,
I looked above saw the Milkyway,
I looked around the garden.
Roses, roses and roses,
This unique festival of lights and beauty
Why,why,why this unique scene.
This graceful event
In my garden first time,
My garden smiles.
Then the sweet music
Engulfied the scene all around
Emanating from garden
“It was the celebration of
Flowers and heavenly bodies,
In honour of visit of poetic soul,
of our galaxy milkyway,
Yu Hsi a universal friend,
Of creative mind.”
Crossed many seas, to be with us
Welcome my friend from shining heavenly bodies,
Beautiful roses and divine music
My garden smiles.
•••••
34. Radiating message from Sree Siddaganga Maths
You, in front of you, see a sage,
Wearing beautiful spiritual blessing, the sage,
Everyday, Almighty has given this sage,
A precious diamond of life
The sage,strung over thirty six thousand,
Diamonds into a priceless garland of Tapasvi life,
With the message to humanity;
“O my fellow citizens,
In giving, you receive happiness,
In Body and Soul.
You have everything to give.
If you have knowledge, share it.
If you have resources, share it with the needy.
Use your mind and heart,
To remove the pain of the suffering,
And, cheer the sad hearts.
In giving, you receive happiness.
Almighty will bless all your actions.”
•••••
35. Righteousness in the heart
ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவனத்தில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற 21ஆவது பட்டமளிப்பு விழாவில் அப்துல் கலாம் அவர்கள் கலந்து கொண்டார். மாணவர்களிடையே உரையாற்றும் போது அப்துல் கலாம் வாசித்த கவிதை இது.
Where there is righteousness in the heart,
There is beauty in the character
When there is beauty in the character,
There is harmony in the home.
When there is harmony in the home,
There is an order in the nation.
When there is order in the nation,
There is peace in the world.
•••••
36. மரம்
புவி மாசு அடைவதால் சுற்றுச்சூழல் கெட்டு பூமி வெப்பமடைந்து கொண்டே இருக்கிறது. மரங்கள் நடுவதன் மூலம் பூமி வெப்பமடைதலை தடுக்க முடியும் என அப்துல் கலாம் கருதினார். தமிழக நடிகர் விவேக் அவர்களிடம் மரம் நடுவதற்கான ஆலோசனையை வழங்கினார். நடிகர் விவேக் அவர்கள் பசுமை கலாம் (கிரீன் கலாம்) என்ற தன்னார்வ அமைப்பை தொடங்கினார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் மரங்களை நடத்தொடங்கினார். பத்து லட்சமாவது மரத்தினை அப்துல் கலாம் நட்டதோடு, ஒரு கோடி மரங்களை நடுமாறு நடிகர் விவேக்கிற்கு ஒரு இலக்கினை குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் நடிகர் விவேக் தனது நடிக்கும் பணிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட மரம் நடுவதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருறார். தற்போது அவர் 30 லட்சமாவது மரத்தை நட்டு முடிக்கும் பணியில் தீவிரமாக உள்ளார். அப்துல் கலாம் மரம் பற்றிய பல கவிதைகளை எழுதியுள்ளார். அதில் இதுவும் ஒன்று.
கிளி வளர்த்தேன்
பறந்துவிட்டது
அணில் வளர்த்தேன்
ஓடிவிட்டது.
மரம் வளர்த்தேன்
இரண்டும் திரும்பி வந்துவிட்டது.
•••••
37. அக்கினிச் சிறகுகள்
அக்கினிச் சிறகுகள் அணைவதில்லை அவை
இறவாது வாழும் அவற்றிலிருந்து
விழுந்த இறகுகள்
மேலெழுந்து பறந்துகொண்டிருக்கும் வரை...
•••••
38. கடமை
அழகைப் பற்றி கனவு
காணாதீர்கள், அது உங்கள்
கடமையைப் பாழாக்கிவிடும்.
கடமையைப் பற்றி கனவு
காணுங்கள் அது உங்கள்
வாழ்க்கையை அழகாக்கும்.
•••••
39. இலட்சியக் கனவு
கனவு காணுங்கள்
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில்
காண்பது அல்ல
உன்னைத்
தூங்க விடாமல்
பண்ணுவது எதுவோ
அதுவே (இலட்சிய) கனவு.
•••••
40. பிறந்த நாள்
உன் வாழ்நாளில்
நீ அழுது
உன் அன்னை சிரித்த
ஒரே நாள்...
•••••
41. எழுத்தறிவு
இந்தியாவில் சுமார் 30 கோடி மக்கள் எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களை எழுத்தறிவு பெற்ற மக்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு மாணவரும் 5 பேருக்கு எழுதப் படிக்க கற்றுத்தர வேண்டும் என மாணவர்களிடம் உரையாற்றும்போது தனது ஆசையை, எண்ணத்தை வெளியிட்டார்.
நாம்
கனவு காண வேண்டியது
“மகத்தான இந்தியாவை அல்ல.
மாறாக,
‘எழுத்தறிவு பெற்ற
இந்தியாவைத்தான்.
•••••
42. லட்சியம்
ஒரு முறை வந்தால்
அது கனவு
இருமுறை வந்தால்
அது ஆசை
பலமுறை வந்தால்
அது லட்சியம்
•••••
43. வெற்றி உன்னிடம்
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னைக் கொன்றுவிடும்
கண்ணைத் திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.
•••••
44. திறமை
நம் அனைவருக்கும்
ஒரே மாதிரி திறமை
இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்
அனைவருக்கும்
திறமையை
வளர்த்துக்கொள்ள ஒரே
மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
•••••
45. தோல்வி மனப்பான்மையை
தோல்வி அடையச் செய்வோம்!
கனவு காணுங்கள்
கனவு என்பது தூங்கும்போது
வருவதல்ல!
நம்மை தூங்க விடாமல் செய்வதே
கனவு!
•••••
46. கஷ்டம் வரும்போது
கண்ணை மூடாதே
அது உன்னை
கொன்றுவிடும்.
கண் திறந்து பார் நீ
அதைவென்று விடலாம்.
•••••
47. நீ நட்சத்திரமாக
ஜொலிக்க விரும்பினால்,
நீ யார் என்பது முக்கியமல்ல;
உனது மனது எதை விரும்புகிறதோ,
அது நிச்சயம்
உன்னை வந்து சேரும்.
•••••
48. நூலகம்
ஒரு நல்லப்புத்தகம்
நூறு நல்ல
நண்பர்களுக்கு சமம்.
ஆனால், ஒரு நல்ல
நண்பன் ஒரு
நூலகத்திற்கே சமம்.
•••••
49. புத்தகத் திருவிழா
ஈரோட்டில் மக்கள் சிந்தனை மன்றத்தின் சார்பாக புத்தகத் திருவிழா நடைபெற்றது. இப்புத்தகத் திருவிழாவில் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் கலந்துகொண்டு புத்தகங்களின் சிறப்பைப் பற்றி பேசினார். அவர் நூலகத்தின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார். அவர் பேசிய உரையிலிருந்து எடுத்துக் கொண்ட மேற்கோள்களில் சில ......
இன்று முதல் நான்,
20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப
நூலகத்தைத் தொடங்குவேன்.
எனது மகளும், மகனும்
இந்த குடும்ப நூலகத்தை
200 புத்தகங்களாக்குவார்கள்.
எமது பேரக்குழந்தைகள்
குடும்ப நூலகத்தை 2000
புத்தகங்களாக்குவார்கள்.
நான் எங்களுடைய நூலகத்தை
வாழ்க்கை முழுமைக்கான செல்வமாகவும்
விலைமதிப்பற்ற சொத்தாகவும் கருதுகிறேன்.
நாங்கள் குடும்ப உறுப்பினர்களுடன்
சேர்ந்து படிப்பதற்கு குடும்ப நூலகத்தில்
குறைந்தது 1 மணி நேரம் செலவழிப்போம்.
•••••
50. புத்தகம் படிப்பதன் அவசியம்
அருமையான புத்தகங்கள் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும்
கற்பனைத்திறன் படைப்பாற்றலை உருவாக்கும்
படைப்பாற்றல் சிந்திக்கும் திறனை வளர்க்கும்
அறிவு உன்னை மகானாக்கும்.
•••••
51. வெற்றி என்பது இறுதிப்புள்ளி...
தோல்விகள் என்பது இடைப்புள்ளிகள்....!
மன உறுதியுடன் இடைப்புள்ளிகளைத்
தோல்வியடையச் செய்து உன்னால்
வெற்றியடைய முடியும்.
•••••
52. தண்ணீரைத் தேசிய வளமாகவும்
பொதுவுடைமையாகவும் அங்கீகரித்தாக வேண்டும்.
•••••
53. 2020 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல. இது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலை நோக்குக் கூட அல்ல ஒரு பணி இலக்கு. இதனை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்படுவோம். வெற்றி காண்போம்.
•••••
54. சக்தியே சக்தியை மதிக்கும்.
•••••
55. ஒரு காலத்தில் நம் பூர்வாங்க முயற்சிகளைத்
தடுத்து நிறுத்த முனைந்தவர்களே இன்று
அவற்றை தொடங்கி வைக்க முன் வருகின்றனர்.
•••••
56. அன்றாடம் தாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு
நடுவிலும் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக
மாற்றுவதையே ஒரு சவாலாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
•••••
57. இந்தியா குறித்த ஏதேனும் நல்லதோர் தகவலுக்கும்
உங்கள் இதழில் கொஞ்சம் இடம் அர்ப்பணியுங்கள்.
அது பொய்யும், புனைசுருட்டும் அற்ற எதார்த்தமான
செய்தியாக இருக்கட்டும். பெரும் பத்திரிகைகள்
இவ்விதம் செயல்பட்டால், அதைப் பின்பற்றி நாட்டில்
ஒரு மகத்தான நடத்தை மாற்றமே நிகழும்.
•••••
58. காலத்திற்கேற்ப ஆசிரியர்களும் தங்கள் அறிவை அவ்வப்போது உயர்த்திக் கொள்ளவேண்டும். ஏனெனில் இன்று ஒவ்வொரு மாணவனும் ஒரு ஆசிரியனுக்குச் சமம்.
•••••
59. ஒரு தேசத்தின் முன்னேற்றம் என்பது அந்நாட்டு மக்கள் எவ்விதம் சிந்திக்கிறார்கள் என்பதைப் பொருத்தே அமையும்.
•••••
60. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார்
முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது
இல்லை.
•••••
61. சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை
தேவை இல்லை. துன்பங்களை சந்திக்கத்
தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை...
•••••
62. உன் கை ரேகையைப் பார்த்து எதிர் காலத்தை
நிர்ணயித்துவிடாதே... ஏனென்றால் கையே
இல்லாதவனுக்கும் கூட எதிர்காலம் உண்டு.
•••••
63. One best book
Is equal to
Hundred good friends
But one good friend is equal to library.
•••••
64 you have to
Dream before
Your dreams
Can came true.
•••••
65. Love your job
But don’t love your company,
Because you may not know
When your company
Stops loving you.
•••••
66. You cannot change
Your future,
but you can change
your habits
and surely your habits
will change your FUTURE”.
•••••
67. நீ முயன்றால்....
நட்சத்திரங்களையும் பறிக்கலாம்.
•••••
68. பூமி மீது சூரிய ஒளிபட்டால்
அது பகல். ஒளி படாவிட்டால் இரவு.
இதில் நல்லது கெட்டது என்று
எதுவும் இல்லை.
•••••
69. தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்,
அதுதான் நம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்.
•••••
70. I’m not a hanDSOme guy,
But I am give my
HAND-TO-SOME one
Who needs help.
Beauty is in heart,
Not in face.
•••••
71. Don’t read success
Stories, you will only
Get a message. Read
Failure stories, you
Will get some ideas
to get success.
•••••
72. All birds find shelter
During a rain.
But Eagle avoids rain
By flying above
the clouds
(Problems are common,
Put attitude make the
difference!!
•••••
73. Indian Education Framework
Needs to chance
Completely.
•••••
74. Unless India Stands
Up To The World,
Noone will Respect Us.
In This World,
Fear Has No Place
Only Strength
Respects strength”.
•••••
75. It is very easy to defeat someone
But it is very hand to win someone.
•••••
76. கனவு காணுங்கள். அவற்றை
நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
என்னால் முடியும்...
நம்மால் முடியும்...
இந்தியாவில் முடியும்.. என்ற
மந்திரத்தை சொல்லிக்
கொண்டே இருங்கள்.
•••••
77. சிரிப்பு
சிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி
புத்துணர்வுடன் வைத்திருக்கும் மாமருந்து ஆகும்.
சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான்.
ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் நகைச்சுவையும் ஒன்று.
இந்திய மக்கள் குறைவாக சிரிக்கின்றார்கள்.
அதிலும் தமிழ் மக்கள் மிகக் குறைவாக சிரிக்கிறார்கள்.
நாம் உடல் நலமுடனும், மன நலமுடனும், மன வலிமையுடனும் வாழ
சிரிப்பு அவசியம். அது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
•••••
78. இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின்
பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்
அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது
உங்கள் கைகளில் தான் உள்ளது.
•••••
79. வெல்வோம், சாதிப்போம், வேதனைகளைத்
துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும்.
•••••
80. கிராமத்தில் இருந்தாலும்,நகரத்தில் இருந்தாலும், படித்த
குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில்
இருந்து வந்தாலும் உங்களால் வெற்றியடைய முடியும். நீ
யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய்.
•••••
81. ஆசிரியர்களுக்குப் பத்து கட்டளைகள்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினமாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்துல் கலாம் ஆசிரியர் பணியை மிகவும் நேசித்தார். தான் ஒரு ஆசிரியராகவே இறக்கவேண்டும் என ஆசைப்பட்டார். ஆகவே நாடு முழுவதும் மாணவர்களை சந்திப்பதை தனது லட்சியங்களில் ஒன்றாகவே பின்பற்றி வந்தார்.
புதுடெல்லியில் 2004 ஆம் ஆண்டு, செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. அப்போது குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் அவர்கள் பங்கேற்று நல் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார். அவர் அப்போது அங்கு கூடியிருந்த ஆசிரியப் பெருமக்களிடம் பத்து கட்டளைகளை உறுதி மொழியாக ஏற்க வைத்தார்.
அவை வருமாறு;
கல்வி கற்பித்தலை நேசிப்பேன், கற்பித்தலே எனது ஜீவன்.
கல்வி கற்பித்தல் என்ற மாபெரும் அறப்பணிக்கு என்னை முற்றிலும் அர்ப்பணிக்கிறேன்.
சராசரி மாணவனை உயர்செயல்திறன் மிக்க மாணவனாக உயர்த்தினால் மட்டுமே என்னை நான் சிறந்த ஆசிரியராகக் கருதுவேன்.
எனது வாழ்க்கையே எனது மாணவர்களுக்குச் செய்தியாக இருக்கும் வகையில் நான் வாழ்ந்து காட்டுவேன்.
எதையும் ஆராய்ந்து அறியும் உணர்வையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாணவர்களும், குழந்தைகளும் கேள்விகள் கேட்பதற்கு ஊக்கமளிப்பேன்.
மத, இன, மொழி வேறுபாடின்றி மாணவர்கள் அனைவரையும் சமமாக நடத்துவேன்.
மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தருவதற்கான ஆற்றலைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்வேன்.
சிறந்த சிந்தனைகளால் தொடர்ந்து எனது மனதை நிரப்புவேன்.
மாணவர்கள் மத்தியில் உன்னதச் சிந்தனையை, செயல்பாட்டைப் பரப்புவேன்.
எனது மாணவர்களின் வெற்றியை எப்போதும் கொண்டாடுவேன்.
ஆசிரியர் தினம் கொண்டாடும் இந்த இனிய நன்னாளில் மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் இந்த உறுதிமொழிகள் ஒவ்வொன்றையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
•••••
82. முடியும் என்ற நம்பிக்கை முதலில் ஒவ்வொரு
இந்தியனுக்கும் வேண்டும்.
•••••
83. எனது இளம் குழந்தைகளே, தனி நபரைவிட
நாடுதான் பெரியது என்ற எண்ணத்தை
உங்கள் உள்ளத்தில் பதியவைத்து வளருங்கள்.
•••••
84. அசாத்தியம் என்று எதுவுமே கிடையாது.
அதையே என்னால் சாத்தியம் ஆக்க முடியும்
என்றே நினைக்க வேண்டும்.
•••••
85. ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் நல்ல
ஆசிரியர்களே, சிறந்த முன்னுதாரணமாக,
வழிகாட்டியாக இருக்க முடியும்.
•••••
86. துடிப்பான இளைஞர்களால் மட்டுமே,
மறுமலர்ச்சி ஏற்படுத்தி இந்தியாவைச்
சக்தி வாய்ந்த நாடாக மாற்ற முடியும்.
•••••
87. உணவில் தன்னிறைவு பெற உதவிய
விவசாயிகளையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும்,
இந்தநாடு பாராட்டி மகிழ வேண்டும்.
•••••
88. சிந்தனைதான் முதலீடு, முனைப்புதான் வழிமுறை...
கடும் உழைப்பே தீர்வு... என்பதை நினைவிற்கொள்ளவேண்டும்.
•••••
89. எத்தனை எத்தனை யுத்தங்கள் ...
எந்தப்போராக இருந்தாலும்
அமைதிக்குத்தான் இறுதி வெற்றி.
•••••
90. நண்பர்களே, கனவுகள் இல்லாவிட்டால்,
புரட்சிகரமான சிந்தனைகள் தோன்றாது.
சிந்தனைகள் இல்லாவிட்டால், செயல்கள் உருவாகாது.
•••••
91. ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும்
அக்னிக்குஞ்சு சிறகு முளைத்து பறக்கட்டும். இந்த
புண்ணியத் திருநாட்டின் கீர்த்தி ஜுவாலை,
விண்ணிலும் பேரொளி பரப்பட்டும்.
•••••
92. உயர்ந்த எண்ணங்களால்
உழைப்பு, திறமை பெருகும்
உழைப்பு ...
நற்செயலுக்கு ஆதாரமாகும்....!
•••••
93. கனவு...கனவு...கனவு....!
கனவு எண்ணமாக மாறும்
அதன் முடிவு செயல்!
கனவு,எண்ணம்,செயல்
இவற்றிற்கு உழைப்பு தேவை!
இலட்சியம் ஊக்கத்தை உருவாக்கும்,
ஊக்கம் உயர்ந்த
எண்ணங்களாக மலரும்!
•••••
கனவை விதைக்கும் சொற்கள்
முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள்
இரண்டாவது முயற்சியில் தோல்வியடைந்தால் முதல்
வெற்றி அதிர்ஷ்டத்தால் விளைந்த குருட்டாம்போக்கான வெற்றி என்று
விமர்சிப்பார்கள்.
•••••
93. வெற்றிக்கான விளக்கவுரை வலுவாக இருந்தால்,
தோல்வி எப்போதுமே நம்மை ஆட்கொள்ளாது.
•••••
94. வாழ்க்கையில் இடர்ப்பாடுகள் அவசியம்,
ஏனென்றால், வெற்றி என்ற மகிழ்ச்சியை
அனுபமிக்க அவை உதவியாக இருக்கும்.
•••••
95. வித்தியாசமாகச் சிந்திக்க புதியதைக் கண்டுபிடிக்க இதுவரை பயணப்படாத பாதையில் பயணப்பட இதுவரை சாதித்திராத சாதனைகளைச் செய்துமுடிக்க துணிச்சலைப் பெறுங்கள் என்பதே இளைஞர்களுக்கு என்னுடைய செய்தி.
•••••
96. அற்புதங்களை அகஸ்மாத்தாகச் செய்ய முடியாது.
அடுத்தடுத்துச் செயல்பட்டுக் கொண்டே
இருந்தால்தான் சாதிக்க முடியும்.
•••••
97. கனவு,கனவு,கனவு அவசியம்.
கனவுகள் எண்ணங்களாகும்.
எண்ணங்கள் செயல்களாக வடிவெடுக்கும்.
•••••
98. எப்படிப்பட்ட ஏழையாக இருந்தாலும் சரி…
புறக்கணிக்கப்பட்டவராக அல்லது
எளியவராக இருந்தாலும் சரி…
யாருக்கும் விரக்தி மனப்பான்மை
வந்துவிடக் கூடாது.
•••••
99. புத்தகங்கள் கனவுகளை வளர்க்கும்.
கனவுகள் எண்ணங்களை உண்டாக்கும்.
எண்ணங்கள் செயல்களை உருவாக்கும்.
•••••
100. பிரச்சினைகள் நம் எஜமானர்கள் ஆகிட
அனுமதிக்கக் கூடாது.
அவற்றை நாம் தோற்கடித்தால்
வெற்றிகள் நம்மைத் தேடிவரும்
என்பதை எனது ஆசிரியர்களிடமிருந்து
கற்றுக்கொண்டேன்.
•••••
101. ஒளிவு மறைவு இல்லாத ஆராய்ந்து செயல்படுகிற
சுயக்கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கையை
மற்றவர்களின் பொதுநலன்களில் எப்போதுமே
நாட்டம் கொண்டிருக்கிற ஒரு வாழ்க்கையை,
ஒரு வலுவான நடத்தையை உருவாக்குகிற,
பல்வேறு பழக்கங்களின் அடித்தளத்தில் உருவான
ஒரு வாழ்க்கையை வாழ்வதுதான் சவால்.
•••••
102. கடின உழைப்பும், விஞ்ஞானப் பூர்வமான
அணுகுமுறையும், ஆன்மிக உணர்வும் இருந்தால்
யாருமே ஒரு நல்ல மனிதராகத் திகழ முடியும்.
அதோடு அடுத்த மனிதர்களிடம்
நற்குணங்களையும் காண முயலுங்கள்.
•••••
103. அனைத்து துறைகளிலும் இந்தியாவை
முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு
முதலில் அறிவார்ந்த இளைஞர்களை
நாம் தயார் செய்ய வேண்டும்.
•••••
104. உங்கள் குறிக்கோளில்
வெற்றிபெற வேண்டும்
என்றால் உங்கள் இலக்கில்
இம்மியும் பிசகாமல்
குறிவைத்து அதே
சிந்தனையுடன் செயல்பட
வேண்டும்.
•••••
105. வெற்றி பெற வேண்டும் என்றால்
பதட்டம் இல்லாமல் இருப்பது
தான் வெற்றி பெறுவதற்கான
சிறந்த வழி.
•••••
106. நீண்ட நாள் முழுவதும்
கணத்திற்குக் கணம்
நேர்மையாய், துணிவாய்,
உண்மையா, உழைக்கிறவன்
கரங்களே அழகிய கரங்கள்.
•••••
107. காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை இழுத்து
இழுத்து நடக்காதே!
•••••
108. வல்லரசு இந்தியா - என்ற லட்சியம்
நிறைவேற ஞானம் என்னும் சுடரை
என்றும் பிரகாசிக்க வைப்பேன்.
•••••
109. முடியும் என்று நம்பும் ஐம்பத்துநான்கு கோடி
இளைஞர்களால் இந்தியாவின் நதிகளை அனுபவத்தின்
துணைகொண்டு இணைக்க முடியும் நதிகளை இணைக்க
முதலில் நம்பிக்கைதான் தேவை.
•••••
110. மரணம் என்னை எப்போதுமே
அச்சுறுத்தியதில்லை. எல்லோருமே
ஒருநாள் போய்ச்சேர வேண்டியர்கள் தானே….
•••••
111. கற்பவரால் தனது கல்வியை
இக்கட்டான நேரத்தில் சரியாகப்
பயன்படுத்தப்படாத வரை கல்வியில்
எதுவுமே நடக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
•••••
112. நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால்
முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.
•••••
113. கடின உழைப்பு, நேர்மைக்கு
மாற்று எதுவும் இல்லை;
நிச்சயமாக எதுவும் இல்லை.
•••••
114. கரைகளைக் கடக்கும்
துணிவிருந்தால்தான் புதிய
கடல்களை கண்டுபிடிக்க முடியும்
•••••
115. 21 ஆம் நூற்றாண்டில்
முதலீட்டையும்
தொழிலாளர்களையும் விட
அறிவுதான் முதன்மையான
உற்பத்தி ஆதாரமாக இருக்கும்.
•••••
116. அதிகம் பயணிக்காத பாதைகளில்
செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள்.
அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
•••••
117. ஒரு தேசம் ஊழலில்லாமலும்
அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க
மூன்று பேரால் மட்டுமே
மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
தந்தை, தாய் ஆசிரியர்கள்தான்
அந்த மூன்று பேர்.
•••••
118. எல்லாப் பறவைகளும் மழைக்காலங்களில்
கூடுகளில் அடையும் ஆனால் கழுகு
மழையைத் தவிர்க்க
மேகத்துக்கு மேலாகப் பறக்கும்.
•••••
119. அறிவுதான் உங்களைச் சிறந்தவர்களாகவும்
பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.
•••••
120. தேசம் என்பது எந்தவொரு
தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும்
கட்சிக்கும் அப்பாற்பட்டது.
•••••
121. கருணையில்லாத அறிவிடல்
முழுமை பெறாது.
•••••
122. ஒரு தேசத்தின் மகுடமே
அதன் சிந்தனையாளர்கள்தான்.
•••••
123. உங்களுக்கு சிறகுகள் உள்ளன
தவழ்ந்து செல்லாதீர்கள்
அதைக் கொண்டு
மேலேமேலே பறந்து செல்லுங்கள்.
•••••
124. தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.
•••••
125. உங்களிடம் கேளுங்கள் நீங்கள்
எதற்காக நினைவு கூறப்பட விரும்புகிறீர்கள்.
•••••
126. மிக உயர்ந்த லட்சியம் மனிதர்களுக்கான
எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.
•••••
127. எந்தவொரு விஷயத்திலும்
முடியவே முடியாது என்று
யார் கூறினாலும் நம்பாதீர்கள்.
•••••
128. சக்தியின் பெருமையை
சக்தியே அறியும்.
•••••
129. பல்லாண்டுகளாகக் கடினமாக
உழைத்தவர்களால்தான் ஒரே இரவில்
வெற்றிகரமானவர்களாக மாறமுடிகிறது.
•••••
130. வானத்தைப் பாருங்கள், நாம் தனித்து இல்லை.
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம்
நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும்
உழைப்பவர்களுக்கும் மட்டுமே
அது சிறந்தவற்றை வழங்குகிறது.
•••••
131. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு
ஒரே வழி அடுத்தவர்களின் வெற்றியை
உங்களுடைய வெற்றியைப் போலக்
கொண்டாட கற்றுக்கொள்ளுங்கள்.
•••••
132. அறிவியலுக்கு பயம் தெரியாது
வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு
துணிவிருந்தால், அறியப்படாத
விஷயங்களுக்கு சவால் விடும்
ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது.
•••••
133. முடியாத விஷயங்கள் குறித்து
கனவு காண்பவர்கள் அவற்றை
வெற்றி கொள்ள முடியும்.
•••••
134. எந்தவொரு மனிதனுக்கும்
தனது குறிக்கோளை அடையவேண்டும்
என்ற மன உறுதியும்
அதற்கான உழைப்பும் இருந்தால்
அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.
•••••
135. கற்றலில் ஆக்கசக்தி பிறக்கிறது.
ஆக்கசக்தியில் சிந்தனை மலர்கிறது.
சிந்தனையில் அறிவாற்றல் தோன்றுகிறது.
அறிவாற்றலால் நாம் உயர்ந்தவர்களாகிறோம்.
•••••
136. முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்து விடாதே!
அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல்
வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்!
•••••
137. ஒரு மனிதனை ஜெயிப்பதைவிட
அவன் இதயத்தைக்
கொள்ளை கொள்வது சிறந்தது!
•••••
138. ஈடுபாடின்றி வெற்றி இல்லை!
ஈடுபாட்டினால் தோல்வியும் இல்லை!
•••••
139. நமக்குள்ளே உலகம் இருக்கிறது.
இதைப் போலவே நாம் இந்த
உலகத்தில் இருக்கிறோம். இந்தப் பிரபஞ்ச
இசையுடன் இணையும் ராகமாக
உங்களை நீங்கள் தான்
அமைத்துக்கொள்ள வேண்டும்!
•••••
140. மக்களுக்கிடையே நல்லிணக்கத்தைவிட
வேறு எந்தச் செயல்திட்டமும்
மிக முக்கியமானதல்ல.
•••••
141. சிந்தனை செய்யுங்கள்..
அதுவே மூலதனம்! வாழ்வின்
ஏற்றத்தாழ்வுகள் பற்றிக் கவலை வேண்டாம்.
•••••
142. அற்ப சந்தோஷங்களுக்காக
ஓடுவதைவிட உயர்ந்த
லட்சியங்களுக்காகப் பாடுபடுவது
சாலச் சிறந்தது.
•••••
143. வானத்தை நோக்குங்கள்!
நாம் தனியாக இல்லை!
பிரபஞ்சமே கனவை நனவாக்கும்!
உழைப்பாளிகளுக்கு சிறந்ததைத்
தர நட்புடன் காத்திருக்கிறது!
•••••
144. மாணவர்களின் மிக முக்கியமான
இலக்கணம், கேள்வி கேட்பதே!
•••••
145. தவறான காரியங்களை ஒருபோதும் செய்யக்கூடாது.
இரு இலக்கை நோக்கி செல்ல பல வழிகள்.
நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன்
அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.
•••••
146. உயரிய நோக்கம் இருந்தால்
மனித ஆற்றலின் உச்ச எல்லை என்ற
சுவர்கள் தவிடு பொடியாகிவிடும்.
•••••
147. சரியான காரியத்தை செய்ய எளிமையான வழி என
என்னிடம் கேட்காதீர்கள். தாயின் முகத்தில் புன்னகை
அரும்ப செய்யும் காரியங்களை செய்யுங்கள். அதனை
நேர்மையாகவும், கடின உழைப்புடனும் செய்யுங்கள்.
•••••
148. எப்போதும் வித்தியாசமாக சிந்திக்க
துணிவு வேண்டும்.
தனித்துவமாக இருக்க வேண்டும்.
•••••
149. தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதே
இளைஞர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
•••••
150. எதிர்பாராத பிரச்சினைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி
பெறுவது இளைஞர்களின் தனித்தன்மையாகும்.
•••••
151. எங்கள் இந்தியா
நிகழ்ச்சி ஒன்றின்போது அப்துல் கலாம் குத்து விளக்கினை ஏற்றி வைத்தார்.
குத்து விளக்கு ஏற்றும் முன்பு அவர் கூறியது.
குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம்
அதற்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி கிறிஸ்தவர்களின் அடையாளம்
அதை ஏற்றும் நான் ஒரு இஸ்லாமியன்
இதுதான் எங்கள் இந்தியா.
•••••
152. பயில்வது படைப்பாற்றலை வளர்க்கும்.
படைப்பாற்றல் எண்ணத்தை உருவாக்கும்.
எண்ணம் அறிவை ஊட்டும்.
அறிவு உங்களைச் சிறப்புறச் செய்யும்.
•••••
153. தனி மனிதர்களைவிட
நாடே முக்கியம்
என்ற சிந்தனையை
மனதில் வைத்துக்கொண்டு
நீங்கள் அனைவரும் வளரவேண்டும்.
•••••
154. கோட்பாடுகளை இறக்குமதி செய்வதையும்
பிறர் கருத்துகளை, சிந்தனைகளை
இங்குக் கொண்டுவந்து வளர்ப்பதை விடுத்து,
நமது சொந்தத் தீர்வுகளைத்தான் நாம்
உருவாக்கிக் கொண்டாட வேண்டும்.
•••••
155. நாம் அனைவருமே நமக்குள்ளேயே
ஏதோ ஒரு அதி அற்புத அறிவாற்றல்
வைத்துக்கொண்டிருக்கிறோம்
•••••
156. என் எண்ணத்தில் கல்விமுறை
மாணவர்களின் ஆக்கப்பூர்வமான
கற்பனைத் திறன்களை
ஊக்குவிப்பதாக அமைய வேண்டும்.
•••••
157. போற்றத்தக்க நற்பண்புகளையும்
போதிப்பதாக நம் கல்விமுறை அமையவேண்டும்.
•••••
158. மாணவர்கள் அமைதியின்
தூதுவர்களாக அரும் பங்காற்றலாம்.
•••••
159. அன்பு ஒன்றே இடையறாது
தொடரும் ஆனந்தம்; மானுடத்தின்
இலட்சிய நோக்கும் அதுவே.
•••••
160. நான் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
விடுக்கும் வேண்டுகோள் இதுதான்.
மாணவர்களது மலர்ந்த நெஞ்சங்களில்
உங்கள் மனச்சலிப்புகளைக் கொட்டி
அசுத்தப்படுத்தி விடாதீர்கள்.
•••••
161. பிரகாசமான எதிர்காலம் குறித்த
ஒரு செய்தியை
இளைஞர்களுக்குத் தெரிவியுங்கள்!
தைரியம் சொல்லுங்கள்!
அது அவர்களுக்கு மட்டுமல்ல
இந்த நாட்டுக்கே செய்கின்ற
மகத்தான சேவை ஆகும்.
•••••
162. இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும்
வரலாற்றின் பக்கங்களில்
ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்
அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க
வைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.
•••••
163. இந்த உலகம் இரவும் பகலும்
கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது.
ஏனென்று தெரியுமா, உங்களையும்
மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக.
•••••
164. பூமிக்குக்கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள
எந்த ஒரு சக்தியைக்காட்டிலும்
மனஎழுச்சி கொண்ட
இளைஞர்கள்தான் மிகப்பெரிய சக்தி.
•••••
165. எனக்கு வேண்டும் என்ற சுயநில என்ணம்தான்
லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. அந்த
எண்ணத்தை மாற்றி நாம் ஒவ்வொருவரும்
நம்முடைய மனத்தை, வீட்டை,
குடும்பத்தை தூய்மையானதாக
மாற்றுவோமேயானால், நாடு மாறும்.
•••••
166. தனிப்பட்ட ஒருவரது புத்திக் கூர்மையின்
அடிப்படையில் உருவாவதல்ல தொழில்நுட்பம்.
பலரது அறிவாற்றலின் சங்கமத்தில் பிறப்பது இது.
•••••
167. ஒரு மனுஷன் பிரியும்போது
அவன் தாய் அழுதா அவன் ஒரு நல்ல மகன்
அவன் பிள்ளைக அழுதா அவன் ஒரு நல்ல தகப்பன்
அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதா…
அவன் ஒரு நல்ல தலைவன்!
•••••
169. பிறந்த நாள்
பிறந்த நாள் என்றால் என்ன? என்கிற இந்த ஒரு கேள்வியை பிபிசி வேர்ல்ட் நிறுவனத்தார் உலகில் உள்ள மிகப் பெரிய மனிதர்கள் (VIP) எல்லோரிடமும் கேட்டனர். அதில் மிகச் சிறந்த பதிலாக தேர்வு செய்யப்பட்டது அப்துல் கலாமின் பதில்.
“வாழ்க்கையில் அந்த ஒரே ஒரு நாள் உன்னுடைய
அழுகைக்குரல் கேட்டு உன் தாய் சிரிப்பது…
•••••
170. உங்களுக்குள்ளே அடி ஆழத்தில்
புதைந்து கிடக்கும் எண்ணங்களை,
ஆசைகளை, நம்பிக்கைகளை நீங்கள்
ஆராய்ந்து பார்க்க ஏதுவாக அந்த
அறிவாற்றல் தூண்டிவிடப்படும்.
•••••
171. முழுமையான ஈடுபாட்டுணர்வோடு
செயல்படும்போது ஒரு
பரவசப் பெருக்கை உணர்கிறேன்.
•••••
172. மாணவர்கள்
அப்துல் கலாம் மாணவர்களை மிகவும் நேசித்தார். மாணவர்களை சந்திப்பதற்காக நாடு முழுவதும் பயணம் செய்தார். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு அவர்களை உற்சாகப்படுத்தியும் வந்தார். மாணவர்களுக்கு அறிவுரையும், ஆலோசனைகளையும் வழங்கினார் அவை பொன்மொழிகளாகக் கருதப்படுகிறது.
தோல்வியைக் கண்டு
பயப்படாதீர்கள்.
தோல்வியென்ற சொல்லையே
தோற்கடியுங்கள்.
•••••
173. மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய மூன்று
காரியங்களைச் செய்ய வேண்டும். அவை
1. இலட்சியத்தில் உறுதி வேண்டும்.
2. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்க வேண்டும்.
3. தோல்வியைக் கண்டு பயப்பட வேண்டும்.
தோல்வியைத் துரத்தி அடிக்க வேண்டும்.
•••••
174. மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால் பிரச்சினைகளை எதிர்த்து கடுமையாகப் போராட வேண்டும். பிரச்சினைகள் உங்களைத் தோற்கடித்து விடக்கூடாது. நீங்கள்தான் பிரச்சினைகளைத் தோற்கடிக்க வேண்டும்.
•••••
175. மாணவர்கள் தங்கள் மனதில் தேடுதல்
வேட்கையையும், வேள்வித் தீயையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் எப்போதும் உயர்வான என்ணங்களையே எண்ணவேண்டும்.
•••••
176. உங்களுக்கு இறக்கைகள் உள்ளன.
தவழ முயற்சிக்காதீர்கள்,
பறக்க கற்றுக் கொள்ளுங்கள்,
உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.
•••••
177. கஷ்டம் வரும்போது
கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்
கண்ணை திறந்து பார்.
நீ அதை வென்று விடலாம்.
•••••
178. வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதீர்கள்
ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்
ஒரு லட்சியம் – சாதியுங்கள்
ஒரு சோகம் – தாங்கிக் கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் – வென்றுவிடுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்.
•••••
179. நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால்
நீ யார் என்பது முக்கியமல்ல,
உனது மனது எதை விரும்புகிறதோ
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.
•••••
180. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்
நீ நீயாக இரு.
•••••
181.மாணவர்களுக்கான பத்து உறுதிமொழிகள்
மாணவர்களிடையே உரையாற்றும்போது மாணவர்கள் எப்படிப்பட்ட லட்சியம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை அப்துல் கலாம் வலியுறுத்தி வந்தார். 10 உறுதி மொழிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். மாணவர்களுக்கான 10 உறுதி மொழிகள் இதோ…
1. நான், எனது வாழ்க்கையில் நல்லதொரு லட்சியத்தை
மேற்கொள்வேன். நன்றாக உழைத்துப் படித்து என் வாழ்க்கையிலே மேற்கொண்ட லட்சியத்தை அடைய முற்படுவேன்.
2. நான், எனது விடுமுறை நாட்களில், எழுதப்படிக்கத் தெரியாத ஐந்து பேருக்காவது எழுதப்படிக்க கற்றுத்தருவேன்.
3. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்த பட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதை பாதுகாத்து வளர்த்தும் மரமாக்குவேன்.
4. நான், எனது வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வேன். எனது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வேன். எனது முதுகுளத்தூரை தூய்மையாக வைத்துக்கொள்வேன். எனது இந்த செயலால் என் தமிழ்நாடு தூய்மையாகும். இந்தியா தூய்மையாகும். மக்களின் மனமும் சுத்தமாகும், வாழ்வு சிறக்கும்.
5. மது, சூதாடுதல் மற்றும் போதைப்பழக்கங்களுக்கு ஆளாகித் துயருறும் ஐந்து பேரையாவது அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த நான் முயல்வேன்.
6. நான், ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ மொழியின் பெயராலோ எந்தவித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்துகொள்வேன்.
7. நான், வாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொண்டு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.
8. நான், என் தாய் மற்றும் தாய்நாடு இரண்டையும் நேசித்து, பெண்குலத்திற்கு உரிய மரியாதையையும், கண்ணியத்தையும் அளிப்பேன்.
9. நான், நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாகச் சுடர்விடச் செய்வேன்
10. நமது தேசியக் கொடியை என் நெஞ்சத்தில் ஏந்தி நாம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்.
•••••
182. சுய கட்டுப்பாடு
சாதிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டுள்ள மாணவர்களுக்கு பல நல்ல ஆலோசனை வழங்கி வந்தார். ஆலோசனைகளைத் தனது வாழ்க்கையிலிருந்தே கீழ்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனதையும் எண்ணங்களையும்
கட்டுப்படுத்தி, என் தலைவிதியை எனக்குச்
சாதகமானதாக அமைத்துக்கொள்ள நான்
கடுமையாக முயற்சி செய்தேன்.
ஒவ்வொரு மாணவருக்குமே
வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை
இருக்கத்தான் செய்கிறது. ஆனால்
அதை நிஜமாக்கிக் காட்டுவதில் தான்
ஒவ்வொருமே வேறுபடுகிறோம். சுயக்
கட்டுப்பாட்டு நெறியைப் பின்பற்றிச்
செயல்பட்டால், ஒவ்வொருவராலும் சாதிக்கமுடியும்
•••••
183. மற்றவர்கள் என்னை உதாரணமாக
எடுத்துக் கொள்ளவேண்டும் என்று
நான் விரும்பவில்லை, ஒருசில
ஆத்மாக்களாவது எனது வாழ்க்கைக்
கதையைத் தெரிந்துகொள்வதன் மூலம்
உத்வேகம் பெறக்கூடும் என்று நம்புகிறேன்.
•••••
184. மறைவு
அப்துல் கலாம் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.கல்வி நிறுவனத்தில் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று நடைபெற்ற மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியின்போது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இழப்பு தாங்காமல் நாடே கண்ணீரில் மூழ்கியது. அவருக்காக நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் அப்துல் கலாமின் மறைவிற்காக கண்ணீர் அஞ்சலி என போஸ்டர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து அவரின் மேற்கோளே இடம் பெற்றிருந்தன.
நமது பிறப்பு ஒரு
சம்பவமாக இருக்கலாம்.
ஆனால்
இறப்பு ஒரு சரித்திரமாக
இருக்க வேண்டும்.
ஆம். அப்துல் கலாம் ஒரு சரித்திரமாக வாழ்ந்து மறைந்தார். அவருடைய சாதனைகள் இந்திய நாட்டின் சரித்திரத்தில் நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது.
•••••
Reference
இணையதளம்.
இந்தியா 2020- அப்துல் கலாம் யு.சு.ராஜன்.
டாக்டர் அப்துல் கலாமின் வெற்றி மொழிகள் – நெல்லை சு.முத்து
தினந்தந்தி (05.09.2015)
ஏ.காதர் முஹைதீன் (ஹூமாயூன்) CSI கணினி நிறுவனம், முதுகுளத்தூர்.
தினமணி வலை பூங்கா, தி இந்து, தினமலர் நாளிதழ்கள்.
ஜனாதிபதி அப்துல் கலாம் – கவிஞர் கானதாசன்.
•••••
ஏற்காடு இளங்கோ
https://ta.wikipedia.org/s/3pgz
ஏற்காடு இளங்கோ (பிறப்பு: மார்ச் 19, 1961) ஓர் எழுத்தாளர். அறிவியல் சார்ந்த பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னும் ஊரில் எளிய குடும்பத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியை பேளுக்குறிச்சியிலும் அறிவியல் இளையர் பட்டவகுப்பை நாமக்கல்லிலும், முதுகலைப் படிப்பை அண்ணாமலைப் பல்கலையிலும் முடித்தார். இவருக்கு ஜார்ஜ் டிமிட்ரோவ், ஹோசிமின் என இரு மகன்கள் உள்ளனர்.
பணியும் நூல்களும்
நடுவணரசு தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் இவர் அறுபத்தைந்து அறிவியல் நூல்கள் எழுதி இருக்கிறார். அவை மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் செய்திகள் நிரம்பியவை.
'பழங்கள்' என்னும் புத்தகம் 'அனைவருக்கும் கல்வி' என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது .
’செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்’ என்ற நூலும் ’அனைவருக்கும் கல்வி’ என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் வழங்கப்பட்டன.
'விண்வெளி ஆயிரம்' 'நீரில் நடக்கலாம்' போன்ற நூல்களையும் கலிலியோ, ஐசக் நியூட்டன், லூயி பாஸ்டர், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் அறிஞர்கள் பற்றியும் எழுதியுள்ளார்.
சிறிய அளவிலும் பெரிய அளவிலும் 73 புத்தகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இவருடைய மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தானா நூல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 11-ஆவது மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்டது[1]
பிற பொதுப் பணிகள்
1987 ஆம் ஆண்டு முதல் அறிவியல் இயக்கத்தில் முனைப்பானவராக உள்ளார். தற்பொழுது சேலம் மாவட்டத் தலைவராக உள்ளார்.
மாணவர்களுக்கான மாத இதழ் 'துளிர்' ஆசிரியர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.
பொதுவிடத்தில் எச்சில் துப்புதல் சுகாதாரக் கேடு என்பதை அறிவியல் அடிப்படையில் விளக்கி மூன்று லட்சம் துண்டறிக்கைகள் விநியோகம் செய்து பரப்புரை இயக்கம் நடத்தினார்.
மைதாவினால் செய்யப்படும் பரோட்டா சாப்பிடுவதால் உடல் நலம் கெடும் என்பதை விளக்கி வருகிறார்.
பிளாஸ்டிக் தண்ணீர்ப் புட்டிகளை ஒரு வாரத்திற்கு மேல்பயன்படுத்தல் கூடாது என்று பரப்புரை செய்தார்.
ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரைகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அறிவொளி இயக்கம் சார்பாக நீக்கி ஏரியைத் துப்புரவு செய்தார்.
மந்திரவாதிகள், போலிச் சாமியார்கள் செய்யும் ஏமாற்று வித்தைகளையும் கடவுள் பெயரைச் சொல்லி பரப்பும் மூடச்செயல்களையும் 'பொய்' என்று அறிவியல் அடிப்படையில் நிரூபித்து வரும் தம் மனைவிக்குத் துணை நிற்கிறார்.
மாணவர்களைப் பள்ளிகளில் சந்தித்து வானவியல் பற்றிய அறிவியல் உண்மைகளைச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ஏற்காட்டில் வாழ்ந்து வரும் இவர் மார்க்சியக் கொள்கைவழி அறிவியல் முறையில் நாத்திகராக விளங்கி வருகிறார்.
தம் இறப்பிற்குப் பிறகு தம் உடலை மருத்துவ ஆய்வுக்குப் பயன்படுத்தவேண்டும் என்று தம் விருப்ப ஆவணத்தில் பதிவு செய்துள்ளார்.
பொதுவகத்தில் தாவரவியல் பெயர்களுடனும், அதற்குரிய குறிப்புகளுடனும் பதிவேற்றுகிறார். அப்பதிவேற்றங்களை இத்தொடுப்பில் காணலாம்.
ஆதாரம்
மைதா மாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு - தினமணி Jul 15, 2013 3:15 AM
சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
"உங்களது தேடுதல் :- ஏற்காடு இளங்கோ". நூல் உலகம். பார்த்த நாள் 12 பெப்ரவரி 2014.
நோபல் பரிசு பெற்ற பெண்மணிகள் தினமலர் புத்தகங்கள் பார்த்த நாள் பிப்ரவரி 11, 2014
ஏற்காடு இளங்கோ. "கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசேரி". வரலாறு. பார்த்த நாள் 12 பெப்ரவரி 2014.
ஏற்காடு இளங்கோ. பெண் வானவியல் அறிஞர்கள். சீதை பதிப்பகம்.
ஸ்டீபன் ஹாக்கிங்: தன்னம்பிக்கையின் நாயகன். மங்கை வெளியீடு.
கருத்துகள்
கருத்துரையிடுக