மஹாகவியின் கோடை
நாடகங்கள்
Backமஹாகவியின் கோடை
கவிஞன். வாசகர் சங்க வெளியீடு - 5
1970
++++++++++++++++++
எழுதியது : பெப்ரவரி 1966
முதல் மேடையெற்றியது : ஓகஸ்ட் 1969
முதல் பதிப்பு : செப்பம்பர் 1970
வெளியீடு :
வாசகர் சங்கம்,
“நூறி மன்ஸில்”,
கல்முனை - 6.
அச்சு :
கத்தோலிக்க அச்சகம்,
18, மத்திய வீதி, மட்டக்களப்பு.
விலை ரூபா 2-75.
++++++++++++++++++
தேவநேசன் நேசையா,
சென்ற இடங்கள்
சிறக்கப் பணி யாற்றி
நின்ற பெரியன்
அதகால் நினக் கன்புக்
காணிக்கை இந்தக் கவி.
“மஹாகவி”
“நீழல்”
அளவெட்டி
11-9-70
++++++++++++++++++
கோடை யாரையும் குறிப்பிடாக் கற்பனை.
கோடையின் உரிமைகள் மஹாகவி உடையன.
++++++++++++++++++
கோடையின்
பிறப்பு
நாடகம் பலப்பல நடக்கக் காண்கிறோம்.
ஆடுவோர் தேவரும் அரக்கரும் ஆன
புராண காலப் பொய்களே அதிகம்.
ஆடையும் அணிகளும் மினுங்கும் அரிய
அரசர்களுடைய பெருமைகள் கூறும்
சரித்திரக் கதைகளும் சரிக்குச் சரியே.
அச்சிலே அடித்த பாத்திரங்களையும்,
அச்சிலே அடித்த சம்பவங்களையும்
கண்டு கண்டு கவலைகள் கொண்டோம்.
நேற்றைய செய்தியை நிதமும் பார்த்துச்
சீற்றம் அடைந்த மிகச் சில பேர்கள்
இன்றைய காலத் திறங்கி வந்தனர்.
இவர்களும்,
அதிசய மாக அந்த நாள் அறிந்தும்,
புதிய காலப் போக்குகள் உணராக்
கேலியும் பகிடியும் கிண்டலு மான
போலிகள் படைத்து விகடம் புரிந்தனர்.
இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்,
இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்,
இன்றைய காலத் திழுப்புகள், எதிர்ப்புகள்,
இன்றைய காலத் திக் கட்டுக்கள்
என்றிவை காணவோ மேடை யில்லை.
புதிய களங்கள், புதிய போர்கள்,
புதிய வெற்றிகள்- இவைகளைப் புனையும்
நாடகம் வேண்டி நம் மொழி கிடந்தது.
கோடையை எழுதும் காலமும் குதிர்ந்தது.
எழுதி எழுதி ஏட்டொடு கிடக்கும்
பா நாடகங்களே பயிலும் தமிழில்,
கோடை ஒர் புதிய கொடி உயர்த்தியது-
தாசீசியஸ் அதைத் தயாரித் தளித்தார்.
நுஃமான் அதனை நு}ல் செய்கின்றார்.
சைத்திரீகர் ‘சௌ’ வின் கோடுகள்,
சிவலிங்கத்தின் சித்திரம் கிடைத்தன.
இவர்களுக் கெனது நன்றிகள் இயல்க.
நாடகம் புதியதோர் நடையில்
ஓடுக இனி இச் கோடை யோடுமே!
“ம ஹா க வி ”
“நீழல்”
அளவெட்டி,
11 - 9 - 70
++++++++++++++++++
கோடைக்கு
ஓர் அறிமுகம்
“கோடை” மஹாகவியின் முக்கியமான படைப்புக்களுள் ஒன்று. அரசாங்கத்தாலும் தமிழ்ப் பிரமுகர்களினாலும் இருமுறை தடை செய்யப்பட்ட பெருமை இந் நாடகத்துக்கு உண்டு. நான் அறிந்தவரையில் மேடையேற்றாமல் தடைசெய்யப்பட்ட தமிழ் நாடகம் இது ஒன்றே. ‘கோடை’ பிபுத்துவ சாதி அமைப்பைக் கேலி செய்வதும் உதாசீனம் செய்வதுமே பிரமுகர்களின் கோபத்துக்கக் காரணமாகும்.
கோடையின் முதல் மேடையேற்றத்தின் போது அதைத் தடைசெய்யுமாறு இத் தமிழ்ப் பிரமுகர்களே அரசாங்கத்துக்குத் தகவுரை செய்தார்கள். பரிசீலனையின் பின்னர் இத்தடை நீக்கப்பட்டது. இரண்டாம் தடைவ கொழும்பில் ஒரு நாவலர் விழாவில் கோடையை மேடையேற்றும்படி கேட்டார்கள். எனினும் இப் பிரமுகர்களின் உள் வெட்டுக்களினால் கடைசி நிமிடத்தில்¬¬-நடிகர்கள ஒப்பனைக்கத் தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில்-நாடகம் தடுக்கப்பட்டது. நாடகத்தில் சில காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பது இவர்கள் கோரிக்கை. குறிப்பாக, ஜயர் நாயனக்காரர் வீட்டில் இட்டிலீ சாப்பிடக் கூடாது என்று அவர்கள் கேட்டார்கள். நெறியாளரும் நடிகர்களும் அதற்குச் சம்மதிக்கவில்லை அதனால் திரும்பிச் சென்றார்கள்.
இவ்வாறு பிரபுத்துவ சமுதாயச் சின்னங்களை தாக்குகின்றது என்ற பெருமைக்குரிய குற்றச்சாட்டு கோடையின்மீது சுமத்தப்பட்ட போதிலும் அதன் அடிப்படைப் பொருள் அது அல்ல அன்னிய ஏகாதிபத்திய ஆட்சியினால் கிராம சமுதாய மனப்பாங்கில் ஏற்பட்ட விளைவுகள், முரண்பாடுகளே கோடையின் அடிப்படையாகும். நாடகம் முழுவதும் இந்த அம்சமே விரவியிருக்கின்றது.
இதைப் புரிந்து கொள்ள முடியாத சிலர் இது ஒரு காதல் கதைதானே என்று மிகச் சுலபமாகக் கூறியுள்ளார்கள். காதலையும் நாயனக் கலையையும் இம் முரண்பாடுகளை வெளிக் கொண்டுவரும் ஊடகமாகவே மஹாகவி உபயோகித்துள்ளார் என்பது சற்று நிதானித்து நோக்கினால் தெளிவாகும்.
செல்லம் தன் மகளின் காதலைப் புறக்கணித்து ஒர் அசட்டுப் பொலீஸ்காரனை-அவன் மாதச் சம்பளம் பெறும் அரசாங்க ஊழியன் என்பதற்காகவே-அவளுக்கு மணம் முடித்தவைக்க முயல்வதும், தன் மகனின் கலையார்வத்தை வெறுப்போடு நோக்கி அவனை ஆங்கிலம் கற்பித்து ஒரு கிளார்க்காக மாற்றவேண்டும் என்று விரும்புவதும், தேசியக் கலையையும் கலைஞரையும் மேல்தட்டில் உள்ளவர்கள் ஒதுக்குவதும் அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியின் சமுதாய விளைவுகளே. பிரிட்டிசாரின் வரவின் முன்னர் இத்தகைய மனப்பாங்கு நமது சமூகத்தில் தோன்றி இருக்கவில்லை. வெளியார் ஆட்சியினால் சமுதாய வாழ்வில் ஏற்பட்ட கோடை காலமாக இதை நாடகம் சித்திரிக்கின்றது. “இதுவோ கடுங்கோடை. வெய்யிலினால் அல்ல, வெளியார் அரசாட்சி செய்யும் கொடுமைச் சிறப்பே அதுதானே” என்பது பஞ்சையரின் குரல்.
இந்த வகையில் கோடை ஒரு சமுதாய வரலாற்று நாடகமாகும். சுதந்திரத்துக்கு முற்பட்ட காலகட்டத்தின் சமுதாய வாழ்வை ஒரு நாயனக் கலைஞனின் குடும்பத்தின் ஊடாக இயல்பு குன்றாமல் அது சித்திரிக்கின்றது.
எனினும் இவ்வரலாற்று விளைவுகளைக் கோடை வெறுமனே யன்றி ஓர் ஆழமான நோக்குடனேயே சித்திரிக்கின்றது. ஏகாதிபத்தியப் பிடிகளுக்கு எதிரான உணர்வைத் தூண்டுவதே அந் நோக்காகும். நாடகத்தின் கதைப் பொருள் அதை நோக்கியே வளர்ச்சி யடைகின்றது. சோமுவும் கமலியும் தளைகளைக் துணிவோடு அறுத்துக்கொண்டு வெளியேறும் இளந் தலைமுறையினராவர். பஞ்சையர் அக்கால கட்டத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பாளரும் முற் போக்காளருமாக உருவாக்கப்பட்டுள்ளார்.
எனினும் தீவிரமான கிளர்ச்சிகளும் போராட்டங்களும் இன்றி குடும்ப நிகழ்ச்சிகளின் ஊடாக நாடகம் அமைதியாக வளர்ச்சியடைவதால் சிலர் இவ் விசயங்களைப் புரிந்துகொள்ளவில்லை. அன்னிய ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தி எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை தெரிவிப்பதுடன் பஞ்சையர் அமைந்து விடுவது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. ஆனால் மஹாகவி இதற்கு மாற்றமாக நாடகத்தைப் படைத்திருக்க முடியாது. அவ்வாறு படைத்திருந்தால் அது இயல்பு குன்றிய மிகைப்படுத்தலாகவே முடிந்திருக்கும்.
ஏனெனில் இலங்கையில் வெகுஜன ரீதியான தீவிரமான சுதந்திரப் போராட்டம் நிகழவில்லை. மத்தியதர, உயர்மத்தியதர வர்க்கத்தினரே இங்கு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார்கள். அவர்களின் போராட்டம் தூதுக்குழுக்கள் மூலமும் அரசாங்க சபைத் தர்க்கங்கள் மூலமுமே நிகழ்ந்து முடிந்தன. ஆகவே கிராமங்களில் அதன் தாக்கம் வலுப்பெறவில்லை. பஞ்சையர் போன்ற படித்த சிந்தனையாளர்களே அங்கு தோன்றி இருக்கமுடியும். ஆகவே மஹாகவி தன்னைச் சுற்றியுள்ள சாதாரண மக்கள் மத்தியில் இருந்து தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் இதைத் தவிர வேறு விதத்தில் இயங்கி இருக்க முடியாது.
எனினும் எதிர்காலத்தின் மீது பஞ்சையர் தெரிவிக்கும் நம்பிக்கை தெளிவானதும் பலம் மிக்கதுமாகும்:
“என்றே ஒருநாள், இருந்து பார் மாணிக்கம்;
நின் றந்தக் கோயில் நிமிர்ந்து, நெடுந் தூரம்
பார்த்தூப் பயன்கள் விளைக்கின்ற கோபுரமும்,
வேர்த்துக் கலைஞர் விளைத்த மணி மண்டபமும்,
வீதிகளும், நூறு விளக்கும், பரதத்தின்
சேதிகளைக் கூறும் சிலம்புச் சிறுபாதம்
ஆடும் ஆடும் அரங்கும், அறிந்து சுவைஞர்கள்
நாடிப் புகுந்து நயந்திட நீ சோமனுடன்
ஊதும் குழலில் உயிர் பெற்று உடல் புளகித்து
ஆதி அறையில் அமரும் கடவுளுமாய்
என்றோ ஒருநாள் எழும்”
பஞ்சையரின் இக்குரல் வெறுமனே கலைகளியினதும் சமயத்தினதும் புத்தெழுச்சி பற்றியது மட்டுமல்ல. தளைகள் அனைத்தையும் ஒடித்துவிட்டு எழுச்சியுறும் ஒரு புதிய சமுதாயத்தைப் பற்றியதுமாகும். பேசுபவர் ஒர் ஜயர் கேட்பவன் ஒரு கலைஞன் என்றபடியினால் இது அவர்கள் வாழ்க்கையோடு ஒட்டிய எதிர்கால நம்பிக்கையாக அமைந்த போதிலும் உண்மையில் இதன் தொனி எல்லைகள் கடந்து முழுச்சமுதாயத்தையும் பற்றியதாகவே ஒலிக்கின்றது.
“கோடை சுதந்திரத்துக்கு முற்பட்ட காலகட்டத்தைச் சித்திரி;பதனால் அதன் தற்காலப் பெறுமதி என்ன” என்ற ஒரு கேள்விக்கு இடம் உண்டு. இலங்கையின் தற்காலப் நிலையும் சுதந்திரத்திற்க்கு முற்பட்ட நிலையும் அதிகம் வேறுபட்டவை யல்ல என்பதே அதற்க்குரிய பதிலாகும். இலங்கை இன்னும் உணடமையான சுதந்திரம் பெறவில்லை. மாட்சிமை தங்கிய மகாராணியின் பெயராலேயே நாம் இன்னும் ஆளப்படுகின்றோம். அன்னிய ஏகாதிபதியத்தின் பிடி இன்னும் பலமாகவே இருக்கின்றது. வெள்ளைக்காரரின் ஆட்சிமுறை, கல்வி, சட்டம், பொருளாதாரப் பிடி அனைத்தும் அப்படியே இருக்கின்றன. அதனால் அடிமை மனப்பாங்கின் சின்னங்கள் நமது சமூகத்தில் இன்னும் இருக்கின்றன. உண்மையில் 1956ம் ஆண்டின் பின்னரே இலங்கையில் தேசியப் போராட்டம் ஆரம்பமாகியது; அது இன்னும் முடியவில்லை. ஆகவே நாடகத்தின் கால வேறுபாடு வாசகனைப் பாதிப்பதில்லை.
எனினும் பஞ்சையரின் குரல் இன்று நான்கு திசைகளிளும் இருந்து நெளிவாகவும் பலமாகவும் ஒலிப்பதை வாசகன் அதிகமாக உணர்வான். வாசகனின் குரலும் அதுவாகவே இருக்கும்.
கோடையின் கலையாக்கம்பற்றிச் சொல்வதற்கு அதிகம் உண்டு. எனினும் விரித்துரைக்க வேண்டியதில்லை என்றே நினைக்கின்றேன்.
நாடகத்தில் கடைசிவரை வாசகனை ஆழ்த்திவைப்பது அதன் களையாக்கத் திறனே. நாடக ஆக்கம் பற்றிய அநேக முன் உதாரணங்கள் கோடையில் உண்டு என்பதை விமர்சகர்களும் படைப்பாளிகளும் கண்டுகொள்வார்.
கதைப் பொருளின் சீரான வளர்ச்சியும், பாத்திரங்களின் இயல்பான நடத்தையும், குண இயல்பும், உரையாடலும், முரண்பட்ட பாத்திரங்களின் இயக்கமுமே நாடகத்தின் உயிர். இவ்வுயிர்ப் பண்பு கோடையில் நன்கு பேணப்பட்டுள்ளது.
கோடையில் பாத்திரங்கள் தம் இச்சைப்படி, இயல்புக்கு ஏற்ப இயங்குகின்றன. பொம்மலாட்டக்காரனைப் போல் மஹாகவி அவற்றை இயக்கவில்லை. ஒரு யதார்த்தப் படைப்பில் படைப்பாளி பாத்திரங்களைத் தம் இயல்புக் கேற்ப இயங்கவிடுவது இன்றியமையாத தாகும். கோடையில் இவ் அம்சம் மிக நுட்பமாகக் கையாளப்பட்டுள்ளது.
தமிழில் தோன்றிய கவிதை நாடகங்களுள் கோடைக்கு ஒரு தனி இடம் உண்டு. இதுவரை எழுதப்பட்ட கவிதை நாடகங்கள் அனைத்தும் -- இரண்டொன்றைத் தவிர -- பழைய இதிகாசங்களிலும் இலக்கியங்களிலும் காணப்படும் உபகதைகளையும், பழங் கவிஞர்களினதும் சமயச் சான்றோர்களினதும் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் சொல்வன வாகவே உள்ளன. கோடை மட்டுமே சமூக வாழ்வின் முக்கியமான பிரச்சினைகளை -- வரலாற்று விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட கலாபுர்வமான யதார்த்தப் படைப்பாகும். இது ஒரு புதிய மரபின் தோற்றமாகும்.
கோடையை நூலாக்கும் வாய்ப்பை எமக்களித்த
மஹாகவிக்கு எனது நன்றி.
எம். ஏ. நுஃமான்.
நூறி மன்ஸில்,
கல்முனை - 6.
20 - 9 - 1970.
++++++++++++++++++
மஹாகவியின் கோடை
மேடை யேற்றம்.
தயாரிப்பு: நாடோடிகள், கொழும்பு.
நெறியாட்சி: அ. தாசீசியஸ்
* முதல் மேடையேற்றம் : 1969--8--15.
இடம் : கொழும்பு, ஹவ்லொக் நகர் லும்பினி அலங்கு.
நடிகர்கள் :
கணேசு : செல்வன் சாந்தகுமார் சண்முகம்
செல்லம் : செல்வி ஈஸ்வரநிதி இராஜரத்தினம்
கமலி : செல்வி சித்திரா ராம் ஈஸ்வரா
மாணிக்கம் : தி. சச்சிதானந்தன்
சோமு : த. நமசிவாயம்
பஞ்சையர் : செ. தங்கராசா
விதானையார் : சி. சுந்தரலிங்கம்
முருகப்பு : எஸ். தோமஸ் லம்பேட்
சாமியார் : ச. முத்துலிங்கம்
காசி : வி. சிங்காரவேலு
* இரண்டாவது மேடையேற்றம்
செல்வன் சேரன் உருத்திரமூர்த்தி கணேசுவாகவும்
ஜீ. மறைமுதல்வன் முரகப்புவாகவும் நடிக்க,
மட்டக்களப்பு நகர முன்றில் வெளியரங்கில்
1970-2-6ல் நிகழ்ந்தது.
++++++++++++++++++
மஹாகவியின்
கோடை
என்ற
பாநாடகம்
இலங்கைப் பொது நிகழ்ச்சி அவையின்
அங்கீகாரம் உடையது
சிறீ லங்கா சாகித்திய மண்டலத்தின்
பரிசொன்று பெற்றது
++++++++++++++++++
இடம் :
ஈழத்தின் வடக்கே ஒரு கிராமம்
களம் 1 :
மாணிக்க நாயனக்காரர் வீட்டுத் தலைவாசல்
களம் 2 :
பஞ்சையரின் சிவன் கோயில் மண்டபம்
காலம் :
1937ம் ஆண்டு, ஆனியில் ஒரு நாள்
வைகறை தொடக்கம் மறு வைகறை வரை.
சினை
மாணிக்கம் : நாயனக்காரர்
செல்லம் : அவர் மனைவி
கமலி : அவர் மகள்
கணேசு : அவர் மகன்
சோமு : அவர் சிட்சைப் பிள்ளை
பஞ்சையர் : அவர் சுவைஞர்
முருகப்பு : அவர் மனைவியின் உறவினர்
விதானையார் : அவர் ஊரவர்
காசி : அவர் வண்ணான்
சாமியார் : அவர் அறியாப் பரதேசி.
முற்கூற்று
பாடல்; பூபாளம்:
நாடகம் கண்டு நயக்கத்
தெரிந்தோர் நடுவினில் வந்து
ஆடல் விழைந்தோம். வணக்கங்கள்
கோடி, அனைவருக்கும்.
மேடையின் மீது வெளி நாட்டார்
ஆட்சி விளைத்த ஒரு
கோடை.
நாயன இசையில் புபாளம் கோட்டுத்
தனிதல். கூறல்:
எனினும் குழலொன்
றிதென்ன? குளிர்கிறதே!
நாயனம் கேட்டுத் தணிதல்.
பாடல்; மோகனம்:
அள்ளி இறைத்த அமிழ்தாய்
எழுந்ததிவ் ஆயிரத்துத்
தொள்ளா யிரத்து முப் பத்தே
ழிலும், ஓர் துணிந் கலை!
மௌ;ள நம் மாணிக்க நாயனக்
காரரின் வீடுவரை
உள்ளம் இழுக்கும். தொடர்வோம்
வருக, உறவினரே . . .
ஆனிமாதம் 1937ல் ஒருநாள் அதிகாலை. ஈழத்தின்
வடக்கே ஒரு கிராமத்தில் உள்ள மாணிக்க நாயனக்காரர்
வீட்டுத் தலைவாசல்.
திரை விலக, மேடை முழுவதும் இருள். வைகறைப் பொழுதை
உணர்த்தும் வண்ணம் மேடைப் பின்புற வெண்திரை
செவ்வரி படர்ந்திருக்கிறது. நாயனம் கேட்டுப் பாடல் தொடங்கியதும்
மேடையில் ஒளி சிறிது அதிகரிக்கின்றது. மங்கிய ஒளியிலே
மேடையின் வலது மூலையில் ஓலைக்குடில் ஒன்றின் வாயில்
தெரிகின்றது. வாயிலில் ஒரு புறத்தில் கிளிக்கூடு ஒன்று தொங்குகின்றது.
வலது புறத் திண்ணையில் சிறுவன் கணேசு தவிலை அடிக்கும்
பாவனையிலே சிலையாக அமர்ந்திருக்கிறான். திண்ணைக்கு முன்னால்
ஒரு மரக்குற்றி இருக்கிறது. மறுபுறத் திண்ணையில் ஒரு வெற்றிலைத்
தட்டம் காணப்படுகின்றது. இடதுபுறத் திண்ணைக்கு வெளியே ஒரு
சாய்வு நாற்காலி. அதிலே அமர்ந்திருக்கும் சோமு நாயனக் குழலைத்
துடைக்கும் பாவனையில் சிலையாக இருக்கின்றான்.
மேடையின் இடது மூலையில் கிணற்றடி வேலியும் வேலியின்மேல்
எட்டிப் பார்க்கும் வாழைகளும் தெரிகின்றன. கிணற்றுக்கும் வீட்டுக்கும்
இடையில் செல்லம், நீர் நிறைந்த தண்ணீர்க் குடத்தை இடுப்பில்
வைத்த வண்ணம், சிலையாக நிற்கிறான்.
மேடையின் இடதுபுற முன் பகுதியில் குனிந்து முற்றம்
பெருக்கும் பாவனையில் விளக்குமாற்றோடு கமலி சிலையாக நிற்கிறான்.
பாடல் முடிந்ததும் சிலையானோர் செயற்படத் தொடங்குகின்றார்கள்.
கணேசு வேகமாகத் தவிலைத் தட்டுகிறான். சோமு குழலைத்
துடைக்கிறான். செல்லம் நடந்து முன்புறம் வந்து இடப்புறம்
குடத்தை இறக்கி வைத்துவிட்டு கணேசுவிடம் வந்து
எரிச்சலோடு அவனைப் பாi;க்கிறாள். கமலி கூட்டியவள்,
கிணற்றுப் பக்கம் போகிறாள்.
இவர்கள் செயற்படத் தொடங்கியதும் மேடையில் ஒளி
நிறைகிறது. பின் வெண்திரையில் இளஞ் சூரிய ஒளி சிறிது
சிறிதாக மறைகிறது…
செல்லம் : தம்பி, எழும்பு! தலையைப் பார், பற்றையாய்ச் செம்பட்டை பற்றிக் கிடக்கு. போய்ச் சீவைய்யா. கொப்பர் வெளிக் கெழுந்து போன பொழுது முதல், இப்படியே சும்மா இதை ஏன் அடிக்கிறாய்?
கணேசு : கொஞ்சம் பொறம்மா, கொதிக்காமல். நானும், இந்த அஞ்சாறு நாளாய் அடிக்கிறேன். இந்தச் சொல் பஞ்சிப் படுது வருதற்கு.
செல்லம் : பார் ஆளை!...
கட்டை எடுத்துக் கடகடென்று நாளெல்லாம் தட்டுகிறதே உனக்குத் தலை எழுத்து? பிள்ளை!
(‘பிள்ளை’ என 3,4 தரம் கூப்பிடுகிறாள்; கமலி கிணற்றடியிலிருந்து வருகிறாள்)
இவனைப் பிடித்துக் குளிப்பாட்டிப் பள்ளிக் கனுப்பு!
(செல்லம் போதல்)
கணேசு : (சைகை மூலம் கமலியை அருகே அழைத்து)
பலகாரம் என்னக்கா?
கமலி : எங்கே, சொல் பார்ப்போம்?
கணேசு : எனக்கா தெரியாது…?
தோசை! தாளித்த துவையல் மணக்கிறதே! ஆசை உடையேன் அதன்மேல். அதனாலே, ஏழெட்டு வேணும் எனக்கு!
கமலி : இல்லை
கணேசு : இல்லையே…? இல்லையென்றால்…?
(சிணுங்குகிறான்)
கமலி : இன்றைக்குத் தோசை அல்ல என்றேன்.
கணேசு : உது சும்மா…
என்றைக்கும் உன் வாய் இடையே பிறக்கிறது, பொய்தானே!0
சோமு : நேற்றுப் பொழுது படும் பொழுது
“மெய்தான் அரும்பி விதிர் விதிர்க்கக்”, கைநோக, ஆட்டுக்கற் பக்கம் அமர்ந்திருந்தாய் அல்லவா?
கணேசு : பாட்டும் முணுமுணுத்துக் கொண்டு?
சோமு : பயித்தியமே,
பாட்டென் றதனைச் சுருக்கிப் பகராதே. நீட்டு நிலத்தின் நிகரற்ற ஓசை யெல்லாம் கூட்டாய் விளைந்து குழைந்து, குளிர் வுடலில் ஊட்டும் ஓர் விந்தை! ஒதுக்கிலே நின்றபடி கேட்டிருந்தேன் நானும்!
கமலி : எதற்காகக் கேட்டிருந்தார்?
இங்கே ஓர் பாட்டை உதட்டுள் இழுப்பதற்கும் சங்கீதம் கற்றோர் விடமாட்டார்!
சோமு : சாகு முன்னர்
என்றே, உன் நாவில் எழுகின்ற சங்கதி நன்றாய் அதே போல, நான் எடுத்த நாயனம் பேச வைத்தல் வேண்டும் எனப் பேராசை கொண்டவன் நான்!
கமலி : ஆசை மெத்திப் போன தறிவேன்! அது எனது பாட்டிலோ?
சோமு : அன்றி அந்தப் பாட்டை விளக்கும் இன்பக் கூட்டிலோ? பொல்லாக் குறுக்கு விசாரணைதான்!
(சோமு எழுந்து பேசியபடியே நடந்து குழலை வைத்துவிட்டு மீண்டும் பழைய இடத்திற்கு வந்து நின்று சோம்பல் முறிக்கிறான்)
பாட்டேது, இதழின் பவளங்கள் இல்லாது…?
நாடோ சுவைக்க அறிந்தால், நடுச் சபையில் மேடையிலே வீற்றிருந்து மேம்பாட்டைக் காட்டி நீ பாடுதல் கூடும் பலர் கேட்க!
கமலி : ஜயையோ!
(போய்க் கணேசுவின் அருகே திண்ணையில் அமர்கிறாள்)
வாய்க்குள் முணுமுணுத்தால் கூட, மதிப்புரைகள் தூக்கி வந்து வாசிக்கும் தொல்லை நிலையிலே, மேடையிலே ஏறும் விருப்பத்தை விட்டிடலாம்.
சோமு : தாடையிலே தொட்டுத் தடவாக் குறையாக, எத்தனை நாட் கொஞ்சி இருந்தேன், ஒரு பாட்டைப் பாடிக் காட்டென்று, முழுதாய்! பயனில்லை. ஓடி முகம் கழுவி ஒய்யார மாய் நீறு புசிப் பெரியதொரு பொட்டிட்டுக் கொண்டு வந்து, கந்த ரலங்காரம் பாடிக் கரம் குவித்துக் குத்து விளக் கெதிரே கும்பிட்டு நீ இருக்க, வைத்த செவி, விழிகள் வாங்காமல் உண்டு நான் கற்றவைகள் நூறு, கமலி!
கமலி : கடும் புகழ்ச்சி
வித்தையும் மிச்சம் வருகிறதே உங்களுக்கு!
கணேசு : பாட்டை விடுங்கே! பலகாரம் என்ன? சாப்பாட்டை நினைத்தல் பழுதில்லை இவ்வேளை. சட்டென்று சொல்லு, தமிழன்னை மீதாணை!
கமலி : இட்டிலியாம் இன்றைக்கு! இனியேனும் பல்லைத் தேய்.
கணேசு : இட்டிலியா? ஆகா! இதுவும் சுவை உடைத்தே!
சோமு : கொட்டை உழுந்தைக் குளிர் நீரில் ஊற வைத்துத் தோலை அகற்றித், தொழிலா ளினி ஒருத்தி காலை மடக்கிக் கருங்கல்லின் முன்னமர்ந்தே, ஓர் கை குழவி உருட்டப், பிறிதோர் கை ஈர மாத் தள்ளி இருக்க, உழைத்திடுவாள். மற்ற நாட்காலை மலரக், கிணற்றடியில் அற்புதம் ஒன்றாகும். அடடா! புளிகொண்டு வெண்கலத்தைத் தொட்டு விளக்கச் செம் பொன்னாகும், கண்களே கூசிக் கலங்கும் படியாக! செந்நெருப்பை மூட்டி, அடுப்பில் அதைச் சேர்த்து, மின்னிருக்கும் சிற்றிடையார் மௌ;ள, மிகமௌ;ள, மாவைத் துணியில் வடித்து, அந்தப் பாத்திரத்துள் ஆவி பட வைத் தயர்வார்…
கணேசு : அயரா முன்
வெந்துமுடிந்து, விரிந்து மலர்ந்து அவிந்து, சிந்தை குளிர்ந்து கிளர்ந்து மகிழ்ந்து உசும்பச் சந்திரர்கள் போலச் சமைந்து விளைகின்ற- இட்டிலியா? ஆகா, இதுவே சுவை உடைத்து!
(சப்ர்க்கொட்டி)
சட்டினி தானே மணந்த தக்கா?
கமலி : சாப்பாட்டு
ராமா, இனி வா, சனியன்!
இராத்திரி நீ
ஒன்றுமே உண்ணா துறங்கி விட்ட மாதிரி அன்றோ புலம்புகிறாய்…? அப்பா வருகிறார், ஓடு கிணற்றடிக்கு!
கணேசு : ஓமக்கா!
(கணேசுவும் கமலியும் கிணற்றடிக்குப் போதல். சோமு முன் இடப் புறத்தால் வெளியேறல். சில கணத்தில் மாணிக்கம் புகுதல்.)
மாணிக்கம் : கேட்டியே…?
ஆடு அவிழ்த்துக் கொண்டேன் அலைகிறது? முற்றத்தில் நட்ட கொடியை நறநறென்று தின்கிறதே; கட்டி வைக்க ஓர் ஆள் கிடையாதே இவ் விட்டில்…?
(செல்லம் கோப்பியுடன் புகுதல்)
பெட்டை எங்கே…?
செல்லம் : என்ன? வரும் போதே பேச்சோடு? கோப்பி தரட்டே குடிப்பதற்கு?
மாணிக்கம் : கொண்டு வா.
(வலதுபுறத் திண்ணையில் அமர்கிறார். செல்லம் கோப்பி கோப்பி கொடுத்தல்)
ஆட்டை, அவிழாமல் கட்டத் தெரியாதே?
செல்லம் : நேற்றைக்கு
(சிரித்துவிட்டு)
நீங்கள் தான் கட்டியது!
மாணிக்கம் : மெய்தானே?
(செல்லம் போதல். மாணிக்கம் கோப்பி குடித்தல், பிறகு தோடி இராகத்தை விரிவாக வாய்க்குள் இசைத்தல். செல்லம் சில கணத்தில் தட்டத்துடன் திரும்புதல்)
செல்லம் : கட்டவிழ வில்லை. கயிற்றோடு, கட்டி வைத்த கட்டையையும் சேர்த்துப் பிடுங்கியது! கட்டி விட்டேன். தட்டம் இந்தாருங்கோ.
மாணிக்கம் : (தோடியைத் தொடர்ந் திசைத்தல்)
செல்லம் : தட்டம் இந்தாருங்கோ.
மாணிக்கம் : (திகைத்துத் திரும்பி)
சரி, தா.
செல்லம் : தவிற்காரர்
உங்களிடம் ஏதோ உரைக்க இருந்தாராம், சொன்னாரா ஏதேனும்?
மாணிக்கம் : சுண்ணாம்பைக் காணோமே?
செல்லம் : என்ன? கரண்டகம் தட்டத் திருந்ததே?
மாணிக்கம் : இங்கே இருக்குக் கரண்டகம், சுண்ணாம் பதனுள் எங்கே இருக்குது? எடுத்துவா நீர் கொஞ்சம்.
(மாணிக்கம் தோடியைத் தொடர்தல், செல்லம் போயைப் பேணியில் நீர் கொண்டுவந்து கொடுக்கின்றாள்.)
மாணிக்கம் : (தோடியை நிறுத்தி)
சொன்னார் தவிற்காரர்.
செல்லம் : சொன்னாரா?
மாணிக்கம் : சொன்னார்!
(தாமதித்து, சுண்ணாம்பு தடவுகிறார். செல்லம் ஆவல் பொங்க அவரருகே சென்று, மரக்குற்றியை இழுத்துப் போட்டு, அதிலமர்ந்து ஆவலோடு அவரைப் பார்க்கிறாள்)
தம்
மன்னாரிற் கட்டிக்கொடுத்த கெளுக்கு நித்தம் அடியாம்! நெடுகக் குடித்து விட்டுப் பிய்த் தெடுக்கின் றானாம் பிரிய மருமகன்!
செல்லம் : அவ்வளவு தானே…?
மாணிக்கம் : அதற்கு மிஞ்சி வேறென்ன?
செவ்விளநீர் போலச் சிவந்த சிறுபெட்டை! அந்தக் குடியன் அடித்துக் கலக்குகிறான். கந்தோரில் வேலை… களிசான்… சயிக்கிளிலே தந்தி கொண்டு செல்கின்ற தம்பி என்று கட்டிவைத்தார்.
(பெருமூச்சு)
பாவம், தவிலைப் பழுதின்றித் தட்டும் அந்த நாவற் புலப் பொடிய னுக்கு நடந்திருந்தால், இப்படியா, போகும்? இதெல்லாம் தலை விதி!
செல்லம் : அப்ப… அவர் வேறொன்றும் சொல்லவில்லை?
மாணிக்கம் : இல்லையே!
(‘இல்லையே’ என்ற பின்னர் மாணிக்கம் நிமிர்ந்து செல்லத்தின் முகத்தை உற்றுப்பார்க்கிறார்- “ஏன், என்ன விடயம்” என்ற கருத்திலே. செல்லத்திற்கு ஏமாற்றம். மாணிக்கத்தின் நேர்ப்பார்வை தாக்குவதால் எங்கெங்கோ பார்க்கிறாள். நேரடியாக விடயத்தைக் கூறும் தயக்கத்துடன், குனிந்து கீழே கிடக்கும் “குறை ஒலைப் பெட்டி” யை எடுத்து, அதனை இழைத்தபடி பேசுகிறாள்)
செல்லம் : எப்போதோ தொட்டதனைச் சொல்ல இருந்தாராம். வந்தொரு நாள் என்னிடம்தான் வாய்விட்டார். தூரத்துச் சொந்தம்தான் என்றாலும் என்னிடம் சொல்லி என்ன? உங்களிடம் போய்க் கேட்டு ஓமென்றால் பாருங்கோ எங்களின்ரை இட்டமோ, என்றேன். இது சொல்லித் திங்களொடு திங்கள் எட்டுச்… செவ்வாய்… புதன், பத்து நாளாயிற்று. அந்த நடேசுத் தவிற்காரர் இன்னும் ஏன் சொல்லா திருந்தாரோ!
மாணிக்கம் : ஐயையோ,
என்ன கதையை எடுத்துப் பிடிக்கிறாய்?
ஒத்துக் காரற்றை மகனின் உபகதையே?
ஒத்து வராது நமக் கந்தச் சம்பந்தம்!
செல்லம் : சத்த மிடாமற் கதையுங்கோ!
(கணேசுயும், கமலியும் உட்புறமிருந்து புகுதல். கணேசு பள்ளிக்புத் தயாராய் உடுத்து, புத்தகங்களுடன் இழுத்முவரப் படுகிறான்.)
தங்கச்சி,
என்ன பிள்ளை வேணும்?
கமலி : இவன் போக மாட்டானாம்.
வாத்தியார், தன்ரை வலக்கை விரல் மொளியில் நேற்றடித்தார் என்று சொல்லி நின்று சிணுங்குகிறான்.
(செல்லம், மடியில் பணமெடுத்து நீட்டி)
செல்லம் : இத்தாடா, தம்பி, இதைக் கொண்டேத் தாமரது சந்திக் கடையில் கடலைச் சரை வாங்கு.
(கணேசு அவளிடம் போய்ப் பணம் வாங்கள்)
மாணிக்கம் : பள்ளிக்குப் போதல் பழுதில்லை. ஓடிப்போ.
(தயங்கும் கணேசுவைப் பார்த்து அவர் எழ, அவன் போகிறான். அவர் அவன் பின்னால் சிறிது சென்றுவிட்டு மீள்கிறார்)
மெய்யேப்பா,
(பேசுவதை நிறுத்திக் கமலியை முறைக்க, அவள் உணர்ந்து உள்ளே செல்கிறாள்)
நல்ல விசரே உனக்கு? என்றும் செய்யா இடத்திலே சம்பந்தம் செய்வதற்கு நிற்கிறாய் வீணாய். நினைத்துப் பார் கொஞ்சம். அந்த முத்து குடும்பத்தார் மூன்று தலை முறையாய் ஒத்தைப் பிடித்தே உழைத்தவர்கள்.
செல்லம் : ஆனாலும்,
குத்தகைக்குப் பெற்ற நிலத்தில் குறையாமல் அத்தனை காய் பிஞ்சும் அடுக்காய் விளைக்கிறார். கொத்தவரை கூடக் குலை குலையாய்க் காய்க்கிறது. காணி ஒன்று வாங்கி அதில் வீடும் ஒன்று கட்டிவிட்டார். போன வரிசம் புதிய கிண றொன்றும் வெட்டி விட்டார். சும்மா விடுங்கள் வெறும் பேச்சை. தண்ணீர் கிணற்றில் தயிர் போல் இருக்கிறதாம். உண்ண முடியாத உப்புக் கரிச்சல் அல்ல, எங்கள் கிணற்றில் இருக்கிறது போல!
மாணிக்கம் : தண்ணீரும் வீடும் சரிதான்! தயவு செய்தென் பெணடணை அவர்க்குக் கொடுக்கும் பிழை செய்யும் எண்ணத்தை மட்டும் எனக்குக் கொடுக்காதே, உன்னாணை!
செல்லம் : ஐயோ, எதற்க்குப் போய்ச் சத்தியங்கள் பண்ணுகி றீர்கள்? பொடியர் படித்தவர். எங்களைப் போல், தந்தி எதுவும் கிடைத்த தென்றால், இங்கிருந்து கையில் எடுத்துப் பிடித்தபடி சிங்கப்புர்ப் பெஞ்சன் எடுக்கும் சிவராச சிங்கத்தார் வீட்டு வெளித் திண்ணையிலே போய்க் குந்தி வாசித்துக் கேட்டு வருகிறது மாதிரியே? யோசிக்க வேண்டும் எதற் கெனிரும்! இல்லை யென்றால் யாசிக்க வேண்டும் தெருவில், எவ ரெனிலும்!
மாணிக்கம் : புசிக்கத் தக்க புதுப் பொன் மொழி புகன்றாய்! பேசத் தெரிதல் பிசகன்று. எனினும் உனதாசையைக் கொஞ்சம் அழகா னதன்மேலே வைத்திருந்தால் என்ன?
செல்லம் : வலிய வருந் திருவை
முற்றத்தில் விட்டுக் கதவை முழுசாகப் புட்டி விட்டால், எங்கே பொழுது விடிகிறது?
(சோமு இடது முன்புறத்தால் புகுதல்)
மாணிக்கம் : வந்துவிட் டாயா?
சோமு : “வசதியில்லை இப்போது தந்துவிடுவேன் விரைவிலே, தம்பி” என்று சொல்லி விட்டார்.
செல்லம் : பேந்தென்ன? சொல்லி விட்டார்!
(எழுந்து முன்னேசென்று நிற்கிறாள்)
சொன்னபடி
நல்ல கெட்டிக்காரர் நடப்பார்! ஓம், நம்பிக்கை! பஞ்சையர்தானே…?
மாணிக்கம் : எதற்குப் பறக்கிறாய்?
(எழுந்து அவளருகே வந்து)
கொஞ்சம் பொறன் நீ.
செல்லம் : பொறுத்தாச்சே போது மட்டும்!
போன வரிசச் திருவெம்பாக் காசு இன்றைக்கு ஆனி பதினெட்டும் ஆச்சு, வரவில்லை!
(சோமு வலது பின்புறம் வெளியேறல்)
சொல்ல மட்டும் கோபம் வருகிறதாம். ஐயரது பல்லி முட்டைப் பேச்சைப் பசி யின்றிக் கேட்டிருங்கள்! வில்வம் சருகே பணம்?
மாணிக்கம் : நீ விளங்காமற்
பேசுவதாற் தானே பெரும் புவியே சுற்றுதாம்! ஈசன் செயல் என் றெதுவும் கிடையாதே! வில்லங்க காலம். நமக்குத்தான் வில்லங்கம் அல்ல. அவர்க்கும் அது தானே? ஐயருக்குக் கோயிலிலே வந்து குவிகிறதே செல்வ மெல்லாம்?
செல்லம் : வண்டிகளிற் காணிக்கை வந்திறங்க வில்லை யென்றால், கொண்ட கடனைக் கொடுக்கிறது கூடாதே?
மாணிக்கம் : கோயிற் கடனைப் புரிந்தேன். அவர் கடனே? வாயில் வருவதெல்லாம் வார்த்தையேன்று பேசாதே!
செல்லம் : ஐயோ, அவர்தான் வருகிறார்!
(ஓடிப்போய்த் திண்ணையைத் துப்பரவாக்குகிறாள். மாணிக்கமும் பின்னால் செல்கிறார். பஞ்சையர் புகுதல்)
பஞ்சை : மாணிக்கம்,
மெய்யே, இதென்ன? பெரிய விவாதமோ?
மாணிக்கம் : ஐயா,வாருங்கோ, அமருங்கோ. செல்லம், அந்த மான்தோலை வாங்கில் வடிவாகப் போட்டுவிடன்.
பஞ்சை : ஏனப்பா, நீயும் இரன். இந்த ஆசாரம் தானே நமது தலையைக் குழப்புவது.
(மாணிக்கம் குடுமியைக் கோதிக்கட்டி முடிதல் ஐயர் சாய்மணைக் கதிரையில் அமர்தல். மாணிக்கம் திண்ணையில் அமர்தல்.)
செல்லம் : பாசல் என்ன கையில், பெரிதாய்? திருவெம்பாக்காசை யெல்லாம் வட்டியுடன் கட்டிக் கொணர்ந்தியளோ?
பஞ்சை : செல்லம் பகிடி சிரிப்பு வராப் பகிடி! எல்லாம் சரிதான்!
(செல்லம் பாசலையே உற்றுப் பார்த்தபடி நிற்கிறாள். மாணிக்கத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த ஐயர், அவள் பார்வையை உணர்ந்து பேச்சை நிறுத்தி, பாசலையும் அவளையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு)
இதுவோ? இது நேற்றுச் சிங்கப்புர்ப் பெஞ்சன் எடுக்கும் சிவராச சிங்கத்தார் வீட்டிற் கிடைத்த சிலுக் கொன்று!
செல்லம் : யப்பான் சிலுக்கோ?
பஞ்சை : தெரியவில்லை. யாவாரம்
இப்போ ததற்கே. இதை ஏன் எனக்கென்றாள் எங்கள் கிருகத் திலக்குமி! நான் வாங்கியதை உங்களுக் கேனும் உதவும் என்று கொண்டு வந்னே;. தங்கச்சி கட்டச் சரியாய் இருக்குமோ? எட்டுயார் கூட இதில் இல்லை!
செல்லம் : அதுக்கென்ன?
பட்டென்றால் வாங்குதற்கும் பஞ்சிப் படுகிறதே? கட்டிப் பார்க் கட்டும்… கமலீ!
(செல்லம் வீட்டினுள்ளே போதல்)
பஞ்சை : கதையன், அப்பா!
சோமு வந்தான் காலமை, நீ சொல்லி அனுப்பியதாய்?
மாணிக்கம் : ஊருக் குழுகிறது மாடு. பசுவோ நம் யாருக்கும் பாலாய்ப் பொழிந்து தருவது.
பஞ்சை : ஆதாடியினைக் கண்ணெதிரே தொட்டெடுத்து வைப்பாய் நீ;
ஆடும் உடலம் அதன் முன்னால். ஆனாலும், ஆடு கொண்டு போவார், அது உனது நாயனத் தோடு நடக்கும், உயிர் நீக்க!
மாணிக்கம் : வேள்வி யென்றால், கூடு வதிலே குறைச்சல் இல்லை. எங்களது கோயிற் பழம் மண் டபத்துக்கோ, கூரையில்லை!
பஞ்சை : ஆயிரங்கால் மண்டபம் அக் காலத் திருந்தனவாம். எங்களது கோயிலுக்கோ-
மாணிக்கம் : எட்டுத்தூண்!
பஞ்சை : எட்டுக்கும்
சாந்தேனும் புசிச் சரிக்கட்டக் காலமில்லை! கோபுரம், ஆண்டாண்டாய்க் கொடுவெய்யில், காற்று, மழை பாவம் புரிந்த படியால், படிப்படியாய்ச் சிற்பி இருந்து செதுக்கி முடிந்த சிலைப் பொற் புடைந்து கெட்டுப் பொலிவு சிதைந் தழிந்து மொட்டை உருவாய் முடமாகி நிற்கிறது.
மாணிக்கம் : (சிறிது முன்னே செல்சிறார்)
சட்டங்கள் செயும் அரசோசரி எனக் கை கட்டி நின்று பார்த்தால், கறுமம்தான் கைஓங்கும்!
பஞ்சை : என்றோ ஒருநாள், இருந்துபார் மாணிக்கம்; நின் றந்தக் கோயில் நிமிர்ந்து, நெடுந்தூரம் பார்த்துப் பயன்கள் விளைக்கின்ற கோபுரமும், வேர்த்துக் கலைஞர் விளைத்த மணி மண்டபமும், வீதிகளும், நூறு விளக்கும், பரதத்தின் சேதிகளைக் கூறும் சிலம்புச் சிறு பாதம் ஆடும் அரங்கும், அறிந்து சுவைஞர்கள் நாடிப் புகுந்து நயந்திட நீ சோமனுடன் ஊதும் குழலில் உயிர் பெற்று உடல் புளகித்து ஆதி அறையில் அமரும் கடவுளுமாய் என்றோ ஒரு நாள் எழும்பும், இருந்துபார்!
மாணிக்கம் : நன்றாய் இருக்கு நினைத்தாலும்!
பஞ்சை : நாளெல்லாம்
தேவாரம் கேட்கும். திருவா சகம் என்னும் பா, ஈரமாக்கும் பலர் கண்ணை, நிச்சயமாய்.
மாணிக்கம் : கந்த புராணப் படிப்பும் நடக்கட்டும்! இந்த ஊர் முற்றும் இருந்ததனைக் கேட்க வரும்!
(செல்லம் புகுதல்)
செல்லம் : எந்த ஊரிற் சென் றிருந்தீர்கள்? ஏதேதோ பேச்சு மிகவும் பெரிதாய் நடக்கிறதே! ஐயர் நினைவு திருப்பணியில்; ஆகாரம் செய்வதைக் கூடச் சிறிதும் நினையாரே!
பஞ்சை : ஆகாரம் இன்றி முடியுமா அம்மணி?
ஆதாரம் இந்த உலகுக் கதுதானே?
செல்லம் : அப்படிக் கூறுங்கள். அதுதானே நான் நினைத்தேன். எப்பொழுது கோயில் எழும்புமோ, அப்பொழுதே ஐயர் வருவாய் அதிகரிக்கும். அர்ச்சனைக்குத் தேங்காய் மாலைகள் திரளும். பழ வகைகள் ஓங்கிக் குவியும். பசுப்பால் ஒரு குளமாய்த் தேங்கிக் கிடக்கும். இதெல்லாம் தெரியாதே…?
பஞ்சை : செல்லம் பகிடி சிரிப்புக் கிளப்பாது!
நல்லது, இனிநாம் நடப்பம்.
(கமலி கொண்டுவந்து கொடுக்க. வாங்கித் தட்டோடு இட்டிலி வைக்கிறால் செல்லம். கமலி போதல்)
இதுவென்ன?
இட்டிலியே? சேச்சே! எதற்காக? வீட்டிலே சுட்டு வைக்க கைக்கச், சுடச்சுட நான் இப்போதுதான் தோசை ஐந்து தின்று தொடர்ந் திங்கே வந்துள்ளேன்… ஆசை கொடிதே! அதற்கென்ன… ஆகட்டும்!
மாணிக்கம் : பாலிருந் தால் வெள்ளிப் பாத்திரத்தில் கொண்டுவா. மேலும் ஒன்று?
(செல்லம் போய்ப் பால் கொணரல்)
பஞ்சை : வேண்டாம் விடப்பா, இனிப் போதும்! ஏலுமட்டும் தின்றேன். எழும்ப முடியாது.
மாணிக்கம் : மூலையிலே கையைக் கழுவுங்கோ.
(பஞ்சையர் கை கழுவுதல்)
முற்றத்தில் நிற்கிற தென்ன விதானையார்? வாருங்கோ.
(விதானையார் புகுதல். திகைப்பு விழி விழித்தல்)
பஞ்சை : இங்கே பிழையாய் எதுவும் நடக்கவில்லை.
விதானை : சங்கைப் பிசகு நடந்திருக்குப் போலிருக்கு.
பஞ்சை : வாரும், வடிவாய் இருங் காணும் வாங்கிலே.
விதானை : மாணிக்கம், தேடி வர வைத்து விட்டாயே ஏன் அந்தப் பக்கம் நீ இல்லைக் கன காலம்?
செல்லம் : சோடா என்றால் தான் குடிப்பார். கடைப்பக்கம் ஓடப் பொடியள் ஒருத்தரும் வீட்டில் இல்லை.
விதானை : வேண்டாம் பாருங்கோ. விடியற் புறம் எழும்பி
(செல்லம் மீதி இட்டிலியுடன் போதல்)
ஆண்டான் நம் வீட்டின் அடிவளவிற் சீவுகிறாள் பாளை வடித்த பதநீர் அருந்தி வந்தேன். ஆளுக்கு நல்ல தது தானே, ஐயரே? தட்டத்தை மட்டும் இங்கே தள்ளுங்கோ, போதும் அது! சட்டப் படி குற்றம் இல்லை எனினும், எங்கள் அப்பருக்கும் அப்பர், அவர் அப்பர், அவ்வப்பர் அப்பருக்கும் அப்பர், அவர் அப்பர் அக்காலமுதல், இன்று வரையும் இருந்து வருகின்ற ஒன்று மரபென் றுளதே. அதனால், நாம் கோப்பி உங்கள் வீட்டில் குடிப்பதற்க்கு ஞாயம் இல்லை! சாப்பிடவும் மாட்டோம்! சரிதானே? ஐயரோ ஞானி. பிள்ளை குட்டி இல்லாத தனி நபர். நானே உலகில் நடக்கிறவன். நாளைக்கு ஊர் ஏனே தானே என் றெதையும் கதைக்குமே. அப்பருக்கும் அப்பர், அவர் அப்பர், அவ்வப்பர் அப்பருக்கும் அப்பர், அவர் அப்பர் அக்காலமுதல் நாமே இவ் வுரை நடத்துகிறோம். ஆதலினால், ஓமோம், எமக்கென் றிருக்கும் தொரு பொறுப்பு. தின்னக் குடிக்க முடியாது நம் வீட்டில்! எங்களுக் கோர் கொள்கை இருக்கிற தையரே!
செல்லம் : (புகுந்து பேணியோடு கோப்பி வைத்தல்)
கொள்கை இருக் கட்டும், கோப்பி குடியுங்கோ.
பஞ்சை : மௌ;ள மௌ;ள எல்லாம் சரியாய் வரத்தானே வேணும்? குடியும். கதை வெளியில் போகாது காணும்!
விதானை : சரிதான். கடவுள் துனை! எங்கே…?
(விதானை பேணியில் வாய் வைத்து, கோப்பி குடித்தல். மாணிக்கம் மேடையின் முன்புறம் வருதல். செல்லம் மாணிக்கத்தின் அருகில் சென்று மெல்லக் கதைத்தல்)
வெல்லம் : எச்சி லாக்கி எல்லே இவர் போய்க் குடிக்கிறார், சிச்சீ!...
மாணிக்கம் : அதுக் கென்ன செல்லம்? பிற கதை நீ பொச்சுச் சுடுசாம்பல் போட்டு விளக்கிவிடன்.
செல்லம் : எதடதனை நாள் சொல்வேன் நான், விட்டில் கிளாசிரண்டு வைத்திருக்க வேண்டுமென்று?
மாணிக்கம் : வாங்கித் தருகிறேன்.
சத்தம் இடாதே. தயைசெய். பொறு, செல்லம்!
(விதானை கோப்பி குடித்து நிமிரல்)
விகானை : சட்டப்படி இதற்கோர் ‘சாச்சீட்’ கிடையாது! இட்டிலியைத் தின்றார் அவர். நான் இதைக் குடித்தேன் உண்டலிலும் பார்க்கப் பருகல் உறைப்பில்லைக், கண்டியளெ…?
மாணிக்கம் : உண்மை!
பஞ்சை : கடும் உண்மை. அப்பனே!
விதானை : கை பிழை பா டான குடிப்புத்தான் என் குடிப்பு, ஐயரின் உண்போ அது போல அன்று. அவர் எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை. புண்ணியம் பாவம் புதிதாமே ஐயருக்கு?... வந்த அலுவல் சொல்ல மறந்து விட்டேன்!
மாணிக்கம் : சொல்லுங்கோ.
விதானை : அந்தப் பழைய அரசாங்க ஏச்சண்டர் சொந்த ஊர் போகப்;, புதிதாய் வருகின்ற இந்தத் துரைக்கோர் வரவேற் பெடுக்கின்றோம். பட்டணத்தில் உள்ள பழைய நகர் மண்டபத்தில் கட்டிப் பறக்க விடுகின்றார் கண் நிறைய ‘யுனியன் யாக்குக்’ கொடிகள். புதுத் துரையும் ஏனையோர் போல, எமக் கெல்லாம் நல்லதுகள் செய்வோர் எனத்தான் தெரிகிறது. செய்யட்டும்! உயவு கிடைக்கும் விசுவாசம் உள்ளவர்க்கு. இங்கிலிசுக் காரன் இருக்கும் வரை நமக்கோர் பங்க முறும் என்று பயப்படத் தேவையில்லைத் தானே…? அதுதான் தகுந்த வரவேற்பாய் நானும், எனைப்போற் பிறரும், ஒருங்காகக் கூடி எடுத்தல் குறித்தோம். அதனால்தான் ஓடி வந்தேன் என்னுடைய பங்காக உன் மேளம் அங்கே நடக்க அடுக்குகள் நான் பார்க்கிறேன். சங்கீதம் இன்றிச் சரிப்படுமே ஓர் விழாவு?
செல்லம் : திட்டம் சரிதான். விதானையார் திட்டமென்றால், நட்டம் நமக்கே, நயமோ அவருக்கு! வெட்டியடி தானே…?
விதானை : விடுங்கோ பழங் கதையை!
கட்டாயம் நான் இதற்குக் காசு தருவிப்பேன். முட்டாள் என் றென்னை நினைத்தீரோ? முந்நுறு ரூபாய் கிடைக்கும். இதோ முப்பது ரூபாய்.
(மாணிக்கம் பணத்தைப் பெற்றுச் செல்லத்திடம் கொடுத்தல்)
சா பா நீ…பா வுக்கும் சல்லி தர வேண்டும் எனக் கச்சே ரியிலே கடுமையாய்க் கூறியுள்ளேன். இச் சேதி உன்னோ டிருக்கட்டும், மாணிக்கம்.
பஞ்சை : அச்சா! மாணிக்கம், அரசாங்கச் சேவகம்!
செல்லம் : பஞ்சைய ருக்குப் பகிடி. நமக்குத்தான் பஞ்சி, அதனைச் சிரித்துச் சுவைப்பதற்கு!
(செல்லம் போதல்)
மாணிக்கம் : எப்போ வரவேணும்?
விதானை : இன்றைக்கே. இல்லை என்றால் இப்படி ஏன் ஓடி இளைக்க வருகின்றேன்? ஏழரை போல் வந்திறங்கி விடவேணும். கூறிவிட்டேன். பிந்திவிடக் கூடாது… சொன்னாற் போல், மாறு கரை வேட்டி, வைரக் கடுக்கனொடு பட்டின் சிவப்பிற் சரிகை பளபளக்கப் பொட்டுமிட்டுக் கொண்டு, பொலிவாய், அதி பொலிவாய், வந்து நில்லு. கண்டு மருளட்டும் வெள்ளையன்.
பஞ்சை : “ஆடவர் பெண்மை அவாவும்” படிபோலும்?
விதானை : சாடையாய் ஏதோ மொழிகிறார், என்னவோ? அந்த நாளில் நீ ஓர் ஆண்பிளைதான். இன்றைக்கும், இந்த வயதிலும் என்ன குறை? சபையில்
(செல்லம் புகதல்)
குந்தினாய் என்றால் குசு குசுப்பார் பெண்டுகள்!
செல்லம் : எங்கள் விதானை இதென்ன அலட்டுகிறார்?
தங்கமக்கை கேட்டால் தலையில் அடித்திடுவா, ஆம்பிளையை ஆம்பிளை போய் அந்த விதம் புகழ்ந்தால், நாம் போம் கதி?
விதானை : நான் நடக்கட்டே? வேறென்ன?
உங்களின்ரை கோப்பி உருசிதான். என்ரை அவ தங்கத்தின் கோப்பி சரியாய் வருவதில்லை. ஆன படியால் அனுதினமும் எம்விட்டில் தேயிலையைத் தானே கரைத்துக் குடிக்கின்றோம்! அப்ப நான் வாறன்...?
மாணிக்கம் : அதுக்கென்ன, வாருங்கோ.
(விதானை போதல்)
செல்லம் : முப்பது ரூபாய் முழுசாகத் தந்து விட்டார். ஆப்படியே கொண்டே அடுக்குப்பானைக் குள்ளே வைத்துவிட்டு வந்தேன். இரவு வரும் போது மிச்சம் இருநூற் றெழுபதையும் கையோடு வாங்கி வராவிட்டால் வராது தெரியுமெல்லே…?
பஞ்சை : வெள்ளையனுக்கு விருந்து மருந்தென்றால், உன்னை அதற்குள் எதற்காய் இழுக்கிறான்?
செல்லம் : என்னவாம் ஐயர்? இதென்ன அநியாயம்? அந்தக்காலத்தில் அவர் போல நம்முடைய இந்தக்காலத்தில் இருக்கிற ராசாக்கள் கூப்பிட்டனுப்பக் கொடுத்து வைத்த தெங்களுக்கும்?
மாணி : அந்தக் காலத்தவர்கள் எங்களது ராசாக்கள்! சிந்தை கொடுத்துச் செவி மடுத்து நிற்பார்கள். இந்தப்பறங்கி எதிரிற் போய் வாசித்தால்,
“இந்த ஆள் பெண்ணோ?” எனத்தான் நகை நட்டைப் பார்த்து நகைத்துப் பகிடிவிடப் போகிறான்.
பஞ்சை : நேர்தËதிகளைக் கண்டு நெகிழ இவர்க் காகுமோ? ஏதோ நடக்கட்டும். என்ன, வரட்டுமே?
(பஞ்சையர் போதல்)
செல்லம் : ஐயர் என்ன அந்த விதம் சொன்னார்?
மாணி : அவர் என்ன,
கையால் உனைப்போற், கரிப் பானைதேய்ப்ப்பவரே?
செல்லம் : பின்னே எதற்காம் சகுனப் பிழையாக தன்னுடைய நாக்கால் தகாதது போல் கூறினார்? பல்லி சொல்லா நேரத்தில் பார்ப்பான் அதை எதற்குச் சொல்ல வருவான்?
மாணி : சுடும் நாக் குனக் காத்தை! அந்த மனிசன் அறியாமற் பேசாது.
வேந்தயத்தைப் போட்டு வெகுவாய்க் கமகமக்க, நீ வை குழம்பு. தலை இதுக்குள் நீட்டாதே. éவையர்களுக்குப் பொது ஞாயம் கூடாது. நாவை அடக்கித்தான் நாடே கிடக்கிறது என்று சொல் கின்றார், அவர். நீயோ, உள்ளதுகள் ஒன்றும் தெரியாதுளறத் துணிகிறாய்! பஞ்சையர் வீட்டுப் பழைய அலுமாரி மிஞ்சி வழிகிற தென்ன விளங்குமே?
செல்லம் : புத்தகங்கள்! அவ்வளவும் புத்தகங்கள்! வேறென்ன?
மாணி : மெத்தப் படித்த மனிசன். நீ சொல்லுகிற
ஒத்துக் காரற்றை மகன் போல என்று வையன்!
செல்லம் : எல்லாம் தெரியும் எனக்கு! சில நாளாய் இங்கிலிசு கூடப் படித்து வருகிறார் என்றதெல்லாம் என்ன எனக்குத் தெரியாதே?
இங்கிலிசை ஏனாம் இவர் போய்ப் படிக்கிறார்?
மாணி : உங்கள் முருகப் பெதற்காய் படித்தான்? அதற்காக அல்ல! இவர் ஏன் நகரில் குதிக்கால் உளையக் கொடுங் கோடை வெய்யிலிலே
எச்சண்டர் வீட்டுக்கெதிரில் நடுத் தெருசவில் சப்பாத்துக் காலும் கடும் சட்டை தொப்பியுமாய் இப்போது போ இப்போ நில் என்று காட்டிக் கை Àக்கி நடனம் தொடங்க நினைக்கிறார்?
செல்லம் : நாக்கில் உங்கட்கு நரம்பு கிடையாது! முத்து மகனை முயன்று படிப்பித்து அவ்வொத்துத் தொழில் விட்டுயர்ந்தாலும் உங்களுக்குப்
பத்தியம் இல்லை. அதுவும் தொழில்தான்! பொலிசாளர் வேலை பொருந்தாத வேலையே?
மாணி : நல்லாய்ப் பொருந்தும் உனக்கென்றால்! என்னுடைய பிள்ளைக்குதுகள் சரியில்லைப் பேசாதே!
செல்லம் : எல்லாம் தெரியும் எனக்கு! உந்தச் சோமனை நான் இந்த வரைக்கும் இருக்க விட்ட தென் பிசகு. சுpட்டைக்கு வந்தான். சிவனே எனப் பாடம் கற்று முடிந்தால் கடை கட்ட வேண்டாமோ? இன்னும் இருந்தான் இடும்பன் போல். ஏன் æட்டில் என்னுடைய பிள்ளை உலாவ இடமில்லை. மிச்சம் இடம் கொடுத்து விட்டீர்கள். பேய்ச்சியும்
பட்சம் நிறைந்தவள் போல் அந்தப் பயலைத்தான் முற்றம், விறாந்தை,தலைவாசல், உள்வீடு, அடுப்படி, கோடி, கிணற்றடி, திண்ணை, படலை, ஒழுங்கை வரை பார்த்துக் கலைத்துத்
திரிகிறாள், எல்லாம் சிரிப்பாய்ச் சிரிக்குது. சங்கீதம் கற்று முடிந்தால், சரி போவன். பஞ்சையர் வாலைப்பிடித்துத் திரிந்து ‘சமுக்கிறுதம்’ ஏனாம் தடியன் படிக்கிறான்? ஆரும் உவரைத் திவசம் அதுகளுக்கு
வாரும் என்று கேட்டு வருவினமே ஊரிலை? ஊதுவதோ உந்தக் குழலைத்தான், உள்ளுக்கோ ஏதோ பெரிய எடுப்பும்n நினைப்புகளும்.
ஆசைகளுக்கும் அளவிருக்க வேண்டாமே? இன்றைக் கொரு முற் றிதற்கெடுக்க வேண்டும், நான். அந்தப் பொலிசுப் பெடியருக்கும் பெண் கொடுக்க வந்து வடலி அடைப்பார் நெருக்குகினம் இன்றைக் கொரு முற் றிதற்கு!.....
(முருகப்பு புகுதல்)
மாணி : முருகப்பு?-
வா... இரு… வாறன் ….
(மாணிக்கம் போதல்)
செல்லம் : வழி தெரிந்து விட்டதே?
போæர், வருæ ர் ஒழுங்கையிலே. æட்டுக்குள ஏனோ வராமல் இருப்àர் என இருந்தேன். ஏனா பீனா சீனா என்று படித்து விட்டால்
ஆருக்கும் கொஞ்சம் அதிகம் தலைவீக்கம்!
முருகப்பு : அத்தை அதிகம் புகழுறியள் நீங்கள்!
செல்லம் : உடம் பிப்படி ஏன் உருகிக் கிடக்கு?
கடுமை தான் போல உங்கள் கந்தோரில் வேலை?
முருகப்பு : விடுங்களத்தை சும்மா! நூன் வேலைக்கும் அஞ்சுவனே?
செல்லம் : முத்துவின் பிள்ளை முழு மாப்பிளை யாகி உத்தியோகத்தில் அமர்ந்து விட்டால் உள்ளபடி நாங்கள் மகிழ்வதற்கு ஞாயம் இல்லை என்பீரே? என்னுடைய தாயார் அவவுடைய தாயாரும் …
முருகப்பு : என்னுடைய தாயார் அவவுடைய தந்தையும்
கூடப்பிறந்த தெனக்குத் தெரியாதே?
செல்லம் : ஆதலினால் நான் உமது மச்சாள்! என் பிள்ளை உம்
மச்சினி பிள்ளை. அதெல்லாம் முறை சரிதான்.
முருகப்பு : ஓடுவது நம்முள் ஒரே இரத்தம் தான் அத்தை.
ஆண்ணர் எங்கே கோனார் அவசரமாய்?
செல்லம் : எங்கும் இல்லை. இன்று பறுவம். ஆதனால் கிணற்றடிக்குச் சென்றிருப்பார் தோய. திரும்பி இதோ வந்திடுவார்.
நீரும் பறுவ விரதம் பிடிக்கிறதே?
முருகப்பு
: ஆருக்குதுகள்? அரசாங்கம் எங்களுக்குப்
éரணை èவு கொடுக்க முடியுமே?
செல்லம் : உத்தியோகத்தர்க்கு உதுகள் முடியாது. பத்து வரிசம் இருக்கும் அவள் பாக்கியம் செத்து. சிறு குஞ்சுகளாகப் பத்தை விட்டுப்
போய் விட்டாள் பாவி. எனினும் மனிசர்கள் ஆய்விட்டீர் நீங்கள். அவள் செய்த புண்ணியத்தால்! சாப்பிடுமன்…? பிள்ளை!... சமையல் முடிந்ததே!
(வாழைப் பொத்தியைக் கொத்திக் கொண்டு கையில்
கத்தியுடன் கமலி புகுதல்)
கமலி : கூப்பிட்டியளெ? குழம்படுப்பில் வைத்திருக்கு. வாழைப்é இன்னும் வறுக்க அரியவில்லை. கீரை கடையக் கிடக்கு. ரசம் வைக்க
உள்ளியில்லை கொஞ்சம் உருளைக் கிழங்கெடுத்து வெள்ளைக் கறி யொன்று காய்ச்சி விடட்டுமே அம்மா
செல்லம் : நீ என்ன அடுப்படிக்குள் இவ்வளவும் சும்மாவே நின்றாய்? சுறுக்காய்ச் சமை ßள்ளை. கொப்பர் இப்போது குளித்து விட்டு வந்திடுவார்.
(பொத்தியின் ßத்தைக் கத்§யால் சுண்டிåடுகிறாள் கமç. அது முருகப்புåன் மேல் åழுகிறது. முருகப்புவை åறைத்து நோக்கி)
கமலி : எங்கே அம்மா கொடு வாட் கத்தி இருக்குது?
செல்லம் : உப்புமுட்டிப் பக்கம், அடுப்புப் புகட்டிலை தான்!
முருகப்பு : இன்றைக்கு வேண்டாம். இனி ஒருநாள் வாறன் அத்தை எங்கடை
æடÊடில் இறால் குழம்பும் முட்டையும். அப்பு வடிவாய்ச் சமைப்பார்.
செல்லம் : அது தெரியும்!
என்றைக்குப் பின்னை வருæhÊ?
முருகப்பு : சனிகÊ¢ழமை?
செல்லம் : எண்ணெய் வைத்து நல்லாய் முழுகி விட்டு வந்துவிடும்.
கமலி : அன்றைக்குத்தானே அபரபக்கத் தட்டமி!
(கமலி போதல்)
செல்லம் : கட்டாயம் வந்தெம் கறி வண்ணம் கண்டு போம். புpள்ளை இறைச்சிப் பிரட்டற் கறிவைத்தால் அள்ளி அள்ளித் தின்றாலும் ஆசை அடங்குமே? ஏட்ட ஒதுங்கி இராமல் அடிக்கடி நீர்
வந்தால், கணேசனுக்கும் வாய்ப்பு. பொடியனுக்கு எந்த விதமாய் வருகிற திங்கிலிசு! நீரும் பாடத்தை நெருக்கிப் படிப்பித்தால்,
தோதாய் இருக்கும். தோழிலை மறப்பித்தல் வேண்டும்.
முருகப்பு : அருமை அத்தை, மிச்சம’ சரி அத்தை!
ஓ மத்தை வாறன்,…ஒழுங்காய் இனி வரவே?
செல்லம்: : நாம் எம்மனை முயற்சி செய்வோமோ, அத்தனை
வெற்றி, வரத்தானே வேணும்!
முருகப்பு: : அவன் வீரன்,
கற்று விடுவான்.
செல்லம்: : கமலீ!
முருகப்பு: : வரட்டுமே….?
(கமலி புகுதல். முருகப்பு போனவன்,
கமலி வரக் கண்டு திரும்பல்)
(பாடல்)
சங்கரப் பிள்ளை விதானை
இங்கு வந்த தேனாம்? ங?
திங்களன் றடுத்த æடÊடுப்
புங்கன் ஏசினானாம்? ங?
சங்கரப் பிள்ளை விதானை
இங்கு வந்த தேனாம்? ங?
தங்கள் æடÊடு மூலையிற்
தழைத்து நின்ற வெண்டிக் கன்றை
உங்கள் æடÊடில் ஆடு வந்து
திங்கு தென்று தொங்கித் தொங்கித்
திங்களென் றடுத்த வீட்டுப்
புங்கன் ஏசினானாம்? ங?....
கேள்விப்பட்ட நேரம் தொட்
டுடல் துடிக்குதே!
ஆள் விட்டால் வரேனோ நான்
நெருப் பெடுக்கவே?
வேள்வி ஆட்டைப் போல அவனை
வெட்டிச் சரிப்பேன்.
வெட்டிப் பின்னர் கட்டித் ÀகÊ¢தÊ
தோலை உரிபÊபேனÊ.
உரிதÊத தோலை இழுதÊதுகÊ கடÊடி
மேளம் அடிப்பேன்!
தஙÊ¢டு ததÊதா ©ம.Ê.தஙÊ¢டு ததÊதா ©மÊ
தஙÊ¢டு ததÊதா ©மÊ.
அடுத்த
திங்களன் றடுத்த வீட்டுப்
புங்கன் ஏசுவானோ?
கிழட்டுச்
சங்கரப்பிள்ளை விதானை
இங்கு மீளுவானோ?
ஏங்களையும் உங்னளையும்
யுhரென் றெண்ணினாரே?
கேள்விப் பட்ட நேரம் தொட்
டுடல் டுடிக்குடே?
டல்டு டிக்குடே! டல்டு டிக்குடே!...
கமலி : அம்மா ஏன் அண்ணர் அதிகம் படபடத்து இம் மாதிரியாய் எழுந்து நின்று கொட்டகை கூரை அ§ரக் கு§க்¢றார்?
(முருகப்பு வெட்கி நழுவல்)
செல்லம் : என்ன பெட்டை
அண்ணர் முறை வைத் தழைக்கிறாய் இப்படி? ஏன்னுடைய தாயார் அவவுடைய தாயாரும் இன்னவரின் தாயார் அவவுடைய தந்தையும்
கூடப் பிறந்த தென்று கூடத் தெரியாதே ஆடப் பிறநதவள் போல அப்படி நீ அன்னவரைக் கூப்பிட்டாய் எனறால் குடிமுழுகிப் போய்åடும்
கமலி: : ‘சித்தப்பா’ என்று சிறப்பாய் அழைத்திடலாம், ஆள் எங்கே, காணோம்? அடடா,ஒரு வயிறு சாப்பிடவும் நிற்காமல் போய் விட்டார். சை,
செல்லம்: : நாக் குனக்குக் கொஞ்சம் நறுக்கப்பட வேண்டும்! போக் கெல்லாம் பச்சைப் பிழையாகப் போகுதெணை!
அந்தப் பொடியரை நீர் ஆர்தான் என நினைத்தீர்?
கமலி: : ஒத்தினையே மூன்று தலைமுறையாய் ஊதுகிற முத்துவின் மூத்த மகன் எல்லே?
செல்லம்: : பொலிசாளாÊ!
åதÊதை என்று சொல்லி, விடியும் வரை இரவு முற்றும் முளித்திருந்து , மூசிக் குழல் மூலம் கத்தும் தொழிலே கணிக்கப்படும் தொழில்!
æடு ,மடித்தால் åறைப்பாக நிற்கும் உடை யோடு ,பணமும் ஓழுங்காய்த் தரும் அரச சேவகம் என்று தெரிந்து கொண்டால் நல்லது நீ!
கமலி: : ஆடு பிடிபட்டால் அன்னாருக் காள் விடுதல் கூடும் இதை நான் குறித்துக் கொள்ளட்டுமே!
செல்லம்: : தங்கச்சி என்ன தமிழே நீ பேசுகிறாய்? இந்கே பார் , கொம்மா எதற்காய் உனை வருத்த எண்ணுகின்றேன்? நாளைக் கெனைப் போல் உலையாதே. திண்ணையிலே குந்தித் தினங்கள் கினங்கள் வரும் என் றெதிர் பார்த் தென்றும் இருந்தபடி ஏங்காமல் ,
அன்றாடம் வேலைக் கழகாய் Ùடுத்துப்போய் மாதா மாதம் தம் மடியில் படி கொணரும் மாப்பிள்ளையைக் கட்டி மகிழ்ந்து குடும்பத்தைப் பார்ப்பாய் ! இதற்காய்ப் பலவாய் முயல்கின்றேன்.
போய்ப் பார் வெளியில் பொடியனைக் காணவில்லை.
(கமலி போதல்)
பள்ளி விட்டால் அந்தப் பயல் நேரே இங்Pகூரில்
உள்ளதுகள் போல் எங்கே ஓடி வருகிறான்?
கொல்லன் உலைமுன் குனிந்து கொண்டு நிற்கிறதும்
செல்லையா வின்றை வளவில் சில பேர்கள்
கொட்டில் ஒன்றில் æற்றிருந்து கொண்டு புகையிலையைத்
தொட்டுக் கிழித்தெடுத்துச் சோணையினைக் காப்பிலையில்
இட்டுச் சுருட்டி இமைத்திடு முன் Áலாலே
கட்டி, மிசின்போல் கடகடென்று மட்டமாய்
வெடÊடி முடித் தடுக்கப் பார்த்து வியக்கிறதும்,
பெட்டைகளைக் கண்டால் இபÊபோதே பெரும் ஆள் போல்
கிட்டப் போய் நின்று வியழங்கள் கேட்கிறதும்,
கட்டை மணியன் குடித்துவிட்டுக் கத்துகிற
மொட்டைகளைக் கேட்டோர் மினிற்றில் பிடிக்கிறதும்,
பட்ட பனையில் பழைய மரங் கொத்தி
குட்டுவதில் ஓர் புதுத் தாளம் கண்டு கொண்டு
æடÊடுக்கு வந்தால் விசரனைப் போலவே
ஓட்டமாய் ஓடி ஒதுக்கில் இருந்தந்தக்
கட்டை எடுத்துக் கடகடென்று நாளெல்லாம்
தட்டுகிறதும் சரியாய் விளங்கவில்லை.
ஏந்த வழியில் இறக்கி விடினும் அந்த
ஏந்த வழியில் அடையாத உச்சிகளை
ஏட்டிப் பிடிக்க எனத்தானோஇ என் வயிற்;றை
வுpட்டுத் தரையில் விழுந்த மகா æhன்!
ஐயரÊ உரைப்பார் அடிக்கடி, இவ்ëரிலே
உள்ள அரசோ உதவாத வேற்றரசு,
பிள்ளை வளர்த்தல் பெரிதும் அரிதென்று!
கண.டவர் ஆர் உண்மையினை? கட்டாயம் இங்கிலிசுப்
பண்டிதர் தம் பட்டணத்துப் பள்ளிவரை போக்காட்டிப்
பேனை எடுத்துப் பிடித்துப் பெரி தெழுதும்
ஆனானப் பட்ட அரிய கிளாக்கராய்
ஆக்கினால் அன்றி அடியேன் உயிர் பிரியேன.;
காக்கக் கடவுள்! அவன் கட்டியினைத் தட்டுவதை
நீக்கல் முதற் கண் நிகழ்த்தின், நிலை திருந்தும்.
(கமலியும், கையில் ஓர் பெட்டை நாய்க்
குட்டியுடன் கணேசுவும் புகுதல்)
கணேசு : பார்த்தாயா அம்மா?
செல்லம் : பறை நாய்!
கமலி : எதற்கம்மா
வார்த்தை இது, தம்பி வாசலிலே வந்திடு முன்?
கணேசு : ஏனம்மா ஈதைப் பறை நாய் எனச் சொன்னாய்?
செல்லம் : பின்னே உதென்ன, பெருஞ் சா§ என்¢றியே?
கணேசு : பள்ளர், பறையர், பரிகாரி, பண்டாரம்,
வெள்ளாளர், தச்சர், கரையார்,கரையார் விதானைமார்,
பிராமணர், கொல்லர் - பிற இன்னோ ரன்ன
அரிய பெரிய பிரிவு முறைகள்
நிறைய உடைய பிரிய மனிசர்கள்
நாய்களுக்கும் அந்த நடப்பைக் கொடுக்கிறதே?
கமலி : நீ எதுக்குச் சும்மா நெடுக அலட்டுகிறாய்?
செல்லம் : எங்கே பிடித்தாய் இதை நீ?
கணேசு : வழியிலே.
தங்க மக்கை æட்டுத் தலை வாசலின் முன்னால் நின்றதுகள். ஓன்றை எடுத்து வந்தேன் நேராக! என்ன பெயர் அக்கா நாம் இதற்கு வைக்கலாம்?
கமலி : நாய்க்குட்டி அந்த விதானையார் æட்டானோ?
(நாய்க்குட்டியை வாங்கிப் பார்த்தல்)
செல்லம் : பேய்ப்பெட்டை! ஆரோ பிடிக்காமல் æசிåட்ட
பெடÊடைநாயÊ!
கணேசு : பெடÊடைநாயÊ! மெயÊதானே? பார்ப்பம் அக்கா?
(கணேசு நாயை வாங்கப் போகக், கமலி ஒதுங்கல்)
கமலி : எட்ட நில்லு, சும்மா!
கணேசு : (சபையை நோக்கி)
இதெனÊன ஓரே குழபÊபமÊ? விட்ட பகிடி கிடையாது. ஏதற்காய்க் கை
தட்டல், சிரித்தல், தலையைத் திருப்புதல்? கொட்டு கொட் டென்று விழித்தல்? குசுகுசுத்தல்! கட்டையிலே போக, கலிகாலம் அல்லவோ….? கெட்ட நிலை, கேவலங்கள் இன்னும் குறைய வில்லை! அனÊனியர் ஆடசிஅகனÊற பிறNனுமÊ இனÊன இதறÊகுச் சிரிக்கலாம், இனÊன இதற்குக் கட்டி அழலாட் எனக்காணும் காலம் இல்லை! பஞÊசையர் ஏதோ பகர்வார்,குடி உயரும் கோன் உயர-இல்லை இல்லைக், கோன் மாற என்றெல்லாம்!
செல்லம்: : ஜயோஎன்ரபிள்ளைஅலட்டுதே!
கமலி: : வையாபுரியா ரிடம் எண்ணை வாங்கி வைத்தால் எல்லாம் சரியாய் விடு மம்மா. இப்படித்தான் ¤த்தப்பருக்கும் ஒருக்கால் சிர¤ல் அடித்து, எப்படியோ மாற்றி எடுத்துவிட்டார் அல்லவே?
செல்லம் : கொப்பர் பரவணியில் உள்ள குறை ஆச்சி!
ஏன்ரை பிள்ளை!
(செல்லம் அந்தரித்துப் பிள்ளையைத் தழுவல்)
கணேசு : அம்மா, எதற்குக் குளறுகிறாய் ?
செல்லம் : (கணேசு நிலை திரும்பியது கண்டு தேறி)
ஒன்றும் இல்லை! ஓன்றும் இல்லை!
கமலி : ஒன்றுமில்லைத் தம்பி வா,
சாப்பிடுவம் உள்ளே.
கணேசு : சரியக்கா,
(கணேசு கமலி போதல்)
செல்லம் : என்னுடைய
மாரியம்மா, தாயே! மறு ஒன்றும் நேராமல்
ஊரில் பிறர் போல என்னையும் உய்ய விடு!
இன்றைக்கே தேங்காய் உடைப்பேன். வருகிற
வெள்ளிக்கிழமை விரதம் இருந்துவிட்டுக்
கோயிலுக்குப் ‘பெட்டி’ கொடுக்க வருகிறேன்,
தாயே!
(சாமியார் பாடிக் கேட்டல்)
சாமி : வாயில் எல்லாம் வாழை! வுய லெல்லாம் நெற் கதிர்கள்
கோயில் எல்லாம் எல்லாக் கலையும் குவிந்தனவாம்!
செல்லம்: : அது யார் படலையிலே?
(பாடல்)
சாமி: : கோயில் எல்லாம் எல்லாக் கலையும் குவிந்த தெல்லாம்
போயதேன்?
செல்லம்: : சாமியார்!
(பாடிக் கொண்டு சாமியார் புகுதல்)
சாமி: : ஏனோ புழுவானோம் மாரியம்மா…?
செல்லம்: : (படபடப் போடு தடுக்கை எடுத்தவள் அதை, எறிந்துவிட்டு மான் தோலை விரித்து சாமி இருங்கோ! இருங்கோ தயவு செய்து!
(சாமியார் சாய் கதிரையில் அமர்கிறார்)
சாமி: : யார் நீ, மனிதப் புழுவே? உனக்காக அம்மாள் எனை இங் கனுப்பி அலைக்கழித்தாள்! மாரியம்மா! உன்றேன் விளையாட்டை எப்படி இப்
பாரில் அலையும் பரதேசி கண்டறிவான்? வேண்டியதைக் கூறு விரைவாய்! ஊலகை எல்லாம் ஆண்டவன்! நீலி! ஆழகி! அதிகாரி!
காண்டகை!காளி! கமலி!
(செல்லம் திடுக்கிடல்)
கடு மோடி!
வேண்டியதைக் கூறு விரைவாக!
செல்லம்: : என் பிள்ளைக்கு……
சாமி: : ஆண்டாண்டு தோறும் அருக்கன் விரத மிரு!
வேண்டியதைத் தநதுவிட்டேன்! - æரி! வெகு சூரி!
(திருநீறு எறிந்து, கையிலும் கொடுத்து)
கொண்டோடு!
(ஓடுகிறாள்)
வா இங்கே!
(வருகிறாள்)
நில்லு!
(நிற்கிறாள்)
நிமிர்ந்து நில்!
(நிமிர்ந்து நிற்கிறாள்)
சண்டி! சண்டாளி! சளுக்கி! பராசக்தி!
அன்னையின் ஆணை! - அதை எடுத்துக்கொண்டு வா!
செல்லம்: : என்னத்தைச் சாமி, எடுத்து வர?
சாமி: : ஏய்க்காதே!
பானையிலே உள்ள பதார்த்தத்தைக் கொண்டு வா?
(செல்லம் போய் முட்டி ஒன்றைக் கொண்டு வந்து
அதிலிருந்து முப்பது ரூபாவை எண்ணிக்
கொடுத்துக் குனிந்து வணங்கல்)
சாமி: : போ நீ, அப்பாலே! பொடிக்குச் சுகம் வரும்!
(சாமியார் நழுவல்)
செல்லம்: : காலம் கலி காலம் என்று கதைப்பார்!
ஆனாலும் இதுவும் நிகழ்ந்ததே இன்றைக்கு!
“போ நீ , அப்பாலே!” எனவும் புகன்றாரே …
எப்பாலே…? அப்பாலா… இப்பாலா…? உப்பாலா…
உப்பாலா… உப்பாலோ… உப்பாலே… உப்பாலே!
(கமலி ,கணேசு புகுதல்)
கணேசு: : உப்பாலே…?
கமலி: : உப்பாலே…? என்னம்மா உப்பாலே…?
செல்லம்: : உப்பெடுத்துக் கொஞ்சம் கரைத்துக் கொண்டோடிவா!
(கமç போதல்)
அப்பா, மகனே!
(கணேசுவைக் கட்டித் தழுவுதல்)
கணேசு: : இதென்ன அநியாயம் !
(கமலி உப்புச் சிரட்டையுடன் புகுதல்
கமலியும் செல்லமுமாக உப்புநீரைக் கணேசுவுக்குப்
பருக்குதல்)
செல்லம்: : துப்பாதே! துப்பாதே!
கமலி: : துப்பாதே!
கணேசு: : துப்பாதே?
ஏன்னம்மா, கந்தோர் இடங்களிலே காண்கிற
போட்டில் இருக்கிறதைப் பொன் மொழி போற்
பேசிறியள்?
கமலி: : இப்போ சுகம் அம்மா!
செல்லம்: : என்ன , சுகம் தானோ?
அப்பா! முருகப்பா!
(முருகப்பு புகுதல்)
முருகப்பு: : அத்தை அழைத்தியளே…!
ஏதோ அமளியைப் போல இருக்குது!
தீதேதும் நேர்ந்த துளதோ? தெரிவியுங்கள்!
இங்கீலீ சாட்சி இனித்தாய் நடக்கையிலே
எங்கடை æடÊடிலÊஇதெனÊன அமலோதி?
நாங்கள் மலைபோல் இருக்கப் பிழை நடந்தால்,
போங்கள், எனக்கேன் பொலிசில் ஒரு வேலை?
செல்லம்: : இங்கே அநியாயம் ஏதும் நிகழவில்லை.
ஏங்கோ இருந்து புகுந்த ஒரு சாமியார்
தீர்த்துவிட்டார் நோயை! அது தெய்வச்செயல் தானே!
பார்த்து வைத்தாற் போலப் பகர்ந்தாரே, “பானை யொடு
கொண்டா அதனைக் ,கொடு” என்று!
கமலி: : பின்னர்….?
செல்லம்: : கொடுத்துவிட்டேனே!
கமலி: : எதனை? ஏதனை அம்மா?
செல்லம்: : முப்பது ரூபாய்? அதனை.
கமலி: : முழுக்கவுமோ?
செல்லம்: : எப்படியோ என்னுடைய பிள்ளை எழும்பி விட்டான்!
அவ்வளவும் போதும்!
முருகப்பு: : அநியாயம்!
கமலி: : ஐயையோ!
முருகப்பு: : கொஞÊசமÊ பொறுஙÊகள! கொணர்வேன், ஒரு கணத்தில்
வெற்றி! முழுவெற்றி!
கணேசு: : வெற்றி! முழுவெற்றி!
செல்லம்: : (திகைத்து)
நெற்றியில் ஓர் பொட்டை இடு கமலி!
(முருகப்பு தலையை நீட்டல்)
கமலி: : நான் மாட்டேன்.
(கணேசு விரலை நாக்கிற் தொட்டு
முருகப்பு நெற்றியில் இடுகிறான்)
முருகப்பு: : பிறÊபாடு பார்பÊபோமÊ. பிழையிலÊலை! இபÊNhது அவÊ
வறÊபனÊ தனைப் பிடிகÊக ஆயதÊதமÊ ஆகிறேனÊ.
கற்பனை உண்டென் றால், கடலை வறுத்திடலாம்!
தள்ளுங்கள்! தாரும் விடை! ஆம், திரும்பிடுவேன்,
களÊளபÊ பரNசி காதிற் பிடித்தபடி!
(போதல்)
செல்லம்: : எலÊலாமÊ பெரிய குழபÊபமÊ! ஒரே குழப்பம்!
கணேசு: : வாழÊ வோhÊ பெரிய குழபÊபமÊ தான்! ஓர் பக்கம்
தாழ்வு! தளர்வு! தவிபÊபு! மறுபுறமோ
ஆள்வு! பணத்தின் அதிகரிப்பு! அப்பப்பா!
கமலி: : நீ போய்ப் படம்மா!
செல்லம்: : எதந்கு ?
(தெளிவுற்று)
வா, சாப்பிடுவம்!
(செல்லம்,கமலி போதல்)
கணேசு: : சா- பா -நீ - பா வுக்கும் சல்லி தர வேண்டும்.
(கணேசு தவிலுடன் குந்தி அதனை அடிக்கத்
தொடங்குகிறான். திரை விழுகிறது. தவில் அடி
இடைவேளை முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கிறது)
இடைவேளை
(திரை விலகும்போது இடைவேளையிற் கேட்ட தவிலடி
தொடர்கிறது. முந்திய காட்சி தொடர்கிறது.
கணேசு தவிலடித்துக் கொண்டிருக்கச்,
சோமு வெளியில் இருந்து புகுதல்)
சோமு : நீ என்ன தம்பி நினைத்தாய்…?
கணேசு : எதைப் பற்றி….?
சோமு : சாயந்தரம் நாங்கள் ‘சாதரா’ விற் போகும்
சேவகத்தைப் பற்றி?
கணேசு : அதற்கென்ன! செல்கையிலே
கூட வர நான் குதிக்கின்றேன். கூட்டிக்கொண்டு
ஏகுæ ரானாலÊ எனகÊகுதÊ திறுதÊதி தான்.
சோமு : ஆகட்டும், பார்ப்போம். நான் அண்ணரிடம் சொல்கிறேன்.
கணேசு : தாளத்தை என் கையிற் தந்துவிடுங்கள் அண்ணா!
நீளக் கச்சேரி நிகழ்ந்தாலும், நேராகப்
பின்னால் இருந்து பிச கின்றிப் போடுகிறேன்.
சோமு : உன்னால் அது முடியும் என்கிறதோ உண்மை தான்!
கொம்மாவிடாவே! கொலிச்சில் படிக்க வைத்து,
எம் மாதிரியா? - எழுதிக் கிழிக்கின்ற
பெம்மானே ஆக்கப் பெரிதும் நிளைத்துள்ளா.
தாளத்தை நீ இரண்டு கைகளிலே தாங்கி இன்று
ஆளுவோர் முன்னால் அமர்ந்திருந்து தட்டுவதோ?
நாளைக் கவனே நடத்துகிற கச்சேரிக்
கோயிலுக் குள்ளோர் குறுந் தெய்வம் ஆக்கிவி;ட
எண்ணி யிருக்கும் இவவுக்கு நீ இன்று
பண்ணி யிருக்கும் நினைப்புப் பழுதன்றோ?
கணேசு: : அம்மா நினைக்கும் நினைப்பும் நடக்குமே?
(புகுந்து)
கமலி : அம்மா நினைக்கும் நினைப்பும் நடப்ப தென்றால்,
நாங்கள் நினைக்கும் நினைப்பும் நடக்குமே?
சோமு : செம்மறிகள் போலச் செயலில் இறங்காமல்,
சும்மா இருந்தால் எதுவும் நடக்குமே?
எம் மா நினைப்பை நினைத்தாலும் அந்நினைப்பை
இம் மா நிலத்தில் எளிதில் நிகழ்த்திடலாம்,
ஆசை இருந்தால்!
கமலி : அடடா, இசை æரர்
காசை மதிதÊதுக் கடவுளுக்கே ஏற்கிற
பாட்டை, அறியாப் பரதேசி முன்னிலையில்
காட்ட முனைந்து, கடுக்கன் வயிரத்திற்
போட்டு நடக்கப் புகும்போது பேசுகிற
பேச்சை இவைகள்? எனக்குப் பிடிக்கவில்லை,
சேச்சே….!
சோமு : கமலி, சிறந்த கருத் தொன்றைக்
கூறி விட்டாயே குறுக்கி! கலையினை எவ்
வாறும் அதனை அறியாதான் தர்வாரில்
ஏறி இசைத்தல் இழுக்கென்றாய்?
கமலி : பின் னென்ன?
சோமு : Áறு நிசத்தை நிகர்த்த தொரு நுண்ணிய
வார்த்தை! எனினும் வயி றரிக்கும் மட்டும் அதைப்
பார்த்து நடத்தல் பழுது, பயனில்லை!
தேடி என்றோ ஓர் திருநாளில் ஆனியிலோ
ஆடியிலோ வந் தடைகிற சேவகத்தை
மோடி செய்து கண்ணால் முளிசிச் கலைத்து விட்டால்
சாப்பிட வேண்டாமே?
கமலி : சமையல் முடிந்திருக்குச்
சாப்பிடுங் கோவன்?
சோமு : சரி தான்! நமக்கு மட்டும்
சாப்பா டிருந்தால் சரியாகிப் போகுமே?
ஊராருக்கெல்லாம் உணவு கிடைக்கட்டும்,
சீராகப பின்னர் சிறப்பாப் உடுத்து வந்து
கூடி எமது குழல் கேட்கக் குந்துவார்.
கமலி : ஊருக்கு முற்றும் உணவு பரிமாற
ஆருக்கியலும்? அடுப்படியும் போதாதே!
சோமு : ஊருக்கு முற்றும் உணவு பரிமாற
ஊள்ளது தான் ஆட்சி!
கணேசு : “உறுபசியும், ஓவாப்பிணியும், சிறுபகையும்
சேரா தியல்வ” தரசு!
சோமு : அதனை உருட்டுவதோ
வெள்ளையன். அந்த விடாக்கண்டன் தன்னுடைய
கப்பலிலே ஏறிக் கடலைக் கடக்கட்டும்
சிப்பாய்களோடு! சிறு பெண்ணே, பின்னால் நம்
உப்பு வியர்வை நம் சோற்றக் குதவுமடி!
கணேசு : வேர்வையினைக் ;காய்ச்சிக் கறிக்குள விடலாமே?
(கமலி குழைந்து சோமுவைப் பார்த்தல்)
ஆரும் எனக் கோர் பதிலளிக்கக் கூடாதோ!
சோமு : பார்வையில் நீ காட்டும் பணியைப் புரிவதற்குக்
காலம் இருக்கு!
கமலி : கவுண்மேந்து மாறுமட்டும்
போலும்?
சோமு : எடியே, பொடிச்சி, அதுமட்டும்
ஏன்னால் இருக்க இயலாது!
கமலி : சாப்பிட்ட
பின்னும் எனக்கோர் பெரிய பசி கிளம்பி
ஓடும் உடலம் முழுதும், வயிற்றில் அல்ல!
சோமு : நாடடிமை மீளுவது நாளைக்கிருக்கட்டும்!
ஆடியிலே நாள் வைத் தழைத்தாலும், ஓடிப்போய்
நாடி மயிரை மழித்துக் குளித்து விட்டுக்
கோடி உடுத்துக் குசாலாய் மணவறையிற்
குந்தி விடத்தான் குறி பார்த்திருக் கிறேன்,
அந்தோ, உன் அன்னை! ஆவதான் அசையாத
நந்தி போல் வந்தா நமக்கிடையில்! இவ்வேழை
நந்தன் என்ன செய்வான்?
கமலி : “நகர்;” என்று பாட் டொன்றைப்
பாடப்பிடித்தாற் பயன் விளையும் பாருங்கோ!
சோமு : போடி பச்சைக்கள்ளி! புலாலின் சுவை அறிய
ஆடறுத்தால் அன்றி நமக் காகாதிப் போதைக்கே!
கமலி : ஆகா தென ஓர் குழலைப் பிடித்தபடி
நோகா திருங்கோ! நுளம்பால் இரவெல்லாம்
Àக்கம் வராமற் துடிக்கிறேன்.
கணேசு : எனÊனகÊகா?
ஆனியிலே எங்கே நுளம்பு…?
சோமு : அட, நீ நில்! இந்தக்
கோடை நுளம்பு கொடிதே! அதனோடு
வாடையும் சேர்ந்தால் வறுத் தெடுத்துப் போடும் என்று
புத்தகங்கள் கூறும், புளுகல்ல !
கணேசு : யன்பர்களே,
யேதேதோ யெல்லாம் யெடுத்து யியம்புகின்றீர்.
காதலரைப் போலத்தான் காண்கின்றீர். யானாலும்
யோதித் யிருந்தால் யுலகம் யுருப்படுமா?
தீதோ, நலமோ n~ய லாற்ர வேண்டும்.
மறக்கவோ, ஈதை மறிக்கவோ, அன்ரி
மறைக்கவோ, இல்லை மறுக்கவோ ஆகா தென்ரு
அன்னோ டறைந்து விட யாi~ப் படுகின்றேன்.
ஆக்கமும் ஊக்கமும் நல்கி அருகிலே
நிற்ரல் விடுத்தோர் நிமிசம் யகல்கிறேன்!
(போதல்)
சோமு : கற்றல், இருந்து கணித்தல் இவைகளால்
முற்றுப் பெறாது. முனைந்தக் கணிப்புக்களை
~றறுப் புரிந்து ~ரிபார்த்தல் யேற்ற தம்மா
(காசி புகுதல். திடுக்கிட்ட கமலி கதவருகே ஓடல்.
சோமு வலப்புறம் நகர்ந்து நிற்றல்)
காசி : நாடகம் ஏதோ நடக்குது போலிருக்கு?
மேடைக்கு நானும் வரட்டே? ஊதிலை தான்
அஞ்சு நிமிசம் அசுகை புரியாமல்
வந்து நின்று பார்த்தேன், வடிவாய்;;;;;;;;;: படுதோசம்!
இந்த விதமே நடிக்கிறது எங்கடை
அண்ணாவி கண்டால் அடித்துக் கலைத்திருப்பார்!
வண்ணான் எனினும் எனக்கு வரும் Ùதுகள்
காதல் என்றால் சும்மா கதைக்கிறதே Ùப்பிடி …?
கமலி : மூதேவிக் காசி!
: (சோமு கமலி அருகே வருகிறான்)
காசி: : முடியாதே உங்களுக்கு?
பார் தம்பி இநதப் படி யெல்லோ ஆடுவது?
இத்திரீப் பாட் தான் எனக்கு வரும் பாருங்கோ ,
(நடித்தல்)
நாதா! ஆடியாள் நகத்தை தொடுதலும்
ஆகாதா? இதற் கந்தக் கண்ணகி தான் உங்களுக்குத்
தோதா? புரிகிறது? வாதா? புல முத்தம்
தாதா! என் வேதா! சங்கீதா! பொற் காதா!...ஆ,
மாதா! ஏ - சாதா? எப்போ தா? இப்போ தா! தா!
(திரும்பி மறுபடி பாடி மேடையைச் சுற்றி
ஆடிவந்து நிற்றல்)
கமலி : அச்சா!
சோமு : பகுத்தாச்சா!
காசி : அப்படிச் சொல்லுங்கள்.
முச்சந்திக் கொட்டகையில் முன்னாளில் ஆடியது
மிச்சம் மறந்தேன்! மெதுவாகப் பேசிறியள் -
பொச்சம் தீராது, பொடியள் உதனாலே!
“பட்டணத்துக் கொட்டகையிற் காட்டும் வசுக்கோப்பில்
æடÊடுகÊ கலைதÊதலÊ வெகு சோர்!” என் றிப்பதை
முட்டாள் பொடியள் மொழியும், முழுமோசம்!
துட்டுக் குதவாது! À! À! À
(துப்பல் போல் பாவனை)
கமலி; : சீச்சீச்சீ!
துப்பாதே æட்டுக்குள்…
காசி : சூ! சு;சூ! பொறு பிள்ளை!
துப்பாக்கிக் கிந்தப் பயமில்லை இப்போது!
துப்பலுக் கிந்தப் பயமே ? துடிக்கிறியள்?
கமலி : துப்பாக்கிப் காராம் பயமில்லை? சொல்லுகிறாய்!
காசி : ஐயோ! அதுகள் உனக்குத் தெரியாதே…?
மெய்யாக? காந்தி கடலை வறுக்க வந்தார்,
உப் பாக்க என்றாம்! உடனே அவ் வெள்ளையன்
துப்பாக்கி நீட்டித், துடும் என்று சுட்டானாம்!
சப்பாத்துக் காலால் உதைத்தானாம்.
சோமு : அப்புறம்?
காசி : காந்தி உதுக் கெல்லாம் சாவாரே ? கண்டியளே?
ஆந்தை உருவெடுத் தோர் ஆல மரக் கொப்பில்
ஏறி இருந்து, சிரித்தார்!
சோமு : கமலி: அடே, அப்பா!
சோமு : வேறு வித மப்பா, நான் கேள்விப்பட்டது!
ஆனாலும் உன்ரை கதைதான் அசல் என்பேன்!
கமலி : பேனை எடுத்துப் பிடித்துப் பெரிசாக
“மேனகா - அல்லது - வேசி உயில்” என்றெல்லாம்
ஆரணியிலே இருந்தோர் ஐயங்கார் செய்கிற
Áறு கதை உன்றை ஒன்றின் முன் நிற்குமே?
சோமு : “வெள்ளையன் சுட்டான்” என் ஒன்று சொன்னியே,
இல்லை! இதில்தான் பிச கொன்றிருக் கிறது.
காசி : சொல்லு தம்பி, பார்ப்பம்? எனக்குத் தெரியுமே?
ஆக்கள் கதைக்கிறதைக் கேட்டுவிட்டுச் சொல்லுறன்
பத்திரிகை நீங்கள் படிப்பியள் , சொல்லு தம்பி.
சுத்தமாய் சொல்லு! சுதியாய் இருக்குமே?
சோமு : இந்தியாக் காரன் தான் சுட்டான்!
காசி : அதெப்படி?
உந்தப் புழுகை ஒருக்காலும் நான் நம்பன் !
காந்தி தமிழன் எல்லே? காந்தியைப் போய்க்
காந்தியின்ரை
சொந்த ஊர்க் காரர் சுடுவினமே?
சோமு : சொல்லக் கேள்!
வெள்ளையன் தான் ராசா. அவன் தானே அந்த ஊர்
பள்ளிகளை எல்லாம் நடத்தினவன்? பள்ளியிலே
பிள்ளைகளுக் கெல்லாம் எதனைப் படிப்பித்தான்?
காசி : சொல்லு தம்பி , கேட்பம், சுகமாய் இருக்குது!
(கணேசு புகுதல்)
சோமு : நாங்கள் மடையர்! நமக்கென்றே ஒன்றும் இல்லை.
ஆங்கிலேயன் தான் அரசன். அவன் வாயாற்
சொல்லுவதைக் கேட்டாற் சுவர்க்கம்! அவனுடைய
காலைப் பிடித்தால் கடுஞ் சுவர்க்கம்!” …இப்படித்தான்!
கணேசு : பஞ்சையர் சொல்லுகிற பாட் டொன்று இருக்கு தல்லே!
காசி : கொஞ்சம் அதைச் சொல்லு தம்பி! நல்லாய் இருக்குதே?
கணேசு : இந்தப் பாட்டுத்தான் எனக்குப் பிடித்தது.
(ஓதல்)
“ஆணி-
அடிப்பதைப் பொறுக்கவோ அமைந்த துன் தலையே?
ஆள்பவர்க் குதவவோ அமைந்த துன் கூரே?!
அடுத்தவர் கைபட் டமைந்த துன் உருவம்
ஆதலால்,
விரும்பிய வண்ணம் நின் இரும்பு மேனி
இரு புறம் கூர் எடுத்து இன்னா
புரிபவர்க் கீண்ட எப் பொழுதும் ஆகாதே…”
காசி : பாட்டே இது? ச, வடுவாய் விளங்குது?
கேட்கவும் மிச்சம் ருசியாய் இருக்குது?
கணேசு : வேதமென்று சொன்னால் இது தான் புது வேதம்.
காசி : ஓதியதும் நல்ல ஒழுக்கம்! சபாசு தம்பி.
எங்கள் முனி பா கவதர், இதைக் கொடுத்தால்,
காய் கோத் தொரு தங்கக் கம்பி தரித்துள்ள
தொண்டையிலே போட்டுக் குலுக்கிக் கலக்கிவிட்டுத்
துண்டு துண்டாய்த் தள்ளி நிரவல் தொடங்குவார் -
அண்டை அயலிலே நிற்க முடியுமே?
எண்டாலும் தம்பி கணேசு வலு விண்ணன்.
சுண்டங்காய் ஆட்டம் இருந்துகொண்டுஇ பார் ஆளை!
சோமு : இந்தியாக் காரப் பொலிசுதான் சுட்டது…
காசி : அந்தப் பொலிசை அவன் ஆணியைப் போ லடித்து
வைத்துக் கொள்கின்றான்: அதுதானே தாற்பரியம்?
சோமு : மெத்தச் சரிதான்! பொலிசுகளை மட்டுமல்ல,
ஊரை முழுதும் உதைப் போல் தான் வைத்திருந்தான்.
ஆரும் அவனுக் கவன் அடிக்கும் ஆணிதான்!
காசி: : காந்தி தவிர ?
சோமு : அவர் போற் சிலர் தவிர!
காசி : ஓகோ, இப்போதான் உதெல்லாம் விளங்குது.
தொட்டு மிசினைத் துடைக்கும் தொழில் தருவான்;;;É
எட்டி உள்ளே பார்த்தால் - இதுகள் பிடிக்காது!
கட்டை அவிழ்ப்போமே? கதைத்த தெல்லாம்
போதுமெல்லே?
(மாராப்பை அவிழ்த்தல். அதற்குள் நிறமும்
சரிகையும் பளபளக்கும் பட்டு வேட்டி சால்வைகள்)
காசி : எப்படி வேலை?
சோமு : எடுப்பாய் இருக்குது!
காசி : அப்படிக் கொத்த அநியாயக் காரன் முன்
கைப்பட நானே கழுவி மினுக்கியதைப்
போட்டால் எனக்குப் பிடிக்காது! போகட்டும்!
நாட்டாண்மை பண்ணுதற்கு நான் வருதல் கூடுமே?
உங்களின்றை பட்டுகள். நீங்களே சாத்துறியள்.
எங்கள் குலத்துக் கிழுக் கில்லை, என்ன தம்பி?
(முருகப்பு களைத்துப் புகுதல்)
முருகப்பு : ஆளைப்பிடித்தேன்! அடித்தேன்! ஆவனிடம் அத்..
தாளைப் பறித்தேன்! குறித்தேன் டயறியிலே,
நம்பர்களை எல்லாம்! நுடாப்பேனோ? ஓடிவந்தேன்!
(கமலி, கணேசு, சோமு, காசி நகைத்தல்)
நம்hத்தான் மாட்டீர்!இதா அந்த நம்பர்கள்:-
எல்,எட்டு லச்சத் தெழுபத்தை யாயிரம்!
எல் ஐந்து லச்சத்தோ டெண்பத் தையாயிரம்!
எல் ஐந்து லச்சத் தெழுபத் தெண்ணா யிரத்து
மூன்று!
கமலி, கணேசு, சோமு, காசி: சபாசு!
கணேசு : முயற்சி உடையவர் எஞ்
ஞான்றும் இகழ்ச்சி அடையார்! இவர் வாழ்க!
முருகப்பு : அத்தை எங்கே போனா…? ஆவ கொடுத்த தாள் நம்பர்
முற்றும் உமக்குத் தெரியுமே?
கமலி : (வாய் பிதுங்கி)
இல்லையே….?
முருகப்பு : அத்தை எங்கே? அத்தை எங்கே…?
கமலி : (நெளிந்து)
அத்தை உள்ளே நித்திரையாம்!
(முருகப்பு உள்ளே போதல்)
காசி : பித்தனா? ஆவர் நம் பொலிசாளர்!
(முருகப்பு புகுதல்)
முருகப்பு : அத்தையின் தாள் நம்பர் தாளின் நம்பருடன்
ஓத்து வந்த தென்றால் உடனே புறுவாச்சு!
கமலி : கா சிப்போ யார் கையில்?
முருகப்பு : அந்தக் கழுதை யிடம்
æசி åட் N;டனே! நாம் வேண்டியது நம்பரன்றோ?
சீசீ, இதுவா சிறிதும் விளங்கவில்லை?
(தொண்டையைச் செருமிக்கொண்டு இன்றைய
அரசியல் வாதியின் மெட்டில்)
தேங்கிக் கிடந்த சிறு தீவை வெள்ளையன்
ஓங்கி வளர உயர்த்தினான். இன்றிங்கே
தார்த் தெருக்கள் ஓடும்! தடத்தில் ரயில் ஓடும்!
வார்த்தைகளில் எல்லாம் வழிந் தோடும் இங்கிலிசு!
பார்த்திருக்க மாட்டீர் இவற்றை அவனின்றி!
முத்திரைச்சந்தி முகப்பிற் படமோடும்É
பார்த்திருக்க மாட்டீர் இவற்றை அவனின்றி!
இங்கிலீ சாட்சி இதமாய் நடக்கையிலே
எங்களது நாட்டிலோ, எங்களது æட்;டிலோ
ஏதும் பிசகு நடத்தல் இயலாதாம்!
ஆதலால் இந்த வழக் கெமக்கு வெற்றியே
ஆக அமையும்! அதன் பின் வருவேன், என்
தோகை மயிலே, துடிக்காதே!
கமலி : ¥, கழுதை! கண் மண் ¤றிதும் தெரியåல்லை!
ஓடும்! ஒழுங்கை வழியாக நீர் ஓடும்!
(முருகப்பு ஓடிப்போதல்)
காசி : நானும் .. நடப்பம்? எங்கள் நாயனக் காரர் ஏ -
தேனும் கதைத்தால் இருந்து கொஞ்சம் கேட்கலாம்
என்று நினைத்தேன். இவர் இல்லை æட்டிலே!
பட்டணத்தில் அந்தப் பழைய நகரசபைக்
கொட்டகை போய் நானும் குழல் கேட்க எண்ணுகிறேன்.
கிட்ட நுழைய விடுவானோ, என்னவோ?
வாறன் எணை தங்கச்சி!
கணேசு : வாழ்க! வணக்கங்கள்!
(காசி போதல்)
கமலி : ¤ங்ப்éர் பெஞ்சன் எடுக்கும் சிவராச
சிங்கத்தார் பெற்ற சிறிய மகன் கந்தோரில்
லீ வெடுத்துக் கொண்டு கொழும்பில் இருந்து வந்து
நிற்கிறதால், தாய்க்காறி நேரே போய்க் கோயிலிலே
‘பெட்டி’ கொடுத்தாவாம்!
கணேசு : பிறகு? பிறகென்ன?
கமலி : Áறு வடை! மோதகங்கள் Áறு - தயாரித்துத்
தாரும் என்று கேட்டுத் தயவாகக் கோயில் அம்மா
ஆளோடு சாமான் அனுப்பினா. ஆதலினால்
புத்தகத்தை நீ எடுத்திப் போது படித்திருந்தால்
பத்துப் பதினைந் துனக்குத் தருவேன் நான்!
கணேசு : பத்துப் பதினைந்து? Áற்றைம்பது தானே?
கமலி : போ, போ. படி நீ இப்போது!
(கமலி போதல். சோமு மேடையின் அடியில் உள்ள
அலுமாரியின் பின் மறைதல். கணேசு படித்தல்)
கணேசு : “இங்கிலாந்து தேசத்தில் எங்கள் மன்னர்
இருக்கிறார். இவரது பேர் ஐந்தாம் யோச்சாம்.
இங்கிலிசுக் காயிரத் தொண்ணுhற்றுப் பத்தில்
இவர் பிறந்தார்! தைமாதம் ஏழாந் தேதி!
(1810 தை 7ம் திகதி என்று பல தடைவ கூறி
மனனம் பண்ணல்)
அங் கிருந்த படி நம்மை ஆளுகின்றார்,
அன்போடும் அருளோடும் அருமை யாகப்
திங்களுக்கு மும்மாரி பொழியும் வண்ணம்”
(திங்களென்றால் ஆண்டோ? சரியாகத் தெரியவில்லை!
எங்களுக்கோர் ஆண்டில் தான் மூன்று மழை பெய்கிறது!)
இவருடைய திருநாமம் வாழ்க! வாழ்க!” -
என்ன இதெல்லாம் பழசாய் இருக்கே? அம்
மன்னவர் செத்து மறு ஆளும் வந்து, போய்
விட்டாரே! என்ன விசர்ப் புத்தகம் இது ? சே!
எட்டாம் எற்வேட்டை எனக்குத் தெரியும்! அவர்-
(பாடல்)
முடிதுறந்தாரே! மன்னர்
முடிதுறந்தாரே! சிம்சன்
உடன் பறந்;தாரே!
ஆயிரத்து எண்Èற்றுத் தொண்Èற் றைந்திலே
அவதரித்த எங்கள் வெள்ளை அரச வள்ளலே
ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தாறிலே
அரசை விட்டு மணமுடித்தார் - அதுவும் நல்லதே!
முடிதுறந்தாரே! சிம்சன்
உடன் பறந்;தாரே! …
(சோமு அலுமாரி மறைவிலிருந்து முகம் மழித்தபடி
முகத்தில் நிறைய சவர்க்கார நுரையுடன் புகுதல்)
சோமு : பாட்டுப் பிரமாதமாக இருக்கு தடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேன் அடா! அடா!
கணேசு : கட்டை மணியம் குடித்து விட்டுக் கத்துகிற
மெட் டுங்களுக்கும் பிடித்திருக்கே? மெய்யே ? ஓர்
பெட்டைக்காய் அந்தப் பெரிய அரசை யெல்லாம்
விட்டுவிட் டந்தாள் வெளிக்கிட்டு விட்டுதே…?
கெட்ட பழக்கம்!
சோமு : சரிதான், போ
கணேசு : (கமலி புகுதல் கண்டு)
கேளுங்கோ
பெட்டைகளாலே எவர்க்கும் பெருந்தொல்லை!
கமலி : ஆறுகிறீர் போல… படிப்பை முடித்துவிட்டு
வேறு தொழிலை விரும்பும்! எதைப் படித்தீர்
கூறும், இப்போ மட்டும்.
கணேசு : குடையாதே அம்மா போல்!
Áறு வடை, இன்னொரு Áறு மோதகம்,
எல்லாம் ‘றெடி’ தானே;;;…?
கமலி: : (கொண்ர்ந்த பெட்டியி லிருந்து மோதகம் எடுத்துக் கொடுத்து)
இந்தா!
கணேசு : மிக
கணேசு, சோமு: நன்று
(உண்கின்றனர்)
கமலி : நல்ல பிள்ளை நீ! தின்று தின்று நடந்தபடி,
கோயில் அம்மா æட்டில் இதைக் கொண்டேக்
கொடுத்துவிட்டு,
æ§யிலே நின்று விளையாடி விட்டு,
மகிழம்é கொட்டுண் டிருக்கும், பொறுக்கி
மடியில் நிறைய வடிவாய் முடிந்து கொண்டு,
ஆறுதலாய் வா தம்பி!
(வடை மோதகத்துடன் பெட்டியைக் கொடுத்தல்)
கணேசு : (பெட்டியை வாங்கிக் கொண்டு)
அப்படியே ஆகுக!
(போதல்)
சோமு : “நாதீ! எனது நகத்தைத் தொடுதலும் ஆ-
காதீ ? இதற்கு முருகப்புவா உனக்குத்
தோதீ… ? புரிகிறது வதீ ? பல முத்தம்….
(சோமு தொடர இருவரும் அலுமாரியின் பின்
மறைதல், செல்லம் புகுதல்)
செல்லம்; : என்ரை பிழை! அல்ல துதுவும் நடக்குமே?
பொல்லாத பொய்யன்! பொறுக்கி! புலைப் பயல்!
புல்லன்! புழுகன்! புரட்டன்! புப்… புண்ணாக்கன்!
(மேடையில் திரிதல்)
என்ரை மருமோன் இதுக் கோர் முடி வெடுப்பான்.
(திரிதல்)
பானையிலே உள்ள பழஞ்சோற்றைப் போட்டிருந்தால்
ஏனிந்தத் தொல்லை ? இழவு?... பழிப் பெல்லாம்?
காவி உடுத்த கடைப்புளிகள் வந்தால், அப்
பாவிகளின் பற்கள் உடைக்கப்பட வேண்டும்!
பிள்ளை கமலி!
பெடிச்சி எங்கே போய் விட்டாள்…?
(செல்லம் போய்த்திரும்பவும், சோமுவும் கமலியும் அலுமாரியின்
பின் இருந்து வெளிவரவும் சரியாய் இருக்கிறது.
கமலியின் கன்னத்திலும் சவர்க்கார நுரை)
உள்ளுக்கும் இல்லை.
(கண்டு கொண்டு)
உதுவும் நடக்குதுவே?...
சை! சை.. எனக் குதுகள் இவ்வளவுக் கானதெல்லாம்
ஐயோ, தெரியாமற் போச்சுதே, ஆச்சி!
போடி அடுப்படிக்கு!
(கமலி உட்புறமும் சோமு வெளிப்புறமும் போதல்)
போச்சுதே மான மெல்லாம்
எங்கிருந்தோ வந்தான் இடும்பன்! இடைசசாதி!
(ஆவேசத்தோடு அதை இதை எடுத்தெறிதல்
உட்புறம் போதல் மேடையில் சில கணம் வெறுமை.
இருள்கிறது. கமலி புகுந்து அரிக்கன் லாம்பொன்றைத்
திண்ணையில் வைத்துத் Àண்டிவிட்டுப் போதல்.
சோமுவும் மாணிக்கமும் சேவகத்துக்கு
வெளிக்கிடுவது தெரிதல்)
மாணி : சோமு, வா தம்பி, சுறுக்காய் வெளிக்கிடன்.
நேரமாச் செல்லே? நெடுக இருக்கிற?
(சோமு அலுமாரியின் பின் மறைந்து
வேட்டி மாற்றி வருதல்)
என்ன, தவிற்காரர் இன்னும் வரவில்லை?
ஒத்துக்காரர் தான் அடுக்களைக்குள் நிற்கிறார்.
(வெற்றிலை போடுதல்)
ஊமை யன்ரை காருக்குச் சொன்னி யெல்லே…..?
சோமு : சொல்லி விட்டேன்.
(பொட்டு வைத்துக் கொள்ளல்)
மாணி : காரை இன்னும் காணன்? வருவானே கட்டாயம்…?
(கார் வந்து நிற்கும் சத்தம்)
சோமு : வந்து விட்டான் போல!
(சங்கிளியைப் போட்டுக்கொண்டு உடுப்புக்களைச் சரிசொய்தல்)
மாணி : வரட்டும், வெளிக்கிடுவம்.
(எதையோ நினைந்தவர் போல்)
அந்தக் காலத்தில் அவர் பெரிய வித்துவான்.
(காசி கொணர்ந்த துணி யிடை யெதையோ தேடல்)
கந்தையா என்று சொன்னால் கல்லும் குழையுமாம்… இந்தியா போன இடத்தில் அவருடைய வாசிப்பைக் கெட்டு மகிழ்ச்சி அடைந்ததனால்…
(தேடிய சாரதாவைக் கண்டேடுத்தல்)
தாத்தாவுக் கந்தத் தருமபுரத் தாதீனம் போர்த்தியது தம்பி இப் பொன்னாடை!
(அலுவலை நிறுத்திப் பரவசப் பட்டு)
அன்றோரு நாள்
மார்கழி மாதம் - மதிநிறைந்த நன்னாள் - இவ்வுரிலே யாரும் உறக்கத் திருக்கையிலே - நள்ளிரவு தாண்டிச் சில நாழிகை கடந்த வேளை - உதே இடத்தில் வீற்றிருந்து வாசித்தாய்… சூழ மனிசர் கிடையாது - சொக்கிப் போய்ப் பஞ்சையர் மட்டும் ஒரு பாயில் இருக்கிறார்… விஞ்சி எழுந்த இசையின் விசையில் இரு கண்கள் கலங்கக் கலங்கத் துடைக்கிறார்… ஏழை இருந்தேன், இதோ, இவ் விடத்தில் தான்! ஆழிக் குமுறல், அலைகின்ற மென்காற்றுப் பேசும் மொழிகள், பொரிய உல கழியும் ஊழிக் கதறல், உருண்டு சில கல் மீது வீழும் அருவி மிழற்றும் மழலைகளாய், பாடல், கவிதை, பரதம்- இவை ஒன்றி ஓடப் பிழிந்த சுவையாய்ச், செவி காணும் ஓசை, அரவம், துளனி, ஒலி, தமரம், ஓதை, அமலை ஒழுங்கோ டெழுப்ப ஒரு புல்லை நறுக்கிப் புகுத்தி முடித்த குழல் வில்லை நீ ஆள விளைந்த வியப் பிடையே… பஞ்சையர் மேனி பதறுகிறார் சொல்லுகிறார், “அஞ்சுகிறேன் அப்பா! உது மனித சாதனையை மிஞ்சியது! தெய்வம், இல்லையேல் பிசாசுதான்?...” அன்றே நினைத்தேன்! அதை இன்றே செய்கிறேன்…
சோமு : தாங்களே போற்றத் தலை ஏதோ செய்கிறதே.
(கண் துடைத்தல்)
மாணி : கொஞ்சம் குனிந் திதனைப் போட்டுக்கொள் தம்பி!
(மாணிக்கம் சோமு தோளில் சால்வையை இடல்)
சோமு : அண்ணா இதென்ன? எனக்காக அது ஏற்கும்?
மாணி : இன்றைக்கு நாங்கள் இருந் தொன்றாய் வாசிக்கும் ஆசையினால் இப்போ தவதிப் படுகிறோம். பேசாதே!
(மாணிக்கத்தின் உதவியுடன் சோமு பொன்னுடையச் சீராக போர்த்திக் கொள்ளல்)
சோமு : அண்ணா, கலையிற் பொரியவர்கள் தாங்கள்! இதனைத் தரும்போது மேலும் பெரியவர்கள் ஆனீர்கள்: நானோ சிறியேன்!
மாணி : ஒரு கதையும் வேண்டாம், உரைக்கக் கேள் தம்பி: சங்கீதம் ஒன்று, சகல உலகுக்கும்! வெள்ளையர்கள் என்றாள் மிருகங்கள் அல்லவே?
(பரவசப்பட்டு)
நாமும் நமக்கோர் நலியாக் கலை உடையோம்! நாமும் நிலத்தினது நாகரிக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்துவோம்! சும்மா இரோம்! என்று சொல்லி உயிர் சிலிர்க்க ஊதப்பா, சோமு! உடல் துடிக்க வந்து அவர் உன் பாதத்தில் வீழ்க! பணிக! பணி புரிக!
(தன்வசம் மீண்டும்)
என்னால் உனக்குத் தரத் தக்க காணிக்கை இவ்வளவே!
சோமு : அண்ணா, இதிலும் பெரி தில்லை!
மாணி : இன்றுவரை நான் இதைப் போட்டுக் கொண்டதோ என்றைக்கும் இல்லை!
சோமு : எனக்குத் தெரியும், அண்ணா!
மாணி : நீ தான் மகனே தகுதி நிறைந்தவன்.
சோமு : அண்ணா, நன் பொல்லா அறிவீனம் நான் அறிவேன்!
மாணி : கண்ணீர் எதற்கு?
(சோமு விழுந்து வணங்க முயலல். செல்லம் புகுதல்)
சோமு : மாணி, செல்லம்: கடவுளே!
செல்லம் : உங்களை என்ன
கூத்து நடத்துறியல்? கண்டறியாக் கூத்துகள்! பார்த்தாற் சனங்கள் சிரிக்கும்! பயித்தியமே? தாத்தாவின் பட்டும் தரப்பட்டு விட்டதுவே? என்னத்தைக் கூறி, எவரிடம் போய் ஆறுவேன், ஆச்சி !
மாணி : இதென்ன அமளிப் படுகிறாய்? கூச்சல் இடாமல் குறை இருந்தால் சொல், ஆத்தை!
(விதானை புகுதல். செல்லம் அமைதியுறல்)
விதானை : என்ன? வெளிக்கிட்டு விட்டியளெ…?
மாணி : வாருங்கோ!
ஐந்து வினாடி பொறுங்கோ! அதுக் குள்ளே வந்து விடுவோம்!
விதானை : பொறுங்கோவன்!
(வாங்கில் சாவகாசமாகக் குந்தல்)
சின்னப் பிச கெல்லே ஒன்று வந்து…
மாணி : செல்லம்: என்னது ?
விதானை : சின்னப் பிச கெல்லே ஒன்று வந்து சேர்ந்தது? என்னிற் பிழை சொல்ல மாட்டியள் !
மாணி : செல்லுங்கோ!
வெல்லம் : என்ன விதானை ? இழுக்கிறியள்,… செல்லுங்கோ…!
விதானை : நாங்கள் நினைக்கிறதெல்லாம் நடக்குமோ…? ஒற்றைக் காலில் நின்றுரக்கத்தான் பேசினன். மற்றவர்கள் யாபேரும் “மாட்டம்” என்று விட்டாங்கள். ஒற்றைக் காலிற் தான் அவன்களும் நின்றாங்கள்!
செல்லம் : சற்று விளக்கமாகச் சொல்லும் ..
விதானை : சரி சரி ..
“வெள்ளையனுக்கு விழா வெடுக்கும் வேளையிலே அள்ளி வைக்கப் பார்த்தாய்” - அடிக்கவும் வந்தான்கள்!
(கமலி புகுதல்)
பிள்ளை சொல்லு பார்ப்பம், பிழை என்ன னெ; மேலே? மெல்ல வந்தேன் இங்கே. விசயத்தைச் சொல்லி விட வேண்டு மெல்லே உங்களுக்கு? வேண்டாமாம் உங்களை...
(யாவரும் : .....?)
“எட்டுலகை முற்றாலும் இங்கிலண்டுக் காரர் முன் நட்டுவ மேளம் நடக்க விடுவோமோ?
சட்டையும் ஆபாடமற் சனியன்கள் வந்துவிடும்” -முட்டாட் பயல்கள் மொழிந்தார்கள் இப்படியே! நட்டம் உமக்குத்தான். நான் என்ன செய்யிறது? சங்கீத ஞானமே இல்லாத் தரித்திரங்கள் - என்னை அதுக்குப் பிழை சொல்லக் கூடாது ... வைத்த படியே விழாவை நடத்துவதற்குச் சத்தமோ ஆட்கள் சரியாகப் பார்த்து விட்டார்! கைத்தாளம், தோசை சுடும் கல் லளவாம்! ஊதுகுழல் எத்தனை நீளம், வளைவு! டமரங்கள் மெத்தப் பெரிசு! முழக்கர்களின் கூட்டமும் பத்தே? பதினைந்தே ...? ஐம்பது பேர்! தங்களது பொத்தான் மினுங்கப் பொலி சடித்த சப்பாத்தோ டத்தனை பேரும் வர ரூபாய் ஐந்நூறு.....!
மாணி : சத்தத்துக் காட்கள் சரியாகப் பார்த்து விட்டார்....
செல்லம் : “பாண்டு” வெள்ளையன்ரை பறை தானே....?
விதானை : சுச்சுச் சூ,
வேண்டாம் பழிப்பு! விடுங்கோ என்னைப் போக....! அச்சாரம் தந்தேன்.......?
செல்லம் : அதின்னும் இருக்குதே...?
விதானை : அச்சாரம் எல்லே? அதைத் திருப்பிக் கெட்பேனே...? மிச்சம் உபகாரம். வேறென்ன? செம்பில பச்சைத் தண்ணீர் இருந்தால் தாரும்... விடாய்க்குது.....
(செல்வம் போதல்)
கோப்பி யொன்றும் வேண்டாம்!
(செல்வம் புகுந்து செம்பில் நீர் கொடுத்தல்)
செல்லம் : குடியும்.
விதானை : (வாயை வைத்து குடித்து விட்டு)
வரட்டுமே?
(விதானை போதல். கார்க் கோணை இழுத்து அடித்துக் கேட்டல்)
சோமு : நீங்கள் தவிர்த்தல் நியதி. அவர்களே தாங்கள் தவித்தார்.
மாணி : இரண்டும் சரிதானே...?
நாங்கள் அவமாய் நடத்தப் படவில்லை....
(மறுபடியும் கார்க் கோண் கேட்டல்)
ஊமையனும் கார்க் கோணை ஊதத் தொடங்கி விட்டான்! சோமு, கார் வேண்டாம். போ, சொல்லிப் போக்காட்டி விடு. சாமி, முருகா!
(சோமு வெளிப்புறம் கமலி உட்புறம் போதல்)
செல்லம் : சரிந்து படுத்து விட்டால்,
ஓமோம், எதுவும் அதோடை ஒழிந்து விடும்! ஆமையைப் போல அடங்கிக் கிடக்காமல், ஓம் அல்ல தில்லை, ஒரு வார்த்தை சொல்லுங்கோ.
மணி : என்னத்தை ஆச்சி இதுக்குள் நெருக்குகிறை?
செல்லம் : முன்னத்தைத் தானே முதலில் முடிக்கிறது?
அங்கே வடலி அடைப்பார் நெருக்கினம்.
இன்றைக் கொரு முற்றிதற்கு:
தங்கச்சிக் கந்தப் பொடியரைத் தான் செய்யிறது;
இங்கே நான் சோமன் இருக்க விடமாட்டேன்.
மாணி : சோமுவைப் போ என்று சொல்ல முடியுமே?
ஏதோ எனக்குத் தெரிந்த உருப்படிகள் இன்னும் இரண்டொன் றிருக்குக். கொடுத்துவிட்டால், அப்புறம் என்ரை அலுவல் முடுஞ்சுது!
செல்லம் : அப்ப அறுங்கோ! அறி வின்றிப் பேசிறியல்...?
செப்பமாய் என்றைக் கெதனைத் தான் செய்யிறியள்....?
(வீட்டுக் கதவில் கமலி தோன்றுதல். தரித்தல். திகைத்தல் மறைதல். மாணிக்கமோ செல்லமோ கமலியைக் காணவில்லை)
மாணி : உள்ளபடி உன் விருப்பம் அது வென்றால், பிள்ளைக்கது பிரியமென்றால், நீ அந்தச் சல்லைப் பணலுக்கே செய்யன். சரிப்படுத்தப் பாரன். அது உனது பாரம்! சரி சரி, போ.
செல்லம் : (திருத்தி அடைந்து)
நேராமாச் செல்லே, நெடுக இருக்கிறியல்? வாருங்கோ சாப்பிட
மாணி : வேண்டாம்.
செல்லம் : படுங்கோவன்
(செல்லம், மாணிக்கம் உட்புறம் போதல். சோமு புகுதல் கண்டு செல்லம் திரும்பல். சோமு குனிந்ததலை நிமிர்த்த வில்லை)
சோமு முதலில் உனக்குத்தான் சொல்லுவன். நீ தான் முழுவதையும் நின்று நடத்துவி. அண்ணர் வேறே யார் அவளுக்கிருக்கினம்..?
சோமு : ...................................?
செல்லம் : ஒத்துக் காரற்ரை பொலிசுப் பொடியருக்கு அத்தை மகளின் மகள் தானே இக் கமலி...? ஒத்துக் கொண்டிட்டார் இவரும். உனக்கும் அது சந்தோசம் தானே...? சரியே...? சரி தானே...?
சோமு : ...........?
(ஒதுங்கி ஓர் வாங்கில் குந்தல்)
செல்லம் : சாப்பிட வாவன்...
சோமு : தயவு செய்து வேண்டாம்!
செல்லம் : படு தம்பி பின்னை!
(லாம்பைத் தணித்து விட்டுச் செல்லம் போதல்)
சோமு : படுத்துக் கிடந்து
துடிப்பதோ எங்கள் துறை!
(சிறிது நேரம் இருத்தல். பிறகு எழுந்து போய்ச் சுவரில் மாட்டியுள்ள குழலை எடுத்தல். மணி 12 அடித்தல். குழலைப் பார்த்து-)
அண்ணனும் கூட அவமதிக்கத் தக்க திது!
(குழலை தோளில் மாட்டல்)
உண்மை கொடிதே! உலகில் அதனுடனே பொரிட்டு வாழப் புகுந்தோம். கலங்குவதோ?
(பொற் சால்வையை எடுத்து விரித்து வடிவாகப் போட்டுக் கொள்ளல்)
வீரிட்டு அலறி விழுந்து புரளுவதோ?
பார் எட்டுத் திக்காய்ப் பரந்து கிடக்கிறது.
(தீர்மானத் தோடு நடந்து போதல்.
மேடையில் இருள ஆரம்பிக்கிறது. பஞ்சையாரின் குரல் பின்னனியில் ஓதிக் கேட்டல். அதோடு ஏற்ற ஒலிகள்)
குரல் : நின் றந்தக் கோயில் நிமிர்ந்து, நெடுந் தூரம் பார்த்துப் பயன்கள் விளைகின்ற கோபுரமும்,
(கண்டா மணி ஓசை)
வேர்த்துக் கலைஞர் விளைத்த மணி மண்டபமும், வீதிகளும், நூறு விளக்கும், பரதத்தின்-
(பரத நாட்டியப் பல்லியம்)
சேதிகளைக் கூறும் சிலம்புச் சிறுபாதம்
ஆடும் அரங்கும், அறிந்து சுவைஞர்கள்-
நாடிப் புகுந்து நயந்திட, நீ சோமனுடன்
ஊதும் குழலில் உயிர் பெற் றுடல் புளகித்து
ஆதி அறையில் அமரும் கடவுளுமாய்-
(ஓசைகள் அடங்கள்)
என்றொ ஒரு நாள் எழும்.
(திடிரென தனி நாயனத் தோசை மேலே எழுந்து
அபாரமாகக் கேட்டல். கமலி மணமகள் போன்ற
அலங்கார உடையுடன் புகுந்து சோமுவைத் தேடி
அங்கு மிங்கும், அலுமாரியின் பின்னும் பார்த்தது விட்டு-)
கமலி : உண்மை கொடிதே! உலகில் அதனுடனே
போரிட்டு வாழப் புகுந்தோம். கலங்குவதோ?
வீரிட் டலறி விழுந்து புரளுவதோ?
பார் எட்டுத் திக்காய்ப் பரந்து கிடக்கிறது!....
(கமலி கூட்டி லிருந்து கிளியை எடுத்து அணைத்தபடி, தீர்மானத் தோடு வெளியேறல்; மேடையை இருள் முற்றாகச் சூழ்கிறது.)
பிற்கூறு
(மேடையைச் சூழ்ந்த இருளிடையே சில கணங்கள் நாயனம் ஓங்கிக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டுச் சற்றுத் தணிய, இருட்டிடை பஞ்சையர் மட்டும் தெரிதல்)
பஞ்சை : கீதம் உயிரைக் கிளறிப் பிழிந் தெழுந்து
வேதம் போல் ஓங்கி வெளி யெங்கும் பொங்கியதே!
தூய அமிழ்தின் துமியோ? துடித்தழைக்கும்
சேயின் குரலோ? செழுந்தமிழோ? சாமத்தில்
கோயில் இடத்து நின்று கூப்பிட்டக் கேட்கிறதே!
(இரு கணம் மறுபடியும் நாயனம்
ஓங்கி விட்டுத் தணிதல்)
சோமா, இது வென்ன சொர்ப்பனமோ! நத்தோடு
கூகை இருந்து குரல் காட்டும் கும் மிருட்டில்-
(நெருப்புப் பெட்டியைத் தட்டி
ஒரு தூண்டாமணி விளக்கை ஏற்றுகிறார். திருப்பணி
புரியப்பட வேண்டிய பழைய கோவிலின் சிறு
மண்டபப் பகுதி ஒன்றும், அதில் நந்தி வாகனத் தருகில்
சோமு குழல் ஊதுவது தெரிகிறது)
பஞ்சை : நீயோ, உனது நிழலோ, குழ லெடுத்தீர்?....
(சோமுவின் எதிரே சற்றுத் தள்ளி அவனைக் குழப்பாமல் ஒரு கப்போடு குந்துகிறார்.
சோமு காணாமல் அதாடர்ந் தூதிக் கொண்டிருக்கிறான்)
பஞ்சை : ஓயாத இன்பம் உளது...!
(கண்ணைத் துடைத்தல். குழல் ஓசை ஓங்குகிறது. சில கணத்தில் பாதசரத் தொலி, அதை அணிந்தவள் அந்தரித் தோடி வருவது போல் கேட்கிறது. சோமு ஓதி முடித்துக் குழலை வைத்து விட்டு நிமிர்கிறான். மேடையின் எல்லையில் கமலி தொன்றிச் சோமுவின் அருகிற் செல்லக், கொட்டு மேள ஓசை தொடங்கி பெரிதாகக் கேட்கிறது. தொடர்ந்து மந்திரம் ஓதி கேட்டல். ஐயர் ஒரு மலரைக் கீழே கிடக்கக் கண்டெடுத்துச் சோமு விடம் கொடுக்க. அதனைக் கமலியின் பின்னலிற் சூடல். பிறகு, சோமுவும் கமலியும் கோயிற் கருவறையை நோக்கி வணங்குதல். வணங்கிய வாறு சபையை நோக்கித் திரும்பி முன் மேடைக்கு வர அவர்களுக்குப் பின்னால் திரை விழுகிறது. நாடகத்தின் பிற பாத்திரங்களும் ஒவ்வொருவராக வந்து நின்று சபையை வணங்க, சபையில் விளக்குகள் மெல்ல மெல்ல மீள்கின்றன. நாடக ஆரம்பத்தில் கேட்ட தவிலடி மீண்டும் கேட்க ஆரம்பிக்கிறது. பின்னணியிற் பாடல்)
நாடகம் கண்டு நயக்கத் தெரிந்தோர் நடுவினில் வந்து ஆடி மகிழ்ந்தோம்;
வணக்கங்கள் கோடி, அனைவருக்கும்!
முற்றிற்று
--------------------------------------------------------------------------
மஹாகவியும்
தமிழக் கவிதையும்
கடந்த முப்பது வருட காலமாக கவிதை எழுதி வரும் மாஹகவி அவர்கள் பொதுவாக அன்றிலிருந்து இன்றுவரை இலங்கையின் தலையாய தமிழ்க் கவிஞர் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளார். இன்றுள்ள தற்காலக் கவிஞருள்ளே காலத்தால் முந்தியவரும் இவரெ.
இவருடைய நூற்றுக் கனக்கான தனிக் கவிதைகளும் பல காவியங்களும் கவிதை நாடகங்களும் இசைப் பாடல்களும் பத்திரிகை மூலமாகப் பிரசுரமாகி யுள்ளன. நூலுருவமாக வள்ளி, குறும்பா என்ற கவிதைத் தொகுதிகளும், வடிஸ் வீரமணி அவர்களால் மக்கள் மத்தியில் வில்லுப் பாட்டாக இசைக்கப்படும். கண்மணியால் காதை (கலட்டி) என்ற காவியமும் வெளிவந்துள்ளன. சிறிது காலமாக தேன் மொழி என்னும் கவிதை இதழையும் நடத்தியுள்ளார். இப்போது, “ நாடோடிகள்” நாடகக் குழுவினரால் பல முறை மேடையேற்றப் பட்டு, வைதீர்கர்களின் எதிர்ப்பையும் மக்களின் ஆதரவையும் பெற்ற கோடை என்னும் கவிதை நாடகம் வெளிவந்துள்ளது. புதிய தொரு வீடு, முற்றிற்று, கோலம் முதலிய அவருடைய மற்ற நாடகங்களும் மேடையேற்றப்பட உள்ளதாக அறிகிறோம்.
இவ்வளவு அதிகமான ஆக்கங்களை வெளிக் கொணர்ந்திருந்தும், அவரைப் பற்றிய ஆதார பூர்வமான விமர்சனம் எதுவும் இன்னும் நம்மிடையே முயற்சி செய்யப்பட வில்லை. அவரைப் பற்றி மட்டுமல்ல, பொதுவாக அநேக தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய நிலைமை இதுவே. அண்மைக் காலத்தில், மாக்ஸிசக் கண்ணோட்டத்தில் எமது சில இலக்கியப் படைப்புக்கள் பொருள் hPதியாக ஆராணப்படுகின்றன எனினும், கலை ஆக்க hPதியாக எமது படைப்புக்கள் ஆராய்வதற்குத் தகுந்த அடிப்படைக் கோட்பாடுகளை இன்னும் நாம் வகுத்துக் கொள்ள வில்லை.
இந்த நிலையில் தற்காலத் தமிழ்க் கவிதைப் பரப்பில் மஹாகவிக்கு உள்ள இடத்தையும்,தற்காலத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அவர் சாதித்து இருப்பதையும், வருகின்ற சில ஆண்டுகளில் நாம் மேலும் மேலும் சீர் தூக்கிப் பரிசீலித்துப் பார்ப்பது அவசியம்.
2
எந்த ஒரு இலக்கியக் காரனும், அவன் வழ்கின்ற நாட்டின் சரித்திரச் சூழலாலும் அவனுக்கு அமைந்த வர்த்தகத் தொடர் பாலும் பாதிக்கப் படுகின்றான் என்பதும். அவற்றின் பிரதிபலித்து அவனுடைய படைப்புக்களில் இடம் பெறும் என்பதும், பொதுவாக ஒப்புக் கொள்ளும் உண்மை. அதே போல, இந்தப் புறச்சூழல் பாதிப்புக்கு ஒவ்வொரு இலக்கியக்காரனும் தன்னில் அமைந்த சில தன்மைப் பாடுகளினால் முகம் கொடுக்கிறான் என்பதும், அந்த முகம் கொடுத்தலில் காணப்படும் இணக்கமும் இணக்கமின்மையுமே அவனுடைய வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் என்பதும், அவ்வாறு ஒரு சரித்திர சூழலுக்கு அவனுடைய தன்மைப்பாடு உருவாக்கும் இணக்கம் அல்லது இசைவாக்கம் பின் தொடரப்படுமாயின், அவன் ஒரு புதிய சந்ததியை உருவாக்கியுள்ளான் எனப் பொருள்படும் என்பதும் ஆழ்ந்து பெற்றுக் கொள்ளக்கூடிய உண்மைகளே.
மஹாகவி, நாட்டின் அரசியல் சுதந்திரத்துக்கான கோரிக்கை வலுப்பெற்ற காலகட்டத்திலிருந்து, தமிழ் - சிங்கள தேசிய மறுவளர்ச்சிக் காலகட்டத்தினூடாக வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்து வரும் இந்த காலகட்டத்தினுள் பிரவேசிக்கிறார் என்பதையும், அவர் யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்றில் சாதாரண மத்திய வர்க்கத்தில் பிறந்து, பெரும் பகுதிக்காலம் கொழும்பில் உத்தியோகம் பார்த்து, அரசாங்க சேவையாளராகி, இன்று நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடமை யாற்றும் ஒரு புத்திஐPவி என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொண்டால் அவருடைய படைப்பில் காணப்படக்கூடிய சரித்திரப் புறத்தாக்கங்களை நாம் பெரும் பாலும் எல்லைப் படுத்திக் கிரகித்துக் கொள்ளலாம்.
அரசியல் - பொருளாதாரச் சுதந்திரத்திற்கான கோரிக்கைகளும், சமுக சுதந்திரம், பண்பாட்டுச் சுதந்திரம் ஆகிய வற்றிற்கான கோரிக்கைகளையும், மாறுதல்களையும் அவற்றின் உடனடியாகத் தோற்றுவிக்கின்றன. மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட சமுகச் சுதந்திர உணர்வு, சாதிக் கட்டுப்பாடு, பெண்ணடிமை, பண்ணையடிமை போன்ற சமுகத் தளைகளிலிருந்து விடுதலை கோருகின்றது. பண்பாட்டுச் சுதந்திர உணர்வு, விதேசியக் கலாச்சாரத்தை வெறுத்து, சுதேசியக் காலச்சாரத்தை மீட்டெடுத்தலுடன், பழைய நிலமான்ய சமுக அமைப்பின் ஆசார அனு~;ட்டான சடங் குசம்பிரதாயங்களிலிருந்து விடுதலையையும், தனி மனித மனப்பான்மையையும், பகுத்தறிவு வாதத்தையும், பழைய ககலை- இலக்கிய வடிவங்களை உடைத்துக் கொண்டு, தனக்குப் பொருத்தமான புதிய கலை - இலக்கிய வடிவங்களை ஆக்கிக் கொள்ளும் வேட்கையையும் உண்டாக்கிறது. எப் பொருளும் கவிதைக்கு - இலக்கியத்திற்கு - ஆகும் என்ற கட்டற்ற தேடலையும் அதனால் கவிதை வெளியீட்டிலும் புதிய புதிய முறைகளையும், சொல்வார்ப்புக்களையும், உவமானங்களையும், உருவங்களையும் கவிதையுள்ளம் நாடுவதற்குரிய பௌதிகச் சூழலும் இதுவே. சரியாகச் சொன்னால், தற்காலக் கவிதை அல்லது நவீன கவிதை என்பதே இந்தச் சகாப்தத்திற் குரிய ஒரு புதிய வார்ப்புத்தான்.
தேசிய மறுமலர்ச்சிக் காலத்தில் மத்திய தரவ ர்க்கத்தின் சிந்தனையில் ஏற்பட்ட இந்தப் பொதுவான வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் மஹாகவி பிரத்தியேகமானவரல்ல உண்மையில் அவரே அதன் சிறந்த பிரதிநிதியாய், மேற்குரித்த சகல சிந்தனை - உணர்வுகளையும், தமது கவிதைப் பொருளாகக் கொண்டு விளங்குவதை அவருடைய படைப்புக்களிலிருந்து அறியலாம். இன்று வரையுள்ள மஹாகவியின் கவிதைப் பொருட் பரப்பை விரிவாக ஆராய விரும்புகிறவர்கள் இந்தப் பொதுவான எல்லைப் பாட்டை அறிவார்கள்.
ஆனால் பொருள் hPதியான இ;த எல்லைப் பாட்டை, அல்லது, இந்தப் பொதுவான சரித்திரச் சூழல் மஹாகவியின் சிந்தனையை எப்படிப் பாதித்தது என்ற விபரங்கள், தமிழ் கவிதைப் பரப்பில் அவருடைய பங்கு எத்தகையது என்பதைச் சரியாக அறியத்தரமாட்டாது. இந்தச் சரித்திரச் சூழலின் பாதிப்புக்கு மஹாகவி முகம் கொடுக்கும் போது, அவர் தன்னிடம் அமைந்த என்ன தன்மைப் பாடுகளினால், என்ன இனக்கத்தைத் தமிழ் கவிதைக்கு ஏற்படுத்தினார் என்பதை ஆராய்வதன் மூலமே, அவருடைய சாயான பங்கை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாகப் பாரதியும் பெரும்பாலும் தேசிய மருமலர்ச்சிக் காலத்தவர்தான். பாரதியின் சிந்தனை உணர்வுகளும், ஏறக்குறைய மேற்குரித்த எல்லைகளுக்குள்ளே உள்ளன. எனினும் பாரதியின் கவிதைக்கும் மஹாகவியின் கவிதைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது மேலோட்டமான வேறுபாடு அல்ல. மிகவும் ஆழமான வேறுபாடு ஆகும். இத்தகைய வேறுபாடே அவரவரின் தன்மைப்பாடும் இணக்கப் போக்கும் ஆகும். பாரதியைப் பொறுத்த வரையில், பரந்து பட்ட மக்களின் சமூக அரசியல் விழிப் புணர்ச்சிக்கும், போராட்டத்திற்கும் தமிழ்ச் செய்யுளையும் கவிதையும் அழைத்தே அவருடைய தன்மைப்பாடு ஆகும். அதன் பயனாய் தமிழ் செய்யுளும் கவிதையும் சில பிரத்தியேகத் தன்மைகளைப் பெற்றன. அத்தன்மைகள் வழிவழியாகச் சிலரின் கவிதைகளில் வளர்ச்சி யடைந்தன. அது தான் பாரதியின் முக்கியத்துவம். அப்படியல்லாமல், அந்தக் காலத்து சமூக அரசியல் விழிப்புணர்ச்சிக்கும் போராட்டத்திற்கும் பாரதி வசனத்தை மாத்திரம் அழைத்திருந்தால், அல்லது தீவிரமான இயக்க நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொண்டிருந்தால் பாரதி தமிழ் கவிதை உலகு அறியாத ஒருவராகவே இருந்திருப்பார். அல்லது அவர் கவிதையை, தோத்திரப் பாடல், கீர்த்தனைகள், குயிற்பாட்டு போன்றவற்றிற்கு மட்டும் அழைத்திருந்தால், ஒரு இடைக்கால் புலவனுக்குக் கூடிய எந்த அந்தஸ்தும் பாரதிக்கு ஏற்பட்டிருக்காது. அது போல மஹாகவியின் முக்கியத்துவத்தையும் நாம் சரியாகக் கண்டறிய வேண்டுமானால், குறித்த சரித்திர சூழலுக்கு முகம் கொடுத்த அவரின் தன்மைப்பாடு எனவும், அதனால் தமிழ்க் கவிதைக்கு ஏற்பட்ட இனக்கத் திறன் எனவும் ஏதாவது இருந்தால் அவை எவை எனக் கண்டறிதல் வேண்டும்.
3
இதற்கு முதலில் தமிழ் நாட்டினதும் இலங்கையினதும் சம காலக் கவிதைப் போக்கை ஒப்பு நோக்கிப் பார்ப்பது அவசியம்.
தமிழ் நாட்டின் தற்காலக் கவிதை ஆரம்பமாவதாகக் சொல்லப்படுகிறது. பாரதியின் தேசிய இயக்க இசைப் பாடல்களையும், தோத்திரப் பாடல்களையும், பழைய கவிய மரபில் தோன்றிய முப் பெரும் பாடல்களையும், சில தனிக் கவிதைகளையுந் தொடர்ந்து, பாரதிதாசன் திராவிட இயக்கத்திற்காக எழுதிய பிரசாரச் செய்யுள்களும், அதே தொனியில் அமைந்த சில காவியங்களும் தோன்றின அத்துடன் இசைப்பாடல்களின் சந்த அமைப்டபில் ஒரு வித்தியாசத்தையும், இயற்கை அழகுபற்றித் தனித் துண்டமாக எழுதும் ஒரு மரபையும் அவர் தோற்று வித்தார். அதே காலத்தில் வாழ்ந்த நாமக்கல்லார், தேவி, சுத்தானந்த பாரதியார் போன்றோர் பெரும்பாலும் பாரதியும் பாரதிதாசனும் கையாண்ட விருத்தப்பாக்களையும் சிந்துக்களையும் அதே பாணியில் கையாண்டார்கள். பாரதி பரம்பரை என ஒன்று அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது.
பாரதி பரம்பரையின் வளர்ச்சி திருப்தி கரமான தல்ல என்பது இன்று தமிழ் நாட்டில் பலரது தீர்க்கமான கருத்து. அவர்கள் பெரும்பாலும் எழுதும் சிந்துகளும் விருத்தங்களும், இயற்கை வருணனையும் காதலும் கருத்துரையும் மலிந்த சொற்சிலம்பமாகி விட்டது என்பதை அநேகமாக எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
பாரதி இலகு படுத்தியதாகக் கூறப்படும் செய்யுள் நடை இவ்வாறு ஐPவனுள்ள எதையும் தாங்க முடியாத வெற்றுக் கூடாகி, வெறும் சிலம்பொலி யாகிக் காணப்படும் தமிழ் நாட்டில் தான் செய்யுள் உருவம் உடைக்கப்பட்டு, வசன கவிதை அதன் உடைந்த ஓடுகளினுள் இருந்து குஞ்சு பொரித்து வரவும் காண்கிறோம். இந்த வசன கவிதை, சிதம்பர ரகுநாதன் சில காலம் காட்டிக் கொள்ள முடின்றது போலத் தமிழ்நாட்டில் மடிந்து கொண்டு போகும் ஒரு மரபு அல்ல. மாறாக இன்று தமிழ் நாட்டில் கவிதை என ஏதாவது எழுதப்படு மானால், அது வசன கவிதை எழுதுபவர்களிடையே தான் காண முடியும் என்ற ஒரு நிலை உருவாகி விட்டது. எழுத்தில் மட்டுமல்லாது, கணையாழி, நடை, ஞானாரதம் மதலியவை போன்ற பல பத்திரிகைகளிலும் செய்யுள் நடை வழக் கொழிந்த வசனப் பாணியிலான இந்த வசன கவிதைகளே பிரசுரமாகின்றன தாமரையில் வெளிவரும் கவிதைகள் கூட, அந்தப் புதுக் கவிதைகளின் விகாரத் தன்மை அற்றனவாய் இருப்பினும், வசனத் தன்மையை - செய்யுள் உடையவை - அதிகமாகக் கொண்டவையே. கலைமகள், கல்கி, தீபம் போன்ற பத்திரிகைகளும் வழக்கமான கவிதையைப் புறக்கணித்துள்ளன.
இலங்கையின் நிலை என்ன? பாரதியையும் பாரதிதாசனையும் பின் பற்றிய அவர்கள் பரம்பரையினர் எழுதிய அதே விருத்தப் பாக்களையும் சிந்துக்களையும் தான் இலங்கையிலும் தற்காலக் கவிஞர் பரம்பரையினர் எழுதத் தொடங்கினார் என்று கூறப்படுமாயின், அதைத் தொடர்ந்து இங்கு மூன்று முக்கியமான மாற்றங்கள் நடந்துள்ளதைப் பின்னோக்கிக் காணலாம். அவை :
அ. சிந்து வகை வரவரத் தன் முக்கியத்துவத்தை இழந்து ஆரம்பக் கவிஞர்களின் ஆரம்பப் படியாக ஓய்ந்தது.
ஆ. வெண்பாப் பயிற்சி பரவலாக்கப்பட்டு, அதன் ஓசை பேச்சோசைத் தொனிக்கு மாற்றப்படடடது. அகவலிலும் இவ்வாறே.
இ. விருத்தப்பா முதலியவை, இரு கிளையாக வளர்ச்சியடையத் தொடங்கின, ஒரு கிளை சந்த விகப்பங்களை வளர்த்து வளர்த்து, ‘60ம் ஆண்டுகளில் ~Pணிக்கத் தொடங்கியது. மறு கிளை பேச்சு மொழியின் தொனியை நோக்கி வளர்ந்தது - இன்னும் வளர்கிறது.
இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் பரிணமித்துள்ள இந்தப் பேச்சோசை இறுபதாம் ஆண்டுகளில் இனம் கண்டுகொள்ளப்பட்டுள்ளது. 4-11-68 ல் பேச்சோசையும் பாட்டோசையும் என்ற தலைப்பில் எழுதிய முருகையன், “பேசும் குரலுக்கேற்ற சுதந்திரமான தாள லயத்துடன் ஒழுங்கு கெடாமல் இயங்கிச் செல்வதே” பேச்சோசை இயற்பா என வரையரை செய்தார். 1-3-70ல் பேச்சு மொழியும் கவிதையும் என்ற தலைப்பில் எழுதிய நுஃமான், பேச்சோசைப் பண்பு பெற்ற சில இலங்கைக் கவிதைகளை எடுத்துக் காட்டி பின்வருமாறு எழுதுகிறார்: “(இக்கவிதைகள்) ஒரு செய்யுளுக்குரிய எதுகை மோனை, சீர்தளைக் கட்டுப்பாடுகளை இழக்காமலேயே பேச்சோசையின் சகல பண்புகளையும் கொண்டுள்ளன. வசனத்தைப் போல் நிறுத்தக் குறிகளைப் பெற்று, சிறு தொடர் அமைப்புக்களைக் கொண்டு, செய்யுள் இசையின் ஆதிக்கத்தை விட்டு நீங்கி உள்ளதை நாம் இங்கு காண்கிறோம். மரபு hPதியான எல்லாச் செய்யுள் உருவங்களிலும், குறிப்பாக வெண்பா, கட்டளைக் கலிப்பா, கட்டளைக்கலித்துறை, கலிவிருத்தம் போன்ற வரையறுப்புக்கள் மிகுந்த வடிவங்களிலும், இன்றைய எமது நவீன கவிஞர்கள் இந்தப் பேச்சு மொழிப் பண்பைச் செயற்படுத்தி இருக்கின்றார்கள். ஈழத்து தமிழ் கவிதை இலக்கியத்துடன் தொடர்கு கொண்டவர்களுக்கு அது தெரியும்.”
ஆகவே இரு நாட்டுக் கவிதைப் போக்குகளையும் நாம் ஈராயும் போது, தமிழ் நாட்டில் செய்யுள் உடைத்து வசன கவிதை தோன்றியுள்ளதையும், இலங்iகிலும் செய்யுளில் உடைவு நிகழாமல், அது பேச்சோசை என்னும் ஒரு புதிய கட்டடத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளதையும் அவதானிக்கிறோம். இலங்கையில் வசன கவிதை தோன்ற வில்லை. அதாவது தமிழ் நாட்டில் செய்யுள் உடைந்து, புதிய பொருளை உள்ளடக்க முடியாத ஒரு வக்கற்ற பழம் பாத்திரமாக இற்றுப் போக, இலங்கையில், புதிய சூழ்நிலைகளையும் புதிய பொருளையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தொனிக்கு அது மாற்றப் பட்டுள்ளது.
4
இவ்வாறு, தமிழ் நாட்டின் கவிதைப் போக்கிற்கு முற்றிலும் மாறுபட்டு, இலங்கையில் சுயாதீனமான ஒரு கவிதைப் போக்கு வளர்ந்துள்ளது. என்றால் அதற்கு இலங்கைக் கவிஞரே பொருப்பாளியாவார் என்பதும், இந்த மாற்றம் ஒரு கவிஞருக்குள்ளேயே அடங்குகிக் கிடக்க முடியா தெனினும், அதன் முதற்காரணமாக ஒரு கவிஞரே அமைந்திருப்பார் என்பதும் வெளிப்படை. உண்மையில், இலங்கைக் கவிதையின் பேச்சோசைப் பண்பை இனங்கண்டு எழுதிய விமசகர்களின் கட்டுரைகளில், பேச்சோசைப் பண்புடையன எனக் கொடுக்கப்பட்ட பல எடுத்துக்காட்டுக்களிலும் பெரும்பாலாலானவை மஹாகவியினுடையவை என்பது வெறும் சந்தர்ப்ப வசமல்ல. இது வரை பிரசுரமாகி யுள்ள தமிழ்க் கவிதைப் பரப்பில், பேச்சோசைப் பண்பைச் சரியாக நிதானித்துக் கொண்டு பார்க்கும் போது, பேச்சோசைப் பண்பு பெற்ற கவிதைகளின் தரப் பெறுமானத்திலும் தொகைப் பெறுமானத்திலும், மஹாகவியே முதன்மை பெறுகிறார் என்பதுடன், காலத்தால் முந்தியவையும் அவருடையதெ என்பதை அவதானிக்கலாம்.
மஹாகவியின் கவிதைகள் இப்போசைத் தன்மை பெறக் காரணம் என்ன?
நெடுங்காலமாக, சங்க காலத்திற்கும் சங்கம் மருவிய பதினெண் கீழ்க் கணக்கு நூல்களின் காலத்திற்கும் பிறகு வந்த ஏறத்தாழ எண்ணுhறு ஆண்டுகளாக தமிழ்க் கவிதைசந்தத்தையும் ஓசை மிகப்பையுமே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறது. கவிதையின் மொழி ஊடகமான செய்யுளின் இசைப்பாடலின் மொழி ஊடகமாகவும் இருந்ததால், இசைப்பாடலின் செவிப் புலக் கலையாக்கம் கவிதையின் கலையாக்க முறையாகவும் ஆனதே இதற்குக் காரணம் எனலாம்.
ஆனால் சங்க காலத்துக்குக் கவிதைகளில் சந்தமும் ஓசை மிகைப்பும் கலைப் பணியாகக் காணப்படவில்லை. முதற் பொருள், கருப் பொருள் என்னும் பருமையான, உருப்படியான காட்சிப் பொருள்களின் மூலம் உரிப் பொருளை உணர்த்தும் கட்புலக் கலையாக்கம், அந் நாளில் ஒரு நெறியாகவே வளர்க்கப்பட்டது இதற்குக் காரணம் ஆகும்.
ஆகவே செவிப்புலக் கலையாக்கம், கட்புலக் கலையாக்கம் என இரு வகையான கலையாக்கங்களை நாம் பிரித்தறியலாம். இசை பொருந்திய செவிப்புலக் கiலாக்கம், உணர்வை உணர்ச்சி நிலையில் பரிவர்த்தனை செய்ய முற்படுகிறது. கவிதைக்கு உணர்ச்சி இன்றியமையாதது என்ற ஒரு கோட்பாடு இதன் அடிப்படையாகவே வந்தது. ஆனால் கவிதைக்கு உணர்ச்சி இன்றியமையாத ஒன்றல்ல. சங்க காலத்துக் கவிதைகளை வாசித்து ஒருவன் உணர்ச்சி வசப்பட இயலாது. ஆனால் அவன் ஆழ்ந்த உணர்வினுள் ஆழ முடியும். கட்புலப் படிமங்களினூடாக அங்கு உணர்வு பரிவரித்தனை செய்யப்படுவதே இதற்குக் காரணமாகும்.
அது எப்படி எனினும், சந்தமும் ஓசை மிகைப்பும் உள்ள, இசை தழுவிய செவிப்புலக் கலையாக்கம் உணர்வை, உணர்ச்சி என்னும் பாய்நிலை ஊடகத்தில் பரிவர்த்தனை செய்யக் கூடியது என்பதே இங்கு மனம் கொள்ள வேண்டியது. சமுக இயக்கங்கள் வலுப் பெறும் காலம் உணர்ச்சிப் பெருக்குள்ள கால மாதலால், செவிப் புலக் கலையாக்க முள்ள கவிதைகளே அக்காலத்தில் தோன்றும். உதாரணமாக பக்தி இயக்க காலம். தமிழ் நாட்டின் சுதந்திரப் போராட்ட காலத்திலும், திராவிட இயக்கப் பொற்காலக் கனவு நிலைக் காலத்திலும், திராவிட இயக்கப் பொற்காலக் கனவு நிலைக் காலத்திலும் இதுவே நிலைமை. அந்த இயக்கக் காலங்களில் பாரதியும், பாரதிதாசனும், எழுதிய தேசிய - திராவிட இயக்க இசைப்பாடல்களினதும், சிந்துக்களினதும் செல்வாக்குத் தவிர்க்க முடியாதவாறு செய்யுளின் ஓசை நயத்தையே கவிதையின் கலைப் பாணியாக மாற்றிவிட்டது.ஸ
ஆனால் இலங்கையின் புறநிலைக் காரணிகள் சற்று வித்தியாசமாய் இருந்தன. இங்கு சுதந்திரப் போராட்டம் என ஒன்று நடக்க வில்லை என்பதோடு, ஆதி வரலாறு பற்றிய பொற்காலக் கனவும் சற்றுத் தூரத்திலேயே இருந்தது. தமிழரசுக் கட்சியின் இயக்கத்திற்கான ஓசைப் பாங்கான செய்யுட்கள் எழுதப்பட்டன வென்றாலும், அதன் மிச்ச சொச்சங்களை இப்பொழுதும் காணலாமென்றாலும், அது நீடிக்கவில்லை. தவிர மஹாகவி என்ன காரணத்தினாலோ தேசிய மறுமலர்ச்சி உணர்வு நிறையக் கொண்டிருந்தும், அத்தகைய இயக்கப் பாடல்களில் அவ்வளவாக ஈடுபடவு மில்லை. இலங்கையின் சமுக பொருளாதார - அரசியல் சூழலில் தமிழரசுக் கட்சியின் அந்த இயக்கமும் அணுகல் முறையும் பயன் அற்றது என்ற கருத்து அந் நாட்களிலிருந்தே பலரிடமிருந்து வந்தது ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். எப்படி யெனினும், 1985ம் ஆண்டு இனக்கலவரத்துக்குப் பிறகும், 1960ம் ஆண்டுச் சத்தியக் கிரகத்துக்குப் பிறகும் அத்தகைய இயக்கப் பாடல்கள் கௌரவக் குறைவாகவே காணப்பட்டன.
இந்த நிலையில், மஹாகவியின் கவிதை தவிர்க்க முடியாதவாறு இயக்கப்போக்குகளிலிருந்து அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் நோக்கித் திரும்பியது. அன்றாட நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் நோக்கி மஹாகவியின் கவிதை திரும்பியதே முக்கியமான ஒரு திருப்பு முனையாகும். ஏனெனில், மஹாகவிபோல், தமிழ் நாட்டில் பிச்சமூர்த்தியோ அல்லது வேறு எவரோ அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவம் என்னும் பௌதீக அடிப்படையை அல்லது யதார்த்த அடிப்படையை நோக்கித் திரும்பி யிருந்தால் இன்று தமிழ் நாட்டின் கவிதைச் சரித்திரம் வேறாக இருந்திருக்கும். ஆனால் அந்தத் திருப்பம் ஏற்பட முடியாத தனிமையும் விரக்தியுமுள்ள ஒரு வர்க்க நிலைப்பாட்டை பிச்சமூர்த்தி முதலியோர் கொண்டிருந்ததால், அவர்கள் அன்றாட நிகழ்ச்சி அனுபவங்களின் அடியான யதார்த்தத்தில் நிலை கொள்ளாது, அதிலிருந்து பெரும் கருத்துக்களையே முதன்மையாக வைத்து கருத்துச் சூக்குமத்தையே கலையாக்கமாகவும் கொண்டார்கள். அவர்களைப் போலி என்றும், டூப் என்றும், முருகையன் முதலிகோர் கேலி செய்தாலும், அவர்களுடைய போக்கிற்குரிய பௌதீக அடிப்படையை அல்லது தன்மைப்பாட்டை நாம் தெத்திக் கடந்து விட முடியாது. கருத்து நிலையை முதன்மையாக வைத்து, செவிப்புலக் கலையாக்கத்தை மறுத்து, கட்புலக் கலையாக்கத்தின் இயல்பின்பாற் படமால், கருத்து முதல் நிலைக்கு உட்படாமல், திடமான மெய்மையான, யதார்த்தமான அன்றாட நிகழ்ச்சி அனுபவங்களில் கால் குத்தி நின்றார். இதுவே, தமிழ் கவிதைப் பரப்பில் வேறெங்கும் காணமுடியாத அவருடைய தன்மைப்பாடு ஆகும்.
மஹாகவி அன்றாட நிகழ்ச்சி அனுபவங்களுக்கு உணர்வு முனைப்பட்டு, அவைகளை அவருடைய உள்ளம் ஆழமாகத் துருவி நோக்குவதை, வீடும் வெளியும், கண்களும் கால்களும், சீமாட்டி, செத்துப் பிறந்த சிசு, விட்ட. பல்லி, மற்றவர்க்காய்ப்பட்ட துயர், நீருழவன் முதலிய மிகப் பல கவிதைகளில் பரக்கக் காணலாம். இவைகளில் அந்நிகழ்ச்சி அனுபவத்தின் இயக்க பூர்வமான ஆக்கத்தை முன் எப்போhதும் இல்லாத முறையில் சிரு~;டித் துள்ளார்.
இந்த அன்றாட நிகழ்ச்சி அனுபவம் என்பது கூறிய அறி திறனும் கண்டுபிடிப் பாற்றலும் பெற்றது. அன்றாட நிகழ்ச்சி என்பது அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் உறவையும், கவிதையில் சரியாக வார்க்கும் கோது, அவர்களின் பொதுவான மனப்போக்கும் இயல்புகளும், அவர்கள் அமைந்துள்ள சமயத்தில் நடைபெறுகின்ற மாற்றங்களும் புலப்படாமல் போக இயலாது.
இவ்வாறு தனித்தனி நிகழ்ச்சிகளிலிருந்து, தம்மைச் சுற்றி வாழும் மனிதர்களின் பிரச்சினைகளையும், மனோபாவங்களையும், இயல்புகளையும், அந்தச் சமுகத்தில் நிகழும் மாறுதல்களையும், அவற்றின் முழு மொத்தமான சமுக சட்டத்தையும் அவதமானிக்கும் போது, அந்த முழு மொத்தமான சமுக மனித குல - ஓட்டத்தை உள்ளடக்கிய பெரும் படைப்புக்கள் ஒரு இலக்கிய காரனிடமிருந்து தோன்றுதல் இயல்பே. தனிக் கவிதைகளிலிருந்து காவியத்தக்கும் நாடகங்களுக்கும் மஹாகவியின் பிரவேசம் இப்படித்தான் ஆரம்பமாகிறது. சடங்கு. கண்மணியாள் கதை, ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் போன்ற அவரது காவியங்களையும், கோடை, முற்றிற்று, புதிய தொரு வீடு போன்ற அவரது கவிதை நாடகங்களையும் பார்க்கும் போது தன்னைச் சுற்றியுள்ள கிராமியச் சமுகத்தையும், தனி மனிதர்களையும், அவரவரின் இயல்பும், முரண்பாடும், மாறுதலும், தேடுதலும் புலப்படும்படி அவர் எவ்வாறு சிரு~;டித்துள்ளார் என்பது விளங்கும்.
சடங்கு என்ற காவியத்தில் ஒரு யாழ்ப்பாணத்து விசாயக் குடும்பத்தின் வகை மாதிரியான சில பாத்திரங்களை வார்ப்பதோடு, முந்திய நிலமான்யச் சமுக அமைப்பின் மிச்ச சொச்சங்களை மீறமுடியாத பழைய தலைமுறையினர் போலியான சமுக ஆசாரங்களிலும் சடங்குகளிலும் எவ்வாறு கட்டுண்டு கிடக்கின்றனர் என்பதையும், புதிய தலைமுறையினர் அந்தச் சடங்குகளை உடைத்தெறிய எவ்வாறு முனைகின்றனர் என்பதையும், அவ்வாறு உடைத்தெறிதலின் உடனிகழ்ச்சியாக குடிப்பெயர்வு அல்லது பிரதேச மாற்றம் நிகழ்வதையும் சித்தரிக்கிறது.
கண்மணியால் காதை சில ஆண்டுகளுக்கு முன்னர் எமது கிராமங்களில் இளைஞர்கள் மத்தியில் உண்டான சுதேசிய விழிப்பினதும், தமது கிராமத்து ஸ்தாபனங்களையும் மக்களையும் முன்னேற்றுவதற்கு அவர்கள் எடுத்த சிறு முயற்சிகளினதும் சீர்திருத்த நடவடிக்கைகளினதும் பின்னணியில் ஒரு இளைஞனை வளர்த்தெடுத்து, அவன் மூலமா யாழ்ப்பாணத்தில் இந் நாளையப் ;புரட்சி’ வெடிக்கக் காரணமான சாதிப் பிரச்சினையில் வெடிகுண்டு வீசி அந்தப் பிரச்சினை காதல் மூலமாகவோ கலப்புத் திருமணத்தின் மூலமாகவோ, உயர் சாதிப் பையன்களின் தயாள சிந்தனையாலோ தீர்க்கப்பட முடியாது என்பதைக் காட்டுகிறது. இரத்தக் களரியில் முடிகின்ற இந்தக் காவியம், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடும் ஒரு வஞ்சினத்தை வாசகரிடையே தோற்று விப்பதுடன், “ஒரு சேதி: கீழ்ப்புற வானில் ஞாயிறு நீதி காண எழுந்தது” என்ற அழுத்தமான நம்பிக்கைக் குரலுடன் முடிகிறது. தன்னிலும் தன் நாட்டவர் திறமையிலும் பொதுவாக மக்களினத்திலும், வாழ்க்கையின் ஓயாத, முன் உந்தும் முனைவிலும் மஹாகவிக்கு உள்ள நம்பிக்கை தடித்த வைரமுடையது. வெறும் போட்பாட்டளவில் இல்லாது, அவருடைய வாழ்க்கையோடு ஒன்றிய இதனை அவருடைய படைப்புக்களி லிருந்து பலர் கண்டு எதிர்காலத்தில் பேசுவார்கள்.
ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம், அற்புதமான சரு~;டித் திறனுடன், தமிழ்ச்செய்யுள் வரலாற்றில் ஒரு சாதனை என்று சொல்லத் தக்க எளிமையும் அழகும் இயற்பண்பும் கொண்ட கட்டளைக் கலிப்பாக்கலால் ஆகி, பிறப்புத் தொடக்கம் இறப்பு வரை ஒரு மத்திய தரவர்க்கத்து மனிதன் ஊசலாட்ட நிலையைச் சித்திரித்து, உயிர் ஒரு நெடுந்தொடர்ப் பரிமாணமம் என்பதை உணர்த்து கின்றது. இளமை, வாலிபம், ஆண் - பெண் உறவு, முதுமை முதலியவற்றின் வாழ்வியல் இயக்கத்தை ஒரு முழுமையாகக் காணுகினற முயற்சியே அது. வாழ்வை, அதன் சகல புறநிலை முரண்பாடுகளும் உள்ளடங்கிப் போக, அதனை ஓர் உயிர்ப்பு இயக்கமாகக் காணும் மஹாகவியின் முயற்சியின் மிக உயர்ந்த பேறு என்றும் அதனைக் குறிப்பிடலாம்.
கோடை, இலங்கையில் பிரிட்டி~hரின் ஆட்சியின் போது, யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்றிலுள்ள ஒரு நாயனக்காரரின் ஒரு நாள் வீட்டு நிகழ்வைக் கொண்டது. ஒரு காலனித்துவ நாட்டில் ஏகாதிபத்திய hதிகளின் தேவைக்காகப் புகுத்த்படும் கல்வி முறையும், அதற்கமைந்த தொழில் முறையும், ஒரு சிறிய கிராமத்து மக்களின் மனோபாவத்தைக் கூட எவ்வளவு பாதிக்கும் என்பதையும், அதனால் மதிப்பீடுகள் எவ்ளவு தலைமாறிப் போய் இருந்தன என்பதையும், அந் நாளில் ஊர்ச் சனங்களின் மத்தியில் அந்நிய ஆட்சிக் கெதிராக எவ்விதம் புகைச்சலும் குமைச்சலும் இருந்தன என்பதையும் தொட்டுச் செல்லும் இந் நாடகத்தில் ஒரு கிராமத்தின் குறுக்கு வெட்டு முகத்தையே சந்திப்பது தமிழ்க் கவிதை நாடகத்தில் நேர்ந்த முதலாவது சந்திப்பாகும். முற்றிற்று, புதியதொரு வீடு, போன்ற நாடகங்களிலும் இது போல் சொல்லலாம். மஹாகவியின் யதார்த்தத் தன்மைப் பாட்டை இவைகள் மிக ஆழமாகக் கீறித் துலக்குகின்றன.
இவ்வாறு அன்றாட நிகழ்ச்சிகளையும், அன்றாட நிகழ்ச்சிகளில் சந்திக்கும் மனிதர்களையும், அவர்கள் நினைப்பவற்றையும் நிகழ்த்துவனவற்றையும் கவிதையாய் சித்திரிப்பதாய் இருந்தால், இத்தகைய சித்திரிப்பின் கலையாக்கம் நிச்சயமாக செவிப் புலனை அடிப்படையாகக் கொண்ட ஒலிமயப் பாணியில் அமைய முடியாது. இது கேட்டுக் கிளர்ந் தெழச் செய்கின்ற வி~யமோ அல்லது தாளம் போட்டு தலையாட்டச் செய்கின்ற வி~யமோ அல்ல. இது நிகழ்ச்சிகளையும், நிகழ்ச்சிகளின் காரணங்களாக இயங்கும் மனிதர்களையும் வாசகள் கண்முன் கொண்டுவர வேண்டிய வி~யம். இந்த நிகழ்வையும் இயக்கத்தையும் வாசகன் கண் முன் கொண்டு வரவேண்டுமானால், இவைகளின் தொடர்புக்கும் துலக்கத்துக்கும் இன்றியமையாத பிண்ணனியையும் களத்தையும் இயங்கு முறையில் கட்புலப் படிமங்களின் மூலம் சிரு~;டிக்க வேண்டியது அவசியம். இந்த அவசியத்தை நாம் இன்று உணர்வதற்கும் காரணமாகி, ஒரு படைப்பாளியின் யூகத்தோடும் செய்திறனோடும் ஓர்ந்து, அன்றாடம் சந்திக்கும் வகை மாதிரி மனிதர்களைக் கொண்டு, காலம் களம் ஆகிய வற்றோடு கூடிய ஓர் இயங்கு றைக் கலையாக்கத்தை மஹாகவி உருவாக்கினார். மஹாகவி உருவாக்கிய இந்தக் கலையாக்கத்திற்கும், சங்க காலத்து அகத்துறைப் பாடல்களின் கலையாக்கத்திற்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் சங்காலத்துப் பாடல்களில் வருகின்ற பாத்திரங்கள் தனித்தன்மையோ, வகைமாதிரித் தன்மையோ உள்ளனவாக இல்லாமல், ஒரே அச்சு சார்ப்பில் அமைந்த குறி உருவமாக அமைந்துள்ளன. இது இரண்டு காலத்துக்கு முள்ள சமூக வளர்ச்சியின் வேறுபாடு. ஆகவே மஹாகவி தமிழ்க் கவிதைக்கு உருவாக்கிய கலையாக்கம்தனித்தன்மை வாய்ந்தது. இதையே நாம் யதார்த்த நெறி என்கிறோம்.
இந்த யதார்த்த நெறிக் கலையாக்கத்திற்கு கட்புலப் படிமங்களை இயங்கு முறையில் அமைக்கும் போது, வௌ;வேறான அளவீடுகளும், குறுகிய வாக்கிய அமைப்புக்களும் இடம் பெறும். இதனால் தாளக் கட்டுக் குறைந்து கட்டின்மை மிகும். தாளத்தின் கட்டின்மை மிகும். தாளத்தின் கட்டின்மை மிகும் போது, பாட்டோசை குன்றிப் பேச்சோசையே மிகும். அவசியமின்றி ஓசைக்காகச் சேர்த்துக் கொள்ளப்படும் அடைமொழிகள், பண்புச் சொற்கள் ஆகியன தவிர்க்கப் படுவதுடன், ஏகார ஈறுகள் புறக்கணிக்கப்படும். அடிகளின் வரி உருவமும் பொருட் புலப்பாட்டுக்குத் தக்கபடி மாற்றியமைக்கப்படும். ஆகவே மஹாகவியின் கவிதைகளில் காணப்படும் பேச்சோசைப் பண்பு அவருடைய யதார்த்த நெறிக் கலையாக்கத்தினால் விளைந்ததாகும்.
5
இது வரை அவதானிக்கப்பட்ட வி~யங்களிலிருந்து,
(அ) மஹாகவி தேசிய மறுமலர்ச்சிக் காலத்து மத்தியதர வர்க்க முற்போக்குச் சிந்தனையைப் பிரதிபலித்தவர் என்பதும்,
(ஆ) அன்றாட நிகழ்ச்சிகளினதும் அனுபவங்களினதும் அடிப்படையில் யதார்த்த பூர்வமாய், அல்லது மெய்மை சார்ந்து செய்யப்பட்ட படைப்புக்கள் மூலம் அந்த சிந்தனையை புலப்படுத்தியவர் என்பதும்,
(இ) அந்த யதார்த்த பூர்வமான படைப்புக்குத் தேவையான முறையில் செய்யுள் நடையை ஒரு புதிய பட்டத்திற்கு வளர்த்தெடுத்தவர் என்றும்,
அறியலாம்.
ஆனால் அவர் வளர்த் தெடுத்த இந்தக் கவிதைப் பண்புகள் அவருடனேயோ அல்லது அவர் பிரதிபலித்த மத்திய தரவ ர்க்க முற்போக்குச் சிந்தனைகளுடனோ மட்டம் முடிந்து விடப் போகிறவை அல்ல என்பது தான் நாம் இறுதியாகத் தெரிந்து nhள்ள வேண்டியது. இன்று அவருடைய தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களிடமும் அதை அடுத்த தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களிடமும் காணப்படுகிறது என்பது மட்டுமல்ல, இன்றைய இளம் சந்ததியினரிடையே, இன்றைக்யக் காலகட்டத்தில் உலகெங்கணும் மிகவும் கூர்மையடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தைச் சித்திரிக்கவும் திசைப்படுத்தவும் அவர் வளர்த்த கவிதைப் பண்புகள் சக்தி மிக்க ஆயதமாகப் பாவிக்கப் படுகின்றன. மஹாகவியின் மூலம் கிடைத்த இந்த யதார்த்தப் பண்புகள் சமுதாய மாற்றத்திற்கான கீழ்த்தட்டு மக்களின் போராட்ட உணர்வைச் சித்திரிக்கப் பயன்படுத்தப்படும் பொழுது, இந்தப் போராட்ட உணர்வுகள், பாரதி, பரதிதாசன் பாணியில் வெறும் பிரச்சாரமாகவே இசைக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்றைய இளம் சந்ததியினர் போராட்ட உணர்வு மிக்க தமது படைப்புக்களை இந்த யதார்த்த நெறியில் சிரு~;டிக்கப் புகுவதால், ஆழ்ந்த பாதிப்புள்ள போராட்டப் படைப்புக்களை ஆக்கும் திறமையைப் பெற்றுள்ளார்கள். அந்த அளவுக்கு மஹாகவியின் யதார்த்தப் பண்பை அவர்கள் மேலும் வளர்த்து இணக்கமுறச் செய்ய உள்ளார்கள்.
ஆகவேதான் மஹாகவி ஒரு புதிய சந்ததியை விருத்தியாக்கும் ஓர் கால கட்டம் ஆகிறார். நாம் இன்னமும் பாரதி யுகத்தில் இருக்கிறோம் என்று சொல்வது தவறு. பாரதி பரம்பரையின் இறுதித் தளிர்கள் பழுத்துக் கொண்டிருக்கின்றன. பாரதி ஒரு யுகசந்தி என்பது மெய்யே. ஆனால் அந்த யுகசந்தி பிரிந்து விட்டது அதன் ஒரு கிளை பிச்சமூர்த்தி என்றால், அதன் மறுகிளை மஹாகவியே. பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்ச மூர்த்தி என்றால், அத் தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி எனலாம்.
சண்முகம் சிவலிங்கம்
பாண்டிருப்பு,
கல்முனை,
20-9-70
++++++++++++++++++
கோடையின்
நெறியாட்சி
“நாடோடிகள்” இலக்கியக் குழுவின் மாதாந்தக் கூட்டமொன்றிலே
“தரமான நாடகங்கள் தமிழிலே உள்ளனவா”? என்ற
ஆய்வை நாம் மேற்கொண்ட வேளை, நண்பர்
வி. சிங்கார வேலன் “மஹாகவியின் கோடை” யை
எமக்கு அறிமுகப் படுத்தினார்.
‘கோடை’ யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றைக் களமாக் கொண்டது.
1937 ஆம் ஆண்டிலே நம் நாட்டைப் பிற நாட்டார் ஆண்ட
வேளையிலே - சாதரண மக்களிடையே வெளியாட்சி
பற்றி நிலவிய கருத்துக்களும், மக்களை எதிர்
நோக்கிய பிரச்சினைகளும், நம் நாட்டுக் கலைகள்
புறக்கனிக்கப்பட்ட விதமும் கோடையிலே அலசப்பட்டுள.
ஆட்சி நம் கைகளுக்கு மாறிய பின்னர் எத்தனையே
குறைகள் நிவர்த்தியாகிவிடும். எனக் கிராமங்களில்
வாழும் பல்வேறு திறத்தோர் ஏங்கினர்: 1937 இலே
வாழ்ந்த மக்கள் மாத்திரமன்றி அதற்கு முந்திய
பரம்பரைகளும் இதே பிரச்சினைகளை எதிர்
நோக்கின் இதே இலட்சியங்களைக் கனவுகளாகக்
கண்டு ஏங்கி நின்றன் இவை யனைத்தும்
நாடோடிகளின் கவனத்தை ஈர்த்தன. ஆவ்வாறே அன்றைப்
பிரச்சினைகள் வேறுபட்ட வடிவங்களிலும் வேகங்களிலும்
இன்றைய சமுதாயத்தையும் பீடித்திருப்பதைக் கண்ணுற்றோம்.
அக குறைகள் நிவர்த்தியாக்கப் பட வேண்டும் என்ற
தாகம் இன்றும் நிலவுவதையும் நாம் உணர்ந்து கொண்டோம்.
எனவே “கோடை”யை மேடையேற்றத் துணிந்தோம்.
“கோடை” கவிதையால் நெய்யப்பட்டது. குவிதை நாடகம்
எதையும் நாம் மேடையிலே இதற்கு முன்னர்
பார்த்ததில்லை. எனவே ‘கோடை’க்கு வடிவம் கொடுத்து
மேடையிலே நாடக மாக்குதற்கு இதற்கு முந்தி
மேடையேற்றப்பட்ட நாடகம் எனவே தன்னம்பிக்கையையும்
துணிவையும் மூலதனமாகக் கொண்டே நாடோடிகள்
இந் நாடகத்தைத் தயாரிக்கத் துணிந்தார்கள்.
“மஹாகவியின் கோடை” வார்த்தைச் சோடனை குறைந்தது;
எளிய சொற்களா லானது: பிரதேச வழக்குகள் பொதிந்தது:
கருத்துக்கள் நிறைந்தது. சொற் சிக்கனம் மிக்கதாயும்
கருத்து மலிந்ததாயும் இருந்த தாதலின், அழுத்திக்
கூறவேண்டியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.
கூறப்படும் அனைத்தையும் அழுத்திக் கூறின், அழுத்தத்தின்
கருத்துப் பயனற்றதாகிவிடும். எனவே முக்கியமானவற்றைத்
தேர்ந்தெடுத்து அவற்றை வலியுறுத்துவதன் மூலம், கருத்துக்களை
வெளிக் கொணர்ந்தோம். இவிவழி, கவிதை நாடகம்
சிறக்கு மென்பது உறுதி.
சொற்களின் இறுதியை அமுக்கி வடுவது நாடக நடிகரிடையே
பொதுவாகக் காணப்படும் குறைபாடாகும். வார்த்தைகளின்
முடிவு ‘விழுங்கப்’படின் - கவிதையே ஊறுபடும்; நாடகமும்
தரங்குன்றும். எனவே வார்த்தைகள் முழுமையாக உச்சரிக்கப்
படுவது நாடகத்திற்கு அவசியமானது; கவிதை நாடகத்திற்கு
மேலும் இன்றி யமையாதது எனவே பயிற்சிக்குப் பெரிதும்
உகந்ததாகவும் இக் கவிதை நாடகம் காணப்பட்டது.
எமது நடிகர்களிடையே கவிதையை கவியரங்குகளிற் படித்த
அனுபவமுடையவர்கள் ஓரிருவரே. ஏனை நடிகர்கள்
கவிதையை வாய்விட்டுப் படித்து அனுபவம்
பெற்றிருக்காது - வசனங்களைச் சாதாரண வசணங்களாகப்
பேசுதற்கு வாய்ப்பாக அமைந்தது என்றே கூறவேண்டும்.
கவிதையின் தாள ஓசைக்காக நாம் கவலைப் பட
வேண்டிய அவசிய மிருக்கவில்லை.
அவ்வோசையில் கவனஞ் செலுத்துவதும்
வேண்டாத தொன்று. வார்த்தைகள் முழுமையாக
உச்சரிக்கப் படின் கவிதை ஓசை வெளியாக
ஒலிக்காத் தாளமாக விழுந்து கொண்டேயிருக்கும்.
நாடகங்களை மேடையேற்ற முயற்சிக்கும் மன்றங்கள், தரமிக்க
கவிதை நாடகங்களை மேடையேற்றினால், வார்த்தைகளை
முழுமையாக உச்சரிப்பதற்கும் பொருத்தமான வற்றைத்
தேர்ந்தெடுத்து அழுத்தங் கொடுத்தற்கும் பயிற்சி பெறுவர்.
மேலை நாடுகளிலும், புதிதாகத் தோன்றும் நாடகக்
குழுக்கள் பயிற்சி பெறும் நோக்கோடு கவிதை
நாடகங்களைப் பெரிதும் உவந்தேற்று மேடையேற்றுகின்றன.
மஹாகவி ஈழத்ததிலே தனக்கெனத் தனியான இடம் பெற்ற
கவிஞர். கோடை பெற்ற வெற்றி - ஈழத்து நாடக
ஆசிரியர்களுட் தலை சிறந்தோருள் ஒருவராகவும் அவரை
வெளிக் கொணர்கிறது. “முற்றிற்று” , “கோலம்”, “புதிய தொரு வீடு”
ஆகியன அவர் எழுதிய நாடகங்களுட் குறிப்பிடத் தக்கன.
அவையும் விரைவிலே மேடை யேறுமென எதிர் பார்க்கலாம்.
நூல் வடிவிலே யுள்ள தமிழ் நாடகங்கள் மிகக் குறைவாகவே
காணப்படுகின்றன. பல்வேறு கவிஞர்களின் முத்துக்களைத்
தொடுத்துக் ‘கவிஞன்’ வடிவிலே வெளியிட்டு வரும் நுஃமான்
கோடையைப் பிரசுரிப்பதன் மூலம் நாடக இலக்கியத்திற்கும்
நல்லதொரு பணி புரிகிறார்.
அ.தாசீசியஸ்
தாளையடி,
1-6-70.
--------------------------------------------------------------------------
விவசாயம்தான் நாட்டினுக் குயிர்
விவசாயம் தான் எங்கள் வேலையும் !
விவசாயிகளுக்கு அவசியமான
விவசாய இரசாயனங்கள், உபகரணங்கள்,
பசளைகள், விதைகள், கோழி உணவுகள்,
கால்நடை மருந்துகள் முதலிய
என்றும் கிடைப்பதோ எங்களிடNமு!
பாம் ஹவுஸ்
34, பசார் வீதி, மட்டக்களப்பு.
தொலைபேசி : 332.
கிளை : திருமலை வீதி, ஓட்டமாவடி.
டிஸ்ஸ_, நைலக்ஸ், நைலோன் டெக்ரோன்,
ரேயோன் நூல் ரூ கைத்தறிச் சேலைகள்,
ஜக்கட் துணிகள்,
டெரிலின், நைலோன், டேட்ரோன், நூல் ரூ கைத்தறி சேட்கள், லங்கா சலு சல ஜவுளிகள்
முதலியன பெற்றுக் கொள்ளலாம்.
தொலைபேசி : 365
முபாரக்ஸ்
மட்டுநகர்
எமது வாழ்த்துக்கள்
எஸ். எஸ். எம். வொலுக்கார் அன் பிரதேஸ்
தொலைபேசி :255
9, கடைத்தெரு,
மட்டக்களப்பு.
தொலைபேசி: 264. தந்தி: “ஹாஐpயார்”
வனிதையாரின்
வனப்புக்கு மெருகூட்டும்
உயர் ரக ஆடைகளுக்கும்
ஆடவர்கள், குழந்தைகள் ஆகியோரின்
முதல் தர
“ஆயந்த ஆடைகளுக்கும்”
அதி சிறந்த ஸ்தாபனம்
ஹாஐp: எம். பீ. எம். முகம்மது காசிம்
அன் பிரதர்ஸ்
த. பெ. இல : 1, 32, பசார் வீதி,
மட்டுநகர்.
நமது நகைகள் நவீனமானவை!
இ. கனகரத்தினம் அன் கோ.
நகை அடகு பிடிப்போரும்
நகை வியாபாரிகளும்.
பிரதான வீதி - செங்கலடி.
ஆயிரக் கணக்கான
எம் வாடிக்கையாளர்
அனைவருக்கும்
அகம் கனிந்த நன்றிகள்.
விஜயலகூ~மி மில்ஸ் லிமிட்டெட்,
செங்கலடி,
786
கல்கி பீடி
காரம் மணம் குணம் நிறைந்தது
பாவித்து இன்பம் அடையுங்கள்
அத்துடன்
எமது புதிய தயாரிப்பு
எஸ்.எஸ். பீடி
ஒரு முறை பாவித்துப் பாருங்கள்
கிடைக்குமிடம்:
எஸ். சின்னத்துரை அன் பிரதர்ஸ்
79, மெஸெஞ்சர் ஸ்ட்றீட்,
கொழும்பு.
டெலிபோன்: 35821 ரூ 32346
சிவநடராசா ஸ்டோர்ஸ்
உரிமையாளர்: த.சி. தம்பையா அன் கோ.
இல. 12, பசார் வீதி, மட்டக்களப்பு.
தொலைபெசி : 319
கிளை : இல. 26, 26 டீ, 105, 135, பசார் வீதி, ஏறாவூர்.
தொலைபேசி : 892.
• யாழ்ப்பாணம் திறம் சுருட்டு, புகையிலை
• ஆர்.வீ. ஐp, கல்கி, கமலா, யானை, த.பி.சொ. பீடிவகைகள்
• சுத்தமான நல்லெண்ணெய்
• சாய்ப்புச் சாமான்கள்
• பிஸ்கட் வகைகள்
• சுவர்க் கடிகாரம், மேசைக்கடிகாரம், கைக்கடிகாரம்
• பௌன்டன் பேனாக்கள்
• கிளாஸ் தினிசுகள்
எங்களிடம் சகாயமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
விரைவில் வெளியாகிறது-
எம். ஏ. நுஃமானின்
நிலம் என்னும் நல்லாள்
முதலிய
சிறு கவித் தொகை
கவிஞன் வாசகர் சங்கம், கல்முனை 6.
--------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக