சுதந்திர மண்
சிறுகதைகள்
Back
சுதந்திர மண்
வீரகேசரி மூர்த்தி
சுதந்திர மண்
வீரகேசரி மூர்த்தி
++++++++++++++++++++
சுதந்திர மண்
(சிறுகதைகள்)
ஆசிரியர்:
வீரகேசரி மூர்த்தி
மணிமேகலைப் பிரசுரம்
++++++++++++++++++++
சமர்ப்பணம்
காரிருளில் கருவாக்கி கஷ்டமென்னும்
காரிருளைத் தன்நம்பிக்கை ஒளியினால்
கடுகியோட விரட்டி நம்மெழுவரையும்
கண்ணியவர் களாக்கிய புண்ணியவதி
கண்கண்ட கடவுளெம் இரத்தினம் - செல்லத்துரைக்கு
காணிக்கையாய் இம்மலர் சமர்ப்பணம்.
++++++++++++++++++++
நூல் தலைப்பு: சுதந்திர மண்
ஆசிரியர்: வீரகேசரி மூர்த்தி
மொழி: தமிழ்
பதிப்பு ஆண்டு: 2001
பதிப்பு விபரம் : முதல் பதிப்பு
++++++++++++++++++++
அணிந்துரை
ஈழத்தின் காவலூர் பல்வேறு துறைகளிலும் திறமைவாய்ந்த கலைஞர்களை ஈன்றதன் மூலம் “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோனெனக் கேட்டதாய்” எனப் பெருமை அடைகிறது இன்று. வானொலித்துறையில் பிரபல்யம் அடைந்த அமரர்கள் சோ.சிவபாதசுந்தரம், எஸ்.புண்ணியமூர்த்தி, எஸ்.பாலசுப்பிரமணியம், திரு.பொன் சுந்தரலிங்கம்,பத்திரிகைத்துறையில் புகழ்பெற்ற திரு.கந்தையா நித்தியானந்தன் (வீரகேசரி), திரு.எஸ். குகநாதன், திரு.எஸ். பாலச்சந்திரன் (ஐரோப்பிய ஈழநாடு), திரு. மூர்த்தி செல்லத்துரை ( இந்நூல் ஆசிரியர்), திரு. சிவனடியான் ஸ்ரீபதி (ஆசிரியர் பயணம்), யாழ்பாண ஈழநாடு பத்திரிகையில் பணிபுரிந்த திரு.க.காசிலிங்கம்,திரு.மகாலிங்கம், திரு.வே.இராசலிங்கம் (கனடா நம்நாடு), திரு.ரி.கே. பரமேஸ்வரன் (கனடா ஈழநாடு), பிரபல எழுத்தாளர்களான அமரர் முதலியார் குலசபாநாத ன்(புத்திப் பரீட்சை பாடநூல் ஆசிரியர்),காவலூர் ஜெகநாதன்,காவலூர் சிவபாலன், காவலூர் இராசதுரை, சரவணையூர் மணிசேகரன், திரு.என்.கே.மகாலிங்கம் (பூரணி சஞ்சிகை ஆசிரியர்), இந்து மகேஷ் (பூவரசு சஞ்சிகை ஆசிரியர்-ஜெர்மனி), திரு.இ. ஜீவகாருண்ணியன் (இனியவன்), திரு.சதாசிவம் சேவியர் (இந்தியத் திருத்தல நூலாசிரியர்), ஆகியோருட்பட மற்றும் பலர். கவிதைத் துறையில் காவலூர் கவிஞர் செல்வராசா, கவிஞர் தில்லைச்சிவன் (ஆசிரியர்) ஆகியோர் காவலூரின் சான்றோர்களாவர்.
இரண்டாம் எண்ணில் பிறந்தோர் கற்பனாவாதிகள், சிந்தனாவாதிகள் என்பது மூர்த்தியைப் பொறுத்தமட்டில் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை என்பதை அவரது பால்யகால நண்பனென்ற முறையில் நான் நன்கறிவேன். மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் திகதி பிறந்த இவர் ஒரு சிந்தனாவாதியாவார். கலகலப்பாகப் பேசுவதை விடுத்து சதா எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார். அதன் காரணமாக ஒரு சிறந்த எழுத்தாளராக, கவிஞராக, பத்திரிகையாளராகத் திகழ்கின்றார்.
வாலிபப்பராயத்தில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி எழுத்தாளராகத் திகழ்ந்த காவலூர் மூர்த்தி அந்த அனுபவங்களுடன் 1970 களில் ஈழத்தின் பிரபல தேசியப் பத்திரிகையான வீரகேசரியில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற தன் மூலம் பத்திரிகைத்துறையில் பாதம் பதித்தார். அங்கு பணிபுரிந்த காலத்தில் என்னையும் வீரகேசரியின் மாங்குளம் நிருபராக நியமிக்க உதவினார். எஸ்.ரி.மூர்த்தி என்ற பெயரில் நாடக, நாட்டிய விமர்சனங்கள், விஞ்ஞானக் கட்டுரைகள் (ஆங்கில மொழிபெயர்ப்பு), தமிழ் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய தொடர் கட்டுரைகள், 1980 ஆம் ஆண்டு ஆழிக்குமரன் ஆனந்தன் தலை மன்னா ரிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்திச் சென்று உலக சாதனையை நிலைநாட்டிய போது இவரும் ஈழநாடு நிருபராயிருந்த பாமா ராஜகோபாலுடன் படகில் சென்று அச்சம்பவத்தினையும் தொடர் கட்டுரையாக வீரகேசரியில் எழுதினார். இதனால் இவரை எல்லோரும் வீரகேசரி மூர்த்தி என அழைக்கலாயினர்.
வீரகேசரியில் பணியாற்றிய அந்தப் பத்தாண்டு காலம் தனது வாழ்க்கையின் வசந்த காலம் என மூர்த்தி மிகமகிழ்வுடன் கூறுவார். நாட்டு நிiமை மோசமாகியதும் வருத்தத்துடன் வீரகேசரிப் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு வெளி நாட்டுக்குப் புறப்பட்டார்.
கனடாவில் தமிழ் கொம்பியூட்டரோ, தமிழ் தட்டச்சு இயந்திரமோ இல்லாத 1980களில் மொன்றியலில் “கியூபெக் ஈழத் தமிழ் ஒன்றியம்”வெளியிட்டு வந்த கையெழுத்துப் பிரதியான ‘தமிழ் எழில்’ சஞ்சிகையின் ஆசிரியராகவும் தொண்டாற்றி வந்தார். அத்துடன் ரொறண்டோவிலிருந்து வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளிலும் தற்போது விடயதானம் செய்து வருகின்றார். இவரது ‘சுதந்திர மண்’ என்ற சிறுகதை தமிழ கத்தில் வெண்மதிப் பதிப்பகத்தார் நடாத்திய சிறுகதைப் போட்டியில் சிறந்த கதைக்கான பாராட்டுப் பரிசினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எக்கருமத்தையும் பிறர் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் சய்யாது ஏன், எதற்காகச் செய்ய வேண்டும் என்ற காரணத்தை தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். அப்போது தான் அக்கருமத்தினால் பூரண நன்மை ஏற்படும் என்ற கொள்கை உடையவர் மூர்த்தி. கோவிலிலே ஐயர் தன்கையால் பிசைந்த ஐவகைப் பழங்களை சுவாமி சிலையின் சிரசில் வைத்து அப்புகின்றார். அது வழிந்து வந்து சிலையின் பாதங்களில் வீழ்ந்ததும் அதைக் கையால் வழித்தள்ளி வாளிக்குள் போட்டு பஞ்சாமிர்தமென பக்தர்களுக்கு வழங்குகிறார். அது ஆண்டவனின் பிரசாதமென நம்பி அனைவரும் வாஞ்சையோடு வாங்கி உண்ணுகிறார்கள். எல்லோரும் சாப்பிடுகிறார்கள் என்பதால் நாங்களும் அதனைவாங்கி உண்ணுகிறோம். அது எவ்வளவு அசுத்தமானது.அதனால் உடல்நலம் பாதிக்கும் என்ற கருத்தினைக் கருவாகக் கொண்டு 'பஞ்சாமிர்தம்’என்ற சிறுகதையை எழுதியுள்ளார். அது வாசகர்களை சிந்திக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
சந்தர்ப்பம் சூழ்நிலை எவ்வாறு நல்லோரைத் தீயோராகவும், சாதுவை கொலை வெறியராகவும் மாற்றும் என்ற கருத்தினை 'சாது மிரண்டால்’ என்ற சிறுகதையின் மூலம் அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
மூர்த்தி முற்போக்குச் சிந்தனையாளராக இருந்த போதிலும் எம்மினத்தின் பாரம்பரிய கலை கலாச்சாரங்கள், பண்புகள் ஆகியன குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் கைவிடப்படாது கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை னொண்டவர். ஆனால் காலத்தின் கோலத்தில் பிறநாடுகளுக்கு புலம்பெயர்ந்து நம்மவர்கள் சிலரது போக்கு அவரின் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக நெருடுகி ன்றது என்பதனை அவரது இத்தொகுதியின் முதலாவது 'பிறந்த மண்’ கதையின் மூலம் உணரக் கூடியதாக இருக்கிறது.
சிலரது பலவீனங்கள் அவர்களை நல்லவர்களாக வைத்திருக்கிறது என மகாத்மா காந்தி கூறியது முற்றிலும் உண்மை. பொய், களவு செய்யும் துணிவு எனக்கில்லை. அதனால் நான் நல்லவனாக இருக்கிறேனென மூர்த்தி கூறுவதுண்டு. அக்குணங்கள் இவரிடம் இல்லாததினால் அத்தகைய குணமுடையோரை இவருக்கு அறவே பிடிக்காது. பிறரிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காது ஏமாற்றி விட்டு சுத்தமான ஆசாடபூதியாக நடிக்கும் ஒருவரைக் கடிக்கும் வகையில் 'மாலை போட்டவன்’ என்ற சிறுகதையில் ஆவேசமாக எழுதியுள்ளார்.அநீதிகளையும் அக்கிரமங்களையும் அம்பல ப்படுத்தினால் தொடர்ந்தும் அத்தகைய செயல்களைச் செய்யமாட்டார்கள் என்ற எண்ணத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லும்--எழுதும் துணிச்சல் கொண்டவர். இதனால் மூர்த்தி பல எதிரிகளைச் சம்பாதித்ததுண்டு. புகழ் பெறவேண்டும் என்பதற்காக தவறிழைப்போருக்குப் புகழ்பாடும் தன்மை இவரிடம் கிடையாது.
இறை வழிபாட்டினை நிறையப் பணம் சம்பாதிக்கும் வியாபாரமாக்கியோர் சமயத்தின் பேரால் மக்களை ஏமாற்றி வருவதும், மக்கள் மூடநம்பிக்கை கொண்டிருக்கும் நிலையும் இல்லாதொழிக்கப் படவேண்டும் என்ற கருத்து ‘மூர்க்கரொடு’, பேசுந் தெய்வம், சந்நியாச சம்சாரி ஆகிய கதைகளில் பிரதிபலிக்கின்றது.
நகைச் சுவையாகப் பேசி நண்பர்களை மகிழ்விக்கும் மூர்த்தியின் எழுத்திலும் நகைச்சுவை இழையோடி இருப்பதை வாசகர்களாகிய நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள். இவரது எழுத்துப்பாணி ஒரு தனிப்பாணி. எளிய பேச்சுத் தமிழில் வளாவளா என்றில்லாமல் சொற் சிக்கனத்தைக் கடைப் பிடித்து எழுதுவார். பத்திரிகை நிருபர்கள் எழுதும் செய்திகளில் தேவையற்ற விடயங்களை வெட்டிக் கொத்தி எடிட் பண்ணும் உதவி ஆசிரியராக இருந்ததினால் இவர் தனது எழுத்துக்களில் சொற் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது ஆச்சரியமில்லை.
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மூர்த்தி ஒரு சிறந்த கவிஞருமாவார். கனடாவில் இவரது சிலகட்டுரைகளும் கவிதைகளும் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்தி நிறை எழுதாதிருப்பது இவரது குறைபாடு. இனிமேலாவது நிறைய எழுத வேண்டும் என்பது எனது வேணவா.
எஸ்.எஸ்.புவனேந்திரன்
பாரிஸ்.
என்னுரை
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பதால் எண்ணும் எண்ணத்தை எல்லாம் எழுத்துருவில் படம் பிடித் துக் காட்டும் எழுத்தாளர்கள் சிற்பிகளல்லவா?
நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எனசமுதாயத்தில் உள்ள குள்ள நரிகளின் குளறுபடிகள், கும்பிடுகள்ளர்களின் திருவிளையாடல்கள், பத்திரிகைகளில் தமது சுயவிளம்பரத்துக்காக விழாவெடுக்கும் புகழேந்திகள், ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்கும் கண்ணபிரான்களின் அந்தரங்கள் ஆகியஅனைத்தையும் அப்பட்டமாக்கி அப்பாவி மக்களின் அறிவுக் கண்களைத் திறக்கச் செய்வது சிற்பிகளின் சிறந்த
கலைப்பணி அல்லவா?
கலியுகமான இக்காலத்தில் கண்ணியவான்களையும் அரைக்காசுக்கு நம்பலாமா? கற்புக்கரசிகளே! கண்ணகிகளே!என மேடைகளில் முழங்குவோர் உங்கள் கற்பினைச் சூறை யாட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காமமே கண்ணாக இருப் பர். விழிப்பாய் இருங்கள்.கோமாளிகளின் கோலத்தைக் கண்டு ஏமாளிகள் ஆகாதீர்கள்.
முழுச்சமுதாயத்தின் மூலவேரான ஆதிபராசக்திகளே! புலம் பெயர்ந்தநாடுகளில் உங்கள் சக்திகளை ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்கப் பயன்படுத்துங்கள்.அகில உலகு க்குமே சவால்விடும் அணுசக்தியாக மாறிவிடாதீர்கள்.ஆயி ரத்தில் ஒரு கண்ணகியாக இருக்காது ஆயிரத்துக்கு ஒரு கண்ணகி குறைவாக இருங்கள்!
உங்களின் சந்தேகங்களினால் குடும்பத்தின் சந்தோசங்க ளை உதிரச் செய்யாதீர்கள். ஆணவத்தினாலோ ஆவேச வார்த்தைகளினாலோ கணவன்மார்களை அடக்கிவிடலாமெ னத் தப்புக் கணக்குப் போடாதீர்கள். அன்பினைச் சொரிந்து அன்பினைச் சொரியச் செய்யுங்கள்! ஆவதும் பெண்ணாலே என்பதோடு மாத்திரம் மானத்தைக் காப்பாற்றுங்கள்.
;அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்ற அற்புதக் கோட்பாடே சுதந்திர மண்ணின் ஆணிவேர். இக்கதைகள் யாவும் கற்பனைக் கதைகளேயானாலும் அவற்றின் கருக்க ள் யதார்த்தமானவை,நம்மத்தியில் அன்றாடம் நிகழும் சம் பவங்களின் மூலகாரணிகள்.இலக்கியமென்பது வெறும் பொ ழுது போக்கு சாதனமல்ல.வாசகப் பெருமக்களை சிந்திக் கத்தூண்டி தமது தவறுகளை உணர்ந்து சிந்தித்து தம்மை த்தாமே திருத்த உதவும் உன்னத சக்தி வாய்ந்த சாதனம். அதனால் தான் சுதந்திர வாசைன ஒரு மனிதனைப் பூரண மனிதனாக்குகிறது எனச் சொன்னார்கள்.
சுதந்திர மண்ணில் சில உத்தமர்- உத்தமிகளாவது உலா வர வேண்டும் என்பதே என் வேணவா. அப்போது தான் பேனை பிடித்த நான் பாக்கியசாலி ஆவேன்.
காவலூரில் மேலைக்கரம்பன் மண்ணே சொந்த மண்ணா கையால் ;மேக மூர்த்தி’, ‘காவலூர் மூர்த்தி’ என்ற புனை பெயர்களில் சிறுகதைகள், கவிதைகளையும், எஸ்.ரி.மூர்த்தி என்றபெயரில் கட்டுரைகளையும் எழுதிவந்தேன். பத்தாண்டு காலம் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்து விட்டு கனடாவுக்குப் புலம் பெயர்ந்ததும் என்னை அறிந்தோர் வீரகேசரி மூர்த்தி என்றழைத்தனர். இங்கேயும் பத்திரிகை, எழுத்துப் பணிகளைத் தொடர்வதில் எனக்கோர் ஆத்ம திருப்தி.
நன்றி மறப்பது நன்றன்று
தமிழ் மக்கள் பரந்து வாழும் பாரெங்கும் ;சுதந்திர மண்ணைப் பிரகடனப்படுத்த உந்து சக்திகளாக இருந்த என் உற்ற நண்பர்கள் ‘சிந்தனைப் பூக்கள்’ ஆசிரியரும் முன் னாள் பல்கலைக் கழக விரிவுரையாளருமான எஸ்.பத்மநாதன் (கனடா), இரங்கும் இல்லத்தின் ஸ்தாபகரும் சமூகத் தொண்டருமான சிவனடியான் ஸ்ரீபதி (ஜெர்மனி) என்வேண் டுகோளினை ஏற்று இந்நூலுக்கு மதிப்புரையினை வரைந்து தவிய ‘டிஸ்னி றெஸ்ரோறன்ட்’ உரிமையாளரும் சிறந்த வாசகருமான நண்பர் சிவகுரு புவனேந்திரன்(பாரிஸ்),எழுத் தமைப்புச் செய்கையில் கணணியில் ஏற்பட்ட சிக்கல்களை சீர்செய்ய கைகொடுத்துதவிய என்அக்கா திருமதி இரத்தி னம் செல்வலெட்சுமியின்மக்கள் செந்தூரன் (றமேஸ்), ஆதி மூர்த்தி (றதீஸ்)-கனடா ஆகியோருக்கும் எனது படைப்புக்க ளை குறுகிய காலத்தில் நூலுருவில் அழகுற அமைத்துத் தந்த மணிமேகலைப் பதிப்பக உரிமையாளர் ரவி தமிழ்வா ணன் அவர்களுக்கும், இந்நூலினை விலைகொடுத்து வாங் கி எனக்கு ஆதரவு வழங்கிய வாசகர்களாகிய உங்களுக் கும் என் இதய பூர்வமான நன்றிகள்.
சுதந்திர மண் வாசனையை நுகரும் ஆவலோடு நுழையும் சுதந்திர வாசகர்களே உங்கள் மனதில்படும் சூடான கருத் துக்களை அள்ளி வீசுங்கள்! அவை தான் என்னை வளர்ச் சிப் பாதையில் ஏற்றிவிடும் வாசற்படிகள்.
மற்றுமோர் நூலின் மூலம் மீண்டும் உங்களோடு தொடர்பு கொள்ளும் வரை நன்றியுடன் விடை பெறுகின்றேன்.
Virakesari Moorthy
175 Cedar Ave.# 411
Richmond Hill, On.
L4C 9V3
Canada
E-mail: Moorthy.sella@amd.com
பிறந்த மண்
ஹெலி சத்தத்தைக் கேட்டதும் பங்கருக்குள் ஓடிப் போய் பதுங்க வேண்டிய அவலம் ஒருபுறம். ஆமிக் காரன்களின் அடாவடித் தனமும் அட்டகாசமும் மறுபுறம். இறுதியாக செல் வீச்சினால் கொட்டடியில் இருந்த எங்களது வீடும் தரை மட்டம். அதனால் அயல் அட்டத்தவர்களுடன் சேர் ந்து வன்னிக் காட்டுக்கு ஓடினோம். அங்கு புனர் வாழ்வுக் கழகத்தினர் தற்காலிக 'ரென்ற்" விடுதிகளை ஏற்படுத்தித் தந்தார்கள்.ஆயிரக் கணக்கில் நாலா புறமுமிருந்து திரண்டு ண்டுவந்திருந்த மக்களுக்கு அது எந்த மூலைக்கு? கிழங்கு அடுக்கினது போல் எத்தனைமட்டுக்கு அதுக்குள்ளே அடைபட்டுக் கிடக்க முடியும். வெய்யில் நேரங்களில் மர நிழலில் கிடந்தோம்.மழை பெய்யும் போது என்ன செய்வது?
மழையில் நனைந்து, குளிரில் நடுநடுங்கி மூக்கைச் சீறிக் கொண்டு நுளம்புக்கும் இரத்த தானம் செய்து கொண்டிரு ந்தோம். காய்ச்சலினால் முனங்கிக் கொண்டு முழங்காலில் முகத்தைப் புதைத்து குந்தியிருந்தோருடன் கூட இருந்து விரும்பியோ விரும்பாமலோ நோய்களைப் பகிர்ந்து கொ ண்டோம். பசிக் கொடுமையால் கூப்பாடு போட்டாலும் சாப் பாட்டைக் கண்ணிலும் காணமுடியாத நிலை. காட்டுக் கனி களைத் தின்றும்,ஆத்துத் தண்ணியைக் குடித்துக் கொண் டும் எத்தனை மாதங்களுக்குத் தான் காலத்தை ஓட்ட முடியும்?
யாழ்ப்பாணத்து நிலைமை ஓரளவு சீராகியதும் உறுதியான முடிவோடு நான் மாத்திரம் யாழ்ப்பாணம் போனேன்.கந்தை யா முதலாளியைச் சந்தித்து எனது காணியை வாங்கிக்கொண்டு பணம் தந்து உதவுமாறு கேட்டேன். முதலில் முடியாதெனக் கூறியவர் எனது வற்புறுத்தலின் பின் ஒருவா று இணங்கினார். பெருந்தொகைப் பணத்தை யாழ்ப்பாண த்தலிருந்து கொண்டு செல்வது பாதுகாப்பு இல்லை என்ப தால் பணத்தை கொழும்பிலுள்ள அவரது மற்றக் கடை யில் வாங்கிக் கொள்வதாகக் கடிதம் வாங்கிக் கொண் டேன்.யாழ்ப்பாணத்தில் அறாவிலை கொடுத்து பாண், சீனி, தேயிலை,அரிசி,பருப்பு ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வன்னிக்குக் கிளம்பினேன்.வழியெங்கும் ஆமிக்காரன்களின் சோதனைச் சாவடிகளில் எடுத்தெடுத்துப் பிரித்துக்காட்டிய
தொல்லையில் வெறுங்கையுடனேயே வன்னிக்கு வந்து பட்
டினி கிடந்து செத்திருக்கலாம் என நினைத்தேன். மனை வியும் நானும் பாணை பிய்த்து சாப்பிட்ட போது கோழிக் குஞ்சுகளைப் பார்க்கும் பருந்துகள் போன்று அங்கிருந்த குழந்தைகள் முதல் கிழடுகள் வரை அத்தனை பேரும் திறந்த வாயில் வீணி வடிய எங்களையே பார்த்துக் கொ ண்டிருந்தனர். பசிக் கொதியில் தானதர்;மத்தைப் பற்றி யார்; யோசிப்பார்கள். முனைவி பசி அகோரத்தில் பாணை முழு சாகவே விழுங்க முனைந்தாள்.ஆனால் ஒரு கடி கடித்தது மே விக்கல் எடுத்தாள். குடலொட்டிக் காய்ந்து கிடந்ததி னால் ஆறுதலாகவேனும் தின்னமுடியாமல் திண்டாடினாள்.
சில தினங்களில் சோதனைச் சாவடிகளின் கெடுபிடிகளை எல்லாம் தாண்டி நானும் மனைவியும் கொழும்பு வந்து சே ர்ந்தோம். கோட்டை புகையிரத நிலையத்துக்கு வந்திருந்த எனது மச்சான் நேரடியாக எங்களை வெள்ளவத்தை பொ லிஸ் நிலையத்துக்கு கூட்டிச் சென்றார். எனக்கும் மனைவி க்கும் வயிற்றைக் கலக்கியது.'முதலில் பொலிஸில் பதிவு செய்து போட்டுத் தான் வீட்டை கூட்டிக் கொண்டு போக வேணும். இல்லாவிட்டால் அவங்கள் வீட்டுக்குள்ளே புகுந் து புலி;களை வைத்திருப்பதாகக் கூறி உங்களோடு எங்க ளையும் கைதுசெய்து கொண்டு போய் விடுவாங்கள்" என் றார் மச்சான். பொலிஸ்நிலையத்தில் பதிவு செய்யும்போது, 'ஏன் கொழும்புக்கு வந்தது? எங்கிருந்து வாறது, என்ன கொண்டு வந்தது? என்றெல்லாம் நூற்றெட்டுக் கேள்வி கள் கேட்டாங்கள். வன்னியில் இருந்து வருகிறோம் என உண்மையைச் சொன்னதும்'புலியிடமிருந்து வாறதா, வெடி குண்டு கொண்டு வந்ததா?" என்றெல்லாம் கேட்டாங்கள். நாங்கள் வெறுங் கையோடு போனதால் பிரச்சனை தலை க்கு மேலே போகவில்லை.
மச்சான் தனக்குத்; தெரிந்த ஒரு டிரவல் ஏஜன்ஸி மூலம் எங்களை கனடாவுக்கு அனுப்ப முயற்சி செய்தார். காணி விற்றகாசுமுழவதையும் ஏஜன்ஸிக்காரனிடம் கொடுத்தோம். முதலில் சிங்கப்பூருக்கும் அங்கிருந்து ஜப்பானுக்கும் இறு தியாக நியூயோக்குக்கும் கூட்டிக்கொண்டு வந்தார். அங்கி
ருந்து கனடா போடருக்கு கொண்டு சென்று இமிக்கிறே சன் அலுவலகத்தைக் காட்டி அங்கு போய் றிபூஜி என்று சொல்லுங்கள். அவர்கள் விண்ணப்பப் படிவமெல்லாம் பூர்த் தி செய்து தந்து கனடாவுக்குள் செல்ல அனுமதிப்பார்கள்;
என்றார். எங்களது க~;டகாலமும் நெடுந்தூரப் பயணமும் முடிந்ததென்று நின்மதியாகப் பெருமூச்சு விட்டோம்.
கனடாவென்றால் முழுக்கமுழுக்க வெள்ளைக்காரர்கள்தான் இருப்பார்களென எண்ணிக்கொண்டு வந்த எமக்கு கனடாவு க்கு வந்து விட்டோம் என்பதையே நம்ப முடியாமல் இருந் தது. யாழ்ப்பாணத்தில் நிற்பது போல் எந்தப் பக்கம் பார்த் தாலும் தமிழ்ச்சனங்களும் தமிழ்க் கடைகளுமாகவே இருந் தது. வீரகேசரி,தினக்குரல், ஆனந்தவிகடன், குமுதம் பத்தி ரிகைகள்; கூட கடைகளில் இருந்தன.
தொடர்மாடிக் கட்டிடத்தில் எங்களுக்கு ஒரு படுக்கை அறையுடன் கூடிய அப்பாட்மென்ற் வாடகைக்கு எடுப்பத ற்கு இடத்துக்கேற்றவாறு எண்ணூறு முதல் ஆயிரம் டொ லர் வரை வாடகை வரும் என்றார்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் சமூகநல உதவிப் பணம் ஆயிரத்தி இருநூ று டொலர்கள் மாத்திரமே கிடைத்தது. அதனால் ஒரு தமி ழ் ஆளின் வீட்டுக்குக் கீழேயுள்ள ;பேஸ்மென்ட்;;;"(நிலவறை) ஒன்றை அறுநூறு டொலர் வாடகைக்கு எடுத்துத் தந்தார்க ள். இரு சிறிய ஜன்னல்களுடன் இருள் மயமாக இருந்த அதற்குள் குடிபுகுந்ததும் கொட்டடியில் பங்கருக்குள் இருந் தது போலவே இருந்தது. கனடாவுக்கு வந்தும் கூட எங்க ளுக்கு இதே கதியா என்றெண்ணினோம். பகலிலும் லைற் றைப் போட்டுக் கொண்டிருந்தோம். அப்படிச் செய்தால் மா தம் முடிய லைற் பில் எக்கச் சக்கமாக வரும்,தேவை ஏற் படும் போது மாத்திரம் போடுங்கள் மற்றும் வேளைகளில் ஓவ் பண்ணி விடுங்கள் என்றார் வீட்டுக்காரர். பேஸ்மென்ட் டுக்குள் இருந்து வெளியே வருவதற்கு கிணற்றுக்குள் இரு ந்து வெளியே ஏறி வருவது போன்று படியேறித்தான் வர வேண்டும்.
மலிவாகச் சாமான் வாங்கும் 'சுப்பர் ஸ்ரோர்" ஒன்றைக் கூட்டிச் சென்றுகாட்டினர்கள்.அடேயப்பா!அதுவொரு இந்திர
லோகம் போன்றிருந்தது. பால் பழங்கள், இறைச்சிகள்,முட் டைகள், பசுமையான மரக்கறிகள்,அரிசி,மா,சீனி அது இது வென்று சகல சாமான்களும் ஒரே கடையில் குவித்து வை க்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும் பெரும் ஆச்சரிய மாக இருந்தது. வன்னியில் இருக்கும் போது ஒரு துண்டுப் பாணையே கண்ணில் காணமுடியாமல் இருந்தோம். இங் கே பொல்லுப் போன்ற பிரெஞ் பாண், நீளமான வட்டமான இத்தாலிப் பாண்கள், தவிட்டுப் பாண், தானியப் பாண் என் றெல்லாம் விதம் விதமான பாண்களை அடுக்கி வைத் திருக்கிறாhகள். வுpலையும் குறைவு. இங்கு சாப்பாட்டுக்குக் குறைவில்லை, ஒவ்வொரு நாளுமே இறைச்சி வாங்கிச் சாப்பிடலாம். தாராளமாகப் பாலும் வாங்கிக் குடிக்கலாம்.
நாங்கள் இருக்கும் வீட்டுச் சொந்தக்காரர் குமார் பத்தாயிர ம் டொலர் ;டவுண் பேமன்ற்; ;கொடுத்து வங்கியில் ;மோட் கேஜ்; லோணும்; ;எடுத்து ஒன்றரை லட்சம் டொலருக்கு இந்த தனி வீட்டை வாங்கினாராம். மாதாமாதம் ஆயிரத்தி இருநாறு டொலர்; ;மோட் கேஜ்; ; கடன் கட்ட வேணும். கட்டாமல் விட்டால் வங்கிக்காரன் வீட்டை விற்றுப் போட்டு தங்களது கடன் காசை எடுத்துக் கொள்வானாம். குமார் காலை எட்டு மணியிலிருந்து மாலை நாலு மணி வரை ஒரு பக்டரியில் வேலை செய்கிறார். சம்பளத்தில் கழிவுக ளெல்லாம் போக ஆயிரம் டொலர்கள் தான் கையில் கிடைக்குமாம். அத்தோடு இரவு எட்டு மணியிலிருந்து நள் ளிரவு வரை ஒரு றெஸ்ரோறண்டிலும் கிளீனிங் வேலை செய்கிறார். அதில் மாதம் ஐநூறு டொலர் கையில் கிடை க்குதாம். அவரது இரண்டு வருமானமும் மோட்கேஜ் கட ன், லைற் பில், டெலிபோண் பில், வீட்டுக்கும் காருக்கும் இன்சூரன்ஸ் எல்லாம் கட்டத் தான் போதும். நின்மதி இல் லாமல் மாடு மாதிரி ஓடியோடி உழைக்கிறார். வீடும் வே லையும் தான் அவரது வாழ்க்கை. இங்குள்ள ஏனைய தமி
ழர்களின் வாழ்க்கையும் அப்படித்தான். குமாரின் வருமா னம் வாழ்க்கைச் செலவுக்குப் போதாததினாலேயே ;பேஸ் மென்டை ;எங்களுக்கு வாடகைக்குத் தந்துள்ளார்.
இவரைப் போலவே வீடு வாங்கியுள்ள ஏனையோரும் ஏழு நாளும் இரண்டு வேலை செய்து மனைவி மக்களையே கவனியாது இயந்திரம் போல் இயங்குகிறார்கள். இதனால் விரக்தியுற்ற சில மனைவிமார் அக்கம் பக்கத்திலுள்ள வே று ஆம்பிளைகளோடு தொடர்பு கொள்கிறார்கள். இரகசி யத் தொடர்பு கணவன்மாருக்குத் தெரிய வந்தாலும் அவர் கள் எதுவுமே செய்ய முடியாது. பெற்றோர்கள் தமது பிள் ளைகளை அடிப்பதோ, கணவன் மனைவியை அடிப்பதோ கனடாவில் பாரதூரமான குற்றம். மனைவி 911என்ற அவ சர சேவை நம்பருக்கு டெலிபோண் பண்ணிச் சொன்னால் போதும். அரை மணி நேரத்தினுள்; பொலிஸார் விரைந்து வந்து கணவருக்கு கை விலங்கு மாட்டி அழைத்துக் கொ ண்டு போய்விடுவார்கள். இரண்டு மணி நேரம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வாக்கு மூலத்தை பதிந்து கொண்டு வீட்டுப் பக்கமே போகக்கூடா து, மனைவியை அடிக்கக் கூடாது, பிள்ளைகளைப் பார்க்க விரும்பினால் முன்னேற்பாடு செய்து வீட்டுக்குள் செல்லாது பிள்ளைகளைச் சந்திக்கலாம் என எச்சரித்து விடுதலை செ ய்வார்கள். இப்படி எத்தனையோ கணவன்மாhகள் ஒண்டிக் கட்டைகளாகத் தனிக் குடித்தனம் பண்ணி வருகிறார்கள். முனைவிமார் வருமான மின்றி இருந்தால் அவர்களுக்கும்
பிள்ளைகளுக்கும் அரசாங்கம் சமூகநல உதவிப் பணம் வழங்குகிறது. காசே தான் கடவுளாச்சே- அப்புறம் புரு~ன் எதற்கு?
ஊரிலிருந்து பதினைந்து வயதுக்கு மேற்பட்ட வயதில் வந் த பொடிப்பிள்ளைகளும் கனடாவின் சுதந்திரமான சட்டத் தை சாதகமாக்கிக் கொண்டு கட்டாக்காலிகள் போல் இர விரவாக ஊர்சுற்றித் திரியினம்.ஊரிலிருந்தால் ஆமிக்காரன் அப்பிக்கொண்டு போய் விடுவான் என்ற பயமிருக்கும். இங் கு பெற்ற தாய் தகப்பனுக்கே பயப்படத் தேவையில்லை. ஏன் இங்கு பொலிஸாருக்குக் கூடப் பயப்பட வேண்டியதில் லை. காரணமில்லாமல் பொலிஸார்; ஒருவரை தாக்கினால் அவருக்கெதிராகவே வழக்குத் தாக்கல் செய்யலாம். பெற் றோர் வீட்டை விட்டுத் துரத்தி விட்டாலும் அவர்களுக்கு அரசாங்கம் உதவிப்பணம் வழங்கும். கறையான் அரிச்சது போல்; ;மஸ்றூம் ;தலை வெட்டு. ஒற்றைக்காதில தோடு. நூற்றெட்டுப் பொக்கெற் உள்ள தோம்பாஸான லோங் ஸ_ம் சேட்டும். பக்டரி புகை போக்கிக் குழாய்போல் அவர்
களது வாயிலிருந்து எந்நேரமும் சிகரட் புகை. தமிழ்ப் பொடியன்கள் என்றே அடையாளம் காண முடியாத கோ லம.; இரவிரவாக றோட்டளக்கிறது பெடடைகள் விவகாரமா க கோ~;டிச் சண்டைகள், துப்பாக்கிச் சூடுகள். இதுதான் அவையளின் வாழ்க்கை.
ஊரில் எல்லாத் தமிழர்களையுமே சிங்களவர் ;கொட்டியா ; என அழைப்பது போன்று இங்குள்ள தமிழர்கள் அனைவ ரையுமே ;ரைகேர்ஸ்; ;என வெள்ளைக்காரர்கள் அழைக்கும் அளவிற்கு இந்த இளைஞர் கோ~;டி நடந்து கொள்கிறது. சில பெட்டைகளும் அதேநிலை தான். வேலைக்குப் போய் வரும் வேளைகளில் காதலில் மாட்டிக்கொண்டு பூங்காவெ ன்றும் சினிமாத் தியேட்டர் என்றும் சுற்றித்திரியினம். இரவில் படுக்கைக்குப் போகும் போது ;ஹான்ட் போனை வைத்துக் கொண்டு மணித்தியாலக் கணக்காக காதலன்மா ரோடு குசுகுசுப்பார்கள். பெற்றோருக்குத் தெரிய வந்து தட் டிக் கேட்டதும் இரகசியமாக கல்யாணப்பதிவு செய்து கொ ள்வார்கள். புதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆணோ பெண் ணோ தாம் தாம் விரும்பியோரை கலியாணம் கட்டிக்கொ ள்ளலாம் என்கிறது கனடாச்சட்டம். பெற்றோர்களே தமது பிள்ளைகளுக்கு சோடி சேர்க்க வேண்டும் என்று நாங்கள் சொன்னால் வாய்விட்டுச் சிரிப்பார்கள் கனடியர்கள்.
கனடாவில் பிறந்த தமிழ்ப் பிள்ளைகள் தாய் தகப்பன் மா ரை ;டம் ,; ;ஸ்ருப்பிட் ;என்றும் ;லீவ் மீ எலோன் அன்ட் கெற் லொஸ் ;என்றும் ஏசுதுகள். அநேகமான பெற்றோருக்கு இச்
சொற்களின் அர்த்தம் புரியாததால் ஆத்திரம் அடைவதி ல்லை. ஊரிலிருந்தால் என்னைத்தனியாக விட்டுப் போட்டு நீங்கள் தொலைந்து போங்கள் என்று எந்தவொரு பிள்ளை யாவது பெற்றோரை இப்படித் திட்டுங்களா?தமிழையே ஒழு
ங்காகப் பேசத் தெரியாது யாராவது தமிழில் கேள்வி கேட் டால் ஆங்கிலத்தில் பதில்கூறி விட்டுப் போகுதுகள்.
எண்டைக்கு எங்கட இனம் தமிழ் மண்ணை விட்டு வெளிக் கிட்டுதோ அன்றே தமிழ்ப் பண்பாடும் பறந்து போச்சுது. இதுகளையெல்லாம் கேட்டும்,பார்த்தும் எனக்குத் தலை சுற்றுகிறது. இக்கரை பச்சையாக இருக்குமென எண்ணி இங்கு ஓடி வந்தது தப்பென்பதை உணர்ந்து கொண்டேன். தாய் மண்ணிலிருந்து பட்டினி கிடந்து செத்தாலும் தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரத்துடன் கண்களை மூடியிருக்கலாம்.
மாலை போட்டவன்
கோயில் பக்கமே காலடி வைக்காத நான் அன்று புதுவரு டத் தினம் என்பதால் காலையில் குளித்து விட்டு ஐயனார் கோயிலுக்குச் சென்றிருந்தேன். புதவருடத்துக்கு புத்தாடை வாங்க வேணும் என்ற எண்ணமே எழவில்லை. எழுந்தா லும் வாங்க வழியில்லை. அப்பா அம்மாவுடன் வாழ்ந்த இளமைக் காலத்தில் புதுவருடம் பிறப்பதற்கு ஒருவாரத்துக் கு முன்னரே குதூலம் ஆரம்பித்து விடும். புதுச்சாரமும், சேட்டும் அணியலாம். பட்டாசு கொழுத்தலாம். கோயிலுக் குப் பக்கத்தில் பெரிய ஆக்கள் போர்த் தேங்காய் அடிக்கி றதைப் பார்க்கலாம் என்றெல்லாம் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும். அந்த இனிய பொற்காலம் இனியெங்கே வரப் போகிறது. தோய்த்து அயன் பண்ணிய லோங்ஸையும் சேட்டையும் அணிந்து கொண்டு கோயிலுக்குச் சென்றேன். கோயிலுக்கு செல்லும் ஆண்கள் வழக்கமாக வெள்ளை வேட்டிஅல்லது பட்டு வேட்டி தான் கட்டிக்கொண்டு; போவதை நான் கண் டுள்ளேன். ஆனால் இந்த ஐயனார் கோயிலில் மொட்டை அடித்து கறுப்பு நிற வேட்டியும் கட்டிக் கொண்டு நி;ன்றவர் களைப் பார்த்ததும் எனக்குச் சற்றுப் பயமாக இருந்தது. பேய் பிசாசுகள் போன்று கறுப்பு நிற ஆடை அலங்காரங்க
ளை செய்து கொள்ளும் ;ஹலோவின்; ;நாள் எனக்கு நினை
வுக்கு வந்தது. மற்றும் சிலர் தலை மயிரை நீளமாக வள
ர்;த்து நீண்ட தாடியும் வளர்த்திருந்தார்கள். அத்துடன் பட் டையாக விபூதியும் பூசியிருந்தார்கள்.
'நீட்டலும் மழித்தலும் வேண்டா உலகம் பழித்தது விட்டு விடின்" என்றார் திருவள்ளுவர். பொய்,களவு,சூதுவாது,நம்பி க்கை மோசடி,கொலை ஆகிய பஞ்சமா பாதகங்களை புரி வோரை உலகம் பழிக்கும். அத்தகைய பாவச் செயல்களி ல் ஈடுபடாது நம்மை நாமே கட்டுப் படுத்திக் கொண்டால் அதுவே சிறந்த கடவுள் வழிபாடாகும் என்கிறது வேதம். பிரார்த்தனை மூலமும்,வழிபாட்டின் மூலமும் மனதை தூய்
மைப் படுத்திக் கொள்ளாது சடாமுடியும் தாடியும் வளர்; ப்பதினாலோ, மொட்டையடித்து ஆண்டி வேடம் தரிப்ப தினாலோ ஆண்டவனின் அருளைப் பெறமுடியுமோ? தம் மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் அந்த வேடதாரிகளை நம்பி நம்மவர்கள் எத்தனை பேர்; ஏமாளிகள் ஆகியுள்ள னர். இக்கலியுக காலத்தில் பக்தர்களாகவும்,பகவான்களாக வும் வேடம் பூணுவோர் பசுத்தோல் போர்த்த புலிகள். அத னாலேயே இந்த வேடதாரிகள் கூடும் ஆலயப்பக்கம் நான் தலை காட்டாமல் இருந்து வருகிறேன்.
திறந்த மார்பில் பத்துப் பவுண் சங்கிலியுடனும்,எட்டு விர ல்களில் நவரெத்தினக் கற்கள் பதித்த ஒன்பது மோதிரங்க ளுடனும் மைசூர் மகாராஜா மாதிரி மிடுக்குடன் வந்தார்; சுப்பர் மார்;க்கெட் முதலாளி ரகுராம். நல்ல வேளை அவ ரும் கறுப்பு நிற வேட்டி அணியவில்லை. சிகப்பு நிற அக லக் கரையுடைய பட்டு வேட்டி அணிந்திருந்தார். அதன் பளபளப்பும் மினுங்கலும் விலை உயர்ந்த வேட்டி என்பதை பறைசாற்றியது. ஆவரை விடப் பத்து மடங்கு அலங்காரத் துடன் வந்திருந்தாள் அவரது மனைவி. பட்டுப் பீதாம்பர வேலைப்பாடுகள் கொண்ட உயர்ந்த ரகச் சேலை. மணிக் கட்டிலிருந்து கைகளின் நடுப்பகுதி வரை அடுக்கிய காப்பு கள். கழுத்து நிறைய தாலிக்கொடி,சங்கிலி,அட்டியல்- அப் பப்பா எத்தனை அலங்காரம். அவளது பெயர்; என்னவென் பது அநேகருக்குத் தெரியாது. ஆனால் அவளைப் பற்றிக்கதைக்கும் போது அந்த மலடி என்றே கூறுவார்;கள்.
ஆலயத்தினுள் சென்றதும் ;நான்; ;என்ற அகங்காரத்தை அகற்றும் வண்ணமே ஆண்கள் அ~;டாங்கமாகவும்,பெண்க ள் சா~;டாங்கமாகவும் வீழ்ந்து வணங்குகிறார்கள். அதன் அர்;த்தத்தைப்; புரிந்து கொண்டு தான் ரகுராமும் மனை வியும் வீழ்ந்து வணங்கினார்களோ என்னவோ? ஆலயத்தி
னுள் காலடி வைத்ததிலிருந்து திரும்பிப் போகும் வரை யில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்த போது அவர்களது ;நான் ;என்ற அகங்காரம் அகன்றதாகத் தெரி யவி;ல்லை. ஆலயத்துக்கு வந்திருந்த அநேகமானோரும் அவர்களை மகாராஜா,மகாராணி போலவே மதித்தார்கள். குணம் உள்ளவர்களை உதாசீனம் செய்து விட்டு பணம்
படைத்தவர்களுக்கு பட்டுக்குடை பிடிக்கும் அளவுக்கு மதி கெட்டு விட்டது நமது சமுதாயத்துக்கு.
இவற்றை யெல்லாம் பொருட்படுத்தாது சாதாரண நாலு முழவேட்டியும் வெள்ளைச் சேட்டும் அணிந்து ஒரு மூலை யில்அமர்ந்து கையிலுள்ள தேவாரப் புத்தகத்தைப் பார்த்து தேவாரம் பாடிய படியிருந்தார் கந்தையர்.அவரும்அவரது மகனும் இலங்கையிலிருந்து பலசரக்குச் சாமான்களை தொகையாக வரவழைத்து இங்குள்ள சில்லறைக் கடைக் காரர்களுக்கு விற்பனை செய்துவந்தவர்கள்.அவரது அடக்க ஒடுக்கமான தன்மையும் வழிபாட்டுமறையும் என்னை வெகு வாகக் கவர்ந்தது. அவர் தேவாரம் பாடிமுடியும் வரைகாத் திருந்து, முடிந்ததும் அவரருகே சென்றமர்ந்து, வணக்கம் ஐயா எப்படி உங்கடபாடு. வுpஸ்னஸ் எல்லாம் ஒழுங்காக நடக்குதா எனக் கேட்டேன்.
'ஐயோ தம்பி அதை ஏன் கேக்கிறியள். எங்களிட்ட சாமா ன்வாங்கி வித்தவையள் எல்லாரும்; கோடீஸ்வரர்கள்; ஆகிவிட்டினம.; ஆனால் எங்கட பாடு தான் கழுதை தேய் ந்து கட்டெறும்பான கதையாப் போச்சுது."
'ஏனைய்யா என்ன நடந்தது, யாராவது வீட்டில கொள்ளை அடித்து விட்டார்களா?"
'வீட்டில எவரும் கொள்ளை அடிக்கயில்லை.எங்களிட்ட சா மான்கள் வாங்கிய சில முதலாளிமார் தான் கொள்ளை அடிச்சுப் போட்டினம் அதுவும் பகல் கொள்ளை.ஓருமாதத் தவணையில் காசு தரலாம் எண்டு சொல்லி இரண்டாயிரம், மூவாயிரம் டொலருக்கு கடனாக சாமான்களை வாங்கிச்சி னம். சாமான்களை விற்றுப் போட்டு காசைத் தருவினம் தானே என்ற நம்பிக்கையில் நாங்களும் கடன் கொடுத்துக் கொண்டே இருந்தோம். ஆனால் அவங்கள் திருப்பித் தர வேயில்லை. அதனால இப்ப எல்லாம் கந்தறுந்து கஞ்சிக்கும் வழியில்லாமல் நாங்க க~;டப்படுகிறோம். எல்லாம் இந்த ஐயனாருக்குத் தெரியும் அவர் சும்மா விடமாட்டார். அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்று கொல்லும் என்பது பொய்க்காது.
அந்தா நிக்கிறாரே ரகுராம் அவர்; எங்களுக்கு இருபதாயி ரம் டொலர்; தரவேணும். கேக்கக் கேக்கக் இப்ப தாறன் பிறகு தாறன் என்று தவணை சொல்லிக் கொண்டே வந் தார். என்ன தம்பி நெடுகத் தவணை சொல்லிக் கொண்டு வாறீர்;;;; எப்ப காசு தரப்போறீர் என்று கேட்டதும் அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. குhசு தராமல் விட்டால் என்ன செய்வீங்க? போய் செய்யிறத செய்யுங்க என்று சண்டித்தனம் பேசினார். சோந்த வீடு வாங்கி வைச் சிருக்கிறார். முப்பதாயிரம் டொலருக்கு புதுக் ஹொண்டா கார் வாங்கி வைச்சிருக்கிறார். அவற்ற கழுத்திலும்,மனிசியி ன்ர கழுத்திலும் கையிலும் எத்தனை ஆயிரம் டொலருக்கு நகைகள் கிடக்குது பாத்தியளா? இதுகளுக்கெல்லாம் காசி ருக்குது எங்களிட்ட வாங்கின கடனைத் திருப்பித் தரத் தான் காசில்லை.அந்த நாளையில தான் ;கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் ;எனப் பாடினார் கம்பர். இப்ப கம்பர் உயிருடன் இருந்தால் கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினான்.... ;என்று தான் பாடுவார்."
'நீங்கள் கொடுத்துக் கொடுத்து கெட்டுப்போனீர்கள் ஜயா. அவர்கள் நம்பிக்கை மோசடி செய்து நன்றாகப் பணம் சம் பாதித்து விட்டார்கள். நேர் வழியில் சம்பாதிக்கும் பணம் நிலைத்து நிற்கும். குறுக்கு வழியில் சம்பாதித்த பணம் குடும்பத்துக்கே உதவாமல் கரைந்தோடி விடும் ஜயா. நீங் கள் எதுக்கும் கவலைப் படாதீங்கோ. உங்களைப் படைத் த ஜயனார் உங்களுக்குப் படி அளக்காமல் விடமாட்டார். படுபாதகங்கள் செய்து விட்டு பக்த கோடிகளாக நடிப்போ ரது நடிப்பும், உண்மையான பக்தர்களின் வழிபாடும் இறை வனுக்குப் புரியாமலா இருக்கும்.
ரகுராமின்ர நடிப்புக்கு சிவாஜி கணேசனே தோத்துப் போய் விடுவார் தம்பி. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று சந்தேகப் படாத அளவுக்கு நடிப்பான். ஜயப்பனின் திருவி ழாவின் போது நாற்பது நாள் விரதமிருந்து,மாலை போட்டு இருமுடி தரித்து இங்கு கனடாவில இருந்து சபரி மலைக் குப் போய் மலையேறி வந்த பின் தான் எங்களுக்கும் மாலை போட்டவன். நான் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்து செத்தாலும் அடுத்தவனுக்கு நம்பிக்கை மோசடி செய்யாமல், அடுத்தவன் சொத்தை அபகரிக்கா மல் உத்தமனாக வாழ்ந்தேன் என்ற பெருமையோடு சா வேன் தம்பி. ஆனால் நான் செத்துப் போனாலும் நீர் இரு
ந்து பாரும் இவன் காசு பணத்தை வைத்திருந்தாலும் கடைசி காலத்தில் நோய்வாய்ப் பட்டு தண்ணி வெந்நி கூட குடிக்க முடியாமல் வருந்தி வருந்தித் தான் சாவான்.
ஆண்டவன் சந்நிதியில் நின்று கொண்டு இப்படியெல்லாம் நான் திட்டக் கூடாது. என்ர மனவேதனை தாங்க முடியாம ல் ஆத்திரப்பட்டு இப்படித் திட்டிப் போட்டன்."
ஆலயம் புனிதமான இடம். புதவருடத் தினத்தன்று ஆலயத் துக்குப் போய் வந்தால் மனதுக்கு இதமாக இருக்குமென நம்பிப் போயிருந்தேன். ஆனால் கந்தையரின் கவலை தோய்ந்த கதையைக் கேட்டதும் ஆலயம் புனிதர்கள் கூடு ம் இடமா அல்லது நயவஞ்சகர்கள் கூடுமிடமா என்ற வினாவுக்கு விடை காண முடியாமல் விரக்தியோடு ஆலய த்தை விட்டு வெளியேறினேன்.
சுதந்திர மண்
மாலை நாலரை மணியானதும் அலுவலகங்களில் இருந்து அசுர வேகத்தில் வெளியேறிய ஊழியர் கூட்டம் நாலா புறத் தாலும் வந்து புற்றீசல்கள் போன்று பாதாள ரயில் நிலையக் குகைக்குள் புகுந்தது. அக்கூட்டத்துள் ஒருவராக வந்திறங் கிய பரமேஸ்வரத்தாரும் ஏனையோரைப் போலவே துருதுரு த்துக் கொண்டு நின்றார்.
அரை மணி நேர ரயில் பயணம். அடுத்து அரை மணி நேர பஸ் பயணம். பரமேஸ்வரத்தார் வீடு போய்ச் சேர எப்படியும் ஆறு மணியாகி விடும். ரயில் வரும் திசையை எட்டி எட்டிப் பார்த்தவாறே நின்றார். அவரது பொறுமையை நீண்ட நேரம் சோதிக்காது வந்துநின்றது ரயில். கதாநாயகி நீச்சல் உடை யில் கவர்ச்சியாகத் தோன்றும் தமிழ்ப் படத்தின் முதல் நாள் வெளியீடன்று நிரம்பி வழியும் தியேட்டரைப் போன்று நிரம்பி வழிந்தது ரயில். ஒவ்வொரு கதவினூடாகவும் ஐவர் இறங்க பத்துப் பேர் வீதம் ஏற முயன்றனர். ஓரே நெரிசலி னால் ஓட்டோமட்டிக்காக மூடப்படும் கதவும் மூடமுடியாமல் இருந்தது.
பிரதான சந்தியொன்றில் திரளாகப் பயணிகள் இறங்கியதும் நெரிபட்டுக் கொண்டு நின்ற பரமேஸ்வரத்தாருக்கு குந்தியிரு க்க சீற் கிடைத்தது. சாசுவாசமாக அமர்ந்து கொண்டு நிம்மதியாகக் கண்களை மூடிக்கொண்டார். கண்களை மூடிக் கொண்டாரே தவிர நித்திரை கொள்ளவில்லை. பஸ்ஸிலோ ரயிலிலோ பயணம் செய்யும்போது கண்களை மூடிக் கொண் டிருப்பதில் அவருக்கொரு இங்கிதம். எதிரிலே கவர்ச்சியான காரிகைகள் இருந்தாலன்றி அவர் கண்களை மூடிய வண்ண மே பயணம் செய்வது வழக்கம்.
நேற்றுச் சமைத்த சோறு கறி பிறிஜ்சுக்குள் இருப்பதனால் இன்று சமையல் வேலை இல்லை. வீட்டுக்குப் போனதும் மே லைக் கழுவிப் போட்டு சாப்பாட்டை மைக்குறோ அவணில்
சூடுகாட்டி சாப்பிட்டு விட்டுப் படுக்கலாமென நினைத்த போது
அவருக்கு சற்று நின்மதியாக இருந்தது.
பரமேஸ்வரத்தார் கலியாணம் கட்டிய பிரமச்சாரி. இலங்கையி லிருந்து அஞ்சி அஞ்சிச் சாவதை விட கனடாவுக்கு வந்தால் நிம்மதியாக வாழலாமென நினைத்து அகதியாய் கனடாவு க்கு வந்தார். பின் மனைவி பிள்ளைகளையும் கனடாவுக்கு வரவழைத்தார். ஊரில் இருக்கும் போது இவர் கிழித்த கோ ட்டை மனைவி எப்போதும் தாண்டியதில்லை. கனடாவில் பெண்களுக்கான கட்டுப்பாடற்ற சுதந்திர சட்டங்களை கேட்ட றிந்து கொண்ட அவரது மனைவி சுந்தரியின் நடைமுறைகளி ல் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படுவதை அவர் அவதானித்து வந்தார். பதிவிரதையாக இருந்தவள் படிப்படியாக பத்திரகா ளியாக உருவெடுத்தாள். அவரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். முடியாமல் போனதும் பத்திரகாளிக்கு அஞ்சித் தோப்புக் கரணம் போடும் பக்தராக இருக்க விரும்பாது தில் லை அம்பலத்து ஆண்டியாய் இன்று சுதந்திர புரு~ராய் தனிக் குடித்தனம் பண்ணுகிறார். கனடா விஜயம் எண்ணைச் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் குதித்த கதையாகி விட்ட தென எண்ணி அலுத்துக் கொண்டார்.
ஆனால் அவரது மனைவி சுந்தரியோ கணவன்மாரினால் கை விடப்பட்ட பெண்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவிப் பணத்தை பெற்று மகாராணி போல் வாழ்ந்து கொண்டிருந் தாள். இப்போது பிள்ளைகளோடு தொண தொணக்க ஆரம்பி த்து விட்டாள். நாட் செல்லச் செல்ல பரமேஸ்வரத்தாரைப் போலவே பிள்ளைகளும் அவளை முற்றாக நிராகரித்தனர். அவள் அடிக்க கையோங்கும் போதெல்லாம் 'தெரியும் தா னே 911 நம்பரை டயல் பண்ணி விட்டால் பொலிஸ் வந்து வாசலில் நிக்கும்.பிறகு நீங்க கம்பி எண்ண வேண்டி வரும்" என எச்சரிப்பான் மூத்த மகன்.
'கனடாவுக்கு வந்து காவாலிகளாகிப் போய்ச்சுதுகள். ஊரில யென்டா இப்படி எதிர்த்துக் கதைப்பினமே. முதுகுத் தோலை உரிச்சுப் போடுவன். அப்பன் துலைஞ்சது மாதிரி நீங்களும் துலைஞ்சு போறியளோ இல்லையோ எண்டு இருந்து பாருங்கோ"என அவளும் ஆதிக்கம் பண்ணுவாள்.தனி மனித சுதந் திரத்துக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஒருவரது விருப்பத்துக்கு மாறாக அவரது கையைப் பிடித்தாலே தாக்க
முயன்றதாக வழக்குத் தொடரக் கூடிய கனடாச் சட்டத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டவளுக்கு அதே சட்டத்தைப் பிள்ளைகள் பயன்படுத்திக் கொள்வதைப் பொ றுக்க முடியாமல் இருந்தது. அதே வேளையில் கணவனை இழந்தது போல் பிள்ளைகளையும் இழந்து விட்டால் தனிமர மாய் போய் விடுவேனே என்ற ஏக்கமும் எழவே செய்தது. கணவன் பிரிந்து சென்றதுக்கும் தானே காரணம் என்பதை அவள் உணராமலில்லை. கணவனோடு மீண்டும் கூடி வாழ வேண்டும் போலிருந்தது. ஆனால் தானாகக் கணவனுக்கு அழைப்பு விடுக்க அவளது ஆணவம் இடமளிக்கவில்லை.
பரமேஸ்வரத்தாருக்கோ அதைப் பற்றிய கவலையே இல்லை. சொந்த மண்ணை விட்டு இந்த மண்ணுக்கு வந்த எமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். நரகத்தில் ராஜாவாக இருப்பதை விட மோட்சத்தில் அடிமையாக இருப்பது மேலெ னக் கருதி இறுதி வரை ஒண்டிக் கட்டையாகவே வாழ்வதெ ன முடிவு கட்டி விட்டார். ஐம்பது வயதானாலும் ரயிலால் இறங்கி படிகளில் பாய்ந்து பாய்ந்து ஏறி சுரங்கத்தை விட்டு வெளியே வந்து பஸ்ஸில் ஏறி இருக்க இடமும் பிடித்துக் கொண்டதில் அவருக்குப் பரம திருப்தி. ஓடியோடி வராது ஆடியாடி வந்தோர் இருக்க இடம் கிடையாது வெளவால்கள் போன்று தொங்குவதைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொ ண்டார்.
வீடு போய்ச் சேர்ந்த பரமேஸ்வரத்தார் சாப்பாட்டை முடித்துக் கொண்டு செற்றியில் அமர்ந்து ரி.வி.யை முடுக்கினார். தின மும் இரவுச் சாப்பாட்டின் பின் ரி.வி. பார்ப்பது அவரது மாமூல். பி.பி.ஸி செய்தியில் இலங்கைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பப் படுவதால் அதனை ஆவலுடன் பார்ப்பார். அன்றைய தினமும் அவர் எதிர் பார்த் ததைப் போன்று இலங்கைச் செய்தி ஒளிபரப்பாகியது.
'ஸ்ரீ லங்காவில் வடபகுதிக்கான உணவு, மருந்துப் பொருட்க ளின் வினியோகம் முற்றாகத் தடைப்படுத்தப் பட்டுள்ளதாலும் வெளிநாடுகளில் இருந்து வருவிக்கப்பட்ட நவீன போர்க் கரு விகளினால் இராணுவதிதினர் கண்மூடித் தனமாக தாக்கிக் கொண்டு வடபகுதிக்குள் ஊடுருவிக் கொண்டிருப்பதினாலும் வடபகுதியிலிருந்த தமிழ் மக்கள் வெறுங்கையுடன் வன்னி
க்கு இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு இடம் பெயர்ந்துள்ள அகதிகள் உணவின்றியும் மருந்துகள் இன்றி
யும் அவஸ்த்தைப் படுவதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஸ்தாபனம் கண்டித்துள்ளது. நீங்கள் கேட்டுக் கொண்டி ருப்பது பி.பி.ஸி. செய்தி அறிக்கை.
இச்செய்தியைக் கேட்டதும் சரித்திரம் படைத்த தமிழினம் இன்று தரித்திரதாரிகளாய் உண்ண உணவின்றி தெருத்தெரு வாய் அலைவதை எண்ணிப் பார்த்த பரமேஸ்வரத்தாரின் இத யம் குமறியது.
காலையில் அம்புலன்ஸ் வண்டியின் அவலச் சத்தத்தைக் கேட்டு கண்விழித்த பரமேஸ்வரத்தார் கனடா வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?ஊரில என்றால் காலையில கோயில்மணி ஓசையையும், குருவிகளின் இனிய குரலோசையையும் கேட்க எவ்வளவு சந்தோசமாக இருக்குமென என எண்ணி அலுத்து துக்கொண்டார். பாத்றூமுக்குள் நுழைந்து லைற்றைப் போட் டதும் இருட்டில் சுதந்திரமாக ஓடித்திரிந்து கொண்டிருந்த கர ப்பான் பூச்சிகள் ஆமிக்காரன்களைக் கண்டு அஞ்சும் தமிழ் மக்களைப் போன்று ஒழிப்பிடம் தேடி ஒழித்துக் கொண்டன. அவதி அவதியாக காலைக் கடன்களை முடித்துக் கொண்டு சான்ட்விச்சுடன் ஆபீஸ_க்குப் புறப்பட்டார்.
;சமர்; ;காலம் அதுவும் அன்று காலையே இருபது டிக்கிரி செல்ஸியஸ் வெப்பநிலை. அரை நிர்வாணத்துடன் பஸ்ஸில் ஏறிய பெண்களைக் கண்டதும் அவருக்கு அசிங்கமாகத் தோன்றியது. இருந்தாலும் பளிச்சிடும் உறுப்புகள் அவரது உணர்ச்சிகளைச் சற்றுத் தூண்டி விடத்தான் செய்தன. எப்ப ;சமர்;’வரும் முழுக்கத் திறந்து விட்டுத் திரியலாமென ஆவ லோடு இருப்பினம் கனடியப்பெண்களென மனதுக்குள் முணு முணுத்துக்கொண்டார். சிலபேர் நீச்சலுடையுடன் பஸ் தரிப்பு நிலையங்களில் பொடியன்களை இறுகக்கட்டி அணைத்;து சொண்டைச் சூப்பிக் கொண்டு நிற்பதைக் காணும் போதெல் லாம் அவற்றை ஜீரணிக்க முடியாமல் அவஸ்த்தைப் படுவார். பாதையோரங்களில் மலசலகூடம் இல்லாத கனடாவில் யாரா வது அடக்க முடியாத நிலையில் பாதையோரத்தில் ஒதுங்கி நின்று சலம்கழித்தால் அது ;இன்டீசன்ஸி; ;எனக் குற்றம் சாட் டி கைது செய்யும் பொலிஸாருக்கு பாதை ஓரங்களில் இடம் பெறும் படுக்கையறைக் காட்சியெல்லாம் ;
ஷடீசன்ஸி;;;;;|யாகத் தெரியுதே எனப் பரமேஸ்வரத்தார் ஆச்சரியப் படுவார்.பார்ப்பதற்கே அசிங்கமாகத் தோன்றும் பெரிய சொண் டுகளை உடைய கறுவல்களைக் கட்டிப்பிடித்து சல்லாபம் புரியும் மாம்பழம் போன்ற கனடியப் பெட்டைகளைப் பார்க் கும் போது இவளவையளுக்கு இப்படியும் ஒரு கண் கெட்;ட காமவெறியா? எனவும் அவர் விசனப்படுவார்.
;வின்ரர் ;குளிரை நினைத்தால் பரமேஸ்வரத்தாருக்கு மேனியே விறைத்துப்போவது போன்றிருக்கும். வின்ரர் காலத்தில் மரங்கள் நிர்வாணமாகி விடும். விலங்குகள் வழைக்குள் பதுங்கி
விடும். பறவைகள் உ~;ண வலயப் பிரதேசங்களுக்கு புலம் பெயர்ந்து விடும். நாங்கள் தான் ஒன்றுமே செய்ய முடியாது வின்ரர் குளிருடன் போராடிக் கொண்டிருக்கிறோம். எத்தனை வருட காலத்துக்குத் தான் இப்படிப் போராடமுடியும்? எங்கட மண்ணில் இனவெறியர்களின் குண்டு வீச்சுக்களும் n~ல் அடிகளும் ஓய்ந்து என்று தான் சுதந்திர மண்ணாகுமோ?
;வைற் சுப்பர்மெஸி; ;என்ற இயக்கம் கனடா வெள்ளையருக் குத்தான் சொந்தம் வேறெவரும் இங்கு இருக்கக் கூடாதென பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்யுது. இந்த இனத்துவேசிகள் எதிர்காலத்தில் சிங்களவர்களைப் போன்று எம்மை அடித்துக் கொன்று விடுவார்கள். ஊரிலும் அதே தொல்லை--இங்கேயும் அதே தொல்லை. எமக்கென்றொரு சுதந்திர நாடிருந்தால் எம க்கேன் இந்தத் தொல்லைகள்? அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. அந்தச் சுதந்திர மண்ணிலேயே நான் வாழ்ந்து மடி வேனெ பரமேஸ்வரத்தார் உறுதி பூண்டார்.
பஞ்சாமிர்தம்
இரவு பதினொரு மணி, மகன் சஞ்சேயையும் அரவனைத்துக் கொண்டு நல்ல உறக்கத்தில் மூழ்கி இருந்தாள் விஜயா. அவளது கணவரான டாக்டர் சோமாஸ்கந்தன் எம்.எஸ்.சுப்புல ட்சுமியின் பழைய சங்கீதப் பாடல் கசெற்றை ரேப் றெக்கோ டரில் போட்டுக் கேட்டு ரசித்த வண்ணம் அதற்கேற்ப வயிலி னை சாதகம் பண்ணிக் கொண்டிருந்தார். ;ஸ்ரெதஸ்கோப்;;; ; பிடிக்கும் கை பிடில் பிடித்து வயிலின் வாசிப்பது அதிசயம் தான். மகன் சஞ்சே விழிப்புடன் இருந்தால் சேட்டுக் கொழு வும் ;ஹங்கரை ; கையில் ஏந்தி மறுகையை வயிலினாகப் பாவனைசெய்து கொண்டு தந்தைக்குப் போட்டியாக வயிலின் வாசித்துக் கொண்டிருப்பான். மேதைக்குப் பிறந்தது பேதை யாகுமா?
மெடிக்கல் கொலிஜ்ஜால் வெளிவந்ததும் தங்களது பாரம் பரியத்தையும் கலாச்சாரங்களையும் அடியோடு தூக்கி எறி ந்து விட்டு மேல் நாட்டுப் பாணியில் மதுவருந்தி களியாட்ட விழாக்களில் பொழுதைப் போக்கும் ஏனைய டாக்டர்களைப் போலன்றி டாக்டர் சோமாஸ் அடக்கமான சுபாவமும் இறை பக்தியும் கொண்டவர்.மது அருந்துவதே இல்லை,ஏன் சிகறட்கூட புகைப்பதில்லை. திருமணங்கள் சொர்க்கத்தில்; நிச்சயிக் கப்படுகின்றன என்பது இவர்களைப் பொறுத்தமட்டில் நூற்று க்கு நூறு வீதம் உண்மை.
ஹோலின் மத்தியில் தரையில் அமர்ந்த வண்ணம் வயிலின் வாசித்துக் கொண்டிருந்த சோமாஸ_க்கு யாரோ கதவில் தட் டிய சத்தம் காதில் விழவேயில்லை. அந்தளவுக்கு அவர் இன்னிசையில் மூழ்கிப்போயிருந்தார். நடுராத்திரி நேரம் டாக் டர் ஐயாவின் பங்களாக் கதவை படபடவெனத் தட்டினால் டாக்டர் ஐயா கோபித்துக் கொள்வார் என்ற அச்சத்தில் மீண்டும் மெதுவாகத் தட்டினாள் வனிதாமணி. சுகவீன முற் றிருந்த அவளது ஆறு வயதான வத்சலா தாயின் தோளில் துவண்டு கிடந்தாள்.கதவில் தட்டப்படும் சத்தத்தைக் கேட்டு விழித்தெழுந்த விஜயா கண்களை கசக்கிய வாறு ஹோலுக்
குள் வந்;தாள். என்னப்பா யாரோ கதவில தட்டின மாதிரி இருந்திது உங்களுக்குக கேக்கவில்லையா என்றாள்.
இசையுடன் இணைந்து இன்பலாகிரியில் மூழ்கியிருந்த சோ மாஸ் திடீரென சுயநினைவுக்கு வந்தார். காற்றில் உயரப்பற
ந்து கொண்டிருந்த பட்டம் திடீரென நூலறுந்து தள்ளாடிச் சரிந்தது போலிருந்தது அவருக்கு. சேட்டை அணிந்து கொ ண்டு போய் கதவைத் திறந்தார்.
'மன்னிச்சுக் கொள்ளுங்க டாக்டர் ஐயா இரவு நேரத்தில வந்து உங்களுக்கு இடைஞ்சல் தந்திட்டன். என் மகளுக்கு திடீரெனச் சுகமில்லாமல் வந்திட்டுது. தலையைச் சுத்துது, வயித்தைப் பிரட்டுது, சத்தி வாற மாதிரி இருக்குது என்று துடிதுடித்தாள். நானும் சரியாப் பயந்து போனன். ஆசுப்பத்தி ரிக்குப் போறதுக்கு இந்த நேரத்தில காரும் பிடிக்க முடியா தையா.அதாலதான் உங்களிட்டக்கொண்டு வந்தனான் குறை நினைக்காதேங்கோ ஐயா" என்றாள் வனிதாமணி.
விஜயா கொண்டு வந்து கொடுத்த ;ஸ்ரெதஸ்கோப் ;பினை காதில் மாட்டிக் கொண்டு வத்சலாவின் நெஞ்சுப் புறத்தையும் முதுகுப் புறத்தையும் சோதிச்சுப் பார்த்தார் சோமாஸ். சாப்பா ட்டில ஏதோ வித்தியாசம் இருந்திருக்கு, பழைய சாப்பாடு ஏதாவது சாப்பிட்டவவா? என்றார்.
'இரவு கோயிலுக்குப் போய் வந்தோம் ஐயா. வந்ததும் தன க்குப்பசிக்கவில்லை ஒன்றுமே வேணாமென்று சொல்லிப் படு த்;தா. கொஞ்ச நேரத்தில தலையைச் சுத்துது, வயித்தைப் பிரட்டுது என்று அழத்தொடங்கி விட்டா."
'கோயில்ல ஏதாவது சாப்பிட்டாவா? "
'ஓமோம் டாக்டர் ஐயா கோயில்ல பஞ்சாமிர்தம் சாப்பிட்டவ"
'மூலஸ்தானத்தில இருக்கிற முருகனின் கற்சிலைக்கா அல் லது வசந்த மண்டபத்தில் இருக்கிற வெண்கலச்சிலைக்கா அபிN~கம் நடந்தது? "
ஷஷவசந்த மண்டபத்து வெண்கலச் சிலைக்குத் தான் டாக்டர் ஐயா. இண்டைக்கு அம்மாவும் நீங்களும் கோயிலுக்கு வரவி ல்லை. ஆறுமுகப் பெருமானுக்கு அபிN~கம் செய்து பட்டுச் சாத்திமாலையும் அணிவித்துசெகசோதியாக இருந்தார் ஐயா|;
'செப்புக் கிண்ணத்தில பாலையோ,பழத்தையோ அதிகநேரம் வைத்திருந்தால் அதில செழும்பு ஊறி சாப்பிட முடியாமல் போய்விடும் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? "
'ஆமாம் டாக்டர் ஐயா ஆனா மகள் இண்டைக்குப் பால் கூட குடிக்கவில்லையே,"
'கோயில்ல சாப்பிட்ட பஞ்சாமிர்;தம் தான் இவவுடைய வருத் தத்துக்குக் காரணம். வெண்கலச்சிலையின் உச்சியில் ஐயர்
பிசைந்த பழங்களைத் தப்பி அது சுவாமியின் உடலால் வடி ந்து பாதத்தில் வீழ்ந்ததும் அதை வழிச்செடுத்து அள்ளிச் சட்டியில் போட்டு பஞ்சாமிர்தம் என்று சொல்லி அடியார்க ளுக்குக் கொடுக்கிறார்கள். அப்படிச் செய்யும் போது வெண் கலச்சிலையில் பழங்கள் பட்டதும் செழும்பு ஊறி விடும். அந்தச் செழும்பு எங்களுக்கு நஞ்சு மாதிரி இருப்பதால் எங் கட வயிற்று உறுப்புக்கள் அதைச் செமிபாடடைய விடாமல் வெளியேற்றி விட முனைகின்றன. அதனால் தான் வயிற்றுப் பிரட்டலும் தலையைச் சுற்றி வாந்தி வாற மாதிரியும் இரு க்கும். கடவுள் பிரசாதமென்று எண்ணிக் கண்டதையும் வாங் கிச் சாப்பிடக்கூடாது. சைவக்கார டாக்டராக இருந்து கொண் டும் இப்படிச் சொல்லுகிறேன் என்று நினைக்க வேண்டாம். சுத்தம் சுகம் தருமென்று சொல்லுறது உங்களுக்குத் தெரி யும் தானே."
நித்திரைத் தூக்கத்திலிருந்த விஜயாவுக்கு கணவரின் பிரச ங்கத்;தை கேட்க விசராக இருந்தது.வருத்தமென்று கொண்டு வந்த பிள்ளைக்கு மருந்தைக் கொடுத்தனுப்பாமல் பிடித்து வைத்துக் கொண்டு பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கிறார் என மனதுக்குள் புறுபுறுத்துக் கொண்டாள்.
'நீங்க சொல்லுறது சரிதான் டாக்டர் ஐயா. செழும்பூறின பஞ் சாமிர்தத்தை சாப்பிட்டது தான் மகளுக்குப் பிரச்சினையாகப் போய்ச்சுது. மருந்து கொடுத்தால் உடனேயே சுகமாகி விடு மா டாக்டர் ஐயா? "
'இதுக்கு மருந்தே தேவையில்லை வீட்ட போனதும் வாய்க்கு ள்ள விரலை விட்டு சக்தி எடுத்தால் வயிற்றுக்குள்ளே செமி யாமல் இருக்கிற செழும்பூறின பஞ்சாமிர்தம் வெளியில வந் திடும். அதோடு வருத்தம் குணமாகிவிடும். எதுக்கும் நான் கொஞ்சம் டிஸ்பிறின் தாறன் சத்தி எடுத்து களைப்பு ஆறிய பின்ஒரு டிஸ்பிறினைப் போட்டு தண்ணி குடிக்கக்கொடுங்கோ. காலையில் எழும்பும்போதுஅவநல்ல சுகமாக இருப்பா."
'நீங்க செய்த உதவிக்கு மிக்க நன்றி ஐயா. இதில இருபது ரூபா இருக்குது வைத்துக் கொள்ளுங்கோ."
'வேண்டாம் வேண்டாம் அயல் வீட்டுக்காரரான உங்களிட்ட நான் காசு வாங்க முடியுமா? நாளைக்கு நான் உங்களிட்ட ஏதாவது உதவிக்கு வந்தால் பெருந்தொகையான காசு தர
வேண்டி வந்திடும். ஆனதினால உங்களிடம் நான் காசு வாங்க மாட்டன் போய் வாருங்கோ" என நகைச்சுவையாகக் கூறி அனுப்பி வைத்தார். டாக்டர் தொழிலை பணம் சம்பா திக்கும் தொழிலாக சோமாஸ் என்றுமே கருதியது கிடை யாது. ஏழை எளிய மக்களுக்கு தனது சேவையை ஒரு தொண்டாகவே செய்து வந்தார். வைத்தியசாலையில் பணிபு ரிவதற்கான சம்பளத்தை மாத்திரம் பெற்றுக் கொள்வாரே தவிர தனிப்பட்ட விதத்தில் ஆபத்து வேளைகளில் செய்யும் சேவையை தொண்டாகவே செய்து வந்தார். ஓய்வு கிடைக் கும் வேளைகளில் இசைக் கச்சேரிகளில் பங்கு கொண்டு வயிலின் வாசித்து வருவார். வயிலின் என்றால் அவருக்கு வைட்டமின் மாதிரி.
'என்னப்பா நடுச்சாமத்தில வருத்தமென்று வாற ஆக்களுக்கு உடனடியா மருந்தைக் கொடுத்து அனுப்பிறத விட்டுப் போட் டு லெக்ஸர் அடிச்சுக் கொண்டு இருக்கிறீங்க. சரி கதவைப் பூட்டிப் போட்டு வந்து படுங்கோ" எனச் சினந்தாள் விஜயா.
;பிறிவென்சன் இஸ் பெற்றர் தான் கியூவர் ; அதாவது நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளுறது மருந்தை விட நல்லதெ ன்பது உமக்குத் தெரியும் தானே. அதுகளுக்கு உடனே மரு ந்தைக் கொடுத்து அனுப்பி வைக்க எனக்குத் தெரியாமல் இல்லை. நோய்க்கான காரணத்தை அதுகளுக்கு விளங்கப்ப டுத்தி விட்டால் அதுகள் கண்ணை மூடிக்கொண்டு கண்டதை யும் திண்டு வருத்தத்தை தேடிக்கொள்ளாமல் சுகதேகிகளாக இருக்குங்கள்.
நோயாளிகள் புத்திசாலிகள்ஆனால் அப்புறம் உங்கட பிழை ப்புக் கெட்டு நீங்க தான் சாப்hபிட வழியில்லாமல் பஞ்சாமிர் தத்தோடு கண்டதையும் தின்ன வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்" எனக் கூறிக் கொண்டு படுக்கையில் சாய்ந்து போர் வையால் போர்த்துக் கொண்டாள்.
சாது மிரண்டால்
கையில் துப்பாக்கியுடனும் கொலை வெறியுடனும் கணே சன் காத்து நிற்கின்றார். இதுவரையில் எத்தனையோ சிங் கள இராணுவத்தினரைக் கொன்று விட்ட போதிலும் அவ ரது கொலை வெறி இன்னும் அடங்கவில்லை.
சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வாறு ஒருவரை மாற்றி அமைக் கும் என்பதற்கு கணேசன் ஓர் உதாரண புரு~ர். தெய்வ பக்தரான கணேசன் ஒருதருக்கும் எள்;ளளவு பொல்லாங் கும் செய்ய மனதால்கூட நினைத்துப் பார்க்காதவர். தெரு வால் நடந்து போகும் போது எறும்புகள் ஊர்வதைக் கண்டால் அவற்றை மிதித்து கொல்லக் கூடாதென நினை த்துவிலகி நடந்து செல்பவர். அந்தளவுக்கு மென்மையான இதயமும் ஜீவராசிகளிடத்தில் இரக்கமும் கொண்டவர்;. உயிர்க் கொலை பஞ்சமா பாதகங்களில் ஒன்றெனக் கரு தும் கணேசன் கொலைகாரரைக் கண்டாலே தூர விலகி ஓடுபவர்.
சாதுவாயிருந்த கணேசனை கொலை வெறியராக மாற்றிய அந்தச் சம்பவம் நடைபெற்று பதினைந்து ஆண்டுகள் பறந் தோடிய பின்னரும் அதுநேற்று நடந்தாற் போன்று இன்றும் அவரது மனத்திரையில்ஆழப் பதிந்து போயிருந்தது. அவரு க்கு மட்டுமா? -- 1983ம் ஆண்டு ஜூலை மாதம் கொழும் பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழ்ந்த எத்தனை யோ தமிழ்க் குடும்பத்தினருக்கு இதயத்தையே கசக்கிப் பிழியும் வேதனை மிக்க துயரச் சம்பவங்கள் நிகழ்ந்தன. கண் முன்னிலையில் கொலை வெறியர்களிடம் கணவன்மா ரையும், மனைவிமார்களையும்; பறிகொடுத்தோர் அத்தனை பேரின் உள்ளத்திலும் அந்தப் பயங்கரச் சம்பவம் ஆழப்பதி ந்திருக்கிறது.
கொழும்பில் தெமட்டக்கொடை ;சிந்தெட்டிக் ;புடவைத் தொ
ழிற்சாலையில் கணேசன் பத்து வருட காலமாக குமாஸ்த் தாவாகப் பணியாற்றி வந்தார். அவரது அமைதியான குண த்தைக் கண்;ட சக தமிழ் ஊpழி;யர்கள் மாத்திரமன்றி சிங்
கள ஊழியர்கள் கூட அவர் மீது மிக்க மரியாதை கொண் டிருந்தார்கள். சிங்கள ஊழியர்கள் அவரை கணேசன் மாத்தையா என்றழைக்காமல்; ;;கண தெய்யோ ;(விநாயகப் பெருமான்) என்றே அழைப்பார்கள். அதே கணதெய்யோ இன்று விடுதலைப் புலி இயக்கத்தில் சேர்ந்து கையில்
துப்பாக்கியுடன் வன்னிப் பகுதியில் பத்திரகாளி வேடத்தில் நிற்பதை அந்தச் சிங்கள ஊழியர்கள் கண்டால் நம்பவே மாட்டார்கள்.
கணேசன் 1978ம் ஆண்டு திருமணம் செய்து தெமட்டக் கொடையில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து மனைவி யுடன் தனிக் குடித்தனம் ஆரம்பித்தார். அடுத்தவர்களுக்கு இடைஞ்சலின்றி தாங்களும் தம்பாடுமாக இருந்தார்கள். அயலிலுள்ள சிங்களவர்களுடன் அன்புடன் பழகி வந்தார் கள். அவர்களது இரண்டாண்டு கால இல்லற வாழ்வின் அறுவடையாக ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை க்கு குபேரனெனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார் கணேசன். அதிகாலை ஐந்து மணிக்கு மகனின் குதூகல சிரிப்பொலி கேட்டு கண்விழிக்கும் கணேசன் குபேரனுடன் சிறிது நேரம் சிரித்து விளையாடி விட்டுக் குளிக்கச் செல்வார். குளித்து முடிந்து கடவுளைத் தியானம் செய்து திருநீற்றுப் பூச்சுடன் மகனைத் தூக்கி மடியில்வைத்து தாலாட்டிவாறு மகனுக்கு கதை கூறி மகிழ்வார். மனைவி காலைச் சாப்பாடு தயார் செய்ததும் சாப்பிட்டு விட்டு வேலைக்குக் கிளம்பி விடு வார். போகும் போதும் மகனது கன்னத்தில் செல்லமாக கிள்ளி முத்தமிட்டு விட்டுச் செல்வார்.
அலுவலகத்தில் கூட மகனின் சிரித்த முகம் நினைவுக்கு வந்ததும் அவர் தன்னை மறந்து சிரித்து விடுவார். அதன் பின்னரே தான் சிரித்ததை யாராவது கண்டிருப்பார்களோ என எண்ணி அக்கம் பக்கம் திரும்பிப் பார்ப்பார். மாலை யில் வீடு திரும்பும் போது மனைவி மங்களம் அவருக்காக வடையோ முறுக்கோ செய்து வைத்திருப்பாள். குழந்தை பிறப்பதற்கு முன்னர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் உடை மாற்றி முகம் கழுவி மனைவி செய்து வைத்திருக் கும் பலகாரத்தை ஆசையோடு சாப்பிட்டு தேநீரையும் குடி த்து விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார். ஆனால் இப்
போதெல்லாம் அப்படியல்ல. வேலையால் வந்து முகம்
கழுவி மகனைத் தூக்கி மடியில் வைத்து சிறிது நேரம் விளையாடிய பின்னரே அவர் பலகாரத்தையும் சாப்பிட்டு தேநீர் குடிப்பார். அந்தளவுக்கு மகன்மீது அன்பும் பாசமும் வைத்திருந்தார்.
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக மகன் குபேரன் வளர்வதைக் கண்டு கணேசன் சந்தோ~ப்பட்ட போதிலும் அவரது அடி மனத்தில் ஒருவித பீதி நெருடிக் கொண்டிருந்தது. மகன் பிறந்த போது அவனது ஜாதகத் தை கணிக்க யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல சோதிடர் ஒருவ ரிடம் கொடுத்திருந்தார். ஜாதகத்தைக் கணித்த சோதிடர் இந்தப் பிள்ளையின் சாதகம் குபேரனின் சாதகம் போன்று மிகச் சிறந்த சாதகம். ஆனால் இப்பிள்ளைக்கு மூன்று வயது நடக்கும் போது பிள்ளைக்கும் தாய்க்கும் தத்து இருக்கிறது. தெய்வத்தின் கிருபையினால் தத்திலிருந்து தப் பி விட்டால் பின்னர் உங்களுக்கு அதி~;டம் தான் எனக்கூ றியிருந்தார். மகனது ஜாதகம் குபேரனது ஜாதகம் போன்ற தெனக் கூறியதை யடுத்தே மகனுக்கு குபேரன் என்றே பெயர் வைத்தார் கணேசன். தினமும் தெய்வத்தை தியானி க்கும் போது இறiவா எனது மாம்பழக் குஞ்சுக்கு எதுவித ஆபத்தும் வரவிடாமல் காப்பாற்றிக் கொள் என வேண்டிக் கொள்வார்.
மகனது மூன்றாவது பிறந்த தினத்தன்று நெருங்கிய உறவி னர்களையும் சில நண்பர்களையும் வரவழைத்து மகிழ்வு டன் கொண்டாடினார்கள். நாட்கள் நகர்ந்து கொண்டிருந் தன. ஜூலை 25 ம் திகதி வழமை போல் மகனது சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு கண்விழித்தார் கணேசன். மகனோடு சிரித்துக் கதைத்து விளையாடிக் கொண்டிருந்த போது யாரோ தூரத்தில் கூச்சலிடும் சத்தம் கேட்டது. காது கொ டுத்துக் கேட்டார். அதிகாலை நேர அமைதியைக் கலைத் துக் கொண்டு வந்த 'ஐயோ கொல்லாதே கொல்லாதே" என்ற அலறல் கேட்டு மங்களமும் துடித்துப் பதைத்துக் கொண்டெழுந்தாள். என்ன நடக்கிறது என்பதை கணேச னால் ஊகித்துப் பார்க்க முடியாமல் இருந்தது. தெமட்ட க்கொட கிராமமே விழித்தெழுந்து வீதியோரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இவர்களுக்கு வீட் டை விட்டு வெளியே வரவே பயமாக இருந்தது. 'என்னப்
பா யாரையோ குத்திக் கொலை செய்து போட்டாங்கள் போலிருக்குது. எங்கட தமிழ் சனத்தைதான் கொலை செய்
துபோட்டாங்கள் போல. அதுதானே கொல்லாதே கொல் லாதே என்று கத்துதுகள்" என்றாள் மங்களம்.
'என்ன இழவோ தெரியவில்லை நீ பிள்ளையின்ர சூப்பி யை எடுத்து தந்திட்டு லைற் எல்லாத்தையும் அணை. சூப் பியைக் கொடுத்து பிள்ளையை சத்தம் போட விடாமல் வைத்திருப்பம். சத்தம் கித்தம் கேட்டால் தப்பித் தவறி எங் கட வீட்டுக்குள்ளேயும் வந்து விடுவான்கள்"என்றார் கணே சன். அவருக்கும் மனதுக்குள் பயமாகத் தானிருந்தது. இரு ந்தாலும் இறைவன் தன் குடும்பத்தைக் காப்பாற்றி விடுவா ரென நம்பினார்.
சுpறிது நேரத்தில் வெறிக் கூச்சலுடன் கும்பலொன்று அவர து வீட்டை நோக்கி வருவதை அவர்களால் உணர முடிந் தது. 'அடோ கரித் தெமழோ எலியட்ட என்ட" (அட பறத் தமிழா வெளியே வாடா) எனக் கத்திக் கொண்டே வீட்டின் முன் கதவை உலுப்பினார்கள். கணேசன் மடியில் கிடந்த குழந்தையை தோள் மீது சாய்த்து அணைத்துக் கொண் டார். மங்களமும் பயத்தில் கணவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு திருதிருவென விழித்தாள். கணேசன் செய்வதறி யாது திகைப்புற்று நிற்கையில் கதவை உடைத்து திறந்து கொண்டே உள்ளே நுழைந்தது கொலைகாரக் கும்பல். கையில் கத்தி வைத்திருந்த ஒருவன் ஓடி வந்து கையில் குழந்தையுடன் நின்ற கணேசனை காலால் எட்டி உதைத் தான். குழந்தையை இறுகக் கட்டி அணைத்தவாறே மல் லாக்க விழுந்தார் கணேசன். குழந்தையை வெட்டிப் போடு வானோ என்ற பயத்தில் குழந்தையை இரு கைகளாலும் மூடி மறைத்தவாறே 'கருணாகர அப்பிட்ட முக்குத் கரண்ட எப்பா. வடு முக்குத்தரி ஓணனங் அறங் யண்ட" (தயவு செய்து எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம். ஏதாவது பொருள் வேண்டுமானால் எடுத்துக் கொண்டு போங்கள்" என்று கெஞ்சினார்.
'ஒயாகே வடு தமாய் அப்பிட்ட ஓண" (உன்ர சரக்குத் தான் எங்களுக்கு வேணும்) எனக் கூறிக்கொண்டே ஒரு வன் அவரது மனைவியின் சேலையை பிடித்திழுத்துக் கிழி த்தான். இருசிங்களக் காடையர்கள் அவளை முழு நிர்வா ணமாக்கி விட்டு அவளது மார்பகங்களை வாஞ்சையுடன்
பற்றிப் பிடித்துக் கசக்கி மகிழ்ந்தார்கள். வலி தாங்கமாட்டா மல் வீறிட்டுக் கத்தினாள் மங்களம். கணேசனுக்கு உள் ளம் காலிலிருந்து உச்சிவரை இரத்தம் கொதித்தது.மரண
பரியந்தம் அவளைக் கண் கலங்க விடாது காப்பாற்றுவேன் எனத் திருமணத்தன்று செய்து கொடுத்த சத்தியம் அந்த நேரத்தில் அவருக்கு ஞாபகத்துக்கு வந்தது. மகனை இறக் கிவிட்டு தன் உயிரையும் துச்சமென மதித்து மனைவி யைக் காப்பாற்ற ஓடினார். ஓருவன் அவரைத்தள்ளி கீழே வீழ்த்த விட்டு அருகிலிருந்த ரி.வி.யின் வயரை இழுத்தறு த்து அதனால் கணேசனின் கைகளை பின்புறமாக மடக்கிக் கட்டினான். பின் அவரது கண் முன்னிலையிலேயே அவர் கள் மங்களத்தை மாறி மாறிக் கற்பழித்தார்கள்.
புலிகளின் வாயில் சிக்கிய புள்ளிமானாக மங்களமும் மூர்ச் சை அடையும் வரை துடிதுடித்துப் போராடினாள். அதைப் பார்த்து பொறுக்க முடியாத பச்சிளம் பாலகன் கூட அம்மா அம்மா என அலறிக் கொண்டு தாயிடம் ஓடினான். அந்தப் பச்சிளம் பாலகனை ஒருவன் அதன் கால்களில் பிடித்துத் தூக்கி சுவர் மீது ஓங்கி அடித்தான் ஒரு அடி அந்தச் சண் டாளன். கணேசன் பற்களை நறும்பியவாறு கண்களை மூடிக் கொண்டார். குழந்தைக்கு அலறக்கூட அவகாசமிருக்கவில்லை. சுவரும் நிலமும் இரத்த மயமாகியது. மங்க ளம் மூர்ச்சையுற்ற பின்னரும் கூட ஒருவன் தனது காமவெ றியை தீர்த்துக் கொண்டிருந்தான். அது முடிந்ததும் 'லங்கா அப்பே றட்ட சிங்கள றட்ட" (இலங்கை எங்கட நாடு சிங்கள நாடு) எனக் கூறிக்கொண்டே மல்லாந்து கிட ந்த மங்களத்தின் நெஞ்சில் கத்தியைப் பாய்ச்சினான். அதைப் பாhத்து மயங்கி வீழ்ந்தார் கணேசன். மங்களம் ஏற்கனவே மயக்க முற்றிருந்ததனால் மரண வேதனையை உணராமலே மரணமானாள்.
கணேசன் மயக்கம் தெளிந்து கண் விழித்த போது எல்லா மே பகற்கனவு போன்றிருந்தது. காhச்; சில்லுக்குள் சிக்கி நசிந்த தவளை போல் கிடந்த மகனது உடலையும், மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரி மான் போல் கிடந்த மங்களத் தின் உடலையும் பார்த்த போது அவரது இரத்தமே கண் ணீராகப் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. திக்பிரமை கொண்ட அவரும் உயிரற்றுப் போய்விட்ட சடலம் போல் கிடந்;தார். மறுநாள் காலையில் அவரது வீட்டுக்குவந்த அகதி முகாம்
குழவினர் அவரை வலுக்கட்டாயமாக அகதி முகாமுக்குத் துர்க்கிச் சென்றனர். அங்குசென்ற பின்னரும் கூட கணே சன் சித்தப் பிரேமை பிடித்தவர் போல் கூரையையே விழித் துப் பார்த்துக் கொண்டிருந்தார். கூரையில் தொங்கிக் கொ
ண்டிருந்து மகன் குபேரன் சிரிப்பது போன்றிருந்தது. திடீ ரென அக்காட்சி மாறி சிங்களகொலை வெறியர்கள் நடாத் திய கொடூரக் காட்சி மனத்திரையில் தோன்றி மனதை ரம்பத்தால் அறுத்தது. புத்த பகவானே புத்தி கெட்ட இந்த சண்டாளப் பாவிகளுக்கு அழிவே இல்லையா எனக் கதறிப் புலம்பினார்.
அன்றிலிருந்து கணேசனுக்குஏறிய கொலை வெறி பதினை ந்து வருடங்களாகியும் இன்னமும் அடங்கவில்லை--எப்படி அடங்கும்? தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால் எம்மை கொடூரமாகக் கொலை செய்யும் கொடும் சிங்கள இனத் தையே கொன்றளிக்க முடியாவிடினும் இயன்ற வரை எத்த னை பேரைக் கொல்ல முடியுமோ அத்தனை பேரையும் கொண்டு போட்டுத் தான் சாவன் என்ற ஆக்ரோசத்துடன் கையில் துப்பாக்கியுடன் பத்திரகாளி ரூபத்தில் சிங்கள ஆமிக்காரன்களை எதிர்பார்த்து வன்னிக் காட்டுப் பற்றை க்குள் பதுங்கி இருக்கிறார் கண தெய்யோ கணேசன்.
தொலைதூரத்துக்கு அப்பாலும்...
பாக்கியம் ஒருமாத காலமாக கண்ணீரும் கம்பலையுமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறாள். வீட்டில் சமையலும் இல்லை சாப்பாடும் இல்லை. அதனால் மனதைப் போல வே அவளது உடலும் தளர்ந்து போய்விட்டது. அழுதழுது கண்ணீரும் வற்றி, சீறிச் சீறி மூக்கும் கொவ்வைப் பழம் போல் சிவந்து விட்டது. 'ஐயோ என்ர கண்மணி எங்கே? அவளுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லையே கட வுளே" என ஈனக் குரலில் அனுங்கிக் கொண்டிருந்தாள். உறவினர்களின் வற்புறுத்தலால் தண்ணியும் தோடம் பழ ஜூஸ_ம் குடித்தாள். அதனால் அவளது உயிர் இன்னும் உடலை விட்டுப் பிரியாது கூண்டுக் கிளி போல் அடைபட் டுக் கிடக்கிறது.
பருவப் பெண்ணான மகளைக் காணவில்லையென பொலி ஸாருக்குத் தகவல் கொடுத்ததும் அவர்கள் விரைந்து வந்து பாக்கியத்தையும் அவளது கணவர் கந்தசாமியையும் துருவித் துருவி விசாரித்தார்கள். பாக்கியத்துக்கு ஆங்கி லம் பேச முடியாததால் அவள் கூறிய விபரங்களையும் கந்தசாமியரே பொலிஸாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மொழி பெயர்த்தார். மறுநாள் அச்செய்தி பத்திரிகைகள், வானொலிகள், டெலிவி~ன்கள் அனைத்திலும் தலைப்புச் செய்தியாக வெளிவந்தன. தமிழ் மக்கள் மத்தியில் மாத்தி ரமல்ல அனைத்து மக்களிடையேயும் ஒரே பரபரப்பு.
மகள் கமலினியுடன் நெருங்கிப் பழகியோரது பெயர் விபர ங்களைக் கேட்டறிந்த பொலிஸார் அத்தனை பேரையும் விசாரணை செய்தும் கூட நம்பகரமான தகவல்கள் எது வுமே கிடைக்கவில்லை. அதனால் கமலினியின் மறைவு மர்மமாகவே இருந்தது. ஒருவார காலமாக அயலட்ட மெல் லாம் சல்லடை போட்டுத் தேடுதல் நடாத்திய பொலிஸார் பொது மக்களைத் தகவல் தருமாறு அறிவிப்புச் செய்து விட்டு ஓய்ந்து போனார்கள்.
கந்தசாமியர் வேலைக்குச் செல்வதையும் கைவிட்டு தினமு
ம் அதிகாலையில் அத்தனை ஆங்கிலப் பத்திரிகைகளை யும் வாங்கி தனது மகளைப் பற்றிய செய்தி ஏதாவது
வெளிவந்திருக்கிறதா எனப் பார்த்துப் பார்த்து சலிப்படை ந்து விட்டார். எங்கள் பிள்ளையை மீட்டுத் தந்தால் அபி N~கம் செய்து அன்னதானமும் போடுகிறோம் என றிச்மெ ன்ட் ஹில் பிள்ளையார், துர்க்கை அம்மன், ஐயப்பன் கோ யில் அனைத்திலும் நேர்த்தி வைத்தார்கள். மகளின் குறிப்புடன் சோதிடர்களைத் தேடி ஓடினார்கள். 'பிள்ளைக்கு வியாழன் பன்னிரண்டாம் இடத்துக்கு மாறியிருக்குது. சீதை க்குப் பன்னிரண்டில வியாழன் வந்த போது தான் அவ இராமபிரானோடு காட்டுக்குப் போய் பின்னர் இராவண னால் கடத்திச் செல்லப் பட்டார். அதே போன்று இந்தப் பிள்ளையையும் யாரோ கடத்திச் சென்று அவவுடைய விருப்பத்துக்கு மாறாக தடுத்து வைச்சிருக்கினம். பிள்ளை யின் உயிருக்கு ஆபத்தில்லை. அதையிட்டு நீங்கள் கவ லைப் பட வேண்டியதில்லை. வெள்ளிக் கிழமையன்று நவ க்கிரகத்துக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழ பகவான் எப்படியும் பிள்ளையை மீட்டுத் தருவார்" என்றனர் சோதிட ர்கள்.
ஊரில் இருந்தால் ஆமிக்காரன்கள் பிள்ளையை கடத்திக் கொண்டு போய் மான பங்கம் செய்து கொன்று போடுவா ங்கள் எனப் பயந்தே குடும்பத்தோடு கனடாவுக்கு வந் தோம். தொலைதூரம் கடந்து வந்தும் சனியனின் தொல் லை தொலையாமல் சிப்பிலி ஆட்டுதே என எண்ணி மனம் கலங்கினார் கந்தசாமியர்.
'நான் கேக்கிறன் எண்டு தப்பாக நினைக்காதே கந்தசாமி, சிலவேளை உன் மகளை அவவோடு படிக்கிற எங்கட பொடியள் யாராவது காதலிச்சு அவவை கலியாணம் செய் யும் யோசனையில கடத்திக் கொண்டு போயிருப்பினமோ" என்றார் கந்தசாமியாரின் நண்பரான முருகேசர்.
இதே கேள்வியைத் தானே பொலிஸ்காரன்களும் திரும்பத் திரும்ப கேட்டாங்கள் அண்ணே. அப்படி எங்கட மகள் யாரையாவது காதலிச்சதாக எங்களுக்குத் தெரியாதண் ணே. அது உண்மையாக இருந்திருந்தால் எப்படியோ எங் களுக்கு தெரிய வந்திருக்குமல்லவா. மகளும் எங்கயும் கண்டபடி சுற்றித் திரியிற ஆளுமில்லை. பள்ளிக்கூடம் முடி ந்ததும் உடனேயே வீட்டுக்கு வந்துவிடுவா. வேறு எங்க
யாவது போவதாயிருந்தாலும் எங்களிட்ட சொல்லிப் போட் டு எங்கட அனுமதியோடு தான் போய் வருவா. நாங்க சந் தேகப்படக் கூடிய விதத்தில அவ நடந்து கொண்டதே இல்லை. அப்படி நல்ல பிள்ளையாக இருந்தவ திடீரெனக் காணாமல் போனதை நினைக்கத் தான் பெரும் கவலை யாக இருக்குதண்ணே.
'பிள்ளையின்ர விருப்பத்துக்கு மாறாக யாராவது கடத்திக் கொண்டு போயிருந்தால் எப்படியாவது கத்திக் குளறி சந் தேகத்தை ஏற்படுத்தி இருப்பா. அதைப் பார்த்து யாராவது உடனே பொலிஸ_க்குப் போண் பண்ணி இருப்பினம். அல்லது யாராவது பிள்ளையை கெடுத்துப்போட்டு மோச மான காரியம் ஏதும் செய்திருந்தாலும் இதுவரையில் துப்புக் கிடைத்திருக்கும். ஊரில கிருசாந்தியைப் போல் எத்தனை பேருக்கு இந்தக்கதி நடந்திருக்குது. அதே கதி இஞ்சயும் எல்லோ நடக்குது."
'அது தானே முருகேசண்ண,என்ர பிள்ளையை யார் கடத் திக் கொண்டு போய் வைச்சு என்னென்ன சித்திரவதை எல்லாம் செய்யிறாங்களோ தெரியவில்லை. நாமெல்லாம் இருந்து கொண்டும் தன்னைக் காப்பாற்ற வரவில்லையே என்று கவலைப்பட்டு என்ர குஞ்சு பதைபதைக்குதோ தெரி யாது. எங்களைப்போலவே அவளும் தண்ணி வென்னியோ சாப்பாடோ இல்லாமல் பட்டினி கிடக்கிறாளோ என்னவோ. கிளிப்பிள்ளை மாதிரி செல்லமாக வளர்த்து பூனையிட்ட பறிகொடுத்த கதையாகப் போச்சுதண்ணே".
'கனடாப் பொலிஸார் எங்கட பொலிஸார் மாதிரி கடுகடுப் பான ஆக்களில்ல கந்தசாமி. குற்றவாளிகளை கைது செய் தாலும் அவையள அடிச்சு வெருட்ட மாட்டினம். அடிச்சால் தங்களுக்கு எதிராக வழக்குத் தொடருவாங்கள் என்ற பயம். அதால தீர்ப்பு வழங்குகிற முழுப்பொறுப்பையும் நீதி
பதியிடமே விட்டுப்போட்டு தாங்கள் தப்பிக் கொள்ளுவினம். அடிச்சுத் தண்டித்தால் தானே குற்றவாளிகள் திருந்துவாங்
கள். இஞ்ச கைது செய்யப்பட்ட எத்தனையோ பேர் கொ ஞ்ச நாள் விளக்க மறியலில இருந்து போட்டு விடுதலை யாகி சுதந்திரமாகத் திரியினம். துன்புறுத்தலும் இல்லை, தண்டனையும் இல்லை. அப்ப இவையள திருத்திறது எப்ப டி கந்தசாமி? "
'ஊரில குற்றவாளிகள் இல்லாத அப்பாவித் தமிழ் இளை ஞர்களை இராணுவத்தினர் கைது செய்து கொண்டு போய் தலை கீழாகக் கட்டித் தொங்க வைத்து அடிச்சு உதைச்சு
கழுத்தை பிளேட்டினால் வெட்டி, வெட்டுக் காயத்துக்குள்ள மிளகாய்த்தூளை அப்பி சித்திரவதை செய்தும் மண்வெட்டி யால அடித்தும் கொடூரமாக கொலை செய்து புதைக்கி றாங்கள். அதை தட்டிக் கேக்க ஆக்களில்லை. ஆனால் இஞ்ச குற்றவாளிகளுக்குக் கூட பொலிஸ்காரன்கள் தனி மனித சுதந்திரத்தின் கீழ் ஜனநாயக உரிமை வழங்கினம். என்ர மகள் காணாமல் போய் இன்றுடன் மூன்று கிழ மையாப் போச்சுது ஒரு தகவலுமே கிடைக்கவில்லை. எல்லாரும் போண் பண்ணி மகளைப் பற்றித் தகவல் கிடை ச்சுதா என்று எங்களைத் தான் கேக்கினமே தவிர இன்ன இடத்தில உங்கட மகளைக் கண்டோம் என்று வயித்தில பால் வார்ப்பார் எவருமில்லை அண்ணே. எனக்கும் நம்பிக்கை இல்லாமல் போச்சுது".
'சீச்சீ அப்பிடிச் சொல்லாத கந்தசாமி. கடைசி வரைக்கும் நம்பிக்கையை தளர விடக்கூடாது. பிள்ளையின்ர பலனின் படி உயிருக்கு ஆபத்து இல்லையென்று சாத்திரிமார் சொ ல்லி இருக்கினம். அதோட நீங்க எல்லாக் கோயில்களி லும் நேர்த்தி வைச்சிருக்கிறீங்க. ஆனதினால எப்படியோ கெதியில மகளைக் கண்டு பிடிச்சே தீருவீங்க. எதுக்கும் உங்கட அப்பாட்மென்டிலயோ அக்கம் பக்கத்திலயோ இருந்த பொடியன்கள் யாராவது தலைமறைவாகி இருக் கினமோ என்று விசாரிச்சுப் பாருங்கோ" எனக்கூறி விட்டுச் சென்றார் முருகேசர்.
'நயாகரா அருவியில் பெண்ணின் சடலம்! யாருடையது என அடையாளம் காணப்படவில்லை" என்ற தலைப்புடன் ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்த செய்தியை வாசித்த
தும் கந்தசாமியரின் இதயமே ஒருகணம் ஸ்தம்பிதம் அடை ந்தது. உடனடியாகப் பொலிஸ் நிலையத்துக்குப் போண் பண்ணி பதட்டத்துடன் அச்செய்தி பற்றி விசாரித்தார். அது ஒரு வெள்ளை இனப் பெண்ணின் சடலமெனப் பொலிஸார் கூறிய பின்னரே அவரது இதயம் மீண்டும் இயங்கியது.
கமலினி காணாமல் போன நாள் முதல் கந்தசாமியரும் பாக்கியமும் கட்டிலில் படுத்து நின்மதியாகத் தூங்கியது கிடையாது. ஹோலில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டு கோழித் தூக்கம் தூங்கினார்கள். நடுச்சாமத்தில் ;ஃபயர் எலாம் ; மாதிரி டெலிபோண் அலறியதும் துடித்துப் பதைத் துக் கொண்டு எழுந்தார் கந்தசாமியர். பாக்கியமும் திடுக்
குற்று கண்விழித்தாள். போணை எடுத்து கந்தசாமியர் ஹலோ என்றதும்,'ஒரு குட் நியூஸ். உங்களுடைய மக ளைக் கண்டு பிடித்து விட்டோம். இன்னும் ஒரு மணி நேர த்தில் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வருவோம்" என்று கூறிவிட்டு போணை வைத்தான் பொலிஸ்காரன்;.
மகளைக் கண்டு பிடிச்சிட்டினமாம் இன்னும் ஒரு மணித் தியாலத்தில இஞ்ச கூட்டிக் கொண்டு வருகினமாம் எனக் கத்திக் குளறி துள்ளிக் குதித்தார் கந்தசாமியர். மகளைக் கண்டு பிடிச்சிட்டாங்களாம் என்றதுமே துவண்டு போய்க் கிடந்த பாக்கியத்துக்கு எங்கிருந்து தான் திடீரெனப் பலம் வந்ததோ தெரியாது அவளும் துள்ளிக்கொண்டு எழுந் தாள். அமாவாசையாக இருண்டு போய் கிடந்த அவளது முகம் பறுவத்துச் சந்திரனாய் பளபளத்தது.
'எனது அப்பாட்மென்டுக்கு எதிரில் வசித்த ஒரு மெக்ஸிக் கோ நாட்டுக்காரன் எனக்குத் தெரியாமல் என்மீது ஆசை வைத்திருந்தானாம். எனது முழிக்கண்ணும் நீண்ட கறுப்புக் கூந்தலும் கவர்ச்சியை ஏற்படுத்தியதாம். அதனால் என்னை திருமணம் செய்யும் நோக்கத்துடன் கடத்திக் கொண்டு போய் ஒரு அறையினுள் பூட்டி வைத்திருந்தான். என்னைத் துன்புறுத்தவில்லை. ஆனால் தன்னைத் திருமணம் செய்யு மாறு அன்பாகவும் அதட்டியும் கேட்டான். படிப்பு முடிந்த பின்னரே நான் திருமணம் செய்வேனெனக் கூறி ஒரேயடி யாக மறுத்து விட்டேன்.அவனோ என்னை விடுவதாகத் தெரியவில்லை. அவனுக்குத் தெரியாமல் தப்பி ஓடுவதற் கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். இன்று தான் அதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. தப்பி ஒரே ஓட்டமாக ஓடி வந்து மெக்டொனால்ஸ் கடைக்குள் புகுந்து பொலிஸ_க்குப் போண் பண்ணுமாறு சொன்னேன்" என மூச்சு வாங்கவாங்க பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித் தாள் கமலினி.
பொலிஸார் கமலினிக்கு ஆறுதல் கூறி காரில் ஏற்றிச் சென்றனர்.அவள் அடையாளம் காட்டிய வீட்டினுள் புகுந்து அவளைக் கடத்திய இளைஞனைக் கைது செய்து கைவி லங்கு மாட்டினர். கமலினியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவளது வீட்டுக்கு அழைத்துச் சென் றனர். கமலினியைக் கண்டதும் பெற்றோரும் உற்றாரும்
கட்டித் தழுவி கண்ணீர் மல்கினார்கள். கமலினியும் நீண்ட நாட்களாக அவர்களைப் பிரிந்திருந்து கண்ட மகிழ்ச்சியில் தேம்பித் தேம்பி அழுதாள். அன்றிரவு அவர்கள் அனை வருக்குமே சிவராத்திரி.
தலைத் தீபாவளி
என்ன மாப்பிளே! இது உங்களுக்கு தலைத் தீபாவளி. எங்களுக்கெல்லாம் விருந்துச் சாப்பாடு தருவியளோ அல் லது பெண்டாட்டியைக் கண்டதோடு கைகழுவி விட்டு விடு வியளோ? தலைப்பொங்கல், தலை வருசமெல்லாம் வந்து போச்சுது. சக்கரைப் பொங்கல்,சைவச்சாப்பாடெல்லாம் எங் களுக்கு ஒத்து வராது. அதனால் அவற்றுக்கெல்லாம் உம் மை தொந்தரவு செய்யவில்லை. ஆனால் தீபாவளிப் பண்டி கைதானே எங்களுக்கேற்ற ஒரேயொரு தமிழ்ப் பண்டிகை. நல்லா தண்ணி அடிச்சு இறைச்சிக் கறியோட சாப்பிட்டு மகிழலாம். அந்த ஒரேயொரு பண்டிகையையும் நழுவ விட நாங்கள் தயாரில்லை. நிச்சயமாக தீபாவளி யன்று உன்ர வீட்டில தான் தண்ணியும் சாப்பாடும் என சந்திரனை வற்பு றுத்தினார்கள் அவனது நண்பர்கள்.
'அட கனடாவில இருந்து கொண்டும் தண்ணிக்கும் இறை ச்சிச் சாப்பாட்டுக்கும் இப்பிடித் தவிக்கிறீங்களேடா. அங்க ஊரில இருக்கேக்க தான் கிழமைக் கொருக்காவோ, மாத ததுக்கொரு முறையோ இறைச்சிச் சாப்பாடு சாப்பிடலாம். கொழும்பில இருக்கேக்க இறைச்சி சாப்பிட ஆசைப் பட்டு சாப்பாட்டுக் கடைக்குப் போனால் அவங்கள் வெங்காயக் குழம்புக்குள்ள நாலைஞ்சு இறைச்சித் துண்டைப் போட்டு ஆக்கிப் போட்டு காசு வாங்கும் போது மாத்திரம் இறை ச்சி சாப்பாடு என்று சொல்லி அநியாயமாக அறுப்பாங்கள். அதே பழக்கத்தை இஞ்ச கனடாவுக்கும் கொண்டு வந்திட் டாங்கள். கடைகளில போய் ;மட்டின் றோல் ; வாங்கினால் அதுக்குள்ள கிழங்குக் கறி தான் இருக்குது. ;மட்டின் ;துண் டு இருக்குதா எனத் தேடிக் கண்டு பிடிக்க கையோட பூத க்கண்ணாடியும் கொண்டு போக வேண்டி இருக்குது.
தீபாவளியன்று உங்களுக்கு ஆசைதீர, வயிறுமுட்ட இறை ச்சி சாப்பிட வேணுமென்டால் சைனீஸ் ரெஸ்ரோறண்டுக் குப் போங்க. எட்டு டொலருக்கு ;வுபே லஞ் ;சில மாட்டி றைச்சியோ, கோழி இறைச்சியோ உங்களுக்கு வேண்டிய
அளவு எடுத்தெடுத்துச் சாப்பிடலாம். உங்கட தண்ணி அடி ச்ச வாய்க்கு உறைப்புக்கு தனி மிளகாய் சோஸ_ம் வைச் சிருப்பான் மணியாய் இருக்கும். அதோடவயிறு இடம் கொடுத்தால் பழங்கள், ஐஸ்கிறீம்களும் சாப்பிடலாம். நான் இப்ப குடும்பஸ்த்தன். முந்தி பெச்சிலராக இருக்கேக்க செலவ ழிச்ச மாதிரி இப்பவும் செலவழிக்க முடியாது. கணக்குப் பார்த்துத்தான் செலவழிக்க வேண்டி இருக்குது.
யாழ்ப்பாணத்தில ஆமிக்காரன்கள் செல் அடிச்சதில அப்பு வுக்கும் சரியான காயமாம். காலில காயமென்ற படியால் உயிருக்கு ஆபத்து இல்லையாம். இருந்தாலும் அதைக் கேள்விப் பட்டதில் இருந்து மனம் வேதனையாக இருக் குது. வயது போன நேரத்தில அவருக்கு இப்பிடித் துன்பப் படவேண்டி இருக்குது. தீபாவளியைக் கொண்டாடக் கூட மனமில்லாமல் இருக்குது. இருந்தாலும் தலைத் தீபாவளி என்ற படியால் மனிசிக்கு ஒரு சேலையை மாத்திரம் வாங் கிக் கொடுத்திருக்கிறன்".
'அட சொறியடா சந்திரன் உன்னுடைய மனக்கவலை தெரியாமல் நாங்கள் உன்னோட பகிடி பண்ணிப் போட் டம். உண்மை தான் உன்ர அப்புவைப் போல இன்னும் எத்தனை ஆயிரம் பேர் ஆமிக்காரங்களின் அநியாயத்தி னால் வீடு வாசல்களில் இருக்க முடியாமலும், சாப்பாடு மருந்துகள் இல்லாமலும் எவ்வளவு தூரம் க~;டப்பட்டுக் கொண்டிருக்குதுகள். இரக்க குணமற்ற அரக்கச் சாதி எங்கட தமிழினத்தை வேரோடு அழிக்க முடிவெடுத்துப் போட்டு உலகத்தை ஏமாத்த சமாதானத் தீர்வு, சமாதானப் பேச்சு வார்த்தை என்று சும்மா பசப்பு வார்த்தை பேசிக் கொண்டிருக்குது"
'தர்மம் குன்றி அதர்மம் தலை விரித்தாடும் போது மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் என்றார் கிரு~;ண பகவான். அன்றொரு நாள் நரகாசுரன் என்ற அரக்கன் தான்பெற்ற தவ வலிமையினால் தலை க்கனம் பிடித்து தமிழ் மக்களைச் சித்திரவதை செய்த போது மகாவி~;ணுவாக அவதரித்து நரகாசுரனைக் கொன் றார். அத்தினத்தை தான் நாங்கள் தீபாவளி எனக் கொண் டாடி வருகிறோம்.
பின்னர் அரக்க குணம் படைத்த துரியோதனன் ஆகியோர் தர்ம புத்திரர்களான பஞ்ச பாண்டவர்களை சித்திரவதைப் படுத்திய போது அவர்களை அழிக்க கிரு~;ணராக அவ தரித்து அவர்களைக் கொன்றழித்து பகவத் கீதையையும் அருளிச் சென்றார்.
ஆனால் இன்று எமது சொந்த மண்ணில் வாழவிடாது விர ட்டி அடித்து சித்திரவதை செய்து வரும் அரக்க குலத்தை வேரறுக்க அவதாரம் எடுக்காது இருப்பது ஏனென்று விழ ங்கவில்லை. எமது அடிப்படை உரிமைகளைப் பறித்து அத்துடன் ஆண்டாண்டு காலம் சந்ததி சந்ததியாக வாழ் ந்து வந்த மண்ணையும் பறித்து எம்மினத்தையும் கொன்ற ழிப்பது அதர்மமில்லையா? தம் மண்ணையும்,தம்மினத்தை யும் பாதுகாத்துக் கொள்வதற்காக நமது இளந் தலை முறைகள் மேற்கொண்டு வரும் யுத்தம் தர்ம யுத்தமில்லை யா?
இது கலியுகமா அல்லது புலியுகமா? இப்போது கண்ணன் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டி தமிழினத்தைக் காக்கா மல் எல்லாமே அழிந்து போன பின் சுடுகாட்டில் பிணம் காத்த அரிச்சந்திரனாக அவதரித்து என்ன பயன்? எண்டை க்கு அவர் அவதரித்து எமது இனத்தைக் காப்பாற்றுவாரோ அன்றைய தினத்தைத் தான் நாங்கள் தீபாவளியாகக் கொ ண்டாட வேணும்" என்றான் சந்திரன்.
'நீ சொல்லுறதும் சரிதான் சந்திரன். நம்மட கண்ணன் தான் இன்னும் அவதாரம் எடுக்கவில்லை. ஆனால் சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி எனப்போதித்த புத்த பகவானுக்குமா புத்தியில்லாமல் போய் விட்டது? படைத்தல் காத்தல்,அழித்தல் ஆகிய முத்தொழிலையும் புரியும் இறைவன் தானே அவரும். படைக்கும் போதே அவர் கருணை, தயவு தாட்சணியம், ஜீவகாருண்ணியம் இல்லாத இனத்தைப் படைத்தார். தனது சிரு~;டிகள் புரி யும் அட்டகாசங்களையும், அநியாயங்களையும் கண்டும் காணாததைப் போல் கண்களை மூடிய வண்ணம் போதி மரத்தின் கீழ் போதை மயக்கத்தில் இருக்கிறார். அவரா வது விழித்தெழுந்து தன் மத்தவரது மதவெறியை தணிக் கக் கூடாதா?"
'அரக்கர்களான அவர்களுக்குப் புத்திமதி சொல்ல வெளிக் கிட்டால் தனக்கே ஆபத்து வந்து விடும் என்பதை புத்தபக வான் நன்கறிவார். ;உம்பட்ட பிஸ_த? உம்பகே ஒழுவ கப்பாண்ட ஓண ;(உனக்கு விசரா? உன்ர தலையை வெட்ட வேணும்) எனக் கூறிக்கொண்டு அவரது தலையை சீவவும் அஞ்சாத இனமல்லவா அது. அதனால் தான் புத்த பகவானும் குத்துக் கல்லாக குந்தியிருக்கிறார்.
தந்தையிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மகன் தந்தையை உயிரோடு சுவருக்குள் வைத்து மூச்சுத் திணறத் திணற மூடிக் கட்டிடம் கட்டிய இனமல்லவா அது. பெத்த அப்பனையே கொண்ட இனம் ஆண்டவனைக் கொல்லாமல் விடுமா?" எனச் சிரித்துக் கொண்டே கேட் டான் சந்திரன்.
'நல்ல காலம் நாங்களெல்லாம் ஏதோ முற்பிறப்பில புண் ணியம் செய்தபடியால் புண்ணிய பூமியான இந்தக் கனடா வுக்கு வந்து சேர்ந்திட்டம். சந்திரன் சொன்னது போல இஞ்ச இறைச்சிச் சாப்பாடு மாத்திரமல்ல பால்,பழங்கள் எல்லாமே தினமும் திருப்தியாகச் சாப்பிடக் கூடிய வசதி இருக்குது. இங்குள்ள எங்கட சனங்கள் யாராவது சாப்பிட வழியில்லாமல் பிச்சை எடுக்கவில்லை. ஆனால் வெள்ளை க்காரச் சனங்கள் தான் எங்களிட்ட கையேந்துதுகள். எங் களைப் பொறுத்த மட்டில் கனடா தான் எங்களுக்குத் தமிழீழம். தமிழீழத்தைப் போலவே லோண்டறி முதல் சலூண், சாப்பாட்டுக் கடை, பலசரக்குக் கடை, ஜவுளிக் கடை, நகைக் கடை, சந்தை ஆகியவை மாத்திரமல்ல கல்யாண மண்டபங்கள், பூச்சோடனைகள், மணவறைகள் கூட இருக்குது. எதுவித தடையுமின்றி கடைகளுக்கு கொட்டை எழுத்தில் தமிழ் பெயர்ப் பலகைகளும் மாட்டி இருக்கினம். கோயில்கள் திருவிழாக்கள் எல்லாம் நடக் குது. தமிழ் றேடியோக்கள், டெலிவிசன் நிகழ்ச்சிகள், தமி
ழ்ப் பத்திரிகைகள் எல்லாமே இருக்குது, வெகு விரைவில் தமிழ் எம்.பீக்களும் வந்து விடுவினம். அப்புறம் இது தானே எங்களுக்குத் தமிழ் ஈழம்".
இவர்களது சம்பாசனையை இடை நிறுத்துவது போல்
'ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்...." என்ற தமிழ் பக்திப் பாடல் வீதியால் சென்று கொண்டிருந்த காரிலிரு ந்து பலமாக ஒலித்தது. அனைவரும் அந்தக் காரையே திரும்பிப் பார்த்தார்கள். தேசிக்காயும், பூமாலையும் தொங்க விடப்பட்டிருந்த அந்தக் காரின் இலக்கத் தக ட்டிலும் துர்க்கா என்றே ஆங்கிலத்தில் பொறிக்கப் பட் டிருந்தது.
'அந்தக் கார்க்காரன் தெல்லிப்பளை தங்கம்மா அப்பாக்குட் டியின் சொந்தக்காரணாக இருந்தாலும் இருக்கலாம். இன் றைய நிலையில் தெல்லிப்பளையில் ஒருவர் ;துர்க்கா ; என்ற லைசென்ஸ் பிளேற்றோடு கார்;வைத்திருந்தால் அந் தக் காரும் சுக்கு நூறாக்கப் பட்டு அவரும் சவமாக்கப் பட்டு செம்மணியில் புதைக்கப் பட்டிருப்பார். எம்மண்ணில் எமக்கில்லாத சுதந்திரமெல்லாம் இந்த அந்நிய மண்ணில் இருக்குது. இரண்டாயிரம் ஆண்டளவில் புதிதாக சில நாடுகள் உருவாகுமென சர்வதேசபூகோள வரைபடக் குழு வினர் கூறியிருக்கினம். அதில தமிழீழமும் ஒன்றாயிருக்க லாம்;. அன்றைய தினத்தைத் தான் நாங்கள் தீபாவளியா கக் கொண்டாட வேண்டும் "என்றான் சந்திரன்.
'அது சரியான தீர்மானம் தான் அதனை நாமனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்கிறோம்.அந்நிலை வந்தால் உன் னையே தமிழீழத்தின் முதலாவது முதல் மந்திரியாக நியமிக்கவும் நாங்கள் தயார். அதுக்கு நீ தயாரா?"
'தனது ஏவல் பேய்களை தமிழீழத்துக்கு அனுப்பி தமிழ் நூல் நிலையங்களையும், தமிழ்க் கோயில்களையும் எரிக் குமாறு உத்தரவிடும் ஜனாதிபதிக்கு நெருப்புக் கொள்ளி யை எடுத்துக் கொடுக்கும் மந்திரியாக இல்லாமல் தண் ணி வாளியை எடுத்துக் கொடுக்கும் மந்திரியாக இருப் பதையே நான் விரும்புவேன்" என்றான் சந்திரன்.
இத்தகைய உத்தமனான உனக்கும் உனது மனைவிக்கும் நாங்கள் எங்களது செலவில் தீபாவளியன்று விருந்து போடுகிறோம். நீ சொன்ன அந்த சைனீஸ் றெஸ்ரோரண்டு க்கு எங்களை அழைத்துச் செல் என்றனர் சந்திரனின் நண் பர்கள்.
ஆடைபாதிஆள்பாதி
ஸ்காபுறோவிலுள்ள ஒரு ஹோட்டலில் இலங்கைத் தமி ழர் அமைப்பொன்றின் இராப்போசன விருந்தும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்கள் பெண் கள் உட்பட சுமார் நூற்றி ஐம்பது பேர் கலந்து கொண்டி ருந்தனர். ஆண்கள் அனைவரும் கௌரவமான முறையில் கோட் சூட் அணிந்திருந்தார்கள். பெண்களில் பலர் சேலை சட்டை அணிந்திருந்தார்கள். மற்றும் சிலர் ஆபாசமில்லா மல் பான்ட்ஸ_ம் சட்டையும் அணிந்திருந்தார்கள். ஆனால் ஒரேயொருத்தி மட்டும்.......
அவள் தமிழ்ப் பெண்ணாக இருக்க முடியாது. ஒல்லியான சற்று உயர்ந்த உடற்கட்டு. நிறமும் கறுப்பு. தலை மயிரை யும் கழுத்தளவோடு கத்தரித்திருந்தாள். அவள் கயானாக் காரி அல்லது றினிடாட்காரியாக இருக்கலாமென நான் நினைத்தேன். அவள் அழகி என்று சொல்வதற்கில்லை. ஆனால் அங்கு வந்திருந்த ஆண்கள் அனைவருமே கடை க் கண்ணால் பார்க்கும் அளவுக்கு அவளிடத்தில் ஒருவித கவர்ச்சியிருந்தது. கவர்ச்சியை ஏற்படுத்துவதற் கென்றே அவள் ஆடை அணிந்திருந்தாள்.
மிகவும் மெல்லிய கறுப்புத் துணியில் தைக்கப்பட்ட உள்ச ட்டை என்று சொல்லுவமே அதே தான். மார்பிலிருந்து பாதம் வரை தொங்கிக் கொண்டிருந்தது. தோள்களின் மீது நூல் போன்ற மெல்லிய ரேப்கள் அந்த உள்சட்டை யைக் கீழே வீழ்ந்து விடாதபடி பிடித்துக் கொண்டிருந்தது. பிறேசியர் கூட அணிந்திருப்பதாகத் தெரியவில்லை. மார்ப கங்களும் விம்மிப் புடைத்திருக்கவில்லை. அவை தூக்க ணாங் குருவிக் கூடுபோல் தொங்கிக் கிடந்தன. ஆனால் இரு மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கினைப் போ ன்று முலைகளுக்கிடையே இருக்கும் கால்வாய் சட்டைக்கு மேலாகத் தெரிந்து கொண்டிருந்தது. அதன் கவற்சி தான் அத்தனை ஆண்களின் பார்வையையும் கவர்ந்திழுத்து அந் தக் கால்வாயினூடாக வடியச் செய்தது.
விழாவுக்கு பிரதம விருந்தினராக வந்திருந்த ரொறண்டோ நகர மேயரைப் படம் பிடித்துக் கொண்டிருந்த வீடியோக் கார ரவி அடிக்கடி அவள்பக்கம் கமராவைத் திருப்பி பல நிமிட நேரம் லென்ஸை உருட்டி உருட்டி குளோசப்பி லும் தூரத்திலுமாக அவளைப் படம் பிடித்தான். அவளை மாத்திரம் படம் பிடித்துக் கொண்டிருந்தால் ஏனையோர் தன்னை தவறாக நினைக்கலாம் என எண்ணியோ என்ன வோ அவளுக்கு அக்கம் பக்கத்தில் இருந்தோரையும் சில கணம் மாத்திரம் சுழற்றி எடுத்தான்.
பறுவத்துச் சந்திரன் போல் வட்டமான அழகு பொங்கும் முகத்தினைக் கொண்ட வெள்ளை வெளேரென்ற பெண் மணி ஒருத்தி றோஜாக் கலர் பட்டுச் சேலையும் சட்டை யும் அணிந்திருந்தாள். பார்வைக்கு அழகு தேவதை போ ன்றிருந்தாள். ஆனால் மார்புகளோ கால்வாயோ தெரியும் வண்ணம் ஆடை அணியாததால் அவளிடத்தில் கவர்ச்சியி ருக்க வில்லை. உண்மையான அழகு இருக்கும் இடத்தில் கவர்ச்சி இல்லை -- அழகே இல்லாத இடத்தில் கவர்ச்சி இருந்தது. வீடியோக் காரர்களுக்கும் படப்பிடிப்பாளர்களுக் கும் கவர்ச்சி தானே முக்கியம். வர்த்தக விளம்பரங்கள் மாத்திரமல்ல இன்றைய வாழ்க்கையே கவர்ச்சியில் தானே மயங்கிப் போய்க் கிடக்கிறது.
இயற்கை அழகே இல்லாத அவள் எவ்வாறு செயற்கை யாக கவற்சியை ஏற்படுத்தலாம் என்ற கவற்சிக் கலையில் கைதேர்ந்தவளாக இருந்தாள். கொக்கைப் போல் கழுத் தை நீட்டி வழைத்தும் அடிக்கடி தேவை இல்லாமல் முப்ப த்தியிரண்டையும் காட்டியும் அருகிலிருந்தோருடன் சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். 'புகையிலை விரிச்சாப் போச்சு பொம்பிளை சிரிச்சாப் போச்சு" என்பது அவளைப் பொறுத்த வரை நூற்றுக்குநூறு உண்மை. அவளது நடை உடை பாவனை எல்லாமே அவள் அனைத்தையுமே இழந் தவள் போலவும் இன்பம் அனுபவிக்கத் துடிப்பவள் போல வும் காட்டின.
தனக்கு அறிமுகமான ஒரு சில ஆண்களிடம் வலியச் செ ன்று பேச்சை ஆரம்பித்தாள். ஆனால் மனைவிமார் அருகி னில் இருந்ததினால் அவர்கள் பேச்சை மேலும் தொடர விரும்பாமல் துண்டித்துக் கொண்டார்கள். வீடியோ ரவி மனைவி இல்லாமல் தனியாக வந்திருந்ததினால் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பவில்லை. வீடியோ கமரா வை மேடையை நோக்கி செற் பண்ணி ஸ்ரான்டில் நிற்க வைத்து விட்டு அவளுக்கருகே சென்று அமர்ந்து கொண் டான். குழைந்து குழைந்து சிரித்து சிரித்து அவளுடன் பேச்சுக் கொடுத்தான். அவன் தன்னை நாடி வந்து அரு கே இருந்து பேசுவதையிட்டு தானொரு அழகியென பிறர் நினைத்துக் கொள்வார்களென எண்ணி தனக்குள் தானே பெருமைப் பட்டுக் கொண்டாள் அவள்.
தனியாகச் சென்றிருந்த என்மனமும் அவளுடன் போயிருந் து பேச்சுக் கொடுத்தால் என்னவென உறுத்தியது. ஆனால் அவ்வாறு செய்தால் என்னைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என எண்ணி மனதை அடக்கிக் கொண்டு இருந்து விட்டேன். இருந்தாலும் அணில் ஏறவிட்ட நாய் போன்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களிருவரும் அதைப்பற்றி பொருட்படுத்தியதா கவே தெரியவில்லை. தானொரு பெண் என்பதையும் மறந் து ஏதோ பலநாள் பழகிய நண்பருடன் பழகுவதைப் போன்று அடிக்கடி மேசை மீதிருந்த அவனது கையைத் தொட்டுத் தொட்டு விழுந்து விழுந்து சிரித்துப் பேசிக்கொ ணடு இருந்தாள். அவள் குனிந்து கொண்டு பேசும் போ தெல்லாம் அந்தக் கால்வாயின் ஆழம் சற்று அதிகமாகத் தெரிந்தது. ரவி நிச்சயமாக உணர்ச்சி வசப்படாமல் இருந் திருக்க மாட்டான்.
ரவி தனது பேர்ஸைத் திறந்து அதனுள்ளிருந்து தனது பிஸ்னஸ் காட் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் அதனை ஆவலோடு வாங்கி உன்னிப்பாகப் பார்த் து விட்டு சிரித்த வண்ணம் அவனிடம் என்னவோ சொன் னாள். பதிலுக்கு அவனும் என்னவோ கூறியவாறு அவளி டம் கையேந்தினான். ஆனால் அவளிடம் பிஸ்னஸ் காட் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால் அவன் தனது மற் றுமொரு பிஸ்னஸ் காட்டினை எடுத்து அதன் பின்புறத்தில் அவளிடம் எதையோ கேட்டு எழுதினான். நிச்சயமாக அது அவளது பெயரும் டெலிபோண் நம்பருமாகத் தானிருக்கும். கனடாவில் காதலிப்போருக்கு காதல் தூது விடக் கைகொ டுக்கும் கருவி டெலிபோண் தானே.
விருந்துபசார வைபவத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஆர
ம்பமாகிறது என அறிவிப்பாளர் அறிவித்ததும் அவளை விட்டுப்பிரிய மனமின்றி அவளது கையைத் தொட்டு ஏதோ சொல்லி விட்டு படமெடுக்கச் சென்றான் ரவி. அதன் பின் னரே கனவுலகை விட்டு நிஜ உலகுக்கு வந்தவளைப் போன்று மண்டபத்தில் இருந்தோரை சுற்றி நோட்டம் விட் டாள். எனக்கு அண்மையிலிருந்த ஒருவரைப் பார்த்து கையசைத்து முழுப் பற்களும் தெரியச் சிரித்தவாறு எழும்பி வந்தாள்.'ஹலோ சண் எப்படி இருக்கிறீர் லோங் ரைம் நோ சீ" என்றாள். அப்போது தான் அவளும் தமிழ் பெண் என்பதை நான் அறிந்து கொண்டேன். என்னையும் அவள் கடைக் கண்ணால் பார்த்ததும் என் மனம் கிளு கிளுத்தது. நான் என்ன முற்றும் துறந்த முனிவனா? அவளை ஒரு முறை முற்றும் திறந்து பார்க்க வேண்டும் போல் விரகதாபம் விம்மிப் புடைத்து எழுந்தது.
கனடாவுக்கு வந்ததும் தனது கலாச்சாரத்தைக் கைவிட்டு பாலோடு கலந்த கோப்பியாக கனேடியரின் கலாச்சாரத் துடன் கலந்து விட அவள் பகீரதப் பிரயர்த்தனம் பண்ணுவ து புலனாகியது. ஆனால் காகத்தின் கூட்டினுள் முட்டையி ட்டுப்பொரித்த குயில்க் குஞ்சினைப் போல் அவளது நிறம் அவளைக் காட்டிக் கொடுத்து விடுகிறதே. ஆடை மாற்று வது போல் காதலர்களையும் கணவன்மார்களையும் அடிக் கடி மாற்றிக் கொள்ளும் கனேடியப் பெண்களின் அகராதி யில் மானம், ரோசம், கற்பு என்ற சொற்களே கிடையாதே. ஊற்றிக் கொள்ள மதுவும் உல்லாசத்துக்கு உடலுறவுமே அவர்களின் அத்தியாவசியத் தேவை. கறுவலென்ன கண் ராவி என்றாலென்ன ஆர் குத்தினாலும் அரிசியானால் சரி என்பது அவர்களது அவா. படுக்கையறை உடுப்புகளைப் போன்றவற்றை அணிந்து கொண்டு பாட்டிகளுக்குச் செல் லுவினம். மார்பகங்கள் வெளியே நழுவி விழப்போவது போன்றிருந்தாலும் அதைப்பற்றி பெரிசு படுத்திக்கொள்ள மாட்டினம். மதி மயங்கும் வரை மதுவை அருந்தி சிகரட் டையும் புகைத்துக் கொண்டு யார் மடியிலாவது விழுந்து விடுவினம். மறுநாள் காலையில் கண்விழிக்கும் போது தான் யார் வீட்டுப் படுக்கை அறையில் ஆடையின்றிக் கிட க்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுவினம். படுக்கைய றையில் நடந்த திருவிளையாடல்கள் எல்லாம் கனவில் நடந்தது போலிருக்கும். உடல் நோத் தெரியாமல் இருக்க வீட்டுக்காரன் ஊற்றிக் கொடுக்கும் விஸ்கியை வாயும் கொப்பளிக்காமல் மடக்கு மடக்கெனப் குடித்துப் போட்டு மீண்டும் போர்த்துக் கொண்டு சுருண்டு படுப்பினம்.
எங்கட கனடாத் தமிழிச்சியும் அப்படிப் பட்டவளாகத் தானி ருக்க வேண்டும். எப்படியாவது ஒருவரைப் பிடித்து விட வேண்டுமென்ற வேட்கையில் பருந்து போல் அங்குமிங்கு மாக நோட்டம் விட்டவாறு தவித்துக் கொண்டிருந்தாள். ஆனால் வீடியோ ரவியைத் தவிர வேறெவரும் அவளது வலை வீச்சில் சிக்குவதாகத் தெரியவில்லை. சாப்பாட்டு நேரம் வந்ததும் நீண்ட கியூ சாப்பாட்டு மேசையை நோக் கி அணிவகுத்து நின்றது. வீடியோ ரவிக்குப் பின்னால் அவள் ஒட்டிக் கொண்டு நின்றாள். அடிக்கடி அவனது காதுக்குள் ரகசியம் சொல்லும் பாணியில் நழுக்கென நெஞ்சை அழுத்தி ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டு நின்றாள். இன்ப லாகிரியில் மூழ்கிப் போயிருந்த ரவியும் அவள் கூறியவற்றை சுவராசியமாக ரசிப்பவன் போன்று வாய்விட்டுச் சிரித்தான். அவளும் அவனது இரு தோள் களை கைகளால் பற்றிப் பிடித்துக் கொண்டு குலுங்கிக்குலுங்கிச் சிரித்தாள்.
வைபவம் முடிய இரவு பத்து மணியாகி விட்டது. சாப்பாட் டை முதலே முடித்துக் கொண்ட அரைவாசிச் சனம் ஏற்க னவே கிளம்பிவிட்டார்கள். ரவி தனது கமரா லைற் வயர் கள் அனைத்தையும் கழற்றி அடுக்கிக் கொண்டிருந்தான். அதுவரை அவளும் காத்திருந்தாள்.
ஆனால் அதே வேளை ரவியின் வரவை ஆவலோடு எதிர் பார்த்துவீட்டில் அவனது மனைவி சந்திரா விழித்துக்கொண் டிருந்தாள். அவளது இரு குழந்தைகளும் தூங்கி விட்டன. ஆனால் சந்திராவுக்கு தூக்கம் வரவில்லை. அவள் நல்ல மூட்டில் இருந்ததினால் ஏதோ செய்ய வேண்டும் போலி ருந்தது. எதற்கும் அவர் வரட்டுமென நினைத்துக் கொண் டு கட்டிலில் படுத்து உருண்டு கொண்டிருந்தாள். நாளை ஞாயிற்றுக் கிழமை லேற்றாக எழும்பினாலும் பரவாயில் லை அவர் வரட்டுமென மணிக்கூட்டை பார்த்த வண்ணம் கிடந்தாள். நேரம் நள்ளிரவையும் தாண்டிவிட்டது. ரவி வர வேயில்லை. அந்த இன்பமான நினைவுடனேயே சந்திரா தூங்கிப் போய் விட்டாள்.
அதிகாலை இரண்டு மணிக்கே வீடு திரும்பிய ரவி சத்தம் செய்யாமல் அவதி அவதியாக உடுப்பை மாற்றிக் கொண் டு மனைவி படுத்திருந்த கட்டிலில் போய் படுத்துக்கொண் டான். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த சந்திராவின் முகத் தைப்பார்க்கக் கூட அவனுக்கு பதட்டமாக இருந்தது. அவ ள் என்ன செய்ய வேண்டுமென ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாளோ அதையே தான் வேறிடத்தில் செய்து விட்டு வந்த குற்ற உணர்வு மனதை நெருடிக் கொண்டி ருந்தது. இருந்தாலும் வழமையான வீட்டுச் சாப்பாட்டை விட ஸ்பெ~ல் கோழிப் புரியாணி சாப்பிட்ட மனத் திருப்தி யோடு அவன் கண் அயர்ந்து விட்டான்.
வேடதாரி
மிஸ்டர் குருவிச்சை மூதூர் தொகுதியினர் மத்தியில் மாத் திரமன்றி அதனை அடுத்துள்ள தொகுதியினர் மத்தியிலும் பிரபல்யமானவர். குருவிச்சை ஏனைய செடிகளைப் போல் நிலத்தில் வேரூன்றி தனது சொந்த வேரில் நின்று வாழாது பிற மரங்களின் கிளைகளில் ஒட்டிக் கொண்டு அவற்றின் சத்தினை உறிஞ்சி வாழும் செடி. அதுபோலவே பெரும் புள்ளிகளோடு ஒட்டிக்கொண்டு அவர்களது பெயரைப் பயன் படுத்தி பொது மக்களின் பணத்தைச் சுருட்டி வாழ்க்கை நடாத்தியதால் இவருக்கு மிஸ்டர் குருவிச்சை என்பது தொழிலாகு பெயர்.
தமிழினத்தை திட்டமிட்டு அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வரும்இனத்துவேச சிங்களக் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர் தொகுதி எம்.பியின் வலது கரமாக இயங்கியவர் மிஸ்டர் குருவிச்சை. மழை யில் நனைந்த வடலிப் பனை மரம் போன்ற நிறமும் உயர மும் கொண்ட இவருக்கு ஏறு நெற்றி. கட்டாந் தரையில் முழைத்த புற்களைப் போன்று தலையில் ஆங்காங்கே சில மயிர்கள். அடிக்கடி சிரித்த வண்ணமே உரையாடும் அவ ரது பற்கள் மாத்திரம் பளிச்சென மின்னும். வெள்ளை நிற வேட்டியும் ந~னலும் அணிந்து கொள்ளும் அவரின் உள் ளமும் உடலும் ஒரே நிறம். ஆடையாவது வெள்ளை நிற மாக இல்லாவிடில் தனது சுயரூபம் அம்பலமாகி விடும் என்பது அவரது ஐதீகம்.
பத்தாயிரம் முதல் பதினையாயிரம் ரூபா வரை பலரிடம் பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டு அவர்களை தனது உறவினர்கள் நண்பர்கள் என எம்.பியிடம் அறிமுகம் செய் து ஆசிரியப் பதவிகளைப் பெற்றுக் கொடுத்தார். மற்றும் பலரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அடுத்த தவணைக் குள் எடுத்துத் தருகிறேன், அடுத்த வருடத்தினுள் எடுத்துத் தருகிறேன் எனக் கடத்திக் கடத்தி கடைசியில் கையை விரித்தவர். ஊராரிடம் சுருட்டிய பணத்தில் தனது இரு பிள் ளைகளையும் வட்டுக்கோட்டை ஜவ்னா கல்லூரியில் சேர்
த்துப் படிப்பித்தார். ஆனால் தமது மனைவி பிள்ளைகளின் நகைகளை விற்றும், காணிகளை ஈடு வைத்தும் காசை இவரிடம் கொடுத்து ஏமார்ந்த தந்தைமார்கள் மனவேதனை யில் சாபமிட்டார்கள்.
எம்.பியின் பதவிக் காலம் முடிவுற்று அடுத்த பொதுத் தேர் தலில் அவர் மண் கவ்வியதும் அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போன்று அவரை விட்டு அகன்றார் மிஸ்டர் குருவி ச்சை. ஸ்ரீ லங்கா அரசின் கெடுபிடிகளினால் வடக்கு கிழ க்கு மாகாணங்கள் யுத்த முனைகளாயின. ஸ்ரீ லங்கா இராணுவத்தினரின் காடைத்தனங்கள் கட்டவிழ்த்து விடப் பட்டன. கற்பழிப்பு, சித்திரவதைகள், கொலைகள் ஆகியன நாளுக்கு நாள் அதிகரித்தன. அவற்றை சகிக்க முடியாத விடுதலைப் புலிகள் ஆங்காங்கே மறைந்திருந்து இராணு வத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். வெள்ளி க்கிழமை மாலை ஜவ்னா கல்லூரியிலிருந்து மகிழ்வுடன் வீடுசெல்லக் கிளம்பிய மாணவர் கூட்டத்தின் மீது புக்காரா விமானத்தில் வந்த இராணுவத்தினர் குண்டுகளை வீசினார் கள். அதில் குருவிச்சையாரின் மகன்,மகள் உட்பட மற்றும் சில பாவிகளின் பிள்ளைகளது உடல்களும் சின்னா பின்ன மாகிச் சிதறின.
பிள்ளைகளுக்கு ஆசிரியர் வேலையும் கிடைக்கவில்லை அதற்காகக் கொடுத்த பணமும் கிடைக்கவில்லையென அன்று பல பெற்றோர்கள் மனம் நொந்து அழுதார்கள். ஆனால் இன்று தன் பிள்ளைகளே உயிருடன் இல்லையே எனக் கதறி அழுதார் மிஸ்டர் குருவிச்சை.'தன்வினை தன் னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்ற பட்டணத்து அடிகளின் கூற்று மிஸ்டர் குருவிச்சைக்காகவே கூறி வைத் தாற் போன்றிருந்தது.
பழைய செல்வாக்கினைப் பயன்படுத்தி பலநோக்கு கூட்டுற வுச் சங்க நிருவாக சபையில் ஒரு உறுப்பினராக ஒட்டிக் கொண்டார் மிஸ்டர் குருவிச்சை. பங்கீட்டு விநியோகத்துக் காக வரும் தட்டுப்பாடான பொருட்களில் பெரும் பகுதியை மூடை மூடையாக சில்லறை வியாபாரிகளுக்கு விற்று பண த்தை தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள் நிர்வாக சபை உறுப்பினர்கள். இதனால் ஏழைகளின் வயிற்றில் வீழ்ந்தது அடி. ஏற்கனவே தான் செய்த துரோகத்துக்கு வீழ்ந்த பேரி டியை மறந்து தொடர்ந்தும் பிறர் பொருளை உறிஞ்சிக்
கொண்டிருந்தார் மிஸ்டர் குருவிச்சை. சமூக விரோதிகளை யும் துரோகிகளையும் களை எடுப்புச் செய்ய விடுதலை இயக்கத்தினர் நடவடிக்கை மேற்கொண்டதும் அச்சத்தினா ல் மனைவியுடன் கனடாவுக்கு தப்பி ஓடி வந்தார் மிஸ்டர் குருவிச்சை.
முதலில் 'வெல்பெயாரிலும்" பின்னர் வேலை தேடி உழை த்த போதிலும் மிஸ்டர் குருவிச்சையின் மனம் திருப்தியடை யவில்லை. குரங்கின் கையும்,சிரங்கு வந்தவன் கையும் சொறியாமல் இருக்குமா? அடுத்தவர்களைச் சுரண்டிச் சுரண்டியே பழக்கப்பட்டு விட்ட இவரது கைகளும் சும்மா இருக்கவில்லை. தான் எதைச் சொன்னாலும் ஆமாப்போ டும் தலையாட்டிகள் சிலரையும் தனது உறவினர்களையும் சேர்த்து 'தமிழர் கலை கலாச்சாரக் கழகம்" என்றொரு சங்கத்தினை உருவாக்கினார். உரில் தமிழினத்தின் விரோ தியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எடுபிடியாக இருந்த வர் இப்போது கனடாவில் தமிழ்க் கலை கலாச்சாரத்தை வளர்க்கும் தொண்டர். எது வளர்ந்தாலும் வளராவிடினும் தனது வங்கிக் கணக்கு வளரவேண்டும் என்பதே அவரது குறிக்கோள். தைப்பொங்கல் விழா, புதவருடக் கலை விழா, தீபாவளி விழா, இன்னிசை விழா என தொடர்ந்து நடாத்திக் கொண் டே இருந்தார். அன்பளிப்பு பத்து டொலர்கள் என டிக்கட் அடித்து பணம் பணமாகச் சேர்த்தார். கலைஞர்களுக்கு சன்மானம் எதுவுமே வழங்காது தமது கழகத்தின் வளர்ச்சி க்காக இலவசமாக நிகழ்ச்சிகளை நடத்தி உதவுமாறு பணி வன்புடன் கேட்டுக் கொள்வார். நிதி வசூலில் சிறுதொகை மாத்திரம் கழகத்தின் வங்கிக் கணக்கில் இடப்படும். பெரு ந்தொகை அவரது சொந்த வங்கிக் கணக்கில் இடப்படும். உண்மையான வருமானத்தை கழகநிருவாகிகளுக்குக் கூட காண்பிக்க மாட்டார். யாராவது கணக்குக் கேட்டால் உட னடியாக அவருக்கு கல்த்தா. அவரது பதவிக்கு வேறொரு தலையாட்டி நியமிக்கப் படுவார். பத்திரிகையாளர்களை நண்பர்களாக்கி தனது கழக விழாக்கள் பற்றிய செய்தி களை தனது படத்துடன் பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய் வார். அதன் மூலம் தன்னைப் பெரும் பிரமுகராகக் காட்டி மக்கள் மனதில் நம்பிக்கையினை ஊட்டி அடுத்த விழாக் களுக்கான டிக்கட் விற்பனையை அதிகரிப்பதே அவரது நோக்கம்.
கழக வேலைகளைக் கவனிக்க சொந்தமாக ஒரு கார் இல்லாமல் பெரும் அலைக்கழிவாக இருக்கிறது எனக்கூறி புத்தம் புது 'ஹொண்டா" கார் ஒன்று வாங்கினார். இரண்டு வருடங்களின் பின் சொந்த வீடொன்றும் வாங்கினார். நான் காம் நம்பர் காரர்கள் வாய்ச் சாதுரியத்தினால் பிறரை ஏமாற்றி காரியம் சமர்ப்பிப்பதில் சமர்த்தர்கள் என்கிறது எண்சோதிடம.; எனவே மிஸ்டர் குருவிச்சையாரின் பிறந்த திகதியும் நான்காகவே இருக்க வேண்டும்.
இவரது அந்தரங்கமான நடவடிக்கைளும், துரித முன்னேற் றமும் கழகச் செயலாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கழகப் பணத்தைச் சுருட்டுகிறான் என ஆத்திரமுற்றார். விழாக்களுக்கு எவ்வளவு டிக்கட்டுகள் அடிக்கப்படுகின்றன அவற்றில் எவ்வளவு விற்பனையாகின என்ற விபரங்கள் சமற்பிக்கப் படவேண்டும்,கணக்கு வழக்கு எப்போதும் சீரா க இருக்க வேண்டுமென செயற் குழுக் கூட்டத்தில் பிரே ரித்தார்
செயலாளர். அதனை ஏனை யோரும் ஆமோதித் தனர். தனது மடியில் கைவைக்கும் செயலாளரை தட்டி விட வேண்டியது தான் என மனதுக்குள் கர்விக்கொண்ட குருவிச்சையார்'அது பிரச்சினையில்லை. டிக்கட் விற்பனை வருமானம், விழாச் செலவுகள் சம்பந்தமான சகல விபர ங்களும் பொருளாளரிடம் இருக்கிறது. வருடாந்தப் பொதுக்கூட்டத்தின் போது அவர் தனது வரவு செலவுத் திட்ட அறி க்கையை வாசிப்பார். அதற்கிடையில் கழக உறுப்பினர்கள் யாராவதுஅதைப்பார்க்க விரும்பினாலும் அவர் காட்டுவார்" எனக் கூறிச் சமாளித்தார்.
அன்றிலிருந்து செயலாளருக்கு எதிரான சதி வேலையில் ஈடுபட்டார் மிஸ்டர் குருவிச்சை. கழகத்தின் ஏனைய உறுப் பினர்களிடம் செயலாளரைப் பற்றி இல்லாதது பொல்லாத துகளைக் கூறி அதிருப்தியை ஏற்படுத்தினார். அவர் கழகத் தில் இருந்து கொண்டே வெளியில் கழகத்துக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகப் பழி சுமத்தி அவரைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தார். நேர்மைவாதி யான செயலாளர் கொதித்தெழுந்தார்.இவனை இனிமேலும் விட்டு வைக்கக் கூடாதென எண்ணி வருமானவரி திணைக் களத்துக்கு விரிவான ஒரு மொட்டைக் கடிதத்தினை அனுப் பி வைத்தார்.
மிஸ்டர் குருவிச்சைக்குத் தெரியாமலே அவரது வருமானம், வங்கிக் கணக்குகள்,சொத்து விபரங்கள் அனைத்தும் ஆரா யப்பட்டு சகல விபரங்களும் திரட்டப் பட்டது. கலை கலாச் சாரத்தை வளர்ப்பதாகப் பொய் சொல்லி பொது மக்களை ஏமாற்றிப் பணம்திரட்டி அதில் தனக்கு வீடும், காரும் வாங் கியது. வருமானவரி சம்பந்தமாகப் பொய்க் கணக்கு சமர்ப் பித்து மேலதிகமான பணத்தை வங்கிக் கணக்கில் வைத்தி ருந்தது என அவர் மீது பல குற்றச் சாட்டுக்கள் சுமத்தப் பட்டன. அவரது வீடு, கார் அனைத்துமே வருமானவரி திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டது. அத்துடன் அவரை தேசத்துரோகி, சமூக விரோதி எனக்கண்டு ஸ்ரீலங்காவுக்கு உடனடியாக நாடு கடத்தியது. கட்டிய மனைவியையும் கனடாவில் கைவிட்டு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்ட வேடதாரிக்கு ஸ்ரீலங்காவின் சித்திரவதைக் கூண்டில் ஓர் அறை ஒதுக்கப் பட்டிருந்தது.
கன்னத்தில்முத்தமிட்டாள்
'ஐஞ்சு வருசமாக ஒரு பிரச்சினையும் இல்லாமல் தொடர் ந்து வேலை செய்து வந்த என்னை பக்டரி பிஸி இல்லை என்று சொல்லி திடீரென வேலையால நிப்பாட்டிப் போட்டா ங்கள். வேலை செய்து உழைச்சே வாழ்க்கைச் செலவை சமாளிக்கிறது பெரிய க~;டமாயிருந்திது. இனி 'அண்எம்பு ளொய்மென்ற்றில"வாற கொஞ்சக் காசில என்னென்று கால த்தை ஓட்டிறதோ தெரியவில்லை.கனடாவில வெதர்,வேர்க், வுமண் (காலநிலை, வேலை,பெண்கள்) என்ற சொற்களில்; முதல் எழுத்துக்களாக வரும் மூன்று டபிள்யூக்களையும் நம்பக் கூடாது அவை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கு மென்று சொன்னது சரியாத் தான் இருக்குது".
இவ்வாறு தனக்குள் தானே புறுபுறுத்துக் கொண்டிருந்தான் சந்திரன். வேலை இல்லாததால் விடிய வெள்ளன அவதி அவதியாக விழுந்தெழும்பி ஓடி காலம எட்டு மணியில இருந்து பின்னேரம் ஐஞ்சு மணி வரை மாடு மாதிரி மாரடி க்காமல் நன்றாக ஆசை தீரப் படுத்து நித்திரை கொள்ள லாம் என்று நினைக்கையில் அவனது உள்ளமெல்லாம் ஆனந்தம் பொங்கியது. ஆனால் அப்பாட்மென்ற் வாடகை, டெலிபோண் பில், கேபிள் பில், விசாக் காட் கடன் எல்லா வற்றையும் எப்படிக் கட்டிறது என்பதை நினைத்ததும் சந்தி ரனுக்கு மூளையே விறைக்குமாப் போலிருந்தது.
அந்த நேரம் பார்த்து ' அப்பா பொங்கல் வருகுது எனக்கு என்ன சீலை வாங்கித் தரப்போறீங்க? அதோட பொங்கலுக் குப் புதுப்பானையும் ஒன்று வாங்க வேணும்" என்றாள் மனைவி மாலதி. சந்திரனுக்கு பொத்துக் கொண்டு வந்தது ஆத்திரம். ஆத்தை படுகிற பாட்டில குத்தியன்...... அழுதா னாம் என்ற கதையாத் தானிருக்குது உன்ரகதை. வேலை பறி போயிற்றுது. சம்பளம் எடுத்தே வீட்டுச் செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடினன் இனி என்னத்;தைச் செய்யிறதென்று நான் மண்டையை உடைத்துக் கொண் டிருக்கிறன் உனக்குப் பொங்கல் பானையும் புதுச்சீலையும்
தான் அவசியம் தேவைப்படுது எனக் கத்தினான்.
'அதுக்கேனப்பா இப்ப சள்ளென்று விழுகிறியள்? கையில காசில்லை என்று சொல்லலாம் தானே".
'பொங்கலும் மண்ணாங் கட்டியும் எங்களுக்கு எதுக்கு?
41
அது காணி பூமி உள்ளவங்கள் தங்கட காணியில விழை ஞ்ச நெல்லை மார்கழி மாதத்தில அறுவடை செய்து குத் திய புத்தரிசியை தைமாதம் முதலாம் திகதி பொங்கிச் சூரி யனுக்குப் படைச்சு மகிழ்வது தான் தைப்பொங்கல். சொந் தக் காணி நிலமோ வீடுவாசலோ இல்லாமல் இஞ்ச அடு த்தவன்ர அப்பாட்மென்டில குடியிருக்கிற நாங்கள் கடை யில காசு கொடுத்து அரிசி வாங்கிப் பொங்கிறதில என்ன அர்த்தமிருக்குது? வின்ரர் குளிரில சூரியனையும் வடிவாகக் காண முடியாது. வெளியில வைச்சுப் படைக்கவும் முடியா து. வீட்டுக்குள்ள வைச்சுப் பொங்கி எங்களுக்கு நாங்களே படைச்சு வயிறு புடைக்கத் தின்னிறதில என்ன கொண்டாட் டம். நாளாந்தம் அதைத் தானே செய்து கொண்டிருக்கிறம். போன பொங்கலுக்கு என்ன நடந்ததென்பது உனக்கு ஞாப கமிருக்குதா? தமிழ்க் கடையில வாங்கின சர்க்கரையை கழுவாமல் கொள்ளாமல் அப்படியே போட்டு பொங்கி விட் டாய் புக்கை முழுக்க ஒரே மண். ஒருவருமே சாப்பிட முடி யாமல் காபேஜ்சுக்குள்ள தானே கொட்டினது.அதில் பார்க் க இந்தமுறை பொங்காமலே விடுவது புத்தி சாலித்தனம்".
'புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம்மவர்கள் நமது கலை கலாச்சாரங்களை கைவிடாது பேணி இளையதலை முறையினருக்கும் அவற்றைப் பழக்கவேண்டும் என்று கூட் டங்களிலும் விழாக்களிலும் பேசியும், பேப்பர்களில் எழுதி யும் வருகினம். நீங்க என்னடா என்றால் அவற்றைக் குழி தோண்டிப் புதைக்க வேணும் என்கிறீங்கள். க~;டம் க~;ட மென்று சொல்லிக் காலமெல்லாம் கவலைப்பட்டுக் கொண் டிராமல் ஒரு சில நாளாவது சந்தோசமாக வாழ வேண் டும் என்று தானே பண்டிகைகளும் விழாக்களும் ஏற்படுத்த ப்பட்டன. நீங்க கவலைப்படாதீங்கப்பா. தை பிறந்தால் வழி பிறக்கும்தானே.தைமாதத்துக்குப் பிறகு உங்களுக்கு இதை இதைவிட நல்லவேலை கிடைச்சாலும் கிடைக்கும்.தையில வியாழனும் மாறுதாம் அப்ப எங்களுக்கு விடிவு வந்தாலும் வரும்".
'தையில வியாழன் மாற முன்னரே எங்கட கைராசி மாறிப் போச்சுது.மாறினதுக்குப் பின்னர் கட்டியிருக்கிற கோவணமு ம் இல்லாமல் போனாலும் போகும்.எங்களுக்கெங்க விடிவு வரப்போகுது.மூச்சடங்கி முடிவுவந்து சுடுகாட்டுக்குப் போன பிறகுதான் எங்களுக்கு நின்மதிவரும்.எந்;தக்;கிரகம் மாறனா லும் எங்கட தலையெழுத்து மாறவே மாறாது".
'ஏனப்பா இப்படி வேதாந்தம் பேசிறீங்க காலம எழும்பேக்க நல்லா இருந்தீங்க பிறகென்ன நடந்தது உங்களுக்கு?” 'சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி எண் டது போல் சும்மா இருந்த என்னை நீ தானே உன்வாயா ல் ஊதிக்கெடுத்தாய் சும்மா இருந்திருக்கலாம் தானே".
மாலதி தன் தவறை சமாளிப்பதற்காக சிரித்துக் கொண்டே திடீரென அவனை கட்டித்தழுவி முத்தமிட்டாள். அவ்வளவு தான் அக்கணமே சந்திரன் தனது மனக்கவலை எல்லாம் மறந்து வாய் விட்டுச் சிரித்தான்.
'எனக்குப் புதுச்சீலையும் வேண்டாம் புதுப்பானையும் வேண் டாம். நீங்கள் கத்திக் குளறாமல் எந்த நேரமும் இப்படி யே சிரிச்ச முகத்துடன் சந்தோ~மாக இருந்தீங்கள் என் றால் அதுவே எந்த நாளும் எங்களுக்குப் பொங்கல் திரு நாளாக இருக்கும். வாழ்க்கை என்றால் இப்பிடித்தா னப்பா கடலலை மாதிரி பொங்கி எழும்பிறதும் தூங்கி விழுகிறது மாகத் தானிருக்கும். அதுக்காக வேலை போச்சு தென்று கவலைப் படவோ ஆத்திரப் படவோ கூடாது. உங்; களால் புதுச்சீலை வாங்கித் தரமுடியாமல் இருந்தால் அதுக்காக நான் கோபிக்க மாட்டனப்பா. உங்களுக்கு வச தியிருந்த போது நான் கேட்காமலே வாங்கித் தந்தனீங் கள் தானே. நான் சும்மா பேச்சுக்காக கேட்டனே தவிர சீரியஸாகக் கேட்கவில்லை"என்று மாலதி சொன்னதும் சந்திரனின் கண் கள் பனித்தன.
'ஏனப்பா இப்ப அழுகிறீங்க? உங்களைப் போல உடனுக் குடன உணர்ச்சி வசப்படுகிற ஒருதரையும் நான் காணவில் லை. ஒருக்கா ஆத்திரப்பட்டுக் கத்துவீங்க,பிறகு சிரிப்பீங்க, அப்புறம் குழந்தைப் பிள்ளை மாதிரி அழுவீங்க. நீங்க ஒரு நடிகனாக இருந்தால் மகிழ்ச்சிக் கட்டத்திலும் சோகக் கட் டத்திலும் நல்லா நடிச்சு நாகேஸ் மாதிரி பேரெடுப்பீங்க".
'அதைத்தானே இப்பவும் செய்து கொண்டிருக்கிறன்;. இந்த உலகமாகிய நாடக மேடையில முதலில செல்லத்துரை தம்பதிகளின் புதல்வனாக புத்திர பாத்திரமேற்று நடிச்சன். அதே வேளையில் சின்னத்தம்பி தம்பதிகளின் பேரனாகவும் நடிச்சன். இப்போது உனக்குக் கணவனாகவும் பிள்ளைக ளுக்கு அப்பனாகவும் நடிச்சுக் கொண்nருக்கிறன். தொடர்ந் தும் மாமனார் வேடம் பாட்டன் வேடம் எல்லாம் ஏற்று நடிப்பேன். பூட்டன் வேடம் ஏற்று நடிக்கவும் அவகாசம் கிடைக்குமோ என்னவோ.கிடைத்தால ;'ஆரம்பமாவது-- மனி தன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்
குவது மண்ணுக்குள்ளே---- ஆராய்ந்து பாரிதை மனக் கண்ணுக்குள்ளே ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே---- " எனப்பாடிப் பாடி நடிப்பேன்.
'போதும் போதும் நிறுத்துங்க உங்கட கற்பனையை. நடக் க ஏலாமப் போற அந்த வயதிலயும் நாடகம் நடிக்க உங் களால முடியுமா? " எனக் கேலி செய்தாள்; மாலதி.
தைப்பொங்கலன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பாத்றூமை திறந்து கொண்டு வெளியே வந்த மாலதி ஒருகணம் திகைத்துப் போய்நின்றாள்.அவளுக்கென வாங்கி ஒழித்து வைத்திருந்த புதுச் சேலையை கைகளில் ஏந்திய படி நின்றான் சந்திரன். ஆச்சரியத்தினால் முகத்தில் புன்ன கை தவழ, 'என்னப்பா சீலை வாங்கக் காசில்லை என்று அன்றொரு நாள் கத்தினீங்க இப்ப எப்படிக் காசு வந்தது. யாரிடமாவது கடன் பட்டீங்களா? "என்றாள் வியப்புடன்.
'இருக்கவே இருக்கிறது விசாக் காட், அதில் தான் உனக் கும் பிள்ளைகளுக்கும் உடுப்பு வாங்கினேன்."
'அப்போ உங்களுக்கு எதுவும் வாங்கவில்லையா? "
'என்னப்பா நீ வேறு நான் வேறா?நீ புதுச்சீலை அணிந்து அழகாகவும் ஆனந்தமாகவும் இருந்தால் எனக்கு அதைவி டச் சந்தோ~ம் வேறென்ன? சரிசரி புதுச் சேலையைக் கட் டிக் கொண்டு புக்கையைப் பொங்கு பின்னர் பிள்ளைகள் எழும்பியதும் அவர்களையும் குளிச்சாட்டி எல்லோ ருமாக கோயிலுக்குப் போய வருவோம்".
புதுச் சேலையை கட்டி அழகு பார்ப்பதற்கு முன் அவனை க் கட்டியணைத்து முத்தம் கொடுத்தாள் மாலதி. குளித்து விட்டு வந்த அவளது முத்தம் சந்திரனின் கன்னத்தில் ஐஸ் வைத்தாற் போன்று ஐpல்லெனக் குளிர்ந்தது.
'முருகா பிறரை ஏமாற்றிப் பிழைக்க எனக்குத் தெரியாது. ஆனால் உடலில் வலுவிருக்கும் வரை மாடாய் உழைத்து என் குடும்பத்தை காப்பாற்ற முடியும். உழைத்து வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு தொழில் இல்லாமல் செய்து போட் டியே. புது வருடத்திலிருந்தாவது எனக்கு நல்ல சம்பளத்து டன் வேலை கிடைக்க அருள்செய் என ஆலயத்தில் முரு கனை வேண்டிக் கொண்டான் சந்திரன்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தொ டர்ந்து வேலை தேடிக்கொண்டிருந்தான். ஆனால் எங்கே யும் வேலை கிடைப்பதாகத் தெரியவில்லை. இரண்டு கிழ மையின் பின் அவன் ஏற்கனவே வேலை செய்த பக்டரியில் இருந்து டெலிபோண் வந்தது. மீண்டும் வேலைக்கு வரு மாறு அவர்கள் கூறியதும் தனது கவலைகள் தீர வழி பிற ந்து விட்டதெனக் கூறி துள்ளிக் குதித்தான் சந்திரன்.
அவனது மகிழ்ச்சியில் மாலதியும் இணைந்து கொண்டாள். அவர்களிருவரும் இணைந்து மகிழ்வோடிருக்கும் நாளெ லாம் பொங்கல் திருநாளல்லவா?
புனர்ஜன்மம்
கரம்பன் கடற்கரையில் இராணுவம் வந்திறங்கியதை பனை யில் கள்ளுச் சீவிக்கொண்டிருந்த சிங்காரம்; கண்டு விட் டான்.பயத்துடன் விர்ரென சறுக்கிக் கொண்டு மரத்தை விட் டிறங்கி ஊர்மனைக்குள் ஓடி வந்து 'ஆமிக்காரங்கள் வந் திறங்கி விட்டாங்கள் எல்லாரும் ஓடுங்கள்" எனக்கத்தி னான். அதேவேளையில் சனங்கள் திடிம் புடிம் எனத்தெரு வால் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் சத்தமும் கேட்டது.
இரண்டு நாட்களாக ;ஹெலி ;யும், சகடையும் காவலூர் துறை முகத்திலிருந்து பருத்தியடைப்பு, கரம்பன், சுருவில், நாரந்தனை எல்லாம் சுற்றிச்சுற்றிப் பறந்து செல் அடித்தது. அதனால் மூச்சுத் திணற, உடலெல்லாம் வேர்த்தோட பங் கருக்குள் பதுங்கிக் கிடந்தோம். மூன்றாம் நாள் காலை யில் வெளியே வந்த போது எல்லோருக்கும் பசி வயித்தை க் கிள்ளியது. பயத்தாலும் பலவீனத்தாலும் தேகம் நடுங் கிக் கொண்டிருந்தது. சமைத்துச் சாப்பிட அரிசியைத் தவிர வேறெதுவும் வீட்டிலில்லை. வெறும் கஞ்சியாவது காய்ச் சிக் குடிப்பம் என்று அம்மா அடுப்பில் அரிசி போட்ட பின் னர் தான் சிங்காரம் கத்திய கத்தலும் சனங்கள் ஓடும் சத்தமும் கேட்டன.
பிள்ளைகள் எல்லாரும் ஓடுங்கள் வேலணைக்குப் போய் சிறி மாமா வீட்டிலயாவது இருந்து போட்டு வருவம் என்று சொல்லிக் கொண்டே அடுப்பில் வெந்தது பாதி வேகாதது பாதியாக இருந்த கஞ்சியை சோத்துப் பெட்டிக்குள் ஊத்தி னா அம்மா. காச்சின கஞ்சியையாவது ஆறுதலாகக் குடிக் கவும் வழியில்லாமக் கிடக்குது கோதாரிப்பட்ட நாட்;டில என புறுபுறுத்தா ஆச்சி.அம்மாவையும், ஆச்சியையும் நான் சைக்;கிளில் ஏற்றிக் கொண்டு போறன் நீங்களெல்லாம் ஓடி வாங்க என்றான் தம்பி. 'எட நான் சைக்கிளில ஏறினால் விழுந்து கிழுந்து போவன் நீ அம்மாவையும் அப்பாவையும் ஏத்திக் கொண்டு போ நான் எப்படியோ மெல்ல மெல்ல பெட்டையளோட ஓடிவருவன்" என்றா ஆச்சி. 'எணே நீ ஓடமாட்டாயண சைக்கிளில் முன்னுக்கு ஏறியிரு
ந்தால் நான் விழவிடாமல் கொண்டு போவன்" என்றான் தம்பி. என்றுமே சைக்கிளில் ஏறிப் பழக்கமில்லாத ஆச்சி ஏறமாட்டேனென அடம் பிடித்தா. கிழவி எங்களோடு வந் தால் நாங்களும் ஓட முடியாதென்ற பயம் எங்களுக்கு.
;ஹெலி ;யின் இரைச்சல் கேட்கத் தொடங்கியது. தரையில் வந்து கொண்டிருக்கும் ஆமிக்காரங்களுக்கு புலிகளினால் ஆபத்து எதுவும் ஏற்படாது பாதுகாப்பதற்காகவே ;ஹெலி ; தாழப் பறந்து கொண்டு வரும். அதனால் ஆமிக்காரங்கள் அண்மையில்வந்து விட்டாங்கள் என்பதைப் புரிந்து கொண் டோம்.
வாணை ஆச்சி ஓடுவம் எனச்சொல்லிக் கொண்டே நாங் கள் ஓடத்தொடங்கினோம். கொஞ்சத் தூரம் ஓடிப்போய் திரும்பிப் பார்த்த போது ஆச்சி வெகு தூரத்தில் தள்ளா டித் தள்ளாடி வந்து கொண்டிருந்தா. மரணத்துக்கு அஞ்சி ஓடும் அந்த வேளையிலும் ஆமையும் முயலும் ஓட்டப் பந் தயத்தில் ஈடுபட்ட கதை ஞாபகத்துக்கு வந்தது. பசிக் களையோடு கால்கள் பின்னப் பின்ன ஓடிய எங்களுக்கும் விழுந்து படுக்க வேண்டும் போலிருந்தது. ஆச்சி வரும் வரை ஹெலியின் பார்வைக்குத் தெரியாது மரத்தின் கீழ் மறைந்து குந்தினோம்.'கோதாரியில போவாங்களால சாகி ற வயசிலும் நின்மதியாகச் சாக வழியில்லாமல் கிடக் குது" என்று திட்டிக்கொண்டு வந்த ஆச்சியும் களைப்பாற எங்களுடன் குந்தினா.
தூரத்தே மற்றுமொரு கும்பல் ஓடிக்கொண்டிருப்பது தெரிந் தது. ஹெலியிலிருப்பவன் சகடையில் இருப்பவங்களுக்கு ஏதோ சிங்களத்தில் ;வயலெஸ் ; மூலம் சொல்வது நான் கையில் வைத்திருந்த ;டிரான்ஸிஸ்டர் ; றேடியோவில் கேட் டது. அதைக் கேட்பதற்காகவே அதனையும் கையோடு எடுத்துக் கொண்டு வந்தேன். குண்டு போடச் சொல்லுகி றான் என ஊகித்துக் கொண்டோம். முட்டை போடும் கோழி பதுங்குவது போல் சகடையின் பின் பக்கம் கீழே பதிந்தது. மறுகணம் பனங்காய்கள் விழுவது போல் மூன்று நான்கு செல்லுகள் விழுந்தன. நிலத்தையே அதிர வைத்த அவற்றின் வெடிச் சத்தத்தை அடுத்து அந்த இடத்தைச் சுற்றி ஒரே புகை மண்டலம். அத்துடன் தாக்குதலுக்கு இல க்கானோரின் மரண ஓலமும் கேட்டது. எங்களுக்;கு தலை விறைத்து நெஞ்சும் திக்குத் திக்கென்றது.
ஹெலியும் சகடையும் கண்ணுக்கெட்டாத தூரம்வரை சென் றதும் வாணை ஆச்சி ஓடுவமெனக் கூறிக்கொண்டே மெது மெதுவாக ஓடத்தொடங்கினோம். வயலுக்கூடாக ஓடிப்போய் தெருவில் ஏறும் போது ஏதோ இரைச்சல் கேட்டது. அது ஆமிக்காரனின் ஜீப்பாக இருக்குமோ எனப் பயந்தோம். நல்ல வேளை அது தோட்டக்கார மார்க்கண்டுவின் லான்ட் றோவர். கையைக் காட்டி மறித்ததும் அவர் நிறுத்தினார். நாங்கள் வேலணைக்குப் போறம் ஆச்சி ஓடமாட்டா எங்க ளை ஏற்றிக் கொண்டு போறீங்களா எனக் கேட்டோம். அவர் பதில் கூறு முன்னரே நானும் தங்கச்சியுமாக ஆச் சியைத் தூக்கி லான்ட் றோவரில் ஏற்றி விட்டு நாங்களும் ஏறிக் கொண்டோம். செருக்கன் சந்திக்கு அண்மையில் போய்க் கொண்டிருக்கையில் ஹெலியும் சகடையும் அடு த்த றவுண்ட் வந்தது. லான்ட் றோவருக்கு மேல் செல் அடிப் பாங்கள் என்ற பயத்தில் அண்ணே நிற்பாட்டுங்கோ நாங்கள் இறங்கி ஓடுகிறோம் எனக் கத்தினோம். பொறு ங்க பிள்ளைகள் நான் எங்காவதொரு மரத்துக்குக் கீழ கொண்டு போய் நிறுத்திறன். இல்லாவிட்டால் அவங்கள் லான்ட் றோவருக்கு மேல் செல் அடிச்சுப் போடுவாங்கள் என்றார்.
எங்களுக்கு மேலே வந்து விட்ட சகடையின் பின் பக்கம் இலேசாகப் பதிந்ததைக் கண்டதும் நானும் தங்கச்சியும் பாய்ந்து விழுந்தெழும்பி ஓடினோம். செல் விழுந்து வெடித் த சத்தம் கேட்டதும் நான் நிலத்தில் வீழ்ந்து படுத்து விட் டேன். எங்குமே ஒரேபுகை மண்டலமாக இருந்தது. லான்ட் றோவரில் இருந்த ஆச்சி மார்க்கண்டு ஆகியோரின் பாடு என்ன? தங்கச்சிக்கு என்ன நடந்தது என்று ஒன்றுமே தெரி யவில்லை. இஞ்ச கிடந்து நாளாந்தம் அஞ்சி அஞ்சிச் சாவதை விட கனடாவுக்கு ஓடித் தப்பி விட்டால் நிம்மதி யாக இருக்கும். அண்ணா எங்களைப் பொண்சர் பண்ணி கனடா எம்பஸியால விசாவும் கிடைச்சிட்டுது ஆனால் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே போறதுக்கு இன்னும் விசாக் கிடைக்கவில்லை. கனடா மண்ணில் காலடி வைக் கச் சந்தர்ப்பம் கிடைக்குமோ அல்லது இந்த மண்ணில தான் தெரு நாய்களைப் போல் செத்துக்கிடந்து காகங் களுக்கும் பருந்துகளுக்கும் இரையாவதோ என எண்;ணி மனம் பதகளித்தது.
செல் வெடித்ததினால் எழும்பிய புகை மண்டலம் முற்;றாக
கலைந்ததும் எழுந்து நின்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். வெகு தொலைவில் ஒரு பனை மரத்தின் பின்னால் தங்கச்சி நிற்பது தெரிந்தது. சத் தம் போட்டு அவளை அழைத்தேன். ஆனால் உடலில் இயக்கமே இல்லாததால் சத்தமே வரவில்லை. கையைத்தட்டி அவள் நான் நிற்கும் திசையைப் பார்த்ததும் கையை காட்டி வரவழைத்தேன். பின்னர் ஆச்சிக்கு என்ன நடந்தது என்று அறியும் ஆவலில் இருவருமாக சிதைந்து கிடந்த லான்ட் றோவரை நோக்கி ஓடினோம். அது தீப்பிடித்து இன்;னும் எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து பத்தடி தூரத்துக் கப்பால் கருகிய நிலையில் தூக்கி எறியப்பட்ட ஆச்சி குறவணம் புழவாய் சுருண்டு கிடந்தா. ஆச்சி ஆச்சி என அழைத்துக் கொண்டே அவவுக் கருகே ஓடிச் சென் றோம். வாயால் நுரையும் இரத்தமும் கக்கியபடி கிடந்தா. கையால் உசிப்பிப் பார்த்தோம். உடலில் உயிர் இருப்பதற் கான அறிகுறி எதுவுமே இல்லை. மூக்கில் கையை வைத் துப் பார்த்தேன் மூச்சே வரவில்லை. எங்களுக்கும் மூச்சு நின்று விடும் போலிருந்தது.
தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்தவாறு இருவ ரும் ஆச்சியின் கருகிய சடலத்தினருகே குந்தியிருந்தோம். தூரத்தே மார்க்கண்டுவின் முனகல் சத்தம் கேட்டது. அவ ரைப் போய் பார்த்து உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமே இன்றி பித்துப் பிடித்துப் போயிருந்தோம். அப்பா அம்மா, தம்பி எல்லாரும் வேலணைக்குப் போய் சேர்ந்தி னமோ, அவையள திரும்பவும் சந்திக்க முடியுமோ என்ன வோ? ஆச்சியைப் போல் நாங்களும் செத்திருந்தால் நின்ம தியாக இருந்திருக்கும் எனநினைத்த போது ஒருவித பயம் மின்சாரம் போன்று என்னுடலில் ஊடுருவுவதை உணர்ந்; தேன்--அது தான் மரணபயமோ?சதா அன்பு வடிந்து இன்று இரத்தம் வடியும் ஆச்சியின் முகத்தை இறுதி முறையா கப் பார்த்து இரு கைகளாலும் வருடி கண்களில் ஒற்றிக் கொண்டு எமது கொடிய நெடும் பயணத்தை ஆரம்பித் தோம். ஏற்கனவே உடம்பில் தெம்பில்லை. இப்போ மனதி லும் வலுவில்லை -- நடப்பதற்கே தஞ்சமின்றி காகித ஓடம் போன்று நகர்ந்து கொண்டிருந்தோம். சரமாரியாக செல் லுகள் வீழ்ந்ததினால் குழிவிழுந்து கிடந்த வீதிகளும் எங் களை இடறி விழுத்தும் போலிருந்தது.
அப்பாவையும் அம்மாவையும் பத்திரமாக வேலணையில்
இறக்கிவிட்டு எங்களை ஏற்றிச் செல்வதற்காக தம்பி விரை ந்து வந்தான். ஆச்சி எங்கை அக்கா என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் நாமிருவரும் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறினோம். பற்றரி இல்லாத றேடியோ போல் கதறல் வெளிவராது தொண்டைக்குள்ளேயே நின்று விட் டது. மூவரும் எதுவித பேச்சு மூச்சுமின்றி மாமாவின் வீட் டைச் சென்ற டைந்தோம். ஆச்சியை இழந்த செய்தியைக்
கேட்டு அம்மாவும் கதறி அழுதா. மாமா வீட்டில் ஏதோ சாப்பிடக் கிடைத்ததால் அவவின் தொண்டையிலிருந்து சத் தம் வந்தது.
எங்களையும் சாப்பிடச் சொல்லி மாமி சோறு தந்தா. சோற்றைக் கண்ணால் கண்டே கனகாலமாகையால் அப்ப டியே கோப்பையோடு தூக்கி லபக்கென விழுங்க வேண் டும் போலிருந்தது. ஆனால் இரண்டு பிடி எடுத்து வாய்க் குள் வைத்ததுமே விக்கல் எடுத்தது. தண்ணியைக் குடித்து விட்டு சாப்பிட முனைந்தோம். வயிறு நிறையப் பசி இருந் தது, கோப்பை நிறைய சோறும் கோழிக் கறியும் இருந் தது ஆனால் சாப்பிட முடியவில்லை. காரணம் என்னவென எமக்குப் புரியவில்லை. பட்டினி கிடந்து குடல் காய்ஞ்சு போய்ச்சுது. அதுதான் சாப்பிட முடியாமல் இருக்குது. அவ திப்படாமல் ஆறுதலாகச் சாப்பிடுங்க என்றா மாமி. அரை வாசி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில நான்; மயக்கம்வந்;து
விழுந்து விட்டேன். மயக்கம் தெளிந்து கண்விழித்த போது கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தேன். உண்ட கழைப்பு தொண்டருக்கே உண்டென்றால் மரண பயத்தில பட்டினி யோடு ஓடி வந்த உங்களுக்கிருக்காதா என்றா மாமி.
உடும்புகளாய் பங்கருக்குள் நுழைவதும் வெளியே வந்து மூச்சிழுப்பதுமாக நாட்கள் நகர்ந்தன. இறுதியாக யாழ்ப் பாணத்தை விட்டு வெளிக்கிட அனுமதி கிடைத்தது. ஆனா ல் கிளாலிக்கூடாக வள்ளத்தில் போகும் ஆக்களை ஆமிக் காரங்கள் சுட்டுத் தள்ளுவதாகவும் செய்தி வந்தது. இருக் கவும் முடியாது போகவும் முடியாது இரண்டும் கெட்டான் நிலை. கார் முகிலைக் கிளிக்கும் மின்னல் ஒளி;க் கீற்றாய் மற்றொரு செய்தியும் இருநாள் கழித்து வந்தது. கிளாலிக் கூடாகப் பிரயாணம் செய்வோருக்கு ஆயதமேந்திய விடுத லைப் புலிவீரர்கள் பாதுகாப்பு என்ற அந்தச் செய்தி அறிந் ததும் அப்பாடா எம்மைப் பிடித்துச் சிப்பிலி ஆட்டிய ஏழரை ச்சனியோ அட்டமத்துச் சனியோ இன்றுடன் முடிந்தது என மகிழ்ந்து புறப்பட்டோம்.
விடுதலைப் புலியினரது உயிருக்கே உத்தரவாதம் இல் லாத போது அவர்களின் பாதுகாப்போடு செல்லும் எமது உயிருக்கும் என்னவாகுமோ என்ற அச்சத்துடனேயே கிளா லிக் கடலைக் கடந்தோம். ஆனையிறவில் காலடி வைத்த தும் உறுதியற்ற பயணத்தின் முதற் கட்டத்தை தாண்டிய பெருமூச்சு வந்தது. அங்கிருந்து மினி பஸ் மூலம் வவுனி யாவை வந்தடைந்தோம். மினி பஸ்ஸால் இறங்கி நடந்து செல்லும் போது இராணுவ செக்கிங் பொயின்ற்றில் கடும் சோதனை. சூட்கேஸ்களை எல்லாம் திறந்து உடுப்புகளை கிளறி எறிந்தாங்கள். சோதனைக்காக ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக கியூவில் நின்றதில் கழைப்பு ஏற்பட்டது. அத்துடன் இரண்டு மைல் தூரம் நடந்து வந்த கழை, பசிக் கழை வேறு வாட்டி வதைத்தது. அகதிகளாய் வரு வோருக்கு சற்றுத் தொலைவிலுள்ள பள்ளிக் கூடமொன் றில் தங்குமிட வசதியும் சாப்பாட்டு வசதி எல்லாம் இரு க்குதென்று யாரோ சொன்னார்கள். ஆனால் அங்கெல்லாம் போனால் பன்னிரண்டு மணி றெயினை விட்டிடுவம். அதை விட்டால் நாளைப் பகல் வரைக்கும் இஞ்ச கிடந்து சீரழிய வேணும். நீங்க ஸ்டேசனுக்குப் போங்க நான் கடையில பாணும் சோடாவும் வாங்கிக் கொண்டு வாறன் என்றார் அப்பா. றெயினில் ஏறி இடம் பிடித்து சௌகரியமாக அமர் ந்து கொண்டதும் நெடுந்தூரப் பயணத்தின் இரண்டாவது கட்டத்தை தாண்டிவிட்ட நின்மதி. அறா விலைக்கு அப்பா வாங்கி வந்த அச்சுப் பாணையும் வாழைப் பழத்தையும் தின்று சோடாவையும் குடிதத்தும் நித்திராதேவி எங்களைத் தழுவிக் கொண்டாள். ஆமிக்காரங்களின் அட்டூழியங்களுக் கும் செல் வீச்சுக்களுக்கும் அஞ்சி நிம்மதியாக நித்திரை கொள்ளாமல் விட்டு எத்தனை வருசமாச்சு?
கொழும்பு சென்றடைந்ததும் வெள்ளவத்தையிலுள்ள எமது அப்பாவின் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தோம். நாங்கள் பட்டு வந்த அவலத்தைக் கேட்டறிந்த அவரும் விழுந்து விழுந்து எங்களை உபசரித்தார். பிளேன் டிக்கட் டை கொன்பேர்ம் பண்ணும் வரை ஒரு கிழமை அவரது
வீட்டில் தங்கியிருந்தோம். அப்போது கொழும்பைப் பார்த் தால் யாழ்ப்பாணம் போன்றிருந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே தமிழ்ச் சனங்கள். ஒரு காலத்தில் கொழும்பிலிருப்பது
ஆபத்து என அஞ்சி யாழ்ப்பாணத்துக்குப் பறந்தடித்து வந் த சனங்கள் இன்று கொழும்பிலிருப்பது தான் பாதுகாப்பெ னக்கருதி வாடகை வீடுகளிலும் ஹோட்டல்களிலும் சீவிக் கினம். ஆனால் கொழும்பிலும் ஆமிக்காரங்கள் நள்ளிரவு நேரம் வீடுகளுக்குள் புகந்து சோதனை நடாத்தி இளம் பொடியன்களை விசாரணைக்கென பிடித்திழுத்துச் சென்றா ங்கள். எங்கள் தம்பியும் இருந்ததினால் அவனைப் பறிகொ டுத்து விட்டு நாங்கள் கனடாவுக்குச் செல்ல முடியாதென அஞ்சி நாங்களே அவனை அறைக்குள் தடுப்புக் காவலில் வைத்திருந்தோம்.
பயணம் வெளிக்கிட்டு எயாப்போட்டுக்குப் போகும் வழியி லும் ஆமிக்காரங்கள் தடுத்து நிறுத்தி தம்பியை அப்பிக் கொண்டு போய் விடுவாங்களோ என்றபயம். நல்லவேளை யாக வழியில் எதுவித தடங்கலுமின்றி எயாப்போட்டைச் சென்றடைந்தோம். அங்கு செக்கிங் எல்லாம் முடிந்து எயாலங்கா பிளேனில் ஏறி அமர்ந்ததும் மீண்டுமொரு நின்மதிப் பெருமூச்சு. விமானம் விர்ரெனக் கிளம்புகையில் காதடைத் ததோடு இதயமும் அடைத்துக் கொண்டது.
பிறந்து வளர்ந்து இருபத்தியிரண்டு வருடங்களாக ஊசாடித் திரிந்த எங்களது வீடு,பின் வளவில் நிற்கும் மாமரங்களி லிருந்து மாங்காய்களைப் புடுங்கி வைக்கலுக்குள் பழுக்;க வைத்துப் புட்டுடன் ரசித்துச் சுவைத்துச் சாப்பிட்ட சம்பவம், காலையில் எங்களை மணியோசை மூலம் துயிலெழுப்பும் முருகமூர்த்தி;;கோயில்,வாண வேடிக்கையோடு களைகட்டும் கந்தச~;டித் திருவிழா, ஆரம்பக்கல்வி கற்ற சண்முகநாத வித்தியாசாலையில் கழித்த களிப்பான காலம்,உயர் கல்வி; கற்ற யாழ் பல்கலைக் கழகம்,ஆபத்தான வேளைகளில் ஆதரவாக இருந்த அயல் வீட்டு சபாரெத்தின மாஸ்டர் குடும்பம்,சிறி மாமாவின் குடும்பம் எல்லாம் என்மனத்திரை யில் திரைப்படம் போல் நீண்டு விரிந்தது. இவை எல்லா வற்றையும் விட்டுப்பிரிந்து எங்கோ தொலை தூரம் போகி றோமே என்ற ஏக்கத்தில் கண்கள் கலங்கின.முதல் முறை யாகப் பிளேனில் பயணம்செய்யும் குதூகலம் கூட எனக்கு ஏற்படவில்லை. ஆமிக்காரர்களின் அக்கிரமங்களைத் தாங்க முடியாது எப்பயடா கனடாவுக்கு ஓடித்தப்;;புவோம் என அங் கலாய்த்த என்மனம் இப்போ ஏனடா எம்பிறந்த மண்ணை விட்டுப் போகிறோம் என ஏங்கித் தவிக்கிறது. பெற்றதாயை நிற்கதியாய் தவிக்க விட்டுப் பிரிவது போன்ற பெருந்துயர்.
நெடுந்தூரப் பயணத்தின் இறுதிக் கட்டமாக கனடா எயாப் போட்டில் காலடி வைத்தோம். வாரத்தில் ஏழு நாளும் காலை எட்டு மணிமுதல் நள்ளிரவு வரை இரு வேலைகள் செய்து அதிக வருமானம்; காட்டி எங்களைப் பொன்சர் பண்ணி; நாம் வந்து சேருமுன்னர் என்னென்ன அனர்த்த னங்கள் நடக்குமோ, எங்களை உயிருடன் காணமுடியுமோ எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அண்ணா விமான நிலையத்துக்கு வந்திருந்தார். எங்களைக் கண்டதும் விம்மி அழுது கொண்டு அனைவரையும் கட்டித் தழுவினார்.
பூரண சுதந்திரமான கனடாவின் மண்வாசனையை நுகர்ந்த போது இருள் மயமான கருவறைக்குள் இருந்து புதிய பூமி யில் புனர் ஜன்மம் எடுத்த புளகாங்கிதம் பூரித்தது.
கலாநிதியும் காலனும்
றீற்றாவின் மதாளித்த உடலழகு, விம்மிப் புடைத்து நிற்கும் மார்பகங்கள், அள்ளிச் சொருகிய அடர்ந்த கருங் கூந்தல், சதா வெற்றிலையை குதப்பிக் குதப்பி செக்கச் செவேலென சிவந்திருக்கும் வாயிதழ்கள் அத்தனையும் ஆண்களை காந் தமாய்; கவர்ந்திழுக்கும். தீண்டத் தகாத குலத்தில் பிறந்த அவளது அழகு திருமணம் செய்த பின்னருங் கூட கட்டுக் குலையாதிருந்தது. தீண்டத் தகாதவர்களென ஒதுக்கி வைத் த உயர் சாதி ஆண்வர்க்கமே அவளது செக்ஸி அழகைக் கண்டு விறைத்தெழுந்தது. உயர் குலத்தில் பிறந்து உயர் அந்தஸ்த்தில் வாழ்ந்து வருபவன் என்ற இறுமாப்புக் கொண் ட கல்லூரி அதிபர் கந்தசாமியர் கூட றீற்றாவைக் கண்டதும் நிலை தடுமாறிப் போய்விடுவார்.
நெல்லுக் குத்த, மாவிடிக்க, மாடுகளை மேய்க்கவென றீற்றா தினமும் கந்தசாமியரின் வீட்டுக்கு வந்து போவதுண்டு. தன து மனைவி வீட்டில் இருக்கும் வேளையில் றீற்றாவை வீட்டு வாசல் படி ஏறவிடாத கந்தசாமியர் மனைவி வீட்டில் இல்லா த சமயங்களில் அவளை வீட்டுக்குள் மாத்திரமல்ல தனது படுக்கை அறைக்கே இழுத்துச் சென்று விடுவார். அத்துடன் மனைவியின் ஸ்தானத்தையே வழங்கி கட்டியணைத்து இன்பு றுவார். கட்டிலிலாவது சமத்துவம் கூட்டிக் கொடுக்கும் காமத் தின் சக்தியே பராசக்தி.
இலங்கையின் வடபகுதியில் மேற்குலக கிறிஸ்தவ திருச்ச பையின் போதகர்கள் சைவர்களை மதம் மாற்றும் பணியில் ஈடுபட்ட காலகட்டம். காலாதி காலமாக சைவ சமயத்தையே பின்பற்றி வாழ்ந்து வந்த சைவர்கள் அசையவே இல்லை. ஆதி அந்தம் இல்லாது இறப்புப் பிறப்புக்கு அப்பாற் பட்ட வரே உண்மையான முழுமுதற் கடவுள். அப்படியானால் மாட்டுத் தொழுவத்தில் மனிதனாய்ப் பிறந்து அடி உதையும் முள் முடியும் தரித்து சித்திரவதைப் பட்டு மாண்டு போனவர் எப்படி ஆண்டவனாக முடியுமெனக் கேள்வி கேட்டனர். அக் காலத்திலேயே தங்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அள
வுக்கு யாழ்ப்பாணத்தவர்கள் அறிவாளிகள் என்பதை உணர்
ந்து கொண்ட அந்நிய நாட்டுப் போதகர்கள் திண்டாடிப் போ னார்கள்.அதனால் சில தந்திரோபாயங்களைக் கையாண்டனர்.
செய்யும் தொழில் காரணமாக போதிய வருமானமின்றி ஊத் தை உடுப்புகளுடன் அசிங்கமாகத் தோன்றியதால் தீண்டத் தகாதவர்களென ஒதுக்கி வைக்கப் பட்டோரை அவர்கள் நாடினார்கள்.'இறைவன் முன்னிலையில் உயர்வு தாழ்வென்ற பாகுபாடில்லை. இந்து சமயத்தில் மாத்திரமே இப்பாகுபாடு இருக்கிறது. இந்துக்களாய் இருக்கும் நீங்கள் உங்களது கோவிலுக்குள்ளே சென்று யானை முகமும் எலி வாகனமும் கொண்ட கடவுளைத் தோத்தரிக்க முடியாத பாவிகளாய் உள்ளீர்கள். கிறீஸத்;தவ மதத்தில் இத்தகைய கட்டுப்பாடு கள் எதுவுமே இல்லை. அனைவருக்கும் பூரண சுதந்திரமும் சமத்துவமும் உண்டு. கர்த்தரான யேசுக் கிறீஸ்த்து நாதர் உங்களோடிருந்து விசுவாசிகளான உங்களைக் காப்பாற்று வார். ஆனபடியினால் பரமண்டலத்திலே ஜீவிக்கும் பரம பிதா வான யேசுக் கிறீஸ்த்துவை நீங்கள் நம்புங்கள்"எனக்கத்திக் கத்திப் பிரசங்கம் செய்தார்கள்.
உயர் சாதியினர் எனக் கூறிக் கொள்வோர் தம்மை ஒதுக்கி வைத்தாலும் அவர்களிலும் பார்க்க மிக உயர்ந்தவரான பரம சிவன் எங்களை ஒதுக்கி விடவில்லை என்ற அசையாத நம் பிக்கையுடன் சிவ சிவா என்று சொல்லி திருநீறும் சந்தண மும்பூசி சிவனை வழிபட்டு வந்தார்கள் கீழ்சாதியினர். தூணி லும் துரும்பிலும் சக்தியாக இருக்கும் இறைவனை கோயிலு க்கு உள்ளேயோ வெளியேயோ நின்று வழிபட்டாலும் ஒன்று தானே எனக் கருதி அவர்கள் திடமாக இருந்தார்கள். அத னால் இறுதி முயற்சியாக அவர்களது பொருளாதார பலவீன த்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்கள் போதகர் கள். தீண்டத் தகாதவர்களை வீடு வீடாகத் தேடிச் சென்று காசும் உடுப்புகளும் கொடுத்தார்கள். புது வருடம் தீபாவளிப் பண்டிகைகளுக்குக் கூட புது உடுப்பு வாங்கி உடுக்க வசதி யற்றிருந்த அவர்களுக்குப் புது உடுப்புகள் கிடைதத்தும் புது வருடத்தின் ஞாபகம் வந்தது.எலும்புத் துண்டுக்கு ஆசை ப்பட்ட நன்றியுள்ள பிராணியைப் போன்று அன்றிலிருந்து மாடுதின்னும் மதத்தை பின்பற்றுவோரது எண்ணிக்கை சிறிது
சிறிதாக அதிகரித்தது. அவ்வாறுமாறிய ஒருகுடும்பத்தில் பிற ந்தவளே றீற்றா.
பணபலத்தினால் பாரெல்லாம் கிறிஸ்த்து மதத்தைப் பரப்பிய ஐரோப்பியர்களின் இன்றைய பரம்பரையினர் அரைத்த மாவையே அரைப்பது போன்று ஆண்டாண்டு காலமாய் பைபிளிலுள்ள அதே வாசகங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லி அலுத்துப் போனார்கள். விரக்தியுற்ற நிலையில் நின்மதியைத் தேடி பேதைகளிடமும் போதை வஸ்த்துக்க ளிலும் மோகங் கொண்டார்கள். அதிலுமே நிரந்தர இன்பத் தினையோ நின்மதியினையோ பெறமுடியாது பித்தர்களாய் அலைந்த போது சைவசமய ஞானிகளின் அர்த்தபு~;டியான ஆங்கில ஞான உபதேசங்களை செவிமடுத்தார்கள். அன்றி; லிருந்து தம்மை மறந்து தலைப்பட்டனர் தலைவன் தாழை. மது,மாது,மாமிசம், கிறீஸ்த்தவ மதம் அனைத்தையுமே மற ந்து இந்தியாவிலுள்ள சைவசமய ஞானிகளின் ஆச்சிரமங் களில் அதிமருத்துவ சக்தி வாய்ந்த மூலிகையான துளசி மாலையை உருட்டிய வண்ணம் பேரானந்;த பெருவாழ்வை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் றீற்றாவின் பரம்பரை யினர் இன்னமும் பிளாஸ்ரிக்கினால் செய்யப்பட்ட செபமா லையையே உருட்டிக் கொண்டிருக்கின்றனர்.
றீற்றாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அது உரிச்சுக் கழட்டி கந்தசாமியரைப் போலவே இருந்ததினால் அது அவருக்குத் தான் பிறந்ததென ஊரார் குசு குசுத்தார்கள். பரம்பரைச் சைவக்காரனான அவருக்குப் பிறந்த குழந்தை க்கு இன்னாசித்தம்பி எனப் பெயரிட்டு ஞானஸ்த்தானமும் கொடுப்பித்தாள் றீற்றா. அச்சம்பவம் கந்தசாமியரின்; இதய த்தை நெருஞ்சி முள்ளாக நெருடியது. இருந்தாலும் எது வுமே செய்ய முடியாத நிலையில் தொடர்ந்தும் அவளுடன் களவியல் கூடிக் களிப்புற்றார். அம்மாவின் அழகு கொண் ட இன்னாசித்தம்பி அப்பாவைப் போல் அறிவில் சூரன். மல்லாமலை போன்று வளர்ந்து பி.ஏ.பட்டப் படிப்பினை முடித்து கலாநிதிப் பட்டமும் பெற்றார். அதனால் யாழ் பல் கலைக் கழகத்தில் விரிவுரையாளர் பதவி கிடைத்தது;. தன்னையும் தனது சமூகத்தினையும் பிறர் மதிக்காது ஒதுக் கி வைத்ததைக் கண்டு ஆத்திரமுற்றார். அப்பரின் அகம்பா
வமான டி.என்.ஏ.மகனிலும் தன் தொழிலைச்செய்தது. இந்த
சமுதாய அமைப்பையே முற்றாக மாற்றி அமைக்க வேண்
டுமென திடசங்கற்பம் கொண்டார். விரிவுரையின் போது உயர் குல மாணவரிடையே வாழைப் பழத்தில் ஊசி ஏற்று வது போன்று கம்யூனிஸத்தையும் மெது மெதுவாகத் திணி த்து வந்தார்.
பொருளாதார ரீதியில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி செல்வத்தை சகலரும் பகிர்ந்து அனுப விக்க வேண்டும் என்ற உயர்வான தத்துவத்தைக் கொண்டதே கம்யூனிஸம்.ஆனால் கலாநிதி இன்னாசித்தம்பியர் அதனை தனக்குச் சாதகமாக்கி சமுதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந் தவன் என்ற பேதம் இருக்கக் கூடாது. யாவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை மாணவரிடையே திணித்து வந்தார். அவர் மாத்திரமல்ல ஓரளவு எழுத வாசி க்கத் தெரிந்து கொண்ட சில சிறுபான்மை இனத்தவர்க ளும் தங்களைத் தாங்களே கம்யூனிஸ்ட்டுகளெனத் தம்பட் டம் அடித்துக் கொண்டனர். சிறுபான்மையினரின் வாக்குக ளைப் பெறும் கபட நோக்குடைய சில அரசியல்வாதிகளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரில் தேர்தலில் குதித்து சமபந்தி போசனமும் உண்டார்கள்.
கலாநிதி இன்னாசித்தம்பியரின் மகுடியில் கட்டுண்டு மதி மயங்கிய தீவுப்பகுதியைச் சோந்;த தளையசிங்கம,; ஜெய பாலன் ஆகிய மாணவர்கள் புதிய சாதனை எதையாவது சாதிக்க வேண்டுமெனத் துடித்தார்கள். இன்னாசித்தம்பியர் போதித்தது உண்மையான கம்யூனிஸக் கொள்கையே என நம்பி பல்கலைக் கழகத்திலிருந்து பி.ஏ.பட்டதாரிகளாக வெ ளியேறியதும் சமுதாய சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுப ட்டார்கள்.
அங்;குள்ள இளைஞர்கள் பெரும்பாலும்; ஏழாம் எட்டாம் வகுப்போடு பள்ளிப் படிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு கொழும்பு, கண்டி, காலி,மாத்தறை ஆகிய இடங்களிலுள்ள தமது உறவினர்களது கடைகளுக்கு வேலை தேடிச்சென்று விடுவார்கள். முதன்முதலாக உயர் கல்வி கற்று பட்டதாரி யாகிய தளையசிங்கத்தை கொழும்பில் பிரபல முதலாளி யாக இருந்த முருகேசர் சீதனம் என்ற பெயரில் அதிக விலை கொடுத்து தனது மருமகனாக்கிக் கொண்டார்.
சமூகச் சீர்திருத்த நடவடிக்கையின் முதற் கட்டமாக தனது பெருங்காட்டு கிராமத்தின் எல்லைப் புறக் கடற்கரையோடு வாழ்ந்து வரும் சிறுபான்மையினருக்கு அறிவு வளர்ச்சியை
ஏற்படுத்த வேண்டுமென எண்ணி அப்பகுதியில் ஒரு வாசிக
சாலையைக் கட்டுவித்தார் தளையசிங்கம். அதன் திறப்பு விழாவுக்கு தனது குருவான கலாநிதி; இன்னாசித்தம்பியை பிரதம விருந்தினராக அழைத்திருந்தார். அந்த விழாவினை க்குழப்புவதற்கு முதலில் மிரட்டல்களும் பின்னர் கல்லெறி யும் விழுந்தது.தளையசிங்கத்தின் துணிச்சலையும் முற்போ க்குச் சாதனைனயயும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார் கலாநிதி இன்னாசித்தம்பி. தங்கள் பகுதியில் முதன்முறை யாக நடைபெற்ற அந்த விழாவில் குழுமியிருந்த சிறுபான் மையினர் பலமாகக் கரகோ~ம் செய்து மகிழ்ந்தனர். அத னை ஒலிபெருக்கி மூலம் தொலைவிலிருந்து கேட்டுக்கொ ண்டிருந்தவர்கள் கீழ்சாதி நாய் கீழ்சாதிகளுக்காகப் பாடுப டுகுது. அறக்கப் படிச்சு கூழ்ப் பானைக்குள் விழுந்த கதை யாப் போச்சுது எனக் கூறி கர்விக் கொண்டார்கள்.
பிள்ளையார் கோயில் திருவிழா ஆரம்பமாகியதும் சிறுபான் மையினரை அழைத்து வந்து அவர்களை கோவிலுக்கு உள்ளே சென்று கும்பிடுமாறு வற்புறுத்தினார். கோயில் வாசலில் ருத்திர தாண்டவமாடும் சிவனின் கோலத்துடனும் உயர்த்திய வலக்கையில் கொடுவாக் கத்தியுடனும் நின்ற பரிபாலனசபைத் தலைவர் 'கோயிலுக்குள் யாராவது கால டி வைத்தால் கொலை விழுமெனக் கர்ஜித்தார். தளையசிங்கத்தை தனியே விட்டு எட்டடி பின்வாங்கினர் சிறுபான் மையினர். வீணான வம்பு வேணாமையா நாங்கள் போய்வி டுகிறோம் எனக் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு ஒரே ஓட் டமாக ஓடிப்போய் விட்டார்கள்.
கோயில் வாசலில் பொலிஸ் ஜீப் வந்து நின்றது. சாராய வாடையுடன் குதித்திறங்கிய பொலிஸ்காரரிடம் இவன்தான் கோயிலில் குழப்பம் விழைவிக்க வந்தவன் என்று தளைய சிங்கத்தைக் காட்டினார் தலைவர். தனிமரமாக நின்ற அவ ரை அடித்து பிடரியில் பிடித்துத் தள்ளி ஜீப்பில் ஏற்றினார் கள். ஏற்றிய பின் ஜீப்பினுள்ளே வைத்தும் அடி. ஊர்காவற் றுறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அங்கே யும் அடிஉதை. இரவு றிமாண்டில் வைத்துப் பூட்டி வெறும் சீமேந்து தரையில் படுக்க விடப்பட்டார். மறுநாள் காலை யில் கோயில் பக்கமே தலை காட்டக் கூடாதென எச்சரிக் கப் பட்டு விடுவிக்கப்பட்டார்.
உடல் வருத்தமும் அடிபட்ட நோவும் தீரும் வரை ஒருவார காலம் வீட்டில் படுத்த படுக்கையில் கிடந்தார் தளையசிங் கம். அவரது இளம் மனைவி அழுதழுது உடம்பு முழுவ தும் சுடுதண்ணி ஒத்தடம் கொடுத்தாள். நோவுக்கு நல்ல தென்று தகப்பன் வாங்கிக் கொடுத்த சாராயத்தையும் இர த்தம் கண்டியிருந்த இடங்களில் மெதுவாகப் பூசித் தடவி னாள். அடி உதை வாங்கினாலும் தான் செய்வது நன்மை யான ஒரு சமுதாயப் புரட்சியே என தனது கொள்கையில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த தளையசிங்கம் அஞ் சா நெஞ்சத்துடன் அடுத்த நடவடிக்கையாக குடி தண்ணீர் அள்ளும் பொதுக் கிணற்றில் சிறுபான்மையினரை தண்ணீர் அள்ளச் செய்யும் முயற்சியில் இறங்கினார். இதுகாலவரை அக்கிணத்தில் சிறுபான்மையினர் தண்ணீர் அள்ளியதே கிடையாது. உயர்சாதியினர் யாராவது வரும்வரை காவலி ருந்து அவர்கள் வந்ததும் தமது குடங்களையும் நிரப்பிக் கொண்டு போவார்கள். இத்தனைபேருக்கும் அள்ளி இறை க்க எனக்கு நேரமில்லை. என்ர அவர் அவசரமாக எங் கயோ போகப் போறார். அவருக்கு தேத்தண்ணி போட்டுக் கொடுக்க வேணுமென்று சொல்லி தங்கள் குடத்தை மாத் திரம் நிரப்பிக்கொண்டு போவோரும் உண்டு.
நீங்களும் மனிதர்கள்தானே ஏன் கிணற்றில் தண்ணிஅள்ள முடியாது? நான் நிற்கிறேன் வருவது வரட்டும் பயப்படா மல் அள்ளுங்கள் எனவற்புறுத்தினார் தளையசிங்கம். தண் ணீர் அள்ளினால் பின்னர் தங்களையும் பொலிஸ்காரங்கள் அடிச்சு ஜீப்பில ஏற்றிக் கொண்டு போய் அடைச்சுப் போடு வாங்கள். கோட்டுக்கும் கொண்டு போவாங்கள் என்றெண்ணிப் பயந்து தண்ணீர்; அள்ள ஒருவருமே முன் வரவில் லை. தளையசிங்கத்தாரும் விடாது வற்புறுத்திக் கொண்டி ருந்தார். பயமறியாத இளம் கன்றினைப் போல் ஒரு இளம் பெட்டை துணிந்து முன்வந்து தண்ணீர் அள்ளினாள்.தளை யசிங்கம் மகிழ்ச்சிப் பெருக்கில் பலமாகக் கை தட்டிச் சிரி த்;தார். அத்தனை பேருக்குமே தண்;ணீர் அள்ளி இறைத் ததில் அவள் கழைத்தே போய் விட்டாள்.
இந்த அற்புதம் விதானையாரின் காதுக்கு எட்டியது. அன் றிரவே பொலிஸார் ஜீப்பில் வந்து தண்ணீர் அள்ளிய பெட் டையின் வீட்டுக்குச் சென்று விசாரித்தார்கள். தளையசிங் கம் ஐயா தான் அள்ளும் படி பலவந்தப் படுத்தினார். அத
னால் தான் அள்ளினேன் என பயத்தால் நடுங்கியபடி கூறி னாள்.ஐயா அவள் சின்னப்புள்ள தெரியாமச் செஞ்சிட்டாள்
அவள விட்டிடுங்க ஐயா எனக் கெஞ்சினாள் தாய்.அடுத்து தளையசிங்கத்தின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் இது காலவரை இந்தக் கிராமத்தில எதுவித பிரச்சினையும் இல் லாமல் இருந்தது. இப்ப நீ ஒருத்தன் மேல் படிப்பு படிக்க வெளிக்கிட்டதால அடிக்கடி எங்களுக்கும் தொல்லையாப் போச்சுது என அதட்டினார்கள். நான் செய்வது தப்பா என்று அவர் கேட்டு வாய் மூடு முன்னரே தொப்புத் தொப்பென நெஞ்சில் அடி விழுந்தது. இது தான் கடைசி முறை இனிமேலும் உன்னைப்பற்றி ஏதாவது கம்பிளெயி ன்ற் வந்தால் உனக்கெதிராக வழக்குத் தாக்கல் செய் வோம் ஜாக்கிறதை என எச்சரித்து விட்டுச் சென்றார்கள். மறுநாள்; நெஞ்சு நோவுக்கு ஒட்டகப்புலத்தானிடம் சென்று புக்கை கட்டினார் தளையசிங்கம்.
'என்ன தம்பி படிச்ச பொடியன் அறிவாளியாக இருப்பீங்க என்றெண்ணி க~;டப் பட்டுச் சம்பாதித்த பணத்தையும் சீத னமாகத் தந்து மகளுக்குக் கட்டிவைச்சன். அவள் கண்;ணீ ரும் கம்பலையுமாக இருக்கிறதைப் பார்த்து இனிமேலும் என்னால பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. சீதனக் காசு சும்மா வந்த காசு தானே என்று எளியஞ் சாதிகளுக் காக அள்ளிச் செலவழிச்சீங்க. சரி பணம் தான் போச்சுது என்று பார்த்தால் இப்ப எங்கட மானத்தையும் போகப் பண் ணுறீங்க. எத்தனை வருச காலமாக இந்த வீட்டில வாழுகி றம் ஒரு நாளாவது பொலிஸ் வீட்டு வாசல் பக்கமே வந்த தில்ல. என்ன முருகேசர் உங்கட மருமகன் எளியஞ் சாதி களுக்காகப் பாடுபடுகிறார். அவையளுக்கும் அவருக்கும் ஏதோ முன் பின் தொடர்பிருக்குது போல கிடக்குது என்று எல்லாரும் கேளாக் கேள்வி கேக்கிறாங்கள். எனக்கு வேட் டி உரிஞ்சு கீழ விழுந்த மாதிரிப் போச்சுது. தயவு செய்து நீங்கள் இஞ்ச இருக்காமல் மகளையும் கூட்டிக் கொண்டு கொழும்பு கண்டி பக்கம் போயிருங்க. ஊருடன் பகைத் தால்; வேருடன் கெடும் என்று சொல்லுவாங்கள். ஏன் ஊர வையளோட வீணான பகையைத் தேடுவான்" என்று தனது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தார் முருகேசர்.
பிற்போக்குவாத முதலாளித்துவச் சிந்தனையில் ஊறித்தி ழைத்த கல்வியறிவற்ற மாமனுக்கு முற்போக்கு வாதத்தை சொல்லிப் புரியவைக்க முடியாதென்று எண்ணி மௌனியா
க இருந்துவிட்டார் தளையசிங்கம். முற்போக்குவாத கண வனுக்கும் பிற்போக்குவாத தந்தைக்குமிடையே நற்போக்கு ச்சக்தியாக தவித்தாள் தளையசிங்கத்தின் மனைவி. அன்றி ரவு கணவனைப்பற்றி எண்ணிக் கவலைப் பட்டவாறே படுக் கைக்குச்சென்ற அவள் தனது தாலிக்கொடி அறுந்து விழு வதாகக் கனவுகண்டு வெருண்டெழுந்தாள்.மறுநாள் காலை யில் நெஞ்சுவலிக்குதென்றார் தளையசிங்கம்.அவதி அவதி யாக கார்பிடித்து யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண் டோடினார்கள். ஆனால் அன்றிரவே மையப் பெட்டியோடு வீடு திரும்பினார்கள்.
மரணச் செய்தி கேட்டுப் பதறித் துடித்த சிறுபான்மையினர் அத்தனை பேருமே ஓடி வந்து அவரது வீட்டுப் படலைக்கு வெளியே நின்று 'கீழ்சாதி எங்களுக்காய் பாடுபட்ட மேல் சாதி ராசாவே....கண்மூடி முழிக்கு முன்னே நீர் மேலுலகம் மேவியதேனோ...."என ஒப்பாரி வைத்துக்கதறி அழுதார்கள். மரணச் செய்தியை அறிந்திருந்தும் கூட கலாநிதி இன்னா சித்தம்பியர் அப்பக்கம் தலைகாட்டவே இல்லை. முதலாளி த்துவத்தின் ஏவல்நாய்களான பொலிஸார் அடியோடு அழி ந்துபோக வேண்டுமெனத் திட்டினார். தான் வளர்த்து விட்ட வாரிசு ஒன்று சாய்ந்து விட்டதெனக் கவலையுற்றார்.
நூறு வயசு வரை வாழ வேண்டிய முழு ஆம்பிளை கீழ் சாதிகளுக்கு உதவி செய்யப் போய் பொலிஸாரின் அடி உதையால முப்பத்தொன்பது வயசிலயே அநியாயமாகச் செத்துப் போனார் என அயலட்டத்தவர்கள் கூறி முதலைக் கண்ணீர் வடித்தார்கள்.
அன்று தளையசிங்கத்துக்கு---இன்று கம்யூனிஸத்தின் தொட் டில் எனக்கருதப்படும் சோவியத் நாட்டிலேயே கம்யூனிஸத் துக்கு அகால மரணம். வரலாற்றுப் புகழ்மிக்க செஞ்சதுக்க த்தின் மத்தியிலே வானளாவ கம்பீரமாக நிமிர்ந்து நின்ற லெனின் சிலை அடியோடு பெயர்க்கப்பட்டு வீழ்ந்து கிடக்கி றதே---அவருக்கு காலனாய் வந்த கலாநிதிகள் யாரோ?
மூர்க்கரொடு.....
மருதடி விநாயகர் ஆலயத்தின் முன்பாக காரை நிறுத்தி விட்டு கோயிலை நோக்கி வந்த மாணிக்கத்தாரைக் கண்ட தும் அங்கு நின்ற அடியார்கள் அனைவருமே கையெடுத் துக் கும்பிட்டு வணக்கம் ஐயா என்றனர். பதிலுக்கு அவ ரும் கையெடுத்துக் கும்பிட்டு முகம் மலரச் சிரித்து வணக் கம் வணக்கம் என்றார். மானிப்பாயில் மாணிக்கத்தாரை அறியாதோர் எவருமிலர்.பிரபல வர்த்தகரான அவர் கடந்த பதினைந்து வருட காலமாக மருதடி விநாயகர் ஆலய தர்மகர்த்தா சபையின் தலைவராகத் தொடர்ந்து தொண்டா ற்றி வருபவர். அப்பதவியை ஏனையோருக்கு விட்டுக் கொ டுக்க அவர் முன்வந்த போதிலும், 'நீங்கள் தான் ஐயா தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமான ஆள். உங்களி ன் நிர்வாகத்தில் ஆலய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறு வதோடு திருப்பணி வேலைகளும் ஒழுங்காக செயற்பட்டு வருகின்றன. எனவே நீங்களே தொடர்ந்து தலைவராக இருங்கள் உங்களுக்கு ஒத்தாசையாக நாங்கள் உதவி செய்வோம்" எனக்கூறி மறுத்து விட்டார்கள்.
நேர்மையான சிறந்த நிர்வாகியான மாணிக்கத்தார் குறிப்பா க ஆலய நிதி நிருவாகத்தில் மிகவும் கண்டிப்பானவர். ஆலயத்தின் பெயரில் ஆயிரக்கணக்கான பணத்தை வங்கி யில் சேமித்து வைத்திருந்தார். ஆலயப் பணத்தில் தனது ஊதியத்துக்காக ஒரு சதமேனும் எடுக்காது திருத்தொண் டாகவே செய்து வந்தார். சில சமயங்களில் தனது சொந் தப் பணத்தைக் கூட ஆலய விடயங்களுக்காகச் செலவு செய்வார். 'என் கடன் பணி செய்து கிடப்பதே" என அவர் அடிக்கடி கூறிக்கொள்வதுண்டு. அதனால் அவரைக்காணும் போதெல்லாம் சிறுவர்கள் அடே என்கடன் வருகுதடா என கேலியாகக் கூறிச் சிரிப்பார்கள்.
இறை பணி என்றால் என்ன என்பதை அர்த்தபு~;டியாக உணர்ந்து, அவன் அருளாலே அவன் தாள் வணங்கி நாம் உய்ய வேண்டும் எனப் பணியாற்றி வருபவர் அவர். சகல ரினதும் நன்மதிப்பைப் பெற்றிருந்த மாணிக்கத்தாரை நீதி அமைச்சு சமாதான நீதிவானாக நியமித்தது. சமயப் போத னைகளைப் பின்பற்றி தூய மனதுடன் தொண்டாற்றி வந் தால் இறைவன் அருளால் சகல சௌபாக்கியங்களும் எம்மைத் தேடி வரும். நாமாக அவற்றைத் தேடி அலைய வேண்டியதில்லை என்றார் மாணிக்கத்தார். அவரது கருத்துக்கேற்ப அவரது குடும்பமும் சீரும் சிறப்புமாக இருந்தது. கல்வி அறிவும் ஒழுக்கமும் கொண்ட அவர்களது இரு பிள் ளைகளுள் மகள் டாக்டர், மகன் கம்பியூட்டர் எஞ்ஜினியர். அமெரி;க்காவில் தொழில் புரிந்துவரும் ஒரு டாக்டரைத் திருமணம் புரிந்த கொண்ட மகளும் அங்கேயே கணவரு டன் வாழ்ந்து வருகிறார். மகன் கனடாவில் உத்தியோகம் செய்கின்றார். தாய் தகப்பனை தங்களோடு வந்திருக்கு மாறு கேட்டுக் கேட்டு இருவருமே அலுத்துப் போய் விட் டார்கள்.
கடையும் கோயிலுமாக ஓடியோடித் திரிந்தார் மாணிக்கத் தார். அத்துடன் யுத்தக்கெடுபிடிகள் காரணமாக வீடு வாச ல்களை இழந்து சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் தவித் தோருக்கு தனது சொந்தச் செலவில் உடைகளும் உணவு களும் வழங்கி ஆதரித்தார். இறைக்க இறைக்கத் தான் கிணற்றில் நீர் ஊறும். அதே போன்று நம்முடைய செல் வத்தை ஏழை எளியதுகளுக்கு அள்ளி இறைக்க இறைக்க அது பெருகிக் கொண்டேயிருக்கும் என்றார். அவர் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் வாய் திறந்தால் தத் துவ முத்துக்களே உதிரும். என்று ஆலய தர்மகர்த்தா பத வியை ஏற்றாரோ அன்றிலிருந்தே மாணிக்கத்தார் மாத்திர மல்ல அவரது மனைவி பவளமும் மச்சம் மாமிசம் அருந்து வதைக் கைவிட்டனர். இருவருமே மனதாலும் செயலாலும் தம்மைத் தாமே தூய்மைப் படுத்திக் கொண்டனர். ஓய்வு வேளைகளில் பவளம் தேவார திருவாசகங்களையும் பக வத் கீதையினையும் படித்துக் கொண்டிருப்பாள். அல்லது சுப்பிரபாதம், பக்தி கமழும் தேவாரக் கசெட்டுக்களை ரேப் றெக்கோடரில் போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பாள். ஏனை ய பெண்களைப் போன்று அயலட்டத்தவர்களுடன் கூடி அரட்டை அடிப்பதில்லை.
வெள்ளிக் கிழமையன்று வழமை போல் கணவனும் மனை வியும் காலையில் குளித்து விட்டு அர்ச்சனைத் தட்டுடன் ஆலயத்துக்குச் சென்றார்கள். உதயப் பூசையைத் தரிசித்து விட்டு காரில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது பேரிரைச்சலுடன் அரச படையினரின் பொம்பர் விமானம்
மிகத் தாழ்வாகப் பறந்து சென்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் சற்றுத் தொலைவில் டுமீல் டுமீலென்ற பலத்த சத்தம் அவர்களது செவிப் பறையை கிளித்தது. வீட்டை அண்மித்த போது ஒரே புகை மண்டலமாக இருந்தது. இரு வருமே அதிர்ந்து போயினர். காலாதி காலமாக அவர்கள் குடியிருந்த கோயிலான இல்லம் கொழுந்துவிட்டு எரிந்து து கொண்டிருந்தது. 'ஐயோ விநாயகரப்பா இதென்ன கொடுமை அப்பா? எங் களை நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டாயே. நாம் உமக் கென்னகெடுதல் செய்தோம.;இதுவென்ன சோதனையப்பா..." என அழுது குழறினாள் பவளம். குத்துக் கல்லாக நின்ற மாணிக்கத்தாரின் கண்களிலிருந்து முத்து முத்தாகக் கண் ணீர் சிந்தியது. அவர்களது வீடு தீப்பற்றி எரிவதைக் கண் டும் பவளத்தின் கதறலைக் கேட்டும் அக்கம் பக்கத்தவர் கள் ஓடி வந்தார்கள். பெண்கள் பவளத்துடன் சேர்ந்து ஒப் பாரி வைத்தார்கள். ஆண்கள் தண்ணீர் அள்ளி எற்றி தீயை அணைக்க முற்பட்டார்கள். என்னையா அடுத்தவ னுக்கு தீங்கு செய்யவே நினைக்காத உங்களுக்கு இத்துர் ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறதே. விநாயகப் பெருமானுக்குக் கூட கண் இல்லாமல் போய் விட்டதா? என்றனர் அயலட் டத்தவர்கள்.
கண்களைத் துடைத்தவாறு மாணிக்கத்தார் நிதானமாகப் பேசினார். 'எய்தவன் இருக்க அம்பை நோவது அநியாயம் அப்பா. நாம் செய்த கர்ம வினைகளுக்குரிய தண்டனை யை நாம் அனுபவித்தே தீர வேண்டும். நான் முற்பிறப் பில் செய்த பாவத்துக் குரிய தண்டனையே இது. நேற் றிருந்த வீடு இன்றில்லை. இன்றிருப்பார் நாளை இல்லை. மண்ணுலகிலுள்ள எந்தவொரு பொருளுமே நிலையற்றது என்ற உண்மையை விநாயகப் பெருமான் எனக்கு உணர் த்தி விட்டார். வீடழிந்தாலும் எங்கள் இருவரது உயிரையும் விநாயகப் பெருமான் காப்பாற்றி விடடார். அதற்கு நாம் நன்றி கூற வேண்டும். அவரை வழிபடச் சென்றதால் எமது உயிர் பிழைத்தது. இன்றேல் எமது வீடே எமக்குச் சுடு காடாக மாறியிருக்கும். இதன் மூலம் மெய்ப்பொருளை உணரும் சக்தியை விநாயகப் பெருமான் தந்து விட்டார். அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
அவர்; புலிகளுக்கு பெருந்தொகையாகப் பணம் கொடுத்து உதவுபவர்; என சில கீழ்சாதி நாய்கள் தகவல் கொடுத்து அவரது வீட்டையும் காட்டிக் கொடுத்ததை அடுத்தே சிங் களப் படையினர் இந்த அட்டூழியத்தை செய்ததாக அவர் பின்னர் கேள்விப் பட்டார். இருந்தாலும் அதையிட்டு அவர் ஆத்திரம் கொள்ளாது தன்வினை தன்னைச் சுடும் எனக் கூறிவிட்டு பித்துப் பிடித்தவர் போலிருந்தார்.
அவர் நினைத்திருந்தால் அடுத்த நாளே பெரும் மாளிகை ஒன்றை வாங்கியிருக்க முடியும். ஆனால் இப்போது நிலை யற்ற எதிலுமே அவருக்குப் பற்றில்லாமல் போய் விட்டது. கடை,பணம்,பொருள், வீடு வாசல், எதிலுமே அவருக்குப் பிடிப்பில்லை. அனைத்தையும் கைவிட்டு பிள்ளைகளோடு வந்திருக்க முடிவுசெய்தார். மகனுக்கு அறிவித்ததும் அவன் மகிழ்ச்சியோடு உடனடியாக ஏஜன்ஸி மூலம் அமெரிக் காவுக்கு வரவழைத்து அங்கிருந்து கனடாவுக்கு அழைத்து வந்துபொன்ஸர் செய்தான். தந்தையின் பேச்சிலும் செயலி லும் ஒருவித விரக்தி நிலவுவதை மகன் உணர்ந்தான். வீடு எரிந்ததால் ஏற்பட்ட விரக்தியாக இருக்கலாமென நினைத்துக் கொண்டான்.
கனடாவுக்கு வந்ததும் 'வீட்டுக்குக் கிட்ட கோயில் இருக் குதா"என்பது தான் மாணிக்கத்தார் மகனிடம் கேட்ட முதல்
கேள்வி. இஞ்ச இப்போ மூலைக்கு மூலை சுருட்டுக் கடை மாதிரி எத்தனையோ கோயில்கள் இருக்குதப்பா. ஆனால் ஒரேயொரு கோயில் அதுவும் பிள்ளையார் கோயில் தான் ஒழுங்கான கோயிலாக இருக்குது.அது சரியான தூரத்தில் இருக்குது. நாளைக்குச் சனிக்கிழமை தானே நான் உங்க ளைக் கூட்டிக் கொண்டு போகிறேன் என்றான் மகன்.
ஏன் மற்றக் கோயில்களுக் கெல்லாம் என்ன குறையென விழுந்தடித்துக் கேட்டார் மாணிக்கத்தார்.'அதுகள் எல்லாம் கோயில்கள் இல்லையப்பா. சாமான்கள் வைக்கிற, கார் கராஜ்சுகள் நடத்துகிற வெயா ஹவுஸ{கள். அதை குத்த கைக்கு எடுத்து அதுக்குள்ள சுவாமி சிலைகளை வைச்சுப் போட்டு கோயிலென்று கும்பிடுகினம்";.
'அடடே அப்படிச் செய்யக் கூடாதே. சின்னக் கோயிலாக இருந்தாலும் சைவாகம விதி முறைப்படி கட்டி கும்பாபிN~ கம் செய்தெல்லே சுவாமி சிலைகளை பிரதி~;டை செய்ய வேணும். இல்லாவிட்டால் முழுக்குடியே நாசமாகிப் போய் விடு மல்லவா".
மறுநாள் காலையில் றிச்மென்ட் ஹில் பிள்ளையார் கோவி லுக்குச் செல்லுகையில் தூரத்தே தெரிந்த கோவில் கோபு ரத்தைக் கண்டதும் அப்பனே மருதடி விநாயகா என்றார் மாணிக்கத்தார். உள்ளே சென்றதும் மூலஸ்த்தானம் இன்றி அங்கும் இங்குமாகப் பிரதி~;டை செய்யப் பட்டிருந்த ஆள் அளவு உயரமான பிரமாண்டமான சிலைகளைக் கண்டதும் அவருக்கு அதிருப்தியாக இருந்தது. ஏன் இப்படி ஒழுங்கு முறையின்றிக் கட்டி இருக்கிறார்கள் என்றார். இது இந்தி யர்களால் கட்டப்பட்ட கோயிலப்பா,அவர்கள் தங்கட முறை ப்படி கட்டியிருக்கினம். அதோட இஞ்ச வின்ரர் குளிரான படியால் இப்படித்தான் முதலில் நாலா புறமும் சுற்றிவர மூடிக் கட்டிய கட்டிடத்தினுள் கோபுரங்களுடன் கூடிய சிறு சிறு பீடங்களைக் கட்டி அவற்றினுள் சிவன், வி~;னு ,முரு கன், பிள்ளையார்,முருகன் சிலைகளை பிரதி~;டை செய்து ள்ளார்கள் என்றான் மகன். 'நானும் அம்மாவும் தினமும் காலையில் கோயிலுக்குப் போய் கும்பிடவேணும். இது சரியான தூரம். உங்கட வீட் டுக்குக் கிட்ட இருக்கிற கோயிலைக் காட்டி விடு நாங்கள் உன்னைச் சிரமப்படுத்தாமல் நடந்தோ அல்லது பஸ்சில யோ போய் வருவோம்".
றிச்மென்ட் ஹில் கோயிலில் இருந்து வரும் போது பிஞ்ச் வீதியில் வீட்டுக்குக் கிட்டயிருந்த முருகன் கோயிலைக் காண்பித்தான் மகன். அந்த வெயா ஹவுஸினுள் சென்ற மாணிக்கத்தாருக்கு தான் சிறுவனாக இருந்தபோது கோயி ல் கட்டி விளையாடிய ஞாபகம் வந்தது. மூலஸ்த்தானம் இல்லை, கொடித்தம்பம் இல்லை, பலிபீடம் கூட இல்லை. இரு பீடங்களில் சிலைகளை வைத்து திரைச் சேலை யினால் மூடியிருந்தார்கள். இவற்றையெல்லாம் அவதானி த்த மாணிக்கத்தாருக்கு பக்தி கூட வரவில்லை. காசுக்கார நாடான கனடாவில கோயிலை ஒழுங்கு முறையாகக் கட்ட வழியில்லாமல் இருக்கினமே என அலுத்துக் கொண்டார். ஊரில அந்த நாளையில அரச மரத்தடியில் சூலத்தை வைத்து வளிபட்டவை தானே. அதுபோல் இந்த முருகனை வழிபடுவோம் என முடிவு செய்து வழிபட்டு வந்தார்கள்.
அக்கோயிலில் உள்ள குருக்கள் மாத்திரமன்றி பரிபாலன சபைத் தலைவர், செயலாளர், தனாதிகாரி, கிளாக்கர் அத்
தனை பேருமே கோவில் பணத்தில் சம்பளம் பெறுவதை அறிந்து ஆச்சரியமடைந்தார் மாணிக்கத்தார். கோவிலில் திருத்தொண்டு செய்வதை விடுத்து கோயில் பணத்தில் சம்பளம் பெறுவதா? இது என்ன அநியாயமடா? கோயில் சொத்தை அபகரிப்பவனின் சந்ததியே உருப்படாதென்று சொல்லுவினம். தொண்டு செய்து அருளைப் பெற வேண் டிய இறைவன் சந்நிதானத்தில் இவங்கள் பொருளைத் தேடும் வியாபாரம் பண்ணுறாங்களே முருகா என முணு முணுத்தார்.ஏன் முறையான கோவிலை இவர்களால் கட்ட முடியாதிருக்கிறது என்பதற்கான காரணத்தை அவர் புரிந்து கொண்டார்.
புதுவருடத் தினத்தன்று அதிகாலையில் குளித்து விட்டு காலை ஒன்பது மணிக்கே கோயிலுக்குச் சென்றனர் மாணி க்கத்தாரும் மனைவியும். காலையிலேயே கோயில் கலகல ப்பாக இருக்குமென எண்ணிக் கொண்டு சென்ற அவர்க ளுக்கு அங்கே பேரதிர்ச்சி காத்திருந்தது. கோவில் இருக் கும் வெயா ஹவுஸ் பூட்டப் பட்டிருந்தது. வாசலில் ஒரே குப்பை கூளங்களாகக் கிடந்தது. நாலைந்து வயோதிபர் கள் இவர்களைப் போன்று ஏமாற்றத்துடன் நின்றனர்.
'பரிபாலன சபையினருக்கிடையே காசு விசயத்தில் கனகா லமாகப் பிரச்சினை. அதிலே ஒரு கோ~;டியினர் நேற்றிரவு கோவிலுக்கு முன்பாகக் குப்பையைக் கொட்டிவிட்டு இன்று அதிகாலையில் கட்டிடச் சொந்தக்காரனுக்கு போண் பண் ணி சொல்லியிருக்கினம்.அவன் வந்து பார்த்துவிட்டு ஆத்தி ரத்தில் கோயிலைத் திறக்க முடியாமல் வேறு பூட்டைப் போட்டு பூட்டிவிட்டுப் போயிருக்கிறான்"என்று நிலைமை யை விளக்கினார் அங்கு நின்ற ஒரு வயோதிபர்;. அவர்கள்
கூறியதைக் கேட்டு சகிக்கமுடியாது காதுகளை பொத்திய படி முருகா முருகா என்றார் மாணிக்கத்தார்.
'புதுவருடத் தினத்தன்று எக்கச் சக்கமான சனங்கள் வருவி னம். கோயில் பூட்டியிருந்தால் நிருவாக சபையினருக்கு அவமானம் ஏற்படுமென்று திட்டம் போட்டு செய்திருக்கிறா ங்கள் படுபாவிகள்"என்றார் ஒருவர். புதுவருட தினத்தன்று
முருகனை வழிபட முடியாது பெரும் ஏமாற்றமாகப் போய்
விட்டதே என எண்ணி மனம் நொந்தார் மாணிக்கத்தார். முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு முட்டி மோதுவதை விடுத்து பக்திநெறியறிந்த அவர் நின்மதியாக வீட்டிலிருந்து இனி இறைவனை வழிபடுவதே சிறந்த வழியென முடிவு செய்து கொண்டார்.
வாழைக்குள் வைரம்
கல்யாண மண்டபத்தின் நுழை வாசலில் பூரண கும்பமும் மங்களமான குத்து விளக்குகளும் எமது கலாச்சார சின்ன ங்களாய்த் திகழ, கையில் சிறு தாம்பாளங்களுடன் நின்றி ருந்த விபரமறியாச் சிறுமிகள் இருவர் சந்தணம் குங்குமம் தந்து வரவேற்றார்கள். ஆனால் உள்ளே புற்பாய்களுக்குப் பதிலாக வெள்ளை விரிப்புக்கள் விரிக்கப்பட்ட மேசைகளும் அவற்றைச் சுற்றி வட்ட வடிவில் கதிரைகளும் போடப்பட் டிருந்தன. விருந்தினர்கள் கதிரைகளில் அமர்ந்த வண்ணம் பூரிப்புடன் அளவளாவிக் கொண்டிருக்க மணவறையில்; மாப்பிளையும் தோழனும் அமர்ந்திருந்தனர்.தம்பதிகள் உய ரமான பீடத்திலும் விருந்தினர்கள் தரையில் புற்பாயிலும் அமர்ந்திருந்த பாரம்பரியம் புலம் பெயராது ஈழ மண்ணிலே யே நிலைத்து விட்டது.
வாலிபர்கள்,சிறுமிகள்,குமரிகள் தவிர்ந்த ஏனையோர்அனை வரும் தம்பதிகளாகவே வந்திருந்தனர். தாமே புதுமணத் தம்பதிகள் என்பது போல் அவர்களது முகங்களில் ஆனந் தக் களிப்பு. ஆனால் தனிமரமாய் சென்றிருந்த என் முகத்தில் மாத்திரம் சலனம். எனக்கொரு துணை இல்லையே என்ற வாட்டமல்ல.'கன்னியாம் குமரியாம் கனக சம்பொன் னாம்" என தான் மனனம் செய்து வைத்திருந்த வாக்கியங் களை குருக்கள் ஒப்புவிக்க அதனை உண்மையென நம்பி அவளுக்கு மாங்கல்ய பூ~ணம் செய்து மனைவியாக ஏற் றுக் கொள்ளும் கணவனது நம்பிக்கை நீடித்து நிலைக்கு மோ அல்லது எனக்கு ஏற்பட்டது போல்...... ?
எல்லாம் நல்ல படியாகவே நடக்கும் என்று எண்ண வேண் டும் என்பார்கள். முட்டாள்கள் கூட திருமணம் செய்யும் போது மனைவியை விட்டு ஓடிப் போய் விட வேண்டும் என்று எண்ணுவதில்லை. 'சுந்தரம்பிள்ளை பௌத்திராய...... மகாலிங்கம் புத்திராய......காந்தி நாமதேய......"என என்னை யும் அடுத்து மணமகளையும் குருக்கள் சபையோருக்;கு அத்தாட்சிப்படுத்தி வைக்க காலமெலாம் ஒன்றாக இனை
ந்து வாழவேண்டும் என்ற இன்ப உணர்வோடு தான் நானு ம் மாங்கல்யம் சூட்டி, மாயையாகிய கிண்ணி விரலினால் அவளது கிண்ணியைப் பற்றி, காலைப் பிடித்து அம் மியில் வைத்து கால் விரலில் மிஞ்சியை மாட்டி வஞ்சியை மனைவியாக வரித்துக் கொண்டேன். ஆனால் அந்த வஞ்சி என்னை வஞ்சித்தே விட்டாள்.
கல்யாண மண்டபத்தில் இருக்கும் உணர்வே எனக்கில் லை. எல்லோருமே சிரித்துச் சிரித்து கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்கையில் நான் மட்டும் மூலஸ்த்தானத்து கற்சி லையாக..... குருக்களின் மந்திர உச்சாடனம் என் செவி யில் விழவில்லை, மேள தாள வாத்திய இசை கூட விழ வில்லை...... எல்லாமே ஒரே சூனியம்.
பண்டைக் காலத்தில் மயிலே, குயிலே, மரகதமே, மானே, தேனே, மதிநிலவே, மலரே எனப் பெண்களைப் புலவர்கள் என்னமாய்ப் புகழ்தார்கள். அந்தக் காலத்துப் பெண்கள் எல்லோரும் அப்படித் தானிருந்தனரோ? அல்லது பொய்யி லே பிறந்து பொய்யிலே வளர்ந்ததினால் புலவர்கள் பொய் தான் கூறினரோ?
என்னடா காந்தி மூலையில் தனியாக ஒதுங்கியிருந்து கொ ண்டு நாதஸ்வர இசையில் லயித்து விட்டாயோ என்றவாறு என்தோளில் தட்டினான் நண்பன் பரமேஸ். அப்போது தான் சுய நினைவுக்குத் திரும்பிய நான் அடடே நீ வந்ததைக் கூட நான் அவதானிக்கவில்லை சொறி என்றேன்.
இவ தான் என் மனைவி சோபனா என பக்கத்தில் நின்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்தான் பரமேஸ். வணக் கம் எனக்கூறி சிரிக்க முயன்றேன் ஆனால் வாயிதழில் சிரி ப்பே வரவில்லை. இவளா இவனது மனைவி என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நாமிருவரும் கல்லூரிக் காலத்து இணை பிரியா நண்பர்கள். கல்லூரி வாழ்க்கை முடிந்ததும் இலவம் பஞ்சாய் காற்றடித்த பக்கமெல்லாம் பறந்து பிரிந்து விட்ட நாம் நீண்டகால இடைவெளிக்குப் பின் கனடாவில் சந்தித்தோம். அந்த நீண்ட கால இடை வெளிக்குள் எமது சரித்திரமே என்னமாய் நீண்டு தரித்திர மாய் தாண்டவமாடுகிறது? எஞ்ஜினியராக வேலை செய்யும் பரமேஸ் அலுவலகத்தில் ஓய்வு நேரம் ஏற்படும் போதோ அல்லது வேறெங்காவது தனிமையில் இருக்கும் போதோ எனக்குப் போண் பண்ணி மணித்தியாலக் கணக்கில் பேசிக்கொண்டிருப்பான் -- இருப்பினும் அது அறுவையல்ல. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் அவனது மன வேதனையும், மரணாவஸ்த்தையும் எனக்குத் தான் தெரி யும். ஓருநாளாவது மனம் திறந்து என்னுடன் தனது மனக் கவலைகளை கொட்டித் தீர்க்காவிடில் அவனுக்கு இதயமே வெடித்து விடும் போலிருக்கும் என்பான். இருக்காதா சின் னஞ் சிறிய இதயத்தினுள் எவ்வளவு துயரைத் தான் திணி த்து வைத்து தாங்கிக் கொள்ள முடியும்?
கனடாவில் முதன் முதலாக என்னைச் சந்தித்த போது கட் டித்தழுவி கண்ணீர் மல்க அவன் கூறியது அத்தனையும் என் மனதில் இன்றும் கல்லின் மேல் எழுத்தாய் பதிந்திருக் கிறது. 'அடே காந்தி என்னைப் பற்றி உன்னொருவனுக்குத் தானடா முழுமையாகத் தெரியும். திருமணம் என்பது எமது
வாழ்வில் நாம்செய்யும் ஒரு தியாகமாக இருக்க வேணும். மணமகளை சீதனம் என்ற பெயரில் பேரம் பேசக்கூடாது. வசதியற்ற குடும்பத்தில் வாழும் பெண்களுக்கு நாமே சக ல வரதட்சனைகளும் கொடுத்து அவர்களை வாழவைக்க வேணும் என்றெல்லாம் நான் கல்லூரிக் காலத்தில் கூறி யது உனக்கு நினைவிருக்கும். அப்போது என்கருத்தை நீ
யும் ஆமோதிதத்து இன்றும் எனக்கு ஞாபகத்தில் இருக்கி றது. இருவர் கருத்துமே ஒத்திருந்த படியால் தானே நாமி ருவரும் உற்ற நண்பர்களாக இருக்க முடிந்தது. வறுமை யின் காரணமாக வயது முப்பத்தியிரண்டாகியும் சமுதாயக் கட்டுக் கோப்புகளைத் தாண்டாது அடக்கமாக வாழ்ந்த ஒரு பெண்ணைப் பற்றிக் கே;விப்பட்டேன். அவள் அழகான வளாக இருக்க வேணும் என்று கூட நான் எதிர்பார்க்க வில்லை. அவளை மனைவியாக ஏற்றுக்கொள்வதன் மூலம் எனது தியாகச் சிந்தனைக்கு உருக்கொடுக்க நான் துடித் தேன். நண்பர்கள் மூலம் கல்யாணப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து பெற்றோரின் சம்மதத்துடன் அவளைத் திருமணம் செய்துகொண்டேன். நகைகள் சேலைகள் மாத்திரமல்ல கல்யாணச் செலவுகள் முழுவதுமே என்பொறுப்பு.
அழகும் நற்குணமும் பெண்களிடம் ஒருங்கே அமைந்திருப் பது அரிது. இவளிடம் இரண்டுமே அமையப் பெற்றிருப்பது நான் செய்த தியாகத்துக்கு கிடைத்த சன்மானம் என எண் ணினேன்.
'திருமணம் என்பது ஒரு புனிதமான சடங்கு. கள்ளம் கபட
மின்றி ஒளிவு மறைவின்றி ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர அன்பு கொண்டு உல்லாசமாக வாழும் நல்லறமே இல்ல றம். அதனால் அப்புனித சடங்குக்கு பேரம் பேசாமல் நானே சகல செலவுகளையும் ஏற்றுக் கொண்டு வசதியற்ற
பெண்ணுக்கு வாழ்வுகொடுக்க வேண்டுமென்ற பெரு நோக்
குடனேயே உன்னை நான் தேர்ந்தெடுத்தேன். எஞ்ஜினிய ரான எனக்குப் பெருவாரியான சீதனத்தைத் தந்து என்னை விலைக்கு வாங்க பல முதலாளிமார்கள் முன்வந்தார்கள். பணத்திமிர் கொண்ட அவர்களது பெண்களுக்கு அடிமை யாக வாழ நான் விரும்பவில்லை.உண்மை அன்புக்கு அடி பணிவதே எனது குறிக்கோள். அந்த உண்மையான அன்பு உன்னிடம் இருக்கும் என்பது எனது அசையாத நம்பிக் கை"என்று நான் அவளிடம் திருமணத்துக்கு முன்னரே சொ ல்லியிருந்தேன். அவள் அதற்கு எதுவித பதிலுமே சொல் லவில்லை. ஆனால் கலங்கிய அவளது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
'திருமணம் முடிந்ததும் அவளை நான் அம்மா அம்மா வென அன்பொழுக அழைத்தேன். ஏதோ காணாததைக் கண்டு விட்டதைப் போல் ஏன் குழைகிறீர்கள் என்றாள் அவள். உண்மை தான் சோபனா.குழந்தைகள் தமது தாய் மாரிடம் எவ்வளவு தூரம் குழைகிறார்கள் என்பது உமக் குத் தெரியுமல்லவா. கணவன் மனைவி உறவு தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள உறவாக இருக்க வேண்டும். அதனால் தான் சேயானநான் தாயான உம்மிடம் குழை கிறேன் என்றேன். நாட்கள் செல்லச் செல்ல அவளது பேச் சிலும் செயல்களிலும் ஒருவித மாற்றம் ஏற்பட்டு வருவதை நான் உணர்ந்தேன். வறுமை கற்றுக் கொடுத்திருந்த நெறி யான வாழ்க்கை முறை வசதியான வாழ்வு கிடைத்த பின் அவளிடமிருந்து மெல்ல மெல்ல நழுவியது. அன்புக்கு அடிமையாக இருந்த என்னை அவள் தனக்கு அடிமையெ னத் தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு மெது மெது வாக என்னை அதிகாரம் பண்ண முற்பட்டாள்.
எனது பணத்தை தாறுமாறாக செலவு செய்தாள். தனக் கென வீணான ஆடம்பரப் பொருட்களை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளாது தனது உறிவினர்களுக்கும் வாங்கித்தருமாறு வறிபுறுத்தினாள். நான் வேலையால் களைப்புடன்
வீடு செல்லும் போது அவள் மேக்கப்புடன் தயாராக வெளி க்கிட்டு நின்று கொண்டு சொப்பிங் போக வருமாறு உத் தரவிடுவாள். உண்மையான அன்பு உன்னிடத்தில் இருக்கு மென்பது எனது அசையாத நம்பிக்கை என திருமணத்தின்
முன்னர் நான் சொன்ன போது கண்ணீர் வடித்த அவள் இப்படி மாறுவாளென நான் கடுகளவேனும் சந்தேகிக்கவில் லை. நான் எதைத் தியாகமென நம்பி மகிழ்தேனோ அது வே இன்று தீயாக மாறி என்னைச் சுட்டெரிக்கிறது. கடல் ஆழம் கண்டாலும் பெண்களின் மனதாழம் காண்பதரிது என அன்றைய அறிஞர்கள் கூறியது அனுபவ ரீதியான உண்மை தானடா காந்தி".
'அது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை தான் பரமேஸ். உனக்கேற்பட்ட அதேநிலை தான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. உண்மையிலேயே நாமிருவரும் அபூர்வ நண்பர்கள் தான். நாங்கள் மனைவியரை தாயாக நினைத்து பணிவுடன் நடந் து கொள்ளும்போது அவர்கள் அதனைத் தவறாகப் புரிந்து கொண்டு நாமெல்லாம் பெண்ணையர்கள் என எண்ணி எம் மைத் தமது கைப்பொம்மைகளாக ஆட்டிப்படைக்கலாமென முடிவு செய்து விடுகிறார்கள்.அதற்குக் காரணம் எமது முட் டாள் தனம் தானென்பதை நான் காலம் தாழ்த்தித் தான் உணர்ந்தேன்.ஆரம்பத்திலிருந்தே நான் மனைவிமீது வைத் திருந்த அன்பை வெளிக்காட்டிக் கொள்ளாது அவளை அதிகாரத்துடன் நடத்தியிருந்தால் அவள் நல்லவளாகவே இருந்திருப்பாள். குடும்பத்திலும் பிரச்சினைக்கே இடமிருந்தி ருக்காது. நடந்து முடிந்து போனதைப் பற்றிப் பேசுவதால் எதுவுமே பிரயோசனமும் இல்லை. சனியன் தொலைந்தது என்று நான் கைகழுவி விட்டு விட்டேன். ஆனால் நீ இன் னும் கைகழுவி விடவில்லை. அது ஒருவகைக்கு நல்லது தான் பரமேஸ். நீயும் என்னைப் போல் தனிமரமாகி விட் டால் வாழ்வே சூன்யமாகி விடும். நீ அவளுக்கு இடம் கொடாத வகையில் நடந்து கொண்டு வார இறுதி நாட் களில் அன்பாகப் பழகி வந்தால் நாளடைவில் அவள் உன்வழிக்கு வந்து விடக்கூடும்" என நான் அவனை ஆறு தல் படுத்தினேன். நான் பிரிந்திருந்தாலும் அடுத்தவனை யும் பிரிந்து செல்லுமாறு சொல்வது புத்திசாலித் தனமான தல்ல என்பதை நான் நன்கு அறிவேன்.
அவனது மனைவியை நான் சந்தித்ததே கிடையாது. சந்தி க்க வேண்டும் என்ற அவாகூட வந்ததில்லை. ஆக்க சக்தி
களான அம்மன்களை தரிசிப்பதை விடுத்து அழிவுச் சக்தி களான இந்த துர்க்காதேவிகளை ஏன் சந்திக்க வேண்டும்? இன்று தான் முதன் முதலாக பரமேஸ் தனது மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அப்பாவி போலிருக் கும் இவளா அவனை ஆட்டிப் படைக்கிறாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
முருகப் பெருமானுக்கு மாத்திரமல்ல இந்தப்பெண்களுக்கும் கள்ளம், கபடம், சாந் தம்,வெகுளி,அடக்கம்,அகம்பாவம் என ஆறுமுகங்களுண்டு. எந்நேரம் எந்த முகத்துடன் எம்மை எதிர் கொள்வார்கள் என்பதுஒரு முகம் கொண்ட எமக்குப் புரியாது. அதோ அந்த மணவறையில் இருக்கும் மணமகளும் எவ்வளவு பௌவியமாக அமர்ந்து கொண்டு புன்னகை புரிகின்றாள்.திருமணம் முடிந்து எவ்வளவு காலத் தினுள் ஒன்றின் பின் ஒன்றாக எஞ்சிய ஐந்து முகங்களும் தோன்றி ஒருதிரு முகம் கொண்ட அப்பாவிக் கணவனை சித்திர வதைப்படுத் துமோ யாரறிவார்.
செவ்வாழை மேனியென வர்ணிக்கப்படும் பெண்களின் மே னிக்குள் வைரம் பாய்ந்திருக்கும் என்பதை எவரால்தான் முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியும்? யாமறியோம் பராபரமே.
நிறப்பலி!
ஷஷஆபத்திலிருக்கும் உயிர்களைப் பாதுகாக்கும் அத்தியாவசிய சேவையினை செய்ய வேண்டிய நீங்கள் மூவரும்உங்கள் கடமையிலிருந்து தவறியதன் மூலம் உயிர்ப்பலிக்கு உடந் தையாக இருந்துள்ளீர்கள். அத்துடன் அக்குற்றத்திலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்வதற்காக குழந்தையின் தந்தை யை ஏமாற்றி படிவத்தில் அவரது கையொப்பத்தையும் வாங் கியுள்ளீர்கள். உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இவ்விரு குற் றச் சாட்டுக்களும் விசாரணையின் மூலம் சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளன. அதனால் வாதி தரப்பினருக்கு நீங்கள் மூவரும் ஒருலட்சம் டொலர் ந~;ட ஈடாக வழங்க வேண்டும். அத்துடன் பத்து வருடகால சிறை த்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனத் தீர்ப்பளிக்கிறேன்” என உத்தரவிட்ட நீதிபதி மேசையில் சுத்தியலால் தட்டுவத
ற்கிடையில் ஆத்திரமடைந்த ஒரு குற்றவாளி தனது கைமு~;டியை குற்றவாளிக் கூண்டின் சட்டத்தில் பலமாகக் குத் தினான்.
கடவுளே, தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதை நரூபித்துக் காட் டி விட்டாய் என தனக்குள்தானே முணு முணுத்துக் கொண் டார் கந்தசாமி மாஸ்டர்.தனக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங் கப்பட்ட போதிலும் தலையைத் தொங்க விட்டவாறு நீதிமன் றத்தை விட்டு வெளியேறிய அவரை கமெராக்கள், வீடியோ கமெராக்கள் சகிதம் ரி.வி., றேடியோ, பத்திரிகை நிருபர்கள் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். உங்களுக்குச் சாதகமா கத் தானே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது அது மகிழ்ச்சியா எனக்கேட்டு பேட்டியை ஆரம்பித்தார் ரி.வி.நிருபர்.
ஷஷஎனக்கெங்கே சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது? எனது பிள்ளையை உயிருடன் மீட்டுத் தந்திருந்தால் அது தான் எனக்குச் சந்தோ~மாகவும் சாதகமாகவும் இருந்திருக் கும். இறந்துபோன என் மகனை இறைவனால் கூட மீட்டுத் தர முடியாது இவர்கள் எங்கே மீட்டுத்தரப் போகிறார்கள்||.
ஷஷமூன்று லட்சம் டொலர் ந~;டஈடாகக் கிடைத்திருக்கி; றதே அதைப்பற்றி....? ||
ஷஷபிள்ளையைப்பறி கொடுத்துவிட்டுத் தவிக்கும் எமக்குப் பண மென்ன பணம்? பணத்தை வைத்துக் கொண்டு கொஞ்சி விளையாடுவதா?என்மகன் மரணாவ ஸ்த்தைப்பட்டு துடிதுடி த்துக் கொண்டிருந்த போது நானே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லாமல் அம்புலன்ஸ் காரர்கள் விரைவாகக் கொண்டு போய் என் பிள்ளையைக் காப்பாற்றுவார்கள் என நம்பி மோசம் போய்விட்டேனே எனத் தலையில் அடித்த வாறு கதறி அழுதார் கந்தசாமி மாஸ்டர். கமெராக்காரர்க ளும்,வீடியோக்காரர்களும் ஓடியோடி குளோசப்பில் அதனை படமெடுத்தனர். சுற்றிவர நின்றோரது கண்கள் பனித்தன.
அழுதபடியே நிலைதடுமாறி கீழே ஸ்னோவில் வீழ்ந்தார் மாஸ்டர். அருகில் நின்ற அவரது உறவினர்கள் அவரைத் தூக்கி நிறுத்தி உடையில் ஒட்டிக் கொண்டிருந்த ஸ்னோ வைத் தட்டி விட்டு கைத்தாங்கலாகப் பிடித்தவாறு காருக்கு கொண்டு சென்றனர்.படப்பிடிப்பாளர்களும், நிருபர்களும் விடாது பின் தொடர்ந்தனர். மாஸ்டர் காரில் அமர்ந்ததும், ஷஷஎதிரிகளுக்குப் பத்து வருடகால கடூழியச் சிறைத் தண்ட னை வழங்கப் பட்டுள்ளதைப் பற்றி என்ன சொல்ல விரும்பு கிறீர்கள்? ||என்றனர்.
ஷஷஅரசாங்க ஊழியர்கள் அதுவம் அத்தியாவசிய வைத்திய சேவையில் பணிபுரியும் ஊழியர்கள் இனத்துவே~மோ, நிற த்துவோ~மோ இன்றிப் பொதுநல சேவை மனப்பான்மையுடன் சேவைசெய்ய வேணும். நாங்கள் வெள்ளை இனத்தவர் கள் இல்லாத படியால் வெள்ளையர்களான அம்புலன்காரர் கள் எமக்குச் சேவை செய்ய மறுத்து விட்டார்கள். அனால் ஒரு பச்சிளம் உயிர் பலியாகி விட்டது--இது மன்னிக்க முடி யாத குற்றம். ஆண்டவன் அதற்குத் தண்டனை கொடுத்து விட்டான். இனத்துவே~மும், நிறத்துவே~மும் கொண்ட ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு இதுவொரு தகுந்த படி ப்பினையாக அமையும்.
அப்போதுதான் எங்களது பிள்ளைக்கேற்பட்ட அவலம் ஏனை யோருக்கும் ஏற்படாதிருக்கும்.
எங்கள் நாட்டில் இனத்துவே~ம் எவ்வளவு தூரம் தலை விரித்தாடுகிறது.தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக நம் மவர்களை சிங்கள இராணுவத்தினர் ஈவிரக்கமோ தயவு தாட்சண்ணியமோ இல்லாது சுட்டுக் கொல்லுகிறார்கள். தமி ழ்ப் பெண்களை எல்லாம் கதறக்கதறக் கற்பழித்து விட்டு துவக்குப் பிடியால் தலையில் அடித்துக் கொலை செய்து குழி தோண்டி புதைத்தார்கள். கொலை செய்தோர் அடை யாள அணிவகுப்பின் போது அடையாளம் காண்பிக்கப்பட்ட போதிலும் அவர்கள் சிங்களவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகள் எடுக்கப்பட வுமில்லை தண்டனைகள் வழங்கப்படவுமில்லை.இந்த அநீதி களை சர்வதேச நாடுகளும்,ஐக்கிய நாடுகளும் அறிந்திருந் தும் கூட தட்டிக்கேட்க முன்வரவில்லை. வெறும் புள்ளிவிபர அறிக்கைகளை மாத்திரம் வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற ன. ஸ்ரீலங்காவில் அடிப்படை மனித உரிமைமீறல் சம்பவங் கள் நடைபெறுகின்றன என அறிக்கை விடுவதால் மாத்திரம் என்ன பயன்? அதுமாத்தி ரமன்றி தமது இனத்தையும் தமிழ் மண்ணையும் இனத்துவே~pகளிடம் இருந்து மீட்டெடுப்பதற் காக தமது உயிரையே பணயம் வைத்துப் போராடி வரும் விடுதலைப் போராளிகளைப் பயங்கரவாதிகளெனப் பறை சாற்றி வரும் அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரத்தை உண் மையென நம்பி வெளிநாட்டினர் விடுதலைப் புலி இயக்கத் தினை தடை செய்தும் வருகின்றனர்.
அங்கிருந்தால் எமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சி அபயம் தேடி இங்கே கனடாவுக்கு ஓடி வந்தோம். ஆனால் அதே இனத்துவே~ம் இங்கே எமது மகனைப் பலி கொண்டு விட்டது. இந்த உலகில் இனத்துவே~ம் இல்லாத நாடே இல்லைப் போலிருக்கிறது. தப்பித் தவறி நாம் மோட்சத்துக்குப் போனாலும் அங்கேயும் தமிழன் என்ற காரணத்தினால் இதே நிலை தான் ஏற்படுமோ என்னவோ? இககரைக்கு அக்கரை பச்சை என்பது அங்குபோய் நேரில் பார்த்தால் தானே உண்மை நிலை தெரிய வரும்.
பல்வேறின மக்களும் நின்மதியாகவும் வசதியாகவும் வாழக் கூடிய நாடு கனடா எனத் தெரிவு செய்யப்பட் டுள்ளது. ரோறண்டோ மாநகரம் பல்வேறின மக்களையும், பல்கலாச் சாரங்களையும் கொண்ட தலை சிறந்த நகரமென நகர பிதா பொதுவைபவங்களில் பெருமையுடன் பறைசாற்றி வரு கிறார்.ஆனால் அதே நகரில் வாழும் வெள்ளையர்கள் அல் லாத நாம் எவ்வளவு தூரம் புறக்கணிக்கப் பட்டு வருகி றோம் என்பதை நீங்கள் என் மகனது மரணத்தின் மூலம் புரிந்து கொண்டீர்கள். அகதிகளை ஆதரிப்பதாகக் கூறப் பட்டு வரும் இந்நாட்டிலுள்ள சில இனத்துவே~pகளினால் கனடா நாட்டுக்கே அவப்பெயர் ஏற்படுகிறது.
அவ்வப்போது எயிட்ஸ், எபோளா வைரஸ், மாதர்களது மார் புப்புற்றுநோய் போன்றவற்றைக் குணமாக்கி மக்களின் உயி ரைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ ஆராய் ச்சிக்கென அரசாங்கம் கோடிக் கணக்கான டொலர்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. அத்துடன் நவீன வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகளை நிறுவியும்,மருத்துவ நிபுணர் களுக்கு பெருந்தொகைப் பணத்தை சம்பளமாகவும் வழங்கி வருகிறது. இதெல்லாம் எதற்காக? விலை மதிப்பற்ற மனித உயிர் மாண்டு போய் விடக்கூடாது என்பதற்காக அல்லவா?
தனக்கேற்பட்ட நோய் பற்றியோ தனக்கு என்ன செய்கிறது என்றோ வாய் திறந்து சொல்ல முடியாது அவஸ்த்தைப் பட்டு அழுது குழறிய என் பதினெட்டு மாதக் குழந்தையை உடனடியாக ஹொஸ்பிட்டலு க்கு கொண்டு செல்வதற்காக நான் அம்புலன்ஸை அழைத்தேன். குய்யோ...குய்யோ என சைரண் ஒலியோடு விரைந்து வந்தார்கள்.ஆனால் எங்கள் நிறத்தைக் கண்டதும் வேண்டா வெறுப்பாக நடந்து கொண் டார்கள். பிள்ளையை சோதித்துப் பார்க்க வேணுமே என்ற கடமை உணர்ச்சி கூட இல்லாமல் சுவரில் பிள்ளைகள் வரைந்திருந்த ஓவியங்களைப் பார்த்து தமக்குள் கேலியாக எதையோ சொல்லி சிரித்துக் கொண்டு நின்றார்கள். பிள் ளையைக் காப்பாற்ற வேண்டுமே எனத் துடித்துக் கொண்டு நின்ற எனது வற்புறுத்தலினால் பிள்ளையை சோதித்தார் கள்.இதுகடுமையான வருத்தமில்லை உடனடியாக ஹொஸ் பிட்டலுக்குக் கொண்டு போக. சாதாரண இயர் இன்பெக் ~ன் தான்.இதுக்கெல்லாம் ஏன் எங்களை அழைத்து தொந் தரவு செய்கிறீர்கள். உங்களது பமிலி டாக்டர் சொன்னது போல் அன்ரிபயோட்டிக் கொடுக்கிறீர்கள. இரண்டு மூன்று நாளில் வருத்தம் சுகமாகி விடும் எனக் கூறிச் சென்றார் கள். அவர்களது பேச்சைநம்பி நானும் பொறுத்திருந்தேன்.
ஆனால் மறுநாள் மீண்டும் எனது குழந்தை வேதனை பொறுக்க முடியாது நெளிந்து வளைந்து துடித்துக் கதறிய ழுது கொண்டிருந்தது. அதனைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க என்மனம் கேட்கவில்லை.மீண்டும் அம்புலன்ஸை அழைத்தேன். நல்ல வேளையாக முதல் நாள் வந்தோர் வரவில்லை வேறு மூவர் வந்திருந்தார்கள். இவர்கள் உடன டியாக என்பிள்ளையை ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டு போ வார்கள் என நம்பி பிள்ளைக்கு நடந்தவற்றை சுருக்கமாகக் கூறினேன்.ஆனால் இவர்களும் அசமந்தப் போக்கில் சம்பந் தமில்லாத கேள்விகளை கேட்டுநேரத்தைக் கடத்திக் கொ ண்டிருந்தார்கள். ஐயோ என்ரபிள்ளையை உடனடியாக ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டு போங்கள் என நான் கத்திய பின்னரே பிள்ளையைக்கொண்டு சென்றார்கள்.நானும் மனை வியும் அவர்களுடன் கூடவே சென்றோம். முதலில் எமது வீட்டுக்கு அண்மையிலிருந்த ஹொஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றார்கள்.
அங்கு எமேஜென்ஸியிலிருந்த டாக்டர் அவதி அவதியாகப் பிள்ளையை சோதித்து விட்டு பிள்ளைக்கு மெனிங்கைற்றிஸ் வருத்தம் கடுமையாகி விட்டது. ஏன் இவ்வளவு லேற்றாகக் கொண்டு வந்தீர்கள். வருத்தம் கடுமையாகி விட்டதால் எம் மால் ஒன்றும் செய்ய முடியாது சில்றண் ஹொஸ்பிட்டலுக்கு அனுப்பி வைக்கிறோம். அங்கேயுள்ள ஸ்பெ~லிஸ்ற் டாக்ட ர்கள் கவனிப்பார்களெனக் கூறி திரும்பவும் அம்புலன்ஸில் சில்றண் ஹொஸ்பிட்டலுக்கு அனுப்பி வைத்தார். அங்கேயும் ஷரூலேற்| ஆகிவிட்டது இருந்தாலும் முயற்சி செய்து பார்க் கிறோமெனக் கூறி அவதி அவதியாக ஏதேதோ செய்தார் கள். நாங்கள் வெயிற்றிங் றூமில் பொறுமை இழந்து கடவு ளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் முகத்தை தொங்கப் போட்ட வண்ணம் வந்த டாக்டர் சொறி நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் உங்கள் குழந்தை யைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது என்றார்.
சந்நியாச சம்சாரி
யாழ்ப்பாணத்தின் பிரபல கத்தோலிக்க கல்லூரி ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த டேவிட் மரியதா ஸ{க்கு ஜெர்மனிக்குச் சென்று ‘கெமிக்கல் எஞ்ஜினியரிங்’ படிப்பதற்கு புலமைப்பரிசில் கிடைத்தது. வயது வந்த பொடி யன் வெளிநாட்டுக்குப் போனால் ஒருவேளை திரும்பி வரா மல் அங்கேயே தங்கி விடுவானோ என்ற பயத்தில் கலியா ணத்தைக் கட்டிப்போட்டுப் போ என நிர்ப்பந்தித்தனர் அவ னது பெற்றோர்கள். கலியாணம் கட்டினால் படிக்கக் கொள் ள முடியாது.கலியாணத்துக்கு இப்போ என்ன அவசரம் இர ண்டு வருசத்தில் படிப்பை முடித்துக் கொண்டு வந்த பின் செய்யலாமென அவன் மறுத்து விட்டான். வேறு வழியின்றி அந்தோனியாரை வேண்டிக்கொண்டு அவனை ஜேர்மனிக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர்.
ஆங்கிலம் சர்வதேச மொழியென்ற நம்பிக்கையோடு ஜெர்ம னிக்குச் சென்ற மரியதாஸ் அங்குள்ள பெரும்பாலான ஜெர் மனியர்களுக்கு ஆங்கிலம் தெரியாதிருப்பதைக் கண்டு ஆச் சரியமடைந்தான். முற்றிலும் மாறுபட்ட சூழலுக்கேற்ப தன் னைச் சுதாகரித்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தான்.ஒரு வெள்ளிக் கிழமையன்று வழமை போல் இரவு ஒருமணி வரை படித்துக் கொண்டிருந்து விட்டுப் படுத்தவன் மறுநாள் காலை பத்து மணிக்கு விழிப்புற்றான். இருந்தா லும் படுக்கையை விட்டு எழும்ப மனமின்றி சுவரில் தொங் கிய கலன்டரிலிருந்த இயேசுவின் படத்தைப் பார்த்த வண் ணம் படுத்திருந்தான். முள்முடி தரிக்கப்பட்ட அவரது தலை யிலிருந்து வடிந்து கொண்டிருந்த இரத்தக் கறையினைப் பார்த்தபோது ஆமிக்காரனின் சித்திரவதைக்கு ஆளான ஒரு தமிழனைப் போன்று இயேசு காட்சியளித்தார்.
திடீரென தொலை தூரத்தில் கேட்ட மிருதங்க ஒலியும் பாட் டுச் சத்தமும் மரியதாஸின் கவனத்தை ஈர்த்தது. கட்டிலை விட்டு எழும்பிய அவன் ஜன்னலூடாக வெளியே எட்டிப் பார்த்தான்.ஜெர்மனியில் யார் மிருதங்கம் அடிப்பார்கள் என அவனது மனம் வினாவெழுப்பியது. கருநாகம் போல் நீண்டு வளைந்து கிடந்த வீதியின் தொங்கலிலிருந்து ஒரு கோ~;டி ‘ஹரே ராமா ஹரே கிரு~;ணா….’ எனப் பாடிக் கொண்டு வருவதைக் கண்டான். உடனே தான் இலங்கையில் நிற்ப தைப் போன்ற உணர்வு பிறந்தது மரியதாஸ{க்கு. அவர்கள் தனது தொடர்மாடிக் கட்டிடத்தை தாண்டிச் செல்லு முன்னர் கீழே சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவலில் விறுவிறென பற்களை விளக்கி முகத்தைக் கழுவிவிட்டு உடுப்புகளை யும் மாட்டிக் கொண்டு கீழே சென்று அந்தக் கூட்டத்தின ரையே பார்த்த வண்ணம் நின்றான். மிருதங்க வாத்தியத் துடன்‘ஹரே ராமா ஹரே கிரு~;ணா’எனப்பாடுவதால் அவர் கள் இந்தியர்களாவே இருப்பார்களென எண்ணினான். அவர் கள் அருகே வந்ததும் வெளிநாட்டவர்களாக இருப்பதைக் கண்டு வியப்படைந்தான். ஆண்கள் மொட்டை அடித்துக் காவி உடை அணிந்திருந்தார்கள்.
ஜெர்மனியப் பெண்களும் இந்தியப் பெண்களைப் போன்று வெள்ளைச் சேலை அணிந்து கழுத்தில் உருத்திராட்ச மாலைகளும் அணிந்திருந்தார்கள்.
அந்தரத்தில் தொங்கும் அங்கங்களெல்லாம் அறுந்து விழுந் து விடுமோ என அஞ்சும் அளவுக்கு துள்ளிக் குதித்தாடிய அவர்களது ஆனந்தமயமான ஆட்டமும் மிருதங்க இசையும் அவனுள் ஒருவித உணர்வினையும் உத்வேகத்தையும் ஏற்ப டுத்தியது. அத்துடன் அவனது உடலெங்கும் மயிர் சிலிர்த்து எழுந்தது. ‘ஹரே ராமா ஹரே கிரு~;ணா’ என கிறீஸ்த்தவ னான அவனது வாயிதழ்கள் முதன் முதலாக முணுமுணுத் தன. அவர்களோடு சேர்ந்து தானும் ஆட வேண்டும் போலி ருந்தது அவனுக்கு. அன்றிலிருந்து பிரதி சனிக்கிழமை தோ றும் அவர்கள் வரும்வரை காத்து நின்று அவர்களோடு இணைந்து பாடி ஆடிக்கூத்தாடி நீண்ட தூரம் வரை சென்று திரும்பி வருவான். பொழுது போக்கு எதுவுமே இன்றி நண் பர்களும் இல்லாமல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்த அவனுக்கு இதுவொரு சிறந்த பொழுது போக்காகவும் மன துக்கு இதமாகவும் இருந்தது. அதனால் நாளடைவில் அவர் களது கிரு~;ணர் கோவில் இருக்கும் இடத்தையும் கேட்டறி ந்து ஓய்வு நேரங்களில் அங்கே சென்று வரலானான்.
அங்கு ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு வந்த ஆன்மீகச் சொற் பொழிவுகளும் சைவக்கறிவகைகளுடன் கூடிய சோறும் அவ னுக்கு மிகவும் பிடித்துக் கொண்டது.இவை அனைத்துக்கும் மேலாக அவர்களுடன் ஆங்கில மொழியில் உரையாடக் கூடியதாக இருந்தமை அவனுக்குப் பரம திருப்தியாக இரு ந்தது. அடிக்கடி அங்கு போய்வந்து கொண்டிருந்தவன் படி ப்பு முடிந்ததும் அவர்களுடனேயே இணைந்து கொண்டான். அன்றிலிருந்து தன்பெற்றோர்களையும் மறந்து அவர்களுக்கு கடிதம் எழுதுவதையும் நிறுத்திக் கொண்டான்.எத்தனையோ கடிதங்கள் எழுதியும் பதில் கிடைக்காததினால் அவன் ஜெர் மன் பெட்டையைக் கலியாணம் கட்டிக்கொண்டு தம்மைமற ந்து விட்டான் என எண்ணிக் கவலைப்பட்டனர் பெற்றோர். சில வருடங்களின் பின்னர் மொட்டை அடித்து காவி தரித்து மஹா கார்த்ததாஸ் என்ற ஹரே ராமா சுவாமியும் சி~;யர்க ளும் கொழும்பில் ஹரோராமா இயக்கத்தின் கிளை ஒன்றி னை அமைக்க வந்திருப்பதாக செய்தி பரவியது. அதனால் அவர்களைப் பத்திரிகையின் சார்பில் பேட்டி காண்பதற்கா கச் சென்றிருந்தேன்.என்ன ஆச்சரியம்!மஹாகார்த்தாஸ் என் ற அந்தச் சுவாமியார் டேவிட் மரியதாஸே தான். அவரும் நானும் சில காலம் ஒன்றாகப் படித்தவர்கள். அதனால் அவ ரும் என்னை அடையாளம் கண்டு கொண்டார். எனது சுகது க்கங்கள் வாழ்க்கை பற்றியெல்லாம் விசாரித்தார்.நான் இன் னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை அறிந்து கொண்டதும் திருமணம் செய்யும் ஆசை இருக்கிறதா என வினாவினார். ஆம் என்ற அர்த்தத்தோடு நான் தலையை அசைத்தேன்.
திருமணம் செய்து கொள்வதால் உமக்கு என்ன நன்மை ஏற் படப்போகிறது? இப்போது உமக்காக மாத்திரம் உழகை;கும் நீர் பின்னர் மனைவிக்காகவும்,பிள்ளைகளுக்காகவும் உழை க்க வேண்டும். மனைவி உமது உழைப்பை மாத்திரமல்ல உடல் சக்தியையும் உறிஞ்சி விடுவாள்.உமாதேவியை மண ந்து கொண்டதனால் சிவபெருமான் தொல்லைகளிலிருந்து விடுபட முடியாது இன்னமும் தவம் செய்து கொண்டே இரு க்கின்றார். ஆனால் கிரு~;ண பகவானோ ஏற்கனவே தொல் லைகள் ஏதுமற்ற ஆனந்தப்பரவச நிலையை அடைந்து விட் டார். அதனால் பரமானந்த நிலையில் சதா ஆனந்தக் கூத் தாடி லீலா விநோதங்களைப் புரிந்து வருகிறார் என விளக் கிக் கொண்டே இருந்தார். அதனைக் கேட்டதும் கல்யான ஆசையிலிருந்த எனக்கு கிரு~;ணபகவானைப் போன்று பல் வேறு பெண்களுடன் திருவிளையாடல் புரிய வேண்டும் போலிருந்தது.
கிறிஸ்த்தவராயிருந்து கெமிக்கல் எஞ்ஜினியரிங் படிக்க ஜெர் மனி சென்ற நீங்கள் எவ்வாறு இந்தக் கோலத்துக்கு ஆளா கினீர்கள்? என்ற கேள்வியுடன் பேட்டியை ஆரம்பித்தேன்.
ஜெர்மனிக்குச் சென்ற என்னைத் தனிமை மிகவும்வாட்டியது. கல்லூரி நேரம் தவிர எவருடனும் தமிழிலோ ஆங்கிலத்தி லோ கதைக்க முடியாமலிருந்தது.ஜெர்மனியர்களுக்கு ஆங் கிலம் தெரியாது. எனக்கு அவர்களது டொச் பாi~ தெரி யாது. அதனால் விரக்தியோடு காலத்தை ஓட்டிக் கொண்டி ருந்த போது ஹரே ராமா இயக்கத்தினரின் சந்திப்பு ஏற்பட்;
டது. அதனால் நானாக அவர்களைத் தேடிச் சென்று அவர்களது ஆங்கிலப் பிரசங்கங்களைக் கேட்டும்,பூஜை, பஜனைக ளில் பங்கு பற்றியும் வந்தேன்.ஆரிய இனத்தவர்களான ஜெ ர்மனிய ஹரே ராமா சுவாமிகள் ஆரிய மொழியான சமஸ்கி ருதத்தினை அழுத்தம் திருத்தமாகக் கற்றுத் தெளிந்துள்ள னர்.பகவத்கீதையில் சமஸ்கிருதத்தில் கூறப்பட்டிருக்கும் மந் திரங்களை வழுவின்றி உச்சரித்து அதற்கெல்லாம் ஆங்கில த்தில் அற்புதமான விளக்கங்களைத் தந்தார்கள். அவற்றை நான் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்பேன்.பின்னர் எனது படிப்பு முடிந்ததும் படிப்படியாக நானும் அவர்களுள் ஒருவ னாகச் சேர்ந்து சந்நியாசத்தை ஏற்றுக் கொண்டேன்.
கிறிஸ்த்தவரான நீங்கள் சென்று வழிபடுவதற்கு ஜெர்மனியி ல் கிறிஸ்த்தவ கோவில்கள் எதுவும் இல்லையா?
எத்தனையோ கறீஸ்த்தவ கோவில்கள் இருக்கின்றன.அங்கெ ல்லாம் டொச் பாi~யிலேயே தான் பூஜை, பிரசங்கங்கள் எல்லாம் நடாத்துகிறார்கள். ஆங்கிலத்தில் நடாத்தினாலும் கூட அவர்கள் ஒரே விடயத்தைத் தான் திரும்பத் திரும்ப பிரசங்கம் பண்ணிக் கொண்டிருப்பார்கள். சின்னவயது முதல் திரும்பத் திரும்ப அதே பிரசங்கங்களைக் கேட்டு எனக்கு அலுத்துப் போய்விட்டது.ஆனால் ஹரே ராமா இயக்கத்தினர் தினமும் வௌ;வேறு தத்துவங்களையும், ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் உள்ள உறவுபற்றிய விளக்கங்களை எல் லாம் மிகத்தெளிவாக விளக்குவார்கள்.அதனால் நான் மாத் திரமல்ல ஜெர்மனியர்களும் ஏனைய நாடுகளிலுள்ள வெள் ளைக்காரர்களும் கிறிஸ்த்து மதத்தைக் கைவிட்டு இதில் இ ணைந்துள்ளாhகள்;.
நீங்கள் இங்கு வந்திருப்பதை அறிந்து உங்கள் அப்பா, அம் மாவந்து சந்திக்கவில்லையா?அவர்கள் வந்து சந்தித்து தங் களோடு வந்திருக்கும் படி கேட்டால் என்ன செய்வீர்கள்?
நான் இப்போதும் அம்மா அப்பாவுடன் தானே இருக்கிறேன். ராதாவும் கிரு~;ணரும் தான் என் அம்மா அப்பா. அவர்க ளது நாமத்தையே அனுதினமும் செபித்துக் கொண்டிருந் தால் அதைவிட ஆனந்தம் வேறொன்றுமில்லை.
மஹா கார்த்ததாஸ் என்னுடன் கதைத்துக் கொண்டிருக்கையி லும் அவரது கைவிரல்கள் சேலைப்பையினுள்ளிருந்த உரு த்திராட்ச மாலையை உருட்டிக் கொண்டே இருந்தன.
உலக விவகாரங்களில் ஆசைப்படுவதினால் தான் எமக்குத் துன்பங்களும் துயரங்களும் ஏற்படுகின்றன. அவற்றைக் கை விட்டு கிரு~;ணரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால் அவரைப் போலவே நாமும் ஆனந்த மயமாக இருக்கலாம்.
உங்கள் செலவுக்கு எவ்வாறு பணம் கிடைக்கிறது? வெளி நாடுகளில் உள்ள உங்கள் கிளைகளிலிருந்து பணம் அனு ப்புவார்களா?
அவர்கள் அனுப்புவதில்லை. ஆனால் எப்படியோ கிரு~;ண பகவான் படி அளப்பார்.இந்தப் பெரிய மண்டபத்தையே ஒரு முதலாளி எங்களது ஆலயத்துக்காக இலவசமாகத் தந்துத வியுள்ளார். அத்துடன் மற்றும் பல முதலாளிகளும் பொது மக்களும் நிதியினை அன்பளிப்புச் செய்த வண்ணம் உள்ள னர். சிலர் எமது உணவுக்காக காய் கறிகள் அரிசி எல்லா வற்றையும் கொண்டு வந்து தருகிறார்கள்.
அவர் கூறியதும் உண்மை தான். பிச்சைக்காரர்களுக்கு பத் துச் சதம் கூட கொடுக்க விரும்பாத எங்கட சனங்கள் கோ யில் குளத்துக்கு நூறு ஆயிரமென்று அள்ளிக் கொடுப்பார் கள்.அவர்களின் தயவை ஆண்டவன் தயவு எனக்கூறிக்கொ ண்டு இவர்களும் எம்மைப் போன்று க~;டப்பட்டு உழைக் காது சும்மா இருந்து சாப்பிடுகிறார்கள். மாலை வேளைக ளில் கொழும்பு கோட்டைப் பகுதிகளில் நின்று மிருதங்க வாத்தியங்களுடன் துள்ளிக் கூத்தாடும் இவர்களை வேலை முடிந்து வீடுதிரும்புவோர் சற்று நின்று பார்த்து ரசித்து விட் டுச் செல்வார்கள்.
காலையிலிருந்து நள்ளிரவு வரை வியாபாரத்தைப் பற்றியும் பணத்தைப் பற்றியுமே சிந்தித்த வண்ணம் அங்குமிங்குமாக கார்களில் அலைந்து திரிவார்கள் முதலாளிமார்கள்.ஆனால் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கும் அவர்களது மனை வியர்கள் பொழுது போக்குக்காக சினிமாவுக்குப் போவது போல் அலங்கரித்துக் கொண்டு இவர்களது ஆலயத்துக்கு வந்து போனார்கள். வெறுங்கையோடு வராது பால் பழம் அரிசி மரக்கறி வகைகளுடன் வந்தார்கள். காலை மாலை பூஜைகளும் பிரசங்கங்களும் முறையாக நடைபெற்று வந் தன. அத்துடன் பிரசாதங்களும் தங்குமிட வசதிகளும் வழங் கப்பட்டதனால் அநாதைகளும் வாழ்க்கையில் விரக்தியுற் றோரும் அங்கேயே தஞ்சம் புகுந்தனர்.காலத்துக்குக் காலம் வெளிநாடுகளில் இருந்தும் மொட்டை அடித்த பல ஹரே ராமா சாமிகள் வந்து போனார்கள். அவர்களில் சிலர் போ தை வஸ்த்துக்கள் வைத்திருந்ததாக இலங்கை அரசு குற்ற ஞ் சாட்டி இருபத்திநான்கு மணிநேரத்தினுள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இருந்தாலும் அவ்வாலயத் தின் வளர்ச்சி தடைப்படவில்லை. கன்னிப்பருவத்தில் ஒருவரைக் காதலித்து பின்னர் அவரால் ஏமாற்றப்பட்டு விரக்தியுற்றிருந்த ஒரு ஆசிரியையும் அங்கு அடைக்கலம் புகுந்து சந்நியாசமும் ஏற்றுக் கொண்டார்.அவ வுடைய மனம் தான் விரக்தியுற்றிருந்ததே தவிர மேனியோ தளதளவென்று தக்காளிப்பழம் போன்றிருந்தது. ஜமுனாதாசி என மறுபெயர் சூட்டப்பட்ட அவர் சிறுவர்களுக்கு அங்கே சமய வகுப்பினை நடாத்திவந்தார்.ஆலயத்தில் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி சமத்துவமாக இருந்து பிரார்த்தனை செய்வார்கள், பிரசாதம் உண்ணுவார்கள், உரையாடுவார் கள். கிரு~;ண பகவானே ஆண் பெண் என்ற பேதமின்றி சதா பெண்கள் புடை சூழ திருவிளையாடல்கள் புரிந்தவரல் லவா? கார்மேக வர்ண மேனியர்கள் மீது இன்று வெள்ளை க்காரப் பெண்கள் மோகம் கொள்வதைப் போன்ற வழக்கம் அன்றே பாரத நாட்டில் இருந்திருக்கிறது என்பதனை கிரு~; ண லீலை புலப்படுத்துகின்றது. கிரு~;ணரே குழல்--புல்லாங் குழல் மன்னரல்லவா?
“குழல் ஊதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்குறை யேதும் எனக்கேதடி சசியே….”
“ஆனந்த மோகன வேணுகானமதில் என்மனம் அலை பாயு தே, தனித்த வனத்தில் எனை அழைத்து முத்தம் தந்து முகிழ்த்த வா…”
என்றெல்லாம் பாடி எத்தனை பெண்கள் இன்பசுகம் அனுபவி த்தார்கள். மஹா கார்த்தாசும் ஜமுனாதாசியும் அதற்கு விதி விலக்கானவர்களா? இசையால் மாத்திரமன்றி தசையாலும் வசமாகினார்கள். ஆனந்த லீலைகள் புரிந்த மாயா விநோத னின் தூயசி~;யர்கள் அல்லவா?அவர்களது ஆன்மீக உறவு நாளடைவில் ஆண்டான் ஆண்டாள் உறவாக உன்னத நிலையினை அடைந்தது. தாசனும் தாசியும் பள்ளி அறையி னில் முற்றும் துறந்தோராயினர். கிரு~;ண பகவானின் ஆன ந்தப் பரவச நிலை அவர்களுக்கும் கிட்டியது.
திருமணம் செய்வதால் உனக்கு என்ன நன்மை ஏற்படப் போகிறது? என்று அன்று எனக்கு உபதேசம் செய்த அதே சாமியார் இன்று தானும் சம்சாரி ஆகிவிட்டார். ஆனால் அவர் மஹா புத்திசாலி. என்னைப் போன்று எனக்காகவும் மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் க~;டப்பட்டு உழைக்க வேண்டிய அவசியமேயில்லை. சும்மா இருந்து சாப்பிடுகிறார். எல்லாம் இன்ப மயம்.
பேசுந் தெய்வம்
அகால வயதில் ஆருயிர்க் கணவரைப் பறிகொடுத்தது போல் தன் இரு கண்மணிகளான மகன்மாரையும் இழந்து விடுவோனோ என்ற மனப்பீதி கோமதியை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அதனால் தாலிக்கொடியையும் ஏனைய நகைகளையும் விற்ற பணத்தை ஏஜன்ஸிக்காரணுக்கு கா ணிக்கையாகக் கொடுத்து பிள்ளைகளுடன் ஒருவாறு கன டா வந்து சேர்ந்து விட்டாள்.இங்கு சமூக சேவை திணைக் ளத்தினால் வழங்கப்பட்ட சமூக நல உதவிப்பணம் ஆயிர த்தி இருநூறு டொலரில் சரி அரைவாசி அப்பாட்மென்ற் வாடகைக்குப் போக மிகுதிப்பணத்தில் சிக்கனமாக வாழ்க் கையைக் கடத்திக் கொண்டிருந்தாள். கணவனை இழந்த அன்றே கோமதி தன் வாழ்க்கையையும் இழந்து விட்டாள். இருந்தாலும் பிள்ளைகளின் நலனுக்காக நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருந்தாள். தன் வாழ்க்கையைப் பறித்துக் கொண்ட கடவுள் பிள்ளைகளின் வாழ்க்ககையாவது வளம் படுத்த மாட்டானா என்ற எண்ணத்தோடு காலத்தை கடவு ள்வழிபாட்டிலும் பிரார்த்தனையிலும் தவப்பொழுதாகக் கழி த்து வந்தாள். ஊரில் அடக்க ஒடுக்கமாக இருந்து வந்த பிள்ளைகள் கனடாவுக்கு வந்ததும் இங்குள்ளோருடன் சேர் ந்து கட்டாக்காலிகளாகத் திரியத் தொடங்கியதும் கோமதி க்கு தலைவெடித்தது. மனச்சாந்திக்காக வெள்ளிக் கிழமை களிலும் விN~ட தினங்களிலும் பஸ்ஸ_க்கும் கட்டணம் செலுத்தி அம்மன் கோவிலுக்குச் சென்று வந்தாள். அங்கு ஐயருக்கு தட்சணையும் கொடுத்து துர்க்கை அம்மனே என் துயரைத் துடைத்து நின்மதியைத் தாவென வேண்டிக் கொண்டாள். ஆனால் நாளுக்கு நாள் அவளது துயரங் கள் அதிகரித்து வந்தனவே தவிர அணுவளவேனும் குறை ந்த பாடில்லை.எண்ணெய்ச் செலவே தவிர பிள்ளை வளர் த்தியில்லை என்ற கதையாக அவளுக்கு காசுச் செலவே ஒழிய பலனேதும் கிடைக்ககவில்லை.மூத்த மகனுக்கு பதி னெட்டு வயதாகியதும் அவனுக்கென வழங்கி வந்த இரு நூறு டொலரை சமூகசேவைத் திணைக்களம் நிறுத்தி விட் டது. அதனால் ஏற்கனவே கிடைத்த பணம் போதாமல் பல் லைக் கடித்துக் கொண்டு வாழ்ந்து வந்த அவளுக்கு தற் போது நாக்கையும் கடிக்க வேண்டிய நிலை. அதனால் ஆலயத்துக்குச் செல்வதையும் அர்ச்சனை செய்வதையும் நிறுத்தி விட்டு வீட்டிலேயே பூசை வழிபாடியற்றி வந்தாள். விரக்தியும் வேதனையும் அடையும்போது இங்குள்ள தனது ஊரவளான பவானியுடன் டெலிபோணில் கதைத்து ஆறுத ல் அடைவாhள். அதாவது கனடாவில் காசில்லாமல் பேசக் கூடியதாக இருக்கிறது என்பதில் கோமதிக்கு ஓரளவு திரு ப்தி. ‘உதவிப் பபணத்தையும் குறைச்சுப் போட்டாங்கள் அதால கோயிலுலுக்குப் போறதையும் நான் கைவிட்டிட் டன்”என பவானியிடம் கூறிக் கவலைப்பட்டாள்.
அவளது கவலையைக் கேட்டு மனம் வருந்திய பவானி அதற்கொரு மாற்றுவழி கூறினாள்.“பங்காரு அடிகளாரின் அருட்கடாட் சத்தினைப் பெற்ற அம்மா ஒராள் இங்கே இரு க்கிறா. அவ வும் உம்மைப் போலவே வாழ்க்கை எல்லாம் வெறுத்து எந்த நேரம் பார்த்தாலும் பூசையும் பிரார்த்தனை யுமாhக இருப்பா. துன்பங்கள் உள்ள சனங்களெல்லாம் கோயில்களுக்குப் போய் பணத்தைச் செலவழித்து திருவிள க்குப் பூசை,தீர்கக்க சுமங்கலிப் பூசை எல்லாம் செய்தும் எதுவித நன்மையும் ஏற்படாமல் உம்மைப் போலவே விர க்தி அடைந்து கோவிலுக்குப் போவதை நிறுத்தி விட்டு இப்ப அந்த அம்மாவிடம் தான் போகினம்.அவவொரு கண் கண்ட தெய்வம். பூசை முடியும் போது அவவுக்கு கலை வரும். அப்போது உங்களுக்கு என்ன துன்பங்கள் இருக் குது, அவற்றை நீக்குவதற்கு என்ன செய்யவேணும் என் றெல்லாம் சொல்லுவா.அவவுவுக்கு அம்மன் விடை கொடு த்தால் உங்களுடைய வீட்டுக்கும் வந்து பூசைசெய்வா” என்று ஆறுதல் கூறினாள் பவானி.
“வீட்டுக்கு வந்து பூசை செய்ய எவ்வளவு காசு கொடுக்க வேணும்?”எனக் கேட்டாள் கோமதி.ஒரு சதமும் நீர் கொடு க்க வேண்டியதில்லை. அம்மா தன்னுடைய காசில் டிக்கட் எடுத்துக்கொண்டு பஸ்ஸில் வருவா அல்லது அவவை யாராவது தங்கள் காரி;ல் ஏற்றிக் nhண்டு வந்து விடுவி னம். அம்மாவுக்கு எதிலுமே ஆசாபாசம் ககிடையாது. ஏழை எளியவர்களுக்கும் நோய் துன்பங்களினால் அவஸ்த் தைப் படுவோருக்கும் உதவிசெய்ய வேணும் என்பதுவே அவவுடைய நோக்கம்.மாதா மாதம் பறுவ தினத்தன்று தன் னுடைய செலவில் மண்டபத்தை வாடகைக்கு எடுத்து பூசை செய்து,பூசைக்கு வாற ஆக்களுக்கு அன்னதானமும் கொடுப்பா. யாராவது பணம் கொடுத்தாலும் வாங்கமாட்டா. பணம் என்ன பணமம்மா? நாhங்க போகும் போது அது கூட வரவா போகுது? நாம செய்யிற தான தர்மம் தான் நம்மோடு வரும். இதை எலல்லா மக்களும் உணர்ந்து கொள்ள வேணுமென்று சொல்லுவா.கோவில்களில் அப்படியா? அர்ச்சனையிலிருந்து அபிN~கம் வரை எல்லாத்துக் குமே காசுதானே.அத்தோடு இருக்கிற கோயில்கள் போதா தென்று புதுப்புது கோயிலல்களைக் கட்ட வெளிக்கிட்டு காணி வாங்கவென்றும் கட்டிட நிதிக்கென்றும் கையேந்திக் கொண்டு திரியினம்.
ஆனால் அம்மாவின் தொண்டினை பார்த்த உண்மையான அடியார்கள் நாங்களும் அம்மனுக் கென்று ஒரு கோயில் கட்ட வேணுமென்று சொன்ன போது அதெல்லாம் இப்போ தைக்கு வேணாம் நேரம்வரும் போது அம்மனே அதற்கான ஏற்பாட்டினைச் செய்வா. கனடாவில சங்கம் அமைப்பதும் ஆலயம் கட்டுவதும் சுயவிளம்பரத்துக்கும் தான். தூய்மை யும் அமைதியும் கொண்டஇடம் தான் இறைவனின் உறை விடம்.எங்காவது ஒரு மூலையில் அமைதியாக இருந்து தியானம் பண்ணுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன். ஆன்ம ஈடேற்றத்துக்கு அதுதான் அவசியம். எதுவித பிரதி பலனையும் எதிர்பாராமல் ஏழைகளுக்கு உதவி செய் என்று தான் அம்மாளாச்சி எனக்கு உத்தரவு தந்திருக்கிறா. அவவுடைய அருளினால் என்னை நாடி வரும் துன்பப்பட் டோருக்காகப் பிரார்த்தனை செய்வதுதான் என் பணி. நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகள் தான் இப்பிறவியில் அனுபவிக்கும் இன்பதுன்பங்களுக்குக் காரணம். கர்மவினை யின் பலனை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இருந்தா லும் கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து தூய மனது டன் தியானமும் பிரார்த்தனையும் செய்து வந்தால் எப்படி யும் இறைவன் அருளால் விமோசனம் கிட்டுமென் றெல்லா ம் அந்த அம்மா சொல்லுவா. பூசை முடிந்து அவவுக்கு கலை வரும்போது அருகில் நிற்போருக்கு அருள் வாக்கும் சொல்லுவா. வேணுமென்றால் அடுத்த பறுவப் பூசைக்கு நீயும் என்னோடு கூடவந்து பார். உனக்கும் அம்மா ஏதா வது சொல்லுவா என்றாள் பவானி. தனக்கும் அம்மா ஆறு தல் வார்த்தை சொல்லுவா என்ற நம்பிக்கையோடு கோம தியும் பறுவ தினத்தன்று குளித்து திருநீறும் பூசிக்கொண்டு பவானியுடன் பூசை நடைபெறும் மண்டபத்துக்குச் சென் றாள். அங்கே செம்பட்டடையினால் போர்க்ககப்பட்ட சிறிய மேடையின் மீது மேல் மருவத்தூர் அம்மன், பங்காருஅடி கள்,பிள்ளையார், முருகன் ஆகியோரது திருவுரு வப்படங் கள் வைக்கப்பட்டிருந்தன. பீடத்தின் முன்பாக இரு குத்து விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வாழைப் பழத்தில் குத்தப்பட்டிருந்த சந்தணக் குச்சிகளின் நறுமணம் மண்டப மெல்லாம் பரவி ஒருவித சுகந்தத்தினை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பீடத்தின் முன்பாக கண்களை மூடிய வண்ணம் ஐம்புலன்களையும் அடக்கியவாறு ஜடமாக அம ர்ந்திருந்தா அம்மா.அவவைச் சூழவிருந்த பெண்களும் சில ஆண்களும் கைகளிலிருந்த புத்தகங்களைப் பார்த்து அம்ம னின் தோத்திரங்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணி பங்காரு அடிகளின் திருவுருவப் படத்துக்கு குங்கும அபிN~கம் செய்தவாறு நின்றா. நல்லவேளை கோயிலைப் போல் இங்கே வாசலில் காசுகொடுத்து டிக் கட் எடுக்க வேண்டிய கட்டாயமில்லை என எண்ணி ஆறு தல் அடைந்தாள் கோமதி. அவளும் பவானியும் பின்வரி சையில் இருந்து கொண்டு ஏனையோருடன் சேர்ந்து தோ த்திரங்களைப் பாடினார்ள். ஒருமணி நேரரத்தின் பின் பிரார் த்தனை முடிவடைந்ததும் அம்மா கற்பூரத்தினைக் கொளு த்தி நீற்றுப் பூசணிக்காயின் மீது வைத்து அதனை இருகை களினாலும் ஏந்தியவாறு மண்டபத்தினைச் சுற்றி வலம் வந் தா. ஓம் சக்தி, ஓம் சக்தி எனக்கூறியவாறு வலம் வந்து கொண்டிருக்கையில் அம்மாவின் கண்கள் ஒருவிதமாய் சொருகி உடலிள்ள தசைகளெல்லாம் முறுக்கேறி உன்ன தம் ஏற்பட்டது.அதைப்பார்த்த அடியார்களின் உடலில் மின் சாரம் பாய்வதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. உத்வேக உணர்வுடன் நீற்றுப் பூசணிக்காயை அம்மா தரையில் மோதி உடைத்து அதனுள் குங்குமத்தைப் பூசி இரத்த மயமாக்கிவிட்டு மயங்கிய நிலையில் மௌனமாக அமர் ந்து கொண்டா. மௌனம் கலைந்து கண்விழிக்கும் போது தங்களுக்கு ஏதாவது அருள்வாக்கு கூறுவா என்ற எண்ண த்தில் சிலபெண்கள் முண்டியடித்துக் கொண்டு அவவுக்கு முன்பாக சென்று அமர்ந்து கொண்டனர்.கோமதியும் பவானி யும் தாங்கள் இருந்த இடத்திலேயே இருந்தார்கள்.சிறிது நேரத்தில் மௌனம் கலைந்த அம்மா திருநீறு குங்குமம் இருந்த தாம்பாளத்தில் கற்பூரத் தீபத்தினை ஏற்றிக் கொண் டு கண்களைச் சொருகிய வண்ணம் எழுந்து நேர் எதிரில் இருந்தோரைக் கடந்து பின்வரிசையில் இருந்த கோமதி யிடம் சென்றா.அம்மா தன்னை நோக்கி வருவதைக் கண்ட கோமதி அதிர்ச்சி அடைந்து முன்தானையால் மார்பைப் போர்த்தியவாறு எழுந்து பயபக்தியோடு கைகூப்பி நின் றாள். அவளைப் பார்த்து புன்னகை செய்த அம்மா அவ ளது நெற்றியிலே திருநீறு குங்குமத்தைப் பூசி நீ ஒன்றுக் கும் கவலைப் படாNதே அம்மா. இதுவரை காலமும் நீ அனுபவித்து வந்த துன்பமெல்லாம் பனிபோல் கரையப்போ குது. இன்னும் இரண்டே இரண்டு மாதத்தில் உன் மன தில் சாந்தி ஏற்படப்போகுது. உன் மனம் சுத்தமானது. இப் பிறவியில் நீ எவருக்குமே அற்ப தீங்கு கூடச் செய்யவில்லை. வேறு சிலர் உறவினர்களினதும், நண்பர்களினதும் சொத்துக்களை எல்லாம் அபகரித்து அவர்களை ஏமாற்றி விட்டு அபிN~கங்களும் ஆராதனைகளும் செய்யினம். அதனால் அவர்களுக்கு எதுவித பயனுமே ஏற்படப் போவ தில்லை.மனதிலேபொய்,களவு,சூதுவாது,பொறாமை போன்ற அழுக்குகளை வைத்துக் கொண்டு அபிN~கம் ஆராதனை செய்வதன் மூலம் ஆண்டவனை ஏமாற்றி விடலாமென்று அவர்கள் பகற்கனவு காணுகினம்.மாசிலாமணியான ஆண்ட வனைச் சென்றடைய வேண்டுமாயின் நாமும் மனத்தின் கண் மாசிலனாக வேண்டும். அதற்குப் பிரரார்த்தனை தான் சிறந்த மார்க்கம். கோவிலுக்குச் செல்ல முடியவில்லையே என்று நீ கவலைப்படாதே. வீட்டில் இருந்த வண்ணமே தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டுவா.அதன் மூலம் மோட்ச வீட்டுக்கான பாதையை நீ காண்பாய். நீ முற்பிறப் பில் செய்த கர்மவினை தான் உனக்கு குடும்ப சுகத்தை அனுபவிக்க முடியாமல் செய்துவிட்டது. கணவனோடு சேர் ந்திருந்து குடும்ப சுகத்தை அனுபவிக்க முடியவில்லை. பிள்ளைகளாலும் இதுவரை காலமும் சுகமடைய முடிய வில்லை.
உன்னுடைய வீட்டுக்குப் போகும்படி அம்மா எனக்கு விடை தந்துள்ளா. நான் ஒருநாளைக்கு உன்னுடைய வீட் டுக்கு வருவேன்.அன்றோடு உன் கர்மவினைகள் எல்லாம் கழிந்தோடி விடும் என்றார். மேனி சிலிர்க்க கண்கள் பனி க்க கோமதி நன்றிப் பெருக்கோடு அம்மாவை வீழ்ந்து வணங்கி அவவுடைய பாதங்களைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டாள். கடந்த ஐந்தாண்டுகளாக துர்க்கை அம்மன் ஆலயத்துக்குச் சென்று வணங்கி காசு கொடுத்து அர்ச்சனை செய்து துன்பங்களை எல்லாம் அழுதுமுறை யிட்ட போதிலும் அம்மனோ புரியாத பாi~யில் பூசை செய்யும் பூசாரியோ வாய் துறந்து ஒரு ஆறுதல் வார்த்தை கூட கூறவில்லை. ஆனால் இன்று பால் பழங்களையோ தட்சணையையோ எதிர்பாராமல் இந்த அம்மா பேசும் தெய்வமாக வந்து என் துன்பங்களை எல்லாம் தானா கவே அறிந்து அருள் வாகக்கு தந்து விட்டாவே என எண்ணிப் பூரிப்படைந்தாள் கோமதி. சதா துன்பங்களையே எண்ணி எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்த அவளது மன தில் நம்பிக்கை ஒளி பிறந்தது.
ஓர் இதயம் கல்லாகிறது
“கனடாவில் பெட்டைகளைப் பிடிப்பதற்கு கொஞ்சமாவது அழ
கான மூஞ்சி வேணும். அதோட இங்கிலீஸ_ம் கொஞ்சமாவது பேசத் தெரிஞ்சிருக்க வேணும் தெரியுமோ?”என்று நாதனுடன் வாதிட்டான் அழகன். அவர்கள் இருவரும் ஒரே றூம்மேற். ரொறண்டோவுக்கு வந்த பின்னர் தான் ஒருவரைஒருவர் சந்தி
த்து நண்பர்கள் ஆயினர்.அத்துடன் இருவரும் ஒன்றாகச் சேர்
ந்து அப்பாட்மென்டை வாடகைக்கு எடுத்துவாழ்ந்து வந்தனர். நாதன் அழகனை விட சற்று நிறம்குறைவு. அத்துடன் ஆங்கி லமும் பேசமாட்டான்.அதனால் தான் ஏதோ பெரிய அழகன், அறிவாளி என்ற தலைக்கனம் அழகனுக்கு.
“கனடாவில பெட்டை பிடிக்கிறது பெரிய வேலையில்லை. அதுக்கு அழகான மூஞ்சியோ,ஆங்கில அறிவோ தேவையில் லை. இப்ப வேணு மென்றாலும் அரை மணித்தியாலத்தில் டக்ஸியில் கொண்டு வந்து இறக்குவன் பெட்டையை.டவுண் ரவுனுக்குப் போய் இருபது டொலரைக் காட்டினதும் இறைச்
சித் துண்டைக்கண்ட நாய்கள் மாதிரி பின்னால வருவாளுகள் பெட்டைகள்.ஆனால் உன்னைப் போல பெட்டைகளுக்குப் பின் னால திரிய வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்கென்று ஒருத்தி ஊரிலை இருக்கிறாள்.அவள் வரும் வரைக்கும் நான் காத்திருப்பேன்” எனப்பொழிந்து தள்ளினான் நாதன்.
நாதன் ஊரிலிருந்தபோது எப்படி இருந்தானோ அதுபோலவே கனடாவுக்கு வந்த பின்னரும் நல்லவனாகவே இருந்தான். அத் துடன் ஊரிலுள்ள குடும்பத்தவர்கள் மீதுமிகவும் அக்கறை கொ ண்டிருந்தான். காசைக் கண்டபடி செலவுசெய்யாது மாதா மாதம் குடும்பத்தவர்களுக்கு தவறாது பணம்அனுப்பி வந்தான். ஆனால் அழகனோ முற்றிலும் நேர்மாறு. ஊரிலுள்ள உறவினர்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று சிந்திக்கவே மாட்டான். சம்ப ளம் எடுத்ததும் ஸ்டையிலான புது லோங்ஸ், சப்பாத்து ஆகிய வற்றை வாங்கி அணிந்து கொண்டு திரிவான். அப்படி ஸ்டையி லாகத் திரிந்தால் தான் தன்னைப் பார்த்து பெட்டையள் மயங்கு வாள்கள் என்பது அவனது நம்பிக்கை.
ரொறண்டோக்கு வந்த புதிதில் நாதன் தான் வேலைதேடித் திரி ந்து முதன் முதலாக ஒரு பக்டரியில் வேலை பெற்றுக்கொண் டான். முதலாளி காட்டிக் கொடுத்த வேகைளை மிக உன்னிப் பாக அவதானித்து சரியாகவும் விரைவாகவும் செய்தான். அது மாத்திரமன்றி ஊரிலுள்ள சகோதரிகளின் திருமணத்துக்குப் பண ம் தேவை என்பதால் சனி ஞாயிறு தினங்களிலும் மறுக்காமல் ஓவர் டைம் வேலை செய்தான். ஆனால் அவனுடன் வேலை செய்த இத்தாலியர்களும், வெள்ளையர்களும் சனி ஞாயிறு தினங்களில் வேலை செய்ய மறுத்துவிடுவார்கள். அதனால் நாதனை முதலாளிக்கு நன்கு பிடித்துக் கொண்டது. ஸ்ரீலங்க ன்ஸ் லீவு எடுக்காமல் நல்லா க~;டப்பட்டு வேலை செய்வா ர்கள் என்பதனை நாதனின் மூலம் அறிந்துகொண்ட முதலாளி உனக்குத் தெரிந்த வேறு ஸ்ரீலங்கன்ஸ் இருந்தால் வேலைக்
குக் கூட்டிக்கொண்டு வா எனஅவனிடம் கூறினார்.முதன்முதலில் தனது றூம் மேற்றாக இருந்த அழகனைக் கொண்டு போய் வேலையில் சேர்த்துவிட்டான்.பின்னர் படிப்படியாக தனக்குத் தெரிந்த சுமார் பதினைந்து ஸ்ரீலங்கன் தமிழ்ப் பொடியன்களு க்கு அங்குவேலை எடுத்துக் கொடுத்தான்.பிறருக்குத் தன்னாலி யன்ற அளவு உதவி செய்வதில் நாதனுக்கு அலாதி பிரியம்.
அழகனோ அவன் செய்த உதவியையும் மறந்து பக்டரியில் தானே முதலில் சேர்ந்த தமிழ் ஆளென்பது போலவும்அத்துடன் நாதனைவிட தனக்கு வேலை கூடத்தெரியும் என்பது போலவும் காட்டிக் nhண்டான். அது நாதனுக்குத் தெரிந்திருந்தும் அவன தை பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை.அவனுடைய அறிவு அந்த ளவு தானென எண்ணிக் கொண்டு பேசாமல் இருந்தான். ஆனா ல் நாதன் வேலையில் சேர்த்துவிட்ட ஏனையோர் நாதனின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அழகனின் அகம்பா வமான போக்கு அவர்களுக்குமே பிடிக்கவில்லை. வெய்யிலைக் கண்டு உருகும் ஸ்நோவைப் போல் பிறரது க~;ட துன்பத்தினை க்; கண்டதும் நாதனின் மனமும்உருகிவிடும்.
அவன் கனடாவுக்கு வந்து ஐந்து வருடங்களாகி விட்டன.அன்று முதல் தொடர்ந்து அதே பக்டரியில்தொடர்ந்து வேலை செய்து வருகிறான். உழைத்த பணம்யாவற்றையும் அவன் தனக்கெனச் சேர்த்து வைத்திருந்தால இன்று அவனொரு லட்சாதிபதியாக வேலை செய்யாது சும்மா இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க லாம். தங்கள் பிள்ளைகளையும் கனடாவுக்கு அழைக்க உதவி செய்யுமாறு அவனது அக்காமார் அடிக்கடி வற்புறுத்திக் கொண் டிருந்ததினால் ஏஜென்ஸிக் காரர்களுக்கு பதினையாயிரம், இரு பதினாயிரம் டொர்ககள் வீதம் கொடுத்து நான்கு மருமக்களை கனடாவுக்கு வரவழைத்தான். அவர்களுக்கு தனது பக்டரியில் வேலையும் பெற்றுக் கொடுத்தான்.ஆனால் தமக்காக நாதன் செலலவு செய்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாகவேனும் திரு ப்பிக் கொடுக்க வேண்டுமென அவர்கள் நினைக்கக் கூடவில் லை. நாதனும் அதனைக் கேட்காமல் விட்டுவிட்டான். தனது சொந்த மச்சாளான சறோவையே திருமணம் செய்ய விரும்பி இருந்தான் நாதன். இருவரினதும் பெற்றோர்களும் அதற்கு ஆட் சேபம் தெரிவிக்கவில்லை. புதுவருடம் பொங்கல் தீபாவளி வரும் போது உடுப்புகள் வாங்குமாறு சறோவுக்கு பணம் அனுப்பி வந்தான்.சறோவின் சிறியபோட்டோ ஒன்றினை பிறேம் பண்ணி தனது கட்டிலுக்கு அருகே வைத்திருந்தான். படுக்கைக்குப் போகும் போது அதனை எடுத்து ஒருமுறை முத்தம் கொடுத்து விட்டு அதனைப் பார்த்தக்கொண்டே தூங்கிவிடுவன்.சிலசமயம் நித்திரையிலும் சறோ சறோ எனப் புலம் புவான்.அதனைக் கேட் டுக் கொண்டு கிடந்து காலையில் எழுந்ததும் அவனைக் கிண்ட ல் செய்வான் அழகன்.சறோவையும் உடனடியாக ஏஜன்ஸிக்கா ரர்களின் மூலம் கனடாவுக்கு வரவழைக்க வேண்டுமென அவனு க்குக்கொள்ளை ஆசை. ஆனால் தான் திருமணம் செய்வதற்கு முன்னர் தனது இரு அக்காமாருக்கும் திருமணம்செய்து கொடுக் கவேண்டும் என்பதனால் தனது ஆசையை கட்டுப்படுத்திக் கொ ண்டான்.
அக்காமார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஐந்து வரு டகாலம் சென்றது. இனி சறோவை அழைத்து திருமணம் செய்து கொள்ள வேண்டுமென ஆவலோடிருந்தான். ஆனால் சில ஏஜன் ஸிமார் அழகிய பெட்டைகளைக் கூட்டிக்கொண்டு வரும்போது இடையில் ஜப்பானில் ஹோட்டலில் தங்கவைத்து மிரட்டி அவர்க ளது கற்பைச் சூறையாடி விடுவது பற்றியும் அவன் கேள்விப்பட் டிருந்தான். அதனால் நம்பிக்கைகயாhன ஏஜன்ஸிக்காரர் கிடைக் கும் வரை விசாரித்துக் கொண்டே இருந்தான்.இறுதியில் பதினை யாயிரம் டொலர்கொடுத்து சறோவை கனடாவுக்கு வரவழைத்து திருமணம் செய்து கொண்டதில் அவனுக்கு அளவு கடந்த சந் தோ~ம். கலியாணம் என்பது கரும்பை அடிப்பாகத்திலிருந்து சுவைப்பது போன்றதெனக் கூறியதற் கொப்ப அவனுக்கு எல்லா மே தித்திப்பாக இருந்தது. அவனுக்கு மாத்திரமா சறோவுக்கும் தான். ஏங்கித் தவித்த மனங்கள் இன்று தூங்கவும் விரும்பாது இரண்டறக் கூடி இன்பம் துய்த்து மகிழ்ந்தன. குடும்பம் என்பது ஒரு கூட்டுமுயற்சி அல்லவா. “ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்”என்ற வள்ளுவர் வாக்கினை அவர்கள் அர்த்த பு~;டியுடன் அனுபவித்தனர்.
பெட்டைகளைப் பிடிப்பதற்கு கொஞ்சமாவது அழகான மூஞ்சி வேணுமென்று முன்னர் நாதனைக் கிண்டல் செய்த அழகன் இப்போ தனிமரமாகி வேறொரு நண்பரின் அப்பாட்மென்டில் குடிபுகுந்தான்.தானும் விரைவில் ஒருத்தியை கட்டிவிட வேண் டுமென அவதிப்பட்டான். தற்செயலாக ஒருநாள் பஸ்ஸினுள் சந்தித்த ஒரு தமிழ்பெட்டையுடன் கதைத்து தன்னை அறிமுகம் செய்துகொhண்டான். அன்றிலிருந்து அவன் தினமும் அவள் பின்னாலேயே திரிந்து ஒருவாறு அவளையே திருமணம் செய்து கொண்டான். அழகனும் நாதனும் அடிக்கடி போணில் கதைத்துக் கொள்வார்கள். வார இறுதிநாட்களில் மனைவிமார்களுடன் வீடு களுக்கு மாறிமாறி விசிற் பண்ணி பழகி வந்தார்கள். ஒரு வீக் என்டில் தனதுமனைவியுடன் நாதனின் வீட்டிற்கு வந்திருந்த அழ கன் “எங்களிடம் பத்தாயிரம் டொலர் இருக்கிறது. அதை டவுண் பேமென்ராகப் போட்டு ஒரு வீடு வாங்கலாம் என்று நினைக்கி றோம். நாங்க இரண்டு பேரும் உழகை;கிற படியால் கெதியில மோட்கேஜ் கடனைக் கட்டி முடித்து விடலாம்.அப்பாட்மென்றுக்கு வீணாக வாடகை கட்டிக்கொண்டு இருக்கிறதிலும் பார்க்க வீட் டை வாங்குவது நல்லது தானே” என்றான். ஓம் அது நல்ல யோசனை தான். மோட்கேஜ் விசயமாக வேங்கில கதைச்சனீங் களா”என்றான் நாதன்.‘எல்லாம் கதைச்சு ஒழுங்கு பண்ணிப் போட்டன்.ஆனால் லோண் எடுக்கிறதுக்கு கோ- சைனர் ஒராள் கையெழுத்து போட வேணுமென்று சொல்லுறாங்கள். அதைப் பற்றி உம்மோட கதைச்சுப் பார்ப்பமென்று தான் வந்தனான்” என்றான் அழகன். யாராவது உதவி கேட்டால் இல்லை என்று சொல்வதற்கு நாதனுக்கு மனம் வராது என்பது அழகனுக்கு நன்றாகத் தெரியும். இழகிய மனசுகொண்ட நாதன் ஏற்கனவே கனபேருக்கு உதவி செய்ததும் அவனுக்குத் தெரியும்.ஆனால் எவருமே நாதனை ஏமாற்றாது வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.
“கோ-சைன் பண்ணினால் நீங்கள் மோட்கேஜ் கட்டத்தவறும்
போது அவங்கள் எங்களைப் பிடிப்பாங்கள். நீங்கள் கட்டாமல்
விடமாட்டீர்கள் தானே. சரி நானும் சறோவும் சைன் பண்ணித்
தாறோம்” என்றான் நாதன்.அவர்கள் சைன் பண்ணியதும் அழ
கன் வீடொன்றை தனது பெயரிலும் மனைவியின் பெயரிலும்
எழுதி வாங்கிக் கொண்டான்.
காலப் போக்கில் அழகனின் குணமும் நடைமுறைகளும் மனை
விக்குப் பிடிக்காததினால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபா
டுகளும் வாக்குவாதங்களும் ஏற்பட்டன. ஆத்திரத்தைக் கட்டுப்ப டுத்த முடியாமல் அவன் மனைவியை அடித்தும் துன்புறுத்தினா ன். தொல்லை பொறுக்க முடியாமல் மனைவி பொலிஸில் புகார் செய்தாள். அவனைக் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற பொலிஸார் அவனை விசாரணைக்கு உட்படுத் தி இனி மேல் அந்த வீட்டுக்குச் செல்லாது வேறிடத்தில் இருக் குமாறும், மனைவிக்கு அடிக்கவே கூடாதெனவும் எச்சரித்து விடு தலை செய்தார்கள். அன்றிலிருந்து அவர்களது வாழ்க்கை திசை மாறியது. “இனி அவளை அடித்துத் துன்புறுத்தமாட்டன். எப்படியும் எனது
மனைவியுடன் சமாதனம் பேசி சேர்த்து வை” என நாதனிடம் கெஞ்சினான் அழகன். இவனோடு யார்தான் ஒன்றாக இருப்பார் கள் என மனதுக்குள் எண்ணிக் கொண்ட நாதன் “சரி எதுக்கும்
நான் அவவுடன் பேசிப்பார்க்கிறேன்” என்றான்.
நாதன் சறோவுடன் அவளது வீட்டுக்குச் சென்று மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான்.“என்ன தங்கச்சி குடும்பமென்றால் ஆயி
ரம் பிரச்சினைகள் இருக்கத் தான் செய்யும். அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு போறது தான் புத்திசாலித்தனம். சேர்ந்து வாழ வேண்டிய நீங்கள் இளம் வயதில் இப்படி பிரிஞ்சிருக்கிறது
உங்கள் இரண்டு பேருக்குமே அவமானமல்லவா? அவர் தான் செய்தது பிழையென்று உணர்ந்து இனிமேல் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லுகிறார். ஆனபடியால்
நீங்கள் இரண்டு பேரும் ஒற்றுமையாகி வாழுறதுதான் நல்லது. நீங்கள் இரண்டு பேருமாக பொலிஸ் நிலையத்துக்குப் போய் இனிமேல் நாங்கள் ஒற்றுமையாக வாழுவோம் என்று சொன் னால் அவர்கள் ஒத்துக் கொள்வார்கள்.உம்முடைய யோசனை என்ன? என்றான் நாதன்.சறோவும் கணவனின் ஆலோசனைக்கு ஒத்தூதினாள்.
அண்ணே நீங்கள் சொல்லுவது நியாயம் தான். அதை நான் மறுக்கவில்லை. நீங்களும் பல வருசங்கள் அவரோடு றூம் மேற்றாக இருந்தபடியால் அவரது குணங்களைப் பற்றி என் னைவிட உங்களுக்கு கூடுதலாகத் தெரியும். நானும் என்ன அவரைவிட்டுப் பிரிஞ்சிருக்க வேண்டுமென்றா விரும்பினனான். அல்லது சும்மா வீட்டுக்க குந்தியிருந்து அவற்ற உழைப்பிலை
யா சாப்பிட்டுக் கொண்டிருந்தனான். நானும் விடிய வெள்ளன எழும்பி இந்த வின்ரர் குளிரை எல்லாம் பொருட்படுத்தாமல் வேலைக்குப் போய் உழைக்கிறன்.அவர் கதைக்கிற கதையே விசர்க்கதைகள். “நான் வேலை முடிஞ்சு சப்வேயில வரேக்க ஒரு பொம்பிளை என்னையே பார்த்துக் கொண்டிருந்தா. பிறகு நான் இறங்கின ஸ்டேசனில தான் அவவும் இறங்கினா. இறங் கி எனக்குக்கிட்ட வந்து யூ ஆர் வெரி ஹான்ட்சம். ஆ யூ சிங் கிள்?” எனக் கேட்டதாகச் சொன்னார்.
முதல் தரம் சொல்லேக்க இஞ்சத்த பொம்பிளையள் அப்படிப் பட்ட ஆக்கள் தானே ஒருவேளை உண்மையாக இருக்கலா மென்று நானும் நம்பீற்றன். மற்றொரு நாள் ஒரு வெள்ளைக் காரப் பெட்டை தன்னைப் பார்த்து,யுவர் ஐஸ் ஆர் பியூட்டிபுள் என்று சொன்னதாகச் சொன்னார்.இப்படியே ஏதாவது அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.இந்த கனடாவில தான் ஒருவர் தான் வடிவான ஆம்பிளை என்ற நினைப்பு அவருக்கு. என்னைப் பிடிக்காவிட்டால் அல்லது நான் அழகில்லை என்று கண்டால் என்னை விட்டுப்போட்டு போய் வடிவான வெள்ளை க்காரப் பெட்டையைக் கட்டிக் கொள்ளலாம் தானே. அதை விட்டுப்போட்டு ஏன் இந்த விசர்க்கதைகள்? ஏன்ன செய்யிறது வீட்டையும் வாங்கிப் போட்டம் சமாளித்துக் கொண்டு ஒற்றுமை யாக இருப்பமென்று பார்த்தால் அவர் என்னை ஒரு விசரி என்று நினைச்சு அடிச்சுத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார். எத்தனை நாள் நான் அடியையும் வாங்கிக் கொண்டு உங்களுக்குக் கூட ச் சொல்லாமல் பொறுத்துக் கொண்டிருந்தன்.கடைசியாக வாழ் க்கையே வேணாமென்ற நிலையில தான் பொலிஸ_க்கு அறிவி ச்சனான். அவரைத் திருத்துவது என்பது நாய் வாலை நிதிர்த்த முயன்ற கதை தான். தயவு செய்து நீங்க குறை நினைக்க வேணாம் அண்ணே. இனிமேலும் அவருடன் கூடி வாழ முடி யாதென்று நான் முடிவு பண்ணி விட்டேன்” என்றாள்.
கனடாவில் தான் ஒருவர்தான் அழகான ஆம்பிளை என்ற நினை ப்பு அவருக்கு என்று அவள் சொன்னதும் வாய்pட்டுப் பல மாகச் சிரிக்கவேண்டும் போலிருந்தது நாதனுக்கு. இருந்தாலும் அவனு க்காக சமாதானம் பேசப்போயிருக்கும் வேளையில் அவனைத் தானே கேவலமாக காட்டிக் கொள்ளக் கூடாது என்பதனால் க~;டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான். எதுக்கும் இன்னு மொருமுறை யோசித்து நல்ல முடிவு எடும். நான் பிறகு உம் முடன் கதைக்கிறேன் எனச் சொல்லி அழகனின் மனைவியிடமிரு ந்து விடை பெற்றான் நாதன்.
அழகன் நாதனுக்குப் போண் பண்ணி ஆவலோடு என்ன நடந்த தெனக்கேட்டான்.நடந்தவற்றை அப்படியே ஒப்புவித்தான் நாதன். அவளுக்கு இப்படித்தான் வாய்க்கொழுப்பும் திமிரும். வுhற ஆத் திரத்துக்கு அவளை ஒரேயடியாய் அடித்துக் கொல்ல வேணும் போலிருக்கிறது என்றான் அழகன். இவர்கள் இருவருக்குமிடை யில் ஆப்பிழுத்த குரங்காக நான் மாட்டுப்பட்டுப் போனேனே என்றெண்ணினான் நாதன்.
வீட்டு மோட்கேஜைக் கட்ட முடியாமலும் வீட்டை விற்கவும் முடி யாமலும் திண்டாடினான் அழகன். வீட்டை விற்பதற்கு மனைவி யும் கையெழுத்திட வேண்டும். தனக்குப் பத்தாயிரம் டொலர் தந்தால் தான் கையெழுத்துப் போடுவேன் என அடித்துக் கூறி விட்டாள் மனைவி.
ஒருமாதத்தின் பின் வங்கியிலிருந்து நாதனுக்கு கடிதமொன்று வந்தது.அழகன் மோட்கேஜ் கட்டத்தவறி விட்டதாகவும் அதனால் கோ-சைன் பண்ணிய நீங்கள் அதனைக் கட்டவேண்டும். இல்லா விடில் உங்கள் சம்பளத்திலிருந்து மாதாமாதம் ஆயிரம் டொலர் நேரடியாகக் கழிக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை வாசித்த நாதனுக்கு தலை சுற்றியது. உதவி செய்யப் போய் வீணாக வம்பில் மாட்டிக் கொண்டேனே என்று அலுத்துக் கொண்டான் நாதன். அழகனுடன் அதைப்பற்றிக் கதைப்பதற்கு டெலிபோண் எடுத்தாலும் அவன் இவனது நம்ப ரைப் பார்த்து விட்டு போணையே எடுக்காமல் விட்டுவிடுவான். சேய்வதறியாது மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்த நாதன் ஒரு தமிழ்ச் சட்ட த்தரணியிடம் போய் ஆலோசனை கேட்டான்.
நீர் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.அவரால் மோட் கேஜ் கட்ட முடியாமல் இருக்கிறது. எனக்கும் வழியில்லை அத னால் வீட்டை விற்றுவிடுங்கள் என்று ஒரு கடிதம் எழுதி அனுப் பினால் அவர்கள் உம்மைக் க~;டப்படுத்த மாட்டார்கள். ஆனால் கடிதம் எழுதுவதற்கு ஐநூறு டொலர் செலவாகும் அதனை நீர் தரவேண்டும் என்றார் சட்டத்தரணி. தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனால் போதும் எண்றெண்ணி மகிழ்ந்த நாதன் சரியே அப்படியே செய்வோம் என்றான்.
மனமிரங்கி அடுத்தவனுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத் தில் மாட்டிக் கொள்வதைவிட நாமுண்டு நம்ம பாடுண்டென ஒதுங்கி இருப்பது தான் புத்திசாலித் தனமென்று முடிவு செய் தான் நாதன். இளகிப் போயிருந்த தன் இதயம் இறுக்கம் அடைவதையும் அவன் உணர்ந்து கொண்டான்.
அழகன் வேறு பெட்டைகளைத் தேடி அலைந்து கொண்டிருந் தான். பெட்டைகளைப் பிடிப்பதற்கு அழகான மூஞ்சி மாத்திரம் இருந்தால் போதுமா?
மின்னூல் வடிவம் : தி. கோபிநாத் (2008)
அண்மைய மாற்றம் : தி. கோபிநாத் (06.02.2008)
கருத்துகள்
கருத்துரையிடுக