ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும்
வரலாறு
Back
ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும்
வி. சிவசாமி
ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும்
வி. சிவசாமி
இதனை எழுதுவதற்கான பல நூல்களையும் கட்டுரைகளையும், பேராதனைவளாக நூலகத்திலும், யாழ்ப்பாணவளாக நூலகத்திலும் பயன்படுத்தியுள்ளேன். குறிப்பாக பேராதனைவளாக நூலகத்தினைச் சேர்ந்த நண்பர் திரு. எம். துரைசுவாமி அவர்கள் இவ்விடயம் பற்றிய தகவல் தேட்டத்திற்கு அரும்பெரும் உதவி செய்துள்ளார்.
இந்நூலைப் பிரசுரித்தற்கான தாள்களைக் குறைவின்றிப் பெறுவதற்கு அனுமதி வழங்கிய கிழக்கு இலங்கைக் கடதாசிக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. கே. சி. தங்கராஜா அவர்களும். இதனை அச்சிட்டு உதவிய கலைவாணி அச்சகத்தாரும், குறிப்பாக முன்னின்று முகமலர்ச்சியுடன் உதவிய நண்பர் திரு. க. முருகேசு அவர்களும் நினைவுக்குரியவர்கள்.
நூலாக்கப் பணியின் போது ஊக்கியும், பிரசுரிக்கும்போது இதன் அமைப்புப் பற்றிய ஆலோசனைகளைக் கூறியுமுதவிய நண்பர் திரு. ஆ. சிவநேசச் செல்வன் அவர்களுக்கும், பல வழிகளில் ஊக்கி உதவி செய்த ஏனைய நண்பர் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி உரியது.
காய்தலுவத்தலகற்றி யொருபொருட்கண்
ஆய்தலறிவுடையார்க் கண்ணதே
யாழ்ப்பாண வளாகம்
திருநெல்வேலி வி. சிவசாமி
வைகாசித் திங்கள், 1976.
பொருளடக்கம்
பக்கம்
ஆரியர் ... 1
ஆதி இருப்பிடம் ... 3
இந்தோ – ஆரிய இந்தோ - இரானியத் தொடர்புகள் ... 10
இந்தோ ஐரோப்பிய மொழிகள் ... 11
ஆரியரின் ஆதி இருப்பிடம் ஆசியாவிலா ஐரோப்பாவிலா? ... 13
ஆரியரின் புலப் பெயர்ச்சிகளும் காலமும் ... 18
இந்தியாவில் ஆரியர் ... 29
வேத இலக்கியம் ... 30
வேதங்களின் காலமும் வரலாற்றியல்பும் ... 34
வேத காலத்தில் ஆரியர் வாழ்ந்த இடங்களும் ஜனக் குழுக்களும் ... 37
வேத கால அரசியல் நிலை ... 44
வேதகாலச் சமயதத்துவநிலை ... 52
வேதகாலச் சமூகநிலை ... 68
வேதகாலப் பொருளாதாரநிலை ... 82
பிற்காலம் ... 88
அடிக் குறிப்புகள் ... 95
உசாத்துணை நூல்கள் ... 107
அட்டவணை ... 113
பிழைதிருத்தம் ... 116
ஆரியர்
இந்தியாவிற்குக் குறிப்பிடத்தக்க தொண்டு செய்தோரில் ஆரியர் முக்கியமான இடமொன்றினைப்பெறுகின்றனர். ஆரியர் என்ற பதம் வரையறுக்கப்பட்ட ஓரினத்தையன்றிக் குறிப்பிட்ட மொழி. கலாச்சாரத்தினைக் கொண்ட மக்களையே குறிப்பதாகும். ஆனால் அறிஞர்களில் ஒருசாரார் இப்பதம் இனத்தினைக் குறிக்கும் எனவும் கொள்வர். எவ்வாறாயினும் பிறமக்கள் பலரிலும் பார்க்க இவர்களின் செல்வாக்கு இந்தியாவில் மேம்பட்டுக் காணப்படுகின்றது. இவர்களும் திராவிடரும், ஆதிஒஸ்ரலோயிட் போன்ற பிறரும் ஒன்றுபட்டு உருவாக்கியதே புகழ்பெற்ற இந்தியப் பண்பாடாகும். இவ் ஆரியர் எங்கிருந்து வந்தாலும் அவர்களின் வீரம், துணிச்சல், நாகரிக வளர்ச்சி ஆகியன குறிப்பிடத்தக்கன. இந்தியாவிற்கும் பிற இடங்களுக்குமிவர்கள் சென்று அவ்வவ் இடங்களிலே நிலவிய மேம்பட்ட மேம்படாத கலாச்சாரங்களைச் சிலவேளைகளில் அழித்துத் தமது பண்பாட்டினைத் திணித்தனர்@ சில வேளைகளிலே தம்மிலும் மேம்பட்ட பண்பாடுள்ள மக்களை வென்றபோது அம் மக்கள் கலாச்சாரத்தினைத் தாம் ஏற்றுக்கொள்ளப் பின்னின்றிலர். தேவையான தவிர்க்கமுடியாத வேளைகளிலே ஒத்த மேவல் (ஊழஅpசழஅளைந) செய்தும் வந்தனர். தம்முடன் உறவாடிய, தொடர்பு கொண்ட பிறமக்களின் பண்பாடுகள் வளர்ச்சியடையும் பல வேளைகளில் பண்பாடுகள் வளர்ச்சியடையவும் பல வேளைகளில் உதவி அளித்தும் வந்தனர். இந்தியாவில் ஆரிய மொழியின் முக்கியத்துவத்தினை முதுபெரும் மொழிநூற் பேராசிரியர் சுநீதிகுமார் சட்டர்ஜி பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இந்தியாவில் எம்முன்னோர் விட்டுச் சென்றுள்ள மிகப்பெரிய செல்வங்களில் எமது ஆரிய மொழியும் ஒன்றாகும். மேலான ஒழுங்கு முறைகளுடன், நெக்கிறிற்றோ, ஆத ஒஸ்ரலோயிட் (திராவிட முதலிய) பலவகையான மக்கட் கூட்டங்களை ஒருங்கு இணைத்தவர்கள் ஆரியரே. இவ்வாறு ஏற்பட்ட ஒருமைப்பாட்டிலே சில இடங்களில் இதன் கூறுகள் இரண்டறக் கலந்து விட்டன. சில இடங்களிலே, மேலெழுந்தவாரியாகவே ஒன்றுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய மக்களின் வரலாறு, சமயம், தத்துவம் - இந்தியாவின் தனிச்சிறப்பான பண்பாடு ஆதியன உருவாகுவதற்கு மிக முக்கியமான காரணியொன்றாக ஆரியமொழி இலங்கிற்று. ஒஸ்ரிக் மொழிபேசியமக்களும், திராவிடரும் அமைத்த அத்திவாரத்தின் மேலேதான் ஆரியர் கட்டத் தொடங்கிய கூட்டான பண்பாடு இந்திய மண்ணிலே மலர்ந்தது. இப்பண்பாட்டினை வெளிப்படுத்தும் வாயிலாகவும், இதன்சின்னமாகவும் இவ் ஆரியமொழி விளங்கிற்று. வடமொழி, பாளி. வடமேற்குப் பிராகிருதம், அர்த்தமாகதி, அபப்பிரம்சம் முதலியனவாகவும், பிற்காலத்திலே ஹிந்தி, குஜராத்;தி, மராத்தி, ஓரிய, வங்காளி, நேபாளி முதலிய பல மொழிகளாகவும் இவ் ஆரிய மொழி கிளைத்து வளர்ந்தது. இவ்வாறாக இம்மொழி வௌ;வேறு காலங்களிலே வௌ;வேறு பிராந்தியங்களில் இந்திய கலாச்சாரத்துடன் அழிக்க முடியாத வகையில் ஒருங்கு இணைந்து விட்டது.
‘ஆரிய’ என்ற பதம் உயர்குடிச் சேர்ந்த, மிகநேர்மையுள்ள, சிறப்பு வாய்ந்த, பெருந்தன்மையுடைய, மிக மரியாதையுள்ள முதலிய பல கருத்துக்கள் கொண்டதாகும்.
ஆரியர் “நோர்டிக்” எனவும் அழைக்கப்படுவர். தொடக்கத்தில் இவர்கள் உயரமானவர்கள்@ வெண்ணிறமுடையவர்கள்@ மஞ்சள் அல்லது பொன்நிறக் கேசம் உடையவர்கள்@ நீலக்கண்கொண்டிருந்தனர். இத்தகையோராகவே வேத இலக்கியத்தில் இவர்கள் ஒரளவு காட்சியளிக்கின்றனர். ஆனால் காலப்போக்கிலே புதிய இருப்பிடத்தின் சீதோஷ்ண வேறுபாடுபிறமக்களுடன் கொண்டிருந்த தொடர்பு முதலியனவற்றால் நிறம் போன்றவற்றிலே மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் மேற்குறிப்பிட்ட இயல்பு கொண்டோரை வட இந்தியாவின் சில பகுதிகளிலும் ‘மஹாராஷ்டிரம்’ போன்ற இடங்களிலும் காணலாம்.
ஆதி இருப்பிடம்
ஆரியரின் ஆதி இருப்பிடம் எது என்பது பற்றி முற்றிலும் முரண்பட்ட கருத்துக்களும் அறிஞரிடையிலே நிலவுகின்றன. இவர்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் என ஒரு சாராரும், வெளியேயிருந்து வந்தவர்கள் என பிறிதொருசாராரும் கூறுகின்றனர். இவ்விருவகையான கருத்துடையோரிடத்தும் தனிப்பட்ட வகையிலே கருத்து வேறுபாடுகள் உள. இவற்றினைத் தொகுத்துக்குறிப்பிடலாம்.
ஆரியரின் ஆதி இருப்பிடம் இந்தியாவெனக் கொள்ளுவோரிலே திரு. எம். ஜா. பிரஹமர்ஷி தேசம் என்பர். கலாநிதி டி. எஸ். திரிவேத முல்தானிலுள்ள தேவிகா ஆற்றுப் பிரதேசம் என்பர்@ திரு. எஸ். டி. கல்ல காஷ்மீர் ஹிமாலயப் பிரதேசம் என்பர். திரு. ஏ. சி. தாஸ். திரு. கே. எம். முன்ஷி சப்த சிந்து அல்லது பஞ்சாப் என்பர். இவ்வாறு கொள்ளுவோரிற் சிலர் ஆரியர் இந்தியாவிலிருந்து மேற்கேயுள்ள பிற இடங்களுக்கும் சென்றனர் எனக்கூறுவர்.
இவ் அறிஞர்களின் கருத்துப்படி, ஆரியர் வேற்று நாட்டவர் என்பதற்கோ, புலம் பெயர்ந்ததற்கோ தக்க சான்றுகளில. இருக்குவேதகால ஆரியர் சப்த சிந்துப் பகுதியினையே தெய்வத்தால் ஆக்கப்பட்ட தேசமாகவும் தாயகமாகவும் கொண்டனர். புலம்பெயர்ந்து செல்வோர் தமது தாயகத்தினைப்பல நூற்றாண்டுகளின் பின்னரும் நினைவு கூருவர். ஆனால், ஆரியர் இவ்வாறு செய்திலர். ஆதி வடமொழிக்கும், ஆதி இரானியமொழிக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கு மிடையிற் காணப்படும் ஒற்றுமையியல்புகள் புலப்பெயர்ச்சிக் கான சான்றுகளல்ல. மேலும் வேத இலக்கியம் மிகப் பழமையானது. வெளியிலிருந்து இவர்கள் வந்தவரெனின் ஏன் வரும் வழியில் இலக்கியம் இயற்றிலர்? இந்தியாவிற்கு வந்த பின்னரே இவர்கள் பண்பாட்டு மேன்மையடைந்தனர் எனக் கூறமுடியாது. இந்தியாவிலிருந்தே இவர்கள் வெளியே சென்றிருப்பர். வேள்விச் சடங்குகள் இருக்குவேதம் தொகுக்கப்படுமுன்னரே இந்தியாவிலேற்பட்டு விட்டன.
ஆனால் மேற்குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. முதலாவதாக, இந்தியாவே அவர்களின் ஆதி இருப்பிடமாயின், அது முழுவதையும் ஆரியமயமாக்கிய பின்னரே வடமேற்கு எல்லையினைக் கடந்து இரானிற்கும், பிறமேற்கு ஆசியா நாடுகள், ஐரோப்பா ஆகிய இடங்களிற்கும் சென்றிருப்பர். வரலாற்றுக்காலத்தில் இத்தகைய மக்கட்புலப் பெயர்ச்சி வடமேற்கு எல்லைக்கு ஊடாக நடைபெற்றிலது. இந்தியாவின் தென்பகுதியில் திராவிட மொழிகள் பரந்து நிலவுவதே ஆரியர் வெளியே இருந்து வந்தமைக்குத் தக்கசான்று எனலாம். மேலும் வேத இலக்கியம் முழுவதையும் கூர்ந்து கவனிக்கும்போது ஆரியர் படிப்படியாக வடமேற்கு இந்தியாவிலிருந்து கங்கைச் சமவெளிக்கும் பின் தக்கணம், தென் இந்தியா ஆகியனவற்றிற்கும் சென்றமையினை அவதானிக்கலாம். அடுத்தபடியாக, வடமொழியுடன் தொடர்புள்ள பிறமொழிகள் ஐரோப்பாவிலேயே தொடர்புள்ள பிறமொழிகள் ஐரோப்பாவிலேயே நெருங்கிக் காணப்படுகின்றன. ஆனால், ஆசியாவிலே வடமொழியுடன் தொடர்புள்ள மொழிகள் சிதறிச் சில இடங்களிலேயே நிலவுகின்றன. மேலும் இந்தியாவின் காலத்தால் முந்திய சிந்துசமவெளி நாகரிகம் (ஹரப்பாகலாச்சாரம்) ஆரியச் சார்பற்றதெனப் பல அறிஞர் கருதுகின்றனர்.
எனவே, ஆரியரின் ஆதி இருப்பிடம் இந்தியாவிற்கு வெளியே உளது எனலாம். இதனை அறிய இருக்குவேதம், ஆதிக்கிரேக்கர், ஆதி இரானியர் போன்ற பிற ஆரியரின் புராதன நூல்கள், தொல்பொருட்கள், ஒப்பியல்மொழிநூல், மானிடவியல்நூல் போன்றவற்றினையே துணையாகக் கொள்ள வேண்டியுளது. இவற்றினைத் துணைகொண்டு மிக முற்பட்டகால ஆரியரின் நாகரிகம், நடமாட்டங்கள், புலப்பெயர்ச்சி ஆகியவற்றினை ஒரளவு ஊகிக்கலாம்.
ஐரோப்பாவின் புராதனமொழிகளான கிரேக்கம், லத்தீன் போன்றவற்றினையும், வடமொழியினையும் பயின்ற மேனாட்டறிஞர் பலர் இவற்றிடையே நிலவிய ஒற்றுமையியல்புகளைக் கண்டு வியப்புற்றனர். இவை ஒரே மூலத்திலிருந்து முகிழ்த்திருக்கலாம் என முடிவு கட்டினர். எடுத்துக் காட்டாக, “வட மொழியின் தொன்மை எவ்வாறாயினும், அதுவியக்கத்தக்க அமைப்புக் கொண்டது@ கிரேக்கத்திலும் பார்க்க முழுமையானது@ லத்தீனிலும் பார்க்க வளமுள்ளது. இவ்விருமொழிகளிலும் பார்க்க மிக நேர்த்தியானது@ அப்படியாயினும் வினையடிச் சொற்கள், இலக்கண வடிவங்கள் ஆகியனவற்றில் இவ்விரண்டினுடன் தற்செயலாக ஏற்பட்டிருக்க முடியாத நெருங்கிய தொடர்புள்ளதாய்க் காணப்படுகின்றது. இத்தொடர்பு மிகவலுவாகக் காணப்படுதலின், இவற்றை ஆயும் மொழிநூலறிஞன் எவனும் இவை அனைத்தும் ஒரு பொது மூலத்திலிருந்து தோன்றியவை என்பதை நம்பாதுவிடமாட்டான். கோதிக். கெல்ரிக் போன்றவையும் வடமொழி மூலத்தைக் கொண்டவையே. பழையபாரசீக மொழியுமிதே குடும்பத்தைச் சேர்ந்ததே” என்றகருத்தினைச் சேர்வில்லியம் ஜோன்ஸ் என்பவர் 1786-ல் வங்காளத்திலிருந்த வேத்தியல் ஆசியக்கழகத்தில் நிகழ்த்திய புகழ்பெற்ற விரிவுரையிலே தெரிவித்தார். இம்மூலமொழி இந்தோ – ஐரோப்பிய மொழியெனப் பெயரிடப்பட்டது. இதனைப் பேசியமக்கள் இந்தோ ஐரோப்பியர் என அழைக்கப்பட்டனர். இதன் விளைவாக ஒப்பியல் மொழிநூல், மொழியியல் ஆகியவற்றிற்கு வித்திடப்பட்டது. இதன்பின்னர் பேராசிரியர் ம~;முல்லரும் இதே கருத்தினைத் தெரிவித்தார். ஆனால், ஆரிய மொழிகளைப் பேசியோர் ஒரே இனத்தவராய் இருந்திருக்கத் தேவையில்லை. சில அறிஞர் இவர்கள் ஒரேஇனத்தவர் எனவும் கருதுவர். ஆனால் அக்கருத்துச் சரியன்று.
வடமொழிக்கும் பிற ஆரியமொழிகளுக்குமிடையில் உள்ள சொல் ஒற்றுமைகளைக் குறிப்பாக, உறவினர் தெய்வம், மிருகங்கள், எண்கள் முதலியனவற்றைக் குறிக்கும் சொற்களிலே காணலாம். எடுத்துக்காட்டாக. சகோதரனைக் குறிக்கும் வடமொழிச் சொல்லான பிராதர் என்பதையும், அதே கருத்தினைக் கிரேக்க மொழியிற் குறிக்கும் பிராதெர் என்பதையும், லத்தீன் மொழியில் விரதர், கெல்ரிக் மொழியில் பிறதிர், தியூத் தோனியக் சார்பான ஆங்கிலத்தில் பிரதர் என்பனவற்றையும் ஒப்பிடலாம். இதுபோலவே, தாய், தந்தையைக் குறிக்கும் மாதர், பிதர் ஆகிய வடசொற்கள் முறையே மேற்ற, பேற்ற எனக்கிரேக்கத்திலும். மாற்ற, பாற்ற என லத்தீனிலும், மதிர், அதிர் எனக் கெல்ரிக்கிலும், மாடர், பாடர் எனத் தோக்கேரியத்திலும் வழங்குவன. தியூத்தோனியத்திலே வதர் எனும் சொல் தந்தையைக் குறிக்கும். தியூத்தோனியத்தைச் சேர்ந்த ஆங்கிலத்திலே வரும் மதர், வாதர் எனும் சொற்களையும் கவனிக்கலாம். மேலும், தெய்வத்தினைக் குறிக்கும் தேவ என்ற வடசொல், தியுஸ் என லத்தீனிலும், திய எனக் கெல்ரிக்கிலும், திவர் எனத் தியூத்தோனியத்திலும் திவொஸ் என லிதுவானியத்திலும் வழங்கும். இவை போலவே, சகோதரி, குதிரை, ஒன்று. பத்து, நூறு முதலியனவற்றைக் குறிக்கும் பதங்களிலும் ஒற்றுமை யுண்டு.
மேலும் ஆரியரின் தேரைக்குறிக்கும் ரத எனும் வடசொல்லினை இதே கருத்தில் லத்தீன் ரொத, கெல்ரிக்கில் ரொத், புராதன ஜேர்மானியத்திலும் லிதுவானியத்திலும் ரதஸ் என வரும் பதங்களுடன் ஒப்பிடலாம். இப்பதம் போலவே, சக்கரம். அச்சு, சில்லுக்குடம், நகம் முதலியனவற்றைக் குறிக்கும் இந்தோ – ஐரோப்பியப் பதங்களிடையில் ஒற்றுமையுண்டு.
இப்பெயர்ப்பட்ட பொதுச் சொற்கள், ஒப்பியல் மொழியியல், தொல்லியல், மொழியியற் புதைபடிவ ஆய்வியல் முதலியனவற்றின் துணைகொண்டு ஆதி ஆரியரின் நாகரிக நிலைகளை அறிவதற்கு அறிஞர் முயன்று சில முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவற்றின்படி ஆதி ஆரியர் மிக உன்னதமான நாகரிகச் சிறப்புள்ளவராய் இருந்திலர். அவர்கள் வியக்கத்தக்க மொழியொன்றினைப் பேசிவந்தனர். சமூக ரீதியிலவர்கள் தம்மை நன்கு ஒழுங்குபடுத்தி யிருந்தனர். மிகமோசமான சூழ்நிலையிற் கூட. அவர்களின் ஜனக்குழு ஒற்றுமை குலைய வில்லை. பிற்காலத்தில் இவர்களுடன் தொடர்புற்ற பிறமக்கள் இவ் ஒற்றுமையினைக் கண்டு வியந்தனர். அவர்களின் சமூகம் குடும்பத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இக் குடும்பத்திலே தந்தை வழியுரிமையும். ஏகபத்தினி விரதமும் நிலவின. தந்தைவழியு ரிமையுடைய குடும்பமே இந்தியாவிற்கு வந்த ஆரியர் மத்தியிலே கோத்திரம் அல்லது குலம் என அழைக்கப்பட்டது. பொதுவாகத் தலைவனைக் கொண்ட இத்தகைய குலங்களே சமூகத்திலிருந்தன.
இந்தோ ஐரோப்பியர் சிறந்த கற்பனையுடையவர்கள். தாங்கள் சென்ற இடங்களிற் கேற்றவாறு தம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டனர். இவற்றால் அவர்களைப் பிறர் வெல்லமுடியாதிருந்தனர். ஆண், பெண் ஆகிய இருபாலார் மத்தியிலே நல்லுறவுகள் நிலவின. தாயாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும், மகளாகவும் பெண்ணினை அவர்கள் நன்கு மதித்தனர். பெண்ணின்பாதுகாவலராகவும் விளங்கினர். தாயாகப் பெண் குறிப்பிட்ட குலத்தின் மதிப்புள்ள ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினாள்.
அவர்களின் சமயத்திலே மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் நன்மை சார்பான அம்சங்களே பிரதானமாக வற்புறுத்தப்பட்டன. தெய்வங்கள் மனிதரைப் போலன்றி மேலேயுள்ள உலகத்திலேதான் வாழ்பவர் என அவர்கள் கருதினர். தெய்வங்களை மனித அம்சங்கள் கொண்டவராக அன்றிப் பெரும்பாலும் சக்திகளாகவே அவர்கள் போற்றினர். மனிதப் பண்புகளையும் தெய்வங்களிலேற்றிக்கூறினர். ஆனால் இத்தகைய போக்கு மனித இயல்புள்ள தெய்வங்களை வணங்கிய மக்களின் தொடர்பு கொண்ட பின்னரே, அவர்கள் மத்தியிலேற்பட்டது. அவர்கள் வணங்கிய தெய்வங்களில் எடுத்துக்காட்டாக, வானமாகிய தந்தை, மாதாவாகிய பூமி, சூரியன், உஷா, காற்றுத் தெய்வம் முதலியோரைக் குறிப்பிடலாம். ஆதி எகிப்தியர், சுமேரியர் வணங்கிய தெய்வங்களைப்போல இவர்கள் வணங்கிலர். மேலும் ஆதி ஆரியரின் அன்றாட வாழ்விலே தீ பெரியதோரிடத்தைப் பெற்றிருந்தது. குளிர்வலய மக்களுக்குத் தீயின் இன்றியமையாமை வெள்ளிடைமலை. தீ வணக்கமும் பிரதான இடம் பெற்றிருந்தது.
புராதன இந்தோ – ஐரோப்பிய வேர்ச் சொற்கள் அவற்றிலே காலப்போக்கிலேற்பட்ட மாற்றங்கள் முதலியனவற்றினை அடிப்படையாகக் கொண்டு பிரான்டென்ஸ் ரென் என்ற அறிஞர் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதாவது ஆதி ஆரியர் பெரும்பாலும் வரண்டபாறைப் பிரதேசத்தில் வாழ்ந்தனர். அங்கு “வில்லோ”, “ஒக்”, “பேர்ச்” பிசினுள்ள மரம் முதலியன வளர்ந்தன. ஆனால் பெரிய காடுகளில்லை. பழமரங்களுமி;ல்லை. அவர்கள் காட்டுப்பன்றி, ஓநாய். நரி, கரடி, முயல், சுண்டெலி முதலிய காட்டு மிருகங்களையும் பசு, செம்மறியாடு, வெள்ளாடு, குதிரை, நாய், பன்றி முதலிய வீட்டுமிருகங்களையும் அறிந்திருந்தனர். நிலம், நீர் ஆகிய இரண்டிலும் வாழும் மிருகங்களையோ மீனையோ அறிந்திலர். காலம் செல்லத் தொடக்கத்திலிருந்த இடத்தினை விட்டுத் தாழ்ந்த சதுப்பு நிலமுள்ள பிரதேசத்தையடைந்தனர். அவ்விடத்து மேலும்புதிய மிருகங்கள், தாவரங்கள் காணப்பட்டன. யூரல் மலைக்குத் தெற்கேயும் கிழக்கேயுமுள்ள வடக்குக் கேர்க்கிஸ் ஸ்ரெப்பிஸ் (புற்றரைகள்) பகுதியே அவர்களின் புராதன இருப்பிடமென்பது இந்தோ – ஐரோப்பிய மொழியின் மிகப்பழைய நிலைபற்றிய ஆய்வினாற் புலப்படும். அத்துடன் அவர்களின் புதியவிருப்பிடம் கார்ப்பேதியின் தொடக்கம் போல்ரிக் வரையுள்ள சமபூமியே என்பது பிற்பட்ட இந்தோ- ஐரோப்பிய மொழிநிலை பற்றிய ஆய்வினாலறியப்படும்.
இவர்கள் ஒரளவு நாடோடிகளாக மந்தைமேய்த்தும். புராதன விவசாயம் செய்தும் வந்தனர். மந்தைகளே இவர்களின் பெருஞ் செல்வமாகும். இதுபற்றிப் பின்னர் கூறப்படும். இவர்கள் குதிரையினைக் குறிப்பாகப் போரிலே நன்கு பயன்படுத்தினர். இவ்வாறு இந்தோ – ஐரோப்பிய நாகரிக நிலையினைப் பல்வேறு ஆய்வுகளின் மூலம் ஓரளவாவது திரும்பவும் அமைத்துக் குறிப்பிடுவர்.
இவர்களின் ஆதி இருப்பிடம் பற்றித் தொடர்ந்து ஆயுமுன் இந்தியாவிற்கு வந்த ஆரியரின் அயலவராகவும், மிகப்பழைய காலத்திலே சகோதரராகவும் விளங்கிய ஆதி இரானியருக்கும், இந்தோ – ஆரியருக்கும்மிடையிலே காணப்படும் ஒற்றுமையம்சங்களைக் குறிப்பிடலாம்.
இந்தோ – ஆரிய இந்தோ - இரானியத் தொடர்புகள்
இந்தோ – ஆரியரின் ஆதி ஏடு இருக்குவேதம். ஆதி இரானியரின் ஆதி ஏடு அவெஸ்தா. இருக்குவேதம் போரன்றி அவெஸ்தா கி. மு. 7ம் நூற்றாண்டளவிலே தோன்றிய சொறாஸ்ரர் எனும் பெரியாரின் சீர்திருத்தங்களால் தோன்றிய சொறாஸ்ரர் எனும் பெரியாரின் சீர்திருத்தங்களால் ஒரளவு மாற்றம் அடைந்துள்ளது அவ்வாறாயினும் அவெஸ்தாவின் மொழிநடை, யாப்பு, பொருள் ஆகியனவற்றிற்கும் இருக்குவேதத்தின் மொழி நடை, யாப்பு, பொருள் ஆகியனவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது இதனாலே மொழி நூலறிஞர் சிலர் இருக்குவேத மொழியும், பழைய இரானிய மொழியும் ஒருமொழியின் பிரதேச வேறுபாடுகள் என்பர். இருக்குவேத ஆரியரும் ஆதி இரானியரும் தம்மை ‘ஆரிய’, ‘ஐர்ய’ எனஒரு பொதுப் பெயராலழைத்தனர் ஒருவேளை, பொதுவான ஆற்றுப் பெயர்களையும் அறிந்திருந்தனர் போலும், எடுத்துக்காட்டாக இருக்குவேதத்திலே வரும் சரஸ்வதி, ஹரஉவதிஸ் என அவெஸ்தாவிற் குறிப்பிடப்படுகின்றது. இருசாராரும் பெரும்பாலும் பொதுத் தெய்வங்களை வணங்கினர். உதாரணமாக இருக்கு வேத மித்ர, வருண, சோம, அர்யமன், நாசத்ய போன்ற தெய்வங்கள் முறையே மித்ர, அஹ{ரமஸ்த, ஹயோம. அர்யமன், நாசத்ய என அவெஸ்தாவில் அழைக்கப்படுகின்றனர். பல சொற்களிலும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. எனவே “இருக்குவேதமும், அவெஸ்தாவும் ஒரே ஊற்றிலிருந்து பாயுமிரு நதிகள்” என ரொத் எனும் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளமை பொருத்தமானது. இருக்குவேத ஆரியரும், ஆதி இரானியரும் முன்னொரு காலத்தில் ஒரே மக்கட் கூட்டத்தினராய் வாழ்ந்து பின் பிரிந்தனர் போலக்காணப்படுகின்றனர். இவ்வாறு இரு சாராரும் ஒன்றாக வாழ்ந்த காலம் இந்தோ - இரானிய காலமெனவும், (ஒன்றாயிருந்தபோது) இவர்களை இந்தோ - இரானியர் எனவும், அழைக்கலாமென அறிஞர் கருதுவர். ஆரியரின் ஆதியிருப்பிடம் பற்றி ஆயும்போது இந்தோ இரானியகாலம் ஒரு முக்கியமான காலகட்டமெனலாம். இரானில் ஆரியரின் சுவடுகள் உள்ளன. மேற்குறிப்பிட்ட நெருங்கிய கலாச்சார ஒற்றுமை பிற இந்தோ – ஐரோப்பிய மொழிகளுக் கிடையிலே காணப்பட்டிலது.
இந்தோ – ஐரோப்பிய மொழிகள்
நூறு எனும் எண்ணைக் குறிக்கும் பதத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தோ ஐரோப்பிய மொழிகளிலே பெரும்பாலும் ஆசியாவிலுள்ளவை (தோகேரிய மொழி தவிர்த்து) ‘சதம்’ எனவும். அறிஞரால் இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலே முக்கியமாகப் பத்து மொழிகள் உள்ளனவாகப் பேராசிரியர் ரி. பறோ குறிப்பிட்டுள்ளார். அவையாவன@
1. ஆரிய அல்லது இந்தோ - இரானியமொழி: இதிலே, புராதன பாரசீக மொழி இந்தியாவிற்கு வந்த ஆதிஆரியரின் மொழி ஆகியன அடங்குவன. இவற்றுள்ளே காலத்தால் முந்திய இலக்கியம் இந்தியாவிற்கு வந்த ஆரியருடைய இருக்குவேதமாகும். இதுவே, இந்து – ஐரோப்பிய மொழிகளில் எழுந்த காலத்தால் முந்திய மிகப் பழைய நூலாகும். ஆதிப்பாரசீகரின் காலத்தால் முந்திய நூல் அவெஸ்தா.
2. போல்ரிக் - சிலாவேனிய மொழிகள்: முன்னையதிலே லிதுவானியம். லெற்றிஸ், வழக்கற்ற பிரஸ்ஸிய மொழி ஆகியனவும் பின்னையதிலே, ரூசிய, போலிஸ்செக், புல்கேரிய மொழிகளும் பிற சிலவும் அடங்குவன.
3. ஆர்மானிய மொழி: இது கி.பி. 5-ம்நூற்றாண்டு தொடக்கம் அறியப்படுகின்றது.
4. அல்பேனிய மொழி: இது தற்காலத்திலே தான் அறியப்படுகின்றது. இதுவரை குறிப்பிட்ட நான்கு சதம் மொழிகள்.
5. கிரேக்கம்: இதிலே பலகிளை மொழிகள் உள்ளன. கி. மு 800 அளவிலே வாழ்ந்த ஹோமரின் பாடல்களே காலத்தால் முந்திய கிரேக்க இலக்கியமாகும்.
6. லத்தீன்: இதிலிருந்துதான் பிராஞ்சியம், இத்தாலியம், ஸ்பானியம், போர்த்துக்கேயம், ரூமேனியம் முதலியன முகிழ்ந்தன. லத்தீன் இலக்கியம் கி. மு. 200 அளவில் வளரத் தொடங்கியது. இதற்கு முற்பட்ட காலச் சில சாசனங்கள் உள்ளன.
7. கெல்ரிக்: இதிலிருந்து ஐரிஸ், வெல்ஸ் முதலியன வளர்ந்தன. காலத்தால் முந்திய ஐரிஸ் பாடல்கள் கி. பி. 8-ம் நுற்றாண்டளவைச் சேர்ந்தவை.
8. ஜேர்மானியம்: இதிலிருந்து வழக்கிறந்த கோதிக், ஸ்காந்திநேவியன், மேற்கு ஜேர்மனியம் முதலியன தோன்றின. கடைசியாகக் குறிப்பிட்டதிலிருந்து தற்கால ஜேர்மானியம், ஆங்கிலம் முதலியன முகிழ்ந்தன. காலத்தால் முந்திய ஜேர்மானிய நூல் கி.பி. 4ம் நூற்றாண்டில் உல்வில என்பவரால் எழுதப்பட்ட கிறிஸ்தவவேத மொழிபெயர்ப்பாகும்.
9. தோக்கேரியன்: மத்திய ஆசியாவிலே, சீனத் துருக்கிஸ்தானில் கி.பி 6-10 நூற்றாண்டு காலத்திய பௌத்த ஏட்டுச்சுவடிகளில் இது இக்காலத்திலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று வழக்கற்ற n;மாழியாகும்.
10. ஹிற்றைற்: இது மேற்காசியாவிலேயுள்ள போகஸ்கோயில் ஆப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ள சாசனங்களில் இக்காலத்திலே கண்டுபிடிக்கப்பட்டது. இச்சாசனங்களின் காலம் கி. மு. 19-12 நூற்றாண்டு வரையாகும். இவற்றிலுள்ள மொழி வழக்கற்று விட்டது பிற்குறிப்பிட்ட ஆறு மொழிகளும் கென்ரும் வகையின.
வேறு எந்தமொழிக்குடும்பத்திலும் பார்க்க இந்தோ – ஐரோப்பிய மொழிகளே உலகின் பலபாகங்களிலும் நிலவுகின்றன. அத்துடன் உலகிலுள்ள இலக்கியவளமுள்ள மொழிகளிற் பலவும் இம்மொழிக் குடும்பத்தனவே. இதனால், இந்தோ – ஐரோப்பியரின் ஆதி இருப்பிடம் பற்றிப்பல ஆய்வுகள் நடைபெற்றமையினாலே வியப்பில்லை.
ஆரியரின் ஆதி இருப்பிடம் ஆசியாவிலா, ஐரோப்பாவிலா?
ஆராய்ச்சி நன்கு வளர்ச்சியுறாத காலத்திலே, மத்திய ஆசியாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் எனப் பலர் கருதினர். ஆனால் பெரும்பாலான இந்தோ – ஐரோப்பிய மொழிகள் ஐரோப்பாவிலே நிலவுவதால் அங்கேயே அவர்களின் ஆதி இருப்பிடம் இருந்திருக்க வேண்டும் எனவும் பலர் பிற்காலத்திலே கொண்டனர். மத்திய ஆசியாவிற்கு நீண்டகாலத்தின் பின்னரே வந்திருப்பர் எனவாதித்து வரலாயினர். ஐரோப்பாவின் தென்பகுதி, மேற்குப்பகுதி ஆகியனவற்றில் ஆரியரின் நடமாட்டங்கள் காலம் செல்ல ஏற்பட்டன. எனவே ஐரோப்பாவின் மத்திய பகுதி, கிழக்குப்பகுதி ஆகியன அவர்களின் ஆதி இருப்பிடம் எனக்கருதப்பட்டது. ஆகவே மத்திய ஆசியாவின் மேற்குப்பகுதி ஐரோப்பாவின் கிழக்குப் பகுதி ஆகியனவற்றிலேதான் அவர்களின் ஆதி இருப்பிடத்தைத் தேட வேண்டியுள்ளது.
ஆரியரின் ஆதி இருப்பிடம் இந்தியாவிற்கு வெளியே ஆசியாவிலுள்ளதென ஒரு சாராரும், ஐரோப்பாவில் உள்ளதெனப் பிறிதொரு சாராரும் கூறுகின்றனர். முதலில் ஆசியாவே அவர்களின் ஆதி இருப்பிடம் எனக் கொள்ளுவோரின் கருத்தினைக் குறிப்பிடலாம். இதிலும் கருத்து வேறுபாடு உள்ளது. மத்திய ஆசியாவே (பமீர் – பக்ரியப் பகுதிகள்) ஆரியரின் ஆதி இருப்பிடம் எனக் கூறியோரிலே பேராசிரியர் ம~;முல்லர் குறி;ப்பிடற்பாலர். இவ்வாறு கொள்ளுதற்குச் சிலகாரணங்கள் உள்ளன. முதலாவதாகச் ‘சதம்’, ‘கென்ரும்’ பிரிவுகளுக்குத் தகுந்த மையம் மத்திய ஆசியா. ஆதிகால நாகரிக மையங்கள் பல ஆசியாவிலேதான் உள்ளன. பிற்காலத்திலே பெருமளவிலே நடைபெற்ற மக்கட் புலப்பெயர்ச்சிகள் மத்திய ஆசியாவிலிருந்து ஏற்பட்டன. ஆதி ஆரியர் கடலுடன்; தொடர்பு கொண்டிருந்தனர் போலும் ஆதி இரானியரின் வேதமான அவெஸ்தாவின்படி மக்கள் மத்திய ஆசியாவிலே (அர்யானம் வையங்) உண்டாயினர்.
மேலும் அனவ் போன்ற இடங்களிலே காணப்படும் மைபூசிய பாத்திரங்களைப்பயன் படுத்திய மக்கள் குதிரைவளர்த்தனர் எனவும், ஒரு சாரார் கூறுவர். மத்திய ஆசியா ஆரியரின் ஆதி இருப்பிடம். (ருசாநiஅயவ) என்ற கருத்தினைப் பேராசிரியர் ஆர். என். தண்டேகர் மீண்டும் வற்புறுத்தியுள்ளார். யூரல் தொடக்கம் வட அல்தாய் வரையுள்ள வடகேர்க்கிஸ் புற்றரைகளே ஆரியரின் ஆதி இருப்பிடமாகும் என்பதே இவரின் கருத்தாகும் இவ்விடத்தில் ஆதி ஆரியரின் நாகரிக நிலைகளுக்குத் தக்க சான்றுகள் உள்ளன என இவர் கூறுவர்.
பேராசிரியர் சய்ஸ் அனட்டோலிய பீடபூமியே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். அண்மைக்காலத்திலே றொபேட்ஷேவர் என்பவர் திபெத் ஆரியரின் ஆதி இருப்பிடம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கருத்தினை ஏற்கனவே பர்ஜிதர் போன்றோர் கூறியுள்ளனர்.
புகழ்பெற்ற இந்திய தேசிய விடுதலைவீரரான பால கங்காதர் திலக் வடதுருவமே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். இவர் தமது கருத்திற்குச் சான்றாக வேதங்களிலுள்ள வானநூற்குறிப்புகளைக் கொண்டுள்ளனர். ஆனால் இவரின் கருத்தினைப் பலர் ஏற்றிலர்.
ஐரோப்பாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் எனக்கொள்வோரின் கருத்துக்களை கவனிக்கலாம். இதிலும் கருத்து வேறுபாடு உள்ளது. பேராசிரியர் கைல்ஸ் கங்கேரி சமவெளியியே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். இவர்களை இவ்வறிஞர் “விரொஸ்” என அழைத்துள்ளார். ‘விரொஸ்’ விவசாயம் செய்தனர்@ மந்தை மேய்த்தனர் எனக் கூறுவர். ஆனால் கைல்ஸ் மொழிநூல் வல்லுநர்@ தொல்லியலாய்வாளரல்லர்.
வட ஐரோப்பாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் என பென்கா லதம் போன்ற ஆய்வாளர் கூறியுள்ளனர் இவர்களின் கருத்துப்படி நோர்டிக் இனத்தவர்கள் நாகரிகமுள்ளவர்கள் பென்கா, கைகர் போன்றோர் ஜேர்மனியையும், லதம் போன்றோர் ஸ்காந்திநேவியாவையும் ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். பேராசிரியர் ஜே. சி. மையேர்ஸ், ஸ்கிரேடர், கோர்டன் சைல்ட், பி. கே. கோஸ் போன்றோர் தென்ரூசியாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். கஸ்பியன் கடல் தொடக்கம் நீப்பர் வரையுள்ள பிரதேசத்திலே சுருங்கிய எலும்புக் கூடுகள் கொண்டுள்ள கல்;லறைகள் உள்ளன. இவை சிவப்புக்களி மண்ணாலே மூடப்பட்டு மேலே மேடொன்று (குர்க்கன்) கொண்டுள்ளன. கல்லறைக்குமேலே, மண்தூவுதல், மேடையைச் சுற்றி மரவேலியிடுதல் ஆகியன இருக்கு வேதம் 10-18-4, 18-13-லே தொனிக்கின்றன. இங்கு வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் உயரமுள்ளவர்கள்@ பெரிய மண்டையோடு உடையவர்கள். இவர்களைப் பொதுவான நோர்டிக் இனத்தவர் எனலாம். இவ்விடத்திலே நிலவிய பண்பாடு ஒரே தன்மையானது. இம்மேடுகளிலே (குர்க்கன்களிலே) செம்மறியாடு, மாடு, குதிரை ஆகியனவற்றின் எலும்புகள் உள்ளன. எனவே இம்மக்கள் மந்தைமேய்த்த நாடோடிகளா? சக்கரமுள்ள குதிரை வண்டிக்காரரா? மேடுகளின் மேற்காணப்படும் தானியங்கள் விவசாயத்திற்குச் சான்றாகும் எனவும் சிலர் கருதுவர். இக் கல்லறைகளால் அறியப்படும் நாகரிகத்திலே கல், செம்பு, வெண்கலம் முதலியன இடம்பெற்றுள்ளன. கல், செம்பு, ஆதியனவற்றாலான துளையிட்ட கோடரிகள், அம்புகள். ஈட்டிகள் முதலிய கருவிகள் உள்ளன. இத்தகைய சின்னங்கள் மைக்கோப் போன்ற இடங்களிலே கிடைத்தன. மேலும், இப்பிரதேசத்திற்கு வெளியே ரேப்கிஸர், ருறங்ரேப் போன்ற இடங்களிலும் அநட்டோலியாவிலும் உள்ளன.
மேலும், தேன் உற்பத்திக்குத் தேவையான எலுமிச்சைமரம், ‘பீச்’ மரம் முதலியனவுமிங்கு வளர்ந்தன. இருக்குவேதத்திற் கூறப்படும் ரசா வொல்காவின் பழைய பெயரான ரா ஆக இருக்கலாமெனவும் சிலர் கருதுவர். பொதுவாக அறிஞர் பலர் இந்தோ, ஐரோப்பியரின் ஆதி இருப்பிடம் கலாச்சாரம் முதலியனபற்றிக் கூறுவனயாவும் பிறவற்றிலும் பார்க்க மேற்குறி;ப்பிட்ட கலாச்சாரத்துடன் பெருமளவு ஒத்துக் காணப்படுகின்றன எனவே, ஆதி ஆரியர் இங்கிருந்து பிற இடங்களுக்குப்புலம் பெயர்ந்தனர் எனவும் கொள்ளலாம் என்பர். மேலும் நெஹ்றிங்என்ற அறிஞர் ஆதி ஆரியர் ‘ரிப்பொல்ஜி’ கலாச்சாரத்தினைக் கொண்டிருந்தனர் எனவும், அவர்களினிருப்பிடம் தென்ரூசியாவிலே மட்டுமன்றி மேற்கேயுமிருந்தது என்பர். அண்மைக்காலத்திலே பிரான் டென்ஸ்ரென் என்பவர் சொற்பொருளாராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு ஆரியரின் ஆதி இருப்பிடம் மலைத் தொடரின் அடிவாரத்திலுள்ள புற்றரையெனவும் அது யூரல் மலைக்குத் தெற்கேயுள்ள வடமேற்குக் கேர்க்கிஸ் புற்றரைகள் எனவும் கூறுவர். மேலும் அவரின் கருத்துக்கள் சில குறிப்பிடற்பாலன. மொழியியற்சான்றினைக் கொண்டு நோக்கும்போது புராதன இந்தோ – ஐரோப்பிய வரலாற்றில் இரு காலப்பகுதிகள் உள்ளன. அவையாவன.
1. காலத்தால் முந்திய பகுதி – அதாவது. இந்தோ – ஐரோப்பியர் யாவரும் ஒன்றாக வாழ்ந்த காலம் அல்லது இந்தோ – ஐரோப்பியர் காலம்.
2. பிரதான மையத்திலிருந்து இந்தோ - இரானியர் பிரிந்து புதிய சுவாத்தியமுள்ள பிறிதோரிடத்திற்குச் சென்றுவிட்ட காலம்.
இந்தோ - இரானியர், ஹிற்றைற் மக்கள் ஆகியோரின் முன்னோர் கோகஸஸைத் தாண்டிச் சின்னாசியா, மொசொப்பொத்தேமியா, இரான் ஆகிய இடங்களுக்கும், பின் இந்தியாவிற்கும் வந்திருப்பர். அல்லது, ஒரு பகுதியினர் பிரதான மையத்திலிருந்து புலம் பெயர்ந்து இரானிய பீடபூமிக்கும்பின் இந்தியாவிற்கும் வந்திருப்பர். பிரதான மையத்திலிருந்து பிறிதொரு பிரிவினர் மேற்கே, போலந்து எனும்புதிய இடத்திற்குச் சென்றிருப்பர். இதைவிட. கார்ப்பேதியன், கிழக்கு ஐரோப்பா முதலிய பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்து பரவினர் எனலாம். பரான்டென்ஸ் ரெனின் கருத்துக்கள் பெருமளவு நியாயமானவை@ மிகத் திட்டவட்டமான மொழியியல், தொல்லியற்சான்றுகளின் அடிப்படையிலமைந்துள்ளவை. பொதுப்பட நோக்கும்போது, யூரல் மலைக்குத் தெற்கேயுள்ள பரந்த ஆசியச் - ஐரோப்பிய சமவெளியே ஆரியரின் ஆதி இருப்பிடம் என அறிஞரில் ஒரு சாரார் நன்கு எடுத்துக்காட்டியுள்ளனர். ஆரியரின் ஆதி இருப்பிடம் தென்ரூசியா எனப் பேராசிரியர் ரி. பறோ சில காலத்திற்குமுன் கூறியிருந்தார். ஆனால், அண்மையில் இக்கருத்தினை மாற்றியுள்ளார் என்பது பின்னர் கூறப்படும்.
ஆரியரின் புலப்பெயர்ச்சிகளும் காலமும்
ஆரியரின் புலப்பெயர்ச்சிகள் அவற்றின் காலம், இயல்புகள் ஆகியன பற்றிக் கலாநிதி சுப்பராவ் குறிப்பிட்டுள்ளவை கவனித்தற்குரியன. கி. மு. இரண்டாயிரம் ஆண்டின் பிற்பாதியிலே மேற்கு ஆசியா அடங்கலும் மக்களின் கொந்தளிப்புள்ள புலப்பெயர்ச்சிகள், அழிவுகள், புதிய மொழிகள் தோன்றல் முதலியன அநட்டோலியா தொடக்கம் நிலவின மேற்குறிப்பிட்டவை இந்தோ – ஐரோப்பியரின் வருகையாலே பலநாடுகளிலே காணப்பட்டன. இவற்றின் தாக்கத்திற்கு இந்தியா தப்பவில்லை. ஆனால் ஒரு முக்கியமான குறிப்பினை நினைவிலிருத்த வேண்டும். வன் செயலில் ஈடுபட்டும், ஒரளவு மந்தை மேய்த்தும் வந்த மக்கள் தாம் வென்று அடிப்படுத்தியோரின் கலாச்சார அம்சங்கள் பலவற்றை மேற்கொண்டனர். இவ்வாறு பழைய உலகனைத்திலும் ஆரியர் தெளிவற்றும். உறுதியற்றும் காணப்படுகின்றனர். ஆனால் நாகரிக வரலாற்றிற்கு அவர்களின் மொழிகள் முதுசொத்தாகக் கிடைத்துள்ளன. இந்தோ – ஐரோப்பிய மொழிகள் பரவுதலும் குதிரையினைப்பழக்குதலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட எளிதிற் செல்லும் போர்த்தேர் உபயோகமும் ஒரளவு சமகாலத்தவை. ஆரியரின் நாகரிகத்துடன் தொடர்பான மிருகங்களிலே பசுமட்டுமன்றிச் குதிரையும் குறிப்பிடற்பாலது. குதிரைகள் காட்டுமிருகங்களாகத் தென்ரூசிய, உக்றெயின் புற்றரைகளிலே திரிந்தன. பின்னர் மத்திய ஆசியாவுக்கும் கொண்டு செல்லப்பட்டன. கி.மு. 2000 அளவிலே மனிதன் இவற்றை நன்கு பயன்படுத்தி வந்தான். வேத இலக்கியத்திலே வரும் குதிரை பற்றிய குறிப்புகள் மத்திய ஆசியப் புற்றரைகளில் (ஸ்ரெப்பிஸில்) வாழ்ந்த வற்றினை நினைவூட்டுவன. ஆரியருக்குப் பெரும்பாலும் குதிரை தேர் இழுக்கும் மிருகமாகவே போருக்கும், சவாரிக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கி மு. 2000 – 1500 அளவிலே தென்ரூசியாவிலே குதிரை வளர்க்கப்பட்டது. காலத்தால் முந்திய மைக்கொப் கல்லறையிலுள்ள வெள்ளிக் கிண்ணத்திலும் அனவ். சியல்க் போன்ற இடங்களிலுள்ள தொல்லியற சின்னங்களிலும் குதிரையின் வடிவம் காணப்படுகின்றது ஆரியர் குதிரை உபயோகத்தினைத் தொடக்கி வைத்திலர்@ ஆனால் அதனை விரைவான போக்குவரத்துச் சாதனமாக்கினர் என்று கூறுதலே பொருத்தமானது. மேற்காசியாவிலே சீரியாவிலுள்ள சாசனங்களிலும், கஸ்ஸைற், மித்தானிய மன்னர் சாசனங்களிலும் குதிரை பற்றிய குறி;ப்புகள் வருகின்றன. இந்தோ – ஐரோப்பியர்புலப்பெயர்ச்சி பற்றிய சான்றுகள் திட்டவட்டமாகக் கிடைத்தில. எனினும், சிலவற்றைக் குறிப்பிடலாம். வடபலுக்கிஸ்தானிலே ரணாகுந்தை, டபர்கொற் முதலிய இடங்களிலே பலகுடியிருப்புகள் முற்றாகவே வன்முறைச் செயல்களால் அழிக்கப்பட்டதற்கான சின்னங்கள் உள்ளன. தென்பலுக்கிஸ்தானிலுள்ள சாஹிதும்ப் கல்லறையிலே செப்புத்தகடு முத்திரைகள் (இலச்சனைகள்) செப்பினாற் செய்த துளையுள்ள கோடரி, காலுள்ள கிண்ணங்கள் முதலியன கிடைத்துள்ளன. இம்முத்திரைகள் இரானிலுள்ள அனவ் (iii) கிஸார் (iii) காலச்சின்னங்களிற் கிடைத்தவற்றினைப் போன்றவை. மேற்குறிப்பிட்ட கோடரிவகை இதுவரை இந்தியாவிற் கிடைத்திலது. இது மேற்காசிய வகையுடனும், தென் ரூசியாவிலுள்ள மைக்கொப் சார்ஸ்கய போன்ற இடங்களிற் கிடைத்தவற்றுடன் ஒப்பிடற்பாலது.
தென்ரூசியப் புற்றரைகளிலிருந்து ஆதி ஆரியர் மேற்கு, தெற்கு, கிழக்குத் திசைகளை நோக்கிப் புலம் பெயர்ந்திருப்பர். மேற்கே சென்றவர்களும் தெற்கே வந்தவர்களில் ஒரு சாராரும் மேற்கு, தெற்கு ஐரோப்பாவிலே குடியேறியிருப்பர். கிழக்கேயும், தெற்கேயும் சென்றோர் இரான் அதற்கு மேற்கேயுள்ள மேற்கு ஆசியப் பகுதிகள், இந்தியா ஆகிய இடங்களை நோக்கினர். கிழக்கு ஐரோப்பாவிலும், மேற்கு ஆசியாவிலும் ஆரியரின் நடமாட்டங்களைக் காட்டும் சில சான்றுகள் கிடைத்துள்ளன. கி. மு. 2300 அளவில் அல்லது அதற்குச் சில நூற்றாண்டுகளின் முன் அதி ஆரியர் புலம்பெயரத் தொடங்கியிருப்பர். அவர்களில், ஒரு பிரிவினரான ஆதிக்கிரேக்கர் கி;. மு. 2300 –க்குச் சற்றுப்பின்னரே கிரீசிற்கு வந்தனர். கி; மு 16ம் நூற்றாண்டளவிலே, ஆரியர் மேற்கு ஆசியாவிலே காணப்பட்டனர். பழைய புகழ்பெற்ற மெசொப்பொத்தேமிய நாகரிக எல்லையிலும் ஆரியர் சிலர் வாழ்ந்தனர். அங்கிருந்தும் நாகரிக அம்சங்கள் சிலவற்றைப் பெற்றனர். கி;.மு 16ம் நூற்றாண்டளவிலே மெசொப்பொத்தேமியாவை ஆண்ட கஸ்ஸைற் மன்னர் இந்தோ – ஐரோப்பியப் பெயர்கள் தரித்திருந்தனர். எடுத்துக்காட்டாக அர்த்தமன்ய, அர்ஸவிய, யஸ்தத, சுத்தர்ன போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் வடக்கே அல்லது வடகிழக்கேயிருந்து வந்திருப்பர். கி. மு 14ம், 15ம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த மித்தானிய மன்னர் பெயர்களிலே இந்தோ – ஐரோப்பியப் பெயர்கள் பல காணப்படுகின்றன. எகிப்திலுள்ள எல் அமர்னாவிற்கும் சின்னாசியாவில் உள்ள ஹிற்றைற் தலைநகரான போகஸ் கோய்க்குமிடையிலே நடைபெற்ற ராஜதந்திரத் தொடர்புகளில் இவற்றைக் காணலாம். ஹிற்றைற் மன்னரான சுபிலுலியுமவிற்கும், மித்தானிய மன்னரான சுபிலுலியுமவிற்கும், மித்தானிய மன்னரான துஸ்ரத்தவின் மகன் மத்தியுசாவிற்குமிடையிலே கி. மு. 1380லே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை குறிப்பிடப்பாலது. இதிலே, மித்தானிய மன்னன் தான் வழிபட்ட மி -இத்ர (மித்திரன்), உருவன (வருணன்), இந்தர (இந்திரன்), நச...அத்தி இயன்ன (நாசத்ய) ஆகிய தெய்வங்களைச் சாட்சியாக விளித்து வணங்குகிறான். எனவே, கிழக்கே சென்ற ஆரியரின் தெய்வங்களை மித்தானியரும் வணங்கியிருந்தனர். மேலும், கூடுதலான சான்று ஒன்றினைக்குறிப்பிடலாம். போகஸ்கோய் சாசனங்களிலே குதிரைச் சவாரிபற்றிய நூலொன்று அரைகுறையாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடற்பாலது. இது கி. மு. 14ம் நூற்றாண்டளவைச் சேர்ந்ததாகும். இதனைக் கிக்குலி எனும் மித்தானிய மன்னன் எழுதினான். இதிலே திருப்புதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் வடமொழிச் சொற்களைப் போன்றவை. எடுத்துக்காட்டாக ஜகவர்த்தன, தேரவர்த்தன, பஞ்சவர்த்தன என்பன முறையே ஒன்று, மூன்று, ஐந்து திருப்புதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. குதிரைச்சவாரியினை ஆதி ஆரியர் இந்தியாவிலும் சிறப்பாகப் பயன்படுத்தினர். தொல்லியல் ரீதியிலும். மொழியியல் ரீதியிலும் மேற்குறித்த சான்று கி. மு இரண்டாயிரம் ஆண்டளவில் இந்து – ஐரோப்பிய மொழிகள் பேசியோரை இந்தியாவுடன் தொடர்புபடுத்தக்கூடிய முக்கியமான ஒன்றாகும். எளிதாகவும், மிகவிரைவாகவும் செல்லும் குதிரைகளையும், குதிரைபூட்டிய தேர்களையும் முதன் முதலாக நன்கு பயன்படுத்தி ஆரியர் வெற்றியடைந்தனர். மேற்கு ஆசியாவிலே கி, மு. 1500 அளவில் ஆரியரின் நடமாட்டங்களைப் பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டது.
அண்மையிலே பேராசிரியர் ரி. பறோ ஆரியரின் ஆதி இருப்பிடம் மத்திய, கிழக்கு ஐரோப்பாவாக இருந்திருக்கலாம் என்பர். இந்தோ - இரானியருக்கும் சதம் மொழிகளுக்கும் குறிப்பாக போல்ரோ – சிலாவோனிய மொழிகளுக்கும் வின்னிய உக்;ரிய மொழிகளுக்கும் புராதன இந்தோ – ஐரோப்பிய காலத்திலே நிலவிய விசேட தொடர்புகளை நோக்கும்போது மேற்குறிப்பிட்ட கருத்துத் தெளிவாகும் என்பது அவரின் வாதமாகும். மத்திய ரூசியாவிலிருந்து மக்கள் புலப்பெயர்ச்சி கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியுமேற்பட்டது. இதனால், மத்திய ஆசியா சில காலமாக ஆரியரின் இருப்பிடமாயிற்று. இப்பழையகாலத்தில் இந்தோ – ஆரிய, இரானிய எனும் இரு கிளைகள் ஏற்படத் தொடங்கி விட்டமைக்குச் சான்று உள்ளது. இந்தோ – ஆரிய, இரானிய எனும் இரு கிளைகள் ஏற்படத் தொடங்கி விட்டமைக்குச் சான்று உள்ளது. இந்தோ – ஆரியர் தான் முதலிலே தெற்கு நோக்கி இரானிற்கும் அங்கிருந்து இந்தியாவிற்கும் மேற்கு இரானிற்கும் சென்றனர் இரண்டாவது அலையாகவே இரானியரின் புலப்பெயர்ச்சி முதலிலே கிழக்கு இரானிலேற்பட்டது. இதன் விளைவாகக் கிழக்கேயும், மேற்கேயும் சென்ற இந்தோ – ஆரியரின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன பின்னர் இரானியர் மேற்கே செல்ல, அங்கு முன்னர் சென்றோரின் செல்வாக்குக்குன்றிற்று. ஆனால் அவர்கள் அங்குமுன் இருந்தமைக்கு மேற்கு ஆசியாவிலேயுள்ள ஆவணங்கள் சான்றுபகருவன.
இந்தியாவிலே ஹரப்பா கலாச்சார முடிவும் (கி. மு 1500 அளவில்) ஆரியரின் வருகையினாலேற்றப்பட்டதெனத் தொல்லியலறிஞரான மார்ட்டிமர் வீலர், ஸ்ருவட் பிகொற் போன்றோரும். மொழிநூல்விற்பன்னரான பேராசிரியர் பறோவும் வற்புறுத்தியுள்ளனர். எவ்வாறியினும் ஹரப்பா கலாச்சாரம் மங்கிக் கொண்டிருந்த காலத்திலே திடீரென முடிவுற்றது. இக்கலாச்hசரத்தலங்கள் பலவற்றலே அரண் செய்த நகரங்கள், கோட்டைகள் பல இருந்தன. இருக்குவேதத்திலே வரும் பிரபல்யமான போர்த் தெய்வமான இந்திரன் கறுத்த நிறம், தட்டையான மூக்குமுள்ள தாசர், தஸ்யுக்களின் அரணுள்ள நகரங்களைத் தகர்த்து ஆரியர் வெற்றியினை மேம்படுத்திய வீரனாக, புரந்தரனாக, புரபித் (நகரங்களைத் தகர்த்தவன்) ஆகப் போற்றப்படுகிறான். இக்கோட்டை நகரங்கள் கல்லினாலும், சுடாத செங்கட்டிகளினாலும் ஆனவை. சில வேளைகளிலே தீயினாலும் அழிவுகளை இந்திரன் ஏற்படுத்தினான். சிந்து சமவெளியிலுள்ள மொஹெஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகளின் விளைவாக, அவ்விடங்களில் அரணுள்ள நகரங்கள் இருந்தமை நன்கு அறியப்பட்டுள்ளது. ஆரியர் நகரங்களை அறிந்திலர்@ கிராமிய நாகரிகத்தினர். மேற்குறிப்பிட்ட நாகரிகச் சின்னங்கள் ஆரியரின் வருகையினாலே அழிவுற்றன எனவும். சூழ்நிலைக்கேற்ற பொருத்தம் காட்டும் சான்றுகளைக் கொண்டு நோக்கும்போது இந்திரனே இதற்குக் காரணம் எனவும் வீலர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹரப்பா கலாச்சாரம் கி;. மு. 2500 – 1500 வரையெனப் பொதுவாகக் கொள்ளலாம் என்பர். ஆனால் அண்மைக்காலத்திலே காபன் 14 முறைப்படி இதன் காலம் பொதுவாக கி. மு. 2300 – 1750 வரையெனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஹரப்பா கலாச்சாரம் முடிவுற்ற பின். தரம் குறைந்த ஜுகர் கலாச்சாரம் ஜங்கர் கலாச்சாரம் ஒன்றன் பின் ஒன்றாக நிலவின. இவ்விரண்டிலும் ஒன்று அல்லது இரண்டுமே ஆரியர் கலாச்சாரமாயிருக்கலாமெனச் சில ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளனர். ஹைனேகெல்டேன், வெயர்சேவிஸ் ஆகிய இரு அறிஞர்கள் ஜுகர் கலாச்சாரமே, ஆரியருடையது என்பதைப் பொதுவாக ஏற்றுக்கொள்ளலாம். ஜுகர் கலாச்சாரம் ஆரியருடையது என்ற கருத்து வலுப்பெறுகிறது. கலாநிதி புசல்கார், கலாநிதி ரி. என். ராமச்சந்திரன் முதலியோர் ஹரப்பா கலாச்சாரம், ஆரியருடையதென்பர். கங்கை ஆற்றங்கரையிலுள்ள ஹஸ்தினாபுரத்தில் நடத்திய அகழ்வாய்வின் விளைவாகக் கங்கைக் சமவெளியிலே சாதாரண மைபூசிய சாம்பல் நிற மட்பாண்டங்கள் (Pயiவெநன புசநல றயசந) பலவற்றைத் திரு. பி. பி. லால் கண்டுபிடித்துள்ளார். இவை கி;. மு. இரண்டாவது ஆயிரம் காலத்தன. இவற்றைச் சமகாலத்திய மேற்காசிய. கிழக்கு ஐரோப்பியத் தொல்லியற் சின்னங்களுடன் ஒப்பிட்டு இவர் ஆராய்ந்துள்ளார். இவை போன்றவை கிரிஸ், இரானிலுள்ள ஷாரேப் ஆகிய இடங்களிலும், சில மாற்றங்களுடன் உர்மியா ஏரிக்குத் தெற்கேயும். கிழக்கே இந்தியாவின் மேற்கு எல்லையிலே, சீஸ்ரனிலும் காணப்படுகின்றன. இச்சின்னங்கள் இவ்வாறு கிரீஸ் தொடக்கம் சீஸ்ரன் வரை இந்தியாவுக்கு வெளியேயும் காணப்படுகின்றன. இதே காலப்பகுதியிலே கி. மு. 1360 ஆண்டளவைச் சேர்ந்த போகஸ்கோய்க் சாசனங்களும், மேற்காசியாவில் ஆரியரின் நடமாட்டங்களைக் காட்டுவன. எனவே, மேற் குறி;ப்பிட்ட சின்னங்கள் பொதுவாக ஆரியரின் புலப்பெயர்ச்சி, நடமாட்டங்கள் ஆகியவற்றைக் காட்டுவன. ஏற்கனவே குறிப்பிட்ட மைபூசிய சாம்பல்நிற மட்பாண்ட கலாச்சாரத்திற்கு முன் கங்கைச் சமவெளியிலே நிலவிய வெண்கலக் கருவிகளின் கலாச்சாரத்திலே (சிவப்புநிறம் நீரால் கழுவப்பட்டு மங்கி) மஞ்சள் நிறமட்பாண்டங்களும் இடம் பெற்றிருந்தன. வெண்கலக்கருவிகளிலே கோடரி, ஈட்டி, வாள், மனிதவடிவம் போன்ற கருவி முதலியனவும் அடங்கும். மேற்குறிப்பிட்ட பல்வேறு ஆய்வாளரின் கருத்துக்களிலே திரு. பி. லால் என்பவரின் கருத்தே பொருத்தமானதாகத் தெரிகின்றது. ஹரப்பா கலாச்சாரம் ஆரியருக்கு முற்பட்டது. ஆனால் இதனை ஆரியர்தான் அழித்தனர் என்பதும் அறிஞரின் ஒருமுகமான முடிவன்று.
இந்தியாவிற்கு ஆரியர் படிப்படியாகவே, வட மேற்கு எல்லைப்புறக்கணவாய்கள் ஆற்றோரங்கள் மூலமாக வரலாயினர். இவற்றுள். கிருமு, (குரம்), கோமதி (கோமல்), குபா (கபூல்), சுவாஸ்து (சுவாத்) முதலியன இருக்குவேதத்திலே குறிப்பிடப்படுகின்றன. ஆரியரின் இந்தியப் புலப்பெயர்ச்சி பல நூற்றாண்டுகளாக நடைபெற்றது எனலாம். இது குறித்துப் பேராசிரியர் ரி. பறோ பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இந்தோ – ஆரியரின் புலப்பெயர்ச்சி இந்தியாவில் ஒரே இயக்கமாக அன்றிப் பற்பல கட்டங்களாக ஏற்பட்டதற்கு மொழியியற் சான்றும் காணப்படுகிறது. வடமேற்கு இந்தியாவிலே நிலவிய வேதகால மொழிக்கும் மத்திய தேசத்திலே நிலவிய பிற்பட்ட காலமொழிக்குமிடையிலே கிளைமொழிச்சார்பான வேறுபாடுகள் பல உள்ளன. வேதமொழியிலே ர், ல். வேறுபாடுபெருமளவு பேணப்பட்டுள்ளது. இஃது ஒரு முக்கியமான வேறுபாடாகும். வேத மொழியிலுள்ள முக்கியமான வேறுபாடாகும். வேத மொழியிலுள்ள இவ்வியல்பு இரானிய மொழிக்குமுள்ள தனியியல்பாகும். மேற்காசியாவிலுள்ள ஆரியமொழிகளிலும் வின்னிய உக்ரிய மொழிகளிலுள்ள ஆரியச் சொற்கள் சிலவற்றிலும் இவ்வியல்பு காணப்படுகின்றது. ஆரியரின் புலப்பெயர்ச்சி திட்டவட்டமான தனியான செயலன்று. பல ஜனக்குழுக்களுடன் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றது. இவ்வாறு வந்த மக்கள் ஒருவேளை ஒரே இனம் ஒரே மொழியினைச் சேர்ந்தவராயிருந்திலர்.
மேலும், இந்தியாவிற்குவந்த ஆரியர் வருகைப்பற்றிப் பேராசிரியர் சுநீதிகுமார் சட்டர்ஜி குறிப்பிட்டுள்ள கருத்துக்களும் மனம் கொள்ளத்தக்கன. ‘இரானிலிருந்து இந்தியாவிற்கு ஆரிய ஜனக்குழுக்கள் படிப்படியாகவே புலம்பெயர்ந்தனர். இப்புலப்பெயர்ச்சி பல தலைமுறைகளாக நடைபெற்றிருந்திருப்பன. இப்புலப்பெயர்ச்சிபற்றி இன்று கிடைத்துள்ள வேத இலக்கியத்திலே குறிப்பு எதுவுமில்லை. ஏனெனில் அவர்கள் தாம் புதிய இடத்திற்குப் புலம்பெயர்ந்தமை பற்றிய நினைவு கொண்டிருந்திலர். பர்சு, மத முதலிய இரானிய ஜனக்குழுக்களோடு பல நூற்றாண்டுகள் வாழ்ந்தனர். இரானிய மேட்டு நிலம் அவர்களின் புலப்பெயர்ச்சியின் போது தங்குமிடமாக அன்றித்தாயகமாகவே விளங்கியது. அங்கு அவர்கள் இந்தோ - இரானிய கலாச்சாரமரபுகள் பலவற்றை உருவாக்கினர். இவற்றின் தாக்கம் மெசொப்பொத்தேமியாவிலே நன்கு காணப்படுகின்றது. அவெஸ்தா, இருக்குவேதம் ஆகியவை இப்பொதுவான மரபுகளைக் கொண்டவை”
வரலாற்றுக்காலத்தில் இந்தியாவில் இஸ்லாமியர் வருகையும் ஆதிக்கமேற்படுத்தலும் பல நூற்றாண்டுகளின் பின்னரே வெற்றிகரமாக முடிந்தன. எனவே ஆரியரின் புலப்பெயர்ச்சியும் இவ்வாறே நெடுங்காலப் பகுதியிலே நடைபெற்றிருக்கலாம். இந்தியாவிற்கு வந்த ஆரியர் நீண்டகாலமாக ஆரியரல்லாத மக்களுடன் போர் செய்தே தமது செல்வாக்கினை நிலைநாட்டினர்.
“ஆரியர் கி. மு. 2000 அளவில் இந்தியாவை நோக்கி வந்திருப்பர். கி. மு. 1400 – க்குப்பின் வந்திரார். கி.மு. 1500 அளவிலே வந்திருப்பர். ஆனால் கி.மு 1800க்குமுன் வந்திரார்” எனப் பேராசிரியர் ஏ. பி. கீத் ஆரியரின் இந்திய வருகைபற்றிய காலத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஆரியர் கி. மு. 1500 அளவிலே வந்திருப்பர் என மராட்டிமர் வீலர் கருதுவர். மேலும் “ஆரியர் கி. மு. 1700 – 1400க்கு மிடையில் இந்தியாவிற்கு வந்தனர்” எனவும், “இருக்குவேதப்பாடல்கள் கிமு 1200 – 1000க்கு மிடையில் இயற்றப்பட்டன எனவும் பேராசிரியர் ரி. பறோ கூறியுள்ளார். இவர்கள் இந்தியாவிற்கு கி. மு. 1750 – 1300 வரையுள்ள காலப்பகுதியிலே வந்திருப்பர் என டி. எச் கோர்டன் எனும் ஆய்வாளர் கருதுவர். ஹைனேகெல்டேர்ன்;;;;;;;;, வெயர்சேவிஸ் ஆகியோர் இவர்கள் கி. மு. 1200 – 1000 வரையில் வந்தனர் என்பர். இவ்விரு ஆய்வாளர்களுடைய முடிபுகளுக்கான தொல்லியற் சின்னங்களையும் பிறவற்றையும் இந்தியாவில் அண்மையில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட நவ்டதோலி (மத்திய இந்தியாவில்) ராஜஸ்தான், மத்திய பிரசேதம், மஹாராஷ்டிரம், ஆந்திரதேசம் ஆகிய இடங்களிலே கிடைத்துள்ள தொல்லியற் சின்னங்களுடன் நன்கு ஆராய்ந்து பேராசிரியர் எச். டி. சங்காலியா மேற்கு இந்தியா மேற்காசியத் தொடர்புகளுக்கான காலம் கி. மு. 1700 – 1500 வரை யென்பர். சேர்லியனாட் வூலி எனும் தொல்லியல் ஆய்வாளர் ஆரியர் கி. மு. 1500 அளவில் இந்தியாவிற்கு வந்தனர் என்பர்.
“இந்தோ – ஐரோப்பிய ஜனக்குழுவினர் ஆசிய ஐரோப்பிய (நுரசயளயைn) உலகினை அரங்காகக் கொண்டு ஏற்படுத்திய புலப்பெயர்ச்சிகளின் காரணங்களை எளிதிலே நிர்ணயிக்க முடியாது. மந்தைகள் பெருகிய தாலே அவற்றின் மேய்ப்பர் புத்தம் புதிய புற்றரைகளை நாடவேண்டியவராயினர் என்பர். ஆரிய – ஐரோப்பியப் புற்றரைகளிலே காலத்திற்குக்காலம் ஏற்படும் வரட்சியினாலவர்கள் செழிப்பான புதிய இடங்களைத் தேடிச் சென்றிருப்பர். இத்தகைய நாடோடிக் குதிரை வீரர், நிலையான வாழ்க்கை நடத்திவந்த மக்களுக்குப் பேரபாயம் விளைவித்தனர். ஆனால், போரின் விளைவாக முன்னையோர் பின்னையோரிடமிருந்து நாகரிகக் கலையினைக் கற்றனர். இறுதியிலே வெற்றி பெற்றோர், வெல்லப்பட்டோருடன் நன்கு ஒன்று சேர்ந்து தமது முன்னைய நிலையினை முற்றாக இழந்துவிட்டனர். இவ்வாறு இந்தோ - இரானியரின் புலப்பெயர்ச்சி பற்றிப் பேராசிரியர் ஆர். கிர்ஷ்;மன் நன்கு ஆய்ந்து கூறியிருப்பது இந்தியாவிற்கு வந்த ஆரியருக்கும் சாலப் பொருந்தும்.
ஆரியரின் இந்தியப் புலப்பெயர்ச்சி ஏற்பட்ட காலம் குறித்துப் பேராசிரியர் சுநீதிகுமார் சட்டர்ஜி வரலாற்றுநோக்கிலே கூறியுள்ளவை மனம் கொளற்பாலன. ‘ஆதிகாலவரலாற்றில் ஆரியர் இந்தியாவிற்கு வந்தமையினை ஒப்பியல் ஆய்விலே நோக்கும்போது அது பிந்தியகால நிகழ்ச்சியெனவே தோன்றும். அவர்கள் கி. மு. இரண்டாயிரம் ஆண்டின் நடுப்பகுதிக்குமுன் இந்தியாவிற்கு வந்திரார்@ அல்லது அதற்குப் பின்னரும் வந்திருப்பர். இந்தியவரலாற்றினை உலகவரலாற்றுடன் குறிப்பாக மேற்கு ஆசிய வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புள்ளதாகவே நோக்குதல் அவசியமாகும். இவ்வாறு நோக்கும்போது, இந்தோ – ஐரோப்பியர் மேம்பாடுள்ள புராதன நாகரிகமுள்ள மக்களுடன் பிந்திய காலத்திலேதான் அதாவது, கி. மு. 2000 அளவிலே தொடர்பு கொள்ளலாயினர். எனவே, ஆரியரின் இந்திய வருகை மிகப் பழைய காலத்திலேற்பட்டதென மிகைப்படுத்திக் கூறுதல் முற்றான வரலாற்றுச் சார்பற்ற முடிபாகும். மேலும் அவர்களிலே முதல் வந்தோர் கி. மு. 1500 அளவிலேதான் பஞ்சாப்பினை அடைந்தனர்.
பொதுவாகத் தொல்லியல், இலக்கியம். மொழியியற் சான்றுகள், புராதனவரலாறு முதலியனவற்றை ஒப்பிட்டு நோக்கும்போது ஆரியர் சுமார் கி. மு. 2000 தொடக்கம் சில நூற்றாண்டுகளாக இந்தியாவை நோக்கி அலை அலையாக வந்து கொண்டிருந்தனர் எனலாம்.
இந்தியாவில் ஆரியர்
ஆரியரின் வருகையுடன் இந்திய வரலாற்றிலே புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டது. ஒரு நாட்டின் வரலாற்றுக்காலம் அந்நாட்டின் இலக்கியத்துடனே தான் தொடங்குகிறது எனில். இந்தியாவின் வரலாற்றுக்காலம் ஆரியர் வருகையுடன் ஆரம்பித்தது எனலாம். ஹரப்பா கலாச்சாரத்தில் எழுத்துப் பயன்படுத்தப் பட்டதாயினும், அஃது இன்றுவரை செவ்வனே வாசிக்கப்படவில்லை. எனவே ஹரப்பா கலாச்சாரகாலம் வரலாற்றுத் தொடக்க காலம் அல்லது வரலாற்றுக்கு முற்பட்ட காலமெனக் கருதப்படுகிறது. அறிஞரில் ஒருசாரார் வேதகாலமும் வரலாற்றுத் தொடக்க காலமெனக் கருதுவர். இருக்குவேதமே இந்தியாவிற்கு வந்த ஆரியரின் ஆதி ஏடாகும். அது மட்டுமல்ல ஆரிய உலகில் எழுந்த முதலாவது நூலுமாகும். இவ் வேதமும் ஏனைய வேதங்களும் அவற்றின் சார்புநூல்களும் எழுந்த காலமே வேதகாலமாகும். இந்தியாவில் ஆரியரின் தொடக்க காலவரலாற்றை அறிவதற்கு வேத இலக்கியமே பிரதான மூலமாகும். இதைவிடத் தெல்லியலும், பிற ஆரியரின் பழைய நூல்களும் ஒரளவு உதவியாக உள்ளன. “இந்தோ – ஆரியர் தமது மொழியுடன் இந்தியாவிற்கு முதலிலே வந்ததற்கும், இருக்குவேதப் பாடல்கள் இயற்றப்பட்டதற்குமிடையிலே நெடுங்காலம் சென்றுவிட்டது. இதனாலேதான் இருக்குவேதத்தில் ஆரியரின் புலப்பெயர்ச்சி பற்றிய குறிப்புகள், நினைவுகள் காணப்பட்டில. மொழியியற் சான்றுபகருகின்றதான பொதுவான இந்தோ - இரானிய காலத்திலிருந்து வேதகாலத்திற்கு வரப் பல மாற்றங்களேற்பட்டுவிட்டன. எனவே, இரானியரும், இந்தோ – ஆரியரும் முற்றாகப் பிரிந்துவிட்ட பின்னரே, அதாவது பின்னையவர் இந்தியாவிற்கு வந்த பின்னரே மாற்றங்கள் பல ஏற்பட்டன” எனப் பேராசிரியர் ரி. பறோ குறிப்பிட்டுள்ளார். ஆனால், பொதுவாக நோக்கும்போது பாடல்கள் பாடிக் கொண்டும் ஆரியரல்லாத மக்களோடும், தமக்குள்ளேயும் போர் புரிந்து வரும் மக்கட்கூட்டமாகவே முதன் முதலாக ஆரியர் இந்தியாவிலே காட்சியளிக்கின்றனர். இந்தோ ஆரிய மொழி, இலக்கியம் ஆகியவற்றின் வரலாறும் இத்துடன் தொடங்கின.
வேத இலக்கியம்
வேத இலக்கியத்தில், இருக்கு, யஜுர், சாமம், அதர்வம் எனும் நான்கு வேதங்களும் அவற்றின் தொடர்பகுதிகளான பிராஹ்மணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷதங்கள், சூத்திரங்கள் என்பன அடங்குவன. இவற்றுள், இருக்குவேதமே முதன்மையானது. காலத்தால் முற்பட்டது. இருஷிகள் பலர் பல நூற்றாண்டுகளில் பல்வேறு தெய்வங்களை விளித்துப்பாடிய துதிப்பாடல்கள் 1028 இதிலிடம் பெற்றுள்ளன. இப்பாடல்களிற் சில இந்தியாவுக்கு வெளியேயும், ஆரியர் வரும்வழியிலே பாடப்பட்டன எனவும் அறிஞர் சிலர் கருதுவர்.
சாம, யஜுர் வேதங்கள் இருக்கு வேதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. சாம வேதத்திலே பெரும்பாலும் இருக்கு வேதப் பாடல்களே பண்ணிற் கேற்ப அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இதனைத் தனிப்பட்ட வேதமெனக் கூறமுடியாதெனினும், இந்திய இசை வரலாற்றிற்கு மிக முக்கிய நூலாகும். யஜுர் எனில், வேள்வி வாய்ப்பாடு எனப் பொருள்படும். எனவே, இவ்வேதம் யாக விதிகளைக் கொண்டதெனலாம். காலத்தால் முந்திய வடமொழி வசன நடையினை இதிலே காணலாம். இவ்வேதத்திலே ஆரியர் படிப்படியாகக் கிழக்கே செல்லுதலையும், அவர்களின் சமயத்திலேற்பட்ட மாற்றங்கள் சிலவற்றையும் காணலாம். இம்மூன்று வேதங்களும் இவ்வாறு ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை@ நெடுங்காலமாக இம்மூன்றுமே வேதங்களாகக் கருதப்பட்டன.
நான்காவது வேதமான அதர்வ வேதம் (அதர்வாங்கிரசம்) மேற் குறிப்பிட்டவற்றிலிருந்து வேறுபட்டது@ 731 சூக்தங்களும், 20 காண்டங்களும் கொண்டது. பாமர மக்களின் சமய நம்பிக்கைகள், சமூக பழக்கவழக்கங்கள் போன்றவற்றினை இதில் காணலாம். பொருளடக்கத்தில் இது வேறுபட்டதாகையாலேயே நெடுநாளாக வைதிகர் இதனை ஏற்றுக் கொண்டிலர் “மாந்திரிகம், சமயம் ஆகியனவும், ஒரளவு இறைஞானமும் அதர்வ வேதத்திலே முற்றாக ஒன்றுபடுகின்றன” எனவும் அதர்வன், சமயகுரு, புரோஹிதர், வைத்தியர், மந்திரவாதி ஆகியோரின் கடமைகளைத் தம்மிடத்து ஒருங்கே கொண்டிருந்தார் எனவும் ஜே. என். ஷென்டே குறிப்பிட்டுள்ளார்.
வேதங்களின் தொடர் பகுதியான பிராஹ்மணங்களிலே வேள்வியே பிரதான பொருளாக உள்ளது. இவை பொதுவாக வசனரூபத்தில் எழுதப்பட்டுள்ளன. வேள்வியால் எதையும் சாதிக்கலாம் என்ற கருத்து நிலவியது. வேள்விக்கு மட்டமற்ற முக்கியத்துவம் அளிக்கப்பட, ஒரு சாரார் வெறுப்புற்றுக் காட்டிற்குச் சென்று, வேள்விகளின் உட்பொருள் பற்றித் தியானம் செய்து தம் முடிவுகளை வெளியிடலாயினர். இவ்வாறே ஆரண்யகங்கள் தோன்றின. இவற்றினைத் தொடர்ந்து தத்துவ நூல்களான உபநிஷதங்கள் எழுந்தன. ‘உபநிஷத்’ எனில், ஒருவனின் அண்மையில் இருத்தலாகும். அதாவது, ஞான போதனைக்காக மாணவன் (சிஷ்யன்) ஆசிரியரின் (குருவின்) முன்னிலையில் இருப்பதாம். இப்போதனை பரஞானமாகிய மறை பொருளை மறைவாகத் தகுதியுடையவருக்கே புகட்;டப்படுதலால் ‘ராஹஸ்யம்’ எனும் கருத்திலே, ‘இதம் உபநிஷத்’ ‘இதம் ரஹஸ்யம்’ என உபநிஷதங்களிலே வருகின்றது. இதனைக்குரு சிஷ்யனுக்கு ஆசார பூர்வமாகப் புகட்டும் ஞானம் எனக் குறிப்பிடலாம். இதனை ‘அஞ்ஞான இருளைப் போக்கும் பிரமஞானம்’ எனச் சங்கராச்சாரியர் கூறுவர். இந்தியாவின் மிகப் பழைய தத்துவ சிந்தனைகளை இவற்றிலே காணலாம். உபநிஷதங்கள் வேதங்களைக் கண்டித்தாலும் வேதநெறியிலிருந்து பிறழ்ந்தில. எல்லாமாக 108 உபநிஷதங்கள் கூறப்படினும் அவற்றுட் காலத்தால் முந்திய பிருஹதாரண்யக, சாந்தோக்ய, தைத்திரீய, பிரஸ்ன, ஈச, கட முதலிய 13 உபநிஷதங்கள் பிரதானமானவை. உபநிஷதங்கள் முதலிலே வசனத்திலும், பின் வசனம் செய்யுள் கலந்த நடையிலும் இறுதியிலே செய்யும் வடிவிலும் எழுதப்பட்டன. இவை வேதகாலத்தின் முடிவிலே தோன்றியதாலும், வேதங்களின் சாரமாக அமைந்துள்ளன எனக் கருதப்படுவதாலும், வைதிகக் கல்வியின் முடிவிலே கற்கப்படுவதாலும், வேதாந்தம் எனக்கூறப்படுவன. வேதநெறிக்குப் புறம்பாகத் தோன்றிய பௌத்தம், சமணம், ஆஜீவிகம் ஆகியனவும் உபநிஷதங்களுடன் ஒரளவு தொடர்புடையன. உபநிஷதங்களை மூலவடிவிலன்றி, அவற்றின் பாரசீக மொழி பெயர்ப்பினைத் தழுவி லத்தீனில் எழுதப்பட்டனவற்றைப் படித்த ஸோப்பநோர் (ளுஉhழிநnhயரநச) எனும் புகழ்பெற்ற தத்துவஞானி இவை பற்றிக் கூறியுள்ளவை கவனித்தற்குரியன. “உபநிஷதங்களைப் போன்று மிக நன்மை பயப்பனவும் உயர்நிலை அளிப்பனவுமானவை வேறொன்றும் உலகில் இல்லை. இவையே என்வாழ்விற்குச் சாந்தியளித்து வருபவை@ எனது மரணத்திலும் சாந்தியளிப்பவை” என்பதாகும்.
வேதகால முடிவிலே வேதங்களைக் கற்பதற்கு உதவியான வேதாங்கங்கள் எழுந்தன. கல்பம், சிi~, வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஸம் என்பனவே வேதாங்கங்களாம். எளிதிலே நினைவிலிருத்தற்காகச் சூத்திர வடிவில் இவை இயற்றப்பட்டன எனவே, இக்காலம் (கி. மு. 6 – 4ம் நூற்றாண்டுவரை சூத்திரகாலம் எனப்படும். உபநிஷத போதனைகளின் சாரமாகவுள்ள பிரம சூத்திரங்கள் பாதராயனரால் எழுதப்பட்டன.
வேதங்கள் ஒவ்வொன்றிற்கும் தொடர்பகுதிகளாகப் பிராஹ்மணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷதங்கள் முதலியன உள்ளன. எடுத்துக்காட்டாக, இருக்குவேதத்திற்கு ஐதரேய, கௌசீதகீபிராஹ்மணங்கள், ஆரண்யகங்கள் உபநிஷதங்களிருப்பதைக் குறிப்பிடலாம். ஒரு பகுதி முடிந்து மற்றையது தொடங்குவதில் வரையறையில்லை.
வேதம் எனில், ‘மிகச்சிறந்த அறிவு’ எனப்பொருள்படும். வேதங்கள் யாவும் சுருதி என அழைக்கப்படும். அதாவது மனிதராலன்றி இறைவனாலருளப்பட்டவை. இறைவன் அருள் புரிய இருஷிகள் கேட்டு அறிந்து எழுதினர். இவை மனிதராலே செய்யப்படாதவை என்ற காரணத்தால் ‘அபௌருஷேயம்’ எனவும் அழைக்கப்படும். மேற்குறிப்பிட்டவாறுதான் வைதிகர் இவற்றை நோக்கினர்.
வேதங்களின் காலமும் வரலாற்றியல்பும்
வேதங்களின் காலத்தை நிர்ணயிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது யாதெனில், அவை இயற்றப்பட்டகாலம் (மந்திரகாலம்) வேறு, தொகுக்கப்பட்ட காலம் (சம்ஹிதை காலம்) வேறு என்பதே. இச்சம்ஹிதைகள் பல இருஷிகள் குடும்பங்களிலே பேணப்பட்டன. இதனாற் பலசாகைகள் (சுநஉநளெழைளெ) எழுந்தன. வேதங்களில் இடைச் செருகல்கள் ஏற்டாதவாறு வழிவகைகள் கையாளப்பட்டன. இவை தொகுக்கப்பட்டபின் பாடபேதம் ஏற்பட்டிலது எனலாம். பிரஹ்மணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷதங்கள் வௌ;வேறு காலத்தன@ சிலபகுதிகள் சமகாலத்தன. காலத்தால் முந்திய இருக்கு தேவகாலமே முந்திய வேதகாலம் அல்லது வேதகால முற்பகுதியெனவும் ஏனைய வேதங்கள், பிராஹ்மணங்கள், ஆரண்யகங்கள் உபநிஷதங்கள் காலமே பிந்திய வேதகாலம் அல்லது வேதகாலத்தின் பிற்பகுதியெனவும் வரலாற்றாசிரியர் கொள்வர். இவற்றின் காலம் பற்றிக் கருத்துவேறுபாடுகள் உள. புத்தபிரானும், மகாவீரரும், உபநிஷத காலத்தின் பிற்பகுதியிலே கி. மு. 6ம், 5ம் நூற்றாண்டுகளிலே வாழ்ந்தனர். முந்தியகால உபநிஷதங்கள் பிந்திய ஆரண்யக காலங்கள் சமகாலத்தனவாயிருப்பினும் இவ் இலக்கியவகைகள் திடீரென முகிழ்த்திருக்கமாட்டா. இவ் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் ம~;முல்லர் இருக்குவேதப் பாடல்கள் கி. மு. 1200 – 1000 அளவிலே தோன்றியிருக்கலாமெனவும் பிந்தியவேதங்கள் கி. மு. 1000 – 800 அளவிலே தோன்றியிருக்கலாமெனவும் பிராஹ்மணங்களும் முந்தியகால உபநிஷதங்களும் கி. மு. 800 – 600 வரையில் எழுந்திருக்கலாமெனவும் கூறுவர். ஆனால், பிந்திய வேதங்கள், பிராஹ்மணங்கள், முந்திய உபநிஷதங்கள் ஆகியனவற்றின் காலம் தனித்தனி 200 ஆண்டுகளெனக் குறிப்பிட்டதை முற்றாக ஏற்கமுடியாது. அகச்சான்றும் இதற்கு ஆதாரமளிக்கவில்லை. எனவேதான் கலாநிதி எம். வின்ரெர்நிட்ஸ் என்பவர் வேத இலக்கியத்தின் காலம் பற்றி ம~;முல்லர் கூறியிருப்பதை ஏற்காது இன்னும் அதகமான காலவரையறையினை எடுத்துரைத்துள்ளார். சமணசமய ஸ்தாபனகரான பார்ஷ்வர் கி. மு. 8ம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர். இதைக் கொண்டு நோக்கிய வின்ரெர்நிட்ஸ் இருக்குவேத காலம் சுமார் 2500 அல்லது 2000 தொடக்கம் 1500 வரையில் என்பர்@ வேதகால முடிவு கி. மு. 750 – 500 வரையிலேற்பட்டது என்பர். பேராசிரியர் எ. எல். பசாம் இருக்குவேதகாலம் கி. மு. 1500 – 1000 வரையெனவும், பிந்திய வேதகாலம் கி. மு. 1000 – 500 வரையெனவும் கொள்ளுவர். தொல்லியலறிஞரான ஸ்ருவட்பிகொற் என்பவர் மேற்காசியச் சான்றுகளுடன் ஒப்பிட்டு இருக்குவேதம் கி. மு. 1400 – 1000 வரையில் எழுந்திருக்கலாம் எனவும், அதற்குத் திடமான சான்றுகளில்லை யெனவும் குறிப்பிட்டுள்ளார். மொழிநூல் வல்லுனரான பேராசிரியர் ரி. பறோ. இருக்குவேதப் பாடல்கள் இயற்றப்பட்டுத் தொகுக்கப்பட்ட காலம் கி. மு. 1200 – 1000 வரையில் என்பர். கி. மு. 12 – 9ம் நூற்றாண்டுவரையிலே கங்கைச் சமவெளியில் ஆரியர் வாழ்ந்தமைக்குத் தொல்லியற் சான்றும் உளதெனத் தொல்லியலாய்வாளர் கூறுகின்றனர். சதபத பிராஹ்மணத்திலே பரீ~pத்தின் மகன் ஜனமேஜயனின் தலைநகரான ஆசந்தீவத் கூறப்படுகின்றனர். அதுவே நாகசாஹ்யம் (ஹஸ்தினாபுரம்) ஆகும். பரீ~pத்தின் வழித்தோன்றலான நிக~{வெள்ளப் பெருக்கு ஏற்பட கி. மு. 800 அளவில் இதனைக் கைவிட்டான். இதற்குத் தொல்லியற் சான்றுளது. எனவே, பொதுவாகக் கூறின். இருக்குவேதகாலம் கி மு. 1800 – 1100 வரை யெனவும், பிந்தியவேகாலம் கி. மு. 1100 – 500 வரையெனவும் கொள்ளலாம்.
“வேதசம்ஹிதைகள் பல்வேறு காலத்திய மனித நினைவுகளையும் ஆவணத் தொகுப்புக்களையும் கொண்டவை” இவை திட்டவட்டமான வரலாற்று நூல்களாக இல்லாவிட்டாலும் வரலாறு சம்பந்தமான பல செய்திகள் இவற்றிலோரளவாவதுவிரவிக் காணப்படுகின்றன. சமயச்சார்பான செய்திகளே கூடுதலாக இடம் பெற்றாலும், சமகால அரசியல், பொருளாதாரம் சமூகம், கலாச்சாரம் பற்றிய கருத்துக்களும் வௌ;வேறு அளவில் இடம் பெற்றுள்ளன. வேதங்கள் தொகுக்கப்பட்டபின், நன்கு பேணப்பட்டு வந்தன. எனவே, இவற்றில் இடைச்செருகல் ஏற்பட்டிராது. இதிஹாஸ, பௌராணிக மரபுகளிலும் பார்க்கவேதமரபு மிகக்கவனமாகப் பேணப்பட்டமையினாலே அவற்றிலும் பார்க்க இம்மரபிற்கு வரலாற்று ஆசிரியர்களில் ஒருசாரார் கூடுதலான முக்கியத்துவம் அளித்துள்ளனர். இவை காலத்தால் முந்தியனவாயிருப்பதும், இடைச் செருகல்கள், மாற்றங்கள் இவற்றிலேற்படாதிருப்பதும், இவற்றின் வரலாற்றியல்பை நன்கு வற்புறுத்துவன@ அதிகரிப்பன. சமகாலத் தொல்லியற் சான்றுகளும் வேதஇலக்கியம் கூறுவதை ஒரளவாவது உறுதிப்படுத்துவது இதன் வரலாற்றியல்பிற்குப் பிறிதும் ஓர் உதாரணமாகும். மேலும், பிந்திய காலச் சமய நூல்கள் சிலவற்றிலுள்ள மிகைபாடுகள், கற்பனைக் கதைகள் போன்றவை வேத இலக்கியத்திலே குறைவாகவே காணப்படுகின்றன. குரு, சிஷ்ய மரபுகள் உபநிஷதகாலத்தில் ஒரளவாவது பேணப்பட்டதற்கும் பிருஹதாரண்யக உபநிஷதத்திலே (2.6, 4.6, 6.5) வரும்பெயர்ப்பட்டியல்கள் தக்க சான்றாகும். ஆச்சாரியர் பலரின் பெயர்கள் தாயின் பெயர் வழிவந்துள்ளமை கவனித்தற்குரியது. எடுத்துக்காட்டாக காத்யாயனீ புத்ர, கௌதமீபுத்ர போன்றவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய போக்குப் பிள்ளைவளர்ப்பதிலே தாயின் முக்கியத்தவத்தைக் காட்டுவதாகச் சங்கராச்சாரியர் குறிப்பிடுவர். ஆனால் தாய்வழி உரிமைச் சமூகத்தவரான திராவிடர் போன்றோரின் தொடர்பாலுமிஃது ஏற்பட்டிருக்கலாம்.
மேற்குறிப்பிட்ட நூல்களின் துணைகொண்டு ஏறத்தாழ கி. மு. 1800 – 500 வரையுள்ள காலப்பகுதியில் இந்தியாவில் ஆரியர் வாழ்ந்த இடங்களையும் அவர்கள் மத்தியிலே நிலவிய ஜனக்குழுக்கள் நாகரிக நிலை ஆகியன பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
வேதகாலத்தில் ஆரியர் வாழ்ந்த இடங்களும், ஜனக்குழுக்களும்
இக்காலத்தில் ஆரியரின் குடியிருப்பிடங்களை வரையறுத்தற்குத் துணையாக இந்நூல்களிலே வரும் மலைகள், ஆறுகள், இடங்கள், ஜனக்குழுக்கள், இராச்சியங்கள் முதலியன பற்றிய குறிப்புக்களைக் கவனித்தல் அவசியமாகும். இருக்குவேதத்தில் இமயம் குறிப்பிடப்படுகிறது. வேதங்களிலே குறிப்பிடப்பட்டுள்ள 31 ஆறுகளிலே 25 இருக்குவேதத்திலேயே வருகின்றது. புகழ் பெற்ற நதீஸ்துதியிலே (இ. வே. 10-75) பல ஆறுகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுட்பல சிந்துநதியினைச் சேர்ந்தவை. இதன் கிளைகளான சுதுத்றீ (சட்லஜ்), விபாஸ் (பியஸ்), பருஷ்ணீ (ரவி), அசிக்னீ (சேனாப்), விதஸ்தா (ஜேலும்) ஆகிய ஐந்தும் சேர்ந்து பஞ்சாப் (ஐந்து ஆறு பாயுமிடம்) என்ற பெயரினை இவை பாயுமிடத்திற்கு அளித்துள்ளன. சிந்துவின் மேற்குக்கிளைநதிகளான குபா (கபூல்), க்ருமு, கோமதீ, சுசர்து, சுவேத்யா, போன்றன கவனித்தற்பாலன. சிந்துநதிப் பள்ளத்தாக்கிற்கு வெளியே சரஸ்வதீ, யமுனை, கங்கை, சரயு என்பன. குறிப்பிடப்படுகின்றன. இக்காலத்திலே மிகச்சிறந்த ஆறு (நதீதம, இ. வே. 2. 41. 16) சரஸ்வதி ஆகும். இருக்குவேத காலச் சரஸ்வதி பெரிய ஆறாகக் கடலிற் சங்கமித்தது@ தூய்மையானது (இ. வே. 7. 95. 12) சப்தசிந்து எனும் பதம் இருக்குவேத்திலே வரையறுக்கப்பட்ட ஓரிடத்தினைக் குறித்தது. சிந்துநதியினையும். அதன் கிளைகளையும், சரஸ்வதியினையும் இது குறிக்கும் என ம~;முல்லர் போன்றோர் கருதினர். சிலர் சரஸ்வதிக்குப் பதிலாகக் குபா அல்லது ஒ~ஸ் ஆற்றினைக் கொள்ளுவர். ஆனால் சிந்துவும் அதன்கிளைகளும், சரஸ்வதியும் எனக் கொள்ளுதலே மிகப் பொருத்தமானதாகும். இருக்குவேதகால ஆரியர் கடலினை ஒரளவு அறிந்திருந்தனர் போலும்.
இக்காலத்தில் ஆரியர் பல ஜனக்குழுக்களாகப் பிரிந்துவாழ்ந்தனர். இவர்கள் தமக்குள்ளேயும் ஆரியரல்லாதோருடனும் போர்புரிந்து வந்தனர். பத்து மன்னரின் போர்பற்றிய பாடல்களிலே பல ஜனக்குழுக்கள் குறிப்பிடப்படுகின்றன. இப்போரிலே, பரத ஜனக்குழுவினனான சுதாஸ் வசிஷ்டரின் உதவியுடன் பத்து மன்னரை வென்று வாகைசூடினான். இப்போரில் வெற்றி பரத ஜனக்குழுவிற்கு ஆதிக்க முதன்மையளித்தது. பொதுப்படக்கூறின். வடமேற்கிலே காந்தாரி, பக்த, அலின, பாலனசஸ், விஷாணின் முதலிய ஜனக்குழுவினர் வாழ்ந்தனர். இவர்களுட்சிலர் ஆரியரல்லாதோர் ஆவர். சிந்து பஞ்சாப் ஆகிய இடங்களிலே சிவ, பர்சு, கேகய, விர்சீவந்த், யது, அனு. துர்வச, துருக்யு போன்றோர் குடியேறினர்.
கிழக்கே மத்திய தேசத்திலே திருத்ஸ{, பரத, பூருத, சிருஞ்ஜய ஆகியோரும், அதற்கும் கிழக்கே கீகடரும், மல்வா, ராஸ்புத்தானப் பகுதிகளிலே மத்ஸ்யரும். சேதியரும் குடியேறிவாழ்ந்தனர். தாஸ, தஸ்யுக்கள் ஆரியரின் எதிரிகளாகவும், நாகரிகமுள்ளவராகவும் கூறப்படுகின்றனர். ஆரியர் ஆரியரல்லாத மக்களுடன் உறவாடத் தொடங்கிவிட்டனர். இவ்வாறு ஆரியர் இருக்குவேதகாலத்திலே ஆபுகானிஸ்தானம், வடஇந்தியாவின் மேற்குப்பகுதி ஆகியனவற்றிலே வாழ்ந்தனர் எனலாம். பஞ்சாபே ஆரியரின் நாகரிகமையமாக இலங்கியது. பரத ஜனக்குழுவே புகழ் பெற்ற ஜனக்குழுவாகும். இந்தியாவின் பெயரான பாதரவர்ஷம் இதிலிருந்து வந்ததாகும். சிலர் இப் பெயர்பரத எனும் மன்னன் பெயரிலிருந்து வந்ததென்பர். பரத ஜனக்குழுவினர் மத்தியிலே நிலவிய மொழிவழக்கே பாரதீ என்றழைக்கப்பட்டதாகவும், அதிலிருந்துதான் இந்தியாவைக் குறிக்கும் பாரத எனும் பெயர் வந்ததாகவும் ஒருசாரார் கருதுவர்.
ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது, இங்கு வாழ்ந்த ஆரியல்லாத மக்களுக்கும், வந்தவர்களுக்குமிடையிலே கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்திரனைப்பற்றிய பாடல்களிலிவை மிகத் தெளிவாகக் காணப்படுகின்றன. ஆரியரல்லாத மக்கள் தாஸ, தஸ்யுக்கள் என அழைக்கப்பட்டனர். சிலவகையில் ஆரியரிலும் பார்க்க அவர்கள் நாகரிக நிலையிலே மேம்பட்டவர்கள். திராவிடர், ஆதிஒஸ்ரலோயிட் மக்கள் முதலியோரே ஆரியர் குறிப்பிட்ட தாஸ, தஸ்யுக்கள் எனப் பொதுவாகக் கொள்ளலாம். ‘பணி’ என்போர் செல்வந்தராகவும், வணிகராகவும் ஆரியரல்லாதோராகவும் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களும் மேற்குறிப்பிட்டோர் கூட்டத்தைச் சேர்ந்தோராவர்.
வேதகாலத்தின் பிற்பகுதியில் ஆரியர்பிற இடங்களுக்குப் புலம்பெயர்ந்து செல்வதையும். அவர்களின் ஜனக்குழுக்களில் மாற்றங்களேற்படுதலையும், ஆரியரல்லாத மக்களுடன் முன்னையிலும் பார்க்க நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதையும் காணலாம். இக்காலத்திலே, பஞ்சாப்பிற்குக் கிழக்கேயுள்ள பகுதி முக்கியத்துவம்; பெற்றது. சரஸ்வதி ஆறு குறிப்பிடப் படவில்லை. வங்காளவிரிகுடாக் கடலையும், அராபியக் கடலையும் ஆரியர் நன்கு அறிந்துவிட்டனர். எனவே, கடற்கரையினை யடுத்த பிரதேசத்திலுமவர்கள் குடியேறிவிட்டனர் எனலாம். சதபதபிராஹ்மணத்தில் வரும் ‘ரேவோத்தரஸ்’ நர்மதையெனச் சிலர் கருதுவர். கிரௌஞ்ச என்பது கைலாச மலைப்பகுதியாகும். கௌசீதகீ உபநிஷதத்திலே கூறப்படும் ‘தெற்கு மலை’ விந்தியமலையாகும். ஆசந்தீவத் (ஹஸ்தினாபுரம்) பரீ~pத்தின் மகன் ஜனமேஜனின் தலைநகராகக் கூறப்படுகின்றது. சதாநீர எனும் ஆறு கோசலம். ‘விதேஹ’ அரசுகளும் எல்லையாகக் குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் ஆரியர் வாழ்ந்த ஐந்து இடங்கள் ஐதரேய பிராஹ்மணத்திலே (8.14) கூறப்படுகின்றன. அவையாவன: (அ) மத்தியதேசம் (ஆ) பிராசீதிஸ் (கிழக்குத் திசையில் உள்ள இடம்) (இ) தºpணாதிஸ் (தெற்கே உள்ள இடம்) (ஈ) பிரதீசீதிஸ் (மேற்கேஉள்ள இடம்) (உ) உதீசீதிஸ் (வடக்கே உள்ள இடம்) என்பனவாம். இவற்றின் எல்லைகளைத் திட்டவட்டமாக வரையறுக்க முடியாது. இக்காலத்திலும் ஆரியர் பல ஜனக்குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தனர். ஆனால் பழைய ஜனக்குழுக்கள் சில மறைந்தன. அவற்றுட்சில ஒன்றுபட்டுப் புதிய ஜனக்குழுக்களாகமாறின. புத்தம் புதிய ஜனக்குழுக்களும் சில தோன்றின. இருக்குவேத காலத்திலே பஞ்சாபில் பிரதான ஜனக்குழுக்களாக விளங்கிய பூரு, அனு, துருக்யு, யது, துர்வச முதலியன முக்கியத்துவம் இழந்தன. பூரு, பரத ஆகிய இரண்டும் குருஜனக் குழுவுடன் ஒன்றுபட்டனர். இவர்களுடன் பஞ்சாலரும் சேர்ந்து பிரபல்யமாய் விளங்கினர். ஆனால், பரத மன்னரின் புகழ்மங்கவில்லை. பரத தௌஹ்சந்தியும், சாத்ருஜித்தும் சிறந்த அரசராகவும், அஷ்வமேதம் (குதிரை வேள்வி) செய்தோராகவும் குறிப்பிடப்படுகின்றனர். அதர்வவேதம் குரு மன்னரான பரீºpத்பற்றியும், அவனின் இராச்சியம் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. குரு – பஞ்சால மன்னர் சிறந்த யாகம் செய்தனர். ஏனைய மன்னருக்கு முன்மாதிரியாக வேள்வி இயற்றினர். திக்குவிஜயம் செய்தனர் குரு – பஞ்சாலப்பகுதியிலே சிறந்த மொழிவழக்கு நிலவிற்று. இப்பகுதியிலேயே வேதசம்ஹிதைகள், பிராஹ்மணங்கள் திட்டவட்டமாக நிலைபெற்றன. காசி, கோசலம், விதேஹம் ஆகிய இராச்சியங்கள் இக்காலத்தின் பிற்பகுதியிலேதான் (உபநிஷத காலப்பகுதியிலே) பிரபல்யமடைந்தன. எடுத்துக்காட்டாக விதேஹமன்னராக ஜனகன் தத்துவ ஆசிரியராகவும், தத்துவஞானிகளின் ஆதரவாளனாகவும் விளங்கினான். அங்க, மகத, வங்க ஆகிய இடங்களை ஆரியர் அறிந்திருந்தாலும் இவை முற்றிலும் ஆரிய மயமாகவில்லை. மேற்கிலே, சிந்து, பஞ்சாபில், நீச்ய, அபாச்ய, பாஹீக, அம்பஷ்;ட ஆகியஜனக்குழுக்களும், வடக்கிலே கஷ்மீர், வடமேற்கு எல்லையின் மேற்பகுதியில் உத்தரகுரு, உத்தரமத்ர, மூஜவந்த், மஹாவிர்ஷ, காந்தாரி, பாஹ்லிக, கேசின், கேகய, காம்போஜ என்போரும் வாழ்ந்தனர்.
ஆரிய கலாச்சாரம் பரவியவாற்றினைச் சதபத பிராஹ்மணத்தாலும் (14.1.10) அறியலாம். விதேஹ அரசனான விதேஹமாடவன் தன் புரோகிதரான கௌதமராகுகணவொடு சேர்ந்து, சரஸ்வதி அற்றங்கரையிலிருந்துவேள்வித் தீயினைத் கிழக்குத்திசை யாகச் சதாநீர நதிக்கு ஊடாகக் கொண்டு சென்று கோசலத்தை அடைந்து அங்கு குடியிருப்பு ஒன்றினை ஏற்படுத்தினான். இதனைத் தனது ஜனக்குழுப் பெயரால் (விதேஹ) அழைத்தான். யாதவர் (சத்வந்த்) ஆரிய கலாச்சாரத்தைத் தென்மேற்கிலே, ராஜ்புத்தானம், மல்வா, குஜராத், தக்கணம் முதலிய பல இடங்களிலே பரப்பினர் ஆரியரல்லாத மக்களோடு எளிதில் இணக்கமுற்ற ஒன்றுபடலாயினர் இதனாலே பிற்கால நூல்களான இதிஹாஸங்கள், புராணங்கள் இவர்களை அசுரர் என அழைத்தன.
விந்தியமலையினைத் தாண்டித் தெற்கேயும் ஆரியர் இக்காலத்திலே குடியேறினர் சதபத, ஐதரேய, பிராஹ்மணங்களிலே (கி. மு. 1000ம் அளவிலே) சத்வந்த், விதர்ப்ப, நிஷாத, குந்தி என்போர் கூறப்படுகின்றனர். மேலும், ஐதரேய பிராஹ்மணத்திலே ஆரியர், ஆரியரல்லாதார் சேர்க்கையினால் உண்டான சாதியினரும், மிலேச்சரும் குறிப்பிடப்படுகின்றனர். இதிலே ஆந்திரர், புந்திரர், சபரர், புளிந்தர், மூதிபர் ஆகியோர் தாஸ்யுக்கள் எனவும், ஆரியர் குடிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் விஷ்வாமித்திரரின் முதல் 50 பிள்ளைகளின் வழித்தோன்றல்கள். தகப்பனாரின் சாபத்தினால் இந்நிலையடைந்தனர். ஆந்திரர் பிற்காலத்திலே, கோதவரி, கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்தனர் ஆனால் அக்காலத்தில் இப்பகுதியிலோ, இதற்கு வடக்கேயோ வாழ்ந்திருப்பர். புந்திரர் வங்காளத்திலும், சபரர் விசாகப்பட்டினத்தை அடுத்துள்ள குன்றுகளிலும் வசித்திருப்பர். புளிந்தர் மல்வாவிற்குத் தென்கிழக்கேயும், மூதிபர், ஹைதரபாத் பகுதியிலும் வாழ்ந்திருப்பர். கி. மு. 6ம் நூற்றாண்டளவிலும், அதற்குப் பின்னும் எழுந்த வைதிக சூத்திரங்கள், காலத்தால் முந்திய பௌத்த புனித நூல்கள் (கி. மு. 5 – 4ம் நூற்றாண்டளவில்) வடமொழி இதிஹாஸங்கள், புராணங்கள் ஆகியன ஆரியர் படிப்படியாகத் தெற்கே தென்னந்ததம் வரை சென்று தமது நாகரிகத்தினைப் பரப்பியவாற்றினை ஓரளவு குறிப்பிடுகின்றன. மேலும், இதிஹாஸங்களிலும், புராணங்களிலும், தமிழிலக்கியத்திலும் வரும் அகத்தியர் பற்றிய கதைகள் முக்கியமாகக் குறிப்பிடற்பாலன. அவர் விந்திய மலையினை அடக்கியமை, இவ்வலன், வாதபி ஆகிய இரு அசுரரைக் கொன்றமை, கடல் நீர் முழுவதையும் குடித்தமை ஆகியன குறிப்பிடற்பாலன. அகத்தியர் ஆரிய நாகரிகத்தின் பிரதிநிதியாகவே கொள்ளப்படுகிறார். முன்னிரண்டு கதைகளும் ஆரியர் விந்திய மலையினைக் கடந்து தெற்கே வந்து வெற்றிகரமாகத் தமது நாகரிகத்தினைப் பரப்புதலையும், மூன்றாவது கதை அவர்கள் பெருங்கடல்களைத் தாண்டி இந்தியாவுக்கு வெளியே ஈழம். தென்கிழக்காசியா ஆகிய இடங்களுக்குச் சென்று நாகரிகம் பரப்புதலையும் கருவாகக் கொண்டுள்ளன என வரலற்றாசிரியர் பொதுவாகக் கொள்ளுவர். இக் கதைகள் பிற்காலத்திலெழுதப் பட்டவையாயினும், முற்பட்ட கால வரலாற்று நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டுள்ளன என்பதே அறிஞர் முடிபு.
எனவே, பிந்திய வேதகாலத்தில், ஆரியர் படிப்படியாக வட இந்தியாவின் மத்திய பகுதிகள், கிழக்குப் பகுதிகள், தென்மேற்குப் பகுதிகள் ஆகியவற்றிற்குடியேறி, ஆரியரல்லாத மக்களுடனும் ஒன்றுபட்டு இந்திய பண்பாட்டினை வளர்க்கத் தொடங்கினர் எனலாம். மேலும், அவர்களிலே, துணிகரமானோர் ஒரு சாரார் தெற்கே, தக்கணம், தென்னிந்தியா வரை சென்றுவிட்டனர். இக்கால முடிவில் ஒரு சிலர் கடல்கடந்து ஈழத்திற்கும் ஆரிய கலாச்சாரத்தைக் கொண்டு சென்றனர். இக்காலத்தில் ஆரியரின் பிரதான குடியிருப்பிடம் வட இந்தியா. ஆரிய அரசுகளின் எல்லைகளில் ஆரியரல்லாத மக்களின் அரசுகளிருந்தன. ஆனால் ஆரியரின் மிகப் பிரதான கலாச்சாரமையமாகிய ஆரியவர்த்தம் கிழக்கே காலகவனத்தையும். தெற்கே பாரியாத்திராவையும், மேற்கே ஆதர்சவினையும், வடக்கே இமயமலையினையும் எல்லைகளாகக் கொண்டுள்ளதென (சுமார் கி. மு. 6-5ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த) பௌதாயன தர்ம சூத்திரம் (1-2-10) கூறுகிறது. இவ்விடத்தில் ஆரியர், ஆரியரல்லாதாரின் குறிப்பாகத் திராவிடரின் கலாச்சார சங்கமத்தினால் இந்தியப் பண்பாடு உருவாகிப்பிற இடங்களுக்கும் பரவிற்று. வைதிகப் பண்பாட்டின் மையம் இதுவேயாம்.
கங்கைச் சமவெளிக்கு ஆரியர் எப்பொழுது வந்தனரோ, அப்போது அவர்கள் இந்திய வரலாற்றிலே நிரந்தரமான பதிவினை ஏற்படுத்துவர் என்பது திண்ணமாயிற்று. இந்தியாவின் மிகப் பிரதான பகுதியிதுவே. வரலாறு கண்ட அகில இந்தியப் பேரரசுகளும் முக்கியமான சமய, பண்பாட்டு இயக்கங்கள் பலவும் இங்கேதான் தோன்றிப் பிற இடங்களுக்குப் பரவின. கங்கை புனித ஆறாக விளங்குகிறது. அது பாயும் சமவெளி இந்தியாவின் ஒருபிரதான அல்லது பிரதான அரசியல், சமய, பொருளாதாரமையமாகவும் விளங்கி வந்துள்ளது. அங்கு ஆரியர் வருகையும், ஆதிக்கமேற்படுத்துதலும் மேற்குறிப்பிட்ட உண்மையினை வலுப்படுத்துவன.
அரசியல் நிலை
இருக்குவேத காலத்திலே, பெரும்பாலும். முடியாட்சி நிலவிற்று. ஜனக்குழுக்கள் வாழ்ந்த கிராமங்கள் ஒன்று சேர்ந்து சிறு சிறு அரசுகளாயின. அரசின் தலைவனான மன்னனைக் குறிக்கும் ‘ராஜன்’ என்ற பதம் பல பாடல்களிலே வருகின்றது. பரத மன்னனான சுதாஸிற்கு எதிராகப் பத்து மன்னர் போர் செய்தனர். தானஸ்துதிப் பாடல்களில், பல மன்னர் குறிப்பிடப்படுகின்றனர். ஆரியரல்லாத மக்களிடையிலும், முடியாட்சி நிலவியதை இலிபிச, சுமுறி, போன்ற தாஸ மன்னரைப் பற்றிய குறிப்புகளால் அறியலாம். ஒவ்வொரு ஜனக்குழுவிற்கும் தனிப்பட்ட மன்னனிருந்தான். ஆரியர் காலத்திலே தமக்குள்ளேயும் ஆரியரல்லாத மக்களோடும் பல வேளைகளிற் போர் செய்து வந்தனர். போரிற் மக்களை அழைத்துச் செல்லத் தலைவன் தேவை. இத்தலைவனே நாளடைவிலே மன்னனானான். “ஜனக் குழுத்தலைவன் மன்னனாகவும், அரசனாகவும் விளங்குவதற்குப் போரே காரணம். என வில்டுரண்ட் என்பவர் கூறியுள்ளது வேதகாலத்திற்கும் பொருத்தமானது.
கண, கணபதி போன்ற பதங்கள் இதிலே காணப்படுவதாலே, சிறிதளவு குடியரசுகளும் நிலவின எனலாம். இக்கால மன்னன் ஜனக்குழு நிலையிலே தான் காணப்படுகிறான். மன்னனின் பெயருடன் ஜனக் குழுப் பெயரும் வருகின்றது. பேரரசனைக் குறிக்கும் சாம்ராட் எனும்பதமும், உலகம் முழுவதையும் ஆளும் மன்னரைக் குறிக்கும் விஸ்வஸ்ய புவனஸ்ய ராஜா எனும் பதங்களும் வருகின்றன. ஆனால் இருக்குவேத மன்னரைப் பொறுத்த வரையிலிவை எந்த அளவிற்குப் பொருத்தமானவை எனத்திடமாகக் கூறமுடியாது.
பரத ஜனக்குழுவைச் சேர்ந்த திருத்ஸ{ மரபில் வந்த சுதாஸ் விஷ்வாமித்திரரின் தூண்டுதலினாலே, தனக்கு எதிராக வந்த பத்து மன்னர்களை ரவி ஆற்றங்கரையிலே வென்று பெரும் புகழ் பெற்றான். (இ. வே. 7, 18, 33, 83) இவ் அரசன் வென்றோரிலே பூரு, யது, துர்வச, அனு, துருஹ்ய ஆகிய பிரபல்யமான ஜனக் குழுக்களுமிடம் பெற்றிருந்தன. சுதாஸ்தாஸ மன்னனான பேத(ன்) தலைமையிலே வந்த அஜஸ், சிக்ருஸ், ய~{ஸ் ஆகியோரை யமுனை ஆற்றங்கரையிலே வென்றுவாகை சூடினான். எனவே இவனின் வெற்றிகள் முதன்மையான ஆதிக்க நிலையினைச் சமகாலத்திலோரளவு ஏற்படுத்தின. இத்தகைய சூழ்நிலையிலே சாம்றாட் எனும் பதம் கவனித்தற்குரியது. பத்துமன்னர் (தசராஜ்ஞ) போர் இருக்குவேத – கால ஜனக்குழுக்களின் போராட்டங்களையும் அவற்றாலே மேலாதிபத்யம் குறிப்பிட்ட சில பகுதிகளிலேற் படுதலையும் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
மன்னன் பெருமதிப்பும், மேன்மையும் உள்ளவனாக இலங்கினான். பாடல்களிலும் சிறப்புப் பெற்றுள்ளான்@ பெரியமாளிகையிலே வசித்தான். போலும் ஆனால் தெய்வீகத் தன்மையுள்ளவனாகக் கருதப்பட்டிலன். திரஸதஸ்யு என்பவன் மட்டும் புறநடையாக. அரை குறையான தெய்வமாகக் கருதப்பட்டான்.
அரசுரிமை வழி வழியாகவே நிலவிற்று. இதனை எடுத்துகாட்டாக, பூரு, ஜனக்குழுவிலே, துர்க்ஹ, கீரி~pத், திரஸதஸ்யு, என்போர் ஒருவர் பின் ஒருவராக ஆண்டதினால் அறியலாம். ஆனாலவதியமாயின் குடிகள் அரச குடும்பத்திலிருந்தோ, பிரபுக்கள் குடும்பத்திலிருந்தோ மன்னனைத் தெரிவு செய்தனர்.
அரசன் மட்டற்ற அதிகாரங்கள் கொண்டவனாக இருந்திலன். ஜனக் குழுமன்றங்களான சபா, சமித் என்பன அரசியலிலே முக்கிய பங்கு பற்றின. ஆனாலிவற்றின் உறுப்பினர் கடமைகள் பற்றி அதிகம் அறிய முடியாது. இதனால், அறிஞரிடையிலிவை பற்றிக் கருத்து வேறுபாடு உளது. சபா கிராமமன்றம் எனவும், சமிதி ஜனக்குழுவின் பொது மன்றம் எனவும் சிம்மர் எனும் அறிஞர் கருதுவர். சபா சமூகக் கூட்டங்கள் கூடும் மையமாகமட்டுமன்றி மன்றம் கூடும் இடமெனவும், சமிதி ஜனக்குழுவின் அலுவல்களைக் கவனிப்பதற்கான மக்கள் மன்றமெனவும் கீத் கூறுகிறார். சமூக, அரசியல் நோக்கங்களுக்காகக் கூடும் கிராமமன்றமே சபா எனவும், சிலவேளைகளிலே சமூகக் கூட்டத்தினைக் குறிப்பிட்டாலும் மத்திய அரசாங்கத்திலிருந்த அரசியல் மன்றமே சமிதி எனவும் ஒரு அறிஞர் கருதுவர் வேதகால ஆரியரின் சிறப்பான பொதுமக்கள் மன்றமே சமிதி எனலாம். சபா மன்னனின் ஆலோசனைக் கழகம் எனவும், வேறொரு அறிஞர் கூறுவர். சமிதியிலே குறிப்பிட்ட ஜனக்குழுவின் பிரமுகர் பலர் இடம் பெற்றனர் எனவும், ஹோமரிய மன்றங்கள், ரோமானிய கொமிதிய, சென்சூரிதிய. தியூத்தோனிய மன்றங்கள் போன்று இதுவும்; இராணுவ இயல்புடையதெனவும் பி. கே. மஜும்தார் குறி;ப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும். மன்னரின் சர்வாதிகாரப் போக்கிற்கு இவை தடையாக விளங்கின. மன்னனுக்கும் மன்றங்களுக்குமிடையிலே மட்டுமன்றி மன்ற உறுப்பினர் மத்தியிலும் இணக்கம், ஒற்றுமை நிலவவேண்டுமென வற்புறுத்தப்பட்டது. இருக்குவேத இறுதிப்பாடல் இத்தகைய ஒற்றுமையினை ‘ஒன்று கூடுங்கள்@ சேர்ந்து பேசுங்கள்@ ஏக மனதாயிருங்கள்’ என அழகாக எடுத்துக் கூறுகின்றது.
மன்னனின் வரம்பற்ற அதிகாரம் புரோஹிதரின் செல்வாக்கு, பெரு மதிப்பு ஆகியனவற்றாலும் குறையும். இவர் மன்னனி;ன் ஆத்மீகவாழ்விற்குத் தேவையான சமயக்கிரியைகள் செய்வதுடன் அவனுக்குப் போரிலே வெற்றி கிடைத்தற்கான கிரியைகள், மாந்திரிகவிதிகளையும் செய்வர்@ ஓதுவர். அவனுக்கு ஆலோசனை கூறுவர்.
குடிகளைப்பாதுகாப்பதே அரசனின் புனித கடமையாகும். அதற்குப் பதிலாக அவன் குடிகளின் ஆதரவு, பற்று முதலியனவற்றினை எதிர்பார்த்தான். பலி எனும் பதம் இருக்குவேதத்திலே வரி அல்லது கடவுளுக்கு அளிக்கும் அமுது எனப் பொருள்படும். தொடக்கத்திலே மக்கள் தமக்குப் பாதுகாப்பினை அளிக்கும் வேந்தனுக்குக் கைமாறாகத் தாமாகவே கொடை வழங்கினர். இக் கொடை பின்னர் ஒழுங்கான வரியாயிற்று. இக் காலத்திலே திட்டவட்டமானவரி முறை நிலவவில்லை. வரியினைப் பொருளாகவே மன்னன் பெற்றான் எனலாம். பொதுவாக, நிலங்கள் மன்னனுக்கு உரியனவல்ல.
இக்கால மன்னன் போர்த்தலைவனாகவே விளங்கினான். மன்னன், பிரபுக்கள் தேர்களிலும், பொது மக்கள் நிலத்தினின்றும் போர் புரிந்தனர். போர் அணி வகுப்புக்கள் பற்றிக் கூறுகின்றது. போர்ப்பறைகள் கொடிகள் இடம் பெற்றன. அம்பு, வில்லு, ஈட்டி, கோடரி, வாள், கவண் முதலியன போரிற் பயன்படுத்தப்பட்டன.
குதிரை பூட்டிய தேர்ப்படையும், காலாட்படையும் குறிப்பிடத்தக்கன. நிலையான படை இருந்திலது. ஆரியரின் வெற்றிகளுக்கு எளிதாக விரைவிற் செல்லும் குதிரை பூட்டிய தேர்ப்படை, ஒரு முக்கிய காரணமாகும். பிற இடங்களை முற்றுகையிடும் போது தீ வைத்தனர்@ பகைவரின் கோட்டைகளைத் தகர்த்தனர். இருக்கு வேதத்தில் வரும் ஹரியூபிய ஹரப்பா என அறிஞர் சிலர் கருதுவர்.
இக்கால நிருவாக அமைப்பிலே. கிராமத்தலைவரான கிராமணி, படைத்தலைவரான சேனானீ, சமய ஆலோசகரான புரோஹிதர் குறிப்பிடத்தக்க அதிகாரிகளாவர். ஒற்றர்கள் நாட்டிலே நிகழ்வனவற்றைப் பற்றி மன்னருக்கு அறிவிப்பர். நீதிபரிபாலனம் ஒரளவு நடைபெற்றது. மன்னரே நீதியின் ஊற்று, குற்றவியல், குடியியல் (சிவில்) வழக்குகள் விசாரிக்கப்பட்டுத் தீர்க்கப்பட்டன.
வேதகாலத்தின் பிற்பகுதியிலே, ஆரியருடைய அரசியல் நிலைகளிலே மாற்றங்களேற்படலாயின. முந்திய வேதகால அரசியல் நிலையின் சில அம்சங்கள் தொடர்ந்து நிலவின. முடியாட்சியே தொடர்ந்து நிலவிற்று. குடிகளின் விருப்பம், தேர்வு, அரசரின் குணாதியங்கள் என்பன மன்னரைத் தெரிவுசெய்தலிலே கவனிக்கப்பட்டன. அரசன் தெய்வீகத் தன்மை வாய்ந்தவன் என்ற கருத்துப் பொதுவாக நிலவிற்று. இக்கருத்து ஏற்கனவே இருக்குவேதத்திலே தொனித்தாலும், இக்காலத்திலே, வாஜபேஜ, ராஜசூய வேள்விகளை வேந்தன் செய்விப்பதால். மன்னன் பிரஜாபதியின் வடிவமாகக் காட்சியளிக்கிறான். எனவே, அவன் தனியாகவே பலரை ஆளுகிறான்” எனச் சதபதபிராஹ்மணம் கூறும்.
அரசமுறையிலே, தேர்தல் தெய்வீகத்தன்மை முதலியனவற்றுடன் ஒப்பந்தக் கோட்பாடும் (வுhநழசல ழக ஊழவெசயஉவ) ஒரளவு தொனிப்பதாகப் பேராசிரியர் ஆர். சி. மஜும்தார் குறிப்பிட்டுள்ளார். இக் காலத்திய கோன்மையின் தாராண்மைக் கருத்துக்களை ஒரளவு யஜுர் வேதத்திலே காணலாம். புரோஹிதர் மன்னனுக்கு மகுடாபிஷேகம் நடைபெறும் போது கூறுவதாவது.
“மன்னராக நீர் இன்று தொடக்கம் வலியோரையும் மெலியோரையும் பாரபட்சமின்றி நடத்துவீராக. மக்களுக்கு நன்மை புரிவதிலேயே மிகவும் முயற்சிப்பீராக யாவற்றிற்கும் மேலாக நாட்டினைத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுவீராக” என்பதாம் இதே, வைபவத்திலே மன்னன் தான் தவறு இழைத்தால் தனக்குப் பிற்சந்ததி அற்றுப் போவதாக எனத்தான் சத்தியம் செய்யும் போது கூறுகிறான். ஆகவே, இந்திய மன்னர் முற்றான கடுங்கோன்மைவாதிகள் அல்லர்” எனப் பேராசிரியர் மஜும்தார் வற்புறுத்தியுள்ளார்.
பிந்திய வேதகாலத்தில் ஆரியர் பல திசைகளிலும் வெற்றிகரமாக முன்னேறினர். பெரிய அரசுகள் தோன்றின. இவற்றாலே, மன்னரின்; மாட்சிமை, அதிகாரம் முதலியன அதிகரித்தன. அவர்கள் அஷ்வமேதம், வாஜபேயம் போன்ற பெருவேள்விகளை நடத்தினர். ஏகாட், சார்வபௌம போன்ற விருதுப் பெயர் தரித்தனர். சிலர் ஐந்திரமஹாபிஷேகமும் செய்தனர்.
முடியாட்சி வழிவழியாகவே நிலவி வந்தது. பத்துத் தலைமுறைக்கு (தச – புருஷம் - ராஜ்யம்) ஆளப்பட்டு வந்த இராச்சியம் பற்றியும் குறிப்பு உளது. சில வேளைகளிற் குடிகளே அரசனைத் தெரிவு செய்தனர். (அ. வே. 19-3-4) நாடுகடத்தப்பட்ட அரசர் திரும்பவும் ஆட்சி புரிந்தமை பற்றிய குறிப்பு உண்டு. அரசர் ஆதிக்கம் வலுப்பெற்றாலும், குடிகள் சீறின், பல தலைமுறைகளாக ஆண்டுவந்த மன்னனும் பதவி இழந்தமையினைப் பத்துத் தலைமுறையாக ஆண்டு வந்த சிருஞ்ஜய மன்னனான துஷ்டரீது பவும் சாயன நாடுகடத்தப்பட்டமையினால் அறியலாம்.
கணராஜ்யங்கள் அல்லது குடியரசுகள் ஆரிய கலாச்சார மையத்தின் எல்லைகளில நிலவின. சபா, சமிதி ஆகிய தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வந்தன. அதர்வ வேதத்திலே மன்னன் “பிரஜாபதியின் இரு புத்திரிகளான சபாவும், சமிதியும் எனக்கு இடைவிடாது உதவி புரிவீர்களாக” என வேண்டுகின்றான். சபாவிலே நீதி சம்பந்தமான விடயங்களும் கவனிக்கப்பட்டன. “சபா” முதல்வர் சபாபதி என அழைக்கப்பட்டார். சபாவிலே பொதுமக்கள் கூட்டங்கள் களியாட்டங்கள் நடைபெற்றன எனலாம். சமிதியிலே பெரும்பாலும் அரசியற் கொள்கைகள், சட்டங்கள் முதலியன உருவாக்கப்பட்டன.
ஆனால், காலப்போக்கில், மன்னனின் அதிகாரம் அதிகரிக்கவே, அலுவலகப் பதவணிக் குழுவினர் தோன்றினர். இதன் விளைவாகப் பொது மக்களின் மன்றங்கள் முக்கியத்துவம் இழந்தன. சமிதி முற்றாக மறைந்தது. சபா அரசனுடைய அவையாக மாறிற்று.
அரசருக்கு உதவியான அதிகாரிகளிலே. புரோஹிதர். சேனானீ, கிராமணீ, பாகதூத (வரி சேகரிப்பவர் அல்லது உணவு விநியோகம் செய்பவர்), சூத (தேர்ச் சாரதி), சங்கிரஹீதிர் (பொருளாளர்), அ~ர்வாய (சூதாட்ட மேற்பார்வையாளர்), த~ன் (தச்சன்), ரதகார (தேர் செய்பவன்), ஸ்தபதி (நீதிபதி அல்லது தேசாதிபதி) முதலியோரைக் குறிப்பிடலாம். இவர்களிலே கடைசியாகக் குறிப்பிட்டவரைத் தவிர்ந்த ஏனையோர் ரத்னின் என அழைக்கப்பட்டனர். இவர்கள் ராஜசூயத்தில் இடம் பெற்றமையிலிருந்து, இவர்களின் முக்கியத்துவம் வெள்ளிடைமலை.
புரோஹிதர் செல்வாக்கு ஒரளவு மேம்பட்டு நிலவியது. பிருஹதாரண்யக உபநிஷத்திலே (1-4-12) மன்னருடைய அதிகாரமும் பிராமணரிலிருந்து தோன்றியதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும், மன்னரின் அதிகாரம் அதிகரித்ததேயன்றிக் குறையவில்லை. அரசன் தொடர்ந்து பலி (வரி) பெற்று வந்தான். பாக என்ற சொல் பிற்கால இந்திய அரசுகளில் சேகரிக்கப்பட்ட வரியினைக் குறிக்கும் சொல்லாகும். இச் சொல், இக்காலத்திலே வழங்கத் தொடங்கிவிட்டது. வரிசேகரிப்பவர் (பாகதூத) ஒரு முக்கியமான அதிகாரியாவர். பொதுவாகப் பிற்காலத்திலே குடிகளின் வருமானத்தில் ஆறிலொரு பகுதி பாக என அழைக்கப்பட்டது அதன் விகிதம் குறைந்தும், கூடியுமிருந்ததைப் பிற்காலத்திய அர்த்த சாஸ்திரம் போன்ற நூல்களால் அறியலாம்.
அரசன் தானே போருக்குத் தலைமைதாங்கி வந்தான். முக்கியமான தண்டனை அதிகாரியாகவும் அரசரே இலங்கினார். அவனுக்கு உதவியாகப் பல அதிகாரிகளிருந்தனர். கிராமத்தில் ஏற்படும் சிறு பூசல்களைக் கிராம்யவாதிகள் தீர்த்து வைப்பர். கற்றவியல், குடியியல் குற்றங்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அங்கக் குறைப்பு, கடுந்தேர்வு (ழுசனநயட) போன்றனவும் விதிக்கப்பட்டன.
தருமம் நன்கு வற்புறுத்தப்பட்டது. தருமமே கொடுங்கோல் வேந்தனைத் தண்டிக்கும். “தருமமே~த்திரியருக்குப் பலமளிக்கும் எது தர்மமோ அதுவே சத்தியம். அரசருமிதற்கு உட்பட்டவராவர் எனப் பிருஹதாரண்யக உபநிஷத் கூறும். (1-4-14)
வேதகாலச் சமய தத்துவ நிலை
ஆரியருடைய சமயம் பற்றிய பல அம்சங்களை வேத இலக்கியத்தில் ஒரளவு அறியலாம். கர்ப்பமாகிய காலம் தொட்டு மரணம் வரையும் ஆரியரின் வாழ்க்கையிலே சமயம் முக்கியமான இடம்பெற்றிருந்தது. இருக்குவேத காலச்சமய நிலைக்கும், பிந்திய வேத காலச் சமயநிலைக்குமிடையிலே வேறுபாடுகளிருந்தன. பல நூற்றாண்டுகளிலே பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகவே இருக்குவேதம் விளங்குகிறது. இதில் ஆதி மக்களின் சமய நம்பிக்கைகள் காணப்படுவதிலே வியப்பில்லை. ஆதி மனிதனின் சமயம் வளர்ச்சி அடைவதை இங்கும் காணலாம்.
இக்கால ஆரியர் பிராதானமாகத் தேவர்களை (லத்தீன் - தியுஸ் - ஒளியுள்ளவற்றினை) வணங்கினர். இவர்கள் இயற்கையின் பல்வேறு அம்சங்களைக் கண்டுவியப்புற்றனர். உஷா, சூரியன், அக்கினி (தீ) முதலியோர் பற்றிய பாடல்களில் இயற்கையின் நலத்தினை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர் என்;பதை உணரலாம். இத்தெய்வங்களுக்கு மனிதப் பண்புகளேற்றிக் கூறினர். இவர்களுடன் இருஷிகள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். இந்திரன், வருணன் போன்ற தெய்வங்களின் இயற்கை அம்சங்களைத் தெளிவாக அறிய முடியாதுள்ளது. ஒரு தெய்வத்தின் விருதுப் பெயர் அத்தெய்வத்தின் ஒர் அம்சத்தினைக் குறித்துப் பின் நாளடைவிலே தனித் தெய்வத்தினையும் குறித்தது. எடுத்துக்காட்டாக, சவிதிர் சூரியனின் ஒரம்சமான ஊக்குவித்தலைக் குறித்து நாளடைவிலேதனித் தெய்வமாயிற்று. பல தெய்வ வணக்கம் நிலவிற்று. ஆனால், ம~;முல்லர், இருக்குவேத காலச் சமயத்தினை “தனனோதீஸம்” என வர்ணித்துள்ளார். அதவாது, “ஒரு நேரத்தில் ஒரு தெய்வமே பெருந் தெய்வமாகக் கருதப்படும். பிறிதோரிடத்தில், இதே தெய்வத்திலும் பார்க்க வேறொரு தெய்வம் உயர்ந்த நிலையில் உள்ளதாக வணங்கப்படும். (வுhந டிநடநைக in iனெiஎனைரயட பழனள யடவநசயெவiஎநடல சநபயசனநன யள வாந hiபாநளவ) எல்லாத் தெய்வங்களையும் ஒன்று சேர்த்து. “விஸ்வே தேவா” என வணங்கினர். இருக்குவேதத் தெய்வங்கள் 33 எனக் கூறப்படும். இத் தெய்வங்கள் உலகத்தின் மூன்று பிரிவுகளிலும். உள்ளனர். பொதுவாக நன்மையே புரிவர். இத்தெய்வங்களை அவர்கள் வீற்றிருக்கும் இடம் நோக்கி யாஸ்கர் (கி. மு. 6ம் நூ. அளவில்) மூன்று பிரிவாக வகுத்துள்ளார்.
முதலாவதாக, வானம், வருணன். சூரியன், விஷ்ணு, உஷா போன்ற விண்ணுலகத் தெய்வங்களைக் குறிப்பிடலாம். இரண்டாவதாக, இந்திரன், ருத்திரன், மருத்ஸ், பர்ஜன்ய முதலிய வளி மண்டலத் தெய்வங்களையும், இறுதியாகப் பிருதுவீ, அக்கினி, சோம போன்ற பூவுலகத் தெய்வங்களையும் குறிப்பிடலாம். இத் தெய்வங்களில் இந்திரன், அக்கினி, சோம என்போரே மிகமுக்கியமானவர். இருக்குவேத்தில் 25 விகிதப் பாடல்கள் இந்திரனைப் பற்றியவை. போர் புரிந்து வெற்றிகரமாக முன்னேறி வந்த ஆரிய சமுதாயத்திலே போர்த் தெய்வமான இந்திரன் முக்கியத்துவம் அடைந்ததில் வியப்பில்லை. இந்திரனுக்கு அடுத்தபடியாக அக்கினியே பிரதான தெய்வமாகும். குளிர்வலயத்தில் வாழ்ந்த மக்களுக்குத் தீயின் முக்கியத்துவம் வெள்ளிடை மலை. வைதிக சமயக்கிரியைகளில் இன்றும் தீவழிபாடு தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றது. தீவணக்கம் இந்தியாவுக்கு வந்த ஆரியர் மத்தியில் மட்டுமன்றிப் பழைய இரானியர் கிரேக்கர் உரோமர் முதலிய பிற ஆரியர் மத்தியிலும் நன்கு நிலவியது.
இப்பிரபஞ்சத்திலுள்ள ஒழுங்கு ருத (சுவய) என அழைக்கப்பட்டது. சிரத்தா (நம்பிக்கை) மன்யு (கோபம்) போன்ற பண்புப் பதங்களும் தெய்வீகத் தன்மை பெற்றன. பல தெய்வ வணக்கம் நிலவிய போதிலும் எல்லாம் ஒரே பரம்பொருள் எனும் கருத்தும் நிலவிற்று. இவ் ஏக தெய்வ வணக்கம் நிலவியதனை “ஏகம் ஸத் விப்ரா பஹ{தா வதந்தி (இ வே. 1. 164. 46) உண்மைப் பொருள் ஒன்றே@ ஞானிகள் பலவாறு கூறுகின்றனர். அதாவது, இதனை, அக்கினி, மாதரிஷ்வன் எனக் கூறுவர்” என்பதால் அறியலாம். மேலுமிக் கருத்து ‘எங்களின் பிதா, சிருஷ்டிகர்த்தா விதாதா, (ஒழுங்கு படுத்துவர்) ஆகிய இறைவன் உலகம் அனைத்திலுமுள்ள நிலைகளையும், பொருட்களையும் அறிபவர்@ அவர் பற்பல தெய்வங்களைத் தாங்கி நிற்கும் ஒரேயொருவர்” என இருக்குவேதம் (10. 82. 3) யஜுர் வேதம் (17-27) அதர்வவேதம் (2. 1. 3) முதலியன வற்றிலே வருவதும் குறிப்பிடற்பாலன.
காலம் செல்ல, ஆரியர் உலகம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இருக்குவேத காலத்தின் பிற்பகுதியிலே தோன்றிய சில பாடல்கள் இத்தகைய சிந்தனைகளைப் பிரதிபலிப்பன. எடுத்துக்காட்டாக, உலகச் சிருஷ்டி பற்றிய பாடலில் (10. 129. 7) உலகம் தானாகவே முகிழ்த்ததா? அல்லது இறைவனால் உண்டாக்கப்பட்டதா? எனவினவப்படுகிறது. இந்திய தத்துவ ஞான ஊற்றின் தொடக்கமுமிங்கு காணப்படுகின்றது. இதிலே உலகம் தானாகவே, முகிழ்த்தது எனும் ‘பரிணாம வளர்ச்சி’க் கருத்தும், கடவுளே இப்பிரபஞ்சத்தைப் படைத்தார் என்ற கருத்தும் தொனிக்கின்றன. இந்தியத் தத்துவத்திலே படைத்தற் கடவுளான பிரமா, ஒழுங்குபடுத்துபவர் எனப் பொருள்படும் விதாதா என அழைக்கப்படுவதும் குறிப்பிடற்பாலது. வேறு சிலவற்றிலே, எத் தெய்வத்திற்கு அவி அளிப்போம்? எனும் ஐயப் பாடு உளது.
ஆரியரின் சமய வாழ்க்கையிலே வேள்வியே பிரதான இடம் வகித்தது. தெய்வங்களுக்குப் பலியளித்து வணங்கினர். இக்கால வேள்வி முறை சாதாரணமானது. பலிகளை வேள்வித் தீயிலிட்டனர். அக்கினியே ஏனைய தெய்வங்களுக்கும், மனிதருக்கும். தூதுவராவர். தெய்வங்களைப் பிரீதிப்படுத்தவும், உலக இன்பங்களைப் பெறவும் வேள்வி இயற்றினர். சாதாரண வீட்டு வேள்விகளுக்கு மட்டுமன்றிப் பெரிய வேள்விகளுமியற்றப்பட்டன சாதாரண வீட்டு வேள்வியினை இல்வாழ்வான் இல்லக் கிழத்தியுடன் இயற்றுவான். இக் கால ஆரியர் இவ் உலக இன்பங்களையே பெரிதும் நாடினர். நீண்ட ஆயுள் (100 ஆண்டுகள்) மிகுதியான செல்வம், வீரமைந்தர், முதலியனவற்றையே பெரிதும் விரும்பினர். மறு உலக சிந்தனை பற்றிய ஒரு சில குறிப்புகளே வருகின்றன. இறந்த பின் ஒருவர் இரு வழிகளால், தேவர் உலகத்திற்கும், பிதிரர் உலகத்திற்கும் செல்வர். யமலோகத்தில் யமனும். யமீயும் அமரர்க்குரிய இன்பத்திலே திளைப்பர். இத்தகைய விண்ணினை வேள்வி இயற்றுதலால் அடையலாம். பாவம் என்பது பிரபஞ்ச அல்லது உலக ஒழுங்கினை (ருதம்) மீறுதல் அல்லது வேள்வி இயற்றாது விடுதலாகும். இருக்குவேதத்திற் சில பாடல்களிலே தவம் செய்யும் மௌனி முனிவர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
வேதகாலத்தின் பிற்பகுதியிலே நிலவிய சமய நிலையினைக் கவனிக்கும் போது அதர்வவேதத்தினை முதலிலே குறிப்பிடலாம். ஏனைய வேதங்களிலே காணப்படாத பாமரமக்களின் நம்பிக்கைகள் இதி;ல் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் இதில் நன்மை அல்லது தீமை விளைவிக்கும் மாந்திரிக விதிகள் உள்ளன. பல காலத்தின் பின்னரே இஃது ஒரு வேதமாகச் சில மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ‘அசுரர்களைச் சாந்திப் படுத்தலும். நண்பர்களுக்கு நன்மையேற்படுத்தலும், பகைவர்களைச் சபித்தலும்’ இவ் வேதத்தின் பிரதான நோக்கமாகும். பூமி, வருணன், ருத்திரன் பற்றிய சில பகுதிகள் குறிப்பிடற்பாலன.
தொடக்க காலத்தில் எளிமையாயிருந்த வேள்விகளிலே காலம் செல்லப் பெரிய கிரியைகள் இடம் பெறலாயின. செல்வந்தர், வறியோர் தத்தம் வீடுகளிற் செய்து வந்த வேள்விகள் எளிமையானவை@ சில வேள்விகள் நாடோறும் அல்லது சில பருவங்கள் தோறும் செய்யப்பட்டன. அதர்வவேத மந்திரங்கள் பெருமளவு வீட்டுச் சடங்குகளிலேயே பயன்படுத்தப்பட்டன. பிந்திய வேதங்கள், பிராமணங்களிலே பெரிய வேள்விகள் அதிக முக்கியத்துவம் பெற்றன. இவற்றிற் பயன்படுத்தற்காகவே, சாம, யஜுர் வேதங்கள் தொகுக்கப்பட்டன. ஒழுங்கான வேள்வி முறையே பிராஹ்மணங்களின் பொருளாக உள்ளது. ஆஹவனீயம், கார்ஹபத்யம், தா~pணாத்யம் ஆகிய முத்தீ வளர்க்கப்பட்டது. பெரிய பலீபீடங்கள் அமைக்கப்பட்டன. பல புரோஹிதர் ராஜசூய, வாஜபேய போன்ற பெரிய வேள்விகள் இயற்றுவதில் ஈடுபடுத்தப்பட்டனர். யஜமானன் (வேள்வி இயற்றுவிப்போன்) பெரிய த~pணை (கொடை) கொடுத்தான். சொற்களைச் செவ்வனே உச்சரிப்பதிலே தான் வேள்விகளின் பலன் ஏற்படுமென்பதை உணர்ந்திருந்தனர். வேள்வியினாலே தெய்வங்களையும் கட்டப்படுத்தலாமென்றெண்ணியிருந்தனர். இருக்குவேதத்திலே தெய்வங்களைப் பிரீதிப்படுத்தி, நன்மை பெறுதற்கான கருவியாகவே, வேள்வி பயன்படுத்தப்பட்டது. ஆனால் இக்காலத்திலே வேள்வியே யாரையும் கட்டுப்படுத்தவல்ல. எதையும் சாதிக்க வல்ல, கருவியாக மாறிற்று. ஆரிய நாகரிகம் பரவியிருந்த இடங்களிலே, தீவணக்கமும். அதற்கான கிரியைகளும் பரவின ஆரிய நாகரிகச் சின்னமாக இவை இலங்கின. இந்திரன் வருணன் முதலிய இருக்கு வேதகாலத்திய பிரதான தெய்வங்கள் முன்னைய முக்கியத்துவத்தினை இழந்தனர். யஜுர் வேதம், பிராஹ்மணங்கள் ஆகியவற்றிலே பிரஜாபதியே பிரதான தெய்வமாகும்.
ருத்திரன் (சிவன்), விஷ்ணு, பிரபல்யமடைந்தனர். யஜுர் வேதத்திலே பிரஜாபதி, ருத்திரன், விஷ்ண ஆகியோர் பிரபல்யமடைகின்றமையினைக் காணலாம். புராணங்களிலே நன்கு வளர்ச்சியுற்ற திரிமூர்த்தி (பிரமா, விஷ்ணு, ருத்திரன்) கோட்பாட்டின் ஆரம்பத்தையும் இந்நூலிலே காணலாம். ருத்திரனுடன் அம்பிகா சக்தியாகவன்றிச் சகோதரியாகவே கூறப்பட்டுள்ளார். யஜுர் வேதம் வாஜஸனேயீ சம்ஹிதையிலே (16லே) வரும் சதருத்திரீயம் குறிப்பிடற்பாலது இதிலே ருத்திரனின் நூறு நாமாவாளீ கூறப்படுகின்றது. இவற்றுள், மஹாதேவ, ஈசான, சங்கர, சிவ, பசுபதி, நீலக்கிரீவ, சிதிகண்ட முதலியன குறிப்பிடற்பாலன. ஐதரேய, சதபத, கௌசீதகீ, பிராஹ்மணங்களிலே ருத்திரன் பிரபல்யமடைவதைக் காணலாம். விஷ்ணுவுமிக்காலத்திலே பிரபல்யமடையத் தொடங்கிவிட்டார்.
இருக்குவேதத்திலே சிவபிரான், ருத்திரன் எனும் பெயரிலே சிலபாடல்களிற் குறிப்பிடப்படுகின்றார். ஒயாது போர் புரிந்து கொண்டிருந்த ஆரிய சமூகத்திலே போர்த்தெய்வமான இந்திரனுக்கு இருக்குவேதத்திலே முக்கியத்துவமளிக்கப்பட்டதிலிருந்து ருத்திரனோ, அல்லது விஷ்ணுவோ பிரபல்யமற்ற தெய்வங்களெனத் திடமாகக் கூறமுடியாது. ஆரியரல்லாதோர் குறிப்பாகத் திராவிடர் தொடர்புகள் அதிகரித்தன. இருசாராரும் பலகருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சமயத்துறையிலே, முக்கியமாக இருக்குவேத காலத்திற்குப் பிந்திய வேத இலக்கியம், இதிஹாசங்கள், புராணங்கள் ஆகியவற்றிலே, உதாரணமாகச் சிவபிரானைப் பற்றிய கருத்துக்களிலே ஆரியரல்லாதோர் கருத்துக்களே மேலோங்கின எனலாம். ஆரியர், மத்தியிலே தொடக்கத்திலே பிரபல்யமாகப் பாடல்கள் பலவற்றிலே போற்றப்பட்ட தெய்வங்கள் இந்தியச் சூழ்நிலை மாற்றத்தினாலே பிரபல்யம் குன்றினர். எடுத்துக்காட்டாக வருணன் நீர்த் தெய்வமானான். இந்திரன் வேதலோக அரசனானான். ஆரியரிலொருபிரிவினரான ஆதிக்கிரேக்கர் எவ்வாறு மைனோவன், மைசீனியன் நாகரிகங்களிற் காணப்பட்ட மேலான நாகரிக அம்சங்களைப் புறக்கணியாது தமது நோக்கத்திற் கேற்பப் பயன்படுத்தித் தமது நாகரிகத்தினை வளர்த்தனரோ அவ்வாறே இந்தியாவுக்கு வந்த ஆரியரும் ஆரியரல்லாத மக்களிடையே நிலவிய நாகரிக அம்சங்கள் பலவற்றைத் தமதாக்கினர் எனலாம்.
மேலும் உபநிஷதகாலத்திலே முக்கியத்துவம் பெற்ற பிரஹ்மன் - ஆத்மன் கோட்பாடு, கர்மம் பற்றிய கருத்துக்களின் கருவினைப் பிராஹ்மணங்களிலே காணலாம். உலகத் தோற்றம் பற்றிய கதைகள் சிலவும் இந்நூல்களில் உள்ளன.
வைதிகக்கல்வி, வேள்வி ஆகியனவற்றிற்று எதிர்ப்புகள் புராதன காலம் தொட்டு நிலவிவந்தன. மாண்டூக சூக்தத்திலும் (இ. வே. 7. 163) ஐதரேய ஆரண்யகத்திலும் (iii. 2. 6. 8) பின் கௌசீதகீ உபநிஷதத்திலும் (2. 5) இப்போக்கினைக் காணலாம். எடுத்துக்காட்டாக, ‘ஏன் வேதங்களை ஓத வேண்டும்? வேள்வி இயற்ற வேண்டும். (ஐ. ஆ. 2. iii 6.8), “இப்பாடல், இப்பாடல் என மக்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இப்பாடலின் கருத்து அவர்களுக்குத் தெரியுமா? (ஐ. ஆ. 2. 1. 2. 1) முதலியனவற்றைக் குறிப்பிடலாம்.
இப்பெயர்ப்பட்ட எதிர்ப்புகள், ஐயப்பாடுகள், வேள்விகளை மிதமிஞ்சி வற்புறுத்திய பிந்திய வேதகால முற்பகுதியிலே தான் நன்கு நிலவியமை தெளிவு. வேள்விச் சடங்குகளில் அதிருப்தியுற்றோரில் ஒரு சாரார் காட்டிற்குச் சென்று வேள்விகளைப் பற்றித் தியானம் செய்து அவற்றின் உட்கருத்துக்களை விளக்கினர். இவ்வாறே ஆரண்யகங்கள் எழுந்தன. இவ் வகையான நூல்களிலே மேற்குறிப்பிட்டவாறு வேள்விகள் பற்றிய வினா, ஐயப்பாடு எழுந்தமையிலே வியப்பில்லை. இந்நூல்கள் காட்டிலுள்ள தபோதனர் கற்கக் கூடிய முறையிலமைந்துள்ளன. பின்னர் கூறப்படும் நால்வகை ஆச்சிரமங்களிலொன்றான வானப்பிரஸ்தர் கற்கும் நூல்களாக ஆரண்யகங்கள் அமைந்துள்ளன. இந்நூல்கள் பிராஹ்மணங்களையும் உபநிஷதங்களையுமிணைத்து வைக்கின்றன. பிராஹ்மணங்கள் கூறும் வேள்விக்கும், உபநிஷத தத்துவத்திற்குமிடையிலுள்ள இணைப்புப் பந்துதாத்தொடர்பு மூலம் விளக்கப்படுத்தப்படும். “பிராஹ்மணங்களிலிருந்து உபநிஷதங்களிற்கு இந்திய சிந்தனை வளர்ச்சியடைதல் இந்திய தத்துவ வரலாற்றிலே மிகமுக்கியமான நிகழ்ச்சியெனலாம்” எனப் பேராசிரியர் டாஸ் குப்த குறிப்பிட்டுள்ளார்.
“உபநிஷதங்கள் கூறும் பிரதான விடயம் தத்துவம் பற்றிய பிரச்சினையாகும். அதாவது, உண்மையைத் தேடுவதாகும்” உண்மைப் பொருளை அறியும் ஆவலே உபநிஷதங்களிலே மேலோங்கிக் காணப்படுகின்றது. “உபநிஷத ஞானிகள் ஒருவரைச் சத். சித், ஆனந்தமாகிய பரம்பொருள் பாற்படுத்துகின்றனர். ஞானத்தை அறிவுறுத்;தும் இந்நூல்கள் ஞானகண்டம் எனவும், வேள்வி முதலியவற்றை வற்புறுத்தும் முந்திய நூல்கள் கர்மகாண்டம் எனவும் கூறப்படும்.
உபநிஷதங்கள் கூறும் பரஞானம் பிரமவித்யா அதாவது பரம்பொருள் பற்றிய அறிவு எனப் பொருள்படும். இதனை அறிந்து ஆன்ம ஈடேற்றம் பெறவேண்டும் என் வேணவா மிகுத்துக் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, உபநிஷதங்களிலே வரும் பிரார்த்தனைகளில் ஒன்று குறிப்பிடற்பாலது. அதாவது, “அசத்திலிருந்து (உண்மையற்றபொருள் அல்லது நிலையிலிருந்து) சத்திற்கு (உண்மையான பொருள் அல்லது நிலைக்கு)க் கொண்டு செல்வீராக. (அஞ்ஞான) இருளிலிருந்து (ஞான) ஒளிக்குள் சேர்ப்பீராக. மரணத்திலிருந்து (அழியும் நிலையிலிருந்து) அமிர்தத்திற்குள் (அழியாநிலைக்குள்) செலுத்துவீராக (பிருஹதாரண்யக உபநிஷத் 1. 3. 28)”
உபநிஷதங்களிலே கூறப்படும் சமய, தத்துவக் கோட்பாடுகள் வேதசம்ஹிதைகள், பிராஹ்மணங்கள் ஆகியனவற்றிற் கூறப்படுவனவற்றிலிருந்து ஓரளவு வேறுபட்டன. வேள்விகளாற் பலனில்லை யெனப் பிருஹதாரண்யக (1.4.10) முண்டக (1.2.18) முதலிய உபநிஷத்துகள் வற்புறுத்துவன. “தத்துவமஸி” (நீயே அது) அதாவது பரமாத்மனும், ஜீவாத்மனும் ஒரே பொருள் என்பதே உபநிஷத தத்துவத்தின் சாராம்சமாகும். “இவ்வுலகம் முழுவதும் அதை (பிரமத்தை) அடக்கியுள்ளது@ அதுவே, உண்மையாகும். அதுவே ஆத்மா@ அது நீயே சுவேதகேது” என உத்தாலகர் சுவேதகேதுவிற்குச் சாந்தோக்கிய உபநிஷதத்திலே (6.9.16) விளக்குகிறார். பிருஹதாரண்யக உபநிஷத் (1.4.20) இக்கருத்தினை ‘எவன் நானே பிரமம் (அஹம் பிரஹ்மாஸ்மி) என்பதை அறிகிறானோ அவன் எல்லாமாகிறான் தேவர்கள் கூட அவன் அவ்வாறு ஆவதைத் தடுக்கமுடியாது. அவன் அவற்றின் ஆத்மாவாகிறான்’ எனக்கூறும். இவ் ஐக்கியம் ஏற்கனவே, சதபத பிராஹ்மணத்தில் (10.6.3) “தினையின் சிறுமணிபோல இதயத்தில் இப்பொன்மயமான புருஷன் உள்ளான். அவனே பரமாத்மா@ எனது ஆத்மா@ இங்கிருந்து செல்லும்பொழுது அதனை அறிவேன்” எனவருகின்றது. சாந்தோக்கிய உபநிஷத் (1.14.4) இதனை தெளிவாகக் கூறும். அதாவது “இதயத்திலுள்ள ஆத்மா இதுவே@ இதுவே பிரமம்@ இறந்த பின் இதுவே யாவேனாக. இதனை நம்புவனுக்கு ஐயமொன்றில்லை. இவ்வாறு சாண்டில்யர் கூறுவர்” சமூகரீதியிலே வேறுபாடுகள் நிலவினாலும், ஆன்மிகரீதியிலே ஒருமைப்பாடு – யாவரும் ஒரேபரம்பொருளின் அம்சங்கள்@ அதிலிருந்தே தோன்றியவர்கள் என்பதாலே வற்புறுத்தப்படுதலை அவதானிக்கலாம்.
ஆத்மனின் இயல்புகள் பிருஹதாரண்யக, சாந்தோக்கிய உபநிஷதங்களிலே விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. யாஜ்ஞவல்க்யர் ஆத்மனின் இயல்பை “இதுவன்று@ அதுவன்று” (தேதி, நேதி) என எதிர்மறையிலே பிருஹதாரண்யக உபநிஷதத்திலே குறிப்பிட்டுள்ளார். பரமாத்ம – ஜீவாத்ம ஒருமைப்பாடு, களிமண், சிறு பொன்கட்டி, கத்தரிக்கோல், உப்பு முதலிய சாதாரணப் பொருட்களை உவமையாகக் காட்டித் தெளிவாக உரைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக “களிமண்கட்டி மூலம், களிமண்ணாற் செய்யப்பட்ட யாவற்றினையும் அறிந்து கொள்ளலாம். அவற்றைக் குறிப்பிடும் சொற்களிலேயே மாற்றம் உள்ளது. பிரமவித்தையுமிப்படியே” எனச் சாந்தோக்கியம் (6.1.4) கூறும். மேலும், பரமாத்மனிலிருந்து உலகம் முகிழ்த்தலைச், ‘சிலந்திவலைகளைத் தன்னிலிருந்து உண்டு பண்ணுகிறது போலவும், நெருப்பிலிருந்து பொறி உற்பத்தியாகிப் பறப்பது போலவும் ஆத்மனிலிருந்து எல்லாம் முகிழ்க்கின்றன” எனப் பிருஹதாரண்யக உபநிஷத் (2.1.20) கூறும். பரம்பொருள் ஒன்றேயென்பது மிகத்தெளிவாகச் சாந்தோக்கிய உபநிஷத்திலே (6.2.1) “சத் என்பதே தொடக்கத்தில் இரண்டாகவன்றி ஒரே பொருளாக விளங்கிற்று” (சத் ஏவ அக்ராசீத் ஏகமேவாத்தவிதீயம்) எனக் கூறப்படுகிறது. பிருஹதாரண்யக உபநிஷத்தும் (1.4.11) பிரமம் ஒன்றே’ எனக்கூறும்.
ஆத்மன் கோட்பாடுடன் நெருங்கிய தொடர்புள்ள ‘பிராண’ பற்றிய கோட்பாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிருஹதாரண்யக, தைத்திரீய உபநிஷதங்களிலே இது பற்றி நன்கு விளக்கப்படுகிறது. பிருஹதாரண்யக உபநிஷத் (4.3.4) ஆத்மனின் பல நிலைகளை மிகச்சிறந்த கவிதை வடிவிலே விவரிக்கின்றது.
உபநிஷதங்கள் குறிப்பிடும் பரம் பொருளான பிரமம், நிர்குணப்பிரமம் (குணங்களற்ற பிரமம்), சகுணப்பிரமம் (குணங்களோடு கூடிய பிரமம்) என விபரிக்கப்படுகின்றது. சகுணப்பிரமமே, சிவன், சக்தி, விஷ்ணு எனப்பலவாறு அழைக்கப்படும். இத்தகைய போக்கிலே தான் சுவேஸ்தாஸ்வதார உபநிஷத் ருத்திரனை (சிவபெருமானை)ப் பரம்பிரமமாகக் கூறுகின்றது.
இருக்குவேத்திலே அம்மன் வணக்கம் அதிகம் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. உஷா, அதிதி போன்ற பெண் தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் குறிப்பிடத்தக்கன வாயினும். அவற்றில் அம்மன் வழிபாடு பற்றிய முக்கியமான கருத்துக்கள் பல இடம் பெற்றில. இருக்கு வேதத்திற்கு முந்திய ஹரப்பா கலாச்சாரத்திலே தாய்த் தெய்வவழிபாடு நன்கு நிலவிற்று. குறிப்பாகத்திராவிட இந்தியாவின் பிரதான வழிபாடுகளிலிஃது ஒன்றாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிகலே, பல்வேறு பெயர்களில் அம்மன் இன்றும் வணங்கப்படுகின்றார். ஆரியர், ஆரியரல்லாதோர் தொடர்புகளதிகரிக்க, ஒத்து மேவல்கள் ஏற்பட அம்மன் வணக்கமும் ஆரியரின் வழிபாட்டு முறையிலே முக்கியத்துவம் பெறலாயிற்று. ஸ்ரீ சூக்தம், துர்க்கா சூக்தம், தேவீ சூக்தம் முதலியன குறிப்பிடத்தக்கவை. கேன உபநிஷதத்திலே (3.12-4.-1) பரப்பிரமத்தை அறியாது இந்திரன் முதலிய தேவர்கள் மயங்கினர். அப்போது ஞானத்திமருவுருவான உமாதேவி தோன்றிப் பரம் பொருளை அறிவுறுத்தினார். சக்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட தேவீ உபநிஷதங்கள் - எடுத்துக்காட்டாக, பஹ்வருஷோபநிஷத், திரிபுரோபநிஷத், பாவனோபநிஷத் முதலியன பிற்காலத்திலே தோன்றின.
கணபதி, ஸ்கந்த ஆகிய தெய்வங்களும் பிரபல்யமடைந்தன. இருக்கு வேதத்திலேயுள்ள பிரஹ்மண ஸ்பதி பற்றிய திருப்பாடல் (2.23.1) ஒன்றிலே வரும் கணபதி எனும் பதம் இவரையே கருதுவதாகப் பலர் கருதுகின்றார்கள். இவரைப் பற்றிய காலத்தால் முந்திய குறிப்பு இதுவே. இன்றும், சைவகாமக் கிரியைகளிலே கணபதியினை ஆவாஹனம் செய்வதற்கு இஃது ஓதப்படுகிறது. பிந்திய கால வேத இலக்கியத்தைச் சேர்ந்த தைத்திரீய ஆரண்யகத்திலே கணபதி பற்றிய காயத்திரீ மந்திரம் ஒன்று வருகின்றது.
இருக்குவேதத்திலே வரும் ஸடஸபதி எனும்பதம் அக்கினி பற்றிய பாடலிலே காணப்படினும், இது ஸ்கந்தனை (முருகனை)க் குறிக்கும் என ஒரு சாரார் கருதுவர். சதபதபிராஹ்மணம் இவரை ருத்திரனின் குமாரன் எனக் குறிப்பிடும். சாந்தோக்ய – உபநிஷத்திலே (7-26-27) சளத்குமார என்பவர் நாரதருக்கு மனச்சாந்தி அளிப்பதும் மட்டுமன்றி அவரின் அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை வழங்கினார் என அறிகிறோம். தைத்தீரிய ஆரண்யகத்திலே சண்முக(ன்), ருத்திர(ன்), தந்தி, பிரமன், விஷ்ணு, ஆதித்ய(ன்) துர்க்கா முதலிய தெய்வங்களுக்கான காயத்திரீ மந்திரங்கள் வருகின்றன.
மைத்திராயணீய உபநிஷத் பிரமா, ருத்திர(ன்), விஷ்ணு முதலிய தெய்வங்கள் மேலான, அழியாத பரப்பிரமனின் வெளிப்பாடாக விளங்குகின்றனர் (4.5.6) எனக்கூறும்.
ஒம் மிகப் புனிதமானது. சாந்தோக்யம் (1.1) கடோபநிஷத் முதலியனவற்றில் இதன் முக்கியத்துவம் நன்கு கூறப்படுகின்றது வைதிகக்கல்வி, மந்திரங்கள் முதலியனவற்றின் தொடக்கத்திலும், இறுதியிலும் இஃது ஒதப்படும். “வேதங்கள் தவங்கள், அனுஷ்டானங்கள் ஆகியனவற்றின் சாராம்சமிதுவே” யெனக் கடோபநிஷத் (1.2.15) கூறும்.
உபநிஷதங்களிலே துறவறம் சிற்சில இடங்களிலே வற்புறுத்தப்படினும், உலக வாழ்க்கையின் முக்கியத்துவமே வலியுறுத்தப்படுகின்றது. இல்வாழ்க்கை துறவறத்திற்கு முன்னோடியாகவே அமையும். இவ் உலக வாழ்க்கையிலே பற்றற்ற நிலையிலிருந்து கொண்டே பரஞானத்தை உணரலாம். மேலும், உபநிஷதங்கள் கூறும் பரம்பொருளான பிரஹ்மம் ஆனந்தமயமானது. அப்பொருள் உணர்த்தும் ஞானக் கண்ணினாலேயே அதனை உணர்ந்து உய்வு பெறலாம் (பிருஹதாரண்யக உபநிஷத் 5).
உபநிஷதங்களை நன்கு ஊன்றிப்பயிலாத சிலர் இவை ஒழுக்க நெறியினை வற்புறுத்தில எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் உண்மையான நிலைபேறு. பிருஹதாரண்யக (5.3), தைத்திரீய (1.9.1) முதலிய பழைய உபநிஷதங்களிலே தமம் (புலனடக்கம்), தானம் (கொடை), தயா (கருணை), சமம் (சாந்தி), சத்யம் (வாய்மை) முதலியனவும், சாந்தோக்கியத்தில் (8.1.15) இவை சிலவற்றுடன் எல்லா உயிர்களிடத்து அஹிம்ஸையும் (அஹிம்ஸான் ஸர்வபூதானி) நன்கு வற்புறுத்தப்படுகின்றன. ஒருவர் பற்றின்றி உலக இன்பங்களை அனுபவிக்க வேண்டுமெனவும், மற்றவரின் பொருளை எவ்வகையினும் விரும்பக்கூடாதெனவும், தான் செய்ய வேண்டியனவற்றைச் செவ்வனே செய்து நூறாண்டு பூரணமாக வாழவிரும்ப வேண்டும் எனவும் ஈசாவாஸ்ய உபநிஷதம் கூறும். இதிலே சில முன்னேற்றமான சமூகவியற் கருத்துக்களும் தெளிவு. பற்றற்ற ஒழுக்க நிலையிலுள்ள வாழ்க்கை யாஜ்ஞவல்க்யருடைய கதையிலும் நன்கு காணப்படுகின்றது. அவர் தாம் இல்வாழ்க்கையிலிருந்து வானப் பிரஸ்த வாழ்க்கைக்குப் போகுமுன் தம்முடைய இருமனைவியருள் ஒருவரும் பிரமஞானத்தில் அறிவுறுத்துகையில் கணவன் மனைவியிடத்துத் தனக்காக அன்றிப் பரம்பொருளுக்காகவே அன்பு கூரவேண்டுமெனவும், மனைவி கணவனிடத்துத் தனக்காக அன்றிப் பரம்பொருளுக்காகவே அன்பு கொள்ள வேண்டுமெனவும் வற்புறுத்தியுள்ளார் (பிருஹதாரண்யக உபநிஷத் 4.5)
மேலும் துறவறம், யோகம், மறுபிறப்பு, கர்மம் முதலியனபற்றிய கருத்துக்கள் புத்தபிரானுக்கு முந்திய உபநிஷதங்களிலேயே நன்கு விரவிக் காணப்படுகின்றன. வேள்விகள் நன்கு கண்டிக்கப்பட்டாலும் கொல்லாமை குறித்தும் சில புறநடைகள் இருந்தன.
வேள்விகளை வற்புறுத்தியவர்களுக்கும் உண்மையான பரஞானத்தைத் தேடியோருக்கு மிடையிலிருந்த கருத்து வேறுபாடு கடோபநிஷத்திலே கூறப்படும் முதிர்ந்த வைதிக சமயப்பாதுகாவலரான வாஜசிரவண என்ற பிராமணர், அவரின் மகன் நசிகேதன் பற்றிய கதையிலே உருவகமாக நன்குபிரதிபலிப்பதைக் காணலாம். மேலுமிதே உபநிஷத்திலே (1.1.6) “தானியம் வளர்ந்து முதிர்ந்து, வளைந்து, விழுந்து மறுபடியும் பயிராக வளருவது போல மனிதனும் இறந்து மறுபடியும் பிறவியெடுக்கிறான்” என மறுபிறப்புத் தெளிவாக உரைக்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட உபநிஷத காலச்சிந்தனைகள் கோட்பாடுகள் முன்னைய காலச் சமயத்திற் பெருமளவு இடம் பெற்றில. இதனால் இவை ஆரியருக்கு முற்பட்ட காலத்திய திராவிடரும், பிறரும், ஆரியரும் வேறுபாடின்றி ஒன்றுபட்ட தொடர்பால் ஏற்பட்டிருக்கலாம் என ஒரு சாரார் கருதுவர். வேறொருசாரார் இவை வேதகாலச் சிந்தனை வளர்ச்சி யென்பர். இத்தத்துவ ஆய்விலே பிராமணர் மட்டுமன்றிப் பிறவருணத்தவரும், முக்கியமாக அரசரும் பங்கு பற்றியமை குறிப்பிடற்பாலது. மன்னர் சிலர் இவ்வித்தையிற் சிறந்து விளங்கினர். இது ~த்திரியவித்யா எனவும் அழைக்கப்பட்டது. காசி அரசனான அஜாதசத்ரு, கார்க்ய பாலாகி என்ற பிராமணனுக்கு இது பற்றி உபதேசம் செய்தார். இதிலிருந்து பிராமணரும் மன்னரிடம் சென்று ஞானோபதேசம் பெற்றமையினை அறியலாம். ஜனகமன்னனின் தத்துவ அறிவும், ஆதரவும் குறிப்பிடற்பாலதே. மேலும், யாஜ்ஞவல்க்யர் போன்ற பிராமணரும், கார்க்கீ, மைத்திரேயீ போன்ற பெண்களும், சத்யகாம ஜாபால போன்ற குலம் தெரியாதவர்களும் மேற்குறிப்பிட்ட ஆய்விலீடுபட்டனர்@ புகழ்பெற்றனர்.
உபநிஷத தத்துவங்கள் பல்வேறு சிந்தனையாளரால், பல்வேறு காலங்களில் வேறு வேறு இடங்களில் உரைக்கப்பட்டனவே யன்றி முறையாக ஒழுங்கு படுத்ததப்பட்ட தத்துவ ஆய்வுகளாகக் காணப்பட்டில. எவ்வாறாயினும், உபநிஷதங்களின் முக்கியத்துவம் பெரிதாகும். இந்தியாவிற் பிற்காலத்திலே வளர்ச்சியடைந்த வைதிக தத்துவப்பிரிவுகள் இவற்றினை அடிப்படையாகக் கொண்டன. பிந்திய காலத்தில் எழுந்த ஷத்தர் சனங்களின் (ஆறுவகையான தத்துவங்களின்)- சாங்கியம், யோகம், நியாயம், வைஷேஷிகம், மீமாம்சம், வேதாந்தம் ஆகியவற்றின் ஆசிரியர்களும், இடைக்காலத்தில் அத்துவித தத்துவத்தினை நிலைநாட்டிய சங்கரர், விசிஷ்டாத்துவிததத்துவ ஆசிரியரான ராமானுஜர், துவைத தத்துவ ஆசிரியரான மத்துவர் போன்றோரும் உபநிஷதங்களை நன்கு பயன்படுத்தித் தத்தம் கருத்துக்களை வகுத்து நிலைநாட்டினர். எனினும் உபநிஷத சிந்தனையாளரின் கட்டுப்பாடற்ற சுதந்திரமும், தனிச்சிறப்பியல்பும் குறிப்பிடற்பாலன. இவர்களின் சுயசிந்தனைத்திறன் குறிப்பிடத்தக்கதே. வைதிக மரபிற்குப் புறம்பாக வளர்ச்சியுற்ற பௌத்தம், சமணம், ஆஜீவீகம் முதலியனவும் உபநிஷதங்களிற் காணப்படும் சிலகருத்துக்களை – மறுபிறப்பு, கர்மம் போன்றவற்றினை மேற்கொண்டுள்ளன. மனித சிந்தனையியல் வரலாற்றாசிரியனுக்கு உபநிஷதங்கள், மேலும், முக்கியத்துவம் வாய்ந்தவை. “உபநிஷதங்களிலே காணப்படும் மறைஞானக் கோட்பாடுகளின் சாயலை பாரசீகசூவியத்தில் (ளுரகளைஅ) உள்ள மறைஞானம், புதிய பிளேட்டோனியத்தில் (நேற Pடயவழnயைniஉள) உள்ள மறைஞானத்திலே காணப்படும் சொல்பற்றிய தத்துவம், எக்காட் (நுஉமயசவ)இ டவுலர் (வுயரடநச) முதலியோர் வரையுள்ள அலெக்சாந்திரிய கிறிஸ்தவ ஞானிகளின் போதனைகள், 19-ம் நூற்றாண்டைய தத்துவ மறைஞானியான ஸோப்பனோரின் தத்துவம் முதலியனவற்றிலே காணலாம்” என அறிஞர் கருதுவர்.
வேதகாலச் சமூக நிலை
இருக்குவேதகாலச் சமூகநிலையிலே தந்தைவழியுரிமைக் குடும்பமே சமூகவாழ்வின் அடிப்படையாக விளங்கிற்று. தகப்பனே குடும்பத்தின் தலைவன். அவனுக்கு அடுத்தபடியாக, மூத்தமகன் முக்கியத்துவம் பெற்றிருந்தான். பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலே பொதுவாக நல்லுறவு நிலவிற்று. திருமணப்பாடலிலே (இ. வே. 1085) புதிதாக மணமகனில்லம் வந்த மணமகள் அவனின் சகோதரர், பெற்றோர்களை மதித்த போதிலும் அவர்களை ஆளுகிறாள் எனவும் கூறப்பட்டுள்ளது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை நிலவியதை இதிலிருந்து அறியலாம். கூட்டுக்குடும்பங்கள் சிலவற்றில் இல்லாளின் தாயுமிருந்தாள், விருந்தினரை – அதிதிகளை உபசரித்தல் நன்கு போற்றப்பட்டது.
ஆரியர் இந்தியாவுக்கு வந்த காலத்தில் அவர்களின் ஜனக்குழு அமைப்பில் ஒருவகையான பிரிவுகள் காணப்பட்டன. இக்காலச் சமூகத்திலே சாதிமுறை எந்த அளவிற்கு நிலவியது எனத்திடமாகக் கூறமுடியாது. இதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. கலப்புத் திருமணம், கூட்டுவிருந்து ஆகியன நிகழாமை சாதி முறையிலுள்ள பிரதான அம்சங்களாம். காலத்தால் முந்திய இருக்குவேதப் பாடல்களிலே தனித்தனியாகப் பிராமணர், ~த்திரியர், வைஷ்யர், சூத்திரர் ஆகிய சாதிகள் ஒழுங்காகச் சமய அங்கீகாரத்துடன் கூறப்பட்டுள்ளன@ சமய அங்கீகாரத்துடன் இவை நிலைபெற்றன. இதன்படி, பிராமண, ~த்திரிய, வைஷ்ய, சூத்திர எனும் நால்வகை வருணங்களும் முறையே, உலக முழுவதையுமுள்ளடக்கிய பரம்பொருளின் முகம், புயம், தொடை, பாதம் ஆகியவற்றிலிருந்து தோன்றின. இப்பாடலுக்கு அறிஞர் பலவாறு விளக்கம் அளிப்பர். சமூகத்தின் இன்றியமையாத பிரிவுகள் உருவகமாகக் கூறப்பட்டுள்ளதெனச் சிலர் கருதுவர். சாதியினைக் குறிக்கும் ‘வர்ணம்’ எனும் சொல் நிறத்தினைக் கருதும். வெண்ணிறமுள்ள ஆரியருக்கும், கறுப்புநிற அனாரியருக்குமிடையிலே காணப்பட்ட நிற வேறுபாடு சாதிமுறை தோன்றுதற்கான ஒரு காரணமாகும். இதைவிடத் தொழில்கள், குடும்பக்கட்டுப்பாடுகள், பிறகுழுக்கள் அல்லது மக்கள் தொடர்புகள் முதலியன வற்றினையும் அடிப்படையாகக் கொண்டு சாதி முறை தோன்றியிருக்கலாம்;. தொடக்கத்திலே மேற்குறிப்பிட்ட அடிப்படைகளிலே தோன்றிய சாதிகள் ஒன்றோடொன்று சேரக்கூடிய நிலைமை காணப்பட்டாலும் காலப்போக்கில் இவை நிரந்தரப் பிரிவுகளாயின எனலாம். பிராமணர் கல்வியினை – வைதிகக் கல்வியினைப் பேணிவந்தனர்@ வளர்த்து வந்தனர். ஏனைய வருணத்தவர்களிலும் பார்க்கக் கல்வியிலும், கேள்வியிலும் சிறந்து விளங்கினர். சமயகுருவாகவும் கடமையாற்றினர். ~த்திரியர் நாட்டினைக் காவல்செய்து வந்தனர். வைஷ்யர் விவசாயம், வியாபாரம் செய்து வந்தனர். சூத்திரர், முன்னைய மூவருக்கும் பணி செய்து வந்தனர். பொதுவாக நோக்கும்போது, இருக்குவேத காலத்திலே நிறம், தொழிலடிப்படையிலே வேறுபாடுகளிருந்தாலும் திட்டவட்டமான சாதிப் பாகுபாடுகள் நிலவில எனலாம். ஒருவன் தான் புலவன் என்றும், தந்தை வைத்தியன் என்றும், தாய் தானியமரைப்பவளென்றும் (இ. வே. 9.112) கூறுவதிலிருந்து தொழில்வேறுபாடுகள் அவ்வளவு நிலவவில்லை எனலாம். அத்துடன் ஒருவன் தன்னுடைய மூதாதையர் தொழிலைவிட வேறொன்றினை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு நிலவிற்று எனலாம். இத்தகைய சமூகப்பிரிவுகள் ஆதிஇரானிய சமூகத்திலும் நிலவியதை அவெஸ்தாவினாலறியலாம். இரானிய சமூகத்திலே அதர்வஸ் (குருமார்), ரதேஸ்தஸ் (வீரர்), வாஸ்திரியஸ் சூயன்தஸ் (குடும்பத்தலைவர்), ஹ{ஸ்திஸ் (பணியாட்கள்) ஆகிய பிரிவுகள் நிலவின. எனவே பிரிவுகள் உள்ள ஆளால் பெருமளவு சாதிக்கட்டுப்பாடற்ற சமூகத்தினையே இருக்குவேதத்திற் காணலாம். “சாதிமுறையின் தோற்றத்திற்கான அடிப்படையும் அதன் தொடர்ச்சியும் நான்கு வருணங்களிலன்றித் தொழில்களோடு சம்பந்தமுள்ள பெருந்தொகையான சாதிக் குழுக்களின் அமைப்பிலேயே தங்கியிருந்தன. முதல் மூன்று வருணத்தவருமே வைதிக சமயச்சார்பான சம்ஸ்காரங்கள் (புனிதச் செயல்கள்) இயற்றுதற்கு அருகதையுள்ளவர்கள். கர்ப்பம் தரித்த நாள் முதல் மரணம் வரையும் அவர்கள் பின்பற்றவேண்டிய சம்ஸ்காரங்கள் நாற்பது எனப் பிற்கால நூல்கள் கூறும். இவற்றுட்பல இக்காலத்திலேயே தொடங்கிவிட்டன. அவற்றுள் ஒன்று உபநயனம் (ப+ணூல் தரித்தல்). இச் சம்ஸ்காரம் மூலமாக ஒருவனுடைய இரண்டாவது பிறப்பு – ஆத்மீகப்பிறப்பு ஏற்படுகின்றது. புதுவாழ்வு தொடங்குகின்றது. இதனாலே முதன் மூன்று வருணத்தவரும் துவிஜர் அல்லது இருபிறப்பாளர் என அழைக்கப்படுவர்.
இருக்கு வேதகாலச் சமூகத்திலே பெண்கள் நன்னிலையிலே வாழ்ந்தனர். அவர்கள் வீட்டுப் பொறுப்பாளராக மட்டுமன்றி, அலங்காரம் செய்து விழாக்களுக்குச் சென்றனர். பெண்களின் அழகுச் சிறப்பு உஷா பற்றிய பாடல்களிலே நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. மங்களகரமான புன்னகை தவழும் இளநங்கையர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. “திருமணம் செய்த தம்பதிகள் பொன் ஆபரணங்களினாலே தம்மை அலங்கரித்துக் கொண்டு, ஆண், பெண் பிள்ளைகளைப் பெற்று நூறாண்டு வாழ்வார்களாக” என ஒரிடத்திலே குறிப்பு உண்டு. (இ. வே. 8. 38. 3). மனைவி கணவனுடன் சரி நிகர் சமானமாகவும் வாழ்ந்தாள். “வீட்டில் ஆட்சி புரிதற்காக வரும் வீட்டுத் தலைவியே உமது வீட்டிற்குள் செல்வீராக” எனக் குறிப்பிடப்படுகின்றது. (இ. வே. 10.85) மணமகன் சுமங்கலியான மணப் பெண்ணின் கையினைப் பிடித்துக் கொண்டு “நல்ல அதிர்ஷ்டத்திற்காக உனது கையினைப்பிடிக்கிறேன்: உன்னுடைய கணவனான என்னுடன் மூப்புப் பருவம் வரை இருப்பீராக. பக, ஆர்யமன், சவிதிர், புரந்தி, ஆகிய தெய்வங்கள் உன்னை எனக்கு அளித்திருக்கிறார்கள்” எனக் கூறுவது குறிப்பிடற்பாலது. கணவனையும் மனைவியையும் குறிக்கும். ‘தம்பதீ’ எனும் பதம் முதலிலே வீட்டுத் தலைவனைக் குறித்தது. இருவரையும் குறிப்பதற்கு ஒரே சொல் பயன்படுத்தப்பட்டதிலிருந்து, சமூகத்திலே, கணவன், மனைவி ஒருமைப்பாடு தெளிவு. “இல்லாளே இல்லம்” (இ. வே. 3. 53.4) கணவனை நேசிக்கும் களங்கமற்ற மனைவி’ (இ. வே. 1. 73. 3), வீடு பூமியில் சுவர்க்கம்’ (இ. வே. 10. 107.10) முதலிய குறிப்புகள் கவனித்தற்பாலன. காதலி காதலனின் காதில் பேசுதல் வில்லின் நாண் ஒலிக்க உவமிக்கப்படுகின்றது. (இ. வே. 6. 75. 3) இதிலே வீரரின் வீரமும், காதலரின் காதலும் ஒருங்கே இணைத்துக் கூறப்படுகின்றன. ஒரிடத்திலே வீட்டிலே யாவருக்கும் அணியாகவுள்ள மனைவி போலத் தெய்வத்தை விவரிக்கின்றனர். (இ. வே. 1. 66. 5). பெண்ணினைக் குறிக்கும் சுபகா (தெய்வம்), கல்யாணி (நன்மை பயப்பவள்) முதலிய சொற்களும் மனம் கொளற்பாலன. மனைவி கணவனுடன் வேள்வி செய்தாள். மனைவியின்றி இல்வாழ்வான் வேள்வி இயற்ற முடியாது.
சமூகத்திலே பெரும்பாலும் காதல் திருமணமே நடைபெற்றது. திருமணச் சடங்குகள் நடைபெற்றமை உடற் குறையுள்ள பெண்களுக்கு ஸ்திரீதனம் வழங்கப்பட்டது. திருமணத்தின் பிரதான நோக்கம் ஆன் மகப்பேறு. ஒயாது நடை பெற்றபோர்களுக்கும், இறுதியிலே ஈமக்கிரியைகள் செய்தற்கும் ஆண்மகனே விரும்பப்பட்டான். எனவே, அவர்கள் ஆண்மகவினை விரும்பினர். கணவன் இறந்த பின் மனைவி உடன் கட்டையேறும் வழக்கம் அருகி நிலவிற்று. சிலர் பலபெண்களை மணந்தாலும் பொதுவாக, ஏகபத்தினி விரதமே போற்றப்பட்டது.
அக்காலத்திலே கல்வி பெரும்பாலும் சமயக் கல்வியாகவே விளங்கிற்று. அதுவும் கேள்விச் செல்வமாகவே போற்றப்பட்டது. ஆசிரியர், மாணவர் ஆகியோரின் ஒழுக்கம் கவனிக்கப்பட்டது. கோசா, லோபா முத்திரா போன்ற பெண்பாற் புலவர்களும் விளங்கினர். கருத்துக்களைப் பிற இடங்களிலிருந்து பெறுதற்கு அவர்கள் தயங்கிலர்@ பல்வேறு திசைகளிலிருந்து நல்ல சிந்தனைகள் பல எமக்கு வருவதாக” என ஓரிடத்திலே கூறப்படுகிறது. (இ. வே. 1.89.1) மேலும், திருமணம் பற்றிய பாடலிலே (இ. வே. 10.85.7) “சிந்தனை அவளின் (மணமகளின்) தலையணையாகத் திகழ்ந்தது@ காட்சி அவளின் கண்களுக்கு மையாகத் திகழ்ந்தது” என வரும் குறிப்பிலும் நாகரிகமேம்பாடு தொனிக்கின்றது. சிறப்பு வாய்ந்த காயத்திரீ மந்திரம் “பூமி, வளிமண்டலம், வானம் ஆகியவற்றிலுள்ள இறைவனே! சவிதிர் கடவுளிற்குரிய மிகப் பெரிய சிறப்பினை அடைவோமாக. அவர் எம்முடைய நுண்ணறிவைத் தூண்டுவாராக! (இ. வே 3.62.10)”, என அறிவுக்கூர்மையினை வலியுறுத்தலைக் காணலாம். மேலும், தவளைப்பாடலில் (இ. வே 7.103) அக்காலத்திய கல்வி முறை ஒரளவு பிரதிபலிக்கின்றது. ஒரு தவளைகத்திய பின் மற்றொன்று சப்தம் செய்வது போன்று ஆசிரியர் முதலிலே வேதம் ஓதிய பின் மாணவர் ஒருங்கு சேர்ந்து ஓதுவர். பின்னர் தவளைகள் யாவும் ஒன்று சேர்ந்து கத்துவது போல ஆசிரியரும் மாணவரும் ஒருமித்து ஓதுவர் எனக் குறிப்பிடப்படுகின்றது. வேதப் பாடல்களைப் பலவாறு போற்றினர். ஒரு சாரார் இவற்றினைப் பாடிப் பேணினர்@ பிறி தொருசாரார் இவற்றிற்கு இசை அமைத்துப் பாடினர்@ வேறோரு சாரார் பிறருக்குப்படித்துக் காட்டினர்@ இன்னொரு சாரார் வேள்விக்கான கிரியைகளை அமைத்தனர் (இ. வே. 10.71.11)
ஆடல், பாடல், இன்னிசைக்கருவிகளை இசைத்தல், தேர்ச்சவாரிப் போட்டிகள் முதலியன குறிப்பிடத்தக்க பொழுதுபோக்குகளாகவும் இடம் பெற்றன. நடனம் பற்றிய குறிப்புகள் உஷா (இ. வே. 1.92.4), இந்திரன் (6.29.37) முதலியோர் பற்றிய பாடல்களிலே வருகின்றன. பிற்கால இந்தியாவின் புகழ்பெற்ற நடராஜவடிவம், பரத நாட்டியம் முதலியனவற்றின் முன்னோடிக் கருத்துக்கள் சில இவற்றிலே காணப் படுவதாகவும் அறிஞர் சிலர் கொள்ளுவர். ஆனால், இவை புராதன நடனம் பற்றியவை எனப் பொதுவாகக் கொள்ளலாம். ஹரப்பாகலாச்சாரத்திலும் நடனம் நிலவியமை மனம் கொளற்பாலது.
கோதுமை, பால், காய்கறிவகை, இறைச்சி முதலியன உணவாகக் கொள்ளப்பட்டன. பசு போற்றப்பட்டது. “சோம” வேள்விகளிலும், “சுரா” சாதாரண வேளைகளிலும் அருந்தப்பட்ட பானங்களாம். இருபாலாரும் மேலாடை, கீழாடை அணிந்தனர். கம்பளியும் அணியப்பட்டது. தலைப்பாகை அணியப்பட்டது. அவர்கள் ஆபரணங்களை விரும்பி அணிந்தனர்.
வேதகாலத்தின் பிற்பகுதியிலே நிலவிய சமூக நிலைமைகளை நோக்கும் போது முற்கால அம்சங்களின் தொடர்ச்சி, விரிவுகள், மாற்றங்கள் முதலியனவற்றை அவதானிக்கலாம். தந்தைவழியுரிமையுள்ள கூட்டுக் குடும்பமே தொடர்ந்து நிலவிற்று. அதிதி நன்கு போற்றப்பட்டான். இல்வாழ்வான் செய்யவேண்டிய ஐந்து வேள்விகளில் அதிதியினைப் போற்றி உபசரித்தல் ஒன்றாகும்.
இக்காலத்திலே சாதிமுறை வளர்ச்சியடைந்து சிக்கலுற்றது. முற்காலத்திய நெகிழ்ச்சி பெரும்பாலும் ஏற்பட்;டிலது. அப்படியிருந்தும் எல்லாவருணத்தாரும் ஒளி (றுசம்) பெறவேண்டுமென அதர்வவேதம் (18.48) கூறும். சமூக ரீதியிலே வேறுபாடு நிலவினாலும் ஆன்மீக ரீதியிலே சமத்துவம் நிலவியது பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
நால்வகை வருணங்களுமிக்காலத்திலே நிலைபெற்றன. ஆரியர் ஆரியரல்லாதோர் தொடர்புகள் முன்னையதிலும் நன்கு ஏற்பட்டுவிட்டன. வருணங்களுக்கிடையிலே கலப்புத் திருமணம் பொதுவாக விரும்பப் படவில்லை. அநுலோம திருமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் பிரதிலோம திருமணம் செய்தல் தடுக்கப்பட்டது@ கண்டிக்கப்பட்டது. எனினும் இத்தகைய திருமணங்கள் நடைபெற்றுவந்தன. நால்வகை வருணத்தவரையும் விளிக்கும் முறையும் அனுசரிக்கப்பட்டது. இக்காலத்திலே, வைஷ்யரும், சூத்திரரும் நன்கு பாதிப்புற்றனர். பிராமணர், ~த்திரியர் நிலை, குறிப்பாக, முன்னையோரின் நிலை மேலோங்கிற்று. ஆனால், அருகியாவது சில மாற்றங்களிருந்தன. கல்வியறிவு மூலம் ஒருவர் பிராமணர் ஆகலாம் என்பது ஜனகரின் வரலாற்றினாலறியலாம். கல்வியுடையவன் பிரமரிஷி எனத் தைத்திரிய சம்ஹிதை கூறும். உபநிஷதகாலத்தில் ஒருவகையான நெகிழ்ச்சியேற்பட்டது. சமூகத்தின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த அறிஞர், பெண்கள் ஒரு சாரார் தத்துவ விசாரணையில் ஈடுபட்டனர். குறிப்பாக மன்னர் இவ்விசாரணையிலீடுபட்டமையும் உபநிஷதகாலப்பிற் பகுதியிலே வாழ்ந்த புத்தபிரான், மகாவீரர் ஆகியோரும் அரசகுலத்தவர் என்பதும் மனம் கொளற்பாலன. ஆனால் பிற்கால இந்தியாவின் சமூகக்கேடான தீண்டாமை இன்னும் செவ்வனே தலைகாட்டவில்லை. ஆனால், மேற்குறிப்பிட்டவாறு வருண முறை நிலைபெற்றுவிட்டது.
சமூகத்திலே வாழ்ந்த மக்கள் எவ்வாறு நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டனரோ, அதுபோலவே, சமூகத்திலுள்ள தனிமனிதனின் வாழ்நாளும் நான்கு கூறுகளாகப் படிமுறையிலே வகுக்கப்பட்டு ஒவ்வோர் பகுதிக்கும் குறிப்பிட்ட கடமைகள், ஒழுக்கங்கள் வரையறுக்கப்பட்டன. வாழ்க்கையின் தொடக்கப் பகுதி பிரமச்சரியமாகும். இக்காலப் பகுதியலொருவன் தன் குலக் கல்வியினைப் பயிலுவான். இதன்பின் திருமணம் செய்து இல்வாழ்க்கை நடத்துவான். இது கிருஹஸ்த நிலையாகும். பல ஆண்டுகள் இல்வாழ்க்கை நடத்தியபின் மனைவியுடனோ, தனித்தோ காட்டிற்குச் சென்று பரம்பொருளைத் தியானித்து வாழுவான். இந்நிலை வானப்பிரஸ்தம் எனப்படும். இறுதியான சந்நியாசநிலையிலவன் முற்றும் துறந்த முனிவனாக மிளிருவான். இந்நான்குபடி நிலைகளும் ஆச்சிரமங்கள் எனப்படும். தொடக்கத்திலே முதல் மூன்று ஆச்சிரமங்களே நிலவின எனவும், இவை தனித்தனி வாழ்க்கை முறையாகவும் நிலவின எனவும் அறியப்படுகின்றன. பின்னரே இவை படிமுறை நிலைகளாயின. இவற்றுடன் நான்காவதும் சேர்க்கப்பட்டது. வானப்பிரஸ்தன் ஆரண்யகங்களைக் கற்கலாம். இத்தகைய ஒத்துமேவலால் இல்லறம், துறவறம் ஆகிய இரண்டும் நல்ல முறையில் ஒன்றுபடுத்தப்பட்டன@ இணக்கப்படுத்தப்பட்டன. துறவறத்தை மட்டும் வற்புறுத்தியோரின் செல்வாக்குத் தடைப்பட்டது. வைதிக தருமம் நன்கு நிலைபெற்றது. மேற்குறிப்பிட்ட நான்கு வர்ணங்களும், நான்கு ஆச்சிரமங்களும் இக்காலத்திலுருவாகி ஒருங்கு இணைக்கப்பட்டு வர்ணாஸ்ரமதர்மமாக மலர்ந்து இந்து சமுதாயத்தின் பிரதான அம்சமாக நிலைபெற்றன.
உலக வாழ்க்கையின் பிரதான குறிக்கோளாக இந்துக்கள் மேற்கொண்ட புருஷார்த்தங்களான அறம், பொருள், இன்பம், வீடு (தர்மார்த்தகாமமோ~ம்) ஆகிய நான்கிலும், முதன்மூன்றுமே தொடக்கத்திலே திரிவர்க்கம் (முப்பால்) என நிலவின. நாலாவது மூன்றாவதிலடங்கும். அது பிற்காலத்திலே தான் நான்காவதாகச் சேர்க்கப்பட்டது. இம் மூன்றிலும் அர்த்தத்திற்கு (பொருளிற்கு) முக்கிய இடமொன்று அளித்தமையிலிருந்து “ஆதிகால இந்துக்கள்; இவ் உலகைப் பற்றிச் சிந்தித்திலர்@ மறுவுலகைப் பற்றி மட்டுமே சிந்தித்தனர்” எனச் சிலர் கொள்ளுதல் தவறான கருத்து என்பது தெளிவு. இத்திரிவர்க்கக் கோட்பாடுமிக்காலத்திலே தொடங்கிற்று.
உலகம் மிக விரும்பத்தக்கது என அதர்வவேதம் (5-30-17) கூறும். மேலும் அதே வேதத்திலும், யஜுர் வேதத்திலும் (1-11-17) முழுமையான ஆரோக்கியம், செல்வம், வாழ்க்கை, அறிவொளி முதலியவற்றிற்கான பிரார்த்தனைகளைக் காணலாம். பூமியின் சிறப்புப் பற்றிய அதர்வ வேதப் பாடல் குறிப்பிடற்பாலது. காலம் செல்ல உலகம் துன்பமயமானது. அதிலிருந்து விடுதலையடைய வேண்டுமென்ற கருத்து நிலவிற்று. அதர்வ வேதத்திலே பொதுமக்களிடையிலே நிலவிய சமய, சமூக, நம்பிக்கைகள் காணப்படுதலினாலுமதன் முக்கியத்துவம் கவனித்தற்குரியது.
கணவன், மனைவி ஆகியோருக்கிடையில் நிலவ வேண்டிய மன ஒருமைப்பாடு பற்றி அதர்வ வேதம் குறிப்பிடும். அதாவது “நாமிருவரும் ஓருள்ளம் கொண்டவராகிப் பிள்ளைகள் பெற்றோராவோம்” என்பதாம். “கணவனின் அரைவாசியே மனைவி” எனும் கருத்து பிராஹ்மணங்களிலே (சதபத பிராஹ்மணம் 5-2-1-10) காணப்படுகிறது. மேலும் பிருஹதாரண்யக உபநிஷத் (1-4-3) கூறுவதும் குறிப்பிடற்பாலது. ஆத்மன் (பிரமஞ்சத்தை உள்ளடக்கிய புருஷன்) தனிமையாயிருந்து மகிழ்ச்சியடைந்திலன். எனவே, தன்னிலிருந்து பெண்ணைத் தோற்றுவித்தான். தனியாக இருந்து ஆத்மனிலிருந்து, ஆடவனின் தோழமைக்காகவே பெண் தோற்றுவிக்கப்பட்டாள். எனவே, பதி (கணவன்) பாதி, பத்னீ (மனைவி) பாதியாயினர். இவ் இருவரின் சேர்க்கையினால் உலகம் தோன்றிற்று. இதுபோன்ற கருத்து மேற்காசிய நாகரிகங்களிலும் நிலவியதைக் கிறிஸ்தவ வேதம் - பழைய ஏற்பாட்டினாலும் அறியலாம். பிற்கால இந்தியாவிலே, சைவ சமயத்திலே சிவன் பாதி, சக்தி பாதியாகக் கூறப்படும் அர்த்த நாரீஸ்வரக் கோட்பாட்டிலே முற்குறிப்பிட்ட கருத்து நன்கு நிலவுவதைக் காணலாம். மேலும் பிரஜாபதி பெண்ணைப் படைத்து உபசரித்தார் (உபாஸ்த). எனவே, யாவரும் அவளை உபசரிக்க வேண்டுமெனப் பிருஹதாரண்யக உபநிஷத் (6-4-3) கூறும். படித்த பெண் விரும்பப்பட்டாள். (பி. உ. 6-17) சதபதபிராஹ்மணத்திலே (1-2-5-16) வரும் பலிபீடம் பற்றிய வருணணையொன்றிலே ஆதி இந்தியர் கண்ட அழகுராணியின் வடிவம் கூறப்படுகிறது. ‘பலிபீடம் மேற்கிலே அகலமாகவும், நடுவிலே சிறுத்தும், கிழக்கிலே மறுபடியும் அகலமாயுமிருக்க வேண்டும்’ என்பதாம். அதாவது இடை சிறுத்து, அதன் மேல், கிழ்ப் பகுதிகள் அகன்றிருக்க வேண்டுமென்பதே. இக்கருத்துப் பிற்கால இந்திய இலக்கியங்களிலே விபரமாக வருகின்றது. எடுத்துக் காட்டாகக் காளிதாஸர் போன்ற பெரும் புலவர்களின் பாடல்களைக் குறிப்பிடலாம். எனினும், பிந்திய காலத்திலே பெண்ணின் நிலை குறைந்து விட்டது. துன்பம் தரும் மூலங்களில் ஒன்றாகவும் பெண் கூறப்படுகிறாள். ஆனால் இக்கருத்து அருகியே காணப்படுகின்றது. பெண்பிள்ளை விற்றலும் சில வேளைகளிலே நடைபெற்றது திருமணச் சடங்குகள் முற்காலத்திற் போலவே நடைபெற்றாலும், ஒரு புதிய அம்சமுமிடம் பெற்றது. மணமகன் மணமகளின் கையினைப் பிடிக்கு முன். அவளின் காலினைக் கல்லிலே மிதிக்கச் செய்வான். கணவன் மனைவி உறவு கல்லுப்போன்று உறுதியாக இருக்க வேண்டுமென்பதே இதன் கருத்தாகும். அதர்வ வேத்திலும் திருமணப் பாடல்கள் சில உள்ளன. ஆண், பெண் இரு பாலரையும் ஒன்று சேர்க்கவும், பிரிக்கவும் ஒதப்படும் மந்திரங்களும் இவ்வேதத்திலே வருகின்றன ஓரிடத்திலே தன் கணவன் தன்னுடன் நூறாண்டு வாழவேண்டுமென மனைவி விரும்புகிறாள் (அ. வே. 14-2-63) பிறிதோரிடத்திலே மனைவியை நோக்கி “நான் சாமன்@ நீ இருக்கு@ நான் வானம்@ நீ பூமி” (அ. வே. 14-2-7) எனக் கூறுகிறான். இவற்றின் மூலம் கணவன் மனைவியின் பரஸ்பர அன்பும், பற்றும் தெளிவாகின்றன. உபநிஷத காலத்திலே தைத்திரேயீ, கார்க்கீ போன்ற பெண்கள் சிறந்த ஆய்விலீடுபட்டு அறிஞரையே திகைக்கச் செய்தனர்.
பிந்திய வேதகாலத்திலும் கல்வி பெரும்பாலும் சமயக் கல்வியாகவே விளங்கிற்று. கல்வி (வித்யா) இருவகைப்படும் என முண்டக உபநிஷத் கூறும் (1-1-45) அவையாவன: அழியாப் பரம்பொருளை (அ~ரம்) அறிதற்கான பராவித்யா. இருக்கு, சாம, யஜுர், அதர்வ வேதங்கள், சி~h, கல்பம், வியாயகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஸம் என்பனவே அபராவித்தியா. சாந்தோக்ய உபநிஷதம் (எii – 2) அக்கால மாணவர்கள் பயின்றவற்றை விவரிக்கின்றது. இவற்றிலே, வேதங்கள், இதிஹாஸ புராணங்கள், இலக்கணம், கணிதம், பிதிரர் பற்றிய அறிவு, தருக்கம், ஒழுக்கவியல், காலம், தேவவித்யா, பிரமவித்யா, பூதவித்யா (உயிர்நூல்), ~த்திரவித்யா, ந~த்திரவித்யா (வான நூல்), தேவ ஜனவித்யா (நடனம், இசை முதலிய நுண்கலைகள்) முதலியன கூறப்பட்டுள்ளன. அதர்வவேதத்திலே பலவகை மருத்துவ அறிவு வெளிப்படுகின்றது.
வைதிகக் கல்வி பல ஆண்டுகளாகப் பயிலப்படும். பொதுவாக மாணவர் ஆசிரியரின் வீட்டிலே (குருகுலம்) தங்கிக் கல்வி பயின்றனர். அவருக்குப் பல்வேறு பணிவிடைகள் செய்து கல்வி கற்றனர். இக்கல்வி முறையிலே மாணவரின் ஒழுக்கம், உடற்பயிற்சி. தொழிற்பயிற்சி, முதலியனவும் இடம்பெறும். இக்கல்வி வாழ்க்கை நெறிக்கான கல்வியாக இலங்கிற்று. ஒருவர் பிரமச்சரிய ஆச்சிரம காலத்திலே கல்வி பயின்று, பின்னர், இல்வாழ்க்கையினைக் கடைப்பிடிப்பர். கல்வி பல ஆண்டுகள் பயிலப்பட்டது. எடுத்துக்காட்டாக, சுவேதகேது ஆருணி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு (12-24 வயதுவரை)க் கற்றமையினைக் குறிப்பிடலாம் (சா. உ. 6-12) அக்காலக் கல்வியின் இலட்சியங்கள் பலவற்றினைத் தைத்திரிய உபநிஷத்திலே (1-2-1) குரு சிஷ்யனுக்குக் கல்வி முடிவிலே கூறும் அறிவுரைகளிலே நன்கு காணலாம். எடுத்துக்காட்டாக, “உண்மை பேசு@ தருமம் செய்@ கல்வியைப் புறக்கணியாதே@ ஆசிரியருக்குப் பிரியமான கொடையினை வழங்கியபின் சந்ததிக் கயிறு அறாது கவனிப்பாயாக. உண்மையிலிருந்து பிறழாதே. தருமத்தைக் கைவிடாதே. நன்மை செய். பொருள் வளத்தினைக் கவனிப்பாயாக. கல்வியைக் கற்பதையும் புகட்டுவதையும் புறக்கணிக்க வேண்டாம். தெய்வங்கள் பிதிரர்களுக்குச் செய்யவேண்டியனவற்றைச் செய் அன்னை, தந்தை, ஆசிரியன், அதிதி ஆகியோரைத் தெய்வமாகப் பேணுவாயாக....” இவை தற்காலப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா உரைகளை நினைவூட்டுகின்றன. கல்வி கற்றவன் தனக்கும் உலகிற்கும் செய்ய வேண்டியவை வற்புறுத்தப்படுகின்றன. கல்வியினடிப்படையிலே ஒழுக்க நெறி இலங்குகின்றது. வாழ்க்கை வாழவேண்டும். அதனால் மற்றவர்களும் நன்மையடைய வேண்டும் என்ற கருத்தும் தென்படுகின்றது. கல்வி வாழ்நாள் முழுவதும் கற்கவேண்டுமென்ற கோட்பாடும் (ஊழnஉநிவ ழக டகைந டழபெ நனரஉயவழைn) இதிலே நன்கு தொனிக்கின்றது.
மாணவன் ஆசிரியருக்கு வழங்கிய த~pணைகள் (கொடைகள்) சிலபற்றிக் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக ஜானஸ்ருதி றைக்வனிடம் சென்று பிரமஞானம் பற்றியறிவதற்காக 600 பசுக்கள், ஒரு பொன்சங்கிலி, கோவேறுகழுதை இழுக்கும் வண்டியொன்று முதலியவற்றையும் தன் மகளையும் தானமாக வழங்கினான் (சா. உ. 4-1-2) பிறிதோரிடத்திலே 100 பசுக்களும் ஒர் எருதும் வழங்கப்பட்டன. பி. உ. (4.2) இதே பகுதியிலே கல்வியினைப் புகட்டாமல் தானம் பெறக் கூடாதென யாஜ்ஞவல்க்யர் குறிப்பிட்டுள்ளார். சாந்தோக்கிய உபநிஷத் முடிவிலும் (8.15) குருசிஷ்யனுக்கு அளிக்கும் உபதேசமுள்ளது. கல்விகற்றுப்பின் இல்வாழ்க்கையிலே நின்று படித்ததைப் படித்து நன்கு மகப்பேறு பெற்று, புலனடக்கிச் சகல உயிர்களிடத்தும் அஹிம்சையுடன் நடந்துகொள்பவன் பிரம உலகத்தையடைந்து மீண்டும் திரும்பிவரமாட்டான். (பிறக்கமாட்டான்) என்று கூறப்பட்டுள்ளது. குருவிற்கும் சிஷ்யனுக்குமிடையிலே நல்லுறவு நன்கு நிலவ வேண்டுமென்பது உபநிஷதப் பிரார்த்தனைகளிலே வற்புறுத்தப்படுகின்றது. “நாமிருவர் கற்பது ஒளி பெறுவதாக@ நாம் இருவரும் ஒருவரையொருவர் வெறுக்காது இருப்போமாக” என ஆசிரியரும் மாணவரும் ஒருமித்துக் கூறுவது கடோபநிஷதப் பிரார்த்தனையிலே வருகின்றது. கல்வியினைக் கற்கும்தோறும் அறியாமை அகன்று போகும். பிருஹதாரண்யக உபநிஷத் (4-10) ஈசஉபநிஷத் (9) ஆகியவற்றிலே பிரமஞானத்திலே திளைக்கத்திளைக்க அஞ்ஞானம் அகன்று செல்லுதல் வற்புறுத்தப்படுகின்றது. கல்வி ஆண், பெண் இருபாலாருக்கும் அவசியமாகும். (பி. உ. 6) கல்விகற்ற பெண்பிள்ளை (பண்டிதா) பற்றிய குறிப்பும் உண்டு. எனினும், ஆண்பிள்ளைகளே கல்வியிற் சிறந்து விளங்க வேண்டுமெனப் பலர்விரும்பினர்.
வேள்விகளை ஒட்டிப் புராதன விஞ்ஞான வளர்ச்சியுமோரளவு ஏற்பட்டது. வேள்விகளுக்கான பருவம், நாள் முதலியவற்றை அவதானிக்க வேண்டியதால், வானநூல் வளர்ந்தது. இது விவசாய வளர்ச்சியினை ஒட்டியும் வளர்ந்தது. வேள்விக்கான பலிபீட அமைப்புகளின் தேவைகளாலே கேத்திரகணிதம் வளர்ந்தது. வேள்வியிலிடப்படும் மிருகங்களின் உடற்கூறுகளைப் பற்றிய அறிவும் நன்கு நிலவியது. தத்துவ ஆய்விலே, பரிணாமவளர்ச்சி, மிகமிக நுண்ணியதான அணு முதலியன பற்றிய கருத்துக்கள் தொனிக்கின்றன.
ஆரியர் தாம் சென்ற இடங்களிலே நிலவிய சமூகசமய பழக்கவழக்கங்களையும் சூழ்நிலைக்கேற்றவாறு ஏற்று, அவற்றை வைதிக மரபிற் சேர்த்துக் கொண்டனர். எடுத்துக்காட்டாக வைதிகமரபுக் கொள்கைகளுக்கு விரோதமற்ற தேச, ஜாதிதர்மங்கள் பிரமாணம் எனக் கௌதமர் கூறியிருக்க, விசேஷணத்தை நீக்கித் சேத தர்மங்கள் பிரமாணம் எனக் கொண்டு வடநாட்டார்க்குக் கம்பள வியாபாரம் முதலிய ஐந்து விப்ரதிபத்திகளும், தென்னாட்டாருக்கு உபநயனமாகாதவன், பெண்டிர் இவர்களோடு உண்ணுகை, பழைய சோற்றை உண்ணுகை, சகோதரன் சகோதரியின் பிள்ளைகளுக்கிடையில் (மைத்துனன், மைத்துனி) திருமணம் ஆகிய ஐந்துவிப்ரதிபத்திகளுமுள எனப் பௌதாயன தர்ம சூத்திரம் கூறும். ஆனால் இவை வடநாட்டிலனுமதிக்கப்படாதவை. இந்தியாவில் ஆரியர் பின்பற்றிய இணக்க முறைகளுக்கு இஃதும் ஓர் எடுத்துக்காட்டாம்.
வேதகாலப் பொருளாதார நிலை
இருக்குவேதகால ஆரியர் ஓரளவு விவசாயிகளாகவும், ஓரளவு மந்தை வளர்ப்போராகவும் விளங்கினர். விவசாயத்துடன் மந்தை இணைந்து காணப்படுகிறது. மந்தைகளே இவர்களின் பிரதான செல்வம். தரமான பெறுமதி. மந்தைகள் இந்து – ஐரோப்பியர் சமூகத்திலே பெற்றிருந்த முக்கியத்துவத்தினைப் பின்வருவனவற்றாலு மறியலாம். ஆதிக் கிரேக்கர் காலத்திலே ஹோமர்காலத்திலே, மந்தைகள் தரமான பெறுமதியாகக் கணிக்கப்பட்டன. மந்தை எனப்பொருள்படும் Pநஉரள சொல்லடியாகவந்த லத்தீன்பதமான Pநஉரnயை என்பதன் வழியாகவே Pநஉரnயைசல எனும் ஆங்கிலச் சொல்வந்துள்ளது. சைபீரியா, கென்யா, மேற்கு ஆபிரிக்கா, கொலம்பியா போன்ற நாடுகளில் அண்மைக் காலம்வரை பழங்குடிகள் மந்தையினைப் பணம் போலப் பயன்படுத்தி வந்தனர். பழந்தமிழிலக்கியத்திலே மந்தையைக் குறிக்கும் மாடு எனும் பதம் செல்வத்தையும் குறித்தது குறிப்பிடற்பாலது. பசு மிகவும் போற்றபட்டது. இதனைக் குறிக்கும் சொற்களில் ஒன்றான “அக்ன்யா” எனும்பதம் ‘கொல்லக் கூடாது’ எனும் பொருள்படும். இதிலிருந்து இதன் முக்கியத்துவம் வெள்ளிடைமலை. பசுவினாலே பெறப்படும் நன்மைகளைக் கொண்டு அது ஒரு புனிதமிருகமாகக் கருதப்படலாயிற்று.
குதிரையும் நன்கு முக்கியத்துவம் பெற்றது. இது போரிற்கும், பொழுதுபோக்கிற்கான தேர்ச்சவாரிக்கும், அல்லது தனிச்சவாரிக்கும், போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. விவசாயத்தில் எருதுகளின் பயன்பாடு குறிப்பிடற்பாலது. எருதுகள் பூட்டிய கலப்பைகள் கொண்டு விவசாயம் நடைபெற்றது. விவசாயத்திலே நீர்ப்பாய்ச்சுதலும் இடம் பெற்றது. ‘யவ’ முதலிய தானியங்கள் விளைவிக்கப்பட்டன. இருக்கு வேதகாலத்திற்கு முன்பே பஞ்சாப் பகுதியிலே விவசாயம் நன்கு நடைபெற்றமை ஹரப்பாகலாச்சாரச் சின்னங்களாலும் அறியப்படுகின்றது.
வியாபாரம் நடைபெற்றது. இது பெரும்பாலும் பண்டமாற்றாகவே நிலவியது. ‘நிஷ்க’ எனும் பதம் ஒருவகையான நாணயமெனச் சிலர் கருதினாலுமிக்காலத்தில் இஃது ஓர் ஆபரணத்தையே குறித்திருக்கலாம். ‘பணி’ என்போர் பிரபல வியாபாரிகளாகக் கூறப்படுகின்றனர்.
மக்கள் தமக்குப் பெருந்தொகையான செல்வங்கள் தருமாறு தெய்வங்களை விளித்துப் பாடியதிலிருந்து அவர்களின் உலகியற் பற்றுத் தெளிவு.
சமூகத்திலே பல்வேறு தொழில்கள் நிலவின. ஒவ்வொரு சாதியினரும் தத்தம் தொழிலைச் செய்தனர். இக்காலத்தில் ஒருவர் தமது தொழிலை மாற்றலாம். பருத்தி பயிரிடப்பட்டது. பருத்திப் புடைவைகள், கம்பளிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. நெய்தல் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ‘அயஸ்’ எனும் பதம் இரும்பினைக் கருதிற்றா? கருதவில்லையா? என்பது குறித்துக் கருத்து வேறுபாடு உளது. எனினும் இருக்கு வேதகாலப் பிற்பகுதியிலாவது இரும்பின் உபயோகம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு இரும்பினுடைய உபயோகம் முதலிலே சின்னாசியாவிலே வாழ்ந்த ஹிற்றைற் மக்கள் மத்தியிலேற்பட்டது. நெடுங்காலத்தின் பின்னரே பிறமக்கள் இது பற்றி அறிந்தனர். இந்தியாவிற்கு வந்த ஆரியரில் ஒரு சாரார் இரும்பின் உபயோகத்தினை அறிந்திருந்தனர் எனலாம். எவ்வாறாயினும், ஆரியரின் வருகையுடனேதான் இரும்பின் உபயோகமும் இந்தியாவிலேற்பட்டது என்பதில் ஐயமில்லை. தொல்லியல் ரீதியிலே இருக்கு வேதகாலத்திய இரும்புப் பொருட்களிதுவரை கிடைக்கவில்லை. ஆனால் அண்மையில் வட இந்தியாவின் மேற்குப் பகுதியிலே கிடைத்துள்ள இரும்புப் பொருட்கள் கி. மு. 12-ம் நூற்றாண்டளவைச் சேர்ந்தவை என்பது தெளிவாக உறுதிப்படுத்தப்படின் மேற்குறிப்பிட்ட கருத்து நன்கு வலுப்பெறும். ஆனால், செம்பு, பொன், வெண்கலம் போன்ற பிற உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுவந்தன. ‘அயஸ்’ என்பது செம்பு அல்லது வெண்கலத்தையே இக் காலத்திலே குறித்தது என ஒரு சாரார் கருதுவர். இருக்குவேதம் “வெண்கலக்காலநூல்” எனத் திரு. தீ~pத் கருதினார்.
இக்காலத்திலே மக்கள் பெரும்பாலும் கிராமங்களிலேயே வாழ்ந்தனர். வீடுகள் பெரும்பாலும் மண், மரம் முதலியவற்றால் அமைக்கப்பட்டிருந்தன. பொது மக்கள் பெரும்பாலும் நடந்து சென்றனர். மன்னரும், பிற உயர் வர்க்கத்தினரும் தேர், வண்டிகள், குதிரைகள், கழுதைகள் முதலியனவற்றினைப்பிரயாணத்திற்குப் பயன்படுத்தினர்.
பிந்திய வேதகாலத்திலே, பொருளாதாரத் துறையிலே மாற்றங்கள் ஏற்பட்டன. ஆரியர் கங்கைச் சமவெளிக்குச் சென்றபின் விவசாயம் நன்கு வளர்ச்சியுற்றது. இரும்பினுடைய உபயோகம் யஜுர் வேதகாலத்திலே திட்டவட்டமாக ஏற்பட்டுவிட்டது. விவசாயப் பெருக்கத்திற்கு இரும்பின் உபயோகம் நன்கு உதவிற்று. விவசாயக் கருவிகள் செய்தற்கும், காடுகளை வெட்டி நாடாக்கவுமிது நன்கு துணையாயிருந்தது. பல எருதுகள் பூட்டிய கலப்பை கொண்டு விவசாயம் நடைபெற்றது. அதாவது பெரிய அளவிலே விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. சதபத பிராஹ்மணம் விவசாயத்தின் பல்வேறு நிலைகளைக் குறிப்பிடுகின்றது. நீர்ப்பாய்ச்சுதலும் நடைபெற்றது. கோதுமையுடன் நெல் நன்கு பயிரிடப்பட்டது. கங்கையாற்றின் மேல் கரையிலுள்ள ஹஸ்தினாபுரத்திலே நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் விளைவாக கி. மு. 12-ம் நூற்றாண்டளவிலேயே நெற் பயிர்ச் செய்கை, மந்தை வளர்த்தல் முதலியன கங்கைச் சமவெளியின் மேற்குப் பகுதியிலே நிலவியது பற்றி இலக்கிய மூலங்கள் குறிப்பிடுவதை உறுதிப்படுத்தக் கூடியதாயிருக்கிறது. மிக நேர்த்தியான மட்பாண்டங்களும், செம்பினாலான அம்பு நுனிகள், இரும்புத் துண்டுகள், கண்ணாடியாலான காப்புகள், மண்ணாலான எருது உருவங்கள், எலும்பினாலான ஊசிகள், குதிரை. பன்றி, ஆடு, மாடு ஆகியனவற்றின் எலும்புகள், எரிந்த அரிசி முதலியனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் பொருளியலின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்தமை உபநிஷதங்களாலும் புலப்படும். இதனை வைதிகக் கல்வி முடிவிலே குரு சிஷ்யனுக்கு அளிக்கும் அறிவுரையிலே “நன்மையைப் புறக்கணியாதே. பொருள் வளத்தினை (பூத்யை)ப் புறக்கணியாதே” எனக் கூறுவதிலிருந்து (தை. உ. 1-2-1) உணரலாம். மேலுமிதே உபநிஷத்திலே 93.7-9) உணவினுடைய முக்கியத்துவம் பற்றி நன்கு வற்புறுத்துகையில் “அன்னத்தை (உணவினை) நிந்திக்க வேண்டாம்@ இழித்துக் கூற வேண்டாம்@ பெருவாரியாக உணவு உற்பத்தி செய்க (அன்னம் பஹ{குர்வீத) இது விரதம் (கடமை)” என வரும்பகுதிகள் நன்கு குறிப்பிடற்பாலன. மனிதனுக்குத் தேவையான உணவு உற்பத்திப் பெருக்கம் பற்றி வேகாலத்திலே மக்கள் சிந்தித்திருந்தனர். இதற்கு முற்பட்ட ஹரப்பா கலாச்சாரத்திலேயே தானிய உற்பத்தியும், சேகரிப்பும் நன்கு கவனிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடற்பாலதே.
ஹஸ்தினாபுர அகழ்வாராய்ச்சி கி. மு. 1100 – 800 வரையுள்ள காலப்பகுதியிலும், இதன் பின்பும் கங்கைச் சமவெளியின் மேற்பகுதியிலே வாழ்ந்த மக்களின் பொருளியல் நிலை, உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றியறிய உதவுகின்றன. ஏரிக் கட்டுள்ள எருது, எருமை, செம்மறியாடு, பன்றி முதலியவற்றின் எலும்புகள் எரிந்து கருகிக் காணப்படுகின்றன. இவற்றிலுள்ள வெட்டுக்களை நோக்கும்போது, இவை உணவிற்காகக் கொல்லப்பட்டன என்பது தெளிவு. மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உண்ணும் பழக்கம் நிலவிப் பின்னர் மறைந்தது. ஏரிக்கட்டுள்ள எருது, எருமை முதலியவற்றின் எலும்புகள் பெருவாரியாகக் கிடைத்துள்ளமையினை நோக்கும்போது, மந்தை வளர்த்தல் ஒரு முக்கியமான தொழிலாக விளங்கியது என்பது புலனாகும். பெருமளவு விவசாயம் நிலவிய சமூகத்திலே மந்தைகள் முக்கியமான இடம் பெற்றிருத்தலில் வியப்பில்லை. மான் வேட்டையினைப் மக்கள் நன்கு விரும்பினர். ஏனெனில், இதன் எலும்புகள் எழுத்தாணியும், அலங்கார வேலைப்பாடுள்ள பிற பொருட்களும் செய்தற்குப் பயன்படுத்தப்பட்டன.
மனிதனுக்குத் தேவையான அறம், பொருள், இன்பமாகிய திரிவர்க்கங்களை வகுத்தமையிலே இவற்றின் நடுவணதாகப் பொருளினை வைத்துப் பொருளியலின் முக்கியத்துவத்தினை அக்கால மக்கள் வற்புறுத்தியது குறிப்பிடற்பாலது. “எவருக்கும் இருப்பிடம் அளிக்க வேண்டும். இது விரதம்” எனத் தைத்திரீய உபநிஷத் (3-10) கூறும்.
“ஆதிகால இந்துக்கள் மனித வாழ்க்கைக்கும், சமூக இயக்கத்திற்கும் அடிப்படையாகச் சடப் பொருளின் உண்மைக்கு மதிப்பு அளித்தனர். யஜ்ஞமே ஆரிய சமூகக் கூட்டமைப்பின் (ஊழஅஅரநெ) கூட்டான உற்பத்தி முறையினைக் குறிக்கும். தனிச் சொத்துரிமை, வகுப்புகள், அரசு முதலியனவற்றைத் தோற்றுவிக்குமுன் ஆதி ஆரியர் கையாண்ட கூட்டான வழிவகையே யஜ்ஞம்” என எஸ். ஏ. டாங்கே எனும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இக்காலத்திலே வர்த்தகம் நன்கு வளர்ச்சியுற்றது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வர்த்தகர் நடமாடினர். பணம் மிக்க வைஷ்யரை (செட்டிகளை)ப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ‘நிஷ்க’ இக்காலத்திலே பெறுமதியுள்ள நாணயமாக இருந்திருக்கலாம். முன்னைய காலத்திற்போலவே மந்தையொரு பெறுமதியுள்ள பொருளாய்க் கணிக்கப்பட்டது. ‘புராண’ என்ற நாணய வகையும், வேறுசிலவும். இக்காலத்தின் பிற்பகுதியிலே புழக்கத்திற்கு வந்து விட்டன. பண்டமாற்றுத் தொடர்ந்து நிலவிற்று. சந்தைகள், வர்த்தகக்குழுக்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. கடல் மார்க்கமான வர்த்தகமும் ஏற்பட்டு விட்டது. இந்தியக் கடற்கரையோரங்களில் மட்டுமன்றி, அப்பாலும், ஈழம், தென்கிழக்காசியா, மேற்காசியா போன்ற இடங்களுக்கும் வர்த்தகர் செல்லத் தொடங்கி விட்டனர்.
தொழில் அடிப்படையிலான சாதிப் பிரிவுகள் பல நிலவின. சிறு கருவித் தொழில்கள் பல நிலவின. உழவன். தச்சன், கொல்லன், குயவன் முதலியோரைக் குறிப்பிடலாம். விவசாயம், வர்த்தகம் வளர்ச்சியடைய நகரங்களும் இக்காலப் பகுதியிலே தோன்றின. ஹஸ்தினாபுரம், கம்பில்ய, கௌசாம்பி, பரிச்சக்ர, மிதிலா, சம்பா போன்ற பல நகரங்கள் வடஇந்தியாவில் எழுந்தன.
பிற்காலம்
வேதகாலத்தின் பின் ஆரிய நாகரிகம் தொடர்ந்து பிறவிடங்களுக்குப் பரவிற்று. குறிப்பாக, விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள இந்திய பகுதியிலும், வட கிழக்கு இந்தியாவிலுள்ள வங்காளம், அசாம் பகுதிகளிலும் ஆரியர் நாகரிகம் முன்னையதிலும் நன்கு பரவலாயிற்று. ஆரியர், ஆரியரல்லாதோர் உறவுகள் மேலுமதிகரித்தன. புதிய கருத்துக்களும் தோன்றின. வேதகால முடிவிலேதான் (கி. மு. 6-5ம் நூற்றாண்டுகளில்) ஆரிய நாகரிகமையத்தின் எல்லையிலே பௌத்தம், சமணம், ஆஜீவிகம் முதலியன தோன்றி வடஇந்தியாவிலும், பிற இந்தியப் பகுதிகளிலும் பரவின. மேலுமிதே காலத்திலே, (கி. மு. 6-4ம் நூற்றாண்டுகளில்) ஆரிய நாகரிகம், விந்திய மலைக்குத் தெற்கே பரவிய வாற்றினை ஏற்கனவே குறிப்பிட்ட வைதிக சூத்திரங்கள், இதிஹாஸங்கள், புராணங்கள் காலத்தால் முந்திய பௌத்த, சமணப் புனித நூல்கள், n;தால்லியற் சின்னங்கள் மூலம் ஓரளவு அறியலாம். இதே காலப்பகுதியிலே மகத அரசு வளர்ச்சியுற்றது. மகத மன்னரான நந்தனரும் (கி. மு. 4-ம் நூ). மௌரியரும் (கி.மு. 4-3ம் நூ) தீபகற்ப இந்தியாவின் சிறு பகுதியினையோ, பெரும்பகுதியினையோ தம்பேரரசுடன் இணைத்து ஆட்சி செய்தனர். குறிப்பாக மௌரியர் காலத்திலே மௌரியப் பேரரசு தமிழ் நாட்டின் வட எல்லை வரை வரிவுற்றது. இதன் விளைவாக, ஏற்கனவே சமய பண்பாட்டு ரீதியிலே வைதிக சமய, பௌத்த, சமண, ஆஜீவீகக் குருமார் மூலமும், பிறர் மூலமும் பரவிவந்த ஆரிய நாகரிகம் அரசியல் ரீதியிலும் தென்னாட்டிலே பரவ மேலும் வாய்ப்புகள் ஏற்பட்டன. ஒரே பேரரசின் பகுதிகளான வடக்குத் தெற்கு இந்தியப் பகுதிகளிலே மக்களின் நடமாட்டங்கள் முன்னையதிலும் அதிகரித்தன. மௌரியருக்குப்பின் தக்கணத்திலே பேரரசு அமைத்த சாதவாஹனர் ஆட்சிக்காலத்திலே (கி. மு. 3 – கி.பி. 3ம் நூ.வரை) வடநாடு தென்னாட்டுத் தொடர்புகள் முன்னையிலும் நன்கு ஏற்பட்டன.
ஆரிய நாகரிக மையத்திலிருந்து தெற்கே செல்லச்செல்ல, குறிப்பாகத் தூர தெற்கே வர ஆரிய நாகரிகத் தாக்கம் குறைந்து செல்கின்றது. தென்னிந்தியாவைப் பொறுத்த அளவிலிருவகையான தடைகளிருந்தன. புவியியல் நிலைகளாலேற்பட்ட தடையொன்று, ஆரியர் தெற்கே வந்தபோதும் திராவிடர் நாகரிகம் நன்னிலையிலிருந்தது. மேலும், வடக்கேயிருந்து வந்த ஆரியர் (இவர்களில் ஆரிய நாகரிகத்தை ஏற்ற ஆரியரல்லாதோருமிருந்தனர்) தொகை தெற்கேயிருந்தவர்களிலும் பார்க்க மிகக் குறைவு. எனவே, இணக்க முறைகள், ஒத்துமேவல்கள் நடைபெற்றன.
தெற்கே ஆரியர் நாகரிகம் பரவினாலுமதிலேற்கனவே, வட இந்தியாவிலிருந்த ஆரியரல்லாதார் நாகரிக அம்சங்களுமிடம் பெற்றிருந்தன. அவற்றுட் சில தென்னகத்திற்கும் பொதுவானவை. போர்வீரர், அரசர், வணிகர், முனிவர், விவசாயிகள், பிராமணர், தொழிலாளிகள், இருஷிகள், பௌத்த, சமண, ஆஜீவீகத் துறவிகள் முதலிய பல்வேறு மூலங்களுக்கு ஊடாக ஆரிய நாகரிகம் தெற்கே பரிவிற்று. காடுகள் மேலும் அழிக்கப்பட்டு விவசாய விஸ்தரிப்பும், இருப்பிடங்களமைத்தலும் நடைபெற்றன. முன்னை நாள் அரசுகள் வெல்லப்படுதலோடு புதிய அரசுகளும் தோன்றின. இருஷிகள், துறவிகள் இயற்கையளித்த இருப்பிடங்களிலே வாழ்ந்த தத்தம் கருத்துக்களைப் போதித்தனர். ஆரியர், அனாரியர் தொடர்புகள் மேலும் அதிகரித்தன. வடநாட்டுக் கருத்துக்கள் தென்னாட்டிலுள்ள மக்களைக் கவர்ந்தன@ குறிப்பாக, மன்னர்களைக் கவர்ந்தன. இம்முயற்சியிலே பிராமணரும் நன்கு ஈடுபட்டனர். “நாற்பத்தெண்ணாயிரத்தவர்” “எழுநூற்றுவர்” போன்ற பதங்கள் இவர்கள் அலை அலையாகத் தமிழகத்திற்கு வந்தமையினைக் குறிப்பன என அறிஞரில் ஒரு சாரார் கொள்ளுவர்.
மஹாபாரதம், இராமாயணம் ஆகிய இதிஹாஸங்களிலே குறிப்பிடப்பட்டுள்ள முனிவர், இருஷிகள் ஆச்சிரமங்களும் கவனித்தற்பாலன. எடுத்துக்காட்டாக, இராமாயணத்திலே வரும் தண்டகாரண்யம், பஞ்சவடி முதலியவற்றிலே வாழ்ந்த வைதிக சமய முனிவர்களைப் போலப் பலர் தெற்கே வந்துதங்கி, ஆச்சிரமங்களமைத்து வைதிக சமயக் கோட்பாடுகளைப் பரப்பினர்@ வேள்விகறியற்றினர். இவர்களுக்கு அனாரியரின் எதிர்ப்புகளிருந்தமையினை அசுரர், இரா~தர் பற்றிய கதைகளால் ஊகிக்கலாம். பௌத்த புனித நூல்களிலொன்றான சுத்த நிபாதத்திலே வரும் பாவரி என்னும் பிராமண இருஷியின் கதையும் வைதிக சமயிகள் எவ்வாறு தெற்கே சென்று வாழ்ந்தனர் என்பது பற்றி இதிஹஸங்கள் கூறுவதை உறுதிப்படுத்துகின்றது.
மேலும், அகத்தியர், பரசுராமர் பற்றிய கதைகளும் ஆரிய நாகரிகம் தெற்கே பரவியவாற்றினை உருவகமாகவும், மறைமுகமாகவும் குறிப்பிடுகின்றன. அகத்தியர் பற்றிய ஏற்கனவே குறிப்பிட்டிருந்தாலும் அவர் தமிழை வளர்த்தமை, பாண்டியரின் குலகுருவாக விளங்கியமை பற்றிய கதைகளும் மனம் கொளற் பாலன. ஆரியர் எவ்வாறு ஆரியரல்லாத மக்களை இணக்கப்படுத்த முயன்றனர் என்பதையுமிக்கதைகள் காட்டுகின்றன. மேலும், அகத்தியரின் தொடர்புள்ள இடங்களும் மரபுகளும் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும், வெளியே இலங்கை, தென்கிழக்காசிய நாடுகளிலும் பல அறியப்படுகின்றன. இவற்றின் மூலம் அகத்தியர் எனும் பெயர் ஒரு குடும்பப் பெயராக இருந்திருக்கலாம் அல்லது அப்பெயருள்ள பலர் வாழ்ந்தனர் எனக் கொள்ளலாம் பொதுப்பட நோக்கும்போது, அகத்தியர் ஆரிய நாகரிகப் பிரதிநிதியாக மிளிர்வதை அவதானிக்கலாம். பரசுராமர் பற்றிய கதைகளிலொன்று சேரநாட்டின் (தற்போதைய கேரளத்தின்) தோற்றம் பற்றியதாகும். இப்பகுதியில் ஆரியர் நாகரிகம் பரவியதை இதுவும் எடுத்துக்காட்டும். வடஇந்தியாவிற் போன்று ஆரிய நாகரிகத் தாக்கம் தெற்கேயும் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்டது. ஆனால் வடஇந்தியாவிற் போன்று இதன் பாதிப்பு இப்பகுதியிலே நன்கு ஏற்படவில்லை.
கி. மு. நாலாம் நூற்றாண்டளவிலே, வாழ்ந்த காத்யாயன என்ற வடமொழி இலக்கண ஆசிரியர் சேர, சோழ, பாண்டிய நாடுகளைப்பற்றிக் குறிப்பிடுகிறார். மேலும், பெருமளவு இதே காலத்தைச் சேர்ந்த மெகஸ்தெனீஸ் எனும் கிரேக்க ஆசிரியர் பாண்டிநாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இக்காலப்பகுதியளவில் அல்லது இதற்கு முன்னரே ஆரியர் தென்னந்தம் வரையறிந்து விட்டனர். நந்த (கி. மு. 4-ம் நூ) மௌரிய (கி. மு. 4 - 2-ம் நூ. வரை), சாதவாஹன (கி. மு. 3-கி.பி நூ. வரை)ப் பேரரசுகள் வளர்ச்சியோடு வடஇந்திய, தென்னிந்திய உறவுகள் மேலுமதிகரித்தன. இந்திய ஒருமைப்பாடு குறிப்பாகச் சமய பண்பாட்டு ரீதியிலேற்படலாயிற்று.
வடநாட்டிலும் பார்க்கத் தீபகற்ப இந்தியாவிலே ஆரியர் பலவழிகளில் இணக்கமுறைகளைப் பின்பற்றியதை நோக்கும்போது தென்னகம் ஆரியமயமானது என்பதிலும் பார்க்க இந்துமயமாயிற்று எனப் பேராசிரியர் ஆர். என். தண்டேகர் கூறியிருப்பது கவனித்தற்பாலது. தென்னகமக்கள் ஆரியரின் தெய்வங்களிலும் பார்க்கச் சமய சமூக நெறியான வர்ணாஸ்ரமதர்மத்தையே பெரிதும் ஏற்றனர். தெற்கே எதிர்ப்புகள் நிலவிவந்தாலும் அவற்றை ஒழித்திலர். தென்னாட்டுப் பழக்கவழங்கங்கள், சமய வழிபாட்டு முறைகளை அவர்கள் பொதுவாக அழித்திலர். ஆனாலவற்றைப் பொதுவாக ஏற்று வைதிகமரபு மெருகிட்டு அவற்றிற்கு வைதிக சமய சமூகவியல்புகளிலிடமளித்தனர். இருசாராரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். எடுத்துக்காட்டாகச் சுத்தபக்தி - இறைவனிடத்துக் கொள்ளும் தூய்மையானபற்று இந்தியாவிற்குத் தென்னகம் அளித்த பெரும் கொடைகளில் ஒன்றாகும். பக்தி திராவிடநாட்டிலே தோன்றி, மஹாராஷ்டிரத்தி;ற்குப் பரவி, அங்கிருந்து மதுரையை அடுத்துள்ள கங்கை – யமுனைப்பள்ளத்தாக்கிற்குப் பரவிற்று எனப் பத்மபுராணம் கூறும். தென்னிந்தியாவில், ஆரிய நாகரிகத்திற்குப் புறம்பான ஐயனார், மாரியம்மன் போன்ற பலதெய்வங்கள் பழையமுறைப்படியும், வைதிக சமய மெருகுடனும் இன்றும் வணங்கப்படுகின்றனர். கிராமப்புறங்களிலே வைதிகசமயக் கிரியைகளுடன் முற்பட்டகாலச் சடங்குகளும், வாத்தியங்களுமிடம் பெறுகின்றன. எடுத்துக்காட்டாகச் சில வாத்தியங்கள், பொங்கல், வேள்விகள் முதலியன குறிப்பிடற்பாலன. ஆரிய நாகரிகச் சார்பற்ற தைப்பொங்கல், கார்த்திகைத்தீபம் முதலிய விழாக்கள் புதுமெருகுடன் தொடர்ந்து நிலவுகின்றன.
பிற்கால வைதிக சமயப் பிரிவுகளான, காணபத்தியம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், சௌரம் ஆகியவற்றிலே ஆரியர், ஆரியரல்லாதோர் – திராவிடர், ஆதி ஒஸ்ரலோயிட் முதலிய மக்களின் கருத்துக்கள் எந்த அளவிற்குச் சங்கமித்துப் படிந்துள்ளன என்பதை ஒரளவாவது அறியலாம். வைதிக சமயச் செல்வாக்கு வளர்ச்சியடைய, ஆரிய நாகரிகத்திற்குப் புறம்பான அரசமரபுகளிற்பல பிற்காலத்திலே வைதிக இருஷிகள் அல்லது இதிஹாஸவீரர் அல்லது சந்திரன், சூரியன், அக்கினி குலங்களிலிருந்து தாம் தோன்றின எனப் பெருமைப்பட்டன. எடுத்துக்காட்டாகத் தமிழகத்தினை ஆண்ட முடியுடை வேந்தரான பாண்டியர், சோழர், சேரர் ஆகியோரைக் குறிப்பிடலாம். தென்னகத்திலேற்கனவே நிலவிய சமூகப்பிரிவுகளும் ஆரியவர்ணப்பிரிவுகளும் ஒன்று சேர்ந்து பிற்காலத் தென்னிந்திய சமூகப்பிரிவுகள் தோன்றக் காரணமாயிருந்திருக்கலாம்.
வேதகால வடமொழி, இதிஹாஸவடமொழி, பிற்காலவடமொழி (ஊடயளளiஉயட ளுயளெமசவை) என வடமொழியின் நிலைகளை மூன்றாகப் பிரிக்கலாம். பிற்கால வடமொழிக்கே பெரும்பாலும், கி. மு. 6 – 5ம் நூற்றாண்டளவிலே வாழ்ந்த பாணினி இலக்கணம் வகுத்தவர். இம்மொழி தொடர்ந்து தற்காலம்வரை இந்தியாவின் பண்பாட்டுமொழியாகவும், இந்துக்களின் புனிதமொழியாகவும் இலங்கிவந்துள்ளது. இதனை ஒருகாலத்திலே புறக்கணித்த பௌத்தர், சமணர் கூட இதனைப் பின்னர் பயன்படுத்தினர். இந்தியாவின் எப்பகுதியிலும் வாழ்ந்த மன்னரும் இதற்கு ஆதரவு நல்கினர். இந்தியாவின் இணைப்பு மொழியாக, பொதுமொழியாக, அறிவியல் மொழியாகச் சமீபகாலம்வரை இது நிலவி வந்துள்ளது. மேலும் இந்திய பண்பாடு பரவிய ஈழம், தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா முதலிய நாடுகளிலும் மதிப்புள்ள இடத்தினை வடமொழி பெற்றிருந்தது.
“இந்தியாவில் ஆரியரின் மிகக் குறிப்பிடத்தக்க தொண்டுகள் சமூகநிறுவனங்களிலும், சமயத்திலுமே காணப்படுகின்றன. இந்தியர் வாழ்வின் பல்வேறு நிறுவனங்கள் - குறிப்பாக, இந்துசமயத் தொடக்கத்தினைப் பலர் ஆரியர் வருகையிலிருந்துதான் எடுத்துக் கூறுவர். வடமொழி, சாதிமுறையிலமைந்த சமூகம், சமய வேள்வி, உபநிஷத்தத்துவம் முதலியனவும் ஆரியரின் தொண்டுகள் என்பர்@ விவசாயத்திற்காகப் பெருந்தொகையாகப் பலகாடுகளை அழித்து நிலத்தினைப் பண்படுத்தினர். அவர்களின் தொண்டுகள் தொடர்ந்து வளர்ந்ததாலோ, அவற்றிற்கு எதிராகத் தோன்றிய இயக்கங்களாலோ, மேலும் அபிவிருத்திகள் தோன்றின எனப் பேராசிரியர் ரோமிலாதாபர் ஆரியரின் தொண்டுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மேற்குறிப்பிட்டனவற்றிற்கு ஆரியர் மட்டுமன்றித் திராவிடரும் பிறரும் நன்கு பணியாற்றியுள்ளனர் என்பதும் மனம் கொள்ளத்தக்கது.
“ஆரியர், ஆரியரல்லாதோர் (திராவிட, ஆதி ஒஸ்ரலோயிட் முதலியபிற) பண்பாட்டுத் தொடர்புகள் பன்னெடுங்காலமாக ஏற்பட்டு, ஒன்றோடொன்று பல வழிகளிலே பின்னிப் பிணைந்துவிட்டன. இதனால் எவர் எந்த அளவிற்கு இந்தியப் பண்பாட்டிற்கு அருந்தொண்டாற்றினர் என முடிவாகக் கூறுதல் எளிதன்று எனப் பேராசிரியர் கே. கே. பிள்ளை அவர்கள் கூறியிருப்பது குறிப்பிடற்பாலது. அவ்வாறாயினும், இன்றைய நிலையில் ஒரளவு பொதுப்படக் கூறலாம்.
அடிக்குறிப்புகள்
1. டீயளாயஅ யு. டு. ளுவரனநைள ழn ஐனெயைn ர்ளைவழசல யனெ ஊரடவரசந. ஊயடஉரவவயஇ 1964 p. 21.
2. ஆரியர் வருமுன்னரே திராவிடரும், அவர்களுக்கு முன் ஆதி ஒஸ்ரலோயிட் மக்களும் அவர்களுக்கு முன் நெக்கிற்றோக்களும் வந்து விட்டனர்.
i. புசநைசளழn பு. டுiபெரளைவiஉ ளுரசஎநல ழக ஐனெயை ஏழடள. i – ஒi ஊயடஉரவவயஇ 1903 – 1922.
ii. ஆயதரஅனயச சு. ஊ. (நுன.) வுhந ஏநனiஉ யுபநஇ டீழஅடியலஇ 1965இ pp. 146 – 167.
3. i புழசனழn ஊhடைனநஇ வுhந யுசலயளெஇ முநnnமையவ pசநளளஇ 1970 pp 208 – 212.
ii முழளயஅடிi னு. னு. வுர்ந ஊரடவரசந யனெ ஊiஎடைணையவழைn ழக யுnஉநைவெ iனெயை in ர்ளைவழசiஉயட ழுரவடiநெஇ டுழனெழnஇ 1965இ p. 76.
4. ஊhயவவநசதi ளு. மு. ஐனெழ – யுசலயn யனெ ர்iனெiஇ ஊரடஉரவவயஇ 1960இ pp. 2 – 3.
5. ஆழnநைச றுடைடயைஅளஇ ளுயளெமசவை – நுபெடiளா னுiஉவழையெசலஇ ழுஒ-கழசனஇ 1951இ p. 152
6. ஆயதரஅனயச சு. ஊ. (நுன) ழி. உவைஇ p. 145.
7. ஆயதரஅனயச சு. ஊ. (நுன) ஐடினை.இ pp 220 – 221.
8. ஆயதரஅனயச சு. ஊ. (நுன) ஐடினை.இ p 221.
9.
i. ஆயசளாயடடஇ ளுசை துழாnஇ ஆழாநதெழனயசழ யனெ வாந ஐனெரள ஊiஎடைணையவழைnஇ ஏழடளஇ i – iiiஇ டுழனெழnஇ 1931.
ii. றூநநடநச ஆழசவiஅநசஇ வுhந ஐனெரள ஊiஎடைணையவழைnஇ ஊயஅடிசனைபநஇ 1960இ pp. 90.கக.
iii. டீயளாயஅ யு. டு.இ றுழனெநச வாயவ றயள ஐனெயைஇ டுழனெழnஇ 1954. p. 24.
10. டீரசசழற. வு.இ வுhந ளுயளெமசவை டுயபெரயபநஇ சுநஎளைநன நுனவைழைn டுழனெழnஇ 1973இ p. 24.
11. புழசனழn ஊhடைனநஇ ழி. உவை.இ pp. 13இ 91 – 93.
12. புழசனழn ஊhடைனநஇ ழி. உவை.இ p. 91
13. புழசனழn ஊhடைனநஇ ழி. ஐடினை p. 91
14. Pபைபழவ ளுவரயசவஇ Pசநாளைவழசiஉ ஐனெயைஇ புசநயவ டீசவையinஇ 1961இ p. 276.
15. i. புழசமழn ஊhடைனந ழுp. உவை.
ii ஊhயவவநசதiஇ ளு. மு.இ ஐனெழ-யுசலயn யனெ ர்iனெiஇ ஊயடஉரவவயஇ 1960இ pp. 10-15.
16. டீயடைநல ர். று. ஏநனய யனெ யுஎநளவயஇ ரு. ஊ. சு.இ ஓஏ. 1ரூ2. 1957. pp 23 – 35.
17. i புhழளா நேபநயனெசய யேவாஇ வுhந யுசலயn வுசயடை in ஐசயn யனெ ஐனெயைஇ ஊயடஉரவவயஇ 1937.
ii. ஆயதரஅனயச சு. ஊ. (நுன) ழுp. உவை.இ ஊh. ஒi.
18. பொதுவாக, ‘சதம்’ எனும் பதம் ஆசியாவிலுள்ள ஆரிய மொழிகளிலும், ‘கென்ரும்’ எனும் பதம் ஐரோப்பாவிலுள்ள ஆரிய மொழிகளிலும் நூறு என்ற எண்ணினைக் குறிக்கும். ‘ச’, ‘க’ வாக மாறுதல் குறிப்பிடற்பாலது. Pபைபழவ ளுவரயசவஇ ழுp. உவை.pp. 245கக.
19. டீரசசழற வு.இ ழுp. உவை p. 7.
20. i னுயனெநமயச சு. N. Pசநளனைநவெயட யுனனசநளளஇ Pசழஉநநனiபௌ ழக வாந ஐனெயைn ர்ளைவழசiஉயட ஊழபெசநளளஇ 1947.
ii னுயனெநமயச சு. N.இ ரு. ஊ. சு. ஓஐஐ. iஇ 1954இ pp. 14 – 15.
21. சுழடிநசவ ளூயகநசஇ நுவாழெபசயவிhல ழக யுnஉநைவெ ஐனெயை ர்யசசயளழறவைணஇ 1954.
22. வுடையம டீ. பு. வுhந ழுசழைnஇ டீழஅடியலஇ 1893.
23. i சுயிளழn நு. து. (நுன). ஊயஅடிசனைபந ர்ளைவழசல ழக ஐனெயை ஏழட. ஐ. ஊயஅடிசனைபநஇ 1935இ pp. 69 – 70.
ii. புழசனழn ஊhடைனநஇ ழுp. உவை.இ pp. 138 – 158.
24. i. புழசனழn ஊhடைனநஇ ஐடினைஇ pp. 158 0 182.
ii. ஆயதரஅனயச சு. ஊ. (நுன) ழுp. உவை. p 213.
25. i. புழசனழn ஊhடைனந ழுp. உவை. pp. 183 – 206.
i. ஆயதரஅனயச சு. ஊ. (நுன) ழுp. உவை. p. 27.
iii. வுhந ஊரடவரசயட ர்நசவையபந ழக ஐனெயைஇ ஏழட. iஇ ஊயடஉரவவயஇ 1958இ p. 143.
26. ஆயதரஅனயச சு. ஊ. (நுன) ழுp. உவை. p. 214.
27. ஆயதரஅனயச சு. ஊ. (நுன) ழுp. உவை. p. 215.
28. ஊhயவவநசதi ளு. மு. ழுp. உவை. pp. 11 – 14.
29. i. ஊhயவவநசதi ளு. மு. ழுp. உவை. pp. 13 – 14.
ii டீயளாயஅஇ யு. டு.இ ழுp. உவை p. 29.
30. டீரசசழற வு. ளுயளெமசவை டுயபெரயபநஇ ளுநஉழனெ ஐஅpசநளளழைnஇ டுழனெழnஇ pp. 30 – 31.
31. ளுரடிடியசயழ டீ. வுhந Pநசளழயெடவைல ழக ஐனெயைஇ டீயசழனயஇ 1958இ pp. 97 – 98.
32. விவசாய சமூகத்திலே மந்தை முக்கியமான இடம் பெற்றிருந்தது. இந்தோ – ஐரோப்பிய மரபிலே போர்வீரர் குழு எனில் “பசுக்களைத் தேடிச் செல்வோர் கூட்டம்;” எனவும், ‘பாதுகாப்பு அளித்தல்’ எனில் ‘பசுக்களைப் பாதுகாத்தல்’ எனவும் பொருள்படும் பதங்கள் உள்ளன.
33. i Pபைபழவ ளு. ழுp. உவை. pp. 266 – 267.
ii டீசனைபநவ யனெ சுயலஅழனெ யுடடஉhin – வுhந னுயறn ழக ஐனெயைn ஊiஎடைணையவழைn – புசநயவ டீசவையinஇ 1968. pp. 144 – 145.
34. டீசனைபநவ யனெ சுயலஅழனெ யுடடஉhinஇ ழுp. உவை. p. 145.
35. Pபைபழவ ளுவரயசவஇ ழுp. உவை. p. 249.
36. i Pபைபழவ ளுவரயசவஇ ழுp. உவை. p. 250.
ii ஊரடவரசயட ர்நசவையபந ழக ஐனெயை ஏழட. ஐஇ ஊயடஉரவவயஇ 1958இ p. 141.
37. i Pபைபழவ ளுரவயசவஇ ழுp உவை. p.250.
ii புரசநெல. ழு. சு. வுhந ர்வைவவைநளஇ புசநயவ டீசவையinஇ 1962. p. 105.
38. i Pபைபழவ ளுவரயசவ ழுp. உவை. p. 251.
ii புழசனழn ஊhடைனந ழுp. உவைஇ pp. 18 – 19. மேலும், மித்தானியர் மத்தியிலே ‘மரியன்ன’ எனும் வீரர்கள் இக்காலத்தில் இருந்தனர். இச் சொல் வீரரைக் குறிக்கும் ‘மர்யா’ எனும் வடமொழிப்பதத்தை நினைவூட்டுகிறது.
iii புரசநெல ழு. சு. ழுp. உவை. p. 124 – 125.
39. டீரசசழற. வு. ளுயளெமசவை டுயபெரயபநஇ டுழனெழnஇ 1973. p. 41.
40. டீரசசழற வு. ஐடினை.
41. றூநநடநச ஆ. ழுp. உவை. pp. 90 – 92.
42. றூநநடநச ஆ. ழுp. உவை p. 93.
43. டீசனைபநவ யனெ சுயலஅழn யுடடஉhinஇ ழுp. உவை.இ p. 140.
44. i றூநநடநச ஆ.இ ழுp உவை. pp. 43 – 45.
ii Pபைபழவ ளுவரயசவஇ ழுp.உவை. pp. 174 – 175; 226 – 227.
iii டீசனைபநவ யனெ சுயலஅழனெ யுடடஉhinஇ ழுp. உவை. டி. 145 – 147 நவஉ.
45. ர்iநெ புநடனநசn சு. வுhந ஊழஅiபெ ழக வாந யுசலயளெ யனெ வாந நனெ ழக ர்யசயிpய ஊiஎடைணையவழைnஇ ஆயnஇ ஏழட. 56இ 1956. pp. 136 – 140.
46. வெயர் சேர்விஸ் எனும் அறிஞரும் மேற்குறிப்பிட்ட கருத்தினையே கொண்டுள்ளார். குயசை ளுநசஎளைஇ று. யு. வுhந ஊhசழழெடழபல ழக வாந ர்யசயிpயn ஊiஎடைணையவழைn யனெ வாந யுசலயn ஐnஎயளழைளெ. ஆயn ஏழட. 56இ 1956. pp. 153 – 156.
47. ஆயதரஅனயச சு. ஊ. (நுன) ழுp. உவைஇ pp. 197 – 198.
48. ளுரடிடியசயழ டீ.இ ழுp.இ p. 98.
49. i. டுயட. டீ. டீ. நுஒஉயஎயவழைn யவ ர்யளவinயிரசய யனெ ழவாநச நஒpடழசஙயவழையெ in வாந ரிpநச புயபெய யனெ ளுரவடநத டியளiளெ. யுnஉநைவெ ஐனெயைஇ ழே. 10ரூ11. நேற னுநடாi. 1954. p. 147. இவர் இம்மட்பாண்டங்களின் காலம் கி. மு. 1500-600 வரையென்பர். மேற்படி ப. 151.
ii. டீசனைபநவ ரூ சுயலஅழனெ யுடடஉhinஇ ழுp. உவை. pp. 210 – 218.
50. i. டுயட. டீ. டீ. குரசவாநச ஊழிpநச ர்ழயசனள கசழஅ வாந புயபெநவiஉ டீயளinஇ யுnஉநைவெ ஐனெயைஇ ழேஇ 7இ 1951.
ii டீசனைபநவ யனெ சுயலஅழனெ யுடடஉhinஇ ழுp. உவைஇ pp. 200 – 206.
51. டீரசசழற. வு. ழுp உவை p. 32.
52. டீயளாயஅ யு. டு. ழுp. உவை. pp. 29-30.
53. ஊhயவவநசதi ளு. மு. ஐனெழ-யுசலயn ரூ ர்iனெiஇ ஊயடஉரவவயஇ 1960. p. 17.
54. முநiவா யு. டீ. ர்ழஅந ழக வாந ஐனெழ – நுரசழிநயளெஇ ழுசநைவெயட ளுவரனநைள in hழழெரச ழக புரசளநவதi நுசயஉhதi Pயஎசலஇ ழு. ரு. P. 1933.
55. றூநநடநச ஆ.இ ழுp. உவை. p. 92.
56. டீரசசழற வு. ழுp. உவை. p. 32.
57. புழசனழn னு. ர். Pசநாளைவழசழை டியஉமபசழரனெ ழக ஐனெயைn ஊரடவரசநஇடுரணயஉஇ 1958.
58. ஏனைந குழழவழெவந ழே. 45.
59. ஏனைந குழழவழெவ ழே. 46.
60. ளுயமெயடயை ர். னு. நேற டுiபாவ ழn வாந ஐனெழ-ஐசயnயைn ழச றுநளவநசn யுளயைவiஉ சுநடயவழைளெ டிநவறநநn 1700 டீ. ஊ. – 1200 டீ. ஊ. யுசவiடிரள யுளயைநஇ ஒஒஎi ¾ இ ஆஊஆடு ஒiiiஇ pp. 312-322.
61. துயஉஙரநவவய ர்யறமநள யனெ ளுசை டுநழயெசன றுழழடடலஇ Pசநாளைவழசல ழக ஆயமெiனெ – ஊரடவரசந யனெ ளுஉநைவெகைiஉ னுiஎநடழிஅநவெஇ ஏழட. ஐ. Pசநாளைவழசல யனெ டீநபinnபைள ழக ஊiஎடைணையவழைn. டுழனெழnஇ 1963. p. 406.
62. புhசைளாஅயn; சு. ஐசயnஇ புசநயவ டீசவையinஇ 1961இ p. 76.
63. ஊhயவவநசதi ளு. மு. ழுp. உவை p. 18 – 19.
64. டீரசசழற வு.இ ழுp. உவைஇ p. 33.
65. ளூநனெந து. N. குழரனெயவழைn ழக வாந யுவாயசஎயnநை ஊiஎடைணையவழைnஇ Pழழயெஇ 1949.
66. சுயனாயமசiளாயெn ளு.இ (நுன. ரூ வுச.) ருpயnளையனள டுழனெழnஇ 1953இ p. 20.
67. ஆயதரஅனயச சு. ஊ.இ யுnஉநைவெ ஐனெயைஇ டீயயெசயளஇ 1952இ pp. 87 – 88.
68. i. ஆயஒஆரடடநச. ர்ளைவழசல ழக யுnஉநைவெ ளுயளெமசவை டுவைநசயவரசநஇ 1860.
ii. றுiவெநசnவைண ஆ.இ ர்ளைவழசல ழக ஐனெயைn டுவைநசயவரசந ஏழட.ஐஇ வுச. டில ஆசளஇ ளு. முநவமயசஇ ஊயடஉரவவயஇ 1927இpp. 292 – 293.
69. றுiவெநசnவைண ஆ. ஐடினைஇ pp. 291 கக.
70. சுயிளழn நு. து. (நுன) ழுp. உவை.இ pஇ 112.
71. டீயளாயஅ யு. டு. ழுp. உவைஇ pp. 31 கக
72. Pபைபழவ ளுவரயசவஇ ழுp. உவைஇ p. 255.
73. டீரசசழற வு. ழுp. உவை. p. 35.
74. டுயட டீ. டீ.இ ழுp. உவை. p. 149.
75. னுயபெந ளு. யு. ஐனெயை கசழஅ Pசiஅவைiஎந ஊழஅஅரnளைஅ வழ ளுடயஎநசலஇ டீழஅடியலஇ 1949இ p. 48.
76. சுயலஉhயரனாரசi ர். ஊ.இ Pழடவைiஉயட ர்ளைவழசல ழக யுnஉநைவெ ஐனெயைஇ ஊயடஉரவவயஇ p. 1950. p. 9.
77. ஆயதரஅனயச சு. ஊ. (நுன) வுhந ஏநனiஉ யுபநஇ டீழஅடியலஇ 1965 p. 248.
78. ஆயதரஅனயச சு. ஊ. ஐடினை. p. 254.
79. i. டீhயனெயசமயச னு.சு. ய. யுசலயn ஐஅஅபைசயவழைn iவெழ நுயளவநசn ஐனெயைஇ யுnயெடள ழக வாந டீhயனெயசமயச ழுசநைவெயட ஐளெவவைரவநஇ ழே. 12இ 1931இ pp. 103 – 116. டி. டுநஉவரசநள ழn வாந யுnஉநைவெ ர்ளைவழசல ழக ஐனெயை ஊயடஉரவவயஇ 1919.
ii. சுயலஉhயரனாரசi ர். ஊ. ளுவரனநைள in ஐனெயைn யுவெநஙரவைநைளஇ ஊயடஉரவவயஇ 1932.
iii. ஊhயவவநசதi ளு. மு.இ pடயஉந ழக யுளளயஅ in வாந ர்ளைவழசல யனெ ஊiஎடைணையவழைn ழக ஐனெயைஇ புயராயவiஇ 1955.
80. ஆயதரஅனயச சு. ஊ. (நுன) ழுp. உவைஇ pp. 256 – 266.
81. ஆயதரஅனயச சு. ஊ. (நுன) ஐடினை. pp. 261 – 266
82. யுவையசநலய டீசயாஅயயெ எii. 18.
83. Nடையமநவய ளுயளவசi மு. யு. யு. ர்ளைவழசல ழக ளுழரவா ஐனெயைஇ ழுஒகழசனஇ 1966இ p. 72.
84. னுipயஎயஅளயஇ ஊh. 9 – 11; ஆயாயஎயஅளயஇ ஊh. 6 – 11.
85. Pயளnமைமயச மு. ஆ.இ புநழபசயிhiஉயட குயஉவழசள in ஐனெயைn ர்ளைவழசலஇ டீழஅடியலஇ 1955. p. 25.
86. i ஆயதரஅயனயச சு. ஊ. ஊழசிழசயவந டுகைந in யுnஉநைவெ ஐனெயை ஊயடஉரவவயஇ 1922இ pp. 214 – 221.
ii ஆயதரஅனயச சு. ஊ. (நுன) வுhந ஏநனழை யுபநஇ டீழஅடியலஇ 1965. p. 355.
87. ய. ஆயதரஅனயச சு. ஊ. ஐடினை.
டி. டீhயசபயஎய P. டு. ஐனெயை in வாந ஏநனiஉ யுபநஇ டுரஉமழெறஇ 1956. pp. 139 – 140.
88. சுநிளழn நு. து. (நுன) ழுp. உவைஇ p. 96.
89. யுடவநமயச யு. ளு. ளுவயவந யனெ புழஎநசnஅநவெ in யுnஉநைவெ ஐனெயைஇ னுநடாiஇ 1962இ p. 161கக.
90. ஆயதரஅனயச சு. ஊ. (நுன). ழுp. உவைஇ. pp. 356 – 357.
91. ஆயதரஅனயச சு. மு. ஆடைவையசல ளலளவநஅ in யுnஉநைவெ ஐனெயை. ஊயடஉரவவயஇ 1956.
92. ளுiபொ ளு. னு. யுnஉநைவெ ஐனெயைn றுயசகயசந றiவா ளிநஉயைட சநகநசநnஉந வழ வாந ஏநனiஉ pநசழைனஇ டுநனைநnஇ 1965இ p. 168.
93. ஆயதரஅனயச சு. ஊ. யுnஉநைவெ ஐனெயைஇ டீயயெசயளஇ 1952. pp. 76 – 77.
94. ஆயதரஅனயச சு. ஊ. ஐடினை p. 76.
95. யுசவாயளயளவசயஇ 2-6 நவஉ.
96. i. ர்யளவiபௌ து. (நுன)இ நுnஉலஉடழியநனயை ழக சுநடபைழைn யனெ நுவாiஉளஇ ஏழட. iiஇ நேற லுழசம 1909. pp. 12 – 47.
ii. புசளைறழடன ர். னு. சுநடபைழைn ழக வாந ஏநனயஇ டுழனெழnஇ 1923.
iii. னுநளாஅரமா P. ளு.இ ழுசபைin யனெ னுநஎநடழிஅநவெ ழக சுநடபைழைn in ஏநனழை டுவைநசயவரசநஇ டீழஅடியலஇ 1933.
iஎ. னுயனெநமயச சு. N. ளுழஅந யுளிநஉவள ழக வாந ஏநனழை ஆலவாழடழபலஇ ரு. ஊ. சு. ஒii-iஇ 1954இ ppஇ 1 – 23.
97. ஆயஉனழநெடட யு. யு. ஏநனழை ஆலவாழடழபலஇ னுநடாiஇ 1963இ p. 22.
98. வுhயியச சு.இ ஐனெயைஇ புசநயவ டீசவையinஇ 1966. p. 44.
99. றுiவெநசnவைண ஆ.இ ழுp உவை.இ p. 125.
100. ளூநனெந N. து.இ வுhந ஆலவாழடழபல ழக வாந லுயதரசஎநனயஇ டீழஅடியலஇ 1959.
101. ளுயமரவெயடய சுயழ ளுயளவசiஇ யுளிசையவழைளெ கசழஅ ய கசநளா றழசடனஇ டீழஅடியலஇ 1954இ p. 58.
102. என்னுடைய ஆசிரியப் பெருந்தகையும், ஓரிசாவிலுள்ள கேந்திரிய சமஸ்கிருத வித்தியாபீடஇயக்கநருமான கலாநிதி ம. த. பாலசுப்பிரமணியம் அவர்கள் இக்கருத்தினை நன்கு வற்புறுத்துவர்.
103. அ. டீயசரய டீ. Pசந டீரனனாளைவ ஐனெயைn Phடைழளழிhலஇ 1921.
104. னுயள புரிவய ளு.இ யு. ர்ளைவழசல ழக ஐனெயைn Phடைழளழிhல ஏழட. i. ஊயஅடிசனைபநஇ p. 31.
105. சுயனாயமசளைமயெn ளு. யு. ர்ளைவழசல ழத ஐனெயைn Phடைழளழிhலஇ ஏழட. i. டுழனெழnஇ 1941இ p. 150.
106. சுயனாயமசiளாயெn ளு. ஐடினை.
107. கேன உபநிஷத்திலே, உமா எனும் பதமே வருகின்றது. இச்சொல்; திராவிடச் சொல்லாகவே காணப்படுகிறது. தாய்த் தெய்வத்தினைக்குறிக்கும் அம்மன் (அம்மா) என்ற தமிழ்ச் சொல்லைப் போன்றது.
108. அ. சுயவயெ N. முயசவவனைநலயஇ டீழஅடியலஇ 1973இ pp. 81-82.
109. முநiவா யு. டீ. வுhந சுநடபைழைn யனெ Phடைழளழிhல ழக வாந ஏநனயள யனெ ருpயnளையனளஇ ஏழடஇ iiஇ ழுஒகழசனஇ 1925இ p. 497.
110. னுயள புரிவய ளு. ழுp. உவை.இ pp. 32-35.
111. றுiவெநசnவைண ஆ.இ ழுp. உவைஇ p. 266.
112. பிராஹ்மனோஸ்ய முகமாஸீத் பாஹ{ராஜன்யஹ்கிருதஹ் ஊரூ ததஸ்ய யத்வைஷ்யஹ் பத்ப்யாம் சூத்ரோஜாயத (இ. வே. 10 – 90) பிராமணன் அவன் (புருஷன் - சிருஷ்டிகர்த்தா) முகம்@ அரசன் புயங்கள்@ வைஷ்யன் தொடை@ சூத்திரன் அவனுடைய பாதங்களிலிருந்து தோன்றினான்.
113. டீழளந யு. ஊ. ஊயடட ழக ஏநனயளஇ டீழஅடியலஇ 1960இ p. 24கூ
114. னுரவவ N. மு. ழுசபைin யனெ னுநஎநடழிஅநவெ ழக ஊயளவந in ஐனெயைஇ ஏழட. i. 1931.
115. அ. ஆயதரஅனயச சு. ஊ. ஊழசிழசயவந டுகைந in யுnஉநைவெ ஐனெயைஇ ஊயடஉரவவயஇ 1922இ pp. 330 – 331.
116. வுhயியச சு.இ ழுp. உவை p. 40.
117. ஆயதரஅனயச சு. ஊ. யுnஉநைவெ ஐனெயைஇ டீயயெசயளஇ 1952 pp.81-86.
118. ளூயமரவெயடய சுயழ ளுயளவசடஇ றுழஅநn in வாந ஏநனழை யுபநஇ டீழஅடியலஇ 1954.
119. றுதைநளநமநசய ழு. ர். னந யு. யு. நேற ஐவெநசிசநவயவழைn ழக வாந யேவயசயதய ஊழnஉநிவஇ ரு. ஊ. சு. ஏழட. எ. ழே. 2. 1947இ pp. 50-55.
120. உயர்ந்த சாதி ஆண்மகன் தன்னிலும் தாழ்ந்த சாதிப் பெண்ணினைத் திருமணம் செய்தல் அநுலோம திருமணம்@ உயர்ந்த சாதிப் பெண்ணினைத் தாழ்ந்த சாதி ஆண் திருமணம் செய்தல் பிரதிலோம திருமணம்.
121. ஆயதரஅனயச சு. ஊ. ஊழசிழசயவந டுகைந in யுnஉநைவெ ஐனெயைஇ ஊயடஉரவவயஇ 1922இ p. 336.
122. ஆநபாயனரவய 2. 22.
123. சுப்பிரமணிய சாஸ்திரி P. ளு. வடமொழி இலக்கிய வரலாறு, அண்ணாமலை நகர் 1946, ப. 204 – 205. விப்ரதிபத்திகள் எனில் ஒன்றற்கொன்று முரணுள்ளவை எனப் பொருள்படும்.
124. ஆழசபயn ஏ. யு. ர்ளைவழசல ழக ஆழநெலஇ புசநயவ டீசவையinஇ 1964இ pp. 175-176.
125. i டுயட. டீ. டீ. ழுp. உவை. pp. 11-151.
ii ளுiபொ ளு. னு. ழுp. உவை. p. 170 கி. மு. 1000 அளவில் இரும்பின் உபயோகம் ஏற்பட்டது.
iii டீசனைபநவ யனெ சுயலஅழனெ யுடடஉhinஇ ழுp. உவைஇ p. 211.
126. ஜெய்பூரிலே கி. மு. 1100 அளவைச் சேர்ந்த இரும்பு உருக்குத்தொழில், கொல்வேலை ஆகியவற்றிற்கான சான்றுகள் அகழ்வாய்வின் போது வெளிவந்தன. ஆயனசயள ர்iனெரஇ ளுநிவநஅடிநச 13இ1975
127. i னுனைளவை ளு. மு. யுn ஐவெசழனரஉவழைn வழ யுசஉhயநழடழபல.
ii ஊhடைனந புழசனழnஇ றூயவ hயிpநநென in ர்ளைவழசல. புசநயவ டீசவையinஇ 1964. pp. 175-176.
128. டுயட டீ. டீ. ழுp. உவைஇ pp. 11 – 151.
129. டுயட டீ. டீ. ழுp. உவைஇ p. 14.
130. னுயபெந ளு. யு.இ ழுp. உவை.இ ஊhஇ iii-iஎ.
131. ஆரியாவர்த்தம் ஆரியரினிருப்பிடம், நாகரிக மையமெனப் பொருள்படும். இப்பதம் ஆரம்பத்திலே கங்கை – யமுனை ‘டுவாப்’ பினையும் பின்னர் பௌதாயன தர்மசூத்திரத்திற் கூறப்பட்டுள்ளவாறு காலகவனம், பாரியாத்திரா, ஆதர்சம், இமயமலை ஆகியனவற்றையும் எல்லைகளாகக் கொண்டிருந்த பிரதேசத்தைக் குறித்தது. மனுஸ்மிருதி காலத்திலே இமயம் தொட்டு விந்திய மலைவரையுள்ள வடஇந்தியாவைக் குறித்தது.
132. சிரௌத, கிருஹ்ய, தர்மசூத்திரங்கள் முதலியனவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிலே வைதிக மரபுகளை யொட்டிய சடங்குகளனைத்தும் சூத்திர வடிவிலே கூறப்படுகின்றன.
133. மஹாபாரதம், இராமாயணம்.
134. வடமொழியிலே 18 மஹாபுராணங்களும், 18 உபபுராணங்களும் உள்ளன. பிரஹ்ம, பத்ம, விஷ்ணு, வாயு, பாகவத, நாரதீய, மார்க்கண்டேய, அக்கினி, பவிஷ்ய, பிரஹ்மவைவர்த்த, வராஹ, லிங்க, ஸ்கந்த, வாமன, கூர்ம, மத்ஸ்ய, கௌட, பிரஹ்மாண்ட புராணங்களே 18 மஹா புராணங்களாம்.
135. i. Pடைடயல மு. மு. ஐ. யுசலயn iகெடரநnஉந in வுயஅடையாயஅ in வாந ளுயபெயஅ யுபநஇ வுயஅடை ஊரடவரசநஇ ஏழடஇ 12இ ழேஇ 2ரூ3இ 1966இ pp. 159-169.
ii Pசழஉநநனiபௌ ழக வாந கசைளவ ஐவெநசயெவழையெட ஊழகெநசநnஉந ளுநஅiயெச ழக வுயஅடை ளுவரனநைளஇ ஏழட. iஇ முரயடயடரஅpரசஇ 1968இ p. 273.
136. i. ளுசiniஎயள டலநமெயசஇ ர்ளைவழசல ழக வாந வுயஅடைளஇ ஆயனசயளஇ 1929இ p. 136.
ii. Nடையமயவெய ளுயளவசiஇ ழுp. உவை.இ pp. 69-70.
137. ஊழவெசiடிரவழைn ழக ளுழரவா ஐனெயை வழ வாந hநசவையபந ழக ஐனெயைஇ Pரடிடiஉயவழைளெ னுiஎளைழைnஇ னுநடாiஇ 1965இ 18-19.
138. ஐடினை ppஇ 18-19.
139. ஐடினை p. 16.
140. காணபத்யம் - கணபதியினை முழுமுதற் கடவுளாகக் கொண்டுள்ள வழிபாடு. இதுபோலவே முருகப்பெருமான், சிவபிரான், திருமால், சக்தி, சூரியன் ஆகிய கடவுளாரை முழுமுதற் கடவுளாகக் கொண்டுள்ள வழிபாடுகள் முறையே கௌமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், சௌரம் எனக் கூறப்படும்.
141. வுhயியச சு.இ ழுp. உவைஇ p. 48.
142. ஊழவெசiடிரவழைn ழக ளுழரவா ஐனெயை வழ வாந hநசவையபந ழக ஐனெயை Pரடிடiஉயவழைளெ னுiஎளைழைnஇ னுநடாiஇ 1965 p. 39.
சுருக்கங்கள்
ரு.ஊ. சு. ருniஎநசளவைல ழக ஊநலடழn சுநஎநைற.
ழு. ரு. P. ழுஒகழசன ருniஎநசளவைல Pசநளள.
உசாத்துணை நூல்கள்
ளுநடநஉவ டீiடிடழைபசயிhல
ஐ. ழுசபைiயெட ளுழரசஉநள
1. யுவையசநலய டீசயாஅயயெ வுநஒவ றiவா நுபெடைளா வுசயளெடயவழைn யு. டீ. முநiவா (நுன)இ ழுருPஇ 1909.
2. யுவையசநலய டீசயாஅயயெ றiவா வாந ஊழஅஅநவெயசல ழக ளுயலயயெஉயசலய எழடள. ஐ – ஐஏ Pயனெவை ளுயவலயஎசயவய ளுயஅயளசயஅiஇ (நுன) ஊயடஉரவவயஇ 1894இ 1896இ 1897.
3. யுவாயசஎயஎநனய ளுயஅhவைய றiவா வாந ஊழஅஅநவெயசல ழக ளுயலயயெஉயசலய எழடளஇ ஐ – ஐஏஇ ளுயமெயச Pயனெரசயபெ Pயனெவை (நுன) 1895.
4. யுவாயசஎயஎநனய ளுயஅhவையஇ எழடள ஐ – ஐஐஇ று. னு. றாவைநெல (வுச) ஆழவடையட டீயயெசளனையளளஇ னுநடாiஇ 1962.
5. துயiஅinலைய டீசயாஅயயெ சுயபாரஎசைய யனெ டுழமநளா ஊயனெசய (நுன) யேபிரசஇ 1954.
6. முயவாயமய ளயஅhவையஇ டுநழிழடன ஏழn ளுஉhசழநனநச (நுன) டுநipணபைஇ 1900-1910.
7. ஆயவைசயலயni ளுயஅhவைய எழட. 5 டுநழிழடன எழn ளுஉடிசஎநனநச (நுன) டுநipணபை.
8. வுhந Nசைரமவய ழக லுயளமய றiவா Niபாயவெர எழடள. ஐ-ஐஐ சு. பு. டீhயயெனயமயச (நுன). டீழஅடியலஇ 1918இ 1948.
9. சுபஎநனய டீசயாஅயயௌ: யுவையசநலய யனெ முயரளவையமi டீசயாஅயயௌஇ யு. டீ. முநiவா (வுச) ர்ழுளுஇ ஓஓஏஇ ஊயஅடிசனைபந ஆயளஇ 1920.
10. சுபஎநனய ளுயஅhவைய றiவா வாந ஊழஅஅநவெயசல ழக ளுயலயயெநயசலயஇ எழடள. ஐ-ஐஏஇ வுடையம ஆயாயசயளாவசய ருniஎநசளவைல ஏயனைiஉ ளுயஅளாழனயn ஆயனெயடஇ Pழழயெஇ 1933-1946இ சு. வு. ர். புசகைகiவா (வுச) எழடள ஐ-ஐஐ ளுநஉழனெ நனவைழைnஇ டீயயெசயளஇ டுயணயசரளஇ 1896.
11. ளுயவயியவாய டீசயாஅயயெ ஏழடளஇ ஐ-ஏஇ டுயஒஅi ஏநமெயவநளஎயச ளுவநயஅ Pசநளளஇ டீழஅடியலஇ 1940 துரடரைள நுபபiபெ (வுச)இ ளுடீநு ஏழடளஇ ஐஐஇ ஐஏஇ ஓடுஐஇ ஓடுஐஐஐஇ ஓடுஐஏஇ ழஒகழசனஇ 1882-1900.
12. வுயவைவசைலைய யுசயலெயமய றiவா வாந ஊழஅஅநவெயசல ழக ளுயலயயெஉயசலயஇ சுநதநனெசய டுயடய ஆவைசய (நுன) ஊயடஉரவவயஇ 1892
13. வுயவைவசைலைய டீசயாஅயயெஇ சுயதநனெசய டுயடய ஆவைசய (நுன) ஏழடள. ஐ-ஐஐஇ டீiடிடழைவாநஉய ஐனெiஉய ளநசநைளஇ ஊரடஉரவவயஇ 1959-1862.
14. வுயவைவசைலைய ளுயஅhவையஇ நு. சுழநச யனெ நு. டீ. ஊழறநடi (நுன) ஏழடள. ஐ-ஐஏஇ டீiடிடழைவாநஉய ஐனெiஉய ளநசநைள உயடஉரவவயஇ 1860 – 1899.
15. ஏயதயளயநெதi ளுயஅhவையஇ Pயனெவை சுயஅ ளுழமயடய ஆளைசய (நுன) Pயசவள ஐ-ஐஏஇ டீயயெசயளஇ சு. வு. ர். புசகைகiவா (வுச) டீயயெசயளஇ 1899.
16. Pசinஉipயட ருpயnளையனள நனவைநன றiவா நுபெடiளா வுசயளெடயவழைn டில ளு. சுயனாயமniளாயெnஇ டுழனெழnஇ 1953.
17. வுhந வுhசைவநநn Pசinஉipயட ருpயnளையனள வுச. டில. சு. நு. ர்ரஅநஇ டுழனெழnஇ 1931.
18. டீயரனாயலயயெ னூயசஅயளரவசயஇ நு. ர்ரடவணஉh (நுன). டுநipணபை 1884.
19. டீயரனாயலயயெ புசாலயளரவசயஇ சு. ளூயஅய ளுயளவசi(நுன) ஆலளழசநஇ 1901.
ஐஐ. னுiஉவழையெசநைள யனெ ழவாநச றுழசமள.
1. யுஅயசயளinhய யேஅயடiபெயரௌயளயயெ றiவா ஊழஅஅநவெயசல நுனவைநன றiவா நுபெடiளா வுசயளெடயவழைn டில ர்யச னுரவவ ளாயசஅய யனெ N. பு. ளுயசனநளயiஇ Pழழயெஇ 1941.
2. யுpவந ஏ.ளு. வுhந ளுவரனநவெள ளுயளெமசவை நுபெடiளா னுiஉவழையெசலஇ புழியட யேசயலயn யனெ ஊழ. 1902.
3. டீடழழஅகநைடன ஆ. ஏநனiஉ ஊழநெழசனயnஉநஇ ர்ழுளுஇ ஏழடஇ 10இ ஊயஅடிசனைபந ஆயள. 1905.
4. டீழாவடiபொ ழுவவழஇ ளுயளெமசவை றுழசவநசடிரஉh ஏழட. ஐ. ஏஐஐ 1906.
5. முநiவா யு. டீ. ரூ ஆயஉனழநெடட யு. ஏநனiஉ ஐனெநஒஇ ஏழடளஇ ஐ-ஐஐஇ ஐனெயைn வுநஒவள ளநசநைளஇ 1912.
6. ஆயஉனழநெடட யு. யு. Pசயஉவiஉயட நுபெடiளா னுiஉவழையெசல ழு ரு P 1924.
7. ஆழnநைச றுடைடயைஅளஇ யு. ளுயளெமசவை நுபெடiளாஇ னுiஉவழையெசலஇ ழுஒகழசனஇ 1899.
8. ஏளைஎயடியனொரஇ ஏயனைமையியனயரெமயசயஅயமழளய ஏழட. ஐஓ ஏ. ஏ. சு. ஐளெவவைரவந ர்ழளாiயிரசஇ 1959. ஏழட. ஓ. ஏ. ஏ. சு. ஐளெவவைரவந ர்ழளாiயிரசஇ 1959.
ஐஐ. ளுநஉழனெயசல றுழசமள.
யுலையமெயச மு. ஏ. சுயபெயளறயniஇ யுnஉநைவெ ஐனெயைn நுஉழழெஅiஉ வுhழரபாவஇ டீயயெசநளஇ 1934.
யுடவநமயச யு. ளு. i. நுனரஉயவழைn in யnஉநைவெ ஐனெயைஇ டீயயெசநள 1944.
ii. Pழளவைழைn ழக றுழஅநn in ர்iனெர ஊiஎடைணையவழைn டீயயெசயளஇ 1956.
iii. ளுவயவந யனெ புழஎநசnஅநவெ in யnஉநைவெ ஐனெயைஇ னுநடாiஇ 1962.
யுpவந ஏ. ஆ. ளுழஉயைட யனெ சநடபைழைரள டகைந in வாந புசாலயளரவசயளஇ யுhஅயனயடியனஇ 1939.
டீhயசயபயஎய யு. டு. ஐனெயை in வாந ஏநனiஉ யுபநஇ டுரஉமழெற 1956.
டீhயளயஅ யு. டு. வுhந றுழனெநச வாயவ றயள ஐனெயைஇ டுழனெழn 1967.
டீநni Pசயளயன i. வுhந ளுவயவந in யnஉநைவெ ஐனெயைஇ யுடடயாயடியன 1928.
ii. வுhந வுhநழசல ழக புழஎநசnஅநவெ in யnஉநைவெ ஐனெயைஇ யுடடயாயடியனஇ 1927.
டீடழழஅகநைடள ஆ. வுhந சநடபைழைn ழக வாந ஏநனயஇ நேற லழசனஇ 1908.
டீரசசழற வு. வுhந ளுயளெமசவை டுயபெரயபநஇ டுழனெழnஇ 1973.
ஊhடைனந புழசனழnஇ ளு. வுhந யுசலயளெஇ டுழனெழnஇ 1970.
ஊரடவரசயட ர்நசவையபந ழn ஐனெயைஇ ஏழடளஇ ஐ-ஐஐஐஇ ஊயடஉரவவயஇ 1958.
னுயள ளு. மு. நுஉழழெஅiஉ ர்ளைவழசல ழக யnஉநைவெ ஐனெயை ஊயடஉரவவயஇ 1925.
னுயள புரிவய ர்ளைவழசல ழக ஐனெயை Pரடைழளழிhலஇ ஏழட. ஐஇ ஊயடஉரவவயஇ 1923.
னுரவவ N. மு. ழுசபைin யனெ னுநஎநடழிஅநவெ ழக ஊயளவந in ஐனெயைஇ ஏழட. ஐஇ டுழனெழnஇ 1931.
புhழளயடட ரு. N. ர்ளைவழசல ழக ஐனெயைn Pழடவைiஉயட ஐனநயளஇ ழு ரு Pஇ 1959.
முநiவா யு. டீ. சுநபைழைn யனெ Phடைழளழிhல ழக வாந ஏநனயள யனெ ருpயnளையனளஇ ஊயஅடிசனைபநஇ ஆயளஇ 1925.
ஆயஉனழநெடட யு. i. ர்ளைவழசல ழக ளுயளெமசவை டுவைநசயவரசநஇ னுநடாiஇ 1961.
ii. ஏநனiஉ ஆலவாழடழபலஇ ளுவசயளளடிரசபஇ 1897.
ஆயதரஅனயச சு. ஊ. (நுன). ர்ளைவழசல யனெ ஊரடவரசந ழக வாந ஐனெயைn Pநழிடநஇ ஏழட. ஐ வுhந ஏநனழை யபநஇ டுழனெழnஇ 1951; ஏழட ஐஐ வுhந யபந ழக ஐஅpநசயைட ருnவைலஇ டீழஅடியலஇ 1960.
ஆயதரஅடிநச சு. ஊ. i. யுnஉநைவெ ஐனெயைஇ னுநடாiஇ 1964. ii. ஊழசிழசயவந டுகைந in யnஉநைவெ ஐனெயைஇ Pழழயெஇ 1922.
ஆழழமநசதi சு. மு i.ர்iனெர ஊiஎடைணயவழைnஇ ஏழடள. ஐ – ஐஐஇ டீழஅடியலஇ 1957.
ii. குரனெயஅநவெயட ரnவைல ழக ஐனெயைஇ டீழஅடியலஇ 1954.
iii யுnஉநைவெ ஐனெயைn நுனரஉயவழைnஇ டுழனெழnஇ 1947.
Nடையமயவெய ளுயளவநசi மு யு. யு. ர்ளைவழசல ழக ளுழரவா ஐனெயைஇ ழு ரு Pஇ 1966.
Pயனெநல சு. டீ. ர்iனெர ளுயஅளமயசயளஇ னுநடாiஇ 1969.
Pயசபவைநச P. நு. யுnஉநைவெ ஐனெயைn ர்ளைவழசiஉயட வுசயனவைழைn னுநடாiஇ 1962.
Pயவாயம ஏ. ளு. வுhந யnஉநைவெ ர்ளைவழசயைளெ ழக ஐனெயைஇ டுழனெழnஇ 1966.
Phடைipள P. ர். (நுன) ர்ளைவழசயைளெ ழக ஐனெயை Pயமளைவயn யனெ ஊநலடழnஇ ழு ரு Pஇ 1961.
Pசயடிhர P. ர். ர்iனெர ளுழஉயைட ழுசபயnணையவழைnஇ டீழஅடியலஇ 1961.
சுயிளழn நு. து. (நுன). வுhந ஊயஅடிசனைபந ர்ளைவழசல ழn ஐனெயைஇ ஏழட. ஐ. னுநடாiஇ 1962.
சுநலஉhயரனாரசi ர். ஊ. Pழடவைiஉயட ர்ளைவழசல ழக யnஉநைவெ ஐனெயைஇ ஊயடஉரவவயஇ 1950.
ளுயஅயனனயச து. N. நுஉழழெஅiஉ ஊழனெவைழைn ழக யுnஉநைவெ ஐனெயைஇ ஊயடஉரவவயஇ 1922.
ளூயசஅய சு. ளு. யுளிநஉவள ழக Pழடவைiஉயட ஐனநயள யனெ ஐளெவவைரவழைளெ in யுnஉநைவெ ஐனெயைஇ னுநடாiஇ 1959.
ளூயமரவெயடய சுயழ ளுயளவசiஇ றுழஅநn in வாந ஏநனiஉ யுபநஇ டீழஅடியலஇ 1954.
றூநநடநச சு. நு. ஆழசவiஅநசஇ வுhந ஐனெரள ஊiஎடைணையவழைnஇ டுழனெழnஇ 1953.
றுiவெநசnவைண ஆ. ர்ளைவழசல ழக ஐனெயைn டுவைநசயவரசநஇ ஏழட. ஐ. ஊயடஉரவவயஇ 1927.
அட்டவணை
அகத்தியர் 42, 43, 90, 91 எகிப்தியர் 8
அநட்டோலிய 14, 18 எகிப்து 21
அர்யமன் 10 எல்அமர்ணா 21
அல்தாய் 14 ஐரோப்பா 4, 5, 13, 14, 17, 20, 22, 24
அனவ் 19
அஹ{ரமஸ்த 14 ஒஸ்ரலோயிட் 1, 2, 39, 93
ஆசியா 4, 14, 20, 25, 82, 94, கங்கேரி 15
ஆத்மன் 61, 62 கங்கை 24
ஆந்திரதேசம் 27 கணபதி 63, 64
ஆந்திரர் 42 கல்ல 3
ஆரியர் 1-5, 7, 10, 13, 14, 16-22, கஸ்பியன் 15
25-29, 31, 37, 38, 42-45, 54, 58, கஸ்ஸைற் 19
66, 89, 94 கஷ்மீர் 3
இந்தியா 1, 2, 4, 9, 18, 20-22, 24, கிக்குலி 21
27, 92. கிரீஸ் 21. 24
இந்திரன் 21, 23, 53, 54 கிரேக்கர் 5, 10, 20, 54, 58, 82
இந்தோ-ஆரியர் 9, 10, 29, 30
இந்தோ - இரானியர் 9-11, 17 கிரிஷ்மன் 28
இந்தோ – ஐரோப்பியர் 6, 7, கீத் 27
13, 17, 19 கென்யா 82
இரான் 4, 17, 19, 22, 24 கே. கே. பிள்ளை 94
இரானியர்5, 9, 14, 17, 22, 28 கேர்கிஸ் 14
இலிபிச 44 கைகர் 15
ஊக்றெயின் 18 கைனேகெல்டேர்ண் 24, 27
உமாதேவி 63 கோர்டன் 27
உரோமர் 54 கோகஸஸ் 17
உர்மிய 24 சங்கராச்சாரியர் 32, 36
உல்வில 12 சங்காலியா 27
எக்காட் 68 சத்யகாம ஜாபால 67.
சபரர் 42 நசிகேதன் 66
சரஸ்வதி 37, 39, 41 நந்தர் 88
சாஹிதும்ப் 19 நவ்டதாலி 27
சிந்து 5, 37 நாசத்ய 10, 21
சிவபிரான் 58 நஸº{35.
சியல்க் 19 நீப்பர் 15
சின்னாசியா 17 நெக்கிறிற்றோ 2
சீரியா 19 நெஹ்றி;ங் 16
சீஸ்ரன் 24 நோர்டிக் 2, 15
சுநீதிகுமார்சட்டர்ஜி 1, 26, 28 பஞ்சாப் 3
பசாம் 35
சுபிலுலியும 21 பரசுராமர் 90, 91
சுப்பராவ் 14, 18 பரீºpத் 35, 40
சுவேதகேது 79 பர்ஜிதர் 15
சேரர் 93 பலுக்கிஸ்தான் 19
சைல்ட் 15 பறோ 11, 18, 22, 23, 35
சொறாஸ்ரர் 10 பாவரி 91
சோழர் 93 பிகொற் 35
டபர்கொற் 19 பிரஹ்மன் 61-62
டாங்கே 87 பிரஜாபதி 57
தண்டேகர் 14, 92 பிரஹ்மர்ஷிதேசம் 3
தஸ்யுக்கள் 39 பிரான்டென்ஸ்ரென் 8, 17
தாஸ் 3 புசல்கார் 24
தாஸர் 39 புத்தபிரான் 34
திபெத் 14 புந்திரர் 42
திராவிடர் 1, 2, 36, 39, 66 புளிந்தர் 42
89, 94 புரந்தரன் 23
திரிவேத 3 பென்கா 15
திலக் 15 போகஸ்கோய் 21, 24
துஸ்ரத்த 21 போலந்து 17
தேவிகா 3 மகாவீரர் 34
மº;முல்லர் 6, 14, 34, 35 வங்காளம் 6
மத்திய ஆசியா 13-14, 18-19 வசிட்டர் 38
மத்தியுசாயு 20 வருணன் 10, 21, 53
மத்திய பிரதேசம் 27 வாஜசிரவண 66
மஜும்தார் 49 விரொஸ் 15
மஹாராஷ்டிரம் 92 விஷ்ணு 57, 64,
மித்தானிய 20 வீலர் 22, 27
மித்ரன் 10, 21 வின்ரெர் நீட்ஸ் 35
முல்தான் 3 விதேஹமாடவன் 41
முன்ஷி 3 வெயர் சேவிஸ் 24, 27
மூதிபர் 42 வூலி 27
மெசொப்பொத்தேமியா றைக்வன் 80
17, 26 றொபெட்ஷேவர் 14
மேற்காசியா 13, 19-21, 24 ஜங்கர் 23, 24
மையேர்ஸ் 15 ஜனகன் 67, 75
மைத்திரேயீ 67 ஜனமேஸய 35
மொஹெஞ்சதாரோ 23 ஜா 3
மௌரியர் 88 ஜானஸ்ருதி 30
யமுனை 45 ஜுகர் 23, 24
யாஜ்ஞவல்க்யர் 61, 67, 80 ஜேர்மனி 15
யூரல் 9, 14, 18 ஸ்கந்த 63, 64
ரணாகுந்தை 19 ஸ்கந்திநேவியா 15
ராகுகண 41 ஸ்கிறேடர் 15
ராமச்சந்திரன் 23 ஸ்ரெப்பிஸ் 19
ராஜஸ்தான் 27 ஸடஸாதி 63
ரிப்பொல்ஜி 16 ஷாரேப் 24
ருத்திரன் 53, 57-58, 64 ஷென்டே 31
ருறங்ரேப் 16 ஸோப்பனோர் 32, 68
ரூசியா 16, 18-20, 22 ஹயோம 10
ரேப்கிஸர் 16 ஹரப்பா 5, 22, 24, 73
ரொத் 10 ஹஸ்தினாபுரம் 84, 85
ரோமிலா 94 ஹிற்றைற் 17, 21. 84
லதம் 14 ஹோமர் 12, 82.
லால் 24-25
பிழை திருத்தம்
பக்கம் வரி பிழை திருத்தம்
3 18 பிரஹமர்ஷி பிரஹ்மர்ஷி
6 11 ஆசிக் ஆசியக்
11 27 சிலாவேனிய சிலாவோனிய
18 3 ஆசியச் ஆசிய
27 24 ஆயசி ஆசிய
34 21 ஆரண்யகாலங்கள் ஆரண்யகங்கள்
35 3 இலக்தின் இலக்கியத்தின்
44 21 அரசியல் நிலை வேதகால அரசியல் நிலை
63 28 அடைந்தன அடைந்தனர்
64 10 சளத்குமார சனத்குமார
78 4 அகல அகலா
கருத்துகள்
கருத்துரையிடுக