செய்னம்பு நாச்சியார் மான்மியம்
கவிதைகள்
Backசெய்னம்பு நாச்சியார் மான்மியம்
அப்துல் காதல் லெப்பை
--------------------------------------------------
அருகிவரும் ஆசாரங்கள் - 1
செய்னம்பு நாச்சியார் மான்மியம்
கவிஞர் அப்துல் காதல் லெப்பை
மணிக்குரல் பதிப்பகம்
கல்ஹின்னை - இலங்கை
--------------------------------------------------
முதற் பதிப்பு : ஜூலை 1967
உரிமை ஆசிரியருக்கே
விலை ரூபா ஒன்று
----------------------------------------------
பதிப்புரை
மணிக்குரல் பதிப்பகம் தரும் நூல்கள் மணியானவையென்று மக்கள் போற்றுமளவுக்குத் தனது பணியை அணிபெறச் செய்து வருவது நமது பதிப்பகம் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வர்.
ஆம்! குறுகிய காலத்தில் நம்மால் வெளியிடப்பட்ட குறைந்த அளவு நூல்களுள் ஒன்றான, கவிஞர் அப்துல் காதர் லெப்பையவர்களின் 'ரூபாய்யாத்' ஸ்ரீ லங்கா சாகித்திய மண்டலப் பரிசு பெற்றதிலிருந்து நமது வெளியீடுகளின் தரம் மதிக்கப்படுவதாகும். ஆல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!
நமது கவிஞரால் நல்ல நூல்களை நகைச்சுவை ததும்பும் படைக்க முடியம் என்பதைக் காட்டி, அவர்தம் ஆற்றலைப் பறைசாற்றுவத இந்த, 'செய்னம்பு நாச்சியார் மான்மியம்'. நமது கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்கள் சுடர் விளக்கு! அந்தச் சுடர் விளக்கும் நன்றாய் விளங்கிடத் தூண்டு கோலொன்று வேண்டுமல்லவா! அவர்களைப் பொறுத்த மட்டில், அந்தத் தூண்டுகோலின் பணியைத்தான் நாம் செய்கிறோம். ஆதன் பயனாகத் தமிழுக்குத் தண்மணம் சேர்க்கும் கவிதை மலர்கள் பல கிடைக்கின்றன.
அந்த வகையில், நமது சஞ்சிகையான மணிக்குரலில் கவிஞருக்கு ஒரு களம் அமைத்துக் கொடுத்தோம். அதில் அவர்கள் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் திருமண சப்பிரதாயத்தை வைத்துத் தித்திக்கத் தித்திக்கத் திருமணத் திருவிளையாடலைN நடத்திக் காட்டினார்கள். அவர்களுக்கு நமது அன்பு கலந்த நன்றி. ஆந்த அற்புத விளையாட்டை அனுபவித்து னந்தமடந்த மக்கள் அந்தத் திவிளையாட்டின் சூத்திரதாரிhன செய்னம்பு நாச்சியார் பெயரிலேயே அந்தத் திருவிளையாட்டை நூலாக்கித் தர வேண்டுமென்று ஆசைப்பட்டனர், அன்பாய் வேண்டினர். ஆதற்கிணங்க, அப்பகுதியில் வழக்கிலிருந்து நவநாகாPகத்தின் பாதிப்பினால் அருகிவரும் ஆசாரங்களையும் சேர்த்து உருவாக்கித் தருகிறோம், இந்த நாச்சியார் மான்மியத்தை ஆவலாய்ப் படித்து அனுபவித்து மகிழுங்கள். ஆகம் கனிந்ததென்றால் ஆதரவு தாருங்கள்.
தமிழ் எழுத்தை அறபுக் கலைவண்ணத் தமிழ் எழுத்தாக்கி, அதனால் செய்னம்பு நாச்சியாரின் திருவிளையாடலைப் புலப்படுத்தி அட்டையை அழகு செய்துதவிய ஓவியர் ரைத்தலாவளை ஆ.N.யு. அஸீஸ் அவர்களுக்கு நமது அகங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஏழில் பெற நூலை உருவாக்கித் தந்த பண்டாரவளை மொஹிதீன்ஸ் அச்சகத்தாருக்கும் நமது நன்றியை உரித்தாக்குகிறோம்.
மணிக்குரல் பதிப்பகத்தார்
-----------------------------------------------------------
அணிந்துரை
கலாநிதி சு. வித்தியானந்தன்
-இலங்கைப் பல்கலைக்கழகம்-
தமிழிலிலக்கிய வரலாற்றிலே தற்காலப் பகுதியைப் பாரதியுகம் எனக் கூறுவர். பெருங்கவிஞனாகிய பாரதியைப் பின்பற்றித் தனிப்பாடல்களும் சிற்றிலக்கியங்களும் படைப்போர் பலர் இன்றுமுளர். இத்தகையோர் தாந்தாம் வாழும் பகுதிகளிற் காணப்படும் சமூகக் குறைபாடுகளையும் சீர்கேடுகளையும் அகற்றும் பொருட்டு அங்கதப் பாடல்கள் சிலர் பாடி வருகின்றனர். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பாடிய நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் இத்துறையிற் சிறந்ததொரு நூலாகக் கருதப்படுகின்றது. மருமக்கள் தாயம் எனப்படும் சமூக அமைப்பு முறையினாற் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நிலைகுலைந்ததைக் கண்டு, அதனை நீக்குவதற்கு மக்கள் சிந்தனையை உருவாக்கவே மான்மியத்தைப் பாடினார். ஆவரின் பெரு முயற்சியின் பயனாகவே பேரியக்கமொன்று சேரநாட்டிலே தோன்றியது.சீர் திருத்தச் சட்டமும் நிறைவேறியது. அதனடிப்படையில் மான்மியம் நூதனமான சமுதாயச் சித்திரமாக அமைந்துவிட்டது.
எமது ஈழநாட்டுக் கவிஞரில் ஒருவரான பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்களும் சில ஆண்டுகளுக்கு முன் சீதனக்காதை என்னும் அங்கதக் கவிதை நூலான்றினை எழுதினார். சீதனக் கொடுமையைப் பொருளாகக் கொண்டு, சமூக வாழ்க்கையை நகைச் சுவையோடு சித்திரிக்கும் சிற்றிலக்கியம் அது.
அங்கதம் ஆங்கிலத்திலே சற்றயர் (ளுயவசைந) எனப்படும். சுமூகத்திலே வழங்கும் சில நம்பிக்கைகளும் சடங்குகளும் நடைமுறைகளும் வழக்கிழந்தவனாக, அவற்றின் பொருந்தாமையைச் சுட்டிக்காட்டி, அவை எத்துணை ஏளனத்திற்கு இடமாயுள்ளன என்பதைச் சித்திரிப்பதே அங்கதத்தின் தலையான பண்பும் பணியுமாம். சுpரிப்புடன் சிந்தனையையும் சேர்ப்பது அங்கதத்தின் தலையான பண்பும் பணியுமாம். சிரிப்புடன் சுpந்தனையையும் சேர்ப்பது அங்கதத்தின் உத்தி. இவற்றைச் செய்து முடிப்பதற்குப் பண்பட்ட, கனிந்த உளப்பாங்கு அவசியமாகும். இதன் காரணமாகவே, உலகின் பல மொழிகளிலும் உயர்ந்த அங்கத நூல்களைப் படைப்போர் வயதில் முதிர்ந்தவராகக் காணப்படுகின்றனர். இளமுள்ளம் கோபாவேசங்கொண்டு "கொலை வாளினையெடா மிகக் கொடியோர் செயலறவே" என்று துடிக்கின்றது. ஆனால், நாளாக நாளாகப் பிரச்சனைகளைச் சிறிது தூர நின்று நோக்கவும், அவற்றை அனுதாபத்துடன் அணுகவும் ஏற்ற பக்குவம் ஏற்படுகின்றது. ஊலகைப் பார்த்துச் சிரிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். ஆத்தகை முயற்சிபெற்ற நிலையிலே மென்மையான நகைச்சுவை கலந்து உண்மைகள் சொல்லுருவம் பெறுகின்றன.
கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களின் செய்னம்பு நாச்சியார் மான்மியம் மேற்கூறிய நூல்களின் வகையைச் சார்ந்ததாகும். முட்டக்களப்பு முஸ்லிம்களிடம் நிலவும் சில ஆசாரங்களை அடித்தளமாகக் கொண்டு சிறு 'காப்பியம்' ஒன்றைப் படைத்து விடுகின்றார் கவிஞர். திருமணமே இந்நூலில் வளரும் கதைப் பின்னலுக்குக் கரு. எமது சமுதாயத்திலே திருமணமும் ஒரு சடங்குதானே! அச்சடங்கோடு தொடர்புடைய பாத்திரங்கள். ஆப் பாத்திரங்களின் குண விசித்திரங்கள், அக்குண விசித்திரங்களை உருவாக்கும் சமுதாய அமைப்பு, அவ்வமைப்புக்கு அனுகூலமாகவிருக்கும் நம்பிக்கைகள் ஆகிய பலவற்றைப் பண்பட்ட நகைச்சுவையுடன் படம் பிடித்துக் காட்டுகிறார். ஜனாப் அப்துல் காதர் லெப்பை அவர்கள். இவ்வழகிய நூலிலே கதை இருக்கிறது@ கவிதை இருக்கிறது@ சமூக வியலும் அடங்கியிருக்கின்றது. கவிஞரது இளமைக் கால நினைவுகளும் அடங்கியுள்ளன போலும். ஆந்த வகையிலே இதனை ஒரு சமுதாய வழக்கக் குறிப்போடு (ளுழஉயைட னழஉரஅநவெ) எனத் துணிந்து கூறலாம்.
புல நூல்கள் இலக்கிய நயத்துடன் சமுதாயப் பதிவேடாகவும் விளங்குவதுண்டு. இதன் காரணமாகவே வரலாற்றறிஞரும் சமூகவியலாகும். இலக்கியத்தை எப்பொழுதும் வேண்டி நிற்கின்றனர். ஈழத்தின் கீழ்மாகாண முஸ்லிம்களினது திருமண சம்பிரதாயங்களைப் பற்றி நூலெழுதுவோருக்கு இச்சிறு காப்பியம் செய்திப் பெட்டகமாக அமைந்துள்ளதென்பது உறுதி.
தமிழ் இலக்கியத்தை வளம்படச் செய்ததில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு. காப்பியம், ஆற்றுப்படை, பிள்ளைத்தமிழ், கலம்பகம், அம்மானை, அந்தாதி, திருப்பகழ், மாலை, கும்மி, சிந்து, ஏசல், கீர்த்தனை, படைப்போர், முனாஜாத், கிஸ்ஸா, மஸ்அலா, நாமா எனப் பலவகைப் பிரபந்தங்களை இயற்றி முஸ்லிம்கள் தமிழ்த் தொண்டாற்றியிருக்கின்றார்கள். இந்த வகையிலே ஈழத்திலே வாழ்ந்த முஸ்லிம் புலவர்களுட் பலர் கற்பனை ஆற்றலும் பொருட் சிறப்பும் சொல்லழகும் கவியமைப்பும் பொரு;நதிய பல நூல்களை ஆக்கியிருக்கின்றனர். யாழ்பாணத்து சு. அசனாலெப்பை, வெர்விலை அகமது லெப்பை மரைக்கார் வாத்தியார், செய்கு முஸ்தபா ஒலியு;லா, மக்கூன் அப்துல் ஹமீது மரைக்கார் வாத்தியார், மருதமுனை மீராn லபெ;பை ஆலீம, அட்டாளைச்சேனை மு.வெ.அப்துல் நகுமான் ஆலீம், அக்கரைப்பற்று சேகுமதாறு சாகிப் புலவர். புத்தளத்துத் தம்பி மரைக்கார் போன்ற பல முஸ்லிம் புலவர்கள் ஈழத்துக் கவிதையுலகிலே சிறப்பாகக் குறிப்பிட வேண்டியவர்கள்.
இன்று வாழும் முஸ்லிம் பலவர்களில் இந்நூலின் ஆசிரியரான அப்துல் காதர் லெப்பை அவர்களுக்குத் தனியிடமுண்டு. சாகித்திய மண்டலப் பரிசில் பெற்ற கவிஞர் இவர். ஏளிய நடை. ஏளிய சத்தம் முதலியன எமது காலத்துக் கவிதைகளுக்கு இன்’றியமையாதன என்று பாரதி பாடினான். புhரதி பரம்பரையில் வரும் கவிஞரெல்லாம் எளியநடை என்பதைத் தமது தாரக மந்திரமாகக் கொண்டுள்ளனர். எமது கவிஞரும் எளிய, இனிய சொற்களால் நகையோவியங்களைத் தீட்டி விடுகின்றார். புhடல்களில் ஆங்காங்கு வரும் அறபுச் சொற்கள் கூட அழகுத் தமிழாக மாறிவிடுகின்றன. ஆதைப் பொலவே கிழக்கிலங்கைக்குச் சிறப்பான சொல்லாட்சிகளும் ஏற்ற அழுகுடன் இடம் பெற்றுள்ளன. ஒருதாரணம்
புதுருக் கோட்டையும் புதுநெய்ப் போத்தலும்
வீடே நிரம்பம்@ வேலையாள் கூட்டம்
காலையும் மாலையும் காத்துக் கிடப்பதம்
முல்லைக்காரன் முனங்கிப் போவதும்
குhசிம் பாவா கணக்குப் பார்ப்பதும்
இவ்வடிகளிற் புதுருக்கோட்டை, முல்லைக்காரன் ஆகிய சொற்கள் ஈழத்திற் பிறபகுதிகளில் வழக்கில்லாதன எனலாம்.
இனி ஆசிரியரின் சொல்லோவியம் ஒன்றைப் பார்க்கலாம்.
சேய்னம்பு hநச்சி செங்காட்டுப் புலி
வுhயில்லாமலே வங்காளம் போவாள்
நோயில்லாமலே நூறுநாட் படுப்பாள்
சீட்டுப் பிடித்துச் சேர்த்த பணத்தைக்
கூட்டுப் பெட்டிக்குள் குவித்து வைப்பாள்.
இவ்வாறு பல வருணைகளும், சித்திரங்களும் நூலில் மலிந்து காணப்படுகின்றன. ஈழத்து தமிழிலக்கியம் வளர்;ந்து வருகின்றது. ஆதற்கு ஏற்கனவே தனது பங்கைச் செலுத்தியுள்ள கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்கள், இந்நூலின் மூலம் தக்கதோர் இடத்தை வகுத்துக் கொண்டார். அவர் இலக்கியப் பணி செழித்து ஓங்குக.
சு.வித்தியானந்தன்
(பிறையன்பன்)
பல்கலைக்கழகம்
பேராதனை
7-6-67
---------------------------------------------------
என்னுரை
சமூகங்களுக்கிடையில் காணப்படும் பழக்க வழக்கங்களை ஆராய்ந்த நிபுணர்கள், புவியியல், இப்பழக்க வழக்கங்களை உருவாக்கவதில் அதிகம் பங்கெடுத்துள்ள தென்று கூறுகின்றனர். மதத்தின் செல்வாக்கால் நிலைபெற்றிக்கும் பழக்க வழக்கங்களை விடப் புவியியலின் செல்வாக்கால் அதிகம் பழக்க வழக்கங்கள் நிலை பெறுகின்றன என்பது அவர் கருத்து. அவர்கள் கூற்றை நாம் முற்றாகத் தள்ளி விடுவதற்கில்லை. முதங்கள், இனங்களை வேறுபடுத்திக் காட்டும் அதேவேளையில் புவியியல் சம்பிரதாயங்களை இனங்களுக்கிடையில் ஒன்றுபடுத்திக் காட்டுகிறது. ஊதாரணமாகக் கலியாண வைபவங்களில் மதச்சம்பிரதாயங்கள் வெறு, வேறாக இருப்பினும், சாதாரண சம்பிரதாயங்கள் ஒன்று போற் காணப்படுகின்றன. குலியாணப் பந்தலில் தென்னோலையால் அலங்காரங்கள் செய்தலும், குலை போட்ட வாழை, கரும்பு, தாழங்குலை ஆகியவற்றைத் தோரணங்களிற் கட்டுதலும், செம்புக் குடங்களில் விரிந்த கமுகம் பூ அல்லது தெனனம்பூவை வைத்தலும் கிழக்கு மாகாணத்தில் தமிழர், முஸ்லிம்களிடத்தில் பரந்து காணப்படுகின்றன. இது புவியியல் காரணமாக எழுந்த சம்பிரதாயமாகும்.
மட்டக்களப்புக் கவிகளை நாம் ஆராயம்போது அவை முழுக்க, முழுக்க மருதநிலத்துப் பண்பாட்டை அண்டியதாகவே காணப்படுகின்றன. மிருகங்கள், பறவைகள், வயல், குளம், தாவரங்கள் முதலிய யாவும் அக்கவிகளில் மருத நிலத்திற்குரியனவே யாகும் அக்கவிகளில் வரும ஏராளமான சொற்கள் சம்பிரதாயங்கள் அகத்திணை புறத்திண பற்றிய கூட்டுறவுச் சிக்கல்கள் யாவும் மருத நிலத்திற்குரியனவே.
மட்டக்களப்பு முஸ்லிம்களிடத்தில் காணப்படும் சில சம்பிரதாயங்கள் உதாரணமாக தாலிகட்டல், குரைவைக்கூத்து, குடிமுறை போன்றவை பக்த்தில் வாழும் தமிழர்களிடத்திலும் காணப்படுகின்றன. இவை இனங்களின் கூட்டுறவால் கலந்து விட்ட பழக்க வழக்கங்களாகும்.
திருமணத் திருவிளையாட்டு என்னும் பகுதியில் மட்டக்களப்பு முஸ்லிங்களிடத்துக் காணப்படும் சம்பிரதாயங்கள் இன்று வரையும் நிலை பெற்றிருப்பதைக் காணலாம். இவற்றில் எடிவை நல்லவை எவை கெட்டவை என்பதல்ல பிரதானம். புவியியல் எவ்வளவு தூரம் இச்சம்பிரதாயங்களை உருவாக்கியிருக்கிறதென்பதையே நாம் நோக்க வேண்டும்.கலியாண வைபவங்களிற் கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகள் மிக அனந்தம். பேண்கள் சம்பிரதாயங்களின் இருப்பிடமென்று சமூக ஆராய்ச்சியாளர் கூறுவர். ஊலகத்திலுள்ள எ;த இனத்தை எடுத்துப் பார்த்தாலும் சம்பிரதாயங்களைப் பாதுகாப்பது பெண்களாகவே காணப்படுகின்றனர். சம்பிரதாயங்களின் நன்மை தீமைகளைப் பற்றி அவர்கள் அக்கறையெடுப்பதில்லை. மூதாதையராற் கொண்டு வரப்பட்டனவே என்ற ஒரு பிரேமைதான் அவர்களை ஆட்டுகிறது. சும்பிரதாயங்களைப் பேணுவதால் எவ்வளவோ வீண் செலவுகள் ஏற்படகின்றன என்பதையிட்டு சிந்திப்பதில்லை.
பொதுவில் நின்று நாம் நோக்கம்போது, இவைகளால், ஏற்படும் தீமைகள் பல. பணச்செலவுகள் வேறு. இவ் சம்பிரதாயங்கள் சரியான முறையில் பேணப்படாமையால் உடைந்து பறக்கும் விவாகங்கள் அனேகம். இப்படியெல்லாம் இருந்தாலும், பெண்கள் இச்சம்பிரதாயங்களை விடுவதற்கு விரும்புவதில்லை.
சமூகத்தின் பிரதான பங்கை எடுப்பவர் குரு, மதஅறஜவு புகட்டல், மதச் சடங்குகளை நடத்துதல்’ போன்றவற்றில் ஆலிம்கள் ஒரு தனி இடம் வகிக்கின்றனர்.அவர்களுடைய சேவை அதிகம் விரும்பப்படுவதால் சமூகத்திலேற்படும் சாதக பாதகங்களுக்குச் சிலவேளை அவர்களே பொறுப்பாளியாக விடுகின்றனர். ஓதுகிற பாடசாலை நடத்தும் விடயத்தில் அவர்களுடைய சேவை விரும்பப்படுவது ஒரு பக்கமிருக்க, பிரம்பும் கையுமாக அவர்களிருப்பதைக் கண்டு சமூகத்தில் அவர்கள் ஒரு அச்சந்தரும் உருவமாகவும் மாறிவிடுகின்றனர். ஒரு தாய் தனக்கு அடங்காத பிள்ளைளை அதோ "ஆலிம் வருகிறார் பிடித்துக் கொடுப்பேன்" என்று பயங்காட்டுவது இன்னும் தாய்மார்களுக்கிடையில் ஒரு வழக்கமாகிவிட்டது.
விவாக விடயத்தில் மணமகளினதும், மணமகளினதும் சம்மதம் கவனிக்கப்படாமல் விடுவது ஒரு பெரிய குறை. இதனாலேதான் பெற்றார்களுக்கிடையில் ஏற்படும் தகராறினால் அநேக விவாகங்கள் முறிந்து விடுகின்றன. பெற்றோர்களுக்கிடையில் கொடுக்கல், வாங்கல் சம்பிரதாயம் பேணல், சீர் சிறப்புச் செய்தல் இவைகள் காரணமாகவே அடிக்கடி தகராறுகள் ஏற்படுகின்றன. சம்பிரதாயங்கள்எவ்வளவுக்குக் கூடுகிறதோ அவ்வளவுக்குத் தகராறுகளும் கூடுகின்றன. பெண்கள் கல்வித்துறையில் முன்னேறுகிற போது தான் இத் தகராறுகள் ஓரளவு குறையலாமென எதிர்பார்க்கலாம்.
இத்தகைய சூழ்நிலைகளைப் பின்னணியாகக் கொண்டு அமைந்ததே திருமணத் திருவிளையாடல். எனது நண்பர் ஜனாப் எம். ஸி. உம். ஸ_பைர் அவர்கள் இத்தகைய ஒரு நூலை உழுதித்தர வேண்டுமென்று என்னிடம் பலமுறை கேட்டார். எழுதினேன். அவருடைய மணிக்குரல் மூலம் இக்கவிகளை அவர் வெளிப்படுத்தினார்.
சமூக சாஸ்திரத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு இத்தகைய நூல் ஒரு வழிகாட்டியாகுமென்பது எனது அபிப்பிராயம் இக்கவிகளில் வரும் பெர்கள் யாவும் கற்பனையே யன்றி எவரையும் குறிப்பிடுவனவல்ல.
இந்நூலுக்குப் பொருத்தமானதோர் அணிந்துரை தந்துதவிய கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
அ.கா.லெ
காத்தான்குடி
10-6-67
------------------------------------
சமூக முயிர்ப்பர்
சலியா துழைக்கும்
சால்பு மிக்கோன்!
சுhன்றோன்! ஆய்ந்து,
ஆமைந்த அறிஞன்!
அன்பா லெனையே
ஆட்கொண் டியக்கும்
ஆரிய நண்பன்
இனிய பண்பார்
எ.எம்.எ. அஸீஸ்
இணையில் அன்புக்
கிந்நூல் அர்ப்பணம்!
--------------------------------------------------
மணம் சரிகாண் படலம்
எல்லா மறிந்த எங்கள் ஆலிமு
நல்லது சொல்வார் நாமேன் தடுப்பான்?
ஏவல், விலக்கல் எல்லாம் அறிந்தவர்@
பாவம் என்றால் பதறி விலகுவார்@
குடும்ப மெல்லாம் குலத்தோடறிவார்
ஆண்டுக் 'கத்தம்' ஆரார் வீட்டில்
அடுக்காய் வருனெ; றவரே அறிவார்@
ஊரை அளந்த உத்தமரே
பேரைக் கேட்டால் பிள்ளையும் பிறக்கும்@
ஊதிப் பார்த்தால் 'ஊரோடி' யோடும்.
இப்படியான எங்க ளாலிமு
'சுபகுத்' தொழுகையைச் சுறுக்காய் முடித்து,
நடையாய் நடந்து, நாலாம் குறிச்சி
கணக்கப் பிள்ளை காசிம் பாவா
வீடு போகுமுன் விரைவாய்ச் சென்று,
வழியி;ல் மறித்து, "வல்லவன் துனையால்
நல்ல நாள் பார்த்து நாங்கள் வருவோம்"
என்று முடிவையும் எடுத்தே வந்தார்.
ஆதலால் மாமா ஆதங் கண்டு,
சாவல் கமீது, சக்கரிக்காக்கா,
எதுமான் தம்பி, உமறு லெவ்வை,
உங்க சாச்சா, உசன் பெரியப்பா,
வெள்ளத்தம்பி, வேங்க மரைக்கார்,
யாவரும் வேணும் என்றார் ஆலிமு,
ஆதலினாலே, அவர்களைக் கண்டு
முன்னறி வித்தலாய் முழுதுஞ் சொல்லி
அவர்களிடமும் அறியச் செய்து
சம்மதங் கேட்டுச் சரிகண்டு வருவது
சும்மா வாகிலும் நல்லது தானே,
என்று சொல்லி இசுமான் கண்டு
முண்டாசு நீக்கி மொட்டத் தலையைப்
பெண்டாட்டி மரியம் பீவி காணத்
தடவிக் கொண்டார், தட்டிக் கொண்டார்@
மரியம் மாவும் மனம் மகிழ்வுடனே
சரி, சரி என்று சரியே கண்டா.
செப்பு அனுப்பும் படலம்
மரியம் பீவி மகளை நோக்கி
சின்னக் கண்டு, சிவந்த மாமி,
பொன்னி நாச்சி, போடியார் சாச்சி,
மூத்த பிள்ளை, முக்காட்டுக் காரி,
இவர்களை யழைக்க இளைய சிறுக்கனை
உடனே அனுப்புவாய் என்ன அவளும்
ஓதப் போன அவனை அழைக்கத்
தம்பி சாயுவைத் தட்டியே விட்டாள்@
அங்கே தம்பி 'அலிபு, பேத், தேயை'
அப்போது முடித்தே ஆலிமைக் கேட்டான்.
ஒப்பவே அவரும், ஓடியே வந்து
உம்மாவை யணுக, உவப்புடன் அவளும்
முன்னே கூறிய முழுப்பேரையுமே
இன்னே ஓடி எங்கும் போகாமல்
அழைத்து வாவென, அவர்களும் வந்தனர்:
பெண்கள் கூடிப் பேச்சைத் தொடுத்தனர்,
மண்டபக்கதவில் மறைந்தாள் மகளும்,
கணக்குப் பிள்ளை காசிம்பாவா
இணக்க முரைத்ததை இசைத்தாள் மரியம்.
எல்லாம் அறிந்த எங்கள் ஆலிமு
நல்லது கூறினால் நாமேன் மறுப்பான்?
ஆதலால்,
சீரு சிறப்பு செய்வ தற்காகப்
பெரிய செப்பொன்று பேச்சுக்கு முன்னே
சம்பந்தி வீட்டுக்குச் சாயந்தரமே
அனுப்ப வேண்டும், ஆதலினாலே,
அரிசி மரக்கால் அளந் தெடுத்துக,
குற்றிப் புடைத்துக் குருணல் நீக்கி,
ஊறப் போட்டபின் உரலிலிடித்து,
மாப்பலகாரம் மாலைக்கு முந்தியே
சேர்த்திட வேண்டும். சிவத்த மாமி
யாவரும் வருவீர் என்றனள் மரியம்@
அப்படியே
செப்பும் முடிந்தது, சேர்த்தும் முடிந்தது,
ஒப்புடன் மனைவி உவந்து செய்ததை,
செப்பிட - ஆலிமும் சிரித்துக் கொண்டார்@
இசுமான் கண்டும் எடுப்பாய் நின்றார்
நாச்சியார் படலம்
செய்நம்பு நாச்சி செங்காட்டுப் புலி,
வாயில் லாமலே வங்காளம் வோவாள்,
நோயில்லா மலே நூறுநாள் படுப்பாள்,
சீட்டுப் பிடித்துச் சேர்த்த பணத்தைக்
கூட்டுப் பெட்டிக்குள் குவித்து வைப்பாள்,
ஏசப்பிடித்தால் எல்லாம் நடுங்கும்,
காசிம் பாவா கடுகாய் விடுவார்,
படுத்த பூனையும் படி தாண்டி ஓடும்,
எடுத்த பிள்ளையும் இம் என்றடங்கும்,
இப்படி யானவள் இந்தச் சம்பந்தி@
செப்பைத் திறந்து சீராய்ப் பார்த்தாள்,
பல காரங்கள் பலபல இருந்தன,
கட்டிலி லிருந்த காசிம் பாவாவை
உற்றுப் பார்த்தாள் ஒடுங்கிப் போனார்,
பாருங்கள் இந்தப் பலகாரங்களை!
நம்ம குடும்பம் நாடே யறியும்,
கிள்ளிக் கொடுத்தாலும் கிடாரம் வேண்டும்,
பேச்சுச் செப்பா? பிச்சைச் செப்பா?
தொடங்கவும் பேச்சை தூங்கிய புருஷன்
விடுங்க நாச்சி வேண்டாமே குறை,
முதல் முதல்வந்தது முணு முணுக்காதே!
இதெல்லாம் பெரிதாய் எடுக்கப் படாது
பாட்டன் பூட்டன் பழக்கிய வழக்கம்,
வீட்டுக்கு வந்ததை விரும்புதல் வேண்டும்,
பள்ளிம் மாவிடம் பங்கு வைக்கவிடு
நாலு கலியாணம் நடத்திப் பார்த்தவ!
வேலிக் காலாய் வீட்டி லிருப்பவ!
அவருக்குத் தெரியும் அடுக்குப் பண்ண,
என்று நாச்சியை இளகச் செய்து
சென்றார் காசிம் செட்டியார் கடைக்கு.
மணம் பேசு படலம்
என்ன பிள்ளை மரியம்பீவி
வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்ததம
அவரைச் சொல்லி ஆட்களுக் கறிவி.
'மகரிப்' முடிந்து மாப்பிள்ளை வீட்டில்
கலியாணப் பேச்சைக் கடிதாய் முடித்து
நல்ல நாளும் நேரமும் பார்த்து,
எல்லா ருமாக இந்தக் கிhணத்தைச்
சிறப்பாய் டிப்போம் செய்தி என்று
செர்வும் ஆலிமு சொக்கிய மகளும்
மெல்லக் கதவுள் மிடுக்காய ஒளிந்தாள்.
'மகரிபு' முடிந்ததும மாப்பிள்ளை வீட்டில்
எல்லோரும் கூடி எடுத்தனர் பேச்சை,
காசிம் பாவா காக்கா ஆதமை
தொடங்கச் சொன்னார் தூக்கினார் கதையை,
கைக்கூலி என்ன கையில் கொடுப்பீர்?
சீதனம் எவ்வளவு சேர்த்துக் கொடுப்பீர்?
ஆதனம் எதைத்தான் அறியக் கொடுப்பீர்?
காணி எவ்வளவு கணக்காய்த் தருவீர்?
தென்னந் தோட்டமும் தெரியத் தருவீர்?
வீடுவளவு வேறாய்த் தருவீர்?
என்று பட்டியல் எடுத்து விளம்ப
இசுமான் கண்டின் இளைய மச்சான்
வேங்க மரைக்கார் விரித்தார் கதையை,
ஐயாயிரந் தான் அறியத் தருவோம்,
அதிலே ஆயிரம் ஆபரணங்கள்,
அதிலே ஆயிரம் அடுக்குப் பாத்திரம்,
மூவா யிரந்தான் முழுவதும் காசு,
கரவாகு வட்டையில் காற் கட்டை தூரம்,
படுமரக காணியில் பத்தேக்கர் தோட்டம்
இளங்கன்றுத் தென்னை எல்லாம் தருவோம்,
தாயதி வீடுதான் தனியே தருவோம்,
எல்லாம் எழுத்தில் ஏலவே செய்வோம்,
நல்லதம்பி நமதுநொத்தாசி
எல்லாம் தெரிந்தவர் இன்றைக் காகிலும்
கண்டு கேட்டால் கணக்காய்ச் சொல்வார்
ஈடு, ஒத்தி எதுவு மேயில்லை,
உள்ள பிள்ளையும் ஒன்றே ஒன்றுதான்,
எல்லாம் கொடுக்கவே இசைந்தார் மச்சான்,
என்று முடிக்க, இது கேட்ட ஆலிமு
சரிதான், சரிதான் சாச்சா கேட்டது
பத்துக் கொடுத்தால் பதினாறாயிரம் வரும்
அல்லா தருவான் ஆதலினாலே
விரும்பு வீர் என்ன, வேங்க மரைக்கார்
என்ன ஆலிமு இப்படி பேசுற,
மூன்று பிள்ளைகள் முன்னே நிற்கிறார்,
பெண்சாதி புருசன் இதோடு முடிந்த தா?
இன்னும் மிச்சம் இந்தக் காணிதான்,
இதிலே 'அரவும்' இழக்க முடியாது,
அவரு பெற்ற அத்தனை யோடு
பாலை முனைத்தோட்டம் பங்காயில்லையே,
மக்களுக்காக மனமாய்க் கொடுத்தார்
என்ன,
ஆதங் காக்கா அடமாய் நின்றார்,
ஐயாயிரமும் அரைச்சத முடனே
காசாய் வேண்டும் கைக் கூலியது தான்,
பூணும் சாமான் பொட்டகம் வெண்கலம்
வேறாய் வேண்டும் வீண்பேச்சல்ல,
மாப்பிள்ளை என்ன மண்ணாங் கட்டியா!
மானா வாரியில் மதிப்பான பூமி
நடுக் காட்டு வட்டை நாவடிக் காணி
குஞ்சான் குளம் கூவலடிப் பள்ளம்
எத்தனை, எத்தனை எல்லாமாக
ஐம்ப தேக்கர் அவர் பேருக்குண்டு,
பொட்டு மாவடியில் புதுக் காணிவெட்டி
அறுப தேக்கர் அழகான தோட்டம்
இளங் கன்றுத்தென்னை எல்லாம் அவரது,
என்று நீட்ட,
சரி, சரி போதும் சரிந்த வட்டையிலே
இருக்கிற காணி இருப தேக்கர்
அதிலே பத்தை அளிப்போம் மேலும்,
கைக் கூலி அதுதான் காசு மூவாயிரம்
என்று முடிக்க, இருந்த ஆலிமு
இருபக்கத் தையும் இதிலே யிணைத்து
காசிம் பாவாவைக் கடைக் கண் நோக்க
அவரும அது சரி ஆமாப் போட
சுமான் கண்டும் இணங்கி நிற்க
ஓதுவோம் பாத்திஹா உத்தர வென்றே
பாத்திஹா என்றார் பார்த்தே சபையை,
முடிந்தது பாத்திஹா, முடிந்தது பேச்சு,
வருகிற மாதம் வளர் பிறைபத்து
கழித்து வரும் நாள் கணக்கு வியாழன்
நல்ல நாள்தான் நானே பார்த்தேன்
என்றார் ஆலிமு ஏற்றார் யாவரும்,
அரிசி மாரொட்டி அடுக் காய் வந்தது,
கோழிக் கறியும் கூட வந்தது@
வளவில் பழுத்த வாழைப் பழமும்,
தயிரும், சீனியும் தாவி வந்தன@
வட்டப் பீங்கான் வளைந்து சென்றது,
தண்ணீர்க் கோப்பை சுற்றித் திரிந்தது,
படிக்கம் வளைந்து பார்த்து நகைத்தது@
கல, கல வென்றே கலியாணப் பேச்சு
ரொட்டி விருந் தோடு முட்டி முடிந்தது@
வெற்றிலை, பாக்கு விரைந்து வரவும்
பற்றிய கையராய்ப் பரவச மடைந்தனர்,
சுற்றிய படிக்கமும் சூழ்ந்து மறைந்தது.
மணமகன் படலம்
காசிம் பாவா கணக்கப் பிள்ளை
காணித் தோட்டம் காசுப் 'புழக்கம்'
செட்டியார் நட்பு சேர நிறைந்தவர்
செய்னம்பு நாச்சியைச் சிலையாக வைத்துக்
கொண்டைப் பூவும், கூட்டுக் காப்பும்,
தண்டைச் சரடும், தாவணி மாலையும்,
அல்லுக்குத்தும், அடுக்கு மோதிரம்,
பொன்னுக் கட்டும், பொன்மணிக் கோவையும்,
தாவத்துக் கூடும், தங்கமணிக் காப்பும்,
எத்தனை, எத்தனை எல்லாம் தங்காய்
பத்தரை மாற்றுப் பசும்பொற் பாவையாய்க்
காத்தே வந்தார், கடிந்துமே பேசார்,
எல்லாம் நாச்சி என்றே இருப்பார்.
வண்டி மாடென்ன! வாழைக் குலை என்ன!
தயிர்ப் பானை என்ன! தலைச் சுமையுடனே
புதுருக் கோட்டையும், புதுநெய் போத்தலும்
வீடே நிரம்பும்@ வேலையாள் கூட்டம்
காலையும், மாலையும் காத்துக் கிடப்பதும்,
முல்லைக்கான் முனங்கிப் போவதும்,
காசிம் பாவா கணக்குப் பார்ப்பதும்,
மூத்த மகனுக்கு முட்டிப் போகும்,
காளைப் பருவம். கல்வியைப் பற்றியோ
ஓதற் பள்ளியில் ஒருமாத மிருந்தான்@
ஆலிமும் சலித்தார், அடித்தும் பார்த்தார்,
துள்ளிப் பறப்பான், துரக்குஞ்சல்லவா?
வீட்டிN தை;து வேண்டிய ஓதலை
ஓதிக் கொடுக்க ஒப்பினார் ஆலிமு,
தர்மப் பள்ளியில் தமிழ்ப் படிப்பது
மூன்றாம் வகுப்பு முழுதும் படித்தான்,
நாலாம் வகுப்பு நாலு மாதந்தான்,
அப்பால் அதையும் அடிவாரி விட்டான்
தானே வளர்ந்த தனிப் பெருங் காளை
பளையகாட் சாறன், பட்டுப் பூச்சு வார்,
அணில்மார்க் பெனியன், ஆரணியஞ் சால்வை,
கீச்சிடும் செருப்பு, கிறுக் கான பார்வை,
கன்னியர் கண்டால் கால்தடு மாறுவர்,
பச்சை டத்துள் பாசாங்கு காட்டும்
மச்சிமார் பலபேர் மயங்கியே நிற்பர்,
ஆனாலும் காளை அலாதி யானவன்
வாப்பா அறிவார் வண்ணக் கிளியை,
உம்மா சொல்லுவா உயர்ந்த கிளியை
அவர்கள் காட்டும் அந்தக் கிளிக்காய்
எந்தக் கிளியும் இவன் 'கல்பில்' இல்லை,
சோலைக் கவியும், சுந்தரக் கவியும்
மாலைக் கவியும், மங்களக் கவியும்
காதற் கவியும், கல்யாணக் கவியும்
ஆயிர மாயிரம் அழகாய்ப் பாடுவான்
இசுமான் கண்டின் இன்பக் கிளியை
இனித்தான் காண்பான் இளங்காளை அகமது
போன வருஷம் புதுப்பள்ளி யடியில்
பன்னிரண் டிரவும் பார்த்த மௌலூதில்
கன்னிப் பெண்களைக் கண்ட நினைவுகள்
ஒவ் வொன்றாக ஓடி வந்தாலும்
இசு மான் கண்டின் இன்பக் கிளியின்
விசு வாசந்தான் விஞ்சிய தம்மா.
மணமகள் படலம்
இசுமான் கண்டின் இதயக் கனியாய்
வளர்ந்தாள் பாத்துமா வண்ணக் கிளிபோல்
ஆறு வயதில் ஆலிமிடமே
ஓதப் போனாள் ஓதி முடித்தாள்.
ஈமான் இல்லாம் எல்லாம் படித்தாள்.
எட்டு வயதில் இரண்டாம் வகுப்பில்
தமிழும் படித்தாள். தந்தையு; பார்த்தார்,
போதும் படிப்பு 'புள்ளை' படித்தது,
ஆளும் பெரிதாய் ஆகி விட்டதால்
வீட்டிலே நிறுத்தினார்@ விட்டில் ஆனாள்.
ஏன்தான் இஸ்மான் கண்டின் இலக்கு@
ஆலிமும்கூட அதுசரி என்பார்.
பாய்தட் டிழைக்கப் பழகிக் கொண்டாள்,
ஆக்கக், காச்ச அள்ளிப் போட
ஆட்கள் பலபேர் அங்கே உண்டு,
சிறு சோறாக்கிச் சிறு வீடுகட்டிப்
பாவைக் கலியாணம் பண்ணி விளையாடித்
தோழிய ருடனே தோட்டஞ் சுற்றி
நாளும் பொழுதும் நகர்ந்து செல்லப்
பத்து வயதைப் பாத்துமா எட்டினாள்.
தங்கக் காப்பு, தங்கச் சரடு,
தங்கமணிக் கோர்வை, தங்க மோதிரம்,
தங்கமாலை, தங்கமே எல்லாம்
தங்கபதுமையாய்த் தாண்டினாள் பத்தையும்,
பதினொரு வயது பாய்ந்து வரவும்
பார்த்தார் இசுமான் கண்டும் பதறித்
தங்க விளக்கைத் தவிக்கவிடாமல்
மங்கல மாக பணத்தை முடித்துப்
பிள்ளைப் பாரம் பெரும் பாரம் நீக்கி
மரியம் பீவியும் மாமியா வாகப்
பார்த்து மகிழப் பாக்கியஞ் செய்து
தந்தை கடமையைத் தானே முடிக்கத்
துணிந்தார் என்றாற் சொல்லவும் வேண்டுமோ?
பச்சைப் பிடவை, பட்டுச் சட்டை
வெற்றிலைச் சிவப்பில் விளைந்த உதடு
துள்ளித் திரியும் புள்ளி மானாய்த்
தோட்டஞ் சுற்றினாள் தோழியருடனே,
கொஞ்சுங் கிளியும கூட்டிலுண்டு,
கெஞ்சும் பூனை கிட்ட உண்டு,
கூட்டில் வாழும் கூண்டுக் கிளிபோல்
வீட்டில் வாழும் வெட்டுக் கிளியாய்ச்
சுற்றிச், சுற்றிச் சுற்று வேலிக்குள்
நாளும் பொழுதும் நகர்ந்து செல்ல
வானம் பார்த்த வண்ணக் கிளியென
வளர்ந்து வந்தாள் வாட்டமேயின்றி,
அறிந்த கல்வி அதுவே யென்றால்
அப்பால் கவலை ஆரே கொள்வார்?
ஆதலினாலே அவளும் இன்பமாய்
இருந்தா ளென்றால் ஏன்வேறு யோசனை
தந்தைக்குண்டு தாய்தனக் குண்டு?
மௌலூதுப் படலம்
கலியாண நாளும் கடுகி வந்தது,
மாப்பிள்ளை வீட்டில் மௌலூது ஓத
வேண்டிய ஒழுங்குகள் விரைவாய் நடந்தது,
வெற்றிலை பாக்கு வீடுகள் தோறும்
கொடுத்து மனிதரைக் கூப்பிட்டழைத்தனர்,
"காசிம் பாவா கணக்கப் பிள்ளை
மூத்த மகனுக்கு முன்வரும் வியாழன்
கலியாணத்துக்குக் கட்டாயமாக
வரச் சொல்லுங்கோ@ வருகிற செவ்வாய்
இரவு மௌலூது" என்று சொல்லி
ஆள் அழைப்பும் அழகுற நடந்தது,
வீட்டு வண்ணான் வேலன், கணபதி
முத்து மாணிக்கம், முகிதீன் காக்கா,
சின்னத்தம்பி, சீனிமுகம்மது
பந்தல் போட்டனர் பாவாடை சுற்றினர்,
குருத் தோலையால் கூடுகள் கட்டினர்,
தாழங் குலையைத் தடியில் மாட்டினர்,
வண்ணத் தாளால் வளையம் சுற்றினர்,
கலியாணப் பந்தல் காட்சியளித்தது,
பெரிய ளெலூது! பெரிய விருந்து!
பெரிய கூட்டம்! பெரிதே எல்லாம்!
இரவு முழுவதும் இதுவே கோலமாய்
வருவார், போவார், வந்து தங்குவார்,
இருப்பார், சிரிப்பார், இருந்து தூங்குவார்
இவ்விதமாக இரவுங்கழிந்தது.
பாசம் கொண்டுபோகும் படலம்
வியாழக்கிழமை விடிந்ததும் தாலி
கட்டும் வழக்கம் கைக் கொண்டிருப்பதால்
புதன் பின் இரவு புதுமாப் பிள்ளைக்கும்
புதுப் பெண்ணுக்கும் போடும் மருதோன்றி
எடுத்துப் போதல் எங்கும் வழக்கம்.
மஞ்சட் துண்டு, மருதோன்றிக் கிண்ணம்,
காசும் சேர்த்துக் கைப்பெட்டி ஒன்றில்
வைத்துப் பெண்கள் வைகறைக்கு முன்னே
குரவைக் கூத்தொடு குடையும் பிடித்துப்
பாதைகள் தோறும் பள்ளி நடந்து
மேள தாளத்துடன் மிடையப் பறையனும்
முட்டி மோத, மொட்டாக்கு நெகிழ,
முன்னே பெண்களும், பின்னே புருஷரும்
செல்லும் காட்சியே செப்பும் பரசமாம்
வேறு
நின்று, நின்று குரவையுடன் நிமிர்ந்து நடப்பார்,
நிற்பாடடிப் பறையனையும் கொட்டச் சொல்வார்,
என்றுமிது பெண்களது சொந்த விருப்பம்,
இதில் ஆண்கள் ஏமாந்து போய்விடுவாரே
தொன்று தொட்டு வந்த இது பெண்களிலே
தொட்டவனும் கிட்டவந்தால் தள்ளி விடுவாள்,
நின்று, நின்று ஆண்களெல்லாம் 'லாம்பும்' கையுமாய்
நேரமெல்லாம் நடந்து நிற்பார் பாதை நெடுக
வேறு
பெண் வீட்டிலிருந்து பெயர்ந்த மருதோன்றி
முன்னே பறையன் மோகனம் பாட
மாப்பிள்ளை வீட்டை மண்டி நெருங்கும்@
மாப்பிள்ளை வீட்டார் மருதோன்றி யுடனே
பறையன் முன்னே பாய்ந்து கொட்ட
பெண் வீட்டை நோக்கிப் பெயர்ந்து நெருங்குவர்
குரவைக் கூத்தும் குடையும் நெருங்க
எறும்பு போல ஈரடி மூவடி
வைத்து, வைத்து வழியெல்லாம் நின்று,
அவர்கள் வரட்டும் அடிமாமி நில்லு,
இவர்கள் வரட்டும் இனிப் போவதில்லை
என்று பெண்கள் இரண்டு பக்கமும்
கயிறிழுப்பது போல் காலை யிழுத்து
நடக்க, நடக்க நடுவிலே பறையன்
இருபக்கத் தாலும் இடையில் மறிக்கக்,
குரவையில் போட்டி குடையையும் தள்ள,
புருஷன் மாரோ போபோ என்னப்
பறையனை விலக்கிப் பாதை சீராக்கி
ஏதோ பெண்வீட்டார் இளைத்தவர் போல
முன்னே அணுகி மூடிய பாசம்
கொண்டு கொடுக்கக் குறித்த மாப்பிள்ளை
வீட்டார் வாங்கி விருப்புடன் அவர்கள்
தங்கள் பாசத்தைத் தாமே நீட்ட
இப்படி மாறி இருபகுதி யாரும்
கத்தித் கத்திக் கலகலப் புடனே
வீடு செல்ல விடிவெள்ளி எழும்.
தாலி கட்டும் படலம்
வேறு
மதினிமார் சேர்ந்து மதோன்றி போட்ட பின்னர்
மாப்பிள்ளை, பெண்ணை மங்களநீர் ஆட்டினரே
புத்தாடை போட்டுப் புதுக்கட்டில் மீதினிலே
பெண்ணையிருப்பாட்டிப் பெத்தாவும் காத்திருந்தாள்@
மாப்பிள்ளை வீட்டில் மாமனார் வந்திருந்தார்.
ஊர்மனிதர் எல்லாம் ஒன்hக வந்திருந்தார்,
ஆலிமும் முன்னாலே அமர்ந்தருந்தார் ஆயத்தமாய்
காவின் எழுதக் கல்யாணப் புத்தகமும்
பதிவை முடிக்கப் பதிவுகாரர் புத்தகமும்
காத்தேயிருந்தனவே காலை நேரம் ஆகியதே
மாப்பிள்ளை வந்தார் மணப்பந்தர் தனைநோக்கி,
முதலிற் சலாம்கூறி முன்னே விரித்திருந்த
வெள்ளை விரிப்பி; விரல்மடித்து ஆலிமுக்கு
முன்னேயிருந்தார், முகம்பார்த்து ஆலிமுமே
காவின் முடிப்போம் கணக்குஞ் சரியாச்சு
உத்தரவென்றே ஓதலெல்லாம் ஓதியபின
பதிவும் நடந்தது, பார்த்திருந்தார் மற்றவர்கள்,
எல்லாம் முடிந்ததும் எதிர்பாhத்த வாறதுபோல்
மாப்பிள்ளை மட்டும் மணப்பாவையைப் போல
தலை கவிழ்ந்திருந்தார் தத்தளித்த பார்வையுடன்
மாமனார் வந்து மடிகாலில் இருந்துரிமை
ஒலிசொல்லப் போனார் ஓதினார் ஆலிமுமே
கைக்கூலிக் காசு கையிற் கொடுத்தவுடன்
மச்சானும் வாங்கி மடியிலே வைத்திருந்தார்
மாப்பிள்ளை, மட்டும் மண்பூனை யைப்போலே
திருதிருவென்று திரும்பியும் பார்க்கவில்லை,
என்ன நடந்தும் ஏனென்று கேட்கவில்லை.
இப்படியிருக்க எல்லாம் முடிந்த பின்
எழும்பினார் மாப்பிள்ளையும் எல்லாரும் பார்த்திருக்க
முன்னே மாமனார் மோதிரம் போட்டவுடன்
தனித்தனியே சலாம் தானே யுரைத்தாரே.
வந்தவர்கள் எல்லாரும் வாழ்த்தும் சலாமுரைத்தார்,
மோதிரம் போட்டார், முழுப்பரிசும் தானீந்தார்.
சால்வையும் சாரனுமாய் சரிசரியாய்ப் பரிசளித்தார்,
மச்சான் இவையெல்லாம் மடித்தே எடுத்தொன்றாய்ப்
பொட்டணிகட்டிப் போட்ட பின்னர் மாப்பிளையும்
பெண்வீடு நோக்கிப் பெயர அடிவைத்தார்.
வண்ணான் மறித்தான் வன்னப்பரிசு கேட்டு,
பரிசு கொடுத்த பின்னர் பாவாடைதான் விரித்தான்,
மேளதாளம் முன்செல்ல மெல்லியலார் குரவையிட
ஆலிம் பைத்தோத ஆரவாரம் மெல்ல எழப்
பட்டாசுக் கட்டு படபடெனத் தான்வெடிக்க
மாப்பிள்ளை ஊர்கோலம் மணப்பெண்ணை நோக்கிவழி
அடியெடுத்து வைத்ததுவே ஆகா அதென்னழகு!
வேறு
மணமகள் வீட்டை மாப்பிள்ளை அடைந்ததும்
தண்ணீரு; பாலும் தனிச்செம்பும் கைக்கொண்டு
மச்சினன் வந்து மச்சானின் கால்கழுவக்
கணையாழி பரிசாய்க் கைவிலில் அவர்போட
மச்சினன் பின்னே மச்சானை அழைத்தேகிப்
பந்தரின் கீழே பாவாடை விரிப்பிலே
இருப்பாட்டி விட இருந்தார் மாப்பிள்ளையும்
இங்கேயும் ஆலிமு இருந்தார் பக்கத்தில்
காலாறிச் சற்றுக் களைதீர்ந்த பிற்பாடு
மாப்பிள்ளையுடன் மாமனார் முன் செல்ல,
ஆலிம் பின்செல்ல, அவருடன் மரைக்காரும்
மணமகள் அறைக்கு மறைவாகப் போனவுடன்
மாமனார் முன்போய் மகளின் கையை
மாப்பிள்ளையிடம் மதிப்பாய்க் கொடுக்க
மாப்பிள்ளை பிடித்தார், மரைக்கார் உடனே
மொட்டாக்கு நீக்க மோகனப் பாவைக்குத்
தாலியை மாப்பிள்ளை தானே கட்டப்,
பார்த்த ஆலிமு பாத்திஹா ஓத,
வந்தனர் வெளியே, வாழும் மாப்பிள்ளை
கட்டிலின் மேலே கதையே யின்றிப்
பக்கத்தி லிருக்கப் பார்த்த கிழவி
பாலும் பழமும் பங்கு வைத்துப்
பெண்ணைப் பார்த்துப் பிடி வெற்றிலையை
மாப்பிள்ளையிடம் மடித்துக் கொடுவென
அவளும் கொடுக்க அவரும் வாங்கி
வாயில் வைத்தாரோ இல்லையோ அறியோம்?
இப்படி யிருக்க,
வந்த மனிதர் வாயெல்லாம் கழுவக்
காவின் சோறு சுடிதாய் வரவும்
உண்டனர் யாவரும், உரைத்தனர் வாழ்த்துக்கள்!
ஆலிம் பங்கும் அலாதியாய்க் கிடைத்தது.
நீராட்டப் படலம்
ஏழுநாள் வரையும் எங்கு போனாலும்
மச்சினன் காவல் மாப்பிள்ளைக் கிருக்கும்
ஏழுபாய் கட்டிலில் ஏழுநாள் விரிப்பர்,
மாப்பிள்ளை உடையை மாற்றுவார் ஏழுநாள்,
பெண்ணும் அதையே பின்பற்ற வேண்டும்,
முட்டைப் பொரியலும், முழுக் கோழிக் கறியும்,
பாலும், பழமும், பல்சுவைப் பண்டமும்
ஏனோ பேசுவான் ஏழுநாள் வரையும்,
'மாமியார் வீடு மகா சௌக்கியம்'
எனும்படி மாப்பிள்ளை இருப்பார் சுகமாய்,
இப்படி ஏழுநாள் இருந்து பறக்க,
நீராட்டுவிழா நெருங்கிடும் பாhPர்,
பெண் வீட்டிலே தான் பெண்களெ ல்லாரும்
குரவை முழக்கிக், கூண்டுச் சோடியை
ஒன்றா யிருத்தி, ஒரே நேரத்தில்
நீர் முழுக் காட்டி, நேர்ச்சையும் வைத்த பின்
ஆலாத்தி தாங்கி, அருகிலி ருத்திக்
கண்ணூறு கழித்துக், கலியாணக் கூறையை
உடுக்க வைத்ததும், உண்ணக் கொடுத்தபின்
இரவோடி டிரவாய் இருவரையும் கூட்டி
மாப்பிள்ளை வீட்டில் மதிப்போடு சேர்ப்பர்,
அங்கும் ஆலாத்தி அழகாய் எடுத்துக்
கண்ணூறு கழித்துக் காவலும் வைத்ததும்
எல்லோரும் போக இருவரும் மூன்றுநாள்
மாப்பிள்ளை வீட்டில் மருண்டு கிடப்பர்.
பெண் பார்க்கும் படலம்
மாப்பிள்ளை வீட்டில் மதிப்போடு பெண்ணும்
மூன்றுநாள் வரையும் முடங்கிக் கிடப்பாள்
இனித்தான் பெண்ணை எல்லோரும் நோக்கி
இரசிக்கும் வழக்கம் இருக்குது பாhPர்
பெண்ணின் நிலையைப் பேசுவான் ஏனோ!
தண்டை, கொலுசு, தாவத்து மோதிரம்
பொன் கொண்டைக் குத்தி, பூட்டுக் காப்புடனே
கழுத்து மணிக்கோர்வை காதலுக்குக் குத்தும்
என்றிவ் விதமாய் எவ்வளவு பாரமோ!
பொன் விலங்குகளோ! போது மென்பாரோ!
காரைக்காற் சோமன், கைச்சட்டையுடனே
தோட்டுப் பாயில் தோன்ற இருத்தி,
முன்னே தட்டை வெள்ளையால் மூடி,
சுவரோ ரமாகச் சுந்தரப் பாவையை
'அஸறுக்குப்' பிறகு அமர வைத்ததும்
மாப்பிள்ளை வீட்டார் மனமகிழ் வுடனே
இனசனத்தாரை இனிதே வரும்படி
அழைப்பு விடுத்தனர், அவர்களும் வந்தனர்,
வந்த பெண்கள் வண்ணப் பாவையைக்
கண்ணாற் கண்டு கணையாழி போட்டனர்@
சிலரோ காசு சேர்த்தனர் தட்டில்@
ரொட்டியும் தேநீரும் உண்டனர் வந்தோர்@
செய்நம்பு நாச்சி சிரித்த முகத்துடன்
ஓடுவா, ஆடுவா உட்கார்ந்திருப்பர்
மோதிரத் தட்டை முன்னின்று பார்ப்பா,
இப்படியாக இந்தாள் மணமகள்
இருட்டு வரும்வரை, என்னென்று சொல்வேன்!
ஆடாமல், அசையாமல் அலங்காரம் மாறாமல்
பேசாமல், சிரியாமல் பிறரையும் நோக்காமல்
வியர்த்து வியர்த்து வேர்வையடங்க
இந்த 'அதாபில்' இப்படி மூணுநாள்
இருப்பது லேசா? எல்லாம் வழக்கம்!
மூன்றாம் நாளில் மோதிரம் காசு
கணக்குப் பார்த்தனர், கட்டியே முடிச்சாய்ப்
பெண்ணிடம் கொடுத்துப் பெரிய மாமி
செய்னம்பு நாச்சி சேடியர் சூழ
சம்பந்தி மரியம் சந்தோஷம் சொல்லப்
பெண்ணைத் தாயுடன் பெயர விடுத்தனர்
மாப்பிள்ளை கூடவே மருண்டு காவலாய்ப்
போனவர் போனவர் புறகேன் வருவார்?
செய்னம்பு சீறிய படலம்
மாப்பிள்ளை வீட்டில் மணப்பெண் இருக்கையில்
செய்நம்பு நாச்சி, சேடியர் மூலம்
மாப்பிள்ளைப் பெட்டி மதிப்பா னுப்பினாள்,
சீப்புக் கண்ணாடி செப்பு மாப்பெட்டி
ஏலங்கரம்பு இலங்கு சவ்வாது
வெற்றிலை பாக்கு வெள்ளிக் கரண்டி
இப்படிப் பற்பல இன்பப் பொருட்கள்
மூன்று பெட்டியில் முழுதும் வைத்துச்
சம்மந்தி வீட்டுக்குத் தானே னுப்பினாள்
மரியம் சம்மந்தி மதிப்புடன் பெற்றாள்
மாப்பிள்ளை போன மூன்றாம் நாளில்
செய்நம்பு நாச்சி, சேடியருடனே
அலுக்குக் குலுக்கு மினுக்குத் தழுக்குடன்
சம்பந்தி வீட்டுக்குச் சர்வ கோலத்துடன்
வந்தே இறங்கினா! வரவேற்பு மிகஜோர்.
மரியம் பீவி மரியாதை கொடுத்துப்
புதுப் பாய் போட்டுப் புதுவட்டா ஈந்து
சங்கையாகவே 'சாத்துகள்' செய்தும்
வேலைக்காரியின் விரல் தடுமாறிச்
சீனித் தட்டுச் சிதறி விழவும்
கொஞ்சம் சீனி குதித்து நாச்சியின்
பனாரிஸ் பட்டில் பட்டுக் கசிந்து
போனதைக் கண்டு பொறுமை யிழந்து
அடக்கி யடக்கி அவசரமுடனே,
சொல்லாமல் சேடியர் சூழ வீட்டுக்குப்
போகவும், மரியம் புறத்தே அழைக்கப்
பேசாமல் திரும்பாமல் பின்னுமே பாராமல்
வீட்டை யடைந்து வியர்க்க, வியர்க்க
காசிம்பாவாவைக் கடிந்து நோக்க,
என்ன நாச்சி என்றவர் கேட்க,
முறை கெட்ட அந்த மூளியின் வீட்டுக்கு
மகனை விட்டது மகா பிழையாகும்
வரட்டும் அவனும் வழிகாட்டுவேன் என
காசிம்பாவா கலக்குமுடனே
பொறுக்கச் சொல்லியும் பொறுத்தால் தானே!
அடுத்த நேரமே அகமது மாப்பிள்ளை
அறிந்தே இதனை அவசரமாக
உம்மாவை யணுக உம்மா இரைந்து
'மகனே தங்கம்!' மனுஷனை மதியாத
மரியம் வீடு வேண்டவே வேண்டாம்@
இதென்ன கலியாணம்@ இப்படிப் பட்ட
முறை கெட்டவளிடம் மோதுவதை விட
சும்மா இருக்கலாம்@ சொந்த மகனானால்
போகாதே நீ, போகாதேடா,
வருவது வரட்டும்@ வரட்டும் ஒருகை
பார்த்தே விடுவது, பார்ப்பாய் நீயும்
என்று மகனை ஏங்கி அழுது
சொல்லவும் அவனும் சுறுக்கென நிமிர்ந்து
சரிதான் உம்மா சனியன் வேண்டாம்
என்றிருந்தானே என்ன புதுமை!
இரவு சென்றும் எங்கே மருமகன்
என்று தேடி இசுமான் கண்டு
மகனை அனுப்ப மச்சான் வராரெனச்
செய்னம்பு நாச்சி சீறிப் பாயப்
பையனும் வந்தான், பாவையும் அழுதாள்.
பிணக்கு தீர்த்த படலம்
வேறு
வேங்க மரைக்கார் வீட்டுக்கு வந்ததுமே
இந்தக் கதை கேட்டார் என்ன புதுமையென
ஆலிமை யழைத்தார் அவரும் உடன் வந்து
அதுசரி என்று சொல்லி ஆதரவுதான் கூறி
காசிம் பாவாவைக் கண்டு சலாமுரைத்து
போனதெல்லாம் போகட்டும், புள்ளையை விடுங்க என
நாச்சியார் பாய்ந்து ஞாயம் பல பேச
மாப்பிள்ளை கூட மதிப்பாய் அது பேச
அல்லாவுக்காக அனைத்தும் பொறுங்க என்று
ஆதரவு கூறி ஆதங்கண்டு வீடுசென்று
மரியம் பீவியையும் மகளையுமே பார்த்து
இருவரும் போங்கள் எல்லாம் சரியாகும்
என்று சொல்ல மரியம் இருபது கோழியப்பம்
சுட்டே எடுத்துச் சுமந்துச் சென்று சம்மந்தி
வீட்டை யடைய வேண்டா வெறுப்புடனே
பாயும் கொடுத்துப் பழிபோட்ட பாவனையில்
ஆதரவு செய்தே அழாத குறையினளாய்
ஆலிமுக்காக அனைத்தும் பொறுத்தே னென்று
சொல்லியனுப்பிச் சுந்தரப் புதல்வனையும்
நாலாம் நாளின்பின் நல்லது போ என்று சொன்னாள்.
மருமகன் படலம்
கோபமும் தாபமும் கலக்க,
மருமகன் போவதும் வருவது மாகி
ஆலிம் இடையில் அணை போட்டு நிற்க
ஒன்றரை வருடங்கள் ஒருவிதம் போகவும்
பெண்ணும் ஒருநாள் பெரியவ ளானாள்
சடங்குகள் செய்து சாற்றும் முறைப்படி
வீட்டைக் காத்து, விளக்குகள் ஏற்றி
கொண்டாடிய பின் கொண்ட மருமகன்
புதுப்புது ஆடைகள் புதிதாய் வாங்கிப்
பெண்சாதி அணியப் பெருமையாய்க் கொடுத்தான்
இனித்தான் மருமகன் இனிதாய் வாழ்வார்
என்று மாமியார் எக்களிப்புடனே
'சாத்து மாத்துச்' சரியாகச் செய்து
குறையே இன்றிக் குடித்தனம் வாழ
நடைமுறைப்படி நடந்து வருகையில்
மருமகன் ஒருநாள் மகளிடம் சொல்லி
மாமியும் மாமனும் மனமகிழ் வுடனே
பேசிய காணி பிசகின்றித் தந்து
வீட்டையும் விட்டு வெளியே போகுதல்
வேண்டு மென்று விடாப் பிடியாக
நிற்கவும் அவர்கள் நிலம்ஒன்று வாங்கிப்
புதுவீடு கட்டிப் புகுந்தனர் வேறாய்.
பிள்ளை ஒன்று பிறந்த பிற்பாடு
சீதன ஆதனம் சீராய் எழுதுதல்
ஊர் வழக்கமென உரைக்கவும் மாப்பிளை
உம்மாவிடம் சொல்ல உம்மா நாச்சி@
"எழுதித் தந்தால் இருந்து வாழு
இல்லை யென்றால் ஏன் கலியாணம்"
என்று சொல்லி இறுமாந்து நிற்க
மகனும் கேட்டு மறுப்புச் சொல்லாது
மாமியார் வீட்டை மறந்தே நின்றான்,
இசுமான் கண்டு இதென்ன வழக்கம்
தலைப்பிள்ளை கண்டு தானே சீதனம்
எழுதிக் கொடுத்தல் என்று சொல்லி
ஒன்றும் பேசாமல் ஊமையாய் இருந்தார்.
காரணம் வேறு காண இருந்தது
புதுநிலம் வாங்கிப் புதுவீடு கட்டவும்
கையிலிருந்த காசு முடங்கக்
காணி ஒன்றைக் கந்தப்பா விடம்
ஈடாக வைத்து இருபதினாயிரம்
வாங்கி இருந்தார், வருகிற வருஷம்
ஈட்டை மூண்டதும் எல்லாம் எழுதிக்
கொடுப்போம் என்ற கொள்கையுடனே
இசுமாங் கண்டு இருந்தார் என்றதை
மரியம் பீவி மட்டுமே அறிவாள்
ஆலிமு வந்து சீதன ஆதனம்
எழுதிக் கொடுக்க ஏன் தடை வேண்டும்?
பேசின படிக்குப் பேச்சை முறியாமல்
மருமகன் கேட்டதை மாறாது கொடுத்தல்
முறைதான் என்று முடிவாய்க் கூறவும்
உள்ள கஷ்டத்தை உரைத்தார் இசுமான்,
சரிசரி என்று சார்ந்து கதைத்துப்
பெயர்ந்த ஆலிமு பிறகு வரவில்லை.
மாதம் இரண்டு மூன்று பறந்தன
மருமகன் போனவர் போனவரே தான்.
சோதனைப் படலம்
என்ன செய்தும் இசுமான் கண்டால்
ஈட்டை முண்டு காணி எழுத
இயல வில்லை என்பதை ஆலிமு
நல்லாய் அறிந்தும் நாலு வார்த்தை
நாச்சியார் பக்கம் நல்லது சொல்ல
முடியாமல் விட்டது மூடு மந்திரமே,
கட்டுக் கதைகள் கட்டிப் பறந்தன@
இசுமான் கண்டுக் கிருந்த ஆதனம்
எல்லாம் கடனில் இருக்கிற தென்றும்,
மருமகன் பாடு மகா திண்டாட்டம்,
காத்திருப் பதில் கைநட்ட மேதான்,
என்று பலபல எங்கும் பேசினர்,
காசிம் பாவாவும் கல்போல் இருந்தார்,
அப்படி ஆதனம் அழியவே இல்லை,
அறுவடை முடிந்ததும் அடைப்பார் கடனை!
விளைச்சல் இவ்வருஷம் வியப்பாக இருந்தது,
நல்ல விளைவு நாடே அறியும்,
எல்லாம் தெரிந்தும் இசுமாங் கண்டு
அல்லாஹ் போதும், அவன றிவானெனக்
காலம் பார்த்துக் காத்தே இருந்தார்.
'கரைப்பான் கரைத்தால் கல்லும் கரையும்'
'அடிப்பார் அடித்தால் அம்மியும் நகரும்'
பொய்யும் புரட்டும் பொங்கி ஓட,
நாச்சியார் மனமும் நஞ்சாய் மாற,
மாப்பிளை அகமது மனந் தடுமாறினான்.
எத்தனை பெண்கள் இன்னும் இருக்கிறார்.
ஒன்று போய்விட்டால் ஒன்பது வருகுது,
சொத்து நிரம்பினால் சுகமும் நிரப்பும்,
என்று நிநேகிதர் எடுத்து இயம்பவும்,
அகமது மனதை அலைய விட்டான்.
செய்னம்பு நாச்சி செப்பினாள் முடிவை
இந்தக் கலியாணம் இனிமேல் வேண்டாம்
கொடுப்பதைக் கொடுத்துக் குறையில்லாமல்
விலகிக் கொள்வது வேண்டியது தானே,
சும்மா பொய்யை ஏன் சொல்ல வேண்டும்.
என்று மகனையும் இழுத்தாள் தன்பக்கம்,
உம்மா உரைப்பதை ஒப்பினான் அவனும்,
காதிக் கோட்டில் கனகப்பிள்ளை
வழக்கைத் தொடுத்தார் வந்த நாச்சி
எப்படியாயினும் இதைப் பிரித்திடுதல்
சம்மதமெனவே சத்தியம் செய்தாள்
காதியார் வழக்கைக் காரணம் கேட்டு
மாப்பிள்ளை இடம் மறித்துக் கேட்க
உம்மா சொல்வதை ஒப்பினேன் ஆதலால்
தலாக்குச் சொல்ல சம்மதம் என்றனன்.
இசுமான் கண்டை ஏனென்று கேட்க
ஆத்திரத் தாலே அவரும் சொன்னார்.
எது வந்தாலும் எனக்குச் சரியென
மூன்று தவணையில் முத்தலாகக் குறைக்கக்
காதி போட்டார் கட்டளை உடனே.
வாங்கிய தெல்லாம் திருப்பிக் கொடுத்து
மகரும் கட்டி மாப்பிள்ளை அகமது
விலகிக் கொள்வது விரும்பிய தென்று,
ஆலிமே சொன்னால் அப்பால் என்ன,
மூன்று தலாக்கும் முடியுந் தறுவாயில்
பாத்திம் மாவும் பரிதாபத் துடன்
பதறிப், பதறிப் பாதி உயிராய்க்
கஷ்டத் துடனே கண்ணீர் ஓடப்
பிள்ளை ஒன்றையும் பிரச வித்திட்டாள்.
மரியம் பீவியும் மகிழ்ந்தாள் பேரனை.
நாச்சி அறிவு பெற்ற படலம்
செய்நம்யு நாச்சி சேர்ந்தாற் போலவே
மூன்று கலியாணம் முடித்தா மகனுக்கு
எல்லாம் அவவுக் கேற்றமேதான்
காகிம் பாவா கால் நீட்டி விட்டார்.
குடும்ப பாரம் குவிந்தது தலையில்
மகனார் அகமது மாப்பிள்ளை இன்னும்
கணக்கு வழக்கு கணிசமாய்ப் பார்ப்பான்
பட்ட கடனைப் பார்த்தே யிறுத்தான்
ஆதனம் விற்றுக் கடன்களடைத்தான்,
உம்மாவும் மகனும் உள்ள பிள்ளைகளும்
வீட்டில் இருக்கும் வேளையில் ஆலிமு
வந்து சொன்னார் வளர்த்த மகனைச்
சும்மா வைத்தால் 'சோலி'யே தரும்
இருபத்தை;து வயதும் எட்ட
இருக்க விடுவது சரியல்ல என்று
மானா சேனா மம்மது மரைக்கார்
இளைய மகளை இனிதே முடிப்போம்
தாயுமில்லை தந்தையுமில்லை
பெத்தா வளர்த்த பிள்ளையதுவும்
ஆம்பிளப் பிள்ளைகள் ஆருமேயில்லை
மூன்று பெண்கள் முடித்து விட்டனர்,
நல்லாயிருந்து நாளது வரையும்
மானம் மரியாதை மதிப்பாய்ப் பேணி
வாழும் பிள்ளைகள் வடுவே யி;ல்லை.
வீடு வளவு வேறாயில்லை.
காணி யுண்டு கருவாட்டு முனையில்
சாப்பாடு மட்டில் சரியாய்ப் போகும்
அகதியை முடித்தல் ஆயிரம் தரும்
நமது வீடே நமக்குப் போதும்
வீட்டிலே வைத்து வேண்டிய சிறப்பை
நாமே செய்யலாம் நல்லது தானே
என்று சொல்ல இணங்கினர் யாவரும்
சல சலப் பின்றிச் சாதாரணமாய்
அந்தப் பெண்ணை ஆலிமே நின்று
முடித்து வைத்தார் முகூர்த்தம் பார்த்து
பதினைந்து வயதுப் பாவைதா னவள்
பேரோ ஜொஹ்ரா பெருமையே யில்லை,
ஆரம்பத்தில் அன்பாய் நடந்தது
போகப் போக நாச்சியார் பொறாமை
பொங்கி வரவும் புகுந்தது சனியன்
"மருமகள் என்ன மண்ணாங்கட்டி
சோம்பேறிக் கழுதை சுறு சுறுப்பில்லை,
வீட்டைக் கூட்டி விளக்க ஒரு மாதம்,
ஆக்கின சட்டியை அடுக்க ஒரு மாதம்
அம்மியி லிருந்தால் அரைக்க ஒரு மாதம்"
ஏச்சும் பேச்சும் எத்தனை நாளைக்கு!
பொறுத்தாள் பாவை பொறுமையே போச்சு!
நிறைந்த மாதம் நிறை வயிற்றுடனே
பெத்தாவை நோக்கிப் பேசாம லொரு நாள்
ஓடியே விட்டாள். ஓங்கார நாச்சி
போனால் போகட்டும் போகாதே என்று
மகனைச் சொல்ல மாப்பிள்ளை மகனும்
ஏதோ சொல்லி எதிர்த்தானே பாhPர்!
நாச்சியார் கொட்டம் நடுங்கி விட்டது.
மகனும் மனைவியின் மனைக்கே ஓடினான்.
- முற்றும் -
-------------------------------------------------------------------------------------
அருகிவரும் ஆசாரங்கள் : 2
காட்டாறு பாவா படலம்.
"காட்டாறு பாவா கடாட்ச மிருந்தால்
போட்ட மண்ணும் பொன்னாக மாறும்"
என்பது மெய்யே என்பார் பெண்களும்
அப்படி என்ன அவர் தான் செய்தார்?
ஜின்வா சலாத்துச் செ;பவர் அவரே@
முhPது கொடுத்தே மொட்டாக்குப் போடும்
பெரிய பாவா பேரில் பெரியவர்.
கண்ணோடி நாச்சிமார், கண்ணூறு நாச்சிமார்,
உம்மா நாச்சிமார், ஊரோடி நாச்சிமார்,
சின்னம்மை நாச்சிமார், செவ்வாப்பு நாச்சிமார்,
இப்படி நாச்சிமார் எல்லோரும் ஓட
ஓதியும் பார்ப்பார், ஊதியும் பார்ப்பார்,
சாம்பலும் போடுவார், சாம்பிராணி பிடிப்பார்,
தண்ணீரும் ஓதுவார், தாயத்தும் கட்டுவார்.
பஞ்சநூல் போடுவார், அஞ்சனம் தேடுவார்
வேப்பிலை கட்டுவார் வேலியும் காப்பார்,
சந்தனம் ஓதுவார் சாத்திரம் சொல்லுவார்,
இத்தனை 'கியாதி' இருப்பதால் பெண்கள்,
உண்டியல் நிரப்பி உரட்டிகள் சுட்டு
பாலொடு பழமும் பாக்கு வெற்றிலையும்,
சந்தனக் குச்சும் சாம்பிராணி யுடன்
மஞ்சட் துண்டும் மணப் பலகாரமும்
அள்ளிச் சுமந்தே அவர் வீடு சென்று
பாவாவின் மனைவி பார்த்திட வைக்க,
"ஹாலில் இருக்கிறார் காணலாம் இருங்க"
என்றதும் போனவர் இருந்திட பாவா
அறையினைத் தாண்டி அமைதியாய் வந்து
"வருவது தெரியும் வந்ததும் தெரியும்
அவுங்களும் இரவு வந்து சொன்னாங்க"
ஆதலி னாலே ஆத்திரப் படாமல்
காசு ஐஞ்சுரூபா கையோ டெடுத்துக்
கோழிச் சேவலும் குங்குமம் களஞ்சும்
வாழைப் பழமும் வாடாத பூவும்
கொண்டு வாருங்கள் கோழியை நேர்ந்து
கட்டுவோம், நூலும் கட்டுவோம், எல்லாம்
அவர்கள் பொருட்டால் அடியோடு பறக்கும்,
என்றவர் கூறி இரக்கத் துடனே
பெண்களைச் சொல்லும் பெருமையைக் கேட்டால்
யார் தான் பணி யார்? யார்தான் மறுப்பார்?
காட்டாறு பாவா கடாட்சமே போதும்.
கருமாரிப் படலம்.
சின்ன வயதில் சிறுபெண்கள் கருவானால்,
கருமாரி வருத்தம் கண்றாவி யாகிவிடும்,
கடுக்காய்ப் பரிகாரி கஷாயம் வடிப்பான்,
காட்டாறு பாவா கழுத்தில்நூல் கட்டிடுவார்,
முத்துலெவ்வை ஆச்சி முடிச்சொன்று நேந்துவைப்பா,
கந்தன் பரிகாரி காய்வெட்டி மந்திரிப்பான்,
வெற்றிலை ஓதி விழுங்கச் சொல்வார் ஆலிமு.
நாச்சியார் வந்து நாகூருக்கு நேந்து வைப்பா,
உம்மா ஒரு கோழி உரலிலே கட்டிடுவா,
புருஷன் ஒருபக்கம் புகாரிக்கு நேந்திடுவான்,
யாசின் லெவ்வை வந்து யாசினொன்று ஓதிடுவார்,
உருக் கெண்ணெய் ஓதி உச்சந்தலையில் வைப்பார்,
வேப்பிலைக் கொத்தை வேலியிலே கட்டிடுவார்,
வலையொன் றெடுத்து வாசற்கதவில் வைப்பார்,
கோடாரி ஒன்று கோணத்திலே சாத்தி வைப்பார்,
இவ்வளவு செய்தும் இன்னும் வருத்தமே தான்,
பிள்ளை பிறக்கவில்லை பெரிய கருமாரி,
இரண்டு நாள்வரை இப்படி யிழுத்து நிற்கும்,
பேயன் பரிகாரி பேய்க்கு மடை வைத்திடுவான்,
உயிர்ப்பலி கொடுத்தே உயிர்காக்க வேணுமென்பான்,
கருங்கோழி வெட்டிக் கரையாக்கன் ஓட்டிடுவான்,
என்ன செய்தும் பிள்ளை ஏனோ பிறக்கவில்லை,
பிள்ளைப் பேறென்றால் 'பீசபீல்' என்று சொல்லிச்
சந்தனப் பெத்தா சாந்தி ஒன்று சொல்லிடுவா,
தெரிந்த மருத்துவிச்சி தேடியே வந்தாலும்,
வீட்டுக்கு வந்ததும் விரட்டி விடுவார்கள்:
குண்டுனிப் பெத்தா கூட இருக்கையிலே
என்ன பயமெனவே இறுமாந்து பேசிடுவார்,
பிள்ளையும் பிறந்து பெற்றதாயும் தப்பிவிட்டால்
அற்புத மொன்றே அங்கு நிகழ்ந்ததுவாம்!
சுன்னத்துக் கலியாணப் படலம்
சுன்னத்து நடக்கும் சுபதினத் துக்கு
முந்தின இரவு முகூர்த்த மௌலூது
ஓதிடும் வழக்கம் உண்டு தான் கேளீர்
வீட்டு முற்றம் விளங்கும் பந்தலால்,
தென்னங் குருத்தும், தெங்கிளங் குலையும்.
வாழைக் குலையும் வாசலிற் தொங்கும்@
தாழம் பழங்கள் தடிகளில் தொங்கும்@
கடதாசிப் பூக்கள் கட்டியே தாங்கும்@
பலநிறச் சீத்தை பந்தலை மூடும்,
பந்தலில் 'லாம்பு' பலபல தொங்கும்,
தோரண விளக்குத் தோன்றும் ஒருபால்
பந்தலின் அழகு பார்க்கவும் வேண்டுமே!
வண்ணான் கைத்திறன் வார்த்தையை மிஞ்சும்!
இவ்விதம் பந்தல் இலங்கி யிருப்பப்
பறையன் பந்தலிற் பறைகொட்டி நி;ற்பான்
முதற்பறை தட்டி முடிந்த பிற்பாடு
ஆள் அழைப்புக்காய் அவனும் செல்லுவான்.
வெற்றிலை பாக்கும், வெள்ளைத் துண்டைக்
கட்டிய வாட்டாவும் கையி லேந்தி
ஒருவர் இருவர் ஒவ்வொரு வீடாய்ச்
சென்றாள் அழைப்பர் சேவிப்பான் பறையன்,
பறையன் சேவிக்கப் பாக்கோடு வெற்றிலை,
வட்டாவில் வைத்து வந்தவர் கொடுத்து,
"இரவைக்கு மௌலூது இன்னார் வீட்டில்
சுன்னத்து நாளை அஸறுக்கு பிறகு"
வரச் சொல்லுங்கோ வாக்கு மாறாமல்"
என்று சொல்லி இப்படி அழைப்பர்.
மரைக்கார் வீட்டில் மதிப்பாய் அழைப்பர்,
ஒய்த்தா வீட்டிலும் ஒழுங்காய் அழைப்பர்,
விதாணை வீட்டிலும் விசேஷ அழைப்புகள்,
இப்படி அழைத்தபின் இரவு மௌலூது,
விருந்தொடு நடக்கும் விதமோ வேறுதான்
ஆலிம்கள் ஏலவே அந்த மௌலூதை
மக்ரிபு முடிந்து மதிப்பாய் ஓதுவார்,
இஷாவுக்கிடையில் எல்லாம் முடியும்,
கடைசி து ஆவைக் கடைசியாய் வைப்பர்.
பந்தலில் ஆட்கள் பரந்து நெருங்கவும்,
பதம்படிப் போரால் பரவசம் கூடும்,
கடைசி துஆவிற் கையேந்திய பின்
ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கி
வரி வரியாக வரிசை யமைப்பார்@
வந்தவர் யாவரும் வரிசையிலமர்வர்.
வட்டச் சகனை வளைந்து சுற்றும்
வழக்கம் அப்போது வந்ததே இல்லை.
ஒற்றைச் சகனில் ஓரைந்து போய்ச்
சுற்றியிருந்து சோற்றை யுண்பதை
இலேசென யாரோ இங்கே புகுத்தினர்?
தனிப் பீங்கானும் தட்டையிற் கறியும்
கோப்பையிற் புளியும் குறையா தெவர்க்கும்,
உளமகிழ்வுடனே உண்பர் யாவரும்
ஒருவர் கறியை மற்றவர றியார்
அவரவர் பீங்கான் அவரவர் பாடு,
மட்டக்களப்பில் மதிப்பான வழக்கம்
எவரும் இதனை ஏற்றிப் புகழ்வார்,
தயிரும் பழமும் தட்டையிற் சீனியும்
ஈற்றிற் கொடுப்பார் இதனைச் சேர்த்துச்
சோற்றோடு கரைத்துச் சுவையாய் உண்ணத்
தனிப் பீங்கானே தலைக்கு வேண்டும்.
சகனில் உண்ணல் சாத்திய மில்லை,
இவ்விதம் விருந்தும் இனிதாய் முடிய
எல்லாரும் அவரவர் இல்லம் ஏகுவர்.
அடுத்தநாள் வந்ததும் அஸறுக்கு முந்தி
மாப்பிள்ளைக்கு மருதோன்றி போடுவர்.
குரவைக் கூத்தோடு கூடிப் பெண்கள்
மருதோன்றி போட்டு மங்கள நீராட்டப்
பறையன் நின்று பறைத்தட்டி நிற்பான்,
பட்டாசு வேறு படபடத் தொலிக்கும்,
நீராட்டு விழா நிறைவேறிய பின்
புத்தாடை அணியப் போகுவன் மாப்பிள்ளை.
பச்சை, சிவப்பு பலபல வர்ணம்
கலந்த ஜரிகையாற் 'கவுண்' போன்ற ஆடை
காற் சட்டையுடனே கட்டி விடுவர்
ஜரிகைத் தலைப்பா தலையை மறைக்கும்,
மொட்டாந் தலையை மூடி மறைக்கும்,
இந்தத் தலையை இளவெயிற் பட்டதும்
பஞ்ச வர்ணத்திற் பளிச்சென மினுங்கும்,
கவுணின் மினுக்கம் கண்ணைப் பறிக்கும்,
குதிரையின் மேலே குடைநிழல் வீச
அழகு மாப்பிள்ளையை அமர வைப்பர்,
பரிசுகள் பலவும் பலரும் கொடுப்பர்
சாறனும் சால்வையும் சங்கையாம் பரிசுகள்,
கோமாளி வேஷம் என்hற் கோபமா?
நவாபின் வேஷமா நாமோ அறியோம்!
குதிரையின் உடலை கவுணே மூடும்
ஜரிகைச் சட்டை ஜரிகைத் தலைப்பா
ஜரிகை கவுணும் ஜாலம் செய்ய
பொன்மணிக் கோவை போடுவர் கழுத்தில்,
எல்லாம் ஜொலிக்க இலங்கு மாப்பிள்ளை
பறையன் முன்னே பாய்ந்து கொட்டவும்
மேளக்காரன் மிடுக்காய்த் தட்டவும்
நாக சின்னம் நாதம் பாடவும்
பட்டாசு வெடி படபடத் தோங்கவும்
வனிதைர் குரவை வழிவிட்ட னுப்பவும்
குதிரை மீது குதூகல முடனே
பவனியின் நடுவே பாவையாய்ச் சொல்வான்,
சிறுவர் கூட்டம் சிதறி நெருங்கும்,
பெரியவர் கூட்டம் பின்னாற் தொடரும்,
மாட்டு வண்டியில் மத்தளம் சமர்ப்பினா
பாட்டுக் கச்சேரி பவனியை ஊக்கும்,
ஊரைச் சுற்றி ஊர்வலம் வருகையில்
பள்ளிக ளெங்கும் பவனியும் ஓயும்,
பாத்திஹா ஓதிப் பகரும் காணிக்கை
நேர்த்தியாய்த் வைத்து நெடுவழி நடந்து
வெளிக்கிட்ட பவனி வீடு வந்தடைய
இரவுமணி ஒன்பதை எட்டிடும் பாhPர்!
மாப்பிள்ளை வந்ததும் மங்கையர் கூடி
ஆலாத்தி யுடனே அழைத்துச் செல்வர்.
சற்றாறிய பின் சடங்கு தொடங்கும்
பறையன் கொட்டவும் பட்டா சொலிக்கவும்
மேளம் குமுறவும் மிடுக்கொடு மங்கையர்
குரவை முழக்கவும் குறித்த சடங்கு
கலகலப் புடனே கடிதென முடியும்.
ஓதுகிற பள்ளிப் படலம்
ஆலிம் ஒருவர் அவர் பாட்டுக்குக்
குடிலொன்று கட்டிக் குர்ஆன் ஓதப்
பள்ளி தொடங்குவார்@ பக்கத்துப் பிள்ளைகள்
பதறி நிற்பார் பார்க்க வேண்டுமே!
உம்மா வாப்பா ஓதச் சொல்லி
சும்மா அடிப்பார் என்ற சோர்வால்@
ஓலைப் பள்ளி ஓதும் பிள்ளைகள்
நாற்ப தைம்பது நல்லாய்ப் போதும்,
களிமண் தரையில் கால்கள் நாட்டி
கூரை வேய்ந்த குடிசைப் பள்ளி,
பாய் போட்டிருக்கும், பாலர் இருந்து
குர்ஆன் பலகையும் குர்ஆனும் கொண்டு
ஓத வருவர் ஓடி ஓடி@
காலை எழுந்ததும் கால் முகங்கழுவி
ஓதுகிற பள்ளிக்கு ஓட வேண்டும்,
பின்னேர மானதும் பிறகும் ஓதப்
போக வேண்டும் பொழுதடையும் வரை,
மாலா மண்ணை மரப் பலகையிலே
பூசிப் பூசிப் புதுப் புதுப் பாடம்
எழுதிக் கொடுப்பது எல்லாம் ஆலிமே,
முதலாம் ஜூஸ_வரை முழுதும் பலகையில்,
அப்பால் ஜூஸ_க்கள் அச்சுக் ர்ஆனில்,
ஒவ்வொன்றாக ஒழுங்காய்த் தொடங்கும்,
ஒவ்வொரு ஜூஸ_ம் ஓதி முடித்துப்
புதுஜூஸ_த் தொடங்கையில் பொருந்திய வட்டா
பாக்கு வெற்றிலை, பழமும் பணமும்,
வைத்துக் கொடுத்தல் வழக்க மாகும்,
வெள்ளிக் கிழமை பள்ளிக்கா சென
வேறு கொடுக்க வேண்டும் பிள்ளைகள்
பணக்காரர் வீட்டுப் பாலகன் மீது
ஆலிமும் இரக்கம் அதிகங் காட்டுவார்
ஜூஸ_வுக் கைந்து பத்துக் கிடைக்கும்
இந்த வருவாயை எடுத்தே ஆலிமு
அந்தப் பள்ளியை அழகாய் நடத்துவார்
துட்டப் பையன் துடுக்கை யடக்குதல்,
குற்றியில் போடல், கட்டி வைத்தல்
தண்டனை இவைகள் தாங்குவர் சிறுவர்
பிரம்பு கையில் பேசி நிற்கும்@
கண்டால் ஆலிமைக் கலங்குவர் சிறுவர்
"ஆலிம் வருகிறார் அழாதே" என்று
உம்மா பிள்ளையை உறுக்கி வளர்ப்பாள்
தெருவில் ஆலிமைத் தெரியக் கண்டால்
ஓடுவார் சிறவர் உடலே தெறிக்க
இவ்விதம் பழக்கும் இந்தப் பள்ளியில்
ஓதி முடிப்பதும் ஒரு சிலரே தான்.
அதிகம் பிள்ளைகள் அடி தாங்காமல்
ஓடி ஒளிப்பர் ஓதலும் பறக்கும்.
முப்பது ஜூஸ_வும முழுதும் முடிந்ததும்
தப்பாது வெகுமதி தந்தை செய்வான்.
அப்பால் குர்ஆன் "பேத்து" ஓதுதல்:
முப்பதாம் ஜூஸ_வை முதலாய்க் கொண்டு
முழுக் குர்ஆனையும் கீழ்நோக்கி ஓதுதல்
அல்லது திருப்பி அடியிpலருந்தே
ஒன்றிரண்டு மூன்றாய் ஒழுங்காய்ப் போதல்
இதுவும் முடிந்தால் இன்னும் ஓதுவது
மௌலூது ஆகும் மனப்பாடம் செய்வது
இதுவும் முடிந்தால் எல்லாம் முடிந்தது,
ஓதுகிற பள்ளியில் ஓதியும் முடிந்தது.
நோன்பில் ஹதீது சொல்லும் படலம்
"முடப்பேய் தவிர முழுப்பேய் களையும்
அடைக்கும் மாதம் அழகிய றமலான்"
இந்தக் கொள்கை இருப்பதால் யாவரும்
இரவி; திரிவதை என்றுமே அஞ்சார்.
ஸஹர் வரையிலும் சயனம் குறைத்துப்
பெண்களும் சிறுவரும் பெயர்ந்து திரிவதும்
பள்ளியை நோக்கிப் பம்மிய இருட்டில்
சிறுவர்கள் தானும் சேர்ந்து போவதால்
இப்படிக் கொள்கை இருப்பத நல்லதே.
நோன்பு மாதம் நோற்றிடும் பெண்கள்
ஹதீது கேட்டல் கடமை யென்றறிவர்.
பட்டப் பகலில் பாதை கடந்து
ஹதீதுக்குப் பொவதைக் கண்டியார் கணவரும்
பதினொரு மாதமும் பாதை தெரியாமல்
வாழ்வைக் கழித்த வனிதையர் யாவரும்
இந்த ஒருமாதம் எல்லாம் விட்டு
கூட்டம் கூட்டமாய்க் குதூகல முடனே
பட்டப் பகலில் பாதை நெடுகலும்
கதைத்து மகிழ்ந்து ஹதீதுக்கு வருதல்
காட்சியே யாயினும் கண்ட சுதந்திரம்
இது மாத்திரமே என்றால் மிகையில்லை.
பெரிய வளனவில் பெரிய பந்தல்
போட்டி யிருப்பார் புதுக்கால் நாட்டி
ஆலிம் இருந்து ஹதீது சொல்ல
அரங்கு மேடை அமைத் திருப்பர்
பந்தலை இரண்டு பங்காய் மறைத்துப்
பெண்களை வேறாய்ப் பிரித்து வைப்பர்
ஆண்கள் பக்கம் ஆலிம் இருப்பார்,
இரு பாலாரும் இரு வாசல்களால்
போவர் வருவர் புறமே தம்வழி.
பெண்கள் அமரும் பிற்பக்க வாசலில்
சீப்புக் கண்ணாடி செப்பு மாப்பெட்டி
மிட்டாய் ஹல்வா மிகவே நிறைத்து
தட்டந் தட்டமாய்த் தனித் தனிக்கடை
பீங்கான் கோப்பை பெட்டி விற்போரும்
மணப்பாக்கு கைப்பு மகிழ்ந்து விற்போரும்
வரி வரியாக வரிசையில் நிற்பர்.
பெண்களே இவற்றை விற்பவர் எனினும்
ஆண்களும் விற்பதை அவர்களும் தடுக்கார்.
இவ்விதமாக இந்தக் களரி.
இலங்கித் திகழுதல் என்றும் வழக்கம்,
ஹதீது தொட்ங்கக் காலை பத்தாகும்
ஆண்கள் ஒருபக்கம் அமர்ந் திருப்பர்,
பெண்கள் வேறாய்ப் பிரி; திருப்பர்,
ஆலிம் மேடையில் அமர்ந் திருந்து
கைவிசிறி யினால் காற்றை வீசி
சலவாத் துடனே நாற்றவார் ஹதீதை.
இடைக்கிடை பைத்தும் அரைந்து படிப்பர்,
இந்த நேரத்தில் இளைப்பு நீங்க
ஆலிமும் சற்றே ஆறியிருப்பார்,
பெண்கள் பக்கம் பேச்சு நிகழும்
புத்தாடை யுடன் பூணாரம் போட்டு
கன்னிப் பெண்களும் கலியாணப் பெண்களும்
கிழவிகள் கதையைக் கேட்டு ரசிப்பர்,
பேசுவார் சிலர், பேசா மடந்தையாய்
ஊமை போலிருப்பார் ஒரு சில மங்கையர்.
பூணாரம் தோன்றப் புன்னகை புரியும்
பூவைப் பார்த்துப் புழுங்குவர் பலபேர்,
பார்த்தும் கேட்டும் பலபல முகங்களை
அறியக் கிடைக்கும் அரிய சந்தர்ப்பம்
நழுவ விடாமல் நங்கையர் யாவரும்
ஹதீதுக்கு வருவதைக் கடமையாய்க் கொள்வர்.
பன்னிரண்டரை 'பாங்கு' சொல் நேரம்
ஆலிம் ஹதீதை அழகாய் முடிப்பர்,
நாளைக்கு மிச்சம் நவில் வேனென்று
தொடர்கதை ஒன்றைத் தொட்டே விடுவார்
ஹதீதும் கலையக் கலகலப் பெழும்பும்,
கடையைச் சுற்றிக் கூடுவர் கன்னியர்,
இனிப்புப் பண்டம் எல்லாம் வாங்குவர்,
பீங்கான் கோப்பையில் பேரம் நடக்கும்,
கண்ணாடி சீப்பு கடிதாய் விற்கும்
வியாபாரம் ஜோராய் விளங்கிடும் பாhPர்!
எல்லாம் தட்டில் ஏந்திய வண்ணம்
வீட்ட நோக்கி விரைவாய் நடப்பர்,
காதாற் கேட்ட ஹதீது மாறிச்
சாமான் தட்டமாய்ச் சாரும் வீட்டினை,
ஒவ்வொரு நாளும் ஒழுங்காய் இவ்விதம்
ஹதீதும் நடக்கும் கடையும் நடக்கும்,
முதற்பத்து நாளும் முடிந்த பிற்பாடு
ஆலிமின் காசை அளித்திட வேண்டும்.
தட்டம் வைத்துத் தண்டுவர் காசை,
பெண்கள் பக்கமே பெருந்தொகை சேரும்,
போடியார் மனைவி போடுவா நோட்டுகள்
பாட்டாளி மனைவி பார்ப்பாள் சில்லறை
ஏற்றத் தாழ்வு தெரியவும் இதிலே
அழைப்பும் மதிப்பும் அங்கயே மாறும்,
புகழும் இகழும் புகுந்து வெளிக்கிடம்
தட்i ஆலிமு தானே எடுத்ததும்
கூலியாள் வேலையாள் கூலியைக் கொடுப்பார்,
தனது பங்கைத் தானே எடுப்பார்,
இவ்விதம் ஹதீதும் இனிதே தொடரும்,
இருபது நோன்பும் இவ்வாறு முடிய
இரண்டாம் முறையும் காசு சேர்படும்.
சென்ற முறையில் சிறிது போட்டவர்
இந்த முறையில் இன்னும் கூட்டுவர்.
இல்லாத வளோ இல்லாதவள் தான்!
மூன்றாம் முறைதான் முக்கிய மானது,
இருபந் தேழாம் இரவு கடந்ததும்
சேரும் பணமே சிறப்பைக் காட்டும்.
அன்று ஹதீது அலாதியா யிருக்கும்
போடாமல் யாவரும் போகவே மாட்டார்.
பித்ராக் கொடுத்தால் பிச்சை போடுதல்
பெருநாள் உடுப்பு பிரபல வேலைகள்
நிறைய இருப்பதால் நிறுத்துவார் ஹதீதை
பெருநாள் முடிந்த பிறகாறு நோன்பு
இருப்பதால் ஹதீதை இதிலே தொடங்குவர்,
இந்த ஹதீதோ இன்னும் விசேஷம்!
திருக் கலியாணம் சொல்லும் திருநாள்,
சுவர்க்க லோகச் சுந்தர வைபவம்,
பாத்திமா நாச்சியார் பக்தித் திருமணம்.
வெடி முழக்கத்துடன் விளங்கும் ஹதீது,
புதிய உடுப்பும் புதுப்புது நகைகளும்
அணிந்து பெண்கள் அஸறுக்குப் பிறகு
ஹதீதுக்கு வருவர் களிப்பு நிரம்ப
கடைகளும் விசேடமாய்க் காட்சி யளிக்கும்,
ஆறு நாளும் அழகான காட்சி.
பாட்டும் பதமும் பரவச மூட்ட
திருக் கலியாணம் சிறப்பாய் முடியும்,
பரிசுகள் பல பல ஆலிமை யடையும்,
ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுவர்,
அழகிய உடையுடன் தோன்றுவார் ஆலிம்
ஆலிம் கழுத்தில் அணிவர் மாலைகள்,
குடைநிழல் வீசக் குறித்த ஆலிமை
பைத்து முழக்குடன் பட்டாசு வெடிக்க
பெண்கள் குரவை பெரிதாய் ஒலிக்க
அழகாய்ப் பவனியில் அழைத்துச் செல்வர்.
பாதைகள் பலவும் சுற்றிய பிறகு
ஆலிமை வீட்டுக் கழைத்துப் போகுவர்,
சிற்றுண்டி யுடனே சேர்ந்து வந்தோரை
ஆலிம் வீட்டார் ஆதரித் திடுவார்,
திருக் கலியாணத் திரு வைபவங்கள்
இத்துடன் அழகாய் இனிதாய் முடியும்.
ஹஜ்ஜூப் பெருறாள் படலம்
ஹஜ்ஜூப் பெருநாள் காட்சிப் பெருநாள்
ஏழுநாள் வரை இனிதர் நடக்கும்
பெருநாள் வருமுன் பெண்கள் கூடி
அரிசி மாவினால் அச்சுப் பலகாரம்
பல பல பண்ணிப் பாண்டங்களிலே
நிரப்பி வைப்பர், நெடுநாள் இருக்கும்
வெண்கலப் பாத்திரம் விளக்கி வைத்தல்,
பொன் அபரணம் புதுமினுக் கிடுதல்.
வெள்ளை யடித்தல், வீடு மெழுகல்
வேலைகள் யாவும் விரைவில் முடியும்.
உடுப்புத் தைத்தல் உடைகள் வாங்குதல்
இவற்றில் ஆண்கள் இராப்பகல் அலைவர்
இப்பெருநாளே இன்ப நாளாம்
ஊஞ்ச லாட்டம், ஊரெங்கு மிருக்கும்,
களிக்கம் படித்தல், கப்பல் இழுத்தல்,
புதின வீடுகட்டல், புலவர் பாடல்,
கதாப் பிரசங்கம் காணலாம் இரவில்
பக்கீர் தகரா பாடும் சத்தம்,
அண்ணா வியாரின் அம்மானை ராகம்,
ஊஞ்ச லாடி உயரும் கீதம்,
சிறுவர் பாடி யாடும் இரைச்சல்,
யாவும் ஒன்றாய் ஊரே யடங்க
ஒலித்து நிற்கும் ஒன்று பாலெங்கும்,
பிறையும் பத்து நிலவம் பரந்தது.
இரவில் யாரும் இருகண் மூடார்.
பட்டாசு வெடியால் பாலரே தூங்கார்,
நிலவில் வாலிபர் நிலாச்சோ றுண்ணத்
தோட்டம் நாடித் தொடர்வார் கூட்டமாய்.
பெண்கள் நிலவில் பெயர்வார் இனசனம்
வீடுகள் தேடி விரும்பிய செப்புடன்
ஏழுநாள் வரையும் இரவும் பகலும்
காணலாம் காட்சி பகலோரம் வரை
கரும்பு, தோடை கடல் போல் கிடக்கும்
தேங்குழல், பூந்தி தேங்கிக் கிடக்கும்
சர்வத்து போத்தல் சாரிபோல் காணும்
பின்னேர மானதும் பெரிய வெளியில்
சிறியார் பெரியார் சிரிப்புடன் கூடிப்
பண்டங்கள் வாங்கி; பகிர்ந்து புசித்தல்
கண்கொள்ளாக் காட்சி காணலாம் எங்கும்
ஹஜ்ஜூ மாதம் கலியாண மாதம்,
கலியாண சோடிகள் களிகொள்ளும் மாதம்
சுன்னத்து மாப்பிள்ளை சூழ்ந்திடும் மாதம்
வெளியூர் சென்றவர் வீடு திரும்புதல்,
அழிந்த வேலியை அழகாய்க் கட்டுதல்,
கூரை வேய்தல், குறைகள் திருத்துதல்,
எல்லாம் புதிதாய் இயங்கும் இம்மாதம்,
மக்கள் மனத்தில் மகிழ்ச்சி பொங்க
ஊக்கிய இந்த உயர்வுறு மாதம்
நீங்கிப் போக நெடுநாட் செல்லும்
ஆங்காங்கு சின்னம் அழியாது நிற்கும்.
களிகம்படித்தல் படலம்
காளையர் கூடிக் களிக்கம் படித்தல்
காட்சியாய் இன்னும் காணலாம் பாhPர்,
ஹஜ்ஜூப் பெருநாள் காலிக்கும் நிலவில்
பொழுது போக்காய்ப் புகுந்த இவ்வாட்டம்
சம்பிரதாய மாய்ச் சமைந்தே விட்டது.
அண்ணா வியாரே அரங்கேற்றி வைப்பர்,
பறையன் சேவிக்கப் பக்கீர் தட்டக்
குடையின் கீழே கோலா கலமுடன்
மாலை யணிந்து மதிப்பாய் வருவார்
அண்ணாவி யாரும், அவர் தன் சீடரோ
பின்னால் தொடர்ந்து பெருமையாய் வருவர்.
அரங்கு நெருங்க அண்ணாவி யாரை
ஆசன மொன்றில் அமரச் செய்வர்,
பந்தல விளக்கு பளிச் சென்றிருக்கும்,
மக்கள் கூட்டம் மண்டி நெருங்கும்,
பெண்கள் ஒருபுறம் பேச்சிலே நிற்பர்.
சிறுவர் சிறுமியர் சிரித்த மகிழ்வர்,
களிக்கம் பாட்ட் கடிதெனத் தொடங்கும்@
அண்ணாவி யாரோ அரங்கில் நிற்பார்,
சீடர்கள் கோலுடன் சிறிய வட்டமாய்
உரலைச் சுற்றி ஊர்ந்து நிற்பர்,
தோத்திரக் கவியைத் தொடங்குவா ரண்ணாவி
காசிம் படைப்போர் முகைதீன் மாலைக்
காப்புக் கவிகளே தோத்திரக் கவிகள்.
அரங்கை; சுற்றி அண்ணாவி யாரும்
ஆலா வர்ணமாய் அப்பாட்டை இழுப்பர்
சீடரும் பின்னால் சேர்ந்து பாடுவர்,
இப்பாடல் மூடிய எடுப்பர் கீர்த்தனம்
'தந்தனத் தானா' தாளத்துடனே
சல்லாரி யொலியும் சாhந்து தொடரும்,
'தெய்' என்ற ஓசையில் திடலும் நடுங்கும்
அண்ணாவி யாரே ஆக்குவார் கீர்த்தனம்
ஊரில் நடக்கும் ஒவ்வொரு புதினமும்
கீர்த்தன மாகக் கேட்டிடும் பாhPர்!
வெள்ளம் வந்து விளைவித்த புதுமையும்
பஞ்சம் வந்து படுத்திய பாடும்
யுத்தம் வந்தால் ஊர்பட்ட கஷ்டமும்
போடியார் சண்டை போட்ட விபரமும்
பள்ளியில் வழக்குப் பார்த்த விபரமும்
இன்னும் இவைபோல் எத்தனை எத்தனை
அண்ணாவி யாரின் அழகுக் கவியில்
கீர்த்தனை யாகக் கேட்பவர் மகிழக்
களிக்கம் படியி;ல் காட்சிக்கு வந்திடும்.
தாளமும் பாட்டும் தடையின்றி ஓடக்
களிக்கம் படியும் கால்களின் ஆட்டமும்
வளைந்து வளைந்து வட்டஞ் சுற்றலும்
ஒருங்கே நிகழும் உளமும் மயங்கும்.
கண்ணுக் கிளிமையும் காதுக் கின்மையும்
களிக்கம் படியில் காணலாம் மிகவே,
காட்சி முடிந்ததும் கண்டு களித்தவர்
அண்ணாவி யாருக் களிப்பர் பரிசு
சீடரும் பரிசுகள் சேர்த்துப் பெறுவர்.
பள்ளிவாசற் படலம்
ஐஞ்ஞறு குடிகள் அங்கே இருக்கும்,
பள்ளியோ சிறியது பதினெட்டு மரைக்கார்,
சீனிக்கண்டு மரைக்கார் சீப்மரைக் காராய்
மம்மதுத் தம்பி மதிப்பான மோதீன்
சின்னான் கண்டும் சின்ன மோதினாய்
அக்கிராமத்தில் ஆட்சி நடக்கும்
போடியார் மரைக்கார், பூக்கண்டு மரைக்கார்.
சாலார் மரைக்கார், சாவல் மரைக்கார்,
கண்ணாடி மரைக்கார், கைலேஞ்சி மரைக்கார்,
கந்தூரி மரைக்கார் காசியார் மரைக்கார்,
என்னென்ன பேரோ எல்லாம் புதினம்
இப்படிப் பேர்தான் எங்கும் வழங்கும்
சொந்தப் பேரைச் சொல்லி யழைத்தல்
எந்த இடத்திலும் இல்லவே இல்லை,
கண்ணாடி ஆலிமு, களிக்கம்பு ஆலிமு,
சின்னார் ஆலிமு, சிட்டுக்குருவி ஆலிமு,
இப்படி ஆலிமு எண்ணிக்கை கூட
காட்டார் லெவ்வ, கருவாட்டு லெவ்வ,
கோட்டார் லெவ்வ, குண்டுனி லெவ்வ,
தடிக்கம்பு லெவ்வ, தாயத்து லெவ்வ,
என்ற லெவ்வமார் எத்தனையோ வரும்
மூத்தார் ஹாஜி, மூக்குத்தி ஹாஜி,
மாங்காட்டு ஹாஜி, மானார் ஹாஜி,
என்றுபல ஹாஜிகள் இலங்கித் திகழ்வர்,
மாம்பழக் காரன், மரம்வெட்டி வாவா
மருதோன்றி நானா, மண்ணுண்ணிச் சாய்வு
பிண்ணாக்கு லெவ்வ, பேNhட்டிக் காக்கா
இப்படி எத்தனை எத்தனை பட்டம்
ஊரில் யாரும் ஒருபட்ட மின்றி
வாழ்வது மில்லை, வாழ்ந்தது மில்லை,
இதிலே பெருமை இன்னும் வேறு
பெண்கள் சண்டையில் பெரிதாய் இவைவரும்
குடும்பப் பெச்சில் கூடியே ஒலிக்கும்,
பட்டப் பெயரும் பரிகாசப் பெயரும்
இட்டு மனிதரை என்று மழைப்பது
குற்ற மென்றிறை குர்ஆன் கூறும்.
இவ்விதம் இருக்கும் இந்த ஊரில்
கந்தூரி ஒன்று கணக்கர் வந்தது,
பள்ளியைச் சுற்றிப் பாலர்கள் கூட்டம்
காலையி லவிருந்தே காத்துக் கிடந்தது.
அறுவடை முடிந்த ஆறாம் வெள்ளியில்
பன்னிரண் டிரவும் பாங்குடன் 'நாரிசா'
கொடுத்து மௌலூது குறிப்பாய் முடிந்ததும்
பெரிய கந்தூரி போய்க் கொடுத்தல்
முந்தையோர் வழக்கம் முழுவதும் பேணல்
வாழும் சந்ததி வழிவந்த கடனே!
ஆதலால்,
அரிசி பலமூடை அடுக்கிக் கிடந்தன.
கடாரம் பலபல கிடந்து நோக்கின,
அடுப்புக் கல்லுகள் அப்பால் கிடந்தன,
விறகுக் குவியல் விளங்கிய தொருபால்
ஏலங் கராம்பு ஈர வெங்காயம்
நெய் போத்தல் யாவும் நிரையா யிருந்தன
சுபகு முடிந்ததும்,
பக்கீர் தஹரா பாடித் தட்ட
எரியும் நெருப்பில் ஏற்றினர் கடாரம்
ஐந்து கடாரங்கள் அடுப்பில் நின்றன,
சிலர் இவ்வேலையில் சேர்ந்துநிற்க
பந்தல் போட்டனர் பள்ளியைச் சுற்றி
இடம் போதாததால் இப்படிச் செய்தனர்
பெண்கள் வேறு பிறம்பா யிருந்தனர்,
பதினெட்டு மரைக்கார் பள்ளியி லிருந்து
பல கருமங்களும் பார்த்து நின்றனர்.
காலை இடியப்பம் கறியோடு வந்தது.
ஆலிம் லெப்பைமார் அவர்களின் தோழர்
விறாந்தைப் பள்ளியில் விளக்கும் நிறுத்தித்
தூபங் கமழத் தொடங்கினர் ஓத,
வெளியிலே பட்டாசு வெடிக்கும் சத்தம்
பக்கீர் தஹரா பாடும் சத்தம்
பிள்ளைகள் செ;யும் பேரொலி வேறு
ஆக்குவார் காச்சுவார் அள்ளிப் போடென்பார்
விறகு தள்ளென்பார் வேகுது பாரென்பார்
அரிசி கழுவென்பார் ஆறப் போடென்பார்
மோதினார் தர்பார் முழுவதும் ஒலிக்க
நடுப்பள்ளி முழுதும் நாரிசாச் சோறு
பதினைந்து கடாரம் பரந்து நிறைந்தது,
காளையர் காவலாய்க் காத்த நின்றனர்.
பம்பரம் போலவர் பார்த்த இடமெல்லாம்
பறந்து நின்றனர், பகல் பதினொன்று
மணியும் நெருங்க மரைக்கார் படையும்
ஒன்று சேர ஓதலும் முடிந்தது,
ஆலிமு ஓதிய அதிநீண்ட துஆவில்
அமைதி நிலவ அத்தனை சோற்றையும்
பங்கு வைத்தனர் பரவச முடனே.
-------------------------------------------------------------------------------
வழக்குச் சொல் விளக்கம்
அடம் : பிடிவாதம்
அதாபு : வேதனை
அலிபு, பே, தே : அறபு அரிச்சவடி
அரவும் : கொஞ்சமும்
அஸறு : பின்னேரத் தொழுகை
ஆலிமு : அறிஞர் - போதகர்
ஊரோடி : தொற்றுநோய்
ஒத்தி : ஒரு வகை ஈடு
ஒலி : மணமகளை, மணமகனுக்கு உரிமையாக்கிக் கொடுக்கும் தகுதி படைத்தவன்
ஒய்த்தா : நாவிதன்
கத்தம் : இறந்தவர் பேரில் நடத்தும் சடங்கு
கருமாரி : பிள்ளைப்பேறு
கரையாக்கன் : ஒரு வகைப் பேய்
கடாரம் : பெரிய வெண்கலப் பானை
காவின் : திருமண ஒப்பந்தம்
காதிக்கோடு : விவாக விலக்கு விசாரணை நீதிமன்றம்
குரவை : பெண்கள் வாயுள் விரலையோட்டி நாவைச் சுழற்றியெழுப்பும் ஒலி
குறிச்சி : ஊர்ப்பிரிவு
கூறை : கலியாணப் பிடவை
கொட்டம் : இறுமாப்பு
கோழியப்பம் : தேய்காய் பூவும் சீனியும் சேர்ந்த சுருளப்பம்
சகன் : பெரிய பீங்கான்
சலவாத்து : நபிகள் நாதர் பேரில் சொல்லும் புகழ்மாலை
சாத்துகள் : ஆசாரங்கள்
சுபகு : வைகறைத் தொழுகை
சுன்னத்து : விருத்தசேதன சடங்கு
செப்பு : பல்வகைப் பலகாரப்பெட்டி
சேடியர் : தோழியர்
சேவித்தல் : உபசரித்தல், பறையடித்தல்
சோமன் : சேலையில் ஒருவகை
தக(ஹ)ரா : கைப்பறை
தர்பார் : ஆட்சி - ஆட்சிபீடம்
தாயதி : தாய்வழிச்சொத்து
தாயத்து : அட்சரக்கூடு
துஆ : பிரார்தனை
தோட்டுப் பாய் : பெரிய வெள்ளை நிறப்பாய்
நாரிசா : நேர்ச்சை சிற்றுண்டி
பக்கீர் : ஏழை
பச்சைவடம் : சிவப்புச் சீலை
பாத்திஹா : ஒரு கருமத்தை ஆரம்பிக்கும் பொழுதும் முடிக்கும் பொழுதும் திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களை ஓதும் சடங்கு
பாவா : சமயஞானிகளுள் ஒரு வiகினர்
பாங்கு : தொழுகை அழைப்பு
பித்றா : நோன்புப் பெருநாள் காலையில் வழங்கும் தர்மம்
பீசபீல் : அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தல் எதிர்பாராத இறப்பும் சேரும்
புகாரி : நபிகள் நாயகத்தின் உபதேசங்களை விளக்கி ஓதுதல்.
புதுருக்கோட்டை : புதிய அறுவடையில் கிடைத்த நெல்லைக் கதிருடன், மணி வடிவாகக்கட்டி யெடுத்தல்.
புறகு : பிறகு
பெத்தா : தாயின் தாய் அல்லது தந்தையின் தாய்
பேத்து : திருப்பி
பைத்து : பாடல்
பொட்டகம் : பெட்டகம்
பொட்டணி : பொருள்களைத் தொகுத்துக் கட்டிய கட்டு
போடியார் : நிலச்சுவாந்தர்
மரக்கால் : ஆறு கொத்துக் கொண்டது
மக(க்)ரிப் : மாலைத் தொழுகை
மரைக்கார் : பள்ளிநிர்வாகி, தர்மகத்தா
மகர் : மணமகள் மணமுடிக்கும் பொழுது மணமகளுக்குக் கொடுக்க வேண்டிய பணம்
முண்டாசு : தலைப்பாகை
முல்லைக்காரன் : வேளாண்மை விளைவிப்பவன்
முத்தலாக்கு : மும்முறை விவாகரததை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
முhPது : வழிகாட்டுதல்
மூளி : அணிகலமில்லாதவள், உறுப்புக்குறைந்தவள்
முண்டு : மீட்டு, மீட்டுதல்
மோதீன் : முஅத்தீன் - தொழுகைக்கு அழைப்பவர்
மௌலூது : நபிகள் நாதர் முதலாம் பெரியோர் தம் பிறப்பையும், சிறப்பையும் பாடி விருந்தளிக்கும் சடங்கு
யாசின் : திருக்குர் ஆனின் ஓரத்தியாயம்
லாம்பு : விளக்கு
வட்டை : வயல்
வட்டா : வெற்றிலைத் தட்டம்
விதானை : கிராமசேவகர்
வெள்ளி : வெள்ளிக்கிழமை
றம்ழான் : விரதமிருக்கும் மாதத்தின் பெயர்
ஜின்வாசலாத்து : 'ஜின்' என்னும் ஆவியை வசியப்படுத்தும் வித்தை
ஜூஸ_ : அத்தியாயம்
ஹதீது : மார்க்கப் பிரசங்கம்
ஹால் : பக்தி மயக்கநிலை
ஸஹர் : நோன்பு வைக்கும் வைகறைப் பொழுது
ஹறாம் : தவிர்க்கப்பட்டது
ஹத்து : தகாத முறையில் ஆண்பெண் உறவு வைப்பவர்களுக்கு விதிக்கும் தண்டனை
கருத்துகள்
கருத்துரையிடுக