வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்
வரலாறு
Back
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்
எஸ். சிவலிங்கராஜா
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்
எஸ். சிவலிங்கராஜா
நூலாசிரியர்.......
நமது பண்பாட்டுப் பேணல் முயற்சியில் திரு. சிதம்பரப்பிள்ளை சிவலிங்க ராஜா அவர்களுடய நூல் மிகவும் பயனுள்ள பணியினைக் காலத்துக்கேற்ற வகையிலே ஆற்றுகின்றது. குறிப்பிட்ட பிரதேசங்களில் தமிழர்களுடைய வாழ்வியல் பற்றிய நுண்ணாய்வுகள் சிற்றின அடிப்படையிலே நிகழின், அவற்றின் பயனாக பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை கனவுகண்ட “ஈழத்து வாழ்வும் மளமும்” பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி வெளியிட வாய்ப்பு உண்டாகும். வடமராட்சிக் கல்விப் பாரம்பரியத்தில் வந்தவராகிய பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ஆவல் நிறைவேறும் வண்ணம் மற்றும் பலரும் முயற்சி மேற்கொள்ளும்படி தூண்டுதற்கும் இந்நூல் உதவியாய் உள்ளது.
திரு. சிவலிங்கராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று முதற்பிரிவிலே சித்தி பெற்றவர். பல்கலைக்கழகத்துக்கு வருவதற்கு முன்னது கந்தமுருகேசன், பண்டிதர் க. வீரகத்தி, ஏ.டி. சுப்பிரமணியம் போன்றோரிடம் தமிழ் கற்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். கலைமாணித் தேர்வுக்கு “வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்” என்னும் ஆய்வுக் கட்டுரையச் சமர்ப்பித்தார். அக்கட்டுரையினை விரிவாக எழுதி வெளியிடவேண்டுமென வடமராட்சிக் கல்விக் கழகங்கள் சிலவும், ஆர்வலர்கள் சிலரும் இவரைத் தூண்டி வந்தனர். அதன் பயனே இந்நூலாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலே விரிவுரையாளராகப் பணியாற்றும் திரு. சிவலிங்கராஜா எங்களுடைய துறையின் தமிழ்ப்பணி எவ்வகையிலே நடைபெறுகின்றது என்பதை உலகுக்குக் காட்டத் தன்னாலான பங்களிப்பாக இந்நூலை வெளியிடுகின்றார்.
யாழ்ப்பாணத் தமிழர்களுடைய கல்வி, மொழி, இலக்கியம் ஆகியன பற்றி அறிய விரும்பும் ஆய்வாளர்களுக்கு இந்நூல் நல்ல பயனுள்ள தகவல்களைக் கொடுக்கவல்லது.
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
தமிழ்த்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வடமராட்சியின்
கல்விப் பாரம்பரியமும்
இலக்கிய வளமும்
எஸ். சிவலிங்கராஜா
தமிழ்த்துறை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வெளியீடு:
வடமராட்சிக் கல்வி வட்டம்,
பொன்னுச்சாமி கோட்டம்,
பருத்தித்துறை.
Educational Tradition
& Literary Development
in Vadamaradchi (in Tamil)
(Vadamaradchiyin Kalvip Parampariyamum Iiakkiya Valamum)
by
S.Sivalingarajah B.A. (Hons.)
Assistant Lecturer,
University of Jaffna
Thirunelvely, Jaffna
Publishers:
Vadamaradchi Study Circle
Ponnuchamy Koddam
Point Pedro.
உரிமை : ஆசிரியருக்கு
1984-05-05
அச்சுப்பதிப்பு:
திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.
விலை ரூபா: 25-00
வாழ்த்துரை
பேராசிரியர் சு. வித்தியானந்தன்
M.A.,Ph.D
துணைவேந்தர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ஈழத்துத் தமிழியல் தொடர்பாக யாழ்;பாணப் பல்கலைக்கழகத்தைக் களமாகக் கொண்டு நடைபெற்றுவரும் பல்வேறு நிலைகளிலான ஆய்வுகள் ஒன்று. “வடமராட்சியின் கல்விப்பாரம்பரியமும் இலக்கிய வளமும்” என்ற தலைப்பிலான நூலாக உருப்பெற்றுள்ளது. தமிழ்த் துறைத்துணை விரிவுரையாளரான திரு. எஸ். சிவலிங்கராஜா அவர்கள் தமது சிறப்புக் கலைமாணிப் பட்டத்தேர்வின் ஒரு பகுதியை நிறைவுசெய்யும்பொருட்டு மேற்கொண்ட ஆய்வின் பேறு இது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகிழக்குப் பிரதேசமாகிய “வடமராட்சி” ஈழத்துத் தமிழ்ப் பாரம்பரியத்திற்குரிய சிறப்புக் கூறுகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டது. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை ஆகியதுறைப் பட்டினங்க@டாகத் தமிழ்நாட்டுடனும் கிழக்கிலங்கையுடனும் தொடர்பு கொண்டுள்ள இப் பிரதேசம், அத்தொடர்பால ஈழத்துத் தமிழ்ப் பாரம்பரியத்திற்கு ஆற்றியுள்ள பங்களிப்பு விரிவான ஆய்க்குரியது. சமயத்துறையிலும் மொழித்துறையிலும் புகழ்பூத்த அறிஞர் பெருமக்களை உருவாக்கிய சிறப்பு அம்மண்ணுக்குரியது. “மாயவாததும்சகோளரி” எனவும், “அத்துவித சித்தாந்த மகோத்தாரணர்” எனவும் சிறப்புப் பெயர்களைப் பெற்றவரும், திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரின் ஆசிரியர் பெருமானுமாகிய நா. கதிரைவேற்பிள்ளையும், ஈழத்தின் முதலாவது தமிழ்க் கலாநிதி என்ற சிறப்புக்குரிய பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையும் இம்மண்ணிலே தோன்றியவர்களென்பது ஈண்டு நினைவுகூறுதற்குரியது. இத்தகைய சிறப்புமிக்க இப்பிரதேசத்தின் கல்விப் பாரம்பரியத்தையும் அதன் விளைவுகளிலொன்றான இலக்கியவளத்தையும் கண்டறியும் முயற்சி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நான்கு இயல்களில் அமையும் இந்நூலின் முதலாவது இயல் இப்பிரதேசத்தின் புவியியல், வரலாறு, பொருளியல், பண்பாட்டியல் என்பவை தொடர்பான பொது அறிமுகமாக அமைகின்றது.
இரண்டாம் இயல் இப் பிரதேசத்தின் வாய்மொழிப் பாரம்பரியத்தை ஆராய்கின்றது. நாட்டுப் பாடல்கள், கூத்துமரபு, சிறு தெய்வ வழிபாட்டு மரபு ஆகிய இவை தொடர்பான அரிய தகவல்கள் பல திரட்டித்தரப்பட்டுள்ளன. கூத்துமரபு என்ற வகையிலே இப்பிரதேசத்தின் அண்ணாவிமரபு தொடர்பாகத் தரப்பட்டுள்ள குறிப்புகள் மேலும் விரிவான ஆய்வினை அவாவிநிற்கின்றன. குறிப்பாக அ;ணாவழ ஆழ்வார் எனப்படும் எம்.வீ. கிரு~;ணாழ்வார் முதலிய சிலரது வரலாறுகள் தனிநூல்களாக எழுதப்படவேண்டிய அளவு விடயப்பரப்புடையவை.
மூன்றாவது இயல் இப்பிரதேசத்தின் எழுத்தறிவுப் பாரம்பரியத்தினை ஆராய்கிறது. குருகுல முறையிலான திண்ணைக் கல்வி மரபு, ஐரொப்பியர் தொடர்பிலான பாடசாலைக் கல்வி மரபு ஆகிய இரு வகைகளிலும் இங்கு எழுத்தறிவுப் பாரம்பரியம் உருவாகி வளர்ந்தமை பற்றிய பல தகவல்கள் இவ்வியலிலே திரட்டித் தரப்பட்டுள்ளன. கல்விமுறைகள், கல்வி பயில்களகங்கள், கல்வி தொடர்பான நிறுவனங்கள், கல்விப் பாரம்பரியமும் எழுத்திலக்கியமும் ஆகிய துணைத்தலைப்புக்களல் அமையுமிவவியலே இவ்வாய்வு நூலின் சாராம்சமான பகுதுpயாகும். யர்ப்பாணப் பெருநிலத்தின் பொதுவான எழுத்தறிவுப் பாரம்பரியத்தின் பின்னணியில் வடமராட்சியின் அப்பாரம்பரியம் நோக்கப்படுகின்றது. கல்விக்கூடங்களை நிறுவியவர்களின் வரிசையிலே வடமராட்சியின் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த திரு.கா.சூரன் அவர்களது பணி இங்கு தனிக்கவனத்தைப் பெற்றுள்ளது. ஷசாதிமான்களுக்கும்ஷ கிறிஸ்தவ பிரசாரகர்க்கும் எதிராகத் தேவரையாளி சைவவித்தியா சாலையை (பின்னர் தேவரையளி இந்துக் கல்லூரி) நிறுவிய அன்னாரது பண்பும் பணியும் விரிவான ஆய்வுக்குரிய விடயப்பரப்புடையன. இலக்கியம், இலக்கணம், சமயம், தத்துவம் ஆகிய துறைகளிற் சிறந்து விளங்கியவர்களான உடுப்பிட்டி சிவசம்புப்புலவர், முத்துக்குமார சுவாமிக் குரக்கள், சுப்பிரமணிய சாஸ்திரிகள், புலொலி வ. கணபதிப்பிள்ளை, புலொலி வ. குமாரசுவாமிப்புலவர், கந்தமுருககேசனார், நா. கதிரைவேற்பிள்ளை, சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை முதலிய பெருமக்களது பணிகள் தொடர்பாக இவ்வியலிற் சுட்டப்படும் அம்சங்கள் வடமராட்சியின் கல்விப் பாரம் பரியத்தினதும் இலக்கிய வளத்தினதும் செழுமையைப் புல்படுத்துகின்றன. இவர்கள் வளத்தினதும் செழுமையைப் புலப்படுத்துகின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி ஆராயப்படவேண்டிய தகைமையுடையவோராவர்.
ஈழத்தின் ஏனய பிரதேசங்களுடனும தமிழ் நாட்டுடனும் வடமராட்சிப் பிரதேசம் கொண்டிருந்த தொடர்புகள – சிறப்பாகக் கல்வி சார் தொடர்புகள் - ஷஷவடமராட்சியும் பிறபகுதிகளும்|| என்னும் தலைப்பிலாலான நான்காம் இயலில் எடுத்துக்காட்டப்படுகின்றன. கிழக்கிலங்கை தந்த தமிழ்ப் பேரறிஞர்களான தமிழ்த்துறை முதற் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, வித்துவான் க. பூபாலபிள்ளை முதலியவர்களது கல்விக்கு வித்திட்டோர் வடமராட்சியைச் சார்ந்தோரென்பது இவ்வியலிற் கூறப்படுகின்றது.
அதேபோல மகாகவி சுப்பிரமணியபாரதியின் குருவான யாழ்ப்பாணத்துச் சுவாமி எனப்படும் அருளம்பலம் என்பார் வடமராட்சியைச் சார்ந்தவர் என்பதும் நினைவுக்கு இட்டுவரப்படுகின்றது.
நா. கதிரைவேற்பிள்;ளை, வ. கணபதிப்பிள்ளை, ஷஇயற்றமிழ்ப் பேராசிரியர்| வல்;வை ச. வைத்திலிங்கம்பிள்ளை ஆகியோர் தமிழ் நாட்டில் ஆற்றிய பணிகளும் அவற்றாற் பெற்ற சிறப்பும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
நூலில் இறுதியில் அமையும் அனுபந்தம் வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திற்கும் இலக்கிய வளத்திற்கும் பங்களிப்பு செய்தவர்களது விபரத்திரட்டாக அமைகிறது.
இந்நூலின் ஆசிரியரான திரு. சிவலிங்கராஜா அவர்கள் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிலே சிறப்பு ஈடுபாடுகொண்டவர். சி. வை. தாமோதரம்பிள்ளை. மகாவித்துவான் சி. கணேசையர், சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் ஆகியோரது தமிழ்ப்பணிகள் பற்றித் தனிக்கவனம் செலுத்திவருபவர். இவரது சி.வை தாமோதரம்பிள்ளை பற்றிய சிறுநூல் முன்னரே வெளிவந்தது. அடுத்து இந்நூல் வெளிவருகின்றது.
ஈழத்துத் தமிழிலக்கியம் தொடர்பாகவும் அதற்கு அடிப்பரடயான சமூக – பாண்பாட்டு வரலாறு தொடர்பாகவும் கற்க விழைவோருக்கு – சிறப்பாக யாழ்ப்பாணத்துத் தமிழிலக்கிய மரபை அறிய விழைவோருக்கு – பயன்படத்தக்க ஒரு நூலாக இது அமைகிறது. திரு. சிவலிங்கராஜா அவர்களர் ஆய்வுப்பணி மேலும் வளர ஊக்கமளிப்பது தமிழ் ஆhவலர்களது கடனாகும்.
அணிந்துரை
பேராசிரியர் ஆ.Nலுப்பிள்ளை
Ph.னு. (ஊநல.)இ னு. Phட. (ழுஒழn)
தலைவர், தமிழ்த்துறை,
யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
இலங்கை மண்ணிலே தமிழினத்துக்குரிய உரிம பிற இனத்துக்குரிய உரிமையிலும் எவ்வகையிலும் குறைந்ததாக இருக்கக்கூடாது என்ற அபிலாசை, கடந்த சுமார் அறுபது ஆண்டுகளாக இலங்கை அரசியலிலே ஷஷதமிழர் பிரச்சினைஷஷயைத் தோற்றுவித்து வருகிறது. தமிழருடைய அரசியல் கோரிக்கைகள் காலத்துக்குக்காலம் வேறுபட்டு வருகிறபோதிலும், அவை யாவற்றுக்கும் அடிநாதமாக விளங்குவது தமிழினத்தின் சமஉரிமைக் கோரிக்கையே. சிங்கள இனம் தனது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் ஓரளவு தெளிவாக விளங்கும்படி பேணிப் பாதுகாத்து வந்துள்ளது. இலங்கைத் தமிழஜனம் இலங்கை மண்ணோடொட்டிய தனது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் மனித்துவச் சிறப்போடு எடுத்துப் பேணிப் பாதுகாத்து நிலைநிறுத்துவதிலே தவறிவிட்டது.
இலங்கைத் தமிழினம் ஷஷவரலாற்று இல்லாத தமிழர்|| ஷஷபாரம்பரியம் இல்லாத தமிழர்|| என்ற அவதூறுகளை எதிர்த்தரப்பாரிடமிருந்து ஏற்கவேண்டிய நிலையில் இருக்pறது. இலங்கைத் தமிழினத்தின் வரலாற்றைத் துலக்கமடையச் செய்வதற்கு இன்று பலதுற அறிஞர்கள் பல்வேறு வழிகளில் முயன்றுவருகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறையிஜல் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றும் சிவலிங்கராசாவின் இச் சிறுநூலும் இவ்வகையிலே போற்றப்படவேண்டிய ஒரு முயற்சியே. அவர் தமிழ்ச் சிறப்புக்கலை வகுப்பிலே மாணவனாக இருந்தபோது எழுதிய கட்டுரை சிறிய விரிவாக்கம் பெற்று இப்பொழுது நூலுருப்பெறுகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்றுள்ளும் வடமராட்சி சில அம்சங்களிலே தனித்துவம் வாய்ந்த பகுதுpயாகத் திகழ்கிறது. வடமராட்சியிலே சிறந்த கல்விப் பாரம்பரியம் நிலவிவலுகின்றமையை எடுத்துக்காட்டுவதிலே, நூலாசிரியர் வெற்றிபெற்றுள்ளார். எனினும் ஆராய்ச்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், இச் சிறுநூல் பெருநூலாக இடமிருக்கிறது. கல்விப் பாரம்பரியம் மட்டுமல்லாது வடமராட்சித் தமிழர் பாரம்பரியமென நூல் விரிவடைந்தால், பயன்மிக்க நூலொன்று தோன்ற இடமிருக்கிறது.
வடமராட்சிப் பாரம்பரியம் வடமராட்சியில் இன்றுள்ள கல்விதான்களுக்கே முற்றுமுழுவதாகத் தெரியவராது. பல இடங்களிலும் பலவகைத் தகவல்களைத் தேடியே, அவற்றின் துணைகொண்டு, வடமராட்சிப் பாரம்பரியம் ஆராய்ச்சி காணப்படவேண்டிய நிலையிலுள்ளது. வடமராட்சிப் பாரம்பரியம் தெளிவுபெற்றால், அதக் கண்டறியப் பயன்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணக் குடாநாட்டின் பிற பகுதிப் பாரம்பரியங்களை ஆராய்ந்து காணலாம். இலங்கைத் தமிழ் இனத்தின் பாரம்பரியத்த ஆராய்ந்து காணலாம். இலங்கைத் தமிழ் இனத்தின் பாரம்பரியத்தை ஆராய்ந்து காண, யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பாரம்பரியம் பற்றிய ஆராய்ச்சி உதவும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
சிவலிங்கராசாவின் சிறுநூல் ஷஷகாலத்தின் தேவை||யை ஒட்டி வெளிவருகிறது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தால் வடமராட்சித் தமிழர் பாரம்பரியம் பற்றிய பெருநூலை அவர் எழுதுவதற்கு அது தூண்டுதலாக அமையும். அந்த வரவேங்பு இலங்கைத் தமிழர் பாரம்பரியத்தைப் பல்வேறு கோணங்களில் ஆராய்வதற்கு அறிஞர்களின் கவனத்தைத் திருப்புவதாகவும் அமையும்.
முன்னுரை
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றாய்விற் குறவட்டப் பிரதேச நுண்ணாய்லுகளுக்காக தேவை. அணுகுமுறை – ஒரு குறிப்பு.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
தமிழ்த்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிறப்புப் பட்டதாரி வனுகுப்பு மாணவர்கள் தமது இறுதி வருடத்திற் கட்டாயமாகச் சமர்ப்பிக்கலேண்யெ ஆய்வுக் கட்டுரையொன்று இப்பொழுது இந்நூல் வடிவில் வெளிவருகிறது. தமிழ்த்துறையின் இன்றைய உதவி விரிவுரையாளர்களில் ஒருவராக விளங்கும் திரு. சிதம்பரப்பிள்ளை சிவலிங்கராஜா இதன் ஆசிரியர். திரு. சிவலிங்கராஜாவின் இந்த ஆய்வுக் கட்டுரை அச்சுப் பதிவுக்கு முன்னரே பலரால் நாடப்பெற்று வாசிக்கப் பெற்ற ஒன்றாகும். வடமராட்சி பற்றிய இக்கட்டுரைபோன்று, தென்மராட்சி பற்றியும் ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதுவிக்கப்பட்டது.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பிரதான பிரதேசக் கூறுகளாக அமைபவை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, மலையகம் என்பனவாகும். இவற்றுள் யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக அதுவே ஷஷமேலாண்மை|| யுடைய ஈழத்துத் தமிழ்ப் பிரதேசமாகக் கணிக்கப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்துப் பாரம்பரியங்களே ஈழத்தின் (தமிழ்ப்) பாரம்பரியங்களாகப் போற்றும் ஒரு மனநிலை இன்னும் சிலரிடையே காணப்படுகிறது.
இவ்வாறு ஷவிதந்து| கூறப்படும் யாழ்ப்பாணத்தினுள்ளும் யாழ்ப்பாணப் பண்பாட்டின் பொதுத் தன்மையின் அங்கங்களாகவும் அதேவேளையில் தமக்கென ஒரு தனித்துவமுடைய உபபண்பாடுகளாகவும் விளங்கும் அலகுகள் உள்ளன. வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி என்பனவற்றையும் யாழ்ப்பாணப் பட்டினத்தினுள் வரும் வண்ணார் பண்ணையையும் உதாரணமாகக் கூறலாம்.
யாழ்ப்பாணப் பண்பாட்டின் இன்றியமையாத ஓது அலகாக விளங்கும் வடமராட்சிப் பிரிவின் இலக்கியத் தோற்றத்திற்கான மூலங்களையும், அக அமைப்புக்களையும் அவற்றின் வழியாக வெளிவந்த இலக்கிய வெளிப்பாடுகளயும் பருவரைவாகச் சுட்டுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் முக்கிய நோக்காகும்.
யாழ்;ப்பாணப் பண்பாட்டு வட்டத்தினுள் வடமராட்சிப் பிரிவுக்குச் சில மனித்துவமான பண்புகள் உள்ளன. மற்றைய பிரிவுகளுடன் ஒப்பிட்டு நோன்கும் பொழுது இப் பிரதேசத்தில் பாரம்பரியத்தைப் பழைமைபேண் உணர்வுடன் பேணுமதே வேளையில் மேலோங்குவதற்கான வாய்ப்புக்களைத் தரும் புமையை ஒதுக்காது பயன்படுத்தும் ஒரு கருத்து நிலையும் விடாமுயற்சிப் பண்பும் நிலவுவதைச் சுட்டிக்காட்டுவர். வடமராட்சியின் பிரNதுச முக்கியத்துவம் கல்வித்துறையிலும் அதன் காரணமாக உத்தியோகத்துறையிலும் உணரப்பட்டது. வல்லை ஒரு புறத்திலும் உப்புக்கடல் மறுபுறத்திலுமாக இப்பிரதேசத்துக்குக் கிடைத்த ஒரு புவியியல் ஒதுக்கற்பாடும் சில தனித்துவமான சமூகப் பண்புகள் தொடர்ந்து பேணப்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
ஒரு பிரதேசப் பாரம்பரியத்தினுள் ஒரு பிரிவின் பண்பாட்டு அசைவியக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை விளங்கிக் கொள்வதும் அவ்விளக்கத்தின் வழியாக யாழ்ப்பாணப் பாரம்பரியத்தை அதன் பகுதிநிலையிலும் முழநிலையிலும் அறிந்து கொள்வதுமே இந்த ஆய்வு முயற்சியின் நோக்கமாகும்.
இது முற்று முழதாக முதற்பட்டநிலைபட்ட மாணவ முயற்சியாகவே தொடக்கப்பட்டதெனினும் ஆய்வாளரின் ஆhவமும் நோக்கு முதிர்ச்சியும் ஷஷசிறிது வேறுபட்ட ஆழமான|| ஆய்வுக்கு இடமளித்தது. இதன் காரணமாகச் சிறலநெறிமுறைப் பிரச்சினைகள நின்று எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டது.
திரு. சிவலிங்கராஜா இந்த ஆய்வினை மேற்கொண்டபோது இரு முக்கிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. முதலாவது இலக்கியம் என்பது யாது? அது எந்நிலைப்பட்டது என்பதாகும். ஒரு பகுதியின் இலக்கியப் பாரம்பரியம் ஆகிய இரண்டும் உருவாக்கப்படும் முறைமை பற்றிய தெளிவிருத்தல் அத்தியாவசியமாகும். இலக்கிய உற்பத்தி பற்றிய தெளிவில்லாவிடின் இலக்கியப் பாரம்பரியம் பற்றிய தெளிவில்லாது போய்விடும். இரண்டாவது இலக்கியம் பற்றி மேற்கொள்ளும் கருத்துமைதிக்கு (கருது கோளுக்கு) அமைய, அப்பகுதியின் சகல இலக்கிய வெளிப்பாடுகளையும் உள்ளடக்குகின்ற ஓர் அணுகு முறையை நிறுவிக் கொள்ளுதலாகும்.
இந்த இரண்டு பிரச்சினைகளையும் எதிர்நோக்கிய பொழுது அது நாள்வரை வழக்கிலிருந்து வந்த ஷஷயார் எதனை எழுதினார்|| என்ற ஆசிரியர் (புலவர்) நிலைப்பட்ட நோக்கு இந்தப் பிரச்சினைகளைப் புறங்காண்பதற்கு பயன்படாது என்பது தெரியவந்தது. பிரதேசப் பிரிவின் தனித்துவங்களையும் அவற்றுக்கும் ஆசிரியரின் ஆக்க ஆளமைக்குமுள்ள ஊடாட்டத்தையும் அந்த நோக்கு வெளிக்கொணராது.
மேலும், இந்த ஆய்வின் நோக்குப் பகுதி பற்றிய நுண்ணாய்வு மூலம் முழுமையின் கோளப் பொலிவைத் தெளிவுபடுத்திக் கொள்வதேயான்மையால் யாழ்ப்பாணத்தின் மறுபிரிவுகளை விட இப்பிரிவினை உயர்ந்ததாக வலியுறுத்தும் எண்ணமும் தொழிற்பட முடியாது போய்விட்டது. இந்தக் குறவட்டப் பிரிவு மேன்மை வாதமும் பாரம்பரிய வழிப்பட்டதேயாகும். வரன் முறையான ஆய்விலே அத்தகைய மனப்போக்குக்களுக்கு என்றும் இடம் கிடையாது.
இக்கட்டத்திலேதான் இன்று சமூக விஞ்ஞானத் துறையில் மேற்கொள்ளப்படும் ஷஷபருநிலை – நுண்;நிலை ஆய்வு முறைமை|| யினை (ஆயஉசழ யனெ அiஉசழ டநஎநட ளவரனநைள) அமைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஒவ்வோர் ஆய்வுத் துறைக்கும் அதன் பொருள் ஒழுற்குக்கேற்ப இவ்வாய்வு முறைமை கையாளப் படுமெனினும் இதன் அடிப்படையான பண்பு, நுண்நிலை ஆய்வுகளின் மூலம் பெறப்படுவனவற்றினைக் கொண்டு பருநிலைப் பண்புத் தொகுப்பினைச் செய்வதும், பண்புகள் நுண்நிலையில் எவ்வாறாகக் காணப்படுகின்றன என்ற பார்ப்பதுமாகும். ஒரு நாணயத்தின் இருபறங்களாக இவை தொழிற்படும்.
இதே நுண்நிலை ஆய்வு முறைமையினை ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றாய்வின் பாற்படுத்தி நோக்கினால், வடமராட்சிபற்றிய ஆய்வு இரண்டு விடயங்களை அறிய உதவுவதாக அமைதல் வேண்டும்.
1. இந்தப் பிரிவு மட்டத்தில் இலக்கியத்தின் உற்பத்தி, விநியோகம், நுகர்வு அமையும் முறைமையை அறிவதன் மூலம் ஈழத்துத் தமிழிலக்கிய முழமையின் அலகுகள் எவ்வாறு தோன்றி முழமையாகியுளளன என்பதை விளங்கிக்கொள்ளல்; இந்தப் பிரிவுக்கும் மற்றைய பிரிவுகளுக்குமுள்ள ஊடாட்டம் பற்றிய அறிவும் இதற்குள் அடங்கும்.
2. பருநிலை ஆய்வு மட்டத்திர் பொதுப்பண்புகள் என்று கூறப்படுபவை இந்த நுண்ணிலை ஆய்வின்பொழுது எந்த அளவுக்கு இயைபுடையனவாகக் காணப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்தல்.
இந்த அடிப்படையின் பிரச்சினையை அணுகமுனையும்பொழுது, தரவுகளயும், தகவல்களையும் குறிப்பிட்ட ஒழுங்கு முறையில் (அத்தியாய வரிசையில்) அமைக்கவேண்டி ஏற்பட்டது. முதலில் இப்பிரிவன் சமூக வரலாற்றுப் பின்னணியை நிறுவி அடுத்து இலக்கியத்தினை வாய்மொழி எழுத்துப் பாரம்பரியங்களுக்கியைய வகுத்து நோக்கி இறுதியாக இப்பிரிவின் இலக்கிய முயற்சிகள் எவ்வாறு ஈழத்துத் தமிழ்; இலக்கிய முழமையுடன் இணைகின்றன என்பது காட்டப்பட்டுள்ளது. ஒவ்வோர் அத்தியாயத்தினுள்ளும் விடயப் பரிசீலனை பகுக்கப்பட்டுள்ள முறைமை அவ்வத்துறையின் தனித்துவத்தை வெளிக்கொணருதல் வேண்டும். உதாரணமாக ஷஷஎழுத்தறிவுப் பாரம்பரியம்|| என்னும் தலப்பில் கல்விமுறைகள், கல்விபயில் களங்கள், திண்ணைப்பள்ளிக்கூடங்கள், பெண் கல்வி, நிறுவன ரீதியபன முயற்சிகள், கல்வி தொடர்பான நிறுவனங்கள், கல்விப் பாரம்பரியமும் எழுத்திலக்கியமும், பத்திரிகைகள், கோயிற் பதிகங்கள், சரம கவிகள், இலக்கண மரபு, புராணபடனம் என்பன எடுத்து ஆராயப்பட்டுள்ளன.
இவ்வாறு வரன்முறையான புலமை நிலைப்பட்ட ஆய்வின் பொழுது தான் நமக்கு தெரியாதவை எத்தனையோ உள்ளன என்பது தெரியவரும். அத்துடன் தகவற் பதுக்கல் எத்துணை சமூகவிரோதமான செயல் என்பதும் இவ்வாறான ஆராய்ச்சியினை மேற்கொள்ளும் பொழுதுதான் தெரியவரும். தகவலைப்பெறும் இடம் பற்றிய விவரங்களை ஒளிக்காது எடுத்துக்கூறும் ஆய்வு நேர்மை ஆராய்ச்சியாளனுக்கு வேண்டும். அந்த நேர்மையற்றவனை ஆராய்ச்சியாளன் என்று கூறவே கூடாது. ஆனால், தகவற்பதுக்கற்காரர் கூறும் தம் தகவலைப் பகிர்ந்து கொள்ளாத பட்சத்தில் ஆராய்ச்சியாளனின் இறுதி முடிபுகள் தவறானவையாக இடமுண்டு என்பதையும் உணரல் வேண்டும். ஷபோட்டோஸ் ராற்| யுகத்திஜலும் ஏட்டுச் சுவடிக் காலப் பகிர்வொதுக்க மனப்பான்மை கூடாது. திரு சிவலிங்கராஜா இத்தகைய இடர்ப்பாடுகளை எதிர்நோக்கியது எனக்குத் தெரியும். பெற்ற தகவல்களைப் பெருந்தன்மையுடன் எடுத்துக் கூறாதவர்களாலும், தகவற் பதுக்கற் காரர்களினாலும் ஈழத்தின் இலக்கியத்துஐற ஆராய்ச்சி முயற்சிகள் பல முடங்கியுள்ளன. உண்மையான மீள்கண்டு பிடிப்புகள் தாமதமாகிக் கொண்டே செல்கின்றன.
திரு சிவலிங்கராஜாவின் இச்சிறு நூல் இத்துறையில் எமது தமிழ்த்துறை வழிப்படுத்திய முதல் முயற்சிகளில் ஒன்றாகும். இது ஒரு முழமையான ஆய்வு என்று முன்வைக்கப்படவுமில்லை. ஆனால், இது எமது பாரம்பரியங்களின் ஆய்வுக்கான சாத்தியப் பாட்டினை எடுத்துக்காட்டி நிற்கின்றது. இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்குமுள்ள உறவுகள், தொடர்புகள் பற்றிப் பேசுவது இன்று பெருவழக்காகியுள்ளது. இந்த ஆய்வு சமுதாயத்தினுள்ளிருந்து இலக்கிய முகிழ்க்கும் வகையினை (டுவைநசயவரசந in ளுழஉநைவல) பிண்டப் பிராமாணமான ஓர் ஆய்வின் மூலம் எடுத்துக் காட்ட முனைகின்றது. இதுவெ, இதன் பலமாகும்.
இது பலவீனங்களற்றது என்று கூறவில்லை. வடமராட்சியின் இலக்கியப் பாரம்பரியம் என்பதே ஆராயப்டப்டுள்ளதால் ஈழத்தின் நவீன தமிழ் இலக்கியத்தில் ஈழத்து நவீன தமிழிலக்கியப் பண்புருவாக்கத்தில் வடமராட்சி பற்றிய சித்pரிப்பும், வடமராட்சியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் (வடமராட்சிச் சூழலால் நிர்ணயிக்கப்பட்ட) நோக்கு முறையும் எத்துணை இடம்பெற்றுள்ளன என்பது ஆராயப்படாது போய்விட்டது. ஷவடமராட்சி| என்பது கருத்து நிலையில் ஒரு குறிப்பிட்ட ஷஷமனநிலை||யும் நோக்கு முறையும் ஆகம். ஆய்வுக் கட்டுரை பாரம்பரியமான யாழ்ப்பாணத்து இலக்கிய மரபு என எடுத்துக் கூறப்படும் மருபுவட்டத்தையே வரையறையாகக் கொண்டுள்ளது.
விடயத்தை எடுத்துக் கூறியுள்ள தெளிவு காரணமாகச் சிவலிங்கராஜா பாராட்டுக்குரியவராகிறார். இச்சிறு நூல் அவர் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சி வாழ்க்கையின் முதற் பெறுபேறே. இது தரும் ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு அவர் தம் நோக்கையும் முயற்சியையும் ஆழ, அகலப்படுத்திக் கொள்ளல்வேண்டும்.
எமது துறையின் சமூகப் பயன்பாடு உணரப் படுவதற்கான உதாரணமாக இந்நூலைக் கொள்வதில் தவறில்லை தவறில்லை எனக் கருதுகிறேன். இத்தகைய திருப்திகள் தான் எம்மை ஊக்குவிப்பவை. இந்நூலை வெளியிடுவதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. ஆ. தேவராசனுக்கு நன்றி.
ஷஷஓகோ............... இது அடிப்படையில் ஒரு வடமராட்சி ஷவிளையாட்டுத் தானே| என்றும் கூறப்படும் என்பது தேவராசனும் சிவலிங்கராஜாவும் நானும் ஷஷவடமராட்சியாங்கள்|| என்பது உண்மையே. இப்படியாகச் சில ஷஷஅகழ்வு ஆய்வுள்|| பண்ணுவதும் ஈழத்து இலக்கியப் பாரம்பரியற்களுள் ஒன்று; ஆனால், எழுத்திற் பொறிக்கப்படாதது!
பதிப்புரை
திரு ஆ. தேவராசன்
பொதுச் செயலாளர்,
வடமராட்சிக் கல்வி வட்டம்,
பொன்னுச்சாமி கோட்டம்,
பருத்தித்துறை.
ஈழத் தமிழர் வரலாற்றில் பல்வேறு துறைகளில் பல்வேறு கால கட்டங்களில் வடமராட்சிப் பகுதி தனது தனித்துவமான முத்திரையைப் பதித்திருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துக்குரியர் என்ற கருத்தினை பம்மல் சம்பந்த முதலியார் கூறியிருக்கிறார். இதே கருத்தினை ஷஷபத்தொன்பதாம் நூற்றாண்டுத்தமிழ் இலக்கியம்|| என்ற அரிய ஆய்வு நூலைத் தந்த மயிலை சீனிவேங்கடசாமி அவர்களும் ஏற்று வலியுத்தி இருக்கிறார்.
தமிழ் இலக்கிய வரலாற்று வளர்ச்சிக்கு ஈழம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அளித்த பங்களிப்பு ஒரு பொற்காலத்தை, திருப்பு முனையை ஏற்படுத்தியதோடு அமையாது. ஈழத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்துக்கும் வளர்ச்சிக்கும் கால்கோள் கொண்டுள்ள வரலாற்று உண்மையும் மனங்கொள்ளத் தக்கது. இந்தப் பங்களிப்பில் வடமராட்சியின் பங்களிப்புக்கணிசமானது.
இலக்கியம், நாடகம், மருத்துவம், கல்வி முதலான பல்வேறு துறைகளில் வடமராட்சிக்குத் தனிப் பாரம்பரியம் உண்டு. ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அளவுகோலாக விளங்குவது அகராதித்துறை வளர்ச்சியாகும். தமிழில் எழுந்த அகராதிகளு; மூன்றை வடமராட்சியியே (மேலைப்புலோலி நா. கதிரைவேற்பிள்ளை, புலொலி சி.சுப்பிரமணிய சாஸ்திரிகள், உடுப்பிட்டி உவைமன் கதிரைவேற்பிள்ளை ஆகியோர்) தந்துள்ளமை நிளைவுகொள்ளத் தக்கது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பேரகராதி உவைமன் கதிரைவேற்பிள்ளை அவர்களின் அகராதியில் இருந்து வளர்ச்சி பெற்றதேயாகும். நாடகத்துறையில் புலொலியில் அறுபதுபாகைக் கிணற்றை அண்மித்;த கரையந்தோட்டக் கிராமத்தில் வசித்த அண்ணாவி தாமர் என்று அழைக்கப்பட்ட ஆறுமுகம் தாமோதரம்பிள்ளை அவர்களின் பாரம்பரியமும் நீங்காத நினைவிலுள்ளவை. அண்ணாவி தாமர் பாரம்பரியம் இன:று அருகிவிட்ட போதிலும் மாதனைக் கிராமத்துப் பாரம்பரியம் தொடர்ந்து வளர்கிறது.
இவைதவிர, காவடி ஆட்டம், கரக ஆட்டம், கிராமியப் பாடல்கள் முக்கியமாக மீனவ மக்கள் கிராமயப் பாடல்கள் போன்ற துறைகளிலும் வடமராட்சிக்குத் தனி இடமுண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், அதற்கு முன்பும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஈழத்தமிழர் பொருளனாதார வளர்ச்சியில் வல்வெட்டித்துறை (வல்லி + பட்டி + துறை). துறைமுகமும், சிறப்பாகப் பருத்தித்துறைத் துறைமுகம் அளித்த பங்களிப்பு மறக்க முடியாதவை.
ஒரு துறையில் பொது ஆய்வு மேற்கொள்ளப்படும் போது, பிரதேசப் பங்களிப்புகள் முழமையாகப் பதிவாவதில்லை. இவ்வகையில் தமிழ் நாட்டிலும், இலங்கையில் சிங்கள மக்கள் பகுதியிலும் பிரதேச ஆய்வுகள் வளர்ந்துள்ள அளவுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் பகுதிகளில் பிரதேச ஆய்வு வளர்ச்சி பெறவில்லை. ஆய்வின் மூலம் அப்பகுதியின் பங்களிப்புகளை முழமையாக பதிவுசெய்து கொள்வதுடன், அந்தப்பகுதியின் பங்களிப்புகளையும், பாரம்பரிங்களையும் வெளிக்கொணர்வதன் மூலம் அவை அருகிவிடாது தொடர்வதற்கு புத்தார்வம் தோற்றுவிக்கப்படுகின்றது. இவ்வகையிலே பிரதேச ஆய்வு முக்கியத்துவபம் பெறுகிறது.
இந்த வகையில் திரு. எஸ். சிவலிங்கராஜா அவர்கள் ஷஷவடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்|| என்ற பிரதேச ஆய்வை முன்வைத்துள்ளார். அவர் யாழ் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் – தன் ஆய்வுகள் மூலம் தமிழ் கூறு நல்லுலகுக்கு அறிமுகமானவர்; வளர்ந்துவரும் ஆக்கபூர்வமான ஆய்வாளர். அவரர் இந்த ஆய்வு முடிவுகளை நாலுருவில் வெளியிடுவதில் நாம் நிறைவு காண்கிறோம். இந்த ஆய்வு, நூலுருப் பெறு முன்னரே, முதகலை மாணிப் பட்டத்துக்கு ஆய்வு செய்வோர் உட்படப் பல்வேறு ஆய்வு செய்வோருக்கு துணையாகி ஊன்று கோலாக அமைந்துள்ளது என்பது ஆய்வுலகம் அறிந்த உண்மை. எனவே இந்நூல் பல்கiலைக்கழக புகுமுக மாணவர் முதல் பல்வேறு துறை ஆய்வாளர்களுக்கும் ஆhவலருக்கும் பயன்படும் கைந்நூலாக அமையும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு.
இந்நூலை வெளியிடுவதற்கு பணந் தேவையென்று நாம் கேட்டபோது, பெரிதுவக்கத் தன்னை ஈன்ற அன்னையின் பெயரால் இந்நூலை வெளியிட மனமுவந்து பணம் தந்த. தமிழ்ப்ப ண்பாட்டு ஆhவலனாய்கலா இரசிகளாய் இருந்து, இன்று தமிழ்ப் புரவலனாய்த் திகழ்கின்ற அன்பர் கரவை வே. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு எங்கள் நீங்காத நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பி.கு.
இந்நூலுக்கான பதிப்புரையை நான் எழுதி ஏறத்தாழ ஓர் ஆண்டு முடிவுறுகிறது. அச்சு வேலைகள் தொடங்க முன்னதாக கடந்து ஜுலை வன்செயல்களும் அவற்றின் தொடர்கதைகளும் கன்னெஞ்சையும் உருக வைக்கும் தன்மையனவாக அமைந்துள்ளன. இக்கால இடைப்பாட்டில் இந்நூலை அச்சேற்ற முடியாதுபோய்விட்டதற்கு வருந்துகிறோம். இப்போது உங்கள்முன் இந்நூல் வைக்கப்படுகிறது.
என்னுரை
எஸ். சிவலிங்கராஜா
தமிழ்த்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகக் கற்கும் இறுதியாண்டு மாணவர்கள் பரீட்சைத் தேவையின் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்யும் பொருட்டு ஆய்வுக் கட்டுரையொன்றைச் சமர்ப்பிக்கவேண்டும்.
நான் இறுதி ஆண்டு மாணவனாக இருந்த போது எனக்குரிய ஆய்வுக்கட்டுரையின் தலைப்பைத் தெரிவு செய்யும்படி பேராசிரியர் கா. சிவத்தம்பி பணித்தார். ஈழத்து இலக்கிய வரலாறு சார்ந்த ஒரு விடயத்தை எனது ஆய்வுத்துறையாகக் கொள்ள ஆவலுடையேன் எ;னபதை அவரிடம் தெரிவித்தேன். அவரே இவ்வாய்வின் தலைப்பைத் தந்தார்.
ஈழத்து இலக்கிய வரலாறு முழுமையாக ஆராயப்படுவதன் அவசியத்தையும், அம்முழுமையான ஆய்வுக்குப் பிரதேசரீதியான சிற்றின ஆய்வு அத்தியாவசியமானது என்பதையும் பேராசிரியர் க. கைலாசபதி வலியுறுத்தி என்னை ஆசீர்வதித்தார்.
பட்டப்படிப்பு மாணவனொருவனின் பரீட்சைத் தேவையின் ஒரு பகுதியான இவ்வாய்வுக்கட்டுரை இன்று சிறு நூலாக வெளிவருகின்றது. அனுபவம், முதிர்ச்சி என்பவை அதிகரிக்க இச்சிறுகட்டுரை ஒரு நூலாக விரியலாம்.
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும் ஈழத்து இலக்கியவரலாற்றில் கணிசமான இடத்தை வகிப்பதை இவ்வாய்வின்போது காணமுடிந்தது.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு முழமையாக ஆராயப்படும் பொழுது அதன் ஓர் அத்தியாயம் வடமராட்சியைச் சார்ந்ததாக அமையும் என்று நம்புகிறேன்.
முற்று முழுதான, பூரணமான ஆய்வென்று இதனைக் கொள்ள முடியாது. இது பட்டப்படிப்பு மாணவனொருவனின் பரீட்சைத்தேவையின் ஒருபகுதி என்பதை ஆய்வாளர்கள் மனங்கொள்ள வேண்டும். பூரணமான ஆய்வை நோக்கிய பயணத்தின் ஆரம்பமென்றே இச்சிறு நூலைக்கொள்ளவேண்டும்.
இன்று ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு பற்றி ஆராய்வதற்குப் பல்வேறு தடைகள் உள்ளன. ஈழநாட்டின் தமிழறிஞர்களின், ஆக்கங்களைப் பணிகளைப்பற்றிய விபரங்களை அவர்களின் தலைமுறையில் வந்தவர்களிடமோ, இரத்த உறவினரிடமோ பெறமுடியாதிருக்கிறது.
நமது பாரம்பரியத்தின் பலத்தை நிறுவக்கூடிய சான்றுகளைப் பேணிப்பாதுகாக்கும் ஷஷவரலாற்றுப் பேண் முறையை|| நாம் இன்னும் பூரணமாகக் கைக்கொள்ளவில்லையென்றே கருதவேண்டியுள்ளது. நான் நட்சத்திரக்கணிப்பு முறையும், சமய, சமூகச் சடங்காசாரங்களும், பல தழமிழறிஞர்களின் ஜனனமரணக் கணிப்புக்களையே பாதித்துள்ளது. இத்தகைய சூழலில் இயன்றவரை முயன்று தகவல்களைப் பெற்றிருக்கிறேன்.
வடமராட்சியின் புகழ்பூத்த தமிழறிஞர் பலரைப்பற்றிய விபரங்களைப் பெறுவதற்காக அவர்களின் வழித்தோன்றல்களுக்கு, உறவினர்களுக்குக் கடிதங்கள் எழுதினேன். பலரிடமிருந்து பதிலே கிடைக்கவில்லையென்பதை மனவருத்தத்துடன் குறிப்பிட்டேயாக வேண்டும். சிலர் ஆhவத்துடன், பூரணமானது எனக் கருதமுடியாவிடினும் தமக்குத் தெரிந்தவி~யங்களை எழுதி அனுப்பிய. அவற்றுள் தேவையானவற்றை இந்நூலிற் சேர்த்திருக்கிறேன்.
வடமராட்சியைச் சேர்ந்த அறிஞர் பலரை நான் நேரிற்கண்டு உசாவிய பொழுது, இதுவரை வெளிவராத பலதகவல்களை அவர்க்ள தந்துதவினர். குறிப்பாக, கலாநிதி கு. சிவப்பிரகாசம், (புலொலி) வீரசிங்கம் ஆசிரியர் (தும்பளை) ஏரம்பமூர்த்தி ஆசிரியர் (பருத்தித்துறை) பண்டிதர் சங்கரவயித்தியலிங்கன் (வல்வெட்டித்துறை) ஆ. தா. சுப்பிரமணியம் ஆசிரியர் (துன்னாலை) பண்டிதர் க. வீரகத்தி (கரவெட்டி) வித்துவான் சுப்பிரமணியம் (புலோலி) நீலகண்டன் ஆசிரியர் (உடுப்பிட்டி) திருமதி மனேன்மணி சண்முகதாஸ் (தும்பளை) முதலியாரைச் சுட்டிக் காட்டாம். இவர்களுக்கெல்லாம் என் இதயபூர்வமான நன்றிகள்.
பல்வேறு வேலைகளுக:கு மத்தியிலும், என்மீதுள்ள அன்பினாலும், வடமராட்சியின் கல்விப்பாரம்பரியத்திலும் இலக்கிய வளத்திலுமுள்ள பற்றினாலும் அழகான வாழ்த்துரையை உடனடியாகவே எழுதியுதவிய துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களுக்கும், நூலைப்படித்துப்பார்த்து, அணிந்துரை வழங்கிய தமிழ்த் துறைத்தலைவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையவர்களுக்கும் என்றும் என்நன்றிகள் இருக்கும்.
தேவையானபோது தேவையான உதவிகளைக் ஷகாலநேரம்| பாராது பெருமனதுடன் செய்த பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுக்கு என்றும் என்நன்றிகள் உரியது.
இந்நூலாக்கத்தின்போது பலர் உதவிபுரிந்தனர். பதிப்புத்துறையில் அனுபவம்மிக்கவரான மயிலங்கூடலூர் பி. நடராசன் அவக்கு வார்த்தைகளால் நன்றி கூறுவது கடினம். அவர் அன்புக்கும், நட்புக்கும், நக்றிக்குமுரியவர். வல்லிபுரக்கோவில் மணல்மேட்டினைத் தன் ஷகமராவுக்குள்| சிறைப்பிடித்து, அழகான அட்டைப் படமாக்க எதவிய கலாநிதி பொ. இரகுபதிக்கும், வடமராட்சியின் வரை படத்தை வரைந்துதவிய, புவியியற்துறையைச் சேர்ந்த செல்வி ந. தேவரஞ்சிதத்திற்கும், ஷபுறூவ்| பார்ப்பதோடு மாத்திரமன்றி வாக்கிய அமைப்புக்களிலும் திருத்தம்வேண்டிய விடத்துச் சுட்டிக்காட்டித் திருத்த உதவிய ஆசிரியர் க. கனகசிங்கத்திங்கும் என்றும் எனது இதயபூர்வமான நன்றிகள்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நூல் விரைவில் வெளிவரவேண்டும் என்ற ஆhவத்துடன் அயராதுழைத்த சுன்னாகம் திருமகள் அழுத்தக உரிமையாளர், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியுடையேன்.
என்னை உழுதும்படி ஊக்குவித்தும், எழுதியதை வாசித்து விமர்சித்தும், என்னை உருவாக்கும் மனைவி சரஸ்வதிக்கும் நன்றிகள்.
எனது ஆய்வுக் கட்டுரையைக் கருத்தரங்கில் கேட்ட நாள்முதலாகவே இதனை நூலுருவிற் கொண்டுவரவேண்டுமென்று அவராதுழைத்த வடமராட்சி கல்வி வட்டச் செயலர் ஆ. தேசராசனுக்கும், இப்பதிப்புக்கான முழச் செலவையும் கையேற்ற கரவை வே. பாலசுப்பிரமணியத்திற்கும் எனது நன்றிகள் என்றும் உரித்தாகுக.
இவ்வாராய்ச்சிக்கான தலைப்பைத்தந்து, என்னை நெறிப்படுத்தி, இக்கட்டுரை சிறப்பாக அமையவேண்டுமென்பதில் கண்ணுங் கருத்துமாக இருந்தது மாத்திரமன்றிக் கனதியான முன்னுரையையும் எழுதித்தந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன்.
இவ்வாராய்ச்சியை நான் செய்யும்பொழுது அடிக்கடி ஷஷஞானோபதேசம் செய்தும், அரிய நூல்களைப் பெருமனதுடன் தந்தும் ஊக்கமளித்த என் பேராசான் பேராசிரியர் க. கைலாசபதியை நீர்மல்கும் கண்களுடன் நினைவு கூறுகிறேன்.
அறிமுகம்
அமைப்பும் அணுகுமுறையும்
வடமராசட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும் என்ற இச்சிறுநூல் நான்கு இயல்களைக் கொண்டது. ஒரு நாட்டின், அல்லது பிரதேசத்தின் வாழ்வு தாழ்வுகளைத் தீர்மானிப்பது சமூக வரலாற்றுப் பின்னணியே ஆகும். எனவே இந்நூலின் முதலாவது இயலாக வடமராட்சியின் சமூக வரலாற்றுப் பின்னணி மிகச் சுரக்கமாக ஆராயப்பட்டுள்ளது. இவ்வியலில் புவியியல், வரலாறு, சமூகம், பொருளியல், மொழிநிலை என்ற அம்சங்கள் ஷஷசிக்கனமாக|| இடம்பெறுகின்றன.
கல்விப் பாரம்பரியத்திற்கும், இலக்கிய வளத்திற்கும் அடிஅத்திவாரமாக வாய்மொழிப் பாரம்பரியமே அமைகிறது. எனவே இவ்வாய்வின் இரண்டாவது இயலாக வாய்மொழிப் பாரம்பரியம் நோக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டுப்பாடல்கள், கூத்துமரபு, சிறுதெய்வ வழிபாடுகள் என்ற அம்சங்கள் இடம்பெறுகின்றன.
எழுத்தறிவுப் பாரம்பரியம் என்ற மூன்றாவது இயல் இந்நூலின் முக்கியமான இயலாக அமைகிறது எனலாம். இவ்வியலில் கல்வி முறைகள், கல்வி பயில்களங்கள், கல்வி தொடர்பான நிறுவனங்கள், கல்விப் பாரம்பரியமும், எழுத்திலக்கியங்களும், பத்திரிகைகள், இலக்கணமுயற்சிகள், அகராதிகள், புராணபடனமரபு என்னும் அம்சங்கள் இடம்பெறுகின்றன.
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கியவளத்தினையும் முழமையாக அறிய இப்பகுதி ஏனைய பகுதிகளுடன் கொண்டிருந்த கல்வி சம்பந்தமான தொடர்புகளைச் சுரக்கமாகவேனும் அறிவது அவசியமாகும். எனவே இந்நூலின் நான்காவது இயலாக வடமராட்சியும் பிறபகுதிகளும் என்ற இயல் அமைகிறது. இவ்வியலில் வடமராட்சியும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளும், வடமராட்சியும் மட்டக்களப்பும், வடமராட்சியும் தென்னிந்தியாவும் என்னும் அம்சங்கள் இடம்பெறுகின்றன.
இறுதியாக இக்கட்டுரையின் ஷஷபாலம்|| கருதி அனுபந்தம் ஒன்று சேர்த்திருக்கிறேன். வடமராட்சியின் அறிஞர்களில் மிக முக்கியமானவர்கள் பற்றி மிகச் சுருக்கமாக இவ்வனுபந்தத்திற் கூறப்பட்டுள்ளது.
இவ்வாய்வுக்கட்டுரை இவ்வடிப்படையிலேயே அமைந்துள்ளது. வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கிய வளத்தினையும் காரண காரியத் தொடர்போடு சமூகவியற் பின்னணியில் நோக்க முயன்றிருக்கிறேன்.
ஈழத்து இலக்கிய வரலாறு இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லையென்றே கருதவேண்டியுள்ளது. இக்கட்டுரையின் நோக்கம் ஈழத்து இலக்கிய வரலாற்றை முழுமையாக அறிவதற்கு ஒரு சிறிதளவாவது உதவவேண்டுமென்பதே. ஒரு நாட்டின் இலக்கிய வரலாறு பூரணத்துவம் பெறவேண்டுமெனின் மாவட்ட ரீதியான, பிரதேசவாரியான சிற்றின ஆய்வு நுண்மையாக நிகழ்த்தப்படவேண்டும். கல்வியும் இலக்கியமும் காலத்தின் குரல்களாகும். காலத்தேவையையொட்டியே இவ்வாய்வு நிகழ்கின்றது.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் தேங்கிநிற்கிறது என்று கொள்ளமுடியாது. குடாநாட்டிற்கு வெளியே வன்னி, மன்னார், மட்டக்களப்பு, மலைநாடு, தென்பகுதிகள் என்பவற்றையும், ஈழத்துக்கு அப்பால் தென்னாட்டையும் உள்ளடக்கியே காணப்படுகிறது எனலாம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டை வைத்து ஆய்வு செய்யப்பட்ட ஆரம்ப கால ஈழத்து இலக்கிய, கல்விப் பாரம்பரியங்கள்கூட முழுமையாகக குடாநாடு முழுமையையும் ஆழமாக நோக்கவில்லையென்றே கருதவேண்டியுள்ளது. இந்த இடத்திலேதான் பிரதேச ரீதியான சிற்றின ஆய்வின் தேவை முன்னெழுகின்றது. பிரதேசம், பிரதேசமாகக் கல்வி, இலக்கியப் பாரம்பரியங்கள் ஆராயப்பட்டால் பின்பு தொகுத்து நோக்கும்பொழுது முழமையான ஒரு வரலாற்றைக் காண்பது இலகுவாகும் என நம்பலாம்.
குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறிதும் பெரிதுமாக கல்விப் பரம்பலும், இலக்கிய முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. ஐரோப்பியர் காலத்துக்கு முந்திய கல்விப் பாரம்பரியத்திற்கும், இலக்கியவளத்திற்குமான ஆதாரபூர்வமான தரவுகள் மிகச் சொற்பமாகவே கிடைத்துள்ளன. செவிவழிச் செய்திகளே கல்விப் பாரம்பரியததினையும் இலக்கிய வளத்தினையும் அறிய உதவுகின்றன.
வடமராட்சிப்பகுதியில் நீண்டதோர் கல்விப்பாரம்பரியமுமி, இலக்கிய வளமும் நிலவிவந்துள்ளமையையும, இவற்றின் அறாத் தொடர்ச்சியான எச்சசொச்சங்களை இன்று வரையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
வடமராட்சியில் நிலவிய கல்விப்பாரம்பரியத்தினையும், இலக்கிய வளத்தினையும் சமூகவியல் நோக்கில் ஆய்வதே எனது நோக்கமாகும். வெறுமனே பட்டியல்போட:டுக் காட்டாது கல்விப் பாரம்பரியத்திறகும் இலக்கிய வளத்திறகுமிடையே உள்ள சமூக உறவினையும் இப்பாரம்பரியத்தில் சமூகத்தின் பங்களிப்பினையும் பின்னணிக் காரணிகளையும் ஆராய முற்பட்டிருக்கிறேன். கல்வி, நிறுவன ரீதியாக இயக்கத் தொடங்குவதற்கு முன் எவ்வாறு வடமராட்சிப் பகுதியில் நிலவி வந்தது என்பதும், நிறுவன ரீதியான கல்வித் தொடர்புகளுக்கும் முன்னைய கல்விப் பாரம்பரியத்திற்குமிடையிலேபட்ட உறவும் மாறுதலகளும் இக்கட்டுரையில் ஆராயப்பட்டிருக்கின்றன. கல்விக்கும் இலக்கியத்திற்கும் ஆதாரமாயுள்ள சமூக நிலைப்பாடுபற்றியே அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு பிரதேசததின் கல்வியும் இலக்கியமும் அந்தப் பிரதேசத்தை உலகளாவிய புகழுக்கு உயர்த்தும் என்ற உண்மையையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அறிவியலும், அழகியலும் கல்விப் பாரம்பரியத்தோடு கொண்டிருந்த உறவினையும் இவ்வாய்வின்போது காணக்கூடியதுர்கு இருந்தது.
இவ்வாய்வு ஒரு முழுமையான ஆய்வாக அமையாவிட்டாலும் ஒரு பிரதேசத்தின் கல்வி, இலக்கியப் பாரம்பரியத்தை அறிய – அணுக உதவியாக இருக்குமென்று நம்புகிறேன்.
பொருளடக்கம்
பக்கம்
அமைப்பும் அணுகு முறையும் எiii
இயல் ஒன்று 1-9
1. சமூக வரலாற்றுப் பின்னணி
1 . 1 புவியியல்
1 . 2 வரலாறு
1 . 3 சமூகம்
1 . 4 பொருளியல்
1 . 5 சில பண்பாட்டு அம்சங்கள்
1 . 6 மொழிநிலை
இயல் இரண்டு 10-19
2. வாய்மொழிப் பாரம்பரியம்
2 . 1 நாட்டுப்பாடல்கள்
2 . 2 கூத்து மரபு
2 . 3 சிறுதெய்வ வழிபாட்டு மரபு
இயல் மூன்று 20-50
3. எழுத்தறிவுப் பாரம்பரியம்
3 . 1 கல்வி முறைகள்
3 . 2 கல்வி பயில் களங்கள்
3 . 3 கல்வி தொடர்பான நிறுவனங்கள்
3 . 4 கல்விப் பாரம்பரியமும் எழுத்திலக்கிய மரபும்
(அ) கோயிற் பதிகங்கள்
(ஆ) சரமகவிகள்
(இ) பத்திரிகைகள்
(ஈ) இலக்கண முயற்சிகள்
(உ) அகராமி முயற்சிகள்
(ஊ) புராணபடன மரபு
இயல் நான்கு 51-58
1. வடமராட்சியும் பிறபகுதிகளும்
4 . 1 வடமராட்சியும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளும்
4 . 2 வடமராட்சியும் மட்டக்களப்பும்
4 . 3 வடமராட்சி தமிழ்நாடு கல்வித் தொடர்புகள்
அனுபந்தம் 59-72
பொருள் அட்டவணை 73-80
(அ) இந்நூலில் இடம்பெறுவோர்
(ஆ) இந்நூலில் இடம்பெறும் வடமராட்சியில் எழுந்த நூல்கள்
உசாத்துணை 81-82
இயல் ஒன்று
சமூக வரலாற்றுப் பின்னணி
1 . 1. புவியியல்
ஈழத்தின் வடபகுதியான யாழ்ப்பாணக் குடாநாட்னெ; வடகிழக்குப் பகுதியாக வடமராட்சிப் பிரதேசம் அமைந்திருக்கின்றது (படம் 1). இப்பிரதேசம் வடமராட்சி தெற்கு, மேற்கு உதவி அரசாங்க இதிபர் பிரிவு, வடமராட்சி கிழக்கு, வடக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு என இரண்டு நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்டப்டுள்ளது. நிலப்பரப்பவிலும் சனத்தொகையிலும் குடாநாட்டின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக வடமராட்சிப் பகுதி அமைந்திருக்கிறது. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற பிரசித்திபெற்ற துறைமுகப் பட்டினங்களையும், கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற தொன்மை வாய்ந்த கடல்சார் கிராமங்களையும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணைவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டி, தொண்டமனாறு போன்ற பாரம்பரியப் பகுதிகளையும், நெல்லியடி போன்ற வளர்ந்துவரும் பட்டினங்களையும் கொண்டதாக வடமராட்சிப் பிரதேசம் அமைந்திருக்கின்றது.
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும், இலக்கிய வளத்தினையும் ஆராய்வதற்கு முன், வடமராட்சியின் புவியியல், வரலாறு, சமூகப் பொருளாதார நிலைப்பாடு, மொழிநிலை ஆகிய அம்சங்களையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் சுருக்கமாக ஆராய்தல் இன்றியமையாததாகும்.
வடமராட்சியின் புவியியல் முக்கியத்துவம் கல்விப் பாரம்பரியத்துடனும் இலக்கிய வளத்துடனும் மிகவும் இறுக்கமான தொடர்புடையதாகும். தமிழ் நாட்டிற்கு மிக அண்மையிலுள்ள பகுதியாக வடமராட்சி அமைந்திருப்பதால் தென்னிந்தியப் பாதிப்பு மற்றைய இடங்களை விடச் சற்று அதிகதாகவே இங்கு காணப்படுகின்றது. பண்டைக் காலத் தமிழ்நாட்டின் வரலாற்றை நோக்கும்பொழுது இலக்கியப் பாரம்பரியத்துக்கும் புவியியலுக்கும் உள்ள உறவினை நன்கு அறியலாம். சுப்பாராவ் கூறிய ஷஷகவர்ச்சி மையத் தளங்கள்|| என்ற வகைக்குள் வடமராட்சியின் பல பகுதிகள் அடங்குதல் குறிப்பிடத்தக்கது. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற இடங்கள் இக்கவர்ச்சி மையத்தளங்களில் முக்கியமானவை எனலாம். ரோப்பிய வருகையையொட்டியும் அதற்கு முந்திய கலப்பகுதிகளிலும் இவ்விடங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பதும் வரலாற்றுண்மையாகும்.
வடமராட்சியின் புவியியல் அமைப்பில் வல்லைவெளி ஒரு ஷஷசிறு பாலை|| போல் அமைந்திருக்கிறது. நவீன போக்குவரத்து வசதிகள் ஏற்படுவதற்கு முன் வல்லைவெளியாற் பிரயாணஞ் செய்வது மிகவும் கடினமானதாக இருந்தது. மற்றைய பகுதிகளைவிட வடமராட்சிக்கு ஒரு தனித்தன்மை உருவாகுவதற்கு இப் ஷஷபாலைவெளி||யின் அமைப்பும் ஒரு காரணமாக அமையலாம் என எண்ண இடமுண்டு.
கடல் சார்ந்த பகுதிகளைவிட வடமராட்சியின் மற்றைய பகுதிகளில் நிலவளம், நீர்வளம் என்பன மாறுபட்டும் வேறுபடடும் காணப்படுகின்றன. இம்மாறுபாட்டிற்கு இயைவுபடவே இப்பிரதேச மக்களின் தொழில்களும் தீர்மானிக்கப்பட்nருக்கின்றன. நெல், தோட்டப்பயிர்ச் செய்கைக்குரிய பகுதிகள் பரவலாக இப்பகுதியில் அமைந்துள்ளன. மீன்பிடி, உப்பு விளைவித்தல் போன்ற தொழில்களும் புவியியல் சார்ந்த பொருளாதார அம்சமாகவே அமைகின்றன. சோழர் காலத்தில் இப்பிரதேசத்திலிருந்து உணவுப் பொருட்களையும் உப்பினையும் ஏற்றிச் செல்வதற்காகவே தொண்டமானாறு வெட்டப்பட்டது என்ற ஒரு ஐதீகமும் உண்டு. இத்தொண்டமானாற்றின் தொடர்ச்சி வடமராட்சியை ஊடறுத்து ஏறத்தாழ அதன் அந்தம்பரை செல்கின்றது. இயல்பாக அமைந்த பரவைக்கடலுடன் இணைந்து வள்ளம் சென்று வரக்கூடியதாக இது அமைந்திருந்ததாம். இப்போதும் இப்பகுதிகளில் கோடை காலத்தில் உப்பு இயற்கையாகவே விளைகின்றது. மாரிகாலத்தில் இப்பரவைக் கடலில் உள்@ர் மீன்பிடித் தொழில்கள் நடைபெறுவதுண்டு. இப்பரவை கடலின் இரு மருங்கும் கள்ளி, தாழை, ஈஞ்சு போன்ற பற்றைகளும் தொடர்ந்து ஷஷகண்டல்|| காடு என அழைக்கப்ப்டும் சிறு சிறு பற்றைக் காடுகளும் காணப்படுகின்றன. வடமராட்சிப் பகுதியின் விறகுத் தேவையையும் வேலி அடைக்கும் ஷஷஅலமபல்||களையும் இக்காடுகளே ஈடுசெய்கின்றன எனலாம்.
இக்காடுகளில் புலி, மான என்பவைகளும் வசித்ததாக அறியக்கிடக்கின்றது. ஒல்லாந்த தேசாதிபதிக்கு வடமராட்சிப்பகுதியிலிருந்து பத்து மான் தோல்கள் அனுப்பப்பட்டமையுமு; குறிப்பிடத்தக்கது, பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த ஷஉதயதாரகை|ப் பத்திரிகையில் இப்பகுதியில் புலிக்ள உலவியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியத்திலும், இலக்கிய வளத்திலும் புவியியல் பெறும் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கதே.
இப்பகுதியில் செம்மண், நரைமண், இருவாட்டி (புழதி) போன்ற மண்வகைகளே பரவலாகக் காணப்படுகின்றன. மண்ணின் வளமும, வளமின்மையுமு; மக்களின் மனதையும், தொழிலையும பாதித்துள்ளமை அவதானிக்கக்கூடியது.
1 . 2 வரலாறு
வடமராட்சியின் வரலாறு மிகவும் முக்கியமானதாகவும் பிரச்சினைக் குரியதாகவும் காணப்படுகின்றது. கி.மு. தொடக்கம் இப்பகுதி சிறந்து விளங்கியமைககும் இராசதானியாக இருந்தமைக்குமுரிய சான்றுகள் கிடைக்கின்றன. ஆனால் வடமராட்சி என்ற பெயர் வந்த வரலாறு பற்றிப் பல்வேறு கதைகள் உண்டு. வட மறவர் ஆடசி வடமராட்சி ஆகியது என்றும் கூறுகின்றனர். ஈழத்தின் வடபகுதியாகிய தென்னிந்தியாவில் இருந்து வந்த மறவர்கள் ஆட்சி செய்த இடமென்று இதற்கு விளக்கமுங் கூறுவர். சாவகச்சேரிக்கு அண்மையிலுள்ள மறவன்புலவு என்ற இடப் பெயரையும் இதற்குப் பக்கத்துணையாகச் சுட்டுவர். ஆனால் இக்கூற்று வரலாற்றாதாரங்களுடன் நிறுவப்பட்டதாகத் தெரியவில்லை.
ஷஷகடயிம் பொத|| என்ற சிங்கள எல்லைப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மராட்சிரட்ட என்பது
தற்காலத்தில் தென்மராட்சி, வடமராட்சி (மாராச்சி, மராச்சி, மராட்சி) என்ற இரு பிரிவுகளையும்
உள்ளடக்கியது||2
மராச்சிரட்ட என்பதன் திரிபும் வளர்ச்சியும் மராச்சி என மாறுபட்டு அவை பின் வடதென்பகுதிகளைக் குறித்திருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
18ஆம் நூற்றாண்டில் எழுந்த கைலாயமாலையில் வடமராட்சி என்ற பெயர் இடம் பெறமையும் நோக்கத்தக்கது. தமிழ்க் குடியேற்றம் பற்றிக் கூறும் கைலாயமாலையில் புலோலி என்ற இடப்பெயரே சுட்டப்படுகிறது. 3 வடமராட்சியில் புலவர்களும் கல்வி வளமும் காணப்பட்ட பகுதிகளில் புலோலி விதந்துரைக்கக்கூடியது. வடமராட்சியில் வரலாற்றோடு தொடர்புடையதாகக் கூறப்படும் சிங்கைநகர், புட்டளை, இமையாணன், சமரபாகுதேவன் குறிச்சி, ஆனைவிழுந்தான், ஆனைப்பந்தி போன்ற இடப்பெயர்கள் இன்றும் காணப்படுகின்றன.
வடமராட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வல்லிபுரக் கோயிரை அடுத்த பகுதிகளோடு மிக நெருக்கதாகக் காணப்படுவது நோக்கற்பாலது. முதலியார் குல. சபாநாதன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
பருத்தித்துறைகணித்தாய் மணல் மேடுகள் பொருந்தி யிருக்கின்ற வல்லிபுரமே பூர்வகாலச் சிங்கை நகராகும் என்பது முதலியார் இராசநாயகம் கொண்ட முடிபாகும். வல்லிபுரம் மணல் கும்பிகளுள் காற்றடிக்கும் காலங்களில் அல்லது மழை பெய்துவிட்டபின் அநேக பழம் பொருட்கள் அகப்படுகின்றன. அங்கே பலவிடங்களில் பூர்வகாலக் கலவோடுகள், கீச்சுக்கிட்டம், அங்கிருந்து கரைமார்க்கமாகச் சென்ற பெரிய வீதியில் அடையாளங்கள் முதலிய வல்லிபுரம் பண்டொருநாள் சிறந்த தலை நகராய் விளங்கியதென நிரூபிக்கின்றன. இக்கொள்கையையே நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசம் ஆதரித்து எழுதியுள்ளார். 4
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடமராட்சிப் பகுதியில் நீண்டதோர் கல்விப் பாரம்பரியம் தோன்றுவது சாத்தியமே. கி.பி. 1344 இல் ஈழத்துக்கு வந்த இபுன் பத்தூ தாவின் கூற்றுப்படி ஆரியச் சக்கரவர்த்தியின் தலைநகரம் ஷஷபுத்தல|| என்பதாகும். இப்புத்தலவைப் பலர் புத்தளம் எனக் குறிபபிடுவர். பேராசிரியர் கணபதிப்பிள்ளை அப்புத்தல என்னும் இடம் இப்போ புட்டளை என வழங்கும் இடமெனக் கருதுவர்.
ஷஷ - புத்தல என்பது புத்தளமாக இருக்கமுடியாது. ஷஷசிங்கை நகர்|| எனக் கூறப்படும் வல்லிபுரக்
குறிச்சிக்கு அணித்தாயுள்ள புட்டளை என இப்போது வழங்கும் கிராமமே இப்புத்தலவா இருக்கவேண்டும். மேலும் இவ்வரச பரம்பரையினரைச் சிற்கையாரியச் சக்கரவர்த்திகள் என்றும் குறிப்பான், புட்டளை சிங்கையின் ஒரு பகுதி. சிங்கையென்னும் பகுதி கி.பி. 3ஆம் நூற்றாண்டளவில் கீர்த்திவாய்ந்த இடமாக இருந்தது. இதற்குச் சான்று வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பொன்னேட்டுச் சாசனம். அன்றியும் அங்கு பல கட்டிடங்களும், கோட்டை கொத்தளங்களும் அழிந்தொழிந்து மண்ணால் மூடப்பட்டிருப்பதை அங்கு செல்வோர் இன்றும் காணலாம். அத்துடன் இதன் அருகே ஒரு பெருந்துறையும் உள்ளது. அங்கிருந்து கப்பல்கள் அக்காலத்தில் போக்குவரத்துச் செய்தன இப்பொழுதும் அத்துறையைக் கப்பற்றுறை என அழைப்பர். 5
இவ்வாறு வரலாற்றுப் பழமையுமு; முக்கியத்துவமும் உடைய ஒரு பிரதேசத்தில் கல்விப் பாரம்பரியம் நின்று நிலைக்கவும் இலக்கியம் வளம்பெற்று வளரவும் வாய்ப்புண்டென்று கருதமுடியும்.
வடமராட்சி என்ற பிரிவும், சொற்பிரயோகமும் யாழ்ப்பாண மன்னர் காலத்தில் இருந்தமைக்கான நான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால், யாழ்ப்பாண மன்னர்களின் நிர்வாகப் பிரிவுகளின் அடிப்படையிலேயே பறங்கியர் யாழ்ப்பாணத்தை நிர்வகித்தனர் எனவும் அறியக்கிடக்கின்றது.
ஷஷபறங்கியர் தமிழரசரின் பரம்பரையான முறைகளைப் பெரும் பாலும் மாற்றாது கைக்கொண்டனர். அரசாட்சி விசயத்தில் யாழ்ப்பாண நாடு முன்போலவே வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி, பச்சிலைப்பள்ளி என்னும் நான்கு பிரிவுகளை உடையதாய் இருந்தது.|| 6
என்ற குறிப்பின்படியும் 1658ஆம் ஆண்டளவில் போல்டியல் பாதிரிதான் யாழ்ப்பாணத்திற் கண்ட கிறிஸ்தவ தேவாலயங்களைப் பற்றிய குறிப்பில் வடமராட்சியில் சட்டவேலி, உடுப்பிட்டி, பருத்தித்துறை ஆகிய இடங்களில் மூன்று தேவாலயங்கள் இருந்ததெனக் குறிப்பிட்டு;ளளார். 7 போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்று முன்பே இவ்வாட்சிப் பிரிவு இருந்திருக்கக்கூடுமென எண்ணத் தோன்றுகிறது. யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்த அரசை ஐப்பசி மாதம் 31ஆம் திகதி வரைந்த கட்டளையிலே பின்வருமாறு குறிப்பிட்டு இருப்பதைக் காணமுடிகிறது.
ஷஷவடமராட்சிப் பிரிவுக்குக் கனகராயர் இப்பற்றுக் கம்பளி முதலியார் டொன்மானுவேல் சேனரட்ன முதலியாரும் இறைசுவதேரும். ஷஷதிறவெற் வெந்தூன மாப்பாண|| - கிளாக்கு. 8
இவற்றிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி என்ற நிர்வாகப் பிரிவு பல்லாண்டுகளின் முன்பே வகுக்கப்பட்டதென்று அறிய முடிகின்றது. 19ஆம் நூற்றாண்டில் வெளிவான பத்திரிகைகளில் வடமராட்சி வடமிறாட்சி என்றே குறிக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. அரசாட்சியும் அரசவைச் சூழலும் இப்பகுதியின் ஆரம்பக்காலக் கல்வி மரபுக்கு ஷஷஅடியத்திவாரமாக|| அமைந்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகின்றது.
1 . 3 சமூகம்
வடமராட்சியின் சமூக அமைப்பினை நோக்கும்பொழுது அங்கே பல்வேறு வகையான சாதிப்பிரிவுகளும் காணப்படுகின்றன. ஆனால் ஒரேஇன மக்களே (தமிழர்) இங்கு நிரந்தரமாக வசிக்கின்றனர். பல்லாண்டுகளாக இச்சாதிப் பிரிவுகள இங்கு நிலவி வருவதாகத் தெரிகின்றது. கல்விப் பாரம்பரியத்திற்கும் இலக்கிய உருவாக்கத்திற்கும் இச்சாதிப் பிரவுகளுக்கும் மிக நெருக்கமான தொடர்புண்டு. ஆரம்ப காலக் கல்வி மரபு சாதியடிப்படையிலேயே நிலவி வந்துள்ளது.
பொருளாதார நிலைப்பாட்டிற்கும், நிலவுடைமைக்கும், சாதிப்பிரிவுகளுக்குமுள்ள இறுக்கமான தொடர்பு, சமூக அந்தஸ்தையும் கல்வியையும் வெகுவாகப் பாதித்துள்ளது. வடமராட்சியை இதற்கு வகைமாதிரியான உதாரணமாகக் கொள்ளலாம். அடுத்துவரும் அத்தியாயங்களில் இப்பகுப்பு விரிவாக ஆராயப்படவுள்ளது.
1 . 4 பொருளியல்
வடமராட்சிப் பகுதியின் பொருளியற் போக்கினை நோக்கும் பொழுது நாம் ஏலவே குறிப்பிட்டது போல் விவசாயம், வணிகம், மீன்பிடி, கைத்தொழில்கள் என்பனவே முக்கியம் பெறுகின்றன. ஐரொப்பியர் வருகையும், ஆங்கிலக் கல்வியும் இப்பொருளியற் பாங்கினைச் சிறிது சிறிதாகத் தகர்ந்துள்ளமையும் மனம்கொள்ளத் தக்கது.
விவசாயம், கடற்றொழில், கைத்தொழில் ஆகியவற்றினூடு நிலவி வந்த வாய்மொழி இலக்கியத்தின் வளத்தினையும், அறாத்தொடர்ச்சியையும் இன்றும் வடமராடசிப் பகுதியிலே சிறப்பாகக் காணலாம். இன்று பெரும்பான்மையோர் அரசாங்க உத்தியோகங்களை வகித்தபோதும் கிராமங்கிளல் வாய்மொழிப் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது. வடமராட்சிப் பகுதியில் பல்வேறு சாதிகளுள்ளும், ஆசிரியர்கள் அதிகமாகக் காணப்படுகின்றமைக்கு அடிநிலையாகக் காணப்பட்டது. இப்பகுதியின் பாரம்பரியக் கல்வி மரபு என்றே கருதவேண்டும்.
வடமராட்சியின் பொருளியல் அமைப்பு, சமூகவாழ்க்கை, கல்விப் பாரம்பரியம் அனைத்தும் புவியியல் அமைப்பின் செல்வாக்குடன் பெரிதும் தொடர்புகொண்டு காணப்படுவது உண்மையே. கரையோரங்கள் கடல் சார்ந்திருப்பதும், தமிழகம் அண்மையிலிருப்பதும் வாய்ப்பான கப்பற்துறைகள் காணப்படுவதும் பொருளியல் வாழ்வோடு மட்டும் தேங்கி விடாமல், கல்விப் பாரம்பரியம், சமயம், பழக்கவழக்கம் என்ற பண்பாட்டு அம்சங்களோடும் இப்பகுதியை இணைத்துவிட்டது எனலாம்.
வடமாராட்சியில் விவசாயம், மீன்பிடி போன்ற பெருந்தொழில்களை விட மட்பாண்டம வனைதல், பெட்டி பாய் கடகம் பின்னல்.9 நெசவு வேலை, தச்சுவேலை, கொல்லவேலை பொன்ற பல்வேறு கைத்தொழில்களும் நடைபெறுகின்றன. பாரம்பரியத் தொழில்களுக்கும், சமூக, சாதிப் பிரிவுகளுக்குமூடே சிறப்பான ஒரு கல்விப் பாரம்பரியம் வடமராட்சியில் நிலவி வந்துள்ளமை அவதானிக்கத்தக்கது.
1 . 5 சில பண்பாட்டு அம்சங்கள்
யாழ்ப்பாணத்தின் பண்பாட்டம்சங்கள் வடமராட்சிக்குப் பொதுவாக அமைந்தபோதிலும் சிலவகையிற் தனித்துவமுடையவையாகவும் காணப்படுகின்றன. கல்வித்துறை தவிர்ந்த உணவு, உடை, விளையாட்டுப் போன்றவற்றிலும் சில தனித்துவத்தினை இப்பகுதியில் காணலாம்.
பண்பாட்டின் ஒரு அம்சமான உணவுவகையிலும் இப்பகுதி சிறப்பான சில தன்மைகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லெண்ணெய் உபயோகம், தோசை, ஷஷபருத்தித்துறை வடை||, மீன் தீயல் (அவியல்), பிண்ணாக்கு என்பவை ஈழமெங்கும் பிரசித்தமானவை. பல்வேறு வகையான பலகாரவகைகளும் இப்பகுதியில் இன்றும் விற்பனையாவதுண்டு. 10
வடமராட்சிப் பகுதியில் பெண்கள் பெரும்பாலும் 18ஆம் நூற்றாண்டின் மத்தியபகுதிவரை ஷஷகுறக்குக்கட்டு||க்காரராகவே இருந்தார்கள் என்று கூறப்படுகின்றது. குடாநாட்டின் மற்றைய பகுதிகளில் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த பெண்களே குறக்குக்கட்டுக்காரர்களாக இருக்கின்றனர். ஆனால், வடமராட்சியில் உயர்சாதிப் பெண்களும் அண்மைக்காலம் வரை ஷஷகுறக்குக்கட்டு|| க்காரர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்றும் வயது முதிர்ந்த உயர்சாதிமூதாட்டிகளிடையே இப்பண்பினைக் காணலாம். வடமராட்சியின் சில பகுதிகளிற் திருமணமான நடுத்தரவயதைத் தாண்டிய பெண்கள் சட்டையின்றித்தாவணி போடும் வழக்கமும் உண்டு. தாவணித் தொங்கலிற் திறப்புப் போன்ற ஒரு பொருளை முடிந்து முதுகுப் பக்கமாக விட்டிருப்பர்.
ஷஷதையலர் மேலெறித் தாவணித் தொங்கல் வளமைகண்டு
பொய்யிடை வள்ளியின் தாய்மனையிந்தப் புலொலியெனும்||11
என்னும் பாடல் அடியின் மூலம் இப்பண்பாட்டினைக் கண்டுகொள்ளலாம்.
வடமராட்சிப் பகுதியில் நடைபெறுகின்ற விளையாட்டுக்களைக் கவனிக்கும்போது அவை பாரம்பரிய விளையாட்டுக்களையே பெரும்பாலும் கடைப்பிழத்து வந்துள்ளன. இன்றும் சிறுவர்கள் ஷஷஅம்பெறிதல்|| என்னும் விளையாட்டை விளையாடுவர். இவ்விளையாட்டைக் குடாநாட்டின் மற்றைய பகுதிகளில் காண்பது கடினம். இதைவிட மாட்டுவண்டிச் சவாரி, கிளித்தட்டு (யாடு), ஷஷபோர்த்தேங்காயடி|| என்பவை சிறப்பாகக் குறிப்பிடக்கூடியவை. சித்திரை வருடப்பிறப்பு, சித்திரா பூரணை நாட்களிற் பெரியவர்களும் இப்பகுதியில் (அண்மைக் காலம்வரை) போர்த் தேங்காய் அடிப்பது வழக்கம்.
மொழிநிலை
இவ்வாறான பண்பாட்டுத் தனித்துவமுடைய வடமராட்சிப் பகுதியில் வழங்கும் மொழிநிலையும் நோக்கத்தக்கது. சாதாரண பேச்சுவழக்கிலும், உரையாடலிலும் இலக்கணச் சுத்தமான பல சொற்களைக் கையாளுவதை அவதானிக்கலாம். வடமராட்சிக்குள்ளேயே கிராமங்களுக்குக் கிராமம் வேறுபாடான சொற் பிரயோகங்களைக் கையாளுவதையுங் காணலாம். ஒலியமைப்பிலும், உருபன்களிலும் அவை வேறுபாடுடையவை. நல்ல தமிழ்ச் சொற்களை நாகரிகம் கலவாத தாழ்த்தப்பட்டோர் எனக் கருதப்படுகின்ற மக்களிடையே அதிகமாகக் காணலாம்.
மூடல் (ஓலையாற் பின்னப்பட்ட சிறிய பெட்டி), மள்ளாக் கொட்டை (நிலக்கடலை), போக்கணம் (மரியாரை), அயத்து (மறந்து), இணல் (நிழல்), பூழம் (வெறும்), வெள்ளண (நேரத்துடன்), பீலிப்பட்டை (தண்ணீர் இறைக்க ஓலையாலிழைக்கப்பட்டது), சவுக்கம் (சால்வை), பச்சடி (சம்பல்), கையில் (தேங்காய்ப்பாதி), பொட்டழி (துணிமூட்டை) போன்ற பல்லாயிரக்கணக்கான சொற்களை உதாரணமாகக் காட்டலாம். இவற்றைவிட ஷஷசிலுவல்|| (உதவாத), நாறல் (உதவாத, பழுதான), பண்ணிப்போட்டாய் (ஒன்றும் செய்யமுடியாத) போன்ற சொற்பிரயோகங்களும் வழக்கிலிருக்கின்றன. வடமராட்சியின் இலக்கிய வளத்தின் கணிசமான பகுதியை இச் சொற்களிலே காணலாம். பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பண்டிதர் ச. வீரக்தி, செ. கதிர்காமநாமன், புலொலியூர் சதாசிவம், தெணியான் முதலியோரின் படைப்புகளில் வடமராட்சிக்கே உரித்தான பல பேச்சு மொழிச் சொற்களையும் தொடர்களையும் காணலாம்.
யாழ்;ப்பாணக் குடாநாட்டில் மட்டுமன்றி இலங்கை முழுவதற்கும் வியாபித்த அரசியல் பொருளியற் கருத்துக்கள் பல வடமராட்சிப் பகுதியிலே முளைவிட்டமை நோக்கத்தக்கது. உதாரணமாக 1931ஆம் ஆண்டு சட்ட நிரூபண சபைளில் பே. பாலசிங்கம் இலங்கைக்கு சுயமொழிக் கல்வியின் அவசியத்தையும், மகாவலி வடக்கே திசைதிருப்பப்படுவதன் அவசியத்தையும், சுதெச வைத்தியத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திப் பேசினார். 12 கே. பாலசிங்கம் வடமராட்சியின் பிரசித்தி பெற்ற மரபுவழிக் கல்வி அறிஞரின் மரபினிலே வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரைப்போலவே ஈழத்துக்குப் பொதுவான அரசியற் பொருளாதாரக் கருத்துக்களை முன்வைத்த மர்மகுலசிங்கம், பொன். கந்தையா, ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றவர்களும் வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலிருந்து முகிழ்த்தவர்களே. வடமராட்சியின் தனித்தன்மைக்கும், சிறப்புக்கும் அடிநாதமாக இப்பகுதியில் நிலவிவந்த கல்விப் பாரம்பரியத்தினையே கொள்ளவேண்டியிருக்கிறது.
அடிக்குறிப்புக்கள்:
1. யாழ்ப்பாண வைபவ கௌமுதி – பக். 133
2. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் - இந்திரபாலா கா. பக். 67
3. கைலாயமாலை - ஷஷ..... ..... மாரன் கனக மழவனைப் பின் நால்வருடன் சேரும் புலோலி திகழவைத்து ...... || பக். கசு.
4. சிங்கைநகர் – முதலியார் குல, சபாநாதன், சமூகத் தொண்டன் ஆண்டு மலர் 1961 – பக் 47
5. இலங்கைவாழ் தமிழர் வரலாறு – பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை – பக். 23. ஆவணி 1956 பேராதனை
6. யாழ்ப்பாண வைபவ கௌமுதி – பக். 73.
7. போல்டியஸ் - இலங்கைச் சரித்திரம்.
8. யாழ்ப்பாண வைபவ கௌமுதி – பக். 120
9. ஷஷபெட்டி பாய் குட்டான் பெயர்பெறு கதிர்ப்பாய் அடுக்குப் பெட்டியு மருவிலை மூடலும் பிட்டவி நீத்துப் பெட்டியும்|| - காதலியாற்றுப்படை பேராசிரியர் கணபதிப்பிள்ளை
10. சுழகிற் பரப்பி விலையது கூறும்
கமழ்தரு செம்பனங் காய்ப்பணி யாரமும். -காதலியாற்றுப்படை
11. செழுங்கமலச் சிலம்பொலி – க.வீ.பக். 43.
12. கே. பாலசிங்கம். சட்டநிரூபண சபைப் பேச்சு, - 1931 ஈழகேசரி.
இயல் இரண்டு
வாய்மொழிப் பாரம்பரியம்
2 . 1 நாட்டுப் பாடல்கள்
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கிய வளத்தினையும் ஆராயும்பொழுது, வாய்மொழி இலக்கிய மரபினையும், அம்மரபிலிருந்து முகிழ்த்த எழுத்திலக்கிய மரபினையும் அறிவது அவசியமாகின்றது. வாய்மொழி இலக்கிய மரபே எழுத்தினாலான உயரிலக்கியங்களுக்கு ஊற்றுக்காலாக அமைந்தமையையும் வடமராட்சியின் இலக்கிய வளத்தினூடு தரிசிக்க முடிகிறது. எழுத்து இலக்கிய ஆற்றலும் ஆளமையும் வாய்மொழி மரபுவழியே வளர்ந்துவந்துள்ளமையையும் இப்பகுதியிலே காணமுடிகிறது.
வாய்மொழி மரபு வடமராட்சியில் பல்வேறு கிளைப்பாடுடையதாகக் காணப்படுகின்றது. இக்கிளைப்பாட்டின் ஒன்றான நாட்டார் பாடல்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகின்றன. மருத்துவிச்சியின் வாழ்த்துப் பாடல், தாலாட்டு, விளையாட்டுப் பாடல்கள், சடங்குப் பாடல்கள், தொழிற் பாடல்கள், ஒப்பாரி ஆகியவை சாதாரண ஒரு மனிதனின் வாழ்க்கை பிறப்பு, வளர்ப்பு, திருமணம், வழிபாடு, தொழில், மரணம் என்ற சுடற்றுவட்டத்துள்ளேயே தொழிற்படுகின்றன. வசதிகளும் வாய்ப்புகக்ளும் வளருவதற்கு முன் குழந்தைகள் வீட்டிலேயே பிறந்தனர். பிள்ளைப்பேறு பார்க்கும் மருத்துவிச்சி(அநேகமாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அனுபவதுமுள்ள மூதாட்டிகளே மருத்துவிச்சிகளாகப் பணிபுரிந்துள்ளனர்.) வாழ்த்துப் பாடலை பாடுவாள். இப்பால்கள் ஆண் குழந்தைகளுக்கு வேறாகவும் பெண் குழந்தைகளுக்கு வேறாகவும் அமையும்.
ஷஷஅரிசிப் பொதியோடும் வந்தீரோ தம்பி
அரிசி மலைநாடும கண்டீரோ தம்பி
உள்ளிப் பொதியோடும் வந்தீரோ தம்பி
உள்ளி மலைநாடும் கண்டீரோ தம்பி||
போன்ற ஆண்குழந்தை வாழ்த்துப் பாடலை உதாரணமாகக் காட்டலாம்.
குழந்தை வளரத் தொடங்கத் தொட்டிலிலே போட்டுத தாலாட்டுவர். இத் தாலாட்டுப் பாடல்களைத தாய்மார் பாடும்பொழுது இரண்டு மூன்று வீடுகளுக்குக் கேட்கக்கூடியதாகப் பாடுவதுமுண்டு. தாலாட்டின் ஷஷஇழுமென்|| ஓசையும் தொட்டிலின் அசைவும் ஒன்று சேரக் குழந்தை தன்னை மறந்து தூங்கிவிடும். படிப்பறிவற்ற கிராமியப் பெண்கள் தாலாட்டுப் பாடல்களில் வாய்மொழி இலக்கியத்தின் முக்கிய அம்சமான வாய்ப்பாட்டுத் தன்மையைக் காணலாம். இவ்வாய்ப்பாட்டுத் தன்மையே தாலாட்டைத் தாங்கிநிற்பதையும் அவதானிக்க முடிகின்றது. அதிகமாக மெல்லோசைச் சொற்களே தாலாட்டில் இடம்பெறுவது முக்கியமான அம்சமாகும். தாய்மாரின் மன உணர்வுகள், மன உழைச்சல்கள், உறவுமுறைகள், எதிர்பார்ப்புக்கள் என்பனவெல்லாம் தாலாட்டில் பதிவாகியிருப்பதை அவதானிக்கலாம்.
குழந்தை பிறந்து 31ஆம் நாள் தொட்டில் கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். தாய்மாமனே தொட்டில்; கட்டவேண்டுமென்ற நம்பிக்கையொன்றும் உண்டு. இன்றும் இப் பழக்கம் வழக்கிலிருக்கிறது.
ஆராரோ, ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ
எனத் தொடங்கிச் சில சம்பவங்களையும் சுட்டிப் பாடுவார்கள். உதாரணமாக,
தொட்டில் கட்ட வந்த அம்மான்
பட்டினியே போறாராம் .......... ஆராரோ ...........
என்ற தலாட்டினைச் சுட்டலாம்.
ஒல்லாந்தர் வடபகுதியைப் பல்வேறு கோயிற்பற்றுக்களாகப் பிரித்தனர். வடபகுதியிற் கட்டைவேலிக் கோயிற்பற்று என்பதும் ஒன்று. இப்பகுதியில் இருந்த தொன்மை வாய்ந்த சிவன் கோயில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் கட்டைவேலித் தேவாலயம் அமைக்கப்பட்டது. கிறிஸ்தவத்தின் வருகையையும் அதனால் சிதையும் மரபுவழிக் கல்வி முறையினையும் கண்டு எள்ளிநகையாடுவன் போன்ற நாட்டார் பாடல்கள் வடமராட்சியின் முக்கிய பகுதிகளிலொன்றான கரவெட்டிப்பகுதியிலே நிலவிவருகின்றன. 1
இவற்றைவிடச் சிறுவர்கள்
ஷஷகண்ணாரே கடையாரே காக்கணம்
பூச்சியாரே,
கோச்சி என்ன காய்ச்சினாள்?
கூழ்.
கூழுக்குக் கறியென்ன?
புழு.
பெரும் புழுவாய் பிடிச்சுக்கொண்டு
ஓழவா
என்;று விளையாடுவதும்
துள்ளுப் பினாட்டு குறாப் பினாட்டு
கொக்கா தலையிலே என்ன பூ?
முருக்கம் பூ
முருக்குத் தழைச்ச முன்னு|று மாம்பழம்
பட்டையிக்கை வைச்ச
பழஞ்சோறெங்கே?
பண்டிதிண்டுட்டுது
பண்டிக்கு மேலே படுவான் மிளைககச்
செட்டியாபிள்ளை
ஒருகையை மடக்கெண்டால்
துடக்கு.
சிறுவர்கள் கூடி வட்டமா இருந்து கைகளை நிலத்திலே பதிய வைத்து வினாவும் விடையுமாகப் பாடி விளையாடுவதுமுண்டு.
சிறுவர்கள் ஊஞ்சல் கட்ட ஆடுவர். பெரிய ஊஞ்சலை ஷஷஅன்ன ஊஞ்சால்|| என்று அழைப்பர். அன்ன ஊஞ்சால் கட்டி ஆடம்போது பின்வரும் பாடலைப் பாடுவர்.
கச்சாயிற் புளியிலே ஊஞ்சாலும் கட்டி
கனகரா தோப்பிலே தோட்டமும் செய்து
வெட்டாத செவ்விளனி வெட்டி மடைபோட்டு
எரியாத கற்பூரம் எரித்து மடைபோட்டு||
என்பன போன்ற ஊஞ்சற் பாடல்களையும் பாடி விளையாடுவர்.
வடமராட்சியின் கடற்கரையையண்டிய பகுதிகளான கற்கோவளம், நாகர்கோவில் போன்ற இடங்களில் கரைவலை இழுக்கும்போது பாடும் பாடல்கள் இலக்கிய வளமும் சுவையும் கொண்டவை. உதாரணமாக நாகர்கோயிற்பகுதி மீனவர்கள் பாடும் பாடலைக் காண்போம்.
ஏலெலங்கிடி ஏலெலையா
கறுப்பி வாடி காரில போவோம்
ஏலேலங்கிடி ஏலேலையா
சிவப்பி வாடி ஜீப்பில போவோம்
ஏலேலங்கிடி ஏலேலையா
கையிலை ரண்டு கலாவரை மோதிரம்,
ஏலேலங்கிடி ஏலேலையா
சுதுமலை மச்சாள் சுதியான பெட்டை,
ஏலேலங்கிடி ஏலேலையா
ஆரெடா சண்டியன் நேரிலை வாடா,
ஏலேலங்கிடி ஏலேலையா
பருத்துறை மாப்பிளை எடுத்துறைப் பெம்பிளை
என்ற பாடலும், இதுபோன்ற பல்வேறு பாடல்களும் இன்றும் வழங்கிவருகின்றன.
வடமராட்சியின் வாய்மொழிப் பாரம்பரியத்தில் ஒப்பாரிக்கும் முக்கியத்துவம் உண்டு. சோக உணர்வை, ஷஷமனப்பாரங்களை|| இ;வ்வொப்பாரிகளிலே காணலாம். வடமராட்சிப் பகுதியில் ஒப்பாரிகள் பெருமளவு வழங்கிவருவது போலக் குடாநாட்டின் மற்றைய பகுதிகளில் இல்லையென்றே குறிப்பிடவேண்டும். இழவு வீடுகளிலே ஒப்பாரிகளின் ஓறையை இன்றும் தாராளமாகக் கேட்கலாம். வயது வந்த மூதாட்டிகள், நடுத்தர வயதுப் பெண்கள் மிகவும் லாவகமாக ஒப்பாரிகளைப் பாடுவர். வாய்ப்பாட்டு ரீதியாக அமையும் ஒப்பாரிகளில், இடையிடையே சொற்கள், இயைவுபடாது, எதுகைமோனை தப்பி விழுந்துவிடுவதுமுண்டு. இக்குறைபாட்டை ஒருவகை ஓசையால் பெண்கள் நிரப்பிவிடுவார்கள். வடமராட்சியின் சில பகுதிகளின் பொருளாதார அமைப்பின் முக்கிய அம்சமாகப் பெண்கள் மரக்கறி வியாபாரம் செய்து பொருளீட்டுவதும் ஒன்றாகும். நெல்லியடி, பருத்தித்துறை, சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் போன்ற சந்தைகளில், இவர்கள் வியாபாரம் செய்வது வழக்கம். (இப்போ இம்முறை அருகி வருகிறது). எனவே தாய் இறந்தபோது மகள் கூறும் ஒப்பாரி இப்பொருளாதார நிலையினைச் சுட்டுவதாக அமைகின்றது. வகை மாதிரிக்காக ஒன்றைச் சுட்டலாம்.
அம்மா நீ
வாip வரத் திண்டிருந்தன் - என்ரை
வன்ன வண்டி வாடுதணை............
நீ .............
கோலிவரத் திண்டிருந்தன் - என்ரை
கோல வண்டி வாடுதணை.
உறவினர்கள் மத்தியில் ஏற்படும் தகராறுகளையும் தொல்லைகளையும் எல்லோரும் ஒன்றாகச் சந்திக்குமிடமான சாவீட்டிலே சொல்லித் ஷதீர்ப்பதும்| இப்பகுதியின் மரபாகும். அவ்வாறு சொல்லித் தீர்ப்பதன் மூலம் ஒருவித மன அமைதியும். ஆறதலும் ஏற்படுவது. இயல்பானதே. ஒரு பெண் தங்களுடன் சண்டை பிடித்துத் தொந்தரவு கொடுக்கும் உறவினரைச் ஷசாட்டிப்| பாடிய ஒப்பாரி இவ்விடத்தே கவனிக்கத்தக்கது.
என்ரை அப்பு .................. இவை
சீனத் துவக்கெடுத்து – எங்களைச்
சிதற வெடி வைக்கினமே ...............
என்ரை அப்பு - இவை
பாரத் துவக்கெடுத்து – எங்களைப்
பதற வெடி வைக்கினமே..............
என்ரை அப்பு
நான் படலையிலை ஆமணக்கு
என்ரை அப்பு, நானவைக்கும்;
பாவக்கா யாகினனே,
வேலியிலை ஆமணக்கு
என்ரை அப்பு, நானவைக்கு
வேப்பங்கா யாகினனே.
இவ்வாறாக, வடமராட்சிப் பகுதியின் வாய்மொழி இலக்கிய மரபான நாட்டார் பாடல்கள் பிரதேசத்தின் பண்பாடு, பழக்கவழக்கம் போன்ற பல்வேறு அம்சங்களையும் பிரதிபலிக்கின்றது. ஆரொக்கியமான ஓர் இலக்கியப் பாரம்பரியம் தோன்றும் பிரதேசத்தில் வாய்மொழி இலக்கிய வளமானதாகவும், உரமானதாகவும் இருக்கவேண்டும் என்பதற்கு வடமராட்சி ஒரு வகைமாதிரியாக அமைந்திருக்கிறது எனலாம்.
வடமாரட்சியின் வாய்மொழி இலக்கியத் தொடர்பில் பழமொழிகளும் முக்கியம் பெறுகின்ற. குடாநாட்டின் மத்திய பகுதிகளில் அதிகம் நடைமுறையில்லாத பல பழமொழிகளை இப்பிரதேசத்தில் இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது. ஷஷபிச்சையெடுக்குதாம் பெருமாள், அதைப் புடங்குதாம் அனுமார்||. ஷஷஅதுகும் பிரண்டேப்பை, இதுகம் கழண்டேப்பை|| என்பன போன்ற பழமொழிகளைப் படித்தவர்களும் பாமரர்களும் கையாளுவதைக் காலாம். தாம் கூறப் புகந்த வி~யத்திற்கு அழுத்தம் கொடுக்கவே இப்பழமொழிஜகளைக் கையாளுகின்றனர். வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியத்தின் ஷஷவாடையை|| இப்பழமொழிகளிலேயும் காணலாம்.
||வெட்டிய கட்டுத் தலைமே லேற்றி
நீண்ட வழியைத் தாண்டிக் காலன்
வருபெருங் கூட்ட நகையினம் பெண்டிர்||
-காதலியாற்றுப்படை
பேராசிரியர் கணபதிப்பிள்ளை
வடமராட்சிப் பகுதியில் விறகுவெட்டித் தலைமேற் சுமந்து வந்து வியாபாரம் செய்யும் அடிநிலை மட்டத்திலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் பாடும் பாடல்களும் குறிப்பி;டத்தக்கவை. அவை தனித்தனியான நாட்டார் பாடல்கள், பிரசித்தி பெற்ற கூத்துப் பாடல்கள் (இப்போ சினிமாப் பாடல்கள்) என்பனவாகும்.
2 . 2 கூத்துமரபு
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய வளத்திலும் கூத்துக்கள் பெறும் முக்கியத்துவம் குறிப்பிடக்கூடியது. பண்டைய கூத்துக்களின் வளர்ச்சிப் படிகளைப் பல்வேறு வகையில் இப்பகுதிகளிலே காணலாம். பெரும்பாலும் பின்தள்ளப்பட்ட சமூகங்களிடையே இக்கூத்துமரபு நிலைபேறு உடையதாகக் காணப்படுகிறது. பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில்; ஒவ்வொரு கிராமங்களிலும் மாதத்திற்கு நான்கு, ஐந்து கூத்துக்களும் நடைபெறுவதுண்டு. நெல்லண்டைப் பத்திரகாளி கோயிலில் ஒரு மாதத்தில் 15, 20 கூத்துக்களும் நடைபெற்றதுண்டு, பெரும்பாலும் இக்கூத்துக்கள் நேர்த்திக்கடன்களுக்காகவே போடப்படும். இதனால் இவை சமயச் சார்புடைய கதைகளைக் கொண்டவையாகவும் அமைகின்றன. கூத்துக்கள் கோயில் வீதிகளில், அல்லது கோயிலைச் சூழவுள்ள வயல் வெளிகளிற்றான் நடைபெறும். சிறுபான்மையாகச் சமயச் சார்பற்றவையாகவும், சில கூத்துக்கள் நிகழ்வதுண்டு.
வடமராட்சிப் பகுதியில் பெரும்பான்மையாகக் கூத்துமரபினைப் பேணுபவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே. இக்கூத்து நிகழ்வுகள் சமயச் சார்புடையவையாக அமைகின்ற அதேவேளையில் ஒரு சாதியின் ஷஷஒன்றுகூடல்|| நிகழ்ச்சியாகவும் அமைவதுண்டு. பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் தங்கள் சாதியினர் ஆடம் கூத்தினைப் பார்க்க ஆண்கள், பெண்கள், குழந்தைகள் யாவரும் கூத்தாடுமிடத்திற்குப் ஷஷபாய்||, ஷஷசாக்கு||, ஷஷலாம்பு|| என்பவைகளுடன் நேரத்திற்கே வந்து கூடிவிடுவர்.
எழுத்தறிவுப் பாரம்பரியமற்ற உயர்சாதியல்லாதோர் மத்தியிலே இக்கூத்து மரபுதான் எழுத்தறிவுப் பாரம்பரியத்தின் தோற்றுவாயாகவும் அமைகிறது. வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியத்தில் தாழ்த்தப்பட்டோரின் கல்வி வளர்ச்சிக் கட்டத்தினை ஆராயும்பொழுது முதன் முதலில் அண்ணாவியின் மகனோ மருமகனோதான் எழுத்தறிவுப் பாரம்பரியத்தினுள் காலடி வைப்பதைக் காணமுடிகிறது.
வடமராட்சிச் சமூகத்தில் சாதியமைப்புப் பெறும் முக்கியத்துவத்தினை இக்கூத்துமரபுடன் ஒன்றிணைத்து நோக்குவது கல்விப் பாரம்பரியத்தினையறிய உதவியாகும். உயர் சாதிக்காரர்களில் கூத்துப் பழக்கும் அண்ணாவியை, ஷஷஅண்ணாவியார்|| என ஆர் விகுதி சேர்த்து அழைப்பதும், தாழ்த்தப்பட்டோர் மத்தியில் கூத்துப் பழக்குபவரை ஷஷஅண்ணாவி|| என அழைப்பதும் மரபு. உதாரணமாக அண்ணாவி முரகன், மூத்ததம்பி அண்ணாவியார் என அழைப்பதைக் குறிப்பிடலாம்.
வடமராட்சியின் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களான, அத்துளு, நெல்லண்டை, அல்வாய் முத்துமாரி அம்மன் போன்ற இடங்கள் கூத்துக்களுக்குப் பிரசித்தமானவை. இவ்விடங்களில் காத்தான் கூத்து, அரிச்சந்திரா, பவளக்கொடி, நல்லதங்காள், சாவித்திரி கத்தியவபான் போன்ற மரபு வழிக் கூத்துக்களே பெரும்பாலும் ஆடப்படும். இக்கூத்து மரபின் எச்சசொச்சமாக இன்றும் இப்பகுதியில் இமயன் வேலாயுதம், சுபத்திரை ஆழ்வார், மூளிப் பொன்னு, நாரதர் கந்ihயர், அனுசூயா வேலுப்பிள்ளை, சகுனி கந்தன் போன்ற ஷஷவிருதுப்|| பெயர்கள் நின்று நிலவுகின்றன. இவை அவர்கள் ஏற்று நடித்த பாத்திரங்களின் நடிப்புச் சிறப்புக் கருதியிடப்பட்டவையாகும். கூத்தாடுபவர்களு;ககும் கூத்துப் பழக்குபவருக்கும் ஒரு மட்டத்தில் சமூக மதிப்பு வழங்கப்பட்டமையையும் காணமுடிகிறது.
வடமராட்சிப் பகுதியில் புகழ்பெற்ற அண்ணாவிகளாக அண்ணாவி தம்பையா (தும்பளை), அண்ணாவி ஆறுமுகம், அண்ணாவி சரவணமுத்து (அல்வாய்), அண்ணாவி ஆழ்வார்;, மூத்ததம்பி (கரவெட்டி), அண்ணாவி செல்லையா (மாதனை), அண்ணாவி மகாலிங்கம் (துன்னாலை), அண்ணாவி கணபதிப்பிள்ளை, பொன்னு (நெல்லியடி) போன்றோரைக் குறிப்பிடலாம்.
ஷஷநாடகத் தமிழை நன்கென உணர்ந்தோன்
ஆடலும் பாடலும் அமைவரு மாசான்
அண்ணாவி தம்பையன் அருமையாய்ப் பழக்கிய
விலாசம் பார்க்க வெற்றிலை யருந்தி
விரைந்து விரைந்து நடப்போர் குழாமும்||
எனப் பேராசிரியர் கணபதிப்பிள்ளை குறிப்பிடுவர் கவனிக்கத்தக்கது.
வடமராட்சியின் கிழக்குக்கரையை யண்டிய பகுதிகளில் (குடத்தனை, குடாரப்பு, அம்பன்) கிறிஸ்தவக் கூத்து மரபுகளும் வளர்ந்துவற்துள்ளன. வடமராட்சியின் கிழக்குக் கரையிலிருந்து ஷஷதாசீசியஸ்|| போன்ற சிறந்த நெறியாளனைத் தந்ததும் இக்கூத்துமரபே யெனலாம்.
இப்பகுதிளிக் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கியவளத்தினையும் கூத்துமரபும் தாங்கிநிற்பது அவதானிக்கக்கூடியது.
அண்ணாவிகள் இயற்கைப் புலமை படைத்தவராக இருத்தல் சிறப்பான பண்பாகக் கருதப்பட்டது. கற்பனை வளமும், உணர்வுச் சிறப்பும் உள்ள பாடல்களைச் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப எழுந்த மானமாகப் பாடும் வல்லமை இவர்களிடையே காணப்பட்டது. இலக்கியவளத்தினைப் பொறுத்தவரையில் இவ்வண்ணாவிமாரின் பங்களிப்பு மகத்தானது. சாதி ஒழிப்பு, சமூகச் சீர்திருத்தம் என்பனவற்றிற்காக் கதைத் தொடர்பின்றி இடையிலே இவண்ணாவிமாரே இயற்றிப் ஷஷபக்கப்பாட்டாகப்|| பாடுவதும் வழக்கம். சில பாடல்களை ||பெட்டிக்காரர்களும்|| பாடுவார்கள்.
சந்தச் சுவையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபடக்கூடியதாகவும் இப்பகுதி அண்ணாவிமார்கள் பாடக்கூடியவர்கள். இவ்வண்ணாவிமார்களில் பலர் எழுத்தறிவுப் பாரம்பரியத்திற்கும், வாய்மொழிப் பாரம்பரியத்திறகும் பாலமாக அமைந்தவர்கள். இவர்களுள் வாய்மொழி மரபில் இருந்து எழுத்திலக்கிய மரபினுள் காலடிவைத்த எம.வீ. கிரு~;ணாழ்வார் போன்ற அண்ணாவினளே விதந்தோதலாம்.
அண்ணாவி ஆழ்வார் என அழைக்கப்டப்ட எம். வீ. கிரு~;ணாழ்வார் கூத்தாடிய காலத்தில் ஒருமுறை ஊர் |அடங்கலும்| ஷஷசிரங்கு|| என்னும் சருமவியாதி நடந்துகொண்டிருந்ததாம். ஆழ்வார் மேடைக்கு வந்து நடககும்பொழுது முன்னுக்கிருந்த சிறுவர் தூங்கிவழிந்தபடி சிரங்கைச் சொறி;ந்துகொண்டிருந்தார்களாம். தனது கட்டம் முடிந்து போன ஆழ்வார் சிறிது நேரத்தின் பின் பக்கப்பாட்டுக்காரனுக்குப் பக்கத்தில் வந்துநின்று உடனே இயற்றி சிரங்கைப் பற்றி ஒரு பாடல் படினாராம்.
ஷஷசிரங்கப்பனாரே கு~;டராஜன் பெற்ற
செல்வக் குபெரா
அகங்கைக்கும் புறங்கைக்கும்
அழகான முழங்கைக்கும்
சொறியச் சொறிய நல்ல
சுகத்தைத் தந்தாயே – சிரங்கப்பனாரே
(தகவல்: அண்ணாவி சரவணமுத்து, அல்வாய் - ஆழ்வாரின் மாணவனும் சகபாடியும்.)
அண்ணாவி ஆழ்வார் வயோதிபகாலத்தில் ஷஷபபூனாக||வும் நடித்துள்ளார். அத்துளு அம்மன் ஆலய முன்றிலில் நடந்த ஷஷகண்டிராசன்|| நாடகத்தில் இவர் பபூனாக நடித்ததை நான் பார்த்தேன். தன்னை ஒரு மரமேறிக் கள்ளுச் சேர்ப்பவனாகப் பாவனைசெய்து அவர் பாடிய பாடல் சுவையும் பொருளும் நிறைந்தது.
சோக்கான தென்னங்கள்ளு
சொக்கவைக்கு மெந்தன் கள்ளு
சோதித்துக் குடித்துப் பார்க்க
வாருங்கோ நயினார் – உங்களைச்
சூறையாட்டி விழுத்தாவிட்டால்
கேளுங்கோ நயினார்.
கொப்பாட்டன் பாட்டனெங்கள்
கோந்துறுவும் மாந்துறுவும்
தப்பாமங் சீவிப் புகழைத் தாவினோம் நயினார்
எப்போதும் எங்களுக்குப் பெயர்
ஷஷஏற்றந்தான்|| நயினார்.
நெஞ்சை விட்டகலாத இப்பாடல் இன்ஞம் வடமராட்சிப்பகுதியில் ஷஷவாய்மொழிப் பாடலாக|| வழங்கிவருகிறது. இதை இயற்றியவரும் இவரேதானாம்.
இவ்வாறு புலமையும் இலக்கியவளமும் கொண்ட வரகவி கிரு~;ணாழ்வாரைத் தந்தது வடமராட்சியின் முக்கிய கிராமங்களில் ஒன்றான கரவெட்டியே. இவர் பிரதேசங் கடந்த புகழுக்குரியவர்.
வாய்மொழி இலக்கியத்திற்கும், எழுத்து இலக்கியத்துக்குமுள்ள உறவினை நோக்கும்பொழுது, இச் சிரங்குபற்றிய பாடலுக்கும் கவிமணியின் ஷஷமெய்யிற் சிரங்கை விடியுமட்டும் சொறியக் கையிரண்டும் போதாது|| என்ற யாப்பு நெறிப்பட்ட பாடலுக்குமுள்ள நெருக்கம் புலனாகிறது, வாய்மொழி மரபே எழுத்தாக முகிழ்க்கும் என்பதற்கு இதுவம் ஒரு சான்றாகும்.
வடமராட்சியின் கூத்துமரபினைக் கவனிக்கும்போது, கூத்துக்கான உடை அலங்காரம், சீன், ஒப்பனை என்பனவும் இப்பகுதியிலே ஆரம்பித்ததாகக் கூறுகின்றனர். ஈழத்திலேயே முதன்முதல் கூத்துக்கான சீன் வகைகளையும், மணி உடுப்பு – பூச்சுக்கள் இவைகளையும் தமிழ் நாட்டிலிருந்து கொண்டுவந்து வாடகைக்குக் கொடுத்தவர்களும் வடமராட்சியைச் சேர்ந்தவர்களே. பருத்தித்துறை கொட்டடிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இன்றும் ஷஷசெல்வநாயகம் சீன்|| என்று அழைக்கப்படும் செல்வநாயகத்தின் மூதாதையரே, ஷசீனை| முதன் முதல் கொண்டுவந்தவர்களாம் - (தகவல்: தும்பளை வீரசிங்கம் ஆசிரியர்)
வடமராட்சிக் கல்விப் பாரம்பரியத்திலும், இலக்கியவளத்திலும் வாய்மொழி மரபு பெறும் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. நாட்டார் பாடல்கள், கூத்துக்கள், சடங்கு சார்ந்த பாடல்கள் என்பனவெல்லாம் கல்வியையும், இலக்கியத்தையும் உள்ளடக்கியே வளர்ந்துள்ளன.
2 . 3 சிறுதெய்வ வழிபாட்டு மரபு
வடமராட்சியின் வழிபாட்டு நெறிகளுள் பிரசித்தி பெற்ற ஆகம அமைப்புக்குட்பட்ட ஆலயங்கள் எழுத்தறிவுப் பாரம்பரியத்துடன் தொடர்புற்று இயங்கிவர, கீழ்நிலைப்பட்ட, சிறு தெய்வவழிபாட்டு நெறிகள் வாய்மொழி இலக்கியப் பண்பினைப் பேணிவந்துள்ளன. ஒரு, சன்னதம், உச்சாடனம், மந்திரம் என்பவைகளையொட்டியே இவ்விலக்கியம் பாரம்பரியம் நிலவி வந்துள்ளது. ஐயனார், அண்ணமார், பணிக்கர், காளி, கொத்தி போன்ற சிறுதெய்வ வழிபாட்டிடங்களையும், அவைகளைச் சார்ந்த பூசாரிப் பாடல்களையும் ஓளரவு இப்பகுதியிடீல காணலாம். உடு:க்கடித்துப் பேயாட்டம் ஆடும்போது பூசாரிகள் அங்கொன்று மிங்கொன்றுமாகத் தாம் இயற்றியுமு;, முன்னோர் இயற்றியதையும் பாடுகின்றனர். அண்மைக் காலத்தில் இப்பண்பு மிகவும் அருகிவந்துள்ளது. இப்பகுதியின் பல இடங்களில் சிறுதெய்வ வழிபாடும் பெருந்தெய்வ வழிபாடும் இன்று ஒன்றிணைந்து செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பெருந்தெய்வ ஆலயங்களிலேயே தனித்தனி சிறுதெய்வங்களுக்குச் சிறு சிறு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் காணலாம். உதாரணமாக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் கோயிலிலே நாச்சிமாருக்கும், சப்தகன்னியருக்கும் தனித்தனி வழிபாட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். மிக அண்மைக் காலம்வரை பயபக்தியாகப் போற்றபட்டு வந்த வல்லை முனிக்கு இன்று ஆலயம் அமைக்கப்பட்டுள்ளமையும், அதற்கு அருகிலேயே விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறு தெய்வ வழிபாடு பெருந்தெய்வ வழிபாட்டுடன் இணைந்து சென்றுள்ளமையும் அவை ஆகம செறிப்பட்ட பூசைகளையுமு; ஆராதனைகளையும் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. இப்பண்பு தீவடங்கலும் காணப்படுவது உண்மையே. வடமராட்சிப் பகுதியில் சிறுதெய்வ வழிபாட்டு மரபு இன்று பெருமளவு குறைந்துள்ளமை சமூக பொருளியல் மாற்றத்தின் அடியாகவேயெனலாம். சிறுபான்மைச் சமூகத்தவர் மத்தியிலேயே இன்றும் இச்சிறுதெய்வவழிபாட்டு மரபு இன்று பெருமளவு குறைந்துள்ளமை சமூக பொருளியல் மாற்றத்தின் அடியாகவேயெனலாம். சிறுபான்மைச் சமூகத்தவர் மத்தியிலேயே .இன்றும் இச்சகிறுதெய் வவழிபாட்டு மரபு நெறிகள் சிறிதளவு பேணப்படுவதைக் காணலாம்.
வடமராட்சிப் பிரதேசத்தின் வழிபாட்டு நெறிகள் இருமரபுப் பட்டதாக அமைந்துள்ளமை உண்மையே யெனினும் ஆகம நெறிப்பட்ட பெருந்தெய்வவழிபாட்டு மரபே மேலோங்கிக் காணப்படுகின்றது. இம்மேலாண்மையே இப்பகுதியின் மரபுவழிப்ப்ட்ட சமய இலக்கியங்களிலும் பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது.
ஒரு பிரதேசத்தின் பண்பாடு, பழக்க வழக்கம் என்பன அப்பிரதேசத்தின் இலக்கிய வளத்தினையும், வாழ்வினையும் ஊடுருவிச் செல்கின்ற அதேவேளையில் கல்வியையும் கலைகளையும் உள்ளடக்கியே காணப்படும் என்பதற்கு வடமராட்சி ஒரு வகைமாதிரியான உதாரணம் எனலாம்.
இயல் மூன்று
எழுத்தறிவுப் பாரம்பரியம்
3 . 1 கல்வி முறைகள்
வடமராட்சியின் எழுத்தறிவுப் பாரம்பரியம் யாழ்ப்பாணக் குடா நாட்டின் கல்விப் பாரம்பரியத்தினின்றும் வேறுபட்டுள்ளது என்று கூறமுடியாது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் அக்காலத்தில் குரசீடமுறையிலேயே கல்வி போதிக்கப்பட்டது. பரம்பரை பரம்பரையாக மரபுவழிக் கல்வி முறையே நிலவிவந்துள்ளது. மற்றைய தொழில்களைப் போலக் கல்வியும் தந்தையிடமிருந்து மகனுக்குப் போதிக்கப்பட்டது. இந்த மரபு சிறிது காலம் செல்லத் திண்ணைப் பள்ளிக்கூடங்களாக உருவெடுத்தன எனலாம்.
ஏறத்தாழ 20ஆம் நூற்றாண்டுவரை இத்திண்ணைப் பள்ளி மரபினை வடமராட்சிப் பகுதியிலே காணக்கூடியதாக இருந்தது. ஐரோப்பியர் வருகையையொட்டி நிறுவன ரீதியான ஆங்கிலஈ தமிழ்ப் பாடசாலைகள் நிறுவப்பட்ட பின்னர் இப்பகுதியிலே மிக அண்மைக்காலம்வரை இத்திண்ணைபபள்ளி மரபு காணப்பட்டது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கு மிக அருகில (ஓடக்கரை) வெற்றிவேலு வாத்தியாரின் திண்ணைப்பள்ளி 1974வரை இயங்கிவந்ததை அறிவோம். ஆங்கிலப் பாடசாலையில படிக்கும் மாணவர்கள் இவரிடம் இலக்கணம், இலக்கியம், கணிதம் பயின்றுகொண்டிருந்தனர். பெரும்பாலான மாணவர்கள் இவரின் உறவினர்களாகவும் வசதியற்றவர்களாகவுமிருந்ததால் வேதனமின்றியும் இவர் கற்பித்தது உண்டு. வீட்டினுள்ளே நாலுபக்கமும் ஓரளவு உயரமான திண்ணையுண்டு. மாணவர் கீழே இருந்து திண்ணையில் வைத்து எழுதிப் படிப்பர். இவரின் முக்கியத்துவம் ஷஷமனனம்|| செய்விப்பதிலேயே தங்கியிருக்கும். ஷநெட்டுரு|, ஷவாலாயம்| என்ற பதங்களை அடிக்கடி உபயோகிப்பர். உயர்தர இலக்கிய இலக்கணங்களை இவர் போதிப்பதில்லை. பாடத்திட்டத்தோடெட்டியே இவர் பயிற்சிகள் நடைபெறும். திண்ணைப் பள்ளியின் எச்ச சொச்சமாக இவரின் பள்ளியைக் கருதலாம்.
196 வரை புலொலியில் கந்தர் முருகேசனின் தி;ண்ணைப்பள்ளி திறம்பட நடந்தமை குறிப்பிடத்தக்கது. இவரின் ஆழ்ந்தகன்ற தமிழ்ப் புலமையும். முற்போக்குச் சிந்தனையும் ஷநொத்தாரின்| பரீட்ரைக்குத் தமிழிலக்கணம் பாடத்திட்டமாக அமைந்திருந்ததும் இவரது திண்ணைப்பள்ளியீன் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள் எனலாம். இவரைப் பற்றிய விபரங்கள் பின்னால் அனுபந்தத்திற் சேர்க்கப்பட்டுள்ளன.
வடமராட்சிப் பகுதியின் பல பகுதிகளிலும் ஷஷஇராப்பள்ளி||, ஷஷநிலாப்பள்ளி|| என்ற பெயரில் பல மரபுவழிக் கல்விப் பயிற்சிகள் நடைபெற்றுவந்துள்ளன. வளர்ந்தோரே இப்பள்ளிகளில் பயிற்சி பெற்றனர். இங்கு இலக்கணம், இலக்கியம், சோதிடம், தருக்கம், சைவசித்தாந்தம் என்பனவே பயிற்றப்பட்டன. புராணபடனம் விசேட இடத்தைப் பெற்றிருந்தது,
வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியம் பெரும்பாலும் பரம்பரைச் சொத்தாகவே காணப்படுகின்றது. இப்பகுதியில் 19ஆம் நூற்றாண்டுவரை பெரும்புலமை பெற்று விளங்கியவர்களின் பட்டியலையும், வரலாற்றையும் பார்க்கும்போது இந்த உண்மை புலனாகின்றது. வாய்ப்பும், வசதியுமுள்ள உயர்ந்த சாதிக்காரர்களுக்கே கல்வி வசதியும் கிடைத்திருக்கின்றது. புலமையாளர்கள் கல்வி கற்ற மரபினை நோக்கும்பொழுது தகப்பனிடமோ, பேரனிடமோ அல்லது மாமனிடமோதான் அவர்கள் ஆரம்பக் கல்வியைக் கற்றிருக்கின்றனர் என்ற உண்மை புலனாகின்றது. கல்வியும் ஷஷகுலவித்தையாகவே|| கருதப்பட்டு வந்துள்ளது.
நாள்பார்த்து முதன் முதல் தொழில்களை ஆரம்பித்தல் போன்று கல்வியும் ஏடு தொடக்கல் என்னும் சடங்காசாரத்துடனேயே ஆரம்பமாகின்றது. கோயிலில் அல்லது ஆசிரியர் வீட்டினில், அல்லர் குடம்பத்தில் படித்தவருடைய வீட்டினில் விஜய தசமியாகிய சரஸ்வதி பூசை என்றே இவ்வேடு தொடக்கும் சடங்காசாரம் நிகழும். ஆசிரியர், கோயிற் பூசகர், அறிவுமிகுந்த பெரியார் ஒருவர், இச்சடங்காசாரத்தினை நிகழ்த்துவார். ஆசிரியருக்குப் பழம், பாக்கு, வெற்றிலை, அரிசி, நெல், வேட்டி சால்வை போன்ற அன்பளிப்புகள் மாணவர் தகுதிக்கும் வசதிக்குமேற்ப வழங்கப்படும். ஏடு தொடங்கியபின் நெடுங்கணக்கு, ஆத்திகூடி, கொன்றைவேந்தன், நல்வழி போன்றவற்றிலும் பயிற்சியளிக்கப்படும். இப்பயிற்சி படிப்படியாக வயதுக்கேற்றபடி வளர்ந்து செல்லும்.
அக்காலக் கல்விமரபில் பரம்பரை எவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்தியது என்பதைப் பாவலர் சரித்திர தீபகத்தில் சண்முகச் சட்டம்பியாரின் வரலாறு குறிப்பிடப்படுவதிலிருந்து அறியலாம்.
இவர் வாழையடி வாழையாகப் பிதா, பாட்டன் அப்பாட்டன், முப்பாட்டன் என மூன்று நான்கு தலைமுறைகளான வித்துவான்களின் வம்சத்தைச் சேர்ந்தவர். 1
இப்பண்பு வடமராட்சிக்கு மட்டுமன்றி யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதற்குமே பொருத்தமானது.
3 . 2 கல்விபயில் களங்கள்
வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கிய வளத்தினையும் பேணிப் பாதுகாககும் எழுத்தறிவுப் பாரம்பரியத்திற்கு அடிஅத்திவாரமாக அமைந்தவை திண்ணைப்பள்ளிகள், பாடசாலைகள், வேறு நிறுவனங்கள் போன்ற கல்வி பயில் களங்களாகும். திண்ணைப் பள்ளி மரபில் பெரும்பாலும் உயர்சாதிக்காரர்களே கல்விகற்றனர் என்பதும் அவர்களிடம் பெரும்பாலும் அதிக பொருளாதார எதிர்பார்ப்பு இருக்கவில்லை யென்பதும் தெரிகிறது. கல்வி ஓர் உபகாரப் பண்டமாகவும் கருதப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஷஷஉற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்|| கல்வியைப் பெற்றுள்ளனர். சாதி அமைப்பும், சமூகஉறவும், பொருளாதார வாய்ப்புமே அக்காலக் கல்விப் பாரம்பரியததினைத் தீர்மானித்துள்ளது. மாணவர்கள் அமாவாசை, பூரண நாள்களில் ஆசிரியர்களுக்குச் சாமை, தினை, நெல், ஒடியல் போன்றவற்றையும், காய்கறி வகைகளையும் வழங்கியுள்ளனர் என அறியமுடிகின்றது.
வாய்ப்பும் வசதியும் கொண்ட உயர்சாதிக்காரர்களே கல்வியைப் பெற்றனர். எனினும், சில திண்ணைப் பள்ளிக்கூடங்களளில் சாதி அமைப்பு இறுக்கமாகப் பேணப்பாடாமையும் உண்டு சிவசம்புப் புலவரின் திண்ணைப்பள்ளியிலும், கந்தர் முருகேசனின் திண்ணைப்பள்ளியிலும் இச்சாதி அமைப்புப் பேணப்பட்டதாகத் தெரியவில்லை. கந்தர் முருகேசன் முற்போக்குச் சிந்தனை உடையவர். சிவசம்புப் புலவரின் பெருமனமோ, அல்லது அவரின் ஷஷபிறப்புப்பற்றிய|| கதையோ இத்திருப்பத்திற்குக் காரணமென அறியமுடியவில்லை.
தி;ண்ணைப்பள்ளிகள்.
அக்காலக் கல்விப் பாரம்பரியத்தின் முக்கிய நிறுவனமான திண்ணைப் பள்ளிகளின் அமைப்பினையும் ஆசிரியர் மாணவர் உறவினையும் நோக்கும் பொழுது, பள்ளிக்கூடம் ஆசிரியர் மாணவர் உறவினையும் நோக்கும் பொழுது, பள்ளிக்கூடம் ஆசிரியரின் வீட்டிலோ அல்லது அவ்வூர்ப் பெரியவரின் வீட்டிலோதான் அமைந்திருந்தது. ஆசிரியர் தனியாக அமைந்த திண்ணையில், பலகையில் அல்லது பாயில் அல்லது மான் தோலில் அமர்ந்திருப்பார். அவரைச் சூழவுள்ள திண்ணைகளில் பாய் போடப்பட்டிருக்கும். அல்லது நன்கு மெழுகிய திண்ணையாக இருக்கும். மாணவர்கள் வரிசையாக இருப்பார்கள். ஆசிரியர் பாடம் நடத்துவார். பெரும்பாலும் ஆரம்ப வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கே காலையில் வகுப்புக்கள் நடக்கும். மாலையில் இலக்கணம், இலக்கியம், புராணபடனம், சோதிடம் என்பன வளர்ந்தவர்களுக்குக் கற்பிக்கப்படும். எழுதிப்படித்தலை விட வாய்மொழியாகக் கேட்டு மனனம் செய்து படித்தலே பெரும்பான்மையாகும். ஓலைச சுவடிகளிலும், பின் காகிதத்திலும் குறிப்புக்கள் எழுதி – பிரதி செய்து படிப்பதுமுண்டு.
மாணவர்களின் வயது வித்தியாசத்தைவிட அவர்களின் திறமை வேறுபாட்டிற்கியையவே பாடங்கள் படிப்பிக்கப்படும். ஆசிரியரின் வீட்டு வேரலகளைப் பெரும்பாலும் மாணவர்களே செய்வார்கள். அக்காலக் கல்விமரபில் இது மிகவும் முக்கியமான அம்சமாகும். வீட்டுவேலை, வயல்வேலை போன்ற வேலைகளயும் ஆசிரியர்களுக்குப் பணிவிடைகளையும் மாணவர்களே செய்வர். உதாரணமாக, ஆசிரியரைக் குளிப்பாட்டுதல், குணிதுவைத்தல் போன்ற வேலைகளையும் மாணவர்களே செய்வர். இவ்வாறான நேரங்களிலும் ஆசிரியர் மாணவருடன் பாடம் சம்பந்தமான உரயாடல்களிலேயே ஈடுபட்டிருப்பர். இதனால் மாணவர்களின் அறிவு கூர்மையெ வசதியாயிருந்தது எனலாம்.
மாணவர்களில் விவேகம், திறமை ஆகியவற்றை அறிய ஆசிரியருக்கு இவ்வாறான நேரம் மிக வாய்ப்பானதாக இருந்தது என நம்பலாம். மாணவர்களைத திண்ணைப் பள்ளியில் அநுமதிக்குமுன் ஆசிரியர் சில கேள்விகள் கேட்டுப் பரீட்சிப்பதுமுண்டு. பெரும்பாலும் இவ்வினாக்கள் கூர்மையான அவதானிப்புத் திறமையும், நினைவாற்றலையும பரீட்சிப்பதாகவே இருக்கும். இதனாற்றான் இவ்வாறான கல்விமரபில் வந்தவர்கள் அட்டாவதானம், சதாவதானம் நிகழ்த்துவதோடு பல்லாயிரக் கணக்கான பாடல்களும் மனனமுடையவர்களாக இருந்தார்கள்.
மேல்வகுப்பு மாணவர்களில் திறமையானவர்கள் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்துவர். இவர்களை மாணாக்க உபாத்தியாயர் என்றும் இழைப்பர். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடம் பல மாணாக்க உபாத்திமார்கள் இருந்தார்களாம். கந்தர் முருகேசனின் திண்ணைப் பள்ளியில் மாணாக்க உபாத்தியாயராகப் பெரிய மாணவர்கள் ஆரம்ப மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதை நான் நேரிற் கண்டிருக்கிறேன்.
திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்களைச் சட்டம்பியார், அல்லது உபாத்தியாயர் என்றே அழைப்பர். இவரே திண்ணைப் பள்ளியின் பாடத்திட்டங்களை வகுப்பதற்கும் போதிப்பதற்கும் பொறுப்பாவார். பாடத்திட்டம் என்ற பெரில் அவை வழங்காவிடினும் திட்டமிடப்பட்ட ஒரு வகையிலேயே போதிக்கப்டப்டன. இவை ஆசிரியரின் திறமையையும் அறிவையும் உள்ளடக்கியதாக இருக்கும் பாடநேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களிலும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளியலாம்.
ஆசிரியர் மாணவர் உறவு மிக நெருக்கமாக அமைந்தபோதிலும் பணிவு, பயம், பத்தி, அடக்கம் உடையவர்களாகவே மாணவர்கள் காணப்பட்டனர். மாணவர்களின் நடைமுறையிலும், அவர்கள் ஆசிரியர்களை ஷஷவிளிக்கும்|| சொற்களிலிருந்தும் இவற்றை அறிந்து கொள்ளலாம். அக்காலத்தில் கரவெட்டியிலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்ற முதியவரொருவர் ஆசிரியரிடமிருந்து தாம் விடைபெறும் போது கூறும் ஷஷவிடைபெறும்|| பாடலைக் காட்டினார்.
ஷஷகாலமே வந்தே மையா
கருத்துடன் பாடம் தந்தோம்
சீலமாய் எழுதிக் கொண்டோம்
தேவரீர் மனத்திற் கேற்பக்
கோலமாய் நீறு ப+சிக்
குழந்தைகள் பழஞ்சோ றுண்ணச்
சீலமாய் அனுப்பு மையா
தேவரீர் மனத்திற் கேற்ப.||
தேவரீர், ஐயா போன்ற சொற்களாலேயே ஆசிரியரை விளிப்பர். தம்மை ஷஷஅடியேன்|| சிறியேன் என்று மிகப் பணிவாகவே குறிப்பர். இப்பண்பு அக்காலக் கல்விமரபின் முக்கிய அம்சமாகும். மாணவர்களுக்குப் போதிக்கப்பட்ட கல்வியும் பழக்கவழக்கங்களும் சமயஞ்சார்ந்ததாகவே அமைந்திருந்தது என்பதைக் ஷஷகோலமாய் நீறு பூசி|| என்னும் தொடர் உறுதிசெய்கின்றது.
மாணவர்கள் ஆசிரியரில் அன்பும் நன்றியும் உடையவர்களாகக் காணப்பட்டனர். தம் கடமைப்பாட்ழனை வெளிக்காட்டத் தாம் பேசும், எழுதும் இடங்களில் குரவணக்கம் செய்பவர்களாகவும், தமது முதல் உழைப்பினைக் குருவுக்குக் காணிக்கை செய்பவர்களாகவும் காணப்பட்டனர். இந்த மரபினை வேறு வடிவத்தில் இன்றும் காணலாம். பருத்தித் துறையைச் சேர்ந்த முத்துக்குமாரசுவாமிக் குரக்கள் தனக்கு வரன் முறையாகத் தமிழ் பயிற்றுவித்த உடுப்பிட்டி சிவசம்புப் புலவருக்குக் குரவணக்கம் செய்வதையும், பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஷஷமாணிக்க மாலை|| எனினும் றூலைத் தனது ஆசிரியரான முத்துக்குமாரசுவாமிக் குருக்களுக்குக் காணிக்கையாகப் படைத்தலையும் காணமுடிகிறது.
நத்தும் பருத்தித் துறைவாழ் சிவச்சுடர் நான்மறையோன்
ஒத்தநல் லாரியம் செந்தமிழ் என்னை உணரவைத்தோன்
முத்துக் குமார சுவாமிக் குரமணி மொய்கழற்கீழ்
வைத்திப் பனுவலை மாணு மவனருள் வாழ்த்துவனே. 2
இந்த மரபின் வாழையடி வாழையாக வரும் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் முதன் மாணாக்கருள் ஒருவரான பேராசிரியர் க. கைலாசபதி தமது ஷபண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் 3 என்னும் நூலைப் பேராசிரியரும் தனது ஆசிரியருமான க. கணபதிப்பிள்ளை அவர்களுக்குக் காணிக்கையாக்குகிறார். பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை ஷசாசனமும் தமிழும்| என்னும் நூலையும் தனது ஆசிரியராகிய பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்கே சமர்ப்பணம் செய்துள்ளார். காணிக்கை, கையுறை, படையல், சமர்ப்பணம் என்னும் பாரம்பரியம் குரசீட மரபில் இருந்து முகிழ்த்த மரபேயென்று உணரமுடிகிறது. இப்பண்பு நீண்டு செல்வர் கல்விப் பாரம்பரியததின் உள்ளார்ந்த ஆற்றலினைச சுட்டுவதாக அமைகிறது எனலாம்.
அக்காலத்தில் திண்ணைப்பள்ளிகளின் நோக்கத்தினை நோக்கும் பொழுது, அவை மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகவும், இறைபக்தியுடையவர்களாகவும் ஆக்குவதோடு புராணபடனம், புராண பிரசங்கம், இலக்கிய இரசனை என்பவற்றில் பயிற்சியையும் வழங்குவனவாக அமைந்திருந்தன. யாப்பும் அணியும் கற்றுச் செய்யுளியற்றல் முக்கியமானதாகக் கருதப்பட்டது. படித்தவரென்று கருதப்பட்டவர் பாட்டெழுதக் கூடியவராக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. இலக்கியத்தினை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிப்பதற்கும், பயன் சொல்வதற்கும் இலக்கண அறிவு பயன்பட்டிருக்கின்றது. பதவுரை, பொழிப்புரை, விருத்தியுரை என்று தமது திறமை முழவதையும் அககால ஆசிரியர்கள் இலக்கியங்களிற் செலுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.
கணிதம், அளவையியல் (தருக்கம்), சித்தாநதம் என்பனவும் அக்காலக் கல்விமரபில் நன்கு போதிக்கப்பட்டிருக்கிறது. சித்தாந்தக் கருத்துக்களை நிறுவுவதற்குத் தருக்க அறிவு நன்கு பயன்பட்டிருக்கிறது. வடமராட்சியின் கல்வி மரபில் இலக்கியம், இலக்கணம், சித்தாந்தம், தருக்கம், சோதிடம் என்பவற்றில் தனத்தனியே பாண்டித்தியம் உள்ளவர்களும் இருந்திருக்கிறார்கள்.
அக்காலக் கல்விதரபில் போதிக்கப்டப்ட பாடத்திட்டத்தினைப் பின்வரும் உதயதாரகைச் செய்தி கூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.
........ இப்பொழுது படிப்பிக்கும் தமிழ்க் கல்விகளாவன அரிவரி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருவள்ளுவர் குறல், நல்வழி, வாக்குண்டாம், நன்னெறி, நீதிவெண்பா, நாலடியார், சதுரகராதி, வாழ்த்துமாலை, தொன்னூல் விளக்கப் புகழ்ச்சிமாலை, திருவள்ளுவ மாலை, கணக்கு, அந்தாதி, நைடதம், சோதிடம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நிகண்டு, அரும்பொருள்விளக்கம், இராவணசித்தர் சூத்திரம், காவியம், நன்னூல், வைத்திய சாஸ்திரம், ஆகமம் முதலானவைகளே.4
மாணவர்களுக்கு மேற்காட்டிய நூல்களும், இவைபோன்ற பிறநூலகளும் போதிக்கப்ட்டுள்ளன. மனனமாக்குதலும், ஒப்புவித்தலும், விளக்கம் கூறலுமே அக்காலக் கல்வி மரபின் முக்கிய அம்சமாக விளங்கியது.
அக்காலத்து ஆசிரியர்களுக்குச் சமூக அந்தஸ்து மிக உயர்ந்ததாகவே இருந்தது. மாணவர்களும் மதிக்கப்பட்டார்கள். மாணவர்கள் மட்டுமன்றிப் பெற்றோரும், ஊரவர்களும் ஆசிரியர்களை மதித்தும் போற்றியும் வந்து;ளனர். பெரியவர்கள், ஆசிரியர்களையே ஆலொசனை பெறுதல், நாள்பார்த்தல், குடம்பப்பிணக்குகளைத் தீர்த்தல் என்பவற்றிற்காக நாடியுள்ளனர். ஆசிரியர்கள், வைத்தியம், சோமிடம் என்பவற்றில் புலiமுயும் பயிற்சியும் பெற்றுச் சமூகப் பயன்பாடுடையவர்களாகக் காணப்பட்டமை முக்கிய அம்சமாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் குடாநாட்டில் பெண் கல்வி இருந்த நிலையை யாழ்ப்பாண வைபவ கௌமுதி பின்வருமாறு கூறும்.
ஷஷமி~னரிமார் வந்த காலத்தில் படித்த ஆடவர் ஆங்காங்கு காணப்பட்டாலும் படித்த ஸ்திரிகளைக் காண்பது அரிதாம். ஆதி அமெரிக்க மி~னரிமார் யாழ்ப்பாணம் வந்தபொழுது (1316) யாழ்ப்பாண நாட்டில பாடி நடனம் செய்யும் பெண்களைவிட இரண்டு சுதெசப் பெண்களுக்கு மாத்திரம் எழுத வாசிக்கத் தெரியுமென்று அம்மி~னரிமாருள் ஒருவர் எழுதியிருக்கிறார். அக்காலத்தில் பெண்பிள்ளைகள் படித்தல் மரபன்று எனக் கருதப்பட்டது.|| 5
அக்காலச் சமூக அமைப்பில் பெண் கல்வி முக்கியம் பெறவில்லை என்பது நன்கு புலனாகின்றது. மரபுவழிக் கல்வியில் புலமை பெற்ற பெண் பரம்பரையையும் முதன் முறையாக வடமராட்சிப் பகுதியிலேயே காணமுடிகிறது. பாரம்பரியக் கல்விவழிவந்த முதன் முறையாக மதுரைத் தமிழ்ப் பண்டிதர் பரீட்சையில் இரு பெண்பிள்ளைகள் சித்தியெய்தக் காரணமாயிருந்த பார்பதி அம்மையார் புலோலி வ. கணபதிப்பிள்ளையுடைய சகோதரியாவர். இவர் சைவப் பெரியார் சிவபாதசுந்தரனாரின் மாமியார். பார்பதி அம்மையார்பற்றிப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கூறுவது மனம்கொள்ளத்தக்கது.
ஷஷபார்பதி அம்மையாரைப் பாறாச்சியென வழங்குவது வழக்கம். வான்மீகததைச் சமஸ்கிருதத்தில் வாசித்து விளக்கம் செய்யும் திறமை அந்த அம்மையாருக்கு இருந்தது. குறித்த குடம்பத்தில் இரு பெண்பிள்ளைகள் மிக இளம் பருவத்தில் மதுரைப் பண்டித பரீட்சையில் சித்தியெய்தவைத்தவர் பார்பதி அம்மையார். தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களைக் கதை சொல்வது போற் கற்பித்து விடுவார் என்று கேள்வி.|| 6
இவ்வாறு வடமராட்சிப் பகுதியில் பெண்கள் எழுத்தறிவுப் பாரம்பரியம் உடையவர்களாகக் காணப்பட்டமைக்கும் ஆதாரங்கள் கிடைக்கின்றன. எழுத்தறிவு வசதி கிடைக்காத பெண்களும் புராண படனம், பிரசங்கங்கள் ஆகியனமூலம் புராண இதிகாச அறிவுடையவர்களாகக் காணப்பட்டனர். பாரதம், இராமாயணம், கந்தபுராணம் என்பவற்றை நன்கு அறிந்திருந்தமையினாற்றான் இவர்கள் வாய்மொழியாகப் பாடும் ஒப்பாரிகளில், அருச்சுனன், வீமன், திரௌபதை, இராமன், கூனி, சகுனி, சூர்ப்பனகை போன்ற பெயர்களையும் கதைத் தொடர்புகளையும் கையாண்டனரோ என எண்ணத் தோன்றுகிறது. சாதாரணமான நிகழ்ச்சிகளைச் சுட்டி விளக்கும்பொழுது எழுத்து வாசனையே அறியாத பெண்கள் பாரத இராமாயணப் பாத்திரங்களைச் சுட்டுவதும், கதை நிகழ்ச்சிகளைக் காட்டி விளக்குவதும், ஏசவதும் குறிப்பிடத்தக்கது. வடமராட்சிப் பகுதியின் ஷஷபாட்டிக்கதை மரபுகள்|| கூடப் பெரும்பாலும் புராண இதிகாச மரபினையொட்டியவையாகவே காணப்படுகின்றன. பிள்ளைப்பருவத்தில் நான் பாட்டியிடம் கேட்ட கதைகள் பெரும்பாலும் புராண இதிகாச மரபினையொட்டியவையாகவே காணப்படுகின்றன. பிள்ளைப்பருவத்தில் நான் பாட்டியிடம் கேட்ட கதைகள் பெரும்பாலும் தேவ அசுர யுத்தக் கதைகளும், வீமசேன மகாராசா, அருச்சுன மகாராசா கதைகளுமே ஆகும். ஏலவே குறிப்பிட்டது போல வாய்மொழி இலக்கிய மரபு எழுத்திலக்கிய மரபினைச் செழுமையாக்கியது போலவே, எழுத்திலக்கிய மரபுகளும் வாய்மொழி மரபுடன் இணைந்தும் வழங்கியுள்ளன. வடமராட்சிப் பகுதியில் ஷஷதமிழ் அறிவு|| உள்ள பெண்கள் காணப்பட்டமைக்கு மேற்காட்டிய பாரம்பரியமும் ஒரு காரணமாகலாம். ஷஷபுலொலியூர்ப் பெரியார்|| என ஈழத்தவரால் மதிக்கப்படும் சு. சிவபாதசுந்தரம் தாம் எழுதிய அகநூலைத தனக்குத் தமிழ் அறிவு ஊட்டிய பார்பதி அம்மையாருக்குக் காணிக்கை யாக்கியுள்ளார்.
இந்நூல்
எனது மாமியாரும்
எனக்குத் தமிழ்க்கல்வி யூட்டியவருமாகிய
தவச்செல்வியார்
வ. பார்வதி அம்மையாருடைய
திருவடிகளுக்குச் சாத்தப்பட்டது.
ஏலவே குறிப்பிட்ட காணிக்கை மரபு குடம்பத்தினூடு தொடர்வதையும் அவதானிக்க முடிகிறது.
வடமராட்சியின் மொழிநிலையைப் பற்றி முன்பே நோக்கியுள்ளோம். எனினும பார்வதி அம்மையார் ஷஷபாறாச்சி|| என அழைக்கப்பட்டமை மரியாதை கருதியே எனலாம். ஷஷமூதிர்ப்பெண்டிர்|| ஆக விளங்கிய பெண்களை ஷஷஆச்சி|| விகுதி சேர்த்து அழைப்பது இப்பகுதியின் வழக்கம். ஷஷபெருத்தாச்சி||, ஷஷஅப்பாச்சி|| என உறவு முறைப் பெண்பாற் சொற்களும் ஷஷபெரியப்பு||, ஷஷசீனியப்பு||, ஷஷகுஞ்சியப்பு||, ஷஷஆசையப்பு||, ஷஷசின்னண்ணன்||, பெரியண்ணன்||, ஷஷஆசையண்ணன்||, ஷஷமூத்தஅம்மான்||, ஷஷஆசையம்மான்||, ஷஷசீனியம்மான்|| போன்ற ஆண்பால் உறவுமுறைச் சொற்களும் இப்பகுதியில் இன்னும் நிலவுகின்றன.
இவ்வாறான உறமுறைப் பெயர்களைவிட அரியாததை, பூதாத்தை, வேதாத்தை போன்ற பெண்பால் இடுகறிப்புப் பெயர்களையும் அரியாத்தை வளவு, பூதாத்தைவளவு என்ற பெண்களின் பெயரால் வளவுகளின் பெயர்கள் வழங்குவதையும் காணலாம். இப்பெயர்கள் வடமராட்சியின் சிலபகுதிகளுக்கும் வன்னிப்பிரதேசங்களுக்கும் உள்ள உறவின் காரணமாக எழுந்ததோ என எண்ணத் தோன்றுகிறது. பெண்பாற் பெயர்களைப் போலவே சிலம்பன், சிலம்பியாவளவு, பூதன் வளவு, பூதறாப்பிட்டி (ஓதறாப்பிட்டி) போன்ற பெயர்களையும் ஆண்களின் பெயரோடு சேர்த்து வழங்குவதை இன்றும் காணலாம். இவ்வாறே ஆனைவிழுந்தான். ஆனைப்பந்தி போன்ற இடப்பெயர்கள் வரலாற்றுத் தொடர்பினை நினைவுறுத்துவனவாக இப்பகுதியிற் காணப்படுகிகன்றன. கல்விப் பாரம்பரியத்துடன் தொடர்புடைய ஷஷகொட்டகைவளவு||, ஷஷகூத்துப்பிட்டி||, பள்ளிக்கூட வளவு|| போன்ற வளவுப் பெயர்களும் இப்பகுதியிலே காணப்படுகின்றன. பெரும்பாரும் கூத்துப்பிட்டி, கொட்டகைவளவு போன்ற இடப்பெயர்கள் தாழ்த்தப்பட்டோர் சமூகச் சூழலிலேயே காணப்படுகின்றன.
நிறுவனரீதியான கல்வி முயற்சிகள்
வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியம் ஐரோப்பியர் வருகையை யொட்டி இருகிளைப்பட்டதாக இயங்கத் தொடங்குகிறது எனலாம். 16ஆம், 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் மதம் பரப்பும் நோக்கத்திற்காகக் கல்வியையே ஆயதமாகக் கொண்டனர். வடமராட்சிப்பகுதியில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்த பகுதியிலேயே தமது கல்வி நிலையங்களையும் நிறுவினர் முதலில் சுதேசக் கல்வியையே இவர்களும் போதித்தனர். தாம் சுதெசக் கல்வியைப் பயிலவும் சுதெசிகளுடன் பழகவும் திண்ணைப் பள்ளக்கூட ஆசிரியர்களையே நாடினர். இவ்வாறு ஐரொப்பியருடன் தொடர்புடைய ஆரம்பத் திண்ணைப் பள்ளிக்கூடம் இருந்த இடங்களில் ஒன்று கரவெட்டியில் இன்றும் ஷஷபறங்கியார் வளவு|| என்ற பெயரில் நிலவுகின்றது. இப்பறங்கியர் வளவில் இருந்து ஆசிரியர் பரம்பரை ஒன்று வளர்ந்துள்ளமையையும் அறிய முடிகின்றது. இப்பறங்கியார் வளவு, பாடசாலையை நிறுவியவர்களின் முன்னோரே கரவெட்டிப்பகுதியில் மிக உயர்ந்த சாதிக்காரர்களாகவும் நிலவுடைமையாளராகவும் இருந்தனர் என்றும், இவர்களில் ஒருவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பிரபந்தம் பாடுவிக்கும் நோக்கமாகவே நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் வரவழைக்கப்பட்டார் என்றும, அவர் இவர்களின் போட்டியாளரும் நிலவுடைமையாளருமான ஷஷவேலாத்தையுடையார்|| என்பவரால் ஷஷதிசைதிருப்பப் பட்டு|| வந்த வழியில் வேலாத்தையுடையார்மீது கோவைப்பிரபந்தம் பாடினார் என்றும் அதுவே கரவை வேலன் கோவை என்றும் அறிய முடிகிறது.
வடமராட்சிப் பகுதியில் தொன்மைவாய்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களும், பள்ளிக்கூடங்களும் பரவலாக உண்டு. இவை காலத்துக்குக் காலம் அமெரிக்கமிசன், மெதடிஸ்தமிசன் என மாற்றம்பெற்றபோதும் ஷஷவேதப்பள்ளிக்கூடம்|| என்றே சுதெசிகளால் அழைக்கப்பட்டன. ஆரம்பத்தில் கிறிஸ்தவமதத்தில் சேர்ந்தவர்களை ஷஷவேதக்காரர்|| என்றும் தம்மைத் தமிழர் என்றும் சுதெசிகள் அழைத்தனர். இப்பண்பினை இன்றும் வடமராட்சிப் பகுதியிலே காணலாம்.
நிறுவனரீதியான கிறிஸ்தவப் பாடசாலைகள் நிறுவப்பட்டமையும் அவற்றின் பாடத்திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டமையும், அச்சியந்திர வருகையும், காகித உபயோகமும் மற்றைய பகுதிகளைப் போலவே வடமராட்சிப் பகுதியையும் நியாயமான அளவு பாதிததன. கல்விக்காகவும், அக்கல்வி சார்ந்த பொருளாதார வாய்ப்புக்காகவும் நம்மவரில் பலர் கிறிஸ்தவர்களாகவே மாறினர். வடமராட்சியைச் சேர்ந்த பல கிராமங்களில் கிறிஸ்தவ தேவாலயமும், பாடசாலையும் ஒரே வளவுக்குள்ளேயே அமைக்கப்பட்டன. உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி, பருத்தித் துறை ஹாட்லிக் கல்லூரி, உடுப்பிட்டி பெண்கள் பாடசாலை என்பன இந்தவகையில் விதந்தோதக்கூடியவை. இப்பாடசாலைகளுக்கான நிலத்தைக் கிறிஸ்தவ மதத்தினைச் சாராத உள்@ர்ப் பிரபுக்கள் நன்கொடையாக வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
உடுப்பிட்டியில் திண்ணைப் பள்ளிக்கூடமாக இயங்கிப் பின் ஷஷதருமப் பள்ளிக்கூடம்|| எனப் பெயர் மாற்றம்பெற்ற அருளம்பல முதலியாரின் பாடசாலை பற்றிய செய்திகள் உதயதாரகைப் பத்திரிகையில் அவ்வப்போது வெளிவந்துள்ளன. உடுப்பிட்டியில் நிறுவப்பட்டிருந்த அருளம் பல முதலியாரின் பாடசாலை பற்றிய செய்தி யொன்றினை வகை மாதிரிக்கு இங்கு காட்டுவோம்.
ஷஷவண்ணார்பண்ணை கந்தப்ப குமாரன் இராமலிங்கர் சிறிதுநாளைக்கு முன் வடமராட்சியைச் சேர்ந்த உடுப்பிட்டியிலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்ற தருமப் பள்ளிக்கூடத்துக்கு வந்து அப்பள்ளிக்கூடத்து மாணவர்களைப் பரிசோதனை பண்ணித திருத்தணிகை கந்தப்பையர் குமாரர் ஆகிய விசாகப்பெருமாள் ஐயரும் களத்தூர் சுவாமி முதலியார் குமாரன் வேதகிரி முதலியாரும் பிழையறப் பரிசோதித்து உரைசெய்து அச்சிற் பதிப்பித்த இலக்கிய இலக்கணங்களையும் வேதாகமங்களையும் மாணாக்கரது நன்மைக்காக பள்ளிக்கூடத்திலே வைத்து வழங்கும்படி கொடுத்ததுமன்றிச் சில பல தரித்திரரான பிள்ளைகளுக்குத் தன் சொந்தச் செலவாக வஸ்திராகாரம் முதலியன கொடுத்து கல்வி படிக்கிறதற்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறார்||. 7
சாதாரண திண்ணைப் பள்ளிக்கூடத்தின் வளர்ச்சிக்கட்டம் இதுவாகும். இப்பள்ளிக்கூடம் நிறுவிய அரும்பல முதலியாரின் மனக்தான் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் அதிகமான பிரபந்தங்களைப் பாடியவரும் வடமராட்சிக் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கியவளத்திலும் முக்கிய பங்களாளராகவும் சிவசம்புப் புலவர் காணப்படுகிறார்.
கிறிஸ்தவத்தின் வருகையும், பாடசாலைகள் நிறுவப்பட்டமையும் கல்விமரபிலும் இலக்கிய உருவாக்கத்திலும் நியாயமான தாக்கத்தை ஏற்படுத்தியமை தவிர்க்கமுடியாததே.
கிறிஸ்தவர்கள், கட்டைவேலி, வதிரி, அல்வாய், புலோலி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, திக்கம் போன்ற இடங்களில் பல்வேறு தரத்தில் கிறிஸ்தவ பாடசாலைகள் நிறுவினர். சுதேசிகளும் இவற்றிற்குப் போட்டியாகச் சைவப் பாடசாலைகளையும் கிராமங்களில் நிறுவினர். அரசாங்க உதவி கிடைக்காதபோதும் தம அபிமானத்தாலும், கடின உழைப்பாலும், ஊரவர்புகளின் உதவி ஒத்தாசையாலும் இப்பாடசாலைகள் உயிர்வாழ்ந்தன எனலாம்.
கரவெட்டியின் வடக்கெல்லையான வதிரியில் லோலி எல்லை என்று ஓர் இடமுண்டு. இங்கு கிறிஸ்தவ தேவாலயமும், கிறிஸ்தவ பாடசாலையும் அமைந்திருக்கின்றன. வெஸ்லியன் எல்லை என்பது லோலி எல்லையெனத் திரிந்தது எனக் கூறுகின்றனர். இன்று இவ்விடத்தில் உள்ள அம்மன் ஆலயம் லோலி எல்லை அம்மன் ஆலயம் என்றும், உல்லியன் எல்லை அம்மன் ஆலயம் என்றும் அழைக்கப்படுகின்றது. வெஸ்லியன் எல்லை என்ற சொல் மருவி வசந்திருக்கவேண்டும். இன்று இவ்வாலயத்த எல்லையம்மன் என்ற பொருளிலும் இவ்வூர் மக்கள் வழிபடுகின்றனர். இவ் வெஸ்லியன் எல்லைப் பள்ளிக்கூடத்திற்கும் நீண்ட நாள்களாகப் போட்டியும் பிணக்கும் இருந்துவந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகால கிறிஸ்தவ பாடசாலைகளிலும் ஓரளவிற்குச் சாதியமைப்பு பேணப்படவேண்டிய அவசியம் (நிர்ப்பந்தம்) பாதிரிகளுக்கு ஏற்பட்டது என்று அறியக்கிடக்கிறது. உள்@ர் உயர்சாதிக்காரர்களும் பிரபுக்களும் தங்கள் பிள்ளைகளைக் கிறிஸ்தவப் பாடசாலைக்கே அனுப்பினர். ஆங்கிலக் கல்வியும் ஆட்சியாளரின் அனுசரணையும் இவர்களின் அந்தஸ்துப் பேணுகைக்கு அவசியமாக இருந்தமை இதற்குக் காரணமாகலாம். ஷஷவேதப் பள்ளிக்கூடங்களுக்குள்|| கூட தாழ்த்தப்பட்டவர்கள் வகுப்பிற்குள் சமமாக இருந்து கல்வி கற்க முடியாத நிலை இருந்ததாகவும் அறிய முடிகின்றது. எனினும் சுதெசிகளின் பள்ளிக்கூடங்களில் இருந்த இறுக்கம் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் நிலவவில்லை என்பதும் உண்மையே.
இவ்வாறான கல்விமரபு தோன்றி வளர்ந்த வடமராட்சிப் பகுதியில் திண்ணைப் பள்ளிகள், கிறிஸ்தவப் பாடசாலைகள், சுதெசிகள் நிறுவிய பாடசாலைகள், இந்துப்போட் நிறுவிய பாடசாலைகள் எனப் பல பாடசாலைகளும் பின் அரசாங்கப் பாடசாலைகளும் எனப் பல்வேறு பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருந்தன. இவை இப்பகுதியின் கல்வி நிலையையும், இலக்கிய வளத்தையும் பேணுபவையாகவும், வளர்ப்பவையாகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தங்கள் பிள்ளைகளைக் கிறிஸ்தவப் பாடசாலைகளில் கல்வி கற்க அனுப்பிய உயர் சாதிக்காரர்கள் பலர் சைவப் பள்ளிக்கூடங்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டுள்ளமையும் இப்பகுதியிலே காணப்படுகின்றது. சிறுபான்மைச் சமூகத்தவர்க்கென உயர்சாதிக்காரர்கள் ஆங்காங்கு சில பள்ளிக்கூடங்களும் நிறுவியுள்ளனர். ஆரம்பக் கல்வியே இங்கு போதிக்கப்பட்டது. ஷஷகையெழுத்து|| வைக்கப் பழகுமளவிற்கான படிப்பு நிறுவனங்களாகவே இவை காணப்பட்டன.
இத்தகைய சூழல்களிலேதான் வடமராட்சிப் பகுதியில் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த திரு. கா. சூரன் அவர்களால் ஒரு பாடசாலை நிறுவப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இததகைய முயற்சி ஒரு அசுரசாதனையெனலாம். தேவரையாளி இந்துகல்லூரியென வழங்கும் அப்பாடசாலை ஆரம்பகாலத்தில் தேவரயாளி சைவவித்தியாசாலையென அழைக்கப்பட்டது. வடமராட்சியின் ஷஷசாதிமான்களுடனும்||, கிறிஸ்தவப் பாடசாலைகளுடனும் போட்டி போட்டு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இப்பாடசாலையை திரு. சூரன் அவர்கள் கட்டியெழுப்பினார்கள். சிறுபான்மைச் சமூகத்தினரின் கலங்கரை விளக்கமாக இப்பள்ளிக்கூடம் அமைந்தது. வடமராட்சிப் பகுதியில் தோன்றிய சாதியெதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தேவரையாளி சைவவித்தியாசாலை சாத்வீகப் போராட்டத்தின் முதற்படியாக அமைகிறது எனலாம்.
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தில் திரு. சூரன் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. சிறுபான்மை மகன் ஒருவன், கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகவும் கல்விவளர்ச்சிக்காகவும் எடுத்த முயற்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. திரு சூரன் அவர்களின் ஆரம்ப காலக் கல்வி முயற்சியும், அவரின் பாடசாலையின் வளர்ச்சிப் படிகளும் காலத்தின் கோலத்தையும் சமூக உறவு நிலைப்பாட்டையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
திரு. சூரனின் முயற்சிக்கு அக்காலத்திலிருந்த உள்@ர் உயர்சாதிக்காரர்கள் இ;ன்னல் விளைவித்தபோதும், சிலர் உள்ளார்ந்த உதவிகளையும் செய்துள்ளனர் என்பதை சூரன் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். கிறிஸ்தவ மதத்தைத் தழுவி தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள விரும்பாத சைவப்பற்றினால் இவர் எடுத்த முயற்சி பாராட்டக்கூடியது. இவரின் பாடசாலைக்கான நிதிசேகரிப்பு முயற்சிபற்றிய விளம்பரம் இந்துசாதனப் பத்திரிகையிலும் இடம்பெற்றுள்ளது.
தான் நிறுவிய பாடசாலையில் ஆரம்பக்காலங்களில் தானே தலைமை ஆசிரியராகவும் தனது மனைவியுமு;, தம்பையா என்பவருமே உதவி ஆசிரியர்களாகவும் இருந்துள்ளனர். ஆரம்பகாலத்தில் இப்பாடசாலைக்கு உயர்ந்த சாதிக்கார ஆசிரியர்களை நியமிக்கத் தாம் பட்ட இன்னலைச் சூரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 8
யாழ்ப்பாணக் குடாநாடெங்கிலும் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி மறுக்கப்பட்ட சூழ்நிலையில் வடமராட்சியில் ஒரு தேவரையாளி சைவ வித்தியாசாலை தோன்றி வளர்ந்தது அசுரசாதனையே. மிக அண்மைக் காலமவரை சிறுபான்மைத் தமிழ் மாணவர்கள் பாடசாலைகளுககுள் சமமாகப் பிரவேசிக்கவில்லை என்பதும் உண்மையே.
ஷஷநாங்கள் மாணவர்களாக இருந்த காலத்திலே தமிழ்ப் பாடசாலைகளிலே சிறுபான்மைத் தமிழ் மாணவரின் தொகை மிகக் குறைவு. அவ்வாறு படித்தவர்களும் வகுப்பறையிலிருந்து படிக்க அனுமதிக்கப்படவில்லை. வெளியே தாழ்வாரத்தில் நின்றே அவர்கள் படிப்பது வழக்கம்||.9
இப்படியான காலச் சூழ்நிலையில் சூரனவர்கள் எடுத்த முயற்சிதான், சைவப்புலவர் வல்லிபுரம், அல்வையூர்க் கவிஞர் மு. செல்லையா முதலிய கற்றோரை அச் சமூகத்திற்குத் தந்தது.
தூய சைவ வாழ்வு வாழ்ந்த சூரன் அவர்கள் கவியியற்றுவதிலும் பதிகங்கள் பாடுவதிலும் வல்லவர். பிற்காலங்களில் திரைப்பட விமர்சனங்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய பராசக்தி பட விமர்சனமே நமக்குத் தெரிந்த வரையில் ஈழத்தில் முதன்முதலாக வெளிவந்த ஒரு பட விமர்சன நூலாகும்.
வடமராட்சிப் பகுதியில் இன்று எண்பதுக்கும் அதிகமான அரசாங்கப் பாடசாலைகள் இருக்கின்றன. இவையாவும் ஆரம்ப நிலைகளிலிருந்து ஊற்றெடுத்து வளர்ந்து வந்தவையே.
முளையிலேயே கருகிப் போன, பல்வேறு காரணங்களால் அழிந்த, அழிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களும் வடமராட்சிப் பகுதியிலே இருந்திருக்கின்றன. அரசாங்க உதவி இல்லாமையாலும் ஊரவர்களின் உதவி ஒத்தாசையின்மையாலும் இவை நிகழ்ந்தன எனலாம்.
3 . 3 கல்வி தொடர்பான நிறுவனங்கள்
வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியத்தினை நோக்கும் பொழுது நிறுவன ரீதியான, அமைப்பினைச் சாராது. தனியார் சிலராலும், ஒரு சில குழவாலும், சனசமூக நிலையங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள், வாசிகசாலைகள் என்பனவற்றாலும்அ கல்விப்பணி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவை நூலகமாகவும், வாரத்திலொருமுறையாவது சொற்பொழிவுகள் நடைபெறும் இடமாகவும், புராண, இலக்கண, இலக்கிய வகுப்புக்கள் நடைபெறுமிடமாகவும் வழங்கி வந்துள்ளன. இவை ஒவ்வொரு சிறுசிறு நிலையங்களாகுவும் சாதியமைப்புக்குட்பட்டவையாகவும் நிலவி வந்துள்ளன. தங்கள் தங்கள் சாதியின் உயர்வை நிறுவவும் இக்கல்வி நிறுவனங்கள் பயன்பட்டுள்ளன. இவற்றின் பெயர் சாதியின் பெயரால் அல்லது தம் சாதியின் முதன்மை பெற்ற புராண இதிகாச நாயகர்களின் பெயரால் நிறுவப்பட்டன. உதாரணமாக, உட்டக்கூத்தர் சனசமூகநிலையம், திருநீலகண்டர் மடாலயம், விஸ்வகுல முன்னேற்ற நிலையம் என்று வழங்கியவற்றைக் குறிப்பிடலாம். இவை பிற்பட, வள்ளுவர் சனசமூக நிலையம், பாரதி படிப்பகம் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளன. வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தில் இவை முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளன.
துன்னாலையைச் சேர்ந்த திருநீலகண்ட தொண்டர் மட ஆலயம் அவ்விடத்திலுள்ள குயவர் குடம்பத்தினர் நிறுவியதாகும். இதி;ல கல்வி முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் இருந்தே துன்னாலையைச் சேர்ந்த புலவரும், பண்டிதர் என அழைக்கப்பட்டவருமான திரு. தா. முருகேசு அவர்கள் தோன்றியுள்ளார்கள். இவர் தமிழ் நாட்டிலும் சில காலம் வாழ்ந்து பெரும் புகழ் பெற்றவராவார். 10
நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் வாழ்ந்த இடத்தில் அவரின் பெயரால் இன்றும் ஒரு நல்ல நூல் நிலையம் இயங்கிவருகின்றது. ஆண்டு தோறும் விழாவெடுத்து, மலரும் வெளியிடுகின்றனர். வடமராட்சியின் பாரம்பரியத்தினைப் பேணும் வகையில் திருஞானசம்பந்தர் கலாநிலையம் ஒன்று புலொலியில் இன்றும் சிறப்பாக இயங்கி வருகின்றது.
வடமராட்சிப்பகுதியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய வளத்திலும் சனசமூக நிலையங்கள், வாசிகசாலைகள் வகித்த பங்கும் முக்கியமானது எனலாம்.
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய உருவாக்கத்திலும் வாணி கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. 1953ஆம் ஆண்டு வரையில் பண்டிதர் க. வீரகத்தியவர்களால் இது நிறுவப்பட்டது வடமராடசியிலிருந்துமட்டுமல்ல குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து பயின்றனர். இலக்கணம், இலக்கியம், தருக்கம், சித்தாந்தம் என்னும் பாடங்கள் இங்கு நடத்தப்பட்டன. ஈழத்துச் சாந்தி நிகேதனமாக அமையவேண்டுமென இதன் இலட்சியம் இருந்தது. பிரவேச பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் பரீட்சைக்குத் தோற்றிய பலர் இதில் படித்து விசேட சித்தியும் பெற்றனர். சைவபரிபாலன சபையினர் நடத்திய சைவப்புலவர் பரீட்சையில் இக்கழகத்திலிருந்து தோற்றிப் பலர் திறமைச் சித்தி பெற்றனர். பல ஊர், பலசாதி மாணவர்களும் ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலுதல் போன்ற உணர்வுடன் இங்கு பயின்றனர். இங்கு கற்பித்தவர்களுள் பண்டிதர் வீரகத்தி, சைவப் புலவர் எஸ். வல்லிபுரம், புலவர் புவனேஸ்வரி, பண்டிதர் பொன். கணேசன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஊதியம் எதுவுமின்றி மாணவரிடம் வேதனம் பெறாது இவ்வாணி கலைக்கழகம் இயங்சியமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் கூறும் நல்லுலகத்திலேயே முதன் முதல் தொல்காப்பியருக்கு விழாவெடுத்து பெருமை இக்கழகத்தையே சாரும். அழகான ஆண்டு மலர்களை வெளியிட்டு வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கிய வளத்தினையும் பேணிய பெருமை இதற்குண்டு. ஈழத்தின் பல பாகங்களிலும் இக்கழகத்தின் மாணவர்கள் இன்றும் புகழுடன் விளங்குகிறார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து வருகைதரும் பேரறிஞர்கள் பலர் இக்கழகத்திற் சொற்பொழிவு ஆற்றியதுடன் இக்கழகத்தைப் பாராட்டியும், வாழ்த்தியும் சென்றுள்ளனர். அ.ச. ஞானசம்பந்தன், கி.வா. ஜகந்நாதன், குன்றக்குடி அடிகள், விஜயபாரதி தம்பதியினர், வச்சிரவேலு முதலியார், சா. கணேசன் போன்றோர் குறிப்பிடக்கூடியவர்கள். 1962ஆம் ஆண்டு சிறந்த ஓர் ஆண்டு மலரையும் இக்கழகம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
வாணி கலைக்கழகம் மாணவர்களை உருவாக்கியதுடன் சமூகத் தொண்டிலும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்துள்ளது. புத்தக வெளியீட்டு முயற்சிகளையும் இக்கழகம் மேற்கொண்டமை குறிப்பிடக்கூடியது.
3 . 4 கல்விப் பாரம்பரியமும் எழுத்திலக்கியமும்
தமிழிலக்கிய வரலாற்றிலும், தமிழ்க்கல்விப் பரப்பிலும் தமிழ் உரைநடை வளர்ச்சியிலும் அச்சியந்திரசாலைகள் பெற்ற முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் இலக்கியங்கள் ஏட்டளவில் நின்று அழிந்துபோகாது அவை அச்சுவாகனம் ஏறித் தமிழ் கூறு நல்லுலகெங்கணும் கவனிவந்த காலத்திலே வடமராட்சிப் பகுதியிலும் அச்சகங்கள் நிறுவப்பட்டன. அவை படிப்படியாக அளவிலும், வேலையிலும், பெருகத் தொடங்கின. நாவலர் அச்சுக்கூடம் கொண்டுவந்த காலப்பகுதியை அடுத்து வடமராட்சிப்பகுதியிலும் அச்சுக்கூடங்கள் நிறுவப்பட்டதாக அறிய முடிகிறது. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை ஆகிய இடங்களிலேயே வடமராட்சியின் முதல் அச்சுக்கூடங்கள் அமைந்தன.
ஷஷதனக்கென அச்சுக்கூடம் ஒன்றினை நிறுவிக்கொண்டதன் மூலம்
இயற்றமிழ்ப் போதகாசிரியர் நாவலர் கையாண்ட நடைமுறை
யொன்றைப் பின்பற்றினாரென்பது தெளிவாகின்றது.|| 11
என்று பேராசிரியர் கார்த்திகேசு சிலத்தம்பி கூறுவது வடமராட்சியில் ஆரம்பகாலங்களிலேயே அச்சுக்கூடங்களின் வருகை தொடங்கிவிட்டன என்பதற்கு ஆதாரமாகின்றது.
வடமராட்சிப்பகுதியில் தோன்றிய அச்சுக்கூடங்கள் ஓரளவுக்கு (அக்கால) இப்பகுதியின் அச்சுத் தேவைகளைப் பூர்த்தி செய்தனவென்றே கருதவேண்டியுள்ளது. வல்வெட்டித்துறை பாரதீ நிலைய முத்திராட்சரசாலை, தும்பளை கலாநிதி அச்சுயந்திரசாலை, வியாபாரிமூலை கலாபவன அச்சகம், நெல்லியடி சிவகுக அச்சுயந்திரசாலைகள் வடமராட்சிப் பகுதியிலே தொழிற்பட்டன. இதனாலும் புலமையும், அறிவும் விருத்தியாகும் வாய்ப்பு உண்டானதெனலாம்.
இவ்வச்சுக்கூடங்கள் பழைய ஏட்டுப்பிரதிகளைப் பரிசோதனைபண்ணி அச்சிடுவதிலும், வெளியான நூல்களுக்கு உரையெழுதிப் பதிப்பித்தலிலும், ஊள்@ர்ப் புலவர்களின் ஆக்கங்களையும் கண்டனத் துண்டுப் பிரசுரங்களையும், சரதமவிகளையும் அச்சிடுவதிலும் பெரும்பான்மையும் ஈடுபட்டிருந்தன. பிற்பகுதிகளில் பாடப்புத்தகங்கள், பஞ்சாங்கங்கள், துண்டுப்பிரசுரங்கள், வாழ்த்து மடல்கள், அழைபபிதழ்கள், விளம்பரங்கள் என்பனவற்றையும் அச்சிட்டுள்ளன. இவ்வச்சுக்கூடங்களை நிறுவியவர்கள் தமிழறிவும், தமிழ்ப்பற்று முள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.
இவ்வச்சுக்கூடங்களில் யாழ்ப்பாணன் நிறுவிய கலாபவன அச்சுக்கூடம் இலக்கிய இலக்கண முயற்சிகளோடு பெருமளவில் பாடப்புத்தகங்களையும் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அச்சகங்கள் வெளியீட்டு நிறுவனங்களாகவும், புத்தக விற்பனவு நிலையங்களாகவும் தொழிற்பட்டதோடு நூல்நிலையமாகத் தொழிற்பட்டமையையும் அறியமுடிகின்றது. தும்பளையிற் சுப்பிரமணிய சாஸ்திரிகள் நிறுவிய அச்சுக்கூடத்துடன் ஷபுத்தகத் தருமாலயம்| என்ற ஒரு நூலகத்தையும் நிறுவியிருந்தார். பணங்கொடுத்து வாங்கிப் படிக்க வைத்தாராம். இவ்வச்சகமும் நூல்நிலையமும் இன்று அடியோடழிநதுள்ளது. இந்த இடத்தை .இன:றும் ஷஷஅச்சுக்கூடத்தடி|| என்றே பொதுமக்கள் அழைக்கின்றனர்.
பத்திரிகைகள்
வடமராட்சியில் நிறுவப்பட்ட அச்சியந்திரசாலைகளிலிருந்து அவ்வப்போது பத்திரிகைகளும் வெளிவந்துள்ளன. வல்வெட்டித்துறை பாரதீ நிலைய முத்திராட்சரசாலையிலிருந்து சைவாபிமானி என்னும் பத்திரிகை மாத வெளியீடாக வெளிவந்தது. இப்பத்திரிகையின் ஆசிரியாராக வல்வை வயித்தியலிங்கம்பிள்ளையின் மணவரும் உறவினருமான பொ.ஞானசபாபதிப்பிள்ளை பணியாற்றினார். இப்பத்திரிகை சமய சமூகப் பணியையே முதன்மையானதாகக் கொண்டியங்கியபோதும் இலக்கிய, இலக்கண விடயங்களுக்கும் போதிய இடமளித்துள்ளது எனத் தெரியவருகிறது. வடமராட்சிப் பகுதியில் வெளிவந்த பத்திரிகைகளிலும் இதுவெ மூத்ததாகவும் காணப்படுகின்றது. இப்பத்திரிகைளயில் வடமராட்சிக்கு வெளியிலு;ள அறிஞர்களின் ஆக்கங்களும் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன. வல்வை வயித்திலிங்கம்பிள்ளையின் ஜனரஞ்சகமான படைப்புக்களும், சமூகச் சீர்கேடுகளைச் சுட்டி எழுந்த பாடல், உரைநடை வி~யங்களும் இப்பத்திரிகையில் வெளிவந்ததாக அறிய முடிகின்றது. அவர் பல்வேறு புனைபெயர்களில் இவற்றை எழுதினார் என்று கூறப்படுகின்றது.
வதிரியில் அமைக்கப்பட்டிருந்த ஞானசித்தி யந்திரசாலயில் இருந்து அதன் உரிமையாளர் வித்துவான் சி.நாகலிங்கம்பிள்ளை என்பவரை ஆசிரியராகக்கொண்டு ஞானசித்தி என்னும் பத்திரிகை வெளிவந்தது. ஏலவே இவரின் தமையனார் வித்துவான் தாமோதரம்பிள்ளை வண்ணார் பண்ணையில் இருந்து வெளியிட்ட ஞானசித்தி பத்திரிகையையே இவர் வதிரியில் இருந்து வெளியிட்டார். (1934ஆம் ஆண்டு ஏப்பிரல் 13 இதழில்) ஞானசித்திப் பத்திரிகையில் பின்வரும் விஞ்ஞாபனம் இடம்பெற்றுள்ளது.
ஷஷ1908ஆம் ஆண்டு மாசிமாதத்தில் எனது தமையனார் ஞானசித்தி என்னும் பத்திரிகையை யாழ்ப்பாணத்திலே ஆரம்பித்து நானகு வருட காலம் பிரசுரஞ்செய்தார்கள். பின் அவை புத்தகமாகக் கட்டிவிற்கப்பட்டன. 1915ஆம் ஆண்டு அப்புத்தகங்கள் அருமையான படியால் பலரும் ஆவலுடன் தேடுவாராயினர். இதனைக் கொண்டு யாம் ஞானசித்தியை இரண்டாவது முறையாக அச்சிடலாமென நினைத்து சில அன்பர்களோடு யோசனை செய்ததில் அவர்கள் நம்மைப் பெரிதும் உற்சாகப்படுத்தினார்கள். பணமுட்டதிகமான இக்கால நிலைமைகளிலும் யோசித்துத் தொடங்கும்படியும் புத்தி புகட்டினார்கள்.
சைவசமயத்தின் தற்கால நிலையை நோக்கும்போது சும்மாவிருக்க மனம்வராமல் திருவருளையே
துணையாகக் கொண்டு தமையனார் அவர்கள் செய்து போந்த தொண்டைப் பின்பற்றிச் செய்துவர
எண்ணி ஞானசித்திப் பத்திரிகையைப் பிரகாஞ் செய்துவர முன்வந்தோம்.||
ஞானசித்திப் பத்திராதிபர்
இதிலிருந்து பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்களாகவும் அச்சகங்கள் தொழிற்பட்டமை புலனாகின்றது. புத்தகவெளியீடு விற்பனை, உரை என்பவற்றிற்கு ஞானசித்தியில் வந்த விளம்பரம் ஒன்று குறிப்பிடக்கூடியர்.
தஞ்சை வாணன் கோவை
குன்றத்தூர் அட்டாவதானி சொக்கப்பநாதர் உரையும்
வித்துவான் சி. நாகலிங்கம்பிள்ளை இயற்றிய,
நூலாசிரியர், உரையாசிரியர் சரித்திரம் பலவகை ஆராய்ச்சிக்
குறிப்பு என்பவைகளும் அடங்கியுள்ளன.
ஞானசித்தி அச்சியந்திரசாலை,
பதிப்பாசிரியர் சி. நாகலிங்கம்பிள்ளை
1935 – புரட்டாதி.
அச்சகங்களின் பணியை பிரதேச எல்லைக்குள் அடக்குதல் சாலாது. அச்சுப்பணி காலங்கடத்தும், தேசங்கடத்தும் நின்று நிலைப்பவை. சுப்பிரமணிய சாஸ்திரிகளின் பஞ்சாங்கம் தமிழ்கூறும் நல்லுலகெங்கும் பரந்திருந்தமையும் சிறந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பழைய ஏட்டுப்பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்டு அச்சுவாகனமேறிய நாட்டார் பாடல்களையும் இப்பகுதியில் காணமுடிகிறதுர். வடமராட்சிக்கு அப்பால், வரலாற்றுப் புகழ்மிக்க வன்னிவள நாட்டில் வழங்கிய வேலப்பணிக்கர் பெண்சாதி – அரியாத்தiபேரில் ஒப்பாரி என்னும் நூல் கீழைக்கரவை வ.கணபதிப்பிள்ளை அவர்களால் நெல்லியடி சிவகுக அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.
அச்சகங்கள் பன்முகப்பட்ட பணியினை மேற்கொண்டுள்ளமையைக் குறிப்பிடும்பொழுது பத்திரிகைகள் முக்கியம் பெறுகின்றன. அச்சக உரிமையும், வசதியுமற்றவர்கனும் பத்திரிகைகள் நடாத்தியுள்ளனர். வடமராட்சிப் பகுதியின் தனித்துவத்தைப் பேணுகின்ற அதேவேளையில் ஈழத்தின் பொதுவான லக்கியப்போக்கிற்கும் நோக்கிற:கும் ஈடுகொடுத்து இவை இயங்கியுள்ளன. ஈழமணி, தேசத்தொண்டன், கண்கள், சைவபோதினி முதலிய பத்திரிகைகளும் வாழ்ந்து மடிந்திருக்கின்றன. ஈழமணி பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. தேசத்தொண்டன் மாதப் பிரசுரமாக - இலக்கியம், சமூகம், வரலாறு, அரசியல் என்ற பகுதிகளைக் கொண்டு வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியரும் அதிபரும் யாழ்ப்பாணத்துக் கட்டைவேலியூர் பண்டிதர் ஜே. எஸ. ஆழ்வாப்பிள்ளை என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
சைவபோதினி பருத்தித்துறை சைவப்பிரகாச சபையாரால் சைவசமயிகள் முன்னேற்றம் கருதி வெளியீடப்படும் ஓர் மாதப் பத்திரிகை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சைவசமயக் கட்டுரைகளும், ஆசங்கைகளும் இடம்பெற்ற இப்பத்திரிகையில் வடமராட்சியைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் கட்டுரைகள் எழுதியுள்ளர். கரவெட்டிகிழக்கு க. பொன்னம்;பல உபாத்தியாயர், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் தந்தையார் பண்டிதர் கார்த்திகேசு போன்றோர் பலவேறு தலைப்புக்களி;;ல் கட்டுரைகள் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சு. சிவபாதசுந்தரம் தொடர்ந்து இப்பத்திரிகையிற் சமயக் கட்டுரைகள் எழுதியுள்ளமையும் அவதானிக்கக்கூடியது.
ஷஷகண்கள்|| பத்திரிகை அல்வையூர் ஆசிரியர் சு. கணபதிப்பிள்ளை அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது. அவரைச் ஷஷசுகணா|| என அழைப்பர். சமூக சீர்திருத்தம், சாதி எதிர்ப்பு, இலக்கியம், நாவல், சிறு கதை என்பவற்றைத் தாங்கி ஓரளவு தி.மு.க. பாணியில் வெளிவந்த சஞ்சிகையாகும். அதன் அட்டை கறுப்பும் சிவப்புமாகவே அமைந்திருந்தது. அண்ணா, ஈ.வே.ரா. போனறோரின் படங்களும், பொன்மொழிகளும் கண்களில் இடம்பெற்றிருந்தன.
வடமராட்சியின் முக்கிய பகுதிகளிலொக்றான கரவெட்டியைச் சேர்ந்த சி. சிவஞானசுந்தரத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் சிரித்திரன் பத்திரிகையை இவ்விடத்தில் குறிப்பிடுவது முக்கியமானது. இப்பத்திரிகையின் ஆசிரியர் தனித்துநின்று ஈழத்து இலக்கியத்திற்கு வளமூட்டும் வடமராட்சியின் பிரதிநிதிகளில் முக்கியமானவராகிறார். தனியே நகைச்சுவையை மாத்திரம் கொண்டு ஆரம்பத்தில் வெளிவந்த சிரித்திரன் இன்று நாவல், சிறுகதை, கவிதை, புதக்கவிதை, கேள்வி பதில் என்றே பல்வேறு அம்சங்களைக்கொண்டு வெளிவருகின்றது. இப்பத்திரிகையில் இடம்பெறும் நகைச்சுவைத் துணக்குகள் பலவற்றில் வடமராட்சியின் முத்திரை தெரிவதுண்டு.
சிவஞானசுந்தரம் தினகரன் பத்திரிகையில் தினமும் வெளியிட்ட சவாரித்தம்பர் என்னும் கருத்தோவியவிளக்கம் அக்காலத்தில் பெருமதிப்பையும் செல்வாக்கையும் பெற்றிருந்தது. போராசிரியர் க. கைலாசபதி தினகரன் ஆசிரியராக இருந்த காலத்திலேயே சவாரித்தம்பரை அறிதுமுகஞ்செய்துவைத்தார். வடமராட்சியில் வாழ்ந்த தம்பர் என்னும் சாதாரண மனிதனை (அவருக்குப் பட்டப்பெயர் சவாரித் தம்பர்) நாடறியும் ஒரு பாத்திரமாக மாற்றியுள்ளார். தம்பர் இலக்கியம், நிகண்டு என்பவற்றைக் கற்று அறிந்ததோடு மிகவும் முற்போக்குச் சிந்தனை உள்ளவராகவும் காணப்பட்டவர். நெல்லியடி மடத்தில் குடியரசு பத்திரிகையைப் பலர்க்கும் படித்துக்காட்டியவர். ஈ.வே. ராவின் குடியரசில் அங்கத்தவராக இருநு;தவர் என்றும் அறியமுடிகிறது. இவருடன் இணைந்து குடியரசுப் பத்திரிகை படித்தவர்களும், முற்போக்கினை வளர்த்தவர்களுமான குழு ஒன்று நெல்லியடியில் இயங்கிவந்தது. இவர்களே ஈ.வே.ராவை நெல்லியடிக்கு அழைத்துக் கூட்டம் நடத்திக் கல்லெறிபட்டவர்களாவர். அண்மைக்காலம் வரை குடியரசு கந்தப்பு, குடியரசு செல்லையா போன்ற ஷஷவிருதுப் பெயர்களுடன்| வாழ்ந்தவர்களையும் நெல்லியடியிவே காணலாம்.
இவ்வாறு முக்கியம் பெற்ற சவாரித்தம்பரையும், அவரின் நண்பனான சின்னக்குட்டியையும், கரவெட்டியில் இன்றும் வாழும் கிட்டிணரையும், விக்கிரியையும், நன்னனையும் பாத்திரமாகக் கொண்டு திரு. சிவஞானசுந்தரம், சுந்தர் எனும் பெயரில் வரைந்த ஓவியங்கள நகைச்சுவையோடு சமூகச்சீர்திருத்தத்தையும், வடமராட்சியின் பழக்கவழக்கங்களையும், மொழிநடையையும் வெளிக்கொணர்ந்தன. இவர் கையாண்ட மூடல், பனங்கழி, சவுக்கம், பெட்டகம், சத்தகம், சதிரலுக்கு, சாவாரி, சின்னமேளம், தைலாப்பெட்டி முதலிய சொற்கள் வடமராட்சியை இனங்காட்டுவன. அத்தோடு வாரவெளியீடுளிலட ஷஷசித்திரகானம.;|| எனும் தலப்பில் சினிமாப் பாடல்களுக்குச் சீர்திருத்தமான கேலிச்சித்திரங்களையும் வரைந்துள்ளார். (படம் - 2)
கோயிற் பதிகங்கள்:
வடமராட்சியின் பல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய வளத்திலும் கோயிற் பதிகங்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. அவை: பதிகம் ஊஞ:சல், அந்தாதி, இரட்டைமணிமாலை, நான்மணிமலை, மும்மணக்;கோவை, விஞ்சதி, ஒருபா இருபது போன்ற பல்வேறுவகையின. பெரும்பாலும் எழுத்தறிவுப் பாரம்பரியத்தில் வந்தவர்களே அதிகமான இவ்விலக்கிய வடிவங்களை ஆக்கியுள்ளனர். அவ்வப்போது அவை நூல் வடிவமும் பெற்றுள்ளன. பெரும்பாலும் குடாநாட்டிற்கே பொருந்துகின்ற இவ்விலக்கியப் பாரம்பரியம் வடமராட்சிப் பகுதிக்குச் சிறப்பானதெனக் கொள்ளமுடியாது. எனினும் ஆற்றல்வாய்ந்த புலவர்களினால் இவை செய்யப்பட்டமையின் ஷஷசொற்சுவை பொருட்சுவை|| நிரம்பியவையாகக் காணப்படுகின்றன. சிவசம்புப்புலவரின் கந்தவன நாதருஞ்சல் தொடக்கம் பண்டிதர் க. வீரகத்தியின் ஷஷகண்ணிற் காக்கும் காவலன்|| வரை இச்சிறப்பினைக் காணலாம்.
ஒரு கிராமத்தில், படித்தவரெனக் கருதக்கூடியவருக்கு இருந்த மதிப்பு இப்படியான பதிகங்கள் பாடுவதனாலும் புராணத்திற்குப் பயன் சொல்வதனாலுமே நிலைநிறுத்தப்பட்டது. சமூகம் அவரிடம் இத்தகைய ஆற்றலையே எதிர்பார்த்தது பண்டிதர், புலவர் முதலான பட்டப்பெயர்களை, பதிகம், சரமகவி ஆகியவற்றை இயற்றுவதோடு புராணபடனம் செய்யும் யாவருக்கும் இப்பகுதி மக்கள் இட்டு வழங்கியதை அவதானிக்க முடிகிறது.
இயல்பாகப் புலமைவாய்ந்திருந்த சிலரும் அக்காலக் கல்விப் பாரம் பரியத்திற்குக் கட்டுப்ப்ட்டு யாப்பு அணி இவற்றைத் தெரிந்துகொள்ள முயன்றிருக்கின்றனர். இதனால் ஆற்றலுள்ள சில புலவர்களும் இலக்கண வரம்பினுள் நின்று ஆக்கவேண்டியிருந்திருக்கிறது. ஷஷசீர்மேவு||, ஷஷகார்மேவு|| என்று தொடங்கிய பாங்கிலிருந்து இவற்றை அறியமுடிகிறது. எனினும் அவர்கள் இலக்கணத்தில் இ;டறி விழுந்ததாகத் தெரியவில்லை. தாம் வாழ்ந்த பகுதியிலுறைந்த கடவுளரை அல்லது வழிபடு கடவுளரைப்பற்றி இவர்கள் யாடியுள்ள பாடல்களை நுணக்கமாக அணுகினால் இவர்களின் பிறப்பிடம், சாதி, தொழில் என்பவற்றை அறிந்து கொள்ளலாம். ஒரு கிராமத்தில் பிறந்த இன்னொரு கிராமத்தில் அல்லது ஊரில் வாழ்ந்தாரும் தான் பிறந்த பகுதியிலுறைந்த கடவுள்மீது ஒரு பதிகம், அல்லது ஒரு பாடலாவது பாடியிருப்பதைக் காணலாம்.
பக்தியுணர்வும், தத்துவநோக்கும் கொண்டவையாக எழுந்த இந்தப் பதிகங்களினூடே கோயில்கொண்ட பெருமானின் புகழையும், கோயில் வரலாறுகளைச் சுட்டுகின்ற செவிவழிச் செய்திகளையும், புராண அதிகாசக் கதைகளையும், அவ்வூர் ஆலயகர்த்தாவின் குடும்பப் பெருமை, வழமைகளையும், இனத்தவரின் சிறப்பையும் கட்டுவனவாக அமைந்திருக்கின்றமையையும் காணலாம்.
சமூக வளர்ச்சியின் காரணமாகவோ, என்னவோ அண்மைக்காலத்திலெழுந்த பதிகங்களில் ஆலயம் சார்ந்த பிரசசினைகளையும், அதனியக்குனர் குழவினரையும் நையாண்டி செய்து, கடிந்து கூறும் பாடல்கள் இடம்பெற்றமை குறிப்பிடக்கூடியது. காலஓட்டத்தில் கடவுளரை வழிபடும் அடியவர்கள் ஆலயம் சார்ந்தவர்களைச் சிலேடையாக நையாண்டிசெய்யும் இப்பண்பினை ஷஷமலைபோலே ஒரு மாடு வழிமறிக்கிறதே|| என்ற நந்தனார் சரித்திர நாடகத்திலே வரும் ஜனரஞ்சகருமான பாடலுடன் ஒப்பிடலாம். அவ்வாNறு பக்தியைப் பாடவந்த பலர் சமூகத்தினையும் நாசூக்காகச் சாடியுள்ளனர். உதாரணமாகக், கரவெட்டியில், தச்சந்தோப்பு விநாயகர்மீது பண்டிதர் த.வீரகத்தியவர்கள் பாடிய ஷஷகண்ணிற் காக்கும் காவலன்|| என்னும பதிகததிலிருந்து ஒரு பாடலைச் சுட்டலாம். அந்த ஆலயத்தில் வழிபடும் அடியார்கள் சிலரை அறிந்தவர்கள் அடையாளம் காணும் வகையில் அப்பதிகப் பாடல்கள் அமைந்துள்ளன எனலாம்.
ஷஷகானமயிற் பாவனை செய்காட்டுக் கோழி
கடுவிடத்திற் கரந்துறையும் கரிய நாகம்
ஞானவிழி யோகியரிற் தூங்கும் பூனை
நாவிரண்டு கூறுடைய உடும்போடு. ஆடு
போனவழி நனையஅழும் ஓநாய் இந்தப்
பூவுலகைத் தலைகீழாய்ப் பார்க்கும் வெளவால்
ஆனஇவை எல்லாமே அடிய ராகி
ஆகடியம் செய்வதுமுன் ஆட லோசொல்.|| 12
என்ற பாடலை வகைமாதிரிககுக் காட்டலாம். பக்தியினூடு சமூகச் சீரழிவினைப் பாடுவதனைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
இப்பகுதியில் உள்ள ஆலயங்கள் மீது பாடப்பட்ட ஊஞ்சற்பதிகங்கள் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாக்களில் பூங்காவனத் திருவிழாவன்று பண்ணுடன் பாடப்படுவது வழக்கம். படித்தவர்கள் மட்டுமன்றிப் பாமரரும் இவ்வாறான பதிகங்களைச் சுவைத்து மகிழ்ந்து மனனமாக வைத்திருப்பதற்கு இதுவெ காரணமாகும்.
வடமராட்சியைச் சேர்ந்த புலவர்கள் வடமராட்சிப் பகுதிக்கு வெளியேயுள்ள பிரசித்திபெற்ற தலங்களான நல்லூர், மாவிட்டபுரம், சித்தாண்டி மாமாங்கம், கதிர்காமம், திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், வெருகல், நயினாதீவு போன்ற ஆலயங்களின்மீதும் பதிகங்கள் பாடியுள்ளனர். தொழில்காரணமாக இவ்விடங்களிலோ, அருகிலோ வசித்தமையாலும், வழிபாட்டுணர்வாலும் இவை எழுந்திருக்கலாம. இவற்றை விட வேறு சிலர் புலவர்களிடம் வந்து தாங்கள் கேட்டுத் தங்கள் தேவைக்காகவும் நேர்ந்திக்காகவும் புகழுக்காகவும் பாடுவித்துள்ளமையையும் காணலாம். அவ்வாறு பாடப்பட்ட பதிகங்களின் அட்டையில் இன்னாரின் கேள்விப்படி இன்னார் பாடியது என்று குறிப்பிடப்பட்டிருப்பதனையும காணலாம்.
புலவர்களின் மனக்குறை, நோய், தேவை இவற்றினை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பதிகங்கள் எழுந்துள்ளன. தாங்கள் செலுத்தும் காணிக்கையாக, நேர்த்திக்கடனாகச் செய்வதாகவும் சிலரின் பாடல்களில் குறிபபிடப்பட்டுள்ளது.தாம் பாடிய பாடல்களைத் தினமும் வழிபடும்போது பாடிப்பாடி வழிபட்டதாகவும், அதனால் கேட்டது கிடைத்ததாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஈழநாட்டின் பிரசித்திபெற்ற பல சைவ ஆலங்கள்மீது ஊஞ்சற் பதிகங்கள் பலவற்றைப் பாடியுள்ள கரவெட்டியைச் சேர்ந்த வ. சிவராசசிங்கம் அண்மையில் நயினை நாகபூ~ணி பிள்ளைத் தமிழையும் பாடியுள்ளார். இவ்வரிசையில் க. கணபதிப்பிள்ளை யாசிரியரின் தச்சைச் சிலேடை வெண்பாவும் விதந்தோதக் கூடியது. பக்தியுடன் இணைந்து புலமயும் தமிழும் வளர்ந்தது நமக்குப் புதிதல்லவே.
வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியத்தால் முகிழ்த்த இலக்கிய வளத்தின் ஒரு பலம்வாய்ந்த நினைவுச் சின்னமாக இப்பதிகங்கள் நின்று நிலவுகின்றன. வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை, அகவல் போன்ற பல்வேறு யாப்பு வடிவங்களிலும் இப்பதிகங்கள் எழுந்துள்ளன. இவை ஆக்கியோரின் ஷஷயாப்பறி புலமையை|| வெளிக்காட்டுவனவாகவும் காணப்படுகின்றன. கற்பனைவளமும், பக்திச் சுவையும் நிறைந்தவையாக இவற்றிற் பர காணப்படுகின்றமையும் உண்மையே. அதேவேளையில் வித்துவத்திறனைக் காட்டுபவையாகவும் வெறுஞ் செய்யுளாக அமைந்து காணப்படுகின்றனவையும் உண்டு. வடமராட்சிப் பகுதியில் பாடல் பெறாத, பாடப்படாத ஆலயங்களே இல்லையெனலாம்.
சாமகவிகள்
வடமராட்சிக் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய வளத்திலும் சரமகவிகள், (இரங்கற்பாக்கள்) பெறும் பங்கும் முக்கியமானது. தன்னுணர்ச்சியாக வெளிவரத்தொடங்கிய இக்கவிதை மரபு பண்டிதர்களையும் பாரம்பரியக் கல்வியாளர்களையும் பாமரர்களையும் பாதித்துள்ளமையை அறியமுடிகின்றது. சரமகவிகளைக் ஷஷகல்வெட்டி|| என அழைப்பதிலிருந்து அதன் தொன்மையையும் தோற்றத்தினையும் அறியலாம்.
இச்சரமகவி மரபிலும் இருவெறுபட்ட சமூக முக்கியத்துவம் உண்டு. உறவினர், நண்பர் இறந்தபோது தாமே மனமுருகிப் பாடுவது ஒன்று.
பணங் கொடுத்துத் தம் குடம்பநிலை, அந்தஸ்து என்பவற்றையும் மனஉணர்வுகளையும் வெனிப்படுத்தப் பாடுவிப்பது இன்னொன்று.
முன்வகையில் தன்னாசான், நண்பர், தாய், தந்தை, உறவினர் இவர்களில் யாராவது இறந்தபோது மனமுருகிப் பாடுவர். இதற்கு உதாரணமாக ஆறுமுகநாவலர் இறந்தபோது சிவவம்புப்புலவர் பாடியதனைச் சுட்டிக் காட்டலாம்.
ஷஷஆரூh னில்லைப் புகலியர் கோனில்லை யப்பனில்லை
சீரூரு மாணிக்க வாசக னில்லை திசையளந்த
பேரூரு மாறு முகநா வலனில்லை பின்னிங்குயார்
நீரூரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மையரே.||
என்ற இரங்கற்பாடல் பிரதேசங்கடந்த புகழ்பெற்ற பாடலாகும். அக்காலத்து வாழ்ந்த புலவர்கள், கல்விமான்கள் இரங்கற்பாக்கள் இயற்றக்கூடியவர்களாகவே காணப்பட்டனர். இத்துறையும் அவர்களின் சமூக அந்தஸ்தையும், அறிவையும், தேவையையும் பிரதிபலிப்பவையாகவே அமைந்திருந்தன.
கல்வெட்டு எனும் சரமகவிமரபில் ஒப்பாரும் மிக்காருமற்றவராகத் திகழ்ந்தவர் கரவை நாடகக் கவிமணி எனப் போற்றப்பட்ட கிரு~;ணாழ்வாராவர். இவரின் பதடல்கள் இலக்கிய அந்தஸ்தும், உணர்வு நலமும், நயமும் நிறைந்தவை. இயல்பாகவே கவிபாடும் ஆற்றலுள்ள இவர், பண்டிதர்கள், க.வீ., பொ. கார்த்திகேநு, வித்துவான் க. நடராஜா போன்றவர்களின் கூட்டுறவினால் யாப்பறி புலவனாகவும் திகழ்கின்றார். வெண்பா, விருத்தம், கட்டளைக்லித்துறை ஆசிரியப்பா போன்ற பல்வேறு யாப்புவகைகளில் இவர் நயமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்த நூற்றாண்டில் ஈழத்தில் இவருக்கிணையான சரமகவிக் கவிஞர் ஒருவர் வாழ்ந்தாரென்று கூறமுடியாது.
இவர் பாடிய புலம்பல்கள் நெஞ்சைத் தொடுபவை. கற்பனை நிறைந்தவை. வகைமாதிரிக்குப் பேரர் புலம்பல் எனும் தலைப்பில் இவர் பாடிய பாடல் நோக்கத்தக்கது.
ஷஷமுற்றத்து மண்சோறாய் மூன்றுமற் காயடுப்பாய்
பற்றியபா வட்டையிலை பாற்கறியாய்ப் - பெற்றுவித்துச்
சாப்பிடவா அப்பா சமைத்தஉண வாறுதென்று
கூப்பிடுவ தாரையினிக் கூறு.||
வடமராட்சிப் பகுதியில் மாத்திரமன்றி பலபாகங்களிலிருந்தும் இவரைக்கொண்டு சரமகவிகள் பாடுவிக்கப் பலர் வருவதுண்டு. பொருத்தமான கற்பனைகளுடன் உள்ளத்தை உருக்கும வகையில் புலம்பல்கள் பாடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்.
சரமகவிகளோடு மட்டும் கிரு~;ணாழ்வார் நின்றவரல்லர். வாழ்த்து மடல்கள், வாழ்த்துப்பாக்கள், பதிகங்கள், கோயில்கள், கடவுளர்மீது தனிப்பட்ட துதிகள் என்பவற்றையும் பாடியுள்ளார். 1895ஆம் ஆண்டு பிறந்த இவர் 1972ஆம் ஆண்டிலேயே மரணமானார்.
பொன். கந்தையா, ஜீ. ஜீ. பொன்னம்பலம், வதிரிப் பெரியார் சூரன், நீச்சல் வீரர் நவரத்தினசாமி முதலிய வடமராட்சிப் பெரியார் பலரை இவர் புகழ்ந்து பாடியிருக்கிறார். வகைமாதிரிக்கு நீச்சல் வீரர் நவரத்தினசாமியைப் பாடிய பாடலை இங்கே சுட்டிக்காட்டலாம்.
வங்கமலி பொங்குகடல் சங்கொலி முழங்கிடும்
வளமேவு தொண்டை மானூர்
வரதகுரு குலமகிப் திருமுருகுப் பிள்ளையாம்
வள்ளலுக் கரிய சுதனே
சங்கமலி பல்கலைத் துங்கமே நவரத்தின
சாமியே வருக வருக
சத்திக்கு முயர்பாக்கு நீரிணையை நீந்தியே
தாண்டினோய் வருக வருக
மங்களம் பொலிவடம் ராட்சிக்கு வாகைமலர்
மாட்டினோய் வருக வருக
பங்கமில் லாதநர சிங்கமென் றேத்திடும்
பார்த்தனே வருக வருக!
பாராளு மகராணி வரவினுக் கொருபுதுமை
பரவினோய் நீ வருகவே.
இவ்வாறு பல்வேறு வகையான யாப்பு வடிவங்களையும் சந்தங்களையும் கையாண்டு கவிதைபடைத்த எம்.வீ. கிரு~;ணாழ்வார் நாடகத்துறையில் ஈட்டிய புகழுக்குச் சமதையாகக் கவிதைத்துறையிலும் புகழீட்டியுள்ளார். இவரை வரகவி என்றே அழைக்கலாம்.
வடமராட்சியின் சமூக உறவையும், கிராமிய நிலையையும் நன்கு சித்திரிக்கும் பாடல்கள் பலவற்றை இவர் பாடியுள்ளார். பெரும் நாடகப் புலவரான இவர் பாரம்பரியக் கல்வியறிவு பெறாதவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இலக்கணமரபு
வடமராட்சிப் பகுதியின் இலக்கணப் பாரம்பரியத்தினை நோக்கும் பொழுது அம்மரபு வைரம் பாய்ந்ததாகவே காணப்படுகின்றது. எழுத்தறிவுப் பாரம்பரியத்தின் நிலைப்பாட்டினையும், நுண்ணறிவின் செயற்பாட்டினையும் இப்பாரம்பரியத்திலே காணலாம்.மரபுவழிக் கல்வியில் வந்தவர்கள் இலக்கணத்தில் சிறந்த தேர்ச்சியுடையவர்களாக இருந்தனர். சவசம்புப்புலவர், நா. கதிரைவேற்பிள்ளை, கந்த முருகேசன், முத்துக் குமாரசாமிக்குருக்கள், இலக்கணக்கொத்தர், குமாரசாமிப் புலவர் போன்ற அறிஞர்கள் தோற்றுவித்த இம்மரபு பண்டிதர் வீரபத்திவரை நின்று நிலைக்கிறது. இலக்கணச் சூத்திரங்களுக்கு உரைகளும், உரைகளுக்கு விளக்கமும் வடமராட்சிப் பகுதியிலிருந்து வெளிவந்துள்ளன. வடமராட்சியின் இலக்கண மரபின் வளர்ச்சியையும் செழுமையையும் பண்டிதர் க. வீரகத்தியின் பின்வரும் கூற்றிலிருந்து அறியலாம்.
ஷஷஉரைகளுக்கு விளக்கம் எழுதுவதிலும் நம்மவர்கள் விட்டுவைத்து விடவில்லை. நன்னூற் காண்டிகை உரைக்கே விளக்கம் எழுதினார் (1902) யாழ்ப்பாணத்துப் புலொலியூர் வ. குமாரசாமிப் புலவர், இந் ஷஷநன்னூற் காண்டிகை உரை விளக்கம்|| இருட்டிலிருந்து ஒளிக்குச் செல்லும் வாய்ப்பை நல்கியது. விடுபடாதிருந்த இலக்கணப் புதிர்களை விடுசித்து சிவஞானமுனிவரின் ஆகபெயர், அன்மொழி வேறுபாடே ஈடாட்டம்காண வழிவகுத்தது. ஷஷவிளக்கப்|| பெருமை விளக்கப்பெருகும். || 13
இந் நன்னூற் காண்டிகை உரை விளக்கம் எழுதிய புலோலி வ. குமாரசாமிப் புலவர் சாதாரணமாகப் பேசும்பொழுதே இலக்கண சுத்தமான வார்த்தைகளையே கையாளுவாராம். சாதாரண பேச்சு வழக்கு இவருக்கு ஷஷஅலேஜி|| என்று கூறுவார்கள். இதனால் இவரை அண்டிக் கல்வி கற்க மாணவர்கள் அஞ்சியதாகவும் அறியககிடக்கின்றது. இவரின் இலக்கணப் புலமைபற்றியும் இலக்கண வகுப்புப்பற்றியும் பேராசிரியர் கணபதிப்பிள்ளை நயம்படக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
இலக்கணந் தன்னை விளங்கக் கற்றே
இலக்கண நெறியால் இயைபுடன் பேசி
வந்தடை மாணவர்க் கந்தமிழ்த் தமிழை
இலக்கண முறையுடன் இயம்பிடு முதியோன்
கோதி லிலக்கணக் கோவிந்த னென்னும்
குமார சாமிப் புலவன் தன்னிடம் 14
குமாரசாமிப்புலவரைவிட இவருக்கு முன்பு வாழ்ந்த வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை, சிவசம்புப்புலவர் போறோர் நம்பி அகப்பொருளுக்கும், காரிகைக்கும் உரை எழுதியுள்ளனர். உடுப்பிட்டி சிவசம்புப்புலவரின் காரிகை உரை, விளக்கம், புதிய இயல் என்பவற்றைக்கொண்டு வெளிவந்தது. பல சர்ச்சைகளுக்கும் வாதங்களுக்குமுட்பட்ட இக்காரிகைப் பதிப்பு மூலபாடத்திறனாய்வாளருக்கு மிகவும் பயன்படக்கூடியதாகும்.
வடமராட்சிப் பகுதுpயின் இலக்கணப் பாரம்பரியமும் சிவசம்புப்புலவரின் ஊற்றெடுத்து அவரினூடே முத்துக்குமபாரசாமிக் குரக்களுக்கூடாகப் பரவி பேராசிரியர் கணபதிப்பிள்ளையிற் தேங்கி இன்று பல்கலைக் கழக இலக்கணமரபாகப் பேராசிரியர்கள் ஆ. வேலுப்பிள்ளை, அ. சண்முகதாஸ் போன்றோருக் கூடாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது எனலாம்.
ஐந்திலக்கணத்தில் அறிவும் ஆற்றலுமுள்ளவர்கள் வடமொழியிலக்கணங்களிலும் சிறந்த பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருந்தனர். உதாரணமாக, முத்துக்குமாரசாமிக் குரக்கள், சுப்பிரமணிய சாஸ்திரிகள, புலோலி வ. கணபதிப்பிள்ளை, நா.கதிரைவேற்பள்ளை முதலியோரைச் சுட்டிக் காட்டலாம்.
இலக்கணக் கல்வியுடுன் இயைவுபட்டதும், காரணகாரியத் தொடர்புடையது. ஷஷஎண்|| என்று பண்டைய இலக்கியங்களில் கூறப்பட்டதுமான தருக்கவியலிலும் இப்பகுதி அறிஞர்கள் திறமையுடையவர்களாகக் காணப்பட்டனர். வாதம் செய்வதற்கும் சைவ சித்தாந்தக் கருத்துக்களை நிறுவுவதற்கும், இலக்கண வழியை இறுக்கமாகக் கடைப்பிடித்து நிறுவுவதற்கும் தருக்கம் எனப்படும் அளவை இயல் பயன்பட்டது.
பாரம்பரியப் புலமையில் வந்தவர்கள் மேற்காட்டிய தேவைகளுக்காக அளவையியலைத் தெளிவுற அறிந்திருந்தனர். சீரான சிந்தனைக்கு அளவை இயல் பயன்பட்டது என்று இவர்கள் கூறுகிறார்கள். வடமராட்சிப் பகுதியிலிருந்து இராமநாதபிள்ளை எழுதிய அளவை இயல் எனும் நூலும், க. சிவபாதசுந்தரம் எழுதிய அளவை நூலும் குறிப்பிடத்தக்கவை.
அகராதி முயற்சிகள்
வடமராட்சிப் பகுதியிலிருந்து தோன்றிய கல்விப் பாரம்பரியத்தின் பயன்தரு முகிழ்ப்பான அகராதி முயற்சிகளும் முக்கியதாகக் குறிப்பிடத்தக்கவை. தமிழகராதிகளின் மூலபிதாக்களில் ஒருவரான வைமன் கதிரைவேற்பிள்ளை உடுப்பிட்டியைச் சேர்ந்தவரே. இவர் தேடித் தொகுத்த விடயங்கள் யாவும் மதுரைத் தமிழ் சங்கத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு நூலுருப்பெற்றுள்ளது. இதங்கு இவர் மகன் பாலசிங்கம் ஒரு முகவுரை எழுதியுள்ளார். இவரின் அகராதிபற்றி எஸ். செபநேசன் கூறுவது அவதானிக்கத்தக்கது.
மருத்துவம், இரசாயனம், அளவையியல், சைவசித்தாந்தாம், வேதாந்தம், தத்துவம், அலங்காரம், சோதிடம் முதலிய பலதுறைக்கலைச் சொற்களை இவர் தேடித் தொகுத்தார். சொற்களின் தொகையையும் அவற்றிற்குக் கொடுக்கப்பட்டுள்ள மிக நுட்பமான விளக்கங்களையும் பார்க்கும்போது ஒரு தனிமனிதன் ஆற்றல் இவ்வளவா என்ற பிரமிப்பு ஏற்படுகின்றது. 15
வடமராட்சிப் பகுதியின் அகராதி முயற்சிகளில் சதாவதானம் நா. கதிரைவேற்பிள்ளையால் தொகுக்கப்பட்ட அகராதியும், சி. சுப்பிரமணிய சாஸ்திரிகள் 1924ஆம் ஆண்டு வெளியிட்ட சொற்பொருள் விளக்கமெனனும் அகராதியும குறிப்பிடத்தக்கவை. மதுரைத் தமிழ்ப் பேரகராதியின் பதிப்புரையில் உ.வே. சாமிநாதையர் யாழ்ப்பாண அகராதிகள் பற்றிக் குறிப்பிடாதுவிட்டபோதிலும் தொகுப்பாளர் சார்பில் கி.மா. கோபாலக்கிரு~;ணக்கோன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
ஷஷபல சொற்களைச் சேர்த்தும் திருத்தியும் யாழ்ப்பாணத்துச் சதாவதானம் கதிரைவேற்பிள்ளையவர்களால் ஓர் அகராதி வெளியிடப்பெற்றும், பின்னர் யாழ்ப்பாணத்து உவைமன் கதிரைவேற்பிள்ளை என்னும் புலவரால் தொகுக்கப்பெற்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் கதிரைவேற்பிள்ளை தமிழ்ச் சொல்லகராதி என்னும் பெயரால் ஓர் அகராதி வெளியிடப்பெற்றது.|| 16
இவ்வாறு கல்விப் பாரம்பரியம் வழங்கிய நன்கொடைகளில் நவீன உலகிங்குப் பயன்பாடுடைய அகராதி முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை.
வடமராட்சியின் பலம் வாய்ந்த கல்வி மரபின் பல்வேறு அறுவடை வேண்டியவை. இலக்கிய வளத்தின் பல்வேறு அம்சங்களையும் கொண்ட ஆக்கங்களை இப்பகுதியிலே பரக்கக்காணலாம். சிவசம்புப் புலவரின் கல்லாடக் கலித்துறை முதல் கந்த முருகேசனின் நாவலன் கோவை (இன்னும் அச்சேறவில்லை) வரை இப்பகுதியில் எழுந்துள்ளமையை அவதானிக்கலாம். வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும், இலக்கிய வளத்தினையும் பேணிக் காத்தவர்களை அனுபந்தத்தில் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளோம்.
புராணபடனம்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் புராண பிரசங்கமரபு நாவலருடனேயே ஆரம்பக்கின்றதெனலாம். வடமராடசியில் வாழ்ந்த அறிஞர் பெருமக்களில் பலர் புராணபடனத்தில் வல்லமையும் பயிற்சியுமுடையவராகவே காணப்பட்டனர். புராணபடனம் இப்பகுதிகளில் ஒரு சமயச் சடங்காகவே நிகழ்ந்துள்ளது. எழுத்தறிவுப் பாரம்பரியம் ஜனரஞ்சகமாகவும் பயன்பட்டமைக்குப் புராணபடனம் ஒரு சாட்சியாகும். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், குறிப்பாகப் பெண்கள் ஆலயங்களிற் சென்று ஷபடிப்பு|க் கேட்பது (புராணபடனம்) வழக்கம். மிகவும் ஆசாரசீலர்களாகவே ஆலயத்திற் புராணப் படிப்புத் தொடங்கியதும் ஊரில் உள்ளவர்களில் அனேகமானவர்கள் மாமிசம் புசிக்கமாட்டார்கள். ஷஒருநேரச் சோறு| என்று விரதமிருப்பார்கள். ஷஷமச்சத்தைத் திண்டபாடுமில்லை, புராணத்தைக் கேட்டபாடுமில்லை.|| என்று ஒரு பழமொழிகூட இப்பகுதியில் நிலவுகிறது. புராணம் வாசிப்பவரை விடப் ஷபயன்| சொல்லுபவர் 9உரை) திறமையாளராகவும், மதிப்புடையவராகவும் கருதப்படுவர். பயன் கூறுபவருக்குள்ள பெரும்பயன் அவர் பெறும் சமூக அந்தஸ்தே யெனலாம்.
வித்துவத்தன்மையில்லாமலும், ஆழ்ந்த அறிவு இல்லாமலும் ஓரளவு படித்தும், குரல்வளம் உடையவர்களும் ஷஷபயன்பழகிப்|| பயன் சொல்வதும் உண்டு. இவர்கள் குறிப்பாகக் குறிப்பிட்ட ஒரு புராணத்திலேயே விசேட பயிற்சி பெற்றவர்களாகவிருப்பர். இல்கிய ஆக்கத்திறனில்லாமலும், நயம்பட உரைக்க முடியாவிடினும் இவர்களின் குரல்வளமும், சமூகத்;தேவையும் இவர்களைப் ஷஷபயனுக்குரியவர்களாக்கியது எனலாம்.|| இவர்கள் ஆலயங்களில் புராணம் பயன்சொல்லி ஷஷவேதனம்|| பெறுவர். கூலி கூடக் கொடுக்குமிடங்களுக்குச் செல்வதே இவர்களது நோக்கம், இவர்களுக்கு முன்கூட்டியே ஷஷஅச்சவாரம்|| கொடுத்துவைப்பதும் உண்டு. இந்த வகைக்கு உதாரணமாக மிக அண்மைக்காலம் வரை வாழ்ந்த துன்னாலையைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவரையும், கரவெட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பவரையும் குறிப்பிடலாம்.
புராணபடனம் வெறுமனே உரையாக (பயனாக) அமையாது. பொழிப்புரை, விருத்தியுரை - இலக்கணக்குறிப்பு, கிளைக்கதைகள், மேற்கோள்கள், ஒப்பியல்நோக்கு என்பவற்றில் நிகழ்த்தப்படுவதனையே சிறப்பாகப் பெரும்பான்மையோர் விரும்புவர். வைத்தியலிங்கம்பிள்ளை, சிவசம்புப்புலவர், தில்லைநாதநாவலர், கதிரைவேற்பிள்ளை முதலிய பலர் இவ்வாறான ரசனையைத் தூண்டும் வகையில் நயம்படச் செய்யப்படுவதே சிறந்த புராண படனமாகக் கணிக்கப்பட்டது.
புராணத்திற்குப் பயன் சொல்லுவதிலும் போட்டியும், செருக்கும் காணப்பட்டமையும் உண்டு. அவை பற்றிய பல கதைகளும் உண்டு. புராணம் படிக்கத் தொடங்குமுன் கோயிலின் பிரதம குரு விநாயகபூசை செய்து ப}hசாலாத்திகாட்டி நூலின் காப்புச் செய்யுளையும் பாடத்ததொடங்கும் பகுதியின் முதற் செய்யுளையும் படித்தே புராணப் படிப்பைத் தொடங்குவர். இதனாற்தான கோயிற் பூசகர்களும் புராண இலக்கிய அறிவு வாய்க்கப்பெற்றவராக இருக்கவேண்டியிருந்தது. உ+ம்:வைத்தியலிங்கதேசிகர், குறிப்பிட்ட படலமோ, பாடல்களோ படித்து முடிந்ததும் பூசகர் பூசையை நிகழ்த்தி புராண உரைகாரரிடம் ஷஷகாளாஞ்சி|| கொடுப்பர், அக்காளாஞ்சியில் உபயகாரரின் வசதிக்கேற்றபடி பழம், பாக்கு, வெற்றிலையுடன் பணமும் இருக்கும். இதுவம் ஒருவகையில் வேதனமே.
புராணப்படிப்பு பெரும்பான்மையும் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களிலேயே நிகழும். பூரணையிலோ அல்லது உத்தரம், திருவோணம் போன்ற நட்சத்திரங்கள் நிற்கும் நிறைநாளிலோதான் புராணப்படிப்பு நிறைவுபெறும். அந்தநாள் ஆலயத்தில் பெரிய அலங்காரத் திருவிழாக்களும், அன்னதானமும் நிகழ்வதுண்டு. ஆலயத்தைச் சூழவே கல்வி, கலை, கண்பாடு என்பன தேங்கி நின்றமைக்கு இது ஒரு உதாரணமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டிலே நல்லூரில் ஆரம்பித்ததாகக் கருதப்படும் புராணபடனமரபு இன்றும் ஓரளவு வடமராட்சிப் பகுதியிலேயே நிலைத்துநிற்கிறது எனலாம். கோயில்களில் கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் முதலியவையும், சித்திரபுத்திரனார்கதை, பிள்ளையார் கதை, பிள்ளையார் புராணம், ஏகாதசிப் புராணம், கோவலனார்கதை என்பனவும் படிக்கப்பட்டன. அக்காலம் அச்சுவாகனமேறிய நூல்களின் எண்ணிக்கையில் இவை அதிகமாக இருப்பதற்குப் புராணபடன மரபே காரணம் எனலாம். வள்ளியம்மை திருமணப்படலம், தெய்வானையம்மை திருமணப்படலம், பிட்டுக்கு மண்சுமந்த சருக்கம் போன்றவை படிக்கப்படும் நாட்கள் விசேட நாட்களாகக் கருதப்பட்டன. பண்பாட்டுணர்வு மங்கள நிகழ்ச்சிகளில் உள்ள நம்பிக்கையை இவை பிரதிபலிக்கின்றன எனலாம்.
ஷஷநாவலர் பெருமான் காலத்தின்பின் அவர்கள் அணுக்கத் தொண்டர்களாய் இருந்தோர்கூடச் சிந்தாமணியிலும் கம்பராமாயணத்திலும் சுவைகண்டு காட்டிக்கொண்டிருந்தபோது, கந்தபுராணத்தையும்
அன் பண்பாட்டினையும் ஒழுங்குறப்பேணி வளர்த்து நாவலர் அடிச்சுவட்டிலே இயன்று வந்தது புலாலியூரே.|| 12
என்று தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளையவர்கள் கூறுவது மனத்திருத்தத்தக்கது.
வடமராட்சியின் புராண படன மரபு இப்பகுதியின் சமய சமூக பொருளாதார அம்சங்களுடன் இறுக்கமான தொடர்புடையதாகக் காணப்பட்டது. ஆனால் இப்போ இம்மரபும் அருகிவருவதும் குறிப்பிடத்தக்கது. அம்மரபுவழிவந்த அறிஞர்கள் பற்றிய விபரங்கள் அனுபந்தத்திற் சேர்க்கப்பட்டுள்ளன.
அடிக்குறிப்புக்கள்
1. பாவலர் சரித்த்ர தீபகம் - ஆhனல்ட் சதாசிவம்பிள்ளை, பக்கம் 122. மானிப்பாய், 1888.
2. மாணிக்கமாலை, - பேராசிரியர் கணபதிப்பிள்ளை உரிமையுரை – முதற்பதிப்பு – 1950
3. பேராசிரியர் க. கைலாசபதி, பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும். 1967.
4. உதயதாரகை, 21-10-1841
5. யாழ்ப்பாண வைபவ கௌமுதி, பக்கம் 276 - 277
6. புலொலியூர்ப் பெரியார் சு. சிவபாதசுந்தரம் நினைவு மலர், 1978 – பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை. பக்கம் 1.
7. உதயதாரகை, 17-06-1841.
8. திரு.கா. சூரன் அவர்களின் நினைவு மலர், 1960 – எனது வiலாறு பக்கம் - 5
9. சைவப் பெரியார் பற்றிய சில சிந்தனைகள் - ச. அம்பிகைபாகன் சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் நூற்றாண்டு மலர்.
10. ஈழகேசரி. 12-07-1953 நினைவுக்கட்டுரை
11. இயற்றமிழ்ப் போதகாசிரியர் வல்வை ச. வைத்தியலிங்கம்பிள்ளை – கார்த்திகேசு சிவத்தம்பி. பக்கம் 13.
12. கண்ணிற் காக்கும் காவலன் - பண்டிதர் க. வீரகத்தி, பக்கம்.
13. ஈழத்து இலக்கண முயற்சிகள் - பண்டிதர் க. வீரகத்தி, நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு பலர், இலங்கை, பக்கம் 100
14. காதலியாற்றுப்படை – பேராசிரியர் கணபதிப்பிள்ளை.
15. ஈழநாட்டில் எழுந்த தமிழ் அகராதிகள் - எஸ். ஜெபநேசன், அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மகாநாடு (நினைவுமலர்) பக்கம் 105
16. மதுஐரத் தமிழ்ச் சங்கப் பேரகராதி முகவுரை – கி.மா. கோபால கிரு~;ணக்கோன், பக்கம் 2.
17. கதிரொளிஜ - புலொலியூர்ப் புலவர்கள், தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை.
இயல் நான்கு
வடமராட்சியுமு; பிறபகுதிகளும்
4 . 1 வடமராட்சியும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளும்
வடமராட்சிப்பகுதிக்கும் ஈழத்தின் ஏனைய பகுதிகளுக்கு மிடையே கல்வி, இலக்கியத் தொடர்புகளைக் கவனிக்கும்பொழுது, வடமராட்சி குடாநாட்டிலும், குடாநாட்டிற்கு வெளியேயும், கடல்கடந்து தமிழ் நாட்டிலும், தனது பணியையும், பங்கினையும் வியாப்தியடையச் செய்தமை புலனாகின்றது. வடமராட்சியைச் சேர்ந்த அறிஞர்கள் ஈழத்தின் கல்விப் பாரம்பரியத்திற்கு ஊற்றுக்காலாகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. வடமராட்சிக்கு வெளியேயுள்ள அறிஞர்கள் போற்றியும் பாடியுமுள்ளனர். இவற்றைவிட இவர்கள் பாடிய சமயச்சார்பற்ற கோவை முதலியனவும் குறிப்பிடத்தக்கன.
இந்தவகையில் முதன்முதலாக ஆதாரபூர்வமாகக் கிடைப்பது கல்லூரி சின்னத்தம்பிப்புலவரியற்றிய 1716 – 1780 (கி.பி) கரவை வேலன் கோவையேயாகும். இக்கோவை கரவெட்டியில் வாழ்ந்த உள்@ர்ப் பிரபுவாகிய வேலாயுத உடையர்மீது பாடப்பட்டது. ஷஷசமயச் சார்பற்ற ஈழத்தில் எழுந்த உள்@ர்ப் பிரபுமீது பாடப்பட்ட முதற்பிரபந்தமாக இது காணப்படுகிறது.ஷஷ 1 இப்பிரபந்தம் முழமையாகக் கிடைக்கவில்லை. இதில் 401 பாடல்கள் இருந்ததாகக் கூறப்பட்டபோதும் இன்று 322 பாடல்களே கிடைத்துள்ளன. மிகுதிப்பாடல்கள் அழிந்ததா? அழிக்கப்பட்டதா? என்ற ஐயம் ஏற்படக்கூடியதாக இப்பகுதியில் செவிவழிக் கதைகள் நிலவுகின்றன.
இரண்டு உள்@ர்ப் பிரபுக்களிடையே உண்டான போட்டி காரணமாக, ஒரு பிரபு ஷஷபுலவர்பாடும் புகழுக்காக|| நல்லூரிலிருந்து புலவரை அழைப்பித்திருநதார். புலவர்வரும் வழியில் மறறைய பிரபு அழகிய பந்தலிட்டு, வரவேற்றுப் பரிசு வழங்கித் தனமீது ஒரு கோவை பாடுமாறு வேண்டிநின்றாராம் பரிசுபெற்ற புலவர் அப்பிரபுமீது இக்கோவைப் பிரபந்தத்தைப் பாடியதாகவும் ஷகதை| வழங்குகிறது. இன்றும் கப்புதூவெளி என்னுமிடத்தில் ஷஎல்லைமானப்பந்தலடி| என்ற பெயருடன் ஒரு இடம் இருக்கிறது. இவ்விடத்திலேயிருந்துதான் சின்னத் தம்பிப் புலவர் கரவைவேலன் கோவையைப் படிhடினாராம். அழிந்த பாடல்கள் மற்றைய பிரபுவர்க்கத்தினரை இகழ்ந்து பாடிய பாடல்கள் என்றும் ஒருகதை இப்பகுதியில் நிலவுகிறது. இப்பிரபந்தத்தில் வரலாற்றுச் செய்திகளைவிட இலக்கியச் சுவை முக்கியம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமராடசிப் பகுதிக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குமிடையேயிருந்த கல்வி இலக்கியத் தொடர்புகள் முக்கியமானவை. வடமராட்சியைச் சேர்ந்த மாணவர்கள் பலர் குடாநாட்டில் தலைசிறந்த ஆசிரியர்களாக விளங்கிய சேனாதிராஜமுதலியார், நெல்லைநாதமுதலியார், ஆறுமுகநாவலர், அவர் மருகர் பொன்னம்பலபிள்ளை போன்றோரை நாடி ஷஷஉற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்|| கற்றுள்ளமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன. வித்தூன் கணேசையர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளையிடம் தாம் படிக்கச் சென்றபோது ஷஷகரவெட்டியைச் சேர்ந்த கார்த்திகேசு என்பவர் படித்துக்கொண்டிருந்தார்|| எனக் குறிப்பிட்டுள்ளார். (8ஆம் வகுப்புத் தமிழ்மலர் – 1967).
நாவலரும் வடமராட்சிப் பகுதியில் மிகுந்த ஈடுபாடுகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பருத்தித்துறையில் ஷஷசைவப்|| பாடசாலை நிறுவியதோடமையாது, புலோலி பசுபதீஸ்வரர் மீது ஊஞ்சலும் பாடியுள்ளார். நாவலர் பருத்தித்துறைக்கு வந்து அடிக்கடி தங்கிச் செல்வாராம். கந்தர் ஆறுமுகவன் இந்தியாவிலிருந்து ஷஷநாவலர் பட்டத்துடன்|| திரும்பியபோது முதன்முதலில் வரவேற்புவிழா பருத்தித்துறைக் கொட்டடிப்பிள்ளையார் கோயில் முன்றலிலேயே நடைபெற்றதாம். இரண்டாவது வரவேற்பு வரலாற்றுச் சிறப்புப்பெற்ற வல்லிபுரக் கோயிலிலேயே நடந்ததாம். (தகவல்: கலாநிதி க. சிவப்பிரகாசம்).
இவ்வாறு வடமராட்சிக்கும் குடாநாட்டின் மற்றைய பகுதிகளுக்கும், கல்வி, இலக்கியம் சார்ந்த தொடர்புகள் காணப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
4 . 2. வடமராட்சியும் மட்டக்களப்பும்
வடமராட்சிப்பகுதிக்கும், ஈழத்தின் ஏனைய பகுதிகளுக்குமிடையிலான கல்வி இலக்கியத் தொடர்புகளை நோக்கும்போது, வடமராட்சியைச் சேர்ந்த கல்வியாளர்கள் தங்கள் கல்வி இலக்கியப் பணியைத் திறம்படச் செய்து ஷஷபுகழ்பூத்த|| பலரை உருவாக்கியிருப்பதை அறியமுடிகிறது.
விபுலானந்தரின் ஆரம்பகாலத் தமிழாசிரியரான வைத்தியலிங்க தேசிகர் புலோலியைச் சேர்ந்தவர். இவர் மட்டக்களப்பிற் கோயிற்பூசகராயும், ஆசிரியராகவும், சமூகத் தொண்டராயும் இருந்தவர். பல மாணவமணிகளை மட்டுநகரிற் தோற்றுவித்தவர்.
ஷஷபள்ளிப் படிப்போடமையாது வீட்டிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பிப்பதற்கு சுவாமியாரின் தந்தையார் ஏற்பாடு செய்திருந்தார். இப்படி இவருக்கு இலக்கண இலக்கியங்களைக் கற்பித்தவர், பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் காரைதீவுப் பிள்ளையார் கோயிலுக்குப் பூசகராய் இருந்தவருமான வைத்தியலிங்க தேசிகராவார்.|| 2
என்று வைத்திலிங்க தேசிகரைப்பற்றி அம்பிகைபாகன் குறிப்பிடுவது மனங்கொள்ளத்தக்கது. வித்துவான் புலொலியூர் வைத்திலிங்கதேசிகர் எனுந் தலைப்பில் பண்டிதர் வீ. சி. கந்தையா தாமெழுதிய மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூலில் பன்னிரண்டு பக்கங்களில் தேசிகரைப் பற்றி எழுதியுள்ளார்.
ஷஷதனது உடல் பொருள் ஆவி ஆகிய மூன்றையும் மட்டக்களப்புத் தமிழகத்திற்கென்றே அடியுறை செய்து யாழ்ப்பாண நாட்டினர் இந்நாட்டுக்குச் செய்துவரும் சேவைகளுக்கோர் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்நல்லறிஞருடைய வரலாறு பொறிக்கப்படாவிடின் இத்தமிழகப் புலவர் பரம்பரை வரலாற்றுத் தொடரும் நிறைவுடையதொன்றாகாதென்பதே எனது துணிந்து முடிபாகும்.|| 3
விபுலானந்தரைத் தொடர்ந்து மடடக்களப்பின் ஷஷமாமணி||யாகப் புகழ்பெற்ற புலவர் மணியின் ஆசிரியராக வாய்க்கப்பெற்ற வரும் புலொலியூரைச் சேர்ந்த வித்துவான் சந்திரசேகரம்பிள்ளை என்னும் அறிஞரென்று கூறப்படுகின்றது. ஷஷஇன்னாரது இளமைக்கால ஆசிரியராக வாய்த்தோர் மட்டக்களப்பை நிரந்தர வாசமாகக் கொண்ட யாழ்ப்பாணத்துப் புலொலியூர்ச் சந்திரசேகரம்பிள்ளை என்பார் ஆவர்.
(மட்டக்களப்புத் தமிழகம் - பக்கம் 260)
மட்டக்களப்பின் ஷஷபேரறிஞர்|| எனப் போற்றப்படும் வித்துவான் ச. பூபாலபிள்ளை இயற்றமிழ்ப் போதகாசிரியர் வல்வை வைத்திலிங்கம் பிள்ளையின் மாணவராவார்.
ஷஷதருக்கம, நிகண்டு முதலான கருவி நூல்களையும் நன்னூல், தொல் காப்பியம் முதலிய இலக்கண நூல்களையும், சங்ன இலக்கியங்களையும், புராண இதிகாசங்களையும், சித்தாந்தசாத்திரங்களையும் முறையே கற்றுத் தேறினார். இயற்றமிழ்ப் போதகாசிரியரான வல்வையூர்ச் ச. வைத்தியலிங்கம்பிள்ளை அவர்கள் இவருக்கு நல்லாசிரியராய் அமைந்தனர்.ஷஷ 4
மட்டக்களப்புக்கும் வடமராட்சிக்கும் கல்வி, இலக்கியப் பாலம் அமைத்தவர்களான வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை, புலோலி வைத்திலிங்கதேசிகர், புலோலி சந்திரசேகரம்பிள்ளை போன்றோருடன் கற்கோவளம் வேதநாயகம் போதகரும் குறிப்பிடப்படவேண்டியவர்.
இவர் ஏறக்குறைய 1865ஆம் ஆண்டளவில் கற்கோவளமென்னும் கடல்சார்ந்த கிராமத்திலே பிறந்தவர். மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் போதனாசிரியராக இருந்து பின் கிறிஸ்தவ போதகராகி வேதநாயகம் போதகர் என்னும் பெயருடன் வாழ்ந்தவர். இவர் தீபம் என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து மட்டக்களப்புச் சமூகத்திற்குச் செய்ததொண்டு அளப்பரியது. இவர் சிறந்த கட்டுரைகளையும், தனிப்பாடலைகளையும் இயற்றியதோடு ஷஷமலேரியாக் கும்மி||, ஷஷஉழவர் சிறப்பு|| என்னும் நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். ஷஷதீபம்|| ஆசிரியரான இவருக்கும் ஷஷசுதெசநாட்டியம்|| ஆசிரியர் வேலுப்பிள்ளைக்கும் (வித்துவான் சரவணமுத்துவும் சேர்ந்து) ஷஷமதப்போர்|| ஒன்று நடந்ததென்றும் அது உரைநடையிற் தொடங்கிப் பின் கவிதைப் போராக மாறியதென்றும் கூறுவர். வேதநாயகம் போதகர் பற்றிப் பண்டிதர் வீ. சி. கந்தையா கூறுவது மனங்கொள்ளத்தக்கது.
ஷஷயாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராயினும் தன்னை ஒரு ஷஷமட்டக்களப்பான்|| எனக் கருதிக்கொண்டு இந்த நாட்டின் நிலவளம், கலைவளம், மக்களின் மனவளம் என்பவற்றிற் பெரிதும ஈடுபாடு கொண்டு வாழ்ந்து மறைந்த தமிழ்ப் புலவரும் தமிழ் உரைநடை ஆசிரியருமாகிய வேதநாயகம் போதகர், நல்ல எழுத்தாளர் தோன்றுவதற்கு முன்னோடியாக இந்த நாட்டில் வாழ்ந்தவராவர்.||5
இவ்வாறு வடமராட்சிப் பகுதியில் தோன்றிய பலர் வடமராட்சிக்கு வெளியே ஈழத்தின் பல பாகங்களிலும் தூய்மையான தொண்டினை ஆற்றிச் சிறந்த கல்விமரபு ஒன்றிணையும் தோற்றுவித்துள்ளனதெனலாம்.
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலிருந்து முகிழ்த்த பலர் வடமராட்சியைச் சூழவுள்ள பகுதிகளில் சிறப்பான கல்விதரபினையும் இலக்கியவளத்தினையும் பேணியுள்ளனர் சிறந்த உரையாளரென மதிக்கப்டப்ட மட்டுவில் ம. க. வேற்பிள்ளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துணைவேந்தர் பேராசிரியர் க. வித்தியானந்தன் முதலியோர் வடமராட்சியைத் தாய்வழியாகக் கொண்டவர்களென்பது குறிப்பிடத்தக்கது. புலொலியைச் சேர்ந்த சோதிடரும் தமிழறிஞருமான கணபதிப்பிள்ளையின் மகன் பண்டிதர் சச்சிதானந்தன் இப்போ மாவிட்டபுரத்தில் வாழ்கின்றார். இவரின்
ஷஷதேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை – அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
சாவிற் றமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாமபல் தமிழ்மணந்து வேகவேண்டும்.||
என்ற பாடலைப் பாரதிதாசனின் பாடல் என்று மயங்குவாரும் உளர். கவிஞர் முருக வே. பரமநாதனும் வடமராட்சியைச் சேர்ந்தவர். இவரும் பல நூல்களே எழுதியுள்ளார். இவர்களைப் போன்ற பலர் வடமராட்சியின் கல்விமரபிற் தோன்றித் தாம் புகுந்த இடத்திற்கும் வாழ்ந்த இடத்திற்கும் புகழும் பெருமையும் தேடிக்கொடுத்துள்ளனர் எனலாம்.
4 . 3 வடமராட்சியும் தமிழ்நாடும்
வடமராட்சிப்பகுதியின் கல்விப்பாரம்பரியமும், இலக்கிய உருவாக்கமும் கடல்கடந்து தமிழ்நபட்டிலும் வியாபித்துள்ளது. வடமராட்சியிலிருந்து கல்வியே நோக்கமாகக்கொண்டு தமிழ்நாடு சென்ற பலர் அங்கு மாணவராயும், ஆசிரியராயும் வாழ்ந்து பின் வடமராட்சிக்குத் திரும்பியுள்ளனர். தமிநாட்டின் தலைசிறந்த தமிழறிஞர்களோடு கல்வி, இலக்கியத தொடர்புகளைக் கொண்ட பலர் இங்கு வாழ்ந்திருக்கின்றனர். நல்ல வலுவான ஒரு மாணவ பரம்பரையை உருவாக்கியதன் மூலம் (வடமராட்சி) ஈழத்தின் முக்கிய பகுதியாகத் தமிழ்நாட்டவராற் கணிக்கப்பட்டுள்ளது.
தாயுமாணவரின் தந்தையார் கேடிலியப்பிள்ளை வடமராட்சியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஷஷகேடிலியப்பிள்ளையினாலேயே வடமராட்சிக்கும் (கரணைவாய்) வேதாரணியத்திற்கும் தொடர்பு ஏற்பட்டது என்பர். இன்றும் வேதாரணியத்திற்கும் கரணவாய்ச் சைவக் குரமாருக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
கோவிந்த ஸாமிபுகழ் சிறிது சொன்னேன்
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்
தேவிபதம் மறவாத தீர ஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்
காவிவளர் தடங்களிலே மின்கள் பாயுங்
கழனிகள்சூழ் புதவையிலே அவனைக் கண்N;டன். 7
என்று மகாகவி பாரதியாராற் பாடப்பட்ட யாழ்ப்பாணத்துச் சாமி வடமராட்சியைச் சேர்ந்தவரென்று நிறுவப்பட்டுள்ளது. இவரின் சமாதியை வியாபாரமூலை என்னும் இடத்தில் காணலாம். இவர் சமாதிகொண்டுள்ள .இடத்திலே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நினைவுச்சின்னம் ஒன்றை நிறுவியுள்ளது. வடமராட்சிக்கும் தமிழ்நாட்டிற்குமுள்ள கல்வி, இலக்கிய உறவுகளை நோக்கும்போழுது, அக்காலக் கல்வியாளர்கள், ஞானிகள், துறவிகள், மரக்கலமேறித் தமிழ் நாட்டிற்குச் செல்லுதலும். அங்கு சிலகாலம் வாழ்ந்து தம் தாய்நாட்டிற்குத் திரும்புதலும் சர்வசாதாரணமான நிகழ்ச்சிகள். இந்தியா சென்று திரும்பிய அறிஞர்களை, துறவிகளை ஈழத்திலும் நன்கு மதித்தார்கள் என்பதும் உண்மையே. இந்த வகையிற்தான் பாரதியாரின் யாழ்ப்பாணத்துச் சுவபாமியும் அடங்குகிறார். யாழ்ப்பாணச்சாமி பற்றிய குறிப்பிடத்தக்க அம்சமான அவரின் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டமை பற்றிப் பேராசிரியர் கா. சிவத்தம்பி கூறுவது கவனிக்கத்தக்கது.
சாமியாரது அன்பரும் அவரது வாழ்வை ஐயந்திரிபற அறிந்தவருமாகிய மேலைப்புலோலிச் சபாபதிப்பிள்ளையவர்கள் தக்க ஆதாரங்காட்டிப் பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த அருளம்பல சுவாமியாரே பாரதியார் குறிப்பிடும் யாழ்ப்பாணத்துச் சாமியாரென நிறுவினர்.ஷஷ
ஆதாரபூர்வமாக யாழ்ப்பாணச்சாமி இனங்காணப்பட்டபின் அவரின் சதாதிக்கருக விழாவெடுத்து நினைவுச்சின்னமும் நாட்டப்பட்டது. வடமராட்சி பாரதி பாடிய புகழுக:குரியதாகின்றது.
யாழ்ப்பாணச் சாமியைப் பற்றித் தென்புலோலியூர் கணபதிப்பிள்ளை கூறுவதும் மனங்கொள்ளத்தக்கது. மேலைபபுலோலியிலே வாழ்ந்துகொண்டிருந்த திரு. சின்னையா வேலுப்பிள்ளையவர்களுடைய அருமைப் புதல்வராகிய அருளம்பலமவர்கள்தான் சுப்பிரமணிய பாரதியார் போற்றிப் பரவுகின்ற யாழ்ப்பாணத்துச் சாமியாவார். 1878ஆம் ஆண்டளவிலே தோன்றிய இவர் சதாவதானம் கரைவேற்பிள்ளை Nலைப்புலோலி சைவ வித்தியாசாலையிலே ஆசிரியாராயிருந்த காலத்தில் அங்கே கல்விபயின்றுகொண்டிருந்தார் என்று அறியக்கிடக்கின்றது. பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்டு சிறிதுகாலம் மட்டக்களப்பிலும் கம்பளையிலும் வர்த்தகத்தில் ஈடுபடடுக்கொண்டிருந்தார். 1910ஆம் ஆண்டளவில் ஏதொ வைராக்கியத்துடன் யார்க்குஞ் சொல்லாமல் இந்தியா சென்றுவிட்டார். பருத்தித்துறையிலிருந்து தோணிமார்க்கமாக நாகபட்டினத்தை அடைந்தார்கள். நாகையிலே நீலலோசினி அம்மன் கோயில் வாயிலருகே நிட்டையிலிருந்தமையை ஷஷநீலலோசினி அம்மன் தோத்திரம்|| எடுத்துக்கூறும் தோரணியம், அகத்தியம்பள்ளி மாயவரம், காரைக்குடி, புதவை ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்றுகொண்டிருந்த காலத்திலேயே புதவையில் சுப்பிரமணிய பாரதியார் இவரைக் கண்டு பறறுதல் கொண்டார். 9
மேலைப்புலோலியிலே பிறந்த திரு. வி. கலின் ஆசிரியரான சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளயும் வடமராட்சிக்கும் தமிழ்நாட்டிற்குமுள்ள கல்விப்பாரம்பரியத் தொடர்பிற்கு ஊற்றுக்காலானவர்களில் ஒருவர் எனலாம். தமிழ்நாட்டில் பேருடனும் புகழுடனும் வாழ்ந்த ஈழததறிஞர்களில் சிறப்பானவர்களுள் இவரும் ஒருவர். மேலைப் புலோலி நா. கதிரைவேற்பிள்ளையவர்களால் 1903ஆம் ஆண்டு இராயப் பேட்டையில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜனசபை நிறுவப்பட்டது. இச்சபைக்கு தமிநாட்டின் பல பாகங்களிலிருந்தும் அறிஞர்கள், ஞானிகள், பீடாதிபதிகள் என்போர் வருகதந்ததாகவும் அறிய முடிகின்றது.
ஷஷஒரு சமயம் தேசிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சபைக்கு எழுந்தருளினார். சபாமூர்த்தியாகிய முருகப்பெருமானைக் கண்டு களிகூர்ந்தார். உடனே எழுந்தது கீழ்வரும் அற்புதக் கீர்த்தனம்.||
முரகா, முரகா, முரகா
வருவாய் மயில் மீதினிலே
வடிவே லுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் - முருகா – முருகா – முருகா – 10
இத்தகவலின்படி மகாகவி பாரதியாருக்கும், நா. கதிரைவேற்பிள்ளைக்கும் ஏதோ ஒருவகைத் தொடர்பிருந்ததென்று ஊகிக்க முடிகின்றது.
ஷஷமுதல் முதலில் எனக்குக் கல்விக்கண் திறந்தவர் யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளை யவர்கள்ஷஷ 11 என்று ஷஷதமிழ்த்தென்றலாற்|| குறிப்பிடப்பட்டவர். ஆழ்ந்த புலமையாலும் பயன்கருதாத சேவையாலும் ஈழத்தின் புகழைத் தமிழ்நாட்டில் நிறுவிய பல அறிஞர்களை வடமராட்சிப் பகுதியிலே காணலாம்.
சிறந்த புலமையாளரான உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பாற்கரசேதுபதிமீது கல்லாடக்கலித்துறை பாடி அரங்கேற்றிப் பரிசு பெற்றவர். இவருக்குப் பாற்கரசேதுபதி ஆண்டுதோறும் 300 ரூபா அனுப்பியதாக அறியமுடிகின்றது.
வல்வை ச. வைத்தியலிங்கம்பிளளையும் தமிழ்நாட்டாரால் நன்கு மதிக்கப்பட்டவர். சென்னை நகரத்துப் பேரறிஞர்களே இவருக்கு ஷஷஇயற்றமிழ்ப் போதகாசிரியர்|| எனும் பட்டம் வழங்கிச் சிறப்பிததனர் எனக் கூறப்படுகின்றது.
புலொலியூரைப் பிறப்பிடமாகக்கொண்ட வ. கணபதிப்பிள்ளை, காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ்ப் பண்டிதராகவும், திருவனந்தபுரத்திலுள்ள மகாராசக் கல்லூரியிலே பிரதம ஆpசரியராகவும் பணியாற்றியுள்ளார். சிறந்த தமிழ்ப் புலமையும், சமஸ்கிருதப் புலமையும் கொண்ட இவருக்குத் தமிழ்நாடெங்கும் பல மாணவர்கள் இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.
வடமராட்சியின் அறிஞர்கள் பலர் தமிழ்நாடு சென்று புகழ்நிறுவியது தற்செயல் நிகழ்ச்சியல்ல. ஈழத்தில் தாம்பெற்ற பாரம்பரியக் கல்விக்கு மெருகுதேடுவதற்காகவும் அறிவை வளப்படுத்துவதற்காகவுமே தமிழ்நாடு சென்றுள்ளனர். ஈழத்தில் புகழ்பெற்ற தமிழறிஞர்கள் பலர் ஈழத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் கல்வி கற்றுள்ளனர். இந்தியா சென்று திரும்பிய ஈழத்தறிஞர்களுக்கு ஈழத்திலே அதிக கௌரவம் வழங்கப்பட்டமை யதார்த்தமே. உடுப்பிட்டி சிவசம்புப்புலவர் இந்தியா செல்வதற்கு முன் அவரின் குலம், கோத்திரம் பற்றிப் பேசி ஒதுக்கிய அக்காலப் பெரியவர்களே, அவர் தமிழ்நாட்டில் ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள் இருந்து திரும்பிவரும்பொழுது அவரை வரவேற்று உபசரித்துப் பாராட்டு விழாக்கள் நடத்தியதாகவும் அறியமுடிகிறது. இந்தியா சென்று திரும்பிய அறிஞர்களுக்கு அக்காலத்தில் சமூக அந்தஸ்து, அங்கீகாரம் என்பன தாராளமாகக் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டில் வாழ்ந்த, தொடர்புகொண்டிருந்த ஈழத்து அறிஞர்களுக்கும், தமிழ்நாட்டாருக்கும் போட்டி, பிணக்கு, பொறாமை என்பன இருந்தமைக்கும் சான்றுகள் உண்டு. நாவலர் தொடக்கம் நா. கதிரைவேற்பிள்ளைவரை இப்பிரச்சினைக்குள்ளானவர்களே. வள்ளலார் கட்சியினருக்கும் நா. கதிரைவேற்பிள்ளைக்கும் வழக்கு நடந்தமையும், பாற்கரசேதுபதியை உடுப்பிட்டி சிவசம்புப்புலவருக்குப் பரிசு வழங்க விடாது தடுக்க முயன்றமையும், ஆய்வாளர்கள் அறிந்ததே. தமிநாட்டவர் ஈழத்தறிஞர்களை யாழ்ப்பாணத்தவர் என்ற பொதுமைப்பாட்டிற்குள்ளேயே கணித்துள்ளனர். ஈழத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும் பிரதேச எல்லைக்குள் முடங்காது தம்மை, யாழ்ப்பாணத்தவர், ஈழத்தவர் என்வே கருதிவந்ர்ள்ளனர். தமிழ்நாட்டில் வாழ்ந்தபோது ஒருவருக்கொருவர் உதவியாகவும் அனுசரணையாகவும் வாழ்ந்துள்ளமையையும் அறியமுடிகிறது.
ஈழத்திற்கும், குறிப்பாக வடமராட்சிக்கும், தமிழ்நாட்டிற்குமுள்ள தொடர்பு வணிகம், அரசியல் என்பவற்றைவிடக் கல்வி, இலக்கியம் என்பவற்றையே பெருமளவு கொண்டிருந்தமையும் குறிப்பிடக்கூடியது.
இவ்வாறு வடமராட்சிப்பகுதிக்கும், ஈழத்தின் மற்றைய பகுதிகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் இருந்த கல்வி, இலக்கியத் தொடர்புகளும் வடமராட்சியின் சிறப்பினைப் பேணுவனவாகவும் பாதுகாப்பானவாகவும் அமைத்தன. இச்சிறப்புக்களுக்கெல்லாம் அடிஊற்றாக அமைந்திருந்தது கல்விப்பாரம்பரியமும் இலக்கிய வளமுமேயெனில் மிகையன்று.
அடிக்குறிப்புகள்
1. கலாநிதி க. சிவத்தம்பி - ஈழத்தில் தமிழ் இலக்கியம்
2. சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கையும் பணியும், ச.அப்பிகைபாகன், அடிகளார் படிவமலர்
பக்கம் 18.
3. மட்டக்களப்புத் தமிழகம், பண்டிதர் வீ.சி. கந்தையா, பக்கம் 242.
4. - மேற்படி நூல் - பக்கம் 208
5. - மேற்படி நூல் - பக்கம் 323,324
6. க. சி. குலரத்தினம் - நாவலர் நூற்றாண்டு விழா மலர், 1980 (க. நடேசபிள்ளை கூற்று என்று கூறுவர்)
7. பாரதி பாடல், சுயசரிதை, பக்கம் 275, சக்தி வெளியீடு 3ஆம் பதிப்பு, 1957.
8. ஈழத்தில் தமிழ் இலக்கியம், டாக்டர் கா. சிவததம்பி, பக்கம் 58.
9. தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை - ஷபுலோலியூர்ப் புலவர் கதிரொளி – 1976
10. ஸ்ரீபாலசுப்பிரமணிய பக்தஜனசபை வயிரவிழாமலர், பக் 24 – 1968 சென்னை 14
11. வாழ்க்கைக் குறிப்புக்கள், திரு. வி. க.., பக்கம் 96, 97.
அனுபந்தம்
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கிய வளத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பலரையும் வெறுமனே பட்டியல் போட்டுக் காட்டாது அவர்களின் சிறப்பியல்புகளையும், படைப்புக்களையும் சுரக்கமாகக் குறிப்பிடுகிறேன். இலக்கியம், இலக்கணம், புராணப்படனம், பிரசங்கம்போன்ற துறைகளிலீடுபட்டவர்களுக்கே முதன்மை வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்கால இலக்கிய, ஆராய்ச்சி, அறிஞர்கள் யாவரையும குறிப்பிடாது ஷஷவகை மாதிரிக்கு|| ஒருவராகவே எனக்குக் கிடைத்த தகவல்களின்படி குறிப்பிட்டிருக்கிறேன்.
அருணந்தி – க.ச.
இவர் இலங்கையின் பல பகுதிகளிலும் வித்தியாதரிசியாக இருந்தவர். பருத்தித்துறையைச் சேர்ந்த சடையர் என்னும் ஆசிரியரின் மகன். 1934ஆம் ஆண்டு பிள்ளைப்பாட்டு என்னும் சிறுவர் பாடற்தொகுதியொன்று பதிப்பித்தார். இது பின் 1943ஆம் ஆண்டு இரண்டாவது பதிப்பாக வெளிவந்தது, ஈழத்தின் தலைசிறந்த குழந்தைக் கவிஞர்களான சோமசுந்தரப்புலவர், பீதாம்பரன், நல்லதம்பி முதலியோரை எழுத்துலகுக்கு அறிமுகஞ் செய்தவர். ஆங்கில விஞ்ஞானப் பட்டதாரியான இவர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஏரம்பமுதலியார் மொழி பெயர்த்த ஆங்கில நாவலுக்கு அழகான ஒரு முகவுரையெழுதியுள்ளார். பல்வேறு நூல்களுக்கு முகவுரையும் அணிந்துரையு மெழுதியுள்ள இவரின் முகவுரைகளில் கனகிபுராண முகவுரையும் குறிப்பிடத்தக்கது. இவர் ஈழத்துக் கல்வியுலகிற்குச் சிறந்த தொண்டாற்றியுள்ளார்.
அருணாசல உபத்தியாயர்
இவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். சிவசம்புப்புலவரின் மாணவர். வல்வை வைத்தியலிங்கம்பிள்ளையின் சகபாடி. ஷஷநெடியகாட்டு ஊஞ்சல், பதிகமும் பல தனிப்பாடல்களும பாடியுள்ளார். சிறந்த புராண பிரசங்கியாராகவும் இருந்தார் என்று கேள்வி.
ஆ. ஆறுமுகம் வித்துவான்
அல்வாய் என்னுமிடத்திலே அண்மைக்காலம்வரை (1925) வாழ்ந்தவர். இவர் நா. கதிரைவேற் பிள்ளையின் மாணாக்கனும் உறவினருமாவர். இலக்கணத்தில் மிகுந்த ஆற்றலுள்ளவர். ஆசிரியராகப் பணியாற்றி இயமையிலேயே இறந்தவர். இலங்கை வேந்தன் என்னும் புனைபெயரில் செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி போன்ற பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 1924, 1925 செந்தமிழ்ச் செல்வியில் ஷஷஇலக்கண விளக்க உரையாளர் யார்|| என்று ஒரு விவாதம் நடைபெற்றது. அதில் பண்டித ந. மு. வேங்கடசாமிநாட்டார், வி. சிதம்பரராமலிங்கம்பிள்ளை, சா. பெரியசாமிப்பிள்ளை, சென்னை பா. கண்ணப்பமுதலியார் போன்றோருடன் விவாதத்திற் கலந்துகொண்டவர். இலங்கை ஆ. ஆறுமுகம்பிள்ளையவர்கள் இலக்கணவிளக்கவுரைச் சமாதானம் (செந்தமிழ்ச் செல்வி பக்கம் 329 – 336, 1924 – 25) என்னும் கட்டுரையை எழுதி அவ்விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர். பிற ஆக்கங்கள் பற்றிய விபரம் கிடைத்திலது.
ஆழ்வாப்பிள்ளை ஜே. எஸ்
துன்னாலையைச் சேர்ந்த பண்டிதர் ஜே. எஸ். ஆழ்வாப்பிள்ளை பல்துறையறிவு மிக்கவர். இவர் கவித, நாடகம், பத்திரிகை, பாடப் புத்தகங்கள் போன்ற பல்வேறு வழிகளில் தனது கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். சத்தியவேத அம்மானை, கிறிஸ்தவ பஞ்சாமிர்தம் (தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புகழ் என்ற ஐந்துவகைப் பாடல்கள் அடங்கியவை), நசரேய இரட்டை, மணிமாலை, நசரேய மும்மணிக்கோவை, நசரேய அந்தாதி, தமிழன் குரல், இஸ்லாமிய நீதி நெறி, இஸ்லாமிய கதாமாலை போன்ற சமய இலக்கியங்களையும், கலிகாலக் கோலம், பூலோக வேடிக்கை, உலகம் பலவிதம், கலிகால வேடிக்கை, மாயக்கும்மி முதலிய ஜனரஞ்சகமான சிறுகவிதை நூல்களையும் இயற்றினார். இவ் ஜனரஞ்சகப் படைப்புக்களில் சாதி, சமய, சமூக ஊழல்கழள நையாண்டி செய்துள்ளார். இவரை இவ்வூர் மக்கள் ஷஷகட்டை ஆழ்வார்|| என்றே அடைப்பர். வகை மாதிரிக்கு அவரின் பின்வரும் பாடலைச் சுட்டிக்காட்டலாம்.
ஷஷஅஞ்சு வயதுடைய அகிழான் அளவாம்பிளைகள்
பிஞ்சிற் பழுக்கிறாரையா - இவர்
வந்து மதவடியிற் குந்தி இருந்துகொண்டு
கலியாணமும் வேணுமாம்.||
நகைச்சுவையும், கிண்டலும் நிறைந்த பாடல்களைப் பாடிய இவர் ஷஷதொண்டன்|| என்னும் சிறந்த பத்திரிகையொன்றையும் நடத்தியுள்ளார். கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் என்ற பல்வேறு சிறப்பம்சங்களைக்கொண்டதாக இப்பத்திரிகை அமைந்திருந்தது. அரச கரும மொழியாகச் சிங்களம் வருவதற்கு முன்பே, தமிழ்மூலம் சிங்களம் என்னும் நூலை இவர் எழுதியமை குறிப்பிடத்தக்கது. இவரின் மகன் வண.எம்.ஏ. இரத்தினராஜா கலை இலக்கியப் பணிகளில் ஈடுபாடுடையவராகக் காணப்படுகிறார்.
ஆழ்வாப்பி;ள்ளை சி.
கரணைவாயைச் சேர்ந்த ஆசிரியரான இவர்கரவைவேலன்கோவைக்கு உரையெழுதிப் பதிப்பித்தவர். இப்பதிப்பு இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது (1956இல்), அவர் சில தனிப்பாடல்களும் எழுதியதாகத் தெரியவருகிறது.
இராமலிங்கம் வே.
உடுப்பிட்டியைச் சேர்ந்த வே. இராமலிங்கம் என்பவர் சிறந்த கவிஞராக விளங்கியுள்ளார். தம்காலத்துக் கோட்டை வியாக்கியங்களை நையாண்டிசெய்து கோட்டுப் புராணம் என்னும் நூலினை இயற்றியுள்ளார். அந்நூல் இன்று கிடைத்திலது. உதிரியான சில பாடல்களே வாய்மொழியாக வழங்கி வருகின்றன.
இராசசிங்கம் எஸ். கே
கரவெட்டியைச் சேர்ந்த இவர் வித்தியாதரிசியாகவும், ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஈழத்தில் முதன் முதல் கல்வி உளவியல் என்ற நூலைத் தமிழில் எழுதியவர் இவரே என்பர். இவரின் ஆக்கங்கள் பற்றிய விபரங்களை அறிய முடியவில்லை.
இராமநாதபிள்ளை
இவர் புலொலியைச் சேர்ந்தவர். பட்டதாரி ஆசிரியர், அளவை இயல் என்ற தருக்கநூலைத் தமிழில் எழுதியுள்ளார்.
ஏகாம்பரம் க.
வல்வெட்டியிலே தோன்றியவர். இருபாலைச் சேனாதிராஜ முதலியாரிடமும் திருத்தணியைச் சரவணப்பெருமாள் ஐயரிடமும் இலக்கண இலக்கியங்களையும் கற்றவர் என்று கேள்வி. கந்தரந்தாதிக்கு இவர் சிறந்த உரையொன்று எழுதியுள்ளார்.
ஏகாம்பரம் நா. (1844 – 1877)
இவர் வல்வெட்டியிலே பிறந்தவர். யாழ்ப்பாணக்கலலூரியிற் கற்றவர். இந்தியா சென்று பல்கரைலக்கழகப் புகுமுகத் தேர்விலே சித்தியெய்தினார். மரபுவழி இலக்கண இலக்கியத்தில் சிறந்த ஆற்றலுள்ளவர் என்று கேள்வி. இலங்கையில் முதன்முதல் அட்டாவதானம் செய்தவரும் இவரே என்பர்.
கணபதிப்பிள்ளை வ. (1845 – 1894)
இவர் புலொலியூரைச் சேர்ந்தவர். உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவரின் மாணவர். இந்தியா சென்று பலகாலம் வாழ்ந்தவர். வடமொழியிற் சிறந்த பாண்டித்தியம் உடையவர். பச்சையப்பன் கல்லூரியிலும், திருவனந்தபுரத்தில் உள்ள மகாராசாக் கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றியவர். பத்துக்கு மேற்பட்ட நூல்களை இவர் ஆக்கியுள்ளார். இலக்கணத்தில் பெரும் புலம வாய்ந்தவர்.
கணேச பண்டிதர் ஞா.
இவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். திருக்குறள் அதிகாரசரமாகிய திருத்தாலாட்டு என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நூல் 1921ஆம் ஆண்டு சென்னையில் வெளியாகியுள்ளது.
கணபதிப்பிள்ளை – பேராசிரியர் – தும்பளை
தும்பளையைச் சேர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். முத்துக்குமாரசாமிக் குரக்களின் மாணவர். இவர் தமிழ் மொழிக்கு ஆற்றியபணி தனியே விரிவாக ஆராயப்படவேண்டியது. இவர் காதலியாற்றுப்படை, மாணிக்க மாலை, நானாடகம், இருநாடகங்கள், சங்கிலியன், இலங்கைவாழ் தமிழர் வரலாறு, ஈழத் தமிழர் வாழ்வும் வளமும் போன்ற பல நூல்களை ஆக்கியுள்ளார். ஈழத்தின் இன்றைய தலைசிறந்த அறிஞர்களான பேராசிரியர் க. வித்தியானந்தன், பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் வேலுப்பிள்ளை, பேராசிரியர் அ. சண்முகதாஸ் போன்றவர்கள் இவரது மாணவர்களாவர்.
கணபதிப்பிள்ளை வே.
இவர் அல்வாயைச் சேர்ந்தவர். இவர் சோதிடத்தில் மிகுந்த ஆற்றலுடையவர். ஈழமண்டல சதகம் என்னும் நூலை இயற்றியவர். சிறந்த போதகாசிரியராயும திகழ்;ந்தார் என்று அறியக்கிடக்கிறது.
கரைவேற்பிள்ளை கு. உ.வைமன் (1829 – 1804)
இவர் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர். மரபுவழிக் கல்வியும் மேலைத்தேய கல்வியும் ஒருங்கிணைப் பெற்றவர்.நீதிபதியாகக் கடமையாற்றியவர். யாழ்ப்பாண அகராதியைத் தொடக்கிவைத்தவர். இலங்கைத் தேசபிமானி என்ற ஒரு பத்திரிகையை நடத்தியவர். சில நூல்களும் தனிப்பாடல்களும் எழுதியுள்ளார். சட்ட நிரூபண சபை உறுப்பினர் க. பாலசிங்கம இவரது மகனாவர்.
கரைவேற்பிள்ளை நா. (1844 – 1907)
இவர் மேலைப் புலோலியைச் சேர்ந்தவர், மரபுவழிக் கல்வியில் முகிழ்த்த பேரறிஞர். சிற்நத பேச்சாளராகத் திகழ்ந்தவர். தென் இந்தியாவில் இவருக்கு ஷஷமாயாவாததும் சகோளரி|| என்னுமு; பட்டம் வழங்கப்பட்டது. இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் திரு. வி. கலியாணசுந்தரமுதலியாரின் ஆசிரியர் என்பர் குறிப்பிடத்தக்கது.
கந்த முருகேசன்
இவர் புலொலியைச் சேர்ந்தவர். மிக அண்மைக்காலம்வரை திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்து நடத்தியவர். பல மாணவர்களை உருவாக்கியவர் ஷஷநாவலன கோவை|| என்னும் நூலை இயற்றியுள்ளார். (இன்னும் அச்சாகவில்லை). சிறந்த புராண உரையாசிரியரான இவர் ஒரு நாஸ்திகர். ஷஷகிரேக்கஞானி சோக்கிறதீசரின் விசாலமான நெற்றியும், வங்கக்கலி தாகூரின் தீட்சணியமான கண்களும், ஆங்கில இலக்கிய மேதை பெர்னாட்N~hவின் வெள்ளிய தாடியுங்கொண்ட பொலிவு பூத்த முகம்படைத்த உருவமென்று சிறிய திண்ணையில் காட்சி தருகிறது............ பன்னசாலை போன்று அமைந்த வீட்டு முன்பக்கமுள்ள திண்ணையில்கிழக்கு நோக்கிய வண்ணமதாய் அளக்கலாகா அளவும் பொருளுமான கிரணங்களெறிப்ப, ஞானபானுவாய்க் காட்சி தருபவர் தான் கந்த முருகேசனார்.|| இவ்வாறு கந்த முருகேசனாரைப்ப்றி வ. சிவராசன் குறிப்பிடுவர். (கந்தமுருகேசன் முத்தமிழ்விழாமலர் – பக். 27 – 1962)
பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார். கூர்த்தவிவேகம் படைத்தவர். வடமராட்சியின் பலபாகங்களிலும் இவருக்கு மாணவர்கள் உள்ளனர்.
கார்த்திகேசு பண்டிதர் பொ.
இவர் கரவெட்டியைச் சேர்ந்தவர். தலைமையாசிரியராகக் கடமையாற்றியவர். வெருகற் சித்திரவேலாயுத சுவாமிபேரில் கீர்த்தகைகள், செல்வச்சந்நிதி பதிகம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். பல மனிப்பாடல்களும் சரமகவிகளும் பாடியுள்ளார். சிறந்த கட்டுரைகள் பலவற்றை அக்காலப் பத்திரிகைகளிலே எழுதியுள்ளார். சிறந்த புராண பிரசங்கியான இவர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தந்தையாராவர்.
கார்த்திகேசு:
இவர் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்தவர். சிறந்த புராண பிரசங்கியா இவர் பிரம்மசிறீ கணேசையரின் சகபாடியாக அ.ச. பொன்னம்பலபிள்ளையிடம் பாடங் கேட்டவர் ஷஷநான் வித்துவசிரோமணியின் மாணவனானமை|| என்னும் கட்டுரையில் கணேசையர் கரவெட்டியைச் சேர்ந்த கார்த்திகேசு என்று குறிப்பிட்டு;ளளார். பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இவர் மிக இளமையிலேயே இறந்துவிட்டார். கரவெட்டியில் பரபல்யம் பெற்று விளங்கிய க. சிற்றம்பல உபாத்தியாயர் இவரர் மருகரும் மாணவருமாவர்.
குமாரசுவாமிப்புலவர் வ.
இவர் புலோலியைச் சேர்ந்தவர், உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் மாணவன். இவரை ஷஷஇலக்கணக் கொத்தர்|| என்று அழைப்பர். இவர் நன்னூற் காண்டிகையுரை விளக்கம் என்னும் சிறந்த நூலை எழுதியுள்ளார். சிறந்த உரையாசிரியரான இவர் கவிபாடும் ஆற்றலும் கைவரப்பெற்றவர்.
குமாரசுவாமி முதலியார் (1792 – 1874)
இவர் உடுப்பிட்டியில் வல்வெட்டி என்னும் ஊரிலே தோன்றிவர். உலைமன் கதிரைவேற்பிள்ளை இவரது மகன். இவர் அருளம்பலச் சேவை என ஒரு கேவையை உடுப்பிட்டியில் வாழ்ந்த அருளம்பல முதலியார் மீது பாடியுள்ளார். தீருவிற் சுப்பிரமணியர் பதிகம், மூளாய்ச் சித்திவினாயகர் ஊஞ்சல், கந்தவனநாதருஞ:சல், இந்திரகுமார நாடகம் முதலிய நூல்களை எழுதியுள்ளார். ஷகோதாரி| மீது கலித்துறையொன்றும் பாடியுள்ளார்.
சந்திரசேகர முதலியார்
இவர் வல்வெட்டியிலே தோன்றியவர். இவர் விறலிவிடுதூது ஒன்று பாடியுள்ளார். வடதேநப் புலவரொருவர் இவர்மேல் சந்திரசேகரக் குறவஞ்சி என்னும் பாமாலை ஒன்றைச் சூடினார் என்பர்.
சிவசம்புப்புலவர் அ. (1830 – 1910)
உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவரென்றால் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும். இவர் சிறந்த புலவர். உரையாளர் - இலக்கண விளக்க உரையாசிரியர் – தமிழ்நாட்டில் 14 ஆண்டுகள் வாழ்ந்தவர் - இருபாலைச் சேனாதிராஜ முதலியாரிடம் கல்வி கற்றவர். ஈழத்தில் அதிகமான பிரபந்தங்களைப் பாடிய புலவர் இவரே. இவர் பாற்கரசேதுபதி மீது கல்லாடக் கலித்துறையும், நான்மணி, இரட்டைமணி மாலையும் பாடியுள்ளார். இவரின் கல்விமரபே இன்று ஈழத்தின் பல்கலைக்கழகத் தமிழ் மரபாக முகிழ்த்துள்ளது. முத்துக்குமாரசாமிக் குரக்கள், வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை போன்றவர்கள் இவரது சிறந்த மாணவர்க்ள. இவரது மாணவர்கள் ஈழநாடெங்கும் பரவலாகக் காணப்படுகின்றனர். ஏறத்தாழ நாற்பது நூல்கள்வரை இவர் எழுதியுள்ளார். வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய வளத்திலும் மிக முக்கிய பங்கு இவருக்கு உண்டு.
சிவபாதசுந்தரம். சு. (1877 – 1953)
இவர் புலோலியூரைச் சேர்ந்தவர். ஷஷபுலோலியுர்ச் சைவப் பெரியார்||என அழைக்கப்பட்டவர். இவர் சென்னைப் பல்கலைக் கழக பீ. ஏ. பட்டதாரி, கல்லூரி அதிபராகக் கடமையாற்றியவர். இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் இவர் எழுதியவை சமய, தருக்க நூல்களே, 1977இல் இவரின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அகநூல், சைவபோதம், திருவருட்பயன் விளக்கவுரை, சைவக்கிரியை விளக்கம், கநச்தபுராண விளக்கம் முதலிய நூல்கள் இவரின் ஆழ்ந்தகன்ற புலமையைக் காட்டுவன.
சிதம்பரப்பிள்ளை, வே. (................. - 1955)
இவர் புலொலியைச் சேர்ந்தவர். தி;ணணைப் பள்ளிக்கூடம் வைத்து நடாத்தியவர். சிறநத புராண உரையாளர். கந்தபுராண சூரபத்மன் வதைப்படலத்திற்குச் சிறந்த உரை ஒன்று எழுதியுள்ளார். இவர் கண்பார்வையை முற்றாக இழநதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்தம்பி உபாத்தியாயர், த. (1830 – 1886)
இவர் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர். சிறந்த புலமையாளர். ஒரு பாடசாலையை நிறுவியவர். நில அளவைச் சூத்திரம், சோதிடச் சுரக்கம் மதனவல்லி விலாசம் முதலிய பல நூல்களை எழுதியுள்ளார்.
சின்னத்தம்பி, பண்டிதர், கா. (1907 – 1942)
இவர் கரவெட்டியைச் சேர்ந்தவர். மிக இளம் வயதில் இறந்தவர் திருச்சந்நிதிவேலவர் பதிகம், தச்சந்தோப்புப் பிள்ளையார் திருப்பதிகம். திருச்செந்தூர் திருவிரட்டைமணிமாலை, தச்சந்தோப்புப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ், பாலர்வாசகம், மான்விடுதூது என்னும் நூல்களைப் பாடியவர். அருணந்தி தொகுத்த பிள்ளைப்பாட்டு என்னும் நூலில் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மிகச் சிறந்த குழந்தைக் கவிஞராவர்.
சுப்பிரமணிய சாஸ்திரிகள் (1875 – 1950)
இவர் புலொலியில் தும்பளை என்னும் இடத்தைச் சேர்ந்தவர். மிகச் சிறந்த அறிஞர், தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம் உடையவர். கலாநிதி யந்திரசாலை என அச்சகம் நிறுவி வடமராட்சியின் கல்வி வளர்ச்சிக்கு அருந் தொண்டாற்றியவர். ஷஷபுத்தகத்தருமாலயம்|| என ஒரு நூல்நிலையம் அமைத்திருந்தவர். பருத்தித் துறையிலிருந்து வந்த வாக்கிய பஞ்சாங்கத்தைக் கணித்தவர் இவரே. புராணபடனம், சொற்பொழிவு என்பவற்றிலும் இவர் சிறந்து விளங்கினார். வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய உருவாக்கத்திலும் சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கு முக்கிய பங்குண்டு. கந்தபுராணத்தின் பல காண்டற்களுக்கு இவர் உரை எழுதியுள்ளார். சொற்பொருள் விளக்கம் என்னும் சிறு தமிழகராதியையும் இவர் வெளியிட்டுள்ளார்.
செல்லையா, மு.
இவர் அவ்வாயைச் சேர்ந்தவர். சிறந்த கவிஞர். வளர்பிறை இவரின் கவிதைத் தொகுப்பு. வண்டுவிடு தூது பாடி வானொலிப் பரிசு பெற்றவர். பல தனிப்பாடல்களும், கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். ஈழநாட்டுத் திருத்தலங்கள்மீது பல பதிகங்களைப் பாடியுள்ளார். காந்தியநெறியில் வாழ்ந்து அண்மையில் இந்தவர்: இவரது,
ஷஷஅம்மா வெளியே வாஅம்மா
அழகாய் மேலே பாரம்மா
சும்மா இருந்த சந்திரனைத்
துண்டாய் வெட்டின தாரம்மா||
என்னும் குழந்தைப் பாடல் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் போற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செல்லையாபிள்ளை, சி.
இவர் திக்கத்தைச் சேர்ந்தவர். கந்தவனநாத ஆலய ஆதீன கர்த்தராக விளங்கியவர். இவர் சிறந்த புராண பிரசங்கியுமாவர். சிறந்த குர் வளமுள்ளவர் என்று கேள்வி. இவர் துகளறுபோதத்துக்கு அரிய உரை எழுதி வெளியிட்டுள்ளார்.
செவ்வந்திசாததேசிகர், தி. (1907 – 1938)
இவர் கரணவாயைச் சேர்ந்தவர். மகாவித்துவான் கணேசையரின் மாணவர். சிறந்த கவிஞர், புராணபடனத்தில் திறமைவாய்ந்தவர். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவபு பிரபந்தத்திரட்டு இவராலேயே தொகுக்கப்பட்டது. இவர் தமிழ்மொழி ஆராய்ச்சி, மாவைக் கந்தசாமி மும்மணிமாலை, நல்லுர்க் கந்தன் கோவை என்னும் நூல்களை இயற்றியுள்ளார். 1936 – 1937 ஆம் ஆண்டுகளில் ஈழகேசரியில் தமிழ்மக்களின் பண்பாட்டு அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையி; சிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். வேதாரணியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாமோதரம்பிள்ளை, சி. (1863 – 1921)
இவர் வதிரியைச் சேர்ந்தவர். வித்துவான் தாமோதரம்பிள்ளை என்று அழைக்கப்பட்டார். ஞானசித்தி எனனும மாதவெளியீட்டினை நடத்தியவர். வதிரி சி. நாகலிங்கம்பிள்ளையின் தமையனார். இவர் சந்தியாவந்தன ரகசியம், சைவசிரார்த்தரகசியம், கதிர்காமபுராண வசனம் ஆகிய நூல்களை இயற்றினார்.
தில்லைநாத நாவலர் (1854 – 1934)
இவர் புலொலியைச் சேர்ந்தவர். சிறந்த உரையாசிரியர், புராணபிரசங்கம் செய்வதில் வல்லவர், திருவள்ளுவர் சமணர் என்னும் கொள்கை மறுப்பு என்னும் நூலையும் இவர் எழுதியுள்ளார்.
நாகலிங்கம்பிள்ளை, சி. (1881 – 1951)
இவர் வதிரியைச் சேர்ந்தவர். ஞானசித்தி பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தியவர். ஞானசித்தி யந்திரசாலை எனும் பேரில் அச்சகமொன்றைக் கரவெட்டியில் நிறுவிக் கல்விப் பணி புரிந்தவர். வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய வளததிலும் இவருக்கு மிகுந்த பங்குண்டு, திருநெல்வாயிற்புராணம், த~ண கைலாச புராணம், கதிர்காமபுராணம் முதலிய நூல்களை ஆக்கியுள்ளார்.
நல்லைவெண்பா, தஞ:சைவாணன் கோவைஉரை, சந்தியாவந்தனரகசியம் முதலிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
பொன்னம்பல உபாத்தியாயர், க. (1881 – 1951)
இவது கரவெட்டி கிழக்கைச் சேர்நதவர். சிறந்த புலமையாளர். கல்வி ஒழுக்க உரை, சந்தானாசாரியார் சரித்திரச் சுருக்கம், யார்க்கரு விநாயகரூஞ:சல், யார்க்கரு விநாயகர் திருவிரட்டை மணிமாலை முதலிய நூல்களை இயற்றியுள்ளார். சிறந்த ஒழுக்க சீலரான இவர் குடாநாட்டின் பல பாகங்களிலுமுள்ள ஆலயங்களில் ஷஷகைலப்பிரசங்கம்|| செய்து வந்தார் என்று அறியமுடிகின்றது. கந்தபுராணம், பெரியபுராணம், திருவாசகம் என்பசற்றில் சிறந்த பரிச்சயமுடையவர் என்றும் கேள்வி, திவுளானை அரசினர் பாடசாலையில் தலைமையாசிரியராகக் கடமையாற்றும்போது (1926) இவரது கல்வி ஒழுக்க உரை முதற் பதிப்பு வெளிவந்துள்ளது. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் பின்வரும் சிறப்புக் கவியைக் கல்வி ஒழுக்க உரைக்கு வழங்கியுள்ளார்.
ஷஷஒளவைப் பிராட்டிநற் கல்வி யொழுக்க மருளுமுறை
செவ்விதி னாய்ந்துரை செய்தச்சி லோங்கத் திகழுவித்தான்
சைவன் கரவைப் பதியன்பொன் னம்பலஞ் சாறறுபெயர்
எவ்வமின் மன்னர் மதிக்கு முபாத்தியா யேந்திரனே.||
ஒளவையாரா லருளிச்செய்யப்பட்ட ஷகல்வி ஒழுக்கம்| எனும் நூலை ஏட்டுப் பிரதியிலிருந்து முதன் முதல் அச்சேற்றியவரும் இவரே என்று அறியமுடிகின்றது.
முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் : - (1858 – 1936)
இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் மிக்கவர். கவிதை புனையும் ஆற்றல் மிக்கவர். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் மாணவர். இவரின் மாணவரே பேராசிரியர் கணபதிப்பிள்ளை. சிவபெருமான் அலங்காரம், பசுபதீஸ்வரர் அந்தாதி முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
முருகேசு, பண்டிதர், தாஇ - (1883 – 1958)
இவர் துன்னாலை வடக்கினைச் சேர்ந்தவர். இவர் புராண பிரசங்கம் செய்வதிலும் தனிப்பாடல்கள் இயற்றுவதிலும் வல்லவர். சமய சமூகப் பணிகள் ஆற்றியுள்ளார். தமிழ் நாடு சென்று சிலகாலம் வாழ்ந்தவர் திருநீலகண்டர் மடாலயத்தை நிறுவி மரபுவழிக் கல்வியைப் பேணியவர்.
இயற்றமிழ்ப் போதகாசிரியர் வைத்தியலிங்கம்பிள்ளை
வல்வை. ச. (1843 – 1900)
இவர் வல்வெட்டித்துறையிலே தோன்றியவர். வடமராட்சியின் கல்விப்பாரம்பரியத்திலும், இலக்கிய வளத்திலும் இவருக்குச் சிறப்பான பங்குண்டு. இவர் அச்சகம் நிறுவித் தமிழ்த் தொண்டாற்றியவர் என்று அறிய முடிகின்றது. ஷசைவாபிமானி| என்னும் பத்திரிகையை நடத்தியவர். இவர் வள்ளியம்மை திருமணப் படல உரை சூரபன்மன் வதைப் படல உரை, சிந்தாமணி நிகண்டு, சாதிநிர்ணய புராணம் முதலிய நூல்களையும், வல்வை வைத்தியேசர் பதிகம், ஊஞ்சல், செல்வச்சந்நிதித் திருமுறை, நல்லூர்ப் பதிகம், மாவைப்பதிகம் முதலிய பாடல்களையும் எழுதியுள்ளார் என அறியமுடிகின்றது. சிறந்த புராணப் பிரசங்கியாகவும் விளங்கினார். இவரைப்பற்றிப் பேராசிரியர் கா. சிவத்தம்பி ஒரு நூல் எழுதியுள்ளார்.
வேதநாயகம்பிள்ளைப் போதகர்: (1865 - .....)
இவர் கற்கோவளம் எனும் ஊரைச் சேர்ந்தவர். தனது இருபதாவது வயதளவில் மட்டக்களப்பபுக்குச் சென்று அங்கு வாழ்ந்தவர். தமிழும், ஆங்கிலமும் நன்கு கற்றவர் என்று அறியமுடிகின்றது. மட்டக்களப்பு அரசடி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் போதனாசிரியராகக் கடமையாற்றியவர். அக்காலத்தில் பல தனிப்பாடல்கை எழுதினார் என்று கேள்வி.
ஷஷஆசிரியத் தொழிலை விட்டு கிறிஸ்தவமதப் போதகராகி அக்காலம் மட்டக்களப்புக் கிராமங்களிலே பாடசாலை எதுவும் இல்லாதிருந்த பெருங்குறையை நீக்கினார். கிறிஸ்த்ததமப் போதனை என்ற காரணத்தினோடு, நாட்டிலே ஒழுக்கக்கல்வியை ஊட்டியவர். மட்டக்களப்பு நாட்டின் பழம் பண்பாடு, கலைகள் என்பவற்றில் ஈடுபாடு கொண்டவர்|| என்று பண்டிதர் வீ. சி. கந்தையா குறிப்பிடுவர்.
இவர் தீபம், லங்காவர்த்தமானி முதலிய இதழ்களின் ஆசிரியராக விளங்கியவர்.
சிறந்த உரைநடையாசிரியராகத் திகழ்ந்த வேதநாயகம்பிள்ளைப் போதகர் சிறந்த சமூகத்தொண்டர் என்றும் அறிய முடிகின்றது.
இவர் பாடிய உழவர்சிறப்பு, மலேரியாக் கும்மி என்ற பாடல்கள் மட்டக்களப்புப் பகுதியிற் பிரசித்தமானவை என்றும் அறியமுடிகின்றது.
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலும இலக்கிய வளத்திலும் மேற்காட்டிய அறிஞர்களைவிட இன்னும் பலர் தொடர்பு பூண்டு இருக்கின்றனர். இவர்கள் வடமராட்சியிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். பிரதேசப் பற்று மிக்கவர்கள். ஆழ்ந்து அகன்ற புலமையாளர்கள். பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்குப் பின்பு அவர் ஷஷஅடியில்|| வாழையடி வாழையாக வளரும் பேராசிரியர்கள் ஆ. வேலுப்பிள்ளை, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ் முதலியோர் குறிப்பிடக்கூடியவர்கள். வடமராட்சியின் மரபுவழி முகிழ்த்த கல்விப் பாரம்பரியத்தின் ஷஷஉரத்திலே|| மேலைத்தேய ஆய்வணுகுமுறைகளையும் கைக்கொண்டு இவர்கள் அரும்பணி ஆற்றிவருகின்றனர். இவர்களின் பணி ஈழத்துக்கு வெளியே தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் பரந்து வியாபிததுள்ளது.
சுவாமி விபுலானந்தரிடமும் பேராசிரியர் கணபதிப்பிள்ளையிடமும் கற்றதன் மூலமும் வடமராட்சியின் கல்வி வளத்தைப் பெற்றவர்கள். அநுபவித்தவர்கள் பலர். இவர்களுள் பேராசிரியர் சு.வித்தியானந்தனுக்குத் தனித்துவமானதோர் இடமுண்டு. ஷஷவேரோடி விளாத்தி முளைத்தாலும் தாய்வழி தப்பாது|| என்ற ஒரு பழமொழி வடமராட்சிப் பகுதியில் நிலவுகிறது. வடமராட்சியைத் தாய்வழியாகக்கொண்டும் பேராசிரியர் கணபதிப்பிள்ளையைக் குரவாகக்கொண்டும் திகழும் பேராசிரியர் வித்தியானந்தனின் திறனிலும் சிறப்பிலும் வடமராட்சியின் பாரம்பரியக் கல்விக்கும் இலக்கிய வளத்திற்கும் கணிசமான பங்குண்டு எனலாம்.
வடமராட்சியில் நாவல், சிறுகதை எழுத்தாளர்கள் பலர் வாழ்ந்துள்ளனர்: வாழ்கின்றனர். இவர்களில் முக்கியமாக செ. கதிர்காமநாதன், தெணியான், நந்தினி சேவியர், புலொலியூர் சதாசிவம், ரகுநாதன், புலொலியூர் தம்பையா, பத்மநாதன் முதலிய பலரைச் சுட்டிச் சொல்லலாம்.
வடமராட்சிப் பகுதியில் இருந்து பாடப்புத்தகங்கள் பல எழுதிவெளியிட்ட பலர் உள்ளனர். இலக்கியம், சமயம், சுகாதாரணம, விஞ்ஞானம், கணிதம், அளவையியல் போன்ற துறைகளிலும் எழுதியுள்ளனர். இவர்களில் முக்கியமாக ஷஷயாழ்பபாணன்|| என்னும் சிவக்கொழுந்து ஆசிரியர், பண்டிதர் க. வீரகத்தி, வி. மகாலிங்ம், வி.கே. நடராசா, கம்பகா கந்தப்பு, இ. முத்துத்தம்பி, பேராசிரியர் கணேசலிங்கம், தோமஸ் ஈப்பன், கே. எஸ். குகதாசன், மு. அற்புதநாதன் முதலிய பலரைக் குறிப்பிடலாம்.
இப்பகுதியில் அறிவியல், விஞ்ஞானம் சார்ற்த அஙிஞர்களாகவும், ஆய்வாளர்களாகவும் பலர் காணப்படுகின்றனர். உதாரணமாக பேராசிரியர் ஜெயரத்தினம் எலியேசர், அணுவிஞ்ஞானி உடுப்பிட்டி கந்தையா (அணு ஆராய்ச்சித்துறை, அமெரிக்கா), கலாநிதி தயாநிதி, சி. லோகநாதன் முதலியோரைக் குறிப்பிடலாம். ஈழத்தில் பாடசாலைக்கு வெளியே விஞ்ஞானம் கற்பித்தலின் முன்னோடி நிறுவனமாகத் தொண்டைமானாறு வெளிக்களநிலையம் விளங்குகிறது. இது ஐ.சீ.சீ. என்ற அனைத்துலக நிறுவனத்துடன் இணைப்புப்பெற்றதே இதன் சிறப்புக்கு உரைகல்லாகும். வடமராட்சியின் மூளைகளே இதன் பின்னணியில் நின்றன.
அரசியல் துறையிலும் ஆற்றலும் புகழும் கொண்டவர்களாக இப்பகுதி அறிஞர்கள் விளங்கியுள்ளனர். இவர்களில் பொன். கந்தையா, ஜீ. ஜீ. பொன்னம்பலம், கே. பாலசிங்கம், தர்மகுலசிங்கம் முதலியோரைக் குறிப்பிடலாம்.
வடமராட்சி யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒரு சிறு பகுதி. வடமராட்சியை இலங்கையின் ஷமுளை| என்று சிலேடையாக அழைப்பார்கள். வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் ஷஷமூளைசாலிகள்|| என்ற அபிப்பிராயமும் தீவடங்கலும் உண்டு. இந்த ஷஷஅபிப்பிராயம்|| வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினாலும் இலக்கிய வளத்தினாலுமே ஏற்பட்டது எனலாம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குச் சில தனித்தன்மையான பண்புகள் காணப்படுவர் உண்மையே. இத் தனித்தன்மையைப் பேணிப் பாதுகாக்கும் பிரதேசங்களுள் வடமராட்சியுமு; ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாய்வின் மூலம் வடமராட்சிக்குக் கல்வி, பண்பாடு ஆகியவற்றில் ஒரு சிறப்பியல்பு இருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. இச்சிறப்பியல்பு பெருமளவு ஷஷதனித்தன்மை|| வாய்ந்ததாகவும் காணப்படுகிறது. முன்பின் தெரியாத ஒருவர் வடமராடசியில் எந்த வீட்டிலும் துணிந்து ஷஷவாத்தியார்|| என்று கூப்பிடலாம் என்பார்கள். தமிழாசிரியர்கள் நிறைந்த ஒரு பகுதியாக ஒரு காலகட்டத்தில் வடமராட்சி காணப்பட்டது. இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது மரபு வழிக் கல்விமுறை நன்கு சிறப்புற்றிருந்தமையே எனலாம். ஷதமிழ் வாத்திமாரின்| பிள்ளைகளில் பெரும்பாலோர் ஆங்கிலம் கற்று அறிஞர்களாகவும் உயர்ந்த பதவி வகிப்பவராகவும் வந்துள்ளனர். இப்பண்பு குடாநாடு முழுவதற்கும் பொருத்தமேயெனினும் வடமராடசிக்குப் பெரும்பான்மையென்று கூறலாம்.
வடமராட்சி, பிரதேசம் கடந்த புகழுடையது. அதன் புகழுக்கு அடிப்படைக்காரணமாக அமைவது கல்வி வளமேயேனலாம். ஏலவே கட்டுரையிற் குறிப்பிட்டதுபோல் அதற்குப் பல்வேறு காரணங்கள் உள. இலக்கியம், சமயம், அறிவியல் நெறிகளில் ஆற்றலும் ஈடுபாடுமுடைய பலர் ஈழத்தின் கல்வியுலகத்திற்கு அளப்பரிய பணியைச் செய்திருக்கின்றனர். இவர்களில் குறிப்பிடக்கூடிய பலர் வடமராட்சிப்பகுதியி;ல் வாழ்ந்துள்ளனர்.
இப்பகுதியின் ஷஷபுகழ்பூத்த|| அறிஞர்களின் ஷமரபு கிளக்கும்| பொழுது அவர்கள் ஏதோ ஒருவகையில் பாரம்பரியக் கல்வி மரபிலிருந்து முகிழ்த்தவர்களாகவே காணப்படுகின்றன. மிகப் பலம்வாய்ந்த அத்த்pவாரத்திலேதான் உயர்ந்த கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. சிவசம்புப் புலவர் தொடக்கம் பேராசிரியர் சிவத்தம்பி வரை தமிழிலக்கியப் பரப்பில் ஈழம் கடந்த புகழுக்குரியவர்கள்.
இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்க் கல்விப் பாரம்பரியத்தில் வடமராட்சியின் பங்களிப்புக் குறிப்பிடக்கூடியது. அதற்குக் கால்கோளாக அமைந்தவர் ஈழத்தின் முதற் கலாநிதி பேராசிரியர் கணபதிப்பிள்ளையாவர். இவரின் பணி வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திற்கு ஒரு புதிய பலத்தைக் கொடுத்தது எனலாம். இவரின் பங்களிப்புத் தனியே ஆராயப்பட வேண்டியது. சிவசம்புப்புலவர், முத்துக்குமாரசுவாமிக் குரக்கள், பேராசிரியர் கணபதிப்பிள்ளை என்ற தொடர்ச்சி நல்லதொரு பலமான பாரம்பரியமாகவே அமைந்துள்ளது.
இவ்வாய்வு பூரணத்துவமானது என்றோ, இதன் முடிவுகள் முடிந்த முடிவுகள் என்றோ கொள்ளவேண்டுமென்பதில்லை. இந்நூல் பூரணமான ஒரு ஆய்வை நோக்கிய பயணத்தின் ஷஷமுதலடி||யாகவே அமைந்துள்ளது. என நம்பலாம்.
பொருள் அட்டவணை
(அ) இந்நூலில் இடம்பெறுவோர்
அண்ணா, பேரறிஞர் – 38
அண்ணாவி ஆழ்வார் – 16
அண்ணாவி ஆறுமுகம் - 16
அண்ணாவி சரவணமுத்து – 16,17
அண்ணாவி செல்லையா – 16
அண்ணாவி தம்பையா – 16
அண்ணாவி மகாலிங்கம் - 16
அண்ணாவி முருகன் - 15
ஷஅநுசூயா| வேலுப்பிள்ளை – 16
அம்பிகைபாகன், ச. - 50, 53, 58
அருணந்தி, க. ச – 58
அருணாசல உபாத்தியாயர் – 59
அருளம்பல சுவாமியார் – 56
அருளம்பல முதலியார் – 29
ஆரியச்சக்கரவர்த்தி – 4
ஆழ்வாப்பிள்ளை, சி. - 61
ஆழ்வாப்பிள்ளை, ஜே. எஸ். - 38, 60
ஆறுமுகநாவலர் – 42, 52
ஆறுமுகம்பிள்ளை, ஆ. - 60
ஆறுமுகம் வித்துவான், ஆ. - 59
இந்திரபாலா, கா. - 9
இபின் பதூதா – 9
ஷஇயமன்| வேலாயுதம் - 16
இரத்தினராசா, வண. எம்.ஏ. - 60
இராசசிங்கம், எஸ். கே. - 61
இராசநாயகம், முதலியார் – 3
இராமநாதபிள்ளை, த. - 46, 61
இராமலிங்கம, உடுப்பிட்டி வே. - 61
இராமலிங்கம், துன்னாலை – 48
ஷஇலங்கை வேந்தன்| - 59
ஈ. வே. ரா, பெரியார் – 38, 39
எலியேசர், ஜெயரத்தினம் - 69
ஏகாம்பரம், க. - 61
ஏகாம்பரம், நா. - 61
ஏரம்ப முதலியார் – 58
கணபதிப்பிள்ளை, க. - 42
கணபதிப்பிள்ளை, கீழ்க்கரவை, வ. - 37
கணபதிப்பிள்ளை, சு. - 38
கணபதிப்பிள்ளை, தென்புலோலியூர், மு. - 49, 50, 56, 58
கணபதிப்பி;ள்ளை, பண்டிதமணி, சி. - 26, 49
கணபதிப்பிள்ளை புலோலி, வ. 26, 45, 54, 57, 62
கணபதிப்பிள்ளை, பேராசிரியர், க. - 4, 8, 9, 14, 16, 24, 46, 49, 50, 62, 68
கணபதிப்பிள்ளை, வே. - 62
கணேசபண்டிதர், ஞா. - 2
கணேசலிங்கம், பேராசிரியர், வி. கே. - 69
கணேசன், சா. - 34
கணேசன், பண்டிதர், பொன். - 34
கணேசையர், வித்துவான், சி. - 52, 64
கண்ணப்ப முதலியார், பா. - 60
கதிரைவேற்பிள்ளை, உவைமன் கு. - 46, 47, 62
கதிரைவேற்பிள்ளை, சதாவதானம், நா. - 33, 44, 45, 46, 47, 48, 56, 57, 58, 59, 63.
கதிர்காமநாதன், செ. - 8, 69
கந்தப்பகுமாரன், இராமலிங்கர் – 29
கந்தப்பு, கம்பகா – 69
கந்த முருகேசன் - 20, 22, 23, 44, 47, 63
கந்தையா, உடுப்பிட்டி – 49
கந்தையா, வித்துவான், வீ. சி. - 54
கலியாணசுந்தரனார், திரு. வி. க. - 56, 58, 3
கார்த்திகேசு, பண்டிதர் – 38
கார்த்திகேசு, பண்டிதர், பொ. - 43, 63
கிரு~;ணாழ்வா, எம். வீ. - 17, 18, 43, 44
குமாரசுவாமிப்புலவர், இலக்கணக்கொத்தர், வ. - 44, 45, 64
குமாரசுவாமி முதலியார் – 64
குன்றக்குடி அடிகள் - 34
கேடிலியப்பபிள்ளை – 55
கோபாலகிரு~;ணக்கோன், கு. மா – 46, 50
ஷகுடியரசு| கந்தப்பு – 39
ஷகுடியரசு| செல்லையா – 39
குலரத்தினம், க.சி. - 58
கைலாசபதி, பேராசிரியர், க. - 24, 39, 49, 62
ஷசகுணி| கந்தன் - 16
சச்சிதானந்தன், பண்டிதர், க. 54
சண்முக சட்டம்பியார் – 21
சண்முகதாஸ், அ. - 45, 62, 68
சண்முகம், கரவெட்டி – 48
சதாசிவம், புலோலியூர் – 8, 69
சதாவிலம்பிள்ளை, ஆர்ணல்ட் - 49
சந்திரசேகi முதலியா – 64
சந்திரசேகரப்பிள்ளை, வித்துவான் - 53
சபாநாதன், குல, - 3, 9
சபாபதிப்பிள்ளை, மேலைப் புலோலி – 55
சரவணமுத்து, வித்துவான் - 54
சாமிநாதையர், வே. - 46
சிதம்பரப்பிள்ளை, வே. - 65
சிதம்பரராமலிங்கம, வி. - 60
சிவக்கொழுந்து, வே. - 37, 69
சிவசம்புப் புலவர் – 22, 23, 24, 30, 44, 45, 47, 48, 57, 58, 59, 62, 64, 66, 68
சிவஞான சுந்தரம், சீ. - 38, 39
சிவஞான முனிவர் – 45
சிவத்;தம்பி, பேராசிரியர், கார்த்திகேசு – 35, 38, 50, 55, 58, 62, 63, 65
சிவபாதசுந்தரனார், சைவப்பெரியார், சு. - 26, 27, 38, 46, 49, 50, 65
சிவப்பிரகாசம், கலாநிதி, கு. - 52
சிவராசசிங்கம், வ. - 42
சிவராசன்,வ. - 63
சிற்றம்பல உபாத்தியாயர். க. - 64
சின்னத்தம்பி உபாத்தியாயர், த. - 65
சின்னத்தம்பி, பண்டிதர், கா. - 65
சின்னத்தம்பிப புலவர் – 29, 51
ஷசுகணா| - 38
ஷசுபத்திரை| ஆழ்வார் – 16
சுப்பிரமணிய சாஸ்திரிகள், ச. - 36, 37, 45, 46, 65, 66
சூரன், கா. - 30, 31, 32, 43, 49
சூரன, திருமதி – 32
செபநேசன், எஸ். - 46, 50
செல்லையா, அல்வாயூர்க் கவிஞர் – 32, 66
செல்லையாபிள்ளை, சி. - 66
செல்வநாயகம் - 18
செவ்வந்திநாத தேசிகர், தி. - 66
சேனாதிராசா முதலியார், இருபாலை – 52, 61, 64
சொக்கப்பநாவலர் – 37
சோமசுந்தரப்புலவர் – 59
ஞானசபாபதிப்பிள்ளை, பொ. - 36
ஞானசம்பந்தன், அ. ச. - 34
ஞானப்பிரகாசர், சுவாமி – 4
தம்பையா – 32
தயாநிதி, கலாநிதி – 69
தர்மகுலசிங்கம் - 8, 69
தாசீசியஸ், அ. - 16
தாமோதரம்பிள்ளை, வித்துவான் சி. - 36, 37
தாயுமானவர் – 55
தில்லைநாத நாவலர் – 48, 67
தெணியான் - 69
தோமஸ் ஈப்பன் - 69
நடராசா, வி. கே – 9
நடராஜா, வித்துவான். க. - 43
நடேசபிள்ளை, சு. - 58
நந்தினி சேவியர் – 69
நல்லதம்ப – 59
நவரத்தினசாமி, நீச்சல் வீரர் – 43
நாகலிங்கம்பிள்ளை, வித்துவான், வதிரி, சி. - 36, 37, 67
ஷநாரதர்| கந்தையா – 16
நெல்லைநாத முதலியார் – 52
பத்மநாதன் - 69
பரமநாதன், முரக. வே. - 54
பாரதிதாசன் - 54
பாரதியார், மகாகவி சுப்பிரமணிய – 55, 56, 57, 58
பார்பதி அம்மையார் – 26, 27
பாலசிங்கம், க.. - 8, 9, 46, 62, 69
பாற்கர சேதுபதி – 57, 64
பீதாம்பரன் - 59
புவனேஸ்வரி, புலவர் – 34
பூபாலபிள்ளை, வித்துவான். ச. - 53
பெரியசாமிப்பிள்ளை, சா – 60
பெரியதம்பிப்பிள்ளை, புலவர்மணி – 53
பொன்னம்பல உபாத்தியாயர், க. - 38, 67
பொன்னம்பலபிள்ளை, ச. - 52, 63
பொன்னம்பலம், ஜீ. ஜீ. - 8, 43, 69
போல்டியஸ் பாதிரி – 5, 9
மகாலிங்கம், வி. - 69
முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் - 24, 44, 45, 62, 64, 67, 68
முத்துத்தம்பி, இ. - 69
முருகேசு, புலவர், தா. - 39, 68
மூத்ததம்பி – 16
மூத்ததம்பி அண்ணாவியார் – 16
ஷமூனிப்| பொன்னு – 16
யாழ்ப்பாணத்துச் சுவாமி – 55, 56, 69
யாழ்ப்பாணன் - 37, 69
லோகநாதன், சி. - 69
வச்சிரவேலு முதலியார் – 34
வயித்தியலிங்கம்பிள்ளை, இயற்றமிழ்ப் போதகாசிரியர், வல்வை, ச. - 36, 45, 48, 50, 53, 59, 64, 68
வல்லிபுரம், சைவப்புலவர், எஸ். - 34
விசாகப்பெருமாள் ஐயர், திருத்தணிகை – 29
வித்தியானந்தன், பேராசிரியர், சு. - 54 – 62
விபுலானந்தர் – 52, 53, 58
விஜயபாரதி – 34
வீரகத்தி, பண்டிதர், க. - 8, 9, 34, 40, 41, 43, 44, 50, 69
வீரசிங்கம், தும்பளை – 18
வெற்றிவேலு வாத்தியார் – 20
வேங்கடசாமி நாட்டார், பண்டிதர், ந.மு. - 60
வேதகிரி முதலியார், களத்தூர் – 29
வேதநாயகம்பிள்ளைப் போதகர் – 53, 54, 69
வேலாத்தை உடையார் – 29
வேலாயுத உடையார் – 51
வேலுப்பிள்ளை, சின்னையா 56
வேலுப்பிள்ளை, சுதேசநாட்டியம் ஆசிரியர், க. - 54
வேலுப்பிள்ளை, பேராசிரியர், ஆ. - 24, 45, 62, 68
வேற்பிள்ளை, ம. க. - 54
ஜகநாதன், இ. வா. 50
(ஆ) இந்நூலில் இடம்பெறும்
வடமராட்சியி;ல் எழுந்த நூல்கள்
அகநூல் - 61
அருளம்பலக கோவை – 64
அளவைநூல் - 46
அளவையியல் - 46, 61
இந்திரகுமார நாடகம் - 64
இயற்றமிழ்ப் போதகாரியர் வல்வை ச. வைத்தியலிங்கம் பிள்ளை – 50
இரு நாடகங்கள் - 62
இஸ்லாமிய கதாமாலை – 60
இஸ்லாமிய நீதிநெறி – 60
ஈழத்தமிழர் வாழ்வும் வளமும் - 62
ஈழத்தில் தமிழ் இலக்கியம் - 58
ஈழத்து இலக்கண முயற்சிகள் - 50
ஈழமண்டல சதகம்
உலகம் பலவிதம் - 60
உழவர் சிறப்பு – 54, 63
கண்ணிற்காக்கும் காவலன் - 40, 50
கதிர்காம புராணம் - 67
கதிர்காம புராண வசனம் - 67
கந்தபுராண உரை – 66
கந்தபுராணம் சூரபத்மண் வதைப்படல உரை – 65, 68
கந்தபுராண விளக்கம் - 65
கந்தவனநாதரூஞ்சல் - 40, 64
கரவை வேலன் கோவை – 29, 51, 61
கலிகாலக் கும்மி – 60
கலிகாலக் கோலம் - 60
கலிகால வேடிக்கை – 60
கல்வி உளவியல் - 61
கல்வி ஒழுக்க உரை – 66, 68
காதலியாற்றுப்படை – 9, 50,62
கிறீஸ்தவ பஞ்சாமிர்தம் - 60
கோட்டுப் புராணம் - 61
கோதாரிமீது கலித்துறை – 66
சங்கிலியன் - 62
சத்தியவேத அம்மானை – 60
சந்தானாசாரியார் சரித்திரச் சுருக்கம் - 67
சந்தியாவந்தன ரகசியம் - 67
சந்திரசேகரக் குறவஞ்சி – 64
சாசனமும் தமிழும் - 24
சாதிநிர்ணய புராணம் - 68
சிவசம்புப்புலவர் பிரபந்தத் திரட்டு – 66
சிந்தாமணி நிகண்டு – 68
சிவபெருமான் அலங்காரம் - 68
செல்வச்சந்நிதிப் பதிகம் - 63
சைவக்கிரியை விளக்கம் - 65
சைவசிரார்த்த ரகசியம் - 66
சைவபோதம் - 65
சொற்பொருள் விளக்கம் - 46
சோதிடச் சுரக்கம் - 65
தச்சந்தோப்புப்பிள்ளையார் திருப்பதிகம் - 65
தச்சந்தோப்புப்பிள்ளையார் பிள்ளைத்தமிழ் - 65
தச்சைச் சிலேடை வெண்பா – 42
தமிழ்ச்சொல் அகராதி – 47
தமிழ்மொழி ஆராய்ச்சி – 66
த~ண கைலாச புராணம் - 67
திருக்குறள் அதிகாசாரமாகிய திருத்தாலாட்டு – 62
திருச்சந்நிதிவேலர் திருப்பதிகம் - 65
திருச்செந்தூர் திருவிரட்டை மணிமாலை – 65
திருநெல்வாயிற் புராணம் - 67
திருவருட்பயன் விளக்கவுரை
திருவள்ளுவர் சமணர் என்னும் கொள்கை மறுப்பு – 67
திருவிற் சுப்பிரமணியர் பதிகம் - 64
துகளறு போத உரை – 66
நசரேய அந்தாதி – 60
நசரேய இரட்டைமணிமாலை – 60
நசரேய மும்மணிக்கோவை – 60
நல்லூர்க் கந்தன் கோவை – 65
நன்னூற் கண்டிகை உரை விளக்கம் - 45, 64
நாவலன் கோவை – 47, 63
நானாடகம் - 62
நில அளவைச் சுருக்கம் - 65
நீலலோசனி அம்மன் தோத்திரம் - 56
நெடியகாட்டு ஊஞ்சல் - 59
பசுபதீஸ்வரர் அந்தாதி – 68
பசுபதீஸ்வரர் ஊஞ்சல் - 52
பராசக்தி பட விமர்சனம் - 32
பாற்கரசேதுபதிமீது கல்லாடக் கலித்துறை – 47, 57
பாற்கரசேதுபதிமீது நான்மணிமாலை – 64
பாற்கரசேதுபதிமீது இரட்டை மணிமாலை – 64
பிள்ளைப்பாட்டு – 59, 65
பூலோக வேடிக்கை – 60
மதனவல்லி விலாசம் - 65
மலேரியாக் கும்மி – 54, 68
மாணிக்கமாலை – 24, 49, 62
மாயக்கும்மி – 60
மாவைக் கந்தசாமி மும்மணிமாலை – 66
மான்விடுதூது – 65
மூளாய்ச் சித்தி விநாயகர் ஊஞ்சல் - 67
யார்க்கரு விநாயகர் ஊஞ்சல் - 67
யார்க்கரு விநாயகர் திருவிரட்டை மணிமாலை – 67
வண்டுவிடு தூது – 66
வளர்பிறை – 66
வள்ளியம்மை திருமணப்படல உரை – 68
விறலிவிடுதூது – 64
வெருகற் சித்திரவேலாயுத சுவாமி பேரில் கீர்த்தனைகள் - 63
வேலப் பணிக்கன் பெண்சாதி அரியாத்தை பேரில் ஒப்பாரி – 37
உசாத்துணை
அம்பிகைபாகன், ச., ஷஷசுவாமி விபுலானந்தரின் வாழ்க்கையும் பணியும்ஷஷ, அடிகளார் படிவமலர், சிலை
நிறுவனக் குழவினர், காரைதீவு (கி. மா.), 1969
இந்திரபாலா, கா., யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், யாழ்ப்பாணத் தொல்பொருளியற் கழகம்,
வட்டுக்கோட்டை, இலங்கை, 1972.
கணபதிப்பிள்ளை பேராசிரியர், க., இலங்கைவாழ் தமிழர் வரலாறு| பேராதனை, 1956.
காதலியாற்றுப்படை, திருமகள், அழுத்தகம, சு;னாகம், 1950.
மாணிக்கமாலை, சாவகச்சேரி இலங்காபிமானி அச்சியந்திரசாலை, 1953 (இரண்டாம்
பதிப்பு).
கணபதிப்பிள்ளை, பண்டிதமணி, சி., புலோலியூர்ப் பெரியார் சிவபாதசுந்தரம்; நினைவு மலர்,
யாழ்ப்பாணம், 1978.
கணபதிப்பிள்ளை, தென்புலோலியூர், மு., ஷஷபுலொலியூர்ப் புலவர்கள்|| கதிரொளி, பருத்தித்துறை, 1976.
கந்தையா, பண்டிதர், வீ.சீ., மட்டக்களப்புத் தமிழகம், ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீடு,
குரும்பசிட்டி, 1964.
கலியாணசுந்தர முதலியார், திரு. வி., திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள், பகுதி ஐ, திருநெல்வேலி
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1969
.
குலரத்தினம், க. சி, நாவலர் நூற்றாண்டு விழாமலர், யாழ்ப்பாணம் 1980
கைலாசபதி, பேராசிரியர், க., பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், பாரிநிலையம், சென்னை, 1966.
சதாசிவம்பிள்ளை ஆர்னல்ட், பாவலர் சரித்திர தீபகம், ஸ்திருங் அஸ்பரி இயந்திரசாலை, மானிப்பாய்
1886.
சபாநாதன் குல, ஷஷசிங்கைநகர்|| சமூகத்தொண்டன் ஆண்டுமலர், 1961.
சிவத்தம்பி, பேராசிரியர் கா,. இயற்றமிழ்ப் போதகாசிரியர், வல்வை, ச. வைத்தியலிங்கம்பிள்ளை.
ஈழத்தில் தமிழிலக்கியம், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை 1978.
சுப்பிரமணிய பாரதியார், பாரதிபாடல்கள், சக்தி வெளியீடு, 1957.
சூரன், கா. எனது வரலாறு, திரு. கா. சூரன், அவர்களின் நினைவு மலர் 1960
பாலசிங்கம் கே., ஷசட்ட நிரூபணப் பேச்சு| ஈழகேசரி 1931.
போல்டியஸ் - ஊநலடழn டில டீயடனயநரள – யு னுநளஉசipவழைn ழக ய பசநளவ யனெ அழளவ கயஅழரள ஐகுஐநு ழக ஊநலடழn.
வீரகத்தி பண்டிதர். க., செழுங்கமலச் சிலம்பொலி, வாணி, கரவெட்டி 1970
கண்ணிற் காக்கும் காவலன், வாணி, 1969.
ஈழத்து இலக்கண முயற்சிகள் - அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மகாநாடு,
யாழ்ப்பாணம், 1974.
வேலுப்பிள்ளை, வயாலிளான் க., யாழ்ப்பாண வைபவ கௌமுதி, ஜயஸ்ரீ சாரதா பீடேந்திரசாலை, வயா
விளான் 1918.
ஜெபநேசன், எஸ். ஷஷஈழநாட்டில் எழுந்த தமிழ் அகராதிகள், அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி
மாநாடு (நினைவு மலர்) 1974.
ஜம்;புலிங்கம்பிள்ளை, செ. வே. பதிப்பாசிரியர், கைலாயமாலை.
ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபை, வயிரவிழாமலர், சென்னை 1968.
கருத்துகள்
கருத்துரையிடுக