மக்கள் பிரதமர் ஸ்ரீமாவோ
வரலாறு
Backமக்கள் பிரதமர் ஸ்ரீமாவோ
பாமா. ராஜகோபால்
------------------------------------------------
மக்கள் பிரதமர் ஸ்ரீமாவோ
பாமா. ராஜகோபால்
ஈகேஆர் பப்ளிஷர்ஸ்
வல்வெட்டி, வல்வெட்டித்துறை
----------------------------------------------
வெளியீடு : 1
பதிப்பு : ஆகஸ்ட் 1970
விலை : ரூ. 1-00
People's Premier
SRIMAVO
Pama Rajagopal
Publisher: EKR Publishers, Valvettithurai.
Printer: Eelanadu Limited, Jaffna.
First Edition : August 1970
Price : Re. 1-00
------------------------------------------------
(புகைப்படம்)
மக்கள் பிரதமர்
-----------------------------------------------
(புகைப்படம்)
முன்னுரை
திருமதி சிறிமாவோ றத்வத்தை பண்டாரநாயக்கா உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றவர். அவர் பிறவியிலே செல்வத்தில் உதித்து புகுந்த வீட்டிலும் பெருமையும், செல்வத்தையும் அடைந்திருந்த போதிலும் நாட்டின் ஏழை மக்களுடன் கூச்சமின்றி அந்நியோன்னியமாகப் பழகவும், அவர்களின் குறைகளையும், கஷ்டங்கயையும் உணரவும் சக்தி வாய்ந்தவராய் இருக்கிறார். இதனாலேயே தன்னுள் அடங்கி நிற்கும் அத்தனை பலத்தையும் மூச்சையும் கொண்டு சோஷலிஸ ஜனநாயக வழிகளில் எம் தாய் நாடாகிய இலங்கையினை முன் நடத்திச் செல்லப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒரு மனிதன் எந்நிலையிலும் கருணையோடும், கண்ணியத்தோடும் மற்றவர்களுடன் பாசத்தோடும் பழகுவதற்கு அம்மனிதன் தன் வாழ்க்கையிலேயே பெரும் துக்கத்தையோ கஷ்டத்தையோ எதிர் கொண்டு அதைச் சமாளித்து வெற்றிகாணும் அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டும். அவ் வகையான நிலை திருமதி பண்டாரநயக்கா அவர்களுக்கு அவர் கணவர் காலஞ் சென்ற பிரதமர் பண்டாரநயக்கா அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது ஏற்பட்டது. இந்த பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் எப்படியோ சமாளித்துத் தன் பிள்ளைகளின் பொறுப்பையும் நாட்டின் பொறுப்பையும் ஒருங்கே ஏற்று நடாத்தி வருகிறார். முதன் முதலாக நாட்டில் இன, மத, மொழி, பொருளாதாரம் முதலிய காரணங்களால் பிரிவோ, பேதமோ இல்லாத முறையில் மக்களை ஒரே கருணைக் கண்களால் நோக்கக் கூடிய அரசாங்கத்தை உண்டாக்கி நடாத்தி வருகிறார். இவர் சேவை நாட்டிற்கு இன்னும் பல வருடங்களுக்குத் தொடர்ந்து இருக்குமாறு பிரார்த்திக்கிறோம்.
இவரைப் பற்றிய இச் சிறு புத்தகத்தை எழுதி வெளியிட முன்வந்த இளைஞரான எழுத்தாளர் பாமா. ராஜகோபால் அவர்களை மகிழ்ச்சியுடன் பாராட்டுகின்றோம்.
செல்லையா குமாரசூரியர்
தபால் தந்திப் போக்குவரத்து அமைச்சு.
தபால் தந்திப் போக்குவரத்து அமைச்சு
வெளிநாட்டுத் தந்திச் சேவைக் கட்டிடம்,
டியூக் வீதி,
கொழும்பு 1.
---------------------------------------------
(புகைப்படம்)
'அரசியல் மேதை'
அமரர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
கண்ட கனவு நனவாகிறது!
---------------------------------------------
(புகைப்படம்)
எம். ஸி. பேசுகிறார்.
நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக சோஷலிச அடிப்படையில் அரசாங்கம் ஒன்றை அமைத்து தலைமை தாங்கும் அளவுக்கு திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் துணிச்சலும் மனோதிடமும் பெற்ற வீராங்கனையாக விளங்குகின்றார்.
நாட்டில் வாழும் சகல இனமக்களதும், பிரிவினரதும், அபிலாஷைகளை, நன்கு புரிந்து கொண்டு மாற்றாரின் கருத்துக்களுக்கும் உரிய மதிப்புக் கொடுக்கும் பெருந்தன்மையும், மற்றவர்களின் உரிமைகளை பேணிக்காக்கும் நல்லெண்ணமும் கொண்டவராக அவர் விளங்குகின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக, இதுகால வரையில் உரிமைகள் மறுக்கப்பட்டு, நசுக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை தமிழ் மக்களின்பால் அன்பு கொண்டு, இலங்கையின் சரித்திரத்திலேயே முதல் தடவையாக அவர்களின் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர் ஒருவரை நியமித்தது மட்டுமன்றி, நாட்டில் நிலவும் சமூகக் குறைபாடுகளை வேரோடு களைந்தெறியும் வகையில் சட்ட மாற்றங்களைக் கொண்டுவரவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் அவர் கிஞ்சிற்றும் தயக்கம் காட்டாது செயலில் ஈடுபட்டுள்ளது வாக்குறுதிகளை எவ்வளவு தூரம் அவர் மதிக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
நாட்டை மிகவிரைவிலேயே பொருளாதாரத் துறையில் அபிவிருத்தியடையச் செய்வதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறார்!
நாட்டின் நன்மையைப் பொதுப்படையாக வைத்து தம்மால் செய்ய முடியும் என்று கருதும் விஷயங்களை எத்தனை எதிர்ப்பிருந்தாலும் தயக்கமின்றி செயல்படுத்தும் திறமையும், முடியாத விஷயங்களை வைத்துக் கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீண் விரையம் செய்யாமல் முற்றுப்புள்ளி வைத்து விடக்கூடிய சாதுர்யமும் அவருக்கு இருக்கின்றன. மற்றவர்களின் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் சரியாகப் புரிந்து கொண்டு மதிப்பளிக்கும் பிரதமமந்திரி அவர்கள் இந்நாட்டின் உண்மையான ஒருமைப்பாட்டையும், சௌஜன்யத்தையும், கட்டிவளர்க்க முடியும் என்று முழுமனதாக நம்புகின்றார். அந்த நம்பிக்கை உரம் பெறுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டியது இந்நாட்டில் வாழும் சகல குடி மக்களதும் கடமையாகும். அந்த வகையில் தமிழ் பேசும் மக்களின் பொறுப்பு மகத்தானது.
எனவே அரசியல் குரோதங்களை வைத்துக்கொண்டு நாட்டைக் குழப்பியடிக்கும் 'திருப்பணி'யில் எம் அரசியல் வாதிகளும், ‘பெரிய’ மனிதர்களும் இறங்காமலிருப்பார்களாயில் நம்மை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சனைகளையும் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் செயல்படும் கூட்டணி அரசினால் தீர்த்து வைப்பது பெரிய காரியமாக இராது.
திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவைப் பற்றி இச்சிறு நூலை எழுதி வெளியிட முன்வந்த இளம் நண்பர் பாமாராஜகோபாலுக்கு எமது பாராட்டும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
அவரது நோக்கம் வெற்றி பெறட்டும்!
- எம் ஸி. சுப்பிரமணியம்
(நாடாளுமன்ற உறுப்பினர்)
யாழ்ப்பாணம்.
---------------------------------------------------
(புகைப்படம்)
கலாநிதி பேசுகிறார்!
ஸ்ரீமாவோ ஈழத்தின் சரித்திரத்தையே நம் கண்முன்னேயே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும் ஒரு அதிமுக்கிய தலைவி! ஆனாலும் அவரைப் பற்றித் தமிழர்கள் அதிகம் அறிந்து வைத்திருக்க நியாயமில்லை. நன்றாக அறியாத ஒன்றைப் பற்றியோ, ஒருவரைப் பற்றியோ தப்பபிராயங்கள் ஏற்படுவது இயற்கை!
உணர்ச்சிக்கு அடிமையாகிய மனிதர் உண்மையை உணர்வது கஷ்டம்; ஆதலால் எத்தனை எத்தனையோ முக்கிய பிரச்னைகள் உள்ள சிறுபான்மையினரகிய தமிழர், பெரும்பான்மை வாக்குகளால் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட இந்நாட்டின் பிரதமர் ஸ்ரீமாவின் வாழ்க்கைச் சரித்திரத்தைத் தத்ரூபமாகப் படிப்பது அவர்கள் மனதில் பயமகன்று, உண்மை உணர்த்தப்பட்டு, சமரசம் ஏற்பட ஏதுவாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பரந்த நோக்கும் முற்போக்குள்ள இளைஞர் பாமா ராஜகோபால் எழுதியுள்ள இப்புத்தகத்தை ஒரு தடவையாவது படிக்குமாறு தமிழன்பர்களை வேண்டுகின்றேன்!
ஸ்ரீமாவின் வெற்றியின் இரகசியமென்ன? அவர் எப்படியான குணாதிசயங்கள் உடையவர்? அவரது குடும்பம் எப்படியானது? அரசியல் அனுபவம் நிறையப் பெற்ற ஆண்களையே தன்னிடம் பயம், பக்தி, மரியாதை கொள்ளச் செய்யும் அவரின் அசாதாரண குணங்களின் மர்மமென்ன? இப்படியான கேள்விகளுக்கு ஆசிரியர் இந்நூலில் பதில் பகிர்கிறார்!
ஸ்ரீமாவின் கதையைப் படிப்பதினால் தமிழர்கள் மட்டுமல்ல, ஈழத்தினர் மட்டுமல்ல, உலகத்தினரே பயன் பெறலாம் என்பது என் அபிப்பிராயம்!
- கலாநிதி கோபாலபிள்ளை
மகாதேவா.
தலைவர், 'மயிற்' தாபனம்.
15- வது ஒழுங்கை,
கொழும்பு-3.
---------------------------------------------------
ஏன் எழுதினேன்?
உலகத்தில் முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும் எந்த ஒரு நாட்டிலுமே நடக்காத புதுமை ஈழத்தில் நடந்தது! அந்த புதுமையின் நாயகி ஸ்ரீமாவோ!
துணிச்சலாக, மிக மிகத் துணிச்சலாக சோஷலிச சமுதாயத்தை ஏற்ப்படுத்த இந்த நாட்டின் சரித்திரத்தையே மாற்றும் நடவடிக்கைகளை வேகமாக மேற்கொண்டிருக்கிறார் அவர்!
ஜக்கியத்துக்காகவும், சோஷலிச சமுதாயத்தை உருவாக்கவும் தன்னையே அர்ப்பணித்து உழைப்பதன் மூலம் இலங்கையின் சரித்திரத்திலேயே என்னும் காயாத புதுமையான மலர்ச்சிக்கு வித்திட்டார்.
இந்த நாட்டுத் தமிழ் மக்களுக்கு இலங்ஙையே சொந்தம்; இதுவே அவர்கள் தாய்நாடு. இந்த நிலையில் உலகத்திலேயே பெண்ணை முதல் பிரதமராக்கிய பெருமையில் அவர்களுக்கும் பங்குண்டு!
தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக வைத்து அரசியல் சூதாட்டமாடிய இனவெறியர் ஆர். ஜி. யையும், அவர் போன்றவர்களையும் அரசியல் வாழ்விலிருந்து விரட்டியடித்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவியாக ஸ்ரீமாவோ விளங்குகிறார் என்பதனை தமிழர்களாகிய நாம் மறந்துவிட முடியாது.
இதுமட்டுமன்றி, நேற்றுவரை ஈழத்து சரித்திரத்தை மாற்றி சிறுபான்மை யினத்தினருக்கு தனது அரசியல் இடமளித்து, இன மத மொழி பேதமற்ற முறையில் தேசிய ஒற்றுமையை வளர்கத் தீவிரமான செயலாக்கங்களை மேற்கொண்டுள்ளார்.
இதற்காகத் தமிழர்களாகிய நாம் அவருக்கு நன்றிமிக்கவர்களாக இருக்க வேண்டும்; துணிச்சல் மக்க அவரது நல்ல முற்போக்குத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இந்த நாட்டின் பிரதமர்; அதிலும் உலகத்தின் முதல் பெண் பிரதமராக இருந்தவர். தேசிய ஐக்கியத்துக்கு வழிவகுத்துக்கொண்டு வருபவர். ஆலங்கை சுகந்திரமடைந்த பின்னர் பதவிக்கு வந்த எந்த ஆட்சியாளருமே செய்யாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரும்பெரும் மாற்றங்களைச் செய்து கொண்டிருப்பவர்; மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் உண்மையான மக்கள் ஆட்சியை அமைத்தவர்.
இந்த நாட்டில் பொருளாதர வளமிக்க பூரண சுகந்திரமிக்க, இன, மத, மொழி பேதமற்ற ஜனநாயக குடியரசை இடதுசரிகளின் இணைப்பின்றி உருவாக்க முடியாது என்பதனை உணர்ந்து தீர்க்க தரிசனத்துடன் செயலாற்றிக் கொண்டிருப்பவர்!
- இவ்வளவு சிறப்புக்களையும் கொண்ட பிரதமர் ஸ்ரீமாவோவைப்பற்றி இந்த நாட்டின் தமிழ் மக்களும் ஓரளவு அறிந்து வைத்திருப்பது அவசியம் என்ற நோக்கமே இந்நூல் உருவாகக்காரணமாகியது.
தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்ப:டும் நாலாந்தர சினிமா நடிக நடிகைகளின் வாழ்க்கை முழுவதையுமே கரைத்துக் குடித்து வைத்திருக்கும் நம்மில் பலர், இந்தநாட்டின் தலைவர்களைப்பற்றி அறிந்து வைத்திருக்காதது ஒரு பெரிய சாபக்கேடு!
இந்த நிலை மாற வேண்டுமாணால், தகுதி அறிந்து தரம் அறிந்து மதிப்பக் கொடுக்கும் மனோநிலை ஏற்பட வேண்டும்.
வேடிக்கை காட்டுபவர்கள், கதாநாயகியுடன் கட்டிப் புரள்வார்கள் - தலைவர்களல்ல, லட்சிய வாதிகளல்ல!
ஏழையின் வாழ்வைத் திசை திருப்பக் கூடியவரே வட்சியவாதி!
ஒரு சமுதாயத்தின் வறுமை, பசிப்பிணியை தீர்க்கக் கூடியவரே புரட்சியாளர்!
மக்களின் அமேக ஆதரவையும், அனடபையும் பெற்றவரே உண்மையான மக்கள் தலைவர்!
- இத்தனைக்கும் பொருத்தமானவர் ஸ்ரீமாவோ!
ஆவர் உண்மையான மக்கள் பிரதமர்!
இந்நூல் தமிழ் பேசும் மக்களுக்கு பிரதமர் ஸ்ரீமாவைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ளக் கூடியதாக அமையும் என்பது என் நம்பிக்கை.
இந்நூல் வெளிவர விளம்பரம் தந்துதவிய நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கும், பலவிதத்திலும் என் முயற்சிக்கு ஒத்தாசை புரிந்த என் இனிய நண்பர்களுக்கும் இருதய பூர்வமான நன்றி!
அன்பன்,
பாமா ராஜகோபால்
வல்வெட்டி,
வல்வெட்டித்துறை.
---------------------------------------------------------------
இலங்கையின் சரித்திரத்தில் புதிய சகாப்தம் ஆரமபமாகிவிட்டது!
இந்த நாட்டில் நசுக்கப்பட்ட இனமாக ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் வீறுநடை போட்டு புதுயு கம் பிறந்து விட்டது.
முதலாளித்துவக் கும்பல்களான ‘பணமூட்டை’களுடன் நடாத்திய போராட்டத்தில், வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று, உண்மையான மக்களாட்சியை நிறுவியிருக்கிறார், திருமதி ஸ்ரீமாவோ!
ஊலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்று, இலங்கைக்கும் ஆசியாவுக்கும் மட்டுமல்ல, பெண் உலகுக்கே பெருமை தேடித்தந்த ஸ்ரீமாவோ ரத்வத்தை பண்டாரநாயக்கா, மீண்டும் ஆட்சியை அமைத்து, ‘மக்கள் பிரதமர்’ என்ற சாதனையைத் தட்டிக்கொண்டு விட்டார்.
நமது நாட்டின் நாடாளுமன்றச் சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பாண்மையுடன் பதவிக்கு வந்திருக்கிறார்.
வறுமை இருளில் வாடித்தவிக்கும் மக்களின் வாழ்வை வளம்படுத்த போராட்டங்கள் பல நடத்தி, தியாகங்கள் பல செய்து, தோல்விகள் பலகண்டு சதா உழைப்பு என்று ஒயாது உழைத்த சமசமாஜ, கம்யூனிஸ்ட்டு முற்போன்கு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து, சுரண்டும் வர்க்கத்துக்கு ‘சாட்டை’யடி கொடுக்க புறப்பட்ட ஸ்ரீமாவேவுக்கு ஆரம்பமே பெரும் வெற்றியாக அமைந்து விட்டது!
தொட்டிலை ஆட்டும் கை நாட்டை ஆளும் என்ற பழமொழிக்குப் புது மெருகு ஊட்டியவர் ஸ்ரீமா!
உலகமே கண்டு அதிசயிக்கக் கூடிய விதத்தில் செழுமைமிக்க பூமியாக்கி, புதிய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்கத் தீட்டியிருந்த திட்டத்தையெல்லாம் செயல் படுத்த ஆரம்பித் விட்டார். அவர்!
சோஷலிசம் என்ற ‘மந்திரம்’ அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது! அந்த மந்திரத்தின் உண்மைத்தன்மையையும், மறுமலர்ச்சிப் பாதையையும் மக்களுக்குச் செயலிலேயே உணரவைக்கும் பணியை வேகமாகச் செயல்படுத்தத் தொடங்கி விட்டார், புதிய பிரதமர்.
‘அந்நியர் ஆட்சியிலிருந்து விடுபட்டால் மட்டும் போதாது: அவர்களுடைய பிடியிலிருந்து விலகி பூரண சுதந்திரம் பெற்ற குடியாட்சியாக இலங்ஙை மிளிர வேண்டும்’ என்ற தமது கணவரின் கனவை நனவாக்கக் களத்தில் குதித்து விட்டார்.
‘லங்கா சோசலிசக் குடியரசு’ என இலங்கையi நாமும், உலகமும் அழைக்கப் போகும் நாள் வெகு தூரத்திலில்லை என அறிவித்து விட்டார்.
எத்தனையோ எதிர்ப்புக்களுக் கிடையில் தமது தலைமைப் பதவியை வெற்ற்pகரமாகப் பாதுகாத்து உலகத்தின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்து ஏறு நடை போட்டுக் கொண்டிருக்கிறரே, இந்தியாவில் ஓர் இந்திரா காந்தி -
அவர் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று, உலகத்தலைவர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றதன் இரகசியம் -
வேறென்றுமில்லை! சோஷலிச அமைப்பை ஏற்படுத்த்p, சகல மக்களும் ஏற்றத் தாழ்வு இன்றி வாழ வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டு செயலாற்றினார்.
அவரது ‘சோஷலிசம்’ அவரை எந்தப் பிரச்சனை அணுகினாலும், சமாளித்து அவருக்கு வெற்றிப் பாதையைத் தந்து கொண்டிருக்கிறது.
சோஷலிசப் பாதையில் இந்தியாவில் ஓர் இந்திரா!
இலங்கையில் ஒரு ஸ்ரீமாவோ!
அங்கே -
தகப்பனுக்குப் பின் மகள்.
இங்கே -
கணவனுக்குப் பின் மனைவி!
மக்களை மதித்தார். மக்களோடு மக்களாக இணைந்து அவர்கள் பிரச்சனையைத் தெரிந்து, உணர்ந்து புரிந்து கொண்டு செயலாற்றினார்!
ஸ்ரீமாவோவின் வெற்றியின் இரகசியம் இதுதான்!
இன்று இலங்கையில் இன, மத, மொழி பேதமற்ற முறையில் சகல மக்களுடைய அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான அன்னையாக விளங்கும் திருமதி ஸ்ரீமாவோ தேர்தலை நினைத்து, ஓட்டு வேட்டைக்காகத் திடீரென மக்களை மதித்தவரல்ல! மக்களை நேசிப்பவர் போல் அவருக்கு நடிக்கத் தெரியாது.
அவர் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அவரது இதயத்தின் அடித்தளத்திலிருந்து வந்தவை!
அவருக்கு வார்த்தைகளால் ஜாலம் காட்டத் தெரியாது! வாக்குறுதிகளை அள்ளி வீசத் தெரியாது!
மூன்று குழந்தைகளுக்குத் தாயாகவும், அரசியலுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த ‘அரசியல் மேதை’க்கு மனைவியாகவும் இந்நாட்டு ஏழை மக்களின் பிரச்சனைகளை இருதய பூர்வமாக உணரவைத்தது!
அரசியலுக்குள் நுழைந்த பின்னர்தான் ஸ்ரீமா மற்றவர்களை மதிக்கப்பழகவில்லை! அது அவருடன் கூடப்பிறந்தது!
சிறுவயது முதலே தன்னுடன் ஒட்டி உறவாடியவர்கள் எல்லாரையும் நேசித்தார்! அவர்களுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்து விடுவார்!
-----------------------
தொழிலாளி வர்க்கத்தினருக்கு இந்த நாட்டில் தனி இடத்தை அளித்து, பல எதிர்ப்பு சக்திகளிடையே தமது அரசியல் வாழ்வை அசையாது கொண்டு நடாத்தியவர் காலஞ் சென்ற நமது பிரதமர் ‘அரசியல் மேதை’ திரு. எஸ் டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா!
இந்த நாட்டு மக்களின் பொருளாதரம் உயர வேண்டும், கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் என்பதற்காக இரவு பகலாக உழைத்துக் கொண்டிருந்த பண்டாரநாயக்கா 1959ம் ஆண்டு செப்டம்பர் 25ம் திகதி ‘றேஸ்மெட் பிளேஸி’லுள்ள அவரது இல்லத்தில் கொலைகாரன் ஒருவனின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த ஆறு குண்டுகளுக்கு இரையானார்!
அவரது உடல்தான் பிரிந்தது! ஆனால் அவர் உள்ளத்தில் ஊறி நின்ற கருத்துக்கள், செழுமையான சிந்தனைகள், எதிர்கால சந்ததிக்கு நலமாக உதவும் அர்த்த பூர்வமான திட்டங்கள் செயலாக்கப்படுவதற்கு அவரது இலட்சியத் துணைவியார் திருமதி. ஸ்ரீமாவோ தமது சொந்தக்கவலைகளை மறந்து துணிந்து களத்தில் குதித்தார்!
வறுமை, பசிப்பிணி, அறியாமை, சுரண்டல் இவற்றுடன் போராட தன் கணவனின் ஆத்ம சக்தியுடன் புறப்பட்டார். தனது உடைந்த நெஞ்சுக்கு மேலாக, ஏழை மக்களின் கண்களில் வழியும் கணிணீர்த் துளிகளைத்துடைக்க வேண்டும் என்ற கொள்கையை இலட்சியமாக ஏற்றார் திருமதி ஸ்ரீமா!
1960ம் ஆண்டு மார்ச் மாதத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சியின் வெற்றிக்காக நேரடியாகத் தலைமை தாங்கா விட்டாலும், பிரச்சாரம் செய்தார்! அத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்ச்சிக்கு 46 ஸ்தானங்களும், யு. என். பிக்கு 50 ஸ்தானங்களும் கிடைத்தன் யு. என். பி ஆட்சி அமைத்தது! ஆனாலும் ஒருமாத காலத்தில் டட்லி அரசு தோற்கடிக்கப் பட்டது!
1960 ஜூலையில் நடந்த தேர்தலில் ஸ்ரீமாவோ ஆட்சி அமைத்தார்! அவரது தலைமைப்பீடத்தை மக்கள் எவ்விதம் விரும்புகிறார்கள் என்பதை அத்தேர்தல் முடிவுகள் ஓரளவு தெளிவு படுத்தின!
பணத்துக்கும், வறுமைக்கும் நடந்த போராட்டத்தில் வறுமை ஓரளவு வெற்றி பெற்றது! தேர்ந்தெடுக்கப்பட்ட எம். பி. யுhக இல்லாமல் செனட்டராகப் பதவி ஏற்றே பிரதமரானார்! இத் தோர்தலில் ஸ்ரீமாவே 900 கூட்டங்களுக்கு மேலாக முழங்கித் தள்ளியிருக்கிறார். ஊழைப்பில் களைக்காதவ் அவர்!
பிரதமர் பதவி ஸ்ரீமாவுக்கு புதிய அனுபவங்கள் ஆனாலும் பதட்டடமின்றி கொண்ட கருமத்தை சீராக நிறைவேற்றுவதில் எப்பொழுதும் சிந்தனையைச் செலவிட்டார்!
தன்னம்பிக்கை, மனவைரக்கியம், துணிச்சல், அசாத்திய தைரியம், கஷ்டப்படு பவர்களுக்காக இரங்கும் சுபாவம் இவையெல்லாம் கலந்த அமைதியான போக்கு ஸ்ரீமாவுக்கு வெற்றியையே அளித்து வந்தது!
1960 - 1965 ஆம் ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் இவர் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது! ஆனாலும், பிரச்சனைகளைக்கண்டு கால்தெறிக்க ஓடவில்லை!
ருhணி மாளிகையில் பிரதமராகச் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு ‘றோஸ்மெட் பிளேஸி’லுள்ள தமது இல்லத்துக்கு ஸ்ரீமாவோ அருமை மகன் அனுராவுடன் திரும்பியபோது, அங்கே-
இனத்தவர்களும், நண்பர்களும், ஏன் அரசியல் விரோதிகளும் கூட அவரை வாழ்த்தவும், பாராட்டவும் வழிமறைத்து நின்றனர்!
ஆனால் ஸ்ரீமாவோ எல்லோரையும் விலக்கிவிட்டு வீட்டினுள்ளே சென்றார்! தமது கணவரின் படத்தின் முன்னே முழந்தாழிட்டு வணங்கிணார்!
அனால் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகள் நிலத்தில் முத்தாக விழுந்தன!
கணவனே கண்கண்ட தெய்வமாக வாழ்ந்தவர் அவர்!
எந்தெந்தக் பிரச்சினையை எப்படி எப்படிச் சமாளிக்கவேண்டுமோ அப்படி அப்படியெல்லாம் சமாளிதார்!
பொருதவேண்டிய இடத்தில் பொருதி கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து மடக்க வேண்டிய சமயத்தில் மடக்கினார்!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பெரும் தலையிடியாக இருந்து வந்த இந்திய வம்சா வழியினர் பிரச்சினையை ஸ்ரீமா அணுகி, ஆராய்ந்து தீர்வும் கண்டார்!
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தத்தீர்வு!
டில்லியில் காலஞ்சென்ற இந்தியப் பிரதமரால் பகதூர் சாஸ்திரியுடன் பேசி ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டு வெற்றியுடன் திரும்பி வந்தார் ஸ்ரீமா!
இந்த ஸ்ரீமா - சாஸதிரி ஒப்பந்தம் ஸ்ரீமாவோவின் அரசியல் என்றும் வரலாற்றில் உணர்த்திக்கொண்டிருக்கும்!
இதேபோன்றே அண்டை நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் யுத்தம் நடந்த சமயம், சீனா சென்று இரு நாடுகளின் சமரசத்துக்காக சீனத்து சூ - என் - லாயுடனும், தலைவர்களுடனும் பேசி வந்தார்!
வெளி நாட்டினர் இவர் விவேகம் கண்டு வியந்து பாராட்டினார்கள்! உலக நாடுகளின் அபிமானத்தையும், பாரட்டுதலையும் பெறத்தொடங்கினார் ஸ்ரீமா! உலக நாடுகளில் இலங்கையின் பெருமை உயரத்தொடங்கியது.
எத்தனையோ தடவை எத்தனையோ வெளிநாடுகளுக்குச் சென்று வந்தாலும் ஸ்ரீமாவின் தேசப்பற்று மாறவில்லை!
ஆட்சிக்காலம் முடிவதற்குச் சிலகாலம் தான் அப்போது இருந்தது! அவரைச் சில பிரச்சனைகள் அணுகத்தொடங்கின.
அந்த சமயத்தில் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்தார்! சமசமாஜ, கம்யூனிஸ்டுகளை அணைத்துக் கொண்டார். நாட்டுக்கு விடிவுகாலம் பிறந்தது!
முதலாளித்துவப் பத்திரிகையின் ஏகபோகத்தை முறியடித்து உண்மையான ஜனநாயகத்தை ஏற்ப்படுத்த பத்திரிகைகளை அரசு பொறுபேற்க வேண்டுமென்ற பிரேரணை முற்போக்கு சக்திகளினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது ஒரு “ஓட்”டினால் தோல்வியடைந்தது. அரசு! ஆனாலும் ஸ்ரீமாவோ கவலைப்படவில்லை. இந்த நாட்டில் என்றோ ஒருநாள் ஸ்ரீலங்கா சமசமாஜ - கம்யூனிஸ்ட் கூட்டணி பூரணமான மக்கள் அரசொன்றை அமைத்தே தீரும் என்று சங்கற்பம் பூண்டுகொண்டார்!
1916ஆம் ஆண்டு ஏப்பிரல் 17ஆம் தகதி!
இந்த நாட்டில் இன, மத பேதமற்ற ஓர் ஆட்சியை இரண்டாம் தடைவையாக அமைத்த பெருமையும், திறமையும், துணிவும், தன்னம்பிக்கையும், ஆற்றலுமிக்க திருமதி ஸ்ரீமாவோ முதல் தடவையாக தன் சிறிய வாயைத்திறந்து ‘கீச்சு’க் குரலில் கத்தினார்!
அந்த கத்தல் -
இந்த நாட்டிலுள்ள சகல மக்களையும் ஓர் இன, மத, பேதமற்ற ஓர் சோஷலிச அரசை அமைக்க விடுத்த அழைப்பாகத்தானிருக்கவேண்டும்!
54 ஆண்டுகளுக்கு முன்னர் பார்னஸ்ரவத்தைக்கும், ரத்வத்தை குமாரி ஹாமிக்கும் புதல்வியாகப் பிறந்தவர்தான் ஸ்ரீமா!
பெருமைக்கும் புகழுக்குமுரிய கண்டியன் சிங்களக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரத்வத்தை குடும்பத்தினர்!
பண்டைய மரபுகளைக்காத்து, அரச வமிசத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய பெருமையுன் வாழ்ந்தவர் மகாவெலன்ரன்ன. பரம்பரை பரம்பரையாகவந்த பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தித் புகழுடன் வாழ்ந்தவரல்ல மகாவெலன்ரன்ன! நன்றாக கற்றுத் தேறியவர். சுpங்களத்தில் பண்டிதரான இவர் பாளி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கரைத்துக் குடித்திருந்தார்.
இவரது வீடு எந்நேரமும் கலைஞர்களுக்கும், அறிஞர்களுக்கும் திறந்து விடப்பட்டிருக்கும். கண்டிய நடனங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதில் இவருக்கு தனிச்சுவை!
இவ்வளவு பெருமைக்குமுரிய மகாவெலன்ரன்னவின் இளைய மகள்தான் ஸ்ரீமாவின் தாயார்!
கண்டியில் இன்னெரு பெருமைமிக்க குடும்பத்தைச் சோந்தவர்தான் ஸ்ரீமாவின் தகப்பனார் பார்னஸ் ரத்வத்தை!
ஸ்ரீமாவுடன் கூடப்பிறந்தவர்கள் எல்லாருமாக 6பேர்! 4ஆண் சகோதரர்கள் 2பெண்கள்!
செல்வத்தின் பூரிப்பிலே ஸ்ரீமா நாள் ஒரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளார்ந்தார் என்று சொல்லவும் வேண்டுமா?
சிறுமி ஸ்ரீமா பெரிய அழகியாக இருந்தாரென்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது! ஆனால் அவர் கண்கள் -
ஆழமான, ஊடுருவிச் செல்லக்கூடிய சக்தி படைத்தையாக இருந்தன! இதனைக் கண்ணுற்றவர்கள் நிச்சயமாக அவரது எதிர்காலம் சிறப்பு மிக்கதாக இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டிருபார்களோ, என்னவோ?
ஸ்ரீமா சின்னவளாக இருந்த போது பெரிய பெரிய தன்மைகள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய குணாதிசயங்கள் என்று ஒன்றுமே இருந்து விடவில்லை! சாதாரணமாக வளர்ந்துவரும் பெண்கள் எதை எதை விரும்புவார்களோ அதை, அந்தந்தச் சமயத்தில் விரும்பினார்.
சேன். புpரிஜட்ஸ் கான்வெண்டில்தான் ஸ்ரீமா படித்தார்
இந்த நாட்டில் வாழும் லட்சோபலட்ச மக்களுக்கு அன்னையாக விளங்கும் ஸ்ரீமா என்ன படித்தார் என்பது, பலருக்குத் தெரியாது!
எஸ். எஸ். ஸி. கூடப் படித்திருப்பாரோ என்று பலர் பேசிக் கொள்வதையும் இந்தக் காதுகள் கேட்காமலில்லை.
ஆனால், உண்மை என்ன? -
ஒரு நாட்டின் தலைமைப்பதவிக்கு இருக்க வேண்டிய கல்வித்தகுதியைவிடக் கூடிய தகுதி ஸ்ரீமாவுக்கு உண்டு!
‘மற்றிக்குலேசன்’ சித்தி பெற்றிருக்கிறார் ஸ்ரீமா! இதற்கு மேலும் ‘இன்ரர் ஆர்ட்ஸ்’ படித்த ஸ்ரீமா அத்துடன் படிப்புக்கு ‘குட்பை’ போட்டு விட்டார்.
ஸ்ரீமாவின் குடும்பக் கீர்த்தியும் அவருடன் இயற்கையான அறிவும் இந்தக்கல்வித் தரத்துடன் இணைந்து கொண்டன!
கவர்ச்சிகரமான ஆணழகன், அறிவுத்திறன் படைத்த ஆற்றல் மிக்கவர், நாட்டை வழிநடாத்தும் மந்திரிகளில் ஒருவரான ‘அரசியல் மேதை’ திரு. எஸ். ஆர். டீ. பண்டார நதயக்கா கண்டிய அழகிக்கு மணமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!
அழகும் எழிமையும் அடக்கமும் பண்பும் யௌவனவும் இனிமையும் கொண்ட இருபத்தி மூன்று வயது வட்ட நிலவு வதனத்தாள் ஸ்ரீமாவுக்கு அழகும், அறிவாற்றலும், புகழும் படைத்தவரான பண்டாரநாயக்காவைத் தவிர வேறு எவருமே இந்த உலகில் ஏற்றவரில்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம்!
பண்டாரநாயக்காவுக்காக ஸ்ரீமா பிறந்தார்! ஸ்ரீமாவுக்காக பண்டாரநாயக்கா பிறந்தார்.
முப்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்தத் திருமணம் சரித்திரப் பெருமை வாய்ந்தது.
வசந்தகாலத்தில் ஒளியும் எழிலும்மிக்க நாள் அது!
மணமகன் பண்டாரநாயக்கா தன சொந்தத் தொகுதியிலேயே நெய்யப்பட்ட உள்நாட்டுத் தேசிய உடையைத் தரித்து தமது சுற்றத்தார் புடைசூழ மணமகளது சொந்த இடமான பலாங்கொடை வந்து சேர்ந்தார்.
இரத்தினபுரியிலிருந்து பலாங்கொடை வரையிலான முப்பத்துமூன்று மைல் தூரமும் மணமகனின் வருகையை ஒட்டி - அழகுக்கு அழகூட்டும் வகையில் அலங்கரிக்கப் பட்டிருந்தது!
பலாங்கொடையில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான பந்தலின் கீழ் மணமகளின் சுற்றத்தினரால் மனமகன் வரவேற்க்கப்பட்டார்.
அங்கிருந்து யானைகளும், கண்டிய நடனக்காரர்களும் முன்செல்ல மனமகன் பலாங்கொடையிலுள்ள மனமகள் இடமான ‘வளவ்வவுக்கு’ அழைத்துச் செல்லப்பட்டார்.
மணமகள் ஸ்ரீமாவுக்கு உறவுப் பெண்களும், தோழிகளும் அலங்கரித்து, அழகுபடுத்தினார்கள். இடையிடையே கேலியும் செய்து கொண்டார்கள். அமைதியாக இருப்பதுபோல் ஸ்ரீமா நடித்தாலும், அவரின் முகம் நாணத்தால் சிவந்தது! உள்ளம் ஆர்வத்தால் துள்ளிக்குதித்தது!
அன்று ஸ்ரீமா முன் எப்போதும் இல்லாதவாறு எழிலுடனும், வனப்புடனும், வசீகரத்துடனும் காணப்பட்டார்!
முகூர்த்தம் நெருங்க நெருங்க ஸ்ரீமாவின் இதயம் ‘படபட்’ என்று அடித்துக் கொண்டிருந்தது அதே சமயம் ஆவல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
காதல் திருமணமல்ல இது! பெற்றவர்கள் பேசி முடித்துக் கொண்டார்களே தவிர மணமக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டது கிடையாது. ஆனாலும், ஒளிமயமான ஓர் எதிர்காலம் ஸ்ரீமாவின் உள்ளத்தில் தெரிந்தது!
மணப்பந்தலில் ராஜதந்திரிகள், மந்திரிகள், கவர்னர்கள், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் இன்னும் ஏகப்பட்டோர் கூடி இருந்தனர். கண்டிய நாட்டுத் தலைவர்கள் பாரம்பரிய உடைகளுடன் அமர்ந்திருந்தார்கள்! இந்திரலோகக் காட்சியை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது - திருமணப்பந்தலும், அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்ச்சிகளும்!
மணமகன் அருகே மணமகள் வந்தமர்ந்தார்!
கண்டிய முறைப்படி திருமணம் நடந்தது!
பிக்குகள் “அஸ்ரக” மந்திரம் ஓத, துணிமணிகள், தங்கநகைகள், வெற்றிலைகள் இருபக்கத்திலும் கைமாறின.
சம்பிரதாய நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருந்தன.
இதனை அடுத்து -
“என் வாழ்விலும் தாழ்விலும், இன்பத்திலும் துன்பத்திலும், ஏற்றத்திலும், இறக்கத்திலும் ஏன் எல்லாவற்றிலும் நீங்களே எனக்கு!” என்று சொல்லாமல் சொல்லுவது போல் -
தன் மென்மையான தளிர்க்கரங்களால் மணமகன் பண்டாரநாயக்காவுக்கு ‘பால் சோற்றை’ ஊட்டினார் மணமகள் ஸ்ரீமா!
நறுமணம் கமழும் மலர்கள் தேன்நிலவுக்காக அழகி ஸ்ரீமாவையும் ‘அரசியல் மேதை’ பண்டாரநாயக்காவையும் வரவேற்றன!
புதுமணத் தம்பதிகளுக்கே உரிய மகிழ்ச்சியில் திளைத்து இன்பப் பூரிப்பில் மிதந்தனர்! ஆனாலும் பண்டாரநாயக்கா நாட்டுக்குச் செய்ய வேண்டியதன் மகத்தான பணியை மறந்து விடவில்லை!
தன் கணவரை முதலிரவிலேயே முற்றும் முழுதுமாகப் புரிந்து கொண்டார் ஸ்ரீமா!
அன்றே கணவருக்குத் தன்னை அர்ப்பணித்தார்!
--------------------------
குடும்பத்தைப்பற்றியே நினைக்க நேரமில்லாது முழுநேர அரசியல் வாழ்வு நடாத்தியவர் பண்டாரநாயக்கா!
மக்களுக்காக தன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்தார்.
ஆனாலும், ஸ்ரீமா தன் கணவனை மனம் கோணாமல், அவர் குடும்பவாழ்வும், அரசியல் வாழ்வும் சிறக்க பணிசெய்தார்.
சாந்தமான அழகும், சலிப்புத்தராத முகவசீகரிப்புடனான ஸ்ரீமாவின் உபசரிப்பும் ‘றோஸ்மட் பிளேஸி’லுள்ள அந்த இல்லத்தில் எந்நேரமும் தனிக்களை ஊட்டிக் கொண்டிருந்தன!
திடீர் திடீர் எனக் கணவருடன் எத்தனைபேர் வந்தாலும் வரவேற்று உபசரிக்கத் தவறமாட்டார்!
உலகப் பிரச்சினைகளுக்குள் முழ்கிக்கிடக்கும் பண்டாரநாயக்காவுக்கு தன் மனைவியின் ஒத்தாசையும், ஒத்துழைப்பும் புதுப்பூரிப்பை ஏற்ப்படுத்தும்!
குடும்ப வாழ்வைக் கவனித்த அதே சமயம் பொது வாழ்விலும் ஸ்ரீமா ஈடுபடத்தான் செய்தார்!
கணவர் அரசியல் விஷயங்களில் என்ன செய்தென்று தெரியாது திணறும் போதெல்லாம் யோசனை சொல்லிக் கொடுத்திருக்கிறார்!
அரசியல் மேடைக்கு பகிரங்கமாக வராவிட்டாலும், கணவரிடமிருந்து அரசியலை ஓரளவு படித்து வைத்திருந்தார்.
நாட்டுப் பிரச்சனையைத் தீர்க்க தன் கணவன் உழைத்தது போன்று, அப்போது பெண்ணினத்தின் உயர்வுக்கும் ஓரளவு உழைத்தார்!
பல ஊர்களில் நடைபெற்று வரும் மாதர் சங்கங்களில் உறுப்பினர் பதவி வகித்த தோடு மட்டும் நின்றுவிடாமல், அந்தச் சங்கங்கள் மக்களுக்கு உண்மையான சேவையை அளிப்பதற்கு ஆக்க பூர்வமான திட்டங்களையும், யோசனைகளையும் தீட்டிக் கொடுத்தார்.
சுனித்திரா, சந்திரிகா என்ற இரு பெண் குழந்தைகளையும், அனுரா என்ற தன் அருமைக்கு அருமையாகப் பிறந்த அன்பு மகனையும் நல்ல படி வளர்க்க வேண்டிய பெரும் பிரச்சினை அவருக்கு!
இன்று நாட்டுமக்களுக்கு எல்லாம் தாயாக விளங்குகிறார் என்றால், அதன் இரகசியம் -
தன் குழந்தைகளுக்கு சிறந்த தாயாக அவர் விளங்கிக்கொண்டிருப்பதே!
திரு பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த சமயம் பல வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு வந்து போயிருக்கிறார்கள்.
இந்தியாவின் நேரு, சீனத்து சூ - என் - லாய், டிட்டோ, ராஜேந்திரப் பிரசாத், ஹரோல்ட் மாக்மிலன், ஜப்பான் கிசி, மவுண்ட் பாட்டன் பிரபு போன்ற உலக மகா மேதைகளெல்லாம் இலங்கைக்கு வந்தபோது இன்முகம் காட்டி வரவேற்று இனிக்க இனிக்க பேசி, அவர்களது அன்பு கலந்த அபிமானத்தையும், பாராட்டுதல்களையும் பெற்றார் ஸ்ரீமா!
----------------------------------------
ஐந்து வருட காலம் சிறந்த எதிர்கட்சித் தலைவியாக இருந்த பெருமையும் ஸ்ரீமாவைச் சாரும்!
ஆட்சியாளரின் தில்லுமுல்லுகளை ‘புட்டுப்புட்டு’க்காட்டி நாட்டையும், நாட்டு மக்களையும் தவறான பாதையில் வழி நடாத்திச் செல்ல முனைந்த சமயங்களிலெல்லாம் அரசாங்கத்தை “அக்கு வேறு ஆணி வேறாக” ‘பிய்த்துப்பிய்த்து’ கொட்டத்தை அடக்கிய ஸ்ரீமாவின் துணிச்சலை அவ்வளவு விரைவில் மறந்துவிடமுடியாது!
1965 - 1970 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் திரு. டட்லி சேனனாயக்கா தலைமையிலான தேசிய அரசாங்கம் பதவியேற்று ஆட்ச்சி நடாத்திய சமயத்தில் ஸ்ரீலங்கா சமசமாஜ கம்யூனிஸ்ட் கூட்டணிக்னு தலைமை தாங்கி எதிர்க் கட்ச்சித் தலைவியாக இருந்து கொண்டு பிரதமர் டட்லியையே எத்தனையோ தடைவ திணற வைத்திருக்கிறார்.
நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழைவர்க்கம் அணுவணுவாகச் செத்துப்போக ஆட்சியாளர் முதலாளித்துவ பண மூட்டைகளுடன் கூடிக்குலாவி கும்மாளமடிக்கின்றது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்தியம்பியிருக்கிறார், திருமதி. ஸ்ரீமாவோ!
விவசாயத்துறையில் நாடு தன்னிறைவு பெற்று விட்டதாக பிரதமர் டட்லியும், அவரது சகாக்களும் கூக்குரலிட்ட போதெல்லாம் அதெல்லாம் கட்டுக்கதை; மக்களை ஏமாற்ற இந்த ‘மந்திர’த்தை உபசரிக்கிறார்கள் என்று எச்சரித்தார். அன்று அவர் சொன்னது இன்று எவ்வளவு தூரம் சரியாகிவிட்டது என்பது புரிகிறதல்லவா?
எதிர்க்கட்சியிலிருந்தபோது அவருக்கு எத்தனை சோதனைகள்! கிண்டல்கள்! தனிப்பட்டமுறையிலே அரசாங்கக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவதூறாகப்பேசி மக்களிடையே புரளிகளைக் கிளப்ப முயன்றார்கள்.
அந்த சமயத்திலெல்லாம் தக்க பதிலடி கொடுத்து வாய்களை மூட வைத்தார் ஸ்ரீமா!
அவர்களது வாளை ஒட்டநறுக்கக் காலத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்!
நாடு எல்லாத் துறையிலும் தன்னிறைவு பெற்றுக் கொண்டிருக்கிறதென்றும், 2-வது பராக்கிரமபாகு யுகம் ஏற்ப்பட்டுக் கொண்டிருக்கிறதென்றும், பசி பட்டினி நீங்கி மக்கள் சீரும் சிறப்புடனும் வாழ்கிறார்களென்றும் கட்டுக்கதைக்காவியம் புனைந்து கொண்டிருந்த தேசிய அரசாங்காத்தின் உண்மைக் கோலத்தை மக்களுக்கு அம்பலப்படுத்த வழியில்லாது தவித்தார்; என்ன செய்வதென்று ஏங்கினார் ஸ்ரீமா!
முதலாளித்துப் பத்திரிகைகள் உண்மைகளை மூடிமறைத்து, அரசாங்கத்துக்குத் துதிபாடிக் கொண்டிருந்தன!
இந்த மயக்கத்தைப் பயன்படுத்தி, இந்த நாட்டு முதலாளித்துவக் ‘கும்பல்’களும் அமைச்சரிகளும், ஆட்சியாளிகளின் அடிவருடிகளும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்!
பத்திரிகைப் பலம் கிடையாது ஸ்ரீமாவுக்கு, பணத்தின் பலம் கிடையாது - ஏழைகள்தான் அவரது நண்பர்கள்! எப்படியிருந்த போதிலும், அரசாங்காத்தின் ‘பொட்டுக் கேடு’களை முடிந்தளவு உடைத்தெறிந்தார்!
முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்த உழைத்தார்!
-----------------------------------------
ஹொரகொல்லை!
காலஞ்சென்ற இந்நாட்டுப் பிரதமர் திரு. எஸ். டுபிள்யூ. ஆர். டீ. பண்டார நாயக்காவினுடைய சமாதி இங்குதானிருக்கிறது.
இந்த முறை இலங்கைப் பொதுத் தேர்தலுக்குரிய வேட்பு மனுப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக….
அன்றுதான் திருமதி ஸ்ரீமாவேவின் 54வது பிறந்த தினம்!
ஸ்ரீலங்கா சமசமாஜ கம்யூனிஸ்ட் கூட்டணித் தவைர்களும், கூட்டணியின் சார்பில் நாடு முழுவதிலும் போட்டியிட்ட வேட்பாளர்களும் திருமதி ஸ்ரீமாவோ தலைமையில் காலஞ்சென்ற பிரதமர் பண்டாரநாயக்கா சமாதிக்கு முன்னர் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டனர்!
டாக்டர் என். எம். பெரேரா, டாக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்கா, பீட்;டர் கெனமன் ஆகிய தலைவர்களும் ஸ்ரீமாவுடன் இணைந்து பண்டாரநாயக்காவின் கொள்கைகளை சொல்லிலும், செயலிலும் கடைப்பிடிப்பதென சத்தியம் எடுத்தனர்!
பண’மூட்டை’களுக்கும், ஏழைவர்க்கத்துக்கிடையிலான பலப்பாPட்சை ஆரமபமானது!
விவசாயமென்றும், மகாவலியென்றும், உணவுற்பத்தியென்றும் மாய்மாலங்களை மக்களுக்குக் காட்டி வெற்றி கொள்ள முனைந்து, யு. என். பி! முதலாளித்துவ தமிழ், சிங்கள, ஆங்கில தினசரிகளெல்லாம் யு. என். பி.யின் துண்டுப் பிரசுரமாக வெளிவந்தன!
டட்லியையும், சகாக்களையும் ‘ஓகோ’ என்று புளுகி எழுதின.
தனிப்பட்ட முறையில் டட்லியைத் துதிபாடியும், ஸ்ரீமாவைத் தாக்கியும் எழுத முனைந்தன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி - சமசமாஜக்கட்சி - கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இந்தநாட்டில் தேசிய ஒற்றுமை அழிந்து விடுமென்றும், வகுப்புவாதம் தலைதூக்கி விடுமென்றும் ‘விஷ’த்தைக் கக்கு கக்கென்று கக்கி யு. என். பி. யை ஆட்சி பீடமேற்றிவிடத் தலைப்புச் செய்தி தொடக்கம், கடைசிப்பக்கச் செய்திவரை எழுதித்தள்ளின.
போதாதற்கு, 1958ஆம் ஆண்டுக் கலவரத்தை பச்சை பச்சையாக எழுதி தமிழ் மக்களை தடுமாறச் செய்ய முயன்றார்கள்.
வானொலியையும் தமது ஏக போகச் சொத்தாக்கி, ஒரு மணி நேரத்துக்கு ஒரு செய்தியை ஒலிபரப்பி, சுயப்பிரச்சாரம் செய்தது, யு. என். பி!
இவ்வளவு பக்கப்பலப் பிரச்சாரங்களையும் தாக்குப்பிடித்து, திருமதி ஸ்ரீமாவோ உண்மையான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார்! கஷ்டப்படும் மக்களுக்கு என்ன என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தெட்டத் தெளிவாக விளக்கினார்!
வறுமையுடன் போராடிய மக்கள் உண்மைக்கும் போலிக்கும் இனம் கண்டு கொண்டார்கள்!
பிரான்ஸ் இருளடைந்த நேரத்தில் ஜோன் ஆவ் ஆர்க் நடாத்திய வீரப் போராட்டத்தை நமக்கு நினைவு படுத்தினார் ஸ்ரீமாவோ!
இந்த நாட்டில் சோஷலிச ஆட்சி ஏற்பட்டு இன, மத பேதமற்ற ஒரு சமுதாயம் உருவாக வேண்டுமென்று எத்தனையோ ஆண்டு காலமாக போராடிய சமசமாஜக்கட்சித் தலைவர் டாக்டர் என். எம். பேரெரா, கம்யூனிஸ்ட்கட்சி தலைவர்கள் டாக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்கா பீட்டர் கெனமன் போன்றவர்களின் இணைப்பு, முதலாளித்துவக் கும்பல்களின் அட்டகாசத்தை அழித்தொழிக்க ஸ்ரீமாவுக்கு கைகொடுத்து உதவியது!
அரிசிக்கும், அரசியலுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறதென்பதை உணர்;ந்து இரண்டு கொத்து அரிசி தருவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்!
படித்துவிட்டு லட்வக்கணக்காக வேலையில்லாதிருக்கும் இளைஞர்களின் விடிவுக்குத் திட்டம் தந்தார்.
தொழிலாளி வர்க்கம், ஏழைமக்கள் விமோசனத்துக்கு உத்தரவாதம் அளித்தார்!
வடக்கு, கிழக்கு, தெற்கில் பல்கலைக்கழகங்கள் நிறுவித் தருவதாக உறுதி கூறினார்.
சாதி வெறியர்களுக்குச் ‘சாட்டை’யடி கொடுத்து, தமிழ் பேசும் இனத்துக்கு கூடிய சலுகை தந்து, சோஷலிச நாடாக இந்நாட்டை மாற்றி, பொருளாதார பூமியாக்கி விடுவதாக மனதாரச் சொன்னார்!
மக்களை கவர்தற்காக அவர் வாக்குறுதிகளை அளிக்கவில்லை! சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றி விடுவார் ஸ்ரீமா!
சின்ன வாக்குறுதிகளாக இருந்தாலும் சரி, அவற்றை நிறைவேற்றி விடுவார்!
1960ஆம் ஆண்டு யூலை தேர்தலின் போது நடந்த சம்;பவம் ஒன்றுதான் இப்போது நினைவுக்கு வருகிறது!
அப்போது அவர் தேர்தல் கூட்டங்களுக்கு ‘டூரிஸ்ட்’ கம்பனியொன்றின் காரையே வாடகை;கு அமர்த்திச் சென்று வந்தார்.
தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாக, ஸ்ரீமா காரில் சௌ;று கொண்டிருந்தார்.
‘டூரிஸ்ட்’ கம்பனிக்குச் சொந்தமான அந்தக்காரின் சாரதி ஸ்ரீமாவைப் பார்த்துக் கூறினார்:
“இன்னும் மூன்று நாட்களுக்குப் பின்னர் நீங்கள் பிரதமராக வரப்போகிறீர்கள்!”
ஸ்ரீமா தன்கே உரிய புன்னகையுடன் சொன்னார்: “அது மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்”
“அம்மா! நீங்கள் என் விருப்பப்படி பிரதமராக பதவி ஏற்றால், எனது ஆசையை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் ராணி மாளிகை;குப் பதவி ஏற்கச் செல்லும் போது, உங்கள் காரைச் செலுத்தும் வாய்ப்பை எனக்கு அளிக்கவேண்டும்” என்று ஸ்ரீமாவைப் பார்த்து அந்தக் கார்ச்சாரதி கூறினார்!
“பிரதமரானால் நிச்சயம் உனது ஆசை நிறைவேறும்” என்று ஸ்ரீமா கூறினார்.
அம்முறை பிரதமர் பதவியை ஸ்ரீமா ஏற்கச் செல்லும் சமயத்தில், தாம் கார் சாரதிக்கு அளித்த வாக்குறுதியை மறக்கவில்லை.
குறிப்பிட்ட ‘டூரிஸ்ட்’ கம்பனியின் அனுமதியைப் பெற்று, கார்சாரதியை அழைத்து, தனது காரை ஓட்டவைத்து ராணி மாளிகை சென்றார்!
வாக்குறுதி எதுவானாலும் சொன்னால், நிறைவேற்றி விடுவார்!
--------------------------------------
1970 மே 27ஆம் திகதி பொதுத் தேர்தல் முடிவுகள் இந்த நாட்டு உழகை;கும் வர்க்கத்துக்கும், ஏழைவர்க்கத்துக்கும், சுரண்டப்பட்டு வந்த வர்க்கத்துக்கும் விடிவாக அமைந்தது!
முதலாளித்துவக் கும்பல்கள் முகம் குப்புற விழுந்து மூக்குடைபட்டுக் கொண்டார்கள்! துதி பாடிய முதலாளித்துவப் பத்திரிகைகள் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடித் திக்குமுக்காடின!
ஸ்ரீமாவோவின் வெற்றி கண்டு நாடும் உலகமும் வியந்து, முற்போக்கு சக்திகளின் வெற்றியென உலகம் பாராட்டியது.
முன்னாள் பதினொரு அமைச்சர்களை மக்கள் படுதோல்வியடையச் செய்து தக்க பாடம் படிப்பித்தார்கள்.
திருமதி ஸ்ரீமாவோவுக்கு “சுவீப்” விழுந்து விட்;டது என்றார்கள்! இப்படிச் சொன்னவர்கள் உமைப்பில் நம்பிக்கையற்ற உதவாக்கரைகள்!
இந்த நாட்டில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான கூட்டணி அரசுதான் இந் நாட்டு மக்களுக்கு விமோசனப் பாதையைக் காட்ட முடியுமென்பதை மக்கள் உணர்ந்து வாக்களித்தார்கள்! இதனால் அவரும், அவர் தோழர்களும் அமோக வெற்றி பெற்றனர். நாட்டுக்கு உண்மையான சேவை செய்பவர்கள் தேவைப்பட்டார்கள். ஸ்ரீமா தலைமையிலான சுயநலக்கலப்பற்ற கோஷ்டியினர் தெரிவு செய்யப்பட்டனர்! இதுதான் உண்மை!
106 ஸ்தானங்களில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சி 91 ஸ்தானங்களில் வெற்றி பெற்றது. 22 ஸ்தானங்களில் போட்டியிட்ட சமசமாஜக்கட்சி 19 ஸ்தானங்களில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட்கட்சி 6 ஸ்தானங்களில் வெற்றி பெற்றது!
ஓவ்வொரு பிரதிநிதியும் நூறு இருநூறு வாக்குகளால் வெற்றியைத் தேடிக்கொள்ள வில்லை. மூவாயிரம், நான்காயிரம், பத்தாயிரம், இருபதினாயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றனர்.
அந்தனகலையில் போட்டியிட்ட ஸ்ரீமா 21 ஆயிரத்துக்கு மேலான அதிகப்படியான வாக்குகளைப் பெற்று எதிர்த்துப் போட்டியிட்டவரை மண் கவ்வச் செய்தார்! பீலிக்ஸ் 22 ஆயிரத்துக்கும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றார்.
ஸ்ரீமா பிரதமர் பதவி ஏற்ற சில மணி நேரத்தில் கொழும்பிலும், மற்றும் சில பகுதிகளிலும் விஷமிகள் ‘கலாட்டா’வை ஏற்ப்படுத்த முயன்றனர். தமிழரை அஞ்சவைத்து, கூட்டணி அரசு மீது பகைமையையும், விரோதத்தையும் ஏற்ப்படுத்த “பூச்சாண்டி” காட்டினார்கள். இந்தப் பூச்சாண்டியை எல்லாம் ஓரே நிமிடத்தில் அடக்கி விட்டார் ஸ்ரீமாவோ!
தேசிய ஒற்றுமையபை; பற்றிப் பேசியவர்கள் தேசியப்பிளவை ஏற்ப்படுத்த முயன்றார்கள். ஸ்ரீமா அஞ்சவில்லை. எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார்!
முன்னைய அரசு பேரம் பேசி மந்திரிப் பதவி ஒன்றைத் தமிழருக்கு அளித்தது, ஆனால் ஸ்ரீமாவோயாருடனும் பேரம் பேசாமலேயே செல்லையா குமாரசூரியர் என்ற தமிழருக்கு தபால் மந்திரிப் பதவியை அளித்தார். இந்த நாட்டில் வாழும் 5லட்சம் சிறுபான்தை; தமிழ் பேசும் இனத்தினருக்கு இது வரை காலமும் ஆட்சி மன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது! அந்தக் குறையையும் நீக்கி திரு. ஏம். ஸி. சுப்பிர மணியத்தை நியமன் எம்பியாக நியமித்தார். ஆம் அவர் தேசிய hPதியில் நாட்டைப் பார்க்கிறார், மக்களை நோக்குகிறார்!
அவருக்கு வேண்டியது; இந்த நாடு பொருளாதார சுகந்திரம் அடைய வேண்டும்! இந்த நாட்டு மக்கள் சமத்துவமாக நிம்மதியாக பசி பட்டினியின்றி வாழ வேண்டும்!
--------------------------------------
திருமதி ஸ்ரீமாவோவின் வெற்றிக்கும், அவரிடமுள்ள சில தனித் தன்மைகளுக்கும் தொடர்பு இருக்கத்தான் வேண்டும்.
கடவுள் பக்தி மிக்கவர் அவர்! கதிர்காமத்துக் கந்தனையும், கண்டியையும் அநுராதபுர புனித போதி மரத்துப் புத்தனையும் வணங்க அவர் தவறுவதில்லை! தேர்தலுக்குப் முன்பும் பதவி ஏற்கும் போதும் இதனை அவர் வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார்!
இம்முறையும் கதிர்காமக் கந்தனிடம், கண்டிக்கும், போதிமரத்து புத்தனிடமும் தனது சகாக்களுடன் சென்று ஆசி பெற்று வந்தார். வழிபடும் போது அவரது துகத்தைப் பார்த்தால் தெரியும் - வெறும் வேஷமல்ல! உண்மையான பக்தியுடன் பிரார்த்தனை செய்கின்றார். உண்மையான பிரார்த்தனையும் அவருக்கு ஒரு விதத்தில் இவ்வித வெற்றியை அளித்தது எனலாம்.
தனக்குச் சரியென்று பட்டதை எவரது எதிர்புக்கிடையிலும் செம்மையாகச் செயல்படுத்தி விடுவார்! இவரது முன்னேற்றத்தில் இவ்வித செயற்; திறனுக்குப் பெரிய பங்குண்டு.
எப்பொழுதுமே அமைதியாக இருப்பார் அதிகம் வாய்விட்டுச் சிரிக்கமாட்டார் எப்போதாவது இருந்து விட்டுத்தான் வாய்விட்டுச் சிரிப்பார் ஆனால் -
அழமான சிந்தனை; அழகான புன்சிரிப்பு; தன்னை மதிப்பவர்களை நன்கு மதிப்பவர்; நெருங்கி பழகிறவர்களுடன் மனம் விட்டுப் பழகுவார்! சந்தேகம் ஏற்பட்டு விட்டால், அவர்களை எட்டி உதைக்கத் தயங்கமாட்டார்.
இத்தனைக்கும் மேலாக அவரிடம் உள்ள பெரும் சொத்து; நல்ல உள்ளம், புனிதமான நெஞ்சம்!
---------------------------------------
(விளம்பரங்கள் 12 பக்கங்கள் உள்ளன)
------
கருத்துகள்
கருத்துரையிடுக