உலகப் பெரியோன் கென்னடி
வரலாறு
Back
உலகப் பெரியோன் கென்னடி
புலவர் குழந்தை
1. உலகப் பெரியோன் கென்னடி
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. பதிப்புரை
4. ‘செந்தமிழ்க் குழந்தை’
5. மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை
6. உலக பெரியோன் கென்னடி (1964)
7. முன்னுரை
8. உலகப் பெரியோன் கென்னடி
2. தலைவன் சிறப்பு
3. கொலையின் கொடுமை
4. உலகத் துயர்
5. கொலை நிகழ்ச்சி
6. ஆற்றாதிரங்கல்
7. ஐயுற் றிரங்கல்
8. அற்றநினைந் திரங்கல்
9. தலைவர்கள் அச்சம்
10. உசாப்பு
11. வாக்குமூலம்
12. தீர்ப்பு
13. உலகோர் அச்சம்
14. உலகோர் பழித்தல்
15. உலகோர் வெறுத்தல்
16. அமைதி இரங்கல்
17. கொலைஞன் வருந்தல்
18. திருமணம்
19. உலக ஆட்சி
20. வாயுறை வாழ்த்து
1. வாழ்த்து
உலகப் பெரியோன் கென்னடி
புலவர் குழந்தை
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : உலகப் பெரியோன் கென்னடி
தொகுப்பு : புலவர் குழந்தை படைப்புகள் - 1
ஆசிரியர் : புலவர் குழந்தை
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2008
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 16+ 224 = 240
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 150/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : வ. மலர்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
இணையதளம் : _www.tamilmann.in_
பதிப்புரை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர்.
தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணியெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலையாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை.
குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப்பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள்.
(இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.)
கோ. இளவழகன்
‘செந்தமிழ்க் குழந்தை’
பள்ளி சென்று படித்த காலம் 5 ஆண்டு எட்டு மாதம்தான்! ஆனால் திருக்குறளுக்கும், தொல்காப்பியத்துக்கும் உரை எழுதி, பேரிலக்கியம் ஒன்றைப் படைத்து, நாடகக் காப்பியம் உருவாக்கிப் பல இலக்கண நூல்களையும், வரலாற்று நூல்களையும் எழுதியவர் பெரும்புலவர் அ.மு. குழந்தை. ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த ஓல வலசில் 1.7.1906 அன்று முத்துசாமிக் கவுண்டர், சின்னம்மையார் தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர் குழந்தைசாமி; பின்பு தன்னைக் ‘குழந்தை’ என்றே குறிப்பிட்டுக் கொண்டார்.
ஈரோடு லண்டன் மிஷன் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் “எலிமெண்டரி கிரேடு”, “லோயர் கிரேடு”, ஹையர் கிரேடு” ஆசிரியர் பயிற்சி பெற்ற அவர் திருவையாறு சென்று தேர்வு எழுதி 1934இல் ‘வித்துவான்’ பட்டம் பெற்றார். மொத்தம் 39 ஆண்டுகள் ஆசிரியப் பணிபுரிந்தார். பவானி மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் மட்டும் தொடர்ந்து 21 ஆண்டுகள் பணி புரிந்தார்.
தொடக்க காலத்தில் கன்னியம்மன் சிந்து, வீரக்குமாரசாமி காவடிச்சிந்து, ரதோற்சவச் சிந்து போன்ற பக்திப் பாடல்களைப் பாடினாலும் 1925க்குப் பின் பெரியாரின் பெருந் தொண்டராகவே விளங்கினார்.
‘தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக விளங்கும் நூல் திருக்குறள்; அது மனித வாழ்வின் சட்ட நூல்’ என்ற கொள்கையுடைய குழந்தை 1943, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திருக்குறள் மாநாடுகளில் பெரும் பங்காற்றினார். தான் எழுதிய பள்ளிப்பாட நூல்களுக்கு ‘வள்ளுவர் வாசகம்’ வள்ளுவர் இலக்கணம்’ என்று பெயரிட்டார். வள்ளுவர் பதிப்பகம் வைத்துப் பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் பெரியார் நூல்கள் நான்கு.
பள்ளிக்கு வெளியே வந்தவுடன் கருப்புச்சட்டை அணிந்து கடவுள் மறுப்பாளராக விளங்கினாலும் பள்ளிப் பாடங்களில் உள்ள பக்திப் பாடல்களை மிகவும் சுவைபட நடத்துவார். தான் இயற்றிய ‘யாப்பதிகாரம்’ ‘தொடையதிகாரம்’ போன்ற நூல்களில் திருஞான சம்பந்தர் தேவாரப் பாடல்கள் பலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.
அரசியல் அரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல்கள் போன்றவை கவிதை நூல்கள், ‘காமஞ்சரி’ பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோண்மனியத்திற்குப் பின் வந்த மிகச் சிறப்பான நாடகக் காப்பியம் ஆகும்.
தொல்காப்பியர் காலத் தமிழர், திருக்குறளும் பரிமேலழ கரும், பூவா முல்லை, கொங்கு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு, தமிழ் வாழ்க, தீரன் சின்னமலை, கொங்குக் குலமணிகள், கொங்கு நாடும் தமிழும், அருந்தமிழ் அமுது, சங்கத் தமிழ்ச் செல்வம், அண்ணல் காந்தி ஆகியவை உரைநடை நூல்கள்.
‘தமிழ் வாழ்க’ நாடகமாக நடிக்கப்பட்டது. தீரன் சின்னமலை பற்றி முதன்முதலில் நூல் எழுதி அவர் வரலாற்றை வெளிக் கொணர்ந்தவர் புலவர் குழந்தை.
தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புதிய எளிய உரை எழுதினார். திருக்குறளுக்குப் புத்துரை எழுதியதுடன் தமிழில் வெளிவந்த அனைத்து நீதி நூல்களையும் தொகுத்து உரையுடன் “நீதிக் களஞ்சியம்” என்ற பெயரில் பெரு நூலாக வெளியிட்டார்.
தமிழ் அறிந்தவர்கள் அனைவரும் கவிஞராக ‘யாப்பதிகாரம்’, ‘தொடையதிகாரம்’ என்ற யாப்பு நூல்களை எழுதினார். கும்மி, சிந்து ஆகியவற்றிற்கும் யாப்பிலக்கணம் வகுத்துள்ளார். இலக்கணம் கற்க நன்னூல் போல ஒரு நூல் இயற்றி ‘இன்னூல்’ என்று பெயரிட்டார். ‘வேளாளர்’ ‘தமிழோசை’ போன்ற இதழ்களையும் நடத்தினார்.
வகுப்பில் பாடம் நடத்தும்போது பாடல்களை அதற்குரிய ஓசை நயத்துடன் ஒலிப்பார். உரைநடைபோலத் தமிழாசிரியர்கள் பாடல்களைப் படிக்கக் கூடாது என்பது அவருடைய கருத்தாகும். தமிழைப் பிழையாகப் பேசினாலோ, எழுதினாலோ கண்டிப்பார்.
ஈரோட்டில் வாழ்ந்த மேனாட்டுத் தமிழறிஞர் ‘பாப்லி’லியுடன் நெருங்கிப் பழகியவர். அவரைப் பற்றிப் ‘பாப்புலி வெண்பா’ என்ற நூலே எழுதியுள்ளார்.
அவர் படைப்பில் தலையாயது ‘இராவண காவியம்’ ஆகும். பெயரே அதன் பொருளை விளக்கும். 5 காண்டங்கள், 57 படலங்கள், 3100 பாடல்கள்.
இந்நூல் 1946-ல் வெளிவந்தது. பின் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கி 1971-ல் இரண்டாம் பதிப்பும் 1994-ல் மூன்றாம் பதிப்பும் வெளிவந்தது. அண்மையில் நான்காம் பதிப்பை சாரதா பதிப்பகம் (சென்னை - 14) வெளியிட்டுள்ளது.
மிகச்சிறந்த நயமுடைய இராவண காவியத்தைக் கம்பனில் முழு ஈடுபாடு கொண்ட அறிஞர்களும் பாராட்டியுள்ளனர். ‘கம்பன் கவிதையில் கட்டுண்டு கிடந்தேன். இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது’ என்று ரா.பி.சேதுப் பிள்ளை கூறினார். கம்பர் அன்பர் ஐயன்பெருமாள் கோனார் ‘இனியொரு கம்பன் வருவானோ? இப்படியும் கவிதை தருவானோ? ஆம், கம்பனே வந்தான்; கவிதையும் தந்தான்’ என்று புலவர் குழந்தையைப் பாராட்டுவார்.
அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசாமி போன்றோரின் துணையுடன் அரிய செய்திகள் சேகரித்துத் ‘திராவிட காவியம்’ பாட முயன்றபோது 24.9.1972 அன்று புலவர் குழந்தை மறைந்தார். பாரதிதாசன் ‘செந்தமிழ்க் குழந்தை’ என்று பாராட்டியது போலத் தமிழாக வாழ்ந்த அவருடைய நூற்றாண்டு நிறைவு நாள் 1.7.2006 ஆகும்.
புலவர், முனைவர்
ஈரோடை இரா. வடிவேலன்
32, தியாகி குமரன் தெரு,
ஈரோடை - 638 004.
மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை
பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு.
புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமையாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது.
பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர்.
அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது.
4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார்.
அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார்.
அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
“இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்
- (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3).
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தையானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.
விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார்.
“புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்து வதற்காக எழுதப்பட்டதேயாகும்.
நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப் படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார்.
புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள்.
சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை
1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது.
1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட!
எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர்.
வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது.
இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு!
கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார்.
“தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!”
நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது.
கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள் கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார்.
“ இனியொரு கம்பனும் வருவானோ?
இப்படி யும்கவி தருவானோ?
கம்பனே வந்தான்;
அப்படிக் கவிதையும் தந்தான்
ஆனால்,
கருத்துதான் மாறுபட்டது”
என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.
இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது.
கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை.
தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
இராவண காவிய மாநாடு
இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது.
இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசையில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு.
தீர்மானங்கள்
28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும்.
இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும்.
மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும்.
இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல்
படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005)
அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான்.
மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005).
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.
கலைஞரின் சாதனை!
இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது.
இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார்.
வாழ்க அப்பெருமகனார்!
உலக பெரியோன் கென்னடி (1964)
முன்னுரை
கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதைக் கேட்டதும் உள்ளத்தே உண்டான அதிர்ச்சியால் எழுந்த உணர்ச்சியின் உருவமே ‘உலகப் பெரியோன் கென்னடி’ என்னும் இந்நூல்.
அமெரிக்க நாட்டுத் தலைவர், ஜான் கென்னடி ஒரு வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதைக் கேட்டதும் உண்டான உணர்ச்சியின் பாற்பட்ட என் உள்ளம் ‘உலகப் பெரியோன் கென்னடி’ என்றது. அதையே நூலின் பெயராகக் கொண்டு இச்சிறு செய்யுள் நூலைச் செய்தனன்.
‘உலகப் பெரியோன் கென்னடி’ என்ற இந்நூல், வெறும் கையறமாக - இரங்கற் பாக்களாக - இல்லாமல், உலகியலைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு சிறு நாடகக் காவியமாக அமைந்தது.
அமெரிக்கக் குடியரசின் 35-ஆவது தலைவராகிய ஜான் கென்னடி, அமெரிக்காவின் தென்மாநிலமான டெக்ஃசாசின் தலைநகரான டெல்லாஃச் நகரில் 22- 11 - 1963 வெள்ளிக் கிழமை பகல் 1 மணிக்கு (இந்தியாவில் இரவு 12- 30 மணி) தன் மனைவி ஜாக்குவிலினுடன் திறந்த இன்னூர்தியில் ஊர்வல மாகச் சென்றபோது ‘ஆசுவால்டு’ என்னும் ஓர் இனவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
25 - 11 - 63 திங்கட் கிழமையன்று தலைவர் கென்னடியின் பூதவுடல், அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டனில் உள்ள ஆர்லிங்டன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
கென்னடியின் பூதவுடல் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப் பட்ட போது, உலகில் உள்ள எல்லா நாட்டுத் தலைவர் களும் வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டு, மறைந்த மாதலை வர்க்கு இறுதி வணக்கம் செலுத்தினர்.
உலகில் அரசியல் முறை தோன்றிய நாள் தொட்டு இதுநாள் காறும் எந்த ஒரு பேரரசர்க்கும், அரசியற் பெருந்தலைவர்க்கும் இத்தகைய பெருமை ஏற்பட்டதில்லை.
தலைவர் கென்னடி 29 - 5 - 1917 இல் பிறந்தார்; 22 - 11 - 1963இல் மறைந்தார்; 46 ஆண்டு, 5 மாதம், 23 நாட்களே உலகில் வாழ்ந்தார். ஆனால், உலகப் புகழேணியின் உயர் படியைக் கடந்து விட்டார்.
கென்னடி கொலையுண்டது கேட்டு உலகமே ஆராப் பெருந்துயரில் ஆழ்ந்தது. காந்தியடிகளுக்கன்றி, இதுவரை உலகம் வேறு யார்க்கும் இத்தகைய பெருந்துயரம் அடைந்ததே இல்லை. கென்னடியின் இழப்பு உலகுக்கு அத்தகைய பேரிழப் பாகும்.
இதுகாறும் வரலாற்று நிகழ்ச்சி.
இனி, ‘இலக்கியப் படைப்பு’ என்னும் கற்பனை நிகழ்ச்சி.
கென்னடியை ஆசுவால்டு சுட்டுக் கொன்றான். ஆசு வால்டை ரூபி என்பவன் சுட்டுக் கொன்றான். ரூபியை முறை மன்றத்தார் எப்படியோ கொல்லலாம். இத்துடன் இதுமுடிந்து விடும்.
ஆனால், ஒப்புயர்வற்ற உலகப் பெருந்தலைவர்களை இப்படியே ஒவ்வொரு வெறியன் சுட்டுக் கொன்று கொண்டே இருக்க வேண்டியது தானா? இதற்கொரு முடிவில்லையா? மக்கட் பண்பு, பகுத்தறிவு என்பதெல்லாம் இதுதானா? மக்களைக் காக்க அரசு என்பதொன்று இருக்கிறது என்பதன் பெருமை இதுதானா? என உலக மக்கள் நொந்து கொண்டனர்.
இனிப் போர் முதலிய கொடுமைகளிலிருந்து தப்ப என் செய்கோம் என ஆற்றாதும், இப்படி எங்களை விட்டு விட்டுச் சென்று விட்டாயே என ஐயுற்றும் கொலை நிகழ்ந்த அந்நிலையை நினைந்தும் உலக மக்கள் பலவாறு இரங்கினர்.
கென்னடியின் கொலையால் அச்சங்கொண்ட உலகத் தலைவர்கள் உலக மன்றத்தில் ஒன்று கூடி, இனி இத்தகைய கொடுங்கொலைகள் நடக்காமல் செய்ய வேண்டும்; இத்தகைய கொலைகளின் காரணங்களை ஒழிக்க வேண்டும்; பொல்லாத கொடிய போர்க் கருவிகள் செய்வதை நிறுத்திவிட வேண்டும்; இனிப் பகையும் போரும் இன்றி உலகம் அமைதியாக வாழும் படி செய்ய வேண்டும் - என ஒருமுகமாக முடிவு செய்தனர்.
இங்கு ‘கொலைஞன்’ என்பது - தலைவர் கென்னடியைச் சுட்டுக் கொன்ற ஆசுவால்டை அன்று. உயிரும் உடலும் பிரியும் அந்நேரம் அல்லது காலத்தை - ‘காலன்’ என்பதுபோல, கொலையே, கொலைத்தொழிலே - கொலைஞன் என உருவகஞ் செய்யப் படுகிறது.
பகுத்தறிவு - நடுவர் (ஜட்ஜ்) ஆகவும்; அன்பு, அருள், ஒழுக்கம், வாய்மை, அறம், நடுநிலைமை, தென்பு என்பன - அறங்கூறவையத்தார் (ஜூரிகள்) ஆகவும் உருவகம்.
பகை - பகைவன் ஆகவும், சின முதலிய தீக்குணங்கள் படைஞர்களாகவும், நோய்கள் முதலியன கொலைக் கருவி களாகவும் உருவகம்.
உசாப்பில் (விசாரணையில்) உசாவப்படும் பலவகையான தீக்குணங்களையுமே கொலைஞன் வாக்கு மூலத்தில் கொலைக்குக் காரணங்கள் எனவும், தான் பகையின் ஏவலன் எனவும், கொல்வது தனது தொழில் எனவும், தான் தன் கடமை யைச் செய்ததால் குற்றமற்றவன் எனவும் கூறுகிறான்.
அறங்கூறவையத்தார் - அவனை விடுதலை செய்து விட்டுக் கொலைக்குக் காரணமான அத் தீக்குணங்களை மீளாக் கடுங்காவல் சிறையில் இடுவது - அத்தீக்குணங்கள் கூடா என்பது கருத்து.
அக்குணங்களைத் தூக்கிக் கொல்வது கொலைக் குற்றம் என்பதன் கருத்து - ஒரு பொருளோடு உடன் தோன்றி, அப்பொருள் அழியும்போது தானும் உடன் அழிவது - குணம் எனப்படும். பொருள் - குணி எனப்படும். எனவே, குணியை விட்டுக் குணத்தை அழிக்க முடியாது. ஆகையால், உலகில் மக்கள் உள்ளவரை அக்குணங்களும் இருந்தே தீரும். அவற்றைச் செயல் பட விடக்கூடா தென்பதே.
கென்னடி உலக அமைதிக்காகப் பெரிதும் முயன்று வந்ததால், அமைதி - கென்னடியின் மகள் எனப்பட்டது. அமைதி உலகத் தாயின் ஒரே மகள்; உலக மன்றத்தார் உதவி யோடு உலக மன்றத்தில் வளர்ந்து வருகிறாள்.
முறைமன்றத்தார் கொலைஞனை விடுதலை செய்ததால் உலகோர் அஞ்சி, அவனைப் பழித்து வெறுக்கின்றனர். அமைதியும் கொலைஞனது விடுதலை கேட்டு இரங்குகிறாள். தோழி, கொலைஞன் மனமாறுதலைக் கூற, அமைதியின் உள்ளம் அவன் பால் செல்கிறது.
உலகோர் பழித்து வெறுப்பதற்காகக் கொலைஞன் வருந்து கிறான். அவன் வருந்துவது கண்ட ஒருவர், உலகத் தலைவர்கள் அமைதியிடத்தில் அளவுகடந்த அன்புடையவர் களாக உள்ளனர். அமைதியும் உன்னைக் காண விரும்புகிறாள். அவள் அன்பைப் பெற்றாள் உன் துயரம் ஒழியும் என, கொலைஞன் அவ்வாறே நியூயார்க்கு நகரில் உள்ள உலக மன்றத்திற்குச் செல்கிறான். தோழி, அமைதிக்கு அவனை அறிமுகப்படுத்த இருவரும் காதல் கொல்கின்றனர்.
கொலையின் காரணங்கள் சிறைப்பட்டதால், கொலைஞன் கொலைத் தொழிலை விட்டுவிட்டான். கொலை இல்லாததே அமைதி ஆகையால், அமைதி கொலைஞனை மணக்க விரும்பு கிறாள். உலகத் தலைவர்கள் உடன்பட்டு நடத்த அமைதி கொலைஞன் திருமணம் சிறப்பாக நடந்தது.
உலக அமைதியை நிலைநாட்டுவதே உலக மன்றத்தின் கடமையும் பொறுப்பும் ஆகையால், உலகத் தலைவர்கள் உலக அரசியாக அமைதிக்கு முடிசூட்டினார்கள்.
கென்னடியின் நிலையில் உள்ள ஜான்சன் திருமுடியை எடுத்துக் கொடுக்க, குருசேவ் வாங்கி எலிசபெத் அரசியிடம் கொடுக்க, மற்ற உலக நாட்டுத் தலைவர்களெல்லாம் வாழ்த்த, அரசி என்னும் நிலையில் உள்ள அவ்வம்மையார் வாங்கி அமைதிக்கு முடிசூட்டுதலின் கருத்து - இம் மூன்று வல்லரசு களும் ஒன்றுபட்டு, எல்லா உலக அரசுகளுடனும் ஒத்துப் போரும் பூசலும் இன்றி, உலக அமைதியை உண்டாக்க வேண்டும் என்பது.
கொலைஞன் - அன்புத்துறை, அருட்டுறை, அறிவுத் துறை, அறத்துறை, ஒப்புரவுத் துறை - இவற்றின் தலைமை ஏற்று உதவ, அமைதி அமைதியாக உலகை ஆண்டுவந்தாள் என்பது - அன்பு முதலிய அத்துறைகளே அமைதிக்குக் காரணம் என்பது.
உலக மன்ற ஆட்சியின்கீழ் உலகநாடுகள் எல்லாம் அமைந்து, உலகில் போரும் பூசலும் இல்லாமல் அமைதி நிலவும் படி செய்தல் உலகத் தலைவர்களின் இன்றியமையாக் கடமையும் பொறுப்பும் ஆகும். இந்நூற்பயனும் அதுவே. வாழ்க கென்னடி வான்புகழ்! வாழ்க அமைதி!
உலகப் பெரியோன் கென்னடி
தலைவன் சிறப்பு
தாழிசை
1. உலகப் புகழ்தன் உயர்வுக்கா
உதவி வேண்ட உவந்துதவும்
உலகப் பெரியோன் கென்னடியின்
உயர்வுக் குவமை அவ்வுயர்வே! (1)
2. தன்போற் பிறரும் இன்பாகத்
தாம்வாழ் குவதே தகவென்ன
அன்பால் ஒப்புர வாக்குவதில்
அவனுக் கவனே ஒப்பாவான். (2)
3. பாரில் இனிமேல் ஒருபோதும்
பகையும் போரும் இலவாக
நீரில் அசையா நிழல்போல
நிலையா நின்ற மலையாவான். (3)
4. மக்கள் நலமே தன்னலமா
மதித்திங் கதற்கே வாழ்ந்துவந்த
தக்க தலைவன் கென்னடியின்
தகவே உலகின் தகவாமே. (4)
கொலையின் கொடுமை
கலிவிருத்தம்
(படர்க்கை)
5. கொலையேகொலை உலகத்துயிர் கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை கொள்கைக்குயிர் கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை வெறிகொண்டுயிர் கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை திடுகுப்பெனக் கொல்லுங்கொலை கொலையே! (5)
6. கொலையேகொலை மேன்மக்களைக் கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை இனமக்களைக் கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை அறவோர்களைக் கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை ஆள்வோர்களைக் கொல்லுங்கொலை கொலையே! (6)
7. கொலையேகொலை அறமஞ்சிடக் கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை மறமிஞ்சிடக் கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை முறைசாய்ந்திடக் கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை அருளோய்ந்திடக் கொல்லுங்கொலை கொலையே! (7)
8. கொலையேகொலை அறியாமலே கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை எதிரின்றியே கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை சால்பின்றியே கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை மனமொன்றியே கொல்லுங்கொலை கொலையே! (8)
9. கொலையேகொலை படுபாவிகள் கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை முழுமூடர்கள் கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை அழிகேடர்கள் கொல்லுங்கொலை கொலையே!
கொலையேகொலை பழிகோடிகள் கொல்லுங்கொலை கொலையே! 9)
அறுசீர் விருத்தம்
(முன்னிலை)
10. கொலையே யெத்தனை உலகறி வாளரைக்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை அறிவிய லறிஞரைக்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை அரசிய லறிஞரைக்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை யெத்தனை பேர்களைக்
கொன்று களித்தனையோ! (10)
11. கொலையே யெத்தனை காதலர் தங்களைக்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை கன்னிய ரின்னுயிர்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை காளைய ராருயிர்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை யெத்தனை பேர்களைக்
கொன்று களித்தனையோ! (11)
12. கொலையே யெத்தனை அன்பமர் தாயரைக்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை தந்தையர் தங்களைக்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை ஆருயிர்ச் சேயரைக்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை யெத்தனை பேர்களைக்
கொன்று களித்தனையோ! (12)
13. கொலையே யெத்தனை குடும்ப முழுமையுங்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை ஊரை யடியோடு
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை மாநக ரங்களைக்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை யெத்தனை பேர்களைக்
கொன்று களித்தனையோ! (13)
14. கொலையே எத்தனை மணிமுடி மன்னரைக்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை வீர மறவரைக்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை தூதுவ ரொற்றரைக்
கொன்று தொலைத்தனையோ!
கொலையே யெத்தனை யெத்தனை பேர்களைக்
கொன்று களித்தனையோ! (14)
உலகத் துயர்
கொச்சகம்
15. ஆகொலையா! கென்னடியை யா! உண்மை யாகவா!
ஆகொலையா! கொன்றவன் யார்! ஐயோ அடகெடுவாய்!
ஆகொலையா! செய்தாய்? அடடாஅம் மாதலைவன்
ஆகொலையா! கொல்லவுனக் கப்படி என்செய்தான்! (15)
16. ஐயோ கொலைஞா! அறிவிலி! ஆகொடியா!
ஐயோ படுபாவி! ஆகெடுவாய் ஏன்கொன்றாய்!
ஐயோ அமெரிக்க அன்னாய்!உன் செல்வனெங்கே?
ஐயோ! இனியமைதிக் காரிந்தப் பேருலகில்! (16)
17. ஏன்கொன்றாய் பாவீ! இழிஞா! எதிர்பாரா
தேன்கொன்றாய் கென்னடியை? இல்லை, உலகமைதி
தான்கொன்றாய், கேளாமல் தானேமுன் வந்துதவும்
வான்கொன்றாய், மக்கள்நல வாழ்வினையுங் கொன்றாயே! (17)
18. படுகொலையா! மக்கட்பண் பாடறி யாப்பதரே!
கெடுகொலையா! ஏன்கொன்றாய் கென்னடியை? அஆஅ!
அடுகொலையா! பாவைவிளை யாட்டோதான் இக்கொலையும்!
சுடுகொலையா! ஓர்நொடியில் சுட்டுக்கொன் றிட்டாயே! (18)
19. வருமணு குண்டுலகை மாய்க்கா தெதிர்த்துநின்ற
பெருமலை கென்னடியிப் பேருலகம் ஏங்கியழ
இருபதி னொன்றுபதி னொன்றொன்பத் தேழ்வெள்ளி
ஒருபகல் ஓர்மணிக்கை யோசாய்ந்து விட்டதுவே! (19)
20. புன்கொலையால் பொன்றாப் புகழ்பூத்த கென்னடியே!
உன்கொலையை வானொலியில் கேட்டும், உலகோருன்
வன்கொலையைச் செய்த்தித்தாள் வாயிலாய்த் தான்கண்டு
தன்கொலையாக் கொண்டு தவியாய்த் தவித்தனரே! (20)
21. கன்னெஞ்சர் என்பதனைக் காட்டவோ, காழ்த்தகொடு
வன்னெஞ்சர்க் குக்காட்டு வாய்க்கவோ, பாகித்தான்
புன்னெஞ்சச் செஞ்சீனாப் போகயார் இவ்வுலகில்
தன்னெஞ் சுருகியழா தாருன் கொலைகேட்டே! (21)
எட்டடிக் கொச்சகம்
22. கொன்றாயே பாழ்ங்கொலைஞா! கொன்றேன் எனவெதிரில்
சென்றாயா, இன்னதற்காச் செய்தேன் கொலையெனநேர்
நின்றாயா இல்லை, நினதுகொலைக் கொள்கையினால்
வென்றாயா இல்லை, வெறியாஜான் கென்னடியைக்
கொன்றாயா இல்லை, உலக அமைதிதுணை
இன்றேயா றாத்துயரால் ஏங்கியழு தேதெருவில்
நின்றே கதற நினையாநல் வாழ்வினையும்
கொன்றாயே பாவீ! கொடியா கொடுங்கொலைஞா! (22)
23. ஆவ தறியா அறிவிலீ! ஆகொடியா!
நோவ தறியா நுனிநோக் கிலாப்பாவி!
சாவ தறியாத் தறுதலையே! சண்டாளா!
ஈவ தறியா இழிஞா! உனக்கிதனால்
மேவ தறியா வெறியா! உலகநிலை
போவ தறியாப் பொறியில் பொடிசுட்டி!
ஓவ தடாதென்ப தோராமல் இவ்வுலகக்
காவ லனையடடா!கண்ணிமைக்குள் கொன்றனையே! (23)
24. மண்ணுக் கலங்க மலைகலங்க வானொலியின்
பண்ணுக் கலங்கப் படைகலங்கப் பாருல
குண்ணுக் கலங்கவந்தோ! கொல்லக் குறிபார்த்த
கண்ணுக் கலங்கலையோ! கைகலங்க லையோஉன்
எண்ணுக் கலங்கலையோ! என்பிறந்தாய்! குண்டுபட்ட
புண்ணுக் கலங்கப் பொறிபுல னுங்கலங்க
வண்ணக் குருதி வழியமனை யாள்மடிமேல்
உண்ணுக்கு வீழக்கொன் றோகெடுத்தா யேகொலைஞா! (24)
25. நீயழுகா யேனுமிந்த நீடாழி சூழுலகன்
பாயழுகா தோநேரில் பார்த்தேங்கி நின்றார்தம்
வாயழுகா தோபத்து மாதம் சுமந்துபெற்ற
தாயழுகா ரோகாதல் திருவாட்டி கென்னடியும்
மேயழுகா ளோஎரிவாய் மெழுகாய் உளமுருகி
ஆயழுகி றார்தந்தை அழுகிறார் சேய்களென்று
கூயழுகா ளோஅழுகக் கொன்றனையே பாழ்ங்கொலைஞா! (25)
26. கொலையே! உனக்கிறுதி கூடாதோ, நல்லுயிர்கொல்
கொலையே! உலகமக்கள் கோவென் றழுவதுகேட்
கிலையோ? உனக்கெங்கள் கென்னடி வாழமன
மிலையோ? உலகநல மேதன் நலமாக்கொண்
டுலையா துழைப்பதுகண் டோமகிழ்ந்து நீதந்த
விலையோ? கெலையா! வெறியா! உனக்கிரக்கம்
இலையோ? தனித்தலைவன் என்றும்பா ராதுகொன்ற
புலையாநீ கெட்டழிந்து போயொழிய மாட்டாயோ! (26)
27. உன்னை அவனறிவா னோஇன்னா னென்றில்லை;
அன்னை வரையந் நொடிவரை அச்செயல்
தன்னை அறிவானோ தானில்லை; ஆங்காகப்
பின்னை எதனால் பெருந்தலைவன் கென்னடி
தன்னை யடாசுட்டுத் தான்கொன்றாய்? சண்டாளா!
என்னை ஒருதலைக் காமம்போல் இப்பகையும்
உன்னைச்சுடுசுடென உள்ளிருந்து தூண்டிற்றோ?
என்னை இதன்கா ரணத்தை இயம்பாயோ? (27)
28. பற்குச்சிக் காவழியில் வைத்துவளர் பைங்கொம்பை
அற்குப் படாமல் அடியோ டொடிப்பது?
விற்கும் விறகுக்கா மாபலவை வெட்டுவது?
புற்கட்ட வாநெற் புடையை அறுப்பது?
கற்கொட்ட வாவீட்டின் கல்லை எடுப்பது?
விற்கட்ட வாமாட்டின் கால்நரம்பை வெட்டுவது?
கொற்கொட் டினவெறிக்கா கென்னடியைக் கொல்லுவது?
மற்கட்டி இன்னுயிர்கொல் மாகொடிய பாழ்ங்கொலையா! (28)
29. கொலையே! உனைப்போல் கொடிய கொடும்பாவி
இலையேஆ! இவ்வுலகில் ஏனிவ் வுலகைவிட்டுத்
தோலையே எனக்கடிந்து சொல்லிய அவ்வுறுதிச்
சொலையே அடாதிருப்பிச் சொல்லுனைபோல் போர்வெறியாம்
அலையேநில் என்றவ் அணுகுண்டைத் தாங்கிநின்ற
மலையே சரிந்துவிழ வன்கொடுமை செய்தனையே,
விலையே யிலாவுலக மேதக்கோன் கென்னடியைக்
கொலையே புரிந்தந்தோ கொன்றனையே மாகொலையா! (29)
30. இந்த உலகிலுள்ள ஏனோ இரண்டொழிய
உந்த னதுகொலைகேட் டோவென் றழுதிரங்கிச்
சிந்தியகண் ணீராறாச் செல்லத் தியங்கிநின்றே
எந்தலைவா! என்கொடுமை! இல்லை, இதுபொய்யோ
இந்தவொரு வன்கொடுமை என்றுங்கேட் டில்லோமே,
அந்த வெறியன்மகன் அல்லனோ? அய்யாவோ!
எந்தலைவா! கென்னடியே! என்செய்தாய்? என்றேங்கி
நொந்துலக நாடெல்லாம் நொந்நோக எங்குசென்றாய்? (30)
31. ஏங்கி யுலகமக்கள் இன்னாத் துயரமுடன்
தூங்குவது போலுலகம் துஞ்சிவிடு மோவறியோம்
ஈங்கினி என்செய்கோம்! என்றொன்றுந் தோன்றாமல்
மூங்கையரைப் போல முணுமுணுத்துக் கொண்டிருப்ப,
நீங்க ளிதற்கஞ்சேல் நெஞ்சாரச் சொல்லுகிறேன்
தீங்கணுகா மற்காப்பேன் தேர்மின்என்ற கென்னடீஇ!
ஆங்குல கத்தலைமேல் வீழா தணுகுண்டைத்
தாங்கிப் பிடித்தஅக்கை தானோய்ந்து போயிற்றே! (31)
32. தன்னுரிமை யோடுமக்கள் தாம்வாழச் செய்வதுவே
என்னுரிமை, மக்கள் இயலுரிமை, எல்லோரும்
முன்னுரிமை, எய்தும் முதலுரிமை, இவ்வுலகின்
மன்னுரிமை - என்று மடிதற்றுக் கொண்டெழுந்தென்
இன்னுரிமை என்றே இடிமுழக்கம் செய்துவந்த
பொன்னுரிமை போன்ற புகழுரிமைக் கென்னடியே!
உன்னுரிமை தன்னை உணராலக் கொடுங்கொலைஞன்
தன்னுரிமை யென்றுசுட்டுத் தான்கொன்று விட்டானே! (32)
33. ஆட்சி யுடனுலகில் நின்றுநிலை பெற்றமன்னர்
ஆட்சி யொழிந்தேயவ் வாறாங் குலகில்மக்கள்
ஆட்சியினிதே அலர்ந்து மணங்கமழ்ந்து
ஆட்சி யொடுபுதிது வாழ்வாங்கு வாழுமக்கள்
ஆட்சியது கண்டு களிக்க அதற்காக
ஆட்சி புரிந்துவந்த அண்ணல்எம் கென்னடியே!
ஆட்சி யுடையமக்கள் மன்னா! வறுங்கொடுங்கோல்
ஆட்சி யினுங்கொடியோன் ஐயோகொன் றிட்டானே! (33)
34. பகைமையினால் உண்டாகும் பாழ்ங்கொடும்போ ரால்மக்கள்
..கையொருங்கு மீளாத் துயரத்தி லேதவிக்கும்
..கையொழிந்து மக்களெல்லாம் அச்சமின்றி வாழ்வதூஉம்
..கைய உலக அமைதி நிலைநிற்கப்
..லுமிர வுந்துணிந்து பாடுபட்டு வந்ததன்னேர்
..கைய உலகத் தலைவஜான் கென்னடியே!
..கைய புலிபோற் கொடியன் அடடவிழி
..கையனத் தோசுட்டுத் தான்கொன்று விட்டானே! (34)
35. ..றே குலமென்னும் உண்மை நிலைமறந்தே
..றாம லொன்றாய் உலகமக்கள் வெவ்வேறாய்
.. றே இனத்தால் நிறத்தால் சமயத்தால்
..றே தனியாய்ப் பிரிந்திருக்கும் தாழ்வுயர்வைக்
..றேயம் மக்கட் குலத்தையொன் றாக்குதற்குக்
.. றாது பாடுபட்டு வந்தகுணக் குன்றம்நீ
..றேஎம் கென்னடியே! அத்தொண்டுக் காகவுனைக்
.. ன்று தொலைத்தானே கொலையோ அதன்பரிசு! (35)
36. ஓவுலக மக்களெல்லாம் உன்கொலையைக் கேட்டதுமே
ஆவென வேயலறி அந்தோ மதிகலங்கிப்
பாவி யெவனிப் படிச்செய்தான்? பாங்கறியாச்
சாவெனு மோர்கொடியோன் தான்சாவ தில்லையோ!
யாவ ரினியிவ் வுலகமைதிக் காகொலையின்
நாவினிற் பட்டெம்மை நட்டாற்றில் விட்டுவிட்டுப்
போவதெங் கென்னடிநும் போன்றார்க் கியல்போதான்
கூவியழு கின்றஅந்தக் கூக்குரலைக் கேளாயோ! (36)
37. இந்த உலகிலர சேற்பட்ட நாள்தொட்டு
வந்துலகை யாண்டுவந்த மாமன்னர் எத்தனைபேர்!
இந்தநாள் காறும் இருநா டதுவொழிய
நந்து முலகிலுள்ள நாட்டுத் தலைவரெல்லாம்
உந்த னதுகொலைகா துற்றது மேநேரில்
வந்தழுது கண்ணீர் வடித்து மலர்தூவி
நொந்துருகி நேர்மை நுவன்றிறு திவ்வணக்கம்
தந்ததுநின் போலோர் தலைவர்க்கும் உண்டோதான்! (37)
38. இந்தவுல கிற்பகைபோர் இல்லாமல் செய்வதற்கு
வந்துல கிற்பிறந்த மாதலைவன் கென்னடியே!
இந்த உலகையினி இல்லா தழித்தொழிக்க
வந்து பிறந்தவனான், வந்தீரேல் என்னெதிரே
அந்த நொடியே அழித்திடுவேன் என்றறைகூம்
அந்த அணுகுண்டும் அஞ்சி அலறிஐய!
வந்தவழி பார்க்கின்றேன் என்று வணங்குமெனின்,
உந்தனைம றக்குமோ இவ்வுலகம் உள்ளளவும்? (38)
39. இந்த உலகில் இருப்பதா சாவதா
எந்த ஒருமுடிவும் இல்லாமல் சொல்லாமல்
இந்த நிலையில் எனைவிட்டுச் சென்றனையே
உந்தன் கருத்தை உணர்வாரோ இவ்வுலகோர்!
எந்த நிலையில் எனைவைக்கப் போறாரோ?
அந்தோவென் செய்வேன்யான் அப்பாவென் கென்னடியே!
உந்தனைக்கொன் றென்னைவிட்டான் ஓகொடிய பாவியென்றே
அந்தவணு குண்டும் அழுது புலம்புமன்றோ? (39)
40. தீமைகளெ லாந்திரண்ட தீமையினும் தீமையப்பொ
றாமையத னாலுளமொன் றாமையமை யாமைதீண்
டாமையுல கொன்றுப டாமைமக்க ளொற்றுமையில்
லாமை முதலியபொல் லாமையுற லாலப்பொ
றாமை மனத்தகத்த றாமையத னேதுவறி
யாமையெனு முண்மை யறிந்துலகத் தந்தவறி
யாமையதைப் போக்க அரும்பாடு பட்டதறி
யாமையினால் கென்னடியை ஆகொன் றனைகொலையா! (40)
41. கொல்லுங் கொடுங்கொலையே! கொல்லாமல் கொல்லுதியே!
சில்லஞ் சிறுபருவம் சிற்றிலிழைத் தேயாடச்
செல்லுந் தெருவெல்லாம் செல்லாத கொள்கையினார்
சொல்லம்பு வந்து சுடுதீ யெனச்சுடுதே,
நல்லன்பு ளாருலகில் நாலுபே ருங்கிடையா,
வில்லம்பின் றில்லை வெடிகுண்டுக் காலமிதே
இல்லம் புகுஞ்சிறியேன் எந்தையைக்கொன் றாயேயென்
றல்லும் பகலும் அழுவாள் உலகமைதி. (41)
42. அந்தோ! உலக அமைதி எனுங்குழந்தாய்!
எந்தாய்! எனைத்தனிவிட் டெங்குசென்றீர்? என்றுமனம்
நொந்தே கதறிமுகம் நோக்கிநின் றேயுளங்க
சிந்தே அழாதெகுரு சேவிருக்கி றார்மனமி
சைந்தே யுதவத் தயங்காருன் தந்தையைத்தொ
டர்ந்தே யுனைக்காத்தி டத்தலைமை பூண்டவர்பின்
வந்தே யுளார்ஜான்சன் இந்தியராம் யாங்களுமு
கந்தே யுனைகட்டிக் காத்து வளர்த்திடுவோம். (42)
43. தந்தை பிரிந்ததுயர் தாங்காது தானிரங்கிச்
சிந்தை கலங்கித் திகைக்கும் அமைதியெனும்
பைந்தொடி யேஎலிச பத்தரசி யுன்மீதில்
உந்தன் அனையின் ஒருகோடி அன்புடையார்,
உந்தைஜான் கென்னடியி னாலே உயர்வுற்ற
அந்த உலகமன்றத் துள்ளநா டத்தனையும்
உந்த னிடத்தே உள்ளூற அன்புடையர்
வந்த துயரினிதா மாற்றி வளர்த்திடுவார். (43)
44. துடுக்கொடுமண் ணாசைதலை தூக்கவந்தச் செஞ்சீனன்
மிடுக்குட னேவந்தென் மேற்பாயக் கண்டதுமே
எடுக்கு மெடுப்பினில் யானிருக்கின் றேனம்மா!
அடுக்கும் பகைவனைக்கண் டஞ்சேல் எனவுதவி
கொடுக்கமுன்வந் தேபகைவன் கொட்ட மடக்கியதும்,
உடுக்கை யிழந்தவன் கைபோ லொருவன்
இடுக்கண் களைவதாம் நட்பென்ற இன்குறளைக்
கடுக்குமன்றோஅப்படியே? காணமரிக் கத்தோழீ! (44)
45. எஞ்சேயர் சும்மா இருக்கவே மண்ணசையால்
செஞ்சீனக் காரன் திடுகுப்பென் றேபாய
நெஞ்சால் நினையா நிலைகண்டு நான்வருந்த,
அஞ்சாதே அம்மாநான் ஆமுதவி செய்வேனென்
றெஞ்சாம லேயுதவி என்துயர்போக் கிக்காத்த
உஞ்சேயன் கென்னடியின் அப்பே ருதவிதனை
நஞ்சேனும் உண்டமைவேன் நானென்று மேமறக்கேன்
எஞ்சாப் பெருஞ்செல்வி யேயமரிக் கத்தங்காய்! (45)
46. பொல்லாத செஞ்சீனன் போர்க்கோலம் பூண்டெழுந்து
வல்லேயெம் நாட்டின்மேல் வந்ததுகே ளாமுன்னம்,
நில்லாயங் கேயடா, நீவந்த வாதிரும்பிச்
செல்லாய் எனக்கூறிச் செய்தஅப் பேருதவிக்
கில்லே மெதிர்மாறே எந்தோழா கென்னடியே!
சொல்லாமுன் முன்வந்து தோன்றாத் துணையான
நல்லாயுன் பேருதவி நாங்கள் மறந்தாலும்
பொல்லாத சீனர்களெப் போது மறவாரே. (46)
47. அம்மா மகனை இழந்தே அழுதிரங்கும்
அம்மா துயர்தாங்கா அமெரிக்கத் தங்கையே!
இம்மா நிலவுலகில் யானுமொரு பெண்ணாக
அம்மா அடிமை அகற்றியெனை வாழ்வித்த
எம்மா மகன்காந்தி என்னைத் தவிக்கவிட்டே
அம்மா ஒருகொடிய னால்சுட்டுக் கொன்றதுயர்
அம்மா! இன்னுந்தீர வில்லை, அதற்குள்ளே
உம்மா மகன்கென் னடிகொலைகேட் டோநொந்தேன். (47)
48. ஐயோ!என் அன்பே!என் ஆருயிரே! ஆகெட்டேன்;
பொய்யோ கனவோயான் பித்தேறிப் போனேனோ!
மெய்யோ எனைத்தனியே விட்டீரே நட்டாற்றில்!
ஐயோஇவ் வாறுசெய்ய யார்துணிந்த தாகொடுமை!
செய்யாவென் மெய்யணியே! தேம்பா அறிவொளியே!
கையாத ஆண்பாலே! காதற் கனிச்சுவையே!
எய்யா வுலகிலினி என்செய்கேன் யான்தமியேன்!
உய்யா வகைதெருவில் ஓவிட்டுச் சென்றீரே! (48)
49. எங்கேயோ வானம் இடித்ததென்று நானிருந்தேன்,
எங்கேயும் இல்லை, இடித்தஅப் பேரிடிதான்
இங்கே இதோவென் தலையில் இடித்ததுவே,
மங்கா ஒளிவிளக்கே! வான்வழங்கும் பேரொளியே!
பங்காவென் உள்ளப் பயனே! பயன்படா
வெங்கான கத்திடையே விட்டகலும் வெய்யோர்போல்
இங்கே எனையழவிட் டெங்குசென்றீர்? ஏதுசெய்கேன்?
எங்கோ மகனே! இனியார் துணையெனக்கே! (49)
50. அன்புத் திருமுகத்தை, ஆணழகை, ஆரருளை
முன்புற் றிடுவிழியை, மூவாத் திருவுருவை,
நன்புற்று நின்று நகையா வருகவென
இன்புற்றேன் கண்ணால் இனியொருகால் காண்பேனோ!
தென்புற்றேன் செஞ்செவியும் உள்ளமும் தித்திக்க
பின்பற்றி என்னோடு பேசுங் கனிமொழியை
இன்புற்றென் காதால் இனியொருகால் கேட்பேனோ!
என்பற்றி வாழ்வேன்கொல்! என்வாழ்வே எங்குசென்றீர்? (50)
51. கண்ணே கெரோலின்என் கண்மணிஜான்! எங்குடியை
விண்ணார் சுடர்போல் விளக்குமின்வி ளக்குகளே!
நண்ணா நறுமலர்காள்! நானுங்கள் கைபடா
துண்ணேன் ஒருபோதும், உங்கள்மெய் தீண்டினல்லான்
பண்ணார் குழல்நரம்பு பாவினிமை யுங்கேட்க
எண்ணேன் எனவுங்கள் எந்தையினிக் கொஞ்சுவதைக்
கண்ணாரக் கண்டு களிப்பேனோ! கண்மணிகாள்! (51)
52. மன்னே இனியொருகால் வாவென்று வாய்மணக்க
அன்னே அழைக்க அகமகிழ்ந்து கேட்பேனோ!
என்னே இனியுங்கள் வாழ்வதூஉம் எந்தலைவன்
மன்னே பயன்படுத்தி வந்த உடைமைகளே!
கொன்னே இனியொருகால் அவ்வாழ்வு கூடுங்கொல்!
பன்னாளும் என்தலைவன் பாற்பயில்நன் னூல்களே!
மன்னே இனியுங்கள் வாய்மலர வாய்க்குங்கொல்!
என்னே உலகியலின் மன்னா இயற்கைத்தே! (52)
53. என்றலைவா! என்னுயிரே! என்னன்பே! என்மக்க
ளின்றலைவா! என்வாழ்வின் இன்பே! இனித்துணையோ
தென்றழுதே யேங்கும் திருவாட்டி கென்னடியே!
உன்றலைவன் மட்டுந்தா னோகென் னடியுலகத்
தின்றலைவன், போர்வெறியைச் சென்றெதிர்த்து வெல்லவல்ல
வன்றலைவன், இவ்வுலகை வாழ்விக்கப் போந்தஎங்கள்
மன்றலைவன், மக்கள் மறுமலர்ச்சி யாமமைதிப்
பொன்றலைவன் நம்மைவிட்டுப் போயினா னையகோ! (53)
54. பொங்கா அலைகடல்போல் பொங்கியெழும் போர்வெறியை
இங்கே தலைகாட்டா தேயுனது வாலிடுக்கி
அங்கே கிடவென் றதட்டியுல கைக்காத்து
மங்காப் புகழ்படைத்த மாதலைவன் மாமனைவி!
எங்கோ மகளேயோ! எந்தலைவி! ஜாக்குவிலின்!
நங்காய்! உனைப்பார்த்துன் நல்லமக ளும்மகனும்
இங்கேன் வரவில்லை இன்னும் எமதுதந்தை
எங்கே? எனக்கேட்டால் என்சொல்லித் தேற்றுவையோ! (54)
55. ஐயோ அவன்சுட, அவ்வெடிக் குண்டுபட
ஐயோவென் றேமடிமே லேசாய்ந்த அப்பொழுதத்
தையோ வெனக்கதறிச் செய்வ தறியாது
கையாலப் புண்பொத்திக் கண்ணீரா லேகழுவி
ஒய்யா தழுதழு தோய்ந்தழுகை அப்படியே
செய்யாத பாவையெனத் திருவாட்டி கென்னடி!
மெய்யோ உடலுயிரின் வீற்றிருக்கை யோவென்ன
எய்யா நிலையதனுக் கேதுவமை சொல்கேனே! (55)
56. என்றைக் கிருந்தாலும் என்றோ ஒருநாளைக்
கின்றைக்குக் கேட்டதுபோல் கேட்ப தியல்பன்றே?
அன்றைக்கும் இவ்வா றழுவா திருப்பாயோ?
முன்றைப் பெரும்புகழ்க்கும் மூத்த முதியபுகழ்
பின்றைப் பெரும்புகழ்க்கும் பேசவுமெட் டாதபுகழ்க்
குன்றைஅப் போர்வெறியைக் கொன்றமைதி காத்துயர்ந்த
ஒன்றைத் தலைவனாப் பெற்ற உனைப்போல
என்றைக் கெவருலகில் இப்பேறு பெற்றுயர்ந்தார்! (56)
57. இருந்துமுண் ணாதுடா தீயா திவறுவோர்
இருந்துமுல குக்கவரால் யாதுபயன் ஒன்றுமில்லை;
பொருந்துவது யார்க்கும் பொருந்தும் படியாக
வருந்து முலகோர் வறுமை யெனுநோய்க்கு
மருந்தென வேண்டுவன வாரிவா ரிவ்வரையாத்
தருந்தலைவன் கென்னடியைத் தானிழந்தந் தோதவித்து
வருந்தும் அமெரிக்க மக்களே! உங்களினும்
வருந்துவரன் றோஅவன்கை வண்மைநினைந் திவ்வுலகோர்? (57)
58. ஆவுன் கொலைகேட் டதுமம ரிக்கமக்கள்
ஓவென்று கூவியழு துள்ளந் துடிதுடித்து
நாவொன்று பேச நனவு கனவாக
மாவென்றி கண்டஎம் மாதலைவ கென்னடி!
தாவொன்றும் இன்றெம்மைத் தானோம் பியதலைவா!
ஏவொன்று மாமயில்க ளென்னயாம் ஏங்கிநொந்து
கோவென்று வாய்விட்டுக் கூவியழ எப்படியோ
போவென் றெமைவிட்டுப் போயினையே எந்தலைவா! (58)
59. வெள்ளி! அறுவரினும் மேம்பட்ட மிக்கபுகழ்
உள்ளவன்நீ அன்றே, உலகமைதிக் காவிருந்த
வள்ளலெம் கென்னடி மட்டுமா! மன்னடிமை
தள்ளிய லிங்கனொடு சாக்கரட் டீசென்னும்
ஒள்ளறிவுச் சிற்பி உயர்வுதாழ் வுக்கொடுமை
எள்ளிய ஏசு பெருமான், எவரிடத்தும்
கள்ளமிலா உள்ளன்எங்கள் காந்தி யடிகளையும்
கொள்ளைகொண் டேபெருமை கொண்டகுணக் குன்றன்றே! (59)
60. கொலையேஎம் கென்னடியைக் கொன்றாய், அடாகொடிய
கொலையேஎம் ஜாக்குவிலின் கோக்கொழுந னைக்கொன்றாய்,
கொலையே கரோலின்ஜான் கோத்தந்தை யைக்கொன்றாய்,
கொலையே ரோஃச் யூசப்பின் கோக்குழந்தை யைக்கொன்றாய்,
கொலையே அமெரிக்கக் கோமகனைக் கொன்றாய்,வன்
கொலையே அமைதிக் குழந்தைதந்தை யைக்கொன்றாய்,
கொலையே விளையாட்டாக் கொல்லுங் கொடும்போரும்
கொலையேநீ அஞ்சுமணு குண்டுஞ் சிரிக்காவோ! (60)
61. ஒன்றிரண்டு பேரோடா ஓகொடிய மாகொலையா!
அன்றடிமை போக்கியஅவ் ஆபிரகாம் லிங்கனையும்
பின்றை யவன்போல்கார் பீல்டுமிக்கென் லேயினையும்
கொன்றை யடபாவி! கோவென்று தாயிழந்த
கன்றுகள் போலக் கலங்கியம ரிக்கமக்கள்
நின்று கதறி நிலைகுலைந் தேங்கியழ
இன்றன் னவர்தம் இருந்தலைவன் கென்னடியைக்
கொன்று தொலைத்தாயே கொல்லுங் கொடும்பாவீ! (61)
62. அறிவுல கச்சிற்பி யாஞ்சாக் கரட்டீசை,
இறவா ஒளிவடிவன் ஏசு பெருமானை,
அறமுவக்க வேவாழ்ந்த அண்ணல்எம் காந்திதனை,
முறையறப்பா கித்தான் முதல்முதல் மந்திரியாய்
நிறைதரவே போந்த லியாகத் அலிகானை,
பறையார் கடலிலங்கைப் பண்டார நாயகாவை
இறையும் இரக்கமின்றி யேகொன்ற வன்கொலைஞா!
குறியெதிர்ப்பாக் கென்னடியைக் கொன்றுகைக் கொண்டனையே! (62)
கொலை நிகழ்ச்சி
ஆசிரியப்பா
63. நல்லோன் கென்னடி டெல்லாஃச் நகரில்
எல்லோன் போலொழி வில்லா தவ்வூர்ப்
பல்லா யிரங்கண் ஒல்லே களிக்கப்
புல்லா ஊர்தியில் இல்லாள் தன்னொடு
வல்லே ஊர்வலம் செல்லா நிற்கையில்,
இரண்டிரண் டிரண்டொன் றேழொன் பதுநாள்
பகலொரு மணிக்கு முகமறி யாத
வெய்யோன் ஒருவன் சுட்டனன்
ஐயோ என்றுல கலறிட அந்தோ! (63)
கட்டளைக் கலிப்பா
64. இந்தி யாவின் விடுதலைத் தந்தையாம்
எங்கள் காந்தி யடிகள்கோட் சேயினால்
அந்த வாறவ் வடிமை வழக்கினை
அடர்த்த ஆபிர காம்லிங்கன் பூத்தினால்
எந்த வாறுமுன் கொல்லப்பட் டார்களோ
ஈவி ரக்கமில் லாமல்சுட் டையகோ!
அந்த வாறுநம் கென்னடி தன்னையும்
ஆசு வால்டெனும் பாவியுங் கொன்றனன். (64)
தாழிசை
65. கலைநிகர் மாட மலியம ரிக்கத் தலைநகர் வாசிங்டன்
வந்துல கத்தலை வர்களொருங் கிறுதி வணக்கம் செலுத்தியெழு
தலையலை போலூர் வலஞ்சென் றேஆர் லிங்டன் கல்லறையில்
அடியோன் உடலை அடக்கம் செய்தனர்; நீள் புகழ் வாழியவே. (65)
வெண்பா
66. உலகென்னும் நல்லாள்தன் ஒத்ததுணை யையும்
இலகமைதி தந்தை யினையும் - உலகமக்கள்
தன்னிகரில் லாத தலைவனையுந் தாமிழப்பக்
கென்னடிபோக் கைக்காண் கிலம்.
67. நாற்பத்தா றைந்துதிங்கள் நாலைந்து முந்நாளே
ஏற்பத்தான் இவ்வுலகேன் எண்ணியது? - மேற்படவே
ஊங்கிருக்கின் கென்னடியின் ஒண்புகழைத் தன்னாலே
தாங்கமுடி யாதெனவே தான்.
கட்டளைக் கலித்துறை
68. தன்னடி நீங்கா நிழல்போற் பெருங்குணந் தானமைந்து
மன்னடி மைபகை போரின் றமைதியாய் மாநிலத்தில்
என்னடி மையென இல்லாது செய்திட வேயுழைத்த
கென்னடி போன்ற வரையிது நாள்வரை கேட்டிலமே. (68)
வெண்பா
69. கென்னடியை ஆசுவால் டென்னுமோர் கீழ்மகன்
கொன்னொடியி லேசுட்டுக் கொன்றிட்டான் - அன்னவனை
அப்படியே கொன்றிட்டான் ரூபி; அவனையறம்
எப்படியோ கொல்லும் இனி. (69)
கலிவெண்பா
70. இத்துடனிச் செய்தி முடிந்துவிடும். என்றாலும்
வித்திருக்க எட்டி விளையாவோ? - இவ்வுலக
மாந்தர்க்குள் மாந்தர் மதிக்குமுயர் மாந்தர்களாம்
காந்தி யடிகள்லிங்கன் ஏந்துபுகழ்க் கென்னடிபோன்ம்
ஒப்புயர் வில்லா உலகத் தலைமக்கள்
இப்படியே ஒவ்வொருவ ராக இனவெறிக்
கந்தோ இரையாக வேண்டி யதுதானோ?
கந்தோ கரையோ இலாக்களிறோ காட்டாறோ?
நல்லோர்க்குக் காலமில்லை என்னுமித் தொல்லுரையும்
எல்லோர்க்கு மேலிறுதி இல்லா ஒருபொருளோ?
நச்சுமிள காய்ப்பூண்டை விட்டுவிட்டு நாட்பூக்கும்
அச்செடியி னைப்பிடுங்கு வாருண்டோ? அஆ!
இதுதானா மக்களுயர் வென்தூஉம்? அன்றி
இதுதானா மக்கட்பண் பென்பதூஉம்? இல்லை
இதுதானா ஆறறி வென்பதூஉம்? அந்தோ!
இதுதானா ஞாலத் தியற்கையூஉம்? என்னே!
இதுதானா மாக்கட்கும் மக்கட்கும் ஏற்றம்?
இதுதானா காவல் எனுமரசுக் காப்புடைமை?
என்றுலக மக்கள் இரங்கியே தம்வாக்கால்
சென்றுலக நாட்டரசு செய்யுந் தலைவர்களை
நொந்தகமு டைந்துணர்வு நொள்கியாற் றாதறிவி
ழந்தமைதி யின்றியிருந் தார். (70)
ஆற்றாதிரங்கல்
எழுசீர்விருத்தம்
71. எக்கா ளத்தொடு மிக்குல கப்போர்
எனுமக் கொடியோன் இறுமாப்பாய்
தக்கோர் தொக்கொரு மிக்கேங் கக்கெடு
தலையா நின்றவந் நிலைகண்டே,
எஏ! வாலை யொடுக்கென் றேயார்த்
தெழுந்தோய் மண்ணில் விழுந்தாயே!
அஆ! கென்னடி! என்செய் கோசொல்
லாயோ இனிவரு வாயோதான்! (71)
72. இம்மா வுலகை இனியோர் நொடியில்
இல்லா தழிக்க வல்லேனான்
எம்மா லழியா இலவென் றணுகுண்
டெதிரா வெழுந்த அதுகண்டே,
சும்மா குதியேல் எனவே எழுந்த
துரையே! மண்ணுக் கிரையானாய்!
அம்மா! கென்னடி! என்செய் கோசொல்
லாயோ இனிவரு வாயோதான்! (72)
73. செந்தே ளெனவே இனநிற வெறியும்
சினந்தே சீறி வரவஞ்சி
நொந்தே யுலகோர் அலறித் துடித்து
நொடியா நின்ற படிகண்டே,
வந்தேன் உலகீர் அஞ்சே லென்ற
வல்லோன் வெடிவாய்ப் புல்லானாய்!
அந்தோ! கென்னடி! என்செய் கோசொல்
லாயோ இனிவரு வாயோதான்! (73)
74. பொய்யோ வுலகம் எனவோர் சிலர்தம்
போகூ ழெண்ணிப் புலனெக்குக்
குய்யோ முறையோ எனவே வறுமைக்
கொடுமைக் கிடைவாழ் படிகண்டே,
மையோ வெனவே வாரி வழங்கி
வந்தோய்! மாண்டும டிந்தாயே!
ஐயோ! கென்னடி! என்செய் கோசொல்
லாயோ இனிவரு வாயோதான்! (74)
75. இப்பே ருலகத் தினில்மக் களர
சில்லா நாடொன் றில்லாகத்
தப்பா தெவரும் அவர்தம் உரிமை
தகமக் கள்சரி நிகராக
எப்போ துமுழைத் திட்டோய்! இனியிங்
கெவரே உன்போன் றவர்தானே!
அப்பா!கென்னடி! என்செய் கோசொல்
லாயோ இனிவரு வாயோதான்! (75)
76. பொய்ச்சா தியின நிறவேற் றுமையும்
போரும் பகையும் பொருவின்றி
எச்சா கியெநா னேநா னென்றே
இறுமாத் திடலுக் கறியாமை
துச்சா மெனவவ் வறியா மைகெடத்
துடித்தோய்! மண்ணிற் படுத்தாயே!
அச்சோ!கென்னடி! என்செய் கோசொல்
லாயோ இனிவரு வாயோதான்! (76)
ஐயுற் றிரங்கல்
எழுசீர் விருத்தம் - வேறு
77. கருவிலே யமைந்த உயர்பிறப் பென்று
கருதியே ஒருசிலர் தம்மை,
உருவிலே கரியர் என்றொரு சிலரை
ஒருபொரு ளாமதி யாமல்
வருவதை அடியோ டொழித்திட உழைத்து
வந்தனை இருந்திருந் தாற்போல்
தெருவிலே யலைந்து திரிகென விட்டுச்
சென்றனை போலுங்கென் னடியே! (77)
78. பொருந்திய உணவுப் பொருள்களும் ஏனைப்
பொருள்களும் செல்வமும் இன்றி
இருந்திடும் உலக நாடுகட் கெல்லாம்
இலையெனா முன்னுவந் துதவித்
திருந்திட உலக மதனையொப் புரவு
செய்துவந் ததைவிடுத் தந்தோ!
வருந்தியே வறுமை யால்நலி கென்று
மறைந்தனை போலுங்கென் னடியே! (78)
79. கடமையி னின்று தவறியே மிகவும்
கைவலுத் தவர்படை வலியால்
குடிமையைப் பறித்துக் கொண்டுதாய் நாட்டுக்
குடிகளை அடக்கியே ஆளும்
கொடுமையைப் போக்கல் கடமைய தாகக்
கொண்டனை அதைவிடுத் தையோ!
அடிமையா யலைந்து திரிகவென் றெமைவிட்
டகன்றனை போலுங்கென் னடியே! (79)
80. கடந்தடு தானைப் பெருக்கினைக் கட்டுப்
படுத்தியே காப்புடை யுலகில்
இடந்தொறும் மக்கள் அடிமையி னீங்கி
இயன்றதம் உரிமைக ளெல்லாம்
அடைந்ததுமே மக்கள் ஆட்சிநா டெங்கும்
அரும்பியே மலர்ந்துநன் கினிது
நடந்திட உழைத்தோய்! நலிகென விட்டு
நடந்தனை போலுங்கென் னடியே! (80)
81. ஓங்குபோர் வெறியின் அறிகுறி யான
உலகினை ஒருநொடிப் போதில்
ஆங்குநீ றாக அழித்திட வல்ல
தாகிய அவ்வணு குண்டைத்
தாங்கியே உலகத் தலையில்வீ ழாமல்
தடுத்திருந் ததைவிடுத் தந்தோ!
போங்களெப் படியோ என்றெமை விட்டுப்
போயினை போலுங்கென் னடியே! (81)
82. உலகினிற் போரும் பூசலும் இன்றி
ஒன்றுபட் டுலகநா டெல்லாம்
இலகிட அமைதி நிலவிடற் காக
இயன்றஅவ் உலகமன் றத்தின்
தலைமைபூண் டமைதி காத்துமே வந்த
தகைமிகு தலைவஇவ் வுலகை
அலைகெனத் தெருவில் விட்டுமே நீங்கி
அகன்றனை போலுங்கென் னடியே! (82)
83. இருங்கட லுலகில் தற்குறி ஒருவன்
இருப்பதும் இப்பெரும் உலகுக்
கருங்குறை யாகும், அவ்வறி யாமை
யாலுல கத்தெலாத் தீங்கும்
ஒருங்குறும் எனவம் மடமையைப் போக்க
உலகுடன் முயன்றதை வித்தே
இருங்களெப் படியோ என்றெமை விட்டே
ஏகினை போலுங்கென் னடியே! (83)
அற்றநினைந் திரங்கல்
கலித்துறை
84. ஏசு பெருமான் சேசு வெனப்பட லேபோல,
மாசு நிறத்தினி லின்றெனும் உண்மை மனக்கொள்ளப்
பேசவே சென்ற கென்னடி! உந்தன் பேச்செல்லாம்
பேசவே செய்தான் ஆசுவால் டெனுமப் பெரியோனே! (84)
85. நிலவிரி மதியுடு விடைவரு வதுபோல் நிரல்நின்று
கலகல வெனவூர் கண்டு களிக்கக் களித்தேயூர்
வலம்வரு போது கென்னடி! உன்பெரு மைகளெல்லாம்
சொலும்வகை செய்தான் ஆசுவால் டெனுமத் தூயோனே! (85)
86. மழகளி றதனிளம் பிடியொடு சோலை மலர்காணூ
வழிவரு போதிடி வீழ்வென நகர்வலம் வருகின்ற
விழவொலி கேட்ட காதப் போதே விதிர்ப்பெய்த
இழவொலி கேட்கக் கென்னடி! யாமுனக் கென்செய்தேம்! (86)
87. கருவிழி யின்றி வெள்விழி பொருளைக் காணுங்கொல்!
இருவிழி யுஞ்சேர்ந் தியல்வதே கண்ணுக் கியல்பேபோல்!
ஒருநிற முயர்வொரு நிறந்தாழ் வெனும்வேற் றுமைபோக்க
வருவது கண்டந் நிறவெறி கொண்டது வரவேற்பே! (87)
88. எந்தா யுலகே வாழ்ந்தது போதும் இனியிவுடல்
இந்தா எனவீந் தேயமெ ரிக்கா வின்முப்பத்
தைந்தா வதுகுடி யரசுத் தலைவ னாவுலகில்
வந்தே புகழுடம் பெய்தினை கென்னடி! வாழியவே! (88)
தலைவர்கள் அச்சம்
கலிவிருத்தம்
89. மாக்கொலைத் துயர்பொறா உலக மன்றினர்
பூக்கொலை போன்றுகென் னடியின் பொன்னுயிர்
போக்கிய கொடுமையைப் போன்ற அத்தகு
கோக்கொலைக் கஞ்சியே ஒன்று கூடினர். (89)
90. மாந்தருள் உவமையில் மாந்தராகிய
காந்தியை லிங்கனைக் கவலை யின்றியே
யீந்திட இன்றுகென் னடியை விட்டதும்
பாந்தநல் லரசியற் பொறுப்ப தாகுமோ? (90)
91. இக்கொலை போலினி ஏற்ப டாவணம்
இக்கொலைக் கேதுல கினிலில் லாமலே
தக்கது செய்தலே தக்க தாமென
ஒக்கவெல் லோருமே உறுதி செய்தனர். (91)
92. கொலையினை வெறுத்தலிற் கொலைக்குக் காரண
நிலையினை வெறுத்ததை மக்கள் நீக்கிடும்
நிலையினை யாக்கல்நன்னெறிய தாமெனத்
தலைவர்க ளொருங்குதீர் மானித் தார்களே. (92)
93. இனவெறி முதலிய கொலைகட் கேதுவாம்
கனையெரி யனையதீக் குணங்கள் கண்டிப்பாய்
இனியுல கத்திடை இருந்தி டாவணம்
சினையற வொழித்திட முடிவு செய்தனர். (93)
94. உடையதம் உடைமையும் உரிமை யுள்ளவும்
அடைதர விடுகிலா தடக்கி யாண்டிடும்
கொடுமையும் கொலைவெறி கொண்டி டாவணம்
விடுதலை வாழ்வினை வகுத்தல் வேண்டினார். (94)
95. படைபெருக் குதல்பகை பெருக்கல் பாழ்ங்கொலைக்
குடையபோர்க் கருவிகள் பெருக்கல் ஒன்றுமே
நடைபெறா துலகிடை நச்சுப் போரையும்
தடைசெயத் துணிந்தனர் தலைவர் யாவரும். (95)
96. அறிவிய லெனவுல கழித்தற் காங்கொடும்
பொறிகளும் அவ்வணு குண்டும் போன்றவை
குறிகொடு செய்திடும் கொடுமை யாயபோர்
வெறியதை யொழித்திட விரும்பி னார்களே. (96)
97. பகையெனும் சுழலிடைப் படாது நட்பெனும்
தகையினில் அவரவர் தத்தம் நாட்டினை
வகையுடன் பசிபிணிவறுமை யின்றியே
மிகையுடன் அமைதியாய் ஆள மேயினார். (97)
அறுசீர் விருத்தம்
98. இன்னொரு படியுங் கேளீர்
எம்மனீர்! உலக நாட்டுள்
என்னென எவ்வெந் நாட்டுக்
கில்லையோ அவையுள் நாட்டார்
தன்னெனப் பிறரை எண்ணித்
தகவுடன் உதவிப் போற்றும்
பொன்னன குணமேற் கொள்வீர்
கென்னடி போல, மேலும். (98)
99. ஒருகுலைக் காய்கள் போல
உலகநா டுகளைக் கொண்டு
திருகுத லின்றி யொன்றிச்
செந்துகிர்க் கொடிபோல் ஒன்றும்
அருகுத லின்றி எங்கும்
ஒப்புர வாக்கி நாளும்
பெருகிய அன்பி னோடு
பேணுதல் கடப்பா டாகும். (99)
100. இற்றென ஒவ்வோர் நாடும்
இனிதர சியற்று மாறு
மற்றதன் எல்லை தன்னை
வரையறுத் திடுதல் வேண்டும்
உற்றஇவ் வுலக மன்றத்
துயர்குடி மக்கள் போல
நற்றக உலகத் துள்ள
நாடுகள் நடக்க வேண்டும். (100)
101. அடிமையா யடக்கி யாளும்
அடாவழக் காய பொல்லாக்
கொடுமைபோய் உலகி லுள்ள
எச்சிறு குட்டி நாடும்
விடுதலை யுடைய தாகி
மேம்பட உலக மன்றக்
குடியர சாக வாழ்வு
கூர்ந்திடச் செய்ய வேண்டும். (101)
102. எச்சிறு நாடே யேனும்
இனியுல கத்தோர் நாடு
நச்சுயிர் கொல்லி போலோர்
நாடுமேற் பாயும் என்ற
அச்சம தின்றி யேதன்
னரசுவீற் றிருக்க வேண்டும்.
இச்செயல் உலக மன்றத்
ததனிடம் இருக்க வேண்டும். (102)
103. ஒவ்வொரு நாடும் தத்தம்
அளவினுக் குகந்தாற் போல
உவ்வுல கத்து மன்றப்
படையைவைத் தோம்பல் வேண்டும்
இவ்வகை யுலக மன்றத்
தாட்சிய தியலு மானால்
அவ்வியம் ஒழியும் என்றார்
அமெரிக்கத் தலைவர் ஜான்சன். (103)
104. ஏற்றநற் றிட்டம் ஆகும்
எனக்குரு சேவும், ஃஓமும்
போற்றுதற் குரிய தெங்கள்
அரசியும் புகழ்வர் என்று
சாற்றவும், உலக நாட்டுத்
தலைவரெல் லோரும் ஆமாம்
மாற்றருந் திட்டம் என்ன
வழிமொழிந் தேற்றுக் கொண்டார். (104)
மேற்படி - வேறு
105. நோயொழிய, நல்வாழ்வு வாழவழி காணலன்றி
நோய்போல் கொல்லும்
தீயவைகா ணலையொழித்தல் தகவெனஇந் தியத்தலைவர்
செப்ப ஃஓமும்
ஏயதென, ஜான்சனும்ஆம் எனக்குருசேவ் இனியுலகோர்க்
கிப்போ ரச்சம்
போயொழியச் செய்திடுவோம் எனஅவையோர் மகிழ்ந்திருகை
புடைத்தே ஆர்த்தார். (105)
முறை மன்றம்
உசாப்பு
கலிவிருத்தம்
106. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது குண்டே,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது வெடியே,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கையே,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன். (106)
107. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் உறுதி,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் உணர்ச்சி,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் உள்ளம்,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன். (107)
108. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது பகையே,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது சினமே,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது பொறாமை,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன் (108)
109. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றத வாவே,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கயமை,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது மடமை,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன். (109)
110. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது பசியே,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது வறுமை,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது மடியே,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன். ( 110)
111. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதவ் வுயர்வு,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது தாழ்வு,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது மானம்,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன் (111)
112. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது சாதி,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது நிறமே,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதவ் வினமே,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன் (112)
113. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது சமயம்
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கட்சி,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கொள்கை,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன். (113)
114. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் அடிமை,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் உரிமை,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் இழிவு,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன். (114)
115. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது தறுகண்,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது வெறுப்பு,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கோழை,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன் (115)
116. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது வெறியே,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது விடாமை,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது செருக்கு,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன் (116)
117. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கடமை,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கொடுமை,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கொலையே,
யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது நான் . . . தான். (117)
விளக்கம்
நடுவர் : யார்கொன்றது, நீயா?
கொலைஞன்; இலை. (இல்லை)
நடுவர் : யார் கொன்றது?
கொலைஞன் : குண்டு.
நடுவர் : யார் கொன்றது, நீயா?
குண்டு : இலை.
நடுவர் : யார் கொன்றது?
குண்டு : வெடி.
நடுவர் : யார் கொன்றது, நீயா?
வெடி : இலை.
நடுவர் : யார் கொன்றது?
வெடி: கை
நடுவர் : யார் கொன்றது, நீயா?
கை : இலை.
நடுவர் : யார் கொன்றது?
கை : என் ஐயன்.
இவ்வாறே கொள்க. ஐயன் என்றது - கொலைஞனை.
வாக்குமூலம்
நடுவர் : அறுசீர் விருத்தம்
118. கொன்றது கொலையே ஒத்துக்
கொண்டது நான்தான் என்று;
சென்றது நிகழ்வ தெல்லாம்
தெளிவுறத் தேர்ந்து மேலும்
ஒன்றிய கரியும் ஏதும்
ஒழுங்குற நூலோ டாய்ந்து
மன்றினீர்! துலாக்கோல் போல
வழங்குக நல்ல தீர்ப்பே. (118)
119. ஏன்கொலை யேநீ கொன்றாய்?
என்னவன் உனக்குச் செய்தான்?
நான்கொலை செய்ய வில்லை,
நடந்ததை நடந்த வாசொல்
வேன்கொலை நான்செய் கில்லா
விடினுல கத்தின் உண்மை
தான்கொலை செய்து கொள்ளும்
சான்றுடன் உசாவித் தேர்மின்! (119)
120. உடலுயிர் ஒன்று கூடி
ஓரறி வுயிரா மாதி
உடலுயி ரினங்கள் தோன்றும்.
உயிரிரண் டொன்று கூடின்
உடலுயிர் ஒன்றித் தோன்றும்.
உடலுயிர் கூட னாற்போல்
உடலுயிர் பிரியும் அந்தத்
தொழிலினுக் குரியன் யானே. (120)
121. தொல்லுல கதனில் செய்யும்
தொழிலினால் பெயருண் டாகிச்
சொல்லுமப் பெயர்பல் வேறு
சாதியாய்த் தோன்றி னாற்போல்,
கொல்லுமத் தொழிலி னாலே
கொலையெனப் பேரு பெற்றேன்.
நல்லது தீய தென்ப
தவரவர் நயக்கு மாறே. (121)
122. வலியவர் வருத்த மெத்த
வருந்தியே உதவி வேண்டும்
மெலியவர்க் குதவி செய்தல்
மேலவர் கடமை யன்றோ?
ஒலிபுன லுலகந் தன்னில்
உற்றுழி யுதவி தன்னைப்
பொலிதரு கடனாக் கொண்டு
போற்றியே வருகின் றேனால். (122)
123. இப்பெரு முலகந் தோன்றி
உயிரினம் இயங்க லான
அப்பொழு திருந்தே கொல்லும்
அத்தொழி லதைமேற் கொண்டேன்.
எப்பெரு முதவி யேனும்
வேண்டுவா ரெவரே யேனும்
தப்புத லின்றிச் செய்யும்
தகுதியு முடையே னையா! (123)
124. பகலவன் தோன்றா னேனும்
பனிமதி தேயா வேனும்
அகலிரு விசும்பி லேனை
யாவுமே காணா வேனும்
புகலரு முயிர்க ளெல்லாம்
பொன்றினும், பொன்றா உண்மை
நகலரு மணுவுங் கூட
நடுநிலை பிறழு கில்லேன் (124)
125. கான்வழி புட்போல் ஏவு
கணையெனப் பறக்க வாய்த்து
வான்வழி சனிவி யாழன்
மதிபுதன் செவ்வாய் வெள்ளி
தான்வழி சென்று வாழும்
தகுதியேற் படினும் ஐய!
நான்வழி வழியா வுள்ள
நடுநிலை தவற மாட்டேன். (125)
126. ஒன்றிய உலகந் தன்னில்
ஓருயி ருள்ள மட்டும்
என்றொழில் ஒழிந்து சோம்பி
இருந்திடேன்; உயிர்க ளெல்லாம்
கொன்றிடும் பகைவிட் டொன்று
கூடியே வாழு மானால்,
அன்றுயிர் கோற லின்றி
அமைதியோ டினிது வாழ்வேன். (126)
127. ஐயயான் தொழில்செய் யேனேல்
அறமெனும் பொருளின் றாகும்,
வையக மதனில் மக்கள்
மாக்களென் வகையின் றாகும்,
மெய்யினை அழித்துப் பொய்யும்
மேம்படும், உயிர்க ளெல்லாம்
செய்யுந செய்யா, வாழ்வு
சீர்குலைந் திடவுஞ் செய்யும். (127)
128. உயிருயி ரில்ல வாக
அமைதரும் உலகந் தன்னில்
உயிருடைப் பொருளில் மக்கள்
உயர்வெனப் பகர்வர் மக்கள்
உயிரொடு பிறந்தொன் றான
உயிர்க்குண மிருவ கைத்தாம்.
செயிரெனுங் குற்றந் தன்னுள்
சினமுதற் குற்ற மாகும். (128)
129. அடைதர விரும்பு மொன்றை
அடைதர முடியா வண்ணம்
தடையது செயினும், நாளும்
தாங்வொண் ணாது மேன்மேல்
உடைதர உள்ளம் பல்வே
றூறுசெய் திடினும், ஆற்றா
திடைதரும் ஒருவன் உள்ளத்
தெரிசினம் எழுந்து தோன்றும். (129)
130. பச்சிளம் குழவி யேனும்
பார்க்குமே தேனு மொன்றை
நச்சிடின் கொடுக்கா விட்டால்
ஞாயர்பால் சினந்தான் கொள்ளும்;
அச்சினந் தோன்ற வேசீ
ராடியே அழுது காட்டும்
இச்சினத் தீயைப் போலோர்
தீயிந்த உலகத் தில்லை. (130)
131. தாயெனப் பாரா, அன்புத்
தந்தையென் றெண்ணா, பெற்ற
சேயெனக் கருதா, வாழ்க்கைத்
துணையெனச் சிறிதும் உள்ளா,
தூயநட் பெனவு நோக்கா,
சுற்றமென் மற்றும் வேண்டா,
தீயினுஞ் சுடலால் மேலோர்
செப்பினர் சினத்தீ யென்றே. (131)
132. அப்பெரு சினத்தீ யால்வெந்
தழலுசூட் டாணி போல,
ஒப்பிய ஒருவ னுள்ளத்
தேபகை உணர்ச்சி தோன்றும்.
அப்பகை யுணர்ச்சி காழ்ப்புற்
றதுநிக ருறுதி யாகி
இப்பெரு முலகி லொன்றும்
எதிரிலாப் பொருள தாகும். (132)
133. மனமெனும் உலையில் தீய
வையெனும் கரியால் மூண்ட
சினமெனும் சுடுசெந் தீயில்
சேப்புறப் பழுக்கக் காய்ந்த
இனமெனுங் குறடு கொண்டே
எடுத்தெதிர் சுடும்ப கைமை
எனுங்கொடும் பொருளைப் போலோர்
கொடும்பொருள் உலகத் தில்லை. (133)
134. வஞ்சம்பொய் களவு சூது
மடமின்னா வறுமை வெஃகல்
வெஞ்சொல்கோள் மானங் காம
வெறிகுடி இழிவாற் றாமை
அஞ்சுமஞ் சுதலஞ் சாமை
செருக்கவா பொறாமை யாதி
நஞ்சுமஞ் சும்ப கைக்கு
நற்படைத் துணைக ளாமே. (134)
135. அப்படைத் துணைக ளோடும்
அத்துணைத் தலைமை தாங்கும்
செப்பருஞ் சினத்தீ யென்னும்
திறலுடை அமைச்ச னோடும்
ஒப்பறு முலகை யாளும்
ஒருதனித் தலைவ னான
அப்பெரும் பகைவன் கொல்லென்
றாற்கொலும் அலுவ லேன்யான். (135)
136. ஐம்புலன் களையும் ஆட்டிப்
படைத்திடும் அவாஅ என்னும்
பம்பியே புதரி னின்று
பாய்ந்துதன் இரையைக் கொல்லும்
வெம்புலி வாழுங் காட்டில்
விட்டமான் குட்டி போல
நம்பியே உள்ளக் காட்டில்
மனமிக நலிந்து வாழும். (136)
137. அவ்வவாப் புலியின் மூத்த
அரும்பெறல் குட்டி யான
ஒவ்வுமோர் பொருளு மின்றி
உயர்ந்துதன் ஒப்ப தான
அவ்விய முதலா வுள்ள
தீக்கொடுங் குணங்க ளான
எவ்வகை யினுநற் பண்பில்
குட்டிகள் இன்னல் செய்யும். (137)
138. மற்றவர் பெருமை கண்டு
மனம்பொறாத் தன்மை யாலே
பெற்றது பொறாமை யென்னும்
பெரும்பெய ரதுவே உள்ளம்
பற்றுதீக் குணங்க ளான
பகைமுத லவற்றுக் கெல்லாம்
உற்றகா ரணமாய்த் தாயின்
தூண்டலால் ஊறு செய்யும். (138)
139. ஈனிய வாழைபோல
இடம்பொரு ளேவல் வாய்க்கின்
தானெனத் தருக்கி ஏனோர்
தமையெலாம் அடக்கி யாள்வோன்
நானெனச் செருக்கி மேலோர்
நடுங்கவே நாளும் வான
மீனெனக் கொடுமை செய்வான்
மிகவெனக் குதவி செய்வான். (139)
140. தீயினால் கருகி வெந்து
சிதைவுறும் பொருளே போல
நோயினால் உடம்பு நொந்து
நுகருறுப் பொருங்கு கெட்டுப்
போயினால் உயிரத் துன்பம்
பொறுக்கிலா தகலுங் காலம்
ஆயினால் இரக்கங் கொண்டப்
பொழுததற் குதவி யாவேன். (140)
141. அரியநச் சுயிர்க ளேது
வாகுமந் நோய்க ளென்னும்
கருவிக ளோடு மற்றைக்
கருவிகள் கொண்டு கொல்வேன்.
பொருகட லுலகந் தன்னில்
புகலென உதவி வேண்டி
வருபவர்க் கெந்த நாளும்
மறுத்திடும் வழக்க மில்லேன். (141)
142. வாய்க்கட னாகக் கேட்டு
வாங்கிய கடனைச் சின்னாள்
போய்க்கடன் கொடுத்தோன் கேட்கும்
போதந்த நன்றி கொன்றோன்,
ஏய்க்கவெப் போது தந்தாய்
என்னவே, வழக்கில் தோல்வி
வாய்க்கவே கொடுத்தோன் நொந்தவ்
வஞ்சனைக் கொலெனக் கொன்றேன். (142)
143. அரும்பொரு ளெனவே வைத்த
அடைக்கலப் பொருளை அன்னான்
பெரும்பொழு தகன்று போந்து
கேட்கவே பீடொன் றில்லான்
இரும்பினை எலிகள் தின்ற
தெனுங்கதை போலக் கூறப்
பெரும்பொரு ளிழந்தான் சீற்றம்
பெருகிக்கொல் லெனவே கொன்றேன். (143)
144. கன்றிய வெயிலில் செய்த
கடுந்தொழிற் குரிய கூலி
இன்றிலை நாளை வாவென்
றிப்படி யேநா டோறும்
சென்றிட நீயெப் போது
செய்தனை வேலை போடா
என்றவன் கடிந்து கூற
எளியவன் வெகுளக் கொன்றேன். (144)
145. பள்ளநீர் வயலில் பாயும்
பான்மைபோல் மிக்க செல்வம்
உள்ளவர் இலார்க்கு நாளும்
உதவியொப் புரவு செய்தல்
தெள்ளிய கடனாக் கொள்ளா
திவறியார் செல்வத் தாலே
வெள்ளையர் கறுப்பர் போல
வேற்றுமை தோன்றக் கொல்வேன். (145)
146. ஒன்றுமே அறியான் பாவம்!
ஊரினும் இலையன் றேனும்
கொன்றனன் எனப்பொய் கூறிக்
கொடுஞ்சிறைப் படவே செய்த
நன்றிலி தனைப்பத் தாண்டு
நலிவுறு காவற் கூடம்
சென்றுமீண் டதுமே தீயிற்
சினந்துகொல் லெனவே கொன்றேன். (146)
147. உள்ளவோர் தொழிலு மின்றி
உடையவர் வீட்டிற் புக்குக்
கொள்ளைகொண் டதனால் வாழும்
கொடுந்தொழி லாள னான
கள்ளனை எதிர்த்த வீட்டுக்
காரனைக் குத்திக் கொன்றேன்.
கள்ளனைக் கொலென வீட்டுக்
காரர்வேண் டிடவே கொன்றேன். (147)
148. கடாப்படி குளத்து நீர்போல்
கலங்கிட மக்க ளுள்ளம்
குடாப்படி நரிபுக் காட்டுக்
குட்டியைக் கொள்ளு மாபோல்,
அடாப்பிடி யாக ஊரார்
அரும்பொருள் கவர்ந்து நாளும்
விடாப்பிடி செய்யும் பொல்லா
வெறியரைக் கொலெனக் கொல்வேன். (148)
149. அஃகிய பொருள்மீக் கூர
அயலவர் பொருளை நாளும்
வெஃகியே அடைதற் கான
வேளைபார்த் துழலல் மேலும்
அஃகிய தாவ தோடே
அச்செயல் அடர்க்கும் வெங்கூர்
எஃகதாக் கொண்டே அன்னார்
இடருற வெகுண்டு கொல்வேன். (149)
150. போதென விளக்கில் வீழும்
விட்டிலைப் போலப் பாரில்
சூதினால் பொருளி ழந்த
துயரினால் என்பால் வைத்த
காதலார் கணக்கில் லாதார்
கடந்தவப் பார தப்போர்
சூதினால் நடந்த தென்னில்
அதன் திறஞ் சொல்லப் போமோ! (150)
151. குடிகுடி யெனவே முட்டக்
குடித்துமே வெறியுங் கொண்டோன்
அடிதடி கலகம் செய்தே
யாதொரு தீங்கும் செய்யா
துடையவர் தம்மைக் குத்திக்
கொல்லென உடனே கொல்வேன்.
குடிவெறி யனையும் மற்றோர்
கொல்லென அடித்துக் கொல்வேன். (151)
152. காய்ச்சிய எண்ணெய் போலக்
கனன்றுமே கொடுவெங் காமத்
தீச்சுடப் பொறுக்க கில்லா
தான்சட்ட திட்டம் பாரான்
பேய்ச்சொறி பிடித்தான் போலப்
பெயர்கெடத் திரிய அன்னான்
தீச்செயல் பொறுக்கா ஊரார்
சினந்துகொல் லெனவே கொல்வேன். (152)
153. அறன்கடை யெனவே பாரா
அற்றம்பார்த் தஞ்சா நாணாப்
பிறன்கடை காத்து நின்ற
பேதையை அடித்துக் கொன்றேன்.
உறங்கிடுங் கணவன் காணா
தகன்றுவந் துடனு றங்கும்
குறங்கிடைக் கழலை போன்ற
கொடியளைக் குத்திக் கொன்றேன். (153)
154. விருப்பெழும் வகையில் நேரில்
கரும்பென விரும்பப் பேசி
விருப்பது வெறுப்ப தாக்கண்
மறைந்ததும் வேம்பின் மிக்க
உருப்படும் வகையிற் பேசும்
ஒழுக்கமில் நீறு பூத்த
நெருப்பன கொடியர் தம்பால்
நிகழ்கொலைக் களவு முண்டோ! (154)
155. தீயினால் சுட்ட புண்ணுள்
ஆறுமா றாது தீயின்
ஆயிர மடங்கு தீய
தாகுமக் கொடிய தான
வாயினால் சுட்ட அந்த
வடுவெனும் வள்ளு வத்தைத்
தோயிலான் சொன்ன வெஞ்சொல்
சுடப்பொறான் சுளிக்கக் கொல்வேன். (155)
156. கொடுக்கினால் மேனி யெங்கும்
கொட்டுகொட் டெனவெ டுக்கு
வெடுக்கெனக் கொட்டுந் தேள்போல்
வேண்டுமென் றேமேல் மேல்மேல்
அடுக்கடுக் காக இன்னா
அடுத்தடுத் தேசெய் தந்தோ!
கெடுத்திடுங் கொடியர் தம்மைக்
கீரைபோல் கிள்ளிக் கொல்வேன். (156)
157. பழியெனப் பெரியோர் நாளும்
பழகிய பழக்கத் தாலே
ஒழியெனப் பழிக்கஞ் சாமல்
ஒழுக்காமக் கொண்டு வாழும்
வழியெனக் கொடுசெய் யொண்ணா
வான்பழி செய்யும் பொல்லார்
விழியிடைப் படாது நல்லோர்
வெறுக்கவே வெகுண்டு கொல்வேன். (157)
158. நாணிலான் தீமை செய்ய,
நன்மையே தேனு மொன்றும்
பேணிலான், அறத்தை வாயால்
பேசிலான், குற்றஞ் செய்யக்
கோணிலான், பழிக்கஞ் சில்லாக்
கொடுமையான், மகன்தா னென்று
தோணிலான் துயரத் தாலே
துடிதுடித் தொழியச் செய்வேன். (158)
159. உடைமையால் தருக்கி மேலோ
ரொடுபகை கொள்ளல், செய்யுங்
கடமையில் தவறல், சாதி
இனநிறம் சமயம் கட்சிக்
கொடுமையால் செருக்கி என்னைக்
கொல்கொல்கொல் என்னல் எல்லாம்
மடமையால் விளைவ தென்னின்
யானதை மறக்கிற் பேனோ? (159)
160. சிறப்பெனப் படுதற் கேது
செய்தொழிற் சிறப்பே யாகப்
பிறப்பினில் உயர்வு தாழ்வு
பேசியோர் சிலரைப் பாவம்
இறப்பவும் இழிஞ ராய்க்கொண்
டிழைக்குமக் கொடுமைக் காற்றாப்
புறப்படும் புரட்சித் தீக்கப்
புல்லியர் விறகாச் செய்வேன். (160)
161. கரும்பறை ஆலைத் தீயில்
விடாய்கொடு கழியத் தாழ்த்துத்
தரும்பிறர் நீரை யுண்ணான்
மானத்தால் தாக்குண் டாவி
பெரும்பொறை எனவே எண்ணி
எண்ணியே பெயர்ந்த யாக்கை
இரும்பொறை போல மாய்ந்தோர்
எத்தனை பேரென் கையால்! (161)
162. பகலிர வின்றிப் பாடு
படட்டுமே பசியைப் போக்க
வகையிலை வறுமை வாட்ட
மனைமக்கள் மயங்கி நிற்கப்
புகையிலை அடுப்பில் உள்ளம்
புகைந்துவெஞ் சினத்தீ மூளப்
பகைகொடெம் உழைப்பால் வாழும்
பதரைக்கொல் லெனவே கொல்வேன் (162)
163. நூறினி லொன்றே யாக
நுவலுமோர் காசுக் காக
மாறுபா டுடைய ராகி
ஏறியே வழக்கு மன்றம்
ஏறுமா றாகச் செல்வம்
இழந்துமே தோல்வி யுற்றோன்
மீறிய மானந் தின்ன
வெகுண்டுகொல் லெனவே கொன்றேன். (163)
164. ஒருசிறு வரப்புக் காக
உடைமையை விடாமை யென்னும்
உரிமையால் காடு தோட்டம்
உள்ளசொத் தெல்லாம் விற்றும்
பெருவழக் கதனில் வெற்றி
பெற்றிடா வருத்தம் தாங்கா
துரிமையை இழந்தோன் வேண்ட
உடைமைகொண் டோனைக் கொன்றேன். (164)
165. தொடுத்தவோர் துணையு மின்றித்
தொடுப்பறு கலப்பை போல
நடுத்தெரு வினிலே வைத்த
விளக்கென நலிந்து பாவம்
அடுத்தவர் தம்மைக் காப்ப
தாகவே உறுதி கூறிக்
கெடுத்தவர் தம்மைச் சீறிக்
கிளையல றிடவே கொல்வேன். (165)
166. தன்னிகர் தமிய ராகத்
தாமெதிர்ப் பட்டே யுள்ளம்
கன்னலி னினிமை போலக்
கலந்தமெய்க் காதல் தப்ப,
மன்னிய உலக வாழ்வை
வெறுத்துயிர் மாய்த்துக் கொண்ட
கன்னியர் காளை யர்தம்
கணக்கென்கைக் கணக்கே யாகும். (166)
167. இட்டுக்கட் டியகட் டுப்பா
டென்னப்பெண் பாற்கு மட்டும்
முட்டுக்கட் டையதா மூடப்
பழக்கமா முடிந்த சாதிச்
சட்டத்தால் தனிமை வாழ்க்கை
தாங்கிய இளைய நல்லார்
கட்டுக்கெட் டொழிந்து பட்டார்
இற்றெனக் கணிக்கப் போமோ! (167)
168. காந்துதிண் கற்புச் செல்வி
கண்ணகி சிலம்பைக் கண்டு
சாய்ந்ததென் குடையென் செங்கோல்
தளர்ந்தது யானே கள்வன்!
ஆய்ந்துபா ராது கொன்றேன்
கெடுகவென் ஆயுள் என்று
நேர்ந்தஅச் செழியன் கோலை
நிமிர்த்தியே அவனைக் கொன்றேன். (168)
169. ஆதகா தெனவே மாறன்
அரசுகட் டிலிலே துஞ்சக்
காதலாற் கட்டுப் பட்ட
காவலன் தேவி கண்டே
மாதுயர் தாங்காள் ஈங்கு
வறிதுயிர் வாழாள் ஏங்கி
ஊதுலைக் குருகு போல
உயிர்த்தனள் உடன்கொன் றேனே. (169)
170. ஆண்டகை தமிழுக் காக
ஆரூயிர் விட்ட பூதப்
பாண்டியன் தேவி ஒன்று
பட்டதால் கைம்மைக் கோலம்
பூண்டுவாழ் வதைநீத் தன்னம்
பூங்கயம் புகுதல் போல
மூண்டெரி கணவ னோடு
மூழ்கவ ளுயிர்கொன் றேனே. (170)
171. தலையிடை யன்பிற் பட்ட
தையலர் கோடா கோடி
அலையிடைத் துரும்பு போற்றம்
ஆருயிர் தன்னை எண்ணி
மலையிடைப் பிறவாப் புள்ளி
மானென மஞ்ஞை யென்னக்
கொலையிடைப் பட்டார் காதற்
கொழுநர் தம்பிரிவாற் றாமே. (171)
172. இத்தகு செய்கை பின்னர்
இயன்றவோர் பழக்கமாகி
அத்தக வுயிரைப் போக்கு
அன்பிலா ரையுங்கட் டாயம்
கத்தியே கதறி யுள்ளங்
கலங்கியே அழுது கெஞ்சச்
செத்ததங் கணவ ரோடு
தீயிடைத் தள்ளிக் கொன்றேன். (172)
173. அத்தகு கொடுமை தன்னை
அகற்றுமுன் மோகன் ராயும்
எத்தனை கோடி கோடி
இளமயி லனையார் தம்மைச்
செத்ததங் கணவ ரோடு
செல்கென இரக்க மின்றி
ஒத்தவோர் கடமை யாக்கொண்
டுடன்கட்டை ஏற்றிக் கொன்றேன். (173)
174. சாதியி லுயர்ந்த சாதி
தாமெனத் தருக்கி வாழ்வோர்
சாதியில் தாழ்ந்த சாதி
யாமெனத் தாழ்த்தப் பட்டோர்
சாதியி லுயர்ந்த சாதிச்
சட்டதிட் டங்கள் தப்பின்
சாதியி லுயர்ந்தோர் சீற்றந்
தணியுமா றடித்துக் கொல்வேன். (174)
175. மாக்களி லுயர்ந்தோர் மக்கள்
மக்களில் வெள்ளை மக்கள்
மீக்குலம்; கரியைப் போலும்
மேனியார் இழிந்தோ ராவர்
நீக்குக அணுகா தென்னும்
நிறவெறி யவனைக் கொன்று
காக்குக எனவே அந்தக்
கயவனைக் காய்ந்து கொன்றேன். (175)
176. நீக்கரோ நிறத்தில் தாழ்ந்த
நிறமென நினைக்கும் வெள்ளை
மாக்களின் கொடுமை தாங்கா
மக்களுக் கிரங்கி யுள்ளம்
போக்கியே உயர்வு தாழ்வைப்
பொன்னுட னிரும்பை யொன்றாய்
ஆக்கிட முயல்வோ னைக்கொன்
றருளுதி எனவே கொன்றேன். (176)
177. அன்றிதற் காக வேதான்
ஆபிரகாம் லிங்கன் தன்னைக்
கொன்றனன் உயர்ந்தோர் வேண்டிக்
கொண்டதால் ஒருவன் மூலம்;
பின்றையும் இதனுக் காகப்
பெருங்கொலை பலசெய் துள்ளேன்.
இன்றுகென் னடிகொ லைக்கும்
இத்தொடர் பிலாம லில்லை. (177)
178. எம்மின மொன்றே மக்கள்
இனத்தினி லுயர்ந்த தென்றச்
செம்மன மில்லா இட்லர்
செருக்குடன் கூறி யூதர்
தம்மினம் எமது நாட்டில்
இருப்பது தகுதி யன்றால்,
அம்மர பினரைக் கொல்லென்
றாணையின் படியே கொன்றேன். (178)
179. இனவெறி பிடித்த இட்லர்
ஈசலைப் போல மக்கள்
இனமதை எண்ணி யேயோர்
இடத்தினி லடைத்த டைத்தே
மனவெறி யடங்கு மட்டும்
வன்கொலை செய்செய் செய்செய்
எனவேயை யைந்து நூறா
யிரரைமின் விசையாற் கொன்றேன். (179)
180. அன்றன்றங் கங்கே ஆறாம்
அறிவின்றித் தாறு மாறாய்க்
கொன்றொன்று குவிக்கும் கண்ட
பேர்களைக் குலைந டுங்கக்
கன்றொன்று மவ்வ குப்புக்
கலகங்க ளினிலே அந்தோ!
வென்றொன்று மிலைவ குப்பு
வெறியினால் விரைந்து கொல்வேன். (180)
181. செந்தமிழ் மாறன் செங்கோல்
முறையது திரிந்தே அந்தோ!
மந்திரி மனைவி தம்மால்
மதவெறி தலைமீக் கொள்ள
எந்தமிழ் மக்கள் எண்ணா
யிரவரைக் கழுவி லேற்றி
அந்தகோ! கொல்லெ னாமுன்
அழவழக் கொன்றிட் டேனே. (181)
182. கல்லெனாக் கடின வுள்ளப்
பல்லவன் கடமை தப்பி
இல்லெனா உயிர்போல் நாவுக்
கரசருக் கிழைத்த அந்தச்
சொல்லொணாக் கொடுமை யெல்லாம்
சமயத்தின் தொடக்கா லன்றோ?
கொல்லெனாச் சொல்லா தாலே
கொன்றிலேன் அரசை யன்றே. (182)
183. தென்றமிழ் நாட்டை யன்று
சீர்குலைத் ததனைப் போல
அன்றுமே னாட்டில் ஆளும்
அரசொடு சமயம் பின்னி
ஒன்றல பலநூற் றாண்டு
சமயத்தின் உரிமைப் போரில்
கொன்றுயான் குவித்தேன் வேண்டிக்
கொளக்கொள அங்கு மிங்கும். (183)
184. அன்றிருந் தின்று காறும்
அகம்புறச் சமயப் போரால்
ஒன்றொரு சமயத் துள்ளே
உள்ளவுட் பிரிவுப் போரால்
வென்றிதோல் விக்காச் செய்யும்
வேந்தர்போல் செய்த போரால்
கொன்றவன் கொலைகள் வெம்போர்க்
கொலையினும் கொடிதே யய்யா! (184)
185. ஒருமனப் பட்டு வாழும்
ஊரினை ஏய்த்து வாழ்வோர்
இருமனப் பட்டவ் வூரை
இரண்டுகட் சிகள தாக்கிக்
கருமனப் பட்டே அவ்வூர்க்
கட்சிக ளொன்றை யொன்று
செருமனப் பட்டே தாக்கச்
சினந்திரு மாட்டுங் கொல்வேன். (185)
186. எனதுயர் கட்சி தன்னை
இகழுநை, இகழ்ந்தெ திர்க்கும்
உனதுயிர் குடிப்பேன் என்னும்
உணர்ச்சியா லுந்தப் பட்டுத்
தனதுயிர் எனுமக் கட்சி
வெறிதலைக் கேறத் தானே
அனையவன் வெகுள அந்த
எதிர்க்கட்சி யானைக் கொல்வேன். (186)
187. அறிவினால் நாட்டு மக்கட்
காய்ந்துநல் லனசெய் யுஞ்செந்
நெறியென அமைத்துக் கொண்ட
நெறியதற் கெதிர்மா றாகப்
பொறியினால் கருத வொண்ணாப்
புன்மைய தான கட்சி
வெறியினா லேயான் கொன்ற
அளவினை விளம்பப் போமோ! (187)
188. மடமையும் பசியும் நோயும்
வறுமையும் வருத்தத் தண்டக்
கடுமையும் உரிமை யின்றிக்
கலங்கிய உரசை மக்கள்
அடிமையை அகற்று மாறு
வேண்டஅவ் அடக்கி யாண்ட
கொடியனா கியஜார் மன்னன்
குடியடி யோடு கொன்றேன். (188)
189. அடிமையின் சின்ன மான
ஆங்கில ஆட்சி யாளர்
கொடுமையைப் பொறுக்கி லாது
கொதித்துளங் குமுறிச் சீறி
விடுதலை வேட்கை பொங்கி
வெடித்தெழு புரட்சி வீரர்
சுடுதொழி லாளர் தம்மைச்
சுட்டுக்கொல் லெனவே கொன்றேன். (189)
190. அடுதொழி லவராம் வெள்ளை
ஆட்சியா ரடக்கி ஆண்ட
கெடுபிடி தாக்கி லாது
கிளர்ந்தெழும் இந்நாட் டாரைச்
சுடுதொழில் டையர்கை யோயச்
சுட்டுத்தள் ளியபஞ் சாப்புப்
படுகொலை போலப் பின்னும்
பலபடு கொலைகள் செய்தேன். (190)
191. வீரமே யுருவா நாட்டு
விடுதலைக் காக வெள்ளைக்
காரர்க ளொடுபோ ரிட்ட
கட்டபொம் மனையும், வெள்ளைக்
காரரை வெருட்டி யேதாய்
நாட்டையைந் தாண்டு காத்த
சூரனாம் தீரன் சின்ன
மலையையும் தூக்கிக் கொன்றேன். (191)
192. அயிரத் தெண்ணூற் றைம்பத்
தேழினில் அடிமை வாழ்வு
போயொழிந் திடவே வீரர்
விடுதலை யுணர்ச்சி பொங்க
ஏயென வேபு ரட்சிக்
கொடியுயர்த் திடவே யன்று
மேயவவ் வுரிமைப் போரில்
வியந்திரு புறமுங் கொன்றேன். (192)
193. எட்பக வளவும் தோன்றா
திருந்துமே வெளிக்கு மிக்க
நட்புற வுடைய னாக
நடந்துநம் பிக்கை வைக்க
மட்பகை வனுக்குக் காட்டிக்
கொடுத்திடும் வஞ்ச நெஞ்ச
உட்பகை வனைக்கொல் லென்னா
உடன்துடித் திடவே கொல்வேன். (193)
194. ஊருடன் பகைகொண் டூரை
ஒருபொருட் டாயெண் ணாமல்
நீருடன் பகைகொண் டுள்ள
நெருப்பென நீக்குப் போக்கில்
பூரிய னொருவன் செய்யட்
டூழியம் பொருக்கா ஊரார்
வேருடன் கொல்க என்று
வெகுளஅவ் வாறே கொல்வேன். (194)
195. அடுத்தவர் நாட்டை வென்றே
ஆண்டபே ரரசெ னப்பேர்
எடுத்திட வேண்டு மென்றே
எழுந்தபே ராசை யாலே
கடுத்தபோர் மறவ ரோடு
கரிபரி தேர்க ளென்னத்
தொடுத்தநாற் படைக ளோடு
சென்றுபோர் தொடுக்கக் கொன்றேன். (195)
196. எதிரெதி ராக வீரர்
எனச்சொலி நிறுத்தி வானின்
அதிரவே முரசம் வேல்வாள்
அம்புகள் மின்னின் மின்னி
உதிரவே அங்கு மிங்கும்
குருதியா றோடக் காண்போர்
விதிரவே உயிரும் மெய்யும்
வேறுவே றாகக் கொன்றேன். (196)
197. நாள்செலச் செலவே போரும்
நாகரி கத்த தாக,
வாள்செல வேல்வில் லோடு,
வந்தன வெடியும் குண்டும்,
கோள்சொல்வார் போல வந்து
குறுக்கிட வான்போர், வன்மைத்
தோள்செலக் குண்டு மாரி
சொரிந்துகொல் லெனவே கொன்றேன். (197)
198. உளத்திலே உவகை பொங்க
உடனுறைந் தின்பந் தந்து
வளத்திலே மிகுந்த வாழ்க்கைத்
துணைவியை மாற்றார் கொள்ளக்
குளத்திலே குவிந்த கொட்டிப்
பூவெனக் கொடுமைக் கஞ்சாக்
களத்திலே பட்ட மன்னர்
களைக்கணக் கிடுதற் காமோ! (198)
199. கரிபரி மறவ ரோடு
களத்திடைப் பொருத மன்னர்
இருவரும் வேல்வா ளோச்சி
எதிரெதிர் பொருது நின்றே
ஒருவரும் ஒழியா தந்தோ!
ஒருகளத் தொழிந்த அந்த
வெருவரு காட்சி கண்டு
வியந்ததற் களவு முண்டோ! (199)
200. போரெனக் கேட்கின் தோளைப்
புடைத்தெழுந் துருத்துச் சீறி
யாரெனக் கெதிர்நிற் கிற்பார்
இவ்வுல கத்தி லென்றே,
காரெனக் கடிது சென்று
களத்திடைப் பொருது வீழ்ந்த
வீரர்கள் தொகையிற் றென்று
விளம்புதற் குரிய தாமோ! (200)
201. ஆட்சியேற் பட்ட காலத்
திருந்துமண் ணாசை யாலே
மாட்சிய தாகப் போரை
மதித்துமண் ணாண்ட மன்னர்
நீட்சியாய்ப் படையைக் கொண்டு
நிறுத்தியே பொருது கொல்லும்
காட்சியைக் கண்டு கண்டு
களிப்புறக் களித்து வந்தேன். (201)
202. ஒன்றிரண் டுலகப் போரில்
உலகநா டுகளே யெல்லாம்
நின்றிரண் டாகக் கூடி
நிலங்கடல் வான மெங்கும்
பொன்றுக எனவே குண்டு
மாரியா! பொழிந்தை யோடா!
கொன்றத னளவைக் கேட்கின்
கோடியே கோடிப் போகும். (202)
203. மாறுபட் டெழுந்து ஜப்பான்
வலிந்துபோர் வெறிகொண் டாட
ஊறுபட் டியலி ரண்டாம்
உலகப்போர் முடிய வேண்டி
நீறுபட் டொழிய வென்றே
நேயநா டுகள்வேண் டப்போர்
கூறுபட் டொழிய ஜப்பான்
மேலணு குண்டு போட்டேன். (203)
204. இங்ஙனம் உலகில் யான்நச்
சுயிர்பிணி கருவி ஏனை
அங்கியல் பொருளால், தீய
குணங்களால், அழலைப் போலப்
பொங்கிய சினத்தால் தோன்றும்
பகைமையால் போரால் நாளும்
மங்கல மாகக் கொல்லும்
தொழில்செய்து வாழ்கின் றேனால். (204)
கென்னடி செய்த குற்றம்
205. கொலைசெயற் கேது வாகக்
கென்னடி செய்த குற்றம்,
மலைநிலங் கடல்தீ காற்று
வானினும் பெரிய வாறாம்.
உலகையோர் நொடிக்குள் ளாக
ஒழித்திடும் அணுகுண் டாய்வை
வலிகெடும் படிநி றுத்தி
வைத்ததோர் பெரிய குற்றம். (205)
206. கொடையெனா முன்னம் பற்றாக்
குறையுடை நாட்டுக் கெல்லாம்
தடையிலா தளித்த ளித்துத்
தமிழ்ப் பழஞ் செல்வர் போல,
உடையஅவ் வேற்றத் தாழ்வை
ஒழித்துமே உலக மெல்லாம்
நடைபெற வேயொப் பாக
நடந்ததி ரண்டாங் குற்றம். (206)
207. படைவலி மிகவே யுள்ள
நாடுகள் பகைத்து வன்மை
உடையவல் லரசுப் போட்டி
யால்நிகழ் உலக மாப்போர்
நடைபெறா தமைதி யோங்க
நஞ்சன படைப்பெ ருக்கத்
தடைசெய முயன்று வந்த
தகைமையே மூன்றாங் குற்றம். (207)
208. குன்றமும் கடலும் போலக்
கொள்கையால் வேறு பட்டும்
ஒன்றிய அமைதி யோடிவ்
வுலகமின் புற்று வாழ்தல்
நன்றெனக் குருசே வோடு
நட்புக்கொண் டுலகை யோம்பும்
மன்றினில் தலைமை பூண்டு
வந்ததே நாலாங் குற்றம். (208)
209. வலியவர் வலியி லாதார்
மண்ணினைக் கொள்ள வேண்டி
வலியவந் நாட்டின் மீது
பாய்ந்துமே வருதல் கண்டு
மெலியவர் மெலிவைப் போக்க
வேண்டிய உதவி செய்தவ்
வலியவர் செருக்கைப் போக்கி
வந்ததே ஐந்தாங் குற்றம். (209)
210. நீக்கரோக் களையும் வெள்ளை
நிறத்துமக் களையும் ஒன்றாய்
ஆக்கிவெள் ளையரைத் தாழ்த்த
அவன்றலைப் பட்ட தாலே
மேக்குலத் தவர்க ளான
வெள்ளையர் பெருமை தன்னைக்
காக்கவே ஆசு வால்டின்
கையினால் சுட்டுக் கொன்றேன். (210)
211. மற்றினிக் கூறு தற்கு
மாற்றமொன் றில்லை, வாழ்வில்
உற்றவென் செயற்பா டெல்லாம்
உள்ளதை யுள்ள வாறே
சொற்றனன் விடாம லொன்றும்,
தொழில்முறைப் பட்டே னல்லால்
குற்றமொன் றில்லேன்; ஆய்ந்து
கூறுக நல்ல தீர்ப்பே. (211)
தீர்ப்பு
தாழிசை
212. அன்பருள் ஒழுக்கம் வாய்மை
அறம்நடு நிலைமை சால்பு
தென்பெனும் அவ்வ றங்கூ
றவையத்தார் தேர்ந்து கூற; (212)
213. படுங்குணம் குற்றம் நாடிப்
பகுத்தறி வெனுந்தீர்ப் பாளர்
கொடுங்கொலை வழக்கைக் கேட்டுக்
கூறுவார் நல்ல தீர்ப்பு. (213)
தாழிசை - வேறு
நடுவர் :
214. உள்ளபடி நடந்ததனை உள்ள வாறே
ஒன்றனையும் ஒளிக்காமல் உள்ள வாறே
எள்ளளவு மேனும்பொய் கலவா வண்ணம்
இனிதுரைத்த கொலைஞனுரை தன்னை நோக்கின்; (214)
215. இக்கொலைக்கும் இன்னுமெக் கொலைக்குங் கூட
இக்கொலைஞ னொருதொடர்பும் இல்லா னாவான்;
எக்கொலைக்கும் தொடர்பில்லான் ஆகை யாலே
இவனைவிடு தலைசெய்கின் றேன்காண். ஆனால், (215)
216. உலகமக்க ளோடமைதி ஏங்கச் சென்ற
உயர்தலைவன் கென்னடிபோன் றுலகம் போற்றும்
பலதலைவர் கொலைக்குங்கா ரணம்யா ரென்று
பார்க்கினத னுண்மைபுலப் படுங்கண் டீரே. (216)
217. மூலமதை விட்டறுகைப் பிடுங்கின் முன்போல்
முளைகிளம்பும், அதுபோலக் கொலைக்குண் டான
மூலமதைக் கண்டுகளை யாது விட்டால்
முன்போலக் கொலைநிகழு முறைதப் பாதே. (217)
218. சுட்டவனை விட்டுவெடி தனைநோ தல்போல்
துணிந்துகொலை செயவிவனைத் தூண்டி னாரை
விட்டிவனைக் கொலைஞனொன்று பட்டஞ் சூட்டல்
வெடியைவிட்டுக் குண்டதனை வெறுத்தல் போலும். (218)
குறள் வெண்டுறை
219. வெண்ணிறமும் செந்நிறமும் மேலான தாகுமென
எண்ணிக் கருநிறத்தை எள்ளும் நிறவெறியும்; (219)
220. எம்மினமே மேலா மினமாமற் றேனையவை
எம்மினத்துக் கீடலவென் றெண்ணும் இனவெறியும்; (220)
221. எஞ்சாதி யேயுயர்ந்த சாதிமற் றேனையவை
எஞ்சாதி யிற்றாழ்ந்த தென்னுஞ்சா தித்திமிரும்; (221)
222. ஒன்றே குலமென்னும் உண்மையுண ராதுயர்தாழ்
வென்றே பலசாதி இனநிற வேற்றுமையும்; (222)
223. இனம்போ லெரிசினங்கொண் டெதிர்ப்பட்ட பேரையெலாம்
மனம்போன வாறுகொல்லும் வகுப்பு வெறிச்செயலும்; (223)
224. எஞ்சமய மேசிறந்த தேனைச் சமயமெலாம்
எஞ்சமயத் திற்றாழ்ந்த தென்னு மதவெறியும்; (224)
225. எங்கொள்கை யேசிறந்த கொள்கைமற் றேனையவை
எங்கொள்கை யிற்றாழ்ந்த தென்னுங்கொள் கைவெறியும்; (225)
226. எங்கட்சி யேசிறந்த கட்சிமற் றேனையவை
எங்கட்சி யிற்றாழ்ந்த தென்னுங்கட் சிவ்வெறியும்; (226)
227. ஆளப் பிறந்தவர்யாம் அல்லாரெம் மாலடக்கி
ஆளப் படப்பிறந்தார் எனுமாதிக் கவ்வெறியும்; (227)
228. இவ்வுலக மெல்லாமென் ஏவலின்கீ ழாகவென
அவ்வகையி லேமுயலும் அவ்வதிகா ரவ்வெறியும்; (228)
229. அயலா ருடைமையைத்தான் ஆளவெண்ணி யேயடைய
முயலு முயற்சியுமம் முறையில் தகாவொழுக்கும்; (229)
230. தக்க வழியிலன்றி யேதகா தவ்வழியில்
புக்க கொடிய பொருந்தாக்கா மப்பெருக்கும்; (230)
231. உடைய பிறப்புரிமை யுள்ளபடி யவ்வவர்கள்
அடைய விடாதடக்கி யாளுமடக் கும்முறையும்; (231)
232. தேடா திருந்துழைத்துத் தேடியதை உண்டுறங்கும்
பாடா வதித்தனமும் பண்பிலா டம்பரமும்; (232)
233. அழுக்கா றவாவெகுளி அஞ்சுதலஞ் சாமையெலாம்
ஒழுக்காறாக் கொண்டே ஒழுகுகய மைத்தனமும்; (233)
234. நன்னலமும் தன்மான நல்வாழ்வை யுங்கெடுக்கும்
தன்னலமும் தற்புகழும் தற்பெருமை யுந்தருக்கும்; (234)
235. பொறியும் புலனுமனப் போக்குமிணங் காச்செலவும்
அறிவதறி யாமையொட டங்காமா றித்தனமும்; (235)
236. எண்ணித் துணியா இழிகுணமும்; எண்ணியதைப்
பண்ணு மிழிவு மக்கட் பண்பொடுப டாச்செயலும்; (236)
237. பொல்லாப் பகைக்குணமும் போர்வெறியும் ஆறறிவுக்
கொல்லாப்புன் தீக்குணமாம் உள்ளவை அத்தனையும்; (237)
238. ஆகுங் கொலைகளுக்குக் காரணங்கள் ஆகையினால்
ஆகுமிவையேகுற்ற வாளிக ளாகையினால்; (238)
239. வாளாப் படுகொலைசெய் மாகொடுமிப் பாவிகளே
மீளாக் கடுங்காவல் வெஞ்சிறைபு கற்குரியார்; (239)
240. குணியொடு தோன்றியதன் கூட அழிதலினால்
குணியைவிட் டுக்குணத்தைக் கொல்லுதலுங் கூடாதே. (240)
241. கொல்லுங் கொடியபெருங் குற்றத்திற் காத்தூக்கிக்
கொல்லல் கொலைக்குற்றம் ஆகுங் குறித்தறிவீர். (241)
உலகோர் அச்சம்
அடிமடக்கி வந்த கொச்சகம்
242. கொல்லுதலை யேதொழிலாக் கொண்ட கொலைமகனைக்
கொல்லவில்லை யென்றறவோர் கூறினரா மேதோழீ!
கொல்லவில்லை யென்றறவோர் கூறினரே யாமாயின்,
நல்லவர்கட் கிவ்வுலகில் நன்மையிலை யோதோழீ!
நன்மையுண்டேல் கென்னடியை நாமிழப்பே மோதோழீ! (242)
243. கெடுதலை யேதொழிலாக் கொண்டவக் கீழ்மகனை
விடுதலைசெய் தேயறவோர் விட்டனரா மேதோழீ!
விடுதலைசெய் தேயறவோர் விட்டனரே யாமாயின்,
வடுவிலார் இவ்வுலகில் வாழ்வதரி தோதோழீ!
வாழ்வதெளி தேல்தலைவன் மறைந்திருப்பா னோதோழீ! (243)
244. மாதலைவன் கென்னடியை வன்கொலைசெய் புல்லியனை
ஏதுமறி யாதவனென் றியம்பினரா மேதோழீ!
ஏதுமறி யாதவனென் றியம்பினரே யாமாயின்,
மாதலைவர் கள்வாழ வகையினியின் றோதோழீ!
வாழவகை யற்றவர்க்கு வகையினியின் றேதாழீ! (244)
245. உலகத் தலைமகனை ஓகொன்ற பூரியனைக்
கொலவிலையென் றேதீர்ப்புக் கூறினரா மேதோழீ!
கொலவிலையென் றேதீர்ப்புக் கூறினரே யாமாயின்,
உலகிலுயர்ந் தோர்வாழ்தற் குரிமையிலை யோதோழீ!
உரிமையன்றோ கென்னடியின் உயிர்குடித்த தேதோழீ! (245)
246. மக்களைவாழ் விக்கவந்த மாமகனைக் கொல்கொலைஞன்
எக்கொலைக்கு மேதொடர்பில் லாதவனா மேதோழீ!
எக்கொலைக்கு மேதொடர்பில் லாதவனே யாமாயின்,
தக்கோர் வாழ் தற்குலகில் தகவிலையே யோதோழீ!
தகவிருந்தால் கென்னடியைத் தானிழப்பே மோதோழீ! (246)
உலகோர் பழித்தல்
கொச்சகம்
247. கொன்றெந்தை யைத்தாயும் யாங்களும் கோவென்று
நின்றழச் செய்தவனை நல்லன் நெறிபிறழான்
என்றறவோர் கூறியதும் இயல்பேதான் போலும்!
இனிவாய்மைக் கிவ்வுலகில் இடமில்லைப் போலும்! (247)
248. கொன்றெந்தை யைத்தாயைக் கோவென்று யாங்கதறி
நின்றழச் செய்தவனை நல்லன நெறிபிறழான்
என்றறவோர் கூறியதும் இயல்பேதான் போலும்!
இனிவாய்மைக் கிவ்வுலகில் இடமில்லைப் போலும்! (248)
249. கொன்றெங் குழவிகளைக் கோவென்று யாங்கதறி
நின்றழச் செய்தவனை நல்லன் நெறிபிறழான்
என்றறவோர் கூறியதும் இயல்பேதான் போலும்!
இனிவாய்மைக் கிவ்வுலகில் இடமில்லைப் போலும்! (249)
250. கொன்றென் கொழுநனைக் கோவென்று யாங்கதறி
நின்றழச் செய்தவனை நல்லன் நெறிபிறழான்
என்றறவோர் கூறியதும் இயல்பேதான் போலும்!
இனிவாய்மைக் கிவ்வுலகில் இடமில்லைப் போலும்! (250)
251. கொன்றென் துணைவியைக் கோவென்று யான்கதறி
நின்றழச் செய்தவனை நல்லன் நெறிபிறழான்
என்றறவோர் கூறியதும் இயல்பேதான் போலும்!
இனிவாய்மைக் கிவ்வுலகில் இடமில்லைப் போலும்!
என்று - தனிச்சொல் (251)
252. தாயைத் தந்தையை இழந்த சேயரும்,
சேயை இழந்த தாயும் தந்தையும்,
மனைவியை இழந்த கணவனும், கணவனை
இழந்த மனைவியும் அழுந்திய துயரால்
விடுதலை செய்ததை வெறுத்துப்
படுகொலை யாளியைப் பழித்தனர் மன்னே.
இது - ஆசிரியச் சுரிதகம். (252)
உலகோர் வெறுத்தல்
எண்சீர் விருத்தம்
253. கல்லேனுங் கரையுமுளம் கரையாப் பாவி!
கடுங்கொலைஞா! எம்காந்தி அடிகள் தம்மைக்
கொல்லாம லிருந்திருந்தால் அணுகுண் டென்னும்
கொடுஞ்செல்வப் பெருக்கினால் கொக்க ரிக்கும்
பொல்லாய்எம் மான்உலக மன்றத் தின்கண்
பொலிந்தமைதி புடையமர உலக மக்கள்
எல்லாரும் ஒருங்கன்புற் றினிது வாழ
இவ்வுலக மன்னவனா இருப்பா ரன்றோ! (253)
254. அடுங்கொலைஞா! என தருமைப் புதல்வ னான
ஆபிரகாம் லிங்கனைக்கொன் றிலையே யானால்
நெடுங்கொலைக்குக் காரணமா கியவப் பொல்லா
நிறவினவேற் றுமையொழிந்து நெடுநா ளாகிப்
படுங்கொலையால் கென்னடியை இழந்தே வாடும்
படியிருக்கா தென்றமரிக் கத்தா யேச,
ஒடுங்கியுளம் உட்கியவக் கொலைஞன் பாவம்!
ஒருவழியுந் தோன்றாமல் உழல லானான். (254)
255. நிறவெறிக்கீங் கிரையாகா தெம்மைக் காத்தந்
நிறவெறியை யொழிக்கமுனைந் ததனுக் காக,
அறநெறிக்கப் பாற்படுபுன் மாக்கட் காக
ஆகெடுவாய் கென்னடியை ஐயோ கொன்றாய்!
புறவெரிக்கும் விலங்கினம்போல் அழிந்தொழிந்து
போகாயோ எனநீக்க ரோக்கள் ஏச,
குறிபிழைத்த காதலர்போல் உள்ளஞ் சோம்பிக்
குறுகுறுத்தக் கொலைமகனுங் கொடுகிப் போனான். (255)
256. பொல்லாத படுகொலையா! நில்லா தீங்கு
போபோபோ கொடி யவென உலக மக்கள்
எல்லோரும் இகழ்ந்தொதுக்க அவனும் பாவம்!
இருக்கவிடம் அறியாதிவ் வுலக மெங்கும்
செல்லாத காசாகிச் சிறுமை யுற்றுத்
திசைகெட்டு மதிகெட்டுத் தேம்பி நொந்து
நில்லாத நிலையாகி விட்டு நீங்கா
நிழல்போலத் துயரமொடு நெக்கு நின்றான். (256)
257. கட்டழகும் இளம்பருவத் துடிப்பும் கண்டோர்
கண்கவரும் திருவுருவும் கருத்தி னுள்ளே
இட்டெழுதிப் பார்த்துவக்கும் எழிலுங் கண்டே
எல்லோரும் அமைதியெனும் இனியாள் அன்பில்
பட்டெவரும் முகமெடுத்துப் பாரா ராகப்
பாவியந்தக் கொலைஞனுந்தன் பழைய போக்கை
விட்டெவருந் துணையில்லாத் தனிய னாக
வெறுமைநிலை யினில் வாழ்வை வெறுத்து வந்தான். (257)
258. மாக்கொலைக்குக் காரணங்க ளாகி மக்கள்
மாக்களினும் கீழாக வாழச் செய்யும்
தீக்குணங்க ளத்தனையும் கடின காவல்
சிறையிருக்கப் பகைவனுந்தன் திறமை குன்றிப்
போக்கிடமற் றெங்கேயோ ரிடத்திற் புக்குப்
புற்கென்று தான்முடங்கிப் படுக்க லானான்.
ஈக்கொலைக்கும் சிலந்திமுயல் கில்லா வாக
இயல்திரிந்து கொலைஞனுமாங் கிருக்க லானான். (258)
அமைதி இரங்கல்
வெண்பா
259. மன்ற மழவுலக மக்களழக் கென்னடியைக்
கொன்ற கொலைஞனைக் குற்றமற்றோன் - என்றே
அறங்கூ றவையத்தார் ஆய்ந்துரைத்த தீர்ப்பின்
திறங்கூறி யேங்குமமை தி. (259)
260. என்னை யழத்தனிவிட் டெந்தையை என்னருமை
அன்னை யழக்கொலைசெய் யன்னவனை - என்னை!
அடுதலைசெய் திட்டிலனென் றெல்லா! அறவோர்
விடுதலைசெய் திட்டனரா மே. (260 )
261. இந்த இளம்பருவத் தென்னோ டனையழவென்
தந்தை தனைக்கொல் தகவிலனை - அந்த
அறங்கூ றவையத்தார் ஆய்வதனை நோக்கின்
புறங்கூ றவையத்தார் போன்ம்! (261.)
262. பட்டப் பகலில்மக்கள் பார்த்திருப்ப எந்தைதனைச்
சுட்டுக்கொன் றிட்டவனைத் தூயனென - விட்டுவிட்ட
அம்முறை மன்றத் தவர்தீர்ப்பை ஆராயின்
இம்முறை மன்றமினி யேன்? (262)
263. அன்னாய்! இனவெறியும் அத்தகைய தீக்குணமும்
கொன்னேயுன் தந்தையைக் கொன்றனவாம் - அன்னான்
அவைதூண்ட லால்கொன்ற தாலவனை விட்டே
அவைதமைச்சி றையிலிட்டா ராம். (263)
264. அப்படி யா! வுண்மை யாகவா? இப்போது
செப்படி யாதவன் செய்கின்றான்? - இப்போ
தமைதி யுடனிருக்கின் றானாம்போ ஏடீ!
அமைதி யுடனிருப்பி டம். (264)
265. அமைதி யுடனென்ற அச்சொல்லும், அன்னான்
அமைதி யுடனிருக்கும் அஃதும் - அமைதியின்
உள்ளத்தே சென்றதவள் உள்ளம் உளப்படுக்கக்
கள்ளத்தே சென்றதவள் கண். (265)
266. கொண்ட கொலைத்தொழிலை விட்ட குணக்குன்றைக்
கண்டு மகிழவுளங் கண்ணினாள் - வண்டலிடைப்
பாய்மா கடல்சூழப் பட்டுத் திகழுலகத்
தாய்மா மகளமைதி தான். (266)
கொலைஞன் வருந்தல்
தாழிசை
267. தெருக்கூட்டி மலமெடுத்தூர்த் துப்புரவு செய்யுநரைத்
தீண்டாதா ரெனத்தாழ்த்திச் சிறுமையுறச் செய்வதுபோல்,
கருங்கூட்டி லிருந்துயிரைக் கவலையறக் கொல்வதையே
கடப்பாடாக் கொண்டவெனைக் கயவனென இகழுநரே! (267)
268. தலைக்கழகு தருங்கூந்தல் அழகியவள் தனைப்பறட்டைத்
தலைச்சியெனப் பழம்பெயரால் தானழைக்கு மதுபோலக்
கொலைத்தொழிலை விடுத்துயர்நற் குணத்தொடுவாழ் இப்பொழுதும்
கொலைஞனென முன்போலக் கூப்பிடுதற் கென்செய்கேன்? (268)
269. அக்கொடிய தீக்குணங்க ளாகியவை அத்தனையும்
அருங்காவற் சிறையிருக்க யாருமற்ற ஒருதனியேன்
எக்கொடிய தீச்செயலும் எண்ணாமல் என்பாட்டில்
இருப்பதறி யாதுலகோர் இனுமிகழ்தற் கென்செய்கேன்! (269)
270. திருட்டைவிடி னும்பழைய திருடர்களை நம்புவரோ?
தில்லுமுல்லை விட்டிடினும் தெளிவாரோ புரட்டர்சொலை?
வெருட்டியுயிர் கொலுந் தொழிலை விட்டிடினும் எனைக் கண்டால்
வெருண்டோடிப் பழித்துலகோர் வெறுப்பதனுக் கென்செய்கேன். (270)
271. வெங்கொடுங்குண் டிலையெனினும் வெடிக்கெதிர்நிற் பவருண்டோ?
விளையாட்டா வேலெறியின் மெய்யினிற்பட் டுருவாதோ?
எங்கொடுங்கொல் தொழிலினைவிட் டிருந்தாலும் எனையுலகோர்
இனுங்கொலைஞ னெனவேகொண் டேசுதலுக் கென்செய்கேன்! (271)
திருமணம்
அறுசீர் விருத்தம்
272. கண்டா ரெவருங் கண்கலங்கக்
கலங்கிக் கவலை கைம்மிகவே
உண்டோ எனக்கே இவ்வுலகில்
உய்தி யினியென் றுளநொந்து
மண்டா நின்ற மானத்தால்
மாழ்கிக் கொலைஞன் வருந்துவதைக்
கண்டா ரொருவர் மனமிரங்கிக்
கைசெய் தவனைத் தேற்றுவரால். (272)
273. மக்கள் வாழ்வே தம்வாழ்வா
மதித்து வாழும் குருசேவும்
தக்க வாறக் கொள்கையையே
தாமேற் கொள்ஜான் சனுமேயோ!
அக்கொள் கையையப் படியேகொண்
டாளும் பிரிட்டன் அரசினரும்
ஒக்க உலக மன்றத்தே
இருக்க உனக்கோர் குறையுண்டோ? (273)
274. அம்மூ வரசோ டிந்தியநாட்
டரசுஞ் செவிலித் தாயாக
இம்மூ துலகத் தாயன்போ
டினிதீன் றெடுத்த ஒருமகளாம்
அம்மா தலைவன் கென்னடியின்
அன்புக் குரிய திருமகளாம்
அம்மா தலைவி அமைதியினை
அன்பால் வளர்த்து வருகின்றார். (274)
275. மற்று முலக நாடுகளின்
மதிப்பிற் குரிய தலைவர்களும்
பெற்று வளர்த்த கென்னடியின்
பிரிவால் வருந்தாப் பெற்றியினில்
உற்ற உலக மன்றத்தே
ஒருங்கு வளர்த்து வருகின்றார்;
நற்றாய் மகிழ அவ்வமைதி
நங்கை வளர்ந்து வருகின்றாள். (275)
276. அன்னார் வளர்த்து வருகின்ற
அமைதி என்னும் அம்மங்கை
தன்னை ரனைய தகைபுடையாள்
தக்க பருவ முற்றுடையாள்
உன்னால் காணும் உவப்புடையாள்
உலக அரசுத் திருவுடையாள்
அன்னாள் விரும்பின் தலைவரெலாம்
அப்பால் உன்னை விடமாட்டார். (276)
277. அன்னாள் அன்பைப்பெறின் நீயும்
அவள்தாய் உன்னை விருந்தேற்பாள்
அன்னே யுனது தனித்துயரம்
அகலும் பகல்காண் பனிபோல,
முன்னாள் நீகொள் அத்தொழிலை
விட்டே வாழும் முறைமையினை
அன்னாள் முன்னே அறிந்துள்ளாள்
அவளைக் காண ஆகையினால்; (277)
278. இன்றே செல்க எனவவரும்
இனிதே கூற அக்கொலைஞன்
அன்றே சென்றான் நியூயார்க்காம்
அணிமா நகருக் கவ்வுலக
மன்றே வருக என்பதுபோல்
மாடக் கொடிகள் வரவேற்க
நன்றே மாடத் திருந்தமைதி
நங்கை அவனைக் கண்டாளே. (278)
279. கண்டா னவனும் கண்ணொடுகண்
களிக்கத் தோழி அவற்கூறக்
கொண்டாள் காதல் பருவமொடு
குணமுங் குறியும் ஒப்புறவே;
தண்டா வதனைத் தாயறியக்
குறிப்பாள் தோழி சாற்றிடவே
வெண்டா மரையைத் திருவன்னம்
மேயாப் போற்றாய் விருந்தேற்றாள். (279)
280. ஒருவ ருள்ளத் தேயொருவர்
மாறிப் புக்கே உளம்போல
இருவர் கருத்தும் ஒன்றுபட
இயலும் வாழ்க்கைத் துணைவர்களாய்
மருவி யின்புற் றேவாழ
மனத்துட் கொண்ட அக்குறிப்பைத்
தெரியப் பேசி அம்முடிவைத்
தெரிந்து தாயும் மகிழ்பூத்தாள். (280)
281. உலக மன்றத் தலைவர்களுக்
குணர்த்த அவரும் உவப்பெய்தி
இலகு மன்றல் நாட்குறித்தே
எல்லா நாட்டுத் தலைவர்களும்
உலகு முவப்ப ஒருங்கிருந்தே
உயர்மங் கலவாழ்த் தொழிமுழங்க
இலகும் அமைதி கொலைமகனுக்
கினிது செய்தார் திருமணமே. (281)
282. கொள்ளும் பொழுதில் மணஞ்செய்து
கொண்ட அமைதி யுங்கொலையும்
கள்ளங் கரவி லாதொன்று
கலந்த உள்ளங் களிப்பெய்த
உள்ளும் புறமும் உடம்பாக
உயிரு முயிரும் ஒன்றாக
எள்ளும் பொழுதொன் றின்றாக
இன்புற் றினிது வாழ்ந்தார்கள். (282)
உலக ஆட்சி
எழுசீர் விருத்தம்
283. இப்பெரு முலகத் தொருதனி யரசி
யாகவே இருந்தினி துலகம்
வெப்பகை யொடுபோர் இன்றியே அன்பு
மேவவோர் குடைநிழ லதன்கீழ்
ஒப்புர வுடனே உலகநா டுகளின்
தலைவர்க ளொருவழிப் படவே
திப்பிய முடனாள் கெனவமை திக்குத்
திருமுடி சூட்டிட இசைந்தார். (283)
284. தந்தையின் நிலையில் உள்ள நம்ஜான்சன்
எடுத்துமே தரக்குரு சேவும்
இந்தமா வுலக நாட்டுநற் றலைவர்
யாவரும் ஒழுங்குற வாழ்த்த
அந்தமர் முடியை எலிசபெத் தரசி
அணிவளைக் கையினிற் றரவே
முந்துற வாங்கிப் புனைந்தனள் அமைதி
முடியினில் அம்மணி முடியை. (284)
285. அவ்வுல கரசி யாகிய அமைதி
அமைதியா யிவ்வுல கதனை
ஒவ்வொரு நாடும் தத்தம தெல்லைக்
குட்பட உலகர சியற்கீழ்ச்
செவ்விய ஆட்சி நடத்திடச் சட்ட
திட்டங்கள் செய்ததன் படியே
வெவ்விய பகையும் போருமில் லாமல்
மேம்பட ஆண்டுமே வந்தாள். (285)
286. எச்சிறு நாடும் உலகினில் அடிமை
இன்றியே மன்றர சியற்கீழ்
நச்சிடு முரிமை யொடுதனி மக்கள்
நலிபசி பிணிமிடி மடமை
அச்சமும் இன்றி யேமக்க ளாட்சி
அலரமுத் தொழிலொடு மக்கள்
மெச்சிடும் வகையில் குறையிலா துலகை
மேம்பட ஆண்டுமே வந்தாள். (286)
287. அப்பெரு முலக அரசியின் கணவன்
ஆகிய கொலைஞனும் ஆட்சி
துப்புற நடக்கன் பருளற மறிவொப்
புரவெனுந் துறைகளின் தலைமை
நப்புறத் தாங்கி அமைதியோ டிருந்து
ஞாயிறுந் திங்களும் போல
முப்பழந் தமிழர் கோன்முறை யதனில்
முறைபுரிந் துதவியே வந்தான். (287)
288. தீக்குண மெல்லாஞ் சிறையினி லிருக்கச்
சினம்பகை போர்அறி யாமே
மாக்களும் மக்கட் பண்படைந் தின்பாய்
வாழவே ஒருமனப் பட்டுக்
காக்குமா றினிது காத்தனள் அமைதி
கருத்தொடு வளர்த்தவப் பூங்காப்
பூக்கமழ் தரஜான் கென்னடி புகழ்போல்
பொலிதர அமைதியோ டுலகே. (288)
வாயுறை வாழ்த்து
மருட்பா
இப்பே ருலகில் இதுகாறும் ஈன்றாள்போல்
ஒப்பா ரிலேமெனவே ஓர்குடைநீ ழற்கீழ்
மொழிவழி யேதத்தம் முன்னோர் முறையின்
வழிவழி யேயாண்டு வந்தபெரு மாமன்னர்
ஆழ்கடல் நீள்கரை யார்மணலி னும்பலரே.
வாழ்கடன் மேம்பட்ட வண்டமிழர் தொன்மரபின்
மூத்த குடியாம் முடியுடை மூவேந்தர்
பூத்த புகழ்மரபிப் போதெங்கே? மாத்தமிழர்
கங்கைகொண்ட சோழன் கடாரங்கொண் டானென்பர்
எங்கவ் வரசேந் திரன்வழியார்? மங்கலமாய்ப் 10
பாட்டளவி லேபுலவர் பாடிப் பரிசுபெற்ற
ஏட்டளவி லேயின் றிருக்குனவே. எட்டுத்
திகைபுகழைம் பத்தாறு தேயமெலா மெங்கே?
மொகலாயப் பேரரசும் மோரியப் பேரரசும்
எங்கேசப் பான்சீனத் தின்பழைய மன்னரினம்
எங்கே? இனிமேனா டென்று புகழ்பூத்த
ஏலங் கிரேக்கம் எகுபதுரோம் பாரசிகம்
சாலடியம் பாபிலோன் சால்யவன மேமுதலா
அப்பழம் பேரரசெல் லாமெங்கே? நீர்மேலாம்
கொப்புளம் போலக் குமைந்தழிந்த வல்லவோ? 20
போர்த்தெழுந்த அவ்அலெக்கு சாண்டருநெப் போலியனும்
பார்த்துமகிழ்ந் தாராவிப் பாருலகைக் கண்குளிர?
இவ்வுலகி னையொழிப்பேன் என்றெழுந்த இட்லரைப்போல்
இவ்வுலகி லேயெழுந்தோர் எத்தனைபேர்? இவ்வுலகம்
இன்னுமவ் வாறே யிருக்க அவரெல்லாம்
என்னானா ரென்பதனை யேமறந்தோம். இவ்வுலகைக்
கொன்று குவிப்பதையே கொற்றமென அன்றுமுதல்
இன்றுமே எண்ணுவதும் என்கொல்லோ யாமறியேம்!
எக்கொடுமை யேனுஞ்செய் தீவிரக்க மில்லாமல்
மக்களைக் கொல்வதன்றோ மன்னர் பெருங்கொற்றம்? 30
ஊரெரி யூட்டல் ஒருங்கு களத்தொழிதல்
பாரரசர் கொற்றமெனப் பாராட்டு மிவ்வுலகம்
அக்கலிங்கப் போரால் அசோகன்மன மாறியதும்
மக்களைக்கொன் றேகுவித்த வன்கொலைக்குப் பின்னன்றோ?
இன்றுமப் பாழும் கொலைகளையன் றேவரலா
றென்றுநாம் கற்றுவரு கின்றோங்கொல் அந்த
முடிசார்ந்த மன்னரெவாம் மூதுலகை விட்டுப்
பிடிசாம்ப லாயரெனும் பேச்சல்ல வோமிச்சம்?
சென்றகா லத்தரசர் செய்கையினை விட்டுவிட்டே
இன்றுலகை யாள்வோர் இயல்பை யினிக்காண்போம். 40
மக்க ளரசாள மக்களால் தேர்ந்தெடுத்து
மக்கள் தலைவரென வந்துமக்க ளாட்சிசெய்வீர்!
மக்களால் தேர்ந்தெடுத்த மக்கள் தலைவர்களம்
மக்களைக் கொல்லுவதா மக்க ளரசாட்சி?
ஓர் நாட்டு மக்களைக்காத் தோம்புந் தலைவர்கள்மற்
றோர்நாட்டு மக்களைக்கொன் றோம்புவதன் உட்பொருளென்?
தந்நாட்டைப் போலவொரு தாய்நாட்டை வென்றுபிடித்
தந்நாட்டு மக்களைக்காப் பாற்றுதலி னாற்பயனென்?
ஓரடிமண் கொள்ளினுமாங் குள்ளோர் தமைக்காக்கும்
பாரமல்லால் வேறு பயனுண்டோ அச்செயலால்? 50
தன்னுடம் பைச்சுமந்து தானடத்த லோடொருவர்
தன்னுடம்பு மேன்சுமந்து தள்ளா டிடவேண்டும்?
காப்பதற்குத் தேர்ந்தெடுத்த காவலர்கள் மக்களுயிர்
நீப்பதற்குக் கச்சைகட்டி நிற்றல்முறை யாமோகாண்?
எல்லைகடந் தேயயல்நாட் டெள்ளளவு மண்கொளப்போய்க்
கல்லறைபோய்ச் சேர்ந்தோர் கணக்குவழக் குண்டோகாண்?
இக்கொள்கை அக்கொள்கை என்றுமக்க ளைக்கொல்லும்
அக்கொள்கை மக்களர சக்கொள்கை யாமோகாண்?
நென்னல் முதலமைச்சர் இன்றிங்கே நிற்குமிவர்
இன்ன படியாய் இயலும் அரசியலும். 60
இன்றிச் சிறையிருப்போர் நேற்றிந்நாட் டின்தலைவர்
இன்றித் தகையசெய்தி யைக்கேட்கின் றேம்நாளும்.
அந்நாட்டுப் போர்வீரர் ஆர்ப்பாட்டம் செய்தின்று
தந்நாட்டாட் சிப்பொறுப்பைத் தான்மேற்கொண் டிட்டனராம்.
அக்குடியாட் சித்தலைவ ரைப்புரட்சிக் காரர்பிடித்
துக்கொடிய னென்றுசொலிச் சுட்டுக்கொன் றிட்டனராம்.
மன்னரைக்கொன் றாட்சியெய்தி மாதமொன் றாகவில்லை
அன்னரைக்கொன் றேபடைஞர் ஆட்சியைக்கைப் பற்றினராம்.
அப்புரட்சிக் காரரறி யாதந்நாட் டுத்தலைவர்
தப்பிச்சென் றோர்நாட்டில் தஞ்சம் புகுந்தனராம். 70
சென்றவா ரம்புரட்சி செய்தர சேற்றவரை
இன்றுபடை யாளர்சிறை யிட்டரசை யேற்றனராம்.
நேற்றாட்சி யாளரைக்கொன் றேயந் நிலத்தாட்சி
ஏற்றாரை யின்றுகொன் றேபிறரேற் றாரரசை
தற்காப்பு மந்திரியைத் தான்பிடித்துச் சென்றுகரும்
பொற்காப்பிட் டேசிறையில் போட்டனராம் போர்வீரர்
உட்டுறை மந்திரியின் றூர்க்காவ லாளர்களால்
சுட்டுக் கொலப்பட்டார் சுற்றுலாப் போம்போ
தெனநாளும் வானொலியி லேகேட்ப தெல்லாம்
கனவோ இலை நனவோ கைப்புணுக்கேன் கண்ணாடி? 80
கட்டியங் காரன் கதையின் கருத்தின்று
வெட்ட வெளிச்சமாய் விட்டதன்றோ மெய்யாக?
சாம்போ தறியாத் தறுதலைபோ லக்காங்கோச்
சோம்பே நிலைமறக்கும் சோம்பே றிகளுண்டோ?
ஆட்சியர சுங்காவல் ஆகுமெனின் மக்களைக்கொல்
ஆட்சியினர் கொண்டபொருள் யாதென் றறிகிலமே.
கட்சி வகுப்புக் கலகங்கட் குங்குறைவோ?
வெட்சியென்றார் அன்றின்று வேறுபட்ட கொள்கைஎன்பர்
பக்கத்து நாட்டைப் பகைப்பதால் தாய்நாட்டு
மக்கட்கு மேலும் வரும்பயன்தான் என்னே? 90
பகுத்தறிவு மக்கட்பண் பாடுமிது தானா?
பகுத்துணரா தவ்வறிவைப் பாழ்படுத்த லாமா?
அடுத்த முறைதலைவ ராகிட வேதேர்ந்
தெடுத்திடுவார் கட்டாயம் என்ப துறுதியுண்டோ?
மன்னரன்று மண்கொண்டார் மாமன்னர் ஆவதற்கா;
என்னபயன் உங்களுக்கே சொந்தமா இப்பதவி!
கட்டுபணம் போகவொரு கையா ளிடம்தோற்று
விட்டார் முதலமைச்சர் என்பது வெற்றுரையோ?
நாட்டுக்கு நாடுபகை நாடொறுமாட் சிப்புரட்சி
ஏட்டிக்குப் போட்டி இதுதானா ஆட்சிமுறை? 100
ஆக்குமணு குண்டுகளுக் கஞ்சியஞ்சி இவ்வுலகோர்
மாக்களினுங் கேடுகெட்டு வாழுவதா ஆட்சிமுறை?
மாதலைவன் கென்னடியை வன்கொலைக்கா வாக்கொடுத்து
மாதலைவர் காளின்னும் வன்மமும டாதுடியும்?
இக்கொடுமை இப்படியே இன்னும் நடைபெறுதல்
மக்க ளரசியற்கு மாண்புடைத் தாமோகாண்?
அங்கங் கவர்பாட்டுக் கக்கடாவென் றாண்டுவந்தால்
இங்கமைதி யாகமக்கள் இன்புற் றிருப்பரன்றோ?
மக்களெல்லாம் உண்மையிலே மக்களா வாரானால்
இக்கொடுமை யன்றே ஒழியும் எனலுறுதி. 110
மக்கள் மக்கள் ஆகுமட்டும் மக்கள் தலைவரெலாம்
தக்கபடி தந்நாட்டைத் தானாள லேதகவாம்.
அன்பும் அருளும் அறமும் நடுநிலையும்
தன்போற் பிறரையெண்ணித் தானடக்கும் அத்தகவும்;
ஒன்றே குலமுலகம் ஒன்றேதான் இன்பதுன்பம்
ஒன்றே எனுமுணர்ச்சி ஒன்றேதான் - நன்றாக
இத்தகுநிலையை எய்திடச் செய்யும்
அத்தகு நிலையை ஆக்கியே எம்மீர்!
பொறாமையும் பகையும் போரும்
உறாமையிவ் வுலகினை ஓம்புதல் கடனே. 120 (289)
வாழ்த்து
வெண்பா
290. வாழ்க உலகமைதி, வாழ்க உலகமன்றம்,
வாழ்கதிருக் கென்னடியின் வான்பெரும்பேர், - வாழ்க மக்கள்
ஆட்சியொடு தன்னுரிமை ஆலறுகு போன்று மக்கள்
மாட்சியொடு வாழ்க மகிழ்ந்து. (290)
கருத்துகள்
கருத்துரையிடுக