காவல் வேலி
சிறுகதைகள்
Backகாவல் வேலி
(சிறுகதைகள்)
தில்லைச்சிவன்
தேசிய கலை இலக்கியப் பேரவை
-------------------------------------------------------------------------
தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு - 102
நூற்பெயர் : காவல் வேலி
ஆசிரியர் : தில்லைச்சிவன் (தி. சிவசாமி)
பதிப்பு : மே, 2003
வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவை
அச்சிட்டோர் : கௌரி அச்சகம்
முகப்பு ஓவியம்: இரா. சடகோபன்
விநியோகம் : சவுத் ஏசியன் புக்ஸ்,
வசந்தம் (பிறைவேற்) லிமிடட்,
44, மூன்றாம் மாடி,
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி,
கொழும்பு -11.
தொலைபேசி : 335844.
வசந்தம் புத்தக நிலையம்
405, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
விலை : ரூபா. 100/=
Title : Kaval Veli
Author : Thillaisivan
Edition : May, 2003
Publishers : Dheshiya Kalai Ilakkiyap Peravai
Printers : Gowry Printers
Cover Design : R. Shadagopan
Distributors : South Asian Books,
Vasantham (Pvt) Ltd,
No. 44, 3rd Floor,
C.C.S.M. Complex,
Colombo -11.
Tel : 335844.
Vasantham Book House,
405, Stanly Road,
Jaffna.
ISBN No : 955-8637-14-9955-8637-10
Price : Rs. 100/=
------------------------------------------------------------------
பதிப்புரை
தேசிய கலை இலக்கியப் பேரவை இதுவரை பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளது. எமது பேரவையின் ஸ்தாபகருள் ஒருவரும் தாயகம் ஆசிரியரும் எழுத்தாளருமான க. தணிகாசலம் எழுதிய பிரம்படி, கதை முடியுமா ஆகிய இரு நூல்களும் எஸ்.என். வாகீசன் எழுதிய ஏன், நந்தினி சேவியர் எழுதிய அயற்கிராமத்தைச்சேர்ந்தவர்கள், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் எழுதிய வெட்டுமுகம், என்னுடையதும் அம்மாவினுடையதும், மணல்வெளி அரங்கு ஆகியனவும் நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுதிய ஒரு ஜனனத்தின் அஸ்தமனம் சோ. ரஞ்சகுமார் எழுதிய மோகவாசல், க. சட்டநாதனின் சட்டநாதன் கதைகள், கே.எஸ். சிவகுமாரனின் இருமை, தாமரைச் செல்வியின் ஒரு மழைக்கால இரவு, மாவை வரோதயனின் வேப்பமரம் ஆகிய நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
எந்திரம் போல் உழைப்பவனோ பசியால்வாடி
ஏங்கியழும் குழந்தைமுகம் கண்டுநைந்து
சிந்தித்துச் சுரண்டும்முத லாளிமீது
சினங்கொண்டு சிரமறுக்கத் துணிவானன்றி
வந்தித்து அடிதொட்டு வயிறு காட்டி
வாழவழி பார்த்திடான் மானம் காத்த
செந்தமிழான் செருவென்றால் வாளைத்தொட்டு
சீறிஎழும் சிங்கமடா சிந்தித்தாயா,
என்றும் இதுபோல வேறும் பல எனது பாடல்கள் இராவணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ~புயல்| இதழிலும், நடேசையரின் ~வீரனி|லும் ஈழகேசரியிலும், சுதந்திரன் ஏடுகளிலும் வெளிவரக் கண்டு மகிழ்ந்தேன், என்று 'தில்லைச்சிவன் கவிதைகள்' என்ற நூலின் என்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
மூத்த எழுத்தாளர் தில்லைச்சிவன் 'தமிழன்', 'கலைச்செல்வி' ஆகிய இரு இலக்கிய ஏடுகளை இரண்டு ஆண்டுகளாக வெளியிட்டு வந்துள்ளார். கனவுக்கன்னி (1961), தாய் (1969), தில்லைச்சிவன் கவிதைகள் (1998) போன்ற ஆறு கவிதை நூல்களும், 'நான்' சுயகாவியம் ஒன்றினையும் 'ஆசிரியை ஆகினேன்' காவியமும் இதுவரை வெளிவந்த இவரது கவிதை நூல்களாகும்.
மேலும் "பாப்பாப்பாட்டுக்கள்" (1985), "பூஞ்சிட்டு பாப்பாபாட்டுக்கள்" (1998) ஆகிய பிள்ளை இலக்கிய நூல்களையும் யாத்துள்ளார்.
"வேலணைத் தீவுப் புலவர்கள் வரலாறு", 'நாவலர் வெண்பா பொழிப்புடன்' ஆகிய ஆய்வு நூல்களையும் படைத்துள்ளார்.
'அந்தக் காலக் கதைகள்' என்ற இவரது உரைநடைச் சித்திரங்களாக வரைந்த (1997) சிறுகதை நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது.
இக்கதைகளைத் தொடர்ந்து தில்லைச்சிவன் எழுதிய சிறுகதைகள் இந்நூலில் இடம் பெறுகின்றன.
இச்சிறுகதைகளைத் தொகுத்து எமது பேரவையினால் இந்நூலை வெளியிட விரும்பிய தில்லைச்சிவன் அவர்களுக்கு எமது நன்றிகள்.
இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய மூத்த பத்திரிகையாளர் 'கோபு' அவர்களுக்கும் எமது அன்பைப் பரிமாறிக் கொள்கிறோம்.
இந்நூலுக்கு அட்டைப்படம் வரைந்த ஓவியரும், பத்திரிகையாளரும், கவிஞரும், சட்டத்தரணியுமான இரா. சடகோபன் அவர்களுக்கும் கணனி வடிவமைத்த சிந்தியா, சோபனா, ஆகியோருக்கும், இந்நூலை அச்சிட்டு வழங்கிய கௌரி அச்சகத்தினருக்கும், திரு. எஸ். இராஜரட்ணம் அவர்களுக்கும் எமது நன்றிகள்.
விமர்சனங்களை வரவேற்கிறோம்.
தேசியகலை இலக்கியப் பேரவை
இல. 44இ 3-ம் மாடி,
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி
கொழும்பு - 11
தொலைபேசி : 335844.
---------------------------------------------------
பொருளடக்கம்
1. வேலி...
2. தீட்டு...
3. எதார்த்தம்...
4. பிள்ளையான்...
5. பதுங்குகுழி சமாதியானது....
6. தண்ணீர் குற்றம் பொறுக்காது....
7. பசுஞ்சோலை...
8. காத்திருப்பு...
9. கனவு பலித்தது...
10. வள்ளி...
11. சாதியை வென்ற அறிவு ...
12. வக்கிரம்...
13. சவாரியும் சதியும்....
-----------------------------------------------------------
முன்னுரை
“வெல்லச்சுனையினையும்
வெல்லக்கவி செய்யும்
தில்லைச்சிவன்” படைத்த சிறுகதைகள் சில இந்நூலில் தொகுக்கப் பெற்றிருக்கின்றன.
கவிதைகள், காவியங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என தில்லைச்சிவனின் படைப்புக்கள் பல நூல்களாக முன்னே வெளிவந்திருக்கின்றன.
தில்லைச்சிவன் நல்லாசிரியனாக, கல்லூரி அதிபராகப் பெயர் பெற்றவர். சிறந்த சிந்தனையாளர், நாடும் ஏடும் போற்றும் உயர்ந்த கவிஞர் எழுத்தாளர். “வெல்லச்சுனையினையும் வெல்லக் கவிசெய்யும் தில்லைச்சிவன்” என்று எப்போதோ சில்லையூரான் போற்றிப் புகழ் பெற்றவர்.
'தில்லைசிவன்' படைப்புகளுக்கு முன்னுரை தேவையில்லை. ஆயினும் எனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பினை இழந்துவிட நான் விடுவேனா?
இந்நூலுக்கு வேலியாக முதல்கதை வேலி அமைந்திருக்கிறது. காமவெறி அடங்கியபின் இனவெறி தலைதூக்கி கொலைவெறியில் முடிகிறது ~வேலி| என்ற இக்கதையில் நாட்டில் சமாதானமும் அமைதியும் தற்காலிகமாக ஏற்பட்டாலும் கூட இனவெறிபிடித்த அந்நியப்படை தொடர்ந்திருந்தால் என்னவெல்லாம் நிகழும் என்பதைச் சொல்லாமல் சொல்லும் ஆசிரியர் “வேலிகள் பயிரை மேய்ந்து பசியாறின” என்று முடிக்கிறார். இக்கதையைப் படித்து முடித்ததும் கிருஷாந்திகள், கோணேஸ்வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. கதையோடு நிற்காது கதைக்கு வெளியேயும் சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர்.
வேலி, தீட்டு, எதார்த்தம், பிள்ளையான், பதுங்குகுழி, தண்ணீர் குற்றம் பொறுக்காது, பசுஞ்சோலை, காத்திருப்பு, கனவு பலித்தது, வள்ளி, சாதியை வென்ற அறிவு, வக்கிரம், சவாரியும் சதியும் ஆகிய பதின்மூன்று சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன.
இக்கதைகள் பெரும்பாலும் ~ஆதவன்| வார இதழிலும் ~மல்லிகை| சஞ்சிகையிலும் வெளி வந்தவை.
ஒன்றிரண்டு கதைகள் தவிர அனைத்தும் போர்ச் சூழலை வைத்து அழகாகப் பின்னப்பட்ட கதைகள். கதைகளில் அங்கதச்சுவை இழைந்தோடி மெருகூட்டுகிறது.
சாதியப் பாகுபாட்டை நாசுக்காக கிண்டலடிக்கும் ஆசிரியர் “தீட்டு” என்ற கதையில் சாதிக்குள் சாதி பார்க்கும் பழக்கத்தையும் ~வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி| ஒரு தட்டு தட்டிவிடுகிறார்.
“பிள்ளையான்” என்ற கதையில் வெய்யிலில் “இட்ட அடி தெரிய எடுத்த அடி கொப்பளிக்கும்” பிள்ளையான் “பெருங்குளம் அம்பாளுக்கு கமக்காரர் கொடுக்க வேண்டிய உரிமத்தை வசூலித்துக் கொடுக்கும் எனது தொண்டு மழையாலோ, வெயிலாலோ விடப் பூச்சிகளாலோ தடைப்பட்டு விடாது” என்று அடித்துக் கூறுகிறார். பிள்ளையானும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதை கௌரவமாக எடுத்துச் சொல்லும் ஆசிரியர் கால வெள்ளத்தால் பலநூறு பேரோடு பிள்ளையானும் சுற்றிச் செல்லப்பட்டு விட்டதையும் கூறிவிட்டு, “வேலணைப் பெருங்குளம் மாரியம்மன் கோவிலில் புதியதோர் வெள்ளோட்டம் விடுவதாக அறிந்து சென்றேன். அங்கே பிள்ளையான். பிள்ளையானேதான்! ஆஜானுபாகுவான தோற்றம் தோற்றப்பொலிவோடு, இரண்டு தோள்களிலும் இரு கோணிப்பைகளைச் சுமந்துகொண்டு, புத்தம் புதிய மணித்தேரில் சித்திரித்த சிலையாக வீதிவலம் வந்து கொண்டிருந்தார். என் மனதை அந்த வயல்வெளியும், பங்குனிமாதம் பாழ் வெய்யிலையும் எண்ணி எண்ணி மகிழ வைத்ததுடன் கங்கை வார் சடையர் அன்பரான கடவுளைக் கண்டேன்” என்பது கதையைப் படித்து முடிக்கும்போது மெய் சிலிர்க்கிறது.
தேருக்கு உருக்கொடுத்த ஊரவரையும் தேரை நிர்மாணித்த பெருந்தட்சனையும் நெஞ்சம் வாழ்த்த மறந்துவிடாது! “எதார்த்தம்” படிக்கவேண்டிய உண்மைக் கதைதான். நாட்டில் நடந்து கொண்டிருந்த கதை. வேடிக்கை கலந்த வேதனை! எதார்த்தம் என்ற கதை உண்மைக்கதை என்றும் ஆசிரியர் கிண்ணடலுக்காகச் சொல்கிறார். மற்றைய கதைகளெல்லாம் நமது நாட்டில் நடந்த நடக்காத கதைகளாகத் தெரியவில்லையே?
“அந்தக் குப்பைச் சிவின்ரை வெள்ளாட்டுக் குட்டியை என்ற நளப்பெடி கொண்டுபோய் விட்டான். அதுக்கு ஆசையாக்கும். அவன் வைத்துப் படுக்கட்டுமே” என்று நிமிர்த்தியவர் தொனியில் வக்கிரம் பீறிட்டது.
கேட்ட சுந்தர் படபடக்கும் நெஞ்சை அமர்த்திக் கொண்டே, “அதுசரி பொன்னன், ஆண்சாதி, பெண்சாதி இருசாதிகளும் கலப்பதுதானே திருமணம். இவற்றில் தவறொன்றுமில்லை. ஆனால் உனது மகன் முன் ஒரு பெண்ணுக்குப் புருஷனாகவும் இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் இருந்து கொண்டு இன்னொரு பெண்ணா! “என்ற சம்பாஷணையிலிருந்து ‘வக்கிரம்’ கதையை வாசகர்கள் புரிந்து கொள்வர்.
இதுவரை இதர கதைகளிலெல்லாம் சாதிப் பாகுபாட்டை கிண்டலடித்து சவுக்கினால் சொடுக்கிய ஆசிரியர் இந்தக் கதையில் தலித் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தைப் பெருமையாகச் சொல்லிவிட்டு அக்காலத்தைய சில தலித் எழுத்தாளர்களுக்குச் சாட்டை எடுத்து விளாசுகிறார். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமானவை. அத்தனையும் முத்தான சத்தான கதைகள். ஒவ்வொன்றையும் நான் எடுத்துச் சொன்னால் நீங்கள் படிப்பதற்கு என்ன இருக்கப் போகிறது?
நீங்கள் படிக்கத் தொடங்கினால் ஒருகதையுடன் நின்றுவிட மாட்டீர்கள். முழுவதையும் படித்து முடித்தே நூலைக் கீழே வைப்பீர்கள். இது நிச்சயம்!
வாழ்க தில்லைச்சிவன் படைப்புக்கள்!
அன்பன்
கோபு
(எஸ்.எம். கோபாலரத்தினம்)
18-03-2003.
-----------------------------------------------------------------
என்னுரை
ஏன் எழுதினேன்?
எழுதாமல் இருக்க முடியவில்லை அதனால் எழுதினேன். என்முன் நடந்த சம்பவங்கள் சில என் மனதை உறுத்தின. அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு என் மனதை ஆற்றிக் கொள்வதற்காக எழுதினேன்.
காலத்துக்குக் காலம் எனது மன அழுத்தங்களைப் பதிவுகளாக்கிப் பல ஏடுகளுக்கு அனுப்பி வைத்தேன். என் மனதைப் புரிந்துகொண்டு, சில ஏடுகள் சில கதைகளை வெளியிட்டன. இவ்வாறு ~~ஆதவன்|| மல்லிகை ஆகிய ஏடுகளில் பிரசுரிக்கப் பெற்றனவும், வேறு சில வார ஏடுகளுக்கு அனுப்பி இன்றளவும் பிரசுரிக்கப் பெறாதனவுமான பதின்மூன்று சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
இளம் வயது தொடக்கம் கவிதைத் துறையில் பரிச்சியம் பெற்றுப் பலநூறு கவிதைகளைப் படைத்த யான், சிறுகதை எழுத விரும்பி, ~~மறுமலர்ச்சி|| ஏட்டில் ~~பழக்கம்|| என்ற ஒற்றையங்க நாடகம் மூலம் அறிமுகமாகி, 1950-1955 காலப்பகுதியில் ~தினகரன்| ஏட்டில் ஐந்தாறு கதைகளை எழுதினேன்.
எனது உணர்ச்சிகளை வடிக்கும் சாதனமாகக் கவிதையே முன்வந்து நிற்றலால், காலவோட்டத்தில் சிறுகதைகளை எழுதும் ஆர்வம் குறைந்து போனது.
கவிதைகளை நயப்பதிலும், கவிதை நூல்களைப் படிப்பதிலும் உள்ள ஆர்வம் போல சிறுகதைகளை வாசிக்க ஆர்வமும் நேரமும் போதாமை காரணமாக சிறுகதை எழுதும் எனது ஆற்றல் வளரவில்;லை. இருந்தும், நான் அனுபவித்தும் கேட்டும் உணர்ந்த நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு உரைநடைச் சித்திரங்களாக எழுதிய ~~அந்தக்காலக் கதைகள்|| என்ற நூல் ~~மல்லிகைப் பந்தல்|| டொமினிக் ஜீவா, அவர்களால் வெளிக் கொணரப் பெற்று என்னை மகிழ்வித்தது.
இதனை அடியொற்றிப் பிற்காலத்தில் என்னால் எழுதப்பெற்ற கதைகளை இந்நூலில் தொகுத்துள்ளேன். காலப்பதிவுக்கென்று மட்டும் அமையாது வாசிப்போர் மனதில் புதிய உணர்வுகளையும் சமூகத்தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியனவாக இக்கதைகள் அமையுமெனின் அது எனது வெற்றி ஆகும்.
இந்த நூலாக்கத்திற்குத் துணைக்காரணமாக இருந்த மாவை வரோதயனை நன்றியுடன் நினைக்கிறேன்.
அச்சுவாகனத்தில் ஏற்றி உலா வர விடுத்த திரு. சோ.தேவராஜா அவர்களுக்கும் கௌரி பதிப்பகத்தாருக்கும் மதிப்புரை வழங்கிய ஆகிய பேர்களுக்கும் எனது நன்றிகள்.
தில்லைச்சிவன்
'கூடல்'
வேலணை.
-------------------------------------------------------------
வேலி
யாழ்ப்பாணத்தின் மானம் கிடுகு வேலிகளாலும் கற்பகிர்களாலும் மறைக்கப்பட்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அன்று பாதுகாப்புக்காக அடைக்கப்பட்டிருந்த வேலிகள் இன்று அதே பாதுகாப்பு காரணமாக எரிக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் பல வளவுகள் அம்பர வெளியாக விடப்பட்டுள்ளமை பலர் அறிந்த உண்மை.
இவ்வளவுகளுக்குள்ளே பல பெரிய சிறிய வீடுகள் உடைந்தும் தகர்ந்தும் சீரழிந்து காணப்பட்டன.
யுத்த பீதியால் கதியற்றவர்களாகி, ஊரூராக ஓடிக்களைத்து வன்னி வவுனியாவென்று சென்று முகாம்களில் தங்கியிருந்தோரில் சிலர் அங்கும் நிம்மதியாக வாழமுடியாமை கண்டு, சகல அனுமதிகளையும் பெற்று மீண்டும் தம் ஊரை நாடினர்.
அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்த அம்பர வளவுகளில் இருந்த உடைந்த வீடுகளைத் துப்பரவு செய்துகொண்டு வாழத் தொடங்கிய ஒரு சில குடும்பங்களுள் கோகிலாவும் அவளின் தாய்க் கிளவியும் அடக்கம்.
வீடுவளவு அழிந்து பொலிவிழந்து போயிருப்பினும், சொந்த மண்ணின் பரிச உணர்வும் வாசனையும், அங்கு நின்ற மா பலா தென்னைகளும் மகிழ்வைத்தர கிணற்று நீரிலிருந்து, ஒருவாய் நீர் அள்ளி மொண்டு ஆயாசந் தணிந்தனர். குளிர்ந்த மரங்களின் நிழல்களின் கீழ், மண்புழுதியின் மேல், இருந்து கொண்டே தம் எதிர்காலத்தைத் தாயும் மகளும் திட்டமிட்டனர்.
எதுவுமில்லையாயினும் வளவு நிறைந்து நின்ற விருட்சங்களின் உபகாரம் உண்டென்ற நம்பிக்கையுடன் வாழத் தொடங்கினர். மாவின் பூக்களும் பிஞ்சுகளும் மகிழ்வைத் தந்தன. பனைகள் குலைகளை ஈன்று கொண்டு, வெருட்டிக் கொண்டிருந்த காலத்துக்குச் சவால் விட்டன. சொரிந்து கிடந்த தேங்காய் நெற்றுக்களைப் பொறுக்கிவிட்டு வெளி விறாந்தையில் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில், வீதியால் யாரோ ஒருவரைக் கைதுசெய்து கொண்டு சென்ற காவலர் பின் வந்த கிராமசேவகர், கோகிலாவையும் விசாரித்து இருப்பை உறுதிசெய்து கொண்டார்.
சந்தேகத்தில் கைதான ஆணோ, பெண்ணோ சித்திர வதைகளோ பாலியல் கொடுமைகளோ இன்றி விடுதலையானால் அவையொரு அதிசய செய்திகளாகப் பலராலும் பேசப்படுதல் உண்டு. இவை தவிர்ந்த மாமூல் செய்திகளை யாரும் வாய் திறந்து பேச மாட்டார்கள். ஒவ்வொரு சுவர்களுக்கும் மரங்களுக்கும் காதுகள் முளைத்திருக்கும்போது, வழி நெடுகிலும் ஆயுதக் காவல் வேலிகள் போடப்பட்டிருக்க அன்றாடச் செய்திகளைச் சம்பவங்களை வாய்திறந்து சொல்வதும் கேட்பதும் எந்தக் கொம்பனுக்கும் முடியாத காரியம்.
இவ்வாறாக அமைதி, சகசநிலை பேணப்பட்டிருந்த காலத்தில் ஒருநாள்.....
புதிதாகக் குடிவந்த கோகிலா வீட்டுத்தூரமாக இருந்து தலை முழுகும் நாள் வந்தது. விடிந்துவிட்டால் வெட்ட வெளியிலே அடைப்புகளற்ற கிணற்றங்கரையிலே நின்று குளிக்க வேண்டிய நிலையை அசிங்கமாக எண்ணி, இருளோடு இருளாக, வைகறைக்கு முந்திய இலங்கை நேரம் நான்கு மணிக்கே கிணற்றடிக்குச் சென்றாள் கோகிலா.
கிணற்றடியையும் முன் வீதியையும் பரக்கப் பரக்க விழித்துப் பார்த்ததும், யாதொரு அசுமாத்தமும் இன்றி நிசப்தம் சூழ்ந்திருப்பதைக் கண்ட துணிவுடன் மேல் றவிக்கையைக் கழற்றி, உடுத்திருந்த சேலையால் மார்பை மறைத்துக் கட்டினாள். துலாக்கொடியை இழுத்து வாளியை கிணற்றுள் விட்டபோது 'கிறீச்" என துலாவின் அச்சுலக்கைச் சத்தம் மனதில் பயத்தைத் தந்தது. உடனே துலாவை மெதுவாக இருப்பில் விட்டுவிட்டுச், சின்ன கைவாளியால் இரண்டு மூன்று வாளி தண்ணீர் அள்ளித் தலையில் ஊற்றினாளோ இல்லையோ அவளின் கையை ஒரு முரட்டுக்கரம் பற்றியது. வாய்க்குள் கொப்புளித்த தண்ணீரை விழுங்கியோ கொப்புளித்தோ குரல் எடுக்க முடியாமல் இன்னொரு கரம் அவள் வாயைப் பொத்தியது. கால்கள் கைகளை அடித்து திமிறியும் தப்பிக்க முடியாமல் இரண்டு முரடர்களும் அவளை அலாக்காகத் தூக்கிச் சென்றனர். திமிறிப் போராடிய போதும் அவர்களின் பிடியில் இருந்து அவளால் மீள முடியவில்லை.
பக்கத்தில் இருந்த பரி;மனை ஒன்றிலிருந்து அவலக்குரல் கேட்கிறது. ஊர் நாயொன்று ஈனக் குரலில் குரைத்;துத் தனக்கேன் வம்பென்று அடங்கிவிட்டது. கோகிலாவின் வயோதிபத்தாய் விளக்கைத் தூண்டிவைத்துக்கொண்டு 'கோகிலா! கோகிலா!" என்று குரல் கொடுத்தும் யாரும் கேட்டுக்கொண்டதாயில்லை. காலை ஆறு மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீங்குமுன் யாருமே தலைகாட்ட முடியாது. அப்படியான ஒரு சகசநிலை.
இந்த வேளையில், தத்தமது இச்;சையை முடித்துக் கொண்ட முரடர்களின் உள்ளத்தில் விபரீதமான எண்ணம் அழுத்திவிட்டது.
இப்படியே விட்டுச் சென்றால் புலிக் குகையில் சிங்கக்குட்டியா?
'கூடவே கூடாது. புலிவயிற்றில் சிங்கக்குட்டி பிறக்கவே கூடாது" என்று கத்தியவன் ஆக்கிரோசத்தோடு, வெடிகுண்டின் கிளிப்;பைக்கழற்றிக் குருளைக் குகைக்குள் வீசினான்.
குண்டின் பேரொலியோடு ஊரடங்கும் நீங்கியது. மனித உரிமையாளரும் மக்களும் தங்கள் வழமையான நடவடிக்கைகளான அறிக்கைகளைத் தயாரித்துக் கொண்டிருக்க, பாவமறியாத ஒரு உயிர் இனத்தின் பெயரால் பலியாகிக் கொண்டிருந்தது.
வேலிகள் பயிரை மேய்ந்து பசியாறின.
-ஆதவன்-
02-09-2002.
தீட்டு
இது ஒரு அந்தக்காலக் கதையல்லÉ தொழாயிரத்து தொண்ணூறில் நிகழ்ந்த உண்மை கதை.
கார்த்திகை மழை பெய்து ஓய்ந்திருந்த வேளை. இருவாட்டி நிலம், ஈரமும் தூர்வைப் பதமும் இருந்தது. தோட்டத்தைச் சுற்றிப் பார்த்த அருளின் மனதில் புதிய சிந்தனைகள் தோன்றின. தீவின் மேற்கே யுத்தமேகங்கள் சூழ்ந்திருந்தது. அது கடுமையாவதன் முன், தருணத்தைப் பயன்படுத்தி இந்த இரண்டாயிரம் கன்று நிலத்தைக் கொத்தி நட்டுவிட வேண்டும். நாற்று மேடைகளில் புகையிலைக் கன்றுகளும் செழித்திருந்தன. தொழில் இன்மையால் கூலியாட்களைப் பிடிப்பதிலும் க~;டம் இராது. எனவே தோட்டத்தை கொத்திப் பரவிக் குளி எரு வைத்து விட்டால் போதும். படிப்படியாக நாற்றினை நடலாம் என்று நினைவுகளைச் சுமந்து கொண்டு வீடுநோக்கி நடந்தான்.
போகும் வழியில் சில குடியிருப்புக்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் சமூக மக்கள் வாழ்ந்தனர். அவர்களனைவரும் அருளிற்குப் பழக்கமானவர்கள். அவர்களிலும் தமது சமூகத்தவர்களிலும் இருந்து திறமையான சிலரை வேலைக்கு அழைத்துவிட்டு தனது வீடுபோய்ச் சேர்ந்தான். மறுநாள் நடக்கும் வேலைக்கு வேண்டிய உபகரணங்களையும் கவனித்தான். அந்நாள் வெள்ளிக்கிழமையானதால் எல்லாருக்கும் காலை, மதிய வேளைகட்கு ஆதாரச் சாப்பாடு என்பதால் அதற்குரிய காய் பிஞ்சுகளையும், காலைப் பிட்டுக்குக் கிழங்கும் சேகரித்து வந்தான். இவற்றினோடு வாழைமடற்கட்டு ஒன்றும் வந்தது.
பொழுது விடிந்து காலையானபொழுது, ஒவ்வொரு குடியிருப்பிலிருந்து குறிப்பிட்ட கூலியாட்கள் அருளின் வீட்டுமுற்றத்தில் நின்றனர். இவர்களில் குறிப்பிடாத சிலரும் நின்றனர். எல்லாருமாக இருபது பேர்.
வீட்டு முற்றத்தில் தருவிக்கப்பட்டிருந்த மண்வெட்டிகளில் ஒவ்வொன்றை எடுத்துத் தமது தேவைக்கேற்பத் தோது பார்த்துத் தோளில் வைத்துக் கொண்டும், வெற்றிலையைச் சப்பித் துப்பிக் கொண்டும் தங்களுக்குள் ஏதோ குசுகுசுத்தனர். என்னவோ ஏதோவென்று அருள் விசாரிக்கவும், 'இவ்வாண்டுப் போகத்துக்குரிய முதல் வேலை உங்களது சாமான் சட்டு விலை ஏற்றம். நாங்களும் தொழிலின்மையால் உங்களுடன் பேரம் பேசவில்லை. சென்ற வருடம் பேதமின்றித் தலைக்கு நூறு ரூபா தந்தீர். இவ்வருடம் கூடத்தான் தர வேண்டும்". என்று சொல்லிக் கொண்டே நடந்தனர். பின்னே நடந்த அருளும் விடவில்லை. 'காலப்போக்கைப் பார்த்தால் இன்றோ, நாளையோ ஆமி இந்தப் பக்கமாக வரலாம். அப்போது எல்லாவற்றையும் விட்டு ஓடவேண்டியது தான். விதைத்த நெல்லு, வயலில் நட்ட புகையிலை தோட்டத்தில இதற்காகச் செய்த தொழிலைச் செய்யாமலிருப்பதா! என்றுதான் தொடங்குகிறேன். இதற்காக உங்கள் கூலியைக் குறைக்கமாட்டேன். ஊரின் வழக்கப்படி எல்லாம் நடக்கட்டும். ஷசுலுத்தான் அல்லது பக்கிரி| என்று கொண்டே தோட்டத்தில் இறங்கினான். தொழிலாளர் இரு பகுதியாகப் பிரிந்து நின்று வேலை செய்தனர். எந்தப் பந்தி முற்துகின்றது என்று அவர்களுக்குள் போட்டி. இதனால் வேலை சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் அருளின் மனைவி தேனீரும், காலை ஆகாரமும் கொண்டு வந்திருந்தாள். காலை ஆகாரம் வழங்கப்பட்ட பின் கைகளை அலம்பி, வெற்றிலை பாக்கு எடுத்துக்கொண்டு தொழிலாளர் வேலையைத் தொடங்க, அருளும் மனைவியும் மதிய உணவிற்கான ஆயத்தங்களைச் செய்யப் புறப்பட்டனர்.
நேரமும் ஒரு மணியை எட்டிவிட்டது. சாப்பாடு கொண்டுபோகச் சுணங்கிவிட்ட தயக்கம் வேறு. உதவிக்கு ஒருவரைத் தேடி அயற்குடிசையிலிருந்து ஒரு நளவ சமூகச் சிறுவனைக் கூட்டி வந்த அருள், அவன் தலையில் சோறு கறி நிரம்பிய கடகத்தைச் சுமத்திவிட்டார். தான் அவனின் பின்னே வாழை இலை மடல்போன்ற ஏதனங்களையும் குடிநீர்ச் சாடிகளையும் கொண்டு சென்றார்.
தோட்டத்தில் சீமேந்தால் கட்டிய துரவும் கிணறும். கிணற்றைச் சுற்றி நாலைந்து தென்னைகள். அவற்றின் நிழலில் இருந்துதான் சாப்பிடுவோம். அவற்றின் கீழ்ப் போய் நின்ற சிறுவனை எல்லோரும் ஏறிட்டுப் பார்த்ததும் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. தலைகளைக் கவிழ்ந்து கொண்டு தம் கருமத்தைப் பார்த்தனர். அந்தப் பெடியன் உணவுக் கடகத்தை கீழே இறக்குவதற்குப் படும் அவஸ்தையை கண்டும் காணாதவர்கள் போல் நின்றனர்.
ஒருவரும் உதவிக்கு வராததால் தானாகவே இறக்க முயன்றபோது, சில கறிவகைகள் கீழே கொட்டும் சமயத்தில் அருள் ஓடோடி வந்து உதவியதுடன், சிறுவனை ஆசுவாசப் படுத்திவிட்டுச் சோற்றுக் கடகத்தைக் கிணற்றடியில் தூக்கி வைத்தார். இலைகள், தடல்களைக் கழுவி எடுத்துக் கொண்டு வேலைக்காரரைச் சாப்பாட்டுக்கு அழைத்தார்.
எல்லா வேலையாட்களும் மண்வெட்டிகளைத் துடைத்து ஓரத்தில் வைத்தனர். தலைப்பாகைகளை அவிழ்த்து உதறிக் கொண்டு கைகால் முகம் கழுவிக் கிணற்றடிக்குச் சென்றனர். ஆனால் பள்ளி வகுப்பைச் சேர்ந்த இருவர் மட்டும் தலைப்பாகையை அவிழ்த்து உதறி கால்முகங்களைக் கழுவாமலே தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு மண்வெட்டிகளைக் கிணற்றடியில் வைத்தனர். ஷஷநாங்கள் விரதகாரர்கள். தீட்டுப்பட்ட உணவைப் புசிப்பதில்லை|| என்று சொல்லிக் கொண்டே நடந்தார்கள். எல்லா விழிகளும் அவர்களைப் பார்த்து விழித்திருந்தன. சிறுவன் குனிந்து கொண்டு கிணற்றுக் கட்டிலிருந்தான்.
-ஆதவன்-
31-12-2001.
எதார்த்தம்
ஷயாவும் கற்பனை| என்ற அடிக்குறிப்புடன் சில கதைகள் முடிவுறுவதைக் காணும் போதெல்லாம் என் உள்ளம் நகும். எழுத்தாளர்கள் மக்களை எவ்வளவு மட்டமாகக் கருதித் தமது கற்பனை ஆற்றலைப் புளுகுகிறார்கள் என்பது எனது ஆதங்கம்.
எனக்கு சிறுகதை எழுத ஆர்வம் வந்தபோது அதற்குக் கருத்தேடி வானத்தைப் பார்த்ததில்லை. கடற்கரைக்கோ மலையடிவாரத்துக்கோ சென்றதில்லை. புழுங்குதென்று பூஞ்சோலைப் பக்கம் போனதுமில்லை. பனை ஓலை விசிறி மட்டையால் என் முதுகை நானே சொறிய எல்லாக் கருக்களும் என் அயலிலிருந்து கிடைத்து விடும்.
வேலிக்கு மேலால் குசலம் விசாரித்து, அடுத்தடுத்த வீடுகளின் ஷவளவளாக்களை|க் கதைக் கருக்களாகக் கொண்டு வருவார்கள் சகோதரிகள். அம்மாச்சியின் தொணதொணப்பால், குடிகாரக் குழந்தையின் கூட்டிவைப்புக் கதைகளின் கருக் கிடைக்கும். வேலிக்குள் சொருகிக் கிடக்கும் சிரட்டைகள் சேரிமக்கள் வந்துபோகும் கதைகள் கூறும். கை மண்டியில் தண்ணீர் குடித்தவன் கைகளைப் பிடித்து போதும் என்றானோ, மோகம் என்றானோ! கருவைக் கண்டுபிடிக்க முந்துமென் மனது. அடுத்த வீட்டுச் சண்டையில் விலக்குப் பிடிக்கப் போய் குண்டி கூழுக்கழ, கொண்டை பூவுக்கழுத கருக்கிடைத்தது.
இவ்வாறாக பெற்ற ஒரு கருவை வைத்து அன்று நானோர் கதையை எழுதினேன். அடிக்குறிப்பில் ஷயாவும் கற்பனையே| என்று பயபக்தியுடன் எழுதியும் வைத்தேன்.
பத்திரிகையில் வெளிவந்தபோது பரவசத்துடன் பலபேருக்குக் காட்டினேன். சிலர் மகிழ்ந்தார்கள். சிலர் முகத்தைச் சுழித்துச் சென்றனர். எனது அயலவர் எவருமே இதைக் கற்பனை என்று ஏற்றுக் கொள்ளவில்லை.
எனது ஆசிரியன் 'எங்கே இருந்தடா உனக்கு கற்பனை வந்தது. குளத்தில் பார்த்த தாமரையை ஆகாயத்தில் காட்டுறாய். அயல் வீட்டுக் கதையைப் பெயர்களை மாற்றிவிட்டுக் கற்பனை என்று கதை கட்டுகிறாய்" என்று அடிக்காக் குறையாக ஏசிச் சென்றார்.
அடுத்த வீட்டுச் செல்வி அக்கா என்னைப் பார்த்தும் பார்க்காதது போலச் சென்றது பாவமாக இருந்தது. பயமிருந்தாலும் எனது உடன் மாணவ நண்பர்கள், எதார்த்தமான கதை என்று பாராட்டக் கேட்டது மகிழ்ச்சிதான். 'எதார்த்தவாதி வெகுசன விரோதி" என்பது நானறிந்திருக்கவில்லை. ஊரில் சிலரின் அகோர பார்வைத் தீக்குத்தப்பிப் பிழைத்துப் பலரின் புகழ்மழையில் நனைந்தேன்.
இன்று நான் எடுத்துக் கொண்டது எனது கதை.
வேறு யாராவது பாதிக்கப்பட மாட்டார்கள் என நம்புகிறேன். எனது இக்கதையில் சம்பந்தப்பட்டு ஒரு பெண் வருகிறாள். அவள் இப்படி இருப்பாள் என்று நான் முன் நினைத்ததெல்லாம் தவறு. |கற்பனையாக ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப நினைத்தால், சொன்னால் மெய்போலாகும்| என்பது போல் என் உளத்தின் காட்சியிலும் கற்பனையிலும் உருவாகி உயிர் பெற்றாள் ஒருத்தி.
அவளை நான் காதலித்தேன். கண்டதும் கொண்ட காதலல்ல. காணாது கொண்ட காதலுமல்ல. பாசத்தோடு பழகிப்பெற்ற காதல். இருவரும் சமவயதினராக இருந்தபோதிலும் உருவத்தில் அவள் பெரியவள். அவள் என்னைத் ஷதம்பி| என்று அழைப்பதும் நான் அவளை ஷஅக்கா| என்பதும் ஊருக்காகத்தான். உறவுமுறையில் மச்சாள்-மச்சான்.
எனது காதலை நான் அவளிடம் கூற நாணினேன். அவள் என்னைக் காதலித்தாளோ தெரியாது. நானே வெட்கப்பட்டு எனது காதலை வெளிப்படுத்தாத போது அவளாக வெளிப்படுத்த மாட்டாள் என்றே இருந்தேன். காலம் ஓடியது. நான் அவளைக் காதலித்தேன். அவளும் என்னைக் காதலிப்பதாகவே நம்பினேன்.
நாங்களிருவரும் பாடசாலை நேரந் தவிர்ந்த மற்ற நேரங்களில் ஒன்றாகவே விளையாடுவோம். கோவில் திருவிழாக்களுக்குக் கூடிச் செல்வோம். நான் அழகாக வரவேண்டும் என்று அவளும் அவள் அழகாக உடுத்துத் தலை சீவிப் பூமுடித்து வரவேண்டும் என்று நானும் அக்கறைப்படுவோம்.
நாங்களிருவரும் ஒட்டுறவாக வாழ்வதைப் பார்த்த பாட்டன் பாட்டி ஷபுருசன் பெண்டாட்டி| என்று சொல்லிக் கொள்வார்கள். இவை பற்றி நாங்கள் சங்கோஜப் படுவதில்லை.
அக்காலச் சஞ்சிகைகளையும் கதைப் புத்தகங்களையும் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்போம். கவிதைகளை ரசித்து அனுபவிப்போம். கதாமாந்தர்களை விமர்சிப்போம். குண்டான பெண் உருவங்களில் நான் அவளின் பெயரை எழுதி விட்டால், கோமாளி வடிவங்களில் அவள் என் பெயரை எழுதிவிட்டு மறைந்து ஓடிவிடுவாள். ஒரு கதையில் ஷஅம்மா என்னைப் பெற்றது என்னடி| என்றுக் கேட்டுக் குழந்தை அடம் பிடித்தாள். தாய் கோவிலில் வாங்கினேன், குளத்தில் கண்டெடுத்தேன்| என்று கூறியும் பிள்ளை அழுவதை விடவில்லை. கேட்டுக் கொண்டிருந்த தந்தை உள்ளதைச் சொல்லி விடேன்| என்று மனைவியைச் சீண்டினான். நான் அவளைப் பார்த்தேன். அவள் நிலத்தைப் பார்த்தாள். இவ்வாறான அனுபவங்களுடன் அவளுக்கு வயசும் வர எனக்கு மீசை முளைத்தது. இருவரும் இடம்மாறி வேறு வேறு இடங்களுக்குச் சென்று விட்டோம்.
யாழ்ப்பாண நகரின் பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்ற அவள், விடுமுறை காலங்களில் ஊருக்குவரும் வேளைகளில் எல்லாம், நானும் எனது பாடசாலையிலிருந்து ஊருக்கு வந்து விடுவேன். பிறகென்ன? பழைய கலகலப்பு. குறும்புகளுக்குக் குறைவில்லை. ஆயின் எனது நெஞ்சத்தில் புதைந்துள்ள காதல் விடயம், அவளறியா மறைபொருளாக இருப்பதாகவே நினைத்தேன். எப்படியும் எனது நெஞ்சத்துக் காதலை அவளுக்குத் திறந்து காட்டி விடத் துணிந்தும் முடியாது தவித்தேன். காலம் வரும் என்று காத்திருந்த ஒரு நாள் இரவு, திடீர் என்று என் ஞானத்தில் ஒரு கவிதை பிறந்தது.
மொத்தமாக அங்கதக் கவிதையாகப் பிறந்த அப்பாடல் தத்ரூபமாக அவளின் அப்போதைய நடைமுறைகளைப் பிரதிபலித்தது. பாதாதிகேச வர்ணனையாகப் பிரவகித்த அக்கவிதையை நகல் எடுத்து அக்காலத்தில் பிரபல்யம் மிக்க சிற்றிலக்கிய ஏடு ஒன்றிற்கு அனுப்பி வைத்தேன்.
பிரசுரமாகுமா பிரசுரமாகாதா, பிரசுரமாகினால், அவளின் பார்வைக்கு கொண்டுவருவதெப்படி? என்ற நினைவுகளில் மிதந்து எனது காலம் ஓடிக்கொண்டிருந்தது. நெஞ்சுக்குளியில் மறைத்து வைக்கப்பெற்ற எனது காதலின் திறவுகோலாகவும், எனது முதற் பிரசவமுமான இக்கவிதை அச்சுவாகனமேறி உலாவரும் தோற்றப் பொலிவைக் காணும் ஆவல் பல இரவுகளில் எனது தூக்கத்தைக் கெடுத்திருந்தது.
இவ்வண்ணம் இருந்தபோது, எழில் வண்ணத்தோடு எனது கவிதையைத் தாங்கி வந்த சிற்றிலக்கிய ஏடு, கிடைத்ததுதான் பிரித்துப் பார்த்த கையோடு வீடு, நோக்கிச் சென்றேனா! அங்கே அவள் கையில் இதே ஏட்டின் இன்னோர் பிரதி. வேகம் அடங்கி வியப்பும் வெட்கமும் உந்த அவள் பக்கமாகப் போனேன்.
ஷஷதம்பி! ரொம்ப நல்ல கவிதை. எதார்த்தங்களை ரசித்துத் தத்ரூபமாகச் சித்தரித்திருக்கின்றாய், சொற்கள் தேர்ந்தெடுத்த வைரங்கள். மூடி மறைப்பில்லாமல் அப்படியே பிரகாசிக்கின்றன. ஆனால் ஒன்று, ஒரு வரியில் ஒரு சொல்லை மட்டும் மாற்றஞ் செய்திருந்தால் மிக நேர்த்தியாகவும் எதார்த்தமாகவும் இருக்கும்|| என்றாள் அவள்.
வியப்புடன் ஷஷஎன்ன அப்படிச் சொல்கிறாய்? எதை மாற்றவேண்டும்|| என்று நெருடும் என் நெஞ்சைப் பொத்திக் கொண்டேன். என் காதல் வெளியரங்கேறி விட்டதோ என்ற துடிப்போடு.
அவள் சொன்னாள்- ஷஷபொழுதுபட்டுப் பன்னிரண்டு மணியளவில் வருகிறாள்||, என்ற வரி,
ஷஷபழுதுபட்டுப் பன்னிரண்டு மணியளவில் வருகிறாள் என்றிருந்தால் எவ்வளவு எதார்த்தமாக இருக்கும்||. என்னை எங்கோ சாக்கடையில் தள்ளிவி;ட்டது போன்ற இச்சொல்லால் உணர்ச்சிவசப்பட்டு ஷஷஅடியே உன்னைப் பற்றியல்லவா எழுதியிருக்கிறேன்|| என்று பதற்றத்துடன் கூறினேன்.
ஷஷஅதையுந் தெரிந்துதான் சொல்கிறேன். அப்படி எழுதியிருந்தால், எதார்த்தமாக இருக்கும்|| என்றவள் ஷஷநீர் என்ன நினைக்கிறீர்|| என்றாள். கடைசிக் கவிதையைப் பாரும்!
ஷஷபட்டணத்து மச்சினியைப் பாக்கப் பயமாகுது கட்டிக் கொண்டால் வேற சனியன் வேண்டாம் என்று தோணுது|| என்ற எதார்த்தம் இருக்கிறதே என்று கொண்டே நடந்தேன்.
ஷஷசரி..... சரி..... போய் வாடா, மீண்டும் சந்திப்போம்|| என்று கைகளை ஆட்டி விடை தந்தாள் அவள்.
-மல்லிகை-
ஒக்டோபர்-2001.
பிள்ளையான்
ஷபாவி யார்?
இக்கேள்விக்குப் பங்குனி மாதம் பகல் வழிப் பயணம் செய்பவன் பாவி என்பது பழைய கண்டுபிடிப்பு. பங்குனி மாதம் பகல் வழிப்போகும் பாவிகளின் பாவ விமோசனம் கருதிய எமது முன்னோர் கோடையிலே இளைப்பாற்றும் குளிர் தருக்களை வீதிகளின் இருமருங்கிலும் வரிசையாக நட்டுவைத்திருந்தனர். பூவரசு, வேம்பு, ஆல், அரசு, புளி என நின்ற பலவகை மரங்களில் இன்று ஆங்காங்கே சில மரங்களை மட்டுமே காணலாம். வேக வாகனங்களின் பிரயாண வசதிகள் வந்துவிட்டதால், பாவ விமோசனம் பெற்ற மக்கள் தமது தேவைகளுக்காக வீதி மரங்களையும் கொண்டுபோய் விட்டனர்.
காற்றுக்கும், மழைக்கும், புயலுக்கும் மனிதர், கண்களுக்கும் தப்பிப்பிழைத்த குளிர் தரும் மரங்களில் ஒன்று பருத்துச் சடைத்து வளர்ந்து எங்கள் வீட்டு வளவின் முகப்பில் நின்றது.
கருக்கரிவாள் போன்ற வளைந்த நெருங்கிய இலைகளையும், நெற்கதிர் போன்று நீண்ட அலக்குகளில் கொத்துக் கொத்தாக மலர்ந்து சிறிய மூக்குத்தி வடிவோடு மணம் கமழும் பூக்களையும், குலை குலையாகக் காய்த்துத் தொங்கும் பசுமையான காய்களையும், காக்கை உவக்கும் கனிகளையும், எண்ணெய் விதைகளையும் தரும் வேம்பு மரம் அது.
அன்று பகல் பதினொரு மணியளவில் வெப்பும் வியர்வையும் வீட்டு வளவின் முகப்பில் உள்ள வேம்பின் நிழலின் கீழ் விரித்து, வேம்பின் புடைத்த வேரையே தலையணையாக்கிச் சரிந்து கிடந்தேன். வேம்பின் நறுமணத்தோடு கூடிய உயிர்ப்பின் சுவாசம் உடலுக்கும் மனதுக்கும் இதம் செய்தது. காகம், கரிக்குருவி, கிளி, குயில் போன்ற குருவிகளும் அணில், ஓணான் போன்ற பிராணிகளும் வெயிலுக்கு ஒதுங்கிவந்து மரக் கிளைகளிலிருந்து சரசமாடின. அப்பிராணிகளின் சரசசல்லாப விளையாட்டுக்களில் மனசு இலயித்திருக்க, மெல்லெனச் சுதந்தம் சுமந்த தென்றல் வருட, மகிழ்ந்திருந்த வேளையில், எனக்கு முன்னால் விரிந்து கிடந்த வயல்வெளி என் பார்வைக்குப்பட்டது.
வெயிலால் உலர்ந்து, பசுமை இழந்து மணற் காடாகிக் கிடந்த அந்த நிலத்தின் ஊடாக அந்தக் காலத்தில் போடப்பட்ட விவசாய வீதி ஒன்று போனது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரிந்த வீதியின் முகப்பில் கானல் நீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த நீரில் நீந்திக்கொண்டு, ஒரு உயர்ந்த உருவம் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. மணலிற் புதையுண்ட காலைத் தூக்குவதும் குதிப்பதுமாகத் தள்ளாடிக்கொண்டு, தோள்கள் இரண்டிலும் சுமைகள் தொங்கவரும் அந்த மனிதனைப் பார்த்ததும், இவர் ஒரு பாவியோ என என் மனம் வியசுகித்தது.
பங்குனி மாதம், நண்பகல் நேரம், உச்சி வெய்யில் கொளுத்திக்கொண்டிருக்க நிழலற்ற நெடுமணற் பாதையில், தோள்கள் இரண்டிலும் சுமைகளுடன் கால்களிற் செருப்புமின்றி இட்ட அடி எரிய, எடுத்த அடி கொப்பளிக்க அவரும் வந்து எமது குளிர் தருவின் கீழ்க் குந்தி விட்டார். அவரின் உயர்ந்த அகன்ற மேனி ஷஷகுப்||பென்று வியர்த்துக் கொட்டியது. தலையில் முண்டாசாகக் கட்டியிருந்த ஈரிழைத் துண்டை அவிழ்த்து உதறி முகத்தையும் நெஞ்சையும் துடைத்துக்கொண்டு எமது வீட்டு வாசலைப் பார்த்து ஷஷஅம்மா நாச்சியார்|| என்று குரல் கொடுத்தார்.
குரல் கேட்ட முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு வந்த எனது தாயார் ஷஷபிள்ளையான் உனக்கு நேரகாலம் தெரியாதா? இந்த அகோர நெருப்பு வெய்யிலுக்குள் வெளிக்கிட்டாயே,|| என்று கொண்டே ஷஷபொறு பொறு! மோர்க்கொண்டு வருகிறேன்|| என்று குசினிப் பக்கம் சென்றார்.
எனது வாய் சும்மா இருக்கவில்லை. ஷஷபங்குனி மாதம் பகல் வழிப் போபவர்களைப் பாவி என்பார்களே|| என்றேன்.
ஷஷமெய் வருத்தம் பாரார். கண் துஞ்சார், கருமமே கண்ணாகினார் என்றும் சொல்லியிருக்கிறார்களே|| என்றமையாது, ஷஷபெருங்குளம் அம்பாளுக்கு, கமக்காரர் கொடுக்க வேண்டிய உரிமத்தை வசூலித்துக் கொடுக்கும் எனது தொண்டு மழையாலோ- வெயிலாலோ -விடப் பூச்சிகளாலோ தடைப்பட்டு விடாது|| என்று அடித்துக் கூறினார்.
சமையற் கட்டிற்குள் புகுந்த என் தாயார் வடித்த கஞ்சியுள் சோறும் மோரும் விட்டு ஊறுகாயும் உப்பும் பிசைந்த பானகப் பானையுடன் சிரட்டையும் கையுமாய் வந்து அமர்ந்தார்.
பானத்துடன் அம்மா கொடுத்த பனாட்டையும் சுவைத்துத் தின்ற பிள்ளையான் ஆயாசந்தணியச் சுற்றியிருந்தபின், துடித்தெழுந்து நாச்சியார் என்கவும், என் தாயார் கொண்டு வந்த ஒரு இலாச்சம் நெல்லையும் தான் கொண்டு வந்திருந்த இரு சாக்குகளிலும் மாறி மாறிக் கொட்டப் பெற்றுக்கொண்டு, ஷஷஎன்ன தம்பி பார்க்கிறார், ஒரு சாக்கு பிள்ளையானின் கூலி நெல், மறு சாக்கில் உள்ள நெல்தான் அம்பாளுக்கு|| என்றுகொண்டே, இருசாக்குகளை இரண்டு தோள்களிலும் போட்டுக்கொண்டு, வெயிலையும் பொருட்படுத்தாது, கருமமே கண்ணாகப் புறப்பட்டு விட்டார். மேலும் எத்தனை வீடுகளில் தண்டலோ! வெகுவேகமாக நடக்கிறார். அன்று கண்டதுதான், அதன் பிறகு அவரை நான் காணவில்லை.
காலங்கள் ஓடிச் சென்றன. காலவெள்ளம் பல நூறு பேரோடு பிள்ளையானையும் அள்ளிச்சென்று விட்டது. அவர்களைத் தகனஞ் செய்த சுடலைகளும் புல் முளைத்துப் புதர் மண்டிக் காடாகிப் போயின. எல்லாரும் மறக்கப்பட்டவர்களான நிலையில் ஒரு நாள்É
வேலணைப் பெருங்குளம் மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் விடுவதாக அறிந்து சென்றேன். அங்கே பிள்ளையான்- பிள்ளையானே தான்! ஆஜானுபாகுவான தோற்றப் பொலிவோடு, இரண்டு தோள்களிலும் இரு தோணிப் பைகளைச் சுமந்துகொண்டு, புத்தம் புதிய மணித் தேரில் சித்திரித்த சிலையாக வீதிவலம் வந்துகொண்டிருந்தார். என் மனதை அந்த வயல்வெளியும், பங்குனி மாதப் பாழ் வெய்யிலையும் எண்ணி எண்ணி மகிழ வைத்ததுடன் கங்கை வார் சடையர் அன்பரான கடவுளைக் கண்டேன்.
-மல்லிகை-
யூன்-2001.
பதுங்குகுழி
சமாதியானது
கல்லு வைத்த கோவில் எல்லாம் கையெடுத்துக் கும்பிட்டும், பலன் கிடைக்காத தம்பதிகள், பத்தாண்டுகளாகச் செய்து வந்த நேர்த்திகள் பல, யாத்திரைபோன திருத்தலங்கள் பல.
தொட்டிலும் பிள்ளையும் தருவதாக நயினை நாகேஸ்வரியாளுக்கு நேர்த்தி, வேல் வடித்துத் தருவதாக நல்லூர்க் கந்தவேளுக்கு நேர்த்தி, கற்பூரச்சட்டி, காவடி என்றெல்லாம் நேர்த்திகள் வைத்தும், உபவாசமிருந்தும் விரதங்கள் பிடித்த பலனோ என்னவோ அவள் திருமணம் முடித்த பத்தாம் வருடம் ஆடி மாதம் முழுகிய முழுக்கு மீண்டு வரவில்லை.
தலைமக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கோவில்களில் நேர்த்திக் கடன்களைக் கொடுத்தும், புதிது புதிதாகக் காணிக்கைகளைச் செலுத்தியும் களித்தனர்.
எருமை ஈனுமுன் நெய்விலை பேசுபவர் போலத் தொழிற் பட்டுப் பிறக்கப்போகும் பிள்ளை ஆணோ பெண்ணோ என்பதிலும், ஆணாயின் பெயர் என்ன வைப்பது? பெண் எனில் எந்தப் பாட்டியினுடைய பெயரைச் சூட்டுவது என்பதில், தம்பதிகளுக்கிடையே கருத்து மோதல்களும் இவற்றால் ஏற்பட்ட ஊடலும் தணிக்கும் கூடலுமாகத் தம்பதிகள் களி வெள்ளத்தில் மிதந்த காலம் அது.
வயிறு மெல்ல எழுந்தும், தாயின் முகம் கருத்து மிருப்பதைப் பார்த்த அயற் பெண்கள், ஆண்பிள்ளைதான் என்று ஆரூடம் சொல்லக்கேட்ட தாயின் உள்ளம் விண்டு ஷஷபிரபா பிரபா|| எனத் தன்னுள் சொல்லி மகிழ்ந்தது.
இவ்வாறே தன் வயிற்றுள் வளரும் சிசுவிற்கு இரகசியப் பெயர் சூட்டி, அவள் ஆற்றப் போகும் வீர தீரச் செயல்களையும், அறிவாற்றலில் சிறந்து சமுதாயத்திற் பெரிய மனிதனாகத் திகழப் போவதையும், கற்பனையாக மனதுள் கண்டு விண்ட உளத்தினளாகப் பூரித்தவள், அடுத்துப் பிறக்கப்போகும் சித்திரைத் திங்களை நினைத்ததும் சற்றே துணுக்குற்றாள்.
ஷஷசித்திரை மாதம் புத்திரன் பிறந்தால் அக்குடி நாசம்|| என்று யாரோ ஒரு வழிப்போக்கன் சொல்லி, காற்றுவழி காதில் வந்து விழுந்த அச்சொல், அவளை வருத்திக் கொண்டே இருந்தது. ஷஷகுடிநாசமே தவிரப் பிறக்கும் பிள்ளை பேரறிவாளனாக வருவான்|| என்று சொல்வோர் கூற்றை எண்ணித் தனது மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டே அடுத்து ஆகவேண்டிய வைகளைக் கவனித்தாள் அவள்.
சித்திரா பூரணையும் சித்திரை நட்சத்திரமும் கூடிய அந்த நாள் அதிகாலையில், ஏதோ ஒரு அருட்டுணர்வினால், துயில் முறித்தெழுந்த அவளின் காதுகளில், சிறிதான ரீங்கார ஓசைபோற் கேட்ட விமானச் சத்தம், வரவரப் பேரிரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
அயலிலுள்ள வயிரவர் கோவிலில் சித்திரைக் கஞ்சி வார்க்கும் அலுவல்களில் ஈடுபட்டிருந்த கணவன் ஷஷகுண்டு போடுறாங்கள்|| என்று அலறிப் புடைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான். நுழைந்தவருக்கு மனைவியின் கோலமும் சூழ்நிலையின் நிலைப்பாடும் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தாற் போன்ற பரிதவிப்பினை ஏற்படுத்தியது.
யாழ்ப்பாணக் கோட்டையைப் புலிகளிடமிருந்து பாதுகாக்கச் சென்ற படையினரின் நெடும் பயணத்துக்கு வீதி துப்புரவாக்கற் பணியில், படைகள் ஈடுபட்டு, எம்மை எம்மையெல்லாம் நிற்கதிக்காளாக்கிய நாளது.
எண்ணிய சிறு பொழுதுக்குள்ளே அயல் வீட்டு மாட்டுத் தொழுவத்தின் மேல் விழுந்த குண்டொன்றினால் சில மாடுகள் துடித்துத் துடித்து இறந்துகொண்டிருக்க அடுத்த வீட்டுக்காரரும் ஊரவர்களும் வெடித்த எலிக்கோட்டை வாணங்கள் போல நாலாபக்கமும் சிதறி ஓடினர்.
சைக்கில்கள், வண்டிகள், உழவுயந்திரங்கள் என்று கிடைத்த வாகனங்களில் ஏறியும் நடந்துமாக ஊரே காலியாகிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு வளவுகளிலும் பாதுகாப்புக்காகப் பதுங்கு குழிகள் இருந்தும், அதைப் பாவித்துப் பதுங்கி இருந்து பார்க்க எவருக்குந் துணிவோ அவகாசமோ இருக்கவில்லை.
இந்த நிலையில் இடுப்பைப் பிடித்துக்கொண்டு வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாள் மனைவி. கணவனோ! ஒரு பாய்த் தடுக்கையும் தலையணைகளையும் பதுங்கு குழிக்குள்போட்டு மனைவியைப் படுக்க வைத்தான். அவ்வளவுதான். தொடர்ந்து அவனால் அங்கிருக்க முடியவில்லை. என்ன செய்வது ஏது செய்வது என்ற அங்கலாய்ப்போடு அங்கிங்கென்று திரிந்தான். தனது மனைவியை ஏதாவதொரு மருத்துவமனையில் சேர்த்துவிட வேண்டும் என்ற நப்பாசை. இதற்கு ஒரு வாகனம் வேண்டும். எங்கு பெறலாம் என்று துடிப்பில் அங்கெல்லாம் தேடிக்கொண்டே நடந்தான்.
இங்கே பதுங்குகுழிக்குள் கிடந்த தலைவி ஷஷஅம்மா|| என்ற குரல் கேட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தாள். பாரையும் காணாததால் தனது மனப்பிரமையை நினைத்து உதட்டுள் சிரித்தாலும் உடல் வேதனையால் நொந்தது. மீண்டும் அதே குரல் தலைமாட்டுப் பக்கத்திலிருந்து கேட்டது. ஷஷநான் தானம்மா உது மகன் பிரபா|| ஷஷஆம் ஆம் பிரபா என்ர மகன்தான்|| என்றவள் சரிந்து கிடந்த தனது வயிற்;றைப் பொத்திக் கொண்டாள். வயிறு ஆளைக் குத்தி எழுப்பியது. தன் எண்ணங்களால் கருவாகி உருவாகி வந்த மகன் என்பதால் அவனைத் தாய் நன்கறிந்திருந்தாள்.
வீரமும் விவேகமும் நிறைந்த புத்தியுள்ள மகனாதலால் அக்கிரமம் அநீதிகளைச் சகித்துக்கொண்;டு இருக்க மாட்டான் என்பதை அறிவாள். அறிந்துமென்ன? தாய் மனம் பொறுமையை வேண்டியது. பொறுத்திரு காலம் வரும் என்று சொல்லலாமா! அவன் கேட்க மாட்டானே. லேசாகத் தன்கையால் தனது வயிற்றைத் தடவிப் பார்த்தாள். இந்த நிலவரத்தில் எப்படியடா உன்னைக் காப்பாற்றுவேன். கொஞ்சம் பொறு என்று அடக்க முயன்றாள். அடிவயிற்றைப் பொத்தினாள்.
ஒரே உந்துதலில் நச்சுக் கொடியையும் அறுத்துக்கொண்டு வெளியே வந்த சிசு சீதப்பன்னீர் புனலுள் மூச்சுப் பேச்சற்றுக் கிடந்தது.
அறுந்த நஞ்சுக்கொடி விடமும் இரத்தப் பெருக்கால் ஏற்பட்ட வேதனையும்பட்ட தாய் தனது இறுதி மூச்;சை விட்டு மகனுடன் சேர்ந்து கொண்டாள்.
மருத்துவமனைக்கு செல்லக் காருடன் வந்த கணவன் நிலைமையைக் கண்டு கலங்கினான். இனி இருந்தென்ன செத்தென்ன என்ற விரக்தி அவனுக்கு. வாயில் வந்தவாறு எல்லாத் தெய்வங்களையும் திட்டினான். நாளைக், கோளை, நாட்டை, அரசை எல்லாம் திட்டித் தீர்த்தான். வானைப் பழித்தான். வந்த விளைவைப் பழித்தான். இந்த நிலையில் கார், வாகனத்தைக் கண்டு வட்டமிட்டு ஹெலி வீசிய குண்டுச் சிதறல் ஒன்று அவன் தலையைப் பிளக்கப் பதுங்குகுழியின் வாயிலை அடைத்துக் கொண்டு அவனுடல் விழுந்தது.
மறுநாள் தமது வீடுகளைப் பார்க்க வந்த ஊரவர் சிலர், புயல் வீசியழிந்த காடுகள் போலப் பாழாய் கிடந்தவைகளைப் பார்த்துப் பரிதவித்த கையோடு பதுங்குகுழிகளையும் அதன் உட்புறமாக கிடந்த உடல்களையும் பார்த்துப் பதற்றப்பட்டனர். எல்லா உடல்களையும் பதுங்குகுழிக்குள் ஒன்றாகப்போட்டு மூடிவிட்டு அப்பால் அவசரமாகச் சென்றனர்.
பாதுகாப்புக்காகத் தோண்டிய பதுங்குகுழி குடும்பத்தின் சமாதியானது.
-ஆதவன்-
21-10-2001.
தண்ணீர் குற்றம் பொறுக்காது
காலை மதியம் மாலை என்ற முப்பொழுதும் தனது கிணற்றடிக்கு வரும், குடங்களையும் வாளிகளையும் கொள்கலன்களையும் தனது கைகளாலேயே தண்ணீர் கொண்டு வார்த்து நிரப்பிவிட வேண்டும், என்று விடாப்பிடியாக நின்றார் நித்திய சிவம். ஷஉங்களுக்கேன் இந்தக் க~;டம், நாங்களே தண்ணீரை எடுத்துக் கொள்கிறோமே| என்றால் அதற்கவர் உடன்படுவதாயில்லை. ஷஉங்கள் பாத்திரங்களை வையுங்கள்| என்று மட்டுமே சொல்வார். பாத்திரங்களை அலம்பி நீரை பூமரத்தடியில் ஊற்றவும் அனுமதிக்கமாட்டார். அது சாமிக்குப் பூவைக்கும் செடியாம்.
ஷஷஇதென்ன கறுமம்! இளைஞர்கள் குமரிகள் என்று வாலிப வயதினர் நிற்க அவங்களுக்கும் துலாக்கொடியை விட்டுக் கொடுக்காது, தாமே தண்ணீர் எடுத்து வார்த்துக் கொண்டிருக்கிறாரே|| என்று வியந்த சிலர், ஷஇதை அகதிகளுக்காகத் தாம் செய்யும் உபகார சேவையாக நினைத்துச் செய்கிறாரோ என்னவோ! நமக்குத் தண்ணீர் கிடைக்கிறதுஷ என்ற சுயதிருப்தியோடு சென்றனர். வீதிகளிலும் சந்திகளிலும் தண்ணீர்ப் பந்தல்கள் வைத்துப் புண்ணியம் சேர்ப்பது போன்ற ஒரு சேவைதான் இதுவென்ற நினைப்பு அவர்களுக்கு.
சூரியகதிர்ப் படை நடவடிக்கையால் , வலிகாமம் தீவுப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களிற் சில தென்மராட்சிச் சூழலிலுள்ள, பாடசாலை கோவில் என்ற ஒரு வட்டத்தில் குடியிருந்தனர். குளிக்கவும் சமைக்கவும் குடியிருப்பிடத்தில் உள்ள நீர் போதுமானது தவிர அந்த அயலில் குடிக்க நல்ல நீர்க்கிணறு நித்தியசிவத்தாரின் வீட்டுவளவில்தான் இருந்தது.
குடிதண்ணீர் தேடி நித்தியசிவம், வளவிற்குள் செல்லும் ஒவ்வொருவரையும் விரைந்துசென்று, வரவேற்று கிணற்றடிக்கு கூட்டிச்சென்று, தன் கையாலேயே துலாக்கொடியைப் பிடித்திழுத்துத் தண்ணீர் அள்ளிப் பாத்திரங்களை நிரப்பி விடுவார். நித்தியசிவம். அடிக்கடி முதுகை நிமிர்த்தித் தோள்பட்டையைச் சுருக்கிக் கொள்வதைப் பார்க்கப் பரிதாபமாகவிருக்கும். இருப்பினும், ஏதோ ஒரு ஓர்மத்துடன் அழைப்பின்றி இந்தத் தொண்டைச் செய்யும் நித்தியசிவத்தை அகதிகளிற்பவர் வாய்நிறையப் புகழ்ந்து பாராட்டினார்கள். ஷஷதங்களின் நல்லமனத்திற்கு நல்ல தண்ணீர்க் கிணறும் சாட்சியாக இருக்கிறது|| என்று புகழ்ந்தனர். சிலர், தம்மனத்துக்குள் வைதுகொண்டு செல்லாமலுமில்லை.
இவ்வாறே நித்தியசிவம் ஐயாவின் கரசேவை, சில தினங்கள் நடந்து கொண்டிருந்த ஒருநாள், காலைநேரம், தண்ணீர் எடுக்கச்சென்ற அகதிகளை வழக்கமாகப் படலையைத் திறந்து வரவேற்கும் சிவத்தாரைக் காணவில்;லை. வெளிப்படலையும் உட்பூட்டிட்டு பூட்டப்பட்டுக் கிடந்தது. முற்றத்து மா, பலாச் சருகுகளும் கொட்டுண்டது கொட்டுண்டபடியே கிடக்கின்றன. கூட்டிப் பெருக்குவாரையும் காணவில்லை. வழமையாக இவ்வேலையைக் கவனிக்கும் சிவத்தாரைக் காணவில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தவேளையில், ஒருவர் படலைக்குமேலே கட்டியிருந்த வேப்பம் இலைக் கொத்தைக் காட்டினார்.
ஒருவர் பின் ஒருவராக வந்த அகதிகள் கூட்டம் படலையை முற்றுகையிட்டு நிற்க, உடலையும் முகத்தையும் தலையையும் தடித்த துணியினால் மூடிக்கொண்டு வந்தது ஒரு உருவம். அதன் வாயிலிருந்து ஈனக்குரலில் ஷஷஅவருக்கு அம்மைநோய் கண்டிருக்கிறது. நீங்கள் வேறு கிணறுகளைப் பாருங்கள்|| என்ற ஒலி பிறந்தது.
இதைக் கேட்ட அகதிகள் நிலை மிகப் பரிதாபமாக இருந்தது. ஒருவர் சொன்னார் ஷஷஎங்களுக்காக இரவு பகல் பார்க்காது தண்ணீர் அள்ளி வார்த்த இவருக்கு இக்கதி வரலாமா? என்றும் அம்மனுக்குக் கண்ணே இல்லையென்றாள். மற்றொரு கிழவி. ஷஷஎல்லாம் எமது கர்மம்|| எனத் தம்மையே நொந்து கொண்டனர் சிலர். இவ்வாறே ஆதங்கப்பட்டுக் கொண்டு குடங்களுடன் சென்ற அகதிகளைக் கண்டு அனுதாபப்பட்ட ஊரார் சிலர், தூரத்திலே உள்ள நன்னீர்க் கிணற்றுக்கு ஆற்றுப்படுத்தினார்கள்.|| அவ்வளவு தூரமோ!|| என்று தயங்கிப்போன பெண்களும் வயோதிபரும் உவர்நீரைக் குடித்துக்கொண்டு கிடப்போம் அதிலென்ன|| என்று தமது வதிவிடங்களுக்குச் சென்றனர். இளைஞர்கள் சயிக்கில்களில் கொள்கலன்களைக் கட்டிக்கொண்டு நன்னீர் தேடி ஊர்வலஞ் சென்றனர்.
இவ்வாறு அல்லற்படும் அகதிகளின் கதையைக் கேட்ட, நித்தியசிவத்தாரின் உறவினர் ஒருவர், உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டார். நேற்று இரவுதான் சொன்னான். இன்று காலையே தனிநபராக நாடகத்தை நடத்திவிட்டானே! என்று நினைத்துப் பூரித்து போனார். தனது நாடக விமர்சனத்தை நடிகர் நித்தியசிவத்துடன் கலந்துரையாட வேண்டும் என்ற ஆசை தூண்டியது. நித்தியசிவத்தின் படலையருகே போய் நின்றதும், சொல்லிவைத்தாற்போல் படலைதிறக்க உள்ளே அழைத்துச் சென்ற உறவினர் வாய் திறக்கமுன்பே, நித்தியசிவம் முந்தி விட்டார்.
ஷஷஇந்த எழியதுகளுக்கு இப்படிப் பாடம் படிப்பிக்காவிட்டால் இதுகள் திருந்தாது. இரவு பகலாக நான் தண்ணீர் இறைத்து ஊற்றும் காரணத்தைப் புரியாமல்.... என் தோள்மூட்டு விட்டுப்போக எதற்காக அள்ளி வார்க்கிறேன் என்று விளங்கினார்களா? இல்லையே! நானும் வாயால் பலமுறை சொன்னேன். ஷஷகிணறும் குற்றம் பொறுக்காது|| என்று கேட்டார்களா? நான் என்ன வேலை இல்லாதவனா?
நான் எங்கள் ஆசாரங்கள் கெடக்கூடாதே என்பதற்காகத் தோள்மூட்டிழுக்க அள்ளி அள்ளி வார்க்க அவர்களுக்கும் ஒரு விவஸ்தை அற்றுப்போய் விட்டது. ஒருநாளா! இருநாளா! ஒவ்வொரு நாளும் துலாக் கொடியில் அவர்களைப் பிடிக்கவிடாமல் நான் அள்ளியூற்றக், கொண்டு செல்பவர்களின் கர்வம்தான் என்ன? நல்லவர்கள் எண்டால் புரிந்து கொள்வார்கள். இந்த நளம் பள்ளுகளுக்கு இது புரியாதுதானே|| என்று முத்தாய்ப்பு வைத்தார், நித்தியசிவம்.
ஷஷஆமாம், நீதான் சரியான ஆள்|| என்று சொல்லித் தலையை ஆட்டிப் பாராட்டினார், வந்த உறவினர்.
-ஆதவன்-
21-10-2001.
பசுஞ்சோலை
ஷசெல்| வீச்சினால் சினந்து போய் பாவனையற்றிருந்த புகையிரத நிலையக் கட்டிடத்தின் ஒரு மூலையில் அடுப்பு மூட்டி உலைவைத்துக் கொண்டிருந்தாள் சுவர்ணா. அருகில் பனை ஓலைப் பெட்டியொன்றில் ஒரு கிறங்கை அரிசி இருந்தது. மற்றோர் அகதிப்பெண் மனதிரங்கிக் கொடுத்த அவ்வரிசியைச் சுழகிலிட்டு நெல்லும் கல்லும் நீக்கித் துப்புரவுசெய்து கொண்டிருந்தாள், அவள்.
கொழும்புத்துறைத் துறைமுகத்தில், இரவு முழுவதும் கண் விழித்துக் காத்திருந்துவிட்டு, அப்போதுதான் வந்து தன் பக்கத்தில் குறண்டிக்கிடக்கும் மகன் மூர்த்தியின் முகத்தைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் சொரிந்தாள். அவளுக்கு இருவாரங்களுக்கு முன் கடற்கரையில் விட்டுப்பிரிந்து சென்ற கணவன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை சிறிது சிறிதாக அற்றுப்போயிருந்தது. ஆனால் மகன் மூர்த்தியோ ஒவ்வொரு நாளும் பொழுது சாயும் வேளையில் கடற்கரைக்குச் சென்று, தந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
தனிமையில் தந்தையாரின் அன்பான தழுவல்களையும் உபசரிப்புகளையும் கொஞ்சிக் குலாவல்களையும் எண்ணி எண்ணிக் கண்கள் குளமாக நின்றான். நித்திரை இன்றிக் காத்திருத்தலால் கண்ணிமை மடல்கள் வீங்கிப் போயிருந்தன.
யாழ் கோட்டைத் தாக்குதல்களின் போது மண்டைதீவை ஆக்கிரமித்த படையினரின் பார்வையினால் அகப்பட்ட பலபேரில் சுவர்ணாவின் கணவன் இராசதுரையும் ஒருவர்.
ஆக்கிரமித்த படையினருக்கும் பயந்து பல குடும்பங்கள் தோணிகளில் ஏறி அக்கரைக்குக் சென்று கொண்டிருந்தனர். அவ்வாறே கடற்கரையில் நின்ற ஒரு சிறு தோணியில் ஏறிய பலருடன் சுவர்ணாவையும் மகனையும் ஏற்றிவிட்டு, அடுத்த தோணியில் வர நின்ற கணவன் ராசதுரை வராதது சுவர்ணாவுக்கு கவலையும் கலக்கமாகவுமிருந்தது.
யாழ் கோட்டையுள் முற்றுகைக்குட்பட்டிருந்த படையினர் சிலர் வெளியேறி மண்டைதீவுக்குட் புகுந்த கையோடு, அங்கே படையினரின் பாதுகாப்பில் இருந்த பொதுமக்கள் பலரை, வெட்டியும் குத்தியும் சுட்டும் கொன்று விட்டார்கள் என்ற செய்தி எட்டியதும், சுவர்ணா ஏங்கி இடிந்து போனாள். மகன் மூர்த்தியோ தந்தையின் அபார திறமைகளில் நம்பிக்கை வைத்தபடி அவர் வருகைக்காகக் காத்திருந்தான்.
ஒவ்வொரு இரவும் கடற்கரையில் கண்விழித்துக் காத்திருப்பதும், வீசும் அலைகளிடையே மிதந்துவரும் கருமைநிறக் கடற்பாசிகளைத் தோணி வருவதாக நினைத்துத் தந்தையைப் பார்த்துத் துடிப்பதும் கடற்பறவைகள் கத்தவும் நாய்கள் குரைக்கவும் கேட்டு அதோ இதோவென அங்கலாய்ப்பதும் ஒரு வேளை வரும் மீன் தோணிகளைக் கண்டு ஓடிச்சென்று தந்தையாரைத் தேடுவதுமாகப் பல இரவுகள் தூங்காது காத்திருந்து, கண்ணீரும் கம்பலையுமாக, வீங்கிய கண்களுடன் வந்த மூர்த்தி, இன்று நீண்ட நேரமாகத் தாயின் பக்கத்தில் தூங்கி விட்டான்.
மகனின் குழந்தை முகத்தையும் அழுக்குப் படிந்த உடலையும் உடையையும், பார்த்துக் குமுறி எழும் அவளின் நெஞ்சம் போன்றே பானையிற் கொதித்த நீருடன் அவிந்த சில பருக்கைகளும் துள்ளின. அரிசி அவிந்துவிட்ட நிலையில் சிறிது உப்பையும் போட்டுக் கஞ்சிப் பானையை இறக்கி வைத்தாள். அகப்பையால் கஞ்சிப் பானையைத் துளாவி ஆறவைத்துக் கொண்டே மகனை எழுப்பினாள்.
கஞ்சியைக் குடித்துக் கொண்டே ஷஷஅப்பா வருவாரா அம்மா|| என்று கேட்ட மகனின் ஏக்கத்தைப் புரிந்துகொண்ட தாய், தனது துயரத்தை அடக்கிக்கொண்டு, ஷஷஅவர் வாற நேரம் வரட்டும் நீ சும்மா இருடா|| என்று அதட்டியும் இதமாக வருடியும் மகனைத் தேற்றியதோடு அவன் கடற்கரைக்குப் போய் காத்திருப்பதையும் தடுத்து விட்டாள்.
இப்போது நகர வீதிகளில் சுற்றித் திரிந்த மூர்த்தி சங்கக்கடை வாயில்களில் தவமிருந்தான். அங்கே அகதி நிவாரணம் பெறவருபவர்களில் அறிந்த தெரிந்த சிலபேர், இவன் முகத்தைப் பார்த்துக் கனிவோடு அள்ளிப்போடும் அரிசி, மா, சீனியைப் பெற்றுக் காலத்தை ஓட்டி வந்த நிலையில், கிராம சேவகரின் தயவால் வாராவாரம் நிவாரணப் பொருட்கள் இவர்களுக்கும் கிடைத்தன.
பசிக்கவலை நீங்கப் பள்ளிக்கூடக் கவலை வந்தது. ஆண்டு மூன்றைத் திறமையுடன் தாண்டி நான்காம் ஆண்டுக்காகக் கிடைத்த புத்தகங்களையும் சீருடைத் துணிகளையும் இழந்ததுடன் பாடசாலையும் இருப்பொழிந்து விட்டது. பாடசாலை அதிபர், இடாப்புகள், பிறப்புச் சாட்சிப் பத்திரங்களுடன் இடம்பிடிக்க ஓடித் திரிகிறார் என்று சொன்னார்கள். புதிதாகப் புதிய பாடசாலையில் போய்சேர உடுப்பு, புத்தகம், பயிற்சிக் கொப்பிகள் என்றின்னவற்றுடன் விடுகைப்பத்திரம், பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் என வேறுவேறு பொருட்கள் வேண்டும். எங்கே போவது. தந்தை வந்திருந்தால் இந்தக் கவலை எனக்கில்;லையே என்று நினைத்தவன், இவற்றையெல்லாம் தாயிடம் கேட்டு அவரைக் கவலைப்படுத்த விரும்பாததால், தனது கவலைகளை தன்னுள்ளே வைத்துக்கொண்டு, அதே நிலையத்தில் வாழும் ஏனைய அகதிப் பிள்ளைகளைச் சேர்த்து விளையாடித் திரிந்தான் மூர்த்தி.
ஆண்டு ஒன்றின் மேலாகி விட்டது. ஆறின கஞ்சி பழங்கஞ்சி. சுவர்ணாவின் துயர அலைகள் கரையில் எற்றி காய்ந்து விட்டன. இராசதுரை இறந்துவிட்டான் என்று போக்குவரவில் அடிபட்ட பேச்சுகளை மூர்த்தி நம்பவே இல்லை. ஒரு சோலி சுரட்டுக்குப் போகாத நல்லபிள்ளையான தனது தந்தையை யாரும் கொல்லவே மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு. ஒருவேளை செத்திருந்தால்...! அதன்மேல் அவனால் சிந்திக்கவே முடியாது திணறுவான். அப்படி ஆகாது என்று தன்னைச் சுதாகரித்துக் கொண்டு பிறபராக்குகளில் செல்வது அவனது வழமை.
இப்படியான ஒருநாள் தாய்க்குத் தெரிந்த ஒருவர் இவர்களிருந்த இடத்துக்கு வந்தார். அவரைக் கண்ட சுவர்ணா சங்கோசத்துடன் எழுந்து நின்று உபசரித்து இருக்க வைத்து உரையாடினாள். உரையாடலின் பொருள் விளங்கவில்லை. எனினும் அவரது சிரிப்பும் எக்களிப்பும் மூர்த்திக்குப் பிடிக்கவில்லை. புதிதாக வருபவர்கள் துயர்களை விசாரித்து ஆறுதல் சொல்லிச் சொல்வதைக் கேட்ட மூர்த்திக்கு இவர்களுடைய பேச்சுவார்த்;தையும் போக்கும் பிடிக்காதது வியப்பல்ல. அவர் ஒருவிதமான அனுதாபத்தையும் பரிவையும் வெளிக்காட்டாது அட்டகாசமாகச் சிரித்துப் பேசுவதைப் பொறுக்கமுடியாத மூர்த்தி வெறுப்போடு வெளியே சென்றான். சென்றவன் வீதியின் ஓரமாக இருந்த மதில் ஒன்றில் இருந்துகொண்டு சிந்தனையில் மூழ்கினான்.
என்ன நினைத்தானோ! ஏது நினைத்தானோ! அந்த வீதியால் வந்து கொண்டிருந்த சிறுவர் அணிமீது அவனது கவனம் சென்றது. எல்லாப் பிள்ளைகளும் ஒரே நிறத்தில் ஒரே வகையான காற்சட்டைகளும் சட்டைகளும் தொப்பிகளும் அணிந்து கழுத்தில் ஷஷரைஷஷயுடன் சீராக நடந்து செல்கிறார்கள். அவர்களின் அணிநடையும் ஒய்யாரமும் மூர்த்தியின் உள்ளத்தில் இனம் புரியாத ஆவலைத் தூண்டின. பாடசாலையில் இப்படியான அணிவகுப்புகளில் அவனும் பங்குபற்றினவன் தான். அதனை நினைத்தான். ஷஷஇன்றென்ன என்னோடொத்த இவர்களுடன் சேர்ந்து விட்டாற் போகிறது|| என்ற நினைவு தூண்ட எழுந்து அவர்களின் பின்னாலே சென்றான்.
தூரத்தில் ஒரு பெரிய வளவு. நிறைந்த மாஞ்சோலை. இடையிடையே பலாமரங்களும் சில தென்னைகளும் நிற்கின்றன. நிழல் தரும் பெருவிருட்சங்கள் வேறு. எங்கும் ஒN பசுமை பெற்றிருந்த அந்தத்தோப்பில் மூன்று நான்கு மண்டபங்கள். தற்காலிகமாக அமைக்கப்பட்டுக் கிடுகுகளால் வேயப்பெற்றிருந்தன. மண்டபங்களைச் சுற்றி ஊஞ்சல்கள், சறுக்குமரங்கள், சக்கரங்கள், ராட்டினங்கள், பதுங்கு குழிகள் எனப்பல.
வளவினுள் புகுந்த சிறுவர்கள் ஊஞ்சலாடுவதும் சக்கரம் சுற்றுவதும் சறுக்கி விழுவதும் எழும்புவதுமாகப் பல விளையாட்டுக்களிலும் ஈடுபட்டிருந்தனர். இவற்றையெல்லாம் வெயிலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி.
மூர்த்திக்கு இவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும் போலிருந்தது. அந்த நேரத்தில் அவனை அணுகிய ஒருவர் ஷஷஎன்ன தம்பி நீயுமிச் சோலையில் சேர விரும்புகிறாயா|| என்று கேட்டார், உடனே ஷஷஆம்|| என்று சொல்லத் தயங்கிப் பின்னால் நெளிந்து பிகுபண்ணி கைவிரலை வாயில்வைத்துக் கடித்துக்கொண்டு நின்ற மூர்த்தியைப் பார்த்து ஷஷஇங்கே இருப்பவர்கள் எல்லாம் தந்தை தாயற்ற அனாதைகள். இவர்கட்கு உணவு தந்து வளர்த்தும் படிப்பித்தும் பல் தொழில்களும் பயிற்றி நாட்டுக்காகப் போசித்து வருகிறோம். நீ எப்படியோ? அனாதையாக இருந்தால் இந்தச் சோலையில் வந்து சேர்ந்து எல்லாவற்றையும் பெறலாம்|| என்று சொன்னவருக்கு விடைகூறாமலே தாயை நினைத்தபடி திரும்பி வந்த வழியிலே இருப்பிடம் நோக்கி நடந்தான் மூர்த்தி.
இருப்பிடம் சேர்ந்த மூர்த்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே புதிதாக வந்த உறவினரின் மடியில் சுவர்ணா கிடந்தாள். கண்டதும் முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்களைப் பொத்தினான். பதைத்தெழுந்த தாய், ஆடைகளைத் திருத்திக் கொண்டு ஷஷஎன்னடா மூர்த்தி சாப்பிட்டாயா|| என்று எழுந்து வர, வெப்பிசாரத்தோடு ஷநான் தாயும் தந்தையுமற்ற அனாதை| என்று கொண்டே பசுஞ்சோலையை நோக்கி நடந்தான்.
காத்திருப்பு
விவசாய விஞ்ஞானப் பட்டம் பெற, பேராதனைப் பல்கலைக்கழகம் புகுந்த கண்ணன், ஆண்டிறுதியில் மீண்டு வந்து, புலமைப்பரிசிலாகக் கிடைத்த ஷசெக்ஷ ஒன்றைத் தந்தையின் கையில் திணித்தான். விழிகளைத் திறந்து ஷசெக்|குத்தாளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்த தந்தையின் முன்பாக, பயணப் பெட்டியைக் கட்டிலில் வீசினான். விம்பல் பொருமலுடன் கண்களில் கசியும் நீரைத் துடைத்துக்கொண்டு, ஷஇனி நான் வளாகத்துக்குப் போகமாட்டேன்| என்று சொல்லிக்கொண்டே, போட்டிருந்த உடைகளைக் கழற்றினான்.
தாயார் ஷதிருதிரு|வென்று விழிக்கத், தந்தையார், என்னவோ ஏதோவென்று ஒன்றும் அறியாதவராக மகனின் செயற்பாடுகளை அவதானித்துக் கொண்டிருந்தார்.
கழற்றிய உடைகளை உதறிக் கொடியில் போட்டுவிட்டுச் சாரம் ஒன்றை உடுத்தபடி, கட்டிலிற் கிடந்த மகனுக்குத் தாய் ஒரு தலையணையை எடுத்துப் போட்டாள். அதை எடுத்துத் தலைக் கீழ் வைத்துக் கொண்டு, புரண்டு குப்புறக் கிடந்தான் கண்ணன்.
ஷஷபிரயாணக் களைப்பு அலுப்போடு, மனக்கவலை ஏதுமிருக்கும், எல்லாம் ஆறுதலாகப் பேசுவோம், இப்போது போய் மாட்டில் பாலைக்கறந்து, வற்றக்காய்ச்சி, சூடாக ஒரு கோப்பி போட்டுக்கொடு|| என்றுகொண்டே தந்தையார் தோளில் மண்வெட்டியைத் தூக்கி வைத்துக்கொண்டு தோட்டத்துக்குப் புறப்பட்டு விட்டார்.
அங்கே தோட்டத்தில் வேலை ஓடவில்லை. அசைபோட்டார். படித்தது, பாஸ் பண்ணியது, மேலே படிக்க முடியாத வறுமை, வேலைதேடி ஓடித்திரிந்து ஒன்றுங் கிடைக்காததால், விவசாயத்தில் இறங்கியது, பூமிமுகம் பார்த்ததால் தேடி வந்த சம்பந்தங்களைத் தட்டிக் கழித்து, அழகிகளை மேயத்திரிந்து ஆடிக் களைத்தபின் வீட்டுமாப்பிள்ளையானதும், விட்டகுறை நீக்க மகனை ஒரு பட்டதாரியாகக் காணவேண்டும் என்ற ஆவலையும் எண்ணிக் குமுறியது அவருள்ளம். இவ்வாறே நிலைகொள்ளா மனத்தோடு எழுந்து மெல்ல வீடுநோக்கி நடந்தவர், பொறுமையிழந்து விறுவிறுவென நடந்து, மகன் கட்டிலில் இருக்க, குடித்த கோப்பிப் பாத்திரத்தை தாய் கையில் வைத்துக்கொண்டு கதைகேட்க, குசலம் விசாரிக்க வந்த பக்கத்து வீட்டுக்காரியும் அங்காந்து கொண்டிருக்க, வீட்டுக்கு வந்து சேர்ந்தார் தந்தையார்.
அந்தநேரமே வேறுமிருவர் வந்துசேர, தாயார், தன் தலையைப் பிடித்துக்கொண்டு பேராதனைச் சம்பவங்களை விசாரித்தாள். இடைமறித்த கண்ணன் அங்குமட்டுமல்ல, போய் வருமிடங்களிலும் தமிழன் எனத் தெரிந்தால் க~;டம். வெறுப்போடுதான் பார்க்கிறார்கள். தேநீர்ச்சாலைகட்கோ, கடைகளுக்கோ போக முடியாது. குளிப்பதுகூடக் காக்கைக் குளிப்புத்தான். கக்கூசுக்குள் போனால் அவசரமாக வந்து கதவைத் தடடுவார்கள். வசுக்களில் கூட நின்றுதான் பிரயாணம் செய்யவேண்டும். இப்படி மூன்றாந்தரப் பிரஜையாக, அடிமைபோல உயிர் பயத்துடன் வாழ முடியாது, என்றவாறு, வந்திருப்போரின் முகங்களைப் பார்த்துப் பேசுந் திராணியற்று, மீண்டும் குப்புறப்படுத்து விட்டான்.
வந்திருந்தவர்கள் அன்றைய எமது சமூகம் பஞ்சமர்க்கிழைத்த கொடுமைகளை இவை விஞ்சி விட்டனவே, முற்பகல் செய்தால் பிற்பகல் விளையுமென்பார்களே! அவ்வினைதான் இவ்வாறு சூழ்ந்ததோ என்று பேசிக்கொண்டு சென்றனர். தந்தையார் பாய்த் தடுக்;கை எடுத்து விரித்துக் கிடந்துகொண்டு சுருட்டைப் பற்ற வைத்துப் புகையை வானத்தை நோக்கி மேலே ஊதிக் கொண்டிருந்தார்.
இந்தக் குழப்பங்களுக்கிடையில் பிள்ளை எப்படிச் சாப்பிட்டிருப்பான்? சாப்பிட்டானோ! சாப்பாடு இல்லையோ! சாப்பிட்டாலும் சிங்களக் கறிபாகம்! பிள்;ளைக்குப் பிடித்ததோ பிடிக்கவில்லையோ? தாய் மனம் இவ்வாறு அங்கலாய்ப்போடு, சரக்கரைத்த ஆணமும் சொதியும் பொரியலும் ஆக்கி முடித்த கையோடு மகனைச் சாப்பாட்டுக்கு எழுப்பியது.
புரண்டு புரண்டு கிடந்தும், திரும்பத் திரும்ப எழுப்பிய பரிவிற்கு ஈடுகொடுக்க முடியாதெழுந்த கண்ணன், சோம்பல் முறித்துக்கொண்டு கிணற்றடிக்குச் சென்றான்.
அங்கே குளிர்ந்த நீரைத் துலாவாளியால் அள்ளி ஆசைதீரக் குளித்துவிட்டு வர, தந்தையும் சாப்பாட்டு மேசையில் வந்திருந்தார்.
வழமைபோலவே தந்தையும் மகனும் ரசித்துச் சிரித்துப் பேசிச் சாப்பிட்டுக்கொண்டிருக்க தாய் உணவு பரிமாறினாள். அந்தநேரம் தந்தை என்ன நினைத்தாரோ! ஷஷகண்ணா! இனி இந்தத் தோட்டந் துரவெல்லாம் உன் பொறுப்பு, நீயே பார்த்துக்கொள்|| என்றவரின் கண்கள் குளமாகி நின்றன. ஷஉதடுகள் ஷஷஉனக்கும் எனக்கும் ஒரே விதிதான்|| என்று சொல்லி மூடின.
மகன், ஷஷசுதந்திரத்தை நேசித்தால் துன்பங்களைத் தாங்கத்தான் வேண்டும். அடிமை உத்தியோகம் எப்பொழுதும் ஆபத்துதான்|| என்று நினைத்துக்கொண்டே தந்தையின் கோரிக்கையை ஏற்றுத் தலையசைத்தான்.
கண்ணன் புகையிலை மிளகாய் தோட்டச் செய்கையில் தீவிரமாக, ஈடுபட்டுச் சிரத்தையோடு உழைக்கிறான். ஊரார் பார்வையில் அவனது பயிர்கள் வளர்ந்து செழித்து நிற்கின்றன. வெட்டுக்கொத்து, பாத்திகட்டல், உரமிடுதல், கிருமிநாசினி தெளித்தல் எல்லாம் விஞ்ஞான ரீதியில் செய்யக்கண்ட ஊரார் ஷஷபடித்தவனல்லவா|| என்று பாராட்டிச் செல்லும் வேளையில், ஊரில் ஒரு பதற்றம் நிலவியது.
நேற்று நகரம் சென்றவன் இன்னும் வரவில்லை, மேற்கேபோன பிள்;ளைகள் மூவர் மூன்று நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. அவனைக் காணவில்லை இவனைக் காணவில்லை என்ற பேச்சோடு ஊர் அலமலக்குப்பட்டது. காணாமற்போன பிள்ளைகளிற் சிலர் கண்ணனின் வகுப்புத் தோழர்கள். சில பட்டதாரிகளுமுண்டு. இவர்கள் எங்கே சென்றார்கள் என்பதை விட, எந்த இயக்கத்துக்குப் போனார்கள் என்ற கேள்விகள் மேலோங்கி நின்றவேளையும், கண்ணன் ஒன்றும் அறியாதவன்போல் கருமமே கண்ணாகப் பாடுபட்டான்.
பெற்றோர்களின் ஒரே ஒரு பிள்ளை என்பதால் இவர்களின் பாசத்தாற் கட்டுண்டு கிடக்கிறான் கண்ணன் என்பதில் பெற்றோருக்கு ஆறுதலாக இருந்தது.
இந்த நிலையில் ஒருநாள், தாழப்பறந்து வந்த விமானங்கள் இரண்டு ஆகாயத்தைச் சுற்றி வளைத்து நோட்டமிட்டன. அங்காங்கு வேடிக்;கை பார்த்து நிற்போர், கண்முன்னாகவே அங்குமிங்குமாக குண்டுகளை வீசி மக்களைப் பீதியில் ஆழ்த்தின. என்னவோ ஏதோவென ஏங்குவார் ஏங்க, தொகுதியின் முதற்பிரஜையின் வீட்டை நோக்கி குண்டுகளால் அயலில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள் இரண்டும், குதிரை ஒன்றும் துடிதுடித்து மடிந்தன.
தோட்டத்தில் நின்றபடியே வானத்தைப் பார்த்த கண்ணன், வட்டமிட்டுக் குத்தி எழுந்த விமானங்களைப் பார்த்து வெகுண்டான். இங்கேயும் நிம்மதி இல்லை. எங்கே போவது? என்ன செய்வது ஏக்கத்தோடு இயல்பூக்கங்கள் பீறி எழ, இதற்கு மேலும் பொறுத்திருப்பது தருமத்தை அலட்சியப்படுத்தவதாகும். செய்யவேண்டியவற்றை செய்யாதுவிடுவது தவறு என்றது மனம். தன்னைக் கொல்லவருவது பசுவெனினும் அதைக் கொல்வது தருமம்|| என்று நினைத்தானோ என்னவோ மண்வெட்டியைச் சுழற்றி எறிந்தான். தன்முன் தளைத்தோங்கி நின்ற புகையிலைச் செடிகளைப் பார்த்து என்ன நினைத்தானோ? கண்ணீரைக் கைகளால் துடைத்துக்கொண்டு, பயன்கருதாக் கடமை அழைக்கத் தணியாத தாகத்தோடு ஓடிச்சென்ற கண்ணன் மீண்டு வீட்டுக்கு வரவில்லை.
கண்ணனைக் காணாப் பெற்றோரின் கவலை சொல்லுந் தரத்தல்ல. ஆசைக்கும் ஆஸ்திக்கும் ஒரே ஆண்பிள்ளையாகப் பெற்றுக் கொள்ளிக் கடமைக்கென எண்ணி வளர்ந்தபிள்ளை, சொல்லிக்கொள்ளாமல் காணாமற்போனதை எண்ணி எண்ணித் துயருற்றார்கள். அந்நிலையில், ஊரிலுள்ள வீடுகள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் இந்நிலைமையே காணப்பட்டதால் ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டு காத்திருந்தனர்.
ஷஷஅண்மையில் நடந்த அடிபாடொன்றில் கண்ணன் வித்தாகி மகன் தந்தைக்காற்றும் கடனை நிறைவு செய்துவிட்டான்|| என்பதை ஊர் உலகம் அறிந்திருந்தாலும், கண்ணனின் வயோதிபத்தாய் தந்தையார் அவன் வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர், அவனது உயிர்ப்புக்காற்று, தம்மோடு உறவாடிக் கொண்டிருப்பதை உணருந் திறனற்றுப்போய்.
கனவு பலித்தது
காலக் கனவுகளில் மிதந்தார் கந்தர்.
தனது கரங்கொண்டு சவர்க்காரம் பூசித் தடவும் முகங்கள் ஒவ்வொன்றினிடமும், அவ்வவ் முகங்களின் தகுதிகண்டு, தனது கனவின் உள்ளிருப்புக்களை வெளியிட்டு; பொருள்தேடும் அவரது உதடுகள், ஒவ்வொரு உதடும் ஒவ்வொரு பொருளைக் கூறிச்செல்ல, தான் விரும்பும் பொருள் கிடைக்காதது கண்டு, ஷஇவர்களுக்கு ஒன்றுந் தெரியாது| என்று தனக்குத்தானே சொல்லி இலேசாகப் புன்னகைத்துக் கொள்வார். அவ்வாறே அவரது கனவு மட்டும் மற்றவர்கள் அறியாத புதிராக வளர்ந்து வந்தது.
ஆண்டுதோறும் நடைபெறும் பரீட்சையின் முடிவுகள் அவரின் கனவினை வளர்க்கும் காரணிகளாயின. இவ்வாண்டு வெளிவந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில், எட்டுப் பாடங்களில் ஷஷடி|| தரம் பெற்ற மகன் பார்த்தனின் பரீட்சை முடிவுகள், தந்தையின் கனவுகளின் சிகரமாயமைந்தன. இன்னுஞ்சில ஆண்டுகளில் மகனை டாக்ரராகக் காணும் கற்பனையில் பூரித்துப் போனார்.
பலரின் கட்டிகளுக்குக் கத்திவைப்பதிலும் கால்களில் தைத்த முட்களைச் சத்திரசிகிச்சை செய்து எடுத்து விடுவதிலும் நிபுணரான பரியாரி கந்தர் தனது மகன் பார்த்தனை ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டராகக் கண்டதில் வியப்பில்லை. பரீட்சை முடிவுகள் மகன் டாக்டராகுவான் என்ற நம்பிக்கையை வலுப்படுத்த, மகனால் தான் பெறப்போகும் புகழை எண்ணியெண்ணி மகிழ்ந்தார்.
இந்நிலையில் ஒருநாள்! வெள்ளிதாய் தெளிந்த வானத்தில் மின்னி முழங்கிப் பொழிந்த ஷஷசெல்|| மழை ஊர்மக்களைக் காட்டுப்பகுதிக்கு இடம் பெயர்த்தியது. வீடுகள் தகர்ந்து வீதிகள் குண்டும் குளியுமாகி இருப்பழிந்து காட்டுப்புலம் நோக்கிச் சென்ற மக்கள், அங்குள்ள பெருமரக்காடுகள், இடைகள்போல் ஷசெல்ஷ மழையைத் தாக்குப்பிடிக்கும் என்று நம்பினர். மலையைப் பெயர்த்துக் குடையாகப்பிடித்து மாடுகளைக் காத்த மாயவன் எங்களுக்காக மரங்களை வளர்த்து வைத்துள்ளாரே என்ற மகிழ்வுமிருந்தது. செல்மழைக் கஞ்சிக் காடுகள் நோக்கிச் சென்று மரங்களின்கீழ் வாழ்ந்த மக்களுக்குப் பயமும் பீதியும் சற்றுத் தணிய, வயிறு பிரச்சினை தந்தது.
தந்தையும் தாயும் மகனும் மீண்டும் ஊருக்குப் போக நினைத்தனர். மூட்டை முடிச்சுக்களைச் சுமந்து கொண்டு, சாரிசாரியாகக் காடுநோக்கி வரும் ஊர்ச்சனங்கள் சொன்ன செய்தி அவர்களின் மீள் பயணத்தை நிறுத்திவிட்டது. ஆனால் அவர்கள் சுமந்து வந்த பொதிகள் இவர்களின் வெறுமையை உணர்த்தி நின்றன. ஊரே இடம் பெயர்ந்து உடன்வந்திருக்கும்போது ஊருக்குச் சேவை செய்யும் கத்திரிக்கூட்டை விட்டு வந்தேனே என்ற கவலை கந்தருக்கு.
பசியோடு அல்லாடிக்கொண்டு ஆங்காங்கே பாலை வீரை விளாம்பழங்களையும் காய்களையும் நின்று கொண்டிருந்தவர்கள், யாரோ சிலர் வார்த்த தர்மக்கஞ்சியைக் குடித்தாறி, ஆங்காங்கே புதிதாக அமைந்த சில முகாம்களிலும் உறவினர் வீட்டுக் கோடிகளிலும் தங்கினர். இங்கேதான் இனி ஊருக்கு இப்போதைக்கும் போகமுடியாது என்ற சுய உணர்வு தோன்றியது. விட்டுவந்த வீடு வாசல் பொருள் பண்டமெல்லாம் பாதி அழிந்தும் மீதி கொள்ளையிலும் ஒழிந்து விட்டதாக ஒப்பாரி வைத்த பலர் ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல் என்று எங்கே எப்படி வாழ்ந்தபோதும் உயிரைப் பிடிக்கும் ஆவலோடு இருந்தனர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டில் வாழ்ந்தவர்களாதலால், பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி நமக்கு எப்படியும் சமாளித்துக்கொள்ளலாம் என்று துணிந்த கந்தருக்குத் தொழிலாவல் ஏற்பட்டது.
பார்த்த முகங்களெல்லாம் முட்பற்றையாகக் கண்ட கந்தருக்கு கத்தரிக்கூட்டை கைவிட்டு வந்த கவலையோடு தனது கனவை நனவாக்கும் கவலையும் வந்து முட்டி மோதியது. அப்பிரதேசமெல்லாந் திரிந்தும் தனது மகனின் கல்வியைத் தொடர ஒரு பாடசாலையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கணிதம் இருந்தால் விஞ்ஞானமில்லை. விஞ்ஞானமிருந்தால் பௌதீகமோ ரசாயனமோ ஒன்றிருந்தால் ஒன்றில்லை. இந்தநிலையிலும் இடம்பெயர்ந்த மாணவர்களால் பாடசாலைகள் நிரம்பி வழிந்தன. மரங்களின் கீழும் ஆங்காங்கே வகுப்புகள் நடந்துகொண்டிருக்க பல மாணவர்களும் இளைஞர்களும் வீதிகளில் வேலை தேடி அங்கலாடித் திரிந்தனர்.
முகாம்களில் பற்றும் பற்றாத உணவினை உண்டு, வீதிகளிலும் சந்திகளிலும் மரங்களின் கீழும் வேலையின்றிக் கூடிநின்ற அகதிகளின் கண்களில் ஒரு இளைஞர் கூட்டம் அடிக்கடி தென்பட்டது. அவர்களின் வசீகரத்தோற்றமும் துடிதுடிப்புள்ள செயற்பாடுகளும் போவதும் வருவதும் பலருள்ளங்களில் பல கேள்விகளைக் கேட்டன.
யார் யாரோ! யார்பெற்ற பிள்ளைகளோ! இளமையும் அழகும் உள்ள இவர்களேன் இப்படி ஆனார்கள் என்பாரும், பார்த்தால் தெரியுதே படித்த பிள்ளைகள் என்பதை, இவர்கள் எங்களை விடக் கனக்கத் தெரிந்திருப்பார்கள் என்பாரும் எம்நிலை கண்டு இரங்கியதாற்றான் தம்முயிர் துறக்க முன்வந்தார்கள் என்பாருமாகப் பலர் பலவாறு பேசிக்கொண்டிருக்க பார்த்தனது மனம் தனது பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டுப் புதிய கற்பனையில் மூழ்கியது.
ஷஷபடித்ததனாலாய பயன் டாக்ரர் எந்திரித் தொழில்கள் பார்ப்பதாக இருக்கலாம், இப்போது ஏற்கனவே எனக்கென்று தீர்மானிக்கப்பெற்ற தொழில் ஒன்று இருக்கும்போது சோம்பித் திரிவது பாவம். படித்தவன் குலத்தொழில் செய்வது கூடாதல்ல. குலத்தொழில் கற்றது பாதி கல்லாதது மீதி பயிற்சியால் வரும், நாளைக்கே இம்மரத்தடியில் ஒரு சலூன் திறப்பது என்றவன் நெஞ்சு ஷஷபகீர்|| என்றது.
ஆயுத தளபாடங்கள் அற்ற நிலையில் தொழில் தொடங்க நினைத்ததை எண்ணி வருத்தப்பட்டான். வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்றிருக்கும் மக்கள் சேவை அவன் கருத்திற் படவில்லை. அவன் கருத்து வேறாக, விடாமுயற்சியுடன் தனது உறவினர் சிலரிடம் ஆயுத உதவி கேட்டான். அவர்களோ! ஷஷபடித்தபிள்ளை நீ, மேலும் படித்து உனது அப்பனின் கனவை நிறைவேற்று. இந்தத் தொழில் உனக்கு வேண்டாம்|| என்று ஆயுதம் தர மறுத்து விட்டனர்.
தாமுண்டு தம் தொழிலுண்டு என்று வாழ்பவர்களால் இவனின் சேவையின் நோக்கத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆழ்ந்த சிந்தனையோடு சலூன் வைக்க நினைத்த மரத்தின் கீழே போயிருந்தான் பார்த்தன். அவன் மனத்திரையில் அவ்வழியால் வந்துபோகும் முகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து சென்றன. ஷஷஇந்த இந்த முகங்களுக்கு இன்ன இன்ன வகையில் சிகை அலங்காரம் செய்தால் எடுப்பாயிருக்கும். எங்களுக்காகத் தியாகம் செய்யும் இளைஞர்களுக்கு இந்தச்சேவையைக் கூடச் செய்யமுடியாத வாழ்வும் ஒரு வாழ்வா|| என்று தன்னைத்தானே வெறுத்த ஏக்கத்துடன் இருந்தவன் முன்னால், உழவு இயந்திரப் பெட்டியில் சில இளைஞர்கள் வந்துகொண்டிருந்தனர். கையைக் காட்டி நிறுத்தலாம் என நினைத்தபோது தன் பக்கத்தில் வந்த பெட்டியில், கவர்ச்சியால் இழுக்கப்பட்டுத் தொற்றிக் கொண்டான்.
மகனைக் காணாது புலம்பிய கந்தரும் மனைவியும் தங்கள் கனவெல்லாம் பாழாகி விட்டன என எண்ணிப் பரிதவித்தனர். வாழ்வா சாவா என்ற போராட்டத்திலும், பார்த்தனை ஒருமுறையேனும் பார்த்து விடவேண்டும் என்ற துடிப்பு அவர்கட்கு. அறிவும் அழகும், பாடசாலை ஆசிரியர்களின் பாராட்டுகளையும் பெற்று வாழ்ந்த மகனின் அங்க அசைவுகளையும் சொற் சித்திரங்களையும் நினைந்து நினைந்து சொரிந்த கண்ணீரைத் துடைக்கவும் வலியற்றிருந்தனர் பார்த்தனின் பெற்றோர்.
முகாமில் இருக்காது வெளியே சென்று, தனித்திருந்து பாசத்தாற் கரைந்தழும் கந்தர் இப்போது தேறிவிட்டார். காலவோட்டம் கவலையை மறக்கச்செய்து விட்டது. ஆயினும் வயோதிபமும் வறுமையும் வருத்தத் தாம் இழந்துபோன ஒரே ஒரு பெருஞ் செல்வத்தை நினைத்ததும் பைத்தியம் பிடித்தவர், அங்கிங்கென்று அலைந்து திரிவார்.
பித்தர் நிலையில் முகாமை விட்டுச்சென்ற கந்தர் வீதி ஓரத்தில் நின்ற ஒரு பாலைமரத்தின் கீழ் இருந்தார். என்ன காலமோ செல்லுக்குப் பயந்து ஓடிவந்த இடத்திலும் அத்துயரம் தொடரவே செய்தது. முன்னர்போல பயந்தோடிப் போகாது, இரைச்சல் கேட்டு வானத்தைப் பார்த்தார். அங்கே சாகசம் புரிந்த விமானங்களை அங்கார்ந்திருந்து பார்த்த வேளையில், அவற்றில் ஒரு விமானப் பறவை குத்திக் குதித்துக் கீழே வந்தது. இமைக்கமுன் முட்டை ஒன்றை இட்டுவிட்டு முக்கி முனகிப் பிரசவ வேதனையோடு மேலே சென்றதுதான் முட்டை வெடித்த பேரோசையாலும் சிதறல்களாலும் மரக்கிளைகள் ஷபடபட|வென முறிந்தன. நெருப்பும் புகையும் தூசியும் எங்கும் வியாபித்தன. மரத்தின் கீழ் இருந்த கந்தர் தலையில் காயத்துடன் மூச்சை அடைத்து அதே இடத்தில் கிடந்தார்.
இப்பொழுது ஒரு முகாமிலுள்ள கட்டிலின் மெல்லிய மெத்தையில் வளர்த்தி வைக்கப்பெற்ற கந்தர் மூச்;சை தெளிந்து கண் விழித்துப் பார்த்தார். அவர் முன் பார்த்தன் நின்றான். ஒரு டாக்டருக்குரிய கோலத்துடன் டாக்டராகவே நின்ற பார்த்தனை கந்தரால் அடையாளம் காண முடியவில்லை. ஆயினும் உள்ளுணர்வு ஷபார்த்தன் பார்த்தன்| எனச்சொல்ல உதடுகளை ஷமகனே| என அசைத்த கந்தரை அங்கிருந்து அணைத்த பார்த்தனின் கரங்கள் நடுங்கின. உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் தழும்பத் தந்தையைத் தழுவி நின்றான் டாக்டர் பார்த்தன்.
ஆசைக் கனவு பலித்த ஆனந்தக் களிப்பில் ஷஷஎன்னை அம்மாவிடம் அனுப்பு|| என்று ஆவேசமாகக் கேட்டார் கந்தர்.
வள்ளி
வறிய ஏழைக் குடும்பம் ஒன்றிற் பிறந்தவள் வள்ளி. இளமையிலேலே தாயை இழந்து விட்டாள். கூலிப் பிழைப்புக்குச் சென்று வருகிறார் அவளின் தந்தை கணபதியார். அவரின் கையைப் பார்த்தே அன்றாடம் காச்சி உண்ணும் கலை வள்ளிக்குக் கைவந்தது.
தாயின் மரணத்தோடு, ஐந்தாம் ஆண்டுக் கல்விக்கு முழுக்குப் போட்ட வள்ளி, தந்தையின் ஒரே செல்லப் பிள்ளையாக வளர்ந்தாள். அவளின் அழகும், எடுப்பான உடல்வாகும், கணபதிக்கு இப்படி ஒரு மகளாவென அயலாரை வியக்க வைத்தன. பருவ மங்கையான அவள், கணபதியரின் சொற்ப வருமானத்தைக் கொண்டு, சிக்கனமாகச் சீவித்துச் சேமித்த பணத்தில், ஒரு தங்கச் சங்கிலிக்கு உடமைக்காரியாகி விட்டாள்.
வள்ளிமேலுள்ள அன்பும் பாசமும், அவளது அழகுப் பொலிவும் கணபதியார் நெஞ்சில் பேராசையை வளர்த்தன. இவ்வாசைகட்கு இடக்குமுடக்காக பணம் இல்லையே என்ற கவலை வளர்ந்தது. ஷஷஇவளுக்கேற்ற கணவன் என் சாதி சனத்தில் இல்லைÉ பிற இடத்தில் கொள்ளச் சீதனம் இல்லையே என்ற ஏக்கம் வர, இப்ப இவளுக்கு வயசு பதினாறுதானே. வயது வரட்டும் என்று ஆறுதல் அடைந்தார்.
சில தரகர்கள், வசதிவாய்ப்புள்ள தபுதார மாப்பிள்ளைகளுக்குப் பெண்கேட்டு வந்தபொழுது, கணபதியரின் மனதில் சபலம் தட்டியது. ஆளுமை மிக்க தன் மகளுக்கு, பட்டும் படாமலும் விடயத்தைச் சொல்லி, அவளின் விருப்பத்தை எதிர்பார்த்தார். அவளோ ஷஷகாலம் வரும்போது நானே சொல்கிறேன்|| என்று நாசூக்காகக் கதையை முடித்துக் கொண்டாள்.
காலவோட்டத்தில் சில சம்பந்தங்கள் வந்தபோதுங் கூட அவையொன்றும் வள்ளியிடம் எடுபடவில்லை. இதனிடையே வள்ளியும் பக்கத்துவீட்டுக் குமரனும், கிணற்றடியிலும் வேலியிலும் நின்று கதைப்பது அயலட்டங்களில் பறையப்பட்டுக் கணபதியரின் செவிப்பறையிலும் முழங்கியது.
அதிர்ந்துபோன கணபதியார், ஷஷகுமரனின் குலமென்ன! கோத்திரமென்ன! என்னிடம் பெண் கேட்டு வந்தவர்களின் தரமென்ன! அவர்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு இந்தக் குமரனிடம் என்னத்தைக் கண்டாள்|| என்று தன்னுள் புழுங்கிக் கொண்டார்.
தந்தையார் படுந்துயரத்தையும், அவர் தன்னுடன் முகங்கொடுத்துக் கதைக்காது புறக்கணிப்பதையும் அவதானித்த வள்ளி, ஒருநாள் சாப்பாட்டின்பின், துயிலும் தந்தையாரின் பாயில் போயிருந்துகொண்டு, அவரைச் செல்லமாகத் தடவினாள். அவரின் கையை எடுத்து முத்தமிட்டுத் தன் மடியில் வைத்துக்கொண்டே, ஷஷஎன்னைக் குமரனுக்கே கட்டி வையுங்கள்|| என்று மன்றாடிக் கெஞ்சினாள்.
கண்கள் நீர்க்குளமாக, அடங்கியிருந்த துயரம் நெஞ்சிற் கனக்க, கரகரத்தக் குரலில், ஷஷஎன் கனவுகளை யெல்லாம் பொய்ப்பித்து, இந்தப் பாழுங் கிணற்றில் விழ முடிவு செய்தாயே|| என்று விம்மல் பொருமலுடன் கூறினார் கணபதியார்.
ஷஷஅப்பா! நான் நன்றாக யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். என்னைப் பெண் கேட்டு வந்தவர்கள் எல்லாரும் பெரிய இடத்துக்காரர், அவர்களுக்குத் தேவைப்பட்டது வாழ்க்கைத் துணைவியல்ல. வேலைக்காரி! சம்பளம் கேட்காத வேலைக்காரி! வயிற்றுப் பசிக்கு ஆக்கிப் படைத்தும் உடற்பசிக்கு பாய்விரித்துப் படுத்தால் அவ்வளவே அவர்களுக்குத் திருப்தி. அப்பா! நான் அவர்களுக்கு விடுதலை இல்லாத வேலைக்காரியாக இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் அவர்களின் வீட்டுப் படியேறுவீர்களா? அல்லது ஏற விடுவார்களா? வயோதிப காலத்தில் உங்களைப் பார்த்துப் பராமரிக்க என்னை அனுமதிப்பார்களா? இவற்றையெல்லாம் யோசித்துத்தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். நான் தவறு செய்திருக்கிறேனா? சொல்லுங்கள் அப்பா சொல்லுங்கள்|| என்று தந்தையாரின் முகத்தைத் தடவிக் கேட்டாள் வள்ளி.
மகளின் அன்புப் பரிசத்தால் திக்கிமுக்காடிக் கொண்டிருந்த கணபதியார், ஷஷநீ சொல்வதெல்லாஞ் சரி. நான்தான் என் பேதை மதியால் ஆசைப்பட்டு எமது தகுதிக்கு மிஞ்சி நினைத்துவிட்டேன். ஷஷதனக்கெளியது சம்பந்தம்|| என்பார்கள், நாலுந்தெரிந்தவள் நீ, உன் முடிவே என் முடிபென்று இசைவு தந்தார் கணபதியார்.
குமரனும் வள்ளியும் திருமணஞ்செய்து ஒரு குழந்தைக்கும் பெற்றோராகி விட்டனர். யாழ் கரையோரப் பகுதியில் ஒரு சிறுகுடிலில் குடித்தனம் செய்துகொண் டிருக்கின்றனர். யாழ் கண்டி நெடுஞ்சாலைப் போக்குவரவு துண்டிக்கப்பட்டுவிட்டது. கிளாலிப் பாதை திறந்து வவுனியா யாழ்ப்பாண வர்த்தகம் சிறந்திருந்தபோது, துணிந்து தொழில் செய்த குமரன் ஓரளவு வருமானத்தைத் தேடிக்கொண்டு சிறப்புடன் வாழ்ந்து வந்தான்.
என்ன காலமோ! இவற்றைப் பொறுக்காத விதி, சூரியக்கதிர்களாக உள்நுழைய, இடம்பெயர்ந்து, நாவற்குழியூடாகத் தென்மராட்சிக்குள் ஒதுங்கவேண்டிய நிலை குமரனுக்கானது. தென்மராச்சியில் தொழிலின்றிச் சுற்றித்திரிந்து, உணவு, மருந்து, பிள்ளைக்குப் பால்மா என்று வாங்கிய வகையில் கையிற் பணமும் கரைந்து விடத் தொழில் வேறுமின்றி அன்றாடச் சீவியத்துக்கே திண்டாடும் நிலை. விறகு வெட்டி விற்றுச் சீவிக்கவும் முடியாத நிலையில் திண்டாடும் குமரனுக்கு வாய்ப்பாக, தென்மராட்சிமீதும் இலங்கை இராணுவம் முன்னேற, யாழ்ப்பாணம் குமரனை அழைத்தது.
தென்மராட்சியிலிருந்தும் யாழ்ப்பாணத்துக்கு மீளச் சென்ற முதல் நூறு குடும்பங்களுள், குமரனின் குடும்பமும் ஒன்று. வழி நெடுகும் அதிசயமான இராணுவ வரவேற்புடனும் மகிழ்வுடனும் சென்ற குடும்பங்கள் மீண்டும் கதி கலங்கின. தேடுதலும் சோதனைகளுமான கெடுபிடியில் சிக்கித் தவித்தன. பல இளைஞர்கள் கைதாதலும், காணாமல் போவதும் வழமையானது. இந்நிலையில், இளைஞனான குமரனைப் பற்றிய நினைவு குடும்பத்தை வாட்டி எடுத்தது. தான் ஒரு தாய் என்ற பாதுகாப்புடன் இங்கிருந்தாலும் குமரனைப் பாதுகாக்கும் பிடிவாதத்தில் இருந்தாள் வள்ளி. தந்தையாரான கணபதியார் ஷஷபட்டது போதும். இனி இந்த மண்ணைவிட்டு வேறு எங்கும் வரேன்|| என்று விட்டார். தந்தையாரைப் பராமரிக்காது நாடுகடக்க வள்ளிக்கு விருப்பமில்லை. எப்படியும் வயோதிபத் தந்தையும் தாயான தானும் குழந்தையும் இங்கு வாழ்ந்துவிடலாம் என நினைத்த வள்ளி, தனது ஒற்றைச் சங்கிலியையும் விற்றுக் குமரனை அக்கரைக்கு அனுப்பி விட்டாள்.
இங்கே இவர்களுக்கு ஆரம்பத்திலே கிடைத்த நிவாரணப் பொருட்கள் சுமாராக இருந்தன. சீவியம் போய்க் கொண்டிருந்தது. சிக்கனமாக மிச்சம் பிடித்த நிவாரணப் பண்டங்களை விற்று தேவையான பிறபண்டங்களை வாங்கக்கூடியதாகவிருந்த சுமுக காலம் மாறித் தட்டுப்பாடுகள் மிகுந்தன. மக்கள் எந்தத் தொழில் செய்யவும் வாய்ப்புகளின்றி மூலைகளுள் முடங்கிக் கிடந்தனர். கடற்கரையோரங்களிலும் மீன் பிடிக்கத்தடை. வயல்வெளிகளில் மிதிவெடிப் பயம். மிதிவெடிகளில் மாடாடுகளும் சிக்குண்டு மடிந்தன. நோய் நொடிகள் வேறு வாட்டி வதைத்தன. ஆசுபத்திரிகளில் மருந்துக்கும் மருந்துகளில்லை.
எங்கும் பஞ்சமும் பட்டினியும். கணபதியாரும் நோயிற் படுத்துவிட்டார். உடல் வற்றி மெலிந்துபோன வள்ளியின் வெறும் முலையைச் சப்பிச் சப்பிக் குழந்தை வீறிட்டழுகிறது. நோய்க்கு மருந்தெடுக்க ஆஸ்பத்திரிக்குச் சென்ற கணபதியார், வைத்தியர் எழுதிக் கொடுத்த மருந்துத்துண்டுடன் வந்து மூலையில் கிடக்கிறார். மருந்து வாங்கப் பணமில்லை. இவற்றுக்கெல்லாம் வழி தெரியாது ஏங்கிப்போயிருக்கிறாள் வள்ளி.
ஷஷபிள்ளையின் பிறப்புப் பத்திரத்தைக் காட்டினால் சங்கத்தில் பால்மாப்பை கொடுக்கிறார்கள்|| என்று பக்கத்து ஒழுங்கையில் யாரோ சொல்வதை, வள்ளி கேட்டுவிட்டாள். அச்சொல் அவள் நெஞ்சில் பாலொடு தேனையும் வார்த்தது. பரபரப்போடு பிள்ளையின் பிறப்புப்பத்திரத்தைத் தேடினாள். அதைக் காணவில்லை. பதற்றத்துடன், ஷஷஎத்தனை கெடுபிடிகள், இவற்றுக்குள் பூனைகள் குட்டிகளைக் காவுவது போலக்கொண்டு திரிந்தது. எங்கு தொலைந்ததோ! என்று அலுத்துப்போய், பிள்ளையைத் தூக்கிக்கொண்டு ஓடினாள்.
அங்கே ஷஷஇது உன் பிள்ளைதானா? அதற்கத்தாட்சி எங்கே? ஒரே பிள்ளையைத் திரும்பத் திரும்பக் கொண்டுவருகிறார்கள். இரவற் பிள்ளையையும் கொண்டு வருகிறார்கள். பத்திரம் காட்டினால் அடையாளமிட்டுக் கொடுப்போம், பிள்ளையைக் காட்டினால் கொடுக்க முடியாது|| என்று ஒருவன் அடம்பிடிக்க, மற்றவன் பெயரைக்கேட்டு எழுதிவிட்டு ஒருபை மாவைத் தூக்கிக் கொடுத்தான். பிறப்புப்பத்திரம் காட்டியிருந்தால் மூன்று பைகள் கிடைத்திருக்கும். இதுவும் இல்லையென்றால் சும்மா போக வேண்டியதுதானே! எல்லாம் என்றன் பொல்லா விதி என்று தன்னைத்தானே நொந்துகொண்டவள் மேலே நடந்தாள்.
முன்னாற்போன பெண் ஒருத்தி பக்கத்துக் கடை ஒன்றில், கொண்டு சென்ற பால்மாவை விற்றும் பணமாக்குவதைக் கண்டாள் வள்ளி. அவள் நெஞ்சு திக்கிட மனம் ஊசலாடியது. மாவை விற்றுத் தந்தையாருக்கு மருந்து வாங்கு என்றது ஒருமனம். பிள்ளைக்குரியதைப் பிள்ளைக்குக் கொடு என்றது மற்ற மனம். பிள்ளைக்கு என் இரத்தத்தைப் பாலாக்கிக் கொடுக்க முடியும். தந்தைக்கு மருந்து வாங்கத்தான் வேண்டும்|| என்று முடிந்த மனப்போராட்டத்தின் பின் மாவை விற்று மருந்தை வாங்கிய மகிழ்வுடன் வீடு நோக்கி விரைந்து நடந்தாள்.
அங்கே! விரக்தியால் வேதனையுற்ற கணபதியார் முகட்டு வளையில் மாட்டிய வளையில் பிணமாகத் தொங்கினார்.
ஷஅய்யோ அப்பு| என்று வள்ளி கதறி அழுத ஒலி, கரையோரமெல்லாம் எதிரொலித்தது.
சாதியை வென்ற அறிவு
அது அந்தக் கிராமத்தில் உள்ள அழகிய சிறிய பாடசாலை. இம்முறைதான் க.பொ.த. வகுப்பு வைத்து நடத்த அனுமதி பெற்றுள்ளது. இங்கே சாதாரண தரம் படிக்கும் பத்து மாணவர்களுள், சுப்பிரமணியும் ஒருவன்.
பாலர் வகுப்புகளில், நாற்பதுக்கு மேல் தொகையுள்ள மாணவர்களின் சகமாணவன் இவன். உடன் மாணவர் பலர் கடைச்சிப்பந்திகளாகவும் விவசாயக் கூலிகளாகவுஞ் செல்ல எஞ்சிய பத்துப்பேர் இப்போது, க.பொ.த சாதாரண தரம் படிக்கிறார்கள்.
வறுமைச் சூறையில் அடிபட்டுப் போகாமல், சுப்பிரமணி தொடர்ந்து படிப்பது பலருக்குப் பெருவியப்பு. விதவைத் தாயாரின் ஆதரவுடன் எப்படித் தொடர்ந்து படிக்கிறான்? பலர் மனதில் எழுந்தும் கேட்கப் பெறாத கேள்வி இது.
அகத்தழகை முகங்காட்ட, முறுவல்தரும் ஒளியோடு சாந்தசொரூபியான சுப்பிரமணியின் தாயார் ஒரு விதவை. அந்த அழகிய விவசாயக் கிராமத்தில், ஒரு குழி வயலோ, தோட்டமோ அவர்களுக்கு இல்;லை. கூலித் தொழிலாளி ஆகிய அவள், வாடிய பயிர்களைக் கண்டு, மழைவேண்டி இருப்பாள். பயிர்களை அழித்து மேயும் ஆடுமாடுகளைத் துரத்துவாள், கதிர்களைக் கொய்யும் பட்சிகளைக் கல்லெறிந்து கலைப்பாள், ஷஷவானம் பொழிய வேண்டும் பூமி விளைய வேண்டும்|| என்ற நல்ல மனம் அவர்களுக்கு. ஊர் செழிப்புற் றிருந்தாற்றான் தானும் தொழில் செய்து வாழலாம் என்பது அவள் அறியாததல்ல.
பயிர்களுக்குள் களையெடுத்தும், அரிவு வெட்டியும், புகையிலை நட்டும், பதி கிண்டியும் வெட்டி, முடியும் வேலைகளைச் செய்து, பெற்ற கூலிப்பணத்தைக் கொண்டு சீவித்தும் மகனின் கல்வியைப் போதித்தும் வந்தாள், தாயான பொன்னம்மாவெனும் பொன்னி.
வேறு கவலைகளின்றி, கல்வியே கருந்தனமென்று கருதியோ கருதாமலோ கற்றுவந்தான் சுப்பிரமணி.
தலையெழுத்து எவ்வாறு கிறுக்கப்பட்டி ருக்கின்றதோ தெரியாது. முத்துமுத்தான அவனது கையெழுத்தை பாராட்டாதவரில்லை. அச்செழுத்தை விஞ்சும் கலைவண்ணம் உடையது அவனது கைவண்ண எழுத்துக்கள். மாணவர் மலரின் எழுத்துப் பிரதிகள் பல சுப்பிரமணியின் கையெழுத்தைப் பிரகாசம் செய்தன. வகுப்பில் முதல் மாணவனான சுப்பிரமணி, சக மாணவர்களின் சந்தேகங்களைத் தவிர்த்துச் சரியான விளக்கங்களைக் கொடுத்தலால், சகமாணவர்களையும் தன்னோடு இழுத்துச் செல்வதில் முன்நின்றான். அக்காலத்தில் சகமாணவர்களுக்கு, வினாவிடைப் பயிற்சி அளிப்பதில் இவனொரு ஷஷரியூ~ன்|| வாத்தியார்.
இவனுக்கு அடுத்தடுத்த நிலையிலுள்ள மாணவர்கள்கூட எதுவித காழ்ப்புமின்றிப் பாராட்டி நேசம் கொண்டனர். இவ்வூரின் முதலாவது பட்டதாரியாகச் சுப்பிரமணி வருவான் என்பது பலரது கருத்து. இது காரணமாகச் சில நிலச்சுவாந்தார்களும் நொத்தார், உபாத்தியார் போன்ற உத்தியோகத்தர் சிலரும் தமது பிள்ளைகளுக்கு இவன் செய்யும் உதவியைக்கூட உணராது அழுக்காறடைந்தனர். என்னதான் காழ்ப்புணர்வு கொண்டோராலும் அவனை நேரிற் காணும்போது பாராட்டிக் குசலம் விசாரிக்காதிருக்க முடியவில்லை. அவனது சாந்தமும் வசீகரமும் இருந்தவாறிது.
உயர்வு தாழ்வின்றி எல்லாரையும் சமமாக நினைத்து சங்கோசமின்றிப் பழகும் சுப்பிரமணி சூதுவாதறியாத நல்லவன். நயவஞ்சக சமூகத்தின் நாத்திட்டிக்கும் கண்ணேற்றுக்கும் அப்பால், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் எட்டுப் பாடங்களிலும் மிகக்கூடிய புள்ளிகளைப் பெற்று திறமைச்சித்தி அடைந்து விட்டான். பாடசாலையில் தேறிய ஐம்பது வீதமானோரில் அதிகூடிய புள்ளி பெற்ற சுப்பிரமணிக்குப் பாராட்டுக்கள் வந்து குவிந்தன. வட்டாரத்திலும் மாகாணத்திலும் அகில இலங்கை ரீதியிலும் அவனது பேர் பேசப்பட்டது. பத்திரிகைகளிற் படங்களும் பாராட்டுகளும் வேறு. இவற்றையெல்லாம் மனதேற்று தாங்கும் சக்தியை ஊரார் சிலர் இழந்து விட்டனர்.
பழைய பண்பாடு போற்றும் இந்த ஊர், பட்டணத்திலிருந்து பல கடல் மைல் தூரத்தில் உள்ளது. மேட்டு நிலப்பாங்கான குடியிருப்புப் பகுதியில் சுமார் ஐந்நூறு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத் தைந்நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். எல்லாரும் வேளாளச் சைவர்கள், ஆயினும் வயல் புலங்களை உழுவித்துண்போர் மேலோராகவும், இவர்களின் நிலங்களை உழுது வேலை செய்யும் நிலமற்ற விவசாயிகளை உழுதுண்ணும் கீழ்சாதிகள் என்றும் தம்மளவில் சாதிகளை உண்டாக்கி வைத்திருந்தனர். கீழ்சாதிமக்களும் எவ்வளவு வறுமையிலும் வேறு தொழில் செய்வதை வசை என்று கருதிக்கொண்டு மண்கிண்டிகளாகவே வாழ்ந்தனர்.
ஷஷவிவசாயக் கூலித் தொழிலாளியான பொன்னியின் மகன் சுப்பிரமணி நல்ல கெட்டிக்காரன். நிச்சயம் வளாகம் போவான். அப்படியானால் இவன்தான் முதற்பட்டதாரி|| என்று ஊர் பறைந்தது. இவ்வாறாகச் சுப்பிரமணியின் புகழ் வளரக் கண்டு புளுங்கியவர்களில் தம்பிநொத்தாரும் ஒருவர்.
பரம்பரையாக விதானை உடையார் நொத்தார் என்ற தமது வம்ச பெருமை, சுப்பிரமணியால் அழிக்கப்பட்டு விடும் என்று அஞ்சினார். பொறாமை நெஞ்சை நிறைக்கÉ கோபக்கனல் மூண்டது. ஆசிரியர் சிலர், சுப்பிரமணியைப் பாராட்டக்கேட்டால், நெருப்பில் நெய்வார்த்ததுபோல் கொதிப்பார் ஷஷஎன் மகனுந்தான் க.பொ.த. சித்தியடைந்து இருக்கின்றான். இவனைப்பற்றிச் சொல்வாரில்லையே|| என்ற காழ்ப்புணவுவேறு. இவற்றின் பயனாக பாடசாலையில் உயர்வகுப்புக்களை ஆரம்பித்த ஆசிரியர்களையும் உதவிய அரசாங்கத்தையும் மனதால் திட்டினார். பாடசாலையின் வளர்ச்சியே சுப்பிரமணியின் உயர்ச்சிக்குக் காரணம் என்று நினைத்தார். உண்மையும் அதுதான். தூரத்து நகர்ப்பாடசாலைகளிற் சென்று படிக்கும் வசதி வாய்ப்பு, சுப்பிரமணிக்கு இல்லை என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.
இப்படிக்கொத்த நொத்தாருக்கு ஊரில் நல்ல செல்வாக்கு. நல்லது கெட்டதுக்கெல்லாம் ஓடிச்சென்று உதவும் அவரின் பேச்சுக்கு நல்ல மதிப்புண்டு. அவரிடம் பலர் ஆலோசனைகளைப்பெற்றுக் குடும்ப உறவுகளைப் பேணுதலுண்டு. இருந்தும் சுப்பிரமணியின் வளர்ச்சியை முளையிலேயே கிள்ளும் நோக்கும் அவர் மனதில் வளர்ந்து கொண்டிருந்தது.
திடீரென்று ஒருநாள், நொத்தார் அழைப்பதாகச் செய்தி ஒன்று பொன்னிக்குக் கிடைத்தது. பொன்னி தனது மகனின் கீர்த்தியை அறிந்து பாராட்டத்தான் அழைக்கிறார் என நினைத்து உளம் மகிழ்ந்தாள். அவளால் இருப்புக்கொள்ள முடியவில்லை. நொத்தாரின் பாராட்டுக்களைக்கேட்டு, புளங்காகிதமுற விளைந்தது அவள் மனம். சீவிச்சிடுக்கெடுத்து சிறந்த வெள்ளாடையை அணிந்துகொண்டு பறந்த பொன்னி நொத்தார் வீட்டு முற்றத்தில் நின்றாள்.
எதிர்பார்த்திராத நேரம் முற்றத்தில் நின்ற பொன்னியைக் கண்ட நொத்தார் விழித்தார். தன் நெஞ்சே தன்னைச் சுட்டது போலும். எப்படியோ தன்னை சுதாகரித்துக்கொண்டு ஷஷவா பொன்னி இதில் இரு|| என்று விறாந்தையில் தன் பக்கத்தில் இருந்த வாங்கிலைக் காட்டினார். விறாந்தைப் படிமேல் தயங்கித் தயங்கி ஏறிய பொன்னி, முந்தானைத் தலைப்பால் முதுகுமுதல் நெஞ்சுவரை போர்த்துக்கொண்டு கூனிக்குறுகி இருந்தாள்.
பொன்னியைப் பார்த்துக் குசலம் விசாரித்துக் கொண்டே எப்படிப் பேச்சைத் தொடர்வது என்று எச்சரிக்கை அடைந்தார். மகனின் திறமைகளை வியந்து பாராட்டினால், எந்தத் தாய்தான் மகிழாதிருப்பாள். இது தெரியாதா என்ன? நினைத்த உடன் சுப்பிரமணியின் அறிவாற்றல், அடக்கம், அழகு என்று இன்னோரன்ன பண்புகளையெல்லாம் எடுத்து நயந்து கூறித் தாயுள்ளத்தைக் குளிர்ச்சிப் படுத்திய கையோடு ஷஷஇனி இவனை என்ன செய்ய நினைக்கிறாய்? மேலே படிக்கக் கூடியவன்தான். படிப்பிக்கத்தான் வேண்டும். ஆயின் இவனை நீ படிக்கவைக்க என்ன செய்யப்போகிறாய்? மேலே படிக்கவைக்க வசதி வாய்ப்புக்கள் உண்டா?|| எனக் கேள்விகளுக்குமேல் கேள்விகளை அடுக்கினார்.
ஷஷநான் என்ன செய்யுறது. அத்தைக் கூலிக்குப் பணமேது பவிசேது! நான் ஒருநாளைக்கு முடங்கி விட்டாற்சரி, யார் என் பிள்ளையைப் பார்ப்பார்கள், ஏதோ, நாடு நல்லாயிருப்பதால் நானும் நாலு பணம் சம்பாதிக்கிறேன். எல்லாம் இறைவன் செயலென்றி ருப்பதன்றி வேறொன்றுமறியேன்|| என்றாள் பொன்னி.
நொத்தாருக்குத் தெம்பு வந்த விட்டது. சோம்பேறிக் கதிரையில் சரிந்து கிடந்தவர் நிமிர்ந்தார். பொன்னியின் பக்கமாகத் தலையைச் சரித்தார். உதட்டில் புன்னகையை வருவித்துக்கொண்டு, உனது உறவினரான முத்தரின் மகள் நல்ல அழகி. படிக்கும்போது அவளும் பலே சுட்டிதான். இப்போது வீட்டோடிருக்கிறாள். அவர்களிடம் வீடு வாசல் சொத்துச்சுகம் என்றிருக்கு. உனது மகனுக்கு அவளைச் செய்து வைத்தால் மேலே படிக்கவும் முடியுமே என ஆவலைத்தூண்டும் தனது முதலாவது நாகாஸ்திரத்தை அவளது முகத்தை நோக்கி வீசினார்.
ஷஷஐயோ சிவனே! அவன் அப்பாவிக் குழந்தை. குடும்ப பாரமே தெரியாது வளர்த்து விட்டேன். இப்பத்தான் வயசும் பதினேழை எட்டிப் பிடிக்குது. வேண்டாம் ஐயா அந்த நினைவு|| என மறுத்தவள், ஷஷ எனது பிள்ளை தனது உழைப்பைக்கொண்டு வாழ்க்கை நடத்த முடியாதவரை அவன் இந்த நினைவு கொள்ளவும் மாட்டான், நான் சொல்லவும் மாட்டேன்|| என்று, நஞ்சைக் கக்கிச் சென்றி நாகாஸ்திரத்தை போனதிசையிலேயே திருப்பி விட்டாள்.
இதற்குச் சளைத்தவரல்ல நொத்தார். தொடர்ந்து சொன்னார், ஷஷநீ சொல்வது சரி. அவன் மேலே படித்துப் பட்டம் பெற்றால் நல்லதுதான். ஊருக்குள் ஒரு பட்டதாரியை உருவாக்கிய பெருமை உனக்கு வரும். ஆனால் அதற்கும் நாலைந்து வருடம் காத்திருக்க வேண்டும். முப்பது நாற்பது ஆயிரங்களும் வேண்டும். அல்லாமலும் பட்டம் பெற்றதும் வேலை கிடைத்துவிடாது. அப்போதும் உன் பிள்ளையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்|| என்றவர், சற்று ஓய்ந்து பின்னும் தொடர்ந்தார்.
ஷஷநான் ஒன்று நினைக்கிறேன், இவனுக்கு இந்தச் சேட்பிக்கரோட ஒரு உத்தியோகம் பெற்றுக் கொடுத்தால் சம்பளமுமாகுது மேலும் படிப்புத் தொடரவும் முடியுது. கணக்கு வளக்குப் பார்ப்பதிலும் கையெழுத்திலும் திறமையிருப்பதால் ஏதும் கந்தோரில் விரும்பிச் சேர்ப்பார்கள். நேற்று இவனை வழியில் பார்த்ததும் இவனுக்கொரு உத்தியோகம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துவிட்டேன். எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டு வா|| என்று பொன்னியிடம் சொல்லியனுப்பிய நொத்தார், தனது உத்தியோகப் பெருமைக்கு ஏற்படவிருந்த சவாலை நிவர்த்தி செய்து விட்டதாக நினைத்தார்.
இலவசக்கல்வி, இலவசப்புத்தகம், இலவச சீருடையோடு ஊரில் படித்து வீட்டில் சாப்பிட்டு வந்த மகனின் மேற்படிப்புக்கு இத்தனை பணம் வேண்டுமா? ஏங்கிப்போன பொன்னியால் மேலே சிந்திக்க முடியவில்லை. என்ர கை ஒடிந்து விட்டால் இவன் என்ன செய்வான். நொத்தார் பெரிய மனிதன்தான். எவ்வளவு அக்கறையாகக் கதைக்கிறார்.
மகனுக்கு ஒரு வேலை கிடைத்தால் மாசாமாசம் கிடைக்கும் சம்பளத்தையும், தனது உழைப்பையும் சேர்த்துச் சிக்கனமாகச் சிலவழித்து, மீதியை மிச்சம் பிடித்து, காணி, வீடு என்ற களிப்புமிகு கனவோடு தனது குடிலின் முன் இருந்தாள் பொன்னி.
அந்தி மாலைப்பொழுது. மந்தமாருதம் மெல்லென மேனியை வருடிச் செல்கிறது. அந்தவேளையில் திறந்த படலைச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த பொன்னி, மகனைக்கண்டு உச்சியில் முத்தமிட்டு, முற்றத்தில் இருத்தி, நொத்தார் சொன்னவை எல்லாஞ் சொல்லி, மகனின் மறுமொழியைக் கேட்டு நின்றாள்.
பாடங்களைப் படித்துக் கெட்டிக்காரப் பட்டம் பெற்ற சுப்பிரமணிக்கு வாழ்க்கை அனுபவம் போதவில்லை. இடுக்கண்வருங்கால் நகுக, என இருந்தவனுக்குப் போராடி முன்னேறும் நோக்கம் இருக்கவில்லை. நொத்தாரின் யோசனைகள் தேனாகத் தித்திக்கவில்லை. ஆனாலும் அதைவிட வேறுவழியும் தெரியாததால் மௌனியானான்.
மௌனம் சம்மதத்தின் அறிகுறியெனக் கொண்டு வேலைவேண்டி நொத்தார் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்தாள் பொன்னி. ஷஷஅங்குகேட்டேன் இங்கு விசாரித்தேன். பெரிய பெரிய படிப்பாளிகள் எல்லாம் வேலைப் பழகவென்று எழுநூறு எண்ணூறு சம்பளத்துக்கு வரிசையில் நிற்கிறார்கள். சுப்பிரமணியை இந்த வரிசையில் சேர்க்க நான் விரும்பவில்லை. என்னூர்ப் பிள்ளை என்பதால் எனக்கு இவன்மேல் தனி அபிமானம். இதனால்நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன், சுப்பிரமணிக்கு ஊரோடு வேலை. உன் வீட்டில் சாப்பாடு. என் கந்தோரில் உத்தியோகம். பெரிய கிளாக்கருக்கு உதவியாக. மாதாமாதம் சம்பளம் ரூபா ஆயிரம். உன்னையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமாக இருக்கட்டும் என்றுதான் செய்கிறேன். நாளைக்கு நல்லநாள். மகனை வேலைக்கனுப்பு|| என்றதும் ஒன்றுக்கு நூறு கும்பிடு போட்டுக்கொண்டு சென்றாள் பொன்னி.
பொன்னி புறப்பட்டதும், நினைத்ததை முடித்து விட்ட பெருமையில் திளைத்தார் நொத்தார். பரம்பரையாக உத்தியோகச் சிறப்பும் பதவிப் பெருமையும் பெற்று ஊரில் மதிப்போடு இருந்த தம் புகழை மறைத்துக் கொண்டு சுப்பிரமணி வளர்வதை நொத்தார் விரும்பவில்லை. நொத்தாரின் பொறாமையின் பலனாக சுப்பிரமணிக்கு உத்தியோகம் கிடைத்தது.
நொத்தார் கந்தோரில் துடிப்புடன் வேலைப்பார்த்து வந்த சுப்பிரமணியின் அழகும் அன்பான பேச்சும் பணிவும் பலரையும் கவர்ந்தது. பலரது பாராட்டுக்களைப் பெற்று வளர்ந்து வரும் சுப்பிரமணிமேல் நொத்தாரின் மகள் பூரணிக்குக்காதல். பூரணியின் விடாப்பிடியான வற்புறுத்தல் காரணமாக தவிர்க்க முடியாத நிலையில் தன்மகளை இரண்டாவது பெரிய பரிசாக சுப்பிரமணிக்குக் கொடுத்தார் நொத்தார்.
இப்பொழுது நொத்தார் சுப்பிரமணி ஏழையாக இருந்தாலும் என் சாதியான்தானே என்று எல்லாரிடமும் சொல்லி வருகிறார்.
வக்கிரம்
அது ஒரு அழகிய கடற்கரை கிராமம். கோடை குளிப்பாட்டும் இலவசமான வெப்பினை புன்னை, பூவரசு, தாளை போன்ற குளிர் தருக்களின் நிழலாற்றவும், அவற்றின் கீழ் நேரம் போக்கும் சீட்டாட்ட விளையாட்டு வேறு நடந்து கொண்டிருக்கும். கடல் தழுவி வரும் மென்காற்றைக் காசின்றி வாங்கிக் கொள்வதில் போட்டி அங்கு இருக்கவில்லை. தாகத்துக்கு நல்ல குளிர்ந்த பச்சைத் தண்ணீர், கடற்கரை மணலைக் கையால் வறுக ஊறும். சில காசுகளுக்குப் பச்சை ஓலையிற் கோலிய பிளாவில் வார்த்த பனங்கள்ளை ஊதி ஊதிக் குடிப்பதும், போதை கிறங்கப்பாடி மகிழ்வதுமல்லாமல், பழிவேறு அறியாதார் அக்கிராம மக்கள். அவர்களின் முகங்களில் அன்றொரு நாட் காலை புலர்ந்த பொழுதில், இனம் புரியாத பிராந்தியும் சோகமும் அப்பியிருந்தன.
சந்திக்கும் இருவர், கண்களாலும் திகிலோடு கூடிய முகங்களாலும் கேட்கும் கேள்விகளுக்கு விடைகூறாது வாய்கள் மௌனித்தன. அறிந்து செய்தி தவறானால் பழி தூற்றியதாக அமைந்து விடக்கூடாது என்ற தற்காப்பு மௌனமது. நெஞ்சிலிருந்து தொண்டை வரை வந்த வினாவிடைகளை, நாக்குகள், சொல்லிழுக்குப் படாது அடக்கி நின்றன.
பலர் நெஞ்சுகளிலும் விக்கித் தக்கி அடங்கி வாய் பொருமியும் வெளிவரத் தயங்கும் இரகசியம் யாதாயிருக்கும்? என்பதை அறிய முயன்றார் சுப்பிரமணியம். வீட்டில் அயலில் விசாரித்தும் அவரால் எதையும் அறிய முடியவில்லை. கிராமத்தில் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து படித்து உயர் பட்டம் பெற்ற ஒருவராக இருந்தும் சுப்பிரமணியத்தின் செவிகட்கு இவ்விரகசியம் கிட்டாமற் போனது ஏன்?
முற்போக்கான சிந்தனைகளும் அதே செயற்பாடுகளும் உடையவர் சுப்பிரமணியம். இளைஞரான இவர், சமூக ஏற்றத் தாழ்வுகளையும் சாதிமத பேதங்களையும் பாராது எல்லாரையும் சமமாக மதிப்பவர். கூழுக்குப் பல காய்கறிகள் சேர்த்துச் சுவையாக்குவது போல, சமுதாயத்தில் எல்லாச் சாதிகளும் இனங்களும் சேர்ந்திருப்பதே அழகென்று அடிக்கடி சொல்வார். பல நிறப் பூக்களும் நிறைந்திருந்தால் நந்தவனம் அழகானது என்பது அவரது வாதம்.
பொது வேலைகளில் அதீத ஈடுபாடு காட்டிய இவரால் சமூக வேறுபாடின்றிப் பல இளைஞர்களையும் ஒன்று சேர்க்க முடிந்தது. சங்கங்கள், சனசமூக நிலையங்கள், இலக்கிய மன்றுகள் என்பவற்றின் ஸ்தாபகரானார். அதேவேளையில் அவ்வத்தாபனங்களில் பொறுப்புள்ள பல பதவிகளில் தலித்துக்களை நிறுத்தி வெற்றி கண்டார். கோவில்களின் அறங்காவற் சபைகளிலேயும் தலித்துக்களுக்கு உயர் பதவிகளை வழங்கும் வண்ணம் மக்களின் மனங்களை மாற்றி வைத்தார். இதனால் உள்@ரச் சிலர் மனம் புழுங்கினாலும் பலர் மணியத்தின் உழைப்பினை மதித்து அவரின் செயல்களுக்கு அட்டி சொல்வதில்லை. மக்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் பெற்று பக்கச் சார்பற்றிருந்த மணியத்தினால் நடந்த உண்மைச் சங்கதியை அறிய முடியாது போனது. இதனால் ஏற்பட்ட ஒரு உந்துதல் வெளியே தள்ளவும் முற்றத்து வேம்பின் குச்சியொன்றை முறித்துப் பற்களால் சப்பிக்கொண்டு நண்பர்களைத் தேடிப் புறப்பட்டார்.
புறப்பட்டுச் சிறு தூரம் சென்ற அவருக்கு இருவர் ஒரு முடக்கில் நின்று உரையாடுவது தெளிவாகக் கேட்டது. ஒருவர், ஷஷபொன்னன்! ஒரு கதை கேள்விப்பட்டேன் உண்மையா? என அடக்கி மெதுவாகக் கேட்டதும் மற்றவர் நிமிர்த்தி உரைத்த வார்த்தைகள் தன் நெஞ்சை நெருடவும் வேலி ஓரத்தில் மறைவாக நின்று உரையாடலை அவதானித்தார் சுப்பிரமணியம். தான் தேடிச் சென்ற செய்திகளை இடைவழியில் அறியக் கிடைத்த வாய்ப்பினை தட்டிக்கழிக்காது ஒட்டுக்கேட்பது தவறென அவரால் காண முடியவில்லை. அந்த வேளையில் இரண்டாமவர், ஷஷஆமாடா கண்ணா! அந்தக் குப்பைச்சியின்ர வெள்ளாட்டுக்குட்டியை என்ர நளப் பெடி கொண்டு போய்வி;ட்டான். அதுக்கு ஆசையாக்கும். அவன் வைத்துப் படுக்கட்டுமே|| என்று நிமிர்த்தியவர் தொனியில் வக்கிரம் பீறிட்டது.
கேட்ட கந்தர் படபடக்கும் நெஞ்சை அமர்த்திக் கொண்டே ஷஷஅது சரி பொன்னன், ஆண்சாதி பெண்சாதி இரு சாதிகளும் கலப்பது தானே திருமணம். இவற்றில் தவறொன்றுமில்லை. ஆனால் உனது மகன் முன் ஒரு பெண்ணுக்குப் புரு~னாகவும் இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் இருந்து கொண்டு இன்னொரு பெண்ணா! அதுவும் பருவமற்ற மையினர் பெண்ணாகவன்றோ பிடித்தான். இவள் இவனுக்குத் தேவைதானா?
ஷஷஇதுக்கு நானென்ன சொல்ல! முன்னர் உங்கள் ஆள்கள் பல வைப்பாடிச்சிகளை வைத்துத்தானே இருந்தனர். இப்ப என்ன? இவன் கெட்டிக்காரன். உழைப்பாளி. வருவாய்க்கேற்ற பவிசாக ஒரு வெள்ளாட்டியை வைப்பாட்டியாக வைத்திருக்க விரும்பினான். அவளும் விருப்பப் பட்டுத்தானே போனாள். நமக்கென்ன காணும். நாமா சுமக்கப் போகிறோம்|| என்ற முத்தாய்ப்புடன் பேச்சு முடிய இருவரும் எதிரெதிர் வழியில் சென்றனர்.
ஒட்டுக் கேட்டுக்கொண்டு நின்ற சுப்பிரமணியம், ஷஷபொன்னர் என்னவாம்|| என்றுகொண்டே கந்தையருக்கு முன் தோன்றினான். ஷஷநண்டு கொழுத்தால் தன் வளையில் கிடவாது|| என்று தமது பெண்களைச் சபித்துக்கொண்டு சுப்பிரமணியத்தின் கேள்விக்குப் பதிலாக ஒரு முறைத்த பார்வையை வீசிவிட்டு கந்தையர் அப்பாற் சென்றார்.
சென்ற கந்தையர் தம் மனது போராடியது. ஷமைனர் பெண் என்பதாலும் அவன் ஒரு குடுமி என்பதாலும் பெண்ணை கோட் மூலம் மீட்டு விடலாம். மீட்டென்ன அவளை யார் முடிக்க முன்வருவார்கள்| என்ற ஆதங்கமும் ஆத்திரமும் பீற என்ன செய்வது ஏது செய்வது என்று அறியாது நடந்தார். மணியத்தை அவர் மனது சபித்துக்கொண்டது.
சில நூறு குடிகள் வாழும் இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட தலித்து மக்கள் ஒரு பதினைந்து குடிகள் மட்டுந்தான். அவர்களிற் பலர் தொழில் செய்வதற்காக அக்கரை கிராமங்களிலிருந்து வந்து குடியேறியவர்கள். தமக்கென்று ஒரு குளி நிலமும் இல்லாது வாழ்ந்த இவர்கள் ஊரவர்களின் தோட்டந்துரவு வயல் நிலங்களில் வேலைசெய்து, இப்போது வீடு வாசல் பணம் பொருள் என்று முன்னேறி கிராம சமுதாயத்தில் இணைந்து விட்டனர். கள்ளுப்பனைகளும் கடல் வளங்களும் கைதூக்கி விட்டதால், நிலத்தையே நம்பி வாழும் பெரும்பான்மை மக்களை விட இவர்களின் வசதி வாய்ப்புகள் அதிகம். இதனாலும் சமுதாயத்தில் இவர்களின் மதிப்பும் செல்வாக்கும் அதிகமாக இருந்தது. பொதுத் தாபனங்களில் கோவில் குளங்களில் பாடசாலைகள் கிணறு கேணிகள் என எல்லா இடங்களிலும் சம அந்தஸ்தும் இருந்தது. உயர் சாதியினருடைய பந்திகளிற் கூட இவர்களை ஒதுக்கி வைத்தாரில்லை. கௌரவத்தோடு எல்லாவற்றிலும் மக்களோடு மக்களாகச் சேர்ந்து வாழ்ந்திருந்த இவர்களுக்கு ஏதோ ஒரு மனக்குறை. வாயைத் திறந்து வெளிவிட முடியாத நிலையில் வக்கிரமாகப் பரிணமித்தது.
இந்த வக்கிர உணர்வுகளுக்குத் தீனிபோட்டு வளர்க்கவென்றே சில தலித்து எழுத்தாளர்களின் கதைகளும் நாவல்களும் அக்காலங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. பாம்பின் கால் பாம்பறியும். தலித்துக்களின் உணர்வினையும் தேவைகளையும் இன்னொரு தலித்தினால்தான் உணர முடியும். அவனே தலித்திலக்கியம் படைக்க வல்லான் என்ற கருத்து நிலையில் வெளிவந்தன பல கதைகள். பால் உணர்வு பற்றிய வெளிப்பாடுகளின் மேல்சாதி ஆடவர் கீழ்சாதிப் பெண்களைப் போகப் பொருளாகக் கொண்டனர் என்பதால் இவ்வூர்த் தலித்தின மக்களின் மனநிலை திரிந்தது. பழி வாங்கும் வக்கிரத்துக்கு இவ்வூர்க்கிராம, உயர்சாதி மக்களின் ஏழ்மையும் வறுமையும் சாதகமாக இருந்தன போலும்.
யாரோ சில பிரபுகள் எப்போ ஒரு காலத்தில் செய்தார்கள் என்பதாகச் சாட்டுக்கூறித் தம்மோடு சமமாகவும் பேதமின்றியும் பழகி, பொருள் நிலையில் தம்மிலும் குறைந்துள்ள இன்னொரு சாதி மக்களைப் பழிதீர்க்கும் வக்கிரத்தோடு ஓநாய் வாதம் கூறி நிமிர்த்தித் திரிதற்கே தலித்துக்களின் இலக்கியங்கள் பெரிதும் உதவின. அஃதன்றித் தலித்து மக்களின் சம அந்தஸ்து வறுமை ஒழிப்பு சமூக ஒற்றுமை என்ற உயர்ந்த கருத்துக்களால் தலித்துகள் கவரப்படவில்லை. தலித்துக்களின் இலக்கியங்களில் கூறியிருக்கக்கூடிய சீர்த்திருத்தக் கருத்துக்களை, வார்த்து வடித்துக் கீழே ஒழுக விட்டுவிட்டு மேலே கிடந்த தும்பு துரும்புகளை கௌவிக்கொண்டே தலித்துகள் நிமிர்த்தித் திரிந்தனர். இதனால் உயர்சாதிப் பெண்களை வைப்பாட்டிகளாகக் கொண்டு கதாநாயகர்கள் போல வாழவேண்டும் என்ற ஆவல், வெறி என்றுகூடச் சொல்லலாம். இவ்வெறி காரணமாகவே ஒரு வெள்ளாட்டுச் சிறுகுட்டியை கௌவிக் கொண்டு கிழ நரி ஒன்று ஓடிவிட்டது.
இது நடந்து மூன்று வாரங்கள் கழிந்தன. ஊர் அசுமாத்தம் இன்றி உள்ளே கனன்று முகத்தால் வாடிப் போயிருந்தது. பெண்ணைப் பெற்றார் என்ன செய்வது ஏது செய்வது என்று அறியாது வருந்தினர். இளம் நெஞ்சுகள் நாம் எப்படி வாழ்கிறோம் எப்படிப் பழகினோம் ஒட்டுறவாக வாழ்ந்த எங்களுக்குள் இப்படி ஒரு வக்கிரமா என்று ஆதங்கப்பட்டன.
ஊர் மக்களின் பொதுவான இந்தக் கவலையில் பங்குகொள்ளாது ஓரம்போய்க் கொண்டிருந்தனர் தலித்துகள். உள்ளிருந்தே குழிபறித்து விட்டார்கள் என்ற கோபம் மக்களுக்கு.
சமநிலையற்ற சமுதாயத்தின் பெரும்பான்மைச் சமூகம் தாம் பெற்ற அவமானத்தால் கொதிப்புற்ற நிலையில் இருக்க வட குறிச்சியில் தலித்துகளின் விருந்துகளும் கேளிக்கைகளும் எரியுந் தீயில் எண்ணெய் ஊற்றியது போலிருந்த ஒரு நாள்.
பெரும்பான்மைச் சமூகம் அக்கிராமத்தின் சரித்திரத்தில் நிகழாத ஒரு கோரத்தை நடத்தி முடித்தது. பலவீடுகளை எரித்தும் ஒரு உயிரைப் பலியெடுத்தும் ஊர் நிறுதூளிபட்டதால் ஒன்றாகவிருந்த சமூகங்கள் பிளந்தன. ஊர் சோகத்தில் ஆழ்ந்தது. நிகழ்ந்த கொடுமைகளுக்கு ஆறுதல் கூறச் சக்தியற்றவர்களாக வக்கிரம் குடிகொண்டிருந்தது.
சுப்பிரமணியம் கைவிலங்குகளுடன் பொலிஸ் வாகனத்தில் ஏறினார்.
-ஆதவன்-
031-06-2001.
------------------------------------------------------
சவாரியும் சதியும்
சரணை வடக்குக் கடற்கரையோரம் பெரிய வெளி சுமார் அரை மைல் தூரம் நீண்டு கிடக்கும். அந்த வெளிக்கு நாய்க்குட்டி வாய்க்கால் என்று பெயர். கரை ஓரமாக வளர்ந்து சடைத்துள்ள தாழம்புதர், வேலி போல் நீண்டு கிடந்தன. அதன் பச்சைக் காய்களும் சிவந்த பழங்களும் நீண்டு அதி சுகந்த மணம் கமழும் வெண்ணிறத் தாழம்பூக்களும் மனங்கவர நீண்ட வெளி முற்றும் பச்சை விரித்தது போலப் பசும்புல் தலை காட்டிக்கொண்டிருக்கும். அதிகாலைவேளை பசும்புற்றரைகளில் தூங்கும் பனிநீரைக் கதிரவன் வாங்கிக் கொண்டிருப்பது கண்கொள்ளாக் காட்சி. ஆங்காங்கே பிள்ளைக் கற்றாழைகள் குத்து விளக்கேற்றி வைத்தாற்போல செந்நிறப் பூக்களுடன் கூட்டங்கூட்டமாக நிற்கும். கார்த்திகை மாதத்திற்குரிய செங்காந்தல் கொடிகள் வேறு. கற்றாழைப் பற்றைக@டே படர்ந்து தமது ஐந்து இதழ்களையும் விரித்து அழகுக்கு அழகு செய்து கொண்டிருக்கும் அவ்வெளி, கோடையில் வரண்டு போய் இருக்கும். மக்கள் நூற்றுக்கணக்கில் கூடுவதாலும் மாடுகளுக்கு வண்டில் சவாரி பழக்குவோர் பக்கம் பக்கமாகத் தமது வண்டிகளைக் கொண்டு செல்வதாலும் கோடு கிழித்தது போல நாலைந்து வண்டிற் பாதைகள் ஒரே திசையில் சென்று கொண்டிருந்தன. ஒரு பக்கம் கடற்கரையும், தாழையும் அதன் எதிராகத் தெருவும் தெருவின் நிழல் தரும் விருட்சங்களும் இடையில் இவ்வெளியும் இருப்பதினாலோ என்னவோ இவ்வெளியில் நூறாண்டு காலமாக வண்டிச் சவாரி நடந்து வருகிறது.
ஒவ்வோராண்டும் வைகாசி, ஆனி மாதங்களில் ஊரையும் அயலையும் சேர்ந்த சிலர் தமது சவாரி மாடுகளை ஒத்திகைக்காகவும் பயிற்சிக்காகவும் கொண்டு வந்துபோனாலும் ஆடி மாதம் சவாரி சீசன். தீவுப்பகுதியில் உள்ள நாரந்தனை, தம்பாட்டி, கரம்பொன், புளியங்கூடல், வேலணை, அல்லைப்பிட்டி முதலிய இடங்களில் இருந்தும் யாழ்ப்பாண நாட்டுப் புறங்களிலில் இருந்தும் பல சவாரிகள் வரும். பண்ணைப் பாலம் போடாத அந்தக் காலத்திலே சவாரிக்காரர் சவாரிக்கு ஒரு கிழமைக்கு முந்தியே வந்து ஜாகை அடித்து நின்று சவாரியிற் கலந்து கொள்வதுண்டு.
இப்படியான ஓர் ஆண்டு எமது ஊர் சேவா மன்றத்தினர் நாய்வெட்டி வாய்க்கால் திடலை மேம்படுத்தி ஷநாவலர் விளையாட்டுத் திடல்|| என்று நாமகரணஞ் சூட்டி மகிழ்ந்தனர். அவர்களின் ஆவல் இதனோடு அமைந்துவிடவில்லை. இவ்வாண்டே இத்திடலில் விளையாட்டுப் போட்டிகளையும் வண்டிற் சவாரிகளையும் நடத்துவதெனத் தீர்மானித்தும் விட்டனர்.
விளையாட்டுப் போட்டிகளின் விளம்பரங்கள் மதிற் சுவர்களில் ஏறின. நாடு நாடாகப் பரவின. பத்திரிகைகளிலும் செய்திகளாயின. பரிசுத் தொகைகள் வேறு. சவாரிப் போட்டிக்கு முதல் மூன்று பரிசுகளுக்கும் தங்கப் பதக்கங்கள். பதக்கங்களை வழங்குபவர்கள் நாட்டின் முக்கிய புள்ளிகள். போட்டிகளில் பங்குபற்றும் ஆர்வம் கிராமங்கள் தோறும் உள்ள இளைஞர்களை ஊக்குவித்தது. போட்டித் தினத்துக்குச் சில மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சிகள் தொடங்கிவிட்டன.
இளம் சவாரிக் காளைகள் பூட்டிய வண்டிகள் ஒவ்வொரு மாலையிலும் சவாரித் திடலைத் தரிசிக்கின்றன. கழுகன் சோடி, ஒரு வெள்ளைச் சோடி, எலிக்கண்ணன், புலிக்கடியன் இத்தியாதி பேர்களுடன் கூடிய காளை வண்டிகள் பல சவாரித் திடலைப் பரிச்சயப்படுத்த வருவதும் போவதுமாக இருந்த வேளையில் எமது ஊரில் இருந்த சில இளைஞர்களுக்குச் சவாரி மாடுகள் கட்டும் ஆசை தலைக்கேறியது. இவர்களின் ஆசையைத் தீர்க்க ஒருவர் முன்வந்தார். அவர்தான் முத்தர்சோதி என்ற முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர்.
நான் அறிந்தபடி அவர் ஒரு வசதி வாய்ப்பு உடையவரல்ல. அவ்வாண்டின் புகையிலைச் செய்கையின் மூலம் ஒரு மூன்றோ நான்கு ஆயிரங்கள் கையில் உண்டு. இதைவிட மனைவியிடம் மின்னிக் கொண்டிருக்கும் நன்னி பொன்னிகள் சில. இவற்றை மூலதனமாகக் கொண்டு சவாரிக் காளைகள் வாங்கச் சில நண்பர்களுடன் புறப்பட்டுவிட்டார் சோதி.
ஒரு சில நாட்கள் அல்லச் சில வாரங்களாகவே நாடு நாடாகச் சவாரி நாம்பன்கள் தேடித் திரிந்தனர் சோதியும் நண்பர்களும். ஒரு சோடி மாட்டைப் பார்த்தால் ஒன்று வீரனாகவும் மற்றது சக்கட்டையாகவும் இருக்கும். ஒன்று ஓட மற்றது பாயும். ஒன்று தலையை நிமிர்த்தி நடக்கும். மற்றது தலையைக் குனிந்து இழுக்கும். ஒன்று கூட்டுக் கொம்பனாகவும், மற்றது கழுகுக் கொம்பனாகவும் இருக்கும். நிறங்களிலும் ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற பல சோடி மாடுகளைப் பார்த்தாகிவிட்டது. தனித்தனியாக அவிழ்த்துச் சோடி சேர்ப்பதனால் ஒரு சோடி மாட்டின் விலை தனிமாட்டுக்குக் கொடுக்க வேண்டும். இப்படியே பார்த்துப் பார்த்து அலுத்துத் தமக்குப் பிடித்த இரண்டு மாடுகளைச் சோடி சேர்க்க நாலு மாடுகளை வாங்கிக்கொண்டு வந்தார்கள்.
வந்த களையுடன் மாடுகளுக்கு இராச உபசரிப்பு. தவிடு, பிண்ணாக்கு, அரிசி, கடலை இத்தியாதி உணவு வகைகளுடன் கடலிற் குளிப்பாட்டி வெயிலில் காயவிட்டு நிழல் மணலில் படுக்க வைத்துப் பராமரிப்பு. இந்தச் சவாரி மாடுகள் கொண்டு வந்ததைப் பார்க்கவரும் ஊரவர்கட்கு வெற்றிலை, தேனீர் உபசரிப்பு வேறு. இந்த நிலையில் சோதியர் வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்க இரண்டு சோடி மாடுகளை வைத்து இப்படிப் பராமரிக்கிறானே என்ற அனுதாபம் வேறு. இதோடு தொலைந்தான் என்று சொன்னவர்களும் உண்டு. இப்படியே ஊர்வாய் ஓச்சிக் கொண்டிருக்கச் சவாரிகள் இரண்டு சோடியும் நாவலர் திடலை அடைந்தன. போட்டிச் சவாரிக்கல்ல, பயிற்சிக்காக. பயிற்சியில் மூன்று நாம்பன்களையும் விட ஒரு நாம்பன் முந்திக்கொண்டிருந்தது. இதற்கொரு சோடி கிடைத்தால் நிச்சயம் முதற்பரிசு பட்டாசுக்குத்தான். பட்டாசு என்பது முன்னணி நாம்பனின் பெயர். என்ன செய்வது இதற்கொரு சோடி வேண்டும். சவாரி தினமும் நெருங்கி விட்டது. இனிப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. முன்னரே தாங்கள் பார்த்து வந்த புலிக்கடியன் சோடியின் நினைவு மனதில் நிழலாடியது. அதில் ஒற்றைச் சோடி போட்டால் நிச்சயம் வெற்றி நமதே. உடனே இரவிரவாக மல்லாகம் நோக்கி நண்பர்கள் பறந்தார்கள்.
அந்தச் சோடி மாடுகளும் வீட்டில் கொண்டு வந்து கட்டப்பட்டன. இப்போது மூன்று சோடிச் சவாரி மாடுகள்- பட்டாசுக்குப் புலிக்கடிச்சான் சோடி. இனி என்ன? வெற்றி நமக்கே. ஆனால் சாரதி யார் என்ற பிரச்சனை முளைத்தது. இவர்களில் எவரும் சாரதியாக முன் அனுபவம் பெற்றிருக்கவில்லை. பின்னுக்கிருந்து சவுக்குப் போடவும் ஊசி போடவும் கூடுமே தவிர, பிடிகயிறு பிடிக்க முடியாது. இந்த நிலைபரத்தில் சுருளி என்ற நாட்டுப் பக்கச் சாரதிகளைக் கொண்டுவந்தால் அவர்கள் எம் ஊருக்கு வரும் புகழைப் பொறுக்காது ஏதும் சூது செய்யலாம் என்ற நினைவு வரத் தமக்கு நம்பிக்கையான வேறொருவரை அழைத்து வந்தார்கள். அவருக்கு ஒரு கிழமையாக நல்ல உபசரிப்பு கள்ளு சாராயம் என்று மாடுகளுக்குந்தான்.
இன்று சவாரி. மக்களும் போட்டி ஏற்பாட்டாளர்களும் கூடிவிட்டனர். பட்டாசுப் புலக்கடிச்சான் சோடியை இன்னும் காணவில்லை. மற்றைய சவாரிகள் பல வந்து சேர்ந்து விட்டன. எல்லோர் கண்களும் மனமும் பட்டாசுச் சோடியைப் பார்க்கும் ஆவலில் வழிமேல் விழி வைத்துக் கொண்டிருக்க ஒரு மெலிந்த உடல்வாகு பெற்றவரின் சாரத்தியத்தில் பட்டாசுச் சோடி கம்பீரமாகத் தலையை நிமிர்த்தி ராசநடை போட்டு வருகின்றது. பின்னால் ஒரு கூட்டம். வெற்றி தமக்கென்ற களிப்புப் போலும். நடந்தும் ஓடியும் வந்துகொண்டிருக்க சவாரி வண்டில் திடலில் இறங்கிச் சவாரி தொடங்கும் விடந்தையை வந்தடைந்தது.
பல நூறு கண்கள் பட்டாசுச் சோடியைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருக்கப் பலரது வாய்கள் இம்முறை பட்டாசுச் சோடிக்கே பதக்கத்தைக் கொடுத்து விடுவது தானே என்று தம்முட் பறைந்து கொண்டிருந்தன. இவற்றைக் கேட்டவர்களும் பார்த்தவர்களுமான சிலருடைய மனங்கள் கறுவிக் கொண்டிருப்பதை யார் கண்டார்.
சவாரி தொடங்கிவிட்டது. முதலில் நான்கு விடந்தைக்கு வந்தன. தொடர்ந்து நான்கு நான்காக வண்டிகளை நாலுமுறை சவாரி விட்டார்கள். மேலுஞ் சில வண்டிகள் பதிந்து இலக்கம் பெற்றிருந்தபோதும் அவை போட்டியில் நின்றும் தாமாகவே விலகிய நிலையில் நாலு போட்டிகளிலும் முதலாவதாக வந்த நாலு சோடி மாடுகளும் இறுதிப் போட்டிக்குத் தயாராகின. அவற்றுள் ஒன்று பட்டாசுச் சோடி.
இனியென்ன? இறுதி வெற்றி தங்கப் பதக்கம் எல்லாம் எம் மூவருக்குந்தானே என்ற மகிழ்வில் பல மக்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். நண்பர்களுடன் குடித்து மகிழ்வதற்காகப் பக்கத்தே இருந்த கள்ளுக் கொட்டிலுக்குள் போனால் அங்கே காலி மிடாக்கள்தான் இருந்தன. பின் என்ன விடுவார்களா? நினைத்ததை முடிக்கும் சாதியல்லவா? வெள்ளைதான் முடிந்ததென்றால் கறுப்பன் இருக்கவே இருக்கிறது. அதில் ஒரு கிராம் அடித்துவிட்டு வந்தவர்களுக்குச் சவாரித் திடலில் புழுதி பிறந்து கொண்டிருந்தது தெரிந்தது. புழுதிக்கிடையில் பட்டாசுச் சோடி முன்னணியில். இரண்டுமாக தூரம் இடைவெளியில் முன்னே செல்கிறது. எங்கும் ஜெய கோசம். துள்ளுவதும் ஓடுவதும் ஒருவரை ஒருவர் தழுவுவதும் சால்வைகளை எடுத்து வீசிக் கொடிகள் போல ஆட்டுவதுமாகச் சனம். சவாரி முடிவிடத்துக்கு முன்பாக வண்டிற் சில்லொன்று உருண்டோடிச் சனக் கூட்டத்துள் வந்தது. சாரதி உட்பட மூவரும் நிலத்தில் விழுந்துருண்டார்கள். ஒற்றைச் சில்லு வண்டியுடன் பட்டாசுச் சோடி காடோடிவிட்டது. மகிழ்வும் களிப்பும் போய் பலர் மனதில் பதகளிப்பு. பக்கச்சாவி கழன்றிருக்க முடியாது. அப்படியானால் சோதியரின் சவாரி வெற்றி எம் ஊரின் கனவு ஒரு சதியால் முறியடிக்கப்பட்டது. அவர் சில நாட்களில் பாரிசவாதக்காரனாகிவிட்டார்.
-மல்லிகை-
யூன்-1998
-----------------------------------.
கருத்துகள்
கருத்துரையிடுக