இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இசை முன்னோடிகள்
இசை நூல்கள்
Backஇருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இசை முன்னோடிகள்
(கீதம், வாத்தியம், நிருத்தியம்)
வாத்யவிஸாரதா ” பிரம்மபூரீ அ. நா. சோமாஸ்கந்த சர்மா (DIP-IN-MIRDANGAM, MADRAS) மிருதங்க விரிவுரையாளர், இணைப்பாளர் வாத்தியத்துறை, இராமநாதன் நுண்கலைக்கழகம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ஆசிரியர் : பிரம்மபூரீ அ. நா. சோமாஸ்கந்த சர்மா
இராமநாதன் நுண்கலைக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், LD(1556övnri Lollib, s Görgorn stb.
இலங்கை,
முதற்பதிப்பு: 15 - 03- 1995
மொழி: தமிழ்
பொருள் : இசை
உரிமை : நூலாசிரியர்
அச்சுப்பதிப்பு: திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.
அட்டைப்பட அச்சு ஆ. ஞானசேகரம் (ஞானம் ஆட்ஸ் )
விலை: ரூபா 130/-
பிரதிகள்: 1000
Author : Bram misri A. N. Somaskanda Sarma,
Lecturer in Mirdangam, Coordinator - Instrumental Music.
Address: Ramanathan Adicademy of Fine Arts, Jafna University, Maruthanarmadam, Chunnakam, Sri Lanka.
First Edition: 15th March 1995
Price: Rs. 1301
பூரீ ராமஜயம் இயலிசை வாரிதி யாழ்ப்பாணம் பிரம்மபூரீ மா. த. ந. வீரமணி ஐயர் அவர்கள் வழங்கிய
சிறப்புப்பாயிரம்
1. கீதமொடு வாத்தியமும் நிருத்தி யஞ்சேர்
கிளர்கின்ற ஸங்கீதம் ஆத்மா னந்த
மாதவத்தின் நிலையுணர்முன் னோடி களின்
மாண்புமிகு வரலாறு தொண்டு யாவும்
பூதலத்துத் தீந்தமிழ் யாழ்ப்பா னத்துப்
புகழ்பூத்த பல்கலைக் கழக ராம
நாதன் நுண் கலைக்கழகப் பெரும் ஆசான்
நாமஸோமாஸ் கந்தகுரு நயந்தே தந்தார்2. செந்தமிழின் ஈழமதில் ஸங்கீ தத்தின்
சேரிலக் கணம் கற்றே இசையின் சேவை
தந்தமுன் னோடிகளும் வாத்தி யத்தில்
தண்ணிசையும் தாளலய வின்யா ஸங்கள்
முந்தும்இசை முழக்கியநல் முன்னோடிகள்
முகிழ்பரதம் வளர்த்தமுன் னோடிகளின்
சொந்தவர லாறுகளைச் சேவை களைச்
ஸோமாஸ் கந்தகுரு சொரிந்து தந்தார்3. மங்களவாத் தியங்களான நாதஸ் வரம்
மாதவிலின் கலைச்சேவை முன்னோ டிகள்
பங்குலவு வயலினொடு புல்லாங் குழல்
வாணிவாத் தியவினை மிருதங் கமும்
தங்குதமிழ் ஈழத்தில் இசை வளர்த்தே
தந்தமுன் னோடிகளின் சரிதம் தன்னை
பொங்குதமிழ் இனித்திடவே நூல்ச மைத்தார் புகழ்பூத்த நூலும்ஆ சிரியர் வாழி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் க. குணரத்தினம் அவர்கள்
வழங்கிய
வாழ்த்துரை
இசைத்துறையின் வளர்ச்சி இரண்டு பரிமா ணங்களைக் கொண்டது. ஒருபுறம் ஆற்றுகைத் திறன் வளரவேண்டும். மறுபுறம் ஆராய்ச்சித் துறை சிறநது உயரல் வேண்டும். மேற்கூறிய இருபரிமாணங்களையும் வளர்த்தல் எமது பல்க லைக்கழகத்தின் இலக்குகளாகவுள்ளன.
இசை ஆராய்ச்சி வளம்பெற இசைநூலாக் கங்கள் முக்கியமானவையாகும். இருபதாம நூற் றாண்டின் ஈழத்து இசை முன்னோடிகள் என்னும் நூலினை இராமநாதன் நுண்கலைக்கழக விரிவு ரையாளரும், வாத்தியத்துறை இணைப்பாளரு மாகிய பிரம்ம பூரீ அ. நா. சோமாஸ்கந்தசர்ம7 அவர்கள் எழுதியுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. கலைஞர்களின் கலைப்பங்களிப்பை அறிந்து கொள்வதற்கு அவர்கள் பற்றிய வரன் முறையான வரலாறு தொகுக்கப்பட வேண்டி யுள்ளது. இந்தப் பணியினை நூலாசிரியர் பல சிரமங்களுக்கு மத்தியிலும் மேற்கொண்டுள்ளார். இந்நூல் இவரது இரண்டாவது வெளியீடாகும். இவரது நூலாக்கப்பணிகள் வெற்றிபெற எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் வழங்கிய
வாழததுரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழக விரிவு ரை யாளர் பிரம்மபூரீ. அ. நா. சோமாஸ்கந்தசர்மா அவர்கள் ** இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இசை முன்னோடிகள் ** எ ன் னு ம் நூல் வெளியிடுவதை இட்டு மிகுந்த மகிழ்ச்சி அ ைட கி ன் றே ன். இவர் இந்நூலில் முப்பதுக்கு மேற்பட்ட எமது நாட்டுக் கலைஞர்களின் வரலாற்றையும், அவர்கள் இசைக் காற்றிய பங்களிப்பையும் பற்றிச்சிறப்பாக விளக்கியுள்ளார். இத்தகையதொரு முயற்சி இது வரை யில் நூல் வடிவில் தொகுக்கப்படவில்லை. நூல் ஆசிரியர் இசைத்துறை சார்ந்த விரிவுரையாளராகப் பணி புரிந்து வரும் அனுபவத்தைப் பின் புலமாகக் கொண்டு. மதிப்பீட்டுரீதியில் இந் நூலை எழுதியுள்ளார். இந் நூல் ஈழத்து இசை வரலாற்றைப் படிக்கும் மாண, வருக்கு வேண்டிய தகவல்களை அளிப்பதாக வுள்ளது. மேலும் இயற்றமிழ், நாடகத் தமிழ் பற்றிப் பல நூல்கள் வெளிவரினும், இசைத் தமிழ் பற்றிப் போதிய நூல்கள் வெளிவருவதில்லை என்ற குறையை இவரின் நூல் ஓரளவு நீக்குவதாக உள்ளது. பிரம்மபூரீ சோமாஸ்கந்தசர்மா அவர்கள் மேலும் இசைத்துறை சார்ந்த குறிப்பாக வாத்தி யங்கள் தொடர்பான நூல்களை ஆய்வுரீதியாக எழுதி வெளியிட வேண்டும். இம்முயற்சி இராமநாதன் நுண்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள்
வழங்கிய
வாழ்த்துரை
* இருபதாம் நூற்றாண்டின் ஈ ழ த் து இசை முன்னோடிகள்” என்ற தலைப்பில், பிரம் ம பூரீ அ. நா. சோமாஸ்கந்த சர்மா அவர்கள் ஈழத்தின் இசைப் பாரம்பரிய உருவாக்கத்திலிடம்பெற்ற முப்பதுக்கு மேற் பட்ட கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை வெளியிட முனைந்துள்ளமை போற்றுதற்குரிய ஒரு முயற்சியாகும்
ஈழத்தின் இலக்கியப் பாரம்பரிய மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பட்ட அளவுக்கு, இசைப் பாரம்பரியம் இன்னும் மீள் கண்டு பிடிப்புச் செய்யப்பெறவில்லை. ஆனால் இசைக்கு எம்மிடையே மிகச் செழுமை யான ஒரு பாரம்பரியம் உள்ளது.
நாதஸ்வர இசை ஸ்பெஷல் நாடக இசை, சுத்தமான சாஸ்திரிய இசைப் பயில்வு (வாய்ப்பாட்டிலும் வாத்தியங்களிலும்) ஆகியனவற்றுக்கு ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஒரு முக்கியமான கையளிப்பு முறையுண்டு.
இந்தப் பாரம் பரியம், வெறுமனே வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களாக மாத்திர மல்லாது இசைநிலை நின்றதாக அறியப் படல் வேண்டும். ஈழத்து இலக்கிய வரலாற் றில் நடந்திட்ட பல கருதரப் பிழை களை ஈழத்து இசை வரலாற்றை எழுதப் படும் பொழுது தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.
அந்த இசை வரலாற்றில் நாம் இன்று தகவற் சேமிப்புக் கட்டத்திலே உள்ளோம். அதற்குப் பிரம்மபூரீ சோமாஸ்கந்த சர்மா வின் இந்தப் பங்களிப்பு பயனுள்ளதாக அமையும்.
இத்தகைய முயற்சிகள் மேலும் பல மேற்கொள்ளப்படுவதாக
பூரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவா சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, J. P.
அவர்கள் வழங்கிய வாழததுரை
** அந்தணர் என்போர் அறவோர். ’’ என்ற வாக்குக்கு இலக்கணமாக விளங்குபவர் பிரம்மபூரீ. அ. நா. சோமாஸ்கந்தசர்மா அவர்கள். சைவப்பற் றும், தமிழ்ப்பற்றும், கலைப்பற்றும், மண் பற்றும் ஒருங்கே அமையப் பெற்றவர் ஐயா அவர்கள். இதனாலேயே இந்த மண் தந்த இசை முன்னோடி களை நூல் வடிவில் அரங்குக்குக் கொண்டுவர முன்வந்துள்ளார். எமது கலைகளும், எமது கலாச் சாரங்களும், அத்துடன் இணைந்த பண்பாடுகளும் பிரதிபலிக்கப்பட வேண்டுமென்பது அறிஞர்களின் கருத்தாகும்.
ஒரு நாட்டு மக்களின் உள்ளத்தின் உயர்வை எடுத்துக் காட்டுவதில் அந்நாட்டுக் கலைக ளுக்குத்தான் முக்கிய பங்குண்டு. உயர்ந்த கலைகள் பிறக்க வேண்டுமென்றால் உள்ளத்தில் உயர்வும், கலை உணர்வும் இருக்க வேண்டும். ஒரு நாட்டின் கலைகளில் அந்தநாட்டு மண் வாச ைன க ம ழ வேண்டும். பண்பாடு பொதிந்திருக்க வேண்டும். மக்கள் வாழ்வு பிரதிபலிக்க வேண்டும்.
இத்தகைய கலைகளில் உயர்ந்ததாக அனை வரையும் ஈர்க்கக் கூடியதாக உள்ளத்தை மென்மை யாக்குவதாக விளங்குவது இசையாகும்.
இனிய உணர்வுகளை விளைவிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. ஈழத்தமிழர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய சேவை மிகப்பெரிது இந்தவகையில் இருபதாம் நூற்றாண்டு இசை முன்னோடிகளையாவது அறிந்து கொள்வது பயன்தரும் முயற்சியாகும். எனவே தான் ஜயா அவர்கள் தனது அயரா முயற்சியினால் இந்நூலை வெளியிடுகின்றார். எமது நாடு தந்த இசைப் பேரறிஞர்களை இன்று நாம் நினைவுகூர வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த நன்றியுணர்வோடு ஏறக்குறைய முப்பதுக்கு மேற்பட்ட இத்துறை சார்ந்த முன்னோடிகளைத் தமது நூலில் அறிமுகஞ் செய்து வைக்கிறார் ஐயா அவர்கள். வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின், நாதஸ்வரம், தவில், புல்லாங் குழல், வீணை, நாட்டியம், பண்ணிசை, கதாப்பிர சங்கம் ஆகிய துறைகளில் மக்கள் மத்தியில் வரவேற் பைப் பெற்ற இக்கலைஞர்களை எமது இளஞ்சந்ததி யினரும் அறிந்து பின்பற்றக் கூடியவகையில் இப் பணி அமைந்துள்ளது.
நூலாசிரியர் அவர்களும் அவர் தம் குடும்பமும் ஒரு கலைக்குடும்பமாகும். அத்துடன் கட வுட்பணி செய்யும் தெய்வக் குடும்பமுமாகும். இப் புனித இணைப்புத்தான் இத்தகைய நூலா க்க ப் பணிக்கு ஊக்குவிப்பைக் கொடுத்தது எனலாம்.
எனவே பயனுள்ள நன்முயற்சியாக அமையும் இந்நூல் வெளியீடு அனைவராலும் வரவேற்கத் தக்கது. மேலும் மேலும் இத்தகைய புனிதப் பணி களில் ஐயா அவர்கள் ஈடுபாடு கொள்ள வேண்டு மென்று கேட்டுக் கொண்டு திருவருளைப் பிரார்த் தித்து அமைகின்றேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமஸ்கிருதத்துறைத்
தலைவர் பேராசிரியர் வி. சிவசாமி
அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
யாழ்ப்பாணப் பல்கலை க் கழகத்தின் ஒன் றிணைந்த பகுதியாக விளங்கும் இராம நாதன் நுண்கலைக்கழகத்திலே மூத்த மிருதங்க விரிவுரை யாளராகவும், வாத்திய இசைப் பகுதி இணைப் பாளராகவும் விளங்கும் வாத்திய விசாரத் ’’ பிரம்மபூரீ நா. சோமாஸ்கந்த சர்மா அவர்கள் இருப தாம் நூற்றாண்டின் ஈழத்து இசை முன்னோடிகள் என்னும் நூலினை எழுதிப் பிரசுரித்துள்ளார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கலைஞர்கள் குறிப்பிட்ட ஒருகலையினை இசைத் துக்காட்டுவதில் மட்டுமன்றி, அக்கலைபற்றி எழுது வதிலும் திறமை பெற்றிருத்தல் சாலவும் நன்று,
* கீதம், வாத்யம், ததா நிருத்யம். சத்ரயம், சங்கீத முச்யதே ’’ (வாய்ப்பாட்டிசை, வாத்திய இசை, நட னம்ஆகிய மூன்றும் சேர்ந்தே சங்கீதம் என அழைக் கப்படும்) எனச் சங்கீத ரத்னாகரம் கூறும் சாஸ்திரீய இசைமரபிற்கேற்ப நூலாசிரியர் ஈழத்தில் இந் நூற்றாண்டிலே வாழ்ந்த முப்பத்துநான்கு பிரபல வாய்ப்பாட்டிசை, வாத்திய இசை, நடனக்கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றினையும், கலைப்பணிகளையும் பற்றிச் செவ்வனே எழுதியுள்ளார். இக் கலைஞர் பற்றிய பதிவேடுகள் தகவல்கள் முதலியன பேணப்படாத சூழ் நிலையிலே இவர்களைப்பற்றி பல் வேறுதகவல்களை இயன்ற அளவு திரட்டி, இவர்களைப் பற்றி நாமும் மற்றும் சமகாலத்தவர்களும், வருங் காலச்சந்ததியினரும் அறியத்தக்க வகையில் பயனுள்ளதொரு நூலினையாத்துள்ள நூலாசிரியர் நன்கு பாராட்டற்குரியர்.
இந்நூல் இசைக்கலையிலே விருப்பமுள்ளர்கள் அனைவருக்கும் குறிப்பாக இசை மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் என உறுதியாக நம்புகிறேன். நூலாசிரியர் ஏற்கனவே 1989 இல் எழுதியுள்ள மிருதங்க சங்கீத சாஸ்திரம் போல, இந்நூலும் பலரின் பாராட்டினைப் பெறும் என மனமார நம்புகிறேன்; வாழ்த்துகிறேன். நூலாசிரியர் மேலும் பல அரிய இசை நூல்களை எழுதி இசைக்கலையினை வளம்படுத்த வேண்டும் என எல்லாம் வல்ல பூரீபார்வதி ஸ்மேத பரமேஸ் வரனை இறைஞ்சுகிறேன்.
வாழ்க இசைக்கலை !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ்
அவர்கள் வழங்கிய அணிந்துரை
பிரம்மபூரீ அ. நா. சோமாஸ்கந்தசர்மா அவர்களுடைய 20ஆம் நூற்றாண்டி ன் ஈழத்து இசை முன்னோடிகள் என்னும் நூலுக்கு அணிந்துரை எழுதுவதிலே மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், எழுதப்பட வேண்டிய வரலாறு இப்பொழுது எழுதப்படுகின்றது. அவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக்கழக விரிவுரையாளர் எழுதுவது மிகவும் பொருத்தமானதேயாகும்.
வாய்ப்பாட்டு, இசைக்கருவி, ஆட ல் ஆகிய துறைகளிலே சிறந்து விளங்கிய எம்முடைய மண்ணில் கலைஞர்களுடைய வரலாறுகளை எளிமையான தமிழ் நடையிலே ஆசிரியர் எழுதித்தநதுள்ளார். எமக்கு ஏற்பட்ட பல துன்பங்கள் காரணமாக நாம் பலவற்றைக் கைவிட்டுவிடுவோமோ என்ற ஓர் அச்சம் ஏற்பட்டதுண்டு. ஆனால், இன்று பன்முகப்பட்ட நிலைகளிலே எம்முடைய பண்பாட்டை நிமிரச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன. இச்சந்தர்ப்பத்தை நாம் நன்கு பயன்படுத்த வேண்டும்.
எம்முடைய பாரம்பரியம் ஆவணப்படுத்தப்பட்டு எதிர்காலத்தினர்க்குக் கையளிக்கப் பட வேண்டும். இன்றைய தலை முறையினர் அறிந்து கொண்டிராத தகவல்கள் பல அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த வகையிலே இந்நூல் நல்ல் தொரு பயனை விளைவிக்கக் கூடியதாக அமையும் என்பதிலே ஐயமில்லை.
பொதுவான பயன்பாட்டை விளைவிக்கும், அதேவேளையில், இந்நூரல் இசைகற்கும் மாணவர் களுக்குச் சிறப்பான பயனைக் கொடுப்பதாக அமையும். இசைக் கலைமாணிப் பயில்நெறி இப் பல்கலைக்கழகத்திலே சென்ற ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்றது. மாணவர்களுக்கு நுணுக் கமான வரலாற்றுச் சான்றுகளை வழங்க வேண் டும். இப்பயில் நெறியினைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தம்மை அடிக்கடி புதிப்பித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான நூல்களை எழுதுவதன் மூலம் அவர்கள் தம்மை இத்துறைக்குள்ளே ஆழ்த் திக் கொள்கிறார்கள். மரபுவழிக் கல்வி மாத்திரம் பல்கலைக்கழகத்திலே கற் பிக் கப் படுவதில்லை. மரபுவழிக்கல்வியும் ஆய்வுக் கல்வியுமே இங்கு போதிக்கப்படுகின்றன. பிரம்மபூரீ சோமாஸ்கந்த சர்மா இத்துறை தொடர்பான வரலாற்றை; எண்ணி ஆய்வு செய்து வெளியிடுகிறார். அவருக்கு எமது பாராட்டுக்கள். −
நூல், பொன்ன ா ைல வரகவி பி. கே. கிருஷ்ணபிள்ளை பற்றிய வரலாற்றைக் கூறுவதுடன் தொடங்குகின்றது.
ஆசிரியர் பலருடைய வரலாறுகளைக் கூறுமிடத்து இசையுடன் தொடர்பான செய்திகளை மட்டும் கூறிச் செல்கிறார். இந்நூலின் வரலாற்றுத் தலைவர்களாயுள் ளவர்களின் வழித் தோன்றல்கள் பலர் இன்று எம்மிடையே கலைஞர்களாக வாழுகின்றனர். இவர்களுடைய திறமையின் ஒருகூறு எவ்வாறு வந்துள்ளதென்பதை நாம் இனங்கண்டு கொள்ளக்கூடிய வகையில் இந்நூல் அமைகின்றது.
பிரம்மபூரீ சோமாஸ்கந்தசர்மா அவர்களுடைய முயற்சி பாராட்டத்தக்கது. அவரு ைடய முயற்சியினைத் தொடர்ந்து எங்களுடைய இசை, நடனப் பாரம்பரியம் பற்றிய ஆய்வுகள் நடை பெற்று நூல்களாக வெளிவர வேண்டும்.
யாழ்ப்பான பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறை தலைவா
கலாநிதி சபா. ஜெயராசா
அவர்கள் வழங்கிய மதிப்புரை:
பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்து வதிலும், அறிகைக் கையளிப்பிலும், இசையின் பங்கு சமூகவியல், மானுடவியல், உளவியல், இசையியல் போன்ற பல்வேறு பரிமாணங்களு டாக நோக்கப்படுகின்றன. சமூக நிரலமைப்புடன் தாளக்கட்டுப்பாடுகளும், இராக முறைமைகளும் யாப்புக் கட்டுக்கோப்பும் இணைந்திருத்தலை நவீன இசையியல் ஆய்வுகள் புலப்படுத்துகின் றன. உதாரணமாக உடல் உழைப்பை மிகை யாகப் பயன்படுத்தியோர் மத்தியில் மிடற்று இராகம் (Vocal melody) மேலோங்கியிருந்தது. உபகரணங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் (Instrumental melody) பெருவழக்காக இருந்தது.
மூளை உழைப்பை அல்லது உள உழைப்பைப் பயன்படுத்தியோர் மத்தியில் பலவழி இராகம் (Multiphony) சிறப்புப் பெற்றிருந்தது. இவ்வாறாக நவீன இசையில் ஆய்வுகள் பொருண்மை கொண்ட பல தொடர்புகளை எடுத்துக் காட்டுகின்றன. பல் வேறு அறிவுத் துறைகளையும் இசையியலுடன் தொடர்புபடுத்தும் ஆய்வுகள் இன்றைய கால கட்டத்தின் தேவையாகவுள்ளன. தொடர்ந்து வரும் வெளியீடுகளில் அவற்றை நோக்கிய பெயர்ச்சி’ இன்றியமையாததாகும்.
இந்நூலாசிரியர் தமது ஆரம்பக் கல்வியை ஆவரங்கால் நடராஜராமலிங்க வித்தியாசாலையிலும் இடை நிலைக் கல்வியை புத்தூர் பூரீசோமாஸ் கந்தக் கல்லூரியிலும் பெற்றவர்.
சிவாச்சாரியராகவும், வாய்ப்பாட்டுக் கலைஞராகவும் விளங்கிய தமது தந்தையாரிடத்தும், கதாப்பிரசங்க வல்லாளராக விளங்கிய தமது சிறிய தந்தையாரிடத்தும் இசை அடிப்படை களைக் கற்றுக் கொண்டவர். அவற் ைற த் தொடர்ந்து திரு. எம். என். செல்லத்துரை அவர் களிடம் மிருதங்கம் ப யி ன் று 1971ஆம் ஆண்டில் சங்கீதகலாநிதி சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் இசைக் கச்சேரியில் அரங் கேற்றம் பெற்றார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பயின்றவேளை இந்நூலாசிரியர் ரி. ஆர். பூரீநிவாசன், சி. கே. சியாம் சுந்தர், கலாநிதி ரி. கே. மூர்த்தி ஆகியோரிடம் பிரத்யேகப் பயிற்சி அனுபவங்களையும் பெற்றவர். தமக் குரிய வாத்திய விஸாரதா பட்டத்தைப் பெற் றுக் கொண்ட பின்னர் தமிழ்நாடு, கேரளம், ஆகிய மாநிலங்களில் பல இசைக் கச்சேரிகளில் ஆற் றுகை செய்தார்.
தற்போது எமது துறையில் விரிவுரையாள ராகவும், வ த் தியத்துறை இணைப்பாளராகவும் பணிபுரியும் இவர் கர்நாடக இசையின் ஆழ்ந்த வேர்களைப் பற்றி நின்று ஆக்க இசை முயற்சிப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றறார். 1993ஆம் ஆண்டு எமது பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாக் கலை நிகழ்ச்சியின் போது "திரிதாளசங்கமம் ” என்ற புதுமையான லயக்கோல நிகழ்ச்சியைத் தயாரித்து வழங் கினார். 1994ஆம் ஆண்டுப் பட்டமளிப்பு விழாக் கலை நிகழ்ச்சியின் போது, ந வ ச ந் தி தானங்களில் ஒன்றாக விளங்கும் பிரம்மதாளத் தில் லய வின்யாச நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
இந்நூல் இவரது இரண்டாவது படைப்பு. 1989ஆம் ஆண்டு * மிருதங்க சங்கீத சாஸ்திரம் ' என்னும் நூல் இவரால் ஆக்கப்பெற்றது. தற்போது எமது பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி (இசை) பட்டத்துக்குரிய ஆய்வில் ஈடுபட்டுள்ள திரு. அ. நா. சோமாஸ்கந்த சர்மா அவர்களின் ஆய்வுகள் ஆழ்ந்து அகல எமது நல்வாழ்த்துக்கள்,
கீதம், வாத்தியம், நிருத்தியம் முதலாம் புலங் களில் ஈடுபட்டு உழைத்த கலைஞர்களின் வாழ்க் கையைச் சமூக பொருளாதார, ஆக்கத்தோடும் அசைவியக்கத்தோடும், சமூகப் புலக்காட்சியோடும் நுணுகி ஆராயும் பொழுது, மேலும் பல புதிய அறிக்கைத் த க வ ல் கள் கிடைக்கப் பெறும். இவ்வாறான அறிக்கை முயற்சி இசையியல் ஆய்வின் “ இரண்டாவது படிநிலை ’ என்று குறிப்பிடப்படும். எதிர் காலத்தில் இவ்வாறான ஆய்வுகளை நோக்கி நகர வேண்டும் என்ற தேவையையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இந்துநாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ணன்
அவர்கள் வழங்கிய சிறப்புரை:
இருபதாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் ஈழ வள நாட்டிலே கலைத்துறையின் வளர்ச்சிக் கென தம்மை அர்ப்பணித்த கலைஞர்களது வரலாற்றினை எடுத்துக் கூறமுற்படுகிறது இந்நூல். ஈழத்து இசை முன்னோடிகள் என்ற இந்நூலின் ஆசிரியராகிய யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத் துறை விரிவுரையாளரும் வாத்தியத்துறை இணைப் பாளருமாகிய வாத்ய விஸ்ாரத பிரம்மபூரீ அ. நா. சோமாஸ்கந்த சர்மாவின் இம்முயற்சியினைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியடை கின் றே ன். இவர் கலைத் துறையில் நல்ல பயிற்சியும் அனுபவமும் மிக்கவர். எனவே இத்தகைய நூலொன்றினை எழுதுவதற்கு சகல நிலைகளிலும் பொருத்த மானவர்.
இந்நூலில் கீதம், வாத்தியம், நிருத்தியம் ஆகிய மூன்று துறைகளிலும் ஈழத்தில் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பற்றி ஆசிரியர் எடுத்துக் கூறுகின் றார். பெரும் பாலான கலைஞர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து உரிய குருசீட மரபில் தாம் சார்ந்த கலைத்துறையில் பயிற்சி பெற்று தமது, மண்ணை நேசித்து அம்மண்ணிலேயே சிறந்த கலைப் பணியாற்றி புகழடைந்தவர்கள் . ஒரு சிலர் யாழ்ப்பாணத்தின் வெளியே பிறந்தவர்களாயினும் தமது பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து அப்பிரதேசத்து கலைவளர்ச்சிக்கு அரும்பணியாற்றி யவர்கள். இத்தகையோர்களை ஆசிரியர் முன் னோடிகள் எனப் போற்றுவதில் அர்த்தமுள்ளது. எமது பிரதேசத்தில் வாழ்ந்து கலைத்துறை சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடும் இளம் தலைமுறையினர்க்கு இம்முன்னோடிகளை அறிமுகப் படுத்துவதாக அமைகின்றது இந்நூல்.
தமது நாட்டில் தாம் பயிலும் கலைகளுக்கு முன்னோடிகளாக விளங்கியவர் களின் வாழ்க்கை வரலாறு எத்தகையது ? அவர் களது கலைப்பணியின் பரிமாணம் எத்தகையது ? அவர்கள் தமது கலைகளை எத்தகைய சூழலில் எவ் விதம் கற்றுத் தேர்ந்தார்கள் ? என்பது போன்ற வினாக்களுக்கு மிகவும் தெளிவான விளக்கங் களைத்தர இந்நூலாசிரியர் முயற்சி எடுத்துள்ளார். ஈழத்தில் கலைமரபினைப் பேணிப்பாதுகாத்த முப் பதுக்கும் மேற்பட்ட கலைஞர்களது வரலாறு எடுத் துக் காட்டப்பட்டுள்ளது. இப்பெரியார்கள் கலை யம்சங்களை ஆர்வத்துடன் பயின்று மேன்மை யடைய எடுத்த முயற்சிகள், அவர்களது குருபக்தி, தாம் சார்ந்த கலைத் துறை யின் மூலம் ஈட்டிய சாதனைகள், அவர்களது கலைப்பாரம்பரியம் ஆகிய வையும் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
சிறப்பாக ஆலயச் சூழலில் வாழ்ந்து எமது பண்பாட்டின் நிறைவடிவமாக விளங்கும் ஆலயங்களில் கலைப்பணியாற்றி புகழடைந்த நாதஸ்வர தவில் வித்துவான்களின் வரலாறு எடுத்துக் கூறப்பட் டுள்ளது. அத்துடன் வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், வீணை, நாட்டியம், பண்ணிசை, கதாப்பிரங்கம் போன்ற துறைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு கலைப்பணியாற்றிய கலை ஞர்களின் சாதனைகளை எடுத்துக் கூறும் வழியாக எதிர்காலச் சந்ததியினரும் இவர்களைப் பற்றியறிந்து அவர்கள் வழிநின்று கலைப் பணி யாற்றும் வண்ணம் வழியமைத்துக் கொடுக்கின்ரது இந்நூல் எனக் கூறின் மிகையில்லை.
ஈழத்தில் தமிழ் வளர்த்த மேதைகள் பற்றியும் சைவங் காத்த சான்றோர்கள் பற்றியும் நாம் நூல்களின் வழி அறிந்துள்ளோம். அது போன்று ஈழத்தில் கலைப் பணியாற்றிய முன்னோடிகள் பற்றியறிய இந்நூல் துணை செய்கின்றது. எமது நாட்டின் பண்பாட்டு வரலாற்றை அறிவதற்குத் துணை புரியும் இந்நூலினை ஆசிரியர் பலசிர மங்களின் மத்தியில் சேர்த்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். வாழும் கலைஞர்கள் மூலம் பெற்ற செய்திகள், இக்கலைஞர்களது மாணவர்கள் வழியாகப் பெற்ற செய்திகள், இவர்களோடு அறிமுகமான பெரியோர்கள் தந்த விபரங்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கோவைப் படுத்தி இந்நூலினை ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.
இந்நூலின் ஆசிரியர் இ ைசத் து ைற யி ல் கொண்ட ஆர்வம், நீண்டகால அநுபவம், ஆகியவற்றின் வெளிப்பாடாக இந்நூல் அமைகின்றது. மிருதங்க சங்கீத சாஸ்திரம் என்ற நூலினையும் ஆசிரியர் முன்னர் வெளியிட்ட அனுபவம் உள்ளவர். நமது கலைப்பணியைத் தெய்வீகப் பணியாகக் கருதுபவர். இந்நூல் அவரது இரண்டாவது படைப்பாகும்.
இசை, நாட்டியம் ஆகிய துறை சார்ந்த, நிறு வனங்கள் யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெறுவ தற்கும் இத்தகைய கலைஞர்கள் முன்னோடியாக விளங்கியுள்ளனர். இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட இந்நூலினை அனைவரும் ஆர்வத்துடன் வரவேற்பர் என்பதில் ஐயமில்லை. கலைஞர்க ளுக்கும் கலாரசிகர்களுக்கும் இசைத்துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கும் நன்கு பயன்படத்தக்க நூலினை எழுதி வெளியிட்ட பிரம்மபரீ சோமாஸ்கந்த சர்மா விற்கு எமது மனமுவந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஆசிரியர் எதிர் காலத்திலும் இது போன்ற ஆக்க பூர்வமான பணி களை ஆற்றுவதற்கு ஏற்ற சகல நலன்களையும் நல்கும் வண்ணம் இறையருளைப் பிரார்த்திக்கின் றோம். ஆசிரியரின் இம்முயற்சியினை அனைவரும் வரவேற்று ஆதரிப்பார்களாக.
நுழைவாயில் நூலாசிரியரின் உள்ளத்திலிருந்து. .
இசைக்கலை என்பது தெய்வீகத் தன் ைம வாய்ந்தகலை. பக்திமார்க்கத்தில் ஈடுபட்டு இறை வனைச் சரணடைய இசையால் ஆராதிப்பதைவிடச் சிறந்ததும்சுலபமானதுமான மார்க்கம் வேறில்லை. நல்ல இ ைச க்கு, இசைப்பவரையும், கேட்பவ ரையும் மெய்மறக்கச் செய்கிற அற்புதசக்தி உண்டு. வேதம் சங்கீதத்தினை வாய்ப்பாட்டிசை, வாத்திய இசை, நடன இசை, எனக்கூறுகின்றது. எமது பண்பாட்டில் எவ்விடத்தும் இசைக்கலை முக்கியத் துவம் பெறுகின்றது. இத்தகைய கலை நம் மண்ணை யும், நாகரீகத்தையும் பேணுவதற்கு இன்றியமை யாததாகும்.
** பெற்றதாயும் பிறந்தபொன் நாடும் நற் தவ வானிலும் நனிசிறந்தனவே '’ என்னும் வாக்கியத்திற்கமைய இசைக்கலைஞர்கள் இசைக் கலைக்கான பல பங்களிப்புகளை முன்னெடுத் துள்ளார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இசை முன் னோடிகளின் வரலாறு பற்றி நான் எழுதுவது ஒரு முன்னோடி முயற்சி என்று நினைக்கின்றேன். இந் நூலிலே நான் தேர்ந்தெடுத்த இசைமேதைகள் இன்று நம்மிடையே இல்லை எனினும் அவர்கள் வெறும் பாடகர்களோ, வாத்தியக்காரர்களோ, நடனக் காரர்களோ, பாரம்பரிய இசைக்கலைஞர்களோ மட்டுமல்ல, தங்கள் இசையினால் பேரும் புகழும் பெற்றதுடன் பட்டங்களும் பரிசுகளும் பெற்று தம் தாய் நாட்டின் பெருமையினைப் பலநாடுகளுக்கும் பரவச்செய்து சாதனை புரிந்தவர்கள். எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்த ஆவலில், பரந்த அள வில் பல கலைஞர்களுடன் பழகியும், அவர்களைப் பற்றி அறிந்துமிருந்த நான் நூலுருவமாக்கும் முயற் சியில் ஈடுபடலானேன்.
எனது விருப்பத்தைப் பெரும ளவில் பலகலைஞர்களின் பட் டி ய ல் ஒன்றைத் தயார்செய்து, சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட பொழுதுதான் எனது முதலாவது சிரமம் ஆரம்பமானது. எத்த ைனயோ கலைஞர்களின் வாரிசுகள் இங்கு இல்லாததாலும், இருப்பவர்களில் சிலருக்கு வாழ்க் ைக க் குறிப்புகள் சரிவரத் தெரியாததாலும் தெரிந்த வர்களிடம் பலமுறை கேட்டும் அவர்கள் அக்கறை எடுத்து தந்துதவாத தாலும் இப்படி நிறையவே சிரமங்களிருந்தன. நான் பட்டகஷ்டங்களை எழுத்தில் எழுதமுடியாது.
இருந் தும் இந்நூலில் இடம்பெறும் சிலகலைஞர்களின் பிள் ளைகள், உறவினர்கள், ஆர்வலர்கள் இப்படிப்பல தரப்பட்டவர்களை நான் நேரில் சந்தித்து சேகரித்த தகவலும், அநுபவமும் ஆற்றலுமுள்ள பழம்பெரும் கலைஞர்களிடம் விசாரித்துப்பெற்ற சில குறிப்புக் களும், சில நூல்களும் உதவின.
இவை நமக்குப் பல வகைகளிலும் உதவுவனவே யாகும். உதாரணமாக மக்களின் கல்வி, பண்பாடு, பக்தி, ஒழுக்கம் போன்றவற்றைக் கட்டி எழுப்பும் நோக்கங்களுக்கு இசைக்கலை உதவுகிறது.
இவ்வகை இசையினை வழிப்படுத்துவதில் முன்னோடி களாகத் திகழ்ந்தவர்கள் நம் கலைஞர்கள். மேலும் முற்காலத்தைப் போன்று அல்லாது தற்காலத்தில் நிறுவனரீதியாகவும், மக்களின் முன்னேற்றத்திற் கான தொழில்முறைக் கல்வியாகவும், பல நிறுவ னங்கள், கல்விக் கூட ங் கள் வாயிலாகவும் பல்கலைக்கழக மட்டத்திலும் வளர்ச்சியுறுவதற்கு காரணர்களாக விளங்கிய வர்கள் பலர். அவ் வழியிலே சமகாலத்திலும் இவ்விசைக்கலையை வளர்த்து வருகிறார்கள். எனினும் இருபதாம் நூற் றாண்டுப் பகுதியிலே இசைக்கு புதிய திருப்புமுனை களும், சிறப்புக்களும் தோன்றலாயின. இதனைச் சிந்திக்கும்போது மேன்மேலும் இத் து ைற யில் வளர்ச்சி காணவேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு. இவ்வகையில் வித்திட்டவர்கள் முன்னோடிகளாவர்.
ஈழத்தில் குறிப்பாக எங்குமில்லாதவாறு யாழ். பல்கலைக்கழகத்தில் இதற்கென ஒருபுலம் அமையப் பெற்றதும் இதற்கான துறைகள் விரிவாக அமைக்கப் பட்டுள்ளது. வாய்ப்பாட்டிசை, வாத்திய இசை, நாட்டிய இசை, தமிழர் பாரம்பரியமான பண் ணிசை போன்ற துறைகள் வளர்ச்சி பெறுவதற் கான நடைமுறைகள் யாழ். பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்படுவதும் பெரியதொரு வரப்பிரசாத மாகும். மேலும் இதற்கான மாணவர்களுக்கு தகுதி களை முன்வழங்கிய இசைக்கலைஞர்கள், இசை நிறுவனங்கள், பரீட்சை நிறுவனமான வடஇலங்கை சங்கீதசபை, இசை கற்பிக்கப்படும் கல்லூரிகள் யாவும் முக்கியத்துவமுடையன.
எமது பண்பாட்டில் எழுத்தறிவித்தவன் இறை வன் என்றவகையில் இசை எனும் எழுத்தை அறி வித்தவர்களான அமரத்துவம் பெற்ற கலைஞர்கள் அதிமுக்கியத்துவம் படைத்தவர்கள். இவர்களைப் பற்றிய வரலாற்றை நாமும் நமது சந்ததியினரும் அறியப்பட வேண்டிய தொன்றாகும். இதனால் நமது கலை மேலோங்க வாய்ப்பு உண்டு.
இந் நூலில் கீதம், வாத்தியம், நிருத்தியம் என்ற வகையில் முப்பது முன்னோடிகளும் நம் பாரம் பரியதமிழிசையை முன்னெடுத்த நான்கு இசை முன்னோடிகளும் ஆகியவர்களின் வரலாறுகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். இதனால் இசைக் கலை ஞர்களும், மாணவர்களும், துறைசார் ஆராய்ச்சி யாளர்களும் பயன் பெறுவார்கள். மேலும் இங்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தவர் பலரின் வரலாறு களைத் தெளிவாகத் தெரியக்கூடிய சான்றுகள் இல்லா திருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். மேலும் இந்நூலில் சில கலைஞர்களின் வரலாறு இடம் பெறாமல் இருக்கலாம்.
எனினும் சம்பந்தப் பட்டவர்கள் பொருத்தமான தகவல்களைத் தந்து உதவுவீர்கள் என நம்புகிறேன். நம்பிக்கை உண்மை யானால் தொடர்ந்து இது போ ன் ற நூல்கள் வெளிவர உளக்கம் பிறக்கும்.
இந்நூல் தயாரானபோது இதனைப்பற்றிய தகவல்களை கழகத் தலைவர் கலாநிதி சபா. ஜெய ராஜா இயலிசை வாரி தி என். விரமணிஜயர், பேராசிரியர் வி. சிவ சா மி, செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி ஆகியோரிடம் தெரிவித்த பொழுது முதலில் பாராட்டைத் தெரிவித்து உற்சாகமூட்டி, நல் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
அவர்களு க்கு எனது நன்றிகள். மேலும் நூலில் இடம் பெறும் கலைஞர்களைப் பற்றி தகவல் தந்த, அவர்கள் வாரிசுகள் சிலருக்கும், முன்னோடிகளுடன் நெருங் கிப் பழகியவர்களான கலாதரி என். கே. பத்ம நாதன், இசையரசு பொ. சின்னப்பழனி, இசையரசு பி. சந்திரசேகரம்பிள்ளை, நவாலியூர் என். சச்சி தா ன ந் த ன், திரும தி மோகனாம் பிகை கணேசன், மிருதங்கம் எம். கந்தசாமி, மிருதங்க மணி எம். என். செல்லத்துரை ஆகியோருக்கு எனது அன்பு நன்றிகள். மேலும் மு ன் னே (ா டி களின் சில தகவல்களைப் பெற்றுத் தந்த இ. நு. க. மாணவன் சி. சிவசிவாவுக்கும் எனது ஆசிகள்.
இந் நூலினைப் பிழைகளின்றி மிகக் குறுகிய காலத்தில் எவ்வளவோசிரமங்களுக்கு மத்தியிலும் நன்கு அச்சேற்றித்தந்த சுன்னாகம் திருமகள் அழுத் தகத்தார், இதற்கு உறுதுணையாயிருந்த பெரியம்மா அவர்களுக்கும், எந்நேரமும் மனம் கோணாமல் குறித்த அச்சுப் பிரதிகளையும் மூலப்பிரதிகளையும் சரிபார்த்தவுடன் அழுத்தகத்தில் சேர்த்து உதவி புரிந்த துர்க்காபுரம் மகளிர் இல்லச் செல்வங்களுக்கும், மேலும் மூலப்பிரதியையும் அச்சுப் பிரதியையும் ஒத்துப்பார்ப்பதில் எனக்கு உறுதுணை புரிந்தும், சில தகவல்களைத் தந்தும், சிரமம் பாராது உதவிய திரு. எம். எஸ். பூரீதயாளன் அவர் களு க்கும்,
அட்டைப் படத்தை அழகுற அமைத்துத்தந்த திரு. ஆ. ஞானசேகரம் அவர்களுக்கும், வாத்தியங்களின் புளொக் தந்துதவியவர்களுக்கும் நன்றிகள் பல.
நூலுக்கு மகுடம் வைத்தாற்போல் சிறப்புப் பாயிரம், வாழ்த்துரைகள், அணிந்துரை, மதிப்புரை, சிறப்புரை வழங்கிய பிரம்மபூரீ. என். வீரமணிஜயர் அவர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா சிரியர், கே. குணரத்தினம் அவர் கள், கலைப் பீடாதிபதி பேராசியர் பி. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள், இராமநாதன் நுண்கலைக்கழகத் தலைவர் கலாநிதி சபா. ஜெயராஜா அவர்கள், துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள், பேராசிரியர் வி. சிவசாமி அவர்கள், பேராசிரியர் எஸ். சண்மு தாஸ் அவர்கள், பேராசிரியர் பி. கோபாலகிருஷ்ண ஐயர் அவர்கள் ஆகியோருக்கு என் மதிப்பார்ந்த நன்றிகள் பல.
இந்நூல் வெளியிட்டு விழாவினைப் பொறுப் பேற்ற எமது இராமநாதன் நுண்கலைக் கழகத்தின் கவின் கலை மன்றத்தினர் அனைவருக்கும் எனது நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகுக.
அ. நா. சோமாஸ்கந்தசர்மா
கீதம்
பி. கே. கிருஷ்ணபிள்ளை
இசைப்புலவர் என். சண்முகரத்தினம்
வாத்தியம்
புத்துவாட்டி எஸ். இரத்தினம் புத்துவாட்டி எஸ். என். சோமசுந்தரம் கோடையிடி ஏ. மயில்வாகனம் மாவிட்டபுரம் என். எஸ். உருத்திரா பதி கோடையிடி தம்பாபிள்ளை வண்ணை வி. காமாட்சிசுந்தரம் மாவிட்டபுரம் எஸ். கே. இராசா யாழ்ப்பாணம் எஸ். சுப்பையாபிள்ளை யாழ்ப்பாணம் வி. : கணபதியாபிள்ளை இணுவில் வி. உருத்திராபதி நல்லூர் எஸ். வைத்தீஸ்வரஐயர் யாழ்ப்பாணம் என். தங்கம் ஆனைக்கோட்டை ஜி. எஸ். வசந்தகுலசிங்கம் யாழ்ப்பாணம் பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை அளவெட்டி எம். திருநாவுக்கரசு இணுவில் வி. கோதண்டபாணி
யாழ்ப்பாணம் பி. வைத்தியநாதசர்மா நாச்சிமார்கோவிலடி வி. அம்பலவாணர் இணுவில் என். ஆர். கோவிந்தசாமி யாழ்ப்பாணம் ரி. இரத்தினம் அளவெட்டி வி. தட்சணாமூர்த்தி இணுவில் என். ஆர். சின்னராஜா இணுவில் கே. சங்கரசிவம் யாழ்ப்பாணம் ரி. நித்தியானந்தன்
நல்லூர் பொன். ஆத்மானந்தா
நிருத்தியம்
கீதாஞ்சலி கே. நல்லையா கொக்குவில் ஏரம்பு சுப்பையா
மல்லாகம் வி. இராஜரத்தினம்
தமிழர் இசை (பண் இசை) கொக்குவில் ரி. குமாரசாமிப்புலவர் குப்பிளான்
எஸ். செல்லத்துரை தாவடி
எஸ். இராசையா
நல்லூர் பூரி சுவாமிநாதபரமாச்சாரிய சுவாமிகள்
இந்நூல் ஆக்கத்திற்கு உதவிய நூல்கள்
பரதக்கலை - வி. சிவசாமி மிருதங்கசங்கீதசாஸ்திரம் - அ. நா. சோ. பல்லவி - இசை நடன இதழ் பொன்விழாமலர் - வ. இ. ச. சபை தமிழ்நேசன் - மலேசியா சொல்வெட்டு - சின்னராஜா ஏரம்பு சுப்பையா அவர்களும் கலைவாழ்வும் நினைவுமலர் - எஸ். கே. இராசா நித்தி நினைவுகள் நல்லைக்குமரன் மலர்
பொன்னாலை வரகவி பி. கே. கிருஷ்ணபிள்ளை
(1898-1956)
ஈழத்தின் வடபால் பொன்னாலை என்னும் உளரிலே வேய்ங்குழல் கண்ணனாகிய வரதராஜப் பெருமாளின் ஆலயச்சூழலிலேயே 1898ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 10ஆம் திகதி கண பதிப் பிள் ைள தம்பதிகளுக்கு புத்திரனாகப் பிறந்தவர்தான் வரகவி கிருஷ்ணபிள்ளை அவர் கள். இவர்தனது கல்வி யினை சுழிபுரம் விக் ரே (ா றி யா க் கல்லூரியிற் பயின்றார். கல்விபயிலும் போதே இசைக்கலையில் ஆர்வம் கொண்டவராயிருந்தார். இதற்குக்காரணம் இவர்களின் மூதாதையர்கள் கவிவல்லுனர்களாக இருந்தமை எனலாம்.
திரு. கிருஷ்ணபிள்ளை தனது சிறு பராயத்திலே அவ்வூர் வைத்தியராகவிருந்த அண்ணாவி சுப்பிர மணியம் என்பவரை அணுகி அவரிடம் இசை பயின்று, அவரோடு நாடகம் நடிப்பதிலும் ஈடு பட்டார். இதன் பயனாக வாய்ப்பாட்டு இசையிலும் நடன , நாடகநிகழ்வுகளிலும் பங்கெடுக்கவும் ஆரம் பித்தார். மேலும் தமது பாரம்பரியக் கலையான கவி இயற்றும் தன்மையினால் பல விதமான பாடல்களை இயற்றுவதிலும் மேடைகளில் அவற்றை அரங்காற்றுவதிலும் ஈடுபாடுகொண்டு செயற்பட்டார்.
இவருடைய கவி வல்லமையும், பாடல்களை இசைக்கும்தன்மையும், நடிக்கும் திறமையும் முன் னேற்றப்பாதையிலே நன்கு சென்று கொண்டிருந் தன. இவ்வேளையிலே இவருடைய சிறியதந்தையா ரான சண்முகம் என்பவரின் உந்துதலால் பிள்ளை அவர்கள் மலேசியாநாட்டிற்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. இதுமட்டுமின்றி அந்நாட்டிலே புகையிர தப் போக்குவரத்துச்சேவையில் நிலைய அத்தியட்சக ராகவும் கடமைபுரிந்துவந்துள்ளார். அங்குகடமை புரிவதுடன் மட்டுமின்றி அந்நாட்டிலுள்ள இசைக் கலைஞர்களுடன் நட்பும்பூண்டு பழகுவதன் மூலம் தனது இசைக்கலையை மேம்படுத்தினார்.
பிள்ளை அவர்கள் சிலவருடங்களின் பின் ஈழம் திரும்பி தனது இயற்கைஞானத்தினாலும் பல்துறை சார் சிந்தனைகளாலும், கற்பனைத்திறத்தாலும் பல கீர்த்தனைகள் இயற்றியும் அவற்றினை இசை யரங்கங்களினூடும் பரவச்செய்தார். இவர் பாடிய கீர்த்தனைப்பாடல்கள் நூற் று க் கணக்கானவை. எனினும் இருநூறு சாகித்தியங்களே பிரபலமாகப் பாடப்பட்டவைகளாகும். இவை பொன்னாலை வரதராஜப் பெருமாள், பறாளாய் முருகன், வழக் கம்பராய் அம் பா ள், வல்லிபுர ஆழ் வார், கதிர் காமக்கந்தன் ஆகிய தெய்வங்கள் மீது பாடப் பட்டவையாகும். இவற்றோடு நாட்டின் முன்னேற்ற அறிவுரை கூறுவனவாகும்.
தமிழ்எழுச்சி, ஈழத்தின் வளம், சமுதாய எழுச்சி, இசைஎன்பனபற்றி விதந் துரைக்கும் பாடல்களாகவும் இசைப்படைப்புக்கள் அமைந்து விளங்குகின்றன. இப்பணிகள் பிள்ளை அவர்களை ஒரு இயல் இசை சாகித்திய கர்த்தா வாக்கியது எனலாம்.
திரு. கிருஷ்ணபிள்ளை அவர்கள் பாடிய கீர்தனைகளுள் முதலாவதாக கம்பீரநாட்டை ராகத்திலமைந்த ‘* ஒம் பிரணவமுதல்வா ' என் ராரம்பிக்கும் கீர்த்தனை பிரபலமான து. இக் கீர்த்தனையானது இன்றும் ச ங் கீ த பூ ஷ ண ம் பொன்னாலை சு. கணபதிப்பிள்ளை அவர்களால் இசையரங்குகளில் பாடப்பட்டுவருவது குறிப்பிடத் தக்கது. பொது வாக பிள்ளை அவர்களின் கீர்த்தனைப்பாடல்கள், தாலபுரத்தார்கீதம்' என்று குறிப்பிடப்படுகின்றது. மேலும், இது பற்றிய பாடல்கள் ** நமற்கார நவநாகரிக நவரஸ்க்கீர்த் தனைகள் ' என்ற பெயர்கொண்ட நூலாகவும் வெளிவந்துள்ளது.
பிள்ளை அவர்களின் கீர்த்தனைகளில் சிறப்பாக பின்வருவனவற்றைக் குறிப்...
கீர்த்தனை இராகம்
1. ஓம் பிரணவ முதல்வா. கம்பீரநாட்டை
2. துணை நீ ஆதரிபொன்னாலை துவாரகேசவா. கமாஸ்
3. கிருபை ஈசனே. ர்டிங்ச
4. கருணைப்பிரகாசா கதிர்காமையா . சண்முகப்பிரியா
5. சகலகலாவல்லியே. நரட்டைக்குறிஞ்சி
6. மங்களமாய் வாழவேண்டும். சுருட்டி
7. அதிக உணவு பயிரிடுவிர். பேகட
8. பனையே பிரபஞ்சதஞ்சமே பறந்திடுமே பஞ்சமே. சிந்துபைரவி
9. வந்தாளா வரதா. நீலாம்பரி
10. எண்ணும் எழுத்தும். கமாஸ்
பொன்னாலை கிருஷ்ணபிள்ளை அவர்கள் இசை பயின்ற காலம் ஸ்வர சாகித்திய அணியிலேயே இசைப்பயிற்சிகள் அமைந்தனவாக அறிகின் றோம். மேலும், இவரிடம் இவருடைய சகோதரரின் மகனான திரு. சு. கணபதிப்பிள்ளை அவர்கள் இசையும் நாடகமும் பயின்றுள்ளது மட்டுமல்லாமல் தற்போது சிறப்பு மிக்க இசைக் கலைஞனாகவும், சங்கீதப் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணி புரிவது குறிப்பிடத்தக்கதாகும். இவரும் இசையில் சிஷ்ய பரம்பரையினரையும் உருவாக்கி வருகின் றார். மேலும் பிள்ளை அவர்களிடம் இசையும், ஹறார்மோனியமும் பயின்று இசைச்சேவைபுரியும் முருகையா அவர்களும் ஹார்மோனிய இசையினை நிகழ்ச்சிகளுடாக வழங்கி வருகின்றார்.
அக்காலத்து இந்தியத் திரைப்படக் கலைஞர் களான என். எஸ். கிருஷ்ணன், கே. பி. சுந்தராம் பாள், எம். ஆர். கோவிந்தன் ஆகியோர்களுடன் திரு. கிருஷ்ணபிள்ளை அவர்கள்சேர்ந்து பாடியும், நடித்தும் வந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் தயா ரித்த இசை நாடகங்கள் பலவாகும். அவற்றில் *கிருஷ்ண லீலா, ஹம்சன் வதம், எது நல்லவழி, சுதேசம்விதேசம் ' என்பவை சிறப்பானவை. இவர் இறுதியாகத் தயாரித்தளித்தது யாழ். மனோகராப் படமாளிகையில் நிகழ்ந்த ‘'எது நல்ல வழி' என்ற இசை நாடகம் ஆகும். சிறப்பான இசைச்சேவை புரிந்த வரகவி திரு. கிருஷ்ண பிள்ளை அவர்கள் தமது 58 ஆவது வயதில் இவ் வுலக வாழ்வை விடுத்து நிலையுலகம் சென்றார், எனினும் அன்னாருடைய க ைல ச் சே ைவ அவ ருடைய இசை வாரிசுகள் மூலம் தொடர்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.
சந் - தோஷம் * நல்ல ஞானமும் தெய்வப் புலமையும் பொது ஜன ஆதரவும் உடைய இளம் கலைஞர்கள் சம்பிரதாய வழிமுறைகளை விட்டு விலகி கர்நாடக சங்கீதத்தை சோதித்தால் அது தோஷமில்லையா " ? என்று சிறந்த ரசிகர் ஒருவர் அரியக்குடிஐயங்கார் அவர்களிடம் கேட்டார். " " கலையில் தோஷம், பாவம் முதலியவற்றுக்கு பயந்து செயல்புரிந்த காலம் எப்போதோ போய்விட்டது. இந்தக் காலத்தவர்களுக்கு தோஷம் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறது என்ன செய்வது " ? என்றார் ஐயங்கார்.
! நன்றி : தினமணிக்கதிர்
உடுவில் இசைப்புலவர் என். சண்முகரத்தினம் 1915 - 1987
ஈழத்தின் வாய்ப்பாட்டுக்கலைஞர்களுள் மூத்த கலைஞராகக் குறிப்பிடத்தக்கவர் இசைப்புலவர் என். சண்முகரத்தினம் அவர்கள் ஆவார். இவர் ஈழ யாழ்ப் பாணத்து உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவருடைய தந்தையார் நவரத்தினம் அவர்கள். தாயார் திலகவதி. இவர் 1911ஆம் ஆண்டு யூன் மாதம் 21ஆம் திகதி பிறந்தார்.
இவருக்கு சிறுவயதிலேயே இசையார்வம் இருந்தது. இதற்குக்காரணம் இவர் வசித்துவந்த சூழலும் இவருடைய பாட்டனார், பெற்றோர் ஆகி யோர் இசையில் ஆர்வலராக இருந்தமையும் ஆகும். இதன் காரணமாகவே இவரின் பாட்டனார் பேரன் சண்முகரத்தினத்தை அவரின் ஏழாவது வயதில் இந்தியாவிற்கு அழைத்துச் சென்று திருநெல்வேலி ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரிடம் வாய்ப் பாட்டு இசைகற்கவும், ஜமீந்தார் பாடசாலையில் கல்வி பயிலவும் ஏற்பாடு செய்தார். இக்காலத்திலே அவ்வூரிலேயே சுந்தரபாகவதரிடம் பக்தி இசைப் பாடல்களையும் ஓரள வு கற்றுக்கொண்டார். 1926ஆம் ஆண்டு மீண்டும் ஈழத்துக்கு வந்த திரு. சண்முக ரத்தினம், யாழ். இந்துக்கல்லூரியில் சிரேஷ்டவகுப்புவரை கல்விபயின்று கொண்டே தனது இசைக்கல்வியை இங்கும் தொடர்ந்தார்.
இசையார்வத்தின் காரணமாக மலாயா நாட்டில் தனக்குக் கிடைத்த அரச உத்தியோகத்தை விரும்பாத வராய் தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சென்று ‘* சங்கீதபூஷணம் ' பட்டப்படிப்பை மேற்கொண்டு அதிலும் முதலாம் தரத்தில் சித்தி பெற்று இசைக்கான தங்கப்பதக்கத்தையும் பெற்றுச் சாதனை புரிந்தார்.
திரு. சண்முகரத்தினம் பல்கலைக் கழத்தில் பயிலும் காலத்தில் தனது இசை ஞானச் சிறப்பினால் தண்டாயுத திகூழிதர், பொன்னையாபிள்ளை, டைகர் வரதாச்சாரியார், திருப்பாம்புரம் சுவாமி நாதபிள்ளை, சித்துரர்சுப்பிரமணியபிள்ளை ஆகிய இசைமேதைகளிடம் தனிப்பட்டமுறையில் இசை நுணுக்கங்கள் பலவற்றையும் கற்றார். இந்நிலையில் திருச்சி வானொலிக் கலைஞர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பல ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகள் பல செய்துள்ளார். இவருடைய இசையில் சுருதிலய நுணுக்கங்கள் சிறப்பானது. திரு. சண்முகரத்தினம் தனது பட்டப்படிப்பை முடித்து ஈழத்திலுள்ள பரமேஸ் வராக்கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, பண்டத் தரிப்பு மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும், மட்டக் களப்பு சிவானந்தாக்கல்லூரியிலும் இசையாசிரியர்ாகக் கடமைபுரிந்து மாணவர்களுக்கு இசைக்கல்வி போதித்துள்ளார். இது மட்டுமின்றி இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்தின் முதலாந்தர இசைக் கலைஞராக இ ைச ய ர ங் கு நிகழ்ச்சி அளித்தும் வானொலியில் இசைப்பயிற்சி, பண்ணி ைசப் பயிற்சி ஆகிய மாதிரி வகுப்புக்களை நிகழ்த்தியுமுளார்.
'நாதம்’ என்ற மாத இதழை சில ஆண்டு களாக வெளியிட்டு அருந்கொண்டாற்றினார். சிங்கப்பூர், மலேசியா வானொலியிலும் அநேக இசையரங்குகள் நிகழ்த்தியிருக்கிறார்.
இவர் - 1943ஆம் ஆண்டில் தனது சொந்த மாமனின் மகளான ஜெயலட்சுமி என்பவரைத் திருமணம் செய்தார். அதன்பின்னர் உடுவில் பகுதி யில் 1948ஆம் ஆண்டளவில் இசை மன்றம் அமைத்து விழாக்கள் நடத்தியும் இசை வகுப்புக்கள் நடாத்தி யும் இசையை வளர்த்துள்ளார். ஈழத்தின் பலபாகங் களிலும் சபாக்களில் நடைபெறும் இசையரங்குகள் பலவற்றிலும், இந்துக் கோவில்கள், திருமணவை பவங்கள், பண்ணிசையரங்குகள் போன்றவற்றி லும் இசை நிகழ்ச்சியினை நடாத்தியுள்ளார். இவ ருடைய சாரீரவளத்தினை ‘ வெண்கலக்குரல்’’ என இரசிகர்கள் விமர்சித்துள்ளனர். இவர் மிருதங்கம் வாசிப்பதிலும் ஓரளவு திறமை (புள்ளவர். மருதனா மடத்திலுள்ள கலையரங்கத்தை அ ைம ப் ப த ர் கு இவரே முன்னின்று பாடுபட்டு உழைத்தவர் என் பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவருடைய பிள்ளைகள்அறுவர். அவர்களுள் மூத்த மகன் சண்முகராகவன் தந்தையிடமே இசை பயின்று தந்தையாருடன் இணைந்து பல கச்சேரிகள் செய்தும்வந்துள்ளார்.தற்பொழுது சண்முகராகவன் இலங்கையிலும், மலேசியாவிலும், அவுஸ்திரேலி யாவிலும் புகழ் மிக்க இசைக்கலைஞனாக விளங்குகிறார். இளையமகன் பிரணவநாதன் தந்தையாரிடம் மிருதங்கம் பயின்று பின்னர் ‘சங்கீத ரத்தினம்’ பட்டம் பெற்றும் தந்தையாரின் இசை யரங்குகளில் மிருதங்கம் வாசித்துப் பாராட்டுப் பெற்று தற்போது ஜேர்மனியில் மிருதங்க இசை பரப்புகின்றார்.
1965ஆம் ஆண்டு மல்லாகம் நாதஸ்வரவித்து வான் வெங் கடா ச ல ம் அவர்களின் புத்திரி சரஸ்வதி என்பவரை வாழ்க்கையில் இணைத்துக் கொண்டார். இவரோடு வாழ்க்கையில் இணைந்து கொண்ட இசையாசிரியைக்கு கிடைத்த பிள்ளை களில் பூரீ காந்தி என்பவர் இராமநாதன் நுண் கலைக்கழகத்தில் இசைபயின்று ‘இசைக்கலைமணி பட்டம் பெற்று இசையுலகில் பிரகாசிக்கின்றார். தற்பொழுது அவுஸ்திரேலியாவில் இசைப்பணி புரி கின்றார். கலைஞர் திரு. என். சண்முகரத்தினம் அவர்களுக்கு நம் ஈழநாட்டிலே 2-4 - 1971இல் குறிப் பிடும் படியான நிகழ்வு ஒன்று நடந்தது. மருதனார் மடம் அப்புக்காத்து திரு. சதா. பூரீநிவாஸன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற இசையரங்கில் * சாவேரி இராகத்தைப் பாடிய இவரை வினாவி பூஷன் எஸ். பாலச்சந்தர் வெகுவாகப் பாராட்டிய நிகழ்வு தா ன் அது. ச ம க ர ல த்திலேயே இவர் இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் இறுதிப் பரீட் சைகளுக்கும், வட இலங்கை சங்கீத சபையின் இசை, மிருதங்கம் ஆகிய பரீட்சைகளுக்கும் தேர் வாளராகக் கடமையாற்றியும், சங்கீதசபையின் நிர்வாக அ ங் கத் தவ ரா க விளங்கியும் கலைச் சேவைகள் பல புரிந்துள்ளார்.
இவரின் இசைச்சேவைக்காக இவருக்கு சங்கீத ரத்தினம், கானவித்தியாயூஷணம், இசைப்புலவர், இசைச்சக்கரவர்த்தி, இசைமாமணி, இசைவேந்தர், கலைச்சுடர், கானவாரிதி, ஏழிசைக்குரிசில், என்னும் பட்டங்களையும் விருதுகளையும் பல இசை நிறுவனங்கள் வழங்கியமை குறிப்பிடக்கூடியதாகும.
ஈழத்தில் பிறந்து, ஈழத்தின் இசை மரபுவளர்ச் சிக்குத் தொண்டாற்றிப் பெருமை தேடித்தந்த நம் இசைப் புலவர் சண்முகரத்தினம் அவர்கள் தனது 72ஆவது வயதில் 27-03-1987இல் இவ்வுலகை விட்டுச் சென்றார். உடுவை சண்முகரத்தினம், ஈழத்து இசைக்கலைவளர்ச்சியின் தவிர்க்கமுடியாத ஒரு முக்கிய மைல்கல் என்றால் மிகையாகாது.
** நீங்க ஏன் பக்கவாத்தியம் வாசிக்கிறதை நிறுத் திட்டு ஸோலோ மட்டும் வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்க??? என்று வயலின் மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடு விடம் ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு துவாரம் அளித்த பதில் "பக்கவாத்தியம் வாசிக்கிறப்போ நல்லா வாசிக்காட்டா ஆடியன்ஸ் திட்ட றாங்க நல்லா
வாசிச்சா பாடகர் திட்டறார். "
புத்துவாட்டி எஸ். இரத்தினம் மிருதங்கம் 1880 - 1940
ஈழ யாழ்ப்பாணத்து பருத்தித்துறையிலே புத்து வாட்டி என்னும் இசை மண்ணில் வசித்து வந்தவர் தான் புத்துவாட்டி இரத்தினம். இவர் தந்தையார் சின்னத்தம்பி என்னும் இசை விற்பன்னர் ஆவர். இவர்கள் குடும்பமே இசைக்கலைஞர் பரம்பரை யாகும். மூத்த சகோதரர் புத்துவாட்டி நாகலிங்கம் என அழைக்கப்படும் வயலின் இசைக் கலைஞர். இவர்கள் குடும்பத்தினர்தான் கர்நாடக இசையினை 19ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் வளர்க்க ஆர்வம் காட்டியவர்களாவர். இவர் இசையினை வளர்க்கும் நோக்கமாக யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை யிலும் வசித்து வந்துள்ளார்.
புத்துவாட்டி இரத்தினம் அவர்கள் தனது சகோ தரர்களின் வாய்ப்பாட்டு, வயலின், கதாப்பிரசங்கம் போன்றவைகளுக்கு மிருதங்கம் வாசித்து வந்துள் ளார். அத்துடன் இந்தியாவிலிருந்து இங்கேவருகின்ற இசைக்கலைஞர்களின் இசைக் கச்சேரிகளுக்கும் அவர்களுடன் வருகின்ற லய வாத்தியக் கலைஞர் களுடன் சேர்ந்துவாசித்து பெருமதிப்புப் பெற் றுள்ளார். அக்காலத்துக் கலா ரசிகர்கள் இசையை ரசிப்பதில் மட்டுமே ஆர்வலராக இருந்தனர். எனினும் இசையைத் தாமும் கற்று இசைக்கலையை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அக்காலத்தில் இருக்க வில்லை. இந்த நிலையிலும் இவரிடம் மிருதங்கக் கலையை ஒரு சில மாணவர்கள் பயின்றனர்.
அவர்களுள் குறிப்பிடக் கூடியவர்கள் காலஞ்சென்ற மிருதங்க வித்வான் என். தங்கம், நவாலி த. இரத்தினம் ஆகியோர்களாவர். அக்காலத்திலிருந்த யாழ்ப்பாணச் சூழ் நிலையில் குறிப்பிட்ட ஒரு வகை யினர் மட்டுமே இக்கலையைப் பயிலும் ஆர்வமுடை யவர்களாக இருந்தனர்.
வித்துவான் இரத்தினம் அவர்களது வாசிப்பா னது நாதசுகம், மேற்காலப்பரண்கள் (புரட்டல்கள்) அதிவேகமும் சுருதிலயசுகமும் உ ைடய தாக இருந்தன என அறியக் கூடியதாகவுள்ளது. இவரு டைய வாசிப்பானது கர்நாடக சங்கீதப் பாணிக்கே உரியதாக விளங்கியுள்ளது. எனவே அக்காலத்தில் இந்தியாவிலிருந்து வருகின்ற நாடகக் கோஷ்டி களின் அரங்கிற்கு வரவேற்பாக இவர் மிருதங்க வாசிப்பு இருக்கவில்லை. எனினும், இவர் சுத்தமான கர்நாடக இசை மரபினைப் பின்பற்றியே வாசித்து வந்துள்ளார். மிருதங்கக் கலைத் தொண்டினை ஏறக்குறைய 40 ஆண்டுகள் வரையில் ஆற்றியுள் ογπ (σή . இவரின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர் தான் தற்போது இலங்கை வானொலிக் கலைஞராக விளங்கும் ஜெயசுந்தரம் அவர்கள்.
திரு. இரத்தினம் அவர்கள் இ ைச யு ல ைக விட்டு நீங்கிய காலம் திட்டமாக அறிய முடிய வில்லை. ஏறக்குறைய தனது 60 வயது வரை இசைச் சேவையுடன் வாழ்ந்து மிருதங்க இசைக்கு பெருமை தேடியுள்ளார் என்றே கூறலாம். அக் காலத்து ஈழத்தின் முதற் கலைஞர் வரிசையில் இவர் திகழ்ந்தார் எனலாம். இரத்தினம் அவர்களது மிருதங்கக் கலைத் தொண்டு யாழ்ப்பாணத்திற்குப் பெருமை அளிப்பதாகவே உள்ளது.
புத்துவாட்டி எஸ். என். சோமசுந்தரம் வயலின் 1895-1955
ஈழத்திற்கு இசை வித்து இட்டவர்களுள் ஒருவர் புத்துவாட்டி சோமு என அழைக்கப்படும் எஸ். என்.
சோமசுந்தரம் அவர்கள் ஆவார். புத்துவாட்டி என்பது பருத்தித்துறையின் ஓர் குறிச்சியின் பெயராகும். ** புத்துவாட்டி' என்று கூறினால்
ஓர் இசைப்பரம்பரைக்கு முத்திரை பதித்தவர்கள் என்று திட்டவட்டமாகக் கூறலாம்.
1850ஆம் ஆண்டளவில் இந்தியாவின் இசை வேளாளர் பரம்பரையிலிருந்து பல்லிய இசை விற்பனராகவும், நட்டுவனாராகவும், இலங்கை வந்த சின்னத்தம்பி என்னும் கலைஞர் ஈழத்தின் தீவக மான புங்குடுதீவிலிருந்த பொன்னு என்னும் பெண் மணியை மணம் முடித்தார். அக் காலத்தில் ஈழத் தின் பல்வேறுபாகங்களிலும் கோயில் திருவிழாக் களிலும் பிற வைபவங்களிலும் மங்கள இசை, சின்ன மேளம் என்கின்ற சதிர்க ச்சேரிகள் நாடகம் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இச்சின்னத்தம்பி தம்பதிகளுக்கு நாகலிங்கம், சுப்பையா, செல்லர், இராசா, இரத்தினம் என்னும் ஐந்து ஆண்களும் வள்ளிப்பிள்ளை என் கின்ற பெண்ணும் பிறந் தார்கள். இவர்கள் யாவரும் இசையிலேயே நாட்ட முடையவர்களாக வளர்ந்து, தந்தையிடம் ஓரளவு இசை பயின்றும், இந்திய நாட்டிற்குச் சென்று பல்லிய இசைகளைக் கற்றார்கள்.
இதன் பயனாக நாகலிங்கம் அவர்கள் பிடில் (வயலின்), சாரங்கி, போன்ற கருவிகளிலும், சுப்பையா நட்டுவாங்கத்தி லும், செல்லர் பிடில் (வயலின்) கருவியிலும், இராசா வாய்ப்பாட்டு இசையிலும், இரத்தினம் மிருதங்கம், டோலக், தபேலா, சுத்தமத்தளம் போன்ற கருவி களிலும், வள்ளியம்மை நாட்டியம், நாடகம் போன்ற வற்றிலும் சிறப்புற்று ஈழத்தில் இசைச் சேவை புரிந்தனர். அக்காலத்தில் குறிப்பிட்ட சிலரே இசை யில் ஈடுபாடு கொண்டிருந்தனர். வயலின் கலைஞர் சோமசுந்தரத்தின் தந்தையாரே இவர்களில் மூத்த வரான நாகலிங்கம் அவர்கள். இவர்பாரதத்தின் தமிழ்நாடு மலைக்கோட்டையில் நாயுடு இனத்தைச் சேர்ந்த வீராச்சாமி அவர்களின் புதல்வியான விஜயம் என்பவரைத் திருமணம் செய்து, ஈழத்தில் புத்துவாட்டியிலேயே வசித்து இசைத்தொண்டுகள் பலவும் ஆற்றிவந்தார். இக்காலத்திலேயே நாலிங்கம் விஜயம் தம்பதிகளுக்கு சோமசுந்தரம், நடராஜ பிள்ளை ஆகிய ஆண்பிள்ளைகளும், மகேஸ்வரி என்னும் பெண்ணும் வாரிசுகளாகக் கிடைக்கப் பெற்றனர். இதில் மூத்தவ ரான சோமசுந்தரம் அவர்கள் 1895இல் பிறந்ததாக சில மூத்த கலைஞர் களால் அறிய முடிகிறது.
புத்துவாட்டி சோமசுந்தரம் அவர்கள் இசையில் மிகவிருப்பமுடையவராய் வயலின் கருவியைப் பயின்று அக்கருவியினை மேடைகளிலும் வாசித்து தனக்கென ஓர் புகழினைப் பெற்றார். இது மட்டு மன்றி சாரங்கி என்னும் கருவியையும் தனது தந்தையாரிடம் பயின்று அதனைப் பக்கவாத்திய மாக தேவார இசைக்கு வாசித்தும் வந்தார். அத்துடன் தேவார இசையிலே நாட்டமுடையவராக பல தேவாரங்களை இசைக்குறியீடுகளுடன் அமைத்துச் சாரங்கியில் வாசித்ததாக அறியப் படுகின்றது. இதுபோலவே இவரின் சகோதரர் தவில், நாதஸ் வரம், போன்ற இசையிலும், மகேஸ்வரி என்பவர் நாடகம், வாய்ப்பாட்டு, சதுர்க்கச்சேரி போன்ற கலைகளில் நன்கு தேர்ச்சியுடன் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்கள்.
புத்துவாட்டி சோமசுந்தரம் அவர்கள் தனது 11ஆவது வயதில் இசையரங்குகளில் பங்களிப்புச் செய்ய ஆரம்பித்தார். புத்துவாட்டி சோமசுந்தரம் அவர்கள் காலத் தி லேயே வாய்ப்பாட்டு இசை யரங்குகள் இடம் பெற ஆரம்பித்தன. வயலின் ஈழத்தில் முதன் முதலாக பக்க வாத்திய மாக 1900த்தின் ஆரம்பத்தில் இசை அரங்குகளில் பயன் படுத்தப்பட்டது. அக்காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த வைத்தீஸ்வரக்குருக்கள், பரமேஸ்வரஐயர், சங்கர சுப்பையர் போன்ற இசையறிஞர்களின் இசை யரங்குகளில் புத்துவாட்டி சோமசுந்தரம் அவர்கள் வயலின் வாசித்துள்ளார். அத்தோடு இந்தியாவில் இருந்து இசைக்கலைஞர்களை ஈழத்திற்கு வரவழைத்து இசைக்கச்சேரிகள் நடத்தியும் வந்தார். இவர் வாய்ப்பாட்டு, வயலின் ஆகிய இசையில் வல்லுனராக மட்டும் இருந்து விடாமல்பக்திமா னாக வும் இருந்தமை சிறப்பு அம்சங்களில் முக்கியமானது.
இதன் காரணமாக தெய்வங்கள் மீது கீர்த் தனைகள், தில்லானா போன்றவைகள் இயற்றிப் பாடியும், வாசித்துமுள்ளார். இவற்றுள் ‘சாமி உன் சந்நிதியே தஞ்சம் என்று நம்பி வந்தேன்' என்னும் கீர்த்தனை குறிப்பிடக்கூடியது. இப்படி யான உருப்படிகள் நூல் வடிவில் இடம் பெறாமல் இருப்பது இசையுலகிற்கு பெரும் துர்ப்பாக்கியம் எனலாம்.
சோமசுந்தரம் அவர்கள் இசைச் சேவையின் பொருட்டு யாழ். வண்ணார்பண்ணையிலும் வசித்து வந்தார். ஈழத்தில் இவரிடம் வயலின், வாய்ப்பாட்டு போன்ற இசை பயின்ற வாரிசுகள் பலர். அவர் களுள் இ ல ங் ைக ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வயலின் கலைஞர் ஜி. சண்முகானந்தம், மீசாலை யைச் சேர்ந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் சங்கீத பூஷணம் கே. வேலாயுதபிள்ளை, வயலின் வித்து வான் இசைமணி கே. சித்திவிநாயகம், இசை ஆசிரியை திருமதி ஜெகதாம்பிகை ஆனந்தநாயகம், வி. எம். வேதநாயகம், யாழ். இரசிகரஞ்சனசபா வின் ஸ்தாபகர் கே. வி. தம்பு, பலாலி ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் திரு. ஆனந்தநாயகம், இராமநாதன் நுண்கலைக்கழக வயலின் விரிவுரை uusat 6m7 di G? 69 Gö 6ý? சாந்தநாயகிசுப்ரமணியம், நடன நாடகக்கலைஞர் கீ த ரா ஞ் ச லி நல்லையா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
புத்துவாட்டி அவர் களின் இசைமரபானது அவருடைய வாரிசுகள் வழி வந்த தற்காலத்து இசைக்கலைஞர்கள் மூலம் வளர்க்கப்பட்டு வருகிறது. இவ்வகை இசைப் பரம்பரை யினரை வாய்ப்பாட்டு, வீணை, சாரங்கி, நாதஸ் வரம், வயலின் என்ற வகையில் உருவாக்கிய ஈழத்தின் இசை மேதை எஸ். என். சோமசுந்தரம் அவர்கள் தமது 60 ஆவது வயது வரை யில் வாழ்ந்து இசைச்சாதனைகள் பல புரிந்தார். இவரின் கலைச் சாதனைகள் ஈழத்தின் இசைப்பிரியர்களுக்கு ஒருவரப்பிரசாதம் என்று கூறலாம். ‘புத்துவாட்டி’ என்ற அளவிலேயே பெயர் விளங்கக்கூடிய இக் கலைப்பரம்பரை ஈழத்து இசைமரபு வளர்ச்சியின் முக்கிய மைல்கற்கள் என்பது மறுக்கமுடியாத உணமை ஆகும்.
ஒரு சமயம் திரு வா வடு துறை ராஜ ரத் தினம் பிள்ளை வீணைதனம்மாளைப் பார்க்கப் போனார். அந்தச் சமயத்தில் ராஜரத்தினம் பிள்ளையின் ஒரு ரசி கரும் அந்தம்மாளைக் காண வந்தார்; ராஜரத்தினம் பிள்ளையைப் பார்த்து " ஏன்டா ராஜரத்தினம் உன் னுடைய தர்பாரிலே நாயகியை கலந்து வாசிச்சுட் டாயாமே ' ? என்று கேட்டார் அவர். விநயமும் விஷம மும் கலந்து அவர் கொடுத்த பதில் "ஆமாம் ஒரு நாயகி இல்லாத தர்பார் எப்படிங்க சோபிக்கும் ? K சொல்லுங்க என்று சொல்ல எல்லோருமே சிரித்தனர்.
நன்றி: கலைமகள்
ஆனைக்கோட்டை கோடையிடி அ. மயில்வாகனம் மிருதங்கம் 1895 - 1969)
இம் மிரு தங்க க் கலைஞர் 16-12-1895இல் யாழ்ப்பாணத்து ஆனைக்கோட்டையில் திரு. அம்பலம் தம்பதியருக்கு துவிதிய புத்திரனாகப் பிறந்தார். இவருடன் பிறந்த மூத்த சகோதரர் சின்னத்தம்பி ஆவர். சின்னத்தம்பி அவர்கள் சுத்த மத்தளம் போன்ற மிருதங்கத்தை நாடகங்களுக்கும் கூத்துக்களுக்கும் வாசித்து வந்தார். இதைப் பார்த்து ஆவல்கொண்ட மயில்வாகனம் அவர்கள், தாமும் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசை கொண்டார். ஆனால் அக்காலத்திலே இந்திய நா ட க க் கலைஞர்களே யாழ்ப்பாணம் வந்து நாடகம் மேடையேற்றிக் கலைப் பரிமாற்றம் செய்து வந்தார்கள். அக்காலத்தில் கடல்மார்க்க மாக வத்தையில் இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத் திற்கும் போக்குவரத்து சுலபமாக இருந்தது. இதே காலத்தில் கும்கோணம் ராஜமாணிக்கம்பிள்ளை அவர்களது நாடகக் குழுவந்து நாடக நிகழ்ச்சி அளித்து இந்தியா செல்கையில் அக்குழுவினருடன் மயில்வாகனம் இந்தியா சென்று, அவர்களின் வழிகாட்டலில் மிருதங்கம், ஹார்மோ னியம், டோலக், தபேலா போன் ற வாத்தியங்களைப் பயின்றார். வாத்தியங்கள் வாசிக்கப் பயின்றது மட்டு மல்லாமல் மேற்ப டி வாத்தியங்களின் தயாரிப்பு, நுட்பவியல்களையும் நன்குகற்றார்.
திரு. மயில்வாகனம் மிருதங்கத்தைப் பயின்ற காலத்தில் இலங்கையில் மேடைக் கலை நிகழ்ச்சிகள் என நடைபெறுவது சதுர்க்கச்சேரி (சின்னமேளம்) காவடி நாடகம் போன்றவைகள்தான். எனவே இவ்வகை நிகழ்ச்சிகளில் மிருதங்கம், டோலக், தபேலா போன்ற லய வாத்தியங்களை வாசித்து இலங்கை இந்திய இசைக்கலைஞர்களினது நன் மதிப்பையும் ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற் றார். அப்பொழுது அவருக்கு ஏறக்குறைய 25வயது இருக்கும். மயில்வாகனம் அவர்களுடைய கலைச் சேவைக் காலத்தில் இந்தியாவிலிருந்து மிருதங்கக் கலைஞர்கள் பலரும் வந்து இவருடன் சேர்ந்தும் வாசித்துள்ளனர். அவர்களுள் மதுரைராஜப்பா, அம்பல்ராமச்சந்திரன், சுப்பராமபாகவதர், மதுரை நடராஜஐயர் போன்றவர்கள் குறிப்பிடக் கூடிய வர்கள். மயில்வாகனம் அவர்கள் இந்தியாவி லிருந்து வந்த பாடகிகளான வி. பி. ராஜேஸ்வரி, எம். கே. கமலகுமாரி, மைதிலி போன்றவர்களுக்கும் வாசித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஏறக்குறைய 50 வருடங்கள் வரையில் மிருதங்கம் முதலான லய வாத்தியங்கள் வாசித் துள்ளார். அத்துடன் தானே பாடிக்கொண்டு ஏக காலத்தில் மிருதங்கத்தையும் வாசிக்கும் சாதுரியம் இவரிடம் இருந்தது. இதனாலும் இவருடைய வாத்தி யம் சிறப்படைந்தது. இவருடைய மிருதங்க வாசிப்பு அக்காலத்திருந்த இந்தியராஜபாட் நடிகர் விஸ்வ நாத்தாஸ் அவர்களால் பெரிதும் கவரப்பட்டது. யாழ்ப்பாணத்து நாடக அரங்கில் மயில்வாகனம்
அவர்களுக்கு ' கோடையிடி மயில்வாகனம் ‘’ என்னும் பட்டம் விஸ்வநாத்தாஸ் அவர்களால் அளிக்கப்பட்டது. அன்றுமுதல் கோடையிடி மயில் வாகனம் என்ற பெயர் வழக்கத்திற்கு வந்தது. தொடர்ந்தும் கலைச்சேவை புரிந்து முன்னேற்றம் பெற்றார்.
கோடையிடி மயில்வாகனம் அவர்கள் வாத்தி யங்கள் சீர்செய்யும் வேலைகளிலும் சிறந்து விளங்கினார். இ வருக்கு மிருதங்கத்தில் சில சிஷ்யர்களும் இருந்தார்கள். இவருடைய புதல் வர்களுள் நாகராஜா, கதிரமலை, க ந் த சா மி ஆகியோரும் மிருதங்கக் கலைபயின்று ஓரளவு வாசிக்கலானார்கள். எனினும் கந்தசாமி என்பவர் கர்நாடக இசைப்பாணியில் மிருதங்கம் வாசிக்க வேண்டும் என்ற ஆவலினால் கோடையிடி தம்பா பிள்ளையின் புதல்வரான அண்மையில் அமரத்துவ மடைந்த கலாதரி த. இரத்தினம்பிள்ளை அவர்க ளிடம் முறைப்படி மிருதங்கம் பயின்று இசையரங்கு களில் மிருதங்கம் வாசித்தும், பல மாணவர்களை உருவாக்கி அரங்கேற்றம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வகையில் ஈழத்தில் கலைச்சேவைபுரிந்த மயில்வாகனம் அவர்கள் நோயுற்ற காரணத்தினால் 25-04-1969 இல் கலையுலகை நீத்தார்.
இவருடைய குருபரம்பரை வழிவந்த பேரர் களும் மிருதங்கக் கலையில் பயிற்சி பெற்றவராக தற்போது ஜேர்மனி போன்ற நாடுகளில் மிருதங் கக்கலையை வளர்க்கின்றனர். இது இவருடைய கலைத் தொண்டினது சிறப்பின் பிரதிபலிப்பு எனலாம்.
மாவிட்டபுரம் என். எஸ். உருத்திராபதி நாதஸ்வரம் 1900 - 1980)
இவர் ஈழத்திருநாட்டின் வடபகுதியில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற மாவிட்டபுரத்தில் 1900ஆம் ஆண்டு என். சோமசுந்தரம் தம்பதிகளுக்கு புதல்வனாகப் பிறந் தார். இவரின் மூத்ததமையனார் திரு. பக்கிரிசாமிப் பிள்ளை பிரபல நாதஸ்வர வித்துவானாக திகழ்ந் தார். தம்பி நடராஜன் பிரபலநாதஸ்வர வித்துவா னாகவும் இசையாசிரியராகவும், நாடக இயக்குன ராகவும் திகழ்ந்தார்.
திரு. உருத்திராபதி அவர்கள் தனது 4ஆவது வயதில் தந்தையை இழந்தார். இவரின் தாயார் தமது பிள்ளைகளைத் திறமைமிக்க இசைக்கலைஞர் ஆக்குவதில் பட்ட இன்னல்கள் எத்தனையோ. அதைப்போல் மூத்ததமையன் பக்கிரிசாமிப்பிள்ளை அவர்கள் குடும்பப் பாரமும் மற்றும் எத்தனையோ இன்னல்களுக்கும் மத்தியில் திரு. உருத்திராபதி அவர்களை இந்தியாவில் இசைக்கலை பயில அனுப்பிவைத்தார். இவரின் முதல் குருகுலவாசம் சிதம்பரம் நாஸ்வர வித்வான் வைத்திய நாதனிடம் அமையப் பெற்றது.
அந்தக் காலத்தில் குருகுலவாசம் எத்தனையோ இன்னல்களைத் தாண்டிப் பொறுமையுடன் இருந் தால் தான் பயனளிக்கும். இக்காலத்திலோ இசைப் பாடப்புத்தகங்களும் இசைவகுப்புகளும் இருப்பதால் இன்றைய இசைமாணவர்களுக்குக் குருகுலவாசத் தில் நிகழும் இன்னல்கள் இல்லை எனலாம்.
இரண்டு ஆண்டுகள் சிதம்பரம் வைத்தியநாதனிடம் நாதஸ்வரக் கலையைக் கற்று அன்னாரின் ஆசியுடன் ஊர் வந்தார். பின்னும் இந்தியாவிற்கு கொத்தமங்கலம் தண்டாயுத பாணி என்னும் நாதஸ் வர வித்வானிடம் சென்றவர் அங்கே மேலும் 4 வரு டங்கள் நாதஸ்வரக் கலையைப் பயின்றார். இவரின் திறமையைக் கண்ட குருநாதர் அங்கே 20 மாணவர்களுக்கு ஆசிரியராக நியமித்து வகுப் புக்கள் நடத்துவித்தார். 3 ஆண்டுகள் முடிவில் உளர் திரும்ப விரும்பினார். எனினும் அன்னாரின் குரு நாதரோ " " வித்தையைப் பூர்த்தியாக்கிக் கொண்டு போ ‘’ என்றார் அந்த அன்புக் கட்டளையை மீற முடியாது மேலும் ஒரு வருடம் இருந்து பாடத்தைத் தொடர்ந்தார். ஒருநாள் குரு நாதர் அழைத்து * தம்பிநான் இளமையிலேயே நோயாளியாகி விட்டேன். அதனால் தனிக் கட்டை யாக வே இருக்கிறேன் இது உனக்கே தெரியும். எனக்கு மருமக்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் உன்னை என் எடுப்புப் பிள்ளையாக கருதி வருகிறேன் "' என்றார்.
மேலும் ‘* உனது அடக்கமான குணத் திற்கும் புத்திசாதுர்யத்திற்கும் யாழ்ப்பாணத்தில் நீ முதல்தர வித்துவானாக விளங்குவாய் இங்கு தமிழ் நாட்டிலேயே நீ தங்கியிருந்தால் உனக்குப் பேரும் புகழும் உண்டாகும் என்றார் " . ஆனால் தாயார், தமையனார் விருப்படி செய் என்றார் இப்படி இருக்கும் பொழுது குருநாதர் இறையடி சேர்ந்துவிட்டார் பிள்ளையில்லா இடத்துப் பிரதம சிடன் கொள்ளிக்கடன் செய்யலாம் என்பது குரு குலக் கல்விமரபு. அதன்படி ஈமக்கடன்களை இவரே செய்துமுடித்து விட்டு யாழ்ப்பாணம் வந்து சேர்ந் தார். صير \ M
முருகன் கரு ைண யும் மூத்ததமையனாரின் சிட்சையும் அன்பும் தாயாரின் பாசமும் ஊக்கமும் குரு நா த ரின் ஆசியும், அருள் வாக்கும் தான் அவரை இந்நிலைக்கு உயர்த்தியது என்று அடிக்கடி அவர் கூறுவதுண்டு.
1927இல் அளவெட் டி சாம்பசிவ நாதஸ்வர வித்துவானின் மகளான யோகாம்பாளை விவாகம் செய்தார். இவரது சாதனைகளுக்கு உறுதுணை யாக அமைந்தார் இவரது பாரியார். இவருக்கு இரண்டு பெண்குழந்தைகள் மூத்தவர் இராஜமணி, இளையவர் தர்மவதி. இவர் தமது புதல்விகளுக்கும் முறையாக இசைபயிற்றித் தரமுள்ள இசை ஆசிரி யர்களாக ஆக்கியுள் ளா ர். இந்தியாவிலிருந்து பிரபல தவில் வித்துவான்களை இலங்கைக்கு அழைத்து இசைக்கலா ரசிகர்களின் இதய ஆவலைப் பூர்த்தி செய்த பெருமை இவருக்குண்டு.
தமக்கென ஒருபாணியைக் கையாண்டுகர்த்தா ராகங்களை வாசிப்பதிலும் இராகங்களை மத்திம சுருதிபண்ணி உருப்படி வாசிப்பதிலும், பல்லவி, ஸ்வரங்களை வித்தியாசமான தாளங்களில் சரள மாகவாசித்துக் கலைஞர்களையும் பாமரமக்களை யும் மகிழ்விப்பதிலும் ஆற்றல் பெற்றார்.
திரு. உருத்திராபதி அவர்கள் நாதஸ்வரவித் துவானாக திகழ்ந்த போதும் எல்லா வாத்தியங் களிலும் தேர்ச்சி பெற்றிருந்ததோடு இசை ஆசிரிய ராகவும் திகழ்ந்தார். மாவை ஆதீனத்தில் அர்த்த சாமப் பூஜையின்போதும், வெள்ளி, செவ்வாய், நாட்களிலும் நடேஸ்வராக்கல்லூரியில் சரஸ்வதி பூஜையின்போதும் புல்லாங்குழல் வாசித்துள்ளார். என் மூச்சு மாவை முருகனுக்கே உரியது எனக்கூறி மாவை முருக னு க் கே தனது நாதாஞ்சலியை அர்ப்பணித்து அங்கு ஆஸ்தான வித்துவானாகவும் விளங்கினார். இக்கலைஞரின் தொண்டி ைன ப் பாராட்டி சிறந்த வித்துவானென அன்னாருக்கு இசைக் கலாரசிகர்கள் சார்பில் மாவை ஆதீன முதல்வர் பிரம்மபூரீ சு. துரைச்சாமிக்குருக்கள் அவர் களால் தங்க நாதஸ்வரம் வழங்கப்பட்டது. அநேக ரசிகர்களால் தங்க மெடல்களும் வழங்கப்பட்டன. 1964ஆம் ஆண்டிலே அகில இலங்கை அரசினர் இசை ஆசிரியர் சங்கத்தால் ‘* சங்கீதவித்துவ பூஷணம்' என்றபட்டமும் 1965ஆம் ஆண்டில் அகில இலங்கை சங்கீதவித்துவ சபையினால் பொன் னாடைபோர்த்தி ' சங்கீதவித்துவமணி ' என்னும் பட்டமும் வழங்கப்பட்டது.
யாழ்நகரில் நடந்த இசை விழாவின் போது இராமநாதன் இசைக்கல்லூரிப் பேராசிரியராக இருந்த சித்துரர் சுப்பிரமணிய பிள்ளை இவருக்கு பொன்னாடைபோர்த்திப் இவருடைய மாணவர்கள் பலர் நாதஸ்வர வித்துவான்களாகவும் பாட கர் க ளாகவும், இசை யாசிரியர்களாகவும் இசை ஆராய்ச்சி அறிஞர் களாகவும் திகழ்கிறார்கள். 1980ஆம் ஆண்டு மேமாதம் 24ஆந் திகதி நாதஸ்வர வித்துவான் உருத்திராபதி இம் மண்ணுலகைவிட்டு விண்ணுலகெய்தினார்.
பாரதத்தில் பவானி என்னும் இடத்தில், விநாயகர் கலைமகளைப் போல கையில் வீணையைக் கொண்டும் ஆந்திர மாநிலம் பூரீ சைலத்தில் விநாயகர் குழலூதும் நிலையிலும் காணப்படுகின்றார்.
யாழ்ப்பாணம் கோடையிடி தம்பாபிள்ளை மிருதங்கம் 1905
மிருதங்கம் தம்பாபிள்ளை அவர்கள் யாழ்ப் பாணத்திற்கு அருகிலுள்ள நாவாந்துறை என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் 1920ஆம் ஆண்டளவில் ஆனைக்கோட்டை கோடையிடி மயில்வாகனம் அவர் களிடம் மிருதங்கக்கல்வி பயின்றதாக அறிகின் றோம். ஐந்து ஆண்டுகள் வரை அவரிடம் பயின்று, நன்கு சாதகம் செய்து, இசை நிகழ்ச்சிகளுக்கு மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்து விட்டார். எனினும் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடைபெறுவது அரிது. பெரும்பாலும் கூத்துக்கள், நாடகங்கள், சதிர்க்கச்சேரி என்னும் சின்னமேளம், போன்ற இசைநிகழ்ச்சிகளே அதிகம். இப்படியான நிகழ்ச்சிகளுக்கே அதிகம் வாசிக்கும் சந்தர்ப்பம் தம்பாபிள்ளை அவர்களுக்கு கிடைத்தது.
இவருடைய மிருதங்கவாசிப்பானது பாரிய நாதமுடையதாகவும், வேகமுடைய சொற்பிரயோ கம் கொண்டதாகவும் இருந்தது என அறிகிறோம். இதன் காரணமாக இவருக்கும் நாடக, நாட்டிய வாசிப்பின் போது ' கோடையிடி தம்பாபிள்ளை "' என்கின்ற காரணப் பட்டப்பெயர் கிடைத்தது.
எனினும் இவர் தனது மிருதங்க வாசிப்பானது சுத்த கர்நாடக பாணியில் அமைய வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். இதன் காரணமாக இவருடைய மகன் இரத்தினம் அவர்களை இந்திய கலைஞர் களின் உதவியுடன் தஞ்சை குற்றாலம் சிவவடிவேல் பிள்ளை அவர்களிடம் மிருதங்கம் பயில தமிழ் நாடு அழைத்துச் சென்று குருகுலவாசம் செய்து கற்கவைத்தார். மகன் இரத்தினம் அவர் களும் சம்பிரதாயபூர்வமாக மிருதங்கம் பயின்று கர்நாடக இசைக்கச்சேரிகளுக்கு மிருதங்கம் வாசித்தும், சிஷ்யர்களை உருவாக்கியும், இலங்கை வானொலிக் கலைஞராகவும் 1995 பெப்ரவரி 9 வரை விளங் கிய இவர் " " கலாதுரி ' பட்டம் பெற்றகலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடக, நாட்டிய கலைப்படைப்புகளுக்கு மாத் திரமே பொருந்தும் படியாக வாசித்து வரும் வழக்க முடைய தம்பாபிள்ளை அவர்கள் தனது மகன் இரத்தினம் அவர்களை கர்நாடக சங்கீத பாணிக்கும் வாசிக்கக் கூடியவராக தகமைபெறச் செய்தமை ஈழத்தின் மிருதங்க இசை வளர்ச்சிக்கு உந்து சக்தி யாக அமைந்த தென்றால் மிகையாகாது. மிருதங்க கலை வளர்ச்சி பற்றி சிந்திக்கும் போது நம்கலைஞர் கோடையிடி தம்பாபிள்ளையை இலகுவில் மறக்க முடியாது.
ഖഞ്ഞതെഞ്ഞ என். காமாட்சி சுந்தரம் தவில் 1906 - 1944
ஈழத்து தவில் வித்துவானாகிய காமாட்சி சுந்தரம் அவர்கள் யாழ்ப்பாணத்து வண்ணார் பண்ணை நா கலிங் கம் தம்பதிகளுக்கு 1906ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் இளமைக் காலத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து, இசைக்கு ஆரம்ப சிட்சையான தாளம் போடும் பயிற்சியில் ஈடு பட்டார். தமையனாரான சின்னத்துரை உபாத்தி யாயரிடம் சிட்சை பெற்றார்
திரு. காமாட்சிசுந்தரம் அவர்களுடைய மூத்த சகோதரர் தவில், மிருதங்கம், கடம் போன்ற லய வாத்தியங்களை வாசிக்கும் திறமையுடையவராகத் திகழ்ந்தார். இவரை சின்னத்துரை உபாத்தி யாயர் ’’ என அழைப்பார்கள். சகோதரருடன் சேர்ந்து காமாட்சி சுந்தரம் அவர்கள் தவில், கஞ்சிரா போன்ற வாத்தியங்களைக் கற்று வாசிக்கவும் ஆரம்பித்தார். இவருடைய தவில், கஞ்சிரா வாசிப்பு லயக்கணிசம் நிரம்பியது என்று குறிப்பிடுவார்கள். இவரும் சகோதரரும் தவில் வாசிக்கும் காலத்தில் இவர்கள் மைத்துனர்களான ைவரவநாதன், அண்ணாச்சாமி ஆகியோர்களின் நாதஸ்வரஇசை பரங்குகளில் சிறப்புத்தவில் வாசித்து நாதஸ் வரத்தை யு ம் சிறப்புடையதாக்கினார்கள்.
திரு. காமாட்சிசுந்தரம் அவர்களின் தவில் வாசிப்பின் சிறப்பினால் இந்தியாவின் தமிழ்நாட்டுக் கலைஞர் நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ரி. என். ராஜரத்தினம்பிள்ளை அவர்களுக்கு தவில் வாசிக்கும் பேறினைப் பெற்று இந்திய இசையுலகின் நன்மதிப்பும் பாராட்டும் பெற்றார். மேலும் திருவிழிமிழலை சுப்பிரமணியம்பிள்ளை அவர்களது நாதஸ்வரத்திற்கும் சிறப்பாகத் தவில் வாசித்து வரலானார். அக்காலத்தில் இவருடைய சிறப்புக் காரணமாக இந்தியாவில் ஒர் மீனாட்சி சுந்தரம் இலங்கையில் ஒர் காமாட்சிசுந்தரம் என்ற அளவில் இவரின் தவில் வாசிப்பின் வித்வச்சிறப்புக் கணிக்கப்பட்டது. அத்துடன் நல்ல புகழுடன் ரசிகர் களைக் கவர்ந்த காமாட்சிசுந்தரம் இலங்கைவந்து யாழ்ப்பாணம் முருகையா என்பவருடைய நாதஸ்வர இசைக்குத்தொடர்ந்து தவில் வாசித்து சிறப்புற்றார். இவர்களின் இசை நிகழ்வுகளில் மு க் கி ய மா க கோவில் உற்சவ விதிபவனியின் போது வடக்கு விதி யில் தவிற் சமா ' என்று செல்லப்படுகின்ற தனி யாவர்த்தனம் இடம் பெறும். இந் நிகழ்ச்சியில் மணிக் கணக்கில் ரசிகர்கள் பொறுமையாக அமர்ந்து பார்த்தும் கேட்டும் ரசித்து மெய்மறந்த நிலையை எய்துவார்கள். தவிற் சமா என்ற நிகழ்ச்சியில் லய வேலைப்பாடுகள், ஜனரஞ்சக நுட்பங்கள் அமைந்தனவாக வாசிப்பது வழக்கம். இப்படியான தவிற் சமாவை ரசிக்கின்ற தன்மை யாழ்ப்பாண ரசிகர்களிடமேயுண்டு என்றே கூறலாம். இதுவே நாதஸ்வர தவில் கலை வளர்ச்சிக்கும் ஒரு காரண மாகும.
திரு. காமாட்சிசுந்தரம் அவர்களின். தவில் வாசிப்பின் புகழ் ஈழத்தில் மட்டுமல்லாமல் இந்தியா வின் பல இடங்களிலும் பரவியது. நன்மதிப்பும் பெற்றிருந்தது.
இது மட்டுமின்றி கஞ்சிரா வாசிப்பிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவராக இசைய ரங்குகள் பலவற்றில் பங்குகொண்டு நிகழ்ச்சி களைச் சிறப்பித்து வந்தார்.
இவருடைய கலை வாரிசாக கலை பயின்ற வர்கள் பலராவார். அவர்களுள் காலஞ்சென்ற லய ஞானகுபேர பூபதி வி. தட்சணாமூர்த்தி, இசையரசு சின்னப்பழனி ஆகியோர், தவில் கற்று பெரும் சிறப்புப் பெற்றவர்கள். அக்காலத்திலே கஞ்சிரா வைப் பயின்றவரான திரு. எம். என் செல்லத்துரை அவர்கள் மிருதங்கம் கஞ்சிரா என்பவற்றில் பல காலம் இசைச்சேவை புரிந்து மிருதங்கமணி ’’ என்ற விருது பெற்ற முதுகலைஞர் ஆவர். இவரே அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘* நந்தி இசை மன்ற ’’ ஸ்தாபகராகவும் திகழ்பவர்.
இவ்வாறு நற்கலைத்தொண்டு ஆற்றியும் கலைப் பரம்பரைகளை உருவாக்கியும் ஈழத்தில் இசைமரபு வளர ஓரளவு காரணமாயிருந்த காமாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் தனது மிக இளமைக் காலத்திலே, 1944ஆம் ஆண்டு இவ்வுலகை நீத்து உம்பருலகெய்தினார். இவருடைய பிள்ளைகளும் தவில் வாசிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் களுள் திரு. கா. குகன் என்பவர் இன்னும் தவிற் கலையில் பணியாற்றி வருபவராவர். அமரர் காமாட்சிசுந்தரம் வகுத்த தவிற்பாணி தன்னிகரில்லாதது.
மாவிட்டபுரம் எஸ். கே. இராசா நாதஸ்வரம் (1907 - 1994)
ஈழத்து வடபால் மாவிட்டபுரம் கந்தஸ்வாமி தேவஸ்தானச் சூழலிலே இசைப்பாரம்பரியத்தில் வாழ்ந்த கந்தசுவாமி சு ப் புல வீழ் மி ஆகியோ ரின் புதல்வனாக 10-02-1907 இல் பிற ந் த வ ர் தான் மாவிட்டபுரம் சு. க. இராசா அவர்கள். இவர் பாடசாலைக்கல்வியிலும் மேலாக நாதஸ்வர இசைக் கல்வியிலேயே ஆர்வமுடையவராக இருந்தார். நாதஸ்வர இசையை, தனது உறவினரும் தேவஸ் தான வித்துவானும் ஆகிய குழந்தைவேலு என் பவரிடம் கற்றுக் கொண்டார். கற்றதுடன் நன்கு சாதகம் செய்து நாதஸ்வர இசையைச் சிறப்பாக வழங்கிவந்துள்ளார். பாரம்பரியமாகவே மாவிட்ட புரம் கந்தஸ்வாமி தேவஸ்தானத்தின் வித்துவா னாக அரும்பணி செய்து வந்துள்ளார்.
வித்துவான் இராசா அவர்கள் மாவை தேவஸ் தான சேவையுடன், ஈழத்தின் மற்றும் ஆலயங்களின் விஷேட நிகழ்ச்சிகளுக்கும், இந்துக்களின் மங்களச் சடங்குகளுக்கும் நாதஸ்வர மங்கள இசையை வழங்கிவந்துள்ளார். அக்காலத்திலே நாதஸ்வரத் தில் மணிக்கணக்கில் இராகம் வாசிப்பார்கள். இதே பாணியில் இராசா அவர்களும் ஆலயங்கள் தோறும் உற்சவ காலங்களில் உரிய சம்பிரதாயத்தை அனு சரித்து பலமணிநேரம் இராகம் வாசிக்கும் வல்லமை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு தடவை மாவை ஆதினத்தில் மூன்றாம் பிரகார விதியுலாவில் கிழக்கு விதியில் ஆரம்பித்த தோடி இராகம் தெற்கு விதி அந்தத்திலும் முடிவடையவில்லை. அவ்வளவு தூரம் மெய்மறந்து வாசித்துள்ளார் இராசா என அறியப்படுகிறது.
இராசா அவர்களின் நாதஸ்வர வாசிப்பானது ஸ்வரசுத்தமும், லய சுத்தமும், விவகாரமும் பிர்கா சங்கதிகளும் நிறைந்த சுகமுடைய வாசிப்பு. மேலும் சம்பிரதாயம் தழுவாதவாசிப்பு. கோவில் கிரியை களிலும் சரி, இந்துக்களின் மங்கள வைபவங்களி லும் சரி உரியமுறைப்படியே ராகங்கள் உருப்படிகள் என்பவற்றை வாசிக்கும் பழக்கமுடையவர். இராசா அவர்களை நாதஸ்வரத்திற்கு ஒரு ராசா என்று இசைக்கலை ரசிகர்கள் கூறுவதுமுண்டு. இவர் பார்ப்பதற்கு எடுப்பானதோற்றமும், விபூதிப்பூச்சும், அழகான குடுமியும், விகடமாகப் பேசும்சுபாவமும் பார்ப்பவர்களுக்கு எளிமையான அன்புப் பார் வையும் அனைவரையும் ஈர்க்கவல்ல அம்சங்க ளாகும.
இராசா அவர்கள் நாதஸ்வர இசையினை மாவைக் கந்தன் விதியிலே உள்ள தனது வாசஸ் தலத்தில் இருந்துகொண்டே நாதஸ்வரத்திற்கு சிறப்புடைய பல நாதஸ்வரக் கலைஞர்களை உருவாக்கிய பெருமையை உடையவர்.இவ்வரிசையில் சிறப்புற்று மிளிருபவர்களான மாவிட்டபுரம், சண்முகநாதன் அளவெட்டி சிதம்பரநாதன், இணுவில் சுந்தரமூர்த்தி, கோண்டாவில் கானமூர்த்தி போன்றவர்களைக் குறிப்பிடலாம். மேலே குறிப்பிட்ட நாதஸ்வரக் கலைஞர்களைவிட ஈழத்தின் பெரும்பான்மையான நாதஸ்வரக் கலைஞர்கள் ராசா அவர்களிடமே நாதஸ்வரம் பயின்று இசைத்தொண்டு செய்பவர் களாவர். அவர்கள் அனைவரினதும் பெயர்களை இங்கு குறிப்பிடுவது சிரமம்.
ராசா அவர்களின் நாதஸ்வர இசையானது ஈழநாட்டின் பல ஊர்களிலும் பிரபலமான ஆலயங் கள் தோறும் நடைபெற்று வந்துள்ளளமை அவ்வூர் களுக்கும் பெருமையளிப்பதாயிருந்தது.
அக்காலத் தில் அளவெட்டி எஸ். பி. எஸ். திருநாவுக்கரசு, ஆச் சாள்புரம் சின்னத்தம்பி, மாவிட்டபுரம் எம்.எஸ். சண் முகநாதன். திருப்பங்கூர் ராமையா, கலாதரி என். கே. பத்மநாதன் போன்ற நாதஸ்வரக் கலைஞர்கள் இவரோடு இணைந்து வாசித்தும் வந்துள்ளார்கள். அத் துட ன் தவில் வித்துவான்களான இணுவில் சின்னத்தம்பிப்பிள்ளை , திருமுல்லைவாயில் முத்து விர்ப்பிள்ளை, வண்ணை பொ. பழனிவேல், வலங் கைமான் ஷண்முகசுந்தரம், கும்பகோணம் தங்க வேலு, இணுவில் கனகசபாதி, திருமங்கலம் சுந்த ரேசன், வடபாதிமங்கலம் தட்சணாமூர்த்தி, பி. எஸ். ராஜகோபால் பிள்ளை, அளவெட்டி குமார சுந்தரம், பாலகிருஷ்ணன் ஆகிய பழம்பெரும் வித்வான்களும், பின்னர் அளவெட்டி தட்சணாமூர்த்தி, இணுவில் சின்னராஜா, நாச்சிமார் கோவிலடி கணேச பிள்ளை, ஆகியோரும் சிறப்பாக தவில் வாசித்து வந்தது குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.
நாதஸ்வர மேதை ராசா அவர்கள் சிறந்தமுறை யில் உரியகெளரவத்துடனும், நாதஸ்வரசம்பிரதா யங்களைக் கையாண்டும், தனது இசைவாரிசுக ளாகப் பல நாதஸ்வரக் கலைஞர் பரம்பரையை உருவாக்கித் தந்தும், பல்லாண்டு சேவைபுரிந்து மாவிட்டபுரம், நாதஸ்வர இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் தான் என்பதை நிரூபணம் செய்யும் அளவில் நாதஸ்வர இசைக்கு ராஜாவாய் விளங்கி மாவைகந்தப் பெருமானுக்கு இயன்றளவு சேவை செய்தும் தனது இயலாத வயதுக் காலத்தில் 01-01 - 1994இல் 87 ஆவது வயதுப் பூர்த்தியில் முருகன் திருவடியை அடைந்தார்.
அகத்தியர், இராவணன், நாரதர் இவர்கள் மூவரும் இசைவல்லுனர்கள். தமிழ் இசைக்கு இலக்கணம் தந்த ஆதி மும்மூர்த்திகளாவர்.
யாழ்ப்பாணம் எஸ். சுப்பையாபிள்ளை பல்லியக்கலைஞர் 1907 - 1972)
திரு. சுப்பையாபிள்ளை அவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் திருநெல்வேலி என்னும் ஊரில் இசைக் குடும்பத்தைச் சேர்ந்த சந்தனமுத்து காளிமுத்து ஆகியோருக்கு 1907 ஆம் ஆண்டு புத்திரனாகப் பிறந்தார். இவருக்கு சகோதரர்களும் இருந்துள்ள னர். இவர்கள் இசைப் பரம்பரையினரான காரணத் தினால் யாவரும் இசை நாட்டம் கொண்டவர் களாகவும் இசைஞானம் இயற்கையாக அமைந்தவர் களாயும் விளங்கினர். சுப்பையாபிள்ளை தனது மூத்த சகோதரரான பூதப்பாண்டி எ ன் பவரிடம் மிருதங்கக் கல்வியை கற்க ஆரம்பித்தார். பூதப்பாண்டி என்பவர் பல்கலையும் ஓரளவு கற்றுக் கொண்டவர். எனவே த ைம ய னார் வழியை ப் பின் பற்றி சுப்பையாபிள்ளையும் வாய்ப்பாட்டு, மிருதங்கம், நாதஸ்வரம், போன்றவற்றில் நன்கு தேர்ச்சி பெற் றுக் கொண்டார். அதனால் இவருக்கு தனது கலை யினை வளர்க்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கக் கூடியதாயிருந்தது.
1930ம் ஆண்டுப் பகுதியில் அக்காலத்துமிருதங்க வித்வான்களுக்கு ஒப்பிடக் கூடிய வகையில், கதாப் பிரசங்கம், இசையரங்குகள், காவடி, சின்னமேளம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு வாசித்தும், இளமைப் பரு வத்தில் காரைநகர் இந்துக்கல்லூரி, யாழ். கனகரத் தினம் மகாவித்தியாலயம். ஆகிய கல்லூரிகளில் இசையாசிரியராகவும் பணி செய்துள்ளார். ஆசிரி யர் பதவி வகிப்பதுடன் யாழ்ப்பாணம் மற்றும் ஈழத் தின் பலபாகங்களிலும் இசையரங்குகளில் மிருதங் கம், கடம், போன்ற பக்க வாத்தியங்களை வாசித் துள்ளார். சில இசையரங்குகளில் கொன்னக்கோல் கொலுப்பித்தும் கச்சேரிகளைச் சிறப்பித்துள்ளார்.
இவர் பழம்பெரும் வித்துவான்களான இசைப்புலவர் சண்முகரத் தினம், ஐ யாக் கண் ணு தேசி கர், மட்டக்களப்பு ராஜ" போன்றவர்களின் இசையரங் கிற்கு பக்கவாத்யம், கொன்னக்கோல் போன்ற வற்றை இசைத்துப் பாராட்டுகளைப் பெற்றவர். இவருடைய வாசிப்பு மிருதங்கம், கடம், என்பவற்றில் சொற்கோர்வை நிறைந்ததாகவும், புரட்டல்கள் நிறைந்ததாகவும் ரசிகர்களை நன்கு கவர்ந்ததாகவும் அமைந்து இருக்கும்.
இவருடைய காலத்தில் இருந்த லய வித்வான் களான மிருதங்கமணி எம். என். செல்லத்துரை, சங்கீதபூஷணம் A. S. இர ா ம நா தன், குமுக்கா கணபதிப்பிள்ளை, பாக்கிய நாதன், நாச்சிமார் கோவில் கணேசபிள்ளை ஆகியோர் களுடன் இணைந்தும் பக்கவாத்தியங்கள் வாசித்து வந் துள்ளார். இவருடைய வாசிப்பு பாடகர்களுக்கோ, வாத்யகாரர்களுக்கோ இடையூறு இல்லாதவாறு சுநாதமுடைய அழகுள்ள வாசிப்பு என்றே கூறலாம்: இசையரங்குகளில் விசம சங்கதிகள் அற்றதும், பாடகர்களுக்கு லயத்தில் சலனம் ஏற்படுத்தா வாசிப்பும் என்றே கூறலாம்.
அதாவது பாட்டுக்குப் பொருத்தமான வாசிப்பாக இருக்கும். இவையாவும் கலைஞர்களையும் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. இது மட்டுமின்றி யாவருடனும் இவர் பழகுந் தன்மையும் இனிமையான வார்த்தைகளும், எளிமையான போக்கும் பாராட்டிற்குரியன.
1935 ஆம் ஆண்டளவில் இவருக்கு திருமணம் நிகழ்ந்தது. இவருடைய துணை வி பெயர் சிவக்கொழுந்து ஆவர். இவர்களுக்கு ஆண்களும் பெண்களுமாக எட்டு குழந்தைகள் பிறந்தனர். அவர் கள் வளர்ந்து சிறப்பாகத் திருமணப்பேறு ம்பெற்று இனிது வாழ்கின்றார்கள். இவருக்கு மருமகனாக வந்தவர்களில் இருவர் இசையில் ஈடுபட்டுள்ளவர் களாவர். அவர்களில் கணேசன் என் பவர் ஓர் சங்கீத வித்வானாவர். அடுத்தவர் சுபகணேசசுந்தரம் என்ற கதாகாலகூேடிய வித்வானாவார். இவ்வழித் தோன்றலில் தற்போதும் கணேச சுந்தரம் குடும்பத் தினரின் பிள்ளைகள் யாவரும் இசைத்துறையில் சேவைகள் புரிந்து நன்கு பிரகாசிக்கின்றனர். இவர் களின் வழித்தோன்றலில் பே ர ன், மிரு தங் கம் க. கண்ணதாஸன் ஆவர்.
திரு . சுப்பையாபிள்ளையிடம் அநேகர் பல்வகை இசையினைப் பயின்றுள்ளனர். அவர்களில் சிலர் பெரிய விற்பன்னர்களாகவும் விளங்குகின்றனர்.
இவர்களுள் செல்வி கமலா. அம் பல ம் என்பவர் இசையில் அரங்கேற்றம் செய்யப்பெற்றார். மேலும் இணுவை K. R. புண்ணியமூர்த்தி அவர்கள் தவிலும் நாச்சிமார் கே ர வில் அம்பலவாணர், மூளாய் எம். சிதம்பரநாதன், எஸ். மகேந்திரன் ஆகியோர் மிருதங்கமும் பயின்றவராவர். பத்மா கணேசன் அவர்கள் மிருதங்க அரங்கேற்றம் செய்யப் பெற் றார். மேலும் பிற்காலத்தில் கா ந் தி நாயகி, தபோதநாயகம் ஆகியோர் மிருதங்கம், கடம் போன்ற வாத்தியங்களைக் கற்றுக்கொண்டனர்.
திரு. சுப்பையாபிள்ளை அவர்கள் பிற்காலத்தில் கொன்னக்கோல், கடம் போன்ற இசையினைச் சிறந்த முறையில் வழங்கி வந்துள்ளார். இவ் வகை மதிப்பிற்குரிய பல்லியக் கலைஞரா ன சுப்பையா பிள்ளையவர்கள் 6 - 3 - 1972 இல் தமது 65 ஆவது வயதில் இசையுலகை விட்டு நிலையுலகம் அடைந்தார். இவர் கலைச் சேவையும், கலைப் பாரம்பரியமும் யாவருக்கும் சிறப்பும் பெருமையும் அளிப்பதாகும்.
யாழ்ப்பாணம் வி. கணபதியாபிள்ளை மிருதங்கம் 1910 - 1987
க ைல ளு ர் திரு. க ன ப தி யா பிள் ைள 10-01-1910இல் தென்னிந்தியாவில் மதுரா என்னும் நகரத்தில் வீரவாகுப்பிள்ளை அம்மணி தம்பதி களுக்குப் புதல்வனாகப் பிறந்தார். இவர் தமது ஆரம்பக் கல்வியைத் திண்ணைப் பள்ளிக் கூடத் தில் பயின்று கொண்டிருக்கையில் கல்வியில் அவ் வளவு நாட்டம் இன்றி கலைத்துறையில் ஆர்வம் கொண்டு கல்வியை நிறுத்திவிட்டு மிருதங்க வாத் யம் பயில ஆரம்பித்தார். இவருக்குக் குருவாக ஒரு வரும் இருக்கவில்லையாம். தாமாகவே சிறு சிறு கச்சேரிகள், கூத்து, நடனம் என்பவற்றிற்குப் பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்து பெரிய வித்து வான்களின் கலை நுட்பத்தைப் பின்பற்றித் தனது இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டு நாளடை வில் தனிப்பெருங்கலைஞனாகும் நிலைக்கு உயர்ந்து கொண்டார்.
இவர் இந்தியாவிலிருந்து 1932ஆம் ஆண்டு என். எஸ். கிருஷ்ணனுடன் இலங்கை வந்தார். இங்கு வந்து சிறு சிறு கச்சேரிகளுக்கும், நாட கங்களுக்கும் பக்க வாத்தியம் வாசித்துக் கொண் டிருந்த பொழுது இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத் தாபனத்தில் நிரந்தரமற்ற அதிதிக் கலைஞ னாக கலைச் சேவை புரிந்து கொண்டிருந்தார்.
1944ஆம் ஆண்டு செல்வநாயகி என்பவரைத் தனது மணவாழ்க்கையில் ஏற்றுக் கொண்டார். பின்னர் 1944 தொடக்கம் 1952 வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் நிரந்தர நிலைய வித்துவானாகினார். இவர் வானொலிக் கலைஞனாக மட்டும் நின்று விடாமல் வெளிக் கச்சேரிகளுக்கும் மிருதங்கம், டோலக், கஞ்சிரா, கடம், டோல்கி, தபேலா ஆகிய வாத்தியங்களை வாசித்தும் வந்தார். 18-04-1965இல் வெள்ளவத் தையில் நடைபெற்ற தியாகராஜசுவாமிகள் இசைவிழாவில் அமைச்சர் திரு. மு. திருச்செல்வம் அவர்களால் வாய்ப்பாட்டு மணிபாகவதர், வயலின் மணிஜயங்கார் ஆகியோருடன் இவருக்கும் ஒரே மேடையில் கெளரவ விருதொன்றும் வழங்கப்பட் டது. இதில் இவருக்கு ‘கரவேகசுரஞானபூபதி’’ என்ற பட்டம் கிடைத்தது.
கொழும்பிலே இவரிடம் சிஷ்யனாக மிரு தங்கம் பயின்ற இவரின் உறவு முறையான பெறாமகன் மோகன் என்பவரை கணபதியா பிள்ளை அவர்கள் 1965ஆம் ஆண்டு தனது சக வித்துவானான ச ண் மு கம் பிள் ளையிடம் ஒப் படைத்துவிட்டு யாழ்ப்பாணம் வந்தார். அதன்பின் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மாதம் ஒரு தடவை தனி நிகழ்ச்சி அளித்து வந்தார். 1979 இல் இந்தியாவிலிருந்து வந்த பேராசிரியர் வயலின் வித்துவான் ரி.என்.கிருஷ்ணன் அவர்களால்இலங்கை ஒலிபரப்புக் கலையகத்தில் நடாத்தப்பெற்ற நேர் முகழ் பரீட்சையில் விஷேட தரம் பெற்று நிகழ்ச்சிகள் செய்து வரும் காலத்தில் அவர் தனது முதுமையின் காரணத்தினால் ஓரளவு நிகழ்ச்சி களில் மட்டும் பங்காற்றினார்.
எனினும் யாழ்ப்பாணத்தில் பிரம்மபூரீ வை. நித்தியானந்த சர்மா அவர்களின் கதாபிரசங்கம், ஈழத்துச் சுந்த ராம்பாள் என்னும் கனகாம்பாள் சதாசிவம் அவர் களின் பக்தி இசை, வி. ரீ. வி. சுப்பிரமணியம் அவர்களின் பண்ணிசை ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் மேலும் சில முதுகலைஞர்களின் இசையரங்கு களுக்கும் மிருதங்கம், கஞ்சிரா போன்ற வாத்தி தியங்களைப் பக்கவாத்தியமாக 1982ஆம் ஆண்டு வரை வாசித்து வந்துள்ளார்.
இவர் 1983ஆம் ஆண்டு மனைவி இறைபதம் எய்தவே தம்கலைப் பணியை நிறுத்திக் கொண்டு காங்கேசன்துறையில் மூத்த மகளுடன் வசித்து வந்தார்.
இக்கலைப் பரம்பரையை முன்னெடுப் பதற்கு இவர் குடும்பத்தில் யாரும் இவர் கலையைத் தொடரவில்லை எனலாம். எனினும் இவருடைய புதல்விகளில் ஒருவர் நாதஸ்வரம், கடம் ஆகிய வாத்திய கலைஞனாகிய சுப்புசாமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
1987ஆம் ஆண்டு நாட்டுக் குழப்பம் காரணமாக இடம் பெயர்ந்து பாடசாலையில் அகதியாக இருக்கும் பொழுது தனது துர்ப்பாக்கியமான நிலையில் இறைபதம் எய்தினார். அன்னாரின் இறுதிச் சடங்கில் கலைஞர்கள் சார்பில் காலஞ் சென்ற நடிகமணி வைரமுத்து அவர்கள் மட்டுமே கலந்து கொண்டார் என அறிய முடிகிறது. கலைஞர் கணபதியாபிள்ளை அவர்களின் மறைவு இசையுலகிற்குப் பேரிழப்பு எனலாம்.
இணுவில் வி. உருத்திராபதி பல்லியக்கலைஞர் 1911 - 1983
ஈழ யாழ்ப்பாணத்தில் இணுவில் என்னும் ஊரில் இசைவேளாளர் மரபில் 11 - 10 - 1911 இல் பிற ந் தவர் பல்லியக் கலைவல்லுனர் வி. உருத்திராபதி அவர்கள். இவருடைய பெற்றோர் விஸ்வலிங்கம் இரத்தினம் தம்பதிகளாவர். விஸ்வலிங்கம் அவர்கள் அக்காலத்தில் பிரபல்யதவில் வித்வானாகத் திகழ்ந் தவராவர்.
உருத்திராபதி அவர்கள் தங்கள் மரபுப்படியே ா ய்ப்பாட்டு, நாதஸ்வரம், வயலின், புல்லாங் குழல், ஹார்மோனியம் ஆகிய இசைக்கலைகளை ஆர்வத்துடன் பயின்றும், அவ்வழியே இசையினைப் பல அவைகளிலும் சிறப்புறப் பிரகாசிக்கச் செய் தும், இசைமரபுகாத்தவராவர். இ வ. ரு டன் பிறந் தவர் கோதண்டபாணி, நாதஸ்வரக்கலைஞர் களான கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி, ஆகியோரின் தந்தையார் மா சில ா மணி, தட்சணாமூர்த்தி, (தவில் உதயசங்கருடைய தந்தையார் ) மகாலிங்கம் கருணாமூர்த்தி, ராஜரட்ணம் ஆகியோர் ஆவர். இவர் களுள் முதல் மூவரும் முறையே நாதஸ்வரம், வாய்ப் பாட்டு, தவில் ஆகிய இசைக்கலைகளில் சிறந்தவர் களாகப் பிரகாசித்தவர்கள்.
பல்லியம் உருத்திராபதி அவர்கள் இந்தியக்கலைஞர் முத்துக்கிருஷ்ணன் என்ப வரிடம் நாதஸ்வர இசையும், திருவாளப்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் வயலின் இசையும் சிறப்பாகப் பயின்றவர்.
கலைஞர் உருத்திராபதி அவர்கள் 1941 இல் தையலாம்பாள் என்பவரைத் திருமணம் செய்தார். இதன் பயனாக இவருக்கு ராதா கிருஷ்ண ன், பாலகிருஷ்ணன், சந்தான கிருஷ்ணன் ஆகிய மூன்று ஆண்பிள்ளைகளும், பூரீரஞ்சனி, கோகுலவதனி, ஆகிய இரு பெண்களும் கிடைத்தனர். தனது ஆண் பிள்ளைகள் மூவருக்கும் அவர் க ள் விருப்பத்திற் கேற்ப முறையே வயலின், நாதஸ்வரம், போன்ற வாத்திய இசையினைக் கற்பித்தார்.
திரு. உருத்திராபதி அவர்கள் தனது இசைக்கலை களை ஈழத்திலே கோவில்கள், சங்கீதசபாக்கள், பொதுவிழாக்கள், மங்களவைபவங்கள் போன்ற நிகழ்வுகளினூடாக வாத்திய இசையினைத் தனித் தும், முதுபெருங் கலைஞர்களுடன் இணைந்தும் பிரகாசிக்கச் செய்துள்ளார். மேலும் தனது சகோ தரரான ‘* லயஞானகுபேரபூபதி ’’ திரு. தட்சணா மூர்த்தி அவர்களின் மங்கள இசைக் குழுவில் நாதஸ்வரம் வாசித்து வந்தமையும் குறிப்பிடத்தககது.
திரு. உருத்திராபதி அவர்களிடம் வாய்ப்பாட்டு, வயலின், நாதஸ்வரம், புல்லாங்குழல் போன்ற வாத்திய இசைகளைக் கற்றுச் சிறப்புற இசையரங்குகளில் இசைபரப்பியும், இசைவாரிசுகளை உரு வாக்கியும், இசைச்சேவை புரிந்து வருபவர்கள் பலர். அவர்களுள் குறிப்பாக இவரின் மூத்த புதல் வர் " இசைஞானதிலகம் * ராதாகிருஷ்ணன் அவர் கள் ஈழத்தில் சிறப்பாக வயலின் இசையையும், இளைய புதல்வர் ** இசைக்கலைமணி ' சந்தான கிருஷ்ணன் தற்போது வெளிநாட்டிலிருந்து வயலின் இசையையும் பரப்பிவருகின்றனர். மேலும் வாய்ப் பாட்டிசையிலே இவர் மாணவி சங்கீதரத்தினம் திருமதி ஞானகுமாரி சிவனேசன் அவர்களும் இசைச் சேவை புரிகின்றார். மேலும் நாதஸ்வர இசையில் சீடனான இணுவில் கே. ஆர். சுந்தரமூர்த்தி அவர்கள் பிரபல்ய நாதஸ்வரக் கலைஞராக விளங்கி இசைச் சேவைபுரிந்து வருவதும் குறி ப் பி ட த் த க் க து. உருத்திராபதி அவர்களின் குடும்பமே இசைக்கலை நிறைந்தது என்பதற்கு சான்றாக இவருடைய மூத்த மருமகன் திரு. சந்தா ன கிருஷ்ணன் அவர்களும் மிருதங்கம், கஞ்சிரா பேரன்ற லயவாத்தியங்களில் சிறப்பாக இசைச் சேவைபுரிகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய பல்லியக்கலைஞரான உருத்திராபதி அவர்கள் ஈழத் தி ல் கலைச்சேவை புரிந்து 21-3-1983 இல் தனது 72 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு அவ்வுலகம் எய்தினார். எனினும் அன்னா ருடைய பல்லிய இசைத் தொண்டு ஈழத்தின் இசை வளர்ச்சிக்கு உறுதுணையானது என்றால் மிகை யாகாது.
ாகல்லூர் பிரம்மபூரீ ச. வைதீஸ்வர ஐயர் ஏழுதந்திவயலின் 1916 - 1990
ஈழத்து யாழ்ப்பாண நல்லூரிலே 1916ஆம் ஆண்டு மார்கழி மாதம் பிறந்தார். இவருடைய தந்தையார் சபாபதி ஐயர் ஆவர். இவர் தனது இளம் பராயத்தில் பாடசாலைக் கல்வியுடன் இசைப் பயிற்சியையும் அக்காலத்தில் ஈழத்தில் தங்கியிருந்த விணை வித்துவான் துரைசாமி ஐயர், சபேசஐயர் ஆகியவர்களிடம் பயின்றார். இசைப் பயிற்சியாக வாய்ப்பாட்டு, வினை, வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம் ஆகிய பல்லியக் கருவி இசைகளையும் உரிய முறையில் கற்றுத் தேர்ந்தார். இவருடைய சமகாலத்தில் வாய்ப்பாட்டுக் கலைஞர்களாக சண்முக ரத்தினம், மூர்த்திஐயர், பரமேஸ்வர ஐயர் போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய இசைக்கலைஞர்களே பிரகாசித்தார்கள்.
ஏறக்குறைய தனது 20ஆவது வயதளவில் பலமேடைகளில் இசைக் கச்சேரிகள் செய்தும், இசையரங்குகளில் வ ய லின், ஹார்மோனியம், புல்லாங்குழல் ஆகியவற்றில் பக்கவாத்தியமாக வும் தனி இசையாகவும் வா சித் துப் பெருமை தேடி க் கொண்டார். இவர் கையாண்டு வந்த வயலின் ஏழு தந்திகளையுடையது, இவ்வகையான ஏழு தந்தி வயலினை இந்தியாவில் மைசூர் செள டையா, சேதுராமையா ஆகியோர்களே வாசித்து வந்துள்ளார்கள். -
இவர் நல்லூரைச் சேர்ந்த ருக்குமணி அம்பாள் என்பவரைத் திருமணம் செய்து ஒரு மகனையும், ஒரு மகளையும் பெற்றார். இவர்களுள் மகன் நாகேஸ்வர ஐயர் என்பவர் மிருதங்கப் பயிற்சி பெற்று தந்தையாருடன் இசைக் கச்சேரிகளுக்கு மிருதங்கம் வாசித்து வந்தார்.
குறிப்பாக ஐயர் அவர்கள் அருட்கவி சி. வி நா சித் தம் பி அவர் களின் கதா கால கூேழபத்திற்கும் திருமதி மோகனாம்பிகை கணேசன் அவர்களின் இசைக் கச்சேரிக் கும் வயலின் வாசித்து வந்துள்ளார். இக்காலங் களில் இசைப்பணி செய்து கொண்டும் வைத்திஸ் வரஐயர் அவர்கள் வடஇலங்கை சங்கீத சபை யின் ஆசிரியதரப் பரீட்சையிலும் சித்தி பெற்றார்.
வைத்தீஸ்வர ஐயர் அவர்களின் இசைச்சேவை ஈழத்தின் பல பாகங்களிலும் கல்லூரிகள் மூலம் பிரதிபலித்துள்ளது. குறிப்பாக உடுவில் மகளிர் கல்லூரி, பருத்தித்துறை பெண்கள் கல்லூரி, ஹாட்லி கல்லூரி, உ டு ப் பி ட் டி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் இசையாசிரியராக வாய்ப்பாட்டு இசை, வயலின், புல்லாங்குழல், விணை இசை ஆகிய இசைகளைக் கற் பித் து மாணவர்களுக்கு இசையறிவூட்டியுள்ளார். இவர் தனிப்பட்ட முறை யிலும் பல இசை வாரிசு களை உருவாக்கியவர்.
அவர்களுள் மூத்த சிஷ்யை திருமதி மோகனாம்பிகை கணேசன் அவர்களைக் குறிப்பிடலாம். மோகனாம் பிகை அவர்களின் இசை அ ர ங் கி ற் கு ஏழுதந்தி வயலினில் பக்கவாத்தியம் வாசித்துச் சிறப்பித்துள் ளார். இலங்கையில் ஏழுதந்தி வயலின் வாத்தி யத்தை கையாண்டவர் இவர் ஒருவரே.
குறிப் பா க புல்லாங்குழல் மூர்த்திஐயருக்கும் பர மே ஸ்வர ஐயர், சபேச ஐயர் போன்றவர்களுடைய இசையரங்குகளிலும் ஈழத்தின் முது கலைஞர் பலருக்கும் பக்க வாத்தியமாக வயலின் வாசித்தவர். விணை இசைக்கச்சேரிகளும் செய் துள்ளார். ஈழத்தில் இசைக்கலைஞர்கள் யாவருக்கும் நன்கு பழக்கப்பட்டுள்ள கலைஞராக விளங்கி னார். இவர் முருக ப க் த னா கவு ம், யோகர் சுவாமிகள், வடிவேல் சுவாமியார் ஆகியோரிடமும் பக்தியுள்ளவர். எந்நேரமும் 'முருகா முருகா’’ என்றே ஜெபிப்பார் யோகர் சுவாமிகளின் நன் மொழிகளை எப்போதும் கூறிக் கொள்வார். எவ ருடனும் அன்பாகப் பழகுவார், சொன்னசொல் தவ றாதவர், எதையும் துணிந்து செய்வார் ஆனால் ரொம்பவும் ரோ சக்காரர் யாரும் புண்பட சொல்லி விட்டாற் பொறுக்கமாட்டார்.
இவர் சில காலம் இல் ல ற த் தி ல் இருந்து கொண்டே தவ வாழ்க்கை நடத்தியுள்ளார். தனது மனைவி மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை எல்லாம் முடித்து கிளிநொச்சி மகாதேவ ஆச்சிர மத்தில் வடிவேல் சுவாமிகளிடம் துறவறம் பூண்டு காவி வஸ்த்திரம் தரித்து வாழ்ந்தார்.
பிற்காலத்தில் உடல் நலம் குன்றிய போதும் அதிகாலை பபிலேயே எழுந்து உள்ளம் உருகி தியானம், நாமா வளிகள், பஜனைகள் தோத்திரப் பாடல்களைப் பக்தியுடன் கண்ணிர் சொரிந்து பாடுவார். பிற் காலம் முழுவதும் பஜனைகளிலேயே முடிந்தது. இவருக்கு கண்பார்வை தெரியாமல் வந்தபோது சுந்தரமூர்த்திநாயனார் கண்பெற்ற பதிகத்தை தின மும் பாடுவார். இவரின் பக்தியும் விஞ்ஞானமும் ஒன்றுசேர்ந்து சத்திர சிகிச்சை மூலம் கண் பார்வை யைப் பெற்றார். இவர் தன் னை ப் பெ ற் ற தாயின் மீது மிகுந்த பாசமுள்ளவர். அதனால் தனது தாயார் இறந்த சித்திராபெளர்ணமி அன்று தானும் இறக்க வேண்டும் எனும் அவாக் கொண்டி ருந்தார். அதே தினத்தில் தானும் தனது உடலை நீத்தால் தனது விருப்பம் நிறைவேறும் என்று சொல்லி வந்தார். அது போலவே 1990ஆம் ஆண்டு சித்திராபெளர்ணமி அன்று தன் புகழுடம்பை விட்டு முருகனின் பாதார விந்தங்களில் கலந்து தனது ஆசையை நிறைவேற்றினார். அவரின் ஆன்மாவும் சாந்தி அடைந்தது. எனினும் அன்னாருடைய இசை ஈழத்தில் பல கலைஞர்கள் மூலம் தொடர்கிறது என்பது கண்கூடாகும்.
யாழ்ப்பாணம் என் தங்கம் மிருதங்கம் 1916 - 1979 மிருதங்கம் என். தங்கம் அவர்கள் யாழ்ப் பாணத்து வண்ணார்பண்ணையில் இசைவேளாளர் பரம்பரையில் 1916 இல் பிறந்தார். இவரது தந்தையார் கே. நாராயணசாமிப்பிள்ளை. தாயார் ஜானகி அம்மாள் ஆவார். இவர் பலகாலம் யாழ்ப் பாணத்திலேயே இசைச் சேவையுடன் வாழ்ந்தவர். இவர் ஏறக்குறைய 1948 ஆம் ஆண்டளவிலிருந்து இலங்கையின் பல பாகங்களிலும் கர்நாடக இசை யரங்குகளில் மிருதங்கத்தை பக்க வாத்தியமாகச் சிறப்புற வாசித்துள்ளார். இவருக்கு இவருடைய தாய்தந்தையர் இட்டபெயர் தங்கராஜபிள்ளை என்பதாகும். இவர் தனது மிருதங்கக்கல்வியை புத்துவாட்டி இரத்தினம், இந்திய காரைக்கால் கோபாலசாமி, பாலு ஆகியோரிடம் முறைப்படி பயின்றார். யாழ்ப்பாணத்தில் கர்நாடக இசைப் பாணியில் மிருதங்கத்தைக் கையாண்டு கச்சேரிகள் வாசித்த பெருமை அக்காலத்தில் தங்கத்திற்கே உரியதாகும். V
இவர் சி. எஸ். மணி பாகவதர், ( கதாப்பிர சங்கம் ) இந்தியாவிலிருந்து வருகைதந்த பாடகர் களான கும்பகோணம் V. P. ராஜேஸ்வரி, மைதிலி, ஆகியோருக்கு 1954ஆம் ஆண்டு தொடக்கம் 1956ஆம் ஆண்டு வரை ஈழத்தின் பல பா க ங் களி லும் கச்சேரியில் சிறப்புற மிருதங்கம் வாசித்து பாடகர் களினதும், ரசிகர்களினதும் பாராட்டுக்களையும் பெற்றவர். இவரை " என்தங்கம் மிருதங்கம் ‘’ என்றே சிலேடையாக மணிபாகவதர் அவர்கள் அழைப்பர் என்றால் இவர் மிருதங்கவாசிப்புப் பற்றிக் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை.
மேலும் 1968 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு வருகை தந்த காலஞ்சென்ற கதாகாலகூேடிய விற்பன்னர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களுடைய தொடர் இசை விரிவுரை நிகழ்ச்சிகளுக்கு மிருதங்கம் வாசித்து வாரியார் அவர்களாலும் நன்கு மதிக்கப்பெற்றார்.
அத்துடன் ஈழத்து வித்துவான் குப்பிளான் செல்லத்துரை அவர்களது திருப்புகழ்க்கச்சேரி களுக்கும் வாசித்து வந்துள்ளார். திருப்புகழ் கக்சேரி யில் நெரடானவற்றையெல்லாம் தனது வாசிப்பின் சாதுரியத்தால் சமாளித்துக் கொள்வார்.
மேலும் இவர் ஈழத்தில் சதுர்க்கச்சேரிகளுக் கும் இடையிடையே வாசித்தது உண்டு. நடனக் கச்சேரியிலும் வாசிப்பு சிறப்பாகவே அமையும். இவருடைய வாழ்க்கைத் துணைவியாரும் ஒருநர்த்தகி ஆவர். இவருடைய குடும்பமே இசைக் குடும்பம் என்றே கூறலாம்.
இவருடைய வாசிப்பில் வலந்தரை தொப்பி சமப்படும் சுகம் அதிசுவையானது. பரண் சொற்கள் எல்லாம் சுருதி சுத்தமானதாகவும் அதி மேற்கால மாகவும் அமையும். நடை, டேகா, கும் காரம் போன் றவை இவருக்கென்றே உரிய தனிப்பாணியை உடையதும், சம்பிரதாயத்தை ஒட்டி யதாக வும் 9νσωφιψώ.
இவர் தனது மைந்தன் ஜெயசுந்தரம் என்பவரை மிருதங்கக் கல்வியில் ஈடுபடுத்தி, நல்ல முறையில் பாடம் சொல்லி வைத்து, ஈழத்தில் முன்னணிக் கலைஞராகத் திகழ வைத்துள்ளார். ஜெயசுந்தரம் யாழ்ப்பாணம், தென் இலங்கை போன்ற இடங் களில் அனேககச்சேரிகளுக்கு இனிதுறப் பக்கவாத் தியம் வாசித்து வருகிறார். அத்துடன் இலங்கை வானொலியில் நிலைய வித்துவானாகவும் கலைத் தொண்டுபுரிகிறார்.
திரு. என். தங்கம் அவர்கள் சிறப்புற இசைச் சேவைபுரிந்து ஈழத்திற்குப் பெருமை தந்துள்ளார். இவர் 19 - 01 - 1979 அன்று தனது 63ஆவது வயதில் கலையுலகை நீத்து நிலையுலகம் எய்தி னார். இவருடைய மிருதங்கக் கலைத் தொண்டினால் யாழ்ப்பாணம் பெருமையுற்றது, எ னில் மிகை யாகாது.
ஆனைக்கோட்டை ஜி. எஸ். வசந்தகுலசிங்கம் புல்லாங்குழல் 1917 - 1985)
திரு. ஜி. எஸ். வசந்தகுலசிங்கம் அவர்கள் ஈழநாட்டின் வடபுல ஆனைக்கோட்டை என்னும் ஊரிலே 28 - 07- 1917 அன்று பிறந்தவராவர். இவர் தனது இளம்பராயத்தில் தமிழ், ஆங்கிலமொழி ஈடுபாடுகொண்டவராகக் கல்விபயின்றார். கல்லூரி யில் கல்விபயிலும் காலத்திலேயே இசையார்வ முடையவராக விளங்கினார்.
இவர் தனது கல்விப்படிப்புடன் சமகாலத்தி லேயே புல்லாங்குழல், கிளாரினட், தபேலா, வினை ஆகிய வாத்திய இசைகளையும், வாய்ப் பாட்டு இசை, நா ட்டிய இசை ஆகியவற்றையும் உரிய முறையில் பயின்றார். இக்காலப்பகுதியில் இவருக்கு ஆங்கில ஆசிரிய நியமனம் அரசாங்கப் பாடசாலைகளில் கிடைக்கப்பெற்றது. ஆசிரியர் பணியைச் செய்யும் பொழுதே மேற்கூறப்பட்ட இசைக்கலைகளை மேடைகளிலும், கோவில்களிலும் சிறப்பாக வழங்கி வந்துள்ளார்.
திரு. வசந்தகுலசிங்கம் அவர்கள் 1949 ஆம் ஆண்டளவில் பரமேஸ்வராக்கல்லூரியில் ஆசிரியப் பணியில் ஈடுபட்டார். இவ்வேளையில் அக்கல்லூரி யிலேயே தனது இசைக்கலையை நன்கு விருத்தி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது.
மேலும் பல இடங்களிலும் இசையரங்குகள் ஊடாக வாத்திய இசை வழங்கி ஒர் பல்லியவித்துவானாக இசைத்தொண்டு புரிந்துள்ளார். இவர் வாத்தியங்களினுள் புல்லாங் குழலிசையினைச் சிறப்பாகக் கையாண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜி. எஸ். வி. அவர்கள் தனது இசைப்பயிற்சிகளுடன் ஹிந்துஸ்தானிஇசையிலும் நல்ல ஆர்வ முள்ளவராக விளங்கினார். புல்லாங்குழலில் கர் நாடக இசையுடன் ஹிந்துஸ்தான் இசையையும் வழங்கிவந்துள்ளார். மேலும் இவருடைய இசைத் திறமை காரணமாக இவருக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசியகீதத்திற்கான ஒலிப்பதி வில் 1952 இல் புல்லாங்குழலைப் பின்னணியாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தேசியகீதவாத் தியக்குழுவில் பங்களித்த ஒரே ஒரு தமிழ்க் கலைஞர் இவரேயாவார். இது பெருமைக்குரியவிடயமாகும்.
இவருடைய இசைவாரிசுகள் என்ற வகையில் இசை விமர்சகர் நவாலியூர் நா. சச்சிதானந்தன் அவர்களையும், சுதுமலை செல்வராசா, வசந்தகுல சிங்கத்தின் புதல்வி மோகனா ( பரதநாட்டியம்) போன்றவர்களையும் குறிப்பிடலாம். சிறப்பான பல்லிய இசைவல்லுனர் வசந்தகுலசிங்கம் அவர்கள் 1985 ஆம் ஆண்டு அளவில் இவ்வுலகவாழ்வை நித்து நிலையுலகம் சென்றடைந்தார். எனினும் இவருடைய ஞாபகத்திற்குரியதாக இலங்கை வானொலியின் தேசியகீதம் இன்றும் கேட்கக்கூடியதாக இருப்பது இக்கலைஞரின் இசைத்துறைச் சிறப்பை மீட்டு வதற்கு ஏதுவாகிறது.
யாழ்ப்பாணம் பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை நாதஸ்வரம் 1919 - 1993
ஈழத்து யாழ்ப்பாணத்தில் இசை வேளாளர் பரம்பரையில் வாழ்ந்த சாமிநாதர், கமலம் ஆகியோருக்கு புதல்வராக 19-05-1919ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வளர்ந்து வருகையில் சாதாரண கல்வியும் ஓரளவு பயின்று தனது தமையனாரா கிய கந்தசாமியிடம் நாதஸ்வரம் பயின்றார். பின்னர் இந்திய நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவா வடுதுறை ஆஸ்தான வித்துவான் ரி. என். ராஜ ரத்தினம்பிள்ளை அவர்களிடம் முறைப்படி குருகுலவா சப் பயிற்சி செய்து, குருவுடனும் சில கச்சேரிகள் செய்தும், தனது நாதஸ்வரக்கலையை சிறப்பித்துக் கொண்டார். தொடர்ந்தும் இலங்கை வந்து, தனது சகோதரரான பி. எஸ். இராஜகோபால்பிள்ளை அவர்களுடன் (தவில்) சேர்ந்து பல பாகங்களி லும் நா த ஸ் வ ர இசையரங்குகளை பிரபல தேவஸ்தானங்கள், சபாக்கள். மங்கள வைபவங்கள் போன்ற இடங்களில் நடாத்தி வந்தார்.
இவருடைய நாதஸ்வர வாசிப்பு தனித்துவ முடையது என்றே கூறலாம். இவருடைய நாதஸ் வரத்தில்:வுரும் ஒலியான து கிளாரினட் ஷணாய் போன்ற நாத ஒலி வேறுபாடுகளை எடுத்துக் காட்டுவதாய் அமையும். இது இவருடைய வித்வச் சிறப்பிற்கு ஒரு சான்று. நாதஸ்வர வாசிப்பு மட்டு மல்லாது முகவீணை, கடம், புல்லாங்குழல், கஞ்சீரா போன்ற வாத்தியங்களையும் இசையரங்குகளில் வாசித்துள்ளார். இவற்றிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அளவிலேயே வாசித்துள்ளார். நாதஸ்வரத்தில் ஸ்வரப் பிரயோகம், ராகவிஸ்தா ரங்கள் போன்றவை மிகவும் நளினமாகவும், சுநாத முடையதாகவும், பிர்காசங்கதிகள், லய சுத்தம் நிறைந்தவை யாகவும் அமைந்திருக்கும். இவருடைய நாதஸ்வரத்தில் மயங்கா தோர் யாரும் இல்லை என்றே கூறலாம்.
ஆலய உற்சவங்கள், பொச் வைபவங்கள், சமய சம்பந்தமான வாழ்க்கைச் சடங்குகளிலும் உரிய சம்பிரதாயப் படியே உரிய இடங்களில் வாசிப்பதில் திடநம்பிம்பிக்கை பூண்ட இவர் யாழ்ப்பாணத்தைத் சேர்ந்த ஆறுமுகம் பிள்ளை அவர்களது மகளாகிய இராஜநாயகி என் பவரைத் திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் 5 ஆணும் 5 பெண்ணுமாக மொத்தம் பத்துப் பிள் ளைகள் பிறந்தார்கள். இவர்களுள் குறிப்பாக பாலசுப்பிரமணியம், முருகதாஸ் ஆகிய இருவரும் வெளியூர்களில் நாதஸ்வர இசைக் கலைத்தொண்டு புரிகிறார்கள்.
திரு. பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை அவர்கள் நாதஸ்வரம் வாசிக்கும் பாணியானது இவரு ட்ைய குருவாகிய ராஜரத்தினம்ரிடுதினிேயம் வேதமூர்த்தி போன்றவர்களின் பாணியை ஒட்டியது. அத்துடன் இலங்கை இந்திய நாதஸ் வரக் கலைஞர்களுள் பிரபல்யமானவர்களுடனும் சேர்ந்து வாசித்துள்ளார். மேலும் காலஞ் சென்ற வித்துவான்களான கதாபிரசங்கம் சி. எஸ். மணி பாகவதர், வாய்ப்பாட்டுக் கலைஞர் இசைப்புலவர் என். சண்முகரத்தினம் ஆகியோரின் பல இசையரங் குகளில் முகவீணை, கடம் போன்ற வாத்தியங் களை வாசித்து ரசிகர்களின் சிறந்த பாராட்டுக் களைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்திலே முக விணை என்ற ஓர் இசைக் கருவியும் அரங் கிற்கு உகந்தது என்ற அளவில் வயலின், மிரு தங்கம், தவில் போன்ற பக்க வாத்தியங்களைச் சேர்த்து முகவீணை இசையரங்குகள் பல நிகழ்த்தி uygir 6m7 a di .
இவருக்கு யாழ்ப்பாணத்தில் சிஷ்யர்கள் பலர்.
அவர்களுள் கலாதரி என். கே. பத்மநாதன், நல்லூர் பி. எஸ். பிச்சை யப் பா, புன்னாலைக்கட்டுவன் கணேசன் போன்றவர்கள் குறிப்பிடக் கூடியவர் கள். இவருடைய புத்திரர்களுள் இருவர் நாதஸ்வரக் கலை ையத் தந்தையிடமே பயின்றவர்களாவர். மேலும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தின் மங்கள இசைப் பயிற்சிக் குரு குலத்தில் நாதஸ்வர இசையாசிரியராக இவர் பணி செய்தமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்திலும், வெளி நாடுக ளிலும் பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை அவர்களுக்கு வித்வசபைகளி லிருந்தும், இசை ரசிகர்களிடத் திருந்தும் பலபாராட்டுக்களும் பட்டங்களும் கிடைத்துள்ளன. இவற்றுள் லவிதஸ்வரபூபதி, இசைநாதலயமணி, தேவகான இசைத்திலகம், நாதஸ்வரமஹாவலிகங்கா, நாதஸ் வரவித்வசரப இசைஅரசு, பல்லிசைப்புலவர், இசை நாதவாரிதி, ஸாமகானலாவண்ய இசைஞானஜோதி போன்ற பட்டங்கள் குறிப்பிடக் கூடியவைகளாகும். இவர் எல்லோரையும் அப்பனே, ஆண்டவனே ’’ என அன்பாய் அழைப் பார். கலைஞர்களில் சிறி யவர்கள், பெரியவர்கள், யா வரையும் அன்புடன் மதிக்கும் கலை உள்ளம் கொண்ட இவர்கள் பல காலம் இசைச்சேவைகள் செய்து தனது 74 ஆவது வயதில் 07-02 - 1993 அன்று இசைக்கலைவாழ்வை நீத்து அசையாத நிலை உலகம் எ ய் தின n ர்.
இவருடைய இசையுலகச் செயற்பாடுகள் யாவும் என்றும் யாவரிடத்தும் நீங்கா நிலைபெற்றிருக்கும்.
அளவெட்டி எம். திருாகாவுக்கரசு நாதஸ்வரம் (1920 - 1960)
பாரதநாட்டின் சீர்காழியிலே வயலின் வித்துவானாகத் திகழ்ந்த முத்தையாபிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் புத்திரனாக 1920 ஆம் ஆண்டு பிறந் தவர் தான் திருநாவுக்கரசு, சீர்காழியில் " பாடு வார் குடும்பம் ' என்றே இவர்கள் குடும்பத்தினரை அழைப்பார்கள். இவர் சிறுவயதிலேயே இசையார் வமுடையவராக வாய்ப்பாட்டு, நாதஸ்வரம் ஆகிய இசைக்கலைகளை நன்கு கற்றுக் கொண்டார். மேலும் கற்றபடியே இசைச் சேவையிலீடுபட்டார். அது மட்டுமின்றி இசைவாரிசுகளையும் உருவாக்கி வந்துள்ளார்.
திருநாவுக்கரசு அவர்களின் நாதஸ்வர இசை நுட்பத்திறனை அறிந்த ஈழத்துச் சித்தன்கேணி யைச் சேர்ந்த தவில் வித்துவான் கோதண்டபாணி அவர்கள் இவரை ஈழத்தில் நாதஸ்வர இசைச் சேவைக்காக இங்கு அழைத்து வந்து பல இடங்களி லும் இந்து ஆலயங்கள் தோறும் மங்கள இசை அரங்குகளில் பங்கு பற்றச்செய்ததுடன், இந்துக் களின் மங்கள நிகழ்ச்சிகளுக்கும் நாதஸ்வர இசைச் சேவை செய்யச் சந்தர்ப்பங்களை அளித்தார். இக்காலகட்டத்தில் இவருக்கு நல்ல புகழ்ம் கிடைக்கப் பெற்றது. பொதுவாக இவரது நாதஸ்வரவாசிப் பானது ராக, ஆலாபனை விஸ்தாரமுடையதாகவும், சுகமானதாகவும் சங்கதி நிறைந்ததாகவும் பல இசைக்கலைஞர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப் பெற்றது என அறிகிறோம்.
திருநாவுக்கரசு அவர்கள் 1945ஆம் ஆண்டில் சித்தன்கேணியைச் சேர்ந்த ராஜப்பா என்பவரின் மகளான சிவபாக்கியம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இதன் பயனாக பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், சிவகுமார், திரிபுரசுந்தரி ஆகியோரை வாரிசுகளாகப்பெற்றார். இவர்களில் ஆண்கள் மூவரும் தந்தையிடமே வாய்ப் பாட்டு இசைபயின்று நாதஸ்வர இசையையும் பயின்றார்கள். எனினும் தற்போது முத்தமகனான பாலகிருஷ்ணன் ஈழத்தில் தந்தைவழியைப் பின் பற்றிநாதஸ்வர இசைச்சேவைபுரிகின்றார். மற்றை யோர் இந்தியாவில் நாதஸ்வர இசைச்சேவை புரிகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருநாவுக்கரசு அவர்கள் பலகாலம் தவில், நாதஸ்வரக்கலைஞர்கள் சூழ்ந்த அளவெட்டி என் னும் ஊரிலேயே வசித்துவந்தார். இதனால் இவரை அளவெட்டித் திருநாவுக்கரசு என்றே அழைப்பர். இவருடன் அளவெட்டி என். கே. பத்மநாதன், வண்ணை பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை, இணுவை ஆர். சுந்தரமூர்த்தி ஆகியோரும் பலகாலம் சேர்ந்து நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளார்கள். ஈழத்துத் தவில் வித்துவான் அளவெட்டி வி. தட்சணாமூர்த்தி அவர்கள் தனது குழுவிலேயே இவரையும் சேர்த்து பலகாலம் மங்கள இசை நிகழ்ச்சிகளை சிறப்புற ஆற்றியமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவருடைய கால கட்டத்தில் இந்தியாவிலிருந் தும் நாதஸ்வர, தவில், கலைஞர்கள் பிரத்தியேக மாக ஈழத்திற்கு அழைக்கப்பட்டு மங்கள இசை நிகழ்ச்சிகள் இங்கு பல பாகங்களிலும் நம் நாட்டு நாதஸ்வர , தவில் கலைஞர்களுடன் சேர்ந்து நடத் தப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாகவும் இசை முன்னேற்றங்கள் ஏற்பட்டது எனலாம். இவ்வரிசை யில் திருநாவுக்கரசு அவர்கள் பிரபல நாதஸ்வர வித்துவான் காரைக்குறிச்சி அருணாசலம்பிள்ளை அவர்களுடன் சேர்ந்தும் இசைநிகழ்ச்சிகள் பல செய்துள்ளார். இவரின் இசைச் சிறப்புக்காரண மாக யாழ்ப்பாணத்து அந்நாள் அரசாங்க அதிபர் எம். பூரீகாந்தா அவர்கள் இவரைப் பாராட்டிக்கெளர வம் அளித்தார்கள்.
திருநாவுக்கரசு அவர்களிடம் அநேகர் வாய்ப் பாட்டு இசையினையும் பயின்றுள்ளார்கள். அவரி டம் நாதஸ்வர இசையை அவரின் புதல்வர்களும், ஆச்சாபுரம் சின்னத்தம்பி, மூளாய் பாலகிருஷ்ணன் ஆகியோர் நன்கு பயின்று இசைச்சேவை புரிந்து வந்தவர்களாவர். எனினும் மூளாய் பாலகிருஷ்ணன் அவர்கள் இளமைக் காலத்திலேயே சிறப்புப்பெற்று அமரத்துவம் அடைந்து விட்டார். நாஸ்வர இசை யைப்பரப்பிய திருநாவுக்கரசு அவர்கள் 1960ஆம் ஆண்டு இவ்வுலகை விடுத்து நிலையுலகம் சென் றார். எனினும் இவருடைய இசைச்சிறப்புக்களை இவருடைய இசை ஒலிப்பதிவுகள் சில இன்றும் தெரிவித்து நிற்கின்றன. இவருடைய சேவை யானது ஈழத்து இசை வளர்ச்சிக்கு அளப்பரிய தாகும் என்றே கூறலாம்.
இணுவில் வி. கோதண்டபாணி நாதஸ்வரம் 1920 - 1967
இவர் ஈழ யாழ் ப் பாண த் தி ல் இணுவில் எனும் பதியில் இசை வேளாளர் மரபில், விஸ்வ லிங்கம், இரத்தினம் ஆகிய தம்பதிகளுக்குப் புதல் வராக 20-03-1920 இல் பிறந்தார். இவருடன் பிறந் தவர்கள் உருத்திராபதி, தட்சணாமூர்த்தி, மாசிலா மணி, மகாலிங்கம், கருணாமூர்த்தி, ராஜரத்தினம் ஆகியோராவர். இவர்களுள் முந்திய மூவரும் முறையே நாதஸ்வரம், தவில், வாய்ப்பாட்டு ஆகிய கலைகளில் சிறந்து விளங்கினார்கள்.
திரு. கோதண்டபாணி அவர்கள் தனது ஆரம் பக் கல்வியை கோண்டாவில் இந்துப் பாடசாலை யில் பயின்றார். அத்துடன் தனது மரபு வழி யினரின் கலையான நாதஸ்வர இசையை தனது சகோதரர் உருத்திராபதியிடம் ஆரம்பித்து இந்திய நாதஸ்வர வித்துவான்களான ஆண்டாள் கோவில் கருப்பையா, திருவெண்காடு சுப்பிரமணியம் ஆகி யோரிடம் சிறப்பான மு ைற யி ல் தொடர்ந்து பயின்றார். பயிற்சியுடன் சிறப்பாகச் சா த கம் செய்து, மீண்டும் இங்கு வந்து தனது மூத்த சகோதரர் உருத்திராபதி அவர்களுடன் சேர்ந்து நாதஸ்வர இசை நிகழ்ச்சிகள் செய்து வந்தார்.
இக்காலத்தில் நம் நா த ஸ் வர க் கலைஞர்களுடனும் சேர்த்து வாசித்தும் வந்தார்.
இவர் மூளாய் பிரபல தவில் வித்துவான் ஆறுமுகம்பிள்ளை, வீரலகஷ்மி தம்பதியினரின் புதல் வியான ராஜேஸ்வரி என்பவரை 1943ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இதன் பயனாக இவருக்கு கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி, விஜயமூர்த்தி ஆகிய மூன்று புதல்வர்களும் ஆனந்தவல்லி என்ற புதல்வி யும் வாரிசுகளாக கிடைத்த னர். இவர் தனது பெயரில் அமைந்த நாதஸ்வர இசைக் குழுவினுர டாக ஈழத்தின் பல பாகங்களிலும், இந்துக் கோவில் கள், பொது அரங்குகள், மங்கள வைபவங்கள் ஆகியவற்றில் சிறப்பாக இசைத் தொண்டாற்றி இக் கலையைப் பரப்பினார். இக்காலத்தில் நாதஸ் வர வித்துவான்களான மாவிட்டபுரம் உருத்திராபதி, இராசா, திருநாவுக்கரசு போன்ற பிரபல இசை விற் பன்னர்களுடனும் சேர்ந்து வாசித்து வந்துள்ளார்
திரு. கோதண்டபாணி அவர்களுடைய நாதஸ் வர வாசிப்பானது சுகமும், சுருதிலய சுத்தமும் நிறைந்த சங்கதிகளை உள்ளிட்டதாகவே அமை யும். மேலும் சம்பிரதாயங்களை மரபு வழி தவறா மல் வாசிக்கும் பழக்கமுடையவர் இவர் எனவும் அறிகிறோம். பிற்காலப் பகுதியில் தனது சகோதர ரான தட்சணாமூர்த்தி, மற் று ம் சின்னராஜா, கணேசபிள்ளை போன்ற தவில் வித்துவான்களுடன் சேர்ந்து குழுவாக நாதஸ்வர இசைச் சேவை புரிந் தும் வந்துள்ளார். திரு. கோதண்டபாணி அவர்க ளிடம் இசை வாரிசுகளாக நாதஸ்வரம் பயின்ற வர்கள் பலராவர். அவர்களுள் இவருடைய புதல்வர்கள் மூவரையும், இவருடைய மைத்துனரான அமரத்துவமடைந்த நாதஸ்வர விற்பன்னர் மூளாய் பாலகிருஷ்ணன் என்பவரையும் சிறப்பாகக் குறிப் .
கலைஞர் கோதண்டபாணி அவர்கள் தனது மூத்த இரு புதல்வர்களையும் நாதஸ்வர இசையில் பிரகாசிக்க வைக்கும் நோக்குடன் 1963 ஆம் ஆண்டு அரங்கேற்றம் செய்து வைத்தார். அவ்வழியே கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி ஆகிய இருவரும் நாதஸ் வர இரட்டையர் என்ற சிறப் பு ப் பெயரோடு நாதஸ்வர இசைச் சேவை புரிந்து வருவது குறிப் பிடத்தக்கதாகும். ம க ன் பஞ்சமூர்த்தி அவர்கள் நாதஸ்வரக் கலையோடு புல்லாங்குழல் வாத்தியத் தையும் அண்மையில் அரங்கேற்றி அவைகளு டாக சிறப்பாக இசைத் தொண்டு புரிகின்றார். அடுத்ததாக இவருடைய புதல்வியைத் திருமணம் செய்த மருமகன் கே. ஆர். சுந்தரமூர்த்தி அவர் களும் ஒரு சிறந்த நாதஸ்வரக் கலைஞராக விளங்கு கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல இடங்களிலும் நாதஸ்வர இசை பரப்பிய கலைஞர் கோதண்டபாணி அவர்கள் குறுகிய கால வாழ்வினை முடித்து 1967ஆம் ஆண்டு அக் டோபர் மாதம் தனது 47ஆவது வயதிலேயே இவ் வுலகை விட்டு நிலை உலகம் சென்றார். எனினும் இவருடைய வாரிசுகள் மூலமாக நாதஸ்வர இசை மரபு தொடர்கிறது, வளர்கிறது என்பது கண்கூடு, அமரர் அவர்களுடைய இசைச் சேவை அளப்பரி யது என்பதில் சந்தேகமில்லை ! ** தக்கார் தக விலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்'.
யாழ்ப்பாணம் பி. வைத்தியாகாதசர்மா வயலின் (1923 - 1977)
பிரம்மபூரீ வைத்திய நாத சர் மா அவர்கள் யாழ்ப்பாணம், கைதடி என்னும் ஊரில் பரமசாமிக் குருக்கள், வேதநாயகிதம்பதிகளுக்கு 10-08-1923ஆம் ஆண்டு புதல்வராகப் பிறந்தார். இவருடைய தந்தையாரும் நன்றாகப் பாடுவதிலும், பாடல்களை இயற்றுவதிலும் வல்லவர். இதனால் சர்மா அவர் களுக்கும் இயற்கையிலேயே நல்ல ஞானம் உண்டா கியதில் வி யப் பில் லை. இவர்கள் ஓர் இசைப் பாரம்பரியக் குடும்பம் என்றே கூறலாம். இவர் தானாகவே வயலின் கற்க வேண்டும் என விரும் பியதுடன் விருப்பத்தை தனது தந்தையாரிடம் முன் வைத்தார். மேலும் தனது ஆரம்பக்கல்வியை யாழ். வட்டுக்கோட்டை இந்து க் கல்லூரியிலும் கற்றுத் தொடர்ந்து வ ய லின் இசைக் கல்வியைத் தனது 14ஆவது வயதில் மலேசியாவிலுள்ள இந்து கான சபாவில் வயலின் வித் து வான் துரத்து க் குடி பொன்னுச்சாமி ஐயங்காரிடம் கற்றார். இந்தியா சென்று மைசூர் செளடையாவின் தம் பிய ரான குருராஜப்பாவிடமும், மருங்காபுரி கோபாலகிருஷ் ணனிடமும் வயலினிசை நுட்பங்களைக் கற்று இந்தியாவிலேயே அரங்கேற்றம் செய்து அங்கேயே பல கச்சேரிகள் செய்து பெரும் புகழீட்டினார்.
சர்மா அவர்கள் 1946ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்து தனது மாமன் மகளான மனோரமா என்ப வரைத் திருமணம் செய்து இனிது வாழ்ந்து வரும் காலத்தில் பல ஆண்டுகளாக இவர்களுக்கு வாரிசுகள் இல்லாத காரணத்தினால் இவரது இசை மாணவி யான காரைநகர் நாகமுத்து ஐயர் தம்பதிகளின் மகள் சுலோஜனா என்பவரை வாழ்க் ைகயில் இணைத்துக் கொண்டார். இதன் பயனாக இவர் களுக்கு பிள்ளைகள் மூவர் கிடைத்தனர். இவர் இந்தியாவிலிருந்து வருகை தந்த முதுகலைஞர்க ளான சித்துரர் சுப்பிரமணிய பிள்ளை, ஏ. கல்யாண கிருஷ்ண பாகவதர், ம க ரா ராஜ புர ம் சந்தானம், ஈழத்துக் கலைஞர்களான இசைப்புலவர் சண்முக σε οδοτώ, பரம்தில்லைராஜா ஐயா க் கண் ணு தேசிகர், எஸ். பாலசுப்பிரமணிய ஐயர், டி. எஸ். மணிபாகவதர் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார். அக்காலத்தில் மகாராஜ புரம் ச ந் தானம், இசைப்புலவர் சண்முகரட்ணம் ஆகியோர் சர்மா அவர்களுடைய வயலின் இல்லா மல் கச்சேரி ஒப்புக் கொள்ள கொஞ்சம் பின்னடிப் பார்களாம். பாடகர்கள் நல்ல ஆஜானுபாவமான தோற்றமுள்ளவர்கள். சர்மா அவர்களை பாடகர் களின் தோற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது உருவில் மலையும் மடுவும் போல தோற்ற அளிப் பார். எனினும் வயலின் வாசிப்பு மலையாகவே அமையும். நல்ல அழகும் துடிதுடிப்புமுள்ள இவர் ப ா ட ல் கள் இயற்றுவதிலும், ஜதிக்கோர்வைகள் தயாரிப்பதிலும் வல்லவர். வ ய லின் வாசிப்பதி லுள்ள திறமை போலவே நன்றாகப்பாடுவார்.
அக்காலத்தில் மார் கழித் திருவெம்பாவைக் காலத்தில் திருவெம்பாவைப் பாடல்கள் அனைத்தையும் தனித் தனி இராகங்களில் அழகாகப்பாடுவார். இவர் அ தி க ம |ாக இசைவேளாளர்களுடன் தான் நட்பு வைத்துக் கொள்ளுவார். இவரின் அபிமானத்திற் குரியவர்களில் ஒருவர் தற்போது ஈழத்து பிரபல நாதஸ்வரவித்துவான் கலாதரி என். கே. பத்மநாதன் அவர்கள் ஆவர்.
சர்மா அவர்கள் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் இசையாசிரியராகச் சிலகாலம் கடமை புரிந் துள்ளார். பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் நிலைய வயலின் வித்துவானாகவும் கடமைபுரிந்துள்ளார். அந்நேரத்தில் அவர் பல பாடல் களை இயற்றி, இசையமைத்து தானே வயலின் வாசித்தும் பலரின் பாராட்டுதல்களையும் பெற் றார். இவருடைய வயலின் பேசும், பாடும், இசைக் கும் என்றால் மிகையாகாது, இவருடைய வயலின் இசை பற்றிக் குறிப்பிடும் போது மிகவும் அழுத்த மானதும், நுட்பமானதும் ரஞ் சக ம் நிறைந்த பாணியைஉடையதும்என்பர். மேலும் இராகவாசிப்பு ஜீவனுடையது எனலாம். இதனாலேயே இவருடைய வயலினைப் பக்கவாத்தியமாக தமக்குப் பங்களிக்க வேண்டும் எனப் பல பாடகர்கள் விரும்பினர், பாடகர்களை எந்த விதத்திலும் சோர்வுற விடாத ஒத்துழைப்பு நிறைந்த சுருதிலய சுத்தமான வாசிப்பு இவருடையது எனலாம்.
இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் வயலின் இசையால் புகழீட்டிய இவர் 1973இல் தனது 50ஆவது வயதில் இசைக்கு வளம் சேர்த்த மேதை கலையுலகை விட்டு நாதப் பிரம் மத்தோடு ஒன்றினார். எனினும் அமரர் வைத்திய நாதசர்மா அவர்களின் இசைக்கலையை இவருடைய பிள்ளைகள் தொடரவில்லை.
சங்கீதத்தைப் பக்திமார்க்கத்தில் நடத்தினால் தான் நல்லது. பக்தியில்லாத சங்கீதத்தால் பிரயோசன மில்லை. பக்தியில்லாத சங்கீதம் நன்றாயிருந்தாலும் அது ஜிலேபி சாப்பிடுகிறமாதிரி! நல்ல இனிப்பா யிருக்கிறது என்று நிறையச் சாப்பிட்டுவிடலாம். அது வாய்க்கு ருசி, ஆனால் உடம்பு கெட்டுப்போகும். அதேபோல் பக்தியில் லா த சங்கீதம் பிரயோசன மில்லை.
நன்றி : தமிழ்நேசன் 1960
காச்சிமார்கோவிலடி வி. அம்பலவாணர் மிருதங்கம் 1927 - 1981
மிருதங்கம் அம்பலவாணர் அவர்கள் வினா கானபுரம் என்னும் யாழ்ப்பாணத்தின் வண்ணார் பண்ணை நாச்சிமார் கோவிலடியில் பொற்தொழில் செய்வோர் மரபில் (விஸ்வப் பிரம்ம குலத்தில்) 11-10-1927இல் வேலுப்பிள்ளைப் பத்தர், செல்லம்மா தம்பதிகளுக்குப் புத்திரராகப் பிறந்தார். இவருடன் உடன் பிறந்தவர்கள் மூவர். அவர்களுள் ஒருவர் கணேசு என்பவராவர். மற்றைய இருவரும் பெண்க,
அம்பலவாணர் அவர்கள் சிறுபராயத்தில் யாழ் இந்துக் கலவன் பாடசாலையில் கல்வி பயின்றார். கல்வி பயிலும் காலத்தே தமது மரபுத் தொழிலா கிய பொன்னாபரணம் தயாரிக்கும் தொழிலையும் திறம்படச் செய்து வந்தார். இக்காலத்தில் இவர் தந்தையார் காலமானார். அப்போது வாணர் அவர்களுக்கு வயது 11ஆக இருந்தது. இவருக்கு குடும்பப் பொறுப்பு ஏற்படவும் தனது பொன்னா பரணம் தயாரிக்கும் தொழிலின் உதவியால் ஓரளவு சமாளித்துக் கொண்டார். இவர் வாழ்ந்த சூழல் இசை ரசிக ஞானமுடையதாக இருந்தமையினால் வாணர் அவர்கள் மிருதங்க இசையில் நாட்டம் கொண்டவராய் ஆவரங்கால் பொன்னுச்சாமி என் பவரிடம் தனது 20ஆவது வயதில் மிருதங்கக் கல்வியை ஆரம்பித்துப் பயின்றார்.
தொடர்ந்து யாழ். வண்ணையில் மிருதங்க வித்துவானாகவும், மிருதங்கம் தயார் செய்யும் வேலையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய நாட்டுக் கலை ஞர் கோவிந்தபிள்ளை அவர்களிடமும் மிருதங்கம் பயின்றார். அதன் பின்னர் பல்லிய வித்வான் சுப்பையாபிள்ளை அவர்களிடமும் மிருதங்கம் பயின்றார்.
இவருடைய வார்த்தையின் இங்கிதங்கள் யாவ ருடனும் நல்லெண்ண உறவுகளை ஏற்படுத்தியது. தனது கலையையும் சிறிது சிறிதாக விருத்தி செய்தார். யாழ்ப்பாணத்தில் சில பாடகர்களுக்கு மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தார். மேலும் 1949ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்திற்கு நாட்டியக்கலைக் கூடத்திற்கு மிருதங்க ஆசிரியராக வந்த சிதம்பரம் ஏ. எஸ். ராமநாதன் அவர்களிடமும் மிருதங் கத்தை ஐயம் திரிபறக் கற்றார்.
இவருடைய குரு பக்தி, நற்பண்புகள், இறையருள், குருவருள் என்பன இவரை மிருதங்கக் கலையில் ஓர் உன்னத நிலை எய்தும் அளவுக்கு ஆக்கியது. இவருடைய மிருதங்க வாசிப்பு எப்போதும் நல்லமாதிரியாக அமையும். டேகாக்கள், தொப்பிசுகம், சர்வலகு என்பன ஜன ரஞ்சகமானவை. இவருடைய மிருதங்க வாசிப்பு பாட்டுக்களுக்கு மிக மிகப் பொருத்தமானது என்றே கூறலாம். பாடல்களைக் குறைவில்லாத அளவுக்கு மெருகூட்டக் கூடிய வாசிப்பு. அதாவது "சொக சுகா மிருதங்க தாளம்’ என்ற அளவிற்கு இவர் சேவையிருந்தது. இவ் வாசிப்பு எல்லோரையும் மிகவும் கவர்ந்தது. வலந்தரை, தொப்பி என்பவற் றின் சமநிலை போற்றக்கூடிய ஓர் விடயமாக அமைந்தது.
கச்சேரிகளுக்கு சிலவேளைகளில் குறிப்பிட்ட பக்க வாத்தியக்காரர்கள் வர இயலாத சந்தர்ப்பங் களில் பாடகர்களோ அல்லது இசையரங்கு ஏற் பாடு செய்தவர்களோ கேட்டால் எவ்வித மறுப்பு மின்றி மிருதங்கம் வாசித்துக் கச்சேரியை நிறைவு செய்யும் நற்பண்புடையவர். எந்த ஒரு மிருதங்க வித்துவானுக்கும் மிருதங்கம், குறிப்பிட்ட தேவைக்கு இரவல் கேட்டாற் கூட நல்ல மனத்துடன் வாத்தி யம் தந்து உதவுவார். கலை சம்பந்தமான விட யங்களில் மற்றைய கலைஞர்களுடன் இசைந்து செயற்படும் தன்மையுடையவர். இசைபற்றி ஏதா வது ஆலோசனைகள் முன் வைத்தால் ‘* கலந்து பகிர்ந்து செய்வோம் ' என்னும் வார்த்தையைக் கூறி யாவரையும் அனைத்துக் கொள்வார். வித் தைச் செருக்கு இல்லாத இன்மொழி பேசும் இசைக் கலைஞர்.
அம்பலவாணர் அவர்கள் தனது 26ஆவது வய தில் 1953இல் தமதுரரவரான இராமசாமிப் பத்தா அவர்களின் மகளான காமாட்சி என்பவரைத் திரு மணம் முடித்து இல்லறம் நடத்தினார். இவருக்கு
நான்கு ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் கலைப் பயிர்களாகப் பிறந்தார்கள்.
இவர்கள் யாவரும் கல்லூரிப் படிப்புடன், இசைக் கல்வி யும் பயின்றனர். அவர்களுள் மூத்த மகன் ரகு நாதன் சிறந்த மிருதங்க வித்துவனாகக் கலைச் சேவை புரிகிறார். 2ஆவது மகன் ஜெயராமன் அவர்கள் வயலின் வித் துவ n னா க கலைச் சேவையை யாழ்ப்பாணத்தில் செய்கிறார். பூரீ நிவா சன் மிருதங்கம், கடம், முகர்சிங் போன்ற வாத் தியங்களினூடாக இலண்டன் சரஸ்வதி இசைக் கல்லூரியில் இசை பரப்பிக் கொண்டிருக்கிறார். பெண்கள் இருவரும் இராமச்சந்திரன் என்ற புதல் வரும் வாய்ப்பாட்டுக்கலையை நன்கு விருத் தி செய்து கொண்டு தமக்கென மாணவர்களையும் உருவாக்கிக் கொண்டிகின்றார்கள். இது வாணர் அவர்கள் செய்த நற்றவப் பயன் என்று கூறலாம்.
அம்பலவாணர் அவர்கள் யாழ்ப்பாணம் கே. கே. எஸ். விதியில் எம். கே. தியாகராஜபாக வதர் ஞாபகார்த்தமாக இசை விழாவை பல ஆண்டு கள் முன்னின்று நடத்தியதுடன், ஈழத்தின் தலை சிறந்த இசை விற்பன்னர் யாவர்களினதும் கச் சேரிகளுக்கும் மிருதங்கம் வாசித்துள்ளார். குறிப் பாக 1969ஆம் ஆண்டு ஈழம் வருகை தந்த இந்தி யத் தமிழ்நாட்டு வித்வான் கடைய நல் லூ ர் மஜீத் அவர்களின் திருப்புகழ் இ ைச ய ர ங் கு களிற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல இடங் களிலும் மிருதங்கம் வாசித்துப் பெரும் புகழ் பெற் றார். வாணர் அவர்களுடன் அ னே க ம பா க யாழ்ப்பாணம் பிரம்மபூரீ எஸ். சர்வேஸ்வர சர்மா அவர்களே வயலின் வாசித்துள்ளார்.
திரு. அம்பலவாணர் இலங்கை வானொலிக் கலைஞராகவும் சேவை புரிந்துள்ளார். மேலும் யாழ். ரசிக ரஞ் சன சபாவில் 28 ஆண்டுகள் மிருதங்க ஆசிரிய ராகப் பணி புரிந்தும், தனது வீட்டில் வகுப்புக்கள் நடத்தியும் பல மிருதங்க மாணவர்களைத் தயார் செய்து இசைக்கலைச் சேவை புரிந்துள்ளார். இவர்களில் மாணவர் பரம்பரையினருள் குறிப் பிடும் படியாக இவருடைய மகன் ரகுநாதன் அவர் களைக் கூறலாம். மற்றும் இவருடைய மாணவர்கள் பலர் இன்றும் வாணர் அவர்களின் மிருதங்க இசைப் பரம்பரையை உருவாக்கி வருகிறார்கள்.
மிருதங்க இசைக் கலையை ஈழத்திற்கு வழங்கு வதற்குப் பணியாற்றிய அம்பலவாணர் அவர்கள் மார்பு நோயினால் மிருதங்க வாத்திய வாசிப்பி லிருந்து ஓய்வு பெற்று, பொதுநலத் தொண்டு களில் ஈடுபட்டு உழைத்தார். காமாட்சி அம்பாள் தேவஸ்தான ப ரி பா லன சபையில் பங்கேற்று சேவை புரிந்த நம் கலைஞர் 19-07-1981 அன்று தனது கலை வாழ்வை விடுத்து நிலையுலக வாழ் விற்குச் சென்றார். அமரருடைய இசைச் சேவை யானது இவருடைய வாரிசுகள் ஊடாக தொடரு கிறது என்பதில் ஐயமில்லை.
இணுவில் என். ஆர். கோவிந்தசாமி நாதஸ்வரம் 1927 - 1988)
ஈழநாட்டின் வீணாகானபுரம் என்று அழைக் கப்படும் யாழ்ப்பாணத்தில் இசைக் க ைல ளு ர் தழ்ந்த இணுவில் எனும் ஊரில் மங்கள இசைமரபு பேணி வந்த திருமக்கோட்டை இரத்தினம், பாக்கியம் தம்பதிகளுக்கு 18-09-1927இல் பிறந்தவர் தான் என். ஆர். கோவிந்தசாமி அவர்கள். இவர் சிறு பராயத்தில் இணுவில் சைவப்பிரகாச வித்தியா சாலையில் கல்விபயின்றார். இவர் பாடசாலைக் கல்வியிலும் பார்க்க இசைக்கலையில் கூடிய ஆர்வ முள்ளவராய் இந்திய நாடு சென்று தமிழ் நாடு தருமபுரம் நாதஸ்வரவித்துவான் அபிராமம் சுந்தரம் பிள்ளையிடம், முறையே நாதஸ்வர இசையைப் பயின்றார். திரு. கோவிந்தசாமி இ ைச யி ைன ஆர்வமாகப் பயின்று வந்தது மட்டுமன்றி பயின்ற வற்றை நன்கு சாதகம் செய்து சிறப்பாக இசை வழங்கியும் வந்துள்ளார். இவர் நாதஸ்வர இசை பயிலும் காலத்திலே தனது குருமாருடன் அவ்வூர் தேவஸ்தானங்களில் பூஜாகாலங்களின் தேவைக் கேற்ப நாதஸ்வர சேவை செய்ததும் உண்டு.
இணுவை திரு. என். கே. ஜி. உ ய ர மா ன எடுப்பான தோற்றமுடையவர். பொதுமக்களுடன் அன்பாகப் பழகும் சுபாவமுடையவர். கோவிந்தசாமி அவர்களுடன் பிறந்தவர்களுள் இணுவை என். ஆர். சின்னராஜா அவர்கள் தலை சிறந்த தவில் கலை ஞர். திரு. என். ஆர். சந்தானகிருஷ்ணன் என்பவர் சிறந்த நாதஸ்வர் இ ைசக் கலைஞராக இசைச் சேவை புரிகிறார்.
திரு. கோவிந்தசாமி அவர்கள் இந்துக் கோவில் களிலும், இந்துக்களின் சடங்குகளிலும் சம்பிரதாய மரபுகளைப் பின் பற்றி ஈழத்தில் இசைமரபுவளர்த் தவர். இவருடைய நாதஸ்வர இசையானது இராக விஸ்தாரம் நிறைந்ததாகவும், சுருதிலய சுத்தமான தாகவும், நிறைந்த சங்கதிகள், பிர்காக்கள் அடங்கியதாகவும், இரசிகர்களை உற்சாக மூட்டக் கூடிய வகையிலும் அமைந்திருக்கும்.
பெரும்பாலும் தோடி, கல்யாணி, சங்கராபரணம், சகானா, போன்ற இராகங்களையே இராக ஆலாபனைக்கு எடுத்து நீண்டநேரம் வாசிப்பார். இராகத்தைத்தொடர்ந்து வரும் கீர்த்தனைகளை துரிதகாலத்திலேயே பெரும் பாலும் வாசிக்கும் தன்மையுடையவர். கச்சேரி ஆரம்பித்தால் தன்னைமறந்து தொடர்ந்து வாசிக்கும் இயல்புடையவர். இவருடைய நாதஸ்வரச் சிறப்புப் பற்றி கொழும்பில் நடந்த ஆடிவேல் விழாவில் இவர் நன்கு பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திரு. கோவிந்தசாமி தன்னுடன் இந்திய நாதஸ் வர விற்பன்னர்களையும், தனது சகோதரர் சந்தா னம், மைத்துனர் திருகோண மலை கணேசன் போன்றவர்களையும் தனக்குத்துணை நாதஸ்வர மாக அமர்த்திவாசித்து வந்துள்ளார். இவருக்குத் தவில் வாசிப்பதற்கென இந்திய இலுப்பூர் நல்லகுமார் என்பவரை அழைத்து வைத்திருந்தார். மேலும் யாழ்ப்பாணத்து சிறப்புமிகு தவில் வித்துவான் களான தட்சணாமூர்த்தி, தனது சகோதரர் சின்ன ராஜா, நாச்சிமார்கோவிலடி க னே ச பிள்ளை, ஆகியோரை 1963 ஆம் ஆண்டுவரை சிறப்புத்தவில் களாக இணைத்து இசையைச்சிறப்புற வழங்கியும், பிற்காலத்தில் கொழும்பு பெரியசாமி, விராச்சாமி ஆகியோர்களை தவில் வாசிக்கும் பொருட்டுச் சேர்த்து நிகழ்ச்சிகள் பலவும் நடாத்திவந்துள்ளார்.
திரு. என். கே. ஜி. அவர்கள் மாவை மாணிக்க வேலு தம்பதிகளின் புதல்வியான தனபாக்கியம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இதன் பயனாக வசந்தகுமார், இரத்தினகுமார், உதயகுமார் வாகீஸ்வரன், என்னும் புதல்வர்களுக்கு தந்தையா னார். இவர்களும் இன்று நாதஸ்வர இசைப்பணி யில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவிந்தசாமியின் மங்கள இசையானது தீவகப்பகுதியில் இடம் பெறாத இடமே இல்லை எனலாம்.
இணுவை என். கே. ஜிக்குவழங்கப்பட்ட விருது களும், சிறப்புப் பட்டங்களும் பலவாகும். நாதஸ்வர இசையால் பக்தி இசைப்பணிபுரிந்த வித்துவான் அவர்கள் தளர்ந்த நிலையில் அவர் ஆற்றிய கலைப் பணிக்காக இவருக்கு உடுவில் பூரீசிவஞானப்பிள்ளை யார் ஆதீனச் ‘* சிவஞானவாரியம் ‘’ ‘* லயநாத வாரிதி ' என்னும் சிறப்புப்பட்டமளித்து கெளர வித்தது.
ஈழத்தின் பல பாகங்களிலும் மங்கள இசை பரப்பிய நாதஸ்வர மேதை கோவிந்தசாமி அவர்கள் 08-02 - 1988இல் தனது 61ஆவது வயதில் இவ் வுலகினின்றும் முருகன் திருவடி சென்றடைந்தார். இவருக்கென நாதஸ்வர இசைவாரிசு என்ற வகை யில் இவர் புத்திரர்களாகிய வாரிசுகளை விட வேறெவரும் இல் ைல என ப் படுகிறது. அமரர் கோவிந்தசாமி அவர்களின் இசைச்சேவை அளப்பரி யது, பாரம்பரியமானது என்பதில் ஐயமில்லை.
" சிறு விஷயங்களை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது ' பரந்தமனம் வேண்டும். இளம் வித்துவான்களுக்கு ஊக்கம் தரவேண்டும், குருநாதர் என்பவர் இப்படி இருந்தால் - அவர் இசை உலகின் சக்கரவர்த்தி தான்.
ஜேசுதாஸ் நன்றி : மணியன்
யாழ்ப்பாணம்
ரி. இரத்தினம் மிருதங்கம்
1932 - 1995
மிருதங்கக்கலைஞர் தம்பாபிள்ளை இரத்தினம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை என்னும் ஊரிலே 05-02 - 1932 இல் தம்பாபிள்ளை எலிசபெத் தம்பதிகளுக்கு புதல்வராகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் இரத்தினசிங்கம் என்ப தாகும். இவருடன் பிறந்த சகோதரர்கள் பூபால சிங்கம், ஜெயரத்தினசிங்கம் ஆகியோராவர். இவர் களும் வாத்தியக்கலைகளில் ஈடுபாடு உடையவர் கள். இரத்தினம் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை நாவாந்துறை ரோ. க. த. வித்தியாலயத்தில் பயின் றார். இவருக்கு கல்வியில் நாட்டம் குறைவாக இருந்தகாரணத்தினால் கல்லூரிப்படிப்பை நிறுத்திக் கொண்டு, தனது தந்தையார் வழியிலேயே மிருதங்க இசைக்கலைபயில ஆர்வம் கொண்டவராய்த் தன் தந்தையாரைப்பின் பற்றி மிருதங்கம் வாசிக்க ஆரம் பித்தார். எனினும் அவருக்கு அக்காலத்தில் காவடி, நாடகம், சின்னமேளம், பஜனை போன்ற நிகழ்ச்சி களுக்கே வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் மூலமாக இவருக்கு நிறைய வருவாயும் கிடைத்தது எனலாம்.
திரு. இரத்தினம் அவர்கள் மேற்கூறிய நிகழ்ச்சி களுக்கு வாசிப்பதை விரும்பாத இவருடைய தந்தை யார் (கோடையிடிதம்பாபிள்ளை) இவரை அக்காலத்து வயலின் வித்துவான் மலைக்கோட்டை கோவிந்தசாமிப்பிள்ளை அவர்களது அனுசரணையுடன் இந்தியாவுக்கு அனுப்பிச் சிலகாலம் வாய்ப் பாட்டு இசையையும் கற்பித்தார். தொடர் ந் து மிருதங்க இசையையும் கர்நாடகப்பாணியில் பயில வேண்டும் என்னும் நோக்கத்துடன் தஞ்சைகுற்றாலம் சிவவடிவேற்பிள்ளை யவர்களுடைய குரு குலத்தில் கற்கக்கூடிய ஏற்பாடுகளைச் செய்வித்தார். இந்நிலையில் இரத்தினம் அவர்கள் இக்கலையைப் பொறுமையுடன் கற்றுக்கொண்டும், விடு மு ைற காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டும் மிருதங்க இசைக்கு வளம் சேர்த்தார். சம காலத்தில் யாழ்ப்பாணம் சண்முகம்பிள்ளை புதுக்கோட்டை ம க ரா தே வ ன், தஞ்சாவூர் நாக ராஜன்,தஞ்சாவூர் பூரீநிவாசன், குற்றாலம் விஸ்வ நாதஐயர் போன்ற இசைச்கலைஞர்களும் இரத்தினம் அவர்களுடன் இதேகுருகுலத்தில் மிருதங்கம் பயின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஈழம் திரும்பிய, நம் கலைஞர் இரத்தினம் அவர் களுடைய மிருதங்க அரங்கேற்றம் யாழ்ப்பாண நகரசபை மண்டபத்தில் 1951 ஆம் ஆண்டு இசைப் புலவர் சண்முகரத்தினம் அவர்களுடைய வாய்ப் பாட்டு இசையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த அரங்கேற்றத்தைத் தொடர்ந்து இவர் கர்நாடக இசைப்பாணியில் மிருதங்கத்தை வாசிக்கத் தொடங் கினார். இது இவருடைய இசைக்கலையின் திருப்பு முனை எனலாம். தொடர்ந்தும் பல இசையரங்கு களிலும் மிருதங்கம் வாசித்து வரலானார்.
இசையரங்கு என்றவகையில் பரதநாட்டிய நிகழ்வுகளுக்கு இவர் சிறப்பாக வாசிக்க ஆரம்பித்தார். இவருடைய மிருதங்க வாத்திய வித்துவத் திறமை யினால் இலங்கை வானொலியில் 1952ஆம் ஆண்டு இவருக்கு நிலையவித்துவான் நியமனமும் கிடைத்தது.
திரு. இரத்தினம் அவர்களுடன் சமகாலத்தில் நிலையக் கலைஞர்களாக வயலின் வித்துவான் வி. கே. குமாரசாமி, வாய்ப்பாட்டு கலைஞர் ஜோன் பிள்ளை போன்றவர்களும் கடமைபுரிந்துள்ளார் கள். வானொலி மூலம் இவருக்கு மிருதங்கக்கலை யில் பல வழிகளிலும் முன்னேற்றம் கிடைத்தது. இக்காலத்திலே தான் தம் பித்து ைர எ ன் பவரின் மகளான வன்னமணி என்பவரைத் திரு. இரத்தினம் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையும் நான்கு பெண்களும் வாரிசுகளாக கிடைத்தனர். 1965 களில் இவர் கே. பி. நவமணி என்பவரையும் தம் வாழ்க்கையில் வரித்துக்கொண் டார். இவருக்கு மக்கள் இருவர். இவர்களில் இரத்தின துரை என்பவர் இலங்கை வானொலியில் பல் லிசை வாத்தியக்குழுக் கலைஞராக நிகழ்ச்சிவழங்கி வருகின்றார். மற்றவர் இரத்தினதேவ் கொழும்பு சென். ஜோசப் கல்லூரியில் மிருதங்க ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவருடைய மகளைத் திருமணம் செய்து கொண்ட இராஜசிங்கம் என்பவர் மிருதங்கக் கலையை இரத்தினம் அவர்களிடத்திலேயே ஆரம் பித்து தற்போது மிருதங்க இசையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திரு. இரத்தினத்தினுடைய மிருதங்க வாசிப் பானது தனித்துவமுடையது எனலாம்.
இவருடைய மிருதங்க வாசிப்பில் பரண்களின் சுருதிசுத்தமும், அதிதுரிதகாலமுடையது, பக்கவாத்தியம் வாசிக் கும் வேளையில் மத்திமகால உருப்படிக்கு இடை யிடையே மேற்காலடேகாக்களை வாசித்துப் பாட கரை உற்சாகப்படுத்தும் தன்மை இவருக்கே தனி. அதிலும் பரதநாட்டிய இசை அரங்குகளில் இவருடைய மிருதங்கவாசிப்பு அதிசிறப்பு அம்சம் பொருந்திய தாகும். நட்டுவாங்கம், நாட்டிய வெளிப்பாடு போன்ற வற்றிற்கு ஈடுகொடுக்கு மளவுக்கு இவரின் வாசிப் பானது ஜதிகளை, பொருத்தமான இடத்தில் பொருத் தமான காலத்தில் வாசித்து மேடையிலுள்ளவர் களையும் ரசிகர்களையும் உற்சாகப் படுத்தும் தன்மையது.
ஈழத்தின் தென்பகுதியில் ‘* நாட்டியத்திற்கு மிருதங்கம் இசைப்பவர் இரத்தினம் அவர்களே ' என்ற அளவில் அநேக நிகழ்ச்சிகளில் மிருதங்கம் வாசித்து கலைஞர்களையும் தன்னையும் பெருமைப் படுத்தியவர். திரு. இரத்தினம் மேடை நிகழ்ச்சி களுடன் இலங்கைவானொலி, ரூபவாஹினி, ஆகிய நிலையங்களிலும் சிறப்புக்கலைஞராக தனிநிகழ்ச்சி கள் வழங்கியும், உள்நாட்டு, வெளிநாட்டுக்கலை ஞர்களுக்குப் பக்கவாத்தியம் வாசித்தும் பாராட்டுப் பெற்றவர். வடஇலங்கை சங்கீத சபைப் பரீட்சை களுக்கும், நிலைய இசைக்கலைஞர் தேர்வுகளுக்கு பரீட்சகராகவும், சிலவருடங்கள் தேர்வாளராக வும் இக்கலைஞர் கடமைபுரிந்துள்ளார். சிறந்த கலைச்சேவையின் காரணமாக இலங்கை அரசாங் கத்தினால் இவருக்கு ‘* கலாதரி ' என்னும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. மிருதங்க இசைக்கலைக்கு கிடைத்த ஒரு பெருமை என்றே கூறலாம். இவர்
இலங்கையில் மட்டுமின்றி ஜேர்மனி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்று அநேக நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட கலைஞருமாவார்.
கலாதரி இரத்தினம் அவர்கள் தனது வாழ் நாளில் தன்நிகரற்ற கலைஞனாக இசைச்சேவை புரிந்து, கே. கே. அச்சுதன், எம். கந்தசாமி, எம். விக்கிரமன், பிரமநாயகம், ஈஸ்வரசங்கர், போன்ற வர்களை மிருதங்கம், கடம், கஞ்சிரா போன்ற லய வாத்தியங்களில் சிறப்பாகப் பயிற்சியளித்து உரு வாக்கியுள்ளார். தனது பிற்காலத்தில் மிருதங்கம் பற்றிய தொழில் நுட்பத்தை ஆராய்ந்தும் இசைக் கருவிகளைச் சீர்படுத்தும் தொழிலில் ஈடுபட்டும் வந்தார். தோல்வாத்தியங்கள் தொடர்பான முறை கள் பற்றி இலங்கைத்தொலைக் காட்சியில் பேட்டி நிகழ்ச்சி வழங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்க தாகும்.
சிறப்பான இசைச்சேவைகள் புரிந்த கலாதரி இரத்தினம் அவர்கள் மிக அண்மையில் அதாவது 08-02 - 1995 இல் தனது 63 ஆவது வயதில் கலை யுலக வாழ்வை நீத்து அவ்வுலகமாம் நிலையுலகம் சென்று விட்டார். எனினும் அன்னாருடைய கலைச் சேவை இவருடைய இசை வாரிசுகள் மூலமாக பின்னே வரக்கூடிய இசைச் சந்ததி யின ருக்கு ம் கிடைக்கக் கூடியதாகவுள்ளது என்றால் மிகை யாகாது.
அளவெட்டி வி. தட்சணாமூர்த்தி தவில் 1933 - 1975)
ஈழ நாட்டில் யாழ்ப் பாணத்து இணுவில் என்னும் ஊரிலே பிரபல தவில் வித்துவான் விஸ்வ லிங்கம், இரத்தினம் தம்பதியினருக்கு புத்திரராக 26-08-1933இல் பிறந்த திரு. தட்சணாமூர்த்தி அவர் களுக்கு பெற்றோர் ஞானபண்டிதன் என்ற பெய ரையே முதலில் வைத்தார்கள். பின்னர் இவரை தட்சணாமூர்த்தி என்று அழைக்க ஆரம்பித்தனர். இப் பெயர்தான் இவரைக் கலைவாழ்வில் நன்கு பிரதிபலிக்கச் செய்தது.
இவர் தனது ஆறாவது வயதில் தந்தையா ரிடம் தவிற் பயிற்சியை ஆரம்பித்து, யாழ்ப்பாணத்து வண்ணை காமாட்சிசுந்தரம் என்பவரிடம் விரி வாகவும் நுணுக்கமாகவும் பயின்று சிலகாலத்தில் அரங்குகளில் வாசித்தும் வரலானார். இவருடன் சகோதரர்களான உருத்திராபதி, கோதண்டபாணி, ஆகியோர் நாதஸ்வரம் வாசித்து வந்தார்கள். சிறுவயதிலேயே தட்சணாமூர்த்தியவர்களின் தவில் வாசிப்பு யாவரும் பிரமிக்கும் படியானதாகவும், நாதசுகமுள்ளதாகவும், லய வேலைப் பா டு கள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது.
இது மட்டுமன்றி இந்தியப் பெருங்கலைஞரான நாச்சியார் கோவில் ராகவப்பிள்ளையிடம் மேலும் லய சம்பந்தமான நுணுக்கங்களைப் பயின்று, அவருடனும் சேர்ந்து தவில் வாசிக்கும் பேற்றைப் பெற்றார். தொடர்ந்து இந்திய நாதஸ்வர வித்துவான்களான காரைக் குறிச்சி அருணாசலம், ஷேக் சின்னமெளலானா , நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், ரி. என். ராஜரத் தினம்பிள்ளை போன்றவர்களுக்கு அனேக கச்சேரி களில் வாசித்து பாராட்டுக்களையும், தங்கப்பதக் கங்களையும் பெற்றார். ஈ ழ த் தி லு ம் இவருக்கு நரதஸ்வரம் வாசித்து திருநாவுக்கரசு, பி. எஸ். ஆறு முகம், சாவகச்சேரி எம். பஞ்சாபிகேசன் ஆகி யோரும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
இந்தியாவில் அநேக கச்சேரிகளில் நீடா மங்கலம் சண்முகவடிவேல் அவர்களுடனும் சேர்ந்து தவில் வாசித்த இவர்களின் இரு தவில் நாதங்களும் வாசிப்புக்களில் வித்தியாசம் தெரிந்துகொள்ள முடியாத அளவிற்கு பிரமிக்கக் கூடியதாக வாசித் துள்ளார்கள். இந்த நிகழ்ச்சி ஒலிப்பதிவுகள் சில இன்றும் உண்டு. கலைஞர் தட்சணாமூர்த்தியின் திருமணம் 1957ஆம் ஆண்டு நடைபெற்றது. இவ ருடைய மனைவி செல்லத்துரையின் புதல்வியான மனோன்மணி என்பவராவர், இவருக்கு பிள்ளை களாய் வாய்த்த வர் கள் ஐவர். இவர்களுள் இருவர் தவில் பயின்றார்கள். இவர்களில் உதயசங்கர் என்பவர் தந்தை வழியிலேயே தவிற் கலையில் ஈடுபாடு கொண்டு பயின்று தற்பொழுது தவில் வாசிப்பில் முன்னணிக் கலைஞராக விளங்கி வருபவர்.
மற்றவர் ஞானசங்கர். இவ்வகையில் பிரபல்யம் வாய்ந்த இவர்களின் தவில் தனிவினிக்கையை கேட்பதற்காக என்றே அநேக ரசிகர்கள் எங்கே தட்சணாமூர்த்தி அவர்களுடைய நிகழ்ச்சி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் சென்று o docyuntios67.
இந்தியாவிலே தவில் தனிவினிக்கை நேரங் களில் தான் சங்கீத ரசிகர் கூட்டம் வெளியே ஒய்வெடுப்பது வழக்கமாய் இருந்தது. ஆனால் தட்சணாமூர்த்தி அவர்களின் வாசிப்புச் சிறப்பால் ரசிகர் கூட்டம் வெளியே செல்லாமல் கண்டிப்பாக தனிவினிக்கை கேட்க வேண்டும் என்ற நிலைக்கு மாறி வந்துள்ளது. இது அவருடைய நாதப் பிரம் மத்தி ன தும், வித்துவத்தினதும் சக்தியேயாகும். மேலும் 1969ஆம் ஆண்டு சென்னை கிருஷ்ணகான சபாவில் நடைபெற்ற நா த ஸ் வர விற்பன்னர் ஷேக் சின் ன மெளலா னா அவர்களின் கச் சேரியில் தவில் வாசித்து இந்திய சங்கீத விமர் சகரான சுப்புடு அவர்களின் பாராட்டையும் இவர் பெற்றார். இ வ. ரு க்கு சென்னையில் தங் க க் கோபுரம் பரிசாகக் கிடைத்தது. அத்துடன் இவரின் தவில் வாசிப்பினை கலாரசிகர்கள் எவரெஸ்ற், ரொக்கட் எனவும் வியந்து பாரட்டியுள்ளனர்.
லயஞானத்தில் சிறந்த நம் தட்சணாமூர்த்தி அவர்களுக்கு இந்திய நாதஸ்வரச் சக்ரவர்த்தியான திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு விழாவில் கருர் என்னுமிடத்தில் தங்கத் தாலாய தவிற் கேடயம் 12-12 - 1968இல் வழங்கப்பெற்றது.
இவர் தனது வாழ்நாட்களில்பின்பகுதியை இந்தியாவிலேயே செலவிட்டு கலைத்தொண்டு ஆற்றி ஈழத்துக்குப் பெ ரு மை சேர்த்தார். எழுபதுகளில் மீண்டும் இலங்கை வந்து நம் நாட்டில்தவில் இசை பரப் பிய தவில் மேதை 13-3 - 1975அன்று நா தப்பிரம்மத் தோடு ஒன்றி, கலையுலக வாழ்வை நீத்துக்கொண் டார். இவரது தவில் வாசிப்பின் பெருமையினால் யாழ்ப்பாணம் இன்றும், இந்தியாவின் கலைப்பாரம் பரியத்தையே மிஞ்சுமளவுக்கு பெருமை கொண்டு விட்டது என்று பேசப்படுகிறது. சென்ற இடங்களில் எல்லாம், தன்னேரில்லாத் தன் தவில்வாசிப்பினால் கலையுலகை வியக்கச் செய்த நம்கலைஞருக்கு அனேகபட்டங்களும், விருதுகளும் கிடைத்தன. * லயஞான குபேரபூபதி ' என்றபட்டம் அவற்று ளெல்லாம் சிறப்பானது. அது அவருக்கே தகுந்தது.
வயலின் லால்குடி ஜெயராம்ன் அவர்கள் ஒருமுறை புல்லாங்குழல் மாலியிடம், "இப்படி கச்சேரிகளை அடிக்கடிரத்துச் செய்து விடுகிறீர்களே, கச்சேரி செய்ய முடியாது என்றால் ஏன் ஒப்புக் கொள்கிறீர்கள்? என்று கேட்டாராம். அதற்கு அவர் ஒப்புக் கொள்ளா விட்டால் எப்படி ரத்துச் செய்ய முடியும் ? " என்று ஜோக் அடித்தாராம்.
இணுவில் விவகாரவித்வமணி என். ஆர். சின்னராஜா தவில் 1934-1991
யாழ்ப்பாணம் என்றராலே லய ஞானமுடைய ரசிகர்கள் என்று தமிழ் நாட்டில் வியந்து கூறக் கூடிய அளவில் தவில் நாதம் பரப்பிக் கலை உலக வரலாற்றில் ஈழத்திற்குப் பெயர் தேடித் தந்த முதிர்ந்த தவில் கலைஞர்களுள் ஒருவர் என். ஆர். சின்னராஜா அவர்கள். யாழ்ப்பாணத்தின் மத்தியிலுள்ள இணுவில் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பாரத நாட்டின் தஞ்சை மாவட்டத்து திருமக்கோட்டை என்னும் கிராமத்தைச் சேர்ந்த என். இரத்தினம் என்னும் இசைக் கலைஞருக்கும் ஈழத்தின் தீவகப்பகுதிகளுள் ஒன்றான புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்ட பாக்கியம் என்பவருக்கும் புதல்வராக 24-03- 1934ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடன் ஆண் சகோதரர்கள் இருவரும், ஆறு பெண் சகோதரிகளும் பிறந்தார்கள். இவருடைய சகோதரர்களான இருவர் நாதஸ்வரக் கலைஞர்கள். ஒருவர் மறைந்த என். ஆர். கோவிந்த சாமி, மற்றவர் என். ஆர். கந்தானம் என்பவர்.
திரு. சின்னராஜா அவர்கள் தனது பள்ளிப் படிப்பை ஆரம்பத்தில் இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலையிலும், பின்னார் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் பயின்றார். இதே காலத்தில் தனது பாரம்பரியமான தவிற்கல்விப் பயிற்சியை அக்காலத்து நாதஸ்வர விற்பன்னர் சித்தங்கேணி மீனாட்சி சுந்தரன் அவர்களிடத்தில் ஆரம்பித்துப் பயின்றார். தொடர்ந்து இணுவிலில் வாழ் ந் து வந்த பிர பல த வி ல் வித்துவான் சின்னத்தம்பி அவர்களிடம் இக் கலையை நுணுக்க மாகவும் விரிவாகவும் பயின்றார். தனது இயற் கையான ஞானக் கொடையினால் பயின்றவற் றைக் கொண்டு தவில் வாத்தியத் ைத வளம் படுத்தி நாதஸ்வரக் கச்சேரிகளில் வாசிக்க ஆரம் பித்து மு ன் மா தி ரி யா க த் திகழ்ந்தார். திரு. சின்னராஜா ஈழத்திலே பிரபல்யம் வாய்ந்த பல நாதஸ்வர வித்துவான்களுடன் வாசித்தும், இடை யிடையே இந்தியாவின் தமிழ்நாட்டு நாதஸ்வரக் கலைஞர்களை ஈழத்திற்கு அழைத்தும், குழு அமைத்து மங்கள இசையை ஈழத்தின் பல பாகங்களிலும் நிகழ்த்திப் பெருமை தேடிக் கொண்டவர்.
திரு. சின்னராஜா இவ்வரிசையில் முதன் முதலாக இந்திய நாதஸ்வரக்கலைஞர் த ரு ம புர ம் கோவிந்தராஜ பிள்ளை (மதுரை இசைக் கல்லூரி நாதஸ்வர விரி வுரையாளர்) அவர்களை அழைத்து, கச்சேரிகள் பல செய்தார். தொடர்ந்து அபிராமம் கணேசன் என்பவரையும், தமிழ் நாட்டிலிருந்து அழைத்துப் பல பாகங்களிலும் ஆலய மலுேறாற்சவங்கள், இந்துக் களின் இல்ல மங்கள வைபவங்கள், சபாக்களில் நிகழும் இசை விழாக்கள் ஆகியவற்றில் சிறப்போடு பங்காற்றியும் தவிலிசைக் கலையைச் சிறப்பாகப் பரப்பி வந்தார்.
இக் காலத்தில் இணுவில் நாதஸ்வர வித்து வானாக விளங்கிய தனது மாமனான சுப்ரமணியம் என்பவரின் மகள் இராஜேஸ்வரி என்பவரைத் திருமணம் முடித்து ஐந்து புதல்வர்களையும் ஒரு புதல்வியையும் பெற்றார்.
இவர்களுள் மூத்த புதல்வர் இரவிந்திரன் இளைய புதல்வர் சுதாகர் ஆகிய இருவரும் தந்தையிடமே தவில் பயின்று தந்தைவழியிலே முன்னணித் தவில் வித்துவான் களாகத் தவிற் கலைச் சேவை புரிந்து வருகி றார்கள். இது சின்னராஜா அவர்களின் புகழை மேன் மேலும் மெருகூட்டுகின்றது.
திரு. சின்னராஜா அவர்கள் தனது இளமைக் காலத்தில் ஈழத்தின் ‘* லயஞான குபேர பூபதி '' தட்சணாமூர்த்தியுடனும் நாச்சிமார்கோவில் திரு. கணேசபிள்ளையுடனும் இந்தியாவின் தமிழ்நாட்டுத் தவில் கலைஞர்களான நீடாமங்கலம் சண்முகவடி வேல், நாச்சியார்கோவில் ராகவப்பிள்ளை, முத்து விர்ப்பிள்ளை, வலங்கைமான் சண்முக சுந்தரம், கும்பகோணம் தங்கவேல், ராமதாஸ், இலுப்பூர் நல்ல கு மார், வடபாதிமங்கலம் தட்சணாமூர்த்தி போன்றவர்களுடனும் சேர்ந்து, இந்தியாவின் பல பாகங்களிலும் தவிற்கச்சேரிகளில் பங்கு கொண்டு ஈழத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளார். அதே போன்று குறிப்பிட்ட இந்தியக் கலைஞர்களையும் ஈழத்தில் பல ஆலயங்களுக்கும் அழைப்பிப்பதன் மூலம், ஈழத்தில் பலருடனும் சேர்ந்து தனித்தவில் என்ற அமைப்பில் மணிக்கணக்கில் லயவின்யா சங்கள் (தவிற்சமா) நிகழ்த்தி பாமர ஜனங்களையும் இசையுலகில் மயக்குமளவிற்கு தவிலுக்கு என ஒரு தனிச்சிறப்பினையும் உண்டு பண்ணியுள்ளார்.
சின்னராஜா எனப்பெயருடைய இவர் ராஜ கம்பீரத் தோற்றமுடையவர். நிறத்தால் கரிய இவரின் உள்ளம் வெள்ளையானது.
எவருடனும் அன்பாகவும் நல்ல உள்ளத்துடன் பேசு ம் சுபாவமுள்ளவர். குழந்தை உள்ளம் உடைய இவர் எவருக்கும் எவ் வழியிலும் உதவி செய்வார். இவரை யார் தேடிப் போனாலும் அன்பாக வரவேற்று ‘நான் உங்க ளுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்பார். இதே போன்று பொதுநல உதவிகளும் அளிப்பார். பொதுசேவைகளிலும் முன் னின்று உழைப்பார். இவரின் முன்னெடுப்பினால் வளர்ச்சியுற்ற இசை நிறுவனங்கள் பல உண்டு எனலாம்.
ஈழத்தின் தவில் வித்வா ன் களுக் கெல்லாம் ராஜா போன்று விளங்கிய இவர், தவிற் துறையில் பல மாணாக்கர்களை உருவாக்கியுள்ளார். இவர் களில் முதல் சிஷ்யன் இந்தியாவின் திருநெல்வேலி ஜில்லாவில் சேர்மாதேவி என்னும் ஊரைச் சேர்ந்த முருகண்டி என்பவராவர். இவரும் 1962ஆம் ஆண்டு கொழும்பு வேல் விழாவில் திரு. சின்னராஜா அவர்களுடன் சேர்ந்து அபிராமம் கணேசன் அவர் களின் நாதஸ்வரக் கச்சேரிக்கு தவில் வாசித்துள் ளார். அடுத்து கே. ஆர். புண் ணிய மூர் த் தி, சின்னராஜாவினுடய புதல் வர்கள் இரவிந்திரன், சுதாகர், யாழ்ப்பாணம் சி. முருகதாஸ், நெல்லியடி பழனிவேல், இணுவில் சி. கல்யாண சுந்தரம், சுதுமலை சின்னராஜா, மல்லாகம் சி. ஜெயராமன், கோண்டாவில் இ. முருகானந்தம், இணுவில் வி. கருணாமூர்த்தி ஆகியோரையும் சிறப்பாகக் குறிப்ւծ.
புகழ் பூத்தகலைஞர் திரு. சின்னராஜா அவர்கள் தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பல நாடுகளிலும் தவில் இசைக்கச்சேரி செய்து பாராட்டுக்களைப் பெற் ற வர். இவருக்கு *விவகாரவித்வமணி’, ‘தாள அலங்கார கல்பனா ஜோதி”, “லயஞானவித்வமணி’, ‘கரவேகலயஞான கேசரி’, ‘ தவிற் சக்கர வர்த் தி போன்ற பல கெளரவப்பட்டங்கள் கிடைக்கப் பெற்றன. அத்துடன் கரூரில் இந்திய நாதஸ்வரச் சக்கரவர்த்தியான திரு வாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் நினைவு விழாவில் தங்கத் தாலாய தவிற்கேடயம் ஒன்றும் 12 - 12 - 1968இல் வழங்கப்பட்டது இவரின் சீரிய பெருமைக்கு எடுத்துக்காட்டாகும். ஈழத்தில் தட்சணாமூர்த்தி அவர்களுக்கும், சின்னராஜா அவர்களுக்கும் மட்டு மே இவ்விருது கிடைத்தது என்பது குறிப் பிடத் தக்கது. திரு. என். ஆர். எஸ்ஸினனுடைய தவில் வாசிப்பானது அழு த் த முடையதும், விவகாரம், நிறைந்ததுமாகும். பிற் காலத்தில் சுகமுடைய சுநாதமான தக்கும சங்க திகள் அமைந்ததாகவும் லயவேலைப் பாடுடையன வாகவும், அநேகர் மனதைக்கவரும் வ கை யி லே அமைந்தது. இவருடைய அனுபவபூர்வமான தவிற் தனி வழியினை மற்றவர்களும் புரிந்து பின்பற்றும் வகையில் வாசித்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வளவு சிறப்புடைய தவில் மேதை, மிக எளிமையான வாழ்வு நடாத்தி பெருமைக் குணம் அற்றவராக விளங்கித் தான் கல்வி கற்ற கலைக் கூடத்தில் விற்றிருக்கும் பரமேஸ்வரன் ஆலயத்தில் நிகழ்ந்த பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவ உற்சவத் தன் று தனது இறுதித் தவில் நாதமழையைப் பொழிந்து, நாதார்ப்பணம் செய்து 06-07-1991அன்று நாதப்பிரம்மத்தோடு ஒன்றினார். தவில் மரபுக்கு நம் ஈழத்திலே வளம் சேர்த்த அமரர். என். ஆர். சின்னராஜாவின் கலைச்சிறப்பு எமக்கு வரப்பிரசாதமே.
இணுவில் கே. சங்கரசிவம் மிருதங்கம் (1939-1988)
மிருதங்கவித்துவான் சங்கரசிவம்அவர்கள் இசைக் கலைஞர்கள் பொதிந்து வாழும் இணுவையூரில் கந்தையா என்பவரின் புதல்வராக 15-06-1939இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை 1944 முதல் க. பொ. த வரையும் இணுவில் சைவப்பிரகாச வித்தியாலத்தில் 1956 வரை பயின்றார். இதன் பயனாக இவர் ஓர் உதவி ஆசிரியராக 1960ஆம் ஆண்டு அரசாங்கப்பாடசாலையில் நியமனம் பெற் றுக் கடமைபுரிந்தார். இக்காலத்திலேயே மிருதங்கம் பயிலவும் ஆரம்பித்தார். இவருடைய ஆரம்பக் குரு காலஞ்சென்ற மிருதங்க வித்து வான் திரு. அம்பலவாணர் ஆவார். இவர் பிரத்தியேகமாக இப் பயிற்சியை மிருதங்க வித்துவான்களான ப. சின்னராஜா, ஏ. எஸ். ராமநாதன், எம். என். செல்லத்துரை ஆகியோர்களிடமும் விசேடமாகப் பயின்றார். இது மட்டுமின்றி வாய்ப்பாட்டு இசை யினையும் சங்கீதபூஷணம் எஸ். பாலசிங்கம் அவர் களிடம் பயின்றார்.
திரு. சங்கரசிவத்தின் மிருதங்க அரங்கேற்றம் 1972 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர் இக்காலங் களிலேயே வட இலங்கைச் சங்கீதசபைப் பரீட்சை களுக்கும் தோற்றி 1976 ஆம் ஆண்டு 'மிருதங்க ஆசிரியர் தராதரம் பெற்றர்ர்.
தொடர்ந்தும்'மிருதங்கக்கலையில் மாணவர்களைத்தயார் செய்வதில் தனக்கென ஒரு முறையை அமைத்துக்கொண்டவர். மேலும் இவர் ஏனையமிருதங்கக் கலைஞர்களை வயதிற் சிறியோராயிருப்பினும் மதிக்கும் தன்மை யுடையவராகவும் இருந்தார். அத்துடன் தனக்கு இக்கலையிலுள்ள சந்தேகங்களையும் ஏனையவர் களுடன் விளங்கிப்புரிந்து கொள்ளும் பண்புடைய வர். இவருடைய மிருதங்க வாசிப்பு பாடகர் களுக்கோ, வாத்தியக்கலைஞர்களுக்கோ இடையூறு இன்றியதாக இருக்கும்; இவர் மற்றக் கலைஞர் களுடன் பழகும் விதமும் மிகுதியான பண்புடையது.
இவர் கலைச்சேவை பெரும்பாலும் வடஇலங்கை சங்கீதசபையின் மிருதங்கப் பரீட்சைகளுக்கு மிகுதி யாகப் பயன்பட்டது. 1977 தொடக்கம் 1988 வரை செயன்முறைப் பரீட்சைகராகவும். வினாப்பத்திரம் தயாரிப்பாளராகவும், மீளாய்வுக்குழுவினராகவும். பங்கு கொண்டவர். இவரது கலைத் தொண்டில் விசேடமானது 1979ஆம் ஆண்டு ** மிருதங்கசுருக்க விளக்கம் ‘’ என்னும் நூல் வெளியிட்டமையாகும். மிருதங்க சங்கீதத்திற்கான நூல்கள் இந்தியாவில் சரி இலங்கையில் சரி வெளியிடப்பட்டது குறைவு. இந்நிலையில் இவருடைய மிருதங்க சுருக்க விளக் கம் என்னும் சிறிய நூலானது வெளியிடப்பட்டது நல்ல அம்சமாகும்.
இவருடைய கலைச்சேவை வாழ்க்கையானது துரதிஸ்டவசமாக நீடித்து விளங்காது போயிற்று. திடீரென இவருக்கு ஏற்பட்ட ஜூரம் இவரை இசை யுலகிலிருந்து 17 - 5 - 1988 அன்று நள்ளிரவே நிலையுலகிற்கு பிரிந்துச்சென்றது ! கலையுலகில் பெயர் நிறுத்திய சங்கரசிவத்தின் நல்ல அம்சங்கள் என்றும் வாழக்கூடியன.
யாழ்ப்பாணம் ரி. நித்தியானந்தன் வீணை 1941 - 1994
திரு. நித்தியானந்தன் அவர்கள் யாழ்ப்பாணத் தைச்சேர்ந்த தொலைத் தொடர்பு தொழில் நுட்ப வியலாளராக விருந்த துரைராஜா கமில்டன் மில்லி தம்பதிகளுக்கு ஏகபுதல்வனாக 25 - 10 - 1941 இல் பிறந்தார். இவர் கொழும்பைத்தனது பிறப்பிடமாகக் கொண்டவர். எனினும் சிறுவயதிலேயே தாயாரை இழந்த காரணத்தினால் இவருடைய பேரனார் நமசிவாயம் என்பவருடன் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தார். இவர் தனது கல்வியினை ஆரம்பம் முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே பயின்றார்.
இவர் கல்லூரியில் பயிலும் காலத்திலே இசையில் மிகுந்த ஆர்வமுள்ளவராகக் காணப்பட்டார். மின் ஒலி, ஒளிச்சாதனங்களைப் பயன் படுத்தி கலைக்கு உதவுவதிலும் விருப்பமுடையவராக இருந் தார். இதன் காரணமாக இவர் ஒலியமைப்பு, ஒளி யமைப்புப் போன்ற தொழிலில் ஈடுபட்டு இவற்றி னுாடாக கர்நாடக இசை ரசிகனாகவும், தொலைத் தொடர்பு போன்ற சாதனங்களின் தொழில் நுட்பத்தில் வல்லுனராகவும் திகழ்ந்தார்.
இவருடைய நண்பர் தொழில் நுட்பவல்லுனர் ஜெயராஜா அவர்களுடன் சேர்ந்து இத்துறையில் ஈடுபட்டுவந் தவர், பின்னர் ஒலி, ஒளி சாதனங்களின் நுட்ப வியல் கூடமான ' நித்திசவுண்ட்,' என்னும் ஸ்தாபனத்தை ஆரம்பித்தார்.
திரு. நித்தியான ந் தன் அவர்கள் 1972ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்லத்துரை தம்பதிகளின் புதல்வியான புஷ்பதேவி என்பவரைத் திருமணம் செய்து இனிது வாழும் காலத்தில் இவர் களுக்கு தேவானந்தன், சகீலா, ரமணன் என்னும் மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். திரு. நித்தி அவர்கள் தனக்கிருந்த இசை ஆர்வம் காரணமாக ஆசிரிய பயிற்சிக்கல்லூரி விரிவுரை யாளர் ஆறுமுகம்பிள்ளை அவர்களிடம் வி ைண இசை யினைப் பயின்றார். வினையில் வட இலங்கை சங்கீதசபைப்பரீட்சையில் தரம் நான்கு வரை சித்தி படைத்துள்ளார். வினை வாத்திய இசையை ச் சிறப்பான முறையில் சாதகம் செய்து விரைவாக மேடைக்கச்சேரிகள் செய்யவும் ஆரம்பித்தார். இவருடைய காலத்தில் இசை விழாக்கள், பொது இசையரங்கள் போன்ற பல நிகழ்வுகள் நடந்தகாலம். எனவே பல மேடைகளில் சிறப்பான முறையில் கச்சேரிகளை வழங்கி வந்தார்.
இவருடைய வினைவாசிப்பில் சுருதி, லயம் என்பன மிக நுட்பமாக அமையும். மேலும் இராக விஸ்தாரம், தானம் வாசித்தல் தனிச் சிறப்புடையது.
உருப்படிகள், ஸ்வரம் போன்றவை வாசிக்கும்போதும் காலப்பிரமாணம் நிதானமுடையது எ ன ல ா ம். இக்கட்டத்தில் பக்கவாத்தியக் காரர்க்கும் வாசிப்பது இலகுவாக இருக்கும். 1981ஆம் ஆண்டு நல்லை ஆதீனத்தில் நடந்த இசை விழாவில் விணையில் ** நகுமோ“ என்னும் உருப்படியை, ராக ஆலாபனை யைத் தொடர்ந்து வாசித்து பலரின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இவர் கச்சேரியில் சில காலம் இருவினை இசையாகவும் அமைந்திருந்தது. இவருடைய குருவின் மகனான திரு. சத்தியசீலன் என்பவரை இணையாகச் சேர்த்து பல கச்சேரிகள் செ ய் த து ண டு. 1982ஆம் ஆண்டு ஒரு தடவை காரைநகர் இந்துக் கல்லூரி அரங்கில் சுவிஸ் நாட் டுக் குழுவினருக்கென ஏற்பாடாகியிருந்த இசை அரங்கில் இவருடைய இரு வி ைண இசை இடம் பெற்றது. இந் நிகழ்வில் பெரும் வர வே ற் பும், பாராட்டும் இவருக்கு ம், பங்கு பற்றிய மற்றக் கலைஞர்களுக்கும் கிடைத்தது.
நித்தி அவர்கள் மற்றும் கலைஞர்கள், ரசிகர் களுடன் பழகும் சிறப்பு தனித் துவ ம் உடையது. அன்பும், அடக்கமும், கனிவும், சாந்தமும் நிறைந் தவர் எனலாம். மேலும் நித்தி அவர்களுடைய ஒலி, ஒளிச் சாதனச்சுருதி நுட் ப ம் யாழ்ப்பாணத்தின் இசை முன்னேற்றத்திற்கு மு க் கி ய பங்காற்றியது எனலாம். இவரின் பிள்ளைகளும் தந்தையின் கலை அன்பைப் போற்றி தாமும் விணை, வாய்ப்பாட்டு, வயலின் போன்ற கலைகளைப் பயின்று வருகின் றனர்.
வினைக் கலைஞர் நித்தியானந்தன் அவர்கள் சிறப்பான முறையில் இசைக்குத் தொண்டாற்றி நல்ல மதிப்பும், பேரும், புகழும் பெற்று விளங்கி வந்தார். கலைஞர் அவர்கள் தமது 54ஆவது வயதில் 21-05-1994 அன்று இவ்வுலகைத் திடீரென விடுத்து நிலையுலகு சென்றமை கவலைக்குரியதே.
அமரர் நித்தி அவர்களின் இசைக்கலைச் சேவை க ைல யு ல கி ற் கு கிடைத்த பெரும் பணியாகும். எனினும் இவருடைய இசைக்கலை, தொழில் நுட் பம் எ ன் பன இவருடைய பிள்ளைகள் மூலமாக தொடரும், வளரும் என்பதில் சந்தேகமில்லை.
21 நரம்புகளுடையது பேரியாழ், 19 நரம்புக ளுடையது மகரயாழ், 14 நரம்புகளுடையது சகோட யாழ், 7 நரம்புகளுடையது செங்கோட்டி யாழ், 1000 நரம்புகளுடையது " ஆதியாழ் இந்த யாழ்
பின்னர் அழிந்து போயிற்று.
நன்றி : மங்கை
கல்லூர் பொன். ஆத்மானங்தா மிருதங்கம் 1948 - 1986
ஆத்மானந்தா அவர்கள் யாழ்ப்பாணத்து நல் லூரில் இந்துப் பாரம்பரியச் சூழலில் வாழ்ந்த பொன்னையா செல்லம்மா தம்பதியினருக்கு மூத்த புதல்வனாக 16-02-1948ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் புத்தூர் மழவராய ருடைய அன்னதான சத்திரத்தின் நிர்வாகிகளாகவும் கடமை புரிந்தவர்கள். ஆத்மானந்தா அவர்களுடன் சகோதர சகோதரிகளாக ஐவர் இருந்தனர். இவர் யாழ்ப்பாணத்து இந்துக் கல்லூரியில் க. பொ. த. சாதாரணதரம் வரை கல்வி பயின்றார். எனினும் இவருடைய ஆர்வமானது வாத்தியக்கலையாம் மிருதங்கம், தவில் போன்றவைகளில் அதிகமாகவே இருந்தது. அதனால் இவரை யாழ்ப்பாணம் நந்தி இசை மன்ற ஸ்தாபகர் மிருதங்கமணி எம். என். செல்லத்துரை அவர்களிடம் மிருதங்கம் பயிலப் பெற் றோர்கள் ஏற்பாடு செய்தனர். இவர் இக் கலை யிலே நல்ல முன்னேற்றத்துடன் பயின்றார். 1959ஆம் ஆண்டு ஐயாக்கண்ணு தேசிக ர் அவர்களின் இசைக் கச்சேரியில் வாசித்து தம் கலையை அரங்கேற்றினார்.
இவரின் மிருதங்க வாசிப்பானது அரங்கேற்றம் மட்டுடன் நின்று விடாமல் சிறு வயதிலேயே பிரபல ஈழத்து வித்வான்கள் பலருக்கும் பக்கவாத்தியமாகப் பயன் பட்டு அநேக பாடகர் களின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொள்ளு ம ள விற்கு உயர்ந்தது.
ஆத்மானந்தாவின் மிருதங்க வாசிப்பு முக்கிய மாக முழுச்சாப்பு, கும் காரம், மேற்காலபரண்கள், நாதசுகம் பாட்டுக்களுக்கு வாசிக்கும் முக்கிய அம் சங்கள் நிறைந்தவையாகக் காணப்பட்டது. திரு. ஆத்மானந்தா சிறு வயதிலேயே நிறைந்தளவில் கச்சேரிகள் செய்து வந்தார். மிருதங்கத்துடன் கஞ் சிரா, கடம், முகர்சிங், தவில், தபேலா போன்ற வாத்தியங்களையும் சிறந்த முறையில் இசையரங்கு களில் வாசித்து வந்தார். எனினும் சில தனிப்பட்ட காரணங்களினால் கர் நா ட க இசைக் கச்சேரி களுக்கு வாசிப்பதை விட வில்லுப்பாட்டு இசைக்கு மிருதங்கம் வாசிப்பதற்கு முக்கியம் கொடுத்தார். சின்னமணி அவர்களது வில்லுப்பாட்டு இசையில் தொடர்ந்து மிரு தங் கம் வாசித்து வருகையில் 1978ஆம் ஆண்டு சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று தனது கலையைப் புகழுடன் ஆற்றி ஈழம் திரும்பினார். இக்காலத்தில் மலேசியா, சிங்கப்பூரில் வேறு இசை அரங்குகளிலும் மிரு தங்கம் வாசிக்கும் வாய்ப்புப் பெற்றார்.
திரு. ஆத்மா னந்தா அவர்கள் மிருதங்கம் வாசிப் பதில் இடதுகைப் பழக்கமுடையவர். எனவே இசை யரங்குகளில் இவர் பாடகரது இடது புறமே இருந்து மிருதங்கம் வாசித்து வரலானார்.
இவர் மிருதங்கம் வாசிக்கின்ற் இசையரங்குகளில் வயலின் வாசிப் பவர் வலதுபுறம் இருந்து வாசிக்கும் நிலை இருந்து வந்தது. இவருடைய சிஷ்யர் என்று குறிப்பிடும் போது மிருதங்க ஆரம்பக் கல்வியை பயின்ற நல் லூர் ஜெ. சண்முகானந்த ச ர் மா அவர்களைக் குறிப்பிடலாம்.
இவர் 1980ஆம் ஆண்டு அராலி செட்டியார் மடத்தைச் சேர் ந் த சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதியினரின் மூன்றாவது புதல்வியான சரஸ் வதியைத் திருமணம் செய்து கொண்டார். இதன் பயனாகத் திரு. ஆத்மானந்தா தம் ப தி களு க்கு ஆணும், பெண்ணுமாக இரு குழந்தைகள் கிடைத் தனா .
ஆத்மானந்தா அவர்கள் இலங்கை வானொலி யின் இசைக்கலைஞனாகவும் இசைநிகழ்ச்சிகள் நிகழ்த்தியுள்ளார். தொடர்ந்து சிறந்த முறையில் மிருதங்கக் கலைத் தொண்டாற்றிய ஆத்மானந்தா அவர்கள் 1986ஆம் ஆண்டு புளியங்கூடல் மகா மாரியம்மன் கோவில் உற்சவ சம்பிரதாயக் கீர்த் தனைகளின் ஒலிப்பதிவு நாடாவில் சங்கீத பூஷ ணம் என். வி. எம். நவரத்தினம் அவர்களுடைய இசைக்கு பூரீ. ஏ. என். சோமாஸ்கந்த சர்மா அவர் களுடன் சேர்ந்து மிருதங்கம் வாசித்தார். இதுவே ஆத்மானந்தா அவர்கள் மிருதங்கம் வாசித்த இறுதி நிகழ்ச்சியாகும்.
வழமை போல் இவர் வில்லுப்பாட்டு இசையரங்கிற்கு மிருதங்கம் வாசிக்கச் சென்ற வேளையில் வழியில் துரதிஷ்டவசமாக ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 1986ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி அன்று இவ்வுலகை நீத்தார். இவருடைய இழப்பு பெரிதெனினும் இவருடைய இசைநாதம் இசையுலகில் நிலைத்து நிற்கிறது. இவருடைய இளைய சகோதரர் சுகானந்தா என்ப வரும் ஒரு சிறந்த மிருதங்கக் கலைஞர் ஆவர்.
கருவிகள் பல ஒருங்கிணைந்து ஒலிப்பதனை இக் காலத்தில் "ஒகஸ்ரா " (ORCHESTRA) என்பர். இது பழந்தமிழ் நாட்டில் "" ஆமந்திரிகை "" என வழங்கப் பட்டது. அனைத்துக் கருவிகளையும் ஆக்கியும் அடக் கியும் சிதைவின்றிச் செலுத்து வோன் தண்ணுமை யாகிய ( மிருதங்கம் ) மத்தளக் கருவியை இசைப் போன் ஆதலால் அவன் ' அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வன் ' எனப் போற்றப்பட்டான்.
(நன்றி : சீவகசிந்தாமணி)
யாழ்ப்பாணம் கீதாஞ்சலி கே. கல்லையா நிருத்தியம் 1912-1987
ஈழத்தின் நடனக்கலை முன்னோடிகளுள் ஒருவரான கீதாஞ்சலி நல்லையா அவர்கள் ஈழ யாழ்ப்பாணத்தின் வண்ணார்பண்ணையில் விஸ் வப்பிரம்ம பரம்பரையில் கந்தையா அன்னமுத்து தம்பதியினருக்கு 09-03-1912இல் புத்திரனாகப் பிறந்தார்.
இவர் இளமையிலே பாடசாலைக் கல்வியில் ஒரளவு நாட்டமும், இசையிலே மிகுந்த ஆர்வமும், உடையவராக இருந்தார். பாடசாலையில் கல்வி பயிலும் காலத்திலேயே புத்துவாட்டி நா. சோம சுந்தரம் அவர்களிடம் வாய்ப்பாட்டும், வயலினும், வண் ைண காமாட்சிசுந்தரம், மீனாட்சிசுந்தரம் ஆகியோரிடம் மிருதங்கமும் கற்றுவந்தார். ஒய்வு நேரங்களில் ஹார்மோனியம் வாசிப்பதிலும் ஈடு பாடு கொண்டிருந்தார். இதனால் மே ற் கூ றி ய இசைகளைச் சிறந்த முறையிற் பயிற்சி செய்து மேடைகளில் நிகழ்ச்சிகள் வழங்கும் தகுதியைப் பெற்றுக் கொண்டார்.
அக்காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து வரும் கலை ஞர்களின் இசைநிகழ்ச்சிகளுக்கு வயலின், ஹார் மோனியம் ஆகிய இசைக்கருவிகளைப் பக்கவாத்திய மாக வாசித்துப் புகழ் பெற்றார்:"மேலும் நாடகங்களில் பாடுவதும், பாத்திரம் ஏற்று நடிப்பதும் ஆகிய கலைச் சேவைகளைச் செய்தும் வந்தவர்.
பிற் காலத்தில் பல இந்தியக் கலைஞர்களுக்கு பக்க வாத்தியமும் வாசித்துப் பெயர் பெற்றார். அவர் களுள் கே. பி. சுந்தராம்பாள், ராதாபாய் ரீ. பி. ராஜலக்ஷமி, நடிகர் பி. எஸ். கோவிந்தன் என்ப வர்களையும், ஈழத்தில் சின் ைன யா தேசிகர், அச்சுவேலி இரத்தினம்பிள்ளை, ஏரம்பு சுப்பையா, கன்னிகா பரமேஸ்வரி ஆகியோ ரை யும் குறிப் பிடலாம்.
திரு. நல்லையா தனது கலைச் சேவையின் பயனாக இந்தியாவின் தலை சிறந்த இசைக் கலை ஞர்களின் நட்பைப் பெற்றவராய் அங்கே சென்று கேரளக்கலைஞர் கோபிநாத் அவர்களிடம் கதகளி நடனத்தையும், திரு வன ந் த புரத்தைச் சேர்ந்த ல சுஷ் மண ன் என்பவரிடம் பரதநாட்டியத்தையும், நட்டு வாங்கத்தையும், பரூர் சுந்தரம் ஐயரிடம் வய லின் இசையையும் மதுரைபெரிய சாமிப்பிள்ளை யிடம் வாய்ப்பாட்டிசையையும் சிறப்பாகக் கற்றுக் கொண்டார். மேலும் இந்தியாவின் வடநாட்டிற் குரிய மணிப்புரி, கதக், குச்சிப்புடி போன்ற பல் வகை நா ட் டி யங் கள யு ம் ஓரளவு பயின்று கொண்டார்.
திரு. நல்லையா அவர்கள் தான் கற்றவை களை ஈழத்தவருக்கும் பயிற்றி ஊ க்கு விக்கு ம் நோக்கத்துடன் யாழ்ப்பாணத்தில் கலா கூேடித்திரம் என்னும் பெயரில் நாட்டியப் பயிற்சி மையமொன்றினை ஆரம்பித்து இ ைசயில் ஈடுபாடுள்ள பலமாணவர்கள உருவாக்கி வந்தார்.
மேலும் சமகாலத் தில் இருந்த சுப்பையா அவர்களைப் போன்று இவரும் அரசினர் பாடசாலைகளில் நடன ஆசிரிய நியமனம் பெற்றார். நடனம், கிராமிய நடனம், நாடகம் போன்ற கலைகளை மாணவர்களுக்குக் கற்பித்தார். இது மட்டுமன்றி தம் மாணவர்களை அரங்குகளிலும் பிரபல்யமடையச் செய்தார். இவ. ரிடம் விவேகானந்தன் சகோதரிகளான ரங்கா மணி, ரூபமணி, ராதாமணி ஆகியோரும், தொம்மைக்குட்டி, இராதாகிருஷ்ணன் (இலங்கைவேந்தன்) சுமித்திரர, சிவபாதம், ஆகியோர் நடனப்பயிற்சியும், வில் லிசை சின்னமனி, கே. என். நவரத்தினம் ஏ. கே. கருணாகரன் ஆகியோர் வாய்ப்பாட்டிசையும் பயின் ரவர்களாவர்.
திரு. நல்லையா அவர்கள் நடன அரங்குகளில் நட்டுவாங்கம் செய்யும் பொழுது ஜதிக்கோர் வைகள் அழகு பொருந்தியதாகவும் உரிய தொனியு டனும் லயம் தவறாது கவரும் வகையிலும் அமைந் திருக்கும். இவருடைய பருத்த தோற்றமும், கம்பீர மானகுரலும் நாட்டிய அரங்கிற்கு சிறப்பை அளிப் பதாக இருந்த து. 1950ஆம் ஆண்டளவிலிருந்து இராமநாதன் கல்லூரி, விக்டோரியாக் கல்லூரி, ஏழாலை அரசினர் கல்லூரி, கனகரத்தினம் மகா வித்தி ய ர ல யம், இந்துமகளிர்கல்லூரி, றிபேக் கல்லூரி போன்ற அரசினர் கல்லூரிகளில் நடன ஆசிரியராக பணி புரிந்தமையும் இங்கு குறிப்பிடத் தக்கது. இதன் பெறுபேறாக பாடசாலை மட்டத்தில் கிராமிய நடனம், சாஸ்திரியநடனம் போன்றவற்றை வெளிப்படுத்தியுள்ளார். இவருடைய தயாரிப்புக்களில் செம்புநடனம், தாம்பாளநடனம், சுளகுநடனம், அருவி வெட்டு நடனம் போன்றவற்றை குழு நடன நிகழ்ச்சியாக நடாத்தி யு ள்ளார். அகில இலங்கை ரீதியிலான பாடசாலைகள் மட்டத்தில் ந ைட பெறும் இசைப்போட்டிகளுக்கும் மாணவர் களைத்தயார் செய்து அனுப்பிப் பரிசுகள், பாராட் டுக்கள் பெற்றவர். இவருடைய நடனத்தயாரிப்பும், ஆசிரியத்துவமும் கலா இரசிகர்களிடையே கருத்திற் கொள்ளப்பட்டது. வடஇலங்கை சங்கீதசபை தனது பொன்விழாவில் 1992இல் நடன ஆசிரியமணி’’ என்னும் பட்டத்தை இவருக்குக் கெளரவ விருதாக வழங்கியதும், கரவெட்டி வாணிகலா மன்றத்தில் 1956-1970களில் இசைக்கலைச் சேவை புரிந்தமை யைப் பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் அவர் களால் ‘* கீதாஞ்சலி " என்னும் கெளரவ விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க அம்ஷங்களாகும். இலங்கைக்கு எலிசபெத் மகாராணியார் விஜயம் செய்தபோது சிறந்த நடன நிகழ்ச்சியை இவர் தயாரித்தளித்துள்ளார்.
சிறந்த ஈழத்துக் கலைஞரான கீதாஞ்சலி நல்லையா அவர்கள் கலைச்சேவையுடன் மட்டும் இருந்துவிடாமல் சமகாலத்திலேயே வண்ணார் பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலின் திருப்பணிகளில் பங்காற்றும் தொண்டராகவும், ஈழத்தில் பக்தியுடன் இசைவளர்த்த கீதாஞ்சலி நல்லையா அவர்கள் 22-08-1987அன்று இறைவனின் பாதாரவிந்தங்களைச்சென் றடைந்தார்.
தெய்வீக இசைக்கலைஞர்களாய்த் திகழ்பவர்கள் இறைபக்தியையும் கலையையும் தங்கள் வாழ்க் கையோடு இணைத்துப் புகழ்பெற்றவர்கள். அவர்களுள் இவரும் ஒருவர் என்றால் மிகையாகாது.
கொக்குவில் கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா நிருத்தியம் (1922 - 1976)
ஈழத்தின் இசைக்கலைஞர் வாழ்கின்ற குழலிலே பலதிருக்கோவில்கள்தழ இருக்கும் இணுவில் என்னும் ஊரில்வாழ்ந்து வந்த கதிர்காமர் தம்பதிகளுக்குப் புத்திரராகப் பிறந்த ஏரம்பு என்பவர் சிறந்த ஒரு கலைஞர். இவருக்கும் தங்கமுத்துவுக்கும் புதல்வராகப் பிறந்தவரே சுப்பையா என்கிற நம் பரதக்கலைஞர் ஆவார். 13 - 01 - 1922 இல் பிறந்த பரதம்சுப்பையா அவர்களுடைய தந்தை யா ைர அண்ணா வி கதிர்காமு ஏரம்பு என்று அழைப்பர். அண்ணாவி யார் அக்காலத்தில் நடனம், வாய்ப்பாட்டு, நாட்டுக் கூத்து, நாடகம் ஆகியவற்றில் சிறந்த கலைஞராக விளங்கினார். ஏரம்பு சுப்பையா அவர்களும் தந்தை வழியே தாமும் இசைக்கலையில் ஆர்வமுள்ளவராக இருந்தார். இவர் தனது ஆர ம் பக்க ல் வி ைய, கோண்டாவில் தமிழ்க்கலவன் பாட சாலையில் பயின்றார். கனிஷ்டபாடசாலைக் கல்வியுடன் தந்தையாரிடம் நடனம், வாய்ப்பாட்டு ஆகியவற்றை யும் கற்றார். கற்றவற்றைப் பிரதிபலிக்கும் வகை யில் பல அரங்குகளிலும் வெளிப் படுத்தினார்.
இவை மூலம் தன்னை ஓரளவு ஆடற்கலையில் தயார் படுத்திக் கொண்டு வளர்ச்சி பெறலானார்.
கலைஞர் சுப்பையா தனது இளம் பராயத்தில், 1940 ஆம் ஆண்டளவில் பாரதநாட்டிற்குச் சென்று தமிழ் நாட்டு கரைக்குடி இராமகானசபாவில் நாடகக்குழுவில் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். இந்தச்சந்தர்ப்பமானது நாட்டியக் கலையின் முன் னேற்றத்திற்கு சுப்பையா அவர்களை இட்டுச்சென் றது எனலாம். அதாவது இக்காலப்பகுதியில் தமிழ் நாட்டிலுள்ள பிரபல்யமான நடனக் கலைஞர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கப்பெற்றார். அங்கேயுள்ள சாஸ்திரிய நாட்டியக்கலைஞரான திருச்செந்தூர் மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடம் பரத நாட்டிய த் தையும், கேரள நாட்டுக் கலைஞரான கோபிநாத் அவர்களிடம் கதகளி நாட்டியத்தையும் தனிப்பட்ட முறையிலும் சாந்திநிகேதன் ' என்ற கலைக் கூட நிறுவனத்திலும் அரிய கலைகளைப் பயின்றார்.
பலவகை நடன வகைகளைக் கற்கும் நோக் கமாக 1940 முதல் 1948 வரை திரு. சுப்பையா அவர்கள் தமிழ் நாட்டிலேயே கற்றலும், கற்றவை களை அவைக்கு ஏற்றுதலும் என்ற அளவில் தன்னை ஈடுபடுத்தியும், தன்னை ஒரு சிறப்புக்கலை ஞர் என்ற அளவிற்கு தயார் படுத்தியும் கொண்டார் எனலாம். இதன் காரணமாக அக்காலத்தில் இந்தி யாவின் பிரபல நடன நாடக கலைஞர்களிலும் ஒரு வராக இடம் பிடித்தார்.
ஏரம்பு சுப்பையா அவர்கள் தம் உண்மையான கலை உழைப்பினாலும் பெரியோர்கள் ஆசியினாலும் தமிழ் நாட்டில் பல அரங்கு நிகழ்ச்சிகள் செய்யும் வாய்ப்பும் சினிமா, நாடகம் போன்றவற்றில் நடிக்கும் சந்தர்ப்பமும் கிடைக்கப்பெற்றார். 1948 அளவில் இவரின் கலைத்திறனுக்காக வடஇலங்கை சங்கீதசபை இவரைப் பாராட்டிக் கெளரவித்தது.
இவர் இலங்கைவந்து யாழ்ப்பாணத்தில் வி. ஆர். இராஜநாயகம் அவர்களுடைய நடனக்கல்லூரியில் நடன ஆசிரியராக நியமனம் பெற்று கலைப் பணியைத் தொடர்ந்து ஆற்றினார். இக்காலத் திலேயே கொக்குவில் உளரைச்சேர்ந்த கந்தையா சின்னப்பிள்ளை தம்பதியரின் புதல்வியாகிய பூரணம் என்பவரைத் திருமணம் செய்து அங்கு வாழ்ந்து.
கலைஞர் சுப்பையா அவர்களுடைய காலத் தில் தான் முதன் முதலாக தேசியப்பாடசாலைகளில் நடனத்துறை சார்ந்தவர்களுக்கு ஆசிரிய நியமனம் கிடைக்கப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அரசாங்க நடன ஆசிரியநியமனம் பெற்று இவர் நடனக் கல்வியை மாணவர்களுக்கு கற்பித்து இக்கலையைப் பெண்களும் கற்கு மளவிற் மேம்பாடடையச் செய்த முன்னவரானார். இக்கால கட்டத்தில் எம் நாட்டில் நாட்டியக் கலையை ஒரு வித்தியாசமான கோணத்தில் கணிக்கும் ஒரு நிலை இருந்து வந்தது இதனாலேபெண்களை இக்கலையைப் பயில அனுமதிப்பது அரிதாகவுமிருந்தது. ஆனால் 1950ஆம் ஆண்டின் பிற்கூறுகளில் ஈழத்தில் குறிப்பாக சில கல்லூரிகளில் இசைத்துறையும், நடனக்கலைத் துறையும் போதிக்கப்பட ஆரம்பித்தது.
இவர் 1952ஆம் ஆண்டில் மருதனார் மடம் இராமநாதன் கல்லூரி, வேம்படி மகளிர்கல்லூரி கொக்குவில் இந்துக்கல்லூரி, பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி போன்றவற்றில் இசை நடன ஆசிரியராகப் பணி புரிந்தும் வந்துள்ளார்.
இந்நிகழ்வை ஈழத்து நடன வளர்ச்சியின் ஒரு திருப்புமுனை எனக்கூற லாம். இவர் கல்லூரி ஆசிரியப் பணியுடன் மட்டும் நின்றுவிடாமல் தனது விட்டிலேயே " " கலாபவனம்' என்னும் பெயரில் கலைக் கூடமொன் ைற யு ம் அமைத்து, தனிப்பட்ட முறையில் நடனக்கலையைப் பயிற்றுவித்து பெருமளவு நடன ஆசிரியர்களை உருவாக்கியுள்ளார். ஈழத்து நடன ஆசிரியர்களை எடுத்துக் கொண்டால் பெரும்பாலானவர்கள் கலா பவனம் தந்த ஆசிரியர்கள் என்றே கூறலாம். இவர் களுள் குறிப்பாக பிரம்மபூரீ என். விர மணிஜயர் அவர்கள், கலைஞர் வேல் ஆன ந் தன், திரு மதி சாந்தினி சிவனேசன், செல்வி சாந்தா பொன்னுத் துரை, திருமதி பத்மரஞ்சினி உமாசங்கர், திருமதி கிரிசாந்தி ரவீந்திரா, திருமதி சியாமளா மோகன் ராஜ், திருமதி திரிபுரசுந்தரி யோகா ன ந் தம், திருமதி கமலா ஜோன் பிள்ளை போன்றவர்களைக் குறிப்பிடலாம். மேற்குறிப்பிட்டவர்கள் பாரதம் சென்று தங்கள் நடனக் கலையை மேலும் விருத்தி செய்தும் தற்போது நாட்டியக் கலைக்கு அருந் தொண்டுகள் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் ஆற்றி வருகின்றார்கள். இவர்களிலும், திருமதி பத்மரஞ்சினி உமாசங்கர், திருமதி கிரிசாந்தி ரவிந்திரன், ஆகியோர் நமது நுண்கலைக் கழத் தில் நடன விரிவுரையாளர்களாகப் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் சுப்பையா அவர்கள் தமது நடன அரங்குகளில் கிராமியம், பரதம், கதகளி, போன்ற அடிப்படையில் தனி நிகழ்வாகவும், கூட்டு நிகழ்வாகவும் எண்ணற்ற நிகழ்ச்சிகளைத் தனித்தும் தனது மாணவர் மூலமாகவும் செய்து வந்துள்ளார். இவை களுள் திருவெம்பாவை, உளர்வசி, சூடாமணி, காமதகனம், குறிஞ்சிக்குமரன், பா மா விஜயம் போன்றவைகள் பாராட்டைப்பெற்ற நிகழ்ச்சிகள் எனலாம். W
இவருடைய புதல் விகளான சாந்தினி சிவனேசன், குமுதினி ஆகியோர் நாட்டியத்துறை யில் சிறந்து விளங்குகின்றனர்.
இவர்களுள் சாந்தினி சிவனேசன் தந்தைவழியிலேயே நட்டு வாங்கத்தில் ஜதி சொல்லும் அழகு சிறப்பு அம்ச மெனலாம். இவர் பல நிகழ்ச்சிகளை வழங்கியும் மாணவர்களை உருவாக்கியும் வருவதும் குறிப்பிடப் படவேண்டியது. திருமதி சாந்தினி சிவனேசன் தற் போது கோப்பாய் அரசினர் ஆசிரியக்கல்லூரியில் நடன விரிவுரையாளராக விளங்குகிறார். திரு. சுப்பையாவின் கலைப்பணி இவ்வகையில் வளர்த் தெடுக்கப்படுகிறது.
திரு. ஏ. சுப்பையா அவர்களுடைய கலைத் திறன் காரணமாக இவருக்கு 1956 இல் இலங்கை உணவு அமைச்சினால் தலை நகரமாம் கொழும்பில் தங்கப்பதக்கமும் 1960 இல் யாழ்ப்பாணக் கலாமன் றத்தினால் ‘* கலைச்செல்வன் ’’ என்ற பட்டமும் பாராட்டாகக் கிடைத்தன. இவரை ஈழத்தின் வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடனக் கலைமுன் னோடிகளில் ஒருவர் என்று யாவரும் நினைவுகூரு மளவிற்கு இவர், தன்னையும், ஈழத்தில் நடனக் கலைஞர்களையும் உருவாக்கியும் 1976ஆம் ஆண்டு தமது 54ஆவது வயதிலே பூவுலக வாழ்வை நீத்து தில்லையம்பலத்தான் திருவடி சென்றடைந்தார். எனினும் அன்னாரின் நாட்டியப்பணி ஈழத்தில் ஆடற் கலை மரபில் தொடர்கிறது எனலாம்.
மல்லாகம் வி. ராஜரத்தினம் நிருத்தியம் (1931 - 1990)
திரு. வி. ராஜரத்தினம் அவர்கள் ஈழத்தின் மல்லாகம் என்னும் ஊரில் 13-04 - 1931இல் பிரந் தவராவர். இவருடைய தந்தையார் நாதஸ்வர வித்வான் வெங்கடாசலம் என்பவர். தாயார் நாகம்மா என்பவர். இவருடன் பிறந்தவர்கள் சகோதரிகள் மூவர். இவர்களுள் ஒருவர் திருமதி சண்முகரத்தினம் சரஸ்வதி என்பவர். இவரும் ஓர் இசை ஆசிரியை யாகப் பணிபுரிகிறார்.
திரு. ராஜரத்தினம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை சுன்னாகம் மயிலனிப் பாடசாலையிலும் மேல் வகுப்புக்களை தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியிலும் பயின்றார். கல்விபயிலும் காலத் திலேயே நாட்டியத்தில் விருப்பம் கொண்டவராய் இருந்தார். இதன் காரணமாகக் கல்லூரிப்படிப்பை நிறுத்திக் கொண்டு இந்தியா விற்கு ச் சென்று கேரளா மாநிலத்தில் கதகளி நாட்டியத்தை குரு கோபிநாத் அவர்களிடமும், பரதக்கலையை தமிழ் நாட்டில் ராமசாமி என்பவரிடமும் கற்றுக் கொண் டார். தான் கற்றுக் கொண்ட நாட்டியக்கலையை ஈழத்திலும் கற்பிக்கும் ஆவலுடன் ஈழம் திரும் 9607(Tai.
திரு. ராஜரத்தினம் அவர்களுக்கு 1960ஆம் ஆண்டு தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் நடன ஆசிரிய நியமனம் கிடைத்தது. இந்தச் சந் தர்ப்பத்தில் இவர் கல்லூரி மாணவர்களின் தேவை களுக் கேற்ற முறையில் நடன இசைக் கலையைப் பயிற்றி வந்தார். மேலும் சமீபமாகவுள்ள மல்லாகம் மகாவித்தியாலயம், அளவெட்டி அருணோதயாக் கல்லூரி, ஏழாலை மகாவித்தியாலயம், கீரிமலை நகுலேஸ்வராக் கல்லூரி ஆகியவற்றிலும் பகுதிநேர நடன ஆசிரியராக இக்கலையைப் பயிற்றி வந்தார். இது மட்டுமின்றி, இவர் கல்லூரி மாணவர்களை நடன இசை நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் கலந்து கொள்ளும்படி செய்தார்.
திரு. ராஜரத்தினம் 1965ஆம் ஆண்டு கொக்குவில் சித்திரவேலாயுதம் அன்னம்மா, தம்பதிகளின் புதல்வியான ராஜலக்ஷமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று புதல்வி களும் ஒரு புதல்வரும் வாரிசுகளாகப் பிறந்தார்கள். இவர்களுள் மூத்த புதல்வி நளினி என்பவர் தந்தை யாரிடமே நடனம் பயின்று நடன ஆசிரியையாகப் பணி புரிந்து கொண்டிருக்கையில் இளம் வயதி லேயே அமரத்துவம் எய்தினார். இளைய புதல்வி யான சுபாஜினி என்பவரும் தந்தையாரிடம் நடனம் பயின்றவராவர்.
கலைஞர் ராஜரத்தினம் அவர்களிடம் தனிப் பட்ட முறையில் நாட்டியம் பயின்றவர்கள் பலர். அவர்களுள் சிலர் வெளிநாடுகளில் நாட்டியக் கலையினைப் பரப்பி வருகின்றார்கள்.
இம் மாணவர் பரம்பரையிலும் திருமதி தயாளினி கிறிஸ்ரி தேவா, திருமதி ஜெயாளினி பாஸ்கரன் ஆகியோ ரும், மல்லாகம் ம. வி. ஆசிரியை திருமதி ராஜினி என்பவரும் தற்போது நடன ஆசிரியைகளாகக் கடமை புரிவது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் ராஜரத்தினம் அவர்களின் நாட்டியக் கலைச் சேவையினைப் பாராட்டி, அளவெட்டி பூரீ நாகவரத நாராணர் தேவஸ்தானத்தில் அருட்கவி சி. வினாசித்தம்பி அவர் க ள |ா ல் 'நாட்டிய கேசரி' என்ற பட்டமும், ஈழத்தின் கலா ரசிகர்களால் ** நாட்டியக் கலாரத்தினம்’’ என்ற பட்டமும் அவ ருக்கு வழங்கப்பட்டன.
ஈழத்தின் முன்னோடிக் கலைஞர்களுள் ஒரு வராகிய நாட்டியக் கலைஞர் ராஜரத்தினம் அவர் கள் தனது 60ஆவது வயதில் 26 - 12 - 1990 அன்று இவ்வுலக வாழ்வை விடுத்து நிலையுலகு அடைந்தார். அன்னார் நிலையுலகு சென்றாலும் இவருடைய கலையுலகச் சேவை இவரின் மாணவர்கள் மூலம் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொக்குவில் குமாரசாமிப் புலவர் - பண்ணிசை (1895-1982)
புலவர்மணி குமரா சா மி அவர்கள் யாழ்ப் பாணத்துக் கொக்குவில் என்னும் ஊரில் தம்பிப் பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளுக்குப் புதல்வராக 17-08 - 1985இல் பிற ந் தார். இவருடைய தழல் சைவப் பாரம்பரியமானதாகும். குறிப்பாக நாவலர் வழியினைப் பின்பற்றி தமிழும், சமயமும் கலந்த அறிவினைப் பெருக்கும் நோக்குடன் கல்வி பயின் றார். மேலும் 1910ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்று திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆச்சாபுரம் தேவாரப் பாடசாலையில் முறைப்படி ஐந்து ஆண்டுகள் வரை தேவார இசை பயின்றார். அதனைத் தொடர்ந்து 1917 வரை தருமபுரம் ஆதீனத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் சிறப்புறக் கற்று கொண்டார். அக்காலத்தில் அங்கே பல இசை நிகழ்ச்சிகளையும் நடாத்திப் புகழ்பெற்றார்.
புலவர் அவர்கள் தான் கற்றுக் கொண்ட பண்ணிசையினையும், தமிழினையும் ஒன்று திரட்டி பண் இ ைசயுடன் கூடிய சங்கீத உபந்நியாசங்களைச் செய்து வந்தார். தொடர்ந்து ஈழத்திலும் பல இடங்களிலும் பண்ணிசைக் கச்சேரிகள் செய்தும், இந்தியாவில் பல இடங்களிலும், மலேசியா விலும் இச் சேவையைப் புரிந்து வந்தார். இதன் பெறுபேறாகத் தனது சுயவிருப்பத்தில் 1922ஆம் ஆண்டில் கொக்குவில் பூரீ ஞானபண்டித வித்தியா சாலையை நிறுவிப்பும், வித்தியாலத்தின் முன்னேற் றத்திற்காகவும் தனது பண்ணிசை அரங்குகளினூ டாக வரும் பணத்தின் பெரும் பகுதியைச் செல.
1929ஆம் ஆண் ட ள வில் புலவர் அவர்கள் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் தேவார இசை ஆசிரியராகவும் நியமனம் பெற்றுப் பணியாற்றினார். தொடர்ந்தும் பண் இசை ஆசிரியப் பணியினை இராமநாதன் மகளிர் கல்லூரியிலும், திருக்கேதீஸ்வரத்தில் குருகுலப் பாடசாலையிலும், சிறப்புறச் செய்தார்.
மேலும் தனது ஆன்ம ஈடேற் றத்திற்காகச் சிவபூசை செய்யும் தகுதியும் பெற். குமாரசாமிப் புவலர் அவர்கள் பண்ணிசைக் கச்சேரிகள் செய்த போது புத்துவாட்டி இரத்தினம், சோமசுந்தரம், காசிவாசிசெந்திநாதஐயர் போன்ற மேதைகள் மிருதங்கம், வயலின், சாரங்கி போன்ற வாத்தியங்களை இசைத்துச் சிறப்பித்துள்ளார்கள். அக்காலத்து இசைபற்றிய நுட்பங்களை நுணுக்க மாக அறியமுடியவில்லை. இந் நிழ்வுகள் ஒலிப் பதிவில் இல்லாமை இதற்கு ஒர் காரணமாகும். சமகாலத்தில் நவரத்தினம் என்பவரும் பண்ணிசை நிகழ்ச்சிகளை வழங்கிவந்ததாக அறிகிறோம்.
கொக்குவில் குருமாரசாமிப் புலவர் அவர்க ளிடம் அக்காலத்தில் பல ர் பண்ணிசை, புராண விருத்தியுரை போன்றவற்றைப் பயின்றுள்ளார்கள். அவர்களுள் இவருடைய மருமகன் இரத்தினசபாபதி அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் இசைபயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவராவர். மேலும் இவருடைய புதல்வர் குருசாமி என்பவரும் பண்ணி சையைப் பயின்று இசைச் சேவை வழங்கியதுடன் கொழும்பிலும், ஆலயங்களில் தேவரா இசை பரவச் செய்தும் அண்மையில் அமரத்துவமடைந்தவராவர்.
குமாாசாமிப் புலவர் அவர்கள் பக்தி நெறியில் தமிழ் இசைத் தொண்டு ஆற்றியும், இசை வாரிசுகள் தோற்றுவதற்கும் கார ண ராக விருந்து தனது 87ஆவது வயதில் 15-02 - 1982இல் முருகப்பெரு மானின் அரும்பதம் சென்றடைந்தார். ஈழத்தில் இவரின் நோக்கம் அவரின் ஏகபுதல்வர் சிவஞான வாரதி, சிவநெறித் தொண்டர் குருசாமி அவர்கள் மூலமும் அ வ ரின் வழித்தோன்றலில் ஒருவரான அருளம்பலம் பத்மரஞ்சினி (திருமதி உமாசங்கர் ) மூலமும் ஒருவகையில் தொடர்ந்தது-தொடர்கிறது எனலாம்.
சைவப்பிரசங்கங்கள் இசையோடு அ ைம ய வேண்டுமென்று விரும்பியவர் புலவர் என்பது குறிப் பிடத்தக்கது.
குப்பிளான் எஸ். செல்லத்துரை பண்ணிசை (1909 - 1968)
இவர் ஈழத்து யாழ்ப்பாணத்தின் வட பால் குப்பிளான் என்னும் ஊரில் சமயப் பெரியார்கள் வாழ்கின்ற சூழலிலே வாழ்ந்து வந்த சுப்பிரமணியம் தங்கமுத்து தம்பதிகளுக்குப் புதல்வராக 1909 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தையார் ஒர் மிருதங்கக்கலைஞர். இவர்கள் குடும்பமே இசைக் குடும்பம் எனலாம். செல்லத்துரை அவர்களுடன் பிறந்த மூத்த சகோதரர் அப்பாக்குட்டி என்பவரும் இசையில் சிறந்தவராவர்.
செல்லத்துரை அவர்கள் இளமையில் கல்விப் படிப்புடன் இசையிலும் ஆர்வம் காட்டினார்.
அக் காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் பண் இசை கற்றுக் கொண்டவரான சங்கானை நாகலிங்க சுவாமிகளிடம் பண் இசையினைப்பயின்றவர் மேற் படிப்புக்காக மலேசியா சென்றும் தொடர்ந்து பண்ணிசையைப் பயின்று இந்தியாவில் திருவை யாறு தேவாரப்பாடசாலையில் தேவார இசைபயின்றார். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைபயின்று பட்டம் பெற்றார். மேலும் அங்கே திருப்பெருந்துறை அரிகரபாகவதர், மதுரைமாரி யப்பசுவாமிகள், திருவொற்றியூர் அப்பாத்துரை ஆச்சாரியர், அம்பாசமுத்திரம் வேலாயுத முதலியார் போன்ற இசை விற்பன்னர்களிடமும் தனது இசைஞானத்தை விருத்தி செய்து கொண்டார்.
இதன் பயனாக அங்கேயே பலதிருத்தலங்களிலும் சைவசித்தாந்த மகாநாடுகளிலும் இசை அரங்கு நிகழ்ச்சிகள் பலவும் செய்தார். மேலும் துரத்துக் குடியில் நடைபெற்ற திருமுறை விழாவில் முக்கிய பங்களிப்பாக பண்ணிசையைப் பக்கவாத்தியங்களுடன் வழங்கினார். இவ்விழாவில் இவருக்குத் தங்கப்பதக்கமும் " " இசைவல்லார் ‘’ என்ற சிறப்புப் பட்டமும் கிடைக்கப் பெற்றது.
திரு. செல்லத்துரை அவர்கள் ஈழத்தில் திரும் பவும் வந்து பலகாலமாக பண்ணிசைச் சேவையும், கதாகால கூேடியமும் செய்து வந்துள்ளார். அக் காலத்தில் இவருக்குப் பக்கவாத்தியமாக வயலின் வைத்தீஸ்வர ஐயர், புல்லாங்குழல் மூர்த்தி ஐயர், மிருதங்கம் தங்கம், எம். என். சொல்லத்துரை ஆகிய வித்துவான்கள் பக்கவாத்தியம் வாசித்து வந்தார்கள்.
இக்காலப்பகுதியில் இலங்கை வானொ லியிலும் நிகழ்ச்சிகள் பல ஆண்டுகள் வரை வழங்கி வந்துள்ளார். மேலும் சைவசமய சம்பந்தமான நாடகங்களைத் தயாரித்தும், பாத்திர மேற்று நடித்தும் உள்ளார். இக்காலப் பகுதியில் தா ன் இவருடைய திருமணம் நிகழப்பெற்றது. இவருக்கு இரு ஆண்களும், நான்கு பெண்களும் வாரிசுகளாகப் பிறந்தனர். எல்லோருமே பண்ணிசையில் சிறந் தவர்கள். இவர்களில் சரஸ்வதி, மனோ கரி, அபிராமி, ரேணுகா என்ற புதல்விகளும் தந்தை வழியே இசையும் பண்ணிசையும் பயின் றும் தந்தையாருடன் அவை நிகழ்ச்சிகள் வழங்கியும் வருகிறார்கள். இவருக்கு ‘பண்ணிசைவாணர்' என்னும் பட்டம் அளிக்கப்பெற்றது.
செல்லத்துரை அவர்கள் ஈழத்தின் பலபாகங் களில் குறிப்பாக குப்பிளான், காரைநகர், நீர்வேலி தெல்லிப்பழை, ஊரெழு போன்ற பல இடங்களில் பண் இசை போதித்துவந்துள்ளார். இவ்வகையில் பயின்றவர்களுள் பண்ணிசை இராசையாவும் ஒருவராவர். பிற்பகுதியில் சண்டிலிப்பாய் சகோ தரிகள், மகள் சரஸ்வதி, மனோகரி, பூரீதேவிபத்ம நாதன், பொன்முத்துக்குமாரு ஆகியோரும் சிறப்பா கப் பயின்றனர்.
குப்பிளான் செல்லத்துரை அவர்கள் தயாரித்த சமய சம்பந்தமான நாடகங்களுள் சிறுதொண்டர் சாவித்திரி - சத்தியவான், வேதாள உலகம், மார்க் கண்டேயர் போன்றவை சிறப்பான வகைகளாகும். இதனடிப்படையில் இவருக்கு சிறு த் தொண் டர் என்னும் பட்டப்பெயரும் வழங்கிவரலாயிற்று. பிற் காலத்தில் இவருடைய இசையரங்குகள், திருப்புகழ் இசையரங்குகளாகவே அமைந்தன. இவ்விடத்தில் இவருடைய இசையாளுமைத்திறன் சிறப் புற்றது. இராகம், தாளம் என்னும் முக்கிய அம்சங்கள் சிறப் புற்றவை. இதன் வாயிலாக பக்கவாத்திய இசை வழங்கும் கலைஞர்களினது கலையிலும் முன் னேற்றம் காணப்பட்டது. திருப்புகழில் பல்வேறு பட்ட அங்கசமிக்ஞைத் தாளங்களையும் மேடை களில் வெளிப்படுத்திய பெருமை இவருக்குரிய தாகும்.
சிறப்பாக பண் இசையுடனும், கதையுடனும் இசைச்சேவைபுரிந்தும் இத்துறையில் வாரிசுகளை உருவாக்கியும் ஈழத்துக்குப் பெருமை தந்த இசை வல்லார் அவர்கள் 1968 சிவராத்திரி தினத்தில் இறைவன் பாதங்களைப் பற்றினார். இவரின் வாரிசுகள் மூலம் இவர் சேவை தொடர்கிறது.
தாவடி எஸ். இராசையா பண்இசை 1912 - 1975
திரு. இராசையா அவர்கள் ஈழத்தின் தாவடி என்னும் ஊரில் வாழ்ந்து வந்த செல்லையா தம்பதிகளின் புதல்வனாக 15-11-1912இல் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மூவர். இவர் தனது சிறு பாரயத்தில் அவ்வூரிலுள்ள சைவவித்தியா சாலை யில் கல்விகற்றார். கல்வியுடன் இசையிலும் ஆர்வம் கொண்டவராய் 1937 இல் தமிழ்நாடு சென்று கல்யாணசுந்தரதேசிகரிடம் தேவார இசையினையும் நெல்லைரங்கப்பா அவர்களிடம் கர்நாடக வாய்ப் பாட்டு இசையையும், பயின்றார். இக்காலத்தில் பல இசை அரங்குகளிலும் தோவார இசை வழங்கி 6∂7 ሰኘበr .
இராசையா அவர்கள் ஈழத்திற்குத் திரும்பி குப்பிளான் செல்லத்துரை அவர்களிடம் சிறப்பாகத் திருப்புகழ் பாடுவதில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். தொடர்ந்தும் இங்கே பல இடங்களிலும் பண்ணிசை அரங்குகள் பல வும் நடாத்திப் பலரின் பாரட்டுக்களையும் பெற்றார். அத்துடன் ஒரு நடிகராகவும் நாடகங்களில் பங் கேற்று நடித்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் இவருடைய இசை அரங்குகளுக்குப் பக்கவாத்தியமாக, வி. பரமேஸ்வர ஐயர், எஸ். சோமாஸ்கந்தசர்மா, ஏ.சிவசாமி, வி. உருத்திரபதி, கே. சித்திவிநாயகம், எஸ். சர்வேஸ்வரசர்மா ஆ கி யே 7 ர் வயலினும், ஏ. நமசிவாயம், வி. உருத்திரா பதி புல்லாங்குழலும், என். தங்கம், வி. கன பதியாபிள்ளை, எம். என். செல்லத்துரை, ஏ. எஸ். ராமநாதன், ஆகியோர் மிருதங்கமும் வாசித்துச் சிறப்பித்தவர்களாவர். இவருடைய இசைஅரங்குகள் ஈழத்தின் பெரும்பான்மையான தேவஸ்தானங்கள், அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம், நந்தி இசை மன்றம் போன்ற கலை நிலை யங்களில் நிகழ்ந்தது. மேலும் சாவகச்சேரி நடேசன், கல்வயல் விநாசிந்தம்பி ஆகியோர் இராசையா அவர்களுடன் சேர்ந்தும் பல இசை அரங்குகளில் பாடி உள்ளார்கள் .
இராசையா அவர்கள் தாவடி யூரைச் சேர்ந்த செல்லப்பா தம்பதிகளின் புதல்வியான தங்கரத் தினம் என்பவரைத் திருமணம் செய்தார். இதன் பயனாக இவருக்கு ஒரு ஆணும், மூன்று பெண்களும் வாரிசுகளாகப் பிறந்தனர். இவர்களுள் மூத்தவர் திருஞானசம்பந்தர் என்பவர் தந்தையிடமே இசையும், பண்ணிசையும் பயின்றார். ஏனைய மூன்று பெண்களும் வீணை, வாய்ப்பாட்டு ஆகிய இசைகளை ஒரளவு பயின்றவர்களாவர். திருஞான சம்பந்தர் அவர்கள் தந்தையிடம் பயின்று தமிழ் நாட்டிலும் முத்துக் கந்தசாமி, ரங்கப்பா போன்றவர்களிடமும் சிறப்பாகக் கற்றதுடன் ‘தேவார இசை மணி’ என்னும் பட்டம் பெற்று ஈழத்தின் பல பாகங் களிலும், வெளியூர்களிலும் தேவார இசை யரங் குகள் மூலம் பண் இசையை வளர்த்து வருகிறார். தனிப்பட்ட முறையிலும் யாழ். வளாக வேதாகம ஆய்வுநிறுவனத்தில் குருகுல மாணவர்களுக்குப் பண் ணிசை கற்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இராசையா அவர்களுடைய பண் இசையானது பக்தியும், ஜனரஞ்சகமும், சில இடங்களில் நெரடான லய நுட்ப சங்கதிகள் அமைந்ததாகவும் இருக்கும்.
வேறு வேறு தாளங்களைக் காண்பிக்கும் அளவில் புதுப்புதுத் தேவாரங்கள், திருப்புகழ் போன்றவற்றை அவையில் வெளிப்படுத்துவார். இவ்விடய பக்கவாத்தியக்காரர், இரசிகர்கள் யாவருக்கும் இசை முன்னேற்றத்திற்குப் பல வழி களிலும் உதவியது எனலாம். தேசிதாளங்கள் என்ற வகைத் தாளங்களைக் காண்பிப்பதாக நிகழ்ச்சிகள் அமையும்.
மேலும் 1958ஆம் ஆண்டளவில் தமிழ்நாடு சென்று சிதம்பரம் ஓதுவார் கனகசபைப்பிள்ளை அவர்களிடம் தேவார இசை நுட்பங்களை நட்பு முறையிற் தெரிந்து கொண்டவராய் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்திலும், திருச் செந்தூர் கோவிலிலும் சிறப்பாகப் பண் இ ைச அரங்கு நிகழ்ச்சிகள் நிகழ்த்திப் பாராட்டுக்கள் பெற்றதுடன், ஈழம் வந்து தனக்கென ஒரு பாணியில் பண்னிசை மாணவர் பரம்பரையை உருவாக்கினார்.
அத்துடன் 1959இல் கொக்குவில் இந்துக் கல்லூரி யில் தேவார இசைப் பகுதி நேர ஆசிரியராகவும், யாழ் சிவதொண்டன் நிலையத்தில் தேவார ஆசிரிய ராகவும் தொண்டாற்றியதுடன், பண் இசைக்குப் பல மாணவர் பரம்பரையையும் உருவாக்கினார். இவ்வகையில் இவரிடம் பயின்ற மாணவர்களாக டாக்டர் சோமசுந்தாம், டாக்டர் சிவஞானரத்தினம், எம். எஸ். பூரீதயாளன், சங்கர ஐயா அகிலன், சிவா னந்தன், திருமதி சரோஜா சாமிரத்தின சர்மா, செல்வி பொன்னம்பலம் போன்றவர்களைக் குறிப் ც9?t_6)იrtà.
திரு. இராசையா அவர்கள் இவ்வகையாகப் பல வழிகளிலும் தேவார இசை எனப்படும் பண் இசையை ஈழத்தின் பலபாகங்களிலும் வழங்கியும், மாணவர் பரம்பரையை உருவாக்குவதிலும் முன் னோடியாக விளங்கியவராய் தனது 63 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வினை நீத்து நிலையான உலகாம் அவ்வுலகம் சென்றடைந்தார். எனினும் இவருடைய இசைவாரிசுகள் மூலமாக அன்னார் பணி தொடர்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
கல்லை ஆதீனம் பூநீலபரீ சுவாமிகாத பரமாச்சாரிய சுவாமிகள்
(சி. எஸ். எஸ். மணிபாகவதர்)
இன்னிசை விரிவுரை 1918 - 1981
இவர் ஈழத்து யாழ்ப்பாணத்தின் வண் ைண வைத்தீஸ்வரர் தேவஸ்தானத்தின் சூழலில் வாழ்ந்த பிரம்மபூரீ செல்லையர் தம்பதிகளுக்குப் புத்திரராக 1918 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு தந்தையார் இட்ட பெயர சிவசுப்பிரமணிய ஐயர் என்பதாகும். தந்தையார் வண்ணை வைத்திஸ்வரன் கோவில் பூஜைப்பணி செய்து வந்தவராவர். இவர் இளமை யில் தனது கல்வியை வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் பயின்றதுடன், தமிழ், சமஸ்கிரு தம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் பயின் றார். இக்காலத்தில் அங்கே விசேடமாக சுவாமி விபுலானந்தா, சுவாமி அவிநாஸ்ானந்தா, சுவாமி சர்வானந்தா, சுவாமி நிஸ்வேஸ்வரானந்தா ஆகிய தவப்பெரியோர்களிடம் பயின்றார். மேலும் யாழ். இந்துக்கல்லூரியில் மேல் வகுப்புகளைப் பயின் றார். எனினும் இவருடைய விருப்பம் இசையிலேயே இருந்து. இதன் காரணமாக தனது பதினெட்டாவது வயதில் இசைகற்க ஆரம்பித்தார். இதற்குக் காரண மாக அமைந்தவை அக்காலத்தில் சங்கானை சுவாமி கள், உடுவை சங்கர சுப்பையர் போன்றவர்களின் கதாப்பிரசங்களே (இசை விரிவுரைகள் எனலாம்.
மணி ஐயர் அவர்கள் சித்திரம், இசை, நாடகம், என்பவற்றில் இயற்கையாகவே ஞானம் பெற்ற வராய், இசைப் பயிற்சியினை இராசுப்பிள்ளை ஒதுவாரிடம் பயின்றவராய், கதா கால கூேடி பங் களைப் பக்க வாத்திய சகிதம் நிகழ்த்த ஆரம் பித்தார். இவருடைய முதல் நிகழ்ச்சியா ன து வண்ணை வைத்திஸ்வர தேவஸ்தானத்தில் 1938இல் இவருடைய பேரனார் வித்துவான் கணேச ஐயர் முன்னிலையில் நிகழ்த்தப் பெற்றது. இந் நிகழ் வு இவரின் இசையார்வத்தின் திருப்பு முனையா க அமைந்தது. தொடர்ந்தும் மணிஜயர் அவர்கள் ஈழத்தின் பல இடங்களிலும், தேவஸ்தானங்களிலும் நிகழ்ச்சிகள் பல செய்து வந்தார்.
இக்காலப்பகுதி யில் வண்ணை காமாட்சி சுந்தரம், மீனாட்சிசுந்தரம் அவர்களே இவருக்கு மிருதங்கம், கஞ்சிரா போன்ற வாத்தியங்களைப் பக்கவாத்தியமாகவாசித்து, மேற் கூறப்பட்ட நிகழ்ச்சிகளைச் சிறப்புறச் செய்தார் கள். மேலும், ஐயர் அவர்கள் தனது இசைஞானத் தினை மேம்படுத்திச் சிறப்பாக சங்கீத உபந்நியா சங்கள் வழங்கியும், சமகாலத்தில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றும், வாய்ப்பாட்டு, வாத்தியம், நடனம் ஆகிய இசைகளை மாணவர்களுக்குப் பயிற்றி வந்தார். மேலும் நாடகக் கலைஞராகவும் பாத்திரம் ஏற்றுப் பாடியும், நடித்தும் கலையை வளர்த்து வந்தார். இக்காலப்பகுதியிலேயே இவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. இதன் பயனாக புதல்வன் ஒருவரைப் பெற்றார். முருகானந்தம் என்னும் பெயரை யும் அப்புத்திரனுக்கு தட்டினார்.
மணி ஐயர் அவர்கள் மதுரை ஆதீனத்திற்குச் சென்று அங்கே பல இசையரங்குகளில் கதாப்பிர சங்கங்கள் செய்து சிறப்புப் பெற்றார். இவ்வேளை யில் ஆதீனமுதல்வர் ** முத்தமிழ் மணி ' என்னும் பட்டத்தினை அளித்தார்.
அன்று தொடக்கம் இவர் பெயர் ‘மணிபாகவதர்' என்று வழங்கலாயிற்று. மேலும் இவர் கொழும் பில் ஜி ந் துப் பிட்டி பூரீ சுப்பிரமணிய தேவஸ்தானத்திலும் இன்னிசை விரிவுரைகள் பலவற்றைத் தொடர்ந்து வழங்கிப் பாராட்டுகளையும் பொற்கிளிகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கு அமைந்த இசை, வாத்திய, நடன அறிவினைப் பயன்படுத்தி தனக்கென சில பக்கவாத்தியங்களை மிருதங்கம், வயலின், ஆகியனவற்றில் தயார் செய்து நிகழ்ச்சிகள் பல வழங்கி இசையை யும் தன்னையும், வாத்தியக்காரர்களையும் மேம் படுத்திக் கொண்டார். இவர் இலங்கை வானொலி யிலும், ஈழத்தின் பல பாகங்களிலும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலும் எண்ணற்ற கதா கால கூேடி பங்களை நிகழ்த்தி யுள்ளார். இவ்வகையில் மலேசியா நாட்டில் மட்டும் 180 தினங்களில் 150 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்நிகழ்வு இவரின் இசைச்சிறப்பிற்கு சான்றாகும். இசையையும், சமயதர்மத்தையும் வளர்த்து வந் துள்ள இவருக்கு 1960இல் மலேசியா தமிழ் இலக் கியமஹா நாட்டில் 'கதாகாகூேடிபகலாநிதி' என்ற பட்டம் அளிக்கப்பெற்றது.
மணிபாகவதர் அவர்களுடைய நிகழ்ச்சிகள் எப்பொழுதும் விநாயகர் கீர்த்தனையுடன் ஆரம்பிக் கும். இவருடைய நிகழ்ச்சிகள் தனித்துவமுடையது.
அதாவது இசையின் சுருதிலயநுட்பம், மதிநுட்பம் என்பவை சிறப்பானவை ஆகும். தகுந்த இடங்களில் ராகவிரிவு, ஸ்வரங்கள், பல்லவிதிரிகாலம், நிரவல், ஸ்தாயி, வேறுபாடுடைய திருப்புகழ் போன்றவை களின் இசைநுட்பங்களைப் பிரயோகித்து நிகழ்ச்சி களையும், பங்குபற்றும் வாத்தியக்காரர்களையும், ரசிகர்களையும் சிறப்பித்து விடுவார், குறிப்பாக 1970 ஆம் ஆண்டு நல்லூரில் நடைபெற்ற அண்ணா மலை இசைத்தமிழ் மன்ற இசைவிழாவில் ‘* தமிழ் இசையின் இனிமைதனை நாமறிவோம் ' என்னும் பல்லவியை வின்யாசம் செய்து யாவரையும் வியக் கச்செய்தார்.
இது இவருடைய இசையின் பாண்டித் தியத்திற்குச் சான்றாகும்.
மணிபாகவதர் அவர்களுடைய நிகழ்ச்சிகளுக்கு பூரீ. வைத்திய நாதசர்மா, திரு. சண்முகானந்தம். திரு. சித்திவினாயகம், திரு. கண்ணன், திருமதி ஞானம்பிகை பத்மசிகாமணி ஆகியோர் வயலினை யும், திரு. ஆறுமுகம் பிள்ளை, திரு. பிச்சையப்பா ஆகியோர் முகவினையும், திரு. ஆ. நமசிவாயம், திரு. அரியநாயகம் ஆகியோர் புல்லாங்குழலையும், மதுரை கிருஷ்ண ஐயர், பூரீ. கணேச சர்மா , திரு. கணபதியாபிள்ளை,திரு. தங்கம்,திரு. ஆத்மானந்தா திரு. இராஜன் ஆகியோர் மிருதங்கம், கஞ் சிரா, ஆகியவாத்தியங்களையும் வாசித்தவர்களாவர்.
இக்கலைஞர் சிறப்பான பட்டங்கள்பற்பல பெற்றவராய் காவிஉடையுடுத்தித் தவக்கோலம் பூண்டு சுவாமிநாததம்பிரான் சுவாமிகள் என்னும் திருநாமத்துடன் இசை அருளுரை ஆற்றினார். 1966 ஆம் ஆண்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தை ஆரம்பித்து ஆதீனத்தின் வளர்ச்சிக்காக தனது நிகழ் வுகளில் கிடைக்கும் வருமானத்தைச் செலவு செய்தும் தெய்வீக மஹாநாடுகள் பலவற்றையும், தெய்வீக இசை விழாக்களையும் தனது ஆதீனகலாமண்டபத் தில் நிகழ்த்தி, சமயத்தையும் பக்தி இசையையும் வளர்த்து அரும்பணிகள் புரிந்து வந்தார். இதன் பேறாக முன்னேற்றம் கண்ட இசைக்கலைஞர்கள் பலர்.
இவருடைய நிகழ்ச்சி இறுதியாக வண்ணை வைத்திஸ்வரன் கோவிலில் நிகழ்ந்தமை குறிப்பிடத் தக்கதாகும். தம்பிரான் சுவாமிகள் இந்துதர்மத்தையும், இசையினையும் குறிப்பாகத் தமிழையும் முன் னெடுத்தவராய் 1981 ஆம் ஆண்டு பங்குனி உத்தர நட்சத்திரத்தில் சமாதிநிலை அடைந்தார். இவர் பணியை மு ன் னெடுப் ப த ர் காக ஏ ற் கன வே சோசுந்தரபரமாச்சாரிய சுவாமிகளையும் தகுதி யாக்கினார். அவர்பணி தொடர்கிறது.
சுவாமிகள் அவர்கள் தனது இசை, பண், விரிவுரை என்பவற்றை முன்னெடுத்து செல்வதற்காக தனது பூர்வாச்சிரமத்தில் திரு. சுப. கணேசசுந்தரன் அவர்களையும், அடுத்து சுவாமிகள் நிலை யில் பிரம்மபூரீ சிவ. வை. நித்தியானந்தசர்மா அவர்களையும் தயார் செய்து தந்துள்ளார்கள். இவர் கள் மூலமாக இசைப்பணி தொடர்கிறது. வளர்கிறது. என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள்
கருத்துரையிடுக