உனக்கு எதிரான வன்முறை
கவிதைகள்
Backமேமன் கவியின்
உனக்கு எதிரான வன்முறை
கவிதைத் தொகுதி
-------------------------------------------------------------------------------------------------
பக்கம்-1
உனக்கு எதிரான வன்முறை
மேமன்கவி
துரைவி வெளியீடு.
-------------------------------------------------------------------------------------------------
பக்கம்-2
Title---- Unakku Ethirana Vanmurai
. (Collection of Poetry)
First Edtion-----Febbruary-2005
Copy Right. Author
Pages- 146
Publisher………………….Duravi Publication
85, Ratnasothi Saravanamuthu Mw,
Colombo-13
Price-250/=
Type Setting by Memonkavi
Comprint Aziz Nisarudeen
Printers- krips
-------------------------------------------------------------------------------------------------
பக்கம்-3
சமர்ப்பணம் - டொமினிக் ஜீவாவுக்கு
-------------------------------------------------------------------------------------------------
பக்கம்-4-5
துரைவி வெளியீடாக
ஒரு புதுமை நூல்
ஐயா எம்மைவிட்டு 8 வருடங்கள் ஓடிவிட்டாலும், அவர் அபுமானம் கொண்டிருந்த இலங்கை கலை இலக்கிய வளர்ச்சிக்கு ஏதேனும் வகையில்பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற நீடித்த எண்ணத்துடன், அவதானத்திற்குரிய இலங்கை படைப்பாளிகளின் நூற்களை துரைவி வெளியிட்டு வருகிறது.
அதன் காரணமாக என்னவோ,,துரைவி யின் வெளியிடுகளான, தெளிவத்தை ஜோசப் அவர்களின் மலையக சிறுகதை வரலாறுசாகித்திய மண்டல விருதினையும், ,சம்பந்தன்
விருதையும், பெற்றுக் கொண்டதுடன், அதனை தொடர்ந்து வெளி வந்த அல்-அசொமத்தின் வெள்ளை மரம் எனும் நூலும், இறுதியாக துரைவி வெளியீடாக வந்த மு.சிவலிங்கத்தின் தேயிலை தேசம் எனும் நூலிம் சாகித்திய மண்டல விருதினை
பெற்றதன் மூலம் ர்ரஐவியின் நாற்களுக்கு தொடர்ச்சியான கிடைத்த ஓரு கௌரவம்
என்றே நாங்கள் கருதுகுறோம். அதேவேளை அந்த நாற்களை ஆக்கி தந்த படைப்பாளிகளின் ஆளுமைகளுக்கு கிடைத்த கௌரமாக நாங்கள் கருதிகிறோம்.
அந்த வரிசையில் இலங்கையின் அவதானத்திற்குரிய படைப்பாளியான மேமன்கவி அவர்களின் கவிதைத் தொகுதியினை ஐயாவின் 74வது புறந்த தினத்ததை முன்னிட்டு துரைவி வெளிடாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இன்றைய உலக அளாவிய ரீதியாக ஏற்பட்டு இருக்கும். அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக , அச்சுதுறை கணனியின் உதவிவுடன் நூல் வெளியிடிலும் ஓரு புதிய பரிமாணத்தை கண்டு இருக்கிறது. அவ்வாறான ஓரு வளர்ச்சியின் பொழுது, ஆக்கத்திறனின் பங்கும் மிகவும் தேவையான ஓன்றாக இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.. இக்கூற்றுக்கு நண்பர் மேமன்கவியின் இந்த சாற்று பகிர்கின்றது.
எங்கள் ஐயா கொண்டிருந்த கலை இலக்கிய வெளிப்பாட்டில் புதுமையும், பரிசோதனை முயற்சிகள் நடைபெற வேண்டும் என்ற கருத்துக்கு அமைய, சற்று புதுமையான முறையில் துறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் மேமன்கவி அவர்களின் இக்கவிதைத் தொகுதி துரைவி பதிப்பக வெளியீடாக வந்து இருப்பது மகிழ்ச்சியினை அளிக்கிறது.
இத்தொகுப்பு சிறப்பான முறையில் வெளிவர பங்களிப்புச் செய்த
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், திரு அஸீஸ் நிஷாருத்தீன் அவர்களுக்கும் நண்பர் ஆப்டீனுக்கும் நன்றிகளை கூறிக் கொள்ளவதுடன்,தனது நூல் என்பதை மறந்து துரைவி வெளியிடு ஓன்று சிறப்பான முறையில் வெளிவர வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்த மேமன்கவி அவர்களுக்கு விசேட நன்றிகள்.
.
கடந்த கால துரைவி பதிப்பக வெளியீடுகளுக்கு கலை இலக்கிய உலகம்அதே அளவான ஆதரவை மேமன்கவி அவர்களின் இந்த நூலுக்கும் வழங்கும் என எதிர்ப்பார்க்கிறோம்.
துரைவி பதிப்பகம்
துரைவி ராஜ் பிரசாத்
-------------------------------------------------------------------------------------------------
பக்கம்-6-15
சிவதம்பி அவர்களின் முன்னுரை
-------------------------------------------------------------------------------------------------
பக்கம்-16
குத்தியானா ஜூனாகட் பாட்வா
ஆகிய பாரத கிராமத்து
தத்துவங்களை பத்திரமாய்
காத்தவர்களின்
இலங்கை மேமன் புத்திரனாய்
நான் பிறப்பதற்கும்
என் அறிவுக்கும்
நான் கண்டிப்பான முறையில் வளர்வதற்கும்
காரணமாய் இருந்த
அல்ஹாஜ் அப்துல் கரீம் அலி முஹமட் லாகானா
எனும் என் தந்தையாருக்கும்,
ஹாஜியானி ஜூபைதா பாய்
எனும் என் தாயாருக்கும்
முதற்கண்ணான
நன்றி வார்த்தைகள்!
-------------------------------------------------------------------------------------------------
பக்கம்-17
உனக்கு எதிரான வன்முறை
-------------------------------------------------------------------------------------------------
பக்கம்-18
என்னுரை குறிப்பு-1
படைப்பும் நானும்.
முப்பது வருடங்கள்!
கலை இலக்கிய உலகின் பரிச்சயமும், படைப்பாளியாக உருவாக்கிக் கொள்ள நான் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக,ஆறாவது முறையாக புத்தக ரூபத்தில் நான். இந்த முப்பது வருட பயணத்தில் வாழ்கையை வாழ்ந்து அதன் பெறுமதியைத் தெரிந்துக் கொண்டதை விட, கலை இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையின் பெறுமதி நான் புபிரிந்து கொண்டதுதான் அதிகம் என்பேன். இயல்பாகவே எனக்குள் நான் வளர்தெடுத்த அறியாமை கண்டு தூள்ளுதலும்,அநியாத்தைக் கண்டால் கொதித்தலும் போலிமைகளைக் கண்டு எதிர்தலும்,
நேசங்களுக்காய் கரைதலுமான உணர்வுகளின் அழுத்தம் என்னைப் படைக்க தூண்டின. வாழ்வின் எந்தவொரு இக்கட்டான சூழலை நான் சந்திக்க நேர்ந்த பொழுதெலாம் என்னை ஆசுப்படுத்துவதில் கலை இலக்கியம் எனக்கு மிகவும் உதவி இருக்கிறது. ஒரு பாடலின் அழகான வரியாகட்டும், மொழி விளங்காத பொழுதும் இனிமையான ஒலிக்கின்ற ஓரு பாடலாகட்டும் மின்னலென குத்துகின்ற ஓரு ஹைக்கூ யாக
இருக்கட்டும், பளிச்சென முடிகின்ற ஓரு சிறுகதையின் முடிவாகட்டும் கொஞ்ச பழகி இருந்தாலும் குறுகிய காலத்திற்குள் பிரிந்து போகும் நண்பனை போல் உணர்வை ஏற்படுத்தும் ஓரு நாவலாகட்டும், அது படைக்கப்படுகின்ற வீச்சான கூரான படைப்பாக்க முறைமையின் காரணமாக அக்கலைப்படைப்பு எனக்குள் ஓரு அதிர்வையோ அழுத்ததையோ ஏற்படுத்தும் அடுத்த கணமே, என் உடலில் ஆயிரம் பைன்ட் இரத்தம் கூடுகின்ற மாதிரியான ஓர் உணர்வு எனக்கு. அத்தோடு நமக்கு இது மாதிரி வரவில்லையே என்ற மாதிரியான மெல்லிய பொறாமை மின்னல் ஓன்று அடித்து ஓய்வதொடு, வியப்பு கலந்த இனம் புரியாத உணர்வு எழும். அந்த உணர்வைத் தந்த படைப்பின் உருவங்கள் சார்ந்த விடயங்கள் மறந்துப் போக, அந்த உணர்வு மட்டும் மிஞ்சும்.
இப்படிதான் படைப்புக்கு எனக்குமான உறவு நீடிக்கிறது.
இந்த வாழ்க்கை என்பது தின்று, முடித்து புரண்டு படுத்து எழுகின்ற வெறுமையான ஓரு செயற்பாடு என்று நான் நம்புகின்றனோ அன்று நான் எழுதுவதை நிறுத்தி விடுவேன்.
நல்ல கலைப் படைப்பு ஓன்றை உள்வாங்குகின்ற பொழுது அந்த மெல்லிய பொறாமை மின்னல் அடிக்கவில்லையோ,
வியப்பு கலந்த இனம் புரியாத உணர்வு எனக்கு ஏற்படவில்லையோ அன்று தொடக்கம்நான்தீர்மானித்து விடலாம் இனி எனக்கு எழுத வராது என்று.
-------------------------------------------------------------------------------------------------
பக்கம்-19
உணர்ச்சிகள்
மல்லிகை 35ஆவதுஆண்டுமலர்
ஜனவரி -2000
------------------------------------------------------------------------------------------------- ----------
பக்கம்-20
இப்படித்தான் -
எல்லாமேவந்து சேரும்.
சரணாலயத்தை நோக்கி வரும்
பட்சிகளைப் போல்:
குதூகலங்களாய்...
கண்ணீத்துளிகளாய்...
ரீமைச்சல்களாய்...
பிரியங்களாய்...
இப்படித்தான் -
எல்லாமே
சிலதுகள் வேருடன்
பிடுங்கி எறியும்.
சிலதுகள்
உள்ளுக்குள் உயிரை
உசுப்பும்!
மேலும் சிலதுகள்
சரீரத்தையே எரிக்கும்!
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-21
நட்டுவிட்ட தாவரத்தின்
வளர்ச்சியைப் போல
சிலதுகள் விளைந்து போகும்
அறிந்து கொள்ள முடியாமலேயே!
கறையான்களாய்
இன்னும் சிலதுகள்
அரிக்கும்.
கனவில் பூமுகத்தை
கண்ட சிறு குழந்தையின்
பயமாய்
சிலதுகள்
பதட்டம் செய்யும்!
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-22
எதை உண்டாலும்
உடனே வாந்தி எடுக்கும்
நோயாளியின் உடம்பாய்
மனசை
சிலதுகள் மாற்றும்!
பின் விளைவுகளைப் பற்றி
சிந்திக்காத
முரட்டுச் சிறுவனின்
தைரியமாய்
சிலதுகள் மனசை
பேச வைக்கும்!
பக்கம்-23
இன்னும் சிலதுகள்
சொல்லிக் கொள்ளாமலேயே
விடைபெற்றுப் போகும்
பருவம் போல்
எங்கேயோ
காலத்தின் கரைதலில்
காணாமல் போகும் -
ஞாபகங்களின்
சுவடுகளைக் கொஞ்சம்
மிச்சம் வைத்துக் கொண்டு,
சிலதுகள்
சிந்தனையில் கருத்தரித்தாலும்
குறைப் பிரசவங்களாகவே
செத்துப் போகும்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-24
பூமி அதிர்ச்சி
கண்ட ஒரு நகரம்
கொண்ட அழிவின்
சின்னங்களைப் போல -
வலியின் வடுக்களாகவும்,
நட்டுவிட்ட செடியில்
முதல் பூவை
கண்டுவிட்ட
தோட்டக்காரனின்
சந்தோம் போல் -
இன்னும் சிலதுகள்
நெஞ்சத்தை நர்த்தனமிட
வைக்கும்
சதங்கை ஒலி அலைகளாகவும்
நிரந்தரமாய்
தங்கிப் போகும்!
இப்படித்தான்
எல்லாமே
வந்து போகும்!
-----------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-25
எதிர்நீச்சல்
தினக்குரல்
2000 -ஜனவரி-30
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-26
அவள் சொன்னாள்:
முதல் முத்தத்தைப் போல முதல் காயத்தையும்
உள்ளுக்குள் சேமித்து வைத்திருக்கும்
வர்க்கக்காரி நான்.
அதனால், மனவருத்தக்காரியும் கூட;
எல்லா பட்சிகளையும் நேசிக்கின்ற பொழுது
நேசமாகி போகின்ற மனசு
கழுகுகளையும் பருந்துகளையும் பார்க்கையில்
சேதமாகிவிடுகின்றது;
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-27
பூக்களின் நறுமணத்தில் மென்மையில்
வர்ணங்களில் லயித்துப் போனாலும்
சில வண்டுகளின் கடூர ஆதிக்கத்தை
நினைக்கையில் உள்ளுக்குள்
ஒரு பூகம்பம் நடந்து முடிந்து விடுகிறது!
பருவத்தின் வருகை தந்த செழிப்பில்
மண் அழகு ஆகுகையில்
சிலிர்க்கின்ற மனசு
என் வர்க்கம் பருவச் செழிப்பை
கண்டபின் படும் துயரத்தை எண்ணுகையில்
பற்றி எரிகிறது!
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-28
விசுவாசமான நேசங்களாய் எண்ணி
நெகிழ்ந்து போய் நெருங்குகையில்தான்
அந்த கோரமுகங்களை
அடையாளம் கண்டு அலறிப் போகிறேன்
அதிகமான சந்தர்ப்பங்களில்;
என் எதிர்வர்க்கத்தின் எந்தவொரு
சிறு சலனத்தின் உள்நோக்கம்
எனக்கு அடையாளமாகிவிடும் பொழுதெலாம்
என்னில் அணுகுண்டொன்று
வெடிப்பதாய் உணர்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-29
மரணச் சர்ப்பத்தின் அரவணைப்பே
இந்த வர்க்கத்தின் வக்கிர விழிகளிலிருந்து
விடுதலை தருமென
சிலவேளை எண்ணுகையில்
சுயமிக்க நேசகுரலொன்று
""அதுவல்ல விடுதலை
எதிர்நீச்சல் வாழ்வே சரியயனச்'' சொல்லி
அடிக்கடி வருடிப் போகிறது.
பக்கம்-30
தோழனே!
பெண் எனும் பிறவியாய்
பிறந்த சந்தோத்தை
ஒரு பொழுதில் மட்டுமே
நான் அனுபவிக்கின்றேன்
அந்த கழுகுகளிடமிருந்தும்
அந்த பருந்துகளிடமிருந்தும்
என்னைக் காக்கும்
என் மீது நேசம் கொண்ட
பாதுகாப்பு வேலிகளுக்குள்
மட்டுமேஅந்த சந்தோத்தை
அனுபவிக்கின்றேன்;
சுயத்தையும் கூட!
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-31
ஒரு தலைமுறையின் மாற்றம்!
தினகரன்
செந்தூரம்
பெப்ரவரி 20-26, 2000
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-32
புதிதாய் வீடு ஒன்றில்
குடி புகுந்தோம்!
நேற்றைய வீட்டின் சுவர்களின்
கிறுக்கல்களைக் கூட
மறக்க முடியாதவர்களாய்.
பக்கத்து வீட்டுக் குடிகாரனின்
உளறலைக் கூட -
ஒரு ஸ்வரத்தின் லாகிரியாய்
ரசித்துப் பழகிப்போன
எங்கள் செவிகளிலிருந்து
அதனை விரட்ட முடியாதவர்களாய்...
புதிய விளக்குகள்
புதிய ஆசனங்கள்
புதிய தளபாடங்கள் - ஆனால்
நாங்கள் அதே மனிதர்களாய்க்
குடி புகுந்தோம்!
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-33
பழைய உயிரைத் துறந்து
புதிய உயிரைத் தரித்துக் கொண்ட
ஒரு பிரமையின் துளி
நெஞ்சத்தில் நெகிழ
எங்கள் பழையதுகள்
எங்களை விட்டு ஓடி விட்டனவோ
என்றே அஞ்சினோம்!
நேற்றைய வீட்டின் கூரையில்
தொங்கி நின்ற ஒட்டடை
அதே கூரையின் ஓட்டைடகளிலிருந்து
விழுந்த மழைத்துளிகள்
இன்று புதிதாய்க்
குடி புகுந்த வீட்டில்
காணமுடியவில்லைத்தான்,
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-34
ஆனாலும் -
நேற்றைய வீட்டின் உயிர்ப்பில்
இனம் புரியாத ஏதொரு
இழப்பின் சோகம்
சதாகாலம் எங்களுக்குள்
அழுதுகொண்டே இருக்க
நேற்றைய வீட்டில்
உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருந்த
நாங்கள்
புதிய வீடு ஒன்றில்
இயந்திரமாய்
குடி புகுத்தப்பட்டோம்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-35
மழை காலம்
தினக்குரல்
24. 09. 2000
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-36
மழை வந்துவிட்டதாய்
ஈசல் கூட்டமும் சகதித் தரையும்
நீர் நிறைந்த தெருக்களும் அறிவித்தன
தம் வீட்டு ஓட்டைகளை
மறைக்க முடியாதவர்கள்
எதிரிகள் என அவர்களே
பிரகடனம் செய்தவர்களின்
வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர்
சந்தர்ப்பக் குளிர் காய;
மழைகால குளிர் காய
தமக்கான அறைகளுக்காக
தம் வீட்டிலே
சண்டையிட்டுக் கொண்டனர்
ஒன்றாய் பிறந்து வளர்ந்தவர்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-37
மழைகாலம் வந்துவிட்டதை
உறுதி செய்தது
வண்ண வண்ண
குடைகளின் விற்பனை;
இதற்கிடையில் சிலரோ
இரத்த நிற பானத்தை அருந்தி
மழைகால குறிரை
தணித்துக் கொண்டனர்;
மழைகால ஒழுகலின் பொழுதுதான்
கணிசமான மக்களுக்கு;
தம் வீட்டுக்கு எவ்வகை
கூரை தேவை என்னும்
ஞானோதய கேள்வியே எழுகிறது
பருவம் தவறியும் இப்பொழுதெலாம்
வெண்மேகங்கள் கலைக்கப்பட
மழை வந்துவிடுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-38
வாயிலா ஜீவன்களுக்கு மட்டும்
இந்த மழை காலத்தில்
மழையை பற்றிப் பிரசங்கம்
செய்யும் மனிதர்களால்
பல வர்ணங்களில்
செயற்கை உணவு
மட்டும் நிறையவே
கிடைத்துவிடுகிறது
இனி வானத்தை தாங்கள் தான்
வழிநடத்தப் போவதாக
பல பல குழுக்கள்
மழையை போல்
அறிக்கை விட்டன.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-39
அத்தோடு
இலவசமாய் தண்ணீர்
வழங்கப் போவதாகவும்,
தேவையான நேரத்தில்
மழையைப் பெய்விக்கவும்,
வெயில் காய்க்கவும்
வினோத வானங்களை
தயாரித்து தரப் போவதாகவும்,
அந்த அறிக்கைகள்
மழைகால வாக்குறுதிகள் தந்தன.
இந்த மழை
நாளை ஓய்ந்துவிடும்
மீண்டும்
இந்த மண் வரண்டுவிடும்
.
வண்ண வண்ண குடைகள்
நாடார் கடைக்கு
மலிவு விலைக்கு
விற்பனைக்கு வந்துவிடும்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-40
மழைகால வாக்குறுதிகள்
தந்த குழுக்களோ
கோடைகால வெப்பத்திலிருந்து தப்ப
மலைப் பிரதேசங்களுக்கு
ஓய்வெடுக்கப் போய்விடும்.
மழை காலத்தில் வழங்கப்பட்ட
வாக்குறுதி ரொட்டிகள்
கோடைகால வெப்பத்தில்
காய்ந்துவிடும்
இன்னொரு மழைகாலம்
வரும்வரை
வெப்பத்தின் வேதனை தாங்காது
இந்த மண் எரிந்து கொண்டிருக்கும்,
இந்த மக்கள் செத்துக் கொண்டிருப்பார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-41
பேய்கள்
யாத்ரா
- முதலாம் ஆண்டு மலர்
டிசம்பர்-2000
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-42
பேய்களைப் பார்த்ததில்லை
என்றுதான் இத்தனை நாளாய்ச்
சொல்லி வந்திருக்கிறேன்
பெயர்களுக்கு முன்னாலும் பின்னாலும்
சில பட்டதாரிப் பேய்கள்
தம் மாணவத் தளிர்களை
நசுக்கிக் கொன்றன -
பேரில் ஆசிரியர்களான வடிவங்களில்
வயிற்றுப் பிழைப்புக்கு
அந்நிய தேசத்திற்குப் போன
ஏழைக் குமரிகள் மீது வன்முறை செய்தன
சில திரு - திருமதிப் பேய்கள்
எஜமான் - எஜமானிகளான
அதிகார மமதையில்
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-43
தேர்தல் காலங்களில்
பாதையோர மதிற் சுவர்களில்
வண்ண வண்ணப் பேய்கள்
அரசியல் பேசின
போஸ்டர் அவதாரங்களில்
படுக்கை அறைகளைப்
பலி பீடங்களாக்கி
சில பதி பேய்கள் கற்பைச் சோதித்தன
ஆணாதிக்கக் கோரமுகங்களாய்
இல்லறத்தில்
சில பத்தினிப் பேய்கள்
சண்டி ராணிகளாய் அமைதி தின்றன
பெண்மையின் மென்மைகளைத் துறந்து
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-44
புனித வீடுகளில்
பல்வேறு கொள்கை ஈட்டிகளால்
போர் புரிந்தன
மதம் பிடித்த சில பேய்கள்
தமக்கான புனித நூல்களை மறந்து
உலகை ஆள்வதாய் எண்ணி
உலக சபையில் சர்வதேசக் கேடிகளின்
வாரிசுகளாய் இமர்ந்து இருந்தன
சில வெள்ளைப் பேய்கள்
வளரும் நாடுகளின்
பிரஜைகளின் பிணங்களின் மீது;
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-45
பாலியல் வல்லுறவு
புரிவதற்கென்றே பிறந்த சில பேய்கள்
பெண் வர்க்கத்தின் மீது வக்கிரம் புரிந்தன
பெற்ற மகளையும் விட்டுவைக்காமல்
பணத்தின் பசியில்
தர்மம் பேசிய சில பேய்கள்
சொந்தங்களைக் கூடக் கொல்லத் தயங்காமல்
வியாபாரம் பேசின
எத்தனை பேய்கள்
எத்தனை வண்ணங்களில்
எத்தனை வடிவங்களில்
அத்தனை பேய்களும் உலாவி வருகையில்
பாரதி சொன்ன
பிணம் தின்னும் சாஸ்திரங்கள்
சட்டங்களாகிப் போன
ஒரு மயானத்தின் பிரஜையாய்
நான் என்னை உணர்ந்தேன்
இப்பொழுதெல்லாம்
பேய்களை நான் பார்த்ததில்லை
என்று சொல்வதே இல்லை
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-46
என்னுரை குறிப்பு-2
மல்லிகை ஜீவா
கற்று தந்த பாடங்கள்
படைப்பாக்கத்துடன் எனக்கு எந்த கால அளவான பரிச்சமோ, அதே கால அளவான பரிச்சயம் மல்லிக ஜீவா அவர்களுடன் எனக்கு.
அவருக்குரிய சில பண்புகள் காரணமாக அவர் செய்யும் நச்சரிப்பின் நிமிர்த்தம் தொடர்ந் எழுதி வந்ள்ளேன். அதே போல்,அவர பல சிந்தனகளும் வாழ்க்கக்குரிய பண்புகளயும் நானும் என் வாழ்க்கயில் கடபிடித் வருகிறேன்.
ல இலக்கியத்திற்காக அவர உழப்ப கண்டு நான் வியந்து போய் இருக்கிறேன்.
நன்றி பாராட்டுதல் என்ற அவர அழுத்தமான,பிடிவாதமான பண்ப என் வாழ்வில் நான் கடுமயாக கடப்பிடித் வருகிறேன்.
இப்படியாக, மல்லிக ஜீவா எனக்கு பல பாடங்கள கற்று தந்திருக்கிறார்.
அப்படியாக அவர் கற்று தந்த பல பாடங்கள் என படைப்பாக்கத்துடன்ப்பாக்கத்திற்கு மிகவும் உதவி இருக்கின்றன என்பத நன்றி உணர்வுடன் இங்கு பதிவு செய்ய வேண்டிய அவசியமாகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-47
அவர்கள்
பிரவாகம்
7 செப்டெம்பர் 2001
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-48
அவர்களின் முகங்கள்தான்
வெவ்வேறாய் இருந்தன.
அவர்கள்தான் எம்மைஆண்டார்கள்
அவர்கள் எம்மைஅழித்தார்கள்
அவர்கள்தான் எமக்காக உயிர்
துறந்தார்கள்.
அவர்களின் ஆதிக்கம்
எங்களின் எல்லா
அசைவுகளிலும் இருந்தது.
எங்களின் பண்பாட்டை
அவர்கள்தான் வடிமைத்தார்கள்.
எங்கள் பெண்களின் பண்பாட்டை
அவர்கள்தான் வடிவமைத்தார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-49
எங்கள் பெண்களின் பண்பாட்டை
அவர்கள்தான் வடிவமைத்தார்கள்.
எங்கள் பெண்களின்
கற்பை அவர்கள்தான்
சோதித்துப் பார்த்தார்கள்.
எங்கள் குழந்தைகளின்
எதிர்காலத்தை அவர்கள்தான்
முடிவு செய்தார்கள்.
எங்கள் நா அசைவின்
கடிவாளம் கூட
அவர்கள் கைவசம்தான்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-50
எங்கள் சுவாசக் காற்றின் தூய்மையினை
அவர்கள்தான் தீர்மானித்தார்கள்.
அவர்கள் கசப்பானவர்களாகவே
காட்சி தந்தார்கள்
அதனால் உன்னத
உண்மையான சிலரால்
உணரப்பட்டார்கள்.
காலகட்டம் ஒவ்வொன்றிலும்
அவர்கள்
புதிய விருட்சங்களாய்
புதிய அடையாளங்களுடன்
தங்களைப் புதுப்பித்துக் கொண்டார்கள்
அவர்களின் அவதாரங்கள்
எங்கள் இருப்பையும்
மரணத்தையும்
நிச்சயம் செய்தன.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-51
அவர்களை
அழிக்கப் போவதாய்ச் சொல்லி
பல தத்துவங்களை
சுமந்து வந்த பலர்
அவர்களாகவே மாறிப் போனார்கள்
அவர்களே
நவீன கடவுள்களாய்
மாயைகளை விதைத்து
எல்லாவற்றையும்
இயக்கிக் கொண்டு இருந்தார்கள்
பல்லாயிரம் நூற்றாண்டுகளாய்
அதிகாரம் எனும் அரிதாரம் பூசியபடியே
அவர்கள் பிறந்து
கொண்டே இருக்கிறார்கள்
அவர்கள் வாழ்வதற்காகவும்
நாங்கள் அழிவதற்காகவும்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-52
என்னுரை குறிப்பு-3
நான் கண்ட ரவி
ஜீவா அவர்கள் மூலமாகதான் ர விஸ்வநாதன் அவர்களுடனான உறவு எனக்கு.
ஜீவா அவர்கள் உருவாக்கி விட்ட அறிமுகத்திற்குப் பின் என பக்கத் வீட்டுகார்ராக ர விஸ்வநாதன் ஐயா வசித்த பொழு தான் இன்னும் ஆழமாக அவர புரிந்க் கொள்ளக் கூடியதாக இருந்த.தர்மம் செய்யும் பண்பு எல்லோருக்கும் இருக்க வேண்டிய பண்புதான்
ஆனால் தர்ம்ம் செய்வதன் மூலம் பேர் வாங்கி புகழ் பெற்ற பல வர்த்தகர்கள நான் அறிந் வத் இருக்கிறேன்.கல இலக்கிய உணர்வுமிக்க ஓருவருக்கு பிறருக்கு உதவும் எண்ணம் வாய்க்கும் பொழு அச்செயற்பாடு கல இலக்கியத்தின் பெறுமதி உணர்ந் செயற்படுகின்ற ஓரு நிகழ்வாக இருக்கும். ர விஸ்வநாதன் ஐயாவுக்கு வாய்த்த. கல இலக்கிய உணர்வு அவர எல்லோருக்கும் உதவும் ஓரு வர்த்தகராகவும், ஒரு பதிப்பாளராகவும் மட்டுமே இனங்காட்டு இருந்த.ஆனால் அவருக்குள் வாய்த்திருந்த கல இலக்கிய உணர்வுடனான உள்ளத்தால் கல இலக்கியங்கள ரசித் லயித் அவருள் வாங்கிய விதத்த கிட்ட இருந் ரசித்தவன் என்ற வகயில் அவர வெறுமனே ஓரு கல இலக்கிய சுவஞராக இனங்கண்டத விட, கல இலக்கிய படப்புக்கள அவர் படக்காவிடினும், மனதால் அவர் ஓரு கலஞாராக திகழ்ந்தார் என்ற சொல்வேன்.
அவர் கல இலக்கியங்கள லயித் ரசித் நின்ற கணங்களில் அவருடன் கலந்ரயாடிய அந்த நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்.
அவர் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர மறக்குப் பின்னும் சரி, அவர் போன்ற கல இலக்கிய உணர்வுமிக்க ஓரு வர்த்தகர இற்ற வர நான் சந்திக்கவே இல்ல என உறுதியாகச் சொல்வேன்.
அத்தய ஒருவரின் உழப்பில் உருவான ஓரு பதிப்பத்தின் வெளியீடாக என இந்த நூல் வெளிவருவ நான் செய்தபெரும் பாக்கியம் எ என சம்பிரதாய வார்தகளில் சொல்வத விட, அ எனக்கு கிடத்த பெரும் கௌரவமாகவே கருகிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-53
வெளி
மல்லிகை
ஜனவரி-2002
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-54
வெளி கிளறி,
வெளி ஊடறுத்து,
வெளி பிளந்து,
காற்றின் நரம்பு நாளங்கள்
அதிர்வுக்குள் ஆக,
சூனிய முகம் கொண்ட
வெளியின் தோலில்
மனித ஆதிக்கத்தின் தேமல்;
அலைவரிசைகளின் வெள்ளத்தில்
அடித்துக் கொண்டு வரப்பட்ட
நுகர்வு கலாசாரத்தின்
நுண்ணிய செல்களை
சுமக்கும் இயந்திரமாகி,
தேர்வாய்
தேவையாய்
அன்றாட வாழ்வின்
வெளி
இயக்கமாகி,
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-55
விஞ்ஞான ஊசியினால்
வெளியின் நரம்புகளில்
செலுத்தப்பட்ட வீரியத்திற்கு
ஆட்பட்டு ஆட்டம் கண்டு
உருண்டு கொண்டிருந்த
உலக உருண்டையை
வெறும் கோலிக் குண்டாக்கி,
வெளி
பனிப் போர்களின்
பரந்த யுத்த களமாகி
இல்லாத ஒன்றான
ஸ்தூலமாகி
எல்லாமேஅதற்குள்
என்பது நிஜமாகி,
வெளியின் சதையை
சிதைத்துக் கொண்டிருக்கும்
நூற்றாண்டின் நகர்வுகள்;
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-56
ஈரம்
தூசி
நிர்வாணம்
குதூகலம்
இத்யாதி படிமக் கலவைகளை
போதை வஸ்துகளாய் உள்வாங்கி,
மனித சுவாசத்தில் கலந்து
வெளி
அவனின் இருப்பின் தீர்மானமாகி,
வெளியின் இழைகளான
காற்றின் கயிற்றில்
தொங்கிக் கிடக்கும்
மனித மூளையின் படையலால்
வெளி
கண்ணுக்குப் புலப்படா
கனத்த பண்டமாகி,
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-57
மண்ணில் கால் பதித்து
அசையும் ஜீவராசிகளை
வாழ வைக்கும் ஜீவனாய்
வெளியாகி,
எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்
சுப்பர் மார்க்கட்டாய்
வெளி அதுவாகி,
நெரிச்சல் என்ற ஒன்றை
இல்லாமலாக்கி
வெளி அது
அடம் பிடித்தால் மட்டும்
இரைச்சல் எழுப்பி,
மனிதனின் மீது
உட்கார்ந்து இருக்கும்
வெளி -
பிரபஞ்சத்தின்
ஆட்சி நாற்காலியாகி,
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-58
வெளி
வெறிச்சோடி கிடக்கும்
தெருவாய்க் காட்சி தரும்
ஒரு மாயைக்கு
விழிகளை ஆளாக்கி,
விந்தையின் ஜாலத்தைக் காட்டும்
மந்திரவாதியாகி,
எந்த யுகத்திலும்
விடுதலை ஆக முடியா நிலையாகி
மனு கைப்பிடி
வெளிக்கான
நிரந்தர சிறையாகி,
புதிய புதிய
கண்டுபிடிப்புக்களை
தாங்கிச் செல்லும்
வெளி
பல்லாக்காகி,
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-59
தூரம் எனும் நீட்சியினை
அழித்துக் கொண்டு
வெளி
""சீப்'' என்னும் குப்பிக்குள்
அடைத்து வைக்கப்பட்ட பூதமாகி,
வெளியினை
நிர்வாணமாக்க
திசைகளை நிர்ணயிக்க
காலக் குதிரை ஏறி வரும்
வெளிக்கு வெளியே
போக முடியா
மனுனைக் கண்டு
தன் கற்பைக் காப்பாற்ற
துடிக்கும் ஒரு பெண்ணாகி,
மனு எஜமானனின்
காலடியில்
நன்றி மறவா நாயாய்
அடங்கியே கிடக்கிறது
பாவம் வெளி!
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-60
என்னுரை குறிப்பு-4
நேசங்களுக்கான டிப்பு
நேசங்களுக்கான என டிப்பு எப்பொழும் என் வாழ்வின் தவிர்க்க முடியாத ஓன்றாகவே இருந்தி வந்திருக்கிற.
என் வாழ்வினோவ்வொரு காலகட்டத்திலேத ஓரு நேசம் என்னில் அதிக அளவான செல்வாக்கச செலுத்தி வந்ள்ள. அ அந்த காலகட்டத் என சுயத்தின் தேவயின் காரணமாகவும் அன்றய என வாழ்வின் காரணமாக ஏற்பட்டதே ஓழிய என் வாழ்வில் வாய்த்த சகல நேசங்களுக்கும் என்ன உரவாக்கியதில் பங்கு உண்டு.
வாழ்வின் மற்ற எல்லா பகுதிகளவிட, நேசத்தில்தான் சுயத்தின் பங்கு அதிகம் என்பேன்.
நேச உலகில்தான் நான் சுயமாக இருக்கிறேன்.
அந்த உலகில் பந்தா இல்ல.
பொய் எக்காரணத்தயிட்டும் இருக்க்கூடா.
தியாகம் எனும் பேரில் சுயத்த கொல்லும் வேல இல்ல.
சதா நேரமும் நமக்கேற்ற மாதிரியான நடத்தவுடன் சுய முகத்டன் நடமாட முடிக்கின்ற உலகம்அ எனநம்புகின்றவன் நான்.
நான் நானாகவும் என் முன்னே இருக்கும் நேசம் அவாகவும் இருக்கின்ற உலகம்தான் நேச உலகம்.
நேசங்களால் காயப்படலாம் ஆனால், நேசங்களால் யாரும் ரோக்கிப்படவும் கூடா. ரோக்கிக்கவும் கூடா. அந்த உலகில் ஆள் பேதமும் இல்ல. பால் பேதமும் இல்ல.
அன்பு- நேசம் எனபதெலாம் அடயாள அட்டயப் பார்த் ஆரம்பிக்கின்ற பயணம் இல்ல.
அ ஆத்மாக்களின் பாஷய டிப்ப பரஸ்பர நிலயில் புரிந் அறிந் நடக்கின்ற ஓரு
சுயமான பயணம் என்தே உண்ம.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-61
நாளைய தாத்தா சொல்லப் போகும் கதை
ஞானம்
3வது ஆண்டு மலர்
ஜூன்-2002
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-62
கேள் பேரனே!
முன்னம் ஒரு காலத்திலே
ஓர் அராஜக அரசன் ஆட்சி செய்தான்
பென்னம் பெரிய ஆட்சிக்காரன்
நான்தான் என்றே
ஆணவத் தாண்டவமாடியேபடியே;
ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம்
இத்யாதி ஆபரணங்களுடன்;
வான் தொடும் கட்டிடங்களுடனும்
விசை ஒன்றினை தான் அழுத்தினாலே
உலக அசைவாக்கம் தன்வசம்
எனும் உக்கிரமான வக்கிரத்துடனும்;
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-63
வழுக்கையான, தலைப்பாகையுடனுமான
தாடிக்காரர்களை அழிக்க வல்ல
உலக கேடி நானே எனும் வெறியுடனும்;
ஆயுத வியாபாரத்தால் கஜானா நிறைத்தும்
மனு உயிர்களைப் புசிக்கும் கழுகுகளை
செல்லப் பிராணியாய் வளர்த்தும்
முன்னம் ஒரு காலத்திலே
ஓர் அராஜக அரசன் ஆட்சி செய்தான்
பென்னம் பெரிய ஆட்சிக்காரன்
நான்தான் என்றே
ஆணவத் தாண்டவமாடியேபடியே;
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-64
அந்தோ பார் பேரனே!
சென்ற நூற்றாண்டின் செப்டம்பர் பதினொன்றில்
அராஜக ஆட்சி செய்த அந்த அரசனின் நாடு
உலக உருண்டையிலிருந்து காணாமலேயே போனது
அதோ பார்! பேரனே!
அந்த அராஜக அரசன் வாழ்ந்த
அழிவு யுகத்தின் சின்னமாய்
பெரும் கட்டிடமொன்று
தன் வெண்தன்மைதனை இழந்து
துருப் பிடித்த நிலையில்
நூதனச்சாலையாய் நிற்கிறது
போய்ப் பார் பேரனே!
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-65
ஒரு தோழனின் கவிதைகள்
தினகுரல்
18.11.2002
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-66
1.
சரணாலயம் என்பதும்
என் உயிர் என்பதும்
மறுவாசிப்பில்
அபத்தமென ஆயிற்று;
சாய்ந்து கொள்ள தோள்:
வழியும் கண்ணீரை
துடைத்து விடும் விரல்:
துன்பம் நேருகையில்
துவண்டு விடாமல்
தாங்கிக் கொள்ளவும்
தவறாய் போகையிலே
தடுக்கி விழுகையிலே
ஏந்திக் கொள்ளவும்
கரங்கள்:
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-67
இவை -
சரீர வழியான
ஸ்பரிசங்கள்தான்
ஆனாலும் -
தக்க வைக்கும்
நேசத்தின் நேர்மை
அங்கும் தடுமாறாமல்
இருக்கும் தருணத்தை
எண்ணி சந்தோ´!
விழிகளால் கற்பழிக்கும்
அந்தக் கயவர்களின்
சிறு உரசலில் கூட
வழியும் வக்கிரம்
இந்த உறவுகளின்
சிறு ஸ்பரிசத்திலும்
இல்லை என உணர் தோழி!
28. 10. 2002
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-68
2.
உனது உடலே
உனது பிரதியாக
வரலாற்றால் வாசிக்கப்படுகிறது.
உன் ஆன்மா
அப்பிரதியின்
பொதியாகப் பண்டமாகி,
நீ பயணிக்கும் பயணத்தில்
உன் நிஜம் கரைந்து
அகண்ட பிம்பமாகி,
எல்லா விரல்களின் வழியாக
உன் பிரதி பிம்பம்
சிதைக்கப்படுகிறது
அறிவேன் நான்.
18.11.2002
-----------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-69
3
நீ
விழுந்து கிடக்கும்
பள்ளத்தாக்கிலிருந்து
உன்னை என்று மீட்பேன்?
எந்ததொரு படையயடுப்பும்
என்னால்
சாத்தியமாகாத நிலையில்
சொற்களின் அணிவகுப்பு மட்டுமே
நம் சுய மரணத்திற்கான
அஞ்சலியாய்...
என்னால்
ஒன்று மட்டுமே
சாத்தியமாக்க முடிந்து இருக்கிறது
உன் சுயத்தை
புரிந்து கொண்டது மட்டுமே
18. 11. 2002
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-70
என்னுரை
குறிப்பு
5..நன்றியயனும் ரத்தம்
நான் பல வழிகளில் உருவாக எனக்கு பலர் பல வழிகளில் உதவி இருக்கிறார்கள்.
அப்படி உதவிய அனைவரிடமும் நான் என் நன்றி உணர்ச்சியை பேணியே வந்துள்ளேன். உடல் உழைப்பு ரீதியாகவோ,மானசீகமாகவோ, பொருளாதார ரீதியாகவோ, அப்படி உதவியவர்கள் சிலர் பிற்காலத்தில் ஏதோ வகையான உதவி ஒன்று எனக்குத் தேவைப்பட்ட பொழுது, அவர்களின் இயலமையின் காரணமாகவோ அல்லது என்னுடன் அவர்களுக்கு ஏற்படும் கருத்து முரண்பாட்டின் காரணமாகவோ அல்லது என்னிடம் அவர் கண்ட ஏதோ வகையிலான பலஹீனங்களை முன்னிட்டோ அந்த சிலர் எனக்கு உதவாமல் போன சந்தர்ப்பங்கள் என் வாழ்வில் வந்தது உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் அந்த சிலரை மனதளவிலும் கூட நான் வெறுத்தது இல்லை. ஏனெனில் ஏலவே அவர்கள் எனக்கு செய்த உதவிகள் மறக்க முடியாதவை. அதற்காகவே அவர்களை என்றென்றும் நன்றி உணர்வுடன் மதித்தே வந்துள்ளேன். மனுகுலத்தை நேசிப்பவன் நான். ஆனாலும் எந்தவொரு மனிதன் நன்றி மறக்கிறானோ அந்த மனிதன் மீது எனக்கு அன்பு இல்லை.
நன்றி பாராட்டுதல் என்னும் உணர்வு என்னைப் பொறுத்த வரை, அந்த உணர்வு என் உடம்பில் ஓடும் ரத்தம் மாதிரி எனக்கு. ஓரு சொட்டு ரத்தமேனும் இல்லாத உடம்பை யாரேனும் மனிதன் என்று சொல்வதுண்டா? இல்லைத்தானே?
அதனால் நான் நன்றி உணர்வெனும்
ரத்தம் ஓடிக்கொண்டே இருக்கும் உடம்பை கொண்ட மனிதனாகவே
இருக்கவே விரும்புகிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-71
போருக்கான அஞ்சலி
மல்லிகை ஆண்டு மலர்
23.12.2002
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-72
உனக்கான அஞ்சலி
மட்டும்
அழுகை வராமலேயே;
உன் இறப்பு எங்கள்
சிறப்பானது
உன் எதிரி எங்கள்
நண்பனானது;
தர்மத்தின் கையில் நீ
அரசி
அதர்மத்தின் கையில் நீ
அரக்கி;
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-73
உன் மரணம்
அரசின் சமரசம் அல்ல;
காலத்தின் அவசிய
சமாசாரம்;
நேற்று வரை
அரக்கக் கரங்கள் வீசிய
"ஷெல்" " லில் இருந்தது
உன் இருப்பு
அமைதிக் கரங்கள்
இன்று பேசிய சொல்லில்
இருக்கிறது
உன்னை அழித்த
பொறுப்பு;
எல்லா நேசங்களின்
கல்லறைகளோ
சோகப் பறவையின்
கூடு;
உன் கல்லறை மட்டுமே
சமாதான தேவதையின்
கருவறை வீடு;
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-74
நேசங்களின்
மரணங்களோ
நெஞ்சில் தரும்
மெளனமான காயம்
உன் மரணம் மட்டுமே
எங்கள் நெஞ்சின்
சந்தோ ஆகாயம்;
மூச்சுகள் வாங்குவது
அன்றைய உன் பசிக்கு
ருசியான உணவானது
எங்கள் பேச்சுகளில்
நாங்கள் வாங்கி வரும்
இன்றைய உன் மரணமே!
எங்கள் வாழ்வின்
வசீகர கனவானது.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-75
தற்கொலைகளையும்
தற்பொழுதைய கொலைகளையும்
இப்பொழுதே நிறுத்திய
அரங்கேற்றம் உன் மரணமானது
எங்கள் பொற்கனவொன்றின்
அற்புத ஜனனமானது;
நாங்கள் வேண்டி நின்ற
உன் நிரந்தர அழிவானது
இன்றைய எங்கள்
உன்னத புரிந்துணர்வுக்கு
வழியானது.
சமாதானமேஉன் மரணத்திற்கான
நஞ்சானது - அதனால்
சாந்தி அடைந்த தளமோ
எங்கள் நெஞ்சானது;
உனக்கான அஞ்சலி மட்டும்
அழுகை வராமலேயே.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-76
நன்றிக்கான
வார்தைகள்
இத்தொகுப்பினை துரைவி வெளியீடாக வெளியிட மு ன் வந்ந
திரு ராஜ்பி"சாத் துரை விஸ்வநாதன் வர்களுக்கும்,
இத்தொகுப்பு இந்த வடிவமைப்பில்
வ"வேண்டும் என நான் விரும்பிய பொழுது ?
தனது லுவலகத்தையும் னுபவத்தையும்
எனக்குத் தந்து உதவிய
நண்பர் ஸீஸ் நிஸாருத்தீன் வர்களுக்கும்
வ"து கும்பத்தினருக்கும்,
தனது பல சி"மங்களு?க்யிடையே
ஓர் ச்சாளாராக ல்லாது நண்பராக வந்து
இத்தொகுப்பு சிறப்பான முறையில் வ"வேண்டும்
என்பதற்காக நல்ல பல ஆலோசனைகளை
வழங்கி ,இத்தொகுப்பியினை சிறப்பாக ச்சிட்ட
கிறிப்ஸ் உரிமையாளர்திரு கிருஷ்ணமூர்த்திவர்களுக்கும்,
வ"து குடும்பத்தினருக்கும்,
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-77
இன்றைய
மூன்று கவிதைகள்
தினக்குரல்
30.03.2002
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-78
றாகரிகமடைந்த
மனித குலத்தின்
போரையிட்டு...
"வரையறை செய்யப்பட்ட
போர் முனைகளைத் துறந்து
எதிர் அணித் தலைவனின்
இருப்பை மட்டுமேஎண்ணி
டீரட்டுமிராண்டித் தனமாய்
ஏவப்படும் ஏவுகணையே
என் தோழன்!''
எனப் பிரகடனம்
செய்துகொண்டு
அதிகாரத்தின் துணையுடனும்
ஜனநாயகத்தின் பேரிலும்
தொடர்ந்தது நாகரிகமடைந்த
மனித குலத்தின் போர்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-79
ஒளிப்படிமங்களில்
ஒளிந்து கொண்டிருக்கும்
அதிகாரம்
"வெற்றி எமதே!
வெற்றி எமதே!
இதோ பாருங்கள்
எமது வெற்றிக்கான
அடையாளங்களாய்
சிதறிக் கிடக்கும்
எதிரிப்படையினரின்
பிணங்கள்''
என அதிகாரக் குரல்
ஒலித்தது
போரான சூழலில்
சீரான முறையில்
சிருஷ்டிக்கப்பட்ட
ஒளிப்படிமங்களின்
படிவங்களின் மேலான
ஒலிப்பதிவில்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-80
டொலருக்கும்
யூரோவுக்குமிடையிலான
முரணில்...
அப்பொழுது இல்லாத
அநாகரிகம்
பணநோட்டுகளின்
பரிமாண மாற்றத்தில்
கோலோச்சியது
விலைகளின் முரண்பாடுகளின்
விளைவு
விலைகள் இல்லா
ஆயிரம் ஆயிரம்
மனிதர்களின்
கொலைகளில் முடிகிறது!
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-81
மரணங்களின் நேர்முக வர்ணனை
-செப்டெம்பர் 11க்கு-
Poetry.com
1. 10. 2001
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-82
வெட்கத்தால் நாம்
தலைகள் குனியத்தான் வேண்டும்.
புதிய யுகத்தின் பிரஜைகளான,
உன்னதமான நாகரிகமடைந்த குலத்திரான
நாம் வெட்கத்தால்
தலைகள் குனியத்தான் வேண்டும்.
நூற்றுக்கணக்கான
மனித உயிர்களின்
மரணங்களின்
நேர்முக வர்ணனையை
ஒலி - ஒளி பரப்பாய்
பார்க்க கேட்க கிடைத்த
யுகத்தில் வாழ்ந்ததற்காய்
வெட்கத்தால் நாம்
தலைகள் குனியத்தான் வேண்டும்!
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-83
ஒரு பிரகடனம்
தினக்குரல்
27. 12. 2002
--------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-84
நீ தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்
நான் தரமாட்டேன் உனக்கு சந்தர்ப்பம்.
உன் சமரச முகமூடிக்குள் ஒளிந்து கிடக்கும்
வன்மத்தை அறிவேன் நான்.
உன் ஆக்கிரமிப்பு என் அழிவுக்கு
வழி வகுக்கும் வருகை
என்பதை அறிவேன் நான்.
நீ ஆயுதங்களால்
உலகை அழிப்பவன்
நானோ ஆயுதங்களால்
என் இனத்திற்கு
விடுதலை அளிக்க நினைத்தவன்
என்மீது பயங்கரவாதி என்ற
பழிபோட்டு - என்னை
பலி எடுக்கும் எண்ணத்துடன்
அலையும் சர்வதேச பூசாரி நீ.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-85
பதுங்கி நின்று பாய்ந்தாலும்
என் இனத்தின்
பாதுகாப்பை பேணத் துடிக்கும்
என் எண்ணணத்திற்குப் பேர்
விடுதலை!
நீ உலக உருண்டைதனை
உனதாக்கி கலக நெருப்பில்
குளிர் காயப் பார்க்கிறாய்
நானோ இனியும்
கலகங்கள் எழாவண்ணம்
காலத்தின் தேவையினை
உலகம் முழுதும் அறிவித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆழம் தெரியாமல் காலை விட்டு
நீ பெற்ற காயங்களை மறந்து விட்டாயா?
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-86
உன்னிடம் ஆயிரம் ஆயிரம்
பொய் பிரச்சாரம் செய்யும்
எழுதுகோல்கள் இருக்கலாம்
என் பேரிலே இருக்கிறது
ஒற்றை வால்
அனுமன் வால்
இலங்கையை மட்டுமேஎரித்தது
எனது வாலோ
உன் அமைதி கெடுக்கும் வண்ணம்
உனது உலகையே எரிக்கும்.
சதிநாச வேலைக்காரனை
ருசியாக சாப்பிடத் துடிக்கும்
தியாக வரிகளுடன்
பாயத் தயாராகி நிற்கும்
பயங்கர மிருகம் நான்
உன்னைப் பொறுத்தவரை.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-87
எந்த நிறத்து மாளிகையிருந்தும்
நீ அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தாலும்
வேகாது உன் பருப்பு
என்பதை அறிந்து கொண்டிருக்கிறது
உலக இதயங்களைக் கொள்ளை கொண்ட
என் இருப்பு
இனி நீ
சொப்பனத்தில் ஏனும்
தப்புக் கணக்காய் போடாதே
என்னை அழிக்கும் எண்ணத்தை.
உன்னை அழிக்கும்
எண்ணத்தை சுமந்து என்றோ
புறப்பட்டு விட்ட
லிகிதம் நான்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-88
நன்றிக்கான
வார்தைகள்
இத்தொகுப்புக்கு தனது கைவண்ணத்தில்
உருவான புகைப்படங்களை தந்துதவிய
திரு ஜெயபால் வர்களுக்கும், மற்றும்
திருமதி பால"ஞ்சனி ஜெயபால் ஆகிய நேசங்களுக்கும்,
இத்தொகுப்புக்கான எழுத்து வேலைகளுக்கு
தேவையான மனித உழைப்பைத் தந்த
திருமதி ராஜஸ்ரீகாந்தன் வர்களுக்கும்,
பர்ணா ராஜஸ்ரீகாந்தன்
னோஜா ராஜ ஸ்ரீகாந்தன் ஆகியோருக்கும்,
இத்தொகுப்பின் வருகையை
மிகவும் ஆவலுடன்
எதிர் பார்த்து கொண்டிருக்கும்
கெக்கிராவ ஸஹானா
கெக்கிராவ சுலைஹா
ஆகிய நேசங்களுக்கும்
என்னைப்பற்றிய குறிப்பு
எழுதியது மட்டுமல்லாமல்
எனது இயந்தி" உழைப்புக்கு
ஓத்தடமாக இருந்து வரும்
நண்பர் ப.ஆப்டீன் வர்களுக்கும்,
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-89
போரில் நான்
"போர் என்பது நமது அன்றாட வாழ்க்கையில்
கொடூரமான பிரமிக்கத்தக்கதான விரிவாக்கமேஇல்லையா?
போர் என்பது நமது அன்றாடச் செயலின் பெரிதுபடுத்தப்பட்ட நிலையே.
நமது உள்மனதின் பிரதிபலிப்பே. அது பிரமிக்கத்தக்கதாகவும்
மிகக் கொடூரமானதாகவும், பெரும் நாசம் விளைவிப்பதாகவும்
இருந்தாலும் அது நம் அனைவரினதும் தனிப்பட்ட செயற்பாடுகளின்
ஒட்டு மொத்த விளைவே. ஆகவே, நீங்களும் நானும் போருக்குக்
காரணமாக இருக்கும் போது, அதை நிறுத்த நாம் என்ன
செய்ய வேண்டும்? எந்த நேரத்திலும் எழக்கூடிய போரை
நானோ அல்லது நீங்களோ நிறுத்த முடியாதுதான்.
ஏனென்றால் அது ஏற்கனவே தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.
- - ஜித்து. கிருஷ்ணமூர்த்தி -
மல்நுகை
39வது ஆண்டு
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-90
நேற்றைய இரவின் என் கனவில் வந்தவன்
நானாக இருந்தேன் என்றாலும்,
என் முகமேஎனக்கு அடையாளம்
தெரியா வண்ணம் சிதைவாக,
புகை மண்டலம் சூழ,
நான்தானா என்ற
அடையாளமற்ற அந்த
கனவில் ஓர் இருண்ட குகையில்
தொடர்ந்த அந்தப் பயணத்தில்
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-91
முதல் சில வளைவுகளில்
என் கரங்களில்
வில்லும் அம்பும்,
அடுத்து வந்த வளைவுகளில்
வாளும் கவசமும்,
நடுவளைவுகள் சிலவற்றில்
துப்பாக்கிகளும் கைக்குண்டுகளும்
இறுதியாக வந்த வளைவுகளில்
அணுகுண்டுகளும்,
இரசாயனக் குண்டகளும
என் ஆயுதங்களாய் இருக்க,
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-92
என் அதிகாரத்தைத்தக்க வைக்க
மாறிய ஸ்தூல வடிவங்களுடன்
என் ஊன்றுகோலான ஆயுதம்
துணை புரிந்த குகையில்
ஜீவகாருண்யம் அற்ற விழிகளுடனும்,
குருதியில் நனைந்த கரங்களுடனும்
நான் மேற்கொண்ட
இருண்ட பயணத்தின்
படிக்கட்டுகளாய் என் காலடியில்
லட்சோப லட்சப் பிணங்கள்
குவிந்து கிடக்க
பயணத்தின் நடுவில் நான்
துப்பிய எச்சில் நச்சுவாயுவாய்
மிதித்தவர்களின் நாடி
நரம்புகளை ஊடறுத்து
அவர்தம் உயிர் அணுக்களில்
அமில மழையைப் பொழிந்து கொண்டிருக்க,
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-93
எதிர்ப்பட்ட எவரேனும்
என் ஆயுதங்களைப் பறிக்க
எத்தனித்த பொழுதெல்லாம்
அவர் தம்மைக்
கொன்று குவித்தேன்
எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமின்றி
புரிந்த கொலைகளெல்லாம்
என் பாதுகாப்புக்குத்தான் என
பிரசாரம் செய்யுமாறு
கையடக்கத் தொலைபேசி மூலம்
என் சிஷ்யர்களுக்கு
சேதி அனுப்பிய வண்ணமே;
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-94
மிக வேகமாக, மிகவும் வேகமாக
அந்தத் தொலைப் பயணத்தை
கொலை பயணமாக்கக்
கடந்து கொண்டிருந்த, இருண்ட
அப்பயணத்தை கெளரவிக்கும் முகமாய்,
"கவலை வேண்டாம் உன் பின்னால்
பிரகாசமான ஒளி உமிழும்
டிஜிடல் விழிகளுடன் வரும் குழுவினர்
நீ புரியும் கொலைக்காட்சிகளை
"ரீலிலிது' செய்து ஒளிப்படிமங்களாக்கி
மரணத்தின் நேர்முக வர்ணனையாய்
உலக மனித "மூலை முடுக்கெல்லாம்'
ஒளிபரப்பி வருகிறார்கள் வெற்றிகரமாய்
என்றே அவர்கள் பதில் செய்தியினை
அனுப்பிய வண்ணமேஇருந்தனர்
நான் களிப்புறும் வகையில்,
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-95
அந்த இருண்ட குகையின்
அதியுயர் அதிகாரம் கொண்ட
அரசன் நானே என்ற என்
பிரகடனத்தை ஆமோதிக்கும் முகமாக
குகையோரத்து எல்லாச் சாமிகளும்
ஆமாம் போட, என் மனதில்
மனுக்குல அழிவுக்கான
தாக கருமைபரவியே கிடந்ததால்
இறுதிவரை இருண்டே கிடந்த
அந்த இருண்ட குகையின்
போர் யுகம் ஒன்றுக்கான
பொறுப்பாளி நானாகத்தான்
இருந்தேன் என்பது உறுதி ஆயிற்று
கனவு கலைந்து விழித்த
நான் பிணமாய் என்னை
உணர்ந்த பொழுது,
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-96
கொன்றதும், கொல்லப்பட்டதும்,
கொல்லப்படப் போவதும்,
கொல்லப்போவதும்,
நான்தான் என உறுதியான பின்,
இப்பொழுது துல்லியமாய்த் தெரிந்த
என் முகத்தில் தெளிவாய்த்
தெரிந்தது இற்றைவரை
என் அதிகார வெறியினால்
கொல்லப்பட்டவர்களின்
பிணங்களின் முக ஜாடை.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-97
உனக்கு எதிரான
வன்முறை
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-98
எந்தவிதமான
தடையற்ற பிரதேசம் மீது
ஆட்சி செய்ய நினைக்கும்
ஒரு சர்வாதிகாரி போல்
என் மீது ஆதிக்கம் செலுத்த
உன் முனைப்பு முனையும் பொழுதெலாம்
எனது சுயத்தின்
கூர்மைகொண்டு
உன்னை எதிர்க்கும்
எத்தனத்தில் ஈடுபடுகிறேன்
நான்!
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-99
கலாசாரமும் பண்பாடும்
உனக்கு வழங்கிய
சலுகையினைக் கொண்டு
நீ
சாத்தியமாக்க நினைக்கும்
உனது வன்னத்தினதும்
வன்முறையினதும்
வர்ணத்தை வரலாறு ஊடாக
நான் என்பதனால்
உன்னை எதிர்ப்பது
எனது
தனிப்பட்ட புரட்சியாகி
விடுகிறது
வீடு எனும் சிறையில்;
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-100
உன்னை வீழ்த்துவது
எனது உடல் என்று
கருதிக் கொண்டாலும்
அதுவே
உனக்கு நான்
அடிமைஎன்ற
சாசனத்தை நடைமுறைப்படுத்தி விடுகிறது.
உன்னை நிராகரித்தல்
நடைமுறையில் சாத்தியமாகும் பொழுது
உன் கண்களால்
பார்க்கப்பெறும்
இந்த சமூகத்தின் கண்களுக்கு
நான் வெறுக்கப்பட்டவளாக
கணிக்கப்படுகிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-101
இனி நான் என்ன செய்வது?
இன்றே இந்த ணமே
உன் மீதான வன்முறை ஒன்றை
கட்டவிழ்த்துவதற்கான
திட்டமிடத் தொடங்குவது தான்.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-102
நன்றிக்கான
வார்தைகள்
தனது பல சி"மங்களுக்கு மத்தியில்
முன்னுரை வழங்கிய
பேராசியர் கா.சிவதம்பி வர்களுக்கும்,
கணனிதுறையில் எனக்கு
ஆர்வத்தை ஏற்படுத்தி,
இன்று ந்த கண்ணனியை வைத்து
எனது கவிதைத் தொகுதி ஓன்றினை நானே வடிவமைக்கும் சூழல் மைய கா"ணமாக இருந்த
முஹம்மது ஸத்தார் முஹமட் முண்டியா எனும்
எனது நீண்ட நாளைய நண்பனுக்கும்
ஓவியத்துறையில் எனக்கு உதவிய
ஸ்ரீதர் பிச்சையப்பா எனும் நேசத்திற்கும்
மெeனமான எனக்குள்
நேசம் வார்த்து கொண்டிருக்கும்
ஹாஜி பாரூக் எனும் நண்பனுக்கும்,
வியாபா"த்துறையில்
நான் நெருக்கடிகளை
சந்தித்த வேளை
நான் ஓரு இலக்?கயவாதியாக
இருக்?றேன் என்ற ஓ¼"
ஓரு கா"ணத்திற்காய்
விசேமாய் உதவிய
மாமா என நான்
ன்புடன் விளிக்?க?ன்ற
ஹாசிம் உமர்™வர்களுக்கும்,
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-103
தலைகள்
நவமணி மற்றும் கவியரங்குகள்
27. 02. 2004
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-104
பல்வேறு திசைகளிலிருந்து
பல தலைகள் பறந்து வந்தன.
சில தலைகள் கிழக்கிலிருந்தும்,
சில தலைகள் வடக்கிலிருந்தும்
சில தலைகள் தெற்கிலிருந்மு;,
சில தலைகள் மேற்கிலிருந்தும்
பறந்து வந்தன.
அந்தத் தலைகளில்
வெறும் தலைகளும்
பச்சோந்தித் தலைகளும்
பதவி வெறித் தலைகளும்
நிறைந்தே இருந்தன.
வண்ண வண்ண
போர்வைகள் போர்த்திய படியும்
வந்தன அத்தலைகள்;
நிர்வாணத்தை ஆதரித்த
தலைகளும் வந்தன.
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-105
பச்சை என்றும்,நீலம் என்றும்
சிவப்பு என்னும்
இப்போ காவி என்றும்
பல பல வர்ணப் போர்வைகள்
போர்த்திய படியே
பல பல தலைகள்
பிறந்தே வந்தன.
மரத்தில் ஏறி சில தலைகள்
யானையிலும் குதிரையிலும்
அமர்ந்து சில தலைகள்
நாற்காலியில் குந்தி சில தலைகள்
கையேந்தியும் சில தலைகள்
கையில்
சுத்தியலும் அரிவாளும்
வெற்றியிலையும் விளக்கேந்தியும்
சில தலைகள்
பாத யாத்திரையாகவும்
சில தலைகள் வந்தன.
இப்படியாய்
பல பல வழிகளிலும்
பல பல வடிவங்களிலும்
பிறந்தே வந்தன
பல பல தலைகள்
------------------------------------------------------------------------------------------------------------
பக்கம்-106
தொப்பி போட்ட தலைகளாய்
திருநீறு பூசிய தலைகளாய்
கிராப் வெட்டிய தலைகளாய்
கூந்தல் கொண்ட தலைகளாய்
மீசை மழித்த
முகம் கொண்ட தலைகளாய்
சின்னப்பா தேவர் மீசை
முகம் கொண்ட தலைகளாய்
அரை மொட்டைத் தலைகளாய்
முழு மொட்டைத் தலைகளாய்
இப்படியாய்
பற்பல சிகை அலங்காரத்துடனும்
நெற்றி அடையாளத்துடனும்
சிகையே இல்லாமலும்
பல பல கோலங்களில்
பிறந்தே வந்தன
பல பல தலைகள்.
பக்கம்-107
ஜனநாயகம் எனும் எண்ணெய் தடவி
மக்களின் தலைகளை மொட்டை அடிக்க
அதிகாரம் தனை தக்க வைக்க
ஆண்டு ஆண்டு காலமாய்
ஆட்சிகள் செய்ய
ஆசையைக் கொண்டு
பல பல
அவதாரங்கள்
எடுத்தே வந்தன
பல பல தலைகள்.
ஒவ்வொரு தலைகளுக்கும்
இருபது தலைகள்
இருப்பதைக் கண்டு
இராவணனின் பக்தகோடி தலைகள்
வியந்தே போயின;
--------------------------------------------------------------
பக்கம்-108
இந்தத் தலைகளின் நெருக்கடியில்
தலையாயத் தொண்டர்களின்
தலைகள் குழுப்பின
தடுமாற்றத்தினால்;
வழி தெரியாமல்
தலைகளின் போராட்டத்தில்
தம் பிழைப்புக்கு
மலை போல் வந்துவிட்ட
ஆபத்தினை எண்ணி
அந்த தலைகளின்
எடுபிடிகளுக்கு
தலைகள் வலித்தன.
தலை கழன்ற
சில முண்டங்களோ
அந்தத் தலைகளின்
பிழைகளுக்கெல்லாம்
நியாயம் கற்பித்து
ஊர்வலம் போயின;
--------------------------------------------------------------
பக்கம்-109
இந்தத் தலைகள்
வந்த திசைகளுக்கான
மக்களோ தலைகளிற்றி
முண்டங்களாகினர்.
மறுபாஷையில் சொன்னால்
முட்டாள்கள் ஆகினர்.
இந்தத் தலைகளின்
புரியாத் தத்துவத்தைக் கேட்டு
அப்பாவித் தலைகளோ
அப்படியும் இப்படியுமாய்
தலைமுடியைப் பிய்த்துக் கொண்டன.
--------------------------------------------------------------
பக்கம்-110
தங்களின் தலைகளிலே
தாங்களே மண்ணை
வாரிப் போட்டுக்
கொள்ளும் வண்ணம்
அந்தத் தலைகளின்
பேர்களின் முன்னால்
புள்ளிகள் இட்டு
ஓட்டுகள் போட்ட
தொகையில் அதிக அளவான தலைகளே
தந்த அதிகாரம் இது
என்பதனை மறந்து
இந்தத் தலைகளோ
தம்மால் வந்த அதிகாரம் இதுவென்றே
தலை கால் புரியாமல்
ஆட்டம் ஆடின.
--------------------------------------------------------------
பக்கம்-111
அதனால்
பின்னைய நாளில்
ஓட்டுகள் கொடுத்த தலைகளோ
இந்தத் தலைகளின்
நிழல்களைக் கண்டாலே
தலைதெறிக்கும் வண்ணம்
ஓட்டம் ஓடின.
இந்தத் தலைகளைத் தந்த
உயிர் நீத்த தலைகளோ
இந்தத் தலைகள்
திசைகள் தோறும்
போடும் கூத்தைக் கண்டு
தலையில் அடித்துக் கொண்டே
சொர்க்கத்தில் கூட
சோகம் அனுஷ்டித்தன.
இந்தத் தலைகளைத் தந்து
நரகம் போன மூத்த தலைகளோ
சிஷ்ய தலைகள்
தம் பணியினைச்
சிறப்பாய் செய்வதை
மெய்ச்சும் வண்ணம்
தலைகள் ஆட்டி
ஆரவாரம் செய்தன.
--------------------------------------------------------------
பக்கம்-112
தாங்கள் ஈன்ற தலைகளின்
மந்தி சக தவளை
பாய்ச்சலாய்
புதிய ஆட்சிகள் தோறும்
கட்சிகள் கண்டு
காட்சிகள் கண்டு
மூத்த தலைகளின் தலைகளோ
சுத்தின.
இத்தலைகள் தரித்துக் கொண்ட
தத்துவங்களோ
ரகர் விளையாட்டின் பந்தாய்
இழுபறிப்பட்டன
இந்தத் தலைகளின்
பதவிகள் தம்மை
இழுத்துப் பறித்துக் கொள்ளும்
விளையாட்டின் உச்சத்தில்;
இதற்கிடையில் சில
தலை ஆட்டிகளோ
தம்பணி தொடர்ந்தன
நாடாளும் மன்றத்தின்
--------------------------------------------------------------
பக்கம்-113
""நான் தான்
சரியான தலை'' என தலைகள்
தம்மைத் தாமேசொல்லிக் கொள்ள
அந்தத் தலைகளின் பக்தகோடிகள்
ஆமாம் என தலைகள் ஆட்டின.
அரசியல் அதிகாரம்
எனும் அரக்கி
அத்தலைகளின்
தலைகள் மீது
தலை விரித்தாட
அந்த நரித்தனத் தலைகளின்
துரோகத்தனத்தால்
பல தலைகள் உருளக் கண்டு
நேரியத் தலைகள் அவமானத்தால்
தலைகள் குனிந்து கொண்டன.
இனி -
தலைகளின் தலையாய
தர்மத்தை மறந்த
இந்தத் தலைகளை
நாளை தலையயடுக்கும்
எந்தத் தலைமுறையும்
மன்னிக்காது என்பதை
நல்ல தலைகளுடன்
--------------------------------------------------------------
பக்கம்-114
நன்றிக்கான
வார்தைகள்
தார்மீக நிலையிலும்
பல்வேறு நெருக்கடியிலும்
நான் சிக்?க வேளையயலாம்
எனக்கு நல்லதொரு
ஆலோசகராய்
உதவிய க"மாய் திகழும்
ஹாஜி முஹமட் இக்பால்
ஹாஜி ஹமட் தௌக்
எனும் உன்னத மனிதருக்கும்
இறுதியாக-
எனது இத்தொகுப்புக்கு
உழைத்த வேளை
குடும்ப சுமைகளிலிந்து
நான் விடுபடஓத்தழைத்த
என் மனைவி பரீனாவுக்கும்,
எனது மகளகளான
´யாரா பானு ஹாஜிமுஹம்மது ´யாம் பட்டேல்
ஸ்மா பானு,
மற்றும் எனது பே"ன்களான
ர்கம் முஹம்மது ´யாம் பட்டேல்
தல்ஹா முஹம்மது ´யாம் பட்டேல்
ஆகியோருக்கும்
-----------------------------------------------------------------------
பக்கம்-115
சுனாமி-26
அது-
அழைத்துச் சென்ற
சகல உயிர்களுக்கும்
-----------------------------------------------------------------------
பக்கம்-116
1
ஆழி பூதம்-
ஊழிக் கூத்தாடியது
அழிந்தது தேசம்
-----------------------------------------------------------------------
பக்கம்-117
2
கரையைப் பார்த்து பார்த்து
சலித்துப் போன
அலை விழிகளுக்கு
நகரம் பார்க்கும்
ஆசை வந்தது
-----------------------------------------------------------------------
பக்கம்-118
3
நுரைப் பூக்கள் தூவிய
அலைக்கரங்கள்
கொலைக்கரங்களாயின.
-----------------------------------------------------------------------
பக்கம்-119
4
கடலே!
நீ தோற்றுத்தான் போனாய்;
நீ காவு கொண்டு போனவர்களின்
சொந்தங்கள் சிந்திய கண்ணீரால்
எம் தேசமே
உன்னை விட
பெரும் கடலாய்
மாறிய பொழுது
கடலே!
நீ தோற்றுத்தான் போனாய்.
-----------------------------------------------------------------------
பக்கம்-120
5
நீ அழைத்துச் சென்ற
உயிர்களின் உறவுகள்
எழுப்பிய சோக ஓலம் முன்னே
உன் பேரலைகள் எழுப்பிய
இரைச்சல் அமுங்கிப்
போன பொழுது
கடலே!
நீயே காணாமல் போனாய்.
-----------------------------------------------------------------------
பக்கம்-121
6
சதையை ருசித்து
எலும்புத் துண்டுகளை
வீசி எறியும் மாமிச உண்ணி போல்
உயிர்களை உறிஞ்சி
வெறும் உடல்களை
கரைக்கு அனுப்பிய கடலே!
நரமாமிச உண்ணியாய் கடலே
நீயேன் மாறிப் போனாய்?
-----------------------------------------------------------------------
பக்கம்-122
7
கடலே!
இனியயலாம்
உன் அலைகள் சிந்தும்
நுரைக் குவியலை
பார்க்கும் பொழுதெலாம்
நீ அழைத்துச் சென்ற
உயிர்களின் மையத்துகள் மீது
நாங்கள் அணிவித்த
கபன் குவியலே
எங்கள் மனக்கண்ணில்
காட்சி தரும்
-----------------------------------------------------------------------
பக்கம்-123
8
கடலே!
அண்டை கண்டத்திற்கோ
நாட்டில் தான் மயானம்
உன்னால்
எங்கள் நாடே மயானம்!
-----------------------------------------------------------------------
பக்கம்-124
9
கடலே!
கரை வரை தானே
உனது உறவு? - பின்
தரை வரும்
கனவு உனக்கு எதற்கு?
-----------------------------------------------------------------------
பக்கம்-125
10
கடலே!
உலக உருண்டையில்
நீ தான் பெரும்பான்மை
என்பதனாலா
நீரின் ராஜா நானே
எனும் அதிகாரத்துடன்
சிறுபான்மையான நிலத்தை
அழிக்க துணிந்தாயோ?
-----------------------------------------------------------------------
பக்கம்-126
11
உன் அலை நுரை போல
வெள்ளை நிறத்து
நெஞ்சம் கொண்டவர்கள்
என்பதனாலா
ஆயிரம் ஆயிரம்
பிஞ்சு உயிர்களை
உன்னிடம் அழைத்துச் சென்றாய்?
-----------------------------------------------------------------------
பக்கம்-127
12
மேலிடத்திலிருந்து வரும்
அழுத்தத்தின் காரணமாய்
தன்னை தக்கவைக்க
ஆயிரம் ஆயிரம்
உயிர்களை பலி கொடுக்கும்
ஓர் அரசியல்வாதியைப் போல்
மேலிடத்தால் வந்த
அழுத்தத்தால்
உன்னை தக்கவைக்க
நீயும் ஆயிரம் ஆயிரம்
உயிர்களைப் பலி கொண்டாயே
உப்புக் கடலே!
மகா பெரும்
தப்புச் செய்து விட்டாயே!
-----------------------------------------------------------------------
பக்கம்-128
13
அன்று உன் அலை வரிசையிலோ
ஒலித்தது சங்கீத லயம்;
இனி உன் அலை வருகையிலோ
ஒலிக்கும் மரண பயம்.
-----------------------------------------------------------------------
பக்கம்-129
14
தீவு நாடாய்
இருந்த எங்கள் நாடு
சாவுக் காடாய் மாறியது
உன்னால் தானே கடலே!
-----------------------------------------------------------------------
பக்கம்-130
15
கடலே!
நீ சிறு அலையாய்
வந்த பொழுது
என்ன அமைதி!
பேரலையாய்
நீ எழுந்து வந்த பொழுது
எம் நாடே சமாதி!
-----------------------------------------------------------------------
பக்கம்-131
16
கடலே!
இத்துணை காலம்
அள்ளி வழங்கிய
அட்சய பாத்திரமாய்
இருந்த நீ இன்றேன்
எங்களை அழிக்கும்
பாத்திரம் ஏற்றாய்?
-----------------------------------------------------------------------
பக்கம்-132
17
கடலே!
அலைகள் முத்தமிட்டு
எங்கள் பாதங்களை
ஈரம் செய்த
உன் கரையோரங்கள்
இனி எங்களுக்கு
ஒரு கொலைகாரனின்
பாதம் பட்ட
மரணக் கறை படிந்த
ஓரங்களாயிற்று
-----------------------------------------------------------------------
பக்கம்-133
18
கடலலையே!
ஆயிரம் ஆயிரம்
பேர்களைக் கொன்று
குவித்தேனும்
பேர் பெறும் தாகம் கொண்டு
அலைபவர்களின் புகழ் வெறி
உனக்கும் வந்ததோ?
அதனால் தானோ கடலே!
ஆயிரம் ஆயிரம் பேர்களை
தின்று குடித்து
வெறும் அலை என
உன்னை அழைத்தவர்கள்
வாயாலேயே சுனாமி என
உன்னை அழைக்க வைத்தாயோ?
-----------------------------------------------------------------------
பக்கம்-134
19
கடலே!
நெஞ்சில் ஈரம்
இல்லாதவர்கள் தானே
கொலைகள் புரிவார்கள்
ஈரமேஉருவான
உன்னால் எப்படி
இத்தனை கொலைகள்
புரிய முடிந்தது கடலே?
புரியவே இல்லை
எங்களுக்கு கடலே!
-----------------------------------------------------------------------
பக்கம்-135
20
கடலே!
போரால் அழிந்து
கிடந்த எங்களை
பேரலைகளால் அழிக்கும்
போராசை உனக்கு எதற்கு?
-----------------------------------------------------------------------
பக்கம்-136
21
அதிர்வு வந்தது
உனக்குத்தானே கடலே?
அழிவு தந்தாய்
எங்களுக்கு எதற்கு?
-----------------------------------------------------------------------
பக்கம்-137
22
கடலே!
இன்றைய உன்
நுரைப்பூக்கள்
நேற்றைய உன்னாலான
எங்கள் மரணங்களுக்கான
அஞ்சலிப் பூக்களாயின.
-----------------------------------------------------------------------
பக்கம்-138
23
கடலே!
உப்பு ருசிதானே
உனது சொத்து;
பின் அதுவேன்
மனித உயிர் ருசியாய்
மாறிப் போனது
நாங்கள் செத்து?
-----------------------------------------------------------------------
பக்கம்-139
24
கடலே!
எத்தனையோ போர் அலைகளால்
உயிர் கொலைகள்
புரிந்து போன
படை அலைகளை விட
எத்தனையோ எல்லைத் தடைகளை
உடைத்து வந்து
பெரும் நீரலைப் படைகளால்
புரிந்து போன கொலைகளால்
பெரிய இராணுவம் நீயே
என்றே நிரூபித்து விட்டாயே!
-----------------------------------------------------------------------
பக்கம்-140
25
மனித உடலுக்கு
தாகம் வந்தால்
வேகமாய் தேடும்
குடி நீரே
சிறந்த பானம்.
வேகமாய் ஓடும்
கடல் நீரே உனக்கு
தாகம் வந்தால்
இறந்த உடல்களா
உனக்கு தானம்?
-----------------------------------------------------------------------
பக்கம்-141
26
கடலே!
உன் கரையோரம்
காற்று
இனி காலமெலாம்
நீ காவு கொண்ட
உயிர்களுக்கான
அஞ்சலி கவிதையை
எங்கள் செவிகளில்
வாசித்துக் கொண்டே இருக்கும்.
-----------------------------------------------------------------------
பக்கம்-142
நூலாசிரியரின் பிற நூல்கள்
யுக ராகங்கள்
எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம் -இலங்கை-1976
ஹிரோசிமாவின் ஹீரோக்கள்
நர்மதா மதிப்பகம்-தமிழ்நாடு-1982
இயந்தி" சூரியன்
நர்மதா மதிப்பகம்-தமிழ்நாடு-1984
நாளையை நோக்கிய இன்றில்...
நர்மதா மதிப்பகம்-தமிழ்நாடு-1990
(இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற நூல்)
மீண்டும் வசிப்பதற்காக
மல்லிகைப் பந்தல்-இலங்கை-1999
-----------------------------------------------------------------------
பக்கம்-143
துரைவி வெளியீடுகள்
1. மலையகச் சிறுகதைகள்
33 மலையக எழுத்தாளர்களின் கதைகள்
2.உழைக்கப் பிறந்தவர்கள்
55 மலையக எழுத்தாளர்களின் கதைகள்
3.பாலாயி
தெளிவத்தை ஜோசப்பின் மூன்று குறுநாவல்கள்
4.மலையகம் வளர்த்த தமிழ் சாரல் நாடனின் கட்டுரை
5.சக்தி பாலையாவின் கவிதைகள் சக்தி பாலையாவின் கவிதைகள்
6. ஓரு வித்தியாசமான விளம்பரம் ரூபராணி ஜோசப்பின் சின்னஞ் சிறுகதைகள்
-----------------------------------------------------------------------
பக்கம்-144
7.மலையக மாணிக்கங்கள் மலையக முன்னோடிகள் பன்னிருவர் பற்றிய அந்தனி ஜீவாவின் நூல்
8.தோட்டத்து கதாநாயகர்கள் நடைச்சித்திரம் கே.கோவிந்தராஜ்
9.பரிசு பெற்ற சிறுகதைகள் 1998 துரைவி- தினகரன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுப் பெற்ற கதைகள்
-----------------------------------------------------------------------
பக்கம்-145
10.மலையகச் சிறுகதை வரலாறு
ஸ்ரீ லங்கா சாஹித்தி மண்டலப் பரிசு பெற்ற தெளிவத்தை ஜோசப்பின் ஆய்வு நூல்
11.துரைவி நினைவலைகள் அமரர் துரை விஸ்வநாதன்
அவர்களைப் பற்றிய கட்டுரைகள்
12.வெள்ளை மரம் ஸ்ரீ லங்கா சாஹித்தி மண்டலப் பரிசு பெற்ற அல்.அஸூமத்தின் சிறுகதைத் தொகுதி
13. சி.வி.யின் தேயிலை தேசம்
ஸ்ரீ லங்கா சாஹித்தி மண்டலப் பரிசு பெற்ற சி.வி. வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழ் மொழியாக்கம் மொழியாக்கம்; மு.சிவலிங்கம்
-----------------------------------------------------------------------
பக்கம்-146
English details
பின் அட்டை குறிப்பு
புறக்கோட்டை வியாபாரப் பரப்பில் தூசுப் படலத்தில் அல்லாடும் சன நெருக்கடியி லும் மிக நிதானமாக கவிதா உணர்வு இழையோடுகிற்தெனில் அது மேமன்கவியின் நடமாட்டம்தான்.
சந்தேகமில்லை.
குஜ்ராத் மாநிலத்திலிருந்து திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடும் வணிக நோக்கில் புலம் பெயர்ந்து இலங்கைக்கு வந்து போக, பின்னர் இங்கேயே தங்கிவிட்ட மேமன் சமூகத்தில் இந்திய முற்போக்கு இலக்கிய இரத்தம்தான் ஓடுகிறது என்பதற்கு மேமன்கவி சான்று.
இலக்கியத்தில் பின்-நவீனத்துவம் உட்பட ஆயிரத்தெட்டு இலக்கியப பிரச்சினைகளை தலையிலும் டயரியிலும் சுமந்த வண்ணம் கையடக்க தொலையில் பேசியில் முணுமுணுத்துக் கொண்டே தேடல்....தேடல்...தேடலென்று சதா புத்தக்காட்டில் வேட்டையாடும் இந்தக் கவிக்கு புரிந்துணர்வும்,மானுட நேயமும் அதிகமதிகம்தான் என்பதை தோழர் ராஜஸ்ரீகாந்தனின் இறுதிக் கிரியைகளில் சில நாட்கள் தொடர்ச்சியாக அவர் பங்கு பற்றியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.
எத்தகைய நெருக்கடியிலும் கரிசனையோடு கருமாற்றும் சாணக்கியம் அலாதியானது. அது அவருக்கே உரியது. நூல்கள் தயாரிப்பு வேலைகள், வெளியீட்டு அறிமுக விழாக்கள், பேச்சாளர்கள் ,அழைப்புக்களை பகிர்தல் எதுவாக இருந்தாலும், எதையுமே புதுமையாக செய்து பார்க்க வேண்டும் என்ற அவ்வவுடன் தொழிற்படுவது மேமன்கவியின் இலட்சியம். ஓரு மெழுகுவர்த்தியைப் போல் பிறரின் பிரகாசத்திற்காக் கரைந்துருகும் இலக்கிய நெஞ்சம் அவருடையதுதான்.
புதுக்கவிதைத்துறை தவிர தனது இலக்கியத் தேடலின் விளைவாக கருத்துக்கள் முதிர்வடைந்து அவரிடம் வெளிப்படும் விமர்சன கருத்துக்கள் வாசகரின் சிந்தனையத் தூண்டும் வகையானவை.
முதன் முதலில் யுகராகங்கள் பாடிய கவிஞர் ஹிரோசிமாவின்
ஹீரோக்களை சந்தித்து, இயந்திர சூரியனாய் வலம் வந்து நாளையை நோக்கிய இன்றில் சாகித்திய மண்டலப் பரிசுப் பெற்று, மீண்டும் வசிப்பதற்கான புதிய அனுபவங்களை உள்வாங்கி, உனக்கு எதிரான வன்முறையை அடையாளம் கண்டு துரைவி பதிப்பத்தினூடாக இந்த நவீன
தொகுதியை நண்பர் மேமன்கவி பிரசவித்துள்ளார். இதில் அடங்கி இருக்கும் கவிதைகள் எண்ணிகையில் குறைவாக இருந்தாலும் மிக
கனதியாகவும் அழகாகவும் வடிவமைத்துள்ளார். இதற்காகஅவர்அனுபவித்த சிரமங்களை என்னால் நேரடியாகவே அவதானிக்க முடிந்தது. ஆயினும் எதிர் பாரத்த்தப் போல் புத்தக கலாசாரத்தில் சற்று வித்தியாசமாக ஓரு புதுமையைத் தாங்கி பிரகாசித்துள்ளது இத்தொகுப்பு.
இலக்கிய உலகில் நண்பர் மேமன்கவியின் புதுமையைத் தேடும் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
- ப.ஆப்டீன்-
*****
கருத்துகள்
கருத்துரையிடுக