வன்னியர்
வரலாறு
Backவன்னியர்
ஆக்கியோன் :
கலாநிதி சி. பத்மநாதன்
+++++++++++++++++++++++
வன்னியர்
ஆக்கியோன் :
இலங்கைப்பல்கலைக்கழக வரலாற்று
விரிவுரையாளர்.
கலாநிதி
சி. பத்மநாதன்
பேராதனை, 1970
முதற்பதிப்பு : கார்த்திகை 1970
குசைளவ நுனவைழைn: ழேஎநஅடிநச 1970
விலை ரூபா 2-00
எல்லா உரிமையும் ஆக்கியோனுக்கே.
அச்சுப்பதிப்பு: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை. து. 164-1970
+++++++++++++++
இந்நு}லில் :
முன்னுரை ... ... 7
அணிந்துரை ... ... 9
முதலாம் பகுதி
1. வன்னியர் தோற்றம் ... ... 17
(அ) இலக்கியத்தில் வன்னியர் ... ... 17
(ஆ) தென்னிந்திய வரலாற்றில் வன்னியர் 20
2. தென்னகத்து வன்னிமைகள் ... ... 25
3. ஈழத்து வன்னிமைகள் ஐ ... ... 33
(அ) தமிழ் சிங்கள அரசுகளில் வன்னிமைகள் 33
(ஆ) வன்னிநாடுகளின் தோற்றம் ... 34
(இ) திருமலை வன்னிமைகள் ... 38
(ஈ) முக்குவ வன்னிமைகள் ... 43
(க) மட்டக்களப்பு வன்னிமை ... 43
(உ) புத்தளத்து வன்னிமை ... 45
4. ஈழத்து வன்னிமைகள் ஐஐ 53
(அ) தோற்றுவாய் ... ... 53
(ஆ) அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம் 55
இரண்டாம் பகுதி
5. பரராசசேகர மகாராசாவின் திருப்பணி கூறும் பட்டயம் 65
6. கயிலை வன்னியனார் மட தர்மசாதனப் பட்டயம் 81
7. நல்ல மாப்பாண வன்னியனின் ஓலை ... 97
8. வன்னியர் மடாலய தர்மஸாஸனப் பட்டயம் ... 103
+++++++++++++++++++++
சமர்ப்பணம்
வட இலங்கை வரலாறு பற்றிய
பல மூலாதாரங்களைத் தேடி ஆராய்ந்து
தர்க்கரீதியாகப் பல கட்டுரைகளையும் நு}ல்களையும்
எழுதி அரும்பணி புரிந்த
சுவாமி ஞானப்பிரகாசரின் நினைவிற்குக்
காணிக்கையாக
இந்நு}லைச்சமர்ப்பிக்கின்றோம்.
+++++++++++++++++++++++
முன்னுரை
தென்னகத்திலும் ஈழத்திலுமிருந்த இராணுவ அமைப்புக்களில் வன்னியர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். கல்லாடஞ் சொல்வதுபோல நாற்படையிலும் வன்னியர் சேவை புரிந்து வந்தபோதும் படைகளிலிருந்த வன்னியருட் பலர் வில்லாளிகளாகவே இருந்தனர்.
வன்னியப் படைகளின் தலைவராயிருந்த, வன்னியநாயன் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்ற பிரதானிகள் சோழப் பேரரசிற் சமாந்தரராகி, அப்பேரரசு தளர்வுற்ற காலத்திலே குறுநிலமன்னராக எழுச்சிபெற்றனர். பன்னிரண்டாம் நு}ற்றாண்டிலே தோன்றிய தென்னக வன்னிமைகள் பதினாறாம் நு}ற்றாண்டுவரை நிலைபெற்று வந்தன. விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரின் ஆட்சியிலே தொண்டை மண்டலத்திலுள்ள வன்னிமைகள் அழிந்தொழிந்தன.
பொலநறுவைக் காலத்திலும் (993-1215) அதன் பின்பும் தென்னகத்திலிருந்து வன்னியர் ஈழநாட்டிற்கு வந்தனர். ஈழத்தில் வன்னியர்வசமிருந்த படைப்பற்றுக்கள் பல வன்னிமைகள் தோன்றுவதற்கு ஏதுவாயிருந்தன. பொலநறுவை அரசு அழிவுற்றதும் வன்னியநாடுகள் என வழங்கிய பல குறுநில அரசுகள் எழுச்சிபெற்றுப் பல நு}ற்றாண்டுகளாக ஈழ வரலாற்றிலே சிறப்பிடம் பெற்றிருந்தன. இவை வடஇலங்கையிலும் மேற்கிலே சிலாபம், புத்தளம் முதலிய இடங்களிலும் கிழக்கிலே திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும வளர்ச்சியடைந்திருந்தன.
இச்சிறு நு}ல் வன்னியரது வரலாற்றையும் வன்னிநாடுகளின் வரலாற்றையும் மிகச் சுருக்கமாகக் கூறுகின்றது. வன்னியரின் தோற்றம், வன்னிநாடுகளின் வரலாறு என்பவற்றிலுள்ள பிரதான கட்டங்களே நு}லில் விளக்கப்பட்டுள்ளன. இந்நு}லின் இரண்டாம் பதிப்பில் வன்னியநாடுகளின் வரலாறு, சமூக அமைப்பு, சமூக வழமைகள் எனபன விரிவான முறையிலே இடம்பெறும்.
இந்நு}லை எழுதுமாறு ஊக்குவித்து, எழுதிய பின் பல நாட்களாகப் பிரதிகளைப் பார்த்துப் பிழைகளை நீக்கி நு}ல் சிறப்பாக அமைய வழிகாட்டிப் பின் அணிந்துரை அளித்து நு}லை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளுஞ் செய்து பேராதரவளித்த தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி. சு. வித்தியானந்தன் அவர்களுக்கு என் நன்றிகள் பல.
கயிலாய வன்னியனார் தர்மசாதனப் பட்டயத்தில் வரும் கிரந்த எழுத்துக்களை இலகுவில் வாசிப்பதற்கும் அதில்வரும் வடமொழிப் பகுதிகளைப் புரிந்து கொள்வதற்கும் உதவி புரிந்த யாழ்ப்பாணக் கல்லு}ரி விரிவுரையாளர் வித்துவான் இ. பாலசுப்பிரமணியம் (சிறப்புக் கலைமாணி, இலங்கை) அவர்களுக்கும், யாழ்ப்பாணக் கல்லு}ரி விரிவுரையாளர் திரு. வி. சிவசாமி அவர்களுக்கும், அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் முன்னைநாள் அதிபர் பண்டிதர் மு. சதாசிவம் அவர்களுக்கும், இந்நு}லைச் செவ்வனே அச்சேற்றிய சைவப்பிரகாச அச்சகத்தாருக்கும் நு}லாசிரியரின் நன்றிகள் பல.
சி. பத்மநாதன்
5-11-70
வரலாற்றுத்துறை,
இலங்கைப்பல்கலைக்கழகம்,
பேராதனை.
++++++++++++++++++++++++++++
அணிந்துரை
கலாநிதி. சு. வித்தியானந்தன்
இலங்கைப் பல்கலைக்கழகத்
தமிழ்த்துறைத் தலைவர்.
தமிழ்பேசும் மக்கள் இன்று ஈழத்தின் பல பாகங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் ஈழத்தின் தொல்குடி மக்களாக இருந்தபோதும் இவர்களது வரலாறு இதுவரை ஒழுங்கான முறையில் எழுதப்படவி;ல்லை. தமிழர் அரசர்களாகவும் குறுநில மன்னராகவும் ஈழத்தில் ஆட்சிசெய்து வந்திருக்கின்றனர். இங்கு ஆண்ட குறுநிலமன்னரில் வன்னியர் குறிப்பிடத்தக்கவர்.
இவ்வன்னியர்பற்றிச் சில நு}ல்களும் கட்டுரைகளும் வெளிவந்தபோதும் இதுவரை எவராவது ஈழத்தின் பல பாகங்களிலுமிருந்த வன்னிமைகள்பற்றி ஆராய்ச்சிநு}ல் ஒன்றும் எழுதவில்லை. அடங்காப்பற்று வன்னியர்மட்டும் வன்னியர் அல்லர். திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் போன்ற வேறு பிரதேசங்களிலும் வன்னியர் ஆட்சி இருந்து வந்திருக்கின்றது.
மேலும், வன்னியர் தமிழகத்திலிருந்தே ஈழத்திற்கு வந்தனர். தமிழக வரலாற்றினை எழுதிய ஆசிரியர்கள் கூட அங்கிருந்த வன்னியர் பற்றி ஆராயவில்லை. அவர்கள் அங்கு படைத்தலைவராக இருந்து குறுநில மன்னராக விளங்கிச் சுயாட்சியும் செய்து வந்திருக்கின்றனர். இந்த வரலாறு எந்தத் தென்னிந்திய வரலாற்று நு}லிலும் இடம்பெறவில்லை.
இக்குறைகளை ஓரளவு நீக்கும் முன்னோடி நு}லாக வெளிவந்திருப்பதே ‘வன்னியர்’ எனப் பெயரிய இந்நு}ல். இதன் ஆசிரியர் கலாநிதி சி. பத்மநாதன் அவர்கள் வன்னியரின் தோற்றத்தினையும் தமிழகத்திலும் ஈழத்திலுமுள்ள வன்னியரின் வரலாற்றையும் மிகச் சுருக்கமாக இதிலே ஆராய்ந்திருக்கின்றார். இதுவரை வெளியிடப்படாத பல பட்டயங்களைத் தமது ஆராய்ச்சிக்குட் பயன்படுத்தியுள்ளார். தமது கூற்றுக்களுக்குத் தக்க ஆதாரங்கள் தந்து இச்சிறு நு}லை எழுதியுள்ளார்.
கலாநிதி பத்மநாதன் அவர்கள் சிறந்த தமிழ் அறிவுடைய வரலாற்று ஆசிரியர். ஈழத்துத் தமிழர் வரலாறு எழுதுவதற்கு மிகுந்த தகுதியுடையவர். யாழ்ப்பாண அரசுபற்றி ஆராய்ச்சி நு}ல் எழுதி இலண்டன் பல்கலைக்கழகக் கலாநிதிப்பட்டம் பெற்றவர். அவர் அக்கலாநிதிப் பட்டத்திற்கு எழுதிய “யாழ்ப்பாண அரசு” என்ற நு}லில் இரண்டாவது இயலில் பொலநறுவை அரசின் வீழ்ச்சியும் வன்னித் தலைவரின் எழுச்சியும்பற்றி எழுதியுள்ளார். அதனை அடிப்படையாக வைத்தே இந்நு}ல் ஆக்கப்பட்டுள்ளது.
இந் நு}ல் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. இரண்டாம் பகுதி நு}லாக்கத்திற்குதவிய பட்டயங்களையும் ஆவணங்களையும் கொண்டது. முதலாம் பகுதி வன்னியர் வரலாற்றைக் கூறுவது.
தமிழகத்திலும் ஈழத்திலும் உள்ள வன்னியர் வரலாறு நான்கு இயல்களில் அமைந்துள்ளது. இவர்களின் தோற்றம் பற்றி இலக்கியம் கொண்டும், தென்னிந்திய வரலாறுகொண்டும் ஆராய்வதே முதலாம் இயல். கல்லாடம். சிலை எழுபது, வன்னியர் புராணம், வன்னியர் குல நாடகம், வன்னியர் குலக் கலியாணக்கொத்து என்னும் நு}ல்கள் வன்னியர் தோற்றம் பற்றிக் கூறுகின்றன. பன்னிரண்டு பன்றிகளிலிருந்து வன்னியர் தோன்றினரெனக் கல்லாடம் கூற, ஏனைய நு}ல்கள் வன்னியரை அக்கினி குலச் சத்திரியர் என்றும் யாக அக்கினியிலிருந்து தோன்றினரென்றும் கூறுகின்றன.
விசய நகரப் பேரரசின் வீழ்ச்சியின் பின், ஒவ்வொரு சமுகத்தினரும் தத்தம் சமுகத் தொன்மையும் சிறப்பையும் நிலை நாட்ட இதிகாச புராணக் கதைகளைக் கொண்டு நு}ல்கள் இயற்றினார்கள் என்றும், வன்னியர் தம் பழைய வரலாற்றை நிலைநாட்ட இயற்றிய அத்தகைய நு}ல்களே மேலே கூறப்பட்ட நு}ல்கள் என்றும் கலாநிதி பத்மநாதன் கருதுகின்றார். எனினும் அவற்றை ஓரளவு ஆதாரமாகக் கொண்டு வன்னியரின் தோற்றத்தை விளக்கலாமென ஆசிரியர் கொள்கிறார்.
படைக்கலப் பயிற்சியைச் சிறப்புத் தொழிலாக உடைய மக்கட் கூட்டமாகவும் குறுநில மன்னராகவும் இருந்தமையாலேயே அவர்களை இந்நு}ல்கள் சத்திரியரெனக் கூறின. காடவர் எனக் கருதப்படும் வன்ய என்ற வடசொல்லிலிருந்தே வன்னியர் என்ற சொல் தோன்றியிருக்கவேண்டுமென்றும், ஆதிகாலத்தில் வன்னியர் காடுகள் நிறைந்த முல்லைநிலத்தில் வாழ்ந்தார்கள் என்றும் ஆசிரியர் கொள்கின்றார்.
தமிழகத்து வன்னியர் பற்றித் ‘தென்னிந்திய வரலாற்றில் வன்னியர்’ என்ற பிரிவில் ஆசிரியர் கூறுகின்றார். இவர்களின் ஆதி இருப்பிடம் தொண்டை மண்டலம் என்பது அவர் கொள்கை. இதற்கு ஆதாரமாக வன்னியர் வரலாற்றைக்கூறும் நாடோடிக் கதைகளையும் கல்வெட்டுக்களையும் காட்டுகின்றார். காஞ்சியிலிந்து ஆண்ட பல்லவரின் படைகளிற் காடவராகிய வன்னியர் தொழிலாற்றி இருக்கலாமென ஆசிரியர் ஊகிக்கின்றார். சோழப் பெருமன்னர் காலத்திலேயே இவர்களைப்பற்றிய வரிவான சான்றுகள் கிடைத்துள்ளன.
வன்னியர் பற்றியும் வன்னியப் பற்றுக்கள் பற்றியும் பல குறிப்புக்கள் சோழப் பெரு மன்னரின் ஆவணங்களிற் காணப்படுகின்றன. இராணுவ சேவையிலிந்த வன்னியப் படைகளுக்குச் சீவிதமாக விடப்பட்ட நிலங்களே வன்னியப்பற்று என ஆசிரியர் கூறுகின்றார். வேளைக்காரப் படைகளின் தலைவர்களே வன்னிய நாயன் என்ற பட்டத்தைப் பெற்றனர் என்பதற்குச் சோழப் பெருமன்னர் காலத்துக் கிழியூ10ர் மலையமான்களின் கல்வெட்டுக்களை ஆசிரியர் ஆதாரமாகத் தருகின்றார்.
சோழப்பெருமன்னர் காலத்திற் படைத்தொழிலிற் சிறப்புற்று விளங்கியதுபோல விசயநகரமன்னர் காலத்திற் சிறப்புடன் விளங்க வன்னியரால் முடியவில்லை. காரணம், விசய நகர மன்னர் கன்னட தெலுங்குப் படைகளையே கூடுதலாகப் பயன்படுத்தினர். எனவே, சூழலுக்கு ஏற்ப வன்னியர் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
‘தென்னகத்து வன்னிமைகள்’ எனப் பெயரிய இரண்டாம் இயல், தமிழகத்திலிருந்த வன்னிமைகளைப்பற்றிக் கூறுகின்றது. முதலாம் இராசேந்திரன் இரண்டாம் இராசேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களிலிருந்து வன்னியர்கள் பிரதானிகளாக இருந்தனரென அறியலாம். இரண்டாம் இராசராசன் மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் கல்வெட்டுக்களில் வன்னியர் பற்றிய குறிப்புக்கள் பல காணப்படுகின்றன. இவர்கள் வேளைக்காரரின் படைத்தலைவராக இருந்தனரென்றும், பெரிய உடையான், சேதியராயன், சற்றுக்குடாதான் போன்ற விருதுகளைப் பெற்றிருந்தனரென்றும் கல்வெட்டுக்களால் அறியலாம். இவர்கள் குறுநிலமன்னராகி, முதலாம் குலோத்துங்கன் காலத்துக்குப்பின் பெருமளவு ஆதிக்கம்பெற்று விளங்கினர். சோழப்பெருமன்னர் காலத்திலே, கிழியூர் மலையமன்னர், பங்கலநாட்டுக் கங்கர், சாம்புவராயர் ஆகிய மூன்று குலத்துக் குறுநிலமன்னர் வன்னிய நாயகன் என்ற விருதுடன் ஆட்சி செலுத்தினரென இக்கல்வெட்டுக்களின் துணைகொண்டு ஆசிரியர் நிறுவியுள்ளார்.
வன்னியர்களின் அதிகாரம் தலைமுறை தலைமுறையாக வளர்ந்துவந்தது. சோழப் பேரரசு நலிவுபெற்ற காலத்தில், குறுநிலமன்னராகிய வன்னியர்கள் சுதந்திரமாக ஆளத்தொடங்கினர். சோழராட்சிக்குப்பின் இரண்டாவது பாண்டியப்பேரரசு நிலைபெற்ற காலத்தில் வன்னியர் பாண்டியராட்சிக்கு உட்பட்டிருந்தனர். பாண்டியப் பேரரசு தளர்வுற்ற காலத்தில், பாண்டியர்மேல் ஆதிக்கம் செலுத்திய மூன்றாம் வல்லாள தேவனாகிய கொய்சளமன்னனின் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்தனர் வன்னியர். விசயநகரமன்னர் காலத்திலே அம்மன்னர்களோடு வன்னியர் போர் நிகழ்த்தித் தோல்வியுற்றனரென ஆசிரியர் பல சான்றுகள் காட்டுகின்றார். கிருஷ்ணதேவராயர் காலத்தை யொட்டித் தமிழகத்து வன்னிமைகள் அரசியல் ஆதிக்கத்திலிருந்து அழிந்தொழிந்தன.
ஈழத்து வன்னிமைகள் இரு பகுதிகளாக இரண்டு இயல்களில் அமைந்துள்ளன. தமிழ், சிங்கள அரசுகளில் வன்னிகள், வன்னி நாடுகளின் தோற்றம், திருமலை வன்னிமைகள், முக்குவ வன்னிமைகள் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது முதற்பகுதி. இப்பிரிவுகளில் முக்குவ வன்னிமை என்ற பிரிவு மட்டக்களப்பு வன்னிமை, புத்தளத்து வன்னிமை என்ற இரு உட்பிரிவுகளாக அமைந்துள்ளது.
ஈழத்து வன்னிமைகள் முதலாம் பகுதிகளில், ‘தமிழ் சிங்கள அரசுகளில் வன்னிகள்’ என்ற பிரிவில் ஈழநாட்டு வரலாற்றில் பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் வன்னி நாடுகள் சிறப்பிடம் பெற்றிருந்தமையை ஆசிரியர் கூறுகிறார். பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு ஈழம் முழுவதினையும் ஒரே மன்னர் ஆண்ட வரலாறு பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் ஏற்பட்ட கலிங்கமாகனது படையெடுப்போடு முற்றுப்பெறுகின்றது. அதன்பின் வடக்கிலே ஓர் அரசும், தெற்கிலே ஓர் அரசும் பல குறுநில அரசுகளும் தோன்றின. மாகனுக்குப் பின் வட இலங்கையிற் பாண்டியர் ஆதிக்கம் இடம்பெற்றுப் பதின்மூன்று நு}ற்றாண்டின் இறுதியில் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சி ஆரம்பமாகியது. அதன் விளைவாக இடம்பெற்றதே யாழ்ப்பாணப் பட்டினம் என்ற தமிழரசு. இத்தமிழரசின் காலத்திலே பல வன்னிநாடுகள் இருந்தன.
இதே காலத்தில், அதாவது மாகனது ஆட்சிக்குப் பின், பதின்மூன்றாம் நு}ற்றாண்டிலிருந்து சிங்கள அரசர் முதலிலே தம்பதெனியாவிலிருந்தும்@ பின் குருநாகல், கம்பளை கோட்டை முதலிய நகர்களிலிருந்தும் ஆட்சிசெய்தனர். அவ்வாட்சியிலும் வன்னி எனப்பட்ட குறுநில அரசுகள் வளர்ச்சியடைந்திருந்தன.
இவ்வாறு பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் ஈழத்தில் வன்னிமைகள் பல காணப்பட்டபோதும், அந்நு}ற்றாண்டுக்கு முன்பே வன்னிமைகள் தோன்றியிருந்தன என்பதனை ‘வன்னி நாடுகளின் தோற்றம்’ என்ற பிரிவு விளக்குகின்றது. ஈழத்து வன்னிமைகளின் தோற்றத்தை வேளைக்காரப் படையின் வரலாற்றோடு ஆசிரியர் இணைத்து நோக்குகின்றார். வேளைக்காரப் படைகள் ஈழத்தின் சில பகுதிகளிற் சுயாட்சி நடத்தியமையை நாம் காணலாம். வேளைக்காரருக்குக் கொடுக்கப்பட்ட படைப்பற்றுக்கள் வன்னிமைகள் உருப்பெறுவதற்குக் காலாக இருந்தன. சோழராட்சிக் காலத்திலும் அதற்குப் பின்பும் வன்னிப் பற்றுக்கள் பல தோன்றிப் பதின்மூன்றாம் நு}ற்றாண்டின் பிற் பகுதியில் வளர்ச்சி யடைந்திருந்தன என ஆசிரியர் கூற்றுக்களால் அறியக் கிடக்கின்றது.
இவ்வாறு வளர்ச்சியுற்ற வன்னிமைகளில் ஒன்றனைப்பற்றித் ‘திருமலை வன்னிமைகள்’ என்ற பிரிவு கூறுகின்றது. கவிராசர் பாடிய கோணேசர் கல்வெட்டினையும், திருமலைக் கோட்டையின் முன்பாக இருக்கும் கற்று}ணிலுள்ள மொழித் தொடர்களையும் அக்கோட்டையிலுள்ள வடமொழிக் கல்வெட்டினையும் ஆதாரமாகக் கொண்டு குளக் கோட்டனாகிய சோழ கங்கன் காலத்திலே திருமலையில் வன்னிமை இருந்தமையை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். கங்குவேலிக் கல்வெட்டு, திருமலை வன்னியனாரைக் குறிப்பிடுகின்றது. வெருகல் கல்வெட்டிலிருந்து கயிலை வன்னியனார் கோட்டியாரம்பத்தை ஆண்டமை புலனாகின்றது. பதினான்காம் நு}ற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் திருகோணமலை வன்னியர் மேல் ஆதிக்கம் செலுத்தியமையையும் பதினைந்தாம் பதினாறாம் நு}ற்றாண்டுகளில் இம் மன்னர்கள் திருமலை வன்னியரோடு திருமணத் தொடர்பு கொண்டமையையும் ஆசிரியர் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். யாழ்ப்பாணத்தரசரும் திருமலை வன்னியரும் போத்துக்கேயரை எதிர்ப்பதில் ஒருவருக்கொருவர் துணையாயிருந்தனர். சங்கிலி அரசனின் மரணத்துக்குப் பின் கண்டியரசரின் ஆதிக்கம் திருகோணமலை வன்னியிலே இடம்பெறலாயிற்று.
முக்குவ வன்னிமைகளை, மட்டக்களப்பு வன்னிமை, புத்தளத்து வன்னிமை என இரு பிரிவுகளாக ஆசிரியர் வகுத்துக் கூறுகிறார். பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் கலிங்க மன்னன் மாகன், முக்குவரை மட்டக்களப்புக்கு அழைத்து வந்து அவர்களின் படைத் தலைவருக்கு வன்னிபம் என்ற பட்டத்தை அளித்தானென மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. சீதவாக்கையிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று குடியேறிய இஸ்லாமிய குடும்பங்களின் வரலாற்றைக் கூறும் ஓரேட்டுப் பிரிதி, மட்டக்களப்பில் அதிகாரம் செலுத்திய ஏழு வன்னியர்பற்றிக் குறிப்பிடுகின்றது. தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையையும் ஆசிரியர் ஆதாரமாகக் காட்டுகின்றார்.
‘புத்தளத்து வன்னிமை’ என்னும் பிரிவு, ஒல்லாந்த ராட்சிக்காலம்வரை புத்தளத்திலிருந்த முக்குவ வன்மைபற்றிக் கூறுகின்றது. ஆறாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலந்தொட்டுப் புத்தளத்து வன்;னிமைபற்றிக் கிடைத்துள்ள குறிப்புக்களை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இவ்வரசன் (1413 - 1467) புத்தளத்து வன்னிமையைக் கைப்பற்றிய வரலாறு ‘முக்கர ஹடன’ என்ற நு}லில் விவரிக்கப்படுகின்றது. பதினாறாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகளை ஆதாரமாகக் கொண்டு புத்தளத்தை ஆண்ட நவரத்தின வன்னியன்பற்றியும், நீதிமன்றத்தில் அங்கம் வகுத்த வன்னியர்பற்றியும் வன்னியர் பெற்றிருந்த சிறப்புரிமைகள் பற்றியும் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
நான்காவது இயலாக அமைந்துள்ள ஈழத்து வன்னிமை இரண்டாம் பகுதி, யாழ்ப்பாணப் பட்டினம் என வழங்கிய தமிழரசில் அடங்கிய வன்னிமைகளைப்பற்றிக் கூறுகின்றது. யாழ்ப்பாண அரசு உள்ளடக்கியிருந்த வன்னிநாடு மன்னாரிலிருந்து திருகோணமலைவரை பரந்திருந்ததென்றும், அதன் எல்லை சிலாபம்வரை இருந்ததென்றும் சான்றுகள் தரப்படுகின்றன. பனங்காமம், முள்ளியவளை, கருநாவல்பந்து, கிழக்கு மூலை என்பன யாழ்ப்பாணத்து வன்னிக்குடியேற்றங்களில் முக்கியமானவையென குவேறோஸ் கூறுகின்றார். இரு வன்னிக் குடியேற்றங்களைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இரண்டாவது வன்னிக் குடியேற்றம் பாண்டிநாட்டிலிருந்து வந்த 59 வன்னியரின் வருகையோடு ஏற்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலை கூறும் இக்குடியேற்றம் பற்றியே வையாபாடல் என்னுங் நு}லும் கூறுகின்றது.
வையாபாடல் வன்னியர் குடியேற்றம் பற்றிக் கூறுவதை மேற்கோளாகக்காட்டி அமைந்ததே ‘அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம்’ என்னும் பிரிவு. வையாபாடல் கூறுவதை முற்றாக ஏற்காதுவிட்டாலும், வன்னியர் பலர் தென்னகத்திலிருந்து வந்து வன்னிப் பிரதேசங்கள் பலவற்றைக் கைப்பற்றி ஆண்டதை வரலாற்று நிகழ்ச்சியாக ஆசிரியர் கொள்கி;ன்றார். வையா பாடலில் வரும் நிகழ்ச்சிகள் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி காலத்தினை யொட்டியவையெனக் கருதுகின்றார். இவ்வன்னியர் செயவீரசிங்கையாரியன், வரோதய சிங்கையாரியன், மார்த்தாண்டசிங்கையாரியன், சங்கிலி போன்ற பலம்வாய்ந்த யாழ்ப்பாண மன்னருக்குத் திறைகொடுத் ஆண்டனர். எனினும் வன்னியர்கள் சுயாட்சி செலுத்தி, அதிகாரிகளை நியமித்து, இறைவரிகளையும் பெற்றிருந்தனர்.
இந்நு}லிற்குத் தனிச் சிறப்பும் மதிப்பும் அளிப்பது இதன் இரண்டாம் பகுதி, நு}ல் ஆக்கத்திற்குதவிய பட்டயங்களும் ஆவணங்களும் இப் பகுதிகளில் அடங்கியுள்ளன. முதலிரு பட்டயங்களையும் முதன் முதல் வெளியிடும் பெருமை ஆசிரியருக்கே உரியது. அப் பட்டயங்கள், பரராசசேகர மகாராசாவின் பட்டயமும், கயிலாய வன்னியனார் மட தர்ம சாதனப் பட்டயமும் ஆகும். இவ்விரு செப்பேடுகளும் படம் பிடித்துப் பிரதி செய்து அச்சில் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றை இக் கால முறையிற் குறியீடுகளுடன் பிழைகள் நீக்கிப் பதிப்பித்திருக்கின்றார். அவற்றோடு இணைக்கப்பட்டுள்ள வரலாற்று ஆய்வு விளக்கவுரைகள் மிகவும் பயனுள்ளன.
அவ்விரு செப்புப் பட்டயங்களில் பரராசசேகர மகாராசாவின் பட்டயம் யாழ்ப்பாணத்தையாண்ட பரராசசேகர மகாராசா சிதம்பரதரிசனம் செய்து, நிலம் வாங்கிப் பரராசசேகரன் மடத்தை அங்கு அமைத்து, நிவந்தங்களைக் கொடுத்து, யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் வருமானத்தையுங் கொடுத்து, மடதர்ம ஏற்பாடுகள் செய்தமைபற்றிக் கூறுகின்றது. கயிலாய வன்னியனார் மடதர்மசாதனப் பட்டயம் சிதம்பரத்திலுள்ள பரராசசேகரன் மடத்திற்கு யாழ்ப்பாண வன்னியர் சென்று, தானம் கொடுத்தமைபற்றியது. பனங்காமம், கரிகட்டுமூலை மேல்பத்து, தென்னமரவடி, முள்ளியவளை ஆகியவற்றின் வன்னியரின் பெயர்களை இப்பட்டயம் தருகின்றது.
இரண்டாம் பகுதியில் வரும் நல்லமாப்பாண வன்னியனின் ஓலையும், வன்னியர்குல மடதர்மசாதனப் பட்டயமும் முன் வெளியானவை, இவற்றுள் நல்லமாப்பாண வன்னியனின் ஓலை முன்பு சுவாமி ஞானப்பிரகாசரால் வெளியிடப்பட்டது. இதில் ஆசிரியர் அதனை அவர் வெளியிட்டவாறு தந்து, விரித்து, விளக்கவுரைகூறி, வரலாற்றுக் குறிப்புக்களும் தருகின்றார். வன்னி;யர்குல மட தர்மசாதனப் பட்டயம் முன்பு வன்னியர்புராணம் பதிப்பிக்கப்பட்டபோது அதனோடு இணைத்துப் பதிப்பிக்கப்பட்டது. இந்நு}லிலுள்ள பதிப்பில் ஆசிரியர் விளக்கவுரைகூறி, பட்டயத்தில் வரும் வரலாற்றைச் சிலை எழுபது, வன்னியர் புராணம் ஆகிய நு}ல்களில் வரும் வரலாற்றோடு ஒப்புநோக்குகின்றார்.
இந்நு}ல் வன்னியர் பற்றிய சிறியநு}ல்@ ஆயினும் சிறந்த படைப்பு, ஆசிரியரின் முதல்நு}ல்@ வரலாற்று நு}ல்கள் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்பதற்கு முன்மாதிரி, ஈழத்துத் தமிழரின் வரலாற்றை அறிவதற்குரிய சிறந்த வரலாற்று நு}ல்கள் இல்லையே என்ற குறையை இந்நு}ல் ஓரளவு நீக்குகின்றது@ அவரின் முயற்சிகள் பிறரையும் இத்துறையில் வழிகாட்டும் என்ற நம்பிக்கையைத் தருகின்றது.
ஈழத்து எழுத்தாளர் இன்று ஒரு வழிப்புணர்ச்சி பெற்றிருக்கின்றனர். தமது படைப்புக்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவும் வாசகரின் ஒத்துழைப்பும் பெருமளவு கிடைக்கும் என்ற அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய சூழலிலே, முக்கியமான ஒரு துறையிலே, தேவைக்கேற்ற நு}லைக் கலாநிதி பத்மநாதன் படைத்திருக்கின்றார். இந்நு}ல் விரித்து எழுதப்பட வேண்டியது. ஈழத்து வன்னியர்பற்றிய பெரிய நு}லினையும், வேறுபல வரலாற்று நு}ல்களையும் அவர் எமக்கு ஆக்கித்தருவதற்கு நன்மக்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் ஊக்கத்தினையும் அன்னாருக்கு நிறைய அளிப்பார்களென எதிர்பார்க்கின்றோம்.
இலங்கைப் பல்கலைக்கழகம், சு. வித்தியானந்தன்
பேராதனை, 1-11-1970
+++++++++++++++++++++++++
முதலாம் இயல்
வன்னியர் தோற்றம்
வன்னியர் எனப்படும் சமூகம் தமிழகத்தின் வடபிரிவிற் பரந்து காணப்படுகிறது. சோழப் பேரரசரின் படையமைப்பில் வன்னியர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். முதலாம் ராஜராஜன் ஈழநாட்டைக் கைப்பற்றியதை அடுத்து வன்னியர் சோழப் படைகளோடு ஈழத்திற்கு வந்தனர்.
(அ) இலக்கியத்தில் வன்னியர்
கல்லாடம், சிலை எழுபது, வன்னியர் புராணம், வன்னியர்குல நாடகம், வன்னியர்குல கல்யாணக் கொத்து என்னும் நு}ல்கள் வன்னியரின் தோற்றம் பற்றிச் சில கருத்துக்களைக் கொண்டுள்ளன. இவற்றுட் கல்லாடம் தவிர்ந்த ஏனைய நு}ல்கள்யாவும் வன்னியரின் தோற்றத்தையும் குலச் சிறப்புக்களையும் உட்பொருளாகக் கொண்டுள்ளன. இந்நு}ல்கள் யாவும் வன்னியர் படைக்கலப் பயிற்சியைத் தந்தொழிலாகக் கொண்டிருந்தனரென்பதை எடுத்துரைக்கின்றன.
பன்னிரண்டு பன்றிகளிலிருந்து நாற்படை வன்னியர் தோன்றினரெனக் கல்லாடம் செப்புகின்றது. ஏனைய நு}ல்கள் வன்னியர் அக்கினிகுலச் bத்திரியரென்றும், இவர்கள் யாகாக்கினியிலிருந்து தோன்றினரென்றும் சொல்கின்றன. வன்னியரின் தோற்றம் பற்றிக் கூறுமிடத்து, ‘விதிகுலத்தோர் சிறப்புறச் செய்த வேள்விக்குச் சிறந்த வன்னி, உதிகுலத்தோராதலினாலுயர் குலத்தோராமிவர்க்குத், துதிகுலத்தோரொவ்வாரே’ எனச் சிலை எழுபதும்.
‘பங்குனித் திங்களுத்திரந் தன்னில் பரமன்
முக்கணழல் விழியில்
துங்கமா வேர்வை தோன்றிடக் கரத்திற் தோய்ந்து
செழுங்கழுநீரின் மலரைப்
பொங்கமா மகத்திலாகுதி யியற்றிட
புனிதனுக்கு வகையீந்தார்
(வ)ங்கண் வீரவன்னிய பூமன்னர்
பரிமீது தோன்றினனே.’
என வன்னியர் புராணமுங் கூறுகின்றன.
சிவனார் கொடுத்த செங்கழுநீர் மலரைச் சம்புமா முனிவர் தனது அக்கினி குண்டத்திலிட்டபொழுது வன்னியர் தோன்றினரென்பது வரலாறன்றிப் புராணக்கதையே. தென்னகத்திலுள்ள செங்கழுநீர்ப் பற்றில் வன்னியர் வாழ்ந்ததினாலும், இராச புத்திரரின் தோற்றம் பற்றிய மரபுகளைத் தமது கதைகளுக்கு ஆதாரமாகப் புலவர் கொண்டதாலும் இக்கதைகள் தோன்றியிருக்க வேண்டும்.
பதினாறாம் நு}ற்றாண்டளவில் விஜயநகரப் பேரரசு நிலைகுலையத் தென்னிந்தியச் சமூக வழமைகளும் அமைப்புக்களும் சீர்குலையத் தொடங்கின. அமைதியையும் வழக்காறுகளையும் நிலைநாட்டக்கூடிய அரசரின்மையால், சமூகப்பிரிவுகளுக்கிடையே உரிமைகள், பணிகள் என்பவற்றையிட்டுச் சாதிப் பூசல்கள் மலிவுறத் தொடங்கின. இவ்வாறான சூழ்நிலைகளில் ஒவ்வொரு சமூகத்தவரும் தத்;தம் பெருமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக இதிகாச புராணக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு தத்தங் குலங்களின் பூர்வீக வரலாற்றை விளக்க முற்பட்டனர். இதனாற் செங்குந்தர் புராணம், மறப்பாளர் புராணம், வன்னியர் புராணம் போன்ற நு}ல்கள் எழுந்தன. எனவே வன்னியர்புராணம், சிலை எழுபது போன்ற நு}ல்களில் வன்னியரின் பூர்வீக வரலாறு மறைவுற்றிருக்கின்றது.
வன்னியர் அக்காலத்திற் படைக்கலப் பயிற்சியைச் சிறப்புறத் தொழிலாகக் கொண்ட சமூகமாகவும் குறுநில மன்னராகவுமிருந்த காரணத்தினாலே வன்னியரைச் bத்திரியர்களென நு}ல்கள் வருணித்தன. வன்னியரின் சிறப்பை எடுத்துரைக்குமிடத்துச் சிலை எழுபது மேல் வருமாறு கூறும்:
‘படைத்துணைத் தலைவர் குலச்சிறப்பு
விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ
வெனலுடையர், நடையுடையார் மிடியுடைய
நாவலர் மாட்டருள் கொடையார், குடையுடையார்
மலையமன்னர் குன்றவர் பல்லவர் மும்முப் படையுடையார்
வனியர் பிறரென்னுடையார் பகரிரே’
சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பது கவனித்தற்பாலது. சோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்திலாண்ட கிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமே நு}ல் இவ்வாறு குறிப்பிடுகின்றது. இக்குறுநில மன்னர் வன்னியரா யிருந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் ஆதாரமா யுள்ளன.
வன்னிபற்றிக் காலத்தாற் மிக முற்பட்ட குறிப்பு பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ளது. அந்நு}ல் குறிப்பிடும் வன்னிமன்றம் என்பது வன்னிமரத்தின் கீழ்க் கூடுகின்ற மக்கள் கூட்டத்தைக் குறிக்கின்றதோ அல்லது வன்னியர் கெழுமிய மன்றத்தைக் குறிக்கின்றதோ என்பதில் ஐயப்பாடுண்டு. வன்னியர் பற்றி ஆதாரபூர்வமான குறிப்புக்கள் சோழர்காலந் தொடக்கமே கல்வெட்டுக்களில் வருகின்றன.
காடவன் எனப் பொருள்படும் வன்ய என்ற வடமொழிப் பதத்திலிருந்தே வன்னியர் என்ற சொல் தோன்றியிருக்கவேண்டும். வன்னியர் மிக முற்காலத்திற் காடடர்ந்த நிலங்களிலே வாழ்ந்த முல்லைநிலத்து மக்களாக இருந்திருத்தல் கூடும். பத்தொன்பதாம் நு}ற்றாண்டில் மக்கென்சியினாலே சேர்க்கப்பட்ட ஏட்டுப்பிரிதிகளில் வரும் சில கதைகள் இக்கருத்துக்கு ஆதாரமாயுள்ளன.
(ஆ) தென்னிந்திய வரலாற்றில் வன்னியர்.
வன்னியராண்ட சிற்றரசுகள் தொண்டைமண்டலத்திலே இருந்தன. மேலும் வன்னியர் பெருந்தொகையாகத் தொண்டைமண்டலத்தைச் சேர்ந்த ஆர்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களிலே காணப்படுகின்றனர். எனவே வன்னியரின் ஆதி இருப்பிடம் தொண்டைமண்டலமே என்று ஊகிக்கலாம். வன்னியர் வரலாற்றைக் கொண்ட நாடோடிக் கதைகள் ஆதிகாலத்திலே தெண்டைமண்டலம் குறும்பர்பூமி என வழங்கியதென்றும். அங்கு குறும்பரும் வேடரும் வாழ்ந்தனர் என்றும் கூறுகின்றன. சோழமன்னரின் ஆட்சி ஏற்பட்ட பின்பே அங்கு நாகரிக வளர்ச்சி துரிதமடைந்த தென்றும் இவை கூறுகின்றன. சங்ககாலத்திற் கரிகாலன் தொண்டை மண்டலத்திற் பல மக்கட்கூட்டங்களை யடக்கித் தன்னாட்சியை ஏற்படுத்தினான் எனப் பட்டினப்பாலை கூறுகின்றது. சங்ககாலச் சோழர்மறைந்தபின் தொண்டைமண்டலத்திற் பல்லவராட்சி ஏற்பட்டது. பல்லவ மன்னர்கள் வலிமைபொருந்திய அரசினை ஏற்படுத்தினார்கள். பல்லவராட்சியில் காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக்கப்பட்டன. விவசாயம் செழிப்புறச் சமூகவளர்ச்சி துரிதமடைந்தது. முல்லைநில மக்களிடையிலும் பண்பாட்டு வளர்ச்சி ஏற்பட்டது.
பல்லவ அரசு நிலைத்தகாலத்தில் அதனை வடக்கிலிருந்து முதற் சாளுக்கியரும் பின் ராஷ்டிரகூடரும். தெற்கிலிருந்து பாண்டியரும் மீண்டும் மீண்டும் பல தடவை தாக்கினர். இவ்வாறான சூழ்நிலையிற் பல்லவ மன்னர்கள் ஒரு வலிமைபொருந்திய படையை அமைக்க வேண்டி யிருந்தது. வேடர் முதலான முல்லைநிலத்தவரையும் பல்லவர் தம் படைகளிலே சேர்த்திருத்தல் கூடும் அர்த்தசாஸ்திரம் முதலான நு}ல்களும் அரசர் படைகளை அமைக்குமிடத்து வனவாசிகளையும் மலைவாசிகளையுஞ் சேர்த்துப் படைக்கலப் பயிற்சியளிக்க வேண்டுமென்று கூறுகின்றன. காடவரான வன்னியர் பல்லவரின் படையிற் சேர்ந்து படைக்கலப் பயிற்சியைத் தம் சிறப்புத் தொழிலாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
சோழப்பெரு மன்னரின் ஆவணங்களில் வன்னியர் பற்றியும் வன்னிய பற்றுக்கள் பற்றியும் குறிப்புக்கள் வருகின்றன. இராணுவத்திற் சேவகம் புரிகின்ற வன்னியப் படைகளுக்கு ஜீவிதமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களே வன்னிய பற்றெனக் கூறப்பட்டிருத்தல் வேண்டும். சோழப் பெருமன்னர் காலத்துக் கிழியூர் மலையமான்களின் கல்வெட்டுக்களிலே வன்னியநாயன் என்ற விருதினைப் பெற்றிரந்த பிரதானிகளோடு வேளைக்காரர் ஏற்படுத்திய உடன்படிக்கைகள் பற்றிப் பல குறிப்புக்கள் வருகின்றன. இவ்வேளைக்காரர் தமது தலைவனை எத்தருணத்திலும் பாதுகாப்பதாகவும் தம் தலைவன் இறக்குமிடத்து தாமும் உயிர்நீப்பதாகவும் பிரதிக்ஞை செய்தனர். இவ்வாறான வேளைக்காரரையே சில கல்வெட்டுக்கள் ஆபத்சகாயினரெனக் குறிப்பிடுகின்றன. ஆபத்சகாயினரென்ற படைப்பிரிவினருக்கும் பாண்டியப் படையில் இடம்பெற்ற தென்னவன் ஆபத்துதவிகள் என்போருக்குமிடையில் ஒரு தொடர்பு காணப்படுகின்றது.
பதின்மூன்றாம் நு}ற்றாண்டுப் பாண்டிய மன்னரின் ஆவணங்களில் வரும் பெரும்படையோர் என்ற சேனைவன்னியர் வட்டமென்ற குழுவினையுங் கொண்டிருந்தது. மதுரைச் சுல்தான்களாண்ட காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களிலும் வன்னியர் பற்றிய குறிப்புகளுள்ளன.
வன்னியர் நாயன் என்ற விருதினைப் பெற்றிருந்த மலையமான்களின் படைகளில் வேளைக்காரர் இடம்பெற்றிருந்தனர் எனவே வேளைக்காரப் படைகளின் தலைவர்களே வன்னிய நாயகன் என்ற பட்டத்தைப் பெற்றனரெனவும் ஊகிக்கலாம். அவ்வாறாகில் வேளைக்காரப் படையில் வன்னிய சமூகத்தவரும் இடம்பெற்றிருத்தல் கூடும். வேளைக்காரருக்கும் வன்னிய நாயன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த பிரதானிகளுக்குமிடையிலுள்ள தொடர்பு ஈழத்து வன்னிமைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவுகின்றது.
சோழப் பேரரசு நலிவுற்ற பின் அதன் படை அமைப்பும் அழியத் தொடங்கியது. பதினாலாம் நு}ற்றாண்டிலிருந்து தென்னாட்டை ஆட்சி புரிந்த விஜயநகர மன்னர் தமிழகத்திற் கிளர்ச்சிகளை அடக்குவதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் தமிழ்நாட்டுப் படைகளையன்றிக் கன்னட, தெலுங்குப் படைகளையே கூடுதலாகப் பயன் படுத்தினார்கள். அவ்வாறான சூழ்நிலையில் வன்னியர் முற்காலத்திற் போல படையமைப்பிற் சிறப்பிடம் பெறவில்லை. எனவே அவர்கள் விவசாயம் முதலிய தொழில்களை மேற்கொள்ளத் தொடங்கினர்.
முதலாம் இயல்
அடிக்குறிப்பு
1. ..........
கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்
றரிதரு குட்டி யாயபன் னிரண்டினைச்
செங்கோல் முளையிட் டருணீர் தேக்கிக்
கொலைகள் வென்னும் படர்களைக் கட்டுத்
திக்குப் படராணை வேலி கோலித்
தருமப் பெரும்பயி ருலகபெற விளைக்கு
நாற்படை வன்னிய ராக்கிய பெருமான்
- கல்லாடம், 37, வரிகள் 9-11
2. சிலை எழுபது, செய்யுள் 67
3. வன்னியர் புராணம், ‘வன்னிய ராஜாக்கள் உற்பத்திச் சருக்கம்’ செய்யுள், 2
4. வடநாட்டுச் bத்திரியரான இராசபுத்திரர் அக்கினியில் இருந்து தோன்றினார்களென்று வடமொழியிலுள்ள அக்கினி புராணம் கூறுகின்றது. வன்னியர்புராணம் அக்கினிபுராணத்தைத் தழுவியே எழுதப்பட்டுள்ளது.
5. சிலை எழுபது, செய்யுள், 9
6. ‘மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே...”
- பதிற்றுப்பற்று, 44.
7. ளு. Pயவாஅயயெவாயnஇ வுhந முiபெனழஅ ழக துயககயெஇ
Ph. னு. வுhநளளைஇ ருniஎநசளவைல ழக
டுழனெழnஇ 1969இ p. 117
றுடைடயைஅ வுயலடழசஇ யுயெடலளளை ழக வாந ஆயஉமநணெநை ஆயரௌஉசipவள PP. 78-79
8. பத்துப்பாட்டு உ. வே. சாமிநாதையர்
பதிப்பு
பட்டினப்பாலை, வரிகள் 275-90
9. மு. யு. Nடையமயவெய ளுயளவசiஇ யு. ர்ளைவழசல ழக ளுழரவா ஐனெயை
10. முயரவடைலய’ள யுசவாயளயளவசயஇ நுனவைநன டில ளூயஅய ளுயவசலஇ ஆலளழசநஇ 1961இ p 372
11. ளு. Pயவாஅயயெவாயnஇ வுhந முiபெனழஅ ழக துயககயெ p. 106
யுnரெயட சுநிழசவ ழn நுpபைசயிhல ஆயனசயள நுpபைசயிhiஉயட சுநிழசவளஇ ளுழரவாநசn ஊசைஉடநஇ ஆயனசயள புழஎநசnஅநவெ) இதன்பின் யுசுநு எனவரும், 1920, 556 ழக 1919
12. ளு. Pயவாஅயயெவாயnஇ வுhந முiபெனழஅ ழக துயககயெ p. 107.
13. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ p. 107 யுசுநுஇ 1934ஃ1935 : ழேள. 122
126இ 136இ 142இ 144-147இ 153-159.
14. யுசுநுஇ 1934ஃ35 p. 61
15. மு.யு Nடையமயவெய ளுயளவசiஇ வுhந Pயனலயn முiபெனழஅஇ டுழனெழnஇ 1929
16. தென்னிந்திய கோயிற் சாசனங்கள், தொகுதி ஐஐஐஇ பாகம் ஐஐஇ 97
17. ‘தேசத்திலுள்ள வன்னியரும்’
ளு முசiளாயௌறயஅல யுலயபெயசஇ ளுழரவா ஐனெயை யனெ hநச ஆராயஅஅயனயn ஐnஎயனநசளஇ ஆயனசயளஇ 1919. pp 227-229.
இரண்டாம் இயல்
தென்னகத்து வன்னிமைகள்
வன்னிய நாயன் என்ற விருதிணைப் பெற்ற குறுநில மன்னர்கள் பற்றிச் சோழர்காலக் கல்வெட்டுக்களிலே தகவல்கள் கிடைக்கின்றன. முதலாம் ராஜேந்திரசோழன் சாளுக்கிய மன்னனுடன் வன்னியரேவன் என்ற பிரதானியையும் தோற்கடித்ததாக அவனது கல்வெட்டொன்று கூறுகின்றது. இரண்டாம் ராஜேந்திரனது மெய்க்கீர்த்தியில் அம் மன்னனை எதிர்த்து வன்னி அளவன் போர்புரிந்தானென்று கூறப்பெற்றுள்ளது.
எனினும் இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாங் குலோத்துங்கன் ஆகிய பேரரசரின் ஆட்சிக் காலத்துக் கல்வெட்டுக்களிலேயே வன்னியர் பற்றிப் பல குறிப்புக்கள் இடம் பெறுகின்றன. தென்னாற்காடு மாவட்டத்துக் திருக்கோயிலு}ர் தாலுகாவிலுள்ள அரகண்ட நல்லு}ர் என்னும் ஊரிற் காண்படும் ஒப்பிலாமணீஸ்வரர் கோயிலிற் பல வேளைக்காரர் வன்னிய நாயகனுக்கு அளித்த வாக்குறுதிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வேளைக்காரர் கிழியூர் மலையமான் பெரிய உடையானான சற்றுக்குடாதான் வன்னிய நாயகனைப் பாதுகாப்பதென்றும், அவனுக்குக் கெடுதி நேருமிடத்துத் தாமும் அவனுடன் உயிர் நீப்பதென்றும் சத்தியம் செய்தார்கள். அரசனையோ, குறுநில மன்னரையோ பாதுகாக்கும் மெய்க்காப்பாளராக வேளைக்காரர் சேவகஞ் செய்வது வழக்கம். திருக்கோவலு}ரைச் சேர்ந்த கொள்@ரிலுள்ள இராமர்பாறை என வழங்கும் கல்லில் வரையப்பட்டுள்ள கல்வெட்டொன்று கரியனான பலவாயுத வல்லவ மலையமான் என்ற வேளைக்காரன் வன்னிய நாயகனுக்களித்த வாக்குறுதியைச் சொல்கின்றது. இக்கல்வெட்டுக்களில் வரும் வன்னியநாயனுக்கும் வேளைக்காரருக்குமிடையிலான தொடர்பு கவனத்திற்குரியது.
வேளைக்காரர் சோழப் பேரரசரின் மூன்றுகை மகாசேனை முதலிய படைகளிலே சிறப்பிடம் பெற்றிருந்தனர். வன்னியரின் தலைவன் எனப் பொருள்படுகின்ற வன்னியநாயன் என்ற விருதினைப் கொண்ட பிரதானிகள் வேளைக்காரரின் படைத்தலைவர்களாக இருந்தனர் என்று கொள்வதற்க இக்கல்வெட்டுக்கள் ஆதாரமாய் உள்ளன. மேலும் இவை, கிழியூரிலிருந்து ஆண்ட மலையமான்கள் வன்னிநாயன் என்ற விருதுடன் பெரிய உடையான், சேதியராயன், சற்றுக்குடாதான் பட்டங்களையும் பெற்றிருந்தனர் என்பதனையும் அறியத்தருகின்றன. இம் மரபைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் முதலாங் குலோத்துங்கன் காலத்துக்குப்பின் சிறப்பிடம் பெறத் தொடங்கினர். இரண்டாம் ராஜாதிராஜன் காலத்துக் குறுநில மன்னனான ராஜராஜசேதியராயன் என்ற மலையான் வாண கோப்பாடி நாடு, செங்குன்றநாடு, மலாடு, உடைக்காட்டுநாடு என்பவை மீது அதிகாரம் பெற்றிருந்தான்.
பங்கல நாட்டை ஆண்ட கங்கமரபில் வந்த குறுநில மன்னரும் வன்னிய நாயன் என்ற விருதினைப் பெற்றிருந்தனர். மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியிலே கூத்தாடுந்தேவன் பிருதுவி கங்கனான வன்னிய மகாதேவனும் அவன் பின் அவன் மகனான அழகிய சோழன் வரந்தரும் பெருமாள் என வழங்கிய சோழேந்திரசிங்கப் பிருதுவி கங்கனும் அதிகாரம் செலுத்தியதாகத் திருவண்ணாமலையில் உள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மேலும் கூத்தாடும் தேவன் பிருதுவி கங்கன் ஆனைகட்டின என்ற விருதினையும் பெற்றிருந்தான். ஒருயானைப் படையை எதிர்த்துப் போரில் ஈட்டிய சாதனையின் பயனாகவே இவன் மன்னனிடமிருந்து இவ்விருதினைப் பெற்றிருக்க வேண்டும்.
செங்கேணிமரபைச் சேர்ந்த குறுநில மன்னரும் வன்னியநாயன் என்ற விருதினைப் பெற்றிருந்தார்கள். இக்குலத்தை சேர்ந்த செங்கேணி அம்மையப்பன் வன்னியநாயகன் சாம்புவராயனெனவும் அழைக்கப் பெற்றான். சிலை எழுபது, வன்னியபுராணம் முதலிய நு}ல்கள் வன்னியரைச் சம்புகுலத்தவரெனக் குறிப்பிடுகின்றனவென்பதை ஈண்டு நினைவுகொள்ளவேண்டும். சாம்புவராயன் என்ற பெயர் சம்பு என்ற பெயரடியாகவே தோன்றியது. செங்கேணி மரபினர் சோழ நிர்வாகத்திலே உயர்பதவிகளைப் பெற்றிருந்தனர். இம்மரபில் வந்த பல்லவராயர் என்ற அமைச்சன் இரண்டாம் ராஜாதி ராஜன் காலத்தில் அரசகருமங்களைச் சிறப்புறக் கண்காணித்து வந்தான்.
பராக்கிரமவாகுவின் படைகளைப் பாண்டி நாட்டிலிருந்து துரத்திய இப்பல்லவராயர் எதிரிலிச் சோழசாம்புவராயரின் மகனென்று பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டுக் கூறுகின்றது. இவனது சகோதரனான அண்ணன் பல்லவராயனும் படைத் தலைவனாகவிருந்து பராக்கிரமபாகுவின் படைகளைத் தோற்கடித்தான்.
மேலே கூறப்பெற்றவற்றிலிருந்து சோழப்பேரரசர் காலத்துக் கிழியூர் மலையமன்னர், பங்கல நாட்டுக் கங்கர், சாம்புவராயர் ஆகிய மூன்று குலங்களைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் வன்னிய நாயன் என்ற விருதினைப் பெற்றிருந்தனர் என்பது தெளிவாகின்றது. இம் மூன்று பிரிவினரும் ஆண்ட நிலங்கள் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவை. மேலும் இவர்கள் அதிகாரம் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்தது. வன்னிய நாயன் என்ற பட்டத்துடன் ஆனை கட்டின, சற்றுக்குடாதான் என்ற சிறப்புப் பெயர்களையும் பெற்றிருந்தமை இவர்கள் படைத்தலைவர்களாக இருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
சோழப்பேரரசர் சில பிரதேசங்களில் ஆட்சி அதிகாரத்தைப் படைத்தலைவர்களுக்கு அளித்திருந்தார்கள். படைத் தலைமைப் பதவியும் ஆட்சி அதிகாரமும்பரம்பரை உரிமையாக அமைந்ததால் இவர்கள் தாம் அதிகாரம் செலுத்திய பிரதேசங்களிற் குறுநில அரசராக எழுச்சி பெற்றனர். சோழமன்னனின் ஆற்றலும் அதிகாரமும் நலிவடையக் காலப்போக்கில் இக்குறுநிலமன்னர் சுதந்திரமாக ஆளத்தொடங்கினர். மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சி முடிவுற்றதும் வன்னியர் தனியாண்மை செலுத்த நாட்டம் கொண்டனர்.
பதின்மூன்றாம் நு}ற்றாண்டிலே தமிழ் நாட்டிற் பாண்டியராட்சி நடைபெற்ற காலத்தில் வன்னியர் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் மிக அரிதாகவே உள்ளன. தொண்டைமண்டலத்தில் உள்ள வன்னியர் பாண்டியரின் மேலாதிக்கத்துக்குட் பட்டிருந்திருக்க வேண்டும். உபாஸகஜனாலங்கார என்ற ஈழத்து நு}ல் கலிங்கமாகனது காலத்திற் பௌத்த சங்கத்தவரிற் பலர் நாட்டை விட்டோடித் தமிழகத்திற் பாண்டியரின் சமாந்தனான சோழகங்க தேவனின் ஆதரவில் வாழ்ந்தனர் என்று கூறுகின்றது. இச் சோழகங்க தேவன் பங்கல நாட்டுக் கங்ககுலத்தவனோ என்பது சிந்தனைக்குரியது.
பாண்டிய அரசு தளர்வுற்ற காலத்திற் கொய்சள மன்னனான மூன்றாம் வல்லாளதேவன் தமிழகத்தின் வடபால் தன்மேலாதிக்கத்தை ஏற்படுத்தியிருந்தான். சாம்புவராயர் முதலான வன்னி மன்னர் வல்லாளனின் மேலாணைக்குள் அடங்கி இருந்தனர். கம்பண்ண உடையார் தென்நாட்டின்மீது படையெடுத்துவரப் புறப்பட்டபோது தெற்கிலுள்ள அரசுகளில் வன்னி நாட்டரசர்களையும் அடக்குமாறு புக்கராயர் பணித்ததாக மதுரவிஜயம் என வழங்கும் கம்பராய சரிதம் கூறும். விஜய நகரப் பேரரசர்களின் மெய்க்கீர்த்திகளிலே பதினெட்;டு வன்னியரைப் புறங் கண்டமைபற்றிக் கூறப்படுகின்றது. கம்பண்ண உடையார் வன்னி அரசர்கள்மீது பெற்ற வெற்றிகளே இக்கூற்றுகளுக்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டும்.
மக்கென்ஸி என்பவர் தேடிச் சேர்த்த வரலாற்று மூலங்களிலே திருவிடைச்சுரம் கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்த கந்தவராயன், சேதுராயன் என்ற வன்னிய அரசர்களின் வரலாறு கூறும் பிரதியொன்று காணப்படுகின்றது. இவ்விருவரும் நுழைவதற்கரிய அரண்கள் மிகப் பெரியதாய் அமைந்த திருவிடைச்சுரம் கோட்டையிலிருந்து ஆண்ட காலத்தில் விஜய நகர அரசன் கிருஷ்ணதேவராயர் அவ் வன்னியரின் நாட்டை அடக்குவதற்கென ஒரு பலம் மிக்க படையை அனுப்பி யிருந்தார். பல மாதங்களாகப் போர் நிகழ்ந்தும் விஜய நகரப் படைகள் அக் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. எனவே விஜய நகரப் படையில் வந்த பொழிகர் சூழ்ச்சியினாற் கந்தவராயனைக் கைப்பற்றினார்கள். அதனை அறிந்த சேதுராயன் பல நாட்களாகக் கடும் போர் நடத்தினான். எனினும் விஜய நகரப் படைகள் கோட்டையைத தகனர்த்துச் சேதுராயனைக் கொன்றன. அதன் பின் வன்னியராண்ட திருவிடைச்சுரம் விஜயநகர மன்னர் வசமிருந்தது.
பதினைந்தாம். பதினாறாம் நு}ற்றாண்டுகளில் தென்னாட்டை ஆண்ட சில குறுநில மன்னரின் ஆவணங்களில் வன்னியர்பற்றிக் குறிப்புக்கள் வருகின்றன. சூரைக் குடியை ஆண்ட சூரைக்குடி யரசு பள்ளிகொண்ட பெருமாள் என வழங்கிய அச்சுதராய விஜயாலய முதுகு புறங் கண்டான் என்ற வாசகம் வருகின்றது. திருவரங்குளத்தைச் சேர்ந்த ஆலங்குடியில் உள்ள கல்வெட்டொன்றில் அழுந்து}ரரசு திருமலைராசப் பல்லவராயர் பதினெட்டு வன்னியர் கண்டன் எனக் கூறப்பட்டுள்ளான். இராமநாதபுரத்துச் சேதுபதிகளின் பட்டயங்களிலும் இதேபோன்ற குறிப்புக்கள் வழமையாக வருகின்றன. எனினும் இக் குறு நில மன்னர்களின் மெய்க்கீர்த்திகளிற் கூறப்படுவன ஆதார பூர்வமானவையென்று கொள்ளமுடியாது. விஜய நகர மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் வருகின்ற வன்னியர் பற்றிய வாசகங்களை இராமநாதபுரத்துச் சேதுபதிகள், சூரைக்குடி அரசர் முதலானோர் தத்தம் ஆவணங்களிலே சேர்த்துக் கொண்டார்கள். கிருஷ்ண தேவராயரின் காலமளவிலே தொண்டை மண்டலத்து வன்னிமைகள் அழிந்துபட்டன.
இரண்டாம் இயல்
அடிக்குறிப்பு
1. யுசுநுஇ 1928இ p2
2. ஐளெஉசipவழைளெ ழக வாந Pரனரமமழவவயi ளுவயவந ழே. 112. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ p. 107
3. யுசுநுஇ 1934ஃ35 ழேளஇ 122இ 126இ 142இ 144-147இ 153-159இ 171
4. யுசுநுஇ 1928இ P2
5. யுசுநுஇ 1937ஃ38இ ழே 202இ வுhந முiபெனழஅ ழக துயககயெஇ PP 107-108
6. ளுழரவா ஐனெயைn ஐளெஉசipவழைளெஇ ஏழட ஐஏ. ழே. 1398இ யுசுநு 1934ஃ35 PP 61-65இ யுசுநு ழே 600 ழக 1912
7. யுசுநுஇ 1934ஃ35. PP 60-61இ ழேள 122இ 126இ 143-147இ 153-155இ 157-160இ 162இ 170 வுhந முiபெனழஅ ழக துயககயெ. PP 108-109
8. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ P. 109
9. ஐடினை. யுசுநுஇ 1938ஃ9. P. 77
10. யுசுநுஇ 1938ஃ39இ P 77
11. யுசுநுஇ 1938ஃ39இ Pஇ 77இ வுhந முiபெனழஅ ழக துயககயெ P 109
12. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ P 110இ யுசுநுஇ 1911 P 74. யுசுநு. 1899-1900. P 13 யுசுநுஇ 234 ழக 1910
13. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ P 10 யுசுநு. 1911. P. 74. மு. யு. Nடையமயவெய ளுயளவசiஇ ‘Pயசயமசயஅயடியார யனெ ளுழரவா ஐனெயை’ ஊ ர் து.இ 1-4இ PP. 33-51.
14. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ P . 110
15. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ P 111
16. ருpயளயமய துயயெடயமெயசயஇ
17. றுடைடயைஅ வுயலடழசஇ யுn யுயெடலளளை ழக வாந ஆயஉமநணெநை ஆயரௌஉசipவளஇ ளுநஉவழைn 3. ‘யுn யஉஉழரவெ ழக ஊயனெயஎய சயலயn யனெ ஊhநவார சயலநnஇ வாந வறழ ளழஎநசநபைளெ ழக வாந ஏயnnலையச றாழ சரடநன in வாந கழசவ யவ வுசைரஎவையiஉஉரசயஅ’ PP 78-79
18. ஐ P ளு இ ழே. 734இ திருமய்யத்தைச் சேர்ந்த நெய்வாசலிலுள்ள கல்வெட்டு.
19. ஐ P ளு. ழே. 758
20. யு ளு ளு ஐ. ழே. 4. ‘ளுநவரியவi ஊழிpநச pடயவந பசயவெள’ ழேள.1. 3-7.9. PP 66. 68. 71. 73. 81
மூன்;றாம் இயல்
ஈழத்து வன்னிமைகள் - ஐ
அ. தமிழ் சிங்கள அரசுகளில் வன்னிகள்
ஈழவரலாற்றிற் குறிப்பிடத்தக்கவொரு மாற்றம் பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் ஏற்பட்டது. கலிங்கமாகனது படையெடுப்பின் விளைவாகப் பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு ஈழமனைத்தையும் உள்ளடக்கியிருந்த அரசு அழிவுற்றது. மன்னனை மையமாகக் கொண்ட மத்தியமயமான ஆட்சியும், பெருங்குளங்களையும் நீர்ப்பாசனத் திட்டங்களையும் ஆதாரமாகக் கொண்ட பொருளாதார முறையும் அழிந்தன. இவற்றின் அழிவில் மானிய முறையின் இயல்புகளைக்கொண்ட ஓர் அரசியலமைப்பு வளர்ச்சியடைந்தது. மாகனது படையெடுப்பின் பின் இரு அரசுகளும் பல குறுநில அரசுகளும் தோன்றி நிலைபெற்றன.
வடஇலங்கையில் மாகன் நாற்பது (கி. பி. 1215-1255) வருடங்களாக ஆட்சி செய்தான். அவன் மறைந்த பின் அங்கு சாவகரின் ஆட்சியேற்பட்டது. சாவகர் ராஜரட்டையை ஆண்டகாலத்தில் பாண்டியர் ஈழம்மேற் படையெடுத்து வந்து சாவக அரசனான சந்திரபானுவை அடக்கித் தமது ஆதிக்கத்தைத் திணித்து அவனிடமிருந்து யானைகளையும் மணிகளையுந் திறையாகப் பெற்றனர். சந்திரபானு வடஇலங்கையில் வலுப்பெற்றதும் பாண்டியரைப் பகைத்து எதிர்க்கத் துணிந்தான். எனவே வீரபாண்டியன் ஈழத்திற்குவந்து சந்திரபானுவைப் போரிற் கொன்று அவனுடைய மகனை அரசனாக்கிவிட்டுத் திரும்பினான். பதின்மூன்றாம் நு}ற்றாண்டின் முடிவில் ஆரியச்சக்கரவர்த்தியின் தலைமையில் நிகழ்ந்த பாண்டியப் படையெடுப்பின் விளைவாக வட இலங்கையில் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆதிக்கம் ஏற்பட்டது. பாண்டி நாட்டிலுள்ள செவ்விருக்கை நாட்டிலிருந்து வந்த ஆரியச்சக்கரவர்த்தியின் வழியில் வந்த மன்னர் சிங்கை நகரென வழங்கிய நல்லு}ரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணப் பட்டினத்தை ஆண்டு வந்தனர். யாழ்ப்பாணப் பட்டினமென வழங்கிய தமிழரசிற் பல வன்னி நாடுகளிருந்தன.
தெற்கிற் சிங்கள அரசர் முதலிலே தம்பதெனியாவிலிருந்தும் பின் குருநாகல், கம்பளை, கோட்டை முதலிய நகரங்களிலிருந்தும் ஆட்சி புரிந்தனர். அவர்களின் அரசிலும் ஆங்காங்கு வன்னி எனப்பட்ட குறுநிலவரசுகள் பல காணப்பட்டன.
இவ்வாறு ஈழநாட்டு அரசியலிற் பல நு}ற்றாண்டகளாக வன்னிநாடுகள் சிறப்பிடம் பெற்றிருந்தபோதும். ஈழவரலாற்று நு}ல்களில் அவற்றைப்பற்றி விரிவான விளக்கவுரைகள் இடம்பெறவில்லை. வன்னி நாடுகளின் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதற்குப் போதிய, ஆதாரபூர்வமான சான்றுகளும் கிடைக்கவில்லை. சிங்கள மொழியிலுள்ள வன்னி உபட்ட மட்டக்களப்பு மான்மியம் முதலிய தமிழ் நு}ல்களும் வன்னி நாடுகள் பற்றிச் சில தகவல்களைத் தருகின்றன. இந்நு}ல்களிற் புனை கதைகளும் புராணக்கதைகளும் வரலாற்றுச் சார்புள்ள கதைகளோடு கலப்புற்றுள்ளன. எனவே இவற்றுட் பொதிந்திருக்கும் வரலாற்றுண்மைகளை இலகுவில் விளங்கிக் கொள்ளமுடியாது.
(ஆ) வன்னி நாடுகளின் தோற்றம்
பதின்மூன்றாம் நு}ற்றாண்டு தொடக்கம் பாளிமொழியிலுஞ் சிங்கள மொழியிலுமுள்ள வரலாற்று நு}ல்கள் வன்னிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மாகன் ராஜரட்டையை ஆட்சிசெய்த காலத்தில் மூன்றாம் விஜயபாகு மாயரட்டையிலுள்ள ஸீகள வன்னியை அடக்கி ஆட்சி புரிந்தானென்று பூஜாவலிய கூறுகின்றது. எனவே விஜயபாகுவின் காலத்தில் மாயரட்டையிலும் வன்னிப் பிரதேசம் பரந்திருந்ததென்பது தெளிவாகின்றது. விஜயபாகு வன்னிராசன் என்ற நிலையை அடைந்து மாயரட்டையில் அதிகாரஞ் செலுத்தினானெனச் சூளவம்சமும் எடுத்துரைக்கின்றது.
இரண்டாம் பராக்கிரமபாகு ராஜரட்டையிலும் ரோகணத்திலுமுள்ள வன்னி மன்னர் மேலே தனது ஆதிக்கத்தை ஏற்படுத்தியிருந்தான். அவ்வரசனது ஆட்சிக்காலத்தில் இளவரசனான விஜயபாகு அனுராதபுரத்துக்குச் சென்ற பொழுது ராஜரட்டையிலிருந்த வன்னி மன்னர் அவனைக் கண்டு கௌரவித்துத் திறைகொடுத்தனர். வன்னிராசர் படைகளை வைத்திருந்தனரென்றும் வெண்கொற்றக்குடை. சாமரம், ஆசனம் முதலியவற்றைத் தம் பதவிச் சின்னங்களாக இளவரசனிடமிருந்து பெற்றனரென்றும் சூளவம்சம் கூறும். எனவே இரண்டாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் வன்னிமை என்ற குறுநிலவரசுகள் வளர்ச்சியடைந்த நிலையிலிருந்தனவென்று கொள்ளலாம். அரசனுக்குத் திறை செலுத்திய போதும் தத்தம் பிரதேசங்களைச் சுயமாகவே ஆளுவதற்கும் வன்னி மன்னர் உரிமை பெற்றிருந்தனர். ஆகையால் வன்னிமைகள் பதின்மூன்றாம் நு}ற்றாண்டுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும். பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் ஈழநாட்டின் முப்பெரும் பிரிவுகளான ராஜரட்டை, மாயரட்டை, ரோகணம் என்பவற்றில் வன்னிகள் காணப்பட்டமையும் கவனத்திற்குரியது.
மாகன் ஆட்சிசெய்த பிரதேசத்திலும் வன்னிகளிருந்தன. மாகன் தோப்பாவையைக் (பொலநறுவை) கைப்பற்றிப் படையாட்சி வன்னியருக்குக் கொடுத்தான் என்று மட்டக்களப்பு மான்மியங் கூறும். அத்தோடு மட்டக்களப்பிலுள்ள முக்குவ வன்னிமையை மாகன் அமைத்தானென்றும் அந்நு}ல் சொல்லுகின்றது. எனினும் மாகனுடைய காலத்திலேயே முதன் முதலாக ஈழத்தில் வன்னிமைகள் தோன்றினவென்று கொள்ளமுடியாது. மாகன் வன்னிமைகள் இடம்பெற்ற தொண்டை மண்டலத்திலிருந்தன்றிக் கலிங்க நாட்டிலிருந்தே வந்தான். அத்துடன் முக்குவரே முதன் முதலாக வன்னிமைகளாகியிருக்க முடியாது. சேர நாட்டிலிருந்து வந்த முக்குவர் வன்னியரிலிருந்து வேறுபட்ட ஒரு சமூகப் பிரிவினரே. வன்னிமைகள் எனவழங்கிய குறுநில அரசுகளோ வன்னியரென்ற சமூகத்தவரோ சேரநாட்டிலிருந்ததற்கு எந்தவிதமான சான்றுகளுமில்லை. மேலும் மாகனும் விஜயபாகுவும் ஆட்சிசெய்த பிரதேசங்களில் வன்னிமைகள் இடம்பெற்றிருந்தமையால் இவ்விரு மன்னரின் காலத்துக்கு முன்னரே ஈழத்தில் வன்னிமைகள் உருவாகியிருத்தல் வேண்டும்.
தொண்டை மண்டலத்திலிருந்த கிழியூர் மலையமான்களின் கல்வெட்டுக்கள் வன்னியநாயன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த குறுநில மன்னர்க்கும் வேளைக்காரருக்குமிடையில் நிலவிய தொடர்பைத் தெளிவுபடுத்துகின்றன. வேளைக்காரர் வன்னிய பிரதானிகளின் படைகளிற் சேவகம் புரிந்து வந்தனர். எனவே ஈழத்து வன்னிமைகளின் தோற்றத்தையும் வேளைக்காரப்படையின் வரலாற்றோடு இணைத்து நோக்குவது சாலப்பொருந்தும். சோழர் ஈழத்தைக் கைப்பற்றி ஆட்சிபுரிந்த காலத்தில் வேளைக்காரப் படைகளும் ஈழுத்துக்கும் வந்திருத்தல் வேண்டும். ஈழமான மும்முடி சோழமண்டலத்தில் படைத்தலைவர்கள் நிர்வாகத்திற் பங்குகொண்டிருந்தனர். இப் படைத்தலைவர்களும் அவர் வசமுள்ள வேளைக்காரர் முதலியோரைக் கொண்ட படைப் பிரிவும் தொண்டை மண்டலத்திற் போல ஈழத்தின் சில பகுதிகளிற் காலப் போக்கிற் சுயாட்சி மாநிலங்கள் தோன்;றுவதற்கு ஏதுவாயிருந்திருத்தல் கூடும்.
முதலாம் விஜயபாகு (கி; பி. 1055-1111) நடாத்திய போராட்டங்களின் விளைவாக இலங்கையிற் சோழராட்சி அழிவுற்றபோதும் ஈழத்திலிருந்த சோழப்படைகள் அழிக்கப்பட்டனவென்றோ, நாட்டிலிருந்து அகற்றப்பட்டனவென்றோ கருதுவதற்கில்லை. சோழ நாட்டிலிருந்து வந்த போர் வீரருட் பலர் ஈழத்திலே தங்கியிருந்து, சிங்கள மன்னரின் படைகளிற் சேர்ந்து சேவகம் புரிந்தனர். முதலாம் விஜயபாகு காலத்தில் வேளைக்காரப் படை சிறப்புற்றிருந்ததற்கச் சூளவம்சமும் பொலநறுவையிலுள்ள வேளைக்காரர் கல்வெட்டும் சான்றளிக்கின்றன. பொலநறுவையிலுள்ள தலதாமாளிகையைப் பாதுகாக்கும் பொறுப்பை வேளைக்காரப்படை ஏற்றிருந்தது. இப்படைவலங்கை, இடங்கை, சிறுதனம், பிள்ளைகள்தனம், வடுகர், மலையாளர் முதலிய பலஉட்பிரிவுகளைக் கொண்டிருந்தது.
விஜயபாகு சோழருக்கெதிராகப் போராயுதங்களை மேற்கொண்டபோது வேளைக்காரப்படை அரசனைத் தலைநகரிலிருந்து துரத்தி, அரண்மனையைக் கொழுத்தி அரசனது உறவினரைச் சிறைப்படுத்துமளவிற்குப் பலம் பெற்றிருந்தது. இரண்டாம் கஜபாகு பொலநறுவையிலிருந்து ஆட்சிசெய்தபொழுது அவனைத் தாக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த வேளைக்காரப் படைகளுக்குப் பல சன்மானங்களைக் கொடுத்து அரசனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு து}ணடினார்கள். முதலாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்திற் கோட்டியாரத்தில் வேளைக்காரப் படையிருந்ததென்று சூளவம்சம் கூறுகின்றது. பதிவியாவிற் கண்டெடுக்கப்பெற்ற பதின்மூன்றாம்; நு}ற்றாண்டைச் சேர்ந்த ஒரு வடமொழிக் கல்வெட்டும் வேளைக்காரரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. சேது குலத்தைக் குறிப்பிடும் இக்கல்வெட்டு லோகநாத தண்டநாயக்கன் என்ற தளபதி ஒரு விகாரத்தை அமைத்து அதை வேளைக்கார விகாரமெனப் பெயரிட்டு அதைப் பாதுகாக்கும் பொறுப்பினை வேளைக்காரப் படையிடம்; விட்டதாகக் கூறுகிறது.
எனவே இரு நு}ற்றாண்டுகளுக்கு மேலாக ஈழத்தில் வேளைக்காரர் செல்வாக்குப் பெற்றிருந்தனரென்று கருதலாம். வேளைக்காரருக்குக் கொடுக்கப்பட்ட படைப்பற்றுக்கள் வன்னிமைகள் உருப்பெறுவதற்கு வழியமைத்தன. வன்னியபற்று என வழங்கிய நிலப்பிரிவுகள் தென்னிந்தியாவிற் காணப்பட்டதைப் போல ஈழத்திலும் வன்னிப் பற்று என்ற பிரிவுகளிருந்தன. சோழராட்சிக் காலத்தில் ஈழத்திலிருந்த அதிகாரிகள் நிர்வாகத்தின் பொருட்டுப் பற்று என்னும் பிரிவுகளை வகுத்திருந்தனர். இப்பற்றுக்களிற் சில வன்னிய பற்றுக்களாக உருப்பெற்றன. சோழராட்சி நிலவிய பிரதேசங்களிலேயே பிற்காலத்தில் வன்னிமைகள் நிலவியதும் இங்கு நோக்கற்பாலது.
ஈழத்திலுள்ள வரலாற்றுச் சார்புள்ள தமிழ் நு}ல்கள் யாவும் வன்னியர் தமிழகத்திலிருந்து வந்தார்களென்று கூறுகின்றன. மேலும் புத்தளத்து வன்னிமை பற்றிக் கூறும் வன்னி உபட்ட என்ற சிங்கள நு}லும் அவ்வன்னிமையிற் சிறப்பிடம் பெற்றிருந்த முக்குவர் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வந்தனரென்று கூறுகின்றது. எனவே தமிழகத்திலிருந்து வந்த வன்னியர் அதிகாரம் பெற்றதன் விளைவாக ஈழத்திற் பல வன்னிமைகள் தோன்றினரென்று கொள்ளலாம். வன்னியராண்ட பிரதேசங்கள் வன்னி நாடுகளென வழங்கி வந்தன வென்று யாழ்ப்பாண வைபவமாலையுங் கூறுகின்றது.
(இ) திருமலை வன்னிமைகள்
திருகோணமலையிலிருந்த வன்னிமைகள்பற்றிக் கவிராசர் பாடிய கோணேசர் கல்வெட்டுக் கூறுகின்றது. மனுநீதிகண்ட சோழனுடைய மகனாகிய வரராமதேவன் கோணேஸ்வரத்தின் மகிமையைக் கேட்டறிந்து அங்கு தன் மகன் குளக்கோட்டனோடு புனித யாத்திரை வந்தானென்றும், பின் குளக்கோட்டன் சிவாலயத்தையும் பாவ நாசச் சுனையையும் அமைத்து ஆலயத் திருப்பணிகள் செவ்வனே செயற்பட ஏற்பாடுகள் செய்தானென்றும் இந் நு}ல் கூறும்.
குளக்கோட்டனைப்பற்றி மேல் வருந் தகவல்களையும் கோணேசர் கல்வெட்டுத் தருகின்றது. குளக்கோட்டன் மருங்கூரிலிருந்து அழைத்து வந்த ஆறு சோழக் குடிகளைத் திருமலையிலிருத்தி அவர்களுக்குப் பரவணியாட்சியுரிமையோடு நிலங்களைப் பகிர்ந்தளித்தான். அத்துடன் ஆலயத் திருப்பணிக்குத் தேவையான பொருட்களையும் கொடுத்து நாள் தோறும் ஏற்படும் வரவுசெலவுகளின் கணக்குகளைப் பதிவு செய்யுமாறு தானத்தாரைப் பணித்தான்@ குளக்கோட்டன் இருபத்தொருவரிப் பத்தர் குடிகளைத் திருமலையிலிருத்தி மலர் கொய்தல், மாலை தொடுத்தல். கொடி, குடை பிடித்தல், விளக்கேற்றல், படிமங்களைத் துலக்குதல், நெல்லுக்குற்றுதல், மெழுகுதல், சந்தனமரைத்தல் ஆலத்தி செய்தல், நடனமாதர் ஆடுமிடத்தத் தாளத்திற் கேற்பப் பாடுதல் முதலான தொழும்புகளைச் செய்யுமாறு பணித்திருந்தான். தானத்தாருக்கும், வரிப் பத்தருக்கும் இச் சேவைகளுக்கு ஊதியமாகப் பள்ளவெளியில் வயல் நிலங்களைக் குளக்கோட்டன் கொடுத்திருந்தான். மதுரை நகரால் வந்த தனி யுண்ணாப் பூபாலனுக்குத் திருமலை நகரின் ஆட்சியதிகாரத்தைக் கொடுத்து வன்னிபம் என்ற பட்டத்தையும் வழங்கினான். மேலும் திருநெல்வேலியிலிருந்து வந்த காராளனொருவனைக் கட்டுக் குளம் பற்றுக்கு அதிபதியாக்கி நிலா வெளியில் நிலமுங் கொடுத்து வன்னிபமென்ற பட்டத்தையும் குளக்கோட்டன் சூட்டினான். கோணேசர் கோயிலின் வரவு செலவுகளைப் பற்றிய குருகுலக் கணக்கிற்குக் கட்டுக்குளப் பற்று வன்னியனாரும் அவனது சந்ததியினரும் பொறுப்பாக விருக்க வேண்டுமென்று பணித்து அடை, ஆயம், தீர்வை முதலிய வரிகளுங் கோயிலுக்கே செல்ல வேண்டுமென்று அவன் ஆணையிட்டான்.
கோணேசர் கல்வெட்டில் வன்னிமைகள் பற்றிவரும் கதை எந்தளவிற்கு ஆதார பூர்வமானதென்பதை அறிந்து கொள்வதற்குக் குளக்கோட்டனின் வரலாற்றைத் தெளிவுபடுத்த வேண்டும். மனுநீதீ கண்ட சோழன், வரராமதேவன் என்ற அரசர்கள் பற்றிய கதைகள் புனைந்துரைகளாகவே இருக்க வேண்டும். எனினும், குளக்கோட்டனை ஒரு கற்பனையிலெழுந்த நபரெனக் கொள்ள முடியாது. திருமலைக் கோட்டையின் முன்பாகவிருக்கும் ஒரு கற்று}ணில் ‘முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பிணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற மொழித்தொடர் காணப்படுகின்றது. இக்கல்வெட்டு குளக்கோட்டன் கோணேசர் கோவிலின் திருப்பணிகளைச் செய்வித்திருந்தான் என்ற கருத்து அது வரையப்பெற்ற காலத்தில் வலுப்பெற்றிருந்ததென்பதைக் காட்டுகின்றது.
குளக்கோட்டன் சோழகங்கை என்ற பெயரைப் பெற்றிருந்தானென்று தbpண கைலாச புராணம் கூறுகின்றது. குளக்கோட்டன் என வழங்கிய சோழகங்கன் பத்தாம் நு}ற்றாண்டின் பின்னரே வாழ்ந்திருத்தல் வேண்டும். சோழப் பேரரசு எழுச்சி பெற்ற பின்பே சோழகங்கன் என்ற பெயர் வழக்கில் வந்தது. சோழகங்கன் என்ற பெயரைக் கொண்டிருந்த இளவரசரும் குறுநில மன்னரும் கலிங்கத்திலும் தமிழ் நாட்டிலுமிருந்தனர். ஈழத்திலும் பொலநறுவைக் காலத்தில் சோழகங்கனென்ற பெயரைச் சில இளவரசர் பெற்றிருந்தனர். இரண்டாம் கஜபாகுவின் ஆட்சிக் காலத்திற் சோழகங்க குமாரன் என்ற இளவரசன் பொலநறுவையில் இருந்தான். பின் நிஸங்க மல்லனுடைய மருகனான சோட(ழ)கங்கன் விக்கிரமபாகுவைக் கொன்றுவிட்டுப் பொலநறுவையில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தான். திருமலைக் கோட்டையிலுள்ள ஒரு வடமொழிக்கல்வெட்டு கி. பி. 1223இல் ஈழத்திற்குவந்த ஒரு சோடகங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டிலுள்ள பல வரிகள் சிதைவுற்றிருக்கின்றன. சோடகங்கன் கோணேசர் கோயிற்களித்த நிவந்தங்தங்ளைக் கூறவே இக்கல்வெட்டு வரையப்பெற்றதெனத் தெரிகின்றது. கோணேசர் கல்வெட்;டில் வரும் குளக்கோட்டனான சோழகங்களையே இக்கல்வெட்டுக் குறிப்பிட்டிருத்தல் வேண்டும்.
வன்னிமைகள் திருகோணமலைப் பிரதேசத்தி;ல் ஆண்டதற்கும் தானத்தாரும் வரிப்பத்தரும் அங்கிருந்தமைக்கும் கல்வெட்டுச் சான்றுகள் காணப்படுகின்றன. கங்குவேலியிலுள்ள ஒரு கல்வெட்டுத் திருமலை வன்னயனாரும் ஏழூர்களைச் சேர்ந்த அடப்பர்களும் கூடித் தம்பிரானார் கோணைநாதனுக்குக் கங்குவேலியில் நிலங்களையும் புற்றரைகளிலுள்ள வருமானத்தையும் விட்டதாகக் கூறுகின்றது. மேலும் தானம், வரிப்பத்து என்பவற்றையும் இக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.
கோட்டியாரம்பத்தைச் சேர்ந்த வெருகல் என்னுமூரிலுள்ள ஒரு கல்வெட்டு ஒரு கோயிலின் தெற்கு மதிலைக் கயிலாய வன்னியனார் கட்டினாரென்று கூறுகின்றது. ஆராய்ச்சியாளர் இக் கல்வெட்டு பதினாறாம் நு}ற்றாண்டைச் சேர்ந்ததென்று கருதுவர். இக்கருத்துப் பொருத்தமானதெனின் கயிலாய வன்னியனார் பதினாறாம் நு}ற்றாண்டிற் கோட்டியாரம்பத்தை ஆண்டிருக்க வேண்டும்.
திருமலை, கட்டுக்குளம் ஆகிய இடங்களிற் குளக்கோட்டன் வன்னிமைகளை நியமித்தானென்று கோணேசர் கல்வெட்டுக் கூறுகின்றபோதும் இவனே அங்கிருந்த வன்னிமைகளைத் தோற்றுவித்தானென்று கொள்வதற்கில்லை. கோணேசர் கல்வெட்டு கஜபாகுமகாராசன் திருப்பணிபற்றிச் சொல்வன. குளக்கோட்டனின் காலத்திற்கு முன்பே திருமலை வன்னிமை ஏற்பாடாகியிருந்த தென்று கொள்வதற்கு ஆதாரமாயுள்ளன. பாசுபதமறையவர் இறந்ததன் விளைவாக ஆலயத்திற் பூசை முதலியன தடையுற்றபோது கஜபாகுமகாராசன் அங்கு சென்று வன்னிபம், தானம், வரிப்பத்து, நாட்டவர் என்போரை அழைத்து விசாரணை நடத்தி, வெளிநாட்டிலிருந்து பிராமணர்களைக் கொணர்வித்து மீண்டும் ஆராதனைகள் வழமைபோல நடைபெற ஏற்பாடு செய்தான். அத்துடன் 1,100 பொன் கொடுத்துக் குருகுலக் கணக்கிற் பதிப்பித்து ஆயம், தானியவரி ஆகியவற்றிலும் வாணிபத்திற்கிடைக்கும் வருவாயிலும் பத்திலொரு பங்கை ஆலயத் திருப்பணிக்குக் கொடுக்க வேண்டுமென்று அரசன் ஆணையிட்டான்.
பதினாலாம் நு}ற்றாண்டில் யாழ்ப்பாணத்தையாண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் திருமலை வன்னிமைமேல் ஆதிக்கம் பெற்றிருந்தனரென்று கொள்வதற்குச் சில சான்றுகளுள்ளன. அந்நு}ற்றாண்டைச் சேர்ந்ததென்று கருதப்படும் நம்பொத்த என்ற சிங்கள நு}ல் திருகோணமலை ‘தெமள பட்டணத்தில்’ (தமிழரசில்) அடங்கிருந்ததெனக் கூறுகின்றது. தbpண கைலாச புராணம் சொல்வனவற்றிலிருந்தும் திருமலையிலே செகராசசேகரனின் ஆதிக்;கம் நிலவியதென்பதை உய்த்துணர முடிகின்றது.
ஆரியச்சக்கரவர்;த்தி, செகராசசேகரன், பரராசசேகரன் என்ற யாழ்ப்பாணத்து மன்னர்கள், கோணேசர் கோவிலுக்குச் சென்று அங்கு வழங்கிய தானங்களைப் பற்றிக் கோணேசர் கல்வெட்டுச் செப்புகின்றது. பரராசசேகரன், செகராசசேகரன் ஆகிய இருவரும் கோணைநாதரைத் தரிசனம் பண்ணி ஏழுபட்டு முத்துமாலை, பவளக்குடை, ரத்தினப் பதக்கம், முதலியவற்றைக் கொடுத்துக் குருகுலக் கணக்கிற் பதிப்பித்து ஆலயத் திருப்பணிகளுக்குத் தேவையான துணிகளைப் பெறுவதற்குத் திரியாயூரிலுள்ள வயல்களையும் ஏழுகுளங்களையுங் கொடுத்ததாகவும் இந்நு}ல் கூறும். இத்தகவல்கள் ஆதாரபூர்வமானவையெனிற் சில யாழ்ப்பாண மன்னர்கள் திருகோணமலை வன்னிமை மீது ஆதிக்;கம் பெற்றிருந்தனரென்று கொள்ளலாம். எனினும். இவ்வரசர்களை இலகுவில் அடையாளங் கண்டுகொள்ள முடியாது.
பதினைந்தாம் பதினாறாம் நு}ற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த யாழ்ப்பாண மன்னர்கள் திருகோணமலை வன்னியரோடு மணத்தொடர்பு கொண்டிருந்தனர். கனக சூரியசிங்கையாரியனும் புதல்வரும் வடதேசத்திலிருந்து ஈழத்திற்குத் திரும்பியபோது திருகோணமலையிலே தங்கிய பின்னரே தமது நாட்டை மீட்டனரென்று யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. செண்பகப்பெரமாள் என வழங்கிய சபுமல்குமாரன் யாழ்ப்பாணத்தை விட்டுக் கோட்டைக்குச் சென்ற காலத்திற் கனகசூரிய சிங்;கையாரியன் யாழ்ப்பாணத்திலே தன்னாட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்குத் தன்னுறவினனாகிய திருமலை வன்னியனாரிடமிருந்து படைத்துணை பெற்றிருக்கக்கூடும். சங்கலியின் ஆட்சிக் காலத்திலே யாழ்ப்பாணத்திரசனும் திருமலை வன்னியனாரும் ஒருவருக்கொருவர் துணையாகவிருந்து போத்துக்கேயரை எதிர்த்து வந்தனர். திருமலை வன்னியனார் இறந்தபின் அவனது மகன் இளைஞனாக இருந்ததினாற் சங்கிலி வன்னியை ஆளுவதற்குத் தானே உரிமையுடையவனென்று சொல்லி அதனொரு பிரிவைக் கைப்பற்றிக் கொண்டான். சங்கிலி இறந்தபின் கண்டியரசர் திருமலை வன்னியிலே தங்களாதிக்கத்தைத் திணித்தனர்.
(ஈ) முக்குவ வன்னிமைகள்
(க) மட்டக்களப்பு வன்னிமை
பதின்மூன்றாம் நு}ற்றாண்டு தொடக்கம் மட்டக்களப்பிலும் வன்னிமைகளிருந்தன. கலிங்க மாகன் மட்டக்களப்பிற்கு அதிபதியாகவிருந்த தினசிங்கனென்னும் சிற்றரசனைக் கொன்றுவிட்டுச் சுகதிரனுக்குப் பட்டங்கட்டி மண்முனையிற் கோட்டையமைத்துக் கொடுத்து மட்டக்களப்பை ஆளச்செய்தானென்று மட்டக்களப்பு மான்மியம் கூறும்.
மட்டக்களப்பு வன்னிமையை மாகனே அமைத்தானென்று இந்நு}ல் எடுத்துரைக்கின்றது. முக்குவ வன்னிமை பற்றி மட்டக்களப்பு மான்மியம் சொல்வன.
“வன்னிபங்கள் குலவரிசை முட்டிகூற மகிழ்ச்சிகொண்டு
எழுந்திடும் மரபும் நாடுமெந்த
மன்னருன்னை வன்னிபமாய் வகுத்ததென்றும்
மாநிலத்திலுங்கள் முன்னோர் வாழ்ந்தவூரும்
துன்னு புகழ் கோத்திரமும் தொன்று தொட்டுத்
துணையரசன் பேரூருஞ் சொன்னாலிந்த
பன்னுபுகழ் சபையோர்கள் மகிழக் கூறிப்
பங்குபெறு மறியாயானாற் பாவமாமே”
“அறியாதானிச் சபைக்கு அகலநிற்பான்
பரன்றொழும்பர் பழிப்புரைப் பாரறை வேனெங்கள்
நெறி தவறார் சுயநாடு காளிகட்டம் நீர்குலமே
படையாட்சி யுழுது}ணுண்டோர்
வெறிகமழும் காலிங்கவாசனெங்கள் திறத்தோரைப்
படைத்துணைக்குத் தலைவனாக்கி
குறியறிந்து வன்னிபங்கள் குலமே என்றும்
குகப் பட்டத்தரசு கொண்டோனானே”
முக்குவ வன்னிமைபற்றி மட்டக்களப்பு மான்மியம் சொல்வன ஆதாரபூர்வமானவை போலத் தோன்றகின்றன. காலிங்க மன்னன் (மாகன்) காளிகட்டத்திலிருந்து முக்குவரை அழைத்து வந்து அவர்களின் படைத்தலைவர்களுக்கு வன்னிபம் என்னும் பட்டத்தைக் கொடுத்தானென்று நு}ல் கூறுகின்றது. சூளவம்சமும் மாகன் படையெடுத்து வந்தபொழுது பெருந்தொகையான கேரளப் போர் வீரர்களை அழைத்து வந்து, ராஜரட்டையைக் கைப்பற்றியபின் கேரளப் போர் வீரர்களுக்கு நிலங்களையும் பிற சன்மானங்களையுங் கொடுத்ததாகக் கூறுகின்றது.
சீதவாக்கையிலிருந்து மட்டக்களப்புக்குப் போய்க் குடியேறிய இஸ்லாமிய குடும்பங்கள் சிலவற்றின் வரலாற்றைக் கூறும் ஓரேட்டுப் பிரதியில் மட்டக்களப்பிலதிகாரஞ் செலுத்திய ஏழு வன்னியர் பற்றிக் குறிப்புண்டு. பதினேழாம் நு}ற்றாண்டிலே இளங்சிங்கன் என்ற முக்குவ வன்னியன் ஏறாவூரிலே இருந்தானென்று தேசதிபதி பான் கூன்ஸின் அறிக்கையிற் கூறப்பட்டுள்ளது.
(உ) புத்தளத்து வன்னிமை
மட்டக்களப்பிற் போலப் புத்தளத்திலும் ஒல்லாந்தராட்சிக் காலம் வரை முக்குவ வன்னிமை இருந்தது. புத்தளத்து முக்குவர் எப்போது அங்கு குடியேறினர் என்பதை அறிவதற்கு எதுவித சான்றுகளுமில்லை. ஆறாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலந்தொட்டுப் புத்தளத்து வன்னிமை பற்றிச் சில குறிப்புக்கள் கிடைக்கின்றன.
வாட்டிக அபயன் காலத்தில் முக்குவர் புத்தளத்திற்கு வந்து குடியேறினரென வன்னி உபட்ட என்ற நு}ல் கூறுகின்றது. எனினும் இந்நு}ல் துவக்கு, வெடி மருந்து முதலியவற்றைக் குறிப்பிடுவதால் பதினாறாம் நு}ற்றாண்டளவிற் காணப்பட்ட நிலைகளையே இந்நு}ல் திரித்துக் கூறுகின்றதெனக் கொள்ளலாம். கிழக்கிலங்கையிற் போலப் புத்தளத்திலும் மாகன் படையெடுத்து வந்த காலத்திற் புத்தளத்து வன்னிமை ஏற்பட்டிருக்கக் கூடுமென்பது ஆராய்ச்சிக்குரியது.
யாழ்ப்பாணப் பட்டினத்தைச் சேர்ந்த வன்னிநாடுகள் சிலாபம்வரை பரந்திருந்தன வென்று குவேறோஜஸ் சுவாமிகள் கூறியுள்ளார். எனவே கோட்டை அரசு எழுச்சி பெறமுன் யாழ்ப்பாண மன்னரின் ஆதிக்கம் புத்தளத்தில் வந்த அராபிய அறிஞரான இவுன்பற்றுற்றா பட்டாள நகரிலே தான் ஆரியச்சக்கரவர்த்தியைக் கண்டதாகவும், அந்நகரிலுள்ள துறைகளிற் கறுவா பெருந்தொகையிலே குவிக்கப்பட்டிருந்ததாகவும் செப்புகின்றார். இவுன் பற்றுற்றா புத்தளத்தையே பட்டாள நகரென வர்ணித்தாரென்று பல அறிஞர் கருதுவர்.
முக்கர கட்டன என்ற சிங்கள மொழியிலுள்ள நு}ல் புத்தளத்து முக்குவருக்கும் ஆறாம் பராக்கிரமபாகு (1415-67) விற்குமிடையில் நடைபெற்ற போரினைப்பற்றிக் கூறுகின்றது. புத்தளத்தைச் சேர்ந்த முக்குவர் புன்னால, நாகபட்டினம் ஆகிய இடங்களிற் பாளையமிட்டுப் பராக்கிரமபாகுவைத் தாக்கிய போது அவ்வரசன் அமைச்சர்களைக்கூட்டி அவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் காஞ்சிபுரம், காவிரிப்பட்டினம், கீழக்கரை முதலிய இடங்களிலிருந்து போர் வீரர்களை அழைத்துத் தன் படையிலே சேர்த்ததாகவும் இந்நு}ல் கூறும். இவ்வாறாக பராக்கிரமபாகு வரவழைத்திருந்த படைகள் புத்தளத்திற்குச் சென்று மூன்று மாதங்களாக முக்குவருடன் கடும்போர் நிகழ்த்திய பதின் அவ்வன்னிமையைக் கைப்பற்றின. அத்துடன் பராக்கிரமபாகுவின் ஆட்சி ஏற்பாடாகியது. பரக்கும்ப சிரித என்ற நு}ல் பராக்கிரமபாகு ‘முக்கர’ அரசனை நிர்மூலனஞ் செய்தானென்று கூறுகின்றது. பராக்கிரமபாமகுவிற்கும் இம்முக்கர அரசனுக்குமிடையில் நடைபெற்ற போரே முக்கர கட்டனவில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. பராக்கிரமபாகு புத்தளத்து வன்னிமையைக் கைப்பற்றியிருந்தும் அங்கு வன்னியரின் அதிகாரம் மறையவில்லை.
பதினாறாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் புத்தளத்து வன்னிமை பற்றி அரிய சான்றுகளைத் தருகின்றன. ஏழாம் புவனேகபாகு நவரத்தின வன்னியனுக்குக் கொடுத்த செப்பேட்டில் லுணுவில என்னுமிடத்திலிருந்து அவ்வன்னியன் புத்தளத்தை ஆண்டானென்பதை அறியமுடிகின்றது. மேலும் இவ்வாவணம் புத்தளத்திலுள்ள முத்திரகூடம் என்ற நீதிமன்றம் பற்றியும் தகவல்களைக் கொண்டுள்ளது. அம் மன்றத்திலிருந்த பதினெட்டு உறுப்பினரும் ராஜவன்னியர் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தனர். மேலும் அவ்வன்னியர் பல சிறப்புரிமைகளையும் பெற்றிருந்தனர் தலைமுறை தலைமுறையாக அவ்வன்னியரின் சந்ததியினர் முத்திரகூடத்தின் உறுப்பினராயிருப்பதற்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. அரசனுக்குரிய வரிகளைச் செலுத்தும் பொறுப்பிலிருந்து விடுபட்டிருந்ததோடு குற்றங்களைச் செய்யினும் அவற்றிற்கான தண்டனைகளைப் பெறாத வாய்ப்பினையும் அவர்கள் பெற்றார்கள். அத்துடன் அவர்களின் உறவினரும் ஊழிய சேவையிலிருந்து அவகாசம் பெற்றிருந்தனர்.
கணையாழி. கவசம், சாமரம், பவளக்குடை, வெள்ளிவாள் போன்றவற்றைத் தம் சமக்கட்டாகப் புத்தள முக்குவவன்னியர் பெற்றிருந்தனரென்பதை மாதம் பையிலிருந்த தனியவல்லபன் வழங்கிய சேப்பேட்டின் வாயிலாக அறியலாம்.
மூன்றாம் இயல்
அடிக்குறிப்பு
1. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ ஊhயிவநச ஐஐ
2. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ ஊhயிவநச ஐஐஐ டுலையயெபயஅயபந. வுhந னுநஉடiநெ ழக Pழடழnயெசரறய யனெ வாந சுளைந ழக னுயஅடியனநnலைய.
3. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ ஊhயிவநச ஐஐஐ. ஐடினை.
4. மு.யு. Nடையமயவெய ளுயளவசiஇ ‘வுhந ஊநலடழn நுஒpநனவைழைn ழக துயவயஎயசஅயn ளுரனெயசய Pயனெலய’ நுiபாவ யுடட ஐனெயை ழுசநைவெயட ஊழகெநசநnஉந P. 252
5. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ ஊhயிவநசள ஐஐஐ ரூ ஐஏ.
6. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ ஊhயிவநச ஐஏ. சி. பத்மநாதன், ‘யாழ்ப்பாண மன்னர்: குலவிருதுகளும் சின்னங்களும்,’ தினகரன் தீபாவளி மலர், 1970
7. ருniஎநசளவைல ழக ஊநலடழn ர்ளைவழசல ழக ஊநலடழnஇ 1960. ஏழட ஐஇ Pவ 2.
8. வுhந முiபெனஅ ழக துயககயெஇ ஊhயிவநச ஐஐ.
9. ஒல்லாந்தர் கால்தில் நிலவிய வன்னிமைகளைப் பற்றிப் பேராசிரியர் அரசரத்தினம் மிகத்திறமையான கட்டுரை ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்
ளு.யுசயளயசயவயெஅஇ ‘வுhந ஏயnnயைச ழக ழேவா ஊநலடழn: ய ளவரனல ழக கநரனநட pழறநச யனெ ஊநவெசயட யரவாழசவைலஇ 1660-1760’இ வுhந ஊநலடழn துழரசயெட ழக ர்ளைவழசiஉயட யனெ ளுழஉயைட ளவரனநைளஇ ஏழட 10இ ழே.2. PP 101-112.
10 வன்னிஉபட்ட, பிரித்தானிய பொருட்காட்சிச்சாலை நு}ல் நிலையத்திலுள்ள
ஏட்டுப்பிரதி.
கோணேசர் கல்வெட்டு, சண்முகரத்தின ஐயரின் பதிப்பு யாழ்ப்பாணம், 1909
மட்டக்களப்பு மான்மியம் வித்துவான் கு. ஓ. ஊ. நடராசாவின் பதிப்பு.
கொழும்பு, 1962.
வையா பாடல் து. று. அருட்பிரகாசத்தின் பதிப்பு, 1921.
11. பூஜாவலிய, யு. ஏ. சுரவீரவீனுடைய பதிப்ப, கொழும்பு, 1912
12. சூளவம்சம் டுஓஓஓஐஇ செய்யுள் ஐஐ. ‘…வன்னி ராஜாததம்
சமுபாகத...’
13. சூளவம்சம். டுஓஓஓஐஐஐஇ செய்யுள் 10. டுஓஓஓஏஐஐஐ 87-89இ
டுஓஓஓஐஓஇ 53
14. சூளவம்சம் டுஓஓஓஏஐஐஐஇ 87-89
15. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ P 163
16. மட்டக்களப்பு மான்மியம், 54, 104
17;. மட்டக்களப்பு மான்மியம், 95
18. மட்டக்களப்பு மான்மியம் 104
19. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ PP. 105-106
20. ளுழரவா ஐனெயைn ஐளெஉசipவழைளெ ஏழட. ஐஏஇ ழேஇ 1396
21. சூளவம்சம் டுஓஇ 36-44
22. சூளவம்சம், டுஓஐஐஐஇ 24. 29
23. சூளவம்சம, டுஓஐஏஇ 44
24. ளு. Pயசயயெஎவையயெஇ ‘யு ளுயளெமசவை ஐளெஉசipவழைn கசழஅ Pயனயஎலைய’இ துழரசயெட ழக வாந சுழலயட யுளயைவiஉ ளுழஉநைவல (ஊநலடழn டீசயnஉh) ஏழட ஏஐஐஐ Pவ 2. (நேற ளுநசநைள)இ P. 261
25. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ P. 125
26. யாழ்ப்பாண வைபவமாலை பக்கம் 12
27. கோணேசர் கல்வெட்டு, பக்கங்கள் 2-3, 40-42.
28. கோணேசர் கல்வெட்டு. பக்கம் 6. அடை - நிலவரி. ஆயம் - வாணிப வரி, தீர்வை - தானிய வரி.
29. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ P 20
30. ஊ. சுயளயயெலயமயஅஇ யுnஉநைவெ துயககயெஇ PP 377-71
31. ஸ்ரீ தbpண கைலாச புராணம், பாயிரம் செய்யுள் 8
32. சூளவம்சம், டுஓஓஓஇ 238
33. சூளவம்சம் டுஓஓஓஇ 29
34. நுpபைசயிhயை ணுநலடயniஉய ஏழட ஏஇ PP 170-73. துழரசயெட ழக வாந சுழலயட யுளயைவiஉ ளழஉநைவல (ஊநலடழn டீசயnஉh) ஏழட. ஏஐஐஇ Pவ2 (நேற ளுநசநைள) P 179.
35. கா. இந்திரபாலா. ‘கங்குவேலிக் கல்வெட்டு’ சிந்தனை, மலர் 2. இதழ் 2-3 ப.40
36. கா. இந்திரபாலா ‘வெருகல் கல்வெட்டு’ சிந்தனை மலர் 2. இதழ் 2-3 ப 35-37
37. கோணேசர் கல்வெட்டு, ப. 11-13
38. நம்பொத ப.4
39. கோணேசர் கல்வெட்டு, ப 21
40. யாழ்ப்பாண வைபவமாலை ப 46
41. யாழ்ப்பாண மான்மியம், ப. 53-54
42. மட்டக்களப்பு மான்மியம், ப. 104
43. சூளவம்சம், டுஓஓஓஇ 61-7-இ 74-79
44. நாடு காடு பாவணிக் கல்வெட்டு. பிரித்தானிய பொருட்காட்சிச்சாலை நு}ல் நிலையத்திலுள்ள ஏட்டுப் பிரதி.
45. ஆநஅழநை ழக சுலஉமடழகக எயn புழநளெ னுநஉநஅடிநசஇ 1993. P 44
46. வுhந வுநஅpழசயட யனெ ளுpசைவைரயட ஊழஙெரநளவ ழக ஊநலடழnஇ குநசயெழ னுந ஙரநலசழணஇ வசயளெடயவநன டில குச. ளு. பு. Pசநசசயஇ ஊழடழஅடிழஇ 1930இ P. 47
47. வுhந சுநாடய ழக ஐடிn டீயவவரவய வசயளெடயவநன டில ஆயபனi ர்ரளளயin ‘புயநமறயசன’ள ழுசநைவெயட ளநசiஉள ஏழ. டுஓஓஐஐஐஐஇ 1953இ PP. 217-218
48 ஆ. னு. சுயபாயஎயn வுhந முயசயஎய ழக ஊநலடழn PP. 16-19. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ P. 213-214
49. வுhந முயசயஎய ழக ஊநலடழn ஊழடழஅடிழஇ 1961 PP 18-19
50. Pயசயமரஅடிய ளுசைவைய நனவைநன டில மு. னு. P ஏமைசயஅயளinhய. ஊழடழஅடிழஇ 1954 ஏநசளந 75.
51. ஆறாம் பராக்கிரமபாகு கோட்;டையில் அரசனாகியபின் வன்னிநாடுகளைக் கைப்பற்றினான் என்ற அவனுடைய காலத்துச் சிங்கள நு}ல்கள் கூறுகின்றன. முன் எந்த அரசனும் அடக்கியிராத பதினெட்டு வன்னிகளையும்பராக்கிரமபாகு கைப்பற்றினான் என்று கிராசந்தேஸய செப்புகின்றது (கிராசந்தேஸய, செய்யுள் 128) பரகும்ப சிரித (47) என்ற நு}லும் இவ்வாறு சொல்லுகின்றது. மேலும் ராஜரத்னா கரய, ராஜாவலிய, அளகேஸ்வர யுத்தய என்ற வரலாற்று நு}ல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன.
ஈழத்திலே வேட்டுவ வன்னிமைகளும் சில பிரதேசங்களில் நிலைபெற்று வந்தன. பணிக்கிறால என்பவனைப் பராக்கிரமபாகு நான்கு வன்னிகளிலுமுள்ள வேடரின் அதிபதியாக்கினான் என்று மலல கதாவ என்ற நு}ல் கூறும்.
வன்னியர் அடங்காப்பற்றுக்கு வந்தபோது அங்கு வேடரின் தலைவர்கள் சிலவிடங்களில் இருந்து அதிகாரஞ் செலுத்தினார்களென வையாபாடல் கூறும்.
52. ளுiஅழn ஊயளநை ஊhவைவலஇ வுhந ஊநலடழn புயணநவவநநச ஊழவவயஇ 1834இ PP 190-191
53. வுhந ஊநலடழn புயணநவவநநச PP 191-193
நாலாம் இயல்
ஈழத்து வன்னிமைகள் - ஐஐ
(அ) தோற்றுவாய்
யாழ்ப்பாணப் பட்டினம் என வழங்கிய வட இலங்கையில் நிலைபெற்ற தமிழரசிலே பல வன்னிமைகளிருந்தன. இவற்றை வன்னிபம், வன்னியனாரென்ற பட்டங்களைப் பெற்றிருந்த குறுநில மன்னர் ஆண்டு வந்தனர். யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள வலிகாமம், தென்மராட்சி. பச்சிலைப்பள்ளி என்ற மாகாணங்களுடன் வன்னி நாட்டையும் யாழ்ப்பாண அரசு உள்ளடக்கியிருந்ததென்றும், மன்னாரிலிருந்து திருகோணமலை வரை அவ்வன்னி பரந்திருந்ததென்றும் குவேறோஸ் சுவாமியார் கூறுகிறார். வேறோரிடத்திலே கோட்டை அரசின் எல்லைகளை வரையறுத்தக் கூறுமிடத்து யாழ்ப்பாணப் பட்டினத்துக்குரிய வன்னிநாட்டின் எல்லை சிலாபம் வரை பரந்திருந்ததென்றும் இவர் எடுத்துரைக்கின்றார். யாழ்ப்பாண அரசின் அளவினைப் பற்றிக் குவேறோஸ் சுவாமியார் சொல்வன ஒல்லாந்த தேசாதிபதி பான் கூன்ஸ் சொல்வனவற்றைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. யாழ்ப்பாணப்பட்டினத்தைப் பற்றி அத்தேசாதிபதி மேல்வருமாறு கூறுகின்றார். இந் நான்கு மாகாணங்களும் பதின்மூன்று தீவுகளும் யாழ்ப்பாணப் பட்டினமென்று வழங்கி வந்தன@ இவற்;றோடு வன்னியும் அவ்வரசைச் சேர்ந்திருந்தது. யாழ்ப்பாண மன்னர் வன்னியைக் கைப்பற்றித் திறை பெற்று வந்தனர். அதே போலப் போத்துக்கேயரும் வன்னியரிடமிருந்து திறை பெற்றனர். மேற்கிலே கற்பிட்டியிலிருந்து பூநகரிப் பக்கமாகவுள்ள கல்முனை வரை இடங்களை அடக்கிக் கிழக்கிலே திருகோணமலை வரையும் வன்னி பரந்து காணப்படுகிறது. இவ்வரசினைப் சியங்கேரி (சங்கிலி) என்ற அரசன் நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்தான்.
பனங்காமம், முள்ளியவளை, கருநாவல்பத்து, தென்னமரவடி, மேல்பத்து, கரிக்கட்டு மூலை, செட்டி குளம் பத்த என்ற வன்னிகள் தமிழரசர் காலத்திலே யாழ்ப்பாணப் பட்டினத்திற் சிறப்பிடம் பெற்றிருந்தன. ஆரியச்சக்கரவர்த்தி பாண்டி நாட்டிலிருந்து படையெடுத்து வந்து யாழ்ப்பாணத்திலே ஆதிக்கம் பெற்ற காலத்தில் அவனோடு வந்த படைத் தலைவர்கள் பலர் வன்னியுள் நுழைந்து அங்கிருந்த பல சிற்றரசர்களை அகற்றிவி;;ட்டு அவராண்ட குறுநில அரசுகளைக் கைப்பற்றி ஆட்சிசெய்தனர்.
யாழ்ப்பாண வைபவமாலை வன்னியில் இருதடவைகளாக வன்னியரின் குடியேற்றம் ஏற்பட்டதென்று சொல்கின்றது. இவற்றுள் முதற் குடியேற்றம் குளக்கோட்டன் காலத்தில் ஏற்பட்டதெனவும். இரண்டாம் குடியேற்றம் பாண்டித நாட்டால் வந்த ஐம்பத்தொன்பது வன்னியரின் வருகையோடு ஏற்பட்டதென்றும் அந்நு}ல் கூறும். தமிழரசர் காலத்திலேற்பட்ட இரண்டாம் குடியேற்றம் பற்றியே வையாபாடல் கூறுவனவற்றிலிருந்து அடங்காப்பற்றென வழங்கிய வன்னிப் பகுதியின் வரலாற்றை ஓரளவிற்கு அறிந்துகொள்ளலாம்.
(ஆ) அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம்
வன்னியர் பற்றி வையாபாடல் கூறுவனவற்றுள் சில வரலாற்றுண்மைகள் இடம்பெறுகின்றன. அடங்காப்பற்றை வன்னியர் கைப்பற்றியமையைக் குறித்து மேல் வருமாறு நு}ல் கூறுகின்றது. செயதுங்க வீரவரராஜசிங்கன் தன் மாமனது மகளைத் தான் மணம் முடிக்க விரும்புவதாக மதுரை மன்னனிடம் அறிவிக்குமாறு து}துவரை அனுப்பினான். து}துவர்கள் சொன்னவற்றைக் கேட்ட மதுரை மன்னன் அறுபது வாட்படை வன்னியரை அழைத்துத் தன் மகள் சமது}தியை அவர்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். செயதுங்க வீரவரராஜசிங்கனும் இளவரசியை மணம்முடித்து விட்டு அவளோடு வந்த வன்னியர்களை அடங்காப் பற்றுக்குச்சென்று அதைக் கைப்பற்றி ஆளுமாறும், ஆண்டுதோறும் யாழ்ப்பாண அரசனுக்குத் திறை செலுத்த வேண்டுமென்றும் பணித்தான்.
அடங்காப் பற்றை அடைந்ததும் வன்னியர் அதைக் கைப்பற்றுவதற்குத் தம்மிடம் போதிய படையில்லை என்பதை உணர்ந்தார்கள். எனவே, இளஞ்சிங்க மாப்பாணன், நல்லவாகுதேவன், அத்திமாப்பாணன் என்போரிடம் து}துவர்களை அனுப்பி மதுரை, மருங்கூர், காரைக்கால், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, துளுவை நாடு, தொண்டைமண்டலம், வடகிரிநாடு என்னுமிடங்களிலிருந்து கூட்டிவரக் கூடியவர்கள் அனைவரையும் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினார்கள். இதனை அறிந்ததும் தில்லைமூவாயிரவர், திடவீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத்தான், நல்லவாகு மலைநாடன், சிங்கவாகு, சோதயன், அங்கசிங்கன், கட்டைக்காலிங்கன், சொக்கநாதன், கங்கைமகன், கலைக்கோடமுடியோன், வீரகச்சமணி முடியரசன், காபாலிவீரன், சேது எனும் பதியை ஆளுகின்ற வீரம் செறிந்த தலைவன், இளஞ்சிங்க மாப்பாணன் என்போரும் பெருமைமிக்க ஆரிய வம்சத்தாரும் படகுகளில் ஏறி யாழ்ப்பாணம் வந்தார்கள். இவர்களிலே திடவீரசிங்கன், கரிகட்டு மூலைப்பற்றுக்கு அதிபதியானான். இளஞ்சிங்க மாப்பாணன், இராஜசிங்க மாப்பாணன், நல்லவாக மெய்த்தேவன், கறுத்தவாகு, சிங்கமாப்பாணன் என்போர் சான்றாரையும் வலையரையும் துரத்தி விட்டு முள்ளியவளையைக் கைப்பற்றினார்கள். நீலையினார் திசையாண்டாரும் படையும் மேல் பற்றுக்கு வந்து சகரன் மகரன் என்ற வேட்டுவ தலைவர்களைக் கொன்று விட்டு நாட்டையாண்டனர்.
மேற்கு மூலை, கிழக்கு மூலை, என்பவற்றகை கைப்பற்றிய சிங்கவாகு பொக்கா வன்னியிலிருந்தான். சுபதிட்டா என்னும் அந்தணனும் படையும் திரியாய் என்னுமிடத்திற்குச் சென்று நீலப்பணிகனைக் கொன்று விட்டு அந்நிலத்தை ஆண்டனர். காலிங்கன், மலையகத்தார், கன்னார் முதலியோர் கச்சாயிலே குடியிருந்தார்கள். அங்கசன் கட்டுக்குளத்திற்குச் சென்று வாழ்ந்தான். புகழ்மிக்க சிங்கவாகு திருக்கோணமலைக்குச் சென்றான். மாமுகன் வெருகல், தம்பலகாமம் என்பவற்றைக் கைப்பற்றியாளச் சென்றான். மைடன் என்போன்கோட்டியாரத்திற்கு அதிபதியானான். ஓடுக்கன், நீலன், மைலன் என்போர் முறையே துணுக்காய், இத்திமடு, நெடுங்கேணி என்னுமிடங்களுக்குச் சென்றனர் ஆற்றல் பொருந்திய சன்மன் நொச்சிமுனையில் ஆண்டான். நாகன் புல்வெளிக்குச் செல்ல நீலையினான் வாகுதேவன் தனிக்கல்லிலிருந்தான்.
வன்னியர்கள் வந்த பின்னர் அவர்களை அடுத்து அவர்களின் மனைவிமாரும் பரிவாரங்களும் அடங்காப் பற்றை வந்தடைந்தனர். இவ்வாறு வந்தவர்களுள் மதுவீர மழவராயனும் நாட்டையாண்ட மழவராயனும் மன்னனோடு யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். பூபால வன்னிமையும் கோபாலரும் கட்டுக்குளத்திலும் திரியாவிலும் இனிது வாழ்ந்தனர். வில்வராயன் நல்லு}ரிலிருந்தான். குடைகாத்தான், கொடித்தேவன், தேவராயன், கந்தவனத்தான் என்போர் செட்டி குளத்தின் அதிபதிகளாயினர். உத்துங்கராயன் பனங்காமத்தில் வாழ்ந்தான்.
மேலேயுள்ள வையாபாடற் பகுதியிற் பல வன்னியர்களின் பெயர்கள் வருகின்றன. அவர்கள் சென்றிருந்த இடங்களும் கைப்பற்றிய இடங்களும் கூறப்படுகின்றன. இங்கு கூறப்படும் பிரதானிகள் அனைவரும் வரலாற்று நபர்கள் என்று கொள்ள முடியாத போதிலும், இவர்களிற் பலர் தென்னகத்திலிருந்து வந்து வன்னிப் பிரதேசங்கள் பலவற்றைக் கைப்பற்றி ஆண்டதை ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகவே கருதவேண்டும். இவர்கள் இன்ன காலத்தில் வந்தார்கள் என்று திட்டவட்டமாக நு}ல் கூறாமையால் ஈழநாட்டு வரலாற்றையும் தென்னிந்திய வரலாற்றையும் ஒருங்கே ஒப்புநோக்கி ஆராய்வதன் மூலமும், நு}லிலுள்ள அகச்சான்றுகளை நுணுகி நோக்குவதன் மூலமும் ஓரளவிற்கு வன்னியர்கள் வந்த காலத்தை நிர்ணயிக்கலாம். வன்னியரின் வருகை பற்றி நு}ல்தரும் விளக்கம் ஏற்கக் கூடியதொன்றாக அமையவில்லை. மதுரை மன்னனின் இளவரசியோடு இவர்கள் வந்தார்கள் என்பதும் பதினெண்குடிகளைச் சேர்ந்த மக்களைக் கூட்டி வந்தார்கள் என்பதும் ஓரளவிற்கு விஜயன் மதுரை இளவரசியை மணந்தமை பற்றி மகாவம்சம் தரும் தகவல் ஒத்திருக்கின்றன. எனினும், மதுரை மன்னனின் து}ண்டுதலால், வன்னியர்க்ள வந்தார்கள் என்றும செயதுங்க வீரவரராஜசிங்கன் என்ற முதல் அரசன் காலத்தில் வன்னியர் வந்தார்கள் என்றும் நு}ல் கூறுவன கவனத்திற்குரியவை.
கைலாயமாலையிலே கூறப்பெற்ற முதற் சிங்கையாரியனான செயவீரசிங்கை ஆரியன் என்ற பெயரே வையாபாடலிற் செயதுங்க வீரவரராஜசிங்கன் எனத் திரிபடைந்து வந்துள்ளதென ஊகிக்கலாம். சேதுபதி திறலரசு புரியும் வீரன் செருக்குற்ற ஆரிய வம்சத்தார் என்போரும் வன்னியர்களோடு வந்தார்களென்று வையாபாடல் கூறுவதால், சேது நாட்டிலிருந்து வந்த ஆரியச்சக்கரவர்த்திகளோடு இவ்வன்னியர் வந்தனர் எனக் கொள்வது சாலப்பொருந்தும் மேலும் இவ்வன்னியர் படையெடுப்புக்கள் நிகழ்ந்த காலத்திலே தான் வந்திருக்க வேண்டும். எனவே, பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் நடந்த பாண்டியப் படையெடுப்பின் பின்னணியில் வைத்தே வன்னியர் பற்றி வையாபாடல் கூறுவதை நோக்கவேண்டும். இவ்வன்னியர்கள் கைப்பற்றிய இடங்களிற் பல யாழ்ப்பாண மன்னர் ஆதிக்கத்துள் அமைந்திருந்தமையும் இக் கருத்துக்கு ஆதாரம் அளிக்கின்றது. அத்தோடு முதலாம் ஆரியச்சக்கரவர்த்தியாகிய சிங்கை ஆரியன் காலத்தில் அவன் அதிகாரம் பெறுவதற்குப் பாண்டி மழவன் என்ற பிரதானியும் வேறு பல மழவராயன் என வழங்கிய தலைவர்களும் துணை புரிந்தனர் எனக் கைலாயமாலை கூறுகின்றது. மழவராயன் என வழங்கிய தலைவர்கள் வன்னியரோடு வந்தார்கள் என்றும், மதுவீர மழவராயன், மழவராயன் என்போர் அரசனோடு யாழ்ப்பாணத்தில் இருந்தனர் என்றும் வையாபாடல் கூறுகின்றது. எனவே, வையாபாடலில் இடம்பெறும் தகவல்கள் முதலாம் ஆரியச்சக்கரவர்த்தி காலத்திதை யொட்டினவென்றே கருதலாம்.
பான் கூன்ஸ் தேசாதிபதி யாழ்ப்பாண மன்னர்கள் எல்லோருக்கும் வன்னியர் திறை செலுத்தி வந்தார்கள் என்று கூறுகிறார். எனினும் செயவீரசிங்கையாரியன், வரோதய சிங்கையாரியன், மார்த்தாண்ட சிங்கையாரியன், முதலாம் சங்கிலி போன்ற பலம்மிக்க மன்னர்களே வன்னியர்களையடக்கி, வன்னிநாட்டில் தம்மாதிக்கத்தைச் சிறப்பாக ஏற்படுத்தியிருந்தார்கள். வரோதயசிங்கையாரியன் ஆட்சியில் வன்னியர்கள் கிளர்ச்சி செய்தபொழுது அவ்வரசன் வன்னிமேற் படையெடுத்து வன்னியரையடக்கி வழமையான திறயை அவர்களிடமிருந்து பெற்றான்.
ஆறாம் பராக்கிரமபாகு கோட்டையை ஆண்டபொழுது அவனது சேனாதிபதி செண்பகப் பெருமாள் இரு தடவையாக யாழ்ப்பாண அரசைத் தாக்கினான். முதலாவது முறை படையெடுத்துச் சென்றபொழுது சில எல்லைப் பிரதேசங்களைத் தாக்கிவிட்டுத் திரும்பினான். இவன் யாழ்ப்பாணத்தின் மீது மீண்டும் 1450ம் ஆண்டளவிற் படையெடுத்து அவ்வரசைக் கைப்பற்றினான். வன்னியைக் கைப்பற்றிய பின்னரே இவன் யாழ்ப்பாணக்குடா நாட்டில் நுழைந்தானெனக் கருதலாம். யாழ்ப்பாண வைபவமாலை கனகசூரிய சிங்கையாரியன் காலத்தில் வன்னியரின் துணையோடு சிங்களப் படையெடுப்பு நடைபெற்றதெனக் கூறுகின்றது. பின்னர் பதினைந்தாம் நு}ற்றாண்டிற் கனகசூரிய சிங்கையாரியனின் மகனாகிய பரராசசேகரகன் வன்னியரை அடக்கியதோடு தன்னாட்சிக்காலத்தின் இறுதியில் முள்ளியவளையிற் சிலகாலம் தங்கியிருந்தான்.
யாழ்ப்பாண அரசிலிருந்த நிர்வாக அதிகாரிகளில் வன்னியரே முதன்மை பெற்றிருந்தனர். தலைமுறை தலைமுறையாகத் தம் நாடுகளை வன்னியர் ஆண்டு வந்தனர். மேலும் யாழ்ப்பாணத்தில், அரண்மனையில் வருடத்திற்கு இருமுறை வரிசைகள் கூடியபொழுது வன்னியரும் அரசனுக்கு உபகாரம் அனுப்பி வைத்தனர். எனினும் ஆண்டுக்கு ஒருமுறை தலைநகருக்குச் சென்று, யாழ்ப்பாண மன்னரிடம் சமுகமளித்துத் திறை கொடுத்தனர். அரசனின் நேரடியான ஆட்சிக்குள்ள மாகாணங்களிலே காணப்பெற்ற நிர்வாக முறையே வன்னி நாட்டிலும் காணப்பட்டது. எனினும், வன்னியர் சுயமாக ஆண்டு, அவற்றிற் சேவை புரிந்த முதலியார், கண்காணி, பண்டாரப்பிள்ளை, தலையாரி அடப்பனார், மொத்தக்கர் முதலிய எல்லா அதிகாரிகளையும் நியமித்து வந்தனர். அத்துடன் வன்னி நாடுகளிலுள்ள வாரம், தீர்வை, காணிக்கடன், ஆள்வரி முதலிய எல்லா இறைவரிகளையும் வன்னியரே பெற்றனர்.
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சிசெய்த காலத்தில் யாழ்ப்பாண அரசில் நிலவிய வழமைகளை ஆதாரமாகக் கொண்டு வன்னியரிடமிருந்து திறைபெறும் உரிமையை நிலைநாட்டி வந்தனர். எனினும் போர்த்துக்கேயரின் ஆதிக்கம் வன்னியிற் பெரிதும் தளர்வுற்றிருந்தது. ஒல்லாந்தரும் யாழ்ப்பாணப்பட்டினத்தைக் கைப்பற்றியபோது முற்கால வழமைகளையே தழுவி வன்னியரிடமிருந்து திறைபெற்று வந்தனர். எனினும் பல தடவைகளாக வன்னியர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று திறை கொடுக்க மறுத்ததுடன், ஒல்லாந்தருக்கெதிராகக் கண்டி அரசனின் உதவியையும் பெறுவதற்கு முயற்சித்தனர். ஒல்லாந்தர் காலத்தில் தென்னமரவடி, பனங்காமம், மேல்பத்து, முள்ளியளை, கரிக்கட்டுமூலை, கருநாவல்பத்து ஆகிய இடங்களில் வன்னியரின் ஆட்சி நிலைபெற்றது. இவற்றுட் பனங்காமத்தை ஆண்ட வன்னியர் பெருவலிபெற்றிருந்ததோடு அயலிலுள்ள வன்னிமைகளின் பிரதேசங்களையுங் கைப்பற்றியிருந்தனர். இதுவே ஒல்லாந்தர் காலம்வரையுள்ள அடங்காப்பற்று வன்னிமைகளின் சுருக்கமான வரலாறாகும்.
நாலாம் அத்தியாயம்
அடிக்குறிப்பு
1. ஞரநலசழணஇ வசயளெ. P. 151
2. ஐடினைஇ P. 47
சிலாபத்திலுள்ள தெமள ஹத்பத்து என்னும் பகுதியில் ராஜவன்னிபத்து, குமாரவன்னிபத்து என்ற இரு பிரிவுகள் உள்ளன.
(குசயமெ ஆழனனநசஇ புயணநவவநச ழக வாந Pரவவயடயஅ னுளைவசநஉவஇ P. 101) வன்னிபத்து என்ற பெயர் முன்னொரு காலத்தில் வன்னிமை நிலவியதற்குச் சான்றாயுள்ளது.
ஒரு காணியின் விற்பனைபற்றிக் கூறும் (15-3-1644) உறுதியொன்று குருகுல (கறாவ) வன்னியர் பற்றியும் குறிப்பிடுகின்றது.
(ஆ. னு. சுயபாயஎயnஇ ஐனெயை in ஊநலடழநௌந ர்ளைவழசலஇ ளுழஉநைவல யனெ ஊரடவரசநஇ 1964இ P. 180).
3. சுலஉமடழக ஏயn புழநளெஇ ஐளெவசரஉவழைளெ கழச வாந பரனையnஉந ழக வாந ழிpநசமழிஅயn யுவொழலெ Pயஎடைழழநnஇ ஊழஅஅயனெநரச யனெ ஊழரnஉடை ழக துயகnயியவயெஅ 1658இ PP. 84-86
4. யாழ்ப்பாண வைபவ மாலை, ப. 11. 12
5. வையாபாடல். செ 20-50
6. வையாபாடல் செ. 72-82
7. ஆநஅழசை ழக ஏயn புழநளெ வழ டுயரசநளெ Pலட. டுயவந ஊழஅஅயனெநரச ழக துயகnயியவயெஅஇ வசயளெஇ ளுழிhயை Pநைவநசளஇ ஊழடழஅடிழ 1910.
8. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ PP 341-342
9. யாழ்ப்பாண வைபவமாலை. ப. 38
10. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ ஊhயிவநச ஏஐஐஐ
11. வையாபாடல், செ. 102-106
12. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ P. 351இ 355-356
13. ஐ டினைஇ P. 355
14. ஐடினைஇ P. 365
இரண்டாம் பகுதி.
ஐந்தாம் இயல்
பரராச சேகரன் திருப்பணி கூறும் பட்டயம்.
யாழ்ப்பாணப் பட்டினம் பற்றிய ஆராய்ச்சிக்குத் தேவையான வரலாற்றாதாரங்களைச் சேர்க்க முயன்றபோது வட இலங்கை அரசர் எழுதுவித்த இரு செப்பேடுகள் இருப்பதாகச் செய்தி கிடைத்தது. அவை சிதம்பரத்திலுள்ள பரராசசேகரன் மடத்தின் முகாமையாளரும் நல்லு}ர்க் கந்தசாமி கோயிலில் ஓதுவாராக முன் பணிபுரிந்த சிவஞானம் அவர்களின் மகனுமாகிய திரு. சிவக்கொழுந்து என்பவரிடமுள்ளன. இச் செப்பேடுகளைப்பற்றி இதுவரை வரலாற்று மாணவரும் ஆராய்ச்சியாளரும் நன்கறிந்திருக்கவில்லை.
இவற்றிலொன்று யாழ்ப்பாணத்து மன்னர் பரராசசேகர மகாராசா சிதம்பர தரிசனஞ் செய்து அங்கு ஆற்றிய திருப்பணிபற்றிக் கூறுகின்றது. இச் செப்பேடு 9 அங்குல நீளமும் 12 அங்குல அகலமுங் கொண்டுள்ளது. இப்பட்டயத்தில் இலக்கண வழுக்களும் பிரதேச வழக்கிலுள்ள சொற்களின் திரிபுகளும் இடையிடையே வருகின்றன. நாடு என்பதற்குப் பதிலாக னாடு (வரிகள் 2-3) என்ற சொல்லும் தர்மம் என்பதற்குப் பதிலாக தறுமம் என்ற சொல்லும் பட்டயத்தில் வருகின்றன. சர்வமானியம் என்ற சொல்லும் பட்டயத்தில் வருகின்றன. சர்வமானியம் என்ற சொல் இங்கு சறுவ மானியம் என வருகின்றது. மேலும் சில சொற்களில் ‘ழ’ கரம் வரவேண்டிய இடங்களில் ‘ள’ கரம் வந்துள்ளது. (22. கிளக்கும், 49. எழுதினது).
வைத்து, சம்மதித்து என்ற சொற்கள் வைச்சு (16), சம்மதிச்சு எனச் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் யாழ்ப்பாணத்திலே, இராஜ்யத்துக்குள்ளே என்ற மொழிகளின் ஈற்றில் வரும் ‘ஏ’ காரம் ஐகாரமாகி வந்துள்ளது. மேலும் அர்த்த சர்ம வேளை என்ற மொழித் தொடரில் வரவேண்டிய ‘ர’ கர மெய் மருவியுள்ளது. ஸ்வஸ்தி ஸ்ரீ எனும் மங்கல மொழிகளில் உள்ள ஸ்ரீ என்னும் கரந்தத்தில் வரும் பதத்திற்குப் பதிலாக சீ என்னும் கிரந்தத்தில் வரும் பதத்திற்குப் பதிலாக சீ என்னும் எழுத்துப் பிழையாக வந்துள்ளது.
‘ஸ்ரீமந் மஹா மண்டலேஸ்வரன் அரியராய விபாடன் பாஷைக்குத் தப்புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்ட கொண்டநாடு குடாதான் பூர்வ தbpண பஸ்சி மோத்திர சமுத்திராதிபதி கஜவேட்டை கண்டருளிய ...’ என்று விஜயநகர மன்னரின் மெய்க் கீர்த்திகளில் வழமையாக வரும விருதுகள் இச் செப்பேட்டிலும் வருகின்றன. விஜயநகரப் பேரரசு நிலைபெற்ற காலத்திற் குறு நில மன்னர்களும் இவ்வாறான வாசகங்களைத் தம் மெய்க்கீர்த்திகளிலே சேர்த்துக் கொண்டனர். விஜயநகரப் பேரரசு அழிவுற்ற பின்பும் விஜயநகர மன்னரின் மெய்க்கீர்த்திகளிலுள்ள வாசகங்களைக் குறுநில மன்னரும் பிறரும் பயன்படுத்தி வந்தனர் போலத் தோன்றுகின்றது.
இப்பட்டயம் யாழ்ப்பாண மன்னர் பரராசசேகர மகாராசா சிதம்பர தரிசனஞ்செய்து ஓர் அற நிலையத்தை அங்கு ஏற்படுத்தியமை பற்றிக் கூறுகின்றது. பதின்மூன்றாம் நு}ற்றாண்டின் பிற்கூற்றில் பாண்டி நாட்டின் தென்முனையில் ‘சேது’ வை அடுத்துள்ளதும் சேது கரையினை எல்லையாகக் கொண்டதுமான செவ்விருக்கை நாடு என்னும் பதியிலிருந்து வந்து யாழ்ப்பாண நாட்டைக் கைப்பற்றி நல்லு}ரில் அரசிருக்கையை அமைத்த சிங்கையாரியன் எனப்படும் பெருந்திறல் படைத்த பாண்டிய சேனாதிபதியான ஆரியச்சக்கரவர்த்தியின் மரபில் வந்தோரே பதினேழாம் பதினேழாம் நு}ற்றாண்டின் முற்பகுதி வரைக்கும் வடஇலங்கையை ஆண்;டனர். அம் மன்னர்கள் தாம் முடி சூடிய பொழுது ‘பரராசசேகரன், செகராசசேகரன்’ என மாறி வரும் பட்டப் பெயர்களைப் பெற்றனர்.
யாழ்ப்பாண அரசர்களின் கல்வெட்டுக்கள் என்று கொள்ளக் கூடியன இரண்டு மட்டுமே இதுவரை ஈழ நாட்டிற் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்று தென்னிலங்கையில் கோட்டகம எனுமிடத்திற் கண்டெடுக்கப்பட்டது. அது பதினான்காம் நு}ற்றாண்டில் ஆரியச் சக்கரவர்த்திகளுள் ஒருவன் மலைநாட்டினுள் நுழைந்து கம்பளையிலிருந்து ஆட்சிபுரிந்த தென்னிலங்கை வேந்தனைத் தோற்கடித்தமையை மேல்வருமாறு கூறுகின்றது.
‘சேது’
கங்கணம் வேற்கண்ணிணையாற் காட்டினார் காமர் வளைப்
பங்கையக் கைமேற்றிலதம் பாரித்தார் பொங்கொலி நீற்
சிங்கை நகராரியனைச் சேராவனு ரேசர்
தங்கள் மடமாதர் தாம்.
பதவியாவிற் கண்டெடுக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களிலுள்ள வடமொழிக் கல்வெட்டு ஒன்று லோகநாதன் என்ற தண்டநாயக்கன் மணிகளாலும் முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்ட மிக ஒளிபொருந்திய முடியைக் கொண்ட விகாரம் ஒன்றை அமைத்து, அதற்கு வேளைக்கார விகாரமெனப் பெயரிட்டான்; என்று கூறுகின்றது. இக் கல்வெட்டின் தொடக்கத்திலே ‘சேது’ குலத்தின் கீர்த்தி குறிக்கப்படுவதால் ‘சேது’வை இலச்சினையாகக் கொண்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் வம்சமான யாழ்ப்பாண மன்னர் குலமே ஈண்டு குறிப்பிடப்பட்டுள்ளதென ஊகிக்கலாம். எனவே அவ்விகாரையை அமைத்த லோகநாதன் ஆரியச்சக்கரவர்த்தியின் தளபதிகளுள் ஒருவனாக இருந்திருத்தல் கூடும்.
பரராசசேகர மகாராசாவின் திருப்பணி பற்றிக் கூறும் இப்பட்டயம் 56 வரிகளைக் கொண்டுள்ளது. சாலிவாகன சகாப்தம் தொளாயிரத்து நாற்பத்து நான்காம் ஆண்டிற் பரராசசேகரன் சிதம்பரத்திற்குப் போனானென்று பட்டயம் கூறுகின்றது. சகவருடம் 944 இல் (கி. பி; 1022) வட இலங்கையில் ஒரு தமிழரசு ஏற்பட்டிருக்கவில்லை. மேலும் விஜயநகர மன்னரின் ஆட்சி பதினான்காம் நு}ற்றாண்டிலேயே ஏற்பட்டது. எனவே பட்டயத்தில்; ஆண்டு பிழையாக எழுதப்பட்டுள்ள தென்பது தெளிவாகின்றது. இப்பட்டயம் பரராசசேகரனின் ஆணைப்படி எழுதப்பட்டிருப்பின் பட்டயத்தை எழுதியவரின் அவதானக் குறைவினாலும் அறியாமையினாலும் இப்பிழை ஏற்பட்டிருக்கலாம். இப்பட்டயத்திலுள்ளவை மூலசாசனத்திலிருந்து பெயர்த் தெழுதப்பட்டிருத்தலுங் கூடும். அவ்வாறாகில் மூலத்தைப் பார்த்துப் பட்டயத்தை எழுதியவர் ஆண்டினைப் பிழையாக எழுதியிருத்தல் வேண்டும்.
சிதம்பரத்திலே பரராசசேகரனின் பெயரைக் கொண்ட மடம் ஒன்று இன்றும் காணப்படுவதால் இந்தப் பட்டயத்திற் கூறப்படுவன உண்மையாகவே நடைபெற்றிருக்க வேண்டும். பட்டயத்திலே குறிப்பிடப்பெற்றுள்ள பரராசசேகர மகாராசன் சங்கிலிங்கு முன் அரசு புரிந்த மன்னனே என்று கொள்வதற்கிடமுண்டு. சங்கிரலியின் முன்னோனாகிய பரராசசேகரன் ‘வடதேசம்’ சென்றதற்கு யாழ்ப்பாண வைபவமாலை சான்றளிக்கின்றது.
கோட்டை அரசனாகிய ஆறாம் பராக்கிரமபாகுவின் (1450-67) சேனாதிபதியான செண்பகப் பெருமாள் (சப்புமல் குமாரயா) யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி ஆண்ட காலத்தில் (1450-67) கனகசூரியசிங்கையாரியன் வடதேசம் சென்றிருந்தான். அவனுடைய புதல்வர்கள் திருக்கோவலு}ர் அரச குடும்பத்தாருடன் வாழ்ந்து அரசு நெறியும் படைக்கலப் பயிற்சியும் கற்றனர். இவ் விளவரசருள் ஒருவனே கனகசூரிய சிங்கையாரியனின் பின் முடி சூடிய பரராசசேகரன். இவனைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை மேல் வருமாறு கூறுகின்றது.
... “... சில காலத்தின் பின் இராசாவின் முதற்ம குமாரன் சடுதி மரண முண்டுபட்டு இறந்து போனான். சங்கிலி நஞ்சூட்டிக் கொன்றானென்பது ஒருவருக்கும் தெரியாதே போயிற்று. மூத்த குமாரன் இறந்து போக அரசன் தன் இளைய குமாரனாகிய பண்டாரம் என்பவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி வைத்துத் தீர்த்தமாடுவதற்குப் பரிவாரங்களுடனே கும்பகோணத்துக்கு யாத்திரை பண்ணினான். சோழ தேசத்தரசனும் மகாமக தீர்த்த மாடுவதற்குப் பரிவாரங்களுடன் அவ்விடத்தில் வந்திருந்தான். அவ்வித்தில் அச்சங்கிலி செய்த குழப்பத்தினால் அவனையும் பரராச சேகரனையும் பரிவாரங்களையும் அவ்வரசன் பிடித்துச் சிறையில் வைத்தான். படை சேனைகளுடன் பின்னாகப் போன பரநிருபசிங்கம் அதைக் கேள்விப்பட்டுப் போய்ச் சண்டை ஆரம்பித்துக் கடும் போர் பண்ணுகையிற் பரநிருபசிங்கத்துக்கு வலுவான காயங் கிடைத்தது. அப்படியிருந்தும் அவன் அந்தக் காயங்களையும் எண்ணாமல், வீராவேசங்கொண்டு போராடி அவ்வரசனைப் பிடித்துச் சிறையிலிட்டு பரராச சேகரன் முதலானோரைச் சிறையிலிருந்து நீக்கி, மூன்று மாதம் அங்கேயிருந்து தனக்குப் பட்ட காயங்களையும் மாற்றினான். அப்பொழுது சோழ நாட்டரசன் தன் இராட்சியத்தைத் தான் ஆளும்படி விட்டால் திறை யிறுப்பதாக வேண்டிக்கொள்ள அவனிடத்தில் அதற்கேற்ற பிணை வாங்கிக்கொண்டு இராச்சியத்தை ஒப்புவித்து விட்டு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினான்.”
யாழ்ப்பாண வைபவமாலை கூறுமாப் போல் பரராச சேகரன் சோழ அரசனைத் தோற்கடித்துத் திறை பெற்றானென்று கொள்வதற்கு எதுவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் இக்காலத்தில் யாழ்ப்பாண மன்னர் விஜயநகர மேலாணைக்குள் அடங்கி யிருந்தனர். கிருஷ்ண தேவராயர் (1509-30) அச்சுதராயர் போன்றோர் ஆரியச்சக்கரவர்த்திகளிடமிருந்து திறை பெற்றனரென்று கொள்வதற்கு விஜய நகரச் சாசனங்கள் சான்றளிக்கின்றன. தமிழ் நாடுகளில் விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகளாக அதிகாரம் செலுத்திய நாயக்கர்களிடையே ஏற்பட்ட ஏதோவொரு போரற் பரராசசேகரன் பங்கு கொண்டமையை யாழ்ப்பாண வைபவமாலை திரிபுபடுத்திக் கூறுகின்றது. எனினும் பரராச சேகரனோடு படைத் தலைவனாகப் பிரநிருபசிங்கமுஞ் சோழநாட்டுக்குச் சென்றானென்று இந் நு}ல் குறிப்பிடுவது கவனித்தற்பாலது. செப்பேடும் பரநிருபசிங்கப் படையாண்டவர் பற்றிக் குறிப்பிடுகின்றது.
சிங்கையூர் பற்றியும் இப்பட்டயத்திற் குறிப்புண்டு. ஆரியச்சக்கரவர்த்தியின் தலைநகராகிய யாழ்ப்பாணப் பட்டினம் சிங்கை எனவும் சிங்கை நகர் எனவும் அழைக்கப்பட்டு வந்தது.
ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கை நகரிலிருந்து ஆண்டமையால் தbpணகைலாச புராணம், செகராசசேகரம், செகராசசேகரமாலை என்னும் நு}ல்களில் சிங்கையாதிபன், சிங்கைமேவும் செகராசசேகரன், சிங்கைகாவல் மன்னன் என்னும் அடைமொழிகளால் அவர்கள் வர்ணிக்கப்பட்டுள்ளனர்.
படையாட்சி என்ற சொல்லும் இங்கு காணப்படுகிறது. ஆராட்சி (ஆராய்ச்சி) என்ற மொழி வழமையாக ஒரு படைப்பிரிவின் தலைவனைக் குறிப்பதுண்டு. தமிழ்நாடுகளின் இராணுவ முறையிலும் ஆராச்சி என்னும் படைத்தலைவர்கள் இடம்பெற்றனர். மேலும் குவேறோஸ் சுவாமியாரின் நு}லின்படி சங்கிலியின் படைகளிற் பல ஆராச்சிமார் இடம்பெற்றிருந்தனர்.
செப்பேட்டிலுள்ளபடி
1. ஸவஸதி சீமந மஹா மணட லெசுரன ஹரீஹராய விபா ட ந பாஷைக
2. குததபபுவராயர கணடன மூவரயர கணடன கணட னாடு கொண்டு
3. கொணடனாடு குடாதான பூறுவ தbpண பஸசி மோததர
4. சதுஸ ஸமுததிராதிபதி கஜ வெடடை கணடருளிய பதீ வெங்கடபதி தெ
5. வ மஹாராயர பருதிவி ராஜயம பணணியருளிய பதீ வெங்கடபதி தெ
6. கன சகாரதம தொளாயிரதது யச மெற செலலா நினற சுபகிறு
7. து வருஷம தை மாதம குருவாரமும சுவாதி நசசெததிரமும
8. பறுவமும கூடின சுபதினததிலெ யாடபாணம இராசசிய
9. ம பணணியிருந்த பரராசசெகர மகாராசா அவர்கள சிதமப
10. ரததுக்கு வந்து சிதமபரரெசுர தெரிசனம பணணி சபாப
11. திககு குணடலமும பதககமும சாததி திலலை மூவாயிர ருக கும கு
12. ணடலம பொடடு சுவாமிககு எனறும கடடளை நடககும படி நி
13. ததிய மொரு வராகனுககுப படிககடடளையும தினமொனறு
14. ககு ஜஙகல அரிசி நெய வெததியமும மடததிலெ பிட
15. சனாச கல அரிசியும சுவாமிககு பரி வடடமும இபபடி எ
16. நத வெளை தறுமம நடககும படிககு முதலு வைசசு வாகனம
17. வைககிற தறகு அங்கண ஒததியும வாஙகி ஒரு நாளை
18. யிற திருவிளாவும நடபபிசசு வநத பரதெசிகளவநத
19. வெளை யிருகதிறதறகு இராசாககள தமபிரான தெரு வீ
20. தி எனறு முனனு}றறறுவது மனையும வாஙகி வீடு கடடி
21. நநதாவனம பொடுகிறதறகு நலல தணணிக கிணதது
22. ககு கிளககும தெறகும முபபதினாயிரம குளி நிலமும
23. வாஙகி இ(ரா)சாககள தமபிரான வெளியெனறு தொததங
24. குடியிலை பாதி ஊரும வாஙகி யாடபாணததிலை தனது
25. இராசசியததுககுளளை அசசுவெலி புதது}ர அளவெட
26. டி இநத மூனறு ஊரும சறுவமானியமாக சிதமபர தறும
27. ததககு கொடுதது இநதக கடடளை என எனறும தறுமம
28. விசாரிகளும படிககு இராசாவாசலுககு மநதிரிமாராகவும
29. இராச வஙகிஷமாகவும இருககிறவாகள திலலியூர
30. செனாப (தி)யாh சிஙகையூரப படை ஆணடவா திலலியூர
31. குலததுஙகா பரநிருபசிஙகா குலநிருவாஙகப படையா
32. ராசசியாரிவாகள வஙகிஷததிலெ நாலுபேரும சமம
33. திசசு தஙகளினததுககுளளே ஒருதரைக காவிவெ
34. டடித தமபிரனாராக வைதது இராசாககள தமபிரானா
35. h திருசசிறறமபல மெனறவருககு படடமும கடடிவைத
36. து எனஎனறைககு இநதத தறுமம விசாரிசசுகொளளும
இரண்டாம் பாகம்
37. படிககு இநத நாலு பெரையும பரராசசெகரமக
38. ராசா இதபபடி கடடளை பணணி தறுமம நடக
39. ம படிககு கலலு காவெரியும புலலு பூமியும முள
40. ள மடககும இவாகளே இது விசாரிசசு கொளு
41. மபடிககு கடடளைபணணி எளுதிப பொடடது இ
42. பபடிககு பரராசசெகரமகராசா அநதத தறுமதது
43. ககு யாதொரு சகாயம பணணினவாகள சிதமபரத
44. திலெ அததசாமவேளை சபாபதி தெரிசனமபண
45. ணின பலன பெறுவாhகள இததறுமததுககு அகிதம
46. பணணினவாகள சிதமபரதலததிலெ தீயிட
47. டவாகளபொற தொஷததிலெ பொவாhகள இபப
48. டிச சமமதிசச இநத படடய மெளுதினது பரர
49. hசசெகர மகாராசா அவாகள திலலியூர குலத
50. யாh சிஙகையூரப படை ஆணடவா திலலியூர சேனாபதி
51. துஙகா பரநிருபசிஙக குல நிருவாஙகப படையாரா
52. டசியா உ அரிய நலலறம முறறினொன நனறினு மத
53. னை புரிதி யெனபவன காபபவன புகலிருவறகுமபெரு
54. குமமபபயன பதின மடஙகெனறனா பெருநு}லகுறி
55. யமாநதாகள தீவினை வளிககு மீ தொககும இநதபப
56. டடையம எளுதினது பரநிருபசிஙக படையாணடவா
செப்பேட்டில் திருத்திய வாசகம்
1. ஸ்வஸ்தி ஸ்ரீமத் மஹ மண்டலே சுரன் ஹரீஹராய விபாடந் பாஷெக்
2. குத்தப்புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு
3. கொண்ட நாடு குடாதான் பூர்வ தbpண பஸ்சிமோத்தர
4. சதுஸ் சமுத்திராதிபதி சஜவேட்டை கண்டருளிய பதிவேங்கடபதி தேவ
5. மஹாராயர் பிருதுவி ராஜயம் பண்ணியருளாநின்ற சாலிவா
6. சன சகாப்தம் தொளாயிரத்து மேற் செல்லா நின்ற சுபகிரு
7. து வருஷம் தை மாதம் குரு வாரமும் சுவாதி நட்சத்திரமும்
8. பறுவமும் கூடின சுபதினத்தில் யாழ்ப்பாணம் இராச்சி
9. ம் பண்ணியிருந்த பரராசசேகர மகாராசா அவர்கள் சிதம்ப
10. ரத்துக்கு வந்து சிதம்பரரேசுர தரிசனம் பண்ணி. சாபாப
11. திக்குக் குண்டலமும் பதக்கமும் சாத்தி, தில்லை மூவாயிரவருக்கும் கு
12. ண்மலம் போட்டுச் சுவாமிக்கு என்றும்ம கட்டளை நடக்கும் படி நி
13. த்தியமொரு வராகனுக்குப் படிக்கட்டளையும் தினமொன்று
14. க்க ஐங்கலி அரிசி நெய்வேத்தியமும் மடத்திலே பிட்
15. ச்சை கல அரிசியும் சுவாமிக்குபட் பரிவட்டமும் இப்படி எ
16. ந்த வேளை தர்மம் நடக்கும் படிக்கு முதுல வைத்து, வாகனம்
17. வைக்கிறதற்கு அங்கண ஒத்தியும் வாங்கி, ஒரு நாளை
18. யிற் திருவிழாவும் நடப்பித்து, வந்த பரதேசிகள் வந்த
19. வேளை யிருக்கிறதற்கு இராசாக்கள் தம்பிரான் தெரு வீ
20. தி என்று முன்னு}ற்று பது மனையும் வாங்கி வீடு கட்டி,
21. நந்தாவனம் போடுகிறதற்கு நல்ல தண்ணீர்க் கிணற்று
22. க்குக் கிழக்கும் தெற்கும் முப்பதினாயிரம் குளிநிலமும்
23. வாங்கி, இ(ரா)சாக்கள் தப்பிரான் வெளியென்று கொத்தங்
24. குடியிலே பாதி ஊரும் சர்வமானியமாகச் சிதம்பர தர்ம
25. த்துக்குக் கொடுத்து, இந்தக் கட்டளை என என்றும் தர்மம்
26. இந்த மூன்ற ஊரும் சர்வமானியமாகச் சிதம்பர தர்ம
27. த்துக்குக் கொடுத்து, இந்தக் கட்டளை என என்றும் தர்மம்
28. விசாரிக்கும் படிக்கு இராசாவாசலுக்கு மந்திரிமாராகவும்
29. இராச வம்சமாகவும் இருக்கிறவர்கள் தில்லையூர்
30. சேனாப(தி) யார், சிங்கை யூர்ப் படை ஆண்டவர், தில்லையூர்
31. குலத்துங்கர், பரநிருப சிங்கர் குல நிருவாங்கப் படையா
32. ராச்சியாரிவர்கள் வம்சத்திலே நாலுபேரும் சம்ம
33. தித்து தங்களினத்துக்குள்ளே ஒருதரைக் காவி வெ
34. ட்டித் தம்பிரானாக வைத்து, இராசாக்கள் தம்பிரானா
35. ர் திருச்சிற்றம்பல மென்றவருக்குப் பட்டமும் கட்டி வைத்
36. து என்றென்றைக்கு இந்தத தர்மம் விசாரித்துக் கொள்ளும்
இரண்டாம் பக்கம்
37. படிக்கு இந்த நாலு பேரையும் பாராசசேகர மகா
38. ராசா இதப்படி கட்டளை பண்ணித் தர்மம் நடக்கு
39. ம் படிக்கு கல்லு காவேரியும் புல்லு மூமியு முள்ள
40. மட்டுக்கும் இவர்களே இது விசாரித்துக் கொள்ளு
41. ம் படிக்கு கட்டளை பண்ணி எழுதிப் போட்டது. இ
42. ப்படிக்கு பரராசசேகர மகாராசா இந்தத் தர்மத்து
43. க்கு யாதொருவர் சகாயம் பண்ணினவர்கள் சிதம்பரத்தி
44. திலே அர்த்த சாமவேளை சபாபதி தரிசனம் பண்
45. ணின பலன் பெறுவார்கள். இத்தர்மத்துக்கு அகிதம்
46. பண்ணினவர்கள் சிதம்பரத் தலத்திலே தீயிட்ட
47. டவர்கள் போகிற தோஷத்திலே போவார்கள் இப்ப
48. டிச் சம்மதித்து இந்தப் பட்டய மெழுதினது பரர
49. hச சேகர மகாராசா அவர்கள், தில்லையூர் சேனாதிபதி
50. யார், சிங்கையூர்ப் படை ஆண்டவர், தில்லையூர் குலத்
51. துங்கர், பரநிருப சிங்க குல நிருவாங்கப் படையாரா
52. ட்சியார். அரிய நல்லறம் முற்றினோன் நன்றினு மத
53. னைப் புரிதியென்பவன் காப்பவன் புகலிருவற்கும் பெரு
54. குமப்பயன் பதின் மடங்கென்றனர் பெரு நு}ல் கூறி
55. ய மாந்தர்கள். தீவினை வழிக்கு மீதொக்கும் இந்தப் ப
56. ட்டயம் எழுதினது பரநிருப சிங்கப் படையாண்டவர்.
ஐந்தாம் இயல்
அடிக்குறிப்பு
1. இவர் வசிக்குமிடம் கள்ளியங்காடு
2. இவ்விருதுகள் வீரவுக்கண்ண உடையார், கம்பண உடையார், முதலாம் தேவராயர், விருபாbதேவர், மல்லிகார்ஜுனராயர், வீர பிரவுடதேவராயர், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர், முதலாம் வேங்கடபதி தேவர் போன்றோரின் சாசனங்களிலிடம் பெறுகின்றன. நுpபைசயிhயை ஐனெயை. ஏழட ஓஓஓஐஐ ழே 28இ ளுழரவா ஐனெயைn ஐளெஉசipவiஉளெஇ ஏழட. ஐஏ ழேள. 360இ 362 தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் ஐஐ. 546, 550, 552, 554, பாகம் ஐஇ 10, 13, 23
3. ளு. Pயவாஅயயெவாயn வுhந முiபெனழஅ ழக துயககயெ உசைஉய யு. னு. 1230-1450இ இலண்டன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்த ஆய்வுரை, 4ம் அத்தியாயம் (1969)
4. ஊ. சுயளயயெலயபயஅஇ யுnஉநைவெ துயககயெஇ ஆயனசயளஇ 1926 P. 364 இதன் பொருள்: ஆரவாரக்கின்றஅலைகளையுடைய சிங்கை நகரில் வாழும் ஆரியனைச் சென்றடையாத அனுரேசரின் (அனுரை10ஈசர் அல்லது இளவரசர்) இளமாதர் தம்வேல் போன்ற கண்களில் நீர் சொரிந்த வண்ணம் வளையலணிந்த தாமரை மலர் போன்ற கைகளினாலே தங்கள் நுதல்களின் திலகங்களை நீக்கினார்கள்.
5. துழரசயெட ழக வாந ஊநலடழn டீசயnஉh ழக வாந சுழலயட யுளயைவiஉ ளுநஉநைவல ஏழட. ஐஐஐ; Pவ 2 (நேற ளுநசநைள) P. 262. இக்கல்வெட்டை வாசித்த பேராசிரியர் பரணவிதான இங்கு குறிப்பிட்ட சேதுகுலம் மலேசியாவிலிருந்து வந்த ஒரு குலத்தையே குறிக்கும் என்பர். 5ம், 6ம் நு}ற்றாண்டுகளில் மலாய் நாட்டின் ஒரு பகுதியைச் சீனர்கள் சீ-து என்றழைத்தமையால் மலாய் நாட்டிலே சேது வெனுமோர் அரசு காணப்பட்டதென்று அவர் வாதிப்பர். எனினும் சீ-து என்பது ‘செம்மண்ணிலம்’ என்று பொருள்படுவதால் பரணவிதான கூறும் கருத்து முற்றிலும் பொருத்தமற்றது. ‘சேதுகுலம்’ என்ற ஓர் அரசமரபோ சேது எனப் பெயர்பெற்ற இடமோ மலேசியாவிற் காணப்பட்டதென்பதற்கு எந்தவிதமான ஆதாரமுங் கிடையாது.
6. யாழ்ப்பாண வைபவமாலை, (யா. வை. மா) திரு. குல சபாநாதனின் பதிப்பு, சென்னை 1953, பக்கம் 46.
7. யா. வை. மா பக் 55-56
8. பொ. வைத்திலிங்கசேதிகர், தbpண கைலாச புராணம். சிறப்புப்பாயிரம், செகராசசேகரம் சர்ப்பசாத்திரம், செய்யுள். 8.
9. தலையாரி, தலைவன், ‘ளுநசபநயவெ in யெவiஎந அடைவையை’
10. நாற்கடல் நாயகன் என்று பொருள் படும்: வட, கீழ். தென், மேல், கடல்களில் ஆதிக்கம்பெற்றவன். இதுவும் விஜயநகர மன்னர்களின் விருதுகளுளொன்று நந்திக்கலம்பகத்திலும் நந்திவர்மன் பல்லவ மல்லனை ‘நாற்கடல் நாயகன்’ என்று புலவர் வர்ணித்துள்ளமை கவனித்தற்பாலது.
11. ஆடவர் பூணும் காதணி
12. சரடு முதலியவற்றிற் கோக்கப்படும் கல்லிழைத்த தொங்கற் கழுத்தணி
13. தொகையடியார்களுள் ஒரு சாராராண சிதம்பர தலத்திற்குரிய பிராமணர். தில்லை வாழந்தணர் தம்மடியார்க்குமடியேன் (தேவாரம்)
14. பன்றி முத்திரையைக் கொண்ட விஜயநகர காலப் பொற்காசு. தென்னிந்தியாவிலும் ஈழத்திலும் பதினெட்டாம் நு}ற்றாண்டு வரை புழக்கத்திலிருந்தது.
15. ஆடை@ கோயில் மரியாதையாகத் தரிசிப்போர் தலையைச் சுற்றிக்கட்டும் கடவுளாடை, உத்தியோகத்திற்கு அடையாளமாக அரசன் அளிக்கும் நிலை அங்கி.
16. பிற நாட்டவர், பிற ஊரவர், அந்நியரையும் புதிதாவந்து குடியேறியவர்களையும் குறிக்கும். யாழ்ப்பாண நாட்டில் ‘பரதேசிகள்’ எனப்பட்ட, ஒரு பிரிவினர் இருந்தனரென்பதற்குப் பறங்கிகள் கால ஆவணங்களும் நல்ல் மாப்பாண வன்னியரின் ஏடும் சான்றளிக்கின்றன.
17. மன்னனையும் தலைமை அதிகாரியையும் குறிப்பதாக இச்சொற்றொடர் பதின்மூன்றாம் நு}ற்றாண்டுக்குப் பிந்திய தென்னிந்திய கல்வெட்டுக்களில் அமைகின்றது.
18. எவ்வகைக் கடமை (வரி) களு மில்லாது ஆட்சியுரிமையுள்ள நிலம்
19. சந்திராதித்தவரை என்றதற்குப் பதிலாகவுள்ள மொழிகள்.
20. 16ம், 17ம் நு}ற்றாண்டுத் தமிழகச் சாசனங்களில் இடம் பெறும் மொழிகள்.
ஆறாம் இயல்
கயிலை வன்னியனார் மட தர்மசாதனப் பட்டயம் சிதம்பரம்
அடங்காப்பற்றிலே அதிகாரஞ் செலுத்திய வன்னியரின் ஆவணங்களில் இரண்டு மட்டுமே கிடைத்துள்ளன. இவற்றுளொன்று பனங்காமம் பத்து வன்னிபம் நல்ல மாப்பாணன் வழங்கிய ஓலை@ மற்றையது இதுவரை பிரசுரிக்கப்பட்டாத கயிலாய வன்னியனார் மட தர்மசாதனப் பட்டயம். இப் பட்டயம் 11 அங்குல நீளமும் 10 ½ அங்குல அகலமுங் கொண்ட செப்புத் தகட்டிலே இரு பக்கங்களிலும் எழுதப்பெற்றுள்ளது. இச்செப்பேடு சக வருடம் 1644இல் (கி. பி. 1742) யாழ்ப்பாணப் பட்டினத்தைச் சேர்ந்த வன்னியர் பலர் சிதம்பரத்திலுள்ள அற நிலையமொன்றுக்குக் கொடுத்த தானங்களைப்பற்றிக் கூறுகின்றது.
வன்னியர் சிதம்பரத்திலே பரராச சேகர மகாராசனின் கட்டளை நடத்தும் சூரியமூர்த்தித் தம்பிரானிடம் தாம விட்ட நிவந்தங்களை ஒப்படைத்தனரென்று செப்பேடு கூறுவதால் பரராச சேகரன் முன் சிதம்பரத்தில் அமைந்திருந்த இராசாக்கள் தம்பிரான் மடம் எனப் பெயரிய அறநிலையத்தை வன்னியரும் ஆதரித்து வந்தனரென்பது புலனாகின்றது.
‘தங்கயிலைப் பிள்ளை வன்னியனார் மடதர்மத்துக்கு’ என்ற மொழித்தொடர் செப்பேட்டில் வருவதால் கயிலாய வன்னியன் என்ற பிரதானியும் முன்பு இம் மடத்திற்குச் சில சிவந்தங்களை விட்டிருந்தான் என்று கருதலாம். எனவே, யாழ்ப்பாண மன்னர் குலம் அழிந்தொழிந்து நெடுங் காலஞ் சென்ற பின்பும் யாழ்ப்பாணப் பட்டினத்தைச் சேர்ந்த குறுநில மன்னர் சிதம்பரத்திலே பரராசசேகரன் அமைத்திருந்த மடத்தைப் பேணிவந்ததோடு மட தர்ம ஏற்பாடுகள் செவ்வனே நடைபெறுவதற்கான ஆதரவையும் அளித்து வந்தனர் என்பது இச் செப்பேட்டில் வரும் தகவல்களினாற் புலனாகிறது.
அடங்காப் பற்றைச் சேர்ந்த வன்னியர் பலர் ஒன்று சேர்ந்து மடதர்ம ஏற்பாடுகளைச் செய்தமை கவனத்திற்குரியது. வன்னியர் தம்மிடையே போர் புரிந்து வந்தபோதும் ஒல்லாந்த ஆட்சியாளருக்கெதிராகக் கிளர்ச்சியேற்படுத்துங் காலங்களில் ஒத்துழைத்தனர். அடங்காப்பற்றிலிருந்த வன்னியர் பதினெட்டாம் நு}ற்றாண்டிற் சமய விவகாரங்களைப் பொறுத்தமட்டில் இணைந்து பணியாற்றத் தயங்கவில்லை என்பதற்கு இப்பட்டயத்திலுள்ளவை சான்றளிக்கின்றன.
அடங்காப்பற்று வன்னிமைகளின் வரலாற்றை அறிந்து கொள்வதற்குத் தேவையான அரிய சான்றுகள் இப்பட்டயத்திலே வருகின்றன. அடங்காப் பற்றிலுள்ள வன்னிநாடுகள் பலவற்றின் பெயர்களும் அவற்றில் அதிகாரஞ் செலுத்தியிருந்த குறுநில மன்னர்களின் பெயர்களும் பட்டயத்தில் வந்துள்ளன. பனங்காமம் பத்தில் நிச்சயசேனாதிராய முதலியாரும் கரிகட்டுமூலை, தென்னமரவடி என்னும் பத்துக்களில் புவிநலல்மாப்பாண வன்னியனார், புண்ணியபிள்ளை வன்னியனார் என்போரும் வன்னிபங்களாயிருந்தனர். மேல்பத்தில் சூராண தீர வன்னியராய முதலியாரவர்களும் கந்தையினா வன்னியனாரவர்களும், மேல் பத்து - முள்ளியவளையில் இலங்கை நாராயண முதலியாரவர்களும் மயிலாத்தை உடையாரும் வன்னிபங்களாயிருந்தனர். என்பதைச் செப்பேட்டின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் பச்சிலைப்பள்ளியைச் சேர்ந்த நீலையினா வன்னியனார், மூத்தர் வன்னியனார் ஆகியோரைப் பற்றியும் செப்பேடு குறிப்பிடுகின்றது.
வடஇலங்கையில் யாழ்ப்பாண அரசு எழுச்சிபெற முன்;பே வன்னிமைகள் தோன்றியிருந்தன. பாண்டிநாட்டிலிருந்து ஆரியச்சக்கரவர்த்தி படையெடுத்து வந்து வட இலங்கையைக் கைப்பற்றி நல்லு}ரில் இராசதானி அமைத்திருந்த நாட்களில் அவனோடு கூடி வந்த படைத் தலைவர்கள் பலர் அடங்காப் பற்றுக்குச் சென்று அங்குள்ள குறுநில அரசுகளைக் கைப்பற்றி ஆண்டு வந்தனர். எனவே யாழ்ப்பாண அரசின் எழுச்சியோடு வன்னி நாடுகளிற் பல புதிய குறுநில மன்னர் குலங்கள் அதிகாரம் பெற்றன. பதின்மூன்றாம் பதினான்காம் நு}ற்றாண்டுகளில் வன்னியிலே ஏழுக்கு மேற்பட்ட குறுநில அரசுகளிருந்தன வென்று கொள்வதற்கிடமுண்டு. காலப் போக்கில் அயல்நாடுகள் மேற்பலம் வாய்ந்த வன்னியர் ஆக்கிரமித்ததின் விளைவாக ஏழு வன்னி நாடுகள் வளர்ச்சி அடைந்தன.
செட்டிக்குளம். மாதோட்டம் போன்ற இடங்களிற் பறங்கியர் காலத்தில் வன்னியரின் ஆட்சி அழிவுற்றது. அடங்காப்பற்றிலுள்ள வன்னியரை அடக்கித் திறை கொள்வது போத்துக் கேயருக்கு மிகச் சிரமமாக இருந்தது. கி. பி. 1645 இல் வன்னி நாடுகளிலிருந்து 37 யானைகளை யாழ்ப்பாணத்துப் பறங்கியதிகாரிகள் திறையாகப் பெற்றனர்.
ஒல்லாந்தரும் வன்னியரை ஆண்டுதோறும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வழமையான திறையைப் பெற முயன்றனர். ஒல்லாந்த தேசாதிபதிகளும் ஒல்லாந்தராட்சியில் யாழ்ப்பாணப்பட்டினத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரிகளும் எழுதிய அறிக்கைகளில் வன்னியர்பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. வடஇலங்கையில் முள்ளியவளை, கருவநாவல்பத்து, கரிகட்டுமூலை, தென்னமரவடி, மேல்பத்து, பனங்காமம் என்ற ஆறு வன்னிகளில் வன்னிபம், வன்னியனார் என்னும் பட்டங்களைக் கொண்ட குறுநில மன்னர் ஆட்சி செய்தனர் என்பதை இவ்வறிக்கைகளின் மூலம் அறிய முடிகின்றது.
தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையில் (9-11-1979) வன்னியர் பற்றி மேல்வருந் தகவல்கள் கிடைக்கின்றன.
வன்னி வன்னிபம் திறை
1. பனங்காமம் நல்லமாப்பாணன் 11½ யானை
காசியனார்
விளாங்குளம் நல்லமாப்பாணன் 4(½)
பரந்தன் வெளி நல்லமாப்பாணன் 2
2. மேல்பத்து-முள்ளியவளை குட்டிப்பிள்ளை 8(½)
3. கரிகட்டு மூலை சியாந்தனார் 7
4. கருநாவல் பத்து திரிகயிலை 7
புதுக்குடியிருப்பு வன்னியனார்
5. தென்னமரவடி சியமாத்தை 7
யாழ்ப்பாணப் பட்டினத்திலே தலைமை யதிகாரியாக விருந்த கெந்திரிக் ஸ்வாதிக்குருன் எழுதிய அறிக்கையில் (1697) மேல் வருந் தகவல்கள் உள்ளன.
வன்னி வன்னிபம் திறை
1. பனங்காமம் (1) தொன்பிலி;ப்பு 17
நல்ல மாப்பாணன்
(2) தொன் கஸ்பாறு
இலங்கை நாராயணன்
2. கரிகட்டுமூலை (2) தொன்தியாகோ 7
புவிநல்ல மாப்பாணன்
3. மேல்பத்து தொன் தியோகோ
புவிநல்ல மாப்பாணன் 5
4. கருநாவல்பத்து தொன் அம்பலவாணர் 4
5. தென்னமரவடி சேதுகாவலமாப்பாணன் 2
6. முள்ளியவளை தொன் பெருமையினார் 3(½)
பதினெட்டாம் நு}ற்றாண்டிலே தேசாதிபதியாக விருந்த சுரோய்டரின் அறிக்கையிலும் (1762) மேல் வரும் விவரங்கள் கிடைக்கின்றன.
வன்னி வன்னிபம் திறை
1. தென்னமரவடி சேதுகாவலமாப்பாணன் 1
2. பனங்காமம் 16
3. மேல்பத்து அமரக்கோன்முதலியார் 1
4. முள்ளியவளை அமரக்கோன்முதலியார் 1
5. கரிக்காட்டுமூலை அழகேசன் புவிநல்லமாப்பாணன் 7
6. கருநாவல்பத்து அழகேசன் புவிநல்லமாப்பாணன் 4
இதுவரை குறிப்பிடப்பெற்ற ஒல்லாந்தர் காலத்து ஆவணங்கள் வாயிலாகச் சில வன்னிகளிலே இரு வன்னிபங்கள் இருந்தனரென்பதையும் சில கால கட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வன்னிமைகளை ஒரே வன்னியனார் ஆண்டாரென்பதையும் அறிய முடிகின்றது. பனங்காமம், மேல்பத்து, மேல்பத்து-முள்;ளியவளை ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றிலும் இவ்விரு வன்னிபங்கள் இருந்து ஆட்சி புரிந்தமைக்குக் கயிலாய வன்னியன் தர்ம சாதனப் பட்டயம் சான்றளிக்கின்றது.
பரராசசேகர மகாராசாவின் திருப்பணி கூறும் பட்டயத்திற் போல இப் பட்டயத்திலும் விஜய நகர மன்னரின் மெய்க்கீர்த்தி வருகின்றது. அத்துடன் வேங்கடபதி தேவரின் பெயரும் குறிப்பிடப்பெற்றுள்ளது. எனினும் செப்பேடு மன்னனுடைய ஆட்சியாண்டைக் கூறாத சக வருஷத்தையே குறிப்பிடுகின்றது. (1644) பட்டயம் எழுதப்பெற்ற காலத்தில் விஜய நகரப் பேரரசு அழிவுற்றுத் தொண்டை மண்டலத்தில் இஸ்லாமியரின் ஆட்சி ஏற்பட்டிருந்தது. எனினும் பட்டயங்களை எழுதுமிடத்து விஜய நகர மன்னரின் மெய்க்கீர்த்தியைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் தொடர்ந்து வந்ததெனத் தோன்றுகிறது.
பரராச சேகரனின் திருப்பணி பற்றிய பட்டயத்திற் போல இதிலும் கிரந்த எழுத்துக்கள் ஆங்காங்கு வந்துள்ளன. அத்துடன் பேச்சு வழக்கிலுள்ள மொழி நடையிலேயே பட்டயம் எழுதப்பட்டுள்ளது. பட்டயம் தமிழ் நாட்டில் எழுதப்பட்டபோதும் அங்கு பேச்சு வழக்கிலும் ‘ள’ கர, ‘ழ’கர வேறுபாடுகள் அவதானிக்கப்பெற்று வருகின்ற போதும் பட்டயத்தில் ‘ழ’கரம் வர வேண்டிய இடங்களில் ‘ள’கரம் வருவது கவனித்தற்பாலது. ‘ர’கர மெய் வரவேண்டிய இடங்களில் ‘று’கரம் (பூர்வ-பூறுவ, 2-3 தர்மம்-தறுமம் 25-26) வந்துள்ளது. மேலும் மூர்த்தி என்பது ‘மூற்த்தி’ (9) என எழுதப்பட்டுள்ளது. இக்காலப் பேச்சு வழக்கிற் போலப் பதினெட்டாம் நு}ற்றாண்டிலும் ‘ற’ கர ‘ர’கர மயக்கம் தொண்டை மண்டலத்திலிடம் பெற்ற தென்பதற்குச் செப்பேடு சான்றளிக்கின்றது. நாடு, சம்மதித்து என்ற சொற்களும் முறையே ‘னா’டு, சம்மதிச்சு எனப் பிழையாக எழுதப் பெற்றுள்ளன.
பட்டயத்தின் 39ம் வரி முதல் 43ம் வரி வரை கிரந்த எழுத்துக்களில் இரு வடமொழிச் சுலோகங்கள் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறான சுலோகங்கள் கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் முதலிய விஜய நகரப் பேரரசர் கால ஆவணங்களிலே வருகின்றன. இச் சுலோகங்களின் பொருள் மேல் வருமாறு:
தானம் செய்வது, அளித்த தானத்தைப் பரிபாலிப்பது இவ்விரண்டினுள், தானத்தைக் காட்டிலும் பரிபாலனமே மேன்மையானது. தானம் செய்வதாற் சொர்க்கம் கிட்டுகிறது. பரிபாலனத்தால் அழியாத நிலையே (வைகுந்தப் பதவி) கிட்டுகின்றது.
தானம் அளிப்பதைக் காட்டிலும் பிறர் கொடுத்ததைப்பரி பாலனம் செய்வது இரு மடங்கு புண்ணியத்தைக் கொடுக்கும். பிறர் கொடுத்ததை அபகரப்பதாலே தான் கொடுத்ததும் பலனற்றதாகிவிடும்.
செப்பேட்டிலுள்ளபடி
கயிலை வனனியனா மட தாமசாதனப் படடயம சிதமபரம
1. ஸவஸதி சீமன மஹா மணடலெசுரன ஹரி ஹராய விபாடன பாஷைககு
2. த தபபுவராயா கணடன மூவராயா கணடன கணட னாடு கொணடு
3. கொணட னாடு குடாதான பூறுவ தbpண பஸசி மோததர சதுஸஸமு
4. தராதிபதி கஜ வெடடை கணடருளியபதி வெஙகடபதி தெவ மகாரா
5. யா பரிதிவி ராஜயம பணணி யருளா நினற ஸகாபதம ககா இதன
6. மேற செலலா நினற சுபகிறுது சிததிரை யும பூறுவ பb
7. ததில பறுவமும சுவாதி நbததிரமும் குரு வாரமும் கூடி
8. ன சுபதினததிலே சிதமபரம பரராசசெகர மகாராசாவின
9. கடடளை நடததும சூரிய முறததித தமபிரானவாகளுககுப ப
10. னைங காமப பத்து வனனிபம நிசசெய செனாதிராய
11. முதலியாரவாகளும குலசெகர முதலியாரவாகளும
12. கரிகடடை மூலைபததுத தெனன மரவடிப பதது
13. வனனிபம புவிநலல மாபபாண வனனியனாவாக
14. ளும புணணிய பிளளை வனனியனாவாகளும மெலப
15. தது வனனிபமான சூரான தீரராக வனனியராய
16. முதலியாரவாகளும கநதையினா வனனியனாரவாக
17. ளும மெலபதது முளளியவளை வனனிபம இலஙகைனா
18. ராயண முதலியாரவரகளும மயிலாததை உ
19. டையாரவாகளும பசசிலைபபளளி இறைசுவ
20. தொர இலஙகை நராயண முதலரியாரவா
21. களும நீலயினா வனனியனாரவாகளும மூ
22. ததா வனனினாரவாகளும இவ
23. hகளைச சொநத ஊரிலககுடியானவர
24. களும தஙகள கயிலைப பிளளை வனனியனார
25. மடதறமததுககுத தறம சாதனப
26. படடையங குடுதத படி கமததுககு மூன்று மர
27. க கால நெலலு மட தறமததுககுச சநதராதிதய வ
28. ரைககும புததிர பவுததிர பாரமபரிய மும கொடுதது வ
29. ரக கட வொமாகவும இபபடி சமமதிததுச சூரிய மூறததித
30. தமபிரான வாகளுககு நாங்களெலலாதருந தறமசாத
31. னப படடையங கொடததொந தாங்களெனறென
32. றும தறமததைப பரிபாலனம பணணி நடபபிததுக
33. கொளளக கடவராகவும இநதத தறமததுககு யாதாமொ
34. ருவர சகாயம பணணினாரகள அவாகள பூலொக சபா
35. சமாகிய சிதமபரததிலே அறதத சாம வெளையிலே சபா
36. பதி தெரிசனம பணணின புணணியம பெறக கடவராகவும
37. இநதத தறமததுகரு அகிதம பணணினவாகள சிதமபரத
38. தலததிலே தீயிடடவரகள போகிற தோஷத்திலே பொகக
39. கடவொராகவும உஸ{பமஸது1 தாந பாலநயொற மதயெ
40. தாநா ஸரயொ நுபாலநம 1 தாநாஸவறகமவாப நொதி பா
41. லநாத அசயுதம பதம 1 ஸவ ததததா தவிகுணம புணயம பர
42. தததாநு பாலநாத 1 பரதததாபஹா ரெண ஸவதததம
43. நிஷபலம வவெத1 அரிய நலலற முறறினொள றனனினு
44. மதனைபபுரிதியெனபவன காபபவன புகலிருவாககு
45. ம பெருகுமப பயன பதின மடங கெனறனர பெருநு}
46. ற குரிய மாநதாகள தீவினை வளிககு மீதொககும உ.ம
47. னை மடததிடை யெலலையின ம ணறுக ளொனறு க க
48. னைய செயதவா சிவ பதத தாயிரங கறபமுனைவர
49. பொறறிட வீறறினி திருபபரிம முறை பொயினைய நற பயனெற
50. றுக விசைக குமாறெனனொ உஸ{பமஸது
51. இபடிச சிதமபர புராணததிற சிவபுணணிய
52. மகிமையுரைத தலினஇநநச சாதன மெழுதின
53. நனமைககுக கஙகாணி தாணடவ ராயன
54. கை எழுதது இபபடிககு நிசசயச செயனாதி
55. ராய முதலியார
கயிலை வன்னியனார் மட தர்மசாதனப் பட்டயம்
சிதம்பரம்
1. ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீமன் மஹா மண்டலேசுரன் ஹரி ஹராய விபாடன் பாஷைக்கு
2. த் தப்புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் கண்டநாடு கொண்டு
3. கொண்ட நாடு கொடாதான் பூர்வ தbpண பஸ்சி மோத்தர சதுஸ் ஸமு
4. த்திராதிபதி கஜ வேட்டை கண்டருளியபதி வேங்கடபதி தேவ சதுஸ் ஸமு
5. யர் பிருதுவி ராஜ்யம் பண்ணியருளா நின்ற சகாப்தம் இதன்
6. மேற் செல்லா நின்ற சுபகிருது வருஷம் சித்திரை மாதம் உயஉ திகதியும் பூர்வ பb
7. த்தில பறுவமும் சுவாதி நட்சத்திரமும் குரு வாரமுங் கூடி
8. ன சுப தினத்திலே சிதம்பரம் பரராச சேகர மகாராசாவின்
9. கட்டளை நடத்தும் சூரியமூர்த்தித் தம்பிரihனவர்களுக்குப் ப
10. னங் காமம் பத்து வன்னிபம் நிச்சய சேனாதிராய
11. முதலியா ரவர்களும் குலசேகர முதலியா ரவர்களும்
12. கரிக்கட்டு மூலைப் பத்துத் தென்ன மரவடிப் பத்து
13. வன்னிபம் புவி நல்ல மாப்பாண வன்னியனாரவர்க
14. ளும் புண்ணியபிள்ளை வன்னியனாரவர்களும் மேல்ப
15. த்து வன்னிபமான சூராண தீரரான வன்னியராய
16. முதலியாரவர்களும் கந்தையினா வன்னியனாரவர்க
17. ளும் மேல்பத்து முள்ளியவளை வன்னிபம் இலங்கை நா
18. ராயண முதலியாரவர்களும் மயிலாத்தை உ
19. டையா ரவர்களும் பச்சிலைப் பள்ளி இறை சுவ
20. தோர் இலங்கை நாராயண முதலியாரவர்
21. களும் நீலயினா வன்னியனாரவர்களும் மூ
22. த்தர் வன்னியனாரவர்களும் இவ
23. ர்களைச் சேர்ந்த ஊர்களிற் குடியானவர்
24. களும் தங்கள் கயிலைப்பிள்ளை வன்னியனார
25. வர்கள் மடதர்மத்துக்குத் தர்ம சாதனப்
26. பட்டயம் கொடுத்தபடி கமத்துக்கு மூன்று மர
27. க்கால் நெல்லு மட தர்மத்துக்குச் சந்திராதித்திய வ
28. ரைக்கும் புத்திர பவுத்திர பாரம்பரியமும் கொடுத்து வ
29. ரக்கடவோமாகமவும் இப்படிச் சம்மதித்துச் சூரிய மூர்த்தித்
30. தம்பிரானவர்களுக்கு நாங்களெல்லாருந் தர்ம சாத
31. னப் பட்டயம் கொடுத்தோம். தாங்களென்றென்
32. றும் தர்மத்தைப் பரிபாலனம் பண்ண நடப்பித்துக்
33. கொள்ளக் கடவராகவும் இந்தத் தர்மத்துக்கு யாதா மொ
34. ருவர் சகாயம் பண்ணினார்கள் அவர்கள் பூலோக கயிலா
35. சமாகிய சிதம்பரத்திலே அர்த்த சாம வேளையிலே சபா
36. பதி தரிசனம் பண்ணின புண்ணியம் பெறக்கடவராகவும்
37. இந்தத் தர்மத்துக்கு அகிதம் பண்ணினவர்கள் சிதம்பரத்
38. தலத்திலே தீயிட்டவர்கள் போகின்ற தோஷத்திலே போகக்
39. கடவோராகவும் ஸ{பமஸ்து 1 தாந பால நயோர் மத்தேய
40. தாநா ஸ்வரயோநு பாலநம் 1 தாநாஸ்வர்கம வாப்நோதி பா
41. லநாத் அச்சுதம் பதம் 1 ஸ்வ தத்தா த்வி குணம் புண்யம் பர
42. தத்தாநு பாலநாத் 1 பரதத்தா பஹாரெண ஸ்வதத்தம்
43. நிஷ்பலம் வவேத் 1 அரிய நல்லற முற்றினோன் றன்னினு
44. மதனைப் புரிதியென்பவன் காப்பவன் புகலிருவர்க்கு
45. ம் பெருகுமப்பயன மதின் மடங் கென்றனர் பெரு நு}ற்
46. ற் குரிய மாந்தர்கள். தீவினை வழிக்கு மீ தொக்கும். ம
47. னை மடத்திடை யெல்லையின் மண்று களொன்றுக்க
48. னைய செய்தவர் சிவபதத்தாயிரங் கற்ப முனைவர்
49. போற்றிட வீற்றினி திருப்பரிம்முறை போயினைய நற் பயனேற்
50. றுக விசைக் குமாறென்னோ ஸ{பமஸ்து
51. இப்படிச் சிதம்பர புராணத்திற் சிவபுண்ணிய
52. மகிமையரைத்தலின் இந்தச் சாதன மெழுதின
53. நன்மைக்குக் கண்காணி தாண்டவராயன்
54. கை எழுத்து இப்படிக்கு நிச்சயச்சேனாதி
55. ராய முதலியார்.
ஆறாம் இயல்
அடிக்குறிப்பு
1. கயிலாயவன்னியன் என்ற பெயருள்ள பிரதானிகள் பலர் இருந்தனர். பதினேழாம் நு}ற்றாண்டின் நடுவில் வாழ்ந்த கயிலாயவன்னியனைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. (ப. 88. 90) கயிலாயவன்னயனின் சகோதரியைப் பூதத் தம்பி முதலி மணம் முடித்திருந்தான். தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையிற் குறிப்பிடப்பட்டுள்ள கைல வன்னியனைப் பற்றியே யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றதெனக் கருதலாம்.
பனங்காமத்து வன்னியர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் திறை அனுப்பவில்லை எனவும் அதிக எதிர்ப்புக் காட்டிவந்த கைல வன்னியனார் இறந்த பின் வன்னிபமாகிய அவனுடைய பேரன் காசியனார் ஒல்லாந்த அதிகாரிகளின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டதாகவும் தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கை கூறுகின்றது.
தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையில் வரும் கைலாய (கைல) வன்னியனாரே சிதம்பரத்தில் மட தர்ம ஏற்பாடுகளைச் செய்திருத்தல் கூடும்.
(ளு. புயெnயிசயபயளயசஇ ‘யேடடயஅயிpயயெ ஏயnnலையn யனெ வாந பசயவெ ழக ய ஆரனயடலையசளாip’இ தழரசயெட ழக வாந சுழலயட யுளயைவiஉ ளுழஉநைவல (ஊ. டீ.) ஏழட. ஓஓஓஐஐஐஇ ழே 89இ 1936இ PPஇ 221 - 222)
1. யு பரராசசேகரன் சிதம்பரத்துக்குப் போய் நிலங்களை வாங்கிப் பரதேசிகளின் வசதிக்காக இராசாக்கள் தம்பிரான் மடம் என்னும் அற நிலையத்தை அமைத்தான் என அவனுடைய திருப்பணி பற்றிக் கூறும் பட்டயம் சொல்லுகின்றது.
2. வரிகள். 24 - 25
3. வரிகள், 10-18
4. வுhந முiபெனழஅ ழக துயககயெஇ ஊhயிவநச ஐஓ
5. ஆநஅழசை ழக ஏயn புழநளெ (1675-79) வழ டுயரசநளெ Pலடஇ டயவந ஊழஅஅயனெநரச ழக துயககnயியவயெஅஇ வசயளெடயவநன டில ளுழிhயை pநைவநசளஇ ஊழடழஅடிழஇ 1910
6. ஆநஅழசை ழக ர்நனெசiஉம ணுறயயசனநஉசழழn pஇ 97
7. ஆநஅழசை ழக துயn ளுஉhசநரனநசஇ வசயளெடயவநன டில நு. சுநiஅநசளஇ ஊழடழஅடிழ 1946இ PP 56 - 58
8. தென்னிந்திய கோயிற் சாசனங்கள் ஐஐஐஇ பிற்சேர்க்கை ஐஏ
9. ஐந்தாம் இயல், அடிக்குறிப்புகள் 3இ 11 ஆகியவற்றைப் பார்க்க
10. தம்பிரான் - மடாதிபதி
11. ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்தில் ஓர் அதிகாரியே பச்சிலைப்பள்ளிக்குப் பொறுப்பாகவிருந்தான். பதினெட்டாம் நு}ற்றாண்டில் இரு வன்னியர் ஏதோ விதத்தில் இப்பகுதியின் மேல் அதிகாரம் பெற்றிருக்கவேண்டும். இறைசுவதோர் என்பது ‘ரெசீபதோர்’ என்ற போர்த்துக்கேயச் சொல்லின் வழியாக வந்தது. இச்சொல் வரிகளைச் சேர்க்கும் பண்டாரப்பிள்ளை என்னும் சேவையாளரைக் குறிக்கும்.
12. பரராசசேகர மகாராசன் திருப்பணி கூறும் பட்டயத்தில் இம்மொழித் தொடருக்குப் பதிலாக ‘கல்லுக் காவேரியும் புல்லுப் பூமியமுள்ள வரைக்கும்’ என்ற சொற்கள் வந்துள்ளன.
13. தலைமுறை தலைமுறையாக
14. அகிதம் - இடையூறு
15. ‘நன்மை உண்டாகட்டும்’ எனப் பொருள் படும் மங்கள மொழி
16. பட்டயத்தில் வரும் வடமொழிச் சுலோகங்கள் விஜயநகர காலக் கல்வெட்டுக்களிலே வழமையாக வருகின்றன. மல்லிகார்ஜுன தேவர், பிரவுட தேவராயர், கிருஷ்ண தேவராயர் முதலியோரின் கல்வெட்டுக்களில் முதலாவது சுலோகம் மட்டுமே வருகின்றது. வேறு சில ஆவணங்களில் இரண்டாம் சுலோகம் முன்பாகவும் முதலாம் சுலோகம் பின்பாகவம் முறைமாறி வருகின்றன. தென்னிந்திய கோயிற் சாசனங்கள்
17. அரிதான நல்லறததைச் செய்தவன் அடையும் பயனிலும் பதின் மடங்கு பயனை அவ்வறத்தைச் செய்யுமாறு து}ண்டியவர்களும் காப்பாளர்களும் பெறுவார்களென்று சிறந்தநு}ல் வல்லோர் கூறியுள்ளனர். அற நிலையங்களுக்குத் தீங்கு செய்தவர்களுக்கு இம் மடங்கான தீய பலன்கள் கிடைக்கும். பொது மனை, மடம், மன்று போன்றவற்றிற்கு தர்மஞ் செய்பவர்கள் மோலோர் போற்றும் வண்ணம் சிவபதத்தில் ஆயிரம் கற்பங்களுக்கு வாழுவார்கள்.
ஏழாம் இயல்
நல்லமாப்பாண வன்னியரின் ஓலை
கயிலாய வன்னியனார் மட தர்ம சாதனப் பட்டயம் அடங்காப்பற்று வன்னிகளினதும் வன்னிபங்களினதும் பெயர்களைத் தருகின்ற போதும் வன்னிகளின் நிர்வாக முறை பற்றிய தகவல்களைத் தரவில்லை. நல்ல மாப்பாண வன்னியரின் ஓலை வன்னி நாடுகளில் நிலவிய நிர்வாக முறையைப் பற்றி அறிந்து கொள்வதற்குப் பெரிதும் துணை புரிகின்றது.
பனங்காமம் பற்று வன்னிபம் நல்ல மாப்பாணன் கிழக்கு மூலையைச் சேர்ந்த ஆள்வயினார் கந்த உடையானுக்கு முதலியார்ப் பட்டமும் கிழக்குமூலை மேல் அதிகாரமும் வழங்கியமை பற்றி இந்த ஆவணம் கூறுகின்றது.
யாழ்ப்பாண மன்னர் போத்துக்கேயரோடு போராடி இறுதி மன்னனான இரண்டாம் சங்கிலி கைதியாகும்வரை பனங்காமத்து வன்னியர் யாழ்ப்பாண மன்னருக்குப் பெரிதும் ஆதரவாயிருந்தனர். பறங்கியரும் பின் ஒல்லாந்தரும் வட இலங்கையை ஆட்சி புரிந்த காலத்திலே பனங்காமம்பற்று வன்னியரின் ஆதிக்கம் வளர்ச்சியடைந்தது. பரந்தன்வெளி, புதுக்குடியிருப்பு, பூநகரி முதலிய பகுதிகளில், அவ்வன்னியரின் செல்வாக்குப் பரந்திருந்தது. அத்துடன் பனங்காமப்பற்று வன்னியர் அடங்காப்பற்றிலுள்ள ஏனைய வன்னியர்களிலும் மிகக் கூடிய பலத்தையுஞ் செல்வாக்கையும் பெற்றிருந்தனர்;
ஒல்லாந்தர் காலத்திற் பனங்காமத்து வன்னியர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று பதினாறுக்கு மேற்பட்ட யானைகளை ஆண்டு தோறும் திறையாகக் கொடுத்தனர். எனினும் ஒல்லாந்த அதிகாரிகள் பயமுறுத்தல், சூழ்ச்சி முதலிய உபாயங்களைக் கையாண்டு அதிக சிரமத்துடனேயே வன்னியரிடமிருந்து திறைபெற்றனர். வன்னி நாட்டை வன்னியர் சுதந்திரமாகவே ஆண்டுவந்ததுடன், வன்னியிலுள்ள மற்றைய எல்லா நிர்வாக அதிகாரிகளின் மேல் ஆதிக்கம் பெற்றிருந்ததோடு அவர்களை நியமிக்கும் உரிமையையுங் கொண்டிருந்தனர். நல்ல மாப்hபண வன்னியனின் ஓலையும் இதனை நருபிக்கின்றது.
யாழ்ப்பாணத்திற்போல முதலியார். உடையார், பண்டாரப்பிள்ளை. கண்காணி, தலையாரி என்ற பட்டங்களைப் பெற்றிருந்த பல தரப்பிலுமுள்ள அதிகாரிகள் வன்னிமைகளின் நிர்வாகத்திலும் இருந்தனரென்பதை இவ்வோலை மூலம் அறிய முடிகின்றது. முதலியார் என்ற பட்டத்தைக் கொண்டிருந்த பிரதானிகளின் அதிகாரம், கடமை என்பவற்றைப்பற்றி இவ்வாவணம் பல சான்றுகளைத் தருகின்றது. ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திலும் அதன பின்பும் யாழ்ப்பாணத்திலிருந்த நிர்வாகமுறையில் முதலியார் என வழங்கிய தலைவர்கள் சிறப்பிடம் பெற்றிருந்தனர். மாகாணங்களுக்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கித் தேச வழமைகளைப் பேணி, மக்களிடையே ஏற்படுந் தகராறுகளைத் தீர்த்து வந்ததோடு பண்டாரப் பிள்ளைகள் இறைவரி முதலியவற்றை மக்களிடமிருந்து பெறுவதற்கும் முதலியார்கள் உதவியளித்தனர்.
பனங்காமத்தில் முதலியார்கள் இக்கடமைகளை நிறைவேற்றியதோடு அந்த வன்னிமையின் உட பிரிவுகளுக்கும் அதிபதிகளாயிருந்தனர் என்பதை நல்லமாப்பாணனின் ஓலை மூலம் அறிய முடிகின்றது. ஆள்வயினார் கந்த உடையானைக் கிழக்கு மூலையின் முதலியாராகவும் நியமித்த பின் அப்பகுதியிலுள்ள உடையார் கண்காணி முதலிய எல்லோரும் அவனுடைய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டுமென்று நல்ல மாப்பாணன் ஆணை பிறப்பித்தான்.
முதலியார்கள் வழக்குகளை விசாரித்துக் குற்றங் கண்டவிடத்து குற்றவாளிகளிடமிருந்து ஐந்து பொன்னுக்கு மேற்படாத தண்டனை விதிப்பதற்கும் குற்றங் கொடுக்க முடியாதவர்களை அடிப்பிப்பதற்கும் உரிமைபெற்றிருந்தனர். இவற்றோடு முதலியாருக்குப் பல சிறப்புரிமைகளும் கொடுக்கப்பட்டன. பதவிச் சின்னங்களாகப் பல்லக்கு, வெள்ளைக் கதிரை, வில்லுக்குஞ்சம், ஒட்டு விளக்கு, பாவாடை, கொடி, நாகசுரம், தாரை, மேளம் முதலிய வரிசைகளையும், கார்த்திகை, வருஷப்பிறப்பு, தைப்பொங்கல் முதலிய தினங்களிலே குடிமைகளின் சேவைகளைப் பெறுவதற்கும் முதலியார்கள் உரிமைபெற்றிருந்தனர்.
யாழ்ப்பாணத்திற்போல வன்னியிலும் முதலியார் போன்றோர் தம் சேவைக்கு ஊதியமாகப் பணத்தையன்றி நிலங்களையே பெற்றனர்.
நல்ல மாப்பாணன் என்ற பெயரைக் கொண்ட பலர் பனங் காமத்தில் வன்னிபங்களாயிருந்தனர். பதினேழாம் நு}ற்றாண்டின் இறுதியிலே கயிலை வன்னியனாரின் ஆட்சி முடிந்த பின் நல்ல் மாப்பாணன் என்ற ஒரு பிரதானி பனங்காமத்திற்கு வன்னிபமாகியிருந்தான். தொன் கஸ்பாறு நல்ல மாப்பாணன் தமக்கு மாறான பல செயல்களைப் புரிந்ததால் 1762ம் ஆண்டளவில் ஒல்லாந்த அதிகாரிகள் அவனை நீக்கி வி;ட்டுக் கருநாவல் பத்து, கரிகட்டுமூலை என்பவற்றின் வன்னிபமான அழகேசன் புவிநல்ல மாப்பாணனின் மேற்பார்வையிற் பனங்காமத்தை விட்டிருந்தனர். அதன்பின்பே தொஞ்சுவாங் குலசேகர நல்ல மாப்பாணன் வன்னிபமாகியிருக்க வேண்டும். கி. பி. 1782ம் ஆண்டில் வன்னியர் மீண்டும் ஒல்லாந்தருக்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். கி. பி. 1790ம் ஆண்டளவில் துரோகச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி பனங்காமத்து நல்லமாப்பாண வன்னியனை ஒல்லாந்தர் சிறைப்படுத்தினர். அதன் பின் பனங் காமத்து வன்னிமை அறிவுற்றது.
நல்ல மாப்பாண வன்னியனின் ஓலை
1. 1781 ஆண்டு சித்திரை மீ அ திகதி பனைங்காமப்பற்று அயுதாந்தி வன்னிபந்
2. தொஞ்சுவாங்குலசெகர நல்ல மாப்பாண வன்னியனார் அவர்கள் கற்பித்தபடியாவது.
3. பனைங்காமப் பற்றுக்குச் சேர்ந்த கிள(ழ)க்கு மூலைக்குச் சேர்ந்த விளாங்குளம்.
4. சாதி வெள்ளாழ(ள)ன் ஆள்வயினார் கந்த உடையான் வந்து கிழக்கு மூலைக்குத் தொளி(ழி)லும்.
5. முதலியாரென்கிற பட்டப்பேருங் கிடைக்க வேணுமென்று மிகுந்த எளிதாவுடனே மன்றாடிக் கேட்
6. டபடியால் நாமுஞ் சம்மதித்துச் சொல்லப்பட்ட கந்த உடையானுக்கு திசைவிளங்க நாயக
7. முதலியென்கிற பட்டமுங்கட்டிக் கிள(ழ)க்கு மூலைப் பிறி(ரி)வுக்குத் தொளி(ழி)ரு(லு)ங் கற்பித்திருக்கி (ற).
8. படியால் கிள(ழ)க்கு மூலைக்குச் சேர்ந்த உடையார், அயுதாந்தி, மொத்தக்கர்.
9. பணிக்கமார், போதியகமக்காற(ர)ர், மற்றுங் குடியானவர்கள், வரத்தர். போக்க(ர்)
10. கச்ச வடகாற(ர)ர், இனிமேல் வரப்பட்ட குடியானவர்கள், தலையர், பட்டங்கட்டிமார் ச(கலரும்)
11. இவனைத் தங்கள் முதலியாரென்கிறதறிந்து அடுத்த சங்கை பண்ணி முதலியாரென்(ற)
12. பேர் சொல்லி அழைக்கவும்(.) இன்னமுமந்த ஊருக்குள்ளே வரப்பட்ட நீதி ஞாயங்கெட்(டு).
13. பிளை(ழை) கண்ட இடத்து அஞ்சு பொன்னுக்குள்ளே குற்றம்போட்டு வாங்கவும்(.) குற்றங் (கொடுக்க)
14. இடமில்லாத தாள்(ழ்)ந்த சாதியின் மனுஷருக்கு மரத்திலே கட்டி இருபத்தஞ்(சடி)
15. அரைக்குப் பணிய அடிப்பிக்கவும் (.) இவன் சொல்லப்பட்ட யானைத்தீவு முதலாக மற்றுஞ் சகல பண்hர பணிவிடை சகலரும்
16. இவன் சொற் கீள(ழ)மைச்சலுடனே கேட்டு நடந்துகொள்ளவும்(.) இன்னமுமிந்தத் திசை விளங்க நாயக முதலியுடைய நயத்துக்கு வேண்டிய இவனுக்கு
17. வெள்ளாண்மை(ச்) செய்விக்கப்பட்ட இடத்திலே கமம் ஒன்றுக்கும் ஆள் அஞ்சுபேருக்கும் குரக்கன் புலோ ஒன்றுக்கும் அடையிறை சுவந்திர (?)
18. உள்ளியமுங் (ஊழியம்) களித்துக் கொடுத்து உத்தாரமாகவும் கற்பித்து இவனுக்கு வரப்பட்ட சுபசோபனங்களுக்கு வீட்டுக்கு வெள்ளைமேற் சட்டி கூரைமுடி.
19. சேறாடி இருபத்துநாலு பந்தற் காலுக்கும் பந்தலுக்கும் வெள்ளை மேற்கட்டி இருக்கிற இடத்துக்கும் கலத்துக்கும் வெள்ளை பலகைக்கு வெள்ளை
20. திரை, வில்லுக்குஞ்சம், ஒட்டுவிளக்கு, பகற்பந்தமேலாப்பு, பாவாடை, கொடி, வெடி, நாகசுரம், தாரை, மேளம், இப்படிக் குறித்த வரிசைகள் செய்(வித்துக்).
21. கொள்ளவும்(.) கோயிற் சபை கொண்டச் சபை கலியாணச் சபைகளிலே போன இடங்களுக்கும் இருக்கிற இடத்துக்கும் சாப்பிடுகிற இடத்துக்கும் வெள்ளை (.) ஆ(டி)
22. கார்த்திகை வருஷப் பிறப்பு தைப்பொங்கலுக்கு வண்ணான் வந்து வெள்ளை கட்டவும்(.) பறையன் வந்து மேளஞ் சேவிக்கவும்(.) கொல்லன், தச்சன், அம்பட்(டன்).
23. வண்ணன் பறையன் என்று சொல்லப்பட்ட அஞ்சு குடிமையும் அழைத்த நேரம் அவரவர் தொழலுடனே போய் அடுத்த
24. வரிசைகள் செய்து உள்ள சுவந்திரம் பெற்றுக் கொள்ளவும்(.) கற்பித்த கட்டளைப்படிக்க எழுதினது( ) பரநிருப சிங்க முதலி (.)
ஏழாம் இயல்
அடிக்குறிப்பு
1. ஆநஅழசை ழக ஏயn புழநளெ வழ டுயரசநளெ Phட. (9-11-1979) வசயளெடயவநன டில ளுழிhயை Pநைவநசளஇ ஊழடழஅடிழஇ 1910. ஆநஅழசை ழக ர்நனெசiஉம ணுறயயசனநஉசழழn கழச புரனையnஉந ழக வாந ஊழரnஉடை ழக துயககnயியவயெஅ (1697) வசயளெடயவநன டில ளுழிhயை Pநைவநசளஇ 1911இ p 97.
2. ஐடினை
3. முiபெனழஅ ழக துயககயெ PP. 365 - 366
4. ஐடினைஇ P 355 - 359.
5. ஐடினை
6. ஐடினை 377
7. மாப்பாணன் என்ற பெயரைப் பெற்றிருந்த பல வன்னியரைப்பற்றி வையாபாடல் குறிப்பிடுகின்றது. நல்ல மாப்பாணன் என்ற பெயரைக் கொண்ட பல வன்னியபங்கள் அடங்காப்பற்றி லிருந்தனர். தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையில் (1679) பனங்காமம் பத்து வன்னிபம் நல்ல மாப்பாணன் பற்றிக் குறிப்புண்டு. பதினேழாம் நு}ற்றாண்டின் இறுதியில் (1697) தொன் பிலிப்ப நல்ல மாப்பாணன் பனங்காமம் பத்தில் வன்னியமாய் இருந்தான். பதினெட்டாம் நு}ற்றாண்டின் நடுவில் தமக்குப்பணிந்து திறைகொடுத்தமையால் தொன் கஸ்பாறு நல்ல மாப்பாணனை வன்னிபம் என்னும் பதிவியிலிருந்து ஒல்லாந்த அதிகாரிகள் நீக்கி யிருந்தனர்;.
8. கி. பி. 1658ம் ஆண்டு முதல பன்னிரண்டு ஆண்டுகள்வரை பனங்காமத்து வன்னியர் திறை கொடுக்கவில்லையென்றும் கைலாச வன்னியனார் இறந்த வின் வன்னிபமாகிய காசியனார் ஒல்லாந்தருக்கு அடங்கியிருந்தான் என்றும் ஒல்லாந்த அதிகாரிகளின் அறிக்கைகள் கூறுகின்றன.
ளு. புயெnயிசயமயளயசஇ ‘ யேடடயஅயிpயெ ஏயnnலையn யனெ வாந பசயவெ ழக ய ஆரனயடலையசளாip’ துழரசயெட ழக வாந சுழலயட யுளயைவiஉ ளுழஉநைவல (ஊ. டீ) ஏழட ஓஓஓஐஐஐஇ ழே 89. PP 221 - 222.
9. கண்காணிகளுக்குத் துணையாகவிருந்த நிர்வாக சேவையாளர். அயுதாந்தி என்னுஞ் சொல் போத்துக்கேயர் காலத்தில் வழக்கில் வந்தது போத்துக்கேயர் வன்னிபங்களையும் அயுதாந்திகளென்று குறிப்பிட்டனர்.
10. மிகவுந் தாழ்மையாக
11. உடையார் என வழங்கிய பிரதானிகள் ஊர்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவிருந்தனர்.
12. கண்காணி என வழங்கிய சேவையாளர் நிலங்களை அளவிடுதல், வரிமதிப்பீடு முதலிய கடமைகளைச்செய்து வந்தனர்.
13. யானைகளைக் கைப்பற்றுவித்ததோடு மொத்தக்கர் என்போர் பணிக்கர்களின் அதிபர்களாயுமிருந்தனர்;
14. பணிக்கர் யானைகளைக் கைப்பற்றிப் பழக்குவதைத் தம்முடைய தொழிலாகக் கொண்டிருந்தனர்.
15. தலையர் (தலையாரி) என்போர் ஊர்த்தலைவர்களாயிருந்தனர்.
16. மீனவர் வாழும் ஊர்களின் தலைவர்.
எட்டாம் இயல்
வன்னியர் மடாலய தர்மஸாஸனப் பட்டயம்
தமிழ்நாட்டின் பல்வேறிடங்களிலுமுள்ள வன்னியர் விருத்தாசலத்திலுள்ள மடம் ஒன்றுக்குக் கொடுத்த தானங்களைப் பற்றிக் கூறும் இப் பட்டயம் முன் வன்னியர் புராணம் பதிப்பிக்கப்பெற்றபோது அதோடு அச்சேற்றப்பட்டது. இது வரை கிடைத்த. வன்னியர் பற்றிக் குறிப்பிடும் பட்டயங்களில் இது ஒன்றுமே வன்னியரின் தோற்றம் பற்றிய கதைகளைக் கொண்டுள்ளது.
விஜயநகர மன்னரின் விருதுகள் பட்டயத்தின் தொடக்கத்தில் வருகின்றன. இருபத்து நாலு கோஷ்டத்து வன்னியராயர் கண்டன் என்பதும் விஜய நகர மன்னரின் விருதுகளுள் ஒன்றென்பதை இப்பட்டயம் அறியத் தருகின்றது. தொண்டை மண்டலம் முற்காலத்தில் இருபத்துநாலு கோட்டங்களைக் கொண்டிருந்தது. தொண்டை மண்டலமே வன்னியரின் ஆதி இருப்பிடம் என்ற கருத்துக்கு இப் பட்டயத்தில் வரும் மொழித் தொடர் ஓரளவுக்கு ஆதாரமாயுள்ளது.
பட்டயம் வன்னியரை வீரபண்ணாடர் என வர்ணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிலை எழுபதும் நாடு பலவிமனுக்கரசு பண்ணாடு எனவும், மேவரு மேருவொத்த வீரபண்ணாடர் வில்லைத் தேவரே கூறல் வேண்டும். திசை முகனாதியாய மூவருங்கூறல் வேண்டும்...... எனவும் பண்ணாடர் திண்ணமுறு வன்னி மன்னர் எனவும் வன்னியர் பற்றிக் குடுப்பிடுகின்றது. பண்ணாடு என்னும் பிரதேசத்தை வன்னியர் என்ற குறுநில மன்னர் ஆண்டிருத்தல் கூடும்.
இப்பட்டயத்தி;ன்படி இராக்கதரின் கொடுமைகளைப் பொறுக்க முடியாது தேவர்களும், முனிவர்களும் மகேஸ்வரினிடஞ் சென்று முறையிட்டபோது மகேஸ்வரன் சம்பு, அகத்தியர், வசிட்டர் ஆகிய மூவரையுங் கொண்டு விஸ்வயாகத்தைச் செய்வித்தான். பார்வதி கழுத்திலிருந்த செங்கழுநீர் மாலையை சம்புமாமுனிவன் சிவனாரிடமிருந்து பெற்று அதை யாக அக்கினியிலெ போட்டதும் வில், வாள் முதலிய ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம் எழில்மிக்க வன்னியர், கிருஷ்ண வன்னியர். உருத்திர வன்னியர் முதலானோர் தோன்றி இராக்கதரை அடக்கியதாக இப்பட்டயம் கூறுகின்றது.
வன்னியரின் தோற்றம் பற்றி இப்பட்டயம் கூறுவன புராணக் கதைகளையே தழுவியுள்ளன. சிலை எழுபது, வன்னியர் புராணம் முதலிய நு}ல்களும் இவ்வாறான கதைகளை ஆதாரமாகக் கொண்டேவன்னியரின் தோற்றத்தைப் பற்றிக் கூறுகின்றன.
வன்னியர் சம்புகுலத்தவர் என்ற கருத்து காலப்போக்கில் வலுப்பெற்று சமூகத்திற் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தமையைச் சிலை எழுபது முதலிய நு}ல்கள் உணர்த்தும். வன்னியர் சம்புமாமுனிவர் வேட்ட வேள்வியினாலே வன்னியர் தோன்றினர் எனப் பொருற்படுமாறு வீரசம்பு முனி வேள்வி விளங்க வரு முடி வேந்தர் எனச் சிலை எழுபது கூறுகின்றது. அதே போல,
‘பங்குனித் திங்களுத் திரந் தன்னில்
பரமன் முக்கணழல் விழியில்
துங்கமா வேர்வை தோன்றிடக் கரத்திற்
தோய்ந்து செங்கழுநீரின் மலரைப்
பொங்கமா மகத்திலா குதியியற்றிப்
புனிதனுக்குப் வகையீந்தார்.
(வ)ங்கண வீர வன்னிய பூமன்னர் பரி
மீது தோன்றினனே’
எனவும்.
‘சம்பு மாதவஞ் செய்வேள்வி தன்னிலுதித் தாயிந்த
அம்புவி தனிலே வேத சம்புவின் மரபுமானாய்
உம்பரர் களிக்கமான வுதித்த வாதாவி சூரன்
கம்பித மடக்கவென்று கதிரொளி முடியாயென்றார்.’
எனவும் வன்னியர் புராணமும் கூறுகின்றது.
வன்னியர் மடலாய தர்மஸாஸனப் பட்டயம்
(வன்னியர் புராணத்திலுள்ளபடி)
ஸ்வஸ்தி ஸ்ரீ ஸ்ரீமன் மகாமண்டலேசுரன் அரியராய விபாடன் பாஷைக்குத் தப்புராய கண்டன் மூவராயகண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் இருபத்து நாலு கோஷ்டத்து வன்னிராய கண்டன் கொங்குதேசம் குரும்பறுத்து அழியாப் பிரபுடன் கெடி வன்னிய மிண்;டன் நவகோஷ்டத்து வன்னியராய கோலாகல பிரபுடன் வடவாசற் காவலன் இளவரசு மணவாளன் கண்டியப் பிரதாபன் கட்டாரி வல்லபன் தானகுல சீலன் காளிகணங்கள் கைகூப்பு மணவாளன் திங்கள் மும்மாரி பெய்து தேன்பாயும் வளநாடன் கங்காகுலத்தீபன் பூலோக தேவேந்திரன் வேந்தர்குல பஞ்சாbர தீபன் சிவசமய விஷ்ணு சமய பரிபாலன் சிவபூஜாதுரத்திரன் இராஜமன்னிய இராஜஸ்ரீ ஆனகொந்தி திருவேங்கடபதி தேவமகாராயர் இவர்கள் பிரிதி விராஜிய பரிபாலனம் பண்ணியருளா நின்ற சாலிவாகன சகாப்தம் இதின் மேல் செல்லா நின்ற பிலவ வருஷம் தை மீ இருபதாந்தேதி சோமவாரம் பூச நbத்திரம் பாலவகரணம பூர்வ பbமும் கூடிய சுபதினத்தில் இராஜாதிராஜ வளநாடு வெண்ணயூர் நாடு பருவூர் கூத்தத் தனியூர் காசிக்கு மேலாய் விளங்கும் விருத்தகாசி விதர்க்கணன் விபசித்து கலிங்கன் அஞ்சுவர்ணன் முதலான பேருக்கு திருநடனம் புரிந்தருளிய் தேவஸ்தலம் பூருவ கர்ப்பக வன்னி மரத்தில் செங்கழுநீர் புஷ்பித்த திவ்விய Nbத்திரம், சகல லோகங்களும் வெள்ளங் கொண்ட போது பிரம்மதேவன் சில மலைகளைப் படைத்தான். அந்த மலைக்கு இடமில்லாமல் எங்கும் பழ மலையாகத் தானே நிரம்பி நிற்க நான் சிருஷ்டித்த மலைக்கு இடமில்லாமல் போனதேதென்று கோபங்கொண்டான். அந்தக் கோபாக்கினி அவனையும் சுட்டு வீட்டையும் சுட்டது. அவன் தேவ வருஷத்தில் ஒன்பது வருஷம் விருத்தாசல ஈஸ்வரனை நோக்கித் தபசு பண்ண அவர் பிரசன்னமாகி நீ விஷ்ணுவுடைய பிள்ளையான படியினாலே பொறுத்தோமென்று பிரமன் அதிகாரத்தைக் கொடுத்தார். ஐந்து லிங்கத்துக்கு முதன்மையான விருந்த கிரி லிங்கம் ஒரு நாழிகை விருத்த காசியில் வாசம் பண்ணின பேர்கள் சதா சிவ சொருபம் அடைவார்களென்ற வேதத்தில் முறையிடுகின்றது. அப்படிக்கு விசேஷம் பொருந்திய Nbத்திரத்தில் சகல மான ஜாதிக்கு மடமும் நந்தவனமும் தருமம் விளங்கி வருகிறபடியினாலே தம்முடைய மரபு வன்னிய வீரபண்ணாடர் வம்சம் விளங்க வேணுமென்று கொள்காணியாக கோவில் நிலத்தில் கீழ்வீதியில் மேல்சரகில் ஐயனார் கோவிலுக்குத் தெற்கு தெற்கு வீதிக்கு வடக்கு - அடி 75 கிழக்கு மேற்கு அடி அடிக்குப் பணம் ரூபா வீதம் 1402 பணம் ரூபா கொடுத்து இரண்டு சிலராசாதனம் நிறைத்து தாம்பிரசாதனம் உண்டுபண்ணி சேந்தமங்கலம் அண்ணாமலைக் குருக்களுக்கு தத்தம் பண்ணிக் கொடுத்தபடியினாலே வன்னியர் பிற பு வளர்ப்பு எப்படியென்றால் ஆதியில் பிரம்மாவும் விஷ்ணுவும் ருத்திரனும் தேவர்களும் ரிஷிகளும்கூடி கைலாசத்துக்குப் போன இடத்தில் சுவாமிநீங்கள் நம்மிடத்தில்வந்த காரியம் யாதென்று கேட்க சர்வரbகர் ராbத உபத்திரவம் பொறுக்க முடியவில்லையென்று தேவரீh பாதத்துக்கு விண்ணப்பம் செய்ய வந்தோமென்ன நல்லது அவனை ஜெயிக்க வேணுமென்று பொதியமாமுனி சம்புமாமுனி வதிஷ்டமாமுனி மூன்று பேரையும் அழைப்பித்து விசுவயாகம் பண்ணுமளவில் அதிற் பார்வதி கழுத்திலிருந்த செங்கழுநீர் மாலையை வாங்கி அக்கினியில் ஓமம் பண்ணுமளவில் சிலையும் அம்பும் உத்தண்ட வார்த்தையும் வாராம ரிஷபக் கொடியும் புலிக் கொடியும் பஞ்ச வர்ணக் கொடியும் சாம்பிராணிக் கலசமும்பகல் தீவட்டியும் பச்சைப் புரவியம் 18 விருதுடனே சம்புமாமுனி யாகத்தில் ருத்திர வன்னியர் தோன்ற அவர் வயிற்றில் ஐவர் தோன்ற அவருடனே 3 5 4 9 வில்லாளிகள் தோன்ற இவர்களுக்குப் பேருங் கொடுத்து ராbதரைச் சங்கரித்து வந்தவரான படியினாலே ஏகாம்பர் நாட்டுக்குடையவர் பாண்டியன் பரி பிடிக்க பரியேறும் பெருமாளென்று வாதாவியைச் செயித்தவர் கோத்திரமாகிய கிருஷ்ண வன்னியர், சம்புவன்னியர், பிரம வன்னியர், இந்திர வன்னியர், கெங்கா வன்னிய ரென்றும் பேருங்கொடுத்து கொன்றை மாலையுந் தரிந்து புலிக் கொடி வேந்தன் வன்னிய முரசு 39 தில் ஒருவராக தேவர் ரிஷிகளுக்கும் சத்துருவை ஜயம்பண்ணின படியினாலேயும் துர்க்கை பாளையம் போட்ட போது பாலமுதில்லாமல் ஈஸ்பரி பஞ்சலோகத்தையும் ஒரு தாழியாக்கி பாலமுதம் விருந்து பண்ணின சமுத்திராதேவி, இந்திராணி, கோபால தேவி மூன்று பேரும் சந்தோஷித்து வீர சிங்காசனங் கொடுத்து இந்திரன் பெண் மந்திர மாலையை ருத்திர வன்னியருக்கு விவாகம் பண்ணிப் பட்;டந் தரித்து மந்திர வாளும் பிடித்து இயமனை வென்றவர் சோழன் சினேகிதர் ரbpக்கும் உத்தம தேவர் எங்கள் நல்லப்ப காலாக்க தோழனார் உடையார் பண்டாரத்தார் அவர்களும் அரியலு}ர் மானங்காத்த மழவராய நயினார் அவர்களும் அரசுநிலை பெற்றவர்கள், சேரன் சோழன், பாண்டியன் தேசத்திலுள்ள வன்னியரானவர்கள் வருஷந்திரம் மடதருமத்திற்கு கட்டளையிட்டது என்னவென்றால் பல்ல(h)க்கு குதிரை யுடையவர்களுக்கு பணம் 10 - நாட்டுத் தினத்துக்குப் பணம் 5 - சேர்வை மணியத்துக்கு பணம்; 3. தலக் கட்டுக்கு பணம் 1 - குரு தெbணை பணம் 1 - கலியாணத்துக்கு மாப்பிளை வீடு பணம் 1- பெண் வீடு பணம் 1 - குற்றா குற்றம் தீர்த்த அபராத பணமும் சுபா சுபங்களுக்கும் கொடுத்து வருமோகவும்.
இந்தத் தருமத்துக்கு வாக்குச் சகாயம் சரீர சகாயம் அர்த்த சகாயம் பண்ணின பேர்கள் குபேர செல்வமும் இந்திர பதவியும் விபசித்து ரிஷி பதவியும் அடைவார்கள். இதற்கு விகாரம் பண்ணின பேர்கள் கெங்;கைக் கரையில் பஞ்ச பாதகமும் காராம் பசுவையும் மாதா பிதா குருவையும் கொன்ற தோஷத்திற் போவார்கள் - பழமலையார் பெரிய நாயகி அம்மன்றுணை.
எட்டாம் இயல்
அடிக்குறிப்பு
1. வன்னியர் புராணம், திருப்பதி ரத்தின முதலியாரின் பதிப்பு, சென்னை, 1905
2. சிலை எழுபது, செய்யுள் 66
3. சிலை எழுபது, செய்யுள் 67
4. சிலை எழுபது, செய்யுள் 23
5. சிலை எழுபது, செய்யுள் 39
6. வன்னியர் புராணம், ‘வன்னியராஜாக்கள் உற்பத்திச் சருக்கம்’ செய்யுள் 2
7. வன்னியர் புராணம், பாயிரம், செய்யுள் 2
நு}லெழுதுவதற்கு உதவியவை
தமிழ் நு}ல்கள் :
கல்லாடம் P. ஏ. சோமசுந்தரனாரின் பதிப்பு, சென்னை, 1963
கோணேசர் கல்வெட்டு - சண்முகரத்தின ஐயரின் பதிப்பு, யாழ்ப்பாணம், 1909
சிலை எழுபது - ஆ. சுப்பிரமணிய நாயக்கரின் பதிப்பு, சென்னை, 1915
தbpணகைலாச புராணம் - P. P. வைத்தியலிங்கதேசிகன் பதிப்பு, பருத்தித்துறை, 1916
தென்னிந்திய கோயிற் சாசனங்கள் - தொகுதி ஐ-ஐஐஐஇ சென்னை, 1953, 1954, 1655, 1957
நாடுகாடு பாவணிக் கல்வெட்டு - பிரித்தானிய பொருட்காட்சிச் சாலை நு}ல்நிலையத்திலுள்ள ஏட்டுப்பிரதி
பத்துப்பாட்டு - உ. வே. சாமிநாதையரின் பதிப்பு, சென்னை, 1918
மட்டக்களப்பபுமான்மியம் - கு. ஓ. ஊ. நடராசாவின் பதிப்பு, கொழும்பு, 1962
யாழ்ப்பாண வைபவமாலை குல, சபாநாதனின் பதிப்பு, கொழும்பு, 1953
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - ஆக்கியோன்: சுவாமி ஞானப் பிரகாசர், அச்சுவேலி. 1928
வன்னியர்குல கலியாணக்கொத்து - ப. வை. க. முத்துச்சாமி கவுண்டர், சேலம், 1894
வன்னியர் (குல) நாடகம் - சிறுமணவூர் முனிசாமி முதலியாரின் பதிப்பு, சென்னை, 1902
வன்னியர் புராணம் - திருப்பதி, ரத்தின முதலியாரின் பதிப்;பு, சென்னை, 1905
வையாபாடல் - து. று. அருட்பிரகாசத்தின் பதிப்பு, 1921
பாளி, சிங்கள நு}ல்கள்
Cula Vamsa, edited by William Geiger, 2 Vols, P. T. S. London, 1925,
1927, translated by W. Geiger, translated from German into
English C. Mabel Rickmers, 2 Pts, Colombo, 1953
Gira Sandesaya - edited by Sugathapala, Alutgama 1924
Parakumba Sirita, edited by K. D. K. P. Vidrama Sinha, Colombo, 1954
Pujavalya, edited by A. V. Suravira, Colombo, 1907
Rajavaliya edited by B. Gunasekara, Colombo, 1911, translated by B.
Gunasekara, Colombo, 1900
ஏனைய நு}ல்கள்
The Temporal & Spiritnal
Conquest of Ceylon by Fernao de Queyroz, translated by Fr, S. G. Perera
Colombo, 1930,
Instuctions from the Governor General and Conncil of Indiia to the Governor of Ceyol (1656 – 1665) translated by Sophia Pieters, Colombo, 1908
Memoir left by Rycloff Van Goens, Jun Governor of Ceylon (1675 – 1679) to his Successor Laurens Pyl. translated by Sophia Pieters, Colombo, 1910,
Mahalingam, T. V. Administration and Social Life under Vijayana gara,
Madras, 1955.
Modder, F, Manual of the Puttalam District, Colombo, 1908.
Gazetter of the Puttalam District, Colombo, 1908.
----
கருத்துகள்
கருத்துரையிடுக