தமிழ் ஆராய்ச்சி
கட்டுரைகள்
Back
தமிழ் ஆராய்ச்சி
ந.சி. கந்தையா
தமிழ் ஆராய்ச்சி
1. தமிழ் ஆராய்ச்சி
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. பதிப்புரை
6. தமிழ் ஆராய்ச்சி
தமிழ் ஆராய்ச்சி
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : தமிழ் ஆராய்ச்சி
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 108 = 128
படிகள் : 1000
விலை : உரு. 55
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
இராயப்பேட்டை, சென்னை - 600 014.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
முன்னுரை
தமிழைப்பற்றிய ஆராய்ச்சி நூல்கள் மிகச்சிலவே வெளிவந் துள்ளன. அவைகளுட் பெரும்பாலான வடமொழியையே தமது தாய் மொழியென அபிமானிக்கின்றவர்களால் எழுதப்பட்டவை. ஆகவே அவைகளுள் நாம் தமிழைப்பற்றிய உண்மை வரலாறுகளைக் காணுதல் அரிதாகின்றது. இக்கருத்தினையே இந்திய மக்களின் வரலாற்றை ஆராய்ந்த அயல்நாட்டு அறிஞர்கள் மேலும் மேலும் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் ஆராய்ச்சி என்பது; பல்கலைக் கழகத்திலோ, வேறு ஆராய்ச்சிக் கழகத்திலோ, பதவி ஏற்று வேலைபுரியும் பட்டதாரிகள் சிலரால் மாத்திரம் செய்யத்தக்கது; ஏனையர் அதனைச் செய்யும் ஆற்றல் சாலாதவர்கள் என்பன போன்ற கருத்துக்களும் நிலவுகின்றன. இனித் தமிழ் ஆராய்ச்சியில் அறிஞர் பலர், நுழையாமைக்குப் பிற காரணமு முண்டு. இத்துறையில் வருந்தி உழைப்பவர்களுக்குப் போதிய ஊதியம் கிடைப்பதில்லை. தமிழ் வளர்ச்சிக்காகவே இருக்கின்றனவெனச் சொல்லிக் கொள்ளும் நிலையங்களும் அவர்களுக்கு உதவியளித்து ஊக்கம் காட்டுவதில்லை. தமிழ் அறிவுசான்ற திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை, M.A.M.L. அவர் களுக்கே சில புத்தக வெளியீட்டாளர்கள் ஒரு பக்கத்துக்கு ஒரு ரூபாய் வீதம் ஊதியம் அளித்து நூல்களின் பதிப்புரிமையைப் பெற்றார்களானால், சாதாரண ஆராய்ச்சியாளரின் நிலைமை என்ன என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். இன்று தமிழ் ஆராய்ச்சி என்பது ஓரளவில் அரசிய லோடு தொடர்பு படுகின்றது. தமிழர் தம்மையும் தமது மொழியையும் பற்றிய எல்லா உண்மை வரலாறுகளையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டி யிருக்கின்றது. ஆகவே பொது மக்கள் உண்மையை அறியக் கூடிய முறை யில் இந்நூல் வெளிவருகின்றது.
சென்னை
21.3.1947
ந.சி. கந்தையா
தமிழ் ஆராய்ச்சி
தோற்றுவாய்
தமிழைப்பற்றியும், தமிழரைப்பற்றியும் தவறான கருத்துக்கள் தமிழ் நாட்டிற் பரவியுள்ளன. இதற்குக் காரணம், தமிழ் சமக்கிருதத்தின் வழிமொழி என்றும், தமிழரின் நாகரிகம், வட நாட்டினின்றும் தென் னாட்டிற்கு வந்த பிராமண வகுப்பினராற் கட்டி எழுப்பப்பட்டது என்றும் பலர் எழுதி வந்தமையேயாகும். ஆராய்ச்சியில் இக் கருத்துக்கள் முற்றும் தவறுடையன. இன்று இக் கருத்துக்களை எடுத்து ஆளுவோர், உண்மை அறியமாட்டாது பழம் போக்கினர் என ஒதுக்கப்படுவர். தமிழரையும் தமிழையும் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் பல கிடைத்துள்ள இக்காலத் தில் ஆரியத்தால் தமிழ் வளம் அடைந்தது; ஆரியப் பிராமணரால் தமிழர் நாகரிகம் அடைந்தார்கள் என நாட்ட ஒருவர் முன் வருவாரேல், அவர் பூமி உருண்டை வடிவினதன்று; தட்டை வடிவினதே என நாட்டுவதற்கு முன் வந்தவராவர். திராவிட மொழிகளின் ஆராய்ச்சி, திருவள்ளுவர் ஆராய்ச்சி எனத் தமிழர் பெருமைகளை நாட்டுவனபோன்ற கட்டுரைகளையோ சிறு நூல்களையோ எழுதும் சிற் சிலர், தமிழின் ஆக்கத்துக்கும் தமிழரின் உயர்வுக்கும் வடமொழியும் வடமொழியாளருமே காரணம் எனக் குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ தோன்றும்படி எழுதி வருகின்றனர். அந் நூல்களைப் பயிலும் நம்மவர் பலர் உண்மையறியாது பெரிதும் தடுமாறுகின்றனர். உண்மையில் தமிழுக்கும் தமிழருக்கும் ஆக்கம் அளித்தவர்கள் ஆரியரேயாயின், அவ்வாறு கூறுவதில் இழுக்கு யாதும் இல்லை. ஆராய்ச்சியில் ஆரியருக்கு நாகரிகத்தையும், அவர் மொழிக்கு எழுத்தையும், அவர்கள் பயில்வதற்குப் பல நூல்களையும் செய்து அளித்தவர்கள் தமிழர்களாயிருப்பதை வரலாற்றாசிரியர்கள் தெளிவாக ஆராய்ந்து கூறியிருக்க, அவைகளைப் பயின்று உண்மை தெளியாது எழுதி வரும் சிற சிலர் கருத்துக்களின் ஒவ்வாமையைத் தெளிவுறுத்த வேண்டி, இச்சிறு நூல் வெளிவருவது அவசியமாகின்றது.
திராவிடம்
இந்திய நாட்டில் வழங்கும் மொழிகளுள் மிக மிகப் பழமை யுடையது தமிழ். வடக்கே இமயமலையும், தெற்கே கன்னியாகுமரியும், கிழக்கும் மேற்கும் கடலுமாகிய எல்லைகளுக் குட்பட்ட நாடுகளுள் ஒரு கால் தமிழ்மொழி ஒன்றே வழங்கிற்று1. ஆரியர் வருகைக்குப்பின் வடக்கே வழங்கிய தமிழ், பல வடமொழிச் சொற்களையும் அதன் சிதைவுகளையும் ஏற்றுப் பல மொழிகளாக மாறுதலடைந்தது. அம்மொழிகள் ஆரியத்துக்கு இனமுடையன என்று கருதப்படுகின்றன. ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது.
1தெற்கே வழங்கிய தமிழ் உறழ்ந்தும் பிறழ்ந்தும் கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் என்னும் மொழிகளாக மாறியுள்ளன. இம்மொழி இலக்கணங்களில் ஆரியச்சொற்களை அம்மொழிகளில் சேர்த்து வழங்குவதற்குத் தனிப்பட்ட விதிகள் உண்டு. இதனால் அம்மொழிகளின், தொடக்கத்தில் ஆரியச் சொற்கள் இருக்கவில்லை யென்னும். பிற்காலத்தில் அவை சேர்க்கப்பட்டன என்றும் நன்கு விளங்குகின்றன. தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம், தமிழ் என்னும் மொழிகள் அடங்கிய கூட்டத்துக்கு மொழி நூலார் திராவிடம் எனப் பெயரிட்டுள்ளார்கள்.
திராவிடம் என்னும் பெயர், முன் பூமி சாத்திரம் சம்பந்தமாகத் தென்னாட்டுக் கடற்கரை நாடுகளைக் குறிக்க வழங்கிற்று என்றும், திரை இடம் எனப்பட்டதே திராவிடம் எனத் திரிந்ததென்றும் செர்மன் ஆசிரியர் ஒருவர் ஆராய்ந்து காட்டியுள்ளார்.
வடஇந்திய மொழிகள், அமைப்பில் திராவிடமாயிருப்பதற்குக் காரணம்
இந்திய நாட்டை அடைந்த ஆரியரின் தொகை அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களைவிடச் சிறு தொகையாகும். 2ஆகவே அவர்கள் வழங்கிய மொழி அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் மொழி அமைப்பில் மாற்றம் உண்டாக்க முடியவில்லை. ஆனால் ஆரியச் சொற்கள் பல கலந்து அம்மொழியைத் திரிபடையச்செய்தன. பல திராவிடச்சொற் களும் ஆரிய மொழியில் சென்று ஏறின. டாக்டர் கிற்றல் என்பார் (Dr. Kittel) தமது கன்னட அகராதியின் முன்னுரையில் வடமொழி, திராவிட மொழிகளிலிருந்து இரவல் பெற்றதெனத் கருதப்படும் 420 சொற்களை எடுத்துக் காட்டியுள்ளார். வடநாட்டில் வழங்குவனவும் ஆரியத்துக் கினமுடையவை என்று கருதப்படுவனவுமாகிய மொழிகள், அமைப்பில் திராவிட மொழிகளை ஒத்தன என, பி.தி. ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களும் தமது இந்தியாவின் கற்காலம், தமிழர் வரலாறு என்னும் நூல்களில் விளக்கியுள்ளார்.
வடமொழி இலக்கணம் ஒரோரிடத்துத் தமிழ் இலக்கணத்தை ஒத்திருத்தலின் காரணம்
ஆரியர் இந்திய நாட்டை அடைந்தபோது அவர்களின் மொழி மிகத் திருந்தமற்றதாகவிருந்தது. மிகப் பழைய பாடல்களில் காணப்படும் ஆரியச் சொற்கள் சமக்கிருதத்தினும் பார்க்கக் கிரேக்க மொழிப்போக்காகக் காணப்படுகின்றன என்று மாக்° மூலர் கூறியிருக்கிறார். ஆரியர் அநாகரிகராக வரும்போது நகரங்களில் வாழ்ந்து கொண்டிருந்த திராவிட மக்கள், அவர்களுக்கு எழுத்துக்களை உதவியும், அவர் மொழியைத் திருத்தியமைத்தும் துணைபுரிந்தார்கள். ஆகவே வடமொழிச் சொற்கள் பல தமிழ் உச்சரிப்பை அடைந்ததோடு அதன் இலக்கணங்கள் சிலவும் தமிழ் இலக்கணத்தை ஒத்தனவாயின. 1இவ்வுண்மையை அறிய மாட்டாத ஆராய்ச்சியாளர், தமிழர் ஆரியரிடத்திலிருந்து சில இலக்கண விதிகளை இரவல் பெற்றார்கள் எனக் கூறுவாராயினர். (ஒரு மொழியிலுள்ள சொற்கள் மாறலாம்; அதன் இலக்கணத்தைத் தனிப்பட்ட சிலர் மாற்ற முடியாதென மொழி ஆராய்ச்சி வல்லார்2 கூறுவர்).
தமிழில் வழங்கும் சொற்கள் வடமொழியிற் காணப்பட்டால் அவை வடமொழிக்குரியனவா?
ஒரு கூட்டத்தினர் வடமொழி கடவுள் மொழி என்றும், அது பிறமொழியிலிருந்து சொற்களை இரவல்பெற மாட்டாதென்றும் நம்பிக்கையுடையவர்களாயிருக்கின்றனர். ஆகவே அக் கூட்டத்தினர் தமிழிற் காணப்படும் செற்கள் வடமொழியிற் காணப்பட்டனவாயின் அவை வடசொற்கள் என்றே கூறி வருகின்றனர். வடமொழி பல, முண்டா மொழிச் சொற்களையும், திராவிடமொழிச் செற்களையும் இரவல் பெற்றிருக்கின்றதென்பதை ஆராய்ச்சியளர் குறிப்பிட்டுள் ளார்கள். பிறி°லு°கி என்பர் முண்டா மொழிச் சொற்கள் பல வடமொழியிற் புகுந்திருப்பதைக் காட்டியுள்ளார். கன்னட அகராதியைத் தொகுத்த “டாக்டர்” கிற்றல் (Dr.Kittel) வடமொழி திராவிட மொழிகளிலிருந்து இரவல் பெற்றதெனக் கருதப்படும் 420 சொற்களை எடுத்துக் காட்டி யுள்ளார். கால்ட்வெல் பாதிரியார் வடமொழியிற் சென்றுள்ள பல தமிழ்ச் சொற்களைக் குறிப்பிட்டுள்ளார். தமிழிலும், ஆரியத்திலும் காணப்படும் சொற்கள் இந்து-செர்மன் மொழிகளில் காணப்படுகின்றனவோ என்று பார்த்தல் வேண்டும். அவை அம்மொழிகளில் காணப்படுவனவாயின் அவை ஆரிய மொழிக்குரியனவே. இந்து-செர்மன் மொழிகளுக்கும் இந்து ஆரிய மொழிக்கும் பொது வல்லாத பிற சொற்கள் இந்திய மொழிகளி லிருந்து ஆரியத்திற் சென்றேறியுள்ளனவாகும்.இன்று நாம் ஆரியச் சொற்கள் எனக் கருதுவன பல தமிழ்ச் சொற்கள் என அறியவருகின்றன.1 ஆரியர் மத்திய வெப்பநிலையுடைய நாடுகளிலிருந்து இந்திய நாட்டை அடைந்தார்கள். அவர்களுடைய நாட்டிற் காணப்படாத மரஞ்செடி களும், விலங்கு பறவைகளும் பிற பொருள்களும் இந்திய நாட்டிலுள்ளன. ஆகவே அவர்கள் அப்பொருள்களைக் குறிக்க இந்திய மக்கள் பயன் படுத்திய பெயர்களையே ஆண்டிருத்தல் வேண்டும்.
இந்தியர் நாகரிகம் என்பது திராவிடர் நாகரிகமே
இன்று இந்திய நாகரிகமென்று சிறப்பாகக் கூறப்படுவதற்குரிய பகுதிகள் திராவிடருடையனவே; இவற்றை வரலாற்றாசிரியர்கள் நன்கு ஆராய்ந்து நாட்டியுள்ளார்கள்2
1“கிறித்து பிறப்பதற்கு முன்னும் ஆரியர் வருகைக்கு முன்னும் திராவிட நாகரிகம், பொருளாதார, இலக்கிய, திருமண முறைகளில் நன்கு வளர்ச்சியுற்றிருந்தனவெனக் கொள்வதில் யாதும் மயக்கம் இல்லை.”
டாக்டர். ஏ.கே. ஆனந்தக் குமாரசாமி
2ஆரிய நாகரிகம் பெரிதும் திராவிட நாகரிகச் சார்பு பெற்ற தென்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை!! -
பேராசிரியர் ராப்சன்
3இந்திய நாகரிகத்தில் ஆரியரல்லாத மக்களுடைய நாகரிகத்தின் அடிப்படை பெரிதும் உள்ளதென்பதைச் சில்வன் லெவி, பிறி°லு°கி (Sylvann Levi and Jean Prsyluski) என்போர் தெள்ளிதில் விளக்கி எழுதியுள் ளார்கள். அவர்கள் எழுதியுள்ளதன் ஆங்கில மொழி பெயர்ப்பைக் காக்சி (P.Cagci) என்பவர் தாமெழுதிய ஆரியருக்கு முற்பட்ட மக்கள் என்னும் நூலில் வெளியிட்டுள்ளார். இந்திய வரலாற்றில், ஆரியரல்லாத மக்களின் நாகரிக அடிப்படை உள்ளதென்பதை எல்லா ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். டாக்டர். எ°.கே. சட்டேசி
4ஆர்.டி.பனேர்ஜியும் காட்டியவாறு அரப்பா மொகஞ்சதரோ நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டதும், ஆரியரல்லாத மக்களுடையதும் ஆகும். பலுச்சி°தானத்தில் பிராகூய் மக்கள் காணப்படுதலைக் கொண்டு அந்நாகரிகத்தைக் கட்டி எழுப்பியவர்கள் பழைய திராவிடர்களாவர் எனத் துணியப்படுகிறது- மேற்படி
5“திராவிட நாகரிகத்தை நாம் ஒரு போதும் குறைவாகக் கருதுதல் கூடாது. திராவிட நாகரிகத்தின் அடிப்படையினால் ஆரிய நாகரிகம் செழிப்பும் ஆழமும் எய்திற்று. திராவிடர் பல கலைகளில் திறமை அடைந்திருந்தார்கள். அவர்கள் பாடவும் கட்டடங்கள் அமைக்கவும் வல்லவர்களாயிருந்தனர்” - தாகூர்.
சமக்கிருதம் தமிழின் வேறுபாடு
சமக்கிருதம் என்பதற்கு நன்றாகச் செய்யப்பட்டது என்பது பொருள். சமக்கிருதத்துக்கு வட தமிழ் என்பது இன்னொரு பெயர். வடக்கே அதிக பிராகிருதச் சொற்களை ஏற்று வழங்கிய தமிழே நன்றாகச் செய்யப்பட்டுச் சமக்கிருதம் என்னும் பெயர் பெற்றதென்பது அறிஞர் கருத்து. சட்டம்பி சாமி என்னும் சிறந்த ஆராய்ச்சி அறிஞர், சமக்கிருதத் துக்கு அடிப்படை தமிழே எனக் கூறியுள்ளார்6.
“காலஞ்சென்ற சட்டம்பி சாமிகளின் கையெழுத்துப் பிரதி ஒன்றை யான் பார்த்துள்ளேன். சட்டம்பி சாமி அவர்கள், கல்வியாளர்கள் வியக்கக்கூடிய பரந்த அறிவும் ஆராய்ச்சியும் உடையராய் விளங்கினார். சமக்கிருதம் என்பதற்கு நன்றாகச் செய்யப்பட்டது என்பது பொருள். எதிலிருந்து அது நன்றாகச் செய்யப்பட்டது என அவர் கேட்கின்றார். அவர் பல வகைகளால் சமக்கிருதத்துக்கு அடிப்படை தமிழ் என ஆராய்ந்து காட்டியுள்ளார். தெளிவாகக் கூறுமிடத்து அதன் அடிப்படை பழந்தமிழ்” -இராம வர்மா ஆராய்ச்சிக் கக வெளியீடு
தமிழ் ஆராய்ச்சி, வடமொழி ஆராய்ச்சியாக மாறியமை
மேல்நாட்டு மக்கள் வந்து மொழிகளைப்பற்றி ஆராய்ந்து உண்மை காணுவதன் முன்பு சமக்கிருதத்திலிருந்தே எல்லா மொழிகளும் உண்டாயின; அம்மொழியில் உள்ள நூல்களில் எல்லாக் கலைகளும் உள்ளன என்னும் மூடக்கொள்கை மக்களிடையே பரவியிருந்தது. தமிழ்நாட்டில் ஒரு கூட்டத்தினர் சமக்கிருதம் தமது தாய் மொழியெனக் கருதி வந்தார்கள்; வருகின்றார்கள். அவர்கள், ஆராய்ச்சி செல்கின்ற வழியில் செல்ல மாட்டார்கள்; ஆராய்ச்சி எவ்வாறிந்தாலும் சமக்கிருதத்திலிருந்து திராவிட மொழிகள் தோன்றின; ஆரிய மக்கள் திராவிடரைச் சீர்திருத்தினர் என்னும் பழம் பிடியைச் சிறிதும் கைவிடமாட்டார்கள். இவ்வகை மனப்பான்மை யுடையவர்களே பெரும்பாலும் தமிழரையும் தமிழையும் பற்றி ஆராய்ந்து நூல்கள் வெளியிட்டுள்ளார்கள். இக் காரணங்களினால் தமிழ் ஆராய்ச்சி செய்வோர் உண்மை காணமாட்டாதவர்களாகின்றனர். தமிழையே தாய்மொழியாகக் கொண்டுள்ள சிலரும், தமிழ், வடமொழியினால் ஏற்றமடைந்தது என எழுதி வருகின்றனர். அன்னவர் அறியமைக்கு யாம் இரங்க வேண்டியதன்றி அவர்களைக் குறை கூறுவதாற் பயனில்லை.
தமிழ் ஆராய்ச்சி செய்வது எப்படி?
தமிழ் ஆராய்ச்சி செய்வதன் முன் தமிழ், ஆரியம் என்னும் மொழி களுள் எம்மொழி முற்பட்டது? ஆரியர் இந்திய நாட்டை அடைவதன் முன், ஆரியர் தமிழர் என்னும் இரு மக்களின் நாகரிக நிலை எவ்வகை யினது? அநாகரிக மடைந்திருந்த மக்களிடமிருந்து நாகரிக மக்கள் சிலவற்றை இரவல் பெறுவார்களா? பெருந்தொகையான மக்களிடையே சிறு கூட்டத்தினர் கலக்க நேர்ந்தால் எம்மக்களின் கொள்கைகள் கருத் துக்கள் மேலோங்கும் என்பவை போன்றவைகளை ஆராய்ந்து தெளிதல் வேண்டும். அப்பொழுதே ஆராய்ச்சிக்கண் திறக்கும்.
மயில், கழகம் என்பவை வடசொற்களா?
அண்மையில் ஆராய்ச்சியாளர் ஒருவர் 1மயில், கழகம் முதலிய சொற்கள் வடமொழி நூல்களிற் காணப்படுகின்றன என்றும், அவை வடமொழிக்கே உரியன என்றும் கூறியுள்ளார். அவ்வறிஞர் தமிழ் ஆராய்ச்சித் துறையில் நீண்டகாலம் இருந்தவராயினும், வடமொழியில் பல திராவிடர் சொற்கள் சென்று ஏறியுள்ளன என்பதைச் சிறிதும் அறியாது போனமை மிகவும் வருந்தத்தக்க தொன்றாகும். இது ஆழ்ந்து ஆராயவேண்டிய தொன்று அன்றாயினும், இது காரணமாகத் தமிழ் மாணவர் உள்ளத்தில் தோன்றும் மயக்கத்தைப் போக்கவேண்டியே இதனை ஈண்டு ஆராய வேண்டியதாயிற்று.
ஆரியமக்கள் மத்திய ஆசியாவினின்றும் வந்தவர்கள் ஆவர். அவர் நாடுகளில் மயில் இல்லை. மயில் இந்திய நாட்டுக்கு உரிய பறவை. ஆரிய மக்கள் தாம் முன்னறியாதிருந்த மரஞ்செடிகள் விலங்குகள் பறவைகளை யும் பிறவற்றையும் உணர்த்த இந்திய மொழிச் சொற்களையே பெரிதும் பயன்படுத்தினர் எனப் பிறி°லு°கி போன்ற ஆராய்ச்சி அறிஞர் நன்கு ஆராய்ந்து கூறியுள்ளார்கள். இந்தியநாட்டுப் பறவைக்கு இந்தியமொழி களில் பெயர் இருந்தது. வடமொழியிற்சென்று வழங்கிய சொற்கள் என டாக்டர் கிற்றெல் என்பவரால் காட்டப்பட்ட பல சொற்களுள் மயூரம் ஒன்றாகும்.* மயில் என்னும் சொல்லே வடமொழியில் மயூரமாகத் திரிந்து வழங்கி யிருக்கலாம். வேதபாடல்களில் மயில் இருக்குமானால் அது எப்படி வடமொழிக்குரியதாகும். வேத மொழியே உச்சரிப்பு முறையில் திராவிடச் சாயல் பெற்றிருந்ததென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வேதகால முனிவர்கள் பலர் திராவிடர் என்று “மு°லிம் களுக்கு முற்பட்ட இந்தியா” என்னும் நூலாசிரியராகிய இரங்காச்சாரியர் போன்ற அறிஞர் கூறியுள் ளார்கள். மயிலே இல்லாத ஒரு நாட்டிலிருந்து வந்த மக்கள், மயிலைக் குறிக்க ஒரு பெயரைக் கண்டுபிடித்தார்கள் என்றும், அப்பெயரைத் தமிழ் மக்கள் அவர்களிடமிருந்து இரவல் பெற்று அப் பறவைக்குப் பெயராக வழங்கினார்கள் என்றும் கூறுதல் ஆராய்ச்சிக் குறையேயாகும். இச்சிறிய நியாயத்தைப் பேராசிரியர் ஒருவர் அறிந்து கொள்ளாதது வருந்தத்தக்கதே யாகும். மயில் என்னும் சொல் மற்றைய ஆரிய மொழிகளில் காணப்படு கின்றதா? இந்திய… ஆரிய மொழியில் மாத்திரம் அது காணப்படுமாயின், அம்மொழிக்கு அது எவ்வாறு கிடைத்தது என்பதுபோன்ற ஆராய்ச்சி செய்வதன்றோ ஆராயும் முறையாகும்.
கழகம் என்னும் சொல்லும் வடமொழிக்குரியதென மேற்படி ஆசிரியர் கூறுவாராயினர். தமிழில் களம் என்னும் சொல் இருக்கும்போது, கழகம் என்னும் சொல் களம் என்பதிலிருந்து வந்ததென்று ஏன் கூறுதல் கூடாது. சொற்கள் உச்சரிப்பு முறையில் சிறிது வேறுபட்டு வெவ்வேறு கருத்துக்களை விளக்குவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான இயல்பன்றோ. “வே” வேதமாக மாட்டாது “வித்” வேதமாகும் என ஒரு சாரார் கூறுகின்றனர். இதனை ஒத்ததே கழகம் வடமொழி எனக் கூறுதலுமாகும், பழைய ஆரிய மொழிகளில் கழகம் என்னும் சொல் உண்டா? காலின்° என்னும் அறிஞர், ஆரியச் சொற்கள் என்று பொதுமக்களும் பண்டிதரும் கருதும் சொற்கள் பலவற்றை ஆராய்ந்து அவை திராவிடச் சொற்கள் எனக் காட்டியுள்ளார்.
மொகஞ்சதரோ மக்கள் திராவிடரல்லரா?
அவ்வாராய்ச்சியாளர் மொகஞ்சதரோ மக்கள் திராவிடர் என்ப தற்குச் சான்றுகள் இல்லையென்றும், ஹெர°பாதிரியார், மொகஞ்சரோ முத்திரைகளிற் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை வாசித்து, அவ்வாசிப்பின் மூலம் அங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர் எனக்கூறுதல் கொள்ளத்தக்கதன்று என்றும் கூறுகின்றார். எழுத்துக்களின் வாசிப்பினால் மாத்திரமன்று; பிற ஆராய்ச்சிகளாலும் மொகஞ்சதரோ மக்கள் திராவிடரேயென உறுதிப்படு கின்றது. ஜி.ஆர்.ஹண்டர், ஆர்.டி.பனேர்ஜி, பந்தார்க்கர், ராதா குமுதா முக்கர்ஜி, போன்ற சிறந்த ஆராய்ச்சி அறிஞர் வடநாடு, முழுமையும் திராவிடமொழி வழங்கிற்றென்றும், சிந்துவெளி மக்களின் நாகரிகம், திராவிட நாகரிகம் என்றும் நன்கு ஆராய்ந்து கூறியுள்ளார்கள். அன்னோர் அவ்வாறு துணிவதற்குக் காட்டியுள்ள காரணங்களை ஆராய்ந்து மறுக்காதும், தமது கூற்றுக்குச் சான்றுகள் காட்டாதும் வாளா அந் நாகரிகம் எவருடையதென விளக்கமாகவில்லை என ஒருவர் கூறுவாரா னால், அக்கூற்று அவரின் ஆராய்ச்சிக் குறை பாட்டைத் தெள்ளிதிற் புலப் படுத்துவதாகும். மொகஞ்சதரோ அரப்பா முத்திரைகளில் காணப்பட்ட எழுத்துக்களை ஒத்தவை வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட தென்னிந்திய சமாதிகளிற் காணப்பட்ட மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்டிருந்தன. அவ்வகை எழுத்துக்கள் இலங்கையில் கேகாலை என்னும் இடத்திலுள்ள மலையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. மெசபதேமியாவிற் காணப்பட்ட முத்திரைகளிலும் அவ்வகை எழுத்துக்கள் காணப்படுகின்றன. மொகஞ்ச தரோவை அடுத்த பலுச்சி°தானத்தில் திராவிடமொழித் தொடர்புடைய பிராகூய்மொழி வழங்குகின்றது. சுமேரியரும், திராவிடரும் ஒரே இன மக்கள் என டாக்டர் ஹால் கூறியுள்ளார். பிராமி எழுத்துக்கள் மொகஞ் சதரோ எழுத்துக்களிலிருந்து தோன்றியவை என்று பேராசிரியர் லாங்டன் ஆராய்ந்து கூறியுள்ளார். 1ஹெர° பாதிரியார் ஒலி முறையாக வாசித்த மொகஞ்சதரோ எழுத்துக்களின் உச்சரிப்புக்கள் தமிழ்ச் சொற்களாகக் காணப்படுகின்றன. இவை போன்ற பல காரணங்களால் மொகஞ்சதரோ நாகரிகம் தமிழருடையது என்று நன்கு தெளிவாகின்றது. இவர் மொகஞ் சதரோ நாகரிகம் தொடர்பாக யாதும் அறியாதிருப்பது இவர் குறையே யாகும்.
இராதா குமுத முக்கர்ஜி என்னும் பேராசிரியர் கூறுவது வருமாறு:- சிந்து வெளி நாகரிகம் இவ்வாறு திராவிட மொழிகளைப் பேசிய மக்களோடு தொடர்பு பெற்றிருந்ததெனத் தோன்றும். திராவிடமக்கள் மத்தியதரைச் சாதி என்னும் குழுவைச் சேர்ந்தவர்களாவார். இந் நாகரிகம் வேதகாலத்துக்கு முற்பட்ட இந்தியநாகரிகமாகும். பிற்கால இந்திய நாகரிகத்தில் இதன் சில பகுதிகள் காணப்படுகின்றன. 1767ஆம் ஆண்டு வரையில் எம்.ஈ.தாம° (ஆ.நு. கூhடிஅயள) என்பார், ஆரியர் சொந்தமாகத் தமது எழுத்துக்களை உண்டாக்கிக் கொள்ளவில்லை என்றும், ஆனால் அவர்கள் அதனை இந்திய மக்களிடமிருந்து அறிந்து கொண்டார்கள் என்றும் கூறுவாராயினர். இக்கருத்து நீண்டகாலம் ஆராய்ச்சியாளரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பிராமி எழுத்துக்கள், செமித்திய எழுத்துக் களினின்று தோன்றின என்றும், அவை பினீசிய மக்களால் கி.மு. 1000 வரையில் இந்திய நாட்டிற் பரப்பப்பட்டதென்றும் கருதப்பட்டன. இக்கருத்தே நீண்டகாலம் உண்மையெனக் கருதப்பட்டு வந்தது. தாம° கூறியதற்கு அறுபது ஆண்டுகளின் பின், பேராசிரியர் லாங்டன் (Professor Langdon) என்பார், பிராமி எழுத்துக்கள் சிந்துவெளி எழுத்துக்களின் வளர்ச்சியெனக் காட்டியுள்ளார். இந்து நாகரிகம் - இராதா குமுத முகர்ஜி1.
திராவிடர் மத்தியதரை நாடுகளிலிருந்து வந்தவர்களா?
திராவிட மக்கள் மத்தியதரை நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று நீண்டகாலம் ஆராய்ச்சியாளரால் கருதப்படலாயிற்று. சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சிக்குப் பின் ஹெர° பாதிரியார், ஜி.ஆர்.ஹண்டர், பேராசிரியர், பிறாங்போட், சர்.ஜான்.மார்சல், சில்டி, டாக்டர், ஹால் போன்ற சிறந்த ஆராய்ச்சி அறிஞர்கள், இந்திய நாட்டினின்றும் சென்று மேற்கு ஆசியாவிற் குடியேறியவர்களே மத்தியதரை மக்கள் ஆவர் எனத் தெளிவுறக் கூறியுள்ளார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தில் சரித்திர ஆராய்ச்சிப் புலமை நடத்தும் திரு. இராமச்சந்திர தீட்சிதர் அவர்களும் இக்கருத்தையே வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு அறிஞர் துணிதற்கு ஏதுவாயுள்ள காரணங்களை அராய்ந்து பாராதும், அவர்கள் கூற்றுக்களை மறுக்காதும் ஆராய்ச்சியாளர் ஒருவர், இந்தியமக்கள் மத்தியதரை நாடுகளிலிருந்து வந்தவர்களாவர் என வாவா கூறுவரேல் அவர் கூற்று எட்டுணையும் வலி பெறாததாகும். திராவிட மொழிகளின் ஆராய்ச்சி யென்னும் நூல் எழுதியவர், சிந்துவெளி மக்கள் மத்தியதரை நாடுகளி லிருந்து வந்து குடியேறியவர்கள் என்றும், அவர்களின் நாகரிகம் மத்திய தரை நாகரிகம் என்றும் கூறியவை சிறிதும் வலிபெறாமை காண்க.
மத்தியதரை மக்கள் இந்தியரே
அரப்பா மொகஞ்சதரோ எழுத்துக்களையும் நாகரிகத்தையும் நன்கு ஆராய்ந்த டாக்டர் ஜி.ஆர்.ஹண்டர் கூறுவது வருமாறு:
1“ஆரியர் வருகைக்கு முன் திராவிடர் சிந்து வெளிகளில் வாழ்ந்த வர்கள் என்பதற்கு ஏற்ற காரணங்கள் புலப்படுகின்றன. பலுச்சி°தானத்தில் பிராகூயர் வழங்கும் மொழி, திராவிடத்துக்கு இனமாயிருப்பதால் இவ்வுண்மை வலியுறுகின்றது. 2இது வேறு சான்றுகளிலும் பார்க்கச் சிறப்புடையது. ஹைதராபாத்து, சென்னை முதலிய இடங்களில் கிளறிக் கண்டு பிடிக்கப்பட்ட சமாதிகளிற் காணப்பட்ட பொருள்களில் மொகஞ்ச தரோ, அரப்பா முதலிய இடங்களிற் காணப்பட்டவைகளை ஒத்த எழுத்துக்கள் காணப்பட்டன. இவ்விடங்கள் திராவிடமொழிகளுக்குரிய நாடுகளாகும். திராவிடர் சிந்துவில் கி.மு. 1100-க்கு முன் வாழ்ந்தார்கள். அவர்களிடமிருந்தே சிந்து நாகரிகம் அவர்கள் கைக்கு மாறிற்று. “ஆரியர் மத்திய ஆசியாவிலே காட்டு வாழ்க்கையினராயிருந்த காலத்தில் இந்திய நாட்டில் வாழ்ந்த திராவிடர் செமித்தியரை ஒத்த நாகரிகமுடையவர்களா யிருந்தனர். சாலமன், ஹரம் எனும் அரசர் இம் மக்களோடு தொடர்பு வைத்திருந்ததோடு திராவிடச் சொற்களையும் தமது மொழிகளில் வழங்கினர். *சாலமன் காலம் கி.மு.1,000 வரையில். அக் காலத்தில் இன்று வழங்கும் தமிழ்ச்சொற்கள் சில எபிரேய மொழியில் வழங்கினவாயின், சங்ககாலத் தமிழ் அக்காலத்தமிழைவிட அதிக மாறுதல் அடைந்திருந்த தெனக் கூற முடியாது. சாலமன் காலத்து வழங்கிய தமிழ்ச்சொற்கள் இன்றையத் தமிழிலும் காணப்படுகின்றன. இதனால் மொகஞ்சதரோ காலத் தமிழுக்கும் சங்ககாலத் தமிழுக்குமுள்ள வேறுபாடு, இன்றையத் தமிழுக் கும் சங்ககாலத் தமிழுக்கு முள்ள வேறுபாட்டை ஒத்ததாகலாம் எனக் கருதுதல் பிழையாகாது. இவ்வுண்மையைச் சிறிதும் கருத்திற் கொள்ளாது “திராவிட மொழிகளைப்பற்றிய ஆராய்ச்சி எழுதியவர் சங்ககாலத் தமிழ் இன்றைய தமிழிலும் பார்க்க வேறானது. ஹெர° பாதிரியார் சிந்துவெளி எழுத்துக்களுக்குத் தமிழ்ச்சொற்களைப் பெய்து வாசிப்பது தகாது; இம்முறை மொழியாராய்ச்சி முறையான வழிக்கு மாறுபட்டது எனக் குறிப்பிடுவாராயினர். ஹெர° பாதிரியார் கூற்றுக்கள் எளிதில் தள்ளிவிடத் தக்கனவல்ல. அவர் தமிழ் அறியாதவர். அவர் மொகஞ்சதரோ எழுத்துக் களை ஒலிமுறையாக வாசித்தபோது அவ்வொலிகள் குறிப்பிடும் சொற்கள், திராவிட மொழிகளில் இருப்பதை அவர் பிறர் வாயிலாகவே அறிந்தார். அவர் 1945இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல விரிவுரைகள் நிகழ்த்தினார். அப்பொழுது அவர் மொகஞ்சதரோ எழுத்துக்களின் வாசிப்புக்கள். சிலவற்iப் பல பட்டதாரிகள், பேராசிரியர்கள் முன்னிலை யில் கூறினார். அவர் கூற்றுக்களை நேரிலோ எழுத்துமூலமோ எவரும் மறுக்கவில்லை. மௌனம் உடன்பாட்டின் அடையாளமேயாகும். மேற் படி திராவிடமொழிகளின் ஆராய்ச்சி எழுதியவரும், ஹெர° பாதிரி யாரின் விரிவுரைகளைக் கேட்டு மகிழ்ந்தவர்களுள் ஒருவராவர். இன்றும் பம்பாயில் பழஞ்சரித்திர ஆராய்ச்சி நடத்திவரும் ஹெர° பாதிரியாரை இது தொடர்பாக வினாவி அவர் உண்மை அறியலாமன்றோ?
திருக்குறள், வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்பா?
திருக்குறளின் பல பகுதிகள் சாணக்கியர் செய்த அர்த்த சாத்திரத்திலிருந்து எடுக்கப்பட்டதெனச் சிலர் கூறி வருகின்றனர். சாணக்கியர் காஞ்சிபுரத்தினின்றும் வடநாடு சென்று மயூர சந்திரகுப்தனின் மந்திரியாயிருந்த தமிழர். 1இவர் வடமொழியில் அர்த்த சாத்திரம் முதலிய பல நூல்கள் செய்து புகழ்பெற்று விளங்கினார். அச்சுவித்தை கண்டுபிடிக் கப்பட்டு ஆயிரக்கணக்கான படிகள் வெளிவரும் இக் காலத்திலேயேபல நூல்கள் நமக்குக் கிடைக்க வில்லை. சாணக்கியர் செய்துள்ள அர்த்த சாத்திர நூல் தென்னாட்டுத் திருவள்ளுவருக்குக் கிடைத்தது என நம்பமுடியாது. தென்னாட்டில் வழங்கிய சில அரிய கருத்துக்களையே சாணக்கியர் வடமொழியிற் செய்து புகழ் அடைந்தார். திருவள்ளுவரும் தென்னாட்டில் வழங்கிய அதே கருத்தினை முறைப்படுத்தி நூல் செய்தார். இருவரும் தமிழராதலாலும், இருவருக்கும் நூல் செய்வதற்கு ஆதாரம் ஒன்று ஆதலாலும், அர்த்த சாத்திரமும் திருக்குறளும் பல இடங்களில் ஒரே வகையாகக் காணப்படுதல் வியப்பு அன்றென்று. ஆரியருக்கு நூல்களைச் செய்து உதவிய தமிழர்களுள் சாணக்கியர்1 ஒருவராவர்.
திருக்குறளின் காலம்
திருக்குறளின் காலத்தின் கீழ் எல்லை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கு உரிய ஆதாரம் உள்ளது. சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. சிலப்பதிகாரத்தில் திருக்குறளைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதனால் திருக்குறள் சிலப்பதிகாரத்துக்கு முற்பட்ட தென்று துணியப்படுகின்றது.2
மொழிநடை, சொல்லாட்சி முதலிய சிலவற்றை மாத்திரம் கொண்டு சிலர் திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய நூல்கள், காலத்தாற் பிற்பட்டன எனக் கூறுகின்றனர். அவர் கூற்றுக்கள் வலி பெறுமாறில்லை. காலம் குறிப்பதற்குரிய பல சான்றுகளோடு சொல்லாட்சி முதலியனவும் ஒரு சான்றாகுமேயன்றி, அவைகளைக்கொண்டு மாத்திரம் நூல்களின் காலத்தைத் துணிந்துவிடுதல் கூடாது. இன்று ஆனந்த விகடனில் எழுதப் படும் நடைக்கும் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தாரின் மாத இதழில் எழுதப்படும் நடைக்கும் எத்துணை வேறுபாடு உளது. இவ்வேறுபாட்டைக் கொண்டு ஆனந்த விகடனும், தமிழ்ப்பொழிலும் வெவ்வேறு நூற்றாண்டுகளில் உள்ளன எனக் கூறலாமா?
சிலப்பதிகாரத்தின் பிற்பகுதி பிறரெவராலோ எழுதிச் சேர்க்கப் பட்டதென்னும் ஆதாரமற்ற கொள்கை ஒன்றும் சில ஆராய்ச்சியாளரால் கிளப்பப்படுகின்றது. சிலப்பதிகாரத்தின் பிற்பகுதி பிறரால் செய்யப்பட்ட தென்பதற்கு ஆதாரமில்லை. அதில் கூறப்பட்டன சில உண்மையல்லாதன போல் தோன்றுகின்றன வெனில், அவை அக் காலத்தை அடுத்திருந்த மெக°தீன° போன்ற வரலாற் றாசிரியர்களும், புராணகாரர்களும் கூறிய வைகளைவிட நம்பத் தக்கனவாயிருக்கின்றனவென்பதை நோக்கி உண்மை தெளிதல் வேண்டும்.
சிலப்பதிகார காலம்
சிலப்பதிகாரத்தில்,
“ஆடித்திங்கட் பேரிருட் பக்கத்
தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண
வுரைசான் மதுரையோ ட்ரசுகே டுறுமெனு
முறையு முண்டே”
எனவரும் சோதிடக் குறிப்பின் காலம் கி.மு.202 என டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்காரும், கி.பி.171 என1 மு.ழு. சேஷ ஐயரும் முறையே கூறியுள்ளார்கள். சேஷ ஐயரவர்கள் தமது முடிவைக் கூறுமுன், டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் கூறியுள்ளதையும் ஆராய்ந்து பார்த்துள்ளார். 11-ம் பரிபாடலிற் காணப்படும் சோதிடக் குறிப்பின் காலம் கி.பி.196-ஜூன்µ 28² (28th June 196 A.C.) என மு.ழு.சங்கர் என்பார் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றாசிரியர்கள் எல்லோரும் சங்ககாலத்தின் கீழ் எல்லை கி.பி, மூன்றாம் நூற்றாண்டு என்னும் முடிவுக்கு வந்துள்ளார்கள். சிலப்பதி காரமும் மணிமேகலையும் சங்ககால நூல்களாகக் கருதப்படுகின்றன. சிலப்பதிகாரஞ் செய்தவர் சேரன் செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோவடிகள். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு ஆலயம் எடுத்து விழாக் கொண்டாடிய காலத்தில் பல நாட்டு அரசர்கள் அங்குச் சென்றிருந்தார்கள். அவர்களுள் இலங்கைக் கயவாகும் ஒருவன். இலங்கைக் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவன். இலங்கைக் கயவாகுவின் காலம் அறியப்படுதலினால், சேரன் செங்குட்டு வனின் காலமும், அவன் காலத்துக்கு முன்னும் பின்னும் இருந்த சில அரசர்களின் காலங்களும் அறியப்படுகின்றன. ஆகவே சிலப்பதிகாரம், தமிழ் இலக்கியங்கள், அரசர்கள், புலவர்கள் சிலரின் காலங்களை வரையறுப்பதற்கு எல்லைக் கல்போன்று இருக்கின்றது. சிலப்பதிகாரத்தில் திருக்குறள் எடுத்து ஆளப்பட்டுள்ளது. ஆகவே திருக்குறள் சிலப்பதிகாரத் துக்கு முற்பட்ட நூல் எனத் துணியப்பட்டுள்ளது. கரிகாலன் காவிரியின் ஆணையைக் கட்டியதைப்பற்றிப் பட்டினப்பாலை கூறுகின்றது. முன்பு சோழ அரசன், காவிரி அணை கட்டுவதற்குச் சிறையாகப் பிடித்துச்சென்ற இலங்கை மக்களைக் கயவாகு மீட்டுக்கொண்டு வந்ததோடு, பத்தினியின் சிலம்பையும் கொண்டுவந்தான் என்று சிங்கள நூலாகிய இராசாவளி கூறுகின்றது. கயவாகு பத்தினி விழாவுக்குச் சேர நாடு சென்றிருந்தான் எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இலங்கை நூதன பொருட்காட்சிச் சாலையில் கி.பி.ஆறாம் நூற்றாண்டளவில் செதுக்கப்பட்டதென்று கருதப்படும் கண்ணகிச் சிலை ஒன்று காணப்படுகின்றது. கண்ணகி வழிபாடு இலங்கை யில் மிகப்பழமையே வேரூன்றியுள்ளதென பேராசிரியர் ஆனந்தக் குமாரசாமி அவர்கள் விளக்கியுள்ளார். இலங்கை வரலாற்றுக் குறிப்புக்கள் என்னும் நூலில் இதனை சர்.பி.அருணாசலம் அவர்களும் ஆராய்ந்து கூறியுள்ளார். சிங்களவர் விழாக்களில் பத்தினிச் சிலம்பு ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. சிங்கள மக்கள் புத்த ஆலயங்களில் வைத்து வழிபட்ட பத்தினிச் சிலம்புகள் பலவற்றை இன்றும் கொழும்பு நூதன பொருட்காட்சிச் சாலையில் காணலாம். சிலப்பதிகாரத்தைப் பற்றித் தமிழ்ப்புலவர்களும் பிறரும் நன்கு அறிய வந்தது அது அச்சிடப்பட்ட பின்பேயாகும். இற்றைக்கு நானூறு ஆண்டுகளின் முன் இலங்கையில் சமராசன் என்னும் புலவர் ஒருவர் கடலோட்டுக்காதை என்னும் நூல் செய்தார். அந்நூல் இதுவரையில் அச்சேறவிவ்லை அப்புலவர் தாம் சொல்லும் கடலோட்டுக்காதை சிலப்பதிகாரத்தை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டதெனக் கூறுகின்றார். ஆனால் அதில் சொல்வன சிலப்பதி காரத்தில் காணப்படவில்லை. இதனால் இற்றைக்கு நானூறு அல்லது ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னும் தமிழ்ப்புலவர்கள் பெரும்பாலோர் சிலப்பதிகாரத்தைப் பற்றி பெயரளவில் அறிந்திருந்தார்கள். எனத் தெரிகின்றது. சிங்களத்தில் இராசாவளி செய்தவர்கள் சிலப்பதிகாரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். சிலப்பதிகாரத்தைப்பற்றியே அறியாதார், கயவாகு பத்தினிச் சிலம்பைக் கொண்டு வந்தானென்றும், கயவாகுவுக்கு முன் சிறையாகப் படிக்கப்பட்ட சிங்களவர் காவிரி அணை கட்டப் பயன்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறியுள்ளவை, கயவாகு பத்தினிக் கடவுளின் விழாவுக்கு வந்திருந்தானென்றும், அவன் இலங்கை யில் பத்தினிக்குக் கோயில் அமைந்தானென்றும் கூறும் வரலாற்றை ஒத்துள்ளன. ஆகவே இவ் வொற்றுமைகளை ஆதாரமற்றன என்று தள்ளி விடுதல் முடியாது.
S.K. சேஷ ஐயரவர்கள் சங்ககாலச் சேரநாடு என்னும் நூலில் சிலப்பதிகார காலத்தைப் பற்றி ஆராய்ந்து கூறியிருப்பது வருமாறு:
பழங்காலப் புலவர்கள் தாம் நினைத்தபடி சோதிடக் குறிப்புக் களைக் கூறினார்கள் என நாம் கருதுதல் தவறு. மதுரையைத் தீ உண்டதாகச் சிலப்பதிகாரம் கூறும்காலம். கி.பி.171-ம் ஆண்டு அடிµ வெள்ளிவாரம் இருபத்தாறாவது நாளாகும். அக் காலத்தில் செங்குட்டுவன் வாழ்ந்தான். செங்குட்டுவன் காலத்தில் கடல் வாணிகம் உச்ச நிலை அடைந்திருந்தது. இது பிளினி என்பவர் (கி.பி.161-மரணம்) முசிறியைப் பற்றிக் கூறியுள்ள குறிப்புக்களால் நன்குவிளங்குகின்றது. செங்குட்டுவன் கடலோட்டிய வேல் செங்குட்டுவன் எனப்பட்டான். இந்தியச் சரித்திரத்தில் காலங்களைக் குறிப்பிடுவதற்குச் சிலப்பதிகாரம் எல்லைக் கல்லாக விருக்கின்றது. செங்குட்டுவன் வடநாட்டு அரசர் மீது படை எடுத்தான் எனச் சொல்லப் படுகின்றது. அவன் கங்கைக் கரையில் போர் செய்தபோது நூற்றுவர்கன்னர் அவனுக்கு உதவியளித்தனர். அவனை எதிர்த்தவர்களுள், விசயர், பால குமாரர், உருத்திரர் முதலிய பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவர்களை வென்றபின் செங்குட்டுவன் அங்கிருந்து பத்தினிச் சிலை செய்வதற்கு ஒரு கல்லை எடுத்துவந்தான். கல்நாட்டியபோது பல நாட்டு அரசர் வந்திருந் தார்கள். அவர்களுள் இலங்கைக் கயவாகு அரசன் ஒருவனாவன். செங் குட்டுவனல்லாத அரசர் காலத்தில் வடநாட்டின் மீது படை எடுக்க இயலாதவாறு தென்னிந்திய அரசர் பலம் குன்றியிருந்தனர். வடஇந்திய வரலாற்றை நோக்கும்போது, இரண்டுமூன்று முறை மாத்திரம் தென் னிந்தியர் வடக்கு நோக்கிப் படை எடுக்கத் தக்கதாயிந்தது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் சந்திரகுப்தன் பிம்பிசாரன் அசோகன் முதலியோர் காலத்தில் தென்னாட்டார் வடக்கே படை எடுத்திருக்கமுடியாது. புஷ்ய மித்திரன் காலத்திலும் இது நிகழ்ந்திருக்கமுடியாது. புஷ்ய மித்திரன் கி.மு.234-க்கும் கி.மு.184-க்கு மிடையில் ஆட்சி புரிந்தான். சுங்க அரசரின் பிற்கால ஆட்சி குழப்பமடைந்திருந்தது சாதவாகனர் அல்லது சர்தகரீகயர் அதிகாரம் எய்தமுயன்று கொண்டிருந்தார்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதியில் அவர்கள் கண்ணுவரின் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். நாசிக் பட்டையத்தில் ஸ்ரீசாதகர்ணியின் பெயர் காணப்படுகின்றது. புஷ்யமித்திர னின் மரணத்துக்குப்பின் சுங்கரும் கண்ணுவரும் குழப்பம் அடைந்திருந்த காலத்தில் ஒரு படை எடுப்புக்கு இடம் இருந்தது. இது கி.மு.148-க்கும் கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் இடையில். கௌதமி புத்திர ஸ்ரீசாதகர்ணிக்குப்பின் (கி.பி.109-135) புலமாய் என்பவன் 35 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். அவன், முதலாம் உருத்திரதாமனோடு மோதிக் கொண்டான். உருத்திரதாமன் கௌதமி புத்திர ஸ்ரீசாதகர்ணி சாகரதரிடமிருந்து வென்ற நாடுகளைப் பிடுங்கிக்கொண்டான். ஆனால் கௌதமி புத்திரன் யாஞ்ஞஸ்ரீ (கி.பி.173-202) புலமாய் இழந்த சில நாடுகளை மீட்டுக்கொண்டான், சாதவாகனர் அக்காலத்தில் தென்னாட்டுப் படையெடுப்பை எதிர்க்கக் கூடாதவாறு பலவீனமடைந்திருந்தார்கள். யாஞ்ஞ ஸ்ரீயின் காலத்துக்குப்பின் இருட் காலம் எனப்படுகின்றது. பின்பு மூன்றாம் நூற்றாண்டை அடைகின்றோம். நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளாகிய குப்தர்கள் காலத்தைப்பற்றி நன்றாகத் தெரிகின்றது. ஐந்தாம் நூற்றாண்டு வாகடரின் காலமாகும். ஆறாம் நூற்றாண்டில் அதிகாரம் படைத்த பல்லவ சாளுக்கிய காலத்துக்கு வருகின் றோம். சாளுக்கியர் கி.பி.753இல் இராஷ்டிர குப்தரால் வீழ்த்தப்பட்டார்கள். நாலாம் நுற்றாண்டு முதல் அடுத்த நானூறு ஆண்டு வரையில் வடநாட்டின் மீது படை எடுப்பதற்கு ஏற்ற காலமாக இருக்கவில்லை.
மதுரை கி.பி.171இல் தீப்பட்டதாயினும், அப்போது செங்குட்டுவன் ஆட்சிபுரிந்துகொண்டிருந்தானாயினும், கண்ணகி வானுலகடைந்தபின், நூற்றுவர்கன்னர் உதவி கொடுப்பதாக உறுதி கூறியபின் செங்குட்டுவன் வடநாட்டின்மீது படை எடுத்தானாகவேண்டும், நூற்றுவர்கன்னர் என்போர் சாதகர்ணிகளே. செங்குட்டுவன் தனது நாட்டைவிட்டு 32 திங்கள் வெளியே சென்றிருந்தான். அப்பொழுது அவன் கங்கைக் கரையிலிருந்தான். அவன் கங்கைக்கரையிலிருந்த காலம் கி.பி.175-ன் முற்பகுதி எனக் கூறலாம். தமது முன்னோனான புலுமாய் இழந்த நாடுகளைச் சாதகர்ணிகள் பெறுவதற்குச் சாதகர்ணிகள் செங்குட்டுவனின் உதவியை வேண்டியிருக்கலாம். இதனால் செங்குட்டுவன் யாஞ்ஞஸ்ரீயின் காலத்தவன் எனத் தெரிகின்றது. இதனால் நாம் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பைப்பற்றி நன்கு அறியக்கூடியதாயிருக்கின்றது. சாதகர்ணிகள் தமது நோக்கம் நிறைவேறியபோது செங்குட்டுவனின் விருப்பையும் நிறை வேற்றினார்கள். பல ஆரிய அரசர் செங்குட்டுவனை எதிர்த்தார்கள் என்றும், அவர்களில் ஒருவன் பால்குமாரனின் மகன் விசயன் எனவும் படுகின்றான். பாலகுமாரன் என்பவன் தாலிமி கூறும் பாலியோ குரூ°. (Baleokouros,) சில வரலாற்றாசிரியர்கள் பாலியோகுரூ° சாதவாகன அரசருள் ஒருவனென்று கூறியிருக்கின்றனர். இவனுடைய மகனே செங் குட்டுவனைக் கங்கைக்கரையில் எதிர்த்தவனாகலாம். செங்குட்டுவனால் தோற்கடிக்கப்பட்ட இன்னொருவன் உருத்திரன். இவன் உருத்திரசன்மன் அல்லது உருத்திரசேனனாகலாம். இவனிடத்தி லிருந்தே செங்குட்டுவன் சாதவாகனர் இழ்ந்த நாட்டைக் கைப்பற்றினான். கங்கைப் போர் என்பது யாஞ்ஞஸ்ரீயாலும் அவன் துணைவர்களாலும் வடநாட்டு அரசருக்கு எதிராக நடந்த போராகும்.
கண்ணகிக்குக் கல்நாட்டியபோது வந்திருந்த அரசருள் இலங்கைக் கயவாகு ஒருவன் எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மகாவமிசத்தின்படி கயவாகுவின் ஆட்சிக் காலம் கி.பி.173-முதல் 191வரை. இராசாவளி என்னும் சிங்கள நூல், கயவாகு பத்தினிக் கடவுளின் சிலம்பை எடுத்துச் சென்றான் எனக் கூறுகின்றது. கயவாகு பத்தினிக் கடவுளுக்குக் கோயில் எடுத்தான் என்னும் வரலாற்றோடு இது ஒத்திருக்கின்றது. பத்தினிக்கடவுள் வழிபாடு இலங்கையில் பழங்கால முதல் உள்ளது என்று ஆனந்தக் குமாரசாமி அவர்கள் விளக்கியுள்ளார் - (J.R.A.S.1909 p22).
மதுரை கி.பி.171-ல் தீப்பட்டது என்னும் கொள்கை பலவகையால் உறுதிப்படுகின்றது. இதனால் செங்குட்டுவனின் காலம் இரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவது பொருத்தமாயிருக்கின்றது.
செங்குட்டுவனும் கயவாகுவும் ஒரேகாலத்தவர்கள் என்னும் கொள்கை எளிதில் தள்ளிவிடக்கூடியதன்று. சிலப்பதிகாரம் மகாவமிசம் முதலிய நூல்கள் வரலாற்றுத் தொடர்பானவை.
1. இந்தி, வங்காளி, பஞ்சாபி, இரஜபுத்தானி முதலிய மொழிகள் ஆரியத்தைச் சேர்ந்தன வல்ல - Short Studies in the Science of Comparative religions. P 247 J.G.R. Eorlong.
2. பெரிய திராவிட வெள்ளத்துள் சிறிய ஆரியத்துளி கலப்பதனால் உடனே பெரியமாறுதல் உண்டாகிவிட மாட்டாது. அவர்கள், திராவிடரின் தலைவர்கள், வீரர்கள் கடவுளர்கள், வரலாறுகளைத் தம்முடையவைகளாகக் கொண்டிருந்தமை கொண்டு நாம் மயங்கிவிடுதல் கூடாது. மறு நாடுகளில் குடியேறுபவர்கள் அல்லது வெற்றியாளராக வந்தவர்கள் இவ்வாறே செய்திருக்கின்றார்கள். பாபிலோனியா, அக்கேடியா, அசீரியா முதலிய நாட்டின் வரலாறுகளை நோக்கி இதன் உண்மையைக் காணுங்கள் – மேற்படி
1. இருக்குவேதத்திலுள்ள பழைய பாடல்கள், சிதைந்த பொருள் விளங்காத சொற்களையும், சொற்றொடர்களையும் உடையனவாகக் காணப்படுகுகின்றன. சில சமயங்களில் அவை சமக்கிருதத்தினும் பார்க்கக் கிரேக்க மொழிக்கு அண்மையிலுள்ளனவாகக் காணப்படுகின்றன என்று மாக்°மூலர் கூறியிருக்கின்றார். இதனால் முதன்முதல் இந்திய நாட்டுக்கு வந்த ஆரியமொழி, ஆரம்பத்தில் விளங்கக்கூடிய முடிறயில் இணைத்து வழங்கப்படவில்லையெனத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளுக்குப்பின், நாகரிகம் அடைந்திருந்த திராவிட பண்டிதர்கள், அவர்கள் மொழியைத் தேவநாகரியில் எழுதியதோடு கல்வியறிவில்லாத புதிய அம் மக்களுக்குச் சமயம், பழங்கதை முதலியவைகளையும் படிப்பித்தனர் - ³
2.
3. ஒரு மொழி தனது போக்கை மாற்றாமல் பல சொற்களைத் தன்னகத்தே சேர்த்துக் கொள்ளுதல் கூடும்; ஆனால் அது தனது இலக்கணத்தை மாற்றிக் கொள்ள முடியது. அதன் சொல் வைப்பு முறைகளும் மாறுபடாது. இலக்கணம், மொழிக்குரியவர்கள் தம் எண்ணங்களை முறைப்படுத்தி வெளியிடப் பயன்படுத்திய ஒழுங்கு ஆகும். இதனை ஒரு தனிப்பட்டவர் அல்லது ஒரு சாதியார் மாற்றிவிட முடியாது. On the classification of languages Gustave Oppert-p.17
4. திராவிடர் அயல் நாடுகளோடு வாணிகஞ் செய்தார்கள். அவர்கள் தேக்கு, மயில், வாசனைப்பண்டங்கள், முத்து, ஆடை முதலியவைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பினார்கள். இவ்வகைத் தொழில்களோடு சம்பந்தப்பட்ட சொற்கள் திராவிடமாயிருத்தல் வேண்டும்; இரவல் பெற்றனவாயிருக்கமுடியாது. இவ்வாராய்ச்சி இன்னும் நன்றாகச் செய்யப்படவில்லை. ஆராய்ச்சியில் சமக்கிருதம் என்று கொள்ளப்படும் பல சொற்கள் திராவிடமாக மாறலாம். Life in ancient - India. p.15. P.T.S.Iyengar M.A.
5. வேதமொழி, அதன் சொல் வைப்பு முதலிய பிறவும் திராவிடமொழிச் சார்படைந்தன-மேற்படி.
Vedic language bears marks on it of a pretty long growth since it parted from its allied forms. The vowel system of the vedic language is much simpler and its consonant system more developed than those of the parent Indo-germanic or of its European branches. A large portion of the vocabulary of vedic language is not found in the allied languages and must have been picked up in India; and even in matter of syntax and sentence structure it underwent special development in Indian soil… Munda does not seem to have affected the growth of the vedic language so much as the Dravidian-Ibid. PP 4, 6.
6. History of India and Indoneian art - p.6
7. Professor Rapson’s ancient India - p.29
8. Dr. Sumiti Kumar chatterji in வந சுயஅய அரசவாi ஞயவேரடர பயசர அநஅடிசயைட
எடிடரஅந யீ.72
9. Indian Historical Quarterrly vol. 1-p. 178
10. Dravidian India p.117
11. I have seen a paper in manuscript on this subject by the late Chattampi swami, whose encyclopaedic knowledge was the wonder and despair of the
erudite contemporaries. Samskritam means he says, that which is refined from what he asks? and he seeks to prove in a variety of ways that the basis of Sanskrit is Tamil or to be more accurate to Tamil. The Editor - Bulletin of the Sri Ramavarma research institute - No.3
p.17.
1. Research in Dravidian Languages - S. Vaiyapuri Pillai.
The Cock and Peacock are birds native to South Eastern Asia and it could be reasonably expected that words for these would be borrowed in Indo-Aryan along with other words which are names for Indian flora and fauna - Non-Aryan Elements in Indo-Aryan. The Journal of Greater India Society Vol.3 - S.K.Chatterji.
1. Hindu Civilization - P.37. - Rada Kumud Mookerji
2. Hindu Civilization - Rada Kumud Mookerji. M.A., PhD.,
3. The Riddle of Mohenjo-Daro G.R.Hunter New Review No.3
4. It is regarded as certain that Dravidian speakers were at one time spread over the whole of northern India, as wellfrom Baluchistan to Bengal. The origin and development of the Bengali-language - p 28. - S.K. Chatterji.
5. As in the History of Chandra Gupta tutor and prime minister - Chanakya the Damila - who is described in the Mahavamsa a Malabari. His name appears in the two inscriptions of the 4th Century B.C. in the Kancheri caves to which he retired in old age-Short Studies in the science of comparative religions. P.10
6. சிலப்பதிகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிந்திய நூலாக இருக்க முடியாது. அந் நூல் திருக்குறள் அடிகளை எடுத்துக்கூறியுள்ளது. ஒரு நூல் ஒரு நூலாசிரியரால் எடுத்து ஆளப்பட வேண்டுமாயின், அது அவர் நூல் செய்வதற்குச் சிலகாலத்தின் முன் தொட்டுப் புகழ்பெற்று விளங்கவேண்டும். ஆகவே திருக்குறள், சிலப்பதிகாரத்துக்கு மிக முற்பட்ட நூல் எனத் தடையின்றித் தோன்றும் - Studies in Tamil Literature and History - V.R. Ramachandra Dikshitar
1. புணர்முலை - இரண்டு தனங்களோடு எனப் பாடங்கொள்வாருமுண்டு.
1 From the Indus valley, one section of people who afterwards came to be designated as the Dravidians marched to wards the west both by sea as wel as by land, settled down in the province of Sumar in lower Babylonia under the name of the Sumerians and spread their Sumero-Dravidian civilization as far as the holy land of Palastine and Jerusalem and then to Europe and Africa-Quarterly Journal of the Mythic Society-January, 1929.
1. The dravidian people can be traced in a long unbroken line from Crete and Lycia to the Indus valley and the south of India at least culturally. It would not be strange at all to find that the calcolithic civilization of these people extended as far as the Easter Islands and perhaps to Peru and Mexico... From time to time claims are put forward by sensation mongers of American scholars to connect the ancient Mayan civilization with that of Inida-History of Orissa-p.p. 97, 108-R.D. Banerji.
2.
1. Dravidian Pandits composed some upanishads and Brahmanas, and why not Vedas... Mr. Thomas a good numismalist, learned and cautions writer, here agrees with Sir Walter Elliot, a Dravidian scholar that the Vedas were not Co-ordinaled by any Aryan Rishi-Short studies of comparative religions p.p.251,253
2.
1. திராவிட மொழிகளின் ஆராய்ச்சி - பக். 27
2.
1. Ela is also found written in Sanskrit Eda. It is well known the Tamil peculiar sound ‘ழ’ changes into ட or ன or ச in Aryan tongues. உக ‘பழம்’ ‘fruit’ யீயடயஅ (sans); ‘பீழை’ ‘misery’ யீனைய (sans); ‘இழு’ ‘draw’ ereu-o (lat) etc, - Tamilian antiquary. Panavas and the Tamil Kings-Pandit D. Savariroyan (Second edition 1913)
2.
3. It is regarded as certain that Dravidian speakers were at one time spread over the whole of northern India as well from Baluchistan to Bengal-Origin and development of Bengali-p. 28. S.K. Chaterji.
4.
1. Thiruvalluvar cannot be assigned to any century earlier than the VI-History of the Tamils-p. 588-P.T.S. Aiyengar.
2. Studies in Tamil Literature and History.
3. The fact that Brahmins were called truth speakers proves tha lying was common among the Tamil speaking tribes-Tamil Studies-p. 194.
4. Tamil studies - P. 195. M.S. Iyengar, 3. Ibid - P. 174. 4. Ibid - P. 193.
5. Ibid - P. 192
அறிஞர் ந.சி. கந்தையா எழுதிய நூல்கள்
நூல் பெயர் ஆண்டு
1. பத்துப்பாட்டு 1949
2. பதிற்றுப்பத்து 1937
3. கலித்தொகை 1941
4. பரிபாடல் 1938
5. அகநானூறு 1938
6. புறப்பொருள் விளக்கம் 1936
7. கலிங்கத்துப்பரணி 1938
8. விறலிவிடுதூது 1940
9. பெண்கள் உலகம் —
10. பெண்கள் சமூகம் அன்றும் இன்றும் 1948
11. பெண்கள் புரட்சி 1946
12. பொது அறிவு 1957
13. பொது அறிவு வினா விடை 1961
14. உலக அறிவியல் நூல் —
15. உங்களுக்குத் தெரியுமா? 1954
16. அறிவுக் கட்டுரைகள் 1950
17. நூலகங்கள் 1948
18. அறிவுரை மாலை 1950
19. அறிவுரைக் கோவை 1950
20. தமிழர் சமயம் எது? 1947
21. சைவ சமய வரலாறு 1958
22. சிவன் 1947
23. இந்து சமய வரலாறு 1954
24. தமிழர் பண்பாடு 1966
25. நமது தாய்மொழி 1948
26. நமது மொழி 1946
27. நமது நாடு 1945
28. திராவிட மொழிகளும் இந்தியும் 1948
29. தமிழ்ப் பழமையும் புதுமையும் 1946
30. முச்சங்கம் 1947
31. தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா? 1947
32. ஆரியர் தமிழர் கலப்பு 1946
33. ஆரியத்தால் விளைந்த கேடு 1948
34. புரோகிதர் ஆட்சி 1949
35. இராமாயணம் நடந்த கதையா? 1947
36. ஆரியர் வேதங்கள் 1947
37. திராவிடம் என்றால் என்ன? 1948
38. திராவிட இந்தியா 1949
39. திராவிட நாகரிகம் 1947
40. மறைந்த நாகரிகம் 1948
41. ஆதி மனிதன் 1948
42. ஆதி உயிர்கள் 1949
43. மனிதன் எப்படித் தோன்றினான்? 1947
44. மரணத்தின் பின் 1950
45. பாம்பு வணக்கம் 1947
46. தமிழர் யார்? 1946
47. உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு 1948
48. சிந்துவெளித் தமிழர் 1947
49. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் 1958
50. தமிழர் சரித்திரம் 1940
51. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர் 1943
52. திருவள்ளுவர் 1948
53. திருக்குறள் 1949
54. தமிழகம் 1934
55. தமிழ் இந்தியா 1945
56. திருக்குறள் அகராதி 1961
57. தமிழ்ப் புலவர் அகராதி 1953
58. தமிழ் இலக்கிய அகராதி 1953
59. காலக் குறிப்பு அகராதி 1960
60. செந்தமிழ் அகராதி 1950
61. கலிவர் யாத்திரை 1959
62. இராபின்சன் குரூசோ 1949
63. அகத்தியர் 1948
64. தமிழ் ஆராய்ச்சி 1947
65. தமிழ் விளக்கம் —
66. நீதிநெறி விளக்கம் 1949
கருத்துகள்
கருத்துரையிடுக