அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்
சிறுகதைகள்
Backஅயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்
நந்தினி சேவியர்
பதிப்புரை இலங்கையில் பல எழுத்தாளர்களின் கதைகள் அவ்வப்போது பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவருவ, துடன் அவற்றின் ஆயுள் முடிந்து விடும் துர்ப்பாக்கிய நிலையே இன்றுவரை நீடித்து வருகிறது. இதனால் பல எழுத்தாளர்கள் பரந்ததமிழ் பரப்பில் அறியப்படாதவர்களாவதுடன் நல்ல பல சிறுகதைகள், நாவல்கள் நமது கைகளுக்கு கிட்டாமல் காலத்தோடு கரைந்து விடுகின்றன. நண்பர் நந்தீனி சேவியருடைய சிறுகதைகள் எழுபது எண்பதுகளின் அறுவடையாகும். ஆண்டகைகளின் வரலாறே சமூக வரலாறாக சித்தரிக்கப்பட்டு வந்த சூழலில் சமகாலச் சிறுகதைகளின் மூலம் சாதாரண மனி தர்களின் சாதாரண வாழ்வே ஆவணங்களாகப் பதியப் பட்டு வருவதன் தொடர்ச்சியை இவரது கதைகளிலும் காணலாம். உறவுகள், வெறுப்புகள், விரக்திகள், துன்ப துயரங்கள், அலுப்புகள், ஒடுக்கல்கள், நம்பிக்கைகள், பணிதல், பணியமறுத்தல், ஒன்று கூடல், இயங்குதல், வெதும்புதல், விழிப்படைதல் போன்ற மனித நுண் உணர் வுக்கோலங்களை நாம் இச்சிறுகதைகளினூடு தரிசிக் கலாம்.
எமது வெளியீட்டு முயற்சிகளில் தொடர்ந்து எம்மு கடன் ஒத்துழைத்துவரும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனர் எம். பாலாஜிக்கும் அச்சக நண்பர் சங்கரனுக்கும் ஊழியருக்கும் நண்பர்கள் வீ. திவ்வியராஜா, கே.உமாபதி ஆகியோருக்கும் கதைக்கலைஞர் நந்தினி சேவியருக்கும் முன்னுரை வழங்கிய திரு. இ. முருகையன் அவர்களுக்கும். எமது நன்றிகள். இந்நூலுக்கான விமர்சனங்களை கண்டவிடத்துவரும் வார்த்தைகளாக மட்டுமின்றி கனதியான எழுத்துருவக் கடிதங்களாகவும் கட்டுரைகளாகவும் அனுப்பிவைக்கும்படி வாசகர்களை வேண்டுகின்றோம். தேசிய கலை இலக்கியப் பேரவை 14, 57- வது ஒழுங்கை. - கொழும்பு-06. இலங்கை. .1993-سس-08-س-06 முன்னுரை நந்தினி சேவியரின் சிறுகதைகளைத் தொகுத்து ஒரு நூலாக காணும் வாய்ப்பு இப்பொழுது நமக்குக் கிட்டியுள்ளது. ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர் கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது கதைகள் இலங்கைத் தமிழகத்தின் இலக்கிய ஏடுகளான * அலை', 'தாயகம்', 'புதுசு" - "மல்லிகை’, ‘வாகை’ என்பவற்றிலும், ‘ஈழநாடு', 'ஈழ முரசு’ ஆகிய பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. சேவியரின் கதைகளையிட்டு நாம் கவனிக்க வேண் டிய அம்சங்களை எடுத்து நோக்குமுன், தமிழ்ச் சிறு கதைகளின் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் முகங்காட்டி நின்ற இரண்டொரு பண்புகளை நினைவு கூறுதல் நன்று. வ. வெ. சு. ஐயருடன் தொடங்கி “மணிக்கொடி" காலத்திலேயே வயசுக்கு வந்து விட்ட தமிழ்ச் சிறுகதை உலகில், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், ரகுநாதன், லா, ச. ராமாமிருதம், மெளனி என்னும் பெயர்கள் அடிக்கடி பேசப்படும் தகுதியைப் பெற்றன இவர்களுள்ளும் புதுமைப்பித்தனும் ரகுநாதனும் ராமா மிருதமும் மொழியாட்சித் திறனில் தனித்திறம் வாய்ந்த சாதனைச் சிகரங்களை எட்டியிருந்தனர். அவர்களின் மொழியாட்சியிலே கவிதையின் இயல்புகள் சில அழுத் தம் பெற்று முன் நின்றன. ஆற்றல் வாய்ந்த சொற் கனளப் தெரிந்தெடுத்து, அவற்றின் சகல சாத்தியப்பாடு களையும் கடைந்து திரட்டிச் செறிவான சித்திரங்களை அவர்கள் தீட்டலாயினர். தொ. மு. சி. ரகுநாதனின்
தொடக்ககள்லச் சிறுகதைகள் பல இந்த வகையில் விதந்து கூறத்தக்கன. "ஞானோதயம்', 'சுருதிபேதம்’ ‘ஆனைத்தீ’ ஆகிய கதைகளை இன்றும்கூட எடுத்துப் படித்தால், அவற்றின் மொழியாட்சிச் செறிவும் செம் மையும் துலக்கமும் தெளிவாய் விளங்கும். இந்தச் செறி வுடனும் செம்மையுடனும், தவிர்க்க இயலாத விதத் திலே, காட்சிப் படிமங்களும் கருத்துப் படிவங்களும் நிறைந்த கலைவளம் வெளிப்படலாயிற்று. லா.ச.ரா.இன் கைகளில், அபூர்வமான உணர்ச்சிப் பீறல்களையும் சுழிப்புகளையும் ஏந்தும் படிமக்கோவைகளாகச் சிறு கதைகள் உருவெடுத்தன. தமிழ் மொழி மூலம் எவை எவற்றையெல்லாம் எடுத்துரைக்கலாம்-உணர்த்திவைக்க லாம்-புலப்படுத்தலாம் என்பதன் உதாரணபூர்வமான விளக்கங்களை மேற்படி படைப்புகள் அமைத்தன என்று கூறலாம். gp(5 விதத்திலே பார்க்கப்போனால், காவிய காலத்து மொழிப்பயன்பாட்டு நோக்கின் ஒரு நீட்சி என்றும் இதனை விவரிக்கலாம் . கம்பனையும் சயங் கொண்டானையும் பிற இடைக்காலப் புலவர்களையும். பயின்று நயந்த ஓர் ஈடுபாட்டின் அடியாகவும் சில எழுத்தாளர்கள் இவ்வாறு எழுதலாயினர். இவ்வித எழுத்தாக்கங்கள் சில வேளைகளிலே வாசகர்களை மிரட்டி முக்குளிக்க வைத்து மூச்சுத் திணறலை உண்டாக்கு வனவாயும் இருந்தது உண்டு. அதனால், சிறு சிறு வாசகர் வட்டங்களை ஊக்குவிக்கும் சிறுபான்மை இலக் கியங்களாகவும் இவை அமைந்து விட்டன. ஆயினும் இந்தப் போக்கு, தமிழ் எழுத்துலகின் பொதுவான போக்கு என்று நாம் கருதலாகாது. மேலும் மேலும் விரிந்த வாசகர் வட்டங்களை அடையும் தேவைகளும் ஆவல்களும் அதிகரித்தபோது, புதிய புதிய கலை நோக்குகள் தொடங்கலாயின. அப்பொழுது காவிய நினைவுகளிலிருந்து விலகிய மொழி நடையும் , விரிவானதொரு மக்கள் கூட்டத்தில் அக்கறை கொண் உள்ளடக்க அம்சங்களும் இடம் பிடித்துக் கொண்டன. பிற்பட்ட காலங்களில் எழுதப்பட்ட கதைகளில், ரகுநாதனே இவ்வித மாற்றத்தின் உதாரண சாட்சியாக விளங்கினார். மக்கள் நல நோக்குக் கொண்ட இந்த விரிவான பார்வையின் அடியாக வேறொரு விதமான அணுகு முறை தலையெடுத்தது. அதிக ஆர்ப்பாட்டஞ் செய்து பெரிது பண்ணிப் பிரமாதப்படுத்தாமல், மிகவும் இயல் பான சொற்களைக் கொண்ட, இயல்பான ஒரு மொழி நடை செல்வாக்குப் பெற்றது. உள்ளதை அப்படியே பதிவு செய்வதைப் போலத் தோற்றமளிக்கும் ஒரு கலையாக்க நெறி தலை தூக்கிற்று. நடப்பியலின் அச்சுப் பதிவு போலத் தோற்றமளித்தாலும், இக வெறும் அப்பாவித்தனமான ஆவணப்படுத்தல் என்று கருதி விடுதல் கூடாது. நடப்பியலின் எந்தெந்த அம்சங் களைப் படப்பிடிப்பின் பொருட்டுத் தெரிந்தெடுப்பது என்பதிலும், அவற்றுள்ளும் எவை எவற்றுக்கு எந்த எந்த அளவு அழுத்தம் தருவது என்பதிலும் கலைஞர் களின் கவனம் சிறப்பாக ஈடுபட்டது. இதன் பயனாக நுணுக்கமான கலை நயங்கள் பிறப்பதற்கான வாய்ப்பு கள் கிடைத்தன. இவ்வகையான எழுத்தாக்க நெறியின் சாயல் களையே நந்தினி சேவியரின் படைப்புகளில் நாம் இனங் கண்டு கொள்ளுகிறோம். அவரது கதைகளில், கருத்து முழக்கங்களையோ உணர்ச்சிமயமான சன்ன தங்க ளையோ நாம் எதிர்பார்க்க முடியாது. அதே வேளை வெறும் கிளுகிளுப்புகளுக்கும் புளிச்சல் ஏவறைகளுக்கும் கொட்டாவிகளுக்கும் சேவியரின் கதை உலகிலே சற்றே னும் இடமில்லை. அவரது கதைகளைப் படிக்கும்போது நாம் இதனை ஐயந்திரிபின்றி உணர்ந்து கொள்ளு கிறோம்.
இனி, சேவியர் கதைகளில் வரும் உலகம் வெறும் கற்பனையில் உதித்த பொய்ம்மை அன்று; இட்டுக்கட்டப் பட்ட புனைவுகள் அங்கு இல்லை. அத்துடன் அவருடைய கதைக்களங்களிலே ஒருவித பன்முகத் தன்மையையும் நாம் பார்க்கிறோம். யாழ்ப்பாணத்து நவீன சந்தை, முனியப் பர் கோயில், மூதூரின் தென்னை மரச்சோலை, வாசிக சாலை, கபாடி விளையாடும் மணற்பரப்பு, கிட்டியடிக்கும் மைதானம், அர்ச். செபஸ்தியார் தேவாலயம், திருவடி நிலையின் கடற்கரை, பம்பலப்பிட்டி ரயில்வே ஸ்ரேசன் பாலத்துப் படிக்கட்டு என்று கதை நிகழிடங்கள் பலதரப் பட்டு அமைவதை மாத்திரம் நாம் இங்கு கருதவில்லை. இதில் வரும் கதை மாந்தர்கள் பெரும்பாலும் வளரிளம் பருவத்தினராக இருக்கிறார்கள் என்பது உண்மையே யாயினும், வேட்டையாடுதல், மில்லிலே வேலை பாத்தல், கிணறு வெட்டுதல், கல்லுடைத்தல், சயிக்கிள் ஒட்டுதல் என்று பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு, பல்வேறு வாழ்நிலைகளிலும் உழல்கிறவர்களின் செயற்பாடுகளை நெருக்கமாகத் தெரிந்து ஒன்றித்துப் போன ஈடுபாட் டுடன் சித்திரமாக்கியுள்ளார் சேவியர். சகல தரப்பு மாந்தரையும் அக்கறையுடன் பரிவாக நோக்கும் ஒரு மனப்பான்மை இந்தக் கதைகளில் எல்லாம் இழையோடி நிற்கின்றது. இதனை நாம் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். சேவியரின் தனித்தன்மையே இங்குதான் இருக் கிறது என்று சொல்லலாம். NA கால ஓட்டத்தில் மனிதர்களுக்கு நிகழும் மாற்றங் களையும் எதிர்பாராத திருப்பங்களையும், அவர் அவதா னிப்பது மிகவும் சுவையான வகையில் ஒரு கதையிலே பதிவாகி உள்ளது. "தொலைந்து போனவர்கள்" என்னும் கதையில் இந்த அவதானிப்புகளை நாம் சந்திக்கிறோம். "அவனோடு படித்த ஒரு மக்குப் பையன் எங்கோ ஒரு வங்கியில் வேலையாக இருப்பதும், அடிக்கடி
மரபுக் கவிதைகள் பாடும் ஒரு கவிதைப் பற்றுடைய நண்பன் பொலிஸ்காரனாக இருப்பதும், வகுப்பி லேயே ‘இனி இல்லை" என்கின்ற் கெட்டிக்காரனாக இருந்த சினேகிதன் ஒருவன் வள்ளத்தில் தொழிலுக்கு போவதும், இன்னும் இன்னும் நண்பர்கள் ஏதேதோ தொழில்களைப் பார்க்க முனைவதும் இவனுக்குத் தெரியும்.” வாழ்நிலைகள் மாறிக் கொண்டு போவதை எவ்வளவு அநாயாசமாகப் புலப்படுத்திவிடுகிறார், ஆசிரியர். இந்த மாற்றங்கள் பற்றிய அவதானிப்புகள், குறிப்பிட்ட கதை யின் உள்ளடக்கத்துக்கு மிகவும் இன்றியமையாத கூறு களாக அமைகின்றன. “பொலிவு கொண்ட நகரம் இடம் பெயர்ந்து தேற்கே நகரத் தொடங்கி விட்டது. பஸ் தரிப்பு நிலை யங்கள், தேநீர் கடைகள், மரக்கறிக்கடைகள், பலகாரம் விற்கும் அந்த நடுத்தர வயதுக்காரப் பெண்கள். அனைவரும் இடம் மாறிப் போனார்கள். இந்த நகரத்திலும் வேறு கிராமங்களிலும் காணாமற் போனவர்கள் புதிய தோற்றங்களில், இறுகிய உடற்கட்டுகளுடன் மனிதர்களுக்குத் தரி சனையாக ஆரம்பித்தார்கள். இவனிடம் படித்த மாணவர்களில் இரண்டொருவரை நகரத்துத் தெரு வீதிச் சுவர்களில் கலர்ப்படமாகக் கண்டு இவன் ஆச்சரியம் கொண்டான். படிக்கும் காலத்தில் சாதுக்களாக இருந்த இவர் களுக்கு இது எப்படிச் சாத்தியமாயிற்றென அவன் அர்த்த மற்றுச் சிந்தித்தான். போராட்டத்துடன் இணைந்து கொண்டவர்கள் பற்றிக் குறிப்பாக உணர்த்துவதுதான் இங்கு ஆசிரியரது நோக்கம். இதை அவர் எவ்வளவு நாசூக்காக" நசுக்கிடாமல், எந்தவித ஆர்ப்பாட்டமோ, ஆரவாரமோ இல்லாமல், இலேசாகச் செய்து விடுகிறார்.
பட்டறையில் உளியும் கையுமாக நிற்கும் சச்சி தானந்தர், தொலைந்து போன அந்த இளைஞர்களைச் சிலாகித்துப் பேசுவதாகக் காட்டி வேறு எந்த "ஆசிரியர் கூற்றும் இன்றித் தமது கதையைப் பூர்த்தி செய்யும் நேர்த்தி மிகவும் நாகரிகமாக உள்ளது. அறுபத்தைந்து வயதான அந்தக் கிழவர் மகிழ்ச்சியடையக் கூடியவாறு சில சங்கதிகளை அவருடன் பரிமாறிக் கொள்ளும் விருப் பத்தின் அடியிலே புதைந்திருக்கும் உட்குறிப்பை நாமும் உணர்ந்து கொள்ளுகிறோம். இலாகவமான மொழிப் பிரயோகத்தின் பின்னணிப் பரிமாணங்களே சேவிய ருடைய கலையாக்க நெறியின் உள்ளியல்பும் உயிர் நிலையு மாக விளங்குகின்றன. இந்த உண்மையை, சேவியரின் ஏனைய கதையாக்கங்களிலும் நாம் அடையாளங் கண்டு கொள்ளலாம். *வேட்டை' என்னும் கதை வேறு விதமானது. அது ஒரு தனியுலகம். தம்பர் என்ற முதியவரும், அவர் வளர்க்கும் வெள்ளையன் என்னும் வேட்டை நாயும் தான் அதில் வரும் பாத்திரங்கள். "தம்பரும் நாயும் ஒரே மாதிரி. அந்த நாய்க்கும் வயது கடந்து விட்டது. மெலிந்து எலும்புகள் உடலைப் புடைத்துக் கொண்டு வெளியில் தெரிய, முன்னங்கால் ஒரு பக்கம் சாய்ந்து தம்பரைப் போலக் கம்பீரமாக நடக்கும் ஒரு அலாதி.நாய்தான் தம்பர்.தம்பர்தான் நாய்." “வாலைக் குழைத்து வரும் நாய்தான்-அது மனிதருக்குத் தோழன டி பாப்பா" என்று பாடிய அந்தப் பாரதிப் புலவனை நாங்கள் ჭალხ கணம் நினைத்துக் கொள்ளுகிறோம். ஆனால் தம்பருக் கும் வெள்ளையணுக்குமிடையிலுள்ள உறவை-அந்தத் தோழமையை-சேவியர் படம் பிடித்துக் காட்டும் நயம் தணிவிதமானது.
இச்சிறுகதையில் கதை நிகழ்வு என்று ஒன்றுமே இல்ல்ை என்றுகூடச் சொல்லி விடலாம். முயல் வேட்டையும் உடும்பு வேட்டையும்தான் கதை முழுவதி லும் நடந்தேறுகிறது. ஒரு நாய்க்கும் மனிதனுக்குமிடை யிலுள்ள உறவின் மீது நமது கவனத்தையெல்லாம் குவியப் படுத்தும் சேவியர், மனிதருக்கும் மனிதருக்குமிடையே நிலவும் உறவுகளையும் நமக்கு இறுதியிலே நினைவூட்டி வைக்கிறார். “தம்பர் கதறினார். அவரது தாயும் தகப்பனும் இறந்தபோதும், மனைவி மக்கள் வீடு விழுந்து மடிந்த போதும் எப்படி அழுதாரோ அதேபோல.இது அவரது கடைசி நஷ்டம். அவரது உணர்வுக்கு வழி செய்யும் அந்த உயிரின் நாடித் துடிப்பு மெதுவாக அடங்கிக் கொண்டி ருக்கிறது நாயின் முடிவே கதையின் முடிவாகவும் அமைந்து விடுகிறது. ஒவ்வொரு கதையையும் எடுத்துப் பகுப்பாய்வு செய்வது இங்கு நமது நோக்கம் அன்று. நந்தினிசேவிய ரின் கலை நுணுக்கங்களுக்குச் சில வகைமாதிரிகளைக் காட்டினோம். கதைகள் அனைத்தையும் முழுமையாகப் படிக்கும் போது அவர் காட்டும் மனித உறவுகளையும் வாழ் நிலைகளையும் சுட்டிப்பாகவும் திடமாகவும் நாம் அறிந்து கொள்ளலாம். அவரது பார்வையின் திசை நோக்கையும் விளங்கிக்கொள்ளலாம். இந்த இடத்திலே ஓர் உண்மையை அழுத்திக் கூறி வைத்தல் பொருத்தமாயிருக்கும். நந்தினி சேவியரின் கதை கள் ஆயிரத்தில் ஒருவரான அற்புதத் தனியாள் ஒருவரைப் பற்றியோ, அவருடைய விசித்திர குணாதிசயங்களைப் பற்றிறோ பேசி விட்டு நிறுத்திக் கொள்ளும் தன்மையை உடையன அல்ல.
கால ஒடடத்திலே இடையீடின்றி மாறிக் கொண்டிருக்கும் வாழ்நிலைகளின் இயக்கத் திசை களை நுணுக்கமாக நோக்குவதற்கு நமக்கு உதவி செய்யும் வல்லமை வாய்ந்த கலைக் கருவிகள் அவை. அதனாலே தான், இந்தக் கதைகளை வியக்கவைக்கும் சாதனைகளாக நாம் இனங்காண்பதில்லை. நமது அநுபவ விரிவுக்கும் வாழ்க்கை விளக்கத்துக்கும் துணைபோகும் திறன் கொண்ட - நயந்து திளைப்பதற்கு ஏற்ற ஏதுக்களை நிறையவே கொண்டுள்ள - சீரிய படைப்புகளென உணர்ந்து போற்றுகிறோம். நந்தினி சேவியரின் இந்தப் பண்புகளை ஏனைய கதை களிற் போலவே, "ஆண்டவருடைய சித்தம்', 'அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’, ‘பயணத்தின் முடிவில்", 'மத்தியானத்திற்குச் சற்றுப்பின்பாக ஆகிய கதைகளிலும் நாம் காணுகிறோம். − குறிப்பாக, வேட்டை', 'ஒரு பகற்பொழுது', 'நீண்ட இரவுக்குப் பின்' என்னும் கதைகள் நந்தினி சேவியர் என்ற கதைக் கலைஞரின் வளர்ச்சிப் படிகளை எடுத்துக் காட்டும் வரலாற்றுத் துணைகளாகவும் அமைகின்றன. நீர்வேலி தெற்கு முருகையன் நீர்வேலி இலங்கை. 20-04-1993 நூலாசிரியர் பற்றி இயற்பெயர் தே. சேவியர். முகவரி 269/1, என். சி. றோ திருகோணமலை பிறப்பு : 25-05-1949 எழுத்துலகப் பிரவேசம் : 1967ஆம் ஆண்டில் சிறுகதைகள் : இதுவரை 25 கதைகள் எழுதப்பட்ட பத்திரிகை, - சஞ்சிகைகள் ; தாயகம் சிந்தாமணி மல்லிகை வீரகேசரி SAT GÖDSS தொழிலாளி அலை சுதந்திரன் ւյցil* ஈழமுரசு இதயம் ஈழநாடு நாவல்கள் : இரண்டு நாவல்கள் இதுவரை எழுதப்" பட்டன. ஈழநாடு பத்திரிகையின் 10ஆவது ஆண்டு நிறவையொட்டி அகில இலங்கை ரீதியில் நடாத்திய குறு நாவல்கள் கவிதைகள் நூல் நாவல் போட்டியில் ஒரு நாவல் 2ஆம் பரிசு பெற்றது.
இரண்டு குறு நாவல்கள் எழுதியுள் ளார். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் தனது 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய நாவல் போட்டியில் ஒரு குறுநாவல் தங்கப் பதக்கத்தை முதற்பரிசாகப் பெற்றது. பல கவிதைகளும் எழுதியுள்ளார். வெளிவரும் முதல்நூல் இச்சிறுகதைத் தொகுப்பேயாகும். நன்றி சொல்கிறார் என்னை எழுதத் தூண்டியவர்களுக்கும் கதை களை வெளியிட்ட சஞ்சிகைகள், பத்திரிகைகளுக் கும் இந்நூலை வெளியிட்டுவைக்கும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தினருக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவை நண்பர்களுக்கும் தோழர் களுக்கும் நன்றிகள் நந்தினி சேவியர்
உள்ளே, வேட்டை அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு பகற் பொழுது நீண்ட இரவுக்குப்பின் பயணத்தின் முடிவில் " மத்தியானத்துக்குச் சற்றுப்பின்பாக ஆண்டவருடைய சித்தம் தொலைந்து போனவர்கள் வேட்டை “பாற்றா . பாற்றா. கிடக்காடா.கிடக்காடா. பாற்றா. பாற்றா” கைவிரலைச் சுண்டி வாயைக் குவித்து "உய்’ எனச் சீழ்க்கை ஒலி எழுப்பி கையிலிருக்கும் கூர்க்கொட்டனால் பற்றைகளையும் காவோலைகளையும் தட்டி, நாய்க்கு உற்சாகம் கொடுக்கிறார் தம்பர். நாயும் நெருங்கிய. அடர்ந்த.பற்றைக்குள் எல்லாம் அனாயசமாக வளைந்து, நெளிந்து, ஊர்ந்து, பதுங்கி மோப்பம் பிடிக்கின்றது. “வெள்ளையா. உதுக்குள்ளான் கிடக்கு . விட்டி டாதை.எழுப்படா. எழுப்படா..." மீண்டும் மீண்டும் உற்சாகமூட்டுகிறார் தம்பர். நாய் சுறுசுறுப்பாக இயங்குகிறது. தம்பர் ஒரு நிலையில் இல்லை. அவர் வேட்டை யிலேயே லயித்து . "கிடக்கடா . கிடக்கடா .. விட்டி டாதை.விட்டிடாதை.எழுப்பு.எழுப்பு." தம்பரின் உற்சாக ஒலயினால் அந்தப் பற்றைப் பிராந்தியம் அமைதியை இழந்து அல்லோலப்படுகிறது. வெள்ளையன் எதையோ மோப்பம் பிடித்துவிட்டது. தம்பர் உசாராகிறார்.
“வெள்ளையா.அதுதான் ரா.இடைஞ்சலாய்க் கிடத் தால் மற்றப் பக்கமாய் வந்து, சுத்திவளை. மற்றப்பக்க மாய் வா.” நாயைவிடத் தம்பரின் உற்சாகம் கூடிவிட்டது. அவர் சுற்றிச் சுழலுகிறார். வெள்ளையன் பற்றைகளை இடறி எறிவதும், வெளியில் வந்து பற்றையைச் சுற்றிச் சுற்றி ஒடுவதும். மீண்டும் பற்றைக்குள் புகுந்து இடறி இடறிக் கால்களால் மண்ணைத் தோண்டி ன்றிவதும்.தோண்டிய இடத்தில் முகத்தை வைத்துமுகர்வதுமாய் போராடுகிறது. “வெள்ளையா.விலகு நான் பார்க்கிறேன்.என்ன புத்துக்கை விழுந்திட்டுதே. கொஞ்சம் விலகு வெள்ளையா!” விலகவே மனமில்லாது நிற்கும் நாயைப் பலாத்கார மாக விலக்கிவிட்டுத் தமது கையிலுள்ள கத்தியினால் பற்றைகளை வெட்டி வழிசெய்து கொண்டு புற்றை நெருங்குகிறார் தம்பர். “இது என்னடாப்பா.இடைஞ்சலாய்க் கிடக்குது. மம்ப்ெட்டியாலை கூட வெட்டேலா போல கிடக்கு. வெள்ளையா. தம்பி.வாடா. வந்து விட்டு வீசாடியா நிண்டு பார்.என்னாலை வெட்டேலா.புத்துக்கை இடக்குது போல. வந்து பாரடி ராசா." இயலாத நிலைமையை உருக்கமான வார்த்தைகளால் வெள்ளையனுக்குக் கூறி உசார்படுத்துகிறார் தம்பர். வெள்ளையன் உள்ளே நுழைகிறது. மீண்டும் முன்னங் கால்களால் புற்றை விறாண்டுவதும் முகத்தை வைத்து முகர்வதுமாக அவலப்படுகிறது. m தம்பர் சற்று ஓய்வாக மர நிழலில் அமர்கிறார். சடுதியென உடும்பு ஒன்று புற்றுக்குள்ளிருந்து விடு பட்டு வெள்ளையனையும் ஏமாற்றி விட்டு ஒடத் தொடங்குகிறது. தம்பர் தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழும்புகிறார். "பிடியடா.பிடியடா.. அள்ளடா.அள்ளடா..." அந்தப் பிராந்தியம் கொஞ்ச் நேரம் தம்பரின் உற்சாக ஒலியால் நிலை தளர்ந்து அமைதியாகிறது. வெள்ளையன் திறமையாக உடும்பைப் பிடித்து விட்டது. தம்பர் மகிழ்ச்சியோடு வெள்ளையனைத் தட்டிக் கொடுக்கிறார். "எனக்குத் தெரியும் ராசாத்தி.எப்படியும் பிடிச்சுப் போடுவாய்” எண்டு வெள்ளையன் எஜமானின் பாராட்டி னால் உடலை வளைத்து வாலைக் குழைத்து நெளிகிறது. தம்பர் உடும்பை எடுத்து அதன் வாலால் உடும்பின் தலையைச்சுற்றி முன்னங்கால் பாதத்துள் வாலைச் சொருகி உடும்புக் கட்டுப் போடுகிறார். அந்தப் பருத்த உடும்பைப் பார்க்க பார்க்க அவர் முகத்தில் பெருமையின் சாயல் இழையோடுகிறது. அந்த உடும்பைத் தாம் முன்னர் பிடித்த முயலோடு கோர்த்துக் குடலையாகக்கட்டுகிறார் தம்பர், "இண்டைக்கு இது போதும் நடவெடா வெள்ளையா” வெள்ளையன் முன்னே செல்ல வேட்டையை முடித்துக் கொண்டு தம்பர் மண்வெட்டி, கத்தி, குடலை சகிதம் கம்பீரமாகப் பின்னே நடக்கிறார். தம்பருக்குச் சுமார் எழுபது வயதிருக்கும். அவருக்கு அந்த வயதென்று யாரும் சொல்ல மாட்டார்கள். கணிப்பு என்கின்ற அளவுக்கு உட்படாத தோற்றம்.
தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நரை மயிர்கள் குத்திட்டு நிற்கின்றன. முகம் வெளுத்து நெற்றிச் சதை சுருங்கி.செறிந்த புருவ விளிம்புகளும் கனத்துத் தொங்கிய கன்னத் தசைகளும் மயிர்களால் கவியப் பெற்று. அதையும் ஊடுருவிக் கொண்டு அவரது சிவந்த கண்கள் மாலைச் சூரியனைப் போல பளபளத்துக் கொண்டு தெரிகின்றன. இவை எல்லாவற்றையும் வெற்றி கொண்டு தம்பரின் அகண்ட கூரிய நாசி மேலெழுந்து, கம்பீரமாகக் காட்சி தந்து கொண்டிருந்தது. தம்பரின் மெலிந்த தேகம் 'உடும்புத்தோலைப் போல் சொரசொரத்து முந்திரிகை வற்றல் போல் சுருங்கி அலை யாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும். தம்பர் வயதுக்கு மீறிய செயல் செய்யும் ஒரு பிரகிருதி தான். அவரின் உடம்பில் ஒரு நான்கு முழத்துண்டும் ஒரு போத்தல் மேல் துணியும்தான் கிடக்கின்றன. பொத்தல் துணியால் அழகான ஒரு தலைப்பாகை கட்டியிருக்கிறார். அவ்விருதுண்டுகளும் சலவைக்குப்போய் எத்தனை நாளோ யாரறிவார்? தம்பருக்குக்கூட அது சலவைக்குப் போட்டு எத்தனை நாளென்பது ஞாபகம் இருக்காது. அவருக்கு உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு உயிரோடு யாரும் இல்லை. அந்த நாய்தான் அவரது அண்ணன், தம்பி, மகன், மனைவி எல்லாம். தம்பரும் நாயும் ஒரே மாதிரி, அந்த நாய்க்கும் வயது கடந்து விட்டது. மெலிந்து எலும்புகள் உடலைப் புடைத்துக் கொண்டு வெளியில் தெரிய, முன்னங்கால் ஒரு பக்கம் சாய்ந்து தம்பரைப் போல கம்பீரமாக நடக்கும் ஒர் அலாதி.நாய்தான் தம்பர். தம்பர்தான் நாய். தம்ப்ர் அந்தக் கறுத்த நாய்க்கு ஏன்தான் வெள்ளைய னென்று பெயர் வைத்தாரோ? வெள்ளையன் என்று சொல்வதற்கு அந்த நாயில் சாட்டிற்காவது ஒரு சிறு வெள்ளை.கிடையவே கிடையாது. ஆனால் அதற்குத் தம்பர் இட்ட பெயர் வெள்ளையன், இது ஏன் என்பது இன்னமும் கூட ஒருவருக்கும் புரியவில்லை. தம்பர் வேட்டையில் மிகவும் கெட்டிக்காரர். வேட்டைக்கு அவர் வெளியில் சென்றால் வெறுங் கையோடு திரும்புவது கிடையாது. வேட்டையில் மட்டு மல்ல? வேட்டையைப் பற்றி வர்ணிப்பதிலும் அவர் மகாதீரர் . கைகளை வீசி வேட்டையில் என்ன நடந்தது; வெள்ளையன் எப்படிப் பிடித்தது; தாம் என்ன செய்தார் என்பதை அவர் நடித்துக் காட்டுவார். வேட்டையில் புலியான அவருக்கு "வெலிச்சோர். தம்பர்” என்றுகூட ஒரு பட்டம். தம்பருக்கு ஊரில் நல்ல மதிப்பு. யாராவது "தம்பர் முயல் தின்ன ஆசையாகக் கிடக்குது” என்று சொன்னால் போதும், அன்று அல்லது அதற்கு மறு நாள் அந்த ஆசையைத் தம்பர் நிறைவேற்று 61 ft. தம்பரோடு யாரும் வேட்டைக்குப் போவது இல்லை. போனால் ஒரு மிருகத்தையும் தப்பியோட விடக் கூடாது. அப்படி ஏதாவது நடந்தால் தம்பர் சாதாரணமாக இருந்துவிட மாட்டார். அந்த மனிதர் மேல் ஒரே வசை புராணம் பாடி முடிப்பார். இந்த ஒரு காரணத்திற்காகவே அவரோடு யாரும் போவது இல்லை. மற்றும்படி அவருக்கு ஊரில் நல்ல மதிப்பு.
அளவோடு வேட்டையாடிக்கொண்டு தம்பர் திரும்புவதும் இதனால்தான். பலர் வேட்டைக்குப் போனால் எல்லோருமாக வேட்டையாட வேண்டும். இது அவருக்கு மட்டும்தானே ஒன்று அல்லது இரண்டு அது போதும். வயதான காலத்தில் நாயையும் தம்மை யும் வருத்துவதற்கு அவர் விரும்புவது இல்லை. அவருக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் அந்த வெள்ளையனுக்கு முதலில் சாப்பாடு போடாமல் தான் உண்ணமாட்டார் தம்பர். அவரது கூப்பன் எப்போது தொலைந்து போயிற்றோ அன்றிலிருந்து அவர் சோறு உண்பதில்லை. முயல் இறைச்சியும் உடும்பு இறைச்சியும்தான் அவரது அன்றாட உணவு. அவரை உயிருடன் உலாவ விடுவதே அந்த இறைச்சிகள்தான் என்று தம்மர் கூறுவார். எனவே அவரது உயிர் வெள்ளையன். வெள்ளையன் இல்லாது விட்டால் உடும்பேது; முயலேது? “பாற்றா.பாற்றா. உதுக்குள்ளான். உதுக்குள் ளான்” சூரியன் சந்தாதோட்ட வடலிக்குள் விழுந்து விட்டான். தம்பர் வேட்டையை இன்னமும் முடிக்க வில்லை. அவர் கையில் உடும்புக் குடலையோ, முயல் குடலையோ இல்லை. ஒன்றுமே பிடிபடாத ஏமாற்றம். அவரது வார்த்தையில், "ராசா உதுக்குள்ளான்ரி கிடக்குது எடி.பாற்றா பாற்றா” தம்பர் துரிதமாக இயங்குகிறார். இல்லை இயங்குவது போல் நடிக்கிறார். வெள்ளையன் பற்றைக்குள் நுழைந்து வளைந்து மோப்பம் பிடிக்கிறது. வெள்ளையனின் முந்தைய சுறுசுறுப்பு இல்லை. ஏன் தம்பரும் அப்படித் தான். வயது போய் விட்டது மட்டு மல்ல மத்தியானத்துச் சாப்பாடு கூட இன்னமும் வயிற் றுக்குள் போகவில்லை. தம்பர் முன்பென்றால் இவ்வளவுக்கு வேட்டையை முடித்துவிடுவார். ஆனால் இன்று அவருக்கு வேட்டையை முடிக்க விருப்பமில்லை.“வெலிச்சோர் தம்பர் வெறுங்கை யோடு திரும்புவதா?". "பாற்றா.பாற்றா கிடக்கடா எழுப்படா. வெள்ளையா உதுக்குள்ளான் . உதுக்குள் எான்”. . ۔ * ஈனஸ்வரத்தில் முனகுகிறார் தம்பர். கடமைக்காகப் போராடுகிறது வெள்ளையன். *தம்பி மற்றப் பத்தையைப் பாரடி. கிடக்குது எழுப்படி இராசா. ஒண்டெண்டாலென்ன...எழுப்படி இராசா” வெள்ளையன் ஆவேசமாக மோப்பம் பிடிக்கிறது. “தம்பி பொழுதுபட்டால் படட்டுக்கும் நீபாரடி ராசா.பாற்றா.பாற்றா”தம்பருக்கு வீட்டிற்குப்போகும் எண்ணமே இல்லை. வெள்ளையனுக்குப் போக மனமிருந் தாலும் தம்பரில்லாமல் அது போக முடியுமா? தம்பர் போகத்தான் விடுவாரா? பற்றைகளை இடறுகிறது வெள்ளையன், முட்கள் அதன் உடலைக் கீறி, இரத்தம் கசிந்து அதன் எலும்புட லில் உறைகிறது. வேதனையைக் காட்டிக் கொடுக்காமல், எஜமானுக் காக மோப்பம் பிடிக்கிறது வெள்ளையன். “தம்பி பாற்றா. கிடக்கடா. கிடக்கடா. பாற்றா பாற்றா வெள்ளையா. எழுப்படா" வெள்ளையன் பகீரதப் பிரயத்தனம் செய்கிறது “மறறப்பத்தையுக்க போடா. அதையும் பாரடா. உதுக் குள்ளை கிடக்கெடா. "
வெள்ளையனின் நாசியில் ஏதோ தட்டுப்பட்டு விட்டது. தம்பர் உசாராகிறார் “விட்டிடாதை.கிடக்குத்து எழுப்பு. எழுப்பு." வெள்ளையனின் சாமர்த்தியத்தால் ஒரு சிறிய உடும்பு எழும்பி விட்டது. "பிடியடி.பிடியடா அள்ளடா. அள்ளடா வெள்ளையா” வெள்ளையனாலும் ஓடமுடியவில்லை. தம்பராலும் ஒடமுடியவில்லை. உடும்பு ஓர் அடர்ந்த புதருக்குள் நுழைந்து விட்டது. தம்பருக்கு ஆத்திரம் "உதைப்பிடிக்காமல்.விடு றேல்லைராசாத்தி உள்ளுக்கைப்போய். எழுப்படி. . நான்.இஞ்சாலை நிக்கிறன்" தம்பர் வெள்ளையனை ஊக்குவிக்கிறார். வெள்ளையன் பற்றையைச் சுற்றிச் சுற்றி வருகிறது உள்ளே நுழையாமல் வெளியிலேயே நின்று கொண்டு சுற்றிச் சுற்றி வருகிறது. மோப்பம் பிடிக்கிறது. "வெள்ளையா.பயப்படாதை.உள்ளுக்கை போய் எழுப்படா தம்பி' 'போடி.உள்ளுக்கை போய்.அதை எழுப்பு. உதையாவது பிடிச்சுக் கொண்டு வீட்டை போவம்' வெள்ளையன் உள்ளே நுழைகிறது, எதனுடனோ போராடும்.ஒலி. அதனால் அந்தப் பற்றையே கிடுகிடுக் கிறது: "வெள்ளையா.விட்டிடாதை படுக்கையில வைச்சு அமத்து’ தம்பர் வெளியில்ே நின்று ஆவேசமாகக் கத்து கிறார். சிறிது நேர அண்மதிக்குப் பிறகு வெள்ளையன் வெளியே வருகிறது. அதன் வாயில். தம்பர் அதை வாங்க மகிழ்ச்சியோடு கையை நீட்டுகிறார். ‘பாம்பு.ஐயோ வெள்ளைய்ா.இது என்ன..?" தம்பரின் வாய் பயத்தால் அலறியது. வெள்ளையன் வலிகண்ட நாயைப் போல நிலத்தில் சரிகிறது. அதன் உடல் நீலம் பாரித்து. தம்பர் கதறினார். அவரது தாயும் தகப்பனும் இறந்தபோதும், மனைவி மக்கள் வீடு விழுந்து மடிந்த போதும் எப்படி அழுதாரோ அதேபோல.இது அவரது கடைசி நஷ்டம். அவரது உணவுக்கு வழி செய்யும் அந்த உயிரின் நாடித்துடிப்பு மெதுவாக அடங்கிக் கொண்டி குந்தது. ஈழநாடு-1969
அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் வழமைபோல் குந்தியிருக்கும் ஞான வைரவர் கோவில் ஆல மரத்தின் கீழ் குந்தியிருந்தோம். சின்னையரின் தேநீர்க் கடை இன்னமும் திறக்க வில்லை. முன்புறத்துத் தட்டியை இழுத்துச் சாத்திக் கட்டி யிருக்கும் கயிற்றின் முடிச்சு வழமைபோல் இறுகியே இருந்தது. மனிதர் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தட்டியை அவிழ்க்க ஆறு மணியாகி விடும். அது எங்க ளுக்குத் தெரிந்துதாணிருந்தது. காலை நேர வயிற்றுப் புகைச்சலைத் தவிர்க்க சின்னையர் போட்டுத் தரும் தேநீருக்காக நாங்கள் காத்து கிடந்தோம். எங்களது அணியச் சாமான்கள் ஒதுக்குப் புறமாக விழுதுகளில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. முதல் நாள் ஆறுமுகத்தானின் "வாய்ச்சி ஆணி யொன்றில் பட்டுவிட்டதால் எங்களது அணியத்தில் ஒரேயொரு பொருள் மட்டும் குறைந்திருந்தது. "கம்மாலைக்குப் போய் அதைத் தோய்வித்து விட வேண்டும்” என்று ஆறுமுகம் அடிக்கடி முனகிக் கொண்டி ருத்தான். வலது கை ஊனமாகிவிட்டது போன்ற மன வருத்தம் அவனுக்கு. ஆப்புக்களைப் போட்டுக் கட்டியிருக்கும் சாக்குப் பையையும் 'வல்லுட்டுக் குத்தி'யையும் எடுக்கப் போன செல்லையன் இழுகயிற்றை எடுத்து வரும் கந்தனோடு தொலைவில் வருவது தெரிந்தது. வாய்க் கசப்பைத் தீர்க்க வெற்றிலையைக்கூடப் போட முடியாமல் சின்னையர் கடைத்தட்டியைத் திறப் பதை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தோம். அந்த அதிகாலை வேளையில் எம்மைப் போல் எத்தனையோ மனிதப் பிரகிருதிகள் இப்படித் தொழி லுக்குப் புறப்பட்டுப் போவதையும், கர்த்துக் கிடப்பதை யும் நாங்கள் மனப்பூர்வமாக அறிவோம். வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துக் கொண்டு போகும் இந்த நாட்களில் எம்போன்றோரின் அவல நிலைகளை நாம் எமக்குள் எண்ணிப் பார்த்து புழுங்கு வோம். VK. எமது கைகளின் வலுவானது சற்றுத் தொய்யுமாக இருந்தால் நாம் மழை இல்லாத பயிர்க்ளாகி விடுவோம் என்பது எமக்குத் தெரியாமலில்லை. இவற்றைப் பற்றிச் சிந்திக்கும் தோறும் நாம் உணர்ச்சிவசப்பட்டு விடுவோம். எங்களது மனைவி மக்கள் எங்களோடு சேர்ந்து பாடுபட்ட போதிலும் எம்மால் அன்றாடச் செலவுகளைக் கூடச் சரிக்கட்ட (plg. I UTég சங்கடங்கள் ஏற்படுவதைப் பற்றித் தீவிரமாக சம்பாஷிப்போம். படிப்பறிவற்ற எம்மைப் போன்றோருக்கு இவை யாவும் புதிர்களாக இருந்த காலமொன்றிருந்தது. நமது பிள்ளைகளை நாம் ஓரளவிற்குப் படிக்க வைத்தோம். அவர்கள் ஓரளவிற்காவது நமக்குச் சகல வற்றையும் விளக்கக் கூடிய வல்லமை பெற்றவர்களாக இருந்தார்கள்.
எமது கிராமம் பின்தங்கிய நிலையிலிருந்து விடுபட, எமது வாலிபப் பிள்ளைகள் உற்சாகத்தோடு உழைத் தார்கள். நாமும் அதற்கு உடந்தையாக இருந்தோம். எமது கிராமம் ஒரு மாறுபட்ட-வித்தியாசமானமறுமலர்ச்சியுடன் புத்துயிர் பெற்று வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கு எல்லாம் மூலகாரணம் எமது ஒற்றுமையும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் நமது பிள்ளைகளின் உற்சாகமுமே. எங்கள் கிராமத்தில் அநேகமானவர்கள் கூலித் தொழிலாளிகளாகவே இருந்தோம். ஆண்கள், பெண்கள், வாலிபர்கள், முதியோர்கள் என்ற வித்தியாசம் இன்றி நாம் கூலித் தொழில் செய்து சீவியம் போக்காட்ட வேண்டியிருந்தது. நாம் கிணறு வெட்டுதல், மண் சுமத்தல், கல்லுடைத்தல் ஆகிய தொழில்களுடன் பனை அடித்தல், துலா வெட்டுதல் போன்ற தொழில்களிலும் ஒரளவு தேர்ச்சி பெற்று இருந்தமையால் எமக்குள்ளே போட்டிகளும் பொறாமை களும் இருக்கவில்லை. அப்படியான ஒரு நிலைமை ஒரு காலத்தில் இருந்ததென்னவோ உண்மைதான். அவை மிகுந்த அவமானத்திற்கும் அசூசைக்குமுரிய பழைய மடிந்து விட்ட நிைைமகள். செத்துப் போன் அந்தக் காலத்தைப் பற்றி நினைக்குந் , தோறும் நாம் எமக்குள் மிகுந்த வெட்கமடைவோம். இந்த ஒரு நிலைமையே எங்களை ஐக்கியமாக்க உதவிய தெனலாம். காலை நேரங்களில் நாம் அந்த ஞான வைரவர் கோவில் ஆலமரத்தின் கீழ் கூடுவோம். கலட்டி பூவற்கரை திடல், முடவானை, குச்சம்.முதலிய கிராமத்தின் மனிதர் கள் சந்திக்கும் கேந்திர பூமி அது. அங்கு சின்னையரின் தேநீர்க் கடையில் சூடாக ஏதாவதை வயிற்றினுள் தள்ளிய பின் சிதறுதேங்காய் களாக நான்கு திக்கும் பிரிந்து உழைக்கச் செல்வது நமது அன்றாட அத்தியாவசிய கைங்கரியமாக இருந்துவரும் நித்திய கருமம். மைமலில் சோர்வுடன் திரும்பிய பிறகு எமது உடல் களைச் சற்று ஆசுவாசப்படுத்தியபின்.எமது குடில்களின் ஒதுக்குப்புறமாக எமது மக்களின் முகங்களைப் போல, இறுகி வெடித்துப் பிளந்து போய்க் கிடக்கும் பொட்டல் வெளியில் கூட்டமாகக் கூடி இரவு இறுகும் வரை சம்பா சித்துக் கொண்டிருப்போம். எங்களில் குடிவெறிகாரர்களும் இருந்தோம். ஆனா லும் அந்த நிலையில் நாம் எமது குடிசைகளுக்குள் போய் முடங்கிக் கொள்வோம். எமது மனைவிமாருக்கும் எங்க ளுக்கும் இடையில் வாக்குவாதங்களும் வக்கணைகளும் சில நேரங்களில் மூண்டு விடுவதுமுண்டு. அப்போது எல்லாம் மற்றவர்கள் தலையிட்டுச் சமாளிக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தாமல் நாமே அடங்கிப் போகும் ஒரு பழக்கத்தை நாம் உண்டாக்கிக் கொண்டோம். பிறருக்கு இடையூறாக நாம் இருக்க விரும்புவது மில்லை. பிறர் எம்மை அதற்கு அனுமதிப்பதுமில்லை. எம்மைப் போல் தம்மை ஆக்கி கொள்ளாத உதிரிகள் சிலர் எம்மிடையே இல்லாமல் இல்லை. அவையும் தொங்கு தசையாகிக் கிழடு தட்டி விட்ட மனிதர்கள்தாம். அவர் களின் எண்ணிக்கை மிக மிகச் சொற்பமாகவே இருந்தது. அந்த மனிதர்களைப் பற்றி நாம் கோபிப்பது இல்லை. காரணம் நிதர்சனத்திலேயே அவர்களை எமக்குப் புரிந்தி ருந்தது. காலம் எமக்குச் சரியான திசையைக் காட்டிக் கொண் டிருத்தது. நாம் தெளிவு பெற்றுக் கொண்டிருந்தோம்.
எம் கண்முன் ஒரு பாதை தெரிந்து கொண்டிருந்தது அதன் வழியே நாம் நமது சந்ததியை வழிநடத்திச் செல் வதற்கு ஊக்கமாக இருந்தோம். வழமை போலவே சின்னையர் நெடுநேரம் காத்திருக்க வைக்கவில்லை. அவர் தட்டியை அவிழ்த்துக் கடையைத் திறப்பதற்கு நாம் உதவி செய்தோம். தேநீர்க் கடை சுறுசுறுப்பாகத் தொடங்கி விட்டது. அடுப்பின் புகையோடு சுகந்தமான சாம்பிராணி புகையும் காற்றில் மிதந்தது. உற்சாகமாக சின்னையர் போட்டுத் தந்ந தேநீரைப் பருகி விட்டு வல்லுவங்களை’ அவிழ்த்து வெற்றிலையை குதப்பியபடி அணியங்களைந் தோள்களில் ஏற்றிக் கொண்டு நாம் நடக்கத் தொடங்கினோம். பிள்ளையார் கோவிலடித் தோட்ட வெளியில் இறங்கி கூவிலை நோக்கி எம் கால்கள் நடந்தன. முதல் நாள் நாம் துண்டு போட்ட பனையில் இன்று சிலாகைகள் அடிக்க, வேண்டியிருந்தது. எங்களது கால்கள் சற்று வேகமாக நடக்கத் தொடங்கின. மாயக்கைக் குளத்தை அண்மி நாங்கள் நடந்தபோது எட்ட நிற்கும் பனை வடலிகளை ஊடறுத்து அழுகுரல் சத்தம் கேட்டது. நாம் துணுக்குற்றுச் செவிமடுத்தோம். காற்றிலே மெல்லிய ஒப்பாரியில் அனுங்கல் பரவிவந்தது. எமது கால் கள் நிதானித்தன. நாங்கள் கண்களை வடலிகளை நோக்கி எறிந்து நடந்தோம் தூரத்தில் மாயக்கை முருகன் காலெறிந்து நடந்து வருவது எமக்குத் தெரிந்தது. நாம் அவனருகில் கடுகி நடந்தோம். அவன் கூறிய சம்பவம் எம்மை மிகுந்த அதிர்வுக்குள்ளாக்கியது. நாம் திகைத்து நின்றோம். எங்களது பாலிய நண்பன் கிட்டிணன் பைையால் விழுத்து இறந்து விட்டான் என்ற செய்திதான் அது. நாம் வடலிகளுக்குள்ளால் விழுந்து கிட்டிணன் வீட்டை நோக்கி ஓடினோம். வெட்டிப் பிளந்து விட்ட மரம் எங்களைக் காத்துக் கிடக்கிறதென்ற நினைப்பே எங்களுக்கு மறந்து போய் விட்டது. நேற்று மாலை நிகழ்ந்துவிட்ட அந்த சம்பவத்தை நாம் நிச்சயமாக அப்பொழுதுதான் அறிந்தோம். எங்க ளுக்கு மிகுந்த கவலை ஏற்பட்டிருந்தது. கிட்டிணனை நாம் சிறுவயதிலிருந்தே அறிவோம். அவன் மிகுந்த, உற்சாகமான ஒரு தொழிலாளி. துணிச்சல் நிறைந்தவன். யாருக்கும் பயப்படாதவன், முரடன். எங்களுக்கும் அவனுக்கும் இடையில் இருந்த அந்த நட்பு மானசீகமானது. அது மிகுந்த நெருக்கமானதும், பவுத்திரமானதும் கூட. சகல தொழிலாள, விவசாயிகளைப்போல அவனிடமும் எங்களிடமும் இழப்பதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. இந்த நிலைமையும் நமது இறுக்கமான பிணைப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். நேற்று முன் தினம் கூட அவன் எங்களைத் தேடிக் கிராமத்திற்கு வந்திருந்தான். தனக்கும் ஊரின் சில பெரிய மனிதர்களுக்கும் இடை யில் ஏற்பட்ட விரோதங்கள் பற்றியெல்லாம் அப்போது அவன் எங்களிடம் பூடமாகக் கூறினான். தன்னுடைய சமூகத்தவர்களைத் தன்னுடன் நின்று கதைக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினான். அந்த மக்கள் மிகுந்த பயமுள்ளவர்களாக இருந்தமையால் கட்டுப்பாட் டுக்குள் அடங்கிக் கிடப்பதாக அவன் மனமுடைந்து மிக. விசனப்பட்டான். நாமும் அதைப் பற்றிக் கவலை தெரிவித்தோம். இன்று அவன் இறந்து விட்டான். தங்களின் ஒற்றுமையின்மையைப் பற்றி மனமுடைந் தவன் தனி வழிப் பயணம் புறப்பட்டு விட்டான்.
எமது கால்கள் கிட்டிணனது வீட்டினுள் பிரவேசித்த போது அவன் வீட்டின் முன்பு சிறு பந்தல் போட்டு வெள்ளை கட்டப்பட்டிருந்தது. கிட்டிணனது சடலம் பெரிய கட்டிலொன்றில் வளர்த்தப்பட்டிருந்தது. அவனது தலைமாட்டில் குத்துவிளக்கொன்று அழுது வடிந்து கொண்டிருந்தது. கிட்டிணனின் மனைவி தங்கச்சியம்மா வும்.மகள் செல்லக் கண்டுவும் பெரிதாக ஒப்பாரி வைத்து கொண்டிருந்தனர். - நாங்கள் எங்கள் அணியச் சாமான்களை வைத்து விட்டு கிட்டிணனை அருகில் சென்று பார்த்தோம். எமது கண்கள் பனித்து நீரைச் சிந்தின. அன்று எங்களுக்கு வேலைக்குப் போகும் எண்ணமே மறந்து விட்டது. அயல் கிராமத்து அந்த மனிதனுக்காக நாம் அங்கே நின்றிருந்தோம். முருகன் எல்லாக் கிராமங்களுக்கும் இழவு அறிவித் திருந்தான். எமது கிராமத்திலிருந்தும் பலர் வந்திருந்தார் கள். எங்களது பையன்களும் வந்திருந்தார்கள். சந்தைக்கு போனவர்கள் திரும்பினர். செத்த வீட்டில் செய்ய வேண்டிய அலுவல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நாம் முற்றத்து வேலியோரம் பனை நிழல்களில் குந்தியிருந்து சுருட்டுக்களைப் பற்றுவதும், வெற்றிலை களைச் சப்புவதுமாக, கிட்டிணயைப் பற்றி சம்பா ஷித்துக் கொண்டிருந்தோம். நேரம்.கடந்து கொண்டிருந்தது. நாங்கள் அயல் கிராமத்து அந்த மனிதனுக்காக எழுந் திருந்து உதவி செய்ய முனைந்தோம். இரண்டு பூவரசம் கதிகால்களைத் தறித்து, கிட்டிகளைப் பிணைத்து நாம் பாடை வேலைகளைத் தொடங்கி விட்டோம். ஆறுமுகம் பன்னாங்கு பின்னும் காரியத்தில் இறங்கியிருந்தான். மாயக்கையின் மனிதர்களது முகங்கள் இறுகிச் சோர்ந்து கிடப்பதை நாம் அந்த வேளையிலும் அவதானிக் காமல் இல்லை. அதன் அர்த்தம் எங்களுக்குப் புரியவும் இல்லை. சூரியன் உச்சியைக் கடந்து விட்டான். மூன்று மணிக்கு மேலிருக்கும் போலிருந்தது. வந்த மனிதர்கள் பலர் விடைபெற்று விட்டார்கள். நாமோ காத்து இருந் தோம். அந்த அயல் கிராமத்து மக்கள் மெளனமாக உலாவிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏதோ ஒரு பயத்தினால் பீடிக்கப்பட்டவர்களாய் ஒதுங்கி ஒதுங்கி நடந்து கொண்டு இருந்தார்கள். எமக்குப் பொறுமை எல்லை கடந்து விட்டது. முருகனைக் கைச்சாடைகாட்டிக் கூப்பிட்டான் ஆறுமுகம். “என்ன ஆரேனும் .இன்னும் வரவேணுமே..?” “இல்லை.ஆறுமுகம்." "பின்னை ஏன் சுணக்கம்?” “. g “வந்த சனமெல்லாம் போகுது. எப்ப எடுக்கப் போறியள்.?” முருகன் விம்முவது எங்களுக்குப் புரிந்தது. ஏதோ விபரீதம் நடக்கப் போவதாக அவன் அழுவதும் எங்களுக் குத் தெரிந்தது. ஆறுமுகம் எங்களருகில் விரைந்து வந்தான். எமது பையன்களும் எமது கிராமத்து மனிதர்களும் வந்தார்கள் அ-3
“கிட்டிணன்ரை சவத்தைக் காவ ஒருதரும் போகக் கூடாது என்று தடை விதிச்சு இருக்காம். காவச் சம்மதிக் கிறாங்களில்லை.பயப்பிடுறாங்கள்." எமக்கு எல்லாம் புரிந்து விட்டது. சனத்தின் அழுகுர லையும் அதற்குப் பங்கு போடும் மனிதர்களையும் விட்டு நாம் சற்று ஒதுக்குபுறமாக நடந்தோம். முருகனைத் தனியே அழைத்து மற்றவர்களைக் கூட்டி வரும்படி கூறினோம். அவர்கள்-ஆண்கள்-தயங்கியபடி எங்களருகில் வந்தார்கள். ஆறுமுகம் சற்றுச் சூடாக அவர்களைப் பார்த்துப் பேசினான். "நீங்கள். பயந்தவர்கள். ரோசமில்லாதவர்கள்." “எப்பிடியும் அவங்களிட்டைத்தானே நாங்கள் பிழைக்கி றம். எங்களுக்கு உதவியில்லை."அவர்கள் தலைகுனிந்து பேசினார்கள். "நாங்கள் இருக்கறம். பயப்பிடாதையுங்கோ. கிட்டிணனைப் போல இருங்கோ” ஆறுமுகம் பேசினான். மாயக்கை வாழ் மனிதர்கள் துணிந்து நிமிர்ந்த அந்த நேரம் நாம் துணிச்சலைக் கொடுத்தவர்கள் என்பதைக் காட்டாமல் ஒதுங்கி நின்றோம். அவர்கள் பரபரப்போடு சவத்தைக் குளிப்பாட்டி வாய்க்கரிசி போட்டு விரைவாகச் செயற்பட்டார்கள். எல்லாம் பரபரப்பாக நடந்து முடிந்தன. முருகன் தேவாரம் பாடினான் “கூற்றாயினவாறு.விலக்ககலீர் கொடுமைபல செய்தன." முன்னே கொள்ளிச் சட்டியுடன் கிட்டிணனின் புத்திரர் நடக்க அவர்களின் பிறகே வேலியைப் பிரித்துக் கிட்டிணனின் சவம் நாலு மாயக்கை மனிதர்களின் தோளில் ஏறிப் புறப்பட்டது. நாம் எமது கோடரிகளையும் வாய்ச்சிகளையும் தோள்களில் ஏற்றியபடி சவத்திற்கு முன்னும் பின்னும் நடந்தோம். நம்மில் சிலர் பின் தங்கி கிட்டிணனது வீட்டில் காவலுக்கு நின்றார்கள். சுடலையைச் சமீபித்தும் கூட நாம் எதிர்பார்த்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. சவம் கட்டையில் வளர்த்தப்பட்டு நெஞ்சாங்கட்டை வைக்கப்பட்டது. சவத்தைச் சுற்றி நடந்த கிட்டிணனின் மூத்தபையன், கொள்ளிக்குடம் கொத்தப்பட்டதும் சம்பிரதாயமாகக் கொள்ளியை வைத்தான். அது முடிந்ததும் காவோலைகளை கொளுத்தி நெருப்பைப் பெரிதாக்கினார்கள் மாயக்கை வாழ் மக்கள். நாங்கள் மெதுவாக அங்கிருந்து நகரத் தொடங்கி னோம். எம்மில் சிலர் சுடலையிலும் எரிப்பவர்களுக்கு உதவியாக நின்றிருந்தார்கள். அந்த அயல் கிராமத்து மனிதர்களுக்கு அன்றும் சரி அதற்குப்பிறகும் சரி எதுவித தீங்கும் பிறரால் நேரவில்லை அவர்களும் எங்களைப் போல் தங்களையும் ஆக்கிக் கொள்வதற்கு நாம் உதவியாக இருந்தோம். ஒரு நாள் அவர்கள் எங்களை போல வேதங்களை ஆக்கிக்கொள்வார்கள். மல்லிகை-1972
ஒரு பகற்பொழுது படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழையும் வரையும் செல்லத்திற்கு கோபம் அடங்கவில்லை. கோடிக்குள் கட்டப்பட்டிருந்த ஆடு பலத்த சத்தமாகக் கத்தியது. "உனக்கு மட்டுமே. பசி. எல்லாருக்குந்தான். உன்னையும் வித்துத் துலைச்சிட்டால்..? எரிச்சலும் ஏக்கமுமாக அவள் முணுமுணுத்தாள். காலையில் நடந்த அந்தச் சம்பவக்கொதிப்பில்" நித்தியமாய் வழக்கமாய் செய்கிற சில அன்றாட கைங்கரியங்கள் நிறைவேற்றப்படாமல் நிற்பது.கொட்டி லின் முற்றத்தில் கிடக்கும் குப்பைக் கூலங்களிலும் கவிழ்ந்து கிடக்கும் வெற்றுக் குடத்திலும் கோடிக்குள் நின்று கத்தும் ஆட்டின் கதறலிலும் தெரிகிறது. கோடிக்குள் சென்று ஆட்டினை அவிழ்த்து சபாபதி யாரின் பின் காணிக்குள் கட்டுவதற்கு அவள் போகும் போதுதான்.மார்க்கண்டு வந்து.ஆடாய்க் கத்திய அந்த சமாச்சாரம் நிகழ்ந்தது. w அவரது காட்டுக் கத்தலின் துக்கத்திற்கு ஆட்பட்டு அவற்றினைச் சமாளிக்கும் வன்மை சிறிதும் அற்றவராய் அந்த வ்ன்மையை ஒருபோதும் சுவீகரிக்கும் நோக்க மற்று. வழமைபோல் தனது மனையாளே இதற்கும மறுமொழி பகரட்டுமென்று மெளனியாகக் கப்போடு. சாய்ந்து.வானப் பெருவெளியில் 'பகல் நட்சத்திரம் தேடிக் கொண்டிருந்த மாணிக்கத்தை.கடைக்கார மார்க் கண்டு.மிக மிக நையாண்டியாக ஏசினார். “சாமான் வாங்கவெண்டால் பெடியளை பெட்டிய ளோடை அனுப்பிப் போடுவியள்.வாங்கின காசு தரத் தான் நாங்கள் வீட்டுக்கு நடையாய் நடக்க வேணும் என்ன..?கடனுக்கு சாமான் வாங்கி சாப்பிடுறதை விட. பட்டினி கிடக்கலாம். உந்தக் காசுக்கு எத்தனை நாள் நடந்திருப்பன்.உங்களுக்கு வெக்கம், மானம்.ரோசம். ஏதேனும் இருக்கே. மார்க்கண்டுவின் ஏச்சில் புதையுண்டு கிடக்கும் அர்த் தங்கள் மிக மிக கேவலமானவை. அந்த வார்த்தைப் பிரயோகங்களின் தொடர்ச்சி மிகவும் அசிங்கமானவையாகவே வெளிவரும் என்பது எல்லாருக்குந் தெரியும். தனது வார்த்தைகளை நம்பியே தான் கடை நடத்து வதாக அவரே பலருக்குக் கூறியுமிருக்கிறார். கோடிக்குள் நின்ற செல்லத்தின் காதுகளில் மார்க் கண்டுவின் வார்த்தைகள் விழவே செய்தன. “மாணிக்கா.காசு தர முடியாவிட்டால் சொல்லு?" அவர் வார்த்தைகள் இறுகி வந்தன.! மாணிக்கத்தின் மெளனம் அவரை உருக்கொள்ள வைத்தது.பலத்த சத்தமாய் அவர் கத்தினார். இறுதியில் தனது கடனுக்குத் தான் கேட்ட கேள்விகள் போதும் என்கிற முடிவுடன் அவர் நடந்தார்.
அவரது கேள்வி எல்லாவற்றையும் செவிமடுத்துக் கூனிக் குறுகி.மானமிழந்து விட்டது போன்ற நிலை யாய் கோடிக்குள் சிலையாக நின்ற செல்லத்திற்கு அவர் போன பின்பும் முன்னுக்கு வர மனமில்லாதிருந்தது. சாமான் வாங்கிய காசு அறுபத்தி நாலு ரூபா எண்பத்திமூன்று சதத்திற்காக அவர் கேட்ட அந்தக் கேள்விகள்? தான் போனவேலையை மறந்து அது மரத்துப் போய்விட நெடுநேரம் கழித்து அவள் முன்னுக்கு வந்தாள். மாணிக்கம் கப்போடு சாய்ந்து அதே வானத்தின் நட்சத்திரத் தேடல் முயற்சியில். சலனமற்று எதுவித அவளுக்கு எல்லாக் கோபமும் ஒன்றாயச் சங்க மித்து அடி வயிற்றின் புகைச்சலாய் மாற அழுகையும் ஆத்திரமும் பின்னிப் பிணைய மாணிக்கத்தின் மேல் பாய்ந்தாள். “கேட்டியளே அவன் என்னைக் கேட்ட கேள்வியளை உங்களுக்கு ரோசம் இருக்கோ, மானமிருக்கோ, என்டெல் லாம் கேட்டானே. அதுக்காகவாவது ஏதேனும் சொன்னி யளே? ஆ.நான் என்ன செய்யிறது. உங்கடை ஐஞ்சு ரூபா சம்பளத்திலை ஐஞ்சு பேரை.ஒரு நாளைக்கு தாக்காட் டிறது என்றால் கடன் வாங்கத்தானே வேணும்.என்னை என்ன செய்யச் சொல்லுறியள்? அவள் பொருமி அழுதாள். ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குடும்பத்தை மூடியுள்ள பொருளா தாரப் பிரச்சினைகள் நாட்டின் சகலவிதமான பின்தங்கிய வறிய குடும்பங்களில் குவிந்துள்ள பிரச்சினைகளுக்குக் குறைந்ததல்ல. அவன் அந்த வீட்டின் வேலையாள்" என்று குறிப் பிடப்பட்டுள்ள கூப்பன் புத்தகத்துக்குரியவன். தனது விபரமறிந்த காலந்தொட்டு உழைக்கவே செய்கிறான். பிரச்சினைகள். தீர்ந்தபாடில்லை அவனும் அவளும் இணைந்ததற்குப் பிற்பாடு எத்த னையோ சமாச்சாரங்கள் அவனது வாழ்க்கையிலும் நாட்டிலும் நிகழ்ந்துவிட்டன. ஒன்றையொன்று மிஞ்சியதால் கஷ்டநிஸ்டூரங்கள். அவர்களுடைய மூத்த பையன் "குழந்தைக் கூப்பனாக இருந்தது முதல். இன்று.கடைசிப் பையன்.குழந்தைக் கூப்பனிலிருந்து 'பிள்ளை"க் கூப்பனாக மாறியது வரையில் அவர்களது பங்கீட்டு அரிசி தொடக்கம் சீனி.மா. மிளகாய் மல்லி. ரேசன் மட்டை. பாண் மட்டை என்று எவ்வளவோ மாற்றங்கள்! அவர்களுக்கு மட்டு மல்ல. அவளைப் போன்றதும் அவனைப் போன்றதும். அவளது பிள்ளைகளைப் போன்றதுமான. வேலை யாள். சாதாரணம். பிள்ளை. குழந்தை. என்று கூப்பன்களை வைத்திருக்கும் அன்றன்றாடு உழைத்து வயிற்றுக்குள் போடும் மக்களின் வாழ்க்கையிலும் கஷ்டங் கள்தான். இதெல்லாம் தெரிந்திருந்தும் அவள் அவன் மீது சீறினாள். தனது இதயத்தின் வேக்காட்டை அவன் மீது கொட்டினாள் அவன் ஒரு பொறுமைசாலி தனது 'மனிசி"யின் கோபத்தில் உள்ள நியாய அநியாயங்களைப் பற்றி பகுத்துப் பார்ப்பதைவிட எழுந்து வெளியில் போய் விடுவது நல்லதென்ற முடிவோடு அவன் எழுந்து நடந்தான். அவள் முற்றத்தைக் கூட்டவேண்டுமென்றோ. ஆட்டை அவிழ்த்துக் கட்ட வேண்டுமென்றோ யோசிக் காது அழுது கொண்டு நின்றாள்.
அந்தக் கிழமை எடுத்த கூப்பனரிசி இரண்டாம் நாளே முடிந்து விட.பக்கத்து வீட்டில் ஒரு பேணி அரிசி கடன் வாங்கிக்காச்சிய கஞ்சியைக் குடித்துவிட்டுப் போங்கோ என்று கணவனை அழைக்கும் மனோநிலை யற்றவளாய் நின்றாள். ... ; கஞ்சியைச் குடித்துவிட்டு பிள்ளைகள் மூன்றும் பள்ளிக்கூடம் போய் விட்டார்கள். அவன்.நின்றிருந் தாலும் கஞ்சி காணாது ' என்பது அவளுக்கும் புரியும். ஆனாலும் வழமையாக கேட்பது போல் கேட்க அவனும் தனக்குப் பசித்தபோதும் இருப்பது தனது இரத்தங்களுக் கும் போதாது என்பதை உணர்ந்து “எனக்கு வேண்டாம் பசிக்கேல்லை" என்று சொல்லிவிட்டு வேலைக்குப் போவதில் ஒரு திருப்தியை இருவரும் பகிர்ந்து கொள்வது வழக்கம். அது தவறி விட்டது. இப்போது அவளின் கோபம் மார்க்கண்டுவின் மீது தான் மாறியது.காதுகளில் கிடந்த தோடுகளைக் களற்றி கொண்டுபோய் கடையில்விற்று மார்க்கண்டுவின் முகத்தில் காசை விட்டெறிந்து விட்டு அவள் திரும்பி யிருந்தாள். ஆடு மீண்டும் கத்தியதும் அவள் ஆட்டை அவிழ்த்துக் கொண்டு போய் பின் வளவுக்குள் கட்டினாள். ぶ அந்த வாய் பேசாத சீவன் மீது அவளுக்குப் பரிதாபம் பீறிட்டது.பசியின் கொடுமை அவளுக்குப் புரியும். "நீ.நிக்க வேண்டிய இடத்திலை நிக்க வேணும். ! புண்ணாக்கு வாங்கி வைக்க எங்களாலை முடியாது. எங்கை மரங்கள்ளை பச்சையிருக்கு.உன்னை விக்கத் தான் வேணும். அவன் தம்பிராசா அறாவிலையெல்லே கேட்கிறான்” “இனி . அறாவிலை எண்டாலும் விற்கத்தான் வேணும். உன்ர பரிதாபத்துக்காகவும் என்ர வாழ் மாயத்துக்காகவும்தான்.இப்ப தேரட்ன்ட அற்ா விலைக்கு விக்கேல்லையே." ヘ அவள் தனது Galen தென்பூாடில் பேசிக் கொண்டு நின்றாள். அவளுக்கும் வயிறு புதைத்து கியது.தேத்தண்ணி யாவது வைச்சுக் குடிக்கலாமெண்ட்ரில் சீனி.? மாணிக்கம் வெளி பிற்பாடு அவள் தோடு களைக் கழற்றிக்கொண்டு நகைக் கடைக்குப் போன போது சில திட்டங்களோடுதான் போனாள்.நல்ல விலைக்கு விற்றால் மார்க்கண்டுவின்ரை காசு குடுத்து மிச்சக் காசுக்கு.இரண்டு கொத்தரிசியும்.சீனி, தேயிலை யும் வாங்க வேண்டுமென்பதுதான்.அது. தோட்டை அறுபத்தைந்து ரூபாவிற்கே விற்கமுடிந்தது திட்டங்கள் தவிடுபொடியாகி மார்க்கண்டுவின் "பிசகு' தீர்ந்து அவள் திரும்பி விட்டாள். இப்போது அவள் முந்தானையில் பதினேழு சதங்கள் மட்டும்.பகற்பாடு. இரவுப்பாடு. r அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.ஐயோ இந்த நிலமையள் மாறாதா..? பஸ்சுக்குக் கட்டணம் உயர்த்தியதால் நடந்து போக தொடங்கியவர்களில் அவளும் ஒருத்தி. நடந்து வந்த களையும் மனக்கஸ்டங்களும் அவளுக்குக் கண்களில் ஒரு வித மயக்கமாக வந்தது. விளக்குமாறை எடுத்து ஒரு வேகத்தோடு முற்றத்தை பெருக்கி விட்டு மாணிக்கம் சாய்ந்திருக்கும் கப்போ சாய்ந்து கொண்டாள் செல்லம். அவளுக்கு இப்போது தன் கணவனின் மீது அனுதாப மும் எல்லையற்ற பாசமும் பிறந்தது.
"அது ஒரு வல்ல சீவன் எண்டபடியாள் இப்படிப் பேசியும் பேசாமல் இருக்குது. பாவம். அந்தாளும் என்ன செய்யிறது." கப்பு மூலையோடு கிடந்த கடகத்துள் இருந்து அடைக்கோழி கத்தியது. "இது சனியன்” என்று அதைத் தூக்கி வெளியில் எறிந்தாள் செல்லம். அது இட்ட முட்டைகள் இரண்டுந்தான் இன்று தனது பிள்ளைகளின் மதிய உணவுக்கான ஒரு இறாத்தல் பாண் வாங்க உதவியது. இது அதன் மீது பரிவை ஏற்படுத்தினாலும், இன்னும் சில நாட்கள் அந்தக் கோழி முட்டையிட மாட்டாது என்னும்போது ஒரு சுயநலம் கலந்த வெறுப்பு கோழியை விரட்ட உதவியது. செவ்வாய்.வியாழன்.சனி ஆகிய தினங்களில் அவர் களுக்கு ஒவ்வொரு இறாத்தல் பாண் கிடைக்கிறது. காலையில் E | fᎢ6Ꮱ0ᏣᏡᎢ வாங்கிவந்து வைத்துவிட்டு கஞ்சியையே குடித்து விட்டு அவளது பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றிருந்தார்கள். முதலாம், மூன்றாம், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் அவளது மூர்த்தி.மல்லிகா.கீர்த்தி.என்கின்ற அந்தச் செல்வங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள். மூன்று பேருக்கும் ஒரு இறாத்தல் பாண்" அது போதாவிட்டாலும் கீர்த்தி மூத்தவன் தன் பங்கில் விட்டுக் கொடுத்து மற்றவர்களைச் சமாளிப்பான். அது செல்லத்திற்குப் புரியும். ஒன்பது வயது நிரம்பிய அந்தப் பச்சையுள்ளத்திற்கு தமது தாய் தந்தையரின் கவலைகள் புரியாவிட்டாலும் சகோதர வாஞ்சை இருக்கவே செய்தது. அவனை ஐந்தாம் வகுப்போடு நிறுத்தி தகப்ப னாரோடு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று நினைப்பாள். ஆனால் வகுப்பில் அவனது கெட்டிக்காரத் தனத்தை யோசிக்கும்போது மனம் மறுக்கும். மாணிக்கம் கூட மகனைத் தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என்று கூறுவான். மாணிக்கம்மிகவும் மெலிந்து விட்டான். காலை யிலும் மத்தியானத்திலும் சாப்பிடாமல் ஒரு நேரத் தீனி யோடு உழைப்பதென்றால் ஏன்.அவள் காணும் அவர் களைப் போன்று ஒவ்வொரு மனிதரிலும் மெலிவு தெரியவே செய்கிறது. அவள் பருத்தித்துறைக்குப் போகும்போது வியாபாரி மூலையில் ஒரு புதுவீட்டின் கோப்பிசத்தின்மேல் சிலாகை அடித்துக்கொண்டிருக்கும் தனது கணவனை அவள் கண்டாள். சுட்டியலை உயர்த்தி ஆணியை அடிக்கும்போது அவனது விலா எலும்புகள் அவளுக்குத் தெரிந்தன. அவளுக்கு மிகவும் கவலையாக இருந்தது. முதல் நாளும் அதற்கு முதல் நாளும் மாணிக்கம் வேலைக்குப் போகவில்லை.அவனுடைய மேஸ்திரியருக்கு ஏதோ ஒரு அவசர தேவையிருந்ததால் அவர் இரண்டு நாள் வேலைக்குப் போகவில்லை. எனவே இவனுக்கும் வேலையிருக்கவில்லை. முதல் நாளுக்கு முதல் நாளிரவு அவனுக்கு பச்சை மாவில் தோசை சுட்டு அவள் கொடுத்திருந்தாள். முதல் நாளிரவு அன்னலட்சுமியிடம் ஒரு பேணி மா கடன்வாங்கி கொஞ்சமாகக் கீரை போட்டு புட்ட வித்துக் கொடுத்திருந்தாள் இப்படியான நொய்த சாப்பாடுகள் உழைக்கின்ற உடம்புகளுக்கு எந்த அளவுக் குப் போதும்? மாணிக்கத்தை நினைக்க அவளுக்கு அழுகை வந்தது.
“இண்டைக்காவது அந்தாளுக்கு சோறு குடுக்கலா மெண்டால் அவன் கடைக்காரப் பாழ்படுவான் அறா விலைக்கல்லோ தோட்டை எடுத்தான். நகைக் கடை மூலையில் ஒட்டப்பட்டிருந்த அந்த நோட்டீசின் வாசகம் அவளுக்கு இப்போது மிகவும் புரிந்தது. “மாறிமாறி ஆண்டாலும் ஏழையள் வாழ்வு கண்ணிரிலே " இதைத்தானே செல்லையாவும் கூறினான். செல்லையா என்கின்ற அவளுடைய கணவனின் தம்பி கூறும் அந்த நல்ல நிலைமையை ஆக்கக்கூடிய அரசு விரைவில் வரவேண்டுமென்று அவள் மானசீகமாக விரும்பினாள். விலைவாசிகள் ஏறாத, பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத உயர்வு தாழ்வு இல்லாத.அந்த அரசை அமைக்க எல்லாரும் ஒத்துழைக்கக் கூடாதா என்று அவள் மனதுள் முனகினாள். வள்ளியாச்சி கூட அவளிடந்தான் சாவதற்குள் இந்த நிலையைக் கண்டு சாகவேணுமென்று விரும்புவதாகக் கூறியிருக்கிறாள். கிழவியான அந்த மனுசியின் ஆர்வத்தை செல்லையா பல தடவைகள் பாராட்டியிருக்கிறான். “மச்சாளும்.அண்ணையும்தான். இன்னும்பயந்து சாகுதுகள்.” என்று அவன் நளினமாக அவளைப் பகிடி பண்ணுவான். அயலெங்கும், 'அரிசி" 'சீனி 'மா' என்று கடன். இந்த நேரத்தில் தனது மனக்கொதிப்பைக் கூறும் செல்லையா "ஒளிமயமான எதிர்காலம்” பற்றிய நம்பிக்கைக்கனவுகளில் செலவிடுவதில் அவள் தனது பசியையும தனது கணவனின் பசியையும் கணநேரம் மறந்திருந்தாள். அடுப்படியுள் ஏதோ இடறும் ஒலி கேட்டது. விளக்குமாற்றைத் தூக்கிக் கொண்டு பாய்ந்தாள் செல்லம். வரிச்சுப் பிடித்திருந்த மட்டையிடுக்குக்குள்ளால் ஒரு நாய் மதியத்துக்குப் பிள்ளைகளுக்கென்று வைத்திருந்த, பாணைக் கவ்வியபடி பாய்ந்தது. ஒரு கணம் அவளுக்குத் தலை சுற்றியது. ஐயோ கடவுளே.எந்தத் தேவடியாளின்ரை நாய்க். கோதாரி இஞ்சை வந்தது. "அடிஅடி.ஐயோ என்ரை பிள்ளையள் பசி கிடக்க. மாட்டுதுகள்." அவளுக்கு ஏனோ குரல் வரண்டு விட்டது.கத்திப் பேச முடியாமல் “எணை வள்ளியாச்சி.என்று சுரனை யின்றி கூப்பிட்டுக் கொண்டு நாயைத் துரத்திக் கொண்டு பாய்ந்தாள். நாய் உக்கி விழுந்துகிடந்த வேலிப் பொட்டுக்கால் பாய்ந்து ஒழுங்கையில் இறங்கி ஓடியது. வள்ளியாச்சி வேலியின் மூலையில் நின்று அடிஅடி என்று கத்தியும் நாய் நிற்கவில்லை. செல்லத்திற்கு உலகம் இருண்டு வருவது , போலி ருந்தது. அவள் திட்டியழுதாள். பாடசாலையிலிருந்து திரும்ப இருக்கும்.பிள்ளையள் “எணை வள்ளியாச்சி.நான் என்னணை செய்யிறது." அவள் நாயைத் திட்டியபடி புலம்பியழுதாள். ஆடு 'மே' என்று பின் வளவுக்குள் நின்று கத்தியது.
அதன் கத்தலில் பசியோடு வரும் பிள்ளைகளின் சாயல். அவளுக்கு எதுவும் புரியவில்லை. தோடு வித்த -விஷயம் முதல் சகலதையும் ஒருபாட்டம் வள்ளியாச்சி யிடம் கூறிவிட்டு, "ஐயோ வீடு வாசலை வேலி விராயை அறிக்கையாய் வைச்சிருக்கலாமெண்டால் 6 TGT GOGOT செய்யிறது. இப்ப நான் ஆரிட்டைக் கடனுக்குப் >போறது. அவன் மார்க்கண்டுவிட்டை இப்பதான் ரோசத்தோடை காசை எறிஞ்சிட்டு வந்தன். இனி. மாவுக்கு.அல்லது அரிசிக்கு அவனிட்டைப் போகவே. அவன். அவன்.” அவள் அவனையும் திட்டினாள். பேசப் பேச அவளுக்கு மயக்கமாக வந்தது. ஒய்ந்து போய் திண்ணைக் கப்போடு வந்து சாய்ந் தாள் அவள். பசியோடு வரும் கீர்த்தி, மல்லிகா, மூர்த்தியின் உருவம் அவளுக்கு மங்கலாய் தெரிந்தது. முந்தானையை விரித்து நிலத்தில் சரிந்தாள் செல்லம். கண்ணீர்.சீலையில் துளிர்த்தது. ஏதோ ஒருவித மயக்கம்.நித்திரையுமல்ல . மயக்கமுமல்ல . எவ்வளவு நேரம் கழிந்தது. *செல்லம், செல்லம்" என்று வாஞ்சையாகக் குரல் கொடுத்தபடி வள்ளியாச்சி உள்ளே வந்தாள். “எழும்படி மேனை.பெடியள் பசியோடை வரப் போகுது" கிழவியின் குரலில்..அதிகாரம் கலந்த வாத்சல் யம் குமிழியிட்டது. சிணுக்கத்தோடு "நான் என்னனை செய்யிறது" என்று ஏக்கத்தோடு முணுமுணுத்தாள் செல்லம். கிழவி கொடுப்புக்குள் சிரித்தாள்."அதுக்காகப் பிஞ்சுகளையும் பட்டினி போடப் போறியே” இந்தா இதை எடுத்து அவி. முந்தானைக்குள் இருந்த ஒரு பருத்த செஞ்சிவப்பான மண்ணப்பிய மரவள்ளிக்கிழங்கை எடுத்து அவள் முன் வைத்தாள் கிழவி. இப்போதைக்கு இதை அவிச்சு ஒரு சம்பலும் இடிச் சால் சரி. இந்தா இதிலை கொஞ்ச ஒடியலும் கிடக்குது. இதை இடிச்சு கொத்தானுக்கு இரவுக்குப் புட்டவி எல்லாம் சரி. கவலைப் படாதை. எழும்பு. தாயகம்-1974
நீண்ட இரவுக்குப் பின். அந்தப் பரீட்சை நடக்குமிடத்தைக் கண்டுபிடிக்க அரசரத்தினமும், குலமும் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டார் கள் "குலம்" கொழும்பு வாசியாகி மூன்று வருடங்களாகி விட்டாலும் தலைப்பட்டினத்தின் சந்து பொந்துகளைத் தரிசிக்கும் வல்லமையைப் பெற்றிருக்கவில்லை. காலையில் அவசர அவசரமாகக் காரியாலயத்திற்குப் புறப்பட்டு மாலையில் 'றுாம்" என்று சொல்லுகின்ற புறக் கோட்டையின் தையல் கடைப் 'புறக் கூண்டு" மேல் தட்டுக்கு ஏணியேறி வரும் வரை அவனுக்கு அவசர அலுவல்கள் அனர்த்தம். யாழ்ப்பாணத்திலிருந்து மருந்துக்குச் சிட்டை அனுப் பும் ஆயுர் வேத வைத்தியரான மாமாவுக்காக கடைகளை அலசுவதும், புத்தகத்திற்காக எழுதும் சிறிய தகப்பனாரின் மகளுக்காக ‘அற்லஸ் கோல்" முதலிய புத்தகக் கடைகளைத் தேடித் திரிவதும் இடையிடையே கோவூரைத் தேடிவரும் உறவினர் நண்பர்களை அழைத்துச் செல்வதும் புற்றுநோய் ஆஸ்பத்திரி நேர்முகப் பரீட்சையென்று வரும் வேண்டியவர்களுக்கான புகையிரத. நிலையத்தில் ‘தவங்" கிடப்பது முதல் கொண்டு மிருகக் காட்சிச் சாலை நூதன சாலை, மவுண்லவேனியா இத்தி யாதிகள் ஈறாக அவர்களை ஊர் அனுப்பும் வரை எவ்வ ௗவோ சிரமதானங்கள். குலம் மிகவும் பொறுமைசாலி. இல்லாது விட்டால் நெருக்கியழுத்தும்பொருளாதார பிடிக்குள் சிக்இ மரவள்ளிக் கிழங்கோடும் மத்திமமான சாப்பாடுமாக மல்லாடும் இந்த நிலயை உதறித்தள்ளி விட்டு ஊருக்குத் திரும்பியிருப்பான். கொழும்பில் வேலை செய்கின்ற சராசரி அலுவலகத் தொழிலாளிகளின் கஷ்டங்களை அவனும் மிகவும் வன்மையோடு ஏற்றுக் கொண்டிருந்தான். ஒரு சிலர் நினைப்பது போல் கொழும்பில் அவர்கள் உல்லாச வாழ்க்கை வாழவில்லை, என்பதை இந்த மூன்று வருட வாழ்க்கையின் மிகவும் உறுத்தலான அனுபவம் அவனுக்குக் காட்டிவிட்டிருந்தது. w யாழ்ப்பாணம் வரும்போது போலியான ஒரு கம்பீரத்துடன் மிடுக்காக பலர் வருவது போல் அவனால் வர முடியவில்லை. வெளிப்படையாகவே தனக்குள்ள கஷ்டங்களை அவன் கூறிவிடுவான். இருந்தும் அனேகர் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அரசரத்தினம் கூட அவனின் இந்த நிலயை ஒரு காலத் தில் நம்பத் தயாரில்லாமல், தானிருந்தான். கொழும்பில் ஏதோ ஒரு ராஜபோக வாழ்க்கையில் அவன் திழைப்பதாகவும் தனக்கும் அந்த நிலை வரவேண் டுமென்றும் அவன் மிகவும் விரும்பியிருந்தன்.
குலத்திற்கு எழுதும் கடிதங்களில் அரசரத்தினத்தின் அபிலாசைகள் தொனிப்பதைக் குலம் பலமுறை அவதா னித்திருக்கிறான். அரசரத்தினத்தின் அந்த 'அபிலாஷைகள்’ குலத்திற்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தும். எத்தனையோ முறை அவன் சூசகமாகவும் வெளிப்படையாகவும் எழுதி யும் ஊருக்கு வரும் போது நேர்முகமாக எடுத்துக் கூறியும் அரசத்தினத்தின் அந்த நிலையை மாற்ற முடியவில்லை. வரதன் கூறியது போல் அரசரத்தினம் படித்த பலருக் கும் அந்தப் பலகீனத்திற்கு ஆட்பட்டிருக்கிறான். அது விரைவில் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை குலத்திற்கும் இருந்தது. முதல் நாள் மாலை அவன் காரியாலயத்தை விட்டு வந்தபோது. "அதிகாலை ரயில்வே ஸ்டேசனில் சந்திக்கவும்" என்ற தந்தி அவனுக்காகக் காத்திருந்தது. முன்பே அரசு ஏதோ ஒரு நேர்முகப் பரீட்சைக்கு வருவதாகக் கடிதமெழுதிய ஞாபகம் அவனுக்கு வந்தது. குலத்திற்கு மிகவும் அனுதாபம் பீரிட்டது. இன்றைய நிலையில் கொழும்பு வந்து திரும்புவதென்றால் ஏற்படும் பணச் செலவிற்கு "அரசு படப் போகும்பாடு அவனுக்கு மானசீகமாக விளங்கியது" ரயில்வே ஸ்டேசனில் அரசுவைச் சந்தித்த போது அரசுவே அதைப்பற்றி மனந்திறந்து சொன்னான். "மச்சான் சத்தியமாயெடா அம்மாவும் அக்காவும் எனக்குக் காசு தாறதுக்குப் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. நேற்றுத் தான்ரா இந்தக் கடிதம் கிடைச்சுது. காலமை பாணுக்குக் காசில்லாமல் பட்டினியோடை கிடைக்கையுக்கை இந்தக் கடிதம் வந்தது. மத்தியானப் பாட்டுக்கு என்னவேனும் செய்ய வேணுமென்கிற யோசினையிலயிருக்க முழுசாய் ஐம்பது ரூபா வேணு மெண்டால் மச்சான்.போடுறதுக்கு லோங்சு கூட இல்லையெடா. அம்பிகை பாகனிட்டைப் போய்க் கெஞ்சி மண்டாடித்தான்ரா ஒரு லோங்சும் சேட்டும் வாங்கின் னான். மாத்திறதுக்கு வேறை சேட்டில்லை. போட்டிருக் கிற சேட்டும் பின்பக்கம் வெடிச்சுப் போய்க் கிடந்தது தைச்சுப் போட்டுக் கொண்டு வந்தனான். ஒரு சேட்டுப் பெட்டியும் கையுமாக சிவந்து நின்ற கண்களோடு புகையிரத நிலையத்தில் நின்ற அரசுவை மிகுந்த கனிவோடு நோக்கினான் குலம். அந்த அதிகாலை நேரம் யாழ்ப்பாணத்தின் -இலங்கையின் ஒரு சராசரி மனிதனைச்சந்தித்த உணர்வு குலத்திற்கு எழுந்தது. றுாமுக்குச் சென்று குளித்து உடைகளை மாட்டிக் கொண்டு புறப்படுவதற்கிடையில் அரசு எவ்வளவோ கதைகளைக் கூறி விட்டான். “மச்சான் எனக்கு ரெக்னிக்கல் கொலிச் ஸ்ரனோ சேட்டிபிக்கற் இருக்குது. வகுப்பிலையும் நான்தான் கெட்டிக்காரன். உனக்குத் தெரியுந்தானே இந்த வேலைக்குப் போட்டதற்குப் பிறகு ஒரு டியூட்டரியிலை பிறக்ரீசுக்குப் போய் வந்தனான். போன மாதந்தான் இரண்டு மாதந்தான் குடுக்கேல்லையெண்டு அந்தாள் வரவேண்டாமென்று சொல்லிப் போட்டுது. எண்டாலும் என்னாலை ரெஸ்ரை நல்லாய்ச் செய்ய முடியுமெண்ணிற நம்பிக்கையிருக்கு. நான் எடுபடுவன் நீ நம்பு.ஆரேனும் என்னோடை படிச்சவங்கள்தான் வங்கள். மிஸ் வல்லிபுரம் கொடிகாமத்திலை நிண்டு ஏறினவ.அவ என்னைவிட ஸ்பீற் குறைவுதான். ஆர் உங்கை வரப் போகினம்.ஆரேனும் சிங்களப் பொடியன்
வந்தால் அவங்களுக்குச் சிலவேளை கிடைச்சாலும் கிடைக்கும். நம்பிக்கையோடு அவன் முனகியவைகளை குலம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். தன்னுடைய உண்மையான உறுதியான வார்த்தை தள் அரசுவின் அனிச்சமலர் இதயத்தை.அதனில் தேங்கி நிறகும் பசுமையான எண்ணங்களை கசக்கி எறிந்து விடக் கூடாதென்று அவன் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொண்டான். *இந்த வேலை மட்டும் எனக்குக் கிடைச்சால். அம்மாவையும் அக்காவையும் என்ரை இரண்டு தம்பி களையும் என்னால காப்பாத்த முடியும்.” இந்த வார்த்தைகளை அரசு மிகமிக நம்பிக்கை யோடு முனகினான்.குலத்திற்கு உள்ளூரச் சிரிப்பாக விருந்தது. அவன்கூட இப்படித்தான் நினைத்திருந்தான். சுருட்டோடும் சுருட்டுக் கொட்டிலோடும் மல்லாடும் தன் தகப்பனாரை ஒய்வெடுக்க வைக்க வேண்டுமென்று அவன் மிகவும் விரும்பினான். வால்ச் சுருட்டுக்கட்டும் பையனாக இருந்து அதே நேரத்தில் படிப்பிலும் கவன மாக இருந்து ஏதோ ஒரு அதிஸ்டவசமாக கொழும்பில் ஒரு கந்தோரில் உத்தியோகமாகும் வரை அவனிடமும் அந்த நம்பிக்கை இளமையாகவே இருந்தது. இன்று அந்த நம்பிக்கை அவனிடமிருந்து வெகு தொலைவு விலகி மடிந்து போய் விட்டது. கணபதியர் இன்றும் சுருட்டுக் கொட்டிலில் மல்லா டும் மசிய நிறமான் காட்சி அவன் கண்ணில் நிழலாடியது. அழுக்குப் படிந்த பாவாடையுடன் அடுப்புக்கருகில் குந்தியிருந்து கஞ்சி காச்சும் அவன் சகோதரி புனிதத்தின் காட்சியும் புலனாகியது. இந்த நாட்டின் அடித்தளத்திலுள்ள ஒவ்வொரு பிரசையின் வீட்டிலும் அன்றாடம் நிகழும் காட்சிகளின் பிரதியீடுகள்தான் தன் வீட்டிலும் நிகழுகிறது என்பதை அவன் உணர்வான். அவனது நண்பன் வரதன் கம்மாலையின் அனல் வெளிச்சத்தில் சுத்தியலை உயர்த்தி ஓங்கிப் பழுக்கக் காச்சிய இரும்பில் அடிக்கும் காட்சி அவனுள் விரிந்தது. "குலம் இந்த நிலமையள் எலச்சனாலையோ மாறி மாறி அரசுகள் வாறதாலையோ மாறாது.இந்த நிலைமையளைக் கட்டிக் காத்து நிக்கிற அரசு அமைப்பை உடைத்து அதிலை எங்களைப் போலை உழைக்கிற மக்க ளின்ரை அரசைப் போராடி அமர்த்தாத வரையில் இது தீராது.இதுக்கு உதவக்கூடிய எங்கடை ஒரே ஒரு தொழிலாள வர்க்கக் கட்சியிலை நாங்களும் இணைந்து எங்களோடை இணையக் கூடிய நல்லெண்ணங் கொண்ட ஆக்களையும் இணைக்கிற வேலையைச் செய்து அந்தப் பொன்னான வேளையை விரைவிலை வரச் செய்யாமல் சும்மா இருப்பது மடைத்தனம். விரக்தியடைந்து போய் எல்லாத்தையும் கைவிடாமல் உறுதியாய் இருந்து கொள்." வரதனின் குரல் குலத்தின் காதில் அதிர்ந்து வந்தது. அவனுக்கும் அந்த உண்மையில் அசைக்க முடியாத நம்பிக்கையிருந்தது. அவன் அலுவலக நண்பர்கள் பலரோடு அளவளா விய போது அனேகமானவர்கள் அவனோடு முரண்படா திருந்ததைக் கண்டான், வரதனைப் போன்றே அவனது அலுவலக நண்பன் * விமலரத்தின”வும் இவனோடு பல விஷயங்களில் உடன் பட்டிருந்தான்.
காலையில் ரயில்வே ஸ்டேசனில் இருந்து திரும்பும் வழியில் "விமலை’ எதேச்சையாகச் சந்தித்தபோது *அரசு"வை அவனுக்கு அறிமுகம் செய்தான் குலம். விமல் மிகுந்த அனுதாபத்தோடு அரசுவைப் பார்த் தான். “உமது முயற்சி வெற்றியளிப்பதாக." என்று ஆங்கி லத்தில் கூறும்போது அவன் மிகவும் இங்கிதமாகவே நடந்து கொண்டான். சிங்களத்தில் குலத்தோடு கதைக்கும்போது இதே பரீட்சைக்கு தனது உறவினர் ஒருவரும் வந்திருப்பதாக வும் பரீட்சை நடக்குமிடத்தில் மீண்டும் சந்திப்பதாகவும் கூறி அவன் விடைபெற்றுக் கொண்டான். *லெஸ்லி கார்டின்ஸ்" என்னும் அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கிடையில் மப்பும் மந்தாரமுமாய் இருந்த வானம் மழையாகக் கொட்டத் தொடங்கி விட்டது. மழைக்காக ஒரு வீட்டின் முன்பக்க பிளாற்றின் கீழ் ஒதுங்கி நின்றபோது. அரசுவிடம் வரதனைப் பற்றி விசாரித்தான் குலம். *உன்னை விசாரிக்கச் சொல்லிச் சொன்னனான். எனக்கு வேலை கிடைச்சால் தனக்கும் சந்தோஷமாம் எனக்கு வேலை கிடைச்சாப்போலை பிரச்சினை எல்லாந் தீர்ந்திட மாட்டுதாம்." வரதன் என்ன அர்த்தத்தில் அதனைக் கூறியிருப் பான் என்பது குலத்திற்குப் புரிந்தது. அரசுவுக்குக்கூட அது புரிந்துதான் இருக்கும், அவன் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. "லெஸ்லி கார்டின்ஸ்'சில் உள்ள அந்த நூலக வேலை கள் சபைக் காரியாலயத்திற்கு அவர்கள் மிகுந்த அலை வுக்குப் பிறகு எட்டு மணிபோல் போய்ச் சேர்ந்தார்கள். முன்புறம் குறோட்டன் செடிகள், மண்டிப்போய்க் கிடந்த ஒரு சிறிய "மாடிவீடு'தான் அந்த அலுவலகம். அவர்களுக்கு முன்பதாக ஒரு ஐந்தாறு பேர் அங்கு வந்து விட்டிருந்தார்கள். அதில் மூன்று பேர் பெண்கள். முன்புறம் போடப்பட்டிருந்த ஆசனங்களில் அவர் களோடு அரசுவும் குலமும் அமர்ந்து கொண்டார்கள். நேரம் செல்லச்செல்ல கொஞ்சம்கொஞ்சமாக ஆட்கள் வரத்தொடங்கி விட்டார்கள். ரக்சியிலும் காரிலுமாக பெண்களும் ஆண்களும் சுமார் நாற்பது ஐம்பது பேர்களுக்கு மேல் சேர்ந்து விட்டார்கள். ஆங்கிலத் தட்டச்சாளர் ஒருவரைத் தேர்ந்தெடுப்ப தற்கான அந்தப் பரீட்சைக்குக் கிட்டத்தட்ட இலங்கை யின் சகல பாகங்களிலிருந்து முப்பது சிங்களவர்களும் இருபது தமிழர்களும் அழைக்கப்பட்டிருந்தர்ர்கள். முதலில் பகுதி பகுதியாக வேகப் பரீட்சை நடை பெற்றது. அரசு மிகத் திறமையாகவே பரீட்சையைச் செய்தான். மேல் மாடியில் நடந்த அந்தப் பரீட்சைக்கு அவனோடு மூன்று பெண்களும் ஒரு ஆணும் முதல் பகுதிக்கு அனுமதித்தார்கள். பெண்களைவிட அந்த ஆண் மிகவும் வேகம் குறைவாகச் செய்ததை அரசு அவதானித் தான். உள்ளே ஒருவித சந்தோஷம் ஏற்பட்டபோதும் அந்தப் பையன் மீது அவனுக்குப் பச்சாதாபம் ஏற்படவே செய்தது.
பரஸ்பரம் இருவரும் கதைக்கக் கூடிய சந்தர்பம் கிடைத்தபோது அந்தச் சிங்களப் பையன் ஆங்கிலத்தில் அரசுவைப் பாராட்டினான். “உம்மடை திறமையைப் பாராட்டுகிறேன். உமக்கு இந்த வேலை கிடைக்க எனது வாழ்த்துக்கள்." தனது பலவீனத்தை ஏற்றுக் கொண்டு மனந்திறந்து தன்னைப் பாராட்டிய அந்த சிங்கள வாலிபன் மீது அரசு வுக்கு ஒரு மரியாதை பிறந்தது. *ரத்னபால’ என்கின்ற அந்தப் பையனோடு மிகவும் நெருக்கமாகக் கதைக்கக் கூடிய சந்தர்ப்பமும் அவனுக்கு கிடைத்தது. வேகப் பரீட்சை முடிந்ததும் நேர்முகப் பரீட்சை மதியம் இரண்டுக்கு ஆரம்பமாகும் என்று அறிவித் தார்கள். சாப்பிடுவதற்காக *ரத்னபாலவும் இவர்கள் நுழைந்த ஹோட்டலுக்கே வந்திருந்தான். குலம் அந்தப் பையனோடு மிகவும் சரளமாகப் பேசி னான். குருநாகலைச் சேர்ந்த ஒரு வறிய விவசாயியின் மகன் தானென்று அவன் கூறினான். மிகவும் அன்னியோன்னியமாகக் கதைக்கத் தொடங் கியபோது அவன் பல விடயங்களைப்பற்றியும் பேசி னான். உண்மையில் எங்களைப் போன்ற வறிய மக்கள் சிங்களவரென்றாலும்.தமிழரென்றாலும் ஒரே விதக் கஷ்டத்தைத்தான் அனுபவிக்கிறார்கள். பணமுள்ளவன் எந்த இனத்தவன் என்றாலும் எந்த அரசு வந்தபோதும் பாதிக்கப்படுகிறதில்லை.” v ரத்னபாலாவின் பேச்சுக் குலத்திற்கு மிகவும் பிடித்த மாயிருந்தது. "நீங்கள் எங்கு வந்து தங்கியிருக்கிறீர்கள்?’ என்று விசாரித்தபோதுதான் விமல் குறிப்பிட்ட நபர் ரத்னபாலா என்பது தெளிவாகியது. விமலோடு தான் வேலை செய்வதாக குலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். “உண்மையில் எனக்கு இந்த வேலை கிடைக்க மாட்டுது என்று எனக்குத் தெரியும் என்னுடைய தகப்ப னாரின் நிர்ப்பந்தத்திற்காகத்தான் இங்கு வந்தேன். வழமையான தகப்பன்மாருக்கிருக்கிற ஆசைதான் என் னுடைய தகப்பனாரையும்`பிடித்துக் கொண்டிருக்கிறது. அது இந்த முறையோடு தீர்ந்திடும். இனி நான் வயலில் வேலை செய்கிறதை அவர் மிகவும் சந்தோஷமாய் ஏற்று கொள்ளுவர்” இதோடை நான் பத்துக்குக் கூடின பரீட் சைக்கு வந்து போயிட்டன். இதுதான் கடைசி என்று சொல்லி விட்டுத்தான் வந்தேன். வயல்லை வேலை செய் யிறதாலை அந்த மக்களோடு பழகவும் அவர்களோடு ஐக்கியப்பட்டு வேலை செய்யவும் சந்தர்ப்பம் கிடைக்கும்" அதை நான் விரும்புகிறேன் என்று மிகவும் மகிழ்ச்சி யோடு அவன் முணுமுணுத்தான். புதிய மகிழ்ச்சியின் முத்திரை அவன் முகத்தில் பிரதி பலித்தது. குலம் அரசுவை அர்த்தப் புஸ்டியோடு நோக்கினான். அரசு தலையை மெதுவாகத் தாழ்த்திக் கொண்டான். மதியம் நேர்முகப் பரீட்சை நடந்தது. அரசுவை அவர்கள் கேட்ட கேள்விகள் அரசுவுக் கிருந்த நம்பிக்கைகள் எல்லாவற்றையும் சிதறடித்து விட்டன.
“முன் அனுபவம்" இருக்கிறதா என்கின்ற கேள்வியில் புகைந்து கிடந்த அர்த்தம் வேறொரு காரியாலயத்தில் வேலையாளாக இருந்த ஒருவருக்கு வேலையைப் பொறுப் பேற்கும்படி கைகளில் கடிதம் கொடுத்து விட்டபோது தான் புரிந்தது. திரை மறைவில் என்ன நடந்ததோ தமிழரான அந்த நபர் எதுவும் சொல்லாததால் ஒருவருக்கும் புரிய வில்லை. குலம்.ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். அரசுவுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. வீட்டில் அவன் அன்னையும் அக்காவும் தனக்காக வாங்கிய ஐம்பது ரூபாவுக்காக நார்ப்பெட்டியோடு போராட இருப்பது அவன்'மனக்கண்ணில் விரிய. கண்கள் பொலுபொலுத்தன. குலம் அவனை மிகவும் தேற்றினான். "மச்சான் எதுக்காக வருத்தப்படாதை." "இல்லைக் குலம் நான் வெறும் முட்டாளேடா. இந்த ஐம்பது ரூபாவை எப்படியெடா அடைக்கிறது? நான் இனி மேசன் வேலைக்கென்டாலும் போகத்தான் போறன் இனியும் சும்மா வரட்டுத்தனமாய் இருக் கேலாது. "குலம் மிகுந்த சந்தோஷத்தோடு அரசுவின் கைகளை பற்றினான். "மச்சான் பாத்தியே ரத்தினபாலாவைப் போலை யும் உன்னைப் போலையும் எத்தினை தமிழ் சிங்களச் சீவன்கள் கஷ்டப்பட்டு வந்ததோ தெரியாது, நாங்கள் கதைச்சதாலை எங்களுக்குப் பிரச்சினை விளங்கிச்சுது. மற்றதுகள்? ‘குலம் உத்தியோகம் கிடைக்காது என்கிறதாலை மட்டும் நான் இந்த முடிவுக்கு வரயில்லை. நீங்கள் படுகிற கஷ்டத்தைப்பார்த்த பிறகும் இந்த நாட்டிலை இருக்கிற பிரச்சினையைத் தீர்க்கிறதுக்கு நீங்கள் சொல்கிற மார்க்கந்தான் சரி எண்டு எனக்கு விளங்கி விட்டது. நானும் வரதனோடை சேர்ந்து உழைக்க வேணும். இண்டைய நிலையில அது கூடக் கிடைக் குமோ தெரியாது. 'ரத்தினபாலா’ போல நானும் விடவுக்கான மார்க்கத்தைக் காண உழைக்கப் போகி றேன். அந்த நிலை வந்தால்தான் விடிவும் இந்த நிலைக்கு முடிவும் வரும். என்னை நம்பு. நான் திருந்தி யிட்டன். புகையிரத நிலையத்தில் அரசுவை மெயில் வண்டி யில் ஏற்றி யாழ்ப்பாணம் அனுப்பும் போது குலத்திற்கு, என்றுமில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. நீண்ட இரவு கழிந்து அதிகாலை வேளையில் அந்த வண்டி சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் தரித்த போது ஒரு புது மனிதனாகவே கீழே இறங்கினான்.
பயணத்தின் முடிவில் முன்னொரு தடவையேனும் வந்த பரிச்சயம் இல்லாத நிலையில் கையில் சூட்கேஸ் சகிதம் அவன் அந்த பஸ்சை விட்டு இறங்கினான். "யாரைக் கேட்பது.? யாரிடம் விசாரிப்பது.? எதுவுமே தெரியாத புரியாத சூனிய நிலை. வாய் இருக்கிறது. பகல் நேரம். இந்த இரண்டு நம்பிக், கையும் அவனை ஒரளவு துணிவுறச் செய்தது. ஆனாலும் " விசாரித்து அறிந்து அந்த மனிதனின் முன்பு கூனிக்குறுகித் தெண்டனிடவேண்டு மென்கின்ற கூச்சம் அவனை மேலும் தயக்கமுறவைத்தது. தனது இயலாமையையும் அந்த நிலைமைக்கான காரணத்தையும் தனது தமயனையும் அவன் மிகவும் இடிந்து கொண்டான். சூட்கேசில் கனக்கும் காகிதக்கட்டுக்களும் ஒரு சாரமும், துவாயும் மிகமிக பாரமாகி அவனது கையை இழுப்பது போன்ற பிரமை. “புறப்படுகின்ற பஸ்சில் ஏறி, திரும்பவும் யாழ்ப் பாணத்திற்கே போய் விடுவோமா?" விபரீதமான எண்ணமொன்று தலைதூக்கி அவனைச் சஞ்சலமுற வைக்கிறது. விடிகாலையில் பஸ் நிலையத்தில் அவனை வழியனுப் பும் போது தமையனார் கூறிய வார்த்தைகளை அவன் நினைவு கூர்ந்தான். “நான் எல்லாம் அவரோடை கதைச்சனான்.எப்பிடி யும் செய்து தருவார்: சேட்டிவிக்கற்றுக்களைக் காட்டு. அருள்நாதனுக்கும் தேவனுக்கும் அவர்தானே செய்து குடுத்தவர்.நீ.உன்னிலைதான் இனி விசயமிருக்குது. எங்கடை கஷ்டத்தைப் பார்த்து நடந்துகொள்.” தனது குணத்தைப்பற்றி நன்கு அறிந்திருந்தமையால் ஒரு நிதானத்துடன் அவர் வார்த்தைகளை உபயோகிக்கி றார் என்பதை அவன் சட்டென இனங்கண்டு கொண் L- frer. அந்த நேரமே அவனுக்குத் தன் பிடிவாத குணங்கள் யாவும் விலகிப்போய் விட்டதான ஒர் உணர்வு எழுந்தது. “தந்தியடிச்சபடியால் ஆரையேனும் பஸ்ராண்டுக்க அனுப்பி இருப்பார் பயப்பிடாதே" கண்ணாடிப்புறம் எட்டி உரக்க அவர் கூரிய வார்த்தைகள் பஸ்சின் உன்னலி லும் அவனுக்கு மிகத் தெளிவாகக் கேட்டன. அருள்நாதனைப்போல் ஒரு கூட்டுத்தாபன உத்தியோ கத்தராக அல்லது தேவனைப்போல ஒரு பாடசாலை ஆசிரியராக தன் தம்பி வரவேண்டுமென்கின்ற விருப்புக்கு அவர் ஆட்பட்டுப் போயிருப்பதை அவன் சிலநாட்களாக அவதானித்து வந்திருக்கிறான். "உடனடியாகத் தங்களை அனுப்பிவிடவும்” என்ற அந்தத்தந்தி செய்தி கிடைத்ததும் அவர் கொண்ட பரபரப் பும் பதட்டமும் அவனை மிகவும் விசனத்தில் ஆழ்த்தியது. “அவங்கள் ஒரு அதிஷ்டக்காரங்கள். உனக்கும் அப்பிடி ஒரு அதிஷ்டந்தான் வந்திருக்குது."
குசினிப்புறமிருந்து அவனது அண்ணி மெல்லிய" குரலில் கூறிய நம்பிக்கையான வார்த்தைகளை அவன் எண்ணிப் பார்த்தான். குடும்பமென்ற பெரும்சுமையின் பாரத்தை வலுக்கட் டாயமாகச் சுமந்து நிற்கும் அவர்களுக்கு ஒரு விதத்தில் தன்னாலும் உதவி செய்யமுடியும் என்கின்ற நம்பிக்கை விழுதூன்றியபோது அதனை அவனால் மறுதலிக்க முடிய வில்லை." விடியலில் எழுந்து துறைக்குப் போய், சீலையோடு மாரடித்து, மருந்து நனைத்து, நீலம் தோய்த்துக் கஞ்சி முறுக்கிக் காயவைத்து, பிறகு இஸ்திரிக்கைப் பெட்டி யோடு மல்லாடும் தனது தமையனைப் பற்றி அவன் நினை வுக்கு வந்தது. பெரிய குடும்பம். ஏழுபேருக்கு மேற்பட்ட உறுப்பினர் கள். சோடா, நீலம்,கரி? விலை ஏற்றம் முடிவு.ஏதோ ஒரு தூரத்து உறவினரிடம் கையேந்த வேண்டிய ஓர் இக்கட் டான நிலை. அதன் விளைவு தந்தியாக உருமாறி வீடு தேடி வந்து அவனைக் கெதிகலங்கடித்துக் கொண்டிருக்கின்றது. வெள்ளாவிக் கொட்டிலில் துறையடியில்.சீலைகாயப் போடுமிடங்களில் அவனது அண்ணனும் அண்ணியும் கூறியவற்றையெல்லாம் சகிப்புத்தன்மையோடு அவன் கிர கித்துக் கொண்டான். சூட்கேசும் கையுமாக பஸ்ராண்டில் நின்றுகொண்டி ருக்கும் அந்த நேரத்திலும் தனக்கு அது எப்படிச் சாத்திய மாயிற்று என்பதைப்பற்றியும் சிந்திக்கலானான். தெரிந்த முகங்களைத் தேட வேண்டிய அவசிய மல்லை.தடிப்பான கண்ணாடி பிரேம் போட்ட கரிய குட்டையான அந்த மனிதன் சில நேரம் வந்திருக்கலாம். "நீர் தங்கராசாவா?" தோளில் தட்டும் ஒரு நம்பிக்கையான கேள்வி. "ஓம்" என்பது போல் தலையசைத்து, அந்தமனிதனை அவன் ஏறஇறங்கப் பார்த்தான். “இப்ப முதூருக்க ஒரு லோஞ்ச் இருக்குது. போவம்" ரக்சி ஒன்றைக் கை தட்டினார் அந்த மனிதர். ஜெற்றிக்கு விரையும் போதும்.லோஞ்சில் ஏறி அது புறப்படும் வரையும் கூட அவன் அந்த மனிதருடன் எதுவும் பேசவில்லை. சில நிமிடங்களின் பின் அவன் கேட் டான். “எப்பிடி என்னைக் கண்டு பிடிச்சியள்.?” “அது ஒன்றும் கஷ்டமில்லை. சீ.சீ சொன்னவர். பஸ்ராண்டில ஆரேனும் பஸ்சாலை இறங்கி முழுசிக் கொண்டு நிண்டால்.அது நீராய்தானிருக்குமென்று, நான் கண்டுபிடிச்சிட்டன்” கலகலப்பாக அந்த மனிதர் பேசியது அவனுக்கு “சுரீர்” என்றாலும் மெதுவாக அவன் சிரித்தான். தொலைதூரம்.சமுத்திரத்தின் அந்தத்தில் தெரியும் அடிவானக்கறுப்பில் நீளமாகத் தெரியும் நிழல்களையும். வெளிச்சவீட்டையும் உற்றுப்பார்த்தபடி அவன் அமைதி யாக நின்றான். பல தடவைகளில் அந்த மனிதருடன் அலட்சியமாக நடந்து கொண்ட நினைவுகள் ஏனோ அவனுள் திரும்ப வும் திரும்பவும் அலையெழுந்து வந்தன "தலைக்கனம்பிடித்த.மிருகங்கள்.” மூதூர் மண்ணில் கால் பதிக்கும் வேளையிலும் அந்த எரிச்சல் எப்படியோ பீறிடவே செய்தது.
"இவ்வளவு தூரம் வந்திட்டு இனி. உதைப்பாக்கே லாது." அந்த மனிதனைத் தொடர்ந்து உறுதியோடு நடந்தான் அவன். அவன் மூதூருக்க வந்து மூன்று நாட்கள் அந்தக் கடற் கரையும், தென்னஞ் சோலைகளும்.மரஞ்செடிகொடிக ளும் ஏதோஒரு சினிமாவில் பார்த்த காட்சி ஒன்றின் பிரதி பலிப்பாகி. அவனுக்கு மூதூர் மிகவும் பிடித்துக்கொண்டுவிட்டது. வந்த காரியம்.? அன்று மாலை அவனே அதைக் கேட்பது என்ற முடிவு செய்து கொண்டான். லைபிரரி வாசலில் உட்கார்ந்திருந்த அவனை, கந்தோர் பீயோன் தேடி வந்தது அவனுக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. "தம்பி’ உங்களை ஐயா கூட்டிக்கிட்டு வரச் சொல்லிச் சொன்னாரு..." மூதூருக்க வந்த பிறகு அவரும் அவனும் பரஸ்பரம் கதைக்கக்கூடிய சந்தர்ம்பம் ஏற்படவில்லை. அவனது பொழுதுகள் லைபிரரியிலும்.தியேட்டரி லும்.தேநீர்க்கடைகளிலும்.பள்ளிவாசல் முகப்பிலும். தேவாலயத்திலும். இறங்குதுறையிலுமே கழிந்தது. நீண்டதான மூன்று பகல்கள். ஏதோ ஒரு நெருக்கமுறாத அன்னியத்தன்மை வாய்ந்த தவிப்பு வேண்டுமென்றே செய்துகொண்டதான புறக் கணிப்பு. கந்தோர் வாய்பிலைக் கடந்து பின்புற தனி அறைக்கு அவன் விரைந்து நடந்தான் *எப்பிடிமூதூர் பிடிச்சுதா?” அன்று காலையில்தான் வந்தவனை விசாரிப்பது போன்ற பாவனை. “ஒ.நல்லாய் பிடிச்சுக் கொண்டுது.” அவனும் அதே தொனியில் பேசினான். அவர் அவனை கதிரையில் உட்காரும்படி கூறிவிட்டு தன் முன்னால் விரித்திருந்த பெரிய கொப்பி ஒன்றில் மூழ்கிவிட்டார். அவன் அந்த மனிதரின் பின் புறமாகத் திறந்துவிடப் பட்டிருந்த ஜன்னலால் தெரியும் காட்சிகளை சலனமற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். ஜன்னலுக்கு வெளியே மூதூருக்கு வெளிச்சந்தரும் ஜெனறேற்றர் நிலையம் தெரிந்தது அதற்கப்பால்.கால் வாய்க்கு மேல் வளைந்து தெரியும் பாலம். அமெரிக்கன் பிளான் கல்வீடு. உடுப்புக்களை காயப்போடும் ஒரு இளம் பெண். ஊஞ்சலாடும் ஒரு சிறுமி.கிணற்றில் தண்ணீர் அள்ளும் ஒரு அழகான பெண். அவனது பார்வை திரும்பவும் உள் மீண்டு அவரில் நிலைத்தது. . சில கணங்கள் மடிய அவர் மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தார். ‘'தேவன், அருள்நாதனாக்காள் உம்மோடை எப்படி..?” *என்னோடை அவ்வளவு பரவாயில்லை.நல்ல சினேகிதம்.” “அவையள் என்னட்டை வந்ததாலைதான் இப்ப நல்லாயிருக்கினம். இல்லாட்டி உம்மைப்போல.
இப்பவும் தெருவழியதான் திரியவேண்டும் உம்மடை விசயத்தையும் நான் கவனிப்பன்." அவருடைய வார்த்தைகள் கல்லில் விழும் அடிபோல் நெஞ்சில் தாக்குவதை அவன் உணர்ந்து கொண் 4 - fᎢ6ᎿᎢ . தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்த அவன் முன். லாச்சியைத் திறந்து இரண்டு மூன்று பைல்களைத் தூக்கிப் போட்ட அவர்; *இது என்ன தெரியுமா?. என்பது போல் அவனைப் பார்த்தார். 'இது அருளின் ரை. இதில் அவன் எனக் கெழுதின கடிதங்கள் இருக்கு, இது தேவன்ரை இது அல்பிரட் டின்ரை, ஒருகாலத்திலை இது தேவைப்படுமெண்ட ப்டியால் வைச்சிருக்கிறன்.” ஒரு மெல்லிய நையாண்டலோடு , அந்த வார்த்தை களை அவர் பேசினார். அவன் திகைப்போடு அவரைப் பார்த்துக் கொண்டி ருந்தான். இதெல்லாம் தேவையில்லா விசயங்கள் இதுகளை ஏன் எனக்குக் காட்ட வேணும்.? அவன் மெளனியாகவே இருந்தான். அவர் கேட்டார். "நீர் எப்ப ஊருக்குப் போநீர்.” தர்ம சங்கடமான கேள்வி. "நாளைக்கு." "புதன்கிழமை போகலாம் தானே." அவர் அவனை இடைமறித்தார். அவனுக்கு எதுவும் புரியவில்லை. "புதன்கிழமை நாளையின்டைக்குத்தானே. சில விசயங்களிருக்குது.நீர் புதன்கிழமைதான்.போகிறீர்அவர் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மறுநாளும் ஒரு மெளனத்திலேயே பொழுது கரைந்தது. இரவு அவர் கூறினார். ‘ஊரிலை மா, அரிசி தட்டுப்பாடு.தங்கச்சியின்ரை கலியாணமும் வருகுது. நான் கொஞ்சம் சாமான் வாங்கி வைச்சிருக்கிறன். அதைக் கொண்டு போய் வீட்டிலை குடும்.வீட்டிலை வேலி விராயன் அடைக்க வேணும்.கன வேலைகள் கிடக்குது.நீர்தான் நிண்டு செய்யவேணும். அங்கை ஆம்பிளையாருமில்லை.” அவர் ஒரு கீழிறங்கினதொனியில் பேசுவது போல் அவனுக்குபட்டது. விசயம் எல்லாம் புரிந்து விட்டது போன்ற நிலை. அவன் தீவிர சிந்தனையில் புதைந்து போனான். இஸ்திரிப்பெட்டி.துறை.லோன்றி. இரவு முழுக்க அவன் சிந்தித்தபடியே படுத்திருந் தான். பாரிய சாமான்சுமையொன்றை பியோன் ரஹீமிடம் கொடுத்து ஜெற்றிக்கு அவனை அனுப்பும் போது அவர் கூறினார். “வீட்டலுவல்களை மறக்க வேண்டாம். முதல்லை சாமான்களைக் குடுத்திட்டுத்தான்.பிறகு உங்கடை வீட்டுக்குப் போம்.” ஜெற்றிக்கு வரும் வரை ‘ஒரு நிதானமான மெளனத் திலேயே நடை கழிந்தது. வெடிக்கத் தயாராகும் எரிமலையின் அமைதி.
அவன் லோஞ்சியில் ஏறினான். எரிமலை பயங்கரமாக வெடித்தது. றஹீம் திகைத்துப் பொறிகலங்கி நின்றான். சாமானையும் றஹீமையும் மூதூரையும் பின் தள்ளி வேகமாக நகர்த்தது லோஞ்சி. புள்ளிகளாக கோடுகளாகத் தெரியும் தென்னஞ் சோலைகளை. வெளிச்சவீட்டை வெறிக்கப் பார்த்த படி நின்ற அவனின் பார்ன்வ நெடுமூச்சோடு சமுத்திரத் தில் லயித்தது. வீட்டில் வெடிக்க இருக்கும் பூகம்பம்.அதன் விளைவு.? "துறை, இஸ்திரிகை, லோன்றி.” எதையும் எதற்கும் தயாரான ஒரு ஒர்மம் அவனுள் படிந்து இறுகியது. மத்தியானத்திற்கு சற்றுப் நவீன சந்தையின் முன்னே ஆஸ்பத்திரி வீதிக்கும் கஸ்தூரியார் வீதிக்கும் குறுக்காக அந்த நண்பனை இவன் தரிசனம் கொண்டான். ஸ்ரீரியோ போகும் இதமான ஆங்கிலப்பாடலை எதிர் கொண்டு அவன் இவனைத் தேநீருக்கு அழைத் தான். ‘எப்பிடிச் சுகம்.? கண்டு கனநாள். தோழர் கள் எல்லோரும் சுகமா..?" - சரமாரியான கேள்விக்கு விடைகூறு முன்..கேள்வி கள்..கேள்விகள். உரிமை நிறைந்த பரிவு. ஆர்வம். பொனி 'எம்' பாடல் ஒன்று ஸ்பீக்கர் பொக்சில் ஸ்ரீரியோவாவாக இழைந்தது. "எவன் சுயநலத்தோட.எங்களை விட்டு விலகினா லும் கவலையில்லை.எங்கடை கொள்கை தான் சரி. ரஷ்யா பிழைச்சிட்டுது எண்டதுக்காக.எல்லாத்தை யும் விட்டிட்டா இருந்தம்" உற்சாகத்தோடு அவன் பேசினான். கறுப்புப் பிரேம் போட்ட கண்ணாடி.சில்வர்ப் பிரேமாக மாறியிருந்தது. முன்னைய விடச் சற்று மெலிந்தது போல்.கண்களின் தீட்சண்யம் முன் போலவே.
சுமார் பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் எங்கோ ஏதோ ஒரு பகிரங்கச் சொற்பொழிவிலோ அல்லது ஊர்வலத்திலோ இந்த இவன் அவனைச் சந்தித் ததாக ஞாபகம். அன்றும் இன்றும் மாறாமல் ஒரே தோற் றத்தினனாய். நகரத்தின் தரிசனம் கிடைத்த அந்தப்பழைய நாட்கள்' இவனுள் நிழல் தட்டியது. கட்சிக் காரியாலயதின் மேல் மாடியில்.முனிஸ்வரன் வீதிப் புத்தகக் கடையில்.காந்திகபேயில்.திருநெல்வே லிச் சந்தியின் கோவில் முகப்புக் கொட்டிலில். ரீகலின்" எதிர்ப்புறத் தகரக் கொட்டகைத் தேநீர்க்கடையில். எத்தனை தடவைகள் எத்தனை தேநீர்கள். ஒவ்வொரு தடவையிலும் சோர்வு தட்டாத உற்சாகமே புதிது புதிதாகப் பிரசவம் கொண்டது. நம்பிக்கையோடு விசுவாசமாகப் பழகிய சில தன்ன லவாதிகளின் துரோக நடவடிக்கைச் சோர்வுகளுக்கு இந்த இவனது போன்ற பரிவுகள் உயிர்ப்புக்களாயின. “கிளிநொச்சியில்ல. உம்மையும் சிவமாக்களையும். லொக்கப்பிலை வைச்ச அண்டைக்கிரவு. யோகன் மூடிக்கொண்டுபடுத்திருக்கையிக்கையே எனக்குச் சந்தே கம். உவன் மாறுவனெண்டு." உறுதியோடு விரலை நீட்டிப்பலத்துச் சொன்னான் அவன். இவனுக்குச் சிரிப்பு வந்தது "எவன் கொள்கையை விட்டிட்டு வசதிகளைப் பாக்கத் துவங்கிறானோ அவன் எங்களோடை இருக்க ஏலாது. உதுதான் முந்தியும். நடந்தது. அதை விடும்” இடை வெட்டி முத்தாய்ப்பு வைத்த இவன் சற்று நேர மெளனத்தை விழுங்கி.கொடுப்புக்குள் சிரித்தபடி அவனைப் பார்த்தான். கண்ணாடிக்குள்ளால் இவனை ஏறிட்டவன் சிரிப் பின் அர்த்தம் என்னவெனக் கண்டு தானும் மெல்லச் சிரித் தான். * என்னர விசயம் பற்றிக்கேக்கத் தானே நினைக்கி lர். இனியும் காலங்கடத்திறது சரியில்லை எண்டுதான் எல்லாரும் சொல்லுகினம்." ஓர் இரவு முனீஸ்வரன் வீதியின் புத்தகக் கடைப் பின்புறத்தில் ஐந்தாறு புத்தகக் கட்டுக்களை தலைய ணையாக்கி மெல்லிய கடதாசிப் பேப்பரை பாயாக்கி பறக்கும் நுளம்பைச் சிகரெட் புகையால் விரட்ட எத்த னித்து உடல் சரிந்த நேரத்தில் கதையோடு கதையாசு இந்த விசயத்தை அவன் இவனுக்கு உடைத்தான். ஒரு கணம் இவனால் அதனை நம்ப முடியாது இருந். தது. “காந்தன் உண்மையாய்த்தான் சொல்லுறீரோ” கேள்வியிலேயே சந்தேகம் ஊடாடியது. “நிச்சயம்.அது என்னோடை பஸ்சிலை ஒன்றாக வாறது.நானே நேரிலை கேட்டுப்போட்டன். என்னைப் பொறுத்த வரையில்ல எனக்கு விருப்பம்.நான் ஆருக் கும் பயப்படவில்லை.” இரவின் மெல்லிய குளிரின் இதத்தில் அவன் சரிந்து கிடந்து சற்றுச் சூடாகப் பேசினான். இதற்கு முன் அவர்கள் இருவரும் இப்படியான பேச்சுக்களைப் பேசியதில்லை: அரசியல் பற்றியும், இலக்கியம் பற்றியும் நிறைய நிறையப்பேசியிருக்கிறார்கள். ஊர்வலத்தில் கோஷமிட்டிருக்கிறார்கள். நோட்டீஸ் விநியோகித்திருக்கிறார்கள். போஸ்ரர் ஒட்டியிருக்கிறார்கள்.
இப்படியான விசயங்களைப் பற்றிக்கதைப்பது ஏதோ தகாதது என்ற நோக்கில் அல்லாது.இதுபற்றிய அவசர அவசியமற்ற சந்தர்ப்பங்களே அவர்களுக்கு ஏற் பட்டது. ஏற்பட்டிருந்தது. கிராமமுமற்ற...நகரமுமற்ற இரண் டும் கெட்டான் பிரதேசத்தின் பல சரக்குக் கடையொன்றில் விற்பனை யாளனாக அல்லாடிய இவனுக்குத் கடந்து போய்விட்ட இருபத்தெட்டு முப்பது வருட வாழ்க்கையின் இடர்பாடு கள் களைவதற்குரியன என்ற விருப்பு ஏற்பட்ட போதே தத்துவத்தின் நெறிப்படுத்தலுக்குரிய இயக்கமொன்றில் ஐக்கியமாகினான். தொழில்நுட்பக் கல்லூரியில் சான்றிதழ்களும், பரீட் சைப் பெறுபேறுகளும் வறுமைக்கும் பசிக்கும் விடை யளிக்கவில்லை. முடிவு இவனுக்குத் தேவையாகவிருந் தது. இதன் தேடுதலின் முனைந்து நிற்கும் போது ஏற் படும் சந்திப்புக்கள் அது பற்றிய கதைகளிலேயும் செயல் களிலேயுமே கழிந்தன. ஒகஸ்ட் எழுபத்து ஏழின் பரபரப்பான அந்த நாட் களின் சிங்களமாணவர்களைத் தென்னிலங்கைக்கனுப்பும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்த வேளைகளில் அவனுக்குத் கலியாணம் நிச்சயமாகி இருப்பதாக அறிந்தான். அது பற்றிய விடயங்கள் கேட்காமலேயே அடிபட் டுப் போய்விட்டன. அகதிகள் முகாமில் ஒரு பகற் பொழுது பரபரப்பான சமையலில் லோங்சை முழங்கால் வரை மடித்து விட்டு மிக உற்சாகமாக ஈடுபட்டுநின்ற அந்த வேளையிலும்கூட யாரோ "அவனுக்கு வரப்ப்ோகும் மனைவி கொடுத்து வைத்தவள்’ என்று கூறிய வார்த்தைகளின் பின்னணியி லேதான் அந்த விசயத்தை இவன் நினைவு கூர்ந்தான். பஸ்சில் வரும் போது அது பற்றிக் கேட்க எத்தனித் தும் விசயங்கள் வேறு குறுக்கிட்டு விலகிப்போனதன்பின் அந்த இரவில் அவனே இவனுக்கு விசயத்தை மெல்ல ஓதினான். "தேவா.என்ரை முடிவு.சரியா? ..இவன் இருட்டில் மெல்லச் சிரித்தான். 'எனக்குக் காந்தன் உம்மடை பிள்ளையைத் தெரி யாது. உம்மைப் பொறுத்த வரையிலை ஐ மக்கு ஒரு கலியாணம் தேவை. எத்தினை நாளைக்கு கடைச் சாப்பாடு சாப்பிடப் பேர்ஹீர். அதிலையும் நீர் விரும் பின ஒரு பிள்ளையைச் செய்யிற தொண்ட முறை யிலை உமக்குப் பொருத்தமானதாகத்தான் இருக்கு மெண்டு நினைக்கிறேன்," ஒரே கணத்தில் அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி யிட்டு விசயத்தை நிறுத்தினான். மில்லில் பல தடவைகள்.இரவில் பகலில் இதுபற் றிய கதைகள் ஓரிரு வசனங்களுடன் முடிந்ததுண்டு. நெத்தலியாற்றின் சலசலக்கும் நீரில் சிவமும் இவனும் குளித்த ஒருநாளில் காந்தனின் பிரச்சினை ஒன்றைப்பற்றி இவன் அறிந்தான். அது கைகலப்பில்லா மல் மெதுவர்க முடிவடைந்தது என்று பின்னர் இவன் அறிந்து கொண்டான் V காந்தனைப் புரிந்து கொண்ட இவனுக்குச் சில காலம் வியப்புக்கள் தோன்ற ஆரம்பித்தன. நேரமற்றுப் பொழுதற்றுத் தொடரும் கதைகள் இடை முறிக்கப்படுவதும்.செயலில் பரபரப்பு மாறி வருவதும். ஏதோ ஒரு அவசரத்திற்கு ஆட்பட்டவனா கக் காந்தன் மாறிவிட்டதும் புலனாகியது. இரவில் தனிமையில் நெடுநாட்கள் நுளம்பு விரட் டிக் கொண்டிருந்த நிலைமைகள் மாறிப் பல நாட்கள் ஆகிவின்டன.
காந்தனின் மாறுதல்கள் நன்மையாக இருக்க வேண் டும் என்று இவன் விருப்பம் கொண்டான். அவன் ஏதோ ஒரு உரிமைக்கு ஆட்பட்டு, தனது முழுத்தன்மை களிலும் சில மாறுதலுக்குட்பட்டு விட்டமையை இவன் உணர்ந்து கொண்டான். அதில் இவனுக்கு ஒரு மகிழ்வே மீந்திருந்தது. நவீன சந்தையின் மின்சார உபகாரணக் கடை மின் விசிறிச் சுழற்சியில் கீழ்.கலகலத்துச் சிரிக்கும் நிறைவு களில் காந்தனின் எதிர்காலம் பற்றிய கனவுகளை இவன் பரிமாறிக்கொண்டதுண்டு. அப்போதும் அத்தகைய ஒரு மாறுதல் கர்ந்தனின் ஏற்பட்டதற்குரிய ஆச்சரியம் சகலதையும் மீறித் தலை தூக்கவே செய்யும். மாநகரசபை உத்தியோகம்.எதிர்கால இலட்சியங் கள்.வாழ்க்கைச் செலவுகள்.இது சவால்களேதான். காந்தனே பலதடவைகள் கூறியிருக்கிறான். மூதூரின் த்ென்னைமரச் சோலையிலும்.திருவடி நிலையின் கடற்கரையிலும் பம்பலப்பிட்டி ரயில்வே ஸ்டேஷன் பாலத்துப்படிக்கட்டிலும் இருந்து இவனுடன் நெருக்கமாகக் கதைத்த அந்த ஒரு நண்பனை இவன் நினைவு கூர்வான். உத்தியோகம்.வசதி என்று வந்து விட்டால் உறவு. நட்புயாவும்.போலிதானா..? *ஜெகதீசா நீ சந்தோசமாயிருந்தால் போதும். என்னோடை நட்பாக இருப்பதாலை உன்னுடைய வீட்டார் உன்னைக் கோவிப்பதை நான் விரும்ப வில்லை." ஏதோ திகதியிட்ட கடிதமொன்றில் அவனது நட் புக்கு முற்றுப்புள்ளியிட் மையை இவன் நினைவுகூர்த் தான். தேநீரை மெல்ல உறிஞ்சியபடி அவன் இவனை நெடு நேரம் உற்றுப்பார்த்தபடி அமர்ந்திருந்தான். மெளனம் மெல்லக் கரைய இவன் பேசினான். 'உம்மடை பிள்ளை ஏ.எல். படிக்கிறதென்டு சொன்னதாய் ஞாபகம்.இப்பத்தைய இளம் வயதுப் பிள்ளைகளுக்கிருக்கிற போலித்தனங்கள் அதுகளுக்கும் இருக்கத்தான் செய்யும்.உம்மடைபக்கம் வென்டெடுக்க வேண்டியதுதான் நீர்செய்யக்கூடிய ஒரு வேலை-அதை முதலிலை செய்யவேணும்." காந்தன் மெளனித்தான் தலை சற்றுமுன் சரிந்தது. கண்ணாடிப் பிரேம்மெல்லக் கழன்றுவர நடுவில் கைவைத்து நகர்த்தி தலையை நிமிர்த்தினான். ‘முதல்லை உம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள வேணும். உலகத்தை நீர் உணர்ந்தது போல அவவுக்கும் உணர்த்த வேணும்.கூட்டுக்குள்ள தலையைக் கொடுத்து விட்டு மேதாவியைப் போல பேசுறதும் சடுதியாகச் சோர்வடையிறதும் இப்பத்தைய பிள்ளையளின் ரை குணம்.” காந்தன் ஆச்சரியத்தோடு இவனைப் பார்த்துச் சிரித் தான். தேவாவும் சிரித்தான் “உங்கடை அனுபவம் எனக் கில்லை.எனக்குப்பட்டதைச் சொல்லுறன். அவ்வளவு தான மீண்டும் அவன் சிரித்தான். பொனி 'எம்' மின் முடிவுக்குப் பின் ‘சன்ரானா'வின் வீறையும் தவிர்த்து அமுங்கிய குரலில் இவன் முனகினான்.
"எங்கடை பூரண ஆதரவு உமக்குண்டு. கெதியிலை கலியாணச் சாப்பாடு தேவை. முதல்லை கொஞ்சக் காசைமிச்சம் பிடிக்கப் பாக்கவேணும்." "அது போக.கேக்க மறந்து போனன். இப்பவும் கடையிலை தானோ.." சடுதியாக இவனைக் கேட்டான் காந்தன். தேவாவின் முகத்தில் ஒரு சோகம் நிழலிட்டது. 'இல்லைக் காந்தன். சம்பளங்கட்டாது. இப்ப நான் பொலிகண்டியிலை. சூடைதெரிக்கப் போறன்.ஒரு மாதிரிப் பொழுது கழியுது.கஷ்டந்தான்." காந்தன் இவனை விழி விரியப் பார்த்தான். ‘என்ரை நிலைமை மிகமிகப் பெரிசு. தம்பிமாரும் கஷ்டப்படுகிறார்கள். அப்பரைப் பாக்கத்தான் இப்பப் ஆசுப்பத்திரிக்கு வந்தனான். அந்த மனிசனை இந்த வயசிலையும். கண்கலங்காமல் காப்பாத்த முடியேல்லை எண்ணிற கவலைதான்...எனக்கு." தேவாவின் குரல் தளதளத்தது. 'உடம்பிலை வலுவிருக்கிற வரையும் உழைப்பன். வாழுவன்" உறுதியாக அவன் அந்த வார்த்தைகளைக் கூறினான். 'எனக்கு உத்தியோகம் எடுத்துத்தாற தெண்டால் தன்ரை மகளைக் கலியாணம் செய்யச் சொல்வி “ஒருத்தன் கேட்டான்.மாட்டனெண்டு சொல்லிப் போட்டன்." "கலியாணமும் வேலையும்.இப்ப வியாபாரமாய்ப் போச்சு" பெருமூச்சு விட்டான் காந்தன். தகப்பன் எந்த வாட்டிலை. ஐஞ்சு மணிக்கு நான் போய் பாக்கிறன்." "பதின்னாலாம் வாட்டிலை பத்தாம் கட்டில். தாடி யோட என்னைப்போல ஒரு மெல்லிய ஆள். அவருக்கு. உம்மைத்தெரியாது நீர்தான் உம்மை அறிமுகப்படுத்த வேணும்." *கண்டிப்பாய் போய்ப்பாக்கிறன். நாளைக்கும் நீர்வருவீர் தானே.” *இல்லைத் தம்பிதான் வருவான். நாளை யிண்டைக்குத் துண்டு வெட்டிப்போடுவாங்கள் 6Ꭲ6ᏜᎢ Ꮆ சொன்னவர்.வருத்தம் மாறயில்லை என்ன சேய்யிறது.? அதைவிடும் நேரம் என்ன? சுதாரித்த தேவிா, காந்தனைப் பரபரத்தான். "பள்ளிக்கூடம் விடுகிற நேரம்.பஸ்சிலை கூட்ட மாயிருக்கும்.கெதியிலை போனாத்தான். .இடம் பிடிக்க லாம். குறிப்புணர்ந்து. எழுந்தான் காந்தன். பூபாலசிங்கம் புத்தகக் 9th G5)------- மூலையில் வெள்ளைக் கவுண்களும்.ரைகளும்.முட்டிமோதி பஸ் ராண்டை நெருக்குகையில். ‘எப்ப மில்லுக்கு வாரீர்".? காந்தன் கேட்டான். ‘நேரம் கிடைச்சாக் கண்டிப்பாய் ஒரு நாளைக்கு வருவன் நிச்சயம்." *சிவராசாவையும், செல்லத்துரையையும் விசாரிச்ச தாய்ச் சொல்லும்.லோகேஸ் வரனாக்களின்ரை வழக்கு வாறசெல்வாய்க்கிழமை.ஒரு நல்ல நியூஸ் தங்களைப் பிழை எண்டு கந்தரும் சொல்லத்துவங்கிவிட்டாராம். தெரியுமே."
கோப்பாய் கியூவை நோக்கி நடந்தபடி காந்தன் கேட்டதற்கு. - 'உண்மைதானோ" என்று ஆச்சரியமாகக் கேட்டபடி பருத்தித்துறைக் கியூகம்பிக்குள் புகுந்த தேவா புறப் பட்ட பஸ்சில் ஒடித் தொற்றினான். கவனம். கவனம் என்று இரண்டு பேர் அவனை இறுகப் பிடித்துக் கொள்ள காந்தன் கையசைத்தான். சித்தம் தென்னை மர ஒலைகள் சரசரக்க காற்று சற்றுப் பலமாகவே வீசியது. அறைவீட்டின் முன்புறம் போடப் பட்டிருந்த அந்த வாங்குக்கு மேல் அவன் சலனமற்று உட்கார்ந்திருந்தான். அவனைத் தனியே விட்டு விட்டு சிஸ்ரர் மடத்துக் கேட்டைத் திறந்து கொண்டு அவனது தமையன், சுவாமி யாரைப் பற்றி விசாரிக்கப் போய் பத்து நிமிடங்களுக்கு மேல். இன்று சுவாமியாரைக் காண வேண்டுமென்று அவனது தமையனோ அவனோ நினைத்திருக்கவில்லை. அதற்குரிய சூழ்நிலை கூட காலை வரை இருக்கவில்லை. சடுதியாக அது நிகழ்ந்தது. “சுவாமியார் உன்னைப் பார்க்க வேணுமாம். உன் னோடை கதைக்க வேணுமாம். சிஸ்ரர் மாரும் அதைத் தான் விரும்புகினம்." மூன்று நாட்களுக்கு முன் ஒருமாலை நேரம் மில்லில் இருந்து லீவில் வந்து மேல் கழுவிச் கொண்டு கிணற்றடி யில் நிற்கும்போது அவனது தமையன் இந்த விபரத்தைக் கூறியபோது அதில் தனக்கு அவ்வளவு அக்கறை இல்லாத மாதிரியேதான் இவன் காட்டிக் கொண்டான்.
"தங்களின்ரை ஆதரவில் இருக்கின்ற ஒரு பிள்ளையை உனக்கு கலியாணம் செய்துதாறதென்டால் உன்னைப் பற்றி விசாரிக்கத்தானே விரும்புவினம்." சுவாமியாரின் விருப்பத்துக்குரிய காரணத்தை நியா யப்படுத்த முனையும் பாவனையில் தமையன் கதைப்பதை உணர்ந்த இவனுக்குச் சிரிப்பு வந்தது. அவனோடு தமையன் நேரடியாக இவ்வளவு வார்த்தை களை தன்னும் உச்சரிக்கக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்ட தைப் பற்றி அவனுக்கு சந்தோசமாகக்கூட இருந்தது. இந்த முப்பத்திமூன்று வருட வாழ்க்கையில் அவனும் தமையனும் பேசிக் கொண்ட சந்தர்ப்பங்கள் மிக மிகக் குறைவு. அப்படி ஏற்படுகின்றபோதுகளில் வார்த்தைகள் "தடித்தது.முகமுறிவுகள்" அவை முடிவு பெற்ற நிலைமை களே அநேகம். மரியாதை. பயம் என்பதோடு வேண்டத்தகாத சில அதிருப்திகளும் பேச்சை அடியோடு கட்டுப்படுத்தி யிருந்தன. அவனது தாய் இறந்து, தகப்பணிறந்து படிப்புக்கள் அரைகுறையாகி கூலிவேலை கூடக் கிடைக்காத.கொடிய நிலைமைகள் ஏற்பட்ட அந்தக் காலங்களில் கூட வாய் திறந்து எதையும் கேட்காத வைராக்கியத்தில் இவனது தாட்கள் கழிந்திருக்கின்றன. கறேச்சில் வேலை செய்த காலத்திலும்.கஸ்தூரியார் வீதியிலுள்ள ஒரு கடையில் வேலை செய்தபோதும் அச்ச கத்தில் பேப்பரெடுக்க முனைந்து முகம் முறிந்து போன துண்டு. பொறுப்பற்ற ஊதாரியாக அவன் திரிவது கூடாது என்கின்ற விருப்புக்கு அவர் ஆட்பட்டு அவனை ஒரு கலியாணப் பந்தத்தில் தள்ளிவிட முனைவு கொண்டு. எட்டு வருடங்களின் பின்தான்.இந்த ஒரு சந்தர்ப்பமும். இவனின் சம்மதமும் கிட்டியது. யாரையோ மனதில் வைத்து இவனின் சம்மதத்தை அறியத் தமையன் அனுப்பியிருந்த் நண்பனிடம் தனது விருப்பத்தை மிக நிதானமாக இவன் வெளியிட்டான். “என்னைப் பொறுத்தவரை எனக்குக் கலியாணம் இப்ப அவசரமில்லை. அப்படிச் செய்கின்றதென்டாலும். ஒரு அநாதை மடத்திலை இருக்கின்ற பிள்ளையைத்தான் செய்ய விரும்புகிறன். சிஸ்ரர் மடத்திலை இருக்கின்ற எங்கடை சொந்தக்காரப் பிள்ளையைக் கேட்கச் சொல் லும். ر “மாலி கேக் ஸ்பொட்டின்” இஞ்சித் தேனீரை உறிஞ் சியபடி இவன் பேசியபோது வந்த நண்பனே ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தெரிவித்தான். ஒரு காலத்தில் அவனது உறவினர்கள் அவனைப்பற்றி பொறுப்பற்றவன், வருத்தக்காரன், கையாலாகாதவன். என்று ஒதுக்கித் தள்ளியமையின் மீது கொண்ட வெறுப்பை எட்டி உதைப்பதான பாவனையில் அந்தச் செய்தியை இவன் வெளியிட்டான். சங்கானையில் மின்தறிஆலைமுகப்பில் நின்று அவனைப்பற்றி காரசாரமாக அவன் தமையனா ரிடம் ஏசியஉறவுக்கார நூலகரின் வார்த்தைகளை ஓங்கி அடிப் பது போல் அந்த வார்த்தைகளைக் கூறினான் அவன். காற்று மீண்டும் தென்னோலைகளை சரசரக்க வைத்தது. அணிலொன்று வீறுடன் கத்தியபடி அறை வீட்டின் முகட்டில் பாய்ந்ததை அவன் கவனித்தான். அறை வீட்டினுள்ளே மணிக்கூட்டில் பத்துமணி அடித்தது. கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான். பத்து ஏழு. எந்த மணி சரி.? அவனுக்கு ஏனோ எரிச்சலாக இருந்தது. ●一6
இந்த நேரம் மில்லில் என்ன நடக்கும். ஒரு அவியல் முடிந்திருக்கும். கெங்கா தான் அடுப்புப் பார்ப்பான். சின்னத்துரையும் தயாபரனும் நேசலிங்க மும் காலடிப்பார்கள். சில வேளை ஊடுவெட்டியிருப்பார் கள். தருமண்ணை அந்த மங்கல் ஹெல்மட்"டோடு பாங் குக்குப் போயிருப்பார். பெரியவரின் செக்குக்கும் காசு போட வேண்டும். வெள்ளையப்புவின் வண்டில் பத்து மூடை அரிசியுடன் மில்லைக் கடந்து சந்திக்குச் சென்றிருக் கும். குழாய்க் கிணறு குத்துகிறவர்கள் இண்டைக்குத் தானே வருவதாகக் கூறினார்கள்." சிஸ்ரர் மடத்தின் கதவு திறக்க அவனது தமையனும் ஒரு கண்ணாடி அணிந்து மெலிந்த கறுத்த சிஸ்ரரும் கதைத்தபடி, அவனுக்குச் சலிப்பாக இருந்தது. எவ்வளவோ வேலை தள் மில்லில். அவனை அவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள் றோட்டில் வாகனங்களின் இரைச்சல்-கடற்காற்றின் தென்னோலைச் சரசரப்பு - அரைமணித்தியாலம் வீணாகி விட்டதான அவஸ்த்தை. ஒரு காலத்தில் வேலையற்று வேலை தேடி அலைந்து திரிந்த அந்த நாட்களில் இத்தகு நேரப் பிரச்சினை இருக்க வில்லை. வாசிகசாலை முகப்பு, கபாடி விளையாட்டும். மணற்பரப்பும்.கிட்டியடிக்கும் மைதானம்.மார்க்சியம் பற்றிய வகுப்புகள். கூட்டங்கள். இலக்கியச் சர்ச்சை கள்.இன்னும் அவை பற்றிய விருப்புகள் இல்லாமல் போகவில்லை. பொறுப்புகள் சுமைகளாகி நேரமே தொழிலாகிவிட்டது. சிஸ்ரரும் தமையனும் படியேறி வந்தபோது அவன் எழுந்து நின்று கொண்டிருந்தான். "உங்கடை அண்ணா உங்களைப்பற்றி நிறையச் சொன்னவர். நாங்களும் உங்களைப் பார்க்க விரும்பினனாங்கள்." சிநேக பூர்வமான புன்முறுவலுடன் அந்தக் கண் ணாடி சிஸ்ரர் இவனோடு பேசியபோது அவன் மெளன மாகச் சிரித்தான். “ஃபாதர் எப்ப வருவார்?" இவன் கேட்டான். “வந்திடுவார்.வாற நேரந்தான்." இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு விலகி நின்றிருந்த தமையனை இவன் ஏறிட்டான். “உங்கடை விருப்பம் என்ன எண்ணிறதை அறியத்தான் நாங்கள் உங்களை சந்திக்க விரும்பினம்.நீங்கள் இங்கை இண்டைக்கு வந்திருக்கா விட்டால் உங்கடை மில்லுக்கு தாங்கள் வாறதுக்குத்தான் இருந்தனாங்கள். ஆண்டவ ருடைய சித்தம்.நீங்களே வந்திட்டியள்." சிஸ்ரர் சந்தோசமாகக் கதைத்தபோது அவனுக்கு சற்று கூச்சமாகக்கூட இருந்தது. “உங்களைப் போல ஆட்களிருந்திட்டால் திரேசாவை போல எத்தனையோ பிள்ளையஸ் நிம்மதியடையேலும்.” சிஸ்ரர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். “இந்த மாசமே விசயங்களை முடிக்க வேணும்.பெரிய சிஸ்ரரும் மாறி மட்டக்களப்புக்குப் போறா. அதுக்கு இடையிலே. இது நடக்கிறதுதான் நல்லது.இண்டைக்கே பிள்ளையை நீங்கள் பார்த்து உங்கடை விருப்பத்தை எங்களுக்குச் சொல்லுகிறது நல்லது. அவளின்ரை அபிப்பிராயத்தை யும் நாங்கள் கேட்கத்தானே வேணும்.” m தூரத்திலிருக்கும் தமையனாரையும் இவனையும் மாறி மாறிப் பார்த்தபடி சிஸ்ரர் கதைத்தபோது இவன் இ ை மறித்தான்.
மன்னிக்கவேணும் சிஸ்ரர், இந்த விஷயத்திலை. கொஞ்சம் பிந்திறதைத்தான் நான் விரும்புறன். எனக்குச் சில வசதிகளைச் செய்ய வேணும். நான் என்ன சொல்லிற னெண்டால் எனக்கெண்டு சில ஒழுங்குகளை நான் செய்ய வேண்டியிருக்கும்." அவன் பேசிய தோரணையில் ஒரு அழுத்தம் இருந்தது. மேலும் ஏதோ கூற அவன் முற்பட்டபோது சுவாமியாரின் கொண்டா' மணிக் கூண்டடியால் திரும்பி அறை வீட்டில் ஏறியது. தனது மனதில் உள்ள கருத்துக்களை முழுமையாகப் பகிர்ந்து கொள்ள அவன் விரும்பினான். *கன நேரம் காக்கவைச்சிட்டன் போலை.” என்று மன்னிப்புக் கேட்கும் பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு அறைக்கதவைத் திறந்தார் சுவாமியார். அந்தச் சுவாமியாரை அவன் அடிக்கடி கண்டிருக் கிறான். இருபாலைச்சந்தியிலும் நல்லூர் மாக்கற்றிலும் முத்திரைச் சந்தையிலும் சிவப்பு நிற அந்தக் “கொண்டா” மோட்டச் சைக்கிளையும் சுவாமியாரையும் பல தடவை களில் எதிர்ப்பட்டிருக்கிறான். அந்தச் சுவாமியார் இவனை விட ஓரிரு வயதுகள் குறைந்தவராகக் கூட இருக்கலாம் என்றுகூட யோசித் தான். ஒரு காலத்தில் தான்கூட சுவாமியாராக வர வேண்டுமென்று ஆசைப்பட்ட அந்த நிகழ்வுகள் இப்போது அவனுக்கு நினைவு வந்தன. அன்று செமினறிக்கு அவன் போயிருந்ததால் இன்று: எங்கோ ஒரு கோவிலில்...பங்குக் குருவாக.திருப்பலிப் பூசையில் அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து.அவனுக் குச் சிரிப்பு வந்தது. *சிஸ்ரர்.எல்லாம் கதைச்சவதானே.பிள்ளையைப் பார்த்தாச்சா..?" சுவாமியார் அவனைப் பார்த்தார். “அவர் ஆறுதலா கத்தான் எதுவும் செய்ய முடியுமெண்டு சொல்லுகிறார் ஃபாதர்.” ی۔ சிஸ்ரரின் வார்த்தைகளைக்கேட்ட சுவாமியார் கேள்விக் குறியுடன் அவனது தமையனாரைத் திரும்பிப் பார்த்தார். 'தம்பி சொல்லுகிறதென்னெண்டால் தனக்குச் சில பொருளாதார கஸ்டங்கள் இருக்கிறதெண்டும்.அதைச் சரிப்படுத்தக் கொஞ்ச நாள் தேவை எண்டும்.அதுதான் யோசிக்கிறார்" *அதுவும் சரிதான். பெரிய சிஸ்ரரும் மாறிப் போறா. எதுக்கும் நல்ல முடிவாய் கூடிய சீக்கிரம் எடுக் கிறது நல்லது' தமையனாரோடு சுவாமியார் ஏதோ உறுதிப்பாட் டோடு கதைத்தார். “எத்த மட்டிலை எண்டால் உமக்கு வசதிப்படும். திரேசா நல்ல பிள்ளை. உமக்கு ஒரு நல்ல மனைவியாக இருப்பா. அது பற்றி நீர் யோசிக்கத் தேவையில்லை. ஆண்டவருடைய சித்தம் உங்கள் இரண்டு பேரையும் இணைக்கப் போகுது." . *அதுக்காக நான் யோசிக்கேல்லை ஃபாதர். நான் மில்லிலை வேலை செய்யிறன். இருபத்திநாலு மணித் தியாலமும் அங்கைதான் இருக்கிறன். நெல்லெடுக்க மன்னார், மட்டக்களப்பு எண்டு அடிக்கடி பயணம், எனக் கெண்டு நான் சிலதைத் தேட வேணும். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அடுத்த கிறிஸ்மஸ்சோடை எண்டால்." மிகவும் அட்சர சுத்தமாக அவன் பேசுவதை சுவாமி யாரும் சிஸ்ரரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
மடததிலிருந்து ரீயும் பிஸ்கற்றும் வந்தன. சங்கோசத் தோடு "ரீ'யை வாங்கிக் கொண்ட இவன் சற்று நேரம் மெளனத்தில் சிந்தனை வசப்பட்டுப் போனான். எவ்வளவோ விசயங்களை மனதில் போட்டுக் கொண்டு அவன் குழம்பிப் போயிருந்தான். இந்த இடத் திற்கு இன்று வந்திருக்காமல் ஆறுதலாக ஒரு நாள் வந்திருக்கலாம் என்றுகூட யோசித்தான். மில்லில் தேடுவார்கள். காலையில் வருவதாகக் கூறி இரண்டு நாள் லீவில் வெளிக்கிட்டவன் இன்னமும் திரும்ப வில்லை என்றால் அங்கே அனைத்தும் ஸ்தம்பிக்கும். தமையன் செருமி இவனை நினைவுக்குக் கொண்டு வர இவன் ரீயை மெல்லக் குடித்தான். "அப்பிடி எண்டால் திரேசாவை இண்டைக்கே. பாத்திடுமன்.' சுவாமி அவனை ஏறிட்டார். *நாள் இருக்குத்தானே.ஆறுதலாக இன்னொரு நாளைக்கு.' s இவன் அவரின் வார்த்தைகளை உடனடியாக மறுதலித்தான். "சரி.உம்மடை இஸ்டம். ஆண்டவருடைய சித்தம் அப்படி.." எழுந்து நின்ற இவனைப் பார்த்தபடி சுவாமியாரும் எழுந்து கொண்டார். ‘'எதுக்கும் உங்கடை அட்ரசுக்கு நான் கடிதம் எழுதிறன். இதுபற்றி யோசிப்பம்." அவரின் முகவரியை நின்ற நிலையில் குறித்துக் கொண். ட Tன் அவன். வணபிதா. அர்ச் செபஸதியார் ஆலயம் முனை. பஸ் கோல் ற் வரை அவனும் தமையனும் மெளனித்தே நடந்து வந்தனர். நெடு நேரத்தின் பின் அவர் கூறினார். “நல்ல பதிலாகச் சுவாமிக்கு எழுது:” மில்லுக்கு அவன் வரும்போது பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்டது. பஸ்சில்யோசித்துக் கொண்டு வந்த விசயங்களை எல்லாம் கோர்வையாக்கி ஒரு கடிதம் எழுத அவள் முடிவு செய்து கொண்டான். இரவு பணி கொட்டும் நிலவில் வெள்ளையப்புவிடம் போய்த் திரும்பி வந்து குளிருக்காக இரண்டு சேட்டுக் களை அணிந்து கொண்டு அறை மேசைகளில் அவன் கடிதம் எழுத உட்கார்ந்தான். "அன்புடையீர்”.என ஆரம்பித்து தனது நிலைப் பாட்டை அவன் எழுதினான். நான் கொம்யூனிஸ சித்தாந்தத்தை நம்புபவன்; புரட்சி ஒன்றே பிரச்சினை களைத் தீர்க்குமென்ற உறுதிப்பாடுடையவன்; அதற்காக உழைப்பதையே விரும்புபவன்; எனக்கு வரப்போகும் மனைவி என்னைப்பற்றி அறிந்திருப்பது நல்லதென நினைத்தே இதைத் தெரியப்படுத்துகிறேன் என்பது போன்ற விபரங்களை அவன் எழுதினான். கடிதத்தை எழுதி முடித்தபோது அவனுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. ஏதோ நெஞ்சில் கனத்த சுமையை இறக்கி வைத்து விட்டதான உணர்வுடன் அந்தக் கடிதத்தை அவன் போஸ்ற் பண்ண்னான். மில் வேலையில் கவனம் கொண்டு கணக்கு வழக்கு களைப் பொறுப்பேற்று அந்தச் சந்தடியில் சகலவற்றை யும் மறந்து விட்ட ஒரு பனி விலகாத காலையில் அவனுக்கு ஒரு கடிதம் கிடைத்தது.
“உமது கொள்கையுடன் ஒத்துப்போக அந்தப் பெண் தயாராக இல்லை. இந்தக் கல்யாணத்தில் அந்தப் பெண் ணுக்கும்.சிஸ்ரர் மாருக்கும் இஸ்டமில்லை எனபதை தெரி விக்கச் சொன்னார்கள்." இப்படிக்கு, வண. பிதா.
தொலைந்து போனவர்கள் அந்தச் சிறு நகரம் அழிவுண்டு போய் விட்டது. சினிமாக்களில் காட்டப்படும் ஒரு யுதத பூமியின் நகரச் சிதைவு போல அந்த நகரமும் சிதைவுண்டு போய் விட்டது. சின்னஞ் சிறு வயதில் அவன் தனது தகப்பனாருடன் கையைப் பிடித்தபடி உலாவி வந்த அந்த அழகிய நகரம் அவனுடைய தகப்பனாரிடம் ஒரு இரும்புக்கரியல் பூட்டப்பட்ட சைக்கிள் இருந்தது. அதனை உருட்டிக் கொண்டு அந்த நகரத்துக் கடற்கரை வீதியில் எத்தனை தடவைகள் அவன் நடந்திருக்கிறான். ரேவடியில் தரித்து நிற்கும் வத்தைகளிலிருந்து வைக் கோல்களைச் சும்மாடாக்கி ஒடு சுமக்கும் பெண்கள் இன்று இறந்துபட்டிருப்பார்கள். பச்சை நிற மாபிள் பதிக்கப்பட்ட வங்கிக் கட்டிடம், சிவன் கோவில், தீர்த்தக்கேணி, சடைத்துப்பருத்து கிளை பரப்பி நிற்கும் வாகை மரம், அவனது தகப்பனார் சைக்கிளுக்குக் காற்றுப்போனால் ஒட்டுப் போடுகின்று சைக்கிள் கடை.இவை யாவும் எப்போதோ பார்வையை - விட்டு விலகிப் போய் விட்டன.
நகரத்து வீதிகளில் நின்ற புளிய மரங்களும் அந்தப் பழைய காலத்துக் கிட்டங்கிக் கட்டிடமும் அரச மரத்தின் கீழிருந்த சப்பாத்துக்கடையும் அவனுக்கு விபரமறிந்த பராயத்திலேயே இல்லாமல் போய்விட்டன. அவனும், அவனது பள்ளித் தோழர்களும் இரவு இரண்டாவது காட்சி பார்ப்பதற்காக நேரத்துடன் புறப் பட்டு மாக்கற்றின் உட்புறம் முட்டைத்தோசை சாப் பிட்ட கடையும் அந்தத் தோசைக்காரக் கிழவியும்கூடக் காணாமல் போய்விட்டர்கள். − அவன் முதல்முதல் சினிமாவை அறிமுகம் கொண்ட அந்தச் சென்றல் தியேட்டரும், டோர்ச் லைட்டும் கையுமாக உலாவுகின்ற அந்தத் தியேட்டரின் கறுப்புக் கண்ணாடி மனேச்சரும்கூட எங்கோ மறையுண்டு போய் விட்டார்கள். மழை வெள்ள வாய்க்கால்கள் மீன் மாக்கற்புறமாக சென்று கடலில் சங்கமித்த காலங்கள் போய் அவை மண்' மூடிப் போய் விட்டதான நிலைமை . அவன் ஆரம்பக்கல்வியைப் பெற்றுக் கொண்டதும் பின்னர் ஆங்கிலத்தையும் ஒரு பாடமாகச் சேர்த்துப் பரீட்சைகள் எழுதிய மண்டபங்களும் சின்னாபின்னப் பட்டுப் போய் விட்டன. சித்திரை வருடப்பிறப்புகளுக்கு மல்யுத்தம் பார்த்த பொலிஸ் மைதானமும், கபாடி விளையாட்டுக்கள் பார்த்து மகிழ்ந்த மணற்கரைகளும் மறைந்துபோய் விட்டன. . இவனுடைய தகப்பனார் கள்ளருந்திவிட்டு வந்து சைக்கிளைச் சாத்திவைத்து தனது சகமனிதர்களுடன் அரசியல் சம்பாசிக்கும் திண்ணை மண்டபமும் கரிக். கோப்புச் சுடலையின் அந்தியேட்டிமடமும் சுப்பர் ம! ம் என்கின்ற அந்தச் சிறு கிராமமும்கூட அழிவின் பிடியில் சிக்குண்டு போய்விட்டன. - அவன் அந்தப் பிரதேசத்தைத் தரிசனை கொண்டு முப்பத்திரண்டு வருடங்கள். t ஒரு காலத்தில் அவனது தாயும், தகப்பனும் மகிழ்ந்து குலாவி, அவனையும் அவனுடைய இரண்டு அண்ணன் மாரையும், ஒரு தங்கையையும் ஈன்றது இந்நகரத்தில் தான். அவனுடைய அண்ணனொருவன் சின்னஞ்சிறு வயதில் நீந்தவென்று சென்று பிணமாக இங்கு வந்ததை அவன் தனது சின்னஞ்சிறு கண்களால் 'பார்த்து நின்றான்.அப் போது அவனுக்கு வயது நான்கு. அவனுடைய அடுத்த அண்ணன் தொழில் நிமித்தம் வாகனமொன்றில் ஏறி எங்கோ தொலைதூர நாட்டிற்குப் போய் அங்கேயே குடியும் குடித்தனமுமாக இருப்பதையும், அவன் இனி இங்கே திரும்பி வர மாட்டான் என்பதையும் அறிந்து கொண்டதும் இந்த நகரத்து வீதிகளில் ஒன்றில் தான். -- "சச்சிதானந்தற்றை இரண்டாவது பெடியன் ஆரோ வெள்ளைக்காரப் பொம்பிளையை முடிச்சிட்டானாம்." அவனது தாயாரை நெடுநாட்கள் அழவைத்த அந்தச் சம்பவம் நடந்தநேரம் இவன் டியூட்டரிக்கு வந்து போய் கொண்டிருந்தான். நகரைச்சுற்றியிருந்த கடைகள் இடிக்கப்பட்டு கிட்டங்கி இருந்த இடம் இரட்டைமாடிக் கட்டிடமாக மாறிக் கொண்டிருந்த நாட்கள் ஒரு வெய்யில் அகோரமாக எறித்த பங்குனிக் கடைசி யின் நடுஇரவில் அவனது தாய் புற்றுநோய் வந்து இறந்து போனாள். அவனையும், அவனது தங்கையையும் தூரத்தில் இவர் களை மறந்து போய் விட்ட அண்ணனையும் நினைத்துக் கவலை தோய்ந்த முகத்துடன் அவள் மரணித்துப் ! போனாள்.
அவனுடைய தாய் இறந்த நாளில் அவன் படிப்பை முடித்து விட்டு வீட்டில் சும்மாதான் இருந்தான். நண்பர்களுடன் அகால வேளைகளில் திருவிழாவுக்கு சென்று கச்சான் வாங்கிக்கொறித்தபடி இசைக்குழுக் களை ரசிக்கும் ரஸ்தியாதிப்போக்கு சாஸ்வதமாகிப் போய்விட்ட காலங்கள். "மச்சான் புட்டளைத் திருவிழா வாற கிழமை கொடி யேற்றத் தோடை தொடக்கம்." "வல்லிபுரக் கோவில் கடல்தீர்த்தம் இம்முறையும் சன்னதியும் நல்லூரும் கழிஞ்ச பிறகுதான் வருகுது." திருவிழாக்கணக்குகளும் கொடியேற்றங்களும் அவ னுக்கும் அவனது நண்பர்களுக்கும் பஞ்சாங்கப் பாடம். அவனது தகப்பனார் மிகவும் பெலகீனமாகிவிட்டார். இரும்புக்கரியலைக் கழற்றி மூலையில் போட்டாகி விட்டது. இப்போது அந்தச் சைக்கிள் அவனது பராமரிப்பில் *சச்சிமணிவண்டில்” அவனது சைக்கிளுக்குப் பெயராகி நிலைத்தும் விட்டது. புட்டளை ஏழாந்திருவிழா நாதஸ்வரக் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்த நேரம் பக்கத்து வீட்டு அப்புத் துரை வந்து அவனுடைய நண்பனொருவனை அழைத்து -ஏதோ சொன்னது அவனுக்குக் கேட்டது. மனம் இல்லாமல் அவர்களோடு அரைகுறைக் கச்சேரியில் வீட்டுக்குப் போனபோதுதான் அவனது தாய் இறந்து போன விடயம் அவனுக்குப் புலனாகியது. அவனது தாயாரின் இறுதிக்கிரியைகளில் அவனது தகப்பனாருக்குத்தெரிந்த அவனுக்குத்தெரியாத பலர் வந்திருந்தார்கள். தேர்தல் வேறு அண்மித்து இருந்ததால் காண முடியாத பலரையும் அன்று பலர் கண்டார்கள். அவனுடைய தங்கைக்குத்திருமணம் நடந்த அந்த நாட்கள் அவனுக்கு ஞாபகத்திலிருக்கிறது அவனுடைய' மைத்துனன் வேலையற்றிருக்கும் இவனுக்காகப்பலரிடம் சிபாரிசுக் கடிதங்கள் வாங்கி ரெயில் ஏறி தெற்கு நோக்கி பயணப்பட்ட காலங்களும் ஞாபகமிருக்கிறது. அவனோடு படித்த ஒரு மக்குப் பையன் எங்கோ ஒரு வங்கியில் வேலையாக இருப்பதுவும். அடிக்கடி மரபுக் கவிதைகள் பாடும் ஒரு கவிதைப் பற்றுடைய நண்பன் பொலிஸ்காரனாக இருப்பதுவும். வகுப்பிலேயே “இனிமேல் இல்லை” என்கின்ற கெட் டிக்காரனாக இருந்த சினேகிதன் ஒருவன் வள்ளத்தில் தொழிக்குப் போவதுவும். இன்னும் இன்னும் நண்பர்கள் ஏதேதோ தொழில் களைப் பார்க்க முனைவதுவும் இவனுக்குத் தெரியும். "சச்சியின்ரை பெடியன் மற்ஸ்சில வலுவிண்ணன். அவனட்டைத்தான் என்ரை பெடியனைப் படிக்க விட்டி ருக்கிறன்." இந்த ஒரு பெயர் மட்டும் அவனிடம் மிஞ்சிமிருந்தது. ஆனையிறவு தாண்டி தட்டிவானில் பயணப்பட்டுப் புளியடியில் இறங்கி விசுவமடுக்குளத்தடியில் கொஞ்ச நாட்கள் இவன் விவசாயமும் செய்திருக்கிறான். சச்சிதானந்தம் என்கின்ற இவனது தகப்பனாரின் மர வேலைப்பட்டறையில் கொஞ்ச நாட்கள் உதவியாள னாகி உடைந்த கதிரைகள் முக்காலிகளின் கால்களைச் சீர் செய்து காலையில் பட்டறை. மாலையில் ரியூசன். “மணியம் மாஸ்ரர்" அழிந்து போன நகரத்தில் அவனுக்கும் ஒரு பெயர்.
அவனுடைய தங்கைக்கு ஒரு மகன் மாலை சுற்றிப் /பிறந்த அந்த நாட்களில் சிலர் பேசிக் கொண்டது போல் “மாலை சுத்திப் பிறந்தபடியாலை மாமனுக்கும் கெடுதி” அவனது இடது கால் ஊனப்பட்டுப் போய் விட்டது. நிலையொன்று சீவுவதற்காகக் கொண்டு வந்த மாமரம் ஒன்று இவனது காலுக்குமேல்விழுந்தது. இப்போது இவன். “Gogrfa த்தி.மணியம்" சைக்கிள் ஞாபகச் சின்னங்களில் ஒன்றாகி வீட்டின் கோடிப்புறம் தொங்குகிறது. பட்டறைக்கு வெளியே "முழுநேர ரியூசன் வகுப்புக் கள்” என்கின்ற விளம்பரம் நிரந்தரமாகி விட்டது. சிறு வயதில் அவனோடு படித்தவர்களின் பிள்ளைகள் சிலரும் அவனிடம் படிக்க வந்து போய்க் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுப் போய் விட்டது. w நகரத்தின் மையப் பகுதியில் சிறு மாற்றங்கள் தென்பட ஆரம்பித்தன. நகரம் புதுப் பொலிவுடன் விரைந்து மாறி வந்தது. . சடுதியென நகரில் காக்கியின் நிழல்கள். விளையாட்டுப் போட்டிகள்.திருவிழாக்கள்.படக் காட்சிகள்.இரவு பகல் சேவையாற்றும் தேனீர்க் கடை கள் மெல்லெனக் குறைவுபட்டு வந்தன. அவனிடம் படித்துக் சொண்டிருந்த இரண்டொரு மாணவர்களும் காணாமற் போனார்கள். அவர்களைப் பற்றி அவன் மறந்து கொண்டிருந்த நாட்களில்.மற்றைய நகரங்களிலும் தெருவீதிகளிலும் காக்கிகளின் வாகனங்கள் அதிகமாக நடமாடத் தொட ங்கி யிருந்தன். ஒரு நாள். நகரத்தின் இரண்டு மைல் தள்ளி கடற்கரைத் தென்னை மரங்களும்.பாரியமதகும் அடம்பன் கொடிகள் நிறைந்து, பரவி, நிற்பதுமான ஒரு வெள்ள வாய்க்கால் கரையில் ராணுவ வண்டி ஒன்று பல சிப்பாய்களுடன் நொருங்குண்டு போய்விட்டது. பொலிவு கொண்ட நகரம் இடம் பெயர்ந்து தெற்கே நகரத் தொடங்கி விட்டது. பஸ்தரிப்பு நிலையம், தேனீர்க் கடைகள், மரக்கறிக் கடைகள்.பலகாரம் விற்கும் அந்த நடுத்தர வயதுக்காரப் பெண்கள்.அனைவரும் இடம்மாறிப் போனார்கள். இந்த நகரத்திலும் வேறும் கிராமங்களிலும் காணா மற் போனவர்களின் புதிய தோற்றங்களில் இறுகிய உடற்கட்டுக்களுடன் மனிதர்களுக்குத் தரிசனையாக ஆரப்பித்தார்கள். இவனிடம் படித்த மாணவர்களில் இரண்டொருவரை நகரத்துத் தெருவீதிச் சுவர்களில் கலர்ப்படமாகக் கண்டு இவன் ஆச்சரியம் கொண்டான். படிக்கும் காலத்தில் சாதுக்களாக இருந்த இவர் களுக்கு இது எப்படிச் சாத்தியமாகிற்றென அவன் அர்த்தமற்றுச் சிந்தித்தான். சற்று மையடித்து ம்ப்புடன் இருந்தாலும் பட்டறை யில் உளியும் கையுமாக நிற்கும் சச்சிதானந்தர் தனது பெலகீனமான உடல் நிலையையும் மறந்து காணாமற் போன இவர்களைச் சிலாகித்துப் பேசுவதை இவன் பல தடவைகள் கேட்டு உள்ளூர மகிழ்ந்திருக்கிறான். ஏதோ தாமே எல்லாவற்றிற்கும் கொந்தராத்துக்காரர் களென வக்காலத்து வாங்கி மேடைகளில் பிரசங்கம் செய்தவர்கள் தலையைக் காத்துக் கொள்ள எங்கோ ஒடி
விடடமையை அவர் சாங்கோபாங்கமாக எடுத்துக் கூறி இந்தக் காணாமற் போனவர்களைப் போற்றுவார். தொடர்ந்து பலர் மரணித்துப் போனார்கள். நகரம் வெறுமை கொண்டு, வீதிகளும் வெறித்துப் போயின. காக்கிகள் சிறையுண்டு போனார்கள். இரவுகள் நித்திய இரவுகளாகவும், பகல்கள் நித்திய பகல்களாகவும் மக்களுக்குப் பழகிப் போயின. காணாமற் போனவர்களுக்கு இரவுகள் நித்திய பகல் களாகவும், பகல்கள் பகல்களாகவுமே அர்த்தம் கொண்டன. கிழக்கிலும் இன்னும் பெயர் தெரியாத ஊர்களிலும், பல தொலைந்து போனவர்களைப் பற்றியெல்லாம் இவன் அறிந்து கொண்டான். மருத்துவக் கல்லூரி மூன்றாம் வருட, மாணவன் தலைமை வாத்தியார் செல்லப்பாவின் இரண்டாவது மகன், இவனுடைய பெரிய தகப்பனாரின் கடைசி மகன், இவனது தங்கையுடன் கூடப்படித்த திரேசாவின் தங்கை எனப் பலரை இவன் கேள்வியுற்றான். நீண்ட நான்கு வருடங்கள். இந்த இடைவெளியில் பலரை அவன் கண்டு கதைப்ப தற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு அவை பசுமையாக நிலைத்தும் போய் விட்டன. நகரத்தின் உயிர்த் துடிப்புக்கள் மனித பயனங்களின் சகிப்புத் தன்மையில் புத்துயிர் பெற்று வரும் நாளில். கிழக்கின் அனர்த்தங்களை நிகர்த்ததென இங்குமோர் நிகழ்வு உடிக்கொண்டது. பலர் எரியுண்டு போனார்கள்.பலர் வேட்டுக் களுக்கு இரையாகிப் போனார்கள்.வீடுகளும் வேலிகளும் கருகிச் சாம்பராகிப் போயின.
காக்கியின் நிழல் வடபுறமெங்கும் இராட்சதக் கரங் களை விரித்தபடி கவிந்து கிடந்தது. ஊன்றுகோல்களுடன் மணற்காட்டினை நோக்கி யோர் பயணத்தில்.பனை வடலிகளைத் தாண்டி வல்லி புரத்தின் கட்டி முடிக்கப்படாத ராஜகோபுரத்தைக் குறி வைத்து, அவனும், அவனது தகப்பனாரும் நடந்ததை அவன் மீளவும் நினைவு கொண்டான். ஏதோ மாறுதல் நடந்து விட்டதான பாவனை ராணுவ கவச வண்டிகள் ஒடாத அந்த வீதிகளில் மீண்டும் ஒரு சலசலப்பு. அந்த நகரம் இன்னும் வழமையான நிலைமைக்குத் திரும்பவில்லை. அதே மீன்கடை, அதே மாக்கற், உதயன் புத்தக சாலை.மினிவான்கள் . இ. போ ச. பஸ்கள் . கொடி காமத்துக்குச் செல்லும் தட்டிவான்கள். *தம்பி கிட்டடியில நான் பழையபடி எங்கடை கடைக்குப் போயிடுவன் இப்ப எல்லாம் சரிதானே." அவனுக்கு அறிமுகமான ஒரு பலசரக்குக் கடைக்காரர் கூறினார். இவனுக்கு எல்லாமே சிரிப்பிற்கிடமாகவிருந்தது. யாவுமே நிறைவு பெற்று விட்டதா? புல்டோசர்களின் சக்கரங்கள் ரோட்டுக்களில் பதித்த சுவடுகள் இன்னமும்.? சனங்கள் மனிதர்கள் எதிலுமே நிறைவு தேடும் சுகானுபவர்களாகி..? ராணுவ வாகனமொன்று பழைய நகரத்தின் வீதியால் விரைந்து மந்திகைக்குப் போகிறது.
- அதே பச்சை நிறச் சீருடை.சப்பாத்துக்கள்.தலைப் பாகை மட்டுமே சற்று வித்தியாசமாய். இப்படி இன்னும் எத்தனை நாட்களுக்கு? கடற்புறம் வீடுகளுக்கு மனிதர்கள் எப்போது திரும்பு வார்கள் சிதைவுண்ட வீடுகளில் இவனைப் போலாகி விடத் துணியும் மனப்போக்கும் யாரிடமுள்ளது..? ஊன்றுகோல்களைத் துணையாக்கி இவன் நடக் கிறான். - இந்தத் தெருவின் வீதிகளில் இவனைப்போல் வெறும் காலுடன் நடந்த பலர் இன்றில்லை. இவனறிய கட்டி முடிக்கப்பட்ட வீடுகளும்.இல்லையெனவாகி விட்டன. இந்த நகரம் மீண்டும் உயிர்ப்புற வேண்டும். சட்டி பானைக்கடைகளும், தோசைக் கடையும் மீண்டும் இங்கே வேண்டும். அதற்காக மீண்டும் பலர் தொலைந்து போக வேண்டும். சச்சிதானந்தர் நேற்றுக்கூட பலரிடம் இப்படித்தான் கூறிக் கொண்டிருந்தார். இன்று அவனுக்கு உற்சாகம் தரும் செய்திகள் சில காதில் விழுந்திருந்தது. அதனை எப்படியும் சச்சிதானந்தரிடம் சொல்லி விட வேண்டும். அறுபத்தி ஐந்து வயதான அந்தக் கிழவர் மகிழ்ச்சி யடையக் கூடியதான சில சங்கதிகளை அவரிடம் பரிமாறிக் கொள்ள வேண்டும். கரிக்கோப்புச் சுடலையை, சுப்பர் மடத்தை.அந்தி யேட்டி மடத்தை.பழைய சைக்கிள் கடையை, கோவில் தெப்பக்குளத்தைப் பற்றியெல்லாம் நிறையக் கதைக்கக் கூடியதாக அவன் நிமிர்ந்து நடந்தான். செய்தி நெஞ்சில் மகிழ்ச்சியோடு பதிந்திருந்தது. உண்மை. மீண்டும் மீண்டும் பலர் காணாமற் போய் கொண்டி ருக்கிறார்கள். தொலைந்து போய்க் கொண்டிருக்கிறார் கள். ஈழமுரசு-1986
கருத்துகள்
கருத்துரையிடுக