குமுறுகின்ற எரிமலைகள்
சிறுகதைகள்
Backகுமுறுகின்ற எரிமலைகள் மரீனா இல்யாஸ் பி.ஏ. (சிறப்பு) தமிழ் மன்றம் கல்ஹின்னை
Page 3 KUMURUKINRA ERIMALAIKAL (Short Stories) by MARINA İLYAS SHAFEE, B.A. (Hons) All rights reserved First published in May, 1998. Eighty second publication of : THAMIL MANRAM, No: 10, Fourth Lane, Koswatta Road, Rajagiriya, Sri Lanka. Price : 40/- g6mLDůL & V. karunanithy gšgršas: Parkar Computers 8 Publications 293, Royapettah High Road, Chennoi - 600 Ol 4. R 8266637 பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி க. அருணாசலம், M.A., Ph.D. அவர்களின் அணிந்துரை முற்போக்குச் சிந்தனைகளும் பெண் விடுதலை வேட்கையும் நவ யுகத்தைக் காண வேண்டும் என்பதிற் பேரார்வமும் கொண்ட திருமதி. மரீனா இல்யாஸ், பல் கலைக் கழகத்தில் மாணவியாகப் பயின்று கொண்டி ருந்தபோதே தமது இலக்கிய ஈடுபாட்டினையும் படைப் பாற்றலையும் கவிதை, சிறுகதை முதலிய துறை களில் வெளிப்படுத்திப் பரிசில்கள் பலவற்றைத் தட்டிக் கொண்டவர். அவர் எழுதியுள்ள சிறுகதைகளுள் பதினொரு கதைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இக்கதைகள் ஏலவே பேராதனை பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத் தின் ஆண்டு மலரான "இளங்கதிர்” இதழ்களிலும் பிற சஞ்சிகைகளிலும், நாளேடுகளிலும் வெளிவந்துள்ளன. மானுட நேயமும் விடுதலை வேட்கையும் கொண்ட பெண் எழுத்தாளராகையாற் போலும், பொதுவாக
Page 4 மரீனா இல்யாஸ் அவரது க்கூதகளிற் பெண்களின் மன உணர்வுகள், மனப் போராட்டங்கள், அவர்கள் எதிர்நோக்கும் சவால் கள், சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் அவர் களுக்கேற்படும் இன்னல்கள், பாதிப்புகள், ஆண் ஆதிக்கக் கொடுமைகள் முதலியன முனைப்புப் பெற் றுள்ளதை அவதானிக்கலாம். சமுதாயப் புன்மைகள், ஊழல்கள், கபட நாடகங்கள் முதலியவற்றைச் சொற்கள் என்னும் குத்தீட்டியாற் குத்திக் கிளறி வன்மையாகச் சாடும் அவர், பெண் களைப் போகப் பொருளாக்க முயல்வோரையும், சொல் லொன்று செயல் வேறாக நடந்து கொள்வோரை யும் வக்கிர மனம் படைத்தோரையும் கண்டு கொதித் தெழுவதையும் அவரது கதைகளில் அவதானிக்க முடிகின்றது. தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில், அவரது கதை கள் பலவற்றில் முஸ்லிம் சமூகமும், தமிழ்ச் சமூகமும் முக்கியம் பெறுவதும் இணைந்து நிற்பதும் ஆண் ஆதிக்கத்தாலும், வறுமையினாலும், சீதனக் கொடுமை யினாலும் அல்லலுற்று ஆற்றாது தவிக்கும் தமிழ், முஸ்லிம் பெண் பாத்திரங்களே அதிகம் இடம் பெறு வதும் கவனிக்கத்தக்கவை. இவ்வகையில், ஷாமிலா (விடிவைத் தேடி ஒரு முடிவு), சசிகலா (சொந்தங்கள் சுமையான போது.), அஷ்ரபா (வாய்ச் சொல்லில் வீரரடி), பரீனா (யாரென்ன சொன் னாலும்.), கதீஜா (அவளின் மறுபக்கம்), நான் (ஊமைகள் வெதும்புகிறார்கள்), கீதா (கண்ணிர்ப் பூக்கள்), இந்து, தமயந்தி (குமுறுகின்ற எரிமலைகள்), குமுறுகின்ற எரிமலைகள் சுமையா (சாபங்கள் சபையேறிய போது.) முதலிய பாத்திரங்கள் உள்ளத்தை நெருடுவனவாகக் கதை களில் நடமாடுகின்றன. அதிகமான பெண் பாத்திரங்கள் அநீதிகளுக்கெதிராகப் போராட எத்தனிப்பவையாகவும், தீரம் மிக்கவையாக வும், தியாகத்தின் சிகரங்களாகவும், ஆணாதிக்கத் தைத் தகர்த்தெறிய முயல்பவையாகவும் ஆசிரியரின் கருத்துக்களைத் தாங்குபவையாகவும் விளங்குகின்றன. வக்கிர மனம் படைத்த பாத்திரங்கள் ஒருபுறம்; இலட் சிய வேள்வித் தீயில் தம்மையே கருக்கிக் கொள்ள முயலும் பாத்திரங்கள் மறுபுறம்; முற்போக்குச் சிந் தனைகள் கொண்டவை ஒருபுறம்; கீழ்த்தர மனோ பாவம் உடையவை மறுபுறம்; பெண்களே பெண்களுக் குக் களங்கமேற்படுத்தி, அதிற் சுகம் காண முயலும் பாத்திரங்கள், “போராட முடியாத, போராடத் துணியாத நிரபராதிகள் எல்லாம் இப்படித்தான் குற்றவாளிகளாக் கப்பட்டு விடுகிறார்கள்.” என்னும் நிலைக்குள்ளாகும் பாத்திரங்கள் என இத்தியாதிக் கதை மாந்தர்களைக் கொண்டுள்ளன பல கதைகள். சகல கதைகளிலும் இழையோடும் சோக கீதம், குரூரம் மிகுந்தவர்களின் மீதான எரிமலைக் குமுறல், பொறுத் துப் பொறுத்துப் பொறுக்க முடியாத நிலையில் வெடித் துக் கிளம்பும் சத்தியாவேசம், எவரையும் சிந்திக்க வைக்கும் திறன் முதலியவற்றைக் கொண்டனவான கதைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. சதீஸ், இபாம், கணேஷ், மகேஷ், ஜீவா இத்தியாதி ஆண் பாத்திரங்கள் ஒருபுறம்; அவள், நளிர், நிஷாம்.
Page 5 மரீனா இல்யாஸ் சாஜஹான் முதலிய பாத்திரங்கள் மறுபுறம் - ஆசிரியரது கதைகளுக்குத் தனிக் கவர்ச்சியை ஊட்டுகின்றன. ஆசிரியரின் கச்சிதமான வருணனைகள், மனத்தை விட்டகலாப் பாத்திரப் படைப்புகள், பொருத்தமான தலைப்புகள், பொருத்தமான முடிவுகள், சிந்திக்க வைக் கும் திறன் முதலியவை இக் கதைகளுக்குத் தனிச் சோபையளிக்கின்றன. “அழகற்றவள் என்ற காரணத்துக்காக என்னைத் தட் டிக் கழித்த யாரையும் இனிமேல் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்.” எனப் பிடிவாதமாக வாழ முயலும் பரிமளா, தன் தங்கைகளுக்கு வாழ்வளிப்பதற்காக வாழ்வில் எதிர் நீச்சல் அடிக்க முனைந்து அயோக்கியனால் ஏமாற் றப் பட்டுத் திருமணமாகாமலே குழந்தையை வயிற் றில் சுமந்து, “கல்யாணம் பண்ணிக்க வசதியில்லாட்டி கன்னியா வாழ்ற உரிமைகூட நமக்கில்லை பார்த் தியா..? பெண் விடுதலை பேச்சளவிலே மட்டுந்தான் இருக்குது.” என எரிமலையாகக் குமுறும் இந்து ரீச்சர், "ஜீவா. என்கிட்ட இருந்த பெறுமதியான சொத்து என் இதயம் தான். அதை நான் ஏற்கனவே. குட் பை” எனக் காதலிக்கத் தெரிந்தும் திருமணம் செய்யப் பின் வாங்கும் கையாலாகாத் தனம் மிக்க ஆண்களை நோக்கிக் குமுறும் தமயந்தி. “என்னைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே எத்தனை அழகிகளை ரசித்திருக்கிறான். வர்ணித்திருக்கிறான்! அத்தகைய ஒரு பட்டாம் பூச்சிக்கு. அதிர்ஷ்டம்” குமுறுகின்ற எரிமலைகள் எனத் தன்னைத் தேற்றிக் கொள்ளும் சுமையா; “ஏழை யாகப் பிறந்தாலும் அழகற்றவளாகப் பிறப்பது மகா பாவம்” எனத் தனக்கு வாழ்க்கை கிட்டாத நிலையில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் பரிமளா ஆண்மையற்ற, ஆயின் அன்புள்ளம் கொண்ட தன் காதலனுடன் வாழத் துடிக்கும் சீதா, என்றால் அவர்களுக்கு உணர்ச்சிகள் இல்லையா? 6. & A. A. A ஏழைகள் ஆசைகள் இல்லையா? தன்மானம் சுய கெளரவம் எதுவுமேயில்லையா? பணமிருந்தால்தான் இவை களுக்கு மதிப்பளிக்கப்படுமா?’ எனக் குமுறித் தன் விதவைத் தாயினதும் மணம் முடிக்காத தங்கைகளதும் கண்ணீரைத் துடைக்க, வீட்டுப் பணிப் பெண்ணாக வெளி நாடு செல்லத் தீர்மானிக்கும் ஷாமிலா; நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்ந்தும், பொறாமை உள்ளம் கொண்ட பெண்களின் வக்கணைகளால் தூண் டிற் புழுவாகத் துடிக்கும் பளினா; வீட்டில் செல்வச் செழிப்புடன் எல்லா வசதிகளுமிருந்தும் ஆதரவுக்கரம் நீட்ட ஒருவரில்லையே என ஏங்கித் தவிக்கும் சாந்தி; உயிருக்குயிராகத் தன்னுடன் பழகிய அன்புத் தோழி யையே வஞ்சிக்க முயலும் மும்தாஜ்; பொறாமையுள்ளம் கொண்ட சக மாணவிகளின் வக்க ணைப் பேச்சுகளுக்கு அஞ்சித் தன் படிப்புக்கே முற்றுப் புள்ளி வைக்க முயன்று இறுதியில், “கட்டுக் கதை களுக்குப் பயந்து கட்டுப் பெட்டியாக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காது” தன் படிப்பைத் தொடரும் பரீனா; “மேடையில் எங்களுக்குக் கைக்குட்டை நீட்டுறவ னெல்லாம் காட்சி முடிஞ்ச உடனே கண்ணிரைத்தான்
Page 6 மரீனா இல்யாஸ் பரிசாக்கிறாங்க” முற்போக்குவாதிகளாகவும் பெண் களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுபவர்களாகவும் நடித்துத் திரியும் ஆண்களுக்கெதிராகப் போர்க்கொடி உயர்த்தும் புதுமைப் பெண்ணான அஷ்ரபா; “மிஸ்டர் உனக்கு உன் அம்மா எவ்வளவு முக்கியமோ. உனக்குக் குடும்பமும் ஒரு கேடா?” என வெடித்துக் குமுறித் தன் விதவைத் தாயினதும் தங்கைகளதும் துயர் துடைக்க முயலும் தியாகத்தின் சிகரமான சசிகலா ரீச்சர். இத்யாதி பாத்திரங்களை இத்தொகுதியிலே காணலாம். பெண் விடுதலை பற்றிய வேட்கையும் அது தொடர் பான செயற்பாடுகளும் முனைப்புப் பெற்று வரும் இற்றை நாளில், அவற்றுக்கு மேலும் உரமூட்டும் வகையில் இத்தொகுதியில் அமைந்துள்ள கதைகள் பல விளங்குகின்றமை விண்டுரைக்கத் தக்கன. ஆசிரியரது சமூக நோக்கு, மேன்மேலும் ஆழமும் அகல மும் பெறவேண்டும்; கலைத்துவம் சிறந்தோங்க வேண் டும்; தமிழின் தரமான பெண் எழுத்தாளர்களுள் ஒரு வராக எதிர்காலத்தில் திகழ வேண்டும். அவற்றுக்கான அறிகுறிகள் இப்போதே இவரில் தென்படுகின்றன. இவரது காத்திரம் மிக்க எழுத்து முயற்சிகள் மேன் மேலும் தொடர வேண்டும் எனத் தமிழ் உலகம் ஆவ லோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. - கலாநிதி க. அருணாசலம் பேராதனை தமிழ்த்தறைத் தலைவர் 27. O6. 1996. பேராதனைப் பல்கலைக்கழகம் வெளியீட்டுரை அரிதாம், சொல்லிய வண்ணம் செயல் என்று குறள் கூறுவது போல, சில சமயங்களில் சொன்னதைச் சொன்னபடி செய்தல் பெரிதும் சிரமமாய் அமைந்து விடுகிறது. இதனைச் சித்தரிக்கும் சிறுகதையான “குமுறுகின்ற எரிமலைகள்” என்பதுடன் ஆரம் பித்து, “சொந்தங்கள் சுமையான போது.” எனும் கதையுடன் முடிவு பெறும் இத்தொகுதியில், இள மங்கையரை எதிர்நோக்கும் விதவிதமான பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆதி முதல் அந்தம் வரை, ஆசிரியையின் கற்பனை வளம் வாசிப்பவர் கருத்தைக் கவரக் கூடியதாயிருக்கிறது. இவ ரின் எழுத்து நடையில் துடிதுடிப்பு இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த சமயம், தனக் குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மரீனா இல்யாஸ் அவர் கள் சிறுகதை, கட்டுரை மாத்திரமல்ல நாடகங்கள், கவிதைகள் கூட எழுதியுள்ளார். எழுதுவதில் அவருக்கு நிறைந்த வேட்கை இருக்கிறது. அத்தகைய ஒருவரின் முதலாவது சிறுகதை நூலைப் பிரசுரிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். தனது முதல் சிறுகதைத் தொகுதியையும், தனது பட்டப் படிப்பு இறுதிப் பரீட்சைக்கான ஆய்வையும் தமிழ் மன்றம் வெளியிட வேண்டு மென்பதில், சகோதரி மரீனா பெரிதும் அக்கறை காட்டினார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் நாம் நல்ல அக்கறையெடுத்துச் செயல்பட்டோம். இரு நூல்களை நாம் பிரசுரிப்பதற்கு வாய்ப்புத் தந்த சகோதரிக்கு நன்றி. 10, நாலாவது லேன், - எஸ். எம். ஹனிபா கொஸ்வத்த ரோட், நிறுவனர் ராஜகிரிய, பூநீ லங்கா. தமிழ் மன்றம்
Page 7 உள்ளே. 10. 11. குமுறுகின்ற எரிமலைகள் சாபங்கள் சபையேறிய போது. பாலைவனத்தின் பரிதவிப்புகள் கண்ணிர்ப் பூக்கள் விடிவைத் தேடி. வெதும்புகின்ற ஊமைகள் கசந்து போகும் வசந்தங்கள் அவளின் மறுபக்கம் யாரென்ன சொன்னாலும் வாய்ச் சொல்லில் வீரரடி. சொந்தங்கள் சுமையான போது. 11 16 20 25 29 34 39 45 54 61 68 குமுறுகின்ற எரிமலைகள் தமயந்தி அந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்து ஏறக்குறைய ஐந்து நிமிடங்களாயிற்று. அவளுடன் வந் திருந்த சக மாணவிகள் அலுப்புடன் முணுமுணுத்துக் கொண்டிருந்த அதேவேளை, ஒரு வயதான அம்மாள் வந்து கதவைத் திறந்து “உள்ள வாங்க..” என்றாள். அவர்தான் இந்து டீச்சரின் தாய் என்பதை ஊகித்துக் கொண்டவாறே வந்திருந்த மாணவிகள் உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டனர். “இந்து டீச்சர் ஒரு வாரமா எங்களுக்குக் கிளாஸ் எடுக்க வரல்ல. அதான் என்னாண்டு பார்க்கலாம்னு.” தமயந்தி அந்த வார்த்தைகளை முடிக்கு முன்னர், அந்த அம்மாள் அழுகையோடு எழுந்து உள்ளே சென்று, ஒரு கடிதத்தோடு திரும்பி வந்தாள். தமயந்தி பரபரப்புடன் அதை வாங்கிப் படிக்க, சக மாணவிகள் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.
Page 8 12 மரீனா இல்யாஸ் அன்புள்ள பெற்றோருக்கு, நான் உங்களது ஏகபுத்திரி அல்ல. எனக்கடுத்து வாழ வேண்டிய வயதில் மூன்று தங்கைகள் இருக்கின்றனர். எனக்கு வரன் தேடித்தேடி நீங்கள் அலுத்துப் போக வில்லையோ என்னவோ எனக்கு வெறுத்துப் போய்விட்டது. என் பண்பையும் படிப்பையும் மதிக்காமல் சீதனம், சீதனம் என்று வாயைப் பிளக்கும் எந்தவொரு பண முதலைக்கும் பலியாக எனக்கு இஷ்டமில்லை. அதற்காக காலமெல் லாம் உங்களுக்குச் சுமையாக இருக்க முடியாதல்லவா? எனவே, நானே என் வழியை தேடிக்கொண்டு புறப்பட்டு விட்டேன். எங்கோ கண்காணாத இடத்துக்குச் சென்று நான் சாகத் துன்னீந்து விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்காகச் சாவை அணைக்கின்ற கோழைகளின் பட்டியலில் நிச்சயமாக என் இடம் பெறப் போவதில்லை. வாழ்க்கையில் எதிர் நீச்சல் அடிக்கப்போகும் எனக்கு என்றும் உங்கள் ஆசீர்வாதம் உண்டென நம்புகின்றேன். இப்படிக்கு, இந்துமதி கடிதத்தைப் படித்த மாணவிகள், அழுதுகொண்டிருந்த அந்தத் தாயைத் தேற்றக் கூடத் தெரியாமல் அதிர்ச்சியுடன் வெளியேறினர். குறிப்பாக தமயந்திதான் மிகவும் அடி பட்டுப் போயிருந்தாள். “கையாலாகாதவனுக்குக் கழுத்த நீட்ட மாட்டேங்கிற அந்த நெஞ்சுறுதி ஒவ்வொரு பொண் ணுக்கும் வேணுமடீ.” என்று கொதித்தாள். அவ்வேளை, சக மாணவிகளில் ஒருத்தியான சுவீதா சட்டென்று கேட் டாள். ‘அப்படீன்னா நீயும் சீதனம் கொடுத்து மாப்புள வாங்கமாட்டேங்கிறே. அப்படித்தானே.?” தமயந்தியின் குமுறுகின்ற எரிமலைகள் 3 நெஞ்சில் அந்தக் கேள்வி சுரீரென்று உறைத்தது. தன் காதலன் ஜீவாவை ஒருகணம் நினைத்துக் கொண்டாள். ‘என் போராட்டத்துக்கு அவன் துணை நிற்பானா. என்று மனதுக்குள் சின்னதாய் ஒரு சந்தேகம் ஏற்பட்டதுக் காகத் தன்னைத்தானே கடிந்து கொண்டவளாய் அவள் உறுதியாகச் சொன்னாள். “தன் சொந்தக்காலில் நிக்க முடியும்னு நினைக்கிற தன்னம்பிக்கையுள்ள ஒரு தைரிய சாலியோட தாலியத்தான் நான் நெஞ்சில சுமக்க விரும்பு றேன். இந்த உலகத்துல இருக்கிற எல்லா ஆம்புளயுமே கோழைங்கன்னா. பூவும் பொட்டும் இல்லாம வாழ நான் தயார்.” புருவத்தைத் தூக்கிய சக மாணவிகளை அலட் சியப்படுத்தி விட்டுப் புதுமைப் பெண்ணாக வீட்டை நோக்கி வீறுநடை போட்டாள் தமயந்தி..! OOO “அம்மா போஸ்ட்.” தபால்காரனின் குரல் கேட்டு வெளியே வந்த தமயந்தி, தனக்கு வந்திருந்த அந்தத் திருமண அழைப்பிதழை எடுத்துப் பிரித்தாள். சுவீதா-சங்கர் என்ற சோடிப் பதத்தில் கொஞ்ச நேரம் அவள் விழி கள் நிலைகுத்தி நின்றன. தமயந்தி கல்லூரியை விட்டு விலகி ஓர் ஆசிரியை யாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இந்த மூன்று வருட காலத்துக்குள், இவ்வாறு எத்தனையோ தோழிகளின் திருமண அழைப்பிதழ்கள் அவளை நோக்கி வந்தன. ஆனால், அவள் சோடி தான் இணை பிரிந்துவிட்டது. எந்தப் பிரச்சினையை எதிர்த்து அவள் போராட நினைத் தாளோ அதே பிரச்சினை அவள் வாழ்விலும் குறுக்கிட்டது. ஆனாலும், தமயந்தி பிடி தளரவில்லை. அவள் கடைசியாக
Page 9 4. மரீனா இல்யாஸ் ஜீவாவைச் சந்தித்தபோது ரோஷத்துடன் பேசி விட்டு வந்ததை நினைத்துப் பார்த்தாள். “ஜீவா. என்கிட்ட இருந்த பெறுமதியான சொத்து என் இதயம்தான். அதை நான் ஏற்கனவே உங்களுக்குத் தந்துட்டேன். என் அன்பை விட பணம் தான் உங்களுக்குப் பெரிசுன்னா. உங்களோட வாழ நான் தயாரில்ல. 'குட் பை.” தான் சுடச்சுடப் பேசியதும், அவன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு கூனிக் குறுகிப்போய் நின் றதும் அவள் மனதில் நிழற் படமாய்த் தெரிந்து. “யாரோட கல்யாணம் பத்திரிகை அது.” அம்மாவின் கேள்வியில் சுயஉணர்வு பெற்ற தமயந்தி, “சுவீதாவோட” என்று சுரத்தில்லாமல் சொன்னாள். “சீர்திருத்தம், முற்போக் குன்னு பைத்தியம் மாதிரி உளறிக்கிட்டு நீதான் வாழ்க்கை யைப் பாழக்கிட்டு நிக்கிறே.” அம்மாவின் ஆதங்கத்தில் ஆத்திரத்துக்குப் பதிலாக அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது. “கொள்கைக்காகவும் இலட்சியத்துக்காகவும் போராடுறவங்கள உலகம் பைத்தியக் காரங்களாத்தான் நினைக்குமாக்கும்.” தனக்குத்தானே கூறிக் கொண்டவ ளாகச் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தவள் பரபரப்படைந் தாள். அன்று சனிக்கிழமை என்பதால் காலையில் டியூஷன் வகுப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நேரமாகி விட் டதை உணர்ந்ததும் அவசர அவசரமாக உடைமாற்றி, விடை பெற்று பஸ் நிலையத்துக்கு விரைந்தாள். “ஹலோ தம்மி. எங்க தனிவழிப் பயணம்?” தனக்கு மிகவும் பழக்கப்பட்டுப் போன அந்தக் குரல் வந்த திசை நோக்கி திரும்பிய தமயந்தி ஆச்சரியத்துடன் அதிர்ந்தாள். டீ.ச்.ச.ர். இந்து ஒரு வறட்சிப் புன்னகையுடன் அவள் முன் வந்து நின்றார். “நான் டீச்சர் மட்டும் இல்ல, குமுறுகின்ற எரிமலைகள் 15 இப்ப இன்னொரு அந்தஸ்தும் கெடச்சிருக்கு..” ஆனந்தத் துடன் அந்த வார்த்தைகளைக் காதில் வாங்கிக்கொண்ட தமயந்தி "அப்படியா? சந்தோஷம்.” என்றாள் “நான் அம்மா ஆகப் போகிறேன்.” அப்போதுதான் அவரது உப்பிய வயிற்றைக் கவனித்தாள் தமயந்தி. டீச்சர் எதிர்பார்த்தபடியே ஒரு கொள்கைவாதி கிடைச்சிருப்பார் என்று நினைக்கச் சந்தோஷமாக இருந்தது அவளுக்கு. ஆனால் அந்தச் சந்தோஷம் நீடிக்கவில்லை. “வரதட்சணை கொடுத்து ஒருத்தன வாங்கமாட்டேங் கிற துணிச்சல் மனசுல இருந்திச்சி, ஆனா ஒரு அயோக் கியன் கிட்ட இருந்து என்னக் காப்பாத்திக்கிற அளவுக்கு உடம்புல பலம் இல்லாமப் போச்சு. அதான், கல்யாணம் ஆகாமலே ஒரு குழந்தையை வயித்துல சுமக்கிறேன்.” ஒருகணம் வெலவெலத்து நின்ற தமயந்தி, “இது என்ன கொடுமை டீச்சர்.” என்று கண்ணீருடன் வெடித் தாள். “கல்யாணம் பண்ணிக்க வசதியில்லாட்டி கன்னியா வாழ்ற உரிமை கூட நமக்கில்ல பார்த்தியா..? பெண் விடுதலை பேச்சளவுல மட்டும்தான் இருக்குது.” இந்து டீச்சர் இன்னும் என்னவெல்லாமே சொன்னார். தமயந்தி அப்படியே உறைந்துபோய் நின்றாள். அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த பஸ் வண்டி அவளைத் தாண்டி தூரத்தில் போய்க் கொண்டிருந்தது.! (1985-ல் மாவனல்ல சாஹிராக் கல்லூரி நடாத்திய தமிழ்த்தின விழாப் போட்டியில் முதலிடம் பெற்றது)
Page 10 சாபங்கள் சபையேறியபோது. அந்த மினி பஸ்ஸ~க்குள் இன்னும் சிறிது நேரம் அடைபட்டு இருந்தால் மூச்சடைத்து உயிர் போய்விடும் போலிருந்தது சுமையாவுக்கு, “சே. தலைபோகிற வேலை யாக இருந்தாலும் கூட இந்த மாதிரி வாகனங்களில் நெருங்கியடித்துக் கொண்டு ஏறக் கூடாது.” என்று மன துக்குள் அலுத்துக்கொண்டு மீண்டும் ஒரு தடவை அந்தப் பெண்ணை நோட்டமிடுகிறாள். செக்கச் செவேல் என்ற அந்த உடம்புக்கு ரோஜா நிறத்திலான ஸாரி என்ன அழகாகப் பொருந்துகிறது. கடித்துத் தின்று விடலாம் போல் அந்தக் கன்னங்களில் என்ன கவர்ச்சி. அந்த அழகியின் மீது சுமையாவுக்கு இலேசான ஒரு பொறாமை தலை காட்டியது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் அந்தப் பொறாமையுணர்வு மறைந்து உடம்பில் சின்னதாய் ஒரு சிலிர்ப்புத் தோன்றியது “சே. எத்தனை காமக் கண்கள் அவளை ரசித்துச் சுவைக்கின் றன.” என்று மனதுக்குள் கணக்குப் போட்டுக் கூறினாள். குமுறுகின்ற எரிமலைகள் 17 அந்த வாகனத்துக்குள் இருந்த ந்ெருக்கத்தைப் பயன் படுத்தி ஓர் இளைஞன் வேண்டுமென்றே அவள் மார்பில் சாய்ந்திருந்தான். அவனது கண்களில் தெரிந்த அதிகப் படியான சுவாரஸ்யத்தைப் பார்த்தபோது, சுமையாவுக்கு சாஜஹானின் நினைப்பு வந்தது. அவனும் அப்படித்தான். அழகிகளைக் கண்டால் அதிகப்படியான ஒரு மோகத்தில் தவிப்பான். இன்று ஒருத்தியுடன் சுற்றுவான். அவளை விட அழகான இன் னொருத்தி கண்ணில் பட்டால், நாளை அவள் பின்னால் அலைவான். கொஞ்ச நாளில் அந்தச் சுவையும் புளித்துப் போனால், தன் ரசனைக் கேற்ற இன்னொருத்தியைப் பிடிப்பான். இப்படியாக எத்தனையோ மலர்கள் தாவிய பட்டாம் பூச்சி அவன் என்பதை அறியாமல் தானும் அவன் வலையில் சிக்கியதை நினைத்தபோது சுமையாவிடம் இருந்து நீண்டதொரு பெருமூச்சு வெளிப்பட்டது. ‘என் னைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே எத்தனை அழகி களை ரசித்திருக்கிறான். வர்ணித்திருக்கிறான்..! அத் தகைய ஒரு பட்டாம் பூச்சிக்கு வாழ்க்கைப்படாமல் போனது எத்தனை அதிர்ஷ்டம்' என்று நினைத்து அந்தச் சோகத் திலும் சுகம் காண விழைந்தது அவள் மனம். தன் கால்களை யாரோ அழுத்தி மிதிப்பதை உணர்ந்து, 'ஹாய்' என்று முகம் சுளித்தவாறே தன் சிந்தனைகளில் இருந்து விடுபட்ட சுமையா, அந்த அழகி அவசர அவசர மாக இறங்குவதைக் கவனித்துவிட்டுப் பரபரப்படைந்தாள். "ஆமா. நானும் இந்த எடத்துலதானே எறங்கனும். கொஞ்சம் தவறியிருந்தா வேறெங்கயாவது போயிருப்பேன். நல்லவேளை..” என்று தனக்குத்தானே கூறியபடி, முண்டி
Page 11 18 மரீனா இல்யாஸ் யடித்துக்கொண்டு இறங்கினாள். பின், கசங்கிப் போயி ருந்த ஸாரியைச் சரி செய்துகொண்டு நடக்க முற்பட்ட போது காலில் என்னவோ தட்டுப்பட்டது. குனிந்து அதைக் கையிலெடுத்துப் பார்த்தாள். கைக்கடக்கமான ஒரு ‘மணிபர்ஸ். அதேவேளை, அவளை இறக்கிவிட்ட அந்த 'மினி பஸ் தூரத்தில் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தபோது அவளுக்குக் கவலையாய்ப் போயிற்று. நெருங்கியடித்துக் கொண்டு இறங்கும்போது யாராவது அதைத் தவற விட்டிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டாள். கூடவே, தன்னுடன் அந்த அழகிய பெண் மட்டுமே இறங் கியது சட்டென்று நினைவில் தட்டியது. கண்களைச் சுழற் றிப் பார்த்ததில் அந்தப் பெண் பார்வையில் சிக்கவில்லை. என்ன செய்வது என்ற யோசனையுடன் அந்தப்பர்ஸின்' ‘ஸிப் பை இழுத்துத் துழாவினாள். ஐநூறு ரூபாய்ப் பண மும் கொஞ்சம் சில்லறையும், கூடவே அடையாள அட்டை யும் இருந்தது. அதைப் பார்த்ததும் சுமையாவுக்கு அப் பாடா...' என்றொரு நிம்மதியுணர்வு பிறந்தது. அந்தப் ‘பர்ஸ*க்குரியவளின் வீடு பக்கத்தில்தான் இருக்க வேண் டும் என்ற ஊகம் அதைக் கண்டுபிடித்து அடைந்தபோது சரியென்று பட்டது. கையைப் பிசைந்தபடி வாசலுக்கு வந்த அந்த அழ கிய பெண், சுமையாவைக் கண்டதும் புருவத்தைத் தூக்கி விழித்தாள். விபரத்தைச் சொல்லி, அந்த ‘மணிபர்ஸை ஒப்படைத்து விட்டுத் திரும்ப முற்பட்ட சுமையா மீது அந்தப் பெண்ணுக்குக் கண்ணியமான ஓர் அன்பு பிறந் திருக்க வேண்டும். “உள்ள வாங்க..” என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவள் கெஞ்சியதால் குமுறுகின்ற எரிமலைகள் 19 உள்ளே சென்ற சுமையா அதிர்ச்சியடைந்தாள். கூடத்தில் போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றில் சாஜஹான் உட் கார்ந்து வாசல் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் எந்தவிதமான கவனமும் இல்லை. “இவர் தான் என்னோட கணவர். ஒரு விபத்துல அவ ருக்குப் பார்வை போச்சு.” அந்தப் பெண் அறிமுகப் படுத்தியபோது, என்னவென்று சொல்லத் தெரியாத ஒர் உணர்ச்சிக் குவியலுக்குள் சிக்குண்டு தவித்தாள் சுமையா. “எத்தனையோ வெறியர்கள் கண்களால் துகிலுரித்துப் பார்க்கும் இந்த அழகியை ரசிக்க, அவளது கணவனுக்கு அருகதை இல்லையா? அவளின் நெஞ்சை ஏதோவொன்று நெருடியது. ஆயிரம் அழகிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்த ஒருவனுக்கு அழகு தேவதையென ஒரு மனைவி கிடைத்திருந்தும் அதை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லையென்றால். ஒ. அதைவிடக் கொடுர மான தண்டனை அவனுக்கு வேறென்ன இருக்க முடியும்? குரூரத் திருப்தியுடன் அவனது நிலைமையைப் பார்த் துக் கொண்டிருக்க சுமையாவின் இள மனம் இணங்க வில்லை. அவனது காலடியில் மிதிபட்டுப்போன அழகான பெண்களின் பெயர்கள் வரிசையாக ஞாபகத்துக்கு வர. தொடர்ந்தும் அவளால் அங்கிருக்க முடியவில்லை. அவ சரமாக விடைபெற்றுக் கொண்டு வெளியேறினாள். “யாரு வந்திட்டுப் போறது.?” சாஜஹானின் குரல் காற்றோடு கலந்து வந்து பரிதாபமாக அவள் காதில் விழுந்தது.! (1104. 87 வாலிப வட்டம் வானொலி நிகழ்ச்சி)
Page 12 பாலைவனத்தின் பரிதவிப்புகள் திெர்பார்ப்புகள் ஏமாற்றங்களானால் அதற்கு எத் தனையோ வழிகளில் ஆறுதலைத் தேடிக்கொள்ளலாம். ஆனால் ஏமாற்றங்களே வாழ்க்கையாகி விட்டால் அதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? நேற்றைய பொழுதை மறந்து விடலாம் - இன்றாவது இனிய பூபாளத்தைக் கேட்க முடியுமென்றால். இன்றைய பொழுதைக்கூட மறந்து விடலாம் நாளையாவது விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால். ஆனால், அந்த நம்பிக்கைகள் தான் என்றோ சிதறடிக்கப்பட்டு விட்டனவே. ஊஹூம் ஏழையாய்ப் பிறப் பது பாவம் என்றால், அழகற்றவளாய்ப் பிறப்பது மகா பாவம் எனலாம். பரிமளா பெரிதாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள். நிலைக்கண்ணாடி முன் நின்றுகொண்டு தன் நீண்ட கூந்தலைப் பின்னிக் கொண்டிருந்த அவளது தங்கை சித்ராவின் பார்வை சட்டென்று அக்காவின் பக்கம் தாவி யது. பரிமளாவின் உடம்பெல்லாம் ஒருமுறை கூசிப் போயிற்று. சித்ரா - சித்திரம் தீட்டி வைத்தாற்போல் கச்சித குமுறுகின்ற எரிமலைகள் 2. LO f'56 இருந்தர்ள். அத்தகையதோர் அழகிய தங்கைக்கு அக்காவாகப் பிறந்து விட்டதால், தன் வாழ்க்கை பாழா கிறதா? அல்லது தன்னைப் போன்ற ஒரு அவலட்சணத் துக்குத் தங்கையாய்ப் பிறந்ததால், அவள் வாழ்க்கையும் பாழாகிறதா? என்று பரிமளாவால் தீர்மானிக்க முடிய வில்லை. ஆனால் உணர்ச்சித் தீயில் வெந்து, வெந்து, அவள் தீய்ந்து போய்க் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் தீர்க்கமான உண்மை! 'பெண் பார்த்தல்' என்ற பேரில் எத்தனையோ தடவை அவள் காட்சிப் பொருளாக்கப்பட்டாள். ஆனால், ஒவ் வொரு தடவையும், “ரெண்டாவது மகளையெண்டால் ஒரு மாதிரிப் பேசிச் சரிக்கட்டலாம் போலிருக்கு. சீர் வரிசை கொஞ்சம் குறைந்தாலும் சமாளிக்கலாம்.” என்ற தரகரின் பதில் அவளுள் இடியாய் இறங்கும். தன்னால் இனியும் அந்தப் பதிலைத் தாங்க முடியாது என்று எண்ணிய போதெல்லாம், “தயவுசெய்து எனக்கு வரன் பார்க்கிறத நிறுத்திடுங்கம்மா..” என்று கதறித் துடித்து, பின் அடங் கிப் போயிருக்கிறாள். எவ்வளவு காலத்துக்குத்தான் பெற் றோருக்குச் சுமையாக இருக்கமுடியும்? தங்கைக்கு வாழ வழிவிட வேண்டாமா..? “தங்கையைத் தேடித் தானாக வருகின்ற வாய்ப்பை யெல்லாம் எனக்காகத் தட்டிக் கழிக்காதீங்கம்மா..” என்று எத்தனையோ தடவைகள் மன்றாடிப் பார்த்திருக்கிறாள். ஆனால், அவள் மனம் புண்படும் என்ற கலக்கத்தினாலோ அல்லது சமுதாயத்தின் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரி டுமோ என்ற அச்சத்தினாலோ அவள் பெற்றோர் அதற்கு உடன்படவில்லை. மூத்தவள் என்று ஒருத்தி இருக்க, அவளது உணர்ச்சிகளை உதாசீனப்படுத்தி விட்டு, இளை
Page 13 22 மரீனா இல்யாஸ் யவளுக்கு எப்படித் துணை தேட முடியும்? கண்ணுக்குக் கவர்ச்சியாய் - லட்சணமாய் இல்லையே என்பதற்காக இவள் வாழ்க்கைக்கே தகுதியற்றவள் என்று ஒதுக்கிவிட முடியுமா..? இந்தக் கேள்விக்கு விடை கூறாமலேயே காலச் சக்கரம் விரைவாக உருண்டு கொண்டிருந்தது. O OO வருடங்கள் வந்து வயதைக் கூட்டி விட்டுச் சென் றனவே தவிர, பரிமளாவினதோ, அவளின் குடும்பத்தின் நிலையிலோ எந்தவிதமான இனிய மாற்றத்தையும் ஏற் படுத்தவில்லை. ஒரு குழந்தைக்குத் தாயாக வாழ வேண் டிய இந்த வயதிலும் - ஒரு தாய்க்கு மகளாக - ஏன் குடும்பத் துக்கே சுமையாக - வாழுகின்ற அவலத்தை நினைத்து, “நான் ஏன் சாகக்கூடாது.” என்று பரிமளாவின் உள்ளம் விரக்தியில் துடித்துக் கொண்டிருந்த அதேவேளை, “நான் ஏன் வாழக் கூடாது.” என்று சித்ராவின் நினைப்பு ஏங்கிக் கொண்டிருந்தது. சித்ரா - கூண்டை விட்டுப் பறக்கத் துடிக்கும் காதற் கிளியாக இருந்தாள். தன் ஜோடிப் பறவையை இன்னும் எவ்வளவு காலத்துக்குக் காத்திருக்க வைப்பது என்பதே அவளது பிரச்சினையாக இருந்தது. அக்காவைக் காரணம் காட்டியே அசோக்கின் அவசரத்தை ஆரம்பத்திலிருந்தே தடுத்து வந்தாளாயினும், இனி அது முடியாது என்ற நிலைக்கு வந்தாயிற்று. தான் உயிரோடு இருக்கும் காலத்திலேயே, தன் வீட்டுக்கு விளக்கேற்றி வைக்க ஒரு மருமகள் வரவேண்டும் என்ற தன் வயதான தாயின் ஆசைக்கு, அசோக் தலைசாய்த்துவிட்டான். மேலும் அவன் பொறுமையைச் சோதிப்பது நியாயமற்றது என நினைத்தாள் சித்ரா. ஒருவேளை நீண்ட காத்திருப்! குமுறுகின்ற எரிமலைகள் 23 அவன் மனநிலையை மாற்றிவிட்டால்...? ‘பக்கென்று அவளைப் பயம் கெளவிக் கொண்டது. ஆண்கள் அவசரக்காரர்கள் என்பார்கள். தன் வாலிபத் தின் தோற்றம் வாடிப் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில், அசோக் வேறொருத்திக்குக் கணவனாகி விட்டால் தன் கதி என்னாகும் எனச் சிந்தித்தாள் சித்ரா, அதன்பிறகு, அசோக் கின் மாஜிக் காதலியாகவே அவளைப் பார்க்கும் சமூகத்தின் குரூரப் பார்வையிலிருந்து அவள் தப்ப முடியுமா..? அதன் பின் எந்த இளைஞனாவது அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள முன்வருவானா? அல்லது அவளால்தான் குற்ற மற்ற தூய உள்ளத்துடன் இன்னொருவனுக்கு மனைவியாக வாழ முடியுமா..? எப்படியோ தன் வாழ்க்கைப் பிரச்சினை பற்றித் தானே பெற்றோரிடம் பேசவேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைக்குச் சித்ரா ஆளானாள். அக்காவின் பரிதாப நிலையைப் புறக் கணித்துவிட்டுத் தன் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே யோசிக்குமளவுக்குத் தான் சுயநலக்காரியாகி விட்டேனோ என்ற குற்ற உணர்வுடனும், கூச்சத்துடனும் தான் அவள் பெற்றோரிடம் தன் காதலை வெளியிட்டாள். அதன்பின் அந்த வீட்டில் மிக இறுக்கமான ஒரு சூழ்நிலைக்கு அனை வருமே முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. அம்மா அழுகையில் வெடித்தாள். அப்பா ஊமை யாய்த் துடித்தார். அக்கா..? ஒ.! அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கச் சித்ராவுக்குத் திராணியில்லை. கண் களை மூடிக்கொண்டு மெளனத்தோடு போராடினாள். எப்படியும், அக்காவின் கழுத்தில் தாலி ஏறும் வரை தன் கல்யாணத்தைப் பெற்றோர் அங்கீகரிக்க மாட்டார்கள் என்பது சித்ராவுக்குப் புரிந்து போய்விட்டது. அதேவேளை,
Page 14 24 மரீனா இல்யாஸ் அசோக்கின் கடைசி நிபந்தனை அவளைக் கலவரப் படுத் தியது. அசோக். அசோக். இதுதான் நீ எனக்காகக் காத்திருக்கும் கடைசி இரவா..? அந்த இரவின் நிசப்தம் மேலும் அவளைப் பயமுறுத்தியது. “அசோக். என்னைக் கைவிட்டுடாதே! நான் உன் கிட்ட வந்துடறேன். இதோ இப்பவே, இந்த நிமிஷமே புறப்பட்டுட்டேன்.” அவள் மனம் பரபரக்க, மெல்ல எழுந் திருந்து தூக்கத்திலிருந்த ஒவ்வொருவரினதும் பக்கத்தில் நின்று, மானசீகமாக அழுது மன்னிப்புக் கேட்டாள். கடைசி யாகப் பரிமளாவின் படுக்கையருகே வந்தபோது, அங்கே அவளுக்குப் பதிலாக ஒரு கடிதம் தான் கிடந்தது. உடம் பெல்லாம் உதறல் எடுக்குமாற் போன்ற ஒரு நிலையில், பயத்துடன் அதைப் பிரித்த சித்ரா, "அக்கா.” என்று வீறிட்டாள். அவளது அலறல் கேட்டு விழித்துக் கொண் டவர்களுக்கு ஒர் அதிர்ச்சி காத்திருந்தது. விடிந்ததும் விடியாததுமாக அச்செய்தி காட்டுத் தீ போல் ஊரெங்கும் பரவ, அந்த வீட்டில் மக்கள் திரண்டனர். தாலிக்கயிறு தொங்க வேண்டிய பரிமளாவின் கழுத்தில் தூக்குக்கயிறு தொங்குவதைக் கண்ட அனைத்துக் கண் களிலும் ஈரம் கசிந்தது. செத்த பின்பு கிடைக்கும் அனு தாபம், மீண்டும் அவளை வாழ வைக்கப் போவதில்லை. அவள் நீண்ட உறக்கத்தில் இருந்தாள். ‘அழகற்றவள் என்ற காரணத்துக்காக என்னைத் தட்டிக்கழித்த யாரையும் இனிமேல் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன். என்பது போன்ற பிடிவாதத்துடன் அவள் கண்கள் இறுக மூடியிருந்தன. (1984இல் அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற சிறுகதை) கண்ணிர்ப் பூக்கள் சமுதாயம் காதலை அங்கீகரிக்கிறதோ இல்லையே ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் காதல் என்பது ஒரு தொற்றுநோய் போல் பரவிக்கொண்டு வருவதை மறுக்கமுடியாது. அந்தஸ்து வேறுபாடுகள் ஜாதி பேதங்கள் அனைத்தையும் கடந்து, கட்டுப்பாடு களை உடைத்தெறிந்துவிட்டு, எதிர்த்து நிற்கும் உறவின ரையும், ஏன் - சிலசமயம் பெற்றோரையும் கூடத் தூக்கி யெறிந்துவிட்டு, வாழ்வில் ஒன்றுசேரும் உறுதியும் உண் மையன்பும் படைத்த காதலர்கள் இருக்கத்தான் செய்கிறார் கள். ஆனால், என் காதல் வாழ்க்கையில் இவை எதுவுமே குறுக்கிடவில்லை. விதியே குறுக்கிட்டு விட்டது. விதியோடு போராடி வெல்ல முடியுமா..? என் கனவுகளுக் கும் கற்பனைகளுக்கும் கல்லறை அமைத்துவிட்ட அந்தக் கடிதத்தை - விதியின் சதியை - எண்ணி நொந்து கண்ணீரில் வடிக்கப்பட்டிருந்த அந்த வரிகளை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்க்கிறேன். “சீதா. நான் ஆண்மையற்றவன்; குடும்பம் நடத்து வதற்குத் தகுதியில்லாதவன்; என் பலவீனம் எனக்கு
Page 15 26 மரீனா இல்யாஸ் ஆரம்பத்திலேயே தெரியாத நிலையில் உன் வாழ்வில் குறுக்கிட்டமைக்காக என்னை மன்னித்து விடு. என்னை மணந்து கொண்டால் நீ வாழ்வில் எந்தச் சுகத்தையும் அனுபவிக்க முடியாது. ஒரு குழந்தைக்குத் தந்தையாகும் பாக்கியத்தை இழந்துவிட்ட நான், வாழ்க்கைக்கே தகுதி அற்றவனாகி விட்டேன். எனவே, நீ என்னை மறந்துவிட்டு வேறு ஒரு வரை மணந்துகொண்டு சந்தோஷமாகக் குடும் பம் நடத்த வேண்டும் என்பதே என் விருப்பமாகும்.” ஒ. மகேஷ் சுக்குநூறாக வெடித்துவிட்ட உங்கள் இதயத்தில் இருந்து வடியும் இரத்தத் துளிகளை மாலை யாகத் தொடுத்து என்னை ஆசீர்வதிக்க உங்களால் எப்படி முடிகிறது? நான் வேறு ஒருவரை மணந்து கொள்வதா? என் இதயத்தைத்தான் உங்களுக்குத் தந்துவிட்டேனே மகேஷ். உடம்பை மட்டும் இன்னொருவருக்குச் சொந்தமாக்கச் சொல்கிறீர்களா? மனதால் ஒருவரோடும் உடம்பால் இன் னொருவரோடும் வாழும் இரட்டை வாழ்க்கை விபச்சாரி யின் வாழ்க்கையைவிடக் கேவலமானதல்லவா? அந்த வாழ்க்கையில் நான் எப்படி நிம்மதி பெறமுடியும்.? உங்களால் என் இளமைக்குத் தீனி போட முடியாது என்பதற்காகத்தானே உங்கள் அன்புக்குக் காணிக்கையாகத் தந்து விட்ட என்னை வேறு ஒருவருக்குச் சொந்தமாக்கப் பார்க்கிறீர்கள். தாம்பத்ய உறவு தரும் அந்த அற்ப நேரச் சுகத்தில் மட்டும்தான் வாழ்க்கையே அமைகிறதென்றால், கணவன் - மனைவி என்ற உறவுக்குப் பொருளே இல்லாமல் போய்விடும். சூரியன் தொட்டால்தான் தாமரை மலர்கிறதா? ஒளி பட்டாலே இதழ் விரித்துச் சிரிக்கிறதே. அதுபோல, குமுறுகின்ற எரிமலைகள் 27 நானும் உங்களுக்கொரு அன்பு மனைவியாக இருந்து, கால மெல்லாம் அன்பாய்ப் பணிவிடை செய்து, உங்கள் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து, உங்களுக்கு நானொரு குழந் தையாய், எனக்கு நீங்களொரு குழந்தையாய். ஒருவர் மடியில் ஒருவர் தலைவைத்து. ஒ! இதில் இன்பமில் லையா? அன்பின் அத்திவாரத்தில் அமைக்கப்படும் வாழ்க் கையில் சந்தோஷமில்லையா..? மனம் கொண்டதுதானே மாளிகை. உங்கள் அன்பின் நிழலில் உங்களுக்காகவே வாழ்ந்து மடிகிறேன் மகேஷ். சீதா தன் உள்ளத்து உணர்வுகளை - இதயத்தின் வெளிப்பாடுகளை- எழுத்தில் வடித்து மடலாக்கி மகேஷ~க்கு அனுப்பிவிட்டுத் திரும்பிய அதேவேளை, வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தன அந்தப் பாடல் வரிகள். கண்ணில் நீரைக் காணாமல் கவலை ஏதும் கூறாமல் என்னை எண்ணி வாழாமல் உனக்கென நான் வாழ்வேன். வானொலி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்க, சீதா மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட அந்த அடிகளை மட்டுமே தனக்குள் முணுமுணுத்தவாறு ஆறுதலாகக் கண்களை மூடிக்கொண்டாள். அவள் கண்ணை மூடித் திறப்பதற் குள் கரைந்த அந்தச் சில நிமிடங்களைப் போலவே கால ஓட்டத்தில் நாட்களும் விரைவாகக் கரைந்து கொண்டிருந்தன: சில நாட்களின் பின் சீதாவின் பெயருக்கு வெளி நாட்டில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அவள் அதைப் பரபரப்போடு எடுத்துப் பிரித்தாள்.
Page 16 28 மரீனா இல்யாஸ் “என் உயிருக்கு..! நீ எனக்காக வாழ்வதாக எடுத்த முடிவு, இளமைத் துடிப்பிலும் பருவ வேகத்திலும் எடுத்த அவசர முடிவென்று நினைக்கிறேன். அந்த முடிவை எடுத் ததற்காக நீ பின்னர் ஒருநாள் வருத்தப்படுவாய். நீ வருந்தா விட்டாலும் எல்லாப் பெண்களும் ஆசைப்படும் தாய்மை என்ற உயர்ந்த ஸ்தானத்தை உனக்குத் தரமுடியாமல் போனதை எண்ணி, வேதனைப்படாமல் இருக்க என்னால் முடியாது. எவ்வாறாயினும் நான் உன் கண் முன்னால் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை நீ உன் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்ள மாட்டாய் என்பதை நிச்சய மாகத் தெரிந்து கொண்ட பின்புதான், நான் உன் கண் காணாத இடத்தில் வாழ்வதென முடிவு செய்தேன். அதற் காகத்தான் நான் குவைத்தில் ஒரு ஹோட்டல் சிப்பந்தி யாகக் காலடி எடுத்து வைத்தேன். என் நோக்கம், நீ வாழ வேண்டும் என்பதுதான். கண் நிறைந்த கணவனோடும் கருத்தைக் கவரும் குழந்தைகளோடும் கண்ணிரின்றி நீ வாழ்வதைப் பார்க்க நிச்சயம் ஒருநாள் திரும்பி வருவேன். எங்கிருந்தாலும் உன் இனிய நல்வாழ்வுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் அன்பு மகேஷ்.” கடிதத்தைப் படித்து முடித்த சீதா வாய்விட்டுக் கத்றி அழுதாள். அவளுக்காக எட்டாத தொலைவில் இருந்து, கண்ணிரில் வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருந்தது மகேஷின் உயர்ந்த உள்ளம்.! (1984- சாளரம் இதழ் - 2 கையெழுத்துப் பத்திரிகை) விடிவைத் தேடி. காதல். இந்த உணர்ச்சிக்கு அடிமையாகாத உள்ளங்கள்தான் ஏது.? அவள் மட்டும் இதற்கு விதி விலக்காக இருக்க முடியுமா? பருவத் துடிப்பும் இளமை யின் இரசனையும் அவளுக்கு மட்டும் இல்லாதிருக்க முடியாதே. தென்றலின் தழுவலில் சுகம்பெறத் துடிக்கும் புத்தம் புதுமலராய் இதோ அவள் - ஷாமிலா - தனிமையில் அல்ல: துணையோடுதான். ‘காதல் கொள்வதில் ஆனந்தமே; ஜாடை சொல்வதில் பேரின்பமே என்று அவள் விழி சொல்லும் கதைகளை ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருந் தான் - நிஸாம். கண்களின் வார்த்தைகள் அவனுக்குப் புரியவில் லையோ என்னவோ, மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான். ‘நேத்து எங்க வீட்டுல எல்லாரும் போய்ப் பொண்ணு பார்த்திட்டு வந்திருக்காங்க. பொண்ணு அழகா இல்லைன் னாலும் நிறையச் சொத்து சுகம் இருக்காம். கூடிய
Page 17 30 மரீனா இல்யாஸ் சீக்கிரத்துல கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிடுவாங் கன்னு நெனக்கிறேன்.?” அவன் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண் டிருந்த ஷாமிலா, “யாருக்கு.?” என்றாள். “வேற யாருக்கு, எனக்குத்தான்.” நிஸாம் சொன்னதும் தன் நெஞ்சுக்கு நேரே யாரோ கத்தியைப் பாய்ச்சியது போல் அவள் துடித்துப் போனாள். “நிஸாம். நீங்க விளையாட்டாச் சொல்றதைக் கூட என்னால தாங்க முடியல்ல. ப்ளிஸ். இனிமே இப்படியெல் லாம் பேசாதீங்க.”அவள் கெஞ்ச, அவன் சிரிக்கிறான். “நாங்க விளையாட்டு பொம்மைங்க இல்லன்னு பெரிசா வீறாப்புப் பேசுவீங்க.. ஆனா நிஜங்கள ஜீரணிக்க மாட்டீங்க.” அந்தக் கிண்டலில் அவளுக்குக் கிலி பிறக்கிறது. "நிஜமாகவா..?” அவன் சொல்வது பொய்யாக இருக்கக் கூடாதா என்ற ஆதங்கத்தோடு கேட்கிறாள். அவன் உதட் டில் என்றும் மாறாத அதே விஷமப் புன்னகையுடன் பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தான். ஷாமிலாவால் அதைச் சகிக்க முடியவில்லை. “என்ன நிஸாம், பேசாம இருக்கீங்க. இனிக்க இனிக்கப் பேசி என் இதயத்தைக் கவர்ந்திட்டு, இப்ப இதயமே இல்லாத மாதிரிப் பேசுநீங்களே. உங்க பேச்சை நம்பி நான் கட்டின கனவுக் கோட்டையெல்லாம் கண்ணிரில் கரைஞ்சு விழத்தான் வேணுமா?” ஷாமிலாவின் கதறல் அவனில் எந்தவிதமான பாதிப் பையும் ஏற்படுத்தி விட்டதாகத் தெரியவில்லை. அவன் வெகு சாதாரணமாகத்தான் பேசினான். குமுறுகின்ற எரிமலைகள் 31 “கட்டினதெல்லாம் கனவுக் கோட்டைன்னு நீயே சொல் றியே. பிறகென்ன..? நடக்காத விஷயத்தப் பத்திப் பேசிக் கொண்டிருக்கிறதால யாருக்கும் பிரயோசனமில்ல. ஏதோ நீ கொஞ்சம் பார்க்க அழகா இருந்தே. ரெண்டொரு தடவ பேசினதும் உங்களச் சந்திக்காம என்னால இருக்கவே முடியாது நிஸாம்னு சொல்லிட்டுப் பின்னாலயே வந்தே. இப்ப என்னடான்னா இது பெரிய கரைச்சலாப் போச்சு.’- - அவன் சலித்துக் கொண்டான். அதைப் பார்த்த ஷாமிலாவின் உதடுகளில் ஒரு வரட்டுப் புன்னகை தோன்றி மறைகிறது. ‘என் உணர்வு களுக்கு மதிப்பளிக்காத - என் உள்ளன்பைப் புரிந்து கொள் ளாத -பணத்துக்காக மட்டுமே உறவு கொண்டாடும் இந்த அற்ப ஜீவனையா நான் உள்ளத்தில் உயர்த்தி வைத்துப் போற்றி வந்தேன். அவள் அருவருப்போடு அவனைப் பார்க்கிறாள். ‘இவனிடமா இதயத்தைக் கொடுத்தேன். என்று அடிமனது அலட்டிக் கொண்டது கட்டிப் போட்டிருந்த மனத்தை ஆசை வார்த்தைகள் கூறி அவிழ்த்து விட்டுத் தன் உணர்ச்சிகளுக்கு உரமூட்டியவனே, இன்று அதை உதாசீனம் செய்வதை அவளால் தாங்கமுடியவில்லை. “நிஸாம்.” என்று சன்னமாக விம்மினாள். அவளது அழுகை அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது. “சும்மா அழுது புலம்புறதால ஒண்டும் நடக்கப் போறதில்ல. தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாது. எங்கட அந்தஸ்து என்ன? மதிப்பென்ன..? இதெல்லாத்தையும் விட்டிட்டு, ஒண்டுக்கும் வக்கில்லாத ஒன்னக் கட்டிக் கிட்டா என்ன யார் மதிப்பாங்க...? எங்க மானம், மரியாதை
Page 18 32 மரீனா இல்யாஸ் எல்லாம் என்னாகும்? எந்த நிலையிலயும் எங்க குடும்ப கெளரவத்தை இழக்க நான் தயாரில்ல.” தன் செய்கையை நியாயப்படுத்தி விட்டு அவன் எழுந்து கொள்கிறான். “நிஸாம்.” - அவள் கூப்பிடுவதை அவன் காதுகள் வாங்கிக் கொள்ளவில்லை. திரும்பிப் பாராமல் அவன் நடந்துசெல்வதைக் கண்ணீர்த் திரையினூடே பார்த்துக் கொண்டே இருந்தாள் ஷாமிலா. எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ தெரியவில்லை. மனக்கூண்டுக்குள் அவனை அடைத்து வைத்துக் காரசார மாய்க் கேள்வி கேட்டதில் கணிசமான நேரம் கழிந்தது. நிஸாம், ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா உங்களுக்கு? என் அழகு, அன்பு, ஒழுக்கம், நற்குணம் எதையுமே நீங்கள் மதிக்கவில்லையே. ஏன்? நான் ஏழை என்பதால்தானே..! ஏழைகள் என்றால் அவர்களுக்கு உணர்ச்சிகளில்லையா? ஆசைகள் இல்லையா? தன் மானம், சுயகெளரவம் எதுவுமேயில்லையா? பணமிருந் தால்தான் இவைகளுக்கு மதிப்பளிக்கப்படுமா..? இன்றைய உலகில் பணமிருந்தால்தான் வாழ்வு, என்ற தீர்மானம் வீடு செல்லும்போது அவளுக்குள் தீர்க்க é5{ இருந்தது. ஏழை என்ற காரணத்தால் தனக்கேற்பட்டחtp இந்த அவல நிலை தன் தங்கைகளுக்கு ஏற்படக்கூடாது என்று தன் விதவைத் தாயின் முகம் பார்த்து முடிவெடுத் தாள். பணம். பணம். பணம். என்று அவள் உதடுகள் கனவிலும் பிதற்றின. முடிவு.? வீட்டுப் பணிப் பெண்ணாய் அவள் வெளிநாடு செல்லத் தீர்மானித்து விட்டாள். குமுறுகின்ற எரிமலைகள் 33 கடல் கடந்து சென்றுவிட்டு வந்தததன் பிறகு அவ ளைக் களங்கக் கண் கொண்டு நோக்கும் இந்தச் சமூகம் அவளுக்கு வாழ்வு தராமல் ஒதுக்கக்கூடும். ஆனால் அவள் சம்பாதித்த பணத்தை நிச்சயமாக யாரும் தூக்கி யெறிந்துவிட மாட்டார்கள். அந்தப் பணத்தால் அவளது தங்கைகளை வாழவைக்கலாம் அல்லவா? அந்த நம்பிக் கையில்தான் அவள் நாடு விட்டு நாடு செல்லத் தீர்மானித் தாள். இனி, இரண்டு வருடங்களென்ன? ஈரேழு வருடங்க ளாயினும் சரி, அவள் அங்கிருந்து உழைத்துத் தன் தங்கைகளை வாழ வைக்கத் தயாராக இருக்கிறாள்.! (21. 04. 83 - தினகரன்)
Page 19 வெதும்புகின்ற ஊமைகள் தலைகுனிந்தபடி மெளனமாக என்னுடன் வந்து கொண்டிருந்த பஸினாவை ஒருமுறை நிமிர்ந்து பார்க்கி றேன். ஒ. அவளில்தான் எத்தனைவிதமான மாற்றங் கள். என் கண்களையே என்னால் நம்பமுடியாதபடி துடிப் பாக, சுறுசுறுப்பாக, உற்சாகமாகக் கலகலவென்று இருந் தவள், இப்போது களையிழந்த முகத்துடன் சோர்ந்துபோய் அமைதியாக நடந்துகொண்டு வருவதைப் பார்க்க எனக் குப் புதுமையாக இருந்தது. முன்பெல்லாம் இவ்வாறு அவளுடன் சேர்ந்து செல் கின்ற சந்தர்ப்பங்களில் ஒடியாடித் திரியும் மழலைகளைப் போல சிரித்துச் சிரித்துப் பேசி என்னையும் சிரிக்க வைத்து மகிழ்வாளே. அந்தக் கலகலப்பான சுபாவம் மீண்டும் அவ ளிடம் குடிகொள்ளாதா என்று எனக்கு ஏக்கமாக இருந்தது. யாருடனும் ஒருமுறை பேசிவிட்டால் கூட மறுமுறை அவர்களைச் சந்திக்கும்போது ‘ஹாய்.” என்று ஓடிச் சென்று நலம் விசாரித்து நெடுநாட்கள் பழகியவர்களைப் குமுறுகின்ற எரிமலைகள் 35 போல உரையாடும் பஸினா, இப்போது யாரும் தாமாகவே வந்து பேசினால்கூட அவர்களின் பேச்சுக்கு முகம் கொடுக் காமல் வெகு அலட்சியமாக நடந்து கொள்கிறாள். இந்த மாற்றங்களுக்கெல்லாம் என்ன காரணம்? மிகவும் கண்ணியமான ஒரு குடும்பத்திலே பிறந்து வளர்ந்த பஸ்னாவுடன் நெடுநாட்கள் நெருங்கிப் பழகிய தால், அவளின் குணவியல்புகள் பற்றித் தெரிந்து வைத் திருக்கிறேன். அவளைப் பற்றிச் சொல்வதானால் வஞ்ச கம், சூது, பொறாமை போன்ற சொற்களுக்கு அர்த்தம் கூடத் தெரியாதவள் எனலாம். அந்தளவுக்கு வெள்ளை யுள்ளம் படைத்த அவள் யாரையுமே தனது உடன் பிறப் பாகக் கருதி உறவாடும் பழக்கம் கொண்டவள். அந்தப் பழக்கம்தான் பாஸினாவின் தூய நடத்தையிலே பிறர் களங் கம் காணக் காரணமாய் அமைந்ததோ..? ܝܫ அன்றொரு நாள் நீர் கொண்டு வருவதற்காகக் கிணற் றடிக்குச் சென்றபோது, அங்கே கூடியிருந்தவர்கள் அக் கறையுடன் பேசிய ஒரு விடயத்துக்குத் தற்செயலாகக் காதுகொடுக்க நேர்ந்தது. அங்கே பஸினாவைப் பற்றித் தான் கதை அடிபட்டது. பஸினா நடத்தை கெட்டவள் என்று கூறினார்கள். பல்லைக் காட்டிக் காட்டி ஆண்களுக்கு வலை விரிக்கிறாளாம். "எவனயாவது இழுத்திட்டு ஒடப் போறா...” என்று ஒருத்தி தீர்க்கதரிசனம் கூற, “ஒருத்தனோட போனாப் பரவாயில்லையே..” என்று இன்னொருத்தி ஒருமாதிரி இழுக்க. என்னால் தொடர்ந்து அவ்விடத்தில் இருக்க முடியவில்லை. அவசர அவசர மாகக் குடத்தை நிரப்பிக்கொண்டு திரும்பிவிட்டேன். மறுநாள் பஸினாவைச் சந்தித்தபோது வழக்கத்திற்கு மாறாக அவள் மிகவும் சோர்ந்து போய்க் காணப்பட்டாள்.
Page 20 36 மரீனா இல்யாஸ் காரணம் கேட்டேன். வாய்திறக்கு முன்னரே அவள் கண் கள் குளமாயின. கண்ணிரைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் தடுமாறினாள். தன் உடன்பிறப்பல்லாத எந்த ஓர் ஆணுடனும் ஒரு பெண் சாதாரணமாகப் பழகினால் அதற்குப் பெயர் காதலா? நிச்சயமாக ஓர் ஆணும் பெண்ணும் காதலுக்காக அன்றி வேறெதற்காகவும் பழகக்கூடாதா? அப்படியாயின், நேசக்கரம் நீட்டி உறவாடுகின்ற அத்தனை ஆண்களையும் பஸினா காதலிக்கிறாளா? ஆமாம், இந்த எண்ணத்தில் தான் பலரும் அவளைத் தப்பாகப் புரிந்துகொண்டு பலவாறு விமர்சிக்கத் தொடங்கினார்கள். அந்த விமரி சனங்கள் பஸினாவின் தாயாரை எட்டவே, பெற்று வளர்த்த மகளைக்கூடச் சரிவரப் புரிந்துகொள்ளாத அந்தத் தாயும் 'குடும்ப மானத்தை விற்கப் பிறந்தவள்’ என்று கூறி அவளைத் திட்டினாராம். கன்னங்களில் வழிந்தோடும் கண்ணிரைக் கூடத் துடைக்க மனமின்றி அவள் இதைக் கூறியபோது, ஆதர வாக அவள் கண்ணிரைத் துடைத்துவிட முயல்கிறேன். அவ்வளவுதான்: இத்தனை நேரமும் அவள் அடக்கி வைத் திருந்த அழுகை பீறிட்டுக்கொண்டு வர, என் கைகளை இறுகப் பற்றிய வண்ணம் குமுறிக் குமுறி அழுதாள். தன்னை யாருமே முழுமையாகப் புரிந்து கொள்ள மாட்டார் களா என்ற ஏக்கம் அவள் அழுகையில் தெரிந்தது. ஒருவாறாக அவள் சமாதானம் அடைந்தபோது, “நீயா வது என்ன நம்புநியே. எனக்கு அதுபோதும். உலகம் இப்பத்தான் எனக்குப் புரியுது. வக்கிர புத்தியுள்ள மனு ஷங்க இப்பத்தான் என் கண்ணுக்குத் தெரிபடுறாங்க. இனிமேல்.’ அவள் அக்கூற்றை முடிக்கவில்லை. ஏதோ குமுறுகின்ற எரிமலைகள் 37 ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டவள் போல் பேசாமல் நடந்தாள். அன்று தொடக்கம் அவள் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டாள். எதிலுமே ஒரு பிடிப்பில்லாமல், ஏனோ தானோவென்று நடந்துகொண்டாள். அதிகமாகப் பேசமாட்டாள்; சிரிக்கவும் மாட்டாள். அவள் தன்னைப் பலவந்தமாகக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறாளே தவிர, நிச்சயமாக அவளால் 'உம்' என்று இருக்க முடிய வில்லை என்பதை நான் அறிவேன். அவளின் முகபாவங் கள் அவற்றை எனக்குப் புரிய வைத்தன. ஒரு வானம்பாடி யின் சிறகொடித்த பாவத்துக்காக இந்தச் சமூகம் என்ன தண்டனை அனுபவிக்கப் போகிறதோ..? இச்சமூகம் நம்மில் காணுகின்ற குற்றங் குறைகளை நாம் தவிர்த்து வாழ்ந்தால் - அந்த வாழ்க்கை முறையை நம் மனம் விரும்பாதபோதும், இவ்வாறான இழிவுக்கு நாம் உட்படுத்தப்பட மாட்டோம்; அதற்கு வழியும் இல்லாமல் போய்விடும் என்று எண்ணித்தான் பஸ்னா தன்னை மாற் றிக்கொண்டாள். ஆனால், தவறு செய்தவர்கள திருந்தி வாழ முற்பட்டாலும்கூட அதற்கு இடங்கொடுக்காமல் குப்பையைக் கிளறும் ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்ற உண்மையைப் பளலினா உணர்ந்து கொள் வதற்கு அதிக நாட்கள் செல்லவில்லை. தன்னை எப்படியெல்லாமோ கட்டுப்படுத்திக்கொண்ட பஸினாவால், என்மீது செலுத்துகின்ற அன்பை மாத்திரம் கட்டுப்படுத்த முடியவில்லை. என்றும்போல் என்னுடன் நெருங்கியே பழகினாள். அன்றும் அப்படித்தான். நாங்கள் இருவரும் தையல் வகுப்பொன்றுக்குச் சென்றுவிட்டு ஒன்றாக வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அறிமுகமான பலர் வழியில் அகப்பட்டனர். பளினா அவர்களைப் பார்த்து
Page 21 38 மரீனா இல்யாஸ் ஒரு புன்னகைகூட உதிர்க்கவில்லை. உணர்ச்சியற்ற ஒரு பொம்மையைப் போலத் தன்பாட்டில் வந்து கொண்டிருந் தாள். பாதையோரத்திலுள்ள ஒரு வீட்டை நாம் தாண்டும் போது, அங்கே வம்பளந்து கொண்டிருந்த பெண்களின் பேச்சு பளீனாவைக் கண்டதும் திசை மாறியது. “கண்டும் காணாதவ மாதிரி தலையக் குனிஞ்சு கிட்டுப் போறதப் பாரேண்டி..” என்று ஒருத்தி பேச்சை ஆரம்பிக்க, “ஆடின ஆட்டத்துக்கெல்லாம் தலைநிமிர்ந்து நடக்க முடியுமா..” என்று மற்றவள் விளக்கத்தை வினா வாக்க, “தான் போட்ட தூண்டில்ல எந்த மீனும் சிக்கல்லி யேன்னு கவலையோட போறா” என்று இன்னொருத்தி சிரிக்க. பஸினா வெலவெலத்துப் போய் நின்றாள். அதே நேரம் வம்பளந்த வீட்டு வானொலியில் ஒலித்துக் கொண் டிருந்த பாடலின் சில அடிகள் சட்டென்று என் சிந்தனை யைத் தொட்ட்து. “கதைகட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு.” நான் பஸ்னாவை ஆதரவோடு அணைத்தபடி நடக் கிறேன். அவள் கன்னக் கதுப்புகளில் வழிந்த கண்ணிர், மண்ணில் விழுந்து சங்கமமாகி மறைந்து போகிறது. அவள் தலைகுனிந்து நடக்கிறாள். ஒரு நிரபராதி நீதியற்ற இந்தச் சமுதாயத்தின் வக்கணைகளைத் தாங்கமுடியாமல் தலை சாய்வதை நினைக்க எனக்கு வேதனையாக இருந் தது. போராட முடியாத, போராடத் துணிவற்ற நிரபராதிகள் எல்லாம் இப்படித்தான் குற்றவாளிகளாக்கப்பட்டு விடு கிறார்கள் என்று ஆற்றாமையோடு எண்ணிக் கொண்டே நானும் அமைதியாக அவளைப் பின் தொடர்கின்றேன். (07. 10. 1982 - தினகரன்) கசந்துபோகும் வசந்தங்கள். "அம்மா. அம்மா..” என்று மீனா சந்தோஷமாகக் கூவிக்கொண்டு வருவது கேட்டு அவளது தாய் மரகதத் தம்மாள், வெளியே ஓடிவந்தாள். “அம்மா, நான் பரீட்சை யில் நல்லாப் ‘பாஸ் பண்ணிட்டேன். நிச்சயமா எனக்கு கம்பஸ் என்ரன்ஸ் கிடைக்கும்னு எல்லா டீச்சர்ஸ"ம் சொல் றாங்க” என்றாள். மரகதத்தம்மாள் பெருமிதத்தோடு மகளைக் கட்டி முத்தமிட்டாள். பின், தன் கண்களில் பொங்கி வழிந்த ஆனந் தக் கண்ணிரைத் துடைத்தபடியே நிமிர்ந்தவள், மீனாவின் பின்னால் நின்றிருந்த சாந்தியைக் கண்டுவிட்டு “அட. இது நம்ம சுந்தரம் முதலாளியோட மகளில்ல...!” என்று ஆச்சரியப்பட்டாள். "ஆமாம்மா. சாந்தியும் என்ன மாதிரியே நல்லாப் 'பாஸ் பண்ணி இருக்கா..” என்றவாறே அவளை உள்ளே அழைத்துச் சென்றாள் மீனா. அவர்களிருவரையும் தொடர்ந்து உள்ளே நுழைந்த மரகதத்தம்மாள், சாந்தி உட்காருவதற்கு ஒரு பாயை
Page 22 40 மரீனா இல்யாஸ் விரித்து விட்டு, “இந்த மாதிரி ஒரு குடிசைக்கு நீங்க வாறது தெரிஞ்சா சுந்தரம் முதலாளி கோவப்படுவாரு.” என்றாள். பாயில் உட்காரப்போன சாந்தி சங்கடத்தோடு நெளிந்தபடி, “நானாத்தான் வந்தேன். அப்பா ஒண்ணும் பேச மாட்டாரு..” என்றாள். அதற்கிடையில் தன் வெள்ளைச் சீருடையை அவசர மாக மாற்றிக்கொண்டு வந்து தேனீர் தயாரிக்கவென அடுப் படியில் குந்தினாள் மீனா, “நீ போய் அந்தப் பிள்ளையோட பேசிக் கொண்டிரு.’ என்று அவளை எழுப்பிவிட்டுத் தானே தேனிர் போட்டுக் கொடுத்தாள் மரகதத்தம்மாள். சற்றுநேரத்தில் மூச்சிரைக்க இரைக்க வேகமாக அங்கு வந்தான் மீனாவின் அண்ணன் கணேஷ். மீனா ஒடிச் சென்று அவன் கைகளைக் கட்டிக்கொண்டு, “நீ ஆசைப் பட்டமாதிரியே நான் பாஸ் பண்ணிட்டேன் அண்ணா.” என்று குதூகலித்தாள். “கேள்விப்பட்டேம்மா, அதான் முத லாளிகிட்டச் சொல்லிட்டுக் கடையிலிருந்து ஓடி வந்தேன்” என்றவாறே அவன் தங்கையின் தலையை வருடினான். பின் தன் பையிலிருந்து ஒரு கைக்கடிகாரத்தை எடுத் துக் கொடுத்து, “இது உனக்காக நான் வாங்கிவந்த சின் னப் பரிசு. அப்பா உயிரோட இருந்திருந்தா இதைவிட மேலா ஏதாவது.” அவனை முடிக்கவிடாமல் அவன் மார் பில் முகம் புதைத்துக் கொண்டாள் மீனா. “எனக்கு அப்பா, அண்ணா எல்லாமே நீங்கதான்.” அவள் விம்முவதைப் பார்த்துக் கொண்டிருந்த மரகதத் தம்மாளின் கண்களும் மெல்லக் கலங்கின. அந்தக் குடும்பத்தின் அன்னியோன்னியத்தையும் அன்புப் பிணைப்பையும் இனியும் பார்த்துக் கொண்டிருந் குமுறுகின்ற எரிமலைகள் 4l தால் தன்னையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் உடைந்து போய் விடுவேனோ என்ற பயத்தில் அவசரமாக எழுந்துகொண்டாள் சாந்தி. மீனா தன் அண்ணனுக்கு அவளை அறிமுகப்படுத்து முன், அவனே முந்திக்கொண்டு, “இது சுந்தரம் முதலாளி யோட மகளில்ல..? நம்ம முதலாளி கடைக்கு அடிக்கடி வந்து துணிமணியெல்லாம் அள்ளிக்கிட்டுப் போவாங்க...” என்று சிரித்தான். சாந்தி முகம் சிவக்க எல்லாரிடமும் விடைபெற்றுக்கொண்டு, தோழி மீனாவைக் கட்டாயம் மறு நாள் தனது வீட்டுக்கு வருமாறு கூறிவிட்டுச் சென்றாள். அவள் தன் வீட்டுக்கு வந்தநேரம் வேலைக்காரியைத் தவிர அங்கு வேறெவரும் இல்லை. அம்மா, அப்பா, தம்பி எல்லாரும் எங்கே போயிருப்பார்கள் என்று அவளுக்குத் தெரியும். அதனால் வேலைக்காரியிடம் விசாரிக்காமலேயே நேராக மாடியிலுள்ள தன் அறைக்குச் சென்றாள். அம்மா "லேடீஸ் கிளப்' என்றும், அப்பா “ரெஸ்ட் ஹவுஸ் என்று அலைவதும், தம்பி ரமேஷ் தன் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சதா ஊர் சுற்றித் திரிவதும் அடஞக் கொன்றும் புதிய விஷயமல்ல. என்றாலும் அப்போதைய மனநிலையில் வீட்டில் யாருமில்லையே என்ற ஏக்கம் அவளைப் பெரிதாக வாட்டியது. பரீட்சையில் தான் சித்தி யடைந்த விஷயத்தைச் சொல்வதற்காக அவர்கள் வீடு திரும்பும் வரை ஆவலோடு காத்திருந்தாள். முதலில் வீட்டுக்கு வந்தது தம்பி ரமேஷ்தான். சாந்தி ஓடிச்சென்று அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த தன் சந்தோஷத்தை வெளியே கொட்டினாள். “நீ படிச்சு பட்டம் வாங்கி, என்ன தொழில் செய்யவா..” என்று அவன்
Page 23 42 மரீனா இல்யாஸ் பணக்காரர்களுக்கே உரித்தான அலட்சியத்துடன் தூக்கி யெறிந்து பேசிவிட்டு, ‘கஸ்ட்டைப் போட்டுக்கொண்டு ஆடத் தொடங்கினான். அம்மாவிடமிருந்தாவது தன் மனங் குளிர ஒரு வார்த்தை கிடைக்கும் என்று காத்திருந்தாள் சாந்தி. இரவு வீடு திரும்பிய அம்மா நேராகத் தன் படுக்கையறைக்குச் சென்று கட்டிலில் தொப்பென்று வீழ்ந்தாள். ஆவலோடு அவளுடன் பேசத் துடித்த சாந்தியிடம் “எதுவாயிருந்தாலும் காலையில் பேசிக்கலாம். இப்ப டயர்டா இருக்கு.” என்று கூறி மறுபுறம் புரண்டு படுத்தாள். ஏமாற்றத்துடன் திரும்பிய சாந்தியின் பார்வையில் தந்தை எதிர்ப்பட்டார். அவரது சிவந்த கண்களையும் தள் ளாடிய நடையையும் கண்டு விக்கித்தவள், மெளனமாகத் தன் அறைக்குள் நுழைந்து கட்டிலிடம் தஞ்சம் புகுந்தாள். கார், பங்களா, வசதியான வாழ்க்கை அத்தனையும் இருந்தென்ன. தன்னை வரவேற்கவோ, வாழ்த்தவோ தன் சந்தோஷத்தைப் பரிமாறிக்கொள்ளவோ இந்த வீட்டில் ஒரு ஜீவன் இல்லையே என்று நினைத்தபோது, அழுகை ஆக்ரோஷமாகப் பெருக்கெடுத்துக்கொண்டு வந்தது. நீண்ட நேரம் தலையணையை நனைத்து விட்டுப் பின் தனக்கே தெரியாமல் நித்திரையாகி விட்டாள் சாந்தி. காலையில் 'டீ போட்டுக்கொண்டு வந்து வேலைக் காரி கதவைத் தட்டியபோதுதான் விழிப்பு வந்தது. அதைப் பருகிவிட்டுத் தன் அறையின் ஜன்னலைத் திறந்து வெளியே பார்வையைச் செலுத்தினாள். அப்போதுதான் அம்மாவும் அப்பாவும் காரில் ஏறிக்கொள்ளும் காட்சி தெரிந்தது. கார் ஒரு சிறுபுள்ளியாகத் தூரத்தில் சென்று குமுறுகின்ற எரிமலைகள் 43 மறையும்வரை பார்த்துக்கொண்டே இருந்தாள். சற்று நேரத்தில் தம்பி ரமேஷ் மோட்டார் சைக்கிளை உதைத்துக் கொண்டு கிளம்பும் சத்தம் காதைப் பிளந்தது.! சாந்தி ஒரு பெருமூச்சோடு குளியலறைக்குள் நுழைந் தாள். குளித்துவிட்டு வெளியே வரும்போது, வேலைக்காரி மேசை நிறைய உணவு பரப்பி வைத்திருந்தாள். அவளுக்கு அவற்றைத் தொட்டுப் பார்க்கவும் மனம் வரவில்லை. “சாப்பிட்டாயா..?” என்று ஆதரவுடன் கேட்கவோ, அன்பு காட்டவோ யாருமில்லாமல் தான் அநாதையாகி விட்டது போன்ற வேதனையில் மனம் துடித்தது. மீனாவின் குடும் பத்தை நினைத்துப் பார்த்தாள். பணத்தால் ஆடம்பரப் பொருட்களை வாங்க முடியுமே தவிர, அப்படியொரு சந் தோஷமான - நிம்மதியான வாழ்க்கையை வாங்க முடியுமா என்று ஏங்கினாள். அன்று பின்னேரம் சாந்தியின் வீட்டுக்கு வந்த மீனா, கதையோடு கதையாகத் தன் அண்ணனுக்குத் திருமணம் பேசும் விவகாரத்தையும் சொல்லி வைத்தாள். சாந்தி, திடீர் உற்சாகத்தோடு, “பொண்ணு அழகா..? பெரிய இடமா?” என்றெல்லாம் விசாரித்தாள். மீனா சிரித்துக் கொண்டே கேட்டாள். “ஒரு கடையில சம்பளத்துக்கு வேல பார்க்கிற சாதாரண 'சேல்ஸ்மேன் பெரிய இடத்துச் சம்பந்தத்த நினைச்சுப் பார்க்கவாவது முடியுமா..?” அந்தப் பதில் சாந்தியை ஊமையாக்கியது. ஆனால், அவள் உள்ளம் எதையோ சொல்லத் துடித்தது. சில நிமிட மெளனப் போராட்டத்தின் பின், “நான். நான். உன் அண் ணியா வர ஆசைப்படுறேன்டி..” என்று அவள் தன் ஆசையை வெளியிட்டபோது, மீனா ஒருகணம் அதிர்ந்து போனாள். இப்படியொரு சொகுசான வாழ்க்கைய விட்டுட்டு
Page 24 44 மரீனா இல்யாஸ் வர இவளுக்கென்ன பைத்தியமா என்று குழம்பினாள். “இப்ப நீ எதுவும் சொல்ல வேணாம். நாளைக்கு "ஸ்கூல் பார்ட்டிக்கு வருவேயில்ல, அண்ணாக்கிட்ட கேட்டு அவர் முடிவ அப்ப வந்து சொல்லு. போதும்” என்று மீனா விடைபெறும்போது சொன்னாள் சாந்தி. மீனா வுக்கு அவள் பேச்சு விநோதமாக இருந்தது. அடுத்தநாள் அவ்விரு தோழியரும் பாடசாலையில் சந்தித்துக் கொண்ட போது, கணேஷின் முடிவென்ன என்று சாந்தி ஆவலுடன் விசாரித்தாள். “மாளிகையில வாழுற உன்ன மண் குடிசைக் குக் கூட்டி வந்து கஷ்டப்படுத்த மனசில்லன்னு சொல்லச் 99 சொன்னாரு..” என்றாள் மீனா. சாந்தி ஒரு பெருமூச்சுடன் வானத்தை வெறித்தாள். வானம் மேகங்களின்றிச் சூன்யமாகத் தெரிந்தது.! (24 - 01 - 1990 'வாலிப வட்டம் - வானொலி நிகழ்ச்சி) அவளின் மறுபக்கம். தபால்காரனின் சைக்கிள் மணியோசை கேட்டதும் தம் விடுதியறைக்குள்ளிருந்து கதீஜாவும் மும்தாஜும் பாய்ந் தோடி வெளியே வந்தனர். மும்தாஜுக்கு அவளது வீட்டி லிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அவள் சந்தோஷத் துடன் அதைப் பெற்றுக்கொண்டு அறைக்குத் திரும்ப, கதீஜா அவளைப் பின் தொடர்ந்தாள். தோழியின் முகமாற்றத்தைக் கவனித்த மும்தாஜ், “நேற்றுத் தான் உங்க வீட்டவங்க உன்ன வந்து பாத்திட்டுப் போனாங்களே, அதற்கிடையில் என்ன கடிதம் வேண்டிக் கிடக்கு.?” என்று கூறிச் சிரித்துவிட்டுத் தனக்கு வந் திருந்த கடிதத்தில் கண்களை மேயவிட்டாள். பின், அதைக் கதீஜாவிடம் நீட்டினாள். அவள் அதை வாங்கத் தயங்கு வதைக் கண்டதும் சற்றுக் கோபமடைந்தவளாக, “ஒரே வகுப்புல படிக்கிறோம். ஒரே அறையில தங்கி ஒண்ணாவே சாப்பிட்டு ஒண்ணாவே துரங்குறோம். நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு இருக்கு.? சும்மா பாரேன்.” என்று அவள் கைக்குள் கடிதத்தைத் திணித்தாள். அந்தக் கனி
Page 25 46 மரீனா இல்யாஸ் வில், கதீஜா பூரித்துப் போனாள். கள்ளமில்லாமல் வெளிப் படையாகப் பழகும் திறந்த மனதுடைய ஒரு நல்ல தோழி, தனக்கு வாய்த்திருப்பதை நினைத்து உள்ளூரப் பெருமைப் பட்டுக் கொண்டாள். கதீஜா, மும்தாஜ் இருவரும் வெவ்வெறு ஊர்களில் இருந்து கண்டியிலுள்ள ஒரு பிரபலமான பாடசாலைக்கு உயர் வகுப்பில் படிக்க வந்து, அதன் பின்னரே நண்பிகள் ஆனார்கள். போக்குவரத்துக் கஷ்டங்களை முன்னிட்டு, இருவரும் பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் அறையெடுத்துத் தங்கிப் படிப்பதாக முடிவெடுத்தனர். இருதரப்பு வீட்டினரதும் சம்மதத்துடன் அவ்வாறு அவர் களிருவரும் ஒரே அறையில் தங்கியதிலிருந்து, அவர் களுக்கிடையிலான நட்பு மேலும் நெருக்கமாகி ஆழமாக வேர் விட்டு வளர்ந்தது. “கடிதத்தைப் பார்க்காம என்ன யோசிக்கிறே.?” மும்தாஜின் கேள்வியில் சிந்தனை கலைந்தவளாக அந்தக் கடிதத்தை மேலோட்டமாக வாசித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தபடி, கதீஜா சொன்னாள். “உங்க உம்மா நிறையப் புத்திமதி சொல்லி எழுதி இருக்கிறா என்ன. முக்கியமா ஆம்புளப் புள்ளங்களோட ஜாக்கிரதையாப் பழகும்படி.” மும்தாஜ் கலகலவென்று சிரித்துவிட்டுச் சொன்னாள். “உம்மா எப்பவும் இப்பிடித்தான் எழுதுவா. நான் என்ன விபரம் தெரியாத புள்ளயா, அப்படிப் புத்திகெட்டு நடக்கிற துக்கு. ஏதோ, நானாவுக்கு "டெலிபோன்' பண்றதுக்கு மட்டும் அப்பப்ப வெளியப் போவேன். அவர்தான் கடிதமே எழுத மாட்டாரே. சரியான சோம்பேறி. கேட்டா ஆபீஸ்ல வேலை அது இதுன்னு மழுப்புவாரு..” சொல்லியபடியே கதீஜாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்த மும்தாஜ், “எங்க குமுறுகின்ற எரிமலைகள் 47 வீட்டிலிருந்து யாரும் வந்தா அதப்பத்தி எதுவும் உளறி வைக்காதே.” என்று எப்போதும் போல் எச்சரித்தாள். “நானாவோட கதைக்கிறதுக்கு ஏன்தான் இவ்வளவு பயப்படுறியோ..” என்று தன் சந்தேக எச்சிலை வெளியே துப்பினாள் கதீஜா. “நான் தான் சொல்லியிருக்கேனே. வாப்பாவோட வாக்குவாதப்பட்டுக்கிட்டு இனிமே இந்த வீட்டுவாசப்படிய மிதிக்கமாட்டேன்னு சபதம் பண்ணிட்டு நானா வெளியிறங்கினாரு. அதனால அவரோட எந்தத் தொடர்பும் வெச்சிக்கக் கூடாதுன்னு வாப்பா கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கிறாரு. ஆனா, என்னால அவரை ஒதுக்க முடியல்ல.” அவள் கண் கலங்குவதைக் கண்ட கதீஜா பதறிப் போனாள். வீட்டைவிட்டு வெளியேறி எங்கோ ஒரு தனியறையில் தங்கி, 'ஆபிஸ் வேலையும் 'ஹோட்டல்’ சாப்பாடுமாக அலைந்து கொண்டிருக்கும் தன் நானாவை நினைத்துக் கலங்கிக் கண்ணிர் வடித்த மும்தாஜ், பின்னர் ஆறுதலுக் காக அவரோடு டெலிபோனில் கதைத்து விட்டு வருவ தாகக் கூறி வெளியே புறப்பட்டாள். அவள் விடைபெற்றுக் கொண்டதும், அந்த அறையே வெறுமையாகிவிட்டது போலிருந்தது கதீஜாவுக்கு. தான் தனித்து விடப்பட்டது போன்றதொரு உணர்வில் வீட்டு நினைவு வந்து வாட்டியது. மும்தாஜ் பக்கத்திலிருந்தால், எதைப் பற்றியுமே யோசிக்கவிடாமல் எந்நேரமும் கலகலத் துக் கொண்டிருப்பாள். எதையும் மூடிமறைக்கும் பழக்கம் அவளிடமில்லை. ஒரு தடவை அதுபற்றி வாய் விட்டுக் கேட்டுமிருக்கிறாள் கதீஜா. “நான் யாரோட அன்பாய்ப் பழகுறேனோ அவங்கக் கிட்ட் என் மனச அப்படியே கொட்டிடுவேன்.” என்றாள்
Page 26 48 மரீனா இல்யாஸ் உண்மைதான். உடன்பிறப்புக்கள் எவருமின்றிப் பெற்றோ ருக்கு ஒரே மகளாகப் பிறந்து வளர்ந்த கதீஜா, மும்தாஜின் நட்பில் தோழமையின் அம்சங்களை மட்டுமன்றி, ஒரு சகோதரியின் வாஞ்சியையும் பரிவுணர்ச்சியையும் கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறாள்...! “எந்தக் கோட்டையப் புடிக்க இந்த யோசன மகா ராணி.?” என்று கேட்டபடியே, வெளியே போயிருந்த மும் தாஜ் திரும்பி வந்தாள். “இந்த இளவரசி எவன் கூடவாவது ஒடிப் போயிட்டாளோன்னு யோசிச்சேன்..” என்று இவள் விளையாட்டாகக் கூற, “மகாராணியோட உத்தரவில்லாம அப்படியேதும் செய் வேனா.” என்று அவள் பதிலுக்குக் கேட்க, இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். சிரிப்புக்கு மத்தியிலும் மும் தாஜின் கண்களில் கண்ணிர் முத்துக்கள் திரள்வதைக் கண்டு திகைத்த கதீஜா, “உன் மனச நோவிக்கிற மாதிரி பேசிட்டேனா..?” என்று துடித்தாள். அவள் தலையசைத்து அதை மறுத்தபடி, “நானாவுக்கு 'ஃபோன் பண்ணினப்போ அவர் ஆபிஸ்கே வரல்லைன்னு அவரோட 'ஃபிரெண்டு’ சொன்னாரு சுகமில்லாம ‘ஹாஸ்பிடல்ல இருக்காராம்.” - மும்தாஜ் கண் கலங்குவதைப் பார்த்து, கதீஜாவின் உள்ளம் பதைபதைத்தது. “நாம ரெண்டுபேருமாச் சேர்ந்து ஆஸ்பத்திரிக்குப் போய் அவரைப் பார்த்திட்டு வருவோமா..?” என்று பரி வுடன் கேட்டாள். மும்தாஜின் முகம் சட்டென்று தெளிந்து, பின் மீண்டும் இருண்டது. “இன்னிக்குப் பின்னேரம் வகுப்பிருக்கில்லியா. ரெண்டுபேருமே “கட் பண்ணினாக் கஷ்டம். நீ மட்டுமாவது போனாத்தான் நல்லம்..” என்றாள். கதீஜா அதற்குச் சம்மதிக்க, மதிய உணவுக்குப் பின் குமுறுகின்ற எரிமலைகள் 49 அவள் வகுப்புக்கும், மும்தாஜ் ஆஸ்பத்திரிக்கும் புறப் பட்டனர். வகுப்பு விட்டு வந்தபின், மீண்டும் தனிமையும் வெறுமையுணர்வும் குடிகொண்டவளாகக் கட்டிலில் சாய்ந் தபடி மும்தாஜின் வருகைக்காகக் காத்திருந்தாள் கதீஜா. மாலைநேரம், அறைக்குத் திரும்பிய மும்தாஜ் சந்தோஷ மாகக் காணப்பட்டாள். தன் சகோதரன் குணமடைந்திருப் பதே அதற்குரிய காரணம் என்றாள். கதீஜா அன்றைய வகுப்பில் படித்தவற்றைத் தோழிக்கு விளங்கப்படுத்தி விட்டு, அடுத்துவரும் சனி, ஞாயிறு தினங்களில் வகுப்பு இல்லை என்று ஆசிரியர் சொன்ன விபரத்தையும் அவளி டம் கூறினாள். பின், அந்த வார இறுதியில் இருவரும் தத்தம் வீட்டுக்குச் செல்வதென முடிவெடுத்தனர். குறித்த தினம் வந்ததும் இருவரும் ஒன்றாகவே வீட் டுக்குச் செல்ல ஆயத்தமாயினர். ஒரு பெருநாளைக்கு இரு வரும் பேசிக்கொண்டு வாங்கிய ஒரே நிறத்திலான, ஒரே வடிவிலமைந்த உடைகளை உடுத்தனர். பின், இரண்டு நாட்களிலும் உபயோகப்படக்கூடிய அவசியமான பொருட் களிைர்சிறு தோற்பைகளில் போட்டுக் கொண்டனர். அந்தத் தோற்பைகள் கூட ஒரேயளவில், ஒரே நிறத்தில் இருவரும் பேசிக்கொண்டு ஒன்றாக எடுத்தவைதான். அதில்கூடத் தங்களது ஒற்றுமையையும் சிநேகித மனப்பான்மையையும் வெளிக்காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு ஒரு பெரு மிதம். பின் இருவரும் பஸ் நிலையம் வரை ஒன்றாகவே வந்தனர். ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் அறைக்குத் திரும்புவதாகக் கூறிக்கொண்டபின், இருவரும் வெவ் வேறு திசைகளில் செல்லும் பஸ்களில் ஏறித் தத்தம் ஊர் நோக்கிப் பயணமாயினர்.
Page 27 50 மரீனா இல்யாஸ் கதீஜா வீட்டுக்குச் சென்றவுடன், தன் தந்தை கொழும் புக்கு உத்தியோக மாற்றம் பெற்றிருப்பதை அறிந்து துக்கித்தாள். குடும்பத்துடன் கொழும்புக்குச் செல்வதென வும் அங்குள்ள பாடசாலை ஒன்றில் மகளைச் சேர்த்துத் தொடர்ந்து படிக்க விடுவதென்றும் பெற்றோர் எடுத்திருந்த முடிவு, அவளைச் சந்தோஷப்படுத்தவில்லை. மும்தாஜைப் பிரிந்து செல்வதை நினைக்கக் கவலையாக இருந்தது. முகத்தை தொங்கப் போட்டவாறே தன் அறைக்குள் சென்று உடைமாற்றிக் கொண்டாள். பின், தன் தோற் பை யைத் திறந்து பொருட்களை வெளியே எடுக்க முற்பட்ட போது, கைநழுவி'டயரி விழ, கூடவே ஒரு புகைப்படமும் விழுந்தது. அதைப் பார்த்த கதீஜா ஏகமாய் வியர்த்தாள். அதில் மும்தாஜ் ஓர் இளைஞனோடு கைகோர்த்தபடி நின் றிருந்தாள். பின்பக்கத்தில் மும்தாஜ் - பைசல் என்று எழுதப் பட்டிருந்ததை நெற்றியைச் சுருக்கிக்கொண்டு பார்த்தாள். மும்தாஜின் தோற்பை தன்னிடம் மாறி வந்திருப்பதை உணர்ந்தபோது, சங்கடமாக இருந்தது. வெளியே எடுத்த பொருட்களையெல்லாம் மீண்டும் கவனமாக உள்ளே வைத் தாள். அந்த டயரியும் புகைப்படமும் கையில் கனத்தன. மனக் குழப்பத்தோடு டயரியின் பக்கங்களை நோக்கமின்றி வெறுமனே புரட்டினாள். சட்டென்று ஒரு பக்கத்தில் அவள் விழிகள் நிலைகுத்தி நின்றன. பின் அந்த வரிகளில் வேக மாக மேய்ந்தன. “கடிதங்கள் பரிமாறிக்கொள்ள வசதியற்ற நிலையில் நானும் பைசலும் டெலிபோனில் கதைத்துக் கொள்வது சகஜமாகி விட்டது. நம் காதல் விவகாரம் கதீஜாவுக்குக் கனவிலும் தெரியாது. இல்லாத ஒரு நானாவை அவள் மனத்தில் கச்சிதமாக உருவாக்கிக் கதையளந்திருக் குமுறுகின்ற எரிமலைகள் 5. கிறேன்.” கதீஜா தன் கண்களையே நம்ப முடியாதவளாக ஊன்றி, ஊன்றி அந்த வரிகளை மீண்டும் ஒருமுறை வாசித்தாள். நெஞ்சுக்குள் மிகக் கடுமையானதொரு வலியெடுத்து, அது உடம்பெங்கும் வேதனையோடு பரவுவதை உணர்ந்து துடித்தாள். அந்த டயரியின் மற்றொரு பக்கம் இன்னொரு உண்மையை அவளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. “நானா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகப் பொய் சொல்லி, அவரைப் பார்க்கப் போவதாகக் கதீஜாவை நம்ப வைத்துவிட்டு, பைசலைச் சந்திக்கச் சென்றேன். பேராதனைப் பூங்காவில் இருவரும் இன்பமாகப் பொழு தைக் கழித்தோம்.” f கதீஜாவின் மூளையை அசுரத்தனமாக யாரோ கசக்கிப் பிழிவதைப் போலிருந்தது. “ஆண்டவா..! நானாவை நினைத்து அவள் அழுது கலங்கியதெல்லாம் கைதேர்ந்த நடிப்பா? அப்பட்டமான பொய்யா..? எப்படி. எப்படி. அவளால் அத்தனை சுலபமாக என்னை ஏமாற்ற முடிந்தது? நல்ல வளாய், கள்ளமற்றவளாய், கனிவுள்ளம் கொண்ட வளாய் வேஷம் போட இவளால் எப்படி முடிந்தது..? 'உனக்கும் எனக்கும் இடையில் எந்தத் திரையுமில்லை என்று ஒவ்வொரு நாளும் கதையளப்பாளே. எல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள் தானா..?” ஆயிரமாயிரம் கேள்விகள் அலையலையாய் நெஞ்சில் வந்து மோதி அவளை அலைக்கழித்தன. மனம் ஹோவென்று அழுது ஆர்ப்பரித்தது. உள்ளம் வெந்து பொருமியது. எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலைத் தாங்கிக் கொண்டாலும் கூட நண்பர்களால் வஞ்சிக்கப்படுவதைப் பொறுக்கமுடியாது என்பதை அப்போதுதான் அவள் உணர்ந்தாள்.
Page 28 52 மரீனா இல்யாஸ் பொங்கிப் பொங்கி வந்த கண்ணிரை அழுந்தத் துடைத்துக் கொண்டு வெளியே வந்து, இயல்பாக இருக்க முயன்று தோற்றுப் போனாள். கொழும்புக்குப் போக இஷ்ட மில்லையென்று இவள் கவலைப்படுவதாகப் பெற்றோர் தீர்மானித்துக் கொண்டனர். அப்போதைய மனநிலையில் அந்த மாற்றத்தை அவள் வரவேற்பதை அவர்கள் அறிந் திருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் அறையைக் காலி செய்து வருவதாகக் கூறிவிட்டு, அவள் புறப்பட்டாள். ஏற்கனவே அறைக்கு வந்திருந்த மும்தாஜ் வாய் நிறைய இவளை வரவேற்றாள். “ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதான் நானும் வந் தேன். அந்தக் கொஞ்சநேரமும் நீ இல்லாம இருந்தது பைத்தியம் மாதிரி இருந்தது” என்று அளந்தாள். எப்படி இவளால் இத்தனை போலித்தனமாக வார்த்தைகளைக் கொட்ட முடிகிறது என்று நினைக்க மலைப்பாக இருந்தது கதீஜாவுக்கு. இருவரும் தங்கள் தோற்பை மாறிச் சென்றுவிட்ட தைப் பற்றிக் கதைத்து முடித்தபின், தன் தந்தையின் உத்தியோக மாற்றம் பற்றிக் கதீஜா சொன்னாள். தானும் பெற்றோருடன் கொழும்புக்குப் போவதாக அவள் குறிப் பிட்டதும் மும்தாஜ் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். கதீஜா அவள் அழுகையை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. ஏனிந்த நாடகம்..?’ என்று உள்ளுக்குள் கொதித்தபடியே தன் பொருட்களையெல்லாம் ஒன்றாக்கி ஒரு “சூட்கேஸில் அடுக்கினாள். பிரிவுக் கவலையில் அவள் நெஞ்சடைத்துப் போயி ருப்பதாக நினைத்துக் கொண்டு; கண்ணிர் வடித்தபடியே குமுறுகின்ற எரிமலைகள் 53 பொருட்களை அடுக்குவதில் கதீஜாவுக்கு உதவினாள் மும்தாஜ். “உன்னைப் பிரிஞ்சி நான் எப்படி இருக்கப் போறேன்?” என்று இடைக்கிடை புலம்பவும் அவள் தவற வில்லை. கடைசியாகத் தன் ‘ஆட்டோகிராஃப்”பை நீட்டி, “உன் ஞாபகார்த்தமா எதையாவது எழுதிட்டுப் போயேன்.” என்றாள். கதீஜா அதன் வெற்றுப் பக்கமொன்றைப் புரட்டி அதில் தன் பேனாவைப் பதித்தாள். தன்நெஞ்சு அறிவது பொய்யற்க,பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். என்றெழுதிக் கையெழுத்திட்டு, அவள் முகத்தைப் பார்க் காமலே ‘குட்பை என்றாள். மும்தாஜின் நெஞ்சில் சிறு பொறியாகக் கிளம்பிய குற்ற உணர்வு, பெருந் தீயாக வளர்ந்து அவளைப் பொசுக்கு முன்னரே, கதீஜா வெகு தூரம் போய்விட்டாள். சாயம் வெளுத்துவிட்ட நரியின் நிலையில் நின்று கொண்டு, அவள் போவதையே பரிதாப மாகப் பார்த்தபடி நின்றாள், மும்தாஜ். (22, 10. 1989 - சிந்தாமணி)
Page 29 யாரென்ன சொன்னாலும். வெள்ளைப் புறாக்கள் வீதியைக் குத்தகைக்கு எடுத் துக் கொண்டு வந்து விட்டதைப்போல், மாணவ மணிகள் பரபரப்பும் கலகலப்புமாகப் பள்ளிக்கு விரைந்து கொண் டிருந்தனர். பேச்சுக்கும் சிரிப்புக்கும் நம்மிடம் என்ன பஞ்சம் என்று கேட்பதைப்போல், பெரும் ஆரவாரத்தோடு போய்க் கொண் டிருந்த அந்த மாணவர்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து ஒதுங்கித் தான் மட்டும் தனியாகப் போய்க்கொண்டிருந்தாள் ஒருத்தி; அவள்தான் பரீனா. அமைதியான குணமும், அழகான தோற்றமும், களங்க மற்ற உள்ளமும் கொண்டவள்தான் இந்தப் பரீனா. அவளுக் குக் களங்கத்தை ஏற்படுத்தத் துடித்துக் கொண்டிருந்தன சில கறைபடிந்த உள்ளங்கள். பரீனாவின் பின்னால் வந்துகொண்டிருந்த ஒரு மான வப் பட்டாளத்தின் வாயில், முன் தினம் பார்த்த டி.வி. குமுறுகின்ற எரிமலைகள் 55 நிகழ்ச்சி பற்றிய விமரிசனங்கள், புதிதாகப் பாடசாலைக்கு வந்திருக்கும் பாரிஸா டீச்சரைப் பற்றிய சூடான செய்தி கள், கடந்த வருடம் அந்த ஊரிலிருந்து பல்கலைக் கழகத் துக்குத் தெரிவான ஒரேயொரு மாணவியான பாத்திம வின் குடும்பத்தைப் பற்றிய தேவையற்ற அலசல்கள். கூடவே, பரீனாவைப் பற்றிய தரக்குறைவான பேச்சுகளும் அடி பட்டன. பரீனாவுக்கு எல்லாமே துல்லியமாகக் கேட்டது. அவ ளுக்குக் கேட்கவேண்டும் என்பதற்காகவே அந்த மாணவி கள் உரக்கப் பேசிப் சிரித்தபடி வந்தனர். போதாக்குறைக்கு அவளைத் தாண்டிச் சென்றபோது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருத்தி வேண்டுமென்றே பரீனாவை இடித்து விட் டுச் செல்ல, அவளது முக்காடு சற்றுச் சரிந்தது. அவசர மாக அதைச் சரிசெய்து கொண்டாள். “முக்காட்டப் போட் டுக்கிட்டா மட்டும் ஒழுக்கம் வந்திடுமாக்கும்.” அந்தக் கூட்டத்திலிருந்த இன்னொருத்தி குத்தலாகச் சொன்ன போது பரீனாவின் கண்கள் நீரை நிறைத்துக் கொண்டன. ஆனாலும், வாயைத் திறந்தால் வம்பு என்று ஊமையாகவே நடந்தாள். பாடசாலையை அடைந்ததும் அங்கு ஏற்கனவே வம் பளந்து கொண்டிருந்த தன் வகுப்பு மாணவிகளைப் பார்த்து ‘ஸலாம் கூறிவிட்டு, தன்பாட்டில் வகுப்பறையைக் கூட்டி னாள். பின் மேசை, கதிரைகளை ஒழுங்குபடுத்திவிட் டுப் பாடப் புத்தகமொன்றைப் புரட்டியபடி, தனக்குரிய இடத்தில் அமர்ந்து கொண்டாள். “பரீனா. உங்கட ஆள் வாராரு..” கதைத்துக் கொண் டிருந்த மாணவிகள் மத்தியிலிருந்து இப்படியொரு குரல் வரவே, பரீனா சட்டென்று திருப்பிப் பார்த்தாள். இபாம்
Page 30 56 மரீனா இல்யாஸ் ஆசிரியர் வழமையான புன்னகையோடு வந்துகொண்டிருந் தார். பரீனாவும் அவரைப் புன்னகையோடு நோக்கி விட்டு, மீண்டும் பாடப் புத்தகத்தில் கவனத்தைத் திரும்பினாள். “அடேயப்பா. சூரியனைக் கண்ட தாமரைபோல.” அவளது மலர்ச்சியை ஒரு மாணவி இப்படி வர்ணிக்க, மற்றவர்கள் 'கொல்' என்று வாய்விட்டுச் சிரிக்க, பரீனா வுக்குச் சுரீரென்று இதயத்தில் வலியெடுத்தது. சட்டென்று மேசைமேல் தலையைக் கவிழ்த்து விசும்பியவள், பாட சாலை ஆரம்பமணி அடித்தபோதுதான் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள். ஆனால், வழமை போல் எந்தவொரு பாடத்திலும் கவனம் செலுத்த அவளால் முடியவில்லை. இடைவேளை மணியடித்தபோது எல்லா மாணவர் களும் ‘கான்டீன் நோக்கிப் படையெடுக்க, பரீனா மட்டும் வகுப்பறையை விட்டு அசையவில்லை. பசி வயிற்றைக் கிள்ளுவதை உணர்ந்தாள். என்றாலும் சாப்பிடப் பிடிக்க வில்லை. இடைவேளை முடிந்த பின்னர், இபாம் ஆசிரியர் வகுப்புக்கு வந்தார். சில தினங்களுக்கு முன் அவர் நடாத் திய மாதாந்தப் பரீட்சையில் ஒவ்வொரு மாணவரும் பெற் றுக் கொண்ட புள்ளிகளை வாசித்தார். “ஆகக் கூடிய புள்ளி எடுத்திருப்பது பரீனா தான்.” என்று அவர் சொல்லி முடிக்கவும், “உங்க பாடத்துல எப்பவும் பரீனாவுக்குத் தான் ஹயஸ்ட் மார்க்ஸ~ன்னு எங்களுக்குத் தெரியும்.” என்று ஒரு மாணவி முணுமுணுத் துக்கொண்டது பரீனாவுக்கு நன்றாகக் கேட்டது. அழத் துடித்த உதடுகளைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். கற்பிக்கையில் கூட, இபாம் ஆசிரியரின் முகத்தைப் பார்க் காமல் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். குமுறுகின்ற எரிமலைகள் 57 பாடம் முடிந்து வெளியேறுகையில் அவளைக் கூப் பிட்ட அந்த ஆசிரியர், “இன்றைக்கு என்ன நடந்தது உங் களுக்கு.?” என்றார். நெற்றியை இலேசாகத் தடவியபடி, “தலைவலி ஸார்.” என்று கூறிவிட்டு, தன் கலங்கிய கண் களை மறைத்துக்கொள்ள நினைத்தவள் சட்டென்று மறு பக்கம் திரும்பியபோது, மாணவர்கள் தங்களைப் பார்த்துக் கண் ஜாடை காட்டிக் கொள்வதை வேதனையோடு கண்டு கொண்டாள். கண்களை விரித்துக்கொண்டு பார்க்குமளவுக்கு, வாய் வலிக்க வலிக்கப் பேசுமளவுக்குத் தனக்கும் அந்த ஆசிரியருக்கும் இடையில் அப்படியென்ன தவறான சம்பந் தம் இருக்கின்றது என்று அவள் அங்கலாய்த்துக் கொண் டாள். அவர் கற்பிக்கின்ற பாடத்தில் பரீனாவுக்கு அலாதி யான ஆர்வம் இருக்கிறது; அவரது கற்பித்தல் முறை அவளை உற்சாகப்படுத்துகிறது என்பதைத் தவிர வேறு எதுவுமே சொல்வதற்கில்லை. பணிவான பேச்சும், கண்ணியமான நடத்தையும் பரீனா பண்புள்ள ஒரு மாணவி என்பதைப் பறைசாற்றிக் கொண் டிருந்தன. அவளது புத்திசாலித்தனமும் திறமையும் ஆசிரியர்கள் மத்தியில் அவளுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தன. கெட்டிக்கார மாணவர்களிடத்தில் ஆசிரியர்களுக்கு அலாதியானதொரு பிரியம் ஏற்பட்டு விடுவது இயல்புதானே? இபாம் ஆசிரியர் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்கமுடியுமா..? அப்படியா னால், பரீனாவையும் அவரையும் இணைத்துக் கிசு கிசு எழக் காரணம் என்ன? அவர் இளைஞர், திருமணமாகாத வர் என்பதனால்தானா? அவள் யோசித்து யோசித்துக் குழம்பினாள்.
Page 31 58 மரீனா இல்யாஸ் “பரீனாவுக்குப் பிரின்ஸிபல் வரட்டுமாம்.” ஒரு மாணவன் வந்து சொல்ல, அவள் சாதாரணமாக எழுந்து போனாள். மாணவத் தலைவி என்பதால் அதிபரின் காரியா லயத்துக்குப் போய் வருவது அவளைப் பொறுத்தவரை ஒரு சின்ன விஷயம். ஆனால், அன்று உள்ளே நுழைந் தவளை அதிபரின் முகத்தில் தெரிந்த என்னவோ ஒன்று, பயமுறுத்தியது. அவளை ஏற இறங்கப் பார்த்த அவர், ஒரு கடிதத்தை அவளிடம் நீட்டிப் படித்துப் பார்க்கச் சொன்னார். குழப்பத்துடன் அதைப் பிரித்தவள், அதிர்ச்சி யுடன் தலை நிமிர்ந்தாள். அது அவளையும் இபாம் ஆசிரியரையும் இணைத்துத் தாறுமாறாக எழுதப்பட்டிருந்த ஒரு மொட்டைக் கடிதம்..! w “ஒரு மொட்டைக் கடதாசிக்கு இவ்வளவு முக்கியத் துவம் கொடுக்கிறதா நீர் நினைக்கக்கூடாது. ஆனாலும் உம்மை எச்சரிக்கிறது என்னோட கடமை.” அவர் புத்தி சொல்லத் தொடங்கும்போதே, அதைக் கேட்க நிதானமில் லாமல் இவள் அழுகையில் வெடித்தாள். இனிமேல் பாட சாலைக்கு வருவதில்லை என்ற தீர்மானத்தோடுதான் அவள் அதிபரின் காரியாலயத்திலிருந்து வெளியேறினாள். அந்தத் தீர்மானத்தை அடுத்த நாளே அமலுக்குக் கொண்டு வநதாள. தொடர்ச்சியாகப் பல நாட்கள் பரீனா பள்ளிக்கு வரா மல் நின்றபோது, அவளது வகுப்பாசிரியர் உட்பட பாட ஆசிரியர் அனைவருமே அதுபற்றி அக்கறையுடன் விசாரித் தனர். இபாம் ஆசிரியர் நேரடியாக வீட்டுக்கே சென்றார். அவரை அன்போடு வரவேற்ற பரீனா, “ஏன் ஸ்கூலுக்கு வரமாட்டேங்கிறீங்க..?” என்ற அவரது கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திண்டாடினாள். குமுறுகின்ற எரிமலைகள் 59 அந்தக் கிசு கிசு' பற்றி அவரிடம் சொல்லக் கூசி னாள், 'படிக்க இஷ்டமில்லை. என்று சாக்குச் சொன் னால் நம்பமாட்டார். பரீனா குழம்பிக்கொண்டிருந்தபோது அவரே பேசினார். “நான் 'ட்ரான்ஸ்ஃபருக்கு ’ட்ரை' பண் ணிட்டிருக்கேன். சரி வரணும்னு வேண்டிக்கங்க..” என்ற வார்த்தைகளைக் கேட்டு பரீனா ஒருகணம் தடுமாறிப் போனாள். இவருக்கு எல்லாம் தெரிந்துவிட்டதோ என்ற கேள்வி நெஞ்சை நெருடியது. எண்ணங்கள் பின்னோக்கி ஓடின. சில வருடங்களுக்கு முன்பு இபாம் ஆசிரியரின் தாயா ரும் கல்யாண வயதில் இருக்கும் அவரது சகோதரியும், ஆண் துணையில்லாமல் தனியாக இங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, இபாம் ஆசிரியர் தூரப் பிரதேசமொன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். ஊருக்கு மாற்றம் எடுத்து வருவதற்காகத் தான் பட்ட அவஸ்தைகளை நாசுக்காக ஒருமுறை மாணவர்கள் மத்தியில் அவர் கூறி யிருக்கிறார். தன்னால் அந்தக் குடும்பம் மீண்டும் கஷ்டப் பட வேண்டுமோ என்று யோசித்தவள், “நீங்க எங்கேயும் போகக்கூடாது ஸார்” என்று மறுப்புத் தெரிவித்தாள். “நீங்க போறதால எந்தப் பிரச்சினையும் தீர்ந்திடாது.” என்று வாதிட்டாள். "நீங்க படிப்பை நிறுத்திட்டா மட்டும் எல்லாம் சரியா யிடுமா..?” என்று அவர் எதிர்க் கேள்வி கேட்டபோதுதான் அவள் யதார்த்தமாகச் சிந்திக்கத் தலைப்பட்டாள். அலை கள் ஒயும்வரை கடலில் நீந்தமாட்டேன் என்றிருந்தால், அலைகள் அடங்கிவிடுமா என்ன...? கட்டுக் கதைகளுக் குப் பயந்து, கட்டுப்பெட்டியாக வீட்டுக்குள் முடங்கிக்
Page 32 60 மரீனா இல்யாஸ் கிடக்க நினைத்தது எத்தனை பைத்தியக்காரத்தனமான யோசனை என்று அவள் வெட்கித்தாள். மனத்தில் பிறந்த தெளிவு கண்களில் பளிச்சிட, ‘நான் நாளையிலிருந்து திரும்ப ஸ்கூலுக்கு வரப் போறேன் ஸார்.” என்று அவள் உறுதியாகச் சொன்னதைச் சந் தோஷமாகக் காதில் வாங்கிக்கொண்ட இபாம் ஆசிரியர், நிம்மதியாக அங்கிருந்து விடைபெற்றார். புயலுக்கு மத்தியிலும் ஒரு சின்னப் படகு தன் பயணத் தைத் தொடரத் தயாராக நின்றது.! O O. O. O வாய்ச்சொல்லில் வீரரடி. அந்தக் கவியரங்கம் கரகோஷத்தோடு நிறைவு பெற் றது. அஷ்ரபா தன் தோழி பாத்திமாவுடன் அந்த மண்ட பத்தை விட்டு வெளியேறினாள். அப்போது அவர்களைப் பின் தொடர்ந்த ஓர் இளைஞன் “மிஸ் ஒரு நிமிஷம்.” என்று அஷ்ரபாவை நோக்கிப் புன்னகைத்தான். என்ன விஷயம்..? என்பது போல் புருவத்தை உயர்த்தி அவனை நோக்கினாள், அஷ்ரபா. “உங்க கவிதை எல்லாம் ஆண் வர்க்கத்தைச் சாடிக் கிட்டே இருக்கே.” அஷ்ரபா இதற்கு மறுமொழி கூற வில்லை. “உண்மையிலேயே இவன் கலையுள்ளம் படைத்த ஒரு நேர்மையான விமர்சகனா? அல்லது ‘என்னதான் போர்க் கொடி தூக்கினாலும், ஒரு ஆம்புளைக்கி முன்னால நீ வெறும் தூசுதான் என்று என்னை மட்டந்தட்ட வருகின்ற ஒரு மூன்றாம் தர மனிதனா? என்று அவனை ஆழம் பார்த்தாள். “நீங்களும் ஓர் ஆணோட வாழத்தானே போநீங்க.” மெளனத்தைக் கிழித்துக் கொண்டு புறப்பட்ட அவனது
Page 33 62 மரீனா இல்யாஸ் வார்த்தைகளைக் கேட்டதும் வெகுண்டு போனாள் அஷ்ரபா. “ஆமா. நான் ஒர் ஆணோடுதான் வாழப் போறேன். அயோக்கியனோடு அல்ல.” அவன் தொடர்ந்து ஏதாவது பேசி விடுவானோ என்ற பயத்தில் அவசரமாக அவளை இழுத்துக் கொண்டு பஸ்ஸ"க்கு ஓடினாள் பாத்திமா. இருவரும் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்து கொண்டனர். அஷ்ரபாவின் முகம் கோபத்தில் சிவந்து போயிருந்தது. “எனக்குப் பயமா இருக்கடி.” பாத்திமா மெதுவாகச் சொல்ல “என்னடி..?’ என்று கேட்டவாறு பழைய நிலைக்கு வர முயற்சித்தாள் அஷ்ரபா. “நீ கல்யாணம் கட்டிப் போயிட்டா, புருஷன்கிட்ட எப் படி நடந்துக்குவே. நான் ஒண்ணும் உங்களுக்கு அடிமை யில்லைன்னு சொல்லி தொட்டது புடிச்சதுக்கெல்லாம் அவர் கூடச் சண்டை போடு வியா..?” அஷ்ரபா சூழ் நிலையை மறந்து சிரித்தாள். பின் சட்டென்று, “ஒரு மனைவி, குடும்பத் தலை வனுக்குக் கட்டுப்பட்டு வாழுறதை அடிமைத்தனம்னு நான் ஒரு நாளும் வாதிக்க மாட்டேன்டி. அப்படிப் பார்த்தா எங்க உம்மாவும் வாப்பாவுக்கு அடிமைதான். ஏன்னா, அவர் கிழிச்ச கோட்டை எங்க உம்மா ஒருநாள் கூடத் தாண்டியதில்லை. அதுக்காக அவ அடிமை வாழ்க்கை வாழுகிறதா நான் சொல்ல மாட்டேன். ஏன்னா, கணவனுக் குப் பணிவிடை செய்றதிலயும் பணிஞ்சு போறதிலயும் அவ காட்டுற அக்கறையையும், அதனால அவ அடைகின்ற ஆனந்தத்தையும் நான் அவதானிச்சிருக்கேன்.” பாத்திமா ஆச்சரியமாகத் தன் தோழியின் வார்த்தை களுக்குத் காது கொடுத்தாள். குமுறுகின்ற எரிமலைகள் 63 “பெண் ஒரு விசித்திரப் பிறவி. அவள் விழுந்து கொண்டே ஜெயிப்பாள். விட்டுக்கொண்டே, அடைவாள்னு எங்கயோ வாசிச்ச ஞாபகம். அதுக்கு நல்லதொரு எடுத்துக் காட்டு குடும்ப வாழ்க்கைதான்.” சொல்லிக் கொண்டே எழுந்து மணியை அடித்தாள், அஷ்ரபா, பஸ் தரிப்பிடத் தில் நின்றதும் இருவரும் இறங்கிக் கொண்டனர். “உன்னை நான் தவறாப் புரிஞ்சிட்டதா, சும்மாதான் நெனக்காதடி சீண்டிப் பார்த்தேன். அது சரி, நாளைக்கு உன்னைப் பெண்பார்க்க வாராங்க ஞாபகம் இருக்கா..?” பாத்திமாவின் கேள்வியில் சட்டென்று முகம் மாறினாள் அஷ்ரபா. “ஏண்டி. உனக்குப் புடிக்கல்லியா. நாங்க முந்திக் கொழும்பில இருந்தநேரம், எங்க பக்கத்து வீட்டிலதான் இந்த நளிரோட குடும்பம் இருந்திச்சி. எனக்கு நல்லா அவரைப் பத்தித் தெரியும். அவரும் உன் கட்சிக் கவிஞர் தான். பெண்களோட முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுக் கிற முற்போக்குவாதக் கலைஞன். ஆனா அவர் உன்னைப் பத்தி விசாரிச்சப்போ நீயும் ஒரு இலக்கியவாதின்னு நான் அவர்கிட்டச் சொல்லல்ல.” அஷ்ரபாவிடமிருந்து ஏனென்று கேள்வி எழு முன்பே, பாத்திமா விளக்கம் சொல்ல முந்திக் கொண்டாள். “சும்மா ஒரு திரில்லுக்காகத்தான். அப்ப நாளைக்கு ‘ரெடியா இரு நான் காலையிலேயே உங்க வீட்டுக்கு வந்துட றேன்.” விடை பெற முயன்ற தோழியை வம்புக்கு இழுத் தாள், அஷ்ரபா. “ரெடியா இருன்னா எப்படி டீ. கைநிறையக் காப்பும், கழுத்து நிறைய மாலையும் போட்டு, முகம் நிறைய
Page 34 64 மரீனா இல்யாஸ் பவுடர் அப்பி.” பாத்திமாவால் சிரிப்பை அடக்க முடிய வில்லை. “நீ ஒண்ணும் ஷோகேஸ் - பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணிக்கிட்டு நிக்கத் தேவையில்லை. பெண் பார்த்தல்ங்கிற பெயரில பெண்களைக் காட்சிப் பொருளாக்கிப் பார்க்கிற ஒரு சராசரி ஆணா நளிர் இருப் பார்னு நெனக்காதே. தைரியமா இரு.” தோழியை வழி யனுப்பி விட்டுத் தன் வீட்டுக்குச் சென்றாள், பாத்திமா. OOO இரவு கழிந்தது; பொழுது விடிந்தது. ஏற்கெனவே சொன்னதைப் போல் காலையிலேயே அஷ்ரபாவின் வீட்டுக்கு வந்து விட்டாள், பாத்திமா. மாப்பிள்ளை வீட்டார் வந்ததும், இரு பக்கத்தாரையும் நன்கு தெரிந்தவள் என்ற வகையில் அவள் அங்கு உரிமை யோடு வலம் வந்தாள். ஒரு தனியறையில் தன்னடக்கத் தோடு அமர்ந்திருந்த அஷ்ரபா, தன் தோழி கண்ணை விரித்து விரித்து, கையை ஆட்டி ஆட்டி நளிடம் பெருமை யாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்ததைக் கள்ளத்தன மாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். கடைசியாக, பெண் ணோடு கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும் என்ற மாப் பிள்ளையின் விருப்பத்துக்கு எல்லோரும் சம்மதித்தார்கள். அதைத் தொடர்ந்து, தான் உட்கார்ந்திருந்த அறைக் குள் நளிர் நுழைந்ததும் சட்டென்று எழுந்து நின்று கொண் டாள் அஷ்ரபா, “பரவாயில்லை. இரிங்க..” சொல்லிக் கொண்டே, அவன் அவளை அளந்தான். எளிமையான உடையணிந்து தலையில் முக்காடிட்டு, அடக்கமாய் நிற் கும் இவள்தானா புரட்சிகரமான கவிதைகள் எழுதுகின்ற அந்தப் புதுமைப் பெண்? அவனால் நம்ப முடியவில்லை. குமுறுகின்ற எரிமலைகள் 65 “நீங்க ஒரு கவிஞர் என்கிற விஷயம் எனக்குப் புதுசு. இப்ப தான் பாத்திமா சொன்னா. ஆனா உங்க கவிதைங்க எனக்குப் புதுசில்ல. ‘புதுமைப் பெண்’ என்கிற புனை பெயரில உங்க எழுத்துக்களை நான் நிறையச் சந்திச் சிருக்கிறேன்.” அஷ்ரபா மெளனமாக இருந்தாள். “உங்க கவிதை களை நான் ரசிக்கிறேன். உங்க கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன்.” அவன் பேசப் பேச, அவள் காற்றாகி, மெல்ல மெல்லப் பறந்து கொண்டிருந்தாள். “எனக்கு வரப்போகிற மனைவி ஒரு குடும்பப் பாங் கான அடக்கமான பெண்ணா இருக்கணும்னு விரும்புறேன். ஆனா, ஆண், ஆதிக்க வெறி புடிச்சவன்; அடக்குவாதத்தை விரும்புகிறவன்னு சொல்லி எப்பவுமே அவனுக்கெதிராய்ப் போர்க்கொடி தூக்குற உங்களால, ஒரு சராசரிக் குடும்பப் பெண்ணாக கணவனுக்குக் கட்டுப்பட்டு வாழமுடியும்னு நான் நம்பல்ல. சமூகத்துல தலை நிமிர்ந்து வாழனும்னு நினைக்கிற உங்கள மாதிரிப் புதுமைப் பெண்கள், புருஷன் முன்னால தலைகுனிஞ்சு நிப்பாங்கன்னு நான் எதிர்பார்க் கவுமில்ல, அப்படி எதிர்பார்க்கவும் கூடாது.” நளின் பேச்சுத் திசைமாறிய போது, அவனது குரல்வளையை நோக்கி நீளத் துடித்த தன் கரங்களைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள் அஷ்ரபா. “நீங்க ஓர் இலட்சியப் பெண். நிச்சயமா உங்களை வாழ வைக்க ஒரு இலட்சியவாதி பிறந்திருப்பான். நான் இடம் மாறி வந்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க.” அவளுக்குள் கிளம்பிய சின்னச் சின்னத் தீப்பொறிகள் ஓர் எரிமலையாய் வெடிக்கும் முன்பு, அவன் அங்கிருந்து
Page 35 66 மரீனா இல்யாஸ் வெளியேறிவிட்டான். அவனது குடும்பத்தாரும் அவனைப் பின் தொடர, திடீரென்று அந்த வீட்டுக்குள் ஒரு கனத்த மெளனம் குடி கொண்டது. பாத்திமா மெல்ல மெல்லத் தன் தோழியின் அறைக்குள் அடியெடுத்து வைத்தாள். “இவன் தானாடி நீ சொன்ன அந்தப் புரட்சிக் கவிஞன்.? பெண்களோட முன்னேற்றத்துக்காகப் பாடு படுறதாச் சொன்ன அந்த முற்போக்குவாதி இவன் தானாடி..?” அஷ்ரபா வெறிபிடித்தவளைப் போல் தன் தோழியின் தோளைப் பற்றி உலுக்கியபடி கத்தினாள். பாத்திமாவின் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணிர் வடிந்தது. “அவனோட வெளித்தோற்றத்திலயும் பேச்சிலயும் நான் நல்லா ஏமாந்துட்டேன்டி’ - அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. “ஒரு பெண்ணை ஏமாளியாக்கிடறது ஆண்களுக்கு ஒண்ணும் அவ்வளவு பெரிய காரியமில்லடி. ரெண்டே வார்த் தையில, ரெண்டே நிமிஷத்துல அவங்களுக்கு வசப் பட்டுப்போற நம்ம புத்தியத்தான் செருப்பால அடிக் கணும்.” - அஷ்ரபா குமுறினாள். “உன்னோட கவிதைகளையும், புரட்சிகரமான கருத்துக் களையும் அவர் கைதட்டி வரவேற்றாரு, அதனால நிச்சயமா அவரோட இதயத்திலயும் உனக்கு வரவேற்பிருக்கும்னு நம்பினேன்டி. ஏன்னா, அவரோட பேனாவும் உன்னோட பேனாவும் ஒரே இலட்சியத்துக்காகத்தான் போராடிக் கிட்டிருக்கிறதா நான் தப்புக் கணக்குப் போட்டுட்டேன்.” பாத்திமா ஆற்றாமையோடு வெதும்பினாள். குமுறுகின்ற எரிமலைகள் 67 “மேடையில் எங்களுக்குக் கைக்குட்டை டுறவ னெல்லாம், காட்சி முடிஞ்ச உடனே கண்ணிலிரத்தான் பரிசளிக்கிறாங்க. நீதான் இப்ப ஒரு வாய்ச்சொல் வீரரை எனக்கு அறிமுகப்படுத்தினியே.” சொல்லிக்கொண்டே மேசையருகில் சென்று உட்கார்ந்த அஷ்ரபா, ஆவேசத் தோடு பேனாவைப் பற்றி ஏதோ எழுத ஆரம்பித்தாள். நிச்சயமாக அது ஒரு கவிதையாகத்தான் இருக்க வேண் டும் என்ற எதிர்பார்ப்போடு மெல்ல அவளருகே சென்று எட்டிப் பார்த்தாள், பாத்திமா. அங்கே ஒரு குட்டிப் பாரதி யாய் அஷ்ரபாவின் பேனா கொட்டியிருந்த ஆக்ரோஷமான வரிகளில் அவளது கண்கள் ஆர்வத்தோடு மேய்ந்தன. பேச்சிலே நாளும் பெண்களைப் போற்றிப் பிரசங்கம் செய்வாரடி-நன்கு பிரசித்தி பெறுவாரடி! பூச்சியைப் போல் சிறு புழுவினைப்போல் பின்னர் மிதிப்பாரடி-வீட்டில் பெண்ணை மதிக்காரடி சீச்சி, இந்த வாய்ச்சொல் வீரர் செயலில் கோழையடி-அவர் சுயநலக் காளையடி (இளங்கதிர் - 1991, 92)
Page 36 சொந்தங்கள் சுமையானபோது. அந்தப் பாடசாலையில் இடைவேளை மணியடித் ததும் தன் வகுப்பை விட்டு வெளியேறி "ஸ்டாப் ரூமுக்குள் நுழைந்த சசிகலா ரீச்சர் தன் சக ஆசிரியைகளுள் ஒருத்தி யும் நெருங்கிய தோழியுமான புஷ்பாவுடன் கான்ரீனுக்குள் நுழைந்தாள். இருவரும் தாம் கொண்டுவந்திருந்த காலை ஆகாரப் பொதிகளைப் பகிர்ந்துகொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். அதேவேளை 'கான்ரீனுக்குள் நுழைந்த சதீஷ் மாஸ்டரைக் கண்டு சசிகலா முகம் மாறினாள். சதீஷ் அதைப் புரிந்து கொண்டவன் போல மெளனமாக வெளியே வந்தான். “சசீ, என்னோட வா. இந்த ஊரை விட்டே ஓடிப் போயிடுவோம்..” எப்போதோ ஒருநாள் சதீஷ் விடுத்த அழைப்பு இப்போதும் சசிகலாவின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவள் வெறுமனே சாப்பாட்டைக் - கைகளால் அளைய ஆரம்பித்தாள். “ஏய் சசி. என்ன இது..?” என்று புஷ்பா அவளை உலுக்கியபோது, ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்த சசிகலா, குமுறுகின்ற எரிமலைகள் 69 “நான் இன்னிக்கு ‘ஷோட் லீவில வீட்டுக்குப் போவதாக இருக்கேன் புஷ்பா.” என்றாள். "ஆஹா. இன்னிக்கும் பெண் பார்க்கும் படலமோ?” என்று கண்ணைச் சிமிட்டி கொண்டு புஷ்பா கேட்டபோது சட்டென்று சசிகலாவின் கண்களில் நீர் கோத்துக் கொண்டது. “சே. இது எத்தனையாவது பெண் பார்க்கும் பட லம். பதினாறு வயதில் ஆரம்பித்து முப்பத்திரெண்டு வயது வரை தொடர்கிறதே..” சசிகலாவின் மனம் ஆதங் கத்துடன் அலுத்துக் கொண்டது. “இதுவரைக்கும் உன்னப் பொண்ணு பார்க்க வந்தவ னெல்லாம் குருடனாடி..? தொழில் வேற செய்றே. உனக்கு என்ன குறை.?’ புஷ்பா சற்று ஆத்திரமாகவே கேட்டாள். “அப்பா இல்லாத குறை. அந்த இடைவெளிய நிரப்ப ஒரு ஆண் துணை இல்லாத குறை.” அமைதியாகப் பதில் சொல்ல முயன்ற சசிகலாவின் உள்ளம் ஆர்ப்பாட்ட மாய்க் கொந்தளித்துக் கொண்டிருந்தது. “என்னப் புடிக்காட்டியும் நான் வாங்குற சம்பளம் யாருக்கும் கசக்காது புஷ்பா. ஆனா, ஆண் துணையில்லாத குடும்பத்துல மூத்தவளாய்ப் பிறந்திட்டேனேங்கிற விஷ யம் தான் எல்லார் கண்ணையும் உறுத்துது. ஒரு விதவைத் தாய், கல்யாண வயசுல ரெண்டு தங்கச்சிமார். இதுதான் என் குடும்ப நிலை. என்னைக் கட்டிக்கிட்டா மூத்த மரு மகன் என்ற குடும்பப் பொறுப்பு எனக்குக் கணவனா வாற வனோட தலையில ஏறுங்கிற பயத்துலதான் பலபேர் என் னைத் தட்டிக் கழிக்கிறாங்க..” வலிக்கின்ற இதயத்தில் இருந்து புறப்பட்டு வந்த இந்த வார்த்தைகள் புஷ்பாவை
Page 37 70 மரீனா இல்யாஸ் யும் வதைத்தன. அவளும் பாதிச் சாப்பாட்டுடனே கையைக் கழுவிக் கொண்டாள். இருவரும் ‘கான்ரீனை விட்டு வெளியே வரும்போது, முதலாம் ஆண்டு மாணவர்கள் பாடசாலை விட்டுப் போய்க் கெர்ண்டிருந்தார்கள். அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த பெற்றோரும், வேலைக்காரரும் வெளியே காத் திருந்தனர். சதீஷ் மாஸ்டரும் தன் மகனின் கையைப் பிடித் தவாறு வெளியே சென்று கொண்டிருந்தார். சசிகலா அந்தச் சிறுவனை ஏக்கத்தோடு பார்த்தாள். இவன் என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டியவன். என்ற எண்ணம் ஒருகணம் அவளைத் துடிக்க வைத்தது. குழந் தையை அழைத்துச் செல்ல வந்திருந்த சதீஷின் மனை வியை ஒருவித ஆற்றாமையோடு பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தம் பக்கத்தில் நின்ற புஷ்பா வுக்குப் புரிந்திருக்க வேண்டும். “சத்தியமா உன் அழகு அவக்கிட்ட இல்லடி” என்றாள். “அழகு மட்டுமென்ன. அவளிடம் படிப்பறிவு கூட இல்லை. நானொரு பட்டதாரி ஆசிரியையாக இருந்தும் சதீஷின் குடும்பம் என்னை ஏற்க மறுத்தது ஏன்.?” சசிகலாவின் சிந்தனையை மணி யோசை கலைத்தது. இடைவேளை முடிந்ததால் மாணவர் கள் அவசர அவசரமாக வகுப்பறைக்குள் நுழைந்தனர். புஷ்பாவும், சசிகலாவும் பிரிந்து தங்களுக்குரிய வகுப்பு களை நோக்கி நடந்தனர். நண்பகல் பன்னிரண்டரை மணியளவில் ‘ஷோட் லீவு பெற்று, வீடு செல்வதற்காக வெளியிறங்கிய சசிகலா வின் முன்னால் சதீஷ் எதிர்ப்பட்டான். இருவர் கண்களும் நேருக்கு நேர் சந்தித்து மீண்டன. 'விஷ் யூ குட் லக். குமுறுகின்ற எரிமலைகள் 71r " . சதீஷின் வாழ்த்தைக் கேட்டதும் உறங்கிக் கிடந்த உணர் வலைகள் பொங்கி எழுந்தன. தாங்யூ என்று சொல்லக்கூட நா. எழாமல் அவசர அவசரமாய் நடக்கத் தொடங்கினாள். சதீஷ் சார்ந்த நினைவுகளும் அவளைப் பின்தொடர்ந்து வந்தன. சதீஷ், தன் பெற்றோர் விதித்த தடைகளைத் தாண்டி, சசிகலாவையும் கூட்டிக்கொண்டு ஓடிவிடத் தயாராகத்தான் நின்றான். ஆனால், சசிகலா அதற்கு உடன்படவில்லை. “சட்டப்படி, சம்பிரதாயப்படி சேர்ந்து வாழ வாய்ப்பில் லன்னா நாம்ப பிரிஞ்சிருப்போம் சதீஷ், ஒடிப்போக என் னால முடியாது. அது என் குடும்பத்தைப் பாதிக்கும். ஒழுக் கங் கெட்டவளோட தங்கச்சின்னு சொல்லி இந்தச் சமூகம் என் தங்கச்சிமாரையும் ஒதுக்கி வைக்கப் பார்க்கும். அந்த அவமானத்தைத் தாங்கிட்டு அம்மா உயிரோட இருக்க மாட்டாங்க. நான் ஒருத்தி வாழனுங்கிறதுக்காக, மூணு உயிர்களைப் பதற வைக்க என்னால முடியாது. என்ன மறந்திடுங்க சதீஷ்.” சசிகலா சதீஷோடு பேசிய கடைசி வார்த்தைகள் இவைதாம். அதன்பிறகு சதீஷின் கல்யாணம் அவள் கண் முன் னாலேயே நடந்து முடிந்தது. சசிகலா தொடர்ந்தும் அதே பாடசாலையில் கடமையாற்ற விரும்பவில்லை. ஆயினும், அந்த ஊரை விட்டு வெளியே செல்ல அவளுக்கு வசதி யிருக்கவில்லை. ஆயினும், சதீவைஷ நேருக்கு நேர் சந்திப் பதையும் பேசுவதையும் கூடுமான வரையில் தவிர்த்து வந்தாள். பல வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் அவன் குரலை மிக அருகிலிருந்து கேட்டாள். 'எனக்குக் கணவனா
Page 38 72 மரீனா இல்யாஸ் | வந்திருக்க வேண்டியவர், இன்றைக்கு ஓர் அந்நியன் மாதிரி இருந்து, என் கல்யாணத்துக்கு வாழ்த்து தெரிவிக் கிறாரு...!’ என்று எண்ணியபோது சசிகலாவின் கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் சுரந்தது. வீட்டை நெருங்கி விட்டதை உணர்ந்தபோது, கைக் குட்டையால் கண்களை அழுத்தித் துடைத்துக்கொண் டாள். வழக்கம் போல வீட்டுக்குள் நுழையும் போதே "அம்மா..” என்று குரல் கொடுக்க அவளால் முடிய வில்லை. நா, வரண்டு போயிருந்தது. தொண்டையைச் செருமிக்கொண்டு நேராகச் சமையலறைக்குள் போய் நின்றாள். அம்மாவும் தங்கை கெளசல்யாவும் சமையலில் மும்முரமாக இருந்தனர். பாத்திரங்கள் மோதும் ஓசை யைத் தவிர, அங்கு வேறெந்தச் சத்தமுமே இல்லை. “முகத்தைக் கழுவிட்டு ஒரு நல்ல புடவையா உடுத் திக்கோ. அவங்க வாற நேரம்தான்.” அம்மாவின் கட்ட ளைக்குச் சசிகலா உடனேயே அசைந்து கொடுக்க வில்லை. தங்கை கெளசல்யா வேலை செய்யும் அழகைக் கொஞ்ச நேரம் ரசித்தபடி நின்றாள். பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே முறித்துக் கொண்டு வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவியாக இருக்கும் கெளசல்யா, அம்மா வைப் போலவே அமைதியான சுபாவமுடையவள். அதே வேளை அப்பாவைப் போன்ற முகச் சாயல் உடையவள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் சசிகலாவுக்கு இறந்து போன தன் அப்பாவின் ஞாபகம்தான் வரும். மரணப் படுக்கையில் அவர் இருந்த கடைசி நிமிடத் தில், தலைமாட்டில் குந்தியிருந்த தன்னை ஒருமுறை அண் ணாந்து பார்த்துவிட்டு, அமைதியாகக் கண்ணை மூடிக் கொண்ட காட்சி அடிக்கடி அவள் கண்ணுக்குள் தெரியும். குமுறுகின்ற எரிமலைகள் 73 மனைவியை விதவையாக்கி விட்டு, மூன்று குமரிப்பிள்ளை களை அனாதரவாகத் தவிக்கவிட்டுப் போகிறேனே என்ற கலக்கமோ கவலையோ துளியேனும் அவர் முகத்தில் இருக்கவில்லை. அப்பா. உங்க ஆத்மா அமைதியாய் பிரிஞ்சதுக்கு என்மேல நீங்க வெச்சிருக்கிற நம்பிக்கைதானே காரணம்.' ஆற்றாமைக்கு மத்தியிலும் பெருமிதமான எண்ணங் களோடு தனக்குள்ளே சிலிர்த்துக் கொண்டாள் சசிகலா, மீண்டும் அவள் கண்களில் நீர் கோத்துக்கொண்டது. “அம்மா. நானும் வந்துட்டேன். இன்னும் அவங்க வரல்ல.?” கடைசித் தங்கை கவிதாவின் குரல் வாசலில் கேட்டபோது, சசிகலாவுக்கு ‘திக்கென்றது. அதுக்கிடை யில் 'ஸ்கூல் விட்டாச்சா?’ என்று அவள் மனதுக்குள் எழுந்த கேள்விக்கு விடைசொல்வது போல் கவிதாவின் குரல் தொடர்ந்தது. “தலைவலின்னு 'கிளாஸ் ரீச்சர் கிட்டச் சொல்லிட்டு நைஸா’ வந்துட்டேம்மா. இன்னிக்கு சசி அக்காவப் பொண்ணு பார்க்க வாறாங்கில்ல.? நானும் இருந்து கவனிக்க வேண்டாமா?’ உயர் வகுப்பில் படிக்கும் ஒரு பெண்ணுக்குரிய மனமுதிர்ச்சி சற்றுமே இல்லாதவளாகக் கவிதா குதூகலித்தாள். பெண் பார்க்க வருவதற்கே இத்தனை ஆர்ப்பாட் டமா?” என்று சசிகலா துணுக்குற்றாள். ‘முதன்முதலாய் என்னைப் பெண் பார்க்க வந்த அன்று எனக்கும் மனதுக்குள் எத்தனைப் பெரிய கொண்டாட்டமாக இருந்தது. ஆனால், ஒரு மாட்டை விலைக்கு வாங்க வந்தவர்கள் போல எடை பார்த்து, நடை பார்த்து, மூக்கு முழியெல்லாம் ஒழுங்காக
Page 39 74 மரீனா இல்யாஸ் இருக்கிறதா என்று பார்த்து, எல்லாம் சரி என்றானபின் தங்கைமாரை அரைக்கண்ணால் பார்த்துவிட்டு, அவர் கள் முகத்தைச் சுளித்த சுளிப்பில் என் கற்பனைக் கோட்டை யெல்லாம் சுக்குநூறா உடைஞ்சு போச்சுது. ஒரு பெரு மூச்சு விட்டவாறே அவள் தனக்குத்தானே பேசிக் கொனேடாள். “கெதியா உடுத்திக்க புள்ள..” அம்மாவின் கட்டளை யைத் தொடர்ந்து, வெறும் ஜடமாக எழுந்து வந்தாள் சசிகலா. அவளுக்குள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருக்க வில்லை. சம்பிரதாயத்துக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். பெண் பார்ப்பதற்காகக் குடும்பத்தோடு மாப்பிள்ளை யும் வந்திருந்தார். சசிகலா அவர்கள் முன்னிலையில் முடுக்கி விடப்பட்ட பொம்மையாகவே நடந்துகொண்டாள். அவர்களை விழுந்து விழுந்து உபசரித்த அம்மா, எல் லோரும் விடைபெற்றுச் சென்றபின் ஆயாசத்துடன் கட்டி லில் சாய்ந்து கொண்டாள். சற்றே ஒதுங்கியிருந்து சகல வற்றையும் கவனித்துக் கொண்டிருந்த கவிதா, வந்தவர்கள் பார்வையில் இருந்து மறைந்ததும், கூவிக்கொண்டே ஒடி வந்து கெளசல்யாவிடம் சொன்னாள். “அக்கா, நீ மாப்புள்ளயப் பார்த்தியா..? கண்ணிமைக் காம சசி அக்காவையே கவனிச்சிட்டு இருந்தாரு, அவருக் குப் பொண்ணப் புடிச்சிட்டுதுன்னு அவர் பார்வையே சொல்லிச்சி. நிச்சயமா இந்தச் சம்பந்தம் சரி வரும். எனக்கு நம்பிக்கை இருக்கக்கா.” அவள் குதூகலத்தில் பங்கெடுத்துக்கொண்ட கெளசல்யாவின் உதட்டில் ஒரு நிறைவான புன்னகை அரும்பியது. குமுறுகின்ற எரிமலைகள் 75 அம்மா கூடத் தன் ஆயாசத்தீை மறந்து கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். அவள் கண்களில் ஒரு புதிய ஒளி பிறந்து மின்னியது. ஆனால், புரோக்கர் கொண்டு வந்த பதில், அவர்களது நம்பிக்கை, எதிர் பார்ப்பு, சந்தோஷம் அனைத்தையும் நொறுக்கிவிட்டது! சசிகலாவில் மட்டும் எந்தவிதமான சலனமுமில்லை. அவள் எப்போதும்போல் பாடசாலைக்குப் போனாள். நடந்த வற்றைப் புஷ்பாவிடம் சொல்லித் தன் மனப் பாரத்தை இறக்கி வைத்து விட்டுத் தனக்குரிய வகுப்பில் போய் அமர்ந்தாள். அவள் பாடம் நடாத்திக் கொண்டிருக்கையில் புஷ்பா வந்து, “உன்னத் தேடி ஒரு ஆள் வந்திருக்காரு சசி.’ என்றாள். யார் என்ற கேள்வி சசிகலாவிடமிருந்து எழும் முன்பே குறும்பாகச் சிரித்து விட்டு அவள் ஓடி விட்டாள். மாணவர்களுக்குப் பாடப் புத்தகத்தில் வேலை கொடுத்து விட்டுக் குழப்பத்துடன் வகுப்பறைக்கு வெளியே வந்தாள் சசிகலா, ‘கங்கிராஜுலேஷன்ஸ். என்று காதோரம் கேட்ட சதீஷின் குரல் அவளை மேலும் குழப்பியது. எதுவும் புரி யாதவளாக 'ஸ்டாஃப்ரூமுக்கு வந்து பார்த்தபோது, வாச லில் அந்த ஆள் நின்றுகொண்டிருந்தார். ஆம்! கடைசியாக அவளைப் பெண் பார்த்துவிட்டுப் போன அதே ஆள்...! எதுவும் புரியாமல் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் அவனை எதிர் கொண்டவள், என்ன பேசுவதென்று தெரியாமல் சில கணங்கள் விழித்தாள். “உங்களோட தனியா ஒரு விஷயம் பேசணும்.” அவனே முதலில் பேச்சை ஆரம்பித்தபோது அவள் ம்ெளன மாய் ‘ஸ்டாஃப் ரூமுக்குள் நுழைய, அவன் அவளைப் பின்
Page 40 76 மரீனா இல்யாஸ் தொடர்ந்தான். உள்ளே யாரும் இருக்கவில்லை. இருவரும் நேரெதிராய் உட்கார்ந்து கொண்டு மெளனமாய் ஒரு சில நிமிடங்களைக் கழித்தனர். “நான் உங்களப் பொண்ணு பார்க்க வந்தேனே. ஞாபகம் இருக்கா..?’ திடீரென்று அவன் கேட்டபோது, அதுக்கென்ன இப்ப.?’ என்பதுபோல் அவள் அவனைப் பார்த்தாள். “எனக்கு உங்கள ரொம்பப் புடிச்சிருக்கு. உங்களக் கட்டிக்க எனக்கு மனப்பூர்வமான சம்மதம். ஆனா.” அவன் பேச்சின் தொடர்ச்சியைக் கேட்கும்முன்பே அவள் மனம் சந்தோஷ இறக்கைகளை விரித்துக்கொண்டு ஆகா யத்தில் பறந்தது. கண்ணுக்குள் திடீரென்று கனவுகள் ஊற்றெடுத்தன.! “அம்மாவுக்குச் சம்மதமில்லைன்னு 'புரோக்கர் வந்து சொல்லியிருப்பாரு. ஆனா, அவரைச் சரிக்கட்ட ஒரு வழியிருக்கு, நீங்களும் ஒத்துழைச்சா.” அவன் கேள்விக் குறியோடு அவளைப் பார்க்க, அவள் ஆர்வத்தை முகம் நிறைய அப்பிக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “பொண்ண ஏத்துக்கலாம். ஆனா, அவளோட ஒட்டிக் கொண்டிருக்கிற பொறுப்பையெல்லாம் ஏத்துக்க முடியா துங்கிறது தான் அம்மாவோட வாதம். அதனால முதல்ல நீங்க உங்க குடும்பச் சுமைகளை மறக்கணும். கல்யாணத் துக்கப்புறம் எங்க வீட்டோட வந்து இருந்தீங்கன்னாச் சரி. அதுக்கப்புறம் உங்க சம்பளத்துல அவங்க காலம் தள்ளுற நிலை மாறிடும். இதைத்தான் அம்மா விரும்பு குமுறுகின்ற எரிமலைகள் 77 றாங்க. நானும் விரும்புறேன் ஏன்னர்.” அவன் வார்த்தை கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடியாய்ச் சசிகலாவின் இதயத்தில் இறங்கியது.! “ஸ்டாப் தட் நான்சென்ஸ் ப்ளிஸ்.”, தன்னையும் மீறிய வேகத்தில் அவள் கோபமாய்க் கத்தியபோது, அவன் அதிர்ச்சியுடன் சடாரென்று இருக்கையை விட்டு எழுந்தான். “மிஸ்டர் உனக்கு உன் அம்மா எவ்வளவு முக்கியமோ அதைவிட எனக்கு என் அம்மாவும் தங்கச்சி மாரும் முக்கியம். கல்யாணமே ஆகாம நான் வீட்டோட இருந்து கிழவியானாலும் சரி, குடும்பத்தோட சேர்ந்து கஞ்சியாவது குடிச்சிட்டு இருப்பேனே தவிர, சொந்த பந்தங்களை அறுத்திட்டு, உன்ன மாதிரி ஈவிரக்கம் இல் லாத ஒருத்தனோட சேர்ந்து வாழ வர மாட்டேன். துர. உனக்கெல்லாம் குடும்பமும் ஒரு கேடா.” நிதானத்தை இழந்த நிலையில் அவள் ஆத்திரத்துடன் பொரிந்து தள்ள, அவன் அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் அவ்விடத்தை விட்டு வெளியேறினான். அவன் போன பின்பும்கூடத் தனக்கு ஏற்பட்ட ஆத்திரமும் பட படப்பும் அடங்காத நிலையில் அப்படியே மேசை மேல் தலையைக் கவிழ்த்து நீண்டநேரம் விசும்பிக் கொண்டிருந் தாள் சசிகலா, அவளைத் தேடிக்கொண்டு வந்த புஷ்பாவுக்கு அவள் இருந்த கோலத்தைப் பார்த்ததும் பகீர்’ என்றது! என்ன நடந்தது என்று கேட்காமலேயே எல்லா விஷயமும் அவளுக்குப் புரிந்துபோய்விட்டது. தோழியை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் சற்று நேரம் விக்கித்து நின்றாள்.
Page 41 78 மரீனா இல்யாஸ் “என்னால இனிமேல் 'கிளாஸ்க்குப் போக முடியா துடி.” கண்ணைத் துடைத்தபடி சசிகலா கூற, புஷ்பா ஆழ மாய் அவளைப் பார்த்தாள். உண்மையில், அவளால் எந்த வகுப்புக்குள்ளும் நுழைய முடியாதுதான். முகம் சோர்ந்து, கண்கள் ஒளியிழந்து, மூக்கு நுனி சிவந்து தலை மயிர் கலைந்து. ஒ! இந்த நிலையில் அவள் வகுப்புக்குப் போனால் மாணவர்கள் பாடத்தைக் கவனிப்பதற்குப் பதி லாக, அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று ஆராய்வதில் தான் அதிக அக்கறை காட்டுவார்கள். எனவே, “நீ லீவு போட்டிட்டு வீட்டுக்குப் போறது தான் நல்லது.” என்று கூறித் தோழியை வழியனுப்பி வைத்தாள். சசிகலா விடைபெற்றுக் கொண்டு கேட்டை அண்மித்த போது, “கலா.” என்று பின்னால் கேட்டம் குரல், அவளை அப்படியே உறைய வைத்துவிட்டது. வீட்டாரும் நண்பர் களும் அவளைச் சசி என்று கூப்பிடுவதுதான் வழக்கம். கலா என்று அவளைச் செல்லமாக அழைத்த ஒரேயொரு நபர் சதீஷ்தான். மிக நீண்டதோர் இடைவெளிக்குப் பின் தன்னைப் பெயர் சொல்லி அழைத்த சதீஷ், தன் அருகில் வந்து நின்றதைப் பார்த்ததும் அவள் உணர்ச்சிப் பிழம் பானாள். “என்னது நடந்தது? ஏன் வீட்டுக்கு போற்ங்க..? ‘எனி ப்ராப்ளம்..?” அவனது அன்பிலும் ஆதரவிலும் அப்படியே கரைந்து போனாள் சசிகலா, “சதீஷ். உங்கள மாதிரி நல்ல மனசுள்ள ஆம்புளய இனிமே நான் வாழ்க்கையில சந்திக்கவே மாட்டேன்.” விம்மலோடு புறப்பட்ட வார்த்தைகளை வேகமாகக் கொட்டி விட்டு, விறுவிறுவென்று சென்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் சதீஷ்.! குமுறுகின்ற எரிமலைகள் 79 இத்தனை நாளும் ஊமையாய் இருந்தவள் இன்று பேசியது நிஜம்தானா என்று நம்ப முடியவில்லை. அதிர்ச் சியிலிருந்து விடுபட்டு “கலா.” என்று அவன் மீண்டும் கூப்பிடுவதற்குள் அவள் வெகுதூரம் போய்விட்டாள். சசிகலா வீட்டுக்குள் நுழையும்போதே வாசலில் எதிர்ப் பட்டது கெளசல்யாதான். இத்தனை நாளும் தங்கையாகப் பார்த்துப் பழகியவளை இன்று வேறு கோணத்தில் நோக்கி னாள். ஒரு தாய் தன் மகளைப் பார்ப்பதைப் போல...! கௌசல்யாவை மணப் பெண்ணாக அலங்கரித்து மனக் கண்ணில் வைத்துப் பார்த்தாள். இனி, துணை தேட வேண் டியது தனக்கல்ல, தங்கைக்குத்தான் என்று அவளது உள் மனம் உணர்த்தியது. கவிதாவையும் படிப்பித்து ஆளாக்கி விட்டால். பாலையில் நின்றுகொண்டிருந்த அவள் கண் களில் பசுமைக் காட்சிகள் படர்ந்தன. “என்னம்மா. நேரத்தோட வந்துட்டே..?” என்ற கேள்வியோடு உள்ளேயிருந்து அவளை வரவேற்ற அம்மா, “இதென்ன சசி. கண்ணெல்லாம் வீங்கி. முகமெல்லாம் வெளுத்துப்போய்..?” என்று கவலையும் கலவரமுமாய்க் கேட்டாள். ‘வாழ்க்கையும் கூடத்தாம்மா வெளுத்துப் போச்சு...!" என்று உள் மனம் ஊமையாய்க் கதற, “தலைவலி..” என்று சொல்லிக் கொண்டே, தன் அறைக்குப் போக முற்பட்டவள், பின் சட்டென்று திரும்பி, பல வருடங்களாகப் பார்த்துப் பழக்கப்பட்டுப்போன அம்மாவின் பொட்டில்லாத முகத் தைச் சில கணங்கள் வெறித்தாள்! அடுத்து, தன் அறைக்குள் நுழைந்தவள், நிலைக் கண்ணாடியின் முன் நின்று தோற்றத்தைக் கொஞ்சநேரம்
Page 42 8O மரீனா இல்யாஸ் பார்த்தாள். கண்ணீர் கண்களில் நிரம்பி வழிய, மெதுவாக இமைகளை மூடியவள், மனதுக்குள் தன்னையும் ஒரு விதவையாக வரித்துக் கொண்டாள். தன்னைச் சுற்றி இருள் வட்டம் பரவப் போவதை உணர்ந்தாலும்கூட, குடும்பத்துக்கு ஒளி கொடுக்கப் போகிறோம் என்ற நினைப்பு அவள் நெஞ்சுக்கு நிம்மதி யைக் கொடுத்தது. குழப்பமும் பதற்றமும் நீங்கி, மனம் தெளிந்த பின்னர், மெல்ல இமைகளைத் திறந்தாள். அவள் முன்னிலையில் இருந்த நிலைக்கண்ணாடி அவளைத் தியாகச் சுடராகப் பிரதிபலித்துக் காட்டியது.! அப்படியே விழிகளை உயர்த்திச் சுவரில் மாட்டப் பட்டிருந்த தன் தந்தையின் புகைப்படத்தைப் பார்த்தாள். அவரது ஒரு கண்ணில் சோகமும் மறுகண்ணில் நிறைவும் குடிகொண்டு இருந்தது. (இளங்கதிர் - 92,93)
Page 43 மீண்டி மாவட்டத்திலுள் மடிகே என்ற ஊரில் பிறந்த ட பேராத்ன்னப் பல்கலைக்கழ பட்டம் பெற்றவர். ஒரு ஆங்கி மலேசிய சர்வதேச இஸ்லாம கழகத்தில் முதுமானிப் பட்ட பட்டிருக்கிறார். கிழக்கிலங்க கழக விரிவுரையானர் ஜனாட் ஷாபியைத் திருமணம் செய இவர் தந்தை ஜனாப் இ ஆசிரியராயிருந்து ஒய்வு பெர் கட்டுரை, கவிதை, சிறு ஆகிய இலக்கியத் துறைகள் இவருக்கு ஈடுபாடுண்டு. ே லிக் கவியரங்குகளிலும் பா கிறார். வானொலியில், இன நாடகங்கள் ஒலிபரப்பாகியுள் "பாறையில் பூத்த மலர்” என் கத்தின் மூலம், ரசிகர் மத் பெற்றார். "அரும்புகள்” 6 தொகுதியில் இவரின் சில கனவே இடம் பெற்றுள்ளன கைத் தமிழ்ச் சிறுகதைகள் என்ற இவரின் ஆய்வு நூலை 'தமிழ் மன்றம் வெளியிட்டுள் ள தெனுறிதெனிய Diffsat If இல்யாஸ், கத்தில் சிறப்புப் ல ஆசிரியை, யெப் பல்கலைக் டப்படிப்பில் ஈடு ஈகப் பல்கலைக் I ETIH. 6161. STIH. பது கொண்டார். ல்யான், பள்ளி றுன்னார். கதை, நாடகம் ர் அனைத்திலும் மேடை, வானொ ங்கு பற்றியிருக் பரின் ஏரானமான எற தொடர் நாட தியில் பிரசித்தி ான்ற கவிதைத் கவிதைகள் ஏற் 1. "தென்னிலங் ள் ஓர் ஆய்வு" கல்ஹின்னைத்
கருத்துகள்
கருத்துரையிடுக