மரணமடைந்த எழுத்துகளின் புலம்பல்
கவிதைகள்
Backமரணமடைந்த எழுத்துகளின் புலம்பல்
நேதாஜிதாசன்
Contents
முன்னுரை
நன்றி...!
உள்ளே
1. துண்டிலக்கியம்
2. இந்துத்தவ அரசியல்
3. வானிலை மாற்றமா இல்லை சீற்றமா
4. கடலோடி கழுகுகள்
5. எதிரிகளுக்கு சமர்ப்பணம்
6. புனிதமான அரசியல்வாதிகள்
7. நான் யார்
8. அயோக்கியத்தில் களேபரம்
9. உடல் மறைய உடையணிவீர்...!
10. ஆல்கஹால் அடிமைகள்
11. ஒரு பத்து நிமிடம்
12. எனது காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்..!
13. ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு
14. தகவல் அரசியலும் மாவோயிசமும்
15. நள்ளிரவு
16. முடிவுரை
எங்களைப் பற்றி
1
மரணமடைந்த எழுத்துக்களின் புலம்பல்
2
மரணமடைந்த எழுத்துக்களின் புலம்பல்
மரணமடைந்த எழுத்துக்களின் புலம்பல்
உரிமம் : நேதாஜிதாசன்
Creative CommonsAttribution-NonCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது
3
முன்னுரை
கருத்து சுதந்திரம் அரசியல் சட்டத்தால் நிறையவே தரப்பட்டுள்ளது . கொஞ்சமாவது பயன்படுத்துவோமே என்பதன் வெளிப்பாடு இந்த புத்தகம் .
நான் அவர் போல எழுதுகிறேன் என நீங்கள் எண்ணுமளவுக்கு பெரியவன் அல்ல . ஏதோ ஒரு நாள் என் சகோதரனின் உதவியால் டிவிட்டர் அறிமுகமாகி , ப ின் பேயோன , பா . ராகவன் , அ . மார்க்ஸ் போன்றோரின் எழுத்துக்களை படித்து வளர்ந்ததால் ஏற்பட்ட வெளிப்பாடு .
எனக்கு அங்கிகாரங்கள் வேண்டாம் இந்த மின்னூலின் வரிகளை படிக்கும்போது உங்கள் மனது யோசிக்க ஆரம்பிக்கிறது எனில் அதுவே என் வெற்றி .
இதை தொகுக்கையில் மலரும் நினைவுகள் ஏற்பட்டன . அவற்றை வாரி வாரி பஞ்சமில்லாமல் கொடுத்த சூழ்நிலைகளுக்கும் , நட ்புக்களுக்கும் நன்றி .
இன்னும் எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன் ..
நேதாஜிதாசன்
22.10.2015
கருத்துகளை கடத்த suryavn97@yahoo.com
twitter.com/surya_vn
nethajidhasan.blogspot.in
4
முதல் மின்பதிப்பு: 2015
அட்டை வடிவமைப்பு:இம்மானுவேல்
Maranamaditha Eluthukalin Pulambal
This work is licensed under Creative CommonsAttribution-NonCommercial-NoDerivatives 4.0
First electronic edition February 2015
Cover art, illustrations, and design: Immanvel
5
நன்றி...!
நன்றி !
என் பயணம் சரியோ,தவறோ சென்று கொண்டுதான் இருக்கிறேன் முன்பின் தெரியாத இலக்கை நோக்கி …..
எழுத தூண்டிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.
@thepayon @ramesh_conner @nunmathiyon @mekalapugazh
@indiavaasan @writerpara
செய் அல்லது செத்து மடி – நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்
எதாவது என்பது எதுவும் இல்லை என்பதை விட சிறந்தது…
6
உள்ளே
1.துண்டிலக்கியம்
2. இந்துத்துவ அரசியல்
3. வானிலை மாற்றமா இல்லை சீற்றமா
4. கடலோடி கழுகு
5. எதிரிகளுக்கு சமர்ப்பணம்
6. புனிதமான அரசியல்வாதிகள்
7. நான் யார்
8. அயோக்கியத்தில் களேபரம்
9. உடல் மறைய உடையணிவீர்
10. ஆல்கஹால் அடிமைகள்
11. ஒரு பத்து நிமிடம்
12. எனது காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..!
13. ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு
14. தகவல் அரசியலும் மாவோயிசமும்
15. நள்ளிரவு
16. முடிவுரை
1
துண்டிலக்கியம்
தடைகள் வரும் போது பயம் என்ற உடையை தூக்கி
எறிஞ்சிட்டு ஒடிகிட்டேஇருக்கனும்…அப்பதான்
வாழ்க்கை எனும் பந்தயத்தில் பர்ஸ்ட் பிரைஸ்
கிடைக்கும்.
செடிகளை வளர சூரியன் தான் காரணம் ஆனால்
எதுக்குமே உதவாத நிலவுக்கு ஏன் இவ்வளவு ராச
மரியாதை ???
நம் பிரச்சனைகளைத் தீர்க்கவில்லை. சிக்கலில்
இருந்து மீளும் அறிவாற்றலை சிந்தனை நமக்கு
கொடுக்கலாம்.
தோற்றுபோவதுக்கும் தோற்கடிக்கப்படுவதற்கும்
நிறைய வித்தியாசம் உண்டு . ஆனால் நிச்சயமாக
இந்த இரண்டு விஷயமும் நீ முன்னேற முக்கிய
காரணமாக அமையும.
ரசிகனாய் இருக்க விரும்பாதவர்கள் இன்று ரசிக்க
வைத்து கொண்டிருக்கிறார்கள்.
ரசாயன மாற்றம் வேதியியலில் மட்டுமா !!! ரசாயன
மாற்றம் எம்பண்டைய விவசாய முறையிலும்
முறையில்லாமல்!
ஞாபகங்களை சேர்த்து வைக்க போராடி
கொண்டிருக்கும் பாழான வாழ்க்கை இது.. இதுல
சிலரோ பாலா பட ஸ்ரிப்ட்.. சிலரோ சங்கர் பட
ஸ்கிரிப்ட்!
நவீனம் யாவும் பழமையை கொலைசெய்த
கொலைகாரர்கள் தான்.
வாழ்க்கை ஒரு கணிதம். கணக்கு போட்டு ஒட்டும்
உறவுகளை விட கணக்கு தெரியாமல் ஒட்டும்
உறவுகள் ஒரு சாகாவரம்.
திருமணம் to சுடுகாடு இடைப்பட்ட நீண்ட தூர
சொகுசான உடைந்த பேருந்து பயணமே இந்த
அசல் மானிட வாழ்க்கை.
பிரிவு நம்மை பிரிப்பதில்லை பிரிந்தவரை விட்டு..
அது அழியாத நினைவுகளை விட்டு செல்கிறது.
சாதி, மதம், இனம், மொழி, பணம்
இவையனைத்தும் சில பேருக்கு மனித உறவுகளை
முடிச்சு போடுகிறது, பல பேருக்கு மனித உறவை
முரண்பாடாக்குகிறது!
விவசாயிகள் காதல் தோல்வியால் தற்கொலை
செய்து கொள்கிறார்கள் – மத்திய மந்திரி ராதா
மோகன் சிங் ஆமா ஆமா இங்க ஏற்கனவே!
உப்பு தண்ணீர் கடலில் இருப்பது போல கண்ணில்
இருப்பது என்ன டிசைன் கடவுளே!
இருளுக்கு முன் வெளிச்சமா? வெளிச்சத்திற்கு பின்
இருளா? ஒரே கன்பியுஸ்
அவசர காலம் பிரகடனப்படுத்தப்பட்ட
காலங்களில் அதை எதிர்த்து போராட நம்
முன்னோர்களிடம் தைரியம் இருந்தது.ஆனால் நம்
தலைமுறை?
ஏமாற்றுபவர்களை விட ஏமாறுபவர்கள் தான்
தண்டிக்கபடகூடியவர்கள். #தில்லுமுல்லு
தெருவிளக்குகள் மின்சாரத்தின் துனையோடு
இருளோடு போரிடும் போது நீ மட்டும்
விதிவிலக்கா மனிதா!
மரங்களை நட்டுவைத்தவன் அதன் காய்
காய்கனிகளை வேண்டுமானால் எடுத்து
கொள்ளலாம் அது தனிஉடமை. மரம் தரும்
இதமான காற்றை பறிக்கமுடியாது.அது
பொதுஉடமை.
குரு பார்த்தால் கோடி நன்மையாமே.. அப்படினா
குரு இப்ப கெட்டவங்களை மட்டுமே சைட்
அடிச்சுட்டு இருக்காரு போல!
மது விற்று தாலிக்கு தங்கம் தந்த அரசு, அதே
தாலியை அறுக்க மதுவை விற்குறது. வல்லரசு
ஆகிரும்டா சாமி…
பிராடுதனத்தின் அழகு முகத்தில் தெரியாம
போனதின் விளைவு கோட் சர்ட் போன்ற
ஏமாற்றுகாரர்களிடம் சிக்கிவிடுகிறோம்.
மலையாள சினிமாவை கண்டு நிச்சயம் தமிழக
சினிமா கற்றுகொள்ளவேண்டும். பிரேமம்
பின்னிடாங்கய்ய!!!
அனுபவங்களை தோற்கடிக்க புதுமை ஓன்றே
போதுமானதாக இருக்கிறது. சூப்பர் ஸ்டாரே
பிளாப் ஆகும் போது காக்கா முட்டைகள் சொல்லி
தரும் பாடம் இதுதான்.
படைப்பவனின் சக்தியும் மனிதனிடம்
உள்ளது,அழிப்பவனின் சக்தியும் உள்ளது.. அப்ப
மனிதன் தான் கடவுள். #நான்கடவுள்
பிராந்தியம் வாழ்க …
வாழ்க்கைய வளைச்சு வில்லா மாத்தி கோபத்த
அம்பா தொடுத்து துரோகிகளை தாக்கி
அழிக்கனும்.எதிரி கூட நீ வீக்கா இருக்கன்னு
சொல்லுவான். இந்த துரோகிகள்?
நீயும் நானும் தற்காலிகம் தான் இந்த புவியில்.
ஆனால் உன் உழைப்பால் கிடைத்த வெற்றிகளே
நிரந்தரம்.
பொருளாதாரம் கிரிஸ்ல சரிந்து போச்சாமே…
ஏதேன்ஸ் நகர மக்களுக்கு வாழ்த்துகள் ..
ஏகாதிபத்தியத்தின் அடிமைகள் ஒரு போதும் சுக
வாழ்க்கை வாழ்வதில்லை!!
மன வலிமை வைரம் போன்றது.. துரோகங்களால்
பட்டை தீட்டப்பட்டு வலிமை அடைகிறது.உடல்
வலிமை சிலை போன்றது.அவமானம் என்ற
ஊளியால் செதுக்கப்படுகிறது.
நம்பிக்கையோடு உன் முதல்அடியை எடுத்துவை.
முழு படிக்கட்டையும் பார்க்க வேண்டிய அவசியம்
இல்லை.முதல் படியில் ஏறி நில்.
இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சி தான்…
எத்தனை வாக்கு வித்தியாசம்னு தான் பாக்கனும்
#Amma #RKNagar
சாதி என்பதற்கு ஏதாவது சாதித்துவிட்டு சாவு என
பொருள்.. ஆனால் இந்த படுபாவிகள் செத்துட்டு
சாதி தலைவராக்கிறாங்க ..
இவன் ஆதிக்க சாதி இவன் கீழ்சாதி.. அவன்
நடுசாதி.. அந்தாபாரு அவன் சைடு சாதி…
போங்கய்யா யோவ் போய் சிவலப்பேரிபாண்டி
படத்தோட கிளைமாக்ஸ பாருங்க!!
கல்லை வணங்குவதில்
மக்களுக்கு உள்ள ஆர்வத்தைபோல் பெரிய
ஏமாற்றத்தனம் எது இருக்க போகுது!
டிஜிட்டல் எனப்படுவது யாதெனில் 0,1 என FCP
புக்கில் வரையறுக்கபட்டுள்ளது. #DigitalIndia
அவளின் போலியான சிரிப்புக்களை என்னால்
கண்டறிய முடிவதில்லை… யார் தவறு?
காதல் தீ பற்றிகொள்வதால் அதை அணைக்க
இயலாமல் பதின்ம வயதில் போராடுபவர்
எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
பணம் தேவைதான் அதைவிட நம்பிக்கையான
உறவுகள் மிகமிக தேவை இந்த 21ஆம் நூற்றாண்டில்!
புகழ்தரும் யாவும் ஒரு போதை பொருளே..
அளவுக்கு மீறிய புகழும் ஆபத்தானதே……
அன்பின் வாசனை முகர துடிக்கும் உயிரினம்
மனிதன்.
பயணங்கள் இனி தான் பயங்கரமாக
மாறப்போகிறதுஹெல்மெட்வருகையால்
பிறந்த குழந்தை கூட அழுகை எனும் புரட்சி
செய்துதான் தன் தேவையை நிறைவேற்றி
கொள்கிறது. – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
ஒன்று சிறந்த புத்தகங்களை படையுங்கள்
அல்லது மற்றவர்கள் உங்களை பற்றி எழுதுமாறு
வாழுங்கள்.
புகை நமக்கு மட்டுமல் சுற்றுசூழலுக்கும் கேடு தான்..
ஆனாலும் முடியல!
முயற்சி செய்பவன் எதையும் சாதிக்கிறான்.
முயலாதவன் எல்லோர்க்கும் போதிக்கிறான்.
அதிநவீன நகரங்கள் உருவாக்கப்பட உள்ளனவாம்!
நகரங்களில் ஒட்டிய குடிசைப் பகுதிகளில்
வசிப்போர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
ஆறரைக் கோடி!
பார்வையில் உலக போர் நடத்திடும் பெண்ணை
விடவா அழிவு மிகுந்த ஆயுதம் இருந்து விட
போகிறது..
இயந்திரவியல் பொறியியல் படித்தவள் போல
அவள் இதயத்தை மோல்ட் பண்ணி கேஸ்டிங்
பண்ணிட்டா…!
கேமராக்கள் ஒருவரை அழகாகவும் படம் பிடிக்கும்.
இன்னொருவரை நிர்வாணமாகவும் படம்
பிடிக்கும்.
முயற்சிகள் கடல் போல அமைந்தால் வெற்றி இந்த
பிரபஞ்சம் போல உன் பெயர் சொல்லும். முடியாது
என்பது இனி இல்லை நீ முயன்றால்.
பிரபலங்கள் எனும் முறை ஒழிய வேண்டும்.
அப்போது தான் சமத்துவம் பிறக்கும் இந்தியாவில்.
உடலை காயப்படுத்தும் விபத்துகளை விட மனதை
காயப்படுத்தும் விபத்துகளையே மனிதன்
விரும்புகிறான். #காதல் #பிரிவு
யாவருக்கும் ஒரே அளவாகத்தான் அமைகிறது
அவர்களின் சவகுழி. மரணம் ஒன்றே
நடுநிலைமையை பின்பற்றுகிறது.
என் அழுகையின் ரெசிஸ்டர் அவள் ஒரவிழி
பார்வை….!
திருப்பங்கள் சாலைகளில் மட்டுமல்ல…
வாழ்க்கையிலும் அடுத்து என்ன என
சுவாரசியபடுத்துகிறது.
மரணம் என்ற நீதிபதி லஞ்சம் வாங்குவதில்லை.
முடிவற்றவை யாவும் முடியக்கூடிய காரியத்தில்
இருந்து உருவானதே…
ஒரு உண்மை எளிதில் வெளிப்பட்டால் அங்கு
கடின உழைப்புக்கு இடம் இருக்காது.
மனவலிமை இருக்கிறது திடமேறிய கால்களில்
உறுதி இருக்கிறது. உடன் தோழமைகள் பிறகென்ன
எனக்கு தயக்கம்? -தோழர் #சே_குவாரா
நாகரிக வளர்ச்சி எனப்படுவது யாதெனில்
உடன்பிறப்பை டிவீட்டர் போன்ற சமூக
வலைதளங்களில் பிளாக் செய்வது.. போங்கடா
சென்னை இல்லாத ஐ.பி.எல் சும்மா சின்ன பசங்க
மேட்ச் மாதிரி தான். போங்கடா டேய் #Cskbanned
ஒப்பிட்டு பார்க்கிர்களா.. அடுத்தவன் உடமை
உங்கள் மனதை பறிக்கிறதா அதை உழைப்பில்
அடைய மனம் மறுக்கிறதா!! நீங்கள் அழிவின்
பாதையில் போகிறாய்.
வாழ்க்கையின் கொடுமையான நேரம் நம்ம உயிர்
நண்பன் நம்ம கண்ணு முன்னாடி அழுவறதுதான்..
கவலை இதயத்தை நிரப்பி வழியும்போது
கண்ணிர் வலியை துன்பத்தை வெளியேற்றுகிறது.
காலம் மாறும் பொழுது.. அசித்- விசய் சண்டைகள்
போய்.. சந்தானம்-சூரி சண்டையெல்லாம்
டிவீட்டர்ல நடக்கும்…
பணக்காரன விட குணக்காரன் எளிதில்
விழ்ந்துவிடுகிறான் … இதுதான் இயற்கையின்
ஒருதலை காதலோ?
வெளிச்சம் வரும் போது இருள் விலகும். வெப்பம்
வரும் போது குளிர் ஓடி விடும்.இது போலத்தான்
வாழ்க்கை .ஒன்று வரும் பொழுது இன்னொன்று ஓடி
விடுகிறது.
அன்பை கொட்டியது நான் தான்.அவள் இதயத்தில்
தான் கொட்டினேன்.. ஆனால் நான் கண் மூடும்
போது குப்பை தொட்டியில் கொட்டிவிட்டால் என்
அன்பு குவியலை!
நாய்க்கு ஆதார் கார்டு கொடுக்குறதும், மனுஷனுக்கு
ஆதார் கார்டு தர தாமதபடுத்துவதும்
#வல்லரசுஇந்தியா வில்தான் சாத்தியம்
http://t.co/K8rOocjCjK
வெற்றி வேண்டுமா ? எதிரிகளை சேகரித்து
கொள்ளுங்கள்…
உயிரில் வளரும் மலரொன்றை கண்டேன்…. அது
பெண் என அழைக்கப்படுகிறது இனியவர்களால்..
சார்ந்து வாழ்வது தவறல்ல.. சாந்து(பசை) போல
வாழக்கூடாது..
மன்மத வருடத்தில் ஆடி மாசம்!!!!!!
முயற்சியில் வறுமை கண்டவன் வாழ்க்கையில்
வறுமை அடைகிறான்.
இன்று நாளை வரபோவதில்லை.நாளை இன்றில்
வரப்போவதில்லை.. வாழு வாழ்ந்து கொண்டே
இரு.. ஒவ்வொரு நிமிடங்களும் தேவை மச்சான்..
வேலை இல்லாமல் போனால் என்ன!; நீ
தொழிற்சாலைகளை நம்பி இருக்காதே. உன்னை
தொழிற்சாலைகள் நம்பி இருக்கும்படி செய்!
டீக்கடைகளில் தான் சட்டசபையை மிஞ்சும் சமூக
வெட்டி விவாதங்கள் உருவாகின்றன #டீக்கடை
என்னது மதுவிலக்கா!!! முதல்ல அவன
விலக்குங்கடா காத்து வரட்டும்!
#கலைஞருக்கு மூடியில் சரக்கு
ஊத்திகொடுக்காததால் விபரீதம் : சரக்கு
கிடைக்காதா கடுப்பில் மதுவிலக்கு அறிக்கை
குடிபழக்கம் இல்லாதவனையும் சந்தேக பட்டு
குடிகாரனாக்கும் சமுகம் ஒரு வேற லெவல் வரம்!
எரியும் மூங்கில் காட்டில் சிறகு கருகும் ஒரு
பட்டாம்பூச்சியை எந்த பறவை விசாரிக்கும் …
#மூன்றாம்உலகப்போர்
குடைகள் மழையை தடுத்து நிறுத்துவதில்லை
மழையில் நிற்க சக்தியளிக்கிறது அதுபோல தான்
தன்னம்பிக்கை வெற்றியை தருவதில்லை
சோதனைகளை தாங்க பலமளிக்கிறது.
காலி பீர் பாட்டிலில் மண்ணெண்ணை ஊத்தி திரி
வைத்து பத்த வைத்தால் அது பீர் விளக்கு…!
கண்ணின் கவிதை கண்ணை விட
முக்கியமானவர்களுக்கு மட்டுமே புரிகிறது.
சூழ்நிலைக்கு அடிமையாக வாழ்வதை விட ஒரு
அடிமை வாழ்க்கை இந்த மண்ணில் ஏது.நான்
சரக்கடிக்கனும்னாலும் அதை நான் தான் முடிவு
பண்ணும்.அடுத்தவன் இல்ல.
எல்லையில் பாக்கிஸ்தான் அத்துமீறல்:இந்தியா
எச்சரிக்கை இந்த செய்தி கடந்த ஆறுமாசமா
செய்திதாள்களில்.. எவ்வளவு தான் எச்சரிக்கை
கொடுப்பாங்க.
பெண்ணுரிமை பேசும் அனைவரும்
பெண்ணுரிமையை மறுத்தவர்கள் தான்(Including
Me)
கடமை அதிகமாக இருக்கும் போது அதை முடிக்கும்
வலிமை இருப்பதில்லை மனிதர்களுக்கு..
துன்த்தில் எதிர் நீச்சல் போடபோகிறாயா அல்லது
செத்த புணம் போல துன்பத்தோடு மிதக்க
போகிறாயா என்பதே இந்த வாழ்க்கையின்
கேள்வி!
இருபது வருடங்களில் ஒரு கம்பெனியை உலக
பிரபலமாக மாற்றமுடியும்அதேபோல் அதை இருபது
நிமிடங்களில் அழிக்க முடியும்.எல்லாமே மாத்தி
யோசிப்பதில் உள்ளது.
வழி தெளிவாக இருக்கிறதா அதன் வழியே
வெற்றியை நோக்கி பயணிக்காதே.. கரடுமுரடான
வழி பயணமே வெற்றியை நிரந்தரமாக்கும்.
வாழ்க்கையின் அதிமுக்கியமான கேள்வி : நீ
அடுத்தவர்களுக்காக என்ன செய்தாய்? -மார்டின்
லூதர் கிங் Jr
எல்லை விவகாரத்தில் பேச்சுவார்த்தை ஒரு
முட்டாள்தனம். வாஜ்பாயே பிரவாயில்லை
India-Bangladesh
இதயம் பசிஎடுத்து விரும்பி உண்ட உணவு “காதல்”
பிரிவினையை ஏற்படுத்தும் யாவும் ஒரு கூட்டத்தை
ஒன்றினைத்து வைத்ததே.
கடந்த காலங்களை கடக்க தெரியாமல்
நிகழ்காலத்தை தொலைப்பவர்கள் எதிர்
காலத்தில் என்ன ஆவார்களோ?
சுதந்திர தின சூளுரை கண்ணாடி
பேழைக்குள் பிரதமர் !
மதுக்கடை பலகையில் முகவரி காந்திஜி சாலை.
மழை ஓய்ந்தது ஆரம்பமானது தவளை கச்சேரி!
மதுகடைக்களுக்கு பாதுகாப்பு. போய்
அரசியல்வாதிகள் வைப்பாட்டி வீட்டுக்கு
பாதுகாப்பு கொடுங்கடா! நாடு எங்கய்யா போது?
அவள் கண்களே என் அன்பின் கண்ணாடி … என்
அன்பை பிரதிபலிக்க அவள் என்ன மாயம்
செய்தாளோ!
அதிகார குவியல் நிச்சயம் தவறான விஷியங்களை
செய்ய தூண்டும் … மத்தியில் மோடி அரசு அதிகார
குவியலை நோக்கி..
எதிரிகளை சம்பாதிக்க ஒரு கொடுப்பினை
வேணும்… ஆனா நண்பர்களை சம்பாதிக்க ஒரு
புன்னகை போதும்.
காதலியை காதலித்தால் காதலிப்பவளை காதல்
செய்ய காதலிக்க காதலன் காதலுடன் இருப்பான்.
#பாவம் அவரே கன்பியுஸ் ஆயிட்டாரு?
வாழ்க்கை ஓரு பங்கு சந்தை! என்றும் அன்பின்
பங்குகள் சரியலாம் ஆனால் ஒரு போதும்
வீழ்ந்துவிடாது.
கஷ்டப்பட காலங்களில் விலகி நின்னுட்டு
ஓகோனு இருக்கும் போது ஒட்டி
உறவாடுகிறவர்களிடம் கொஞ்சம்
முன்னெச்சரிக்கையா இருக்கனும்.
#துரோகிகள்ஜாக்கிரதை
@kalaignar89 @drramadoss டிவிட்டரில் தொகுதி
பங்கீடு: கலைஞர் டிஎம்ல என்ன பண்ணுறீர்னு
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கனும்.
பீர் உடன் தொடங்கும் வெள்ளிக்கிழமை இரவு
,பட்டினியுடன் விடியும் சனிக்கிழமை பகல்!
#கல்லூரிவிடுமுறை
நாம ஒருதலையா காதலிக்கிற பொண்ணு
இன்னொருத்தன் கூட பேசும் போது வர்ற கடுப்ப
அளக்க அளவுகோல் இல்லை!
காதல் கசிவு என்னுள்.அடைக்க உன் இதயமும்
உன் பார்வையையும் கொடு.அது போதும்.!
நிறைய இருக்கும் போது பயன்படுத்த
முடிவதில்லை. பயன்படுத்த நினைக்கும் போது
நிறைய இருப்பதில்லை. இது இயற்கையின்
சொல்லப்படாத நீதி #வாழ்க்கை
பாஜக சாதி தலைவர்கள் சந்திப்பு. போச்சு
அவங்களும் தெரிஞ்சு போச்சா.. சாதி ஒன்னு தான்
தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க ரூட்டுனு..
#தீருமா_சாதீ
வருத்தம் என்பது Last Seen மாதிரி… மகிழ்ச்சி
என்பது Online மாதிரி.. #வாட்ஸ்அப்
நாகரிகம் என்பது ஒரு கூட்டம் எதை செய்யுதோ
அதையே நாமலும் செய்யனும் என்பது இல்லை. உன்
செயல் பலரை உன்னை தன் ரோல் மாடலாக
ஏற்றுகொள்ள செய்வது.
அவ இல்லாம நா இல்லங்கிறது போயி ἷ சரக்கு
செல்போன் இல்லாம நான் இல்லை என
சொல்லும் காலம் இனிதே தொடங்கிவிட்டது.
என்ன தான் நாம விண்ணை தாண்டி
வருவாயான்னு காதலிச்சாலும் பெண்கள் வீட்டு
கதவை கூட தாண்டி வருவதில்லை… இதான்
அவங்க இயல்பு….!
தப்பு செய்து தண்டனை வாங்குவதில் உள்ள சுகம்
வேறுஎதிலும் வருவதில்லை.. பள்ளி கல்லூரிகள்
சொர்க்கம் தான்..
சில நேரங்களில் அனுபவம் திறமை மற்றும்
திட்டமிடலின் முன் படுத்தபடுக்கையாய்
வீழ்ந்துவிடுவதுன்டு.
அரசு அறிவிக்காத பல நல்ல திட்டங்களை
#வாட்சாப்-ல் அறிவித்து கொண்டிருக்கிறார்கள்…….
#யார் பெத்த புள்ள இந்த வேளை பார்க்குதோ..
மதுவிலக்கு அரசியலால் மட்டும்
சாதித்திடமுடியாதது. கொஞ்சம் பெண்களை
பசங்களை ஏமாத்த சொல்லாதிங்கடா. .
#குடிக்கிறான்டா!!
பிடிக்கிறது பிடிக்காம போகும் போது பிடிக்காம
போறது பிடிக்கும்.அந்த பிடிக்கிறது பிடிக்காம
போன இடத்தை பிடிச்சிரும்.அப்ப தான் பிடிக்கும்?
#புரிய
இனி கூகுள் நம்ம கன்ட்ரோல்… டேய் அப்படியே
அம்மா கூகுள்னு பெயர மாத்துங்கடா.. செய்வீர்களா
தான் கூகுள் ஸ்லோகன்.. தமிழனாய் இருக்க
பெருமை!
நான் தான் அடுத்த மைக்ரோசாப்ட்
ஒனர்..விண்டோஸ் பெயரை மாத்தி மென்டோஸ்னு
வைக்கலாம்னு இருக்கன்? மக்களே கருத்து பீளீஸ்
எப்பவும் தோல்வி அடைபவன் சில நேரங்களில்
நினைப்பதுன்டு “ஏன்டா எனக்கு மட்டும் !! த்தாஆ ”
தீட்டுவது திட்டுவதில் இருந்து தொடங்குகிறது.
#வைரம்
என் தனிமையும் தனியாய் இருக்கிறது உன்
தனிமையால் பெண்ணே…..
சரியானவர்களிடம் மட்டும் சாமர்த்தியமாக ஆமா
போடுவர்கள்.. கொலையே செய்தாலும் தப்பித்து
விடுவர்.
எமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிலையாக
நிற்பதால்,மற்றவர்களின் அழுத்தங்களுக்குப்பணிந்து
கொடாமல் தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது. #LTTE
பெண் விடுதலை என்பது
அரசஅடக்குமுறைகளிலிருந்தும்
சமூகஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச்
சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை
பெறுவாதாகும்.
நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து
முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில்
அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது!
#கார்ல்மார்க்ஸ்
நாம ஒன்னு நினைச்சா கடவுள் ஒன்னு
நினைக்கிறார்… யோவ் ஆண்டவா நீ உண்மையிலே
இருக்கியா? பெரிய மூளை காரன்யா நீ
ஷேவ் பன்னனுமாமே.நம்ம வெளி உறவு துறை
அமைச்சருக்கே ட்ரெண்ட் பன்னுறாங்கய்யா.. ஆன்டி
ஷேவ் பன்னா உங்களுக்கு என்னடா என்னடா டேய்
#ShaveUrHeadSushma
நாம ஒரு பொண்ணை காதலிக்கிறோமா
இல்லையோ ஆனா ஒரு தடவையாச்சு ஒரு
பெண்ணை நமக்காக சிரிக்க அழ வைச்சிரனும்..
அது தான் காதலின் ஒல்டு வெர்ஷன்.
இனி ஒவ்வொரு தமிழனும் நினைக்கனும் ஸ்டீவ்
ஜாப்ஸ் மாதிரி ஆக வேண்டாம் .. இனி நம்ம சுந்தர்
பிச்சை மாதிரி மாறுனா போதும்னு..
முயற்சி முடியும் என்பதை கொண்டுவரும் வரை
வெறும் முயற்சி தான்.. முடியும் என எண்ணிவிட்டால்
அது வெற்றியாய் விஸ்வரூபம் எடுத்து விடுவது
இயல்பு
நேரம் என்பது நேரமாகும் போது நான் நிரந்திரம்
இல்லை என உணரச்செய்கிறது.
வெள்ளி கிழமைகள் சிலரை பெரிய
நடிகராக்குறது.சிலரை வெள்ளிக்கிழமை கோவில்
கூட்டத்தில் மனதை பறிகொடுக்கச்செய்கிறது.
பலரை பேருந்தில் பயணபட செய்கிறது.
நாடு சுதந்திரமடைஞ்சு பல வருசம் ஆச்சு. இன்னும்
அதே அந்நிய கூட்டம் கொள்ளையடித்து
கொண்டிருக்கிறது இந்தியாவில் எம்.என்.சி என்ற
பெயரில்..
எதிரியின் ஏளனச்சிரிப்பு எனது தடுக்க இயலா
வெற்றி!
பாக்கிஸ்தான்ல் வசிக்கும் அனைத்து
தீவிரவாதிகளுக்கும், என் இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள். #வாழ்த்துக்கள்
நல்லவனாக இருக்க முயற்சி செய்யுங்கள்… ஆனால்
, நீங்கள் நல்லவனென்று நிரூபிக்க முயற்சிக்காதீர்…
அது என்றும் முடியாது…!
மகிழ்ச்சியாக எப்போதும் இருக்காதீர். ஒரு நொடி
துன்பம் மகிழ்ச்சியை அழித்து விடும்.
அப்படியே ராகினி எம்.எம்.எஸ் புரியுற வரைக்கும்
இந்தியை திணிங்க அது போதும்.
இந்த காதலுக்கு காரணம் கண்கள் தான்.. காதலே
வேண்டாம் என சொல்பவர்கள் பேசாம கண்ணை
பிடிங்கி எறிஞ்சுருங்கடா..
இந்த காதல் ஆழமானதுனு சொல்றாங்களே? போர்
போட்டா தண்ணீர்க்கு பதில் கண்ணிர் தான்
கிடைக்கிறது.
உன் வாழ்க்கை உன் கையில் மட்டுமல்ல உன்
நாக்கிலும்!
நாம பேச நினைப்பதை இன்னொருவர் பேசி
விட்டு நாம் பேச வாய்ப்பளிக்காத போது ஆமா
சாமி போடுறது தான் உயர்வு.
புரியாதவை என எந்த விஷயமும் இல்லை.
எல்லாமே நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை
என்றே பொருள்படும்.
தமிழ் எழுத்துக்கள் அழகாக வெட்கத்தில்
சினுங்கிறதோ என்னவோ! உன்னை கவிதையாய்
வார்க்க முயற்சித்த போது!
பார்வை மின்சாரம் தேவை என் உயிர் விளக்கு
ஒளி தர…
தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில்
தூக்கி போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன் #இந்த
டையலாக் ஒன்னே போதும் தமிழர்களை
ஏமாத்துவதற்கு!
போட்டோசாப் டிசைன்கள் தோற்றுப்போகும்
அவளை வரைய முற்பட்டால்..
அவளின் கன்னக்குழியை விடவா பெரிய சவக்குழி
இருந்துவிட போகிறது..
தண்டனைகள் தண்டிக்க மட்டுமா இங்கு
பலவற்றை துண்டிக்கவும் தான்…
சென்னைல நீ ஒரு மாசம் வாழ்க்கையை
சந்தோஷமாக ஓட்டிட்டன்னு வைச்சுக்கோ நீ எங்க
போனாலும் பொழைச்சுகிடுவ #HBDChennai
பூகம்பம் பூக்கம்பம் ஆவது பெண்ணில்
தான்..
அதிகாரம் அதிகமாக ஆகும் போது அதிகமாக
இருப்பதெல்லாம் குறைய ஆரம்பிக்கிறது.
தவிப்பும் பிரிவும் சகோதரர்கள் போலும் ஒரே
மாதிரிதான் உணர்கிறது இந்த மனது..
பெண்னிலாவை தேடிய பொழுது வெண்னிலா
கோபப்பட்டது புது நிலவை கண்டு..
நேற்று பத்து பேர் படுகொலை. இன்று இந்திய
நடிகைக்கு உலக அழகிக்கு உலக அழகி பட்டம்
இப்படி நடந்தா பத்து பேர் படுகொலையை
மறந்துவிடுவார்கள்!
விண்மீன் போல எண்ணி கொண்டிருக்கிறேன்
அவன் கண் மீனை கணையை!
கண்களில் போஸ்ட் ,மெயில்,எஸ்.எம்.எஸ் என
அத்தனை வசதிகளை கொண்டவள் என்னவள்
மட்டுமே..
மறக்கமுடயாத போது தான் கண்ணீராக
வெளியேற்ற நினைக்கிறது மனசு ..
நேரம் மனது நடத்தை இந்த மூன்றையும் அடக்க
கற்றுக்கொண்டால் காதல் தோல்விகள்
தோல்வியடைந்து இருக்கும்.
முன்னேறு என அறிவுரை சொல்பவர்கள் யாரும்
தன்னிடம் முன்னேறு என சொல்லவில்லை என்ற
ஏக்கத்தில் திரிபவர்கள் தான்..
ஜென் தத்துவம் என்ன சொல்கிறது என்றால்
ஒன்னுமே சொல்லாதே..அடிச்சும் கேட்பாங்க
அப்பவும் சொல்லாதே.. #சொல்லாதே
உடலில் குறை கண்டு ஒரு பெண்ணை
கலாய்க்காமல் இருப்பதே என்னால் முடிந்தது..
#பெண்ணியம் மத்தப்படி அழகான
பொண்ணுங்களா ஒ காட் பியுட்டிபுல் தான்
முழு நிலவு நிலையாய் இல்லை போலும் உன்
நிலைஅழகை கண்டதால் #அமாவாசை
நிலவுடன் உன்னை ஒப்பிட ஆசை தான்.. ஆனால்
வானில் இரவு மட்டும்தான் நிலவு என்பதால்
பயந்தேன் பெண்ணே #நிலவு
காதலில்தனிமைகிடையாது. பலர்
நினைவுகளோடு..சிலர் நினைத்தவர்களோடு..
#காதல்
பேச நினைக்காத வார்த்தைகளை கண்ணால்
பேச விட வேண்டும் காதலில்..
நான் என்பது ஆணவத்தை தொடங்கி வைத்து
பொறாமை விழாவை கொண்டாடி விடுகிறது.
நேற்றைப்பற்றிய சிந்தனை இன்று இருக்கும் போது
இன்று பற்றிய சிந்தனை தோன்றாது..இன்று
நேற்றாகவும் நாளையாகவும் மாறக்கூடியது.
இதயத்தில் இடம் கேட்டேன் உடனே லஞ்சமாய்
சில துளிகள் கண்ணீரையும் மனதையும் கேட்டாள்.
மறுக்க மனமில்லாமல் கொடுத்து விட்டேன். #காதல்
பயம்தான் உலகின் மிக மோசமான மிருகம். தனக்கு
ஆபத்து எனில் தொற்றிக்கொள்வது பயம்தான்
..பிறர்க்கு மகிழ்ச்சி எனில் தொற்றிக்கொள்வதும்
பயம்தான்!
கடவுளுக்கு படையல்னு சாப்பாடு
போடுறிங்களே…அவருக்கு எவராச்சும் கழிப்பறை
கட்டிக்கொடுத்திங்களா?
நல்ல வேளை இன்னைக்கு காலேஜ் லீவ்.. இல்லனா
பல பொண்ணுங்க பசங்களுக்கு கையில் கயிறு
கட்டி கழுத்து கயிறு போட வைத்திருப்பார்கள்..
உலகம் உருண்டைனு சொன்னவனையே உயிரோடு
எரிக்கச்சொன்ன சர்ச்ல தான் இன்னும் பலர்
பாவமன்னிப்பு என்னும் பாவத்தை
செய்துகொண்டிருக்கிறார்கள்.
எல்லோர்க்கும் திங்கட்கிழமை ஏன் வருதுனு பீல்
பண்ணுறாங்க பட் நான் திங்கட்கிழமை அவ
காலேஜ் வருவான்னு சந்தோஷப்படுறேன்.
வெற்றியின் பின்னால் செல்பவர்கள்
கொஞ்சமாவது ஒய்வு எடுத்துக்கொண்டிருக்கும்
தோல்வியையும் துரோகத்தையும் சந்திப்பவது
நலம்.
பெண்ணழகு கண்ணால் கண்டுணரப்பட
வேண்டியது அல்ல.. அது மனதால் மனதுக்காக
மனதுக்குள் கண்டுணரப்படக்கூடியது.
@sivag_9840 @Nunmathiyon எத்தனை நாள் இனி
இனி என்று பிதற்றுவார்…இந்த சாக்கடைவாழ்
அரசியல் வாதிகள்
இந்தியாவை இந்தியா காரன் முன்னேற்றாமல்
இஸ்ரேல் காரனா முன்னேற்றுவான்… உஸ்ஸ்ஸ்
கொலைக்கருவிகள் சாமிக்கிட்டேயும் இருக்கு..
வேல் வீச்சருவா.. ஆயுத தடுப்பு சட்டத்தில் கைது
செய்ய துணிவிருக்கா உன் கடவுளை
@google பழைய லாகோவே பிரவாயில்லை.. புதுசு
மொக்கையா சப்பையா இருக்கு… #GoogleLogo
முகம் கேவலம்னு முக்காடு போடாதிங்கடி… நான்
பிச்சைக்காரின்னு நினைச்சுறுவேன்.
கேவலமாய் இருப்பதும் அழகுதான்.. மனிதம்
கேவலங்களை மட்டுமே முதலில் குறிப்பெடுத்து
கவனிக்கிறது. #எதுகேவலம்
பிரச்சினைகள் வரும் போகலாம் ஆனால் நாம்
எதை பிரச்சினை என நினைக்கிறோமோ அதுவே
தாக்கத்தை ஈடுபடுத்தும்.
கிரின்பீஸ் நிறுவனத்தின் லைசன்ஸ் ரத்து #மோடி
கேட்குற காச கொடுக்கனும் இல்லைனா
கிரின்பீஸ்க்கு பீஸ் போயிரும் என மிரட்டுகின்றனர்
போலும்
இந்த டைம் மெசின் மட்டும் என் கையில
கிடைச்சா அப்புறம் காந்தியை…
வெற்றி தன் சகோதரன் தோல்வியின் மீதி
பொறாமை கொண்டு உள்ளதால் தான் இங்கே
போட்டியும் பரிசும்..
இந்த மானிட உடல் ஒரு வாகனம்.. சுவாசம்
எரிபொருளாக உடல் வாகனமாக… மனது
ஒட்டுநராகா.. இடையில் சில காதல் விபத்து பல
துரோக விபத்து… #விபத்து
எந்த பொழுதிலும் மரணம் வரலாம்.. அது ஒன்றும்
எமகண்டம் ராகுகாலம் பார்ப்பதில்லை.. அதனால
இந்த நொடி கூட நல்ல நேரம் தான்..
இரவு வந்தால் நிச்சயமாக பகல் ஒன்று இருக்கும் . நீ
வீழ்ந்தால் நிச்சயம் எழுவாய் என தெரிந்துகொள்.
நான் என்பது நாம் என மாறும் போது தான்
உண்மையான டார்வினின் பரிணாம வளர்ச்சி
அரங்கேறுகிறது.
எதிலும் நல்லதை மட்டும் காண்பது நல்லவனாய்
இருப்பதை விட மேலானது.
இந்த உலகம் இரு வகையான வலிகளை உடையது.
ஒன்று வருத்தப்படச்செய்யும் மற்றொன்று உன்னை
மாற்றும்..
வாக்குவாதங்களில் உன்னை வீழ்த்த
மதம்,இனம்,மொழி,உடலமைப்பு பற்றிய
விமர்சனங்கள் எழுமாயின் உன் எதிரி நிச்சயமாக
உன்னை மாற்றும் தகுதி படைத்தவன்.
கடந்து போனதை விட கடந்து வருவது பாதி வெற்றி
ஆகும்.. எதையும் கடந்து விடு
எதாவது என்பது எதுவும் இல்லை என்பதை விட
சிறந்தது…
ஐடியாக்களை பின்பற்றுங்கள். ஐடியாக்களின்
சொந்த காரர்களை பின்பற்றாதீர்….
மழையுதிர்காலத்தில் பேருந்தில் பயணப்படும் மழை
நீர் டிக்கெட் எடுக்காமல் நனைத்து கொண்டே…
ஆயிரம் மனிதர்கள் வாழலாம். ஆனால் துணிவுடன்
வாழ்பவன் மட்டுமே பெரும்பான்மை என
கருதப்படுகிறான் வாழ்க்கை அரசியலில்
தன்முன் மன் மகனை குறைத்து கூறியும்..பிறர் முன்
பெருமையாக கூறுவதையும் பழக்கமாக
கொண்டவர் தந்தை.. புரிந்து கொள்ள கடினமான
உறவு #தந்தை
இன்றாவது என் காதலை அவளிடம்
சொல்லிவிடுவேன் என நினைக்கிறேன் என்பதே
பல ஒரு தலை காதலர்களின் தாரகமந்திரம்
என்பதில் சந்தேகம் இல்லை. #ஒருதலைகாதல்
வானத்தின் காதலி மேகம் உருகி அழுதது
மழையாக… #ஆகாயத்தின்காதல்
இருளில் நடக்கவேண்டியதை வெளிச்சத்துடன்
வெளிச்சமாக செய்துவரும் விட்டில்பூச்சியின்
காதல்
மொழியை இழப்பது நாட்டுக்கு கேடு என்பதை
மோடி மறந்து இந்தியை இழப்பது நாட்டுக்கு கேடு
என பழக்க தோஷத்தில் கூறிவிட்டார் போல..
#Hindi
அழையா விருந்தாளிகளாக வெயில். வரவேற்பது
தமிழர் கலாச்சாரம்.. வரவேற்று விட்டனர் வெயிலை
அம்மை நோய் மற்றும் வேப்பிலையுடன் #வெயில்
ஒப்பிட்டு அசிங்கப்படுத்துவதற்கு சும்மா
அசிங்கப்படுத்துவது எவ்வளவோ மேல்
போதையில்லாத இளைஞர்களை கொடுங்கள்..
அதே போல போதையில் தள்ளாடும் எனக்கு
பதிலாக இன்னொருவரை நியமிங்கள். உலகை
மாற்றி காட்டுகிறேன்..
பூடான் நாட்டைப்போல அரசியல்
சுவரொட்டிகளை ஒட்ட தனி இடம் அமைத்து
கொடுத்தால் நாட்டில் சுவரை அசிங்கப்படுத்தும்
அலங்கோலம் குறையுமே
இசைபுயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பத்வா
கொடுக்க போறாங்களாமே.. அவார்டு வாங்குனா
பாராட்டுறதும் உண்மையை சொன்னா பத்வா
கொடுக்குறது #நியாயம்
ஆசை என்பது அடையும்போது மகிழ்ச்சியை
ஏற்படுத்தி அடையாதபோது சைக்கோவை
உருவாக்கி விடுகிறது. ஆசை எந்த வடிவில்
இருந்தாலும் ஆசைபடதக்கதல்ல.
இன்னிக்கு கனவுல நம்ம பாராளுமன்றத்தின் மீது
பொதுவுடமை கொடி பறப்பது போல ஒரு சம்பவம்.
இது சாத்தியமானு இன்னும் யோசிச்சிட்டு
இருக்கேன்!!!
ஒரு வேலையை செய்ய எதிர்ப்பு வருகிறது எனில்
அந்த வேலை உன்னை அனுபவசாலியாக்கும்.
புரிஞ்சா சரி
புத்தரை போல போதி மரத்தை
தேடிச்செல்வோம். #அப்பவாச்சும் ஏதோ ஞானம்
பிறக்குதான்னு பார்ப்போம்
நீதி ,நேர்மை ஹாரிபாட்டர் இன்விசிபிலிட்டி சூட்
அணைந்து மறைந்து போகலாம் .நிச்சயம்
கடைசியில் வால்டர்மோட்டை கொல்ல
வெளிப்படுவது போல வெளிப்படும்.
பிரச்சினைகள் சலிப்பை ஏற்படுத்தி புதிய
பிரச்சினைகளுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை
எந்த பேலன்ஸ் பிரச்சினையாலும் தடுக்க இயலாது.
படிச்சாலே வேலை இல்ல இதுல என்ஜினியர்ஸ்
டே ஒரு கேடா..வீட்டுல கேட்கிறாங்க என்னத்த
சொல்ல
மிரட்டுபவை எல்லாம் என்றோ
மிரட்டப்பட்டவையாக இருக்கலாம்.
ராணுவத்தில் ஆயுத பூஜை கொண்டாடுவாங்க
தான?
தலைநகரில் பறக்கும் ரயிலில் புகையை
பறக்கவிடும் படியான தீ விபத்து. #ஆயுத பூஜை
கொண்டாட்டமோ? #flashnews
கடக்க முடியாத பெருங்கடல்களை கடக்கலாம்
உங்களிடம் துணிவுக்கும்,முயற்சிக்கும்
பஞ்சமில்லாமல் இருக்குமானால்…
பலூனில் அடைபட்ட காற்றா இல்லை யாருக்கும்
அடங்கா புயல் காற்றா? முடிவு செய்து விடு…!
நேற்றோடு காணவில்லை ஒரு தேதியை…இனி
அடுத்த வருடம்,அடுத்த மாதம் வரை
காத்திருக்கவேண்டும். #எங்க போயிறுக்கும்???
காட்சி பிழைகள் பிழைக்கவில்லை அவளை
காணும் போதெல்லாம்
தொடக்கம் ஆர்வத்தையையும்,சிறிது காலத்தில்
அதே தொடக்கம் சலிப்பையும் ஏற்படுத்தும்.எனவே
காலம் காலமாகமல் பார்த்துக்கொள்ளவும்.
கரைகளின் மீது அலைக்கு என்ன கோபமோ?
ஓயாமல் மரண அடிகளை வழங்கிக்கொண்டே
பயணிக்கிறது.
நான் எதிரிகளை உருவாக்குவதில்லை.ஒருவேளை
எதிரிகளால் நான் உருவாகி வளர்ந்திருக்கலாம்.
மரணம் என்ற தூதுவனுக்கு நாம் தரும்
மரியாதைதான் உலகின் சுத்தமான அடக்கம்…
தீயவற்றில் இருந்து நல்லவற்றை கற்றுக்கொண்டவன்
எளிதில் தீயப்பெயர் எடுப்பதில்லை.
முதுகில் குத்துபவர்களே,உங்களுக்கு ஒரு
வேண்டுகோள்: தயவு செய்து நெஞ்சில்
குத்துங்கள்.. புறநானுற்று கூறும் வீழ்ச்சியின்
காதலன் நான்..
உடல் நிலை சரியில்லை என சொல்லவும் ஒரு மன
நிலை அவசியம் தேவை.
வைகோ நல்ல வேளை நடிகர் சங்கத்தில
இல்லை.இருந்தார்னா ஒரு கருப்பு கோட்
போட்டுக்கிட்டு வசனம் பேச ஆரம்பிச்சுருவாரு.
#NadigarSangamElections
மழையும்,சூரியனும் சாதி,இன,மத,மொழி வேறுபாடு
பார்த்தால் மனித இனம் வாழ்ந்திருக்க முடியுமா…?
உன் புன்னகைக்கும்,கோபத்திற்கும் பகையை
ஏற்படுத்துவதற்கு வழி தேடிக்கொண்டே
இருக்கிறேன்.
நான் நானாக இருக்க காரணம் நீ நானாக
இருப்பதும்,நீ நாமாக மாற நினைப்பதுமே
காரணமடி பெண்ணே…!
மனதில் புதைக்கப்பட்டவை எல்லாம் திடீர்
ஆலமரம் போல வளரும் ஆற்றலுடையது.எனவே
மனதில் புதைக்காதீர் தீங்கானவற்றை….!
கஷ்டமும் துன்பமும் கடையில் தரப்படும் சில்லறை
இல்லைகள்.நாம் தான் சரியான சில்லறையான
நம்பிக்கையை கொடுக்க வேண்டும் .
பசுக்களை பாதுகாக்க தெரிந்த
சட்டத்திற்கும்,மதத்திற்கும் ஒரு அப்பாவி மனிதனை
பாதுகாக்க முடியவில்லை. பிறகு என்ன
மதம்,கடவுள்னு பொய் சொல்லுறிங்க
காதல் வந்த பின் தான் தூக்கமின்மை மற்றும்
பிரிவு,கனவு என அனைத்தையும்
கற்றுக்கொண்டேன் இலவசமாக எப்போதும் உன்
வசத்துடன்.நிச்சயம் நன்றி சொல்வேன்
சிலரிடம் நடிக்க வேண்டியுள்ளது…பலரிடம்
கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது இந்த
வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதற்கு…
ஒரு பெண்ணின் ஆடை குறைபாடு,ஒரு
ஆட்சியாளனின் நடுவுநிலை தவறல் ஆகிய
இரண்டும் நிச்சயம் உலகப்போரை விட
கொடுரமான விளைவுகளை மனிதனுக்குள்
ஏற்படுத்தும்
வெற்றியின் மீது காதல் வயப்படாதீர்கள்.
வெற்றியின் மீது பொறாமை படுங்கள்.அதுவே
முன்னேற வழி.
மனதில் தோன்றுவதை பேசு என சொல்வது
எளிதாகதான் இருக்கும். பேசிய பின்பு அதை
அனைவரும் எளிதாக
எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பது சத்தியம்.
எங்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதோ
அங்கு நிச்சயமாக அதை மீறும் ஒன்று அதிக
பலத்துடன் தோன்றிவிடும். #இயல்பு
நீதியை பெண்ணுடன் ஒப்பிடலாம்.பணம்
அதிகமாக இருக்குமிடம் எப்போதும்
தேடிச்செல்வதில் பெண்ணுடன் ஒத்து போகுறது
இந்த நீதி என அழைக்கப்படும் சட்டங்கள்
தண்ணீர் போல கொள்கலனுக்கு ஏற்ப
மாறுவாயானல் நீ இறுதியில் கடல் போல கடக்க
முடியாதவனாகவும்,கன மழை போல
ஆர்ப்பரிப்பவனாக மாறுவாய்.
காலம் மாறும் போது எல்லாம் மாற்றிவிட்டு,மாற
மறுப்பதை மண்ணில் புதைத்துவிட்டு,மாறியவற்றை
அழகாக மண்ணில் பதிக்கும் போது காலம்
காலமாக அழகு பெறும்.
வாழ்க்கையே துணி காயப்போடுற மாதிரிதான்…
ஈரமான இதயம் சூடானவற்றால் தாக்கப்பட்டு
இறுதியில் ஈரமில்லாமல் ஆக்கப்படுகிறது.
நான் துன்பங்களை மதிப்பதில்லை.ஏனெனில்
அவை என்னை மதிக்காமல்,என் அனுமதி
இல்லாமல் என்னிடம் வந்துவிடுகிறது.
தீமை வெல்லட்டும் பொறாமை கொல்லட்டும்
தீண்டாமை செல்லட்டும் #”மை”கவிதை
தெருவிளக்கு தன் அருகில் உள்ள தெருவிளக்குடன்
ஒளி மூலம் கதை பேசுகிறதாம்.இது பொறுக்காமல்
அணைத்து விட்டார்கள். #மின்வெட்டு
பணம் இருந்தால் மதிப்பா இல்லை மதிப்பு
இருந்தால் பணமா குழப்பமா இருக்கு…?
சில நேரங்களில் நான் நாளைக்கு வேண்டியதை
இன்றேவும்,இன்று வேண்டியதை நாளைக்கு
செய்கிறேன்.
தேசியம்,தேசிய வெறியாக மாறி பின்பு இன
வெறியாக மாறி வன்முறைக்கு அழைத்து செல்லும்.
சட்டம் அனைவருக்கும் சமம். அப்படினு
எஸ்.வி.சேகர் புதிய தலைமுறை டீ.வில சொன்னார்
.. #ஒரு வேளை உண்மையாக இருக்குமோ
என் கவிதைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் போது
தான் தெரிகிறது அவள் எனக்கு தொடர் புள்ளி
வைத்துவிட்டாள் என…!
#கவிதைனுநினைக்கிறேன்
அரசுக்கு லாபம் முக்கியமில்லை இன்று . இன்று நம்
நாட்டை பற்றி உலகமெங்கும் பேச்சுக்கள் விரியும் .
#காந்திக்குவிளம்பரம்
வாழ்க்கையின் அழுக்கை செலவில்லாமல் துவைத்து
செல்கிறது இந்த கண்ணீர் துளிகள்… #சலவை
அமெரிக்காவுக்கு சொம்படிக்க ஏகப்பட்ட நாடுகள்
இருக்க அதில் இந்தியா இருக்காதுனு நம்புறேன்.
#இலங்கை #போர்க்குற்றங்கள் @narendramodi
வானத்தில் இரவில் நட்சத்திர கோலமிட தெரிந்த
இயற்கைக்கு,பூமியில் மகிழ்ச்சி கோலமிட
தெரியாமல் போனது ஏனோ… #இயற்கைசீற்றம்
நம் பிறந்த நாளை நாம் சொல்லி அடுத்தவர்
வாழ்த்து சொல்வதெல்லாம் எவ்வளவு கேவலம்
தெரியுமா…!
காந்திக்கு பிறந்த நாள்னு ஒயின் சாப்பை மூடுற
அளவுக்கு நிலைமை.. இந்த டைம்ல காந்தியே
கட்டிங் போட்டுட்டு மட்டையாகிருவார்…
#Gandhi’sBirthday
மாறுவதை உன்னால் தடுக்க முடியும் எனில்
மாறப்போவதையும் உன்னால் தடுக்க முடியும்.
குடும்பத்துக்கு ஒரு கார்- கெஜ்ரிவால் #அப்படியே
ஆளுக்கு ஒரு ஹெலிகாப்டர்
கொடுங்கடா…எல்லோரும் பறங்க
ஆகச்சிறந்த முட்டாள்தனம் யாதெனில் தவறு
ஏற்படும் என தெரிந்தும்,அந்த தவறுக்கு தேவையான
அத்தனை உதவிகளையும் செய்வது.
பிரம்மாண்டங்கள் ஆரம்பத்தில்
பிரம்மாண்டங்களை பார்த்தே பிரமிக்க ஆரம்பித்து
வளர ஆரம்பிக்கிறது காளானை போல.
இந்தியாவிடம் கிரிக்கெட் விளையாட மாட்டோம்-
பாக்கிஸ்தான் #போய் தீவிரவாதிகள் கூட
கிரிக்கெட் விளையாடுங்கடா
வெளிச்சத்தை சூரியனிடம் இருந்து கடனாக
வாங்கும் நிலவுக்கு சூரியன் என்ன வட்டி விகிதம்
போடப்போது? அநீதியாக வட்டி போட்டால்
யாரிடம் முறையிடும்
பேஸ்புக்கில் ராணுவ அதிகாரிகள் கணக்கு
தொடங்குவது என்னவோ பேஸ்புக்கிலும் போர்
நடத்துவாங்கனு நினைக்க தோனுது..!
இரத்தம் சிவப்பாக இருப்பதே உணர்த்தும் நாம்
அனைவரும் பொதுவுடமைவாதிகள் என்று.
மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் தீராத பகை என
நினைக்கிறேன். இதற்கு சமாதானம் செய்வதே
மனிதனின் கடமையாக இருக்கிறது.
யோசிப்பது,யோசனை சொல்வது,யோசித்து
கொண்டிருப்பது என்பது எல்லாம் ரொம்ப
கஷ்டமான வேலையாக இருக்கவே செய்கிறது.
எல்லோரும் தூங்க ஆரம்பிச்சாலும், நான் மட்டும்
தூங்கல. ஏன்னு கேட்டா நான் யார்னு இருளிடன்
பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்கேனு
சொல்லிருவேன்.
காற்றில் ஒரு பல்ப் ஆடும் போது அது கூட சேர்ந்து
ஒளியும் ஆடுதே.அது மாதிரி தான் ஒரு உணர்ச்சி
ஆடினாலும் இன்னொரு உணர்ச்சியும் ஆட
ஆரம்பிச்சுரும்
மனிதன் எப்போதும் கெட்டவன் தான்.ஆனால்
முழுக்க முழுக்க மனிதன் கெட்டவனாக இருக்க
படைக்கப்பட்டவனில்லை.
காதலுக்கு மாதிரிகள் இருந்திருந்தால் உலகில்
அனைவரும் எவ்வாறு காதலிப்பது என இந்நேரம்
பிழையின்றி மனப்பாடம் செய்தாவது
கற்றுக்கொண்டிருப்பர்.
உன்னால் ஒரு செயலை ஒரு ஆறு வயது
குழந்தைக்காக செய்யமுடியாது எனில் உன்னாலும்
உனக்காக செய்ய முடியாது.
@srilankanavy இப்ப எங்க மீனவர்களை ரீலிஸ்
பண்ணு…! இல்லை நான் உங்க சிங்கள படங்கள்
,பாட்டுக்களை பார்க்கவோ,கேட்கவோ
மாட்டோம்.
ரொம்ப திருந்தனும்னா ,ரொம்ப குறை சொல்ல
பழகிக்கொள்.
துஷ்டனை கண்டால் ஒடி முதல் பரிசு பெற்று விடு.
ஒரு படம் வரப்போதுனா,அதுக்கு ஒரு டிரெய்லர்,ஒரு
டீசர் மட்டும் இருக்கனும்னு. ஆனா இப்ப டீசரே நாலு
ரீலிஸ் பண்ணுறாங்க #வேதனை
பொக்ரானில் ராணுவ பயிற்சியின் போது மேஜர்
மரணம். #இராணுவ பயிற்சியை ஏன்டா படு
வெப்பமுள்ள பாலைவனத்தில நடத்துனிங்க.
#RIPMAJORDHRUV #JaiHind
தின்னதந்தி என்றொரு உணவு உண்டு தெரியுமா!
வருங்கால வீடுகளில் ரோபோக்கள் வீட்டு வேலை
செய்யும். – DARPHA #அப்படினா மனைவிகளுக்கு
வேலைவாய்ப்பு இருக்காதே.
கண்ணே நீ பார்க்கும் போது…! நான் தெரிகிறேன்….!
உன் கண்களில் …!
ரொம்ப நாளாக காதை உபயோகபடுத்தலனா
காதுகளில் ஒட்டடை அடைத்துகொள்ளுமா
என்ன…?
மின்வெட்டு என்னமோ தீடிர்னு வெளிச்சத்தை
திருடி ஒரு ஐந்து நிமிடம் to எட்டு மணி நேரம் கடத்தி
சிறை பிடித்துவிடுகிறது. #CurrentCut
ஆகாயத்தில் அளவுகோல் உதவியில்லாமல்
வெள்ளை புகை கோடு கிழித்து செல்லும்
விமானங்களை நான் பறக்கும் அளவுகோல் என
வகைபடுத்தியுள்ளேன். #அளவுகோல்
தனி ஒருவனுக்கு வழிபாட்டு தலம் இல்லையெனில்
ஜகத்தை அழித்திடுவோம் என கிளம்பிவிட்டனர்
எங்கள் மதவெறியர்கள் வெடிகுண்டு வைக்க.
என் வீட்ல உள்ளவர்களிடம் என் வலைப்பூவை
காட்டினேன். அவர்கள் சொன்னார்கள் சும்மா
காமெடி பண்ணாதே என. #பாராட்டுக்கள்
மாறவில்லை முன்னேறவில்லை பிளாக்மணி
விடுதலை போராட்டம் 1947ல் முடிவுற்றதாக
கேள்விப்பட்டிருக்கிறேன்.மிக்க மனவருத்தம்.
இன்னும் இந்திய மக்கள் சுதந்திரம் பெறவில்லை.
#சுதந்திரம்
இனி இனியவற்றை இனிதாக இனியாவது
இயற்றவேண்டும். #இனி_கவிதை
சமூக அவலங்களை கண்டு நீ ஆத்திரத்தில் பீர்
போல பொங்குவாயானால் நீயும் என் தோழரே.
விருதா…?மருந்தா…? உயிர் போகவிருக்கும்
கலைஞனின் கடைசி சிந்தனை. #யோசனை
ஐ என வியப்பவர்கள் எல்லாம் ஐயால்(Eye)
ஐயப்பட்டவர்கள் தான். #வியப்பு
தமிழை தட்டச்சு செய்யும் போது ஆங்கிலம்
தட்டுபடாமல் ஒடுகிறது திரையிலும்,என்
கண்ணிலும். #என்ன_பிரச்சினையோ
நாட்டில் ஆடை வடிவமைப்பாளர்கள் பஞ்சமென்று
தோன்றுகிறது.சில இடத்தில் ஆடைகளுக்கு
பஞ்சமுள்ள மக்கள் இன்னும் ஆடையில்லாமல்
தான் இருக்கிறார்கள். #வடு
நிருபணங்கள் இல்லாமல் ஒர் இயக்கத்தை எப்படி
தீவிரவாத இயக்கம் என பட்டம் சூட்டுவது
என்பதற்கு சிலருக்கு பயிற்சி அளித்தால் நாடு
முன்னேறும்.
தமிழ் மொழி கி.பி.2054ல் ஐந்தாம் தலைமுறை ஐ.நா
சபையில் ஆட்சி மொழியாக இருக்கும். #கனவு
காற்றிலே என் சட்டை ஆடும் போது நான்
துணைக்கு இன்னொரு சட்டையை நீயும் ஆடுனு
தொங்கவிட்டுருவேன்.ஏனெனில் நான்
காதலர்களுக்கு உதவிசெய்பவன்.
அதிகமாக இருப்பதெல்லாம் பயன்பாட்டிற்கு பின்
அதிகமானதல்ல. #Fact
சில இணையதளங்களில் நான் மனிதர் என்று
நிருபிக்க வாய்ப்பு தருகிறது.மிக்க நன்றி.நான்
மனிதன் தான்.(Captcha)
எதிர்மறைகளை எதிர்க்க எதிர்மறையை
மறையவிடாமல் கிளப்பிவிடுவதே என்
வேலையாக உள்ளது.
தமிழின் வன்முறைகள் கொல்,கற்பழி,அடி,கடத்து
என்ற வினைச்சொற்களாலே பரப்பப்படுகிறது.
நீலவானத்தில் நடைபயணம் செல்லும் மேகத்தை
விட அழகென்ன இருந்துவிடப்போகிறது.
ம.தி.மு.க வில் இருந்து இனி தி யை நீக்கி இ
சேர்க்க வேண்டிய தான். இனி மறுமலர்ச்சி இந்து
முன்னேற்ற கழகம். #வைகோ பா.ஜ.கவில்
இணைய போறார் போல
மழையில் நனைகிறேனா இல்லை என்னில் மழை
நனைகிறதா என கேட்டுக்கொள்கிறேன்.
படுகொலைகள் அனைத்தும் செய்திதாள்களால்
காவல்துறையை படுத்தும் கொலைகள் தான்.
தேதிகள் நகர்வது போல தோன்றும் போது
என்னையறிமால் நான் நகர மறுக்கிறேன்
#நாட்காட்டி_காகிதம்
இறைவன் என்பவன் இரவல் வாங்குபவன்
ஆகிவிட்டால் கோவில்களில். #காணிக்கை
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என
நிறுவனங்களின் விளம்பர வாசகம் மரங்களிடம்
இருந்து திருடப்பட்டதாக இருக்கவேண்டும்.
வாலிப பெண்களை கண்ட உடன் நடக்கும்
அத்தனை இயற்கை ரசாயன மாற்றங்களையும்
ஆணில் படைத்த படைப்பாளி ஒரு வேதியியல்
அறிஞனாக தான் இருப்பான். #நம்பிக்கை
சிகப்பு நிறம் பொதுவுடமை கட்சிக்கு.கறுப்பு நிறம்
நாத்தீகர்களின் கட்சிக்கு ஒதுக்கிய பின்.அந்த
இரண்டு நிறத்தையும் ஒன்றாக செய்தது திராவிட
கட்சி.
நல்ல வேளை அமெரிக்காகாரன் நம்ம ஊரு
டீக்கடைக்கு போகல.போனா எண்ணெய் வளம்
அதிகமாக இருக்குனு படையெடுத்துருப்பான்.
செஸ் போர்டில் வெள்ளை நிறம் கறுப்பு நிறம் என
வைத்து கறுப்பு ராஜா,வெள்ளை ராஜா என
போரிடவைத்தவன் நிச்சயம் நிறவெறியனாக தான்
இருப்பான். #நிறவாதம்
அழுகிபோகும் உடலின் மகிழ்ச்சிக்காக
அழுகவைக்கும் காதல்,மது அருந்துவார்
உயிரோடிருக்கும்போதே. #அழுகல்
எழுத்தாளர் படுகொலை என்ற செய்தி சற்று
மகிழ்ச்சி அளிக்கிறது.எழுத்துகளை அழிக்க
முடிவதில்லை என்பதால்.(ஆனால் நிச்சயம் RIP)
உண்டு. #எழுத்தாளர்
ஒவியர்களால் எப்போதும் கண்ணாடியை
தோற்கடிக்கமுடிவதில்லை. #பிரதிபலிப்பு
#ஏக்கம்
பகலில் இரவாக தான் இருக்கிறது சில
மின்சாரமில்லா ஏழை வீடுகள். இரவில் பகலாக
தான் இருக்கிறது சில மின்சாரமுள்ள பகட்டு
வீடுகள். #வேறுபாடு
கடந்த யாவும் கடப்பவையின் நிழல்
மறைவுகள்.கடப்பவை யாவும் நிழல் மறைவின்
நிழல்கள். #நிழல்கள்
நிழல் போல இருந்துவிட ஆசை. எவ்வளவு
அசிங்கமானவற்றின் மீது பட்டாலும் தூய்மையாக
மாறாமல் வலம் வருவது நிழலே.
பொய் என்றும் இடிக்கத்தான் செய்யும் இதயத்தை.
நல்லவர்கள் யாரும் இனவெறியர்கள் தான்.
ஏனெனில் அனைவரும் மனித இனத்தின்
நன்மைக்கு பாடுபடுபவர்களே.
#இனவெறி_அனைவருக்கும்உண்டு
வானில் விமானம் பறக்கும்போது எனக்கு
தோன்றியது ஒரு வேளை விமானம் புகை
வெளியிடுவதால் காற்று மாசுபடாது என.
பொய் பொய்போல இருந்து பொய் கூறினாலும்
பொய் பொய்யை மட்டுமே உண்மைக்கு எதிராக
சொல்லும். #நியதி
மனிதனுக்கும் பிள்ளையாக பூக்கள் பிறந்து
இரண்டு நாட்களில் வாட வேண்டும் . அப்போது
#பூக்களை வாடாமல் இருக்க என்ற அரிய
கண்டுபிடிப்பு நிகழும்.
கல்லணை என்பது கல்லில் கட்டப்பட்டதாக
இருப்பது போல முல்லை பெரியார் அணை
முல்லைப்பூக்களால் கட்டப்பட்டிருக்கும் என்பதே
கேரளாவின் பயம் என அறிக.
சிரிப்பு வரும் போது அதை கட்டுபடுத்த நான் சில
ஜான் கீட்ஸ்ஸின் கவிதைகளை நினைக்க
ஆரம்பித்துவிடுவேன்.
வேடிக்கை மனிதர்களை தேர்ந்தெடுக்க
வேடிக்கையாக வாக்களிக்க வருவார்கள் பாருங்க
ரொம்பவே வேடிக்கையாக இருக்கும்
சமத்துவம் இன்னும் சமத்துவமாக
உறுதியாகவில்லை சில இடங்களில்.
என் பயணம் சரியோ , தவறோ சென்று கொண்டுதான் இருக்கிறேன் முன்பின் தெரியாத இலக்கை நோக்கி …..
2
இந்துத்தவ அரசியல்
இந்தியா ஒரு பழம்பெரும் தேசம். இங்கு பல அந்நிய படையெடுப்புகளால் பல மதங்கள் ஊடுருவின. இந்தியாவில் உதித்ததே இந்து மதம். இதற்கு மற்ற மதங்களை போல நிறுவனர் கிடையாது இதில் இடையே தோன்றி வளர்த்தவர்கள் மட்டுமே.அப்படி பார்த்தால் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் இந்து ,கிறிஸ்தவம்,இஸ்லாமியம் போன்றவை.
பெரும்பான்மை என பார்த்தால் இந்து மதம் தான். இந்தியாவில் மதம்,இனம்,சாதி என பிரித்து ஆள ஆங்கிலேயர்களால் தூபம் போடப்பட்டது.89 வருடத்துக்கு முன் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்க் என்ற அமைப்பு 27 செப்டம்பர் 1925ல் கேசவ் பல்ராம் ஹெட்ஜ்வர் என்பவரால் ஒரு விஜய தசமி அன்று உருவாக்கப்பட்டது.இது பிரிட்டிஷ் ஆட்சியின் போது தடைசெய்யப்பட்டது.பின்பு இந்திய சுதந்திரத்துக்கு பின் மூன்று முறை தடைசெய்யப்பட்டது.மகாத்மா காந்தியின் படுகொலை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் நதுராம் கோட்சே என்பவரால் அரங்கேற்றப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் முதலில் இந்திய தேசிய கொடியை அங்கிகரிக்கவில்லை. மேலும் அது நம் அரசியலமைப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த அமைப்பின் ஒரே கொள்கை இந்தியா இந்துக்களுக்கே என்பதே.
அமைப்பின் அடிப்படை அமைப்பு ஷகாஸ்.
ஷகாஸ் என்பது இந்தி மொழியில் கிளை என பொருள்படும்.அனைத்து இயக்க பணிகளும் இந்த கிளை வழியாகவே நடைபெறும்.இந்த ஷகாஸ் என்பதில் இவர்கள் மதத்தையும் மதவெறியையும் போதிக்கின்றன.ஆர்.எஸ்.எஸ் தனது அனைத்து லட்சியத்தையும் சாதிக்க இயலாது என எண்ணியதன் விளைவு பாரதிய ஜனதா கட்சி.
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் வளர்ச்சி அடையும் ஷகாஸ்கள் மற்ற ஆட்சியில் வளர்ச்சியிழந்து போகிறது.ஒரு சமயத்தில் இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5-6 மில்லியன் என்று ஆகியது. இதன் ஷகாஷ்களின் எண்ணிக்கை 51,655 ஆகும்.
ஆர்.எஸ்.எஸ்ன் களப்பணி மீட்டர் கணக்கில் இடத்தை பிரித்து கொண்டு பிரச்சாரம் செய்வது என மாறி தற்போது இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் ஆலமரமாக தன் சங்கபரிவாரங்களுடன் வளர்ந்துவிட்டது.
ஆர்.எஸ்.எஸ் என்பது மகாராஷ்டிராவின் தவிர்க்க இயலாத சக்தி. அரசின் முடிவுகள் ரகசியமாக ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் கலந்து பேசியே சட்டமாகிறது என மும்பை வாழ் அரசியல் வாதிகள் கூறுகின்றனர்.இன்று நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் வலையமைப்பு பரந்துவிரிந்துள்ளது.அரசின் அனைத்து முடிவுகளையும் அவர்களால் எடுக்கப்படுகிறது.
சில நேரங்களில் சில இந்துத்துவ வாதிகள் வெளிப்டையாக இந்து மதத்துக்கு ஆதரவாகவும், மற்ற மதங்களை இழிவுபடுத்தியும் கருத்து வெளியிடுவது சகஜமாகி போனது.ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வளர்ச்சியை பார்க்கும் போது ஜெர்மனியில் ஹுட்லரால் அமைக்கபட்ட ஒரு நாசி ராணுவம் போன்றதொரு நிலை ஏற்பட்டுவிடுமென அச்சம் ஏற்படுகிறது.இந்தியா மதச்சார்பின்மை நாடு எனும் நிலை மாறினால் இந்தியாவில் தினம் நூறு கலவரம்.மணிக்கு ஒர் குண்டு வெடிப்பு. இந்த நிலைக்கு வெகுதொலைவில் இல்லை!
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முழுவதுமாக தடைச்செய்யப்படுவதை விட மாற்றி அமைப்பது நலம்.இந்தி மொழி தீணிப்பு.யோகாவில் மதம் தீணிப்பு.கல்வியில் மதம் தீணிப்பு. என அனைத்திலும் மதம்.. நிலைமை மாறுமா!
படிப்பவர்களுக்கு என் கேள்வியை விட்டுவிடுகிறேன். ஆர்.எஸ்.எஸ் என்பதை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் வெறியர்களுக்கு நான் சொல்லி கொள்வது:
நீங்கள் எழுத்தாளர்களை படுகொலை செய்யலாம். கலவரத்தை தூண்டலாம். எழுத்தை யாராலும் அழிக்க முடியாது.தேசியத்தை அழிக்க இயலாது.நேதாஜி பாதையில் பயணப்படுவோமாக.
3
வானிலை மாற்றமா இல்லை சீற்றமா
மழை காலம் அன்று கடும் வெயில்
கடும் வெயில் காலம் அன்று மழை
மாதம் ஐந்து நிலநடுக்கம்
வாரம் இரண்டு சுனாமி
இப்படி மாறியபோது வானிலை அறிக்கையை நம்புவதா
இல்லை கழுதை கல்யாண வைபவம் நடத்துவதா?
நிச்சயம் என் சீற்றமல்ல இது வானிலை சீற்றம்
4
கடலோடி கழுகுகள்
கடலும் கடல் சார்ந்த இடம் பரத நிலப்பரப்பு என தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது.அந்த நிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் பரதவர் என அழைக்கப்பட்னர். இங்கு உப்பும் மீனும் பிரபலம்.தமிழகத்தின் கடலோர பகுதி அது. இராமேஸ்வரம் என அழைக்கப்படும் பகுதி.
அன்று சாதாரண நாளாகவே பொழுது விடிந்திருந்தது.”ச்சே என்ன வாழ்க்கைடா” என்ற வார்த்தைகளோடு அவன் தன் குலத்தொழிலுக்கு புறப்பட்டான் கடல் அன்னையை வணங்கிவிட்டு. வாலிபன் அவன்..அதே ராமேஸ்வரத்தில் அவன் ஊரில் அதிகம் படித்தவன் அவன் தான்.அதாவது நாலாம் வகுப்பு.
அவனை அனைவரும் மைக்கேல் என அழைப்பர்.கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது ஒவ்வொரு மீன் பிடி பயணத்தின் போதும். ஆனாலும் அவன் பின்வாங்கியதில்லை. தினமும் கடல்க்கு மீன் பிடிக்க செல்வது அவன் பழக்கம் . மீன்களுக்கு அவன் வலைகளுக்கு மாட்டால் தப்பிச்செல்வது பழக்கம்.வருமானம் பெரிதாக இல்லை ஆனால் அவன் தன் தொழிலை விட்டதில்லை.
கோடைக்கால மீன்பிடிதடைகால அறிவிப்பு.அதற்கு முன் நடந்த கதை அதிகம் .இந்தியாவின் கால்களில் தொங்கிகொண்டிருப்பது போன்று உலக வரைபடத்தில் இருக்கும் தேசம் இலங்கை.அங்கு தமிழர்களுக்கு எதிரான இனவெறியும், இந்திய பெருங்கடலே என் அப்பன்வீட்டு சொத்து என எண்ணும் சிங்கள இனத்தவர் மிகுதியாய் ஆக்கிரமித்திருந்த தேசம்.அதுபோல தான் மகாஇந்திய சாம்ராஜ்யத்தின் கடல் எல்லையை மதிக்காமல் எல்லைதாண்டி வந்து இந்திய தேசத்தின் பிரஜையை சுட்டுக்கொன்றும்,கைது செய்தும் அறிவிக்கப்படாத யுத்தத்தை தொடர்ந்து வரும் தேசம் அது.
இது நிலை ராமேஸ்வரத்திலும் இருந்தது.தமிழக அரசியல் நிலையோ ஏதோ ஐ.நா சபை மாதிரி தீர்மானங்களும் காரசார விவாதங்களும்,தத்தம் ஆதாயங்களுக்காக இந்த பிரச்சினையை பயன்படுத்தி கொண்டன.தினசரி ஏதாவது ஒரு செய்தியாவது மீனவர் கைது பற்றி இருந்தே ஆகும்.மீன்பிடி தடைக்காலம் மட்டும் யாரும் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் கைது இருக்காது. மற்றபடி மீன்பிடி தடைக்காலம் நீக்கப்பட்டதும் சிங்கள கடற்படையினருக்கும் கைது செய்ய போடப்பட்ட தடைக்காலம் நீக்கப்பட்டதாக அர்த்தம்.
மைக்கேல் செய்தி தாள் படிப்பதுண்டு.அங்கு சாலையோர டீக்கடைகளில் உள்ள பிரான்சிஸ்,டேவிட்,மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் ஆகியோர் தான் அவரது தோழர்களும் பட்டிமன்ற பேச்சாளர்கள். பிரான்சிஸ் ஒரு கடலோர பொதுவுடமை காரன்.சற்று உலக அரசியல் பற்றி அறிந்தவன்.டேவிட் ஒரு முற்றிலும் துறந்த ஞானி போல பேசுவர்.ஒரு தத்துவ ஞானி.போதைக்காரர்.கண்ணதாசன் பாடல்களை சதா கேட்டுக்கொண்டுஇருப்பார்.மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் போர்வீரர். நாட்டுக்காக பாக்கிஸ்தானிக்கு எதிராக போரில் போரிட்டு ஈடுபட்டு ஒய்வு பெற்றவர்.கொஞ்சம் இல்லை நிறையவே முரடர்.எப்போதும் வேலையில்லாத ஒய்வு நேரங்களில் மேரி டீஸ்டாலில் ஒரு பட்டிமன்றத்தையும் இங்கிருந்து கொண்டே காசில்லாமல் இலவசமாக ஐ.நா சபைக்கு ஆலோசனை வழங்குபவர்கள் இவர்கள்.
மைக்கேலுக்கு ஒரு விரோதி உண்டு அவள் பெயர் ஆச்சரியமாக இருக்கிறதா அவள் பெயர் மகதலினா. ஏனெனில் ஆண்களின் வெறுப்பை சம்பாதிக்க தெரியாதவன் மைக்கேல். மேலும் அவன் ஒரு அழகன்.சிறுவயதில் இருந்தே மைக்கேல் மீது மகதலினாவுக்கு ஒரு கண்.அதாவது ஒரு அழகிய கிராமத்து காதல்.கண்ணால் பேசிவிடுவாள் அவள் ஆனால் அவன் பேசி கண்ணைமூடிவிடுவான்.கேட்டால் காதல் என்பால் அவள்.அவனோ ஒன்னும் இல்லை தூரப்போ என்பான்.
காதலின் ஏமாற்றம் பகையாய் மாறுவதில் சந்தேகம் இல்லை.அது போலத்தான் மகதலினா வாழ்க்கையும்.அவள் வெறுப்பு பகைமையை அவன் அடுத்த இளம் பெண்களிடம் பேசும் போது வெளிப்படுத்தினாள்.
ஆனால் இறைவன் என்பவன் விசித்திரமான ஒரு விலங்கு என்பதை நிருபிக்க அங்கு காலம் ஒரு கணக்கு போட்டது.மகதலினா ஒரு கடலோர அழகி. அழகிய கண்கள்.அவள் கண்சிமிட்டல் மின்னல்கள் வெட்டுவதைபோலவும்,அவள் உதடுகள் ஒரு தேன்சிந்தும் வளைகுடா போல அழகாக பார்ப்பவரை சுண்டியிழுத்துவிடும் அழகு.இடையோ வளைந்த வில் போல பார்ப்பவர்களின் மீது அம்பை ஏய்து கொண்டே செல்லும். அவள் நடை ஒரு அழகு.அவள் உடை இத்தனை அழகையும் புதையலை மூடுவது போல இருக்கும். இப்படி வர்ணிக்கும்படியான அழகு தேவதை.
யாருக்கு தான் காதல் வராது அவள் மீது.ஆனால் மைக்கேலுக்கு இதில் விருப்பம் இல்லை.மகதலினாவுக்கு அவன் மீது விருப்பம் உண்டு.பிரான்சிஸ் ஒர் இளைஞன் . பொதுவுடமைக்காரன்.உலகம் அறிந்தவன்.அவனுக்கும் காதலில் விருப்பம் உண்டு.ஒரு வேளை பிரான்சிஸ்ன் வைரமுத்து காதல் கவிதைகளை படிக்கும் ஆர்வத்தால் காதலில் விருப்பம் வந்திருக்கலாம்.பிரான்சிஸ் மகதலினாவை ஒருதலையாக காதலித்து வந்தான்.
ஏனெனில் ஒரு தலைஉள்ள அனைவருக்கும் வருமல்லவா இந்த ஒரு தலைக்காதல்.பொறாமை வளர்ந்தது நண்பர்களான மைக்கேல் மற்றும் பிரான்சிஸ் இடையே.ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே சும்மாவா சொன்னாங்க.
ஒரு நாள் டீக்கடையில் காரசார விவாதம் காதல் திருமணங்களால் வன்முறை ஏற்படுகிறது ஏன் என்பது. இதில் வாக்குவாதம் முற்றி வழக்கு போல மைக்கேல் பெண்களை இழிவுபடுத்தி பேச,அதாவது மகதலினாவை பற்றி தவறாக பேச கைகலப்பானது.இது மகதலினாவுக்கு தெரிய வர அவள் மனவருத்தத்தில் மைக்கேலை மறப்பதாக நடித்தாள்.
உயிர்நண்பர்கள் பகைவர்களாக மிலிட்டரிகாரர் அல்போன்ஸ் சமாதானபடுத்த முயற்சி செய்து தோல்வியில் முடிவு பெற பகைமை தொடர்ந்தது.இருவரும் வெவ்வேறு பாதைகளை தேர்ந்தெடுக்க மைக்கேல் பிரான்சிஸின் கொள்கையை எதிர்ப்பதென முடிவெடுத்தான்.ஏனெனில் பிரான்சிஸ் ஒரு பொதுவுடமை வாதி.அவனுக்கு எதிராக இருக்க முதலாளித்துவ வாதியாக அவனுக்கு எதிராக இருக்க முதலாளித்துவ வாதியாக மாறினான்.அந்த ஊரில் ஒரு சிறு பனிப்போரே நடத்தினர்.
இதில் மகதலினா,அல்போன்ஸ் நடுநிலைமை வகித்தனர்.எப்போதுமே பொதுவுடமைவாதியிடம் வேகம்,மூர்க்ககுணம் அதிகமாக இருக்கும்.அன்று மீன்பிடி தடைகால இறுதி நாள்.மைக்கேல்க்கு அங்கு இருந்த அகதிகள் முகாமில் இருந்த சில அமெரிக்க நண்பர்களின் நட்பு கிடைத்தது.அவர்கள் இந்தியாவை வேவுபார்க்கவந்த சி.ஐ.ஏ உளவாளிகள்.அவர்கள் தமிழகத்தில் அதாவது இலங்கைக்கு அருகாமை பகுதியில் பொதுவுடமைவாதத்தை வீழ்த்த வந்தவர்கள்.
அவர்கள் மைக்கேலின் பொதுவுடமை வெறுப்பை பயன்படுத்தி தங்கள் வேலையை செய்ய முடிவு செய்தனர்.ஆனால் அதே நேரம் பிரான்சிஸ் தமிழகத்தில் உள்ள பொதுவுடமை இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தான்.ஆனால் அவன் தன் மீன்பிடித்தொழிலை விடவில்லை.இரு கொலைமுயற்சி அவனுக்கு எதிராக.ஆனால் அவன் அதில் இருந்து மீண்டிருந்தான்.அமெரிக்க உளவுத்துறை பிரான்சிஸ்ஐ கொலைசெய்ய முடிவு செய்திருந்தது.அதற்கு மைக்கேலை பகடைக்காயாக பயன்படுத்த திட்டம் தீட்டிருந்தது.மைக்கேலுக்கு சி.ஐ.ஏ உறுப்பினர் அட்டை வழங்கி அவனுக்கு பணம் அளித்தது.
மீன் பிடி தடை காலம் முடிவடைந்தது.காலையில் கதிரவன் மீனவர்களை வரவேற்றான் கடலுக்கு வரும்படி.மைக்கேலுக்கு மீன்பிடிக்கும் ஆசையில்லை ஆனால் கடலுக்கு செல்ல ஆயத்தமானான் பிரான்சிஸ்ஸை வீழ்த்தி பொதுவுடமை வேரை அறுக்க. ஆனால் பிரான்சிஸ்ஸோ கண்முழுவதும் மீன்களை பற்றிய கனவு.இருவரும் கடலுக்கு புறப்பட்டனர்.ஆனால் மகதலினாவுக்கு புரிந்து போனது மைக்கேல் மாறிவிட்டான்.காதல் அழிக்க இயலாததது.அவள் மனதில் இருந்தது அவனை நீக்க இயலவில்லை என.
இருவரும் கடலுக்கு சென்றனர் நவீன படகேறி. நடுகடலில் சி.ஐ.ஏ. திட்டப்படி பிரான்சிஸ்ஸை கொல்ல முயன்ற வேளையில்,அங்கு தடைகாலம் நீங்கியதால் சிங்கள ராணுவம் எல்லோரையும் கைது செய்யதது.அவர்களை செய்த சோதனையில் மைக்கேல் ஒரு உளவாளி என கண்டறிந்தனர்.
இலங்கையில் மெல்ல சீனா தன் ஆதிக்கத்தை நுழைதந்துகொண்டிருந்த நேரம் இந்த உளவு விவகாரம் சீன-இந்திய-அமெரிக்க உறவில் ஒரு நிழல்பாதிப்பை நுழைத்தது.அன்றில் இருந்து மைக்கேல் உலகம் அறியும் உளவாளியாகவும்,தேச துரோகியாகவும் அறியப்பட்டான்.மைக்கேலை தவிர அனைவரையும் இலங்கையில் இருந்த மீட்டது.
மைக்கேல் தன் சிறைவாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் தொடர்வதாகவேண்டியாயிற்று.எங்கோ இருந்து வந்த இளைஞன் உலகம் பேசும் உளவாளிகள் வரிசையில் இடம்பெற்றான்.தன் முன்னாள் காதலனை எண்ணி மகதலினா,கடலோரம் பறக்கும் கழுகுகளை பார்த்து கண்ணீர் சிந்தி கொண்டிருந்தாள்.அந்த கடலோரம் எங்கும் பொதுவுடமை கொடி மைக்கேலின் வீழ்சியில் ஆர்பரித்து கடலோர கழுகளை பார்த்து சுடர் விட்டு பறந்து கொண்டிருந்தது மகதலினாவின் கண்ணீருடன்.
5
எதிரிகளுக்கு சமர்ப்பணம்
மரித்துபோகிறவன் எதிரி அல்ல மருத்துவத்துக்கு
மரித்துபோக செய்வதே எதிரி மருத்துவத்துக்கு
நம்மை துன்பபடுத்துபவன் எதிரி
அல்ல ஒருபோதும்
துன்பபடுத்தும் காரணிகளே எதிரி
இங்கு துன்பபடுத்துபவன் எதிரி என்றால் கடவுளும் எதிரியே..
அந்த கடவுள் உள்ளாரா என சந்தேகப்படும் உலகில் நான் கூட எதிரியாக இருக்கலாம் எவனுக்கோ..
என் எதிரியாக இருக்கவேண்டுமா நீ என் வெற்றியை எதிரியாக நினை
அது போதும் எனக்கு..
இதை சொல்லும் போதே என்னை எதிரியாக எண்ணலாம்
அப்படி எண்ணுபவர்களுக்கு நீங்கள் என் தோல்விக்கு நண்பனாக அழைப்புவிடுங்கள் அது போதும்…!
6
புனிதமான அரசியல்வாதிகள்
கூட்டம் சேர்ப்பார்!
கூட்டமாக போவார்!
சாதியம் ஒழி என்பார் !
சாதிய கூட்டங்களுடன் புணர்வார்!
மதுவிலக்கு என்பார்!
மதுவே வேதம் என அருந்துவார்!
மேடையில் முழங்குவார்!
பெண்சுதந்திரம் முழங்குவார்!
கட்டிலில் பெண்சுதந்திரம் அழிப்பார்!
மொழியால் பிரிப்பார்!
மதத்தால் பிரிப்பார்!
சாதியத்தால் பிரிப்பார்!
பன்றிதொழுவத்தில் தூங்குவார்!
சட்டம்தனை வளைப்பார்!
நீதிமன்றத்தை குறைசொல்வார்!
தெருசுவரை கற்பழிப்பார்!
சாலையெங்கும் பலகை நடுவார்!
மக்களை குழப்புவார்!
கூட்டணி என்பார் !
ஒதுக்கீடு என்பார் !
திருவிழாவில் பங்கேற்ப்பார்!
ஏமாற்றுவார்!
ஏமாற்றுவார்!
பணம் கொடுப்பார்!
பிணம் படைப்பார்!
மது கொடுப்பார்!
கெடுப்பார்!
கலவரம் படைப்பார்!
நிலவரம் அடைவார்!
ஏமாற்றுவார்!
பதவி ஏற்ப்பார்!
பிறர் பதவி கெடுப்பார்!
கொள்ளையடிப்பார்!
பணம் பெறுவார்!
அரசன் என்பார்!
ஆண்டியை ஒழிப்பார்!
முதலாளிகளை முத்தமிடுவார்!
பத்திரிகைதனை முடக்குவார்!
செய்திதனை திருத்துவார்!
இலவசம் பலகொடுப்பார்!
நிலம்தனை ஆக்கிரமிப்பார்!
ஆசையை தூண்டுவார்!
மோசம் மட்டும் செய்வார்!
ஊழல் இல்லை என்பார் !
ஊழல் மட்டும் என அமைச்சரவை அமைப்பார்!
நேர்மை என்பார்!
நேர்மையான உயிரை இடம்மாற்றுவார்!
மின்சார தன்னிறைவு என்பார்!
சம்சாரம் மட்டும் எனக்கு நிறைவு என்பார்!
மறுதிருவிழா வரை ஏமாற்றுவார்!
இதை தொடர்கதைபோல செய்வார்.
அரசியல் என்பார்!
7
நான் யார்
நான் யார் என்ற கேள்வி பலருக்கு இருக்கும்!
நீங்கள் உங்களை யார் என கேட்டாலும் நான் யார் தான். சில சமயங்களில் சமூக வலைதளங்எளில் நீ யார்?
உண்மையில் நான் யார்? நீ யார்? பதில் அவ்வளவு எளிதல்ல.
நான் புரியாதவாறு சொன்னால் புரியாதவன் என நான் யார் என்ற கேள்விக்கு பதில்அமைத்துவிடுவீர்.
உண்மை என்னவென்றால் நான் யார் என்பது எனக்கே குழப்பம்தான்.
இப்போது நீ யார் கேள்விக்கு வருவோம்.நீ யார் எனில் உன் பெயரை கூறினால் அது உனக்கு நீ யார்என உனக்கு நீயே கேட்டுகொண்ட கேள்விக்கு பதில்.எனக்கு அது பதிலல்ல.
பதில்களை கொண்டு கேள்வி கேட்பவன் கேள்வி கேட்டு பதிலை பெறுவானா அல்ல கொடுப்பானா?
அது போலத்தான் வாழ்க்கையை பார்த்து நீ கேள்வி கேட்டால் ஓரு ஐம்பதோ அறுபதோ ஆண்டுகள் கழித்து யோசித்து மரணமென பதிலுரைக்கிறது.எவ்வளவு யோசனை நீ யார் என்ற கேள்விக்கு.மரணம் என பதில் கிடைத்த பின் அடுத்து எந்த கேள்வி கேட்பீர்.
நான் யார் கேள்வி ஒரு வேளை நீ யார் என்ற கேள்வியின் கணவனாக இருக்கலாம்.
சில சமயங்களில் நீ யார் என்ற கேள்வி நான் யார் என பிறர் கேட்டவுடன் வந்து பதிலை கேட்க ஆரம்பித்துவிடுகிறது.
நான் யார் என்பதன் பதில் நீ யார் என பிறர் என்னை கேட்டவுடன் பிறந்துவிடுகிறது.புரிந்தால் கேள்வி கேளுங்கள்.
புரியவில்லை எனில் பதிலை கேளுங்கள்.மவுனம் கலையட்டும்
8
அயோக்கியத்தில் களேபரம்
மூன்று பக்கம் கடல்.ஒரு பக்கம் நிலம் சூழ்ந்த நாட்டில் பல இனங்கள் வாழும் சிற்றரசுகள் உண்டு.அன்று நாட்டை மறைமுகமாக ஆண்ட கூட்டத்தின் பெயர் காவி தீவிரவாதிகள்.உண்மையில் திருவிழாவில் வெள்ளை மக்கள் காந்துரஸ்க்கு பதவி கொடுத்திருந்து ஆட்சி அமைக்க சொல்லிருந்தனர்.
அன்று காலை வழக்கம் போலவே விடிந்தது.சூரியன் அன்று என்றும் இருப்பது போல வெப்பமாகவே இருந்தது.காவி தீவிரவாத கட்சிக்கும் பிறை தீவிரவாத கட்சிக்கும் எப்போதுமே ஆகாது.
காவி தீவிரவாத கட்சியோ, நாங்கள் தான் பெரும்பான்மை மற்றும் மூத்தவர்கள்.நீங்கள் எங்கள் நாட்டில் இருக்க கூடாது.மீறி இருந்தால் ஒன்று காவி உடை அணியவேண்டும் அல்லது உயிரை விட வேண்டும் என்ற நிபந்தனை.
அதற்கு பிறை தீவிரவாத கட்சியோ, நாங்கள் ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பே நாட்டை கைப்பற்றிவிட்டோம்.
இப்போது வடக்கு இந்தியாவில் வெடிகுண்டுகள் வெடித்து போர் நடத்திகொண்டிருக்கிறோம்.கூடிய சீக்கிரம் பாக்கியுள்ள நாட்டுடன் இணைத்துவிடுவோம்.இது நாட்டில் உள்ள நிலைமை.
அப்போது மன்னராக இருந்த காவி தீவிரவாத கட்சி, இராமயண புத்தகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது.அவர்கள் ஒர் அரிய உண்மை வடிவில் உள்ள பொய்யை கண்டறிந்தனர். அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
உத்தம பிரேதசம் என அழைக்கப்பட்ட சிற்றரசில் உள்ள அயோக்கியம் என்ற இடத்திலே சீதையின் கணவர் பிறந்தார் என்பதை ஆதாரங்களுடன் அன்று தான் கண்டறிந்தனர்.
கண்டறிந்த உடன் அவர்களது காவி தீவிரவாத படைக்கு நெஞ்சு பொறுக்கவில்லை.பத்வானி என்பவர் ஒரு பழைய ரதம் ஏறி அயோக்கியத்துக்கு சென்று கொண்டிருந்தார்.திடிர்னு நரசிம்ம அவதாரம் அவரை கைது செய்து விடுவித்தது.
சீதையின் கணவர் பிறந்த ஊரில் பிறை தீவிரவாத படையின் ஒரு அலுவலகம் இருந்தது.அதன் பெயர் பாபம்.உடனே காவி தீவிரவாத கட்சிக்கு ஒரே ஆத்திரம்.அது எப்படி எங்கள் அக்கா சீதையின் கணவர் பிறந்த ஊரில் எப்படி நேற்று ஆக்கிரமித்த பிறை தீவிரவாத கட்சியின் பாபம் அலுவலகம் என.
காவி தீவிரவாத கட்சியால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.
காவி தீவிரவாத கட்சி தன் தோழமை தீவிரவாத கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. நாளை அனைவரும் சுத்தியலோடு என் அக்கா சீதையின் கணவர் பிறந்த ஊருக்கு வாருங்கள் நாம் பிறை தீவிரவாத கட்சியின் பாபம் அலுவலகதை இடித்து காவி தீவிரவாத கட்சியின் கொடியை நிறுவ வேண்டும் என.
சூரியன் ரொம்ப சூடாகத்தான் கதிர் வீசியது. காவி தீவிரவாத கட்சியின் உறுப்பினர் புதிய சுத்தியல் மற்றும் புதிதாக கடையில் பேரம் பேசி வாங்கிய சுத்தியலுடன் சீதையின் கணவர் பிறந்த ஊருக்குள் குவிய ஆரம்பித்தனர் காவி தீவிரவாத கட்சியினர்.
ஆனால் அங்கு உள்ள வெள்ளை மனிதர்களுக்கு புரிந்து போனது சீதையின் கணவர் பிறந்த ஊரில் ஏதோ நடக்க போகிறது என.
பத்வானியின் நண்பர் ஒருவர் உத்தரவு வழங்க காவி தீவிரவாத கட்சியினர் சுத்தியலால் அனுமதியின்றி பிறை தீவிரவாத கட்சியின் அலுவலகம் பாபத்தை சுத்தியலால் அடித்து நொறுக்க ஆரம்பித்தனர்.ஒரு அரை மணி நேரத்தில் அலுவலகம் சுக்குநூறாக உடைத்து சிதைக்கப்பட்டிருந்தது.
எல்லாம் முடிந்த பிறகு ஆளுங்கட்சி பாதுகாப்பு காவல் துறை பாபத்திற்கு விரைந்தது.வழக்கம் போல பிறை தீவிரவாத கட்சியினர் மீது பழி போடப்பட்டது. நீங்கள் காவி தீவிரவாதபடையின் அக்காவின் கணவர் இடத்தில் ஆக்கிரமித்து கட்டியுள்ளனர் என கூறப்பட்டது.பிறகு ஒரு பத்து நிமிடத்தில் காவி தீவிரவாத கட்சியினர் பிறை தீவிரவாத கட்சியின் அலுவலகமான பாபத்தை இடித்த செய்தி இந்தியா முழுவதும் காட்டு தீப்போல பரவியது.அதன் பிறகு “இவன் யாருய்யா எங்க அலுவலகத்தை இடிக்க ” என பிறை தீவிரவாத கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து காவி தீவிரவாத கட்சியின் உறுப்பினர்களையும்,ஆதரவாளர்களையும் தாக்க ஆரம்பித்தனர்.
பிறை தீவிரவாத கட்சியினர் அனைத்து வகையான ஆயுதங்களை பயன்படுத்தினர்.இதற்கிடையில் களேபரம் நாடு முழுவதும் பரவியது.காவி தீவிரவாத கட்சியினரும் பதிலுக்கு நாங்களும் சளைத்தவர் அல்ல என திருப்பி தாக்கினர்.அப்படியே களேபரம் கலவரமானது.
இப்படி கலவரம் நடக்க ஒன்றுமே செய்ய இயலாமல் நரசிம்ம அவதாரம் வருந்த வேண்டிய நிலை உண்டானதே அயோக்கிய பூமியின் களேபர வரலாறு.
பின் குறிப்பு:
இது யார் மனதையும் புன்படுத்துவதிற்கில்லை என்பதையும் இது டிசம்பர் 6,1992ல் நடந்த உண்மை சம்பவத்தின் பின்னணியில் எழுதப்பட்ட கதை.
9
உடல் மறைய உடையணிவீர்...!
உடல் மறைக்க ஆடை போய்
உடல் காட்ட ஆடையானது தான்
நூற்றாண்டு சாதனையோ!
துகில் உரித்ததற்கு போர் முழங்கி
கூட்டம் கரைத்த பாரதத்தில்
உரிந்த துகில் உடுத்துவது தான்
நூற்றாண்டு சாதனையோ!
கற்பழிப்புு குற்றச்சாட்டு நாள்தோறும் நாளேடுகளில்
காட்சிக்கு குற்றம் ஆனால் மிருகமாவது இயல்பு தான்
இது காட்சியில் குற்றமா? மிருகத்தின் குற்றமா?
இது தான் நூற்றாண்டு சாதனையோ!
ரெளத்திரம் பழகு போய் கவர்ச்சி பழகு என்பது தான் நூற்றாண்டு சாதனையோ!
ஆடையில் பிழை பிறகு எப்படி பெண் ஒழுக்கம் வாழும் !
உடையில் கவர்ச்சி பாரத பண்பாடு ஆகாது!
நடத்தையில் கவர்தல் பாரத பண்பாடு ஆகும்!
உடல் மறைய உடையணிவீர்…!
உலகம் மறையா புகழடைவீர்….!
10
ஆல்கஹால் அடிமைகள்
அவன் ஒரு மாணவன்.நவீன காலத்து இளைஞனுக்கு தேவையான அனைத்து தகுதியும் இருந்தது அவனிடம்.அவன் பெயர் ரகு.
ரகுவிடம் மது பழக்கம்,புகை பிடித்தல், போதை பொருள் பயன்படுத்தல் என அனைத்து பழக்கமும் அவனிடம் இருந்தது.
ரகு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் மாணவன்.அவன் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தான்.
அவனுக்கு வகுப்புக்கு செல்ல விருப்பம் இல்லை.காலையில் எட்டு மணிக்கு எழுந்திருப்பான்.வழக்கம் போல குளித்து,உணவு உண்டு கல்லூரிக்கு போவான்.ஒரு அரை மணி நேரம் கூட அவனால் வகுப்பில் தாக்குபிடிக்க இயலாமல் மீண்டும் விடுதிக்கே வந்து ஓய்வெடுக்க ஆரம்பித்து விடுவான்.
இதில் கையில் காசு வரும்போது மது அருந்தவும்,புகை பிடிக்கவும் அவன் தவறுவதில்லை.இதில் அவன் விடாப்பிடியாக இருந்தான்.
அவனுக்கு கல்லூரி கட்டணம் கட்டுவதை விட மதுபான விடுதிகளில் கட்டணம் மிக முக்கியமாக இருந்தது.கல்லூரியில் இருந்த வெளியே செல்ல அவுட்பாஸ் கொடுக்கவேண்டும்.ஆனால் அந்த விதிகள் என்னவோ இவனுக்கு பொருந்தியதில்லை. இவன் ஏறாத கல்லூரி சுவர் இல்லை. இவன் செய்யாத பிராடுதனம் இல்லை.
ஆனால் எந்த பிரச்சினையிலும் இவன் சிக்கியதில்லை.அது அவனின் ஏமாற்றும் திறமையின் வெளியீடு.ரகு,அவன் நண்பன் ராஜா இல்லாமல் எதையும் செய்வதில்லை. அங்கே உண்மையான நட்பின் வெளிப்பாடு நிலவியது.
வரவர கல்லூரியில் விதிமுறைகள் கடினமாக்கப்பட்டு கொண்டிருந்தது.அது ரகு மற்றும் ராஜாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்த தவறவில்லை.அந்த புதிய விதிமுறைகள், ரகுவின் குடிபழக்கத்தை கட்டுபடுத்த போடப்பட்டதாக இருந்தது.அவனால் ஒன்றும் செய்யமுயலவில்லை.
கல்லூரியில் அந்த நேரம் அவனுக்கு எதிராக பல பிரச்சினைகள். அவன் முழு மன இறுக்கத்தில் வாடியிருந்தான் தொட்டால்சிணுங்கி போல.அது அவனுக்கு நிச்சயம் இன்று மது அருந்தவேண்டும் என்ற உணர்வை தூண்டதவறவில்லை.
ஆனால் அவனுக்கு தெரியும் அவுட்பாஸ் இல்லாமல் வெளியே செல்ல முடியாது .வெளியே சென்றுவிட்டு உள்ளே வந்தால் பல பிரச்சினைகள் வரும் என அவனுக்கு தெரியும்.ரகுவுக்கு, மது ஆவல் அனைத்தையும் மறக்கச்செய்திருந்தது.வெளியே எப்படியோ சென்றுவிட்டான் பல சுவர்களின் சந்திப்பின் முடிவில். அவனிடம் அன்று ஒரு ஐநூறு ரூபாய் இருந்தது. அவனுக்கு தெரியும் அவன் குடி லிமிட்.
ஆசை பொல்லாதது மற்றும் யாரைத்தான் ஆசை விட்டது.அன்று அவனை எல்லைமீறி ஆல்கஹால் ஆக்கிரமித்திருந்தது. அது அவனது பொல்லாதகாலம் போல, ஆல்கஹால் வாசனையை போக்கும் பாக்கை அவன் மறந்தேவிட்டான்.
ரகுவின் பேச்சில் ஒவ்வொரு நொடியிலும் மது வாசனை,அவனை குடிகாரன் என முத்திரைகுத்திக்கொண்டிருந்தது.
ரகு,முழு போதையுடனே கல்லூரிக்குள் நுழைந்துவிட்டான்.ஒரே தள்ளாட்டம்,மதுவாடை.முடிவாக , அவன் குடித்திருப்பது பேராசிரியர்களுக்கு தெரிய வர அதை அவர்கள் ரகுவுக்கு எதிராக சரியாக பயன்படுத்தி கொள்ள,விளைவாக பிரச்சினை கல்லூரி முதல்வர் வரை கொண்டு செல்லப்பட்டது.
முடிவாக அவனுக்கு தண்டனையாக இரண்டு வாரம் இடை நீக்கம் ,மற்றும் ரகுவின் பெற்றோருக்கும் இந்த பிரச்சினை குறித்து எடுத்துசொல்லப்பட்டது.ரகுவுக்கு வீட்டிலும் மரியாதை போச்சு,கல்லூரியிலும் பெயர் போச்சு என்பது தான் பெரிய வருத்தம். அவனுக்கு கடைசியில் கல்லூரி முழுவதும் குடிகாரன் என்ற பெயர்.
இரண்டு வாரம் இடை நீக்கம் என்னவோ அவனுக்கு குடி குடியை கெடுக்கும் என்பதை நூற்றில் ஒரு சதவீதம் கற்றுகொடுத்திருந்தது.ஏனெனில் அவனுக்கு வாலிப வயது.தவறை சரியென,பெருமைக்காக செய்ய தூண்டும் வயது.
அந்த பிரச்சினைக்கு பிறகும் அவன் மாறுவதாக இல்லை. மீண்டும் மது என அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.ஒரு நாள் அவன் மதுபான விடுதியில் இருந்து மது அருந்திவிட்டு வெளியே வரும்போது எதிரில் அவனது ஆசிரியர்.
வழக்கம்போல ரகுவிடம் அறிவுரை வழங்க ஆரம்பித்தார் அந்த மூத்த ஆசிரியர். பதிலுக்கு ரகு,ஆசிரியரிடம் உதிர்த்த வார்த்தை அவரை உலுக்குவதாய் அமைந்தது.
“சார்,முதல்ல இந்த சமூகம் திருந்தட்டும்,அப்புறம் பாக்கலாம் நான் திருந்துறதை”…!
ஆல்கஹாலின் அடிமைகள் சமூகதாத்தால் தினமும் ஒரு 90 ரூபாய்க்கு உருவாக்கப்பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.மதுவிலக்கு சட்டம் மூலம் திணிக்கப்படுவது தவறு.அது தனிஒருவன் மனதில் தோன்ற வேண்டும்.
11
ஒரு பத்து நிமிடம்
எங்கும் கடன்,எதிலும் கடன்,எங்கும் ஊழல்,எதிலும் ஊழல். இதுவே அரசின் தாரக மந்திரம் போல இந்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது.
ஆயிரம் கோடி ஒதுக்கீடு,பத்து கோடி ஒதுக்கீடு என வரி பணம் ஒதுக்கி செலவு செய்வதில் உள்ள அரசின் ஆர்வத்திற்கு ஒரு எல்லையே கிடையாது.நாட்டில் பணக்காரர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு உதவுவதில் உள்ள ஆர்வத்திற்கு தான் ஒரு எல்லை உண்டா…!
காலம் காலமாக பணக்கார வர்க்கம் மட்டும் முன்னேற அனைத்தையும் செய்துவரும் அரசு தேவையா என என்ன தோன்றுகிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எழுத்தாளர் படுகொலை,நிருபர் படுகொலை, செய்திதாளுக்கு தடை,இணையதள சேவை என கருத்து சுதந்திரத்திற்கு எதிராக எல்லாமே கோலாகலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது.
முதலாளிகள் ஆதரவு,செய்தி தாள் ஆதரவு,மத சாதி இன ஆதரவு, வன்முறையாளர்கள் ஆதரவு ஆகியவை மட்டும் ஒருவருக்கு இந்தியாவில் இருந்தால் அதுவே ஆட்சியமைப்பதற்கும்,எந்த விதமான வன்முறை,குற்றம் செய்வதற்கும்,நீதிமன்றத்தை தன்கைக்குள் வைத்திருப்பதற்கும் போதுமானதாக உள்ளது.இங்குள்ள அரசும் இதைத்தான் செய்துவருகிறது.
ஆளுங்கட்சி,எதிர்கட்சியெல்லாம் இந்த ஆதரவு திரட்டலுக்காகவே ஒருவரை ஒருவர் எதிர்த்து கொள்கிறது.
நாட்டில் ராணுவம் ஆகட்டும், நாட்டில் ஆசிரியர் ஆகட்டும் எதோ ஒரு கட்சியை சார்ந்தே இருக்கவேண்டியதாக உள்ளது. மக்களை ஆளுதல் அரசியல் என்று போய் மக்களை கட்டுப்படுத்தி அடிமை படுத்துவதே அரசியல் என்றாகிவிட்டது.
பணக்காரன் கொலை செய்தால் தற்கொலை என்பதும் ,அதே ஒரு ஏழை கொலைசெய்தால் அவனுக்கு ஆயுள் தண்டனை அளிப்பதும் இங்கே எழுதப்படாத அரசியல் நீதி ஆகிப்போனது.இந்தியாவை போன்றதொரு பாரம்பரியம்மிக்க நாட்டில் மதத்தால் பிரித்து மோதவிடுவதும்,அரசு அலுவலகங்களில் லஞ்சமும்,அரசு அலுவலர்களின் பொறுப்பற்ற தன்மையும்,கற்பழிப்பு,பெண்களுக்கு எதிரான வன்முறையும்,நீதிக்கு எதிரான வன்முறையும்,காவல்துறை அதிகாரியை கொலைசெய்வதும் நடக்கத்தான் செய்கிறது.
இங்கு இந்த பிரச்சினைகளை சரிசெய்ய எவ்வளவோ முயற்சியெடுத்தாலும்,அது சட்டப்படி குற்றம் எனக்கூறி கைது செய்வதும் நாட்டின் வழக்கமாக இருப்பது வருந்த செய்கிறது.
எவ்வளவோ பாடுபட்டு சுதந்திரத்தை வென்றுஎடுத்துவிட்டோம்.அங்கும் துரோகம் தான். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சுதந்திர போராட்டம் மறைக்கப்பட்டு காந்தியை பிரபலபடுத்தி காங்கிரஸ் கட்சி தன்னை பிரபலபடுத்திக்கொண்டது. பிச்சை கேட்டு சுதந்திரம் பெறுவதற்கு சாகலாம் என கூறி ஆங்கிலேயர் மீது படையெடுக்க ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்து படை திரட்டியது அன்றோ வீரம்.
நேதாஜி காங்கிரஸ்க்கு ஆதரவாக இல்லை என தெரிந்துகொண்டு அவரை நாட்டை விட்டு வெளியேற்றி அவர் உயிரோடு இருக்கும் போதே அவர் விமான விபத்தில் இறந்ததாக சொல்லி பின் ஆங்கிலேயருக்கு நேதாஜியின் இடத்தை காட்டி கொடுத்தவர்களுக்கு தானே நாம் பல வருடமாக ஆட்சியமைக்க வாய்ப்பளித்தோம்.
மாற்றம் மாற்றம் என கத்திவிட்டு எவராவது முயற்சியெடுத்தால் உடனே தீவிரவாதி என முத்திரை குத்துவதும் இங்கே தான்.நம்மை விட மிக சிறிய நாடுகளே மிக குறைந்த மக்கள்தொகையை கொண்டு வளர்ந்த நாடுகளாக இருப்பது நாம் கண்ணால் கண்டு அவமானப்படவேண்டிய விஷயம் ஆகும்.
நாம் நல்லாயிருந்தா போதும் ,மற்றபடி காஷ்மீர் எல்லையில் யார் செத்தால் எனக்கென்ன,இந்தியா மீது எவன் போர் தொடுத்தா எனக்கென்ன, பத்திரிகையாளர் செத்தால் எனக்கென்ன என்று தானே இருந்தோம். என்றாவது ஏன் அப்படி? நான் அதை தட்டிக்கேட்பேன் என்று இருந்ததுண்டா…?
வேலையில்லை வேலையில்ல என சொல்லி கொண்டிருக்கிறோமே தவிர நாம் அந்த வேலைக்கு தகுதியானவனா என எண்ணியதுண்டா..?
தேர்தலில் எப்பொழுதுதாவது நாம் பணம் ,மது,பிரியாணி வாங்காமல் நேர்மையாக வாக்களித்ததுண்டா…?
புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததுண்டா…?
அது சரியில்லை,இது சரியில்லை என புலம்புவதே இந்தியனாக நம்மை அடையாளப்படுத்துவதாக இருந்துவிட்டது சர்வதேச அரங்கில். என்றாவது அதை சரிசெய்ய ஏதாவது செய்தோமா…? என்றால் இல்லை.
நாம் ஒரு நாள் மதுவிலக்குக்காக பொங்கியெழுந்தால்,அடுத்த நாளே அதை திசைதிருப்ப பெண்களுக்கு எதிரான கருத்து என்று நம்மை பொங்கச்செய்வதே அரசியலாக உள்ளது.
எதையும் மறந்துவிடும் நம் இயல்பு,இங்கு அரசியல்வாதிகளால் மிக அழகாக நம்மை ஏமாற்ற கையாளப்பட்டுவருகிறது.
மத,சாதி,இனவாதிகளுக்கு எதிராக நாம் ஒருபோதும் இருப்பதில்லை.மேலும் இங்கு கல்வி தனியார்உடமை ஆக்கப்பட்டதில் இருந்து யார் வேண்டுமானாலும்,கல்வியை விற்கலாம்,தகுதியே இல்லாதவருக்கு நாம் போலியாக பட்டம் கொடுக்கலாம் என ஒரு பக்கம் வருங்கால இந்திய சமூதாயம் தகுதியில்லாமல் இருக்க முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு இந்தியன்,சிங்கபூரில் சாலையில் குப்பையை போடுவதில்லை ,அவர்கள் விதிமுறைக்கு கட்டுப்படுகிறோம்.ஆனால் இந்திய மண்ணை மிதித்த உடன் நாம் குப்பையை தரையில் கொட்டுகிறோம்.சிறு வாய்ப்பு கிடைத்தால் ஏமாற்றுகிறோம்.
ஏன் அந்நிய நாட்டை மதிக்கும் நாம், நாம் பிறந்த நாட்டை நமக்கு இருக்க இடமளித்து,எல்லையில்லா சுதந்திரம் அளித்த நம் தாய் நாட்டை ஏன் மதிப்பதில்லை…!
நாம் நம் மீது நம்பிக்கை வைக்காததும், எதற்காகவும் பிற நாட்டுடன் ஒப்பீடுவதும் காரணமாக உள்ளது. நம் சாதனைகளை நாம் சரியாக பாராட்டாததால் ஏற்பட்ட குற்றம் இது.
ஏன் குறைந்த மக்கள் தொகை உடைய இஸ்ரேலால் ஆயுத தளவாடங்களை உற்பத்தி செய்ய முடியும் போது ஏன் நம்மால் முடியாதா…!
பாக்கிஸ்தானால் நம்மை தாக்க முடியும் போது நம்மால் முடியாதா …!
அமெரிக்கர் ஒருவர் மரணமடைந்தால் அமெரிக்கா தேசம் அடையும் ஆத்திரம் ஏன் நம்மில் ஏற்படுவதில் இல்லை…!
அந்த ஒற்றுமை ஏன் நம்மில் இல்லை…!
இன்றும் நாம் அதே பஞ்சசீல கொள்கையை பின்பற்றி எல்லோரிடமும் அடிபடும் நாடாகத்தான் இருக்கிறோம்…!
ராணுவ வலிமை,பொருளாதார வலிமை தேடி பயணப்படும் நாம் என்றாவது ஒரு இந்தியனின் மனவலிமையை வளர்க்க ஏதாவது செய்தது உண்டா…!திறமைகள் அதிகமாக இருந்தால் புறக்கணிக்கப்படுவதும்,திறமை இல்லாதவனை தேர்ந்தெடுப்பதும் இங்கு தான் சாத்தியம்….!
பொருளாதாரம்,கட்சியின் நிலையை பொறுத்தே தீர்மானிக்கபடுவதும் இங்கே தான்…!அரசை தனியார் நிறுவன முதலாளிகள் மிரட்டுவதும் இங்கே தான்…!
பெண்களை வன்முறைக்கு உட்படுத்துவதும் இங்கே தான்…!
சாதி மாறி திருமணம் செய்தால் கலவரம் நடத்துவதும் இங்கே தான்…!
சுயமாக சிந்தித்து எதையும் செய்வதற்கு மாணவர்களுக்கு உரிமையில்லை. தொழில்நுட்ப சுதந்திரம் எளியோரிடம் இல்லை.அதுவும் இங்கே தான்…!
அந்நிய முதலீடுகளுக்காக உள்ளூர் தொழில்களை மறந்த அவலமும் இங்கே தான்…!
விளையாட்டிலும் ஆதிக்க ஜாதியினர் மட்டுமே.எத்தனை பேருக்கு தெரியும்..தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பிராமணர்கள்..இங்கு திறமைகளுக்கு மதிப்பில்லை…அதுவும் இங்கே தான்..!
ஒரு பச்சை பென் கையெழுத்துக்கு ரூ.100 என சொல்லி லஞ்ச ஆட்சி நடத்தி வருவதும் இங்கே தான்…!
முன்னேறியவர்கள் மட்டுமே முன்னேறவேண்டும்.மற்றவர்கள் எல்லாம் அப்படியே வாழ வேண்டும்.. அந்த அவலக்காட்சியும் இங்கே தான்..!
குண்டர் சட்டம் என்றொரு சட்டப்பிரிவு உண்டு.அது தொடர்ந்து குற்றம் செய்பவர்களை தண்டிக்க ஆனால் இங்கு அரசுக்கு எதிராக ,மக்களின் நலனுக்காக போராடுபவர்களின் மீது போட்டு பழி வாங்கும் அவலமும் இங்கே தான்….!
எதிலும் தரமில்லை. எப்போதும் தரமில்லை.எங்கேயும் தரமில்லை. என்பது தான் இந்திய தொழில்துறையின் தாரகமந்திரம்.தரமான பொருட்களுக்கு பதிலாக தரமில்லா பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செலவை குறைத்து கொள்ளையடிப்பதும் இங்கே தான்…!
இந்தியாவில் பல இனம்,பல மொழிகள் இருந்தாலும் இங்கே இந்தியை மட்டும் திணிக்க நினைத்து மற்ற மொழிகளை கொலை செய்யும் அவலமும் இங்கே தான்…!
நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருந்தாலும் இங்கே அவர்களுக்கு யோகாவை திணிப்பதும்,ராமர் கோவில் கட்டுவதும் தான் முக்கிய பிரச்சினை…!
இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் நான் மட்டும் யோக்கியனா என கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் கூறுவேன்.
ஏதோ என்னால் முடிந்த அளவு நாட்டுக்காக பொதுவுடமை கட்சியில் இணைந்து பங்களிப்பும்,அனைத்து சமூக சேவை நிறுவனங்களுக்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளித்து வருகிறேன்…! ஊரில் என்னை நக்சல் தீவிரவாதி என அழைக்கும்படி பணியாற்றி வருகிறேன்..
ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு அரசுக்கு எதிராக கேள்வியாவது கேளுங்கள்..உங்களுக்கு தகவல் அறியும் உரிமை தரப்பட்டுள்ளது..! பயன்படுத்துங்கள்…!
ஏதாவது மக்கள் நலப்போராட்டத்தில் பங்கு பெறுங்கள்…!உங்களால் முடிந்த அளவு ஏதாவது நாட்டுக்காக செய்யுங்கள்…? அதன் பின்பு தான் நாடு உங்களுக்கு நல்லது செய்யும்…!
இந்த பதிவின் நோக்கம் ஒர ஐந்து நிமிடமாவது இந்தியாவுக்காக உங்கள் சிந்தனையை செலவிடுங்கள்…!
கேள்வி கேளுங்கள்…!
சிந்தித்து ஆதரவு வழங்குங்கள்…!
மாற்றத்தை காதலியுங்கள் …!
ஜெய் ஹிந்த்..!
12
எனது காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்..!
இன்று இந்தியாவும்,சர்வதேச நாடுகளும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறது.ஐ.நா அவையில் அகிம்சை தினமாக கொண்டாடப்படும் நாளாக காந்தி பிறந்த நாள் மாறிஉள்ளது.
அப்படி கொண்டாடும் படியாக,மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கும் படியாக,அரசு விடுமுறை தினமாக கொண்டாடும் படியாக அப்படி என்ன காந்தி சாதித்துவிட்டார்…?
அவர் சாதனை எல்லாம் ஆங்கிலேயர்களிடம் அடியை வாங்கிக்கொண்டு திருப்பி அடிக்க தெரியாமல் அகிம்சை என்ற பெயரில் ஆங்கிலேயர்களிடம் நம் வீர மக்களை அடி வாங்க துணை நின்றார்…!
யாராவது மறுத்து கூற முடியுமா…?விடுதலை வேண்டுமென்றாலோ,தன் உரிமை பறிக்கப்படுகிறது என்றாலோ மிருகங்கள் கூட போராடி சண்டையிட்டு உயிர் போனாலும் பிரவாயில்லை என்றே சண்டையிடும்…..!
ஆனால் இந்தியனை ,எங்கிருந்தோ வந்த பிச்சைக்கார கூட்டத்திடம்,நீங்கள் அடியும்,உதையும் வாங்குங்கள், நம் உரிமைகளுக்காக என வழிநடத்தியவருக்கு மகாத்மா பட்டமும்,தேசதந்தை பட்டமும் வழங்கி தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது எவ்வளவு கேவலம்.!
இந்தியாவின் கல்கத்தாவில் பிறந்த தன்மான சிங்கமொன்று, உங்கள் ரத்தத்தை தாருங்கள்.நான் உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன் என கம்பீரமாக முழங்கியவரை தேசத்துரோகி,தீவிரவாதி என முத்திரை குத்தினோம்…!
பகட்டு ஆடை துறப்பு என நாடகமாடி ,பெண்களுடன் சல்லாபமாக இருந்த ஒருவருக்கு எவ்வளவு மரியாதை…! போதாக்குறைக்கு ரூபாய் நோட்டில் அவர் புகைப்படம் பதித்து மதிப்பளிப்பது எவ்வளவு கேவலம்..!
சந்திக்கவே முடியாத ஹிட்லரை சந்தித்து,ஜப்பான் சென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டியவருக்கு நாம் என்ன மரியாதை அளித்தோம்…!
நான் காந்தியை குறை சொல்வதாக எடுத்து கொள்ளாதீர்.நான் வேண்டுவது ஒருவரின் உழைப்பு,தியாகம்,அர்பணிப்பு மறக்கடிக்கபட கூடாது என்பதே…!காந்தியை ஒரு நடிகனை போல பிரபலபடுத்தி நேதாஜி காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்டார் என்பதே உண்மை.
எங்கும் காந்தியின் புகைபடமும்,பெயரும் இருப்பது அதாவது நாம் அடிக்கடி எதை பார்கிறோமோ,கேட்கிறோமோ அதுவே நமக்கு பழகி போகும்.இந்த யுக்தியை கையாண்டு ஒவ்வொரு அரசும் நம் மீது காந்தியை திணித்திருப்பதை மறுக்க முடியுமா.!
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இடத்தை ஆக்கிரமித்து வாழும் காந்தியை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.தேசப்பிதா,மகாத்மா,ருபாய் நோட்டுகளில் உருவம் என அனைத்து உரிமையும் நேதாஜிக்கே சேரவேண்டும்…!
நேதாஜியின் கடைசி காலம் பற்றிய ரகசிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.உண்மை உரக்க சொல்லப்படவேண்டும்…!இதுவே என் காந்தி ஜெயந்தி வாழ்த்துகள் …!
13
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு இது நம் பிரதமருக்கு…
நீங்கள் இந்துத்துவத்தை ஆதரியுங்கள்.சவுதிக்கு சென்று கோவில் கட்ட நிலம் வாங்குங்கள்.ஆர்.எஸ்.எஸ் வளர நிறைய திட்டங்களை அறிவியுங்கள்.இந்து மதத்துக்கு எதிரானவற்றிற்கு தடைவிதியுங்கள்…ஆனால் .கூடிய சீக்கிரமாக அனைத்து தேவலாயங்களையும் காவல்துறை சோதனை போட பயிற்சி அளியுங்கள் பிரதமர் அவர்களே…
அறிவியல் எப்போதும் தீர்க்கதரிசி தான்…நியுட்டன் சொன்ன மூன்றாம் விதி எவ்வளவு உண்மை.ஒரு பக்கம் லாரி வேலை நிறுத்தம் எனில் மறுபக்கம் அத்தியாவசிய பொருள் விலையேற்றம்…நீங்கள் இந்துத்துவத்தை அதிகமாக வளர்த்தீர்கள் விளைவு இஸ்லாமியம் வேகமாக வெறியாக வளர்ந்து விட்டது.இப்போது மீண்டும் இந்துவத்தை வளர தீணி போட்டு கொண்டிருக்கும் நீங்கள் கிறிஸ்தவ தீவிரவாதத்தை சமாளிக்க தயாரா…? என்பதே என் கேள்வி…
இஸ்லாமிய தீவிரவாதத்தால் நாடெங்கும் வன்முறை வெறியாட்டம் எனில் மூன்றாவது பெரும்பான்மை மதத்தவரான கிறிஸ்தவ தீவிரவாதமும் உடன் சேர்ந்தது எனில் நிலைமை என்னவாகும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்…கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது கண்காணிக்க தவறினால் நிலைமை படுமோசமாகும்…ஏற்கனவே மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ள Anti-Balaka தீவிரவாத குழுக்கள் கிறிஸ்தவ தேசம் என்ற கொள்கையில் இயங்கி வருகிறது.இவை அங்கு பல பிறமத வழிபாட்டு தலங்களை சிதைத்தது…
இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவ தீவிரவாதம் வளர்ந்து வருகிறது.திரிபுராவை எடுத்து கொள்ளுங்கள்..அங்கு இயங்கி வரும் National Liberation Front of Tripura என்ற இயக்கம் அங்கு வாழும் மற்ற மதத்தவரை வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்து வருகிறது…
அங்கு உள்ள தேவாலயங்களே அவர்களுக்கு ஆயுதம் வழங்கியது செய்தி அதற்காக ஏப்ரல் 2000ல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்..இது வரை திரிபுராவில் 800க்கும் மேற்பட்ட தீவிரவாத சம்பவங்கள் இவர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் நிலைமை வேறு.அங்கு உள்ள Nationalist Socialist Council of Nagaland என்ற இயக்கம் தனி கிறிஸ்தவ நாடு என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகிறது. இது இதுவரை 30,000 உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்தது மதத்தின் பெயரால்…சமீபத்தில் நாகா உடன்படிக்கை மூலம் நம் பாரத பிரதமர் அமைதிக்காக ஒப்பந்தம் போட்டுள்ளார்.இது ஒன்றும் பெருமைபடுவதற்கு அல்ல.இந்த ஒப்பந்திற்கு பின் உள்ளவை முழு இந்துத்துவம் .நாகா தீவிரவாத இயக்கம் நாகலாந்து முழுவதும் உள்ள அத்தனை இந்துக்களையும்,கிறிஸ்தவர்களாக மாற்றி விட்டது என்றே சொல்லவேண்டும்.
பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆனது நாகலாந்தில் தான்.இந்த இயக்கம் நாடு முழுவதும் பரவினால் நாடு முழுவதும் கிறிஸ்தவர்களாக்கி விடுவார்கள் என்ற அச்சமே நாகா ஒப்பந்தம் … என்ன ஆனாலும் இந்துத்துவம் வளர வேண்டும் …எவ்வளவு ஆசை…
நீங்கள் ஒரு சாரார்க்கு அதிகமாக உதவினால் நிச்சயம் இன்னொரு சாரார்க்கு பொறாமை வளர்வது இயல்பு தான்…அது போல் தான் இதுவும்…ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு..
நீங்கள் இந்துத்துவத்தை வளர்த்தால் கிறிஸ்தவம் வேகமாக வெறியாக வளரும் என்பதே உண்மை…
இது இன்று காலை நான் சாதாரணமாக முடி திருத்தம் செய்ய கடைக்கு சென்றபோது எனக்கு ஒருவர் தந்த துண்டு பிரசுரத்தின் விளைவு.துண்டு பிரசுரம் மூலம் மதம் மாற்றுகிறார்கள் வெள்ளை உடை துறவிகள்..!
நிச்சயம் பிரதமர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்..கதவை மூடிக்கொண்டு நடத்தப்படும் தேவாலய மேடை பேச்சின் மர்மம் என்னவோ..?ஆனால் நிச்சயம் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு….!
14
தகவல் அரசியலும் மாவோயிசமும்
நான் உண்மையை சொல்வேன்.கேள்வி கேட்பேன்.எனக்கென்ன பயம் என்ற வசனங்கள் கருத்து சுதந்திரத்தின் வெளிப்பாடு.
சமீபமாக இந்த வசனங்களை யாரிடமும் இருந்து கேட்க முடியவில்லை.பத்திரிகைகள் கூட அடங்கிவிடுகிறது அதிகாரத்தின் முன்பு ,நாம் ஏன் என்ற எண்ணம் பலருக்கு.
இதில் எழுத்தாளர்கள் படுகொலை வேறு.யாருக்கு தான் கருத்து சொல்ல தோன்றும்.ஏன் எனக்கும் இந்த கசப்பான அனுபவம் ,அயோக்கியத்தில் களேபரத்திற்காக எனக்கு பல ஆர்.எஸ்.எஸ் நண்பர்களிடம் இருந்து கொஞ்சம் கண்மூடித்தனமான விமர்சனங்கள் வந்திருந்தது.
ஏன் நம் திரு.பெருமாள்முருகனுக்கு ஏற்படாத எதிர்ப்பா…? நம் ஆ.மார்க்ஸ்க்கு கிடைக்காத மிரட்டல்களா…? அந்த மேதைகள் பயந்திருந்தால் இந்நேரம் எழுத்துலகம் எந்த நிலையில் இருந்திருக்கும்.
சொல்வதை அஞ்சாமல் சொல்,எழுதுவதை அஞ்சாமல் எழுது என்றுபோய் சொல்வதை முதலாளிகளுக்கு ஆதரவாக சொல்,எழுதுவதை அவர்களுக்கு சாதகமாக எழுது என மாறிவிட்டது.தகவல் என்பது ஆயிரம் அணுஉலைகளை விட ஆபத்தானது.தகவலை பரப்புபவை ஒரு அரசுக்கு சமம் ஒரு வேளை அனைவராலும் படிக்கப்பட்டால்.அப்பேற்பட்ட தகவல் சொல்லும் அமைப்புகள் மீது பதிக்கப்படும் தடைகள் சிலகாலம் வேண்டுமானால் பாதுகாப்பு வழங்கலாம்.ஆனால் அதிகமாக கட்டுப்படுத்தபடுபவை ஒரு நாள் நிச்சயம் அதிக பலத்துடன் கட்டுப்பாடுகளை மீறும்.அதுபோல தகவல் நிறுவனங்கள் நினைத்தால் அரசை கூட கலைக்கலாம்.யாரை வேண்டுமானாலும் கலங்கப்படுத்தலாம்.
கருத்து சுதந்திரம் மெல்ல மெல்ல பறிக்கப்படுவதாகவே தோன்றுகிறது சில காலமாக.மோடி ஆட்சியமைத்த உடன் நாடெங்கும் உள்ள செய்திதாள்கள் மோடியின் சொல்பேச்சுகேட்டு செயல்படும் பொம்மை போல ஆகிவிட்டது.சுதந்திர இந்தியாவில் மாவோ கருத்துகளை பரப்ப உரிமையில்லை.இங்கு பகுத்தறிவுடன் மதங்களை பற்றி கேள்வி கேட்க உரிமையில்லை.அரசை குற்றவாளியாக்கும் எதையும் மக்களிடம் சொல்ல உரிமையில்லை,அண்டை நாடு பற்றிய குறைகளை சொல்லவும் உரிமையில்லை.நீதிமன்றங்களால் கூட கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நிலையில் திருப்பிவிடப்படுகிறது.
ஒரு சவால்,மும்பைக்கு சென்று உங்களால் பால் தாக்கரேவையோ,ராஜ் தாக்கரே பற்றி விமர்சித்துவிட்டு சேதாரம் இல்லாமல் திரும்பமுடியுமா..? பதில் என்னவோ முடியாது தான்.அங்கு நிலைமை வேறு.இது தான் இந்தியாவின் கருத்து சுதந்திரம்.ஐ.நா அவையில் கூட ஊமைகளாக தான் எப்போதுமே இருந்துவருகிறோம்.
எங்கு பத்திரிக்கைகள் தடுக்கப்படுகிறதோ அங்கு சுதந்திரம் இழக்கப்படுகிறது.இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கு கருத்து சுதந்திரத்தை பரிபூரணமாக வழங்கியுள்ளது.நமக்கு மோடி மட்டுமில்லாமல் இந்து,முஸ்லீம்,கிறிஸ்தவ மதத்தையும்,எந்த சாதியையும் பிறர் மனது புண்படாதவகையில் முழுஉரிமை உண்டு.
ஆனால் இங்கு நிலைவேறு.நாம் மோடியையோ,நம் முதல்வரை பற்றி கருத்து கூறினால் உடனே அவர்களின் அடிவருடிகளால் பிரச்சினை ஏற்படுத்தபடுவதும் வழக்கமே.சட்டமோ வேடிக்கை பார்த்துகொண்டு தான் இருக்கும்.அதிகாரம் சட்டத்தை விட வலியது.யார் தான் எதிர்ப்பார் அதிகாரத்தை.எதிர்த்தால் தீவிரவாதிபட்டம் வழங்கி சிறையில் அடைப்பதும் இங்கேதான்.
எந்த ஒரு அரசும்,தம் அரசை பற்றி நல்ல அபிமானத்தை மக்களிடையே ஏற்படுத்த முதலில் நாடுவது செய்திதாள்களை தான்.பழைய சோவியத் ரஷ்யாவில் தகவலை பரப்புவது ஒரு ராஜதந்திரகலையாக போற்றி வழக்கப்பட்டது.அங்கு உள்ள உளவு அமைப்பான KGBயில் தகவல் பரப்புதலுககென்றே Department of Active Measures என்ற ஒரு பிரிவு இயங்கி சர்வதேச அளவில் செயல்பட்டு வந்தது.
அமெரிக்காவில் NSA,CIA போன்ற உளவு அமைப்புகள் தீவிரவாதிகளை விட தகவல் பரப்புபவைகளை கண்டு அஞ்சியே அவற்றை மிகவும் கவனமாக கையாண்டுவருகிறது.அவர்களால் குடைசாய்க்கப்பட்ட அரசாங்கங்கள் யாவும் CIAவின் உளவியல் போர்முறைக்கு முதலில் பலியாக்கப்பட்டு பின் கொரில்லா போர்முறையால் விழ்த்தப்பட்டதே வரலாறு.
விக்கிலீக்ஸ்,கிரிப்டோம் போன்ற வலைதளங்கள் அரசாங்க ரகசியங்களை வெளியிட்டபோது அதை எதிர்த்து கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஜுலியன் அசாஞ்சேவை கொலை செய்ய திட்டமிட்ட வரலாறும் அமெரிக்காவுடையது.இப்படி உலகமெங்கும் அடக்கப்படும் கருத்து சுதந்திரம் எரிமலையாக வெடித்ததே வரலாறு.அந்த நிலை இந்தியாவில் ஏற்ப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிடும் அபாயம்.முறைபடுத்திய தகவல் பாதுகாப்பு உடைய அமெரிக்காவாலே சமாளிக்க முடியாத போது இந்தியா ?
மேலும் எனது பார்வையில் தமிழக செய்தி நிறுவனமான புதிய தலைமுறை அரசியல் களத்துக்கு தயாராகி வருகிறது என தோன்றுகிறது.புதுமை எந்த ஒரு எதிர்ப்பு இன்றி ஏற்றுக்கொள்ளப்படும்போது பழமை புதுமை போல மாற ஆரம்பித்துவிடுகிறது.இங்கு அரசியல் களம் தகவல் தொழில்நுட்பத்தை முழுக்க முழுக்க நம்பியிருக்கும் படி மாறியுள்ளது.
அப்படி மாற்றியதில் புதிய தலைமுறை செய்தி நிறுவனத்துக்கு முக்கிய பங்கு உண்டு.செய்தி நிறுவனங்களில் சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்தி கொண்டதில் முதலிடம் புதிய தலைமுறைக்கு உண்டு.வாடஸ்அப் வழியே கருத்து கேட்பு,தகவல் சேகரிப்பு என புரட்சியை அறிமுகப்படுத்தியதில் புதிய தலைமுறையின் பங்கு இன்றியமையாதது.
மேலும் புதிய தலைமுறையால் நடத்தப்படும் நம்மால் முடியும் ,ரெளத்திரம் பழகு போன்ற நிகழ்ச்சிகள் முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்தை இலவசமாக தரக்கூடியது.புதுமை காதலர்களாக நம் மக்கள் இருந்தாலும் பழமையை மெதுவாக தான் மறப்பார்கள்.மறதி இந்தியர்களின் தேசிய வியாதி.ஆனால் படித்தவர்கள் அரசியலுக்கு வருவது எவ்வளவு நல்லதோ அந்த அளவுக்கு தீமை தரக்கூடியது.ஏனெனில் படித்தவர்கள் தீங்கு தரும் எண்ணத்துடன் அரசியலுக்கு வரும்போது அவர்களது தவறை கண்டறிவது கடினமே.இனி வரும் 2020 பொதுதேர்தலில் புதிய தலைமுறையை அரசியலில் எதிர்பார்க்கலாம்.
மிக அழகாக கட்டமைக்கப்பட்ட செயல்முறைகள்.முதலில் செய்தி நிறுவனத்தை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டுசெல்வது.பின்பு அதை காண,கேட்க,பார்க்க வைப்பது.பின்பு சமூக சேவை நிகழ்ச்சிகளை நடத்தி விளம்பரப்படுத்துவது.என சென்றுகொண்டிருக்கிறது.
இந்தியாவில் மதம்,சாதி,இனம்,மொழி என கருத்து சுதந்திரத்தை தடுக்கும் தடைகற்கள் ஏராளம்.ஒருவேளை யாரும் மதத்தை பற்றி பற்றி கருத்து வெளியிடவில்லை எனில் இன்று எப்படி பல புதிய மதக்கோட்பாடுகள் வந்திருக்கும்.பொதுவுடமை,மாவோயிசம்,மார்க்கிசியம் என யாவும் கட்டுப்படுத்த கட்டுபடுத்த வளருபவை.நீங்கள் இன்று அல்லது ஒரு வருடத்துக்கு மாவோ கருத்துகள் பரவுவதை தடுக்கலாம் ஆனால் மாறும் அரசாங்கள்,மாறாத,இறக்காத கொள்கைகளை வீழ்த்தமுடிவதில்லை.
உங்கள் சிந்தனைக்கு ,நீங்கள் ஒவ்வொரு முறையும் கடும்முயற்சி எடுத்து மாவோயிஸ்டுகளை கைது செய்தாலும் மீண்டும் மீண்டும் அந்த சித்தாந்தம் பரவுவது உங்களால் கட்டுப்படுத்த முடிகிறதா மாவோயிசத்தை? இந்துத்துவாதிகள் ரயிலை எரித்தால் தவறில்லை,ஆனால் மாவோயிசவாதிகள் ரயிலை கொளுத்தினால் தவறா? இந்துத்துவாதிகள் பிற மதத்தினரை கொல்லும்படி துண்டுபிரசுரம் விநியோகம் செய்தால் தவறில்லை ஆனால் மாவோயிசவாதிகள் காலகாலமாக தீமையை மட்டும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தியத்துக்கு எதிராக துண்டுபிரசுரம் விநியோகம் செய்தால் தவறா?
வடகிழக்கு இந்தியா முழுவதும் பொதுவுடமைவாதம் வளர்ந்து வந்த போது அதை தடுக்க பொதுவுடமை எதிர்ப்பு கருத்துகளை பாடபுத்தகத்தை சேர்த்து போதிக்க அரசாணை பிறப்பித்தது எவ்வளவு கேவலமான செய்கை?
உங்கள் ஒரு மாவோயிஸ்டையோ கொல்லமுடியலாம்,ஆனால் ஒருபோதும் வீழ்த்தமுடியாது மாவோவின் வார்த்தைகளையும் கொரில்லா போர்யுக்தியையும்.
மாறும் அரசாங்கத்தால் இறவாத,மாறாத கொள்கைகளை ஒருபோதும் வீழ்த்தமுடியாது. எங்கு ஒரு கொள்கை அதிகமாக கட்டுப்படுத்த படுகிறதோ அங்கு அது கட்டுப்பாடுகளை மீறி வெளிப்படுவது இயல்பு.
நீங்கள் மாவோயிசத்தை தடை செய்தால் இந்துத்துவத்தையும் தடை செய்யுங்கள்.அதுவே சமநீதி.கருத்து சுதந்திரம்,கருத்துக்கு சொந்தக்காரர்க்கு பாதுகாப்பு .அரசியல் சாக்கடையல்ல அது நம் பார்வையை பொறுத்தே.என்றென்றும் நேதாஜி மற்றும் மாவோ வழியில் பயணப்படுவோம் முதலாளித்துவத்தை சாய்க்க…!
15
நள்ளிரவு
நான் எப்போதுமே கல்லூரியில் விடுமுறைக்கு ஊருக்கு செல்வது வழக்கம்.எனது பயண நேரம் சமார் ஏழரை மணிநேரம்.சரி இருக்கட்டும் என மாலை ஒரு ஆறு மணிக்கு ஊருக்கு கிளம்புவேன்.
எப்போதும் ஒரு நள்ளிரவு ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கு வீட்டுக்கு சென்று எல்லோரையும் எழுப்பிவிடுவது வழக்கம் மட்டுமில்லாமல் பழக்கம்.அன்று அதேப்போல நடுராத்திரி ஒன்றரை மணி.
எல்லா நகர பேருந்து போக்குவரத்தும் இல்லா பொழுது.ஒன்னு ஆட்டோவில் போகனும் இல்ல நடந்து போகனும்.
மற்ற பொழுதுகளில் ஆட்டோ கட்டணம் பத்து ரூபாய் ஆனால் நள்ளிரவில் பத்து அடிக்கே பத்து ரூபாய்.வீட்டுக்கு போக அறுபது ரூபாய் ஆகும்.
கையில் காசு இல்லை.ஆனால் பத்து ரூபாய் இருந்தது.
முதுகில் ஒரு கருப்பு நிற பை.அவை தான் என் ஆயுதங்களான ஹெட்செட்,சார்ஜர்,பவர்பேங்க் ஆகியவற்றையும் என் விலைமதிப்பற்ற குப்பைகளை சுமந்து எனக்கு அதிக எடையளித்து கொண்டிருந்தது.
சரி நடப்போம் என நடக்க ஆரம்பித்தேன்.காலைப்பொழுதில் நடந்தால் குறைந்தது ஒரு கால் மணிநேரம் ஆகும்.நடக்க ஆரம்பிக்கும் போதே பயமும் என்னுடன் நடக்க ஆரம்பித்துவிட்டது.மனிதர்களை கண்டு பயப்பட்டதில்லை.ஆனால் இந்த ஐந்தறிவு நன்றியுள்ள குரைக்கும் கடிக்க கூடிய நாய்களை கண்டுபயந்ததுண்டு.
ஏனெனில் அவை நள்ளிரவில் தங்களுக்கு என ஒரு இந்தியா பாக்கிஸ்தான் எல்லை வகுத்து காவல் காத்துக்கொண்டே ஆட்சி புரியும்.தம் இனத்தவரை தவிர வேறுயாரும் வந்துவிட்டால் இனவெறியில் குரைக்கவோ அல்லது கடிக்கவோ பாய்ந்து விடும்.
பயத்தோடு கதை பேசிக்கொண்டே பயணித்ததில் இடையில் நிறைய சுவாரசியமான சின்ன கல் எறி சண்டைகள் நாய்களுடன்.இன்னும் கொஞ்ச தூரம் தான் என மனதை சாந்தப்படுத்திய போது அங்கே ஒரு பழக்கடை.
அது தேசிய நெடுஞ்சாலை ஆயிற்றே.கையில் பத்து ரூபாய் எனும் பெரும்தொகை இருந்தது.
அப்போது என் ஆயுத மூட்டையை குலுக்கிய போது சில்லறை சப்தங்கள்.உடனே ஒரு தீவிரவாத தடுப்புதுறை அதிகாரி போல ஆயுத மூட்டையில் தேடிய போது ஒரு ஐந்து அழகான வட்ட நாணயங்கள்.இப்போது கையில் பதினைந்து ரூபாய்.பழக்கடை வெளிச்சம் அங்கு மட்டும் ஆள் நடமாட்டமில்லா பகலை பரப்பிக்கொண்டிருந்து.
பழக்கடைக்கு சென்று பதினைந்து ரூபாயை அந்த முரட்டுத்தனமான தோற்றமுள்ள கடைக்காரரிடம் கொடுத்து குடிக்க குளிர்பானம் வாங்கி பயணத்தே தொடர்ந்த போது என் உடன் வந்த பயத்தை காணவில்லை.
அப்போது கடிகாரம் போல சார்ஜ் இல்லாமல் மங்கிய வெளிச்சமுள்ள மொபைலில் நேரம் இரண்டு மணி பதினைந்து நிமிடங்கள் என எண்களில் இருந்தது.
நடப்பதை தொடர்ந்த போது என் நள்ளிரவு பயணம் முடியும் படி என் வீடு வந்திருந்தது என் கண்ணுக்கும்,காலுக்கும் அருகே.பிறகு என்ன வழக்கம் போல வீட்டில் எல்லோரையும் எழுப்பிவிட்டு தூங்க ஆரம்பித்தேன்.
காலையில் அதே நெடுஞ்சாலையில் பயணித்த போது அந்த நாய்கள் என்னை மன்னித்து விடு என சொல்லும் படி பார்வையை வீசியது.
நள்ளிரவு பயணங்களில் பயமும் நாய்களும்,கல்லுமே துணை தனியாக பயணிக்கிறவர்களுக்கு எப்போதும்.அனுபவம் புதுமை…பகிர ஆசைப்பட்டேன்.அவ்வளவுதான்.
16
முடிவுரை
தமிழுக்கு எங்கே முடிவு….. இன்னும் தொடர்வோம் போரும் அமைதியை போல..
கருத்துகள்
கருத்துரையிடுக