இப்படிக்கு நான்
வரலாறு
Backஇப்படிக்கு நான் (வாழ்க்கை வரலாறு)
பவள சங்கரி திருநாவுக்கரசு
Contents
இப்படிக்கு நான் (வாழ்க்கை வரலாறு)
அணிந்துரை
1. உயர்திரு எஸ்.பி. வெங்கடாசலம் அவர்களின் மேன்மைமிகு வாழ்க்கை வரலாறு! - பகுதி 1
2. எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 2
3. எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 3
4. எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 4
5. எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 5
6. எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 6
7. எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 7
8. எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 8
9. எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 9
10. தோழர் எஸ்.பி.வி. அவர்களின் தலைமுறை உறவுகள்
11. புகைப்படங்கள்
ஆசிரியர் பற்றி
Free Tamil Ebooks - எங்களைப் பற்றி
நன்றி
1
இப்படிக்கு நான் (வாழ்க்கை வரலாறு)
விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைப் போராளி எஸ். பி. வெங்கடாசலம் எண்ணச் சிதறல்கள்
எழுத்து வடிவம் – திருமதி தி. பவளசங்கரி, ஆசிரியர், வல்லமை இணைய இதழ் www.vallamai.com
வெளியீடு – படிகள் படிப்பியக்கம், சித்தார்த்தா பள்ளி, ஈரோடு 638 003
சாதி, மதம், மொழி கடந்து ஈரோடு மக்கள் அனைவராலும் தோழர் எஸ்.பி.வி. என அன்புடன் அழைக்கப்பட்டவரும், கட்சி, அரசியல் கடந்து அனைவராலும் நட்புறவுடன் அன்பு பாராட்டப்பட்டவரும், சுதந்திரப் போராட்டத் தியாகி மற்றும் பொதுவுடமைப் போராளியுமான அமரர். எஸ். பி. வெங்கடாசலம் ஐயா அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரின் எண்ணச் சிதறல்களை நூல் வடிவாக்கி, ‘இப்படிக்கு நான்’ எனப் பெயரிட்டு, ஐயா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில் 12 – 03 – 2014 அன்று சான்றோர்கள் முன்னிலையில் முன்னாள் அமைச்சரும், எஸ். பி. வி. அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான திருவாளர் சு. முத்துசாமி அவர்களால் வெளியிடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து சான்றோர்களும், அரசியல் தளத்தில் வேறுபட்டிருந்தாலும், மனித நேயம் என்ற ஒற்றை சொல்லில் ஒன்று பட்டிருந்ததாலேயே ஒரே மேடையில் ஒன்று கலந்து உறவாட முடிந்தது. உண்மையில் இது அந்த மனித நேயத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றே கூற வேண்டும். அவருடைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அனைவரின் எண்ணங்களும் உண்மையான, தன்னலமற்ற மக்கள் சேவை என்பதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தது தனிச் சிறப்பு!
இந்த நூலின் சாரங்கள், காணொலி வடிவாக, திரு இரவிச்சந்திரன் அவர்கள் மூலமாகப் பதிவு செய்யப்பட்ட 9 காணொலிகளிலிருந்து எழுத்துருவாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றது பெரும் பேறாக எண்ணுகிறேன். ‘இப்படிக்கு நான்’ என்ற இந்நூல் அவர் கூறியவாறு இயன்றவரை அவர் நடையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் திரு ஜீவானந்தம், திரு கல்யாண சுந்தரம் போன்றவர்களுடன் ஐயா கொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளும், அது குறித்த பல சம்பவங்களும் சுவைபட இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது சிறப்பு. இந்நூல் ஐயாவின் வாழ்க்கை வரலாறு என்பதையும் கடந்து மிகச் சிறந்த இலக்கியமாகப் பரிமளிக்கிறது என்பதை வாசிப்பவர்கள் உணரக்கூடும். இலக்கியம் என்பதே காலத்தின் கண்ணாடி என்ற வகையில், திரு எஸ் .பி. வி. அவர்களின் நினைவலைகள் அனைத்தும் அக்காலத்தைத் துல்லியமாக, பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறைமைகள், மக்களின் மன நிலைகள், இன்ப துன்பங்கள் என அனைத்தையும் மிக வெளிப்படையாக, எந்த அலங்காரப் பூச்சும் இல்லாமல் பிரதிபலிப்பதாக உள்ளது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் முன்பு நடந்த நிகழ்ச்சிகளை வெகு துல்லியமாக தேதி, நேரம், காலம், பெயர்கள் வாரியாக நினைவில் கொண்டு அவர் கொடுத்துள்ள தகவல்கள் ஆச்சரியமேற்படுத்துபவை. நாட்டு நலம் தம் உயிர் மூச்சோடு இணைந்த ஒன்று என்பதை தம் ஒவ்வொரு சொல்லிலும் தெளிவாக்குகிறார்.
“சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். கம்யூனிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து இறுதி வரை செயல்பட்டவர். ஈரோடு நகர் மன்றம் தமிழ் நாட்டில் மிகப் பழமையானது. தந்தை பெரியார் அவர்களை உருவாக்கிய பெரிய நகரம் ஈரோடு. இது தமிழ்நாட்டின் அரசியல், சமூக மாற்றம், சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பொதுவுடமை இயக்கம் ஆகிய அனைத்து முற்போக்கு இயக்கங்களுக்கும் உந்துசக்தியாக இன்றும் விளங்கிவருகிறது. ஈரோட்டுப் பகுத்தறிவுப் பாசறையோடு நெருங்கிய தொடர்புடன் பிறந்து வளர்ந்த அனுபவங்களையும் நிகழ்வுகளையும் தோழர் எஸ்.பி.வி. அவர்களின் முதிய வயதில் வாய் மொழியாகவே பதிவு செய்து அதிலிருந்து எழுத்து வடிவமாக இந்நூல் பதிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. இந்நூல் நிலையான ஆவணமாகும்” - திரு இரா. நல்லகண்ணு அவர்களின் அணிந்துரையிலிருந்து…
இந்நூலை மின்னாக்கம் செய்து அனைவரும் எளிதாக வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ள FreeTamilEbooks குழுவிற்கு என் மனமார்ந்த நன்றியும், பாராட்டுகளும்.
அன்புடன்
பவள சங்கரி
coraled@gmail.com
மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
2
அணிந்துரை
இரா. நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
சென்னை.
ஈரோடு நகரில் தோழர் எஸ்.பி.வி. என்றால் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அனைவருக்கும் அறிமுகமான பெயராகும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தோழர் எஸ்,பி. வெங்கடாசலம் அவர்கள் எல்லோரிடமும் அன்பாகப் பழகும் பண்பாளர். அடித்தட்டு மக்கள், கைத்தறி நெசவாளர், வணிகர்கள், விவசாயிகள், இளைஞர்கள், முதியவர்கள் அனைவரிடமும் சரளமாகப் பேசிப் பழகுவார்.
சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். கம்யூனிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து இறுதிவரை செயல்பட்டவர். ஈரோடு நகர் மன்றம் தமிழ் நாட்டில் மிகப் பழமையானது. வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டவர்.
தந்தை பெரியார் அவர்களை உருவாக்கிய பெரிய நகரம் ஈரோடு. இது தமிழ்நாட்டில் அரசியல், சமூக மாற்றம், சுய மரியாதை இயக்கம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பொதுவுடமை இயக்கம் ஆகிய அனைத்து முற்போக்கு இயக்கங்களுக்கும் உந்துசக்தியாக இன்றும் விளங்கி வருகிறது.
ஈரோட்டுப் பகுத்தறிவுப் பாசறையோடு நெருங்கிய தொடர்புடன் பிறந்து வளர்ந்த அனுபவங்களையும், நிகழ்வுகளையும் தோழர் எஸ்.பி.வி. அவர்களின் முதிய வயதில் வாய் மொழியாகவே பதிவு செய்து அதிலிருந்து எழுத்து வடிவமாக இந்நூல் பதிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். கைத்தறி நெசவு தொடங்கி அச்சுப்பட்டறை, வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, போன்ற முப்பதுக்கும் மேலான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் அனுபவங்கள் வியப்புறச் செய்கின்றன. அத்தனை தொழில்களிலும் ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து வந்திருக்கும் சிறப்பான செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நகர்மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டும், நகர்மன்ற சுகாதாரத் தொழிலாளர்களை அணி திரட்டியும், அவர்களின் குறைகளைத் தீர்த்து வைத்தும்; தலைவரைத் தேர்ந்தெடுத்தும் செய்த சாகச படிப்பினைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சாதி மதத்தை மறுத்து, காதல் திருமணம் செய்துகொண்ட சுவையான செய்திகள்; ஆறேழு தலைமுறையின் குடும்ப வாழ்க்கை முறைகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜீவா, கல்யாண சுந்தரம், பி.ராமமூர்த்தி, பால தண்டாயுதம் ஆகியோரின் அணுகுமுறைகள், இன்றைய அரசியல்வாதிகளுக்கு படிப்பினையாக விளங்கும் வழியில் தோழர் எஸ்.பி.வி. சொல்லியிருக்கிறார்.
ஈரோடு மாநகரின் வளர்ச்சியோடும், அரசியல் கட்சி இயக்கங்களோடும் பிறந்து, வளர்ந்து பொது வாழ்விலும் ஈடுபட்ட செழுமையான அனுபவங்களின் அரிய பெட்டகமாக இந்நூல் விளங்குகிறது.
பழமையான தமிழ்ச் சமுதாயத்தில் வாழ்ந்து எதிர்நீச்சல் அடித்துக் கரையேறியிருக்கிறார் என்பதை அருமைத் தோழர் எஸ்.பி. வெங்கடாசலம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பாடமாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. குடும்பக் கொடி வழியும் இணைந்து கொடுக்கப்பட்டுள்ளது.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி – இவன் தந்தை
எந்நோற்றான் கொல் எனும் சொல் – குறள்.
இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக மருத்துவர் ஜீவானந்தம் கடமையாற்றியிருக்கிறார். அமரர் எஸ்.பி.வெங்கடாசலம் அவர்களின் முதலாமாண்டு நினைவாக வெளியிடப்படும் இந்நூல் நிலையான ஆவணமாகும்.
அமரர் எஸ்.பி.வி. அவர்களுக்கு அஞ்சலி. செவ்வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
1
உயர்திரு எஸ்.பி. வெங்கடாசலம் அவர்களின் மேன்மைமிகு வாழ்க்கை வரலாறு! - பகுதி 1
1922 இல் மே மாதம் 10 ஆம் நாள் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் குவா குவா என்ற சத்தம் கேட்டது . இந்தத் தொகுப்பின் முதல் சத்தம் இதுவே . இந்தக் குழந்தையின் தாத்தா சீரங்க முதலியாருடைய வாரிசுகள் 1. திரு . எஸ் . பழனியப்ப முதலியார் . 2. திரு . எஸ் . சின்னப்ப முதலியார் . பின்னாளில் இருமொழி சொற்கொண்டல் என்று குன்றக்குடி அடிகளால் பொற்பதக்கம் வழங்கப்பட்ட திரு . எஸ் . மீனாட்சி சுந்தரம் முதலியார் 5. பெருமாயி அம்மாள் . 6. மீனாம்பாள் . 7. எஸ் . சோமசுந்தரம் .
பழனியப்ப முதலியாரின் வாரிசுகள் எஸ் . பி . கருப்பண்ண முதலியார் , 2. தையல் நாயகி அம்மாள் , 3. விசாலாட்சி அம்மாள் , 4. எஸ் . பி . வெங்கடாசலம் 5. திரு எஸ் . பி . ரெங்கநாதன் , திரு . எஸ் . பி . சுப்பிரமணியன் . முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும்பொதுவுடமை என்று பாரதியார் பாடியபோது குடும்பக் கட்டுப்பாடு இல்லாத நிலையில் ஒரு குழந்தை என்றில்லாமல் ஒரு குடும்பத்தில் ஆறு , ஏழு என்று இருந்த காலம் அது .
எங்களுடைய பூர்வீகம் ஆறு தலைமுறைக்கு முன்பு சேலம் மாவட்டமாக இருந்து இன்றைக்கு நாமக்கல் மாவட்டத்தோடு இணைந்திருக்கின்ற திருச்செங்கோட்டிற்கு அருகிலே , 6 வது மைல்கல் தொலைவிலே இருக்கும் உலகப்பம்பாளையம் என்ற ஊர் . அந்த ஊரில்தான் ஆறு தலைமுறைகளுக்கு முன்பாக எங்களது பூர்வீகமாக வாழ்ந்து வந்தார்கள் . என்னுடைய தாத்தா முதல் திருமணம் செய்து கொண்டதன் மூலமாக , என்னுடைய தந்தை , என்னுடைய சித்தப்பா சின்னப்ப முதலியார் , அத்தை பெருமாயி அம்மாள் ஆகியோர் குழந்தைகளாகப் பிறந்தனர் . பின் எங்கள் பாட்டி இறந்த பிறகு , தாத்தா ஸ்ரீரங்க முதலியார் புரட்சிகரமான ஒரு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து செல்லம்மாள் என்ற விதவைப் பெண்ணை அந்தக் காலத்திலேயே , அதாவது 160-170 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டு புரட்சி ஏற்படுத்தினார்கள் . என் தந்தைக்கு உலகப்பம்பாளையத்தில் இருக்கும் போதே , அங்கேயே இருந்த , என் தாய் வழித் தாத்தா வேலப்ப முதலியார் அவர்களின் புதல்வி சிவகாமியை மணமுடித்து வைத்தார்கள் . என் தாய்வழித் தாத்தா கொஞ்சம் முரட்டுத்தனமான சுபாவம் உடையவர் . அவர் அந்தக்காலத்திலேயே , கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவி செய்யக்கூடியவர்களில் முன்னணியில் இருந்த கூளான்காளான் என்ற ஒரு கொள்ளைக்காரனுக்குச் சிறந்த நண்பராக இருந்தார் . மாட்டு வண்டியின் சலங்கை சத்தத்தை வைத்தே , அது கூளான்காளான் வண்டி என்பதைக் கண்டுபிடித்து , ‘ வேலப்பண்ணா , போய்ட்டு வாங்கண்ணா’ என்று தைரியமாகச் சொல்லி அனுப்புவார் . அந்த காலத்தில் ஏழை பாளைகள்கூட ‘அனந்த முடிச்சு’ என்ற ஒரு நகையைக் காதிலே போட்டுக்கொண்டு செல்லுவார்கள் . ஒரு முறை ஒரு பெண் இவர் இருக்கும் இடத்தைத் தாண்டி இன்னொரு கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தார் . அங்கே இருப்பவர்கள் , ‘ கூளான்காளான் இந்தப் பகுதியில் இருக்கான் . நீ அனந்த முடிச்சு போட்டுக்கிட்டு வந்திருக்கற .. அவன் புடுங்கிக்கிட்டு உட்டுறப் போறான்’ என்று சொன்னார்கள் , அதைக் கழற்றிக் கொடுத்துவிட்டு , ‘ நீங்கள் பகலிலே வரும்போது கொண்டு வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள் . அப்போது அந்தப்பக்கம் வந்த கூளானின் ஆட்கள் இதைக் கேட்டுவிட்டு , கூளானிடம் சென்று ‘இந்தப் பெண் அனந்த முடிச்சு போட்டிருந்தாள் . வருகிறபோது கழட்டிக் கொடுத்துவிட்டு வருகிறாள்’ என்று சொல்லிவிட்டார்கள் . அப்போது அவன் , ‘ உன்னை மாதிரி ஏழைகள்கிட்ட புடுங்கித்தான் நான் இது பண்ணுவேண்ணு நெனச்சியா . உன்னை மாதிரி ஏழை பாளைங்ககிட்ட நான் தொட மாட்டேன்னு உனக்குத் தெரியாதா ?’ என்று சொல்லி அந்தக் காதிலே ஒரு சின்ன பூட்டைப் பூட்டி கூளாங்காரன் சாவியை எடுத்துக் கொண்டுபோய்விடுவான் . அந்தம்மா தன் கிராமத்திற்குத் திரும்பி வந்து அந்தக் காதை தூக்கிப்பிடித்துக்கொண்டு , பூட்டை உடைத்துத்தான் எடுப்பார்கள் . அந்த கூளாங்காளனின் கதையை மாடர்ன் தியேட்டர்சின் டி . ஆர் . சுந்தரம் அவர்கள் திரைப்படமாக எடுத்தார்கள் . அந்தப் படம் மிக நன்றாக ஓடியது . அதற்குப் பெயர் பாலாமணி அல்லது பக்காத் திருடன் . யாராவது அந்தப் பகுதியில் அட்டகாசமோ , குறும்புத்தனமோ அல்லது தவறான காரியத்தை செய்துவிட்டதாகச் சொன்னாலோ அன்று இரவு இந்தக் காரியத்தைச் செய்தவனின் தோட்டத்திற்குப்போய் , ஒரு மூலிகை இருக்கிறது . அதைக் கொண்டுவந்து அங்கிருக்கும் மாட்டிற்குக் கொடுப்பார் . அந்த மூலிகையை அந்த மாடு தின்றுவிட்டால் கத்தியைக் கொண்டு அதன் தோலை அப்படியே உரித்துவிடுவார் . அந்தத் தோலில்லாத மாடு அப்படியே நிற்கும் . காலையில் சூரிய ஒளி பட்டவுடன் , கீழே விழுந்து குளிர்ந்து விடும் . இப்படியெல்லாம் செய்து வந்தார் அவர் . உலகப்பம்பாளையத்திற்குப் பக்கத்தில் இருந்த ஊரிலிருந்து குமரமங்கலத்திற்குக் குடிபெயர்ந்தார்கள் . குமரமங்கலம் ஜமீந்தாரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது . கடந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்த , டாக்டர் . சுப்புராயன் , ராதாபாய் சுப்புராயன் , அவருடைய தந்தை மோகன் குமாரமங்கலம் , பார்வதி கிருஷ்ணன் போன்றவர்களுக்கெல்லாம் தாத்தாவாக இருந்தார் . அவர் காலையிலே அப்படியே ஊர்வலமா சுத்திட்டு வருவார் . அப்போது அங்கே பாவடியிலே முதலியார்கள் பாவு காய வைத்துக் கொண்டிருப்பார்கள் . ஜமீந்தார் சும்மா இருக்காமல் கிண்டலாகப் பேசுவார் . ‘ என் அறைஞான் கயிறு படாத முதலியார் பொம்பிளைங்க யார் இருப்பாங்கன்னு’ சொல்லிவிட்டார் . இந்தச் செய்தியைக் கேட்ட பாவுத் தொழில் செய்யும் முதலியார்கள் , என்னுடைய தாய்வழித் தாத்தா வேலப்ப முதலியாரிடம் இந்தச் செய்தியைச் சொல்லிவிட்டார்கள் . அவர் என்ன செய்தாரென்றால் , ‘ நாளை காலை ஜமீந்தார் இந்தப்பக்கம் வருவார் . வரும்போது நான் அவரை செருப்பால் அடித்துவிட்டு , என் உடம்பிலே கத்தியைக் கொண்டு கீறிக்கொள்வேன் . நான் கள் குடித்துவிட்டு இந்தக் காரியத்தைச் செய்வேன் . என் உடலிலே இருக்கின்ற காயத்திலே இரத்தம் வடிகின்ற பொழுது நீங்கள் அப்படியே என்னை ஒரு கட்டிலில் போட்டு திருச்செங்கோடு போலீஸ் ஸ்டேஷனிலே கொண்டுபோய் படுக்க வைத்துவிடுங்கள் . நான் மரண வாக்குமூலம் கொடுப்பேன்’ என்று சொன்னார்கள் . அதுபோல மறு நாள் காலை ஜமீந்தார் அந்தப்பக்கம் வரும்போது , ‘ நேத்தைக்கு என்ன சொன்னேன்னு’ செருப்பாலேயே அடித்துவிட்டு , நிறைய கள் குடித்துவிட்டு , கத்தியால உடம்பெல்லாம் கீறிக்கொண்டார் . அவரை அப்படியே கட்டிலில் திருப்பிப்போட்டு திருச்செங்கோட்டு போலீசு ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றார்கள் . அங்கு , போலீசார் எஃப் . ஐ . ஆர் ., தாக்கல் செய்து , இவரும் மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டார் . இதற்குப் பிறகுதான் ஜமீந்தார் திருச்செங்கோட்டிற்குப்போய் , இந்த மாதிரி என்னை செருப்பால அடிச்சுட்டான்னு சொன்னார் . அதற்கு , ‘ எங்கையா .. நீர் இப்படி கத்தியால கீறிட்ட … சாகப்போற மாதிரி மரண வாக்குமூலம் கொடுத்திருக்கார் அவர் . நீ போய் அப்படி செய்யிலேன்னு எப்படி சொல்றது ? முதல் ரிப்போர்ட் பதிவு செய்திட்டோம் . உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமானால் அவரிடம் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் . நாங்க இதுல செய்யிறதுக்கு ஒன்னுமில்ல’ என்று சொல்லிட்டார் . அப்போது அவர் , ‘ வேலப்பண்ணா …. வேலப்பண்ணா … நமக்குள்ள விவகாரம் வேணாம் . ஏதோ நடந்தது , நடந்திருச்சி . நான் அதற்கு வருத்தம் தெரிவிச்சிக்கிறேன் . நீங்க கேசை வாபஸ் வாங்கிடுங்க’ என்று சொன்ன பிறகு அந்த கேசை வாபஸ் வாங்கினார்கள் .
அந்த உலகப்பம்பாளையம் எங்க பூர்வீகமா இருந்த காலத்திலே , அங்கு ஒரு நாயுடுப் பெண் இருந்தார் . அவர் வேறு சாதி இளைஞரைக் காதலித்தார் . அந்தக் காதலை பெண் வீட்டார் ஒப்புக்கொள்ளவில்லை . இந்த நிலையிலே இரண்டு பேரும் துணிந்து திருமணம் செய்து கொண்டார்கள் . திருமணம் முடிந்து சில நாட்களிலேயே யுத்தம் வருவதற்கான வாய்ப்பு இருப்பதால் , இராணுவத்திலிருந்து உடனே வரச்சொல்லி செய்தி வரவும் , அவரும் புறப்பட்டுச் சென்றுவிட்டார் . கணவன் பிரிந்த துக்கம் வேறு ; உறவினர்களின் விரோதம் வேறு ; இந்த நிலையிலே , முதலியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பெண்ணைத் தங்கள் குழந்தையாகத் தத்தெடுத்துக்கொண்டு வளர்த்தார்கள் . அந்தக் குழந்தை சில தினங்களிலேயே மரணம் அடைந்துவிட்டது . அந்த மரணமடைந்த பெண்ணை மதிக்கிற வகையிலே தேசத்திற்காகப் பாடுபடச் சென்று இராணுவத்திலே இறந்துபோன அவளுடைய கணவனின் உடைமைகள் இங்கே வந்துவிட்டது . அதைப்பார்த்தவுடன் தேசபக்தியுடன் அந்தப் பெண்ணின் காதலையும் பாராட்டியும் , அந்தப் பெண் இறந்தவுடன் அதற்கு ஒரு கோவிலைக் கட்டி , அந்தக் கோவிலைத் தங்கள் குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு இன்றைக்கும் ஒவ்வொரு அம்மாவாசையன்றும் இந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள் . தைப்பூசம் மிகச் சிறப்பாக நடைபெறும் . 3, 4 வருடங்களுக்கு ஒருமுறை சாமி செய்வார்கள் . இப்படி சிறப்பாக அந்தப் பெண்ணை தெய்வமாக வழிபட்டார்கள் . எல்லமேஸ்வரி என்ற அந்தப்பெண் வடுகப் பெண்ணாக இருந்தாலும் , நாங்கள் அவரை எல்லமேஸ்வரித் தாய் என்று சொல்லி தெய்வமாக ஏற்றுக்கொண்டோம் . இன்றைக்கும் எங்களில் பலர் குழந்தைக்கு எல்லமேஸ்வரி என்று பெயர் வைத்திருக்கிறார்கள் . நானும் என் பேத்திக்கு எல்லமேஸ்வரி என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன் . அதனால்தான் எங்களை வடுகக்கூட்டம் என்று கூப்பிடுவார்கள் . என்னுடைய மாமன் , மச்சான் எல்லாம் கிண்டலுக்காக வடுகக்கூட்டம் என்றே கூப்பிடுவார்கள் . இப்படி ஒரு உணர்ச்சிகரமான தெய்வத்தை வழிபடுவதை தேசபக்தியின் காரணமாகவும் , காதல் திருமணத்தை ஆதரிக்கின்ற முறையிலும் இந்தச் சம்பவம் 150-160 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கிறது என்று சொன்னால் மிகவும் வியக்கத்தக்கதாக இன்றும் கருதப்படுகிறது . அதன் பிறகு என்னுடைய தந்தைவழி தாத்தா ஈரோட்டிற்கு குடிபெயர்ந்து வந்துவிட்டார்கள் . வந்தவுடன் ஈரோட்டில் மஞ்சள் வியாபாரத்தைத் தொடங்கி செய்து வந்தார்கள் .
மஞ்சளின் விவசாயத்திலே கொள்முதல் செய்து அதைப் பதப்படுத்தி , பின்பு அதை கல்கத்தாவிற்கு ஏற்றுமதி செய்யும் தொழிலைச் செய்து வந்தார்கள் . இதேத் தொழிலைத்தான் ஈ . வே . ரா பெரியாரின் தகப்பனார் வெங்கடப்ப நாயக்கரும் செய்துவந்தார் . எனவே வெங்கட்டப்ப நாயக்கருக்கும் , என் தாத்தாவிற்கும் நல்ல நட்பு ஏற்பட்டது . முதன் முதலில் ஏற்பட்ட அந்த குடும்ப நட்பு , பின்னாளிலும் தொடர ஆரம்பித்தது . எப்படியென்றால் , என்னுடைய சித்தப்பா மீனாட்சி சுந்தரம் முதலியார் அந்தக் காலத்திலே ஈரோடு நகரத்திலேயே , செங்குந்தர் குலத்திலே முதல் பட்டதாரியாகத் திகழ்ந்தார் . அவர் தேசபக்தி உடையவர் . என் தாத்தாவிற்கும் தேசபக்தி அதிகமாக இருந்தது .
கப்பலோட்டிய தமிழன் வ . உ . சிதம்பரனார் அவர்கள் வெள்ளைக்காரனுக்குப் போட்டியாக ‘இந்தியன் ஸ்ட்ரீம் நேவிகேஷன் கம்பெனி (Indian Stream Navigation Company) என்று ஒரு கப்பல் கம்பெனியை ஆரம்பித்த நேரத்திலேயே , எனது பாட்டனார் திரு . சீரங்க முதலியார் , 1000 ரூபாய் கொடுத்து , கப்பல் கம்பெனியின் பங்குதாரராகத் தன்னை இணைத்துக்கொண்டார் . அந்தக் கப்பல் கம்பெனி தூத்துக்குடிக்கும் , இலங்கைக்குமான சுதேசிக் கப்பலை இயக்கி , வெள்ளைக்காரக் கப்பல் கம்பெனியை முடமாக்கியது . இந்த நிலையில் வ . உ . சி ., சுப்ரமணிய சிவா , பாரதியார் போன்றவர்கள் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக நடத்தி வந்தார்கள் . அவர்களின் வந்தே மாதரம் என்னும் கோஷம் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலிக்கச் செய்தது . இதனால் ஆத்திரமடைந்த மாவட்டக் கலெக்டர் ஆஷ்துரை ராஜதுவேஷ வழக்கில் கைது செய்து இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்புக்கூற காரணமாக இருந்தார் . ஒரு மனிதனுக்கு ஒரு ஆயுள்தான் . ஆனால் வெள்ளை ஆட்சி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது விசித்திரமானது . இவர்கள் சிறையில் இருக்கும்போது இந்திய நீராவிக் கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களை மிரட்டி பங்குகளுக்கு அதிக பணம் தருவதாகக் கூறியும் , மிரட்டியும் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிய பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி வ . உ . சி . தொடங்கிய சுதேசியக் கப்பல் கம்பெனியை மூடிவிட்டது . இந்தக் காலகட்டத்தில்தான் சீரங்க முதலியாரின் பங்குகளையும் அதிக விலைக்குக்கேட்டு , பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி முகவர்கள் விலை பேசினர் . ஆனால் அவர் அந்த பங்குகள் தேசபக்தியின் அடையாளச் சின்னங்கள் என்று கூறி விற்க மறுத்துவிட்டார் . அந்தப் பங்குகள் நீண்டகாலம் மீனாட்சிசுந்தரம் அவர்கள் வசம் இருந்தது . . இந்த தேசபக்தி என் தந்தைக்கும் , சித்தப்பாவிற்கும் , என் அண்ணனுக்கும் உண்டு . அது எனக்கும் தொடர ஆரம்பித்தது . மீனாட்சி சுந்தரம் முதலியார் அவர்கள் , பெரியாரோடு தொடர்பு ஏற்படுத்தி , பி . ஏ . பட்டப்படிப்பு முடித்தவுடன் காங்கிரசில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள் .
அப்போது பெரியார் அவர்கள் கோவை மாவட்ட காங்கிரசு கமிட்டியில் பொறுப்பாளராக இருந்தார் . அதிலே எனது சித்தப்பா அவர்களும் காங்கிரஸ் கமிட்டியில் பொறுப்பேற்றுக்கொண்டு , பணியாற்றி வந்தார்கள் . இப்படியாக ஆரம்பத்திலிருந்து எங்கள் குடும்பத்திற்கும் , பெரியார் குடும்பத்திற்கும் நட்பு ஏற்பட்டது . இந்த நேரத்தில் எனது தாத்தாவின் வியாபாரம் நொடித்துப்போய் பெரிய நட்டத்திற்கு ஆளானார்கள் . அதன் காரணமாக அவர் சில நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது . பிறகு என் தாத்தா இறந்தவுடன் , பெரியார் அவர்கள் என் சித்தப்பாவிடம் , ‘ சுந்தரம் நீ படிச்சுட்டு சும்மாதானே இருக்கிறாய் . உன் குடும்பமும் கஷ்டத்தில் இருக்கிறது . நீ ஏதாவது வேலையைப் பார்க்க வேண்டும்’ என்று சொன்னார்கள் . உடனே அவர் தான் கரெஸ்பாண்டெண்டாக இருந்த மகாஜன பள்ளியிலேயே ஆசியராக நியமிப்பதாகச் சொன்னார் . அவர் அன்றைக்கும் கதர் கட்டிக்கொண்டுதான் பள்ளிக்குச் செல்வார்கள் . அன்றைக்கு மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர்கள் எல்லாம் வெள்ளைக்காரர்கள்தான் . வெள்ளைக்காரர்கள் இவர் கிளாஸ் எடுப்பதைப் பார்த்து அசந்து போவார்கள் . என்ன அற்புதமாக ஆங்கிலத்தில் பேசி , மாணவர்களுக்கு எளிமையாகப் புரிகிற வகையில் வகுப்பெடுக்கிறார் என்று பாராட்டினார்கள் . பின்பு அவரை பி . எட் . படிக்க ஏற்பாடு செய்தார்கள் . பி . எட் . முடித்தவுடன் அவரை தலைமை ஆசிரியராக விருப்பமா , என்று அந்த ஆங்கில கல்வி அதிகாரி கேட்டார் . விருப்பம்தான் என்று சொன்னவுடன் , சிவகங்கை சமஸ்தானத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒரு தலைமை ஆசிரியப்பணி காலியாக இருக்கிறது . உன்னை அங்கே தலைமை ஆசிரியராக நியமிக்கிறேன் . போய் அங்கே வேலையைப் பார் என்று சொன்னார்கள் . அப்பொழுது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது . குழந்தைகளும் , தாயாரும் இருக்கிறார்கள் . எல்லோரும் குடும்பத்தோடு சிவகங்கைக்குப் போய் தங்கியிருந்தார்கள் . இவர் சிறந்த விளையாட்டு வீரராகவும் இருந்தார் . டென்னிஸ் விளையாடினாலும் சரி , கால்பந்து விளையாடினாலும் சரி , மிகச் சிறந்த விளையாட்டு வீரராக இருந்தார் . ஆகவே மகாராஜா அவர்கள் தினசரி மாலை நேரத்தில் இவருடன் சேர்ந்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் . பின்னாளில் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மாவட்டக் கலெக்டராக வந்தவர்கள் எல்லாம் ஈரோட்டிற்கு வந்தால் , சுந்தரத்தைக் கூப்பிடு என்று சொல்லி , 1 செட் , 2 செட் டென்னிஸ் விளையாடிவிட்டுத்தான் போகின்ற அளவிற்கு இவர் விளையாட்டு வீரராக இருந்தார் . பின்பு மீண்டும் மகாஜன ஸ்கூலில் தலைமை ஆசிரியர் பொறுப்பு கிடைத்தவுடன் , அதை ராஜினாமா செய்துவிட்டு இங்கே வந்து பணியை மேற்கொண்டார்கள் . இந்நிலையில் , எனக்கு ஐந்து வயது முடிந்தவுடன் , என்னை , இன்றைக்கு ஈரோட்டிலுள்ள ஈஸ்வரன் கோவிலுக்குப் பின்னால் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலிலே ஒரு உச்சிக்குடுமி வச்சிக்கிட்டு சட்டைப் போடாமல் வயசான வாத்தியாரிடம் , பள்ளியில் சேர்த்தார்கள் . அப்போது மணலிலேதான் விரலால் எழுத வேண்டும் . தவறாக எழுதினால் விரலைப்பிடித்து அழுத்தி அந்த மணலிலே எழுத வைப்பார்கள் . இரத்த நாளங்கள் வெளியில் தெரியுமளவிற்கு கை வலிக்கும் . ஓராண்டு நான் அப்பள்ளியில் படித்தேன் . பள்ளி ஆரம்பித்ததும் அங்கே பக்கத்துத் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தின் நிழல் எங்கே விழுகிறது என்று பார்த்து , அந்த நிழலை வைத்துத்தான் பள்ளிக்கூடம் ஆரம்பமாகும் . சாப்பாட்டிற்கு விடுகின்றபோதும் அந்த தென்னை மரத்தின் நிழல்தான் எங்களை அனுப்பிவைக்கும் . மாலையிலே தென்னை மரத்து நிழல் பின்னால் விழுந்தால் பள்ளிக்கூடம் விட்டு , நாங்கள் வீட்டிற்கு வருவோம் . இப்படி ஓராண்டு சென்ற பிறகு , நான் நகராட்சி ஆரம்பப்பள்ளி , இன்று டவுன் பள்ளியாக இருந்து கார்கள் எல்லாம் நிற்கின்ற இடமாக மாறி அது இப்போது பெரிய கடை வளாகமாகக்கட்ட அஸ்திவாரக்கல் போட்டு வேலை நடந்துவருகிறது .
அந்தப் பள்ளியிலே ஓராண்டுக் காலம் படித்தேன் . அதன் பிறகு மகாஜன உயர்நிலைப் பள்ளியில் 2 ம் வகுப்பில் போய்ச் சேர்ந்தேன் . நான் இரண்டாம் வகுப்பு படித்துவிட்டு 3-A வகுப்பிற்கு போகிறபோது எனக்கு ஆசிரியராக இருந்த மறக்க முடியாத பத்மநாப ஐயங்கார் என்பவர் , ஒரு மிகச் சிறந்த ஆசிரியர் . எளிமையாக மாணவர்களுக்குப் புரியும்படியாகக் சொல்லிக் கொடுப்பவர் . அப்பொழுது ஈ . வி . கே . எஸ் . சம்பத் அவர்கள் 4-5 வயதுக் குழந்தை . அப்போது பெரியார் அவர்கள் அந்தப் பள்ளியின் நிர்வாகத்தில் இருந்தார் . அப்போது சம்பத் அவர்கள் பள்ளிக்கு வரும்போது டேபிளிலேயே நிற்கச்சொல்லி பேசச் சொல்லுவார் . அப்போதே நன்றாகப் பேசும் திறமையுடையவராக இருந்தார் சம்பத் அவர்கள் . அந்தத் திறமைதான் பின்னால் அவருக்கு சொல்லின் செல்வர் சம்பத் என்ற ஒரு மரியாதைக்குரிய அடைமொழியைத் தேடித்தந்தது . சம்பத் பள்ளியில் படித்த காலத்தில் பள்ளியின் பேச்சுப் போட்டியில் சம்பத்திற்கும் என் மனைவி மேரிக்கும்தான் சரியான போட்டி இருக்கும் . சம்பத் பெரியாரிடமிருந்தும் என் மனைவிக்கு அறிஞர் அண்ணாவும் போட்டிக்க்கான கட்டுரைகளைத் தயார் செய்து கொடுப்பார்கள் . அதில் பெரும்பாலும் என் மனைவி வெற்றி பெறுவார் . அக்காலகட்டத்தில் இவர்களுக்கான போட்டியாக மட்டும் அல்லாமல் இவர்களுக்குத் தயாரித்துக்கொடுப்பதில் அண்ணாவிற்கும் , பெரியாருக்குமே பெரும் போட்டியிருக்கும் . படிக்கும் காலத்தில் என் மனைவி மீது ஈர்ப்பு ஏற்பட இதுவும் காரணமாக இருந்தது .
அதன் பிறகு நான் 5 வது படிக்கின்றபொழுது , தேசபக்தி அதிகமாக மனதில் ஊன்றிவிட்டது . காரணம் என்னவென்று சொன்னால் என் தந்தையும் , அண்ணனும் கதர்தான் கட்டுவார்கள் . எனக்கும் தீபாவளிக்கு கதர்தான் எடுத்துக்கொடுப்பார்கள் . இப்படியாக தேசபக்தி வளர ஆரம்பித்தது . அப்போது 5 ம் வகுப்பு படிக்கின்றபோது காந்தியடிகள் ஒரு கோஷத்தை வைத்தார்கள் . அந்தக் காலத்திலே சிவகாசியிலிருந்து பட்டாசு வராது . சைனாவிலிருந்துதான் வரும் . அதனாலேயே அதற்கு பெயரே சீன வெடி என்றிருந்தது . அப்போது காந்தியடிகள் சீனவெடியை வெடித்து காசைக் கரியாக்காதீர்கள் என்று ஒரு கோஷத்தை வைத்தார்கள் . என் மனதிலே இது ஆழமாகப் பதிந்திருந்தது . அன்றைக்கெல்லாம் வீட்டிலே விறகுதான் வைத்து எரிப்பார்கள் . அடுப்பிலேயிருந்து கரித்துண்டை எடுத்து , ‘ சீன வெடிகளை வெடித்து காசை கரியாக்காதீர்கள்’ என்று 5 ம் வகுப்பு படிக்கின்றபோதே சுவர்களிலெல்லாம் எழுதுவேன் . அந்தக் காலத்திலேயே தேசபக்தி என் உள்ளுணர்விலே இருந்தது . அப்பொழுது பகத்சிங் , ராஜகுரு , சுகதேவ் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டு , சந்திரசேகர ஆசாத் , கணேஷ்சக்ர வித்யார்த்தி , கல்பனாகர் , பிரீத்தி , அம்பிகா சக்ரவர்த்தி போன்றவர்களெல்லாம் ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலம்தான் வெள்ளைக்காரனை வெளியேற்ற முடியும் என்று நம்பிக்கையோடு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்கள் . அதற்கு , ‘ நவஜவான் இந்துஸ்தான் படை’ என்று பெயர் . அதில் இருந்த தொண்டர்களுக்கெல்லாம் இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசுப் படைத்தொண்டர்கள் என்று பெயரிருந்தது . அந்த நவஜவான் இயக்கத்தின் சார்பாக ஈரோட்டில் அப்போது ஒரு மாநாடு நடப்பதாக அறிவிக்கப்பட்டு வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது . அந்த மாநாடு இன்றைக்கு பரணி பட்டு சென்டருக்கு எதிரிலே இருக்கின்ற மார்க்கெட்டில் நடந்தது . அந்த மார்க்கெட் அந்தக் காலத்தில் வாரச்சந்தையாக இருந்தது . அங்கேதான் அந்த நவஜவான் கான்பரன்ஸ் நடைபெற்றது . அதற்கு சுபாஷ் சந்திரபோஸ் வருவதாக இருந்தது . ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரால் வர முடியவில்லை . அவர் வராததால் அங்கேயிருந்து சென்குப்தா அவர்கள் வந்தார்கள் . பிறகு அதிலே முக்கியத் தலைவர்களாக பத்மாவதி ஆசாத் , திருப்பூரில் இருக்கின்ற ஆசார் மில் சேட்டுடைய மனைவியார் பத்மாவதி ஆசாத் கலந்து கொண்டார்கள் . இன்னொன்று சுதந்திரம் பெற்ற பிறகு நிதியமைச்சராக இருந்த சிந்தாமணி தேஷ்முக்கினுடைய மனைவி துர்காபாய் அவர்கள் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டார்கள் . இப்படி வெளி மாநிலங்களிலிருந்து கலந்துகொண்டவர்களுடன் 3 நாட்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது . அந்த தொண்டர்களுக்கு கிட்டத்தட்ட 15 நாட்கள் பயிற்சி , ‘ திரிவேணி’ என்று சொல்லுகின்ற சிறந்த பயிற்சியாளர் வந்து தியாகி ஆஷிக்கினுடைய வீட்டின் மாடியிலும் , கேசவலால் காளிதாஸ் சேட் வீட்டு மாடியிலும் , தெப்பக்குள வீதியில் அன்றைக்கிருந்த சின்னியப்பம்பாளையம் சின்னசாமி கவுண்டர் அவர்களுடைய ரைஸ்மில் நெற்களத்திலேயும் , எங்களுக்கெல்லாம் பயிற்சியளிக்கப்பட்டது . அதிலே நான் , ஆர் . சி . கிருஷ்ணன் ஆர் . சி . ஷண்முகம் , ஆர் . சி . காவேரி , எஸ் . ஈ . தியாகராஜன் , கே . அர்த்தநாரி , பின்னாளில் மாடர்ன் தியேட்டர்சின் வேலுச்சாமி போன்றவர்களெல்லாம் தொண்டர் படையிலிருந்து பணியாற்றிக் கொண்டிருந்தோம் .
மகாநாடு காரணமாக இந்தப் பயிற்சிக்காக வேண்டி , நான் 15 நாட்கள் பள்ளிக்கூடம் போகவில்லை . அப்போது எனக்கு 10 வயது , 5 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் . அது முடிந்து நான் பள்ளிக்குச் சென்றபோது முதல் வகுப்பு ஆங்கில வகுப்பு . அந்த ஆங்கில வகுப்பிற்கு ஆசிரியராக இருந்தவர் ஜார்ஜ் . அந்தக் காலத்தில் சில கிறித்துவர்கள் , தாங்கள்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே தாங்கிக்கொண்டிருப்பதாக எண்ணி இருந்தார்கள் . பலர் தேசப்பற்றாளர்களாக இருந்தார்கள் . சிலர் வெள்ளைக்காரர்களுக்கு அடிமைப்பட்டவர்களாக இருந்தார்கள் . ஜி . எம் . எஸ் . என்று சொல்லுகின்ற இந்த ஆசிரியர் ஏன் 15 நாட்கள் வரவில்லை என்று கேட்டார் . நான் நவஜவான் இயக்கத்தோட மகாநாட்டிற்குப் போயிட்டேன்னு சொன்னேன் . ‘ ஓஹோ , நீங்க வெள்ளைக்காரனை வெளியேற்றத்திற்கான பயிற்சி பெறப்போயிட்டீங்களா ? ஏறி பெஞ்ச் மேல நில்லு’ன்னார் . அது காலையில் முதல் பீரியட் . அந்த வகுப்பு முடியும் வரை பெஞ்ச் மேல் ஏறி நின்றிருந்தும் அவர் விடவில்லை . அடுத்த ஆசிரியர் வந்ததும் உங்க பீரியட்டிலும் நிற்க வையுங்க , அடுத்த ஆசிரியர் வந்தாலும் நிற்க வைக்கச் சொல்லுங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டார் . அப்படி அன்று 4 பீரியட்டும் நின்னேன் . மதியமும் 3 பீரியட்டும் நின்னேன் . ஆக முதன்முதலில் பெற்ற தண்டனை ஒரு நாள் முழுவதும் பெஞ்ச்சின் மீது நின்றதுதான் . இப்படியாக தேசிய உணர்வோடு வளர்ந்து கொண்டிருந்த நான் , பின்னாளில் காங்கிரஸ் தேர்தல் வரும்போதெல்லாம் , காங்கிரசிற்காக வேலை செய்ய ஆரம்பித்தேன் . அப்போது எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் நிறைய இருந்தார்கள் .
அப்போது தேர்தல் சின்னங்களெல்லாம் கிடையாது . மஞ்சள் நிறப்பெட்டி , மற்றும் பச்சை நிறப்பெட்டி என இரண்டும்தான் இருக்கும் . பச்சை நிறப்பெட்டி ஜஸ்டிஸ் கட்சி சார்பில் நிற்பவருக்கும் , மஞ்சள் நிறப்பெட்டி , காங்கிரஸ் கட்சி சார்பில் நிற்பவர்களுக்குமானது . ஆகவே நாங்களெல்லாம் மஞ்சள் நிறப்பெட்டிக்கு வாக்களியுங்கள் என்று கோஷமிட்டுக்கொண்டு , தெருத்தெருவாக அலைந்து ஆட்களைச் சேகரித்துக்கொண்டிருந்தோம் . 1937 ம் ஆண்டு சென்னை ராஜ்ய சட்டசபைக்கு தேர்தல் வந்தது . அந்தத் தேர்தலில் காங்கிரசும் , ஜஸ்டிஸ் கட்சியும் சென்னை ராஜ்யம் முழுவதும் , ( சென்னை ராஜ்யம் என்று சொன்னால் இன்றைக்கு இருக்கிற தமிழ்நாடு , கேரளம் , ஆந்திரா , கர்நாடகத்தின் ஒரு பகுதி , இதெல்லாம் சேர்ந்ததுதான் ) அந்தப் போட்டி நடைபெற்றது . அந்தப் போட்டியில் ஈரோடு தொகுதியைப் பொறுத்த வரையில் , கோபி உட்பட நல்லதம்பி சக்கரை மன்றாடியார் , பழைய கோட்டை பட்டக்காரர் அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் நின்றார்கள் . அவர் மகாஜனப் பள்ளியில் நிர்வாகத்தில் இருந்தார்கள் . நான் வெள்ளைச் சட்டையை மஞ்சள் சாயத்தில் நனைத்து , அதைப் போட்டுக்கொண்டு ஊர்வலமாகச் சென்று ஓட்டுகளைச் சேகரிக்கும் வேலையைச் செய்துவந்தேன் . அப்பொழுது வரதராஜன் என்ற ஆசிரியர் - அவர் ஜில்லா போர்ட் பள்ளியில் டிரில் மாஸ்டராக இருந்தார் . அவர் பார்த்துவிட்டுப்போய் அன்று பள்ளி நிர்வாகத்தில் இருந்த சிக்கைய்ய நாயக்கரிடத்திலும் , பட்டக்காரரிடத்திலும் , மற்றவர்களிடத்திலும் சொல்லி ஜெய்சிங்குக்கு எதிராக , காங்கிரசுக்கு ஆதரவாக , சுந்தரத்தோட அண்ணன் பையன் மஞ்சள் பொட்டிக்கு வேலை செய்யறான் என்று தூண்டிவிட்டார்கள் . மறுநாள் காலையிலே பள்ளிக்கூடத்திற்குப் போனவுடன் , ராமசாமி என்ற பியூனை விட்டு என்னை வகுப்பிலிருந்து அழைத்து வந்து , ‘ நேத்து காங்கிரசு மஞ்சள் பொட்டிக்கு வேலைக்குப் போனியா’ன்னு கேட்டாரு . ‘ ஆமா , போனேன்’னு சொன்னேன் . அப்பல்லாம் Manual training class ன்னு ஒரு வகுப்பு இருந்தது . அதில் பிரம்பால நாற்காலி போன்றவை பின்னுவது உண்டு . அவர் ஒரு தடி வச்சிருப்பாரு . அந்தத் தடியால சக்கையா வெளுத்தாரு . ‘ நீ பள்ளிக்கூடத்தை விட்டு நின்னுக்கோ .. போ’ன்னார் . நான் வெளியில் போனேன் . உடனே ராமசாமியை விட்டு கூப்பிட்டு வான்னார் . மறுபடியும் வந்தேன் . மறுபடியும் பிரம்பிலே நாலு அடி அடித்து , போய் கிளாசில உட்காருன்னு சொன்னார் . இப்படியாகத் தொடர்ந்தது . விட்டு .. விட்டு .. தேசிய இயக்கத்திலே ஈரோடு தொண்டனாக இருந்தேன் . அதன் பிறகு அடுத்த ஆண்டு நகராட்சித் தேர்தல் நடந்தது . அப்பொழுதும் பச்சைப் பெட்டி , மஞ்சள் பெட்டி , ஜஸ்டிஸ் , காங்கிரசு கட்சி போட்டியிட்டது . இன்றைக்கும் கருணாநிதி ,’ எங்களுடைய தாய் கழகம் ஜஸ்டிஸ் பார்ட்டி’ என்று சொல்லுவார் . அது வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடித்த கட்சி . ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் , பச்சைப் பெட்டியிலே , இன்றைய நடுமாரியம்மன் கோயில் வார்டிலே , பள்ளியினுடைய தாளாளர் சிக்கைய்ய நாயக்கர் நின்றார் . அங்கே மஞ்சள் பெட்டியில் ஆர் . சி . கிருஷ்ணனுடைய அண்ணன் தியாகி . காவேரி அவர்கள் போட்டியிட்டார் . கடுமையான போட்டியாக இருந்தது அது . ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் ஒரு பவுன் ஒரு சீட்டுக்கு என்று ஓட்டை விலைக்கு வாங்கினார்கள் . அந்தக் காலத்திலேயே இப்படி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த நிலையிருந்தது . கடைசியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சிக்கைய்ய நாயக்கர் வெற்றி பெற்றார் . ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்றது . காங்கிரசு தோல்வியடைந்தது . அன்றைக்கும் நான் கடுமையாக காங்கிரசுக்கு வேலை செய்தேன் . அப்போது 10 ம் வகுப்பு பரிட்சை எழுதிவிட்டேன் . அந்தத் துணிச்சலில் நான் கொஞ்சமும் பயப்படாமல் தேர்தல் வேலை செய்தேன் . உடனே டி . சி . கொடுத்து என்னை என் சித்தப்பா வெளியேற்றினார்கள் . நாங்கள் பள்ளிப்படிப்பின்போதே மாணவர் இயக்கத்தை பள்ளியில் பரப்பினோம் . ஆசிரியர் மாணவர்களை கடுமையாக அடித்து கண்டிப்பது , இப்படி பல்வேறு மாணவர்களின் கோரிக்கையை வைத்து நாங்கள் வெளிப்படையாக வராவிட்டாலும் , பேப்பரில் மாணவரின் கோரிக்கைகளை எழுதி இரவிலே சுவரேறிக் குதித்து , பள்ளிக்கூடத்தின் சுவரிலே ஒட்டிவிட்டு வருவோம் . நான் , கனக சபாபதி , சுப்பிரமணியம் , அய்யாவு , போன்றவர்கள் இந்த காரியத்தைத் திருட்டுத்தனமாகச் செய்து வந்தோம் . எங்களுக்கு உதவியாக இருந்தவர் , சுப்பிரமணியம் பிள்ளை என்ற சரித்திர ஆசிரியர் . அவர் மாலை நேரத்திலே ( பிரம்மச்சாரியாக இருந்த , திருநெல்வேலிக்காரர் ) எங்களைக் கூப்பிட்டு உலக சரித்திரம் , சோசலிசம் , தொழிலாளர் வர்க்கப் போராட்டம் ஆகியவைகள் பற்றி வகுப்பெடுப்பார் . இந்த நிர்வாகம் எப்படியோ இதற்கெல்லாம் தூண்டுதலாக நிற்பவர் யார் என்று மோப்பம் பிடித்தபோது , சுப்பிரமணியம் பிள்ளை என்ற சரித்திர ஆசிரியர் பெயர் வெளியில் வந்தது . நிர்வாகம் அவரை பள்ளியைவிட்டு வெளியேற்றியது . நானும் வெளியேற்றப்பட்டேன் . அப்பொழுது ஈரோட்டில் , ‘ தேசிய வாலிபர் சங்கம்’ என்ற தேசபக்தி மிக்க சங்கம் ஒன்று உருவாகி செயல்பட்டுக்கொண்டிருந்தது . அது பிரப் ரோட்டில் பள்ளியின் பின்புறம் உள்ள எதிர் கட்டிட மாடிமீது இருந்தது . அதில் , ஈ . கே . கோவிந்தசாமி , மு . ந . நடேசன் , தியாகராஜன் , சப் - இன்ஸ்பெக்டர் மகன் முருகேசன் , தங்கமுத்து , அம்பாயிரம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து தேசியப்பணி செய்தோம் . ஏகாதிபத்திய எதிர்ப்பு உண்மையைப் பரப்பினோம் . அப்போது கேரளத்திலிருந்து ( சென்னை ராஜ்ஜியம் ஒன்றாக இருந்தது ) சில துண்டுப் பிரசுரம் வரும் . இங்கே போலீசுகாரர்களை அடித்துக் கொன்றுவிட்டோம் , இங்கு இதைச் செய்தோம் , அதைச் செய்தோம் என்று தேசபக்தி ஊட்டும் செய்தி சொல்லுவார்கள் . ‘ இப்பிளவும் ஜெயிக்கட்டே ….. பிரளயம் தோக்கட்டே ……’ என்று மலையாளத்தில் கோஷம் எழுதி அனுப்புவார்கள் . அதை நாங்கள் தமிழ்ப்படுத்தி , சின்ன துண்டுப் பிரசுரங்களாகத் தயாரிப்போம் . ரப்பர் ஸ்டாம்ப்பில் தனித்தனி எழுத்தாக எடுத்துக் கோர்த்து , வாசகமாக்கி , இங்க்கில் நனைத்து , பேப்பரில் ஒத்தி எடுப்போம் . அதுக்கு நான் , அம்பாயிரம் , ஈ . கே . கோவிந்தசாமி , நடேசன் எல்லோரும் உள்ளே உட்காருவோம் . வெளியில் பூட்டிவிட்டுப் போய்விடுவார்கள் . போலீஸ் வந்து பார்த்தால் தேசிய வாலிபர் சங்கம் பூட்டியிருக்கும் . ஆனால் உள்ளே நாங்கள் வேலையை செய்துகிட்டு இருப்போம் . செய்து முடிச்சுட்டு இரவிலே கொண்டுபோய் ஒட்டுவோம் . ஒரு முறை , அர்பன் வங்கிக் கட்டிடத்தை விரிவுபடுத்தி , கவர்னர் ஆர்தர் ஹோப் என்ற வெள்ளைக்காரரை அழைத்துவந்து திறப்புவிழா ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள் . நாங்கள் எப்படியாவது இந்த ஏற்பாட்டைக் குலைக்க வேண்டுமென்று முடிவு செய்து , ஆளுக்கொரு துணிப்பந்தை சுற்றி அதை சீமெண்ணெயில் நனைத்து மறைமுகமாக எடுத்துவந்து அதைப் பற்றவைத்து பந்தல் மீது போட்டுவிட்டோம் . அந்தப்பந்தல் பச்சைப் பந்தல் , அதில் துணிதான் எரிந்ததே தவிர , ஓலை தீ பிடிக்கவில்லை . அப்ப எதிரில் இருந்த நீதி மன்றத்தின் பியூன் , ‘ நெருப்பு .. நெருப்பு’ என்று சத்தம்போட எல்லோரும் வந்துவிட்டார்கள் . நாங்கள் ஓடிவிட்டோம் .
எல்லோரும் வந்து பார்த்து தீயை அணைத்துவிட்டார்கள் . காலையில் கட்டிடத் திறப்பு விழாவும் நடந்துவிட்டது . இப்படியாக தேசிய வாலிபர் சங்கத்தின் கொள்கை என்னவென்றால் , பேசுவதற்குப் பயிற்சி அளிப்பது , சமூக சேவையைச் செய்வது , ஏழை , எளிய மக்களுக்கு உதவுவது ; ஹிந்தியைப் பரப்புவது , கதர்ப் பிரச்சாரம் செய்வது , விதவா விவாகத்தை ஊக்குவிப்பது போன்ற காரியங்களைச் செய்துவந்தோம் . இதெல்லாம் ஒவ்வொன்றும் ஒரு தலைப்பாகக் கொடுத்து வாரந்தோறும் சனிக்கிழமையன்று குறிப்பிட்ட சிலரை பேசவைத்து பயிற்சியளிப்பது . அன்றைக்கு லெனின் , சோவியத் ரஷ்யா போன்ற வரலாறுகளைப் படிக்கின்ற ஒரு ஊக்கமும் , உற்சாகமும் இருந்த காரணத்தினால்தான் நான் இன்றுவரை ஒரு இடதுசாரி எண்ணம் கொண்டவனாக இருக்கிறேன் . தேசிய வாலிபர் சங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது . அந்த நேரத்திலே அரிசி ஆலைகளிலே நெல் மூட்டை மற்றும் அரிசி மூட்டையைத் தூக்குவது , 100, 100 படிகளாக அளந்து பக்கம் தைக்கப்படுவது போன்ற வேலைகளும் செய்தோம் . கிராமத்திலே பெரும்பாலானவர்கள் காங்கிரசுக்காரராக இருந்தனர் . அதனால்தான் பழையகோட்டை பட்டக்காரர்களுக்கும் , குட்டப்பாளையம் பெரியசாமி அவர்களும் , 1937 ம் ஆண்டு மிகப்பயங்கரமான தேர்தல் போராட்டம் நடந்தது . அதில் நாங்கள் ‘குட்டப்பாளையம் பெரியசாமி அவர்களுக்கு , எங்கசாமி பெரியசாமி , எந்தச் சாமி ஜெயிக்குது’ என்ற கோஷம் வைத்து , ஜெயிக்க வைத்தோம் . மிகப்பெரிய செல்வந்தரான அவர் ஜஸ்டிஸ் கட்சிக்கு தூணாக விளங்கினார் . பிற்காலத்தில் அவருடைய மகன் நல்ல சேனாதிபதி அவர்கள் காங்கிரசில் சேர்ந்து அமைச்சராக ஆனார் . ஆகவே நாங்கள் அதை எதிர்த்து , குட்டப்பாளையம் பெரியசாமி அவர்களை ஜெயிக்க வைத்தோம் . அதன் பிறகு 34 ம் ஆண்டு நகரவைத் தேர்தல் வந்தது . அதில் ஈஸ்வரன் , ஆர் . சி வெங்கிடசாமி , ஆகியோர்கள் நகர்மன்ற உறுப்பினராகப் போட்டியிடுகிறார்கள் . காங்கிரசு பெரும்பான்மையாக வெற்றி பெற்றது . பிறகு தேசிய வாலிபர் சங்கத்தில் ஈஸ்வரன் தான் சேர்மேனாக வர வேண்டும் என்று முடிவெடுத்தோம் . காரணம் , அன்றைக்கு தேசிய இயக்கத்திற்கு இளைஞரைச் சேர்க்கவும் , வளர்க்கவும் , போராடவும் , முன்னணியில் இந்தப் பகுதியின் சிறந்த தேசபக்தராகத் திகழ்ந்தார் . நாக்பூரில் நடந்த கொடிப்போராட்டத்தில் சிறை சென்றார் . தனிப்பட்ட நபர் சத்தியாகிரகம் , கள்ளுக்கடை மறியல் , தீண்டாமை மறுப்புப் போராட்டம் நடந்தபோது ஈஸ்வரன் கோவிலிலே பசுபதி என்ற ஹரிஜன் , தோட்டியாக வேலை பார்த்தார் . அவரை ஈஸ்வரன் கோவிலுக்குள் கூட்டிக்கொண்டு நுழைந்ததால் கைது செய்யப்பட்டார் . அப்படி அனைத்துப் போராட்டங்களிலும் முன்னணியில் நின்று சிறை சென்றவர் . அவர்தான் சேர்மேனாக வரவேண்டும் என்று நாங்கள் கோஷமிட்டோம் . அவர் வெற்றி பெற்றவுடன் , ‘ வருங்கால நகரசபைத் தலைவர் எம் . ஏ . ஈஸ்வரன் வாழ்க’ என்று கோஷம் வைத்தோம் . மேலிருந்து ஒருவர் வந்துதான் அவரை நியமிப்பார்கள் . அந்தப் பழக்கம் இன்றும் காங்கிரசில் இருக்கிறது . காங்கிரஸ் நாசமாகிப் போகிறதுக்கான காரணங்களில் இதுவும் ஒன்று . இங்கு இருக்கும் மக்களின் முடிவைக் கேட்க மாட்டார்கள் . அங்கு கமிட்டியைக் கேட்டுதான் முடிவு செய்தார்கள் . அந்தக் கமிட்டியில் அவனாசிலிங்கச் செட்டியார்தான் உறுப்பினர் . அவர்தான் முடிவு பண்ண வேண்டும் என்றும் , அவர் ஆர் . கே . வெங்கிடசாமியைத்தான் சேர்மேனாகத் தேர்ந்தெடுப்பார் என்று எங்களுக்குத் தெரியும் . ஆகவே தேசிய வாலிபர் சங்க உறுப்பினர்கள் 40 பேர் பூந்துறை வரை சென்று பெட்ரோமேக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் , இரவெல்லாம் தெருவிலேயே படுத்திருந்தோம் . பிறகு செட்டியார் வந்தவுடன் , ‘ என்ன சமாச்சாரம்’ என்று கேட்டார் . தொண்டர்களாகிய நாங்கள் ஈஸ்வரன் தான் சேர்மனாக வரவேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னோம் . அப்போது அவர் பரிசீலனை செய்வதாகச் சொல்லி நழுவினார் . இரவு 11 மணி ஆகிவிட்டது . அப்போது காங்கிரசு கமிட்டி அலுவலகம் , பன்னீர்செல்வம் பூங்காவிற்கு அருகில் இருக்கும் சி . எஸ் . ஐ . கிறித்துவ ஆலயத்தில்தான் இருந்தது . அங்கிருந்து நேராக ரைஸ்மில் சின்னசாமி கவுண்டர் வீட்டிற்குச் சென்றோம் . பிறகு இரவு 12 மணிக்கு மதிற்சுவர் மேல் ஏறி நின்று ஆர் . கே . வெங்கிட்டுசாமி நாயுடுவைத் தலைவராகவும் , ஈஸ்வரனை துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கிறேன் என்று அறிவித்துவிட்டுப் போய்விட்டார் . பெரிய ஆர்ப்பாட்டமாக நடத்தியதால் அவர் வெற்றி பெற்றார் . பிறகு தனிப்பட்ட நபர் சத்தியாகிரகம் வந்தபோது காந்தியடிகள் , இந்த யுத்தத்திலே இந்திய மக்களாகிய நம்மைக் கலங்கடிக்கறபடி பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் 2 வது மகாயுத்தத்திலே இந்தியாவை இணைத்துவிட்டது . இந்தப் போராட்டத்திலே யாரும் பட்டாளத்திலே சேரக்கூடாது . பணத்தை செலவு செய்யக்கூடாது என்ற இரண்டு கோஷங்கள் தான் எழுப்பி பிரச்சாரம் செய்ய வேண்டும் . எந்த இடத்திலே போலீசார் கைது செய்கிறார்களோ அந்த இடத்திலே அமைதியாக சிறை செல்ல வேண்டும் என்பதுதான் இலட்சியம்” என்று சொன்னார்கள் . இன்றைக்குக்கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் , அணுகுண்டு ஒப்பந்தம் பற்றிச் சொன்னபோது , 1, 2, 3 இங்கு இந்தத் திட்டம் வருகிறது என்று சொன்னால் , ஒரு யுத்தம் வந்தால் அமெரிக்கா பங்குகொள்ளுமானால் , இந்தியாவும் தானாக பங்குகொள்ளும் என்பது நிபந்தனை . இது காந்தி துவங்கிய தனி நபர் சத்தியாகிரகத்திற்கு எதிரானது . இதைத்தான் இன்றைய மன்மோகன்சிங் செய்து கொண்டிருக்கிறார் . இதையேதான் இடது சாரிக்கட்சிகள் தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது . அப்பொழுது இந்த யுத்தம் வருவதற்கு பல மாதங்கள் முன்பே , ஈரோட்டிலே , மகாஜன உயர் நிலைப்பள்ளியின் , இடைப்பள்ளியாக இருக்கக்கூடிய சரசுவதி ஹால் பக்கம் காலியாக இருந்தது . அதில் ஒரு சோசலிச மாநாடு நடைபெற்றது . அந்த மாநாட்டில் நான் பிரதிநிதியாகக் கலந்து கொண்டேன் . அப்போது அச்சுதபட்டவர்த்தன் அவர்கள் சோசலிச மகாநாட்டிற்கு வந்தார்கள் . அவர் பேசியதை தோழர் இராமமூர்த்தி அவர்கள் தமிழிலே மொழிபெயர்த்தார்கள் . அந்த மகாநாட்டிலே அச்சுதபட்டவர்த்தன் ஒன்றைச் சொன்னார்கள் . ‘ சீக்கிரம் ஒரு மகா யுத்தம் வரப்போகிறது , அந்த மகாயுத்தத்திலே இந்தியாவைக் கலக்காமலே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சேர்ந்துவிடும் . ஆகவே அந்த யுத்தத்தை ஆதரிக்கக்கூடாது . அந்தப் பட்டாளத்தில் யாரும் சேரக்கூடாது . ஒரு செப்புக்காசு கூட இந்த யுத்த நிதிக்காக இந்திய மக்கள் யாரும் கொடுக்கக்கூடாது என்று அவர் பேசினார் . யுத்தம் முடிகிற காலகட்டத்திலே பிரிட்டிஷாருடன் சோவியத் ரஷ்யாவும் யுத்தத்தில் இணைந்துகொண்டது . அது உலகைக் காப்பாற்ற வேண்டும் என்று இணைந்து போராடியது என்றாலும்கூட இந்தியாவிலே கருத்து மாறுபாடு இருந்தது . கம்யூனிஸ்டுகள் முதலில் இதை ஏகாதிபத்தியம் யுத்தம் என்றார்கள் . பின்னர் மக்கள் யுத்தம் என்று சொல்லி அந்த பெயரில் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தார்கள் . ஆனால் இவர்கள் காங்கிரசிற்குள் இருக்கக்கூடாது , வெளியேற்றப்படவேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் உட்பட சோசலிஸ்டுகள் அனைவரும் நிர்பந்தம் செய்தார்கள் . உடனே அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு , அவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினார்கள் .
இரண்டாவது மகா யுத்தம் நடந்தபோது ‘சோவியத் நண்பர்கள் சங்கம்’ தொடங்கப்பட்டது . நடராஜா ஹாலில் கூட்டம் நடந்தது . அதில் எஸ் . பி . வெங்கடாசலமாகிய நான் , முத்தையா , கே . டி . ராஜு , பொதுவுடமை பாடலாசிரியர் எம் . பி . ராமதாஸ் போன்ற பலர் கலந்துகொண்டனர் . பின்பு இது இந்திய சோவியத் கலாச்சார நட்புறவுக் கழகமாக மாறியது . பெயரும் மாற்றப்பட்டது . அந்த காலகட்டத்திலே ஒரு புகைப்படக் கண்காட்சி மகாஜன உயர்நிலைப்பள்ளியில் , சரசுவதி ஹாலில் நடந்தது . அதில் மீனாட்சி சுந்தர முதலியார் பேசினார் . “ இங்கே இருக்கிற பணக்காரர்கள் சோவியத் ரஷ்யாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க .. உங்களுக்குத் தேவையானது , உங்க குழந்தைகளுக்கு நல்ல படிப்பு , குடியிருக்க வீடு , நல்ல உணவு , உடை , காசு இவ்வளவுதானே வேண்டும் . அதை அரசாங்கமே கொடுத்துவிடப்போகிறது . அதனால் சோவியத் ஆட்சி வருவதில் தவறில்லை . அதற்கான சம்மதம் தெரிவிக்கலாம் என்று திருத்தமாகச் சொன்னார் . எங்களனைவருக்கும் இது நியாயமாகத் தோன்ற ஆரம்பித்திருந்தது . ஜப்பானிலிருந்து , பர்மா வழியாகவும் , யூரோப்பிலிருந்து இமயமலை வழியாகவும் , முசோலினி , ஹிட்லர் படைகள் வருவது அறிந்து அந்த இராணுவ வீரர்களைக் கைப்பற்றி சிறையில் அடைத்ததை ஓவியமாக அந்த புகைப்படக் கண்காட்சியில் கண்டபின்புதான் அனைவருக்கும் சந்தேகம் வந்தது . முதலில் சுபாஷ் சந்திர போஸ்கூட நம்பிவிட்டார் . படத்தைப் பார்த்தபின்புதான் , இதற்கு சம்மதித்தால் ஜப்பான் மற்றும் ஹிட்லர் ஆட்சியின்கீழ் இன்னும் நூறாண்டுகள் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும் என்பது புரிந்தது .
2
எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 2
தேசிய வாலிப சங்கத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருந்த போது, ஒருநாள் ஒரு வாலிபர் ஈரோட்டில் ஒரு பூங்காவில் இருந்த நாகப்பழ மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு இறக்க முயன்றார் அப்போது அவர், தன்னுடைய காற்சட்டையைக் கழற்றி அதன் மூலம் கழுத்திலே சுறுக்காகப் போட்டு தூக்கு போட்டுக்கொண்டார். ஆனால் அந்த காற்சட்டை தையல் கிழிந்து அவர் கீழே விழுந்துவிட்டார். நல்ல வேளையாக சாகவில்லை. இந்தச் செய்தி போலீசுக்குத் தெரியப்படுத்தப்பட்டதால், போலீஸார் வந்து அதை தற்கொலை முயற்சி என்ற அடிப்படையில் அந்த வாலிபரை கைது செய்து, அவரை ஈரோடு அரசு மருத்துவ மனையில் சேர்த்து, கழுத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
எங்களுடைய தேசிய வாலிபர் சங்கம், அரசு மருத்துவமனைக்கு இரண்டு கட்டிடங்கள் தள்ளி இருந்தது. இந்த செய்தி கேட்டவுடன், தேசிய வாலிபர் சங்கத்திலிருந்து நானும் ஈ.கே.கோவிந்தசாமி, மூ. நா. நடேசன், முருகேசன் போன்ற தோழர்கள் எல்லாம் அரசு மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தோம். இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு தற்கொலை முயற்சி செய்வதற்கான காரணம் பற்றி விசாரித்தோம். அப்பொழுது அவர் தான், பெங்களூருவைச் சேர்ந்தவன் என்றும், பி.ஏ. படித்திருப்பதாகவும், தனக்கு வேலை இல்லை என்பதால் வேலை தேடி வந்ததாகவும் சொன்னார். எங்குமே வேலை கிடைக்காததால். வாழ்க்கையில் வெறுப்புற்றதால் தூக்கு போட்டுக் கொள்ள முயற்சி செய்தேன். துரதிருஷ்டவசமாக பேண்டிலே சுறுக்குப் போட்டுக் கொண்டபோது அந்த பேண்ட் கிழிந்து நான் கீழே விழுந்துவிட்டேன். போலீஸாரால் தற்கொலை முயற்சி என்ற வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறேன் என்றார்.
இவ்வளவு அழகான வாலிபன். பி.ஏ., படித்துவிட்டு வேலையில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்கிறானே? இவனை எப்படியாவது இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் காவல் நிலையத்திற்குச் சென்று, அங்கே இருந்த இன்ஸ்பெக்டரிடம் கேட்டோம். அந்த வாலிபனை விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சொன்னபொழுது, அவர, ’நாங்கள் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்துவிட்டோம். ஆகவே உங்களில் இருவர், ஆறு மாதத்திற்கு ஜாமீன் கொடுப்பதாக இருந்தால், அந்த வாலிபரை உங்கள் பொறுப்பில் விடுதலை செய்கிறேன் என்றார்.
உடனடியாக, நானும் மூ.நா. நடேசனும் அந்த வாலிபருக்காக ஜாமீன் கொடுத்தோம். இன்ஸ்பெக்டர் ’நீங்கள் ஜாமீன் கொடுத்திருக்கிறீர்கள். ஜாமீன் காலம் வரையில் அவரை நீங்கள்தான் பாதுகாப்பாக வைக்க வேண்டும். வேறு ஏதாவது விபரீதம் நடந்துவிட்டால் உங்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று சொல்லிவிட்டு ‘தூக்கு போட்டுக் கொண்ட ஒரு வாலிபருக்கு நீங்கள் எதற்காக ஜாமீன் கொடுக்கிறீர்கள்? அவர் உங்களுக்கு சொந்தக்காரரும் கூட இல்லை. அவர் ஈரோட்டைச் சார்ந்தவரும் இல்லை. அப்படியிருக்கும்போது நீங்கள் ஏன் அவருக்கு ஜாமீன் கொடுக்க முன்வந்தீர்கள்? என்று கேட்டார். அந்த இன்ஸ்பெக்டரின் பெயர் கண்ணப்பன்.
அதற்கு நாங்கள், “பி.ஏ. படித்த ஒரு பட்டதாரி இளைஞன். வேலை கிடைக்கவில்லை என்கிற காரணத்திற்காக தூக்கு போட்டுக் கொள்கிறான் என்றால், அது நம்முடைய சமுதாயத்திற்கே கேவலமான ஒரு காரியமாகப்படுகிறது. அதனால்தான் அவருக்கு நாங்கள் ஜாமீன் கொடுக்கிறோம்’ என்று சொன்னோம். ‘உங்களுடைய செயலை நான் பாராட்டுகிறேன். நீங்கள் அவரைக் கூட்டிச் செல்லுங்கள் என்று ஜாமீனில் விட்டார்கள். ஆறு மாதம் ஜாமீன் முடிகிற வரையில், சந்திரசேகரன் என்ற அவரை தேசிய வாலிபர் சங்கத்தில் ஆகாரம் மற்றும் மற்ற வசதிகளையெல்லாம் செய்து கொடுத்து அங்கேயே வைத்திருந்தோம். அவர் மிக நன்றாக சித்திரம் வரையக்கூடியவர். அவர் விவேகானந்தருடைய படத்தை மிகவும் அழகாக வரைந்திருந்தார். அதேபோல் நிறைய சித்திரங்களை வரைந்து கொண்டு சங்கத்திலேயே இருந்தார். அவருக்கு ஆகாரமெல்லாம் சகோதரர் கோவிந்தசாமி வீட்டில் இருந்து தினசரி வந்துவிடும். அவர் அதை சாப்பிட்டுக்கொண்டு அங்கேயே இருந்தார். வெகுநாட்களுக்குப் பிறகு பெங்களூர் விலாசத்தைத் தேடிக்கொண்டிருந்தார். ஆறு மாத காலத்திற்கு பின்பு அவரை பெங்களூருக்கு அனுப்பிவிட்டோம். அவர் வீட்டுக்கு செல்கிற போதுதான் தெரிந்தது, அவர் திருமணமானவர் என்றும், திருமணமானபோது அந்த பெண் ருதுவாகவில்லை என்றும் தெரிந்தது. அவர் எங்களை தன்னுடைய தாய் தந்தையருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களும் மிகவும் சந்தோஷப்பட்டு நெய்யிலேயே எல்லாப் பதார்த்தங்களையும் செய்து, நல்ல ஒரு விருந்து கொடுத்து எங்களை அனுப்பி வைத்தார்கள்.
நீண்ட காலத்திற்குப் பிறகு சென்னையில் வீதியில் ஒரு நாள் அவரைச் சந்தித்தபோது, ‘நீங்கள் சந்திரசேகரன் தானே என்று கேட்டேன்’. அவரும், ‘ஆம். நீங்கள் எஸ்.பி.வெங்கடாசலம் தானே’ என்றார். நானும் ஆம் என்று சொன்னேன். ’நான் இப்பொழுது, இராணுவத்திலே சேர்ந்து விமானத்துறையிலே பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மிகவும் நன்றாக இருக்கிறேன்’ என்று சொல்லி சந்தோஷப்பட்டார். அந்த சப்- இன்ஸ்பெக்டரிடம் எங்களுக்கு ஒரு மரியாதையே ஏற்பட்டது. அதேபோல் அவருக்கும் எங்கள் மீது ஒரு மரியாதை ஏற்பட்டது.
இன்னொரு முறை ஒரு கிழவி எங்களுடைய வாலிபர் சங்கத்திற்கு முன்னால் கீழே விழுந்துவிட்டார். அவருக்கு வயத்தால் போய்க் கொண்டிருந்தது. அந்தக் கிழவியைத் தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தோம். அப்போது அவர் சேலையில் ஒரு பத்து இருபது பவுன் நகையை முடிந்து வைத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது நாங்கள், ‘நீங்கள் ஏன் இவ்வளவு நகையை வைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றுகிறீர்கள்?’ என்று கேட்டபோது, ’என்னுடைய பையன் என்னை ஆதரிக்கவில்லை. ஆகவே நான் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன்’ என்று சொன்னார்கள். அப்பொழுது இந்த கண்ணப்பன் அவர்கள்தான், இந்த கிழவியை என்ன செய்வது என்று எங்களிடம் கேட்டார்கள். அந்தப் பெண்ணிடம் 20 பவுன், 25 பவுன் நகை இருக்கிறது. அவர்களுடைய உறவினர்கள் கிடைத்தால், இந்த கிழவியையும், நகையையும் ஒப்படைத்துவிடலாம். ஆகவே நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் என்று சொன்னார்கள்.
அப்பொழுது எங்களுடைய வாலிபர் சங்கத்தில், வீரபத்திரன் என்கிற ஒரு நாவிதர் இருந்தார். கடைசியில் விசாரித்துப் பார்க்கையில் இந்தக் கிழவியும், நாவிதர் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் மூலமாக தமிழ்நாடு முழுவதும் நாவிதர் சங்கம் மூலமாக விசாரித்தபோது, அந்த கிழவியினுடைய உறவினர்கள் யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை.
அப்பொழுது அந்த கண்ணப்பன், ’இந்தக் கிழவி இறந்துவிட்டால், நாங்கள் இந்த நகையை எல்லாம் யுத்த நிதிக்கு சேர்த்துவிடுவோம்’ என்று சொன்னார்கள். அது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏன் என்றால், ’பட்டாளத்தில் சேராதே! பண உதவி செய்யாதே!’ என்று சொன்ன மகாத்மா காந்தி இயக்கத்திலே எங்களையெல்லாம் ஈடுபடுத்திக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தோம். அங்கப்பன் என்ற, ஒரு தொழிலாளி என்னை தனிப்பட்ட நபர் சத்தியாகிரகத்திலே சத்தியாகிரகம் செய்வதற்காக ஈரோட்டில் ஸ்டார் டாக்கீஸ் என்கிற சினிமா தியேட்டர் அருகிலுள்ள சுப்பிரமணியம் கோவிலிலிருந்து சத்தியாகிரகத்தை ஆரம்பிப்பது என்றிருந்தது.
நான் அங்கப்பனை அறிமுகப்படுத்தியும், தனிப்பட்ட நபர் சத்தியாகிரகத்தின் நோக்கத்தை விளக்கி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அட்டூழியங்களையும், அதனுடைய இராணுவ நடவடிக்கைகளை கண்டித்தும் சத்தியாகிரகத்தை ஆரம்பித்து வைத்தேன். அங்கப்பன் அவர்கள், சென்னையை நோக்கிச் செல்கின்ற போது வழியில் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, அவர் விடுதலையாகி வந்த பிறகு ஸ்டார் டாக்கீஸில் தகரத்தைப் பிரித்துவிட்டு, வேறு புதிய தகரம் போடுகின்ற வேலையில் அவரும் ஒரு தொழிலாளியாக வேலை செய்தார். அப்பொழுது துரதிருஷ்டவசமாக அவர் அந்தத் தகடுகளைப் பொருத்திக் கொண்டிருந்தபோது, தகடு கீழே விழுந்தபோது, அதனுடன் சேர்ந்து இவரும் கீழே விழுந்துவிட்டனர். அப்போது அந்தத் தகடு அவருடைய கழுத்தில் பட்டு, கழுத்து துண்டிக்கப்பட்டு அவர் இறந்துவிட்டார். அவர் திருமணமாகாதவர். அப்படிப்பட்ட தியாக வாழ்க்கை வாழ்ந்த சாதாரணமான ஒரு தொழிலாளியை நான் அறிமுகம் செய்து வைத்ததற்காக, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரசாரம் செய்தேன். ராஜதுரோகத்தைக் கையில் எடுப்பதற்காக மக்களைத் தூண்டிவிட்டேன் என்று நான் கைது செய்யப்பட்டேன்.
கைது செய்யப்பட்டபொழுது, சப்இன்ஸ்பெக்டர் கண்ணப்பன் அவர்கள், எந்தவிதமான எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யாமலே வைத்திருந்தார். அப்பொழுது என்னுடைய சித்தப்பார் எஸ்.மீனாட்சி சுந்தரம் முதலியார் அவர்கள் சிறந்த பேச்சாளர். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சரளமாகப் பேசக்கூடியவர். உடனடியாக ஒரு பொருளைப் பற்றி பேசப்பட வேண்டும் என்று சொன்னால், எந்தவிதமான தயக்கமும் இன்றி குறிப்பும் எடுக்காமல் எந்தப் புத்தகத்தையும் பார்க்காமல், உடனடியாக மக்கள் மனம் கவரும் வகையிலே பேசக்கூடியவர். இல்லை என்று பேசக்கூடிய திறமையும் உண்டு. ஆம் என்று பேசக்கூடிய திறமையும் உண்டு. ஆகவேதான், பிற்காலத்திலே குன்றக்குடி அடிகளார் அவர்கள் அவருக்கு ’இருமொழி சொற்கொண்டல்’ என்கிற பட்டத்தையும் கொடுத்து ஐந்து பவுனிலே பதக்கத்தையும், ஒரு ஈஸ்வரன் கோயில் நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.
யுத்த ஆதரவு பிரச்சார கமிட்டியில் அவரும், அண்ணாதுரை அவர்களும் இருந்தார்கள். வெள்ளைக்கார கவர்னர்கள் ஈரோட்டிற்கு வந்தபோதெல்லாம், அவர்தான் மொழிப்பெயர்ப்பாளராக இருந்து உதவினார். ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கத்திடமும், அதிகாரிகளிடமும் பெரும் செல்வாக்கு இருந்ததற்கான காரணம் அவர் யுத்தக் கமிட்டியின் பிரச்சாரக் குழு உறுப்பினராகவும், கவர்னர்களுடைய பேச்சுகளின் மொழிப்பெயர்ப்பாளராகவும் இருந்தார்.
அவர் உடனடியாக வந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்து, என்னை விடுதலை செய்யும்படி ஏற்பாடு செய்து எனக்கு விடுதலையும் கிடைத்தது. பிற்காலத்தில் இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக இருந்து கோவைக்கு வந்தபொழுது, அவருடைய பிரசங்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் இதே மீனாட்சி சுந்தரம் முதலியார் அவர்கள் தான்.
அதேபோல் மதுரையில் நடந்த இந்திராகாந்தியின் கூட்டத்திலும் அவருடைய பேச்சை இவர்தான் மொழிபெயர்ப்பு செய்தார். இப்படியாக, தேசிய வாலிபர் சங்கம் அந்தக் கிழவி இறந்தவுடன் அந்த நகைகளை யுத்தக் கமிட்டியில் சேர்த்துவிட்டார்கள். கடைசி வரையில் அது எங்களுக்கு ஒரு பெரும் வேதனையாகத்தான் இருந்தது.
நாங்கள் இதுபோன்ற பணிகளைச் செய்து கொண்டிருந்ததால், அந்த இன்ஸ்பெக்டருக்கு எங்கள்மீது மதிப்பும் மரியாதையும் இருந்தது. போலீஸ்காரர்களிலேயே சிலர் தேசபத்தியோடு இருந்தார்கள். வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலையிலே இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஈரோட்டில் எனக்குத் தெரிந்த, பெருமாள் என்ற போலீஸ் ஸ்டேஷன் ரைட்டரும், இந்த கண்ணப்பன் அவர்களும் சிறந்தவர்களாக இருந்தார்கள்.
ஒருமுறை கலாஸ் தொழிலாளர்கள் என்கிற ரைஸ் மில் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது 144 தடை உத்தரவு போட்டிருந்தார்கள். நாங்கள் அந்த சங்கத்தை அரசு மருத்துவமனைக்கு அருகில் இருந்த ஒரு மாடியில் வைத்திருந்தோம். கிராமங்கள் தோறும் சென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ரைஸ் மில் தொழிலாளிகளுக்கு கம்பு, ராகி, அரிசி போன்ற உணவுப் பொருட்களை மூட்டை மூட்டையாக சேகரித்துக் கொண்டு வந்து அந்தச் சங்கத்தில் வைத்து, அவர்களில் மிகவும் ஏழ்மையாக இருக்கின்றவர்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தோம்.
ஒருநாள் இரவு, ஒரு ஏட்டும் போலீஸ்காரரும் வந்து நீங்கள் இங்கே கூடியிருப்பது 144 தடை உத்தரவை மீறிய செயலாதலால், கைது செய்வதாகக் கூறி, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நான் ஆற்காட்டு சடா என்கிற (காலிலே அணிகின்ற செருப்பு). நடக்கின்ற போது ’டப்பு டப்பு – டப்பு டப்பு’ என்று அடித்துக் கொண்டே நடக்கும். அதை நான் அணிந்து கொண்டிருந்தேன். இந்த தலைமைக் காவலர், அங்கிருந்த பொருட்களையெல்லாம் ஜப்தி செய்கிறேன் என்று சொல்லி, சேர், டேபிள்களையெல்லாம் எங்களை தலையின் மேல் வைத்து எடுத்துக் கொண்டு வரும்படி சொன்னார்கள். நாங்கள் ’இது எங்கள் வேலை இல்லை,நாங்கள் இந்த வேலையைச் செய்ய முடியாது. நீங்கள் ஜப்தி செய்கிறீர்கள் என்றால், நீங்கள் எடுத்துக் கொண்டு போங்கள். நாங்கள் இதனை எடுத்துக் கொண்டு வரமுடியாது’ என்று கறாராகச் சொல்லிவிட்டோம்.
அப்பொழுது அங்கே இருந்த நான்கு ஐந்து பேர்களாகிய நாங்கள், கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது ’போலீஸ் ஸ்டேஷன் வந்தவுடன் இந்த சடாவை நீ கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். உள்ளே போட்டுக்கொண்டு வரக்கூடாது என்று என்னை எச்சரிக்கை செய்தார். நான் அதை பொருட்படுத்தவே இல்லை. ஏனென்றால், போலீஸ்காரர்கள் என்ன சொல்கிறார்களாளோ அதற்கு நேர்மாறாகத்தான் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களைப் போன்ற தேசிய இளைஞர்களுடைய ஆதங்கமாகவும், கடமையாகவும் இருந்தது. ஆகவேதான் நான் காவல் நிலையத்தின் உள்ளே சென்றவுடன், சடாவை (செருப்பை) கழற்றவில்லை. அங்கே போனவுடன் இன்ஸ்பெக்டர் கண்ணப்பன்தான் இருந்தார்.
அவரிடம் இந்த காவல் துறையைச் சார்ந்த அதிகாரி, ‘இவர்களெல்லாம் 144 தடை உத்தரவை மீறியிருக்கிறார்கள். ஆகவேதான் இவர்களை கைது செய்து கொண்டு வந்திருக்கிறேன். இவர் ஏற்கெனவே ஒரு முறை அங்கப்பன் என்று சொல்லுகிற தனிப்பட்ட நபர் சத்தியாகிரகியை ஆதரித்துப் பேசியிருந்தபோது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பேசினார். அப்பொழுதும் கைது செய்யப்பட்டார். ஆகவே அதுபோன்ற தவறுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்று எரிச்சலூட்டுகின்ற விதத்தில் அந்த கண்ணப்பனிடம் சொன்னார். அப்பொழுது நான், ’ஐயா, 144 தடைச் சட்டம் என்பது தெருவிலே நான்கு பேர்களுக்கு மேல் கூடியிருந்தால், அது தடைச் சட்டத்தை மீறியதாக ஆகிறது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் இவர் எங்களை எங்கே கைது செய்தார் என்று கேளுங்கள். எங்களுடைய சங்கத்தினுடைய கட்டிடத்தில் நாங்கள் மாடியில் இருந்து கொண்டிருந்தபோது, அங்கே வந்து கைது செய்தார். ஒரு கட்டிடத்திற்குள் ஒரு விசேஷம் நடக்கும்போது பத்து, பதினைந்து பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்களை கைது செய்ய முடியுமா? 144 தடை உத்தரவை மீறினார்கள் என்று சொல்கிறார்கள். தெருவில் கூடிக்கொண்டு ஏதாவது பேசினால், கூட்டம் நடத்தினால் அது சட்ட விரோதம். அது 144 தடை உத்தரவை மீறியதாகக் கருதப்படும். இது எங்களுடைய கட்டிடத்திலே நாங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறபோது இவர் கைது செய்து கொண்டு வந்து, 144-ஐ மீறினார்கள் என்று சொன்னால் அது எப்படி சட்டப்படி சரியாகும்?’ என்று கேட்டேன்.
எங்கள் மீது இருந்த அனுதாபத்தினாலும், எங்களுடைய செயல் நாட்டிற்கு உகந்ததாக இருந்தது என்று அந்த இன்ஸ்பெக்டர் நினைத்ததாலும், அந்த தலைமைக் காவலரைக் கேட்டார்: “ஏன்யா, சட்டம் அந்தாளுக்கு தெரிந்த அளவுக்குக் கூட உனக்குத் தெரியலையாயா? ஏன்யா கைது பண்ணின?’ என்றார். அது எப்படியா, 144 தடை உத்தரவு அவர்கள் மாடியில் இருக்கும் போது அங்கே வரும்? என்றார். ஆகவே நீ பைத்தியகாரத்தனமாக கைது பண்ணிட்டு வந்துட்ட, அவர் பாரு நம்மை மூக்கை அறுக்கிற மாதிரி கேள்வியைக் கேட்டாரு? பாத்தியா….? ஆகவே அவர்களையெல்லாம் போகச் சொல் என்று சொல்லி எங்களை அனுப்பினார்.
1942ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம், பம்பாயில் காந்தி, நேரு, வல்லபபாய் படேல் போன்றவர்களை எல்லாம் இரவோடு இரவாக கைது செய்தார்கள். அப்போது காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. தேசிய இயக்கம் ஸ்தம்பித்து இருந்தது. காங்கிரஸ் கட்சியினுடைய அலுவலகங்கள் பூட்டப்பட்டன. காங்கிரஸ் கட்சியினுடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் இந்த இயக்கம் இயங்க வேண்டும் என்று கருதிய நாங்கள் 144 தடை உத்தரவை மீறுவது என்று முடிவெடுத்து, ஆர்.சி. கிருஷ்ணன் வீட்டில் தேசிய வாலிபர் சங்கத்தைச் சார்ந்தவர்களும், காங்கிரஸ்காரர்களுமாக சுமார் நாற்பது ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருக்கிறபொழுது, யார் இந்தத் தடையை மீறுவது? எல்லோரும் ஒரே நேரத்தில் மீறுவது வேண்டாம். படிப்படியாக தினசரி மீறிக்கொண்டிருக்கலாம். ஆகவே யார் மீறுவது என்று வந்தபொழுது, பலரும் நாங்கள் மீறுகிறோம், நாங்கள் மீறுகிறோம் என்று சொன்னதினால் ஆர்.சி.கிருஷ்ணனுடைய வீட்டின் முன்னால் பெரிய ஹால் ஒன்று இருந்தது. அந்த ஹாலில் குறைந்தபட்சம் நூற்று ஐம்பது காங்கிரஸ் தலைவர்களுடைய படங்கள் ஒரே அளவிலே தேக்கு மரச் சட்டத்தால் பிரேம் செய்யப்பட்டு வெகு அழகாக மாட்டப்பட்டிருந்தது. அதிலே ஒன்று பாரதமாதாவினுடைய படம். அந்தப் படத்தின் முன்னால் எல்லோருடைய பெயரையும் சீட்டில் எழுதி குலுக்கிப் போட்டு ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அப்படி குலுக்கிப் போடும் போது என்னுடைய பெயர் வந்தது.
ஆகவே நான் மறுநாள் 144 தடையை மீறுவது என்று முடிவெடுக்கப்பட்டு, தட்டியல் எழுதுவது போன்ற ஆடம்பரமான விளம்பரங்கள், பெரிய பெரிய பேனர்கள், இவைகளெல்லாம் அன்றைக்கு கிடையாது. தட்டியில் நியுஸ் பேப்பரை ஒட்டி அதுக்கு மேல அந்தச் செய்தியை எழுதி அங்கங்கே வைத்து விளக்குக் கம்பங்களில் கட்டி விடுவதுதான் அன்றைய நாளில் பெரிய பிரச்சாரமாக இருந்தது. அப்படி தட்டியலில் ’நாளை மாலை 6 மணிக்கு காந்தி சவுக் காரை வாய்க்கால் மைதானத்தில் 144 தடை உத்தரவை இன்று மட்டும் மீறப்படும்’ என்று எழுதி வைத்திருந்தோம். பெயரை எழுதியிருந்தால் முன்கூட்டியை கைது செய்துவிடுவார்கள் என்பதால் பெயரைப் போடாமல் தட்டியல் கட்டப்பட்டன.
மாலை 6 மணிக்கு தனித்தனியாக எல்லோரும் காரை வாய்க்காலில் வந்து எதிர்புறத்தில் இருந்த வீட்டுத் திண்ணைகளில் நின்று கொண்டிருந்தார்கள். நான் 6 மணிக்கு சரியாக வந்தேன். மேடை மீது ஏறினேன். பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து கோஷமிட்டு பேச ஆரம்பித்தேன். பேச ஆரம்பித்தவுடன், போலீஸார் உன்னை கைது செய்கிறோம் என்று கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றவுடன், அந்த காவல் நிலைய எழுத்தருடைய அறையில் பெரிய ஜன்னல் இருந்தது. அந்த ஜன்னலிலே இரண்டு பேர் உட்காருகின்ற மாதிரி ஒரு நீண்ட சுவர் இருந்தது. நான் போனவுடன் அந்த ஜன்னலிலே உட்கார்ந்து கொண்டேன்.
அப்பொழுது என்னை ஏற்கெனவே கைது செய்த அதே காவலர் வந்து, ’ஏந்திரிச்சு கீழே உட்காரு… கையை கட்டிக் கொண்டு உட்காரு. என்ன பெரிய இவரோ… கீழே இறங்கி உட்காரு… கையை கட்டிக்கொண்டு உட்காரு… அந்த மூலையிலே போய் உட்காரு…’ என்று மிரட்டினார் என்னை. அப்பொழுது அங்கு எழுத்தராக இருந்த பெருமாள் அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது.
‘ஏனைய்யா அவரைப் போய் மிரட்டுற… அவர் என்ன உன் தலையிலயா உட்கார்ந்து கொண்டிருக்கிறார்…? அந்த ஜன்னல்லதான உட்கார்ந்திருக்கிறார்… நீயும் நானும் செய்ய வேண்டிய வேலையிது. நாம் வெள்ளைக்காரன்கிட்ட சம்பளத்திற்கு இருந்துகிட்டு இதை செய்ய முடியல… அவர் அதை செஞ்சிருக்கிறார்… ஏன் அவரைப்போய் அப்படி கோவிச்சுக்கற..? எதையாவது திருடிக்கொண்டு வந்தாரா? இல்லை சாராயம் காய்ச்சிட்டு வந்தாரா? போய் உன் வேலையைப் பாரு’ என்று மிரட்டி விட்டு அனுப்பினார்.
கண்ணப்பன் போன்ற தேசபக்தர்களும் போலீஸில் அந்த காலத்தில் இருந்திருக்கிறார்கள். அதுபோலவே, அன்னியத் துணி பகீஷ்காரத்தின்போது, அன்னியத் துணிகளை ஏற்றிக்கொண்டு லாரி வந்தபொழுது, அந்த லாரியின் குறுக்கால் தேசபக்தர்கள் படுத்துக் கொண்டார்கள். உடனே பிரிட்டிஷ் அதிகாரி, அங்கேயிருந்த துணை இராணுவத்திற்கு உத்தரவிட்டார். உடனே அவர்களை சுடும்படி உத்தரவிட்டார்.
அவர்கள் சுட மறுத்தார்கள். அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்படிப்பட்ட, தேசபக்தர்களும் தேசிய இயக்கத்தில் இருக்கத்தான் செய்தார்கள். அப்படித்தான் தேசிய இயக்கம் வலுவாகவும், தேசபக்த உணர்வோடும், இருந்த காலக்கட்டத்தில் வாராந்திர பிரசங்க பயிற்சிக் கூட்டத்தில் ஒரு சனிக்கிழமை என்னுடைய முறை வந்தது.
நான் பேச வேண்டிய பொருள், நெப்போலியனைப் பற்றியது. அதற்கு நெப்போலியனைப் பற்றிய புத்தகம் தேவையாக இருந்தபோது, எங்களுடைய தோழர் கோவிந்தசாமி அவர்கள், ‘எனக்கு வேண்டிய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் வீட்டிற்கு போவோம். அவருடைய தங்கை மகாஜன பள்ளியிலே எட்டாவதோ, ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரிடம் சொல்லி, பள்ளி நூலகத்தில் இருந்து நெப்போலியனின் புத்தகத்தை எடுத்து வரும்படி சொல்வோம்’ என்றார்.
இரவு 7 மணிக்கு மேல் அவர்களுடைய வீட்டிற்குப் போனோம். போனவுடன் அவருடைய நண்பர் அந்தோணிசாமியின் வீட்டில்,(அவர்களுடைய அண்ணன் பெயர் லூர்து சாமி.) லூர்து சாமி அவர்கள், திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள். முதலில் காங்கிரஸ்காரராக இருந்து, வேதாரண்யத்தில் உப்பு காய்ச்ச எம்.ஏ.ஈஸ்வரனோடு சென்றபோது, கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறையில் அடைக்கும்போது விவரங்கள் கேட்பார்கள். தாய், தந்தையின் பெயர், அவருடைய அங்க மச்ச அடையாளங்களை எல்லாம் கேட்கின்ற போது, அவர்: ’என்னுடைய தந்தை ஈரோட்டில் காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்’ என்றார். உடனே அவர்கள் தந்தி அடித்து, ’இப்படி உங்கள் பையன் சட்ட விரோதமான காரியத்தைச் செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். நான் பதிவு செய்து நடிவடிக்கை எடுப்பதற்கு முன்பாக நீங்கள் வந்து எழுதிக் கொடுத்துவிட்டு அவனை கூட்டிக் கொண்டு போங்கள்’ என்று தந்தி அடித்தார்கள்.
உடனே அவரும் புறப்பட்டுப் போனார். போனவுடன் எழுதிக் கொடுத்து விட்டு லூர்து சாமியை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். பிறகு அவர்கள் அன்னியத் துணி பகீஷ்காரத்தில் ஈடுபட்டார்கள். இப்படியாக காங்கிரஸ் இயக்கத்திலிருந்து, பெரியார் அவர்கள் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வ.உ.சி அவர்கள் நடத்திய குருகுலத்தில் பிராமணர்களுக்குத் தனியாகச் சாப்பாடும், பிராமணர் அல்லாதவர்களுக்கு தனியாகச் சாப்பாடும் பிரித்துப் போடப்பட்டதைக் கண்டித்தார்கள்.
சேரன்மாதேவி குருகுலத்தில் இந்த காரியம் செய்தது காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமானது. இது ஜாதி, மத வேற்றுமையைக் காட்டுகின்றது. அதுவும் இந்த குருகுலம் காங்கிரஸ் கட்சியினுடைய நிதி உதவியினால் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னபோது, அதற்கு ஆதரவாக பெரும்பான்மையினர் இல்லை. ஆகவே பெரியார் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியே வந்து, சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். அப்பொழுதுதான் லூர்து சாமி அவர்களும் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டு, சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து பெரியாரோடு வாழ்நாள் முழுவதும், இறுதி மூச்சு விடுகின்ற வரையிலும் சுத்தமான சுயமரியாதைக்காரராக, எந்தவிதமான பிரதிபலனும் இலாபமும் கருதாமல் தன்னுடைய சொந்தத் தாயாருடைய உழைப்பில் கிடைத்த பல்லாயிரக்கணக்கான ரூபாயை அந்த சுயமரியாதை இயக்கத்திற்கு செலவிட்டார்கள்.
கருணாநிதி அவர்கள் அவரைப் பற்றி ’நெஞ்சுக்கு நீதி’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள், அது பின்னால் வருகிறது.
நெப்போலியனுடைய வாழ்க்கை சரித்திர புத்தகத்தை வாங்குவதற்காக வேண்டி, தோழர் ஈ.கே. கோவிந்தசாமி அவர்கள் தன்னுடைய நண்பர் லூர்து சாமி, அந்தோணி சாமி அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இரவு 7.30 மணியளவில் அங்கே போனோம். அவர்களுடைய சகோதரி லூர்து மேரியை சந்தித்து, நெல்போலியனுடைய வாழ்க்கைக் குறிப்புப் புத்தகம் வேண்டும். நீங்கள் உங்கள் பள்ளியின் நூலகத்தில் அந்தப் புத்தகம் இருந்தால் நாளை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும்படி கேட்டோம். அவர்களும் ஒப்புக்கொண்டு மறுநாள் மாலை அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதன்பிறகு, அந்த புத்தகம் மூலமாக ஏற்பட்ட தொடர்பு படிப்படியாக அந்தக் குடும்பத்தில் ஒருவனாக மாறுகின்ற அளவிற்கு நட்பு ஏற்பட்டு, அந்த நட்பு மூன்றாண்டு காலத்திற்கு பிறகு எங்களிடத்திலே காதலாக மாறி, திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தோம்.
அப்பொழுது அவர்கள் பத்தாவது படித்தவுடன் செவிலியர் பயிற்சிக்குப் போக வேண்டும் என்பதற்காக கள்ளிக்கோட்டைக்குச் சென்றார்கள். அங்கு நேர்முகத் தேர்வு நடந்தபோது அந்த நேர்முகத் தேர்வு நடத்திய ஆங்கிலேய டாக்டர் அம்மா அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்டார்களாம். ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்களாம். ’நீ ஏன் இந்த நர்ஸ் படிப்பிற்கு வரவேண்டும் என்ற விரும்புகிறாய்? என்று கேட்டபோது, ’இதன் மூலம் மக்களுக்குச் சேவை செய்ய ஆசைப்படுகிறேன்’ என்று சொன்னவுடன், ’வெரிகுட் யூ ஆர் செலக்டட்’ என்று தேர்ந்தெடுத்து விட்டார்கள்.
பிறகு கோவையில் ஓராண்டு படித்தார்கள். சென்னையில் சுமார் இரண்டரை ஆண்டுகள் என்று நினைக்கிறேன். பொது மருத்துவமனையில் இரண்டு ஆண்டு காலமும், சென்னை எழும்பூர் பெண்கள் பிரசவ மருத்துவமனையில் பத்து மாதமும் படித்து முடித்தார்கள். அதன்பிறகு எங்களுடைய திருமணப் பேச்சு ஆரம்பித்தது. எங்கள் வீட்டிலே நான் இப்படி பழகுவது தெரிந்து, என்னைக் கண்டிக்க ஆரம்பித்தார்கள். இந்தத் திருமணத்திற்கு பெரும் தடையாக இருந்தார்கள்.
அதேபோல் அவர்களுடைய வீட்டில் இரண்டொருவரைத் தவிர பாக்கியிருந்த அனைவருக்குக்கும் பிடித்திருந்தது. ஒருசிலருக்கு மட்டும் பிடிக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் எல்லாம் அந்த மதத்தின் மீது அதிகப்படியான பிடிப்பு வைத்திருந்ததுதான் காரணம். எங்கள் வீட்டை எடுத்துக்கொண்டாலும் கூட என்னுடைய தகப்பனார் அவர்கள் அதிகப்படியான தெய்வபக்தி உடையவர்கள். அதன் காரணமாக ஈரோட்டில் இருக்கின்ற ஈஸ்வரன் கோயில், பெருமாள் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், முத்துக்குமாரசுவாமி கோயில், அப்பர்சாமி மடம் (அப்பர்சாமி மடம் மற்றும் முத்துக்குமாரசுவாமி கோயிலும் எங்கள் தாத்தாவால் கட்டப்பட்டது) ஆகவேதான், அன்றெல்லாம் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்படாத தர்மகர்த்தாவாக இருந்து எல்லா கோயில் பணிகளையும், வியாபாரத்தைக் கவனிக்காமல் இந்த தெய்வீகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே அவர்களுக்கும் வேறு மதத்தின் பெண்ணைத் திருமணம் செய்வது பிடிக்கவில்லை. அவர்களும் எதிர்த்தார்கள். அவர்களுடைய வீட்டிலும் சிலர் எதிர்த்தார்கள். ஆனால் லூர்து மேரியினுடைய தாயார் ஆட்சேபனைத் தெரிவிக்கவில்லை. அதுபோலவே சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக இருந்து பெரியாருடைய அந்தரங்க நட்புக்குரியவராக இருந்த லூர்து சாமி அவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் நான் கிறிஸ்தவனாக மாறித்தான் இந்தத் திருமணம் நடைபெற வேண்டுமென்று ஒருசாரார் தீவிரமாக இருந்தார்கள்.
ஆனால், லூர்துமேரி அவர்கள் என்னிடம் சொல்லிவிட்டார்கள். ’நீங்கள் மதம் மாறித்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், காதலுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆகவே நீங்கள் மதம் மாறவேண்டாம். நாம் பதிவுத் திருமணம் செய்து கொள்வோம்’ என்று சொன்னார்கள். அப்போது சுயமரியாதை இயக்கத்தில் லூர்து சாமியோடு நெருக்கமாக இருந்தவர், சென்ற சில தினங்களுக்கு முன்பு கருணாநிதி அவர்கள் ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக்கி துவக்க விழா செய்தபோது, அந்தக் கூட்டத்தில் பேசினார்கள்.
’நான் ஈரோட்டில் குடியரசுப் பத்திரிகையில் சாதாரண ஊழியனாக சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டிருந்தபோது, எனக்கு ஈரோட்டில் மிக நெருக்கமாக இருந்து பழகிய நண்பர்கள் ஆ.லூர்து சாமி, சண்முக வேலாயுதம், செல்வம், கருணாநந்தம் போன்றவர்களையெல்லாம் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அந்த சண்முகவேலாயுதம் அவர்கள் பதிவுத் திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அப்போது பதிவுத் திருமண அலுவலகம் ஈரோட்டில் இல்லை. கோவையில் தான் பதிவுத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அங்கே சென்று கேட்டபோது, அந்த பதிவாளர் சொன்னார்: ’இரண்டு மதத்தினைச் சேர்ந்தவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது’ என்று சட்டம் இருக்கிறது என சொன்னார்கள். இன்று அந்தச் சட்டம் இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது.
ஆனால் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே, அதை அறிவித்து அந்த அறிவிப்புப் பதிவு அலுவலகத்தில் நோட்டிஸ் போர்டில் போடப்படும். அதற்கு யாராவது ஆட்சேபனை செய்கின்றார்கள் என்று சொன்னால், 30 நாட்களுக்குள் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அந்தத் திருமணம் நடைபெறும் என்று சட்டம் இருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.
நாங்கள் சென்று விசாரித்தபோது அவர்கள், இரு மதத்தைச் சார்ந்தவர்கள் பதிவு திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொன்னார்கள். அப்படியானால் என்ன செய்வது என்று அவர்களிடத்தில் கேட்டபோது, ’ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்’ என்று தனியாக திருமணம் செய்து கொள்வதற்கென்று ஒரு சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டத்தின்படி நீங்கள் நடந்துகொண்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னார். அந்தச் சட்டம் என்ன என்று கேட்டேன்.
நீங்கள், இந்து மத்தின் மீது நம்பிக்கை இல்லை. எந்த மதத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை என்று எழுதிக் கொடுக்க வேண்டும். அதேபோல், மணமகளும் கிறிஸ்தவ மதத்தின் மீது நம்பிக்கை இல்லை. வேறு எந்த மதத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் மதச் சார்பற்றவர்கள் என்று எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படி எழுதிக் கொடுக்கிற பட்சத்தில்தான் உங்கள் திருமணம் நடைபெறும் என்று சொன்னார்கள்.
நாங்கள் உடனே எழுதிக் கொடுத்துவிட்டோம். எங்களுக்கு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. நாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்று எழுதிக் கொடுத்த பிறகு, எங்களுடைய திருமணம் பதிவு செய்யப்பட்டது. அந்தத் திருமணம் ஈரோட்டில் இன்றைக்கு பழைய இரயில்வே ஸ்டேஷன் ரோடு என்றழைக்கப்படுகின்ற இடத்தில் பெரியாருடைய தகப்பனார் பெயரால், வெங்கடப்ப நாய்க்கர் சத்திரம் என்ற சத்திரம் இருந்தது. அந்த சத்திரத்தில் தான் திருமணம் நடப்பதாக திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. 11.11.1925ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக இராகுகாலத்தில் திருமணம் நடப்பதாக பத்திரிக்கை அச்சிட்டோம்.
திருமணப் பத்திரிக்கை நீட்டிய கையளவிலேயே தான் இருந்தது. சாதாரணமான பத்திரிக்கை. அது வயலட் கலரில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அதில் இரு வீட்டார்கள் பெயர் போடுகின்ற பொழுது மணமகனாகிய எனது வீட்டார் என்ற இடத்தில் பொதுவுடமை இயக்கம் ஈரோடு என்றிருந்தது. மணமகள் வீட்டார் என்று இருக்க வேண்டிய இடத்தில் சுயமரியாதை இயக்கம் என்றிருந்தது. யாருடையத் தனிப்பட்ட பெயரும் இல்லை. பொதுவுடமை இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் என்றுதான் போடப்பட்டிருந்தது.
பெரியார், கே.டி.ராஜ் அவர்களுடைய முன்னிலையில் அவர்கள் சாட்சிக் கையெழுத்திட்டு எங்களுடைய திருமணம் எளிய முறையில் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் வாழை மரம் கட்டாமல், தாலி இல்லாமல் பதிவுத் திருமணமாக நடைபெற்றது.
பதிவாளர்கள் கோயமுத்தூரிலிருந்து தனியாக அவர்களுக்கு ஒரு கார் ஏற்பாடு செய்து அங்கே வந்து திருமணத்தை நடத்தி வைத்தார்கள். அந்தத் திருமணத்தின்போது பெரியார் அவர்கள் பேசினார்கள். ‘இந்தத் திருமணம் கோவையிலிருந்து பதிவாளர்கள் வந்து செய்ய வேண்டியிருக்கிறது. இது எல்லோருக்கும் முடியாத காரியம். ஆகவே ஈரோட்டிலேயே பதிவாளர் அலுவலகத்திலே திருமணத்திற்கு என்று பதிவாளர்கள் தனியாக நியமிக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை அந்தத் திருமண மேடையில் வைத்தார். வைத்தது மட்டுமல்லாமல், இந்தத் திருமணம் லூர்து மேரிக்கும், வெங்கடாசலத்துக்கும் நடைபெறுகின்ற திருமணமல்ல, இந்தத் திருமணம் சுயமரியாதை இயக்கத்திற்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் நடைபெறுகின்ற இணைப்புத் திருமணம் என்று சொன்னார்.
அந்தத் திருமணம் முடிந்த பிறகு யாருக்கும் சாப்பாடோ, டிபனோ என்று எதுவுமே கிடையாது. திருமணம் முடிந்தவுடன் கற்கண்டு தட்டை நீட்டினார்கள், ஆளுக்கொரு கற்கண்டு துண்டை எடுத்துக்கொண்டார்கள். எல்லோரும் வீட்டிற்கு வந்துவிட்டோம். இவ்வளவு எளிமையான திருமணம். ஜாதி, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்ட திருமணம். 1945ஆம் ஆண்டு புரட்சிகரமாக நடைபெறுகின்ற திருமணம். அப்படிப்பட்ட திருமணம் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. நிறைய பேர்கள் வந்திருந்தார்கள். ஆனால் எங்கள் வீட்டில் யாரும் வரவில்லை. பெண்வீட்டாரிலும் குறிப்பிட்ட இரண்டு நபர்கள் வரவில்லை. திருமணம் சிறப்பான முறையில் நடந்து முடிவுபெற்றது.
எனது துணைவியார் படித்து முடித்திருந்தாலும் கொஞ்ச காலம் வேலைக்குப் போகவில்லை. எங்களுடையத் திருமணம் முடிந்தபிறகு 1946ஆம் ஆண்டு எனக்கு முதல் குழந்தை பிறந்தது. அது ஆண் மகனாக இருந்தான். அவனுக்கு என்ன பெயர் வைப்பது என்றிருந்தபோது, ஜீவானந்தத்தோடு முதன் முதலிலே எனக்கு பழக்கம் ஏற்பட்டது. என் திருமணத்திற்கு ஓராண்டு காலம் முன்புதான் ஈரோட்டில் பொதுக்கூட்டத்தில்தான் அப்படிப்பட்ட பழக்கம் ஏற்பட்டது.
அவருக்கு வெள்ளைக்காரன் காலத்தில் விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனை மாவட்டம் விட்டு மாவட்டம் நுழைய தடை விதிக்கப்பட்டு, தடை விலக்கப்பட்டு கடைசியில் திருவனந்தபுரத்தில் அவருடைய சொந்த ஊராகிய பூதபாண்டியில் தங்கவேண்டும் என்கிற நிபந்தனையோடு அன்றைக்கு இருந்த திருவாங்கூர் மகாராஜா அவர்கள் பூதப்பாண்டியில் தங்குவதற்கு அனுமதித்தார்கள். ஆனால் அதுவும் ஒரு நிபந்தனையோடு அனுமதித்தார்கள். எந்தவிதமான அரசியல் கூட்டங்களிலும் நீங்கள் பேசக்கூடாது என்கிற தடையோடு அவருக்கு அங்கு தங்க அனுமதி வழங்கப்பட்டது.
பிறகு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி வந்தது. புழு எப்படி நெண்டிக்கொண்டே இருக்குமோ அப்படி கம்யூனிஸ்ட்கள் எப்போதும் ஒரு இயக்கத்தை செய்துகொண்டே இருப்பார்கள் புழுவை போல் என்று காந்தி ஜெயந்தி தினத்தில் பேசினார். அவருடைய பேச்சு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பேச்சாக இருந்தது. அது சட்ட விரோதமான பேச்சு என்று சொல்லி, திருவாங்கூர் சமஸ்தானத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அதெல்லாம் முடிந்த பிறகு அவர் முதன் முதலிலே ஈரோட்டிற்கு வந்தார்கள். அப்பொழுதுதான் எனக்கும் அவருக்கும் முதல் தொடர்பு ஏற்பட்டது.
அப்பொழுதெல்லாம் கம்யூனிஸ்ட் எங்கே கண்டாலும் தாக்கப்பட்டார்கள். கம்யூனிஸ்ட் கொடிக்கம்பங்கள் வெட்டப்பட்டது. எந்த இடத்திலும் காங்கிரஸ் கொடிமரத்தைவிட உயரமான கொடி மரம் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடி பறக்கக்கூடாது என்று காங்கிரஸ்காரர்கள் ஒரு தவறான கருத்தைக் கொண்டிருந்த காலம் அது.
அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றவில்லை. திராவிடக் கழகத்திலேதான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற கருணாநிதி உட்பட அனைவரும் இருந்தார்கள். அப்பொழுது ஏற்பட்ட மிக மிக நெருக்கமான ஜீவானந்தம் அவர்களுடைய தொடர்பு மிகவும் வளர்ந்து என்னுடைய மகனுக்கு ஜீவானந்தம் என்கிற பெயர் வைக்கப்பட வேண்டிய ஒரு அன்பான விருப்பம் ஏற்பட்டது.
அப்பொழுதுதான் முதன் முதலிலே ஜீவானந்தம் அவர்கள் எங்கள் வீட்டிலே விருந்துண்டு எங்களை கௌரவித்தார்கள். அதன் காரணமாக என்னுடைய மூத்த மகனுக்கு ஜீவானந்தம் என்று பெயர் வைத்தோம். இரண்டாவதாக ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த பேச்சாளராகவும் மிகச் சிறந்த தியாகியாகவும் கேரளத்தில் இருந்து வந்து கோவை மில்லில் ஒரு தொழிலாளியாக சேர்ந்துத் தன்னை படிப்படியாக உயர்த்திக் கொண்டு சட்டமன்ற உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் மிகச் சிறந்த முறையில் பணியாற்றிய ரமணி அவர்களுடைய பெயரை இரண்டாவது மகனுக்கு சூட்டினோம்.
அதுமுதல் ரமணி அவர்களுக்கும் எனது குடும்பத்தினர்களுக்கும் மிக நெருக்கமான ஒரு உறவு ஏற்பட்டது. கட்சி இரண்டாக உடைந்தபோது அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சென்றபோதுகூட ஈரோட்டிற்கு வந்தால் என்னைப் பற்றி விசாரிப்பார். நெருக்கமான நட்போடு பழகினார்கள். அவர் மூன்று அல்லது நான்காம் வகுப்பு தான் படித்தவர். ஆனால் சிறையில் ஆங்கிலத்தை மிக நன்றாக படித்து ஆங்கில பிரசங்கத்தை தமிழில் மொழிபெயர்க்கின்ற அளவிற்கு சிறந்த ஞானம் பெற்றவராக திகழ்ந்தார்.
கோவை மாவட்டத்தினுடைய செயலாளராக சிறந்த முறையில் பணியாற்றினார்கள். அந்த நட்பின் காரணமாக அவர் மீது கொண்டிருந்த தோழமையின் காரணமாக என்னுடைய இரண்டாவது மகனுக்கு ரமணி என்ற பெயரை வைத்தோம். மூன்றாவதாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு கல்பனா என்று பெயரிட்டோம். கல்பனா என்ற பெயர் இன்றைக்கு பல்வேறு இடங்களில் நிறைய குழந்தைகளுக்கு வைக்கப்படுகின்ற அளவிற்கு மிகச் சிறந்த தேசியவாதியாக ஆயுதப் போராட்டத்திலே தன்னை படிக்கின்ற காலத்திலே ஈடுபடுத்திக் கொண்ட ஒரு இளம் மாணவியாக திகழ்ந்தவர்.
அவர் படிக்கின்ற பொழுதே சிட்டகாங் ஆயுதப் போராட்டம் என்கின்ற மகத்தான போராட்டத்தை,. பாகிஸ்தானில் இருந்து பிரிந்து இன்றைக்கு வங்கதேசத்தில் இருக்கின்ற மலைக்குன்று பகுதி அது. அங்கே வெள்ளைக்காரர்கள் ஆயுதத் தொழிற்சாலையை அமைத்திருந்தார்கள். வெள்ளைக்காரர்களுடைய ஆயுதத்திற்கு எதிராக ராட்டையைக் கொண்டு அவனை விரட்ட முடியாது என்று எண்ணிய இளைஞர் பட்டாளம் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.
அப்பொழுது அவர்கள், ’நாம் ஆயுதம் செய்வதைவிட வெள்ளைக்காரர்களுடைய ஆயுதத் தொழிற்சாலையைக் கொள்ளையடித்து அதில் இருக்கின்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு வெள்ளைக்காரர்களோடு போராடுவது என்று முடிவெடுத்தார்கள். அதன் விளைவாக சிட்டகாங்கில் இருக்கின்ற ஆயுதத் தொழிற்சாலையை பிரீத்தி என்கிற கல்லூரி மாணவி. கல்பனா என்கிற இளம் பெண், கல்லூரி மாணவி. அம்பிகா சக்கரவர்த்தி என்கின்ற வங்கத்தி. மிகச் சிறந்த தேசபக்தர். கணேஷ் வித்யார்த்தி என்று சொல்கின்ற தீவிரவாதி.
இன்றைக்கு காசியில் பனாரஸ் போகின்ற வழியில் ஒரு சிறை இருக்கிறது. அந்த சிறை அவர்கள் உட்பட அந்த ஆயுதத் தொழிற்சாலையை கொள்ளையடித்து ஆயுதங்களை எல்லாம் கொண்டுபோய்விட்டார்கள். இந்தச் செய்தி வெள்ளையருக்குக் கிடைத்து அவர்கள் அந்த குன்றுப் பகுதிக்குச் சென்று ஆயுதப் போராட்டத்தை நடத்தினார்கள். தேசபக்தர்கள் கையில் இருக்கின்ற ஆயுதம் தீருகின்ற வரையில் அதாவது கையில் இருக்கின்ற கட்டுச்சாதம் எத்தனை நாளைக்கு வரும் என்பதைப்போன்று கொள்ளையடித்த ஆயுதங்களில் இருந்த வெடி மருந்துகள் எல்லாம் தீர்ந்த பிறகு அவர்கள் வெள்ளைக்கார இராணுவத்தால் வேட்டையாடப்பட்டார்கள்.
அவர்கள் அங்கங்கே தப்பிச்சென்று தலை மறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கல்பனாவைப் பற்றியும், ப்ரீத்தியைய் பற்றியும் நான் பின்னால் சொல்கிறேன். அதை கம்யூனிஸ்ட் கட்சியினால் சிட்டகாங் ஆயுதப் போராட்ட வீரர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் போராட்டத்தையும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் எட்டணாவிற்கு ஒரு புத்தமாக அச்சிட்டு பத்துப் பன்னிரெண்டு புத்தகங்களை வெளியிட்டிருந்தார்கள்.
அதைக்குறித்து கல்பனா மீது எனக்குத் தனியான மரியாதையும் மதிப்பும் இருந்தது. அவர் சிறைப்பட்டிருந்த காலத்தில் மகாத்மா காந்தி அந்தப் பெண்ணைச் சென்று பார்த்தார்கள். பதினெட்டு, பத்தொன்பது வயது இளம் பெண் அவர். பி.ஏ. படித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது வெள்ளைக்கார இராணுவத்தால் பிடிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டார் அவர். மகாத்மா காந்தி அவர்கள் கல்பனாவைப் பார்த்துவிட்டு வந்து கவர்னரை சந்தித்து, அவர் இளம் பெண், படித்துக் கொண்டிருக்கிறாள், அவள் படிப்பு கெடக்கூடாது. ஆகவே அவர்களை நீங்கள் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
அதன் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த கல்பனாவின் மீது கொண்ட அன்பினாலும் அவருடைய தேசபக்தியை மதிக்கின்ற முறையிலும் அந்தப் பெண்ணிற்கு கல்பனா என்று பெயரிட்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக ஓராண்டு முடிவதற்கு முன்னதாக அம்மை தடுப்பூசி போடுகிற போது நகராட்சியில் இருந்து பணியாற்றுகிற பணியாளர் தவறாக ஊசியைப் போட்டதால் அவள் இறந்துவிட்டாள். அவள் நினைவாக ஈரோட்டில் இடுகாட்டில் அவளுக்கு ஒரு கல்லறை கட்டியிருக்கிறோம். அவள் இறந்தபோது என்னுடைய மனைவி சயரோகத்தால் பாதிக்கப்பட்டு பெருந்துறை சானிடோரியத்தில் இருந்தார். குழந்தை இறந்தவுடன் மருத்துவர் உதவியுடன் அவரை கூட்டிக்கொண்டு வந்து பிரேத அடக்கம் முடிந்தவுடன் மறுநாள் மீண்டும் கொண்டுபோய் அங்கேயே விட்டுவிட்டேன். அப்போது அவர் அந்த சமாதியின் மீது ஒரு கல்லை நினைவுச்சின்னமாக வைத்து அதில் ஒரு வாசகத்தை எழுதிக் கொடுத்தார்கள். அந்த வாசகம் திரு.வி.க. அவர்களால் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன்.
’மலரும் மலர்கள் வாடலும்
இவ்வாழ்வு நிலையாது ஊடலும்
உலகம் கண்ட உண்மை என
இவ்வினத்தை விட்டாய் கண்ணே கல்பனா! என்ற வாசகம்தான் அது.
இன்றைக்கும் அங்கே செல்கின்றவர்கள் அதைப் படித்துவிட்டு மிக அருமையான வாசகம் என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். மூன்றாவதாக அவள் பிறந்து இறந்தாள். பிறகு சானிட்டோரியத்தில் சுமார் ஓராண்டு காலம் அங்கே வைத்திய உதவி பெற்று அன்றைக்கு சயரோகத்திற்கு தக்கோ பிளாஸ்டிக் என்கிற ஒரு அறுவை சிகிச்சையை செய்வார்கள். இன்றைக்கு அந்த முறை கிடையாது. எந்த சுவாசப்பை சயரோகத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த சுவாசப் பையிலிருந்து சுவாசம் வெளியே பரவி மற்ற பகுதிகளில் பரவுவதற்கு முன்பு அந்த சுவாசப் பையை இயங்காமல் செய்வது. அதற்குப் பெயர்தான் தக்கோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை. முதுகின் பின்னால் தோள்பட்டையிலிருந்து, கீழே இடுப்பு வரையில் மூன்று முறை ஆபரேஷன் செய்வார்கள். முதலில் மூன்று எலும்பை எடுத்துவிடுவார்கள். அடுத்து கொஞ்ச நாளைக்குப் பிறகு இரண்டு எலும்பை எடுப்பார்கள். அடுத்து கொஞ்ச நாளைக்குப் பிறகு இரண்டு எலும்பை எடுப்பார்கள். அப்படியாக மொத்தம் ஏழு எலும்பு நீக்கப்பட்டு அவள் குணமாகி வீட்டிற்கு வந்தாள்.
3
எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 3
எனது மனைவி வீட்டிற்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது . அந்த குழந்தைக்கு ஜெயபாரதி என்று பெயர் வைத்தோம் . அதற்குக் காரணம் எனக்கு சிறு வயது முதலே பாரதியின் மீது இருந்த ஈடுபாடுதான் . எனக்கு பத்து அல்லது பன்னிரண்டு வயது இருக்கும்போதே , ‘ இளைஞர் சன்மார்க்க சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை ஈரோடு தங்கவேல் வாத்தியார் அவர்கள் ஆரம்பித்து , அது ஒவ்வொரு வாரமும் , இன்றைக்கு காமராஜ் வீதியில் இருக்கின்ற நகராட்சிப் பள்ளியில் ஞாயிறுதோறும் கூட்டங்களை நடத்தி , பாரதியின் பாடல்களை சொல்லிக் கொடுப்பார் .
இப்படி வளர்ந்த சங்கத்து இளைஞர்கள் , பாரதியின் பிறந்தநாளன்று பாரதியின் பாடல்களை , தெருவில் பாடிக்கொண்டு போகின்ற ஒரு பழக்கம் ஏற்பட்டது . அன்று முதல் எனக்கு பாரதியின் மீதும் அவர் பாடல்களின் மீதும் ஒரு அன்பும் , பற்றுதலும் மரியாதையும் ஏற்பட்டது . அதன்பிறகு ஜீவாவுடன் தொடர்பு ஏற்பட்டபோது இந்த மரியாதை பன்மடங்கு அதிகரித்தது .
எனது மனைவி சானிடோரியத்தில் தங்கி வைத்தியம் செய்து கொண்டபோது அங்கு கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு நர்ஸ் இருந்தார் . அவர் என் மனைவியோடு பழகி , ஒரு நெருக்கமான நட்பு ஏற்பட்டு , பின்னர் அதுவே நெருங்கிய குடும்ப நட்பாகவும் , உறவாகவும் மாறியது . அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் அவர்கள் செய்த உதவி கொஞ்ச நஞ்சமல்ல . சொந்த சகோதரி போலவே பழகினார்கள் . அவர்மீது இருந்த நட்பினால் அவர் பெயரில் உள்ள ஜெயா என்ற எழுத்தை எடுத்து பாரதியுடன் சேர்த்து ஜெயபாரதி என்று பெயர் வைத்தோம் .
பிறகு மறுபடியும் என் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சானிடோரியம் கொண்டு சென்று காட்டினோம் . அப்போது அங்கே தங்கி சிகிச்சை பெற்றால் நன்றாக இருக்கும் என்று அப்போது அங்கு தலைமை மருத்துவராக இருந்த விஸ்வநாதன் அவர்கள் கூறினார்கள் . அவர் எனது சித்தப்பா மீனாட்சி சுந்தரனாரிடம் நெருங்கிய நட்புள்ளவர்கள் . அதனால் நோயாளியான என் மனைவிக்கு வைத்தியம் செய்வதற்கு பெரிதும் உதவினார் .
அவர் அப்போது , ‘ ஏன் இப்படி வைத்தியத்திற்கு செலவு செய்துகொண்டு இருக்கிறீர்கள் . உங்கள் மனைவி நர்ஸ் பயிற்சி பெற்றுள்ளார் , வேலைக்கும் செல்லவில்லை . இங்கேயே அவர்களை பணியில் அமர்த்தி வேலை கொடுத்து , சம்பளமும் தருகிறோம் . தங்கும் இடமும் இலவசமாகத் தருகிறோம் . இது உங்கள் வைத்தியத்திற்கும் உதவியாக இருக்கும்’ என ஆலோசனை கூறினார் . அதனை ஒப்புக்கொண்டு நாங்கள் சானிடோரியம் இராமலிங்கம் காசநோய் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்தார்கள் .
அந்த சானிடோரியத்திற்கு ஈரோடு நகராட்சி மன்றமும் , கோவை நகராட்சி மன்றமும் ஆண்டுதோறும் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்கள் . இதனால் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் நான் இடம் பெற்றிருந்தேன் . 1957 இல் ஈரோட்டில் நகராட்சி தேர்தல் நடந்தபோது நான் வெற்றிபெற்று நகராட்சி மன்ற உறுப்பினராகவும் , எதிர்க்கட்சித் தலைவராகவும் முகமது அப்துல்கனி அவர்கள் நகராட்சித் தலைவராகவும் இருந்த நேரத்தில் , அவர் பெருந்துறை சானிடோரியத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர் பொறுப்பில் நகராட்சியில் என்னை தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள் .
கோவை இராமசாமி , ( பிரபலமான பம்ப்செட் தயாரிப்பு நிறுவனம் , சிமெண்ட் ஆலை ஆகியவற்றின் தொழிலதிபராக விளங்கியவர் ). லண்டனில் படிக்கும்போது ஹெலன் என்ற ஆங்கிலப் பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டு இந்தியாவில் தங்கியவுடன் கம்யூனிஸ்ட் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டார் . ஹெலன் இராமசாமி இங்கு வந்த பின்பு பாரத நாட்டின் கலையைக் கற்று பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார் . நான் பெருந்துறை சானிடோரியத்தில் நிர்வாகக் குழுவில் இருந்தபோது அவரை அழைத்து ஓர் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது . நான் நகர் மன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வரவேற்பு கொடுப்பதற்காக நகர்மன்ற சபையில் தீர்மானம் கொடுத்தேன் . அதை ஏற்று சிவாஜி அவர்களுக்கு நகர் மன்றத்தின் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது . அப்போது அவரை தனிமையில் சந்தித்து சானிடோரியத்தின் நிதி பற்றாக்குறை நிலைமையையும் ஜெனரல் வார்டில் தங்கி பல மாதக் கணக்கில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பொழுது போக்கிற்கான ஏற்பாடுகளைப் பற்றி பேசி அவரை ஒருமுறை சானிடோரியத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ள அவரும் ஒப்புக்கொண்டார் . சென்னிமலைக்குத் தியாகி முருகேசன் ஏற்பாட்டின்படி பூமி தான இயக்கத் தலைவர் லினியோ அவர்கள் சென்னிமலை வந்தார் . இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிவாஜி அவர்கள் சானிடோரியத்தைப் பார்வையிட்டார் . அதன் பயனாக அனைத்துப் பொது வார்டுகளுக்கும் ஒவ்வொரு ரேடியோ வாங்கிக் கொடுத்தவுடன் தான் நடித்த திரைப்படச் சுருள்களையும் அனுப்பினார் . வாரம் ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளில் படம் திரையிடப்பட்டது . ஒரு திரைப்பட புரொஜெக்டரையும் கொடுத்து உதவினார் .
அந்த முறையில் சேனிடோரியத்தில் எனக்கு டாக்டர் விஸ்வநாதன் , டாக்டர் ஜோசப் , டாக்டர் ஆறுமுகம் போன்ற அனைத்து டாக்டர்களிடமும் ஒரு மதிப்பும் , மரியாதையும் ஏற்பட்டது . அந்த நிர்வாகத்திலே ஆர் . கே . வெங்கிடுசாமி நாயக்கர் இருந்தார்கள் . அவருக்கும் எனக்கும் கொள்கை ரீதியிலே செயல்முறை தவறுகள் காரணமாக தொடர்ந்து கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் விரோதமும் இருந்து வந்தது .
தேசிய வாலிபர் சங்கம் இருந்தபொழுது அது வலது சாரியாக இருந்து நாங்கள் இடது சாரியாக இருந்த பொழுது . மனக்கசப்பு ஏற்பட்டது . அதன் காரணமாக , அவர் ஜவஹர் வாலிபர் சங்கம் என்ற ஒன்றை தொடங்கி , தனியாக நடத்தினார்கள் .
நகராட்சித் தேர்தல் நடந்தபொழுது , அவரும் ஈஸ்வரனும் வெற்றி பெற்று வந்தபொழுது , ஈஸ்வரனை சேர்மேன் ஆக்க வேண்டும் என்றபோது அதற்கு விரோதமாக அவர் தானே சேர்மேன் ஆக வேண்டும் என்று , அவரே லிங்கம் செட்டியாரிடம் தூது போய் நகராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது , அந்த கசப்பு மேலும் வளர்ந்தது .
காந்திஜி அவர்கள் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் , நகர் மன்ற , ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இப்பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்தார் . இதன் அடிப்படையில் ஈரோடு நகராட்சியின் துணைத் தலைவர் ஏம் . ஏ . ஈஸ்வரனும் கவுன்சிலராக இருந்த வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணிய ஐயர் இருவர் மட்டுமே ராஜினாமாச் செய்தனர் . நகர் மன்றத் தலைவர் ஆர் . கே . வெங்கிடசாமி நாயக்கர் மற்றும் உள்ள கவுன்சிலர்கள் பயந்து கொண்டு ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்கள் . இந்த நிலையில் சேர்மன் நகரசபைக் கூட்டத்தைக் கூட்டி யுத்த நிதிக்கு ரூபாய் 75, 000 வழங்கியும் நீதிக்கட்சிக்காரர் சண்முக வேலாயுதத்தின் ஆச்சி விலாஸ் பள்ளியில் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் படத்தைத் திறந்து வைத்துத் தன்னுடைய ராஜ விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார் . இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் தந்திக் கம்பிகளை வெட்டுவதற்கு ஆலோசனைக் கூட்டம் ஆர் . கே . வெங்கிடுசாமி நாயக்கர் வீட்டில்தான் நடந்தது என்றும் அவர்தான் எல்லோருக்கும் கட்டிங் பிளேயர் கொடுத்தார் என்றும் பொய்யாகக் கூறினார்கள் . போலீசார் ஆர் . கே . வெங்கிடுசாமி நாயக்கரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்த போதுதான் அரசாங்கத்திற்கு விசுவாசம் உள்ளவன் என்றும் காங்கிரஸ் கட்டளைப்படி பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் யுத்த நிதிக்குக் காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாக காங்கிரஸ் தலைவராக இருந்தும் யுத்த நிதிக்கு ரூ .25 ஆயிரம் நகராட்சியின் நிதியிலிருந்து வாங்கியதையும் சர்ச்சில் படத்தைத் திறந்து வைத்ததை எல்லாம் கூறி தப்பித்துக்கொண்டார் . அந்நாளில் நாடு விடுதலை பெற்று காங்கிரஸ் அமைச்சரவை அமைத்தபோது எல்லோருக்கும் இவர் வீட்டில்தான் விருந்து நடைபெற்றது . போராட்டம் நாடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது .
இப்படியாக அவருக்கும் எனக்கும் மனக்கசப்பு வளர்ந்து வந்தது . அதன் காரணமாக பெருந்துறை சானடோரியத்திற்கு எதிரான விரோதமான காரியங்களில் அவர் ஈடுபட்டபோது , அது பன்மடங்கு வளரவும் செய்தது .
என் மனைவியை விஸ்வநாதன் சானிடேரியத்தில் நியமித்தபோது , இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது . அப்பொழுது என் மனைவியின் பெயர் லூர்து மேரியாக இருந்து , பிறகு மேரி வெங்கடாசலமாக மாறிவிட்டது . அவர் மேரி வெங்கடாசலத்தை வேலையிலிருந்து நீக்கவேண்டும் என்று விஸ்வநாதனிடத்திலே நிர்ப்பந்தப்படுத்தினார்கள் .
இருக்கின்ற நர்ஸ்களிலேயே நேரம் பார்க்காமல் மனச்சாட்சியின் சிறந்தபடி வேலை பார்க்கும் அவரை , எந்த காரணத்திற்காக நான் நிறுத்துவது என்று அவர் கேட்டபொழுது , கம்யூனிஸ்ட் என்று சொல்லி நிறுத்துங்கள் என்று அவர் கூறினார் . கேரளாவில் ஆட்சியே கம்யூனிஸ் ஆட்சி . இருக்கின்ற பொழுது , மத்திய அரசு அதை பார்த்துக்கொண்டிருக்கிறது . அப்படியிருக்கும்போது நான் இச்சிறிய நிறுவனத்தில் உள்ள ஒருவரை கம்யூனிஸ்ட் என்று எப்படி நிறுத்த முடியும் என்று சொல்லி தன்னால் அவரை வேலையில் இருந்த நிறுத்தமுடியாது என்று கூறினார் .
இதன்பிறகு உதவி சூப்பரின்டெண்ட் ஆக இருந்த டாக்டர் ஆறுமுகம் அவர்கள் தனக்கு நிர்ப்பந்தம் கொடுப்பார்கள் என்று தெரிந்துகொண்டு , ஒரு வருடம் ஆக்டிங் நர்ஸாக இருந்த எனது மனைவியை டாக்டர் விஸ்வநாதன் இல்லாத சமயத்தில் மற்றொருவரை பணிநிரந்தரம் செய்துவிட்டார் . அதுவும் அவருக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது .
இதன் காரணமாக எனக்கும் அவருக்கும் மனக்கசப்பு வளர்ந்துகொண்டே வந்தது . என் மனைவி அங்கு பணியாற்றிக்கொண்டுதான் இருந்தார் . சானிடோரிய விதிகளுக்கு எதிராகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் தனக்கு வேண்டியவர்களுக்கு வெங்கிடுசாமி நாயக்கர் சானிடோரியத்திலே தவறான பல சலுகைகளை செய்துகொண்டு வந்தார்கள் . அதிலே அன்று ராமசாமி என்ற ஒரு காங்கிரஸ்காரருக்கு விறகு டெண்டர் கொடுப்பார் . அந்த ஆஸ்பத்திரியில் நானூறு , நானூற்றைம்பது பேர் தங்கி வந்தனர் .
தினசரி காலையிலே பால் , டிபன் , பதினொறு மணிக்கு ராகிக் கஞ்சி , பதினொன்றரை மணிக்கு சாப்பாடு , மூணு மணிக்கு டிபன் , 7 மணிக்கு சாப்பாடு என கல்யாண வீடுபோல் சமையல் கட்டு இருந்துகொண்டு வந்தது . அதற்கு வேண்டிய விறகுகளை எல்லாம் ராமசாமியிடமிருந்து பெற்றுக்கொள்வார் .
ஆனால் விதிகளின்படி அது கூட்டுறவு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இருந்ததினால் டெண்டர் கேட்பார்கள் . அந்த டெண்டர் ராமசாமி பெயரில் ஒன்று , அவர் மனைவி பெயரில் ஒன்று , மருமகன் பெயரில் , மகன் பெயரில் எனப்பல டெண்டர் கொடுப்பார்கள் .
அன்றைக்கு வேலாமரம் விறகின் விலை ஒரு டன் 52 ரூபாய் . இவர்கள் 60 ரூபாய்க்கு போடுவார்கள் . மற்றவர்கள் 62, 63, 64 என்று போடுவார்கள் . எல்லாம் சொந்தக்காரர்கள் . கடைசியில் இவர் டெண்டெர் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்படும் . அது மட்டுமல்ல , நாளொன்றுக்கு ஒரு டன் , ஒன்றரை டன் விறகு தேவை , ஒரு லோடு கொடுக்கும்போது பத்து டன் என்றால் ஒன்பது டன் கொடுத்து பத்து டன் கொடுத்ததாக சமையல்காரருக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு கணக்கு காட்டிவிடுவார் .
நான் நிர்வாகக் குழு உறுப்பினராக சேர்ந்தபோது , இந்த செய்தி தெரிந்து , அப்போது சானிடோரியத்திலே இன்றைக்கும் கம்யூனிஸ்ட் கட்சியிலே சிறந்த தலைவராக இருக்கின்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் , இன்று பஞ்சாயத்து போர்டு தலைவராக இருக்கின்ற டி . கே . நல்லபன் அவர்களை அன்றைக்கு ஒரு டெண்டர் கொடுக்கச் சொன்னேன் . அந்த டெண்டரிலே அன்றைக்கு டன் என்ன விலைக்கு விற்கிறதோ , அந்த விலைக்கு ஒரு ரூபாய் , எட்டணா மேலே வைத்து டென்டர் கொடுத்தோம் . அந்த டெண்டரை ஆர் . கே . வெங்கிடுசாமி நாயக்கர் தனது வீட்டிற்குக் கொண்டு வரச் செய்து உடைத்துப் பார்த்தார் .
அப்போது சானிடோரியத்தில் பத்மநாபன் என்ற ஒரு கிளார்க் இருந்தார் . அவர் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் . அவர் வெங்கிடுசாமி நாயக்கர் ராமசாமியை கூப்பிட்டு , “ இதைவிட்டால் நீ பிழைக்க மாட்டாய் . இந்த டி . கே . நல்லப்பனின் டெண்டரை விட ஒரு மூணு பைசா குறைவாக போட்டுக் கொடுத்துவிடு , மற்ற வழியில் நீ பணத்தை சம்பாதித்துக் கொள்” என்று கூறினார் . அதன்படி அவர் வேறு டெண்டரையும் கொடுத்து அதை அங்கீகரித்துவிட்டார் .
இதை பத்மநாபன் என்னிடம் கூறிவிட்டார் . இந்தச் செய்தியை நான் கலெக்டருக்கு தந்தி அனுப்பினேன் . உடனே கலெக்டர் எல்லா டெண்டர்களையும் அன்றே கேன்சல் செய்தார் . புதிதாக டெண்டர்களை வரவழைக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டார் . இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி , ஆட்களை தூண்டிவிட்டு ஒருநாள் நான் சானிடோரியத்திலிருந்து புதுக்கோட்டைக்கு கம்யூனிஸ்ட் பொதுக் கூட்டத்திற்கு போய்க்கொண்டிருக்கும்போது ஏழெட்டு ஆட்களைக் கொண்டு என்னைத் தாக்கினார் . ஆனாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை . ஏனென்று சொன்னால் , வரும் மந்திரிகள் எல்லாம் ராமசாமி வீட்டில்தான் தங்குவார்கள் . அந்த அளவுக்கு செல்வாக்கு படைத்தவர் .
உடனே நாங்கள் “விருந்தினர் ஸ்தாபனங்களின் பெருச்சாளிகள்” என்று இவர் சானிடோரியத்தில் செய்கின்ற லீலைகளை எல்லாம் நோட்டீஸ் அடித்துப் பெருங்கூட்டம் போட்டோம் . வீட்டிற்கு அருகிலேயே ஒரு பொதுக்கூட்டத்தை போட்டோம் . சீனாபுரத்திலே போட்டோம் . ராமசாமியின் ஊரிலே போட்டோம் . பெருந்துறையிலே போட்டோம் . இதனால் ராமசாமியின் தூண்டுதலின் அடிப்படையில் வெங்கிடுசாமி நாயக்கர் சானிடோரியம் குவார்டர்சில் எங்கள் குடும்பம் தங்கக் கூடாது . அதனைக் காலி செய்துவிட்டு வெளியிலிருந்து என் மனைவி வேலைக்கு வரவேண்டுமென உத்தரவிட்டார் . நான் சானிடோரியத்திற்கு விரோதமாக பொதுக்கூட்டம் நடத்தி அதில் பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார் . எனவே என் மனைவியை மூன்று மாதம் விடுப்பு எடுக்கச் சொல்லி மெட்ராஸ் சென்றுவிட்டோம் .
மெட்ராஸில் பொது மருத்துவரிடம் என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று சர்டிபிகேட் வாங்கித் திரும்ப வேலைக்கு வந்தபொழுது , லீவ் லெட்டரை அங்கீகரிக்காதபடிக்கு அந்த லீவ் லெட்டருக்கு D.M.O. கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அவரிடம் அனுப்பினார்கள் . D.M.O. சானடோரியம் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார் . கலெக்டர் தலைவராக இருந்தார் . D.M.O. வை கூப்பிட்டு இந்த லெட்டரை அங்கீகரிக்க வேண்டாம் . இது பொய்யானது என்று சர்டிபிகேட் கொடுங்கள் என்று சொல்லிவிட்டார் .
D.M.O. வின் பெயர் செல்வராஜ் . அவர் என்னைக் கூப்பிட்டு சிரித்தபடி வெங்கிடுசாமி நாயக்கர் ”உங்கள் மெடிக்கல் சர்டிபிகேட்டை அங்கீகரிக்க வேண்டாம் என்று சொன்னார் . நான் இவர்களுக்கு உண்மையாக உடல்நலம் சரியில்லை . ஆதலால் லீவு தேவைதான் என்று பரிந்துரை செய்து லெட்டர் தருகிறேன் எனக் கூறி அனுப்பிவிட்டார் . வேறு வழியில்லாததால் என் மனைவி மீண்டும் வேலைக்கு சேர்க்கப்பட்டார்கள் .
சேர்ந்தபின் ஒருநாள் மட்டும் வேலை செய்துவிட்டு மறுநாள் ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்துவிட்டார்கள் . இப்படியாக அவர் பல்வேறு காரியங்களை செய்துகொண்டு வந்தார் . நான் பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டவுடன் , முதன்முதலாக எனக்கு உறவுமுறையிலே தாத்தாவாக இருந்த சங்கர முதலியாருடைய மிகப்பெரிய ஜவுளி நிறுவனத்திலே சேர்ந்து நான் தொழில் பழகினேன் .
என்னுடைய திறமை மற்றும் வேலை முறையையும் , கணக்கு வழக்கு எழுதுவதையும் பார்த்த எனது தாத்தா சங்கர முதலியாருக்கு என்மீது மதிப்பும் , மரியாதையும் ரொம்ப பாசமும் வந்துவிட்டது .
அப்போது நான் அங்கேயிருந்துதான் தேசிய வாலிபவர் சங்கத்தோடு தொடர்புகொண்டு , அந்த சங்கத்திற்கு சென்று வந்தேன் . பத்துப் பதினைந்து பேர் அங்கு வேலை செய்து வந்தனர் . பதினொரு பன்னிரண்டு மணி அளவில் தேனீர் அருந்த வெளியே வருவார்கள் . அவர்களோடு நானும் செல்வேன் , தேநீர் அருந்த அல்ல , தேசிய வாலிபர் சங்கத்துக்கு சென்று ஒரு மணிநேரம் எல்லாரிடமும் பேசிவிட்டு வருவேன் . நேரம் ஆகிவிட்டதென்றால் “ஏய் ! அவன் அந்த சோம்பேறி மடத்திலே இருப்பான்டா ! போய் கூட்டிட்டு வாங்கடா என்று சொல்லி என் தாத்தா ஆளை அனுப்புவார்கள் . நான் வருவேன் . இப்படி என் முதல் வேலையை ஜவுளித் தொழிலில் துவங்கினேன் .
அதன் பிறகு என் அண்ணனுக்கு நண்பராக இருந்த மிக வேண்டியவரிடம் சாயக்கடையில் சேர்ந்து அங்கே வேலை பழகினேன் . அதைத் தொடர்ந்து என் அத்தை மகன் எம் . சி . பழனியப்ப முதலியார் , எம் . சி . கருப்பண்ண முதலியார் , எம் . சி . வெங்கடாசலம் இவர்களுடைய கடையிலே நான் சேர்த்துக் கொள்ளப்பட்டேன் . அங்கே சில காலம் வேலை செய்தபிறகு என் தன்மான உணர்வினால் அங்கே இருப்பதற்கு பிடிக்காமல் அங்கேயிருந்து நின்றுவிட்டேன் . என் துணைவியார் நேரே போய் என் சித்தப்பா மீனாட்சி முதலியாரை சந்தித்தார் . அவர் என் மனைவிக்கு , தலைமை ஆசிரியராக மகாஜன மேநிலைப் பள்ளியிலே இருந்தார் . நல்ல மாணவியாக அவரது நன்மதிப்பைப் பெற்றிருந்தார் என் மனைவி . அவரே தன் மருமகளாக அமைந்ததால் அவரிடம் சென்று அவரது ஜவுளிக் கடையிலேயே என்னை வேலைக்கு வைத்துக்கொள்ளக் கேட்டார் .
அங்கே அவரது ஜவுளிக் கடையிலே எனக்கு வேலைக்காக சொன்னார்கள் . அவரும் வரச் சொன்னார் , நான் அங்கு சென்று நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நடத்தினேன் . அன்றைக்கு எதற்கெடுத்தாலும் விநியோக அட்டை கட்டுப்பாட்டு முறை அரிசிக்கு , ஜவுளிக்கு , சர்க்கரைக்குக் கண்ட்ரோல் , சீமெண்ணெய்க்கு என எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு இருந்த அந்தக் காலத்தில் மேட்டூர் மில் ஜவுளிகளுக்கு மிகவும் தட்டுப்பாடு இருந்தது . மூன்று இன்ச் லாங் க்ளாத் , ஐநூத்தி ஒண்ணு மல் , நூற்று ஒண்ணு மல் , இப்படிப்பட்ட துணிகளுக்கு மிகவும் தட்டுப்பாடு இருந்தது . லைசென்ஸும் அரசாங்கம் கொடுப்பதைவிட நாங்களும் இன்னாருக்கு இந்த ஜவுளியை விநியோகிக்கிறோம் என்று சொல்லி , எஸ் . கிருஷ்ணசாமி , பி . எஸ் . சூரிய நாராயணா என்ற விலாசத்தாரர்கள் தான் மேட்டூர் மில் துணிகள் அத்தனைக்கும் சென்னை ராஜ்ஜியம் , அதாவது தமிழ்நாடு , கேரளா , கர்நாடகா , ஆந்திரா , புதுச்சேரி , புதுக்கோட்டை உட்பட இடங்களுக்கெல்லாம் விநியோகஸ்தர்களாக இருந்தார்கள் . அவர்கள் எனக்கு ஜவுளி கொடுப்பதாக உத்திரவாதம் தந்தவுடன் லைசென்ஸ் வாங்கப்பட்டு , நான் கடையில் இருந்துகொண்டே ஜவுளி வியாபாரமும் செய்துகொண்டு வந்தேன் .
இப்படிப் பல வருடங்கள் அங்கே இருந்த பிறகு , தனியே வெளியேறி தனியாக ஜவுளிக்கடையை துவங்கினேன் . அதற்கு முன்னதாக 1942 ல் , 144 தடை உத்தரவை மீறி கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சமயத்தில் , என் தகப்பனார் , “ இவனை இங்கேவிட்டால் இப்படித்தான் இருப்பான் . எல்லாரோடும் தொடர்புகொண்டு காங்கிரஸ் வேலை செய்வான் என்று சொல்லி கல்யாணம் காட்சி பண்ணணும் . எனவே இவனுக்கு சேலத்தில் ஜவுளிக் கடை அமைத்துக் கொடுக்கலாம்” என்று முடிவு செய்தார் .
ஈரோட்டிலும் ஜவுளிக் கடை இருந்தது . என் அண்ணா எஸ் . பி . கே . அண்ட் கோ என்று சொல்லி சொந்தமாக ஜவுளி உற்பத்தி செய்து விநியோகித்து வந்தார் . அதன் கிளையாக சேலத்திலே அருணாச்சல ஆச்சாரி தெருவிலே என் . எஸ் . பஸ் கம்பெனி இருந்த இடத்தில் ஜவஹர் விலாஸ் , என்ற பெயர் வைத்து ஒரு கடையை ஆரம்பித்து என்னை கொண்டுபோய் அமர்த்தினார்கள் . என்கூட உதவிக்காக என் தாய்மாமன் ஆர் . வி . கருப்பண்ண முதலியார் இருந்தார் . அவர்களின் மேற்பார்வையில் அந்தக் கடையை பார்த்துக்கொண்டு வந்தேன் . அவர் அதற்கு முன்பு நியூ ஏஜென்ட் பிலிம்ஸ் என்ற மாடர்ன் தியேட்டர் கடையிலே பொறுப்பாளராக இருந்தார்கள் . பிறகு ஜவுளிக்கடையை நடத்திக் கொண்டிருந்தோம் . அப்பொழுது மு . நடேஷ் அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார் .
“நீ இங்கேயே இருந்தால் என்ன செய்வே, இப்போதே நீ வெளியே வந்தால், சத்திரம் காந்தசாமி பொருளாதார உதவி செய்வதாக சொல்லுகிறார். நாம் ஒரு ஜவுளிக் கடை வைத்து நடத்துவோம். அதன்பிறகு நீ கலப்புத் திருமணம் செய்துகொண்டாலும் உனக்கு கஷ்டம் இருக்காது. உன் கல்யாண ஏற்பாடு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறாய். அதனால் இந்த கடமையிலிருந்து வெளியேறு” எனக்கூறி வெளியேற வைத்தார். ஈரோடு வந்தவுடன் அங்கே ஒரு ஜவுளிக் கடை வைத்தோம். அதற்கு முதலில் எஸ்.பி.வி அண்ட் கோ என்று பெயர் வைத்து நடத்தினோம். அதன்பிறகு அதன் பங்குதாரர்களே இன்னொரு விலாசமாக “பிரபாத் ஹாண்டுலூம் டெக்ஸ்டைல்ஸ்” என்று பெயர் வைத்து வளையக்காரத் தெருவிலே ஒரு கடை வைத்து நடத்தினோம். கடை முன்பகுதியில் இருந்தது. பின் பகுதியில் அச்சுப்பட்டறை. சேலைகளை அச்சடிப்பது, அதன் உரிமையாளராக இருந்தவர், தேசிய வாலிபர் சங்கத்தில் எங்களோடு ஒன்றாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்து வந்த நண்பர் அம்பாயிரம் அவர்களின் பட்டறை இருந்தது.
வியாபாரம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையிலே , என்னை சேலத்திலிருந்து கூட்டி வந்த நடேசன் அவர்கள் , தன் அண்ணன் குப்பண்ண முதலியாருடைய தூண்டுதலின் பேரில் என்னை கடையை விட்டு நீக்குவது என்று சொல்லியும் , கீரைக்கார வீதியிலிருந்த கடையை , மேற்கு அனுமந்த நாராயண் கோயில் தெருவில் இருந்த அவரது அண்ணன் கடைக்கு மாற்றினார் . நான் கடையிலிருந்து வெளியேறி , அம்பாயிரத்தோடு சேர்ந்து அச்சுப் பட்டறை நடத்தினேன் . அச்சுப் பட்டறை நன்றாக நடந்து வந்தது . பிறகு நானாகவே அங்கே இருந்து விலகி , காடா பீஸ்களை வாங்கினேன் . அப்பொழுது ஜப்பானிலிருந்து ஒருவித உயர்ந்த காடா துணி வரும் . ஒரு கெஜம் நாலணா , ஐந்தணா , ஆறணா வரை இருக்கும் . அதை பேல் கணக்காக வாங்கி சலவை செய்து அம்பாயிரம் பட்டறையில் கொடுத்து பீஸ்களாக அச்சடித்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன் .
ஆந்திரத்திலிருந்து வந்த ஒரு வியாபாரி இந்த பீஸ்களைப் பார்த்து நன்றாக இருக்கிறது , எத்தனை பீஸ் இருக்கிறது என்று கேட்டார் . அப்பொழுது ஒரு பேலுக்கு நாற்பது பீஸ்கள் வரும் . ஒவ்வொரு பீசும் நாற்பது கெஜம் இருக்கும் .
ஐந்து பேல் , ஆறு பேல் இருப்பதாகச் சொன்னேன் . அவர் அப்படியே எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னார் . அப்பொழுது முதன் முதுலில் நான்தான் ஜவ்வரிசியை கஞ்சியாகக் காய்ச்சி , அந்தக் கஞ்சியில் அச்சடிக்கப்பட்ட பீஸ்களை நனைத்து அதனைக்கை கேலண்டர்களினால் சுற்றி , அது மழமழவென இருக்கவே , ஆந்திர வியாபாரிக்கு அது மிகவும் பிடித்துவிட்டது . ஐந்தணா ஆறணா கொடுத்து பீஸ்களை வாங்கி , ஓரணா ரெண்டனா மேலே போட்டு பீஸ்களை நன்றாகச் செய்து , பத்தணா போல் நல்ல லாபத்துக்கு விற்று அந்த தொழிலை விருத்தி செய்தேன் .
இத்தொழிலில் படிப்படியாக முன்னுக்கு வந்து , அதன்பிறகும் பல தொழில்களைச் செய்தேன் . என் வாழ்க்கையில் நான் செய்த தொழில்கள் சுமார் இருபத்து எட்டு இருக்கும் . இலாபம் வந்தால் அந்த தொழிலைச் செய்வேன் . நட்டம் வருவது போலிருந்தால் அத்தொழிலை விட்டுவிட்டு , வேறு தொழிலுக்கு சென்று விடுவேன் .
ஸ்டாம்ப் விற்கும் தொழிலையும் செய்தேன் . ஸ்டாம்பை வாங்கி பேப்பரில் ஒட்டி விலாசங்களை எழுதி அச்சடித்துக் கொடுத்தால் ஒரு சதவிகிதம் கமிஷன் கொடுப்பார்கள் . அந்த தொழிலையும்கூட கொஞ்ச நாள் நான் அர்பன் பேங்க் பக்கத்தில் இருக்கிற கோர்ட்டில் செய்து வந்தேன் .
பிறகு பழனியப்பா டெக்ஸ்டைல் என்ற ஜவுளிக் கடையும் , பிறகு எஸ் . பி . கருப்பண்ண முதலியார் என்ற விலாசமும் , சேலத்திலே ஜவஹர் விலாசும் , எஸ் . பி . வி அண்ட் கோ , பிரபாத் ஹேண்ட்லூம் டெக்ஸ்டைல் , ஈரோடு அறுவை வாணிபமும் , காரைக்குடியில் ஒன்றும் , ஈரோடு ஜவுளி நிலையம் என்று கும்பகோணத்தில் ஒன்றும் , ஈரோடு சொஸைட்டி என்றும் , பழநியப்ப முதலியார் என்ற பெயராலும் , ரேணுகா பிளிச்சிங் பேக்டரி என்ற பெயராலும் , பிறகு தனியாகவே பெருந்துறையிலே நாற்பது தறிகளை போட்டு உயர்தரமான பெட்ஷிட்களை தயாரித்து ஈரோடு சொஸைட்டிக்கு விநியோகித்தும் , நானாகவே துண்டுகளை தயாரித்து விற்பனை செய்தும் , பிறகு கோட்டை காமராசர் என்று அழைக்கப்பட்ட பொரி இ . எம் . பெரியண்ணன் , அம்பாயிரம் , லிங்கப்பன் , ஈ . எம் . பாலு இவர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்தேன் . அது நல்ல முறையில் ஏழெட்டு ஆண்டுகள் பெரும் இலாபத்தைக் கொடுத்து ஊக்குவித்தது . இப்படியாக பலத் தொழில்களைச் செய்து பொருளீட்டினேன் .
பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து விட்டார்கள் . அப்பொழுது எல்லாம் எஸ் . எஸ் . எல் . சி . தான் , இப்போது இருப்பது போல் +1, +2 கிடையாது . அவர்கள் படித்து முடித்தபிறகு மேற்பட்டப் படிப்புக்கு என்ன செய்வது என்று யோசனை செய்தபோது , ரமணியையும் , ஜீவானந்தத்தையும் டாக்டர் படிப்பிற்கு படிக்க வைக்க முடிவு செய்தோம் . ஏனென்றால் , என்னுடைய மாமியார் அவர்கள் மிட் ஒயிஃப் ஆக அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . அவருடைய தங்கை , கோபியிலும் , தாராபுரத்திலும் மிட் ஒயிஃப் வேலையில் இருந்தார்கள் . மாமியார் மருத்துவத் துறையில் இருந்ததால் , பிள்ளைகளை டாக்டருக்குப் படிக்க வைக்க முடிவு செய்தோம் . டாக்டர் படிப்பு இன்றைக்கு இருப்பது போல அவ்வளவு கஷ்டமல்ல . இரண்டு பேருக்கும் விண்ணப்பம் போட்டேன் .
எம் . பி . பி . எஸ் . படிப்பிற்கு என் மகன் ஜீவானந்தத்துக்கு விண்ணப்பம் போட்டேன் . அந்தத் தேர்வு கமிட்டியிலே டாக்டர் சுந்தரவதனம் அவர்கள் தலைவராக இருந்தார்கள் . சென்னை பொது மருத்துவமனையிலேயே செயலாளராக இருந்தார் . பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை . ஆகவே விண்ணப்பத்தைப் போட்டுவிட்டு என்ன செய்வது என்று யோசனை செய்துகொண்டு இருந்தோம் .
அப்போது பெரியார் அவர்கள் ஞாபகம் வந்தது . அன்றைக்கு அவர் மணியம்மையாரை திருமணம் செய்திருந்தார்கள் . மணியம்மையார் அவர்கள் பெரியாரை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே , அவரது சொந்த ஊரான வேலூரிலே இருந்து எனது துணைவியாருக்கு கடிதம் மூலம் நண்பரானார் .
நானும் எனது மனைவியும் , கே . பி . ராமனாதனுமாக மூன்று பேரும் கே . பி . ராமனாதனுடைய காரை எடுத்துக்கொண்டு திருச்சி புறப்பட்டோம் . இரவு எட்டு மணிக்கு போய்ச் சேர்ந்தோம் .
பெரியார் அவர்கள் தூங்கச் சென்றுவிட்டார் . வாட்ச் மேனிடம் கேட்டதற்கு , “ அவர் உறங்கிவிட்டார் . நாளை காலை வாருங்கள்” என்று கூறினார் .
“மணியம்மை இருக்கிறார்களா?” என்று கேட்டோம். ‘ஆமாம்’ என்றார். ஆனால் இப்போது பார்க்க முடியாது என்று செக்யூரிட்டியும் கூறிவிட்டார்.
“நீங்கள் போய் ஈரோட்டில் இருந்து மேரி வந்துள்ளதாக சொல் என்றதற்கு, “நாளை காலை வந்து பாருங்கள்” என்று மறுபடியும் சொன்னார்.
“நாங்கள் போய் வருவது எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் என்னை நீங்கள் உள்ளே விடவில்லை என்பது அவருக்குத் தெரிந்தால் உனக்குத்தான் ஆபத்து” என்றதும், உள்ளே போய் சொன்னான்.
உடனே அவர்களே வெளியே வந்து , “ மேரி , வாவா” என்று உள்ளே அழைத்தார்கள் . ஐயா தூங்கிவிட்டார் . இருந்தாலும் வாருங்கள் போய்ப் பார்ப்போம்” என்று மணியம்மை சொன்னார் .
நாங்கள் , “ பரவாயில்லை , காலை பார்க்கலாம்” என்றபோது , “ இல்லை , வாங்க” என்று சொல்லி , பெரியாரிடம் சென்று , “ யார் வந்திருக்கிறார்கள் பாருங்கள்” என்றதும் , அவருக்கு உடனே ஞாபகம் வரவில்லை .
“ஐயா ஈரோட்டிலிருந்து மேரி வந்திருக்கு ஐயா” என்றதும், “அடடே, வாபுள்ள வா வா! என்னைவிட உனக்கு அதிகமாக முடி நரைச்சு போச்சு….” என்று சொல்லி கட்டிலிலேயே என்னையும் என் மனைவியையும் உட்கார வைத்தார்.
பிறகு , “ எதற்கு இந்த நேரத்தில் இங்கே வந்துள்ளீர்கள்” என்று கேட்டார் .
“ஐயா பையனுக்கு மெடிக்கல் காலேஜுக்கு போட்டுள்ளோம். அதற்காகத்தான் உங்களை பார்க்க வந்தோம்” என்றோம்.
“இப்பொழுதுதான் வீரமணி வந்துவிட்டுச் சென்றார். டாக்டர் சுந்தரவதனுக்கு இருபது பேரை சிபாரிசு செய்து கடிதம் கொடுத்துள்ளேன். சரி, பரவாயில்லை, நீங்கள் நேராக இங்கிருந்து மெட்ராஸ் புறப்படுங்கள். அங்கே காலை விடுதலை ஆபீஸுக்குப் போங்கள்” என்றார்.
நாங்கள் உடனே அங்கிருந்து மெட்ராஸ் புறப்பட்டோம் . கூடவே என் இரண்டாவது மகன் ரமணியையும் அழைத்துச் சென்றேன் . கிளம்புவதற்கு முன் கும்பகோணத்தில் உள்ள திராவிடர் கழகத் தலைவர் மாரிமுத்துவுக்கு நாங்கள் வருவதாக போன் செய்தோம் . அவர் சானிடோரியத்தில் உள்ள ஜெயலட்சுமியின் தகப்பனார் . அவர் எனக்கு வேண்டிய குடும்ப நண்பர் .
அவர் , வீரமணி அவர்களுக்கு “நம்ம ஆள் ! இவருக்கு எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள்” என்று கடிதம் கொடுத்துவிட்டார் .
காலையில் சென்னையை அடைந்தவுடன் சிந்தாதிரிப் பேட்டையில் இருந்த விடுதலை கட்சி ஆபீஸுக்குப் போனோம் . எப்பொழுதும் ரமணி மிகவும் துறுதுறுப்பானவன் . எந்த முடியாத காரியத்தையும் முடிக்கின்ற திறமையும் சக்தியும் உள்ளவன் . அவன் உடனே சொன்னான் .
“அப்பா, பெரியார் வீரமணிக்குப் போன் செய்துவிட்டார்” என்றான். “எப்படி உனக்குத் தெரியும்” என்றேன். “லெட்டர் பின்பக்கம் பாருங்கள். அண்ணன் இன்டர்வியூ நம்பர் உள்ளது” என்று அதை கவனித்துவிட்டான்.
வீரமணி அவர்கள் வந்தவுடன் , நாங்கள் அவரிடம் எங்களை அறிமுகம் செய்துகொண்டோம் . அவரும் , “ ஆமாம் , ஐயா போன் செய்தார் . லிஸ்டில் உங்கள் பையன் பெயரை இருபத்தி ஒன்றாம் இடத்தில் குறிப்பிட வேண்டாம் . முதல் பெயராகக் குறித்துக் கொள்ளுங்கள் . அவர்கள் எனக்கு அந்த அளவிற்கு வேண்டியவர்கள்” என்று கூறியுள்ளார் . அதன்படி லிஸ்ட்டை மாற்றி அமைத்துள்ளேன்” என்றார் . இண்டர்வ்யூ நடந்தது . இண்டர்வியூ கமிட்டி செக்ரட்டரி பார்த்தசாரதி என்பவர் .
அப்பொழுது எஸ் . கிருஷ்ணசாமியின் மேட்டூர் மில்ஸின் பொறுப்பாளராக இருந்த பழனியப்பன் என்னோடு ஈரோட்டில் படித்தவர் . எனக்கு நெருங்கிய குடும்ப நண்பர் . அவர் மனைவிக்கு காசநோய் வந்தபோது நான்தான் ”விஞ்ஞானம் முன்னேறியிருக்கும் நேரத்தில் டி . பி . நோயைப்பற்றி கவலை வேண்டாம் . சானிடோரியத்திற்கு வந்து சிகிச்சை செய்யுங்கள்” என்று கடிதம் எழுதினேன் . அவரும் மனைவியை இங்கே அனுப்பி சிகிச்சை செய்து குணமாக்கிச் சென்றார் . அவர் என் பள்ளி தோழர் என்பதைவிட , எனது நெருங்கிய நண்பர் என்று கூறலாம் . பக்தவச்சலத்திடம் நெருங்கிய தொடர்பு உள்ளவர் . பக்தவத்சலம் கூப்பிடுகிறார் என்று கிட்டுவிடம் பழனியப்பன் சொன்னால் உடனே அவரை அனுப்பி வைப்பார் . அந்த அளவிற்குப் பழக்கம் உள்ளவர் . ஹானரரி மேஜிஸ்திரேட் ஆக சென்னையில் இருந்தார் .
பக்தவத்சலத்துடன் பழக்கம் மற்றும் பதவி வேறு , எல்லாம் சேர்ந்து அவருக்கு மரியாதை இருந்தது . எனக்காக எதையும் செய்யக் கூடியவர் . என்னை நேராக பார்த்தசாரதியிடம் கூட்டிச் சென்றார் . அப்பொழுது சிபாரிசுக்காக பாண்டிச்சேரி முதலமைச்சர் வெங்கட சுப்பையா வந்திருக்கிறார் .
அவர் சென்ற பிறகு நாங்கள் சென்றோம் . இதுபோல எங்களுக்கு வேண்டிய தேவையைக் கூறினோம் . உடனே ஏற்கெனவே அண்ணன் கணேசன் வந்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் . கவலை வேண்டாம் என்றார் . இல்லை , இல்லை நீங்கள் மறந்துவிடுவீர்கள் , எந்த கோட் போட்டுக்கொண்டு போகிறீர்கள் சொல்லுங்கள் , அதில் ஜீவானந்தம் இண்டர்வ்யூ நம்பரை வைத்துவிடுகிறேன் என்று சொன்னதும் , ஜீவானந்தம் என்ற பெயரை மறக்க முடியுமா ? என்றார் . இருப்பினும் ஜீவானந்தம் நம்பர் எழுதப்பட்ட இன்டர்வியூ கார்டை அவரது கோட்டில் வைத்தார் .
இன்டர்வியூ முடிந்த பிறகு மணியம்மை கார் டிரைவரை விட்டு இந்த நம்பர் இருக்கிறதா என்று இரவு பன்னிரெண்டு மணிக்கு நோட்டிஸ் போர்டில் பார்க்கச் சொன்னார் . பக்தவத்சலத்திற்கும் அந்த போர்டுக்கும் விவகாரம் இருந்தது அதனால் செலக்ஷன் முடிந்து இருபது நாள் ஆனது , ரிசல்ட்டை நோட்டீஸ் போர்டில் ஒட்டுவதற்கு .
போய் பார்த்தால் பேர் இல்லை . மணியம்மையிடம் சொன்னபோது , அவர் திரும்பப் போய் பார்த்துவிட்டு வா என்றார் . நாங்கள் Ô பேக்வர்டு Õ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதால் , அந்த லிஸ்ட்டில் எங்கள் பெயர் இல்லை . எல்லோருடைய சிபாரிசும் இருந்ததால் Ô ஃபார்வர்டு கிளாஸ் Õ வகுப்பிலே பெயர் ஒட்டப்பட்டிருந்தது . அவர் தஞ்சை மெடிக்கல் கல்லூரியிலே சேர்க்கப்பட்டு படித்துக்கொண்டிருந்தார் .
அங்கே படிக்கின்றபோது நடந்த சம்பவம் , அவர் இலக்கிய பேரவையிலே பொறுப்பாளராக இருந்தார் . தமிழ் இலக்கியப் பேரவையிலே ஆண்டு விழாவிற்கு ஜெயகாந்தனை கூப்பிட வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள் . ஜெயகாந்தன் எனது நீண்ட நெடுங்கால நெருங்கிய தோழன் . ஆகவே இவன் போனான் .
அவர் உடனே “உங்களுக்குத் தமிழ் மேல் என்ன பற்று இருக்கிறது . உங்களிடம் நான் வந்து என்ன பேசுவது . இலக்கியம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் . நான் இலக்கியம் பற்றி உங்களிடம் என்ன பேசுவது . ஏன் என்னை கூப்பிடுகிறீர்கள்” என்று கோபமாக பேசினார் .
பிறகு சொன்னார் , “ எல்லாரும் டாக்டருக்குப் படிக்கிறீர்கள் . அரசாங்கம் லட்ச லட்சமாக உங்களுக்குச் செலவு செய்கிறது . படிப்பு முடிந்தவுடன் அமெரிக்கா , லண்டன் என்று சென்று விடுகிறீர்கள் . உங்களுக்கு தேச பக்தி கிடையாது . அரசு லட்சக்கணக்கில் செலவு செய்தும் , நீங்கள் இங்குள்ள ஏழை எளியோருக்கு சேவை செய்யாமல் , வெளிநாடு சென்று கொள்ளையடிக்கப் போகிறீர்கள் . ஆகவே உங்களிடம் என்ன பேசுவது . நான் வர முடியாது” என்றார் .
அப்போது இவன் சொன்னான் . “ நான் இன்னாருடைய மகன் , நீங்கள் சொல்லுவதில் பெரும் பகுதி உண்மையுள்ளது . வேறு ஒரு பகுதியும் இருக்கிறது .
அப்போது ஜெயகாந்தன் சொன்னார் .
“கிராமத்து விவசாயி என்ன கஷ்டம் வந்தாலும் தன் பூமியை விற்று விட்டுச் செல்ல மாட்டான். அப்படிச் சென்றால் தாயை பிரிந்து செல்வதாக அவன் கருதுகிறான். கதறுகிறான். அழுகிறான். படிக்காத விவசாயிக்கு தன் மண்ணின் மீது இருக்கும் பற்றுகூட படித்த உங்களை போன்றோருக்கு நாட்டின் மீது இல்லை” என ஆவேசப்பட்டார்.
அப்பொழுது எனது மகன் சொன்னான் .
“பல பேர் வெளிநாட்டிற்கு செல்கிறார்கள். ஆனால் நான் எக்காரணத்தைக் கொண்டும் பணத்திற்காக வெளிநாடு செல்ல மாட்டேன். இதை உறுதியாக சொல்கிறேன். நீங்கள் என்னை போன்றோருக்காகவாவது ஆண்டு விழாவிற்கு வரவேண்டும்” என்றதும், ஜெயகாந்தன் ஒப்புக்கொண்டு வந்தார்கள். அதை இன்றைக்கு வரை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்.
அவருடைய பல கல்லூரி நண்பர்கள் அயல் நாடுகளிலே மருத்துவர்களாகப் பணியாற்றி வருகிறார்கள் . அவர்கள் எல்லோரும் இவரையும் அழைப்பார்கள் . ஆனால் ஜீவா அதனை ஒருபோதும் ஏற்காமல் மறுத்து இங்கேயே தன் மருத்துவப் பணியை ஆற்றி வருகிறார் . தன் மருத்துவப் பணியோடு பொதுப் பணியையும் தொடர்கிறார் . தன் வைத்தியத் தொழிலை நான்கு மணி நேரம் செய்தால் சமூகப் பணியை எட்டு மணி நேரம் செய்வதைத்தன் 64 வயதில் இன்னும் தொடர்கிறார் என்பது எனக்கும் பெருமை தரக்கூடியது .
4
எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 4
ஜீவானந்தம் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் டாக்டர் நல்லசாமி அவர்களிடம் மயக்க மருத்துவராகப் பணியாற்றினார் . பிறகு தனியாக அவருடன் படித்த டாக்டர் . சம்பத்து மற்றும் டாக்டர் சச்சிதானந்தம் ஆகியோருடன் சேர்ந்து பிரப் ரோட்டில் ஒரு மருத்துவ மனையைத் தொடங்கி , அதற்கு க்யூரி என்று பெயரிட்டனர் .
பலர் அதனை , க்யூரி என்றால் க்யூர் – நோய்கள் குணமாகுமிடம் என்று தவறாகப் புரிந்து கொண்டார்கள் . ஆனால் , பொதுவாக அந்தப் பெயரை அவர் வைத்த காரணமே புற்று நோய் வைத்தியத்திற்கான ரேடியம் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசும் பெற்ற மேடம் க்யூரி அவர்களின் பெயரில் மருத்துவமனை துவங்க வேண்டும் என்ற ஆவல்தான் காரணமாக இருந்தது . ஆனால் பலருக்கு அது புரியவில்லை .
சிலர் தன் பெயர் , தன் மனைவியின் பெயர் , தாய் , குழந்தையின் பெயர் , அல்லது ஆண்டவன் பெயர் என்று வைத்து மருத்துவமனை ஆரம்பிக்கின்ற வேளையிலே இவர் மருத்துவத் துறையில் சிறந்த ஒருவரின் பெயரை வைத்து தன் மருத்துவமனையை ஆரம்பித்திருப்பது அவரது விசால அறிவைக் காட்டுகிறது .
பிறகு அந்த கட்டிடத்தை , கட்டிட உரிமையாளரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டிய நிலை வந்த போது , அவருடைய நண்பர்கள் க்யூரி மருத்துவமனையை அதே பெயரிலேயே தனியாக காந்தி நகரில் தொடங்கி நடத்தினர் .
டாக்டர் ஜீவானந்தம் தன் தங்கை ஜெயபாரதிக்குச் சொந்தமான , கலைமகள் பள்ளி வீதியில் இருந்த ஒரு கட்டிடத்தில் மருத்துவமனையை ஆரம்பித்தார் . அந்த மருத்துவமனைக்கும் பொது நோக்கோடு நளந்தா என்று பெயர் வைத்தார் . அதற்கும் சிலர் தவறான விளக்கம் கொடுத்தனர் . இந்த மருத்துவமனை வந்தால் நலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நளந்தா என்று பெயர் வைத்துள்ளதாகப் புரிந்து கொண்டனர் .
ஆனால் அந்த நோக்கோடு அவர் பெயர் வைக்கவில்லை . பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல வெளிநாட்டவர்களும் , சீனர்களும் கல்வியின் பல துறைகளில் பயின்று சிறந்து விளங்கி இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் நளந்தா பல்கலைகழகத்தை நினைவு வைத்துத்தான் நளந்தா மருத்துவமனை என்று பெயர் வைத்தார் .
இப்படி ஒரு பெயர் வைக்கும் விஷயத்தில் கூட சுயநலம் இல்லாமல் பொது நல நோக்கோடு அந்தத் துறையில் சிறந்தவர்களின் பெயரை வைக்கும் ஒரு நல்ல குணம் இருந்தது . இப்படியாக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று தொழில் செய்யாமல் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயலாற்றி , மருத்துவமனை மூலம் கோடி கோடியாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ளாமல் தன் குடும்பத்தை நடத்த எவ்வளவு பணம் தேவையோ அதை மட்டும் சம்பாதித்து , மருத்துவமனையில் இருக்கும் நேரம் போக , பெரும்பகுதி நேரத்தை பொதுச் சேவை செய்ய பயன்படுத்தினார் .
எதையுமே தனியாகச் செய்ய வேண்டும் , தனியாக சம்பாதிக்க வேண்டும் என்ற சுயநலமில்லாத ஒரு நோக்கு அவருக்கு எப்படியோ வந்து விட்டது . பல இளைஞர்களைச் சேர்த்து அறிவொளி பதிப்பகம் என்று ஒரு அச்சகத்தை ஏற்படுத்தி நடத்தினார் . பிறகு காட்டன் ஸ்மையில் என்ற பெயரில் வெளி நாட்டிற்குத் துணிகளை ஏற்றுமதி செய்யும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் . அதோடு இயற்கை உரம் தயாரிக்கின்ற ‘கிரீன் பீஸ்’ என்ற தொழிற்சாலையையும் பல இளைஞர்களோடு சேர்ந்து தொடங்கினார் .
இப்படியாக எந்த ஒரு தொழிலைச் செய்தாலும் நான்கு ஐந்து வேலை இல்லாத அல்லது உதவி இல்லாத இளைஞர்களை இணைத்து கூட்டு முறையிலே செய்ய ஆரம்பித்தார் . இதன் பிறகு வைத்தியத் துறையாலும் தானாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் ஈரோட்டில் முதன் முறையாக கூட்டுறவு முறையிலே இருபத்தைந்து டாக்டர்கள் இருபத்தைந்து டாக்டர் அல்லாதார் சேர்ந்து ஈரோடு டிரஸ்ட் ஆஸ்பிட்டல் என்கின்ற ஒரு பல்துறை மருத்துவமனையை , நவீன வசதிகளுடன் , பெரிய அளவில் தொடங்கி அது இன்றும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது . அது போலவே இன்றைக்கு மக்களுக்கு பெரும் நோயாக இருக்கின்ற கேன்சர் வியாதியை குணப்படுத்துவதற்காக வேண்டி கூட்டு முறையிலே ஈரோடு கேன்சர் சென்டர் என்ற நிறுவனத்தை திண்டலுக்குப் பக்கத்தில் ஆரம்பித்து அது இன்றைக்கும் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது . கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் , இந்த நோயை குணப்படுத்த முடியாது என்று குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நோயாளிகளை எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு வீடுபோல் வைத்து அவர்களுக்கு அந்த நோயின் கொடுமை தெரியாமல் , இறக்கும் வரையிலே அவர்களை அங்கே தங்க வைத்து , சாப்பாடு கொடுத்து பல நிகழ்ச்சிகளை நடத்தி , இறுதிவரை ஒரு குறையும் தெரியாதவாறு செய்கின்ற இமயம் என்ற ஸ்தாபனத்தை இந்திய மருத்துவச் சங்கம் மூலமாக பிற நல்ல எண்ணம் கொண்ட தர்ம சிந்தையுள்ளோர் உதவியோடும் தொடங்கி நடத்துகின்றார் .
அது போல தான் படித்த தஞ்சையில் கூட்டுறவு முறையில் புற்றுநோய் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று . ஜீவா நூற்றாண்டு நினைவு புற்றுநோய் மருத்துவமனை நிறுவி அதுவும் நடந்து வருகிறது . இதேபோல் புதுச்சேரியில் , புதுச்சேரி டிரஸ்ட் புற்றுநோய் மருத்துவமனையும் , ஊத்துக்குளியில் மக்கள் மருத்துவமனை என்ற கூட்டுறவு மருத்துவமனையும் , பெங்களூருவில் , பெங்களூர் டிரஸ்ட் புற்றுநோய் மருத்துவமனையும் சிறப்பாக இயங்கி வருகிறது . ஈரோட்டிலே பெரிய தியாகியாகிய எல்லோருக்கும் தியாக வழியைக் காட்டிய எம் . ஏ . ஈஸ்வரனின் பெயர் விடுபட்டு இருந்த காலத்தில் எம் . ஏ . ஈஸ்வரனின் பெயரில் முதியோர் இல்லம் தொடங்கப்பட்டது . முதியோர் இல்லம் என்றால் வயதானவர்கள் என்று தெரிவதால் மூத்தோர் இல்லம் என்று பெயர் வைத்து அது தர்ம சிந்தனையுள்ளவர்கள் மூலம் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது .
அது போலவே பராமரிக்க முடியாத ஆதரவற்ற
குழந்தைகளுக்கு , வெங்கடேஸ்வரா ஆதரவு பெற்ற குழந்தைகள் இல்லம் என்று , ஒரு இல்லம் துவக்கி இருக்கிறார் .
என் பொது சேவையை பின்னே தள்ளி விட்டு தன் பொது சேவைகள் மேலே வருகின்ற அளவிலே நல்ல முறையிலே பெற்றோர் நாங்கள் பெருமைப்படும் வகையில் ,
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்
என்பது போல தாய் தந்தையாகிய நாங்கள் பெருமைப்படுகின்ற வகையில் தம் பணிகளைச் செய்து வருகிறார் . அது போலவே தேசிய உணர்வுமிக்க மாணவர்களை உருவாக்க வேண்டும் , என்ற தேச பக்தி உணர்வோடு சித்தார்த்தா மேல்நிலைப் பள்ளி என்ற ஒன்றையும் துவக்கி நடத்தி வருகிறார் . இதுபோல பல்வேறு அமைப்புகள் மூலம் பொதுச் சேவையில் ஈடுபட்டிருப்பது பெருமைக்குரிய செயலாகும் , அவருடைய சகோதரர் ரமணி அவர்கள் வைத்தியத் துறையில் சேர்க்கப்பட்டார் .
பல் மருத்துவராகப் பணியாற்றி வந்தார் . அவருக்கும் தொழிலில் மதிப்பும் மரியாதையும் இருந்தது . தொழிலை நன்றாகச் செய்த அவர் 1991 ல் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார் . அவரிடம் வைத்தியத்திற்கு வரும் ஏழைகளை நன்றாகக் கவனித்து வைத்தியத்திற்கும் காசு கொடுத்து அனுப்புவார் . புன்முறுவலோடு வைத்தியம் செய்து நோயாளிகளையும் சிரிக்க வைப்பார் . ஏழை என்றால் உதவியும் செய்வார் .
ரமணிக்குத் திருமணம் நடந்து ஒரு பையன் ஒரு பெண் குழந்தை பிறந்து , அவர்களுக்கும் திருமணம் நடந்து இப்போது நல்ல நிலையில் உள்ளனர் . ரமணி பள்ளி பருவத்திலேயே பெரும் சினிமா ரசிகனாக இருந்தார் .
இந்த சினிமா மோகத்தால் ஒரு நாளைக்கு ஐந்து படங்கள் கூட பார்ப்பார் . சினிமாவில் இந்தப் படத்துக்கு இயக்குனர் யார் , இசையமைப்பாளர் யார் , நடிகர் யார் என்ற சந்தேகம் வந்தால் உடனே ரமணியைக் கேட்கலாம் . உடனே சந்தேகம் தீர்ந்து விடும் . எங்கே தனிமை உள்ளதோ அங்கே பார்த்தால் ஜீவா இருப்பான் . எங்கே பத்து பேர் இருக்கின்றார்களோ அங்கே ரமணி இருப்பான் . எந்த வேலையையும் யாராலும் முடியாது என சொல்லப்பட்ட வேலையையும் கூட திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவன் .
என் மூத்த மகன் புரட்சிகரமான முறையில் விதவைத் திருமணத்தை ஆதரித்தவன் . பாரதிதாசன் கணவனை இழந்த பெண்களைப் பற்றி ‘வேரில் பழுத்த பலா கோரிக்கையற்றுக் கிடக்குது’ என்பார் . அதுபோலவே என் மூத்த மகன் விதவா விவாகத்தை ஆதரித்துத் திருமணம் செய்து கொண்டவன் . அவனுக்கு இரண்டு மகன்கள் , ஒரு மகள் இருக்கிறார்கள் . ஒரு மகன் நல்ல நிலையிலே பரணி பட்டு சென்டரில் மாப்பிள்ளையாகவும் பங்குதாரராகவும் இருக்கிறான் . இன்னொருவன் பி . ஈ . கெமிக்கல் முடித்து பின் எம் . பி . ஏ . முடித்து விட்டு கெமிக்கல் கம்பெனியில் இருக்கிறான் .
பெண் திருமணமாகி நல்ல நிலையில் உள்ளாள் . எம் . ஏ . முடித்துள்ளாள் .. நானும் என் மனைவியும் கொள்ளு தாத்தா , கொள்ளு பாட்டியாகிவிட்டோம் .
என் பெண் ஜெயபாரதி சித்தார்தா பள்ளியை நடத்தி வருகிறாள் . அவளுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்த மகன் பெயர் நவ்ரோஜ் . இவன் மனைவியின் பெயர் பிரேமலதா , அவர்களின் பெண் குழந்தையின் பெயர் பிரணயா ..
என் மூத்த கொள்ளு பேரன் சோவியத் ரஷியாவிலே படிக்கின்ற போது , பிரேமலதா ரஷ்ய மொழி பயில அங்கு சென்றிருந்தார் , இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் . அவள் கேரளாவைச் சேர்ந்த பெண்மணி , மாநிலம் விட்டு மாநிலம் சென்ற கலப்புத் திருமணம் . இரண்டாவது பேரன் நரேந்திரன் , செட்டியார் வகுப்பைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான் . இவன் கேடரிங் பி . எஸ் . ஸி பட்டதாரி .
பாரதியின் மூத்த பையன் சோவியத் ரஷ்யாவில் பி . ஈ . கம்ப்யூட்டர் இன்ஜீனியரிங் படித்து முடித்தான் . இரண்டாவது பையன் சென்னையில் ஒரு ஓட்டலும் , ஈரோட்டில் ஒரு ஓட்டலும் நடத்தினான் . பின் லண்டன் சென்று அமெரிக்க நிர்வாகத்தில் ஐரோப்பியரால் நடத்தப்படுகின்ற சப்வே என்ற ஓட்டலில் மேலாளராக பணியாற்றினான் . குடும்பத்தோடு அங்கு இருந்தான் . அவன் மனைவி . காயத்ரி இங்கு பி . காம் படித்து விட்டு அங்கே சார்டர்ட் அக்கவுண்ட் படித்தாள் . மூன்றாவது பேரன் பெயர் நிதர்ஷன் , பேத்தியின் பெயர் நிவேதிதா இருவரும் நல்ல நிலையில் சவுக்கியமாக உள்ளனர் . இது எனக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் தருகிறது ,
நான் தீவிர காங்கிரஸ்காரனாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி காந்தி போன்றோர் கைது செய்யப்பட்டு காங்கிரஸ் அலுவலகங்களும் அதன் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்ட சமயம் , அங்கு மகாநாட்டில் கலந்து கொள்ள வந்தவர் காங்கிரஸ் தொண்டர்களை சந்திக்க ஈரோட்டிற்கு வந்தார் .
இப்போது பெரியார் மண்டபமாக உள்ள இடம் அப்போது சித்தையன் என்பவரது ஓட்டலாக இருந்தது . அவர் தீவிர காங்கிரஸ்காரர் . அந்த ஓட்டலுக்குப் பின்னால்தான் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை எல்லாம் காங்கிரஸ் கட்சியின் தீர்மானங்களை செயல்படுத்தச் சொன்னார்கள் , அந்தத் தீர்மானம் ’செய் அல்லது செத்துமடி’ என்பதுதான் . அந்தச் செயல்கள் தண்டவாளங்களைத் தகர்ப்பது , தபால் ஆபீஸ்களை கொளுத்துவது , கள்ளுக் கடைகளுக்கு வருகின்ற மரங்களையெல்லாம் வெட்டுவது , போன்ற காரியங்களை இருபது அம்சத் திட்டமாகச் செய்ய வேண்டும் . என் . கே . கோபாலசாமி அவர்கள் செட்டியாரிடம் ரயில்களைக் கவிழ்ப்பதால் , பொது மக்கள் நூற்றுக் கணக்கில் மடிவார்களே , இது காந்தியின் அஹிம்சா வழிக்கு எதிரானது அல்லவா என்று கேட்டார் . அதற்கு அவர் காந்தி சொன்னதைத்தான் நான் செய்கிறேன் … ‘ செய் அல்லது செத்து மடி‘ ‘ Do or die’ இது தான் நம் கோஷம் என்றார் . அடுத்த நாள் மாலை சப் கலெக்டர் ஆபிஸை தீயிடும் பொருப்பை நானும் கே . சி . தர்மலிங்கம் அவர்களும் ஏற்றுக் கொண்டோம் . செட்டியார் போலீஸ் சந்தேகப்படாதபடிக்கு ஒரு சிறு பையன் அங்கு சென்று ராமகிருஷ்ணா வித்யாலயா சென்று இக்கடிதத்தை அங்கு கொடுத்து , செய்ய வேண்டிய வேலைகளையும் முடித்தாயிற்றா என்று கேட்கும்படிச் சொன்னார் . நான் சிறு பையனாக இருந்ததால் அந்தப் பொறுப்பை ஏற்று கோவை சென்றேன் .
பஸ் அன்றைக்கு கரியில்தான் ஓடியது . இப்போது இருப்பது போல் விடிய விடிய பஸ்கள் அன்று கிடையாது . மாலை ஆறு மணிக்கு மேல் பஸ்கள் இருக்காது . அன்றைக்கு மேட்டுப்பாளையத்தில் சந்தை நாள் என்பதால் பஸ் கூட்டமாக இருந்தது . இடம் கிடைப்பது சற்று கடினமாக இருந்தது . இரண்டு மணிக்கு பஸ்ஸைப் பிடித்து அங்கு சென்று ராமகிருஷ்ணா பள்ளி சென்று சுவாமிஜியிடம் கடிதத்தை கொடுத்தேன் . அவர் ஒரு மணி நேரம் கழித்து வேலை முடிந்து விட்டது நீங்கள் செட்டியாரிடம் போய்ச் சொல்லுங்கள் என்றார் . எனக்கு கற்கண்டும் , பாலும் கொடுத்து வழியனுப்பினார் .
அங்கு வெகுநேரம் நின்றும் பஸ் கிடைக்கவில்லை . ஒரு டயர் வண்டி வந்தது . நான் கோவை செல்லவேண்டும் என்று சொன்னபோது நீ சரியான விளையாட்டுப் பிள்ளை இப்படியா ஓடி வருவது என்று சொல்லி கோவையில் என்னை இறக்கி விட்டார் . அங்கு அப்போது ஒரே பஸ்தான் உண்டு . ஈரோட்டிற்கு ஜி . டி . நாயுடு அவர்களின் யூ . எம் . எஸ் பஸ் யூனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற பஸ்தான் உண்டு . அதுவும் சென்றுவிட்டது . ரயிலும் இரண்டு ரயில்தான் . ஒன்று கேரளாவில் இருந்தும் , இன்னொன்று புளு மவுண்டன் . ஆகவே ரயிலும் கிடைக்காமல் இரவு கோவையிலேயே சகோதரி வீட்டில் தங்கிவிட்டேன் .
திட்டப்படி நெருப்பு வைக்க வேண்டியவர் எனக்காக காத்திருந்து விட்டு , தானே நெருப்பு வைக்க முடிவு செய்துவிட்டார் . அவர் ஆசிரியர் பயிற்சி வேலை செய்யும் சி . எஸ் . ஐ . பள்ளி ஆய்வுக்கூடத்திலிருந்து பாஸ்பரஸ் கொண்டு வந்து கலெக்டர் ஆபிஸ் தூண்களில் சுற்றி எரிய விடலாம் என்று பாஸ்பரஸை தண்ணீரிலே போட்டுக் கொண்டு வந்தார் . தண்ணீரில் இருக்கும் வரை பாஸ்பரஸ் தீப்பிடிக்காது வெளியே எடுத்தவுடன் தீப்பிடிக்கும் . அவர் அதன்படியே தூண்களில் துணியைச் சுற்றி பாஸ்பரஸை எடுத்து அதன் மீது பற்ற வைத்தார் .
பக்கத்து துணிக்கடை உரிமையாளர் கலெக்டர் ஆபிஸ் தீப்பிடித்து எரிவதைப் பார்த்து போலீஸீக்குத் தகவல் சொல்ல , போலீஸ் வந்து விட்டனர் . தீமூட்டிய எனது நண்பர் சுவர் ஏறி குதித்து பக்கத்து தெருவுக்குச் சென்று தனது வீட்டில் ஒளிந்து கொண்டார் . அவருக்கு ஆஸ்துமா வியாதி வேறு இருந்தது . அவரது தந்தை கலெக்டர் ஆபிஸில் தபேதார் வேலை பார்ப்பவர் . போலீஸ் அவர் வீட்டிற்கு வந்து இங்கு பக்கத்து கலெக்டர் ஆபிஸிற்கு தீ வைத்து விட்டு யாராவது வந்து ஒளிந்து இருக்கிறார்களா என்று கேட்டவுடன் , அவர் ஆங்கிலேயரிடம் சம்பளம் வாங்கும் அந்த விசுவாசத்தை தனது பையனைக் காட்டி நிரூபித்துக் கொண்டார் .
பையனை போலீஸ் கைது செய்து ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்று கோர்ட்டார் பத்தாண்டு சிறை தண்டனையும் , இருபது கசையடியும் கொடுத்தார்கள் . நான் கோவையில் இருந்ததால் இந்த சம்பவத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது . இப்படி இருந்த பிறகு முதலில் கைது செய்யப்பட்டவர் ஈ . கே . கோவிந்தசாமி , இரண்டாவது கைது செய்யப்பட்டவர் எம் . ஏ . ஈஸ்வரன் , மூன்றாவது கைது செய்யப்பட்டவர் ஓட்டல் சித்தையன் , நான்காவதாக கைது செய்யப்பட்டவர் சத்திரம் கந்தசாமி , ஐந்தாவதாக நான் 144 தடை உத்தரவை மீறி காரைவாய்க்காலில் பேசுகிற போது கைது செய்யப்பட்டேன் . . காங்கிரஸ் வேலைகளைச் செய்வதற்கு பாரதி வாலிபர் சங்கம் என்று ஒரு சங்கத்தைத் தோற்றுவித்தோம் . அந்த சங்கத்தின் தலைவராக வழக்கறிஞர் கணபதி சுப்ரமணி ஐயர் இருந்தார் . நான் துணைத் தலைவராக இருந்தேன் .
எஸ் . பசுபதி என்பவர் செயலாளராகவும் , சிவதாணு என்னும் கேரளத்தைச் சார்ந்தவர் துணைச் செயலாளராகவும் இருந்தார் . இப்படி குப்பண்ணன் போன்றவர்கள் அதில் உறுப்பினர்களாக பொறுப்புகளில் இருந்தார்கள் . அன்று 1943 ம் ஆண்டு மே மாதம் 1 ம் தேதி கம்யூனிஸ்ட்டுகள் மே தின நிகழ்ச்சி கொண்டாட திட்டமிட்டு என்னை காங்கிரஸ் கட்சி சார்பாக பேச அழைத்தார்கள் . காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ரசீதுக்கு பின்னால் காங்கிரஸ் கட்சியின் தேசிய வேலைத் திட்டங்கள் இருந்தது . அதில் ஒன்று தொழிலாளர்களையும் விவசாயிகளையும் காங்கிரசுக்குக் கொண்டு வருவது , அந்த அடிப்படையில் இந்த மே தினம் என்பது தொழிலாளர் தினம் ஆகவே , அதில் கலந்து கொள்வது என்று நான் கலந்து கொண்டேன் .
காங்கிரஸ் இதை ஏகாதிபத்திய யுத்தம் என்று சொன்ன போது கம்யூனிஸ்ட்கள் இதை மக்கள் யுத்தம் என்று சொன்னார்கள் . அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து மே தினத்தைக் கொண்டாடியதை கண்டித்து , நான் மன்னிப்புக் கடிதம் எழுதித் தர வேண்டும் என்று சொன்னார்கள் , பாரதி வாலிபர் சங்கத் துணைத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் . நான் மறுத்து விட்டேன் . வேண்டுமானால் பாரதி வாலிபர் சங்கக் கூட்டத்தை கூட்டி என்மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து என்னை வெளியேற்றுங்கள் என்று சொல்லி விட்டேன் .
பிறகு ஆர் . சி . கிருஷ்ணனுடைய வீட்டில் அந்தக் கூட்டம் நடந்தது . என்னைக் கண்டித்தும் , காங்கிரஸில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சோசலிஸ்ட்டுகள் பிடிவாதமாகக் கூறி வெளியேற்றினார்கள் . காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட நான் கம்யூனிஸ்ட்டாக மாறி கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்து கொண்டேன் . சோசலிஸ்ட்டுகளால் வலுக்கட்டாயமாக கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தள்ளப்பட்டேன் . பின் படிப்படியாக நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு 1943 இல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானேன் . நான் ஈரோட்டிற்கு முதன்முதலாக வருவதை பற்றிச் சொன்னேன் . அந்த காந்தி சதுக்கத்திலே பொதுக் கூட்டம் நடக்கவிருக்கும் இடத்தில் காங்கிரஸ் கொடி கம்யூனிஸ்ட் கொடியை விட உயரமாக இருந்ததைக் கண்டோம் . எனவே காங்கிரஸ் கொடியை விட கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை உயரமாக வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம் . அன்றைக்கு கம்யூனிஸ்ட்காரர்கள் கொடி மரத்தை காங்கிரஸ்காரர்கள் வெட்டுவதும் , அதைத் தடுக்க வந்தால் கம்யூனிஸ்ட்களை உதைப்பதும் , நாடு பூராவும் நடந்து கொண்டு இருந்தது , இதை வரைமுறையற்று போகவே அன்றைக்கு அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த பி . சி . ஜோஷி அவர்கள் ஒரு கோஷத்தை வைத்தார்கள் . காங்கிரஸ்காரர் தாக்கினால் திருப்பித் தாக்குங்கள் . உங்கள் கொடி மரத்தை வெட்டினால் திரும்பி வெட்டுங்கள் என்று அடிக்கு அடி என்ற கோஷத்தை வைத்தார்கள் . பி . சி . ஜோஷி அவர்கள் இளவயதில் சிறைக்குச் சென்று அன்றைக்கு காந்திஜியால் விடுதலை செய்யப்பட்ட கல்பனாவை திருமணம் செய்து கொண்டார் . அன்றைக்கு ஒவ்வொரு கம்யூனிஸ்ட் வீட்டிலும் ஒரு தோள் உயர தடி இருக்கும் . இது கயித்துக் கட்டிலுக்குப் பயன்படும் சட்டத்தால் ஆனது .
ஒவ்வொரு பொதுக் கூட்டத்திற்கு வரும் போதும் இந்தத் தடியில் கம்யூனிஸ்ட் கொடியைச் சுற்றி எடுத்துக் கொண்டு வருவார்கள் . அப்போது , அந்த கோஷம் என்னவென்றால் ‘தூக்கிப் பிடித்தால் செங்கொடி திருப்பிப் பிடித்தால் தடியடி’ . நாளைக்கு யாராவது வந்தால் தடியடிக்கு தயார் ஆவது என்பதுதான் அந்த கோஷமாக இருந்தது . கருங்கல்பாளயத்திலிருந்து ஒரு தோப்பு இருந்தது . அந்த தோப்பிலே ஒரு பாக்கு மரம் அது கிட்டத்தட்ட நாற்பது அல்லது ஐம்பது அடி உயரம் இருந்தது . அந்த மரத்தை வெட்டி சாலையின் வழியே கொண்டு வர இயலாது . எனவே வாய்க்காலில் போட்டு , காவேரி போகும் வழியில் , கொண்டுவந்த மரத்தை ஆறு , ஏழு பேர் சேர்ந்து தோளில் வைத்து எடுத்து வந்து காந்தி சதுக்கத்தில் , பொதுக் கூட்டம் நடக்கும் இடத்தில் நட்டு கொடியேற்று விழா நடந்தது . இது காங்கிரஸ்காரர்களுக்கு மனம் பொறுக்கவில்லை . காலையிலேயே இதை நட்டு விட்டாலும் , மாலையிலே எப்படியாவது வெட்டி விட வேண்டும் என காங்கிரஸ்காரர்கள் முடிவெடுத்தார்கள் . ஆர் . எல் . கிருஷ்ணா அவர்கள் தலைமையில் நாற்பது ஐம்பது பேர் அரிவாளும் கையுமாக வந்து கொடி மரத்தை வெட்ட ஆரம்பித்தனர் . அதை வெட்டும் வேலையில் முக்கியமாக முழு முயற்சியில் இருந்தவர் , என்னுடைய தம்பி எஸ் . பி . சுப்ரமணியம் அவர்கள் . அன்றைக்கு அவர் தீவிர காங்கிரஸ்காரராக இருந்தார் . குண்டூசியை சட்டையில் குத்த மாட்டார் . ஜெர்மனியில் தயாராகும் பிரஸ் பட்டனை உபயோகப்படுத்த மாட்டார் . ஐஸினால் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் சாப்பிடமாட்டார் . வெம்புளி பேனா என்று ஒரு பேனா இங்கிலாந்தில் இருந்து வரும் அதன் விலை ஆறணா . அதனைக் கூட உபயோகப்படுத்தமாட்டான் . வெளிநாட்டிலிருந்து வரும் எந்தப் பொருளையும் உபயோகப்படுத்தாத காங்கிரஸ்காரன் என் தம்பி . கொடி மரம் வெட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டான் . என்ன சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை . நன்றாகப் பட்டையாக உரித்து அடித்து அவர்களை ஓட ஓட விரட்டினோம் .
பிறகு சுப்ரமணியத்தைக் காப்பாற்றினோம் . அதன்பின் கொள்கை மாறி அவன் தீவிர கம்யூனிஸ்ட்காரனாக மாறிவிட்டான் . கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏதாவது இடையூறு என்றால் முன்னணி வகித்து எதிர்க்கச் செல்பவர்கள் எனது தம்பி எஸ் . பி . சுப்ரமணியம் , எஸ் . ஏ .. நடேசன் , மு . தியாகராஜன் போன்றோர் பிண்ணனி வீரர்களாகச் சென்று கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள் .
அன்றைக்கு சிவகிரியில் தெற்குப்பாளையம் , வடக்குப்பாளையம் என்று உண்டு . ஒரு பகுதி கம்யூனிஸ்ட் பகுதி மற்றொன்று காங்கிரஸ் பகுதி . கம்யூனிஸ்ட் பகுதியில் காங்கிரஸ் கொடி பறக்கக் கூடாது . ஒரு இடத்தில் காங்கிரஸ் கோட்டையிலே கம்யூனிஸ்ட் கொடிமரம் பறக்கக்கூடாது என்று தடுத்தார்கள் . உடனே எஸ் . பி . சுப்ரமணியம் , எஸ் . ஏ . நடேசன் , தியாகராஜன் , ராமலிங்கம் உட்பட ஐம்பது , அறுபது பேர் ஊர்வலம் நடத்திச் சென்று , கம்யூனிஸ்ட் கொடி மரங்களை நட்டு இரவு முழுவதும் பாதுகாத்துக் கொண்டு இருந்தார்கள் . இதுபோலவே ஈரோட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் கொடிமரம் ஏற்றக் கூடாது எனக்கூறி காங்கிரஸ்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் . அன்று நெசவுப் பணிக்கு கையில் பாவு நெய்வார்கள் . பாவு நெய்யும் தடிக்குப் பெயர் சுடகுச் சுமை . சுடகுச் சுமையைக் கொண்டு வந்து பெருமாள் கோயில் தெருவில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டு எங்களைத் தாக்கத் தயாராக இருந்தார்கள் . இந்தச் செய்தி எங்களுக்குக் கிடைத்தவுடன் நாங்கள் இன்றைக்கு இருக்கும் காமராஜர் வீதி வழியாக வராமல் தெப்பக்குளம் வீதி வழியாக வந்து அந்தத் தடியை நாங்கள் எடுத்துக் கொண்டோம் . எங்களைத் தாக்குவதற்கு அவர்கள் வைத்திருந்த தடியை நாங்களே எடுத்து அவர்களைத் திரும்பித் தாக்க ஆரம்பித்தோம் . அப்போது வாயிலே கத்தியை வைத்துக் கொண்டு அரச மரத்தில் ஏறி காங்கிரஸ் கட்சிக் கொடியை விட கம்யூனிஸ்ட் கட்சிக் கொடி உயரமாகப் பறக்க விடப்பட்டது . அது போலவே கருங்கல்பாளையத்தில் கம்யூனிஸ்ட் கொடியை சைக்கிளில் எடுத்துக் கொடுத்து நடு மாரியம்மன் வீதியில் நுழையக் கூடாது என காங்கிரஸ்காரர்கள் தடுத்தனர் .
அதற்கு முன்னனி வகித்தவர் வெங்கடாசலம் என்பவர் . நாங்கள் விடாப்பிடியாகச் சென்று அங்கு ஊர்வலத்தை நடத்தி முடித்தோம் . பின்னாளில் தீவிர கம்யூனிஸ்ட்காரராகப் புலிப்பட்டி வெங்கடாசலம் மாறினார் . கம்யூனிஸ்ட் கட்சி மற்ற கட்சிகளோடு கூட்டணி வைத்து புலிப்பட்டியில் போட்டியிட்டது . பிறகு வளையக்காரத் தெருவில் போராட்டம் நடந்தது . எல்லாப் போராட்டங்களிலும் என் தம்பி , எஸ் . பி . வெங்கடாசலமாகிய நான் , எஸ் . ஏ . நடேசன் ,, தியாகராஜன் போன்றோர் முன்னணியாக நின்று போராட்டங்களை நடத்தினோம் . பின்னாளில் எனது திருமணத்தின்போது கிறிஸ்துவ பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கடுமையாக எதிர்த்தான் . என் திருமணம் நடந்த பிறகு எனது மனைவியின் தங்கையையே திருமணம் செய்து கொண்டான் . கடைசிவரை தீவிர கம்யூனிஸ்டாக இருந்த 2007 இல் மரணமடைந்தான் . புதுக்கோட்டையில் சித்தப்பா கடையில் பொறுப்பு வகித்தான் . அப்போது , திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களோடு தொடர்பு ஏற்பட்டது . முடியரசன் எனும் கவிஞரின் தொடர்பு ஏற்பட்டது . இன்னும் பல தி . மு . க . வை சேர்ந்த சிறந்த பேச்சாளர்களோடு தொடர்பு ஏற்பட்டது . வள்ளத்தரசு எனும் ஒருவரின் தொடர்பு ஏற்பட்டது . அவர் ஒரு சோஷலிஸ்ட் , நான் முன்னமே குறிப்பிட்ட நாராயணசாமி ரவுத் , ஈரோட்டில் தேசிய வாலிபர் சங்கத்தில் இருந்து பிரிந்து ஜவஹர் வாலிபர் சங்கம் சென்றவர் . அவர் அங்கே புதுக்கோட்டை சமஸ்தான காங்கிரஸ் கட்சியினுடைய செயலாளராக இருந்தார் . இப்படி அங்கேயும் ஒரு இடது சாரி இயக்கத்தைத் தன்னோடு நண்பராக இணைத்துக் கொண்டார் . கவிஞர் முடியரசன் எனது மகன்களிடம் காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு சாமி கும்பிடுவதை விட நான் எழுதிய பாடலை பாடிவிட்டு உங்கள் பாடங்களைப் படி என்று அறிவுரை கூறினார் .
அந்தப் பாடல் :
தாயே தமிழே , உயிரே ,
நினைவணங்கும் சேயேன்தனை ,
செயற்கரிய செயலே
நீயே இங்கு தலை நின்றாய்
, நீ இல்லையெனில் இங்கு எனக்கு இன்பம் ஏது .
அவர் தனது மகனுக்குக் கோவையில் கலைமணி பிரஸ் என்று வைத்திருந்த கம்யூனிஸ்ட்டினுடைய மகளை திருமணம் செய்து வைத்தார் . புதுக்கோட்டை பகுதியில் இளமுருகு பொற்செல்வி என்று ஒரு பேச்சாளர் இருந்தார் .
அவர் பெண்களுக்குச் சம உரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காக தன் மனைவியின் பெயரோடு தன் பெயரை இணைத்து கொண்டவர் . தன் மனைவியின் பெயரை தன் பெயருக்கு முன்னால் வைத்துக் கொண்டார் . அது போலவே செட்டி நாடு கானாடு காத்தானிலே சண்முகம் செட்டியார் என்ற பிரபலமான சீர்திருத்தக்காரர் இருந்தார் . அவர் விதவா விவாகம் செய்து கொண்டவர் . அவருக்கும் எனது தம்பி சுப்பிரமணிக்கும் முடியரசு மூலமாக நட்பு ஏற்பட்டது . பாரதியார் அவரது வீட்டிலே தங்கி இருக்கிறார் . தனது பாடல்களிலே கானாடுகாத்தானை வைத்து ஒரு பாடலை இயற்றி இருப்பது பெருமைக்குரிய விஷயம் . அவரோடு என் தம்பிக்குத் தொடர்பு ஏற்பட்டது . குடும்ப நண்பர்கள் ஆனார்கள் . கானாடுகாத்தான் சண்முகம் செட்டியார் எனது தம்பியின் மனைவியைப் பார்த்து இனி உன் பேரை நான் ஜோன்மேரி என்று கூப்பிட மாட்டேன் . பாரதியின் பாடலில் உள்ள கண்ணம்மா என்ற பெயரை வைத்துத் தான் கூப்பிடுவேன் என்று சொல்லி , ” கண்ணம்மா எப்படி இருக்கிறாய்” என்று கேட்பார் , எஸ் . ஏ . நடேசனை எனது தம்பி சுப்பிரமணி அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார் . எஸ் . ஏ . நடேசனைப் பார்க்கும் போது கண்ணம்மா சவுக்கியமா என்று தான் கேட்பாரே தவிர ஜோன்மேரி என்று கடைசி வரை கூறியது கிடையாது . அவர் பெரும் பணக்காரராக வாழ்ந்தவர் . பிறகு அவர் புதுக்கோட்டையை விட்டு வந்து தனியாக பல வியாபாரங்களைச் செய்தார் . கும்பகோணத்தில் கடை வைத்தார் . காரைக்குடியில் கடை வைத்து தமிழ்மேல் உள்ள பற்று காரணமாக ஈரோடு அறுவை நிலையம் என்று பெயர் வைத்தார் . யாருக்கும் புரியவில்லை இது . தூய தமிழில் ஜவுளி நிலையம் என்றால் அறுவை வாணிபம் என்று பொருள் . அவனுக்கும் சோவியத் ரஷியாவிலே தமிழ் ஆசிரியராக பணியாற்றிய செம்பியனுக்கும் கடிதத் தொடர்பு ஏற்பட்டது . பேனா நண்பர்களாக அவர்களது நட்பு நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தது .
என் தம்பிக்குப் பெண் குழந்தை பிறந்தது . அக்குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று சோவியத் ரஷியாவில் உள்ள நண்பரைக் கேட்ட போது அவர் அரும்பு என்று பெயர் வைத்தார் . அவருக்கு எப்படியாவது ஈரோடு வந்து எனது தம்பியைக் காண வேண்டும் என்ற ஆவல் இருந்தது .
இந்தியா வந்தபோது தமிழ்நாடு வந்தார் . அப்போது பொள்ளாச்சியில் பெரும் கலை இலக்கிய மன்ற மகாநாடு நடந்தது . அதற்கு வந்துவிட்டு ஈரோடும் வந்தார் . அவர் தமிழ் பேராசிரியர் என்பதால் அவரை அந்த மன்றத்துக்கு அழைத்திருந்தார்கள் . ஈரோட்டில் எங்கள் வீட்டில் ஒரு நாள் தங்கினார் . தண்ணீர் என்றால் மிகப் பிரியம் கொண்ட அவர் மாலை ஆறு மணிக்கு காவிரியாற்றுத் தண்ணீரிலே குளித்தார் .
இப்படி இரண்டு மூன்று முறை தொடர்ந்தார் . ஒரு முறை தருமபுரி மாவட்டத்தின் ஓகேனக்கல்லில் வந்து குளித்துவிட்டு தருமபுரி பஸ்ஸில் ஏறிச் சென்றார் . பக்கத்து பஸ்ஸில் எனது தம்பி , தம்பி மகள் , தம்பியின் மனைவி இருப்பதைப் பார்த்து விட்டார் . உடனே பஸ் டிரைவரிடம் தமிழில் சிறிது நேரம் நிறுத்தச் சொல்லிவிட்டு எனது தம்பி மற்றும் அவன் குடும்பத்தாருடன் , அளவளாவி விட்டுச் சென்றார் . ஈரோடு வந்த போது எனது தம்பி மகள் படிக்கும் பள்ளியைப் பார்க்க ஆவல் கொண்டார் . கலைமகள் கல்வி நிலையம்தான் எனது தம்பி மகள் படித்த பள்ளி . அதில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் . அந்தப் பள்ளி எனது சித்தப்பா மீனாட்சி சுந்தரம் முதலியாரால் நடத்தப்பட்டு வந்தது . வந்தவுடன் அவருக்கு ஒரு ஆசை வந்தது . நான் தமிழ் வகுப்பில் உட்கார்ந்து கொஞ்சம் பாடம் கேட்க வேண்டும் என்று சொன்னார் . இதனை எனது சித்தப்பாவிடம் சொன்னேன் . அரும்பு படிக்கும் வகுப்பிலே எனது சித்தப்பா மீனாட்சி சுந்தர முதலியாரே பாடம் நடத்தி அதனை இவர் உட்கார்ந்து கேட்டார் . பிறகு பாடம் முடிந்தவுடன் எனக்காக வகுப்பை விட்டுக் கொடுக்கிறீர்கள் எனது அரசாங்கம் அனுமதித்தால் ஓரிரு ஆண்டுகள் இங்கு வந்து தமிழ் கற்றுச் செல்ல ஆசையாக உள்ளது .
ஆனால் எனது அரசாங்கத்திடம் அனுமதி பெறுவது சிரமம் என வேதனையோடு கூறினார் . இப்படியாக தமிழ் பேராசிரியரோடு தொடர்பு ஏற்பட்டது . அவர் நீரின் மேல் இருந்த காதலால் நீரிலேயே இறந்தார் . சோவியத் ரஷ்யாவிலே கடும்குளிரில் நதி பனிக்கட்டியாக உறைந்த போது அந்த பனிக்கட்டியின் மீது அவரும் அவரது மகனும் நடக்க ஆரம்பித்தனர் . அப்படி நடக்கும் போது உருகிய பனிக்கட்டியின் மீது காலை வைத்ததால் அவரும் அவரது மகனும் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர் .
துரதிருஷ்டவசமான சம்பவம் அது . அப்போது நான் நகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தேன் . ஆகவே நகராட்சியில் ஒரு இரங்கல் தீர்மானத்தை இயற்றி சோவியத் ரஷியாவில் உள்ள செம்பியனின் குடும்பத்துக்கு தூதரகத்தின் மூலமாக அனுப்பினோம் . இந்தப் பெருமை ஈரோடு நகராட்சிக்கு அந்தக் காலத்திலேயே உண்டு .
5
எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 5
நான் மட்டுமில்லாமல் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சோவியத் ரஷ்யாவின் மீது ஒரு தனிப்பட்ட அன்பும் , பாசமும் , அசைக்க முடியாத நட்பும் கொண்டிருந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும் . தேசியவாதிகள் சங்கம் இருந்தபோது , அங்கு நடந்த பேச்சுப் பயிற்சியில் லெனின் பற்றியும் , மற்றும் சோஷலிசம் , சோவியத் ரஷ்யா ஆகியவைகளைப் பற்றியும் பேசுவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தோம் . 1944 இல் அகில இந்திய அளவில் ’சோவியத் அன்பர்கள் சங்கம்’ என்கிற சங்கம் ஈரோட்டில் துவங்கப்பட்டது . இதன் மூலம் யுத்தத்தின் புகைப்படக் கண்காட்சி அழகாக நடத்தப்பட்டது . இவற்றிலெல்லாம் சோவியத் நாட்டின் மீது நானும் எங்கள் குடும்பமும் கொண்டிருந்த தணியாத அன்பும் ஆதரவும் தெரிந்தது என்று என்னுடைய நண்பர்கள் சொல்லுவார்கள் . சோவியத் ரஷ்யாவைப் பற்றிப் பேசாத நாளே இல்லை எஸ் . பி . வி . க்கு என்றும் மகிழ்ச்சியுடன் சொல்லுவார்கள் . அப்படி ஒரு அன்பும் பக்தியும் இருந்ததால்தான் சோவியத் தூதுக்குழு தமிழ்நாட்டிற்கு வருகின்ற பொழுதெல்லாம் , நகராட்சியின் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது . சோவியத் கலாச்சாரக் குழு அவர்களது இசை நடன நிகழ்ச்சிகளையும் என் மகள்கள் அரும்பு , பாரதி நம் நாட்டின் பாரம்பரிய பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் ஒரே மேடையில் நிகழ்த்த ஏற்பாடு செய்து பலமுறை இந்திய சோவியத் கலாச்சார வளர்ச்சிக்குச் செயல்பட்டுள்ளேன் . எனது தம்பியின் மகள் அரும்புவை சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையும் வந்தது . அதற்கான முயற்சியும் எடுத்து அவளை ரஷ்யாவிற்கு அனுப்பி படிக்க வைத்தோம் . அவள் சோவியத் இலக்கியத்தில் எம் . ஏ . பட்டம் பெற்று பின்பு பி . எச் . டி . படிக்கும்போது திருமணமானதால் அவள் இந்தியா திரும்ப வேண்டிவந்தது . அவளுடைய திருமணமும் காதல் திருமணமாக இருந்தது . சோவியத்துடனான நட்பு , சகோதரத்துவம் ஆகியவை காரணமாகவே , எனது திருமண வாழ்த்து மடலில் , கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ( அன்று யுத்தம் நடந்து கொண்டிருந்தது ) இரண்டு கோஷங்களை அடித்தார்கள் . அவை , 1. சோவியத் ரஷ்யா வாழ்க ! மற்றொன்று செஞ்சேனை வளர்க ! என்ற இரண்டு கோஷங்களையும் வைத்தார்கள் .
அந்த காலகட்டத்தில் ரயில்வே தொழிலாளர்கள் ரயில்வே தொழிற்சங்கத்துடன் இணைந்த பாரத சங்கம் என்ற ஒன்றை அமைத்துக் கொண்டு , ரயில்வே தொழிலாளர் குடும்பத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் , அவர்களின் குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து , கட்சிக் கூட்டங்கள் மற்ற நடவடிக்கைகள் போன்றவற்றை முன்னிருந்து நடத்தச் செய்தார்கள் . பத்து வயது பனிரெண்டு வயது ஆண் , பெண் இருபாலருமே இப்பணியில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள் . அப்பொழுது அவர்கள் ,
சோவியத் நாட்டைப் பாருங்கடி - அந்தச்
செஞ்சேனை வீரத்தைப் பாடுங்கடி
என்று சோவியத்தின் வீரம் மற்றும் அந்த வீரர்களின் புகழ் பற்றிப் பாடுவார்கள் . அந்த காலகட்டத்தில்தான் , சோவியத் ரஷ்யா பிளவுண்ட பொழுது மீண்டும் வேறு ஒரு ரூபத்தில் சோவியத் நட்பு எங்களுக்குக் கிடைத்தது . செம்பியனுக்குப் பிறகு , சோவியத் ரஷ்யாவில் அவருடைய மாணவராக இருந்த விக்டர் பூர்ணிக்கா என்பவரும் எங்கள் குடும்பத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் . அவரது மாணவர் துபியான்ஸ்கி அவர்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்தார்கள் . அவரோடு தொடர்பு ஏற்பட்டு , அவர் பலமுறை ஈரோட்டிற்கு வந்து எங்கள் வீட்டில் தங்கி இருந்தார்கள் . இன்றைக்கு இந்த வீடியோக் காட்சியை பதிவு செய்து கொண்டிருக்கிற ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர் அவர் . அவரோடு தொலைபேசி மூலம் பேசுவதற்கான வாய்ப்பையும் அவர் பெற்றிருந்தார் . அவர் பலமுறை இங்கே வந்து எங்களோடு தங்கி இருந்து அளவளாவிக் கொண்டிருந்தார் . தமிழ் படிக்கும் ஆர்வம் இருந்த , ஆறு , ஏழு மாணவர்களையும் கூட்டிக்கொண்டு வருவார் . நான் ஒருமுறை . ‘ இப்பொழுது எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள் ?. எத்தனை கல்லூரிகளிலே இந்திய மொழிகள் கற்பிக்கப்படுகிறது ? என்று கேட்டபோது , அவர் . ‘. முன்பு மூன்று கல்லூரிகளில் தமிழ் மொழி போதிக்கப்பட்டது . ஆனால் மற்ற மாநிலமொழிகளெல்லாம் , மூன்று நான்கு பள்ளிகளிலே படித்துக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் தமிழிலே மட்டும் இந்த ஒன்பது , பத்து மாணவர்கள்தான் படிக்கிறார்கள் . ஒரு கல்லூரியில் மட்டும்தான் தமிழ் மொழி இருக்கிறது , மற்ற கல்லூரிகளில் தமிழ் மொழியை எடுத்துவிட்டார்கள் என்று சொன்னார் . ’ ஏன் எடுத்து விட்டார்கள் என்று கேட்டேன் . மற்ற மாநிலங்களில் இருந்தெல்லாம் அந்த அரசாங்கம் சோவியத் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளும்போது அந்தந்த மாநில மொழிகளிலேதான் கடிதப் போக்குவரத்தை நடத்தினார்கள் . ஆகவே அந்த அரசாங்கத்திற்கு , அந்த மொழி படித்த பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள் . ஆகவே அந்த மொழிகளிலே வகுப்பு நடக்கிறது . ஆனால் , தமிழகத்திலே இருந்து மட்டும் சோவியத் ரஷ்யாவிலிருந்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதினால் அவர்கள் ஆங்கிலத்தில் பதில் எழுதுகிறார்கள் . தமிழில் எழுதுவதில்லை . ஆகவே மாணவர்கள் அங்கே தமிழ் படிப்பதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டார்கள் . இப்போது ஐந்தாறு மாணவர்கள் தான் படிக்கிறார்கள் என்ற வேதனையான செய்தியை அவர் சொன்னார் . அவர் வந்தபோது ஒரு பொங்கல் திருவிழாவைப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் . நாங்கள் மேட்டூர் போகின்ற வழியில் அம்மாப்பேட்டையில் ஒரு கிராமத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் அந்த பொங்கல் திருவிழாவை கூட வந்த மாணவர்களுக்கெல்லாம் காட்டினோம் . அந்த தத்துவத்தையெல்லாம் தெரிந்து கொண்டு அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள் . எங்கள் ஊரிலேயே இது போன்ற கிராம விழாக்கள் உண்டு . அதுபோலத்தான் இந்த தமிழ்நாட்டில் நடக்கிறது என்று மிக மகிழ்ச்சியாகக் கூறினார்கள் . கோவையில் செம்மொழி மாநாடு நடந்தபோது அவரது மாணவி ஆன்னாவுடன் வந்திருந்த துபியான்ஸ்கி அவர்கள் ஈரோட்டிற்கு அவரையும் அழைத்து வந்திருந்தார் . சித்தார்த்தா பள்ளியிலும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு கலை பரிவர்த்தனை நடந்தது .
வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆண்டு கொண்டிருந்த போது சோவியத் ரஷ்யா நாட்டின் மீது அன்பும் , பாசமும் , அதன் கொள்கையின் மீது பிடிப்பும் கொண்ட , இந்தியாவில் இருந்தவர்களெல்லாம் , சினிமா நடிகர்களிலிருந்து , கவிஞர் வரை , ரவீந்திரநாத் தாகூர் , பண்டித ஜவஹர்லால் நேரு உட்பட அனைவரும் இணைந்து , சோவியத் நண்பர்கள் சங்கம் என்ற ஒரு இயக்கத்தை இந்தியா முழுவதும் ஆரம்பித்தார்கள் . அப்போதுதான் ஈரோட்டிலும் சோவியத் நண்பர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது , அந்த சோவியத் நண்பர்கள் சங்கம்தான் இந்தியா விடுதலை பெற்ற பிறகு , இந்திய , சோவியத் கலாச்சாரக் கழகமாக மாறியது . சோவியத் நாடு உடைந்த பிறகு , சோவியத் என்ற பெயரை எடுத்து விட்டு ’இந்திய நட்புறவு கலாச்சாரக் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது . நான் நண்பர்கள் சங்கத்தின் ஆரம்பக் காலங்களிலிருந்து , இன்று இருக்கின்ற இந்திய நட்புறவுக் கலாச்சார கழகம் வரையில் பல்வேறு பொறுப்புகளிலிருந்து பணியாற்றியதைப் பெருமையாகக் கருதுகிறேன் .
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய சோவியத் கலாச்சார மாநாடு , பாட்னாவில் , சோவியத் கலாச்சார கழகமும் , காங்கிரஸ் இயக்கமும் சேர்ந்து நடத்திய உலக பாசிஸ எதிர்ப்பு மாநாடு , அதன் பிறகு சென்னையில் நடைபெற்ற இந்திய சோவியத் கலாச்சார மகாநாடு இப்படியாக எல்லா மாநாடுகளிலும் ஈரோட்டிலிருந்து ஒரு ரயில் பெட்டி நிறைய சோவியத் நண்பர்களை அழைத்துக் கொண்டு இந்த மகாநாடு முழுவதும் சென்று கலந்து கொண்ட பெருமை நம் ஈரோட்டிற்கு உண்டு . இந்த நட்புறவுக் கழகம் இந்தியாவில் , கிட்டத்தட்ட 80 லிருந்து 90 வரை பெரிய தொழிற்சாலைகளை நம் இந்திய அரசுத் துறைக்கு நிறுவிக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . ’ காலனி ஆதிக்கத்திலிருந்து புதிதாக விடுதலைப் பெற்ற நாடுகள் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் , பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்றால் அந்த நாடு மின்சாரத்திலேயும் , இரும்பு கனி வளத்திலேயும் , பெட்ரோலியத்திலும் தன்னிறைவுப் பெற்றிருந்தால்தான் அது வேற்று நாடுகளுக்கு அடிமையாகாமல் தம் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்’ என்று லெனின் சொன்ன இந்த வார்த்தைகள் இன்று இந்தியாவிற்கு எப்படிப் பொருந்துகிறது என்று பாருங்கள் . பெட்ரொல் , மின்சாரம் போன்றவற்றிற்காக , இன்றைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய துரதிருஷ்ட்டவசமான நிலைமை இருக்கிறது . ஆகவேதான் இன்றைக்கும் கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை அடிமைப்படுத்தக்கூடிய சந்தைப் பொருளாதாரம் , பொது சந்தை , அணு சக்தி ஒப்பந்தம் போன்றவற்றையெல்லாம் எதிர்க்கின்றார்கள் என்றால் அது அன்று மாமேதை லெனின் வகுத்துச் சொன்னது உண்மையான கொள்கை என்று தெரிகிறது .
ரூர்கேலா , பொக்காரோ உருக்காலை போன்ற சிறந்த உருக்காலைகளெல்லாம் சோவியத் நாடு நமக்காகக் கட்டிக் கொடுத்ததாகும் . சி . சுப்பிரமணியம் அவர்கள் உருக்குத்துறை அமைச்சராக இருந்தபோது பொக்காரோ உருக்காலையை நிறுவ வேண்டுமென்று அமெரிக்காவிடம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது . அப்பொழுது பொக்காரோ நகரிலே இருக்கின்ற டாட்டா நிறுவனத்தின் இரும்பு தொழிற்சாலை மிகப் பெரியதாக இருந்தது . டாடா அவர்கள் அமெரிக்காவிடம் சென்று இந்தியா வைத்திருக்கும் இந்த கோரிக்கையை நீங்கள் ஏற்க வேண்டாம் , தனியாருக்கு மட்டுமே இது போன்ற நிறுவனங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் விளைவாகவும் , அமெரிக்காவின் கொள்கையின் காரணமாகவும் இந்தியாவிற்குப் பொதுவானதாக இந்த தொழிற்சாலைகளைக் கட்டிக் கொடுக்க மறுத்துவிட்டார்கள் . இதைப்பத்திரிக்கை செய்தி மூலம் அறிந்துகொண்ட , சோவியத் அரசாங்கம் , தாங்கள் தொழிற்சாலைகளை தனியாருக்குக் கட்டிக் கொடுப்பதில்லை அரசுத் துறைக்கு மட்டுமே கட்டிக் கொடுப்போம் என்று உறுதி பூண்டு , அதை நல்ல முறையில் கட்டிக் கொடுத்ததோடு , தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வரும் வரை தங்களுக்கு கடனையும் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை , வட்டியும் தர வேண்டியதில்லை என்று சொன்னதுடன் அல்லாமல் சுமார் 400, 500 பொறியாளர்களை சோவியத் ரஷ்யாவிற்குக் கூட்டிச் சென்று தொழிற்சாலை அமைக்கின்ற போதே அதற்கான எந்திர நுட்பங்களின் பயிற்சியும் கொடுத்ததால் இன்று இது நம் இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்சாலையாக விளங்குகிறது . இந்திய - சோவியத் நட்புறவு காரணமாக இதன் இயக்கங்களை மிக மரியாதையோடு எங்களை அழைத்துச் சென்று காட்டினர் . இப்படியாக சோவியத் ரஷ்யா கட்டிக் கொடுத்த தொழிற்சாலைகளின் பல பகுதிகளை இந்தியாவிலேயிருந்து வருடம் ஒருமுறை ஒரு ரயில் பெட்டி அளவிற்கு எழுபது , என்பது பேர்களை நல்ல பிரச்சார இயக்கம் தெரிந்தவர்களையும , சோவியத் பால் நட்பு கொண்டவர்களையும் அழைத்துச் சென்றோம் . அந்த தொழிற்சாலையின் நிர்வாகிகளே நேரில் வந்து ரயில் நிலையத்திலிருந்து எங்களை வரவேற்று அந்த தொழிற்சாலையெல்லாம் சுற்றிக் காட்டி அனுப்பினார்கள் . ஒரு அற்புதமான சுற்றுப்பயணமாக அது அமைந்தது .
ஈரோட்டிலிருந்து 10 தோழர்கள் அந்தப் பயணத்தில் கலந்து கொண்டு 32 நாட்கள் , சாப்பாடு உள்பட 1600 ரூபாய் செலவோடு சென்று பார்த்து பெருமைப்பட்டிருக்கிறோம் . அப்படிப்பட்ட உன்னதமான நட்பு இந்திய சோவியத் நட்பு . இன்றைக்கு அந்த நட்பு வீழ்ச்சியடைந்தாலும் கூட இன்றைக்கும் இந்திய மக்களிடத்தில் சோவியத்தின் பால் அசைக்க முடியாத நட்பு இருக்கிறது . ’ மாஸ்கோவில் மழை பெய்தால் கம்யூனிஸ்டுகள் மதுரையில் குடை பிடிப்பார்கள்’ , என்று அந்த காலகட்டத்தில் தினமணி பத்திரிக்கையில் எழுதினார்கள் . அதே தினமணி இன்றைக்கு சோவியத் ரஷ்யா பிளவு பட்ட நேரத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு தலையங்கத்தில் , ’ சோவியத் ரஷ்யா என்கிற சோஷியலிச நாடு வீழ்ந்து விட்ட காரணத்தால் , இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் பூராவும் நாட்டாண்மைத்தனம் பண்ணுகிறது என்று அமெரிக்காவை கண்டித்து எழுதினார்கள் . இப்படியாக சோவியத் ரஷ்யா வீழ்ந்து விட்டது , சோவியத் மக்களுக்கு மட்டுமல்ல , உலகத்திற்கே ஒரு பெரிய பின்னடைவாக இருக்கிறது என்பது தெரிகிறது . இன்று மீண்டும் அது புத்துயிர் பெற்று வருகிறது . அங்கே கம்யூனிசம் வீழ்ந்து விட்டது என்று எழுதினார்கள் . என்னைப் பொறுத்தவரை கம்யூனிசம் வீழவில்லை , கம்யூனிசம் சாகாது . உழைக்கின்ற மக்களும் , உழைப்பை சுரண்டுகிற மனிதனும் இருக்கின்ற வரைக்கும் உலகத்திலே கம்யூனிசம் இருந்து கொண்டுதானிருக்கும் . அது சாகாத ஒரு இயக்கம் என்று என்னைப் போன்றவர்கள் எல்லாம் சோவியத் ரஷ்யாவின் மீது நம்பிக்கை வைத்து அதை வாழ்த்துகிறார்கள் . அது வளர்ந்து கொண்டிருக்கிறது இப்பொழுது மிகப் பெரிய மாற்றத்தை உலகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது . அது மேலும் வளரும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது .
அந்த இந்திய சோவியத் நட்புறவு கழகத்தின் மூலமாக நடைபெற்ற அகில இந்திய பயணம் 32 நாட்கள் நடைபெற்றது . அதிலே சோவியத் நாடு நிறுவியிருந்த பல்வேறு தொழிற்சாலைகளை நேரில் கண்டு மகிழ்ந்தோம் . இப்போது அந்த சுற்றுப்பயணம் செல்கின்ற பணி நின்று விட்டது . நாங்கள் கல்கத்தா போன போது நினைவுச் சின்னமாக மாறியிருக்கும் , சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடைய வீட்டைச் சென்று பார்த்தோம் . சுபாஷ் சந்திர போஸ் தப்பிச் சென்றவிதம் . அவர் தப்பிச் செல்வதற்கு முன்பு அருந்திய தண்ணீர் பாட்டில் , அவர் சாப்பிட்ட மருந்துகள் . முந்தினநாள் அணிந்திருந்த ஜிப்பா ஆகியவைகள் அப்படியே இருந்தது . அவர் பல்வேறு மகாநாடுகளில் கலந்து கொண்ட காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது . அவர் தப்பிச் சென்ற கார் , அந்தக் கட்டிடத்தின் முன் பகுதியில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது . சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் தப்பிச் செல்வதற்கு ஆப்கானிஸ்தான் வழியாக காபூல் செல்வதற்கு அந்தப் பகுதியைப் பற்றி நன்கு தெரிந்த ஒரு நபரை அனுப்பினார்கள் என்றும் , அந்த நபருக்கு சுபாஷ் சந்திர போஸ் தப்பிச் செல்கின்ற அன்று இரவுதான் முதல் இரவு வைத்திருந்தார்கள் என்றும் , தேச பக்தியின் காரணமாக தன்னுடைய முதல் இரவைத் தள்ளி வைத்து விட்டு அவர் சுபாஷ் சந்திரபோஸை அழைத்துக் கொண்டு இந்தியாவின் எல்லைக்கு அப்பால் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார் என்றும் அறிந்து கொண்டோம் . அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்கிற ஒரு வியக்கத்தக்க செய்தியும் அங்கே எங்களுக்குக் கிடைத்தது . அதன்பிறகு காசி வந்தபோது , அங்கே காசியிலேயிருந்து பனாரஸ் போகிற வழியிலே ஒரு சிலை இருக்கிறது . அந்தச் சிலை சந்திரசேகர் ஆசாத் என்று சொல்லுகின்ற அந்த இளைஞருடைய சிலை , அவர் நவஜவான் இயக்கத்தை ஆரம்பித்த தலைவர்களிலே ஒருவர் , அவர் உடலில் சுமார் , இருபது , முப்பது குண்டுகள் பாய்ந்து அவர் இறந்து தரையிலே விழும் வரை போலீசாருக்கு பயம் குறையாமல் இருந்திருக்கிறது .
அன்று இரவு அவர் இறப்பதற்கு முந்தின நாள் போலீசாருக்குத் தெரியாமல் ஜவஹர்லால் நேருவைச் சந்தித்து அவரிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார் . அதாவது , “ நாங்கள் இதுவரைக்கும் நம்பிக் கொண்டிருந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் என்ற கொள்கையை கைவிட்டு விட்டோம் . மக்களைத் திரட்டி , ஏகாதிபத்திய உணர்வை வளர்த்து , அவர்களை இந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் திருப்பாமல் வெள்ளைக்காரனை வெளியேற்ற முடியாது . ஆகவே நாங்கள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டோம் . இதை நீங்கள் வைஸ்ராயிடம் காந்தி மூலமாக தெரிவித்து , எங்கள் மீது இருக்கிற அத்தனை அடக்குமுறைகளையும் கைவிடுமாறு அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் . பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் , “ இதை நான் பார்த்துக்கொள்கிறேன் . தயவு செய்து இங்கிருந்து உடனடியாகச் சென்று விடுங்கள் . இந்த இடத்தில் போலிஸாரின் கண்களில் சிக்கி விடாதீர்கள் . அது எனக்கு மிகப் பெரிய அவமானமாக இருக்கும் . ஆகவே நீங்கள் சென்று விடுங்கள்” என்று அவரை அனுப்பி வைத்தார் . இந்த சம்பவத்தை ஜவஹர்லால் நேரு அவர்கள் தனது சுயசரிதத்திலே எழுதியிருக்கிறார்கள் . கடுமையான உழைப்பு மற்றும் ஓய்வின்மை , தூக்கமின்மை , போலீசாருக்குத் தெரியாமல் ஓடி ஒளிந்து அதனால் ஏற்பட்ட களைப்பு , இவைகளின் காரணமாக , அலகாபாத் பூங்காவிலே வந்து படுத்திருக்கிறார் . போலீசார் இதனை மோப்பம் பிடித்துவிட்டதை தெரிந்து கொண்ட சந்திரசேகர் ஆசாத் ஒரு மரத்தினடியில் ஒளிந்து கொண்டார் . போலீசார் சுட ஆரம்பித்தவுடன் இவரும் தம் கையிலே இருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட ஆரம்பித்தார் . இப்படியாக நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு , கிட்டத்தட்ட 36 குண்டுகள் பாய்ந்து தரையில் வீழ்ந்த பிறகுதான் போலீசார் வந்து அவருடைய பிரேதத்தை எடுத்துப் போயிருக்கிறார்கள் .
இவருடைய சிலையை பனாரஸ் என்ற இடத்தில் நடு ரோட்டில் வைத்திருக்கிறார்கள் . சுதந்திரம் பெற்ற பிறகு அந்தச் சிலையை திறக்க வேண்டுமென்று பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது . ஆனால் அந்த சிலையைத் திறக்கக் கூடாது என்று சில பிற்போக்குவாத காங்கிரஸ்காரர்கள் தடை செய்திருக்கிறார்கள் . அந்த சிலை பயங்கரவாதத்தைத் தூண்டுகின்ற முறையில் , கையில் துப்பாக்கி இருப்பது போன்று இருப்பதாலும் . பஞ்சக்கச்சம் கட்டிக் கொண்டு , பூணூலும் போட்டுக் கொண்டு , இடுப்பிலே கட்டியிருக்கிற பெல்ட்டில் தோட்டாக்களை வைத்திருக்கிறார் . அத்தோடு அவர் அணிந்திருந்த க்ராஸ் பெல்ட்டிலும் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருப்பது பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக இருந்ததாலும் . அந்தச் சிலையை திறக்கக் கூடாதென்று பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம் சொன்னார்கள் . அதற்கு அவர் ,
”இன்றைக்கு நாம் அனுபவிக்கிற சுதந்திரம், அவர் சிந்திய ரத்தத்தில் இருந்து கிடைத்தது. அவருடைய பாதை வேறாக இருந்தாலும், அவருடைய ஒரே கொள்கை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நம் நாட்டைவிட்டுப் போகவேண்டுமென்பதுதான் ஆகவே, அவர் கொள்கை மற்றும் லட்சியத்திற்காகவும், நாம் பெற்றிருக்கிற சுதந்திரத்திற்காகவும், அந்தச் சிலையை நான் திறக்கத்தான் போகிறேன்” என்று உறுதியாகச் சொல்லி அதைத் திறந்து வைத்தார்கள். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அந்த சிலையைப் பார்த்தவுடன், மெய்சிலிர்த்துப் போனோம். இப்படியும் ஒரு பிராமணரா என்று ஆச்சரியமாக இருந்தது. , காரணம் , பிராமணன் என்று சொன்னால் தைரியமற்ற கோழை என்று நினைத்து வர்ணிக்கப்பட்ட காலம் அது, ஆனால் சுதந்திர இயக்கத்தில் கலந்து கொண்ட பிராமணர்கள் அத்தனை பேரும் வீரர்களாகத் திகழ்ந்தார்கள். சுப்பிரமணிய சிவா சொல்ல முடியாத தியாகத்தைச் செய்தவர். வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய பாரதி போன்றவர்கள் எல்லாம் மகத்தான தியாகங்களை நம் விடுதலைக்காகச் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு நாங்கள் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட பிர்லா மாளிகை சென்று காந்திஜி இறந்த இடத்தைப் பார்த்தோம். இப்படியாக, ஒவ்வொரு இடமாக தேசிய நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்கள் மற்றும் தொழிற்சாலைகளையும் அந்த 32 நாட்களாகச் சென்று பார்த்தோம். , தேச பக்தியையும் தேசிய உணர்வுகளையும் வளர்க்கின்ற ஒரு பயணமாகவே இருந்தது அது
.
சோவியத் இந்திய நட்புறவு சோவியத் மக்களுக்கும் , சோவியத் நாட்டிற்கும் உள்ள நட்பு இப்படித்தான் இருந்தது . ஒரு முறை , குருஷ்ஷேவ்விடம் , அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் , “ உங்களிடம் . யாருக்கும் கிடைக்க முடியாத அருமையான ஒரு பொருள் இருக்கிறது . அதை யாருக்காவது கொடுக்க வேண்டுமென்றால் யாருக்கு அதைக் கொடுப்பீர்கள்” , என்று கேட்டபோது , அவர் கொஞ்சம் கூட தயங்காமல் , “ இந்திய நண்பர்களுக்குக் கொடுப்போம்” என்று சொல்லியிருக்கிறார் . அப்படிப்பட்ட நட்பு இன்றைக்கும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது . அது என்றும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும் .
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பலமுறை நடைபெற்ற இந்திய சோவியத் நட்புறவுக்கென நடைபெற்ற மகாநாடுகளிலே நான் பொறுப்பாளராக இருந்திருக்கிறேன் . இந்திய சோவியத் கலாச்சாரத்தின் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் , மாநில கவுன்சில் துணைத் தலைவராகவும் , மாவட்டத் தலைவராகவும் . இப்படி பல்வேறு பொறுப்புகளில் இருந்து , அந்த இயக்கத்தைக் காக்க பாடுபட்டிருக்கிறேன்
மகாநாடு என்றால் , ஈரோட்டிலிருந்து பாட்னாவிற்கு , ஒரு ரயில் பெட்டி தனியாக ஐந்து நாட்களுக்கு அங்கேயே மகாநாடு முடியும் வரை இருந்து கூட்டி வரும் வகையில் , ஏற்பாடு செய்து கொடுத்தவர் தோழர் எம் . கல்யாணசுந்தரம் அவர்கள் . அதுபோலவே திருவனந்தபுரம் மகாநாட்டிற்குப் போனபோதும் ஒரு ரயில் பெட்டியை ஏற்பாடு செய்து கொடுத்தார் . அதுபோல இந்திய சோவியத் கலாச்சாரக் கழகப் பயணத்தின் போதும் ஒரு தனிப் பெட்டியை 32 நாட்களுக்கும் எங்கள் படுக்கையை விரித்தால் திரும்பவும் சென்னை வந்துதான் படுக்கையை சுருட்டுகிற அளவுக்கு ஒரு கம்பார்ட்மென்ட் ஏற்பாடு செய்து கொடுத்து அதில் சாப்பாடு வசதிகளையெல்லாம் செய்து கொடுத்து மிகச்சிறப்பான முறையில் அதை நடத்திக் கொடுத்தார் . என்றைக்குமே மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருந்தது அது .
அந்த தூதுக் குழுவில் ராஜபாளையத்திலிருந்து அதிகமானவர்கள் வந்திருந்தார்கள் . காரணம் இந்திய சோவியத் கலாச்சார கழகத்தினுடைய தமிழ் மாநிலச் செயலாளர்களுள் ஒருவரான அலெக்ஸ் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் . அப்போது முதலமைச்சராக இருந்த குமாரசுவாமி ராஜா அவர்களின் வளர்ப்பு மகனும் அந்த தூதுக் குழுவிலே வந்திருந்தார்கள் . சோவியத் பால் பற்றுக் கொண்ட நல்லதொரு தூதுக்குழு , அதுபோன்ற தூதுக் குழுக்களை இந்தியா முழுவதும் அனுப்பி , இன்று பொதுத்துறையிலே இருக்கிற குழுவிலேயும் அதனால் விளைகின்ற லாபத்தையும் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிற வகையில் செய்ய வேண்டும் . அதுபோன்று இந்திய நட்புறவுக் கழகம் செய்ய முடியாவிட்டாலும் இன்றைய நிலையில் ரயில்வே நிர்வாகம் அந்த காரியத்தைச் செய்ய வேண்டும் .
பள்ளியில் மற்றும் கல்லூரியில் இருக்கின்ற , சிறந்த தேசபக்தியுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இதுபோன்ற பொதுத்துறை நிறுவனங்களைக் கண்டுகளித்து , அந்த சோவியத்தின் நட்புறவையும் , பொதுத்துறையினால் இந்தியாவிற்கு ஏற்படுகிற நன்மையையும் எடுத்துச் சொல்லுகின்ற பயணமாக இன்று அது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது . ஆகவே இந்தப் பணியை ரயில்வே நிர்வாகம் செய்ய வேண்டும் . இதுபோன்ற பொதுத்துறையில் ஏற்படுத்துவதற்கான காரணம் , மக்களிடம் வரிச்சுமையை ஏற்றி , அதன்மூலம் வருகின்ற வருமானத்தைக் கொண்டு , நிர்வாகத்தை நடத்துவதை விட , இதுபோன்ற தொழிற்சாலைகளைத் தொடங்கி , அதன் மூலமாக வருகின்ற வருமானத்தைக் கொண்டு மக்களுக்கு வரிச்சுமையை குறைத்து , தொழிலையும் பெருக்கி , இந்தத் துறை வளருவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காகத்தான் சோவியத் அரசாங்கம் இந்தியா மற்றும் புதிதாகச் சுதந்திரம் பெற்ற பல்வேறு நாடுகளுக்கு இந்தத் தொழிற்சாலையை அமைத்துக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது .
பண்டிட் ஜவஹர்லால் நேரு , இது போன்ற தொழிற்சாலைகள் இந்தியாவினுடைய கோயில்கள் என்று சொன்னார்கள் . அந்தக் கோயிலைத்தான் இன்றைக்கு மன்மோகன் சிங் அவர்களும் சிதம்பரம் அவர்களும் இடித்துக் கொண்டிருக்கிறார்கள் . இடது சாரி இயக்கங்கள் இதைத் தடுத்து நிறுத்துவதற்கு , மக்கள் தங்கள் ஆதரவை அந்த இயக்கங்களுக்கு முழுமையாகக் கொடுத்து பாராளுமன்றத்திற்கு மிக அதிகமான அளவில் இடது சாரி எண்ணம் கொண்டவர்களை அனுப்பினால்தான் இந்த நாட்டிலுள்ள மக்களுக்கு வரியில்லாத பட்ஜெட்டை போடுவதற்கான பணியினைச் செய்ய முடியும் . அதற்காக வேண்டியாவது இந்த சந்தைப் பொருளாதாரம் உலக மயமாக்குதல் , பொதுத்துறையை தனியார் மயமாக்குதல் .
இதுபோன்ற கொள்கைகளைக் கைவிடவேண்டுமென்பதற்காக மிகப்பெரும் இயக்கம் இந்திய நாட்டில் தொடங்கப்பட வேண்டும் . இன்று இருக்கின்ற இயக்கம் போதுமானதாக இல்லை என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதாகிறது . இதுபோன்ற எண்ணம்தான் என்போன்றவர்களுக்கு 86 வயதாகியும் கூட இந்தக் கொள்கைகள் வளர வேண்டும் , இந்த கொள்கைகள் உள்ள கட்சிகள் வளர வேண்டும் என்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்து வருகிறது .
இந்திய சோவியத் நட்புறவின் காரணமாக எங்கள் குடும்பத்திற்கு ஒரு அருமையான உறவு கிடைத்தது . ரஷ்ய மொழி வளர்ச்சி மகாநாடு டெல்லியில் நடைபெற்றது . என்னுடைய தம்பி மகள் அரும்பு சோவியத் ரஷ்யாவிலே ரஷ்ய இலக்கியம் படித்துக்கொண்டு இருந்தார் . அந்தக் காலகட்டத்தில் சோவியத் ரஷ்யாவிற்கு அதிகப்படியான மாணவர்கள் படிப்பதற்காகச் சென்றார்கள் . தற்பொழுதெல்லாம் பணம் வசூலித்துக் கொண்டு மாணவர்களை சேர்க்கிறார்கள் . ஆனால் அந்தக் காலத்தில் தொழிலாளிகள் , விவசாயிகளுடைய குடும்பத்தினராக இருந்தால் , சாப்பாடு , படிப்பு , புத்தகம் , தங்குமிடம் எல்லாம் இலவசமாகக் கொடுத்து சோவியத் நாட்டில் அந்த மாணவர்களைப் படிக்க வைத்தார்கள் . பின் தங்கிய , அடிமைப்பட்டு இருந்த , அல்லது புதிதாக விடுதலைப் பெற்ற காலனிய நாடுகளுக்கு இந்தக் கல்வியை பரப்புவதற்காகவே ரஷ்யாவில் லுமூம்பா என்ற மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை மாஸ்கோவில் ஆரம்பித்தனர் . டெல்லியில் நடைபெற்ற ரஷ்ய மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எங்கள் குடும்பத்திற்குக் கிடைத்தது . அந்த மகாநாட்டில் நான் , என்னுடைய மகள் ஜெயபாரதி , மாப்பிள்ளை என் . ஜெயவேலு , என் தம்பியின் மனைவி ஜோன்மேரி , என்னுடைய தம்பி எஸ் . பி . சுப்பிரமணி , இப்படி எல்லோருமாகக் கலந்து கொண்டோம் . அந்த மகாநாட்டில் தான் ரஷ்ய மொழிப் பயிற்சி வகுப்புக்கு டெல்லியில் பொறுப்பாக இருந்த பி . சி . ஜோசியினுடைய மனைவி , கல்பனா ஜோசி அவர்களைச் சந்திக்க நேரிட்டது . அன்று முதல் அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நெருக்கமான தோழமை உணர்வு ஏற்பட்டது . அடிக்கடி கடிதப் போக்குவரத்தும் தொடர்ந்து கொண்டிருந்தது . ஆண்டுக்கு ஒரு முறை அவர் எப்பொழுதும் உடுத்துகிற கைத்தறி வெள்ளைச் சேலையை எடுத்தனுப்பி எங்களுடைய அன்பையும் , மரியாதையையும் தெரிவித்துக்கொள்வோம் . அவர் சென்னை ஆபட்ஸ்பரியில் நடைபெற்ற , இந்திய சோவியத் கலாச்சார மகாநாட்டிற்கு வந்திருந்தார்கள் . அப்போது எங்களை கௌரவிக்கின்ற முறையிலேயே பாலவாக்கத்திலே இருந்த என்னுடைய மகள் ஜெயபாரதியின் வீட்டிற்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து எங்களோடு உறவாடிவிட்டுப் போனதை இன்றைக்கும் மறக்க முடியவில்லை . கல்பனாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர்மீது ஏற்பட்ட மதிப்பின் காரணமாக என் பெண்ணிற்கு அவர் பெயரை வைத்துப் பல ஆண்டுகள் சென்றபின்பும் தொடர்ந்த அவருடனான உறவு பெருமைக்குரியது . உருஷ்ய மொழி அந்த உறவுப் பாலத்தை அமைத்துத் தந்தது .
தேசிய இயக்கத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு சிறை வாழ்க்கை சகஜமானது தான் .
நான் கிட்டத்தட்ட பத்து , பன்னிரண்டு முறை காங்கிரசில் இருந்தபோது , வெள்ளைக்காரன் காலத்தில் மூன்று முறையும் , தனிப்பட்ட முறையில் சத்தியாகிரகத்தை அறிமுகப்படுத்தியதற்காகவும் , ரைஸ்மில் தொழிலாளர்கள் போராட்டத்திற்காகவும் , 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது , தடை உத்தரவை மீறி பேசியதற்காகவும் அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் மூன்று முறையும் கைது செய்யப்பட்டேன் . அதன் பிறகு உச்ச வரம்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் , அரசியல் சட்டத்தில் இருக்கிற அதை நிறைவேற்ற வேண்டுமென்று தாலூக்கா ஆபிஸில் மறியல் செய்து கைது செய்யப்பட்டேன் . உச்ச வரம்புச் சட்டம் வந்த பிறகு மிச்ச நிலத்தை பங்கிட்டுக் கொடுக்கும்படி போராட்டம் நடத்தினோம் . உச்ச வரம்பு சட்டத்தில் கிடைத்த மிச்ச நிலங்களை உள்ளேப் புகுந்து , விவசாயிகள் ஆக்கிரமித்துக் கொள்வதற்கான இயக்கத்திலே சிறை சென்றேன் . மில் தொழிலாளர் போராட்டத்திலே சிறை சென்று இருக்கிறேன் . விவசாயி தொழிலாளர்களின் போராட்டத்திலே பலமுறை சிறை சென்று இருக்கிறேன் . இப்படியாக வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும் , காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் தி . மு . க . மற்றும் அ . தி . மு . க . ஆட்சிக் காலத்திலும் 17 முறை கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளேன் .
அப்பொழுதெல்லாம் கைது செய்யப்பட்டு கோவை சிறைக்குச் கொண்டு செல்கின்ற போது எங்கள் வீட்டிலே என்னுடைய பெண்ணில் இருந்து என்னுடைய மனைவி வரை எல்லோரும் அந்த போலீஸ் வேனில் ஏறிக்கொள்வார்கள் . கூடவே வந்து நாங்கள் குடியிருந்த பெருந்துறை ஏரியா வரை வந்து அங்கே இறங்கிக்கொண்டு எனக்கு டாட்டா காட்டியனுப்புவார்கள் . இது மற்ற தோழர்களுக்கெல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருக்கும் . மற்ற தோழர்களெல்லாம் வரும்போது அவர்கள் குடும்பத்தினர் வேதனைப்பட்டு அழுது கொண்டே வருவார்கள் , ஆனால் எனது நான்கு தலைமுறையினரும் மன நிறைவோடு , கண் கலங்காமல் சிறைக்கு அனுப்பி வைத்ததை என்றும் பெருமையுடன் நினைவு கூர்வேன் . நான் சிறைச்சாலைக்குச் செல்லுகின்ற காலங்களில் , அங்கே ஜெயில் சூப்பிரண்டண்ட்டாக இருந்தவர் கோவிந்தராஜுலு என்பவர் . அவர் எங்களுடைய குடும்ப நண்பர் . என்னைக் கண்டவுடன் ஆச்சரியப்பட்டுப்போய் விட்டார் அவர் . ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பார்வையாளர்கள் பார்க்க அனுமதி பெறும்போது என் துணைவியார் வருவார்கள் . அவர் வரும்போது ஈரோட்டிலிருந்து கைதுசெய்யப்பட்ட அறுபது , எழுபது தோழர்களுக்கும் தேவையான பிஸ்கட்டுகள் , பழம் , வெற்றிலைப் பாக்கு என அனைத்தும் எடுத்து வருவார்கள் . வெற்றிலைப் பாக்கு , சோப்பு , எண்ணெய் , பீடி , சிகரெட் , போன்றவைகள் ரகசியமாக எடுத்து வர வேண்டிய பொருட்கள் . காரணம் , தண்டனைப் பெற்றுவிட்டால் அவர்கள் கொடுப்பது தவிர வேறு எதுவும் யாரும் கொடுக்க முடியாது .
ஒருவர் தண்டனை பெறும் காலம்வரை எது வேண்டுமானாலும் கொண்டு வரலாம் . அதனால்
நேராக சூப்பிரன்டண்ட் வீட்டிற்குப் போவார்கள் . அவர் இரண்டு வார்டரைக் கூப்பிட்டு அம்மாவை கூட்டிக்கொண்டு போய் அங்க ஐயாவை பார்க்கச் சொல்லு இங்க வரிசையில நின்று பார்க்க வேண்டாம் . தனியா ஏ கிளாஸ் , பி கிளாஸ் கைதிகள் பார்க்கின்ற அறையிலேயே அவங்க பேசற வரைக்கும் பேசட்டும் , பேசி முடிச்சவுடனே அவரைக் கொண்டு விட்டுட்டு அம்மாவைக் கொண்டு வந்து வீட்டில் விட்டுவிடுங்கள்’ என்று சொல்லுவார் .
அப்பொழுது என் மனைவி இரண்டு பெரிய பைகள் நிறைய சாமான்களை வாங்கிக்கொண்டு வருவார்கள் . தோழர்களுக்குத் தேவையான , சிகரெட் , புகையிலை போன்றவற்றை விரும்புகிறவர்களுக்கும் சேர்த்து , நிறைய பொருட்களை வாங்கி வந்து கொடுப்பார்கள் . என்னுடைய மனைவியின் சித்தப்பா மகள் அங்கே செக் வார்டராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது . நான் சிறைச்சாலைக்குச் சென்றால் , அவர் நைட் டுயூட்டி வாங்கிவிடுவார் . இரவு சாப்பிட்டவுடன் என்றாவாவது இனிப்பு ஏதேனும் சாப்பிடுவேன் . அதற்காக சாக்லெட் வாங்கிக்கொண்டு வருவார் . எனக்குப் பிடித்த வெற்றிலை பாக்கு அசோகா பாக்கு , என அனைத்தும் வாங்கிக் கொடுத்துவிட்டு , அழுவார் . எப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டு இப்போது இங்கே வந்து சோளக் களியையும் , இப்படி ஒரு அரிசியும் மண்ணும் கலந்த சோற்றையும் , புழுவோட போடற கத்திரிக்காயையும் சாப்பிட வேண்டியதாகிவிட்டதே என்று மிகவும் வேதனைப்படுவார் . ” அட , ஜெயிலென்றால் இதெல்லாம் பழக்கம்தானே , அதுக்குத்தானே இங்கே வரோம் , இதெல்லாம் சகஜம்தானே , அதற்காக நீ ஏன் வேதனைப்படறே” என்று சொல்லி சமாதனப்படுத்தி அனுப்புவேன் .
நாங்கள் சிறைச்சாலையில் இருக்கும்போது , அங்கேயே மந்திரி சபை அமைப்போம் . நாட்டில் மந்திரி ஆகிறோமோ இல்லையோ , அங்கு மந்திரி சபை அமைத்துக்கொள்வோம் . உணவு அமைச்சர் , சுகாதார அமைச்சர் , தபால் போக்குவரத்து அமைச்சர் என்று பல்வேறு இலாக்காக்ளைப் பிரித்து அதற்குப் பொறுப்பான தோழர்களை நியமித்து விடுவோம் . காரணம் , சாதாரண குடும்பங்களிலிருந்து வந்திருப்பவர்கள் , தங்களுடைய குடும்பக் கஷ்டங்களையெல்லாம் எழுதி தபால் அனுப்புவார்கள் . அந்தத் தபாலை , சம்பந்தப்பட்ட அந்தத் தோழர் பார்த்தால் கண்கலங்கி நிற்பார் . சிறைக்குள் வரும் கடிதங்கள் அனைத்தும் தபால் துறையினர் படித்துப் பார்த்து உள்ளே இருப்பவர்களுக்கு மனச் சோர்வையும் , வேதனையையும் கொடுக்கும் கடிதங்களை அந்தந்த ஊரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டிகளுக்குத் தெரியப்படுத்தி அதற்கான பரிகாரங்கள் செய்யப்படும் . என்னோடு உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வரச்சொல்லி நடத்திய போராட்டத்தில் ஈரோடு தாலுக்கா அலுவலகம் முன்பு மண் வண்டி முருகேசன் என்பவர் கலந்து கொண்டு சிறைக்கு வந்தார் . அவருடைய தந்தை இறந்துவிட்ட செய்தி தபால் மூலம் சிறைக்கு வந்தது . இந்தச் செய்தியை அவருக்குச் சொல்வதற்கு முன்பு பல்வேறு முறைகளில் இந்தச் செய்தியைத் தாங்கும் பக்குவத்தை ஏற்படுத்திய பின் சொன்னோம் . சில நிமிடங்கள் வரை அவர் மௌனமாக அழுதுவிட்டு நான் சிறைக்கு வருவதற்கு முன்பே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது . தாயாரிடமும் மற்ற உறவினர்களிடமும் நான் சிறையில் இருக்கும்போது தந்தை இறந்து விட்டால் நான் உடன் இல்லை என்று வருத்தப்படாதீர்கள் . செய்ய வேண்டிய காரியங்களை நீங்கள் செய்துவிடுங்கள் என்று கூறி வந்துவிட்டேன் , என்று மன உறுதியுடன் கூறிவிட்டார் . உடனே அவரை குளிக்க வைத்து உடையை மாற்றச் செய்தோம் . அவர் அமைதி அடைந்தார் . வெளியே வந்த முருகேசனுக்கு ஈரோடு நகராட்சி மன்றத்தில் சுகாதாரத் துறையில் கொசு மருந்து தெளிக்கும் பணியை அப்பாயின்மெண்ட் கமிட்டி மூலம் வாங்கிக் கொடுத்தேன் . இது போலவே பல்வேறு துறைகளில் வசதியற்ற ஏழ்மை நிலைமையில் இருந்த பலருக்கு வேலை வாய்ப்புக் கமிட்டி மூலம் உதவி செய்ய முடிந்தது .
10 வருஷம் 12 வருஷம் ஜெயிலில் இருப்பவர்கள் இரவு நேரத்தில் வந்து அவர்களிடம் பேசி , “ தலைவர்கள் எல்லாம் நல்லா இருக்காங்க நீ வந்து இங்க சிரமப்படற , பாவம் நீயே ஒரு தொழிலாளி , நீ இல்லாம உன் குடும்பம் எவ்வளவு கஷ்டங்களை அனுப்பவிக்கிறாங்க பாரு . இதை கவனிச்சுக்கிறது யாரு ? நீ மன்னிப்பு எழுதி கொடுத்துட்டு வெளியே போறதா இருந்தா நான் அதற்கு ஏற்பாடு பண்றேன் . இந்தா இந்த பீடியப் பிடி” என்று சொல்லி , ஒரு பீடியைக் கொடுத்து பிடிக்கச் சொல்லிட்டு ஒரு வழியை சொல்லிக் கொடுப்பார் . அந்த பீடிதான் நாணயமாற்று அங்கு . வயித்து வலி என்று சொல்லி நீ ஆஸ்பத்திரிக்கு வந்துவிடு , அங்கே நான் டாக்டர்கிட்ட சொல்லி , உன்னை ஆஸ்பிட்டலிலே அட்மிட் செய்து விடுகிறேன் . அவர்களும் உன்னை விட்டுவிட்டு போய் விடுவார்கள் . பன்னிரண்டு மணி சுமாருக்கு சூப்பிரன்டண்ட் கிட்ட கூட்டிட்டுப் போவேன் . நீ மன்னிப்பு எழுதிக் கொடுத்தா , உன்னை விட்டுவிடுவோம்” என்று சொல்லுவார்கள் . பலகீனமாக உள்ள இரண்டொரு தோழர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளுவார்கள் . அது பத்திரிக்கையில் பெரிய செய்தியாக வரும் . கம்யூனிஸ்ட் கட்சிக் கைதிகள் நான்கு பேர்கள் மன்னிப்பு எழுதிக் கொடுத்து வெளியே வந்தார்கள் என்று செய்தி வரும் . இந்த மாதிரி வேலையெல்லாம் அங்கே நிறைய நடந்துகொண்டு இருந்தது . ஆகவே ஜெயிலுக்குள்ளே இருந்துகொண்டு இதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே ஆயுதம் உண்ணாவிரதப் போராட்டம்தான் .
ஆகவே நாங்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்த இந்தச் செயலை ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர் சில்வேனி என்பவர் சம்மதிக்கவில்லை . ஆனாலும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று உண்ணாவிரதம் இருந்தோம் . அவர்களும் வந்து எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள் . ஆனால் நாங்கள் குறிப்பிட்ட அந்த டாக்டர் வந்து எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ., போனவர்களை மீண்டும் கூட்டிக்கொண்டு வரமுடியாது என்றாலும் , இனிமேல் இந்த விஷயத்தை செய்ய மாட்டேன் என்று உறுதி கொடுத்தால் தான் நாங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுவோம் என்று காலையிலும் , மதியமும் இரண்டு வேளையும் சாப்பிடவில்லை . ஆறு மணிக்கு மேல் உள்ளே அடைக்கிறபோது , அந்த டாக்டரை கூட்டி வந்து மன்னிப்பு கேட்க வைத்தார்கள் . அதன் பிறகுதான் நாங்கள் சாப்பிட்டோம் .
சிறைக்குள்ளேயும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கட்டுப்பாடு உண்டு . அவரவர்களுடைய உறவினர்கள் கொண்டு வருகின்ற தேங்காய் எண்ணெய் , சோப்பு போன்ற பொருட்களை பொதுவுடமை ஆக்கி விடுவோம் . அங்கு வருகிற பொருட்களையெல்லாம் வாங்கி சேமித்துவைக்கும் அவருக்கு பொருட் கன்ட்ரோல் அமைச்சர் என்று பெயர் . அவர் வருகிற பொருட்களையெல்லாம் சேமித்து , பீடி போன்றவற்றை அனைத்தையும் வாங்கிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட அளவு பீடிகளை மட்டும் அவருக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ளதை பொதுவாக்கிவிடுவோம் . மொத்தம் இருபதினாயிரம் பீடிகள் இருக்கிறதென்றால் , நாங்கள் நாலாயிரம் பேர் இருப்பதாக இருந்தால் , அதைப் பிரித்துக்கொண்டால் அது ஐந்து நாட்களுக்கு வரும் . அடுத்த பார்வையாளர்கள் காலம் வரையில் ஒருவருக்கு ஒரு நாளைக்கு இரண்டு பீடி , மூன்று பீடி என்று அளவிட்டுக் கொடுப்போம் . சிலர் அனைத்தையும் ஒரே நாளில் பிடித்துவிட்டு , மற்ற தோழர்கள் பிடிக்கின்றபோது அவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் . இதைத் தவிர்க்க வேண்டுமென்பதற்காகவே இன்னும் குறைவான அளவில் பீடியைக் கொடுத்து கட்டுப்பாடு விதித்தோம் . சிறைச்சாலைக்குள்ளே பீடிதான் பண்டமாற்று . ஒரு பீடியை கொடுத்தால் ஒரு நாளைய சோற்றையேக்கூட கொடுத்துவிடுவார்கள் . இரண்டு பீடி கொடுத்தால் இன்னொரு பொருள் கொடுப்பார்கள் .
சமையலறையிலிருந்து சாப்பாட்டை ஒரு இரும்பு தகட்டிலே வைத்து அதை ஒரு பாடையைப் போல நான்கு பேர் சேர்ந்து தூக்கிக் கொண்டு வருவார்கள் . இதைக் கிண்டலாக தோழர்கள் பாடை வந்து விட்டது என்று சொல்வார்கள் , அந்த நேரத்தில் சிலர் இதைத் திருடிக் கொள்வார்கள் . பத்து கட்டி பதினைந்து கட்டி என்று குறைந்து போய்விடும் . இப்படி குறைந்தால் இருபது கட்டி முப்பது கட்டி குறையும் என்பதற்காக வேண்டி , நான் , சமையல் கட்டிற்கு சென்று ஒரு பத்து , இருபது கட்டி அதிகமாகவே வாங்கிக் கொண்டு வருவேன் . அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் , விவசாயப் போராட்டத்தில் எங்களோடு ஒன்றாக சிறைக்கு வந்திருந்தார்கள் . மின்சாரக் கட்டணத்தை கருணாநிதி உயர்த்தியபொழுது , அந்தப் போராட்டம் மிகப்பெரிய பந்த் போராட்டமாக நடைபெற்றது . நாங்கள் எல்லாம் முன்கூட்டியே கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டோம் . எங்களுடைய தோழர்கள் ஒரு ஆயிரம் , ஆயிரத்தைநூறு பேர் கைதாகி கொண்டு வரப்பட்டிருந்தார்கள் . தி . மு . க . விலும் பலர் கைதாகி வந்திருந்தார்கள் . ஆனால் அவர்களுடைய சிறை வாழ்க்கை முறை என்பது வேறு , அவரவர்களுக்கு வருகின்ற பொருட்களை எல்லாம் அவர்களாகவே சாப்பிட்டுக் கொள்ளுவார்கள் . மற்ற தோழர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்க மாட்டார்கள் . அதுவும் எப்படி சாப்பிடுவார்கள் என்றால் , தங்களுடைய அந்தஸ்தைக் காட்டுகின்ற முறையில் பகல் நேரத்தில் மற்ற தி . மு . க . தொண்டர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆப்பிளை அறுத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள் . இதைப் பார்த்து நான் கோபமடைந்து , அன்றைக்கு எங்களோடு சிறைக்குள் இருந்த , என் . கே . கே . பி . பெரியசாமி ( இன்று ஈரோடு பகுதியிலே அமைச்சராக இருக்கின்ற என் . கே . கே . பி . ராஜா அவர்களுடைய தந்தையார் ) அவர்களிடத்தில் , ” நாம் தேசிய இயக்கத்திலே நாட்டு மக்களுடைய நலனிலே கண்ணும் கருத்துமாக இருந்து சிறைக்கு வந்திருக்கிறோம் . இங்கே , நாம் மற்ற தோழர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது இது போன்ற பொருட்களை சாப்பிட்டுக் கொண்டிருப்பது அவர்களை வேறு விதமாகத் தூண்டி விடும் . எனவே தயவு செய்து அதை நிறுத்துங்கள் . ஒன்று மறைவாக சாப்பிடுங்கள் இல்லாவிட்டால் அந்த வார்டிலே இருக்கின்ற , அந்த ஊரிலே இருந்து வந்திருக்கின்ற தோழர்களுக்கு பிரித்துக் கொடுக்கச் சொல்லுங்கள் . இப்படி பகிரங்கமாக அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்களேயானால் , அதை நாங்கள் பிடுங்கி எறிய வேண்டிய நிலை ஏற்படும் என்று சொன்னவுடன் , அவர் தி . மு . க . தொண்டர்களை எல்லாம் கூப்பிட்டு , எஸ் . பி . வி . இப்படிச் சொல்றாரு , ஆகவே நீங்கள் செய்வது தவறு . இதுபோன்ற பொருட்களை கொண்டு வராமல் இருப்பதற்கான ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி அதை ஓரளவு கட்டுப்படுத்தினார் .
மற்ற அரசியல் கட்சித் தொண்டர்கள் எல்லாம் சிறைக்குப் போனால் அந்த ஜெயில் வார்டன் , ” கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க வந்தாதான்யா தரித்திரம் வந்துடுது , மற்ற கட்சிக்காரங்க வந்தா பணம் தாராளமாகப் புழங்கும் . 100 ரூபாய் நோட்டு , 200 ரூபாய் நோட்டு , 500 ரூபாய் நோட்டா புழங்கும் . சிறைக்குள் எப்படிப் பணம் வருகிறதென்றால் , ஒரு பணக்கார அரசியல்வாதி உள்ளே வந்து விட்டார் என்றால் , ஒரு வார்டரைக் கூப்பிட்டு , ‘ நீ கோபிக்குப் போய் , இன்னாருகிட்ட இந்த லெட்டரைக் கொடு . அவர் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுப்பார் . வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுத்துடு என்பார் . அவர் ஒருநாள் லீவு போட்டுவிட்டு கோபியில் அந்த அட்ரசுக்குப் போய் ஆயிரம் ரூபாய வாங்கிவந்து அதில் 250 ரூபாய் தான் எடுத்துக்கொண்டு , மீதம் 750 ரூபாய் தான் இவருக்குக் கொடுப்பார் . சிறைக்கு விதிக்கு விரோதமாக பிரியாணி வெளியில் இருந்து வருகின்றபோதும் அதில் கால் பங்கு அவருக்குப் போய்விடும் . ஆகவே ஒரு ரூபாய்க்கு எட்டணாதான் அந்த அரசியல் கைதிகளுக்கு கிடைக்கும் . இப்படியாக சிறைச்சாலைக்குள்ளே ஒரு விளையாட்டே நடந்து கொண்டிருந்தது . கம்யூனிஸ்ட்டுகள் போனால் அதைத் தடுத்து நிறுத்தினார்கள் என்கின்ற வயிற்றெரிச்சல் அனைத்து வார்டர்களுக்கும் உண்டு , ஆகவே கம்யூனிஸ்ட்களிடத்தில் கடுமையாக நடந்து கொள்வார்கள் . இப்படிப்பட்ட சிறை வாழ்க்கை கம்யூனிஸ்ட்களுக்கு வழக்கமான ஒன்றாகப் போய் விட்டது . சிறைச்சாலையைப் பற்றி கவலைப்படாதவர்கள்தான் நூற்றுக்கு தொன்னூற்றொம்பது பேர்கள் , கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டிருக்கிறார்கள் . இன்றைக்கு அந்த சந்தர்ப்பம் இல்லை . சிறைக்குச் செல்கின்ற சந்தர்ப்பம் மிக மிகக் குறைவாக இருக்கின்றது .
என்னுடைய பொதுப்பணியின் காரணமாக நகராட்சி மன்றத்தில் நடைபெற்ற 1957 தேர்தலிலே நான் எந்த நகரச்சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்காக உழைத்தேனோ , அந்தப் பகுதியிலே நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கட்சி முடிவு செய்தது . அதன் காரணமாக , ஆலமரச்சேரி என்ற பகுதியில் நான் நகராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டேன் போட்டியிட்டு , வெற்றி பெற்றும் வந்தேன் . வெற்றி பெற்றபொழுது அன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே நாங்கள் , 27 பேர்கள் கொண்ட மன்றத்திலே 9 பேர்கள் நகர மன்ற உருப்பினர்களாக பொறுப்பு வகித்தோம் . 22 வது வார்டு , 23 வது வார்டு , 24 வது வார்டு , 25 வது வார்டு , 26 வது வார்டு , 27 வது வார்டு ஆகிய இந்த வார்டுகளுடைய ஓட்டுக்களை எண்ணும்போது இரவு 9 மணி , 10 மணி ஆகிவிடும் .
அப்பொழுது பெரும்பகுதியான கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தவிர காங்கிரஸ்காரர்கள் எல்லாம் போய் விடுவார்கள் . ஏனென்றால் , எப்படியும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள்தான் வருவார்கள் , எதற்காக ராத்திரி 12 மணி , 1 மணி வரைக்கும் இருக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டு போய்விடுவார்கள் . இந்த வார்டுகளில் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் மட்டுமே வெற்றி பெற்ற காலக்கட்டம் அது . அந்த காலத்திலே நான் வெற்றி பெற்று வந்தபோது , ஒரு ஏழு , எட்டு பேர்கள் காங்கிரசில் டிக்கெட் கிடைக்காத சுயேட்சைகளாக இருந்தவர்கள் இருந்தார்கள் . அவர்கள் கம்யூனிஸ்ட்களோடு சேர்ந்தால் சேர்மன் பதவியை தாங்கள் வைத்துக்கொள்வது என்றும் , துணைத் தலைவர் பதவியை கம்யூனிஸ்ட்களுக்குக் கொடுத்து விடுவது என்றும் , கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டிட நிதி என்ற பெயரால் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுப்பதென்றும் , முடிவு செய்து அதற்காக , எனக்கு வேண்டியவரான எஸ் . ஆர் . கனகசபாபதி என்பவரை தூது அனுப்பினார்கள் . அவர் கடைக்கு பக்கத்திலேயேதான் வி . ஆர் . ஏ . மாணிக்கம் என்பவரின் கடையும் இருந்தது . அதனால்தான் அவரை அனுப்பினார்கள் . அந்த எஸ் . ஆர் . கனகசபாபதி என்னோடு பள்ளியில் படித்தவர் . அந்தகாலத்திலே மாணவர் இயக்கம் என்ற பெயர் வைக்காத இயக்கத்திலே என்னோடு சேர்ந்து பணியாற்றியவர் . அவர் என்னிடம் வந்து , ‘ வெங்கடாசலம் நீங்க ஒத்துக்கொண்டால் , துணைத்தலைவராக ஆகிவிடுவதோடு . கட்சிக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் நிதி கிடைக்கும் என்று சொன்னார் . அதற்கு நான் , ’ மாணிக்க முதலியாரை எந்தவித காரணத்தைக் கொண்டும் ஆதரிக்க முடியாது . அவர் கள்ள மார்க்கெட்காரர் , கள்ள மார்க்கெட்டை கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையாக எதிர்த்ததால் , நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் . வேறு யாரையாவது நிறுத்துங்கள் , காங்கிரசை தோற்கடிக்கப்பதற்காக வேண்டி அவரை ஆதரிக்கிறோம் என்று சொன்னோம் . அவர்களுக்கு , பணத்தைக் கொடுத்து ஆட்களை விலைக்கு வாங்குவதற்கு மாணிக்கம் முதலியாரை விட்டால் வேறு ஆளில்லை . ஆகவே அவர்தான்னு சொல்லிவிட்டார்கள் , காங்கிரசின் சார்பாக , ஈ . கே . எச் . எம் . அப்துல் முகமது கனி அவர்கள் போட்டியிடுவதாக இருந்தது . ஆனால் , காங்கிரசுக்குள்ளேயே இரண்டொருவர் அவரை நிறுத்தக் கூடாது என்று எதிர்த்தார்கள் . ஏனென்றால் , இந்து மதவாதம் இன்றைக்கும் காங்கிரசுக்குள் சில பேருக்கு இருப்பது போல் அன்றைக்கும் இருந்தது . சுண்டல் வியாபாரம் செய்கிற அம்மாளுடைய மகன் பழனியப்பன் என்பவர் முஸ்லீம்களை எதிர்க்கக்கூடியவர் . அதனால்தான் கட்சியின் நகரமன்றத் தலைவராக அவர் இருந்தார் . அவரை கனி என்பவர் ஒப்புக் கொள்ளவில்லை . ஒரு கட்டத்தில் கனி அவர்கள் சுயேட்சையாக நிற்கலாம் என்று முடிவெடுத்து கம்யூனிஸ்ட்களிடம் ஆலோசனை கேட்டார் . அப்போது கே . டி . ராஜுவும் , நானும் அவரிடம் , ’ பதவிக்காக நீங்கள் கட்சியை விட்டு வர வேண்டாம் . நீங்கள் காங்கிரஸ் கட்சியிலேயே போட்டி போடுங்கள் . உங்களை ஜெயிக்க வைக்கிறோம்’ என்று சொன்னோம் . ஏனென்றால் ஒரு சிறுபான்மை இடத்தைச் சார்ந்தவர் , நகர சபைக்குத் தலைவராக வரவேண்டும் . நீண்ட நாளைக்குப் பிறகு ஷேக் தாவுத் சாயபுவிற்குப் பிறகு ஒரு முஸ்லீம் இனத்தவர் தலைவராக வருவதை நாங்கள் வரவேற்கிறோம் ஆகவே , நீங்கள் சுயேட்சையாக நில்லுங்கள்’ என்று சொன்னோம் . ’ அய்யோ எப்படி நான் சுயேட்சையாக நிற்பது ?’ என்றார் . ’ நீங்கள் காங்கிரஸ் கட்சியில் சுயேட்சையாக நில்லுங்கள் , ஜெயிக்க வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு’ என்று சொன்னோம் .
அவரை எப்படி ஜெயிக்க வைப்பீர்கள் என்ற அந்த சூத்திரத்தைக் கேட்டார் , ’ நாங்கள் எங்கள் கட்சியின் சார்பாக எஸ் . பி . வெங்கடாசலத்தை நிறுத்தி வைக்கிறோம் , அந்த சுயேட்சைகள் ஆறு , ஏழு பேர் ஓட்டுப் போடறவங்கதான் ஜெயிக்க வைக்க முடியும் . அவங்க கண்டிப்பா எங்களுக்கு ஓட்டு போட மாட்டாங்க . போட்டால் உங்களுக்குப் போட வேண்டும் . இல்லாவிட்டால் நடுநிலைமை வகிக்கவேண்டும் . ஆகவே , நீங்கள் காங்கிரஸ் கட்சியில் நில்லுங்கள்’ என்று சொன்னோம் . அதுபோலவே அவர் காங்கிரஸ் கட்சியில் நின்றார் . நான் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலே சேர்மன் பதவிக்குப் போட்டியிட்டேன் , சுயேட்சையாக உள்ளவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும் . அவர்கள் எல்லாம் பல்டி அடித்து காங்கிரஸூக்கு ஓட்டுப் போட வைத்து அப்துல் கனியை சேர்மனாகக் கொண்டு வந்தார்கள் . ஆனால் அவர்கள் நடுநிலைமை தவறாமல் பொறுப்பாக பணியாற்றினார்கள் . அவர்களுக்கு ஒரு பயம் இருந்து கொண்டேயிருந்தது . கம்யூனிஸ்ட்கள் ஒன்பது பேர் இருக்கிறார்கள் . அவர்கள் சிகப்புக் கொடி கொண்டு வருவார்கள் . அப்படியே முனிசிபல் ஆபீசிற்குள் , கவுன்சில் ஹாலில் எதாவது தப்பு நடந்ததென்றால் , அவங்க செங்கொடிய எடுத்து பிடிச்சுக்குவாங்க , நம்மால் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும் . இப்படித்தான் முதன்முதலாக மூன்று ஆண்டுகளாக இருந்த நகராட்சிப் பொறுப்பு ஐந்தாண்டுகளாக மாற்றப்படுகிறது . ஐந்தாண்டுகளுக்கு எப்படி சமாளிப்பது என்றும் யோசனை செய்தார்கள் . அப்பொழுது நாங்கள் சில யோசனைகளைச் சொன்னோம் . ஆறு பேர் கொண்ட கமிட்டி ஒன்றை உருவாக்குவதானால் , அதில் , காங்கிரசில் இரண்டு பேர்களும் . கம்யூனிஸ்ட் கட்சியில் இரண்டு பேர்களும் , சுயேட்சை குழுவிலிருந்து இரண்டு பேர்களும் , தேர்ந்தடுக்கப்படட்டும் . நாங்கள் இரண்டு பேரும் எவர்பக்கம் சேருகிறோமே அந்தக் குழுவில் எடுக்கும் தீர்மானம் தான் நிறைவேற்றப்படும் . நாங்கள் எப்பவும் மக்களின் பக்கம்தான் நிற்போம் . ஆகவே நீங்கள் தைரியமாக செய்யுங்கள் என்று கூறினோம் . அப்படி ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலேதான் கமிட்டிகள் அமைக்கப்பட்டது . எல்லா கமிட்டிகளிலும் பொறுப்புகளில் இருந்தார்கள் . நியமன கமிட்டி கம்யூனிஸ்ட்டுக்கு விடப்பட்டது .
நான் முப்பதாண்டு காலம் நகராட்சி மன்றத்தின் பொறுப்பில் இருந்தேன் . முகமது அப்துல் கனியை போன்ற ஒரு பொறுப்புள்ள , நாணயமான , நகராட்சிப் பணத்தை , சட்டம் அனுமதித்தாலும் , ஒரு பைசா கூட , எடுக்காமல் நடத்திய ஒரே நபர் முகமது அப்துல் கனிதான் என்பதை நான் இன்றைக்கும் தைரியமாகச் சொல்வேன் . ஏனென்றால் சேர்மன் கார் வைத்திருந்தால் அவருக்கு கார் அலவன்சாக 500 ரூபாய் கொடுத்தார்கள் . அதை அவர் எடுத்துக் கொள்ளவேயில்லை . எனக்கு பணம் இருக்கிறது எனது பெட்ரோலில் வருகிறேன் என்று சொன்னார் . அதுபோல் தூதுக்குழு டெலிக்கேஷன் அமைச்சர்களை சென்னையில் சந்திக்க வேண்டும் என்றால் டெடிகேஷன் போவதற்கு அரசாங்கம் கூப்பிட்டால் மட்டுமே அலவன்சு கொடுப்பார்கள் . நாங்களாக போனோம் என்றால் அதற்கு அலவன்சு கிடையாது . அரசாங்கம் கூப்பிட்டு அனுப்பினாலும் , மற்றவர்களையும் கூட்டிக் கொண்டுதான் போவார்கள் . மூன்று பேர் போவது என்றால் , ஐந்து பேரை கூட்டிக்கொண்டு போவார்கள் . அந்த அலவன்சு பணம் வந்தால் அதை வாங்க மாட்டார்கள் . தானே தன் சொந்த காசைப் போட்டு , அந்த டெலிகேஷனுக்கு செலவு செய்வார்கள் .
அதுபோலவே அப்போது சேர்மன் சேம்பர் ஒன்றிருந்தது . தமிழகத்திலே இருக்கிற அத்தனை நகரமன்றத் தலைவர்களும் சேர்ந்து கூடி பொதுவான நகராட்சிகளுக்கு வேண்டிய வேலைத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவது , அந்த சேர்மன் சேம்பர் போடுகிற கூட்டத்திற்கு அவர் காங்கிரஸ்காரராக இருந்தாலும் காங்கிரஸ்காரரைக் கூட்டிக்கொண்டு போக மாட்டார் . என்னைத்தான் வரச்சொல்லி கூட்டிக்கொண்டு போவார் . அப்படியாக போன நேரத்தில்தான் , ஒரு கருத்தை நான் அவரிடத்தில் சொன்னேன் . இப்போது நடந்து கொண்டிருக்கிற அரசு மருத்துவமனை ஒரு காலத்திலே நகராட்சியினுடைய ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தது . அரசாங்கம் மருத்துவமனைகளை அரசு நடத்தும் என்று சொன்னபோது இந்த இடத்தைக் கேட்டார்கள் . அதை அன்றிருந்த நிர்வாகம் , அரசிடம் ஒப்படைத்து விட்டது . ஆனால் , பல நகராட்சிகள் நிபந்தனையோடு ஒப்படைத்தார்கள் . நாளைக்கு நகராட்சி மன்றம் இந்த மருத்துவமனையை நடத்தவில்லை என்றால் , அந்த இடத்தை நகராட்சி மன்றத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னார்கள் . ஆனால் , ஈரோடு நகராட்சி மன்றம் எந்தவொரு இடத்தையும் இடிக்காமல் அந்த மருத்துவமனையை அரசாங்கத்திற்கு ஒப்படைத்துவிட்டோம் . இது நகரின் மையத்தில் இருக்கிறது . போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது . ஆகவே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சொல்லி , இன்றைக்கு இருக்கின்ற ஈ . வி . நஞ்சப்ப செட்டியார் வீதியில் இருக்கின்ற பெரியார் பெயரால் இயங்குகின்ற மாவட்ட மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அங்கே கொண்டு போய்விட்டார்கள் . கட்டிடத்தைக் கட்டி , அப்போது இந்த இடத்தை காவல் துறையினர் குடியிருப்பிற்காக அரசாங்கம் ஒதுக்கி விட்டது . அப்பொழுதுதான் அவரிடம் , நகரின் மையப்பகுதியிலே போக்குவரத்து குறைந்த பகுதியில் காவலர்களுக்கு குடியிருப்பு தேவையில்லை . ஆகவே வேறு ஏதாவது இடத்தை காவலர்களுக்குக் கொடுக்கட்டும் .
ஆகவே இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் . மீண்டும் இந்த இடத்தை நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கிற ஒரு கோரிக்கையை சேர்மன் சேம்பரில் வைத்தார்கள் .
அப்பொழுது ஸ்தல ஸ்தாபன அமைச்சராக இருந்தவர் மஜித் அவர்கள் . அவர்களிடம் பேசி இதைச் சொன்னபோது , நிபந்தனை இல்லாமல் கொடுத்தவர்கள் அவர்கள் மாட்டிக் கொண்டார்கள் , நிபந்தனையோடு கொடுத்தவர்கள் புத்திசாலித்தனமாக தப்பித்துக் கொண்டார்கள் ஆகவே எங்களுக்கு அந்த இடத்தை திருப்பித் தரவேண்டும் என்று சொல்லி , அந்த தீர்மானத்தின் நகலை எடுத்து அனுப்பச் சொன்னார் . நாங்களும் அப்படியே கொடுத்தோம் . அதற்குப் பிறகு அவர் ஒரு முடிவு செய்து அதிகாரிகளோடு கலந்து பேசி , அந்த இடத்தின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் , அந்த ஒரு லட்சம் ரூபாயை நகராட்சி மன்றம் திருப்பி கட்டுமேயானால் , அதை ஒப்படைத்து விடுவது என்று சொன்னார் . நகராட்சி மன்றமும் ஒப்புக் கொண்டது . மீண்டும் அரசு பரிசீலித்து மூன்று லட்ச ரூபாய் கட்ட வேண்டும் தவறாக ஒரு லட்ச ரூபாய் என்று சொல்லி விட்டோம் என்று சொல்லி வருத்தப்பட்டது . நாங்கள் பொதுவாகவே ஒரு தீர்மானத்தை வைக்க நினைக்கிறோம் , எத்தனை லட்சமானாலும் சரி எங்களைக் கேட்க வேண்டாம் . நீங்கள் சொன்னால் நாங்கள் அதைக் கட்டி விடுகிறோம் என்று ஒரு பொதுவான தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினோம் . ஆனாலும் போலீசார் காலி செய்யவில்லை .
6
எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 6
பழைய ஆஸ்பத்திரி காம்பவுண்டிற்கு எவ்வளவு தொகை நிர்ணயித்தாலும் கொடுக்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது அரசுக்குச் சென்றதால் , அதில் குடியிருந்த காவல் துறையினர் காலி செய்யப்பட்டு அந்தக் கட்டிடம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது . அந்த கட்டிடத்தின் தெருவோரங்களில் இருந்த கடைகளை எல்லாம் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகச் சொல்லி அவை அனைத்தும் உள்ளே கொண்டு செல்லப்பட்டது . அந்த மருத்துவமனை கட்டிடங்கள் அனைத்தும் வாடகைக்கு விடுவதன் மூலம் நல்ல வருமானம் வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இந்த கட்டிடம் நகராட்சியின் வசம் வந்ததன் முழு பொறுப்பும் டி . கே . எச் . எம் . முகமது அப்துல் கனி அவர்களையேச் சாரும் . கடைசியாக நகராட்சி மன்றத்தில் , டி . கே . எச் . எம் . அப்துல் கனி அவர்களுடைய பதவிக் காலமான அந்த 5 ஆண்டு காலம் முடிகின்ற கடைசி கூட்டத்தில் நான் ஒரு தீர்மானம் கொடுத்திருந்தேன் .
இந்த ஆஸ்பத்திரி காம்பவுண்டிற்கு நகர மன்றத் தலைவர் டி . கே . எச் . எம் . அப்துல் கனி மார்கெட் என்று பெயர் வைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்திருந்தேன் . ஆனால் அந்த கோரிக்கையை நகராட்சி மன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கு அப்துல் கனி அவர்கள் மிகவும் யோசித்தார்கள் . ’ இந்தத் தீர்மானம் வேண்டாம் , விட்டு விடுங்கள் . ஏனென்றால் இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறி இருந்தால் தான் அது எனக்கும் பெருமையாக இருக்கும் . இந்த நகராட்சிக்கும் பெருமையாக இருக்கும் . ஆனால் எங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள் . ஆகவே இப்பொழுது சுயேட்சையும் காங்கிரசும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவதால் இந்தப் பெரும்பான்மை அவர்களுக்கு இருக்கிறது . அதனால் தீர்மானத்தைத் தோற்கடித்து விடுவார்கள் . எனவே நீங்கள் அதை வற்புறுத்த வேண்டாம்’ என்று சொன்னார்கள் .
நான் , ‘ அப்படி ஒரு இழுக்கு வருமேயானால் அந்த அவமானம் உங்களுக்கு ஏற்பட்டது அல்ல , அது கம்யூனிஸ்ட் கட்சியான எங்களுக்கு ஏற்பட்ட அவமானமே . கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலருக்கு ஏற்பட்ட அவமானம் . அப்படி ஒரு நிலையை நான் உருவாக்க மாட்டேன் . ஆகவே நீங்கள் தைரியமாக நிகழ்ச்சி நிரலிலே அந்தத் தீர்மானத்தை சேர்த்து விடுங்கள்’ என்றேன் .
அவர் தயக்கத்துடனேதான் அந்தத் தீர்மானத்தைச் சேர்த்தார் . யார் யார் எல்லாம் எதிர்ப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியும் . அங்கு இருந்த ஏழெட்டு பேர்களுக்குப் பக்கத்திலேயே எங்கள் கட்சியைச் சார்ந்த ஒன்பது பேர்களும் போய் உட்கார்ந்து கொண்டோம் . கூட்டத்தைச் சரியாகக் காலை பத்தரை மணிக்கு மேல் போடச் சொன்னேன் . அறிமுகவுரையுடன் பத்தரை மணிக்கு நகராட்சி மன்றக் கூட்டம் தொடங்கியது .
அதில் ஒரு ஐம்பது தீர்மானங்களுக்குப் பிறகு , அதாவது பனிரெண்டு மணி சுமாருக்கு இந்தத் தீர்மானம் வருவது போல் அனுசரித்து நிகழ்ச்சிகள் போடப்பட்டது . கூட்டம் நடந்து கொண்டிருந்தது . தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒவ்வொன்றாக நிறைவேறிக் கொண்டு இருந்தது . அப்பொழுது சுமார் பன்னிரெண்டு மணி ஆனவுடன் எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் , அங்கு இருந்த காங்கிரஸ் சுயேட்சை உறுப்பினர்களுக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு , ‘ மணி பன்னெண்டு ஆச்சி வாங்கப்பா போயி டீ , ஒரு வடையும் சாப்பிட்டு வரலாம்’ என்றனர் . பக்கத்தில் அப்போது . டென்னிஸ் கிளப் இருந்தது . எதிர்ப்பவர்களையெல்லாம் அங்கே கூட்டிச் செல்வதற்கான ஏற்பாடு செய்து விட்டேன் .
எல்லோரும் போய் டீ குடித்துக் கொண்டு , வடை சாப்பிட்டுக் கொண்டிருக்கிற பொழுது நான் உடனே எழுந்து தீர்மானங்கள் இத்தனையாவது நம்பரிலிருந்து கடைசி அஜென்டா முடிய அனைத்தும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்று எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்லி நாங்கள் ஒன்பது பேர் , காங்கிரஸ் கட்சியில் எம் முகமது அப்துல் கனியை ஆதரிக்கின்ற சிலரும் சேர்ந்து அந்தத் தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றிவிட்டோம் . பின் நாங்களும் எழுந்து இந்த டென்னிஸ் கிளப் கட்டிடத்திற்கு சென்ற பொழுது , ‘ என்ன நீங்களும் வடை , டீ சாப்பிட வந்திட்டீங்களா ?’ என்று கேட்க , ‘ இல்ல இல்ல கூட்டமே முடிஞ்சு போச்சு’ என்று சொன்னேன் . ‘ அட சண்டாளனே அந்தத் தீர்மானம் என்னாச்சு ?’ என்று கேட்டார்கள் . அதற்கு முகமது அப்துல் , ‘ எல்லா தீர்மானமும் ஏகமனதா பாஸ் ஆயிடிச்சு . கூட்டமும் முடிஞ்சு போச்சு’ என்றார் .
’இப்படி சண்டாளத்தனம் பண்ணி எங்களை எல்லாம் ஏமாற்றி, தீர்மானம் நிறைவேற்றிவிட்டாயே’ என்று கேட்டார். மறுநாள் அந்தத் தீர்மானத்தை எதிர்க்க முடியாது. ஏனென்றால் அதுதான் கடைசி நாள். ஆகவே தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அந்தப் பெயர் அந்த ஆஸ்பத்திரி காம்பவுண்டிற்கு நகராட்சி மன்றத் தலைவர் டி.கே.எச்.எம். முகமது அப்துல் கனி என்று பெயர் வைக்கப்பட்டது.
அன்றைக்கு எந்தத் தெருவிலே இருக்கின்ற கடைகள் எல்லாம் உள்ளே கொண்டு வந்து வைத்து தெருவின் போக்குவரத்து இடைஞ்சலை குறைக்க வேண்டும் , வாகனப் போக்குவரத்து வசதிகளைப் பெருக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றினோமோ அது இன்றைக்கும் , கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருஷம் ஆனாலும் கூட அதைவிட அதிகமாகத் தான் தெருக்கடைகள் வந்து போக்குவரத்திற்கு மிகப்பெரும் இடையூறாக இருந்து கொண்டிருக்கிறது . அதை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்து அப்புறப்படுத்தினாலும் மறுபடியும் ஒரு ஆறுமாசத்திற்குள் மறுபடியும் அந்தக் கடைகள் அங்கே வந்துவிடும் .
இப்படியாகத் தான் இன்றைக்கு வரையிலே அந்தத் தெருவோரக் கடைகள் அதுவும் , பிரப் ரோட்டிலும் , ஈஸ்வரன் கோயில் வீதியிலும் நெருக்கடியை கொடுத்துக் கொண்டே இருக்கிறது . என்றைக்குத் தான் இந்தப் பிரச்சனை தீரும் என்று தெரியவில்லை . யாரெல்லாம் சுயேட்சையாக நின்று கனியை எதிர்த்தார்களோ அவர்களும் , காங்கிரஸில் கனியை எதிர்த்தவர்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் . கம்யூனிஸ்ட்டின் தீர்மானம் எது வந்தாலும் எதிர்ப்பது என்று முடிவு செய்து அஜன்டாவிலே தீர்மானம் வந்த பொழுது அந்த நகர் மன்ற உறுப்பினர்கள் எழுந்து வாசிக்க ஆரம்பித்தவுடன் ‘நாங்கள் அவருடைய தீர்மானம் அனைத்தையும் எதிர்க்கிறோம்’ என்று ஒரேயடியாக சொல்வார்கள் .
ஆனால் நடைமுறை விதி என்னவென்றால் நகர்மன்ற உறுப்பினர்கள் அந்தத் தீர்மானத்தைப் படித்து ஒன்றன் பின் ஒன்றாகத் தான் நிறைவேற்ற முடியும் . அந்த நகர் மன்ற உறுப்பினர் தான் படிக்க விரும்பவில்லை என்றும் நகர் மன்ற குமாஸ்தா அதைப்படித்தால் போதும் என்றும் சொன்னால் , உடனே அந்த மீட்டிங்க் கிளார்க் சினீவாசன் அதைப் படிப்பார் . இப்படி ஒவ்வொரு தீர்மானமும் எதிர்க்க ஆரம்பித்தார் .
படிப்பதற்கு முன்பே எதிர்க்க ஆரம்பித்தார்கள் . அப்பொழுது நாங்கள் , விதிப்படி நாங்கள் படிப்பதைப் படிக்கிறோம் . வேண்டுமானால் அதற்குப் பின்னால் நீங்கள் எதிர்த்துக் கொள்ளுங்கள் என்றோம் . மக்களுக்கும் இது தெரிய வந்த போது பார்வையாளர்கள் கூட்டம் மிகப் பெரியதாகவே இருந்தது . ஒவ்வொரு தீர்மானமாகப் படித்து பின் அவர்கள் அதை எதிர்த்துத் தோற்கடித்தார்கள் .
அந்த நிலைமையைப் பார்த்த பிறகு அதற்கு எதாவது வழி செய்ய வேண்டும் என்று சேர்மனிடம் , ‘ நான் இரண்டு தீர்மானங்களைக் கொடுக்கிறேன் . அந்தத் தீர்மானங்களை என்னைப் படிக்க வைத்து அதன் பிறகு அந்த தீர்மானங்கள் நிறைவேறினால் நிறைவேறட்டும் . இல்லாவிட்டாலும் பரவாயில்லை’ என்று நான் அவரிடம் சொன்னேன் .
அவரும் , ‘ சரி கொடுங்கள்’ என்று சொன்னார் . இரண்டு தீர்மானங்களைக் கொடுத்தேன் . ஒன்று நாட்டிலே மதவெறியும் , ஜாதி வெறியும் தலை விரித்து ஆடுகிறது . அதன் விளைவாக சுதந்திரம் கிடைத்த ஒரு வாரத்திற்குள்ளேயே மகாத்மா காந்தி அவர்கள் மதவெறியர்கள் ஆர் . எஸ் . காரர்களால் , கோட்ஸேயின் சூழ்ச்சியின் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார் .
ஆகவே இந்த மதவெறியை எதிர்ப்பதற்கும் மத ஒருமைப்பாட்டை மக்களுக்கு நினைவூட்டுவதற்காகவும் காந்தியின் மகத்தான தியாகத்தை மக்கள் நினைவு கூறவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை சரியாக 5.20 க்கு நகராட்சி சங்கை ஊதி இதை மக்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும் என்ற ஒரு தீர்மானமும் , அடுத்தாற்போல் நாம் எல்லோரும் அரசியலில் வருவதற்கும் அரசியல் ஈடுபாடு கொள்வதற்கும் , புழுக்களைப் போல் நெளிந்து கொண்டிருந்த இந்திய மக்களை நிமிர்ந்து நிற்கச் செய்த மகாத்மா காந்தி அவர்களை நினைவூட்டுகின்ற முறையிலேயும் குறைந்தபட்சம் நகராட்சி மன்றக் கூட்டம் நடக்கின்ற வரையிலாவது நாம் ஒருமைப்பாடாகவும் மக்களுக்குச் சேவை செய்தவற்காக வந்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகின்ற முறையில் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் மகாத்மா காந்தியின் சிலை நகராட்சி கட்டிடத்திற்கு உள்ளே இருக்கின்ற மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டுப் பின்னர் வந்து இந்தக் கூட்டத்தை துவங்கினால் நமக்குள் ஒரு ஒற்றுமையும் , சேவை செய்ய வேண்டும் என்கின்ற எண்ணமும் அதிகரிக்கும் என்று சொல்லி இந்தத் தீர்மானத்தை கொடுத்திருந்தேன் .
மாலை அணிவித்துவிட்டு வந்து கூட்டத்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ்காரர்களும் , சுயேட்சைகளும் முடிவெடுத்தார்கள் . அப்பொழுது பழனியப்பன் என்பவர் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார் . இந்த கூட்டத்திக்கு அவரே நேரில் வந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தீர்மானம் கொடுத்திருக்கிறார்களே என்று நகர மன்ற காங்கிரஸ் உறுப்பினர் கூட்டத்தில் , ‘ தயவுசெய்து எதிர்க்காமல் தீர்மானத்தை பாஸ் பண்ணுங்கள்’ என்று சொன்ன பொழுது பழனியப்பக் கவுண்டர் அவர்கள் , ’ இதை நாங்கள் எதிர்த்து தான் தீருவோம் , இந்த தீர்மானம் அவர்களால் நிறைவேற்றப்படக் கூடாது . அவர்களுக்கு என்ன பெரிசா தேசபக்தியும் , காந்தியபக்தியும் வந்துவிட்டது’ என்று சொல்ல ஆரம்பித்தார் .
பிறகு இந்தத் தீர்மானம் நகராட்சி மன்றத்தில் வந்த பொழுது நான் எழுந்து படித்து விட்டு பேச ஆரம்பித்தவுடன் , பேசக்கூடாது என்று சொன்னார்கள் . ஏற்கனவே நான் அவரிடம் சொல்லி வைத்தது போல் கனியிடத்தில் போய் சொன்னேன் . இந்தத் தீர்மானத்தைப் பொருத்தவரையில் விளக்குவதற்கு உரிமையுண்டு . என்னுடைய விளக்கத்தைக் கேட்ட பிறகு எதிர்க்க வேண்டுமென்று நினைக்கின்ற ஒரு சிலர் மனம் மாறி ஆதரிக்கலாம் ஆகவே இந்தத் தீர்மானத்தை விளக்குவதற்கு அனுமதி தரவேண்டும் என்று கேட்டேன் . அவர் , ‘ சரி , பேசுங்கள்’ என்று சொன்னார் . நான் , ‘ நமக்கெல்லாம் தேசபக்தியை ஊட்டியவர் , பொதுவாழ்க்கையில் நாம் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டியவர் மகாத்மா காந்தி அவர்கள் . அவர் மதவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார் . ஆகவே நமக்கு தேசபக்தியையும் பொது நலத்தொண்டையும் , ஒருமைப்பாட்டோடு கட்சி வித்தியாசமின்றி , மதபாகுபாடின்றி செய்ய வேண்டும் என்கின்ற உணர்வு இந்த தீர்மானத்திற்குப் பிறகாவது வரவேண்டும் . ஆகவே நீங்கள் எல்லோரும் ஏகமனதாக நிறைவேற்றவேண்டும் என்று சொன்ன பொழுது பழனியப்பக் கவுண்டர் எழுந்து , ’ என்ன கம்யூனிஸ்டுகளுக்கு தேசபக்தி வந்திடுச்சு . மகாத்மா காந்தியின் படத்தை தலைகீழாக ரஷ்யாவில் மாட்டினார்கள் . இந்த கம்யூனிஸ்டுகளுக்கு அப்படி என்ன தேசபக்தி வந்துவிட்டது’ என்று கேட்டார்கள் .
அப்பொழுது நான் , ‘ எங்கே காந்தி படத்தை எப்படி மாட்டினார்கள் என்பதைப் பற்றிய சர்ச்சை நமக்கு வேண்டாம் . இங்கே காந்தியின் மீது பக்தி இருக்கிறதா . காந்தியை நாம் நேசிக்கிறோமா என்பது தான் பிரச்சனையே ஒழிய மற்ற இடத்தைப் பற்றி பேசக் கூடாது என்று சொன்ன பொழுது அவர் அதைக் கடுமையாக எதிர்த்தார் . அப்பொழுது நான் , ‘ கம்யூனிஸ்டுகள் தேசபக்தியைப் பற்றி பழனியப்ப கவுண்டர் பேச வேண்டாம் . ஏனென்றால் அவர் என்னை விட மூத்தவர் . காங்கிரஸ் பேரியக்கம் நடந்து கொண்டு இருந்தபோது அவர் எந்த இயக்கத்திலும் சேரவில்லை , சிறைசெல்லவில்லை . நாங்கள் ஒன்பது பேரில் ஏழு பேர்கள் மகாத்மாஜி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர்கள் . இன்றைக்கு பழனியப்பக் கவுண்டர் கட்டிக் கொண்டிருக்கிற கதர் துணியை தெருத் தெருவாக வண்டியில் போட்டுக் கொண்டுபோய் , குடியரசு வாரம் , சுதந்திர வாரம் என்று அடிமை இந்தியாவில் கொண்டாடப்பட்ட அன்று தெருத் தெருவாக விற்று இருக்கிறோம் . ஆகவே எங்களுக்கு தேச பக்தியைப் பற்றி பழனியப்ப கவுண்டர் அவர்கள் சொல்ல வேண்டாம் . உங்களில் மெஜாரிட்டியாக இருக்கின்ற ஒரே ஒருவர் தான் தேச விடுதலைப் போராட்டத்தில் காந்தி அவர்களோடு கலந்து கொண்டு எங்களோடு சிறையில் இருந்தவர் , எங்களோடு காங்கிரஸ் பேரியக்கத்தில் பாடுபட்டவர் அவர் கருங்கல்பாளையம் ஆறுமுகம் என்ற அவர்கள் மட்டும்தான் உண்மையான காங்கிரஸ்காரர் . அவர் சொல்லட்டும் எங்களைப் பற்றி’ என்று சொன்ன பொழுது எல்லோரும் வாயடைத்து உட்கார்ந்து விட்டார்கள் . இப்படியாக பல்வேறு தொல்லைகளைக் கொடுத்தார்கள் .
பல தீர்மானங்கள் முகமது அப்துல் கனி அவர்களுடைய 5 ஆண்டு கால ஆட்சி சிறப்பாக முடிந்தவுடன் அடுத்த நகர மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது . அந்த நேரத்தில் அவர் ஒரு புத்தகம் வெளியிட்டார் . ‘ ஐந்தாண்டு காலத்தில் நகராட்சி மன்றத்தில் எனது சேவை’ என்று ஒரு புத்தகத்தை , அந்த காலத்திலேயே ஒரு ஐயாயிரம் காப்பி அச்சடித்து வார்டுகள் தோறும் கொடுத்தார் . குறிப்பாக கம்யூனிஸ்ட்கள் நிற்கின்ற வார்டுகளில் அதிகமாக வினியோகித்தார் . அதில் தம்முடைய ஆட்சிகாலப் பணிகள் அனைத்தையும் குறிப்பிட்டுவிட்டு , ஒன்பது கம்யூனிஸ்டுகள் வெற்றியடைந்த பிறகு நான் நகர மன்றத் தலைவராக நிற்க வேண்டும் என்ற முடிவு எடுத்த பொழுது நான் மிகவும் பயந்தேன் . காரணம் , ‘ ஒரு கம்யூனிஸ்டை சமாளிப்பதே ரொம்ப கஷ்டம் . இதுல ஒன்பது பேர் வேற இருக்காங்க என்ன பண்ணுவோமோ , ஏது பண்ணுவோமோ தெரியலயேன்னு’ நான் மிகவும் பயந்தேன் . ஆனால் 5 ஆண்டு கால ஆட்சியில் அவர் நகர்மன்றத்திற்கு கம்யூனிஸ்ட்கள் வருகின்ற பொழுது இரண்டு கொடிகளை எடுத்துக் கொண்டு வந்தார் . ஒன்று சிகப்புக் கொடி , இன்னொன்று பச்சைக் கொடி . நான் கற்பனைக்காகச் சொல்லவில்லை . என்னுடைய செயல்கள் சரியான முறையில் மக்களுக்குச் சேவை ஆற்றுகின்ற முறையில் இருந்தால் பச்சைக் கொடியை காட்டுவார்கள் . ரெயில் தண்டவாளத்தில் ஒழுங்காகப் போக வேண்டுமென்று , தவறாக ஏதாவது நடவடிக்கை எடுக்கும் நிலைமை ஏற்பட்டால் சிகப்புக் கொடியை தூக்கிவிடுவார்கள் . ஆனால் 5 ஆண்டு காலத்தில் ஒரு நாள் கூட அவர்கள் சிகப்புக் கொடியை தூக்கவில்லை . பச்சைக் கொடியைத்தான் காட்டினார்கள் . என்னுடைய நிர்வாகம் சிறப்பாக நடத்துவதற்கு நான் பயந்தது போல் கம்யூனிஸ்டுகள் இடையூறாக இருக்கவே இல்லை . எனக்கு இடையூறாக இருந்தவர்கள் எல்லாம் எனது கட்சியினால் தேர்தெடுக்கப்பட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் தான் . ஆனால் கம்யூனிஸ்டுகள் 5 ஆண்டு காலம் என்னோடு மிக நெருக்கமாக ஒத்துழைத்தார்கள் . குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் எஸ் . பி . வெங்கடாசலம் அவர்களுடைய பணி எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது . நிர்வாகத்திலும் , நகர்மன்ற கூட்டங்கள் நடத்துவதிலும் மிகச் சிறப்பான முறையில் என்னோடு பணியாற்றினார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார் . அதன் பிறகு நான் நான்கு முறை நகர்மன்ற உறுப்பினராக பல்வேறு வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினேன் .
எம் . ஜி . ஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நகர்மன்றங்கள் இல்லாத காலகட்டமும் ஒன்று இருந்தது . அந்த சமயத்தில் நகர்மன்ற நிர்வாகங்களின் செயல்பாட்டிற்காக , ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது ஈரோடு நகர்மன்றத்திற்கு . அதில் மூன்று பேர்கள் எம் . ஜி . ஆர் . அவர்களால் நியமிக்கப்பட்டார்கள் . அதில் நானும் ஒருவன் . நகர்மன்ற செயற்குழுவில் தீர்மானங்கள் எடுப்பது அல்லது நிறைவேற்றுவது , மற்ற வேலைகளைக் கண்காணிப்பது போன்றவைகள் மிகச் சிறப்பான முறையில் அந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் நடைபெற்றது .
இப்படி நகராட்சி மன்றத்தில் பணிகள் மிகச் சிறப்பாகச் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் . இன்று எதிர்கட்சி தலைவராக புகழப்படுகின்ற அளவிற்கு நகர்மன்றப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது . அதுபோல நகராட்சி மன்றத்தில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தபோது அதனுடைய செயலாளராக நூற்றாண்டு விழா குழுத் தலைவர் செயலாளராக நான் இருந்தேன் . சேர்மன் அவர்கள் தலைவராக இருந்தார்கள் . நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக இருந்தது . தந்தை பெரியார் , காமராஜர் அவர்கள் , நெடுஞ்செழியன் அவர்கள் இப்படி அனைவருடனும் சிறப்பாக நடைபெற்றது .
அதற்கு முன்பு நகரமன்றத் தலைவராக இருந்தவர்களை கவுரவிக்கின்ற முறையில் அந்த காலகட்டத்தில் உயிரோடு இருந்த அனைத்து நகரமன்ற தலைவர்களையும் அழைத்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பட்டயங்களும் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது . நகராட்சி மன்றத்தின் நகரமன்ற மண்டபத்தில் ஓய்வு பெற்ற பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நகரமன்ற தலைவர்களுடைய படங்களைத் தான் வைப்பது மரபு . அது தான் சட்டமாகவும் இருந்தது .
ஆனால் இந்த நூற்றாண்டு விழா கொண்டாடுவதை தெரியப்படுத்துகின்ற முறையில் நான் ஒரு தீர்மானம் கொடுத்தேன் . அப்பொழுது சேர்மன் , ‘ என்னப்பா இந்த தீர்மானம் நிறைவேற்றி அனுப்புனோம்னா அரசாங்கம் ஒத்துக்குமோ என்னமோ தெரியலயே ? நாம அனுப்புவதை அனுப்புவோம் . அரசாங்கம் கவுரவிப்பதும் , கவுரவிக்காததும் பிற்பாடு பார்த்துக்கலாம்’ என்று சொல்லி நான் ஒரு தீர்மானம் கொடுத்தேன் . இந்த நகராட்சி மன்றத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற நேரத்தில் நகர்மன்ற உறுப்பினராக இருக்கின்ற அனைவருடைய புகைப்படங்களையும் எடுத்து நகர்மன்றத்தில் மாட்ட வேண்டும் என்ற தீர்மானம் கொடுத்தேன் . அது நியாயமான தீர்மானமாக இருந்ததால் அன்றைக்கு இருந்த தி . மு . க அரசாங்கத்தில் அது நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு ஈரோட்டு நகர்மன்றத்திலேதான் முதன் முதலிலே நகர மன்ற உறுப்பினருடைய போட்டோ மிகப் பெரிய அளவிலே இன்றைக்கும் நகர மன்ற வளாகத்திலே இருக்கிறது . அதன் பிறகு இன்னொரு தீர்மானம் அரங்கராஜன் காலத்திலே கொடுத்து , அதுவும் நகர்மன்ற மண்டபத்தில் இருக்கிறது . நகராட்சி மன்ற செயல்பாடுகள் அனைத்தையும் குறித்து ஒரு மிகச் சிறந்த புத்தகம் நகராட்சிமன்ற நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்டது . அதில் , ’ நகராட்சி மன்றங்களும் ஊராட்சி மன்றங்களும் அரசியல் பயிற்சி பெறுவதற்கான தொட்டில்கள்’ என்று ஒரு கட்டுரை எழுதினேன் . அது எல்லோராலும் பாராட்டப்பட்டது . என்னுடைய அறுபத்தைந்து ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் முதலில் காங்கிரசில் 32 முதல் 43 வயதுவரை இருந்தேன் . காங்கிரசுக்குப் பிறகு 43 வயதிலிருந்து , கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக ஊழியராக இருந்து கொண்டிருக்கிறேன் . நான் அரசியல் கட்சியில் எந்த பணியில் இருந்து பொறுப்பிலிருந்து பணியாற்றினேன் என்றால் காங்கிரஸ் கட்சியில் நகரச் செயலாளராக இருந்திருக்கிறேன் . தேசிய வாலிபர் சங்கத்தின் தலைவராக இருந்து இருக்கிறேன் . பாரதி வாலிபர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்திருக்கிறேன் . இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக இருந்து இருக்கிறேன் . மாவட்டக் கமிட்டி உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன் .
நகர கமிட்டியின் செயலாளராகவும் , இந்திய சோவியத் நட்புறவு கழகத்தில் இந்திய அளவில் நேஷனல் கவுன்சில் கமிட்டி மெம்பராகவும் இருந்திருக்கிறேன் . மாநில துணை செயலாளராகவும் இருந்து பணியாற்றி இருக்கிறேன் . இப்படியாக நான் ஏற்றுக் கொண்ட பல்வேறு பணிகளில் நான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன் என்ற நினைவு மன நிம்மதியைத் தருகிறது . அது போல பல்வேறு பயணங்கள் செய்து இருக்கிறோம் . தேசிய இயக்கத்திற்காகவும் மற்ற காரியங்களுக்காவும் பயற்சி பெற்று இருக்கிறோம் . ஈரோடு தொகுதியில் கே . டி . ராஜு அவர்கள் சட்ட மன்ற உறுப்பினராக நின்று வெற்றி பெற்றார்கள் . 1952 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் காங்கிரசுக்கு கருமாதி செய்ய வேண்டும் என்று நிதி திரட்டி பிரச்சாரம் செய்தார் . தமிழ்நாடு முழுவதும் நின்ற கம்யூனிஸ்ட்டுகளை பெரியார் ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார் . ஆனால் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டும் கம்யூனிஸ்ட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார் . ஒன்று ஈரோட்டிலே கே . டி . ராஜுவுக்கு எதிராக சென்னியப்பா கவுண்டர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்கள் . அதற்கு காரணமாக காங்கிரஸ் தோற்க வேண்டும் என்றால் சென்னியப்ப கவுண்டருக்குத் தான் அந்த சக்தி இருக்கிறது
இங்கு பெரும்பான்மையான மக்கள் கவுண்டர் இனத்தை சார்ந்தவர்கள் . காங்கிரஸில் நிற்பவரும் வேட்டுவ கவுண்டர் இனத்தை சார்ந்தவர் . காங்கிரஸிலே அல்லாமல் சுயாட்சியாக நிற்கின்ற சென்னியப்பா கவுண்டர் அவர்கள் கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் . கே . டி . ராஜு அவர்கள் நாயுடு இனத்தை சேர்ந்தவர்கள் . அப்பொதெல்லாம் எனக்குக்கூட கே . டி . ராஜுவுடைய ஜாதி தெரியும் . இப்படி அவர் பிராச்சாரம் செய்து விட்டு போகிற போது , சில தினங்ளுக்கு பிறகு எம் . ஆர் . ராதா இங்கு வந்தார் . பொதுக்கூட்டத்தில் கே . டி . ராஜூவை ஆதரித்து அவர் பேசிய பேச்சு எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது . என்னடா இது பெரியார் வந்து பேசிட்டு போயிருக்கார் . எம் . ஆர் . ராதா வந்து கம்யூனிஸ்ட்டை ஆதரிக்கிறேன் என்று சொல்கிறாரே என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த போது எம் . ஆர் . ராதா அவர்கள் இங்கே வந்தபோது ஊர்வலம் ஒன்று நடந்தது . அதிலே ராதா அவர்கள் வெள்ளைக் குதிரையில் ஏறிக் கொண்டு வந்தார்கள் . கூட்டத்திலே பேசுகின்ற போது ,
ஐயா தான் என்னை அனுப்பிச்சாரு . ராஜுவுக்கு நீ போய் ஆதரவா பேசு . ராஜு ஜெயிக்கட்டும் . ஆனா நான் வந்து சென்னியப்பா கவுண்டரை எதிர்த்து பேச முடியாது ஆகவே நான் இப்படி பேசிவிட்டு வந்துவிட்டேன் . ஆகவே நீ கே . டி . ராஜுவுக்கு ஆதரவாக போய் ஓட்டு கேள் என்று அனுப்பினார் . ஆகவே பெரியாரின் ஒத்துழைப்பின் பேரிலே தான் நான் வந்திருக்கிறேன் என்று பொய்யையே சொன்னார் .
பொய்யைச் சொல்லி ராஜுவுக்கு ஓட்டு கேட்டு , ராஜுவும் வெற்றி பெற்றார் என்பது ஒரு முக்கியமான ஈரோட்டு செய்திகளிலே ஒன்றாக நான் கருதுகிறேன் . ஒவ்வொரு தேர்தல் காலத்திலேயும் கூட்டணி என்று 1952 லே வந்ததிலே இருந்து , அந்த கூட்டணி கமிட்டியிலே நான் தான் செயலாளராக இருந்து செயல்பட்டு இருக்கிறேன் . காங்கிரஸ் தலைமையிலே இருக்கிற பொழுதும் , ஏ . டி . எம் . கே . தலைமையிலே இருந்த பொழுதும் , தி . மு . க . தலைமையிலே இருந்த பொழுதும் ஒவ்வொரு தடவை ஒவ்வொரு முறையும் நான் தான் கூட்டணி தேர்தல் கமிட்டியினுடைய செயலாளராக இருந்து பணி ஆற்றி இருக்கிறேன் . அனைத்து கட்சிகளும் என்னுடைய சேவைக்கும் , எனது உழைப்பிற்கும் கொடுத்த மரியாதையாக இன்றைக்கும் நான் அதை கருதிக்கொண்டிருக்கிறேன் .
நான் பொறுப்பிலே இருந்த போது ஈரோடு நகர செயலாளராக இருந்த பொழுது கட்டிடம் ஒன்று கட்ட வேண்டும் கட்சிக்கு என்று முடிவெடுத்தோம் . முடிவெடுத்து டி . கே . பாலச்சந்திரன் , எம் . என் . கண்ணப்பன் , இவர்களை கொண்டு ஒரு நாடகம் நடத்துவது . ‘ நீங்கள் என்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கி‘ என்கிற நாடகத்தை நடத்துவது என்று முடிவுச் செய்தோம் . அன்றைக்கு கோவை மாவட்டதிலே தான் ஈரோடு இருக்கிறது . 1957 ல் .
நான் வெற்றி பெற்று வந்தவுடன் இந்த முடிவு எடுக்கிற போது நான் கொஞ்சம் யோசித்தேன் . நாடகத்தை நடத்தி எங்க மிச்சப் படுத்தினாங்க சொல்லி . ஆனால் ஒரு துணிவு இருந்தது . எப்படியும் நடத்தி பார்த்துவிடலாம் என்று நடத்தினோம் . அது போலவே பவானியிலே கட்சி கட்டிட நிதி என்ற இனிய நாடகத்தை நடத்தினார்கள் . திருப்பூரிலே நடத்தினார்கள் . மேட்டுப்பாளையத்திலே நடத்தினார்கள் . கோவையிலே நடத்தினார்கள் . இங்கு எங்குமே கட்சிக்கு சொந்தமான கட்டடிடம் கிடையாது .
நடத்திய பொழுது ஈரோட்டிலே மட்டும் தான் ஒரு பதினொராயிரம் ரூபாய் செலவு போக மிச்ச இலாபமாக நின்றது . பாக்கி நான்கு இடத்திலேயும் கையை புடிச்சி நட்டம் தான் ஏற்பட்டது . அதற்கு காரணம் என்ன என்று சொன்னால் இரண்டு காரணங்களை சொல்ல வேண்டும் . ஒன்று மத வேற்றுமை இல்லாதவர்கள் . ஒரு பிற்பட்ட சமுதாயத்தை சேர்ந்த முகமது அப்துல் கனி அவர்களை தலைவராக ஆக்குவதற்கு அரும்பாடு பட்டார்கள் . அப்படியே ஆட்சி அவர்களை ஐந்தாண்டு காலத்தை சிறப்பாக நடத்த வைத்தார்கள் என்கின்ற ஒரு சிறப்பான எண்ணம் முஸ்லிம் தொலி இயக்கம் இடத்திலே இருந்தது .
ஆகவே துணிஞ்சி ஐந்நூறு ரூபா டிக்கெட் அடித்தோம் . ஐந்நூறு ரூபாய் , நூறு ரூபாய் , பத்து ரூபாய் , ஐந்து ரூபாய்ன்னு டிக்கெட் அடிச்சி நாடகத்தை நமச்சிவாய காம்பவுண்டிலே முத்து குமார் தியேட்டர் இருந்த பக்கத்திலே நமச்சிவாய காம்பவுண்டு . அந்த காம்பவுண்டிலே அந்த நாடகத்தை போட்டோம் . ஐந்நூறு ரூபா டிக்கெட் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வசதி யாருக்கெல்லாம் இருந்ததோ அவங்களெல்லாம் ஐந்நூறு ரூபா டிக்கெட் வாங்கிட்டாங்க . அப்புறம் நூறு ரூபா டிக்கெட் வாங்க முடிஞ்சுது . கட்சித் தொண்டர்கள் பத்து ரூபா , ஐந்து ரூபா டிக்கெட்களை வாங்கினார்கள் . இப்படியாக பெரும் நிதி சேர்ந்தது . எல்லா முஸ்லிம்களும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள் .
இன்னொரு காரணம் என்ன என்று சொன்னால் மகாத்மா காந்தி அவர்கள் சுடப்பட்டு கொன்ற போது இங்கே காங்கிரஸ்காரர்களாகவும் இருந்தார்கள் , ஆர் . எஸ் . காரராக ஆர் . எஸ் . எஸ்காரர்களாகவும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு இருந்தார்கள் .
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கேசவலால் காளிதாஸ் என்ற அவர்கள் காந்தி வந்து அவர்கள் வீட்டில் தான் தங்கினார் . காந்தி சுடப்பட்ட இரண்டொரு தினங்களில் அவர் கைது செய்யப்பட்டார் . இன்னொருவர் ஆர் . கே . சித்தையன் . அவரை ஓட்டல் சிந்தையன் என்று சொல்வார்கள் . அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்திருக்கிறார் . அவரும் , பல காங்கிரஸ்காரர்களும் கைது செய்யப்பட்டார்கள் .
அந்த நேரத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்ததால் காந்திஜி இறந்து விட்டார் என்ற செய்தி ஐந்தரை மணிக்கு ரேடியோவில் சொன்ன பொழுது கம்யூனிஸ்ட்கள் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு , முனிசிபல் தொழிலாளர்கள் ஒரு நூறு , நூற்றைம்பது பேரு , ரெயில்வே தொழிலாளர்கள் முந்நூறு பேர் மற்றும் கட்சித் தோழர்கள் ஐந்நூறு பேர் என அனைவரும் சேர்ந்து கொண்டு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஜிகினா வீதி , புது மஸ்ஜித் வீதி இப்படியாக முஸ்லிம்கள் வாழ்கின்ற இடத்தில் எல்லாம் அவர்கள் வீடுகள் தாக்கப்படுகின்ற பொழுது , பாதுகாப்பாக ஆண்களும் , பெண்களுமாகத் திரண்டு அன்று மாலை 6 மணி சுமாருக்கு ஆரம்பித்த முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு மறுநாள் மதியம் இரண்டு மணி வரை விடிய விடிய தூங்காமல் , அன்ன ஆகாரம் கூட இல்லாமல் கிட்டத்தட்ட ஐநூறு கம்யூனிஸ்ட்டுகள் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள் .
அப்பொழுது நாங்கள் , ‘ நீங்கள் தனித்தனி வீட்டில் இருக்கும் பொழுது எங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு சிரமமாக இருக்கிறது . ஒரு வீதிக்கு ஒரு வீட்டை தேர்ந்தெடுங்கள் . அந்த வீட்டில் எல்லாரும் வந்து இருந்துக்கங்க . அவங்கஅவங்க வீட்டில இருக்கிற உணவுப்பொருள் எல்லாம் கொண்டு வந்து ஒரு நாள் இரண்டு நாள் சாப்பிட்டுட்டு இருங்க என்று சொல்லி அது போலவே செய்து , வீதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தோம் . ஒரு வீதிக்கு ஐம்பது பேரு தடியோட நின்று யாரும் புதிய ஆட்கள் வரமுடியாதவாறு தடுத்து நிறுத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தோம் . அப்பொழுது தான் முஸ்லிம் பெரியவர்கள் இரண்டரை மணிக்கு மேல் மலபார் ஸ்பெஷல் போலீஸ் எம் . எஸ் . வி . வந்தது . அப்பொழுது அவர்கள் கடுமையான கம்யூனிஸ்ட் ஈர்ப்பு போலீஸாராக இருந்தார்கள் . மலபார்ல இருந்து வந்திருந்த அந்த போலீஸார்கள் இராணுவத்தைப் போல் இருந்த ஒர் அமைப்பாக இருந்தார்கள் . அவர்கள் வருவதற்கு இரண்டரை மணி ஆகிவிட்டது . கோயம்புத்தூர்ல இருந்து , எல்லாப் பக்கமும் கலவரம் நடந்தது . அப்பொழுது பெருமாள் என்றவர் சப் கலெக்டராக இருந்தார் . அவர் என்னைக் கூப்பிட்டு உங்கள் கட்சி செய்த உதவிக்கு மிகவும் நன்றி . இப்பொழுது மலபார் ஸ்பெஷல் போலீஸ் வந்துவிட்டது . நம் கலவரம் நடந்து கொண்டே இருக்கிறது . ஆகவே நான் துப்பாக்கி பிரயோகத்திற்கு அனுமதி வழங்கப் போகிறேன் . உங்களுடைய ஆட்களுக்கு அதில் எதுவும் இடையூறு ஏற்பட்டு விடவேண்டாம் . அவர்களை பாதுகாப்பாக போய்விடச் சொல்லுங்கள் . இன்னும் அரை மணி நேரத்தில் நான் துப்பாக்கி பிரயோகத்தற்கு அனுமதி தரப்போகிறேன் என்று சொன்னார் . அப்பொழுது எங்களுடைய தொண்டர்களை எல்லாம் நாங்கள் பாதுகாப்பாக அந்தந்த வீதிகளிலிருந்து கூட்டி வந்துவிட்டோம் . பிறகு கலெக்டர் 144 தடை உத்தரவு போட்டிருந்தார்கள் . பலர் கூடுகின்ற போது துப்பாக்கி பிரயோகத்திற்கு உத்தரவிட்டார் . அன்றைக்கு ஜின்னா வீதி முக்கிலே பொதுவாதி ஆர் . எஸ் . எஸ் காரர்கள் திரண்டிருந்து தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தபோது அவர் துப்பாக்கி பிரயோகத்திற்கு ஆதரவு கொடுத்தார் . அதில் இரண்டு பேர் இறந்தார்கள் . ஒருவருக்கு கால் போய்விட்டது .
இப்படியாக அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுத்தோம் . அப்பொழுது ஆர் . ஜி மசூத் என்பவரும் அஹமது ரஹ்மான் ( என்று நினைக்கிறேன் ), என்பவரும் இந்த கலவரம் நடந்த கொஞ்ச நாளைக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்தனர் . நீங்கள் செய்த உதவிக்கு மிகவும் நன்றி , எங்களுடைய பெண்கள் எல்லாம் மானபங்கப்படுத்தபடாமல் , கற்பழிக்கப்படாமல் , பாதுகாப்பாகக் காத்ததற்காக உங்களுக்கு முஸ்லீம் சமுதாயத்தின் சார்பாக நன்றியை சொல்லிக் கொண்டு நாங்கள் பாகிஸ்தானுக்குப் போகிறோம் . நாங்கள் சிறுபான்மையினர் . எங்களுக்கு பாதுகாப்பு காலாகாலத்திற்கும் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டு அவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குப் போய் விட்டார்கள் . இப்படியாக முஸ்லீம்களுக்கு கொடுத்த பாதுகாப்பு , இன்றைக்கு வ . உ . சி . பூங்காவிலே உள்ள முஸ்லீம்கள் ரம்ஜான் போது தொழுகை நடத்துகின்ற அந்த இடம் அன்றைக்கு இடித்து தள்ளப்பட்டது . ஆகவே புது மஜித் என்று சொல்லுகின்ற அந்த மஜித்தில் நெருப்பு வைக்கப்பட்டது . குரான்கள் கொளுத்தப்பட்டது . அப்பொழுதெல்லாம் கம்யூனிஸ்டகள் துணிந்து அந்தந்த ஏரியாவுக்கெல்லாம் சென்று அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள் .
கலவரம் ஓய்ந்த பிறகும் மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரர்களுக்கு , தங்களுக்கு இன்னும் பாதுகாப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை வரவில்லை அந்த நேரத்தில்தான் சமாதான கமிட்டி என்ற ஒரு கமிட்டி எம் . சி . ராஜகோபால் அவர்களுடைய வீட்டிலே கூட்டப்பட்டது .
அதிலே பிரதானமாக இருந்து பனியாற்றியவர் எம் . சி . சீனிவாசன் , நான் , ஜி . கே . கோவிந்தசாமி , மு . நா . நடேசன் , போன்றவர்கள் எல்லாம் அதில் முக்கியமான பொறுப்புகளில் இருந்து பணியாற்றினோம் . அப்பொழுது 144 தடை உத்தரவு இருந்தது . ஆனாலும் கூட எங்களுடைய சமாதான கமிட்டிக்கு போலீஸார் பேட்சுகளை கொடுத்திருந்தார்கள் . அதைக் குத்திக் கொண்டு போனால் 144 தடை உத்தரவு உள்ள இடத்தில் நாங்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம் , வரலாம் ஒவ்வொரு கிராமம் , அக்ரஹாரம் முதற்கொண்டு , அக்ரஹாரத்தில் சுற்றியுள்ள இடத்திலெல்லாம் முஸ்லீம் சகோதரர்களுக்கு தைரியத்தை ஊட்டி , பொதுக்கூட்டம் போட்டு , இந்து , முஸ்லீம் சகோதரர்களிடம் ஒருமைப்பாட்டை பற்றியெல்லாம் பேசி ஒரு சமாதானமான சூழ்நிலையை உருவாக்குகின்ற ஒரு பணியை மிகத் தீவிரமாக மாசக்கணக்கில் நடத்தினோம் . அதில் முஸ்லீம் சகோதரர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின்பால் அளவிடமுடியாத பற்றும் , நம்பிக்கையும் ஏற்பட்டது . இதன் விளைவுதான் அவர்கள் அள்ளி கொடுத்திருக்கிறார்கள் , இந்த நாடகத்திற்கு என்று நாங்கள் கருதிக் கொண்டோம் .
அதன் விளைவாகத்தான் முகமது அப்துல் கனி அவர்கள் தான் சோவியத் ரஷ்யாவிற்குச் சென்று பார்த்து விட்டு வரவேண்டும் என்று முடிவெடுத்து , அதன்படி சோவியத் ரஷ்யாவிற்கு சென்று வந்தார் . திரும்பியவுடன் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருமுறை , ‘ பிற்பட்ட , தாழ்த்தப்பட்ட , பின்தங்கிய மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் அது எந்த ஆட்சியினாலும் முடியாது . காங்கிரஸ் ஆட்சியினாலும் முடியாது . வேறு எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் முடியாது . கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால்தான் மைனாரிட்டி சமூகத்திற்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்’ என்று பகிரங்கமாகச் சொன்னார்கள் . இப்படியாக அந்தப் பணி வெவ்வேறு விதங்களில் தொடர்ந்தது . நாங்கள் பல்வேறு யாத்திரைகளை நடத்தினோம் . 1952 ம் ஆண்டின் தேர்தலுக்குப் பிறகு அந்த ஈரோடு தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்ற பாதயாத்திரைக் குழு 10 நாட்கள் நடந்தே போனது . காலையில் 8 மணிக்குக் கிளம்பினால் இரவு 8 மணிக்கு ஏதோ ஒரு ஊரில் பொதுக்கூட்டம் , பிறகு வழியில் முழுவதும் பிரச்சாரம் செய்துகொண்டே போவது என்று இப்படியாக எட்டு முதல் பத்து நாட்கள் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டோம் .
அதன் பிறகு தில்லையாடி வள்ளியம்மையின் நூற்றாண்டு விழா வந்தது . டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் ஈரோட்டிலிருந்து அந்தப் பயணத்தை தொடங்குவது என்று முடிவெடுத்தார்கள் . மதுரையில் காந்தி மியூசியத்தில் கூட்டம் போடுவதற்கு முடிவெடுத்து அவர்களிடம் சொன்ன பொழுது அவர்கள் வெட்கத்தோடு தாங்கள் மிகவும் வேதனைப்படுவதாகக் கூறினார்கள் . காரணம் , தில்லையாடி வள்ளியம்மை டிரஸ்ட் என்பது கிண்டியில் இருக்கிறது .
ஐரோப்பா கண்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி தன்னுடைய சொத்தையெல்லாம் இந்த டிரஸ்ட்டிற்கு எழுதி வைத்திருக்கிறார்கள் . தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பாராட்டி அவர் புதைக்கப்பட்ட இடத்தைச் சென்று பார்த்து விட்டு வந்தார் . நாங்கள் செய்யமுடியாத ஒன்றை நீங்கள் செய்கிறீர்கள் , அதற்காக பாராட்டுகிறோம்’ என்றோம் . ஈரோட்டிலிருந்து ஆரம்பித்து ஐந்து , ஆறு நாட்கள் தில்லையாடி வரையில் உள்ள பல்வேறு இடங்களில் கூட்டங்களைப் போட்டு தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் புகழ்ந்து பேசிச் சென்றோம் .
அது போலவே இன்றைக்கு சந்தைப் பொருளாதாரம் அன்னிய முதலீடு இந்தியாவிற்குள் வருவது என்கின்ற நாசகரமான வேலை நடந்து கொண்டு இருக்கிறது . அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக தேச பக்தியையும் , சுதேசி இயக்கத்தையும் , சந்தைப் பொருளாதாரத்தையும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் . இதன் விளைவுகளை இதனால் வருகின்ற ஆபத்துகளை வேறு ரூபத்திலே அன்னிய நாடுகள் இந்தியாவில் புகுந்து இந்தியாவை அடிமையாக்கப் பார்க்கிறது என்று பிரச்சாரம் செய்து போக வேண்டும் என்று முடிவெடுத்து ஈரோடு சிதம்பரனார் பூங்காவில் இருக்கின்ற காந்தி சிலையிலிருந்து ( அந்தச் சிலை வெள்ளைக்காரன் காலத்திலே ஒரு வெள்ளைக்காரக் கவர்னரால் திறக்கப்பட்டது ) ஆரம்பித்து கன்னியாகுமரியில் காந்திஜியின் அஸ்தி வைக்கப்பட்டிருக்கிற மண்டபம் வரை செல்வது , ஒவ்வொரு கல்லூரி , பள்ளிக்கூடத்திலேயும் துண்டுப் பிரசுரங்கள் , வால் போஸ்டர்கள் கூட்டங்கள் நடத்திக் கொண்டு தேசிய உணர்வை மீண்டும் விழிப்படையச் செய்ய வேண்டும் . இந்தியா மீண்டும் ஒரு அன்னிய ஆதிக்கத்திற்கு அடிமையாக இருக்கக் கூடாது என்பதற்காக அந்தப் பயணம் ஏற்பாடு செய்தோம் . ஆறு நாள் பயணம் செய்து அங்கு சென்று அடைந்த பொழுது , மேத்தா பட்கர் அவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த பயணக்குழுவினரைப் பாராட்டி பேசினார் . தில்லையாடி போய் அங்கே கூட்டம் பேசுகின்ற பொழுது அங்கு உள்ள பள்ளிக்கூடத்திலே தில்லையாடிக்கு ஒரு மண்டபமும் இருக்கிறது . அங்கிருந்த ஆசிரியர்கள் , ‘ இங்கே மாணவர்களில் பெரும்பகுதியானவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் படிக்கிறார்கள் . பின்தங்கிய மாணவர்கள் படிக்கிறார்கள் . அவர்களுக்குப் பள்ளிக்கூடத்திலே பெஞ்ச் வசதி எல்லாம் இல்லை என்று சொன்ன போது இந்த இரண்டு தூது குழுவிலேயும் எங்களோடு வந்தவர்கள் , சித்தார்த்தா பள்ளி , கலைமகள் கல்வி நிலையம் , ரமணியம்மாள் பள்ளி , போன்ற பள்ளிகளைச் சார்ந்த இது போன்ற மாணவர்கள் தான் பெரும்பகுதியாக வந்தார்கள் . சித்தார்த்தா பள்ளியைச் சார்ந்தவர்கள் ‘நாங்கள் இப்பள்ளிக்கு வேண்டிய சேர் , டேபிள் , பெஞ்சு எல்லாம் செய்து கொடுக்கிறோம் என்று பொறுப்பு ஏற்றுக்கொண்டு வந்து எல்லாவற்றையும் தயார் செய்து ஒரு லாரி நிறைய அனுப்பிக் கொடுத்து ஈரோட்டிற்கும் , பள்ளி மாணவர்களுக்கும் இப்படி பல்வேறு பணிகளுக்கும் நாட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்துக்கின்ற பல்வேறு பயணங்களிலே நான் இந்த 84 வயது வரை கடந்து வந்து கொண்டு இருக்கிறேன் .
இன்றைக்கும் எனக்கு அந்த உணர்வு இருக்கிறது . உடல் தளர்ந்தாலும் நாட்டுப்பற்றில் உள்ளம் தளராமல் ஆற்றலும் , சக்தியும் இன்றைக்கும் நான் பெற்றிருக்கிறேன் என்பது எனக்கு பெருமைக்குரிய விசயம் . நான் பலமுறை பல நல்ல காரியங்களுக்காகச் சிறை சென்றிருந்தாலும் , இன்னும் நல்ல காரியங்களுக்குச் சிறை செல்லும் நிலைமை ஏற்பட்டாலும் , சிறை செல்வதற்குத் தயாராகவே இருக்கின்ற மனவலிமையை எனக்கு சிறிய வயதிலே தேசிய இயக்கம் கற்பித்துக் கொடுத்திருக்கிறது . எனக்கு அரசியல் வாழ்க்கையில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த சில தலை சிறந்த தியாகிகளுடைய தொடர்பும் ஏற்பட்டது .
திராவிட இயக்கத்தைப் பொறுத்த வரையில் என்னுடைய மனைவியின் குடும்பத்தினர் , குறிப்பாக என்னுடைய மைத்துனர் பெரியாரோடு மிக மிக நெருக்கமாக இருந்தார் . பெரியார் காங்கிரசில் இருந்த பொழுது காங்கிரஸ்காரராக இருந்தார் . அவர் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த பொழுது இவரும் காங்கிரஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்திலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள் . பெரியாருக்கு சட்டை தைப்பதற்கு தையல் மெஷினை அவர் இருக்கும் இடத்திற்கு எடுத்துக் கொண்டுபோய் தைத்து கொடுத்துவிட்டு வருவார் . அந்த அளவிற்கு பெரியாருடைய அன்பிற்கும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்தார் . அவர் காங்கிரஸ்காரராக இருந்தபோது , வேதாரண்யத்தில் உப்பு காய்ச்ச எம் . ஏ . ஈஸ்வரனோடு சென்றபோது , கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள் . சிறையில் அடைக்கும்போது விவரங்கள் கேட்பார்கள் . தாய் , தந்தையின் பெயர் , அவருடைய அங்க மச்ச அடையாளங்களை எல்லாம் கேட்கின்ற போது , அவர் : ’ என்னுடைய தந்தை ஈரோட்டில் காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்’ என்றார் . உடனே அவர்கள் தந்தி அடித்து , ’ இப்படி உங்கள் பையன் சட்ட விரோதமான காரியத்தைச் செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் . நான் பதிவு செய்து நடிவடிக்கை எடுப்பதற்கு முன்பாக நீங்கள் வந்து எழுதிக் கொடுத்துவிட்டு அவனை கூட்டிக் கொண்டு போங்கள்’ என்று தந்தி அடித்தார்கள் .
உடனே அவரும் புறப்பட்டுப் போனார் . போனவுடன் எழுதிக் கொடுத்து விட்டு லூர்து சாமியை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் . பிறகு அவர்கள் அன்னியத் துணி பகீஷ்காரத்தில் ஈடுபட்டார்கள் . இப்படியாக காங்கிரஸ் இயக்கத்திலிருந்து , பெரியார் அவர்கள் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வ . உ . சி அவர்கள் நடத்திய குருகுலத்தில் பிராமணர்களுக்குத் தனியாகச் சாப்பாடும் , பிராமணர் அல்லாதவர்களுக்கு தனியாகச் சாப்பாடும் பிரித்துப் போடப்பட்டதைக் கண்டித்தார்கள் .
சேரன்மாதேவி குருகுலத்தில் இந்த காரியம் செய்தது காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமானது . இது ஜாதி , மத வேற்றுமையைக் காட்டுகின்றது . அதுவும் இந்த குருகுலம் காங்கிரஸ் கட்சியினுடைய நிதி உதவியினால் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னபோது , அதற்கு ஆதரவாக பெரும்பான்மையினர் இல்லை . ஆகவே பெரியார் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியே வந்து , சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார் . அப்பொழுதுதான் லூர்து சாமி அவர்களும் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டு , சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து பெரியாரோடு வாழ்நாள் முழுவதும் , இறுதி மூச்சு விடுகின்ற வரையிலும் சுத்தமான சுயமரியாதைக்காரராக , எந்தவிதமான பிரதிபலனும் இலாபமும் கருதாமல் தன்னுடைய சொந்தத் தாயாருடைய உழைப்பில் கிடைத்த பல்லாயிரக்கணக்கான ரூபாயை அந்த சுயமரியாதை இயக்கத்திற்கு செலவிட்டார்கள்
கருணாநிதி அவர்கள் ஈரோட்டில் குடியரசு பதிப்பகத்தில் வந்து பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது என்னுடைய மைத்துனர் லூர்துசாமி அவர்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது . அதை , தான் பல இடங்களில் சொல்லி இருக்கிறார் . ‘ நெஞ்சுக்கு நீதி’ என்ற தன்னுடைய புத்தகத்தில் கருணாநிதி அவர்கள் இவரைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார் .
ஈரோடு நகராட்சி , மாநகராட்சியாகி திறப்பு விழா நடந்த , பொதுக் கூட்டத்தில் பேசுகின்ற பொழுது கூட , ‘ ஈரோடு என்றால் எனக்கு மிகவும் வேண்டிய நண்பராக என்னோடு இருந்து பணியாற்றிய அருமை நண்பர்கள் சண்முக வேலாயுதம் , லூர்து சாமி , பற்றி நான் குறிப்பிடாமல் இருந்து விட முடியாது . நண்பர் லூர்து சாமி அவர்கள் செலக்ட் புக் ஸ்டால் என்கின்ற அந்த புத்தக நிறுவனத்தை நடத்தி வந்தார்கள் . அவர் மகாநாடுகள் தோறும் அன்றைய ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களுடைய படங்களையும் , திராவிடக் கழகம் தன்னுடைய படங்களையும் நூற்றுக்கணக்கில் எடுத்து வந்து , இந்த மகாநாடுகள் தோறும் விற்பனை செய்து திராவிட இயக்கத்தைப் பரப்பினார்கள் . அதுபோலவே , நான் சாதாரண கருணாநிதியாக இருந்த பொழுது குடியரசு பதிப்பகத்தில் வேலை செய்த சமயம் , இரண்டு இரண்டு வரிகளாக கவிதைகள் எழுதி அந்த கவிதைகளை எல்லாம் போஸ்ட் கார்டில் , ( அன்றைக்கு மூன்று பைசாவிற்கு விற்றது போஸ்ட் கார்டு .) அச்சடித்து பல்லாயிரக்கணக்கில் மகாநாடுகள் தோறும் எனது கவிதையைப் பரப்பி என்னை அறிமுகப் படுத்தியவர் நண்பர் ஆர் . லூர்து சாமி தான்’ என்றெல்லாம் அவரைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள் . ஆகவே அவரோடும் எங்களுடைய குடும்பத்திற்கு நெருங்கிய உறவு இருந்தது ..
ஒருமுறை சம்பத்திற்கும் , என்னுடைய துணைவியாருக்கும் ஒரு பேச்சுப் போட்டி நடந்தது . இரண்டாவது மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது பிரிட்டிஷ்காரன் இங்கே கலெக்டராக இருந்தவர் பள்ளிக்கூடந்தோறும் மாணவர்களுடைய மனநிலை எப்படி இருந்தது என்றும் யுத்தத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக வேண்டியும் மாணவர்களிடையே இந்தப் பேச்சு போட்டியை வைத்திருந்தார்கள் . அதில் ‘இரண்டாவது மகாயுத்தத்திற்குக் காரணம் வியட்நாமா அல்லது ஜெர்மனியா’ என்பது தான் தலைப்பாக இருந்தது .
அப்பொழுது சம்பத் அவர்கள் குடியரசு பதிப்பகத்தில் வேலை செய்து கொண்டிருந்த அண்ணாதுரை அவர்களிடம் சென்று இந்த இரண்டாவது மகா யுத்தத்திற்குக் காரணம் பிரிட்டன்தான் என்ற செய்திகளையெல்லாம் தொகுத்துக் கொண்டு , பேசுவதற்காக தயாராக வந்துவிட்டார் . அப்பொழுது மாணவியாக இருந்த என்னுடைய மனைவி பெரியாரிடம் சென்று இந்த இரண்டாவது மகாயுத்தத்திற்குக் காரணம் ஜெர்மனிதான் என்கின்ற குறிப்புகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து அவர்கள் அங்கே பேசினார்கள் . அப்பொழுது அந்த வாதத்திற்கு தலைவராக இருந்த தலைமையாசிரியர் அவர்கள் இந்த இரண்டாவது மகாயுத்தத்திற்குக் காரணம் ஜெர்மனி தான் என்று தீர்ப்பு வழங்கினார்கள் .
எங்களுக்கு தொடர்பு ஏற்பட்ட காரணங்களிலே இதுவும் ஒன்றாகவும் இருந்தது . நாடு சுதந்திரம் பெற்ற நேரத்தில் பெரியாருக்கும் அண்ணாதுரைக்கும் கருத்து மாறுபாடு இருந்தது . பெரியார் அவர்கள் இது துக்க நாள் . ஆகவே ஆகஸ்ட் 15 ம் நாள் சுதந்திர தினத்தன்று , திராவிட கழகத்தினர் தங்கள் வீடுகள் தோறும் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்று அறிக்கை விட்டார் . அப்பொழுது அண்ணாதுரை அவர்கள் , ’ வெள்ளைகாரன் வெளியேறி விட்டது உண்மை . நாடு விடுதலை பெற்றுவிட்டது உண்மை . அது யார் கையிலே கிடைக்கிறது , அது எப்படி கிடைக்கிறது என்பது அல்ல பிரச்சனை . ஆகவே , இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும்’ என்று அன்றைய திராவிடநாடு பத்திரிகையிலே அண்ணாதுரை அவர்கள் எழுதினார்கள் . இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அன்று முதல் ஆகஸ்டு 15 ம் தேதி சுதந்திர தினத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு அறிக்கை விட்டது . கம்யூனிஸ்ட்கள் தேசியக் கொடியையும் , கம்யூனிஸ்ட் கட்சிக் கொடி என இரண்டையும் தங்கள் வீடுகளில் ஏற்ற வேண்டும் என்று பெரியார் அவர்கள் அறிக்கை விட்டார் . ஆகவே எங்கள் வீட்டிலே கருப்புக் கொடியும் ஏற்றப்பட்டது . தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது . கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியும் ஏற்றப்பட்டது . பெரியார் அவர்கள் என்னுடைய திருமணத்திற்கு வந்திருந்து , சாட்சிக் கையெழுத்திட்டுச் சென்ற பொழுது ஏற்பட்ட நெருக்கம் பின்பு பைய பைய வளர்ந்து கொண்டே வந்தது . பெரியார் அவர்கள் பண விஷயத்தில் மிகக் கறாராகவும் , கண்டிப்பாகவும் ஒழுக்க நிலையை கடைபிடிக்க வேண்டும் என்பதிலும் அசைக்க முடியாத உறுதி கொண்டிருந்தார் .
பொதுப் பணத்தை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் . தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதில் பெரியாருக்கு இருந்த அக்கறையில் அவருக்கு நிகராக வேறு யாரையும் சொல்ல முடியாது . அப்படிச் சொன்ன பொழுது , ‘ ஜீவானந்தம் அவர்கள் இறந்து அவருடைய நினைவு மலர் வந்த பொழுது பெரியார் கட்டுரையில் ஒன்றை எழுதினார்கள் . பலர் திராவிடக் கழகத்திலிருந்து தொண்டாற்றி விட்டு என்னோடு கருத்து மாறுபாடு கொண்டு வெளியேறினார்கள் . அதுபோலவே ஜீவானந்தம் அவர்களும் சுயமரியாதை இயக்கத்திலிருந்து வெளியேறினார்கள் . ஆனால் பணத்தைக் கையாளும் ஒழுக்கத்தில் என்னிடம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டு போனவர்கள் ஒருவரும் இல்லை - ஜீவானந்தத்தைத் தவிர என்று அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார் . அவரை பலமுறை நான் சந்தித்துப் பேசியிருக்கிறேன் . ஒரு முறை சந்தித்து பேசுகின்ற பொழுது , ’ இன்றைக்கு ஈரோட்டில் எல்லாம் என்ன வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்கள் ? என்று கேட்டார் . ’ ஐயா ஒன்னரை ரூபா , இரண்டு ரூபா வரைக்கும் இருக்குது ஐயா’ என்று சொன்ன பொழுது அவர் , ‘ மணி இங்க ஓடியா , மணி , மணி ஓடியா’ என்று மணியம்மையைக் கூப்பிட்டார் . மணியம்மா வந்தார்கள் . ‘ கேளு என்ன சொல்றாருன்னு . ஒன்னரை ரூபா , இரண்டு ரூபாவாம்ல வட்டி’ அப்படியின்னாரு .
’ஏங்கய்யா அப்படி கேட்கறீங்கன்னு’ கேட்டேன். அப்போது அவர், ‘ நான் கட்சிப் பணத்தை எட்டணா வட்டிக்குத் தான் கொடுத்திருக்கிறேன். அப்ப கட்சிப் பணத்தைப் பெருக்குவதில், சேர்ப்பதில் எவ்வளவு கருத்துக் கொண்டிருக்கிறார் என்று பாருங்கள். இன்னொரு முறை இராமசாமி எப்படி இருக்கிறார் என்று கேட்டேன். .
’ஐயா எந்த இராமசாமி கேட்கிறீங்கன்னு கேட்டாரு. புதுக்கோட்டையிலே கடை வச்சிருக்காரே அவரைப் பற்றித்தான் கேட்கிறேன்னாரு. அவரு நல்லா தாட்டியா இருக்கிறாரு’. அப்படின்னு சொன்னேன். இல்லே அவர் நடுவுல ஏதோ ஒரு மஞ்ச மண்டிக்காரரோடு சேர்ந்து வியாபாரம் பண்ணி நட்டப்பட்டதை எல்லாம் கேள்வி பட்டேன்’னாரு. ‘ஐயா எல்லாம் வாஸ்தவம்தான். நட்டம் எல்லாம் அவருக்குச் சேர்ந்தது. ஐயாசாமியுடன் சேர்ந்தது. இவரு தப்பிச்சிட்டாருன்னு சொன்னேன். அப்படியா சமாச்சாரம். அப்படின்னாரு. அப்பவும் நான் கேட்டேன் ஏங்கய்யா அப்படி கேட்கிறீங்கன்னு கேட்டேன். இல்ல நான் கொஞ்சம் பணத்தை அவருகிட்ட வட்டிக்குக் கொடுத்திருக்கேன். ஆகையால்தான் கேட்டேன்னாரு. கட்சிப் பணத்தை பாதுகாப்பதிலே இவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார் என்று பாருங்கள். நான் நெசவு தொழிற்சாலை ஒன்றை பெருந்துறையிலே வைத்திருந்தேன். அதிலே நாற்பது தறிப்போட்டு பெட்ஷிட்டுகள் தயாரித்துக் கொண்டிருந்தேன். அதில் துக்கடா விழும். அரை மீட்டரு, கால் மீட்டரு, ஒரு மீட்டரு வரைக்கும் துண்டு விழும். அதை நெய்து எடுத்துக் கொண்டு ஒரு நாள் ஒரு நூற்றைம்பது பைகள் பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் தோளில் மாட்டிட்டு போற மாதிரி. பை அப்ப நூற்றைம்பது பை பள்ளிக்கூடத்து பசங்க தயாரித்துக் கொண்டு போய் ஈரோடு பெரியார் மன்றத்தில் அவரைச் சந்தித்துக் கொடுத்தேன். ஏனென்றால், அவர் ஏழை பிள்ளைகளுக்காக திருச்சியில் ஒரு பள்ளிக்கூடம் , ஹாஸ்டல் ஒன்றும் நடத்திக்கொண்டு இருந்தார்.
இதைக் கொடுத்தவுடனே ரொம்ப சந்தோஷம் , மகிழ்ச்சி அப்படின்னு சொல்லிட்டு எண்ண ஆரம்பிச்சிட்டாரு . எண்ணினாரு , எண்ணி முடிச்ச உடனே மணி இங்கே வா , மணி இங்கே வான்னு மணியம்மையைக் கூட்பிட்டாரு . நம்ம கிட்ட எத்தன பையங்க தங்கி படிக்கிறாங்கன்னு ஒரு கேள்வியைக் கேட்டாரு . உடனே மணியம்மை சொன்னாங்க . நூற்றி எண்பதோ என்னமோ ஒரு நம்பரைச் சொன்னாங்க .
நூற்றி எண்பது பேர் இருக்காங்களா அப்படின்னு கேட்டாரு . அப்ப என்ன அர்த்தம் . சொல்லாம சொல்கிறார் என்னிடத்தில் . நூற்றி எண்பது பேர் இருக்காங்க நீங்க நூற்றைம்பது தான் கொடுத்திருக்கிங்க . இன்னும் முப்பது பத்தலையேங்கறதை நினைவூட்டலோடு சொன்னார் . உடனே நான் புரிஞ்சுக்கிட்டேன் . ’ ஐயா இன்னும் இரண்டு நாளிலே நான் அந்த முப்பதையும் கொண்டாந்து கொடுக்கிறேன்’ என்றேன் . அப்படி ஒவ்வொரு விஷயத்திலேயும் , நேர்மையாகவும் , கறார் கண்டிஷனாகவும் இருந்திருக்கிறார்கள் பெரியார் அவர்கள் .
7
எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 7
ஒரு முறை பெரியார் அவர்களை பெரியார் மனறத்தில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது , உங்களுக்கு இந்த பெரியார் மன்றம் எப்படி உருவானது என்று சொல்கிறேன் என்று சொல்லி ஒரு சம்பவத்தைச் சொன்னார்கள் . “ நான் சில நாள் ஓய்வெடுக்கலாம் என்று ஈரோடு வந்திருந்தேன் . சும்மா எப்படி உட்கார்ந்திருப்பது . பொழுது போகவேண்டுமே என்று யோசனை செய்தபோது புத்தர் மகாநாடு நடத்தலாம் என்று தோன்றியது . புத்தர் மகாநாடு நடக்கப் போவதை புத்தகம் அடித்து அங்கங்கு விளம்பரம் செய்து , பணம் வசூல் செய்யும்படி சொன்னேன் . விடுதலை பத்திரிகையில் , ஈரோட்டிலே புத்தர் மகாநாடு நடக்கப்போகிறது , அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுதல் விட்டேன் . அதன் படி பணம் வசூலிக்கப்பட்டு மகாநாடு சிறப்பாக நடைபெற்றது .. ஆனால் அதன் பிறகு சிலரிடமிருந்து ரசீது புத்தகம் வரவில்லை . … ஆகவே நான் பத்திரிகையில் மறுபடி ஒரு அறிக்கை விட்டேன் . கணக்கு முடிக்க வேண்டியிருக்கிறது . மகாநாட்டு கணக்கெல்லாம் பார்த்தாகிவிட்டது . நட்டத்தில்தான் இருக்கிறது . ஆகவே உடனே வசூல் செய்த பணத்தை அனுப்பினால் கணக்கை நேர் செய்துவிடலாம் என்று சொன்னேன் . உண்மையிலேயே மகாநாட்டு பணம் மீதமிருந்தாலும் இல்லை என்று சொன்னதற்கு காரணம் அதை வெளியிட்டால் பலர் கணக்கும் தரமாட்டார்கள் பணமும் வராது என்று நினைத்து இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டேன் . அதற்குப் பிறகு எல்லோரிடமிருந்தும் புத்தகமும் வந்தது பணமும் வந்தது . அப்படி மிச்சமான பணத்திலே கட்டப்பட்டதுதான் பெரியார் மன்றம்” என்று சொன்னார்கள் . ஓய்வுக்கு வந்த நேரத்திலே கூட சும்மா இருக்க முடியாமல் இயக்கத்திற்கு ஏதாவது செய்து நிதி சேர்க்க வேண்டும் என்று பைசா , பைசாவாக சேர்த்து , இன்றைக்கு பல கோடி ரூபாய் சொத்துகளாக மாற்றி அதை இன்று திராவிட கழகத்தினுடைய சுய மரியாதை இயக்கத்திற்கு சேர்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள் ..
ஒருமுறை பெரியார் மன்றத்திலே பேரிச்சம் பழத்திற்கு பழைய சாமான்கள் வாங்கும் வியாபாரிகள் சங்கம் , ( தலைச்சுமை பாத்திர வியாபாரிகள் சங்கம் என்று பெயர் அதற்கு .) 25 ம் ஆண்டு விழா நடத்தினார்கள் . அதற்கு ஐயா அவர்களை தலைமை தாங்க அழைத்திருந்தார்கள் . அனைத்து கட்சியினரையும் கூப்பிட்டிருந்தார் . வழக்கம்போல ஐயா கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் மனதில் பட்டதை விளக்கமாக தைரியமாகப் பேசிவிட்டார் . பாரதியார் பார்ப்பான் . பாப்பான் பாடிய பாட்டுல என்ன இருக்கு என்ற ஒன்றை கிளப்பினார் . அடுத்தது இந்தியாவிலேயே பகுத்தறிவிற்கான சர்க்கார் தமிழகத்திலே நடக்கின்ற கருணாநிதியின் சர்க்கார்தான் என்று சொன்னார் . மூன்றாவதாக திருக்குறள் 2000 வருசத்திற்கு முந்தி பாடினது அதில என்ன இருக்கிறது வெங்காயம் என்று சொல்லிவிட்டார்கள் . அடுத்து நான் பேச வேண்டியது . நான் இந்த மூன்றிற்கும் மறுப்பு சொல்ல வேண்டியது என்று முடிவு எடுத்தேன் . ஐயா அவர்கள் பேசியதில் பல்வேறு கருத்தில் எனக்கு உடன்பாடு . நாத்திகம் , சாதி ஒழிப்பு , கலப்புத் திருமணம் போன்றவைகளிலெல்லாம் எனக்கு 100 க்கு 100 சதவிகிதம் உடன்பாடு ஆனால் பாரதி பற்றியும் , திருக்குறள் பற்றியும் கருணாநிதி அரசியல் பற்றியும் சொன்னதில் எனக்கு உடன்பாடு கிடையாது . அது ஐயாவுடைய கட்சிக் கூட்டமாக இருந்தால் நான் பதில் சொல்லாமலே இருந்துவிடுவேன் , ஏனென்றால் நமக்கு அங்கு சந்தர்ப்பம் கிடையாது . தவிரவும் நான் நான் ஒன்றும் சொல்லவில்லை என்றால் அவர் பேசியதை நான் ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும் . பாரதியின் பாடல் பிராமணன் பாடியிருக்கிறார் என்பதைத் தவிர ஐயா சொன்ன வேறு எந்த கருத்தும் எனக்கு உடன்பாடு இல்லை .
ராஜாஜி என்கிற பார்ப்பனர் பின்னால் கதர் மூட்டையை தூக்கிக்கொண்டு விற்பனை செய்த காலத்திலேயே , பார்ப்பான் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான் என்று பார்ப்பனன் பூணூல் போடுவதற்கு கல்யாணத்திற்கு , இறப்பிற்கு என எல்லாவற்றிற்கும் காசு வசூல் செய்கிறான் என்பதை அப்படிச் சொன்னார்கள் . பாரதியார் இன்னொன்றையும் சொன்னார்கள் . நந்தனைப்போல ஒரு பார்ப்பான் இந்த மாநிலத்தில் இல்லை என்று சொல்கிறார் . நந்தன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த பறையன் என்ற இனத்தவன் . அப்படிப்பட்ட கீழ்சாதிக்காரனை நந்தனைப்போல ஒரு பார்ப்பான் இந்த நானிலத்தில் கண்டதில்லை என்று சொன்னால் , அது பாரதியைத் தவிர வேறு யாருக்கும் இந்த துணிச்சல் வராது , தாழ்த்தப்பட்ட சாதிக்கரனை பார்ப்பான் என்று சொல்லக்கூடிய ஒரு கவிதை பாடுகிற பாடகன் இதுவரை பிறந்தது கிடையாது . இனியும் பிறப்பானா என்பதும் சந்தேகத்துக்குரியதுதான் .
பூவில் உதிர்வதும் உண்டு பிஞ்சைப் பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு
நாவிற் கினியதைத் தின்பார் அதில் நாற்பதி னாயிரம் சாதிகள் சொல்லார் .
ஒன்றுண்டு மானிட சாதி பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார் ;
இன்று படுத்தது நாளை உயிர்த் தேற்றம் அடையும் உயர்ந்த திழியும் .
நந்தனைப்போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை ; குணம் நல்லதாயின் ,
எந்தக் குலத்தின ரேனும் உணர் வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம் .
அது போலவே செருப்பு தைக்கின்ற கீழ்சாதிக்காரனுக்கு தன்னுடைய பூணூலைப் போட்டு இன்று முதல் நீ பிராமணன் என்று சொல் ஏனென்றால் நீ உன் கடமையை தொழிலை ஒழுங்காகச் செய்கிறாய் , செய்யும் தொழிலே தெய்வம் . நீ தருமத்தை உணர்ந்தவன் . ஆதலால் நீ இன்று முதல் பார்ப்பனன் உன்னை யாராவது பூணூல் பற்றி கேட்டால் பாரதி போட்டது என்று தைரியமாகச் சொல் என்று சொல்லியவன் பாரதி . இப்படி பாரதியுடைய பாடல்களிலெல்லாம் , பிராமன எதிர்ப்பும் ,, சாதிய ஒழிப்பும் வந்துகொண்டிருக்கிறது . இப்படிப்பட்டவரை ஐயா சொல்லியது தவறு என்று சொன்னேன் .
திருக்குறள் பற்றி சொன்னபோது , 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் எப்படியிருந்தார்கள் , என்ன தொழில் செய்தார்கள் அவர்களுடைய அறிவுத்திறமை எப்படியிருந்தது என்பதெல்லாம் ஆராய்ந்துப் பார்த்தால் , வள்ளுவன் சொல்வதில் மக்ததான புரட்சியும் இருக்கிறது . பிற்போக்குத்தன்மையும் இருக்கிறது என்பது விளங்கும் . வள்ளுவரின் சில கருத்துகள் எனக்கு உடன்பாடு கிடையாது . பல கருத்துகள் ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருக்கிறது . கட்டிய மனைவி காலையில் எழுந்தவுடன் கணவனின் காலைத் தொட்டுக் கும்பிட்டு , மழை பெய்யென சொன்னால் மழை பெய்யும் என்ற மூட நம்பிக்கையில் என ஒப்புதல் கிடையாது .
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை .
விஞ்ஞானப்படி ஆறு , குளம் குட்டை போன்ற இடங்களில் தேங்கி இருக்கும் தண்ணீர் சூரிய உஷ்ணத்தினால் ஆவியாகி மேலே போய் குளிர் காற்று பட்டவுடன் மழையாகிறது அதிலே எனக்கு உடன்பாடு . ஆனால் திருக்குறளிலே இருக்கிற கருத்து எனக்கு உடன்பாடு இல்லை என்று சொன்னேன் .
அது போலவே ,
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும் .
நிலத்திற்குடையவன் தினமும் போய் நிலத்தை கவனித்துக் கொள்ளவில்லையென்றால்
கட்டிய மனைவி போல் நிலமகள் கோபித்துக்கொண்டு போய்விடுவாளாம் . அதுபோல் 2000 வேலி நிலத்தை வச்சுக்கிட்டு வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் மெட்ராஸ்ல உட்கார்ந்திருந்தால் வெள்ளாமை எப்படி வரும் . உச்ச வரம்பு சட்டம் வேண்டும் , ஒருவன் 1000, ஏக்கர் 2000 ஏக்கர் நிலம் வைத்திருக்கக்கூடாது என்று வள்ளுவன் சொன்னதில் எனக்குஉடன்பாடு .
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும் .
அதாவது , நாள்தோறும் ஆராய்ந்து செயலாற்றாத ஆட்சியாளர்களின் நாடு நாள்தோறும் கெடும் , என்பார் வள்ளுவர் .
காங்கிரசு தோற்று இன்று திமுக ஆட்சியில் இருக்கிறதென்றால் அது தொழிலாளர்களை கவனிக்காத அரசினால்தான் . இன்றைக்கும் அதே நிலைதான் இருக்கிறது எதோ சிலபல காரியங்கள் செய்துகொண்டிருக்கிறார்களே தவிர இன்றைக்கும் முதலாளித்துவ அரசாங்கமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல . கருணாநிதி தன் அரசு பற்றியும் சொல்லும்போது , “ இந்தியாவிலேயே இதுதான் முற்போக்கு அரசு” என்றார் .. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கருணாநிதியும் , நெடுஞ்செழியனும் கூட்டங்களிலே பேசிஸ்ரீரங்கநாதரையும் , தில்லை நடராஜரையும் வேல் வைத்து தகர்ப்பது எந்நாளோ என்றார்கள் .. ஏரோட்டம் இல்லை என்றால் தேரோட்டம் ஏதடா தியாகராஜா என்று தேர் பற்றிச் சொன்னார்கள் , ஏனென்றால் இந்தியாவிலேயே பெரிய தேர் திருவாரூரிலே இருக்கிற தியாகராஜப் பெருமாள் தேர்தான் . அதை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சேர்ந்துதான் இழுக்கணும் . முதலாளி வந்து இழுக்க மாட்டான் . அதனால் அந்த விவசாயியின் வாழ்வு சந்தோசமாக இருந்தால்தான் திருவாரூர் தேர் ஓடும் என்கின்ற கருத்தை கருணாநிதி அவர்கள் சொன்னார்கள் . ஊர்கள் தோரும் இப்படி சுய மரியாதை இயக்கத்தைத்தான் அன்று மேடையில் பேசினார்கள் . தியாகராஜப் பெருமாளுக்கு 2000 வேலி இருக்கிறது . அதே மாதிரி வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியாரும் 2000 வேலி வைத்திருக்கக்கூடாது என்றார்கள் . அதன்பின் அவர் 1000 வேலியை தியாகராஜப் பெருமாளுக்கு எழுதி வைத்துவிட்டார் .
அன்று தேர் சரியாக ஓடாமல் நின்றுவிட்டது . ஏனென்றால் அன்று விவசாயம் சரியாக இல்லை . உடனே கருணாநிதி ஆட்சிக்கு வந்த உடனே ஹைடிராலிக் பிரேக் போட்டு அந்த தேரை ஓட வைத்தார் . விவசாயிகள் வாழ்க்கை சரியில்லாததால் ஓடாத தேரை ஹைடிராலிக் பிரேக் போட்டு ஓடவச்சார் . அப்பறம் இன்னொன்றும் கேட்டார்கள் . 2000 வேலி நிலத்தை வச்சுக்கிட்டு அதில் வருகிற நெல்லையெல்லாம் தின்னுட்டு தியாகராஜப் பெருமாள் எங்கே வெளிக்குப் போகிறார் என்று கேட்டார்கள் . இன்றைக்கு தியாகராஜப் பெருமாளின் வருமானக் கணக்கு பார்க்கிறது எல்லாம் அரசாங்கத்தின் கையில் உள்ளது . இன்றைக்கும் மடத்திற்கு எதுக்காக இவ்வளவு நிலம் .. இன்றைக்கும் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியாருக்கும் , கருப்பையா மூப்பனார் குடும்பம் , சாமியப்ப முதலியார் குடும்பத்துக்கும் நிலம் அப்படியே இருக்கிறது . எவ்வளவு சட்டம் வந்தாலும் எப்படியோ ஏமாற்றி நிலத்தை வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் . ஆனால் இந்தியாவின் கீழ் கோடியில் இருக்கின்ற ஒரு கூட்டு அரசாங்கம் , தமிழகத்தில் இருப்பது போல் ஒரு கட்சி ஆட்சி அல்ல , பல்வேறு கட்சிகள் கூட்டாக சேர்ந்து ஆளும் அரசு கேரளத்திலே நடக்கிறது . நம்பூதிரிபாட்டினுடைய ஆட்சி . ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சியையும் கூப்பிட்டார் . இந்து மதத்திலே ஒரு பழமொழி இருக்கு .. உலகளந்த பெருமாள் , உலகத்தவர் அனைவருக்கும் உலகை அளந்து கொடுக்கிறார் . அவருக்கு எதுக்கு நாம் நிலத்தைக் கொடுக்க வேண்டும் ? சுவாமி கோயில்கள் , சர்ச்சுகள் , மசூதிகள் ஆகியவற்றின் நிலங்களை எடுத்து ஏழை விவசாயிகளுக்கு கொடுத்துவிடுவோம் . கோயில் விழாக்கள் விசேசங்கள் நடத்துவதற்கு அறங்காவல் துறை என்றிருக்கிறது அதுபோலவே கிறித்துவர்களுக்கு ஒரு சர்ச் கமிட்டி , முஸ்லிம்களுக்கு வக் போர்ட் இருக்கிறது . அவர்களெல்லாம் இந்தக் கணக்கை எடுத்துக் கொண்டு , உதாரணமாக திருவிதாங்கூரிலே இருக்கிற பத்மநாப சாமிக்குத் தேவையான , அரிசி , வெல்லம் , முந்திரி பருப்பு , திராட்சை போன்றவைகள் எத்தனை மூட்டை வேண்டும் , வெள்ளையடிப்பதற்கு , அர்ச்சகருக்கு சம்பளம் போன்ற அனைத்தையும் கணக்கு போட்டு வருசம் ஒன்றிற்கு 20 லட்சம் வேண்டும் என்று சொன்னார்கள் . அதுபோல முஸ்லிம் மசூதிகளுக்கும் , கிறித்துவ சர்ச்சுகளுக்கும் கணக்கு போட்டு பணத்தை கொடுத்துவிடுவோம் . அவர்களுக்கு நிலம் எதற்கு . நிலம் உழுபவன் கையில் இருக்கட்டும் என்று கேரளத்திலே ரொக்கமாகத்தான் கொடுக்கிறார்கள் . இப்படிப்பட்ட ஆட்சியும் இருக்கும்போது , இன்று கருணாநிதி அரசுதான் முற்போக்கு அரசு என்று சொல்லுகிறார்கள் . அவர் கருத்து அதுதான் என்றால் எனக்கு ஆட்சேபனை இல்லை . ஆனால் என்னுடைய கருத்து இதுதான் என்று சொல்லி முடித்தேன் . அடுத்து பெரியார் அவர்கள் பேசினார்கள் . யார் எவ்வளவு வயதினராக இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் பெரியாருக்கு நிகர் பெரியார்தான் . யாராவது அவர் வீட்டிற்குச் சென்றால் வாசல்வரை வந்து வழியனுப்புவது வரை கூடவே வருவார் . அப்படிபட்ட பெரியார் அவர்கள் அந்தக் கூட்டத்திலே தம்பி சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது . எல்லோரும் பகுத்தறிந்து பார்த்து எது சரியோ அதைச் செய்யுங்கள் என்று கூறி கூட்டத்தை முடித்தார்கள் .
பெரியார் அவர்கள் இறந்தபோது நான் என் மனைவியுடன் அங்கு சென்றிருந்தேன் . அப்போது என் மனைவியைப் பார்த்துவிட்டு மணியம்மையார் எங்களை ராஜாஜி ஹாலில் பெரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த அறையில் அவர் உடலுக்கு அருகில் கூட்டிச் சென்று அஞ்சலி செலுத்த உதவினார்கள் . இறுதிவரை இருந்துவிட்டு வந்தோம் . அதுபோல் பெரியார் இருந்தவரை இறுதிவரை அவருடனேயே இருந்தோம் .
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் நெருங்கிப் பழகியதையும் உறவு கொண்டிருந்ததையும் , அவர்கள் வாயிலாக கேட்டதையும் , நேரடியாகப் பார்த்ததையும் , சிலவற்றை செய்தியாக அறிந்ததையும் , இப்பொழுது பதிவு செய்ய வேண்டும் என்கிற ஆவலோடு வருகிற பகுதிகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் . பெரியாரைப்பற்றி சொன்னேன் . அடுத்ததாக ஜீவானந்தம் அவர்களுடன் கொண்ட உறவு பற்றி சொல்கிறேன் .
ஜீவானந்தம் அவர்கள் வெள்ளைக்காரர்கள் காலத்தில் அனுபவித்த சிறைக் கொடுமைகள் தலைமறைவு வாழ்க்கை ஆகிய இனனல்களுக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது முதன் முதலில் ஈரோடு வந்திருந்த சமயம் நடைபெற்ற சம்பவத்தைக் குறிப்பிட்டேன் . அதன் பிறகு அன்று எங்கள் வீட்டிலே வந்து விருந்துண்டு , எங்களோடு ஏற்பட்ட நட்பு தோழமையோடு மட்டுமல்லாமல் , ஒரு குடும்ப உறவாக , கடைசியில் அவர் மயானம் செல்லும்வரை தொடர்ந்திருந்தது , எங்களுக்கு ஒரு பெருமை கொள்கிற விசயமாகும் . அவர்கள் ஈரோடு வரும்போதெல்லாம் , எங்கல் வீட்டிலேயேதான் தங்கி சாபிடுவார் . மற்றவரைப்போல் ஓட்டலில் தங்கும் வழக்கமெல்லாம் இல்லாமல் இருந்தது . எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பழகி வந்தார் . அவர் ஒரு முறை , என்னுடைய துணைவியார் பெருந்துறை சானிடோரியத்தில் நர்சாக பணிபுரிந்துகொண்டிருந்தபோது , அங்கு 2 நாள்கள் தங்கினார் . அப்போது பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டார்கள் . காலையில் எழுந்தவுடன் வாக்கிங் போவார் . துடுப்பதி ரோடில் ஒரு மூன்று நான்கு கிலோமீட்டர் அளவிற்கு நடந்துவிட்டு வருவார் . இல்லாவிட்டால் சேனிடோரியம் வளாகத்தில் காச நோயாளிகள் நடப்பதற்காக , ஒரு பர்லாங் , இரண்டு பர்லாங் என்று கனக்கிட்டு 8 பர்லாங் வரை குறித்து கல்லை நட்டு வைத்திருப்பார்கள் . அதில் இரண்டு ரவுண்டு , மூன்று ரவுண்டு என்று சுற்றி வருவார்கள் . வந்து குளித்துவிட்டு சாப்பிடுவார்கள் . பின் பத்திரிகை பார்த்துவிட்டு பெருந்துறை சேனிடோரியத்தில் நூலகம் இருந்தது . அங்கு போய் புத்தகம் எடுத்து வருவார் . அப்போது நான் அந்த சானிடோரியத்தின் கமிட்டியின் நிர்வாகக் குழுவில் இருந்ததால் அவர் புத்தகத்தை வீட்டிற்கே எடுத்து வந்து படிப்பார் ,. அவர் என்னிடம் கல்பனா என்ற பெயர் போட்டு நிறைய புத்தகம் இருக்கே , என்னது இது என்று கேட்டார் . அப்போது நான் , “ என் தம்பி எஸ் . பி . சுப்ரமணியம் புத்தகப் பிரியன் . நிறைய புத்தகங்கள் வாங்கிச் சேர்த்து வைப்பான் . என் மகள் கல்பனா இறந்தபின் அப்புத்தகங்களை அவன் பெயரில் கல்பனா நூலகம் என்று அமைத்து வைத்திருந்தான் . 700, 800 புத்தகங்களுக்கு மேல் இருந்தது . அது வீட்டில் இருப்பதைவிட மாதக்கணக்கில் , வருடக் கணக்கில் தங்கி வைத்தியம் பார்க்கும் நோயாளிகள் பொழுதுபோகப் படிக்கக் கொடுத்தால் உதவியாக இருக்குமென்று அப்புத்தகங்களை மருத்துவமனை நூலகத்திற்குக் கொடுத்தோம்” என்றேன் .
”உருப்படியான காரியம்” என்று சொல்லி அந்த நூல்களை எடுத்துவந்து படிப்பார். அவர் எப்போது வெளியூர் பயணம் சென்றாலும், இரண்டு கூடை இருக்கும். ஒன்றில் துணிமணியும், ஒன்றில் 5, 6 புத்தகங்களும் இருக்கும். டிரங்குப் பெட்டியில் ஒரு அடுக்கில் புத்தகங்களும், மற்றொரு அடுக்கில் மருந்துகளும் இருக்கும். நாங்களெல்லாம் நடமாடும் நூலகம், நடமாடும் மருந்துகடை என்று கிண்டல் செய்வோம். அவருக்கு சக்கரை நோய் உண்டு ஆனால் இனிப்பு பிரியர். எப்படியாவது இனிப்பை சாப்பிட்டுவிடுவார். அப்போது இன்சுலின் கிடைக்காத காலம். அவர் என் மனைவியிடம் இன்சுலின் கிடைக்குமா என்று கேட்டார்கள். என் மனைவியும் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் நான் வாங்கித் தருகிறேன் என்றார். எப்படி கொடுப்பீர்கள் என்றார். மெடிகல் ரெப்ரசண்டேடிவ் வருவார்கள் அவர்களிடம் தேவையை சொல்லும் பொறுப்பு என்னிடம் இருக்கிறது. மாதிரி மருந்துகளை இலவசமாக டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் தருவார்கள். அதையும், மற்றும் வேறு பல இடங்களிலும் எப்படியும் தேடி வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். மாஸ்கோ செல்லும் போது தனக்கு இன்சுலின் தேவை என்று கடிதம் எழுதியிருந்தார். நானும் ஒரு நூறு நூற்றைம்பது இன்சுலின் ஊசிகளை வாங்கிக்கொண்டு, எடுத்துக்கொண்டுபோய், அதையும் பணம் ரூ 250ம் கொடுத்தேன். பணம் எதற்கு என்று கேட்டார். நீங்கள் தில்லி செல்லும்வரைதான் கட்சி பணம் இருக்கும், வழி செலவிற்கு தேவைப்படும் என்று சொல்லி கொடுத்தேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்கள். அவர் மாஸ்கோவிலிருந்து திரும்பி வந்தபோது கட்சி இரண்டாக உடைகின்ற நேரம் சீனாக்காரன் படையெடுத்துவந்த நேரம். பாலதண்டாயுதம் நீண்ட நெடும் சிறைவாசத்திலிருந்து மீண்டு வந்திருந்த நேரம். அப்போது அவர் ஒரு கோஷத்தை வைத்தார். பேசாதே பேசாதே பிரிவினை வாதத்தைப் பேசாதே. கிடைக்காது கிடைக்காது திராவிட நாடு கிடைக்காது. ஒரு பெரிய மகாநாடு புரசைவாக்கத்தில் மீனாட்சி கல்யாண மண்டபத்தில் நடந்தது. அந்த மகாநாட்டில் சம்பத் அவர்களும் கலந்துகொண்டார்கள். பேசாதே, பேசாதே பிரிவினைப் பேச்சைப் பேசாதே, கிடைக்காது, கிடைக்காது திராவிட நாடு கிடைக்காது என்ற கோஷத்தை வைத்த மகாநாட்டிற்கு சம்பத் வந்திருந்தார் என்று சொன்னால், அவர் சோவியத் ரஷ்யாவிற்கு பிரதிநிதியாக சென்று வந்திருந்த நேரம் அது. அங்கேயிருந்த மொழிப்பிரச்சனையை தீர்த்த விதம் அங்கு மொழிவழி மாநிலங்கள் அமைந்திருந்த விதம் இவையெல்லாம் பார்த்து வந்தபிறகு, பிரிவினை என்பது சரியான வழியல்ல என்று முடிவெடுத்து, திராவிட கட்சியைவிட்டு வெளியேறி, தமிழ் தேசிய கட்சியை காங்கிரசு ஆரம்பித்த நேரம். மிகப்பிரம்மாண்ட மகாநாடு. மிகப்பெரிய கூட்டம். அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பி வந்துகொண்டு இருந்தேன். அங்கு ஜீவானந்தம் என்னைப் பார்த்துவிட்டார். கடலையை சாப்பிட்டுக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். பின்னால் ஒரு தோழர் வீட்டில் பையெல்லாம் வைத்திருக்கிறேன். போய் எடுத்துக்கொண்டுதான் தாம்பரம் செல்ல வேண்டும் என்றார். அவர் எப்போது சந்தித்தாலும் முதலில் கேட்பது அம்மா எப்படி இருக்கிறார்கள், குழந்தைகள் எப்படியிருக்கிறார்கள் என்று கேட்டுவிட்டுதான் தோழர் எப்படியிருக்கிறார் என்று கேட்பார். உறவு முறையில் முதலில் விசாரித்துவிட்டுதான் பின்பு கட்சி முறையில் எதுவும் பேசுவார். அம்மாவும் வந்திருக்கிறார்கள் என்று சொன்னேன். ரொம்ப சந்தோசம், எங்கே இருக்காங்க என்று கேட்டார். ஐ. ஜி ஆபீஸ் காந்தி சிலைக்கு அருகில் பஸ் நிற்கிறது என்றேன். சரி வா பேசிக்கிட்டே போகலாம் என்று கூடவே நடந்து வந்தார்.
நான் எனது லட்சிய பூமியாகிய ரஷ்யாவைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன் . அங்கு நிகழ்ந்திருக்கிற மாற்றங்கள் ஆச்சரியங்கள் மனித முன்னேற்றம் இவைகளையெல்லாம் மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் . ஆகையினால் ஈரோடு வட்டாரத்திலே ஒரு வாரம் வீட்டில் இருந்து சோவியத் சொர்கத்தைப் பற்றி நான் பேசுகிறேன் என்று சொன்னார்கள் . அதுதான் கடைசியாக இருந்தது . மறுபடியும் ஈரோடு வராமலே மறைந்து விட்டார் . அவர் ஈரோடு வருகிறார் என்று சொன்னால் , கோபாலய்யர் என்று ஒரு சமையல்காரர் , ஈரோட்டில் இருக்கிற அனைத்து சமையல்காரர்களும் அவருடைய சிஷ்யர்கள்தான் . அவர் நெய்யிலேயே ஜிலேபியும் , லட்டும் போடுவார் . காரமும் போடுவார் . ஜீவா வரும்பொழுது மட்டும்தான் நெய்யில் ஜிலேபியும் , லட்டும் போடுவார்கள் . இலையில் ஒரு ஜிலேபி வைத்தவுடன் சாப்பிட்டுவிட்டு என்னம்மா நெய்யிலேயே பண்ணிட்டீங்களே என்பார் . ஆமாங்க தோழரே உங்களுக்குப் பிடிக்குமேன்னுதான் நெய்யிலேயே செய்தோம் என்பார் . மெதுவாக இன்னொன்று சாப்பிடவா என்று கேட்பார் . இனிப்பு சாப்பிடுவது என்றால் ரொம்ப பிரியம் . கோதுமை சாதம் , ராகி களி , கீரை இதெல்லாம் ரொம்பவே பிடிக்கும் . எண்ணெய் தேய்த்துக் குளித்தால் அசைவம் சாப்பிடுவது பிடிக்கும் . ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது என்னுடைய மகள் பாரதியிடத்திலே உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது . ஏன் என்று சொல் பார்க்கலாம் என்றார் . அவள் எனக்குத் தெரியலைங்களே என்றபோது , உன்னுடைய பெயரில் பாரதி இருக்கிறது . பாரதியை எனக்கு ரொம்பப் பிடிக்கும் , அதனால் உன்னையும் எனக்குப் பிடிக்கும் என்று சொன்னார் . அவர் முதுகில் ஒரு காயம் இருக்கும் . அவள் அதைப்பார்த்து , ‘ தாத்தா அது என்ன முதுகில் ஒரு காயம் இருக்கிறதே என்று கேட்டாள் . 1937 ல் பொப்ளி சமஸ்தானத்திலே தேர்தல் நடைபெற்றது . பொப்ளி சமஸ்தான மகாராஜா அதில் போட்டியிட்டார் . அங்கே தேர்தல் பிரச்சாரத்திற்கு போகிறதுக்கு எல்லோருக்கும் பயம் . அப்போது காங்கிரசு கமிட்டி ஒரு முடிவெடுத்து நானும் வட்டப்பாறை வெங்கட்ராமய்யர் இருவரும் பொப்ளி சமஸ்தானம் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அனுப்பினார்கள் . அங்கே போய் பேசுகின்றபோது , இங்கெல்லாம் , பல்லி , பாம்பு , தேள் எல்லாம் உடுவாங்க . அவரு ராஜாவாக இருப்பதால் கூட்டத்தைக் கலைப்பதற்கு யானையையே விட்டார் . குதிரைப்படையை விட்டும் தாக்கினார் . அப்படி அந்தக் கூட்டத்திலே தடியடி பட்டு அதனால் ஆன காயம்தான் இது என்பார் . தலையில் இருந்த இன்னொரு காயத்தைக் காட்டி அது எப்படி வந்தது என்று கேட்டால் , காந்தியடிகள் ஆரம்பித்த கள்ளுக்கடை மறியலில் போலீசார் அடித்த காயம் என்பார் . இன்னொரு காயத்தை ராஜாஜி அவர்களின் தட்சணப்பிரதேச எதிர்ப்புப் போராட்டத்தின் தடியடி என்பார் . இன்னொன்றைக் கேட்டால் அந்நிய துணிகளின் பகீஷ்காரம் செய்தபோது பட்ட தடியடி என்பார் . கடைசியாக , “ நீ சுதந்திரமாக இப்படிக் கேள்விகள் கேட்பதற்காகத் தாத்தா போராடியதற்கு வெள்ளைக்காரன் கொடுத்த பரிசு” என்று கூறி அவளுக்கு முத்தமிட்டார் . அந்தப் புரியாத வயதில் இவர் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளுடன் பழகும் வாய்ப்பு என் குழந்தைகளுக்குக் கிடைத்தது . அதுவே அவர்கள் தேசப்பற்று உள்ளவர்களாக வளர வழிகாட்டியது .
இப்படி அவர் உடலெல்லாம் விழுப்புண்களாக இருக்கும் . எல்லாம் தேசபக்தியின் பெயரால் நாட்டின் பெயரால் ஏற்பட்ட காயங்கள் . அவர் ஈரோடு வந்தால் எப்போதும் மருந்து சீட்டு கொடுப்பார் . அதில் நிறைய மருந்துகள் பெயர் இருக்கும் . அதைக்கொடுத்துவிட்டு , நண்பர்களுக்குத் தோழர்களுக்கு அன்பு ஆயிரம் , எதிரிகளுக்கு அம்பு ஆயிரம் எங்கே என்று கேட்பார் . அம்பாயிரம் அவர்களைத்தான் அப்படிச் சொல்லுவார் . இந்த சீட்டை அவர்கிட்ட கொடுத்துடுங்க என்பார் . அவர் மருந்தை வாங்கிக் கொடுத்துவிடுவார் . நான் 6 சட்டைக்கான துணி , துண்டு இவைகளை வாங்கிக் கொடுப்பேன் . எதற்காக இதெல்லாம் என்பார் . இதென்னங்க பெரிசா ஆயிடப்போகுது என்போம் . மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்வார் . கூட்டங்களுக்குச் செல்லும் முன் ஆரஞ்சுப் பழத்தை உரித்துக் கொடுத்து சாப்பிடச் சொன்னால் என்னையும் சாப்பிடச் சொல்லி அடம் பிடிப்பார் . வேண்டாம் என்று சொன்னால் நான் என்ன ராஜாவா , நீ என்ன அடைப்பக்காரனா ? அந்தக் காலத்துல ராஜாவிற்கு அடப்பக்காரந்தான் வெற்றிலை மடித்துக் கொடுப்பான் . இரண்டு சுளையைச் சாப்பிட்டால்தான் அவரும் சாப்பிடுவார் .
மிகச் சிறந்த பேச்சாளரான ஜீவா அவர்கள் , பேச ஆரம்பிக்கும் முன்பு கேட்பார் . இந்த ஊரில் நிலப்பிரபுக்கள் யார் , பணக்காரர் யார் , கள்ள மார்க்கெட்காரர் யார் , என்று எல்லாம் கேட்டுக்கொண்டு அதற்கு அனுசரித்துப் பேசுவார் . அவ்வளவு சிறந்த பேச்சாளர் என்னுடைய பேச்சை மக்கள் ரசித்தார்களா என்று கேட்பார் . அதற்குப்பிறகுதான் அவருக்கு திருப்தி ஏற்படும் . ஒரு முறை தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம் தோற்றுவித்ததைப் பற்றி சொன்னார் அவர் . ஒரு மாதத்திலே பெரும்பகுதி நாட்கள் கட்சிக் கூட்டம் என்று வெளியூரில்தான் சுற்றிக்கொண்டிருப்பார் . மாதத்தில் 4 அல்லது 5 நாட்கள்தான் தன் வீட்டில் இருப்பார் . அப்படி இருக்கும் போது குடும்பத்துடன்தான் உட்கார்ந்து சாப்பிடுவார் . அப்படி ஒரு முறை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது , தன் பெண்கள் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார் . ஒரு முறை மகளைக் கூப்பிட்டார் . அவர் இதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே படித்துக்கொண்டிருந்தார் . அவர் உடனே ஏம்மா உன்னை எத்தனை தடவை கூப்பிடுவது . அப்பறம் படித்துக்கொள்ளலாம் , நீ வா இங்கு என்றார் . வந்து உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தவுடன் , மகள் அப்படி என்ன புத்தகத்தை இவ்வளவு ஆர்வமாகப் படிக்கிறாள் என்று எடுத்துப் பார்த்தார் . அது ஒரு தமிழ் புத்தகம்தான் . ஆனால் அதற்குள் இன்னொரு புத்தகம் இருந்தது . அதன் பெயர் டாக்சி டிரைவர் . அது அசிங்கமான புத்தகம் . எட்டணாவிற்கு கிடைத்துக்கொண்டிருந்தது . அப்போதுதான் அவர் , அட இந்த நச்சு இலக்கியம் நம் வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டதா என்ற அதிர்ச்சியில் நல்ல இலக்கியம் வளர வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் . அது தோற்றுவிக்கப்பட்டவுடன் சென்னையில் அவரை நான் சந்தித்தபோது , ஈரோட்டில் கலை இலக்கிய மன்றம் திறப்புவிழாவிற்கு நீங்கள் வரவேண்டும் என்றேன் . அவரும் வருகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்றார் . என்ன என்று சொல்லுங்கள் செய்தால் போகிறது என்றேன் . ஒன்றுமில்லை , தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் நிதிக்காக ரூ 100 கொடுத்தால் நான் வருகிறேன் என்றார் . நானும் அவ்வளவுதானே , கொடுத்தால் போகிறது வாருங்கள் என்றேன் . அவர் வந்தார் . இராமாயணத்தில் ஒரு பகுதியான பரதனைப்பற்றி பேசினார் .
பெரியார் மன்றத்திலே அந்த விழா வைத்திருந்தோம் . அதற்குத் தலைமையாக , ‘ இரு மொழி சொற்கொண்டல் மீனாட்சி சுந்தரம் முதலியார்’ அவர்களை வரச்சொன்னோம் . அதற்கு அவர் ஜீவாவினுடைய பேச்சைக் கேட்பதற்காக வேண்டுமானால் நான் வருகிறேன் , ஆனால் அவர்முன் தலைமை வகிக்க நான் வரவில்லை . நான் காங்கிரசில் இருந்த போது அவருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன் , அற்புதமான பேச்சு அவருடையது . நான் தலைமை தாங்கவெல்லாம் வரமுடியாது என்றார் . அவரை மிகவும் கட்டாயப்படுத்தித்தான் தலைமை தாங்க ஒப்புக்கொள்ளச் செய்தோம் . அந்த கூட்டத்திற்கு ரூபாய் 10, 5, 1 என்று டிக்கெட் போட்டோம் . அந்த கூட்டம் நடந்து முடிந்தது .
முடிவுரையில் மீனாட்சி சுந்தரம் முதலியார் அவர்கள் , எனக்கு யாரும் நன்றி சொல்ல வேண்டாம் .. இந்தக்கூட்டம் மூலமாக நல்ல ஒரு இலக்கிய சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள் . அதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் . இராமாயணம் என்று சொன்னால் , கிராமப்புறங்களிலே , பாவடிகளிலே , மக்கள் இராமயணம் கதாகாலேட்சேபம் கேட்பதற்காக கோணிப்பை , பெட்ஷீட் , ஜமக்காளம் என்று கொண்டுவந்து போட்டு உட்கார்ந்து கேட்பார்கள் . விடிய , விடிய நடக்கும் அந்த காலட்சேபத்தில் தூக்கம் வந்தால் அப்படியே படுத்து தூங்கிவிடுவார்கள் . காலட்சேபம் செய்பவர் , விடியற்காலம் 3 மணிவரை செய்துவிட்டு முடித்துவிடுவார் . இப்படி பல நாட்கள் நடக்கும் . இறுதியில் பாதுகாபட்டாபிசேகம் சொல்லி முடிப்பார்கள் . 55 வயதிற்கு மேற்பட்டவர்களே அதில் கலந்துகொண்டு கேட்பார்கள் . ஆனால் இங்கு 20 வயதிலிருந்து 30 வயது வரை இளைஞர்கள் வாய் மூடாமல் , வாயில் ஈ பூந்து செல்வது கூட தெரியாமல் உணர்ச்சிப்பூர்வமாக இராமாயணம் கேட்பதை இன்றுதான் நான் பார்க்கிறேன் . இராமாயணத்திற்கு ஒரு ஈர்ப்புத்தன்மை அவருடைய பேச்சில் உண்டு . நான் மிகவும் பெருமைப்படுகிறேன் . அவர் பேசிய இந்த 2 மணி நேரம் , அவர் பரதனை மட்டும் பேசவில்லை . இராமனாக இருந்தார் , அனுமனாக , இலட்சுமணனாக , இராவணனாக இப்படி அனைத்துக் கதாப்பாத்திரமாகவும் நின்று பேசினார் . இவ்வளவு பெரிய கூட்டத்தில் அவர் 90 டிகிரியில் வளைந்து நெளிந்து பேசிய பேச்சு , அவர் இலக்கியத்தின்பால் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது . ஆகவே இந்த இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று சொல்லி முடித்தார் . முடித்த பிறகு அந்த மேடையிலேயே , தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்திற்கு 1000 ரூபாய் நன்கொடையாக கொடுப்பதாகச் சொல்லி நான் கொடுத்தேன் . அவர் பிற்பாடு வந்து என்னைக் கேட்டார் . ஏது இவ்வளவு பணம் . நான் 100 ரூபாய்தானே கேட்டேன் . நீங்கள் 1000 ரூபாய் கொடுத்துவிட்டீர்கள் என்றார் . அதற்கு நான் , கூட்டத்திற்கு டிக்கெட் போட்டு வசூல் செய்தோம் . அந்த பணத்தில்தான் பாதியை எங்கள் நிதிக்காக வைத்துக்கொண்டு மீதியை உங்களுக்குக் கொடுத்தோம் என்றேன் . அதற்கு அவர் ஆச்சரியமாக , ‘ ஓ , இப்படி ஒரு வழி இருக்கா . டிக்கெட் போட்டுக்கூட வசூல் செய்யலாமா . ரொம்ப சந்தோசம் என்றார் . ஒருமுறை அவர் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தபோது நான் காங்கிரசுகாரனாக இருந்தேன் . மகாத்மா காந்தியடிகள் அவர்களிடம் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட தண்டனையினிலிருந்து அவரைக் காப்பாற்ற வேண்டும் . பகத்சிங் , ராஜகுரு , சுகதேவ் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும்படி வைசிராயிடம் சென்று கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் . ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார் . ஒரு வேளை அகிம்சா வழியில் அவர் இருந்ததனால் அப்படிச் செய்தாரா என்று தெரியவில்லை . சுயமரியாதை இயக்கத்தின் இளைஞர்கள் அவர் எங்கே சென்றாலும் கருப்புக்கொடி காட்டுவது என்று முடிவு செய்திருந்தோம் .
ஈரோட்டிலே டவுன் ஸ்கூல் என்ற நகராட்சிப் பள்ளியினுடைய மேல் மாடியில் கூட்டத்தைக் கூட்டி , ஜீவானந்தம் அவர்கள் இதைப்பற்றி தெளிவாகவும் , விளக்கமாகவும் பேசி , ஈரோட்டிற்குப் பெருமை சேர்த்தார்கள் . 1937 தேர்தலிலே , ரயில்வே காலனியில் , கட்சிப் பொதுக்கூட்டத்தில் , தொண்டர்கள் முன்பாகப் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள் , எப்படி காங்கிரசை எதிர்த்து ஓட்டுப்போடுவது என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது . ஆனால் காங்கிரசில் இருப்பவர்கள் எல்லாம் புல்லியர்கள் . நேர்மையில்லாதவர்கள் . ராஜாஜி இருக்கலாம் , பக்தவச்சலம் , சத்தியமூர்த்தி , காமராசர் என எவ்வளவு பெரிய தலைவரும் இருக்கலாம் . ஆனால் அவர்களெல்லாம் புல்லியர் கூட்டம் . பாரதி பாடினான்
வில்லினை எடடா !— கையில்
வில்லினை எடடா !— அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா .
வாடி நில்லாதே– மனம்
வாடி நில்லாதே ;– வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே
என்ற பாடலை உருக்கமாகப் பாடி காங்கிரசை வீழ்த்துங்கள் , காங்கிரசை வீழ்த்துங்கள் என்று உரக்கக் குரல் கொடுத்து , 1952 தேர்தலிலே முழக்கம் இட்டார்கள் . அப்படி ஜீவானந்தம் அவர்களின் பேச்சு மிகச்சிறந்த முறையில் பல்வேறு நேரங்களிலே இருந்திருக்கிறது . ஈரோட்டிற்கும் அவருக்கும் நிறைய தொடர்பு உண்டு . சோசலிச இயக்கம் என்று இருந்தபொழுது ஈரோட்டிற்கு நிறைய முறை வந்திருக்கிறார்கள் , பேசியிருக்கிறார்கள் . ராஜாஜியையே தோற்கடித்தவர் ஜீவானந்தம் என்று சொல்வார்கள் . காந்தியையே கூட தோற்கடித்தவர்தான் அவர் . ஒருமுறை ஜீவானந்தம் அவர்கள் , மகாத்மா காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார் . “ நீங்கள் இவ்வளவு பெரிய தலைவராக இருந்துகொண்டு வர்ணாசிரமத்தை ஆதரிப்பது சரியல்ல” என்பதை அதற்கான காரண காரியங்களுடன் தெளிவாக எழுதினார் . காலிலே பிறந்தவன் சூத்திரன் , தலையிலே பிறந்தவன் பிராமணன் என்ற வர்ணாசிரமப் பிரிவைக் கண்டித்து காந்தியடிகளுக்கே துணிவோடு கடிதம் எழுதியவர் . அவரும் அதை உணர்ந்தார்கள் . அதுபோல 1952, இல் , சென்னை ராஜ்ஜிய சட்ட மன்றம் , கேரளா , ஆந்திரா , கர்நாடகா தமிழ்நாடு அனைத்தும் சேர்ந்த அந்த சட்டமன்றத்திலே , ராஜாஜி அவர்கள் , பஜகோவிந்தம் பாடப்போகிறேன் என்று குற்றாலத்தில் உட்கார்ந்திருந்த நேரம் . 52 தொகுதிகளிலே காங்கிரசு தோற்கடிக்கப்பட்டது . அன்றைக்குத்தான் ஐக்கிய முன்னணி கம்யூனிசம் தொடக்கி வைத்தார்கள் . காங்கிரசு அன்றைக்குத்தான் முதன்முதலில் தமிழகத்தில் மைனாரிட்டி ஆனது . ஐக்கிய முன்னணி மந்திரி சபை அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது . யார் யாரெல்லாம் , எந்த இலாக்காவிற்கு அமைச்சர் என்று முடிவெடுக்கப்பட்டது . அந்த நேரத்தில் காமராஜர் அவர்கள் ராஜாஜியைச் சந்தித்து தமிழகத்தில் காங்கிரசு விழுந்துவிடும்போல் உள்ளது . காங்கிரசை நீங்கள் காப்பாற்றுங்கள் என்று போய்ச் சொன்னார் . காங்கிரசு மந்திரிசபை அமைக்க வேண்டும் என்றார் . நான் சட்டமன்ற உறுப்பினராகக் கூட இல்லையே நான் எப்படி மந்திரிசபை அமைக்க முடியும் என்றார் ராஜாஜி . நீங்கள் தேர்தலில் நில்லுங்கள் , என்றார் . அப்போது மேல்சபை என்றிருந்தது . ராஜாஜி , நான் தேர்தலில் நிற்கமாட்டேன் , நீங்கள் கவர்னரிடம் சொல்லி என்னை எம் எல் சி ஆக்குங்கள் என்றார் . அரசியல்வாதியாக இருப்பவரை எப்படி எம் எல் சி ஆக்குவது என்றார் . எம் எல் சி என்பது ஒன்று , எழுத்தாளனாகவோ , அல்லது கலை இலக்கியப் பணிகளிலோ இருப்பவராக இருக்க வேண்டும் . அரசியல்வாதியாக இருப்பவரையெல்லாம் எம் எல் சியாக்க முடியாது என்று மறுத்துவிட்டார் . அப்போது ராஜாஜி அவர்கள் , நேருவிடம் சொல்லி , சொல்லச் சொல்லுங்கள் என்றார் . அப்போது காமராஜர் அவர்கள் நேருவிடம் சென்று , தமிழ்நாட்டிற்கு வேறு விதியே இல்லை , காங்கிரசே முடிந்துபோய் விடும் , அதனால் நீங்கள் பிரகாஷை கூப்பிட்டு ராஜாஜியை எம் எல் சி ஆக்கச் சொல்லுங்கள் என்றவுடன் நேரு அவர்கள் வேறு வழியில்லாமல் ராஜாஜியை பரிந்துரை செய்தார்கள் . ராஜாஜியும் மந்திரிசபை அமைத்தார் . அன்றைக்குத்தான் கட்சி மாறுகிற பழக்கமும் முதன்முதலில் ஏற்பட்டது . எஸ் . எஸ் , ராமசாமி படையாச்சி , மாணிக்கவேல் நாயக்கர் , ஆகியோரை கட்சியில் இருந்து பிரித்து அமைச்சர் பதவி கொடுத்தார்கள் .
சட்ட சபை நடக்கிறபோது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனை குறித்து பேசுவார்கள் . அப்படி ஒரு முறை , ஜீவானந்தம் அவர்கள் தென்சென்னையில் உள்ள ராயப்பேட்டை என்கிற ராயபுரத்தில் , ரயில்வே ஸ்டேசன் அருகில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கேட்டார் . அப்போது ராஜாஜி , சமத்துவம் பேசக்கூடிய ஜீவானந்தம் அவர்கள் தன்னுடைய தொகுதிக்காக தனிப்பட்ட முறையில் இப்படிக் கேட்கிறாரே என்று கிண்டல் செய்தார் . இதைக் கேட்ட ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள் . சத்தம் ஓய்ந்த பின்னர் எழுந்த ஜீவானந்தம் அவர்கள் , என்ன செய்வது நாங்கள் மக்களிடம் வாக்குறுதிகளைக்கூறி வாக்கு பெற்று சட்டசபைக்கு உறுப்பினராக வருகிறோம் . ஆனால் ராஜாஜிக்கு அந்த கவலையே இல்லை .. எப்பொழுதும் புறக்கடை வழியாகத்தானே வருவார் . மக்களிடம் வாக்கு வாங்கி இதுவரை எந்தபதவியும் அவர் பெற்றதில்லை . கவர்னர் ஜெனரல் ஆனதுகூட அப்படித்தான் என்று கூற எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள் .. கூட்டம் முடிந்து வந்தவுடன் ராஜாஜி , ஜீவானந்தம் அவர்களின் தோள்மீது கைபோட்டு , நான்தான் ஆளை மடக்குவேன் என்றால் நீ என்னையே மடக்கிவிட்டாயே என்று பாராட்டினார் .
கூட்டம் முடிந்து வெளிவந்தபிறகு எப்பவும் தங்குகிற லட்சுமி பவன் என்ற ஓட்டலில் வந்து அவரோடு தங்கியிருந்தபோது , இரவு 12 மணி ஆகியும் தூங்காமல் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதைப் பார்த்து நான் , என்ன தோழர் அவர்களே , ரொம்ப யோசனையாக இருக்கிறீர்கள் என்றேன் . அவரும்
மனசுக்குள்ள ஒரு சம்பவம் உறுத்திக்கிட்டிருக்கு . நான் தாம்பரத்துல கட்டிக்கிட்டிருக்கிற அந்த குடிசை வீட்டிற்கு , கதவு நிலவு வாங்கறதுக்காக கட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு தோழர்கிட்ட இருந்து 500 ரூபாய் வாங்கினேன் . அதை நாளை அல்லது மறுநாள் தருவதாகக் கூறிவிட்டு வந்தேன் . ஈரோடு கூட்டம் முடித்து , குடியாத்தம் கூட்டம் , கோதண்டராம் கூட்டம் அப்பறம் மோகன் நினைவுக்கூட்டம்
இதெல்லாம் முடித்துவிட்டு போவதற்குள் குறிப்பிட்ட நாள் வந்துவிடும் . அவர் கட்சிக்கு அப்பாற்பட்ட தோழர் என்பதால் சொன்ன நாளில் பணம் தரவில்லையென்றால் வருத்தப்படுவதோடு கம்யூனிச தோழர்களெல்லாம் இப்படித்தான் என்று கட்சியையும் தவறாக நினைப்பார் அல்லவா .. அதான் யோசனை பண்ணிக்கிட்டிருக்கேன் என்றார் . தோழரே இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் படுத்துத் தூங்குங்க . காலைல பார்த்துக்கலாம் என்று கூறினேன் . காலையில் எழுந்தவுடன் 500 ரூபாயை எடுத்து அவர் கையில் கொடுத்தேன் . அவரும் மகிழ்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டு பத்மாவதிக்கு 7 ந்தேதி சம்பளம் வந்துவிடும் . ( பத்மாவதி அவருடைய மனைவி ) அவரிடமிருந்து வாங்கி அனுப்பினால் 8 ந்தேதி உங்களுக்கு கிடைத்துவிடும் என்று கூறினார் . நான் உடனே கதவு , நிலவு , சன்னல் என்னுடையதாக இருக்கட்டும் தோழரே , இந்தப் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூற மிகவும் மகிழ்ச்சியடைந்தார் . அந்த நாட்களில் கம்யூனிசத் தோழர்கள் எவ்வாறு எளிமையாகவும் , நேர்மையாகவும் வாழ்ந்தார்கள் என்பதை விளங்கச்செய்யவே இந்த நிகழ்ச்சியைக் கூறினேன் . அப்பொழுதெல்லாம் ஈரோட்டில் அருள்நெறித் திருக்கூட்டத்தார் 63 நாயன்மார் விழாவை நடத்துவார்கள் . அதில் குன்றக்குடி அடிகளார் அவர்கள் ஆண்டுதோறும் கலந்துகொள்ளுவார் .
8
எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 8
குன்றக்குடி அடிகளார் அவர்கள் சொல்லியதால் ஜீவானந்தம் அவர்கள் 63 நாயன்மார் விழாவிற்கு வேண்டா வெறுப்பாக அழைக்கப்பட்டார் . காரணம் அவர் நாத்திகர் , கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் . சாமியே கும்பிடாத அவரைப் போய் இந்த விழாவிற்குக் கூப்பிடுவதா என்று பலரும் சொன்னார்கள் . குன்றக்குடி அடிகளார் சொன்னதால் வேறு வழியில்லாமல் அறுபத்து மூவர் நாயன்மார் விழாக் குழுவினர் அவரை அழைத்தனர் . திரு . வி . க , அவர்களும் இந்த விழாவிற்கு வந்திருந்தார்கள் . நான் தான் ஜீவானந்தம் அவர்களை கோவிலுக்கு அழைத்து வந்தேன் . அவர் பேசிமுடித்தவுடன் , அந்த 63 நாயன்மார் விழாவின் தலைவர் திரு . வி . பழனியப்ப செட்டியார் அவர்கள் என்னிடம் வந்து ,
“நாங்களெல்லாம் இவர் என்ன பேசப்போகிறாரோ என்று பயந்து கொண்டிருந்தோம். ஆனால் அவர் இதுவரையில் கேட்டறியாத ஒரு சைவ நெறியைப் பற்றி, முற்போக்குச் சிந்தனையுடன், பேசியது மிக நன்றாக இருந்தது. இனிஅவர் இல்லாமல் இந்த விழா இல்லை. ஒவ்வொரு ஆண்டும் அற்பத்து மூவர் விழாவிற்கு இவர் வரவேண்டும்” என்றார். ஜீவானந்தம் அவர்கள் இறந்தபோது சென்னைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
விழா முடிந்தவுடன் , எல்லோருக்கும் பழனியப்ப செட்டியார் வீட்டில் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள் . அங்கே போகும் முன் குன்றக்குடி அடிகளார் , கவர் ஒன்றைக் கையில் கொடுத்து , ’ எனககு இங்கு வெகுமதியாகக் கொடுத்த பணம் இது . நான் வந்து போக கார் இருக்கிறது . அதனால் எனக்கு இது தேவையில்லை . இதை ஜீவானந்தம் அவர்களிடம் கொடுத்துவிடுங்கள் . அவருக்குப் பயன்படும் என்றார் . நான் அவரிடம் , குன்றக்குடி அடிகளார் கொடுத்தது என்று சொல்லிக் கொடுத்தேன் . எதுக்காக அவருக்குக் கொடுத்ததை எனக்குக் கொடுக்கிறார் என்று கேட்டார் . ஜீவானந்தம் அவர்கள் அடிகளாரிடத்தில் சென்று , ‘ என்ன இது இப்படி செய்துவிட்டீர்கள் , மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என்றார் .
அதற்கு அடிகளாரும் , ‘ இல்லை பரவாயில்லை , எனக்கு மடத்தின் பணம் இருக்கிறது . பெட்ரோல் போட்டுக்கிறேன் .. வந்து போக கார் இருக்கிறது . அதனால் எனக்கு இந்த பணம் வேண்டியதில்லை , உங்களுக்கு பயன்படும் என்றார் . இது போல ஒவ்வொரு ஆண்டும் செய்வார் . . அந்தக் கூட்டத்தில் மேடைக்குப் பின்னால் ஒரு பெரிய நடராஜர் சிலை இருந்தது .
“நீங்கள் பின்னால் வைத்திருக்கிற நடராஜர் சிலை எனக்கு வேண்டிய சிலை ஏனென்றால், அது பொதுவுடைமைக் கடவுள். ஏன் என்று சொன்னால் அவர் உடுத்தியிருப்பது மான் தோல் உடை. வேடுவன் அணியக்கூடிய அந்த உடை ஏழ்மை நிலையை எடுத்துரைப்பது. அக்கினிப் பிரவாகத்தை கையில் வைத்திருக்கிறார். அது புரட்சியின் சின்னம். ஒரு கையில் உடுக்கை வைத்திருக்கிறார். அது உடுக்கை அடித்து உலகத் தொழிலாளிகளே ஒன்றுபடுங்கள் என்ற அழைப்பு விடுப்பது காலுக்கடியில் ஒரு அரக்கன் உருவத்தை மிதித்துக் கொண்டிருக்கிறார். அது முதலாளித்துவம் என்று சொல்லி அசத்திவிட்டார். இப்படி அனைவரும் மிகவும் வியக்கும்படியாகச் செய்தார்.
ஒரு நாள் அதி காலையிலே ஒரு செய்தி வருகிறது நான் அப்போது பெருந்துறை சேனிடோரியத்தில் இருந்தேன் . ஜீவானந்தம் அவர்கள் இயற்கை எய்திவிட்டதாக ஒரு செய்தி வந்தது . நான் அப்போதுதான் பூதான இயக்கக் கூட்டம் சென்று வந்திருந்தேன் . பூதான இயக்கக் கூட்டத்திலே அவர் கலந்து கொண்டபொழுது சில கம்யூனிஸ்டுகளுக்கு சந்தேகம் வந்தது . வினோபாஜி அவர்கள் நடத்துகிற பூதான இயக்கத்தில் மாநிலக் குழுவில் இருக்கிறாரே . நாம் உழுகிறவனுக்கு நிலம் சொந்தம் என்கிறோம் . மிராசுதாரர்களிடமிருந்து நிலத்தை வாங்கி உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று கொடுக்க வேண்டும் என்கிறோம் . அது சரியான வழிதான் . ஆனால் இதுவரை ஒரு ஏக்கர் நிலம் கூட எடுத்துக் கொடுக்கமுடியவில்லை . ஆனால் வினோபாஜி அவர்கள் , கால்நடையாகவேச் சென்று யாசகமாக பிச்சை எடுத்து 1000 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்கு கொடுத்திருக்கிறார்கள் . இது நம் கோரிக்கையில் ஒரு பகுதியையாவது நிறைவேற்றியிருக்கிறதே .. இது எப்படி கிடைத்தால் என்ன லாபம்தானே .. உழுபவனுக்கு நிலம் கிடைத்திருக்கிறது . நாளை இப்படி சட்டம் வந்தால் நல்லதுதான் . ஆகவே நான் செய்ததில் தவறில்லை என்றார் .
ஜீவானந்தம் அவர்கள் இறந்த செய்தி கேட்டவுடன் , பெருந்துறையிலிருந்து ஒரு பேருந்தும் , ஈரோட்டிலிருந்து ஒரு பேருந்தும் எடுத்துக் கொண்டு சென்றோம் . அங்கு சென்றவுடன் மாலை வாங்க வேண்டும் என்று பூக்கடைக்கு , கிட்டத்தட்ட 100 பேர் சென்றோம் . எல்லா கடைகளிலும் மாலை நிறையவே கட்டித் தொங்க விட்டிருந்தார்கள் . மாலை வேண்டும் என்று கேட்டிருந்தோம் . எவ்வளவு பூ வேண்டும் என்று கேட்டார்கள் . ஒரு பூ ஒரு பைசா என்ற விலையில் , 100 பூ வேண்டுமென்றால் 1 ரூபாய் என்று மலிவு விலையில் , ஊர் முழுவதும் , ஒரே விலையில் , இலாபமும் வைக்காமல் , கூலியும் வாங்காமல் கொடுக்கிறோம் . பூக்கடை வியாபாரிகள் சங்கத்தில் பேசிவைத்து அன்று முழுவதும் கொடுத்தார்கள் . ஆச்சரியப்பட்டுப்போனோம் . அங்கு சென்றால் , சொல்ல முடியாத கூட்டம் . மூன்றரை மணி 4 மணிக்கு எடுக்கிறார்கள் . துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்திலே அவர் உடல் வைக்கப்பட்டிருக்கிறது . எம் . கே . கல்யாணசுந்தரம் அவர்கள் அருகில்தான் உட்கார்ந்திருந்தேன் . அவரே கேட்கிறார் , இது யார் தோழரே என்று . யார் என்றே தெரியாத பலர் வந்திருந்தனர் . கட்சிக்கு வெளியே , பல்வேறு துறைகளிலே அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள் . அவருடைய உடல் நிறைய பூ அலங்காரத்துடன் எடுத்துச் செல்லப்படுகிறது . சூலைமேட்டு சுடுகாட்டிலே அவர் உடலை எரியூட்டுவதற்கு முன்பு பலர் பேசுகிறார்கள் . அப்போது தி . கே சண்முகம் அவர்கள் வந்திருக்கிறார்கள் . டி . ஏ மதுரம் கருப்பு சேலையும் , முழுக்கை கருப்பு சட்டையும் அணிந்து வந்தார்கள் . சகஸ்ரநாமம் மற்றும் பல நடிகர்கள் வந்திருந்தார்கள் . டி , கே சண்முகம் அவர்களை பேசச் சொன்னார்கள் . ஏனென்றால் தி . கே சண்முகம் அவர்கள் நடத்துகிற நாடகக் கம்பெனிக்கும் ஜீவானந்தம் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு . நாடகம் ஆரம்பிக்கும் முன்பு முன்னால் விழுகிற திரைச்சீலை சிகப்புத்துணி . உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற கோஷம் தான் அதில் பொறிக்கப்பட்டுள்ளது . இதெல்லாம் ஜீவாவோடு ஏற்பட்ட நெருக்கம் மற்றும் நட்பின் காரணமாகத்தான் இருந்தது .
அவர் ஒரு பாடலைப்பாடி ஆரம்பிக்கிறார் :
காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கஞ்சியுமில்லை
வீணுக்கு உழைத்தோமடா தோழா
விதியற்றுப் போனோமடா
பாலின்றிப் பிள்ளைகளும்
பட்டியினியால் தாங்கிடுவார்
வேலையின்றி நமழுவோம்
வீடு முச்சூடும் அழக் கண்டோம் .
ஒன்றுபட்டு போர்க்கொடியை
உயர்த்தினோம் நம் கொடியை
அன்றுடன் தீருமடா இம்சை
முறைகளெல்லாம் .
தனக்கே உரிய கம்பீரமான தொனியில் அதைப்பாடி முடித்தார் , முதன்முதலில் இந்தப் பாடலை ஜீவா இயற்றிப் பாடிய ஒரு பெருமை ஈரோட்டிற்கு உண்டு . ஜீவாவினுடைய இந்தப் பாடலை பிரபல மில் அதிபர் சி . எஸ் . என் . டபிள்யூ மில்ஸ் , உரிமையாளர் , ( தந்தை இறந்தவுடன் , அந்நிய துணியை விற்க மாட்டேன் , என்று மதுரை ஆர் ஜி . மில் சி . எஸ் . என் . டபிள்யூ மில் ஏஜென்சி எல்லாம் கேன்சல் பண்ணிவிட்டு கதர் மட்டுமே தயாரிக்கப் போவதாகச் சொன்னவர் ). கோவை மில் தொழிலாளர்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்தபோது அந்தக் கூட்டத்தில் வந்து பேசுவதற்காக இந்தப் பாடலை தயாரித்து எடுத்து வந்தார் . அந்தப் பாடலை என் . எஸ் , கிருஷ்ணன் அவர்கள் சென்னையிலே இருந்த கிராமபோன் கம்பெனியில் ரெக்கார்ட் செய்து கொண்டு வந்து விற்பனை செய்தார் . அந்தப் பெருமையும் ஈரோட்டிற்கு உண்டு .
அவர் பேசும்போது , ‘ நாங்கள் ஒரு முறை குன்னூரிலே நாடகக் கம்பெனி இருந்த போது , நடிகர்கள் தங்குகிற வீட்டில்தான் இவரும் தங்குவார் . குன்னூரில் குளிராக இருப்பாதால் பகல் மட்டுமே நிகழ்ச்சி நடத்த முடியும் . காலை 10 மணிக்குத்தான் எங்கள் கம்பெனிக்கு வந்து ஜீவா அவர்கள் பேசினார் . அன்றைக்கு மைக்கெல்லாம் கிடையாது . ஒரு ஐம்பது பேர் உட்கார்ந்திருக்கிறார்கள் . அவர் தன் வெண்கல குரலிலே , 2 மணி நேரம் பேசினார் . கூட்டம் முடிந்து வீட்டிற்குச் சென்றபோது , ‘ என்ன அண்ணாச்சி , இந்த 50 பேருக்காக தொண்டை கிழிய இவ்வளவு கத்துகிறீர்களே உடம்பு என்ன ஆகும் என்றேன் .. அப்போது அவர் , 50 பேர் இருந்தார்களே அவர்கள் ஆளுக்கொரு 20 பேரிடம் சொன்னால் போதாதா .. அவர்கள் 2 பேரிடம் சொன்னாலும் இப்படியே பரவினால் போதுமே .. நான் இறப்பதற்குள் சுதந்திரமும் , சோசலிசமும் வளராதா என்று கேட்டார்கள் .. இதைச் சொல்லிவிட்டு சண்முகம் அவர்கள் கண் கலங்கினார்கள் .
நான் ஜவுளி வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது , தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மொத்த விற்பனை ஜவுளி வியாபாரம் செய்து கொண்டிருந்தேன் . அப்போது எனக்கு கேரளாவில் தொடர்பு ஏற்பட்டிருந்தது . கள்ளிக்கோட்டை , எர்ணாகுளம் , திருச்சூர் , கொச்சின்
திருவனந்தபுரம் சென்றிருந்தபோது நம்பூதிரிபாட் அவர்கள் அரசு இருந்தது . அங்கு கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்திற்குச் சென்றிருந்தேன் . அங்கே எம் . என் கோவிந்த நாயர் மற்றும் டி . வி தாமஸ் என்ற அமைச்சர்களும் இருந்தார்கள் . ‘ நான் ஈரோட்டில் இருந்து வந்திருக்கிறேன் , என்றேன் . நிறைய அலுவலர்கள் இருந்தனர் . அவர் என்னோடு பேசிக்கொண்டிருந்தார் . முழு நேர அலுவலர்களை கவனித்துக் கொண்டிருந்தபோது ஒரே துண்டை பலரும் துவட்டிக் கொள்ளும் நிலை இருந்ததை புரிந்துகொள்ள முடிந்தது . எனக்கு ஒரு யோசனை தோன்றியது . கோவிந்தன் நாயர் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு முழு நேர பணியாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கேட்டேன் . அவர் என்பது பேர் இருப்பதாகச் சொன்னார் . கேட்டுக்கொண்டு வந்துவிட்டேன் . ஊருக்கு வந்தவுடன் , அவர்கள் ஒவ்வொருவருக்கும் , 4 வேட்டி , 4 சட்டை , 4 துண்டு , 4 லுங்கி என கணக்கிட்டு அதை பார்சல் செய்தேன் . கோவிந்தன் நாயர் அவர்களிடம் இதை அந்த முழு நேர பணியாளர்களுக்குச் சேர்க்கச் சொன்னேன் . அவரும் , நான் தேவையறிந்து அக்கறையுடன் அனுப்பியிருப்பதற்காக , கட்சி சார்பிலும் , தனிப்பட்ட முறையிலும் நன்றி தெரிவித்து கடிதம் போட்டார் . தாமஸ் அவர்கள் மந்திரி சபையிலே தொழில்துறை அமைச்சராக இருந்தார் . அவர் கௌரி என்கிற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவியை திருமணம் செய்திருந்தார் . அப்போது கட்சி இரண்டாக உடைந்த போது , மார்க்சிஸ்ட் கட்சி கௌரிக்கு ஒரு உத்திரவு போட்டது . ‘ நீங்கள் டி . வி . தாமசுடன் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது . அவரிடத்தில் பேசக்கூடாது என்று கூட தடை விதிக்கும் நிலை ஏற்பட்டது . இதனால் கடைசி வரையில் கட்சி சட்ட திட்டத்திற்கு உட்பட்டு , கணவன் மனைவியானாலும் கடைசி வரை பேசாமலே இருந்தார்கள் . இதை ஏன் சொல்கிறேன் என்றால் , ஒன்று கட்சியின் கட்டுப்பாடு , மற்றொன்று யதார்த்தத்திற்குப் புறம்பாக அன்று கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டை விதித்தது என்று நம்புகிறேன் . டி . வி . தாமஸ் அவர்கள் எங்களை கௌரவிக்கின்ற முறையிலே ஒரு நாள் எங்கள் வீட்டில் தங்கியிருந்து உணவு அருந்திச் சென்றார்கள் . இப்படியாக டி . வி தாமஸ் , கோவிந்தன் நாயர் அவர்களிடத்தில் கட்சி ரீதியில் நெருங்கிய தொடர்பு இருந்த காலம் .
அது போலவே தூக்குமேடை பாலா அவர்கள் . அவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக வாழ்ந்தார் . அந்த தலை மறைவு வாழ்க்கையில் பெரும்பகுதியை ஈரோட்டில் மாவட்டங்களில் தங்கியிருந்தார் . அவர் ஊத்துக்குளி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது , காவல் துறைக்கு எப்படியோ செய்தி கிடைத்து அவரை கைது செய்துவிட்டார்கள் . சிறையில் அடைக்கப்பட்டார் . அங்கு விசாரணை நடைபெற்றது சிறையில் மிகவும் துன்பப்பட்டார் . சிறை வாழ்க்கையைப்பற்றி மிக உணர்வுப்பூர்வமாகப் பேசுவார் . பல தியாகங்களைச் செய்தவர் அவர் . அவர் ஊத்துக்குளியில் ஒரு தோழர் வீட்டில் இருக்கும்போது கைது செய்யப்பட்டார் . அவருக்கு நீதிமன்றம் விதித்தது தூக்குத் தண்டனை . அப்போது ராஜாஜி அல்லது காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருதார்கள் என்று நினைக்கிறேன் . கம்யூனிஸ்ட் தோழர்கள் கடுமையான போராட்டம் நடத்தினார்கள் . தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டி ஊர் முழுவதும் , ’ பாலாவின் தூக்கு தண்டனையை ரத்து செய்’ என்கின்ற கோஷமும் , ஊர்வலமும் , பொதுக்கூட்டமும் தமிழ்நாடு முழுவதும் இருந்தது . அதன் பயனாக பாலன் அவர்களின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு , ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது . அவர் இரண்டு மூன்று முறை ஈரோடு வந்து எங்கள் வீட்டில் தங்கியிருந்து எங்களை கௌரவப்படுத்தினார்கள் . அவருடைய மகன் செக்கோஸ்லேவியா சென்று படிக்கப்போவதற்கு முன் ஒரு முறை வந்தார் . இங்கிருந்து சென்னை சென்றதும் , மகன் படிப்பிற்காக நிதி உதவி தேவை என்றார்கள் . சென்னை போவதற்கும் , தில்லி சென்று தங்குவதற்குமான செலவிற்கான ஒரு சிறிய தொகையை தோழர்களிடம் வசூல் செய்து கொடுத்தேன் . அவருக்கு மிகவும் மகிழ்ச்சி . அவர் மலையாளத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் மிக நன்றாகப் பேசுவார் . சிறையில் இருந்தபோது சமஸ்கிருதமும் நன்றாகப் படித்துக்கொண்டார் . சமஸ்கிருத சுலோகங்களை அழகாக சமஸ்கிருதத்திலே சொல்லி , அதைத் தமிழிலே மொழிபெயர்த்து எங்களுக்குச் சொல்லுவார் . படிப்பறிவே இல்லாத சாதாரண தொழிலாளர் வர்கத்திலே பிறந்தவர் . ஆனால் ஆங்கிலம் , சமஸ்கிருதம் , தமிழ் புலமையும் பெற்றிருந்தார்கள் . அவர் தாம்பரத்திற்குப் பக்கத்திலே ஒரு பகுதியிலே குடியிருந்தார்கள் . நான்கூட ஒரு முறை அவர் வீட்டிற்குச் சென்று உணவருந்தி வந்திருக்கிறேன் . ஆகவே மிகச் சிறந்த தியாக வாழ்க்கை மேற்கொண்டிருந்தவர் பாலன் அவர்கள் . அதுபோல பால தண்டாயுதம் அவர்கள் . தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர் அவர் . நூறு போலீஸ்காரர்கள் வந்தாலும் துணிச்சலாக நிற்கிற ஒரு வல்லமைமிக்க தோழராக வாழ்ந்தார் அவர் . திருநெல்வேலியிலே அவர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார் . தோழர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அவர் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துதான் வெளியில் வ்ந்தார் . அப்படிப்பட்ட மிகப்பெரிய தியாகி அவர் . வெளியே வந்தவுடன் ஏற்கனவே நான் சொன்னேன் . திராவிடக் கழகத்தின் வளர்ச்சியும் , அதன் பிரிவினைப் பேச்சும் கண்டு வருத்தப்பட்டார்கள் . பிரிவினை எதிர்ப்பு மகாநாட்டை நடத்தினார் . பாலன் அவர்கள் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபொழுதே அவர் ஆங்கிலத்திலும் , தமிழிலும் மிகச் சிறந்த பேச்சாளராக இருந்தார் . பாலன் அவர்கள் கல்லூரியிலே பேசுகிறபோது மாணவர்களையெல்லாம் ஒன்று திரட்டுகிற மிகச் சிறந்த பேச்சாளராக இருந்தார் . அப்பொழுது பல்கலைகழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் silver tongue திரு ஸ்ரீநிவாச சாஸ்திரி என்பவர் . அவர் ஆங்கிலேயரே ஆச்சரியப்படும் வகையில் ஆங்கிலப் புலமை பெற்றவர் . அவர் ஒரு முறை பாலனின் பேச்சைக் கேட்டு , ’ வெள்ளைக்காரன் என் பேச்சைக் கேட்டு சில்வர் டங்க் (silver tongue) ஸ்ரீநிவாச சாஸ்திரி என்றான் . ஆனால் பாலன் பேச்சைக் கேட்டால் கோல்டன் டங்க் (golden tongue) பாலதண்டாயுதம் என்றுதான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு உன்னுடைய பேச்சு , கவர்ச்சிகரமாகவும் , அறிவுப்பூர்வமாகவும் இருந்தது என்று பாராட்டினார்கள் . அவர் தன்னுடன் கழகத்திலிருந்த ஒரு ஆங்கிலோ இந்திய பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அவர்களை அண்ணாமலை பல்கலைகழகத்திலிருந்து வெளியேற்றினார்கள் , பாலதண்டாயுதம் அந்தப் பெண்ணை திருச்சியில் ஒரு கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க முயன்று , அதற்கான வேலைகளெல்லாம் முடிந்த பிறகு பால தண்டாயுதம் என்ற இவருடைய பெயரைக் கேட்டவுடனே அந்தப் பெண்ணிற்கு இடம் தர மறுத்துவிட்டார்கள் . மாணவர் இயக்கத்தை கட்டிக் காத்ததிலே , பால தண்டாயுதத்திற்கு பெரும் பங்கு உண்டு .
அவரை திருமணம் செய்துகொண்ட அந்த ஆங்கிலோ இந்தியப் பெண் , அவர் அரசியலை விட்டு வெளியே வந்தால்தான் உடன் வாழுவதாகக் கூறினார் . ஆனால் அதற்கு அவர் , நான் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியை மணந்து கொண்டேன் . அதனால் இரண்டாவதாக உன்னோடு வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார் . அதனால் அந்த ஆங்கிலோ இந்தியப் பெண் திருமண விலக்கு பெற்று வெளிநாடு சென்றுவிட்டார் . பால தண்டாயுதம் அவர்கள் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த போது ஒரு கட்சித் தொண்டர் வீட்டில் தங்கியிருந்தார் . அப்போது அந்த கட்சித் தோழரின் தங்கை இவருக்கு உணவு பரிமாறுவது , மற்ற வேலைகளைச் செய்வது என்று இருந்த போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு திருமணத்தில் போய் முடிந்தது . துல்ஜா ராணி என்ற அந்தப் பெண்ணை மணந்து கொண்டார் . அன்று திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பவர்கள் ஒரு வாரம் முன்பே அலுவலகதில் பதிவு செய்து , யாருக்காவது ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என்று நோட்டீசு போர்டில் போடுவார்கள் . அந்த பதிவாளராக இருந்தவர் , பாலதண்டாயுதனின் தந்தையாருக்கு வேண்டப்பட்டவர் . உடனே அவர் , ’ உங்கள் மகன் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணமுடிக்க முடிவு செய்துவிட்டார் . உங்களுக்கு ஆட்சேபணை இருந்தால் உடனே வந்து தடுத்து நிறுத்துங்கள் ‘ என்று தபால் எழுதிவிட்டார் . அதற்கு அவருடைய தந்தையார் , ‘ என் மகன் பாலதண்டாயுதம் இறந்து வெகு காலங்கள் ஆகிவிட்டது . அதனால் அவர் இப்போது இல்லை’ என்று பதில் எழுதினார் . இப்படியாகத்தான் அவர் திருமணம் நடந்தது .
ஒரு முறை பாலதண்டாயுதம் அவர்களை கைது செய்து , கைகளிலும் , கால்களிலும் விலங்கிட்டு உள்ளாட்சித் தெருக்களில் அழைத்துச் சென்றபோது , இன்று தொழிலதிபராக இருக்கிற மகாலிங்கம் உணர்ச்சிவசப்பட்டு இப்படி ஒரு இளைஞர் இருக்கிறாரா என்று அவருடைய தேசபக்தி மீதும் , கம்யூனிசம் மீதும் ஒரு மரியாதை ஏற்பட்டதாக அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார் . ஒரு முறை பாலதண்டாயுதம் அவர்கள் தன் குடும்பத்துடன் வந்து எங்கள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி எங்களை கௌரவப்படுத்தினார்கள் . அவர்களுக்கு குழந்தை இல்லாததால் , ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார்கள் . பால தண்டாயுதம் , அவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தையுடன் வந்து பல வேலைகளுக்கிடையேயும் , இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஓய்வு எடுத்தது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பெருமையான விசயம் . பாராளுமன்றத்தில் ஜொலித்த சில நட்சத்திர எம் . பி . க்களில் பாலதண்டாயுதமும் ஒருவர் . பல்வேறு நாடுகளுக்கு பாராளுமன்றத் தூதுக்குழுவின் பிரதிநிதியாகச் சென்று வந்தார் . டெல்லி விமானப் பயணத்தின்போது அவருடன் சென்ற மோகன் குமாரமங்கலம் இருவரும் விமான விபத்தில் உடல் சிதறி உருத் தெரியாமல் பலியானார்கள் . உயிரோடு இருந்தபோது காவல் துறையினரால் தேடப்பட்டார் . மரணத்திலும் அவர் உடல் தேடப்பட்டது . அவர் விரலில் அணிந்திருந்த அரிவாள் , சுத்தியல் பதித்த மோதிரம் அவர் உடலை அடையாளம் காட்டியது . பாலனின் அஸ்தி இன்னும் கோவை மாவட்டக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நினைவுத் தூணாக அமைக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளது .
அது போலவே , இராமநாதபுரத்திலே மீனவர் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தி பெரும் பணிகள் செய்து கொண்டிருந்தவர் , ஆர் . எச் . நாதன் . ஆர் . ஹாராஸ்ய நாதன் என்பது முழுப்பெயர் . அவர் மூன்று முறை வந்து எங்கள் வீட்டில் தங்கியிருந்து எங்களை கௌரவித்திருக்கிறார்கள் . அவர் வந்தபோது அவருடைய சகோதரி , ஈரோட்டிலே மின் வாரியத்தில் பணியாற்றிக் கொண்டு , கருங்கல்பாளையத்தில் குடியிருந்தார்கள் . ஆனால் அங்குபோய் தங்கவில்லை . தங்கையைச் சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவார் . உறவினர் வீட்டில் தங்குவதைவிட தோழர் வீட்டில் தங்குவதில்தான் மகிழ்ச்சி என்றும் சொல்லுவார் . அவர் ஒரு சம்பவத்தை எனக்கு நினைவூட்டினார்கள் . அதாவது , மீனவர்களுக்கு அப்போது கூடை கணக்கில்தான் மீன் வழங்கப்பட்டு வந்தது . முதலாளிக்கு இத்தனை கூடை , மீனவர்களுக்கு இத்தனை கூடை என்று சதவிகித கணக்கில் அவர்களுக்கு கூலியாக வழங்குவார்கள் . அது மிகவும் குறைவாக வழங்கப்படுவதாக போராட்டம் நடத்தப்பட்டது . அந்தப் போராட்டம் நீண்டு கொண்டிருந்தது . அங்கு மீன் பிடி தொழிலில் மின்விசைப்படகு வைத்திருந்த முதலாளிகளும் , மீன்பிடித் தொழிலில் இருந்த தொழிலாளிகளும் பெரும்பாலும் கிறித்துவர்களாகவே இருந்தனர் . ஆகவே முதலாளிகள் , இவர்களை மடக்குவதற்காக தேவாலய பாதிரியாரிடம் சென்று , மீன்பிடி தொழிலாளிகள் கம்யூனிஸ்ட் வலையில் சிக்கி கூலி உயர்வு வேண்டும் என்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று முறையிட்டார் . அதனால் பாதிரியாரின் பிரசங்கத்தில் சொல்லி மீனவர்களின் போராட்டத்தை வாபஸ் பெற்று . பணிக்குத் திரும்பச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார் . அப்போதெல்லாம் பிரசங்கம் ஞாயிறு தோறும் கடற்கரையில் தான் நடக்கும் . பைபிள் மற்றும் வேதங்கள் பற்றியெல்லாம் பேசுவார்கள் . பாதிரியாரும் , தன் பிரசங்கத்தில் , விசைப்படகு முதலாளிகள் நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் . அவர்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் . கம்யூனிஸ்ட்காரர்கள் நம் கிறித்துவத்திற்கு எதிரானவர்கள் . அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு போராட்டம் நடத்தாதீர்கள் . நான் அடுத்த முறை பிரசங்கத்திற்கு வருவதற்குள் நீங்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றிருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் . இளைஞர்களை பாதிக்காத இந்த பிரசங்கம் முதியோரை மட்டும் பாதித்ததற்கான காரணம் , தாங்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தால் பாதிரியார் பிரசங்கத்திற்கு வரமாட்டாரே என்பதுதான் . ஆனால் இளைஞர்கள் , முதலாளிகள் கிறித்துவராக இருந்தும் , கிறித்துவ தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்திக் கொடுத்தால் போகிறது என்று பாதிரியாருக்குச் சொல்லத் தோன்றாமல் , முதலாளிகளுக்கு பரிந்து பேசுகிறார் . அதனால் மதத்திற்கும் , இந்த போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை . நாம் , நம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தை நடத்துவோம் என்று முடிவெடுத்தார்கள் .
முதியவர்கள் உடனே , ஆர் . ஹெச் . நாதன் அவர்களைச் சந்தித்து “என்ன இப்படி செய்துவிட்டீர்கள் . எங்களுக்கு கிறிஸ்துநாதர்தான் எல்லாமே . அவருடைய பிரச்சாரம் இல்லாமல் செய்துவிட்டீர்களே” என்று வருந்தினார்கள் .
அதற்கு நாதன் அவர்கள் , “ உங்களுக்கு பிரசங்கம்தானே தேவை . அதைப்பற்றி கவலைப்படாதீர்கள் . உங்கள் பிரசங்கத்திற்கு எந்தத் தடையும் வராது . பாதிரியார் கட்டாயம் வருவார் . உங்கள் போராட்டத்தை நீங்கள் தொடருங்கள்” என்றார் .
அதேபோல போராட்டமும் தொடர்ந்தது . ஞாயிற்றுக் கிழமை பிரசங்கத்திற்கு பாதிரியார் வரவில்லை . மக்கள் கூடியிருந்தனர் . அப்போது மேடையில் பாதிரியார் உடையில் தோன்றியவர் ஆர் . ஹெச் . நாதன் அவர்கள் . “ கிறிஸ்துநாதர் தொழிலாளிகளான உங்களுக்குத் தான் துணை நிற்பார் . ஏனென்றால் அவர் மாட்டுக் கொட்டிலில் பிறந்த ஒரு எழைதான் . அதனால் முதலாளிகளுக்கு ஒரு நாளும் துணைபோக மாட்டார் . ஏழைகளின் துன்பங்களை உணர்ந்தவர் அவர் . மேலும் அவர் , “ ஊசியின் காதுகளில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையும் . பணக்காரகள் ஒரு நாளும் சொர்கத்திற்குச் செல்ல முடியாது . அவர்கள் என்றும் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் என்று எச்சரிக்கை செய்தார் . மேலும் யேசுநாதர் , மலைப்பிரசங்கத்திலே , தன்னிடம் இருந்த ஒரு ரொட்டித் துண்டை நூற்றுக்கணக்கானவர்களுக்கு பங்கிட்டு அனைவருக்கும் வழங்கினார் . அப்படி பசிக்கின்றவர்களின் முகம் பார்த்து அளிப்பவர் இயேசுபிரான் அவர்கள் . ஆனால் இந்த விசைப்படகு முதலாளிகள் ஏழைகளை பார்க்க வைத்து தின்று கொண்டிருக்கிறார்கள் . அதனால் அவர்கள் பாவிகள் . ஒரு நாளும் அவர்கள் சொர்கத்திற்குச் செல்ல மாட்டார்கள் . நாம்தான் உண்மையான கிறித்துவர்கள் . பாதிரியார் அந்த முதலாளிகளுக்கு அடிமை ஆகிவிட்டார் . அதனால் நீங்கள் போராட்டத்தைக் கைவிடாதீர்கள் , தொடருங்கள் நாம் வெற்றி பெறுவோம் என்று சொன்னார் . இதைக்கேட்ட அனைவருக்கும் மிகவும் ஆச்சரியம் . ஒரு பெரியவர் இனிமேல் பாதிரியார் வரவேண்டாம் . இவரே வந்து பிரசங்கம் செய்தால் போதும் என்று சொன்னார்கள் ..
அவர் எங்கள் வீட்டிற்கு வந்தபோது , தனக்கு இருக்கும் ஆஸ்துமா நோய் பற்றி சொன்னார் . ரஷ்ய நாட்டில் வைத்தியம் பார்த்தும்கூட தனக்கு இந்த நோய் சரியாகவில்லை என்றார் . நாங்களும் இங்கு ஈரோட்டில் பெருந்துறை சானடோரியம் மருத்துவமனையில் இருந்த மருத்துவர் டாக்டர் . ஜோசப் அவர்களை அறிமுகம் செய்து அவர் மூலம் வைத்தியம் பார்க்கலாம் என்றோம் . மருத்துவமனையில் நடந்த மதம் சம்பந்தமான பிரச்சனையால் , என் மனைவியைப் போலவே அவரும் பெருந்துறை மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்து தனியாக மருத்துவமனை வைத்துக்கொண்டார் . அவரிடம் வாங்கிக் கொடுத்த மருந்தை 30 நாட்களுக்குச் சாப்பிட்ட பின்பு அவருக்கு நல்ல குணம் தெரிந்ததாகச் சொன்னார் . மாஸ்கோவில் சென்று சாப்பிட்ட மருந்து கூட நோயைக் குணப்படுத்தவில்லை , இந்த மருந்து நன்றாகக் கேட்கிறது என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் . மீண்டும் 3 மாதத்திற்கான மருந்தை வாங்கி அனுப்பினோம் . கடைசியாக அவரை நான் மதுரையில் நடந்த இஸ்கஸ் மகாநாட்டில் சந்தித்தேன் . அவரும் “நான் உற்சாகமாக என் பணிகளைத் தொடருகிறேன் . மிகவும் நன்றாக இருக்கிறேன் . இருக்கும் வேலைகள் சற்று குறைந்தவுடன் , மீண்டும் வந்து ஈரரோட்டில் தங்கி வைத்தியத்தை தொடருவதாக எழுதியிருந்தார் . ஆனால் அவருடைய பணிகள் காரணமாக அவரால் வர முடியாமல் போனது . பிறகு நீண்ட நாட்கள் கழித்து இயற்கை எய்தினார் .
பாண்டிச்சேரியின் முதலியார் பேட்டை மேயராக இருந்த எஸ் . வி சுப்பையா போன்றவர்களும் எங்கள் வீட்டில் தங்கினார்கள் . நானும் முன்பெல்லாம் அடிக்கடி பாண்டிச்சேரி செல்வேன் . அப்போதெல்லாம் அவர் வீட்டிற்குச் சென்று அளவளாவுவேன் . ஒரு முறை கோவையில் இருந்த கலைமணி மற்றும் 2, 3 தோழர்களும் , சுப்பையா அவர்களின் பிறந்த நாள் விழாவிற்குச் சென்று அவரை வாழ்த்திவிட்டு வந்தோம் . பின் சில நாட்களிலேயே அவர் இறந்து விட்டார் . அதற்குப் பின்னும் வேளாளர் தெருவில் இருந்த அவர் வீட்டிற்குச் சென்று சரசுவதி சுப்பையா அவர்களிடத்தில் மணிக்கணக்காக பேசிவிட்டு வந்தோம் . அவர் சில குறைபாடுகளைச் சொன்னார்கள் . தோழர்கள் எவரும் கட்சியின் வயதாகிவிட்ட மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடி அவரோடு தங்கி அவருடைய மனச்சோர்வுகளை போக்குவதில்லை என்றார் . ஒரு பெரிய தலைவர் இங்கு வந்தார் . ஆனால் நான் உடல்நிலை காரணமாக அவரைச் சென்று சந்திக்க முடியவில்லை . ஆனால் அவராவது வந்து என்னைச் சந்தித்திருக்கலாம் ஆனால் அவர் வரவேயில்லை அப்படியேச் சென்றுவிட்டார் என்று குறைபட்டுக் கொண்டார் . பாண்டிச்சேரியிலே மிகச் செல்வந்தர் குடும்பம் . ஒரு முறை கட்சித் தொண்டர் ஒருவரை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றார் . நாங்கள் சைக்கிள் ரிக்ஷாவில் செல்லும் போது அவரிடம் சுப்பையா அவர்களின் வீடு தெரியுமா என்று கேட்டபோது அவர் , “ என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள் . ஒரு குழந்தையைக் கேட்டாலும் தெரியும் . அவர் வீட்டில் எப்பொழுதும் தொண்டர்கள் வந்துபோய்க் கொண்டிருப்பார்கள் . காபி வைத்துக்கொண்டே இருப்பார்கள் . 100 பேராவது காபி சாப்பிடுவார்கள் . என்றார் . நாங்களும் அவரிடம் சென்று மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்று சொல்லியபோது அவர் அதற்கான விதி முறைகளைச் சொல்லி அந்த விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே தான் சிபாரிசு செய்ய முடியும் என்று சொன்னார் . வந்திருந்தவர் ஒரு சோடா கடைக்காரர் . அந்தத் தோழருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை . விதி முறைக்கு உட்பட்டு இல்லாததால் அவருக்கு சிபாரிசு செய்ய மறுத்துவிட்டார் . அப்படி இன்றைக்கும் அவருடைய சிலை முக்கியமான வீதியில் முச்சந்தியில் வைக்கப்பட்டிருக்கிறது . ஒரு வீதிக்கு சுப்பையா வீதி என்றும் பெயரும் வைத்திருக்கிறார்கள் . அப்படி பெருமைப்படத்தக்கவர் , 2, 3 முறை எங்கள் வீட்டில் வந்து தங்கி எங்களை கௌரவப்படுத்தியிருக்கிறார் . அவருக்கு அன்றாட உணவு , காலையில் ராகி ரொட்டி , மதியம் ராகிக் களி , இரண்டு மூன்று காய் வகைகள் மற்றும் கீரை அவ்வளவுதான் .. இப்படி திரு கல்யாணசுந்தரம் அவர்களுடன் எங்கள் குடும்பத்தின் தோழமை அவர் இறந்து எரியூட்டும் வரை சுடர் விட்டுக் கொண்டிருந்தது .
அடுத்து திரு கல்யாணசுந்தரம் அவர்கள் . அவர் ஈரோட்டிலேதான் ரயில்வே தொழிலாளியாக இருந்து அரசியல் பயிற்சி பெற்றது அனைவருக்கும் தெரியும் . அவருக்கும் என் குடும்பத்தாருக்கும் நெருக்கமான ஒரு தோழமைக்கும் மேலான உறவு இருந்தது - தோழமையைவிடச் சிறந்தது எதுவும் இல்லை என்று சொல்லலாம் . ஒருமுறை ஈரோட்டிலே தமிழ் மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கூட்டம் நடந்தது . அதில் எம் . கே . என் அவர்களும் கலந்து கொண்டார் . வெள்ளைக்காரன் காலத்தில் அவர் பூட்ஸ் காலால் உதைபட்டதால் இருதயத்தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு மாஸ்கோ சென்று வைத்தியம் பார்த்து வந்தவர் . ஆகவே அவர் எங்கே சென்றாலும் , தோழருடைய வீடுகளிலேதான் தங்குவார் . உணவுக் கட்டுப்பாடு உண்டு . மாநிலக் குழு கூட்டத்திற்கு வரும்போதெல்லாம் எங்கள் வீட்டில் தான் தங்கியிருப்பார் . என் மனைவி , பிள்ளைகள் மீது மிகுந்த பாசமும் , பற்றும் கொண்டிருந்தார் . அவர் ஒரு முறை விபத்தில் காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மருத்துவமனை உணவைப் புறக்கணித்து , என் மகள் பாரதி வீட்டிலிருந்து உணவு வரவழைத்தே உண்டார் . எஸ் . பி . வி . குடும்பத்தினருக்கு மட்டுமே எனக்கு எத்தகைய உணவை எந்தெந்தக் காலகட்டத்தில் கொடுக்க வேண்டுமென்பதை அறிந்து செய்ய முடியும் , என் மருமகள் பாரதியே எனக்கு உணவு சமைத்து அனுப்பட்டும் என்று உரிமையுடன் கேட்டு வாங்கி உண்டார் . அதன்பின் பார்க்கும்போதெல்லாம் அவள் தினசரி தந்த முலாம்பழச்சாறு குறித்து பெருமையாகச் சொல்வார் . ஒரு முறை கட்சியின் ஒரு தொண்டர் திரு கல்யாண சுந்தரம் அவர்களிடம் சென்று .’ நீங்கள் ஏன் எப்பொழுதும் எஸ் . பி . வெங்கடாசலம் வீட்டில் தங்க வேண்டும்’ என்று எதிர்ப்பு தெரிவித்தார் . அதற்கு அவர் , ‘ நான் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன் . எனக்கு மருத்துவ உதவியும் , பாதுகாப்பும் வேண்டும் . அது எனக்கு அந்தத் தோழர் வீட்டில் கிடைக்கிறது . அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்குக்கூட எனக்கு என்ன தேவை என்று தெரியும் . நான் போகிற ஊர்களிலெல்லாம் இப்படி இருக்கிற தொண்டர்கள் வீட்டில்தான் தங்குவது வழக்கம் . அதனால் என்னை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது . “ என்று கடுமையாகச் சொன்னார் . ( அவருக்கு காலையில் 2 அல்லது 3 இட்லிகள் , மதியம் சாதம் , இரண்டு பொறியல் , கீரை , மாலை கூட்டத்திற்குச் செல்லும் முன்பு 2 தோசை மற்றும் டீ வேண்டும் . இரவு ஏதாவது பழங்களும் , பாலும் சாப்பிடுவார் . கிரீன் லேபிள் டீதான் அவருக்குப் பிடிக்கும் ). அங்கு அவர் வந்திருந்தபோது ஒருமுறை செங்குந்தர் பள்ளியில் ஒரு ஆசிரியர் மற்றொரு ஆசிரியரை செருப்பால் அடித்துவிட்டார் . அதோடு நிற்காமல் வெளியில் இருந்தும் தோழர்களை கூட்டி வந்து அடித்துவிட்டார் . இது பள்ளி நிர்வாகத்திற்கு செய்தி வந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தினார்கள் . நிர்வாகம் அவர்மீது நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணைக் கமிஷன் போடார்கள் . அப்போது நானும் செங்குந்தர் பள்ளி கமிட்டியில் மெம்பராக இருந்தேன் . அதுவும் நானாக போகவில்லை . செருப்பால் அடித்த அந்த தோழர்தான் என்னை சேர்த்துவிட்டார் , நான் சேர மாட்டேன் என்ற போதும் , என்னைக் கட்டாயப்படுத்தினார் . நான் திருமணம் செய்து கொண்டபோதே சாதிய அமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை என்ற அடிப்படையில்தான் உறுதியாக இருந்தேன் . அதனால் பள்ளியின் கமிட்டியில் சேர எனக்கு விருப்பமில்லை . ஆனால் அவர் என்னை நியூ செஞ்சுரி புத்தக நிர்வாகம் நடத்திய புத்தகக் கண்காட்சியில் 3000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கச் சொல்லி தலைமை ஆசிரியரிடம் சொல்லுங்கள் . அவர் வாங்கிக் கொள்வார் என்றார் . நானும் யதார்த்தமாக அவரிடத்தில் சென்று புத்தகக் கன்காட்சியில் நல்ல புத்தகங்களாக 4000, 5000 ரூபாய்க்கு வாங்குங்கள் என்றேன் . அவரும் 5000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினார் . அந்தப் புத்தகங்களுக்குரிய கமிசனை வாங்கி டிராப்ட் எடுத்து நிர்வாகத்தில் கட்டி என்னை மெம்பராக ஆக்கினார் . அவர்கள் குறுக்கு வழியில் என்னை சேர்க்கமாட்டோம் என்று சொன்னதால் எனது சித்தப்பா திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் , இவனுக்கு 18 வயது தாண்டிவிட்டது , செங்குந்தர் வகுப்பைச் சேர்ந்தவன் தான் , நாம் சொல்லுகிற கட்டணத்தைக் கட்டியிருக்கிறான் . அதனால் இவனைச் சேர்த்துக்கொள்வதில் பிரச்சனை இல்லை என்று சொல்லி சேர்த்துவிட்டார் . அப்படி தன்னுடைய பாதுகாப்பிற்காக என்னை சேரச்சொன்னவர் . கமிட்டியில் நான் ஒருவன் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவன் . செயலாளர் தி . மு . க வைச் சேர்ந்தவர் . மற்றவர்களெல்லாம் காங்கிரசுக்காரர்கள் . என்னிடம் சொல்லி விசாரனைக் கமிசனை தள்ளிப்போடச் சொன்னார் . பின்பு நேரே சேலத்திற்கு திரு கல்யாணசுந்தரம் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்திக்கச் சென்றுவிட்டார் . அவரைச் சந்தித்துப் பேசினார் . அவர் மனைவியும் ஒரு ஆசிரியை .
9
எஸ்.பி.வி. – வாழ்க்கைக் குறிப்பு – பகுதி 9
அந்த ஆசிரியர் அவருடைய மாமனார் ஊரான கருப்பூரில்தான் இருந்தார் . அங்கே கூட்டிக்கொண்டு போய் , விவரத்தைச் சொன்னார் . தோழர் எஸ் . பி . வெங்கடாசலம் சொன்னால் விசாரணைக் கமிஷனின் நடவடிக்கையை நிறுத்திவிடுவார்கள் . அதனால் அவரை இந்த நடவடிக்கையை நிறுத்தச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார் . அவரும் இன்னும் எவ்வளவு பேர் அந்த கமிட்டியில் இருக்கிறார்கள் என்று கேட்டார் . மொத்தம் 21 பேர் இருக்கிறார்கள் என்றார் . கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் என்றார் . எஸ் . பி . வி மட்டும்தான் என்றார் . மற்றவர்களைப் பற்றிக் கேட்டார் . செயலாளர் மட்டும் தி . மு . க வைச் சேர்ந்தவர் , மற்றவர்கள் அனைவரும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றார் . அதற்கு அவர் , ‘ மற்ற கட்சிக்காரர்கள் 20 பேரும் இவர் ஒருவர் பேச்சைக்கேட்கும் போது , அவர்கள் எந்த அளவிற்கு இவர்மீது மரியாதை வைத்திருக்கிறார் என்று தெரிகிறது . உனக்கு சப்போர்ட் செய்வதன் மூலம் அந்த மரியாதையை கெடுக்கச் சொல்கிறாயா , கம்யூனிஸ்ட் கட்சியே நடத்துகிற பள்ளிக்க்கூடமாக இருந்தால்கூட உன்னை டிஸ்மிஸ் செய்வதைத் தவிர வேறு வழியில்லை . அதனால் நீங்கள் போய்விட்டு வரலாம் . அதெல்லாம் செய்ய முடியாது’ , என்று சொல்லி அனுப்பிவிட்டார் . மீண்டும் அடுத்த முறை திரு கல்யாணசுந்தரம் அவர்கள் வந்திருந்தபோது அந்த ஆசிரியரும் திரும்ப வந்து அவரைப் பார்த்தார் . அவரும் என்னிடம் , ‘ சரி ஏதோ நடந்தது நடந்துவிட்டது . நான் அவரை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளச் சொல்லவில்லை . டிஸ்மிஸ் செய்தால் ஒன்றுமில்லாமல் போய்விடும் . அவரை பள்ளிக்கு வரச்சொல்லி வெளியிலேயே வைத்து ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அனுப்பி விடுங்கள் . அடுத்த நாள் அவர் வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கிக் கொள்ளட்டும் என்று சொன்னார் . இப்படி , ஒரு கட்சித் தோழராக இருந்தால்கூட தவறு செய்தால் அதை வன்மையாகக் கண்டிக்கிற ஒரு உறுதிமிக்க தோழராக இருந்தவர் கல்யாணசுந்தரம் அவர்கள் . நேர்மையாக இருப்பவர்கள் மட்டுமே அவரிடத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் .. தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது .
ஒருமுறை ஆவடியிலே டேங்க் தொழிலாளர்களின் ஆண்டு விழாக் கூட்டம் நடை பெற்றது . அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் மத்திய அமைச்சராக இருந்த , பின்னாளில் ஜனாதிபதியாக ஆன திரு வெங்கட்ராமன் அவர்கள் . அவர் பேசுகின்றபோது , ‘ இந்த சங்கம் கம்யூனிஸ்டுகள் நடத்துகின்ற சங்கமாக இருக்கிறது . நான் மத்திய அமைச்சராக இருப்பதால் என்னை அழைத்திருக்கிறீர்கள் . அதே நேரத்திலே இங்கே பேசிவிட்டு அமர்ந்திருப்பவர் , பார்லிமெண்ட் உறுப்பினராக இருக்கிற எனது நண்பர் கல்யாணசுந்தரம் அவர்கள் . இது தேர்தல் நேரம் . ஆனாலு கூட ஒரு உண்மையைச் சொல்கிறேன் . பாராளுமன்றக் கூட்டங்களிலே 500 பேர் உறுப்பினர்கள் இருந்தாலும் , ஒரு சிலர் எழுந்து கேள்வி கேட்க ஆரம்பித்தால்தான் அமைச்சர்களுக்கு ஒரு பய உணர்வும் சில தடுமாற்றங்களும் ஏற்படும் . அப்படிப்பட்ட ஒரு சிறந்த பேச்சாளர்களில் கல்யாணசுந்தரமும் ஒருவர் . அவர் பேச எழுந்தால் அவர் என்ன பேசுவாரோ , என்ன செய்வது என்று அமைச்சர்களுக்கெல்லாம் ஒரு பயம் இருக்கும் . ஏனென்றால் அவர் பாராளுமன்ற நேரத்தை வீணடித்ததே கிடையாது . தில்லியில் இருந்தபோது அவர் பாராளுமன்ற கூட்டத்தை தவிர்த்ததே கிடையாது . பாராளுமன்ற கூட்டம் இல்லாத நேரங்களில் பாராளுமன்ற நூலகங்களில்தான் பெரும்பாலும் இருப்பார் . கூட்டங்களில் பேசும்போது பல மேற்கோள்களுடன் , பல நாட்டு சட்டங்கள் , தொழிலாளர் அமைப்புகள் போன்றவற்றை குறித்துக்காட்டி தெளிவாகப் பேசுவார் . அப்பொழுதெல்லாம் அமைச்சர்கள் எழுத்து மூலமாகக் கேள்வி கேளுங்கள் என்று சொல்லி தப்பித்துவிடுவார்கள் . பின் பாராளுமன்ற நூலகங்களில் சென்று படிக்க வேண்டியதைப்படித்து , பிறகு அதன் மூலம் பதில் சொல்கிற நிலை இருந்தது .
ஒரு முறை பள்ளிபாளையத்தில் இருக்கிற சேஷசாயி பேப்பர் மில்லிலே , என்ஜினீயராக பணியாற்றிய 4 பேர்கள் அந்த மில்லில் இருந்து வெளியே வந்து தர்மபுரி பேப்பர் மில் என்ற பெயரில் ஒரு புதிய பேப்பர் மில் தொடங்குவதற்கான வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள் . அவர்கள் நிதியாக ஷேர்களெல்லாம் திரட்டி ஜெர்மனியிலிருந்து மிஷினெல்லாம் வாங்கி வந்துவிட்டார்கள் . மேற்கொண்டு மிஷின்கள் வாங்குவதற்கு பணம் தேவை என்பதால் TIIC ல் லோன் கேட்டிருந்தார்கள் . இவர்கள் சேஷசாயி மில்லில் இருந்து வந்ததனால் அவர்களையே இது இலாபகரமான தொழிலா என்று அந்த பொது வங்கி கேட்டிருந்தது . இது நீடித்து இலாபம் கிடைக்கக்கூடிய தொழிலா என்றும் , ‘ கொல்லன் தெருவில் ஊசி விற்பது போல’ அதே மில்லில் போய் அபிப்ராயம் கேட்டார்கள் . அவர்கள் ‘இது அதிக நாட்கள் இலாபத்தோடு இருக்காது . கடன் கொடுப்பது சரியல்ல என்று சொல்லி விட்டார்கள் . இதைக் காரணம் காட்டி நிர்வாகம் கடன் தர மறுத்துவிட்டது . ஒரு புறம் மிஷின் வந்து இறங்கிவிட்டது . மேலும் மிஷின்கள் வாங்க வேண்டியிருந்தது . ரன்னிங் கேப்பிட்டல் என்று சொல்லக்கூடிய தொழில் நடத்துவதற்கான முதலீடு வேண்டும் . இந்த நேரத்தில் எதுவும் செய்ய முடியவில்லை . மனோகர் என்ற என்ஜினியர் கல்யாணசுந்தரம் மற்றும் என்னோடு தோழமையோடு இருப்பது தெரிந்து , என்னிடத்தில் கேட்டார்கள் . தொழில் தொடங்குவது என்பதில் அவருக்கு ஆட்சேபம் இருக்காது . அதில் உள்ள குறைபாடுகள் எல்லாம் என்ன எனபதை அவருக்குச் சொல்லுங்கள் என்று சொன்னேன் .
அது போல திரு கல்யாணசுந்தரம் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது அவர்களும் கல்யாணி என்ற இன்னொரு என்ஜினீயரும் வந்து நடந்ததெல்லாம் சொல்லி , தாங்கள் ஏற்கனவே தங்கள் சக்திக்கு மீறி ஒரு பெருந்தொகையை அதில் முதலீடு செய்துவிட்டதாகவும் சொன்னார்கள் .’ இங்கெல்லாம் சொல்லி பிரயோசனம் இல்லை . நான் 4, 5 நாட்களில் தில்லி பாராளுமன்ற கூட்டத்திற்காகச் செல்கிறேன் . அங்கு எல்லா பேப்பர்களையும் எடுத்துக்கொண்டு வாருங்கள் . பார்க்கலாம்’ என்றார் . அவர்களும் அதே போல தில்லிக்குச் சென்று அனைத்தையும் கொடுத்துவிட்டு வந்தார்கள் . அவரும் , ‘ ஒரு 15 நாட்களில் கூட்டம் முடிந்து திரும்பி வந்தவுடன் , எஸ் . பி வெங்காடசலத்திடம் போன் செய்து சொல்கிறேன் . அவர் வீட்டிற்கு வரும்போது வாருங்கள் பேசிக்கொள்ளலாம்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார் . அதுபோல தில்லியிலிருந்து திரும்பி வந்தவுடன் , இவர்களை வரவழைத்து அவர் கேட்ட கேள்வியில் இவர்கள் அசந்துவிட்டார்கள் . எல்லாம் முடிந்த பின்பு , நான் டிக் நிறுவனத்திடம் பேசிவிட்டேன் . நீங்கள் சென்னையிலே இருக்கிற டிக்கில் போய் மேனேஜிங் டைரக்டரைப் பாருங்கள் . நான் போன் செய்து சொல்லிவிடுகிறேன் என்றார் . அந்த என்ஜினியர் அவருடன் பேசி முடித்து வெளியே வந்தவுடன் , என்னிடம் மிகவும் ஆச்சரியப்பட்டு பேப்பர் மில்லில் இத்தனை ஆண்டுகாலம் வேலை பார்த்த எங்களுக்கே தெரியாத பல விசயங்களை புள்ளி விவரங்களுடன் கொடுக்கிறாரே என்றும் , உற்பத்தி முறை பற்றியெல்லாம் , முழுமையான ஞானம் கொண்டிருக்கிறாரே என்றும் சொல்லி மாய்ந்து போனார்கள் . அவர் இது சம்பந்தமாக அனைத்து விவரங்களும் எங்கெங்கு பார்க்க வேண்டுமோ அங்கெல்லாம் பார்த்து படித்துவிட்டுத்தான் , பம்பாயில் இருக்கிற தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு , தொழிலாளர்கள் துவங்குகிற தொழில்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்பது அரசாங்கத்தின் கொள்கையாகவும் , இந்திரா காந்தியின் கொள்கையாகவும் இருக்கிறது . ஆகவே நீங்கள் முதலாளிகளுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவது சரியல்ல . தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மறுபரிசீலனை செய்யுங்கள் , என்று சொன்னார் . அவர்களும் வேறு வழியில்லாமல் , அனைத்து பரிசீலனைகளையும் முடித்து சென்னைக்குச் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பார்க்கச் சொன்னார் . நாங்கள் செல்வதற்குள் , கல்யாணசுந்தரம் அவர்கள் அங்கு போன் செய்து பேசிவிட்டார் . நான் அவர்களை அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள ஜெனரல் மேனேஜரைச் சந்திக்க சென்றபோது அவர் தானே வெளியில் வந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்றார் . செல்வதற்கு முன்பே கல்யாணசுந்தரம் அவர்கள் நீங்கள் ரன்னிங் கேப்பிடல் தயார் செய்து கொண்டு போங்கள் . அவர்கள் கடன் தொகை தருவார்கள் என்று சொன்னது போலவே மேனேஜிங் டைரக்டரும் சொன்னார் . பின் அவர்களுக்கு கடன் உதவி கிடைத்தது . மில் நடக்கவும் ஆரம்பித்தது . இப்படி தொழில் நுணுக்கங்களைப் பற்றிய எந்த அனுபவமும் இல்லாமலே , படித்து அத்தனை விசயங்களையும் அறிந்து கொண்டு அதற்கேற்றவாரு , சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஒரு செயலை நடத்துவது என்பது கல்யாணசுந்தரம் அவர்களுடைய சிறபம்சம் . அவர்களால் மட்டுமே இப்படி ஒரு காரியத்தை இத்தனை ஈடுபாட்டுடன் செய்ய முடியும் .
நாங்கள் ஈரோட்டில் பாரதி நூற்றாண்டு விழா நடத்தினோம் . அரசு நடத்துவதைவிட மிகச் சிறப்பாக பல்வேறுகூட்டங்கள் மற்றும் விழாக்கள் நடத்தினோம் . தலை சிறந்த பேச்சாளர்களைக் கூட்டிவந்து நடத்தினோம் . சென்னை இளைஞர் இசைக்குழுவை நடத்தியவர் எம் . பி . ஸ்ரீநிவாசன் . அவரையும் இந்த விழாவிற்கு அழைத்திருந்தோம் . அவரைப் பற்றி பின்னால் சொல்கிறேன் . பிறகு கிருபானந்த வாரியார் போன்றவர்களையும் கூட்டி வந்து ஓராண்டுகாலம் பாரதியைப்பற்றி பேச வைத்தோம் . இதெல்லாம் கூட காற்றில் போய்விடக்கூடும் என்பதால் , பாரதியின் ஏழு புத்தகங்களை நாங்களே பிரசுரித்து வெளியிட்டோம் . வெள்ளைக்காரர்கள் காலத்தில் தடை செய்யப்பட்ட , ‘ ஆறில் ஒரு பங்கு’ என்ற நூலும் அதில் ஒன்று . பள்ளி , கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தி , ஒன்பது கல்வி நிறுவனங்களில் பாரதியின் கல்வெட்டுகளும் வைத்தோம் . ஒரு கல்வெட்டை புதிதாகத் திறக்க இருந்த ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குக் கொடுத்தோம் . அப்போது கலெக்டராக இருந்த தியானேசுவரன் அவர்கள் மாவட்ட த்திற்கும் ஒன்று வேண்டும் என்று கேட்டார் . நானும் , என் மனைவி மேரி வெங்கடாசலம் அவர்கள் பெயரால் அந்தக் கல்வெட்டை அடித்துக் கொடுத்தேன் . அதில் இருந்த வாசகம் என்னவென்றால் ,
தவறாக வேதம் ஓதுகின்ற பாப்பானைவிட
ஒழுங்காக சரைக்கின்ற நாவிதன் மேற்குலத்தான் .
இதைப் பார்த்தவுடன் அவர் , இது ஒரு சாதியை இழிவுபடுத்துவதாக இருக்கிறது . அதனால் இதை பொது இடத்தில் வைக்க முடியாது , வேறு கொடுங்கள் என்று கேட்டார் . நானும் வேறு ஒரு கல்வெட்டை அடித்துக் கொடுத்தேன் . பின்பு அதுவும் அரசியல் காரணங்களுக்காக வைக்கப்பட்ட அந்த கல்வெட்டு எடுக்கப்பட்டது என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன் . அப்போது ராமானந்தம் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பேற்று முழு நேர ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்தார் . நாங்கள் பாரதி நூற்றாண்டு விழாவை கையிலிருந்த பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தோழர்கள் மூலமாக அடித்த கல்வெட்டுகளையும் , அச்சடித்த புத்தகங்களையும் கொண்டு சேர்ப்பதில் திரு ஜீவானந்தம் அவர்கள் மிகப்பெரும் பணியாற்றினார்கள் . அவர் அச்சடித்த புத்தகங்களில் ஒன்று ‘பாரதியும் சுப்பிரமணிய சிவாவும்’ என்ற நூல் . அந்த புத்தகத்தை வெளியிட்டபோது சுப்பிரமணிய சிவா அவர்களின் 99 வது ஆண்டு விழா பாப்பாரப்பட்டியில் நடப்பதாக இருந்தது . அந்த சமயமாக இருப்பதால் ராமானந்தம் அவர்கள் சுப்பிரமணிய சிவா பற்றிய புத்தகத்தில் 1000 பிரதிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார் . அவருக்கு இவ்வளவு புத்தகம் வாங்குவதற்கு வசதியும் கிடையாது , அதற்காக வசூல் செய்யும் திறமையும் கிடையாது . ஆகவே டாக்டர் . ஜீவா அவர்கள் 1000 புத்தகங்கள் அச்சடித்து இந்திய சோவியத் கலாச்சாரத்திற்கு பயன்படுத்துங்கள் என்று சொல்லிக் கொடுத்தார்கள் . இவர் அந்தப் புத்தகம் வந்தவுடன் , அவர் சேலத்தில் திரு கல்யாணசுந்தரம் அவர்களைச் சந்தித்து சுப்பிரமணிய சிவாவின் 99 வது ஆண்டு விழாவிற்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் . அவரும் ஒரு அரசாங்கம் நடத்துவதைவிட மிகவும் சிறப்பாக பாரதியின் நூற்றாண்டு விழாவை ஈரோட்டிலே கொண்டாடி வருகிறார்கள் . இவருடைய தந்தையார் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்டநாள் தோழர் என்று சொல்லி , அவர் இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . ராமானந்தம் அவர்கள் எனக்கும் கல்யாணசுந்தரம் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று நினைத்துக்கொண்டு இப்படி சொல்லிவிட்டார் . கல்யாணசுந்தரம் அவர்கள் , ‘ கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் , நல்ல நிலையில் செயல்பட வேண்டும் என்பதற்காக குடும்பமே சேர்ந்து பாடுபடுகிற ஒரு சில குடும்பங்களில் எஸ் . பி . வெங்கடாசலம் அவர்களின் குடும்பமும் ஒன்று என்று . ஆனால் ஏனோ தெரியவில்லை , ஒரு சில தோழர்கள் அவர் வளர்ச்சியைப் பொறுக்காமல் , அதனை பயன்படுத்திக்கொள்ளாமல் அவரை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் . அவருடைய குடும்பம் எப்படி என்பது எனக்குத் தெரியும் . ஈரோட்டிலே செல்வாக்குள்ள , பேரு பெற்ற ஒரு குடும்பம் . அவருக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி , தொழில் செய்து முன்னுக்கு வருகிறாரே தவிர , கட்சியைப் பயன்படுத்தி முன்னுக்கு வரவில்லை . அது பலருக்குப் பொறாமையாக இருக்கிறது . இதைப் பயன்படுத்திக்கொண்டு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோழர்களுக்கு வரவேண்டும் , என்று சொல்லி தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து கண்ணீர்த் துளிகளைத் துடைத்துக் கொண்டார் . உங்கள் குடும்பத்திற்கும் அவருக்கும் உள்ள உறவு எனக்குத் தெரியாமல் போய்விட்டது . அவர் கண்களில் இரண்டு சொட்டு கண்ணீரைப் பார்த்தவுடன் தான் எனக்கு அது புரிந்தது’ என்று சொன்னார் . ’ பின் அவர் சுப்பிரமணிய சிவாவின் 99 வது ஆண்டு விழாவிற்கு வந்திருந்து அந்த நூலை வெளியிட்டார் . மக்கள் பெருந்திரளாக வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்’ என்றும் அந்தத் தோழர் சொன்னார் . நூறாவது ஆண்டு விழா அரசாங்கம் கொண்டாடுகிற வகையில் தபால் தலையும் , அஞ்சல் கவரும் வெளியிடுவதாகச் சொன்னார்கள் . அப்போது பாஸ்கரன் என்று சொல்லுகிற தபால் துறைத் தலைவர் தர்மபுரியில் இருந்தார் . டாக்டர் ஜீவா அவர்களுக்கு மிகவும் வேண்டியவர் . அதனால் இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அழைப்பு கொடுத்திருந்தார் . அதனால் டாக்டர் ஜீவா , நான் , மனோகர் , ராமலிங்கம் , போன்ற பல தோழர்கள் கார் எடுத்துக்கொண்டு பாப்பாரப்பட்டிக்கு நேரத்தோடு கிளம்பிவிட்டோம் . அவருடைய ஆஸ்ரமம் எல்லாம் சென்று சுற்றிப்பார்த்தோம் . அவருடைய தோழர் குப்புசாமி என்று ஒருவர் , மிக அருமையாக மிருதங்கம் வாசிப்பவர் . அவர் டீக்கடை வைத்திருந்தார் . அங்கு போய் டீ சாப்பிடுவிட்டு அவர் எடுத்து வைத்திருந்த குரூப் போட்டோக்களெல்லாம் பார்த்தோம் . 9 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய நிகழ்ச்சி , மணி 10, மணி , 11 மணி என்று ஆன பின்பும் துவங்கவில்லை . குழந்தைகள் எல்லாம் மணிக்கணக்காக வெளியில் வரிசையில் நிற்கிறார்கள் . நான் தலைமை ஆசிரியரிடம் சென்று ,
“9 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது என்று போட்டிருக்கிறீர்கள். இவ்வளவு தாமதம் ஆகிறது. குழந்தைகள் எல்லாம் எவ்வளவு நேரமாக நின்று கொண்டிருக்கிறார்களே நிகழ்ச்சியை ஆரம்பித்துவிடலாமே “ என்றேன். அதற்கு அவரும், இது அரசாங்க நிகழ்ச்சியாக இருப்பதால் கலெக்டர் அவர்கள் வந்து நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க வேண்டும். அதுவரை காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றார். நானும் சுப்பிரமணிய சிவா அவர்களின் உருவச் சிலைக்கு மாலையணிவித்துவிட்டு கிளம்பலாம் என்று நினைத்த போது அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி அவர்கள் கலெக்டர் மாலைதான் முதலில் இருக்க வேண்டும், பிறகுதான் மற்றவர்கள் மாலை அணிவிக்க வேண்டும் என்றார்கள். ஆனால் நான் மாலையை அணிவித்துவிட்டு வந்தேன். பின்பு மாலையை அவர்கள் எடுத்துவிட்டாலும், அங்கிருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வந்து, ‘ஐயா, உங்களுடைய துணிச்சலை பாராட்டுகிறேன். 99ல் கல்யாணசுந்தரம் அவர்கள்தான் வந்திருந்து புத்தகத்தை வெளியிட்டார்கள். நூறும் நீங்கள்தான் நடத்துகிறீர்கள். 101, 102ம் கூட நீங்கள்தான் நடத்துவீர்கள். உங்களைத் தவிர இந்த தேசபக்தரை வேறு யார் கௌரவிக்க முடியும் என்று என் கையைப் பிடித்து குலுக்கி மிகவும் சந்தோசப்பட்டார்கள். பாப்பாரப்பட்டியில், சின்னைய முதலியார் என்பவர் சுப்பிரமணிய சிவா அவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவர் எழுதிய கடித்தங்களைனைத்தும் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் எழுதப்பட்டு புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. கல்யாணசுந்தரம் அவர்கள் அவருடைய மாமனார் வீட்டில் சின்னையன் என்கிற அவருடைய மைத்துனருடன் இருக்கிறார். அவர் மைத்துனரின் மகன் பெயர் மாணிக்கம். அந்த மாணிக்கத்திற்கு மூளை சற்று சரியில்லாமல் இருந்தது. பள்ளிக்கூடத்திற்கும் அனுப்ப முடியாத நிலையில் இருந்தார். பேசுவதற்கும் சற்று சிரமப்பட்டு, திக்கித் திக்கிதான் பேசுவார். ஒரு முறை நான் அங்கே கருப்பூருக்குச் சென்றிருந்த போது, என்னிடம், “இவனை எப்படியாவது கலைமகள் பள்ளியில் சேர்த்து, ஒரு 5வது அல்லது 8ம் வகுப்பு வரை படிக்க வைக்க முடியுமா என்று கேட்டார்கள். நானும் என் சித்தப்பா மீனாட்சி சுந்தரம் முதலியார் அவர்களிடம் சொல்லி ஹாஸ்டலில் சேர்த்துவிட்டேன். அவர் அதற்கான கட்டணம் கூட வாங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவருடைய மூளை குறைபாடெல்லாம் தீர்ந்து இப்போது சேலத்தில் குழந்தையோடு இருக்கிறார்கள். அந்த உதவியை நான் செய்ததை அவர் என் குடும்பத்தில் உள்ள ஒரு பெரிய பிரச்சனையைத் தீர்த்துவிட்டீர்கள் தோழரே என்று சொல்லி சந்தோசப்பட்டார்கள். ’என்ன தோழரே ரொம்ப அலைச்சல் படுகிறீர்களே என்று சொன்னால், அதற்கு அவர் ‘நான் கட்சிப் பணியில் இருக்கும்போதே சாக விரும்புகிறேன். படுத்து உயிர்விடக்கூடாது’ என்று சொல்லுவார். ஹார்பர் தொழிலாளிகளின் போனஸ் பிரச்சனை சம்பந்தமாக தில்லி, கல்கத்தா, விசாகப்பட்டிணம், சென்னை, கொச்சின் போன்ற அனைத்து ஹார்பர் தொழிளாளர்களும் சேர்ந்து, அனைத்து தொழிற்சங்கங்களும், ஒன்று கூடி அரசாங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளந்தது. யு.சி.பி.ஐ. என்கின்ற ஒரு அமைப்பை மொகீசன் மற்றும் கல்யாணசுந்தரம் அவர்களெல்லாம் துவக்கி வைத்தார்கள். அந்த நேரத்திலே, கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒன்று சேர்ப்பது என்கின்ற இயக்கமாக, கல்கத்தாவில் ஒரு கூட்டம் தினசரி நடந்து கொண்டிருந்தது. பகல் முழுவதும் தில்லியில் மந்திரியுடன் பேச்சு வார்த்தையும், மாலையில் கல்கத்தா சென்று பேச்சு வார்த்தையும் நடத்துவதற்காக விமானத்தில் மூன்று, நான்கு நாட்கள் அலைந்தார்கள். அவர் தில்லி சென்றபோது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டுதான் சென்றார். அப்போது டாக்டர், இருதயத்தில் பிரச்சனை இருப்பதால், விமானம் மூலம் உயரமாக போகும் போது ஆக்ஸிஜன் குறையும். அதனால் விமானப்பயணத்தைத் தவிர்ப்பது நல்லது என்றார். அப்பொழுதும் தன் உடல் நலம் பற்றி கவலைப்படாமல் கட்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒரு மகத்தான மனிதர் அவர். தில்லிக்கும், கல்கத்தாவிற்கும் விமானத்தில் பறந்து பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்து கையெழுத்தான பிறகு, எல்லோரும் சாப்பிடச் சென்றபோது இவருக்கு மாரடைப்பு வந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கேயே மரணமடைந்து, அவர் உடல் எடுத்து வரப்படுகிறது. எங்களுக்கு தகவல் கிடைத்தபொழுது நானும், தோழர் தா. பாண்டியனும், கொடுமுடிக்கு அருகிலுள்ள தாமரப்பாளையத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம். போனில் செய்தி வந்தபோது, தோழர் பாண்டியன் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை இடைமறித்து, விசயத்தை சொல்லி, கூட்டத்தை முடிக்கச் சொல்லி, நேரே கார் எடுத்துக் கொண்டு சென்னை கிளம்பிவிட்டோம். இறுதிச் சடங்கெல்லாம் முடியும் வரை அங்கேயே இருந்துவிட்டுத்தான் திரும்பினோம்.
ஈரோட்டிலே , கம்யூனிஸ்ட் கட்சியை கிராமம் தோறும் சென்று அங்கு கிராம விவாசாயிகளுடன் தங்கி , அவர்களுடைய உணவை உண்டு விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்த்தவர்கள் என்று சொன்னால் அது எம் . சி . சீனிவாசன் பிரதானமானவர் . அவர் ஒரு மூன்றாண்டு காலம் எங்கள் வீட்டிலேயேத் தங்கி கட்சியில் முழு நேரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் . எங்கள் வீட்டிலேயே காலையும் , மதிய்மும் சாப்பிடுவார் . அவருக்கென்று ஒரு தட்டு எங்கள் வீட்டில் இருந்தது . மற்றொரு முழுநேர விவசாய சங்க ஊழியர் , கே . சி . தர்மலிங்கம் அவர்கள் . அவரும் எங்கள் வீட்டிலேயேதான் சாப்பிட்டுக்கொண்டு முழு நேர ஊழியராகப் பணியாற்றிய முக்கியமானத் தோழர்கள் . எம் . சி . சீனிவாசன் அவர்கள் , கட்சியை விட்டுவிட்டு , சார்ட்டட் அக்கவுண்ட் படித்து ஆடிட்டராகப் பணியாற்றியபோது அவர் வீட்டிற்கு ஒரு முறை சென்றிருந்தேன் . இரவு நேரம் . ஊஞ்சல் எடுத்துப்போட்டு உட்காரச் சொன்னார் . அவருடைய மனைவி மாலினி ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் . பின் சாப்பாடு எடுத்து வைக்கச் சொன்னார் . அவர் மனைவியும் கார் டிரைவரை அனுப்பி வாழை இலை வாங்கி வரச் சொன்னார் . அதற்கு தர்மலிங்கம் அவர்கள் எதற்கு இலை என்று கேட்டார் . சாப்பிடுவதற்குத்தான் என்று அவர் மனைவி கூறியபோது , ‘ அவர் வீட்டில் மூன்று ஆண்டுகள் தங்கி அவர்கள் தட்டிலேயே சாப்பிட்டிருக்கிறேன் . அவருக்கு எதற்கு இலை . வெள்ளித் தட்டை எடுத்து வந்து அவருக்கு சாப்பாடு போடு’ என்று சொன்னார் . அப்போதுதான் அந்த அம்மாவிற்கு நான் யார் என்பது புரிந்து , ‘ நீங்கள்தான் எஸ் . பி . வி . அவர்களா ? உங்களைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்’ என்று சொன்னார்கள் . பின்னால் அவர் சேலத்திலிருந்து சென்னை சென்று எம் . ஜி . ஆர் . அவர்களின் கணக்கு வழக்குகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார் . எம் . ஜி . ஆர் . அவர்கள் தி . மு . க . வைவிட்டு வெளியே வந்து அ . தி . மு . க . வை ஆரம்பித்ததற்கு பிரதான காரணமாக இருந்தவர்கள் என் . சி . சீனிவாசன் , என் . கல்யாண சுந்தரம் , பாலதண்டாயுதம் , சுப்பையா போன்றவர்கள்தான் . அவர் சென்னையிலே குடியிருந்த பொழுது தினசரி இவர் வீட்டில் இவர்களெல்லாம் சந்திப்பார்கள் . பின் எம் . ஜி . ஆர் அவர்களை தி . மு . க . விலிருந்து வெளியேற வைத்து , அ . தி . மு . க தொடங்கிய காலகட்டத்திலே பெரும் வீச்சாக தி . மு . க . வளர்ந்தது . அப்பொழுது , கருணாநிதி அவர்கள் தன்னுடைய முரசொலி பத்திரிக்கையில் , ’ தம்பிக்குக் கடிதம்’ என்ற பகுதியில் ஒரு கடிதம் எழுதினார் . அதில் , எம் . ஜி . ஆர் ., தி . மு . க . விலிருந்து பிரிந்து சென்றதற்கு காரணமே வீனஸ் காலனியிலேயே வசிக்கின்ற அந்த ஆடிட்டர் பாப்பான் தான் என்று பகிரங்கமாக எழுதினார் . அதன் பிறகுதான் கருணாநிதியின் லஞ்ச , ஊழல் கணக்குகள் தோண்டப்பட்டு அன்றைய ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டு , கருணாநிதியின் மந்திரி சபையும் டிஸ்மிஸ் செய்யப்பட்டது . அந்தக் குற்றத்தின் அடிப்படையில்தான் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது . அந்த சர்க்காரியா கமிஷனிலே , அரசாங்கத்தின் தரப்பிலே வாதிட்டவர் , மிகப்பெரிய வழக்கறிஞர் , சிறந்த கம்யூனிஸ்ட்டும் , இந்திய சோவியத் கலாச்சாரக் கழகத்தை இந்தியாவிலேயே சிறந்த முறையில் நடத்திக் கொண்டிருந்த தோழருமான என் . ஜே . வானமாமலை அவர்கள் . அவர்தான் அரசின் வழக்கறிஞராக ஆஜரானார்கள் . கொடுக்கப்பட்ட குற்றசாட்டுகளில் சில உண்மையானவை என்று நிரூபித்தார் . அதற்குப் பிறகு பல அரசியல் காரணங்களால் அந்த வழக்கு கைவிடப்பட்டது . பின் சர்க்காரியா கமிஷனே கைவிடப்பட்டது . அன்று பூச்சி மருந்து ஊழல் , சக்கரை ஊழல் , கோதுமை ஊழல் என பல குற்றங்களுக்கு ஆதாரம் திரட்டியவர் எம் . சி சீனிவாசன் அவர்கள் . அவருடைய இறுதிக்காலத்தில் பக்கவாதம் வந்து அவர் வீட்டிலேயே இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது . அவர் இறந்த பொழுது எம் . ஜி . ஆர் . அவர்களுக்கும் உடல் நலம் சரியில்லை . மாலை 5 மணிக்குத் தான் வந்த பிறகு உடலை எடுக்கலாம் என்று அவர் சொல்லியனுப்பியிருந்தார் . அதன் பிறகு அவர் பெரிய மாலையுடன் வந்து மரியாதை செலுத்திய பின்புதான் அவருடைய பிரேத ஊர்வலம் தொடங்கியது . இப்படி ஒரு மிகச் சிறந்த தொழிற்சங்க ஊழியராகவும் , கம்யூனிஸ்ட் கட்சி தொண்டராகவும் , விவசாய சங்க ஊழியராகவும் , இருந்தவர் தோழர் சீனிவாசன் அவர்கள் . சுமார் 3 ஆண்டு காலம் எங்கள் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர் . என்னுடைய மனைவியார் , வைத்தியத்துறையிலே பணியாற்றியதால் , தோழர்களுக்கு என்னால் மருத்துவ உதவிகள் செய்ய முடிந்தது . எனக்கு பல்வேறு மருத்துவர் நண்பர்களும் நர்சுகளும் , தொடர்பில் இருந்ததால் , ஒரு முறை மண்ணடியில் குடியிருந்த சிண்டன் அவர்களின் வீட்டிற்குச் சென்றேன் . அவர் மனைவி ஆசிரியர் பணியில் இருந்தார் . அவருக்கு கடுமையான ஆஸ்துமா நோய் தாக்கியிருந்தது . திரு சிண்டன் அவர்கள் தன் மனைவியின் நோய் குறித்து மிகவும் வருத்தத்தோடு என்னோடு பேசினார் . அவருக்கு எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் . நானும் அவரை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள இண்டர்னேஷல் மெடிகல் மருத்துவமனையின் கிளையில் வெளிநாட்டில் படித்து இங்கு உயர் அதிகாரியாக ஜெயலட்சுமி என்பவர் இருந்தார்கள் . அவரிடம் சொல்லி சிண்டன் அவர்களின் மனைவியின் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தேன் . மறு நாள் திரு சிண்டன் அவர்கள் மனைவியுடன் வந்து மருத்துவ உதவியும் பெறும் வகையில் அவருக்கு எல்லா பரிசோதனையும் செய்தார்கள் . ஆஸ்துமா நோய் பெருமளவில் கட்டுப்பட்டு , மிக நல்ல நிலையிலேயே கடைசி வரையில் இருப்பதாக அவர் பல முறை என்னிடம் சொல்லியிருக்கிறார் .
அது போல பாண்டிச்சேரியில் வைத்தியலிங்கம் என்று சொல்கிற சாதாரண தொழிலாளி , முதலியார் பேட்டையின் கம்யூன் நேயராகப் பணியாற்றியவர் . அவர் சய ரோகத்தினால் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார் . அவரை நடேசன் அவர்கள் என்னிடம் கூட்டி வந்தார்கள் . அவரை பெருந்துறை சேனிடோரியத்தில் சேர்த்து , அங்கு மூன்று மாத ஓய்வும் , மருத்துவ உதவியும் பெற்று , நல்ல நிலையில் திரும்பி , எங்கள் வீட்டிலும் ஒரு வாரம் தங்கிவிட்டு , பாண்டிச்சேரி சென்றார்கள் . இப்படியாக என்னால் என் மனைவியின் மூலமாக பல தோழர்களுக்கு வைத்திய உதவிகளை செய்ய முடிந்தது . அது போலவே ஈரோட்டிலே , சம்பத் என்று சொல்கிறவர் , அவருடைய தந்தையார் , ஒவ்வொரு முறையும் சுயேட்சையாக கம்யூனிஸ்ட் கட்சிக்காக நிற்பார் . வெற்றி பெறாவிட்டாலும் ஒவ்வொரு முறையும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடனே கருங்கல் பாளையத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்தார்கள் . பிரதர் சுப்பிரமணியம் என்று சொல்வார்கள் அவரை . சம்பத் அவர்கள் அரசாங்க தலைமை மருத்துவ மனையில் டி . எம் . ஓ வாக இருந்தவர் , என் மகன் டாக்டர் ஜீவாவுடன் படித்தவர் . பள்ளிபாளையத்திலிருந்து பெரும்பான்மையானவர்கள் , வைத்திய உதவிக்காக , டி . எம் . ஓவின் சிபாரிசு கடிதம் வேண்டி வருவார்கள் . நானும் போன் செய்து விடுகிறேன் நீங்கள் சம்பத் அவர்களைச் சென்று பாருங்கள் என்று சொல்வேன் . சம்பத் அவர்களும் , தாம் ஓய்வு பெறும் வரையில் கட்சித் தோழர்களுக்கு மிகச் சிறந்த முறையில் வைத்திய உதவியும் , நல்ல மருந்துகளையும் கொடுத்து உதவிக்கொண்டிருந்தார் .
அது போலவே சட்டத்துறையிலே , என் . டி . வி . அவர்கள் , நம் தோழர்களுக்கு காசு பெறாமலேயே பல் வேறு சிறந்த வழக்கை நடத்தியவர் , இந்திய சோவியத் கலாச்சாரக் கழகத்திலே அவரோடு சேர்ந்து பணியாற்றிய காலத்திலிருந்து தோழர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் , ஒரு முறை ஒரு வழக்கு தோற்றுவிட்டது . சென்னைக்குச் செல்ல வேண்டும் . என் . டி . வி . அவர்கள் சிவில் வழக்குகளை எடுத்துக் கொள்வதில்லை . கிரிமினல் வழக்கு மட்டுமே எடுத்துக்கொள்வார்கள் . இது சிவில் வழக்கு என்பதால் எஸ் . பி வெங்கடாசலம் சொன்னால் அவர் எடுத்துக்கொள்வார் என்று யாரோ சொன்னதால் நாட்ராயன் என்பவர் என்னிடம் வந்தார் . என் மகள் சென்னையில் இருந்தார் . என் மருமகன் சென்னை பல்கலைகழகத்தில் லைப்ரேரியனாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார் . நேரே வீட்டிற்கு கூட்டிச் சென்று அந்தத் தோழரை அங்கே குளிக்க வைத்து , உணவு கொடுத்து , எம் . டி . அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன் . அவர் , சிவில் வழக்கு எடுப்பதில்லையே என்று சொன்னபோதும் , நான் எடுத்தே ஆக வேண்டும் என்று சொன்னதால் , அவரும் அவருடைய ஜூனியர் வழக்கறிஞரான அசோக் என்பவரைக் கூப்பிட்டு அந்த வழக்கை நடத்தச்சொல்லி வெற்றி பெறச் செய்தார்கள் .
அது போலவே , ஜோடிக்கப்பட்ட ஒரு கொலை வழக்கு . கருப்பையா என்று சொல்லப்படுகின்றவர் , கூட்டுறவுத் துறையிலே பணியாற்றியவர் . நெசவாளர்களுக்கு கார்ட் இல்லையென்றால் அதை ஏற்பாடு செய்து கொடுப்பதற்கு உதவி செய்தார் . அவர் தன்னுடைய மருமகளை நெருப்பு வைத்து கொளுத்திவிட்டதாக ஒரு வழக்கு நடந்தது . அவர் மீதும் , அவர் மனைவி மற்றும் மகன் மீதும் வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட வழக்கு அது . வெளியேயும் , உள்ளேயும் கதவு சாத்தி இருந்தும் , எப்படி நெருப்பு வைக்க முடியும் என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாதபடிக்கு , அந்த சாட்சியெல்லாம் ஜோடிக்கப்பட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது . அப்போது என் . டி . வி . யிடம்தான் சென்றேன் . அவரும் வழக்கை எடுத்துக்கொண்டார் . நானும் ‘தோழரே , அவர் கேஸ் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்’ என்றதற்கு , ‘ நான் வாதாடத்தான் முடியும் . தீர்ப்பு சொல்வது நீதிபதியின் கையில் இருக்கிறது . ஆகவே கவலைப்படாதீர்கள்’ என்றார் . பின்பு இந்த வழக்கு வெற்றி பெற்று அவர்கள் மூவரும் விடுதலை பெற்றார்கள் என்பது எனக்கு சமீபத்தில்தான் தெரிந்தது . இப்படி பல வழக்குகள் , ஸ்டாம்ப் பேப்பருக்குத் தவிர ஒரு பைசா கூட வாங்காமல் இலவசமாக தோழர்களுக்காக நடத்திக்கொடுத்தார் .
ஈரோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் ஐந்து நாட்கள் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்திற்கு இலவசமாகக் கொடுத்தார்கள் .
சோடா கடை பெரியண்ணனின் மகன் ஒரு கொலை கேசில் மாட்டிக்கொண்டார் . அப்பீல் செய்ய வேண்டும் . நேரே அவரிடம் கூட்டிச் சென்றேன் . அவர் இடையன்காட்டு வலசின் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவகத்தில் இடையறாத பணியுடன் , கட்சியின் தூணாக இருந்தவர் . எம் . டி . வி இந்த வழக்கிலும் வெற்றி பெற்று அவருடைய மகனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார் . இப்படியாக , மருத்துவத் துறையிலும் , சட்டத் துறையிலும் பல தோழர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன் .
பி . எம் . சுப்ரமணியம் அவர்கள் , வெள்ளைகாரன் காலத்திலே ரயில்வே டிரைவராக இருந்து கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தவர் , கட்சிக்காக ரயில்வே தொழிற்சங்கத்திற்காக வேண்டி தன் வேலையை உதறிவிட்டு , முழுநேர பணியாளராக பணியாற்றியதை எங்களால் மறக்க முடியாது . அவர் கட்சியிலே கருத்து வேறுபாடினால் வெளிவந்தபோது மிகவும் சிரமப்பட்டார்கள் . நான் அவரைக் கூட்டிவந்து என்னுடைய நெசவுத் தொழிற்சாலையில் பொறுப்புகளை ஒப்படைத்தேன் . நெசவு ஆலையில் நூல் வாங்க வேண்டியிருந்தால் , அவர் தம் கடிதத்தில் , வாங்க வேண்டிய நூல் பற்றிய விவரங்களுடன் , இந்த நெசவுத் தொழிலை சரிவர கவனித்தால்தான் கட்சிப்பணிகள் கௌரவமாக நடக்கும் . அதனால் முதலில் தொழிலை சரிவர கவனித்துவிட்டு கட்சிப்பணிக்குச் செல்லுங்கள் என்று தயவு தாட்சண்யம் இல்லாமல் கடிதம் எழுதி அனுப்புவார் . ஆனாலும் , ஒரு தகராறு காரணமாக இந்த நெசவுத் தொழிற்சாலையை மூட வேண்டி வந்ததால் , நான் வைத்திருந்த சலவைத் தொழிற்சாலையில் அவருக்கு சில பொறுப்புகள் கொடுத்திருந்தேன் . தன் பொறுப்பை மிகத் திறமையாக கவனித்துக்கொண்டார் . அங்கு பொன்னுசாமி என்று இன்னொருவர் வேலை பார்த்தார் . அவருக்கும் , இவருக்கும் ஒத்துவரவில்லை . அதனால் வெளியேறுவதாகக் கூறியபோது சமாதானம் செய்து இருக்க வைத்தோம் . இஸ்கஸ் இல் பணிபுரிந்தபோது பல தோழர்களை அதில் இணைத்து , தமிழகத்திலேயே அதிக உறுப்பினரையும் , சோவியத் நாடுகளுக்காக சந்தாதாரர்களையும் அதிகமாகச் சேர்த்தவர் , சோவியத் நாட்டின் மீதும் , சோசலிசக் கொள்கையின் மீதும் இரும்புத்தனமான உறுதியான கொள்கைப்பற்று கொண்டவர் . அவரை சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்ப முடிவு செய்து , இஸ்கஸ் மூலமாக அவரை அனுப்பி வைத்தோம் . நிறைய பேர் போகிறார்கள் , வருகிறார்கள் , சோவியத் ரஷ்யாவைச் சுற்றிப்பார்த்தார்கள் , அத்தோடு முடித்துக்கொண்டார்கள் . ஆனால் இவர் அப்படியல்ல . என்னிடம் , ‘ தோழரே , சில கல்லூரிகளையும் , பள்ளிகளையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டு , அங்கெல்லாம் சென்று சோவியத் ரஷ்யா பற்றி நீங்கள் சொல்ல வேண்டும்’ என்றார்கள் . பாரதி கல்வி நிலையம் , ஈரோடு கலைக்கல்லூரி , வாசவி கல்லூரி , சிக்கய்ய நாயக்கர் கல்லூரி , முனிசிபல் உயர்நிலைப்பள்ளி இப்படி பல்வேறு கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து , அங்கு மாணவர்களுக்கு , சோவியத் ரஷ்யா மற்றும் சோசலிசம் பற்றியும் மணிக்கணக்காகப் பேசி அங்கே மாணவர்கள் மத்தியிலும் , ஒரு பிடிப்பும் , நல்ல கருத்தும் கொள்கின்ற அளவிற்கு பல்வேறு கூட்டங்களை நடத்தியிருக்கிறோம் . ஒரு கட்டத்திலே , இஸ்கஸ் இன் மாநில மகாநாட்டை ஈரோட்டில் நடத்த வேண்டும் என்று பொறுப்பைக் கொடுத்த பொழுது ஒரு சிலர் , ஏதோ காரணத்தால் , இஸ்கஸ் எஸ் . பி . வெங்கடாசலத்தின் குடும்பச் சொத்தாக இருக்கிறது , இவர்கள் எப்படி மாநில மகாநாடு நடத்துவார்கள் என்று பார்க்கலாம் என்று சவால் விட்டார்கள் . அப்போது பி . எம் . எஸ் , அவர்கள் , சவாலை ஏற்றுக்கொண்டு வெற்றி பெறுவோம் என்று சொல்லி , இரவும் , பகலும் கடுமையாக உழைத்து , கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாயான , மிகப்பெரிய நிதியைச் சேர்த்து , அந்த மாநில மகாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி வைத்தோம் . அதன் காரணமாகத்தான் பி . எம் . எஸ் . அவர்களை சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம் . அப்போது அகில இந்திய செயலாளராக இருந்த ராஜ்குமார் அவர்கள் இந்த மகாநாட்டிற்கு வந்திருந்தார் . வந்திருந்தவர்களை தங்க வைப்பதற்கு 5, 6 கல்யாண மண்டபங்களும் , அவர்களின் போக்குவரத்திற்காக 5, 6, பேருந்துகளும் ஏற்பாடு செய்து வைத்திருந்தோம் . அனைத்து ஏற்பாடுகளும் மிக அருமையாக நடந்தது . சாப்பாடு பொறுத்தவரை , ஈரோடு எஸ் . பி .. வி . யைத் தவிர வேறு எவருமே இந்த மகாநாட்டை இவ்வளவு சிறப்பாக நடத்தியிருக்க முடியாது என்று இஸ்கஸ் தோழர்கள் சொன்னார்கள் . சாப்பாடு இவ்வளவு அருமையாக யாரும் போட்டிருக்க முடியாது என்று சொன்னார்கள் . நான் ராஜ்குமார் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அருகில் சென்று , அவரிடம் , ‘Comrade, how do you like our meals?’ என்று கேட்டேன் . அதற்கு அவர் , ‘your meals are not inside my stomach, it is in my heart’ என்று சொல்லி மோர் குழம்பைக் கொண்டுவரச் சொல்லி ஒரு டம்ளரில் வாங்கி சாப்பிட்டார் . அதன் பிறகு எந்த இஸ்கஸ் மகாநாட்டில் சந்தித்தாலும் , மிக , மிக நட்பாக பழகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
பி . எம் . எஸ் . அவர்கள் இறுதியாக சோவியத் ரஷ்யா சிதறுண்டபோது , மன வேதனைப்பட்டு , விரக்தியடைந்து , செமி - கான்சியஸ் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள் . 7, 8 வருடங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்தவர் , கடைசி காலத்தில் மனைவியுடன் சேர்ந்து இருக்கட்டும் என்று , நானும் , மாஸ்டர் என்று சொல்லுகிற கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் , அவர்களும் , அவரைக் கொண்டுபோய் பொல்லாச்சியில் விட்டுவிட்டு , அவருக்கு எந்த சிரமம் என்றாலும் எங்களுக்கு போன் செய்யுங்கள் என்று அவர் மனைவியிடம் சொல்லிவிட்டு வந்தோம் . மூன்று நாளிலே அவர் இறந்த செய்தி வந்தது . இங்கேயிருந்து காரை எடுத்துக்கொண்டு குடும்பத்தோடு சென்று இறுதி மரியாதை செய்துவிட்டு திரும்பினோம் . மறக்க முடியாத ஒரு கம்யூனிஸ்ட் தோழர் என்றால் பி . எம் . எஸ் . அவர்களைத்தான் சொல்ல வேண்டும் . வெள்ளைக்காரன் காலமான யுத்த காலத்தில் ஒரு போட்டி வைத்தார்கள் . குறைந்த நிலக்கரியிலே யார் ஈரோட்டிலிருந்து சென்னைக்குச் செல்கிறார்கள் என்பதுதான் அந்த போட்டி . அங்கு வெள்ளைக்காரர்கள் ஏகாதிபத்தியம் அதிகமாக இருந்தாலும் கூட , அதில் மிகச் சிக்கனமாக நிலக்கரியை பயன்படுத்தி சிறந்த காதிவாலா ( இப்படித்தான் வெள்ளைக்காரர்கள் கூப்பிடுவார்கள் ) என்று பெயர் எடுத்தார்கள் . ஒரு கூடை மாம்பழம் அவருக்கு பரிசாக வழங்கினார்கள் . கடைசி நேரத்திலே அவருக்கு ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று ஆர்வம் வந்தது . நான் சொன்னால் விடமாட்டேன் என்று , அவருக்கு மிகவும் வேண்டியவரான , டெக்ஸ்மோ ராமசாமி அவர்கள் ஏஜென்சியைக் கொடுப்பதாகச் சொல்கிறார் , நான் காஞ்சீபுரத்தில் சென்று அந்த ஏஜென்சியை வைக்கிறேன் என்று சொல்லிப் போனார்கள் . போய் ஆறு மாதத்தில் ஒரு 10,000 ரூபாய் அனுப்பினார்கள் . என் கையெல்லாம் காப்பு காய்த்துவிட்டது . நான் விவசாயம்தான் செய்து கொண்டிருக்கிறேன் , காலையில் ஏற்றம் ஓட்ட ஆரம்பித்தால் 10 மணிக்கு முடிப்பேன் , பின் புளியைக் கரைத்து ரசம் வைத்து , சோறாக்கிச் சாப்பிடுவேன் . இப்படியாக நான் கொஞ்சம் சம்பாதித்திருக்கிறேன் . பிற்காலத்தில் எனக்கு உதவ வேண்டும் என்பதற்காக வந்துவிட்டேன் , என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு , மறுபடியும் கொஞ்சம் ரூபாயைக் கொண்டுவந்து கொடுத்தார் . அதை மாஸ்டரிடம்தான் கொடுத்து பின் கடைசி காலத்திலே அந்தத் தொகை அவருக்கு உதவிகரமாக இருந்தது .
1932 இல் இருந்து நான் நவஜவான் இயக்கம் , அதன் தொண்டர்படை அமைப்பான இந்துஸ்தான் சோசலிச குடியரசுப் படை , காங்கிரஸ் மகா சபை நகரக் கமிட்டி , பாரதி வாலிபர் சங்கம் , தேசிய வாலிபர் சங்கம் , சோவியத் நண்பர்கள் சங்கம் , அச்சுப்பட்டறை தொழிலாளர் சங்கம் , பீடித் தொழிலாளர் சங்கம் , குதிரை வண்டித் தொழிலாளர் சங்கம் , மோட்டார் தொழிலாளர் சங்கம் , மாணவர் சங்கம் , முனிசிபல் நகர சுத்திகரிப்புத் தொழிலாளர் சங்கம் , கைத்தறி நெசவாளர் சங்கம் , இந்திய சோவியத் கலாச்சாரக் கழகம் (ISCUF) இந்திய கலாச்சார நட்புறவுச் சங்கம் (ISCUS) தள்ளு வண்டித் தொழிலாளர் சங்கம் , விவசாயிகள் சங்கம் , பால் பதனிடும் தொழிலாளர் சங்கம் , மில் தொழிலாளர் சங்கம் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , இந்திய சமாதான நட்புறவுக் கழகம் போன்ற அமைப்புகளின் பொறுப்புகளில் பணியாற்றியும் , போராட்டம் நடத்தியும் சமூகச் சேவை ஆற்றியுள்ளேன் . 1943 முதல் இன்றுவரை உண்மையான கம்யூனிஸ்டாகவும் வாழ்ந்து வருகிறேன் . என் பொது வாழ்க்கையில் நேர்மையாகவும் , பொதுநல நோக்கோடும் , தைரியத்துடனும் அப்பழுக்கின்றியும் செயல்பட்டேன் . என் குடும்ப வாழ்க்கையிலும் கடமை தவறாமல் தன்னம்பிக்கையுடன் , விடா முயற்சியுடன் நல்ல குடும்பத் தலைவனாக வாழ்ந்து வருகிறேன் . பொது வாழ்க்கையையும் , குடும்ப வாழ்க்கையையும் எந்த இடர்பாடும் , முரண்பாடும் இல்லாமல் சரிசமமாக கொண்டுபோக என் குடும்பம் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது . 91 வயதில் மன நிறைவுடன் கூடிய பூரணமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம் என்ற மகிழ்வும் , நிறைவும் , பூரிப்பும் கொண்டிருக்கிறேன் . முதுமை காரணமாக உடல் ஒத்துழைப்பு கொடுக்காததால் மட்டுமே ஓய்வு எடுக்கிறேன் . ஆனால் இன்றும் என் மனம் எழுச்சியுடனும் , துடிப்புடனும் செயல்படுகிறது .
10
தோழர் எஸ்.பி.வி. அவர்களின் தலைமுறை உறவுகள்
11
புகைப்படங்கள்
1
ஆசிரியர் பற்றி
பவள சங்கரி
பெயர் : பவள சங்கரி திருநாவுக்கரசு
மின்னஞ்சல் : coraled@gmail.com
வலைப்பக்கங்கள் : coralsri.blogspot.com, www.coralsri.com
என்னுடைய எண்ணமும் எழுத்தும் பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் நலம் சார்ந்தது. என் எழுத்துகள் வாயிலாக இளையோரை வழிநடத்தல், குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான சிந்தைகளை ஊக்குவித்தல் . இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்கள் பற்றிய செய்திகளை வெளிக்கொணர்தல்.
வெளிவந்துள்ள நூல்களின் விவரம்:
1. விடியலின் வேர்கள் – பேராண்மைமிக்க பெண்களின் வரலாறு
2. கனலில் பூத்த கவிதைகள் – சிறுகதைத் தொகுப்பு
3. கனவு தேசம் – சிறுகதைத் தொகுப்பு
4. நம்பிக்கை ஒளி – குறுநாவல்கள்
5.யாதுமாகி நின்றாய் – சிறுகதைத் தொகுப்பு
6.வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா – தன்னம்பிக்கை கட்டுரைத் தொகுப்பு
7. கதை கதையாம் காரணமாம் – சிறுவர் சிறுகதைத் தொகுப்பு
8. இப்படிக்கு நான் – வாழ்க்கை வரலாறு
2
Free Tamil Ebooks - எங்களைப் பற்றி
மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:
மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.
ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:
ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.
தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:
தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.
சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.
எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.
சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?
சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.
நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.
எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.
தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?
கூடாது.
ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.
அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.
அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.
வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.
பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு
அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்
வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.
FreeTamilEbooks.com
இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.
PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT
இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.
அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.
இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை
எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.
அவ்வளவுதான்!
மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:
ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்
தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல்
சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்
விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?
யாருமில்லை.
இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.
மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.
இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?
ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை.
ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.
அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.
தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?
உள்ளது.
பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.
1. www.vinavu.com
2. www.badriseshadri.in
3. http://maattru.com
4. kaniyam.com
5. blog.ravidreams.net
எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?
இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.
<துவக்கம்>
உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].
தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும்.
இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை
பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்
உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.
எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம்.
http://creativecommons.org/licenses/
நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
e-mail : freetamilebooksteam@gmail.com
FB : https://www.facebook.com/FreeTamilEbooks
G +: https://plus.google.com/communities/108817760492177970948
நன்றி.
</முடிவு>
மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள்.
முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள்.
கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ?
அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும்.
ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது.
அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.
மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?
ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.
நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.
தவிர்க்க வேண்டியவைகள் யாவை?
இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?
நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
email : freetamilebooksteam@gmail.com
Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks
Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948
இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?
Shrinivasan tshrinivasan@gmail.com
Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org
Arun arun@fsftn.org
இரவி
Supported by
Free Software Foundation TamilNadu, www.fsftn.org
Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/
3
நன்றி
எஙுகள் தந்தை எஸ்.பி. வெஙுகடாசலம், தன் குடும்ப வாழ்க்கை, சுதந்திரப் போராட்ட வரலாறு, அரசியல் அணுகுமுறை, சமூகப் போராட்டங்கள் ஆகியவற்றின் அனுபவங்களைப் பதிவு செய்ய விரும்பிய போது, அவரது வயது 86. அவ்வயதில் அவரை வாரந்தோறும் ஆசனூர் மலைப்பகுதிக்கு தொடர்ந்து 6 மாதங்கள் கூட்டிச் சென்று வாய்மொழியாகப் பதிவு செய்த திரு.கு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு எங்கள் நன்றி.
வாய்மொழியாகப் பதிவு செய்த தகவல்களைக் கேட்டு எழுத்து வடிவில் படைத்த எழுத்தாளர் திருமதி. பவளசங்கரி அவர்கள் எம் நன்றிக்குரியவர்.
எழுத்து வடிவில் தரப்பட்ட தகவல்களை முறைப்படுத்தி நூல் வடிவத்திற்கு வடிவமைத்து தன் தந்தைக்காற்றும் கடமையை செவ்வனே செய்ததன் மூலம் எங்கள் சகோதரி அரும்பு தன் நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.
கணிணி அச்சுப் பதிப்பிக்கும் பணியை மிகச் சிறப்பாகவும், விரைவாகவும், மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் செய்து கொடுத்த திருமதி எஸ். சம்பூர்ணம் அவர்களுக்கும் அவருக்கு உதவியாக இருந்த திருமதி எஸ்.சுபா அவர்களுக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றி.
புத்தக வடிவமைப்பில் தன் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு புத்தக அச்சுப் பணியை சிறப்பாக முடித்த ஃபீனிக்ஸ் கிராபிக்ஸ் ரவிச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.
வெ.ஜீவானந்தம்
ஜெ.ஜெயபாரதி
கருத்துகள்
கருத்துரையிடுக