Kanta purāṇam VI
சைவ சமய நூல்கள்
Backகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
பாகம் 6 / 2. அசுர காண்டம், படலம் 33-43 (1498 - 1929)
34. அசமுகிப் படலம் 1518 - 1549
35. இந்திராணி மறுதலைப் படலம் 1550 - 1573
36. மகாகாளர் வரு படலம்1574 - 1603
37. அசமுகி சோகப் படலம்1604 - 1633
38. இந்திரன் மீட்சிப் படலம்1634 - 1642
39. சூரன் அரசிருக்கைப் படலம் 1643 -1669
40. அசமுகி நகர்காண் படலம்1670 -1702
41. அசமுகி புலம்புறு படலம் 1703 - 1717
42. சூரன் தண்டஞ்செய் படலம்1718 - 1788
43. அமரர் சிறைபுகு படலம்1789 - 1929
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
2. அசுர காண்டம்
33. இந்திரன் கயிலை செல் படலம் (1498 - 1517)
1498
மெய்த்துணை யாகிய மின்னினை நோக்கி
எய்த்திடல் ஐயன் அளிக்குவன் ஈண்டே
சித்தம் வருந்தல் எனத்தௌ¤ வித்தான். - 1
1499 - மாதினை அவ்விடை மன்னுற வைத்தே
பேதுறு வானவர் பேரவை நண்ணிப்
போதுமெ னக்கொடு போந்து விரைந்தே
நாதன் அகன்கிரி நண்ணினன் அன்றே. - 2
1500 - அந்தர வைப்பில் அமர்ந்தவர் தம்மோடு
இந்திரன் அக்கயி லைக்கிரி யெய்தி
நந்திபி ரானுறை நன்கடை சேரா
வந்தனை செய்து வழுத்தினன் நின்றான். - 3
1501 - நிற்றலும் வந்ததென் நீபுகல் என்னச்
சொற்றனன் அங்கது தொன்மையின் நாடி
இற்றில கொல்லுன் இருந்துய ரென்னா
நற்றவர் காணுறு நந்தி யுரைப்பான். - 4
1502 - நால்வர் உணர்ந்திட நாயகன் ஞான
மூல வியோக முதற்பொருள் காட்டி
ஏல இருந்தனன் யாவரும் ஏகக்
கால மிதன்றென வேகழ றுற்றான். - 5
1503 - தேறுத வஞ்செய்சி லாதனன் மைந்தன்
கூறிய வாய்மை குறிக்கொள ஓர்ந்து
மாறியீ ழிந்திடு வல்விட மற்றும்
ஏறிய தென்ன இடர்க்கட லுற்றான். - 6
1504 - இம்பரின் வாசவன் இன்னல் உழப்ப
உம்பர்கள் தாமும் உடல்தளர் வுற்றார்
தம்பம தான தடம்புணை தாழ
அம்புதி தன்னில் அழுந்திடு வார்போல். - 7
1505 - செல்லல் உழந்து தியங்கிய தேவர்
எல்லவர் தம்மொடும் இந்திர னென்போன்
நல்லருள் செய்திடு நந்திபி ரான்றன்
மெல்லடி போற்றி விளம்புதல் செய்வான். - 8
1506 - தூய்நெறி நீங்கிய சூரபன் மாவுக்
காயுவொ டாற்றல் அளப்பில செல்வம்
ஏயவை யாவும் இருந்தவ நீரால்
நாயகன் முந்துற நல்கினன் அன்றே. - 9
1507 - நாங்கள் புரிந்திடு நல்வினை நீங்கித்
தீங்கு குறித்தெழு தீவினை சேர
ஆங்கவன் ஏவலின் அல்லலு ழந்தேம்
ஈங்கிது வும்மிறை வன்செயல் ஐயா. - 10
1508 - சூனா¢ இயற்கை சுரர்க்கருள் செய்யும்
மாநிரு தர்க்கிறை வன்புரி துன்பம்
ஆன துணர்த்தி அடைந்தனம் என்னில்
தானது போழ்து தவிர்த்திடல் வேண்டும். - 11
1509 - நீர்த்திரை போல நெறிப்பட யாங்கொள்
ஆர்த்திய கற்றி அறந்தவிர் சூரன்
மூர்த்திகொள் ஆவியும் மொய்ம்பொடு சீருந்
தீர்த்திடு கின்ற திறஞ்செயல் வேண்டும். - 12
1510 - அன்னது செய்திடின் அன்பறு சூரன்
முன்னர் அருந்தவ முற்றிய காலைச்
சொன்ன வரந்தொலை யுந்தொலை வானாற்
பின்னர் அவன்சொல் பிழைத்தனன் என்பார். - 13
1511 - அல்லª¦மி மல்லல் அகற்றிலன் என்னில்
நல்லரு ளுக்கொரு நாயகன் என்றே
எல்லவ ரும்புகழ் ஏற்றமும் இன்றாம்
தொல்லை மறைப்படி யுந்தொலை வாமால். - 14
1512 - ஆகையின் இவ்வகை ஆய்ந்தெமை யாளும்
பாக நினைந்து பரம்பொரு ளானோன்
மோகமி லார்பெற மோனக ஞான
யோகியல் காட்டி யுறைந்துள னேகொல். - 15
1513 - ஈங்கிவன் அல்லதை இத்திற மாகுந்
தீங்கினை நீக்கவொர் தேவரும் இல்லை
ஓங்கிய மாலவ ரோடமர் செய்தே
ஆங்கவன் நேமியும் அற்றனன் ஐயா. - 16
1514 - மூவரின் முந்திய மூர்த்தி செயற்கை
யாவதும் ஈதென அண்டரும் யானும்
பூவுல கத்திடை போந்திடின் இன்னே
தீவினை யார்சிறை செய்வது திண்ணம். - 17
1515 - ஆதலின் ஆயிடை அண்டரும் யானும்
போத லிலைப்புனி தன்கழல் காணத்
தீதறு வேலை தனைத்தெரி வுற்றான்
வாய்தலின் ஓர்புடை வைகுவன் என்றான். - 18
1516 - பேர்பெறு நந்திபி ரானது கேளா
ஆர்வுறும் இன்னல் அகன்றிவண் நீவிர்
சேர்வுறு மென்றருள் செய்திட ஆங்கே
ஓர்புடை வாசவன் அண்டரொ டுற்றான். - 19
1517 - வானவர் கோனரன் மால்வரை தன்னிற்
போனதும் உற்றதும் ஈண்டு புகன்றாம்
மானபு லோமசை செய்கையும் அல்லா
ஏனையர் செய்கையும் யாவும் இசைப்பாம். - 20
ஆகத் திருவிருத்தம் - 1517
- - -
34. அசமுகிப் படலம் (1518 - 1549)
1518 - நீங்காதுறை தனிநாயகன் நெடுமாலயன் உணரா
ஓங்காரமு தற்பண்ணவன் உறையுங்கிரி செல்லப்
பாங்காயணங் கினர்போற்றிடப் பயிழ்காழிவ னத்திற்
பூங்காவனந் தனிலேச்சி இருந்தேதவம் புரிந்தாள். - 1
1519 - சேணாடுபு ரக்கின்றவன் சிந்தித்திடு கின்ற
மாணாகிய வினைமுற்றுற வருவான்றவம் புரிவாள்
காணாளவன் வருகின்றது காலம்பல தொலைய
நாணாடொறுந் தன்மேனியின் நலமாழ்குற மெலிவாள். - 2
1520 - கொளையாரிசை அளிபாடிய குழலிந்திரன் பிரிவால்
உளையாமனம் பதையாத்தவத் துறைகின்றதொ ரளவில்
வளையார்கலி உலகந்தனில் வாழ்சூரபன் மாவுக்
கிளையாள்பலர் இளையார்புணர்ந் தாலுஞ்சிறி திளையாள். - 3
1521 - கழிகின்றதொர் கடலேபுரை காமந்தெறு நோயால்
அழிகின்றவள் எவர்தம்மையும் வலிதேபிடித் தணையும்
இழிகின்றதொ ரியல்பாள்முகில் இனம்வாய்திறந் தெனவே
மொழிகின்றதொர் கடியாள்அச முகியென்பதொர் கொடியாள். - 4
1522 - பொறையில்லவள் அருளில்லவள் புகழில்லவள் சிறிதும்
நிறையில்லவள் நாணில்லவள் நிற்கின்றதொ ரறத்தின்
முறையில்லவள் வடிவில்லவள் முடிவில்லதொர் கற்பின்
சிறையில்லவள் உலகோர்க்கொரு சிறையாமெனத் திரிவாள். - 5
1523 - கீழுற்றிடும் உலகெத்தனை யவையாவையுங் கிளர்ந்தோர்
வாழுற்றிடும் உலகெத்தனை அவையாவையு மாடே
சூழுற்றிடும் உலகெத்தனை அவையாவையுஞ் சுற்றா
ஊழுற்றிடு தன்னூர்தனில் ஒருநாழியில் வருவாள். - 6
1524 - பொய்யுற்றவள் களவுற்றவள் புரையுற்றிடு சுரையூன்
துய்யுற்றவள் களியுற்றவள் சோர்வுற்றவள் கொலைசெய்
கையுற்றவள் விழியாலழல் காலுற்றவள் பவத்தின்
மொய்யுற்றவள் படிறுற்றவள் முனிவுற்றவள் மனத்தின். - 7
1525 - பொங்குஞ்சிகை அழல்மைத்தலை புகுந்தாலென ஔ¤ருஞ்
செங்குஞ்சிய துடையாளெவர் செருச்செய்யினும் இடையாள்
துங்கங்கெழு தூணத்திடை தோன்றிக்கன கனைமுன்
பங்கம்படுத் துயிருண்டெழு பகுவாயரி நிகர்வாள். - 8
1526 - சீயப்பெரு முகன்தாரகன் நிகராகிய திறலாள்
மாயத்தொழில் பயில்கின்றவள் மணிமால்வரை புரையுங்
காயத்தவள் அடற்கூற்றையுங் கடக்கின்றதொர் வலியாள்
தோயப்புண ரிகளேழுமொர் துணையிற்கடந் திடுவாள். - 9
1527 - மாலுற்றிட வாழ்சூரபன் மாவின்கிளை முழுதும்
மூலத்தொடு முடிவித்திடு முறையூழ்வினை யென்னச்
சூலத்தினை யேந்தித்தனி தொடர்துன்முகி யுடனே
ஆலத்தின துருவாமென ஆங்குற்றனள் அன்றே. - 10
1528 - கானின்றுள பொழிலேர்தனைக் காணாநனி சேனாள்
ஆநன்றென வியவாப்புவி அமர்சோலையி தன்றால்
வானின்றுள வனத்தைக்கொடு வந்தேயிவண் மகவான்
தானின்றுவைத் தானிங்கிது தப்பாதென நிற்பாள். - 11
1529 - ஏலாவிது காணாயென ஈர்ந்தண்பொழில் எழிலை
ஆலாலம தெனவேவரும் அசமாமுகி யென்பாள்
பாலானதுன் முகிதன்னொடு பகராவது காட்டித்
கோலாலம துடனேயது குறுகும்படி வந்தாள். - 12
1530 - மட்டுற்றிடு தண்காவினை வருடைத்தனி முகத்தாள்
கிட்டிச்சினை நனைமாமலர் கிளையாவையும் நோக்கித்
தட்டற்றிவண் உறைகின்றவர் தமைநோக்குவ லென்னா
எட்டுத்திசை யினும்நாடுதற் கிடையுற்றனள் கடிதின். - 13
1531 - அதுகண்டனன் அவண்நின்றதொ ரையன்படைத் தலைவன்
முதுகண்டகி இவளாம்அச முகியென்பதொர் கொடியாள்
எதுகண்டிவண் வருகின்றனள் என்னோகருத் திவள்தன்
கதிகண்டனன் நிற்பேனெனைக் காணாநெறி யதனில். - 14
1532 - மற்றிங்கிவள் செயல்யாவையும் வரலாற்றொடு காணாத்
தெற்றென்றவண் மீள்கின்றுழிச் செவ்வேயெதிர் போந்து
குற்றந்தனக் கிசையுந்திறம் முடிப்பேனெனக் கொலைசெய்
விற்றங்கிய புயவேடரில் வேறோரிடை நின்றான். - 15
1533 - நின்றானவன் அதுகண்டிலன் நெஞ்சிற்களி தூங்கக்
குன்றாமலை அசமாமுகக் கொடியாள்அவ ளுடனே
சென்றாள்மலர்க் காவெங்கணுந் திரிந்தாள்திரிந் தளவில்
பொன்றாழ்முலைச் சசிமாதவம் புரிகின்றது கண்டாள். - 16
1534 - அந்தாவிவள் அயிராணிநம் மரசன்றனக் கஞ்சி
நந்தாவளந் தனைப்பெற்றபொன் னகரத்தைவிட் டிங்கே
வந்தாளிவள் தன்னைக்கொடு வருவீரென எங்கோன்
முந்தாதர முடனுய்த்தனன் முடிவற்றதன் படையே. - 17
1535 - இங்குற்றதை உணராமையின் இமையோர்புரம் நாடி
அங்குற்றிலள் அயிராணியென் றரசன்தனக் குரைப்ப
வெங்கட்டழ லெனச்சீறினன் மீண்டுஞ்சிலர் தமையித்
திங்கட்புரை முகத்தாள்தனைத் தேடும்படி விடுத்தான். - 18
1536 - வானெங்கணும் பிலமெங்கணும் வரையெங்கணும் பரவை
தானெங்கணுந் திசை யெங்கணுந் தரையெங்கணுந் தரையிற்
கானெங்கணும் நமர்தேடினர் காணாரிவள் தன்னை
ஊனெங்கணும் வருந்தத்திரிந் துழன்றாரிது வுணரார். - 19
1537 - தண்டேனமர் குளிர்பூங்குழற் சசியென்பவள் தனைநான்
கண்டேனினி இவள்மையலிற் கவலாதொழி கென்றே
வண்டொலிடு தொடைமன்னவன் மகிழ்வெய்தமுன் னுய்ப்பக்
கொண்டேகுவன் யானேயிவள் தனையென்றுகு றித்தாள். - 20
1538 - இத்தேமொழி தனைஇந்திரன் ஈண்டேதனி யாக
வைத்தேகினன் இவள்தன்னை வருந்தாதளித் திடவோர்
புத்தேளிரும் இலரிங்கிது பொழுதாமவன் புகுமுன்
கொத்தேமலர்க் குழலாள்தனைக் கொடுபோவனென் றடைவாள். - 21
1539 - தீனக்குற் கடுஞ்சொல்லெனும் உருமேறு தொழிப்பக்
கூனற்பிறை எயிறாகிய மின்னுப்புடை குவலக்
காணக்கரும் படிவத்தொடு கால்கொண்டேழு விசையால்
வானப்புயல் வழுவிப்புவி வந்தாலேன வந்தான். - 22
1540 - ஊற்றங்கொடு வருதுன்முகி யுடனேயச முகிதான்
தோற்றங்கிளர் மணிவெற்பெனத் துண்ணென்றவண் வரலும்
ஏற்றம்பெற நோற்றேதனி இருந்தாளது காணாக்
கூற்றந்தனைக் கண்டாலெனக் குலைந்தாள்வலி குறைந்தாள். - 23
1541 - நீரோதமி சைத்தங்கிய நிருதக்ககுல மகளோ
பாரோர்மயக் குறுபேய்மக ளோபாரிடத் தணங்கோ
சூரொடுறு தனிக்கொற்றவை தொழில்செய்பவள் தானோ
ஆரோவிவள் அறியேனென அஞ்சிக்கடி தெழுந்தாள். - 24
1542 - எழுகின்றவள் தனைநில்லென இசைத்தேயெதிர் எய்தி
மொழிகின்றனள் அயிராணிநின் முதிராவிள நலனும்
பழியில்லதொர் பெருங்காமரும் பயனற்றிவண் வறிதே
கழிவெய்திடத் தவம்பூண்டிடல் கடனோஇது விடுநீ. - 25
1543 - ஆரொப்புனக் குலகந்தனில் அருளாழியம் பகவன்
மார்பத்துறை திருமங்கையும் மற்றிங்குனக் கொவ்வாள்
பாரிற்கரந் திருந்தேதவம் பயில்வாயிதென் உன்னைச்
சேரத்தவம் புரிகின்றனன் திறற்சூரபன் மாவே. - 26
1544 - இந்நாள்வரை உனைநண்ணிய இமையோர்க்கிறை உனது
நன்னாயகன் நாகப்பெரு நலனுற்றவன் அன்றே
தன்னாலுணர் வரிதென்பர்கள் தன்பேரழ கதனாற்
பன்னாள்அவ னுடன்மேவினை பாகிற்படு கரிபோல். - 27
1545 - தவறுஞ்சுரர் உலகொன்றுளன் சதவேள்வியன் எம்முன்
புவனம்பல அண்டம்பல புரக்குந்திரு வுளனால்
இவனங்கவன் பணியேபுரிந் திளைத்தேகரந் துழல்வான்
அவனிங்கிவன் றனையேவல்கொண் டகிலந்தனி யாள்வான். - 28
1546 - அழிவில்லவன் அவனிங்கிவன் அழியும்பரி சுடையான்
பழியில்லவன் அவனிங்கிவன் பழிவேலையில் திளைப்பான்
கழியும்படர் உழந்தானிவன் களிப்புற்றுளன் அவனே
தொழுவன்பல ரையுமிங்கிவன் தொழுமோவவன் சிலரை. - 29
1547 - அந்நேரில னொடுமேவுவ தறிகின்றிலை அனையான்
தனனேவலின் ஒழுகித்திரி தமியோன்றனைத் துணையென்
றின்னேமெலிந் தனையீதுனக் கியல்போநின தெழிலுங்
கொன்னேகழிந் தனபற்பகல் குறியாயிது குணனோ. - 30
1548 - எத்தேவரும் முகிலூர்தியும் இகல்மேவரும் அவுணக்
கொத்தேவரும் அணங்கோருமுன் குற்றேவல்செய் திடவே
முத்தேவரும் புகழப்படும் மொய்ம்புற்றிடு சூர்முன்
உய்த்தேயவ னொடுகூட்டுவன் உலகாண்டுடன் இருக்க. - 31
1549 - பொன்னோடிகல் பங்கேருகப் பூங்கோமளை தனையும்
அன்னோன்வெறுத் திடுவன்பிறர் அனைவோரையும் அ·தே
உன்னோடள வறுகாதலின் உறுமிங்கிது சரதம்
என்னோடினி வருவாய்கடி தென்றாள்அறங் கொன்றாள். - 32
ஆகத் திருவிருத்தம் - 1549
-----
35. இந்திராணி மறுதலைப் படலம் (1550 - 1573)
1550 - தக்க வேழகத் தலையள் கூறிய
அக்கொ டுஞ்சொலை அணங்கு கேட்டலுந்
தொக்க தன்செவித் துளையில் அங்கிவேல்
புக்க தேயெனப் பொருமி விம்மினாள். - 1
1551 - கைம்ம லர்க்கொடே கடிதில் தன்செவி
செம்மி வல்வினைத் தீர்வு நாடியே
விம்மி யங்குறும் வெய்யள் கேட்டிட
இம்மெ னச்சில இசைத்தல் மேயினாள். - 2
1552 - ஏடி நீயிவண் இசைத்த தீமொழி
நேடி ஓர்ந்துளார் நிரய மாநெறி
யூடு சேர்வரால் உரைத்த நிற்குமேற்
கூடு தீமையார் குறிக்கற் பாலரே. - 3
1553 - வேதம் யாவையும் விதித்த நான்முகன்
காத லன்தருங் கடவுள் மங்கைநீ
நீதி யில்லதோர் நெறியின் வாய்மையைப்
பேதை யாரெனப் பேச லாகுமோ. - 4
1554 - தீங்கி யாவர்க்குஞ் செய்தி டாதவர்
தாங்கள் துன்புறார் தமக்கு வேண்டினோர்
ஆங்கெ வர்க்குமுன் அல்லல் செய்வரால்
ஈங்கு நீயிவை எண்ண லாய்கொலோ. - 5
1555 - தருமம் பார்த்திலை தக்க மாதவக்
கருமம் பார்த்திலை கற்பும் பார்த்திலை
பெருமை பார்த்திலை பிறப்பும் பார்த்திலை
உரிமை பார்த்திலை உறவும் பார்த்திலை. - 6
1556 - பழியும் பார்த்திலை படியி கழ்ந்திடு
மொழியும் பார்த்திலை முறையும் பார்த்திலை
வழியும் பார்த்திலை வருவ பார்த்திலை
இழியுந் தீயசொல் லியம்பற் பாலையோ. - 7
1557 - ஆன்ற தொல்வளன் ஆற்றல் ஆயுள்பின்
ஊன்று சீர்த்திகள் ஒருவுற் றோர்க்கிது
தோன்று நீயிவை துணியல் வாழிகேள்
சான்று நின்குலத் தகுவர் யாவரும். - 8
1558 - இந்தி ற்கலால் ஏவர் பாலினுஞ்
சிந்தை வைத்திடேன் தீதில் கற்பினேன்
வந்தெ னக்கிது வகுத்தி நின்கிளை
உய்ந்தி டத்தகும் உரைய தன்றிதே. - 9
1559 - நூன்மை யாவையும் நுனித்து நாடிச்செங்
கோன்மை யன்றியே கொடுமை செய்துள
மேன்மை மன்னரும் வேறு ளார்களும்
பான்மை யாற்பிலம் படுவர் திண்ணமே. - 10
1560 - மீளில் வெந்துயர் வேலை சார்ந்துளான்
நாளும் நாதனென் றறைதி யார்கணுங்
கோளும் நல்லவுங் கறுகும் அல்லலும்
நாளை உங்கள்பால் நணுகு றாதவோ. - 11
1561 - நீதி யாகிய நெறியி லாதவள்
ஆத லான்மிக அறிவு மாழ்கியே
தீது கூறினாய் செல்வி தன்றரோ
மாது நீயிது மறத்தி யுய்யவே. - 12
1562 - ஏவ ரென்றனை எய்தற் பாலினோர்
தேவர் சூழ்தரக் காப்பர் சிந்தையென்
ஆவி ஐம்புலம் அளிக்கும் எங்கணுங்
காவ லுண்டுநீ கடிதிற் போகென்றாள். - 13
1563 - என்ற காலையில் எயிறு தீயுகக்
கன்று சேயிதழ் கறித்து வெய்துயிர்த்
தொன்றொ டொன்றுகை உருமிற் றாக்கியே
நன்று நன்றெனா நகைத்துச் சீறினாள். - 14
1564 - மறுவில் வாசவன் மனைவி கூறிய
உறுதி வெய்யவட் கூற்றஞ் செய்தில
அறிவில் பேதையாய் அலகை தேறலால்
வெறிகொள் பித்தனுக் குரைத்த மெய்மைபோல். - 15
1565 - ஆன காலையில் அசமு கத்தினாள்
ஊன வெந்துயர் உழக்கும் பெற்றியால்
வான வர்க்கிறை மாதை நோக்கியே
தானு ரைத்தனள் இனைய தன்மையே. - 16
1566 - கிட்டி நல்லன கிளத்தி னேனெனை
ஒட்டி வந்திலை உரைத்தி மாறுனை
அட்டு நுங்குவன் அண்ணற் காகவே
விட்ட னன்இது மெய்மை யாகுமால். - 17
1567 - ஆர்த்தி யாவுநீ அகல வென்னுடைச்
சீர்த்தி அண்ணர்பாற் சேறல் சிந்தியாய்
பேர்த்தி டாதுனைப் பிடித்து வன்மையால்
ஈத்துப் போகின்றேன் சரத மீதரோ. - 18
1568 - முடிவில் ஆற்றலார் மூவர் யாவருந்
தடைசெய் கிற்பினுஞ் சமரின் ஏற்பினும்
விடுவன் அல்லன்யான் விரைவி னிற்கொடே
படர்வன் அன்னது பார்த்தி மேலெனா. - 19
1569 - வெய்யள் அவ்வயி ராணி மென்கரங்
கையிற் பற்றியே கடிதின் ஈர்த்துராய்
மொய்யிற் போயினாள் முரணி லாதவள்
ஐய கோவெனா அரற்றல் மேயினாள். - 20
1570 - பாவி தீண்டலும் புலம்பிப் பைந்தொடி
ஆவி போந்தென அவச மாகியே
ஓவி லாததொல் லுணர்வு மாய்ந்தனள்
காவி யொண்கணீர் கலுழத் தேம்பினாள். - 21
1571 - ஐயர் கையில்வந் தவுண ரைச்செறுந்
துய்ய தீம்படை* தோகை கண்ணுறா
வெய்ய சூர்கிளை வீட்ட வந்தென
மையு லாயகண் வாரி மிக்கதே.
(* ஐயர் - அந்தணர்கள். அவுணர் - இங்குச் சந்தியா
காலத்தில் இடையூறு புரியும் மாந்தேயர் என்னும் அசுரர்கள்.
தீம்படை - இங்கு வருணாஸ்திரங்கள். ) - 22
1572 - காசி பன்தருங் கலதி கூற்றுவன்
பாச மன்னகைப் பட்டு விம்மினாள்
வாச வன்றனி மனைவி வெங்கொலைப்
பூசை வாய்ப்படும் புள்ளின் பேடைபோல். - 23
1573 - நாரி லாதவள் நலிந்து கொண்டனள்
பேரும் எல்லையில் பேதுற் றேயுளஞ்
சோரு கின்றவள் சுற்று நோக்கியே
யாருங் காண்கிலள் அரற்றல் மேயினாள். - 24
ஆகத் திருவிருத்தம் - 1573
-----
36. மகாகாளர் வரு படலம் (1574 - 1603)
1574 - பையரா அமளி யானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே யோலம் விண்ணோர்க் காதியே யோலம் செண்டார்
கையனே யோலம் எங்கள் கடவுளே யோலம் மெய்யர்
மெய்யனே யோலம் தொல்சீர் வீரனே யோலம் ஓலம். - 1
1575 - ஆரணச் சுருதி யோர்சார் அடலுருத் திரனென் றேத்துங்
காரணக் கடவுள் ஓலம் கடல்நிறத் தெந்தாய் ஓலம்
பூரணைக் கிறைவா வோலம் புட்கலை கணவா வோலம்
வாரணத் திறைமேற் கொண்டு வரும்பிரான் ஓலம் என்றாள். - 2
1576 - ஒய்யெனச் சசியிவ் வாற்றால் ஓலிட அதுகேட் டெங்கள்
ஐயனைக் குறித்துக் கூவி அரற்றுவாள் போலு மென்னா
மையினைத் தடுத்துச் சிந்து மருத்தென வந்தா னென்ப
வெய்யரிற் பெரிதும் வெய்யோன் வீரமா காளன் என்போன். - 3
1577 - சாத்தன தருளின் நிற்குந் தானையந் தலைவன் வானோர்
வேத்தவை யான வெல்லாம் வியத்தகு வீரன் உந்தி
பூத்தவன் முதலோர் யாரும் புகழவெவ் விடத்தை யுண்டு
காத்தவன் நாமம் பெற்றோன் காலற்குங் காலன் போல்வான். - 4
1578 - இருபிறை ஞெலிந்திட் டன்ன இலங்கெழில் எயிற்றன் ஞாலம்
வருமுகில் தடிந்தா லென்ன வாள்கொடு விதிர்க்குங் கையன்
உருமிடிக் குரல்போல் ஆர்க்கும் ஓதையன் உரப்புஞ் சொல்லன்
கரவிழைத் தெங்ஙன் போதி நில்லெனக் கழறி வந்தான். - 5
1579 - கொம்மென வந்த வீரன் கூவிய சசியை நோக்கி
அம்மனை அழுங்கல் வாழி அசமுகி யெனும் வெய்யாட்
கிம்மியின் துணையும் அஞ்சேல் ஈண்டுனைத் தீண்டு கின்ற
கைம்முறை தடிந்து வல்லே விடுவிப்பன் காண்டி யென்றான். - 6
1580 - வீரன துரையைக் கேளா மெல்லியல் அணங்கின் நல்லாள்
பேரிடர் சிறிது நீத்துப் பெயலுறு துவலை தூங்கு
மாரியின் செலவு கண்ட வளவயற் வைங்கூழ் போல
ஆருயிர் பெற்றாள் மற்றை அசமுகி அவனைக் கண்டாள். - 7
1581 - ஓவரும் புவனம் யாவும் ஒருங்குமுத் தொழிலும் ஆற்றும்
மூவருந் துறக்கம் வைகும் முதல்வனுந் திசைகாப் பாளர்
யாவரும் என்முன் நில்லார் ஈண்டெனை இகழ்ந்து சீறித்
தேவர்தங் குழுவி னுள்ளான் ஒருவனோ செல்வ னென்றாள். - 8
1582 - வெறித்திடு கண்ணில் நோக்கி வெவ்விதழ் அதுக்கி வல்லே
கறித்தனள் வயிற்றின் மாலை கறகற கலிப்ப ஆர்த்தது
முறித்திவன் தன்னை யுண்டு முரண்வலி தொலைப்ப னென்னாக்
குறித்தச முகத்தி நிற்பக் குறுகினன் திறல்சேர் வீரன். - 9
1583 - தட்டறு நோன்மை பூண்ட சசிதனைத் தமிய ளென்றே
பட்டிமை நெறியாற் பற்றிப் படருதி இவளை யின்னே
விட்டனை போதி செய்த வியன்பிழை பொறுப்பன் நின்னை
அட்டிடு கின்ற தில்லை அஞ்சலை அரிவை யென்றான். - 10
1584 - கேட்டலும் உருத்திவ் வார்த்தை கிளத்தினை நின்னை யாரே
ஈட்டுடன் இவளைப் போற்றென் றிப்பணி தலைதந் துள்ளார்
வேட்டனன் அவரைக் கேட்ப விளம்புதி யென்றாள் முந்தூழ்
மாட்டுறு கனலி யென்னத் தன்குலம் முடிப்பான் வந்தாள். - 11
1585 - தாரணி முதல மூன்றுந் தலையளி புரிந்து காப்பான்
காரணி செறிந்துற் றன்ன கரியவன் கடவுள் வௌ¢ளை
வாரண முடைய ஐயன் மற்றிது பணித்தான் என்பேர்
வீரரில் வீரனான வீரமா காளன் என்றான். - 12
1586 - என்றலும் அனைய வாய்மை இந்திரன் தனக்கும் ஈசன்
பொன்றிரண் மார்பன் நல்கும் புதல்வற்கும் பொதுமைத் தாகி
நின்றது வாகத் தேவர் நிருதரால் வருந்தும் ஊழாற்
சென்றவன் மகவான் ஏவ லாளெனச் சிந்தை செய்தாள். - 13
1587 - புந்தியில் இதனை யுன்னிப் பொள்ளெனச் சினமீக் கொள்ள
இந்திரன் தொழுவன் கொல்லாம் எனையிடை தடுக்கு நீரான்
சிந்துவன் இவனை யென்னாச் செங்கையிற் சூலந் தன்னை
உந்தினள் அதுபோய் வீரன் உரனெதிர் குறுகிற் றன்றே. - 14
1588 - குறுகிமுன் வருத லோடுங் குரூஉச்சுடர் அங்கி மூன்றும்
முறையினோ ரிடையுற் றன்ன முத்தலைப் படையைக் காணூஉ
அறைகழல் வீரன் தொன்னாள் அங்கியை அட்ட தேபோல்
எறிகதிர் வாளால் மைந்தன் இருதுணி படுத்தி னானே. - 15
1589 - படுத்தலும் மணிகள் நீலப் பையரா உமிழ்ந்த தென்னக்
கடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்க் கருங்கணம் அழல்கான் றென்ன
விடித்திடு கொண்மூ வின்பால் எழுந்தமின் னென்ன அன்னாள்
விடுத்திடு சூல வைவேல் வெவ்வழல் பொழிந்த தன்றே. - 16
1590 - காலத்தின் உலகம் உண்ணக் கடலுறு வடவை தானே
ஆலத்தை மீது பூசி அசமுகி கரத்திற் கொள்ளச்
சூலத்தின் அமைந்த தம்மா சோதனை கொடுப்ப னென்னாச்
சீலத்தின் மிக்கோன் கூர்வாள் செந்தழல் பொழிவித் தன்றே. - 17
1591 - சூளினார்த் தெறியும் வீரன் சுடர்கொள்முத் தலைவேல் தன்னை
வாளினால் தடித லோடும் மறிமுகத் தணங்கு சீறிக்
கேளினால் தனது பாங்கிற் கிடைத்ததுன் முகிகைச் சூலங்
கோளினாற் கடிது வாங்கிக் கூற்றனும் உட்க ஆர்த்தாள். - 18
1592 - வசிகெழு சூலம்பற்றி மருத்துவன் துணைவி யான
சசிதனை இகுளை யாகுந் தையல்தன் கரத்திற் சேர்த்தி
நிசியின் பாந்த ளோடு நெடுங்கதிர் நேர்புக் கென்ன
விசையொடு கொடியள் சென்றாள் வீரமா காளன் தன்மேல். - 19
1593 - ஒற்றைமுத் தலைவேல் தன்னை ஒப்பிலான் மரும மீது
குற்றிய முன்னி நீட்டிக் குறுகினள் அமர்செய் போழ்திற்
கற்றையஞ் சுடர்க்கூர் வாளாற் காவலன் எறித லோடும்
இற்றது சூலங் கண்ட அசமுகி இடைந்து போனாள். - 20
1594 - இடைந்தனள் ஏகி ஆண்டோர் இருங்கிரி பறித்திட் டின்னே
முடிந்தனை போலு மென்னா மொய்ம்புடன் அவன்மேல் ஓசசத்
தடிந்தனன் தடித லோடுந் தாரைவாட் படையும் வல்லே
ஒடிந்தது கொடியள் காணா ஒல்லொலிக் கடல்போல் ஆர்த்தாள். - 21
1595 - வீரமம காள கேண்மோ வேதனே ஆதி விண்ணோர்
ஆரும்வந் தாசி கூற அகிலமும் ஆளு கின்ற
சூரனாம் எமது முன்னோன் தோளிடை உய்ப்பக் கொண்டு
பேருவன் இவளை யோராய் விலக்கினை பேதை நீராய். - 22
1596 - தடுத்திடல் முறைய தன்றால் தாரகன் தானை வீரர்
அடுத்திடிற் படுப்பர் கண்டாய் அன்றியும் யானே நின்னை
எடுத்தனன் மிசைவன் துய்க்கின் இரும்பசி யுலவா தென்னா
விடுத்தனன் உய்ந்து போதி விளிவுறேல் எளியை யென்றாள். - 23
1597 - பாதகி இனைய மாற்றம் பகர்தலும் வீரன் கேளா
வேதியின் நினது சூலப் படையிற எறிந்தேன் நின்னை
மாதென அடாது நின்றேன் மற்றிதை உணர்ந்து வல்லே
போதியால் இவளை விட்டுப் போக்கலை கரத்தை யென்றான். - 24
1598 - என்றலுங் கொடியள் கேளா ஈங்கிவன் வாளு மின்றி
நின்றனன் இவனொ டேபோர் நேருதல் நெறிய தன்றால்
அன்றியும் இவனை வெல்லல் அரிதினிச் சசியைக் கொண்டு
சென்றிடல் துணிபா மென்னாத் திரும்பினள் சேடி தன்பால். - 25
1599 - துன்முகி யாகி நின்ற துணைவிதன் சிறைப்பட் டுள்ள
பொன்மிகும் யாணர் மேனிப் புலோமசை தனைத்தான் பற்றிக்
கொன்மலி அம்பொன் மேருக் குவட்டினைக் கொடுபோங் காலின்
வன்மையி னோடு கொண்டு மறிமுகத் தணங்கு போனால். - 26
1600 - போகலும் அதனை ஐயன் பொருநரில் தலைவன் பாரா
ஏகுதி போலும் நில்லென் றெய்தியே உடைவாள் வாங்கிச்
சேகுறு மனத்தாள் கூந்தல் செங்கையாற் பற்றி யீர்த்துத்
தோகையைத் தொட்ட கையைத் துணித்தனன் விண்ணோர் துள்ள. - 27
1601 - இருட்டுறு பிலத்துற் றோரை எடுத்துவௌ¢ ளிடையிட் டென்ன
மருட்டுறு மதிய ளாகி வருந்திய சசியென் பாளை
அருட்டிறத் தோடு வீடு செய்துபின் அவுண மாதை
உருட்டினன் றனது தாளால் உருமென உதைத்துத் தள்ளி. - 28
1602 - அயமுகி வீழ்த லோடும் அழுங்கியே அயலின் நின்ற
வயமிகு துன்மு கத்து மங்கைதன் கரத்தி லொன்றைச்
செயிரறு சசியை நீயுந் தீண்டினை போலு மென்னாத்
துயல்வரு தொடையல் வீரன் துணித்தனன் சோரி பொங்க. - 29
1603 - வேறு
மதர்த்திடு துன்முகி வன்கை வாளினாற்
சிதைத்திடு மொய்ம்புடைச் சேனை காவலன்
உதைத்தனன் அனையளும் ஓவென் றேயுளம்
பதைத்தனள் புலம்பியே படியில் வீழவே. - 30
ஆகத் திருவிருத்தம் - 1603
-----
37. அசமுகி சோகப் படலம் (1604 - 1633)
1604 - அறைபடு கழலினான் அவுண மாதர்கை
எறிதலுங் குருதிநீர் எழுந்த தன்மையால்
திறல்கெழு வெய்யசூர் திருவைச் சுட்டிடுங்
குறைபடு ஞெகிழியின் கோலம் போலுமே. - 1
1605 - திரைந்தெழு குடிஞைபோல் குருதி சென்றிடக்
கரந்துமி படுதலுங் கவன்று வீழ்ந்தனள்
வருந்தினள் அரற்றினள் மறிமு கத்தினாள்
விரிந்திடு கனலுடை வேலை போன்றுளாள். - 2
1606 - மருண்டனள் பதைத்தனள் மறித்த கையினள்
வெருண்டனள் நிலனுற வியன்கை எற்றினள்
உருண்டனள் வெரிநுடன் உரமுந் தேய்வுறப்
புரண்டனள் செக்கரிற் புயலிற் றோன்றுவாள். - 3
1607 - புரந்தரன் தேவியைப் பொம்மெ னப்பிடித்
துரந்தரு வாயிலிட் டுண்பன் ஈண்டெனா
விரைந்தெழும் சென்றிம் மீளும் வீழ்ந்திடும்
இருந்திடும் சாய்ந்திடும் இரங்குஞ் சோருமே. - 4
1608 - கடித்திடும் இதழினைக் கறைகண் மீச்செலக்
குடித்திடும் உமிழ்ந்திடும் குவல யத்திரீஇத்
துடித்திடும் பெயர்ந்திடும் துளக்குஞ் சென்னியை
இடித்தெனக் கறித்திடும எயிற்றின் மாலையே. - 5
1609 - திகைத்திடும் நன்றுநஞ் செய்கை ஈதெனா
நகைத்திடும் அங்குலி நாசி யில்தொடும்
புகைத்தென உயிர்த்திடும் புவியைத் தாள்களால்
உகைத்திடும் புகையழல் உமிழும் வாயினால். - 6
1610 - உம்மென உரப்பிடும் உருமுக் காண்றென
விம்மெனச் சினத்திடும் எரிவி ழித்திடுந்
தெம்முனைப் படையடுஞ் சேனை வீரனை
விம்மிதப் படுமுடல் வியர்க்கும் வௌ¢குமே. - 7
1611 - அற்றிடு கரத்தினை அறாத கையினால்
தெற்றென எடுத்திடும் தெரிந்து நோக்கிடும்
ஒற்றிடும் விழிகளில் உகுக்குஞ் சோரிநீர்
இற்றெவர் பட்டனர் என்னின் என்னுமே. - 8
1612 - வீவதே இனியெனும் வினையி னேன்றனக்
காவதோ இ·தெனும் ஐய கோவெனும்
ஏவரும் புகழ்தரும் எங்கள் அண்ணர்பாற்
போவதெவ் வாறெனப் புலம்பு கொள்ளுமே. - 9
1613 - காசினி தனில்வருங் கணவர் கைதொடக்
கூசுவ ரேயெனுங் குறிய பங்ககெனப்
பேசுவ ரேயெனும் பிறரும் வானுளோர்
ஏசுவ ரேயெனும் என்செய் கேனெனும். - 10
1614 - தேவர்கள் அனைவருஞ் சிந்தித் தென்கரம்
போவது புணர்ந்தனர் பொன்று வேன்இனி
ஆவதன் முன்னரே அவரை யட்டுல
கேவையும் முடிப்பனென் றெண்ணிச் சீறுமே. - 11
1615 - பாருயிர் முழுவதும் படுத்தி டோவெனும்
ஆரழல் வடவையை அவித்தி டோவெனும்
பேருறு மருத்தினைப் பிடித்தி டோவெனும்
மேருவை அலைத்தனன் வீட்டு கோவெனும். - 12
1616 - பீளுறும் எழிலிகள் பிறவும் பற்றியே
மீளரி தெனும்வகை மிசைந்தி டோவெனும்
நாளினை முழுவதும் நாளு டன்வருங்
கோளினை முழுவதுங் கொறித்தி டோவெனும். - 13
1617 - சீர்த்தகை இழந்தியான் தெருமந் துற்றது
பார்த்திக ழுங்கொலஇப் பரிதி வானவன்
ஆர்த்திடுந் தேரொடும் அவனைப் பற்றியே
ஈர்த்தனன் வருவதற் கெழுந்தி டோவெனும். - 14
1618 - கண்டதோர் பா¤தியைக் கறித்துச் சூழ்ச்சிசெய்
அண்டர்கள் யாரையும் அடிசி லாகவே
உண்டெழு கடலையும் உறிஞ்சிக் கைபுறத்
தெண்டிரை தனிற்கழீஇத் திரும்பு கோவெனும். - 15
1619 - செந்நலம் நீடிய தென்னங் காயிடைத்
துன்னிய தீம்பயன் சுவைத்திட் டாலெனப்
பின்னுறு மதியினைப் பிடித்துக் கவ்விமெய்
இன்னமிர் தினை நுகர்ந் தெறிகெ னோவெனும். - 16
1620 - இந்திரன் களிற்றினை ஏனைத் தந்தியைச்
செந்துவர்க் காயெனச் சேர வாய்க்கொளா
ஐந்தரு இலைகளா அவற்றுள் வெண்மலர்
வெந்துக ளாக்கொடு மிசைகெ னோவெனும். - 17
1621 - தாக்குகோ பணிகளைத் தலைகி ழக்குற
நீக்குகோ பிலம்படு நிலயத் தோரையுந்
தூக்குகோ புவனியைச் சுழற்றி மேலகீழ்
ஆக்குகோ மாலென அருந்து கோவெனும். - 18
1622 - வேறு
ஆரும் அச்சுற இனையன அசமுகி வெய்யாள்
சூரன் தங்கைமா லுளத்தினள் இறப்பது துணிவாள்
பேரிடும் பையள் தொலைவுறா மானமே பிடித்தாள்
வீர வன்மையள் ஆதலின் உரைத்தனள் வெகுண்டாள். - 19
1623 - வெகுளு மெல்லையில் கண்டனள் துன்முகி வெய்ய
தகுவர் தங்குலத் துதித்தனள் ஆயினுந் தகவின
புகுதி சால்புணர் புந்தியள் ஆதலிற் பொருக்கென்று
இகுளை முந்துற வந்தனள் இனையன இசைத்தாள். - 20
1624 - வைய மென்செயும் வானக மென்செயும் மற்றைச்
செய்ய வானவர் என்செய்வர் வரைகளென் செய்யும்
ஐய மால்கடல் பிறவுமென் செய்திடும் அவனால்
கையி ழந்திடின் உலகெலாம் முடிப்பது கடனோ. - 21
1625 - பாரும் வானமுந் திசைகளும் பல்லுயிர்த் தொகையுஞ்
சேர வேமுடித் திடுவதை நினைந்தனை செய்யின்
ஆரும் நின்றனை என்செய்வர் அவையெலா முடைய
சூர னேயுனை முனிந்திடும் அவன்வளந் தொலையும். - 22
1626 - ஆத லான்மனத் தொன்றுநீ எண்ணலை அவுணர்
நாத னாகிய வெய்யசூர் முன்னுற நாம்போய்
ஈதெ லாஞ்சொலின் இமையவர் கிளையெலா முடிக்கும்
போத லேதுணி வென்றனள் பின்னரும் புகல்வாள். - 23
1627 - வேறு
ஞானமில் சிறுவிதி நடாத்தும் வேள்வியில்
வானவர் தங்களின் மடந்தை மார்களில்
தானவர் தங்களில் தத்தம் மெய்களில்
ஊனமில் லோரையாம் உரைக்க வல்லமோ. - 24
1628 - நினைவருங் கண்ணுதல் நிமலற் கேயலால்
அனையனை அடைதரும் அறிஞர்க் கேயலால்
எனைவகை யோர்க்கும்எவ் வுயிர்க்கும் ஏற்பதோர்
வினைபடும் இழிதுயர் விட்டு நீங்குமோ. - 25
1629 - ஆகையின் மங்கைநீ அரற்றல் வௌ¢கியே
சோகமுங் கொள்ளலை துயரும் இன்பமும்
மோகமும் உயிர்க்கெலாம் முறையிற் கூடுமால்
ஏகுதுங் எழுகென இயம்பித் தேற்றினாள். - 26
1630 - வேறு
மொழிந்து துன்முகி தௌ¤த்தலும் நன்றென முன்னா
எழுந்து துண்ணென அசமுகி என்பவள் இலதாய்க்
கழிந்த துன்பொடு நின்றதோர் சசியினைக் காணூஉ
அழிந்த மானவெந் தீச்சுட இனையன அறைவாள். - 27
1631 - துப்பு றுத்திய அண்டங்கள் யாவினுஞ் சூரன்
வைப்பு றுத்திய திகிரியும் ஆணையும் வழங்கும்
இப்பு றத்தினில் ஔ¤ப்பினும் இதுவன்றி அண்டத்
தப்பு றத்தினில் ஔ¤ப்பினும் பிழைப்புமக் கரிதே. - 28
1632 - மறைத லுற்றிடும் இந்திரன் தன்னைஇவ் வனத்தின்
உறைத லுற்றிடும் உன்றனை ஒழிந்தவா னவரை
இறைத னிற்பற்றி ஈர்த்துப்போய் என்னகர் தன்னில்
சிறைப டுத்துவன் திண்ணமெங் கோமகன் செயலால். - 29
1633 - உங்கள் தம்மையான் சிறைபடுத் தேன்எனின் உலகம்
எங்கு மாள்கின்ற சூரபன் மாவெனும் இறைவன்
தங்கை யன்றியா னெனதுரந் தனிலெழுந் தனவுங்
கொங்கை யன்றியான் பேடியே குறிக்கொளென் றகன்றாள். - 30
ஆகத் திருவிருத்தம் - 1633
-----
38. இந்திரன் மீட்சிப் படலம் (1634 - 1642)
1634 - அகல நின்றதோர் வீரமா காளனாம் அடலோன்
உகவை யோடுறு சசியினை நோக்கிநின் னுளத்தில்
தகுவர் தங்களுக் கஞ்சலை அன்னையுன் தலைவன்
புகுதும் எல்லையும் அளிப்பன்ஈண் டுறைகென்று போனான். - 1
1635 - போன காலையிற் புலோமசை அடவியம் புறனோர்
மானி னம்பிரிந் தற்றென அவ்வனம் வைகிக்
கோன வன்வினை முற்றிய நோற்றனள் குறிப்பால்
ஆன பான்மையை நாரத முனிவரன் அறிந்தான். - 2
1636 - மேலை வௌ¢ளியம் பருப்பதந் தனில்விரைந் தேகிச்
சீல விண்ணவர் தம்முடன் சிவனடி பரவக்
கால மின்றியே இருந்திடும் இந்திரன் கடைபோய்
ஞாலம் வைகிய புலோமசைக் குற்றவா நவின்றான். - 3
1637 - நவின்ற வாசகங் கேட்டலும் மகபதி நனியுட்
கவன்று தேறியே முனிந்துபின் இறையருள் கருதி
அவன்றன் மாமுறை தூக்கியே தன்னைநொந் தழுங்கித்
துவன்ற தேவரோ டெழுந்தனன் அரன்புகழ் துதித்தே. - 4
1638 - வந்து நந்தியெம் மடிகளின் அடிமுறை வணங்கி
அந்த மில்பகல் வேலைநோக் குற்றனம் அமலன்
சிந்தை செய்தெமை யருள்புரிந் திடுகிலன் தீயேம்
முந்தி யற்றிய தீவினைப் பகுதியை முன்னி. - 5
1639 - கைம்மை யாம்பெயர் அணங்கினோர் பெறாவகை கறுத்த
செம்மை யா£களத் தெம்பிரான் எமக்கருள் செய்வான்
பொய்ம்மை தீர்தவம் இயற்றிட நிலமிசைப் போதும்
எம்மை யாங்கருள் புரிந்தனை விடுத்தியென் றியம்ப. - 6
1640 - நன்று போமென நந்தியெம் பெருந்தகை நவிலத்
துன்று வானவர் தம்மொடுங் கழுமலந் துன்னி
நின்ற வீரமா காளனைக் கண்டனன் நேர்போய்ச்
சென்று புல்லியே முகமன்ஓர் அளப்பில செப்பி. - 7
1641 - போதி ஐயவென் றனையனை ஐயன்பாற் புகுத்தி
மாது நோற்றுழிக் குறுகியே அவள்துயர் மாற்றிக்
கேதம் எய்திய அசமுகி சூளுரை கேளா
ஏது செய்வதென் றுன்னினன் இமையவர்க் கிறைவன். - 8
1642 - சுடர்ப்பெ ருங்குலி சத்திறை சூழ்ந்தனன் துணியா
அடுத்த மங்கையை யுடன்கொடே விரைந்தவண் அகன்று
புடைக்கண் வந்திடுங் கடவுளர் தம்மொடும் புராரி
எடுத்த வார்சிலைப் பொற்றையிற் கரந்தனன் இருந்தான். - 9
ஆகத் திருவிருத்தம் - 1642
-----
39. சூரன் அரசிருக்கைப் படலம் (1643 -1669)
1643 - இன்ன பான்மையின் மகபதி இருந்தனன் இப்பால்
முன்ன மேகிய அசமுகி வெய்யதுன் முகத்தாள்
தன்னொ டேகியே மகேந்திரத் தனிநகர் அடைந்தாள்
அன்ன காலையிற் சூரன்வீற் றிருந்தவா றறைவாம். - 1
1644 - வேறு
மீயுயர் கின்ற விண்ணினின் றிழிந்த விழுமிய மேதினி வரைப்பின்,
ஆயிர கோடி கொண்டவண் டத்தில் ஆடகப் பித்திகை அவற்றுள்,
தீயன விலக்கி நல்லன எடுத்துத் திசைமுகத் தவர்கள் செய் தென்ன,
ஓய்வற விளங்கு தபனியப் பொதுவொன் றொராயிரம் யோசனை யுறுமே. - 2
1645 - இத்தரை யுளதாந் தொல்லைஅண் டத்தில் இடையிடை எய்தியே இலங்கும்,
அத்தமால் வரைகள் கைபுனைந் தியற்றி அம்புயா சனர் பலர் கூடி,
வைத்தெனச் சூரன் அரசியல் நடாத்தும் மன்றினில் ஆயிர கோடி,
பத்தியின் நிறுவும் ஆடகத் தூணம் பரந்ததப் பருமையார் பகர்வார். - 3
1646 - தொல்லையன் டத்தின் கண்டொறுங் கெழீஇய சுவணமா தரையெலாந் தொகைசெய்,
தல்லன விலக்கி நல்லன தெரிந்தே அமைத்த போல் அணிபெறு நிலத்தில்,
ஒல்லுறு புடையில் உம்பரில் அங்கண் உலப்பிலாக் குலகிரிக் குழுவிற்,
பல்லிருந் துணிசெய் தணிபடுத் தென்னப் பன்னிற ஓவியம் பயிலும். - 4
1647 - பொன்னுலா அண்டத் தும்பர்க டோறும் பொருந்திய செக்கர்வான் புராரி,
தன்னதா ணையினால் ஒருங்குசூழ்ந் தென்னத் தண்மலர் விதானமீத் தயங்கப்,
பன்னிரு கோடி யாகியெங் கணுஞ்சூழ் பகலவர் சிலவரே யன்றி,
அன்னவர் பலரும் பணியிலுற் றென்ன அணி மணிக் கண்ணடி ஔ¤ரும். - 5
1648 - மண்ணுலா அண்டத் திரவிகள் என்றூழ் வரம்பிலா மதிகளின் உளவாந்,
தெண்ணிலாக் கற்றை ஐம்பரு நிறத்த செல்லினம் யாவையுஞ் செறிந்தே,
அண்ணலார் மேலைக் கம்பலஞ் சூழ்போய் அமர்ந்தென ஆயிடைக் கவரி,
எண்ணிலா தனவும் ப·றுகிற் குழுவும் இடைவிராய் மிடைவன எங்கும். - 6
1649 - பரக்குறும் அண்டந் தொறுந்தொறும் உளவாம் பகலினைப் பரிமுகத் தெரியின்,
உருக்கியொன் றாக்கித் தவிசென இயற்றி ஔ¤றுதா ரகையவட் குயிற்றித்,
தருக்குறு கின்ற மதிகளை மடங்கல் தகவுசெய் திருத்திய தென்னத்,
திருக்கிளர் அவையத் தவுணர்கோன் இருப்பச் சிறந்ததோர் அரியணை திகழும். - 7
1650 - ஆனதோர் மன்றத் தரியணை மிசையே ஆயிர கோடியண் டத்தின்,
மேனிமிர் வடவை அங்கியும் விடமு மிசைந்தழி யாநெறி மேவித்,
தானவர் பரவக் கூற்றெலா மொன்றாய்த் தணப்பில்பேர் அணிகலந் தயங்க,
வானிமிர்ந் துற்றா லென்னவெஞ் சூர மன்னவர் மன்னன்வீற் றிருந்தான். - 8
1651 - மேலைநாள் அமலன் உதவுபல் லண்டம் மேவர நடாத்துதொல் லாணைக,
கோலொடு வௌ¤ய சீர்த்திகள் முழுதுங் குறுகியே ஈருருக் கொண்டு,
பாலுற வந்து நின்றதே யென்னப் பாங்கரில் அவுணர்கள் தாங்கும்,
வாலிய துணைசேர் தவளவெண் கவிகை மாமதிக் கடவுளை மலைய. - 9
1652 - காருறழ் படிவத் துவரிகள் அனைத்துங் கண்ணகன் பாற்கடல் முழுதும்,
ஈருரு வெய்தி யெழுந்துமே லோங்கி இருந்தென வைகலுஞ் செலுமத்,
தாரக விறலோன் ப·றலைச் சீயத் தலைமையான் சார்ந்தயல் இருப்ப,
ஆரழல் உருவப் பண்ணவ ரேபோல் அமைச்சருங் குமரரும் அமர.
- 10
1653 - எவ்வெலா அண்டத் துறைதரு மருத்தும் இரும்புனற் கிறைவரு மாகிச்,
செவ்விதின் ஒருங்கித் தத்தமில் உலவாச் சீகரம் படுபனி சிதறி,
அவ்வயின் வேண்டும் அளவையிற் பலவாய் அவனடி பணிந் தெழுந் திறம்போல்,
மைவரை யனைய அவுணா¢கள் இரட்டும் வாலிய கவரிகள் வயங்க. - 11
1654 - உரைத்திடும் அண்டந் தொறுந்தொறும் உள்ள உம்பரில் இயக்கர் கோன் உலகில்,
தரைப்பெரு வரைப்பில் பிறவிலுள் ளதனில் தவறிலா அறபுதத் தனவாத்,
தெரித்தனர் எடுத்துப் பொதிந்தென நறிய திரையன்மெல் லிலைதுவர்ப் பழுக்காய்,
விரைத்திடு சுண்ணங் கொள் கலம் பரியா வினைமுறை யோர்பலர் விரவ. - 12
1655 - நின்றதோ ரேனை அருக்கருட் சிலரை நீரமுய்த் துள்ளகோ டிகமேற்,
பொன்றரை யுழியின் மணிசொரிந் தென்னப் புகட்டுறு தம்பலக் களாசி,
மன்றதொல் லறிவர் திருத்தினர் பொருவ மற்றவை அவுணர்க ளேந்தித்,
துன்றிருந் துவர்க்கா யடைபிற பரிக்குந் தொழுவர்தங் குழுவொடு துவன்ற. - 13
1656 - ஆழியங் கிரியிற் கதிர்மணி வெயிலும் அன்னது சூழ்ந்தபேர் இருளும்,
வாழிய அமுதும் உவரியும் அல்லா வாரிதி யும்பல மணியும்,
ஊழியி னிறுதி அமையமே லெல்லாம் ஒன்றிய தென்னமுன் னிருபால்,
கேழுறு பின்னர் அவுணர்மாத் தலைவர் கிளையொடு துவன்றினர் கெழும. - 14
1657 - மின்னவிர் விசும்பின் அகட்டினை அளவி வெண்மதிக் கடவுண்மெய் யணுகிப்,
பின்னுறும் அமுத நீர்க்கடல் திளைத்துப் பெரும்புறப புணரியிற் படியா,
இந்நில மருங்கில் வானகத் துள்ள எழின்மலர்க் காவுதோ றுலாவித்,
தன்னொலி யின்றி மென்மெல அசைந்து தண்ணென வசந்தன்முற் சார. - 15
1658 - விண்படு நிறைநீர்ப் புதுமதிக் கடவுள் வியன்பனித் துவலையைத் துற்றுக்,
கண்படு துறக்கத் தண்டலைப் பொதும்பிற் காமரம் போதிடைக் கவிழ்த்தி,
எண்படு பன்னாள் கழித்தபின் கவர்ந்தே எழிலிகள் கரந்துநின் றீண்டைத்,
தண்பனி உறைப்பிற் கண்ணுறாத் துவலை தணப்பறச் சிதறிடத் தம்மில். - 16
1659 - தேனனர் ஐம்பால் உருப்பசி அரம்பை திலோத்தமை மேனகை முதலாம்,
வானவர் மகளிர் இயக்கர்தம் மகளிர் வலிகெழும் அரக்கர் தம் மகளிர்,
தானவர் மகளிர் விஞ்சையர் மகளிர் சாரணர் சித்தர்தம் மகளிர்,
ஏனையர் மகளி ரியாவரும் வெவ்வே றியற்படு களிநடம் இயற்ற. - 17
1660 - ஐந்திறத் துருவங் காலையில் உரைப்பான் அமையமின் றாகியே தேவா,
வந்தொரு புடையில் ஒதுங்கினன் இருப்ப மற்றவன் உதவுறுங் குமரர்,
நந்துறு பெருநீர்க் குடங்கரிற் கன்னல் நாடினர் நாழிகைப் பறையை,
முந்துற விரட்டிப் பதந்தொறுஞ் சென்று முறை முறை உரைத்தனர் திரிய. - 18
1661 - தேர்த்திடும் உழுவைச் சூழலிற் சிலமான் சென்றென அவுணர்தஞ் செறிவில்,
வேர்த்துடல் பதைப்ப வரும்பல முனிவர் வேறுவே றாசிகள் இசையா,
ஆர்த்திடும் ஒலியாற் கேட்டில வாமென் றஞ்சினர் அவருறு புலத்தைப்,
பார்த்திடுந் தோறும் வாழ்கெனப் பரவிப் பாணியை விரித்தனர் நிற்ப. - 19
1662 - திருக்கிளர் பொன்னாட் டிந்திரன் அல்லாத் தேவர்கள் யாவரும் அவுணர்,
நெருக்கினர் உந்த ஏகிநேர் புகுவோர் நெடுங்கடை காறுமுன் றள்ள,
வெருக்கொடு சென்று மீண்டுமற் றாகி வியன்கடை காவலர் புடைப்பத்,
தருக்குறும் அவையங் காணிய பெறாது தம்முளங் குலைந்தனர் திரிய. - 20
1663 - வெற்றவெங் கதத்தர் அவுணர்கஞ் சுகிசேர் மெய்யினர் வெறுக் கையஞ் சூரல்,
பற்றிடு சுரத்தர் செல்லெனுந் தெழிப்பர் பனிப்பிறை எயிற்றர் பல்லிமையோர்,
பொற்றட மகுடஞ் சிதறிடப் புடைப்போர் புயலுறு சூறையிற் றுரந்துஞ்,
சுற்றுற நிறுத்தும் இருத்தியும் புகுந்தோர் தொல்பெயர் செப்பிமுன் துதிப்ப. - 21
1664 - பொன்றிகழ் கமலத் திதழெலாம் விரிந்த போதினிற் பொகுட் டிடை தோறும்,
மின்றிகழ் நுசுப்பில் திருமக்ள் பலராய் வீற்றுவீ ற்றிருத்தலே போலக்,
குன்றுறழ் கொங்கை மங்கையர் பல்லோர் கொண்டுதன் னுறையுளிற் சென்று,
துன்றிய பலவாந் தீபிகைத் தட்டஞ் சொன்முறை யாசியிற் சுற்ற. - 22
1665 - தென்னுறு பாலை குறிஞ்சியே மருதஞ செவ்வழி யென்னுநா னிலத்திற்,
பின்னகம் புறமே அருகியல் மற்றைப் பெருகியல் உறழவெண் ணிரண்டாய்,
மன்னிய நாதத் திசைகளிற் பிறவில் வரம்பில வாயபாட் டதனுட்,
கின்னரர் சித்தர் இயக்கர்கந் தருவர் கிளத்துமங் கலத்தன இசைப்ப. - 23
1666 - மாகநல் வேள்வி ஆற்றிய திறனும் மதிமுடிப் பரனருள் அடைந்தே,
ஏகிய திறனுந் தனதனை முதலா யாரையும் நிலையழித் தனவுஞ்,
சேகுறும் அண்டம் யாவையுங் கண்டு திருவுடன் அரசியற் றியதும்,
பூகத நிலையத் தவுணர்கள் பல்லோர் புடைதனில் முறைமுறை புகழ. - 24
1667 - கார்த்திடும் அவுணர் திசையுளா ரேனோர் கைதொழூஉத் தனது நோன் கழற்கால்,
தூர்த்திடு மலருந் தொல்பெருங் கவியுந் தூநெறி முனிவரர் தொகையுஞ்,
சார்த்தினர் வரையா மந்திர நெறியால் தலைத்தலை யாசிகள் சாற்றிச்,
சேர்த்தனர் சிந்துந் துணருமக் கதமுஞ் சீர்த்தகால் வீசினன் திரிய. - 25
1668 - ஆடியல் முறையை இயற்றினர் தமக்கும் அடைந்துதற் புகழுநர் தமக்கும்,
பாடியல் முறையில் வல்லுநர் தமக்கும் பரிவுசெய் தலைவர்கள் தமக்கும்,
பீடுறு மகுடங் கடகநூல் முதலாம் பேரணி மணித் துகில் பிறவும்,
மாடுறு நிதியும் ஏனவும் நின்று மலர்க்கைநீட் டினதொறும் வழங்க. - 26
1669 - தேவரும் ஏனை முனிவரும் பிறருஞ் செய்துறாத் தங்கள்பா லன்றி,
ஏவர்பா லானும் இறைவனாம் ஒருதான் ஏதம்நோக் குற்றனன் வெகுளின்,
ஆவிய திழப்பார் போல்வெரீஇப் புகழ்ந்தும் அவனுவப் புற்றிடின் உய்ந்தும்,
ஓவற நிற்பர் அசனிவீழ் தோறும் உரைக்குமந் திரத்தினோர் என்ன. - 27
-----
40. அசமுகி நகர்காண் படலம் (1670 -1702)
1670 - இன்னன பலபல எய்தச் சூரனாம்
மன்னவன் இருத்தலும் மற்றவ் வெல்லையில்
தொன்னகர் அணித்துறத் துன்மு கத்தினாள்
தன்னொடும் அசமுகி தான்வந் தெய்தினாள். - 1
1671 - மோட்டுறு மகேந்திர முதிய மாநகர்
கூட்டுறு திருவெலாங் குலைய முன்னவள்
மாட்டுறு துணையொடு வந்துற் றாலெனக்
கீட்டிசை வாய்தலைக் கிட்டி னாளரோ. - 2
1672 - கெழுதரும் அசமுகக் கெடல ணங்குதன்
பழிதரு கையினைப் பார்த்து நேர்ந்துளார்
அழிதரு துன்புகொண் டழலில் சீறினார்
இழிதரும் இச்செயல் யார்செய் தாரெனா. - 3
1673 - மானமில் அசமுகி மகேந்தி ரப்புரந்
தானுறு துயர்க்கொரு தாரி காட்டல்போல்
ஊனுறு குருதிகை யுகுப்பச் சென்றுழி
யானது கண்டனர் அவுணர் யாவரும். - 4
1674 - வட்டுறு பலகையின் வல்ல நாய்நிரைத்
திட்டனர் கவற்றினை இசைத்த சூளொடுங்
கிட்டினர் இடந்தொறுங் கெழுமி யாடினர்
விட்டனர் அத்தொழில் விரைந்துற் றார்சிலர். - 5
1675 - தெரிதரு கரியபொன் திரித்திட் டாலெனப்
புரிதரு மருப்புடைப் புயலின் செச்சையை
முரிவரு பேரமர் மூட்டிக் கண்டுளார்
பரிவொடு பிரிந்தயல் படர்கின் றார்சிலர். - 6
1676 - கார்ப்பெயல் அன்னதோர் கடாங்கொள் மால்கரி
கூர்ப்புறு மருப்புமெய் குளிப்பச் சோரிநீர்
ஆர்ப்பொடு தத்தமில் ஆடல் செய்வது
பார்ப்பது விட்டனர் படர்கின் றார்சிலர். - 7
1677 - துய்யதோர் கிஞ்சுகச் சூட்டு வாரணம்
மொய்யொடு தன்னுயிர் முடியும் எல்லையுஞ்
செய்யுறு வெஞ்சினச் செருவை நோக்கினார்
ஒய்யென நீங்கியே யுறுகின் றார்சிலர். - 8
1678 - ஊனமில் பலபணி யுடன்று சீறியே
பானுவை நுகரவிண் படரு மாறென
வானிகள் ஓச்சினர் வானிற் கைவிடா
மேனிகள் வியர்ப்புற வெகுண்டுற றார்சிலர். - 9
1679 - வாம்பரி தேர்கரி மானம் பாண்டில்கள்
ஏம்பலோ டூர்ந்திட இயற்றுங் கற்பொரீஇ
யாம்பொருள் அல்லதொன் றடைவ தென்னெனச்
சோம்புதல் இன்றியே தொடர்கின் றார்சிலர். - 10
1680 - குறிகெழு வௌ¤லொடு குற்றி நாட்டியும்
அறிகுறி தீட்டியும் அவையி லக்கமா
எறிகுறு படையினை எய்யுங் கோலினை
நெறிதொறும் விட்டவண் நேர்கின் றார்சிலர். - 11
1681 - நாந்தகம் ஆதியா நவிலுந் தொல்படை
ஆய்ந்திடும் விஞ்சைகள் அடிகள் முன்னமாய்
ஏய்ந்திடுங் கழகமுற் றியற்று மாறொரீஇப்
போந்தனர் ஒருசிலர் பொருமல் மிக்குளார். - 12
1682 - வாட்படு கனலிகால் வானின் கண்ணவாங்
காட்புறு நரம்பியாழ் காமர் வீணைகள்
வேட்புறும் ஈர்ங்குழல் மிடறு காலிசை
கேட்பது விட்டவண் கிட்டி னார்சிலர். - 13
1683 - நாடக நூல்முறை நுனித்து நன்றுணர்
கோடியர் கழாயினர் கூத்தர் ஏனையோர்
ஆடுறு கோட்டிகள் அகலுற் றங்ஙனங்
கூடினர் ஒருசிலர் குலையும் மெய்யினார். - 14
1684 - புலப்படு மங்கலப் பொருள்முற் றுங்கொடு
நலப்படு வேள்விகள் நடத்திக் கேளொடு
பலப்பல வதுவைசெய் பான்மை நீத்தொராய்க்
குலைப்புறு கையொடுங் குறுகுற் றார்சிலர். - 150
1685 - மாலொரு மடந்தைபால் வைதது முன்னுறு
சேல்விழி யொருத்திபாற் செல்ல வூடியே
மேலுறு சினத்திகல் விளைக்க நன்றிது
காலமென் றுன்னியே கழன்றுற் றார்சிலர். - 16
1686 - தோடுறு வரிவிழித் தோகை மாருடன்
மாடம திடைதொறும் வதிந்த பங்கயக்
காடுறு பூந்தடங் காமர் தண்டலை
ஆடலை வெறுத்தெழீஇ யடைகின் றார்சிலர். - 17
1687 - சுள்ளினைக் கறித்தனர் துற்று வாகையங்
கள்ளினைக் கொட்பொடு களிக்கும் நெஞ்சினார்
உள்ளுறுத் தியபுலன் ஊசல் போன்றுளார்
தள்ளுறத் தள்ளுறத் தளர்ந்துற் றார்சிலர். - 18
1688 - அனையபல் வகையினர் அவளைக் கண்டுளார்
பனிவரு கண்ணினர் பதைக்கும் நெஞ்சினர்
கனலொடு தீர்ப்புகை காலு யிர்ப்பினர்
முனிவுறு கின்றனர் மொழிகின் றார்இவை. - 19
1689 - வேறு
அந்தகன் ஒருத்தற் பேரோன் ஆடல்வல் லியத்தோ னாதி
வந்திடும் அவுணர் தம்மை மதிக்கிலா வலியோர் தம்மை
முந்துறு புரத்தை அட்டு முழுவதும் முடிப்பான் நின்ற
செந்தழல் உருவத் தண்ணல் செய்கையோ இனைய தென்பார். - 20
1690 - மேதியஞ் சென்னி வீரன் வெவ்வலி நிசும்பன் சும்பன்
கோதறு குருதிக் கண்ணன் குருதியங் குரத்தன் முந்தே
பூதலம் புரந்த சீர்த்திப் பொருவில்தா ரகனே பண்டன்
ஆதியர் ஆயுள் கொண்ட ஐயைதன் செயலோ என்பார். - 21
1691 - சிரபத்தி அளவை யில்£த் திறலரி ஒருநாற் றந்தக்
கரபத்தின் அண்ணல் வானோர் யாரையும் கலக்கஞ் செய்ய
வரபத்தி புரியா அன்னோர் வணங்கினர் அடைய அந்நாட்
சரபத்தின் வடிவங் கொண்டான் தன்செய லாங்கொல் என்பார். - 22
1692 - வண்டுளர் கமலச் செங்கண் மாயனுந் தூய நீலங்
கண்டம தடைத்த தேவுங் கலந்தனர் தழுவிச் சேரப்
பண்டவர் புணர்ப்புத் தன்னில் உருத்திரர் பரிசா லுற்ற
செண்டுறு கரத்து வள்ளல் செய்கையே போலும் என்பார். - 23
1693 - பிளிற்றுறு குரலின் நால்வாய்ப் பெருந்துணை எயிற்றுப் புன்கண்
வௌ¤ற்றுறு தடக்கை கொண்ட வேழமா முகத்தெம் மேலோன்
ஔ¤ற்றுறு கலன்மார் பெய்தி உயிர்குடித் துமிழ்ந்த தந்தக்
களிற்றுடை முகத்துப் பிள்ளை செய்கையோ காணும் என்பார். - 24
1694 - ஈசனை மதிக்கி லாதே யாமுதற் கடவு ளென்று
பேசிடு தலைவர்க் கேற்ற பெற்றியால் தண்டம் ஆற்றும்
ஆசறு சங்கு கன்னன் அகட்டற் குண்டம் போல்வான்
தேசுறு பானு கம்பன் முதலினோர் செயலோ என்பார். - 25
1695 - நஞ்சுபில் கெயிற்றுப் புத்தேள் நாகணைப் பள்ளி மீது
தஞ்ச மொடிருந்த அண்ணல் தன்செய லாமோ என்பார்
அஞ்சுவன் இனைய செய்கைக் கனையது நினைவன் றென்பார்
நெஞ்சினும் இதனைச் செய்ய நினைக்குமோ மலரோன் என்பார். - 26
1696 - புரந்தர னென்னும் விண்ணோன் புணர்த்திடு செயலோ என்பார்
கரந்தனன் திரிவான் செய்ய வல்லனோ கருத்தன் றென்பார்
இருந்திடு கடவு ளோர்கள் இழைத்திடு விதியோ என்பார்
நிரந்துநம் பணியின் நிற்போர் நினைப்பரோ இதனை என்பார். - 27
1697 - கழைத்துணி நறவ மாந்திக் களிப்புறா உணர்ச்சி முற்றும்
பிழைத்தவ ராகும் அன்றேல் பித்தர்செய் தனராம் என்பார்
இழைத்தநா ளெல்லை சென்றோர் இயற்றியார் யாரோ என்பார்
விழுப்பெரு முனிவா¢ சொல்லால் வீழ்ந்ததோ இவர்கை என்பார். - 28
1698 - அங்கியின் கிளர்ச்சி யேபோல் அவிர்சுடர்க் கூர்வாள் தன்னைத்
தங்களி லேந்தி இன்னோர் சான்றசூள் உறவு சாற்றித்
துங்கமொ டமரின் ஏற்று முறைமுறை துணித்தார் கொல்லோ
இங்கிவர் இருவர் கையும் இற்றன காண்மின் என்பார். - 29
1699 - ஆரிவள் கரத்தி லொன்றை அடவல்லார் எவர்கண் ணேயோ
பேருறு காதல் கொண்டு பெண்மதி மயக்கந் தன்னாற்
சீரிய வுறுப்பி லொன்று சின்னமாத் தருவ னென்று
கூருடை வாளால் ஈர்ந்து கொடுத்தனள் போலும் என்பார். - 30
1700 - கேடுறும் இனையள் தன்னைக் கேட்பதென் இனிநாம் என்பார்
நாடிநாம் வினாவி னோமேல் நம்மெலாம் முனியும் என்பார்
மாடுறப் போவ தென்னை மாநில வரைப்பின் காறும்
ஓடியே அறிதும் என்பார் இனையன வரைத்த லோடும். - 31
1701 - சொல்லியற் சூரன் தங்கை துன்முகி யோடு கைபோய்
வல்லையிற் போதல் கேளா மம்மருற் றவுண மாதர்
சில்லியற் கூந்தல் தாழத் தெருத்தொறுஞ் செறிந்து கஞ்சம்
ஒல்லைமுத் துதிர்ப்ப தென்ன ஒண்கணீர் உகுத்துச் சூழ்ந்தார். - 32
1702 - அந்நகர் மகளிர் யாரும் ஆடவர் யாருஞ் சூழ்ந்து
துன்னினர் இனைய வாற்றால் துயருழந் திரங்கிச் சோரப்
பின்னவர் தொகுதி நீங்கிப் பிறங்குகோ நகரம் போந்து
மன்னவர் மன்னன் வைகும் மன்றினுக் கணிய ளானான். - 33
ஆகத் திருவிருத்தம் - 1702
-----
41. அசமுகி புலம்புறு படலம் ( 1703 - 1717)
1703 - மறிமுக முடைய தீயாள் மன்றினுக் கணிய ளாகிக்
கிறிசெயும் அன்னை தன்னைக் கேளிரை மருகா னோரைத்
திறலுடை முனைனை யோரைத் சிந்தையில் உன்னி யாண்டைப்
பொறிமகள் இரியல் போகக் கதறியே புலம்ப லுற்றாள். - 1
1704 - வேறு
வெறியாரும் இதழிமுடிப் பண்ணவர்கோன் அருள்புரிந்த மேனாள் வந்தாய்,
பிறியாது நுமைப்போற்றித் திரிவனென்றாய் அம்மொழியும் பிழைத்தாய் போலும்,
அறியாயோ கரம்போன தஞ்சலென்றாய் இலைதகுமோ அன்னே யன்னே,
சிறியேனான் பெண்பிறந்து பட்டபரி பவமென்று தீரும் ஐயோ. - 2
1705 - தாதையா னவர்அளித்த மைந்தர்கணே விருப்புறுவர் தாயர்பெற்ற,
மாதரார் பால்உவகை செய்திடுவர் ஈதுலக வழக்கம்என்பார்,
ஆதலால் என்துயரம் அகற்றவந்தாய் இலையந்தோ ஆரு மின்றி,
ஏகிலார் போல்தமியேன் கரமிழந்தும் இவ்வுயிர்கொண் டிருப்ப தேயோ. - 3
1706 - வருவீரெங் கணுமென்றே அஞ்சாது புலோமசையை வலிதே வௌவிப்,
பெருவீர முடன்வந்ததேன் எனதுகர தலந்துணித்துப் பின்னே சென்று,
பொருவீர மாகாளன் அவளையுமீட் டேகினன் அப்பொதும்பர்க் கானில்,
ஒருவீருஞ் செல்லீரோ நமரங்காள் நீருமவர்க் கொளித்திட் டீரோ. - 4
1707 - புரங்குறைத்தும் வலிகுறைத்தும் பொங்கியதொன் னிலைகுறைத் தும்புரையு றாத,
வரங்குறைத்தும் புகழ்குறைத்தும் மறையொழுக்கந் தனைக்குறைத்தும் மலிசீர் தொல்லை,
உரங்குறைத்தும் வானவரை ஏவல்கொண்டோம் என்றிருப்பீர் ஒருவன் போந்தென்,
கரங்குறைத்த தறியீர்நுந் நாசிகுறைத் தனன்போலுங் காண்மின் காண்மின். - 5
1708 - மேயினான் பொன்னுலகின் மீன்சுமந்து பழிக்கஞ்சி வெருவிக் காணான்,
போயினான் போயினான் வலியிலனென் றுரைத்திடுவீர் போலும் அன்னான்,
ஏயினான் ஒருவனையே அவன்போன்தென் கரந்துணித்தான் இல்லக் கூரைத்,
தீயினார் கரந்ததிறன் ஆயிற்றே இந்திரன்றன் செயலு மாதோ. - 6
1709 - எள்ளுற்ற நுண்டுகளில் துணையாகுஞ் சிறுமைத்தே எனினும் யார்க்கும்,
உள்ளுற்ற பகையுண்டேன் கேடுளதென் றுரைப்பர் அ·துண்மை யாமால்,
தள்ளுற்றுந் தள்ளுற்றும் ஏவல்புரிந் துழல்குலிசத் தடக்கை அண்ணல்,
கள்ளுற்று மறைந்திருந்தே எனதுகரந் துணிப்பித்தான் காண்மின் காண்மின். - 7
1710 - சங்கிருந்த புணரிதனில் நடுவிருந்த வடவையெனுந் தழலின் புத்தேள்,
உங்கிருந்த குவலயமோ டவைமுழுதுங் காலம்பார்த் தொழிப்ப தேபோல்,
அங்கிருந்தென் கரந்துணித்த ஒருவோனும் உங்களைமேல் அடுவன் போலும்,
இங்கிருந்தென் செய்கின்றீர் வானவரைச் சிறயரென இகழ்ந்திட் டீரே. - 8
1711 - முச்சிரமுண் டிரணியனுக் கிருசிரமுண் டந்தவன்னி முகற்கு மற்றை,
வச்சிரவா குவுக்கொருபான் சிரமுண்டே அவைவாளா வளர்த்திட் டாரோ,
இச்சிரங்கள் என்செய்யும் ஒருசிரத்தோன் என்கரத்தை இறுத்துப் போனான்,
அச்சுரருக் கஞ்சுவரே பாதலத்தில் அரக்கரிவர்க் களியர் அம்மா. - 9
1712 - பிறைசெய்த சீருருவக் குழவியுருக் கொண்டுறுநாட் பெயர்ந்து வானின்,
முறைசெய்த செங்கதிரோன்ஆதபமெய் தீண்டுதலும் முனிந்து பற்றிச்,
சிறைசெய்த மருகாவோ மருகாவோ ஒருவனெனைச் செங்கை தீண்டிக்,
குறைசெய்து போதுவோ வினவுகிலாய் ஈதென்ன கொடுமை தானே. - 10
1713 - நீண்டாழி சூழுலகை ஓரடியால் அளவைசெய்தோன் நேமி தன்னைப்,
பூண்டாய்பொன் னாரமென இந்நாளும் ஓர்பழியே பூணா நின்றான்,
ஈண்டாருங் குறும்பகைஞர் என்ரம்போந் திறமியற்ற இனிது வையம்,
ஆண்டாய்நந் தாரகனே குறைமதிநீ ரோநின்பேர் ஆற்றல் அம்மா. - 11
1714 - வையொன்று வச்சிக்கைப் புரந்தரனைத் தந்தியொடும் வான்மீச் செல்ல,
ஒய்யென்று கரத்தொன்றால் எறிந்தனைவீழ்ந் தனன்கிடப்ப உதைத்தாய் என்பர்,
மெய்யென்று வியந்திருந்தேன் பட்டிமையோ அவன் தூதன் வெகுண்டு வந்தென்,
கையொன்று தடிந்தானே சிங்கமுக வீரவிது காண்கி லாயோ. - 12
1715 - சூரனாம் பெயர்படைத்த அவுணர்கள்தம் பெருவாழ்வே தொல்லை யண்டஞ்,
சேரவே புரந்ததனைநின் பரிதிசெங்கோல் குடை யெங்குஞ் செல்லா நிற்கும்,
ஆரும்வா னவர்அவற்றிற் கச்சுறுவர் பொன்னகரோன் ஆணை போற்றும்,
வீரமா காளனிடைக் கண்டில னால்வலியர்முனம் மேவு றாவோ. - 13
1716 - ஒன்னார்தஞ் சூழ்ச்சியினால் ஒருமுனிவன் என்சிறுவர் உயிர்கொண் டுற்றான்,
இந்நாளில் அ·தன்றி ஒருவனைக்கொண் டெனது கையும் இழப்பித் தாரே,
பின்னாள்இவ் வருத்தமுற நன்றரசு புரிந்தனையால் பிழைஈ தன்றோ,
மன்னாவோ மன்னாவோ யான்பட்ட இழி வரவை மதிக்கி லாயோ. - 14
1717 - காவல்புரிந் துலகாளும் அண்ணாவோ அண்ணாவோ கரமற் றேன்காண்,
ஏவரெனக் குறவாவர் ஊனமுற்றோர் இருப்பதுவும் இழுக்கே அன்றோ,
ஆவிதனை விடுவேன்நான் அதற்குமுனம் என்மானம் அடுவதையோ,
பாவியொரு பெண்பிறந்த பயனிதுவோ விதிக்கென்பாற் பகைமற் றுண்டோ. - 15
ஆகத் திருவிருத்தம் - 1717
-----
42. சூரன் தண்டஞ்செய் படலம் (1718 - 1788)
1718 - என்று பற்பல உரைத்தனள் ஆவலித் திரங்கிப்
பின்றொ டர்ந்திடு துன்முகி தன்னொடும் பெயரா
மன்றின் மேவரு சூரபன் மாவெனும் வலியோன்
பொன்ற டங்கழல் முன்னரே வீழ்ந்துபோய்ப் புரண்டாள். - 1
1719 - புரண்டு மற்றவள் சகடையிற் பெயர்ந்திடும் போழ்தின்
மருண்டு பேரவை யகத்தினோர் அஞ்சினர் மறுக
அரண்ட ருங்கழற் சூரபன் மாவெனும் அவுணன்
இரண்டு நோக்கினுந் தீயெழ விழித்திவை இசைப்பான். - 2
1720 - என்னை யோவிவட் புலம்புதி அசமுகத் திளையோய்
உன்னை யோர்கிலா தென்னையும் நினைகிலா துன்கை
தன்னை யும்மிவள் கரத்தையும் வாளினால் தடிந்து
முன்னை யோரென இருந்துளார் யாரென மொழிந்தான். - 3
1721 - புரந்த ரன்புணர் புலோமசை புவியிலோர் புறத்தில்
இருந்து நோற்றலும் உன்றனக் கென்றுசென் றெடுத்தோம்
விரைந்து வந்தொரு விண்ணவன் எங்களை வெகுண்டு
கரந்து ணித்துமற் றவளைமீட் டேகினன் கண்டாய். - 4
1722 - என்னு முன்னரே சொரிந்தன விழிகனல் எரிவாய்
துன்னு தீம்புகைப் படலிகை உமிழ்ந்தது துண்டம்
வன்னி காலுறு காலென உயிர்த்தது மதிபோல்
மின்னல் வாளெயி றிதழினை மறைத்தது விரைவில். - 5
1723 - வெடிக்க லுற்றதெவ் வண்டமென் றையுற விரைவில்
இடிக்க லுற்றது தீயவாய் நகைவந்த திதழுந்
துடிக்க லுற்றது புருவமேல் நிமிர்ந்தது துள்ளிக்
கடிக்க லுற்றன எயிற்றணி கறகற கலிப்ப. - 6
1724 - புயற்பு றந்தொறு நித்தில முதிர்ந்தவா போல
வியர்ப்பு மிக்கன முறைமுறை அன்னது விளிய
மயிர்ப்பு றந்தொறும் புலிங்கம்வந் தடைந்தன வல்லே
செயிர்ப்பெ னுங்கனல் கிளர்ந்தது சிந்தையின் நின்றும். - 7
1725 - நீடு வெஞ்சினம் இத்திறம் அவனிடை நிகழ
ஓடு கின்றனர் திசையுளார் உலைந்தனர் முனிவர்
ஆடு கன்றதோர் தெய்வதக் கணிகையர் அவன்சீர்
பாடு கின்றவர் யாவரும் பதைபதைத் திரிந்தார். - 8
1726 - தாங்க லுற்றிடு திசைக்கரி ஓடிய தரிக்கும்
ஓங்கல் மேருவுங் குலைந்தன பணியெலாம் உலைந்த
ஏங்கு கின்றனர் வானவர் நடுங்கினர் இரவி
தீங்கு நாடியே பொயினன் மீண்டனன் திரிந்தான். - 9
1727 - பார்ந டுங்கின விண்ணெலாம் நடுங்கின பரவை
நீர்ந டுங்கின அயன்பதம் நடுங்கின நெடியோன்
ஊர்ந டுங்கின அவுணரும் நடுங்கினர் உலகத்து
ஆர்ந டுங்கிலர் அவன்சினஞ் சிறியதோ அன்றே. - 10
1728 - அண்ண லம்புகழ்ச் சூரபன் மாவென அறையுங்
கண்ணில் புன்மனத் தவுணர்கோன் இத்திறங் கனன்று
துண்ணெ னச்சினத் தமரர்கள் யாரையுந் தொலைப்பான்
எண்ணி யுற்றிடும் இளையரைப் பார்த்திவை இசைப்பான். - 11
1729 - மீனெ டுத்துநம் மேவலில் திரிந்தவிண் ணவர்கோன்
கானி டத்திருந் தொருவனைக் கொண்டிவர் கரங்கள்
ஊனெ டுத்திடத் தறித்தனன் என்றிடின் ஒழிந்த
மானு டத்தரும் அடுவரே இங்கினி மாதோ. - 12
1730 - பரம னேயலன் பங்கயத் தவிசினோன் அல்லன்
திருவு வாவரு மார்புடைத் தேவனும் அல்லன்
இரியும் வாசவன் தானலன் அவன்பணி இயற்றும்
ஒருவ னாமிவர் கைதடிந் தாவிகொண் டுறைவான். - 13
1731 - விண்ம யங்குறு செருவிடைத் தானையால் வீக்கி
எண்மை கொண்டுறும் அமரரைக் கொணர்தலும் எனது
கண்முன் நின்றிடும் அவுணர்தங் கழிபசி யொழிய
உண்மின் நீரெனக் காடுத்திலேன் அறநினைந் துற்றேன். - 14
1732 - மறைவைத் தேயமர் கின்றதோர் வாசவன் தனையும்
நறைவைத் தேயமர் பூங்குழற் சசியையும் நான்முன்
சிறைவைத் தேனிலன் சிறியரென் றுன்னினன் தீயின்
குறைவைத் தோர்கள்போல் ஆயினேன் இத்திறங் குறியேன். - 15
1733 - கைப்ப டுத்திய உயிர்ப்பலி கடிதின்உண் ணாது
தப்ப விட்டதோர் மால்கரி யொத்தனன் தமியேன்
இப்பு விக்கணே இவர்கரங் குறைத்திட்ட தெனது
மெய்ப்ப டுத்திய ஊனமே அலதுவே றுண்டோ. - 16
1734 - பூத ரந்தனைச் சிஆதைடிந் திடுபுரந் தரனை
மாத ரார்புகழ் சசிதனை நாடுவான் வழிக்கொள்
தூதர் இன்னமுங் கண்டிலர் கொல்அவர் துணிவால்
ஏத மின்றிஇப் புடவியிற் குறும்புசெய் திருத்தல். - 17
1735 - நீரி ருந்தனிர் புதல்வரும் இருந்தனர் நிகரில்
தேரி ருந்தது நேமியும் இருந்தது சிறிதென்
பேரி ருந்தது யானுமிங் கிருந்தனன் பின்னை
யாரி ருந்துமென் இருந்துமா கின்றதென் அந்தோ. - 18
1736 - வான ளாவுவெண் பஞ்சியின் மால்வரை வறிதே
தீநி லாயதோர் அளவையின் முடிந்திடுஞ் செயல்போல்
தூநி லாவெயிற் றனையர்கைச் சோரியின் துளியால்
போன தேபல அண்டமுங் கொண்டநம் புகழே. - 19
1737 - இழிவும் இங்கிவர்க் குறுவதே இமையவர் தங்கள்
வழியின் நின்றதோர் அரந்தையும் இவ்விடை வருமே
பழியும் என்னிடத் தெய்துமே என்றும்இப் பழிதான்
ஒழிவ தில்லையே பொறுப்பதே அதனையென் னுயிரே. - 20
1738 - மல்ல லந்தடந் தேர்கடக் கைம்மலை வயமா
எல்லை யில்லவும் அவுணரும் எங்கணும் இருப்பச்
சில்லை மென்குழல் அசமுகி படுவதித் திறமோ
நல்ல நல்லஎன் னரசியல் முறையென நக்கான். - 21
1739 - நக்க காலையிற் காலுறும் வார்கழல் நரல
மக்கள் தங்களிற் பானுகோ பப்பெயர் வலியோன்
செக்கர் அங்கியிற் கிளர்ந்துதன் தந்தைமுன் செவ்வே
புக்கு வந்தனை செய்துநின் றினையன புகல்வான். - 22
1740 - ஐய கேண்மதி நமதுகுற் றேவலால் அழுங்கித்
தொய்ய லுள்ளமோ டிந்திரன் கரந்தனன் சுரரும்
நொய்யர் இத்தொழில் நினைப்பதுஞ் செய்யலர் நுங்கை
கையி ழந்ததென் மாயமோ உணர்கிலேன் கவல்வேன். - 23
1741 - வந்தி பெற்றிடு கான்முளை எட்டிவான் தவழும்
இந்து வைக்கரங் கொண்டனன் என்பதோர் இயல்பே
அந்த ரத்தரில் ஒருவனே இனையவர் அங்கை
சிந்தி யுற்றனன் என்றுநீ உரைத்திடுந் திறனே. - 24
1742 - வலியர் ஆகியே பு£¤ந்தனர் எனினுமற் றவர்கள்
மெலியர் ஆற்றநீ வெகுளுறுந் தகைமைமே வினரோ
ஒலித ருங்கடல் மீன்சுமந் துன்பணி யுழந்தார்
அலியர் அல்லதை ஆண்டகை யார்கொலோ அனையோர். - 25
1743 - நறைம லர்க்கம லத்தனை வெகுளினும் நாரத்
துறையுள் வைகிய முகுந்தனை வெகுளினும் உம்பர்
எறிபு னற்சடை இறைவனை வெகுளினும் இயல்பே
சிறியர் தம்மையும முனிதியோ பெருமையிற் சிறந்தோய். - 26
1744 - முத்தி றப்படுந் தேவரே அல்லதுன் முனிவிற்
கெத்தி றத்தினர் இயைந்துளோர் இளையர்க்கும் இனைத்தே
சித்த முற்றிடும் வெகுளியைத் தீருதி இன்னோர்
கைத்த லந்தனை இழந்துழிப் பெயருவன் கடிதின். - 27
1745 - விசைய வாளினால் இங்கிவர் கரந்தனை விட்டும்
அசைவில் ஆடவன் றன்னைநின் னுளத்தின்மால் அளித்த
சசியை இந்திரக் கள்வனைத் தம்முயிர் தமக்குப்
பசையி லாததோர் அமரரைப் பற்றினன் படர்வேன். - 28
1746 - அங்கண் உற்றிலர் மறைகுவ ரெயெனில் அகிலம்
எங்கும் நாடுவன் அனையர்வாழ துறக்கநா டேகிச்
செங்க னற்கொள அளிக்குவன் அமரர்தந் திறத்தை
மங்கை மாரொடும் பற்றியோர் கன்னலின் வருவேன். - 29
1747 - ஈதி யால்விடை தமியனுக் கென்றுநின் றிரப்பத்
தாதை யாகிய அவுணர்கோன் முனிவினைத் தணிந்து
போதி மைந்தநின் படையொடும் ஆங்கெனப் புகல
ஆத வன்பகை அழகிதென் றுவகையை அடைந்தான். - 30
1748 - ஓகை சேர்தரு விண்ணவர் மணிமுடி உரிஞ்சிச்
சேகை சேர்தரு தாதைதாள் உச்சியிற் சேர்த்தி
வாகை சேர்சிறு தந்யைர் தம்மையும் வணங்கிப்
போகை சேர்விடை கொண்டுதன் னிருக்கையிற் போனான். - 31
1749 - மைந்தன் ஏகலுஞ் சூரபன் மாவெனும் வலியோன்
உந்து தீவிழி உழையரிற் சிலவரை நோக்கி
அந்த நான்முகன் இங்ஙனம் வருகுவன் அவனை
நந்தம் முன்னுறக் கொடுவரு வீரென நவின்றான். - 32
1750 - எங்கண் உற்றுளான் அயனெனக் கூவினர் ஏகிப்
பங்க யத்தனைக் கண்டுநிற் கொணர்கெனப் பணித்தான்
நங்கள் கொற்றவன் என்றலும் ஒல்லென நடவா
அங்கம் ஐந்துடன் அவுணர்கள் மன்னன்முன் அணைந்தான். - 33
1751 - அணைந்த பூமகன் வைகலே பக்கநாள் அவற்றாற்
புணர்ந்த யோகொடு கரணமே லுள்ளன புகல
நுணங்கு சிந்தையால் அகிலமும் படைத்துளாய் நொய்தில்
தணந்த கையிவர்க் குதவுதி என்றனன் தலைவன். - 34
1752 - என்று தானிவை மொழிதலுந் திசைமுகன் இசைந்து
வன்றி றற்கரங் கூடுக மற்றிவா¢க் கெனலும்
ஒன்றொர் மாத்திரைப் பொழுதின்முன் அவைவளர்ந் துறலும்
நன்று நன்றுநின் வல்லபம் என்றுசூர் நவின்றான். - 35
1753 - அன்ன தற்பின்னர் அசமுகத் தணங்கினை அரசன்
தொன்ன கர்க்குளே இருந்திடச் செய்துதுன் முகத்தி
தன்னை மைந்தனோ டுய்த்தனன் புலோமசைத் தையல்
முன்னி ருந்துழி காட்டியே வருகென மொழிந்து. - 36
1754 - உழைத்திர் இந்தபல் சிலதரை நோக்கியே உலகில்
தழைத்த செங்கதிர்க் கடவுளைத் தாரகா கணத்தை
எழுச்சி கொண்டுறு கோளினை யாரையும் இன்னே
அழைத்தி ராலெனச் சொற்றனன் அவுணர்கட் கரசன். - 37
1755 - சேடர் பற்பலர் விடைகொடு சேட்புலஞ் சென்று
நேடி அன்னவர் தமையெலாங் கொணர்ந்துமுன் நிறுவ
மூடு கொண்டலிற் கரந்தமின் பின்னெழு முறைபோல்
கேடு கொண்டதொல் சினவெரி சூரனுட் கிளர்ந்த. - 38
1756 - வியர்க்கும் நெஞ்சினன் கதிர் முதலோர்தமை விளியா
அயர்க்கை இன்றியே வானிடைத் திரியுநீர் அறியா
இயற்கை ஒன்றிலை எங்கைதன் செங்கையை எறிந்தோன்
செயற்கை காணுதிர் வறிதுநீர் இருந்ததென் சேணில். - 39
1757 - இளையள் தன்கரங் குறைத்திடும் இமையவன் உயிரைக்
களைதல் செய்திலீர் அல்லதேல் அனையனைக் கட்டித்
தளைசெய் திவ்விடைக் கொணர்ந்திலீர் அல்லதத் தலையில்
விளைவை வந்தெமக் குரைத்திலீர் நன்றுநும் மிகுதி. - 40
1758 - மறத்தி றத்தினால் எங்கைதன் கையையோர் வலியோன்
குறைத்த தற்குநீர் அகத்தரே அல்லது குறிக்கில்
புறத்தர் அன்றுநம் மாணையால் இத்தொழில் புரிவீர்
முறைத்தி றங்கொலோ நுங்களுக் கிதுவென மொழிந்தான். - 41
1759 - நீதி இல்லவன் ஈங்கிஆவை உரைத்தலும் நிருப
ஏதும் எங்களை வெகுளலை இங்கி இங்கிவள் கரத்தைக்
காது வான்றனைக் கண்டிலம் இன்றுசெல் கதியின்
மீது சென்றவெம் விழியென உரைத்தனர் விண்ணோர். - 42
1760 - துண்ட மாகியே இவள்கரந் துணிபட்ட செய்கை
கண்டி லார்களாங் கதியிடைச் சென்றவாங் கண்கள்
அண்டர் தஞ்செயல் அழகிதென் றனையரை யெல்லாந்
தண்டல் இல்லதோர் சிறைபுரி வித்தனன் தலைவன். - 43
1761 - வேறு
தினகரன் முதலினோர் சிறையிற் புக்கபின்
வினைஞரிற் சிலா¢தமை விளித்து நீவிர்போய்த்
துனைவரு மருத்துவர் தொகையைத் தம்மென
முனிவொடு தூண்டினன் முடிவி லாற்றலான். - 44
1762 - ஒற்றரில் ஒருசிலர் ஒல்லை ஏகியே
குற்றமின் மருத்துவர் குழாத்தைக் கூவியே
பற்றிமுன் உய்த்தலும் பதைக்கும் நெஞ்சினான்
தெற்றென் ஆங்கவர்க் கிதனைச் செப்புவான். - 45
1763 - வானிடை மண்ணிடை மாதி ரத்திடை
மேனிகழ் கடலிடை வியன்பி லத்திடை
ஊனிடை யுயிரிடை ஒழிந்து நின்றிடும்
ஏனைய பொருளிடை எங்கும் நிற்றிரால். - 46
1764 - ஏணுறு கின்றஎன் இளையள் கையையோர்
சேணினன் வாள்கொடு சேதித் திட்டதைக்
காணுதிர் உமக்கெவர் கரக்கற் பாலினோர்
நீணகர் குறுகியிந் நிலைமை சொற்றிலீர். - 47
1765 - தரியலர் சூழ்ச்சியால் தகுவர்க் கிப்பழி
வருவது நன்றென மகிழ்ந்து வைகினீர்
பெருமிதம் நன்றெனப் பேச மாறுசொல்
உரையற நின்றனர் உலவைப் பண்ணவர். - 48
1766 - வன்றிறல் இன்றியே மனத்தில் அச்சமாய்
நின்றிடு கால்களை நீடு கால்களிற்
துன்றிய கனைகழற் சூர னென்பவன்
ஒன்றொரு சிறைதனில் உய்த்திட் டானரோ. - 49
1767 - ஈற்றினை இழைத்திட இருக்குங் கால்களைச்
சீற்றமொ டவுணர்கோன் சிறையில் வீட்டினான்
சாற்றிடின் உலகமேல் தவத்தி னால்வரும்
பேற்றினும் உளதுகொல் பெருமைத் தானதே. - 50
1768 - திரிதத மருத்தரைச் சிறையில் வைத்தபின்
குரைகழல் வினைஞரைக் கூவி இற்றையாண்
டிருதுநன் மதிமுதல் எல்லை யாளரைத்
தருதிரென் றுரைத்தலுந தாழ்ந்து போயினார். - 51
1769 - ஏவல ராயினோர் ஏகி யெல்லையின்
காவலராகிய கடவு ளோர்தமைக்
கூவினர் பற்றியே கொடுவந் துய்த்தலுந்
தேவர்கள் மாற்றலன் சீறிக் கூறுவான். - 52
1770 - புல்லிய மகபதி புணர்த்த அச்செயல்
ஒல்லுவ தென்றதற் குள்ள மாகிநீர்
எல்லிரு மனமகிழ்ந் திருத்திர்¢ என்னொடுஞ்
சொல்லிய வந்திலீ ரியாண்டுந் துன்னினீர். - 53
1771 - நிரந்தரம் நம்பணி நெறியின் நின்றுநீர்
இருந்ததிற் பயனெவன் இருக்கலா மையால்
வருந்தவ றென்சுரர் மருங்குற் றீரெனா
அருந்தளை இட்டனன் அவர்கள் தம்மையும். - 54
1772 - தூவலி கெழுவிய சூரன் பின்பில
ஏவலர் தங்களை விளித்திட் டிப்புவி
காவலர் தமையெலாங் கடிது வம்மெனக்
கூவுதிர் தம்மெனக் கூறித் தூண்டினான். - 55
1773 - தூண்டலும் அளவைதீர் தூத ரோடியே
ஈண்டிய காவலர் இனத்தை மாநிலந்
தேண்டினர் பற்றியே சென்று வென்றிகொள்
ஆண்டகை இறைவன தவையின் உய்ப்பவே. - 56
1774 - ஆக்கையில் வியர்ப்புற அச்சம் நாணுயிர்
தாக்குற நனியுளந் தளாக் கைதொழுங்
காக்குநா¢ தொகுதியைக் காவல் மன்னவன்
நோக்கினன் வெகுண்டிது நுவறல் மேயினான். - 57
1775 - எளித்துற லின்றிகம் ஏவல் நீங்கியே
களித்திடு சசியொடுங் கடவுள் வாசவன்
ஔ¤த்தனன் இம்பரின் உம்பர் இல்லைநீர்
அளித்தது சாவும் அழகி தாமரோ. - 58
1776 - குறித்திடு புரைமனக் கொண்ட லூர்பவன்
நெறித்திகழ ஆணையின் நின்ற தூதுவன்
மறித்திரு முகனுடை மங்கை தன்கரம்
அறுத்தவண் இருந்தனன் அதுவுந் தேர்ந்திலீர். - 59
1777 - மறங்கிளர் தேறல்வாய் மடுத்து வைகலுங்
கறங்குறு நிலையராய்க் கலங்கி னீர்கொலோ
உறங்கினி ரேகொலோ ஓம்பலீர் கொலோ
பிறங்குதொல் வளமையால் பித்துற் றீர்கொலோ. - 60
1778 - ஓயுமென் பகைஞரோ டுறவுற் றீர்கொலோ
வாயவர் தங்களுக் கஞ்சி னீர்கொலோ
சேயிழை யாரிடைச் செருக்குற் றீர்கொலோ
நீயிர்கள் இருந்ததென் நிலைமை யென்னவே. - 61
1779 - எண்டரும் எந்தைநீ இசைத்த தன்மையிற்
கொண்டிலம் ஒன்றுமக் குவல யந்தனைப்
பண்டுதொட் டளிக்குதும் பகைஞர் யாரையுங்
கண்டிலங் கரந்துறை கதையுங் கேட்டிலம். - 62
1780 - தாயெனும் ஏழகத் தலையள் துன்முக
ஆயிழை யொடும்வரல் அதுவும் அன்னர்கை
போயதுந் தெரிந்திலம் புந்தி கொள்ளுதி
மாயமி தாகுமால் மன்ன என்னவே. - 63
1781 - மிடைதரு வெறுக்கையை மிசைந்து மால்கொளீஇப்
புடவியை யிடைதொறும் போற்றல் செய்திலீர்
இடையுற என்வயின் இனைய தோர்பழி
அடைவது மாயையாம் அழகிதே என்றான். - 64
1782 - வேறு
ஒலிகெழும் உவரிப் புத்தேள் உள்ளுறை வடவைச் செந்தீத்
தொலைவுழி எழுவ தேபோல் சூரனுட் சினமீக் கொள்ள
மலிகதிர் இருள்புக் கென்ன வாளுரீஇ மருங்கே தானைத்
தலைவர் நின்றாரை ஏவித் தனித்தனி தண்டஞ் செய்வான். - 65
1783 - சிற்சிலர் தமது நாவைச் செங்கையைச் சேதித் திட்டான்
சிற்சிலர் துண்டந் தன்னைச் செவிகளைக் களைதல் செய்தான்
சிற்சிலர் மருமந் தன்னைச் சிறுபுறத் தொடுகொய் வித்தான்
சிற்சிலர் தாளைத் தோளைச் சென்னியைச் சேதிப் பித்தான். - 66
1784 - எறிதரு கழற்காற் சூரன் இத்திறம் பல்தண் டங்கள்
முறையினிற் செய்து சீய முழுமணித் தவிசில் தீர்ந்து
விறல்கெழும் இனையர் செல்ல விடைகொடுத் தயனை நோக்கி
மறைமுனி போதி யென்ன மற்றவன் இனைய சொற்றான். - 68
1785 - மன்னவர் மன்ன கேண்மோ வான்கதிர் உடுக்கள் ஏனோர்
இந்நில மடந்தை வேலைக் கிறையவர் யாரு மென்றும்
உன்னுடைப் பணியில் நிற்பர் உலகிவர் இன்றி யாகா
அன்னவர் பிழையுட் கொள்ளேல் அருஞ்சிறை சிடுத்தி என்றான். - 68
1786 - குறையிரந் தினைய கூறிக் கோகன தத்தோன் வேண்ட
நறையிருந் துலவு தாரோன் நன்றென இசைவு கொள்ளா
உறையிருந் திலங்கும் வாட்கை ஒற்றரை நோக்கி நந்தஞ்
சிறையிருந் தோரைத் தம்மின் என்றலுஞ் சென்றங் குய்த்தார். - 69
1787 - வன்றளை உற்றோர் தம்மை மன்னவர் மன்னன் பாரா
என்றுநம் பணியில் நிற்றிர் இந்திர னொடுசேர் கல்லிர்
சென்றிடு நுங்கள் தொன்மை செய்திட வென்ன அன்னோர்
நன்றிது புரிதும் என்னா நயமொழி புகன்று போனார். - 70
1788 - போதலுங் கமலத் தோற்கும் புதல்வர்க்கும் அமைச்சர் யார்க்கும்
மேதகு முனிவர் யார்க்கும் வியன்படைத் தலைமை யோர்க்கும்
போதலை உதவிச் சூரன் உறையுளிற் புகுந்தான் முன்செல்
ஆதவன் பகைஞன் செய்த செயலினை அறைத லுற்றேன். - 71
ஆகத் திருவிருத்தம் - 1788
-----
43. அமரர் சிறைபுகு படலம் (1789 - 1929)
1789 - எழிலிகள் மொய்த்ததன் இருக்கை போகிய
மழவுறு சூர்மகன் மாறி லாதபேர்
அழகினை மெய்கொள் அணிந்து தொல்படை
விழுமிய கொண்டனன் மிலைச்சித் தும்பையே. - 1
1790 - இருவகைப் பத்துநூ றிவுளி பூண்டிடும்
ஒருதனித் தேர்தனை ஒல்லை ஊர்ந்துராய்த்
திருமுதற் கடைதனிற் செல்லும் எல்லையில்
விரைவினில் சுற்றின அனிக வௌ¢ளமே. - 2
1791 - நிரைத்தெழு தானவர் நீத்தம் ஆயிரம்
பரித்தொகை அன்னதே பாதி தேர்கரி
உரைத்தஅத் தானையோ டொல்லை ஏகினான்
திருத்தகும் இரவியைச் சிறையில் வீட்டினான். - 3
1792 - கிளர்ந்தன தூளிகள் கெழீஇய வீரர்தோள்
வளர்ந்தன அவரணி மாலை யிற்படீஇ
உளர்ந்தன வண்டினம் உம்பர் தம்மனந்
தளர்ந்தன நௌ¤ந்தனன் தரிக்குஞ் சேடனே. - 4
1793 - பொள்ளென ஆண்டெழு பூமி பாரினுந்
தள்ளரும் விசும்பினும் நிரந்த தானவர்
எள்ளுறும் அமரர்தம் மிருக்கை நாடியே
உள்ளொடு பவத்துகள் ஒருங்கு சென்றபோல். - 5
1794 - வேறு
ஏறிய பூழி நாப்பண் ஈண்டிய இவுளி வாயில்
வீறுகொள் களிற்றுக் கையின் விலாழியுங் கரிக்க போலத்
தூறிய கடமும் ஒன்றாய் ஒழுகுதன் மழைசூழ குன்றின்
ஆறுகள் இழிந்து வையத் தடைவது போலு மன்றே. - 6
1795 - பானிற முதல வாய பல்வகை வண்ணத் துள்ள
கானிமிர் துவசக் காடுங் கவிகையின் கானு மொய்த்த
சேனமுங் கழுகும் ஏனைச் சிறைகெழு புள்ளும் வெம்போர்
ஊனுகர் பொருட்டுத் தாமும் உம்பருற் றிடுவ தேபோல். - 7
1796 - மண்ணுறு துகளின் மாலை மகேந்திர மூதூர் முற்றுந்
துண்ணென மறைத்த லோடுந் துளங்கியே சூரற் கஞ்சி
விண்ணிடை மதிபல் கோடி மேவல்போல் வௌ¤யே செய்ய
தண்ணிழற் கவிகை ஈட்டந் தலைத்தலை ஈண்டிற் றன்றே. - 8
1797 - முறையிது நிகழ மைந்தன் முதியமா நகரம் நீங்கி
அறைகடல் அகழி தாவி அவனியின் எல்லை யேகிச்
சிறைவரு துன்மு கத்துத் தெரிவையை நோக்கி நுங்கை
எறிசுடர் வாளால் இற்ற தெவ்விடை இயம்பு கென்றான். - 9
1798 - என்னலுங் குமர கேண்மோ எங்கரந் துணித்தோர் வீரன்
மன்னினன் சசியும் உற்றாள் மதுமலர்ப் பொதும்ப ரொன்றில்
அன்னதும் இ·தே என்றோர் அணிவிரல் சுட்டிக் காட்டப்
பன்னிரு பெயர்ச்சீ காழிப்* பழுமரக் காவிற் சேர்ந்தான். 10
(* பன்னிரு பெயர்ச் சீகாழி - பன்னிரண்டு பெயர்களில்
ஒன்றாகிய சீகாழிப்பதி.) - 1<0/td>
1799 - தேசுறும் இரவி தன்னைச் செயிர்த்திடு சிறுவன் தானைத்
தூசிமுன் சென்று காவைத் தொலைத்துவௌ¢ ளிடைய தாக்க
வாசவன் மனையைக் கூர்வாள் வயவனை நாடிக் காணான்
காசினி யாண்டுந் தேர்ந்து காமர்பொன் னுலகிற் போனான். - 11
1800 - வேறு
அந்நிலை அவுணர்கள் அனிகம் யாவையும்
முன்னுற ஏகியே மொய்ப்ப ஆங்கவர்
மெய்ந்நிறை மணிவெயில் விரிந்து சூழ்தலாற்
பொன்னகர் வேறொர்பொன் னகரம் போன்றதே. - 12
1801 - எழுந்திடு முனிவினர் இமைக்கும் வெவ்வழல்
வழிந்திடு கண்ணினர் மடித்த வாயினர்
கழிந்திடு திறலினர் ககன வாணர்கள்
அழிந்திடும் ஆர்ப்பினர் அவுணர் எய்தினார். - 13
1802 - மண்டல மேமுதல் வகுத்த வான்கதி
கொண்டிடு கந்துகக் குழுவின் மாலைகள்
விண்டொடர் செலவினில் விரவு பூழியால்
அண்டமும் புவியென வையம் ஆக்கிய. - 14
1803 - இலகிய பொன்னகர் எல்லை எங்கணும்
அலைதரு மதநதி யாக்கி யாயிடை
நிலவிய கங்கைமா நீத்தம் யாவுமுன்
டுலவுத லுற்றன ஒருத்தல் யானையே. - 15
1804 - வெங்கரி சொரிமதம் விரும்பும் வண்டினங்
கொங்கிவர் தருமலா¢க் கூந்தல் வாசத்தால்
அங்குள மாதர்மேல் அணுகி வையக
மங்கையர் கொல்லென மால்செய் கின்றவே. - 16
1805 - அற்றமில் வலியரைச் சிறிய ராயினோர்
பற்றிடின் மேல்நெறிப் பால ராவரால்
வெற்றிகொள் அவுணர் கோன்வேழத் தின்குழாஞ்
சுற்றிய பறவையுந் துறக்கம் புக்கவே. - 17
1806 - மன்னவன் ஓடினன் மைந்த னேயுளன்
முன்னுறு பகையினை முடித்தும் யாமெனா
இந்நில வரையெலாம் ஏகிச் சூழ்ந்தபோற்
பொன்னகர் வளைந்தன பொலம்பொற் றேர்களே. - 18
1807 - விடா¢நெறி ஒழுகிய வெய்யர் மேலையோர்
இடமுறு மகளிரை எய்திப் பற்றல்போற்
கடிகமழ் தருவினைக் கலந்து சுற்றிய
கொடியினை ஈர்த்தன கொடியின் கானமே. - 19
1808 - வேறு
செந்தோ டவிழுந் தாரான்இச் செய்கை நிகழச் சேண்புகலும்
அந்தோ என்று பதைபதையா அலமந் தேங்கி அறிவழிந்து
வந்தான் பானுப் பகைவனெனா மகவான் செம்ம லொடுவானோர்
நொந்தோ டினர்போய் உரைத்திடலும் அனையோன் இனைய நுவல்கின்றான். - 20
1809 - எந்தை யாகுங் குரவன் இலை இமையோர் குழுவிற் பலரில்லை
தந்தை எம்மோ யிங்கில்லை தமியேன் நும்மோ டிருந்தேனால்
அந்த அசுரன் சென்றமையும் அல்லல் புரியுந் திறம்போலும்,
முந்தை விதியை அறிவேனோ என்னோ இன்று முடிந்திடுமே. - 21
1810 - பாடின் றோங்கு திருநீங்கப் பயந்தோர் கரக்கப் பழிவேலை
வீடின் றாகத் தமர்பரிய வெஞ்சூர் முதல்வன் பணிபோற்றி
ஈடின் றாயும் இப்பகல்கா றிந்த நகரத் திருந்தேனாற்
கேடின் றாகும் என்செய்கேன் கிளத்தீர் புரைதீர் உளத்தீரே. - 22
1811 - தாயும் பயந்த தொல்லோனுந் தமரா குற்ற அமரர்களும்
பாயுங் கடல்சூழ் நிலவரைப்பிற் கரந்தார் அதனைப் பல்லவுணர்
ஆயும் படியே திரிந்தனரால் அற்றாம் எல்லை அளியேமும்
போயெங் குறைவோம் நமையெல்லாம் போற்றும் படிக்கோர் புகலுண்டோ. - 23
1812 - போவ தில்லை யாண்டும்இனிப் புலம்பு மாறும் இல்லையதின்
ஆவ தில்லை வருவதெல்லாம் அடையும் அன்றி அகலுவதோ
ஈவ தில்லை யவர்க்கு வெரிந் இறைஞ்சிப் புகழவ திலையெதிர்ந்து
சாவ தல்லால் உய்ந்திடுதல் இரண்டே உறுதி தமியேற்கே. - 24
1813 - அஞ்சேன் மன்னோ அவர்க்கினியான் ஆவி பொருளாக் கொள்ளாதார்
நஞ்சே பொருவுந் தீங்குறினும் நடுக்கஞ் செய்யார் இடர்படியார்
தஞ்சே வகத்தின் நெறிபிழையார் அ·தே போலத் தானவர்கோன்
வெஞ்சே னைகளேற் றெதிர்செல்வேன் வெல்வேன் பலரைக் கொல்வேனே - 25
1814 - செருவீ ரமுடன் அவர்ப்பொருவான் செல்வன் நீரும் எற்போற்றி
வருவீர் வம்மின் வல்லாதீர் வல்லை இன்னே வழிக்கோண்மின்
ஒருவீ ரன்றி, எல்லீரும் உள்ளத் தஞ்சி ஒருவிஅழ
தருவீவேனும் நன்றிறையுந் தளரேன் துணிந்த தமியேயே. - 26
1815 - என்று சயந்தன் மொழிந்திடலும் இமையோர் கேளா இடருழவா
உன்றன் உள்ளம் ஈதாயின் உமக்கு வேறோர் உணர்வுண்டோ
வென்றி அவுணர் பணிபுரிந்து வீடா விழுமந் துய்ப்பதினும்
பொன்றி விடுதல் இனிதம்மா எழுதி கடிதே போர்க்கென்றார். - 27
1816 - வேறு
சயந்தனது கேட்டமரர் தங்குழுவை நோக்கித்
துயர்ந்தநும சிந்தனை துணிந்ததுகொல் என்னா
வியந்துகன கத்தவிசின் மேவுதல்வி டாத்தன்
கயந்தனை நினைப்பஅ துணர்ந்தது கருத்தில். - 28
1817 - கல்கெழு நுதற்சிறிய கண்சுளகு கன்னம்
மல்கிய கறைப்பத மருப்பிணை இரட்டை
மெல்கிய புழைக்கரம் வௌற்றுடலின் வேழம்
பில்கிய மதத்தொடு பெயர்ந்துளதை அன்றே. - 29
1818 - இந்திர குமாரனை இறைஞ்சி எதிராகி
வந்திட அதன்பிடரில் வல்லைதனில் ஏறி
உந்தினன் நடாத்திஅயல் உம்பபர்புறம் மொய்ப்பப்
புந்திகெழு வேர்வினொடு பொள்ளென அகன்றான். - 30
1819 - போகிதரு காளைபசும் பொற்புயல் நிறத்தான்
ஆகம்வௌ¤ றாகும்அயி ராவதமி சைக்கண்
வாகுபெற மேவுவது மன்னுநெடு மால்பாற்
சீகரஅளக் கரிடை செவ்விதிருந் தன்ன. - 31
1820 - பாங்கருறு வானவர்கள் பல்படையும் ஏந்தி
வீங்குதுயர் கொண்டகல வேறொரிடை காணார்
நீங்கல்வசை என்பது நினைந்துதுணி வாகி
ஆங்கவ னொடேகினர்கள் அச்சமில ரேபோல். - 32
1821 - பெருந்தவள மெய்க்கரி பிளிற்றொலியும் உள்ளத்
தரந்தையுறு வானவர்தம் ஆர்ப்பொலியும் ஆற்றப்
பரந்தபகு வாய்முரசு பண்ணொலியும் ஒன்றாய்
வருந்தவறெ னக்ககனம் வாய்விடுதல் போலும். - 33
1822 - ஊழவரு கால்அனைய உம்பர்படை செல்லப்
பூழிநிமிர்ந் தேகின பொலத்துயர் நிலத்த
வாழிகொள் சுவர்க்கமெரி வௌவுநமை என்னாக்
கேழிலுயர் மேனிலை கிளர்ந்தெழுதல் போலும். - 34
1823 - முறையிது நிகழந்திட முரட்களிறு மேலான்
வறியமக வான்மதலை மாநகரம் நீங்கி
எறிகதிர் அருக்கனை இருஞ்சிறையில் வீட்டுஞ்
சிறுவன்அனி கத்தினெதிர் சென்றுபுக லோடும். - 35
1824 - வற்புறு தயித்தியர் வருஞ்சுரரை நோக்கி
முற்பகலின் எல்லையும் முறைப்பணி புரிந்தார்
தற்பமுடன் நின்றுசமர் உன்னிவரு வாரோ
அற்புதம் இதற்புதம் இதென்றறையல் உற்றார். - 36
1825 - கிட்டினர்கள் வானவர் கிடைத்ததமர் என்னா
முட்டினர் தெழித்தவுணர் முன்பினிரு பாலார்
ஒட்டினர் முனிந்தயில்கள் உய்த்தனர்கை வாளால்
வெட்டினர் குனித்துவில் வடிக்கணை விடுத்தார். - 37
1826 - எழுப்படை விடுத்தர் எடுத்தகதை விட்டார்
மழுப்படை எறிந்தனர் வயிர்க்குலிசம் உய்த்தார்
நிழற்பரவு முத்தலை நெடும்படைகள் தொட்டார்
சுழற்றினர் உருட்டினர் சுடர்ப்பரிதி நேமி. - 38
1827 - மாரியென இப்படை வழங்கியிமை யோருஞ்
சீரவுண ராயினருஞ் சேர்ந்துபொரும் எல்லைச்
சோரியது தோன்றியது தூயவிரும் பெற்றும்
பாரிய உலத்திடை பரந்தெழு கனற்போல். - 39
1828 - அங்கமெம செங்குருதி ஆற்றின் நிமிர்ந்தோடி
எங்கணும் நிரந்தன இமைப்பிலவர் வைகுந்
துங்கமிகும் உம்பரிடை சூர்மதலை சீற்ற
வெங்கனல் எழுந்துமுன் மிசைந்திடுவ தேபோல். - 40
1829 - நீடிரு திறத்தரும் நெடும்படைகள் ஏந்தி
ஆடல்புரி காலையழிந் தாற்றலில ராகி
ஓடினர்கள் வானவர்கள் ஒல்லைதொடர்ந் தேபின்
கூடினர்கள் வெவ்வவுணர் குற்றினர்கள் பற்றி. - 41
1830 - சேண்கொடு முரிந்துபடர் தேவர்குழு வோரை
ஏண்கொடு வருந்தகுவர் யாத்தனர் புயங்கள்
நாண்கொடு திரும்பினர் நலங்கொள்கலை மானை
மாண்கொடு வரித்தொகுதி வவ்விஅகன் றென்ன. - 42
1831 - இடுக்கணுறு தேவர்தமை ஈர்த்தனர்கொ டேகி
மிடற்கதிர் அருக்கனை வெகுண்டவன்முன் உய்ப்பக்
கடக்கரிய வன்மையொடு காவல்கொளு மென்றான்
தடக்களிறு மேல்வரு சயந்தன்இவை கண்டான். - 43
1832 - வேறு
கண்டான் வெகுண்டான் புகையாரழல் கல்லென் மேகம்
உண்டான் எனவே உமிழ்ந்தான் ஒருதன் சிலைக்கைக்
கொண்டான் குணத்தின் இரைகாட்டினன் கோட்டி நேர்போய்
அண்டார் வெருவக் கணைமாரிகள் ஆர்ப்பொ டுய்த்தான். - 44
1833 - பொழியும் பொழுதத் தவுணப்படை போந்த வீரர்
மொழியும் மனமும் நனிதாழ்த்திட முன்ன ரேகி
ஒழியுங் கடைநாள் அரன்வெற்பை உறாது சூழ்போஞ்
சுழியுங் கடல்போல் அவனூர்கரி சுற்றி ஆர்த்தார். - 45
1834 - சயந்தன் மிசையும் பொலங்கிம்புரித் தந்த வௌ¢ளைக்
கயந்தன் மிசையுஞ் சிலைவாங்கிக் கணைகள் கோடி
பயந்தந் திடத்தூர்த் தனர்சோமனைப் பன்ன கங்கள்
வயந்தன் னொடுபோய் முயலோடு மறைக்கு மாபோல். - 46
1835 - கல்லென் றரற்றுங் கழல்வீரர் கனைந்து சுற்றிச்
செல்லென் றுவிட்டகணை யாவையுஞ் சிந்தி வல்லே
மல்லொன் றுமொய்ம்பிற் சயந்தன்சர மாரி தூண்டி
வில்லும் மனையோர் தனுவும்புவி வீட்டி னானால். - 47
1836 - வீட்டிக் கணைகள் அவுணப்படை மீது தூர்த்து
மோட்டுக் களிற்றின் தொகைதன்னை முகங்கொள் பாய்மா
வீட்டத் தினைத்தேர் களைவீரர் இனத்தை யெல்லாம்
வாட்டிப் பின்வௌ¢ளம் ஒருநூற்றினை மாய்வு செய்தான். - 48
1837 - வாலிற் புடைக்கும் புழைக்கைகொடு வாரி எற்றுங்
காலிற் படுக்கும் மருப்பாலடுங் கந்த ரம்போல்
ஓலிட் டுயிருண் டிடுமாங்கவன் ஊர்ந்த வேழஞ்
சீலக் கதிரைச் சிறையிட்டவன் சேனை தன்னை. - 49
1838 - நூறாய்ப் புகுதா னவர்வௌ¢ளம் நொடிப்பின் மாய
வீறாய்ப் படையும் பலபூண்களும் மீன மாக
ஆறாய்க் குருதி பெயர்ந்தேயகல் வான நீத்தம்
மாறாய்ப் பொருது மிசையோடி வளைந்து கொண்ட. - 50
1839 - காய்கொல் இபமேற் சயந்தன்அடு காலை தன்னில்
பேய்கொல் உனைத்தீண் டினமேல்வரும் பெற்றி யோராய்
தீகொல் பறவை புரைவாய்எமர் சேனை தன்னை
நீகொல் லடுதி யெனவந்தனன் நீல கேசன். - 51
1840 - எண்ணத் தவரை அலைக்கின்ற இருண்ட கேசன்
தண்ணத் தவரை நிகர்கின்ற சயந்தன் முன்போய்
விண்ணத் தவரை முகில்தாங்குறும் வேட மென்ன
வண்ணத் தவரைக் குனித்தம்பெனும் மாரி தூர்த்தான். - 52
1841 - தூர்த்தான் அதுகால் சயந்தன்எதிர் தூண்டி வாளி
தீர்த்தான் சரமாரி யையன்றியுஞ் சின்ன மாக்கி
ஆர்த்தான் கவசம் அவனிட்டதை அம்பு நூறால்
வேர்த்தான் உயிர்த்தான் இருட்குஞ்சியன் மேக மொப்பான். - 53
1842 - பாசம் பிணித்த அரணம் பரிவெய் தநீல
கேசன் விடுத்தோர் பிறையம்பினைக் கேடில் விண்ணோர்
ஈசன் சிறுவன் சிலைநாணை இறுத்தி சைத்தான்
காசொன் றரவந் துணியப்பகை கௌவு மாபோல். - 54
1843 - சின்னம் படலும் பெருநாண்சிலை வீழ விட்டுத்
தன்னந் தனியாஞ் சயந்தன்சமர் செய்வ தற்கு
முன்னம் பயிற்றும் ஒருமாயையை முன்னி யாற்றித்
துன்னந் தருபல் லுருவங்கொடு தோன்றி யுற்றான். - 55
1844 - வேறு
ஒன்றேயெனுங் கரிமேல்வரும் ஒருவன்பல வுருவாய்ச்
சென்றேதிறம் பலவால்அடச் செறிபேரிருட் குடுமிக்
குன்றேபுரை அவுணர்க்கிறை குறிப்பால்இது மாயம்
என்றேநினைந் தவைமாற்றிட யாதுஞ்செயல் இல்லான். - 56
1845 - மலைவுற்றெதிர் நின்றார்த்திட வாயற்றனன் மயங்கித்
தொலைவுற்றனன் இருட்குஞ்சியன் சூரன்மகன் அனிகம்
மலைவுற்றன விரிகின்றன அலமந்தன வெருவி
உலைவுற்றன இறுதிப்பகல் ஒழிவுற்றிடும் உயிர்போல். - 57
1846 - சோமாசுரன் மாயாபல சுரகேசரி பதுமன்
மாமாருத பலிதண்டகன் வாமன்மதி வருணன்
தீமாகதன் முதலாகிய சேனைப்பெருந் தலைவர்
ஆமாயமி தெனவந்தனர் அவ்விஞ்சையை உணரார். - 58
1847 - தாங்கற்றிடு மாயப்பெருந் தனிவிஞ்ரைகண் முன்னி
ஆங்குற்றிடு பரபாற்பொரு தன்னான்புரி மாயம்
நீங்கற்கரு நிலையாதலும் நெஞ்சந் தடுமாறி
ஏங்குற்றனர் என்செய்குதும் யாமென்று நினைந்தார். - 59
1848 - அந்நேருறு காலந்தனில் ஆகின்றதுந் தலைவர்
தன்னேவலின் மெலிவுற்றதும் சயந்தன்பெரும் திறலும்
கொன்னேதன தனிகக்கடல் குறைகின்றதும் கண்டான்
முன்னேயிர வியைஓர்பகற் சிறைவீட்டிய முதல்வன். - 60
1849 - வேறு
அந்த ரந்தனில் இரவியைச் செயிர்த்திடும் அவுணன்
இந்தி ரன்மகன் மாயைகொல் இதுவென எண்ணா
முந்தை நாட்புகர் உதவிய மூலமா ஞான
மந்தி ரந்தனை உளந்தனில் விதிமுறை மதித்தான். - 61
1850 - மதித்து வெஞ்சுடர்ப் பகையினன் சேறலும் மாயை
விதித்த பல்லுருப் போயின தமியனாய் விடலை
கதக்க ளிற்றின்மேல் தோன்றினன் ஆயிரங் கதிரோன்
உதித்த காலையில் கலையிலாக் குறைமதி யொப்ப. - 62
1851 - ஆன காலையில் இதுபுகர் விஞ்சையென் றறிந்து
மான முஞ்சின முஞ்சுடச் சயந்தன்உள் மறுகித்
தான வேழமேல் இருந்துழித் தேரொடுஞ் சார்ந்து
பானு கோபனாம் பெயரினான் இனையன பகர்வான். - 63
1852 - வருதி இந்திரன் மதலைநின் மாயையும் வலியும்
கருதி யான்வரு முன்னரே போயின கண்டாய்
பரிதி போலவே நின்னையும் இருஞ்சிறைப் படுப்பன்
பொருதி வல்லையேல் என்றனன் சூர்தரு புதல்வன். - 64
1853 - வல்ல ராயினோர் வெல்வதும் மற்ற· தில்லோர்
அல்ல ராகியே தோற்பதும் இல்லையால் அரனே
தொல்லை யூழ்முறை புணர்ந்திடும் நின்னைநீ துதிக்கச்
செல்லு மோவென உரைத்தனன் சயந்தனாந் திறலோன். - 65
1854 - தேற்ற மோடிவை புகறலும் இரவியைச் செயிர்த்தோன்
ஆற்றல் இல்லவர் மொழிதிறம் புகன்றனை அன்றே
ஏற்ற வீரரும் இத்திறம் உரைப்பரோ என்னாக்
கூற்ற மேயென இருந்ததோர் தன்சிலை குனித்தான். - 66
1855 - சிலைவ ணக்கிய காலையில் சயந்தனுஞ் சினத்து
மலைவ ணக்குதன் புயங்கொடே ஒருசிலை வளைத்தான்
அலைவ ணக்கரும் ஞமலியெம் மடிகளை அடைந்தோர்
தலைவ ணக்கியே தத்தமில் இருவர்தாழ வதுபோல். - 67
1856 - பாற்றி ருஞ்சிறைக் கணைபல பரிதியம் பகைஞன்
ஊற்ற மோடுவான் புயலெனச் சொரிதலும் ஒருத்தன்
மேற்றி கழ்ந்திடு சயந்தனும் அனையன விசிகங்
காற்றெ னும்படி தூண்டியே விலக்கினன் கடிதின். - 68
1857 - அன்ன வன்விடுஞ் சரமெலாஞ் சூர்மகன் அறுத்துத்
துன்னு பல்கணை தூண்டினன் அவனவை தொலைத்தான்
இன்ன தன்மையின் இருவரும் பொருதனர் இருளும்
மின்னு மாகவே முறைமுறை மலைந்திடும் விதிபோல். - 69
1858 - இனைன வாறமர் புரிவுழி இரவியம் பகைஞன்
வினைய நீரினால் சொரிந்திடு பகழியை விலக்கித்
துனைய இந்திரன் மதலைஆ யிரங்கணை தூண்டி
அனையன் ஏந்திய சிலைப்பெரு நாணினை அறுத்தான். - 70
1859 - அறுத்த காலையில் ஞாயிறு வெகுண்டுளோன் அழலிற்
செறுத்து வேறொரு சிலைவளைஇக் கணைமழை சிதறி
மறுத்தும் ஆங்கவன் விடுஞ்சரம் சிந்திமற் றவன்மெய்
உறுத்தி னான்என்ப ஒராயிரஞ் சிலீமுகம் உய்த்து. - 71
1860 - உய்த்த காலையில் சயந்தனும் ஒராயிரங் கணைதூய்ப்
பத்தி யோடவன் தேர்கெழு பாய்பரி படுத்து
மெத்து பல்சரந் தானைமேல் வீசினன் விளிவோர்
வைத்த மாநிதி யாவர்க்கும் வழங்குமா றென்ன. - 72
1861 - வாய்ந்த தோர்தன திரதமீ றாகமற் றொருதேர்
பாய்ந்து வெய்துயிர்த் தழலென வெகுண்டுபற கறித்துச்
சேந்த மெல்லிதழ அதுக்கிவா னுருமெனத் தெழியா
ஏந்து வார்சிலை குனித்தனன் எறிகதிர்ப் பகைஞன். - 73
1862 - கூனல் வெஞ்சிலை குனித்துநூ றாயிர கோடி
சோனை வெங்கணை தூண்டிவிற் றூண்யைத் துணித்துத்
தான வெங்கரி தன்னுடன் முழுவதுஞ் சயந்தன்
மேனி முற்றவும் அழுத்தினன் பகலினை வெகுண்டோன். - 74
1863 - வெய்ய வற்சிறை இட்டவன் விட்டபோல்
சைய மொத்த சயந்தன்மெய்ம் மூழ்கலும்
மைய லுற்றனன் மற்றொரு வெஞ்சமர்
செய்வ தற்குத் தௌ¤தலின் றாயினான். - 75
1864 - நீண்ட வாளிக ளான நிறத்திடை
ஆண்ட காலை அரிமகன் தந்திமேல்
வீண்டு விம்மி உணர்ச்சியும் விட்டனன்
மாண்டி லான்அமு தங்கொண்ட வன்மையால். - 76
1865 - நண்ணு பாசடை நாப்பணி டந்தொறுந்
தண்ணென் மாமலர்த் தாமரை பூத்தென
விண்ண வர்க்கிறை மாமகன் மெய்யிடைத்
துண்ணெ னப்படு சோரி பொலிந்ததே. - 77
1866 - கற்ற வாசவன் காளைதன் சீற்றம்நாம்
முற்ற ஓத முடியுங்கொல் தன்னுணர்
வற்ற போதும் அவன்சினக் கண்ணழல்
வற்று வித்தமெய் வார்குரு திப்புனல். - 78
1867 - சயந்தன் அவ்வழி தன்னுணர் வின்றியே
அயர்ந்த போதத் தலையவன் ஊர்தியாம்
கயந்தன் நக்கிறை கண்டு கலங்கியே
துயர்ந்து நின்று சுளித்தெதிர் புக்கதே. - 79
1868 - காய்ந்த தொன்மைக் கதிரை முனிந்திடும்
ஏந்தல் ஊர்தரும் எந்திரத் தேர்மிசைப்
பாய்ந்த காலைப் பரித்தொகை பாகுடன்
வீய்ந்து போன தெழித்தது வேழமே. - 80
1869 - பாண்டில் சேர்தரு பண்ணமை செய்யதேர்
மாண்ட காலையில் வல்லையிற் கீழுறத்
தாண்டி வௌ¢ளையந் தந்தியைச் சீறினான்
மூண்டு பானுவை முன்சிறை செய்துளான். - 81
1870 - மற்ற வன்றன் மணியணி மார்பிடைச்
செற்ற மால்கரி சென்றுமுன் தாக்கலும்
பொற்றை யின்கட் புழைத்திடுஞ் சூசியின்
இற்ற வால்அதன் ஈரிரு தந்தமும். - 82
1871 - தந்தம் நான்குஞ் சடசட ஆர்ப்பொடு
சிந்தல் உற்றன சீர்கெழு சூர்மகன்
உந்து தொண்டலம் பற்றிமற் றோர்கையால்
தந்தி வேந்தன் கவுளிடைத் தாக்கினான். - 83
1872 - வேறு
காழ்ந்த நெஞ்சினன் கரங்கொடு தாக்கலுங் கயமா
ஆழ்ந்த தெண்டிரைப் பாற்கடல் உடைந்தென அரற்றி
வீழ்ந்த யர்ந்தது சயந்தனும் அறிந்தனன் விரைவில்
சூழ்ந்த தொல்லுணர் வெய்தலும் அவனிவை சொல்லும். - 84
1873 - மாயை போயது தனித்தனங் குறைந்தது வன்மை
தீயர் பற்றுவர் அழியுமிந் நகரெனச் சிறிது
நீயி ரங்கலை இனிமன னேவிதி நெறிகாண்
ஆயின் இங்கிவை என்றனன் சயந்தனாம் அறிஞன். - 85
1874 - நுனித்து நாடியே இத்திறம் நுவன்றுநூற் றுணிபு
மனத்தில் வைத்திடும் இந்திர்கான்முளை மயங்கித்
தனித்த நீர்மையுங் களிற்றோடு வீழந்ததுந் தளர்வும்
அனைத்தும் நோக்கியே தானவத் தலைவர்கள் ஆர்த்தார். - 86
1875 - ஆர்த்த தானவத் தலைவர்கள் சயந்தனை அயலே
போர்த்த தாமெனச் சுற்றினர் பற்றினர் புவிமேல்
கூர்த்த வாலெயிற் றரவினம் யாவையுங் குழீஇப்போய்ச்
சீர்த்த வெல்லையில் இரவியைக் கரந்திடுந் திறம்போல். - 87
1876 - தடித்த மொய்ம்புடைச்சயந்தனைத் தானவத் தலைவர்
பிடித்த காலையிற் கைதவன் கைதவன் பெரிதும்
அடித்தி டுங்கள்குற் றிடுங்கள்இங் கிவனுயிர் அதனைக்
குடித்தி டுங்களென் றா£¢எலா வவுணரும் குழுமி. - 88
1877 - மன்னர் மன்னவன் திருமகன் அவ்வழி மற்றோர்
பொன்னே டும்பெருந் தேர்மிசைப் பொள்ளென ஏகிப்
பன்ன ரும்புகழ் படைத்திடு சயந்தனைப் பற்றித்
துன்னி நின்றிடும் அவுணருக் கொருமொழி சொல்வான். - 89
1878 - வரிவில் வாங்கியே யான்விடுஞ் சரம்பட மயங்கிப்
பெரிது மெய்தளர் வுற்றனன் பேசவுங் கில்லான்
கருத லானெ இவன்றனை வருத்தலிர் கடிதே
சுரர்கு ழாத்தொடு புரிமினோ சிறையெனச் சொற்றான். - 90
1879 - கொற்ற வன்மொழி வினவியே மந்தரக் குன்றைச்
சுற்று பாந்தள் போல் இந்திரன் திருமகன் துணைத்தோள்
இற்ற கொல்லேன நாணினால் யாத்தனர் இமையோர்
உற்று நின்றதோர் குழுவினுள் ஒருங்குற உய்த்தார். - 91
1880 - வேறு
தொழிலிது புரிந்த காலைச் சூர்மகன் தனது மாடே
தழியகா வலரை நோக்கிச் சயந்தனும் இருவரும் அல்லால்
ஒழியநின் றோரை எல்லாம் ஒல்லையில் தருதிர் பின்னர்
அழியஇம் மூதூர் செந்தீ அரசனுக் களித்திர் என்றான். - 92
1881 - என்றலும் இறைஞ்சி யன்னோர் எழிலுடைத் துறக்கம் யாண்டுஞ்
சென்றனர் நாடி யேனைத் தேவரை மகளீர் தம்மை
ஒன்றொரு வரையும் வீடா துடனுறப் பற்றி நாணால்
பொன்றிரள் தடந்தோள் யாத்துப் புரவலன் முன்னர் உய்த்தா£ர். - 93
1882 - உய்த்தபின் பதுமச் செல்வி உறைதரும் உறையுள் போலச்
சித்திரங் கெழுவு பொன்னந் திருநகர் எல்லை யெங்கும்
புத்தழல் கொளுவ லோடும் பொள்ளெனப் பொடிபட் டன்றே
முத்திற வரைப்பும் எங்கோன் முறுவலான் முடிந்த வாபோல். - 94
1883 - ஊழியின் அன்றி என்றும் ஒழிவுறாத் துறக்க மூதூர்
பூழிய தான தன்றே புரந்தரன் வறியன் போனான்
வீழுறு சிறையின் உற்றார் மிக்கவ ரென்றால் யாரும்
வாழிய செல்வந் தன்னை நிலையென மதிக்க லாமோ. - 95
1884 - அளிபட னின்றி யென்றும் அலர்தரு நிழற்றும் மூதூர்
வௌ¤படு சுடலை போலாய் வேற்றுருக் கோட லோடுங்
களிபடு பானு கோபன கண்டனன் அவுணர் தம்மில்
ஔ¤படு காவ லோரை நோக்கியீ துரைக்கல் உற்றான். - 96
1887 - தாதுலாந் தெரிய லாகச் சயந்தனை அவனோ டுற்ற
ஏதிலார் தம்மைப் பின்னோர் யாரையுங் கொடுமுன் நீவிர்
போதிரால் என்ன அற்றே போயினர் உவணை நீங்கி
ஆதவன் பகைஞன் மீளா அனிகமோ டவனி வந்தான். - 97
1886 - மாநில மதிக்கும் வீர மகேந்திர புரத்துப் புக்குக்
கோனகர் முன்னம் ஏகிக் கொடிஞ்சிமான் தேரின் நீங்கிச்
சேனையை நிறுவி வானச் சிறையினைக் கொண்டு சென்று
தானவர் மன்னன் முன்போய்த் தாள்முறை வணக்கஞ் செய்தான். - 98
1887 - தண்டுளி நறவ மாலைத் தாதைதாள் வணங்கி எந்தாய்
கண்டிலன் சசிய வானோர் காவலன் தனையுங் காணேன்
அண்டரைச் சயந்தன் தன்னை யாரையுங் கொண்டு சென்றான்
விண்டொடர் துறக்க முற்றும் வெங்கனல் கொளுவி என்றான். - 99
1888 - என்றலும் மகிழ்ந்து சூரன் இளஞ்சிறு குமரற் புல்லித்
தன்றிரு முன்னர் இட்ட சயந்தனை முதலி யோரைக்
கன்றினன் உருத்து வாட்கைக் காவலர் சிலரை நோக்கித்
துன்றிய இனையர் அங்கம் யாவையுந் துணித்திர் என்றான். - 100
1889 - இரலைமான் தொகுதி தன்மேல் இருஞ்சிறை வீடு பெற்ற
உருகெழு புலிபாய்ந் தொப்ப ஒப்பிலா அரசன் சொல்லால்
விரைவுடன் அவுணர் பல்லோர் விண்ணவர் தம்பால் மேவித்
துருவையின் முகத்தி காணத் துண்ணெனத் துணிக்கல் உற்றார். - 101
1890 - கரத்தினைத் தாளைத் தோளைக் கன்னமூ லத்தைக் கல்லென்
றரற்றுறு கண்டந் தன்னை அணிகெழு துண்டந் தன்னைச்
சிரத்தினைத் துணிப்ப அன்னோர் சிறியரோ செய்த நோன்பின்
உரத்தினில் அவைக ளெல்லாம் உடனுடன் பொருந்த லுற்ற. - 102
1891 - செல்லரு நெறிக்கண் நின்ற சேணுளார் தம்மை யாருங்
கொல்லா¤ திறையுங் அங்கங் குறைத்தலும் அரிதா மென்றாற்
சொல்லரி தினையர் வன்மை தொலைந்ததெம் வரத்தா லென்னா
வல்லரி புரைவெஞ் சூரன் மதித்துமற் றதனைக் கண்டான். - 103
1892 - கண்டனன் முனிந்தின் னோரைக் காலமொன் றானும் வீடா
எண்டரு நிரயம் போலும் இருஞ்சிறை இடுதி ரென்றே
திண்டிறல் அசுரர் கேட்பச் செப்பலுஞ் சயந்தன் றன்னை
அண்டரைப் பிடர்தொட் டுந்தி ஆங்ஙனங் கொண்டு போனார். - 104
1893 - போயினர் சிறையின் எல்லை போற்றினர் தம்மை நோக்கி
ஏயினன் நங்கோன் இன்னோர் யாரையுங் காவல் கொண்மின்
நீயிர்க ளென்னா ஒற்றர் நீங்கினர் நின்றோர் தம்மை
ஆயவர் வல்லி பூட்டி அருஞ்சிறைக் களத்தில் உய்த்தார். - 105
1894 - மன்னவன் அதற்குப் பின்னர் மைந்தனை அன்பால் நோக்கி
நின்னக ரத்திற் போதி நீயென அனையன் போனான்
அன்னதோர் சூர பன்மன் அவையொரீஇ உறையுள் புக்கான்
இன்னலங் கடலில் உற்றார் இருஞ்சிறைப் பட்ட வானோர். - 106
1895 - வேறு
காடு போந்தனன் இந்திரன் பொன்னகர் கா¤ந்து
பாடு சேர்ந்தது சயந்தனுஞ் சிறையிடைப் பட்டான்
நாடில் விண்பதச் செய்கையீ தெம்பிரான் நல்கும்
வீட தேயலால் துன்பறும் ஆக்கம்வே றுண்டோ. - 107
1896 - வேறு
படவர வனையதோர் பரும அல்குலார்
இடுகிய நுண்ணிடை எழில ணங்கினோர்
கொடுமைசெய் அவுணரூர் குறுகி வேடர்பால்
பிடியுறு மஞ்ஞையிற் பெரிதும் அஞ்சினார். - 108
1897 - சூரன்வாழ் பெருநகா¢ துன்னிக் காப்பொடு
சீரிலா ஏவல்கள் செய்து மேவினார்
கூரும்வாய் வெங்குரீஇக் குடம்பை உய்த்திடப்
பேருறா திலகுமின் மினியின் பெற்றிபோல். - 109
1898 - வாடிய மகபதி மதலை வானுளோர்
ஆடுறு துயர்க்கடல் அழுந்திச் சூரர்கோன்
வீடருஞ் சிறையிடை மேவி னாரவர்
பாடுறு திறத்தையார் பகரற் பாலினோர். - 110
1899 - இன்னலங் கடலினும் எடுத்து வீடுதந்
தன்னவர் பெருஞ்சிறை அகற்றும் வன்மையார்
பின்னெவர் உண்டுயிர் பெற்றுக் காத்திடு
முன்னவர் தமக்கெலா முதல்வ நீயலால். - 111
1900 - வியந்தரு கதிரைமுன் வெகுண்டு ளானொடு
சயந்தன்விண் ணுலகிடைச் சமர்செய் தெய்த்துழி
வயந்தரு கோடுகண் மாய்ந்து தந்திவீழ்ந்
தயர்ந்தது புவியிடை அணுகிற் றத்துணை. - 112
1901 - வாலிய ஔ¤கெழு வனத்தில் ஏகியே
மூலம தாகிய முக்கண் மூர்த்தியை
மேலுள தாணுவின் மேவச் செய்துபின்
சீலமொ டருச்சனை செய்து வைகிற்றே. - 113
1902 - அறிவுள மால்கரி அமலன் தந்திர
முறையது நாடியே முதிரும் அன்பினால்
மறையுற வழிபடீஇ வைகும் எல்லையில்
குறைபடு நாற்பெருங் கோடும் வந்தவே. - 114
1903 - பா£¢ப்பதி மருங்குறு பகவன் ஆணையால்
மாற்பெருங் களிற்றிடை வல்லை முன்புபோல்
நாற்பெருந் தந்தமும் நண்ண நோக்கியே
ஏற்பரு மகிழ்ச்சியோ டிருந்த தவ்விடை. - 115
1904 - வேறு
ஆயதோர் அமைதி யின்கண் அணங்கொடு மேரு வெற்பிற்
போயின அமரர் கோமான் பொன்னகர் சூரன் மைந்தன்
காயெரி கொளுவி அங்கட் கடவுளர் குழுவி னோரைச்
சேயொடு பற்றி ஏகிச் சிறைசெய்த தன்மை தேர்ந்தான். - 116
1905 - தேர்ந்தனன் தளர்ந்து மேருச் சிலம்பினின் மகவான் பன்னாள்
வார்ந்திடு கங்கை வேணி வள்ளலை உன்னி நோற்பச்
சார்ந்துநிற் கென்னை வேண்டுஞ் சாற்றென முதல்வன் நீதி
பேர்ந்தசூர் கிளையைச் செற்றெம் பேதுற வகற்று கென்றான். - 117
1906 - என்றலும் எந்தை சொல்வான் யாமுமை தன்னை மேவி
ஒன்றொரு குமரன் றன்னை உதவுவம் அவனே போந்து
வென்றிகொள் சூர னாதி அவுணரை விரைவிற் செற்று
மன்றநும் முரிமை ஈவன் வருந்தலென் றுரைத்துப் போனான். - 118
1907 - சாதலுந் தொலைவும் இல்லாத் தானவர்க் கிறைவன் ஏனோர்
ஏதிலர் தம்மால் வீடான் என்றுதன் உளத்தி லெண்ணிச்
சோதிகொள் பரம மாகிதத் தோன்றிடு முதல்வன் நீயே
ஆதலின் விமல மூர்த்தி அவரைமே லடுதி யென்றான். - 119
1908 - அவ்வுரை மகவான் தேறி அரியய னோடு சூழ்ந்து
மைவரு களத்தோன் தன்பான் மதனனை உய்ப்ப அன்னோன்
மெய்விழி எரியின் மாய்ந்து வெறுந்துகள் படலுந் தேவர்
எவ்வெவ ரும்போய் வேண்ட இரங்கியே கருணை செய்தான். - 120
1909 - அரியயன் மகவான் தேவர் அருங்கணத் தலைவர் யாரும்
பரவுற இமய வெற்பிற் படா¢ந்துபின் உமையை வேட்டுப்
பிரிவருங் கயிலை நண்ணிப் பின்னெம திரக்கம் நாடிக்
கருணையால் எந்தை நின்னை நெற்றியங் கண்ணால் தந்தான். - 121
1910 - எந்தைநீ வந்த பின்றை இந்திரன் அயன்மால் தேவர்
அந்தமில் முனிவர் ஏனோர் அனைவர்க்கும் அகன்ற ஆவி
வந்தது போன்ற தம்மா வலியவெஞ் சூரற் செற்றுத்
தந்தம தரசு பெற்ற தன்மையர் போல வுற்றார். - 122
1911 - ஆழ்தத முந்நீர் நேமி அகன்கடல் அழுவம் புக்கு
வீழ்தரு வோர்கள் தம்பால் வியன்கல மொன்று சேர
ஊழ்தரு தொடர்பாற் பற்றி உய்ந்தெனத் துன்ப வேலைக்
கீழ்தரு வோர்கள் நின்னாற் கிளர்ந்துமேல் எழுதல் உற்றார். - 123
1912 - புரந்தரன் முதலா உள்ள புங்கவர் எம்ம னோர்கள்
அரந்தையை அகற்ற உன்னி ஐயநீ போந்த பின்னுந்
தெரிந்திடு துணிபிற் சேர்ந்துந் தெம்முனைச் சூரற் கஞ்சிக்
கரந்தனர் இருந்தார் காணிற் கடுஞ்சிறைப் பிணிப்ப னென்£. - 124
1913 - எம்பிரான் நின்னை முக்கண் எந்தையை வணங்க நேரில்
தம்பெரு வடிவங் காணச் சாருவர் ஒழிந்த காலை
உம்பர்கோன் முதலோர் தத்தம் உருக்கரந் துழல்வர் வான்மேல்
வெம்பணி சிலைகண் மாறாம் வெய்யவர் நிலைமை யேபோல். - 125
1914 - மறைந்திடு பாங்கர் இன்ன வாசவன் முதலோர் யாரும்
அறந்தவிர் சூர பன்மன் அடுபடைத் தலைவர்க் காணிற்
பறைந்திட மார்பம் உள்ளம் பனித்திட வியர்ப்ப யாக்கை
இறந்தன ராகிப் பின்னர் இன்னுயிர் பெறுவர் அன்றே. - 126
1915 - வினைப்பவம் உழந்த விண்ணோர் வெந்தொழில் அவுணர் கோனை
நினைப்பினும் அவச மாவர் நெடுந்துயில் பெறாத நீரால்
மனப்படு கனவு நீத்தார் மற்றது வருமேல் அங்கண்
உனப்படு சூரற் காணின் உயிரையும் இழப்பர் அம்மா. - 127
1916 - பொன்னகர் இறுதி செய்து புதல்வனை அமர ரோடு
துன்னருஞ் சிறையுட் சேர்த்தித் துயர்ப்பெருங் கடலுள் வீட்டி
மன்னிய வெறுக்கை வவ்வி மனையொடு கரப்பச் செய்தும்
இன்னமும் அவுணர் கோமான் இந்திரற் கலக்கண் சூழும். - 128
1917 - ஒப்பரும் வெறுக்கை தன்னால் ஓங்கிய விறலாற் சீரான்
மெய்ப்படு மிடலால் யார்க்கும் மேன்மையால் அழியா வாற்றால்
இப்பகல் வானோர்க் கெல்லாம் இடர்புரி கொடுமை நீரால்
அப்பெருஞ் சூரற் கென்றும் ஆரம்நேர் அன்று மாதோ. - 129
1918 - ஏயதோ ரண்ட மொன்றின் இழைத்தன இவ்வா றேனை
ஆயிரத் தோரேழ் அண்டத் தவன்செயல் அறிதல் தேற்றாந்
தூயதோர் பரத்தின் மேலாஞ் சோதியாய் எம்மைக் காப்பான்
மேயின ஒருநீ அன்றி வேறியார் தெரிதற் பாலார். - 130
1919 - தொடர்ந்திடு சீர்பெற் றுள்ள சூரன தாணை என்னில்
கடந்திடல் புரியார் மாலுங் கமலமேல் அயனும் வானோர்
அடங்கலும் முனிவர் யாரும் ஆயிர விருநா லண்டத்
தொடுங்கிய உயிரும் அன்னோன் பெருமையார் உரைக்கற் பாலார். - 131
1920 - முடிவிலிவ் வளம்பெற் றுள்ள முரண்கெழு சூர பன்மன்
கெடுகிலன் அன்று மேலோன் கிளத்திய வரத்தின் சீராற்
படியறும் அமல மேனிப் பரஞ்சுடர் குமர நீயே
அடுவதை அன்றிப் பின்னர் அவனையார் முடிக்கற் பாலார். - 132
1921 - ஐந்தியல் அங்கஞ் சூரற் கயன்புகன் றுழல்வான் நாளும்
இந்திரை கேள்வன் போர்செய் தெஞ்சினன் எவர்க்கும் மேலாய்
முந்திய சிவன்அன் னோற்கு முதல்வரம் அளித்தான் பின்னர்
வந்தடல் புரியான் நீயே மற்றவற் கோறல் வேண்டும். - 133
1922 - ஆவதோர் சூரன் றன்னை அவன்றுணை வோரை மைந்தர்
ஏவர்கள் தமையும் அட்டே எழிலபெறு சயந்த னோடும்
தேவர்தஞ் சிறையை நீக்கித் திசைமுகன் மகவா னாதிக்
காவலர் பதங்கள் நல்கிக் காத்தருள் எம்மை யென்றான். - 134
1923 - இவ்வஆஆ முகமா றுள்ள எம்பிரான் உளத்திற் கேற்ப
உய்வுறும் அன்பாற் பொன்னோன் உரைப்பமுன் அறிந்த தொன்றை
மெய்வரு தொடர்பால் ஈன்றோர் விழைவினான் மழலை ஓவாச்
செவ்வியல் மகார்வாய்க் கேட்குந் திறனென வினவிச் சொல்வான். - 135
1924 - புன்றொழில் அவுணர் தன்மை புறத்தவர் செய்கை யாவும்
ஒன்றிடை விடாது முற்றும் உள்ளவா றுரைத்தாய் நம்மு
னன்றிது பனுவற் கெல்லாம் நாதனை ஒருநீ அன்றோ
வென்றவன் புறத்தை நீவி இனிதருள் புரிந்தான் எங்கோன். - 136
1925 - அறிவினுள் அறிவாய் வைகும் அறுமுக அமல வெஞ்சூர்
இறுசெயல் நினைக்கி லாகும் ஈண்டையோர் ஆடல் உன்னிக்
குறுகினை யதுபோல் அன்னோன் கொள்கையுந் தேர்ந்தாய் நிற்கோர்
சிறியனேன் உரைத்தேன் என்னுந் தீப்பிழை பொறுத்தியென்றான். - 137
1926 - பொறுத்தியென் குற்றம் என்று பொன்னடித் துணையைப் பொன்னோன்
மறத்தலில் அன்பிற் பூண்டு வணங்கினன் தொழுது போற்ற
வெறித்தரு கதிர்வேல் அண்ணல் எம்முரை கொண்டு சொற்றாய்
உறத்தகு பிழையில் யாதும் உன்னலை இருத்தி என்றான். - 138
1927 - வேறு
பொன்னெனும் பெயரினான் பொருவில் கந்தவேள்
இன்னருள் நிலைமைபெற் றிருந்த பின்னரே
தன்னயல் நிற்புறு சதம கத்தனை
அந்நிலை நோக்கியே அன்பிற் கூறுவான். - 139
1928 - ஈண்டிது கேண்மனத் தேதும் எண்ணலை
மூண்டிடு சூர்குல முடிய வானுளோர்
மீண்டிட இருஞ்சிறை விண்ப தத்தைநீ
ஆண்டிட நல்குதும் ஐயுறேல் என்றான். - 140
1929 - இகபரம் உதவுவான் இதனைச் சாற்றலும்
மகபதி பரிவொடு வணங்கி வானவத்
தொகையொடு போற்றியே துன்பெலாம் ஒரீஇப்
புகலரும் மகிழ்ச்சியுட் பொருந்தல் மேயினான். - 141
ஆகத் திருவிருத்தம் - 1929
-------
ஆகக் காண்டம் இரண்டுக்குத் திருவிருத்தம் - 3712
கருத்துகள்
கருத்துரையிடுக