Kanta purāṇam VII a


சைவ சமய நூல்கள்

Back

கந்த புராணம் VII A
கச்சியப்ப சிவாச்சாரியார்



கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
பாகம் 7a / 3. மகேந்திர காண்டம் / படலம் 1- 12 (1 - 639)


1. வீரவாகு கந்தமாதனஞ்செல் படலம் 1-53

2. கடல்பாய் படலம் 54- 72

3. வீரசிங்கன் வதைப் படலம் 73-89

4. இலங்கை வீழ் படலம் 90-117

5. அதிவீரன் வதைப் படலம்118-154

6. மகேந்திரஞ் செல் படலம் 155-182

7. கயமுகன் வதைப் படலம் 183-237

8. நகர்புகு படலம் 238-336

9. சயந்தன் புலம்புறு படலம் 337 -417

10. சயந்தன் கனவுகாண் படலம் 418-445

11. வீரவாகு சயந்தனை தேற்று படலம் 446-480

12. அவைபுகு படலம் 481-639

செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

3 மகேந்திர காண்டம்

1. வீரவாகு கந்தமாதனஞ்செல் படலம் (1-53)




1 - விரிஞ்சன்மால் தேவ ராலும் வெலற்கரும் விறலோ னாகிப்
பெருஞ்சுரர் பதமும் வேத வொழுக்கமும் பிறவு மாற்றி
அருஞ்சிறை அவர்க்குச் செய்த அவுணர்கோன் ஆவி கொள்வான்
பரஞ்சுடர் உருவாய் வந்த குமரனைப் பணிதல் செய்வம். - 1



2 - இந்திர னாதி யான அமரரும் எனை யோரும்
புந்தியில் உவகை பூப் புடைதனில் ஒழுகிப் போற்றச்
செந்திமா நகரந் தன்னில் சீயமெல் லணைமேல் வைகுங்
கந்தவேள் அருளின் நீரால் இனையன கருத லுற்றான். - 2



3 - நான்முக னாதி யான நாகரும் முனிவ ரும்போல்
மேன்முறை அவுண ராகும் வியன்தொகை யவரும் எங்கோன்
கான்முளை நெறிய ரேனுங் கடியரை முடிவு செய்தல்
நூன்முறை இயற்கை யாகும் நுவலரும் அறனும் அதே. - 3



4 - இற்றிது துணிபா மேலும் எண்ணெழிற் சூரன் றன்னை
அற்றமில் சிறப்பின் வைகும் அவன்றமர் தம்மை எல்லாஞ்
செற்றிடல் முறைய தன்றால் தேவர்தஞ் சிறைவிட் டுய்ய
மற்றவன் தனக்கோர் ஒற்றை வல்லையில் விடுத்து மன்னோ. - 4



5 - தூண்டுநம் மொற்றன் மாற்றஞ் சூரனாம் அவுணன் கேளா
ஈண்டிடு சிறையின் நீக்கி அமரரை விடுப்பன் என்னின்
மாண்டிட லின்றி இன்னும் வாழிய மறுத்து ளானேல்
ஆண்டுசென் றடுதும் ஈதே அறமென அகத்துட் கொண்டான். - 5



6 - வடித்தசெங் கதிர்வேல் அண்ணல் மாலயன் மகவா னாதி
அடுத்தபண் ணவரை நோக்கி அவுணர்தங் கிளையை யெல்லாம்
முடித்திடப் பெயர்தும் நாளை முன்னமோர் தூதன் றன்னை
விடுத்தனம் உணர்தல் வேண்டும் வெய்யசூர் கருத்தை என்றான். - 6



7 - கடலுடைக் கடுவை உண்டோன் காதலன் இனைய செப்ப
மடலுடைப் பதுமப் போதில் வைகினோன் மாயன் கேளா
அடலுடைப் பெரும்போர் எந்தை ஆற்றுமுன் சூரன் முன்னோர்
மிடலுடைத் தூதன் றன்னை விடுத்தலே அறத்தா றென்றார். - 7



8 - என்றலுங் குமர மூர்த்தி இப்பெருந் திறலோர் தம்முள்
வென்றிகொள் சூரன் றன்பால் வீரமா மகேந்திர ரத்துச்
சென்றிட விடுத்தும் யாரைச் செப்புதி ரென்ன லோடு
நன்றென அதனை நாடி நான்முகன் நவிற லுற்றான். - 8



9 - மெல்லென உலவைக் கோனும் வீர மகேந்திர த்திற்
செல்லரி தெனக்கு மற்றே செய்பணி நெறியால் அன்றி
ஒல்லையில் அங்கண் ஏகி ஒன்னலர்க் கடந்து மீள
வல்லவன் இனைய வீர வாகுவே ஆகு மென்றான். - 9



10 - சதுர்முகன் இனைய வாற்றால் சண்முகன் உளத்துக் கேற்பக்
கதுமென உரைத்த லோடுங் கருணைசெய் தழகி தென்னா
மதுமலர்த் தொடையல் வீர வாகுவின் வதனம் நோக்கி
முதிர்தரும் உவகை தன்னால் இத்திறம் மொழிய லுற்றான். - 10



11 - மயேந்திர மூதூ ரேகி வல்லைநீ அமலன் நல்குஞ்
சயேந்திர ஞாலத் தேரோன் தனையடுத் தொருநாற் றந்தக்
கயேந்திரன் மதலை வானோர் காப்பைவிட் டறத்தா றுன்னி
நயேந்திர வளத்தி னோடும் உறைகென நவிறி யன்றே. - 11



12 - அம்மொழி மறுத்து ளானேல் அவுணநின் கிளையை யெல்லாம்
இம்மென முடித்து நின்னை எ•கவேற் கிரையா நல்கத்
தெம்முனை கொண்டு நாளைச் செல்லுதும் யாமே யீது
மெய்ம்மைய தென்று கூறி மீள்கென வீரன் சொல்வான். - 12



13 - வெந்திறல் அவுணர் ஈண்டும் வீரமா மகேந்தி ரத்திற்
சுந்தரத் திருவின் வைகுஞ் சூரபன் மாவின் முன்போய்
எந்தைநீ அருளிற் றெல்லாம் இசைத்தவ னுள்ளம் நாடி
வந்திடு கின்றேன் என்னா வணங்கியே தொழுது போனான். - 13



14 - கூர்ந்திடு குலிசத் தண்ணல் குமரவேள் ஒற்றன் தன்பின்
பேர்ந்தனன் சென்று வீர பெருந்திறற் சூரன் மூதூர்
சார்ந்தனை சிறையில் வானோர் சயந்தனோ டிருந்தா ரங்கட்
சேர்ந்தனை தேற்றிப் பின்னுன் செயலினை முடித்தி யென்றான். - 14



15 - அவ்வழி யமரர் கோமான் அனையன அறைத லோடுஞ்
செவ்விது நிற்றி யற்றே செய்வனென் றவனை நீங்கி
எவ்வமில் துணைவ ராகும் எண்மரும் இலக்கத் தோரும்
மெய்வருந் தொடர்பிற் செல்லக் கண்ணுறீஇ விடலை சொல்வான். - 15



16 - நீயிர்கள் யாருங் கேண்மின் நெடுந்திரைப் பரவை வாவித்
தீயதோர் மகேந்திரத்திற் சென்றுசூர் முன்போய் நந்தம்
நாயகன் பணித்த மாற்றம் நவிலுவன் மறுத்து ளானேல்
ஆயவன் மூதூர் முற்றும் அட்டபின் மீள்வன் அம்மா. - 16



17 - என்றலும் வியந்து பின்னோர் யாவரும் இறைஞ்ச லோடும்
பொன்றிகழ் ஆகத் தூடு பொருந்துறப் புல்லிக் கொண்டு
வன்றிறற் பூதர் தம்முள் மன்னவ ரோடும் அங்கண்
நின்றிட வருளி வல்லே நெடுங்கடல் வேலை போந்தான். - 17



18 - அலங்கலந் திரைகொள் நேமி அகன்கரை மருங்கின் மேரு
விலங்கலின் உயர்ந்த கந்த மாதன வெற்புத் தன்னில்
பொலங்குவ டுச்சி மீது பொள்ளென இவர்த லுற்றான்
கலன்கலன் கலனென் றம்பொற் கழலமா¢ கழல்கள் ஆர்ப்ப. - 18



19 - புஞ்சமார் தமாலச் சூழல் பொதுளிய பொதும்பர் சுற்றி
மஞ்சுநின் றறாத கந்த மாதனப் பிறங்கல் உம்பர்
விஞ்சுநுண் பொடிதோய் மேனி மேலவன் இருவரும் பான்மை
அஞ்சன வரைமேல் வௌ¢ளி யடுக்கல்சென் றனைய தன்றே. - 19



20 - கடுங்கலி மான்தேர் வெய்யோன் கையுற நிவந்த செம்பொன்
நெடுங்கிரி மிசைபோய் வீரன் நிற்றலும் பொறையாற் றாது
நடுங்கிய துருமுற் றென்ன நனிபகிர் வுற்ற தங்கள்
ஒடுங்கிய மாவும் புள்ளும் ஒல்லென இரிந்த வன்றே. - 20



21 - உண்ணிறை புள்ளும் மாவும் ஒலிட ஒலிமேல் கொண்டு
துண்ணென அருவி தூங்கத் தோன்றிய குடுமிக் குன்றம்
அண்ணலைத் தரிக்கல் ஆற்றேன் அளியனேன் அந்தோ வென்னாக்
கண்ணிடை வாரி சிந்தக் கலுழுதல் போலு மாதோ. - 21



22 - அடல்கெழு திண்டோள் வீரன் அடிகளின் பொறையாற் றாது
விடர்கெழு குடுமி வெற்பு வெருவலும் ஆண்டை வைகும்
படவர வுமிழ்ந்த செய்ய பருமணி சிதறும் பான்மை
உடல்கெழு குருதி துள்ளி உகுக்குமா றொப்ப தன்றே. - 22



23 - அறைகழல் அண்ணல் நிற்ப அவ்வரை அசைய அங்கண்
உறைதரு மாக்கள் அஞ்சி ஒருவில வெருவி விண்மேல்
பறவைகள் போய துன்பம் பட்டுழிப் பெரியர் தாமுஞ்
சிறியரும் நட்டோர்க் காற்றுஞ் செயல்முறை கா கின்ற. - 23



24 - மழையுடைக் கடமால் யானை வல்லியம் மடங்கல் எண்கு
புழையுடைத் தடக்கை யாளி பொருப்பசை வுற்ற காலை
முழையிடைத் தவறி வீழ்வ முதியகா லெறியப் பட்ட
தழையுடைப் பொதும்பர் பைங்காய் தலைத்தலை உதிர்க்கு மாபோல். - 24



25 - நன்றிகொள் பரிதிப் புத்தேள் நகுசிர மாக என்றூழ்
துன்றிருஞ் சடில மாகச் சுரநதி தோயத் திங்கள்
ஒன்றொரு பாங்கர் செல்ல ஓங்கிரும் பிறங்கல் உச்சி
நின்றதோர் விசயத் தோளான் நெற்றியங் கண்ணன் போன்றான். - 25



26 - வலமிகு மொய்ம்பின் மேலோன் மலர்க்கழல் உறைப்ப ஆற்றா
தலமரு குவட்டின் நிற்றல் அன்றுதீ முனிவர் உய்த்த
கொலைகெழு முயல கன்மெய் குலைந்திடப் புறத்துப் பொற்றான்
நிலவணி சடையோன் ஊன்றி நின்றிடு நிலைமை நேரும். - 26



27 - மாசிருள் செறியும் தெண்ணீர் மறிதிரை அளக்கர் வேலைப்
பாசடைப் பொதும்பர் வெற்பிற் பண்ணவன் தூதன் நிற்றல்
காசியில் அரற்றத் தள்ளிக் களிறுடல் பதைப்பக் கம்மேல்
ஈசன்அன் றடிகள் ஊன்றி இருத்திய இயற்கை போலும். - 27



28 - தாரகன் படைஞர் பல்லோர் சமரிடை இரிந்து போனார்
பாரிடை யுறாமே அந்தப் பருவரை முழைக்கண் உற்றார்
வீரமொய்ம் புடையோன் அங்கண் மேவலும் அவற்கண் டேங்கி
ஆருயி ருலந்தார் தீயோர்க் காவதோர் அரணம் உண்டோ. - 28



29 - அனையதோர் சிமையக் குன்றம் அசைதலும் அங்கண் உற்ற
வனைகழல் விஞ்சை வேந்தர் மங்கையர் ஊடல் மாற்றி
இனிதுமுன் கலந்தார் அஞ்சி இன்புறா திடைக்கண் நீத்து
வினைவிளை வுன்னி நொந்து விண்மிசை உயிர்த்துச் சென்றார். - 29



30 - வரைமிசை நின்ற அண்ணல் வனைகழல் அவுணர் கோமான்
பொருவரு நகர்மேற் செல்லப் புந்திமேற் கொள்ளா எந்தை
திருவுரு வதனை உன்னிச் செங்கையால் தொழுது மாலும்
பிரமனும் வியந்து நோக்கப் பேருருக் கொண்டு நின்றான். - 30



31 - பொன்பொலி அலங்கல் தோளான் பொருப்பின்மேற் பொருவி லாத
கொன்பெரு வடிவங் கொண்டு குலாய்நிமிர் கொள்கை செவ்வேள்
முன்பொரு ஞான்று மேரு முடியில்வந் தமரர்க் கெல்லாந்
தன்பெரு வடிவங் காட்டி நின்றதோர் தன்மை யாமால். - 31



32 - ஆண்டகை நெடுந்தோள் வீரன் அண்டமேல் மவுலி தாக்க
நீண்டிடும் எல்லை அன்னான் நின்றிடு குன்ற ஞாலங்
கீண்டது பிலத்திற் சேறல் கேடில்சீர் முனிகை யூன்ற
மீண்டுபா தலத்திற் புக்க விந்தமே போலு மாதோ. - 32



33 - விண்ணவர் உய்த்த தேர்மேல் மேவலர் புரம்நீ றாக்கும்
பண்ணவன் ஒருதாள் ஊன்றப் பாதலம் புகுந்த வாபோல்
கண்ணகல் வரையும் வீரன் கழல்பட அழுந்திற் றம்மா
அண்ணலந் தாதை வன்மை அருள்புரி மகற்கு றாதோ. - 33



34 - கன்றிய வரிவிற் செங்கைக் காளைபொற் றாளும் அந்தண்
குன்றொடு பிலத்துட் செல்லக் குறிப்பொடு விழிக்கு றாமே
சென்றிட முடியுஞ் சேண்போய்த் திசைமுகத் தயனும் மாலும்
அன்றடி முடிகா ணாத அசலமும் போல நின்றான். - 34



35 - ஆளரி அன்னோன் தாளும் அடுக்கலும் அழுந்தும் பாரின்
நீளிரு முடிசேர் வானின் நிரந்தமாப் பறவை போதல்
சூளுடை இமையோர் புள்ளும் மாவுமாய்த் தோமில் வீரன்
தாளடு முடியும் நாடிச் சார்தருந் தகைமைத் தாமால். - 35



36 - அந்தமில் வலியோன் நிற்ப ஆயிடைத் துஞ்சும் பாந்தள்
தந்தொகை வீழு றாது தழீஇமருங் காகக் கீழ்போய்
முந்துயர் கமடஞ் சேர்ந்து முழங்குதெண் டிரைக்கண் வைகும்
மந்தர மென்னக் கந்த மாதனந் தோன்றிற் றம்மா. - 36



37 - பதுமநேர் கண்ணன் வேதாப் பலவகை முனிவர் தேவர்
கதிபடர் உவணர் சித்தர் கந்தரு வத்தர் ஒண்கோள்
மதியுடுக் கதிர்கள் ஏனோர் வான்பதம் முற்றும் ஓங்கும்
அதிர்கழல் வீரன் பல்வே றாரமாய் ஔ¤ர நின்றான். - 37



38 - எண்டிசை முழும் நேமி எழுதிறத் தனவும் மற்றைத்
தெண்டிரைக் கடலும் பாருஞ் சேண்கிளர் ஆழி வெற்பும்
அண்டமும் உலகம் யாவும் அகன்விழி பரப்பி நோக்கிக்
கண்டனன் அமலன் வைப்புங் கைதொழு தையன் நின்றான். - 38



39 - ஆணமில் சிந்தை வீரன் அச்சுதன் முதலோர் வைகுஞ்
சேணகர் நோக்கிச் சூழுந் திசைநகர் நோக்கிப் பாரின்
மாணகர் நோக்கி வீர மகேந்திரம் நோக்கிச் சூரன்
நீணகர் இதற்கி யாவும் நிகரிலை போது மென்றான். - 39



40 - விண்ணுலாம் புரிசை வெஞ்சூர் வியனகா¢ அதனை நோக்கி
உண்ணிலா வெகுளி கொண்டான் ஒருகரம் அங்கண் ஓச்சி
நண்ணலார் யாருந் துஞ்ச நாமறப் பிசைகோ வென்னா
எண்ணினான் சிறையில் உற்றோர்க் கிரங்கிஅவ் வெண்ணம் மீட்டான். - 40



41 - விஞ்சையர் இயக்கர் சித்தர் வியன்சிறை உவணர் திங்கள்
செஞ்சுடர்ப் பரிதி நாள்கோள் தெய்வத கணத்தர் யாரும்
வஞ்சினத் தடுதோள் வீரன் மாலுரு நோக்க லாற்றா
தஞ்சினர் வெருவச் செங்கை அமைத்தனன் அழுங்க லென்றே - 41



42 - கோளியல் கருடர் தாம்வீழ் மாதரை விழைந்து கூடி
வாளுறு நகத்தின் ஊறு மதிக்கிலர் மயங்கித் துஞ்சி
வேளெனும் நெடியோன் ஊன்றும் வெற்பொடும் பிலத்திற் சென்று
கேளுடன் எழுந்து நாகர் கிளைதனக் கணங்கு செய்தார். - 42



43 - ஆதியங் குமரன் தூதன் ஆற்றலால் ஊன்றி நிற்பப்
பூதலங் கீண்டு வெற்புப் பொள்ளென ஆழ்ந்து கீழபோய்ப்
பாதலங் குறுக அங்கட் பயிலராத் தொகையை நாகர்
காதலங் கேண்மை நாடிக் கலந்தனர் விருந்து செய்தார். - 43



44 - தேன்றிகழ் தெரியல் வாகைச் சேவகன் கழல்கள் வெற்பின்
ஊன்றலும் அனைய பாங்கர் ஒருசிலர் அரக்கர் நோற்றார்
ஆன்றுயர் பதத்தை வே•கி ஆங்கவர் பிலத்துள் வீழ்ந்து
மான்றனர் இரங்க லுற்றார் வன்கணார்க் குய்வு முண்டோ. - 44



45 - புண்டர நீற்று வள்ளல் புரையுருத் தேவர் நோக்கி
மண்டலம் புகழும் வீர மகேந்திரஞ் சேறற் கன்றால்
கொண்டவிவ் வுருவம் நோக்கிற் குரைகழல் அவுணர் தம்மை
அண்டமும் இடித்துச் சாடும் நினைவுகொல் ஐயற் கென்றார். - 45



46 - வீரமா மகேந்தி ரத்தில் அவுணரும் வீற்று வீற்றுச்
சாருறும் அவுணர் தாமுஞ் சயங்கெழு புயத்து வள்ளல்
பேருரு நோக்கி இங்ஙன் பிறந்தசொற் சழக்கே இன்னுந்
தேருவ துண்டு நந்தந் திறல்வரைப் புணர்ப்பி தென்றார். - 46



47 - ஒலிகழல் வீர வாகு ஓங்கலை யூன்றி இந்த
நிலைமையின் நிற்ற லோடும் நெடியமால் சுதனும் விண்ணோர்
தலைவனும் பிறரும் அன்னோன் தம்பியர் அளப்பி லோருங்
கலிகெழு பூதர் யாருங் கண்டுவிம் மிதத்தின் ஆர்த்தார். - 47



48 - தேவர்கள் முனிவா¢ ஏனைத் திறத்தவர் யாருந் தத்தம்
ஓவரும் பதத்தின் நின்றே ஒல்வதோர் உறுப்பின் மேவக்
காவரு கடிமென் பூத்தூய்க் கைதொழு தைய வெஞ்சூ
மேவரு நகர்சென் றெங்கள் வியன்துயர் அகற்று கென்றார். - 48



49 - ஆவதோ£¢ காலை எந்தை ஆறிரு தடந்தோள் வாழ்க
மூவிரு வதனம் வாழ்க முழுதருள் 1விழிகள் வாழ்க
தூவுடை நெடுவேல் வாழ்க தொல்படை பிறவும் வாழ்க
தேவர்கள் தேவன் சேயோன் திருவடி வாழ்க என்றான்.

( 1 விழிகள் - [பதினெட்டுக்] கண்கள்) - 49



50 - ஆண்டகை தொழுத பாணி அணிமுடிக் கொண்டிவ் வாற்றால்
ஈண்டுசீர்க் குமர வேளை ஏத்தலும் அன்பின் கண்ணீர்
வீண்டுதெண் கடலுள் ஏகி வௌ¢ளமிக் குவரை மாற்றப்
பூண்டகண் டிகையை மானத் தோன்றின பொடிப்பின் பொம்மல் - 50



51 - மீதுகொள் பொடிப்பு மூடி மெய்ப்புலன் சிந்தை யொன்ற
ஓதுவ தவற என்பும் உருகிய செருக நாட்டங்
கோதில்பே ரருளின் மூழ்கிக் குதூகலித் திடுத லோடு
மூதுல கனைத்தும் ஆவி முழுவதும் மகிழ்ந்த வன்றே. - 51



52 - அவ்வகை நிகழச் செவ்வேள் ஆரருள் அதனைப் பெற்று
மொய்வரை மீது நின்றோன் முழுதுல களந்து சேண்போம்
இவ்வுரு வோடு செல்லின் இறந்திடும் உலகம் ஈது
செவ்விதன் றென்னா வேண்டுந் திருவடி வமைந்தான் அன்றே. - 52



53 - கிரிமிசை நின்ற அண்ணல் கிளர்ந்துவான் எழுந்து சென்னிக்
குருமணி மகுடம் அண்ட கோளகை புடைப்ப வீரன்
உருகெழு சீற்றச் சிம்புள் உருவுகொண் டேகிற் றென்ன
வரைபுரை மாட வீர மகேந்திரம் முன்னிப் போந்தான். - 53

ஆகத் திருவிருத்தம் - 53

----

2. கடல்பாய் படலம் (54 - 72)





54 - அழுங்கிய கழற்கால் வீரன் அவ்வழி அவனிக் கீழ்போய்
விழுங்கிரி நிலைமை நோக்கி மீண்டுநீ எழுதி யென்னா
வழங்கினன் வழங்கும் எல்லை வல்லையிற் கிளர்ந்து தோன்றி
முழங்கிருங் கடலின் மாடே முந்துபோல் நின்ற தன்றே. - 1



55 - வீரனங் கெழலும் அன்னோன் விண்படர் விசைப்பின் காலால்
பாருறு வரைகள் யாவும் படர்ந்தன பாங்க ராகச்
சாரதத் தலைவர் ஏனைத் தம்பியர் இலக்கத் தெண்மர்
ஆருமங் கவன்தன் பாலாய் அணிந்துடன் சேற லென்ன. - 2



56 - விரைந்துவான் வழிக்கொள் வீரன் விசைத்தெழு காலின் அண்டந்
திரிந்தன உயிர்கள் முற்றுந் தெருமரல் உற்ற தெண்ணீர்
சுரந்திடு கொண்டல் யாவுஞ் சுழன்றன வடவை உண்ண
இருந்திடும் ஊழிக் காலும் ஆற்றலா திரியல் போன. - 3



57 - பெருமிடல் பூண்ட தோன்றல் பெயர்தலும் விசைப்பின் ஊதை
பரவின வெம்மை மாற்றிப் பரிதியைக் கனலைத் திங்கள்
வருணன தியற்கை யாக்கி வடவையின் முகத்துத் தோன்றித்
திரைகட லிருந்த ஊழித் தீயையும் அவித்துச் சென்ற. - 4



58 - விரைசெறி நீபத் தாரோன் விரைந்துசெல் விசைககால் தள்ளத்
திரைகடல் சுழித்துள் வாங்கித் திறன்மகேந் திரத்திற் சேறல்
அரசியல் புரிவெஞ் சூரன் அனிகங்கள் அவன்மேற் சென்று
பொருமுரண் இன்றித் தம்மூர் புகுவன இரிவ போலாம். - 5



59 - விடைத்தனி யாற்றல் சான்ற விடலைகால் வெற்பி னோடும்
படித்தலங் கீண்டு முன்னம் பாதலங் காட்டிற் றன்னான்
அடற்படு விசையின் காலும் அளியதோ வலிய தன்றோ
கடற்புவி கீண்டு நாகர் உலகினைக் காட்டிற் றன்றே. - 6



60 - பாசிழை அலங்கல் தோளான் படர்தலும் விசையின் காலைக்
காய்சின உயிர்ப்புச் செந்தீக் கலந்துடன் தழீஇக்கொண் டேகி
மாசுறு சூரன் வைகும் வளநகர் சுற்றி யன்னோன்
தூசிய தென்ன முன்னங் கொளுவிய தூமஞ் சூழ. - 7



61 - பூஞ்சிலம் பரற்றுந் தாளான் போதுமன் விரைவின் ஓதை
வேய்ஞ்சிலம் படுதோட் சூரன் வீரமா மகேந்திர ரத்தின்
நாஞ்சிலம் புரிசை பொன்செய் நளிர்வரை குளிர்பூங் கிள்ளை
தாஞ்சிலம் புற்ற சோலை அலைத்தன தரையில் தள்ளி. - 8



62 - உறைபுகு நெடிய வேலான் உயிர்ப்புறு கனன்முன் னோடிசி
செறுநனூர் கொளுவ அன்னான் சென்றிடு விரைவின் கால்போய்
எறிபுனற் கடலைத் தாக்க இடைந்துமற் றதுதான் ஏகி
முறைமுறை திரைக்கை நீட்டி மூண்டிடா தவித்துப் போமால். - 9



63 - அண்ணலங் காளை ஏக உயிர்த்தகால் அவன்செல் லோதை
கண்ணழல் துண்டம் ஓச்சுங் சுடுங்கனல் எதிரா தோடும்
உண்ணிறை புணா¤ யாவும் ஒன்னலன் பதிமேற் சென்று
விண்ணிலம் ஒழிந்த பூதம் அடுதலின் விளைத்த பூசல். - 10



64 - வௌ¢வரைக் குவவுத் திண்டோள் வெலற்கருந் திறலோன் எண்காற்
புள்விசை கொண்டு செல்லப் புறந்தரப் புணரி அங்கண்
உள்வளைந் துலாய சின்னை ஒண்சுறாப் பனைமீன் நூறை
தௌ¢விளித் திருக்கை தந்தி திமிங்கிலம் இரிந்து பாய்ந்த. - 11



65 - நாயகன் தூதன் ஏக நளிர்கடல் எதிர்ந்தி டாது
சாய்வது மீன முற்றுந் தரங்கவெண் கரங்கள் தாங்கித்
தீயசூர் மூதூர் உய்த்துச் சென்றது பொன்று வோர்க்கு
மேயின விச்சை யுண்டி மிகத்தமர் வழங்கு மாபோல். - 12



66 - காழ்தரு தடக்கை மொய்ம்பன் கடுமைசொல் செலவின் ஓதை
சூழ்தரு கின்ற காலைத் துண்ணெனத் துளங்கி விண்மீன்
வீழ்தர வேலை தன்னில் வேலையும் மறிந்து செல்ல
வாழ்திரை எறிமீன் முற்றும் அந்தரம் புகுவ மாறாய். - 13



67 - காமரு நயக்குங் காளை கதுமெனச் செல்லப் பாங்கில்
தூமலர்க் கரத்தி லிட்ட சுடர்மணிக் கடக வாள்போய்
நேமியங் குவடு சூழ்ந்து நிமிர்தரு திமிர மோட்டி
ஏமநல் லண்ட வில்லோ டெதிர்ந்து போய் இகல்செய் கின்ற. - 14



68 - விண்ணவர் யாருந் தேரும் படையுமாய் விரவ மேலோன்
நண்ணலர் புரமே லோச்சு நகையழல் போதல் ஒத்தான்
கண்ணழற் செலவும் போன்றான் கார்முகம் பூட்டி உய்த்த
மண்ணுல கிடந்த கூர்வாய் வாளியும் என்னச் சென்றான். - 15



69 - தரைதனை அலைத்து நோற்குந் தாபதர்க் கலக்கண் செய்து
சுரர்திருக் கவர்ந்து வாட்டுஞ் சூரனை கிளையி னோடும்
விரைவுடன் முடிப்பான் முன்னி வெகுண்டுசெவ் வேளங் குய்த்த
ஒருதனிச் சுடர்வேல் போன்றும் போயினன் உயர்திண் டோளான். - 16



70 - இமிழ்தரு தரங்கப் பாலின் எறிகடன் மதித்து வானோர்க்
கமிர்தினை அளிப்பான் வேண்டி அகிலமும் உண்டு தொன்னாள்
உமிழ்தரு திருமா லுன்ன உணர்ந்துமந் தரமாம் ஓங்கல்
நிமிர்தரு புணா¤ செல்லும் நிலைமைபோல் வீரன் போந்தான். - 17



71 - சேண்டொடர் உலகும் பாருந் தெருமர அனலம் வீசிக்
காண்டகு விடத்தை ஈசன் களத்திடை அடக்கி வைப்ப
ஈண்டெமை விடுத்தி யென்னா ஏத்தலும் அவனங் குய்ப்ப
மீண்டது கடல்போந் தென்ன வீரருள் வீரன் சென்றான். - 18



72 - பொலங்கழல் வீர வாகு புணரிமேல் இவ்வா றேகி
அலங்கலந் திண்டோள் வெஞ்சூர் அணிநகர் வடாது பாலின்
விலங்கலில் வீரன் யாளி வியன்முகத் தவுணன் போற்றும்
இலங்கையந் தொல்லை மூதூர் அணித்தெனும் எல்லை சென்றான். - 19

ஆகத் திருவிருத்தம் - 72
- - -

3. வீரசிங்கன் வதைப் படலம் (73 - 89)




73 - அன்னதோர் வேலை முன்னம் அகன்றலை யாளிப் பேரோன்
துன்னுபல் லனிகத் தோடுஞ் சூரனைக் காண்பான் ஏக
மன்னதி வீரன் என்னும் மதலையா யிரமாம் வௌ¢ளந்
தன்னொடும் இலங்கை வைகித் தணப்பறப் போற்றி யுற்றான். - 1



74 - ஆனதோர் மிக்க வீரத் தாண்டகை அவுணர் போற்ற
மாநகர்க் கோயில் நண்ண வடதிசை வாயில் தன்னில்
மேனிமிர் அவுணர் தானை வௌ¢ளமைஞ் ?றொ டென்னான்
சேனையந் தலைவன் வீர சிங்கனாந் திறலோன் உற்றான். - 2



75 - உற்றதோர் வீர சிங்கன் ஒண்சிறைச் சிம்பு ளேபோல்
வெற்றியந் திண்டோள் ஏந்தல் விரைந்துசென் றிடலுங்காணூஉச்
சற்றுநங் காவல் எண்ணான் தமியன்வந் திடுவான் போலும்
மற்றிவன் யாரை என்னாச் சீறினன் வடவை யேபோல். - 3



76 - உண்குவன் இவன்றன் ஆவி ஒல்லையென் றுன்னிக் காலும்
எண்கிளர் மனமும் பின்னர் எய்துமா றெழுந்து நேர்போய்
விண்கிளர் செலவிற் றானை வௌ¢ளமைஞ் ?றுஞ் சுற்ற
மண்கிளர் கடல்போல் வீர வாகுவின் முன்னஞ் சென்றான். - 4



77 - சென்றிடு வீர சிங்கன் திறல்கெழு புயனைப் பாரா
இன்றள வெமது காப்புள் ஏகினர் இல்லை யார்நீ
ஒன்றொரு தமியன் போந்தாய் உயிர்க்குநண் பில்லாய் நின்னைக்
கொன்றிடு முன்நீ வந்த செயல்முறை கூறு கென்றான். - 5



78 - பொன்னியல் திண்டோள் வீரன் புகலுவான் இலங்கை வாவி
மன்னியல் சூரன் வைகும் மகேந்திரஞ் சென்று மீள்வான்
உன்னினன் போந்தன் ஈதென் உறுசெயல் வலியை யென்னின்
இன்னினி வேண்டிற் றொன்றை இயற்றுதி காண்ப னென்றான். - 6



79 - திறன்மிகு சிங்கன் அன்னோன் செப்பிய மொழியைக் கேளா
இறையுநம் மவுண ராணை எண்ணலன் வலியன் போலும்
அறிகுதும் மீண்டு சேறல் அழகிதன் றென்னா உன்னிக்
குறுகிய படைஞர் தம்மை இவனுயிர் கோடி ரென்றான். - 7



80 - என்றலும் அரிய தொன்றை எயினா¢கள் வேட்டைக் கானில்
சென்றனர் திரண்டு சுற்றிச் செருவினை இழைப்ப தேபோல்
பொன்றிகழ் விசய வாகுப் புங்கவன் றன்னைச் சீற்றம்
வன்றிறல் அவுணர் யாரும் வளைந்தமர் புரிய லுற்றார். - 8



81 - வேலினை விடுப்பர் தண்டம் வீசுவர் முசலந் தூர்ப்பர்
சாலம தெறிவர் ஆலந் தன்னைஓச் சிடுவர் வார்விற்
கோல்வகை தொடுப்பர் நாஞ்சிற் கொடும்படை துரப்பர் வெய்ய
சூலம துய்ப்பர் கொண்ட தோமரஞ் சொரிவா¢ அம்மா. - 9



82 - கிளர்ந்தெழு பரிதி தன்னைக் கேழ்கிளர் உருமுக் கொண்மூ
வளைந்தென அவுணர் வீரன் மருங்குசூழ்ந் தாடல் செய்யத்
தளர்ந்திலன் எதிர்ந்து தன்கைத் தாரைவாள் உறையின் நீக்கி
உளந்தனின் முனிந்தன் னோரை ஒல்லைசூழ்ந் தடுத லுற்றான். - 10



83 - அரக்குருக் கொண்ட வெற்பின் அடுகனற் கடவு ளெய்தி
உருக்கியே யதனை எல்லாம் ஒல்லையின் உடைக்கு மாபோல்
நெருக்கிய அவுணர் தானை நீத்தம துடைய வீரன்
திருக்கிளர் வாளன் றேந்திச் சென்றுசென் றடுதல் செய்தான். - 11



84 - பனிபடர் குழுமல் தன்னைப் பாயிருட் செறிவை அங்கிக்
கனிபடர் பொற்பில் தோன்றுங் காய்கதிர் முடிக்கு மாபோல்
நனிபடர் அவுணர் தானை நைந்திடச் சுடர்வாள் ஒன்றால்
தனிபடர் வீர வாகு தந்தனன் திரித லுற்றான். - 12



85 - உறைந்தன குருதி வாரி ஒல்லையில் உவரித் தெண்ணீர்
மறைந்தன அவுணர் தானை மால்கரி பரிதேர் முற்றுங்
குறைந்தன கரந்தாள் மொய்ம்பு கொடுமுடி துணிந்து வீழந்த
நிறைந்தன அலகை ஈட்டம் நிரந்தன பரந்த பூதம். - 13



86 - வௌ¢ளநூ றவுணர் தானை விளிந்திட இனைய பாலால்
வள்ளல்சென் றடுதல் செய்ய மற்றுள அவுணர் யாரும்
உள்ளநொந் திரங்கித் தத்தம் உயிரினை ஓம்பல் செய்து
பொள்ளென நிலனும் வானும் புலந்தொறும் இரியல் போனார். - 14



87 - போதலும் வீர சிங்கன் பொள்ளெனச் சினமேற் கொண்டு
மாதிரங் கடந்து மேல்போய் வளர்தரும் வாகை மொய்ம்பன்
மீதொரு சூலந் தன்னை விட்டனன் விட்ட காலை
ஏதியங் கதனால் அன்ன திருதுணி படுத்தி ஆர்த்தான். - 15



88 - ஆர்த்தலும் மடங்கற் பேரோன் ஆண்டகை வீரன் மேன்மை
பார்த்தனன் தனது பாணி பற்றிய படைகள் தம்மில்
கூர்த்ததோர் குலிசம் வீசக் குறுகிவாள் அதனான் மாற்றிப்
பேர்த்தொரு படையெ டாமுன்பெயர்ந்தவன் முன்னஞ் சென்றான். - 16



89 - சென்றுதன் மணிவாள் ஓச்சிச் செங்கைகள் துமித்துத் தீயோன்
ஒன்றொரு முடியுங் கொய்தே உவர்க்கட லிடையே வீட்டி
நன்றுதன் னுறையுட் செல்ல நாந்தகஞ் செறித்து முன்னோர்
வென்றிகொண் டகன்றான் என்ப வேலவன் விடுத்த தூதன். - 17

ஆகத் திருவிருத்தம் - 89
- - -

4. இலங்கை வீழ் படலம் ( 90 - 117)




90 - மலங்கொடு சுறவு தூங்கும் மறிகடல் மீது மேரு
விலங்கல்சென் றிட்ட தென்ன விண்ணிடந் தன்னின் நீங்கி
அலங்கலந் திண்டோள் வள்ளல் அவுணர்தம் மிருக்கை யாகும்
இலங்கையங் குவடு மூன்றில் இடைப்படு சிகரம் பாய்ந்தான். - 1



91 - நெடுவரை தன்னை வேலான் ஈறுசெய் திட்ட அண்ணல்
விடவரு தமியோன் தொல்லை இலங்கையின் மீது பாய
அடலதி வீரன் ஏனை அவுணர்கள் கலங்கி யேங்கி
இடியுறு புயங்க மென்ன யாருமெய் பனித்து வீழ்ந்தார். - 2



92 - வேறு
வைப்புறு மகேந்திர வடாது புலமாகி
இப்புறம் இருந்திடும் இலங்கைதனில் ஏந்தல்
குப்புறுத லுங்குலை குலைந்தவுண ரோடும்
உப்புறு கடற்படிதல் கண்டுவகை யுற்றான். - 3



93 - தந்திமுக மாமதலை தன்னடி வணங்கா
தந்தவிண் ணோர்கடல் அலைத்திடலும் அன்னோன்
சிந்தைமுனி வெய்தவிடை சேர்த்தகயி றோடு
மந்தர நெடுங்கிரி மறிந்தபடி மானும். - 4



94 - ஆடல்கெழு மொய்ம்பினன் அடித்தலம் தூன்ற
மூடுதிரை வேலையிடை மூழ்கிய இலங்கை
கூடுமக வண்ணல்குலி சந்தொடர நேமி
ஊடுபுக லுற்றிடுமை நாகவரை யொக்கும். - 5



95 - மாமறைகள் தம்மைமுனம் வஞ்சனை புரிந்தே
சோமுகன் மறைந்ததிரை தூங்குகட லூடே
ஏமமுறு பேருரு எடுத்ததொரு மாண்சேல்
போமதென வாழ்ந்தது பொலங்கெழும் இலங்கை. - 6



96 - தொல்லைதனில் ஓர்விதி துயின்றகடை நாளின்
எல்லைய திகந்துகடல் ஏழுமெழ அங்கண்
ஒல்லைபில முற்றபுவி உய்ப்பவொரு கேழல்
செல்லுவதின் ஆழ்ந்தது திரைக்கடல் இலங்கை. - 7



97 - சிந்துவின் அகன்கரையொர் திண்கிரி யழுந்த
அந்தமி லிலங்கையும் அழுந்தியிடு தன்மை
முந்தொரு மடக்கொடி விருப்பின்முனி மூழ்க
இந்திரனும் நேமியி னிடைப்புகுதல் போலும். - 8



98 - உலங்கொள்பு வீரனடி ஊன்றுதலும் முன்னோர்
விலங்கல்பணி தன்னுலக மேவியது கேளா
அலங்கல்பெறு வாகையவன் ஆற்றலது தாங்கி
இலங்கையது காண்பலென ஏகியது போலும். - 9



99 - இலங்கையிது பானமையின் இருங்கடலுள் மூழ்கக்
குலங்களடு வைகிய கொடுந்தகுவர் யாருங்
கலங்கினர் அழுங்கினர் கவன்றனர் துவன்றி
மலங்கினர் புலம்பினர் மருண்டனர் வெருண்டார். - 10



100 - அற்றமுறு தானவர்கள் ஆழஅனை யோரைச்
சுற்றிய அளப்பில சுறாவுழுவை மீனம்
பற்றிய வளைந்தன பலப்பல திரண்டே
செற்றிய திமிங்கில திமிங்கில கிலங்கள். - 11



101 - கையதனை ஈர்ப்பசில கால்கள்சில ஈர்ப்ப
வெய்யதலை ஈர்ப்பசில மிக்கவுயர் தோள்கள்
மொய்யுடைய மார்பதனை ஈர்ப்பசில மொய்த்தே
சையமுறழ் யாக்கையுள தானவரை மீனம். - 12



102 - அத்தனொடி யாயையனை அன்பின்முதிர் சேயைக்
கொத்தினொடு கொண்டுசிலர் கூவியெழு கின்றார்
எய்த்தனர்கள் செய்வதென் இரும்படையும் விட்டுத்
தத்தமுயிர் கொண்டுசிலர் தாமும்எழ லுற்றார். - 13



103 - உற்றசில தானவரை ஒய்யென அளாவித்
திற்றிவிழை வான்நனி திரண்டனர்க் ளெல்லாம்
பற்றுழி தனித்தனி பறித்தது பொருட்டாற்
பொற்றைபுரை மீன்கள்பெரும் போர்வினை புரிந்த. - 14



104 - தானவர்க ளோ£¢சிலவர் தம்முணல் குறித்தே
வானிமிரு மோதையென வந்துதமை எற்றப்
பூநுனைய வாள்சுரிகை போரயில்கள் கொண்டே
மீனமொடு வெஞ்சினம் விளைத்தமர் புரிந்தார். - 15



105 - சீர்த்திகொள் இலங்கைகடல் சென்றிடலும் அங்கண்
ஆர்த்திபெறு மங்கையர்கள் அங்கையவை பற்றி
ஈர்த்தபிறர் இல்லுற இசைந்துகரம் பற்றுந்
தூர்த்தரை நிகர்த்தன சுறாமகர மீனம். - 16



106 - மீனொருகை பற்றியிட வேறொரு கரத்தைத்
தானவர் வலித்தொரு தடக்கைகொ டிசிப்ப
மானனைய கண்ணியர் வருந்திடுதல் ஓர்ஐந்
தானபுலன் ஈர்ப்பவுள் அழுங்குவது போலும். - 17



107 - திண்டிறல் வலம்படு திருக்கைசுற மீனம்
மண்டிய திமிங்கிலம் வருந்தகுவர் சூழல்
கண்டுமிசை யெற்றிடுத லுங்கடிது வாளால்
துண்டமுற வேயவை துணித்தெழுநர் சில்லோர். - 18



108 - கட்டழல் விழிச்சுறவு காரவுணர் தம்மை
அட்டுணல் குறித்துவர அன்னவர்கள் நீவித்
தொட்டனர் பிடித்தகடு தூரும்வகை பேழ்வாய்
இட்டனர் மிசைந்தனர் எழுந்தனர்கள் சில்லோர். - 19



109 - ஏற்றபுனல் ஊடுதெரி வின்றியெம ரென்றே
வேற்றொரு மடந்தையர் வியன்கையது பற்றிப்
போற்றியெழ அங்கவர் புறத்தவர்க ளாக
மாற்றினர் இசைந்துசிலர் வாழ்க்கைமனம் வைத்தார். - 20



110 - இல்லிவ ரெனப்பிறரை ஏந்தியெழ அன்னோர்
புல்லுதனி அன்பர்புடை போகவொரு சில்லோர்
அல்லலுறு வார்தமை யடைந்ததொரு கன்னி
மெல்லவயல் போந்துழி மெலிந்துழலு வார்போல். - 21



111 - தீமைபுரி மால்களிறு திண்புரவி யாவும்
ஏமரு சுறாத்தொகுதி ஈர்த்துவிரைந் தேகித்
தோமறு பிணாமகரந் துய்ப்பவுத வுற்ற
காமர்கெழு பெண்மயல் கடக்கவௌ¤ தன்றே. - 22



112 - மாற்றறு சுறாச்சில மடப்பிடிகை பற்றி
ஏற்றபெண் வழிச்செல எதிர்ந்ததனை நோக்கி
வேற்றொர்பெடை ஆயதென வேர்வுறுகை கையர்க்
காற்றுமுப காரவியல் பாகியதை யன்றே. - 23



113 - சிந்துவதன் மீதிலெழு சில்லவுண ராயோர்
கன்தன்முரு கேசன்விடு காளைசெயல் காணா
நந்தமையும் நின்றிடின் நலிந்திடுவன் யாங்கள்
உய்ந்திடுதும் என்றுகடி தோடியயல் போனார். - 24



114 - பீடுசெறி தங்கணவ ரைப்பிரிகி லாமே
கூடும்வழி ஆழ்ந்தசில கோற்றொடிமின் னார்கள்
ஆடைபுன லூடுபுக அல்குல்தம கையால்
மூடியெழு வார்முலை முகத்தின்முகம் வைத்தே. - 25



115 - சேண்டொடர் இலங்கைகடல் சென்றுழிய தன்பால்
ஆண்டசில மாதர்கள் அரத்தவுடை கொண்டார்
மீண்டெழலும் நீர்பட வௌ¤ப்படுவ தல்குல்
காண்டகைய செம்மதி களங்கமடைந் தென்ன. - 26



116 - காரவுணர் மாதர்சிலர் காமர்கடல் வீழவார்
நீரமெழ வேயுடை நெகிழ்ந்தொருவி யேக
மூரல்முக மல்லுருவு முற்றுறம றைத்தே
தேரையென ஒண்புனல் செறிந்துதிரி வுற்றார். - 27



117 - ஆசுறு மரைத்துகில் அகன்றிட எழுந்தே
தேசுறு மடந்தைய ரில்ஓர்சிலவர் சேண்போய்
மாசுறு புயற்குழுவை வலலைகரம் பற்றித்
தூசினியல் பானடுவு சுற்றியுல வுற்றா£¢. - 28

ஆகத் திருவிருத்தம் - 117
- - -

5. அதிவீரன் வதைப் படலம் (118 - 154)





118 - அன்னதொர் பான்மைக ளாக இலங்கை
முன்னுறு வார்கடல் ஆழ்ந்தது மூழ்க
இந்நகர் போற்றி இருந்திடு கின்ற
மின்னுனை வேல்அதி வீரன் உணர்ந்தான். - 1



119 - தனது புரங்கடல் காருதல் காணா
நனிதுயர் எய்தினன் நாணும் அடைந்தான்
சினவி யுயிர்த்தழல் சிந்த நகைத்தான்
அனையவன் இன்னத கத்திடை கொண்டான். - 2



120 - சுந்தர மேவரு சூரபன் மாவோ
அந்தமில் தம்பிய ரோவனை யார்தம்
மைந்தர்க ளோமதி யேன்அவ ரல்லால்
இந்த வியற்கையை யார்புரி கிற்பார். - 3



121 - ஆயவா¢ என்னினும் ஆங்கது செய்தற்
கேயதொ ரேதுவும் இன்றுதம் மூர்க்குத்
தீயது செய்கலர் சிந்தைய தன்றால்
மாயையும் ஈது மதிக்கிலள் போலும். - 4



122 - மூவரும் இச்செயல் முன்னலர் பின்னர்த்
தேவர்கள் யாரிது செய்திட வல்லார்
ஏவரும் நஞ்சிறை எய்தினர் வேள்விக்
காவலன் ஆருயிர் காத்து மறைந்தான். - 5



123 - மாதிர மேலவர் வானிடை வைப்பின்
மேதகும் விண்ணவர் விஞ்சையர் சித்தர்
ஆதியர் நம்மிறை ஆணையின் நீங்கார்
ஈது புரிந்திட எண்ணுவர் கொல்லோ. - 6



124 - தவ்வற ஈண்டமர் தானவர் ஆற்ற
மெய்வலி மாயைகள் மேவின ரேனுந்
தெவ்வடு சூர்முதல் தின்படை யஞ்சி
இவ்வியல் தன்னை இழைக்கலர் போலும். - 7



125 - ஆதலின் அன்னவர் ஆற்றலர் என்னின்
ஈதொரு செய்கை இழைத்தவர் யாரோ
தாதை அகன்றுவழி தானவ ரோடுங்
காதலின் இந்நகர் காத்தது நன்றால். - 8



126 - காய மொடுங்கு கனற்சிர மூடு
போயது வல்லை புறஞ்செல நோற்று
மாயை பெரும்படை வன்மைகள் வேதன்
ஈயமுன் வாங்கிய என்செயல் நன்றால். - 9



127 - தந்தை யுறாது தணந்துழி ஆங்கோர்
மைந்தன் இருந்துதன் மாநக ரோடும்
அந்தி லகன்கடல் ஆழ்ந்தனன் என்றால்
நந்தமர் என்னை நகைப்பா¢கள் அன்றே. - 10



128 - மன்னவன் ஈது மதித்திடின் மற்றென்
றன்னை அடும்பெறு தாதையும் அற்றே
பின்னுளர் எள்ளுவர் பெற்றியி தாமேல்
என்னியல் நன்றென எண்ணி இனைந்தான். - 11



129 - இனைந்ததி வீர னெனுந்திறல் மைந்தன்
கனைந்திடு கின்ற கடற்கிடை யாழ்வோன்
அனந்தர மூழ்வினை ஆற்றலின் அன்னான்
மனந்தனில் ஈதொரு தன்மை மதித்தான். - 12



130 - ஒல்லொலி சேரு வரிக்கடல் மீதாய்ச்
செல்லுவன் யாரிது செய்தனர் என்றே
வல்லையில் ஓர்குவன் மற்றவர் தம்மைக்
கொல்லுவன் மெய்ப்படு சோரி குடிப்பன். - 13



131 - என்றதி வீரன் இரும்படை யாவும்
ஒன்றற வாரி உருத்த னிகத்துள்
நின்றுளர் தங்களை நேடுபு கொண்டே
வன்றிரை வேலையின் மீமிசை வந்தான். - 14



132 - வேறு

விடலைதிரு முன்னமதி வீரன்அனி கங்கள்
புடையில்வர நீரின்மிசை பொள்ளென எழுந்தான்
அடுதொழில் இயற்றியிடும் ஆதிதனை யெய்தக்
கொடியவிடம் வார்கடல் குலாய்நிமிர்வ தேபோல். - 15



133 - விழுந்திடும் இலங்கைதனில் மேவும் அதிவீரன்
எழுந்துதன தானையொ டிருங்கட லுளங்கிக்
கொழுந்துமிசை சென்றனைய கோலமொடு நின்ற
செழுந்திறல்கொள் மொய்ம்புடைய செம்மல்நிலை கண்டான். - 16



134 - கண்டனன் வெகுண்டிதழ் கறித்துநகை செய்யா
அண்டர்குழு வானிவனொர் ஆண்டகைநம் மூதூர்
தெண்டிரையில் ஆழும்வகை செய்தும்இவண் நின்றான்
எண்டிசை தொழுந்தகுவர் ஆணையினி தென்றான். - 17



135 - என்றுமொழி யாவிரைவில் யாளிமுகன் மைந்தன்
கொன்றிவன தாருயிர் குடிப்பனென உன்னிச்
சென்றிடலும் ஆழ்ந்தவர் செயற்கையது காண்பான்
நின்றதொரு பேரறிஞன் நீர்மையது கண்டான். - 18



136 - ஆனபொழு தத்தினில் அவன்புடையில் வந்த
தானவர்கள் சூழ்ந்தனர் சமர்த்தொழி லியற்ற
மானவிற லோன்றனது வாளுறை கழித்தே
ஊனொடுயிர் சிந்தியிட ஒல்லையடல் செய்தான். - 19



137 - அற்றன சிரத்தொகுதி அற்றன கரங்கள்
அற்றன புயத்தொகுதி அற்றன பதங்கள்
அற்றன பெரும்புறமும் அற்றவுடன் முற்றும்
அற்றனர்கள் யாருமுயிர் அற்றதவர் பூசல். - 20



138 - பங்கிசெறி செந்தலைகள் பாய்குருதி நீர்மேல்
எங்கணும் மிதப்பன இருங்கடலி னூடே
செங்கொடி படர்ந்திடு செழும்பவள வைப்பில்
அங்கமல மானவை அலர்திடுதல் போலும். - 21



139 - அற்றமகல் வீரன்அவு ணப்படை துணிப்பச்
செற்றிய பிணத்தொகை திரைப்புணரி தூர்த்த
மற்றுமிசை போந்துமணி யாலுமொ£¤ லங்கைப்
பொற்றைய தியற்றியது போன்றுளது மாதோ. - 22



140 - தன்படை விளிந்துசல திக்கடலுள் வீழ
முன்பன்அதி வீரன்முனி யாவதனை நோக்கி
என்புடையி னோரையெறிந் தாய்கடிதின் நின்னைத்
தின்பனது காண்டியென வேசெருமு யன்றான். - 23



141 - சொல்லும்அதி வீரன்வரு தோற்றமது காணா
வல்லைவரு கென்றுதிறல் வள்ளலும் அழைப்ப
எல்லையத னிற்செருவின் ஏற்றிவனை இன்னே
கொல்லுகென அங்கணொரு குந்தம தெறிந்தான். - 24



142 - உய்த்ததொரு கூரயிலு ரத்திலுறு முன்னர்
மத்தகய நேர்விடலை மற்றது தெரிந்தே
கைத்தல மிருந்திடு கனற்புரையும் வாளால்
அத்துணை இரண்டுதுணி யாய்விழ எறிந்தான். - 25



143 - கண்டமுற ஞாங்கரது கண்டுதிறன் மைந்தன்
தண்டம்விரைந் தொன்றொரு தடக்கைகொ டெடுத்தே
மண்டமர்செ யுன்னுயிரை வாங்குமி• தென்னா
அண்டர்புகழ் காளைதன தாகமுற விட்டான். - 26



144 - வேறு

விட்ட காலையத் தண்டினை வெலற்கருந் திறலோன்
அட்டி டான்தனி வாளினால் ஏற்றனன் அகலம்
பட்டு மற்றது நுண்டுக ளாகஅப் பதகன
மட்டி லாததோர் விம்மிதம் எய்தினன் மறுகி. - 27



145 - வேறொர் முத்தலைப் படையது கொண்டதி வீரன்
மாறி லாவிறல் மொய்ம்பினன் தன்மணி மார்பின்
ஊறு செய்திறம் ஓச்சலுங் கண்டுநம் முரவோன்
சீறி யாங்கது பற்றினன் செங்கையால் இறுத்தான். - 28



146 - இறுத்த காலையில் இலங்கையில் யாளிமா முகன்சேன்
செறுத்து மற்றிவன் தனைஅடல் அரிதெனச் சிந்தை
குறித்து மற்றொரு நாந்தகம் ஏந்தினன் குறுகி
வெறித்த கொண்டலுட் கொட்புறு மின்னென விதிர்த்தான். - 29



147 - கறங்கி னிற்பெரு வட்டணை புரிந்துதன் கரமேல்
நிறங்கொள் வாளினை இடம்வலந் திரிததனன் நெறியே
பிறங்கும் ஆர்கலித் தெண்டிரை அலைதரப் பெரிது
மறங்கொள் நாந்தக மீனுகண் டலமரும் வகைபோல். - 30



148 - ஏதி யிங்கிது நான்முகன் தந்துள தெவர்க்கும்
பேத கஞ்செயல் அரியதால் அன்னது பிடித்தேன்
சாதி திண்ணநீ வருகென மிகைமொழ சாற்றிக்
கோதில் வீரன்முன் அணுகலும் அனையவன் கூறும். - 31



149 - நன்று நன்றுநின் னாற்றலும் ஆண்மையும் நம்மை
வென்றி யேயெனின் யாவரும் மேலுனை வியப்பார்
நின்று நீசில மொழிவதென் கடிது நேருதியால்
வென்றி வீரருந் தமைப்புகழ் கிற்பரோ வென்றான். - 32



150 - என்ன ஒன்னலன கிடைத்தனன் வீரனும் எதிர்ந்தான்
அன்ன பான்மையர் வாளம ராடினர் அகல்வான்
மின்னு மாமுகில் தோன்றியே எதிரெதிர் விரிந்து
பின்ன ருள்புகுந் துடனுடன் செறிந்தபெற் றிமைபோல். - 33



1501 - சென்னி நாடுவர் களத்தினை நாடுவர் செவிதாள்
கன்ன நாடுவர் புயங்களை நாடுவர் கரங்கள்
உன்னி நாடுவர் உரத்தினை நாடுவர் உகளப்
பொன்னின் வார்கழல் நாடுவர் வாளமர் பிரிவார். - 34



152 - இணங்கு நீரவர் இருவரும் இனையன உறுப்பில்
அணங்கு செய்திடும் மரபினா லாயிடை உய்ப்பார்
நுணங்கு விஞ்சையின் வன்மையான் நொய்தின்மாற் றிடுவார்
மணங்கொள் செந்நிற வாள்கொடே வட்டணை வருவார். - 35



153 - போத மின்னதில் எம்பிரான் தூதுவன் பொருவான்
ஏதி கொண்டுளான் தன்னையான் வலிந்திடல் இயல்போ
ஆத லாலிவன் படைமுறை வெல்வதே அறனென்
றோதி சேருளங் கொண்டனன் இடைதெரிந் துற்றான். - 36



154 - இடை புகுந்ததி வீரன தடிகளோ ரிரண்டும்
முடியும் ஆகமுந் தோள்களும் ஆங்கொரு முறையே
சுடர்பி றங்கிய வாளினால் ஆண்டகை துணித்துக்
கடிது வீட்டினன் நடுவன்வந் தவனுயிர் கவர்ந்தான். - 37

ஆகத் திருவிருத்தம் - 154
--------

6. மகேந்திரஞ் செல் படலம் ( 155 -182)




155 - வீர வாகுநின் றவ்வதி வீரனை வீட்டித்
தாரை வாளுறை செலுத்தியே வெஞ்சமர் தணித்து
நேரில் வீரமா மகேந்திரம் போவது நினைந்தே
ஏரு லாவரும் இலங்கையின் எல்லைநீத் தெழுந்தான். - 1



156 - எழுந்து வான்வழிச் சேறலும் ஆர்கலி யிடையே
விழுந்து கீழுறும் இலங்கைமண் டெழுந்தது விரைவிற்
கழிந்த தொல்பர நீங்கிய காலையிற் கடலூ
டழுந்து கின்றபொன் தோணிமீச் சென்றிடு மதுபோல். - 2



157 - வார்த்த யங்கிய கழலவன் வான்வழிக் கொளலும்
ஈர்த்த தெண்கடல் நீத்தமேல் எழுதரும் இலங்கை
சீர்த்த நான்முன் உறங்குழிச் சிந்துவூ டழுந்திப்
பேர்த்து ஞாலம்விட் டெழுதரு மேருவிற் பிறழும். - 3



158 - எள்ளு நீரரைப் பற்பகல் ஆற்றலின் இலங்கை
கொள்ளை வெம்பவம் மாசிருள் அடைந்தது குறைதீர்
வள்ளல் தாள்பட நீத்தது பவந்துகள் மாற்றத்
தௌ¢ளு நீர்க்கடல் படிந்தெழுந் தாலெனத் திகழும். - 4



159 - கந்த ரந்தவழ் தெண்புனற் கருங்கடல் நடுவட்
சுந்த ரஞ்செறி பொன்சுடர் இலங்கைதோன் றியது
முந்து காலையில் எம்பிரான் அருள்வழி முராரி
உந்தி நின்றெழு பிரமன்மூ தண்டமொத் துளதால். - 5



160 - இன்ன தாகிய இலங்கைமா புரத்தைநீத் தெழுந்து
பின்னு மாயிரம் யோசனை வானிடைப் பெயர்ந்து
பொன்னு லாவுறு வாகையம் புயத்தவன் புலவோர்
ஒன்ன லானுறை மகேந்திர வரைப்பின்முன் னுற்றான். - 6



161 - நெற்றி நாட்டத்து நந்திதன் கணத்தவன் நேமிப்
பொற்றை யாமெனச் சூழ்ந்துயர் மகேந்திரப் புரிசைச்
சுற்று ஞாயிலும் வாயில்க டொறுந்தொறும் தோன்றுங்
கற்றை மாமணிச் சிகரியும் நுனித்துமுன் கண்டான். - 7



162 - சேர லாரமர் மகேந்திர நகர்வட திசையில்
வாரி வாய்தனுட் கோபுரத் தெற்றியின் மாடே
கோர னேயதி கோரனே எனப்படுங் கொடிய
வீரர் தானையோ டிருந்தனர் காவல்கொள் வினையால். - 8



163 - கரிக ளாயிரம் வௌ¢ளமே தேருமக் கணிதம்
பரிக ளாங்கதற் கிருதொகை யத்தொகை பதாதி
உரிய வப்பெருந் தானையம் பெருங்கடல் உலவா
விரவி மேவர இருந்தனர் காத்திடும் வீரர். - 9



164 - பகுதி கொண்டிடு தானையஞ் சூழலாம் பரவைத்
தொகுதி கண்டனன் விம்மிதங் கொண்டனன் துன்னார்
மிகுதி கொண்டுறை காவலுங் கண்டனன் வியனூர்
புகுதி கொண்டிடும் உணர்வினான் இனையன புகல்வான். - 10



165 - ஈண்டு செல்லினித் தானைசூழ்ந் தமர்செயும் யானும்
மூண்டு நேரினும் முடிப்பவோர் பகலெலா முடியும்
மாண்ட தென்னினும் உலவுமோ மாநக ரிடத்து
மீண்டும் வந்திடுங் கரிபரி பதாதிதேர் வௌ¢ளம். - 11



166 - வந்த வந்ததோர் தானவப் படையொடே மலைவுற்
றெந்தை கந்தவேள் அருளினால் யானொரு வேனுஞ்
சிந்தி நிற்பனேல் இந்நகர்த் தானைகள் சிதைய
அந்த மில்பகல் சென்றிடும் அளியரோ அவுணர். - 12



167 - எல்லை யில்பகல் செல்லினுஞ் செல்லுக இனைய
மல்லன் மாநகர் அவுணர்மாப் பெருங்கடல் வறப்ப
ஒல்லு நீர்மையால் யான்அடல் செய்வனேல் உருத்துத்
தொல்லை மைந்தரைத் துணைவரை உய்க்குவன் சூரன். - 13



168 - உய்த்த மைந்தர்கள் சூழ்ச்சியின் துணைவர்கள் ஒழிந்தோர்
அத்தி றத்துளோர் யாரையும் வெலற்கரி தயில்வேற்
கைத்த லத்தவன் வலிகொடே பற்பகல் காறும்
இத்த லைச்சமர் ஆற்றியே முடிக்குவன் எனினும். - 14



169 - ஏவ ரும்வெலற் கா¤யசூர் பின்னர்வந் தெதிர்க்கும்
ஓவில் வெஞ்சமர் பற்பகல் ஆற்றியான் உறினும்
வீவ தில்லையால் அங்கவன் மேலைநாள் தவத்தால்
தேவ தேவன்முன் அருளிய வரங்களின் சீரால். - 15



170 - அன்ன வன்றனை மாலயன் றனக்கும்வெல் லரிதால்
இன்னு மாங்கவன் ஆணைக்கும் வெருவியே இருந்தார்
பின்னை யாரவன் தன்னைவென் றிடுவர்கள் பெருநாள்
துன்னி யான்சமர் ஆற்றினுந் தொலைகிலன் சிறிதும். - 16



171 - தொலைந்து போகிலன் சூரமர் இயற்றிடில் துன்னிக்
கலந்த யான்விறல் இன்றிமீண் டேகுதல் கடனோ
மலைந்து நிற்கவே வேண்டுமா லாயினும் வறிது
மலைந்த லைப்படுஞ் சுரர்சிறை அகன்றிட வற்றோ. - 17



172 - மற்றிந் நீர்மையிற் பற்பக லவனொடு மலைந்து
வெற்றி கொண்டிலன் இன்னுமென் றமரினை வீட்டி
ஒற்றின் நீர்மையை உணர்த்துதல் ஒல்லுமோ உலவா
தெற்றை வைகலும் அமர்செய வேண்டுமால் எனக்கே. - 18



173 - போத நாயகன் பரம்பொருள் நாயகன் பொருவில்
வேத நாயகன் சிவனருள் நாயகன் விண்ணோர்க்
காதி நாயகன் அறுமுக நாயகன் அமலச்
சோதி நாயகன் அன்றியார் சூரனைத் தொலைப்பார். - 19



174 - இம்பர் சூரொடு பொருதுநின் றிடுவனே என்னின்
நம்பி ரான்அறு மாமுகன் பின்னரே நண்ணி
வெம்பு சூரனை வேலனால் தடிந்துவெஞ் சிறையில்
உம்பர் யாரையும் மீட்டிட வேண்டுமேல் ஒருநாள். - 20



175 - ஆத லால்அம ராற்றுதல் முறையதோ அ•தான்
றீது நம்பெரு மான்றன தருளுமன் றினைய
தூதர் செய்கட னாங்கொலோ அமர்பெறாத் தொடர்பாற்
போத லேகடன் என்றனன் பொருவில்சீர் அறிஞன். - 21



176 - வேறு
இப்பால் வாய்தலின் எல்லை நீங்கிய
துப்பார் தானைகள் துற்று நின்றவால்
அப்பால் எய்தரி தாம ருங்குபோய்
வைப்பார் கீழ்த்திசை வாயில் நண்ணுவேண். - 22



177 - என்னா உன்னி இயன்ற வுத்தரப்
பொன்னார் வேலி புகாது பாங்கர்போய்க்
கொன்னார் கின்ற குணக்கு வாய்தலின்
முனனா ஏகினன் மொய்ம்பின் வீரனே. - 23



178 - மேதிக் கண்ணவன் வீர பானுவென்
றாதிக் கத்தவு ணர்க்கு நாயகர்
ஏதிக் கையர் இரண்டு வீரரும்
ஆதிக் கன்னதன் வாயில் போற்றினார். - 24



179 - திருவுந் தும்வட திக்கு வாய்தலின்
விரவுந் தானையின் வௌ¢ளம் மெய்த்தொகை
பரவுஞ் சூரர் பயிற்று பல்பவத்
துருவஞ் சூழந்தென ஒத்து நின்றவே. - 25



180 - வண்டார் செற்றிய வாகை மொய்ம்பினான்
கண்டான் அன்ன கடிக்கொள் காவலும்
தண்டா துற்றிடு தானை நீத்தமும்
அண்டா அற்புத நீரன் ஆயினான். - 26



181 - ஆண்டங் குற்றவ ளப்பில் சேனையைக்
காண்டும் மிவ்வுழி காவல் போற்றியே
சேண்டுன் றும்புலி செற்றும் ஆதலால்
ஈண்டுஞ் செல்லரி தென்று முன்னினான். - 27



182 - நின்றிப் பாற்படல் நீர்மை அன்றரோ
தென்றிக் கின்வழி சென்று நாடுவன்
என்றுட் கொண்டவண் நீங்கி ஏகினான்
குன்றின் தொன்மிடல் கொண்ட தோளினான். - 28

ஆகத் திருவிருத்தம் - 182
--------

7. கயமுகன் வதைப் படலம் (183 - 237)





183 - ஏகா நிற்புழி ஏந்தல் கீழ்த்திசை
மாகா வற்கொள் மதங்க மாமுகன்
மீகான் ஒப்ப வியன்க லத்தினுக்
காகா யத்தின் அமர்ந்து போற்றுவான். - 1



184 - நூற்றுப் பத்து நுவன்ற தோன்முகன்
மூற்றைக் கையினன் மொய்ம்பி ராயிரன்
சீற்றத் துப்புறு தீய சிந்தையான்
கூற்றத் துக்கொரு கூற்ற மேயனான். - 2



185 - பொன்னார் ஏம புரத்து வைகலும்
மன்னாய் வாழ்பவன் மாறு கொண்டுதன்
முன்னா வெய்தி முனிந்து போர்செய
ஒன்னார் இன்றி உளங்கு றைந்துளான். - 3



186 - கருமே கங்கள் கறித்து வாரியுண்
டுருமே றோடு முரற்ற ஓச்சுவான்
பெருமே தக்க பவஞ்செய் பெற்றியான்
செருமேல் கொண்டிடு சிந்தை பெற்றுளான். - 4



187 - மஞ்சார் வேழம் வனத்தில் வல்லுளி
எஞ்சா வெவ்வா¤ யாளி வல்லியம்
அஞ்சா ராயிர மங்கை கொண்டுணாச்
செஞ்சோ ரிப்புனல் சிந்தும் வாயினான். - 5



188 - காசைப் போது கடுத்த மெய்யர்தென்
னாசைக் காலரொ ராயிரத் தர்தம்
பாசத் தோடு பயின்று சேர்ந்தென
வீசித் தூங்கும் வியன்று திக்கையான். - 6



189 - வாணாள் அ•கினன் மாயும் எல்லையான்
ஏணால் அத்திசை ஏகும் வீரனைக்
காணா நின்று கனன்று சாலவுஞ்
சேணான் இன்னன செப்பி ஏகுவான். - 7



190 - மிக்கார் காவல் விலங்கி நீயிவட்
புக்காய் மாயை புகன் றுளாய்கொலோ
அக்கால் தானுமெம் மாணை நீங்கியே
எக்கா லத்தினும் ஏக வல்லதோ. - 8



191 - வறியா ராகி மயங்கும் வானவச்
சிறியார் வைகிய சீரில் ஊரெனக்
குறியா வந்தனை கோதில் இந்நகர்
அறியா யோநம தாணை ஆற்றலே. - 9



192 - மூண்டே குற்றனென் மொய்சி னத்தினேன்
மாண்டே போயினை வல்லை நீயினி
மீண்டே போந்திறம் இல்லை மேலுனக்
கீண்டே மாயவி ழைத்த எல்லையே. - 10



193 - சூராள் கின்றதொர் தொல்லை மாநகர்
சேரா நின்றனை சீறு கேசரி
பேரா எல்லையொர் பீடின் மான்பிணை
ஆராய் தற்குவ ருங்கொல் ஆற்றலால். - 11



194 - தொடுநே மிக்கடல் துண்ணெ னக்கடந்
திடைசேர் கின்ற இலங்கை நீங்கியே
கடிதே இந்நகர் காண உன்னியே
அடைவாய் தேவர்க ணத்து ளாரைநீ. - 12



195 - திருத்தங் கண்ணகல் தேவர் தம்முளும்
விருத்தன் போலும் மிகத்து ணிந்துநீ
ஒருத்தன் போந்தனை ஒன்றொர் வாளடே
வரத்தென் இவ்விடை மாயை கற்றுளாய். - 13



196 - ஆலா லத்தை அயின்ற நம்பனோ
மாலா னோவன சத்தில் அண்ணலோ
பாலார் தந்தி படைத்த கள்வனோ
மேலார் இங்குனை விட்ட தன்மையார். - 14



197 - சுற்றா நின்றனை சூழ இந்நகர்
ஒற்றாய் வந்தனை போலும் உன்றனை
மற்றார் உய்த்தனர் வந்த தென்கொலோ
விற்றாய் நின்னுயிர் எங்கண் உய்திநீ. - 15



198 - சிறையிற் பட்டுழல் தேவர் செய்கையை
அறிகுற் றிந்திரன் ஆளை யாகியே
நெறியிற் போக நினைந்து ளாய்கொலாங்
குறுகுற் றாயிது வுங்கு றிப்பதோ. - 16



199 - விண்டோ யுங்கனல் மேவும் எல்லையின்
மண்டோய் பூளை மருத்தன் உய்த்தெனப்
பண்டே நொய்யை படுந்தி றத்திவட்
கொண்டே வந்தது சொல்லும் வல்வினை. - 17



200 - முன்னந் நம்பணி முற்று மாற்றியே
கின்னங் கொண்டு கரந்த கீழ்த்திசை
மன்னன் பாலுறு வாருள் அன்றுநீ
இன்னும் மஞ்சலை என்னை யெண்ணலாய். - 18



201 - கொல்லா நிற்பதொர் கூற்ற மேயெனச்
செல்லா நின்றிடு திண்ணி யேன்முனம்
நில்லாய் எங்கடா நீங்கு வாயெனா
ஒல்லான் ஓதி உரப்பி யேகினான். - 19



202 - வன்றாள் கொண்ட மதக்க யாசுரன்
சென்றான் இன்னன செப்பி இம்மொழி
நன்றால் என்று நகைத்து நோக்கியே
நின்றான் வாகை நெடும்பு யத்தினான். - 20



203 - ஓவா திவ்வகை யோதி முன்வருந்
தீவா யோன்எதிர் சென்று வல்லையிற்
சாவா யென்னிடை சார்ந்து ளாய்கொலாம்
வாவா என்றனன் வாகை மொய்ம்பினான். - 21



204 - வானோர் அஞ்ச வருங்க யாசுரன்
தானோர் குன்று தனைப்ப றித்திடா
ஊனோ டுன்னுயிர் ருண்ணு மீதெனா
வானோன் மைந்தன்முன் னார்த்து வீசினான். - 22



205 - வீண்டோய் மேனி வியன்க யாசுரன்
கொண்டோர் கையில் விடுத்த குன்றது
வண்டோ வலம்புரி மாலை மொய்ம்பினான்
திண்தோண் மீமிசை செவ்வ ணுற்றதே. - 23



206 - வேழத் தோன்முகன் விட்ட பூதரம்
பாழித் தோள்மிசை பட்ட காலையில்
வாழிப் பூதியின் வட்டு விண்டெனப்
பூழித் தாகி உடைந்து போயதே. - 24



207 - பொடியும் காலெதிர் புக்க தீயவன்
மிடல்கொண் டுற்றிடு வீரன் ஆற்றல்கண்
டுடலுந் திண்சின முற்றொ ராயிரம்
படருங் குன்று பறித்தன் மேயினான். - 25



208 - பறியா நின்ற பகட்டு மாமுகன்
நெறிவீழ் கின்ற நெடுங்கை சுற்றினான்
இறைசேர் மேரு இருந்த கோடெலாங்
கறைசேர் காலவர் கட்டெ ழுந்தபோல். - 26



209 - பத்தாம் நூறு படுத்த வேலையுள்
மத்தா குற்றன வாசு கித்தொகை
மொய்த்தான் வன்றலை முன்பு சூழ்ந்தெனக்
கைத்தா மால்வரைக் காட்சி மிக்கவே. - 27



210 - துண்ணென் றேகயா சூரன் நூறுபத்
தெண்ணுந் தொல்கிரி யாவும் எம்பிரான்
கண்ணின் றோன்விடு காமர் காளைமேல்
விண்ணங் கான்றென ஆர்த்து வீசினான். - 28



211 - பாடார் பல்கிரி பற்றி வீசலும்
ஈடார் வெம்புலி யாளி கேசரி
கோடார் தந்திகள் கோடி கோடிகள்
வீடா ஆர்ப்பொடு விம்மி வீழ்பவே. - 29



212 - கேடாய் மன்னர் கிடப்ப ஆங்கவர்
வீடா ஆக்கமி சைந்து ளாரெனப்
பாடா வண்டு பராரை மால்வரை
ஊடார் தேன்கள் உகுப்ப உண்டவே. - 30



213 - வேறா கும்பல வெற்பி டந்தொறும்
ஊறா நின்றுல வுற்ற வான்புனல்
மாறா மல்கவிழ் வுற்று வல்லைபேர்
ஆறா கிக்கட லென்ன ஆர்த்ததே. - 31



214 - வரைவீழ் பூம்புனல் மாந திக்கணே
இரையா மாக்க ளியாவும் வீழ்தலாற்
திஆசேர் வாரிகள் சென்று சேணெழீஇ
விரைவால் வெய்யவன் வெப்பம் நீக்குமே. - 32



215 - பேசுஞ் சீரிவை பெற்ற வெற்பெலாம்
ஈசன் தூதுவன் முன்ன ரெய்தின
பாசஞ் சுற்றிய பம்ப ரத்தொகை
வீசுங் காலை சுழன்று வீழ்வபோல். - 33



216 - வேறு
சுடர்ப்பெ ருங்கதிர் ஆதவன் துண்ணெனக் கரப்ப
அடுக்கல் ஆயிரம் இன்னவா றொருதலை யாகக்
கடற்பு குங்கண முகிலென வருதலுங் கண்டான்
தடக்கை வேலுடை அண்ணல்தாள் முன்னினன் தமியோன். - 34



217 - நிற்கு மெல்லையின் வெங்கொலைத் தொழின்முறை நிரம்பக்
கிற்கும் வெய்யவன் விடுத்திடும் ஆயிரங் கிரியும்
பற்கன் மால்வரை காப்பவன் தன்மிசை பழிதீர்
அற்கன் மேல்வரும் எழிலிகள் என அடைந் தனவே. - 35



218 - வேறு
மறுவரை யாத திங்கள் வார்சடைக் கடவுள் நல்க
அறுவரை அனையாப் பெற்றோன் அருளினால் ஐயன் நிற்ப
உறுவரை பத்து நூறும் ஒருங்குமா யுற்று மற்றோர்
சிறுவரை தன்னில் யாவுஞ் சிதறியே உடைந்த வன்றே. - 36



219 - தௌ¤தரு வீரன் தன்மேற் செறிந்திடும் அடுக்கல் யாவும்
விளிவொடு மாய்ந்த வன்றி விளைத்தில வேறங் கொன்றும்
வளநனி சுருங்கி வானம் வறந்தநாள் வௌ¤ற்றுக் கொண்மூக்
கிளர்வன பயனின் றாகிக் கேடுபட் டுடையு மாபோல். - 37



220 - மட்பகை வினைஞ ரானோர் வனைதரு கலங்கள் முற்றுந்
திட்பமொ டமர்ந்த கற்றுண் சேர்ந்துழிச் சிதறு மாபோல்
கொட்புறு புழைக்கை வெய்யோன் குறித்தெறி பிறங்கல் யாவும்
ஒட்பம தடைந்த வீரன் மிசைபட உடைந்த அன்றே. - 38



221 - விறல்கெழு புயத்தி னான்மேல் விடுத்திடு கிரிகள் யாவும்
வறிதுபட் டிடலுங் காணா மால்கரி முகத்தன் நின்றான்
அறநெறி யொருவி மொய்ம்பால் ஆற்றிய வெறுக்கை யாவும்
பிறர்கொள வுகுத்தி யாதும் ஊதியம் பெறுகி லார்போல். - 39



222 - கண்டுவிம் மிதத்த னாகிக் கயாசுரன் முனிந்தோர் தண்டந்
திண்டிறன் மொய்ம்பன் தன்மேற் செலுத்தலும் அதனைக் காணா
ஒண்டழல் புரையும் ஔ¢வாள் உறைகழித் தொல்லை வீழத்
துண்டம தாக்கி யன்னோன் எதிருறத் துன்ன லுற்றாள். - 40



223 - மத்தவெங் கயமாந் தீயோன் வாகையந் தடந்தோள் அண்ணல்
மெய்த்தனி ஆற்றல் காணா விழுத்தகு பனைக்கை யோச்சிப்
பத்துநூ றான சாலப் பழுமரம் பறியா ஏந்தி
உய்த்திட ஒருதன் வாளால் ஒய்யெனச் சிந்தி ஆர்த்தான். - 41



224 - காயெரி கலுழும் வெங்கட் கயாசுரன் விடுவான் பின்னுஞ்
சேயுயர் வரைபல் வேறு தெரிந்தனன் பறிக்கும் எல்லை
நாயகன் தூதன் காணா நாந்தகங் கொடுபோய் அன்னான்
ஆயிர மாகி யுள்ள புழைக்கையும் அறுத்தான் அன்றே. - 42



225 - அறுத்தலுங் கவன்று தீயோன் ஆயிரத் திரட்டி கையுஞ்
செறித்திவன் தன்னைப் பற்றித் திற்றியாக் கொள்வ னென்றே
குறித்தனன் வளைப்ப வாளாற் கொம்மென ஆற்றல் வீரன்
தறித்தனன் ஒருசார் வந்த ஆயிரந் தடக்கை முற்றும். - 43



226 - செற்றமால் கரியின் பேரோன் திண்கையா யிரமும் வீட்ட
மற்றையா யிரங்கை யாலும் வாகையஞ் செம்மல் மார்பின்
எற்றினான் எற்றும் எல்லை எல்லையில் வெகுளி யெய்தி
அற்றுவீழ்ந் திடவே வாளால் அவையெலாம் அடுதல் செய்தான். - 44



227 - கொலைகெழு தறுகண் நால்வாய்க் குஞ்சர முகத்து வெய்யோன்
நிலைகெழு பாணி முற்றும் நீங்கியீ ரைந்து நூற்றுத்
தலைகெழு நிலைமைத் தாகித் தண்சினை பலவுமல்கி
அலைகெழு வீழ்போய் உற்ற ஆலமே போல நின்றான். - 45



228 - பாணிகள் இழந்து நின்ற பகட்டுடை வதனத் தீயோன்
நாணினன் இவனை அட்டு நம்முயிர் துறத்தும் என்னா
மாணறு மனத்திற் கொண்டு மற்றொழின் முன்னித் தோளால்
தாணுவின் கயிலை காப்போன் தடம்புயந் தாக்கி ஆர்த்தான். - 46



229 - ஐயன தொற்றன் காணா ஆற்றலின் றாகி முற்றுங்
கையினை இழந்து நின்றான் கடுங்கதிர் வாளின் வெம்போர்
செய்யலன் இனியான் என்னாச் சிந்தைசெய் துறைவா ளோச்சி
ஒய்யென அவன்றன் மார்பின் உதைத்தனன் ஒருதன் தாளால். - 47



230 - உதைத்திடு கின்ற காலை ஒல்லென அரற்றி வீழ்ந்து
மதத்தினை யுறுக போல மால்கரி முகத்து வெய்யோன்
பதைத்தனன் ஆவி சிந்திப் பட்டனன் பகிர்ந்த மார்பிற்
குதித்திடு சோரி நீத்தங் குரைகடற் போய தன்றே. - 48



231 - அவ்வியல் கண்டு பல்லோர் அவுணர்கள் நமரே ஈண்டு
தெவ்வியல் முறையின் நின்று செருவினை இழைப்பார் போலும்
இவ்விவர் ஆடற் கேது என்கொலோ அறிதும் என்றே
கவ்வையின் நெறிக டோறுங் காண்பது கருதிப் போந்தார். - 49



232 - சென்றிடல் வீரன் காணாத் தீயரென் செய்கை நோக்கிற்
கன்றிவெஞ் சினமேற் கொண்டு கடுஞ்சமர் இழைப்பர் யானும்
நின்றமர் புரிதல் வேண்டும் நிலைமையீ தென்றால் அம்மா
இன்றொடு முடியுங் கொல்லோ இயற்றினும் இவர்போரென்றான். - 50



233 - ஆரணந் தனக்குங் காணா ஆதியங் கடவுள் சொற்ற
பேரருண் மறந்தே இன்னே பீடிலார் தம்மோ டேற்றுப்
போரினை யிழைத்து நிற்றல் புல்லிது புலமைத் தன்றால்
சூருறை மூதூர் தன்னில் துன்னுவன் கடிதின் என்றான். - 51



234 - எப்பெரு வாயில் சார வேகினும் அங்கண் எல்லாங்
கைப்படை அவுணர் வௌ¢ளங் காவல்கொண் டுற்ற ஆற்றால்
தப்பினன் சேறல் ஒல்லா தமியன்இப் படிவத் தோடு
மெய்ப்பதி இதற்குச் செல்வன் வேற்றுரு வெய்தி யென்றான். - 52



235 - கூற்றினை உறழும் வைவேற் குமரவேள் அருளால் ஈண்டோர்
வேற்றுரு வதனைக் கொண்டு வெய்யராம் அவுண வீரர்
போற்றுமிக் குணபால் வாய்தல் பொள்ளெனக் கடந்து பின்னர்
மாற்றலன் ஊரிற் செல்வன் என்றனன் வாகை மொய்ம்பன். - 53



236 - நொய்யதோர் அணுவின் ஆற்ற நுணுகியும் மேன்மை தன்னில்
பொய்யில்சீர் பெருமைத் தாயும் பூரண மாகி வைகுஞ்
செய்யதோர் குமரன் பொற்றாள் சிந்தைசெய் தன்பிற் போற்றி
ஒய்யென அருளின் நீரால் ஓரணு வுருவங் கொண்டான். - 54



237 - நுணுகுதன் னுணர்வே போல நோக்கருந் திறத்தால் தானோர்
அணுவுருக் கொண்டு வீரன் அடுகளம் அதனை நீங்கி
இணையறு குமரற் போற்றி எழுந்துவிண் படர்ந்து மூதூர்க்
குணதிசை வாய்தல் நின்ற போபுர மிசைக்கண் உற்றான். - 55

ஆகத் திருவிருத்தம் - 237
-------

8. நகர்புகு படலம் (238 - 336)




238 - அண்டம் யாவையும் எழுவகை யுயிர்த்தொகை யனைத்தும்
பிண்ட மாம்பொருள் முழுவதும் நல்கியெம் பெருமான்
பண்டு பாரித்த திறமென மகேந்திரப் பதியின்
மண்டு தொல்வளம் நோக்கியே இன்னன மதிப்பான். - 1



239 - எந்தை முன்னரே சூரபன் மாவினுக் கீந்த
முந்தும் அண்டங்கள் அலமரும் உவரிகள் முழுதும்
வந்து மொய்த்தன போலுமால் வரைபுரை காட்சிக்
கந்து பற்றியே ஆர்த்திடும் எல்லைதீர் கரிகள். - 1



240 - இயலும் ஐம்பெரு நிறத்தின்அண் டங்களின் இருந்த
புயலி னம்பல ஓ£¢வழித் தொக்கன பொருவ
மயிலி ருஞ்சரம் முயலொடு யூகமற் றொழிலைப்
பயில்ப ரித்தொகை அளப்பில வயின்றொறும பரவும். - 3



241 - அண்டம் ஆயிரத் தெட்டினுள மேதகும் அடல்மாத்
தண்ட மால்கரி யாயின தடம்பெருந் தேர்கள்
எண்ட ரும்பொரு ளியாவுமீண் டிருந்தன இவற்றைக்
கண்டு தேர்ந்தனர் அல்லரோ அகிலமுங் கண்டோர். - 4



242 - இணையில் இவ்விடைத் தானையின் வௌ¢ளமோர் இலக்க
நணுகும் என்றனன் அந்தணன் நாற்பெரும் படையுங்
கணித மில்லன இருந்தன வௌ¢ளிகண் ணிலன்போல்
உணர்வி லன்கொலாங் கனகனுங் கேட்டசொல் லுரைத்தான். - 5



243 - உரையின் மிக்கசூர் பெற்றஅண் டந்தொறும் உளவாம்
வரையின் மிக்கதேர் கடல்களின் மிக்கை மாக்கள்
திரையின் மிக்கவாம் பரித்தொகை ஆயிடைச் செறிந்த
பரவை நுண்மணல் தன்னினும் மிக்கன பதாதி. - 6



244 - மணகொள் ஆயிரத் தெட்டெனும் அண்டத்தின் வளமும்
எண்கொள் எண்பதி னாயிரம் யோசனை யெல்லைக்
கண்கொள் பான்மைலு ஈண்டிய தற்புதங் கறைதோய்
புண்கொள் வேலுடைச் சூர்தவத் தடங்கிய போலாம். - 7



245 - உரைசெய் ஆயிரத் தெட்டெனும் அண்டத்தின் உளவாங்
கரையில் சீரெலாந் தொகுத்தனன் ஈண்டவை கண்டாந்
தருமம் மெய்யளி கண்டிலம் அவற்றையுந் தந்து
சுரர்கள் தம்முடன் சிறையிலிட் டான்கொலோ சூரன். - 8



246 - அரண்ட ருங்கழற் சூரன்வாழ் மகேந்திரம் அதனில்
திரண்ட பல்லியத் துழனியேழ் கடலினுந் தெழிப்ப
முரண்டி றத்தவை இயம்புவார் அளவையார் மொழிவார்
இரண்டு பத்துநு றியோசனை யுண்டவர் இடங்கள். - 9



247 - கரிகள் சேவகம் ஒருபதி னாயிரம் கடுந்தேர்
விரியும் நீளிடை ஒருபதி னாயிரம் விசயப்
பரியின் எல்லையோர் இருபதி னாயிரம் பையத்
துருவின் இன்னமும் உண்டுகொல் யோசனைத் தொகையே. - 10



248 - இவுளி வாயினும் மால்கரிக் கரத்தினும் இழிந்து
திவளும் நீர்மைசால் விலாழியுந் தானமுஞ் செறிந்து
குவளை யுண்கணார் நீத்தசாந் தணிமலர் கொண்டே
உவள கந்தரும் அகழிசென் றகன்கடல் உறுமால். - 11



249 - வளமை மேதகும் இப்பெரு மகேந்திரம் வகுத்தன்
முளரி அண்ணலிங் கொருவனான் முடிந்திட வற்றோ
ஔ¤று வாட்படை அவுணர்கோ னுடையவண் டத்தின்
அளவி னான்முகர் யாரும்வந் திழைத்தன ராமால். - 12



250 - புரந்த ரன்றன் துலகமும் ஒழிந்த புத்தேளிர்
இருந்த வானமும் எண்டிசை நகரமும் யாவும்
வருந்தி இந்நகர் சமைத்திட முன்னரே வண்கை
திருந்த வேகொலாம் படைத்தனர் திசைமுகத் தலைவர். - 13



251 - பொன்பு லப்படு துறக்கம்வான் மாதிரம் புவிகீழ்
துன்பில் போகமார் உலகென்பர் தொடுகடற் பெருமை
முன்பு காண்கலர் கோட்டகம் புகழ்தரு முறைபோல்
இன்பம் யாவையும் உளநகர் ஈதுபோ லியாதோ. - 14



252 - கறைப டைத்ததாட் கரிபரி அவுணர்தேர்க் கணங்கள்
அறைப டைத்திவண் ஈண்டிய அண்டங்க ளனைத்தும்
முறைக டற்றொகை முழுவதுஞ் சூர்கொணர்ந் தொருங்கே
சிறைப டுத்திய போலும்வே றொன்றிலை செப்ப. - 15



253 - ஐய பூழியும் ஆரகில் ஆவியும் ஆற்ற
நொய்ய வாகிய அணுக்களும் நுழைவா தென்னிற்
செய்ய இந்நகர் ஆவணம் எங்கணுஞ் செறிந்த
வெய்ய தேர்கரி அவுணர்தம் பெருமையார் விரிப்பார். - 16



254 - அள்ளல் வேலைசூழ் மகேந்திர புரிக்கிணை யாகத்
தௌ¢ளி தாவொரு நகருமின் றுளதெனச் செப்ப
எள்ள லின்றிய அண்டமோ ராயிரத் தெட்டின்
உள்ள சீரெலாம் ஈதுபோல் ஒருபுரத் துளதோ. - 17



255 - கழிந்த சீர்த்திகொள் இந்நகர் தன்னிடைக் கஞல
வழிந்து தொல்லுரு மாழையின் மணிநிழ லாகி
இழிந்து ளான்பெறு திருவெனப் பயன்பெறா தெவர்க்கும்
ஒழிந்து வேலைகள் தம்புகழ் கொள்வதில் வுவரி. - 18



256 - ஏற்கும் நேமிசூழ் மகேந்திர வெறுக்கை இவ்வுலகோர்
ஆர்க்கும் ஓர்பயன் பெற்றில துயிர்ப்பலி அருந்துங்
கார்க்கு ழாம்புரை அலகைசூழ காளிமந் திரத்திற்
சீர்க்கொள் கற்பகம் பிறர்க்குத வாதமர் செயல்போல். - 19



257 - மறக்கா டுந்தொழில் இரவியம் பகையழல் மடுப்பத்
துறக்க மாண்டது பட்டிமை யாகுமத் தொல்லூர்
சிறக்கும் இந்நகர் நோக்கியே தன்னலந் தேய்ந்து
பொறுக்க ரும்பெரு நாண்சுடக் கரிந்தது போலாம். - 20



258 - துங்க மிக்கசூர் படைத்திடும் அண்டமாத் தொகையுட்
செங்க திர்த்தொகை ஆங்கவன் பணியினாற் சென்று
பொங்கு தண்சுடர் நடாத்திநின் றென்னவிப் புரியில்
எங்கு முற்றன செழுமணிச் சிகரம் எண்ணிலவே. - 21



259 - மாணி லைப்படும் எழுவகை உலகின் வைப்பென்ன
வேணி லைப்பெருஞ் சிகரிகள் செறிந்தன யாண்டுங்
கோணி லைக்கதிர் உடுப்பிறர் பதங்களிற் குழுமி
நீணி லைத்தலம் பலவுள்ள மாடங்கள் நிரந்த. - 22



260 - நூறி யோசனை சேண்படு நீட்சியும் நுவலும்
ஆறி யோசனைப் பரவையும் பெற்றஆ வணங்கள்
ஏறு தேர்பரி களிறுதா னவர்படை ஈண்டிச்
சேற லாயிடை அருமையால் விசும்பினுஞ் செல்லும். - 23



261 - அடல்மி குத்திடு தானவர் அகலிரு விசும்பிற்
கடிதி னிற்செல மத்திகை காட்டுமா றொப்ப
நெடுமு கிற்கணந் தழுவுசூ ளிகைமிசை நிறுவுங்
கொடிகள் எற்றிடப் போவன இரவிகொய் யுளைமா. - 24



262 - மேலு லாவிய படிகமா ளிகைசில மின்னார்
மாலை தாழ்குழற் கிடுமகி லாவியான் மறைவ
சீல நீங்கிய அவுணர்தஞ் சீர்த்திகள் அனைத்தும்
மேல வேயவர் பவத்தினுள் ஒடுங்குமா றென்ன. - 25



263 - அணிகு லாயகோ மேதகம் மரகதம் ஆரம்
துணியும் நீலம்வச் சிரம்வயி டூரியந் துப்பு
நணிய பங்கயம் புருடரா கம்மெனும் நவமா
மணிக ளாற்செய்து மிளிர்வன வரம்பில்பொன் மாடம். - 26



264 - இயல்ப டைத்தவெண் படிகத்தின் இயன்றமா ளிகைமேற்
புயல்ப டைத்திடு களிமயில் வதிந்திடப் புடையே
கயல்ப டைத்தகண் ணியர்புரி அகிற்புகை கலப்ப
முயல்ப டைத்திடு மதியினைச் சூழ்தரு முகில்பால். - 27



265 - வளனி யன்றிடு செம்மணிப் பளிங்குமா ளிகைமேல்
ஔ¤று பொற்றலத் தரிவையர் வடிமிசைந் துறுதல்
வெறிய சேயன பங்கயப் பொகுட்டின்மீ மிசையே
அளியி னங்கள்தேன் மாந்தியே வைகுமா றனைய. - 28



266 - துய்ய வாலரி புனற்கிறை மண்ணியே தொகுப்பச்
செய்ய தீயவன் ஊன்களோ டவைபதஞ் செய்ய
மையன் மாதரோ டவுணர்கள் அரம்பையர் வழங்க
நெய்யளா வுண்டி உண்குவர் மறுசிகை நீக்கி. - 29



267 - துப்பு றுத்த குஞ்சியங் காளையர் தொகையுஞ்
செப்பு றுத்துசீ றடிமினார் பண்ணையுஞ் செறிந்து
மெய்ப்பு றத்தியல் காட்சியுங் கலவியும் வெறுப்பும்
எப்பு றத்தினும் நிகழவன மதனுல கிதுவே. - 30



268 - பூணும் ஆரமுங் கலாபமும் இழைகளும பொன்செய்
நாணும் ஒற்றராற் பரத்தையர் பாற்பட நல்கிப்
பேணி மற்றவர் விலக்கின நயந்தன பிறவும்
மாணு மைந்தர்கள் தேறுவான் ஆறுபார்த் தயர்வார். - 31



269 - துன்று தானவர் தெரியலின் மாதர்பூந தொடையின்
மன்றல் மாளிகைச் சோலையின் இலஞ்சியின் மலரிற்
குன்ற மால்கரித் தண்டத்தில் யாழ்முரல் குழுவிற்
சென்று சென்றன துணர்வுபோல் அளிகளுந் திரியும். - 32



270 - மாறி லாதசூர் ஆணையால் வந்திடும் வசந்தன்
ஊறு தெண்கடல் அளவியே தண்டலை யுலவி
வீறு மாளிகை நூழையின் இடந்தொறும் மெல்லத்
தேறல் வாய்மடுத் தோரென அசைந்துசென் றிடுமால். - 33



271 - மாட மீதமர் மடந்தையர் தம்முரு வனப்புக்
கூட வேபுனைந் தணிநிழற் காண்பது குறித்துப்
பாடு சேர்கரம் நீட்டியே பகலவற் பற்றி
ஆடி நீர்மையின் நோக்கியே அந்தரத் தெறிவார். - 34



272 - வன்ன மாடமேல் ஆடவர் பரத்தமை மகளிர்
உன்னி யூடியே பங்கியீர்த் தடிகளால் உதைப்பப்
பொன்னின் நாணறத் தமதுகை எழிலியுட் போக்கி
மின்னு வாங்கியே ஆர்த்தனர் குஞ்சியை வீக்கி. - 35



273 - முழங்கு வானதி தோய்ந்தசின் மாளிகை முகட்டின்
அழுங்கல் என்பதை உணர்கிலா மாதரார் அகல்வான்
வழங்கு கோளுடன் உருமினைப் பற்றியம் மனையுங்
கழங்கு மாயெறிந் தாடுவர் அலமரக் கண்கள். - 36



274 - ஈண்டை மாளிகை மங்கையர் தஞ்சிறார் இரங்க
ஆண்டு மற்றவர் ஆடுவான் பற்றியா தவன்தேர்
பூண்ட மான்தொகை கொடுத்தலும் ஆங்வன் போந்து
வேண்டி நின்றிட வாங்கியே உதவுவார் மெல்ல. - 37



275 - நீடு மாளிகை மிசைவரு மாதர்கை நீட்டி
ஈடு சாலுரும் ஏறுடன் மின்பிடித் திசைத்தே
ஆடு கிங்கிணி மாலையாம் மைந்தருக் கணியா
ஓடு கொண்டலைச் சிறுதுகி லாப்புனைந் துகப்பார். - 38



276 - பொங்கு மாமணி மேற்றலத் திரவிபோந் திடலும்
இங்கி தோர்கனி யெனச்சிறார் அவன்றனை யெட்டி
அங்கை பற்றியே கறித்தழல் உறைப்பவிட் டழுங்கக்
கங்கை வாரிநீர் ஊட்டுவார் கண்டநற் றாயர். - 39



277 - கண்டு வந்தனை வரும்புகழ் தஞ்சிறார் கலுழ
விண்டு வந்தனை செய்தெனத் தாழந்தமேல் நிலத்தில்
வண்டு வந்தனைப் படுகதிர்க் கைம்மலர் வலிந்து
கொண்டு வந்தனை மார்இரங் காவகை கொடுப்பார். - 40



278 - அஞ்சி லோதியர் மாளிகை மிசைச்சிலர் அகல்வான்
விஞ்சு தேவரை விளித்தலும் மெய்யுறன் மறுப்ப
வஞ்சர் வஞ்சரென் றரற்றியவ் வானவர் இசைய
நஞ்சி றாருடன் ஆடுதும் என்பர்நண் ணினா¢க்கு. - 41



279 - பொருளில் மாளிகைப் படிற்றியர் புணர்வரென் றுன்னி
வரவு மஞ்சுவர் வராமையும் அஞ்சுவர் மடவார்
கரவின் மேவுதல் அவுணர்கள் காண்பர்கொ லென்றும்
வெருவு கின்றனர் என்செய்வார் விண்ணெறிப் படர்வார். - 42



280 - மேனி லந்தனின் மங்கையர் சிறார்விடா திரங்க
ஊன மில்கதிர் தேர்வர அவரையாண் டுய்த்து
வான கந்தனிற் சில்லிடை யேகிநம் மகவைப்
பானு வந்துநீ தருகென விடுக்குநர் பலரால். - 43



281 - கலதி யாகிய அவுணர்தம் மாதர்கால் வருடிச்
சிலதி யாரென வணங்கினோர் ஏவல்செய் கிற்பார்
சலதி யார்தரும் உலகமேல் தெரிகுறில் தவமே
அலதி யாவுள வேண்டியாங் குதவநின் றனவே. - 44



282 - ஐந்த வாகிய தருக்களும் மணியுநல் லாவும்
நந்தும் அம்புய நிதியமும் பிறவும்இந் நகரின்
மைந்தர் மாதர்கள் இருந்துழி யிருந்துழி வந்து
சிந்தை தன்னிடை வேண்டியாங் குதவியே திரியும். - 45



283 - மீது போகிய மாளிகைக் காப்பினுள் மேவும்
மாதர் வானெறிச் செல்லுவோர் சிலர்தமை வலித்தே
காத லாற்பிடித் தொருசிலர் முறைமுறை கலந்து
போதி ராலென விடுப்பர்பின் அசமுகி போல்வார். - 46



284 - வேறு
மேதாவி கொண்டகதிர் வெய்யவனை வெஞ்சூர்
சேய்தான் வலிந்துசிறை செய்திடலின் முன்ன
மேதாமி னங்கொலென எண்ணிஅவன் என்றூழ்
வாதாய னங்கடொறும் வந்துபுக லின்றே. - 47



285 - தேசுற்ற மாடமுறை சீப்பவரு காலோன்
வாசப்பு னற்கலவை வார்புணரி கொண்கன்
வீசப்பு லர்த்தியிட விண்படரும் வெய்யோன்
ஆசுற்ற தானவர் அமர்ந்திவண் இருந்தார். - 48



286 - பால்கொண்ட தெண்கடல் மிசைப்பதுமை தன்னை
மால்கொண்டு கண்டுயிலும் வண்ணமிது வென்ன
மேல்கொண்ட நுண்பளித மேனிலம் தன்கட்
சூல்கொண்ட காரெழிலி மின்னினொடு துஞ்சும். - 49



287 - வேறு
குழலின் ஓதையும் எழால்களில் ஓதையுங் குறிக்கும்
வழுவில் கோட்டொடு காகள ஓதையும் மற்றை
முழவின் ஓதையும் பாடுநர் ஓதையும் முடிவில்
விழவின் ஓதையுந் தெண்டிரை ஓதையின் மிகுமால். - 50



288 - மதனி ழுக்குறு மைந்தரும் மாதரும் வனமா
மதனி ழுக்கிய வீதியில் வீசும்வண் கலவை
பதனி ழுக்குறச் சேதக மாகுமீன் பலவும்
பதனி ழுக்கிய வாந்தினம் புனைந்தெறி பணிகள். - 51



289 - அளப்பில் வேட்கையங் கொருவர்கண் வைத்துமற் றதனை
வௌ¤ப்ப டுக்கிலர் மெலிதலுங் குறிகளே விளம்ப
ஔ¤ப்ப தென்னுளம் பகரென ஆற்றலா துடைந்து
கிளிப்பெ டைக்கிருந் தொருசில மடந்தையர் கிளப்பார். - 52



290 - குருளை மான்பிணித் திளஞ்சிறார் ஊர்ந்திடுங் கொடித்தேர்
உருளை ஒண்பொனை மணித்தலங் கவர்ந்துகொண் டுறுவ
வெருளின் மாக்களை வெறுப்பதென் முனிவரும் விழைவார்
பொருளின் ஆசையை நீங்கினர் யாவரே புவியில். - 53



291 - விழைவு மாற்றிய தவத்தின ரேனுமிவ் வெறுக்கை
மொழியி னோரினும் அவுணரா கத்தவம் முயல்வார்
ஒழியும் ஏனையர் செய்கையை யுரைப்பதென் னுலகிற்
கழிபெ ரும்பகல் நோற்றவ ரேயிது காண்பார். - 54



292 - குழவி வான்மதிக் கிம்புரி மருப்புடைக் கொண்மூ
விழுமெ னச்சொரி தானநீ ராறுபோ லேகி
மழலை மென்சிறார் ஆவணத் தாடும்வண் சுண்ணப்
புழுதி ஈண்டலின் வறப்பவான் கங்கையும் புலர. - 55



293 - கங்கை யூண்பய னாகவுந் தூயதெண் கடல்நீர்
அங்கண் மாநகர்ப் பரிசனம் ஆடவும் அணைந்து
துங்க மேனிலை மாளிகை ஆவணஞ் சோலை
எங்கும் வாவியும் பொய்கையும் பிறவுமாய் ஈண்டும். - 56



294 - வில்லி யற்றுவோர் வாட்படை இயற்றுவோர் வேறாம்
எல்லை யில்படை உள்ளவும் இயற்றுவோர் இகலான்
மல்லி யற்றுவேரா¢ மாயம தியற்றுவோர் மனுவின்
சொல்லி யற்றுவோர் கண்ணுறு புலந்தொறுந் தொகுமால். - 57



295 - நாடி மேலெழத் தசையிலா துலறியே நரையாய்க்
கோடு பற்றிமூத் தசைந்திடு வோரையுங் கூற்றால்
வீடு வோரையும் பிணியுழப் போரையும் மிடியால்
வாடு வோரையுங் கண்டிலம் இதுதவ வலியே. - 58



296 - கன்னல் மாண்பயன் வாலளை செய்கடுந் தேறல்
துன்னு தீயபால் அளக்கர்தம் பேருருச் சுருக்கி
மன்னன் ஆணையால் இந்நகர் மனைதொறும் மருவிப்
பன்னெ டுங்குள னாகியே தனித்தனி பயில்வ. - 59



297 - அட்ட தேறலும் அடாதமை தேறலும் அருந்திப்
பட்டு வார்துகில் கீறியே தம்மொடு மறைந்து
விட்ட நாணினோர் ஒருசில மடந்தையர் வியன்கை
கொட்டி யாவரும் விழைவுறக் குரவையாட் டயர்வார். - 60



298 - திலக வாணுதல் மாதரா டவர்சிறு வரையின்
அலகி லாமுறை புனைதலின் அணிந்தணிந் தகற்றும்
இலகு பூண்டுகின் மாலைகந் தம்பிற ஈண்டி
உலகில் விண்ணக ரெனச்சிறந் தாவண முறுமே. - 61



299 - கொய்த லர்ந்தபூ நித்தில மணியுடன் கொழித்துப்
பொய்த லாடுவார் முற்றிலால் எற்றுபொற் பூழி
எய்த லானதிந் நகரள வோகடல் இகந்து
நெய்த லங்கரைக் கானலை அடைந்துமேல் நிமிரும். - 62



300 - சுந்த ரங்கெழு செய்யவெண் மலர்களால் தொடுத்த
கந்து கங்களைச் சிறுவர்கள் கரங்களின் ஏந்தி
அந்த ரம்புக எறிதலும் ஆங்ஙன மேகி
வந்து வீழுமால் இருகதிர் வழுக்கிவீழ் வனபோல். - 63



301 - கழக மீதுமுன் போந்திட முதுகணக் காயர்
குழகு மென்சிறார் தனித்தனி வந்தனர் குறுகிப்
பழகு கற்பினூல் பயின்றனர் மாலையிற் பட்ட
அழகு சேர்மதிப் பின்னெழு கணங்கள்மொய்த் தனையார். - 64



302 - கள்ளின் ஆற்றலாற் களிப்பவர் தேறலைக் கரத்திற்
கிள்ளை ஆணினுக் கூட்டியே காமநோய் கிளர்த்தி
உள்ள மோடிய சேவலும் இரங்க ஓதிமத்துப்
புள்ளின் மென்பெடை மீமிசை கலந்திடப் புணர்ப்பார். - 65



303 - உரத்தின் முன்னரே வௌவிவந் தீட்டிய வும்பர்
சிரத்தின் மாமுடித் திருமணி பறித்தொரு சிலவர்
அரத்த மேயதம் பங்கியிற் பஞ்சிகள் அழுத்தும்
பரத்தை மாரடிப் பாதுகை கணிபெறப் பதிப்பார். - 66



304 - தேவி மார்பலர் வருந்தவும் அனையர்பாற் சேரார்
ஆவி போவது நினைகில ராகியே அயலார்
பாவை மார்தமை வெ•கியே பட்டிமை நெறியான்
மேவு வார்சிலர் காண்பதே இதுவுமென் விழியே. - 67



305 - நெருக்கு பூண்முலை இயக்கர்தம் மங்கையர் நெஞ்சம்
உருக்கு மேருடை அமரர்தம் மங்கையர் உளத்தின்
இரக்கம் நீங்கிய அவுணர்தம் மங்கையர் ஏனை
அரக்கர் மங்கையர் கணிகைமங் கையர்களாய் அமர்வார். - 68



306 - கந்த மானபல் களபமுஞ் சுண்ணமுங் கமழும்
பந்து மாலையுஞ் சிவிறிநீ ரொடுபரத் தையர்கள்
மைந்த ரோடெறிந் தாடல்யா ருளத்தையும் மயக்கும்
இந்த வீதிகொல் லுருவுகொண் டநங்கன்வீற் றிருத்தல். - 69



307 - பொன்னின் அன்னமும் பதுமரா கம்புரை புறவுஞ்
செந்ந லங்கிளர் அஞ்ஞையுஞ் சாரிகைத் திறனும்
பன்னி றங்கெழு புள்ளினம் இனையன பலவும்
இன்ன தொன்னகர் மங்கையர் கரந்தொறும் இருப்ப. - 70



308 - பண்டு வேட்டவர் பின்முறைப் பாவையர் பரிவிற்
கண்டு பின்வரை மங்கையர் கானம தியற்றிக்
கொண்ட இல்வழிப் பரத்தையர் கணிகையர் குழாத்துள்
வண்டு பூவுறு தன்மைசென் றாடவர் மணப்பார். - 71



309 - தக்க மெல்லடிப் பரிபுரம் முழுவுறத் தனமா
மிக்க தாளங்கள் ஒத்தமென் புள்ளிசை விரவ
இக்கு வேளவை காணிய பூந்துகில் எழினி
பக்க நீக்கியே மைந்தரோ டாடுவார் பலரே. - 72



310 - பாட்ட மைந்திடு காளையர் அணிநலம் பாரா
வேட்டு மங்கையர் ஒருசிலர் தமதுமெய் விளர்ப்பக்
கூட்ட முன்னியே பன்னிறக் கலவையுங் குழைத்துத்
தீட்டு வாரவர் உருவினை வியன்கிழி திருத்தி. - 73



311 - சுற்று விட்டலர் தாருடை வயவர்தொல் லுருவிற்
பற்று விட்டுடன் உளத்தையும் விட்டுமென் பார்ப்பைப்
பெற்று விட்டிலாப் பெடைமயில் தழீஇத்துயர் பேசி
ஒற்று விட்டனர் ஒருசிலர் ஆறுபார்த் துழல்வார். - 74



312 - அகன்ற கொண்கரை நனவின்எக் காலமும் அகத்தில்
புகன்று மட்டித்த வெம்முலைச் சாந்தொடும் புலர்வார்
பகன்றை போல்முரல் சிலம்படிப் பாவையர் பல்லோர்
முகன்த னில்கரு மணிகளிற் சொரிதர முத்தம். - 75



313 - மங்கை மார்சிலர் ஆடவர் தம்மொடு மாடத்
துங்க மேனிலத் திடைப்படு சேக்கையில் துன்னி
வெங்கண் மெல்லிதழ் வேறுபட் டணிமுகம் வியர்ப்பக்
கங்குல் ஒண்பகல் உணர்கிலர் விழைவொடு கலப்பார். - 76



314 - மறிகொள் சோரிநீர் பலியுட நோக்கிநாண் மலர்தூய்
இறைகொள் இல்லிடைத் தெய்வதம் வழிபடல் இயற்றிப்
பறைகள் தங்கஅக் கடவுளை ஆற்றுறப் படுத்தி
வெறிய யர்ந்துநின் றாடுவர் அளப்பிலர் மின்னார். - 77



315 - அலங்கல் வேல்விழி மாதரும் மைந்தரும் அமர்ந்த
பொலங்கொள் மாடமேல் ஆடுறு பெருங்கொடி பொலிவ
மலங்கு சூழ்தரு தெண்டிரைப் புணரியில் வைகுங்
கலங்கள் மேவிய கூம்பெனக் காட்டிய அன்றே. - 78



316 - புரசை வெங்கரி புரவிதேர் பொருபடைத் தலைவர்
பரிச னங்களா தோரணர் வாதுவர் பரவ
முரச மேமுதல் இயமெலாம் முன்னரே முழங்க
அரச வேழமா எண்ணில கோயில்வந்த தடைவ. - 79



317 - கள்ளு றைத்திடு மாலையம் பங்கியர் கமஞ்சூல்
வள்ளு றைப்புயன் மேனியர் ஒருசிலர் வார்வில்
ஔ¢ளு றைப்படை பிறவினிற் கவரிதூங் குறுத்துத்
தள்ளு தற்கரும் வயமுர சறையமுன் சார்வார். - 80



318 - அறுகு வெம்புலி வலியுடை மடங்கல்மான் ஆமாச்
சிறுகு கண்ணுடைக் கரிமரை இரலையித் திறத்திற்
குறுகு மாக்களைப் படுத்தவற் றூன்வகைக் குவால்கள்
மறுகு ளார்பெறப் பண்டிகொண் டளப்பிலோர் வருவார். - 81



319 - மஞ்சு லாவரு சிகரியுஞ் சூளிகை வரைப்பும்
விஞ்சு மேனில அடுக்கமுஞ் சோலையும் வெற்புஞ்
சஞ்ச ரீகமார் ஓடையும் வாவியுந் தடமும்
எஞ்சல் இல்லதோர் மாடங்கள் எங்கணு முளவே. - 82



320 - எற்றி முன்செலும் முரசினர் கம்மியர் எல்லில்
பற்று தீபிகைச் சுடரினர் மாலைதாழ் படையர்
ஒற்றை முக்குடை இருபுடைக் கவரியர் உலப்பில்
கொற்ற வீரர்ஈண் டளப்பிலோர் வந்தனர் குலவி. - 83



321 - மண்ப டைத்திடு தவமெனும் மகேந்திர மலிசேர்
எண்ப டைத்தகண் ணிரண்டினர் காணுதல் எளிதோ
விண்ப டைத்தவற் காயினும் அமையுமோ மிகவுங்
கண்ப டைத்தவர்க் கன்றியே கண்டிட லாமோ. - 84



322 - வரம்பில் கட்புலங் கொண்டவ ரேனுமற் றிவ்வூர்
விரும்பி இத்திரு நோக்கினும் அளத்தல்மே வருமோ
வரும்பு யற்குழு வைகலும் பருகினு இதனாற்
பெரும்பு னற்கட லானது முடிவுபெற் றிடுமோ. - 85



323 - கழியும் இந்நகர் ஆக்கமோ கரையிலா இவற்றுள்
விழிகள் எண்ணில பெற்றுளார் தாங்கண்ட வெறுக்கை
மொழிவர் என்னினும் நாவதொன் றான்முடிந் திடுமோ
அழிவில் ஆயிர கோடிநாப் பெறுவரேல் அறைவார். - 86



324 - வாழ்வின் மேதகு மகேந்திரப் பெருமித வளத்தைத்
தாழ்வி லாநெறி கண்டனர் தாலுஎண் ணிலவால்
சூழ்வின் நாடியே பகரினும் மெய்யெலாந் துதையக்
கேள்வி மூலங்கள் இல்லவர் எங்ஙனங் கேட்பார். - 87



325 - ஆயி ரம்பதி னாயிரங் கோடிநா அளவில்
ஆயி ரம்விழி ஆயிரம் ஆயிரஞ் செவிகள்
ஆயி ரம்புந்தி கொண்டுளார்க் கல்லதிவ் வகன்சீர்
ஆயி ரம்யுகங் கண்டுதேர்ந் துரைப்பினும் அடங்கா. - 88



326 - பொய்த்தல் இன்றியே இந்நகர்த் திருவைஐம் புலத்துந்
துய்த்தல் முன்னியே விழைந்துகொல் நோற்றிடுந் தொடா¢பால்
பத்து நூறுடன் ஆயிரங் கோடியாப் பகரும்
இத்தொ கைச்சிரங் கொண்டனர் ஈண்டுளார் எவரும். - 89



327 - முன்ன வர்க்குமுன் னாகிய அறுமுக முதல்வன்*
தன்ன ருட்டிறத் தொல்லையில் பேருருச் சமைந்தே
இந்ந கர்த்திரு யாவையுங் காண்குவன் இன்னே
ஒன்ன லர்க்கெனைக் காட்டுதல் தகாதென ஒழிந்தேன்.

( * வீரவாகு தேவர் சண்முகக் கடவுளின் திருவருட்டிறத்தால் எதுவும்
நடத்துபவரே அன்றித் தனக்கென்று ஒரு சுதந்தரமும் இல்லாதவர் என்-
பார், “முன்னவர்க்கு முன்னாகிய அறுமுக முதல்வன்” என்றார்.) - 90



328 - இனைத்த வாகிய பெருவளம் எல்லையின் றிவற்றை
மனத்தில் நாடினும் பற்பகல் செல்லுமால் மனக்கு
நுனித்து நன்றுநன் றாய்ந்திவை முழுவதும் நோக்க
நினைத்து ளேன்எனின் இங்கிது பொழுதினில் நிரம்பா. - 91



329 - அம்பு யாசனன் தௌ¤கிலா அருமறை முதலைக்
கும்ப மாமுனிக் குதவியே மெய்யருள் கொடுத்த
வெம்பி ரான்பணி புரிகிலா திந்நகர் இருஞ்சீர்
நம்பி நாடியே தெரிந்துபா ணிப்பது நலனோ. - 92



330 - என்று முன்னியே அறுமுகன் தூதுவன் இமயக்
குன்றம் அன்னகீழத் திசைமுதற் கோபுரக் குடுமி
நின்று மாநகர் வளஞ்சில நோக்கியே நெடுஞ்சீர்
துன்று சூருறை திருநகர் அடைவது துணிந்தான். - 93



331 - வனைந்த மாளிகை ஔ¤யினில் இடைப்படு மறுகில்
கனைந்து செற்றியே பரிசனம் பரவுதல் காணா
நினைந்த சூழ்ச்சியான் கீழ்த்திசைச் சிகரியை நீங்கி
நனந்த லைப்பட நகரத்து விண்ணிடை நடந்தான். - 94



332 - வான மாநெறி நீங்கியே மறைகளின் துணிபாம்
ஞான நாயக அறுமுகன் அருள்கொடு நடந்து
தூநி லாவுமிழ் எயிறுடைச் சூர்முதற் சுதனாம்
பானு கோபன துறையுளை எய்தினன் பார்த்தான். - 95



333 - பாய்ந்து செஞ்சுடர்ப் பரிதியைப் பற்றினோன் உறையுள்
ஏந்தல் காணுறீஇ விம்மிதப் பட்டவண் இகந்து
காந்து கண்ணுடை அங்கிமா முகன்நகர் கடந்து
சேந்த மெய்யுடை ஆடகன் உறையுளுந் தீர்ந்தான். - 96



334 - உச்சி யையிரண் டிருபது கரதல் முடைய
வச்சி ரப்பெரு மொய்ம்பினோன் மாளிகை வரைப்பும்
அச்செ னத்தணந் தேகிமூ வாயிரர் ஆகும்
எச்சம் எய்திய மைந்தர்தம் இருக்கையும் இகந்தான். - 97



335 - உரிய மந்திரத் துணைவரில் தலைமைபெற் றுறையுந்
தரும கோபன்றன் கடிமனைச் சிகரமேல் தங்கிச்
சுரரும் வாசவன் மதலையும் அவுணர்கள் சுற்றப்
பரிவு கொண்டமர் சிறைக்களம் நாடியே பார்த்தான். - 98



336 - கறைய டித்தொகை பிரிதலும் கயமுனி* கவர்ந்து
மறையி டத்தினில் வேட்டுவர் உய்ப்பவை குவபோல்
பொறையு டைத்துயர் இந்திரன் போந்தபின் புல்லார்
சிறையி லுற்றவர் செய்கையிற் சிறிதுரை செய்வாம்.
( * கயமுனி - யானைக் கன்று.) - 99

ஆகத் திருவிருத்தம் - 336
----

9. சயந்தன் புலம்புறு படலம் (337 - 417)





337 - பரஞ்சுடர் நெடுங்கணை படுத்த பாயலில்
வருஞ்சசி அனையதோர் வாணு தற்சசி
தருஞ்சிறு குமரனாஞ் சயந்தன் அவ்விடை
அருஞ்சிறை இருந்தனன் அமரர் தம்மொடும். - 1



338 - வாலிதாம் அமரர்சூழ் வைப்பில் இந்திரன்
கோலமா கியதனிக் குமரன் வைகுதல்
மேலைநாள் அமுதெழும் வேலை தன்னிடை
நீலமா முகிலுறை நீர்மை போலுமே. - 2



339 - மழைபுரை அவுணர்சூழ் வைப்பில் வாலொளி
தழுவிய அமரருட் சயந்தன் மேயினான்
கழதரு பணிபல கவரச் சோர்தரும்
முழுமதி அதனிடை முயலுற் றென்னவே. - 3



340 - வென்றிவில் லியற்றிய விஞ்சை நீர்மையால்
கன்றிய கரமெனக் காவற் சாலையில்
பொன்றிகழ் வல்லிகள் பூண்டு பற்பகல்
தன்றுணைத் தாள்களில் தழும்பு சேர்ந்துளான். - 4



341 - இயற்படு மானமும் இகலும் நாணமும்
அயற்பட வெம்பழி அனலஞ் சுற்றிட
உயிர்ப்பெனும் ஓதைநின் றுயிர லைத்திடத்
துயர்ப்பெரும் பரவையூ டழுந்திச் சோருவான். - 5



342 - அண்டருஞ் சிறையினால் வீடும் அல்லதேல்
எண்டரு முகம்பல இடருண் மூழ்கலின்
மண்டுதொல் பழியற வலிது துஞ்சுமால்
உண்டநல் லமுதினால் அவையொ ழிந்துளான். - 6



343 - தணிப்பரும் வெஞ்சினத் தகுவர் மன்னவன்
பணிப்படு சிறைக்களம் பட்டுத் தம்முடல்
துணிப்புறு வோரெனத் துயர்கொண் டோர்கணங்
கணிப்பரு முகங்களாக் கழித்து வைகுவான். - 7



344 - தேவியல் மரகதந் தௌ¤த்துத் தீட்டிய
ஓவிய உருவமா சுண்ட தன்மையான்
ஆவியம் புனலறா தமருங் காவியம்
பூவியல் ¦னிறொடை புலர்ந்த தேயனான். - 8



345 - வியலுகம் நூறுடன் மிக்க வெட்டினுள்
இயலுறு சிறுவரை எனினுந் துஞ்சுமேல்
மயல்சிறி தகலுமால் மரபின் வைகலுந்
துயில்கிலன் ஆதலால் அறாத துன்பினான். - 9



346 - நெஞ்சழி துன்பிடை நீட வைகலில்
துஞ்சலன் வலிதுயிர் துறப்பு மாற்றலன்
எஞ்சுமோ ரிறைவரை இமையுங் கூட்டலன்
விஞ்சிய தவந்துயர் விளைக்கு மாங்கொலோ. - 10



347 - இலங்கிய மரகதத் தியன்று பொன்குலாய்
நலங்கிளர் தன்வனப் பிழந்து நாடொறுஞ்
சலங்கெழும் அவுணர்கள்தமைக்கண் டஞ்சியே
கலங்கினன் உய்வகை யாதுங் காண்கிலான். - 11



348 - சுந்தர மரகதத் தனது தொல்லுரு
வெந்துயர் உழத்தலின் வெய்து யிர்ப்பென
வந்தெழு புகைபட மறைந்து கட்புனல்
சிந்திட உடனுடன் திகழத் தோன்றுமால். - 12



349 - முழுதுறு தன்றுயர் முன்னி முன்னியே
இழுதையர் அவுணரும் இரங்க ஏங்குறா
அழுதிடுங் காப்பினோர் அச்சஞ் செய்தலும்
பழுதுகொல் என்றுவாய் பொத்தும் பாணியால். - 13



350 - இந்திரன் சசியொடும் இருந்த சூழல்போய்த்
தந்தனர் பற்றினர் தமரெ னச்சிலர்
முந்துறு காவலோர் மொழிந்த பொய்யுரை
அந்தம தடையுமுன் அயர்ந்து வீழுமே. - 14



351 - ஐந்தரு நீழலை நினைக்கும் ஆய்மலர்
தந்தமென் பள்ளியை உன்னும் தானெனப்
புந்திகொள் மங்கையர் புணர்ப்பை யுட்கொளும்
இந்திரப் பெருவளம் எண்ணிச் சோருமே. - 15



352 - தன்னிணை இல்லதோர் தருவின் நீழலுள்
நன்னலந் துய்த்தியாம் நாளும் இன்புறும்
பொன்னகர் பூழியாய்ப் போங்கொ லோவெனா
உன்னிடுந் தொன்மைபோல் உறுவ தென்றெனும். - 16



353 - ஈண்டையில் அவுணர்கோன் ஏவத் தானைகள்
சேண்டொடர் துறக்கமேற் செல்ல நாடியே
காண்டகு தம்முருக் கரந்து போயினார்
யாண்டைய ரோவெமை ஈன்று ளாரெனும். - 17



354 - ஏயின துறக்கநா டிழிந்து தொல்லைநாள்
தாயொடு பயந்துள தந்தை பாரகம்
போயினன் எனச்சிலர் புகலக் கேட்டனன்
ஆயிடைப் புகுந்தன அறிகி லேனெனும். - 18



355 - அண்டர்கள் ஒருசிலர் அயர்வு கூறவுட்
கொண்டனர் ஏகினர் குறுகி எந்தையைக்
கண்டன ரேகொலோ கலந்துளார் கொலோ
விண்டன ரேகொலோ விளைவெ னோவெனும். - 19



356 - சீரகம் மிக்கசூர் செயிர்த்துச் செய்திடும்
ஆகுல முழுவதும் அறைய அம்மையோர்
பாகம துடையநம் பரமன் மால்வரைக்
கேகின னேகொலோ எந்தை யென்றிடும். - 20



357 - பொருந்தலர் கண்ணுறாப் பொருட்டுத் தம்முருக்
கரந்தன ரோவழீஇக் குரவர் கள்வர்பால்
பொருந்தின ரேகொலோ புவனம் எங்குமாய்த்
திரிந்தன ரேகொலோ தௌ¤கி லேனெனும். - 21



358 - மாண்கிளர் சூரபன் மாவின் ஏவலால்
ஏண்கிளர் அவுணர்கள் யாயைத் தந்தையை
நாண்கொடு பிணித்திவண் நல்கப் போயினார்
காண்கில ரேகொலோ கரந்த வாறெனும். - 22



359 - அன்புடை யம்மனை அத்தன் ஈங்கிவர்
வன்புடை அவுணர்கள் வரவு காண்பரேல்
துன்புடை மனத்தராய்த் துளங்கி ஏங்கியே
என்படு வார்கொலோ அறிகி லேனெனும். - 23



360 - பொன்னகர் கரிந்ததும் புதல்வ னாகுமென்
றன்னையிம் முதுநகர்த் தந்து தானவர்
துன்னருஞ சிறையிடு துயருங் கேட்டபின்
என்னினைந் திரங்குமோ ஈன்ற தாயெனும். - 24



361 - பன்னெடு மாயைகள் பயின்ற தானவர்
அன்னையொ டத்தனை ஆய்ந்து பற்றியென்
முன்னுறக் காண்டகு முறையின் உய்ப்பினும்
என்னுயிர் பின்னரும் இருக்குங் கொல்லெனும். - 25



362 - ஆற்றருஞ் செல்லலுள் அழுந்தும் பான்மையான்
மேற்றிகழ் பரஞ்சுடர் விமலற் போற்றியே
நோற்றனர் முத்தியின் நுழைகுற் றார்கொலோ
பேற்றினர் இருந்தசொற் பிறந்த தில்லெனும். - 26



363 - தீங்கதிர்ப் பகையொடு செருமு யன்றநாள்
தாங்கியெற் கொண்டுழித் தந்தம் இற்றிட
ஆங்கனம் வீழ்ந்ததால் அதற்கு மேற்பட
யாங்குசென் றதுகொலோ யானை என்றிடும். - 27



364 - பிறப்புறு வைகலைத் தொட்டுப் பின்னரே
இறப்புறு நாள்வரை யாவர்க் காயினும்
உறப்படு துய்ப்பெலாம் ஊழின் ஊற்றமால்
வெறுப்பதென் அவுணரை வினையி னேனெனும். - 28



365 - தாவறு தொன்னகர் விளியத் தந்தைதாய்
ஆவியொ டிரிந்திட அளிய னோர்மகன்
வீவருஞ் சிறைப்பட மேலை நாட்புரி
தீவினை யாவதோ தௌ¤கி லேனெனும். - 29



366 - துப்புறழ சடையினான் சூரற் கீறிலா
அப்பெரு வரத்தினை அளித்த லாலவன்
மெய்ப்பட விளிகிலன் வீடுஞ் செய்கிலன்
எப்பொழு திச்சிறை தீரும் என்றிடும். - 30



367 - மட்டறு வெறுக்கையும் நகரும் வாழ்க்கையும்
விட்டனர் கடந்தனர் மேலை யோரென
உட்டௌ¤ந் தகன்றிலன் உவர்பி ணித்திடப்
பட்டன னேகொலோ பாவி யேனெனும். - 31



368 - மாற்றலன் இவ்வுயிர் வசையு றாவகை
போற்றலன் குரவர்பாற் புகுந்த புன்கணைத்
தேற்றலன் தமியனுந் தௌ¤கி லன்சறை
ஆற்றலன் ஆற்ற லனைய கோவெனும். - 32



369 - துறந்ததோ பேரறந் தொலையுந் தீப்பவஞ்
சிறந்ததோ மாதவப் பயனுந் தேய்ந்ததோ
குறைந்ததோ நன்னெறி கூடிற் றோகலி
இறந்ததோ மறைசிவன் இல்லை யோவெனும். - 33



370 - கூடலர் வருத்தலிற் குரவர் தங்களைத்
தேடினர் விரைவுடன் சென்ற தேவர்போல்
ஓடினர் புகாவகை ஒழிந்து ளோரையும்
வீடருஞ் சிறையிடை வீட்டி னேனெனும். - 34



371 - அந்தியின் மறைமொழி அயர்த்து வைகினன்
சந்தியில் வினைகளுந் தழலும் ஓம்பலன்
எந்தையை வழிபடும் இயல்பு நீங்கினன்
முந்தையின் உணர்ச்சியும் முடிந்து ளேனெனும். - 38



372 - மெய்யுயிர் அகன்றிட விளிகி லேன்எனின்
எய்யுறும் அலக்கண்நீத் தினிது மேவலன்
வையுறு நெடும்புரி வடிவம் வெந்தெனப்
பொய்யுடல் சுமந்தனன் புலம்புற் றேனெனும். - 36



373 - சொல்லுவ தென்பிற தொல்லை வைகலின்
மெல்லென ஆற்றிய வினையின் பான்மையால்
அல்லுறழ் மிடற்றின்எம் மடிக ளேயெமக்
கெல்லையில் இத்துயர் இயற்றி னானெனும். - 37



374 - ஆவியும் உலகமும் அனைத்து மாகியும்
ஓவியுங் கருணையின் உருக்கொண் டாடல்செய்
தேவர்கள் தேவனாஞ் சிவன்மற் றல்லதை
ஏவரென் குறையுணர்ந் திரங்கு வாரெனும். - 38



375 - பெறலருந் திருவெலாம் பிழைத்துச் சூருயிர்
அறுவதும் அவுணர்கள் அவிந்து மாய்வதுஞ்
சிறையிது கழிவதுந் தீர்கி லாவசை
இறுவதும் ஒருபகல் எய்து மோவெனும். - 39



376 - நூறொடர் கேள்வியோர் நுணங்கு சிந்தைசேர்
கூறுடை மதிமுடிக் குழகன் தன்னருட்
பேறுடை யேனெனிற் பெருந்து யர்க்கடல்
ஏறுவன் வினையினேற் கில்லை கொல்லெனும். - 40



377 - இத்திறம் அளப்பில எண்ணி யெண்ணியே
மெய்த்துயர் உழந்துவெய் துயிர்த்து விம்மியே
அத்தலை சுற்றிய அமரர் யாவருந்
தத்தமில் இரங்குறச் சயந்தன் வைகினான். - 41



378 - கண்டகன் உதாவகன் கராளன் மாபலன்
சண்டகன் இசங்கனே சங்க னாதியா
எண்டகும் அவுணர்கள் எண்ணி லோர்குழீஇக்
கொண்டனர் சிறைக்களங் குறுகி ஓம்பினார். - 42



379 - ஆயதோர் காப்பினோர் அறுமு கத்தனி
நாயகன் தூதுவன் நணுகு மப்பகல்
ஏயுறு சயந்தனை இமைப்பி லாரொடு
காயெரி யாமெனக் கனன்று சுற்றினார். - 43



380 - வேறு
மன்னா நங்கோன் தன்பணி நில்லா மகவேந்தும்
மின்னா டானும் யாண்டுறு கின்றார் விரைவாகிச்
சொன்னால் உய்வீர் அல்லதும் மாவி தொலைவிப்பேம்
முன்னா ளேபோல் எண்ணலிர் உண்மை மொழிகென்றார். - 44



381 - என்னுங் காலைக் கேட்ட சயந்தன் எம்மாயும்
மன்னும் வானின் றோடின கண்டாம் மற்றன்னோர்
பின்னங் குற்ற தன்மையும் ஓராம் பிணிநோயுள்
துன்னுந் தீயேம் யாவ துரைத்துஞ் சூழ்ந்தென்றான். - 45



382 - விண்டோய் மன்னன் முன்னொரு நாள்மெல் லியல்தன்னைக்
கொண்டே போனான் இன்னுழி யென்று குறிக்கொள்ளேங்
கண்டோம் அல்லங் கேட்டிலம் உள்ளங் கழிவெய்தப்
புண்டோய் கின்றோம் என்சொல்வ தென்றார் புலவோர்கள். - 46



383 - சொற்றார் இவ்வா றன்னது போழ்தில் துணிவெய்தி
உற்றார் போலும் இங்கிவர் எல்லாம் உளமொன்றி
எற்றால் உண்மை ஓதுவர் இன்னோ ரெனவெண்ணாச்
செற்றா ராகுங் காவலர் துன்பஞ் செய்கின்றார். - 47



384 - வென்னஞ் சென்னக் காயெரி யென்ன மிகுதீஞ்சொல்
முன்னஞ் சொற்றே வைவர் தெழிப்பர் முரணோடுங்
கன்னஞ் செல்லத் தோமரம் உய்ப்பர் கடைகிற்பார்
சின்னஞ் செய்வார் போலுடன் முற்றுஞ் சேதிப்பார். - 48



385 - கண்டந் துண்டஞ் செய்திடும் அங்கம் கடிதொன்றிப்
பிண்டந் தன்னிற் கூட வெகுண்டே பேராற்றல்
கொண்டங் கையால் வாள்கொடு மார்பங் குடைகிற்பார்
தண்டந் தன்னான் மோதுவர் அன்னோர் தலைகீற. - 49



386 - இத்தன் மைத்தாக் காவலர் யாரும் எண்ணில்லா
மெய்த்துன் பத்தைச் செய்திட மைந்தன் விண்ணோர்தங்
கொத்துந் தானும் ஆற்றல னாகிக் குலைவெய்தி
நித்தன் றன்னை உன்னி அரற்ற நிற்கின்றான். - 50



387 - சீற்றத் துப்போர் பல்படை கொண்டே செறுபோழ்து
மாற்றத் துன்பம் பட்டத லான்மெய் யழிவாகி
ஈற்றுத் தன்மை சேர்ந்திலன் விண்ணோர் இறைமைந்தன்
கூற்றிற் பட்டுச் செல்லல் உழக்குங் கொடியோர்போல். - 51



388 - நெஞ்சினில் வாலறி வெய்தினர் ஐம்புல நெறிநின்றும்
எஞ்சிய மேல்வினை பெற்றில தேயென இறும்வண்ணம்
தஞ்செயல் வெய்யோர் செய்யவும் மைந்தன் தமரோடும்
துஞ்சிலன் ஊறும் பெற்றிலன் உற்றான் துயரொன்றே. - 52



389 - மாடே சூழ்வார் தம்மொடு மைந்தன் சிறைபுக்கான்
காடே போனான் இந்திரன் ஏனோர் கவலுற்றார்
பாடே விண்ணோர் தம்பதம் முக்கட் பரன்நல்கும்
வீடே அல்லால் துன்பறும் ஆக்கம் வேறுண்டோ. - 53



390 - அந்தா வாளந் தோமரம் எ•கம் அடுதண்டம்
முந்தா வுற்ற பல்படை யாவும் முரிவெய்தச்
செந்தார் மார்பிற் காவலர் கையுந் திறலெஞ்ச
நொந்தார் இன்னா செய்வது நீத்தார் நுவல்கின்றார். - 54



391 - வீவார் பின்னாள் அல்லது வேறார் வினையத்தால்
சாவார் எஞ்சார் பேரமிர் துண்டார் தவமிக்கார்
நோவார் நாமிங் காற்றிய பாலான் நோய்நொந்தும்
ஆவா யாதுஞ் சொற்றிலர் என்றற் புதமுற்றார். - 55



392 - இன்னோர் யாரும் மைந்தனை வானோர் இனமோடு
மெய்ந்நோ வாகும் பாங்கின் அலைத்த வினையாலே
கைந்நோ வெய்தி வன்மையும் நீங்கிக் கவலுற்றார்
முன்னோர் தம்பாற் செய்த துடன்சூழ் முறையேபோல். - 56



393 - வேறு
அத்தகைய காவல் அவுணர் அவர்க்கணித்தாய்
மொய்த் தொருசார் ஈண்டி முறைநீங் கலர்காப்ப
எய்த்த அமரருடன் இந்திரன்சேய் பண்ணவருள்
உத்தமனாங் கண்ணுதலை உன்னிப் புலம்புறுவான். - 57



394 - வந்திப்பவர் பவங்கள் மாற்றுவோய் எத்தேவர்
சிந்தைக்கும் எட்டாச் சிவனே செழுஞ்சுடரே
இந்தப் பிறவி இடருழப்பச் செய்தனையோ
வந்தித்த நின்புணர்ப்பை யாரே கடந்தாரே. - 58



395 - கைந்நாகத் துக்குங் கயவாய்க்கும் நாரைக்கும்
பைந்நாகத் துக்கும் படருஞ் சிலந்திக்கும்
பின்னாகிய வுயிர்க்கும் பேரருள்முன் செய்தனையால்
என்னா யகனே எமக்கேன் அருளாயே. - 59



396 - கங்கை முடித்தாய் கறைமிடற்றாய் கண்ணுதலாய்
திங்கள் புனைந்தாய் சிவனே சிவனேயென்
றிங்கு நினதடியேம எல்லேங் களும்அரற்றல்
நங்க ளுயிர்க்குயிராம் நாயகநீ கேட்டிலையோ. - 60



397 - பாசங்கொண் டாவி பலவும் பிணிப்போனும்
நேசங்கொண் டாங்கதனை நீக்கியருள் செய்வோனும்
ஈசன் சிவனென் றியம்புமறை நீயிழைத்த
ஆசொன்றும் இத்தீமை ஆர்தவிர்க்க வல்லாரே. - 61



398 - நாரா யணனும்அந்த நான்முகனும் நாடரிய
பேராதி யான பெருமான் உயிர்க்கெல்லாம்
ஆராயின் நீயன்றி யாரே துணையாவார்
வாராய் தமியேன் உயிரளிக்க வாராயே. - 62



399 - சீற்றம் விளைத்துமுனந் தேவர் தொகைஅலைப்பான்
கூற்ற மெனவே குறுகுற்ற அந்தகனும்
ஆற்றல் இழப்பஅகல் மார்பில் முத்தலைவேல்
கூற்றியவன் நீயன்றோ எமக்கேன் இரங்கலையே. - 63



400 - ஏங்கி அமரர் இரிந்தோட வேதுரந்த
ஓங்கு குரண்டத் துருக்கொண்ட தானவனைத்
தீங்கு பெறத்தடிந்து சின்னமா ஓர்சிறையை
வாங்கி அணிந்தஅருள் இங்கென்பால் வைத்திலையே. - 64



401 - ஞாலத் தினையளித்த நான்முகனும் நின்றவற்றைப்
பாலித் தவனும் பிறரும் பணிந்திரங்க
ஓலக் கடலுள் உலகந் தொலைப்ப வந்த
ஆலத்தை உண்டஅருள் என்பால் அயர்த்தனையோ. - 65



402 - மோடி தரவந்த முக்க ணுடைக்காளி
ஓடி உலகுயிர்கள் உண்ணும் படியெழலும்
நாடி யவள்வெருவி நாணிச் செருக்ககல
ஆடி யருள்செய்த அருளிங் கணுகாதோ. - 66



403 - பொற்றைக் கயிலைப் புகல்புக்க தேவர்தமைச்
செற்றத் துடனடவே சென்ற சலந்தரனை
ஒற்றைத் திகிரிப் படையால் உடல்பிளந்தே
அற்றைப் பகல்அவரை அஞ்சலென்றாய் நீயன்றோ. - 67



404 - நந்துற்ற கங்கை நதிசெறியும் காசிதனில்
தந்திக் கொடியோன் தவத்தோர் தமைத்துரந்து
வந்துற் றிடச்சினவி வன்தோ லினையுரித்த
அந்தக் கருணைக் களியரேம் பற்றிலமோ. - 68



405 - ஈரஞ்சு சென்னி இருபான் புயங்கொண்டோர்
ஓரஞ் சரக்கர் உலகலைப்ப அன்னவரை
வீரஞ்செய் தட்ட விமல எமைஅவுணர்
கோரஞ்செய் கின்ற கொடுந்தொழிலுட் கொள்ளாயோ. - 69



406 - பண்டை மகவான் பரிசுணராத் தக்கனைப்போல்
அண்டர்பிரான் நின்னை அரியாதோர் வேள்விசெயத்
துண்டமது செய்து சுரரையவன் தோள்முரித்தாய்
தண்ட மதனையின்று தானவர்பாற் காட்டாயோ. - 70



407 - சிந்தப் புரங்கொடிய தீயவுணர் மூவகைத்தாம்
அந்தப் புரங்கள் அடல்செய்தாய் எம்பெருமான்
சந்தப் புரங்கொண்ட தானவரோ டொன்றாகும்
இந்தப் புரமும் எரிக்குதவ ஒண்ணாதோ. - 71



408 - அன்பான் அவருக் கருளுதியாற் பத்திநெறி
என்பால் இலையால் இறையும் எவனளித்தி
நன்பால் மதிமிலைச்சு நாயகனே நல்லருள்கூர்
உன்பால் மிகநொந்தே ஓதியதென் பேதைமையே. - 72



409 - ஆனாலுந் தீயேன் அழுங்க அருள்கொடுநீ
தானாக நண்ணித் தலையளிசெய் தாண்டாயேல்
ஆனாத இத்துயரம் ஆறுமே ஆறியக்கால்
மேனாள் எனயான் துறக்கவளன் வேண்டிலனே. - 73



410 - வென்றி அரக்கரால் மேதகைய தானவரால்
அன்றி முனிவரால் அண்டரால் ஏனையரால்
ஒன்று செயவொன்றாய் உறுதுயரத் தாழ்ந்ததன்றி
என்று மகிழ்வாய் இடரற் றிருந்தனமே. - 74



411 - கீற்று மதியுங் கிளர்வெம் பொறியரவும்
ஆற்றி னொடுமிலைந்த ஆதியே நின்னருளால்
ஏற்ற மிகும்இலக்கண் ஏகின் இழிந்தவளம்
போற்று கிலன்நோற்றல் புரிவேன் புரிவேனே. - 75



412 - தண்டேன் துளிக்குந் தருநிழற்கீழ் வாழ்க்கைவெ•கிக்
கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோதென்றே
கண்டேன் பிறர்தம் பதத்தொலைவுங் கண்டனனால்
தொண்டேன் சிவனேநின் தொல்பதமே வேண்டுவனே. - 76



413 - அல்லற் பிறவி அலமலம்விண் ணாடுறைந்து
தொல்லைத் திருநுகருந் துன்பும் அலமலமால்
தில்லைத் திருநடஞ்செய் தேவே இனித்தமியேற்
கொல்லைத் துயர்தீர்த் துனதுபதந் தந்தருளே. - 77



414 - ஒன்றாய் இருதிறமாய் ஓரைந்தாய் ஐயைந்தாய்
அன்றா தியின்மீட்டும் ஐந்தாய் அளப்பிலவாய்
நின்றாய் சிவனேயிந் நீர்மையெலாந் தீங்ககற்றி
நன்றா விகட்கு நலம்புரிதற் கேயன்றோ. - 78



415 - பொன்பொலியுங் கொன்றைப் புரிசடையாய் இவ்வழிசேர்
துன்ப மகற்றித் துறக்கத்துள் தாழாது
பின்பு நனிநோற்றுப் பெறற்கரிதாம் நின்னடிக்கீழ்
இன்பம் ஒருதலையா எய்தவரு ளாய்எனக்கே. - 79



416 - வேறு
என்று பற்பல இரங்கியே விடஞ்செறிந் தென்னச்
சென்று சென்றிடர் மூடுறா உணர்வெலாஞ் சிதைப்ப
ஒன்றும் ஒர்கிலன் மயங்கினன் உயிர்கரந் துலையப்
பொன்றி னார்களின் மறிந்தனன் இந்திரன் புதல்வன். - 80



417 - ஆங்க வன்றனைப் போலவே அமரரும் அழுங்கி
ஏங்கி ஆருயிர் பதைத்திட வீழ்ந்துணர் வீழந்தார்
தூங்கு வீழுறு பழுமரஞ் சாய்தலுந் தொடா¢ந்து
பாங்கர் கூற்றிய வல்லிகள் தியங்கிவீழ் பரிசின். - 81

ஆகத் திருவிருத்தம் - 417
------

10. சயந்தன் கனவுகாண் படலம் (418 - 445)




418 - விண்ணு ளார்களுஞ் சயந்தனும் வியன்மகேந் திரத்தின்
உண்ணி லாம்பெருந் துயருடன் மாழ்கிய துணர்ந்தான்
எண்ணி லாவுயிர் தோறுமுற் றின்னருள் புரியும்
அண்ண லார்கும ரேசனாம் அறுமுகத் தமலன். - 1



419 - வெஞ்சி றைத்தலை மூழ்கியே அவுணரால் மெலிந்து
நெஞ்ச ழிந்திடும் அவர்தமை அருள்வது நினைந்தான்
தஞ்ச மின்றியே தனித்தயர் சிறுவரைத் தழுவி
அஞ்ச லென்றுபோற் றிடவரும் ஈன்றயாய் அனையான். - 2



420 - இனிய சீறடிக் குமரனிற் செந்திவந் திமையோர்
வினைகொள் கம்பலை அகற்றுவான் இருந்திடும் விமலன்
தனது ணர்ச்சியின் றாகியே அவசமாஞ் சயந்தன்
கனவின் முன்னுற வந்தனன் அருள்புரி கருத்தால். - 3



421 - வீறு கேதனம் வச்சிரம் அங்குசம் விசிகம்
மாறி லாதவேல் அபயமே வலமிடம் வரதம்
ஏறு பங்கயம் மணிமழுத் தண்டுவில் இசைந்த
ஆறி ரண்டுகை அறுமகங் கொண்டுவேள் அடைந்தான். - 4



422 - தந்தை யில்லதோர் பரமனைத் தாதையா வுடைய
கந்தன் ஏகியே யுனையதன் னுருவினைக் காட்ட
இந்தி ரன்மகன் உளப்படும் யாக்கையுள் இருந்த
முந்து கண்களாற் கண்டனன் தொழுதனன் மொழிவான். - 5



423 - தொண்ட னேன்படும் இடுக்கணை நாடியே தொலைப்பான்
கொண்ட பேரருள் நீர்மையிற் போந்தனை குறிக்கின்
விண்டும் அல்லைஅப் பிரமனும் அல்லைமே லாகும்
அண்டர் நாதனும் அல்லைநீ ஏவர்மற் றருளே. - 6



424 - என்ற காலையில் அறுமுகப் பண்ணவன் யாம்அக்
கொன்றை வேணியின் மிலைச்சிய பரஞ்சுடர் குமரன்
உன்றன் அல்லலும் இரக்கமும் மையலும் உணர்ந்து
சென்ற னம்மெனக் கூறியே பின்னருஞ் செப்பும். - 7



425 - நுந்தை தன்குறை நுங்குறை யாவையும் நுவன்று
வந்து நந்தமை வேண்டலும் வரம்பில்சே னையொடும்
இந்த ஞாலத்தின் எய்தியே கிரவுஞ்சம் என்னும்
அந்த வெற்பையுந் தாரகன் தன்னையும் அட்டாம். - 8



426 - அனைய வன்றனை அட்டபின் செந்திவந் தமர்ந்தாம்
வனச மீமிசை இருந்திடு பிரமனும் மாலும்
உனது தாதையும் அமரரும் நம்வயின் உறைந்தார்
இனையல் வாழிகேள் நுங்கையும் மேருவின் இருந்தாள். - 9



427 - வீர வாகுவாந் தூதனை யாமிவண் வித்தேஞ்
சூரன் மைந்தன்அங் கொருவனைப் பலரொடுந் தொலையா
நேரி லாதஇக் கடிநகர் அழித்து நீறாக்கிப்
பாரின் மாலையில் மீண்டிடப் புரிதுமிப் பகலின். - 10



428 - செல்லும் இப்பகல் கழிந்தபின் நாளையே செந்தி
மல்ல லம்பதி நீங்கிஇந் தங்கையல் வைகிச்
சொல்லும் ஐந்திரு வைகலின் அவுணர்தந் தொகையும்
அல்லல் ஆற்றிய சூரனும் முடிந்திட அடுதும். - 11



429 - அட்ட பின்னரே நின்னைவா னவருடன் அவுணன்
இட்ட வெஞ்சிறை நீக்கிநுந் திருவெலாம் ஈதும்
விட்டி டிங்குன தாகுலம் என்றனன் வினைதீர்ந்
துட்டே ளிந்தவர் போதத்தின் உணர்வுமாய் உறைவோன். - 12



430 - ஐயன் ஈங்கிவை உரைத்தவை கேட்டலும் அகத்துள்
மையல் மாசிருள் அகன்றன புகுந்தன மகிழ்ச்சி
மெய்யு ரோமங்கள் சிலிர்த்தன உகுத்தன விரிநீர்
சைய மேயென நிமிர்ந்தன சயந்தன தடந்தோள். - 13



431 - பற்றி னால்வரும் அமிர்தினை எளிதுறப் படைத்துத்
துற்று ளோரெனத் தண்ணெனத் தனதுமெய் சுருதி
கற்ற கற்றன பாடினான் ஆடினான் களித்தான்
மற்ற வன்பெறும் உவகையின் பெருமையார் வகுப்பார். - 14



432 - வேறு
நிகழ்ந்திடு மறவியை நீங்கி இவ்வகை
மகிழ்ந்திடும் இந்திரன் மதலை எம்பிரான்
திகழ்ந்திடு பதமலர் சென்றி றைஞ்சியே
புகழ்ந்தனன் இனையன புகல்வ தாயினான். - 15



433 - நொய்யசீர் அடியரேம் நோவு மாற்றியே
ஐயநீ வலிதுவந் தளித்தி யானுரை
செய்வதும் உண்டுகொல் சிறிது நின்கணே
கையடை புகுந்தனங் காத்தி யாலென்றான். - 16



434 - சயந்தன்மற் றிவ்வகை சாற்ற யாரினும்
உயர்ந்திடு பரஞ்சுடர் ஒருவன் கேட்குறா
அயர்ந்தநுங் குறையற அளித்துந் திண்ணமென்
றியைந்திட மேலுமொன் றிசைத்தல் மேயினான். - 17



435 - இந்நகர் குறுகயாம் ஏய தூதுவன்
நின்னையுஞ் சுரரையும நேர்ந்து கண்ணுறீஇ
நன்னயங் கூறியே நடப்ப உய்க்குதும்
அன்னதுங் காண்கென அருளிப் போயினான். - 18



436 - படைப்புறா தயர்ந்திடு பங்க யன்கனா
அடுத்துனக் கருள்செய ஆறொ டைவரை
விடுத்துமென் றேகிய விமலன் போலவே
இடர்ப்படு சயந்தன்முன் இவைசொற் றேகினான். - 19



437 - ஏகிய காலையின் இறந்து முன்னரே
போகிய புலமெலாம் பொறியில் தோன்றலும்
ஆகிய கனவினை அகன்று பைப்பய
நாகர்கோன் திருமகன் நனவின் நண்ணினான். - 20



438 - வேறு
தந்தி நஞ்சந் தலைக்கொளச் சாய்ந்தவர்
மந்தி ரத்தவர் வாய்மைவந் துற்றுழிச்
சிந்தை மையலைத் தீர்ந்தெழு மாறுபோல் *
இந்தி ரன்தன் மதலை எழுந்தனன்.
( * மந்திரத்தவர்ஸஸஸதீர்ந்தெழுமாறுபோல் - மந்திரம்
அறிந்தவர்களது சத்தியம் பொருந்திய உடனே விஷ
மயக்கம் நீங்கி எழுந்தன்மை போல வந்துற்றுழி - கேட்டவுடனே
எனினுமாம்.) - 21



439 - நனவு தன்னிடை நண்ணிய சீர்மகன்
கனவின் எல்லையிற் கண்டன யாவையும்
நினைவு தோன்றினன் நெஞ்சங் குளிர்ந்துநம்
வினையெ லாமிவண் வீடிய வோவென்றான். - 22



440 - கவலை தூங்கிக் கடுந்துயர் நீரதாய்
அவல மாகிய ஆழியில் ஆழ்ந்துளான்
சிவகு மாரன் திருவருள் உன்னியே
உவகை யென்னும் ஒலிகடல் மூழ்கினான். - 23



441 - அனைய காலை அயர்ந்திடு வானுளோர்
கனவு தோறுங் கடிதுசென் றிந்திரன்
தனய னுக்குமுன் சாற்றிய வாறுசொற்
றினைய ரென ஏகினன் எம்பிரான். - 24



442 - அம்மென் கொன்றை அணிமுடிக் கொண்டவன்
செம்ம லேகலுந் தேவர்க னாவொரீஇ
விம்மி தத்தின் விழித்தெழுந் தேயிரீஇ
தம்மி லோர்ந்து தவமகிழ் வெய்தினார். - 25



443 - சில்லை வெம்மொழித் தீயவர் கேட்பரேல்
அல்லல் செய்வரென் றஞ்சிக் கனாத்திறம்
மல்லன் மைந்தன் மருங்குறு வார்சிலர்
மெல்ல அங்கவன் கேட்க விளம்பினார். - 26



444 - வேறு
அண்டர்கள் மொழிதரும் அற்பு தத்தையுட்
கொண்டனன் அங்கவை குமரன் றான்முனங்
கண்டது போன்றிடக் களித்துப் பாரெலாம்
உண்டவ னாமென உடலம் விம்மினான். - 27



445 - அறுமுக முடையதோர் ஆதி நாயகன்
இறைதரும் உலகெலாம் நீங்கல் இன்றியே
உறைவதுங் கருணைசெய் திறனும் உன்னியே
மறைமுறை அவனடி வழுத்தி வைகினான். - 28

ஆகத் திருவிருத்தம் - 445
----

11. வீரவாகு சயந்தனை தேற்று படலம் (446 - 480)




446 - இத்திறம் அமரரொ டிந்தி ரன்மகன்
அத்தலை இருத்தலும் அனையர் யாவரும்
மொய்த்திடு சிறையக முன்கண் டானரோ
வித்தக அறிவனாம் வீர வாகுவே. - 1



447 - வேறு
மாகண்டம் ஒன்பான் புகழுந் திறல்வாகு அங்கண்
ஆகண்டலன் மைந்தனை விண்ணவ ராயி னாரைக்
காய்கண்ட கராமவு ணத்தொகை காத்தல் கண்டான்
பேய்கண்ட செல்வந் தனைக்காத் திடும்பெற்றி யேபோல். - 2



448 - கண்ணோட லின்றித் துயர்வேலியிற் காவல் கொண்ட
எண்ணோர் எனைக்கண் டிலராயுணர் வின்றி மாழ்க
விண்ணோர்கள் காணத் தமியேன் செலவேண்டு மென்றான்
மண்ணோர் அடியால் அளக்குந்தனி மாயன் ஒப்பான். - 3



448 - ஓங்கார மூலப் பொருளாய் உயிர்தோறு மென்றும்
நீங்கா தமருங் குமரேசனை நெஞசில் உன்னி
யாங்காகுவ தோரவன் மந்திரம் அன்பி னோதித்
தீங்கா மவுணர் செறிகாப்பகஞ் சென்று புக்கான். - 4



450 - தாமந்தரும் மொய்ம்புடை வீரன் சயந்தன் விண்ணோர்
ஏமந்தரு வன்சிறைச் சூழலுள் ஏக லோடுந்
தூமந்திகழ் மெய்யுடைக் காவலர் துப்பு நீங்கி
மாமந் திரமாம் வலைப்பட்டு மயங்கல் உற்றார். - 5



451 - எண்டா னவரிற் புடைகாப்பவர் யாரும் மையல்
கொண்டார் குயிற்றப் படுமோவியக் கொள்கை மேவத்
தண்டார் அயில்வேற் படைநாயகன் தானை வேந்தைக்
கண்டார் சயந்த னொடுதேவர் கருத லுற்றார். - 6



452 - ஏமாந் தவுணர் சிறுகாலையின் இன்னல் செய்ய
நாமாண் டனர்போல் அவசத்தின் அணுகு மெல்லை
மாமாண் படைய அருள்செய்தநம் வள்ளல் தூதன்
ஆமாம் இவனென் றகங்கொண்டனர் ஆர்வ முற்றார். - 7



453 - அன்னா அமருங் களஞ்சென் றயிலேந்து நம்பி
நன்னா யகமாந் திருநாமம் நவின்று போற்றிப்
பொன்னா டிறைகூர் திருநீங்கிய புங்க வன்றன்
முன்னா அணுகி இருந்தான்அடல் மொய்ம்பின் மேலோன். - 8



454 - செறிகின்ற ஞானத் தனிநாயகச் செம்மல் நாமம்
எறிகின்ற வேலை அமுதிற்செவி ஏக லோடும்
மறிகின்ற துன்பிற் சயந்தன் மகிழ்வெய்தி முன்னர்
அறிகின்றி லன்போல் தொழுதின்ன அறைத லுற்றான். - 9



455 - தாவம் பிணித்த தெனுங்குஞ்சித் தகுவ ரானோர்
பாவந் தலைச்சூழ் வதுபோலெமைப் பாடு காப்ப
மாவெம் படரில் இருந்தேங்கண் மருங்கின் ஐய
நீவந்த தென்னை இனிதிங்கு நிகழ்த்து கென்றான். - 10



456 - வேறு
முறையுணர் கேள்வி வீரன் மொழிகுவான் முதல்வன் தந்த
அறுமுக ஐயன் தன்பின் அடுத்துளேன் அவன்தூ தானேன்
விறல்கெழு நந்தி பாலேன் வீரவர கென்போ¢ நுங்கள்
சிறைவிடும் பொருட் சூர்முன் செப்புவான் வந்தேன் என்றான். - 11



457 - என்னலும் அமர ரோடும் இந்திரன் குமரன் கேளாச்
சென்னியின் அமிர்துள் ளூறல் செய்தவத் தயின்ற மேலோர்
அன்னதற் பின்னர் நேமி அமிர்தமும் பெற்றுண் டாங்கு
முன்னுறு மகிழ்ச்சி மேலும் முடிவிலா மகிழ்ச்சி வைத்தான். - 12



458 - அந்தர முதல்வன் மைந்தன் அறைகுவான் ஐய துன்பூர்
புந்தியேங் குறைவி னாதற் பொருட்டினாற் போந்தாய் அற்றால்
இந்தவன் சிறையும் நீங்கிற் றிடரெலாம் அகன்றி யாங்கள்
உய்ந்தனம் பவங்கள் தீரும் ஊதியம் படைத்து மென்றான். - 13



459 - பூண்டகு தடந்தோள் வீரன் புகலுவான் சூர்மேல் ஒற்றா
ஈண்டனை விடுத்த வேற்கை எம்பிரான் வலிதே நும்மை
ஆண்டிடு கின்றான் முன்னர் ஆக்கமும் பெறுதின் பின்னும்
வேண்டிய தெய்து கின்றீர் என்றனன் மேலுஞ் சொல்வான். - 14



460 - உலமெலாங் கடந்த தொளீர் உன்னுதிர் உன்னி யாங்கு
நலமெலாம் வழிபட் டோர்க்கு நல்கிய குமரன் தன்னால்
தலமெலாம் படைத்த தொல்லைச் சதுர்முகன் முதலாம் வானோர்
குலமெலாம் உய்ந்த தென்றால் உமக்கொரு குறையுண் டாமோ. - 15



461 - தேவர்கள் தேவன் வேண்டச் சிறைவிடுத் தயனைக் காத்த
மூவிரு முகத்து வள்ளல் முழுதருள் செய்தா னும்பால்
பாவமும் பழியுந் தீங்கும் பையுளும் பிறவு மெல்லாம்
போவது பொருளோ தோற்றப் புணரியும் பிழைத்தீர் அன்றே. - 16



462 - சீர்செய்த கமலத் தோனைச் சிறைசெய்து விசும்பி னோடும்
பார்செய்த வுயிர்கள் செய்த பரஞ்சுடர் நும்மை யெல்லாஞ்
சூர்செய்த சிறையிந் நீக்கத் தொடர்ந்திவண் உற்றான் என்றால்
நீர்செய்த தவத்தை யாரே செய்தனர் நெடிது காலம். - 17



463 - சங்கையில் பவங்கள் ஆற்றுந் தானவர் செறிந்த மூதூர்
இங்கிதின் அறிஞர் செல்லார் எம்பிரான் அருளி னால்யான்
அங்கணம் படர்வோர் என்ன அகமெலிந் துற்றேன் ஈண்டே
உங்களை யெதிர்த லாலே உலப்பிலா உவகை பூத்தேன். - 18



464 - என்றலும் மகிழ்ச்சி எய்தி இந்திரன் மதலை யாங்கள்
வன்றளைப் படுமுன் போனார் மற்றெமைப் பயந்தோர் அன்னோர்
அன்றுதொட் டின்று காறும் ஆற்றிய செயலும் அற்றால்
ஒன்றிய பயனும் யாவும் உரைமதி பெரியோ யென்றான். - 19



465 - வீரனங் கதனைக் கேளா விண்ணவர் கோமான் தொன்னாள்
ஆரணங் குடனே காழி யடைந்ததே எழுவா யாகச்
சீரலை வாயில் அந்நாட் சென்றிடு காறு முள்ள
காரிய நிகழ்ச்சி யெல்லாங் கடிதினிற் கழறி னானே. - 20



466 - மேதகு தடந்தோள் வீரன் விண்ணவர் கோமான் செய்கை
ஓதலுஞ் சயந்தன் கேளா உரைசெய்வான் அன்னை தன்னைத்
தாதையை யடிகள் தன்னைச் சண்முகத் தனிவேற் செங்கை
ஆதியை யெதிர்ந்தால் ஒத்தேன் ஐயநின் மொழிகேட் டென்றான். - 21



467 - இறைதரும் அமரர் தம்மோ டிந்திரன் புதல்வன் றன்னை
அறிவரில் அறிவன் கண்ணுற் றறுமுகம் படைத்த அண்ணல்
மறையிடை வதிந்த நுங்கள் வன்சிறை மாற்றும் வைகல்
சிறிதிவண் இருத்தி ரென்று பின்னருஞ் செப்பு கின்றான். - 22



468 - தன்னிகர் இன்றி மேலாய்த் தற்பர வொளியா யாரும்
உன்னரும பரமாய் நின்ற ஒருவனே முகங்க ளாறும்
பன்னிரு புயமுங் கொண்டு பாலகன் போன்று கந்தன்
என்னு மோர்பெயரும் எய்தி யாவருங் காண வந்தான். - 23



469 - பங்கய முகங்கள் ஆறும் பன்னிரு புயமும் கொண்ட
எங்கடம் பெருமான் போந்த ஏதுமற் றென்னை என்னில்
செங்கண்மா லுந்தி பூத்தோன் சிறுமையும் மகவான் துன்பும்
உங்கடஞ் சிறையும் நீக்கி உலகெலாம் அளிப்பக் கண்டாய். - 24



470 - சிறுவிதி வேள்வி நண்ணித் தீயவி நுர்ந்த பாவம்
முறைதனில் வீரன் செற்று முற்றவு முடிந்த தில்லை
குறைசில இருந்த ஆற்றாற் கூடிய துமக்கித் துன்பம்
அறுமுகப் பெருமான் அன்றி யாரிது நீக்கற் பாலார். - 25



471 - தாட்கொண்ட கமல மன்ன சண்முகத் தெந்தை வேலாற்
காட்கொண்ட கிரியி னோடு தாரகற் கடந்த பூசல்
தோட்கொண்ட மதுகை சான்ற சூர்முதல் களைய முன்னம்
நாட்கொண்ட தன்மையன்றோ நறைகொண்ட அலங்கல் தோளாய். - 25



472 - காலுறக் குனித்துப் பூட்டிக் கார்முகத் துய்ப்ப ஓர்செங்
கோலினுக் குண்டி யாற்றார் குணிப்பிலா அவுணர் யாரும்
மாலினுக் கரிதாம் அண்ணல் மாமகன் கரத்திற் கொண்ட
வேலினுக் கிலக்க தில்லை விடுப்பது மிகைய தன்றே. - 27



473 - வாரிதி ஏழும் எண்ணில் வரைகளும் பிறவுங் கொண்ட
பாருடன் உலகீ ரேழும் படைத்தபல் லண்டம் யாவும்
ஓரிறை முன்னம் அட்டே உண்டிடும் ஒருவன் செவ்வேல்
சூரனை அவுண ரோடுந் தொலைப்பதோர் விளையாட் டம்மா. - 28



474 - சுறமறி அளக்கர் வைகுஞ் சூரபன் மாவின் மார்பில்
எறிசுடர் எ•கம் வீசி இருபிள வாக்கின் அல்லால்
சிறையுளீர் மீள்கி லாமை தேற்றியும் பொருநர் செய்யும்
அறநெறி தூக்கி ஒற்றா அடியனை விடுத்தான் ஐயன். - 29



475 - ஆளுடை முதல்வன் மாற்றம் அவுணருக் கிறைவன் முன்போய்க்
கேளிதென் றுரைப்பன் அற்றே கிளத்தினுங் கடனாக் கொள்ளான்
மீளுவன் புகுந்த தெல்லாம் விளம்புவன் வினவி எங்கோன்
நாளைவந் திவரை யெல்லாம் நாமற முடிப்பன் காண்டி. - 30



476 - நீண்டவன் தனக்கும் எட்டா நெடியதோர் குமரன் செவ்வேல்
ஆண்டிருந் தேயும் உய்த்தே அவுணர்யா வரையுங் கொல்லும்
பாண்டிலந் தேர்மேற் கொண்டு படைபுறங் காத்துச் சூழ
ஈண்டுவந் தடுதல் அன்னாற் கிதுவுமோ ராடல் அன்றே. - 31



477 - ஈரிரண் டிருமூன் றாகும் இரும்பக லிடையே எங்கோன்
ஆரிருஞ் சமர மூட்டி அவுணர்தம் மனிகந் தன்னைச்
சூரொடு முடித்து நும்மைத் துயா¢ச்சிறைத் தொடர்ச்சி நீக்கிப்
பேரிருஞ் சிறப்பு நல்கும் பிறவொன்று நினையல் மன்னோ. - 32



478 - என்றிவை பலவும் வீரன் இமையவர் குழத்தி னோடுங்
குன்றெறி பகைஞன் மைந்த னுணர்தரக் கூற லோடு
நன்றென உவகை பூத்து நாமவேல் நம்பி யாற்ற
வென்றிபெற் றிடுக வென்று வீற்றுவீற் றாசி சொற்றார். - 33



479 - எண்டகும் ஆகி கூறி இந்திரன் றனது மைந்தன்
அண்டரொ டங்கை கூப்பி அளியரேந் தன்மை யெல்லாங்
கண்டனை தாதை கேட்பக் கழறுதி இவண்நீ யுள்ளங்
கொண்டது முடிக்கப் போதி குரைகழற் குமர வென்றான். - 34



480 - வயந்திகழ் விடலை அங்கண் மற்றவர் தம்மை நீங்கிக்
கயந்தகு காவ லோர்தங் கருத்தின்மால் அகற்றி யேக
இயந்திர மன்னோர் தேறி இமையவர் குழாத்தி னோடு
சயந்தனைச் சுற்றி முன்போல் தடைமுறை ஓம்ப லுற்றார். - 35

ஆகத் திருவிருத்தம் - 480
------

12. அவைபுகு படலம் (481 - 639)




481 - மடந்தையொ டிரிந்திடும் வாச வன்முகன்
அடைந்திடு சிறைக்களம் அகன்று வானெறி
நடந்தனன் அவுணர்கோன் நண்ணு கோன்நகர்
இடந்தரு கிடங்கரை இகந்து போயினான். - 1



482 - அகழியை நீங்கினான் அயுதந் தனின்னும்
மிகுதிகொள் நாற்படை வௌ¢ளந் தானைகள்
தகுதியின் முறைமுறை சாரச் சுற்றிய
முகில்தவழ் நெடுமதில் முன்ன ரேகினான். - 2



483 - கான்கொடி கங்கைநீர் கரப்ப மாந்தியே
மீன்கதிர் உடுபதி விழுங்கி விட்டிடும்
வான்கெழு கடிமதில் வரைப்பின் முன்னரே
தான்கிளர் கோபுரங் கண்டு சாற்றுவான். - 3



484 - குரைகடல் உண்டவன் கொண்ட தண்டினால்
வருபுழை மீமிசை வாய்ப்பத் தாரகன்
பெருவரை நிமிர்ந்திடு பெற்றி போலுமால்
திருநிலை பலவுடைச் சிகரி நின்றதே. - 4



485 - தூணம துறழபுயச் சூரன் என்பவன்
சேணுறும் அண்டமேற் செல்லச் செய்ததோர்
ஏணிகொ லோவிது என்ன நின்றதால்
நீணிலை பலவுடன் நிமிர்ந்த கோபுரம். - 5



486 - துங்கமொ டிறைபுரி சூரன் கோயிலி
பொங்குசெம் மணிசெறி பொன்செய் கோபுரம்
எங்கணு முடியுநாள் இரளி வாய்ப்படும்
அங்கிவிண் காறெழும் வடிவம் அன்னதே. - 6



487 - அண்டமங் கெவற்றினும் அமர்ந்து நிற்புறும்
விண்டொடர் வரைகளும் மேரு வானவும்
பண்டிதன் மிசையுறப் பதித்த தொக்குமாற்
கொண்டியல் சிகரியுட் கூட சாலைகள். - 7



488 - மெய்ச்சுடர் கெழுமிய வியன்பொற் கோபுரம்
உச்சியில் தொடுத்திட முழங்கு கேதனம்
அச்சுத னாஞ்சிவன் அளவை தீர்முகத்
துச்சிதொ றிருந்தரா ஒலித்தல் போலுமால். - 8



489 - திசைபடு சிகரியிற் செறிந்த வான்கொடி
மிசைபடும் அண்டமேல் விடாமல் எற்றுவ
பசைபடும் அதளுடைப் பணைய கத்தினில்
இசைபடப் பலகடிப் பெரிதல் போலுமால். - 9



490 - விண்ணவர் தாமுறை வியன்ப தத்தொடுந்
திண்ணிலை இடந்தொறுஞ் சிவண வைகினர்
அண்ணலங் கோபுரம் அதனிற் கைவலோன்
பண்ணுறும் ஓவியப் பாவை என்னவே. - 10



491 - என்பன பலபல இயம்பி ஈறிலாப்
பொன்புனை தோணியம் புரிசைச் சூழலின்
முன்புறு கோபுர வனப்பு முற்றவும்
நன்பெரு மகிழ்ச்சியான் நம்பி நோக்கினான். - 11



492 - என்பன பலபல இயம்பி ஈறிலாப்
புதவுறு கோபுரப் பொருவில் வாய்தலுள்
மதவலி உக்கிரன் மயூர னாதியோர்
அதிர்தரு நாற்படை அயுதஞ் சுற்றிடக்
கதமொடு காப்பது காளை நோக்கினான். - 12



493 - என்பன பலபல இயம்பி ஈறிலாப்
நோக்கிய திறலவன் நொச்சி தாவியே
ஆக்கமொ டமர்தரும் அவுணன் கோயிலுள்
ஊக்கமொ டும்பரான் ஓடி முன்னுறு
மேக்குயர் குளிகை மிசையிற் போயினான். - 13



494 - என்பன பலபல இயம்பி ஈறிலாப்
வேறு
சூளிகை மீமிசை துன்னுபு சூரன்
மாளிகை யுள்ளவ ளந்தனை யெல்லாம்
மீளரி தாவிழி யோடுள மேவ
ஆளரி நேர்தரும் ஆண்டகை கண்டாள். - 14



495 - என்பன பலபல இயம்பி ஈறிலாப்
கண்டதொ ரண்ணல் கடுந்திறல் வெஞ்சூர்
திண்டிறல் வாளரி சென்னிகொள் பீடத்
தெண்டகும் ஆணை இயற்றிய செம்பொன்
மண்டபம் வைகுறும் வண்மை தெரிந்தான். - 15



496 - என்பன பலபல இயம்பி ஈறிலாப்
அருந்தவ வேள்வி அயர்ந்தரன் ஈயும்
பெருந்திரு மிக்கன பெற்றுல கெல்லாந்
திருந்தடி வந்தனை செய்திட வெஞ்சூர்
இருந்திடு கின்ற இயற்கை இசைப்பாம். - 16



497 - என்பன பலபல இயம்பி ஈறிலாப்
ஐயிரு நூறெனும் யோசனை யான்றே
மொய்யொளி மாழையின் முற்றவு மாகித்
துய்யபன் மாமணி துஞ்சிவில் வீசி
மையறு காட்சிகொள் மண்டபம் ஒன்றின். - 17



498 - என்பன பலபல இயம்பி ஈறிலாப்
மேனகை யோடு திலோத்தமை மெய்யின்
ஊனமில் காமர் உருப்பசி யாதி
வானவர் மங்கையர் வட்டம் அசைத்தே
மேனிமிர் சீகரம் வீசினர் நிற்ப. - 18



499 - என்பன பலபல இயம்பி ஈறிலாப்
சித்திர மாமதி செங்கதிர் பாங்காய்
முத்தணி வேய்ந்து முகட்டிள நீலம்
உய்த்து மணித்தொகை உள்ளம் அழுத்துஞ்
சத்திர மாயின் தாங்கினர் நிற்ப. - 19



500 - என்பன பலபல இயம்பி ஈறிலாப்
வௌ¢ளடை பாகு வௌ¤ற்றுறு சுண்ணங்
கொள்ளும் அடைப்பைமென் கோடிகம் வட்டில்
வள்ளுடை வாளிவை தாங்கி மருங்காய்த்
தள்ளரு மொய்ம்புள தானவர் நிற்ப. - 20



501 - வெம்மைகொள் பானுவை வெஞ்சிறை யிட்ட
செம்மலும் ஏனைய சீர்கெழு மைந்தர்
மும்மைகொள் ஆயிர மூவரு மாகத்
தம்முறை யாற்புடை சார்ந்தனர் வைக. - 21



502 - பாவ முயன்று பழித்திறன் ஆற்றுங்
காவிதி யோ£¢கரு மங்கள் முடிப்போர்
ஆவதொர் சாரண ராய்படை மள்ளர்
ஏவரும் ஞாங்கரின் எங்கணும் நிற்ப. - 22



503 - நாடக நூல்முறை நன்று நினைந்தே
ஆட அரம்பைய ராயுள ரெல்லாஞ்
சேடியர் கின்னரர் சித்தர் இயக்கர்
பாடுற வீணைகள் பண்ணினர் பாட. - 23



504 - ஏகனை ஈசனை எந்தையை யெண்ணா
ராகிய தொல்லவு ணக்குழு வென்ன
வேகும் உளத்தின் கஞ்சுகர் வெங்கண்
மாகதர் சூரல் பிடித்து வழுத்த. - 24



505 - உள்ளிடும் ஆயிர யோசனை யெல்லை
கொள்ளிட மான குலப்பெரு மன்றந்
தள்ளிட வற்ற சனங்கள் மிகுந்தே
எள்ளிட வௌ¢ளிடம் இன்றென ஈண்ட. - 25



506 - வச்சிர மெய்வயி டூரியம் ஒண்பல்
உச்சியில வாலுளை யேயொளிர் முத்தம்
அச்சுறு கண்மணி யாம்அரி மாவின்
மெய்ச்சிர மேந்தும் வியன்தவி சின்கண். - 26



507 - மீயுயர் நீல வியன்கிரி உம்பர்
ஞாயிறு காலையின் நண்ணிய வாபோல்
பாயிருள் கீறிய பண்மணி கொண்ட
சேயபொன் மாமுடி சென்னியின் மின்ன. - 27



508 - கறுத்தவ ராத்துணை கண்டிரு வெய்யோர்
உறுப்பிட கவ்வி யொசிந்து கலைப்போய்
முறுக்கிய வாலொடு முன்கலந் தென்ன
மறுத்தவிர் குண்டலம் வார்குழை தூங்க. - 28



509 - வீறிய மாமணி வெற்பின் மிசைக்கண்
ஏறிய ஒண்பகல் இந்துவி யற்கை
மாறிய வந்தென மால்வள மாகும்
நீறு செறிந்திடு நெற்றி இலங்க. - 29



510 - விண்டுமிழ் கின்ற வியன்புழை தோறுந்
தண்டுளி வந்தமர் தன்மைய தென்னப்
புண்டரி கம்பொறை போற்றி யுயிர்க்கும்
வண்டர ளத்தொடை மார்பின் வயங்க. - 30



511 - பங்கமில் சந்தொடும் பாளிதம் நானங்
குங்குமம் ஏனைய கந்திகள் கூட்டி
அங்கம தன்கண் அணிந்தன அண்டம்
எங்கும் உலாவி இருங்கடி தூங்க. - 31



512 - வான்றிழ் நீனிற மாமுகி லின்பான்
தோன்றிய மின்புடை சுற்றிய தென்ன
ஏன்றுள அண்டம் எனைத்தையும் ஆற்றும்
ஆன்றுயர் தோளிடை அங்கதம் மல்க. - 32



513 - மெய்த்துணை யாமிரு வெம்பணி ஞாலம்
பைத்தலை கொள்வ பரம்பொறை யாற்றா
தெய்த்தன பூண்கொடி யாப்புறு மாபோற்
கைத்தல முன்கட கஞ்செறி வெய்த. - 33



514 - நீலம தாய நெடுங்கிரி மேல்பால்
வாலிய கங்கை வளைந்திடு மாபோல்
கோல மிடற்றிடை கோவைகொள் முத்தின்
சால்வுறு கண்ட சரங்கள் இமைப்ப. - 34



515 - வீர மடந்தையர் மேதக நாளுஞ்
சீரிய தோளிணை செல்கதி யென்ன
ஏரியல் பன்மணி இட்டணி செய்த
ஆர வடுக்கல்பொன் ஆகம் இலங்க. - 35



516 - அந்தியின் வண்ணமும் அத்தொளி யூருஞ்
சுந்தர மாலிடை சுற்றிய வாபோல்
முந்து பராரைகொள் மொய்ம்மணி யாடை
உந்தியின் ஒண்பணி யோடு வயங்க. - 36



517 - இருபணி பார்முகம் இட்டிட வீட்டி
உருமொடு மின்னும் உலப்பில சுற்றிக்
கருமிட நூடு கலந்தென நுண்ணூல்
குரைகழல் வா£¢கழல் கொண்டு குலாவ. - 37



518 - மென்மணி மாழையின் வேதன் இயற்றிப்
பன்மணி மீது படுத்திய பல்பூண்
தொன்மணி மெய்புனை சூரபன் மாவோர்
பொன்மணி மாமுகில் போல இருந்தான். - 38



519 - இருந்திடு கின்ற இயற்கை விழிக்கோர்
விருந்தமு தாக வியப்பொடு நோக்கிச்
சுரந்திடு மன்பொடு சூளிகை வைகும்
பெருந்திறல் மாமுகில் இங்கிவை பேசும். - 39



520 - மூவரின் முந்திய முக்கணன் அம்பொற்
சேவடி பேணிய தேவர்கள் தம்முள்
தூவுடை வேலுள சூரபன் மாப்போல்
ஏவர் படைத்தனர் இத்திரு வெல்லாம். - 40



521 - ஓய்ந்து தவம்புரி வோருள் உவன்போல்
மாய்ந்தவர் இல்லை மறத்தொடு நோற்றே
ஆய்ந்திடின் முக்கண்எம் மையனும் இன்னோற்
கீந்தது போற்பிறர்க் கீந்ததும் இன்றால். - 41



522 - பாடுறு வேள்வி பயின்றழல் புக்கும்
பீடுறும் இவ்வளம் ஆயின பெற்று
நீடுறு மாறு நினைந்திலன் வெய்யோன்
வீடுறு கின்ற விதித்திறன் அன்றோ. - 42



523 - வேறு
மெய்ச்சோதி தங்கு சிறுகொள்ளி தன்னை விரகின்மை கொண்ட குருகார்
கச்சோத மென்று கருதிக் குடம்பை தனினுய்த்து மாண்ட கதைபோல்
அச்சோ வெனப்பல் இமையோரை ஈண்டு சிறைவைத்த பாவம் அதனால்
இச்சூர பன்மன் முடிவெய்து நாளை இதனுக்கொர் ஐய மிலையே. - 43



524 - மிகையான வீரம் வளமாற்றல் சால மேவுற்று ளோரும் இறையும்
பகையார்க ணேனும் உளராகி வாழ்தல் பழுதன்றி நன்றி படுமோ
மகவானை மங்கை யுடனே துரந்தும் அவர்மைந்த னோடு சுரரை
அகலாமல் ஈண்டு சிறைசெய்த பாவம் அதனால் இழப்பன் அரசே. - 44



525 - மன்னுந் திறத்தின் அமைச்சூர பன்மன் மாமக்கள் சுற்றம் நகரம்
முன்னும் படிக்கும் அரிதான செல்வ முடனாளை ஈறு படுமேல்
முன்னென் பவா¢க்கு முன்னாகும் ஆறு முகன்நல்கு முத்தி யலதேல்
என்னுண்டு நாளும் வினைசெய் துழன்ற இவன் ஆருயிர்க்கு நிலையே. - 45



526 - என்றித் திறங்கள் அருளோடு பன்னி எழில்கொண்ட வேர மிசையே
துன்றுற்ற வீரன் வளனோ டிருந்த சூரன்முன் ஏகல் துணியாக்
குன்றத்தி னின்று மிவரெல்லை போன்று குமரேசன் எந்தை அடிகள்
ஒன்றக் கருத்தினி டைகொண் டெழுந்து நடைகொண் டவைக்கண் உறுவான். - 46



527 - வேறு
நலஞ்செய் குளிகை நீங்கிவிண் ணெறிக்கொடு நடந்து
கலஞ்செய் திண்டிறல் வாகுவாம் பெயருடைக் கடவுள்
வலஞ்செய் வாட்படை அவுணர்கோன் மன்னிவீற் றிருக்கும்
பொலஞ்செய் கின்றஅத் தாணிமண் டபத்திடைப் போனான். - 47



528 - எல்லை இல்லதோர் பெருந்திரு நிகழவீற் றிருந்த
மல்ல லங்கழல் இறைவனைக் குறுகிமாற் றலரால்
வெல்ல ருந்திறல் வீரவா குப்பெயர் விடலை
தொல்லை நல்லுருக் காட்டிஎன அவைக்கெலாந் தோன்ற. - 48



529 - ஒற்றை மேருவில் உடையதோர் பரம்பொருள் உதவுங்
கொற்ற வேலுடைப் புங்கவன் தூதெனக் கூறி
இற்றை இப்பகல் அவுணர்கோன் கீழியான் எளிதாய்
நிற்றல் எம்பிரான் பெருமையின் இழிபென நினைந்தான். - 49



530 - மாயை தந்திடு திருமகன் மன்னிவீற் றிருக்கும்
மீயு யர்ந்திடும் அரியணைக் கொருபுடை விரைவில்
போயி ருப்பது மேலன்று புன்மையோர் கடனே
ஆய தன்றியும் பாவமென் றுன்னினான் அகத்துள். - 50



531 - இஆயை துன்னியே அறுமுகப் பண்ணவன் இருதாள்
நினையும் எல்லையில் ஆங்கவன் அருளினால் நிசியில்
தினக ரத்தொகை ஆயிர கோடிசேர்ந் தென்னக்
கனக மாமணித் தவிசொன்று போந்தது கடிதின். - 51



532 - நித்தி லப்படு பந்தருஞ் சிவிகையும் நெறியே
முத்த மிழ்க்கொரு தலைவனாம் மதலைக்கு முதல்வன்
உய்த்த வாறெனக் குமரவேள் வீரனுக் குதவ
அத்த லைப்பட வந்தது மடங்கலேற் றணையே. - 52



533 - பன்னி ரண்டெனுங் கோடிவெய் யவரெலாம் பரவப்
பொன்னின் மால்வரை திரைக்கடல் அடைந்தவா போல
மின்னு லாவிய பொலன்மணிப் பீடிகை விறல்சேர்
மன்னர் மன்னவன் அவைக்களத் தூடுவந் ததுவே. - 53



534 - சிவன் மகன்விடு பொலன்மணித் தவிசுசேண் விளங்கிப்
புவன முற்றுறத் தன்சுடா¢ விடுத்தலிற் பொல்லாப்
பவம னத்தொடு தீமையே வைகலும் பயிற்றும்
அவுணர் மெய்மையுந் தெய்வதப் படிவமாக் கியதால். - 54



535 - அயிலெ யிற்றுடை அவுணர்கள் அணிகலந் தன்னில்
குயிலு டைப்பல மணிகளுங் குமரவேள் உய்த்த
இயலு டைப்பெருந் தவிசொளி பரத்தலின் இரவி
வேயிலி டைப்படு மின்மினி போல்விளங் கிலவே. - 55



536 - செக்கர் வானிற மதிக்கதிர் உடுக்களின் திரட்சி
தொக்க பாயிருள் பலவகை எழிலியின் துளக்கம்
மிக்க லாஞ்செறி மாலையின் உம்பர்மேல் வெய்யோன்
புக்க தேயெனத் தொலைத்ததால் அச்சபைப் பொலிவை. - 56



537 - திசைமு கத்தனுஞ் செயற்கருந் தவிசொளி செறிந்தே
அசைவ ருந்திறற் சூரபன் மாவெனும் அவுணன்
இசைமை தன்னையும் ஆணைதன் னையும்அவ னியாக்கை
மிசைகொள் பேரணிக் கதிரையும் விழுங்கின விரைவில். - 57



538 - அனைய வான்தவி சவுணன்நேர் இருத்தலும் அதுகண்
டெனது நாயகன் விடுத்தனன் போலுமென் றெண்ணி
மனம மகிழ்ச்சியால் அறுமுகப் பிரானடி வழுத்தி
இனைய நாடுவான் இருந்தனன் ஆங்கதன் மிசையே. - 58



539 - பெருந்த னிச்சுடர் எறித்திடு பொன்மணிப் பீடத்
திருந்து மேதகு சிறப்பொடு விளங்கிய ஏந்தல்
விரிந்த பல்கதி ருடையதோர் வெய்யவன் நடுவட்
பொருந்தி வைகிய கண்ணுதற் பரமனே போன்றான். - 59



540 - மின்னி ருந்தவேல் அவுணர்கோன் எதிருறும் விடலை
முன்னி ருந்தஆ டகன்றனை அடுமுரட் சீயஞ்
செந்நி ணங்கவர்ந் தலமர அணுகிமுன் றெற்றப்
பொன்னி ருந்தவி சிருந்திடும் வீரனே போன்றான். - 60



541 - வெம்மைக் காலிருள் வேலைபோல் மூடிவிண் புவியைத்
தம்முட் சித்தரிற் காட்டலுஞ் சதுர்முகத் தொருவன்
நம்மொத் தாரிலை என்றிடச் சிவன்புகழ் நவிலுஞ்
செம்மைத் தொல்குண மாலுநேர்ந் திருந்தனன் திறலோன். - 61



542 - இவற்றி யற்கையால்வீரவா குப்பெயர் ஏந்தல்
நிவப்பின் மிக்கதோர் பொன்மணித் தவிசின்மேல் நெஞ்சின்
உவப்பும் வீரமும் மேதக இருத்தலும் உற்ற
அவைக்க ளத்தினர் யாவருங் கண்டனர் அதனை. - 62



543 - நோற்றல் முற்றுறும் வினைஞர்பால் நொய்தின்வந் திறுத்த
ஆற்றல் சால்வளம் போலவே அரியணை அதன்கண்
தோற்று மேலவன் நிலைமையைக் காண்டலுந் துளங்கி
ஏற்ற அற்புதம் எய்தினர் அவைக்களத் திருந்தார். - 63



544 - வேறு
வாரிலங் கியகழல் மன்னன் முன்னரே
தாரிலங் கியமணித் தசிவின் உற்றுளான்
வீரனும் போலுமால் வினையம் ஓர்கிலேம்
யாரிவன் கொல்லென இயம்பு வார்சிலர். - 64



545 - முந்திவட் கண்டிலம் முடிவில் ஆற்றல்சேர்
எந்தைமுன் இதுபொழு திருத்தல் மேயினான்
நந்தமை நீங்கியே நடுவ ணேயிவன்
வந்ததெவ் வாறென வழங்கு வார்சிலர். - 65



546 - ஒப்பருஞ் சனங்களோ டொன்றி நம்மெலாந்
தப்பினன் புகுந்தனன் தமிய னென்னினும்
இப்பெருந் தவிசிவண் இருந்த தாற்றவும்
அற்புதம் அற்புத மாமென் பார்சிலர். - 66



547 - சீயமெல் லணையொடு செம்மல் முன்னறே
ஏயெனும் அளவையின் ஈண்டு தோன்றினான்
ஆய்பவர் உண்டெனின் அறைவன் நம்மினும்
மாயன்இங் கிவனென வகுக்கின் றார்சிலர். - 67



548 - அறைகழல் ஒருவனை அவையத் தென்முனங்
குறுகிய விடுத்ததென் குழாங்கொண் டீரெனா
இறையவன் நங்களை யாது செய்யுமோ
அறிகில மெனப்பதைத் தழுங்கு வார்சிலர். - 68



549 - ஒட்டலன்ஒருவனை ஒறுத்தி டாதிவண்
விட்டதெ னென்றிறை வெகுளு முன்னரே
கிட்டினம் அவன்றனைக் கெழுமிச் சுற்றயே
அட்டனம் வருதுமென் றறைகின் றார்சிலர். - 69



550 - விளிவிலாத் திறலுடை வேந்தன் தன்னெதிர்
களியுலா மனத்தொடு கடிதின் உற்றுளான்
தௌ¤விலா மாயையின் திறலன் போலுமால்
அளியனோ நுங்களுக் கவனென் பார்சிலர். - 70



551 - மன்னவன் எதிருற வந்து ளான்றனை
அன்னவன் பணியினால் அடுவ தல்லதை
முன்னுற அதனையா முன்னு வோமெனில்
பின்னது பிழையெனப் பேசு வார்சிலர். - 71



552 - யாரிதை அறிகுவர் இனையன் இவ்விடைச்
சூருற உன்னியே துன்னி னான்கொலோ
சேரலர் பக்கமாய்ச் சேர்ந்து ளான்கொலோ
ஓருது மேலென உரைசெய் வார்சிலர். - 72



553 - கடுந்தகர் முகத்தவள் கையொன் றற்றநாள்
தடிந்தனன் காவலோர் தம்மை மன்னவன்
தொடுங்கழல் இவன்வருஞ் சூழ்ச்சி நோக்கியின்
றடும்பலர் தம்மையென் றச்சுற் றார்சிலர். - 73



554 - வாசவன் முதலினோர் மருளத் தொல்லைநாட்
தேசுறும் விஞ்சையர் வடிவிற் சேர்வுறீஇ
ஆசிலோர் புன்னிறுத் தாணை காட்டிட
ஈசனே இங்கிவன் என்கின் றார்சிலர். - 74



555 - ஆயதோர் காசிபன் அதிதி தங்கள்பாற்
சேயனாய் வந்தொரு சிந்தன் போன்றுலாய்த்
தூயவான் புவியெலாம் அளப்பச் சூழ்ந்திடு
மாயனே இவனென மதிக்கின் றார்சிலர். - 75



556 - விண்டொடு சூளினை விளம்பி விண்புவி
உண்டொரு கணந்தனில் உந்தி காட்டிய
புண்டரி கத்தனே புணர்ப்பின் இவ்வுருக்
கொண்டன னாமெனக் கூறு வா£¢சிலர். - 76



557 - மூவரு ளாகுமோ முடிவின் மாதிரத்
தேவரு ளாகுமோ சேணில் வைகியே
தாவரு முனிவரர் தம்மு ளாகுமோ
ஏவரு ளாகுமோ இவனென் பார்சிலர். - 77



558 - மாலைதாழ் மார்புடை மன்னற் கின்னமும்
ஆலமார் கண்டனே அருளின் இன்னதோர்
கோலமாய் வரந்தரக் குறுகி னான்கொலோ
மேலியாம் உணருதும் விளைவென் பார்சிலர். - 78



559 - காற்றுடன் அங்கியுங் கடுங்கட் காலனுங்
கூற்றனும் ஓருருக் கொண்டு வைகிய
தோற்றமி தன்றியிச் சூரன் முன்வரும்
ஆற்றலர் யாரென அறைகின் றார்சிலர். - 79



560 - குன்றமும் அவுணனுங் குலைந்து பாடுற
ஒன்றொரு வேலினை ஒருவ னுய்த்தனன்
என்றனர் அன்னவன் ஈண்டு மன்னன்முன்
சென்றன னோவெனச் செப்பு வார்சிலர். - 80



561 - செற்றிய பன்மணிச் செம்பொன் மன்றமும்
முற்றிடும் அவுணரும் ஔ¤று வான்கதிர்
மற்றிவன் அணிகளின் தவிசின் வாள்பட
அற்றது பகற்சுட ராயென் பார்சிலர். - 81



562 - இருந்திடும் அவுணர்கள் யாரும் இத்திறம்
வருந்திறம் நினைகிலர் மறந்தும் இவ்விடை
தெரிந்திடின் இங்கிது திறல்கொள் மன்னனே
புரிந்திடு மாயையின் புணர்ப்பென் பார்சிலர். - 82



563 - நென்னலின் இறந்துயிர் நீத்த தாரகன்
முன்னுறு தன்னுரு முடிய இப்பகல்
இன்னதோ£¢ பொன்னுரு வெடுத்து முன்னைபால்
துன்னினன் கொல்லெனச் சொல்கின்றார்சிலர். - 83



564 - வேறு
சங்க மேவினர் இனையன அளப்பில சாற்ற
அங்கண் ஓரரி மான்றவி சிருக்கையில் அவுணன்
துங்க மெத்துணை அத்துணைச் சிறப்பொடு தோன்றிச்
செங்கை வேலவற் புகழ்ந்துவீற் றிருந்தனன் திறலோன். - 84



565 - அறிவர் மேலவன் தவிசில்வீற் றிருத்தலும் அவுணர்க்
கிறைவ னாங்கது நோக்கியே எயிற்றணி கறித்துக்
கறுவி யேநகைத் துரப்பிமெய் வியர்ப்பெழக் கண்கள்
பொறிசொ ரிந்திடப் புகையுமிழ்ந் தினையன புகல்வான். - 85



566 - சுற்ற நீங்கியே இலையுண்டு விலங்கெனச் சுழன்று
வற்றன் மாமரக் காட்டகத் திருந்துடன் வருத்துஞ்
சிற்று ணர்ச்சியோர் வல்லசித் தியல்பிது சிறியோய்
கற்று ளாய்கொலாங் காட்டினை நமதுமுன் காண. - 86



567 - துன்று வார்சடை யோகினோர் அல்லது தொலைந்து
பின்று தேவரும் வல்லரிச் சிறுதொழில் பெரிதும்
ஒன்று மன்னதை இவ்விடைக் காட்டலர் உன்போல்
நன்று நன்றுநீ நம்முனர்க் காட்டிய நடனம். - 87



568 - சித்த ராயினோர் செங்கண்மால் முதலிய தேவர்
இத்தி றத்தன காட்டுதற் கஞ்சுவ ரென்முன்
தத்தம் எல்லையிற் புரிந்திடல் அல்லது தமியோய்
பித்த னேகொலாம் நமக்கிது காட்டுதல் பிடித்தாய். - 88



569 - உரைசெய் இந்நகர் மகளிருஞ் செய்வரூன் முற்றாக்
கருவி னுள்ளுறு குழவியுஞ் செய்திடுங் கருத்தில்
வரைக ளுஞ்செயும் மாக்களுஞ் செய்யுமற் றதனால்
அரிய தன்றரோ பேதைநீ புரிந்திடும் ஆடல். - 89



570 - என்னை எண்ணலை எதிருற இருந்தனை இதனான்
மின்னல் வாட்படை யுறைகழித் தொய்யென வீசிச்
சென்னி வீட்டுவன் நின்செயல் முற்றவுந் தெரிந்து
பின்னர் அத்தொழில் புரிவனென் றேயுளம் பிடித்தேன். - 90



571 - ஏணுற் றரெலாம் வழுத்திய அவுணரும் யாமுங்
காணக் காட்டினை நீயறி விஞ்சையைக் கண்டாம்
பூணித் தாயென வருமுனக் கித்துணைப் பொழுது
பாணித் தாவியை அளித்தனன் அன்னது பரிசே. - 91



572 - வாச வன்கரந் தோடினன் பிறரிது மதியார்
கேச வன்னிது நினைகிலன் மறைகளின் கிழவோன்
ஆசி கூறியே திரிந்திடும் அவர்க்கெலாம் முதலாம்
ஈசன் என்னிடை வருகிலன் யாரைநீ யென்றான். - 92



573 - தீயன் இத்திறம் உரைத்தன கேட்டலுந் திறலோன்
காய மீனெனக் காயமேல் வியர்ப்பெழக் கனன்று
மாயை செய்துழல் வலியிலார் போலெனை மதித்தாய்
ஆய புந்தியை விடுமதி கேளிதென் றறைவான். - 93



574 - புரந்த ரன்குறை அயன்முதல் அமரர்தம் புன்மை
வருந்தும் வானவர் சிறையெலாம் நீக்கிமற் றவர்தந்
திருந்து தொல்லிறை உதவுவான் செந்திமா நகர்வந்
திருந்த ஆதியம் பண்ணவன் அடியனேன் யானே. - 94



575 - துன்னை தானைகட் கரசராய் அறுமுகத் தொல்லோன்
பின்னர் வந்துளார் ஒன்பதோ டிலக்கமாம் பெயரால்
அன்ன வர்க்குளே ஒருவன்யான் நந்திபாங் கமர்ந்தேன்
ஒன்ன லார்புகழ் வீரவா கெனும்பெய ருள்ளேன். - 95



576 - தாரகப் பெயர் இளவலைத் தடவரை தன்னை
ஓரி றைக்குமுன் படுத்தவேல் அறுமுகத் தொருவன்
சூரெ னப்படு நின்னிடைத் தமியனைத் தூதாப்
பேர ருட்டிறத் துய்த்தனன் என்றனன் பெரியோன். - 96



577 - கொடுத்தி டாதவென் கொண்டவன் உரைத்தசொற் கொடுங்கோல்
நடத்து மன்னவன் கேட்டலும் ஆங்கவன் நம்மேல்
விடுத்த காரணம் என்னையோ விளம்புதி யென்ன
எடுத்து மற்றிவை எம்பிரான் தூதுவன் இசைப்பான். - 97



578 - மருத்து வன்றனைச் சசியொடு துரந்துசேண் வதிந்த
புரத்தை ஆரழற் கூட்டியே அனையவன் புதல்வன்
ஒருத்த னோடுபல் லமரரை உவளகந் தன்னில்
இருத்தி னாயென வினவினன் அறுமுகத் திறைவன். - 98



579 - இந்தி ராதிபர் அயன்முதற் பண்ணவர் யாரும்
வந்து வந்துவேண் டிடுதலும் அவர்குறை மாற்றப்
புந்தி கொண்டுபன் னிருபுயத் தெம்பிரான் புவிக்கண்
அந்த மின்றுறை பாரிடத் தானையோ டடைந்தான். - 99



580 - தரையின் நண்ணிநின் இளவலை வரையொடு தடிந்து
நெருக லேவந்து செந்தியின் வைகினான் நினையும்
விரைவின் வந்தட உன்னினான் இன்றுநும் மிசையே
அருள்கொ டேசில புகன்றெனைத் தூண்டினன் அதுகேள். - 100



581 - நிறையும் இந்துவைப் படவராக் கவர்ந்தென நிகளச்
சிறைப டுத்தியே அமரரை வருத்தினை செய்யும்
மறையொ ழுக்கமும் நீக்கினை உலகம்ஆள் மன்னர்
அறமும் அன்றிது வீரர்தஞ் செய்கையும் அன்றால். - 101



582 - தாதை யாகியோன் காசிபன் ஆங்கவன் தனயன்
ஆத லானுனக் கமரரைச் சிறைசெய்வ தறனோ
வேத மார்க்கமும் பிழைத்தனை சிறுபொருள் விழைந்தாய்
நீதி யாலுல களிப்பதே அரசர்தந் நெறியே. - 102



583 - உலத்தின் மாண்டதோட் சலந்தரன் அந்தகன் ஒருங்கே
கலத்தல் இல்லதோர் புரத்தவ ராதியோர் கடவுட்
குலத்தை வாட்டலின் இமைப்பினில வீந்தனர் கொடியோய்
நிலத்தின் உம்பரை வருத்துதல் அழகிதோ நினக்கே. - 103



584 - மெய்மை நீங்கியே கொலைகள வியன்றுமே லுள்ள
செம்மை யாளரைச் சீறியே அணங்குசெய் தீயோர்
தம்மில் ஆற்றரும் பழிசுமந் தொல்லையில் தமரோ
டிம்மை வீடுவர் எழுமையுந் துயரினூ டிருப்பார். - 104



585 - இங்ங னந்திரு நீங்கியே துயருழந் திறப்பர்
அங்ங னம்பெரி தாரிருள் மூழ்குவர் அதற்பின்
உங்ங னம்பிறந் தயருவ ரென்றுமீ துலவார்
எங்ஙன் உய்வரோ பிறர்தமக் கல்லல்செய் திடுவோர். - 105



586 - தீது நல்லன ஆயிரு திருத்தவுந் தொ¤ந்தே
ஏதி லார்க்கவை செய்வரேல் தமக்குடன் எய்தும்
பேதை நீரையாய் அமரரைச் சிறைசெய்த பிழையால்
மாது யர்ப்படல் அன்றியே இறுதியும் வருமால். - 106



587 - அண்டர் ஆற்றலை வவ்விய தாரகன் ஆவி
உண்ட கொற்றவேல் இருந்தது விடுத்திடின் உனையுங்
கண்ட துண்டம தாக்குமால் அறநெறி கருதித்
தண்டம் வல்லையிற் புரிந்திலன் இத்துணை தாழ்த்தான். - 107



588 - கெடுதல் இல்லதோர்அமரர்கள் சிறையிடைக் கிடப்ப
விடுதல் செய்தனை பல்லுகம் அவர்தமை இன்னே
விடுதல் உய்வகை யாகுமால் மறுத்தியேல் விரைந்து
படுத லேநினக் குறுதியாம் முறையுமப் பரிசே. - 108



589 - ஆண்ட ளப்பில நோற்றனை வேள்விநின் றாற்றி
மூண்ட தீயிடை மூழ்கினோய்க் கெந்தைமுன் னளித்த
மாண்டி டாதபே ராயுளைத் திருவொடும் வாளா
ஈண்டொர் புன்னெறி யாற்றியே இழுக்குவ தியல்போ. - 109



590 - சைய மேற்படு வளத்தொடு நீயுநின் தமரும்
உய்ய வேண்டுமேல் அமரர்தஞ் சிறையினை ஒழித்து
வைய மேலறத் தியல்புளி வாழிமற் றிதனைச்
செய்ய லாய்எனின் ஈங்குவந் தடுவனால் திண்ணம். - 110



591 - என்று மற்றிவை யாவையும் வரைபக எறிந்தோன்
உன்ற னக்கறை கென்றன் ஈங்குநீ உம்பர்
வன்ற ளைச்சிறை நீக்கியே அறத்தின்இவ் வளத்தை
நன்று துய்த்தனை நெடிதுநீ வாழ்கென நவின்றான். - 111



592 - மறம கன்றிடா வீரனிங் கினையன வகுத்தே
அறையும் வாசகங் கேட்டலும் வெகுளிமூ ளகத்தன்
பொறியு மிழ்ந்திடு கண்ணினன் புகையுமிழ் உயிப்பன்
எறியும் அங்கையன் இறந்திடும் முறுவலன் இசைப்பான். - 112



593 - மேலை யாயிரத் தெட்டெனும் அண்டமும் வென்றே
ஏலு கின்றதோர் தனியிறை யாகிய எனக்குக்
கோல வாலெயி றின்னமுந் தோன்றிலாக் குதலைப்
பால னேகொலாம் இனையன புந்திகள் பகர்வான். - 113



594 - விறலின் மேதகும் அவுணராம் வலியிலார் மிகவும்
வறிய ராகிய தேவராம் மேலவர் மழலைச்
சிறுவ ராந்தனி முதல்வற்கும் அமைச்சியல் செய்வார்
எறியும் நேமிசூழ் உலகத்து வழக்கம்நன் றிதுவே. - 114



595 - நறைகொ டார்முடி அவுணா¢தங் குலத்தினை நலித்து
வறுமை செய்தனர் கடவுளர் அவர்திரு மாற்றிக்
குறிய ஏவலுங் கொண்டனன் ஒழுக்கமுங் கொன்றேன்
சிறையும் வைத்தனன் நங்குடித் தமர்முறை செய்தேன். - 115



596 - நெடிய மால்மகன் உறங்குநாள் ஆணையை நீங்கித்
தொடுபே ருங்கடல் உலகெலாங் கொள்ளினுஞ் சுரரை
விடுவன் அல்லன்யான் வீடருஞ் சிறையினை விண்மேல்
உடைய அண்டத்தின் உச்சியின் ஒருதலை உய்ப்பேன். - 116



597 - தப்பல் செய்திடு மகபதி முதலினோர் தமையும்
இப்ப திக்கணே கொணர்ந்தனன் சிறைசெய இருந்தேன்
கைப்பு குஞ்சிறை விடுவனோ விடுகிலன் கண்டாய்
ஒப்ப ருந்திறல் சூரனென் றொருபெய ருடையேன். - 117



598 - மின்னு வச்சிரப் படிவமும் வேறுபல் வரமும்
முன்னொர் ஞான்றுதன் தாதைஎற் களித்திடு முறையைப்
பின்னர் யாவரே பெயர்ப்பவர் பெருஞ்சமர் இயற்றி
என்னை ஆற்றலால் வென்றிடு நீர்மையோர் எவரே. - 118



599 - தான மாமுகத் தாரக எம்பியைத் தடிந்த
மான வேற்படை யவன்மிசை வருவது வலித்தேன்
பானல் வாய்ச்சிறு சேயொடு நீயமர் பயிறல்
ஊன மேயெனத் தடுத்தனர் ஆதலால் ஒழிந்தேன். - 119



600 - தூங்கு கையுடைத் தாரக இளவலைத் தொல்லை
ஓங்கல் தன்னொடும் அட்டது நென்னலே உணர்ந்தேன்
பாங்கி னோரையப் பாலன்மேல் உந்தியென் பழியும்
வாங்கு கின்றனன் நாளையே காண்டியான் மன்னோ. - 120



601 - அரிகள் எண்ணிலர் இந்திரர் எண்ணிலர் அல்லாச்
சுரர்கள் எண்ணிலர் அண்டங்க டொறுந்தொறும் இருந்தார்
செருவின் ஆற்றலர் வழுத்தியே போயினர் சிவன்கண்
நெருநல் வந்திடு சிறுவனோ என்னெதிர் நிற்பான். - 121



602 - ஓதி என்பல அமரரை விடுலின் உணர்ச்சி
ஏது மில்லதோர் மகவுதன் புன்மொழி ஏற்றுப்
பேதை ஆதலின் ஒற்றனாய் வந்தனை பிழைத்துப்
போதி நின்னுயிர் தந்தனன் யானெனப் புகன்றான். - 122



603 - அகில மார்பவன் இங்கிவை மொழிதலும் ஐயன்
வெகுளி வெங்கனல் சிந்திட வுளஞ்சுட வெகுண்டு
புகையும் அங்கியும் உயிர்ப்புற மயிர்ப்புறம் பொடிப்ப
நகையும் வந்திடச் சிவந்திட விழியிவை நவில்வான். - 123



604 - உய்ய லாவதோர் பரிசினை உணர்வுறா துழலுங்
கைய கேண்மதி கட்செவி மதியொடு கலந்த
செய்ய வார்சடைப் பரம்பொருள் திருநுதல் விழிசேர்
ஐயன் மேதக உணர்ந்திலை பாலனென் றறைந்தாய். - 124



605 - மானு டத்தரைத் தேவென்பர் வானகத் தவரை
ஏனை முத்தொழி லவரென்பர் இருவர்தங் களையும்
நானி லத்தினிற் பரம்பொருள் இவரென நவில்வார்
ஆன சொற்றிறம் முகமனே சரதமற் றன்றால். - 125



606 - ஆய புல்லிய புகழ்ச்சிபோற் கொள்ளலை அறிவோர்
தேய மாவது யார்க்குமெட் டாதது தௌ¤யில்
தூய வீடுபே றருளுவ துபநிடத் துணிவாம்
வாய்மை யாவது புகலுவன் கேளென வகுப்பான். - 126



607 - மண்ண ளந்திடு மாயனும் வனசமே லவனும்
எண்ண ரும்பகல் தேடியுங் காண்கிலா திருந்த
பண்ண வன்நுதல் விழியிடைப் பரஞ்சுடர் உருவாய்
உண்ணி றைந்தபே ரருளினான் மதலையாய் உதித்தான். - 127



608 - முன்ன வர்க்குமுன் னாகுவோர் தமக்குமுற் பட்டுத்
தன்னை நேரிலா தீசனாந் தனிப்பெயர் தாங்கி
இன்று யிர்க்குயி ராய்அரு வுருவமாய் எவர்க்கும்
அன்னை தாதையாய் இருந்திடும் பரமனே அவன்காண். - 128



609 - ஈச னேயவன் ஆடலால் மதலையா யினன்காண்
ஆசி லாவவன் அறுமுகத் துண்மையால் அறிநீ
பேசில் ஆங்கவன் பரனொடு பேதகன் அல்லன்
தேசு லாவகன் மணியிடைக் கதிர்வரு திறம்போல். - 129



610 - பூதம் ஐந்தினுட் கீழ்நிலைத் தாகிய புவியுள்
ஓது கின்றபல் லண்டத்தின் ஓராயிரத் தெட்டுங்
கோதில் ஆக்கமும் ப்டைகளும் உனக்குமுன் கொடுத்த
ஆதி ஈசனே அவனெனின் மாற்றுவ தரிதோ. - 130



611 - ஏத மில்புவி அண்டங்கள் பெற்றனம் என்றே
பேதை யுன்னினை சிறிதவன் தன்னருள் பெறுவோர்
பூதம் மைந்தனும் ஏனைய திறத்தினும் புறத்து
மீது மாமண்டம் எவற்றிற்கும் வேத்தியல் புரிவா£¢. - 131



612 - ஆதி யாகிய குடிலையும் ஐவகைப் பொறியும்
வேதம் யாவையுந் தந்திரப் பன்மையும் வேறா
ஓத நின்றிடு கலைகளும் அவ்வவற் றுணர்வாம்
போதம் யாவையுங் குமரவேள் பொருவிலா வுருவம். - 132



613 - எங்க ணும்பணி வதனங்கள் எங்கணும் விழிகள்
எங்க ணுந்திருக் கேள்விகள் எங்கணுங் கரங்கள்
எங்க ணுந்திருக் கழலடி எங்கணும் வடிவம்
எங்க ணுஞ்செறிந் தருள்செயும் அறுமுகத் திறைக்கே. - 133



614 - தாம ரைக்கணான் முதலிய பண்ணவர் தமக்கும்
ஏமு றப்படு மறைக்கெலாம் ஆதிபெற் றியலும்
ஓமெ னப்படுங் குடிலையே ஒப்பிலா முருகன்
மாமு கத்துளன் றாமவன் தன்மையார் வகுப்பார். - 134



615 - முக்கண் மூர்த்தியும் ஆங்கவன் முண்டகா சனனுஞ்
சக்க ரப்படை அண்ணலும் ஆங்கவன் தானே
திக்குப் பாலங் கதிர்களும் முனிவருஞ் சிறப்பின்
மிக்க தேவரும் ஆங்கவன் யாவர்க்கும் மேலோன். - 135



616 - ஈட்டு மன்னுயிர் எவற்றிற்கும் இருவினைப் பயனைக்
கூட்டு வானவன் ஆங்கவை துலையெனக் கூடின்
வேட்ட மேனிலைக் கதிபுரி வானவன் மேலாய்க்
காட்டு வான்முதல் திறமெலாம் ஆங்கவன் கண்டாய். - 136



617 - சிறுவன் போலுறும் குரவனே போலுறும் தினையில்
குறியன் போலுறும் நெடியவ னாகியுங் குறுகும்
நெறியின் இன்னணம் வேறுபல் லுருக்கொடு நிலவும்
அறிவர் நாடருங் கந்தவேள் ஆடலார் அறிவார். - 137



618 - சிவன தாடலின் வடிவமாய் உற்றிடுஞ் செவ்வேள்
அவன தாணையின் அன்றியே பெயர்கிலா தணுவும்
எவர வன்றனி ஆற்றலைக் கடந்தவர் இவண்நீ
தவம யங்கினை அவன்தனி மாயையிற் சார்வாய். - 138



619 - எல்லை இல்லதோர் பொருளெலாம் ஆகுறு மியாவும்
அல்ல னாகியும் இருந்திடும் அருவமு மாகும்
பல்வ கைப்படும் உருக்கொளும் புதியரிற் பயிலுந்
தொல்லை யாதியாம் அநாதியும் ஆகியே தோன்றும். - 139



620 - வாரி வீழ்தரும் புன்னுனித் துள்ளிகண் மான
நேரி லாதமா¢ குமரவேள் நெடிய பேர் உருவின்
ஓரு ரோமத்தின் உலப்பிலா அண்டங்கள் உதிக்கும்
ஆர வன்றிரு மேனியின் பெருமையை அறிவார். - 140



621 - தொலைவி லாவுயிர்த் தொகுதியுந் தொல்லையைம் பூதத்
தலகி லண்டமும் ஏனவும் ஆதியங் குமரன்
நிலைகொள் மேனியின் நிவர்தரும் உரோமத்தின் நின்றே
உலவை யின்றிமுன் னுதித்திடும் இறுதிநாள் ஒடுங்கும். - 141



622 - ஆவ தாகிய வடிவத்தின் அகிலமுஞ் செறிந்து
மேவு மந்நிலை அனையனே அல்லது வேறிங்
கேவர் கண்டனர் அவ்வுரு வியற்கையை எங்கோன்
தேவர் யாவர்க்குங் காட்டிடக் கண்டனர் சிறிது. - 142



623 - தண்டல் இல்லதோர் ஒன்றொரு மயிர்நுனித் தலையின்
அண்ட மெண்ணில கோடிகள் கோவைபட் டசையப்
பண்டு மேருவிற் கந்தவேள் கொண்டதோர் படிவங்
கண்டி லாய்கொலாங் கணிப்பிலாப் பவம்புரி கடியோய். - 143



624 - அன்று கந்தவேள் அமைந்ததோர் பெருவடி வதனுள்
ஒன்று ரோமத்தின் இருந்ததற் காற்றிடா துனதாய்த்
துன்றும் ஆயிரத் தெட்டெனும் அண்டமாந் தொகையும்
இன்று நீயது தெரிகிலை சிறுவனென் றிசைத்தாய். - 144



625 - அளப்ப ருங்குணத் தாதியாம் எம்பிரான் அமரர்
தளைப்ப டுஞ்சிறை மாற்றவுஞ் சதுர்முகன் முதலோர்
கொளப்ப டுந்துயர் அகற்றவுங் கொடியரை யறுத்து
வளப்ப டும்பரி சுவகெலாம் போற்றவும் வந்தான். - 145



626 - வாழி யானநின் ஆயுளும் வன்மையும் வரமுங்
கேழில் சுற்றமும் படைகளும் வான்றொடக் கிளர்ந்து
பூழி யாலுயர் மால்வரைச் சூழலிற் புகுந்த
ஊழி மாருதம் போலடும் எம்பிரான் ஒருவேல். - 146



627 - ஆகை யாலிவை உணா¢ந்திலை இணையிலா தமர்ந்த
ஏக நாயக முதலவனைப் பாலனென் றிகழ்ந்தாய்
சேகு லாவிய மனமுடைக் கற்பிலாச் சிறியோய்
போக போகயாம் இவ்வொரு தவற்றையும் பொறுத்தாம். - 147



628 - நொய்ய சொற்களால் எந்தையை இகழ்ந்தனை நொடிப்பின்
வெய்ய நாத்துமித் துன்னுயிர் வாங்குவம் விடுத்த
ஐயன் ஆணையன் றாதலின் அளித்தனம் அதனால்
உய்தி இப்பகல் வேற்படைக் குண்டியாய் உறைவோய். - 148



629 - உறுதி இன்னமொன் றுரைக்குவம் நீயுமுன் கிளையும்
இறுதி இன்றியே எஞ்சுதல் வேண்டுமேல் அமையோர்
சிறைவி டுக்குதி இகலினைத் தவிருதி செவ்வேள்
அறைக ழற்றுணை அரணமென் றுன்னியே அமர்தி. - 149



630 - வேறு
எனறிவை பலப்பல இகப்பில்பெரு மாயைக்
குன்றெறி படைக்குரிசில் கொள்கைய தியம்பப்
புன்றொழில் படைத்துடைய பூரியன் உணர்ந்தே
கன்றினன் உயிர்த்தினைய கட்டுரைசெய் கின்றான். - 150



631 - கூரெயி றெழாதகுழ விச்சிறுவன் உய்த்த
சாரென நினைந்துனது தன்னுயிர் விடுத்தேன்
பேரலை அவன்பெருமை பின்னுமொழி கின்றாய்
வீரமும் உரைக்குதியென் வெய்யசின முன்னாய். - 151



632 - கொஞ்சுமொழ கொண்டகுழ விச்சிறுவன் மேலாய்
எஞ்சலில் தோர்முதல்வ னேயெனினு மாக
அஞ்சிடுவ னோசிறிதும் அண்டநிலை தோறும்
விஞ்சியமர் பண்ணவர்கள் யாவரையும் வென்றேன். - 152



633 - சேண்பரம தாகியமர் தேவர்சிறை தன்னை
வீண்படு கனாவினும் விடுக்கநினை கில்லேன்
ஏண்பல பகர்ந்தனை எனக்கெதிர் இருந்தே
காண்பன தெலாமொரு கணத்திலினி யென்றான். - 153



634 - கொற்றமிகு சூரனிவை கூறிஅயல் நின்ற
அற்றமறு மானவருள் ஆயிரரை நோக்கி
ஒற்றுமைசெய் தோனுயிர் ஒறுத்தல்பழி வல்லே
பற்றியிவ னைச்சிறை படுத்திடுதி ரென்றான். - 154



635 - என்னலுமவ் வாயிரரும் ஏற்றெரி விழித்துத்
துன்னுகன லைப்புகை சுலாவுவது மானப்
பொன்னின்மிளிர் பீடிகை அமர்ந்தபுகழ் வீரன்
தன்னைவளை குற்றனர் தருக்கினொடு பற்ற. - 155



636 - மிடற்றகுவர் சூழ்வரலும் வீரனெழுந் தன்னோர்
முடிச்சிகை ஒராயிரமும் மொய்ம்பினொரு கையால்
பிடித்தவுணர் மன்னன்அமர் பேரவை நிலத்தின்
அடித்தனன் நொடிப்பிலவா¢ ஆவிமுழு துண்டான். - 156



637 - மார்புடைய மொய்ம்பொசிய வார்குருதி சோர
ஓர்புடையின் யாவரையும் ஒல்லைதனின் அட்டே
சூர்புடையின் முன்னநனி துன்னும்வகை வீசிச்
சீர்புடைய நம்பியிவை செப்பல்புரி கின்றான். - 157



638 - எந்தைநெடு வேலுனை இனித்தடிதல் திண்ணம்
மந்தமுறு முன்னமுன தைம்புலனும் வெ•க
வந்தபல துப்புரவும் வல்லைபெரி தார்ந்தே
புந்திதௌ¤ வாய்அமர்தி போந்திடுவ னென்றான். - 158



639 - சீயவிறல் அண்ணலிவை செப்பியகல் காலை
ஆயவன் இருந்திடும் அரித்தவிசு தானும்
மீயுறவெ ழுந்துவிசும் பிற்றலையின் ஏகி
மாயையென ஒல்லையின் மறைந்துபடர்ந் தன்றே. - 159

ஆகத் திருவிருத்தம் - 639


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்