Kanta purāṇam VII b
சைவ சமய நூல்கள்
Backகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
பாகம் 7b / 3. மகேந்திர காண்டம், படலம் 13- 21 (640 - 1170)
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
3 மகேந்திர காண்டம்
13. சதமுகன் வதைப் படலம் (640 -660)
640 - ஒண்ணில வெயிற்றினரொ ராயிரரை அட்டே
எண்ணலன் அவைக்களம் இகந்துபடர் காலைக்
கண்ணினழல் காலும்வகை கண்டுபுடை யாக
நண்ணுசத மாமுகனை நோக்கிநவில் கின்றான். - 1
641 - ஆறுமுகன் ஆளையிவன் ஆயிரரை இங்ஙன்
கோறல்புரிந் தானெனது கொற்றமுழு தௌ¢ளி
வேறலுடை யோர்களென மேன்மைபல செப்பிச்
சேறல்புரி வான்தவிசும் உம்பரிடை செல்ல. - 2
642 - ஒட்டியநம் வீரரை ஒறுத்தகல் வனேனும்
விட்டதொரு தூதனொடு வெஞ்சமர் இயற்றி
அட்டல்பழி யாகுமவன் ஆற்றலை அடக்கிக்
கட்டிவிரை வால்வருகெ னக்கழற லோடும். - 3
643 - சூற்குல முகிற்பொருவு சூரனடி தாழா
ஏற்கும்விடை பெற்றிசைவின் ஏகுதல் புரிந்தான்
நாற்கடலும் மேவினும் நதுப்பரிய ஊழிக்
காற்கனலின் ஓதைதொடர் காட்சியது மான. - 4
644 - ஏகுசத மாமுகன் இலக்கமற வீரர்
பாகம்வர எண்ணில்படை பாணிமிசை பற்றி
வேகமொடு சென்றதனி வேலன்விடு வீர
வாகுவினை எய்தியொரு மாற்றம்அறை கின்றான். - 5
645 - காவல்பல நீங்கிவரு கள்வஉல குள்ளோர்
ஏவரும வியப்பவரும் எங்களிறை முன்னம்
மேவினை இகழ்ந்துசில வீரருயிர் வௌவிப்
போவதெவன் நில்லுனது போர்வலி அழிப்பேன். - 6
646 - பட்டிமை உருக்கள்கொடு பாறல்அரி தாசை
எட்டுள பரப்பதனுள் ஆண்டகல்வை யேனும்
விட்டிடுவ னோவென விளம்பிவெரிந் எய்திக்
கிட்டுதலும் வீரனிது கேட்டனன் எதிர்ந்தான். - 7
647 - வேறு
கொற்ற வேலுடை அண்ணல்தன் தொழியினைக்
கொண்டிலன் இகழ்ந்தென்னைப்,
பற்ற ஆயிரர் தஙகளை விடுத்தலும் படுத்தனன் பெயர்காலை,
மற்று மீதொரு வயவனை உய்த்தனன் மன்னவன் இவன் ஆவி,
செற்று மாநக ரந்தனை அழித்தனன் செல்லுவன் இனியென்றான். - 8
648 - கருதி இன்னணஞ் சதமுகன் எனப்படு காவலன் றனைநோக்கிக்,
குருதி வேலுடைப் பண்ணவன் அடிமனங் கொண்டுதிண் டிறல்வாகு,
பொருதல் உன்னியே ஈண்டறை கூவினை
பொள்ளெனப் படையோடு,
வருதி யாலெனத் தௌ¢விளி யெடுத்தனன்
மறலிக்கும் இறைபோல்வான். - 9
649 - எல்லை யன்னதிற் சதமுகற் சூழ்தரும் இலக்கரும் எதிரூன்றி,
வில்லு மிழ்ந்திடு வெஞ்சாந் தொடுத்தனர் வேற்படை விடுக்கின்றார்.
கல்லெ னும்படி நேமிகள் உருட்டினர் கப்பணஞ் சிதறுற்றார்.
வல்லை முத்தலைப் படையெழு மழுக்கொடே எறிகின்றார். - 10
650 - அணிகள் பட்டவர் விட்டஇப் படைவகை
அண்ணன்மேற் புகலோடுந்,
துணிகள் பட்டன நெரிந்தன எரிந்தன
துகளுமாய்ப் போயிற்றால்,
மணிகள் பட்டிடும் இருஞ்சிறைக் கலுழர்க்குள்
வலியன்மேற் படுநொய்ய,
பணிகள் பட்டன போன்றன வேறிலை
படியெடுத் துரைத்தற்கே. - 11
651 - இலக்க மாகிமுன் னின்றபேர் ஆண்டகை
இவர்செய லினைநோக்கி,
இலக்க மாய்முழு துலகமுந் துளக்கியே
இராயிரப் பத்தென்னும்,
இலக்க மாமுடி கொண்டதோர் சூளிகை
இம்மெனப் பறித்தேந்தி,
இலக்கமாகிய யெதிர்பொரு தானவர்
தங்கள்மேல் எறிந்திட்டான். - 12
652 - ஏதி லான்விடு சூளிகை சிறகர்பெற்
றிறந்துவீழ் மேருப்போல்,
மீது சென்றமர் இயற்றியே நின்றிடும்
வெய்யவர் மிசையெய்தித்,
தாது முற்றவுஞ் சாந்துபட் டொருங்குறத்
தனுவெலாஞ் சிதைத்திட்டே
ஓத நீர்முகி லார்ப்பொடு புவிக்கண்வீழ்ந்
துடைந்தன உதிராகி. - 13
653 - கொடிசெ றிந்திடு சூளிகை தன்னுடன்
அவுணா¢தங் குழாங் கொண்ட,
முடிசி தைந்தன நாசிநீ டலையெலாம்
முடிந்தன முடிவில்லா,
வடிவ மைந்திடு கன்னகூ டத்தொகை
மாய்ந்தன நிலைகொள்ளும்,
அடித கர்ந்தன கொடுங்கையும் மாண்டன
ஒழிந்தவும் அழிவுற்ற. - 14
654 - இலக்கர் தம்மையுஞ் சூளிகை தன்னுடன்
இமைப்பொழு தினில் அட்டு,
நிலக்கண் வீரனின் றிடுதலுஞ் சதமுகன்
நிரைவிழி கொடுநோக்கிக்,
கலக்க நண்ணியே தமரினைக் காண்கிலன்
கவன்றனன் தௌ¤வெய்தி,
உலக்கை சூலம்வேல் சக்கரந் தோமரம்
ஓச்சுதல் உறகின்றான். - 15
655 - உற்ற காலையின் ஒண்டிறல் மொய்ம்பினோன்
உருகெழு சினஞ் செய்தோர்,
பொற்றை நேர்தரு சிகரியைப் பறித்தனன்
பொள்ளென எறிகாலை,
மற்றொர் வார்சிலை வணக்கியே வெய்யதீ
வாளியா யிரம் பூட்டி,
இற்று வீழ்வகை இடைதனில் அறுத்தனன்
எறிதரு கதிர்வேலான். - 16
656 - அறுத்த நூறுகோல் பின்னரும் ஆங்கவன்
ஆகத்தின் நடுவெய்தச்,
செறித்த காலையின் வீரவா குப்பெயர்ச்
செம்மல்போய் அவன்வில்லைப்,
பறித்த னன்முறித் தெறிதலுஞ் சதமுகன்
பற்றவீ திடையென்னாக்,
குறித்தொ ரைம்பதிற் றிருகரம் ஓச்சியே
குரிசிலைப் பிடித்திட்டான். - 17
657 - பிடித்த தானவத் தலைவனை அண்ணலோர்
பெரும்புயங் கொடுதாக்கிப்,
படித்த லைப்படத் தள்ளலும் வீழ்ந்துளான்
பதைபதைத் தெழுகாலை.
அடித்த லத்தினால் உதைத்தனன்
அசனியால் அழுங்குறும்அரவம்போல,
துடிப்ப வேயுரத் தொருகழல் உறுத்தினன்
சோரிவாய் தொறுஞ்சோர. - 18
658 - கந்த னப்படு மொய்ம்புடை வெய்யசூர்
கட்டுரை முறைபோற்றி,
வந்தெ திர்த்திடு சதமுகத தவுணனை
மிதித்திடும் அறமைந்தன்,
அந்த கப்பெயர் அசுரனை யாற்றல்பெற்
றமர்முய லகன்றன்னைத்,
தந்தியைப்பதம் ஒன்றுகொண் டூன்றிய
தாதைபோல் திகழ்கின்றான். - 19
659 - வேறு
மின்னல் வாளெயிற் றவுனன் மார்பகம் விடரெ னும்படி விள்ளவே,
தன்னொர் பாத முறுத்தி மற்றொரு தாளி னைக்கொடு தள்ளியே,
சென்னி யாவும் உருட்டி னான்திசை முற்றும் நின்று பரித்திடுங்,
கன்ன மார்மத மால்க ளிற்றினும் வன்மை சான்றிடு கழலினான். - 20
660 - நூறு சென்னியும் இடறி யாங்கொரு நொடிவரைப் பின்முன் அவுணனை,
ஈறு செய்தனன் அதுமு டித்தபின் எல்லை யின்சின மெய்தியே,
ஆறு மாமுக வள்ளல் வாய்மை இகழந்து ளான்அவை யத்தைமுன்,
ஈறு செய்துபின் இந்நக ரத்தை யென்று நினைந்தனன். - 21
ஆகத் திருவிருத்தம் - 660
----
14. காவலாளர் வதைப் படலம் (661 - 689)
661 - சுடரும் வேற்படைத் தொல்கும ரேசன
தடிகள் முன்னி அருளுடன் ஆண்டகை
படிய ளந்திடு பண்ணவ னாமென
நெடிய பேருருக் கொண்டுநின் றானரோ. - 1
662 - திசைய ளந்தன திண்புயஞ் சென்றுசேண்
மிசைய ளந்தன மேதகு நீண்முடி
வசுதை யாவும் அளந்தன வார்கழல்
அசைவ ருந்திறல் ஆடவன் நிற்பவே. - 2
663 - திருவு லாங்கழற் சீறடிச் செம்மல்பேர்
உருவு தாங்கி உகந்தனன் நிற்றலும்
அரவின் வேந்தரும் ஆதியங் கூர்மரும்
வெருவி னார்கள் வியன்பொறை ஆற்றலார். - 3
664 - கதிரெ றித்திடு காமரு பூணினான்
மதுகை பெற்ற வடிவொடு நிற்றலும்
அதுப ரித்தற் கருமையின் ஆற்றவும்
விதலை யுற்றது வீர மகேந்திரம். - 4
665 - உலங்கொள் வாகுவின் ஒண்பதம் ஊன்றலும்
விலங்கி யேதளர் வீர மகேந்திரம்
இலங்கை நீர்மையெய் தாமல் இருந்ததால்
குலங்கொள் தானவக் கோமகன் ஆணையால். - 5
666 - சேண ளாவிய சென்னியன் எண்டிசை
காண நிற்புறு காட்சியன் கந்தவேள்
ஆணை காட்டிநி றுவிய ஆடலாந்
தாணு வென்னத் தமியன் விளங்கினான். - 6
667 - சான்ற கேள்வித் தலைமகன் தாட்டுணை
ஊன்று கின்ற வுழிதொறும் மாநிலம்
ஆன்று கீண்டிட அவ்வப் புழைதொறுங்
தோன்று கின்றன சூழ்கடல் நீத்தமே. - 7
668 - ஆத்தன் ஊன்றும் அடிதொறுந் தோன்றிய
நீத்தம் யாவும் நெடுந்திறல் வெய்யசூர்
வாய்த்த கோயில் வளைந்திறை போற்றிய
வேத்த வைக்களந் தன்னினும் மேவிய. - 8
669 - பூழை கொண்டு புறம்படர் நீத்தநீர்
மாழை கொண்டவன் கோயில் வளைந்துராய்ப்
பேழை கொண்ட பிணிப்பறு பாந்தள்போல்
கூழை கொண்ட மறுகிற் குலாயதே. - 9
670 - துய்ய பூழை தொறுந்தொறுந் தோன்றுநீர்
மையல் வெங்கரி வாம்பரி தேர்படை
கைய ரிக்கொடு காசினி யாறுபோல்
செய்ய மாநகர் யாங்கணுஞ் சென்றதே. - 10
671 - தோட்ட தன்ன சுழிப்படு வாரியின்
ஈட்ட மாநகர் வீதிதொ றேகியே
பாட்டின் மாளிகை பற்பல சாடியே
மீட்டும் ஒல்லையின் வேலை மடுத்ததே. - 11
672 - எம்மை யாளுடை எந்தைதன் தூதுவன்
செம்மை நீடு திருவுரு நோக்கியே
கைம்ம றிக்கொடு கண்டனர் யாவரும்
அம்ம வோவென அச்சமுற் றோடினார். - 12
673 - மாவு லாவரும் மன்னவன் கோயிலுட்
காவ லாளர்இக் காளையைக் கண்ணுறீஇ
ஓவி தோர்வஞ்சகன் உற்றனன் ஈண்டெனாக்
கூவி ளித்தனர் தத்தமிற் கூடினார். - 13
674 - கூடு கின்ற குணிப்பருங் காவலோர்
நீடு மெய்கொடு நின்றவற் கஞ்சியே
ஆடல் பூண்டிலம் என்னின் அரசனே
சாடு நம்மைச் சரதமென் றெண்ணினா£¢. - 14
675 - குமரி மாமதிற் கோயிலுட் போற்றியே
அமரி யோர்கள ரைம்பது வௌ¢ளத்தர்
திமிர மேனியர் தீயுகு கண்ணினர்
சமரி யற்றத் தலைத்தலை மண்டினார். - 15
676 - மண்டி மற்றவர் வல்லெழுத் தோமரம்
பிண்டி பாலம் பெருங்கதை ஆதியாக்
கொண்ட கொண்ட கொடும்படை வீசியே
அண்டம் விண்டிட ஆர்த்தனர் ஆடினார். - 16
677 - ஆடும் எல்லை அடுபடைத் தானவர்
பாடு சூழ்ந்த பரிசினை நோக்கினான்
நீடு சான்ற இடித்தொகை ஆயிர
கோடி போற்புயங் கொட்டிநின் றார்ப்பவே. - 17
678 - அலைக்க வந்த அவுணப் படையெலாங்
கலக்க மூழ்கிக் கருத்துணர் வ·கியே
உலக்கு றாத உருமிடி உண்டிடும்
புலைக்க டுந்தொழிற் புள்ளென லாயவே. - 18
679 - வேறு
பன்மழைக் குலங்களிற் படைக்கலங்கள் யாவையும்
வன்மைபெற்ற வீரருய்ப்ப வந்துமேனி படுதலுஞ்
சின்மயத்தன் ஒற்றன்மிக்க செய்யவீழ் விழுத்திய
தொன்மரத் தியற்கைபோன்று சோரிசோர நின்றனன். - 19
680 - ஆனகாலை வீரவாகு அறிவனங்கி யிற்சினைஇ
மானவீரர் மீதலாது வாளெடுக்க லேனெனாத்
தேனின்மாப் பெருங்கடல் திளைத்தலைக்கு மத்தெனத்
தானவப் பதாதியைத் தடிந்தலைத்தல் மேயினான். - 20
681 - மிதித்தனன் கொதித்தனன் விடுத்திலன் படுத்தனன்
சதைத்தனன் புதைத்தனன் தகர்த்தனன் துகைத்தனன்
உதைத்தனன் குதித்தனன் உருட்டினன் புரட்டினன்
சிதைத்தனன் செகுத்தனன் செருக்கினன் தருக்கினன். - 21
682 - சிரத்தினை நெரித்தனன் திறம்புயம் இறுத்தனன்
கரத்தினை முரித்தனன் களத்தினைத் திரித்தனன்
உரத்தினைப் பிரித்தனன் உருத்தனன் சிரித்தனன்
புரத்தினை உரித்தனன் பொடித்தனன் படைத்திறம். - 22
683 - எடுத்தனன் சுழற்றினன் எறிந்தனன் சிலோர்தமைப்
புடைத்தனன் இடித்தனன் புயத்தினாற் சிலோர்தமைப்
பிடித்தனன் பிசைந்தனன் பிழிந்தனன் சிலோர்தமை
அடித்தலங் கொடித்தலத் தரைத்தனன் சிலோர்தமை. - 23
684 - பெருத்தனன் சிறுத்தனன் பெயர்ந்தும்வேறு பல்லுருத்
தரித்தனன் நடந்தனன் தனித்தனி தொடர்ந்தனன்
மருத்தெனக் கறங்கினன் வளைந்தனன் கிளர்ந்தனன்
ஒருத்தன்வௌ¢ளம் ஐம்பது உலக்குறக் கலக்கினான். - 24
685 - மஞ்ஞை அன்னம் ஒண்புறா மடக்குயில் ரிட்பயில்
செய்ஞ்ஞலங்கொள் மாடமீது சேனங்கூளி பிள்ளைகள்
பிஞ்ஞகன் குமாரனாடு பேரமர்க் களம்படும்
அஞ்ஞையாளர் குருதியூன் அருந்துமா றிருந்தவே. - 25
686 - மானினஞ் செறிந்திரைந்து வந்தவெல்லை தன்னிடைத்
தானொர்சிங்க ஏறுபுக்க தன்மைபோல் அவுணர்தங்
கோனிருந்த உறையுளிற் குலாயகாவ லாளராஞ்
சேனைவௌ¢ளம் ஐம்பதுஞ் சினத்தின்வல்லை சிந்தினான். - 26
687 - முறிந்தனர் உறுப்பியாக்கை முற்றும்வேறு வேறவாய்ப்
பிறிந்தனர் தகர்ந்தனர் பிறங்குசென்னி சோரியுட்
செறிந்தனர் புதைந்தனர் சிதைந்தனர் உருண்டனர்
மறிந்தனர் இறந்தனா¢ மடிந்தனர் கிடந்தனர். - 27
688 - இன்னபான்மை வீற்றுவீற்றின் அவுணர்தானை யாவையுஞ்
சின்னபின்ன மாகியே சிதைந்துவீழந் துலந்திட
உன்னுகின்ற முன்னமட் டுலம்பினான் சிலம்பினின்
மன்னன்மங்கை நூபுரத்தின் வந்தவீர வாகுவே. - 28
689 - வள்ளல்நின்று சமரிழைப்ப மாண்டவீரர் யாக்கையின்
உள்ளதாது வானஏழும் உருவம்வேறு காண்கிலா
தள்ளலாகி யொன்றுபட்ட தங்கிதன்னின் உருகியே
வௌ¢ளியாதி உலகம்யாவும் விரவும்வண்ணம் என்னவே. - 29
ஆகத் திருவிருத்தம் - 689
------
15. நகரழி படலம் (690 - 770)
690 - ஆசுறும் அவுண வௌ¢ளம் ஐம்பது முடித்தோன் ஐஞ்?
றோசனை அளவை யான்றே ஒராயிர மும்ப ரேகித்
தேசுறு மேரு வென்னச் சிகரமோ ரிலக்கஞ் சூடி
வீசுபொன் சுடர நின்ற வேரமொன் றங்கட் கண்டான். - 1
691 - புறத்திருள் இரிய வைகும் பொலஞ்சுடர்ப் பொன்செய் வேரந்
திறத்தியல் கோயில் முன்னஞ் சேர்ந்தது தன்னை வீரன்
பறித்தொரு கரத்தின் ஏந்திப் பதகனாஞ் சூர பன்மன்
அறத்தியல் இழுக்கி வைகும் அவைக்களம் வீசி ஆர்த்தான். - 2
692 - பன்மணி செறிந்த பொற்பிற் பாயொளி எரிபொன் வேரம்
மன்னவன் உறையுஞ் செம்பொன் மாயிரு மன்றில் போதல்
மின்னவிர் மேரு வாதி வெற்பெலாம் மிகலின் ஒன்றிப்
பொன்னகர் பொடிப்பச் செல்லுந் தன்மையைப் போலும்அம்மா. - 3
693 - வார்த்தரு கழற்கால் வீரன் வானுரும் ஏறும் உட்க
ஆர்த்திடு துழனி யேகி அரசன்மே வியவத் தாணி
சேர்த்தவர் கன்னத் தூடு செறியுமுன் எறித லுற்ற
பேர்த்திடு செம்பொன் வேரம் பேரவை மிசையுற் றன்றே. - 4
694 - விற்செறி தூபிச் செம்பொன் வியன்மணி கஞலும் வேரங்
கற்செறி பெருந்தோள் வீரன் எறிதலுங் கடிது நண்ணிப்
பொற்செறி மார்பிற் சூரும் புதல்வருஞ் சிலரும் வைகுஞ்
சிற்சில இடையே அன்றி மன்றெலாஞ் சிந்திற் றாமால். - 5
695 - தடத்தனி வேரங் கீண்டு தபனியத் தவைக்கண் ஓச்சி
இடித்தனன் ஒருதான் நிற்கும் எம்பிரா னேவல் தூதன்
படைத்தளித திறுதி வேலைப் பசும்பொனார் தசும்பின் அண்டம்
உடைத்துல கழித்து நிற்கும் ஒருபெருங் கடவுள் ஒத்தான். - 6
696 - புலவுகொள் அலகு வெவ்வாய்ப் புட்செறி பொதும்பர் தன்னில்
பலமுடை உருமு வீழப் பட்டதோர் பரிச தென்னத்
தொலைவகன் மைந்தன் விட்ட சூளிகை தகர்ப்பத் தொல்சீர்
மலிவுறு சனங்க ளோடு மன்றமங் குற்ற தம்மா. - 7
697 - இடிந்தன மிசையின் எல்லை இற்றபித் திகையின் சூழல்
பொடிந்தன உத்தி ரங்கள் போதிகை பூழி யாகி
முடிந்தன மதலை யாவும் முரிந்தன கபோதம் வீழ்ந்த
மடிந்தன திருவுஞ் சீரும் மன்றழி வுற்ற தன்றே. - 8
698 - பீடிகை புரைத்த பொற்பிற் பேரவை தகர்த லோடும்
பாடுற அரசர் சூழ்ந்த பரிசனர் தம்முட் சில்லோர்
ஓடினர் சிலவர் மெய்யூ றுற்றனர் சிலவர் நெக்கு
வீடினர் சிலவர் ஆற்ற மெலிந்தனர் புலம்ப லுற்றார். - 9
699 - நெக்கது பொதியி லாக நிரந்தது செம்பொற் பூழி
திக்கொடு புவியும் வானுஞ் செறிந்தன அவுண ராகித்
தொக்கனர் உடைந்து மாய்ந்து தொகைபிரிந் தழிந்தார் தொல்லைத்
தக்கனின் உணர்வு தீர்ந்த தகுவர்கோன் இவற்றைக் கண்டான். - 10
700 - ஆயிர நாமத் தண்ணல் அனையவன் வன்மை காணா
ஆயிரம் வடவை யேபோல் அழன்றுதன் னயலின் நின்ற
ஆயிர நெடுந்தோள் ஐஞ்? றானனங் கொண்ட தீயோர்
ஆயிரர் தம்மை நோக்கி அடலுரும் ஏற்றிற் சொல்வான். - 11
701 - விழிப்பரு நிவப்பின் ஓங்கும் வேரமொன் றதனைக் கீண்டே
தெழிப்பொடு குமரன் தூதன் செலுத்தினன் செம்பொன் மன்றம்
இழிப்புறத் தகர்ந்து வீழ்ந்த தீண்டுசில் லிடமே அன்றிப்
பழிப்பெனக் கிதன்மேல் உண்டோ பட்டதென் புகழும் மன்னோ. - 12
702 - கோறலே கொற்ற மன்றால் ஒற்றனைக் குறுகி நீவிர்
மாறுபோர் இயற்றி யேனும் மற்றவன் வழாத வாற்றல்
ஈறுசெய் திடாது பற்றி எம்முனர்த் தருதிர் மெய்யின்
ஊறுசெய் தவனை வானோ ருடன்சிறை உய்ப்ப னென்றான். - 13
703 - அன்னவர் அதனைக் கேளா அரசவீ தருளிக் கேண்மோ
ஒன்னலன் தூதன் சோரி உயிரொடு குடித்தற் குற்றாம்
நின்னருள் ஆணை நாடி நெஞ்சகம் புழுங்கி யஞ்சி
இன்னதோர் பொழுதுந் தாழ்த்தேம் இனியது புரிது மென்றார். - 14
704 - என்றனர் வணக்கஞ் செய்ய இனிதென உவகை பூத்துக்
கன்றிய அவுணர் தங்கள் காவலன் விடுப்ப அங்கட்
சென்றனர் பத்து நூற்றுத் திறலுடை மொய்ம்பர் முன்னம்
நின்றிடு வீர வாகு நிலைமையை உரைக்க லுற்றாம். - 15
705 - வேறு
வேரம தெறிந்தவை வீட்டி நின்றுளான்
சூருரை நகர்வளந் தொலைச்சிச் சூழுநர்
சேருறும் இருக்கையுஞ் சிதைப்பன் இன்றெனா
ஓருறு புந்தியில் உன்னி னாரோ. - 16
706 - மறிப்பிணை முதலிய மான்கள் புள்ளினஞ்
சிறப்புறு தண்டலை மணியிற் செம்பொனிற்
குறிப்பினர் குயிற்றுசெய் குன்றம் யாவையும்
பறித்தனன் திசைதொறும் பரவ வீசினான். - 17
707 - வரைவயி றுயிர்த்திடு மாசில் பல்பகை
அரதன நிரைகளின் அணிய செம்பொனின்
மரபினில் இயற்றிய வரம்பில் தெற்றிகள்
விரைவொடு தொட்டனன் எடுத்து வீசினான். - 18
708 - முடிவகல் பேழையின் மூட்டு நீக்கியே
அடியுறு கொள்கலம் அவற்றைச் சாய்த்தெனப்
படியுறு மண்டபம் பலவுந் தொட்டெடா
இடிபுரை ஓதையான் யாண்டும் வீசினான். - 19
709 - மலரயன் மிசையுறு மாயற் புல்லுவான்
நிலமகள் கைகளை நீட்டி யென்னவான்
உலகெலாம் இகந்துமேல் ஓங்கு கோபுரம்
பலபல பறித்தனன் பாங்கர் ஓச்சினான். - 20
710 - மூளுறும் எரிசிகை முடித்துத் தானவர்
கேளடு தமித்தமி கெழுமி யுற்றென
வாளுறு மாமணி வயங்கு தூபிகைச்
சூளிகை பலபல தொட்டு வீசினான். - 21
711 - கற்றிடும் விஞ்சையின் கழகம் பல்கடைத்
தெற்றிகள் வேதிகை சிறந்த சாலைகள்
துற்றிடு பழுமரச் சோலை வாவிகள்
மற்றுள பிறவொடும் மட்டித் தானரோ. - 22
712 - கந்துக வியனிரை கரிகள் தேர்த்தொகை
பந்தியிற் சாலையிற் பயின்று நின்றன
அந்தமின் றாயின் அள்ளி அள்ளியே
உந்தினன் திசைதொறும் உரற்றி வீழவே. - 23
713 - நிலவரை சூழ்தரு நேமி வெற்பென
மலிதரு செம்மணி வகையிற் பண்ணிய
பலவகை இயந்திரப் பதண இஞ்சிகள்
ஒலிகழற் காலினான் உதைத்து வீட்டினான். - 24
714 - பூழியம் பொற்புயப் புனிதன் வெய்யசூர்
வாழுறு கோநகர் வளத்தை யின்னணம்
ஊழியின் மருத்தென உலாவி யட்டபின்
சூழுறு கிடங்கருந் தூர்த்திட் டானரோ. - 25
715 - அறந்தலை நின்றிடா அரசன் கோயில்நின்
றெறிந்திடு சிகரிகள் இலங்கு சூளிகை
நிறைந்திடு மண்டபம் நெருங்கு காமர்காச்
செறிந்தன பிறவொடு சென்று சேணெலாம். - 26
716 - உளர்ந்திடு வரியளி யுலாவு தொங்கலான்
வளர்ந்திடு பாணியான் மன்னன் செல்வமாய்க்
களைந்தெறி கின்றன கணிப்பி லாதவுங்
கிளர்ந்திடு நெடுமுகில் கிழித்துச் சென்றவே. - 27
717 - சூரெனும் அவுணர்கோன் படைத்த தொல்வளஞ்
சேரிய மிசைவரத் தெரிந்து வானிடைச்
சாருறு கடவுளர் தம்முள் ஏங்கியே
ஏரியல் தொகைபிரிந் திரியல் போயினார். - 28
718 - ஊனிவர் குருதிவேல் ஒருவன் ஓச்சிய
தானவர் கோன்வளந் தகைந்து விண்ணவர்
மேனிகழ் பதங்களை வீட்டி ஏகியே
வானதி தன்னையும் வல்லை தூர்த்தவே. - 29
719 - வெறித்திடு தார்ப்புய விடலை நொய்தினில்
பறித்தெறி அவுணர்கோன் பலவ ளங்களும்
எறித்திடு தீங்கதிர் எல்லை வேந்தனை
மறைத்தன பணிபல மயங்கிச் சூழ்ந்தபோல். - 30
720 - சோலையின் மண்டபத் தொகையிற் சூளிகைப்
பாலினிற் சிகரியிற் பயின்ற புள்ளெலாம்
மேலுறு செலவினில் விரைவின் ஏகியே
மாலயன் புள்ளடு மருவி வைகியே. - 31
721 - செஞ்சுடர்ச் சூளிகை சிகர மாதிகள்
விஞ்சிய மிசைவர விழித்துத் தாளிலோன்
எஞ்சிய வுடலமும் இறுங்கொல் இன்றெனா
அஞ்சினன் அழுங்கினன் அலரி பாகனே. - 32
722 - வள்ளுறு வசிகெழு வயிர மாமுடி
உள்ளபல் சூளிகை உம்பர் செல்வன
பிள்ளைகள் எறிந்திடப் பிறங்கு பம்பரம்
பொள்ளென ஈண்டிவான் போவ போன்றவே. - 33
723 - மீப்படு வியன்முகில கிழித்து விண்மிசை
மாப்பெருஞ் சிகரிகள் வல்லை செல்வன
நீப்பருங் ககனமான் நெடுங்க துப்பினில்
சீப்பிடு கின்றதோர் செய்கை போலுமால். - 34
724 - பயனுறு பழுமரப் பைம்பொற் காமர்கா
வயனெறி தந்திட அகல்விண் செல்வன
நயனறும் அவுணனூர் நணிய கற்பகம்
வியனுல இருந்திட மீள்வ போன்றவே. - 35
725 - ஐயன தொற்றுவன் அள்ளி வீசிய
செய்யபல் பொருள்களுஞ் செறிந்து சேணெலாங்
கொய்யுளை வயப்பரிக் கொடிஞ்சித் தேர்மிசை
வெய்யவன் செலவினை விலக்கு கின்றவே. - 36
726 - திருமிகு சூளிகை சிகர மாதகள்
நிரல்பட ஏகியே நிரந்த பல்வகைப்
பருமணி யெரிசுடர் பரப்பி வான்படர்
இரவிதன் கதிரையும் இகலி வென்றவே. - 37
727 - மின்னவிர் சிகரிபொன் வேர மாதிகள்
என்னவும் வான்படர்ந் தெழாலின் விஞ்சையர்
உன்னுறும் ஓங்கலும் உவண வைப்பெனும்
பொன்னெயில் வட்டமும் பூழி செய்தவே. - 38
728 - குன்றொடு சூளிகை கோபு ரம்பிற
ஒன்றுடன் ஒன்றுபட் டுரிஞ்சி யாயிடைத்
துன்றிய மணிதிசை தோறுஞ் சிந்துவ
மின்றிகழ தாரகை விளிந்து வீழ்வபோல். - 39
729 - பொற்றைகள் சிகரகோ புரங்கள் தத்தமில்
எற்றுழிப் புகையென எழுந்து பூழிகள்
சுற்றிய புலிங்கமுந் தோன்று கின்றன
வெற்றவெம் புயல்களு மின்னும் போலவே. - 40
730 - ஏழுயர் களிறனான் எறிந்த யாவையுஞ்
சூழுற வானிடைத் துவன்ற எற்றலிற்
கேழுறு நுண்டுகள் கெழுமிச் சிந்துவ
பூழியின் நெடுமழை பொழியுந் தன்மைபோல். - 41
731 - ஆரியன் ஓச்சிய அணிகொள் மண்டபம்
வேரமொ டகன்பொழில் பிறவும் விண்ணுறீஇத்
தாரகை முதற்சுடா¢த் தனுக்கள் சார்ந்திடச்
சோரியும் இடையிடை துளித்த தென்பவே. - 42
732 - புந்தியி லான்மகம் புகுந்த தீமையால்
இந்திர னாதியோர் யாருஞ் சூரனால்
நொந்தனர் அவன்நகர் வளமும் நோவுற
அந்தரத் தவரையும் அலக்கண செய்தவே. - 43
733 - வெற்புறழ் மொய்ம்பினான் விடுத்த சூளிகை
பற்பல பொருந்தலும் பட்ட வன்னிபோய்
எற்படு கதிருடை இரவி பச்சைமாப்
பொற்புறு கொய்யுளை பூழி செய்ததே. - 44
734 - பொன்னவிர் சிகரகோ புரங்க ளாதிய
துன்னிய தாக்கலில் தோன்றித் தீப்பொறி
இன்னுயிர் வழங்கிய வெல்லை எங்கணும்
வன்னிபெய் மழையென மயங்கி வீழ்பவே. - 45
735 - வழுவுறும் அவுணர்கோன் வளங்கள் யாவையும்
கெழுதகு விசும்பினைக் கிழித்துச் சேறலின்
எழிலிகள் வயிறுடைந் திரங்கி ஆற்றலா
தழுதென உலகெலாம் அறல்சிந் துற்றவே. - 46
736 - வேறு
ஏசிலா அறிவன் விட்ட இன்னபல் வெறுக்கை யாவும்
மாசகல் விசும்பின் ஏகி மதிமுடி அருள்பெற் றுள்ள
கோசிகன் துறக்க முய்த்த கொற்றவன் தவறி யென்ன
ஆசுற மீண்டு ஞாலத் தகிலமும் வீழந்த அன்றே. - 47
737 - படிதனில் திசையின் பாலிற் பௌவத்திற் பழுவந் தன்னில்
தடவரை தன்னில் இன்ன தகையன பிறவிற் சூர
னுடையபல் வளங்க ளெல்லாம் உரற்றியே வீழ ஆண்டும்
இடைதரு முயிரின் பொம்மல் வெருவிவீழ்ந் திரித லுற்ற. - 48
738 - அலைந்தது பரிதி ஓங்கல் அதிர்ந்தது மேருச் சையங்
குலைந்தது சூழுங் குன்றங் குலுங்கிய அசலம் ஏழுங்
கலைந்தது நாகர் வைப்புங் கலங்கிய கடலும் பாரும்
உலைந்தன உயிர்கண் முற்றும் ஓடின திசையின் யானை. - 49
739 - தண்படு தொடலை மார்பன் தானெறிந் தவற்றிற் பல்வே
றொண்புவி முழுதுஞ் சிந்திற் றொழிந்தன உலப்பி லாத
எண்பதி னாயி ரப்பேர் யோசனை யெல்லைத் தாகிக்
கண்படு சூரன் ஊரின் கல்லென வீழ்ந்த மாதோ. - 50
740 - முடிந்திடல் அரிய சூரன் மொய்வளம் அவனூர் முற்றுந்
தடிந்தெறி உருமே றென்னத் தணப்பற வீழ்த லோடும்
இடிந்தன மாட வீதி யாவையும் கடிகா இற்ற
பொடிந்தன சிகரி யாதி புரிசைகள் மறிந்து மாண்ட. - 51
741 - மண்டபஞ் சிகரி வேரம் அணிமதில் மாட கூடம்
எண்டகு பொதியின் முற்றும் இடிபட எழுபொற் பூழி
விண்டொடு திசைபார் யாண்டும் வெறுக்கையின் வடிவ மாக்கி
அண்டா¢தம் உலகீ தென்றே அறிகுறா வகைசெய் தன்றே. - 52
742 - புடையகல் பொன்செய் மூதூர் பொள்ளெனத் தகர்ந்து வீழ
மிடைதரு வீதி முற்று மேயின சனங்கள் பூசல்
கடைவரு நாள தெல்லைக் ககனமூ தண்ட கூடம்
உடைதலும் முடியும் ஆவி அரற்றுமா றொத்த தன்றே. - 53
743 - வேறு
நாக முந்து நறுநிழல் மாதவி
நாக முந்து நறுநிழற் பொற்கணி
சேக ரம்பல சிந்திடு காழுடைச்
சேக ரம்பல வோடு சிதைந்தவே. - 54
744 - கோட ரங்குல வுற்றிட வான்றொடுங்
கோட ரங்குல வுற்றிடு தண்டலைக்
கோட ரங்குலங் கோலஞ்செய் பொன்வரைக்
கோட ரங்குல வுற்றிறை கொண்டவே. - 55
745 - ஓடும் வாவியின் மீனினம் ஓங்குபுள்
ளோடும் வாவிவிண் ணுற்றிட வீதியின்
மாட மாலை வரிசையின் மல்கிய
மாட மாலை மறிந்திடி பட்டதே. - 56
746 - அண்ட ரண்டரும் அந்நகர் மாண்டன
அண்ட ரண்டம் அளவிடு சூளிகை
மண்ட பம்மதின் மாடந் தரித்தயர்
மண்ட பம்மதின் மாதவம் யாவதே. - 57
747 - பூவை யன்ன மணிமயில் பொற்புறு
பூவை யன்ன மணிமயில் பொற்புறா
வாவி யோடைவண் டான மழிந்திட
வாவி யோடைவண் டானம் அழியுமால். - 58
748 - மொய்யு டைத்தறி மோதித் தளைபரீஇ
மையு டைப்பெரு மால்கரி சோரிநீர்
மெய்யி டத்துக விண்முகி லச்சுறக்
கையெ டுத்துக் கதறி உடைந்தவே. - 59
749 - ஈடு சான்ற வெருத்த முரிந்திட
நீடு பூநுதல் நெக்குறக் கிம்புரிக்
கோடு சிந்தக் குருதியு குத்தரோ
ஓடி வீழ்வ உவாக்கள் அரற்றியே. - 60
750 - கார்கொள் சிந்துரங் காயத் திடையிடைச்
சோரி சோர்தரத் தோன்றுவ ஈற்றினின்
மேரு வாதி விலங்கலை மெய்க்கனல்
சாரும் வெம்புகை தன்னொடுஞ் சூழ்ந்தபோல். - 61
751 - கோடிகள் இற்ற கொடிஞ்சி முரிந்தன
இடைகொள் பீடிகை எல்லைகள் நெக்கன
அடிகொள் சில்லியும் ஆருஞ் சிதைந்தன
பொடிய தாகிப் புரண்டன தேர்களே. - 62
752 - பந்தி தோறும் பராவிய ஐங்கதிக்
கந்து கங்கள் கலங்கி நெரிந்திட
நொந்து மேனி நொறில்வரு செம்புனல்
சிந்தி யோடச் சிதறிய திக்கெலாம். - 63
753 - சிதவல் கொண்டிடு செம்மயிர்க் கொய்யுளை
மதுகை வெம்பரி வாய்களின் வீழ்தரு
முதிர வாரி யொலிகடல் புக்கதால்
இதுகொ லோவட வைக்கனல் என்னவே. - 64
754 - காள வெங்கரிக் காலின் வயப்பரித்
தாளின் ஊடகப் பட்டுத் தரைபுகா
மூளை சிந்த முழுதுடல் பூழியாய்
மாளு கின்றனர் மாநக ரோர் சிலர். - 65
755 - ஆளி மொய்ம்புடை அண்ணல்முன் வீசின
நீளு மாநகர் ஞௌ¢ளலின் வீழ்தலுந்
தோளி ழந்து சுவல்முரிந் தொய்யெனத்
தாளி ழந்து தரங்கமுற் றா£¢சிலர். - 66
756 - பொற்றை யன்ன பொலன்மணி மாளிகை
இற்று வீழ்தலும் என்னிது வென்றெழீஇ
வெற்ற வௌ¢ளிடை மேவுதல் முன்னியே
முற்றம் வந்திடு முன்மறிந் தார்சிலர். - 67
757 - ஊடு மைந்தரும் ஒண்டொடி மாதரும்
மாட மோடு மறிந்தனர் தம்முடல்
வீடி விண்மிசை வேற்றுரு வெய்தியே
கூடி யேவழிக் கொண்டன ரோர்சிலர். - 68
758 - உவமன் இல்லவன் ஓச்சின எங்கணும்
அவதி யின்றிப் பொழிய வவைதெரீஇத்
தவறி லாதுசெய் தாழ்வரை கீண்டெடாக்
கவிகை யாத்தமைக் காத்துநிற் பார்சிலர். - 69
759 - விறற்கொள் வாகு விடுத்தன கல்லக
வுறைப்பின் வீழ ஒதுங்கிடம் இன்மையிற்
சிறக்கு மாநகர்ச் செந்தரைக் கொண்டகீழ்
அறைக்கு ளேபுக் கலமரு வார்சிலர். - 70
760 - மாதர் தங்களை மக்களை அன்னையைத்
தாதை மாரைத் தமதுகைப் பற்றியே
ஏதின் மாடம் இகந்துகச் சோரிநீர்
வீதி போந்து வெருவிநிற் பார்சிலர். - 1
761 - கருவி வானினுங் கண்ணகன் திக்கினுந்
தரணி தன்னினுந் தாவிலன் வீசிய
திருவ ளங்கள் செறிந்தன விழ்தலும்
வெருவிப் போய்க்கடல் வீழ்ந்தொளிப் பார்சிலர். - 72
762 - கிழிந்த சென்னியிற் கேழ்படு செம்புனல்
கழிந்து தோன்றவுங் கண்டனர் ஐயுறாப்
பொழிந்து மெய்ப்புறம் போர்த்தலுந் தேற்றியே
அழிந்தி ரங்குற ஆகுலிப் பார்சிலர். - 73
763 - ஆடல் மொய்ம்பினன் ஆர்த்துமுன் வீசிய
மாட வீதி வளநகர் எங்கணும்
நீட வீழதலும் நிற்றலை அஞ்சியே
ஓடி யூறுற் றுயிர்துறப் பார்சிலர். - 74
764 - திங்கள் சூடி திருமகன் விட்டன
எங்கும் வீழும் இறப்பினை நோக்கியே
அங்கி வெங்கணை தொட்டறுத் தன்னவை
தங்கள் ஆருயிர் தாங்கிநிற் பார்சிலர். - 75
765 - மையல் மாதரும் மைந்தரும் ஆவியும்
பொய்யில் புந்தியும் ஒன்றிப் புணர்தலுஞ்
செய்ய மாடஞ் சிகரமொ டேவிழ
மெய்யும் ஒன்றி விளிந்திடு வார்சிலர். - 76
766 - அந்தண் மாடத் தறிவன் விடுத்தன
வந்து வீழ மறிந்துரு மேறெனச்
சிந்த வேயுகு செம்பொறி மெய்ப்பட
வெந்து சின்னம் விரவுறு வார்சிலர். - 77
767 - வரங்கொள் வீர மகேந்திரத் தின்னணந்
தரங்க மெய்திச் சனங்களெல் லாமிரீஇ
உரங்கள் சிந்தி அழிந்துழி ஒல்லென
இரங்கும் ஓதை எழுகடல் உண்டதே. - 78
768 - மன்றி னிற்கரி பொய்த்து மனுநெறி
கொன்று வாழுங் கொடியர்தம் மில்லெனத்
துன்று மாடத் தொகைவௌ¢ ளிடையதாய்ப்
பொன்றி வீழ்ந்தன புல்லென வாகியே. - 79
769 - நீறு பட்ட நெடுநகர் எங்கணும்
ஊறு பட்ட உயிர்கடஞ் சோரிநீர்
ஆறு பட்டிட அங்கவை யோடளாய்ச்
சேறு பட்டன செக்கர்விண் போலவே. - 80
770 - மலிந்த சீர்த்தி மகேந்திர மாபுரம்
அலைந்து தொல்லைத் திருமுழு தற்றதால்
மெலிந்தி டும்படி விண்ணவர் தம்மெலாம்
நலிந்த வன்வளம் நன்றுறு மேகொலாம். - 81
ஆகத் திருவிருத்தம் - 770
------------
16. சகத்திரவாகுகள் வதைப் படலம் (771- 803)
640 - ஏயின பான்மையின் இவன்மூதூ£¢
மாயத்ரும் எல்லையின் வருகின்ற
ஆயிர வாகுள அடல்வீரர்
மேயின தன்மை விளம்புற்றாம். - 1
771 - ஓலம் உடைக்கடல் உமிழகின்ற
நீல விடத்தினை நிகர்மெய்யார்
மாலை யுடைப்பல வடவைத்தீக்
கோல மெனச்சிகை கொண்டுற்றார். - 2
773 - தீங்களி றாதிய திறல்மாக்கள்
தாங்குவை யோடு தலைப்பெய்தே
ஆங்குள சோரி அறாதீமப்
பாங்கா¢கள் அன்னதொர் பகுவாயார். - 3
774 - எல்லையின் நேமிகள் யாவுந்தாம்
ஒல்லொலி நீரின் உடைந்தென்னக்
கல்லுறை சிந்து கருங்கொண்மூச்
செல்லென ஆர்த்தனர் செல்கின்றார். - 4
775 - வேறு
மைவரு நீல வரைத்தொகை தாங்கும்
மொய்வரு கின்ற முடிக்குழு வென்ன
ஐவகை நூற்றின் அமர்ந்தகல் வானைத்
தைவரு கின்ற தலைத்தொகை கொண்டார். - 5
776 - மராமர மானவை மாதிர மெங்கும்
பராவ விடுத்திடு பலகவ டென்ன
விராவிய அங்கத மேவிய விளங்கும்
ஒராயிர மாகிய ஒண்புய முள்ளார். - 6
777 - எழுக்கொடு முத்தலை எ·கம்பில் நாஞ்சில்
கழுக்கடை சங்கொடு கப்பணம் வெவ்வாள்
மழுக்கதை சக்கரம் வச்சிர மாதி
விழுப்படை யாவும் விராவிய கையார். - 7
778 - எண்டகு நேமிகள் ஏழும் அளக்கர்
மண்டல மானவு மன்னுயிர் யாவுங்
கொண்டிடி னுங்குறை வின்றி நிரம்பா
தண்டம தென்ன அகன்ற வயிற்றார். - 8
779 - விழுமிய ப·றலை வெம்பணி யேனைக்
குழுவொடு போற்றினர் கொண்டுற லாற்றா
தழுதிட நாடிய தற்கயர் வார்போல்
கழல்கள் அரற்று கழற்றுணை கொண்டார். - 9
780 - இருபுயம் ஓர்முகம் எய்திய வானோன்
ஒருவனை வெல்ல ஒராயிர ரானேம்
பொருவகை சென்றிடல் புன்மைய தென்னா
வருபழி யுன்னி மனந்தளர் கின்றார். - 10
781 - மாகர வான்முன மாயையின் வந்தான்
ஆகையி னால்இவன் ஐதென வானிற்
போகுவ னால்இது பொய்யல வல்லே
ஏகுமின் ஏகுமின் என்றுசெல் கின்றார். - 11
782 - மீளிகை யாலெறி மேதகு வேர
மாளிகை கோபுர மண்டபம் வீழ்வ
காளிக ரன்னக ரங்கள்கொ டேற்றுத்
தூளிகள் செய்தனர் தூர்த்திடு கின்றார். - 12
783 - எய்யென மெய்யிடை எங்கும் வியர்ப்பச்
செய்யன கண்வழி செந்தழல் சிந்த
வெய்ய உயிர்ப்பெழ வேர்வுள மூள
ஒய்யென ஓடினர் உற்றிடு கின்றார். - 13
784 - நாகர் தமக்கொர் நமன்றனை யன்னோர்
ஆகிய ஆயிரர் ஆயிர மொய்ம்பர்
வேகம தாகி விழுத்தகு வீர
வாகுவை எய்தி மடங்கலின் ஆர்த்தா£¢. - 14
785 - ஆர்த்திடும் ஓதை அகன்செவி செல்லத்
தார்த்தொகை தூங்கு தடம்புய வீரன்
பார்த்தனன் மூவெயில் பண்டெரி செய்த
தீர்த்தனெ னச்சிறி தேநகை செய்தான். - 15
786 - மேனிமிர் மந்தர வெற்பென நின்றே
வானள வோங்கு மராமரம் ஒன்றைத்
தேனினம் வான்றிசை சிந்தி யரற்ற
ஊன்முதிர் கைகொ டொசித்தனன் மன்னோ. - 16
787 - அண்டம் இருண்டிட ஆதவ ரானோர்
மிண்டிய பேரொளி வீந்திட வீரன்
வண்டழை துன்று மராமரம் அங்கை
கொண்டது பன்முறை கோட்புறல் செய்தான். - 17
788 - வேறு
மாயிர மருப்புள மராமரம் இறுத்தே
தூயன்அம ராடல் முயல் தொன்னிலைமை நோக்கி
ஆயிரம் அடுத்தபுயர் ஆயிரரும் அங்கண்
மூயினர்கள் அண்ணலை முரட்படை சொரிந்தார். - 18
789 - தொடுத்தனர்கள் வார்கணைகள் தொட்டனர்கள் வைவேல்
எடுத்தபல தோமரம் எறிந்தனர்கள் ஆலம்
விடுத்தனர்கள் முத்தலை வியன்கழுமுள் உய்த்தார்
அடற்குலிசம் வீசினர்கள் ஆழிகள் துரந்தார். - 19
790 - இப்பரிசி னுள்ளபடை யாவுமுறை தூங்கு
மைப்புயல்க ளென்னவரை வின்றிவிரை வாக
ஒப்பரிய வீரன்மிசை உய்த்திடலும் அன்னோன்
துப்பொடு மரந்தனி சுழற்றிஅடல் உற்றான். - 20
791 - விட்டபடை யாவையும் வெறுந்துகள வாகப்
பட்டிட மரங்கொடு பராகமவை செய்ய
உட்டௌ¤வின் மானவர் ஒராயிரரும் வீரற்
கிட்டினர் வளைந்தனர் கிளர்ந்தமர் முயன்றார். - 21
792 - ஒட்டியம ராடிய ஒராயிரவர் தாமுங்
கெட்டிரிய மேருநிகர் கேழ்கிளர் புயத்தோன்
மட்டுநனை வார்சினை மரங்கொடு புடைத்தே
சட்டக மிறந்துபடு தன்மைபுரி குற்றான். - 22
793 - செக்கர்புரை குஞ்சிகெழு சென்னிகள் கிழிந்தார்
நெக்கனர் கபோலவகை நெற்றிபிள வுற்றார்
அக்கநிரை சிந்தினர் அலங்குகுழை யற்றார்
உக்கனர்கள் பல்லெயி றுடைந்தனர்கள் துண்டம். - 23
794 - வாய்நிரை பகிர்ந்தனர்கள் மாழைதிகழ் கண்ட
மானவு முரிந்தனர்கள் அற்றனர்கள் பொற்றோள்
ஊனமகல் அங்கைகள் ஒசிந்தனர் தசைந்தே
பீனமுறு மார்பினை பிளந்தனர் தளர்ந்தார். - 24
795 - உந்திகள் குடங்கரின் உடைந்துகுடர் யாவுஞ்
சிந்தினர் மருங்கெழில் சிதைந்தனர் புறங்கண்
முந்துதொடர் என்பொடு முரிந்தனர்கள் வாமஞ்
சந்துபொரு கின்றமுழந் தாளடிகள் அற்றார். - 25
796 - வீந்தனர்க ளோர்சிலவர் வீழ்ந்துமிதி பட்டுத்
தேய்ந்தனர்க ளோர்சிலர் செய்யகுடர் சிந்திச்
சாய்ந்தனர்க ளோர்சிலர் தங்குருதி ஆற்றுள்
தோய்ந்தனர்க ளோ£¢சிலர் துடித்தனர்கள் சில்லோர். - 26
797 - எறிந்திடு படைத்தொகுதி ஏகுமுனம் வீழ்ந்து
மறிந்தனர்க ளோர்சிலவர் மாய்ந்துகக னம்போய்ச்
செறிந்தனர்க ளோர்சிலர் சிதைந்துதலை போயும்
முறிந்தவுடல் கொண்டமர் முயன்றனர்கள் சில்லோர். - 27
798 - ஏரகலும் வீரர்தமி யாக்கையிது வண்ணஞ்
சேரவிறல் உற்றுடைய செவ்வியின் எழுந்த
சோரிநதி மாநகர் தொலைத்துவளன் வாரி
வாரிதி நிறைந்தவனி மீதினும் மடுத்த. - 28
799 - வேறு
அறந்தெ ரிந்துணர் ஆண்டகை அகன்மரம் புடைப்பக்
குறைந்த சென்னிவான் திரிவன எயிற்றொடு குலவிச்
செறிந்த தேவரோ டமிர்தொளித் துண்டவர் சென்னி
நிறைந்தி டாமதித் துணைகவர்ந் துலவுதல் நேரும். - 29
800 - அடல்கொள் மொய்ம்பினன் மரம்புடைத் தலுஞ்சில அவுணர்
உடல்சி னப்பரி முகத்தவர் தலைதுமிந் துதிர
நெடிதும் வாய்வழி சிந்தவீழ்ந் தனர்நெடுங் கடலுள்
வடவை மாமுக மங்கிகான் றிடுவதே மான. - 30
801 - வள்ளல் மாமரத் தண்டுகொண் டடித்தலும் வலியோர்
பிள்ளை மாமதி எயிற்றணி சிந்துவிண் பெயர்ந்தே
அள்ளல் வேலையின் முறைமுறை வீழ்வன அதன்கண்
துள்ளு மீன்கணம் உகண்டுவீழ் கின்றதோர் தொடர்பின். - 31
802 - வலிந்த வூழ்முறை யாவரே கடந்தவர் மரத்தாற்
பொலந்த யங்குபூண் மார்பினன் எற்றிடும் பொழுதிற்
கலந்து போர்செய்தார் ஓர்சிலர் வாளடு கரம்போய்த்
தொலைந்து ளார்செலும் நெறியின்வீழ்ந் தவர்சிரந் துணிப்ப. - 32
803 - இனைய பற்பல நிகழந்திட இணையிலா ஒருவன்
தினையின் வேலையில் ஆயிரம் புயமுடைத் திறலோர்
அனைவர் தம்மையும் ப·றுணி படுந்திறன் அட்டுத்
தனிமை தன்னொடு நின்றனன் அமர்க்களந் தன்னில். - 33
ஆகத் திருவிருத்தம் - 803
--------
17. வச்சிரவாகு வதைப் படலம் (804 - 904)
804 - கூடி ஆரமர் இயற்றினார் தம்வலி குறைந்து
வீடி ஆவிபோய் விளிதலும் அன்னது விரைவின்
நேடி விண்ணிடை நணுகிய தூதுவர் நில்லா
தோடி யாளுடை அவுணர்கோன் முன்புசென் றுரைப்பார். - 1
805 - துன்றும் ஆயிர மொய்ம்புடை நின்படைத் தொகைஞர்
சென்று சில்லமர் புரிந்தனர் அவனது தெரியா
ஒன்றொர் பாதவம் பறித்தனன் புடைத்தலும் ஒருங்கே
பொன்றி வீழ்ந்தனர் புகுந்தவா றீதெனப் புகன்றார். - 2
806 - புகன்ற வேலையின் அவுணர்கோன் புரையிலோன் வன்மை
புகன்ற வேலையின் வடவையார் அழலெனப் பொங்கி
அகன்ற னன்பெரு மிதத்துடன் ஆணையுந் திறலும்
அகன்ற னன்பெருந் துயர்கொளீஇ யினையன அறைவான். - 3
807 - உமைய ளித்திடு சிறுமகன் தூதுவன் ஒருவன்
எமது முன்னம்வந் தவமதி செய்தனன் ஏகி
அமரில் யாரையும் அட்டுநின் றின்னமும் அகலான்
நமது கொற்றமும் நன்றுநன் றாலென நகைத்தான். - 4
808 - முச்ச கம்புகழ் அவுணர்கோன் முனிவினை முன்னி
யச்சே னக்கிளர்ந் தெழுந்துசென் றவனடி வணங்கி
மெய்ச் சிரங்கள் ஓரையிரு திறலுடை விறல்சேர்
வச்சி ரத்திரு மொய்ம்புடைக் காதலன் வகுப்பான். - 5
809 - நொய்ய தூதுவன் பொருட்டினால் இத்திறம் நுவறல்
ஐய கேட்கநிற் கியலுமே இறையிவண் அமா¢தி
மொய்யில் யான்சென்று மற்றவன் பெருமுரண் முருக்கிக்
கைய கப்படுத் துய்ப்பனால் அன்னது காண்டி. - 6
810 - வேறு
என்ன லோடும் இறப்பெதிர் உற்றிடா
மன்னன் மைந்தனை நோக்கி மகிழ்வுறா
அன்ன தன்மையை ஆற்றுதி நீயெனப்
பன்னி யேகும் படிபணித் தானரோ. - 7
811 - விடைபு ரிந்திட மெய்வழித் தாதைதன்
அடிவ ணங்கி யகன்றுமன் கோயிலிற்
புடையி ருந்தன போர்ப்படைச் சாலையின்
இடைபு குந்தனன் யாரும் வழுத்தவே. - 8
812 - அட்டல் இன்றி அமர்தரு சாலிகை
இட்டு மார்பின் இறுக்கி வயத்தகு
பட்டி கைக்கலன் பாலத் துறுத்தியே
புட்டில் அங்குலி பூண்டு பொருக்கென. - 9
813 - ஆணி கொண்ட அயிற்கணை பெய்தபொற்
தூணி கொண்டுபின் தும்பை மிலைச்சியே
நாணி கொண்டு நலந்தரு கார்முகம்
பாணி கொண்டு படைபிற ஏந்தியே. - 10
814 - கொற்ற மாரமர்க் கோலங்கள் உள்ளன
முற்ற வேகொண்டு மூரிவில் வெஞ்சமர்
கற்ற காளை கதுமென நோக்கியே
சுற்று கம்மியர்க் கின்னன சொல்லுவான். - 11
815 - மிக்க நம்படை வௌ¢ளத்தி லோர் சில
தொக்க பூசல் தொழிலினை முற்யி
இக்க ணந்தரு வீர்இவண் என்றலுந்
தக்க தேயெனத் தாழ்ந்தவர் போயினார். - 12
816 - ஆங்கு நின்றிடும் ஏவலர் அப்பணி
தாங்கி யேகத் தகுவர்தங் கோமகன்
நீங்க லின்றுதன் நீழலின் வந்திடும்
பாங்கர் யாரையும் நோக்கிப் பகருவான். - 13
817 - குமர வேள்விடு கோற்றொழில் தூதனைச்
சமரில் வென்றொரு தாம்பில் தளைபுரீஇ
இமையொ டுங்குமுன் எந்தைமுன் உய்க்குவன்
அமைதிர் போருக் கனைவிரும் என்றனன். - 14
818 - பாலன் மற்றிவை பன்னலும் நன்கெனா
ஏலு கின்ற இளைஞரும் மள்ளரும்
மேலை வெஞ்சமர் செய்ய விரைந்துபோர்க்
கோல மெய்திக் குழீஇயினர் கோட்புற. - 15
819 - தாறு கொண்டவன் தன்குறிப் பிற்செலும்
நூறு நூறு நொறில்பரி மான்பெறீஇ
வீறு பண்ணமை தேரொன்றின் வெய்தென
வேறி னான்மொய்ம் பிருபது கொண்டுளான். - 16
820 - தந்தி ரத்துத் தலைவர் தம் மைந்தரும்
மந்தி ரத்து மதிஞர்தம் மைந்தருஞ்
சுந்த ரத்துத் தொடர்பினில் சுற்றுறா
எந்தி ரப்பெருந் தேர்களில் ஏறினார். - 17
821 - ஆன வேலை அரசன் சுதன்விடப்
போன கம்மியர் போர்வினை கூறியே
யானை மேல்கொண் டிரும்பணை எற்றலுஞ்
சேனை தம்முட் சிலதிரண் டுற்றவே. - 18
822 - ஒருங்கு தாம்பல ஓடலின் அன்னவை
பரங்கொ ளற்கரி தாகிப் படிமகள்
புரங்கி ழிந்திடு புண்கொண் டரற்றல்போல்
இரங்கும் ஓதைகொண் டேகுவ தேர்களே. - 19
823 - கருவி வானங் கடலுண்டு செல்லுறும்
வரைக ளாமென வந்துதம் மேலுறீஇ
உருமி னத்தை உகுத்தொலி கேட்டலும்
வெருவி வீழ விரைவன வேழமே. - 20
824 - கிட்டி நாடு நயனமுங் கேடுசெய்
தொட்ட லார்தம் உளமுஞ் சுழன்றிட
வெட்டு மாதிரத் தெல்லையுஞ் சாரிகை
வட்ட மாகி வருவன வாசியே. - 21
825 - ஆடல் வேல்கதை ஆழி அலப்படை
பாடு சேர்ந்த பலகைஔ¢ வாள்சிலை
நீடு சூலம் நெடுமழு ஆதியாக்
கூடு பல்படை கொண்டிடு கையினார். - 22
826 - இடித்த சொல்லர் இமையவர் போர்பல
முடித்த மொய்ம்பர் முரணிய பல்படை
வடித்த கற்பினர் மால்வரை யானவை
படித்த லத்திற் படர்ந்தன்ன காட்சியார். - 23
827 - விசும்பின் மாலை மிலைச்சிய குஞ்சியர்
பசும்பொன் வீரமெய்ப் பட்டிகை நெற்றியர்
நிசும்பர் அன்னதொர் நேரலர் சோரியின்
அசும்ப றாத அகன்பில வாயினார். - 24
828 - தீம டங்கல் திறலினர் தென்புலக்
கோம டங்கலின் கொள்கையைர் தங்கிளை
தாம டங்கத் தறிபிளந் தார்த்தெழு
மாம டங்கல் தனைப்பொரும் வன்மையார். - 25
829 - ஏகும் வெஞ்சமா¢க் கென்றலும் பூண்பரீஇ
மாகம் அஞ்ச வளர்ந்தெழு தோளினார்
மோகம் இல்லவர் மொய்ம்பினின் மேலவ
ராகும் வீரர் அளப்பிலர் எய்தினார். - 26
830 - ஐந்து நூறெனும் வௌ¢ளம் அழுங்குதேர்
தந்தி யின்குழுத் தானும் அனையதே
உந்து மாக்கள ராயிரம் வௌ¢ளமாம்
பந்த மிக்க பதாதி இரட்டியே. - 27
831 - இத்தொ கைப்படும் ஈரிரு தானையும்
மைத்தி ரைக்கடல் வாரியின் ஆர்ப்புறீஇப்
பத்தி ரட்டி படர்புயத் தண்ணலைத்
தத்த மிற்கலந் தொன்றித் தழீஇயின. - 28
832 - துடிவ லம்புரி துந்துபி சச்சரி
கடிகொள் மொந்தை கரடிகை தண்ணுமை
இடிகொள் பேரி இரலைகள் ஆதியாம்
முடிவி லாவிய முற்று முழங்கிய. - 29
833 - இற்ற எல்லையின் ஈரிரு தானையும்
நெற்றி யேகடை நீடய லிற்செல
மற்று ளார்களும் வந்திட வச்சிரப்
பொற்ற டம்புயன் பொள்ளென வேகினான். - 30
834 - வல்லி யக்கடு மான்பொரு மானவா¢
செல்லி யக்கமுஞ் செல்லினை மாறுகொள்
சொல்லி யக்கமுந் துண்ணெனத் தொக்கெழு
பல்லி யக்கடல் ஆர்ப்பும் பரந்தவே. - 31
835 - ஊழி மால்படை ஒல்லென வேயெழப்
பூழி ஈண்டிவிண் பொள்ளென மூடிய
வேழ மால்வரை வீழ்தரு தானநீர்
ஆழி யென்ன அகன்புவி கொள்ளவே. - 32
836 - திகந்தம் எட்டுந் திருநிழல் ஓச்சியே
உகந்த தேர்களின் ஒண்கொடி ஆடுவ
குகன்வி டுத்திடு கொற்றவன் ஆற்றல்கண்
டகன்சி ரங்கள் அசைப்பன போன்றவே. - 33
837 - ஆகும் எல்லை அவுணர்மன் தேர்மிசைப்
பேய்கள் சூழ்ந்து பிணங்கி மலைந்தன
காகம் யாவுங் கழுகும்வெஞ் சேனமுங்
கூகை யோடு குழீஇயிரங் குற்றவே. - 34
838 - மடிந்த வாயுடை வச்சிர மொய்ம்பினான்
பிடித்த கையிற் பெருஞ்சிலை வீழ்ந்தது
தொடுத்த வெந்நுறு தூணியும் இற்றதால்
துடித்த வால்இடக் கண்களுந் தோள்களும். - 35
839 - அண்ணல் மைந்தன தாழியந் தேர்மிசைக்
கண்ண கன்கொடி கையற வீழ்ந்தன
விண்ணின் ஏறு விசும்பின்றி ஆர்ப்பன
எண்ணில் தீக்குறி இவ்வகை யுற்றவே. - 36
840 - உற்ற காலவை உள்ளுறக் கொள்கிலன்
செற்ற மேல்கொண்டு சென்னியோர் பத்துளான்
மற்றொர் தூணியும் வா£¢சிலை யுங்கொளாப்
பொற்ற டங்கை புறந்தனிற் சேர்த்தினான். - 37
841 - மொய்கொள் வச்சிர மொய்ம்பன்இத் தன்மையால்
வெய்ய தன்படை வௌ¢ளமொ டேகியே
செய்ய வேலுடைச் சேவகன் ஏவல்செய்
ஐயன் நின்ற அடுகளம் எய்தினான். - 38
842 - வண்டு லாந்தொடை வச்சிர வாகுதன்
தண்ட மோடு சமர்க்களஞ் சேர்தலும்
அண்டர் நாயகன் தூதுவன் அன்னவை
கண்டு நின்று கழறுதல் மேயினான். - 39
843 - வேறு
இந்திர ஞால வையத் திறைவனே அல்லன் மற்றை
மைந்தரில் ஒருவ னாகும் வருபவன் வருவான் றன்னை
முந்திய தானை யோடு முரணற முருக்கி வீட்டி
அந்திவான் புகுமுன் எந்தை அடிதொழப் போவன் என்றான். - 40
844 - எறிதிரை அளக்கர் என்ன ஈண்டுறும் அனிகம் யாவும்
முறைமுறை சாடி வந்த முதல்வனை முடித்து மாலை
உறுதல்முன் விசய மோடும் ஒய்யென மீளேன் என்னின்
அறுமுக ஐயன் தூதன் ஆவனோ அடிய னென்றான். - 41
845 - எண்டிசை புகழும் வீரன் இனையன விளம்பிச் செவ்வேள்
புண்டரீ கத்துப் பொற்றாள் புந்தியால் இறைஞ்சிப் போற்றி
மண்டமர் முயன்று நேமி மறிதர வரைகள் கீற
அண்டமுந் திசையும் வானுங் குலுங்கத்தோள் கொட்டி ஆர்த்தான். - 42
846 - ஆர்த்திடும் ஓதை கேளா அமர்குறித் தெழுதேர் மேலோர்
கார்த்திடு தந்தி மேலோ£¢ கவனமாப் புரவி மேலோர்
பேர்த்திடு நிலத்தின் மேலோர் பிறங்குசீ ரவுணர் யாரும்
வேர்த்தனர் தி£¤ந்து சிந்தை வெருவினர் விளம்பு கின்றார். - 43
847 - வாழிய உலகம் யாவும் மன்னுயிர்த் தொகையு மாய
ஊழியில் தனிநின் றா£¢க்கும் உருத்திரன் ஆர்ப்போ அன்றேல்
ஆழிகட் கரசன் ஆர்ப்போ அண்டங்கள் நெக்க ஆர்ப்போ
ஏழ்கட லுடைந்த ஆர்ப்போ இத்திறம் ஆர்ப்ப தென்றார். - 44
848 - செருவலி கொண்ட சீற்றச் செங்கணான் ஆர்க்கும் ஓதை
மருமலர்த் தொடைய லாக வச்சிர வாகு வென்போன்
இருபது செவியி னூடும் இரவியம் புழைகள் புக்க
உருமெனச் சேற லோடும் உளம்பனித் துரைக்கல் உற்றான். - 45
849 - ஈரெழு திறத்த வான உலகினுள் இன்று காறிப்
பேரொலி கேட்ட தின்றால் பிறந்ததித் துழனி யாதோ
தேருதி ரென்று பாங்கர் உழையரில் செப்பத் திண்டேர்ச்
சாரதி விசய னென்பான் தாழ்ந்திவை புகலல் உற்றான். - 46
850 - தெற்றென உணர்தி மான்தேர் செலுத்திய வலவ னென்றே
மற்றென துரையை எள்ளல் வல்லைமேற் காண்டி எந்தை
அற்றமில் படையி னோடும் அமர்செய வருதல் நாடி
ஒற்றென நின்றோன் போர்வேட் டார்த்திடும் ஒலியீ தென்றான். - 47
851 - தூதுவன் ஆர்ப்பி தென்று சொல்லுமுன் உருத்துக் கண்கள்
மீதெரி பொங்க நக்கு வெய்துயிர்த் துரப்பி யான்போய்
ஈதொரு கணத்தின் அன்னான் இகல்முரண் அழித்துப் பற்றித்
தாகைமுன் உய்ப்பன் காண்டி சரதம்இத் தன்மை யென்றான். - 48
852 - என்றிவை உரைத்துப் போதும் எல்லையின் முன்ன மாகச்
சென்றிடும் அவுண வீரர் சேனையை வகுத்துச் சீறித்
தன்றுணைத் தாளுந் தோளுந் தடக்கையும் அனிக மாக
நின்றதோர் வீரன் றன்னை நேமியிற் சுற்றி ஆர்த்தார். - 49
853 - கைதனில் இருந்த செம்பொற் கார்முகங் குனித்து வெங்கோல்
எய்தனர் முசலம் நாஞ்சில் எறிந்தனர் தண்டஞ் சூலம்
பெய்தனர் கணிச்சி விட்டார் பிண்டிபா லங்கள் தூர்த்தார்
நெய்தவழ் அயில்வேல் தொட்டார் நேமிகள் உருட்டு கின்றார். - 50
854 - வேறு
தஞ்செனக் கொடுமைசெய் தானவப் படைஞர்கள்
வெஞ்சினத் தன்மையால் விடுபடைக் கலமெலாங்
கஞ்சனைச் சிறைசெயுங் காரணன் தூதுவன்
செஞ்சுடர்ப் படிவமேற் செவ்வண்வந் துற்றவே. - 51
855 - துய்யன்மேல் வெம்படைத் தொகுதிவந் தடைதலும்
மெய்யெலா முற்றதான் மிக்கசோ ரிப்புனல்
மையல்தீர் காலையின் வந்தெழும் பரிதிபால்
பையவே செய்யதண் கதிர்வரும் பான்மைபோல். - 52
856 - ஆனதோர் காலையெம் மையன்வெஞ் சினமுரு
மானினம் பலபல மருவியே செறிவுழி
மேனிவந் தேகியோர் வேங்கைபாய்ந் தடுதல்போல்
தானவப் படையினைத் தாக்குதல் மேயினான். - 53
857 - ஆயிரம் ஆயிரம் அவதிசேர் அவுணர்தஞ்
சேயதண் குஞ்சியைச் செங்கையாற் பற்றியே
பாயிருந்த துரையினும் பாற்படு கிரியினும்
ஏயெனும் அளவைமுன் எற்றியே எறியுமால். - 54
858 - எய்யும்வெம் படைகளும் எறியும்வெம் படைகளுங்
கையினிற் பற்றியே கனலெழப் பிசைதரு
மொய்யெனப் பதைபதைத் தோலமிட் டுயிருகச்
செய்யபொற் றாள்களால் சிலவரைத் தேய்த்திடும். - 55
859 - மத்தமால் கரிகளும் வாம்பரித் தொகுதியுஞ்
சித்திரந் திகழ்மணித் தேர்களும் அவுணர்தங்
கொத்தொடே வீழ்தரக் கோலமால் அடிதனக்
கொத்ததன் றாள்களல் உதைபுரிந் துலவுறும். - 56
860 - கிடைத்திடுஞ் சிலவரைக் கீண்டனன் நீண்டமெய்
துடித்திடக் கழல்களால் துகைத்தனன் சிலவரை
அடித்தனன் சிலவரை அரைத்தனன் சிலவரைப்
புடைத்தனன் சிலவரைப் புதுமரத் தண்டினால். - 57
861 - மத்தவெங் கரிபரி வயவர்தேர் ஆயின
பத்துநூ றொருதலைப் படநெடும் பாணியாற்
குத்திடுஞ் சிகரமேற் கோளரி பாய்ந்தெனத்
தத்தியே திரிதருந் தலைமலைக் குலமிசை. - 58
862 - தேரெலாம் இற்றன திண்டிறற் கவனமாப்
பேரெலாம் இற்றன பிளிறுமால் கரிகளின்
தாரெலாம் இற்றன தானவந் தலைவர்செய்
போரெலாம் இற்றன புகழெலாம் இற்றதே. - 59
863 - ஆங்கதோர் பொழுதினில் அவுணருக் கிறைமகன்
பாங்கராய் வந்திடும் பல்பெருங் குமரரும்
ஓங்குநாற் படையொடும் ஒருவனைச் சுற்றியே
தாங்குபல் படையினால் சமர்முயன் றாற்றினார். - 60
864 - வேறு
அன்ன காலையில் வீரவா குப்பெயர் அறிஞன்
தன்ன தோர்கரத் திருந்திடு பழுமரத் தண்டான்
முன்னர் வந்துசூழ் மைந்தர்கள் முரட்படை யோடுஞ்
சின்ன மாகியே விளிவுறப் புடைத்தனன் திரிந்தான். - 61
865 - செய்ய மத்தகம் இற்றன இற்றன செழுந்தாள்
கைகள் இற்றன மருப்பிணை இற்றன கரிகள்
வெய்ய காலுடன் எருத்தமும் இற்றன மிலைச்சுங்
கொய்யு ளைத்தலை இற்றன குரகதக் குழுவே. - 62
866 - தட்ட ழிந்தன பாரகம் அழிந்தன சகடு
கெட்ட ழிந்தன கேதனம் அழிந்தன கிளர்ந்த
மொட்ட ழிந்தன பாகினம் அழிந்தன முரண்மாக்
கட்ட ழிந்தன ஒழிந்தன கனைகுரல் ப·றேர். - 63
867 - கால்க ளுற்றிடும் வெஞ்சிலை இற்றன கடிய
கோல்க ளிற்றன பரிதிகள் இற்றன கொட்பார்
தோல்க ளிற்றன நாந்தகம் இற்றன தூண்டும்
வேல்கள் இற்றன நாஞ்சில்கள் இற்றன விரைவில். - 64
868 - நெரிந்த சென்னிகள் நெரிந்தன மார்பகம் நெடிது
சரிந்த வெங்குடர் சரிந்தன இழுக்குடைத் தசைகள்
சொரிந்த மூளைகள் சொரிந்தன விரிந்தெழு சோரி
திரிந்த கூளிகள் திரிந்துமாய் வுற்றன சேனை. - 65
869 - கரந்து ணிந்தனர் புயங்களுந் துணிந்தனர் காமர்
சிரந்து ணிந்தனர் நாசிகள் துணிந்தனர் செழும்பூண்
உரந்து ணிந்தனர் கழலடி துணிந்தனர் உளதொல்
வரந்து ணிந்தனர் வன்மையுந் துணிந்தனர் மைந்தர். - 66
870 - வாக்கி னாற்சிலர் தம்முயிர் உண்டிடும் வன்கைத்
தாக்கி னாற்சிலர் தம்முயிர் உண்டிடுஞ் சமர்செய்
ஊக்கி னாற்சிலர் தம்முயிர் உண்டிடும் உலம்பு
நோக்கி னாற்சிலர் தம்முயிர் உண்டிடு நொய்தின். - 67
871 - ஆங்கண் ஓர்சில அவுணரை ஆடல்வெம் பரியை
வெங்கண் யானையை இரதத்தை வாரினன் விரைவின்
மங்குல் வானினுந் தரையினுங் கடலினும் வரைகள்
எங்கு மாகியே வீழ்தர வீரனார்த் தெறிந்தான். - 68
872 - அன்பு லப்புறு கொடுந்தொழில் அவுணர்கள் அமரும்
வன்பு லத்துயிர் கொளவரு மறலிதன் தூதர்
துன்பும் அச்சமும் அணங்குடன் அகன்றுதற் றுதிப்பத்
தென்பு லத்தவன் முன்னுற வீசினன் சிலரை. - 69
873 - ஒருத லைப்படுங் கேளிரைத் துன்னுவான் உய்ப்பக்
கருதி னான்கொலோ சிற்சில அவுணர்தங் கணத்தை
நிருதி மாநகர் புகுந்திட வீசினன் நிகரில்
சுருதி நாயகன் ஏவலாற் றியதனித் தூதன். - 70
874 - நேர்ந்து போர்புரிந் துயிர்தனை விடாததந் நிலைமை
ஓர்ந்து விண்ணவர் மானங்கள் விடுத்திடா துயர்வான்
சார்ந்த ஞாயிறு பிளந்திடா தாடலின் தன்மை
சேர்ந்து ளார்பெறுந் துறக்கமேல் வீசினன் சிலரை. - 71
875 - எண்டி சைப்புறந் தாங்கியே பெயர்கிலா திரக்கங்
கொண்ட வெங்கரிக் கிரையெனச் சிலவரைக் கொடுக்குந்
தெண்டி ரைப்புனல் பருகிய நிரப்பது தீர
உண்டி யாகவே வடவைபால் சிலவரை உய்க்கும். - 72
876 - ஏந்தல் இன்னபல் வகையினால் அடுதலும் இமைப்பின்
வீந்த தானைகள் துணைவரும் பொன்றினர் மிக்கோர்
ஓய்ந்து வானினுங் கடலினுந் திசையினும உலைந்து
சாய்ந்து போயினர் மானமும் வன்மையுந் தவறி. - 73
877 - மற்றிந் நீர்மையைக் காண்டலும் வச்சிர வாகு
இற்ற தேகொலாம் நம்பெருந் தானையென் றிரங்கிச்
செற்ற மீக்கொண்டு வலவனை நோக்கியித் தேரை
ஒற்றன் முன்னுற விடுத்தியால் கடிதென உரைத்தான். - 74
878 - உரைக்கும் வாசகங் கேட்டலுந் தொழுதுமுன் னுற்ற
பரிக்கு லங்களின் மத்திகை வீசியே பாகன்
அருக்கன் ஆழியந் திகிரியூர் வலவனும் அஞ்சி
வெருக்கொ ளும்படி தேரினை வீரன்முன் விடுத்தான். - 75
879 - கொடிய வெஞ்சினந் திருகியே சூ£¢தரு குமரன்
கடிது போர்செய்வான் வருவது மேலையோன் காணா
முடிவி லாமகிழ் வெய்தியே முழுதுல களந்த
நெடிய மாலினும் நெடியன்மற் றிவனென நிமிர்ந்தான். - 76
880 - நெடிய தான்புவி அளந்திடப் புயங்கள்விண் நெருக்க
முடிய லாங்கடந் தண்டகோ ளகைதனை முட்ட
வடிவ மைந்திடு திறலினான் பணிபதி மயங்க
அடிபெ யர்ந்துபார் வெடிபட இடிபட ஆர்த்தான். - 77
881 - புரம டங்கலுந் தெறுகணை போன்றுளான் பொன்னோன்
வரம டங்கலுஞ் சோரிய தடங்கலும் வாணாள்
உரம டங்கலும் உண்டிடத் தறியின்வந் துதித்த
நரம டங்கலும் வெருவர எரியெழ நகைத்தான். - 78
882 - முச்ச கம்புகழ் திறலினான் முறுவலும் முழக்கும்
வச்சி ரத்தட மொய்ம்பினான் கேட்டலும் மறுகி
மெய்ச்சி ரத்தொகை துளக்கி ஆரழலெழ விழித்து
நச்செ யிற்றர வாமெனச் செயிர்த்திவை நவில்வான். - 79
883 - வீர நன்றுநின் ஆண்மையும் நன்றுமே தக்க
பேரு நன்றுபே ராற்றலும் நன்றுநீ பெற்ற
சீரும் நன்றுநின் விஞ்சையும் நன்றுசெய் கின்ற
போரு நன்றுநிற் கேற்பதிவ் வார்ப்பெனப் புகன்றான். - 80
884 - மற்று மோருரை புகலுவான் வந்தெதிர் மலைந்த
கொற்ற வீரரைப் படுத்தனம் என்றுளங் கொண்டாய்
அற்றெ லாமினி விடுமதி நின்மிடல் அலைத்துப்?
பற்றி எந்தைமுன் விடுப்பனால் உனையெனப் பகர்ந்தான். - 81
885 - நின்னை வென்றிட முயலுவன் தமியனும் நீயும்
என்னை வென்றிட முயலுதி இருவரும் அதனைப்
பன்னி நிற்பதிற் பயனெவன் கடிதமர் பயிறி
பின்னை வென்றுளார் வெல்லுக என்றனன் பெரியோன். - 82
886 - என்று முன்னரே வச்சிர வாகுவென் றிசைக்கும்
மன்னன் மாமகன் தனதுகைக் கார்முகம் வாங்கிப்
பொன்னின் நாணொலி கொண்டொரா யிரங்கணை பூட்டி
மின்னு லாந்தனி வேலவன் தூதன்மேல் விடுத்தான். - 83
887 - விடுத்த ஆயிரம் பகழியும் விடலைதன் மிசையே
அடுத்த எல்லையிற் காணுறா அங்கையொன் றதனை
எடுத்து முன்னுற ஓச்சியே அங்கவை எனைத்தும்
பிடித்து வல்லையின் நுண்டுகள் பட்டிடப் பிசைந்தான். - 84
888 - விட்ட வாளிகள் பூழிபட் டிடுதலும் வெகுண்டு
மட்டு வாகைவெஞ் சிலையினைப் பின்னரும் வணக்கி
நெட்டி லைச்சரம் ஒருபதி னாயிரம் நிறத்திற்
பட்டி டும்படி தொட்டனன் அவுணர்கோன் பாலன். - 85
889 - அசைவி லானது நோக்கியே முந்துபோர் அகத்தில்
இசைமை நீங்கியே முடிந்திடு தானவர் இட்ட
முசல மாகிய தொன்டிறனை யெடுத்துமுன் வந்த
விசிகம் யாவையும் புடைத்தனன் திசைதொறும் வீழ. - 86
890 - வழுவில் வாளிகள் வறிதுபட் டிடுதலு மற்றும்
வழுமி தாகிய ஒருபதி னாயிரம் விசிகம்
பழுது றாதன தூண்டியே ஆண்டகை பரித்த
எழுவை நுண்டுகள் ஆக்கியே பின்னரும் எய்வான். - 87
891 - தலையி லாயிரங் களத்தினில் ஆயிரந் தடந்தோள்
மலையி லாயிரம் உரத்தினி லாயிரம் வயத்தாள்
நிலையில் ஆயிரங் கணைகளாத் தூண்டினன் நீடுங்
கொலையில் ஆயிரங் கூற்றினைப் பாலுறுங் கொடியோன். - 88
892 - கையில் ஏந்திய பேரெழு முரிந்திடக் காமர்
செய்ய மெய்ம்முழு தீண்டியே பகழிகள் செறிய
ஐயன் நின்றனன் ஓரிறை வருந்தியே அதற்பின்
ஓய்யெ னச்சென்று வெய்யவன் தேரினை உதைத்தான். - 89
893 - உதைத்த காலையிற் பண்ணுறு பரியெலாம் ஒருங்கே
பதைத்து வீழ்ந்தன பாகனும் உருண்டனன் பட்டான்
கதித்த வையமும் அழிந்தது அன்னது காணா
மதித்து வேறொரு தேரிடைப் பாய்ந்தனன் மற்வோன். - 90
894 - பாய்ந்து வச்சிர வாகுவாந் தொல்பெயர் படைத்தோன்
தேய்ந்த ஒண்பிறை பணியொடு சேர்ந்தன சிலையின்
ஆய்ந்தொ ராயிரம் அயிற்கணை பூட்டியே அடுபோர்
ஏந்தல் நெற்றியுட் செறித்தனன் அமரர்கள் இரங்க. - 91
895 - ஆயி ரங்கணை நுதலிடை அழுத்தலும் அடல்வேல்
தூய வன்றிருத் தூதுவன் சூரருள் புரிந்த
தீய வன்தடந் தேரினைச் செங்கையால் எடுத்து
மீயு யா¢ந்திடும் விண்ணிடை எறிந்தனன் விடுத்தான். - 92
896 - விண்ண கத்திடை எறிந்தபின் வீரவா குப்பேர்
அண்ணல் வச்சிர வாகுவந் தேறுவான் அமைந்து
பண்ணு றுத்திய ஏமமாய் நின்றதேர் பலவுந்
துண்ணெ னப்புடைத் தெறிந்துதைத் தொல்லையிற் றொலைத்தான். - 93
897 - தொலைக்கும் எல்லையின் அவுணர்கோன் மதலைதொல் புவிக்கோர்
இலக்கம் யோசனை எல்லையின் காறும்விண் ணேகி
அலக்க ணுற்றமீண் டழிதரு தேருடன் அமரில்
வெலற்க ருந்திறல் அறுமுகன் தூதன்முன் வீழ்ந்தான். - 94
898 - நிலவ ரைப்புறுஞ் சூர்மகன் எழுந்துதன் நெடிய
சிலைவ ளைத்தமர் செய்திட முன்னலுந் திறலின்
தலைமை பெற்றவன் கண்டுகை ஓச்சியத் தனுவை
வலிது பற்றியே முரித்தனன் பேரொலி மயங்க. - 95
899 - ஏந்து கார்முகந் தனைமுரித் திடுதலும எரியிற்
காந்து கண்ணுடை வச்சிர மொய்ம்பனோர் கரத்தின்
வாய்ந்த வாள்கொடே எதிர்தலுந் தன்னுடை மருங்கின்
நாந்த கந்தனை உறைகழித் தறிவன்மேல் நடந்தான். - 96
900 - நடந்து வச்சிர வாகுமுன் உய்த்திட நனிதோள்
அடைந்த வாளினை விலக்கியே அறிவரில் அறிவன்
கடந்த போர்வலி கொண்டதன் வாளினாற் கடது
கடிந்து வீட்டினன் அவுணர்கோன் நாந்தகத் தடக்கை. - 97
901 - செய்ய தோ£¢கரந் துணிபடத் தீயவன் செறுத்தோர்
கையி ருந்திடு தண்டினை எறிதலுங் கண்டு
மையில் கேள்வியன் துணிபடுத் தவுணர்கோன் மதலை
ஐயி ரண்டவாந் தலையையும் வாளினால் அறுத்தான். - 98
902 - வேறு
எந்தைதன் தூதுவன் எறிந்த வாளினால்
ஐந்திரு சென்னியும் அற்று வீழ்தலும்
மைந்தியல் வச்சிர வாகு வாகிய
வெந்திறல் அவுணர்கோன் வீடி னானரோ. - 99
903 - ஆடியல் அவுணர்தம் அண்ணல் தன்மகன்
வீடிய காலையின் வெருவிப் பாங்கரின்
நாடிய அவுணர்கள் நனிபு லம்புறீஇ
ஓடினர் திசைதொறும் உடைந்து போயினார். - 100
904 - துஞ்சினன் வச்சிரத் தோளன் கண்டிது
நெஞ்சகம் மகிழ்ந்திவண் நிற்ப னேயெனின்
வெஞ்சின அவுணர்கோன் வினவில் தீமையென்
றஞ்சினன் கரந்தென அருக்கன் போயினான். - 101
ஆகத் திருவிருத்தம் - 904
--------
18. யாளிமுகன் வதைப் படலம் (905 - 947)
905 - திண்டிறல் அவுணர்கோன் சிறுவன் வீந்ததும்
மண்டமர் இயற்றிட வருநர் இன்மையுந்
தண்டம துடைந்ததுந் தபனன் மாய்ந்ததுங்
கண்டனன் இனையன கருதல் மேயினான். - 1
906 - எந்தையை எள்ளினான் இருந்த கோநகர்
சிந்தினன் புரத்தையுஞ் சிறிது வீட்டினன்
வந்தவர் யாரையும் மாய்வு செய்தனன்
புந்தியின் வெகுளியிற் சிறிது போக்கினன். - 2
907 - ஏலவெம் போர்செய எவரும் வந்திலர்
ஞாலம தவிரொளி நடாத்து ஞாயிறு
மேல்கடல் நீந்தினன் விரையப் போனினான்
மாலையும் இவ்விடை வந்து நேர்ந்ததே. - 3
908 - அறந்தனை நினைகிலா தல்லல் செய்பவர்
உறைந்திடு நகரிதின் ஒற்றிற் போந்தயான்
சிறந்திடும் அறுமுகத் தேவ தேவனை
மறந்திட லாங்கொல்இம் மாலை காறுமே. - 4
909 - ஏவரும் வழுத்திய எநதை கந்தவேள்
பூவடி தணந்திடு புலம்பும் இவ்விடைத்
தேவர்கள் புன்மையுந் தீர வல்லையிற்
போவது துணிவெனப் புந்தி தேற்றினான். - 5
910 - தேற்றிய திறலுடைச் செம்மல் இம்மென
மாற்றலர் படுநில வரைப்பு நீங்கியே
காற்றெனக் கனலெனக் காலன் என்னவெங்
கூற்றென மறுகிடைக் குலவி ஏகினான். - 6
911 - திறல்கெழு மொய்ம்புடைச் செல்வன் செல்லுழி
மறுகிடை அவுணர்கள் மறலி மற்றிவன்
குறுகலிர் நுங்களைக் கொல்வன் கொல்வனென்
றறைகுநர் முறைமுறை அரற்றி ஓடினார். - 7
912 - எஞ்சிய அவுணர்கள் யாரும் இவ்வகை
அஞ்சினர் இரிந்திட அழிந்து முன்னையாள்
துஞ்சிய ஆவணத் தொகைகள் தந்தாராய்
விஞ்சிய மகேந்திரம் விடுத்து நீங்கினான். - 8
913 - புடையகல் மகேந்திர புரத்தை நீத்தபின்
விடைபொரு வலியினான் விண்ணின் பாலெழீஇ
முடுகினன் வழக்கொடு முருகற் போற்றியே
வடதிசை இலங்கையின் வரைப்பு நண்ணினான். - 9
914 - வேறு
ஆங்கது காலையில் அனைய
பாங்கரின் மேவரு பழையோன்
ஓங்கிய மூவெயி லுள்ளோர்
தாங்கிய வன்மை தரித்தோன். - 10
915 - முடியும் மகேந்திர மூதூர்
வடதிசை யார்அரண் மன்னி
உடைய இலங்கையின் ஓம்பும்
படியறு காவல் பரித்தோன். - 11
916 - ஆயிர மாமுகன் அடுதோள்
ஓய்வில் இராயிர முடையோன்
ஞாயிறு தன்மகன் நகரின்
வாயில்கள் அன்னதோர் வாயான். - 12
917 - வடவரை ஆயிரம் வந்தோர்
உடல்கொடு மேவிய தொப்பான்
படைபல பாணி பரித்தான்
கடையழல் கான்றிடு கண்ணான். - 13
918 - தண்ணளி யோரிறை தானும்
உண்ணிகழ் வற்ற உளத்தான்
எண்ணரும் வெம்பவம் யாவும்
பண்ணினன் அன்று பயின்றான். - 14
919 - மீளில் சினத்ததி வேகக்
கோளரி யைத்தரு கொடியோன்
யாளி முகத்தவன் என்போன்
வாள்வய முற்றிடு வலியோன். - 15
920 - வேறு
பெருந்தகை யாங்கவன் பெயர்ந்த காலையின்
அருந்திறற் சூரனை அடைந்து மீண்டுபின்
மருந்துறழ் தன்மகன் மாட்சி தேர்வுறீஇ
இருந்தனன் வருந்தியே இலங்கை தன்னிடை. - 16
921 - சண்டவெங் கதிகொடு தமியன் சேறலுங்
கண்டனன் யாரிவன் கள்வன் போலுமால்
விண்டலம் நீந்தியே மேவு வானெனத்
தொண்டுசெய் உழையரில் ஒருவன் சொல்லுவான். - 17
922 - நங்குல நாயக நவில்வன் கேட்டிநீ
செங்கதிர் முளைத்துழிச் செல்வற் காணிய
பொங்கொளி மகேந்திர புரத்திற் போந்தனை
இங்குநின் திருமகன் இருந்து காப்பவே. - 18
923 - போந்திடு கின்றபின் புணரி தன்னுள்வான்
நீந்தினன் நீங்கிவன் நேர வன்னதை
வாய்ந்திடு பெருந்திறல் மடங்கற் பேரினான்
காந்திய கனலெனக் கண்டு சீறினான். - 19
924 - சீறினன் படையொடு சென்று தாக்கலும்
வீறொடு வருமவன் வெகுண்டு வாளுரீஇ
மாறமர் இயற்றியே மற்ற வன்றனைக்
கோறல்செய் தொருவிறல் கொண்டு மேயினான். - 20
925 - மின்னவிர் பூணுடை வீர மொய்ம்பினான்
இன்னதோர் இலங்கையின் இடைக்கட் பாய்ந்தனன்
அன்னவன் அடிபொறா தாழி உற்றதாற்
பொன்னகர் வளனொடும் அங்கட் புக்கம்போல். - 21
926 - புக்கிட அளப்பிலர் பொன்ற ஏனையோர்
அக்கணம் எழுந்தனர் அவற்கண் டஞ்சியே
திக்கொடு வானமுஞ் சிந்த நின்மகன்
மைக்கடல் அகமொரீஇ வல்லை எய்தினான். - 22
927 - வெய்தென இவண்வரும் வீர னோடமர்
செய்தனன் வாள்கொடு செவ்வி அன்னதின்
மைதவழ் மேனியின் மதலை மார்புதான்
கைதலை யொருதலை கண்ட மாக்கினான். - 23
928 - பூழியம் புயமுடைப் பொருநன் பின்னுறக்
கேழுறு வானெறி கிளர்ந்து போந்திடர்
வாழிய மகேந்திர வரைப்பிற் புக்கனன்
ஆழுறும் இலங்கையும் ஆழி மேலெழ. - 24
929 - சூருறை திருநகர் துன்னி யாயிடைச்
சீரினை முழுவதுஞ் சிந்தி நங்குல
வீரரொ டேயமர் விளைத்து வென்றவன்
நேருநா¢ இன்மையின் நீங்கி னானரோ. - 25
930 - என்னலும் உருமினும் இடித்த சொல்லினன்
வன்னிகொள் உயிர்ப்பினன் மடித்த வாயினன்
துன்னிய வியர்ப்பினன் சுழலுங் கண்ணினன்
மெய்ந்நிறை வெகுட்சியன் விளம்பல் மேயினான். - 26
931 - காண்டியென் கடிமுறை கடந்து மைந்தனை
ஈண்டுயிர் வவ்வியே இறைவன் ஊர்புகா
மீண்டிடு கள்வன்இவ் வீரந் தன்னொடே
மாண்டிட அடுகுவன் வன்மை யாலென்றான். - 27
932 - என்றிவை விளம்பியே யாளி மாமுகன்
குன்றென ஏழுந்தொரு கொற்ற வாள்கொளீஇ
நின்றசில் படையொடு நேர்ந்து வீரன்முன்
சென்றனன் இனையன செப்பல் மேயினான். - 28
933 - நங்கடன் முறையினை நடாத்து மைந்தனை
இங்கடல் செய்தனை இனைய காப்பொரீஇ
அங்கடற் போந்தனை அழிவு செயதனை
வெங்கடல் கடந்தனை மீடி யேகொலாம். - 29
934 - ஒல்லொலி அளக்கரை உகண்டு நிற்கினிச்
செல்லுதல் அரிதியான் செருவின் நேர்ந்தனன்
கொல்லுவன் பெருவயங் கொள்வன் நீயிவண்
வல்லது புரிமதி மதியிலாய் என்றான். - 30
935 - சொற்றது கேட்டலுந் துழனிப் பேரொலி
உற்றெரி கனலென உயிர்ப்பு மூரலுஞ்
செற்றமும் எய்தியே துளக்கிச் சென்னியைக்
கொற்றமொய்ம் புடையதோர் குரிசில் கூறுவான். - 31
936 - ஒருதலை யுடையவென் னுயர்வும் ஆயிரந்
தருதலை யுடையநின் தாழ்வும் யாமிவட்
பொருதலை இழைத்திடும் போது காண்புறுங்
கருதலை பெருபடி வமைந்த காட்சியே. - 32
937 - தீயவ இம்மொழி திண்ணந் திண்ணமுன்
மாயிரும் புழைக்கையின் மாமு கங்களோர்
ஆயிரந் தன்னையும் அறுத்து வீட்டியே
நாயினங் கவரிய நல்கு வேனென்றான். - 33
938 - கருணைகொள் நந்தியங் கணத்தன் இவ்வகை
உரைதரும் எல்லையின் உததி மேருமால்
வரையினை விழுங்கிய வளைந்த தேயென
விஆவொடு படைஞர்கள் வீரற் சுற்றினார். - 34
939 - சுற்றிய தானையர் தோன்றல் மீதுதாம்
பற்றிய படைக்கலம் பலவுந் தூண்டியே
செற்றமொ டமர்வினை செய்யச் சூறைபோல்
மற்றவர் சூழலுள் வாள்கொண் டெய்தினான். - 35
940 - துண்டமும் அகலமுந் தோளுந் தாளுமொண்
கண்டமுஞ் சென்னியுங் கரமு மானவை
விண்டுவிண் டழிவுற வெய்ய தானவர்
தண்டம தனைத்தையுந் தடிந்திட் டானரோ. - 36
941 - வேறு
அறுகு மாமுகத் தண்ணல் ஆற்றவுங்
கறுவு பெற்றிடுங் கருத்தின் வீரனைக்
குறுகி ஆயிரங் கொண்ட கைகளால்
இறுதி யூழிநாள் இடியின் எற்றினான். - 37
942 - அடித்த கைகளை அங்கை ஒன்றினால்
பிடித்து மேலவன் பெருங்கை வாளினால்
உடைத்த சோரிநீர் உகுத்து வீழந்திறை
துடித்தி டும்படி துண்டம் ஆக்கினான். - 38
943 - ஆயி ரங்கரம் அறலும் மற்றுள
ஆயி ரங்கரம் அவைகள் நீட்டியே
ஆயி ரங்கிரி அவைப றித்தனன்
ஆயி ரங்கணான் ஆடல் கொண்டுளான். - 39
944 - பறித்த ஆயிரம் பருப்ப தத்தையுங்
கறுத்து வீரன்மேற் கடிது வீசலும்
இறத்தல் கொண்டுமெய் எங்கும் எய்தியே
புறத்து வீழ்ந்தன உடைந்து பூழியாய். - 40
945 - பொற்றை யாவையும் பூழி ஆகியே
அற்ற காலையில் ஐயன் தூதுவன்
மற்றை ஆயிரம் வான்க ரத்தையுங்
கொற்ற வாள்கொடே குறைத்து வீட்டினான். - 41
946 - இழைக்கும் எல்லையின் எய்துங் கூற்றினை
அழைக்கு மாறென ஆர்த்துத் தானவன்
தழைக்கு மொய்ம்பினான் தன்னைப் பற்றுவான்
புழைக்கை முற்றவும் பொள்ளென் றுய்த்தனன். - 42
947 - உய்த்த காலையின் ஒருதன் வாளினால்
எய்த்த வன்மைசேர் யாளி மாமுகன்
பத்து நூறெனப் பட்ட சென்னியுங்
கொத்தொ டேவிழக் குறைத்திட் டானரோ. - 43
ஆகத் திருவிருத்தம் - 947
------
19. வீரவாகு மீட்சிப் படலம் (948 - 969)
949 - இன்ன பான்மையால் யாளி மாமுகன்
தன்னை அட்டபின் தன்கை வாளினைப்
பொன்னு லாவுறை புகுத்திச் சென்றனன்
மின்னு செஞ்சுடர் மேனி வீரனே. - 1
950 - இந்தி ரத்திரு இலங்கை நீங்கியே
அந்தி ரைக்கடல் அழுவம் வாவியே
கந்த மாதனங் கவின்ற வேலைசேர்
செந்தி மாநகர் சென்று புக்கனன். - 2
951 - புக்க காலையில் பொருவில் ஆற்றலான்
மிக்க சேவகன் மேவல் காணுறாத்
தொக்க பாரிடஞ் சோமற் காணுறு
மைக்கருங் கடல் மான ஆர்த்தவே. - 3
952 - பாரி டத்தொகை பரிக்கும் மன்னவர்
சேர வந்துதஞ் செங்கை கூப்பியே
வீர வாகுவை மெய்யு றத்தழீஇ
ஆர்வம் எய்தினார் அன்பு கூறினார். - 4
953 - தழுவு வோர்தமைத் தானும் புல்லியே
இழிஞர் தம்பதிக் கேகும் வெம்பவம்
ஒழிவ தாயினன் உமைக்கண் டேயெனா
முழுவ லன்பினான் முகமன் கூறினான். - 5
954 - விலக்கில் வன்மைகொள் வீர வாகுவை
இலக்கத் தெண்மரும் எதிர்ந்து மற்றவன்
மலர்க்க ருங்கழல் வணங்கிக் கைதொழ
அலக்கண் நீங்குமா றனையர்ப் புல்லினான். - 6
955 - அமைவில் பாரிடத் தனிக வேந்தருக்
தமர்க ளாயினோர் தாமுஞ் சூழ்வர
விமல னாகியே வீற்றி ருந்திடுங்
குமர நாயகன் கோயில் மேயினான். - 7
956 - விண்டு வானுளோர் விரிஞ்சன் மாதவர்
கொண்டல் ஊர்பவன் குழுமிப் பாங்குற
அண்டர் நாயகன் அமருந் தன்மையைக்
கண்டு முந்துகண் களிப்பின் மேயினான். - 8
957 - உள்ளம் அன்புடன் உருகத் தூயநீர்
வௌ¢ளங் கண்ணுற விதிர்ப்பு மேவரப்
பொள்ளெ னப்புரம் பொடிப்பச் சூரடும்
வள்ளல் சேவடி வணங்கி னானரோ. - 9
958 - அணங்கு சால்வுறும் அந்தண் சேவடி
வணங்கி மும்முறை மகிழ்ச்சி அன்பிவை
இணங்க அஞ்சலித் தேத்தி நிற்றலுங்
குணங்கள் மேற்படுங் குமரன் கூறுவான். - 10
959 - சுரரை வாட்டுறுஞ் சூரன் முன்புபோய்
விரைவின் நம்மொழி விளம்ப மற்றவன்
உரைசெய் திட்டதும் ஒல்லை மீண்டதும்
மரபின் இவ்விடை வகுத்தியால் என்றான். - 11
960 - வீரன் கூறுவான் விமல நின்மொழி
சூரன் முன்புபோய்ச் சொல்ல விண்ணுளோர்
ஆரி ருஞ்சிறை அதனை வீடலே
காரி யம்மெனக் கருத்திற் கொண்டிலன். - 12
961 - கெடல ருஞ்சுரர் கிளையை வெஞ்சிறை
விடுகி லேனொ வெகுண்டு கூறினான்
அடிகள் அன்னதால் ஆண்டு நீங்கியே
கடிது வந்தனன் கருமமீ தென்றான். - 13
962 - என்ற காலையின் யாண்டு மாகியே
நின்று முற்றொருங் குணர்ந்த நீர்மையான்
உன்றன் செய்கையுள் ஒன்றுஞ் சொற்றிலை
நன்று மற்றது நவிறியால் என்றான். - 14
963 - தொடக்க முற்றுவாழ் சூரன் மாநகர்
அடுத்த காலையின் அகன்ற வேலையில்
தடுத்து ளோரைநின் சரண வன்மையால்
படுத்து வந்தனன் பான்மையீ தென்றான். - 15
964 - அருந்தி றற்புயன் அனைய செப்பலும்
இருந்த கந்தவேள் இகலி னோர்களால்
வருந்தி னாய்கொலோ மன்ற என்றுதன்
திருந்து பேரருள் செய்தல் மேயினான். - 16
965 - அங்கவ் வெல்லையின் ஆயிர ரம்பெயர்ச்
செங்கண் மாயவன் திசைமு கத்தவன்
மங்குல் மேலவன் வதன நோக்கியே
எங்கள் நாயகன் இனைய கூறுவான். - 17
966 - தேவ ரைச்செயுஞ் சிறைவி டுத்துநீ
மேவு நன்கெனா வெய்ய சூரனுக்
கேவு தூதைவிட் டியம்பு வித்தனம்
பாவி யன்னது பயனென் றுன்னலான். - 18
967 - வீத லேயவன் விதிய தாதலின்
தீதில் விண்ணவா¢ சிறைவி டோமென
ஓதி னான்அவன் உயர்வு நீக்குவான்
போது நாளையா மெனப்பு கன்றனன். - 19
968 - ஆறு மாமுகத் தையன் இவ்வகை
கூறக் கேட்டுளோர் கொடிய சூர்மிசைச்
சேறு மென்றசொல் தௌ¤வின் நந்துயர்
மாறிற் றென்றனர் மகிழ்ச்சி எய்தினார். - 20
969 - ஆன வத்துணை ஆடன் மொய்ம்பினான்
தான அப்பதிச் சயந்தன் உற்றதும்
ஏனைச் செய்கையும் எடுத்துக் கூறியே
வான வர்க்கிறை மனத்தைத் தேற்றினான். - 21
970 - சீரு லாமகேந் திரபு ரத்தினும்
வீர வாகுமீண் டதுவி ளம்பினாம்*
ஆர ஞர்க்கடல் அலைப்ப ஆண்டுறுஞ்
சூர னுற்றதும் பிறவுஞ் சொல்லுவாம்.
( * விளம்பினாம் - கூறினோம்; கவிக்கூற்று.) - 22
ஆகத் திருவிருத்தம் - 969
------
20. சூரன் நகர்புரி படலம் (970 - 998)
970 - ஊக வான்படை உலப்ப வச்சிர
வாகு மாண்டதும் வாகை மொய்ம்பினான்
ஏகுந் தன்மையும் ஏவல் தூதுவர்
சோக மோடுபோய்ச் சூர்முன் கூறினான். - 1
971 - ஈரைஞ் சென்னிசேர் இளைய கான்முளை
வீரஞ் சிந்தியே விளிந்த வாற்றினைச்
சூரன் கேட்டலுந் துளங்கித் துன்பெனும்
வாரி யுள்ளுற மயங்கி வீழ்ந்தனன். - 2
972 - வேறு
கண்ணிடை நெடும்புனல் கால மைந்தன்மேல்
உண்ணிகழ் அன்புசென் றுயிரை ஈர்ந்திடத்
துண்ணென உயிர்ப்பெனும் புகையுஞ் சுற்றிட
எண்ணருஞ் செல்லல்கொண் டிரங்கி ஏங்கினான். - 3
973 - ஏங்கினன் புலம்பலும் இனைய வெய்யசூர்
பாங்கமர் தமர்களும் பரிச னத்தருந்
தீங்குசெய் அரக்கருந் தெரிவை மார்களும்
நீங்கற அழுதனர் நெடுங்கண் நீருக. - 4
974 - பழிதவிர் கற்புடைப் பதுமை தன்மகன்
ஒழிவுறு தன்மையை ஓர்ந்து மாமலர்க்
குழலவிழ்ந் தலமரக் கொங்கை மேற்புடைத்
தழுதனள் வீழ்ந்தனள் மறிக்கும் அங்கையாள். - 5
975 - தொல்லியல் இழுக்கிய சூர னென்பவன்
புல்லிய பின்முறைப் புணர்வின் மாதருஞ்
சில்லியற் கூந்தல்தாழ் சேடி மார்களும்
எல்லவ ருந்தழீஇ யிரங்கல் மேயினார். - 6
976 - களமெழு மிசையொலி கடிநல் யாமொலி
துளையொலி வயிரொலி தூரி யத்தொலி
அளமரு மொழியொலி அடங்கி அப்பெரு
நளநகர் புலம்பொலி மயங்கிற் றென்பவே. - 7
977 - அன்னது போழ்தினில் அறத்தைக் காய்தரு
துன்னெறி மந்திரி சூர பன்மனாம்
மன்னவன் முன்னுற வந்து கைதொழு
தின்னன கேண்மென இசைத்தல் மேயினான். - 8
978 - மெய்ப்புவி அண்டங்கள் பரித்த மேன்மையை
ஒப்பருந் திருவினை உலப்பி லாயுளை
செப்பருந் திறலினை சிறந்த சீர்த்தியை
இப்பரி சழுங்குதல் இயற்கை யாகுமோ. - 9
979 - தெண்டிரை நேமிவான் செறிந்து கொள்ளினும்
அண்டம தழியினும் அனைத்து மாயினும்
விண்டிடல் இன்றிவாழ வீர நீமனங்
கொண்டிடு திண்மையுங் குன்றற் பாலதோ. - 10
980 - ஏவரும் வியத்தகும் இறைவ நீயிவண்
ஓவென அரற்றியே உயங்குற் றாயெனின்
மூவரும் நகைப்பர்கள் முன்னம் ஏவல்செய்
தேவரும் நகைப்பர்கள் புகழுந் தேயுமால். - 11
981 - பூதர்தம் படையல புராரி நல்கிய
காதல னேயல கழற விட்டதோர்
தூதுவன் செய்தபுன் தொழிலுக் காற்றலை
பேதுற லாகுமோ பெருமைக் கீறிலாய். - 12
982 - தந்தையர் துஞ்சினுந் தம்முன் பின்னவர்
மைந்தர்கள் துஞ்சினும் மற்றுஞ் சார்ந்தவர்
தந்தொகை துஞ்சினுஞ் சயத்தின் மேலையோர்
சிந்தைகொள் வன்மையிற் சிறிதுந் தேயுமோ. - 13
983 - மேதகு பெருந்திறல் வீரர் தம்மையும்
மாதரும் ¦லிவரால் மாயும் ஊழ்வரின்
ஆதலின் நின்மகற் காயுள் குன்றலின்
தூதனும் அட்டன னாகித் தோன்றினான். - 14
984 - வெவ்விய ஒன்னலர் வினையும் வன்மையுங்
கைவரு நெல்லியங் கனியின் நாடியே
செய்வகை தேற்றினஞ் செய்க லாதிவண்
நைவதும் ஆண்மையின் நலத்திற் காகுமோ. - 15
985 - வரங்களும் மதுகையும் வரம்பின் றெய்தியே
உரங்கிளர் சூரனென் றொருபேர் பெற்றநீ
தரங்கம தடைவதுந் தலைமைக் கேற்பதோ
இரங்கலை இரங்கலை யென்று தேற்றினான். - 16
986 - மேற்றிகழ அறத்தினை வெகுளும் நாமத்தான்
தேற்றலும் அவுணர்கோன் தௌ¤வு பெற்றெழீஇ
ஆற்றருந் துயரினை அடக்கித் தன்பணிக்
கூற்றியல் உழையரை நோக்கிக் கூறுவான். - 17
987 - சேயுயிர் வௌவியே சிறந்த இந்நகர்
மாய்வது புணர்ந்திடு வலிய தூதுவன்
போயது தெரிந்திரோ புகலக் கேட்டிரோ
நீயிர்கள் வாய்மையை நிகழ்த்து மென்னவே. - 18
988 - துப்புடன் இவ்வழி தூதிற் சென்றுளான்
இப்புரம் அகன்றனன் இலங்கை நோக்குறா
அப்புற மேகினான் அதனைக் கண்டனம்
மெய்ப்பரி சி·தென விளம்பி னாரரோ. - 19
989 - வேறு
அம்மொழி வினவ லோடும் அவுணர்கோன் தன்பால் நின்ற
கம்மியர் தம்மை நோக்கிக் கடிதுபோய் அகிலம் நல்கிச்
செம்மலர் மிசையே வைகுந் திசைமுகத் தொருவன் றன்னை
இம்மெனக் கொணா¢திர் என்ன அனையவா¢ இசைக்க லுற்றார். - 20
990 - ஈங்கிது கேட்டி மன்ன இனையமூ தண்டம் நல்குந்
தேங்கமழ பதுமத் தண்ணல் தேவர்கோ னாதி யான
பாங்கின ரோடு மேவிப் படையொடும் புவியில் வந்த
காங்கெயன் றன்கண் உற்றான் உன்பராற் கண்டோர் என்றார். - 21
991 - தொழுவர்கள் இனைய மாற்றஞ் சொற்றலுஞ் சூரன் கேளா
விழுமிது விழுமி தென்னா வெய்துயிர்ப் பெய்திச் சீறி
அழலெழ நகைத்து மற்றை அண்டத்தின் இருந்து நல்குஞ்
செழுமலர் அயனைப் பற்றிச் செல்லுமின் வல்லை என்றான். - 22
992 - கொற்றவன் இனைய மாற்றங் கூறலும் உழையர் கேளா
இற்றிது செய்தும் என்னா இசைவுகொண் டொல்லை ஏகி
மற்றையண் டத்திற் சென்று வானவர் முதுவன் றன்னைப்
பற்றினர் கொணர்ந்தார் தங்கோன் பணித்திடு பரிசு கூறி. - 23
993 - பரிசனர் பலரும் ஈண்டிப் பார்புகழ் சூர னென்னும்
அரசன்முற் கொணர்ந்து வேறோ£¢ அண்டத்தின் அயனை உய்ப்ப
வரிசையால் அவனை நோக்கி மாணழி வுற்ற மற்றித்
திருநகர் அதனைத் தொன்மை போலவே செய்தி யென்றான். - 24
994 - சூரன்மற் றிதனைச் செப்பச் சொற்பணி தலைக்கொண் டைய
ஓரிறை யொடுங்கு முன்னர் உனதுதொன் னகர மாற்ற
ஏருற முன்ன மேபோல் இயற்றுவன் யானே யென்னாப்
பேருல குதவுகின்ற பெற்றியை நினைந்து செய்வான். - 25
995 - பொன்மதில் மாட வீதி பொலன்மணிச் சிகரம் வேரம்
மன்மதன் விழையுஞ் சோலை மண்டபம் வாவி பொய்கை
சென்மலி அரங்க மன்றந் தெற்றியே முதல வெல்லாந்
தொன்மைபோல் ஆகத் தன்கைத் தொழில்முறை படைத்தான்மன்னோ. - 26
996 - இவ்வகை நகர முற்றும் எழில்பெறப் படைத்த பின்றை
மைவரை மேனி மன்னன் மாபெருங் கோயில் தன்னைச்
செவ்விதின் முதுமை போலச் சிறப்பினால் திருத்தல் செய்தான்
ஐவகை இருபான் கொண்ட அல்லியங் கமலத் தண்ணல். - 27
997 - கொன்பெரு நகரும் அந்தண் கோயிலும் படைத்த லோடும்
மன்பெருந் தகைய சூரன் மற்றவன் செய்கை நோக்கி
அன்புசெய் துவகை யாகி அவுணர்கள் யாரும் போற்ற
முன்புபோல் அரிமா னேற்று முழுமணித் தவிசின் உற்றான். - 28
998 - உற்றன னாகிப் பின்னர் ஓதிமத் திறையை நோக்கி
மற்றுநின் னண்டஞ் சென்று வைகுதி நல்கி என்னாச்
சொற்றினர் ஏவ அன்னோன் துண்ணென விடைபெற் றேகிப்
பெற்றதன் னண்டஞ் சென்று பிறங்குதன் னுலகம் புக்கான். - 29
ஆகத் திருவிருத்தம் - 998
-----
221. சூரன் அமைச்சியற் படலம் (999 - 1178)
999 - அந்தநல் லமையந் தன்னின் அவுணா¢கோன் ஏவல் போற்றி
முந்துசெல் லொற்ற ரானோர் மூரிநீர்க் கடலை வாவிச்
செந்தியிற் சென்று கந்தன் சேனையும் பிறவுந் தேர்ந்து
வந்தனர் விரைவின் அங்கண் மன்னனை வணங்கிச் சொல்வார். - 1
1000 - ஏற்றவெம் பூத வௌ¢ளம் இராயிரம் படையின் வேந்தர்
நூற்றுடன் எண்மர் பின்னும் நுவலருஞ் சிறப்பின் மிக்கோர்
மேற்றிகழ் இலக்கத் தொன்பான் வீரர்மற்றி னையரோடுந்
தோற்றமில் பரமன் மைந்தன் தொடுகடல் உலகின் வந்தான். - 2
1001 - சரமீ தவுணர் கோவே தாரக வீரன் தன்னைக்
கரையறு மாயை போற்றுங் காமரு பிறங்கல் தன்னை
இருபிள வாக வேலால் எறிந்தனன் ஈறு செய்து
திரைபொரும் அளக்கர் வேலைச் செந்திமா நகரின் உற்றான். - 3
1002 - விலங்கிய கதிர்வேல் அண்ணல் விரைந்திவன் மேவு மாற்றால்
உலங்கிளர் மொய்ம்பில் தூதன் ஒருவனை விடுத்தான் அன்னான்
இலங்கையை அழித்து வந்தான் யாளிமா முகவன் றன்னை
வலங்கையின் வாளாற் செற்று வாரிதி கடந்து போனான். - 4
1003 - செங்கதிர் அயில்வேல் மைந்தன் தெண்டிரைப் புணரி வாவி
பொங்குவெங் கணங்க ளோடும் போர்ப்படை வீர ரோடும்
இங்குவந் தாடல் செய்வான் எண்ணினன் இருந்தான் ஈது
சங்கையென் றுன்னல் வாய்மை தகுவன உணர்தி யென்றார். - 5
1004 - ஒற்றர்சொல் வினவி மன்னன் ஒருதனி இளவல் தன்னை
அற்றமில் கேள்வி சான்ற அமைச்சரை மைந்தர் தம்மைச்
சுற்றமொ டமைந்த தானைத் தொல்பெருந் தலைமை யோரை
மற்றொரு கணத்தின் முன்னர் மரபொடு கொணரு வித்தான். - 6
1005 - வேறு
ஆங்கவர் யாவரும் அவுணர் மன்னவன்
பூங்கழல் கைதொழூஉப் புடையின் வைகலுந்
தீங்கனல் சுடுவதோர் சீற்றம் உள்ளெழ
வீங்கிய உயிர்ப்பினன் விளம்பல் மேயினான். - 7
1006 - போற்றல ராகிய புலவர் யாரையும்
மாற்றருஞ் சிறையில்யான் வைத்த பான்மையைத்
தேற்றிய மகபதி சென்று சென்னிமேல்
ஆற்றலின் வைத்திடும் அமலற் கோதினான். - 8
1007 - கண்ணுத லுடையதோர் கடவுள் வல்லையோர்
அண்ணலங் குமரனை அளித்து மைந்தநீ
விண்ணவர் சிறையினை வீட்டிச் செல்கெனத்
துண்ணென நம்மிசைத் தூண்டி னானரோ. - 9
1008 - வாய்த்திடு கயிலைமால் வரையை வைகலுங்
காத்திடு நந்திதன் கணத்து வீரரும்
மீத்தகு பூதரும் விரவ மாலயன்
ஏத்திட அரன்மகன் இம்பர் எய்தினான். - 10
1009 - பாரிடை யுற்றுளான் பாணி கொண்டதோர்
கூருடை வேலினாற் கொடிய குன்றொடு
தாரக இளவலைத் தடிந்து பின்னுற
வாரிதி யகன்கரை வந்து வைகினான். - 11
1010 - அன்னதோர் அறுமுகன் ஆங்கொர் தூதனை
என்னிடை விடுத்தலும் ஏகி மற்றவன்
மைந்நிற நெடுங்கடல் வரைப்பிற் பாய்ந்தொராய்ப்
பொன்னவிர் இலங்கைமா புரத்தை வீட்டினான். - 12
1011 - இலங்கையங் காவலும் இகப்புற் றின்னதோர்
பொலங்கெழு திருநகர் நடுவட் புக்குலாய்
நலங்கிளர் என்னவைக் களத்தின் நண்ணினான்
கலங்கலன் நிறையது மாயைக் கறபினான். - 13
1012 - நண்ணினன் எதிருற நவையில் வீரர்போல்
விண்ணவர் பாங்கராச் சிலவி ளம்பியென்
கண்முனஞ் சிலருயிர் களைந்து வன்மையால்
எண்ணலன் பின்னுற எழுந்து போயினான். - 14
1013 - போயவன் இந்நகர் பொடித்துச் சிந்தியான்
ஏயின வேயின படைஞர் யாரையும்
மாயுறு வித்தனன் மற்றும் என்னிளஞ்
சேயுயர் கொண்டனன் செருக்கு நீங்கலான். - 15
1014 - அழிந்ததித் திருநகர் அளப்பில் தானைகள்
கழிந்தன செறிந்தது களேப ரத்தொகை
கிழிந்தது பாரகங் கெழீஇய சோரியா
றொழிந்ததென் னாணையும் உயர்வுந் தீர்ந்ததால். - 16
1015 - ஒற்றென வந்தவவ் வொருவன் தன்னையும்
பற்றிவெஞ் சிறையிடைப் படுத்தி னேன்அலேன்
செற்றிலன் ஊறதே எனினுஞ் செய்திலேன்
எற்றினி வசையுரைக் கீறு கூறுகேன். - 17
1016 - இம்பரின் இவையெலாம் இழைத்த தூதுவன்
நம்பதி இகந்துபோய் இங்கை நண்ணிய
மொய்ம்புடை யாளிமா முகவற் சாடியே
அம்புதி கடந்தனன் அவனி யெய்தினான். - 18
1017 - கார்பொரு மிடற்றவன் காதன் மாமகன்
வாரிதி கடந்திவண் வந்து நம்மொடும்
போர்பொர நினைகுவான் போலும் இவ்வெலாஞ்
சாரணர் மொழிந்தனர் சரத மாகுமால். - 19
1018 - நெற்றியில் அனிகமாய் நின்ற பூதரைச்
செற்றிகல் வீரரைச் செகுத்துச் செயினை
வெற்றிகொண் டேனையர் தமையும் வீட்டியே
மற்றொரு விகலைமுன் வரவல் லேனியான். - 20
1019 - சூரனென் றொருபெயர் படைத்த தொல்லையேன்
பாரிடர் தம்மொடும் பாலன் தன்னொடும்
போரினை இழைத்திடல் பு£¤ந்து வெல்லினும்
வீரம தன்றெனா வறிது மேவினேன். - 21
1020 - துய்த்திடுந் திருவினில் வலியிற் சூழச்சியில்
எத்துணைப் பெரியர்தாம் எனினும் மேலையோர்
கைத்தொரு வினைசெயக் கருதிற் றம்முடை
மெய்த்துணை யோரைமுன் வினவிச் செய்வரால். - 22
1021 - ஆதலின் வினவினன் யானு மாற்றுதல்
ஈதென வுரைத்திரால் என்று மன்னவன்
ஓதினன் அன்னதை உணர்ந்து கைதொழூஉ
மேதியம் பெயரினான் இவைவி ளம்பினான். - 23
1022 - மேலுயர் மாயைகள் விளைக்கும் வெற்பினை
மாலினை வென்றநின் வலிய தம்பியை
ஏலவொர் கணத்தின்முன் எறிந்த வீரனைப்
பாலனென் றுரைப்பதும் உணர்பின் பாலதோ. - 24
1023 - மேதகு தாரக வீரன் தானையை
ஆதிபர் தம்முடன் அட்ட தீரரை
ஏதுமோர் வலியிலா எளிய ரென்பதும்
பூதரென் றிகழ்வதும் புலமைப் பாலவோ. - 25
1024 - மீதெழு திரைக்கடல் விரைவிற் பாய்ந்துநம்
மூதெயில் வளநகர் முடித்து நின்னுடைக்
காதல னுயிரையுங் கவர்ந்த கள்வனைத்
தூதனென் றுரைப்பதும் அறிஞர் சூழ்ச்சியோ. - 26
1025 - சற்றையஞ் சிறையுடைக் கலுழன் ஊர்தரு
கொற்றவன் திசைமுகன் அமரர் கோமகன்
மற்றொரு வடிவமாய் வந்த தேயலால்
ஒற்றுவன் நிலைமைவே றுணரற் பாலதோ. - 27
1026 - உன்றனி இளவலும் ஒருநின் னோங்லும்
பொன்றிய காலையே புராரி மைந்தன்மேற்
சென்றிலை யல்லதுன் சேனை தூண்டியும்
வென்றிலை தாழ்த்திவண் வறிது மேவினாய். - 28
1027 - தீயழல் வறியதே எனினுஞ் சீரியோர்
ஏயிது சிறிதென எள்ளற் பாலரோ
வாயத னாற்றலை அடக்க லாரெனின்
மாயிரும் புவியெலாம் இறையின் மாய்க்குமால். - 29
1028 - மாற்றலர் சூழ்ச்சிய தெனினும் மாறதாய்
வீற்றொரு நிலைமைய தெனினும் மேவுமுன்
ஏற்றெதிர் காப்பரே என்னின் அன்னவர்க்
காற்றரும் இடுக்கண்வந் தடைதற் பாலதோ. - 30
1029 - துறந்திடா வளந்தனைத் துய்த்துச் செய்வகை
மறந்தன மாகியே வன்மை யாளவரை
எறிந்தவர் தமையிகழ்ந் திங்ஙன் வாழ்துமேற்
சிறந்தவர் யாமலால ஏவர் சீரியோய். - 31
1030 - முன்னமக் குமரன்மேல் முனிந்து சேறியேல்
உன்னகர்க் கேகுமோ ஒற்று மற்றுநீ
அன்னது புரிந்திலை ஆடல் மைந்தனோ
டிந்நகர் அழிந்ததென் றிரங்கற் பாலையோ. - 32
1031 - மொய்யுடை நின்முகன் முடிந்த தன்மையும்
ஐயநின் திருநகர் அழிவ தானதுஞ்
செய்யுறு நிலைமைகள் தெரிந்து செய்திடா
மையலின் கீழ்மையால் வந்த வாகுமால். - 33
1032 - கழிந்திடு பிழையினைக் கருதிச் சாலவுள்
அழிந்திடல் இயற்கையன் றறிஞர்க் காதலால்
ஒழிந்தன போகவொன் றுரைப்பன் கேண்மியா
விழிந்ததென் றுன்னலை இமைப்பிற் செய்திநீ. - 34
1033 - ஆயது பிறவிலை அவுணர் தம்மொடு
மேயின படையொடும் விரைந்து கண்ணுதற்
சேயினை வளைந்தமர் செய்யப் போதியால்
நீயினித் தாழ்க்கலை நெருநல் போலவே. - 35
1034 - என்றிவை மேதியன் இசைப்பக் கேட்டலும்
நன்றிது வாமென நவின்று கையெறிந்
தொன்றிய முறுவலும் உதிப்ப நல்லறங்
கொன்றிடு துர்க்குணன் இனைய கூறுவான். - 36
1035 - வன்றிறல் உவணன்மேல் வந்த மாயன்மேல்
நின்றிடும் அமரர்மேல் நேர்ந்து போர்செயச்
சென்றிலை இளையரால் திறல்கொண் டேகினாய்
இன்றினிப் பாலன்மேல் ஏக லாகுமோ. - 37
1036 - இறுதியில் ஆயுளும் இலங்கும் ஆழியும்
மறுவிலா வெறுக்கையும் வலியும் வீரமும்
பிறவுள திறங்களுந் தவத்திற் பெற்றனை
சிறுவனொ டேயமர் செய்தற் கேகொலாம். - 38
1037 - மேதகு பசிப்பிணி அலைப்ப வெம்பலிக்
காதல்கொண் டலமருங் கணங்கள் தம்மையுந்
தூதுவன் தன்னையுந் தொடர்ந்து போர்செயப்
போதியோ அமரரைப் புறங்கண் டுற்றுளாய். - 39
1038 - இன்றுநின் பெரும்படைக் கிறைவர் யாரையுஞ்
சென்றிட விடுக்குதி சிறிது போழ்தினில்
குன்றெறி பகைஞனைக் கூளி தம்மொடும்
வென்றிவண் மீள்குவர் வினைய மீதென்றான். - 40
1039 - கருதிடு துர்க்குணக் கயவன் இன்னன
உரைதரு முடிவினில் ஒழிக இங்கெனாக்
கருமணி யாழியங் கைய மைத்தரோ
தருமவெம் பகையுடை யமைச்சன் சாற்றுவான். - 41
1040 - குலம்படு நவமணி குயின்று பொன்புனை
அலம்படை கொண்புன் முதிரை ஆக்கத்தாற்
புலம்படக் கீறுவ போலும் வீரநீ
சிலம்படி மைந்தனோ டாடல் செய்வதே. - 42
1041 - மேலுயர் கண்ணுதல் விமலன் அன்றெனின்
ஆலவன் அன்றெனின் அயனும் அன்றெனில்
காலனும் அன்றெனிற் காவல் வீரநீ
பாலனொ டமர்செயிற் பயனுண் டாகுமோ. - 43
1042 - மன்னிளங் குதலைவாய் மதலை மீதினும்
இன்னினி அமா¢செய இறத்தி யென்னினும்
அன்னவன் நினதுபோ ராற்றல் காண்பனேல்
வென்னிடும் எதிர்ந்துபோர் விளைக்க வல்லனோ. - 44
1043 - நேரலல் தங்களை நேர்ந்து ளாரெனப்
பேரிகல் ஆற்றியே பெரிது மாய்வதும்
பூரியா¢ கடனலாற் புலமைக் கேற்பதோ
சீரியர் கடனவை தெரிந்து செய்வதே. - 45
1044 - எரிமுகன் இரணியன் எனுமுன் மைந்தரில்
ஒருவனுக் காற்றலர் இலக்கத் தொன்பது
பொருதிறல் வயவரும் பூதர் யாவரும்
அரனருள் புரிதரும் அறுமு கத்தனும். - 46
1045 - கீள்கொடு நகங்கொடு கிள்ளும் ஒன்றினை
வாள்கொடு தடியுமோ வன்மை சான்றதோர்
ஆள்கொடு முடித்திடும் அவரை வென்றிட
நீள்கொடு மரங்கொடு நீயுஞ் சேறியோ. - 47
1046 - மாணிமை கூடுறா மகவு தன்னொடு
மேணறு சாரதர் இனங்கள் தம்மொடும்
பூணுதி செருவெனும் புகற்சி கேட்பரேல்
நாணுவர் நமரெலாம் நகுவர் தேவரும். - 48
1047 - பொற்றையை முடித்தனன் பொருவில் தம்பியைச்
செற்றனன் என்றிளஞ் சிறுவன் தன்னையும்
வெற்றிகொள் புதல்வனை வீட்டி னானெனா
ஒற்றையும் மதித்தனை தொன்மை உன்னலாய். - 49
1048 - ஆறணி செஞ்சடை அண்ணல் தந்திடும்
பேறுடை வேலினைப் பிள்ளை உய்த்தலும்
மாறுள படையினான் மாற்ற லாமையால்
ஈறது வாயினன் இளவல் தாரகன். - 50
1049 - குறுமுனி தொல்லைநாட் கூறும் வாய்மையால்
இறுதியை யடைந்ததாங் கிருந்த மால்வரை
அறிகிலை ஈதெலாம் ஆற்றல் கூடுறாச்
சிறுவன செய்கையே சிந்தை கோடியால். - 51
1050 - எச்சமொ டழிவுறா இரதஞ் சாலிகை
கைச்சிலை பெற்றிலன் கருதி நீயவை
அச்சொடு புரிந்தலை அதனில் தூதனால்
வச்சிர வாகுவாம் மகனுந் துஞ்சினான். - 52
1051 - பலவினி மொழிவதென் படியில் தானவத்
தலைவரில் ஒருவனை விளித்துத் தானையோ
டிலையயின் முருகன்மேல் ஏவு வாயெனின்
அலைவுசெய் தொல்லையின் அடல்பெற் றேகுவான். - 53
1052 - அன்னது செய்கென அறத்தைச் சீறுவான்
சொன்னதோர் இறுதியின் முறுவல் தோன்றிடக்
கன்னிகர் மொய்ம்புடைக் கால சித்தெனுங்
கொன்னவில் வேலினான் இனைய கூறுவான். - 54
1053 - செந்தியின் இருந்திடுஞ் சிறுவன் சாரதர்
தந்தொகை தன்னொடு மீண்டு சாருமேல்
எந்தையொர் சிலவரை ஏவல் அல்லது
மந்திரம் வேண்டுமோ மற்றி தற்குமே. - 55
1054 - வயந்தன தையனை வாச வன்றனைச்
சயந்தனைப் பிறர்தமைச் சமரின் வென்றநாள்
இயைந்தெமை வினவலை இன்றொர் பாலற்கா
வியன்பெரு மந்திரம் வேண்டிற் றாங்கொலோ. - 56
1055 - அண்டர்கள் ஒடுங்கினர் அரக்கர் அஞ்சினர்
எண்டிசைக் கிழவரும் ஏவ லாற்றுவர்
மண்டமர் அவுணரின் வலியர் பூதராங்
கண்டனம் இன்றியாங் கலியின் வண்ணமே. - 57
1056 - பணிக்குதி தமியனைப் பரமன் மைந்தனைக்
கணத்தொகை வீரரைக் கால பாசத்தாற்
பிணித்திவண் வருகுவன் என்று பேசலுந்
துணுக்கெனச் சண்டன்என் றொருவன் சொல்லுவான். - 58
1057 - கழிபசி நோயடக் கவலும் பூதரும்
மழலையம் பிள்ளையும் மற்ற வற்குறு
தொழில்புரி சிலவருஞ் சூழ்ச்சிப் பாலரோ
அழகிது மந்திரம் அவுணர்க் காற்றவே. - 59
1058 - கொல்லுவன் பூதரைக் குமரன் றன்னையும்
வெல்லுவன் பிறரையும் விளிவு செய்வனான்
மல்லலந் தோளுடை மன்னர் மன்னவுன்
சொல்லதின் றென்னஇத் துணையுந் தாழ்த்துளேன். - 60
1059 - ஏவுதி தமியனை இமைப்பிற் சென்றியான்
மூவர்கள் காப்பினும் முரணிற் றாக்கியே
தூவுறு சாரதத் தொகுதி தன்னொடு
மேவலன் தனைஇவண் வென்று மீள்வனால். - 61
1060 - எனவிவை சண்டனாங் கிசைத்த வெல்லையின்
அனலியென் றுரைத்திடும் அவுணர் காவலன்
சினமொடு முறுவலுஞ் சிறிது தோன்றிட
வினையமொ டிம்மொழி விளம்பல் செய்குவான். - 62
1061 - தெம்முனை மரபிலோர் சிறுவன் என்னினும்
வெம்மையொ டேற்குமேல் வெகுண்டு மேற்செலா
தெம்மொடு மந்திரத் திருப்ப ரேயெனின்
அம்மவோ சூரருக் கழகி தாற்றலே. - 63
1062 - என்றிது மொழிதலும் எரியுங் கண்ணினன்
ஒன்றிய முறுவலன் உயிர்க்கு நாசியன்
கன்றிய மனத்தினன் கறித்து மெல்லிதழ்
தின்றிடும் எயிற்றினன் சிங்கன் கூறுவான். - 64
1063 - வெந்தொழில் மறவரை விளித்த தன்மையும்
மந்திரம் இருந்தது மனங்கொள் சூழ்ச்சியும்
இந்திரன் உதவிசெய் இளையன் வன்மையைச்
சிந்திட வேகொலாம் நினைந்த செய்கையே. - 65
1064 - இருநில அண்டமேல் இருந்து ளோரெலாம்
மருவல ராகியே வருக வந்திடின்
ஒருதமி யேன்பொரு துலையச் செய்வனால்
தெரியலை போலுநின் னடியன் திண்மையே. - 66
1065 - வன்மையை உரைப்பது மரபன் றால்எனைச்
சென்மென விடுக்குதி சேனை யோடுபோய்
உன்முனி வுற்றிடும் ஒன்ன லாரையட்
டின்மைய தாக்கியே வருவன் ஈண்டென்றான். - 67
1066 - இன்னவை போல்வன இயல்பி னேன்ஐய
துன்னெறி அமைச்சருஞ் சூழ்ச்சித் தொல்படை
மன்னரும் இசைத்தலும் வயங்கு செங்கதிர்
ஒன்னலன் கையமைத் துரைத்தல் மேயினான். - 68
1067 - சென்றிடு முனிவரர் தியங்க மாயைசெய்
குன்றுடன் இளவலைக் குமரன் கொன்றிடும்
அன்றெனை விடுத்தலைஅழைத்தொன் றோர்ந்திலை
இன்றிது வினவுவ தென்னை யெந்தைநீ. - 69
1068 - உள்ளுறு கரவினன் ஒருவ னும்பரான்
எள்ளரும் ஒற்றுவந் தீண்டு போர்செயின்
முள்ளெயி றின்னமும் முற்றுந் தோன்றிலாப்
பிள்ளையை விடுக்குமோ பெரியை சாலநீ. - 70
1069 - இழித்தகு தூதனால் இடா¢ப்பட டாயெனும்
பழித்திறம் பூண்டனை பாலன் ஆவியை
ஒழித்தனை நகரமும் ஒருங்கு சீரற
அழித்தனை நீயுன தறிவி லாமையால். - 71
1070 - பொருளல தொன்றினைப் பொருளெ னக்கொடு
வெருவுதல் செய்வது வினைய மோர்கிலா
தொருசெயல் விரைந்துசெய் துயங்கி வாழ்தலும்
பெரியவர் கடமையோ பேதைத் தன்மையே. - 72
1071 - பொற்றையொ டிளவலைப் பொன்ற வீட்டினோன்
கொற்றமும் பூதர்தங் குழாத்தி னாற்றலும்
ஒற்றுவன் நிலைமையும் உணரிற் சென்றியான்
பற்றிமுன் னுய்க்குவன் பிணித்துப் பாசத்தால். - 73
1072 - ஆயிரத் தெட்டெனும் அண்டத் துக்கெலாம்
நாயக முதல்வநீ நம்பன் நல்கிய
சேயமர் குறித்தெழல் சீரி தன்றெனை
ஏயினை வெற்றிகொண் டிருத்தி எம்பிரான். - 74
1073 - ஆண்டெனை விடுத்தியேல் அமர தாற்றிட
மூண்டிடும் அவர்தொகை முருக்கித் தேவராய்
ஈண்டுறு வோரையும் இமைப்பில் வென்றுபின்
மீண்டிடு வேனென விளம்பி னானரோ. - 75
1074 - இரவியம் பகையவன் இனைய சிற்சில
உரைதரும் இறுதியின் உலைவு றாததோர்
முரணுறு தாதைதன் முகத்தை நோக்கியே
குரைகழல் இரணியன் கூறல் மேயினான். - 76
1075 - வேறு
வள்ளல் தன்மைசேர் வயப்பெருஞ் சூரனோர் மழலைப்
பிள்ளைப் போர்வலிக் கிரங்கினன் எனும்மொழி பிறக்கின்
உள்ளத் தேநினை நினைக்கினும் வெருவும்ஒன் னலரும்
எள்ளற் கேதுவாம் விடுத்தியான் மந்திரம் இனியே. - 77
1076 - மைதி கழ்ந்திடு மிடற்றவன் மதலைமா நிலத்தின்
எய்தி னான்அமர்க் கென்றலும் என்றனை விளித்து
வெய்தெ னப்பொர விடுத்திலை வெறுத்தியோ வினையேன்
செய்தி டுந்தவ றுண்டுகொல் உனக்கொரு சிறிது. - 78
1077 - பானல் போலொளிர் மிடற்றினன் பாலன்மேற் பசிநோய்க்
கூனை வேட்டுழல் பூதர்மேல் ஒழிந்துளார் தம்மேன்
மான வெஞ்சமர்க் கெம்முனோன் சேறலும் வசையே
சேனை யோடியான் ஏகுவன் செருத்தொழில் புரிய. - 79
1078 - வெற்றிப் பேரமர் ஆற்றியே மேவலர் தொகையைச்
செற்றுத் தேவர்கள் யாரையுந் தடிந்துசெல் குவனால்
இற்றைக் கங்குலின் என்றனை ஏவுதி யெனலும்
மற்றைத் தம்பியாம் எரிமுகன் இனையன வகுப்பான். - 80
1079 - இணையி லாவண்டம் ஆயிரத் தெட்டினுக் கிறைநீ
துணைய தாயொரு வீரகே சரியுளன் சுதராய்க்
கணித மில்லவா யாமுளங் கரிபரி கடுந்தேர்
அணிகொ டானவப் படையுள அலகிலா தனவே. - 81
1080 - அழிவில் பாகுள தேருள சிலையுள அ·தான்
றொழிவி லாதமா¢ அம்புபெய் தூணியும் உளவால்
இழிவில் தெய்வதப் படைகண்முற் றும்முள இறைமைத்
தொழில் நடாத்துறு பரிதியும் ஒன்றுண்டு தொல்லோய். - 82
1081 - அண்டம் ஆயிரத் தெட்டையுங் கன்னலொன் றதனில்
கண்டு மீடரும் இந்திர ஞாலமுங் கவனங்
கொண்ட தோர்தனி மடங்கலும் உனக்குள குறிக்கின்
விண்டு மாலுறு மாயைகள் பலவுள மேலோய். - 83
1082 - இன்ன பான்மைசேர் வெறுக்கைபெற் றீறிலா துறையும்
மன்னர் மன்னநிற் போன்றுளார் யாவரே மலையக்
கன்னி பாலகன் தூதுவன் சிறுதொழில் கருத்தின்
உன்னி யுன்னியே இரங்கவுந் தகுவதோ உனக்கே. - 84
1083 - குழந்தை வெண்பிறை மிலைச்சினோன் மதலையைக் குறுத்தாள்
இழிந்த பூதரைப் பிறர்தமை வென்றிட எமரில்
விழைந்த மானவர் ஒருவரை விடுப்பதே யன்றி
அழிந்தி ரங்கியே வினவுமோ இதுகொல்உன் னறிவே. - 85
1084 - மூளும் வெஞ்சமர் புரிந்தஎன் னிளவல்பன் முடியும்
வாளி னாலடும் ஒற்றனை மற்றுளார் தம்மைக்
கேள டுந்தடிந் தல்லது கேடில்சீர் நகா¢க்கு
மீள்க லேனெனப் பகர்ந்தனன் வெய்யசூ ளுரையே. - 86
1085 - கரந்தை சூடுவான் குமரனைப் பொருதல்கா தலியா
இருந்த வீரர்கள் அளப்பில ராயினும் இப்போர்
விரைந்து நீயெனக் குதவுதி ஏகுவன் மேனாட்
பொருந்து பாதலத் தரக்கர்மேற் சென்றதே போல. - 87
1086 - வலிய தோர்சிலை ஈறிலாக் கவசம்வான் படைகள்
உலகு தந்தவன் அளித்திட முன்புபெற் றுடையேன்
குலம டங்கவாள் அரக்கரைத் தடிந்திசை கொண்டேன்
மெலியன் அன்றியான் அறுமுகன் மேலெனை விடுத்தி. - 88
1087 - என்னு மாற்றங்கள் எரிமுக முடையவன் இசைபப
அன்ன வன்றனை விலக்கியே கரதலம் அமைத்துச்
சென்னி ஆயிரம் பெற்றுள சிங்கமா முகத்தோன்
மன்னர் மன்னனை நோக்கியே வகுத்துரை செய்வாய். - 89
1088 - மந்திர ரத்தருந் தானையந் தலைவரும் மகாருந்
தந்த மக்கியல் வன்மையே சாற்றிய தல்லால்
இந்தி ரப்பெருந் திருவுறும் உன்றனக் கியன்ற
புந்தி சொற்றிலர் இம்மொழி கேளெனப் புகல்வான். - 90
1089 - வேறு
பெற்றிடு திருவினில் பிறந்த வெஞ்சினங்
கற்றவர் உணர்வையுங் கடக்கும் அன்னது
முற்றுறு கின்றதன் முன்னம் அன்பினோர்
உற்றன கூறியே உணர்த்தல் வேண்டுமால். - 91
1090 - மன்னவர் செவியழல் மடுத்த தாமென
நன்னெறி தருவதோர் நடுவு நீதியைச்
சொன்னவர் அமைச்சர்கள் துணைவர் மேலையோர்
ஒன்னலர் விழைந்தவாறு ரைக்கின் றார்களே. - 92
1091 - முற்றுற வருவது முதலும் அன்னதால்
பெற்றிடு பயன்களும் பிறவுந் தூக்கியே
தெற்றென உணர்ந்துபின் பலவுஞ் செய்வரேல்
குற்றமொன் றவர்வயிற் குறுக வல்லதோ. - 93
1092 - மால்வரு தொடா¢பினால் வனத்துச் செல்லுமீன்
கோல்வரும் உணவினைக் குறித்து வவ்வியே
பால்வரு புணர்ப்பினிற் படுதல் போலநீ
மேல்வரு கின்றதை வினவல் செய்கிலாய். - 94
1093 - இந்திர னாதியாம் இறைவர் தங்களை
அந்தரத் தமரரை யலைத்த தீயவர்
முந்துறு திருவொடு முடிந்த தல்லதை
உய்ந்துளர் இவரென உரைக்க வல்லமோ. - 95
1094 - தேவர்கள் யாரையுந் திரைகொள் வேலையின்
மேவரு மீன்றொகை விரைவிற் றம்மென
ஏவினை இனிதுகொல் இனிய செய்கையும்
மாவியில் விருப்பிலார் அன்றி யார்செய்வார். - 96
1095 - அஆகைழல் வாசவற் கலக்கண் ஆற்றியே
இறையினை அழித்தனை இருந்த மாநகர்
நிறைதரு வளனெலாம் நீக்கு வித்தனை
சிறையிடை உய்த்தனை தேவர் யாரையும். - 97
1096 - அத்தகு தேவரால் ஐய நங்களுக்
கித்துணை அலக்கண்வந் தெய்திற் றிங்கிது
மெய்த்திற மாமென விரைந்துட் கொள்ளலை
பித்தரின் மயங்கினை பேதை ஆயினான். - 98
1097 - பொன்னகர் அழிந்தநாட் புகுந்த தேவரை
இன்னமும் விட்டிலை இரக்கம் நீங்கினாய்
அன்னதற் கல்லவோ ஆறு மாமுகன்
உன்னுடன் போர்செய வுற்ற தன்மையே. - 99
1098 - வேறு
பேறு தந்திடு பிஞ்ஞகன் பெருந்திரு வுடனீர்
நூறு தன்னுடன் எட்டுகம் இருமென நுவன்றான்
கூறு கின்றதோர் காலமுங் குறுகிய ததனைத்
தேறு கின்றலை விதிவலி யாவரே தீர்ந்தார். - 100
1099 - எத்தி றத்தரும் நுங்களை வெல்கிலர் எமது
சத்தி வென்றிடும் என்றனன் கண்ணுதற் றலைவன்
அத்தி றத்தினால் அல்லவோ அறுமுகக் குமரன்
உய்த்த செய்யவேல் உண்டது தாரகன் உயிரை. - 101
1100 - பேதை வானவர் தங்களைச் சிறையிடைப் பிணித்தாய்
ஆத லானுனக் கானதென் றுன்பமே அல்லால்
ஏது மோர்பயன் இல்லதோர் சிறுதொழில் இயற்றி
வேத னைப்படு கின்றது மேலவர் கடனோ. - 102
1101 - குரவ ரைச்சிறு பாலரை மாதரைக் குறைதீர்
விரத நற்றொழில் பூண்டுளோ£¢ தம்மைமே லவரை
அரும றைத்தொழி லாளரை ஒறுத்தனர் அன்றோ
நிரய முற்றவுஞ் சென்றுசென் றலமரும் நெறியோர். - 103
1102 - அமரர் தம்பெருஞ் சிறையினை நீக்குதி யாயிற்
குமர நாயகன் ஈண்டுபோ ராற்றிடக் குறியான்
நமது குற்றமுஞ் சிந்தையிற் கொள்ளலன் நாளை
இமையொ டுங்குமுன் கயிலையின் மீண்டிடும் எந்தாய். - 104
1103 - சிட்ட ராகியே அமர்தரும் இமையவர் சிறையை
விட்டி டாதுநீ யிருத்தியேன் மேவலர் புரங்கள்
சுட்ட கண்ணுதல் குமரனங் குலமெலாந் தொலைய
அட்டு நின்னையும் முடித்திடுஞ் சரதமென் றறைந்தான். - 105
1104 - தடுத்து மற்றிவை உரைத்தலும் வெய்யசூர் தடக்கை
புடைத்து வெய்துயிர்த் துரப்பியே நகைநிலாப் பொடிப்பக்
கடித்து மெல்லிதழ் அதுக்கிமெய் பொறித்திடக் கனன்று
முடித்த னித்தலை துளக்கியே இன்னன மொழிவான். - 106
1105 - ஏவற் றொண்டுசெய் தின்னமுங் கரந்தஇந் திரற்குந்
தேவர்க் குஞ்சிறு பாலற்குஞ் சிவனுறை கயிலைக்
காவற் பூதர்க்கும் அஞ்சினை கருத்தழிந் தனையோ
மூவர்க் கும்வெலற் கரியதோர் மொய்ம்புகொண் டுடையோய்த. - 107
1106 - எல்லை நாள்வரை இழைத்ததும் எம்பெருஞ் சத்தி
வெல்லு நுங்களை என்றதுங் கண்ணுதல் விமலன்
சொல்ல யான்முன்பு கேட்டிலன் வஞ்சமுஞ் சூழ்வும்
வல்லை வல்லைகொல் எம்பிநீ புதிதொன்று வகுத்தாய். - 108
1107 - நூற்றின் மேலுமோ ரெட்டுக நுவலருந் திருவின்
வீற்றி ருந்தர சியற்றுதிர் என்னினும் மேனாள்
ஆற்றி னைச்சடை வைத்தவன் கொடுத்திடும் அழியாப்
பேற்றை யாவரே விலக்குவார் அதுபிழை படுமோ. - 109
1108 - ஆதி நாயகன் எம்பெருஞ் சத்தியே அல்லால்
ஏதி லார்வெலார் என்னினுஞ் சத்தியும் இறையும்
பேத மோவரங் கொடுத்தவன் அடுமென்கை பிழையே
ஓத லாவதோர் வழக்கமே உண்மைய தன்றால். - 110
1110 - பழுது றாதுநம் போலவே வேள்வியைப் பயிலா
தழிவி லாவரம் பெற்றிலன் தாரகன் அதனால்
ஒழிவ தாயினன் வச்சிர வாகுவும் உணர்வில்
குழவி யாதலின் மாய்ந்தனன் ஈதுகொல் குறையே. - 111
1110 - அண்ட மாயிரத் தெட்டையுந் தனியர சாட்சி
கொண்டு வைகினன் குலத்தொடும் அமரர்தங் குழுவைத்
தொண்டு கொண்டனன் யாவா¢வந் தெதிர்க்கினுந் தொலையேன்
உண்டு கொல்லிவண் எனக்குநே ராகவே ஒருவர். - 112
1111 - தவமு யன்றுழல் அமரரின் அரக்கர்கள் தம்மின்
அவுணா¢ தங்களின் ஆயிரத் தெட்டெனும் அண்டம்
புவன முற்றவும் ஒருதனி யாழியால் புரந்தே
எவரெ னக்குநே ராகவே அழிவிலா திருந்தார். - 113
1112 - மால யன்முத லாகிய முதுவர்கள் வரம்பில்
கால மாகயான் அமரரைச் சிறைசெயக் கண்டுஞ்
சால வென்றனக் கஞ்சியே இருந்தனர் தனியோர்
பால னேகொலாம் அழிவிலா என்னுயிர் படுப்பான். - 114
1113 - வேறு பாடுறா வச்சிரப் படிவமும் மிடலும்
ஈறி லாததோர் ஆயுளும் பெற்றிடும் என்னை
ஊறு தான்செயக் கூடுறா தொருவர்க்கு மென்றான்
மாறு போர்செய்து பாலனோ எனையட வல்லான். - 115
1114 - எண்ணி லாததோர் பாலகன் எனைவெல்வன் என்கை
விண்ணி லாதவன் றன்னையோர் கனியென வெ·கிக்
கண்ணி லாதவன் காட்டிடக் கையிலா தவன்போய்
உண்ணி லாதபேர் ஆசையால் பற்றுமா றொக்கும். - 116
1115 - என்று மற்றிவை சூரபன் மாவிசைத் திடலுந்
துன்று ப·றலைச் சீயமா முகமுடைத் துணைவன்
நன்று நன்றென வினவியே இன்னமும் நானிங்
கொன்று கூறுவன் முனியலை கேட்டியென் றுரைப்பான். - 117
1116 - வாலி தாமதிச் சடிலமும் பவளமால் வரையே
போலும் மேனியும் முக்கணும் நாற்பெரும் புயமும்
நீல மாமணி¢ கண்டமுங் கொண்டுநின் றனனால்
மூல காரணம் இல்லதோர் பராபர முதல்வன். - 118
1117 - தன்னை நேரிலாப் பரம்பொருள் தனியுருக் கொண்ட
தென்ன காரணம் என்றியேல் ஐந்தொழில் இயற்றி
முன்னை யாருயிர்ப் பாசங்கள் முழுவதும் அகற்றிப்
பின்னை வீடுபே றருளுவான் நினைந்தபே ரருளே. - 119
1118 - அப்ப ரன்றனை உன்னியே அளவைதீர் காலம்
மெய்ப்பெ ருந்தவம் இயற்றினை அதுகண்டு வௌ¤ப்பட்
டொப்பி லாவர முதலியே ஆங்கதற் கொழியுஞ்
செப்பி வைத்தனன் தேர்ந்திலை போலுமத் திறனே. - 120
1119 - பெறல ருந்திரு வுடையநீ அறத்தினைப் பேணி
முறைபு ரிந்திடா தாற்றலால் அமரரை முனிந்து
சிறையில் வைத்தனை அதுகண்டு நின்வலி சிந்தி
இறுதி செய்திட உன்னினன் யாவர்க்ம் ஈசன். - 121
1120 - வரம ளித்தயாம் அழிப்பது முறையன்று வரத்தால்
பெருமை பெற்றுள சூரனை அடுவது பிறர்க்கும்
அரிதெ னப்பரன் உன்னியே தன்னுரு வாகும்
ஒரும கற்கொடு முடித்துமென் றுன்னினான் உளத்தில். - 122
1121 - செந்நி றத்திரு மேனியுந் திருமுக மாறும்
அன்ன தற்கிரு தொகையுடைத் தோள்களு மாக
முன்ன வர்க்குமுன் னாகிய பராபர முதல்வன்
தன்னு தற்கணால் ஒருதனிக் குமரனைத் தந்தான். - 123
1122 - மானு டத்தரில் விலங்கினில் புட்களில் மற்றும்
ஊன முற்றுழல் யாக்கையில் பிறந்துளார் ஒப்ப
நீநி னைக்கலை பரஞ்சுடர் நெற்றியந் தலத்தே
தானு தித்தனன் மறைகளுங் கடந்ததோர் தலைவன். - 124
1123 - சீல மில்லவர்க் குணரவொண் ணாதசிற் பரனைப்
பால னென்றனை அவனிடத் திற்பல பொருளும்
மேலை நாள்வந்து தோன்றிய சிறியதோர் வித்தின்
ஆலம் யாவையும் ஒடுங்கியே அவதரித் ததுபோல். - 125
1124 - அருவு மாகுவன் உருவமு மாகுவன் அருவும்
உருவு மில்லதோர் தன்மையும் ஆகுவன் ஊழின்
கருமம் ஆகுவன் நிமித்தமு மாகுவன் கண்டாய்
பரம னாடலை யாவரே பகர்ந்திடற் பாலார். - 126
1125 - வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரித்த
போதக் காட்சிக்குங் காணலன் புதியரில் புதியன்
மூதக் கார்க்குமூ தக்கவன் முடிவிற்கு முடிவாய்
ஆதிக் காதியாய் உயிர்க்குயி ராய்நின்ற அமலன். - 127
1126 - ஞானந் தானுரு வாகிய நாயகன் இயல்பை
யானும் நீயுமாய் இசைத்துமென் றால· தௌ¤தோ
மோனந் தீர்கலா முனிவருந் தேற்றிலர் முழுதுந்
தானுங் காண்கிலன் இன்னமுந் தன்பெருந் தலைமை. - 128
1127 - தத்த மாற்றங்கள் நிறுவிய சமயிகள் பலருங்
கத்து புன்சொலை வினவினர் அவன்செயல் காணார்
சுத்த வாதுள முதலிய தந்திரத் தொகுதி
உய்த்த ணர்ந்திடு நீரரே ஒருசிறி துணர்வார். - 129
1128 - கருவி மெய்ப்புலன் காட்டுவான் காண்பவன் காட்சிப்
பொருளெ னப்படு நான்மையும் ஐவகைப் பொறியும்
இருதி றத்தியல் வினைகளுங் காலமும் இடனும்
மரபின் முற்றுறு பயனுமாய் நின்றவன் வள்ளல். - 130
1129 - ஞால முள்ளதோர் பரம்பொருள் நாமெனப் புகலும்
மாலும் வேதனும் மாயையாம் வரம்பினுட் பட்டார்
மூல மாகிய தத்துவ முழுவதும் கடந்து
மேலு யர்ந்திடு தனிமுத லவன்அன்றி வேறார். - 131
1130 - தூய பார்முத லாகவே குடிலையின் துணையுங்
மேய அண்டமும் உயிர்களும் வியன்பொருள் பலவு
மாயும் நின்றனன் அல்லனு மாயினன் அவன்றன்
மாயை யாவரே கடந்தனர் மறைகளும் மயங்கும். - 132
1131 - இன்ன தன்மைசேர் முதல்வனைச் சிறுவனென் றிகழ்ந்து
பன்னு கின்றனை அவுணர்தங் கிளையெலாம் படுத்து
நின்னை யுந்தடிந் திடுவனோர் இமைப்பினின் இரப்புந்
தன்ன ருட்டிறங் காட்டுவான் வந்தனன் சமர்மேல். - 133
1132 - அற்றம் இவ்வகை ஆயிரத் தெட்டெனும் அண்டம்
பெற்ற னம்மென வியந்தனை தத்துவ பேதம்
முற்று ணர்ந்திலை தரணியோ அளப்பில வுளகாண்
மற்றை அண்டங்கள் கேட்டியேல் மருளுதி மன்னோ. - 134
1133 - குடிலை யீறதா வாரியே முதலதாக் குழுமி
யுடைய அண்டங்கள் அலகில என்பரொன் றொன்றின்
அடைத லுற்றிடு புவனத்தின் பெருமையார் அறிந்தார்
முடிவு றாததோர் பொருளினை முடிவுகூ றவற்றோ. - 135
1134 - அன்ன வாகிய அண்டங்கள் அனந்தகோ டியையுந்
தன்ன தாணையால் ஓரிமைப் பொழுதினில் தரவும்
பின்னர் மாற்றவும் வல்லதோர் ஆதியம் பிரான்காண்
உன்னொ டேபொரும் ஆடலாற் செந்திவந் துற்றான். - 136
1135 - வச்சி ரத்தனி யாக்கைபெற் றனமென மதித்தாய்
இச்சி ரத்தைய விடுமதி இருவினைக் கீடா
அச்செ டுத்திடும் உயிர்கண்மாய்ந் திடுமென அறிஞர்
நிச்ச யித்தனர் முடிவுறா திருத்திகொல் நீயே. - 137
1136 - பெருமை பெற்றிடு வானத்தின் நிலத்திடைப் பிறந்தோர்
இருமை பெற்றிடு காயமும் இறந்திடுந் திண்ணம்
பருமி தத்துநின் வச்சிர யாக்கையும் பாரின்
உரிமை பெற்றுள தாதலான் அழிவின்றி யுறுமோ. - 138
1137 - அழிவில் மெய்வரம் பெற்றனம் என்றனை அதற்கு
மொழித ரும்பொருள் கேண்மதி முச்சகந் தன்னுட்
கெழிய மன்னுயிர் போற்சில வைகலிற் கெடாது
கழிபெ ரும்பகல் இருந்திடும் பான்மையே கண்டாய். - 139
1138 - அச்சு தன்அயன் அமரரா கியபெய ரவர்க்கு
நிச்ச யம்படு முகமனே யானபோல் நினது
வச்சி ரத்தனி யாக்கையும் அழிவிலா வரமும்
முச்ச கந்தொழப் பல்லுகம் இருத்தலாய் முடியும். - 140
1139 - வான்செய் தேவரை நீயலைக் கின்றதை மதியா
ஊன்செய் கின்றபல் லுயிருக்கும் உயிரதாம் ஒருவன்
தான்செய் கின்றதொல் வரத்தினைத் தான்தவிர்த் திடுமேல்
ஏன்செய் தாயென வினவியே நிறுவுவார் எவரே. - 141
1140 - கெடுத லில்லதோர் வளனொடு நீயுநின் கிளையும்
படுத லின்றியே வாழ்தியென் றின்னன பகர்ந்தேன்
இடுதல் கொண்டிடு சிறையிடைத் தேவரை யின்னே
விடுதல் செய்குதி யென்றனன் அறிஞரின் மிக்கான். - 142
1141 - இன்ன பான்மையான் மடங்கலம் பெருமுகத் திளவல்
சொன்ன வாசகம் வினவியே மணிமுடி துளக்கிக்
கன்ன மூடுசெங் கனல்செறித் தாலெனக் கனன்று
முன்னை யாகியோன் பின்னருஞ் சிற்சில மொழிவான். - 143
1142 - காற்றிற் றள்ளுண்டு நெருப்பினிற் சூடுண்டு கங்கை
ஆற்றில் தாக்குண்டு சரவணம் புக்கலை யுண்டு
வேற்றுப் பேர்முலை உண்டழு தேவிளை யாடும்
நேற்றைப் பாலனை யோபரம் பொருளென நினைந்தாய். - 144
1143 - பிரம மாகிய ஒருபொருள் உயிரெனப் பேர்பெற்
றுருவ மெண்ணில கொண்டுதன் மாயையால் உலப்பில்
கரும பேதங்கள் ஆற்றிடும் பல்புனற் கடத்துள்
இரவி தன்னுருத் தனித்தனி காட்டிய இயல்பின். - 145
1144 - கடந்த கர்ந்துழி அவற்றிடை வௌ¤கக னத்தோ
டடைந்த வாறுபோல் யாக்கையின் பேதகம் அனைத்தும்
முடிந்த காலையில் தொன்மைபோல் அபேதமாம் மொழிக்குந்
தொடர்ந்த சிந்தைக்கும் நாடொணா தமர்பெருஞ் சோதி. - 146
1145 - பிரம மேயிவர் அல்லவர் இவரெனப் பேதித்
திருமை யாகவே கொள்ளலை யாக்கையே வேறு
பரம மாகிய உயிரெலாம் ஒன்றுபல் பணியும்
பொருள தாகியே ஒருமையாய் முடிந்தவா போல. - 147
1146 - விறலும் வன்மையும் இல்லவர் தாழ்வர்மே தக்க
நெறியர் ஓங்குவர் ஈதுல கத்திடை நிகழ்ச்சி
இறுதி யில்லதோ£¢ பெரியன்யான் அறுமுகன் என்போன்
சிறியன் ஆதலின் அவனையான் வெல்குவன் திண்ணம். - 148
1147 - தொகைமை சான்றநங் குரவர்பல் லோருயிர் தொலைத்த
பகைஞ ராதலின் அமரரைச் சிறையிடைப் படுத்தேன்
மிகைசெய் தார்களை நாடியே வேந்தொறுத் திடுதல்
தகைமை யேயென மனுமுறை நூல்களுஞ் சாற்றும். - 149
1148 - மாக ராயுளோர் காப்பினை விடுகிலன் மற்றைப்
பாக சாதனன் தன்னையும் அருஞ்சிறைப் படுப்பன்
ஏக நாயகன் எய்தினும் எதிர்ந்துபோர் புரிவன்
ஆகை யால்இனி இச்சிறு மொழிகளை அயர்த்தி. - 150
1149 - உரைப்ப தென்னினி ஒருவயிற் றென்னுடன் உதித்துப்
பெருக்க முற்றனை நங்குலப் பகைஞரைப் பெரிது
நெருக்கல் இன்றியே அவர்கள்பாற் பட்டனை நீயே
இருக்க மற்றொரு தெவ்வரும் வேண்டுமோ எனக்கே. - 151
1150 - பத்துக் கொண்டநூ றுடையதோர் சென்னியும் பலவாங்
கொத்துக் கொண்டமர் தோள்களுங் கரங்களின் குழுவும்
எத்துக் காற்றினை வன்மையும் வீரமும் இழந்தாய்
பித்துக் கொண்டவர் தம்மினும் பேதைமை விடித்தாய். - 152
1151 - வேறு
தானவர் வழிமுறை தன்னை விட்டனை
வானவர் போன்றனை வன்மை சிந்தினை
மேனிகழ் திட்பமும் விறலு மாண்டனை
மோனமொ டருந்தவ முயலப் போதிநீ. - 153
1152 - மறந்தனை இழந்தனை மான நீங்கினை
சிறந்திடும் அவுணர்தஞ் சீர்த்தி மாற்றிடப்
பிறந்தனை ஈண்டொரு பயனும் பெற்றிலை
இறந்தனை பொலுநீ இருந்து ளாய்கொலோ. - 154
1153 - மந்திரி யாதியான் மற்றி தற்குநீ
சிந்தையில் வெருக்கொளின் திசைமு கத்தர்போல்
ஐந்தியல் அங்கமொன் றங்கை பற்றுதி
வெந்திற லேயெனப் படையும் வீசியே. - 155
1154 - கிளைத்திடு கள்ளியின் கிளைக ளாமென
வளர்த்தனை பலதலை வரம்பில் கைத்தலம்
நௌ¤த்தனை சுமந்தனை நெடிது காலமா
இளைத்தனை வலியிலாய் யாது செய்திநீ. - 156
1155 - பண்டுணர் வில்லதோர் பருவம் ஆதலின்
சண்டனை வருணனைத் தளையின் இட்டனை
அண்டரை யலைத்தனை அறிவு கூடலின்
பெண்டிரின் நடுங்கினை பேடி போலுநீ. - 157
1156 - பன்னெடுந் தலையுடைப் பால னாகுமுன்
வன்மையும் ஆடலும் வந்து பா£¢த்திட
இன்னமும் வந்திலள் வருந்தி ஈன்றதாய்
அன்னைதன் குறைகொலோ அருவ மானதே. - 158
1157 - பகையென ஒன்றுறிற் பதைபதைத் தெழீஇச்
சிகையுடை வாலுளைச் சீயஞ் சீறியே
தகுவிறல் கொள்ளுமால் அவற்றின் தன்மையாய்
மிகுதலை பெற்றதும் வீண்கொல் எம்பிநீ. - 159
1158 - பூதரைத் தலைவரைப் புராரி மைந்தனை
ஏதிலர் யாரையும் யான்வென் றேகுவன்
நீதளர் வெய்திடல் நினது மாநகர்
போதுதி என்றனன் புலனில் புந்தியான். - 160
1159 - என்றிவை அவுணர்கோன் இசைத்த காலையின்
நன்றிவன் உணர்வென நகைத்துக் கொண்டொறுந்
துன்றிய பேரழல் சொரிய வெஞ்சினத்
தொன்றிய தன்னுளத் தினைய உன்னுவான். - 161
1160 - உறுதியை உரைத்தனன் உணர்வி லாதவன்
வறிதெனை இகழ்ந்தனன் வருவ தோர்கிலன்
இறும்வகை நாடினன் யாதொர் புந்தியை
அறிவிலர்க் குரைப்பவர் அவரிற் பேதையோர். - 162
1161 - உய்த்தனர் தேன்மழை உதவிப் போற்றினுங்
கைத்திடல் தவிருமோ காஞ்சி ரங்கனி
அத்தக வல்லவோ அறிவி லாதவன்
சித்தம துணர்வகை தெருட்டு கின்றதே. - 163
1162 - தொலைக்கருந் திருவுடைச் சூரன் புந்தியைக்
கலக்கினும் உய்வகை கருது கின்றிலன்
அலக்கணுற் றிருந்துநாம் இரங்கி ஆவதென்
விலக்கரும் விதியையாம் வெல்ல வல்லமோ. - 164
1163 - ஆவது விதியெனின் அனைத்து மாயிடும்
போவது விதியெனின் எவையும் போகுமால்
தேவருக் காயினுந் தீர்க்கத் தக்கதோ
ஏவரும் அறியொணா ஈசற் கல்லதே. - 165
1164 - நீண்டசெஞ் சடைமுடி நிமலன் ஈந்தநாள்
மாண்டது மாய்ந்திடு மெல்லை வந்ததால்
ஈண்டுளார் யாவரும் இறையுந் துஞ்சுமால்
பூண்டிடும் அமரர்கோன் தவமும் பொய்க்குமோ. - 166
1165 - இறப்பது சரதமேல் இறைவன் என்னுரை
வெறுத்தனன் இகழுமேல் வேண்டி இன்னும்யான்
மறுத்தெதிர் மொழியலன் மன்ன என்பிழை
பொறுத்தியென் றின்னுரை புகல்வ தல்லதே. - 167
1166 - மன்னவர் மன்னவன் வள்ளல் வேலினால்
இன்னினி இறந்திடும் இதுவும் நோக்கியே
பின்னுமிங் கிருந்திடல் பிழைய தாகுமால்
முன்னுற முடிவதே முறைய தாமெனா. - 168
1167 - சிந்தனை செய்திடு சிங்க மாமுகன்
தந்தையை நிகர்வரு தம்முன் தாள்தொழா
வந்தனை செய்தனன் மன்ன சீறிடேல்
புந்தியி லேன்பிழை பொறுத்தல் வேண்டுமால். - 169
1168 - சிறியவா¢ ஒருபிழை செய்யின் மேலவர்
பொறையொடு பின்னரும் போற்றல் அல்லதை
இறையதும் வெகுள்வரோ யானுஞ் செய்பிழை
அறிவன்நீ அன்றியே ஆர தாற்றுவார். - 170
1169 - பொறுத்தனை கோடியென் புன்மை யுள்ளமேற்
செறுத்தெனை இகழந்திடல் செருவிற் சென்றியான்
மறுத்தெதிர் மலைந்திடு மாற்ற லா£¢தமை
ஒறுத்திடு கின்றனன் அதனை ஓர்திநீ. - 171
1170 - செருவினுக் கேகுவன் செறுநர் தம்மிசைத்
தருதியால் விடையெனத் தம்பி கேட்டலும்
பெரிதுள மகிழ்ந்தனன் பிறங்கு காதலால்
வருதியென் றனையனை மார்பிற் புல்லினான். - 172
1171 - பையர வளித்திடும் பாத லத்தினில்
வையக வரைப்பினில் திசையின் வான்களிற்
செய்யஅண் டங்களிற் செய்யும் வென்றியுள்
ஐயநிற் கேதுகொல் அரிய தானதே. - 173
1172 - நீக்கமில் கேள்வியாய் நீமுன் சொற்றன
தூக்குறின் என்மனத் துணிவுந் திட்பமும்
றுக்கமு முணரவே ஒன்ன லாரெனும்
மாக்களை அடுவதோ£ மடங்கல் அல்லையோ. - 174
1173 - சென்றனர் மாற்றலர் என்கை தேர்தியேல்
கொன்றபின் அல்லது கும்பிட் டோடிட
வென்றபின் அல்லது வெகுளி தீ£¢தியோ
உன்றன தாற்றலை உணர்கி லேன்கொலோ. - 175
1174 - இற்றைநாள் நின்னகர் ஏகி ஆயிடை
உற்றிடு படையெலாம் ஒருங்கு கொண்டுநீ
கொற்றமொ டிருக்குதி குமரன் ஈண்டுறின்
மற்றுனை விளிக்குவன் வருதி யாலென்றான். - 176
1175 - ஒல்லென முருகவேள் உனது மாநகர்
செல்லினும் ஏகலை செருவுக் கன்னது
சொல்லினை விடுத்தியோர் தூதன் தன்னையான்
வல்லையின் அமர்செய வருகின்றேன் என்றான். - 177
1176 - என்றலும் அவுணருக் கிறைவன் ஈங்கிது
நன்றென விடையது நல்கத் தாழ்ந்துபோய்த்
தன்றிரு மாநகர் சா£¢ந்து வைகினான்
வன்றிறல் உடையதோர் மடங்கற் பேரினான். - 178
1177 - ஆனதோர் பொழுதினில் அரசன் ஆண்டுறை
தானையந் தலைவரைத் தனயர் தங்களை
ஏனையர் யாரையும் ஏகச் செய்துதன்
மாநகர் இந்திர வளத்தின் வைகினான். - 179
1178 - அந்தமில் வளனுடை அவுணர் காவலன்
மந்திரம் இருந்தது வகுத்துக் கூறினாம்
இந்திரன் முதலினோர் யாரும் ஏத்திடச்
செந்தியின் அமர்ந்தவன் செய்கை செப்புவாம். - 180
------
3. மகேந்திர காண்டம் முற்றுப்பெற்றது
ஆகக் காண்டம் மூன்றுக்குத் திருவிருத்தம் - 4890திருச்சிற்றம்பலம்
------
கருத்துகள்
கருத்துரையிடுக