Vizhiyil vali tantavaṉē
காதல் கதைகள்
Backவிழியில் வலி தந்தவனே
தனிமரம் நேசன்
உள்ளடக்கம்
விழியில் வலி தந்தவனே
விழியில் வலி தந்தவனே -அறிமுகம்
என்னுரை
1. 1. விழியில் வலி தந்தவனே!!! முதல் வலி
2. 2. பண்பாடும் வாணம்பாடி நாமே
3. 3. ஜனகன் மகள் சீதை போல பேரழகி சுகி
4. 4. ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா
5. 5. சந்தனத்துக்கும் சாணிக்கும் வாசம் வேற
6. 6. வேதனையும் வலியும் இவனுக்கு மட்டும் இல்லை
7. 7. சிறையில் பூத்த சின்னமலர்
8. 8. மண்ணில் மரணங்கள் மலிந்த பூமி
9. 9. யுத்த பூமியில் காதல் படுத்தும்பாடு
10. 10.அதிகாரத்தினால் ஆசைக்காதலை அடைய முடியாது
11. 11.இருப்பே கேள்வியாகும் போது வேற மார்க்கம்
12. 12.பூம்பாறையில் பொட்டுவைத்த பூங்குருவி
13. 13.மண்ணுக்காக தம் உயிரை தாரை வார்த்து
14. 14.சமாதானத்தை யாசிக்கும் தமிழச்சி
15. 15. போராடினால் தான் வாழ்க்கை
16. 16. மிகத்தீவிரமான போர் முன்னெடுப்பு
17. 17. நாளைக்கு போராட்டகளத்துக்கு மீண்டும் போகப்போறேன்
18. 18. காத்து இருப்பேன் கண்ணன் வருவான்
19. 19.ஒப்பாரும் மிக்காரும் வாழ்ந்த தாய் பூமி
20. 20.உண்மை பேசு என்று போதித்த புத்தன் சிலைகள்
21. 21. விழியில் வலி தந்தவள் வருவாள்
1
விழியில் வலி தந்தவனே
தனிமரம் நேசன் – stsivanesan@gmail.com
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னஞ்சல்: socrates1857@gmail.com
மின்னூலாக்கம் : சிவ கார்த்திகேயன்
மின்னஞ்சல் : seesiva@gmail.com
Creative Commons Attribution 4.0 International
http://creativecommons.org/licenses/by/4.0
2
விழியில் வலி தந்தவனே -அறிமுகம்
வணக்கம் உறவுகளே .
மீண்டும் சிறிய விடுமுறையின் பின் தனிமரம் இணையத்தின் ஊடே உங்களுடன் இணைகின்றது.
மூன்றாவது ஆண்டின் வலைப்பயண ஆரம்பத்தில் மீண்டும் ஒரு குறுந் தொடரினை உங்களிடம் பகிர்கின்றேன்.
வலையுலகில் தொடருக்கான ஆதரவு மிகவும் குறைவு என்பது என் கடந்தகால நேரடி அனுபவம்
.என்றாலும் ஒவ்வொரு தொடரும் வலையுலக உறவுகளினால் வலைச்சரத்தில் வலம் வருவதே எனக்கு கிடைக்கும் அங்கிகாரம் ஒரு புறம் என்றால் !
இன்னொன்று தொடரின் மூலம் நான் அடையும் ஆத்ம திருப்தி பெரிது . அதனால் தான் இணையத்தில் என் நேரத்தினை செலவிடுகின்றேன்.
இந்தத்தொடர் /
என் கடந்தகாலத்தில் தாயகத்தின் வன்னி நிலப்பரப்பில் விற்பனைப்பிரதிநிதி வேலையும் ,அதனுடன் இணைந்த வியாபார விளம்பர சேமிப்பும் , என்னைப் பல்வேறு நபர்களுடன் பழகும் சந்தர்ப்பத்தை பெற்றதன் விளைவும் அப்படிப் பழகியவர்களில் பள்ளி மாணவர்களும் மாணவர்த்தலைவர்களும் அடக்கம்.
என்னுடன் நெருங்கிப்பழகிய ஒரு மாணவத்தலைவன் கதை தான் இது.
இந்த வாய்ப்பினை எனக்கு சமாதான காலம் தந்தது.2002 இல் A–9 திறப்பும் அந்த அந்த பயணத்தில் பழகிய ரகுவின் நட்பினை நான் பின் பிரிந்து இனவாத அடக்குமுறையினால் .
என்றாலும் மீண்டும் ஒரு நாள் என் ஆன்மீகப் பயணத்தில் சென்னையில் சந்தித்தேன் .அந்த நட்பினை அதன் பின் சிந்தித்தேன் .
இனி ரகுவுடன் உங்களைப் பயணிக்க எழுத்தாணியாக மட்டும் தனிமரம் பிடித்த பாடல்களுடன் இந்தத்தொடரில் பயணிக்கும்.
வழமைபோல இந்தத் தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை .
இது ஒரு சாமானிய வழிப்போக்கனின் உன்னதமான உணர்வு யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை.
என்றாவது ஒருநாள் மீண்டும் வன்னி மண்ணில் சிலரைச் சந்திக்கும் ஆவலுடன் ,ஆசையுடன் ,புலம்பெயர் தேசத்தில் இருந்து .
சுதந்திரக் காற்றினை அன்னை பூமியில் சுவாசிக்க காத்து இருக்கும் ஒரு ஏதிலியின் எதிர் பார்ப்புக்களுடன் இந்தத்தொடரினை ஏற்றிவிடுகின்றேன் தனிமரம் வலையில் .உங்களுடன் கதை பேசும் ஆசையில்.:))).
3
என்னுரை
ஈழம் விட்டு புலம்பெயர்ந்த் பின் மனதில் இருக்கும் துயரங்களை பலர் பொதுவெளி சொல்லி தம் கடந்த கால வேதனைகளை பகிர நினைப்பது இல்லை என்பதை புலம்பெயர்ந்த் பின் தனிமரம் கற்ற பாடம் ஆனால் எழுத்து ஆர்வம் என்னையும் தனிமரம் வலையில் தொடர் எழுதத்தூண்டியது என் ஆத்ம திருப்தியன்றி வேற நோக்கம் இல்லை ! சில தொடர் தனிமரம் வலையில் முன்னர் எழுதிய போது என்னை நேசிக்கும் இன்னொரு ஈழத்து பிரபல்ய பதிவர் என்னிடம் இந்திய தேசத்தில் மீண்டும் நேரடியாக கூறிய விடயம் இன்னும் பலரிடம் செல்ல ஒரு தொடர் எழுதுவோம் என்ற போது இனவாத நாட்டில் இணையத்தில் எழுதமுடியாதநிலையில் தனிமரம் வலையில் எழுதிய தொடர்கதைதான் விழியில் வலிதந்தவனே!
ரகு. சுகி இருவரும் என்னை தனிமையில் அறிந்தவர்கள் தாய் தேசத்தில் ! ஆனாலும் போர் காலத்தின் கோலம் இன்று எல்லாம் உணர்வுகள் தீண்டாத ஓவியம் போல சித்றியநிலையில் முன்னர் தனிமரம் வ்லையில் எழுதியதை மீண்டும் ஒரு ஆவண்ம்போல இந்த் மின்நூல்வடிவில் உங்க்ளிடம் பகிர்கின்றேன். ஈழ அச்சு ஊடகம் சொல்லாத சேதிகள் உங்களை எழுதுவடிவில் சேர்ந்தால் அதுவே என் மன ஆறுதல்! இந்த மின்நூல் முயற்ச்சிக்கு தன் முழுமையான ஆதரவும் .அன்பும் காட்டும் மரியாதைக்குரிய சீனிவாசன் அவர்களுக்கும். அவர்குழுவுக்கும் என் நன்றிகளும். வாழ்த்துக்களும்.
இப்படிக்கு
தனிமரம் நேசன்
பாரிஸ்!
1
சர்வதேச நாளேடுகளிலும் இலங்கை தேசிய நாளேடுகளிலும் சட்ட மூல ஆராய்வு என்ற வார்த்தைப்பிரயோகத்தின் மூலம் ஈழமக்கள் பலரும் சட்ட சீர்திருத்த அமைப்பு,நிறைவேற்று ஜனாதிபதி முறை என்றால் என்ன என்று உண்மையில் தெரியாத சாமானிய மக்கள் பலர் சிந்தித்துக் கொண்டு இருந்த இலங்கையின் சமாதான நாடகத்தின் நடவடிக்கை தேக்கம் கண்ட நிலையான2005 ஆம் ஆண்டின் தைமாதத்தில்…. !
அப்படியான தையில்
முதல் வாரம் ரகு உயர்தரவகுப்பில் சேர்ந்திருந்த ஆரம்ப நாட்கள் .
எதிர்காலம் எப்படி அமையும் என்ற கற்பனைக்கு விதை விதைக்கப்படும் காலம்.
பாவையர் பார்வையில் பள்ளிப்படிப்பு பல்கலைக்கழகம் தாண்டுமா ?இல்லை பாதியில் நிற்குமா நீ தானே என் பொன் வசந்தம் .
என புலம்பும் இந்த இரண்டுவருடம் படிப்பில் ஒழுங்காக கவனம் செலுத்தினால் தான் எதிர்கால வாழ்கை பிரகாசமாக இருக்கும் என்ற நிலையில் ரகு !
கல்வியே நாளை நமதே நம் வாழ்வின் ஒளியே இந்த கல்வி அறிவே என பாமரன் பாதையே என்றது முதல் நோக்கமாக இருந்தது.
ரகுவின் தந்தை ஒரு விவசாயி .நடுத்தர குடும்பம் அவர்களுடையது .ரகுவின் பொழுதுகள் பெரும்பாலும் நண்பர்களுடனே கழியும்.
விவசாயி என்பதை இலகுவாக சொல்லிவிடலாம் .ஆனால் ஒருவிவசாயியின் கஸ்டம் என்ன என்பதை எழுத்தில் சொல்லிவிடமுடியாது.
நெல்லாடிய வயல் எங்கே… ???..என்ற பாடலில் வைரமுத்து இடையில் சரணத்தில் எலிக்கறி தின்பது பற்றி விவசாயின் அவலம் எழுதியது எப்படி பலருக்கு புரியாதோ ??அப்படித்தான் இனவாத ஆட்சியினர் விவசாயத்தின் உப கரணங்கள் முதல், யூரியா வரை வன்னியில் தடைசெய்த நிலையியும் தென் இலங்கை மேட்டுக்குடியினர் பலருக்கு புரியாது.
சேவை என்ற போர்வையில் மருத்துவ டாக்டர்கள் பணம் செய்யும் தொழில் போல அல்ல விவசாயம்!
இது ஒரு சேவை நோக்கான பசியினைப் போக்கும் பாமரனின் புனிதமான தொழில்.
ஆனால் இன்றைய இளைஞர்கள் யாரும் விவசாயம் செய்ய முன் வருவது இல்லை.
ஐடியில் அல்லது ஊடகத்தில் கழுத்துப்பட்டி கட்டி சலாம் போட்டு அடிமையாக இருப்பது போல இன்றைய நவயுகம். முன்னர் போல அது எதோ படிக்காத பாமரர்களின் தொழில் என்ற நிலையில் அடையாளப்படுத்தப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.இன்று இன்ஜினியர் கூட விவசாயத்துக்கு மீள் திரும்பும் நிலையில் .
உயர்தர வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள் சுய அறிமுகம் மேற்கொள்ள சொல்லும் போது, தனது தந்தையின் தொழில் விவசாயம் என்று சொல்ல ரகு ஒரு போதும் தயங்கியது இல்லை.!
ஆனால் அதை சொல்லும் போது சக மாணவர்கள் ஏதோ சொல்லக்கூடாத இராணுவ ரகசியத்தைவெளிநாட்டு ஊடகத்துக்கு இவன் சொல்லியது போல பார்ப்பதை எண்ணி பல முறை அவன் வேதனைப்பட்டதுண்டு.
நகரின் பிரதான பாடசாலைகளில் அதுவும் ஒன்று. நகரின் பெயரைக்கொண்டு அமைந்த பாடசாலையாகும். சமூகத்தில் பெரும் அந்தஸ்து உள்ளவர்களின் பிள்ளைகள் பலரும் படிக்கும் பாடசாலை. கல்வி,விளையாட்டு என்று கிளிநொச்சி மாவட்டத்தில் அதை அடித்துக்கொள்ள வேறு எந்த பாடசாலையாலும் முடியாது.
ரகுவை போல சாதாரண குடும்பத்து பிள்ளைகளும் அங்கே படிக்கின்றார்கள் ரகுவின் இரண்டு தலைமுறை படித்ததும் அதே பாடசாலையில் தான்,!
மூன்றவது வம்சம் ரகுவும் படிப்பதும் அதே பாடசாலையில் தான். முதலாம் வகுப்பு முதல் படித்துவருகின்றான். பிறகு 1996 ஆம் ஆண்டு கிளிநொச்சி இடப்பெயர்வின் பின் சில ஆண்டுகள் அந்த பாடசாலையை பிரிந்து இருந்த ரகு, 2001 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் மீண்டும் கிளிநொச்சிக்கு மீளக்குடியமர்ந்த பின் ரகு மீண்டும் அதே பாடசாலையில் படிக்கத்தொடங்கினான்.
8,9,10,11 என்று இப்போது உயர்தரத்திற்கும் வந்துவிட்டான் இன்னும் இரண்டு வருடங்களில் அவனுக்கு பாடசாலைக்கும் இடையிலான தொடர்புகள் அடுத்த இராணுவத்தளபதியின் பதவி போல முடிந்துவிடும்.
ரகு பிறக்கமுன்பே இனவாத யுத்தம் இருந்தது. அவன் பிறந்த பின்பும் இனவாத யுத்தம் உச்சத்தில் இருந்தது ஏழரைச்சனியன் போல யுத்தத்திலே பிறந்து யுத்ததிலே வாழும் அப்பாவி பிறவிகள் அந்த ஈழ மண்ணின் மக்கள். ரகு உயர்தரம் படிக்க வந்த போது சமாதான காலம் !!
.எனவே தென் பகுதிகளில் இருந்தும் வேடிக்கை பார்க்க பலரும் வெற்றி நிச்சயம் என்றும் .அக்கினிச்சுவாலை, என்றும் இனவாத ஆட்சியில் இராணுவச்சிப்பாயாக முன்களத்தில் பணியாற்றிய சாமானிய கிராமத்து அப்புக்காமியின் மகனின் பேரில் மாதாமாதம் வங்கிக்கு காசு வரும் மகனிடம் இருந்து கடிதமும் நேரடி உரையாடலும் வராத பாமரசிங்கள மக்கள் தம் பிள்ளைகளைத்தேடி சுதந்திரமாக இராணுவ கேள்வி இன்றி சுதந்திரத்துடன் வடக்கு நோக்கிய பயணமும்!
(முன்னர் வடக்கு போக இராணுவ அமைச்சின் பாதுகாப்பு அனுமதிMOD எடுக்க வேண்டும்)
சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் பயணித்தார்கள் ஒரு புறம் என்றால் மறுபுறம். வெளிநாட்டில் இருந்தும் பல்பொருள் அங்காடி திறக்கவும் ,
வெளிநாட்டில் வைத்திருந்த கடன் அட்டைப் பணத்தைக் கொண்டு சாமானிய வியாபார நிலையங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி சொகுசு பல்பொருள் அங்காடி திறக்கும் ஆங்கலாய்ப்பில் ஓடிவந்த வியாபார நரிகள் ஒருபுறம் என்றால்!
இனவாத யுத்ததிற்கு முகம் கொடுக்கொடுக்கா முடியாமல் உயிர் தப்பவும் பொருளாதார மாஜமானைத்தேடி பின் கதவால் ஓடிய பலரும், பிறந்த மண்ணை பாசத்துடன் பார்க்க மீண்டும் சுற்றுலாப் பயணிகளாக வன்னிக்கு வரத்தொடங்கிய காலம்.
அவர்களை எல்லாம் பார்க்கும் போது அட நாங்களும் யுத்தம் இல்லாத ஒரு பூமியில் பிறந்திருந்தால் சந்தோசமாக வாழ்ந்திருக்கலாமே என்று ரகு ஏங்கிய நாட்களும் உண்டு.!தொடரும் வலி…………/
2
2. பண்பாடும் வாணம்பாடி நாமே
“பண்பென்ற பாசக்கூட்டிலே சேர்ந்து பண்பாடும் வாணம் பாடி நாமே என்ற “பரதன் பாடல் போல ரகுவின் தந்தை கதிரவனும் ஒரு பாடல் பிரியன் அமைதியானவர்
.அமைதியில் அப்பனுக்குப் தப்பாமல் பிறந்து பிள்ளையாக இருக்கின்றான் என்று அயலவர்கள் போற்றும் வண்ணம் ரகு.பொதுவாகவே அமைதியான சுபாவம் கொண்டவன். யாருடனும் இலகுவில் பழகிவிடமாட்டான்,அதுவும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம் ஆஞ்சநேய பக்தன் போல அவர்களாக வந்து பேசினாலும் விலகி போகும் ஒரு கேரக்டர்,
உயர்தர வகுப்பில் மாணவிகள் மாணவர்களுடன் சகஜமாக வந்து பேசுவது ரகுவிற்கு ஆச்சரியமாக இருந்தது.”பால் வாசம் கடந்து பூவாசம் கண்டான் பல்கலைக்கழகம் புகும் முதல் நிலைப்பள்ளியில் என்ற “கண்ணதாசன் கவிதைபோல அதுவரை 11ம் வகுப்புக்களில் மாணவர்கள் மாணவிகளுடன் பேசுவது இல்லை.!
ரகுவின் அமைதியான சுபாவம் பல மாணவிகளுக்கு அவனை எப்படியும் பேசவைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தார்கள்.கல்லைக்கூட ஆலையில் போட்டு மாவைப்போல அரைப்பதில் தந்திரம் வைக்கும் கன்னியர் அவன் போகும் இடம் எல்லாம் வலியவந்து பேசுவார்கள் ரகு எதுவும் பேசாமல் போய்விடுவான்,துறவி விஸ்வாமித்திரர் போல பூஜிக்கும் பூக்கள் அல்ல பெண்கள் இந்தக்கல்லூரிக் காலத்தில் தவசியைப்போல தாண்டிப்போகவேண்டும்!இனவாத நாட்டில் வெட்டுப்புள்ளியில் தட்டிவிடுவார்கள் வன்னித் தமிழன் பல்கலைக்கழகம் போனால் அடுத்த சிங்களவனை எப்படி உள்வாங்குவது? என்ற மேல்மட்ட அரசியல் புரியாதவன் இல்லை ரகு.
ஆனால் பசங்களுடன் நன்றாக பம்பல் அடித்து கதைப்பான் இதனால் பல மாணவிகளுக்கு அவன் மேல்அக்கினிச் சுவாலைதான். வெற்றி நிச்சயம் வடக்கை கைப்பற்றும் என்ற கனவில் இருந்த இனவாத ஆட்சி போலத்தான் செம கடுப்பு.
ரகுவுடன் தோள் கொடுப்பான் தோழன் என்பது போல நட்பு என்ற குழாமில் இருந்தான் அர்ஜுன்.
இவர்கள் இருவரும் தான் வகுப்பில் நெருகிய நண்பர்கள் இவர்களுடன் சுயன்,குமரேசன் இவர்களும் அடக்கம் வகுப்பில் மொத்தம் 12 ஆண்கள் 13 பெண்கள்.அர்ஜுன்,சுயன்,குமரேசன்,ரகு நால்வரை தவிர ஏனைய 8 மாணவர்கள் மாணவிகளுடன் சகஜமாக பேசி பம்மல் அடித்து கும்மாளம் போடுவார்கள்.
சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதி போல மாணவர்களிடையே ரகுவின் ஆலோசனை கேட்கப்படும் பின் தான் மாணவர்கள் அதை செயல் படுத்துவார்கள்
.உயர்தரத்தில் மாணவர்கள் மாணவிகளின் கல்வி நடவடிக்கையில் ஏதாவது மாற்றம் என்றாலும் கீழ் நிலை வகுப்புக்களில் வரும் மாற்றம் என்றாலும் அதனைப் பற்றி மாணவர் தலைவர்களின் தலைமகனாக ஆலோசனைக்கு பள்ளி அதிபர் அழைப்பது ரகுவைத்தான். கட்சியின் பொதுச்செயலாளர் போல!மாணவர் தலைவர்களை விளையாட்டு ,இலக்கியம் ,என முன்னனியில் இருக்கக்கூடியவர்கள் யார் ,,? என்பது வரை அபிப்பிராயம் கூறக்கூடிய அளவிற்கு பின்னனியில் இயக்கும் இயக்குனர் என்பதாலும் பதவியில் இருந்தாலும் பணிவானவன் என்பதால் பள்ளியில் ஒரு சிறந்த மாணவன் என்ற அபிப்பிராயம் பல ஆசிரியர்களிடமும் இருந்தது.பள்ளியின் மாணவர் பத்திரிகை ஆசிரியராக ரகு இருந்ததும் ஒரு காரணம். இன்னொன்று பொதுச்சேவையான ஊடக ஆர்வம் பள்ளியில் தொடங்கும் வாய்ப்பு எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை அது ரகுவிற்கு கிடைத்ததுக்கு பள்ளியில் அவன் மாணவர்களின் மதியுரையனாக இருந்ததும் ஒரு காரணம்!
ரகுவின் பாடசாலையில் அப்போது பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தவள் சுகி !
.சமுதாயத்தில் பெரும் செல்வாக்கு மிக்க ஒருவரின் மகள் அதிகாரம் அப்போது அவர்கள் கையில் இருந்தது வன்னியில். இயக்க பொறுப்பாளர் ஒருவருடைய
மகள்.
சுகியின் சுந்தர புருசன் நீயடா!
சூடிக்கொள்வானா என்னை
சுவாசத்தில் இவள்
சுந்தர காண்டம் நாயகி
சிந்துஜா போல சுகியை …..
(சுகியின் நாட்குறிப்பில் இருந்து 2005 )
3
3. ஜனகன் மகள் சீதை போல பேரழகி சுகி
ஒரு முறைபார்த்தால் மறுமுறை பார்க்க தூண்டும் ஜனகன் மகள் சீதை போல பேரழகி சுகி.
கடவுள் அழகை அவளுக்கு மணிமேகலையின் அமுதசுரபி போல வற்றாமல் அள்ளிக்கொடுத்திருந்தார்.
ஆனால் பசங்க யாரும் அவளை திரும்பி பார்கவே பயப்படுவார்கள்.
சின்னத்தம்பி படத்தில் நந்தினியின் அண்ணன்கள் போல அவள் குடும்ப பின்ணணி அப்படி.
சுகி வகுப்பில் படிக்கும் மாணவர்கள் முதல் உயர்தரம் படிக்கும் மாணவர்கள் வரை பலருக்கு அவள் மேல் இதயம் பட முரளி போல சொல்லாமல் காதல் இருந்தாலும் யாரும் அதை நேரடியாக வெளிப்படுத்துவது இல்லை.
உயர்தர வகுப்பை தாண்டித்தான் பள்ளியில் இருக்கும் தாகம் தீர்க்கும் வற்றாத ஜீவநதி போல நம் பள்ளிக்கிணற்றடிக்கு செல்லவேண்டும் !எனவே சுகி கிணற்றடிக்கு செல்லும் போதெல்லாம் இளவரசியின் உலா போல உயர்தரவகுப்பை ஒரு பார்வை பார்த்துவிட்டுசெல்வாள்.
உயர்தர வகுப்பில் படிக்கும் பலருக்கு அது அக்கினி வெயிலுக்கு சந்தனம் பூசியது போல சுகமாக இனித்தாலும் அவள் யாரை பார்த்துவிட்டு செல்கின்றாள் என்று ஜனகன் அரச சபைக்கு வில்லுடைக்க வந்த பட்டத்து இளவரசர்கள் ஜல்லிக்கட்டு காளையைப் போல வில்லுடைக்க முடியாமல் நின்ற இளவரசர்கள் போல குழம்பிப்போய் இருந்தார்கள்.
ஆனால் அவள் பார்வைகள் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் ரேஞ்சில் ரகுவை நோக்கித்தான் என்று யாருக்கும் தெரியாது
.இதை ரகு அறிந்துகொள்ளவே சில காலம் எடுத்தது.
காதல் ஆன்மாக்களை ஆட்டிப்படைக்கும் மந்திரச்சொல். காதலிக்கப்படுவதும் காதலிப்பதும் ஒரு இனிமையான உணர்வு என்ற கவிஞர்கள் .கூற்றினைப்போல உனக்காக வருந்த ஒருத்தி .
உன் கண்ணில் நீர் வடிந்தால் அவள் கண்ணில் உதிரம் வடியும் இப்படி ஒரு பெண் இருந்தால் உலகில் நீ தான் அதிஸ்டசாலி.ரகுவை பட்டத்து இளவரசன் ஆக்க சுகி விரும்பினால் !
ஆனால் அதை அவள் ரகுவிடம் நேரடியாக சொல்லவில்லை பெண்மைக்கே உரிய நானமாக இருக்கலாம்.இல்லை அதிகாரத்தின் அடக்கு முறையை அவள் நினைத்து இருக்கலாம்
தன் பார்வைகளாலே ரகுவை வசியத்தில் கொள்ளை கொண்டாள்.நாள் தோறும் என் தன் கண்ணில் நீ பெளர்ணமி என்பது போல இதை ரகு உணர்ந்துகொண்டாலும் என்னைப்போய் இவள் பார்ப்பாளா ??இவள் அதிகார செல்வாக்கு என்ன? சுகியின் சுந்தரவதனம் என்ன?
என்று ரகு முதலில் அவள் தன்னைத்தான் பார்க்கின்றாள் என்று நம்பவேயில்லை .இந்தக்குளத்திலும் கல் எறிவார்களா?? என்ற நினைப்பு சுகி தன்னை ஏதோ எதேர்ச்சையாக பார்க்கின்றாள் என்று நினைத்தான்.
ஆனால் அது எதேர்ச்சையான பார்வை இல்லை என்பதை அவன் விரைவிலே உணர்ந்து கொண்டான்.விழியில் காதல் மாஜ விஸ்வரூபம் காட்டியது மங்கை சுகியின் வதனத்தில் !
மின்சாரக் கனவு படத்தில் அரவிந்தசாமியை விரும்பாமல் பிரபு தேவா மீது கஜோலுக்கு காதல் வரும் போது அதை அறிந்த பிரபு தேவா பாடுவது போல ஒரு முகாரிப்பாட்டு இருக்குமே ??
என் அழகென்ன என் தொழில் என்ன? ஏன் என்னோடு உன் காதல் உருவானது.?என்று நாசர் கூட பிரபு தேவா புலம்புவது போலத்தான் ரகுவிற்கு அப்போது சிட்டிவேசன் பாடல்.
வன்னிப் பாடசாலைகள் 8.45 க்கு ஆரம்பிக்கும் ஆனால் உயர்தரமாணவர்கள் பெரும்பாலும் பிந்திவருவதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
பிந்தி வந்தால் 9.00 மணிவரை வெளியில் நிற்கவைத்து விடுவார்கள்.
பின் காலை ஒன்று கூடல் முடிந்ததும் தான் பாடசாலைக்கு உள்ளே எடுப்பார்கள் எப்படியும் 15,20 நிமிடங்கள் பாடசாலை பிரதான வாசலுக்கு வெளியே காத்து இருக்கவேண்டும்.சினிமா தியேட்டரில் டாக்குத்தர் படத்திற்கு விசில் ஊத முண்டிய டிப்பது போல .
அப்படித்தான் ரகு ஒரு நாள் பிந்திவந்த போது சுகியும் பிந்தி வந்திருந்தாள்.
வெளியே காத்திருந்த பதினைந்து இருபது நிமிடங்களில் பெரும்பாலும் சுகி சூரியனை நோக்கும் சூரியகாந்திபோல பார்த்துக்கொண்டு இருந்தால்.
இப்போது ரகுவுக்கு தெளிவாக புரிந்துவிட்டது அவள் தன்னைத்தான் பாக்கிறாள் என்று.
அதன் பின் அவள் பாடசாலைக்கு பிந்திவருவதை வழக்கமாக கொண்டுவிட்டாள்.ரகு பார்த்தான் ஏன் பச்சை மட்டை பழுக்கும் வண்ணம் வில்லங்கத்தை விலை கொடுத்துவாங்குவான் (வட்டுவால்)என்று அவன் நேரத்துக்கு பாடசாலைக்கு வரத்தொடங்கினான்.
ஆனால் அடுத்த நாள் சுகி நேரத்துக்கு பாடசாலைக்கு வரத்தொடங்கிவிட்டாள்.கோடு போட்டாள் ரோடு போடும் வித்தையில் கண் எதிரே தோன்றினால் கதாநாயகி போல
நூலகம்,சிற்றுண்டிச்சாலை,கிணற்றடி என்று எங்க ரகு போனாலும் சுகியும் அவளது தோழிகளுடன் அங்கு வந்துவிடுவாள்.கண்ணா உன்னைத் தேடுகின்றேன் காதல் குயில் பாடுகின்றேன் உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை என்ற பாடல் நதியா போல சுகி.
ரகு உயர்தரம்,அவளோ பத்தாம் வகுப்பு இருவருக்கும் இடையில் ஒரே நேரத்தில் பாடவேளைகள் ப்ரீயாக இருக்காது ஆனாலும் அவள் எப்படியோ இவன் போகும் இடம் எல்லாம் வந்துவிடுவாள்.
“இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று “ஒரு வேளை சுகிக்குத்தான் ரகு என்று தேவன் எழுதிவைத்தாரோ ?என்னவோ அவளது வகுப்பறைக்கு பக்கத்து வகுப்பில் வர்த்தகப் பிரிவை மாற்றிவிட்டது பாடசாலை நிர்வாகம்,
இப்போது சுகிக்கு இன்னும் வசதியாக போய்விட்டது.
ஆசிரியர் வராத பாடவேளைகளில் வகுப்புக்கு முன் நின்று ரகுவையே பார்த்துக்கொண்டு இருப்பாள் .!
நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா என்று ஆனால் ரகுவின் நண்பர்கள் வழமை போல இவள் யாரை பாக்கின்றாள் என்று தங்களுக்குள்ளே குழம்பிபோய் விடுவார்கள் ஆனால் ஓவ்வொறுத்தன் மனசிலும் நினைப்பார்கள் தன்னைத்தான் பாக்கிறாள் என்று.123 படம் போல
இன்றுவரை அவள் யாரை பார்த்தாள் என்று ரகுவை தவிர யாருக்கும் தெரியாது .ஏன் ரகுவின் நெருங்கிய நண்பர்களான சுயன்,அர்ஜுனுக்கு கூட தெரியாது.
அழகு,அந்தஸ்த்து என்பன காதலுக்கு தெரியாது என்பதை சினிமாவில் மட்டும் பார்த்த ரகுவிற்கு தன் கண்முன்னே அது வானவில் போல நிஜமாக நடப்பதை நம்மமுடியவில்லை.
ரகு ஒன்றும் அரவிந்தசாமி இல்லை ஆனால் அவள் நிச்சயம் பாஸ் ஹாசினிவிட பேரழகி!
பிரகாசமான அவள் முகம்,காதில் விழும் சுருட்டை முடி,கழுத்துக்கு கீழ் திமிரும் அவள் பெண்மையின் முன்னழகு மெல்லிய புன் சிரிப்பு உயிரை வாங்கும் தபூசங்கர் காதல் கவிதை போல பைத்தியம் கொள்ளும் அவள் பார்வை இதில் ரகு கவரப்பட்டாலும் அவனால் உறுதியான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை காரணம்.
நூறுபேரை பந்தாடும் ஆயிரம் பேர் வந்தாலும் ஒத்த ஆளாக சமாளிக்கும் சினிமா ஹீரோ போல இல்லை.ஆசை,பயம் என்று உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்ட சராசரி வன்னி மைந்தன் ரகு.
அவள் ரகுவை பாக்கின்றாள் என்று அவள் வீட்டுக்கு தெரியவந்தால் அப்புறம்
“உன்னோடு நானிருந்த ஓவ்வொறு மணித்துளியும் என் மரணப்படுக்கையிலும் மறவாது கண்மணியேனு “சொல்லிட்டு ரகு மரணப்படுக்கைக்கு போகவேண்டியதுதான் அவள் குடும்பப் பின்னனி அதிகாரம் அப்படி.
4
4. ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா
இலக்கியத்தில் குற்றாலக்குறவஞ்சி என்ற ஒரு நூலில் நம் மூதாதையர் வசந்தவல்லி பந்தாடும் வர்னனைக்கு இன்று மதிப்பு இல்லாமல் போனாலும் !
அந்த பந்தாட்டம் போலத்தான் இன்றைய நவீன நெட்போல் என்கின்ற வலைப்பந்தாட்டம் .
தமிழன் வீரதீர செயல்கள் எல்லாம் இருட்டடைப்பு செய்யும் இனவாத ஆட்சி தமிழருக்கு அரசியலில் மட்டும்மல்ல விளையாட்டிலும் பாராமுகம் தான் .
அதனைப்பார்த்து வீறுகொண்ட தலைவன் நம் சமூகத்திற்கு உருவாக்கிய வழியில் தமிழீழ விளையாட்டுக்கழகம் மிகவும் பலரை ஊக்கிவித்தது ஒவ்வொரு விளையாட்டிலும் ஆர்வம் மிக்கவர்களை தேர்ச்சி பெற்றவர்கள் ஆக்குவதில் பின் நின்றதில்லை இந்த சமாதான காலத்தில் அவ்வழியில் வலைப்பந்து விளையாட்டு வீராங்கனைகளில் சுகியும் ஒருத்தி!
சுகி ஒரு நெட்போல் வீராங்கனை பாடசாலை நெட்போல் அணியில் முக்கியமான வீராங்கனை,
ஆனால் ரகுவிற்கு நெட்போல் என்றால் கண்ணிலும் காட்டாது.போராளிகள் கூட சமாதனம் பேசுவதை விரும்பாத இராணுவத்தளபதி போல ஒரு முறை அப்படித்தான் பாடசாலை மைதானத்தில் அவர்கள் நெட்போல் விளையாடிக்கொண்டு இருக்கும் போது.!
ரகுவின்அவனது நண்பர்களும் விக்கெட்,பேட்டுடன் கிரிக்கெட் விளையாட மைதானத்துக்குள் நுழைய சுகியின் தோழிகள் மைதானத்தைவிட்டு வெளியேரமாட்டோம் என்ற நிலை கிருஷாந்தி தேடலில் நீதி கேட்டு இராணுவ முகாமைமுற்றுகையிட்ட யாழ் மக்கள் போல சுகியின் தோழிகள் ஆடாவடி செய்ய பிரச்சனை பெரிதாகியது.
ரகு எதுவும் பேசாமல் மைதானத்தை விட்டு சமாதனம் பேசவந்த தூதுவர் அவமதிப்பு செய்ததால் வெளியேறிச் சென்றது போல செல்ல,.
உடனே சுகி தனது தோழிகளை விட்டுக்கொடுப்போம் மக்கள் நிம்மதி தான் முக்கியம் போர் அல்ல என்று நேபாளிய மவோஸ் போராளிகள் சமாதானம் செய்தது போல ரகுவின் நண்பர்களை நோக்கி நீங்கள் கிரிக்கெட் விளையாடுங்க நாங்க போறோம் என்று சொல்லிவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினாள். போகும் போது ரகுவை நோக்கி ஒரு பார்வையை வீசிச்சென்றாள்.ஜானாதிபதி பதவி விட்டு வெளிச் செல்லும் முன்னால் ஜாதிபதி போல.
இப்படித்தான் ஒரு நாள் சுகியின் வகுப்பு மாணவன் ஒருத்தன் உயர்தரவகுப்பு மாணவிகளை பார்த்து ஏதோ சொல்ல ரகுவின் நண்பர்கள் போய் அவனை காதல் தேசம் அப்பாஸ் குறுப் போல அடிக்க ரகுவும் என்ன ஏது என்று விசாரிக்காமல் அமர்க்களம் அஜித் போல போய் அவனை அடித்துவிட்டான்.
உப அதிபர் சம்பவம் பற்றி விசாரிக்க வந்தார் வாஞ்சிநாதன் விஜய் காந்த் போல .அவங்கள் தான் சின்னப்பையன்கள் நீங்கள் உயர்தரவகுப்பு தானே அவங்களை அடிக்கலாமா என்று உயர்தரவகுப்பு மேல் முழு பழியும் விழ ரகு உட்பட சிலர் பாடசாலையில் இருந்து இடைநிறுத்தம் என்ற நிலைக்கு பிரச்சனை வர.
உயர்தரவகுப்புக்கு முழு ஆதரவு தந்தார்கள் சுகியும் அவளது வகுப்பு தோழிகளும்.
இல்லை சேர் எங்கள் வகுப்பு பொடியங்கள்தான்(பையன்கள்)உயர்தர வகுப்பு அக்காக்களை பார்த்து நக்கல் அடிச்சாங்க தெருப்பொறிக்கிகள் போல !அதுதான் அண்ணாங்கள் அடித்தவங்க என்று ரகுவிற்கும் அவனது நண்பர்களுக்கு ஆதரவாக கருத்துதெரிவிக்க உப அதிபரும் ரகுவையும் நண்பர்களையும் இடைநிறுத்தம் செய்யும் முடிவை கைவிட்டார்.
முதல் முறையாக ரகு அவளை நோக்கி தாங்ஸ் என்று சொல்லிவிட்டு சென்றான்.
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா அட ஆனந்த பைரவி ராகமா?
வெட்கங்கள் வர வைக்கிறாய் சொல்லத்தான் நினைக்கின்றேன் சொல்லாமல் தவிக்கின்றேன்… என்று சுகியின் மனம் அப்போது பாடியிருக்கலாம் !காதல் சுகமானது போல
சிற்றுண்டிச்சாலையில் ஒரு நாள் ரகுவும் ,அர்ஜுனும் பேசிக்கொண்டு இருக்கும் போது சுகியும் அவளது தோழிகளும் உள்ளே நுழைந்தனர். சட்ட சபைபோல அவர்களை கண்டதும் ரகு ஜெயலலிதாவைப் பார்த்த கருணாநிதி எழும்பி செல்ல முட்படுகையில் சுகியின் தோழி சொன்னால் அண்ணா உங்களுடன் கொஞ்சம் கதைக்கனும் .எப்ப கதைகளாம் எப்ப என்றாலும் கதைகலாம் என்று சொல்லிவிட்டு ரகு சென்றுவிட்டான்.
பாடசாலையில் விளையாட்டுப்போட்டி ஆரம்பமாகியது சுகியும் ரகுவின் இல்லம் தான்.சின்னவயதில் இருந்தே விளையாட்டில் பெரிதும் ஆர்வம் உள்ள ரகு கடந்த சில வருடங்களாக எந்த விளையாட்டு போட்டிகளிலும் பங்குபற்றுவது இல்லை.தோற்கடிக்கப்பட்ட முன்னால் தொகுதி MP போல இந்த முறை உயர்தர வகுப்பில் படிப்பதால் ஆசிரியரின் வற்புறுத்தலுக்கு அமைய ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டான் 5000 மீற்றர் ஓட்டத்தில்,1ம் இடமும்,800 மீற்றர் ஓட்டத்தில்-3ம் இடமும்,1200 மீற்றரில் இரண்டாம் இடமும் ரகுவிற்கு கிடைத்தது.ரகுவைவிட ஆசிரியரைவிட அதிகம் மகிழ்ந்தது சுகிதான்.
இல்லங்களுக்கு இடையிலான நெட்போல் போட்டியில் ரகுவின் இல்லம் வெற்றி பெற்றது. சுகி பரிசுவாங்கும் போது எல்லோறும் கைதட்டும் போது ரகுவும் கைதட்டிய போது அங்கே பரிசுவாங்கியதைவிட அவனது கைதட்டல்களால் பெரிதும் மகிழ்ந்தாள் அவனிடம் அன்பை எதிர்பார்க்கும் அந்த அபலை
கிரிக்கெட் போட்டியில் ரகுவின் இல்லம் தோல்வி அடைந்தது அந்தப்போட்டியில் ரகு பெரிதாக சோஷபிக்கவில்லை அவன் பெற்றது வெரும் 3 ஓட்டங்கள் தான். ஆனாலும் விக்கெட் கீபராக இருந்த ரகு ஒரு அபாரமான கேட்சை பாய்ந்து பிடித்த போது அவளையும் அறியாமல் சந்தோசத்தில் அந்த மங்கை துள்ளிக்குதித்தாள்.விண்வெளி சென்ற கல்பானசாவ்லா போல!
எல்லோரும் அவளது இல்லம் என்பதால் அவள் சந்தோசப்பட்டாள் என்று நினைத்தனர்.ஆனால் அவளுக்கும் அவளது தோழிகளுக்கும் ரகுவுக்கு மாத்திரமே தெரியும் அவள் மகிழ்ச்சியில் துள்ளியதுக்கு காரணம் ரகுமேல் இருந்த காதலால் தான் என்று.
போட்டி முடிந்ததும் ரகு தனது அணி தோல்வி அடைந்த கவலையில் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தான். சுகியும் அவளது தோழிகளும் அவனை நோக்கிவருவதை அவன் கவனித்தாலும் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.
என்ன ரகு அண்ணா தோத்துவிட்டோம் என்று கவலையா? விடுங்க தோற்பதும் ஜெயிப்பதும் இயல்பு கலந்து கொண்டது தான் முக்கியம் .கிரிக்கெட்டில் தோத்தால் என்ன ஒரு மாகாணம் போனா என்ன மற்ற இடங்களில் ஆள்வது போல மற்ற விளையாட்டுக்களில் வென்றுவிடலாம் எப்படியும் எங்கள் இல்லம் தான் ஜெயிக்கும் நம் கட்சி ஆட்சி தான் பாருங்க இம்முறை.
அவர்களின் குரல் கேட்டு ரகு அவர்களை நோக்கினான்.சுகி வரவில்லை அவளும் இன்னும் ஒரு தோழியும் சிறிது தூரத்தில் நின்று கொண்டு இருந்தனர்.ஏனைய இருவர் மாத்திரமே ரகுவிடம் வந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
ரகு அண்ணா ஒன்று உங்ககிட்ட சொல்லனும் தப்பா நினைக்ககூடாது!
பரவாயில்லை சொல்லுங்க என்று ரகு அவர்களை பார்த்தான்.
இல்லை சுகிக்கு உங்களை ரொம்ப புடிக்குமாம் உங்களுக்கு சுகியை பிடிக்குமானு கேக்கச்சொன்னாள் ?என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் அந்த இடத்தைவிட்டு ஓடி மறைந்தனர்.
சிறிது தூரத்தில் நின்ற சுகியும் மற்ற தோழியும் அவர்கள் பின்னால் ஓடிச்சென்றனர்.
ரகுவின் மனம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது .இவ்வளவு நாளும் பார்த்துக்கொண்டு இருந்தவள் இன்று கேட்டுவிட்டாள். இந்தக் காதல் சரிவருமா இல்லையா?
ஒருவேளை நான் ஓம் என்று சொன்னால் என்ன பிரச்சனைகள் வரும்? என்னை என்ன வேணும் என்றாலும் அவர்கள் குடும்பத்தால் செய்யமுடியும்.
அதை எதிர்க்கும் அளவுக்கு என் குடும்பப்பின்ணணி ஒன்று பெரியது இல்லை .சாதாரன நடுத்தர வர்கத்தை சேர்ந்தவன் எனவே இது எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.இதை வளரவிடக்கூடாது அவளிடம் தெளிவாக சொல்லிவிடவேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தான்.
அடுத்தநாள் பாடசாலையில் சுகி நேருக்கு நேர் அவனை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவளாக பார்வையை வேறுபக்க திருப்பி சென்றாள்.சிறிது தூரம் சென்றதும் திரும்பி அவனை பார்த்து ஒரு சிரிப்பை உதிர்ந்துவிட்டு சென்றாள்.
இவளிடம் எப்படியும் எடுத்து சொல்லி இன்றுடன் இந்தப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் எவ்வாறு அவளை சந்தித்து பேசுவது ?என்று அவன் யோசித்தவாறு வகுப்பறைக்கு சென்றுவிட்டான்.ஆனால் அவளாகவே மதிய இடைவேளையின் போது ரகுவை தேடி வந்தாள்!
(தொடரும்)//////
இல்லம்- பாடசாலையில் உள்ள மொத்தமாணவர்களையும் மூன்றாக பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொறு பெயர் வைத்து உதாரணம் பச்சை,மஞ்சல்,சிவப்பு அதில் மாணவர்களுக்கிடையில் வருடம் வருடம் விளையாட்டுப்போட்டி நடக்கும் இதைத்தான் இல்லவிளையாட்டுப்போட்டி என்று சொல்லுவார்கள்.வருடத்துக்கு ஒரு முறை ஒவ்வொறு இல்லத்திலும் மாணவர்களை மாற்றுவார்கள்.
5
5. சந்தனத்துக்கும் சாணிக்கும் வாசம் வேற
பிரேமதாச ஆட்சியில் பள்ளி மாணவர்கள் ,மாணவிகளுக்கு வந்த மதிய உணவுத்திட்டம் அடுத்து வந்த சில ஆட்சியில் தொடர்தாலும் பின் பன்னாட்டு நாணயநிதியம் வறியநாடுகளுக்கு வழங்கும் சலுகைகள் .இலங்கை ஆட்சிக்கும் துண்டுவிழத் தொடங்கியதும் !
அதன் மேற்பார்வையில் இயங்கும் இனவாத ஆட்சியில் தாயக மண்ணில் தமிழர் காணமல் போனவர்கள் போல போய்ச் சேர்ந்த பின் எஞ்சிய வயோதிபர்கள் போல கையில் பணம் இருந்தால் மட்டும் பள்ளியில் இருக்கும்.சிறுண்டிச் சாலைப்பக்கம் போகமுடியும் !
ரகு உழவன் மகன் என்றாலும் உள்ளத்தில் பணக்காரன் .அதனால் நானும் ஓர் தொழிலாளி போல தந்தைக்கு உதவுபவன் என்பதால் தந்தை கொடுக்கும் அன்புப் பரிசுப் பணம் செலவு செய்வது இந்த சிற்றுண்டிச் சாலையில் .
மதிய உணவு இடைவேளையின் போது ரகு சிற்றுண்டிசாலைக்குள் நுழைந்தான்.சுகியும் அவளது தோழிகளும் இவனுக்கு பின்னாலே உள்ளே நுழைந்தனர் பனைப்பொந்தில் கிளி பிடிப்பது போல!
அவளது தோழியான சுவாதி பேச்சை ஆரம்பித்தாள்.
என்ன ரகு அண்ணா ?நேத்து கேட்டதுக்கு ஒன்னும் பதில் சொல்லவில்லையே.
இதுதான் சமயம் என்று ரகு தன் மனசில் வைத்திருந்த எல்லாவற்றையும் கொதி எண்ணெய்யில் பொறிக்கும் கோழிக்காலைப் போல கொட்டி தீர்த்தான் .
“இங்க பாருங்க தங்கச்சி .சுகிதான் லூசுத்தனமா யோசிக்குது என்றால். நீங்களும் அதை வந்து என்கிட்ட கேட்குறீங்க “
என் நிலை என்ன என்று எனக்கு நன்றாக தெரியும்.!
“நாங்கள் வாழும் தேசத்தின் நிலை என்ன இந்தா அந்தா தீர்வுத் திட்டம் என்று ஒருபக்கம் ஆட்சியாளர் நடிக்கின்றார்கள்,
வா போருக்கு என்று இனவாத இராணுவம் யுத்த மீறல் செய்யுது இன்னொரு புறம் .
சாமாதானம் நிலைக்க யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் கண்காணிப்பாளர்கள் மத்தியஸ்தம் செய்ய வருவார்கள், எல்லாம் பார்ப்பார்கள் என்று பத்திரிகை எழுதுகின்ற நிலையில் !
எங்கள் சந்தி சிரிக்குது விஜய் ,அஜித் என்று அலங்கரித்த பத்திரிக்கையின் முகப்பில் இப்ப ஹீரோக்கள் எரிக்சொல்ஹைம்,யாக்காசி அக்காசூயி,ஜோன்ஸ் பார்க்கர்ஸ் என்று வாயில் நூழையாத பேர் எல்லாம் அடுத்த பரீட்சையில் ஏட்டுச்சுரக்காய் போல வருமோ பொதுக்கேள்வியில் என்று படிக்கும் என் நிலை எந்த வெளிநாட்டு மாணவன் அறிவான் ?
அதே போல சுகியின் நிலை என்ன என்று அவங்களை தெரிந்துகொள்ள சொல்லுங்க .
காதல் சுகமானது என்று பாட்டு பாடிவிட்டு பின் இந்த ஊர் விட்டுப் போய் உனக்கு என நான் இருப்பேன் என்று பாடும் நிலையும் வேண்டாம் ,எங்க காதலால் செந்தூரப்பாண்டி போல அண்ணன் வெட்டிப்போட்டு சிறைக்குப் போகும் நிலையும் வேண்டாம் ,என்னை சீர்குலைக்கும் நிலையும் வேண்டாம் .
காதல் மரத்தை வெட்டி விட்டுப் போகும் தனிமரம் நான்!
இது எல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
அப்போது சுகியின் கண்கள் கலங்கியதை அவன் கவனிக்காமல் இல்லை.!
நல்ல தோழிகள் நல்லதைச் சொல்லி காதல் போதையில் இருக்கும் நல்ல நண்பியை தெளிவு படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் .சேற்றில் தள்ளக்கூடாது .
“சந்தனத்துக்கும் சாணிக்கும் வாசம் வேற நல்ல தெளிவு காட்ட வேண்டியது நல்ல தோழிகள்!
சுவாதி நீ எந்த வழி சொல்லப்போறாய்??????
நிச்சயம் இந்தக் காதல் சரிவராது என்றுஅவனுக்கு நன்றாகவே தெரியும்.எனவே வெளியே வரமுடியாது என்று தெரிந்தும் பள்ளத்தில் குதிக்க ரகு தயாராக இல்லை.!
6
6. வேதனையும் வலியும் இவனுக்கு மட்டும் இல்லை
அன்பு என்ற பாசக்கயிறுக்கு கத்தியாக இருப்பது அதிகாரம் .இந்த அதிகாரம் பல வழிகளில் கத்தியாக குடும்பம் என்ற வட்டத்தில் இருந்து ஊர் ,அது கடந்து நகரம் போய் ,மாநகரம் கடந்து ,தலைநகரம் கலந்து ,தேசம் என்று காதலுக்கு வரும் கத்திகளின் அதிகாரம் என்ன என்று அறியாதவன் இல்லை ரகு !
எந்த நிலையிலும் தன் ஆசையால் தந்தை என்ற மரகத வீணையை சுரம் பிரிந்த தந்தி போல உடைப்பது சுகிமீதான காதலும் அதன் பின் விளைவான அதிகார ஆட்சியும் என்று முன்கூட்டிய முன் உணர்வினால் தான் அன்று பொங்கியது!
ஒருவேளை அவள் சாதாரண ஒரு ஏழைவீட்டு இராஜகுமாரி போல இருந்திருந்தால் ரகுவும் அவள் காதலை ஏற்றுக்கொண்டு இருக்கலாம் !
ஆனால் சும்மா அவளை காதலிக்கின்றேன் என்று சொல்லிவிட்டு பின் குடும்ப பிரச்சனை என்று அவள் விட்டுவிட்டு போனாலோ ,இல்லை அவளது குடும்பம் இவனை தண்டித்தாலோ ,வேதனையும் வலியும் இவனுக்கு மட்டும் இல்லை அந்த அபலைப்பெண்ணுக்கும் சுஜாதாவின் அனித்தாவின் காதல்கள் நூல் போலத்தான் !எனவே அவள் தன்னை பயந்த கோழை என்று நினைதாலும் பரவாயில்லை காதல் தேன் என்ற வலையில் போய் சிலந்திக்கூட்டில் சிக்க அவன் தயார் இல்லை.
இந்த காதல் செய்யும் மாயம்தான் என்ன ஏன் ஒரு சாமானியனுக்கும் அதிகாரவர்கத்தினருக்கும் முடிச்சு போடுகின்றது ஒருவேளை பிரச்சனைகளை பார்க்காத ,பிரிவுகளை கண்டு மனம் உருகி ,மனம் புலம்பி உடைந்த நிலாக்கள் போல காதல் சுவாரஸ்யமாக இருக்காது என்பதா??
கடவுளின் படைப்பில் தான் எத்தனை முடிச்சுக்களை போடுகின்றான் சில முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுகின்றன. சில வாழ்நாள் முழுவதும் அவிழ்க்கப்படாமலே போய்விடுகின்றன்.
அடுத்துவரும் நாட்களில் ரகுவிற்கு சுகியை பார்க்க பாவமாக இருந்தது .எப்போதும் சந்தோசமாக பூஞ்சோலைப் பூவாக திரியும் அவள் முகத்தில் ஆங்காடியில் விலைபோகாத இந்தப்பூ விற்பனைக்கு அல்ல !
விலை அதிகம் என்பது போல சந்தோசம் இல்லை சோகம் குடியேறியிருந்தது.அந்த சோகத்துக்கு தான் தானே காரணம் என்ற குற்ற உணர்வு வேறு அவனுக்கு ,ஆனாலும் ஆரம்பத்திலே காதல் நதிக்கு அணைகட்டியதில் சிறந்தது என்று நினைத்துக்கொண்டான்.
முதல் யாசிப்பையும் முதல் ஸ்பரிஸத்தையும் என்றும் மறக்கமுடியாது என்று சொல்வார்கள். அதே போல சுகிக்கு அவனை மறக்கமுடியவில்லை.
இதயத்தில் காதல் தீபம் ஏற்றியவனே
என் உணர்வுகளை பறித்தவனே
ஏன் என்னை சிதைக்கின்றாய்
அனுதினம் உன் முகம் காண தவிக்கும் ஜீவனை
எழு ஸ்வரம் போல
ஏன் தீண்ட மறுக்கின்றாய்?
என் தவிப்புக்களை அறிந்தும் ஏன்
அறியாத துவாரகைக் கண்ணன் போல நடிக்கின்றாய்?
நீ இல்லை என்றால் என்
இரவுக்கு ஏது பகல்!
சுவாரசியமானவனே சுகியின் நிலையை
புரிந்துகொள்ளடா!!!
(ரகு சுகியின் காதலை மறுத்த போது சுகி எழுதிய கவிதை இதை தோழி சுவாதி என்பதால் ரகுவிடம் காட்டிய போது ரகுவினால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.)
இதயம் பட முரளி போல இருந்தான்!
அதன் பின் அன்று ஒரு நாள் நல்ல மழைக்காலம் சென்னையில் ஒரு மழைக்காலம் போல வன்னியில்!!
பாடசாலை விடுமுறை நாள் என்பதால் ரகு தனது தந்தைக்கு உதவியாக அவர்களது தாய் பூமியான சந்ததியை வாழவைத்துக்கொண்டு இருக்கும் வயலுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தான்.நேரம் பின்னேரம் ஜந்து இல்லை ஜந்து அரை இருக்கும் மெலிதான கார்கால கும்மிருட்டு வரும்போது ரகு இந்தியாவில் புகழ்மிக்க மஹேந்திரா தயாரிப்பு உழவு இயந்திரத்தில்தங்கள் வயலில் வேலை செய்யும் சனத்தை ஏற்றிக்கொண்டு சின்னக் கவுண்டர் போல வந்துகொண்டு இருந்தான் !இந்தப் பாதையில் தான் சுகியின் வீடும் இருக்கின்றது!
7
7. சிறையில் பூத்த சின்னமலர்
இனவாத ஆட்சியினர் சமாதான நாடகத்தில் நடித்துக்கொண்டே முக்கிய போராளிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்துக்கின்ற செயல் பாட்டில் மும்மரமாக ஆழ ஊடுருவும் படையினர் மூலம் ஆங்கங்கே பல இடங்களில் கிளைமோர் தாக்குதல் நடத்துகின்ற நிலையை கண்டிக்க வேண்டியவர்கள் .பல கதைகள் பேசிக்கொண்டு இருந்த நிலையை பார்த்துக்கொண்டு இருக்கும் நம் மக்கள் !உழவு இயந்திரத்தில் வரும் போது மிக அவதானமாக பாதையோரம் விழியினை கூர்மையாக்கி தொலைநோக்குவது இயல்பான ஒன்று.
அப்படித்தான் ரகுவும் உழவு இயந்திரத்தினைச் செலுத்திய வண்ணம் வீதியை நோட்டம் இட்ட போது! பூலான் தேவியின் வரலாற்றில் வரும் சாம்பல் பள்ளத்தாக்கு கதை படித்ததில் பிடித்தது போல
ஒரு சாம்பல் நிற டீ சேர்ட்டும் கறுப்பு பாவாடையையும் அணிந்த ஒரு வன்னிமயில் குடையுடன் சுகிவீட்டு கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றால்!
உள்ளே செல்லும் போது வீதியை ஒரு முறை முன் எச்சரிக்கையில் அவளும் ஒரு சிறையில் பூத்த சின்னமலர் போல நோக்கினாள்.
ரகுவும் அப்போது கிட்ட வந்துவிட்டான். அது சுகிதான்! ரகுவை ஏறிட்டு பார்த்தாள்!
ரகு அவளை கவனித்தாலும் கவனிக்காதது போல உழவு இயந்திரத்தை ஓட்டிக்கொண்டு சென்றான்.
ஆனால் சிறிது தூரம் போய் திரும்பி பார்த்தான் போகும் பாதை சரிதானா? என்பது போல சுகி அப்போது பார்த்துக்கொண்டு இருப்பது தெரிந்தது.விழியில் வலி தந்தவனே என்பது போல
அடுத்த நாள் பாடசாலையில்
“நில்லுங்க ரகு உங்களிடம் கதைக்கணும் “இம்முறை சுகியின் தோழிகள் யாரையும் காணவில்லை. அவள்தான் அவன் எதிரே நின்றுகொண்டு இருந்தாள்.ஒற்றை ரோஜா போல
ஏன் ரகு என்னை பிடிக்கலை என்று சொல்லுறீங்க ?பார்த்தால் கூட பார்காதது கண்ணெதிரே தோன்றினால் பிரசாந்த் போல போறீங்க உங்களை எனக்கு நல்லா பிடிக்கும். பைத்தியம் ஆனேன் ரகு !
நல்லா யோசிச்சு ஒரு பதிலை சொல்லுங்க என்று அழுதுகொண்டே போய்விட்டாள்.!
விழியில் வந்தவள் வழியில் அழுகின்றாள்
வில்லங்கம் காதல் விடலைப் பருவத்தில்
விவசாயி மகன் இவன் அவள்
வீட்டில்
விசயம் தெரிந்தால் வீட்டோ போல
விரைந்து வரும் வெளிக்கிடு
விடுதலைக்கு !
ரகு தன் மனசாட்சியை தானே கேட்டுக்கொண்டான் உண்மையிலே இவள் என்னை விரும்புகின்றாள் தான் போல. !
அப்படி என்னில் என்ன இருக்கு பெண்கள் பார்த்ததும் மயங்கிவிழும் அளவுக்கு நான் பிரசாந்த் போல மன்மதனும் இல்லை, வசதிகள் படைத்த அம்பானியின் வாரிசு இளைஞனும் இல்லை ,படிப்பில் ஸ்டூடன் நம்பர் வன் போலவும் இல்லை.!
ஆனாலும் ஒரு பெண் என்னைக் காதலிக்கின்றாள் அதுவும் மிகவும் அழகான செவ்வரளிப்பூப்போல ஒரு பெண்.
இதுதான் உண்மையான அன்பு என்பதா?ஒருவேளை நான் இதை மிஸ்பண்ணுகின்றேனோ?
ரகுவிற்கு அவளது காதலை ஏற்க தடையாக இருக்கும் ஒரே ஒரு காரணி அவள் குடும்பப்பின்னனி மட்டுமே அரசியலே.. அதன் சூழல்!
ரகுவிற்கு பிடித்தமான ஒருவிடயம் புரூஸ்லி போல கராத்தே அதை முறைப்படி கற்றுவருபவன்.வாரத்தில் இரண்டு நாட்கள் பாடசாலை பொதுவிளையாட்டு மைதானத்தில் நடக்கும் கராத்தே வகுப்பில் தவராமல் கலந்துகொள்வான்.அதில் கலந்து கொள்ளாவிட்டால் மற்றவர்கள் சிரிப்பார்கள் பயந்தவன் உயிர் வாழமாட்டான் என்று !!என்றாலும் இந்த வன்னி பூமியில் கராத்தே உயிர் காக்கும் சில நேரங்களில் இனவாதிகளின் வக்கிரகத்தில் இருந்து என்பதை ஈழம் பதிவு செய்து இருப்பதையும் மறந்தவன் இல்லை ரகு!!!
8
8. மண்ணில் மரணங்கள் மலிந்த பூமி
இனவாத ஆட்சியில் இருப்பைத் தக்கவைக்க எல்லோரும் தற்காப்பு பயிற்ச்சி பெறுவது தவிர்க்க முடியாத நிலை என்பதை பள்ளிக்காலத்திலேயே புரிந்துகொண்டவர்களில் ரகுவும் ஒருவன் அதனால் தான் ஆவலுடன் கராத்தே பயின்றான் அன்றும் அப்படித்தான்!வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுவிளையாட்டு மைதானத்தில் நடக்கும் கராத்தே வகுப்பில் தவராமல் கலந்துகொள்வான்.!
தென் இலங்கை ஆட்சியாளர்கள் சீமெந்தைக்கூட தடை செய்த பொருட்கள் என்ற பட்டியலில் இட்டதால் பள்ளியில் உடுப்பு மாற்றுவதற்கு ஒரு அறையிருக்கு உள்ளே இரண்டாக பிரித்திருந்தாலும் வாசல் ஒன்றுதான்.
உள்ளே ரகு உடுப்பு மாற்றிக்கொண்டு வாசலுக்கு வரும் போது அடைப்புக்கு மற்ற பக்கத்தில் பெண்மையின் அழகினை தரிசிக்கும் சிற்பம் போல சுகி தனது சட்டையை கழற்றி விட்டு டீ சேர்ட்டை போட்டுக்கொண்டு இருந்தாள். விழிக்கும் இமைப்பொழுதில் ரகு பார்த்துவிட்டான் அவன் பார்த்ததை அவளும் பார்த்துவிட்டாள். என்ன சுகி சொல்லிட்டு உள்ள வந்திருக்கலாம் இல்லை நான் உள்ளே நிற்கின்றேன்.என்று ஒரு வார்த்தை!சொல்லி இருக்கலாமே?
சொரி ரகு நான்அக்கம்பக்கம் கவனிக்கவில்லை என்ன காராத்தே எல்லாம் பழகுறீங்க போல ஆர்ஜின் மாதிரி என்று தனது டீசேர்ட்டை போட்டாள்.ரகு எதுவும் பேசாமல் வெளியே வந்துவிட்டான்
அவளும் அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. இங்கே அவளிடம் காமம் இல்லை தூய்மையான காதல் மட்டுமே இருந்தது.அவள் மனதில் காமம் இருந்திருந்தாள் இங்கே தவறு நடக்க சந்தர்ப்பம் இருந்தது.அவள் நினைத்திருந்தால். தான் உடுப்புமாற்றும் போது ரகு உள்ளே வந்தான் என்று சொல்லி அவனை அவமானப்படுத்தியிருக்க முடியும். இதுதான் சமயம் என்று பழிவாங்க முடியும்.அவள் அப்படி செய்யவில்லை.
சுகி நேராக நெட்போல் ப்ராக்டிஸ் நடக்கும் இடத்துக்கு சென்று நெட்போல் ப்ராக்டிஸில் ஈடுபட்டாள் விளையாட்டில் ஒன்ற முடியாத நிலையில் விழியினை காரத்தே வகுப்பை நோக்கினாள் தோகை மயில் போல அது முடிய ரகு தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட தயார் ஆன போது ஒரு நிமிசம் ரகு என்று மறித்தாள்!
என்ன என்பது போல அவளை அளந்தது அளபெடை விழிகள்! அவன் பாவனை செய்ய
என்ன ரகு என்னை புரிந்துகொள்ள மாட்டிங்களா ?!சரியான கஸ்டமா இருக்கு ?படிக்கமுடியலை ஒரே உங்க ஞாபகமாகதான் இருக்கு !
சிந்தனையை சிறைப்படுத்த முடியவில்லை சில் என்று உங்க நினைவுகள் சீண்டுது உங்க மீது ஏன் என் விழிகள் மனது மஞ்சம் கொள்ளுகின்றது. என்று தவம் போல தணிமையில் இருந்து யோசித்தாலும் விடையில்லை நான் என்ன செய்யுறது ரகு நீங்களே சொல்லுங்க?
உங்களுக்கு எப்படி சொல்லுறதுன்னு எனக்கு தெரியலை சுகி ?என் நிலமையை புரியாது உங்களுக்கு. சிட்டிசன் அஜித் போல என் பின்னாடி ஒரு கிராமம் இல்லை இருப்பது ஒரு கோவில் அதில் என் தந்தை தெய்வத்திருமகன் !
நானோ உத்தம புத்திரன் .உங்களை நான் லவ் பண்ணிணால் என்ன என்ன பிரச்சனை வரும் என்று ஒரு நிமிசம் யோசிச்சு பாருங்க?
என்னைக்காதலிக்கும் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது .எனக்கு எவ்வளவு பிரச்சனை வரும் .
புரிந்துகொள்ளுங்க.!
உங்க அப்பா நினைச்சால் விவசாயி மகனை வீதியில் விட்டு நாடோடி போல என்னை என்னவேணும் என்றாலும் செய்யலாம் .
நிச்சயம் இந்தக்காதல் பூவே உனக்காகப் போல சரிவராது .ப்ளீஸ் இதுக்கு மேல என்னால் தெளிவாக புரியவைக்கமுடியாது.இத்தோட விட்டுவிடுங்கள் கவிதை பாடும் அலைகள் அல்ல இந்தக்காதல்!
ஏன் ரகு நாங்கெல்லாம் விரும்ப கூடாதா ?என் அப்பா பெரிய ஆளா இருக்கலாம் அதுக்காக நான் என்ன பண்ணமுடியும்.!
இப்பவா நாம கலியாணம் கட்ட போறமா ?உங்கள் படிப்பு முடிய,என் படிப்பு முடிய அதுக்குள்ள எவ்வளவு மாற்றம் வருதோ?
இந்த மண்ணில் மரணங்கள் மலிந்த பூமியில் மனங்களின் ஆசைகளுக்கு இனவாதம் சங்காரம் செய்யுமோ யார் அறிவார்??
சிலவேளை எங்க வீட்டில் ஓக்கே சொல்லாம் இல்லையா ?
எனவே எங்க அப்பா நம் காதலை ஏற்றுக்கொள்ளவும் கூடும்!
நல்லாயோசிச்சு சொல்லுங்கண்ணா. என்று சொல்லிவிட்டு அவள் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றாள்!
9
9. யுத்த பூமியில் காதல் படுத்தும்பாடு
சங்க இலக்கியங்கள் எல்லாம் காதலில் உருகும் தலைவிக்கு. அன்னம் தூது போனதும், புறா தூதுபோனதும்,பணிப்பெண் தோழிகள் ,தூதுபோனதும் என்று ஏட்டுச்சுரக்காய் போல எல்லாம் வெற்றுக்கோஸம் தான் இந்தியா ஒளிர்கின்றது என்பது போல ! என்ன போய் என்ன ?இந்த காதல் தூது எல்லாம் பேஜார் போல ஒரு புறம் என்றால் !
மறுபுறம் என்ன சொல்லி இருப்பார்கள்
தலைவனுக்கு ?
கொடியிடையாள் அறுகம்புல் போல வாடிப்போனால் என்றா ?தலைவன் முகம் காணாது நெஞ்சோடு புலம்புகின்றாள் .
இப்ப வரும் என்று இருந்த யாழ்தேவி தடம்புரண்டு மதவாச்சியில் வீழ்ந்துவிட்டது வவுனியா வராது என்றா?
இந்த இலக்கியம் எல்லாம் அகநானுறு என்று காதல் பாடினாலும் ;இந்த யுத்த பூமியில் காதல் படுத்தும்பாடு தோழிகளுக்கு எப்போதும் தொல்லை தான் போலும்!
எல்லைதாண்டி வரும் பயங்கரவாதம் போல எப்ப குண்டு வெடிக்கும் என்று தெரியாது போல நினைத்து இருந்த ரகுவிற்கு !
சுகி ரகுவிடம் கொஞ்சம் கதைக்கவேண்டும் என்று சொன்னதாக அவளது தோழி சுவாதி வந்து சொன்னாள்.
13 வது திருத்தச்சட்டத்தை விட்டு வேற பேசமாட்டோம் என்று அடம் பிடிக்கும் இனவாத ஆட்சியாளர் போல அவள் என்ன கதைப்பாள் வழமையான அதே நீ பாதி நான் பாதி என் இதயத்திருடனே உன்னை நினைத்து என்று பழைய பல்லவிதான்.
பிடிக்கும் பிடிக்கும் என்று எனவே ரகு அதை பெரிது படுத்தவில்லை.
ஆனால் நிலமை அவசரகாலச்சட்டம் போல கொஞ்சம் சீரியஸ் என்று அவளது வகுப்பை கடந்து போகும் போது ரகு உணர்ந்தான். சுகி இங்கேயும் ஒரு கங்கை போல அழுதுகொண்டு இருப்பதை கண்டான்.ஒரு நாள் கழிந்தது புதுமைப்பித்தனா ?கனகாம்பரம் கு.பா ராஜகோபாலான சிறந்த கதை ஆளுமை மிக்கவர்கள் ?என்று கடந்த காலத்திலேயே கல்வி புகட்டும் தமிழ் ஆசிரியர் !
இன்றைய தேவையான நிகழ்கால நிலை சொல்லும் மரணங்கள் மலிந்த பூமி நாவல் பற்றியோ, அந்த அவர்களும் இந்த இவர்களும் நாவல் பற்றியோ பாடம் எடுக்காத தமிழ் ஆசிரியர் வராததால் .ஏனைய மாணவர்கள் நூலகத்துக்கு போய்விட்டனர் .
ஹாசினியின் அடுத்த புதுப்படம் என்ன ?சனத் ஜெயசூரிய செஞ்சரி அடித்தாரா ?என்று அறியும் வாரப்பத்திரிக்கை வராத நூலகத்திற்கு !
அங்கு இருபது எல்லாம் இனவாத வெறித்தனத்தின் வேட்டையை காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும், அழகாய் அச்சிட்டு அடுத்த தலைமுறைக்கும் நம் ஈழஅவலத்தைச் சொல்லும் நம் பொக்கிசம் !
.சுகியும் தோழி. சுவாதியும் மாத்திரமே வகுப்பில் இருந்தனர்.
ரகு அவர்கள் வகுப்பை கடந்து செல்வதை கண்டதும் .சுகியின் தோழி சுவாதி கூப்பிட்டாள். “ரகு அண்ணா ரகு அண்ணா கொஞ்சம் இங்க வாங்க.”
அவள் கூப்பிடுவது ரகுவின் காதில் விழுந்தாலும் .
இனவாத ,மதவாத அரசியல் வேண்டாம் என்று சொன்னாலும் புரியாத கொள்கை வகுப்பாளர்கள் போலஅவன் அதை கவனிக்காதது போல சென்றான்.
ஓடிவந்து இடைமறித்தாள் சுகியின் தோழி சுவாதி
“.என்ன ரகு அண்ணா சுகி அழுதுகிட்டு இருக்கா என்ன என்று கேட்கமாட்டிங்களா? அவள் உங்களுடன் கதைக்கனுமாம்.”
!தூதுவந்தவள் மூச்சு வாங்கினால் ரவியின் முகம் பார்த்து .
என்ன சொல்வான் இந்த காளை என் தோழிக்கு பதிலாக என்பது போல.
சரி போய் என்ன என்று கேட்போம் பெரிய கவுண்டர் பொண்ணு விழியில் நுழைந்து இதய வலி என்கின்றது ஏழைஜாதியிடம் என்று நினைத்துக்கொண்டு சுகியை நோக்கி போனான்.
மேசையில் முகம் புதைத்து தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள் சுகி ரகுவை கண்டதும் பெற்றவர்கள் பிரிந்தால் கூடப்பிறந்த உறவு ஓடிவந்தால் கட்டிக்கொண்டு உணர்ச்சி வெள்ளத்தில் அழுது புலம்பும் பெண்களைப் போலஇன்னும் அவளது அழுகை அதிகரித்தது.
என்ன சுகி ஏன் அழுறீங்க? என்ன பிரச்சனை ரகு கேட்கவும்
அது ஏன் உங்களுக்கு நீங்க உங்கள் வேலையை பார்த்திட்டு போங்க நான் அழுதா என்ன? அழாட்டி உங்களுக்கு என்ன ரகு ?என்று சற்று கோபமாக சொன்னாள்.தேடி வந்தவனிடம் ஊடல் கொண்டவள் துரத்துவது சிலப்பதிகாரம் முதல் சுகி வரை பெண் புத்தி ஒன்றுதான் போல எண்ணிக்கொண்டான்!
சரி அப்ப நான் போறேன் என்று ரகு வெளிக்கிட
இல்லை நில்லுங்க ரகு சொல்லுறன். எங்க வகுப்பில் படிக்கும் அரவிந்தன் என்னை விரும்புவதாக சொல்கின்றான் இரண்டு நாளைக்குள் நல்ல முடிவா சொல்லட்டாம் .நான் என்ன செய்ய ரகு ஓரே தொல்லையாக இருக்கு அவனால்!
(அரவிந்தன் பின்னாலில் மண்ணுக்காக மரணித்தவர்களில் கலந்துவிட்டான்)
ரகுவிற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக்கொண்டான் .இங்க பாருங்க சுகி இதுக்கு ஏன் அழுறீங்க. இப்ப புரியுதா லவ்டுடே போல ஒருத்தன் விரும்புவதாக சொல்வது உங்களுக்கு தொல்லையாக இருக்கு இல்ல. அதுமாதிரித்தானே நீங்களும் என்னை தொல்லை பண்ணுறீங்க.ஒரு தடவை சொல்வாயா என்னை உனக்குப் பிடிக்கும் என்று
ரகு அப்படி சொல்வான் என்று சுகி சற்றும் எதிர்பார்கவில்லை சர்வதேச தயவில் வந்த சமாதனம் கூட இனவாதிகளினால் கிழிக்கப்பட்ட தமிழர் நிலை போல அவள் அழுகை மேலும் அதிகரித்தது. ஏன் ரகு நான் உங்களை தொல்லை பண்றேனா ?பரவாயில்லை இனி நான் உங்களை தொல்லை பண்ணமாட்டன். என்னை மன்னிச்சிருங்க.என்று ரகுவின் முகத்தை பார்க்க சக்தி இல்லாதவளாக வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.
எதுவும் பேசாமல் ரகு அந்த இடத்தைவிட்டு வந்துவிட்டான்
அடுத்த இரண்டு நாட்களுக்கு சுகி ரகுவை கண்டாலும் காணாதது போல சென்றுவிடுவாள்.இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்ன தந்தை செல்வா போல அவளை நினைக்க ரகுவிற்கு கஸ்டமாகத்தான் இருந்தது.
ஆனால் மணமேடையில் அவளை இருத்தி அழகு பார்க அவன் தயாராக இல்லை.
இரண்டு மூன்று நாட்கள் சுகி பாடசாலைக்கும் வரவில்லை. ரகுவுக்கு ஏன் என்று அவளது தோழிகளிடம் கேட்கனும் போலவும் ,இருந்தது கேட்டால் ஏதும் நினைபார்களோ என்ற பயம் வேறு . ஆனால் அவன் மனதில் ஏதோ ஒரு மூலையில் சுகி இருந்ததால் அவனால் கேட்காமல் இருக்கமுடியவில்லை.
இரண்டு மூன்று நாட்களாக ஒரே காச்சலாம் வைத்தியசாலை இருக்கின்றாள் என்று விபரம் சொன்னால் சுவாதி!
உள்ளத்தின் தேடல் தான் உஸ்ணம் என்பதா?
உனக்கும் என் மீது காதல் என்பதா?
உண்மை புரியுமா சகியே?
உழவன் மகன் நானடி.
உழுது வாழும் பூமியில்
உள்நாட்டு யுத்தம்
உழுத வயல் எல்லாம்
உருக்குலைந்து போனதடி.
ஊருக்குள் புத்தன் வடிவம்
உருப்படாத இனவாதம்
உனக்கு ஏன் இந்த பிடிவாதம்!
என் மீது ஏன் பிடிமானம்???
(ரகுவின் நாட்குறிப்பில் இருந்து )
நகரில் இருந்த பிரபலமான தனியார் வைத்தியசாலை அது.காய்ச்சல் என்று அனுமதித்து இருக்கும் சுகியை போய் பார்கவேண்டும் என்று எண்ணத்தின் வண்ணம் வானவில் கோலம் காட்டியது ரகுவிற்கு . ஆனால் தனியாக தான் சென்று பார்பது நல்லது இல்லை அதனால் பல பிரச்சனைகள் வரும் ஒரு பெண் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது உறவைத் தவிர தனிய ஒருவன் போவது கண்டநாள் முதல் பிரசன்னா போல வம்பில் முடியும் செயல் என்பதை அறிந்தவன் ரகு .
எனவே சுகியின் தோழிகளுடன் சேர்ந்து அவர்கள் கூட படிக்கும் பையனைப்போல ரகு வைத்தியசாலைக்கு போனான்.
ரகுவின் நல்ல நேரம் அங்கே சுகியின் குடும்பத்தினர் யாரும் இல்லை.இருந்தால் புலன் விசாரனையின் பின் நாளைய தீர்ப்புக்கள் தீ யாகும் இந்தப் பச்சைக்கிளிக்கு ஒரு திருட்டுப்பயலோ மாப்பிள்ளை ?கட்டப்பஞ்சாயத்து கூடினால் காணாமல் போகும் கனவுகள் மட்டும்மல்ல என் குடும்பம் என்ற கோபுரவாசலும் தான் !
10
10.அதிகாரத்தினால் ஆசைக்காதலை அடைய முடியாது
பிடித்தவர்களைக்கண்டால் மனம் பித்துப்பிடித்து பேதலிக்கும் .ஆர்ப்பரிக்கும் இன்பத்தின் வெளிப்பாடு ஆனந்தக்கண்ணீர் விடும்.
அதுவும் பெண்கள் அதிகம் அழுவதில் இன்பம் காணுபவர்கள் நீண்டநாள் காணாத மகன் நேரில் வந்தால் அழுது ஆனந்தப்படும் அன்புத்தாய் உள்ளம் .அதுபோல ரகுவை கண்டது சுகி அழுதாள்.
அன்பைத்தேடும் இதயத்தால் அழுது புலம்பத்தான் முடியும்.
அதிகாரத்தினால் ஆசைக்காதலை அடைய முடியாது.அதுபோலவே அந்த பெண்ணால் வேறு என்ன செய்யமுடியும்.?
எல்லாம் இந்த காதல் செய்யும் மாயம் விடாத தூவானம் போல விழியில் வலி!
ஏன் அழுகிறீங்க சுகி.? என்ன ஆச்சு ?
பார்ரா நாங்க காய்ச்சல் என்று சொன்னம் தானே ! என்ன வானொலி மீள் ஒலிப்பரப்புச் சேவை போல அவள் வேற சொல்லணுமாக்கும் என்று தோழிகள் கிண்டல் செய்தனர்.
இந்த பூமியில் தீராத இன்னொரு யுத்தம் இந்த மலேரியாக் காய்ச்சல்.
இங்கு வந்த மூத்த குடியினரின் பலரின் மூடிய கதைகள் கேட்டால் மலேரியாவில் மாண்டு போனவர்கள் வரலாறு சொல்லும் .
இன்னும் நியாயமான முறையில் பதிவு செய்யவில்லை ஈழத்து இலக்கியம் என்பது வேதனையே!!!
இனவாதிகளின் இடம்பிடிக்கும் செயலில் விரடிவிட்டப்படவர்கள் ஒரு புறம் என்றால் ,
இருக்கும் இடம் விவசாயத்திற்கு உகந்த சூழ்நிலை இல்லாத இடம் என்பதால் !விவசாயம் செய்ய புறப்பட்டு வன்னியில் குடியேற வந்தவர்கள் வரலாற்றை படம் பிடிக்கும் “வெளிக்கிடு விசுவமடுவுக்கு “நாடகம் விளம்பி நிற்கும்.
இன்றும் இந்த நாடகம் வாழம் கலையாக வானொலி நிலையங்களில்!
அதிலும் வந்து போகும் வசனம் “பிழைக்க வந்தால் பிணி போல மலேரியாக் காய்ச்சல் பரியாரியிடம் போக பையில் பணம் இல்லை வெளியில் இருக்கும் வேப்ப மரத்தில் வேப்பம் பட்டை வெட்டிஅவித்துக்குடித்தும் இன்னும் சுகம் வரவில்லை. இந்தக்கதை எல்லாம் ஊரில் இருக்கும் கொப்பருக்கு எழுதிவிடு சீமாட்டி என்று முன்னாள் தமிழ்வாத்தி படிப்பித்தார்.
முதல் நிலையில் படித்த வகுப்பினர்களுக்கு வெளிக்கிடு விசுவமடு நாடகத்தின் சிறப்பு பற்றி .இது எல்லாம் அடுத்த வகுப்பில் இருந்து கேட்டு ரசித்தவன் ரகு .
அதே காய்ச்சல் தான் இவழுக்குமோ என்று கேட்க நினைத்தாலும் ! இரண்டு மூன்று நாளா ஒரே காச்சல் ரகு உங்களை பத்தி நினைச்சு நினைச்சுதான் எனக்கு காச்சல் .
ஏன் ரகு நான் தொல்லை பண்ணுவதாக சொன்னீங்க? சரியான கவலையா இருந்திச்சு ரகு !. என்று சுகி சொல்லவும் ரகுவின் உதடுகள் பேச வார்த்தை இன்றி சிலை செதுக்கும் சிற்பியைப்போல சிறிது நேரம் அவளை பார்த்துக்கொண்டு நின்றான்.
பிறகு போயிட்டு வாரன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். அவன் வாங்கிவந்த நெஸ்டமோல்ட் டின் மட்டும் சுகியுடன் இருந்தது.அவளின் கட்டில் அருகில் இருந்தது அவன் மனம் போல!
இரண்டு நாள் கழித்து மறுபடியும் பாடசாலைக்கு வந்தாள் சுகி.
ஈரமான ரோஜாவே மோகினி போல இம்முறை ரகுவாக போய் அவளிடம் கதைத்தான்.அது அவளுக்குநீண்டகாலத்தின் பின் சிறிமா மகள் சந்திரிக்கா மூலம் வெற்றி பெற்ற சுதந்திரக்கட்சியின் ஆட்சி போல அவள் முகத்தில் அந்த பழைய பிரகாசத்தை கண்டான்!
அதன் பிறகு சுகியை கண்டால் ஜெயலலிதாவை தேடிச்செல்லும் தேசிய திராவிடமுன்னேற்றக்கழக சட்டமன்ற உறுப்பினர் போல ரகுவாக போய் கதைப்பான்.
அவளும் சந்தோசமாக அவனிடம் உரிமையுடன் கதைப்பாள்,சண்டை போடுவாள் அவள் நினைப்பில் அவன் தன் கலாபக் காதலன். அவன் நினைப்பில் அவள் மேல்” மோகமுள் “நாவல் நாயகி போல ஒரு பரிதாபம்.ஆனால் அது காதலாக மாறும் என்று சுகி காத்திருந்தாள்!
“என்னிடம் வருவாய் என் யாசகனே ஏங்கித்தவிக்கின்றேன் ஏகாந்தப்பொழுதில்
என்னை அறிவாயா ?
எண்ணும் எழுதும் கவிதைகளில் என்றும் ஏற்றும்!
என் முதல் பாடகனே !
என் தோழில் சாய்ந்து கொள் என்னையும் சாய்த்துக்கொள்! உன் பொன்வசந்தம் நான் என்று! எப்போதும் என் எண்ணம் ஏங்கும் .என்று நாம் சேர்வோம் !
எழுதிச் செல்லும் விதியின் வழியில்!
11
11.இருப்பே கேள்வியாகும் போது வேற மார்க்கம்
இணைத்தலைமை நாடுகளின் இரகசிய கழுத்தறுப்பும் ,இனவாத கொள்கை வகுப்பாளர்களின் இறையாண்மை என்ற இத்துப்போன இனவெறியின் தூண்டுதலும் ,அந்த இனவாத கோஷம் கொண்ட கொக்கரிப்பின் கூட்டத்தலைவன் கொண்டுவந்த நாம் வெல்வோம்!(அப்பி திணுவெமு) என்ற அரசியல் கோஷம்.
இலங்கையில் தனித்துவ ஈழத்தின் இன்னொரு இனத்தின் இருப்பை மாவிலாறு என்ற மாயை ஊடாக யுத்த ஆற்றினை மடை திறந்த போது!
நாட்டில் யுத்தம் தீவிரமாகியது .
எல்லோரும் ஈழப்போராட்டாத்தில் போராடவேண்டும் .அப்போதுதான் ஒரு இலட்சியத்தீர்வு கிடைக்கும்.
எனவே போராட வலுவுள்ள அனைவரும் போராடவேண்டும் என்று வன்னியில் விடுதலைப்புலிகள் கொண்டு வந்த இறுக்கமான கட்டுப்பாட்டை தொடர்ந்து ,வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் போராட்டத்தில் இணையவேண்டும் என்ற நிலை.
இருப்பே கேள்வியாகும் போது வேற மார்க்கம்??
அப்படி இணைய மறுக்கின்றவர்களை கட்டாயமாக போராட்டத்தில் இணைக்கும் வேலையும் நடைபெற்றது.
வடகிழக்கு மாகாண முதல்வர் என்ற பொம்மை ஆட்சியை ஈழத்தில் வரதராஜாப்பெருமாள் மூலம் முன்னர் இந்தியன் கொள்கை வகுப்புக்கூட்டம் உலகநாடுகளுக்கு சொல்லிக்கொண்டே ஈழத்தில் உருவாக்கிய குழுவான ENDF போல இங்கும் பலர் தானாக முன்வந்து இணைந்தாலும் ,சிலர் புலிகளின் கண்களில் தண்ணிகாட்டிவிட்டு காடு வாய்க்கால் என்று ஒழிந்து திரிந்தனர்.
எங்கும் இது பற்றிதான் ஒரே பேச்சு . இனவாத தென் இலங்கை ஊடகமும் ,அதன் அரச இயந்திரமும் இதை வலுக்கட்டயமாக பிள்ளை பிடிகாரர்கள் என்று உலகநாட்டுக்கு பிரச்சாரம் செய்கின்றது என்பதைப்போல அவனை இயக்கம் பிடித்துகொண்டு போச்சாம் ,இவரின் பெட்டையை இயக்கம் பிடிச்சுகொண்டு போச்சாம்.என்ற செய்திகள் தான் முதன்மை பெற்றது.
இந்த நிலையில் தான் ஒரு நாள் சுகி ரகுவிடம் கேட்டாள் .ஏன் ரகு ?உங்களுக்கு பிரச்சனை வரும்தானே ?உங்கள் வீட்டில் எத்தனை பேர் ??யாரும் மண்மீட்புப் போராட்டத்தில் இருக்கிறாங்களா ????என்று அவள் கேள்விகள்.போராட்ட மண்ணிலும் மதரசுப்பட்டிணம் போல காதல் பூக்கும் தானே?? !
இல்லை சுகி எங்கள் வீட்டில் நான் தான் தங்கமகன் .போராடப்போகவேண்டும் நாடு என்னிடம் இருந்து எதை எதிர்பார்க்கின்றதோ ?அதைச் செய்ய விதியின் பாதையில் விரல் பிடித்து இன்னும் சில நாட்களில் போய்விடுவேன்.
மண்ணுக்கு தலை வணங்கி போகும் மண்ணின் மைந்தர்கள் ஒன்றும் திராவிடம் என்று சொல்லிக்கொண்டு ஈன அரசியல் செய்யும் தலைவர்கள் போல இல்லை .
இந்த நூற்றாண்டில் புறநானுறும் ,கலிங்கத்துப்பரணியையும் வரலாற்றில் மீண்டும் பதிந்த வருகின்ற இனம் ஈழத்துச் சந்ததி என்பதை படிப்பிக்கும் போது !
பாவைகள் யாரும் அன்பில் கட்டி அடிமை கொள்ளாதீர்கள் புதிய பாதை போகும் போது நம் உறவுகளை என்று எழுதிச் சொன்னவர்கள். என்ன ஆனார் ?என்று அன்று அந்தப்பள்ளியில் மேல் வகுப்பில் படித்தவர்களுடன் இருந்து எதேட்சையாக கேட்ட வார்த்தையும் மீள் ஞாபகம் வர நினைவூட்டியபோது http://poonka.blogspot.fr/2013/02/5.html.
சுகியின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டியது ஈழத்தில் தமிழனாகப் பிறந்த பாவச்சுமையை எண்ணி!,
ஏன் ரகு நீங்கள் என்னை விரும்பினால் நான் அப்பாவிடம் சொல்லி உங்களுக்கு பிரச்சனை வராமல் செய்யலாம் தானே?
அப்போது அவளிடம் சுயநலம் இருந்தது திமுகாபோல குடும்பத்துக்காக கொள்கையை விற்பவர் அல்ல தன் தந்தை என்பதைப்புரியாத பேதை அவள் நீ என்னை லவ் பண்ணு உன்னை போராட்டத்துக்கு போகாமல் காப்பத்துகின்றேன்.என்று பகல்கனவு கண்டாள்!
நீங்க ஒன்றும் பிரச்சனை வராமல் செய்யவேணாம் .உண்ணவிரதம் இருந்து தமிழ்தலைவன் என்று பட்டத்துக்காக உலகநாட்டுக்கு படம் காட்டிய தலைவர் போல நினைக்காமல் உங்க அப்பாவை விடுங்க அது போதும். நான் என் வழியில் செயல்படுகின்றேன்.
அப்ப ரகு என் மேல உங்களுக்கு எப்பவும் விருப்பம் வராதா??
விரும்பம் வராது என்று இல்லை சுகி .உங்களுக்கு எத்தனை தரம் சொல்லுறது உங்கள் வீட்டில் இந்த காதலுக்கு சம்மதிப்பாங்களா?
நிச்சயம் இல்லை.எனவே நானும் உங்களை விரும்பி அதன் பிறகு பிரிந்தால். அது எனக்கும் கஸ்டம் ,உங்களுக்கும் கஸ்டம்.
அதனால நான் ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை.
நல்ல நண்பனாக உங்கள் சுகதுக்கங்களில் கைபிடித்து வருவேன் எதிர்பார்ப்பு இல்லாத திறந்த சுதந்திரமான இருவழிப்பாதை நட்பினைப்போல எப்பவும் .
நல்ல ப்ரண்டா இருப்பன் லவ் எல்லாம் வேண்டாம்.
இதற்கு மேல் அவனுடன் காதல் யுத்தம் செய்ய அந்த மங்கைக்கு சக்தி இல்லை.
நீங்க என்ன விரும்புறீங்களோ ?இல்லையோ ?அது உங்கள் சுதந்திரம் பிரெஞ்சு நாட்டைப்போல ஆனால் நான் உங்களை எப்பவும் விரும்புவன் ரகு நெஞ்சம் எல்லாம் நீயே என்று !
அட்லீஸ் ப்ரண்டா இருப்பன் என்றாவது சொன்னீங்களே அதுவே போதும்.!!இப்போதைய நிலையில்.
“உங்களை நினைத்து நான் சில கவிதைகள் எழுதியிருக்கேன். என் ஆசை ,நேசம் ,தேடல், விரகதாபம் ,எல்லாம் விளம்பி நிற்கும் அந்த கவிதைகள் காலத்துயரில், இனவாத யுத்த மழையில் ,காகிதங்கள் களவாடப்பட்டாலும் காற்றில் என் யாசகம் கையில் கிடைக்கும் காதலனே!
அந்தக்கொப்பியை என் பிரண்ட் கிட்ட கொடுத்துவிடுறன் நீங்கள் அவசியம் படித்துப்பார்க்கவேண்டும்.லங்கா ராணி போல !!
12
12.பூம்பாறையில் பொட்டுவைத்த பூங்குருவி
எழுதும் கவிதை எழுதியவர் பார்வைக்கும் வாசிக்கும் வாசனுக்கும் இடையில் சிந்தனைப்பாலம் போடும் !சிறப்பு உருவக அணி ,உள்ளீடு, பாடுபொருள் இயல்புகளைப் பார்த்து அப்படித்தான் சொன்னது போல அடுத்த நாள் அவள் தோழி சுவாதியிடம் அவளது கவிதைக்கொப்பியை ரகுவிடம் கொண்டுவந்து தந்தாள்.!
மிகவும் அழகான அதிகாலை மலர்ந்த ரோசாப்பூ,ஆனந்தம் படத்தில் சினேஹா கொடுக்கும் விளக்கேற்ற வரலாமா ?என்ற இதயம் காட்சிப் படம் போல படங்களைவெட்டி ஓட்டி அதில் தபூசங்கர் கவிதைகள் போல காதல் ஈர்ப்பில் அவர் சாயலை உள்வாங்கி சில கவிதைகளை எழுதியிருந்தாள். சுகி !
சிலதை பொதுவில் பகிரமுடியும் சிலது தணிக்கை செய்ய வேண்டும் தனிப்பட்ட புனித அந்தரங்கம் என்பதைப்போல பல கவிதைகள் நெஞ்சில் பதிந்தது அவள் போட்ட கோலங்கள்.ஆனாலும் ….. !
மனித வாழ்க்கையில் காதல் என்ற ஒன்று தவிர்க்க முடியாத தருனம். அது யார்மேல எப்போது ?வரும் எப்படி வரும்? என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனா பரீட்சை மறுமொழி வருவது போல வரவேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டாவரும். அதே போலதான் சுகியின் காதலும் ரகுவின்மேல்.
ஏன் அவளுக்கு விவசாயிமகன் மீது காதல் வந்தது என்று அவளிடம் கேட்டால் ?நிச்சயம் அவளுக்கு புரியாத புதிர் போல பதில் சொல்லத்தெரியாது.
இந்த உலகில் அவள் வாழுகின்றவரை அவன் நினைப்புகள் அவள் மனதில் ஏதோ ஒரு மூலையில் மூச்சுக்காற்றுப்போல என்றும் இருக்கும்.
அதே போல ரகுவின் மனதிலும் ஏதோ ஒரு மூலையில்இரத்த நாளங்கள் போல அவள் நிச்சயம் இருப்பாள்.
கண்காணிப்புக்குழுவும், சர்வதேசமும் சாமாதான நாடகத்தை கைவிட்டு கண்ணுறங்கத் தொடங்கிய 2007 ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தின் ஒரு நாள் !
ரகு பாடசாலைக்கு வந்திருந்தான். அவன் மனம் எல்லாம் கவலை. காரணம் இதுதான் அவனது பாடசாலை வாழ்க்கைக்கு இறுதிநாள் !
ஆம் பள்ளி என்ற நந்தவனத்தில் தென்றலாக வலம் வந்த விவசாயி வாரிசின் கனவு இனவாத விசத்தின் வெறியினால் விடுதலைப்பக்கம் புயலால வீசும் நிலை.
அடுத்த நாள் இயக்கத்தில் இணைவதாக முடிவெடுத்து இருந்தான்.
அன்று பாடசாலையில் சுகியை பார்த்து சகஜமாக கதைத்தான் .ஆனால் அவளுக்கு அவனது முடிவு பற்றி தெரியாது முன் உணர்ந்து கொள்ள அவள் என்ன அரசியல் வாதியின் மகளா ?பிடிவிராந்து வரும் என்று தெரிகின்ற போது நீதிமன்றத்தில் ரத்துபிடிவிராந்து வாங்கி வைக்க.
அவனும் சொல்லவில்லை.சொல்லிச் செல்ல இது என்ன ஜனாதிபதி வெளிநாட்டு சுற்றுலாவா பயணமா???
என்மேல எதுவும் கோபம் இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்க சுகி .நான் உங்களை நிறைய வேதனைப்டுத்திட்டேன்.எத்தனை தரம் எண்ணிடம் காதல் யாசகம் கேட்டீர்கள்?
கையில் பணம் இருந்தும் தர்மம் செய்யாத பணக்காரன் போல நான்.
எதைப் பற்றியும் யோசிக்காது நல்லாப் படியுங்க இனவாத யுத்த மோகம் ,மதவாதம்,மொழிவாதம் ,பிரதேசவாதம் ,பிடிவாதம் என பலரின் வாழ்வை பள்ளிக்காலம் சீரழிக்கின்றது.
அது எல்லாருக்கும் புரிவது இல்லை என்று முன்னர் என் நண்பன் சொல்லியது ஞாபகம் வருகின்றது சுகி
நீங்க என்னைவிட சிறப்பான ஒருவரை எதிர்காலத்தில் பார்க்கும் போது எங்களுடன் ரகு படித்தானா என்று நினைப்பு வராது.!
பள்ளி வயதில் என் மேல் உங்களுக்கு வந்த ஈர்ப்பை காதல் என்று சொல்லமுடியாது .ஒரு காலத்தில் இதை யோசிக்கும் போது எங்களுடன் படித்தவனும் பளாக் எழுதுகின்றான் ,எழுத்துப்பிழைகளில் கொல்கின்றான் எங்க ஊர் ஆசிரியர் தகுதியை ஹிட்சு வெறியில் சோமபாணத்தில் எழுதுகின்றானோ ?,என்பதைப்போல உங்களுக்கே சிரிப்பு வரும் பாருங்க. அப்போது நான் காற்றில் சுழலும் புறாவின் இறகு போல உங்களைவிட்டு வெகுதூரம் போயிருப்பேன். !
ஏன் ரகு ?திடீர் என்று இப்படி எல்லாம் கதைக்கிறீங்க நான் தான் உங்களை நிறைய கஸ்டப்படுத்திட்டன். என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள்.ஆனால் உங்கள் மேல வந்த விருப்பம் உண்மை ரகு .ஆஸ்திகனுக்கு இருக்கும் கடவுள் பக்தி போல அது எப்பவும் மாறாது. என்றோ ஒரு நாள் என்னை நீங்க புரிந்துகொள்ளுவீங்க என்ற நம்பிக்கை இருக்கு கோகுலம் படத்தில் வரும் பாணுப்பிரியாபோல என்று சுகி தன் பங்கிற்கு அவள் மன ஆதங்கத்தை கொட்டி முடித்தாள் .
ரகு மனதுக்குள் பூம்பாறையில் பொட்டுவைத்த பூங்குருவி பாடல் போல என்று சுகியை நினைத்து சிரித்துக்கொண்டான் .அன்று பாடசாலைவிட்டதும் சைக்கில் பார்க்கில் சைக்கிளை எடுத்துக்கொண்டு ரகு பாடசாலையை விட்டு வெளியேர தயார் ஆனான்.
தூரத்தில் சுகி உன்னை நினைத்துப்படத்தில் சினேஹா ரயில் நிலையத்தில் காத்திருப்பது போல அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள். ரகுவும் அவளை திரும்பி பார்த்தான் விழியில் வலி தந்தவளே !!விடைபெறுகின்றேன் விதியின் வழியில் பிரிகின்றேன் .நெஞ்சிருக்கும் வரை நீதானடி என் ஜீவன் என்பதைப்போல !!
சிலவேளை இதுதான் அவளை பார்க்கும் இறுதி பார்வையாகவும் இருக்காலாம் ஆனால் அந்த மங்கை அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது இந்தப்பாடல் காற்றில் வந்தது!
13
13.மண்ணுக்காக தம் உயிரை தாரை வார்த்து
மண் மீது கொண்டகாதல் ஒருபுறம் தமிழன் என்ற இனத்தையே அழிக்கத் துடிக்கும் இனவாத ஆட்சியின் போர் முற்றுகை ஒரு புறம் என வன்னி மண் வாட்டம் கண்ட நிலையில் !
விடுதலையின் பாதையில் சேர்ந்து ரகுவும் இப்போது ஒரு போராளி.இந்த வாழ்கை அம்பானியின் வாரிசுபோலவோ அரசியல் வாதியின் வாரிசு போலவோ அவ்வளவு எளிதானது இல்லை. மரணபயம் என்பது அவனுக்கு துளியும் இல்லை. காரணம் மூன்று தலைமுறை கடந்து தொடர்கின்றது .தமிழர்மீது யுத்தம் ஆனாலும் தலைக்கு மேல் நாகபாசுரம் போல மரணம் இப்போது இருக்கின்றது.இன்று மரணமோ இல்லை அடுத்த நொடி மரணமோ என்று தெரியாத நிச்சயம் அற்ற வாழ்க்கை.
பிரெஞ்சு நோர்மண்டி தரை இறக்கம் போலவும், ஸ்டாலின் கிராட்டு சமர் போலவும் கண் எதிரே வீரச்சாவினைத் தழுவும் போராளிகள் ,அவயங்கள் இழக்கும் வீரவேங்கைகள் . காலையில் காண்பவரை மாலையில் காணக்கிடைக்காது, மண்ணுக்காக தம் உயிரை தாரை வார்த்து வித்தாகிப் போவார்கள் வீரத்துடன் இது பழகிபோன விடயமாக நாளாந்தம் நடக்கும் விடயமாக மாறிவிட்டது எல்லாப்போராளிகள் போலவே ரகுவின் வாழ்க்கையிலும்.
சிலவேளை நாம் வெல்வோம் என்ற கோஷத்துடன் கொலவெறித்தாண்டவம் ஆடிவரும் இனவாத இராணுவத்துடன் காலையில் இருந்து மாலை வரை தொடர்ந்து சண்டை நடக்கும் .இரண்டும் மூன்று நாட்கள் கூட தொடர்ந்து சண்டை நடக்கும்,! இனவாத ஊடகம் தனிக்கை என்று உள்நாட்டில் கவசம்போட்டாலும் கசிந்துவிடும் கடல்கடந்து வெளிநாட்டு சுதந்திர ஊடகத்திற்கு .ஏன் நம்மவர் அறியக்கூடாதா என்று விடைதேடினால் வீட்டிற்கு வரும் வெடிகுண்டு .கேட்டுப்பாருங்கள் ஆய்வுக்களம் எழுதும் இக்பால் அத்தாஸ் வாழும் சாட்சி இனவாத நாட்டில் .!
அதுமட்டுமா??போர்களத்தில் உணவு ,தண்ணீர் இருக்காது,சோற்றைக்காண்பது கடவுளை காண்பது போல இருக்கும்.நெல்விளைந்த எங்கள் நெஞ்சம் போன்ற தாய்பூமி எங்கும் கந்தக குண்டுமழை பொழிந்த இறையாண்மை ஆட்சியினர் மீது எந்த இணைத்தலைமை நாடும் நிறுத்துங்கள் என்று குரல் கொடுக்கவில்லை .தமிழர் குரலை மட்டும் அடக்கி வாசியுங்கள் என்று அதிகாரப்பாட்டல்லவா பாடினார்கள்!
காயம் அடைகின்ற நண்பர்களை வாகனத்தில் ஏற்றிவிட்டு வரும் போது அங்கம் எல்லாம்இந்தமண்ணு எங்கள் சொந்த மண் என்ற தன்மானத்தில் அந்தக் குருதி சிந்தியிருக்கும்.
அதை கழுவ முடியாது தண்ணீர் இருக்காது.எங்கும் நீர் இருந்த பூமியில் தடைகள் போட்டு அணைகள் எல்லாம் பெருக்கு எடுக்காமல் இருக்க போர் வெறியர்கள் வாய்க்கால்கள் மீது கொட்டிய சீமெந்து எந்த சுனாமி நிதியில் சுட்டதோ ?யார் அறிவார்கள் ??,ஆனாலும் தேசத்துக்காக ஒருவன் சிந்திய குருதி என்பதால் அதில் வீரமும் ,பற்றும் இருக்கும்.அதில் பிரதேசவாத வாடை வீசாது தாய் மண்வாசமே வீசும்.
கோபாலபுரத்தில் குந்தியிருந்து ஈழம் காண்பேன் ஈழம் காண்பதே என் இலட்சியம் என்று அரசியல் நாடகம் போடும் ஈனப்பிறவிக்கு தெரியுமா? ஈழம் காண்பது ஒன்றும் திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதுவது போல இல்லை என்று.
பெற்றவர்கள் கூடவந்தவர்கள் நேசித்தவர்கள் எல்லாரையும் நெஞ்சில் இருந்து நீக்கி தூய மண் மீது நேசிப்பில் தாய்நாட்டிற்காக போராடும் உணர்வை கவிதையாகவோ ,கதையாகவோ வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது.தேசத்திறாக போராடுகின்றோம் என்ற விடிவெள்ளி உணர்வைத்தவிர வேறு எதுவும் மனதில் இருக்காது.
போராட்டச் சூழலில் ரகு சுகியை முழுவதும் மறந்தே போய்விட்டான்.
சுகிக்கு ரகுவில் கடுமையான வஞ்சினம் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மண்நேசிப்பில் போராளியாக போய்விட்டானே !என்னை கடைசிவரை விரும்பவேயில்லை என்னைப்புரிந்துகொள்ளாத முரட்டுக்காளை போல படுபாவி என்னை தவிக்கவிட்டுவிட்டு இப்ப எங்க இருக்கின்றானோ ?எப்படி இருக்கின்றானோ ?அவன் உயிருக்கு போராட்டகளத்தில் எந்த பாதிப்பும் வரக்கூடாது. எங்க இருந்தாலும் அவன் பத்திரமாக இருக்கவேண்டும் என்று அவள் வேண்டிக்கொண்டாள்.
தனது பதினோராம் தர பரீட்சையில் பாஸ் ஆகிவிட்டால் சுகி அடுத்து உயர்தரத்தில் படிப்பதற்கு வேறு பாடசாலைக்கு சென்றுவிட்டாள்.
ரகுவை பற்றி அறிந்துகொள்ள அவள் பல முயற்சிகள் எடுத்தும் எந்த பயனும் இல்லை . போராட்ட களத்தில் இருப்போரிடம் சுடச்சுட செய்தி சொல்லுமா ஊடகம் சினிமா ஒளியில் இருப்பவர் மீது மட்டும் முன்னும் பின்னும் முகத்தை நீட்டும் துப்பாக்கி முணைபோல!அவன் பற்றிய எந்த தொடர்புகளும் இல்லை.அவனது நண்பர்களிடமும் போய் கேட்க முடியாது அவர்களும் போராட்டகளத்தில் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து போய்விட்டார்கள்.
நாம் நேசிப்பவர்கள் நம்காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களை பார்த்துக்கொண்டு இருந்தாலே பாதி வலிகுறைந்துவிடும். ஆனால் அவர்கள் பிரிந்துவிடும் போது அதுவும் அவர்கள் பற்றிய எந்த தகவலும் தெரியாத போது அது கொடுமையிலும் கொடுமை.!
14
14.சமாதானத்தை யாசிக்கும் தமிழச்சி
நாரணன் நம்பி வருவானா? நான் அவனுக்கு மாலை சூட்டுவேனா ?நான் வணங்கும் கடவுள்போல என்
நாயகன் அவன் முகம் மீண்டும் ஒரு முறை பார்க்கமாட்டேனா ,என்று சுகி ஏங்கிக்கொண்டு இருந்தால். விதியின் கட்டளையில் பயணிக்கும் சாமனிய மனிதர்களால் விதியினை மீறமுடியுமா?தலைவிதியை மாற்றமுடியுமா ??இந்திரலோகத்தில் அழகப்பன் போல நம் தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும் .என்று விதியின் மேல் பாரத்தை போட்டுவிட்டு காத்திருந்தாள் சிறைச்சாலை படத்தில் தபூ போல!
காதல் என்ற சொல்லின் அர்த்தம்
என்ன என்று அறிய வைத்தவன் நீ
என் நுரையீரல்களில் சுவாசமானவனே
இதய நாளங்களின் நாட்டியமாடியவன்
உயிர்த்துளி உன்னை சேர துடிக்கும் போது
ஒரு துளிஅன்பை கூட தர மறுப்பது நியாயமா?இலங்கை சட்டமூலம் 13 வது சரத்துப்போல!
நாணம் விட்டு சொல்கின்றேன் அன்பே
என் பெண்மனம் உன்னை தினம் சமாதானத்தை யாசிக்கும் தமிழச்சிபோல அழைக்கின்றது.
உன் அன்பில் அது ஆயுள் கைதிபோல அனுபவித்து சாக துடிக்கின்றது.
என் கண்கள் சிந்தும் கண்ணீரில் கூட
உன் மேலான நேசம் தான் இருக்கின்றது!
புரிந்துகொள்ளடா என் யாசிப்பை
ஒர் நாள் ஏனும் உன்னோடு வாழபிரியாத
வரம் கொடு தென்னவனே!
இப்பிறப்பில் என் இதயம் நுழைந்தவன் நீதான்
இங்குமட்டும் இல்லை !
இந்த பூமியில் எங்கும் சொல்வேன் நீ என்னுடன் இருந்தால்.
இணையத்திலும்
இந்தக்காதல் இசைமீட்ட
இதயராகம் காற்றில் வருவது போல விரைந்து வா. !
சுகியின் சுவாசத்தை சுவாசி .
என் உயிர் நீதானே என்பாயா?
என் இதய ஏட்டில்
உருகிப்போகின்றேன் .
ஒவ்வொரு வீரச்சாவிலும் உன் பெயரைப்போல
இன்னொரு உருவம் ஈழத்தில் வித்தாகிப் போவதில் .
நானும் வீழ்ந்தேனே !
வீரம் விளைந்த மண்ணில்
விவசாயிமகன் வீழியில்
விதியது போர் என்றது
விடியலை நோக்கி நீ
நானும் !
வீதியில் நிற்கின்றேன்
.ஒரு விடியல் வருமா?
மஞ்சல் கயிறு நீ கட்ட
விடியும் ஒரு பொற்காலம் வீட்டில் மட்டுமா?
வீதியில் ,ஊரில், நாளு பேர் ,நம் உறவை
விளம்பரத்துடன் வீதிகடந்து .
நாயாறு கடந்து
நல்ல சந்தோஸம் காண்போமா ?
சர்வதேசம் என்று ஊர் சுற்றி!
நாம் மட்டும்
விதியின் கையில் நாதியற்ற தமிழர் ஆவோமா நல்ல தீர்வு கிட்டவில்லை .
நாம் பார்த்த ச்ர்வ்தேச் அனுசரனையில் ஆலவட்ட சமாதான
நாடகத்தில் என்று நம்மை நாமே நொந்து கொள்வோமா ???
நாட்டுக்காக போராடாப்போனவனே !நல்லவனே !!
நமக்கு மட்டும் இந்த
நாட்டில் விடியல் எப்போது என்று
நானும்சுயநலத்தில் சுருண்டு போகின்றேன் ! .உன்னோடு வாழும் ஆசையில் ஆமி சுட்டாலும்
உன் முன்னால் வீழ்ந்து போகணும் பாடையில் ,போகாமல் ,புதைக்கவும் முடியாமல்,எரிக்கவும் முடியாமல் ,இனவாத போர் பார்த்துப் புலம்புவாயா ??
எங்காவது புலம் தாண்டி வாழ்வாயோ ?
என்று நான் எல்லாம் சிந்திக்க வைத்தவனே!
மீண்டும் சந்திப்போனே??????
உன்னை நிந்திப்பேனா நினைவில் என்றும் நீயடா
நெருப்பில் என் நினைவுகள் சுடுகின்றது.
நாட்குறிப்பில் சிந்தும் விழிநீரும்
விடைகிடைக்குமா என்றல்லவா
விளித்து நிக்கின்றது!
15
15. போராடினால் தான் வாழ்க்கை
நம்மோடு படித்தவர்கள் கூட இருந்து பள்ளியில் பழகியவர்கள் பலர் ஒவ்வொரு போர்ப்பாசறையில் ஏதோ ஒரு பொறுப்பாளரின் பின்னே போர் முரசு கொட்டி களத்தில் இருந்தார்கள் !
அப்படி இருக்கும் நிலையில் சிலரின் வீரச்சாவு எங்கள் நண்பர்களுடன் பகிருப்படுவதும் உண்டு சிலரின் இழப்பை விழிக்கு கொண்டுவருவது விடியலில் வரும் நாளிதழ் அப்படித்தான் ரகுவுடன் படித்த அவன் நண்பன் சுயன் மண்ணுக்காக இறந்தவர்கள் பட்டியலில் இணைந்துவிட்டான் என்ற செய்தி ரகுவிற்கு ஒரு வாரம் கழித்துதான் தெரியும். அனால் அவன் அழவில்லை அவன் கண்கள் ஒருதுளி நீரையும் சிந்தவில்லை.
சுயனுக்கும் அவனுக்குமான நட்பு இணைந்த கைகள் போல எழுத்தில் வர்ணிக்கமுடியாதது. அவனது பாடசாலை வாழ்கையில் மறக்கமுடியாத ஒரு நண்பன் சின்னவயதில் இருந்தே பழக்கம்.சுயன் சற்று சண்டியர் விருமாண்டி போலஆனால் அவன் மனமோ குழந்தை போல அது அவனுடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும்.!
அவன் ஒருத்தியை நேசித்ததும் அவள் அவனை செந்தமிழில் பூசித்ததும் புழுவாரித் தூற்றியதும் எல்லாம் நீங்காத நினைவுகள்!
அவனுடன் பள்ளியில் சண்டை போட்டது பாவையரின் பின்னே ஜொல்லுவிட்டது என நினைவுகள் பசுமையானவை.
இவனுக்காக அவனும் அவனுக்காக இவனும் போட்ட சண்டைகள் ஏராளம் இந்த ஜென்மம் மட்டும் இல்லை இன்னும் ஒரு ஜென்மத்திலும் நான் உந்தன் நண்பனாக வேண்டும் நண்பனே உன் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்று ரகு மனதிற்குள் பிராத்தனை செய்துகொண்டான்.
நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். சிலநேரங்களில் சில மனிதர்கள் போலஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.பிதாமகன் சூர்யா போல!
இன்று சுயன் நாளை நானாக கூட இருக்கலாம் ஆனாலும் தன் நண்பனின் இறப்பு என்றாலும் சரி தன் இறப்பு என்றாலும் சரி அது அர்த்தப்படுகின்றது என்று நினைத்துக்கொண்டான்.தாய் மண்மீது நேசிப்பில் என்பதால்!
போராடினால் தான் வாழ்க்கை கடவுளுக்கு வன்னி மாந்தர்கள் மீது ஏன் இத்தனை ஓரவஞ்சனை. !
சுயனின் நினைவில் மூழ்கியிருந்த ரகுவின் மனதில் சுகி எட்டிப்பார்த்தாள் பாறையின் இடுகில் வேர் விடும் கொடிபோல ! அவளது அழகிய முகம் அவன் முன்னே வந்து போனது.பாவம் என்னை எவ்வளவு நேசித்தாள் ஆனால் என்னால் தான் அவள் காதலை ஏற்கமுடியவில்லை.
அவள் மனம் எப்படி இலங்கை வேந்தன் கலங்கி நின்ற காட்சி போல நொந்து இருக்கும்.அந்த சின்னப் பெண்ணின் மனதில் என் மீதான வாலிப ஈர்ப்புக் காதல் அவள் இறுதிக்காலம் வரை இருக்குமா? இல்லை என்னை மறந்திருப்பாளா?அப்படி மறக்கவில்லை எனில் இறைவா என் மீதான நினைப்பை மறக்க செய்.அவள் அப்படித்தான் படம் போல!
என்னில் அன்பு காட்டிய அந்த ஜீவனுக்கு மேலும் கஸ்டம் கொடுக்காதே அவள் சந்தோசமாக இருக்கவேண்டும் .அவள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கவேண்டும்! .நேசித்தவள் நிறைவாக வாழ வேண்டும் என்பது தானே தூய்மையான யாசகன் நேசிப்பவன் வேண்டும் வரம்!
ஏதோ ஒரு காலத்தில் எம் மண் விடிகின்ற போது அப்போது நான் உயிருடன் இருந்தால்!!! அவளை சந்திக்கும் போது என் மீதான நினைப்பு அவளுக்கு இருக்க கூடாது.என்னை ஒரு தலையாக காதலித்தது தவிர அவள் எந்த தவறும் செய்யவில்லை .எனவே அவள் வாழ்க்கையை வளமாக்கு என்று இறைவனிடம் ரகு சுகிக்காக வேண்டிக்கொண்டான்!
என்னவளே என்னுள் வந்தாய் தீயாக
எனக்கும் உன் நேசம் பிடிக்கும் நதியாக
என் தேசம் எரிகின்றது விடுதலை வேள்வியாக
எப்போதும் நீ இருப்பாய் யாகமாக
என்றாவது வந்தால் நீயாக
என்னிடம் வந்திடாதே கொடியாக
என் வழியில் உன் குடும்பம் நந்தியாக
எனக்கும் வழி மறிக்கும்! என்னை மறந்து விடு!!!
16
16. மிகத்தீவிரமான போர் முன்னெடுப்பு
போராட்ட களத்தில் இருந்து பெற்றவர்களையும் ,கூட வந்தவர்களையும் ,பிறந்த ஊரையும் ,விரும்பினால் போய்ப் பார்க்கலாம் பொறுப்பாளருக்கு அறிவித்தல் கொடுத்து விட்டு.
அப்படித்தான்! ரகுவும்சிறிய விடுமுறை ஒன்றில் ஊருக்கு வந்திருந்தான் !
இனவாத போர் வெறியில் வரும் சிங்கபாகு சிப்பாய் என்றாலும், கஜபாகு ரெஜிமேண்ட சிப்பாய் என்றாலும், விடுமுறையில் வீடு செல்லவும் ,ஆன்மீககருமம் ஆற்றவும் ,விடுப்பு விடுமுறை கேட்டாள் !விரைவில் கொடுக்கமாட்டார்கள் .உயர் அதிகாரிகள் அதனால் அவர்கள் தப்பி ஒடுவோர் பட்டியலிலும், போராளிகளிடம் சரணடைவதாகவும் கதைகள் சொல்வார்கள் எங்கள் பொறுப்பாளர் அண்ணாக்கள் !
இப்படி ஒரு சிலரை காவல் தடுப்பில் இருக்கும் போது சந்தித்ததும் ஞாபகம் வந்து போகும் நிலையில் தான் ரகு சிறிய விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தான்!
தற்போது யுத்த நிலையில் ஊரில் பெரும்பாலானவர்கள் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.ஒரு சிலர் மட்டும் குடும்பமாக இருந்தார்கள். !!
விமானக்குண்டு வீச்சில் இருந்து தப்பவும், இனவாத ஆட்சியின் தமிழர்மீதான உக்கிரமான பொருளாதார கட்டுப்பாடுகள் தொடர்ந்து ஏற்படுவதால் பலர் இடம் பெயர்ந்துகொண்டு இருந்தார்கள். எங்கே பொருட்களையும் ,உடமைகளையும், உயிரையும் பாதுகாக்க வழிகள் இருக்கும் இடங்கள் நோக்கி!!
போனவர்கள் நிலை என எல்லாவற்றையும்.அவர்களிடம் ஊர் புதினங்களை கேட்டு அறிந்துகொண்டான் ரகு.
போர் முற்றுகையிலும் நம்மவர்கள் கைதூக்கி வேண்டிக்கொள்ளும் எங்கள் சன்னிதானம் என உருண்டு நேர்த்திக்கடன் தீர்த்த ஊர்க்கோவில் திருவிழா தொடங்கியது பத்துநாள் திருவிழா .
அதில் சில நாட்கள் மட்டுமே ரகுவால் கலந்துகொள்ள முடியும் என்பதால் இரவு, பகல் என்று நண்பர்களுடன் நாட்டில் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் மிகத்தீவிரமான போர் முன்னெடுப்பு ,சர்வர்வதேசத்தின் மெளனம் ,எரிக்சொல்கைம்,யாக்காசி அக்காசி போய் இப்ப விஜய்நம்பியார் என்ற வேடதாரியின் புதிய முகம் எல்லாம் தமிழர்மீது ஏன் இப்படி ஒரு கபட நாடகம் என எல்லாம் நட்பு வட்டத்தில் ஆக்ரோசமான கருத்துப்பரிமாறல் ஒரு புறம் என்றால் !
போரரைத் தவிர்க்க புலம்பெயர் தேசத்தில் ஏற்பட்டு வரும் கவனயீர்ப்பு உண்ணாவிரத நிகழ்வுகள் ,மக்கள் குழுமத்தின் ஆதரவுகள், இவை எல்லாம் சர்வதேசம் கணக்கில் எடுக்குமா?? என்ன வளம் இங்கு இருக்கு சுரண்டல் பேர்வழிக்கு வந்து சேர்பியாவை போல பிரித்துக்கொடுப்பார்களா??,
சேர்பியாவுக்கு முன் இருந்தே நசுக்கப்படும் இனம் ஈழத்து குடிமக்கள் என்று எந்த!! இராஜதந்திரி அறிவான் சமாதனம் வெள்ளைப்புறா என்று வேசம் கட்டும் குள்ளநரிகள்!
என்று அனல் பறக்கும் கோயில் பிரகாரர்தில் .
அப்படி இருந்த ரகுவின் நட்பு வட்டத்தில் இவர்களில் ஒரு சிலர் அவயங்கள் இழந்த வீரர்கள் என்றாலும் நெஞ்சில் வீரம் இன்னும் வீசும் காளைகள் !
கோயிலில் ரகுவின் பொழுதுகள் சந்தோஸமாக கழிந்தன.
ஒரு மாலைவேளையில்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெயிலின் ஆக்ரோசத்துக்கு சூடுதணிக்கவும் ,நெஞ்சில் இருக்கும் அழுக்குச் சூட்டினை ஓடும் நீரில் போக்கவும் ஆன்மீகத்தில் நம்பிக்கையுடன் வருவோருக்கு தாகம் தீர்க்கும் வண்ணம் கோயில் வடக்குப் பக்க பிரகாகரத்தில் ஒரு நீர்த்தடாகம் எப்போதும் வற்றாது இருக்கும் வண்ணம் நீர் நிரப்பி இருக்கும். அது வற்றாது இருக்க ரகு குடிதண்ணீர் நிரப்பிக்கொண்டு இருந்தான் .
முன்னர் இதை தந்தையோடு வந்து அவன் செய்த செயல் வழமை போலவே கோயிலுக்கு பின் உள்ள பைப்பில் ரகு குடிதண்ணீர் நிரப்பிக்கொண்டு இருந்தான் !.
நிரப்பிவிட்டு திரும்பும் போது அங்கே வன்னி வெயிலின் வெக்கையைத் தீர்க்க தாக சாந்திக்குக்கு சுகியும் தண்ணீர் குடிப்பதற்காக நின்று கொண்டு இருந்தாள் !
சுதந்திரக்கட்சியின் கட்சிக்கொடி போலஒரு நீல நிற சுடிதார் அணிந்திருந்தாள்.
இவர்கள் இருவரையும் மீண்டும் சந்திக்கவைத்தது எது?ஏன் அவள் சற்று முன் வந்திருக்காலம் இல்லை ரகு சற்று பிந்தி வந்திருக்காலம் 12 B படம் சிம்ரன் போலஆனால் இவ்வளவு காலத்தின் பின் இருவரையும் ஒரே நேரத்தில் அழைத்து வந்த சக்தி எது?
சுகி ரகுமேல் வைத்திருந்த அவளது தூய்மையான யாசகமாக இருக்குமோ ஒரு வேளை அது உண்மை என்றால் காதல் சக்தி மிக்கதுதானே. சுகி சிறுது நேரம் ரகுவையே மரங்கொத்திப் பறவைபோல பார்த்துக்கொண்டு நின்றாள் ரகுவும் அவளது பார்வைகளை எதிர்கொள்ள சக்தி அற்றவனாக பார்வை ஒன்றே போதும் குணால் போலஅவளை கடந்து செல்ல முட்படுகையில் அவள் ரகுவின் கையை கன்னிகாதானம் செய்த பின் கணவன் கரம் பற்றும் மனைவிபோல இறுக பற்றினாள்.!!
17
17. நாளைக்கு போராட்டகளத்துக்கு மீண்டும் போகப்போறேன்
தெரிந்தவர்களை கண்டுவிட்டு காணாதவர் போல போவது சிலரின் குணம் .அவருக்கும் ஆயிரம் சோலி இருக்கும் என்று அவரைப் பற்றி மனதளவில் புறம் பேசுவோரும் நம்மில் உண்டு! அதுபோலவே ! என்ன ரகு ?பார்த்தும் பாக்காதது போல போறீங்க! அதே பாசத்துடன் கூடிய ஏக்கம் கலந்த தொனியில் கேட்டாள்.
பஞ்சாயத்தில் நிற்கும் சின்னக்கவுண்டர் விஜய்காந்து போல அவன் நிலையை எண்ணி கையை விடுங்க சுகி . “யாரும் பார்த்தால் என்ன நினைப்பினம்.நீங்க அங்கால வாங்க கதைக்கலாம் என்று அன்னதான மண்டபத்தின் பின் இருப்பது கோயிலுக்கு சொந்த மான பூந்தோட்டம் .”
காலை மாலை பூஜைக்கு பூக்கள் தரும் நந்தவனத் தெரு என்று நண்பர்கள் சொல்லும் .பின்புறமாக அவளை அழைத்துச்சென்றான்.
அவனைபார்த்ததும் வான்கதவு திறந்த மூன்றாம் வாய்க்கால் போல தேம்பித் தேம்பி அழுதால் .
அழாதீங்க சுகி யாரும் பார்த்தால்என்னையும் வட்டுவாய்க்காலில் பச்சை மட்டை அடிவாங்க வழி செய்துவிடுவினம்! அப்புறம் பிரச்சனையாகிவிடும்
அழாமல் என்ன செய்ய சொல்லுறீங்க ரகு ?,என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாமல் போயிட்டீங்களே போராட்ட களத்திற்கு.அவ்வளவு நான் தகுதியில்லாதவளாகப் போயிடேனா?
இல்லை சுகி.
கதைக்காதீங்க ரகு என்று அவன் கன்னத்திலும் ,மார்பிலும் மாறி ,மாறி காதல் போதையில் அடித்தாள். பின் திருமாலின் திரு மார்பில் சாய்ந்த ஶ்ரீதேவி போல அவன் மார்பில் அப்படியே சாய்ந்து கொண்டாள். ரகுவும் அவளை தடுக்கவில்லை ஆற்றுப்படுத்த முன் அவள் கோபம் தணியட்டும் என்று சிறுது நேரத்தின் பின் சொரி ரகு ஏதோ கவலையில் அடித்துவிட்டேன் .வலிக்குதா ?என்று பூமழை பொழிகின்றது பட நதியா போலஅப்பாவியாக கேட்டாள்.
அவன் மார்பில் சாய்ந்த படியே.உள்ளமே என் கோயில் உன் உடல் அல்ல என்ற நிலைஅவளிடம்.
விடுங்க சுகி என்று சாய்ந்து இருந்தவளை விலக்கிவிட்டு ரகு சொற்பொழிவுக்கு வரும் பேச்சாளர் சோடா குடித்துவிட்டுப் பேசுவது போல பேசத்தொடங்கினான். இன்னும் என்னை நினைச்சுக்கொண்டு இருக்குறீங்களா சுகி??
.நான் அப்ப சொன்னதைத்தான் இப்பவும் சொல்லுறேன். உங்களை என்னால் விரும்ப முடியாது.
இன்றைய நம்தேசத்தின் நிலையை நினைச்சுப்பாருங்க ??எந்த நேரம் என்ன நடக்கும், யார் உயிர் எப்ப போகும் எங்கு இருந்து விமானக்குண்டுவீச்சு வரும் எந்த வழியால் இராணுவம் முன்னேறும் என்றும் தெரியாத பயப்பிராந்தியில் மக்கள் !
வாழ்வாதாரங்கள் எல்லாம் யுத்த முனைப்பின் பலனாக மூடிய நிலையில் வாழ்வே போராட்ட சூழலில் யார் ?யார் மரணிப்போம் என்று தெரியாத நிலையில் ஏன் இந்த காதல்??? இந்த ஊரில் எத்தனையோ பேர் காதலித்து இருப்பார்கள். பின் பிரிந்து தேசத்துக்காக போய் கல்லறையில் வித்தாகிப் போனவர்கள் பின் எழுதக்கூடிய நம்பகத்தன்மையான நாவல்களாகக் கூட இருக்கலாம் .
இது எல்லாம் யார் அறிவார் ??எங்கள் மண் இன்னும் பல சுவையான, சுகமான ,சோகமான வரலாற்றை என்றாவது காலச்சரித்திரத்தில் பதிவு செய்யலாம்!இது எல்லாம் நாம் பலருக்கு சொல்லவேண்டிய விடயங்கள்.
இந்த நிலையில் தான் போராட்ட களத்திலும் சிறப்பாக இயங்கும் இலக்கியம் நெஞ்சங்களுக்கு பாராட்டு விழா ,பொற்கிளி என்று எல்லாம் நம் தலமை ஊக்கிவிக்கின்றது .
நானும் எழுதும் ஆர்வத்தில் இருக்கின்றேன் அன்பைத்தேடும் தனித்தீவு போல இப்போது இல்லை புரிஞ்சுக்க சுகி!
நீ மாறவே மாட்டியா ரகு சற்று உரிமையுடன் கேட்டாள்.இல்லை சுகி என் தலையில் என்ன எழுதியிருக்கோ அதன் படித்தான் நடக்கும்.அதே போல உங்கள் தலையில் என்ன எழுதியிருக்கோ அதன் படிதான் நடக்கும்.
ஆமா ஏ.எல்(உயர்தரம்)என்ன பாடம் படிக்கிறீங்க என்று பேச்சை மாத்தினான் ரகு.
மெட்ஸ்(கணிதப்பிரிவு) படிக்கிறன்.
அப்ப இஞ்ஜினியர் தான் போங்க !! “நம்நாட்டுக்காசில் படித்து பட்டம் பெற்றுவிட்டு வெளிநாட்டில் போய் வேலை செய்யப் போறீங்க .அப்படித்தானே.???
அங்கே போய் நம்மண்ணில் இருந்து வருவோர் மனித வலுவில் வேலைக்கு வருபவர்களிடம் .திமித்தனத்துடன் கோப்பை கழுவ வந்தனீயா ??என்றும் குப்பை கூட்ட வந்தனீயா ??என்றும் குதர்க்கம் பேசப்போறீங்களாக்கும் என்று ரகு சொல்லவும்.
சோர்ந்து போயிருந்த அவள் முகத்தில் ஒரு புன்னகையை உதிர்ந்தாள் நீங்கள் எப்போதும் அமைதிப்படை சத்யராஜ் போல் ஜொல்லுப் பாட்டிதான் !
உங்களுடன் கதைச்சிக்கொண்டு இருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கு தெரியுமா? ரகு என் கூடவே நீங்க இருந்தா எப்படி இருக்கும்.!
ஓக்கே சுகி நான் வீட்ட போகணும் !
நாளைக்கு போராட்டகளத்துக்கு மீண்டும் போகப்போறேன் என்று ரகு அவளிடம் சொல்ல. மீண்டும் வேலைக்கு போகும் தாயைப்பிரிந்து செல்லும் குழந்தை போல அழத்தொடங்கினாள்!
18
18. காத்து இருப்பேன் கண்ணன் வருவான்
போகும் பயணம் தெரிந்து போவதில்லை ஈழப்போராட்ட களத்துக்கு செல்லும் வீரவேங்கைகள் .அப்படியானவர்களில் ஒருவன் தான் ரகுவும் என்பதால் அவள் பதிலுக்காக காத்திராமல் நடக்கத்தொடங்கினான்.
இனி எப்ப ரகு உங்களை பார்ப்பேன் மீண்டும் பார்ப்பேன் குறுந்தொகை பாடல் போல கார்காலத்திலா ??இப்பவாவது சொல்லுங்க ??என்னை உங்களுக்கு பிடிக்கும் என்று பீளீஸ்.
ஆனால் உங்களுக்காக எப்பவும் காத்து இருப்பேன் 16 வயதிலினிலே மயில் போல இனவாத யுத்தத்தில் இன்னுயிரை நீக்காவிட்டாள் என்று சற்று சத்தமாக சொன்னாள்.வன்னி மக்களை காப்பாற்றுங்கள் என்று புலம்பெயர் தேசம் சர்வதேசத்திடம் கதறியது போல!
என்ன சொல்ல சொல்லுறீங்க சுகி??காதலுக்கு மரியாதை படத்தின் இறுதிக்காட்சி போல என் அம்மாவையும் ,அப்பாவையும் வந்து உன்னை எனக்கு கட்டிவையுங்க. இவள் எங்க வீட்டு இராசத்திபோல நாங்க பார்த்துக்கொள்வோம் என்றா?
இல்லை விவசாயி நாங்கள் என்றாலும் வீதியில் விடமாட்டோம் எங்க வீட்டுக்கு வந்த மருமகளை என்று விராப்புடன் சம்பந்தம் பேசச் சொல்லுறீங்களா???
இல்லை உங்க அப்பாவின் அதிகார மையம் புரியாமல் நீ என்னை நேசிப்பதையும் !அதனால் வரும் பின்விளைவுகளையும் புரியாதவன் போல நடந்துக்கவா ?
காதலே நிம்மதி பட சூர்யா போல சுகி??
இனவாத ஆட்சி உங்க அப்பாவைக்கூட இந்த ஊரில் இருந்து ,இந்த உலகத்தில் இருந்து குண்டுவைத்து என்றாலும் கொலை கங்கணம் கட்டும் நிலையில் அவர் உயிரைக்காக்க உறங்காத கண்மணிகள் புலனாய்வில் இருப்பார்கள் .அவர் குடும்பத்து பெண் நீ.
இந்த நிலையில் என்னைப்பற்றியும் உன்னைப்பற்றியும் எத்தனை குறுஞ்செய்தி செல்போல கூவிக்கொண்டு போகும் என்று யார் அறிவார் ??
இது எல்லாம் ஜோசிக்காமல் நீ அழுதுவது தான் எனக்கு வியப்பாக இருக்கு!இல்லை நீ என்னை நேசிப்பதை அறிந்துவிட்டு உன் அப்பாவின் அதிகார மையத்துடன் மோதவா??
சினிமா ஹீரோ போல பஞ்சு வசனம் பேசவா?? கதிர் அறுக்கத் தெரிந்தவனுக்கு கழுத்தும் அறுக்கத் தெரியும் கட்டி வையுங்க உங்க பெண்னை என்றா ?
இது எல்லாம் பேச நல்லா இருக்கும் .ஆனால் எல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லை.
பேச்சு வார்த்தை மேசைக்கு என்று வந்து விட்டு இப்ப இனவாதம் பேச்சை முறித்துக்கொண்டு முன்னேறும் இந்த செயல் போல இல்லை நம் வாழ்க்கை!
வெற்றிகொள்வோம் என்ற எண்ணத்தில் முன்னெடுப்பு செய்தால் வீழ்ந்து போவது அப்பாவி மக்கள் போல என் குடும்ப உறவுகள் தான்.
இப்படி ஆகுவதை விட மெளனம் பேசியதே படத்தில் வருவது போல விட்டுவிடுவோம் இந்த காதல் என்ற வார்த்தையே பிடிக்கல உன்னையும் சேர்த்துத்தான் நீ என் முன்னே அழுது புலம்பும் நிலையை என்னால் பார்த்து சகிக்க முடியாது . என்றுவிட்டு! ரகு திரும்பி அவளை ஒரு முறை பார்த்தான் .!!
அவள் கண்களில் இருந்து கண்ணீர் மண்ணில் விழுந்துகொண்டு இருந்தது.நாளை நான் என் மண்ணில் வீழ்ந்தாலும் எனக்கான கண்ணீரை இவள் இப்பவே சிந்துகின்றாள் என்று நினைத்துக்கொண்டு ரகு திருபிப்பார்க்காமல் வேகமாக நடக்கத்தொடங்கினான்.!!
கண்ணில் வலிதந்து கடந்து போகின்றவனே
காதலியின் நினைவு துறந்துபோவாயோ
களத்தில் களிரு போல கட்டளை ஏற்று
கலிங்கத்துப்பரணி பாடுவாயோ
கடும்சமர் என்று களப்பலியாகி
கந்தகக்காற்றில் கலந்து போவாயோ
காலம் எல்லாம் இதயக் கமலம் ஆவாயோ
காத்து இருப்பேன் கண்ணன் வருவான்
என்ற ராதை போல!
( சுகியின் குறிப்பில் இருந்து.)
19
19.ஒப்பாரும் மிக்காரும் வாழ்ந்த தாய் பூமி
இந்த உலகில் சாமாதானம், சாந்தி ,சுபீட்சம் ,பேசும் உலக வல்லரசுகளும், அயல் தேசங்களும், இணைத்தலமை நாடுகளும், அருகே இருந்து அன்பே போதித்த கொல்லாமையை வலியுறுத்திய புத்தனை வணங்கும் புத்திகெட்ட மக்களும் !
இன்னொரு இனத்தை புழுப்போல சங்காரம் செய்த இனமாகிப்போன வரலாறு ஈழத்துகொட்டில்களில் இன்னும் இதய வீணையாக முகாரி வாசிக்கின்றது மூச்சிழந்து .
எப்படி எல்லாம் இறுதி நேரத்தில் இரந்து நின்றோம் ஏதிலியாக அழது புலம்பவும் கண்ணீல் நீர் இன்றி ,கல்லாகிப்போன அந்த கணத்தை எப்படி எழுத்தில் ஓவியம் போல ஒன்ற வைப்பது !
ஒப்பாரும் மிக்காரும் வாழ்ந்த தாய் பூமியில் யுத்த தாண்டவம் ஆடிய அந்த சம்பவத்தை மறந்து விட்டுப்போக எப்படி இந்த உலக வாழ்வில் முடியும்!
அப்படி மறந்து போக இது என்ன ஐபில் விளையாட்டா ?இல்லை அழுது புலம்பும் சீரியல் போலவா ?பிரபல்யம் ஆகிவிட்டோம் என்பதுக்காக சிறு பிள்ளையாக இன்று பேசுவோர் எல்லாருக்கும் எங்கள் சிறுபிள்ளைகள் எல்லாம் கையேந்திய போது கண்டுகொண்டார்களா? கண்டியில் இருந்தும் ,கான்பரோவில் இருந்தும் !
எதைப்பற்றி ஆர் சொல்வது ஊடகத்துக்கு!
ஒருவேளை போராட்டம் நாம் எதிர்பார்த்த போலமுன்னம் பல்லாயிரம் வீரவேங்கைகளின் புனித உயிர் ஈழம் என்ற கோட்டைக்காக இந்த ஈழப்பூமித்தாய் மீது புதைத்த அவர்களின் இன்னுயிர்களும் ,இழந்த அவலங்களும் ,இன்னும் பல கொடைகளும், சேர்ந்து ஒப்பில்லாத தலைவன் வழி வந்த வழிநடத்தலில் வெற்றி பெற்று இருந்தால் !
ரகு போன்றவர்கள் சிந்திய வேர்வையும்,குருதியும் பிரயோசனப்பட்டு இருக்கும் !
ஆனால் எத்தனை ஆயிரம் உயிர்களை காவுகொண்ட யுத்தம் உடமைகள் ,அங்க இழப்பு ,அவலச்சூழலில் ,மனப்பிரள்வு ,ஆகி பித்துப்பிடித்தது பல ஆயிரம்!
இறுதியில் அந்த உயிர்கள் சிந்திய குருதிக்கு கட்டுப்படுத்தும் சூழல் இருந்தும் ஆட்சியதிகாரம் சுவைத்துத்துக்கொண்டு ,மானாட மயில் ஆடா அது பார்த்து கடிதம் தீட்டிய காந்தியின் உன்ணாவிரதத்தையும் தன் உணர்ச்சிப்பேச்சில் திராவிடம் வளர்த்த நடிப்பால் சின்னத்தனம் போல உன்ணாவிரதம் என்ற போர்வையில் தொலைக்காட்சியில் தன் விளம்பரம் தேடியவர்களும்!
வெயில் என்று கொடைக்காணலில் வேலிபோட்டு குளிர் காய்ந்தவர்களும் .வேண்டாம் இனி பிறந்தநாள் விழா என்ற நடிப்புத்தலைவரும், நடைப்பயணத்திலேயே செந்தநாட்டுப்பிரச்சனை பேசாமல் அயல் தேசம் பற்றி அக்கோரம் பேசும் கூட்டங்களும் ,அம்பேத்தகர் வழி என்று தலித்தியம் பேசி அதில் உண்ணாவிரதம் இருந்து உச்சநடிப்பில் உச்சா போனவர்களும் ,
இவர்களையே உத்தமர்கள் என்று உலகவீதியில் நம்பிக்கொண்டு வந்தேறு தேசம் என்றாலும் அடுத்த சந்தயிடமும் இன்னும் இனப்பற்று உண்டு என்று அவர்கள் தலையில் அடுத்த கட்டத்தினை ஏற்றிய பின் தம் கடமை முடிந்தது என்ற நம் புலம்பெயர் உறவுகள் ஒருபுறம் என்றால் ! அங்கேயும் நானே அவரின் பிரதிநிதி என்று குத்துவெட்டில் நன்றி கெட்ட நம்பிக்கை மோசடியில் கடைசிநேர கையூட்டலில் காலை வாரிவிட்ட நிலையில் .
நம் விடுதலை பயங்கரவாதத்தினை பலியெடுக்கின்றேன் என்ற போர்வையில் பலர் பார்த்துக்கொண்டு இருக்கவே படை எடுத்து வந்து செய்த அட்டுழியங்கள் எல்லாம் நம் ஈழக்கனவை !மெளனித்திப் போய்விட்டது.!!
இறுதிநேர விடுதலைவேள்வியை பொது வீதியில் ஊற்றிய தாரினைப்போல நம் இனத்தின் மீது கந்தகப்புகையும் ,காடைத்தனத்தையும் ,கட்டவிழ்த்துவிட்டு முள்ளி வாய்க்கால் வழியாக மூடிவிட்ட செயல் கண்டு இரந்து நின்ற காட்சிதனை கையகப்படுத்தி எந்த ஊடகம் இன்னும் வெளியிடும் எல்லாம் பார்த்து வந்த விழியில் இருந்து வடித்தது கண்ணீர் அல்ல இரத்த ஆறு!!
இன்றும் வடிக்கும் இயல்புநிலைக்கு வரமுடியாத நம் உறவுகள் நினைத்து.இருடறையில் இருக்கும் இன்னும் விடியாத நம் உறவகள் நினைத்து ,யார் வழி தவறியது என்று தெரியாமல் கையேந்தி நின்ற நம் நிலை பற்றி ஏன்ண்டா தப்பி வந்தீர்கள் என்று கேட்டவர்களும் நம் இனம்தான் ???,எப்படியோ எதிர் பார்தவைகள் எல்லாம் எங்கள் முன்னே வீழ்ந்து போனது .எங்கள் உறவுகள் எரிந்து போனவர்களை ,புதைக்கவில்லை எந்த உயிர் இன்னும் துடிக்குது ,சுவாசம் இருக்கா ?போர்த்து மூட உடையின்றி உருகுழைந்த உடல்கள் பற்றி எந்த பிரம்மையும் தெரியாமல் பிறந்த மேனியோடு இருந்த அவலம் எல்லாம் கடந்து வந்த பின் வெட்கம் என்ன இருக்கு ??
அந்த நேரத்தில் கைகொடுக்க வேண்டியவர்கள் எல்லாம் அயல் தேசத்திலும் ,அமெரிக்காவிலும் ,அலுவல்கள் பார்த்தார்களாம் !!
அகதியாக வந்தவர்கள் எல்லாம் ஆற்றுப்படுத்த வேண்டியவர்கள் என்ற வெட்டிப்பேச்சும் ,அப்பாவிகள் பாவம் சுமந்தவர்கள் என்று அங்கதச்சுவையோடு தொலைக்காட்சிகளில் வீராப்பு எல்லாத்தையும் ஒலி/ஒளிபரப்பியது இனவாத ஊடகம்.
எல்லாம் ஒய்ந்த பின் .ஓடிவந்தார் பாங்கி மூன் கூடவே நாசம் கட்டிய விஜய் நம்பியார் மெனிக்பாம்.
இது எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவன் ரகு! பாதத்தில் குண்டு அடிபட்டதில் அப்பாவியாக!
அதன் பின் இன்று அந்த மக்கள் விரும்புவது அமைதியான வாழ்கையையும் யுத்தம் இல்லாத உலகத்தையும் இனி ஒருமுறை அங்கே குண்டு மழை பொழிவதையும்,குருதி, ஆறு ஓடுவதையும் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். எனவே ஈழம் ;ஈழம் என்று இன்னும் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் புண்ணியவான்களே கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள் அந்த மக்களின் உணர்வுகளை.!!!!
20
20.உண்மை பேசு என்று போதித்த புத்தன் சிலைகள்
இந்த உலகில் அடிப்படைத்தேவையாவன என்று வரையப்பட்ட உணவு அது எங்களுக்குப் பகல் கனவாகிப்போச்சு பயிர் இட்டு பால்குடித்து பலர் சேர்ந்து இருந்த எங்கள் ஊர் பண்பட்ட பண்பாடு வளர்த்த பூமியில் பாவிகள் பொசுபரசுக்குண்டு போட்டு!
விளைநிலத்தையும் விளையாமல் செய்த செயலில் பசிக்கின்றது வயிறு !
பாரதமும் ,சர்வதேசமும் பண்போடு பால் ஊத்த வேண்டாம் .பாழ்பட்ட பூமியில் பயிர் இடும் வசதியை முடிந்தால் முதலில் செய்து தந்து விட்டு வெட்டிப்பேச்சு பேசட்டும் ஈழம் காண்போம் எழுந்து வாங்கள் என்று!
சப்பாத்துக்கால்கள் முதுகில் சங்காரம் செய்தாலும் ,தமிழன் என்று முளி புடுங்கினாலும் , சாகாத விழிகள் மீது இவர்களின் சீட்டுச்சக்கர நாற்காலிக்கனவு என்ன என்று தெரியாத பூமி புத்திரர்கள் இல்லை பண்டார வன்னியன் வாழ்ந்த் பூமியில் வந்தவர்கள் .
ஆனால் இன்னும் இருக்கவீடு இல்லை, உடுத்த உடையில்லை ,வீதியில்இரந்து நின்றால் விபச்சாரியாம்!
சமூகம் கெட்டு விட்டுதாம் விளம்பரம் செய்யும் ஊடக விபச்சாரர்களுக்கு விழியில்லை ;வீதியில் தான் பிறந்த ஊரில் இல்லாத வீட்டைப்பார்த்து கதறும் தாய் .அவள் பால் ஊட்ட அழும் பிள்ளைக்கு பசிக்கு உணவில்லாத நிலையை பத்திரிகையில் எழுதவேண்டியர்கள் பந்தி எழுதுகின்றது. பத்தினியா ?பாலியல் தொழிலாளியா ??என்று ஊத்திக்குடித்துக்கொண்டு ஊர்கதை பேசுவோர் முதலில் உடுக்க நல்ல உடை வாங்கித்தந்துவிட்டு .
தங்கள் மானம். மரியாதை என்று ஊர்ப்பற்று என்று விளம்பரம் செய்யட்டும்.
அண்ணன் எப்ப காலியாவான் திண்ணை எப்ப காலி ஆகும் என்று எதிர்பார்த்தவர்கள் எல்லாம் அயல் நாடும், அடுத்த கட்டமும் ,என்று ஆராய்கின்ற கூத்தணியும் இந்த தேசத்தில் தான் கூத்தாடுகின்றது!
எங்கள் வாழ்வு கெடுத்தவனுக்கே எங்கள் ஓட்டு என்ற கோசம் போட்ட கோமாளிகள் எல்லாம் எங்களை வைத்து வியாபரம் செய்கின்றது.
ஐயாமாரே நாங்களும் நல்லாக வாழவேண்டும் மற்ற நாட்டவர்கள் போல உழுத பூமியில் எத்தனை எலும்புக்கூடு இன்னும் உக்காமல் இருக்கு. அந்த இடத்தில் எல்லாம் உண்மை பேசு என்று போதித்த புத்தன் சிலைகள் .
21
21. விழியில் வலி தந்தவள் வருவாள்
யுத்தம் காடாக்கிய வன்னி மண்ணில் மீண்டும் சோலையாக்க வேண்டிய் பாரிய வேலைப்பாடுகள் பல்தேசியத்தின் உதவியுடன் மீளக்கட்டியெழுப்ப வேண்டும் !
பாழான இனவாத அரசியல் ஆலோசக வாதிகள் அகற்றப்பட்டு இந்த நாடு செழிப்புற்றால் மட்டுமே அது சாத்தியம் !
இனவாத பேய்கள் ,மதவாதசகுனிகள் ,மொழிவாத குருடர்கள் ,அயல்தேச முள்ளமாரி ,முடிச்சவிக்கி , வேடதாரி பேய் ஓட்டிகள் எல்லாம் போய்த்தொலைந்தால் தான் புண்ணிய் பூமி ஆகும் அது!
சீர் செய்ய நீண்டகாலம் என்பது நினைவிற்குத் தெரியும்.
வடக்கில் இருந்து தெற்கு கொண்டு போன பிள்ளைகள் எல்லாம் புனர்வாழ்வு என்ற பூட்டிய சிறையில் புழுவைப்போல புதைத்து விடுவார்களா ?விடுதலையாகி வெளிவரும் பிள்ளை முகம் காணூவேனா ?என்ற சோகத்தை நெஞ்சில் தாங்கி நிற்கும் எங்கள் உறவுகள் எல்லாம் நிற்க முதலில் ஒரு ஊன்றுகோல் தாங்க!
எங்களுக்காக பள்ளியை பகிஸ்கரிப்போர்களே பள்ளிக்கே போக வழியில்லாமல் பலர் இங்கு வாழும் .அவலத்தை பலதேசத்துக்கு சுதந்திரமாக சொல்லுங்கள் .
வந்து படிப்பிக்க முயலுங்கள் பாழான அரசியல் தாண்டி .உங்கள் படிக்கும் காலத்தில் உயிர் விட்டு தீக்குளித்து தியாகி ஆகி எங்கள் தியாயங்களை கொச்சைப்படுத்ததீர்கள்.
எங்களுக்கு இந்த ஜென்மத்தில் இப்படி நடக்க வேண்டும் என்று எழுதிய கடவுளைக்கூட சபிக்கின்றோம் நாள் தோறும். கண்ணகி தேசத்துக்கு சாபம் போட்டு எழுதிய தாமரையின் கவிதை போல.
முசேலினி வம்சத்து முந்தாணையில் ஒளிந்து கொண்டு முத்துப்பல் இழித்துக்கொண்டு முகாரி பாடாதீர்கள் மத்திய அரசை மீறி ஒன்றும் நடக்காது கவலை வேண்டாம் என்று அறிக்கைவிட்டுக்கொண்டு .
ஆட்கள் படை சூழவந்து ,பட்டாடைகட்டி பால்ச்சோறு தின்று விட்டு .தேனொழுகப்பேசி விட்டு ,தென்னகம் சென்று நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள். ஈழம் வெல்வோம் என்று இது எல்லாம் உங்கள் ஊர் சினிமா நட்சத்திரம்
களிடம் காட்டுங்கள் .
எங்கள் கால் வலிக்குது எத்தனையோ உள்குத்தினால் என்று நினைத்து மீண்டும் கிளிநொச்சித் தரையில் இருந்தான் ரகு!
சில காலத்துக்கு பிறகு சுகியை ஒரு முறை வீதியில் கண்டான் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தால்.!தோழிகள் சூழ ரகுவை அவள் கண்டாள்!! ஆனால் சைக்கிளை நிறுத்தி அவள் கதைக்கவில்லை.பேசாமல் சென்றுவிட்டாள். பின்னால் இனவாத புலனாய்வு அவளையும் வேவு பார்க்கலாம் ,அப்பாவின் அதிகாரம் வலுவிழந்தாலும் இன்னும் என்ன ஆகும் எதிர்காலம் என்று எண்ணி இருப்பால் போலும்! இந்த நிலையில் ரகுவையும் இன்னும் ஏன் காயப்படுத்துவான் என்று போனாலோ!
மேல் படிப்பு படிக்கவும் அல்லது அவள் தேகத்தையும் காமப்பேய்கள் மேய்ந்துவிடக்கூடும் என்ற பயத்தில் வேற ஊர் போனாலோ
புலம்பெய்ர்ந்து போனாலோ!
விடையே இல்லை!!!
விழியில் வலி தந்தவனே
விரும்பியபோது விலகினாய்
வழியில் வந்தாய் வன்னி வீதியில்
விடையில்லாத வேள்வித்தீ
வீழ்ந்த போது!
வருந்துகின்றேன்
விழியில் வலி தந்தவள்
விவசாயி மகன் விடுதலைகண்டு ஆனந்தம்.
விழிகள் பின்னே என்னையும் வேலி போடுகின்றது
வருந்திவிடாதே!
விரும்பும் உன் வருகை கண்டேன்
வாழ்வோம் இன்னொரு ஜென்மத்தில்!
அதுக்கு பிறகு ரகு சுகியை சந்திக்கவே இல்லை !
வழிமேல் விழிவைத்து விருப்புடன் காத்து இருக்கின்றான் ரகு விழியில் வலி தந்தவள் வருவாள் என்ற எதிர்பார்ப்பில்! அவள் வருவாளா ??,அவன் சேர வேண்டி பிரார்த்திக்கும் கடல்கடந்தவன் நண்பன் இவன்!இந்தப்பாடலுடன் விடைபெறுகின்றான் வன்னிக்களத்தில் இருந்து!
(முற்றும்)
கருத்துகள்
கருத்துரையிடுக