பிங்கல நிகண்டு - பாகம் 4


இலக்கண நூல்கள்

Back

பிங்கல நிகண்டு - பாகம் 4
பிங்கலமுனிவர்



பிங்கலமுனிவர் செய்த
பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு" - பாகம் 4
(சூத்திரங்களும் அவற்றின் பெயர்ப்பிரிவும்)

Source:
பிங்கலமுனிவர் செய்த
பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு"
இஃது இன்ஸ்பெக்டிங் இஸ்கூல் மேஷ்டர் பென்சனர்
வீராட்சிமங்கலம் தமிழ்ப்புலவர் தி. சிவன்பிள்ளை
பல பிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து இயற்றிய உரையோடும்,
கவர்னர்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவராயிருந்த
சோடசாவதானம் தி-க. சுப்பராயசெட்டியார் முன்னிலையிலும் பரிசோதித்து,
மேற்படி சிவன்பிள்ளையால் காஞ்சி-நாகலிங்க முதலியாரது
சென்னை: இந்து தியலாஜிகல் யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
விகுர்தி வருடம் ஆவணி மாதம்
Registered Copy-right., 1890.
---------------------------

பிங்கல முனிவரின் பிங்கல நிகண்டு
நான்காம் பாகம் (சூத்திரங்கள் 3031 – 4121)

(சூத்திரங்களைத் தொடர்ந்து அவற்றின் பெயர்பிரிவு கொடுக்கப்பட்டுள்ளது)

பத்தாவது ஒருசொற்பல்பொருள்வகை 3031- 4121

அகரவருக்கம்

3031 அகப்பா - புரிசையு முள்ளுயர் நிலமு மகப்பா. (1)

3032 அகம் - மனமு முள்ளு மனையும் பாவமும் - புவியு மரப்பொதுப்பெயரு மகமே. (2)

3033 அகலுள் - ஊரு நாடு மகலு ளாகும். (3)

3034 அகி - அரவு மிரும்பு மகியென லாகும். (4)

3035 அக்காரம் - ஆடையுஞ் சருக்கரையு மக்கார மாகும். (5)

3036 அக்கு - வளைமணியேற்றின் முரிப்பிவை யக்கெனல். (6)

3037 அங்கணம் - தூம்பு வாயிலு முன்றிலு மங்கணம். (7)

3038 அங்கதம் - அரவு தோளணி வசையிவை யங்கதம். (8)

3039 அங்கம் - யாக்கையு முறுப்புஞ் சயனமு மங்கம் . (9)

3040 அங்கி - அனலுஞ் சட்டையு மங்கியாகும். (10)

3041 அசனம் - பசியுங் கொழுப்பும் பகுதியு மளவும் – வேங்கைமரமு முணவு மசனம். (11)

3042 அச்சம் - அகத்தியும் பயமு மச்ச மாகும். (12)

3043 அஞ்சலி - தொழுதலும் வாவற் பறவையு மஞ்சலி. (13)

3044 அஞ்சனம் - காள நிறனு மையுந் திசைகளின் – யானையிலொன்று மஞ்சன மாகும் (14)

3045 அடல் - வலியுஞ் செருவு மடலென் றாகும். (15)

3046 அடி - முதலுங் காலு மொறுத்தலு மடியெனல். (16)

3047 அடுப்பு - தரும நாளு முத்தானமு மன்றி - யச்சப்பெயருமடுப்பென லாகும். (17)

3048 அடை - இலையுங் கனமும் விலையும் வழியு – மப்பமுமற்றிவை யடையென லாகும் (18)

3049 அணங்கு - தெய்வமுந் தெய்வத் துவமைசொன் மாதரு – மைய னோயும் வருத்தமுங் கொலையு - மழகு மாசையு மணங்கென்றாமே. (19)

3050 அணி - படையின துறுப்பு மொப்பனையு மழகும் - பெருமையுங் கலனு மன்பு மணியெனல் (20)

3051 அணு - உயிரு நுண்மையு மணுவென லாகும். (21)

3052 அணை - விடயமுஞ் சேதுவு மெத்தையுஞ் சயனமு – மணையென மொழிப வறிந்திசி னோரே. (22)

3053 அண்டசம் - அரவு தவளை முதலை யாமை - யானை யுடும்புமீ னோந்தியும் பறவையும் - பல்லியு மிப்பியு மண்டச மென்ப. (23)

3054 அண்டம் - அண்ட முட்டையு மாகா யமுமே (24)

3055 அண்டர் - உயர்நிலையும்ப ரொன்னல ருடனே - இடைய ரண்ட ரென்ன லாகும் (25)

3056 அத்தம் - ஒருநாண் மீனு மொள்ளிய பொன்னு – மருநெறியுங் கண்ணாடியும் பாதியுங் - கரமும் பகர்சொற் பொருளு மத்தம். (26)

3057 அத்தி - யானையு மொருமரப் பெயரு மென்பு – மார்கலிப்பெயரு மத்தியென் றாகும் . (27)

3058 அத்து - அரைப்பட் டிகையுந் துன்னமு மசைச்சொலுஞ் – செந்நிறமும்மிவை தெரியிலத் தென்ப. (28)

3059 அத்தை - அசைநிலைச் சொல்லுங் குருவு மத்தை. (29)

3060 அந்தம் - அழகு மீறு மந்த மென்ப. (30)

3061 அந்தரம் - அந்தரமேகந் தளியாகாயம் - இறுதி திமிரங் கூட்டமாகும். (31)

3062 அந்தரி - அம்பிகைப் பெயருந் துர்க்கையு மந்தரி. (32)

3063 அந்தி - பாலையாழ்த் திறத் தோரிசைப் பெயரு – மாலைக்காலமு மற்றிவை யந்தி. (33)

3064 அபரம் - நரகமும் பொய்யும் பிறகு மபரம். (34)

3065 அமரர் - அடையலர் பெயருந் தேவரு மமரர். (35)

3066 அமலம் - அமல மழுக்கின்மையு மறிவு மழகும். (36)

3067 அமுதம் - சுவைபா னீர்மை சோறு தெய்வ - வுணவு நீர்மோக்க முப்பு மமுதம். (37)

3068 அமை - அமை அழகு மூங்கிலு மமைவு மமையே. (38)

3069 அம்பணம் - அளவை காராம்பி கதலி யம்பணம். (39)

3070 அம்பரம் - அம்பரங் கடலுமா டையுமா காயமும். (40)

3071 அம்பல் - சிலரறிந்து புறங்கூறலும் பழறிமொழியு மம்பல். (41)

3072 அம்மை - அழகும் வருபிறப்புந் தாயு மம்மை. (42)

3073 அயம் - அயமென் கிளவி யாடு மிரும்புங் - குளமு நீருங் குதிரையுங் கூறுவர். (43)

3074 அயிராவதம் - அயிராவதந்திசை யானையி லொன்றும் - புரந்தரன் யானைப் பெயரும் புகலும். (44)

3075 அயில் - வேலுங் கூர்மையு மயிலென விளம்புவர். (45)

3076 அரணம் - காடு மெயிலுங் கவசமு மரணம். (46)

3077 அரண் - காவல் வேல் காவற் காடிவை யரணே. (47)

3078 அரத்தம் - கடம்புஞ் சுடுவனுங் கழுநீர்ப் பெயரு - மரக்குஞ் செந் நிறமு மரத்த மாகும். (48)

3079 அரந்தை - குறிஞ்சியா ழிசையுந் துன்பமு மரந்தை. (49)

3080 அரம்பை - அரம்பை தெய்வப்பெண் வாழையு மாகும். (50)

3081 அரலை - கழலை வீசங் கற்றாழை யரலை. (51)

3082 அரவம் - அரவநூ புரமும் பாம்பு மோசையுமாம். (52)

3083 அரற்றல் - அழுகையு மொலித்தலு மரற்ற லென்ப (53)

3084 அராகம் - முடுகியல் செந்நிறம் பாலை யாழ்த்திற - மாடகந் தக்கராக மராகம். (54)

3085 அரி - கிண்கிணிப் பரலுங் கிளரொளியும் பன்றியு – மிந்தி ரனும் வண்டும் பாம்புங் குரங்குங் - குதிரையுங் கிளியுந் தவளையு மூங்கிலுந் - திகிரியு நிறமுஞ் சிங்கமுந் தேருஞ் - சயனமுங் கண்ணின் வரியுந் துயிலு - மியமனு நெருப்புங் காற்றும் புகையும் - பகையுஞ் சேகும் பறையு மதுவு - மதியும் ஞாயிறும் பஞ்சா யுதனும் - பொள்ளலும் பௌவமும் பொன்னும் பசுமையும் - வரையு மைம்மையுஞ் செந்நெற் கதிருஞ் - சோலையும் படைக்கலப் பெயரும் விசியு - மரிசியும் வரியு மரியென லாகும் (55)

3086 அரிட்டம் - காகமுங் கள்ளும் பிறவியின் குற்றமு – மரிட்ட மென்ப வறிந்திசி னோரே (56)

3087அருணம் - ஆடு மானு மருண மென்ப (57)

3088 அருணன் - அருணனருக்கனு மவன்றேர்ப் பாகனும் – புதனு மென்னப் புகலப் பெறுமே (58)

3089 அருப்பம் - ஊர்ப்பொதுப்பெயருமொருபெரும் பிணியு - மடவியின் பெயரு மருப்ப மென்ப (59)

3090 அருவி - மலையின்வீழ் புனலுந் தினைத்தாளு மருவி (60)

3091 அலகு - பலகறையு நுளம்பு மளவு மலகெனல் (61)

3092 அலங்கல் - பூவின் மாலையுந் தளிரு மசைவு - மிரங்கலு மொளிர்தலு மலங்க லாகும் (62)

3093 அலரி - அலரி மலருந் தப*னனு மழகுங் - கண்வரி யோர்மரம் என்மனார் புலவர் (63)

3094. அலர் - பழிமொழி யும்பல ரறிந்தலர் தூற்றலு - மலரு மகிழ்வு மலரென்றாகும். (64)

3095. அலை - அலையே கொலையுந் திரையு மாகும். (65)

3096. அல் - இரவு மிருளு மிவையல் லாகும். (66)

3097. அல்கல் - அல்க லென்பது தங்கலு நாளும். (67)

3098. அல்லி - வெண்ணிற வாம்பலுங் காயா மரமு - மகவித ழும் மிவை யல்லியென் றாகும். (68)

3099. அவந்தி - கிளியு முஞ்சைப் பதியு மவந்தி. (69)

3100. அவலை - காடுங் கடுப்பு மவலையின் கண்ண. (70)

3101. அழனம் - அழலும் பிணமு மழன மென்ப. (71)

3102. அழுக்காறு - பொறாமையு மனத்தழுக்கு மழுக்கா றென்ப. (72)

3103. அளகம் - அளகம் புனலு மயிரு மாகும். (73)

3104. அளக்கர் - கடலும் புவியுங் கார்த்திகை நாளு - மளமுஞ் சேறுமளக்க ரென்ப. (74)

3105. அளறு - நரகமுஞ் சேறு மளறென நவில்வர். (75)

3106. அளி - அறுபதமு மன்புங் கள்ளு மளியெனல். (76)

3107. அளித்தல் - கொடுத்தலுங்காத்தலுஞ் செறித்தலு மளித்தல். (77()

3108. அளை - வளைதயிர் புற்று மளையா கும்மே. (78)

3109. அறல் - அறுதியு மப்பு மறலென மொழிப. (79)

3110. அறுவை - ஆடை சித்திரை நாளிவை யறுவை. (80)

3111. அனந்தம் - அளவில் பொருளும் பொன்னு மனந்தம். (81)

3112. அனந்தன் - நாலிரு தெய்வ வரவிலொன்றும் நான்முகனருக - னாதியரன்மால் - சேடனநந்தனென்றிசி னோரே. (82)

3113. அனலி - தினகரன் பெயருந்தீப்பெயரு மனலி. (83)

3114. அன்றில் - அசுர நாளுமோர் பறவையும் மன்றில். (84)

3115. அன்னம் - அடிசிலு மெகினமு மன்னமாகும். (85)

3116. அன்னை - தாயு முன்பிறந் தாளுமன்னை. (86)

ஆகரவருக்கம்

3117. ஆகம் - யாக்கையு மார்பு மாகமென்றுரைப்பர். (87)

3118. ஆகாரம் - அசனமுநெய்யும் படிவமு மாகாரம். (88)

3119. ஆகு - எலியும் பெருச்சாளியு மாகு வாகும். (89)

3120. ஆகுலம் - வருத்தமுஞ் சத்த வொலியு மாகுலம். (90)

3121. ஆக்கம் - ஆக்கஞ் செல்வ முந்திருமகளு மாகும். (91)

3122. ஆசாரம் - ஆடையு மொழுக்கமு மறாப்பெரு மழையு - மரசர்வாழ் கூடமு மாசார மாகும். (92)

3123. ஆசினி - ஈரப் பலாமரச் சேகிவை யாசினி. (93)

3124. ஆசு - மெய்புகு கருவியுஞ் சடுதியுங் குற்றமு - மற்பமு மோர்கவியு மாசென லாகும். (94)

3125. ஆசை - ஆர்வமும் பொன்னுந் திசையு மாசை. (95)

3126. ஆடல் - உரையுங் கூத்தும் வெற்றியு மாடல். (96)

3127. ஆடவர் - ஆண்பெய ரிளையோ ரென்றிவ ராடவர். (97)

3128. ஆடி - வாய்ந்த கண்ணாடியு மாதத் தொன்று - மாய்ந்தவுத் தராடமு மாடி யாகும். (98)

3129. ஆடு - மேடமும் வெற்றியு மாடா கும்மே. (99)

3130. ஆணை - ஏவன் மெய்ப்பாடே விறல்செய றடுத்தல் - சூளுறவு மிலாஞ்சனையு மாணை யாகும். (100)

3131. ஆண்மை - வலியும் வென்றியும் வாய்மையு மாண்மை. (101)

3132. ஆதி - ஆதி பழமையு மரனு மாலு - முதலு நேரோட்டமு மொழியப் பெறுமே. (102)

3133. ஆம்பல் - இசையின் குழலுங் கள்ளு மூங்கிலு - மல்லியும் யானையு மாம்ப லாகும். (103)

3134. ஆரம் - சந்தன மணிவடந் தரளம் பதக்க - மாபரணப் பொதுவு மார மாகும். (104)

3135. ஆரல் - கார்த்திகை நாளு மொருமீன் பெயரு - மங்கா ரகனு மதிலு மாரல். (105)

3136. ஆரவாரம் - ஆகுலமுந் துக்கமு மாரவார மாகும். (106)

3137. ஆரை - புரிசைபுற் பாயோர் புதலு மாரை. (107)

3138. ஆர் - ஆர்வுங் கூர்மையு மாத்தியு மாரெனல். (108)

3139. மற்றும்ஆர் - தேராழி யகத்திற் செறியுறுப்பு மாகும். (109)

3140. ஆர்தல் - அணிதலு நிறைதலு முண்டலு மார்தல். (110)

3141. ஆர்ப்பு - அமருஞ் சிரிப்பு மார்ப்பென லாகும். (111)

3142. ஆர்வம் - ஆசையு நரகத் தொன்று மார்வம். (112)

3143. ஆர்வலர் - காதலர் வேட்டோர் கனிந்தோ ரார்வலர். (113)

3144. ஆலம் - பூவு நீரு மொருமரப் பெயரு - மாழ்கடல் விடமு மாலமாகும். (114)

3145. ஆலவன் - அம்புலிப் பெயரு மாசையு மாலவன். (115)

3146. ஆலாலம் - அலர்ந்த பூவு நீருமோர் மரமு - மலைகடல் விடமும் வாவலு மாலாலம். (116)

3147. ஆலி - துளியு நீர்கொளாலங் கட்டியு - மழையு மாலி யெனவகுத்தனரே (117)

3148. ஆலயம் - யானைக் கூடமு நகரமுந் தேவர் - கோட்டமு மாலயமென்னக் கூறும் (118)

3149. ஆவணம் - உரிமை யங்காடி தெருவு புனர்பூச – மிவையொரு நான்கு மாவண மென்ப. (119)

3150. ஆவலர் - காதலர் வேட்டோ ராவல ராகும். (120)

3151. ஆழி நேழி - சாகரந் தேர்க்கால் சக்கரம் வட்ட - மோதிர மென்ன மொழிந்தவை யைந்து - நேமியு மாழியு மெனநிகழ்த் தினரே. (121)

3152. ஆறு - வழியு நதியுமோ ரெண்ணு மாறெனல். (12)

3153. ஆற்றல் - வலியும் வென்றியும் வாய்மையு மாண்மையு - மிகுதியும் பரித்தலு ஞானமும் பொறையுங் - கூட்டுதலும்மிவை யாற்ற லாகும். (123)

3154. ஆனி - அழிவு மூலமு மானியென் றாகும். (124)

இகரவருக்கம்

3155. இகத்தல் - பொறுத்தலு நடத்தலு மிகத்த லாகும். (125)

3156. இகல் - பகையும் வலியு மமரு மிகலெனல். (126)

3157. இருளை - சுற்றமுந் தோழியு மிகுளை யென்ப. (127)

3158. இசை - இசையே புகழு மொழியு நாதமும். (128)

3159. இடக்கர் - குடத்தின் பெயரு மறைமொழியு மிடக்கர். (129)

3160. இடம் - வீடும் வலியும் படுப்பது மிடமெனல். (130)

3161. இடி - உறுதிமொழி பிண்டி யுருமு மிடியே. (131)

3162. இடை - இடமு நுசுப்பு நடுவு மிடையெனல். (132)

3163. இந்தளம் - நெருப்பிடு கலனு மிசையு மிந்தளம். (133)

3164. இபம் - மரத்தின் கொம்பும் யானையு மிபமெனல். (134)

3165. இரசதம் - அரைப்பட் டிகையும் வெள்ளியு மிரசதம். (135)

3166. இரதம் - புணர்ச்சியுஞ் சூதமு மளியுந் தேரு – மரையாணுஞ் சுவைவு மிரத மென்ப. (136)

3167. இரலை - இரலைக் கிளவி மானி னேறுந் - தலைநாளு மூதுங் கொம்பு மாகும். (137)

3168. இரவி - மலையு மருக்கனும் வாணிகத் தொழிலு - மிரவி யாமென் றிசைக்கப் படுமே. (138)

3169. இராகம் - இசைநிறங் கீதஞ் செம்மையு மிராகம். (139)

3170. இருள் - நரகமு மயக்கமுங் கருமையு மிருளெனல். (140)

3171. இரௌரவம் - ஆகமத்தொன்றுநரகு மிரௌரவம். (141)

3172. இலஞ்சி - மகிழ்மரங் கொப்பூழ் மடுவிவை யிலஞ்சி. (142)

3173. இலம்பகம் - நுதலணி யத்தி யாயஇ மிலம்பகம். (143)

3174. இலாங்கலி - நாளிநேரமுஞ் செங்காந்தளு மிலாங்கலி. (144)

3175. இலையம் - கூத்துங் கூத்தின் விகற்பமு மிலையம். (145)

3176. இல் - மனையுங் குடியு மில்லை யென்றலு - மிடமு மிராசியு மில்லென்றாகும். (146)

3177. இழுக்கு - பிழைத்தல் பொல்லாங் கிவையிழுக் காகும். (147)

3178. இளி - யாழினோர் நரம்புஞ் சிரிப்பு மிளியெனல். (148)

3179. இறப்பு - மிகுதியு மரணமும் போக்கு மிறப்பே. (149)

3180. இறால் - எரிநா டேன்கூ டெருதுமீ னிறாலே. (150)

3181. இறும்பு - குன்றுங் காடு மிடைதூறு மிறும்பே. (151)

3182. மற்றும் இறும்பு - தாமரை நறுந்தண் பூவுஞ் சாற்றும். (152)

3183. இறை - சிறந்தோன் பெயருஞ் செம்மையுஞ் சிறுமையுந் - தலைவனுந் தலைமையும் பெருமையுந் தங்கலு - மயனு மரனு மாதியின் பெயரும் - புள்ளி னிறகுங் கடனும் வரையு - மில்லி னிறப்புங் கடமையு மிறையே. (153)

3184. இறைவை - ஏணியும் புட்டடிலு மிறைவை யாகும். (154)

ஈகாரவருக்கம்

3185. ஈகை - ஈங்கையும் கொடுத்தலும் பொன்னு மீகை. (155)

3186. ஈழம் - இரணியஞ் சிங்கள மீழ மாகும். (156)

உகரவருக்கம்

3187. உஞற்று - உற்சாகமுந் தப்பு முஞற்றென மொழிப. (157)

3188. உடல் - யாக்கையு மாட கமும்முட லென்ப. (158)

3189. உடு - அம்பு மாடு மம்புத் தலையு - மொளிவான் மீனுங் கிடங்கு நாவா - யோட்டுங் கோலு முடுவென லாகும். (159)

3190. உடை - உடுக்கையுஞ் செல்வமுங் குடைவேலு முடையே. (160)

3191. உணர்வு - அறிவுந் தெளிவு மொழிவு முணர்வெனல். (161)

3192. உண்டை - படையின் வகுப்புந் திரட்சியு முண்டை. (162)

3193. உத்தரம் - வடக்குமே லூழித்தீ வார்த்தையு முத்தரம். (163)

3194. உத்தி - உரக படப்பொறி சுணங்குரையாட - லோர் திருவுறுப்பு முத்தி யாகும். (164)

3195. உத்திரம் - உத்திர மென்ப வோர்நா ளுடனே - சித்திர மாளிகை சேர்ந்ததோ ருறுப்பே. (165)

3186. உந்தி - பேதையர் விரும்பியாடலு நீரு - நீரின் சுழியுந் தேரின்றட்டு - நாபியிங் கடலு நதியும் யாழி - னோது முறுப்பு முந்தி யாகும். (166)

3187. உப்பளம் - அளமுங் கழிநிலமு முப்பள மாகும். (167)

3198. உப்பு - வேலையு மதனில் விளையும் விளையாட்டு - மோது முவருமினிமையு முப்பே. (168)

3199. உம்பர் - உயர்நிலை யோரு மிசையு மும்பர். (169)

3200. உம்பல் - யானையும் விலங்கி னாண்பாற் பெயருங் – குடியும் வழித்தோன்றலு மும்பலாகும். (170)

3201. உயவை - கான்யாற்றுப்பெயர் கருவிளை யுயவை. (171)

3202. உரம் - வலிமார் பூக்க ஞானந் திடமுரம். (172)

3203. உரை - சத்தவொலி விருத்தி யுரைத்தலு முரையே. (173)

3204. உலகம் - உலகம் புவி திசை யுயர்குண மாமே. (174)

3205. உலகு - அவனி திசையா காய முயர்ந்தோர் - குலமிவை யுலகெனக் கூற லாகும். (175)

3206. உலக்கை - ஓண நாளு முரோங்கலு முலக்கை. (176)

3207. உலவை - மாக்களின் மருப்பு மரமு மரத்தின் - கோடுங் காற்று முலவையின் கூற்றே. (177)

3208. உவளகம் - பிரிதலு மிடையர் சேரியு மதிலு - மொருசிறை யிடமு மெயிலுறுப்பும் பள்ளமும் - வாவியும் விசாலமு முவளக மாகும். (178)

3209. உவா - அநுமதி யானை யிளையோ னுவாவெனல். (179)

3210. உழை - இடமும் மானும் யாழ்நரம் பும்முழை. (180)

3211. உளை - ஆண்பான் மயிரு மஃறிணை மயிரும் - பரியின் கழுத்தணி மயிரு மிசையுஞ் - சத்த வொலியு முளையென லாகும். (181)

3212. உறுகண் - துக்கமு நோயு முறுக ணென்ப. (182)

3213. உறுவன் - அசோகமர் கடவுளு முனிவலு முறுவன். (183)

3214. உறை - நீர்த்துளி முதலாந் துளியு நீணோய் - போக்கு மருந்தும் பொருளும் போர்வையும் - வெண்கலப் பெயரும் விழுமமும் பெருமையு - மெண்குறிப் பெண்ணிப் பொலிந்துழி யிடுவதும் - பாலுறு பிரையுங் காரமு முணவுங் - குறையுவர் நீரும் படையின் கூடு - மோரிடைச் சொல்லும் வாழ்நாளு முறையெனல். (184)

3215. உறையுள் - ஊர்ப்பொதுப் பெயரு மகாரமு முறையுள். (185)

3216. உன்னல் - மனமு நினைவு முன்ன லாகும். (186)

ஊகாரவருக்கம்

3217. ஊக்கம் - உற்சாகம் வலிமன மிகுதி யூக்கம். (187)

3218. ஊழ் - பழமையு மரபும் பகையு மூழெனல். (188)

3219. ஊறு - தீதுங் கொலையுந் தீண்டலு மூறெனல். (189)

3220. ஊனம் - பிணமுங் கேடு மூன மாகும். (190)

எகரவருக்கம்

3221. எகினம் - அன்னமுங் கவரிமாவு மாண்மரமு நாயும் – புளியும் புளிமரப் பெயரு மெகினம். (191)

3222. எக்கல் - குவித்தலுஞ் சொரிதலு மெக்க லென்ப. (192)

3223. எருவை - கழுகுஞ் செம்புங் கொறுக்கையு மெருவை. (193)

3224. எலி - ஆகுவு மதுவும் பூரநா ளும்மெலி. (194)

3225. எல் - நல்லொளிப்பெயரு ஞாயிறும் பகலு - மெல்லியு மிகழ்ச்சியு மெல்லென வைப்பர். (195)

3226. எறுழ் - தண்டாயுதம் வலி யெறுழா கும்மே. (196)

3227. என்றூழ் - விரிகதி ரவனும் வெயிலு மென்றூழ். (197)

ஏகாரவருக்கம்

3228. ஏதம் - குற்றமுந் துன்பமு மேத மாகும். (198)

3229. ஏதி - ஆயுதமுந் துண்டமும் வாளு மேதி. (199)

3230. ஏந்தல் - பெருமையு முயர்வுந் தலைவனு மேந்தல். (200)

3231. ஏமம் - இன்பமு நீறும் பொன்னுங் காவலு - மிரவுஞ் சேமமு மேமாப்பு மயக்கமு -மென்பன வேமப் பெயரென வாகும். (201)

3232. ஏரண்டம் - ஆமணக் குஞ்சித் திரமுமே ரண்டம். (202)

3233. ஏல்வை - மடுவும் பொழுது மேல்வையென் றாகும். (203)

3234. ஏறு - விடையு மெருதும் விலங்கினாண் பெயரு - மிடியு முதனா ளேறெனப் படுமே. (204)

3235. எனல் - தினைப்புனமுந் தினையு மேன லாகும். (205)

3236. ஏனாதியர் - மந்திரிப் பெயருஞ் சேனைகாப் போரு – மறவரு மயிர்வினை ஞருமேனாதியர். (206)

ஐகரவருக்கம்

3237. ஐயம் - பொழுதும் பிச்சையும் பிச்சைகொள் கலனு – மனுமானமுமிவை யையமென் றாகும். (207)

3238. ஐயன் - வானோர் முனிவர் மறையவ ராசான் - சாத்தன் மூத்தோன் றகப்பனு மையன். (208)

3239. ஐயை - ஆரியை விந்தை யலகைக் கொடியா - ளாசா ரியன்பெரு மாட்டி யுமையை. (209)

ஒகரவருக்கம்

3240. ஒண்மை - அழகு நன்று மறிவு மொண்மை. (210)

3241. ஒலி - ஓசையு முருகுங் காற்று மொலியே. (211)

3242 ஒலியல் - அதழு மாடையு மாலையும் மாறு - மொலிய லென்னு மொண் பெயர் பெறுமே. (212)

3243. ஒழுக்கம் - வழியுங் குலமுமா சாரமு மொழுக்கம். (213)

3244. ஒளி - ஆதவன் மதிபுகழ் விளக்குட னொளிப்பிட – மோதுங் கனலுங் கேட்டையு மொளியெனல். (214)

3245. ஒளிவட்டம் - சக்கரங் கண்ணாடி தானொளி வட்டம். (215)

ஓகாரவருக்கம்

3246. ஓங்கல் - மலையுந் தலைவனும் வலியோன் பெயரி – முயர்வுமேடு மூங்கிலு மோங்கல். (216)

3247. ஓடை - நீர்நிலைப் பெயரு மகழுங்கிரிநெறியு - மரமும் பட்டமு மற்றிவை யோடை. . (217)

3248. ஓட்டம் - ஓட்டமே லுதடுந் தோல்வியு முரைக்கும். (218)

3249. ஓணம் - மாயோ னாளும் வருபுன லாறு - மோணமென்ப ருணர்ந்திசி னோரே. (219)

3250. ஓதம் - ஈரமுங் கடலின் றிரையுங் கடலு - மோத மென்னும் பெயர்க்குரி யனவே. (220)

3251. ஓதனம் - உணவுஞ் சோறு மோதன மென்ப. (221)

3252. ஓதி - மலையும் பெண்பான் மயிரும் பூசையு - மோதினவன் பெயரு மோதியென் றுரைப்பர். (222)

3253. ஓதை - புரிசையு முள்ளுயர் நிலமு மகர - மாதியின் சத்தமு மொலியு மோதை. (223)

3254. ஓரி - அரிவையர் மயிரொழித் தெல்லா மயிரு - முதுநரியு முசுவும் விலங்கின் சேக்கையு - மோரி யென்பரோர் வள்ளலு முரைக்கும். (224)

3255. ஓரை - மகளி ரீட்டமு மற்றவ ராடலு - மவர்விளை யாடுங் களமுமிராசியு - மோரிடைச் சொல்லுங் குரவையு மோரை. (225)

3256. ஓலம் - ஒலியும் பாம்பு மோல மென்ப. (226)

3257. ஓவியம் - கண்ணா ளருஞ்சித் திரரு மோவியர். (227)
--------------

3258. ககனம் - காடுஞ் சேனையும் வெளியுங் ககனம். (228)

3259. கங்கம் - பருந்துஞ் சீப்புங் கங்க மென்ப. (229)

3260. கங்கு - கருந்தினை யும்வரம் பினருகுங் கங்கெனல். (230)

3261. கசடு - குற்றமு மழுக்கு மையமுங் கசடே. (231)

3262. கச்சம் - கவடு மளவையுங் காலுங் கச்சம். (232)

3263. கச்சை - கயிறு மெய்புகு கருவியுந் தழம்புங் - கச்சை யென்று கருதப் படுமே. (233)

3264. கஞறல் - சிறுமையும் பொலிவுங் கஞற லென்ப. (234)

3265. கஞ்சம் - தாளம் வெண்கலந் தாமரை குல்லை - கஞ்சமென்ப ரப்பமுங் கழறுவர். (235)

3266. கடகம் - வட்டமு மதிலு மலையின் பக்கமுஞ் - சேனையு மூரு மோரா றெண்ணுங் - கங்கணப் பெயரும் பலகையுங் கடகம். (236)

3267. கடம் - அருஞ்சுரப் பெயரும் யாக்கையுங் கயிறுங் – குடமுங் கானமுங் குஞ்சரத் திரளு - மற்றதன் கொடிறு மதமுங் கடமே. (237)

3268. கடல் - மகரா லயமு மளவையிங் கடலெனல். (238)

3269. கடவை - கவரிறுக் கேணி குற்றமுங் கடவை. (239)

3270. கடி - விரைவு கூர்மை வெருவுதல் காவல் - வரைவு சிறப்பு மணத்தொழில் விளக்கம் - புதுமை யைய மிகுதி கரிப்பு - நாற்றங் காலம் பேயிவை கடியே. (240)

3271. கடிகை - கடிகைக் கிளவி நாழிகை கபாடத் – திடுதாள்கண்ட முந்துண்டமு மிசைக்கும். (241)

3272. கடிப்பம் - காதணி யணிகலச் செப்பிவை கடிப்பம். (242)

3273. கடு - ஒருமரப் பெயரும் விடமுங் கடுவெனல். (243)

3274. கடை - இடம்வாயி லாவண மீறுங் கடையே. (244)

3275. கட்சி - காடுங் கூடுங் கட்சி யாகும். (245)

3276. கட்டளை - கட்டளை துலாமு நிறையறி கருவியு - முரையறி கருவியு மளவு மொப்புமாம். (246)

3277. கணம் - கணமென் கிளவி கால நுட்பமுந் - திரளும்பேயுந் திப்பிலியு நோயு - முடுவும் வட்டமுங் கணமென லாகும். (247)

3278. கணி - வேங்கை மரமு மருதமுங் கணியெனல். (248)

3279. கணிச்சி - தோட்டியு மழுவுந் தறிகையுங் கணிச்சி. (249)

3280. கணை - அம்புந் திரட்சியும் பூரநா ளுங்கணை. (250)

3281. கண்டகம் - காடு முள்ளுங் கண்டக மாகும். (251)

3282. கண்டம் - கழுத்து மெய்புகு கருவியும் வாளு - நாடு மிடுதிரையு நவிலுந் துண்டமுஞ் - சருக்கரைப் பெயரும் வெல்லமுங் கண்டம். (252)

3283. கண்டிகை - அணிகலச் செப்பு மக்க மணியும் – வாச்சியத் தொன்றும் பதக்கமுங் கண்டிகை. (253)

3284. கண்டூதி - காஞ்சொறியுஞ் சொறியுங் கண்டூதி யாகும். (254)

3285. கதலி - வாழையுந் தேறுங் கதலி யென்ப. (255)

3286. கதவு - காவலுங் கபாடமுங் கதவென லாகும். (256)

3287. கதுப்பு - ஆண்பெண் மயிரு மாவின் றிரளுங் – கொடிறுங் கதுப்பெனக் கூறப்படுமே. (257)

3288. கதை - காரணந் தண்டா யுதமொழி கதையெனல், (258)

3289. கந்தம் - நாற்றமுங் கிழங்கு மணுவின் கூட்டமுங் – கழுத்தடியு மிந்திரியமுங் கந்தமென்ப. (259)

3290. கந்தரம் - கழுத்து மலைமுழை முகிலுங் கந்தரம். (260)

3291. கந்தருவம் - கானமுங் குதிரையுங் கந்தருவ மென்ப. (261)

3292. கந்து - யாக்கையின் மூட்டு மாதார நிலையுங் - கம்பமும் பண்டியு ளிருசுங் கந்தெனல். (262)

3293. கந்துகம் - பந்துங் குதிரையுங் கந்துக மென்ப. (263)

3294. கமலம் - வனசமும் புனலுங் கமலமெனப்படும். (264)

3295. கம் - சலமும் வெளுப்புந் தலையின் பெயருங் - ககனமும்விதியுங் கம்மென லாகும். (265)

3296. கம்பம் - நடுக்கமுந் தூணு நடுத்தறியுங் கம்பம். (266)

3297. கம்பலை - துன்பமுஞ் சத்தவொலியுங் கம்பலை. (267)

3298. கயம் - குளமு மாழமு நீருங் குறையுங் - களிறும் பெருமையு மேன்மையுங் கயமெனல். (268)

3299. கயில் - பிடர்த்தலை பூணின் கடைப்புணர்வு கயிலே. (269)

3300. கயினி - அத்த நாளும் விதவையுங்கயினி. (270)

3301. கரகம் - துளியு மாலாங் கட்டியுங் கங்கையுங் - கமண்டலமுநீருங் கரக மாகும். (271)

3302. கரணம் - காரணமுங் கூத்தின் விகற்பமு மனத்தின் - பகுதியுங் கணிதமுங் கரணமெனலாகும். (272)

3303. கரண்டம் - அணிகலச் செப்புநீர்க் காக்கையுங் கரண்டம். (273)

3304. கரம் - கழுதைகை கிரண நஞ்சிறை கரமெனல். (274)

3305. கரிணி - கரியும் பிடியுங் கரிணி யென்ப. (275)

3306. கரில் - காழ்த்தலுங் குற்றமுங் கொடுமையுங் கரிலெனல். (276)

3307. கரீரம் - அகத்தி மிடாவே யானைப் பல்லடி - கரீரமென்று கருதப் படுமே. (277)

3308. கலாபம் - மேகலை யும்மணிக் கோவையு மயிலின் - றோகையுங் கலாபமெனச் சொல்லப் படுமே. (278)

3309. கலாம் - கொடுமையுஞ் சினமுங் கலாமென லாகும். (279)

3310. கலி - வலியு மொலியுங் கடலுமோர் பாவுங் - கடையுகப் பெயருங் கலியென் றுரைப்பர். (280)

3311. கலிங்கம் - வானம் பாடிப் புள்ளு மாடையு - மூர்க்குருவிப் பெயரு மோர்நாடுங் கலிங்கம். (281)

3312. கலை - மகரமுந் துகிலு மரத்தின் கவடும் - பிறைநிரம் புதலு மாண்முசுப் பெயரு - மானி னேறுங் கல்வியுஞ் சேகுங் - கால நுட்பமு நூலுங் கலையெனல். (282)

3313. கல் - அருவியினோசையுஞ் சிலையுங் கல்லெனல். (283)

3314. கவடு - புரோசைக் கயிறுங் கப்புங் கவடு. (284)

3315 கவந்தம் - புனலுஞ் செக்கும் புகன்றிடு கடியுந் - தலைக்குறைப் பிணமுங் கவந்த மாகும் (285)

3316 கவலை - கவர்நெறி யச்சஞ் செந்தினை கவலை (286)

3317 கவனம் - காடும் விரைவுங் கவன மென்ப (287)

3318 கவி - குதிரை வாய்பெய் கருவியுங் குரங்கும் – புலமை யிலொன்றும் வெள்ளியுங் கலியெனல் (288)

3319 கவிகை - குடையுங் கொடுத்தலுங் கூறுப கவிகை (289)

3320 கவை - எள்ளிளங் காயு மாயிலிய நாளுங் - கவருங் காடுங் கவையென லாகும் (290)

3321 கழி - நுகத்தொளை கோப்பது மிகுதிப் பெயருங் - கடற்புறத் தமர்வதுங் கழியென்றாகும் (291)

3322 கழிவு - காலி மிகுதியுங் கழிவெல லாகும் (292)

3323 கழுது - பேயும் வண்டும் பரணுங் கழுதே (293)

3324 கழை - கரும்பு மூங்கிலும் புனர்தமுங் கழையெனல் (294)

3325 களபம் - களபமும் யானைக் கன்றுங் களபம் (295)

3326 களம் - கருநிற முஞ்செருக் களமுங் கழுத்துங் – களரும்விடமு மிடமுங் களமே. (296)

3327 களரி - காடுஞ் செருச்செய் களமுங் களரி (297)

3328 களிறு - ஏனமுஞ் சுறாமுத லிவற்றி னேறும் - யானையு மத்த நாரூங் களிறே (298)

3329 கள் - மதுவுந் தேனுஞ் சோர்வுங் கள்ளாம் (299)

3330 கள்வன் - கடகரிப் பெயருங் கருநிற மகனுங் - கர்க்கடக விராசியு ஞெண்டுங் கள்வன் (300)

3331 கறங்கு - சத்த வொலியுஞ் சுழலுங் கறங்கே (301)

3332 கறுப்பு - கருநிற முஞ்சினக் குறிப்புங் கறுப்பே (302)

3333 கறை - உதிரமு மாசு முரலு நிறமுங் - கடுவு மிறையுங் கருமையுங் கறையே.(303)

3334 கனம் - பாரமு மேகமுங் கனமெனப்படுமே (304)

3335 கனலி - தினகரனு மங்கியுங் கனலி யென்ப (305)

3336 கன்று - ஆன்கன் றினமுஞ் சிறுமையுங் கையின் - வளையு மிளைய மரமுங் கன்றே (306)

3337 கன்னல் - நாழிகையு நாழிகை வட்டிலுங் கட்டியுங் – கரகமுங் கரும்புங் கன்னலென் றாகும் (307)

3338 கன்னி - அழிவின் மாதரு மழிவில் பொருளு - மிளைமையு மத்த நாளு மிராசியுங் - கவுரியுந் துர்க்கையும் யாறுங் கன்னி (308)

3339 கா - சோலையுந் தோட்சுமையுந் துலாமுங் காவெனல் (309)

3340 காகுளி - இசைமிடற் றோசை தவிசிவை காகுளி (310)

3341 காசு - குற்றமு மணியுங் கோழையுங் காசே (311)

3342 காசை - நாணல் புற்பிடி காசையென்ப (312)

3343 காஞ்சி - ஒருமரப் பெயரு மோரிசைப் பெயருங் – கச்சிப்பதியு மேகலையுங் காஞ்சி (313)

3344 காடு - கானு மிடமுங் காடெனலாகும் (314)

3345 காண்டம் - இடுதிரைப் பெயரும் படலமுங் காண்டம் (315)

3346 காண்டை - தவத்தோ ரிடமுங் கற்பாழியுங் காண்டை (316)

3347 காத்திரம் - யாக்கையு முறுப்பும் யானைமுன் காலுங் – சீற்றமுங் கனத்தலுங் காத்திர மாகும் (317)

3348 காந்தாரம் - காடுமோரிசையுங் காந்தாரமாகும் (318)

3349 காப்பு - புரிசையு முள்ளுயர் நிலமுங் காப்பெனல் (319)

3350 காமரம் - இசையிசைப் பொதுப்பெயரடுப்புபுங் காமரம் (320)

3351 காயம் - காழ்த்தலும் யாக்கையுங் காயமென்ப (321)

3352 காரி - வடுகக் கடவுளுஞ் சனியுஞ் சாத்தனுங் – கருமையுமொரு புள்ளுங் காரி யாகும் (322)

3353 கார் - கருதிய கருமங் கடைமுடி வளவுந் - தவிராச் சினமும் வெள் ளாடும் புனலு - நாகமு மேகமுந் தமமு மழைபடு - காலமுங் கருமையுங் காரெனுங் கட்டுரை. (323)

3354 மற்றுங்கார் - ஆகு மயிரு மழகுமற் றதற்கே (324)

3355 கார்த்திகை - கொற்றவை யோர்நாண் மாதமுங் கார்த்திகை (325)

3356 காலம் - காலையும் விடியலுங் காலமாகும் (326)

3357 கால் - காலே வலிமையுங் காற்றுங் கூற்றுந் - தாளும் பொழுதுந் றியும் வழியு - மளவையுந் தேரி னுருளு மாகும் (327)

3358 காவி - கள்ளுங் குவளையு மோர்கல்லுங் காவி (328)

3359 காழகம் - கருநிறமும் புடவையுங் கடாரமுங் காழகம் (329)

3360 காளம் - காளங் கழுவுங் கறுப்பு நஞ்சும் – வாத்தியத்தொன்றும் வகுக்கப்படுமே (330)

3361 காளை - பாலைத் தலைவனுஞ் சிறுவனுங் காளை (331)

3362 கானம் - காடு மிசையுங் கானமாகும் (332)

3363 கானல் - கழிக்கரைச் சோலையு மலைப்புறச் சோலையுங் - கதிரவனொளியுங் கழியும்பேய்த் தேரு - முவரு முரம்பு முப்பளமுங் கானல் (333)

3364 கான் - காடுங் கந்தமுங் கானென மொழிப (334)

3365 கிஞ்சுகம் - செந்நிற மும்முண் முருக்குங் கிஞ்சுகம் (335)

3366 கிடக்கை - தராதலப் பெயருஞ் சயனமுங் கிடக்கை (336)

3367 கிடுகு - பலகையுந் தேர்மரச் சுற்றுங் கிடுகெனல் (337)

3368 கிட்டி - தாளமுந் தலையீற்றுப் பசுவுங் கிட்டி (338)

3369 கிம்புரி - முடியின துறுப்புந் தாங்கியுங் கிம்புரி (339)

3370 கிழமை - வாரமுங் குணமுங் காணியும் கிழமை (340)

3371 கிளர் - ஒளியுங் கோட்டின் மலர்த்தாதுங் கிளராம் (341)

3372 கிளை - கேளு மூங்கிலும் யாழிசை யுங்கிளை (342)

3373 கிள்ளை - கிளியுங் குதிரையுங் கிள்ளை யெனப்படும் (343)

3374 கின்னரம் - யாழின் பெயருநீர்ப் பறவையுங் கின்னரம் (344)

3375 கீசகம் - குரங்கு மூங்கிலுங் கீசகமாகும் (345)

3376 கீரம் - கிளியும் பாலுங் கீரமாகும் (346)

3377 குக்குடம் - கோழியும் பறவை காகமுங் குக்குடம் (347)

3378 குசலம் - குணமு மாட்சிமையுங் குசலமென்ப (348)

3379 குஞ்சம் - குறளு நாழியுங் குறளையுங் குஞ்சம் (349)

3380 குஞ்சி - குன்றியு மாண்பான் மயிருங் குஞ்சி (350)

3381 குடம் - பதினொரா டலிலொன்றுங் கொட்டிக்கைகுவித்தலுங் கும்பமும் பசுவு நகரமுங் கரும்பின் - கட்டியு மிடங்கருங் குடமெனக் கழறும் (351)

3382 குடம்பை - குடம்பை முட்டையுங் கூடு மாகும் (352)

3383 குடி - ஊர்ப்பொதுப் பெயரும் புருவமு மன்றிக் – குலமுங் கோத்திரமுங் குடியென் றாகும் (353)

3384 குடிஞை - கூகையும் புட்பொதுவும் யாறுங் குடிஞை (354)

3385 குடுமி - கொற்றமு முச்சியு மயிருங் குடுமி (355)

3386 குணம் - குடமு நிறமு நூலுங் குணமெனல் (356)

3387 குணில் - குறுந்தடியுங் கடிப்புங் கவணுங் குணிலே (357)

3388 குணுங்கர் - தோற்கருவி யோரும் புலைஞருங் குணுங்கர் (358)

3389 குண்டலம் - குண்டலம் விசும்புங் குழையு மாகும் (359)

3390 குண்டு - துலையுங் குதிரையு மாழமுங் குண்டெனல் (360)

3391 குத்திரம் - மலையின் பெயரும் வஞ்சனையுங் குத்திரம் (361)

3392 குமரி - யாமனை விந்தை யழிவிலா மாத - ரேழ்மாதர்களி லெண்ணு மோரணங்கோர் நதிப் பெயருங் கற்றாழையுங் குமரி (362)

3393 குமுதம் - நெடுந்திசை யானையி லொன்று நெய்தலு – மடுப்பு மொலியுந் தருப்பையுங் குமுதம் (363)

3394 கும்பம் - வெங்கரி நெற்றியு மிக்கநீர்க் குடமுங் - கும்ப விராசியுங் கும்பமாகும் (364)

3395 கும்பி - யானையு நரகமுஞ் சேறுங் கும்பி (365)

3396 குயம் - கொங்கையு மரிவாளுங் குயமெனப்படுமே )366)

3397 குயில் - குறித்திடு முரையுங் கோகிலமுந்தொளையு – மெண்ணுமிம் மூன்றுங் குயிலென மொழிப (367)

3398 குரல் - கிண்கிணி மாலையுங் கிளர்நெற் கதிரும் - யாழினோர் நரம்புங் கோதையர் மயிரும் - புள்ளின் சிறகுங் குரலெனமொழிப (368)

3399 குரவை - கடலுங் கைகோத் தாடலுங் குரவை (369)

3400 குரு - குரவனு நோயு நிறமும் பாரமு - மரசனுங் குருவெனலாகுமென்ப (370)

3401 குருகு - கொல்லுலை முக்குங் குருக்கத்தி மரமும் - வெண்மையுமூல நாளு நாரையுங் கோழியுங் கையின் வளையுங் குருகெனல் (371)

3402 குருதி - செவப்புங் குசனு முதிரமுங் குருதி (372)

3403 குருந்து - குருந்து முருந்துங் குருக்கத்தியும் பிள்ளையும் ()

3404 குலம் - இரேவதி நாளும் வருணமும் விலங்கின் - கூட்டமுங் கோயிலுங் குலமென்றாகும் (374)

3405 குவடு - மலையுங் கணமுங் கவடுங் குவடே (375)

3406 குவலயம் - குவளையும் புலியுங் குவலயமென்ப (376)

3407 குழல் - இருபான் மயிரு மிசையின் கருவியுந் – தொளையுடைப் பொருளுங் குழலென்றாகும் (377)

3408 குழை - ககனமுஞ் சங்குஞ் சேறுங் காடுங் - குண்டலமுந் தளிருங் குழலுங் குழையே (378)

3409 குளகம் - குற்றெழுத்துச் செய்யுளும் மரக்காலுங் குளகம் (379)

3410 குளம் - குட்டமு நுதலுஞ் சருக்கரை யுங்குளம் (380)

3411 குளிர் - இலைமூக்கரிகருவியுஞ் சீதமுங் கவணுங் - குடமுழவு*ஞெண்டுங் குளிரெனலாகும் (381)

3412 குறிஞ்சி - ஐவகை நிலத்திலோர் நிலமுமோர் மரமு - மோரி*ழையும் யாழுமோர் பண்ணுங் குறிஞ்சி (382)

3413 குறும்பொறை - குறிஞ்சிநிலத்தூருங் குன்றுங் காடுங் – குறும்பொறை யென்று கூறப்படுமே (383)

3414 குன்று - வருண நாளு மலையுங் குன்றே (384)

3415 கூடம் - மனையு மறைவுங் கொல்லன்சம் மட்டியுங் - குவட்டினுச்சியுங் கூடமாகும் (385)

3416 கூட்டம் - குழாமு மலையின் முடியுங் கூட்டம் (386)

3417 கூந்தல் - கோதையர் மயிரு மயிற்றோகையுங் கூந்தல் (387)

3418 கூரல் - கோதையர் மயிர்புட்சிறகிவை கூரல் (388)

3419 கூலம் - அங்காடியும் வரம்பும் புனற்கரையும் பாகலும் – பசுவும் பண்ணி காரமும் விலங்கின் - வாலுங்கூலமாகுமென்ப (389)

3420 கூவிரம் - கொடிஞ்சியுந் தேருங் கூவிளமுங் கூவிரம் (390)

3421 கூழை - பெண்ணின் மயிரும் புட்சிறகுங் கூழை (391)

3422 கூளி - ஏறும் பேயு மிடபமு மீட்டமுங் - கூளியென்பர் குடும்பமு மதற்கே. (392)

3423 கூளியர் - குறவரும் வீரருங் கூளியராகும் (393)

3424 கூற்று - கூற்றென் கிளவி யுரையுங் காலனும் (394)

3425 கேசம் - ஆண்பெ ணஃறிணை மயிரிவை கேசம் (395)

3426 கேசரம் - மலரின்றாது மகிழ்மரமுங் கேசரம் (396)

3427 கேடகம் - பலகையுங் கேடிலூரும் பரிசையுங் கேடகம் (397)

3428 கேழ் - ஒளிய நிறமு மொப்புங் கேழே (398)

3429 கை - ஒப்பனை படையுறுப் பொழுக்கஞ்சிறுமை - கரமும்பின்பிறந் தாளுங்கையே (399)

3430 கொக்கு - ஒருமரப் பெயரு மூலநாளுங் குதிரையும் விருகமுங் குரண்டமுங் கொக்கெனல் (400)

3431 கொடி - வல்லியுங் கேதுவும் படமுங் கொடியெனல் (401)

3432 கொடிறு - கடைவாய்ப் புறமுங்; கருவிப்பற்றுங் - குருமகிழ்பூசமுங் கொடிறெனலாகும் (402)

3433 கொண்டல் - குணக்கெழு காற்று மேகமுங் கொண்டல் (403)

3434 கொண்டை - இலந்தைக் கனிமயிர் முடியிவை கொண்டை (404)

3435 கொண்மூ - கொண்மூ மேகமா காயமிரண்டே (405)

3436 கொந்தளம் - மாதர் மயிரு மற்றவர் சுருளுங் - குழலின் கொத்துங் கொந்தளமாகும் (406)

3437 கொம்மை - கொங்கையுங் கைகுவித்துக் கொட்டலு மழகும் - வலியு மார்புந் திடருங் கொம்மை (407)

3438 கொற்றி - கோவிளங் கன்று மோடியுங் கொற்றி (408)

3439 கொன் - ஓரிடைச் சொல்லும் வறிதும் பெருமையுங் – காலமுமச்சமுங் கொன்னெனுங் கட்டுரை (409)

3440 கோ - ஆவுந் தலைவனு மொளியு மண்டமும் – பாருஞ்சொல்லும் பகழியுங்கண்ணுங் - குலிசமுந் திக்குஞ் சலமுங் கோவே (410)

3441 கோகிலம் - குயிலுங் குரங்குங் கோகில மென்ப (411)

3442 கோசம் - மதிலுறுப் பும்பண் டாரமு முட்டையு - மாணின்குறியும்புத் தகமுங் கோசம் (412)

3443 கோசிக,ம் - பட்டும் புடவையுங் கோசிக மாகும் (413)

3444 கோடகம் - குதிரையும் புதுமையும் முடியுறுப்புங் கோடகம்

3445 கோடரம் - எட்டி யும்மரக்கொம்பும் பொதும்பருங் – குதிரையுந் தேரின் மொட்டுங் கோடரம் (415)

3446 மற்றுங்கோடரம் - குரங்கின்பெயருங் கூறுவ ரதற்கே (416)

3447 கோடிகம் - பூவின் றட்டும் புடவையுங் கோடிகம் (417)

3448 கோடு - மலையதன் முகடும் வரம்புநீர்க் கரையு – மாக்களின் மருப்பு மூது கொம்புஞ் - சங்கு மரத்தின் கொம்புங் கோடெனல் (418)

3449 கோடை - வெயிலுங் காந்தளு மேற்றிசைக் காற்றுங் - குதிரையும் வேனிலுங் கோடையாகும் (419)

3450 கோட்டம் - மருத நிலத்தூர் பாசறை யிடமே - நாடு நகர மானிரை படப்பை - குரவு வளைவு கோவி லெளலிய - நறும்புதலு முண்பனவுங் கோட்ட மாகும் (420 )

3451 கோட்டி - கோட்டமும் வாயிலு மலைச்சலுங் கோட்டி (421)

3452 கோணம் - வளைவுந் தோட்டியுங் கூனிய வாளுங் - குதிரையு மூக்குங் கோணமாகும் (422)

3453 கோணல் - கூனும் வளைவுங் கோணமென்ப (423)

3454 கோதை - மாலையு மாதருங் கைத்தோற் கட்டியு - முடும்புங் குழலுங் காற்றுஞ் சேரனு - மொழுங்கு மியமுங் கோதை யென்ப (424)

3455 கோத்திரம் - குடியு மலையுங் கோத்திர மாகும் (425)

3456 கோரம் - கொடுமையும் வட்டிலுங் குதிரையுங் கோரம் (426)

3457 கோலம் - அழகு மிலந்தையு மாங்கதன் கனியும் – பன்றியும் பீர்க்கும் பாக்குநீ ரோட்டமுங் - கோல மென்னுங் குறியின வாகும் (427)

3458 கோளி - பூவாது காய்க்கு மரமு மத்தியுங் - கொழிஞ்சியு மென்றிவை கோளி யென்ப (428)

3459 கோள் - அலர்கதிர் முதலிய கிரக மொன்பதும் - வலியுங் கொள்கையும் வல்லிடை யூறுங் - கொலையும் பிசினமுங் கோளெனலாகும் (429)

3460 கௌசிகம் - மருதயா ழிசையும் கூகையும் பட்டுஞ் – சுடர்நிலைத் தண்டுஞ் சொல்லிற் கௌசிகம் (430)

3461 கௌவை - கள்ளுந் துன்பமும் பழமொழியுங் கௌவை ()

சகரவருக்கம்

3462 சகடம் - சகடும்பண்டியுஞ் சிகரமுஞ் சகடம் (432)

3463 சகுந்தம் - புட்பொதுப் பெயருங் கழுகுஞ் சகுந்தம் (433)

3464 சகுனம் - புட்பொதுவு நிமித்தமுங் கிழங்குஞ் சகுனம் (434)

3465 சகுனி - பறவை நிமித்தம் பார்ப்பவன் சகுனி (435)

3466 சங்கம் - சங்குமோ ரெண்ணுங் கணைக்காலுஞ் சவையு - நுதலுங் கவிஞருஞ் சங்க மென்ப (436)

3467 சசி - சசியே யிந்திரன் றாரமு மதியமும் (437)

3468 சடம் - கொடுமையும் பொய்யு மெய்யுஞ் சடமெனல் (438)

3469 சடை - வேணியும் வேருங் கிடையுஞ் சடையெனல் (439)

3470 சதம் - எண்ணும் புள்ளி னிறகுஞ் சதமெனல் (440)

3471 சதி - தாள வொத்து மயனாளும் வட்டமுங் - கற்பாட்டியுஞ்
சோறுஞ் சதியென லாகும் (441)

3472 சத்தி - ஓங்கிய வுமையும் வேலுங் குடையுங் - கான்றலும் வலி
யுஞ் சூலமுஞ் சத்தி (442)

3473 சத்திரம் - அதிசயம் விடாப்படை குடையிரும் பூண்சாலை - வேள்வியும் வேலுஞ் சத்திர மாகும் (443)

3474 சந்தி - அந்திப் பெயருங் கழையுந் தெருவின் - சந்தியு மிசைப் புஞ் சந்தியாகும் (444)

3475 சமன் - நடுவு நமனுஞ் சமனா கும்மே (445)

3476 சமித்தல் - பொறுத்தலு நடத்தலுஞ் சமித்த லென்ப (446)

3477 சம்பு - சங்கரனு மாலு மயனு மருகனுஞ் - நரியு நாவலுஞ் சம்புவாகும் (447)

3478 சரகம் - தே னீப்பெயரும் வண்டுஞ் சரகம் (448)

3479 சரணம் - தாளு நகரமு மறை புகலுஞ் சரணம் (449)

3480 சரபம் - தனிவரை யாடுஞ் சிம்புள் சரபம் (450)

3481 சரம் - மணிவட முங்கொறுக் கச்சியு மம்புந் - தனிமையு நடையுமோ ரிருதுவுஞ் சரமே (451)

3482 சரி - வழிதிரள் கைவளை சரியென லாகும் (452)

3483 சலாகை - நாராசமுஞ் சவளமு நன்மணியுஞ் சலாகை (453)

3484. சலாங்கு - பொய்யாப் புள்ளு மசகமுஞ் சலாங்கே. (454)

3485. சல்லியம் - சல்லியஞ் செஞ்சந் தெய்யென்பு பாணம். (455)

3486. சவட்டல் - சுவைத்தலுங் கோறலுஞ் சவட்ட லாகும். (456)

3487. சவம் - பிணமு மூங்கிலுஞ் சவமென லாகும். (457)

3488. சவி - அழகு மணிக்கோவையுஞ் சுவையுஞ் செவ்வையுஞ் - சாறுவுங் காந்தியுஞ் சவியென லாகும். (458)

3489. சாகம் - கொச்சை சிறுகீரை தேக்குச் சாகம். (459)

3490. சாகினி - கீரைத் திரளுஞ் சேம்புஞ் சாகினி. (460)

3491. சாடி - சாடிகோண் மொழி தாழி புடைவையாம். (461)

3492. சாதகம் - பூதமும் வானம் பாடிப் புள்ளுஞ் - சாதக மென்பர் சனனமு மதற்தே. (462)

3493. சாதம் - சாத மெய்யுஞ் சோறும் பிறப்பு மாம். (463)

3494. சாதி - தேறலுங் குலமுஞ் சிறுசண் பகமுந் - தேக்கும் பிரம்புஞ் சாதி யென்ப. (464)

3495. சாபம் - சபித்தலும் வில்லுஞ் சாப மென்ப. (465)

3496. சாமம் - யாமமும் வேதமு மிரவும் பச்சையுஞ் - சாம மென்பர் கறுப்புஞ் சாற்றும். (466)

3497. சாமி - குரவனும் பொன்னுந் தலைவனு முருகனு - மருகனு மிளமை யாட்டியுஞ் சாமி. (467)

3498. சாம்பல் - அடலை யொடுங்கல்பழம் பூவிவை சாம்பல். (468)

3499. சாரங்கம் - சாதகப்புள்ளு மானுஞ் சாரங்கம். (469)

3500. சாரம் - அதக மினிமை மரச்சேகுஞ் சாரம். (470)

3501. சாரல் - மலையின் பக்கமு மருத யாழ்த்திறத் - தோரிசைப் பெயருஞ்சார லென்ப. (471)

3502. சாரிகை - மண்டில வரவு நாகணவாய்ப் புள்ளுஞ் - சுங்கமுஞ் சுழல்காற்றுஞ் சாரிகை யாகும். (472)

3503. சார்ங்கம் - மாயோன் றனுவொடு வில்லுஞ் சார்ங்கம். (473)

3504. சாலம் - மதிலாச் சாமரம் வலைசா லேகஞ் - சவையுங் குறளை மொழியுஞ் சாலம். (474)

3505. சாலி - நெற்பொது வேரி யருந்ததி சாலி. (475)

3506. சாலேகம் - வாதா யனமு மலர்மொட்டுஞ் சாலேகம். (476)

3507. சாலை - கோயிலுங் குதிரைப் பந்தியுஞ் சாலை. (477)

3508. சாறு - விழவுங் குலையும் வேரியுஞ் சாறே. (478)

3509 சானகி - மூங்கிலுந் திருவுஞ்சானகி யென்ப (479)

3510 சானு - மலையு மலைப்பக்கமு முழந்தாளுஞ் சானு (480)

3511 சான்றோன் - மிருகசீரிடமு மிக்கோன் பெயரும் - பெருகிய கதிரின் பெயருஞ் சான்றோன் (481)

3512 சிகண்டி - மயிலும் பாலையா ழ்த்திறத்தோ ரோசையு – மலியுஞ் சிகண்டி யாமென விளம்புவர் (482)

3513 சிகரி - எலியுங் கருநா ரையுமிவை சிகரி (483)

3514 சிகழிகை - மயிர்முடிவாசிகை கோவை சிகழிகை (484)

3515 சிகி - கேதுவு மயிலு நெருப்புஞ் சிகியே (485)

3516 சிக்கம் - குடுமியு முறியுஞ் சீப்புஞ் சிக்கம் (486)

3517 சிதடன் - குருடனு மறிவில் லோனுஞ் சிதடன் (487)

3518 சிதம் - சிதம்வான் மீனும் வெளுப்பு ஞானமு – மாகுஞ்சயமுறப் படலுமாகும் (488)

3519 சிதர் - துவலையும் வண்டுந் துணியுஞ் சிதரே (489)

3520 சிதலை - செல்லுந் துணியு நோயுஞ் சிதலை (490)

3521 சித்திரம் - அழகுங் காடுமா மணக்குஞ் செய்கோல் – வடிவும் பொய்யை மெய்யாப் புணர்த்தலுஞ் - சிறப்பும் விம்மிதமுமோர்பாடலுஞ் சித்திரம் (491)

3522 சிந்து - நீருந் தேசமும் யாறுங் கடலுங் - கூறுமுச் சீருங் குறளுஞ் சிந்து (492)

3523 சிந்தூரம் - திலகமுஞ் நெந்நிறமுஞ் செங்குடையும் புளியும் - யானையும் யானைமுகமுஞ் சிந்தூரம் (493)

3524 சிமிலி - சிள்வீடு முறியுங் குடுமியுஞ் சிமிலி (494)

3525 சிமையம் - சிகரமு மலையுஞ் சிமையமாகும் (495 )

3526 சிரகம் - வட்டிலுந் தலைத்தி ராணமுஞ் சிரகம் (496)

3527 சிலீமுகம் - அம்புமுலைக்கண்ணு மளியுஞ் சிலீமுகம் (497)

3528 சிலை - வின்மலை யோர்மரஞ் சிராவண முஞ்சிலை (498)

3529 சில்லி - தேருருளுங் கீரையும் வட்டமுஞ் சில்லி (499)

3530 சில்லை - பகண்டையுஞ் சிள்வீடுங் கிலுகிலுப்பையுஞ் சில்லை ()

3531 செவப்பு - சினமுஞ் சினக்குறிப்புஞ் செந்நிறமுஞ் செவப்பே (501)

3532 சிவை - கொல்லுலை மூக்குங் கோமா னிடத்துறை - செல்விபெயரும் வேருஞ் சிவை யெனல் (502)

3533 சிறுமை - துக்கமு நோயு மற்பமுஞ் சிறுமை (503)

3534 சிறை - புள்ளி னிறகுங் கரையின் பக்கமு – மேரியுமிடமுங் காவலுஞ்சிறையே (504)

3535 சினை - கருவின் பெயரு முட்டையுமுறுப்புஞ் – செழுமரக் கோடுஞ்சினை யெனலாகும் (505)

3536 சீகரம் - மலையு மதன் சேண் முகடுஞ் சிரமுந் – திரையுந்து வலையுங் கரகமுஞ் சீகரம் (506)

3537 சீதம் - குளிரும் புனலு மேகமுஞ் சீதம் (507)

3538 சீப்பு - கதவின் றாழுங் கங்கமுஞ் சீப்பே (508)

3539 சீருள் - செம்பு மீயமுமாக்கமுஞ் சீருள் (509)

3540 சீர் - தாளமுஞ் செல்வமு ந்தண்டாயுதமுஞ் சீர்த்தியுங் காவும் பாரமுஞ் சீரெனல் (510)

3541 சீவனி - செவ்வழி யாழ்த்திறத் தோரிசைப்பெயரு - முயிர்தரு மருந்துஞ் சீவனியாகும் (511)

3542 சீவன் - வியாழமு முயிருஞ் சீவ னென்ப (512)

3543 சுகம் - இன்பமுங் கிளியுஞ் சுகமென விளம்புவர் (513)

3544 சுக்கை - மாலையும் வான மீனுஞ் சுக்கை (514)

3545 சுசி - சுசியே சுத்தமுங் கோடையு மன்றி – யனலின்பெயர்க்கு மபிதானம்மே (515)

3546 சுடர் - தழலும் விளக்குஞ் சந்திரா தித்தரு - மொளியுஞ் சுடரென்றுரைத்தனர் புலவர் (516)

3547 சுடிகை - சுட்டி மணிமுடி யுச்சி சுடிகை (517)

3548 சுண்டன் - சூரனுஞ் சதய நாளுஞ் சுண்டன் (518)

3549 சுதை - சுடுசுண்ணச் சாந்தும் புதல்வியு மமிழ்துங் - கறவாத் தேனுஞ் சுதையெனலாகும் (519)

3550 சுந்தரி - சூரனுஞ் சசியுந் துர்க்கையுஞ் சுந்தரி (520)

3551 சுபம் - தரும நன்மை மோக்கமுஞ் சுபமே (521)

3552 சும்மை - ஊர்ப்பொதுப்பெயரு நாடுஞ் சுமையு - மொலியு நென்முதற் போருஞ்சும்மை (522)

3553 சுரிகை - மெய்புகு கருவி பத்திரஞ் சுரிகை (523)

3554 சுரியல் - ஆண்பெண் மயிருஞ் சுழியுஞ் சுரியல் (524)

3555 சுருங்கை - நுழைவா யிலுநீர்ப்போகியுஞ் சுருங்கை (525)

3556 சுருதி - ஒலியும் வேதமுஞ் சுருதி யென்ப (526)

3557 சுரை - ஆவின் முலையு மலாபுந் தொண்டியு – முட்டொளைப் பெயருஞ் சுரையென வுரைப்பர் (527)

3558 சுவர்க்கம் - தெய்வலோகமு முலையுஞ் சுவர்க்கம் (528)

3559 சுவல் - மேடும் பிடருந் தோளின் மேலுங் - குரகதக் குசையுங் கூறுஞ் சுவலே (529)

3560 சுவவு - புத்தே ணாடும் புள்ளின் மூக்குஞ் - சுண்டன் பெயருஞ் சுவவென்றாகும் (530)

3561 சூதகம் - தோற்றமும் வாலாமையு முலைக்கண்ணுஞ் சூதகம் ()

3562 சூரன் - சூரனென் கிளவி சூரன் பெயருந் - தீரனு நாயுந் தெரிக்கப் படுமே. (532)

3563 மற்றுஞ்சூரன் - அருக்கனுந்தீயு மாகுமற்றதற்கே (533)

3564 சூர் - சூரென் கிளவி யச்சமுந்துன்பமும் – பிணியுந்தெய்வப் பெயருமாகும் (534)

3565 சூழி - சுனையுங் கரிமுக படாமுஞ் சூழி (535)

3566 செச்சை - வெட்சி வெள்ளாட் டாண்பெயர்செச்சை (536)

3567 செடி - பாவங் குணமின்மை நாற்றம் புதல்செடி (537)

3568 செந்து - ஓசையு நரகத் தொன்ற நரியுஞ் - சீவனு மணுவுஞ்செந்து வாகும் (538)

3569 செப்பம் - தெருவு நெஞ்சு நடுசெம்மையுஞ்செப்பம் (539)

3570 செம்புலம் - பறந்தலைபாலை நிலஞ்செம்புலமே (540)

3571 செம்மல் - பெருமையும் வலியும் பழம்பூவு மீசனுஞ் சிறுவனுந் தலைவனுஞ் செம்மலென்ப (541)

3572 செய்யல் - சேறு மொழுக்கமுங் காவலுஞ் செய்யல் (542)

3573 செல் - இடியு மேகமுஞ் சிதலையுஞ் செல்லெனல் (543)

3574 செவிலி - முன்பிறந்தாளுங் கோடாயுஞ் செவிலி (544)

3575 செவ்வி - போதும் பருவமும் பொழுதுஞ் செவ்வி (545)

3576 செழுமை - வனப்புங் கொழுப்பு மாட்சிமையுஞ் செழுமை ()

3577 சேக்கை - சயனமு முலையுஞ் சேக்கையாகும் (547)

3578 மற்றுஞ்சேக்கை - விலங்கின் றுயிலிடப் பெயரும் விளம்புவர் (548)

3579 சேடன் - இளையோன் பெயரு மடிமையும் பாங்கனு - மனந்தனு
மோர்சாதிப்பெயருஞ் சேடன் (549)

3580 சேடி - சிலதியும் விஞ்சையர் செரியுஞ் சேடி (550)

3581 சேடு - திரட்சி யழகு நன்று பெருமையுஞ் சேடே (551)

3582. சேண் - உயரமு நீளமு மகலமுஞ் சேணே. (552)

3583. சேதகம் - சேறுஞ் செந்நிறமுஞ் சேதக மென்ப. (553)

3584. சேத்து - செந்நிறப் பெயரு மொப்பு மசைச்சொலு – முறுப்புங் கருத்து மையமுஞ் சேத்தெனல். (554)

3585. சேய் - குமரனுஞ் செவ்வாய்க் கோளுஞ் செவப்புஞ் - சிறுவனு நீளமுஞ் சேயெனலாகும். (555)

3586. சொல் - நெல்லும் புகழுஞ் சொல்லுஞ் சொல்லே. (556)

3587. சோதி - இரவியுமெனையாளீசன்பெயரு - மொருநாண் மீனுமொ ளியுஞ் சோதி. (557)

3588. சோனை - ஓண மீனுமொழியாது சொரியு - மாரியுஞ் சோனையென்ன
வகுப்பர். (558)

3589. சௌரி - கன்னன் பெயருங் கார்வண்ணன் பெயருஞ் - சனியின் பெயரு மியமனுஞ் சௌரி. (559)

3590. மற்றுஞ் சௌரி - கருதிலோர் நதிக்குங் கருதப்படுமே. (560*)

ஞகர வருக்கம்.

3591. ஞாட்பு - சமரும் பாரமுங் களமு ஞாட்பே. (561)

3592. ஞாளி - நாயுங் கள்ளு ஞாளி யென்ப. (562)

3593. ஞெகிழி - நூபுரந்தீயுறுவிறகு தீக்கடை கோல் - ஞெகிழி யென்னு நெறிய வாகும். (563)

3594. ஞெள்ளல் - பள்ளமுந் தெருவுமேன்மையு ஞெள்ளல். (564)

தகர வருக்கம்.

3595. தகடு - ஐமையு மிலையுந் தகடென லாகும். (565)

3596. தகை - அருளுங் குணமுந்தளர்வுந் தகையே. (566)

3597. தகைமை - அழகும் பண்பும் பெருமையுந் தகைமை. (567)

3598. தடம் - தடாகப் பெயரு மலையடி யுந்தடம். (568)

3599. தடவு - பகுதியும் வளைவும் பெருமையுந் தடவெனல். (569)

3600. தடி - தனுவு முலக்கையுந் தசையு முடும்புந் - தண்டும் வயலுமின்னலுந் தடியே. (570)

3601. தட்டி - நடுவட்டேரு மொண்டிரிகையும் பரிசையும் - வட்டப் பெயருந் தட்டென லாகும். (571)

3602. தட்டை - கரடிகை கிளிகடி கருவி சின்னந் - தினைத்தாண் மூங்கிலென்றிவை தட்டை. (572)

3603. தண்டம் - தந்திரமுங் கரிசெல் வழியுந் தண்டம். (573)

3604. தண்டு - தடியுந் தானையுங் குழாயும் வீளையு - மிதுனமுமுலக்கையுந் தண்டெனலாகும். (574)

3605. தண்ணடை - - நாடுமருதத் தூருந் தண்ணடை. (575)

3606. தண்ணம் - - மழுவு மொருகட் பறையுந் தண்ணம். (576)

3607. தண்மை - - தாழ்வு மெளிமையுந் தண்மை யென்ப. (577)

3608. தத்தை - - முன்பிறந்தாளுங் கிளியுந் தத்தை. (578)

3609. தமம் - - இராகுவு மிருளுந் தமமென விசைப்பர். (579)

3610. தமிழ் - - இனிமையு நீர்மையுந் தமிழெனலாகும். (580)

3611. தம்பம் - - கம்பமு மெய்புகு கருவியுந் தம்பம். (581)

3612. தரணி - - தலமு மலையுந் தபனனுந் தரணி. (582)

3613. தவிசு - - மெத்தையுந் தடுக்கும் பீடமுந்தவிசே. (583)

3614. தழல் - - கிளிகடி கருவியு நெருப்புந் தழலே. (584)

3615. தளம் - - தாழியுஞ் சாந்துந் தளமாகும்மே. (585)

3616. தளிமம் - - சயனமு ம*கு மெத்தையுந் தளிமம். (586)

3617. தளை - - ஆண்பான் மயிர்தொடர்பு சிலம்புந்தளையே. (587)

3618. தனஞ்சயன் - - எவ்வமின் மாருதத் தொன்று நெருப்புஞ் - சவ்விய
சாசியுந் தனஞ்சயனாகும். (588)

3619. தனம் - - கோவிளங் கன்று முத்திரையுங் கொங்கையுஞ் சாந்தும்
பொன்னுந் தனமெனலாகும். (589)

3620. தனு - - யாக்கையும் வில்லுஞ் சிறுமையந் தனுவே. (590)

3621. தன்மம் - - புண்ணியமும் வேதமுந் தன்மமாகும். (591)

3622. தன்மை - - தன்மையும் பெருமையு நன்மையுந் தன்மை. (592)

3623. தாணு - - துங்கமலையுந்தூணு நிலையுஞ் - சங்கரன் பெயருந் தாணுவாகும்.
(593)

3624. தாண்டவம் - - தாவலு மாடலுஞ் செலுத்தலுந் தாண்டவம். (594)

3625. தாதி - - அடிமையுஞ் செவிலியும் பரணியுந் தாதி. (595)

3626. தாமம - - மாலையு மலரு மணிவடப் பெயரு - நகரமு மொளியுங்
கயிறுங்கொன்றையுந் - தாமமாகச் சாற்றினர் புலவர். (596)

3627. தாரம் - - வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத்துணைவியும் - யாழினரம்பு
மரும்பண்டமும் வெண்டாதுந் - தராவு நாவுந் தார மென்ப. (597)

3628. தாரை - - வழியுங் கண்ணின் மணியுஞ் சுவடு - முடுவுநேரோடுதலுங்
கூர்மையும் - - வாத்தியத் தொன்றும்வீழ் மழையுந்தாரை. (598)

3629. தார் - - மாலையு மலருங் கொடிப்படைப் பெயருங் - கிண்கிணிமாலையுந்
தாரெனக்கிளந்துப. (599)

3630. தாலம் - - ஞாலமுங் கூந்தற் கமுகுநாவுங் - கோலிய கலமும் பனையுந் தாலம். (600)

3631. தாழை - நாளி கேரமுங் கைதையுந் தாழை. (601)

3632. தாழ்மை - இளிவுங் கீழ்மையு மெண்மையுந் தாழ்மை. (602)

3633. தாள் - காலின் பெயரு முயற்சியுங் கபாடத் - தாளு நெல்லரி புல்லுந் தாளே. (603)

3634. தாறு - அளவுங் குலையுந் தாறென லாகும். (604)

3635. தானம் - தந்தியின் மதமும் வலியுங் கொடுத்தலுஞ் – சுவர்க்கமும் வேட்டலு மறமுந் தானம். (605)

3636. தானை - ஆடையும் படையு மாயுதமுந் தானை. (606)

3637. திகிரி - மலையுஞ் சக்கரமும் வட்டப் பெயருந் - தேருமுருளையு
மூங்கிலுந் திகிரி. (607)

3638. திகை - திசையுஞ் சுணங்குந் திகையெனலாகும். (608)

3639. திங்கள், மதி - சந்திரன் பெயரு மாதமுஞ் சாற்றிற் - றிங்களு மதியமு மிரண்டுஞ் செப்பும். (609)

3640. திட்டை - மேடு முரலும் வேதிகையுந் திட்டை. (610)

3641. திணை - குலமு நிலமு மொழுக்கமுந் திணையே. (611)

3642. திதி - பக்கமுங் காத்தலு நிலைபேறுந்திதியே. (612)

3643. திரு - திருவிலக் குமியுஞ் செல்வமு மாகும். (613)

3644. திலம் - எள்ளுமஞ் சாடியுந் திலமெனப்படுமே. (614)

3645. தீ - தீங்கு நெருப்புந் தீயென லாகும். (615)

3646. தீங்கு - தீமையுங் குற்றமுந் தீங்கென லாகும். (616)

3647. துகள் - தோமுநுண் பொடியுந் துகளெனலாகும். (617)

3648. துங்கம் - அகலமும் பெருமையு முயரமுந் துங்கம். (618)

3649. துஞ்சல் - துஞ்சன் மரணமு நிலைபேறு முறக்கமும். (619)

3650. துடி - கால நுட்பமுங் குமரனாடலு - மேலமு மேழ்மாதர் நிருத்தமுஞ் சிறுபறையுந் - துடியென்கிளவி சொல்லுவர் புலவர். (620)

3651. துணங்கறல் - இருளும் விழவுந்துணங்கற லென்ப. (621)

3652. துணி - சோதியுஞ் சீரையுந் துண்டமுந் துணியெனல். (622)

3653. துண்டம் - துணிபடல் வதன மூக்குச் சாரை - துண்டம் புள்ளின் மூக்கு மாகும். (623)

3654. துத்தம் - யாழி னரம்பு மொருகல் விகற்பமும் – பாலுமோரிசை யுமுதரமுந் துத்தம். (624)

3655. துத்தி - அரவின் பொறியு மாங்கொரு புதலுந் - துதைதரு சுணங்குந் துத்தி யாகும். (625)

3656. துப்பு - அரக்கும் பவளமு மாயுதப்பொதுவுந் - துணையும் வலியும் பொலிவு நெய்யு - மனுபவமுந்தூய்மையுந் துப்பெனலாகும். (626)

3657. தும்பி - சுரையும் யானையும் வண்டுந் தும்பி. (627)

3658. துருக்கம் - குங்கும மரமுங் காடுந் துருக்கம். (628)

3659. துருத்தி - தோலும் யாற்றிடைக் குறையுந் துருத்தி. (629)

3660. துரோணம் - சிம்புட் பறவையும் வில்லுங் காக்கையுந் - தும்பையும் பதக்குந் துரோணமாகும். (630)

3661. துவக்கு - தோலும் பிணக்குந் துவக்கென மொழிப. (631)

3662. துளி - மழையுமாலியுஞ் சிதர்தலோடு - பெண்ணாமையுந் துளியென்னப் பேசுவர். (632)

3663. துணி - துன்பமும் புலவி நீட்டலுந் துணியெனல். (633)

3664. தூ - தூயதூற்றம்பகை தசையுந்தூவே. (634)

3665. தூக்கு - துலாமு முறியுங் கூத்தும் பாட்டு - முசாவுத லும்மிவை தூக்கென லாகும். (635)

3666. தூங்கல் - சோம்புநிரம்பாத் துயிலுந்தூங்கல். (636)

3667. தூசு - புடைவையும் யானைப்புரோசைக் கயிறும் - படையின துறுப்புந் தூசெனப்பகர்வர். (637)

3668. தூபம் - புகையின் பெயர்நீர்க் கடம்பிவைதூபம். (638)

3669. தூம்பு - வாயிலுமுட்டொளைப் பொருளுமூங்கிலு - மரக்காலு மதகுந் தூம்பென லாகும். (639)

3670. தூரியம் - துகில்பறை முரசுபே ரெருதுந் தூரியம். (640)

3671. மற்றுந்தூரியம் - வாத்தியப் பெயர்பொ தியெருதும்வரையார். (641)

3672. தெய் - தெய்யென்கிளவி கோறலுந் தெய்வமும். (642)

3673. தெரிவை - காரிகைப்பெயருங் கன்னியிராசியுந் - தேருங் காலைத் தெரிவையாகும். (643)

3674. தெவ் - கொள்கையும் பகையுந் தெவ்வெனலாகும். (644)

3675. தென் - தென்னிசை வனப்புந் தெற்குமோர் பாடலும். (645)

3676. தே - தேயென் கிளவி கொளற்பாடுந் தெய்வமும். (646)

3677. தேசிகம் - திசைச்சொலு மழகுங் காந்தியும் பொன்னு - மோர் கூத்தின் பெயருந் தேசிக மென்ப. (647)

3678. தேசிகன் - தேசாந் தரிகுரு வணிகன் றேசிகன். (648)

3679. தேம் - தித்திப்புந் தேசமு நாற்றமுந் தேமெனல். (649)

3680. தேயம் - காயமு நாடுந் தேய மென்ப. (650)

3681. தேயு - அனலு மருளுந் தேயு வாகும். (651)

3382 தேர்தல் - ஆராய்தலுங் கொள்கையுந் தேர்த லாகும் (352)

3383 தேள் - விருச்சிக விராசியு மனுட நாளுந் - தெறுக்கா லதனொடுதேளென் றாகும் (353)

3384 தொங்கல் - மாலையும் பீலிக்குஞ்சமுந் தூக்கமு - மயிலின் றோகையு மயிருந் தொங்கல் (354)

3385 தொடி - கங்கணங் கைவளை யொருபலந் தொடியே (355)

3386 தொடு - மருத நிலமும் வஞ்சனைப் பெயருந் - தோட்டமு மென்றிவை தொடுவென லாகும் (356)

3687 தொண்டை - யானைத் துதிக்கையுங் கோவையுந் தொண்டை

3688 தொத்து - தொழும்பு மலர்த்திரளுந் தொத்தெனப் படுமே (358)

3689 தொய்யல் - இன்பமுஞ் சோறுந் தொய்ய லென்ப (359)

3690 தொழு - தொழுவமு மிரேவதி நாளுந் தொழுவெனல் (360)

3691 தொறு - தொழுவு மானிரையுந் தொகுதியுந் தொறுவெனல் (361)

3692 தோடு - திரளும் பூவி னிதழுந் தோடெனல் (362)

3693 தோட்டி - கதவும் யானைக் கருவியுந் தோட்டி (363)

3694 தோணி - இரேவதியும் வங்கமு மெயிலின துறுப்பு – மம்புந் தோணியு மிதவையு மாகும் (365)

3695 தோல் - யானையும் வனப்பு மதளுந் தோல்வியுந் - தோலென்றுரைப்பர் தோற் பலகையு மாகும் (366)

3696 தோள் - புயமுங் கையுந் தோலெனப் புகல்வர் (367)

3697 தோற்றம் - வலியும் பிறப்புங் கண்டலுந் தோற்றம் (368)

3698 தோன்றல் - சுதனுந் தலைவனுந் தோன்ற லாகும் (369)

நகரவருக்கம்

3699 நகம் - உகிரு மலையு நகமென லாகும் (369)

3700 நகை - எயிறுஞ் சிரிப்பு மின்பமு மொளியு - நகையென் கிளவி நவிலப் பெறுமே (370)

3701 நடை - வழியு மொழுக்கமும் போக்கு நடையே (371)

3702 நந்தி - ஏறு மீசனு நந்தி யென்ப (372)

3703 நந்து - பறவையு நத்தையுஞ் சங்கு நந்தெனல் (373)

3704 நயந்தோர் - காதலரும் வேட்டோரு நயந்தோ ராகும் (374)

3705 நயம் - நன்று மின்பமு நியாயமு நயமெனல் (375)

3706 நரந்தம் - நாரத் தையுங்கத் தூரியு நரந்தம் (376)

3707 நரை - வெண்ணிற முமானேறு ங்கவரிமாவும் - பலிதமும் பறவையி லொன்று நரையே (377)

3708. நலம் - சொல்லிய விருச்சிக விராசியுஞ் சுகமு - நல்லுப காரமு நலமென்றாகும். (678)

3709. நவம் - ஒன்பதும் புதுமையு மொண்கார் காலமு - மென்பன மூன்று நவமாகும்மே. (679)

3710. நவியம் - மழுவுங் கோடாலியு நவிய மாகும். (680)

3711. நவிரம் - மலையும் புன்மையு மயிலு முச்சியு - மயிரு நவிர மென்ன வகுப்பர். (681)

3712. நவிர் - ஆண்பான் மயிருந் தக்கேசி யிசையு - மருதயாழ்த்திறனும் வாளு நவிரெனல். (682)

3713. நளி - திரளும் பெருமையு நளியெனச் சிறக்கும். (683)

3714. நறவம் - அனிச்சமரமும் வேரியு நறவம். (684)

3715. நற்றுடி - நாக மரமும் வேரு நற்றுடி. (685)

3716. நனை - பூவின் மொட்டுங் கள்ளு நனையே. (686)

3717. நாகம் - நாகமென் கிளவி நல்லிழை யாடையும் - வேழமு மொரு மரப் பெயரும் வெற்பும் - பாம்புங் குரங்கும் விசும்பும் புன்னையுங் - கடவுளரு லகுங்கா ரீயமு மாகும். (687)

3718. நாஞ்சில் - கலப்பைப் படையெயி லுறுப்பிவை நாஞ்சில். (688*)

3719. நாட்டம் - நயனமும் பண்ணும் வாளு நாட்டம். (689)

3720. நாப்பண் - நடுவு நடுவட் டேரு நாப்பண். (690)

3721. நாரி - நறவுபெண்ணாணி பன்னாடை நாரி. (691)

3722. நாவிதன் - கார்த்திகை நாளும் பூரமு நாவிதன். (692)

3723. நாழி - பூரட் டாதி நாளுமுட் டொளையுஞ் - சேருங் கடிகையு மளவையு நாழி. (693)

3724. நானம் - அறிவும் பூசுவன யாவையு நாற்றமும் - நரையுநீராட்டுங் கத்தூரியு நானம். (694)

3725. நிசி - காஞ்சன மஞ்சள் கங்கு னிசியே. (695)

3726. நிதம்பம் - மலையின் பக்கமு மல்குலு நிதம்பம். (696)

3727. நியமம் - நீதியுங் கோவிலு நிச்சயமுந் தெருவு - நகரமும் வீதியு நியம மாகும். (697)

3728. நிரஞ்சனம் - நிரஞ்சனம் வெளியு நிறைவு மோக்கமும். (698)

3729. நிரியாணம் - யானையின் கடைக்கணு மரணமு நிரியாணம். (699*)

3730. நிருமித்தல் - படைத்தலு மாராய்தலு நிருமித்தல். (700)

3731. நிறை - எடைபார்ப் பனவு மரிவையர் கற்பும் - நிகழ்துலா விராசியு நிறையாகும்மே. (701)

3732 நீபம் - ஏதுவு முத்திரட் டாதி நாளு - நீர்க்கடம்பின் பெயருநீப மென்ப (702)

3733 நீர் - புனலுங் குணமும் பூராடமுநீரே (703)

3734 நீலி - நீலியொரு மரமும் பாலைக்கிழத்தியுங் - கருமை நிறமு மவுரியுமாகும் (704)

3735 நீவி - புடைவையுங் கொய்சகப் பெயரு நீவி (705)

3736 நுதல் - புருவமு நெற்றியு நுதலா கும்மே (706)

3737 நெறி - நீதியும் வழியு மொழுக்கமு நெறியெனல் (707)

3738 நெற்றி - படையின துறுப்பு நுதலு நெற்றி (708)

3739 நேத்திரம் - பட்டு நயனமு நேத்திர மாகும் (709)

3740 நேயம் - நெய்யு மன்பு மெண்ணெயு நேயம் (710)

3741 நொச்சி - எயிலுமோர்மரமுஞ் சிற்றூரு நொச்சி (711)

பகரவருக்கம்

3742 பகடு - பெருமை யானை யெருதிவை பகடெனல் (712)

3743 பகல் - பிரிவு நடுவும் பெரும்பகற் பொழுதும் - பகரு முகூர்த்தமும் பகலு நாளும் - பாகுநுகத்தாணியும் தேசும் பகலென்ப (713)

3744 பகவன் - பட்டார கன்மால் பங்கயன் பரம - னிரவி யருகன் புத்தனும் பகவன் (714)

3745 பகழி - அம்புக் குதையு மம்பும் பகழி (715)

3746 பக்கம் - அருகுந் திதியு மிறகும் பக்கம் (716)

3747 பங்கம் - சேறுந் துகிலு மிடரும் பங்கம் (717

3748 பங்கி - ஆண்பா லஃறிணை மயிரும் பங்கி (718)

3749 பங்கு - பகுதியுஞ் சனியு முடமும் பங்கே (719)

3750 பசு - உயிரு மாவும் பசுவென வுரைப்பர் (720)

3751 பச்சை - மரகதப் பெயரும் புதனுந் தோலும் - பரிமளப் புதலுமாலும் பச்சை (721)

3752 படங்கு - பெருங்கொடி மேற்கட்டி வானி படங்கெனல் ()

3753 படம் - கொடியுங் கூரையுங் கோலக் கிழியும் - பணமும் யானை முகபடாமும் படமே (723)

3754 படலிகை - படலிகை யென்பபூந் தட்டுங் கைம்மணியும் – வட்டமும் பெரும் பீர்க்கும் வகுக்கும் (724)

3755 படலை - படர்தலும் வாசிகைக் கோவையும் படலை (725)

3756 படி - அவனியு மங்க வடிவுஞ் சோபானமும் - பகையுங் குணமு நாழியும் படியே (726)

3757 படிறு - பொய்யுஞ் சூதுங் களவும் படிறே (727)

3758 படு - மரத்தின் குலையுநீர் நிலையு மதுவு - முகரிமைப் பெயரும் படுவென மொழிப (728)

3759 படை - படைக்கலப் பெயரும் பரிமாக் கலணையும் – படுக்கையுஞ் சேனையுங் கலப்பையும் படையே (729)

3760 பட்டம் - வழியு நல்ல பதவியு மோடையும் - விலங்குதுயி லிடமுங் கவரிமாவும் - பாரதி வகுப்பும் படங்கமும் பட்டம் (730)

3761 பட்டி - இடமு நாயுந் தொழுவும் பட்டி (731)

3762 பட்டு - சிற்றூர்ப் பெயருந் துகிலும் பட்டே (732)

3763 பணவை - பரணுங் கழுகும் பணவை யென்ப )733)

3764 பணி - தொழிலுந் தொழில் படு கருவியுஞ் சொல்லும் - பணிதலும் பாம்பு மணியும் பணியே (734)

3765 பணிலம் - சலஞ்சலமு மொளிசேர் சங்கும் பணிலம் (735)

3766 பணை - முரசின்பெயரு மூங்கிலின்பெயரு மரத்தின் கோடு மருதநிலமு - மந்நிலப் பறையும் புரவியின் பந்தியும் - பருத்தலு வயலு மரசும் பணையெனல் (736)

3767 பண் - பாட்டினம்பெயரும் பரிமாக் கலணையு - நாட்டிய பண்ணும் பண்ணென நவில்வர் (737)

3768 பண்டம் - பண்ணி காரமு மாடகமும் பண்டம் (738)

3769 பண்ணவன் - பட்டாரகன்முனி திறலோன்பண்ணவன் (739)

3770 பண்ணை - மருத நிலமு நீர்நிலையும் வயலும் - விலங்கின் றுயிலிடமும் மகளிர் விளையாட்டுங் - கூட்டமுஞ் சவையும் புதலும் பண்ணை (740)

3771 பதங்கம் - புட்பொதுப் பெயரும் விட்டிற் பறவையும் - பதங்கமென்று பகரப் படுமே (741)

3772 பதம் - வரிசையுஞ் சோறு மொழியும் வழியு - முணவுஞ் செவ்வியு மறையினோ ருறுப்பும் - பாதமும் பொழுது மவிழும் பதமெனல் (742)

3773 பதலை - சைலப் பெயருந் தாழியு மோர்கட் - பகுவாய்ப் பறையும் பதலை யாகும் (743)

3774 பதி - தலைவனு மூரும் பதியெனத் தகுமே (744)

3775 பதுக்கை - பாறையு மேடுஞ்சிறு தூறும் பதுக்கை (745)

3776 பத்திரம் - எழிலும் புள்ளி னிறகு மிலையும் - பகழியும் சுரிகையும் பத்திர மென்ப (746)

3777 பத்திரை - பசுவுந் திதியுங் காளியும் பத்திரை (747)

3778 பந்தம் - அழகுந் திரட்சியு மிழையுங் கிளையுந் – தளையுங்கைத் தீபமும் பந்தமென்ப (748)

3779 பயசு - பயசு நீரும் பாலு மாகும் (749)

3780 பயம் - பாலு நீரும் பயமென லாகும் (750)

3781 பயம்பு - பகடு படுங்குழி நீர்நிலை பயம் பெனல் (751)

3782 பயல் - பாதியுஞ் சிற்றாளும் பள்ளமும் பயலெனல் (752)

3783 பயிர் - பைங்கூ ழும்புட் குரலும் பயிரெனல் (753)

3784 பயோதரம் - முலையு மேகமும் பயோதர மெனப்படும் 754)

3785 பரசு - மழுவு மூங்கிலும் பரசென வகுப்பர் (755)

3786 பரதர் - தனவை சியருங் கழியரும் பரதர் (756)

3787 பரம் - மெய்யு மெய்புகு கருவியும் பாரமும் - பரிமாக் கலணையு முன்பும் பரமெனல் (757)

3788 பரவை - பரவைக் கிளவி பரப்புங் கடலுந் - திருமக ளாடலு முப்புஞ் செப்பும் (758)

3789 பரி - துலையு நொடியுந் துரகதப் பெயரும் - பெருமையுஞ் செலவு மாயமும் பரியெனல் (759)

3790 பரிகம் - புரிசையுள் ளுயர்ந்த நிலமுங் கணையமும் - பரிக மென்று பகரப்படுமே (760)

3791 பரிதி - இரத வுருளு மிடுபரி வேடமும் - பகலவன் பெயரும் வட்டமும் பரிதி (761)

3792 பருவம் - பக்குவமும் பொழுதும் பருவமாகும் (762)

3793 பலம் - பழமுங் கிழங்குங் காயுஞ் சேனையு - நிறையும் பேறும் பலமென் றுரைப்பர் (763)

3794 பலாசம் - பச்சை நிறமும் புரசும் பலாசம் (764)

3795 பலி - பலிதமுங் காகமும் பலியெனப் பகர்வர் (765)

3796 பலிதம் - நரையுங் காய்க்கு மரமும் பலிதம் (766)

3797 பவனம் - பார்காற் றிராசி மனையும் பவனம் ((767 )

3798 பழங்கண் - துன்பமு மெலிவு மொலியும் பழங்கண் (768)

3799 பளிங்கு - பளிங்கே கல்லும் புகரும் பகரும் (769)

3800 பள்ளி - தவத்தோ ரிடமுஞ் சயனமுந் துயிறலு - நகரமுஞ் சிற்றூரும் விலங்கு துயி லிடமும் - பள்ளி யென்பர் கோயிலும் பகரும் (770)

3801 பறம்பு - மலையு மடந்தையர் முலையும் பறம்பெனல் (771)

3802 பறை - முரசு புள்ளிறகு மொழியிவை பறையெனல் (772)

3803. பனி - துன்பமு நோயுந் துகினமுஞ் சீதமு - மச்சமு நடுக்கமும் பனியென் றுரைப்பர். (773)

3804. பாகம் - பாதியும் பிச்சையும் பாக மென்ப. (774)

3805. பாகல் - பலாவுங் கார வல்லியும் பாகல். (775)

3806. பாகு - சருக்கரைப் பெயருங் குழம்பும் பாகே. (776)

3807. பாசம் - பசாசும் பற்றுந் துன்னமும் பாசம். (777)

3808. பாசனம் - தமருந் தளிகையும் பாசன மென்ப. (778)

3809. பாடி - முல்லைநிலத்தூரும் பாசறையும் படையு - நாடு நகரமும் பாடியாகும். (779)

3810. பாடு - கேடுஞ் சத்த வொலியு மருகும் - பாடென் றுரைக்கும் பெருமையும் பகரும். (780)

3811. பாணம் - மழைவண்ணக் குறிஞ்சியு மம்பும் பாணம். (781)

3812. பாணி - பதியொடு சேர்ந்த பைம்பொழிற் பெயரு - மழகுங் கானமு மப்பும் பண்டமும் - வழுவில் பற்று நாடுங் கையும் - பொழுதி னீட்டமு மியமும்பாணி. (782)

3813. பாண்டில் - வட்டந் தகழி மஞ்ச மூர்தி - கஞ்சஞ் சிரீட மெருதும் பாண்டில். (783)

3814. பாதிரி - ஒருமரப் பெயரு மூங்கிலும் பாதிரி. (784)

3815. பாத்தி - பகுத்தல் சிறுசெ யில்லமும் பாத்தி. (785)

3816. பாம்பு - பன்னகப் பெயரும் வரம்பும் பாம்பெனல். (786)

3817. பாரதி - பாரதி வங்கமும் பனுவ லாட்டியுமாம். (787)

3818. பாராவாரம் - மகார லயமு மதன்கரைப் பெயரும் - பகரிற் பாராவார மாகும். (788)

3819. பாரி - காதலி பெயருநல் லாடையும் புவியும் - பரி யங்கமும் வள்ளலும் பாரி யென்ப. (789)

3820. பார் - தேரின் பரப்பும் புவியும் பாரெனல். (790)

3821. பாலிகை - வதுவைமுளைவட்டம் வாயிதழ் பாலிகை. (791)

3822. பால் - பாதியு மிடமும் பயசுங் குணமும் - பக்கமுந்திசையுமியல்பும்
பாலே. (792)

3823. பாழி - தாபத ரிருப்பும் விலங்குதுயி லிடமு - மகலமும் வலியு நகரும் பாழுங் - கல்லின் முழையும் பாழி யென்ப. (793)

3824. பாளிதம் - கண்டசருக்கரையுஞ் சோறுங்கர்ப்பூரமும் - பட்டுவருக்கமும் பாளிதமென்ப. (794)

3825. பானல் - கருநிறக் குவளையும் வயலும் பானல். (795)

3826 பானு - நல்லொளிப் பெயரு ஞாயிறும் பானு (796)

3827 பிசி - பொய்யுஞ் சோறு மரும்பொருளும் பிசியே (797)

3828 பிசிதம் - விடக்கு நீறும் வேம்பும் பிசிதம் (798)

3829 பிச்சம் - ஆண்பான் மயிரும் வெண்குடைப் பெயரும் - பீலிக்குடையும் பிச்சமாகும் (799)

3830 பிணிமுகம் - புட்பொதுப் பெயரு மயிலும் பிணிமுகம் (800)

3831 பிணை - விருப்பமான் விலங்கின் பெண்டொடர் பும்பிணை (801)

3832 பிண்டம் - பிச்சையுந் திரட்சியும் பிண்ட மெனப்படும் (802)

3833 பிண்டி - பிண்ணாக்கு மாவு மசோகமும் பிண்டி (803)

3834 பிதா - சங்கரன் பெயரு மயனுந் தாதையும் – பெருநாரைப் பெயரும் பிதாவாகும்மே (804)

3835 பிதிர் - துவலையு நொடியுங் கதையும் பிதிரே (805)

3836 பித்திகை - கருமுகை யுஞ்சுவர்த் தலமும் பித்திகை (806)

3837 பிரசம் - தேனீப் பெயருந் தேனும் பிரசம் (807)

3838 பிள்ளை - காரிப் புள்ளுங் காரிக்கடவுளும் - பேசின்மகவும் பிள்ளையாகும் (808)

3839 பிறங்கல் - மிகுதியு முயர்வும் பெருகலும் பிறங்கல் (809)

3840 மற்றும்பிறங்கல் - மலையின்பெயரு மன்னு மதற்கே (810)

3841 பிறப்பு - அச்சமும் பவமுஞ் செறிவும் பிறப்பெனல் (811)

3842 பீடிகை - பீடமுந் தட்டு மாவணமும் பீடிகை (812)

3843 பீதகம் - பொன்னிரு வேலி பொன்மை பீதகம் (813)

3844 பீதம் - பொன்மையுஞ் சாந்தும் பொன்னும் பீதம் (814)

3845 பீரு - அச்சமுற் றோனும் புருவமும் பீரு (815)

3846 பீலி - சயிலமு மயிலின் கலாபமுஞ் சவளமுஞ் – சின்னமுஞ் சிற்றால வட்டமும் பீலி (816)

3847 புகர் - புற்கெனு நிறம்வெள்ளி குற்றமும் புகரே (817)

3848 புகல் - யாக்கைசொல் வெற்றி குதிரும் புகலே (818)

3849 புங்கம் - அம்புக் குதைதுகி லுயர்ச்சியும் புங்கம் (819)

3850 புட்டம் - புடவையுங் காக்கையும் புட்டமென்ப (820)

3851 புணரி - புணரி கடலுங் கடற்றிரை யும்மே (821)

3852 புணர்ச்சி - கலவியு மியைபும் புணர்ச்சி யென்ப (822)

3853 புண்டரீகம் - கமலமுந் திசையின் கரிகளி லொன்றும் – புலியும் வண்டும் புண்டரீகம்மே (823)

3854 புதவு - கதவுமொரு விகற்பப் புல்லும் புதவே (824)

3855 புத்தன் - போதிக்கிறைவனு மாயனும் புத்தன் (825)

3856 புத்தேள் - புதுமையுந் தெய்வமும் புத்தேளாகும் (826)

3857 புந்தி - புதனு மறிவுஞ் சிந்தையும் புந்தி (827)

3858 புரத்தல் - வண்மையுங் காத்தலும் வணங்குதலும் புரத்தல் (828)

3859 புரவலன் - பூபா லனுங்கொடை யோனும் புரவலன் (829)

3860 புரை - உவமை குற்ற முயர்வேயுட்டொளைப் - பொருளென்றின்னவை புரையெனலாகும் (830)

3861 புலம்பு - தனிமையு மச்சமுஞ் சத்தமும் புலம்பே (831)

3862 புலவர் - அறிஞருஞ் சளுக்கியர் பெயரு மண்டருங் – கவிஞருங் கூத்தருங் கலைவல் லாளரும் - புரந்தர ருங்கண் ணாளரும் புலவர் (832)

3863 புலி - சிங்க விராசியு நால்வகைச் சாந்தத் - தொன்றும் வியாக்கிரமு முரைப்பர் புலியே (833)

3864 புலிங்கம் - பொறியுமூர்க்குருவியும் புலிங்க மாகும் (834)

3865 புல் - அநுடமோர்புதலும்புற்கெனுநிறமும் – மொருசார்மரமும் பனையும்புலியும் – புணர்ச்சியும் புல்லெனப் புகலப்பெறுமே (835)

3866 புவனம் - புவனமு முலகும் புனலும் புவியுமாம் (836)

3867 புளகம் - கண்ணாடியுங் குமிழ்த்தலு மன்னமும்புளகம் (837)

3868 புள் - பகரிசை வண்டும் பறவைப் பெயரும் - புகலு மவிட்ட நாளும் புள்ளெனல் (838)

3869 புறணி - குறிஞ்சி நிலமு முல்லையின் புறமுந் - தோலுமரப் பட்டையும் புறணியென்ப (839)

3870 புறம்பணை - குறிஞ்சி நிலமு முல்லையின் புறமும் - புறம்பணை யென்று புகலப் பெறுமே (840)

3871 புறவணி - குறிஞ்சிநிலமு முல்லையும் புறவணி (841)

3872 புறவம் - முலலை நிலமுங் காடும் புறவம் (842)

3873 புனை - பொலிவு மழகுமொப் பனையும் புனையெனல் (843)

3874 புன்கண் - துன்பமு நோயும் புன்கணென்ப (844)

3875 பூ - அவனியும் வனப்பு மலருங்கூர்மையும் - பொலிவும் பிறப்பும் பூவெனலாகும் (845)

3876 பூகம் - கமுகுந்திரட்சியுங் கழுகும் பூகம் (846)

3877 பூக்கம் - பூகமு மருத வூரும் பூக்கம் (847)

3878 பூட்கை - யானை யாளிப்பெயரும் யானையு - மேற்கோளும்மிவை
பூட்கையென்ப (848)

3879 பூதம் - பரணி நாளும் பல்லுயிர்ப்பெயரும் – பாரிடமுமிறந்தகால மூமாலும் - புனிதமும் புலிமுத லைந்தும் பூதம் (849)

3880 பூதி - நீறுஞ் செல்வமு நிகழ்துர்க் கந்தமும் - பூதியென்பர் நரகும் புகலும் (850)

3881 பூதியம் - புவியு முடம்புஞ் செல்வமும் பூதியம் (851)

3882 பூரணம் - நிறைவுமோர் திதியும் பூரணமென்ப (852)

3883 பூருவம் - முதுமையுங் கிழக்கு முன்பும் பூருவம் (853)

3884 பூவை - நாகணவாய்ப் புள்ளுங் காயாவும் பூவை (854)

3885 பூழ்தி - கொடுமையுந் தசையுநுண் பொடியும் பூழ்தி (855)

3886 பூளை - பொருப்பின் கணவாயுமோர் புதலும்பூளை (856)

3887 பேடு - அலியு மூருமத னாடலும் பேடு (857)

3888 பேதை - அறிவிலோனு மெளியனும்பேதை (858)

3889 பேராளன் - மிக்கோன் பெயரு மிருகசீரிடமும் - பெற்றியுரைக்கிற் பேராளன்னே (859)

3890 பை - படமும் பச்சையு மழகும் பையே (860)

3891 பொகுட்டு - சேற்றெழுமொக்குளு மலையும் பங்கயப் – பொன்னிறக் கொட்டையும் பொகுட்டெனலாகும் (861)

3892 பொங்கர் - பொருப்பு மரத்தின் கொம்பும் பொங்கர் (862)

3893 மற்றும்பொங்கர் - இலவின் பெயரு மியம்பல் வேண்டும் ()

3894 பொங்கல் - பொலிவு மிகுதியுங் கொந்தலும் பொங்கர் (864)

3895 பொம்மல் - பொலிவுஞ்சோறும் பொருமலும் பொம்மல் (865)

3896 பொருநன் - கொற்றவன் பெயருந் தலைவனுங்கூத்தனும் - வீரனுந்திண்ணி யோனும் பொருநன் (866)

3897 பொழில் - புவியுஞ் சோலையும் பெருமையும்பொழிலே (867)

3898 பொறி - எழுத்துச் செல்வ மிலாஞ்சனை திருமகண் – மரக்கலம் யந்திரம் வரியிந்திரியம் - பொடித்தெழு நுண்சிறு கனலிவைபொறியே (868)

3899 பொறை - புவனமுந் துறுகலும் பொருப்பும் பொறையெனல் (869)

3900 பொற்பு - பொலிவு மழகு மொப்பனையும் பொற்பெனல் (870)

3901 பொன் - அழகு மைவகை யுலோகமு மிரும்புந் - திருவும் வியாழமும் பொன்னெனச் செப்புவர் (871)

3902 போகி - பொன்னுல காளியும் பாம்பும் போகி (872)

3903 போகில் - பூமொட்டு நாபியும் புட்பொதுவும் போகில் (873)

3904 போக்கு - வழியு மிளமரக் கன்றுங் குற்றமும் – புகலிற்போதலு நடையும் போக்கே (874)

3905 போதகம் - அப்பவருக்கமும் யானைக்கன்று - மிளமையு மரத்தின் கன்றும் போதகம் (875)

3906 போந்து - பல்லியும் பனையும் போந்தெனலாகும் (876)

3907 போர் - சமரமு நென்முதற் சும்மையுஞ் சதயமும் - புகலுங் காலைப் போரினலாகும் (877)

3908 போர்வை - தோலு மீக்கோளும் போர்வையாகும் (878)

மகரவருக்கம்

3909 மகரம் - மலரின் றாதுஞ் சுறவும் மகரம் (879)

3910 மஞ்சரி - மலரின் றிரளுந் தளிரு மஞ்சரி (880)

3911 மஞ்சு - எழிலும் பனியு மிளமையு மேகமும் - வலியும் யானையின் முதுகு மஞ்சே (881)

3912 மடங்கல் - மடங்கலென் கிளவி மறலியு மிடியு – மடங்கலு நோயும் யாளியு மூழியு - மடங்கலும் வடவையு முடிவு மென்ப (882)

3913 மடி - பொய்யு நோயும் புடைவையுஞ் சோம்பும் - புலம்புங்கேடு மடக்கமுந் தாழையும் - வயிறு மடங்கலு மடியென லாகும் (883)

3914 மடு - மடுவுநீர் நிலையு மடுவென வகுப்பர் (884)

3915 மடை - பூண்கடைப் புணர்வுஞ் சோறு மடையே (885)

3916 மட்டு - மதுவு மளவு மட்டென லாகும் (886)

3917 மணி - வனப்பு நவமணியு மௌத்திகமு நீலமுங் – கருநிறமு நன்மையுங் கண்டையு மணியே (887)

3918 மண்டலி - ஒருபெரும் பாம்பும் பூசையு மண்டலி (888)

3919 மண்டிலம் - வட்டமு நாடுங் குதிரையு மண்டிலம் (889)

3920 மதலை - மைந்தனுங் கொன்றை மரமுந் தூணு – மரக்கலமுங் கொடுங்கையு மதலை யாகும் (890)

3921 மதன் - வலியு மழகு மலர்க்கணை வேளு - மாட்சிமைப் பெயரு மதனென லாகும் (891)

3922 திங்கள், மதி - முன்னிலை யசைச்சொலு முடுபதியு முணர்வு (892)

3923 மதியம் - சந்திரன் பெயரு மாதமுஞ் சாற்றிற் – றிங்களுமதியமு மெனச்சிறந் தனவே (893)

3924 மது - மதுவிள வேனிலுந் தேனுங் கள்ளுமாம் (894)

3925 மதுகம் - அட்டிமதரமு மிருப்பையுந் தராவும் - வண்டு மழகு மதுக மாகும் (895)

3926 மத்திகை - மாலையுஞ் சம்மட்டியு மத்திகை யாகும் (896)

3927 மந்தரம் - மந்த வோசையு மேருவு மந்தரம் (897)

3928 மந்தாரம் - தெய்வ மரத்திலொன்றுஞ் செம் பரத்தையு - மந்தார மென்று வழங்கப் பெறுமே (898)

3929. மந்தி - மந்திபெண் குரங்கும் வண்டு முசுவுமாம் (899)

3930. மந்திரம் - கோவிலுங் குதிரைப் பந்தியு மெண்ணமு – மதுவும் வீடு மறையு மந்திரம். (900)

3931. மயல் - அவாவின் பெயரு மலகைப் பெயரு - மயலென் றறைந்தனர் வாய்மொழிப் புலவர். (901)

3932. மயிலை - மீனின் பொதுவு மீனவிராசியு - மலரிரு வாட்சியு மயிலையாகும். (902)

3933. மரக்கால் - அளவையு மாயவனாடலு மன்றி - வளவிய சோதியு மரக்கா லாகும். (903)

3934. மருள் - பேயுங் குறிஞ்சி யாழின் றிறனு - மாலுமோர் புதலு மருளென்றாகும். ((904)

3935. மல் - மாயோ னாடலும் வலியு மல்லெனல். ((905)

3936. மல்லிகை - மாலதி சுடர்நிலைத் தண்டிவை மல்லிகை. (906)

3937. மழை - மழையே குளிர்ச்சியும் வருடமு மேகமும். (907)

3938. மள்ளர் - செருமலை வீரருந் திண்ணி யோரு - மருதநில மாக்களு மள்ள ரென்ப. (908)

3939. மறம் - சினமும் பாவமும் பிணக்குங் கூற்றும் – வலியுஞ் சேவகமும் வம்பு மறமே. (909)

3940. மறலி - அயர்ப்புங் கூற்று மழுக்காறு மறலி. (910)

3941. மறவர் - வேடர்தம் பெயரும் வீரரு மறவர். (911)

3942. மறவி - மறப்பு மழுக்காறு மறவி யாகும். (912)

3943. மனவு - மணிப்பெயரு மக்கு மணியு மனவே. (913)

3944. மன் - மறையு முத்திரட் டாதியு மரசனு - நிலையு மிகுதியு மாக்கமு மொழிவு - முரைசெயி லிடைச் சொலு மன்னென் றுரைக்கும். (914)

3945. மன்றம் - வாய்மைவெளி வாசம் பொதுவு மன்றம். (915)

3946. மன்றல் - பாலையா ழிசையுங் கடிப் பரிமளமும் – வதுவையு மென்றிவை மன்றலாகும். (916)

3947. மன்னல் - பீடும் வலியு மடுப்பது மன்னல். (917)

3948. மன்னன் - அரசனு முத்திரட் டாதியு மன்னன். (918)

3949. மா - ஒருமரப் பெயரு மழைத்தலுங் கறுப்புங் - குதிரையும் விலங்குந் திருவும் வனப்பும் - வலியும் வண்டும் பிண்டியுஞ் செல்வமு – நிறனும் பெருமையு நிலனு மோரிலக்கமு - மருவிய பெயரு மாவென லாகும். (919)

3950. மாசு - குற்றமு மேகமு மழுக்கு மாசே. (920)

3951. மாடம் - மனையு முழுந்து மாட மாகும். (921)

3952. மாதர் - அரிவையரு மழகுங் காதலு மாதர். (922)

3953. மாதவம் - மதுவுநற் றவமு மிளவேனிலு மாதவம். (923)

3954. மாதா - வாணியுங் கௌரியு மன்னையு மாதா. (924)

3955. மாதிரம் - மலையுந் திசையும் யானையு மாதிரம். (925)

3956. மாந்தல் - உண்டலுங் குடித்தலு மிறத்தலு மாந்தல். (926)

3957. மாரி - மழையு முகிலு மரணமு மதுவும் - வடுகியு நோயுமோர் புள்ளு மாரி. (927)

3958. மார்க்கம் - வழியுஞ் சமயமுந் தெருவு மார்க்கம். (928)

3959. மாலதி - மாலதி சுடர்நிலைத் தண்டுநிரு வாணமும். (929)

3960. மாலை - இரவுந் தொடுத்த தொடையலு மந்தியும் – வரன்முறை யொழுக்கமு மியல்பு மாலை. (930)

3961. மால் - வாயு கருமை பெருமை மதிமகன் - மாயோன் மேக மயக்கம் வேட்கை - மாலென் றுரைப்பர்கண் ணேணியு மாகும். (931)

3962. மாழை - அழகு திரட்சி யாடக மாமர - மோலை மடமை யுலோகக் கட்டி - புளிமா மாழை யாகு மென்ப. (932)

3963. மான் - விலங்கின் பெயரும் வெற்புங் குதிரையு - மகர விராசியு முழையு மானெனல். (933)

3964. மிசை - மேடு மொழியு மிசையென விளம்புவர். (934)

3965. மிச்சை - மிச்சை பொய்த்தலஞ் ஞானமு மிடித்தலும். (935)

3966. மீளி - பெருமையும் வலியுந் தலைவன் பெயரும் – விறலோன் பெயரு மீளி யாகும். (936)

3967. மீன் - மச்சப் பெயரும் வானத் துடுவுஞ் - சித்திரை நாளு மீனெனச் செப்புவர். (937)

3968. முகில் - திரளு மேகமு முகிலென லாகும். (938)

3969. முடங்கல் - மூங்கிலுந் தாழையு முடங்க லென்ப. (939)

3970. முடலை - உண்டையுந் திரட்சியும் பெருமையு முடலை. (940)

3971. முண்டகம் - தாமரைப் பெயருந் தாழையுங் கள்ளு – முள்ளுடை முள்ளியு நெற்றியு முண்டகம். (940)

3972. முதலை - முதலை செங்கிடையு முருந்து மிடங்கரும். (941)

3973. முதுமை - முற்றுதற் பெயரும் பழமையு முதுமை. (942)

3974. முரசு - உத்திரட் டாதியும் பறையு முரசசெனல். (943)

3975. முரண் - பகையும் வலியு முரணெனப் பகர்வர். (944)

3976. முரம்பு - பரலடுத்த நிலமும் பாறையு முரம்பே. (945)

3977. முருகு - இளமையு நாற்றமுங் கள்ளும் விழவு - முருக வேளு மழகு முருகே. (946)

3978. முளரி - கமலமு நுட்பமுங் காடு நெருப்பு - முளரி யென்ன மொழிந்திசி னோரே. (947)

3979. முளை - மூங்கிலுஞ் சுதனுமங் குரிப்பு முளையே. (948)

3980. முறம் - விசாகமுஞ் சுளகும் விளம்புவர் முறமே. (949)

3981. முறிகுளம் - அணைமுறி குளமும் பூராடமு முறிகுளம். (950)

3982. முறுவல் - பல்லுஞ் சிரிப்பு முறுவலென்ப. (951)

3983. முறை - கோசமும் பழமையு மூழுங்கூட்டு - மார்ப்புமுறைமையு முறையெனலாகும். (952)

3984. முனி - இருடியும் வில்லும் யானைக்கன்று – முனியென்றுரைப்ப வகத்தியு மொழிப. (953)

3985. முனை - பகையும் வேண்டாமையும் வினையு முனையே. (954)

3986. முன்னம் - சீக்கிரி மரமுமுற் காலமுஞ் சிங்கமு - முன்னமென்று மொழியப் பெறுமே. (955)

3987. மூசல் - மொய்த்தலு மரணமு மூச லென்ப. (956)

3988. மூரல் - முறுவலும் பல்லுஞ் சோறு மூரல். (957)

3989. மூரி - எருமையு மெருதும் பெருமையுஞ் சோம்பும் – வலியு முரணு நெரிவு மூரி. (958)

3990. மூலம் - ஒருநாண் மீனு மேதுவுங் கிழங்கு - மூலமென்று மொழியப் பெறுமே. (959)

3991. மெத்தை - சட்டை யணையிவை மெத்தை யாகும். (960)

3992. மெய் - யாக்கையும் வாய்மையு மெய்யெனலாகும். (961)

3993. மேடம் - மெய்புகு கருவியும் யாடு மேடம். (962)

3994. மேடு - உயரமும் பெருமையு வயிறு மேடே. (963)

3995. மேதை - புதனு மறிஞனு நரம்பு மேதை. (964)

3996. மேல் - மேற்கு மும்பரு மேன்மையு மேலே. (965)

3997. மை - அஞ்சனங் குற்றங் கருநிறமலடு - மஞ்சும்யாடுமையெனலாகும் (966)

3998. மொக்குள் - பூவின் மொட்டுங் குமிழியு மொக்குள். (967)

3999. மொய் - திரளும் யானையுஞ் செருக்கள மும்மொய். (968)

4000. மொய்ம்பு - வலியுந்தோளு மொய்ம்பெனலாகும். (969)

4001. மோடு - உயரமும் பெருமையும் வயிறு மோடெனல். (970)

4002. மௌவல் - வனமல்லிகை யுங்குளிர் வாரமு மௌவல். (971)

யகரவருக்கம்.

4003. யாணர் - கண்ணாளர் பெயரும் புதுமையு மழகு - நன்றும் யாணரெனும்பெயர் நவில்வர். (972)

4004. யாமம் - இரவுஞ் சாமமுந் தெற்கும் யாமம். (973)

4005. யாழ் - மிதுன விராசியும் வீணைக்கருவியு - மசுபதி நாளும் யாழென லாகும். (974)

4006. யூகம் - உடற்குறை கருங்குரங் கோர்தல் கோட்டா – னுட்பொ ருடருக்கம் யூகமாகும். (975)

4007. யூபம் - வேள்வித்தறி கவந்தம் படையுறுப்பும் யூபம். (976)

வகரவருக்கம்,

4008. வங்கம் - வழுதுணைப் பெயரும் வெள்ளியு மீயமும் - வங்கமென் பநாவாயுமாகும். (977)

4009. வசதி - நகரமு மனையுந் தாவும் வசதி. (978)

4010. வசந்தம் - வசந்தஞ்சல் லாபமுஞ் சித்திரை மாதமும். (979)

4011. வசி - வசியே கூர்மை வசிவாள் வடுவுமாம். (980)

4012. வசு - தேவர் கோதனந் தீபொன்னும் வசு. (981)

4013. வஞ்சம் - வாளும் பொய்யுங் கொடுமையும் வஞ்சம். (982)

4014. வஞ்சனை - மாயையும் பெண்ணும் பொய்யும் வஞ்சனை. (983)

4015. வஞ்சி - போரின்மேற் செலவும் புதலுமங்கையரும் – பாவிலோர் பாவு மோர்பதிப் பெயரு - மாற்றருங் குடையும் வஞ்சியாகும். (984)

4016. மற்றும்வஞ்சி - மருதயாழ்த் திறத்தோ ரோசையும் வகுப்பர். (985)

4017. வடகம் - அத்தவாளப்பட்டு மதளும் வடகம். (986)

4018. வடவை - வடவா வனலு மடநடைப் பிடியு – மெருமை பெயருங் குதிரையும் வடவை . (987)

4019. வடு - தழும்புஞ் செம்புந்தவறும் வண்டும் - வடுவென வுரைக்கு மரபாகும்மே. (988)

4020. வடுகு - மருதயா ழோர்குல மிந்தளமும் வடுகே. (989)

4021 வட்டம் - பரிசை பாரா வளையங் கைம்மணி - திரிகை வலயஞ் சாலூர்கோள் வட்டம். (990)

4022. வண்டு - குருநாளுங் குற்றமு மளியுங்கை வளையு - நூலு மம்புஞ் சங்கும் வண்டெனல். (991)

4023. வண்ணம் - வனப்புஞ் சந்தமுங்குணமும் வண்ணம். (992)

4024. வண்மை - வலிவளங்கொடைவாய்மை வண்மை. (993)

4025. வதுவை - வதுவைகலி யாணமு மணமு மாகும். (994)

4026. வம்பு - மணமுநிலை யின்மையும் பாடரும் புதுமையு - முலையின்
கச்சும் படிறும்வம்பே. (995)

4027. வயம் - வலியு நீரும் புள்ளும் வயமெனல். (996)

4028. வயல் - வெளியுஞ் செய்யும் வயலென்றாகும். (997)

4029. வயவன் - திண்ணியோன் பெயரும் வேட்டோன்பெயரு - வலியோன் பெயரும் வயவ னென்ப. (998)

4030. வயா - வருத்தமுங் கருவும் விருப்பமும் வயாவே. (999)

4031. வயிரம்...தணியா முனிவுங் கூர்மையு மணியும் - வச்சிரப் பெயருங் காழும் வயிரம். (1000)

4032. வரி - இசையும் பாட்டு மெழுத்து மிறையு - நெல்லுங் கடலு நிறமுஞ் சுணங்குஞ் - சந்தித் தெருவுங் கடனும் வரியே. (1001)

4033. வருடம் - மழையு மாண்டும் வருடமாகும். (1002)

4034. வருணம் - குலமு நீரு மழகும் வருணம். (1003)

4035. வரை - அளவுங் கையிறையு மலையு மூங்கிலும் – வரைவுமெழுத்தும் வரையென லாகும். (1004)

4036. வலம்புரி - நந்தியா வர்த்தமுஞ் சங்கும் வலம்புரி. (1005)

4037. வலவை - வஞ்சப் பெண்ணும் வல்லோனும் வலவை. (1006)

4038. வலி - வலியே யொலியும் வலியோனும் வஞ்சமும். (1007)

4039. வலித்தல் - வலித்த லென்பது நிணத்தலும் பேசலும். (1008)

4040. வழங்கல் - வண்மையு முலாவுதலும் வழங்க லென்ப. (1009)

4041. வழி - மரபு மொழுக்க முந்திரட்சியுமகாரு - மிடமும் பின்னு முறைமையும் வழியே. (1010)

4042. வளம் - மாட்சிமை கொழுப்புந் தகுதி வளமெனல். (1011)

4043. வள் - வலிப்பற் றிரும்பும் வாளுங் காதும் - வலியுங் கூர்மையும் வள்ளெனலாகும். (1012)

4044. வறிது - சிறுமை பயனில் சொலறியாமை வறிதே. (1013)

4045. மற்றும்வறிது - இளிமையிய லாமையும் வறிதெனலாகும். (1014)

4046. வன்னி - ஒருமரப் பெயருங் கிளியு நெருப்பும் - பிரம சாரிப் பெயரும் வன்னி. (1015)

4047. வாசம் - வாசமிருப்பிடமு மலரின் மணமும் - புள்ளி னிறகும் புடைவையும் புகலும். (1016)

4048. வாசி - வங்கியங் குதிரைவாசியென்ப. (1017)

4049. வாடை - வடகாற்றுஞ் சேரியுமோர் மருந்தும்வாடை. (1018)

4050. வாணி - பாரதிப் பெயரும் பகழிப் பெயரும் - வார்த்தையு மோர் கூத்தும் வாணியாகும். (1019)

4051. வாமனம் - குறளுந்திசை நிலைக்குஞ்சரத்தொன்றும் – வருமொரு நூலு மாலும் வாமனம். (1020)

4052. வாயில் - வாய்புலந் திறங்கரணந் துவாரமும் வாயில். (1021)

4053. வாரணம் - யானையுங் கோழியுஞ் சங்கும் வாரணம். (1022)

4054. மற்றும்வாரணம் - தடைகடன் மெய்புகு கருவியுஞ் சாற்றுவர். (1023)

4055. வாரம் - ஆர்கலி கிழமைக் கூறுபா டன்பு - புனற்கரை மலையடி பகுதியும் வாரம். (1024)

4056. வாரி - கடலும் வெள்ளமும் பகுதியும் விளைவுஞ் - சுற்றுங் கதவும் வருவாயு நீரும் - வட்டையு மதிலும்வாரியாமே. (1025)

4057. வாருணம் - மறிகடற் பெயருமேற்கும் வாருணம். (1026)

4058. வால் - வெண்ணிறம் பெருமை தூய் தோகையும் வாலே. (1027)

4059. வாள் - வசியு மொளியும் வாளென லாகும். (1028)

4060. வானம் - வானமழையு மரத்தின் கனியு மாகமு – முலர்மரப் பெயரும் வரையார். (1029)

4061. வானி - வானியோர் நதியும் வளர் துகிற் கொடியுஞ் – சேனையு மேற்கட்டியுஞ் செப்பல்வேண்டும். (1030)

4062. வான் - வானென் கிளவி வலியும் பெருமையு - மேகமு மாகாயமும் பெருமழையு மிடைச்சொல்லு - மோர்மர மென்று மோதுவர் புலவர். (1031)

4063. விசும்பு - விண்ணுஞ் சுவர்க்கமு மேகமும் விசும்பே. (1032)

4064. மற்றும்விசும்பு - திசையின் பெயருஞ் செப்புவ ரதற்கே. (1033)

4065. விசையம் - சருக்கரைப் பெயருந் தபனமண் டிலமும் - வெற்றிப் பெயரும் விசைய மாகும். (1034)

4066. விடங்கம் - வீதிக் கொடியும் வீட்டின் முகடு - மழகுங்கொடுங்கையு மாண்மையும் விடங்கம். (1035)

4067. விடம் - மரப்பொதுப் பெயரு நஞ்சுந்தே ளும்விடம். (1036)

4068. விடர் - கல்வளைப் பெயருங் கமரும் விடரே. (1037)

4069. விடலை - திண்ணியோனுந் தலைவனும் பாலை - யிறைவனுங் காமத் துறைவனும் விடலை. (1038)

4070. விடை - ஏறு மெருது மெதிர் மொழியும் விடை. (1039)

4071. விண்டு - மாயவன் காற்று மலையே மூங்கின் – மேகமிவ்வைைந்தும் விண்டு வெனலாகும். (1040)

4072. விதப்பு - விபரமு நடுக்கமு மிகுதியும் விதப்பே. (1041)

4073. விதவை - சோறுங்கைம் பெண்ணும் விதவையாகும். (1042)

4074. விதிர்ப்பு - மிகுதியு நடுக்கமும் விதிர்ப்பென விளம்புவர். (1043)

4075. விபுலம் - விரிவும் பெருமையும் விபுல மென்ப. (1043)

4076. விபூதி - நிரயத்தி லொன்று நீறுங்கொடுமையுந் - தசையுங் குற்றமுஞ் செல்வமும் விபூதி. (1045)

4077. விம்மல் - பொருமலு மழுதலு மொலித்தலும் விம்மல். (1046)

4078. வியப்பு - சினமுஞ் சினக்குறிப்பு மதிசயமும் வியப்பே. (1047)

4079. வியல் - அகலமும் பெருமையுங் காடும் வியலே. (1048)

4080. விலோதம் - மங்கையர் மயிர்சுருள் பதாதையும் விலோதம். (1049)

4081. வில் - மூல நாளொளி கோதண்டம் வில்லெனல். (1050)

4082. விழவு - மிதுன விராசியு முற்சவமும் விழவே. (1051)

4083. விழைச்சு - இளமையுங் கலவியும் விழைச்சென லாகும். (1052)

4084. விழைந்தோர் - வேட்டோருங் காத லோரும் விழைந்தோர். (1053)

4085. விளர் - இளமையுங் கொழுப்பும் விளரென்றிசைக்கும். (1054)

4086. விள - விளாமர மிளமை கமரிவை விளவெனல். (1055)

4087. விறப்பு - அச்சமும் பலமுஞ் செறிவும் விறப்பெனல். (1056)

4088. விறல் - வென்றியும் வலிமையும் விற லாகும்மே. (1057)

4089. வீ...பூவு மொழிவு நீக்கமு மடிவும் - புள்ளின் பெயருஞ் சாவும் வீயே. (1058)

4090. வீசல் - கொடுத்தலு மெறிதலும் வீச லென்ப. (1059)

4091. வீதி - நேரோடுதலுந் தெருவும் வீதி. (1060)

4092. வீரை - ஒருமரப் பெயரு முறுதுயர்ப் பெயரும் - விரி கடற் பெயரும் வீரையாகும். (1061)

4093. வெடி - நறைபடு புகையு மச்சமு மன்றி – வெளியின்பெயரும் வெடியென்றாகும். (1062)

4094. வெதிர் - செவிடு மூங்கிலும் வெதிரென மொழிப. (1063)

4095. வெளில் - யானைத் தறியு மணிலும் பாடையுந் – தயிர்கடைதறியும் வெளிலெனச்சாற்றும். (1064)

4096. வெள்ளம் - ஈரமுங் கடலும் கடலின்றிரையு - நீரின் பெருக்குமோ ரெண்ணும் வெள்ளம். (1065)

4097. வெள்ளி - புகரு மிரசதமும் புகலும் வெள்ளி. (1066)

4098. வெள்ளை - பலதேவனும் வெண்பாவும் வெளிறும் - வெள்ளை வெள்ளாட்டு மறியு மதுவுஞ் - சங்கும் வெள்ளை யென்றுஞ் சாற்றும். (1067)

4099. வெறி - அணங்காட்டும் வட்டமு மச்சமும் பேயு - மணக்கு நாற்றமு மாற்றருங் கலக்கமும் - விளம்பிய நோயும் யாடும் வெறியெனல். (1068)

4100. வெறுக்கை - செல்வமும் பொன்னும் வெறுக்கை யாகும். (1069)

4101. வேங்கை - புலியுமோர் மரமும் பொன்னும் வேங்கை. (1070)

4102. வேசரி - கழுதையுங் கோவேறு கழுதையும் வேசரி. (1071)

4103. வேட்டுவன் - மகமோர் குளவி மறவனும் வேட்டுவன். (1072)

4104. வேணி - வேணி சடையு நதியும் விசும்புமாம். (1073)

4105. வேணு - உட்டொளைப் பொருளு மூங்கிலும் வேணு. (1074)

4106. வேதிகை - பலகையுங் குறடுந் திண்ணையும் வேதிகை. (1075)

4107. வேய் - ஒற்று மூங்கிலு முட்டொளையும் வேயே. (1076)

4108. வேய்தல் - வேயுளுஞ் சூடுதலும் வேய்த லென்ப. (1077)

4109. வேலன் - வெறியாட்டாளனுங் குமரனும் வேலன். (1078)

4110. வேலி - ஊரு மரணுங் காவலு நிலமு - மேவிய வயலும் வேலியாகும். (1079)

4111. வேலை - கடலுங் கடலின் கரையும் பொழுதும் - வினையுங் காலையும் வேலையென்றாகும். (1080)

4112. வேல் - படைக்கலமு ஞாங்கரு மோர் மரமும் வேலே. (1081)

4113. வேழம் - குஞ்வசரமுங் கொறுக்கைச்சிப் பெயருமிசையுங் கரும்பு மூங்கிலும் வேழம். (1082)

4114. வேளாண்மை - மெய்ம்மையுங் கொடையும் வேளாண்மை யாகும். (1083)

4115. வேளாளர் - சதுர்த்தருங்கொடை வள்ளலும் வேளாளர். (1084)

4116. வேள் - தார காரியுஞ் சளுக்கியர் வேந்தனும் - வேனி லாளனும் வேளெனலாகும். (1085)

4117. வேள்வி - அருச்சனை யளித்த லாதி யெழுஞ்சனி - வேள்விங் குண்டமும் வேள்வியும் வேள்வி. (1086)

4118. வேனில் - பொலிவுங் கொடையுமோ ரழகு மொப்பனையும் பேயின் றெரும் வேனிலாகும். (1087)

4119. வை - வைக்கோலுங் கூர்மையும் பகுதியும் வையெனல். (1088)

4120. வைகல் - தினமுந் தங்கலுந் தெரியின் வைகல். (1089)

4121. வையம் - உரோகிணி நாளும் பாருந்தேரு - மேறு மூர்தியும்வைய மெனப்படும். (1090)

பத்தாவது -- ஒருசொற்பல்பொருள்வகை முற்றிற்று
ஆகச்சூத்திரம் – 4121
---------------------

பத்தாவது - ஒருசொற்பல்பொருள்வகை / பெயர்ப்பிரிவு

அகரவருக்கம்

3031. அகப்பா எ-து---மதில்,மதிலுண்மேடை (2)

3032. அகம் எ-து-----மனம், உள்வீடு, பாவம், பூமி, மரப்பொது (5)

3033. அகலுள் எ-து---ஊர், நாடு (2)

3034. அகி எ-து------ பாம்பு, இரும்பு

3035. அக்காரம் எ-து---புடைவை, சருக்கரை (2)

3036. அக்கு எ-து------சங்குமணி, எருத்துத்திமில்

3037. அங்கணம் எ-து--சலதாரை, முன்றில் (2)

3038. அங்கதம் எ-து---பாம்பு, வாகுவலயம், வசைச்சொல் (3)

3039. அங்கம் எ-து--உடல், அவயவம், கட்டில் (3)

3040. அங்கி எ-து--நெருப்பு, சட்டை (2)

3041. அசனம் எ-து--பசி,கொழுப்பு, பகுதி, அளவு, வேங்கைமரம், உண்டி. (6)

3042. அச்சம் எ-து--அகத்தி, பயம் (2)

3043. அஞ்சலி எ-து--கும்பிடுதல், வாவல் (2)

3044. அஞ்சனம் எ-து--கரிய நிறம், மை, மேற்றிசையானை (3)

3045. அடல் எ-து--வலி, பொருதல் (2)

3046. அடி எ-து--ஆதி, கால், தண்டித்தல் (3)

3047. அடுப்பு எ-து--பரணிநாள், அடுப்பு, பயம் (3)

3048. அடை எ-து--இலை, கனம், விலை, வழி, அப்பம் (5)

3049. அணங்கு எ-து--தெய்வம், கொல்லியம்பாவையர், நோய், வருத்தம், கொலை,
அழகு, ஆசை. (7)

3050. அணி எ-து--படைவகுப்பு, அலங்காரம், அழகு, பெருமை, ஆபரணம், அன்பு. (9)

3051. அணு எ-து-உயிர், நுண்மை. (2)

3052. அணை எ-து-புணர்ச்சி, செய்கரை, மெத்தை, படுக்கை (4)

3053. அண்டசம் எ-து-பாம்பு, தவளை, முதலை, ஆமை, யானை, உடும்பு, மீன், ஓந்தி, பறவை, பல்லி, இப்பி. (11)

3054. அண்டம் எ-து-முட்டை, ஆகாயம். (2)

3055. அண்டர் எ-து-தேவர், பகைஞர், இடையர். (3)

3056. அத்தம் எ-து-ஓர்நட்சத்திரம், பொன், அருநெறி, கண்ணாடி, பாதி, கை, சொற்பொருள். (7)

3057. அத்தி எ-து-யானை, ஓர்மரம், எலும்பு, கடல். (4)

3058. அத்து எ-து-அரைப்பட்டிகை, தைப்பு, அசைச்சொல், செவப்பு. (4)

3059. அத்தை எ-து- முன்னிலையசைச்சொல், குரு. (2)

3060. அந்தம் எ-து-அழகு, கடை. (2)

3061. அந்தரம் எ-து-தனிமை, தேவராலயம், ஆகாயம், முடிவு, இருள், கூட்டம். (6)

3062. அந்தரி எ-து-பார்ப்பதி, துர்க்கை. (2)

3063. அந்தி எ-து-பாலையாழ்த்திறத்திலொன்று, மாலைக்காலம். (2)

3064. அபரம் எ-து-நரகம், பொய், பிற்பக்கம். (3)

3065. அமரர் எ-து-பகைவர், தேவர். (2)

3066. அமலம் எ-து-அழுக்கின்மை, அறிவு, அழகு. (3)

3067. அமுதம் எ-து-சுவை, பால், குணம், சோறு, தெய்வவுணவு, நீர், மோட்சம், உப்பு. (8)

3068. அமை எ-து-அழகு, மூங்கில்,அமைவு. (3)

3069. அம்பணம் எ-து-அளவை, மரக்கால், வாழை. (3)

3070. அம்பரம் எ-து-கடல், சீலை, ஆகாயம். (3)

3071. அம்பல் எ-து-சிலரறிந்துபுறங்கூறல், பழிமொழி. (2)

3072. அம்மை எ-து-அழகு, வருபிறப்பு, தாய். (3)

3073. அயம் எ-து-ஆடு, இரும்பு, குளம், நீர், குதிரை. (5)

3074. அயிராவதம் எ-து-கீழ்த்திசையானை, இந்திரன்யானை. (2)

3075. அயில் எ-து-வேல், கூர்மை. (2)

3076. அரணம் எ-து-காடு,மதில், கவசம். (3)

3077. அரண் எ-து-காவல், வேல், காவற்காடு. (3)

3078. அரத்தம் எ-து-கடப்பமரம், உதிரம், செங்குவளை, அரக்கு,செவப்பு. (5)

3079. அரந்தை எ-து-குறிஞ்சியாழிசை, வருத்தம். (2)

3080. அரம்பை எ-து-தெய்வப்பெண், வாழை. (2)

3081. அரலை எ-து-கழலை, விதை, ஓர்கற்றாழை. (3)

3082. அரவம் எ-து-காற்சிலம்பு, பாம்பு, ஒலி. (3)

3083. அரற்றல் எ-து-அழுதல், ஒலித்தல். (2)

3084. அராகம் எ-து-பாடடினோருறுப்பு, செவப்பு, பாலையாழ்த்திறம், பொன், ஓர்பண். (5)

3085. அரி எ-து- சுதங்கையின்பருக்கைக்கல், ஒளி, பன்றி, இந்திரன், வண்டு, பாம்பு, குரங்கு, குதிரை, கிளி, தவளை, மூங்கில், சக்கரம், நிறம், சிங்கம், தேர், படுக்கை, கண்வரி, நித்திரை, இயமன், நெருப்பு, காற்று, புகை, பகை, மாவயிரம், பறை, கள், சந்திரன், சூரியன், திருமால், உட்டொளை, கடல், பொன், பச்சை, மலை, தகட்டுவடிவு, நெற்கதிர், சோலை, ஆயுதப்பொது, கட்டிலின்விசி, அரிசி, வரி. (41)

3086. அரிட்டம் எ-து-காக்கை, கள், பிறவிக்குற்றம். (3)

3087. அருணம் எ-து ஆடு, மான். (2)

3088. அருணன் எ-து-சூரியன், சூரியன்றேர்ப்பாகன், புதன். (3)

3089. அருப்பம் எ-து-ஊர்ப்பொது, ஓர்பிணி, காடு. (3)

3090. அருவி எ-து-மலைச்சாரலாறு, தினைத்தாள். (2)

3091. அலகு எ-து-பலகறை, கொதுகு, அளவு. (3)

3092. அலங்கல் எ-து-பூமாலை, தளிர், அசைவு, இரங்குதல், ஒளிசெய்தல். (5)

3093 அலரி எ-து-பூப்பொது, சூரியன், அழகு, கண்வரி, ஓர்மரம். (5)

3094. அலர் எ-து-பழிச்சொல், பலரறிந்து பழிதூற்றல், பூ மகிழ்ச்சி. (4)

3095. அலை எ-து-கொலை, திரை. (2)

3096. அல் எ-து-இரவு, இருள். (2)

3097. அல்கல் எ-து-தங்குதல், தினம். (2)

3098. அல்லி எ-து-வெள்ளாம்பல், காயாமரம், அகவிதழ். (3)

3099. அவந்தி எ-து-கிளி, ஓர்நகர். (2)

3100. அவலை எ-து-காடு, கடுப்பு. (2)

3101. அழனம் எ-து- நெருப்பு, பிணம். (2)

3102. அழுக்காறு எ-து-பொறாமை, மனத்தழுக்கு. (2)

3103. அளகம் எ-து-நீர், மயிர். (2)

3104. அளக்கர் எ-து-கடல் பூமி, கார்த்திகைநாள், உப்பளம், சேறு. (5)

3105. அளறு எ-து-சரகம், சேறு. (2)

3106. அளி எ-து-வண்டு, அன்பு, கள். (3)

3107. அளித்தல் எ-து-கொடுத்தல், காத்தல், செறித்தல். (3)

3108. அளை எ-து-வளை, தயிர், புற்று. (3)

3109. அறல் எ-து-அறுதல், நீர். (2)

3110. அறுவை எ-து-சீலை, சித்திரைநட்சத்திரம். (2)

3111. அனந்தம் எ-து-அளவின்மை, பொன். (2)

3112. அனந்தன் எ-து-அட்டமாநாகத்தொன்று, பிரமன், அருகன், சிவன், திருமால், சேடன். (6)

3113. அனலி எ-து-சூரியன், நெருப்பு. (2)

3114. அன்றில் எ-து-மூலநட்சத்திரம், ஓர்பறவை. (2)

3115. அன்னம் எ-து-சோறு, அன்னப்புள். (2)

3116. அன்னை எ-து-தாய், அக்காள். (2)

3117. ஆகம் எ-து-உடல், மார்பு. (2)

3118. ஆகாரம் எ-து-போசனம், நெய், வடிவு. (3)

3119. ஆகு எ-து-எலி, பெருச்சாளி. (2)

3120. ஆகுலம் எ-து-வருத்தம், ஆரவாரம். (2)

3121. ஆக்கம் எ-து-செல்வம், இலக்குமி. (2)

3122. ஆசாரம் எ-து - சிலை, ஒழுக்கம், பெருமழை, அரசிருக்கை. (4)

3123. ஆசினி எ-து - ஈரப்பலா, மரவயிரம். (2)

3124. ஆசு எ-து - மெய்க்கவசம், சீக்கிரம், குற்றம், சிறுமை, ஓர்கவி. (5)

3125. ஆசை எ-து - அன்பு, பொன், திசை. (3)

3126. ஆடல் எ-து - சொல்லல், கூத்து, வெற்றி. (3)

3127. ஆடவர் எ-து - ஆண்மக்கள், இளையோர். (2)

3128. ஆடி எ-து - கண்ணாடி, ஓர் மாதம், உத்தராடநாள். (3)

3129. ஆடு எ-து - மேடவிராசி, வெற்றி. (2)

3130. ஆணை எ-து - ஏவல், மெய், வெற்றிசெயல், தடுத்தல், சபதம், அடையாளம். (6)

3131. ஆண்மை எ-து - வலிமை, வெற்றி, உண்மை. (3)

3132. ஆதி எ-து - பழமை, சிவன், திருமால், முதல், நேரோட்டம். (5)

3133. ஆம்பல் எ-து - இசைக்குழல், கள், மூங்கில், அல்லி, யானை. (5)

3134. ஆரம் எ-து - சந்தனமரம், மணிவடம், முத்து, கண்டிகை, ஆபரணப்பொது. (5)

3135. ஆரல் எ-து - கார்த்திகை நட்சத்திரம், ஆரான்மீன், செவ்வாய், மதில். (4)


3136. ஆரவாரம் எ-து - ஒலி, வருத்தம். (2)

3137. ஆரை எ-து - மதில், புற்பாய், ஓர்பூடு. (3)

3138. ஆர் எ-து - நிறைதல், கூர்மை, ஆத்திமரம். (3)

3139. மற்றும் ஆர் எ-து - தேர்ப்பண்டியகவாய். ஆக(4)

3140. ஆர்தல் எ-து - அணிதல், நிறைதல், புசித்தல். (3)

3141. ஆர்ப்பு எ-து - போர், நகைப்பு. (2)

3142. ஆர்வம் எ-து - ஆசை, ஓர் நரகம். (2)

3143. ஆர்வலர் எ-து - நாயகர், மித்திரர், அன்புடையோர். (3)

3144. ஆலம் எ-து - பூ, நீர், ஆலமரம், விடம். (4)

3145. ஆலவன் எ-து - சந்திரன், ஆசை. (2)

3146. ஆலாலம் எ-து-பூ, நீர், ஓர்மரம், விடம், வௌவால். (5)

3147. ஆலி எ-து-மழைத்துளி, ஆலாங்கட்டி, மழை. (3)

3148. ஆலயம் எ-து-யானைக்கூடம், நகரம், தேவர்கோவில். (3)

3149. ஆவணம் எ-து-உரிமை, கடைவீதி, தெரு, புனர்பூச நட்சத்திரம். (4)

3150. ஆவலர் எ-து-நாயகர், மித்திரர். (2)

3151. ஆழி,நேமி எ-ன-கடல், தீருருள், சக்கராயுதம், வட்டவடிவு, மோதிரம் . (5)

3152. ஆறு எ-து-வழி, நதி, ஓரெண். (3)

3153. ஆற்றல் எ-து-வலிமை, வென்றி, உண்மை, ஆண்மை, மிகுதி, தரித்தல், ஞானம், பொறை, கூட்டுதல். (9)

3154. ஆனி எ-து-கேடு, மூலநட்சத்திரம். (2)

3155. இகத்தல் எ-து-பொறுத்தல், நடத்தல். (2)

3156. இகல் எ-து-பகை, வலி, போர். (3)

3157. இருளை எ-து-சுற்றம், தோழி. (2)

3158. இசை எ-து-புகழ், சொல், ஒலி. (3)

3159. இடக்கர் எ-து-குடம், மறைத்தசொல். (2)

3160. இடம் எ-து-வீடு, வலி, படுத்தல். (3)

3161. இடி எ-து-உறுதிச்சொல், நென்முதலியவற்றின்மா இடியேறு. (3)

3162. இடை எ-து-இடம், *நுசுப்பு, நடு. (3)

3163. இந்தளம் எ-து-தூபக்கால் ஓர்பண். (2)

3164. இபம் எ-து-மரக்கொம்பு, யானை. (2)

3165. இரசதம் எ-து-அரைப்பெட்டிகை, வெள்ளி. (2)

3166. இரதம் எ-து-புணர்ச்சி, சூதம், அளி, தேர், அரைநாண், சுவை. (6)

3167. இரலை எ-து-ஆண்மான், அச்சுவினிநட்சத்திரம், ஊதுகொம்பு. (3)

3168. இரவி எ-து-மலை, சூரியன், வாணிகத்தொழில். (3)

3169. இராகம் எ-து-இசை, நிறம், கீதம், செவப்பு. (4)

3170. இருள் எ-து-ஒருவகைநரகம், மயக்கம், கறுப்பு. (3)

3171. இரௌரவம் எ-து - சிவாகமமிருபத்தெட்டிலொன்று, ஓர் நரகம். (2)

3172. இலஞ்சி எ-து - மகிழமரம், கொப்பூழ், ஏரி. (3)

3173. இலம்பகம் எ-து - நுதலணிமாலை, அத்தியாயம். (2)

3174. இலாங்கலி எ-து - தெங்கு, செங்காந்தள். (2)

3175. இலையம் எ-து - கூத்து, கூத்தின்விகற்பம். (2)

3176. இல் எ-து - மனைவி, வீடு, இல்லையெனல், இடம், இராசி. (5)

3177. இழுக்கு எ-து - தவறுதல், கேடு. (2)

3178. இளி எ-து - யாழ்நரம்பு, சிரிப்பு. (2)

3179. இறப்பு எ-து - மிகுதி, சாவு, போதல். (3)

3180. இறால் எ-து - கார்த்திகை நாள், தேன்கூடு, எருது, இறான்மீன். *(4)

3181. இறும்பு எ-து - சிறுமலை, குறுங்காடு, தூறு. (3)

3182. மற்றும் இறும்பு எ-து - தாமரைப்பூ. *ஆக(4)

3183. இறை எ-து - உயர்ந்தோன், நடுவுநிலைமை, அற்பம், அரசன், தலைமை, பெருமை, தங்கல், பிரமன், சிவன், கடவுள், பறவையினிறகு,
கடன்,கையிறை, வீட்டிறப்பு, குடியிறை. (15)

3184. இறைவை எ-து - ஏணி, கூடை. (2)

3185. ஈகை எ-து - இண்டங்கொடி, கொடுத்தல், பொன். (3)

3186. ஈழம் எ-து - பொன், சிங்களதேசம். (2)

3187. உஞற்று எ-து - உற்சாகம், இழுக்கு. (2)

3188. உடல் எ-து - சரீரம், பொன். (2)

3189. உடு எ-து - அம்பு, ஆடு, அம்புத்தலை, விண்மீன், அகழி, மரக்கல மோட்டுங்கோல். (6)

3190. உடை எ-து - சிலை, செல்வம், குடை, வேலமரம். (4)

3191. உணர்வு எ-து - அறிவு, தெளிவு, நீங்கல். (3)

3192. உண்டை எ-து - படைவகுப்பு, திரளை. (2)

3193. உத்தரம் எ-து - வடக்கு, மேல், வடவாமுகாக்கினி, மறுமொழி. (4*)

3194. உத்தி எ-து - பாம்பின் படப்பொறி, தேமல், உரைத்தல், சீதேவியென்னுந் தலைக்கோலம். (4)

3195. உத்திரம் எ-து - உத்திரநாள், மாளிகையினோருறுப்பு. (2)

3196. உந்தி எ-து - மகளிர்விளையாட்டிலொன்று, நீர், நீர்ச்சுழி, தேர்த் தட்டு, கொப்பூழ், கடல், யாறு, யாழினோருறுப்பு. (8)

3197. உப்பளம் எ-து - உப்பங்கழி நிலம், உப்புவிளைநிலம். (2)

3198. உப்பு எ-து-கடல், இலவணம், மகளிர்விளையாட்டு, உவர்த்தல், இனிமை. (5)

3199. உம்பர் எ-து-வானோர், மேல். (2)

3200. உம்பல் எ-து-யானை, விலங்கேற்றின்பொது, குலம், மகன். (4)

320.1 உயவை எ-து-காட்டாறு, காக்கணஞ்செடி. (2)

3202. உரம் எ-து-வலி, மார்பு, ஊக்கம், ஞானம், திடம். (5)

3203. உரை எ-து-எழுத்தினொலி, சொற்பொருள், சொல்லல். (3)

3204. உலகம் எ-து-பூமி, திசை, உயர்குணம். (3)

3205. உலகு எ-து-பூமி, திக்கு, ஆகாயம், உயர்ந்தோர், குலம். (5)

3206 உலக்கை எ-து-திருவோணநட்சத்திரம், உலக்கை. (2)

3207 உலவை எ-து-விலங்கின்கொம்பு, ஓடைமரம், மரக்கொம்பு, காற்று. (4)

3208. உவளகம் எ-து-பிரிதல், இடைச்சேரி, மதில், ஒருபக்கம், மதிலுறுப்பு, பள்ளம், தடாகம், விசாலம். (8)

3209 உவா எ-து-பௌரணை, யானை, இளையோன். (3)

3210 உழை, எ-து-இடம், மான், யாழினோர்நரம்பு. (3)

3211 உளை, எ-து-உயர்திணை யாண்பால் மயிர். அஃறிணைப் பொருளின்மயிர், குதிரையின் பிடர்மயிர், ஏழிசையி லொன்று, பேசலாலெழு மொலி. (3)

3212. உறுகண் எ-*து-துக்கம், நோய். (2)

3213 உறுவன் எ-து-அருகன், முனிவன். (2)

3214 உறை எ-து-நீர்த்துளி, மருந்து, பொருள், போர்வை, வெண்கலம், மேன்மை, பெருமை, இலக்கங்குறித்தற்குஇடுமோர்குறி, பாலிடுபிரை, உறைப்பு, உணவு, உவர்நீர், ஆயுதவுறை, ஓரிடைச்சொல், வாழ்நாள் (15)

3215. உறையுள் எ-து-ஊர்ப்பொது, வீடு. (2)

3216. உன்னல் எ-து-மனம், நினைவு. (2)

3217. ஊக்கம் எ-து-உற்சாகம், வலிமை, உள்ளக்கிளர்ச்சி. (3)

3218. ஊழ் எ-து-பழமை, மரபு, பகை. (3)

3219 ஊறு எ-து-தீமை, கொலை, தீண்டல். (3)

3220. ஊனம் எ-து-பிணம், கேடு. (2)

3221. எகினம் எ-து-அன்னம், கவரிமா, ஆண்மரம், நாய், புளிமரம், புளிமா. (6)

3222. எக்கல் எ-து-குவித்தல், சொரிதல். (2)

3223. எருவை எ-து-கழுகு, செம்பு, கொறுக்கை. (3)

3224. எலி எ-து-இல்லெலி, கள், பூரநட்சத்திரம். (3)

3225. எல் எ-து-பிரகாசம், சூரியன், பகல், இரவு, இகழ்ச்சி. (5)

3226. எறுழ் எ-து-தண்டாயுதம், வலி. (2)

3227. என்றூழ் எ-து-சூரியன், வெயில். (2)

3228. ஏதம் எ-து குற்றம், துன்பம். (2)

3229. ஏதி எ-து-ஆயுதபொது, துண்டு, வாள். (3)

3230. ஏந்தல் எ-து-பெருமை, உயர்ச்சி, அரசன். (3)

3231. ஏமம் எ-து-இன்பம், விபூதி, பொன், காவல், இரவு, சேமம், களிப்பு, உன்மத்தம். (8)

3232. ஏரண்டம் எ-து-ஆமணக்கு, சித்திரம். (2)

3233. எல்வை எ-து-மடு, பொழுது. (2)

3234. ஏறு எ-து-பொலியருது, எருது, புலிமுதலியவிலங்கினாண் பெயர் இடி அச்சுவினிநாள். (5)

3235. ஏனல் எ-து-தினைப்புனம், பைந்தினை. (2)

3236. ஏனாதியர் எ-து-மந்திரியர், தந்திரியர், மறவர், நாவிதர். (4)

3237. ஐயம் எ-து-பொழுது, பிச்சை, இரப்போர்கலம், அனுமானம். (4)

3238, ஐயன் எ-து-வானோர், முனிவர், பார்ப்பார், குரு, சாத்தன், மூத்தோன், தந்தை. (7)

3239. ஐயை எ-து-பார்வதி, துர்க்கை, காளி, ஆசான். (4)

3240. ஒண்மை எ-து-அழகு, நன்மை, அறிவு. (3)

3241. ஒலி எ-து-சத்தம், இடி, காற்று. (3)

3242. ஒலியல் எ-து-தோல், சீலை, பூமாலை, நதி. (4)

3243. ஒழுக்கம் எ-து-வழி, குலம், சீலம். (3)

3244. ஒளி எ-து-சூரியன், சந்திரன், புகழ், விளக்கு, மறைவிடம், நெருப்பு, கேட்டைநாள். (7)

3245. ஒளிவட்டம் எ-து-சக்கரம், கண்ணாடி. (2)

3246. ஓங்கல் எ-து-மலை, தலைவன், வலியோன், உயர்ச்சி, மேடு, மூங்கில். (6)

3247. ஓடை எ-து-நீர்நிலை, அகழி, மலைவழி, ஓடை யென்னு மோர்மரம், நெற்றிப்பட்டம். (5)

3248. ஓட்டம் எ-து-மேலுதடு, தோல்வி. (2)

3249. ஓணம் எ-து-திருவோணநாள், நதி. (2)

3250. ஓதம் எ-து-ஈரம், கடற்றிரை, கடல். (3)

3251. ஓதனம் எ-து-உண்டி, சோறு. (2)

3252. ஓதி எ-து-மலை, பெண்மயிர், பூஞை, கற்றோன். (4)

3253. ஓதை எ-து-மதில், மதிலுண்மேடை, அகரமுதலியவெழுத் தொலி, ஆரவாரம். (4)

3254. ஓரி எ-து-ஆண்மயிர், பிறமயிர், கிழநரி, ஆண்முசு, விலங்கின் படுக்கை, கடையெழுவள்ளலிலொருவன். (6)

3255. ஓரை எ-து-மகளிர்கூட்டம், மாதர்விளையாட்டு, மாதர் விளையாடுங்களம், இராசிப்பொது, ஓரிடைச்சொல், குரவை. (6)

3256. ஓலம் எ-து-ஒலி, பாம்பு. (2)

3257. ஓவியம் எ-து-கண்ணாளர், சித்திரகாரர். (2)

3258. ககனம் எ-து-காடு, சேனை, ஆகாயம். (3)

3259. கங்கம் எ-து-பருந்து, சீப்பு. (2)

3260. கங்கு எ-து-கருந்தினை, வரம்பின்பக்கம். (2)

3261. கசடு எ-து-குற்றம், அழுக்கு, ஐயம். (3)

3262. கச்சம் எ-து-யானைக்கழுத்திடுகயிறு, அளவை, மரக்கால். (3)

3263. கச்சை எ-து-கயிறு, கவசம், தழும்பு. (3)

3264. கஞறல் எ-து-சிறுமை, பொலிவு. (2)

3265. கஞ்சம் எ-து-கைத்தாளம், வெண்கலம், தாமரை, கஞ்சா,
அப்பவருக்கம். (5)

3266. கடகம் எ-து-வட்டம், மதில், மலைப்பக்கம், படை, ஓரூர், ஓராறு, ஓரெண், கங்கணம், பலகை. (9)

3267. கடம் எ-து-அருநெறி, சரீரம், கயிறு, குடம், காடு, யானைக் கூட்டம், யானைக்கதுப்பு. யானைமதம். (8)

3268. கடல் எ-து-சமுத்திரம், ஓரெண். (2)

3269. கடவை எ-து-கடவுமரம், ஏணி, குற்றம். (3)

3270. கடி எ-து-சீக்கிரம், கூர்மை, பயம், காவல், நீக்கம், சிறப்பு, மணம்புரிதல், விளக்கம், புதுமை, சந்தேகம், மிகுதி, கரிப்பு, வாசனை, காலம், பிசாசம். (5)

3271. கடிகை எ-து-நாழிகை, கதவிடுதாள், எழுத்தாணி, துணிக்கை. (4)

3272. கடிப்பம் எ-து-காதணி, ஆபரணச்செப்பு. (2)

3273. கடு எ-து-ஓர்மரம், நஞ்சு. (2)

3274. கடை எ-து-இடம், வாயில், அங்காடி, முடிவு. (3)

3275. கட்சி எ-து-காடு, பறவைக்கூடு. (2)

3276. கட்டளை எ-து-துலாம், நிறையறிகருவி, உரைகல், அளவு, உவமை. (5)

3277. கணம் எ-து-காலநுட்பம், திரட்சி, பிசாசம், திப்பிலி, ஓர்நோய், விண்மீன், வட்டம். (7)

3278. கணி எ-து-வேங்கைமரம், மருதநிலம். (2)

3279. கணிச்சி எ-து-தோட்டி, மழு, தறிகை. (3)

3280. கணை எ-து-அம்பு, திரண்டவடிவு, பூசநட்சத்திரம். (3)

3281. கண்டகம் எ-து-காடு, முள். (2)

3282. கண்டம் எ-து-கழுத்து, கவசம், வாள், நாடு, திரைச்சீலை, துண்டம், சருக்கரை, வெல்லம். (8)

3283. கண்டிகை எ-து-ப*ணிச்செப்பு, அக்கமணி, வாச்சியத்தொன்று, பதக்கம். (4)

3284. கண்டூ*தி எ-து-காஞ்சொறிச்செடி, தினவு. (2)

3285. கதலி எ-து-வாழை, தேற்றாமரம். (2)

3286. கதவு எ-து-காவல், கபாடம். (2)

3287. கதுப்பு எ-து-ஆண்மயிர், பெண்மயிர், பசுக்கூட்டம், கன்னம். (4)

3288. கதை எ-து-காரணச்சொல், தண்டாயுதம், சொல். (3)

3289. கந்தம் எ-து-வாசனை, கிழங்கு, அணுக்கூட்டம், கழுத்தடி, இந்திரியம். (5)

3290. கந்தரம் எ-து-கழுத்து, மலைக்குகை, மேகம். (3)

3291. கந்தருவம் எ-து-இசை, குதிரை. (2)

3292 கந்து எ-து-யாக்கையின்மூட்டு, பற்றுக்கோடு, தூண், பண்டியுள்ளிரும்பு (4)

3293 கந்துகம் எ-து-பந்து, குதிரை (2)

3294 கமலம் எ-து-தாமரை, நீர் (2)

3295 கம் எ-து-நீர், வெண்மை, தலை, ஆகாயம், பிரமன் (5)

3296 கம்பம் எ-து-நடுக்கம், தூண், விளக்குத்தண்டு (3)

3297 கம்பலைஎ-து-துன்பம், பேசலாலெழுமொலி (2

3298 கயம் எ-து-குளம், ஆழம், நீர், குறைபாடு, யானை, பெருமை, மேன்மை (7)

3299 கயில் எ-து-பிடரி, ஆபரணக்கடைப்புணர்வு (2)

3300 கயினி எ-து-அத்தநட்சத்திரம், கைம்பெண் (2)

3301 கரகம் எ-து-நீர்த்துளி, மழைக்கட்டி, கங்கை, கமண்டலம், நீர் (5)

3302 கரணம் எ-து-காரணம், கூத்தினோர்விகற்பம், மனமுதலியவந்தக்கரணம், கணிதம் (4)

3303 கரண்டம் எ-து-பணிச்செப்பு, நீர்க்காக்கை (2)

3304 கரம் எ-து-கழுதை, கை, சூரியகிரகணம், நஞ்சு, குடியிறை (5)

3305 கரிணி எ-து-யானை, பெண்யானை (2)

3306 கரில் எ-து-கார்ப்பு, குற்றம், கொடுமை (3)

3307 கரீரம் எ-து-அகத்தி, மிடா, யானைப்பல்லடி (3)

3308 கலாபம் எ-து-மேகலை, மணிக்கோவை, மயிற்றோகை (3)

3309 கலாம் எ-து-கொடுமை, வெகுளி (2)

3310 கலி எ-து-வலிமை, ஒலி, கடல், கலிப்பா, கலியுகம் (5)

3311 கலிங்கம் எது-வானம்பாடி, சீலை, ஊர்க்குருவி, ஓர்தேயம் (4)

3312 கலை எ-து-மகரமீன், சிலை, மரக்கொம்பு, பிறைநிரம்பல், ஆண் முசு ,ஆண்மான், வித்தை, வயிரம், காலநுட்பம், நூல் (10)

3313 கல் எ-து-அருவியி னொலிக்குறிப்பு, கல் (2)

3314 கவடு எ-து-யானைக்கயிறு, மரக்கொம்பு (2)
3315. கவந்தம் எ-து- நீர், செக்கு, பிசாசம், தலைக்குறைப்பிணம். (4)

3316. கவலை எ-து- கவர்வழி, அச்சம், செந்தினை. (3)

3317. கவனம் எ-து- காடு, சீக்கிரம். (2)

3318. கவி எ-து- கடிவாளம், குரங்கு, கவி, சுக்கிரன். (4)

3319. கவிகை எ-து- குடை, ஈதல். (2)

3320. கவை எ-து- எள்ளிளங்காய், ஆயிலியநட்சத்திரம், மரக்கப்பு, காடு. (4)

3321. கழி எ-து- நுகத்தொளைக்கழி, மிகுதி, உப்பளம். (3)

3322. கழிவு எ-து- கழிவு நாள், மிகுதி. (2)

3323. கழுது எ-து- பிசாசம், வண்டு, பரண். (3)

3324. கழை எ-து- கரும்பு, மூங்கில், புனர்பூசநாள். (3)

3325. களபம் எ-து- கலவைச்சாந்து, யானைக்கன்று. (2)

3326. களம் எ-து- கறுப்பு, போர்க்களம், கழுத்து, களர்நிலம், விடம், இடம். (6)

3327. களரி எ-து- காடு, போர்க்களம். (2)

3328. களிறு எ-து- ஆண்பன்றி, ஆண்சுறா, ஆண்யானை, அத்தநட்சத்திரம். (4)

3329. கள் எ-து- கள், தேன், களவு. (3)

3330. கள்வன் எ-து- யானை, கரியவன், கர்க்கடகவிராசி, ஞெண்டு.(4)

3331. கறங்கு எ-து- சத்தவொலி, சுற்றுதல். (2)

3332. கறுப்பு எ-து- கருநிறம், சினக்குறிப்பு. (2)

3333. கறை எ-து- இரத்தம், குற்றம், உரல், நிறம், விடம், குடியிறை, கறுப்பு. (7)

3334. கனம் எ-து- பாரம், மேகம். (2)

3335. கனலி எ-து- சூரியன், நெருப்பு. (2)

3336. கன்று எ-து- பசுவின்கன்று, சிறுமை, கைவளை, மரக்கன்று.(4)

3337. கன்னல் எ-து- நாழிகை, நாழிகைவட்டில், சருக்கரை, கரகம், கரும்பு. (5)

3338 கன்னி எ-து-அழிவின்பாதர், அழிவில் பொருள், இளைமை, அத்தநட்சத்திரம், ஓரிராசி, பார்வதி, துர்க்கை, ஓர்யாறு (8)

3339 கா எ-து-சோலை, தோட்சுமை, ஓர்நிறை (3)

3340 காகுளி எ-து-இசை, மிடற்றெழு மோசை, ஆசனம் (3)

3341 காசு எ-து-குற்றம், மணிப்பொ, கோழை (3)

3342 காசை எ-து-நாணல், புற்பிடி (2)

3343 காஞ்சி எ-து ஓர்மரம், ஓரிசை, கச்சிப்பதி, மேகலை (4)

3344 காடு எ-து கானம், இடம் (2)

3345 காண்டம் எ-து-திரைச்சீலை, படலம் (2)

3346 காண்டை எ-து-முனிவர்வாசம், கற்பாழி (2)

3347 காத்திரம் எ-து-உடல், உறுப்பு, யானையின் முன்கால், கோபம், பருமம் (5)

3348 காந்தாரம் எ-து-காடு, ஓரிசை (2)

3349 காப்பு எ-து-மதில், உள்ளுயர்நிலம் (2)

3350 காமரம் எ-து-ஓரிசை, இசைப்பொது, அடுப்பு (3)

3351 காயம் எ-து-கரிப்பு, உடல் (2)

3352 காரி எ-து-வைரவன், சனி, ஐயன், கருமை, கரிக்குருவி (5)

3353 கார் எ-து-கருதியகருமமுடியுங் காறுங்கொள்ளுங் கோபம், வெள்ளாடு, நீர், கருங்குரங்கு, மேகம், இருள், கார்கால, கறுப்பு (8)

3354 மற்றுங்கார் எ-து-எலிமயிர், அழகு (2)

3355 கார்த்திகை எ-து-துர்க்கை, ஓர்நாள், ஓர்மாதம் (3)

3356 காலம் எ-து-பொழுது, விடியல் (2)

3357 கால் எ-து-வலிமை, காற்று, காலன், பாதம், பொழுது, குறுந்தறி, வழி, அளவு தோருருள் (9)

3358 காவி எ-து-கள், கருங்குவளை, காவிக்கல் (3)

3359 காழகம் எ-து-கருமை, ஆடை, கடாரமென்னுமூர் (3)

3360 காளம் எ-து-கழுமரம், கருமை, விடம், ஓர்வாத்தியம் (4)

3361 காளை எ-து-பாலைநிலத்தலைவன், இளையோன் (2)

3362 கானம் எ-து-காடு, இசை (2)

3363 கானல் எ-து-கடற்கரைச்சோலை, மலைச்சார்சோலை, சூரிய கிரணம், கழி, பேய்த்தேர், உவர், களர்நிலம், உப்பளம் (8)

3364 கான் எ-து-காடு, மணம் (2)

3365 கிஞ்சுகம் எது-செவப்பு, முண்முருக்கு (2)

3366 கிடக்கை எ-து-பூமி, மக்கட்படுக்கை (2)

3367 கிடுகு எ-து-கேடகம், தேர்மரச்சுற்று (2)

3368 கிட்டி எ-து-கைத்தாளம், தலையீற்றுப்பசு (2)

3369 கிம்புரி எ-து-முடியுறுப்பு, பூண் (2)

3370 கிழமை எ-து-வாரம், குணம், உரிமை (3)

3371 கிளர் எ-து-ஒளி பூந்தாது (2)

3372 கிளை எ-து-உறவு, மூங்கில், யாழிசை (3)

3373 கிள்ளை எ-து-கிளி, குதிரை (2)

3374 கின்னரம் எ-து-வீணை, நீர்வாழ்பறவை (2)

3375 கீசகம் எ-து-குரங்கு, மூங்கில் (2)

3376 கீரம் எ-து-கிளி, பால் (2)

3377 குக்குடம் எ-து-கோழி, பறவைநாகம் (2)

3378 குசலம் எ-து-குணம், மாட்சிமை (2)

3379 குஞ்சம் எ-து-குறுமை, நாழி, கோட்சொல்லல்(3)

3380 குஞ்சி எ-து-குன்றிக்கொடி, ஆண்மயிர் (2)

3381 குடம் எ-து-பதினோருருத்திரராடலிலொன், கைகொட்டிக் குவித்தல், கும்பவிராசி, பசு, நகரம், சருக்கரை, கடம் (7)

3382 குடம்பை எ-து-முட்டை, பறவைக்கூடு (2)

3383 குடி எ-து-ஊர்ப்பொது, புருவம், குலம், கோத்திரம் (4)

3384 குடிஞை எ-து-கோட்டான், பறவைப்பொது, யாறு (3)

3385 குடுமி எ-து-வெற்றி, உச்சி, ஆண்மயிர் (3)

3386 குணம் எ-து-குடம், நிறம், நூல் (3)

3387 குணில் எ-து-குறுந்தடி, பறையடிக் குந்தடி, கவண் (3)

3388 குணுங்கர் எ-து-தோற்கருவியாளர், சண்டாளர் (2)

3389 குண்டலம் எ-து-ஆகாயம், காதணி (2)

3390 குண்டு எ-து-நிறைகல், ஆண்குதிரை, ஆழம் (3)

3391 குத்திரம் எ-து-மலை, வஞ்சகம் (2)

3392 குமரி எ-து-காளி, துர்க்கை, கன்னி, சத்தமாதர்களிலொருத்தி, ஓர்நதி, கற்றாழை (6)

3393 குமுதம் எ-து-தென்மேற்றிசையானை, ஆம்பல், அடுப்பு, பேரொலி, தருப்பை (5)

3394 கும்பம் எ-து-யானைமத்தகம், குடம், ஓரிராசி (3)

3395 கும்பி எ-து-யானை, நரகம், சேறு (3)

3396 குயம் எ-து-முலை, அரிவாள் (2)

3397 குயில் எ-து- வார்த்தை, ஓர்பட்சி ,தொளையுடைப்பொருள் (3)

3398 குரல் எ-து-கிண்கிணிமாலை, நெற்கதிர் யாழினோர்நரம்பு,பெண்மயிர், பறவையினிறகு (5)

3399 குரவை எ-து-கடல், கைகோத்தாடல் (2)

3400 குரு எ-து-ஆசாரியன், வேர்க்குரு, நிறம், பாரம், அரசன் (5)

3401 குருகு எ-து-உலைமூக்கு, குரக்கத்திமரம், வெண்மை, மூலநாள், நாரை, கோழி, கைவளை (7)

3402 குருதி எ-து-செந்நிறம், செவ்வாய், இரத்தம் (3)

3403 குருந்து எ-து-வெண்குருத்து, குருக்கத்திமரம், குழந்தை (3)

3404 குலம் எ-து-இரேவதிநாள், சாதி, விலங்கின்கூட்டம், அரசரில் (4)

3405 குவடு எ-து மலை, திரட்சி, மரக்கொம்பு (3)

3406 குவலயம் எ-து-குவளை, பூமி (2)

3407 குழல் எ-து-ஆண்மயிர், பெண்மயிர், இசைக்கருவி, தொளையுடைப்பொருள் (4)

3408 குழை எ-து-ஆகாயம், சங்கு, சேறு, காடு, குண்டலம், தளிர், தொளையுடைப்பொருள் (7)

3409 குளகம் எ-து-குற்றெழுத்துச்செய்யுள், மரக்கால் (2)

3410 குளம் எ-து-குளம், நெற்றி, சருக்கரை (3()

3411 குளிர் எ-து-இலைமூக்கரியுங்கத்தி, குளிர்ச்சி, கவண், குடமுழவு, ஞெண்டு (5)

3412 குறிஞ்சி எ-து-குறிஞ்சிநிலம், குறிஞ்சிமரம், ஓரிசை, மருதயாழ்த்திறம், ஓர்பண் (5)

3413 குறும்பொறை எ-து-குறிஞ்சிநிலத்தூர், சிறுமலை, காடு (3)

3414 குன்று எ-து-சதயநாள், மலை (2)

3415 கூடம் எ-து-வீடு, மறைவு, கொல்லன்சம்மட்டி, மலையினுச்சி (4)

3416 கூட்டம் எ-து-கூட்டம், மலையினுச்சி (2)

3417 கூந்தல் எ-து-பெண்மயிர், மயிற்றோகை (2)

3418 கூரல் எ-து-பெண்மயிர், பறவையினிறகு (2)

3419 கூலம் எ-து-கடைவீதி, வரம்பு, நீர்க்கரை, பாகல், பசு, பண்ணிகாரம், விலங்கின்வால் (7)

3420 கூவிரம் எ-து-தேர்க்கொடிஞ்சி, தேர், வில்வமரம் (3)

3421 கூழை எ-து-பெண்மயிர், பறவையினிறகு (2)

3422 கூளி எ-து-பொலியெருது, பிசாசம் ,எருது, கூட்டம், உறவு (5)

3423 கூளியர் எ-து-குறவர், வீரர் (2)

3424 கூற்று எ-து-சொல், காலன் (2)

3425 கேசம் எ-து-ஆண்மயிர், பெண்மயிர், புறமயிர் (3)

3426 கேசரம் எ-து-பூந்தாது, மகிழ்மரம் (2)

3427 கேடகம் எ-து-பலகை, மலைசெறிந்தவூர், கேடகம் (3)

3428 கேழ் எ-து-ஒளி, நிறம், ஒப்பு (3)

3429 கை எ-து-அலங்காரம், படைவகுப்பு, ஒழுக்கம், சிறுமை, கைத்தலம், தங்கை (6)

3430 கொக்கு எ-து-மாமரம், மூலநாள், குதிரை, செந்நாய், ஓர்புள் (5)

3431 கொடி எ-து-வல்லி, கேது, துகிற்கொடி (3)

3432 கொடிறு எ-து-கபோலம், குறடு, பூசநட்சத்திரம் (3)

3433 கொண்டல் எ-து-கீழ்காற்று ,மேகம் (2)

3434 கொண்டை எ-து-இலந்தைக்கனி ,மயிர்முடி (2)

3435 கொண்மூ எ-து-மேகம், ஆகாயம் (2)

3436 கொந்தளம் எ-து-பெண்மயி, மயிர்ச்சுருள், குழற்கொத்து (3)

3437 கொம்மை எ-து-முலை, கைகுவித்துக்கொட்டல், அழகு, வலி, மார்பு, திடர் (6)

3438 கொற்றி எ-து-பசுவின்கன்று, காடுகாள் (2)

3439 கொள் எ-து-ஓரிடைச்சொல், பயனின்மை, பெருமை, காலம், பயம் (5)

3440 கோ எ-து-பசு, அரசன், கிரணம், ஆகாயம், பூமி, சொல், அம்பு, கண், வச்சிராயுதம், திசை, நீர் (11)

3441 கோகிலம் எ-து-குயில், குரங்கு (2)

3442 கோசம் எ-து-மதிலுறுப்பு, கருவூலம், முட்டை ,ஆண்குறி, புத்தகம் (5)

3443 கோசிகம் எ-து-பட், புடவை (2)

3444 கோடகம் எ-து-குதிரை, புதுமை, முடியுறுப்பினொன்று (3)

3445 கோடரம் எ-து-எட்டிமரம், மரக்கொம்பு, சோலை, குதிரை, தேர்மொட்டு (5)

3446 மற்றுங்கோடரம் எ-து-குரங்கு. ஆக (3)

3447 கோடிகம் எ-து-பூந்தட்டு, சிலை (2)

3448 கோடு எ--து-மலையினுச்சி, வரம்பு, நீர்க்கரை, விலங்கின்கொம்பு, ஊதுகொம்பு, சங்கு, மரக்கொம்பு (7)

3449 கோடை எ-து-வெயில், வெண்காந்தள், மேல்காற்று, குதிரை, வேனிற்காலம் (5)

3450 கோட்டம் எ-து-மருதிநிலத்தூர், பகைமேற்சென்றோருறையிடம், நாடு, நகரம், பசுக்கூட்டம், தோட்டம், குராமரம், கோணல், கோவில், அழுக்காறு, ஓர்புதல், உண்பன (12)

3451 கோட்டி எ-து-கூட்டம், கோபுரவாயில், உலைவு (3)

3452 கோணம் எ-து-வளைவு, யானைத்தோட்டி, கூன்வாள், குதிரை, மூக்கு (5)

3453 கோணல் எ-து-கூன், வளைவு (2)

3454 கோதை எ-து-பூமாலை, பெண், கைத்தோற்கட்டி, உடும்பு, பெண்மயிர், காற்று, சேரன், ஒழுங், மரக்காற்பறை (9)

3455 கோத்திரம் எ-து-குடி, மலை (2)

3456 கோரம் எ-து-கொடுமை, வட்டில், சோழன்குதிரை (3)

3457 கோலம் எ-து-அழகு, இலந்தை, இலந்தைக்கனி, பன்றி, பீர்க்கு, பாக்கு, நீரோட்டம் (7)

3458 கோளி எ-து-பூவாதுகாய்க்குமரம், அத்திமரம், கொழிஞ்சி ()

3459 கோள் எ-து-சூரியன் முதலிய ஒன்பதுகிரகம், வலிமை, கோட்பாடு, இடையூறு, கொலை, புறங்கூறல் (6)

3460 கௌசிகம் எ-து-மருதயாழிசை, கூகை, பட்டு, விளக்குத்தண்டு (4)

3461 கௌவை எ-து-கள், துன்பம், பழிச்சொல் (3)

சகரவருக்கம்

3462 சகடம் எ-து-உரோகிணிநாள், பண்டி, வட்டில் (3)

3463 சகுந்தம் எ-து-புட்பொது, கழுகு (2)

3464 சகுனம் எ-து-பறவைப்பொது, நிமித்தம், கிழங்கு (3)

3465 சகுனி எ-து-பறவை, நிமித்தம்பார்ப்போன் (2)

3466 சங்கம் எ-து-சங்கு, ஓரிலக்கம், கணைக்கால், சவை, நெற்றி, புலவர் (6)

3467 சசி எ-து இந்திராணி, சந்திரன் (2)

3468 சடம் எ-து-கொடுமை, பொய், உடல் (3)

3469 சடை எ-து-பின்னன்மயிர், வேர், நெட்டி (3)

3470 சதம் எ-து-நூறு, பறவையினிறகு (2)

3471 சதி எ-து-தாளவொத்து, உரோகிணிநாள், வட்டம் ,கற்புடையாள், சோறு (5)

3472 சத்தி எ-து-பார்வதி, வேலாயுதம், குடை, கக்கல், வலிமை, சூலம் (6)

3473 சத்திரம் எ-து-அதிசயம், கைவிடாப்படை, குடை, இரும்பு, அன்னசாலை, யாக, வேல் (7)

3474 சந்தி எ-து-அந்திப்பொழுது, மூங்கில், நாற்றெருக்கூடுமிடம், இசைப்பு (4)

3475 சமன் எ-து-நடு, நமன் (2)

3476 சமித்தல் எ-து-பொறுத்தல், நடத்தல் (2)

3477 சம்பு எ-து-சிவன், திருமால், பிரமன், அருகன், நரி, நாவன்மரம் (6)

3478 சரகம் எ-து-தேனீ, வண்டு (2)

3479 சரணம் எ-து-கால், மருதநிலத்தூர், அடைக்கலம்புகுதல் (3)

3480 சரபம் எ-து-மலையாடு, எண்காற்புள் (2)

3481 சரம் எ-து-மணிவடம், கொறுக்கை, அம்பு, தனிமை, நடை, ஓரிருது (6)

3482 சரி எ-து-வழி, கூட்டம், கைவளை (3)

3483 சலாகை எ-து-நாராசம், ஈட்டி, தெய்வவகன்மணி (3)

3484. சலாங்கு எ-து - பொய்யாப்புள், ஒருவகைக்கொதுகு. (2)

3485. சல்லியம் எ-து - செஞ்சந்தனம், முட்பன்றி, எலும்பு, அம்பு. (4)

3486. சவட்டல் எ-து - மெல்லல், கொல்லல். (2)

3487. சவம் எ-து - பிணம், மூங்கில். (2)

3488. சவி எ-து - அழகு, சரமணிக்கோவை, சுவை, செவ்வை, திருவிழா, ஒளி.
(6)

3489. சாகம் எ-து - வெள்ளாடு, சிறுகீரை, தேக்கமரம். (3)

3490. சாகினி எ-து - கீரை, சேம்பு. (2)

3491. சாடி எ-து - புறங்கூறல், தாழி, சீலை. (3)

3492. சாதகம் எ-து - பூதம், வானம்பாடி, சனனம். (3)

3493. சாதம் எ-து - உண்மை, அன்னம், பிறப்பு. (3)

3494. சாதி எ-து - கள், குலம், சிறுசண்பகம், தேக்கமரம், பிரம்பு. (5)

3495. சாபம் எ-து - சபித்தல், வில். (2)

3496. சாமம் எ-து - யாமம், மூன்றாம் வேதம், இரவு, பசுமை, கருமை. (5)

3497. சாமி எ-து - குரு, பொன், தலைவன், முருகக்கடவுள், அருகன், தலைவி. (6)

3498. சாம்பல் எ-து - சாம்பல், ஒடுங்கல், பழம்பூ. (3)

3499. சாரங்கம் எ-து - சாதகப்புள், மான். (2)

3500. சாரம் எ-து - மருந்து, இனிமை, மரவயிரம். (3*)

3501. சாரல் எ-து - மலைப்பக்கம், மருதயாழ்த்திறத்தோரிசை. (2)

3502. சாரிகை எ-து - வட்டமாயோடல், நாகணவய்ப்புள், சுங்கம், சுழல்காற்று. (4)

3503. சார்ங்கம் எ-து - மாயோன்வில், வில். (2)

3504. சாலம் எ-து - மதில், ஆச்சாமரம், வலை, சாளரம், சவை, குறளை மொழி. (4)

3505. சாலி எ-து - நெற்பொது, கள், அருந்ததி. (3)

3506. சாலேகம் எ-து - சாளரம், பூவரும்பு. (2)

3507. சாலை எ-து - கோயில், குதிரைப்பந்தி. (2)

3508. சாறு எ-து - திருவிழா, மரக்குலை, கள். (3)

3509 சானகி எ-து-மூங்கில், சீதை (2)

3510 சானு எ-து-மலை, மலைச்சாரல், முழந்தாள் (3)

3511 சான்றோன் எ-து-மிருகசீரிடநட்சத்திரம், அறிஞன், சூரியன் (3)

3512 சிகண்டி எ-து-மயில், பாலையாழ்த்திறத்தோரோசை, அலி (3)

3513 சிகரி எ-து-எலி, கருநாரை (2)

3514 சிகழிகை எ-து-மயிர்முடி, தொடுத்தமாலை, கோத்தமாலை (3)

3515 சிகி எ-து-கேது, மயில், தீ (3)

3516 சிக்கம் எ-து-குடுமி, உறி, சீப்பு (3)

3517 சிதடன் எ-து-குருடன், அறிவில்லான் (2)

3518 சிதம் எ-து-நட்சத்திரம், வெண்மை, ஞானம், சயமடையப்படல் (4)

3519 சிதர் எ-து-மழைத்துவலை, வண்டு, சீலைத்துணி (3)

3520 சிதலை எ-து-கறையான், சீலைத்துணி, பிணி (3)

3521 சித்திரம் எ-து-அழகு, காடு, ஆமணக்கு, சித்திரம், மெய்போற் பொய்கூறல், சிறப்பு, அதிசயம், ஓர்கவி (8)

3522 சிந்து எ-து-நீர், ஓர்தேசம், ஓர்யாறு -கடல், முச்சீரடி, குறள் வடிவு (6)

3523 சிந்தூரம் எ-து-திலதம், செவப்பு, செங்குடை, புளியமரம், யானை, யானைமுகம் (6)

3524 சிமிலி எ-து-சிள்வண்டு, உறி, குடுமி (3)

3525 சிமையம் எ-து-மலையுச்சி, மலை (2)

3526 சிரகம் எ-து-கரகம், தலைச்சீரா (2)

3527 சிலீமுகம் எ-து-அம்பு, முலைக்கண், வண்டு (3)

3528 சிலை எ-து-வில், மலை, ஓர்மரம், கல் (4)

3529 சில்லி எ-து-தேருருள், சிறுகீரை, வட்டம் (3)

3530 சில்லை எ-து-பகண்டை, சிள்வண்டு, கிலுகிலுப்பை (6)

3531 செவப்பு எ-து-கோபம், கோபக்குறிப்பு, செவப்பு (3)

3532 சிவை எ-து-உலைமூக்கு, பார்வதி, வேர் (3)

3533. சிறுமை எ-து ------ துக்கம், நோய், அற்பம் (3)

3534. சிறை எ-து -------- பறவையினிறகு, கரையின்பக்கம், ஏரி, இடம், காவல். (5)

3535. சினை எ-து--------- கருப்பம், முட்டை, உறுப்பு, மரக்கொம்பு. (4)

3536. சீகரம் எ-து--------- மலை, மலையுச்சி, தலை, அலை, மழைத்துவலை, கரகம். (6)

3537. சீதம் எ-து---------- குளிர்ச்சி, நீர், மேகம் (3)

3538. சீப்பு எ-து---------- கதவின்றாழ், மயிர்சீவுஞ்சீப்பு (2)

3539. சீருள் எ-து--------- செம்பு, ஈயம், செல்வம் (3)

3540. சீர் எ-து----------- தாளவொத்து, செல்வம், தண்டாயுதம், மிகுபுகழ். துலாம், கனம். (6)

3541. சீவனி எ-து--------- செவ்வழியாழ்த்திறத்தினோசை, உயிர்தருமருந்து (2)

3542. சீவன் எ-து--------- பிரகற்பதி, உயிர் (2)

3543. சுகம் எ-து---------- இன்பம், கிளி (2)

3544. சுக்கை எ-து-------- பூமாலை, நட்சத்திரம் (2)

3545. சுசி எ-து----------- சுத்தம், கோடைக்காலம், நெருப்பு. (3)

3546. சுடர் எ-து---------- நெருப்பு,விளக்கு,சந்திரன்,சூரியன்,ஒளி (5)

3547. சுடிகை எ-து-------- நெற்றிச்சுட்டி, கிரீடம், உச்சி (3)

3548. சுண்டன் எ-து------- மூஞ்சூறு, சதயநாள் (2)

3549. சுதை எ-து---------- சுண்ணச்சாந்து,மகள்,அமிழ்து, உதைகாற்பசு (4)

3550. சுந்தரி எ-து--------- மூஞ்சூறு, இந்திராணி, துர்க்கை (3)

3551. சுபம் எ-து----------- தருமம், நன்மை, மோட்சம் (3)

3552. சும்மை எ-து--------- ஊர்ப்பொது,நாடு,சுமை,சத்தம்,நெற்போர் (5)

3553. சுரிகை எ-து--------- கவசம், உடைவாள். (2)

3554. சுரியல் எ-து--------- ஆண்மயிர், பெண்மயிர், நீர்ச்சுழி (3)

3555. சுருங்கை எ-து------- நுழைவாயில், மதகு (2)

3556. சுருதி எ-து---------- ஒலி, வேதம் (2)

3557. சுரை எ-து - பசுவின் முலை, சுரைக்கொடி, கள், உட்டொளை. (4)*

3558. சுவர்க்கம் எ-து - தெய்வலோகம், முலை. (2)

3559. சுவல் எ-து - மேடு, பிடர், தோளின்மேல், குதிரையின் பிடர் மயிர். (4)

3560. சுவவு எ-து - தேவலோகம், பறவை மூக்கு, மூஞ்சூறு. (3)

3561. சூதகம் எ-து - பிறப்பு, மகளிர்பூப்பு, முலைக்கண். (3)

3562. சூரன் எ-து - சூரபன்மன், வீரன், நாய். (3)

3563. மற்றுஞ்சூரன் எ-து - சூரியன், தீ. (2*)

3564. சூர் எ-து - பயம், துன்பம், நோய், தெய்வம். (4)

3565. சூழி எ-து - சுனை, யானைமுகபடாம். (2)

3566. செச்சை எ-து - வெட்சிமரம், வெள்ளாட்டுக்கடா. (2)

3567. செடி எ-து - பாவம், குணமின்மை, நாற்றம், புதல். (4)

3568. செந்து எ-து - ஓசை, ஓர்நரகம், நரி, உயிர், அணு. (5)

3569. செப்பம் எ-து - வீதி, மார்பு, நடு, செவ்வை. (4)

3570. செம்புலம் எ-து - போர்க்களம், பாலைநிலம். (2)

3571. செம்மல் எ-து - பெருமை, வலி, பழம்பூ, ஈசன், புதல்வன், பெருமையிற் சிறந்தோன். (6)

3572. செய்யல் எ-து - சேறு, ஒழுக்கம், காவல். (3)

3573. செல் எ-து - இடி, மேகம், கறையான். (3)

3574. செவிலி எ-து - அக்காள், வளர்த்ததாய். (2)

3575. செவ்வி எ-து - மலரும்பருவத்தரும்பு, சமையம், காலம். (3)

3576. செழுமை எ-து - அழகு, கொழுப்பு, மாட்சிமை. (3)

3577. சேக்கை எ-து - மக்கட்படுக்கை, முலை. (2)

3578. மற்றுஞ்சேக்கை எ-து - விலங்கின்படுக்கை. ஆக (3)

3579. சேடன் எ-து - இளைஞன், அடிமை, தோழன், அனந்தனென்னும் பாம்பு, ஓர்சாதியான். (5)

3580. சேடி எ-து - தோழி, வித்தியாதரருலகு. (2)

3581. சேடு எ-து - திரட்சி, அழகு, நன்மை, பெருமை. (4)

3582. சேண் எ-து - உயரம், நீளம், அகலம். (3)

3583. சேதகம் எ-து - சேறு, செவப்பு. (2)

3584. சேத்து எ-து - செவப்பு, ஒப்பு, அசைச்சொல், உறுப்பு, கருத்து, ஐயம். (6)

3585. சேய் எ-து - முருகக்கடவுள், செவ்வாய், செவப்பு, புதல்வன், நீளம். (5)

3586. சொல் எ-து - நெல், புகழ், வார்த்தை. (3)

3587. சோதி எ-து - சூரியன், சிவன், சோதிநாள், பிரகாசம். (4)

3588. சோனை எ-து - திருவோண நட்சத்திரம், விடாதுபெய்மழை. (2)

3589. சௌரி எ-து - கன்னன், திருமால், சனி, இயமன். (4)

3590. மற்றுஞ்சௌரி எ-து - காளிந்தி யென்னுமோர் நதி. (1)

ஞகர வருக்கம்.

3591. ஞாட்பு எ-து - போர், பாரம், களம். (3)

3592. ஞாளி எ-து - நாய், கள். (2)

3593. ஞெகிழி எ-து - சிலம்பு, தீயுறு விறகு, தீக்கடைக்கோல். (3)

3594. ஞெள்ளல் எ-து - பள்ளம், வீதி, மேன்மை. (3)

தகர வருக்கம்.

3595. தகடு எ-து - ஐமைவடிவு, இலை. (2)

3596. தகை எ-து - அருள், குணம், தளர்வு. (3)

3597. தகைமை எ-து - அழகு, பண்பு, பெருமை. (3)

3598. தடம் எ-து - நீர்நிலை, மலைப்பக்கம். (2)

3599. தடவு எ-து - பகுதி, வளைவு, பெருமை. (3)

3600. தடி எ-து - வில், உலக்கை, ஊன், உடும்பு, தண்டாயுதம், வயல், மின்னல். (7)

3601. தட்டு எ-து - தேர்நடு, திரிகை, கேடகம், வட்டம். (4)

3602. தட்டை எ-து - ஓர்வகைப்பறை, கிளிகடிகோல், தட்டு, தினைத்தாள், மூங்கில். (5)

3603. தண்டம் எ-து - சேனை, யானைசெல்வழி. (2)

3604. தண்டு எ-து - தடி, சேனை, தொளையுடைப்பொருள், வீளை, மிதுலி*னராசி, உலக்கை. (6)

3605. தண்ணடை எ-து - நாடு, மருதநிலத்தூர். (2)

3606. தண்ணம் எ-து - மழுவாயுதம், ஒருகட்பறை. (2)

3607. தண்மை எ-து - தாழ்வு, எளிமை. (2)

3608. தத்தை எ-து - அக்காள், கிளி. (2)

3609. தமம் எ-து - இராகு, இருள். (2)

3610. தமிழ் எ-து - இனிமை, நீர்மை. (2)

3611. தம்பம் எ-து - தூண், கவசம். (2)

3612. தரணி எ-து - பூமி, மலை, சூரியன். (3)

3613. தவிசு எ-து - மெத்தை, தடுக்கு, பீடம். (3)

3614. தழல் எ-து - கிளிகடிகோல், நெருப்பு. (2)

3615. தளம் எ-து - சாடி, சாந்து. (2)

3616. தளிமம் எ-து - படுக்கை, அழகு, மெத்தை. (3)


3617. தளை எ-து - ஆண்மயிர், கட்டு, காற்சிலம்பு. (3)

3618. தனஞ்சயன் எ-து - தசவாயுவிலொன்று, தீ, அருச்சுனன். (3)

3619. தனம் எ-து - பசுவின் கன்று, அடையாளம், முலை, சாந்து, பொன். (5)

3620. தனு எ-து - உடல், வில், சிறுமை. (3)

3621. தன்மம் எ-து - புண்ணியம், வேதம். (2)

3622. தன்மை எ-து - குணம், பெருமை, நன்மை. (3)

3623. தாணு எ-து - மலை, தூண், நிலைபேறு, சிவன். (4)

3624. தாண்டவம் எ-து - தாவல், கூத்து, செலுத்தல். (3)

3625. தாதி எ-து - அடியவள், செவிலித்தாய், பரணி நட்சத்திரம். (3)

3626. தாமம் எ-து - மாலை, பூ, மணிவடம், பட்டினம், ஒளி, கயிறு, கொன்றைமரம். (7)

3627. தாரம் எ-து - வல்லிசை, மனைவி, வீணையினோர் நரம்பு, அரும் பண்டம், வெள்ளி, தரா*, நா. (7)

3628. தாரை எ-து - வழி, கண்மணி, சுவடு, விண்மீன், நேரோடல், கூர்மை, வாத்தியத்தொன்று, மழை. (8)

3629. தார் எ-து - மாலை, பூ, கொடிப்படை, கிண்கிணிமாலை. (4)

3630. தாலம் எ-து - பூமி, கூந்தற்கமுகு, நா, உண்கலம், பனைமரம். (5)

3631. தாழை எ-து - தெங்கு, தாழை (2)

3632. தாழ்மை எ-து - இளிவு, கீழ்மை, எளிமை. (3)

3633. தாள் எ-து - கால், முயற்சி, கதவுறுதாள், நெல்லரிபுல். (4)

3634. தாறு எ-து - அளவு, வாழை முதலியவற்றின் குலை.

3635. தானம் எ-து - யானைமதம், வலிமை, ஈகை, தேவலோகம், வேட்டல், தருமம். (6)

3636. தானை எ-து -வஸ்திரம், சேனை, ஆயுதப்பொது. (3)

3637. திகிரி எ-து - மலை, சக்கராயுதம், வட்டவடிவு, தேர், தேருருளை, மூங்கில். (6)

3638. திகை எ-து - திக்கு, தேமல். (2)

3639. திங்கள், மதி எ-ன - சந்திரன், மாதம். (2)

3640. திட்டை எ-து - மேடு, உரல், திண்ணை. (3)

3641. திணை எ-து - சாதி, நிலம், ஒழுக்கம். (3)

3642. திதி எ-து - பிரதமை முதலிய திதி, காத்தல், நிலைபெறுதல். (3)

3643. திரு எ-து - இலக்குமி, செல்வம். (2)

3644. திலம் எ-து - எள், மஞ்சாடிமரம். (2)

3645. தீ எ-து - தீங்கு, நெருப்பு. (2)

3646. தீங்கு எ-து - தீமை, குற்றம். (2)

3647. துகள் எ-து - குற்றம், தூளி. (2)

3648. துங்கம் எ-து - அகலம், பெருமை, உயர்ச்சி. (3)


3649. துஞ்சல் எ-து - சாவு, நிலைபேறு, நித்திரை. (3)

3650. துடி எ-து - காலநுட்பம், குமரனாடல், ஏலம், சத்த கன்னிகைகளாடல், பாலைப்பறை. (5)

3651. துணங்கறல் எ-து - இருள், திருவிழா. (2)

3652. துணி எ-து - சோதிநாள், மரவுரி, சீலைத்துணி. (3)

3653. துண்டம் எ-து - துண்டு, முகம், மூக்கு, சாரைப்பாம்பு, பறவையின் மூக்கு. (5)

3654. துத்தம் எ-து - யாழினோர் நரம்பு, ஓர்வகைக்கல், பால், ஓரிசை, வயிறு. (5)

3655. துத்தி எ-து - பாம்பின் படப்பொறி, ஓர் செடி, தேமல். (3)

3356 துப்பு எ-து-அரக்கு, பவளம், ஆயுதப்பொது, துணை, வலி, பொலிவு, நெய், அனுபவம், சுத்தம் (9)

3357 தும்பி எ-து-சுரை, யானை, வண்டு (3)

3358 துருக்கம் எ-து-குங்குமரம், காடு (2)

3359 துருத்தி எ-து-தோல், யாற்றிடைக்குறை (2)

3360 துரோணம் எ-து-எண்காற்புள், வில், காக்கை, தும்பைச்செடி, பதக்கு (5)

3361 துவக்கு எ-து-தோல், பிணக்கு (2)

3362 துளி எ-து-மழை, மழைத்துளி, துளித்த, பெண்ணாமை (4)

3363 துனி எ-து-துன்பம், புலவிநீட்டம் (2)

3364 தூ எ-து-சுத்தம், பற்றுக்கோடு, பகை, தசை (4)

3365 தூக்கு எ-து-துலாம், உறி, கூத்து, பாட்டு, உசாவுதல் (5)

3366 தூங்கல் எ-து-சோம்பல், நிரம்பாத்தூக்கம் (2)

3367 தூசு எ-து-புடைவை, யானைக்கழுத்திடுகயிறு, சேனையுருப்பு (3)

3368 தூபம் எ-து-புகை, நீர்க்கடம்பு (2)

3369 தூம்பு எ-து-வாயில், உட்டொளைப்பொருள், மூங்கில், மரக்கால், நீரோடி (5)

3370 தூரியம் எ-து-நல்லாடை, உவகைப்பறை, முரசு, பேரெருது (4)

3371 மற்றுந் தூரியம் எ-து-வாத்தியப்பொது, பொதி, யெருது ஆக (6)

3372 தெய் எ-து-கொல்லல், தெய்வம் (2)

3373 தெரிவை எ-து-பெண், கன்னிராசி (2)

3374 தெவ் எ-து-கொள்ளுதல், பகை (2)

3375 தென் எ-து-இசை, அழகு, தெற்கு, ஓர்பாடல் (4)

3376 தே எ-து-கொளற்பாடு, கடவுள் (2)

3377 தேசிகம் எ-து-அவ்வவ்நாட்டுச்சொல், அழகு, ஒளி, பொன், ஓர்கூத்து (5)

3378 தேசிகன் எ-து-தேசாந்தரி, குரு, வணிகன் (3)

3379 தேம் எ-து-தித்திப்பு, தேசம், வாசனை (3)

3380 தேயம் எ-து-உடல், நாடு (2)

3381 தேயு எ-து-தீ, மயக்கம் (2)

3382 தேர்தல் எ-து-ஆராய்தல், கொள்ளுதல் (2)

3383 தேள் எ-து-விருச்சிகவிராசி, அனுடநாள், ஓர்செந்து (3)

3384 தொங்கல் எ-து-பூமாலை, பீலிக்குஞ்சக்குடை, ஆபரணத் தொங்கல், மயிற்றோகை, ஐம்பான்முடியிலன்று (3)

3385 தொடி எ-து-கங்கணம், கைவளை, ஒருபலம் (3)

3386 தொடு எ-து-மருதநிலம், வஞ்சம், தோட்டம் (3)

3387 தொண்டை எ-து-யானைத்துதிக்கை, கொவ்வை (2)

3388 தொத்து எ-து-அடிமை, பூங்கொத்து (2)

3389 தொய்யல் எ-து-இன்பம், சேறு (2)

3390 தொழு எ-து-பட்டி, இரேவதிநாள் (2)

3391 தொறு எ-து-தொழுவம், பசுக்கூட்டம், கூட்டம் (3)

3392 தோடு எ-து-கூட்டம், பூவிதழ் (2)

3393 தோட்டி எ-து-கதவு, யானைத்தோட்டி (2)

3394 தோணி எ-து--இரேவதிநாள், மரக்கலம், மதிலுறுப்பு, அம்பு, மிதவை (5)

3395 தோல் எ-து-யானை, அழகு, தோல், தோல்வி, தோற்பலகை (5)

3396 தோள் எ-து-புயம், கை (2)

3397 தோற்றம் எ-து-வலிமை, பிறப்பு, காட்சி (3)

3398 தோன்றல் எ-து-புதல்வன், தலைவன் (2)

நகரவருக்கம்

3399 நகம் எ-து-உகிர், மலை (2)

3400 நகை எ-து-பல், சிரிப்பு, இன்பம், ஒளி (3)

3401 நடை எ-து-வழி, ஒழுக்கம், செலவு (3)

3402 நந்தி எ-து-இடபம், சிவன் (2)

3403 நந்து-பறவை, நத்தை, சங்கு (3)

3404 நயந்தோர் எ-து-கணவர், விரும்பப்பட்டவர் (2)

3405 நயம் எ-து-நன்மை, இன்பம், நீதி (3)

3406 நரந்தம் எ-து-நாரத்தை, கத்தூரி (2)

3407 நரை எ-து-வெண்மை, இடபம், கவரிமா, நரைமயிர், நாரை (5)

3708 நலம் எ-து--விருச்சிகவிராசி, சுகம், உபகாரம் (3)

3709 நவம் எ-து-ஒன்பது, புதுமை, கார்காலம் (3)

3710 நவியம் எ-து-மழு, கோடாலி (2)

3711 நவிரம் எ-து-மலை, புன்மை, மயில், உச்சந்தலை, ஆண்மயிர் (5)

3712 நவிர் எ-து-ஆண்மயிர், தக்கேசிப்பண், மருதயாழ்த்திறம், வாள்

3713 நளி எ-து-கூட்டம், பெருமை (2)

3714 நறவம் எ-து-அனிச்சமரம், கள் (2)

3715 நற்றுடி எ-து-நாகமரம், வேர் (2)

3716 நனை எ-து-பூவரும்பு, கள் (2)

3717 நாகம் எ-து-நற்புடைவை, யானை, ஞாழன்மரம், மலை, பாம்பு, குரங்கு, ஆகாயம், புன்னைமரம், தேவலோகம், காரீயம் (10)

3718 நாஞ்சில் எ-து-கலப்பை, மதிலுறுப்பு (2)

3719 நாட்டம் எ-து-கண், ஓர்பண், வாளாயுதம் (3)

3720 நாப்பண் எ-து-இடை, தேர்நடு (2)

3721 நாரி எ-து-கள், பெண், வின்னாணி, பன்னாடை (4)

3722 நாவிதன் எ-து-கார்த்திகை நட்சத்திரம், பூரநட்சத்திரம் (2)

3723 நாழி-எ-து-பூரட்டாதி நட்சத்திரம், உட்டொளைப்பொரு, நாழிகை, அளக்குநாழி (4)

3724 நானம் எ-து-அறிவு, பூசுவன, வாசனை, கவரிமா, குளித்தல், கத்தூரி (6)

3725 நிசி எ-து-பொன், மஞ்சள், இரவு (3)

3726 நிதம்பம் எ-து-மலைப்பக்கம், அல்குல் (2)

3727 நியமம் எ-து-நீதி, தேவர்கோயில், நிச்சயம், தெரு, பட்டினம், கடைவீதி (6)

3728 நிரஞ்சனம் எ-து-வெளி, நிறைவு, மோட்சம் (3)

3729 நிரியாணம் எ-து-யானைக்கடைக்கண், சாவு (2)

3730 நிருமித்தல் எ-து-படைத்தல், ஆராய்தல் (2)

3731 நிறை எ-து-நிறை, கற்பு, துலாவிராசி (3)

3732 நீபம் எ-து-காரணம், உத்திரட்டாதிநட்சத்திரம், நீர்க்கடம்பு (3)

3733 நீர் எ-து-சலம், பண்பு, பூராடநட்சத்திரம் (3)

3734 நீலி எ-து-ஓர்மரம், துர்க்கை, கறுப்பு, அவுரி (4)

3735 நீவி எ-து-சிலை, கொய்சகம் (2)

3736 நுதல் எ-து-புருவம், நெற்றி (2)

3737 நெறி எ-து-நீதி, வழி, ஒழுக்கம் (3)

3738 நெற்றி எ-து-சேனையுறுப்பு, நுதல் (2)

3739 நேத்திரம் எ-து-பட்டு, கண் (2)

3740 நேயம் எ-து-நெய், அன்பு, எண்ணெய் (3)

3741 நொச்சி எ-து-மதில், நொச்சிமரம் ,சிற்றூர் (3)

பகரவருக்கம்

3742 பகடு எ-து-பெருமை, யானை, பேரெருது (3)

3743 பகல் எ-து-பிரித, நடு, பகற்காலம், மூன்றேமுக்கானாழிகை, சூரியன், தினம், பகுத்தல், நுகத்தாணி, பிரகாசம் (9)

3744 பகவன் எ-து-குரு, திருமால், பிரமன், சிவன், சூரியன், அருகன், புத்தன் (7)

3745 பகழி எ-து-அம்புக்குதை, அம்பு (2)

3746 பக்கம் எ-து-அரு, பிரதமைமுதலியதிதி, இறகு (3)

3747 பங்கம் எ-து-சேறு, வத்திரம், ஈனம் (3)

3748 பங்கி எ-து-ஆண்மயிர், புறமயிர் (2)

3749 பங்கு எ-து-பாதி, சனி, முடம் (3)

3750 பசு எ-து-உயிர், பசு (2)

3751 பச்சை எ-து-மரகதம், புதன், தோல், ஓர்வாசனைப்புதல், விட்டுணு (5)

3752 படங்கு எ-து-பெருங்கொடி, மேற்கட்டி, கூடாரம் (3)

3753 படம் எ-து-விருதுக்கொடி, சீலை, சித்திரப்படம், பாம்பின்படம், யானைமுகபடாம் (5)

3754 படலிகை எ-து-பூந்தட்டு, கைம்மணி, வட்டவடிவு, பெரும்பீர்க்கு (4)

3755 படலை எ-து-படர்தல், சிகைமாலை (2)

3756 படி எ-து-பூமி, குதிரையங்கவடி, கற்படி, பகை, பண்பு, நாழி (6)

3757 படிறு எ-து-பொய், சூது, களவு (3)

3758 படு எ-து-மரக்குலை, நீர்நிலை, கள், பேரறிவு (4)

3759 படை எ-து-ஆயுதம், குதிரைச்சேணம், படுக்கை, சேனை, கலப்பை (5)

3760 பட்டம் எ-து-வழி, பதவி, குளம், விலங்குதுயிலிடம், கவரிமா, மரக்கலவகை, பெருங்கொடி (7(

3761 பட்டி எ-து-இடம், நாய், பசுக்கொட்டில் (3)

3762 பட்டு எ-து-சிற்றூர், பட்டாடை (2)

3763 பணவை எ-து-பரண், கழுகு (2)

3764 பணி எ-து-தொழில், தோற்கருவி, சொல், பணிதல், பாம்பு, ஆரணம் (6)

3765 பணிலம் எ-து-ஓர்வகைச்சங்கு, சங்கு (2)

3766 பணை எ-து-பேரிகை, மூங்கில், மரக்கொம்பு, மருதநில, மருதநிலப்பறை, குதிரைப்பந்தி, பெருத்தல், வயல், அரசமரம் (9)

3767 பண் எ-து-இசைப்பாட்டு, குதிரைக்கல்லணை, இசை (3)

3768 பண்டம் எ-து-பண்ணிகாரம், பொன் (2)

3769 பண்ணவன் எ-து-அருகன், இருடி ,திண்ணியன் (3)

3770 பண்ணை எ-து-மருதநிலம், நீர்நிலை, வயல், விலங்கின்படுக்கையிடம், மகளிர்விளையாட்டு, மகளிர்கூட்டம், சவை, ஓர்புதல் (8)

3771 பதங்கம் எ-து-பறவைப்பொது, விட்டில் (2)

3772 பதம் எ-து-வரிசை, சோறு, சொல், வழி, உண்டல், பக்குவம், வேதத்தினோருறுப்பு, கால், பொழுது, அவிழ் (10)

3773 பதலை எ-து-மலை, சாடி, ஒருகட்பகுவாய்ப்பறை (3)

3774 பதி எ-து-தலைவன், ஊர் (2)

3775 பதுக்கை எ-து-பாறை, சிறுமேடு, சிறுதூறு (3)

3776 பத்திரம் எ-து-அழகு, பறவையினிறகு, இலை, அம்பு, உடைவாள் ((5)

3777 பத்திரை எ-து-பசு, திதி, காளி (3)

3778 பந்தம் எ-து-அழகு, உண்டை, நூல், உறவு,கட்டு, கைவிளக்கு (6)

3779 பயசு எ-து-நீர், பால் (2)

3780 பயம் எ-து-பால், நீர் (2)

3781 பயம்பு எ-து-யானைபடுகுழி, நீர்நிலை (2)

3782 பயல் எ-து-பாதி, பையல், பள்ளம் (3)

3783 பயிர் எ-து-பைங்கூழ், பறவையொலி (2)

3784 பயோதரம் எ-து-முலை, மேகம் (2)

3785 பரசு எ-து-மழு, மூங்கில் (2)

3786 பரதர் எ-து-வணிகர், நெய்தனிலமாக்கள் (2)

3787 பரம் எ-து-மெய், மெய்க்கவசம், பாரம், குதிரைக்கல்லணை, முன் ((5)

3788 பரவை எ-து-பரப்பு, கடல், இலக்குமிகூத்து, உப்பு (4)

3789 பரி எ-து-சுமை, விரைவு, குதிரை, பெருமை, செலவு, மாயம் (6)

3790 பரிகம் எ-து-மதிலுண்மேடை, வளைதடி (2)

3791 பரிதி எ-து-தேருருள், பரிவேடம், சூரியன், வட்டவடிவு (4)

3792 பருவம் எ-து-பக்குவம் ,பொழுது (2)

3793 பலம் எ-து-பழம், கிழங்கு, காய், சேனை, ஓர்நிறை, பயன் (6)

3794 பலாசம் எ-து-பசுமை, புரசைமரம் (2)

3795 பலி எ-து-பலிப்பது, காகம் (2)

3796 பலிதம் எ-து-நரைமயிர், காய்க்குமரம் (2)

3797 பவனம் எ-து-பூமி, காற்று, இராசி, வீடு (4)

3798 பழங்கண் எ-து - துன்பம், மெலிவு, ஒலி (3)

3799 பளிங்கு எ-து-படிகம், சுக்கிரன் (2)

3800 பள்ளி எ-து-முனிவரிருப்பிடம், மக்கட்படுக்கை, நித்திரை, ஊர், சிற்றூர், விலங்கின் படுக்கையிடம், தேவர் கோவில் (7)

3801 பறம்பு எ-து-மலை, முலை (2)

3802 பறை எ-து-முரசு, பறவையினிற, சொல் (3)

3803 பனி எ-து-துக்கம், நோய், பெய்யும்பனி, குளிர்ச்சி, பயம், நடுக்கம் (6)

3804 பாகம் எ-து-பாதி, பிச்சை (2)

3805 பாகல் எ-து-பலாமரம், பாகற்கொடி (2)

3806 பாகு எ-து-சருக்கரை, குழம்பு (2)

3807 பாசம் எ-து-பேய், அன்பு, ஊசித்தொளை (3)

3808 பாசனம் எ-து- சுற்றம், உண்கலம் (2)

3809 பாடி எ-து-முல்லைநிலத்தூர், பாசறை, சேனை, நாடு, நகரம் (5)

3810 பாடு எ-து-கேடு, ஓசை, பக்கம்,பெருமை (4)

3811 பாணம் எ-து-மழைவண்ணக்குறிஞ்சி, அம்பு (2)

3812 பாணி எ-து-ஊர்சூழ்சோலை, அழகு, இசை, நீர், பலபண்டம், அன்பு, நாடு, கை, நெடுநேர, வாச்சியப்பொது (10)

3813 பாண்டில் எ-து-வட்டம், அகல், கட்டில், *பரிபூண்டவூர்தி, கைத்தாளம், வாகைமரம், எருது (7)

3814 பாதிரி எ-து ஓர்மரம், மூங்கில் (2)

3815 பாத்தி எ-து-பங்கு, சிறுசெய், வீடு (3)

3816 பாம்பு எ-து-பாம்பு, வரம்பு (2)

3817 பாரதி எ-து-மரக்கலம், சரச்சுவதி (2)

3818 பாராவாரம் எ-து-கடல், கடற்கரை (2)

3819 பாரி எ-து-மனைவி, நல்லாடை, பூமி, கட்டில், கடையெழுவள்ளலி லொருவன் (5)

3920 பார் எ-து-தேர்ப்பரப்பு, பூமி (2)

3921 பாலிகை எ-து-முளைப்பாலிகை, வட்டம், உதடு (3)

3922 பால் எ-து-பங்கு, இடம், பால், குணம், பக்கம், திக்கு, இயல்பு (6)

3923 பாழி எ-து-முனிவர்வாசம், விலங்கின்படுக்கையிடம், அகலம், வலி, நகரம், பாழ், குகை (7)

3924 பாளிதம் எ-து-கண்டசருக்கரை, சோறு, கர்ப்பூரம், பட்டுவருக்கம் (4)

3925 பானல் எ-து-கருங்குவளை, வயல் (2)

3826 பானு எ-து-- ஒளி. சூரியன், (2)

3827 பிசி எ-து-- பொய். சோறு. அரும்பொருள், (3)

3828 பிசிதம் எ-து--இறைச்சி. விபூதி. வேம்பு. (3)

3829 பிச்சம் எ-து--ஆண்மயிர். வெண்குடை. பீலிக்குஞ்சக்குடை, (3)

3830 பிணிமுகம் எ-து--பறவைப்பொது, மயில், (2)

3831 பிணை எ-து--ஆசை, மான், (நாய், பன்றி,புல்வாயிவற்றின்) பெண். ((3)

3832 பிண்டம் எ-து--பிச்சை, உண்டை, (2)

3833 பிண்டி எ-து--பிண்ணாக்கு, இடித்தமா, அசோகமரம், (3)

3834 பிதா எ-து--சிவன், பிரமன், தந்தை, பெருநாரை. (4)

3835 பிதிர் எ-து--திவலை, காலநுட்பம், கதை. (3)

3836 பித்திகை எ-து--சிறுசண்பகம், சுவர். (2)

3837 பிரசம் எ-து--தேனீ, தேன். (2)

3838 பிள்ளை எ-து--கரிக்குருவி, வைரவன், குழந்தை. (3)

3839 பிறங்கல் எ-து--மிகுதி, உயர்வு, பெருக்கம். (3)

3840 மற்றும் பிறங்கல் எ-து--மலை (1)

3841 பிறப்பு எ-து--அச்சம், உற்பத்தி, நெருக்கம். (3)

3842 ;பீடிகை எ-து--ஆசனம், பூந்தட்டு, கடைவீதி. (3)

3843 பீதகம் எ-து--பொன், இருவேலி. பொன்னிறம். (3)

3844 பீதம் எ-து--பொன்னிறம். நால்வகைச் சாந்தினொன்று பொன். (4)

3845 பீரு எ-து--அச்சமுள்ளோன். புருவம். (2)

3846 பீலி எ-து--மலை. மயிற்றோகை. பெருஞ்சவளம். சிறுசின்னம். சிற்றாலவட்டம். (5)

3847 புகர் எ-து--கபிலநிறம்,சுக்கிரன, குற்றம், (3)

3848 புகல் எ-து--சரீரம், சொல், வெற்றி, தானியக்குதிர். (4)

3849 புங்கம் எ-து--அம்புக்குதை, புடவை, உயர்ச்சி. (3)

3850 புட்டம் எ-து--புடவை. காக்கை. (2)

3851 புணரி எ-து--கடல், கடற்றிரை. (2)

3852 புணர்ச்சி எ-து--சையோகம், இணக்கம், (2)

3853 புண்டரீகம் எ-து--தாமரை, தென்கீழ்த்திசையானை, புலி, வண்டு. (4)

3854 புதவு எ-து--கதவு, ஓர்வகைப்புல். (2)

3855 புத்தன் எ-து-போதிவேந்தன் திருமால் (2)

3856 புத்தேள் எ-து-புதுமை தெய்;வம் (2)

3857 புந்தி எ-து-புதன் அறிவு சிந்தை (3)

3858 புரத்தல் எ-து-ஈகை காத்தல் வணங்குதல் (3)

3860 புரை எ-து-உவமை குற்றம் உயர்ச்சி உட்டொளைப்பொருள்- (4)

3861 புலம்பு எ-து-தனிமை அச்சம் சத்தம் (3)

3862 புலவர் எ-து-அறிஞர் சளுக்கியர் தேவர் கவிவாணர் கூத்த
ர் புலமையோர் இந்திரர் கம்மாளர் (8)

3863 புலி எ-து-சிங்கவிராசி நால்வகைச்சாந்தினொன்று புலி (3)

3864 புலிங்கம் எ-து-தீப்பொறி ஊர்க்குருவி (2)

3865 புலி எ-து-அநுடநட்சத்திரம் புதல் புன்மைநிறம் புறக் காழ்மரம் பனைமரம் புலி புணர்ச்சி (7)

3866 புவனம் எ-து உலகின்பொது நீர் பூமி (3)

3867 புளகம் எ-து-கண்ணாடி மயிர்சிலிர்த்தல் சோறு (3)

3868 புள் எ-து-வண்டு பறவைப்பொது அவிட்டநட்சத்திரம் (3)

3870 புறம்பணை எ-து-குறிஞ்சிநிலம் முல்லைநிலம் (2)

3871 புறவணி எ-து-குறிஞ்சிநிலம் முல்லைநிலம் (2)

3872 புறவம் எ-து-முல்லைநிலம் காடு (2)

3873 புனை எ-து-பொலிவு அழகு அலங்காரம் (3)

3874 புன்கண் எ-து-துன்பம் நோய் (2)

3875 பூ எ-து-பூமி அழகு மலர் கூர்மை பொலிவு பிறப்பு (6)

3876 பூகம் எ-து-கமுகு திரட்சி கழுகு (3)

3877 பூக்கம் எ-து-கமுகு மருதநிலத்தீூர் (2)

3878 பூதம் எ-து-பரணிநட்சத்திரம் உயிர் பூதகணம் இறந்தகாலம்
ஆலமரம் சுத்தம் பிருதுவிமுதலியவைம்பூதம் (7)

3880 பூதி எ-து-திருநீறு, செல்வம், துர்க்கந்தம், நரகம் (4)

3881 பூதியம் எ-து-பூமி, உடம்பு, செல்வம் (3)

3882 பூரணம் எ-து-நிறைவு, பௌர்ணமி (2)

3883 பூருவம் எ-து-பழமை, கிழக்கு, முன்பு (3)

3884 பூவை எ-து-நாகணவாய்ப்புள், காயாமரம் (2)

3885 பூழ்தி எ-து-கொடுமை, தசை, நுண்பொடி (3)

3886 பூளை எ-து-மலைக்கணவாய், ஓர்செடி (2)

3887 பேடு எ-து-அலி, ஊர், மன்மதனாடல் (3)

3888 பேதை எ-து-அறிவிலான், தரித்திரன் (2)

3889 பேராளன் எ-து-மிக்கோன், மிருகசீரிடநட்சத்திரம் (2)

3890 பை எ-து-பாம்பின்படம், பச்சைநிறம், அழகு (3)

3891 பொகுட்டு எ-து-சேற்றிலெழுங்குமிழி, மலை, தாமரைக்கொட்டை (3)

3892 பொங்கர் எ-து-மலை, மரக்கொம்பு (2)

3893 மற்றும்பொங்கர் எ-து-இலவமரம். ஆக (3)

3894 பொங்கல் எ-து-பொலிவு, மிகுதி, கொதித்துக்கிளர்தல் (3)

3895 பொம்மல் எ-து-பொலிவு, சோறு, பொருமல் (3)

3896 பொருநன் எ-து-அரசன், தலைவன், நாடகன், படைவீரன், திண்ணியோன் (5)

3897 பொழில் எ-து-பூமி, சோலை, பெருமை (3)

3898 பொறி எ-து-எழுத்து, செல்வம், அடையாளம், இலக்குமி, மரக்கலம், இரேகை, இந்திரியம், தீப்பொறி (8)

3899 பொறை எ-து-பூமி, துறுகல், மலை (3)

3900 பொற்பு எ-து-பொலிவு, அழகு, அலங்காரம் (3)

3901 பொன் எ-து-அழகு, பஞ்சலோகப்பொது, இரும்பு, இலக்குமி, பிரகற்பதி (5)

3902 போகி எ-து-தேவேந்திரன், பாம்பு (2)

3903 போகில் எ-து-பூவரும்பு, கொப்பூழ், பறவைப்பொது (3)

3904 போக்கு எ-து-வழி, இளமரக்கன்று, குற்றம், போதல், நடை (5)

3905 போதகம் எ-து-அப்பவருக்கம், யானைக்கன்று, இளமை, மரக்கன்று (4)

3906. போந்து எ-து-பல்லி, பனை. (2)

3907. போர் எ-து-யுத்தம், நெற்போர், சதயநட்சத்திரம். (3)

3908. போர்வை எ-து-தோல், மேற்போர்வை. (2)

மகரவருக்கம்.

3909. மகரம் எ-து-பூந்தாது, சுறாமீன். (2)

3910. மஞ்சரி எ-து-பூங்கொத்து, தளிர். (2)

3911. மஞ்சு எ-து-அழகு, பனி, இளமை, மேகம், வலி, யானைமுதுகு. (6)

3912. மடங்கல் எ-து-இயமன், இடி, சிங்கம், நோய், யாளி, யுகமுடிவு, மடங்குதல், வடவாமுகாக்கினி, இறுதி. (9)

3913. மடி எ-து-பொய், வியாதி, புடைவை, சோம்பல், புலம்பு, கேடு, அடக்கம், தாழை, வயிறு, மடங்குதல். (10)

3914. மடு எ-து-மடு, நீர்நிலை. (2)

3915. மடை எ-து-பூண்கடைப்புணர்வு, அன்னம். (2)

3916. மட்டு எ-து-கள், எல்லை. (2)

3917. மணி எ-து-அழகு, நவமணிப்பொது, முத்து, நீலம், கருமை, நன்மை, கண்டைமணி. (7)

3918. மண்டலி எ-து-ஓர்பாம்பு, பூனை. (2)

3919. மண்டிலதம் எ-து-வட்டம், நாடு, குதிரை. (3)

3920. மதலை எ-து-பிள்ளை, கொன்றைமரம், தூண், மரக்கலம், கொடுங்கை.(5)

3921. மதன் எ-து-வலிமை, அழகு, மன்மதன், மாட்சிமை. (4)

3922. மதி எ-து-முன்னிலையசைச்சொல், சந்திரன், புத்தி, மாதம். (4)

3923. திங்கள்,மதியம் எ-து-சந்திரன், மாதம். (2)

3924. மது எ-து-இளவேனில், தேன், கள். (3)

3925. மதுகம் எ-து-அதிமதுரம், இனிமை, இலுபைமரம், தரா, வண்டு, அழகு. (6)

3926. மத்திகை எ-து-பூமாலை, குதிரைச்சம்மட்டி. (2)

3927. மந்தரம் எ-து-மந்தவோசை, ஓர்மலை. (2)

3928. மந்தாரம் எ-து-தெய்வமரத்தினொன்று, செம்பரத்தை. (2)

3629. மந்தி எ-து-பெண்குரங்கு, வண்டு, பெண்முசு. (3)

3630. மந்திரம் எ-து-கோவில், குதிரைப்பந்தி, எண்ணம், கள், வீடு, வேதம்.(6)

3631. மயல் எ-து-ஆசை, பிசாசம். (2)

3632. மயிலை எ-து-மீன்பொது, மீனவிராசி, இருவாட்சி. (3)

3633. மரக்கால் எ-து-முகந்தளக்குங்கருவியினொன்று, திருமால்கூத்து, சோதி நட்சத்திரம். (3)

3634. மருள் எ-து-பிசாசம், குறிஞ்சியாழ்த்திறம், மயக்கம். ஓர் புதல். (4)

3635. மல் எ-து-திருமால்கூத்து, வலி. (2)

3636. மல்லிகை எ-து--ஓர்பூச்செடி, விளக்குத்தண்டு. (2)

3637. மழை எ-து-குளிர்ச்சி, மாரி, மேகம். (3)

3638. மள்ளர் எ-து-வீரர், திண்ணியோர், மருதநிலமாக்கள் (3)

3639. மறம் எ-து-சினம், பாவம், பிணக்கு, நமன், வலி, வீரம், சண்டை.(7)

3640. மறலி எ-து-மறதி, நமன், பொறாமை. (6)

3641. மறவர் எ-து-வேடர், படைவீரர். (2)

3642. மறலி எ-து-மறப்பு, பொறாமை (2)

3643. மனவு எ-து-மணி, சங்குமணி. (2)

3644. மன் எ-து-மந்திரம், உத்திரட்டாதிநட்சத்திரம், அரசன், நிலை பேறு, மிகுதி, ஆக்கம், ஒழிவு, இடைச்சொல். (8)

3645. மன்றம் எ-து-உண்மை, வெள்ளிடை, மணம், சபை. (6)

3646. மன்றல் எ-து-பாலையாழிசை, மிக்கபரிமளம் கலியாணம். (3)

3647. மன்னல் எ-து-பெருமை, வலிமை, அடுத்தல். (3)

3648. மன்னன் எ-து-அரசன், உத்திரட்டாதிநட்சத்திரம். (2)

3649. மா எ-து-மாமரம், அழைத்தல், கறுப்பு, குதிரை, விலங்கின் பொது, இலக்குமி, அழகு, வலிமை, வண்டு, நென்மா, செல்வம், நிறம், பெருமை, பூமி, ஓரெண். (15)

3650. மாசு எ-து-குற்றம், மேகம், அழுக்கு. (3)

3651. மாடம் எ-து-வீடு, உழுந்து. (2)

3952. மாதர் எ-து-பெண்கள், அழகு ,ஆசை. (3)

3953. மாதவம் எ-து-கள், தவம், வசந்தகாலம். (3)

3954. மாதா எ-து-நாமகள், பார்வதி, தாய். (3)

3955. மாதிரம் எ-து-மலை, திசை, யானை. (3)

3956. மாந்தல் எ-து-உண்டல், குடித்தல், இறத்தல். (3)

3957. மாரி எ-து-மழை, மேகம், சாவு, கள், காடுகாள், ஓர்வியாதி, ஓர்பறவை. (7)

3958. மார்க்கம் எ-து-வழி, சமயம், வீதி. (3)

3959. மாலதி எ-து-விளக்குத்தண்டு, நிருவாணம். (2)

3960. மாலை எ-து-இரா, தொடுத்தமாலை, அந்திப்பொழுது, வரன்முறை. ஒழுக்கம். இயல்பு. (6)

3961. மால் எ-து-காற்று, கருமை, பெருமை, புதன், திருமால், மேகம், மயக்கம்,. வேட்கை, கண்ணேணி. (9)

3962. மாழை எ-து-அழகு, திரட்சி, பொன், மாமரம், ஓலை, அறிவின்மை, உலோகக்கட்டி, புளிமா. (8)

3963. மான் எ-து-விலங்கின் பொது, மலை, குதிரை, மகரவிராசி, மான். (5)

3964. மிசை எ-து-மேடு, மேல் என்னுஞ்சொல். (2)

3965. மிச்சை எ-து-பெய்யாதல், அஞ்ஞானம், வறுமையுறல். (3)

3966. மீளி எ-து-பெருமை, வலிமை, பாலைநிலத்தலைவன், திண்ணியன் (4)

3967. மீன் எ-து-மச்சம், விண்மீன், சித்திரைநட்சத்திரம். (3)

3968. முகில் எ-து-திரள், மேகம். (2)

3969. முடங்கல் எ-து-மூங்கில், தாழை. (2)

3970. முடலை எ-து-உண்டை, திரட்சி, பெருமை. (3)

3971. முண்டகம் எ-து-தாமரை, தாழை, கள், முள்ளிச்செடி, நெற்றி. (5)

3972. முதலை எ-து-செந்நெட்டி, இறகினடிக்குருத்து, நீர்வாழ்முதலை. (3)

3973. முதுமை எ-து-முற்றுதல், பழமை. (2)

3974. முரசு எ-து-உத்திரட்டாதிநட்சத்திரம், வாச்சியப்பொது. (2)

3975. முரண் எ-து-பகை, வலிமை. (2)

3976. முரம்பு எ-து-பரலடுத்துயர்நிலம், பாறை. (2)

3977. முருகு எ-து-இளமை, வாசனை, கள், திருவிழா, குமரன், அழகு. (6)

3978. முளரி எ-து-தாமரை, நுண்மை, காடு, தீ. (4)

3979. முளை எ-து-மூங்கில், மகன், அங்குரம். (3)

3980. முறம் எ-து-விசாகநட்சத்திரம், சுளகு. (2)

3981. முறிகுளம் எ-து-உடைகுளம், பூராடநட்சத்திரம். (2)

3982. முறுவல் எ-து-பல், சிரிப்பு. (2)

3983. முறை எ-து-புத்தகம், பழமை, நீதி, கூட்டு, கட்டு, முறைமை. (6)

3984. முனி எ-து-இருடி, வில், யானைக்கன்று, அகத்திமரம். (4)

3985. முனை எ-து-பகை, வெறுப்பு, வினை. (3)

3986. முன்னம் எ-து-சீக்கிரிமரம், முற்காலம், சிங்கம். (3)

3987. மூசல் எ-து-மொய்த்தல், சாதல். (2)

3988. மூரல் எ-து-சிரிப்பு, பல், சோறு. (3)

3989. மூரி எ-து-எருமை, எருது, பெருமை, சோம்பல், வலிமை, முரண், நெரிவு. (7)

3990. மூலம் எ-து-மூலநட்சத்திரம், காரணம், கிழங்கு. (3)

3991. மெத்தை எ-து-சட்டை, அமளி. (2)

3992. மெய் எ-து-உடல், உண்மை. (2)

3993. மேடம் எ-து-கவசம், யாடு. (2)

3994. மேடு எ-து-உயரம், பெருமை, வயிறு. (3)

3995. மேதை எ-து-புதன், அறிஞன், நரம்பு. (3)

3996. மேல் எ-து-மேற்கு, ஆகாயம், மேன்மை.(3)

3997. மை எ-து-அஞ்சனம், குற்றம், கருமை, மலடு, மேகம், யாடு. (6)

3998. மொக்குள் எ-து-பூவரும்பு, நீர்க்குமிழி. (2)

3999. மொய் எ-து-கூட்டம், யானை, போர்க்களம். (3)

4000. மொய்ம்பு எ-து-வலிமை, தோள். (2)

4001. மோடு எ-து-உயரம், பெருமை, வயிறு. (3)

4002. மௌவல் எ-து-வனமல்லிகை, குளிர்வாரம். (2)

யகரவருக்கம்.

4003. யாணர் எ-து-கம்மாளர், புதுமை, அழகு, நன்மை. (4)

4004. யாமம் எ-து-இரவு, சாமம், தெற்கு. (3)

4005. யாழ் எ-து-மிதுனவிராசி, வீணை, அச்சுவினிநாள். (3)

4006. யூகம் எ-து-கவந்தம், கருங்குரங்கு, ஆராய்தல், கோட்டான், அகப்பொருளறிதல், தருக்கம். (6)

4007. யூபம் எ-து-வேள்வித்தம்பம், உடற்குறை, படைவகுப்பு. (3)

வகரவருக்கம்.

4008. வங்கம் எ-து-கத்திரிச்செடி, வெள்ளி, ஈயம், மரக்கலம். (4)

4009. வசதி எ-து-நகரம், வீடு, நல்லிடம். (3)

4010. வசந்தம் எ-து-சல்லாபம், சித்திரை மாதம். ((2)

4011. வசி எ-து-கூர்மை, வசியம், வாள், தழும்பு. (4)

4012. வசு எ-து-அட்டவசுக்கள், பசுவின்கன்று, நெருப்பு, பொன். (4)

4013. வஞ்சம் எ-து-வாள், பொய், கொடுமை. (3)

4014. வஞ்சனை எ-து-மாயை, தெய்வப்பெண், பொய். (3)

4015. வஞ்சி எ-து-பகைவர் மேற்செல்லல், ஓர்கொடி, பெண்கள், ஓர்பா, கருவூர், குடை. (6)

4016. மற்றும் வஞ்சி எ-து-மருதயாழ்த்திறத்தொன்று. *ஆக(7)

4017. வடகம் எ-து-அத்தவாளம், தோல். (2)

4018. வடவை எ-து-ஊழித்தீ, பெண்யானை, எருமை, பெண்குதிரை. (4)

4019. வடு எ-து-தழும்பு, செம்பு, குற்றம், வண்டு. (4)

4020. வடுகு எ-து-மருதயாழ்த்திறம், ஓர்சாதி, இந்தளவிராகம். (3)

4021. வட்டம் எ-து-கேடகம், வளைதடி, கைம்மணி, திரிகை, வாகு, வலயம், நீர்ச்சால், பரிவேடம். (7)

4022. வண்டு எ-து-பூசநாள், குற்றம், வண்டு, கைவளை, நூல், அம்பு, சங்கு. (7)

4023. வண்ணம் எ-து-அழகு, சந்தம்,குணம். (3)

4024. வண்மை எ-து-வலிமை, வளமை, ஈகை, உண்மை. (4)

4025. வதுவை எ-து-கலியாணம், வாசனை. (2)

4026. வம்பு எ-து- வாசனை, நிலையின்மை, புதுமை, முலைக்கச்சு, வஞ்சனை. (5)

4027. வயம் எ-து-வலிமை, நீர், பறவைப்பொது. (3)

4028. வயல் எ-து-வெளி, கழனி. (2)

4029. வயவன் எ-து-வீரன், தலைவன், வலியன். (3)

4030. வயா எ-து-வருத்தம், கருப்பம், ஆசை. (3)

4031. வயிரம் எ-து-சினம், கூர்மை, நவமணியிலொன்று, வச்சிராயுதம் மரவயிரம். ((5)

4032. வரி எ-து-இசை, இசைப்பாட்டு, எழுத்து, குடியிறை, நெல், கடல், நிறம், தேமல், சந்தித்தெரு, கடன். (10)

4033. வருடம் எ-து-மழை, வருடம். (2)

4034. வருணம் எ-து-குலம், நீர், அழகு. (3)

4035. வரை எ-து-அளவு, விரலிறை, மலை, மூங்கில், வரைவு, எழுத்து. (6)

4036. வலம்புரி எ-து-நந்தியாவர்த்தம், வலம்புரிச்சங்கு. (2)

4037. வலவை எ-து-காளியேவற்பெண், வல்லவன். (2)

4038. வலி எ-து- ஒலி, வலியோன், கபடம். (3)

4039. வலித்தல் எ-து-கொழுத்தல், பேசல். (2)

4040. வழங்கல் எ-து-ஈகை, உலாவல். (2)

4041. வழி எ-து-பழமை, ஒழுக்கம், திரட்சி, மக்கட்பன்மை, இடம், பின், முறைமை. (7)

4042. வளம் எ-து-மாட்சிமை, கொழுப்பு, தகுதி. (3)

4043. வள் எ-து-பற்றிரும்பு, வாள், காது, வலிமை, கூர்மை. (5)

4044. வறிது எ-து-சிறுமை, பயனில்சொல், அறியாமை. (3)

4045. மற்றும் வறிது எ-து-குறைவு, இயலாமை. (2)

4046. வன்னி எ-து-வன்னிமரம், கிளி, நெருப்பு, பிரமசாரி. (4)

4047. வாசம் எ-து-இருப்பிடம், பூமணம், பறவையினிறகு, சீலை. (4)

4048. வாசி எ-து-இசைக்குழல், குதிரை. (2)

4049. வாடை எ-து-வடகாற்று, இடைச்சேரி, ஓர்மருந்து. (3)

4050. வாணி எ-து-சரச்சுவதி, அம்பு, சொல். ஓர்கூத்து. (4)

4051. வாமனம் எ-து-குள்ளம், தென்றிசையானை, ஓர்புராணம், திருமால். (4)

4052. வாயில் எ-து-ஐம்பொறி, திறம், காரணம், துவாரம். (4)

4053. வாரணம் எ-து-யானை, கோழி, சங்கு. (3)

4054. மற்றும்வாரணம் எ-து-தடை, கடல், கவசம். (3)

4055. வாரம் எ-து-கடல், ஏழுகிழமை, அன்பு, நீர்க்கரை, மலைச்சாரல், பங்கு. (5)

4056. வாரி எ-து-கடல், வெள்ளம், பகுதி, விளைவு, மதிற்சுற்று, கதவு, வருவாய், நீர், வழி, மதில். (11)

4057. வாருணம் எ-து-கடல், மேற்கு. (2)

4058. வால் எ-து-வெண்மை, பெருமை, சுத்தம், தோகை. (4)

4059. வாள் எ-து-வாளாயுதம், ஒளி. (2)

4060. வானம் எ-து-மழை, மரக்கனி, ஆகாயம், உலர்மரம். (4)

4061. வானி எ-து-ஆன்பொருந்தநதி, துகிற்கொடி, படை, மேற்கட்டி. (4)

4062. வான் எ-து-வலி, பெருமை, மேகம், ஆகாயம், மழை, இடைச்சொல், ஓர்மரம். (7)

4063. விசும்பு எ-து-ஆகாயம், தேவலோகம், மேகம். (3)

4064. மற்றும் விசும்பு எ-து-திசை. (1)

4065. விசையம் எ-து-சருக்கரை, சூரியமண்டிலம், வெற்றி. (3)

4066. விடங்கம் எ-து-வீதிக்கொடி, முகடு, அழகு, கொடுங்கை, ஆண்மை. (5)

4067. விடம் எ-து-மரப்பொது, நஞ்சு, தேள். (3)

4068. விடர் எ-து-கற்புழை, நிலப்பிளப்பு. (2)

4069. விடலை எ-து-திண்ணியோன், பெருமையிற்சிறந்தோன், பாலைத்தலைவன், காமத்துறைவன். (4)

4070. விடை எ-து-இடபவிராசி, இடபம், உத்தரம். (3)

4071. விண்டு எ-து-திருமால், காற்று, மலை, மூங்கில், மேகம். (5)

4072. விதப்பு எ-து-விபரம், நடுக்கம், மிகுதி. (3)

4073. விதவை எ-து-சோறு, கைம்பெண். (2)

4074. விதிர்ப்பு எ-து-மிகுதி, நடுக்கம். (2)

4075. விபுலம் எ-து-விரிவு, பெருமை. (2)

4076. விபூதி எ-து-ஓர்நரகம், திருநீறு, கொடுமை, தசை, குற்றம், செல்வம். (6)

4077. விம்மல் எ-து-இரங்கல், அழுதல், ஒலித்தல். (3)

4078. வியப்பு எ--து-சினம், சினக்குறிப்பு, அதிசயம். (3)

4079. வியல் எ-து-அகலம், பெருமை, காடு. (3)

4080. விலோதம் எ-து-பெண்மயிர், மயிர்ச்சுருள், துகிற்கொடி. (3)

4081. வில் எ-து-மூலநட்சத்திரம், ஒளி, வில். (3)

4082. விழவு எ-து-மிதுனவிராசி, திருவிழா. (2)

4083. விழைச்சு எ-து-இளமை, புணர்ச்சி. (2)

4084. விழைந்தோர் எ-து-கணவர், விரும்பினோர். (2)

4085. விளர் எ-து-இளமை, நிணம். (2)

4086. விள எ-து-விளாமரம், இளமை, *நமர். (3)

4087. விறப்பு எ-து அச்சம், பலம், செறிவு. (3)

4088. விறல் எ-து-வென்றி, வலிமை. (2)

4089. வீ எ-து-மலர், ஒழிவு, நீக்கம், கேடு, பறவை. (5)

4090. வீசல் எ-து-ஈதல், எறிதல். (2)

4091. வீதி எ-து-நேரோடல், தெரு. (2)

4092. வீரை எ-து-ஓர்மரம், துன்பம், கடல். (3)

4093. வெடி எ-து-நறும்புகை, அச்சம், வெளி.(3)

4094. வெதிர் எ-து-செவிடு, மூங்கில். (2)

4095. வெளில் எ-து-யானைத்தறி, அணில், பாடை, தயிர்கடைமத்து. (4)

4096. வெள்ளம் எ-து-ஈரம், கடல், கடற்றிரை, நீர்ப்பெருக்கு, *ஒரெ*ண் (5)

4097. வெள்ளி எ-து-சுக்கிரன், வெண்பொன். (2)

4098. வெள்ளை எ-து-பலபத்திரன், வெண்பா, அறிவின்மை, வெண்மை வெள்ளாட்டுமறி, கள், சங்கு. (7)

4099. வெறி எ-து-தேவர்க்காடுங்கூத்து, வட்டவடிவு, அச்சம், *பிசாசம், வாசனை, கலக்கம், வியாதி, யாடு. (8)

4100. வெறுக்கை எ-து-செல்வம், பொன். (2)

4101. வேங்கை எ-து-புலி, ஓர்மரம், பொன். (3)

4102. வேசரி எ-து-கழுதை, கோவேறு, கழுதை. (2)

4103. வேட்டுவன் எ-து-மகநட்சத்திரம், ஓர்குளவி, வேடன். (3)

4104. வேணி எ-து-சடை, நதி, ஆகாயம். (3)

4105. வேணு எ-து-உட்டொளை, மூங்கில். (2)

4106. வேதிகை எ-து-கேடகம், குறடு, திண்ணை. (3)

4107. வேய் எ-து-ஒற்று, மூங்கில், உட்டொளைப்பொருள். (3)

4108. வேய்தல் எ-து-வீடு, சூடுதல். (2)

4109. வேலன் எ-து-வெறியாட்டாளன், குமரன். (2)

4110. வேலி எ-து-ஊர், மதில், காவல், நிலம், வயல். (5)

4111. வேலை எ-து-கடல், கடற்கரை, பொழுது, தொழில், காலம். (5)

4112. வேல் எ-து--ஆயுதப்பொது, வேலாயுதம், ஓர்மரம். (3)

4113. வேழம் எ-து-யானை, கொறுக்கை, இசை, கரும்பு, மூங்கில். (5)

4114. வேளாண்மை எ-து-உண்மை, கொடுத்தல். (2)

4115. வேளாளர் எ-து-சூத்திரர், கொடையாளர். (2)

4116. வேள் எ-து-குமரன், சாளுவன், மன்மதன். (3)

4117. வேள்வி எ-து-பூசனை, கொடுத்தல், மகநட்சத்திரம், ஓமகுண்டம், யாகம். (5)

4118. வேனில் எ-து-பொலிவு, கொடை, அழகு, ஒப்பனை, பேய்த்தேர். (5)

4119. வை எ-து-வைக்கோல், கூர்மை, பகுதி. (3)

4120. வைகல் எ-து-நாள், தங்கல். (2)

4121. வையம் எ-து-உரோகிணிநாள், பூமி, தேர், எருது, வாகனம். (5)

பத்தாவது -ஒருசொற்பல்பொருள்வகை முற்றிற்று

ஆகச்சூத்திரம்-4121
பிங்கலந்தையென்னும் பிங்கலநிகண்டு முற்றிற்று.
----------------------------------------------------------- வகையறிதல்

வகை உட்பிரிவு பக்கம்
முதலாவது வான்வகை ... 4
இரண்டாவது வானவர்வகை ... 14
மூன்றாவது ஐயர்வகை ... 50
நான்காவது அவனிவகை ... 72
ஐந்தாவது ஆடவர்வகை ... 100
ஆறாவது அநுபோகவகை 1.உணவின்வகை 140
2. பூணின்வகை 144
3. இரத்தினவகை 148
4. உலோகவகை 150
5. ஆடைவகை 154
6. பூச்சுவகை 156
7. சூட்டுவகை 158
8. இயல்வகை ௸
9. இசைவகை 170
10.நாடகவகை 176
11. மண்டிலவகை 180
12 படைவகை ௸
13 காலாள்வகை 182
14 தோற்கருவிவகை 184
15. குடைவகை 186
16. ஆயுதவகை ௸
17 செயற்கைவகை 162
18 அக்குரோணிவகை 164
19 வெள்ளவகை 164
20 இல்லணிவகை ௸
ஏழாவது பண்பிற் செயலிற்
பகுதிவகை
1. உள்ளநல்வகை 203
2. உள்ளத்தின்றீயவகை 214
3. மெய்வகை 222
4. வாய்வகை 230
5. கண்வகை 234
6. மூக்கின்வகை ௸
7. செவிவகை 233
8 . கைவகை 242
9 கால்வகை 248
10 முறைமைவகை 250
11. அளவின்வகை ௸
12. காரணவகை - பல்பொருள்
வகை 253
எட்டாவது மாப்பெயர்வகை
1. புள்வகை 242
2.விலங்கின்வகை 270
விலங்கினாண்மரபு 284
விலங்கின்பெண்மரபு ௸
விலங்கின்பிள்ளைமரபு 283
3. பாம்பின்வகை 288
4. சலசரவகை 290
ஒன்பதாவது மரப்பெயர்வகை 294
பத்தாவது ஒருசொற் பல்
பொருள்வகை 323

--------------------

சோதனபததிரம்

பக்கம் வரி பிழை திருத்தம்
7 13 கந்தவாகன் கந்தவகன்
11 13 தடி மிதடி
15 14 0 தமம்
17 18 மாளையன் மாலையன்
20 4 தாருகாரி தாரகாரி
21 30 0 பத்திரி, ஆரணி
23 3 இடாகினி (4) 0 (3)
31 2 பண்டாரம் இந்திரன்பண்டாரம்
௸ 14 கவர்க்கர் சுவர்க்கர்
35 6 யமனூர்தி இயமனூர்தி
43 21 முற்கொழுங் முற்கொழுங்கோல்
55 2 ஒழுக்கம்,வழுவுதல் ஒழுக்கம் வழுவுதல்
56 28 விற்ப விகற்ப
62 22 மாச்சரியம் மாற்சரியம்
63 25 மாவிதம் மாவிரதம்
67 27 தல் குத்தல்
68 28 மானவம் பிரமாண்டம்
75 13 புரம் புரி
76 32 சாகடம் சரிகடம்
79 24 உயைவட் உமையாட்
81 11 பிளப்பின் நிலப்பிளப்பின்
௸ ௸ 0 விட்பு
௸ 16 0 வேடர்
83 13 ஓலியல் ஒலியல்
86 1 சேதசம் சேதகம்
91 27 0 சிராகம்
94 66 படுத் படுத்த
102 27 சோரம் கோரம்
110 25 வேயொற்றர் வேயரொற்றர்
124 4 மன்னவர் மண்ணவர்
௸ 16 அதற்கே அவற்கே
131 21 அணு அனு
133 28 சிமிலி சிமிலம்
143 15 ஐயம்,கவீனம் ஐயங்கவீனம்
௸ 23 கட்டிகம் கட்டி
144 1 பானளியேமேதை பானம் - அளியேமேதை
145 28 0 பூண்
149 1 இரதரம் இரதநம்
153 26 கண்டை கண்டைமணி
156 12 பாரம் பாரகம்



- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Image: pinga451.jpg Fileid: pinga451

பக்கம் வரி பிழை திருத்தம்
168 27 தலைவன்றி தலைவனன்றி
162 29 பலகையை பலகை
168 4 வசி விசி
203 21 கடரம் கடாரம்
221 30 0 (5) கெடுதல் (3)
247 33 வரித்தல் வாரித்தல்
255 27 நிபடம் நிபிடம்
275 8 கிரிசகம் கிரிசரம்
277 18 மைம்மை மைமை
279 6 அயவாணம் அயவணம்
286 1 குழவு குழலி
302 28 வானரப்பிரத்தி வானப்பிரத்தி
௸ 29 பத்திமும் பத்தியம்
305 11 கொடி (கொடி)
320 25 குமுதந் குசமுந்
௸ 27 நாகணற் நாணற்
327 2 உள்வீடு உள்,வீடு
387 11 ஆரணம் ஆபரணம்
406 11 பெய்யாதல் பொய்யாதல்
333 - ம் பக்கத்திலிருக்கிற "சினமுஞ் சினக்குறிப்புஞ் செந்நிறமுஞ்
செவப்பே" என்னும் சூத்திரத்தை 370 - ம் பக்கத்தில் "இடியும்" என்னும்
சூத்திரத்திற்குப் பின்னே கொள்க.
---------------
பிங்கலந்தையென்னும் பிங்கலநிகண்டு முற்றிற்று.
--------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்