திருவிளையாடற் புராணம் கூடற் காண்டம் - பாகம் 1
பக்தி நூல்கள்
Back பரஞ்சோதி முனிவர் அருளிய
திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்)
இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 1 ( படலம் 19-34)
-
உள்ளடக்கம்
(நான்மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முத்தி கொடுத்த படலம் வரை)
19. நான்மாடக் கூடலான படலம் (1307- 1332) 20. எல்லாம் வல்ல சித்தரான திருவிளையாடற் படலம் (1333- 1356) 21. கல்லானைக்குக் கரும்பருத்திய படலம் (1357- 1385) 22. யானை எய்த படலம் (1386 - 1427) 23. விருத்த குமார பாலரான படலம் சுபம் (1428 - 1460) 24. கால் மாறி ஆடின படலம் (1461-1489 ) 25. பழி அஞ்சின படலம் (1490 - 1533) 26. மாபாதகம் தீர்த்த படலம் (1534 - 1574) 27. அங்கம் வெட்டின படலம் (1575 - 1602) 28. நாகமெய்த படலம் (1603 - 1625 ) 29. மாயப் பசுவை வதைத்த படலம் (1626 - 1663 ) 30. மெய்க் காட்டிட்ட படலம் (1664 - 1704) 31. உலவாக்கிழி அருளிய படலம் (1705 - 1723 ) 32. வளையல் விற்ற படலம் (1724 - 1759) 33. அட்டமா சித்தி உபதேசித்த படலம் (1760 -1788 ) 34. விடை இலச்சினை இட்ட படலம் (1789 -1818 ) 35. தண்ணீர்ப் பந்தர் வைத்த படலம் (1819 -1855 ) 36. இரச வாதம் செய்த படலம் (1856 -1885 ) 37. சோழனை மடுவில் வீட்டிய படலம் (1886 -1907 ) 38. உலவாக்கோட்டை அருளிய படலம் (1908 -1925 ) 39. மாமனாக வந்து வழக்கு உரைத்த படலம் (1926 - 1962 ) 40. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய படலம் (1963 -2030 ) 41. விறகு விற்ற படலம் (2031 -2100 ) 42. திருமுகம் கொடுத்த படலம் (2101 - 2130 ) 43. பலகை இட்ட படலம் (2131 -2148 ) 44. இசைவாது வென்ற படலம் (2149 - 2192) 45. பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம் (2193- 2255 ) 46. பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் (2256 -2273 ) 47. கரிக் குருவிக்கு உபதேசம் செய்த படலம் (2274 -2296 ) 48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம் (2297 - 2321 ) |
19. நான்மாடக் கூடலான படலம் (1307-1332 )
1307 |
பூதங்கள் அல்ல பொறி அல்ல வேறு புலன் அல்ல உள்ள மதியின் பேதங்கள் அல்ல இவை அன்றி நின்ற பிறிது அல்ல என்று பெருநூல் வேதம் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளி என்ப கூடல் மறுகில் பாதங்கள் நோவ வளை இந்தன் ஆதி பகர் வாரை ஆயும் அவரெ. | 1 |
1308 |
திருமகள் வலக்கண் வாக்கின் சேயிழை இடக்கண் ஞானப் பெருமகன் நுதல் கணகப் பெற்று வான் செல்வம் கல்வி அருமை வீடு அளிப்பாள் யாவன் அவன் உயிர்த் துணைவன் காண ஒரு முலை மறைந்து நாணி ஒசிந்த பூம் கொம்பின் நின்றாள். | 2 |
1309 |
கதிர் மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருணன் ஏய அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான் ஏய முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும போக்கி மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம். | 3 |
1310 |
எற்று தெண் திரை நீர்ச் சேர்ப்பன் தன் செயல் இழுக்கி நாணம் உற்று இரு கண்ணும் சேப்ப உடன்று எழு கோபச் செம் தீப் பற்றிட ஆகம் வெம்பிப் பரவையும் ஆறும் வெந்து வற்றிட வெகுண்டு நின்றான் மானமும் வலியும் குன்றான். | 4 |
1311 |
நளிர் புனல் மதுரை மூதுர் நாயகன் ஆடல் தன்னைத் தௌ¤கிலன் ஆகிப் பின்னும் செழு முகில் ஏழும் கூவிக் குளிர் கடல் வறந்தது என்னக் குடித்து எழுந்து இடித்துப் பெய்யா ஒளி வளர் மதுரை முற்றும் ஒல் எனக் களைமின் என்றான். | 5 |
1312 |
பொள் என மேகம் ஏழும் புகுந்து பார் தெரிய முந்நீர்ப் பள்ளமும் வறப்ப முற்றப் பருகி மெய் கருகி மின்னித் தௌ¢ளரும் திசையும் வானும் செவிடு உறப் பிலமும் பாரும் விள்ளாமல் வரைகள் எட்டும் வெடிபட மேருச் சாய. | 6 |
1313 |
ஊழிநாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல் ஆர்த்துப் பாழிவான் உருமு வீழப் பணாடவி மணிகள் சிந்தி ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா உடல் நௌ¤ய திக்கில் சூழி மால் யானை நின்ற நிலை கெடத் துணுக்கம் கொள்ள. | 7 |
1314 |
வெள்ளிய நீறு பூத்து முழவென வீங்கு காய் போல் தௌ¢ளிய வாலி சிந்தத் திரண்ட திண் பளிக்குத் நூண்போல் ஒள்ளிய தாரை சோர உம்பர் மீன் கணங்க ளோடும் துள்ளிய திரையில் ஆடு மீன் கணம் துடித்து வீழ. | 8 |
1315 |
ஆர்த்து எழு கொண்மூ ஏழும் சராசரம் அனைத்தும் சூழ்ந்து போர்த்தன ஞாலம் உண்ணப் புக்கது ஓர் வடிவம் கொண்ட தீர்த்தனில் விசும்பும் பாரும் திசைகளும் தெரியா ஆகப் பார்த்த கண் நுழையா வாகப் பரந்து இருள் கான்ற அன்றே. | 9 |
1316 |
பைஞ்சுடர் எறிக்கும் பச்சை கார் ஒளி பரப்பு நீலம் புஞ்ச வாள் உடுக்கள் அன்ன நித்திலம் பொன்னம் குப்பை செம் சுடர் மணிகள் துப்புச் சிதறுவ கணவ ரோடும் விஞ்சையர் மகளிர் ஊடி வெறுத்து எறி கலன்கள் போல. | 10 |
1317 |
கடிய கால் உதைப்பப் பெய்யும் கடும் செல எழிலி மாடக் கொடிய நீள் கரைச் சூழ்ந்து புதைத்தலும் கோல் ஒன்று ஓச்சிப் படி எலாம் புரக்கும் கோனும் நகர் உளார் பலரும் ஞாலம் மடியும் நாள் இதுவே என்னா மயங்கினார் உயங்கினாரே. | 11 |
1318 |
கண் நுதல் மூர்த்தி தானே இன்னமும் காக்கும் என்னாப் புண்ணிய நகரோடும் பொருக்கென கோயில் எய்தி விண் இழி விமான வாழ்க்கை விடையவன் அடிக்கீழ் வீழ்ந்தான் அண்ணலார் ஆடல் முன்னும் அறிந்து கை கண்ட வேந்தன். | 12 |
1319 |
விடையினை ஆலம் உண்ட மிடற்றினை கங்கை தாங்குச் சடையினை கூற்றை வென்ற தாளினை மேரு சாபப் படையினை அடியேம் துன்பப் பாட்டினை நீக்கி ஆளும் நடையினை ஆகி எங்கள் நல் உயிர் காத்தல் வேண்டும். | 13 |
1320 |
என்னலும் தென்னர்க்கு என்றும் எய்திய இடுக்கண் தீர்க்கும் முன்னவன் முன்போல் நான்கு முகிலையும் நோக்கி இன்ன தொல் நகர் எல்லை நான்கும் சூழ்ந்து நான் மடம் ஆகி வின் நெடு மாரி ஏழும் விலக்குமின் என விடுத்தான். | 14 |
1321 |
வந்து நான் மாடம் ஆகி வளைந்து நால் திசையும் சூழ்ந்து சந்து வாய் தெரியாது ஒன்றித் தாம் ஒரு குடிலாய் மாடப் பந்தி கோபுரம் செய் குன்றம் கால்கள் போல் பரிப்பப் போர்த்த இந்து வார் சடையோன் ஏய எழிலிமா நகரம் எங்கும். | 15 |
1322 |
அன்ன நான் மாடத்துள்ளும் நகர் உளார் அமைச்சர் வேந்தன் அன்ன நால் கருவித் தானை சராசரம் பிறவும் தாழ்ந்து முன்னை நாள் தனினும் இன்பம் மூழ்கி நன்கு இருந்தார் ஊழில் பொன்ன நாள் பாகன் தாளில் புக்கு அமர்ந்து இருந்தார் ஒத்தார். | 16 |
1323 |
கழை கெழு வரையின் உச்சி கவிழ்கின்ற புயல் போல் கார் சூழ்ந்து இழை மணி மாடத்து உம்பர் எறிதுளி உடைந்து துள்ளத் தழை கடல் வறப்ப வாங்கித் தம் உடல் வறப்பப் பெய்து மழைகளும் வெள்கி நின்ற வருணனும் வெள்கி நின்றான். | 17 |
1324 |
நடுங்கினன் கழிந்த அச்சம் நாணம் மீதுர மானம் ஒடுங்கினான் உள்ளத்து உள்ளத்து ஓர் உவகை வந்து எய்தப் பொன்பூத்து தடம் கரை குறுகா முன்னோய் தணிந்து பின் தோய்ந்து பாசம் மடங்கினன் அடங்கா அன்பின் வள்ளலைப் பூசை செய்வான். | 18 |
1325 |
புனித நீராடிக் கண்டி பூண்டு வான் கங்கை ஆதி வனிதையர் பசும் பொன் கும்ப வாசநீர் வடித்து நீட்டப் பனிமலர் சந்தம் கந்தம் அணிகலன் பசும் பொன் ஆடை இனையன பிறவும் ஈன்று கற்பகம் எடுத்துக் காட்ட. | 19 |
1326 |
ஐம் கனி அமுதம் ஐந்து கௌவிய அமுதும் தூபம் செம் கதிர் விளக்க மின்ன தேவரான் கொடுப்ப சேல்கண் நங்கை தன் பதியை பூசித்து ஆயிரம் நாமம் கூறிப் பைங்கதிர் முத்தம் சாத்தித் தொழுது அடி பணிந்து நின்றான். | 20 |
1327 |
அருச்சனை உவந்த ஆதி அமலன் நீ யாது வேண்டிற்று உரைத்தி என்று ஓத நீர்க் கோன் ஒல்லை தாழ்ந்து ஒன்றினாலும் கரைத்திட அரிய இந்தக் கடிய என் வயிற்று நோய் நின் திரைத் தடம் ஆடும் முன்னே தீர்ந்திடப் பெற்றேன் எந்தாய். | 21 |
1328 |
வேத முதல் கலை காட்சி முதல் அளவை விரிஞ்சன் முதல் விண்ணோர் செய்யும் சோதனை உள் அகப்படா சோதி உனைச் சோதிக்கத் துணிந்தேன் அந்தோ பேதைமையேன் இடத்து என்ன குணம் கண்டு என் பிணி தீர்த்து என் பெற்றாய் ஆசை கோதம் இலாய் குற்றமே குணம் ஆகக் கொள்வது நின் குணமோ ஐயா. | 22 |
1329 |
பொன் நகரான் காலம் தாழ்த்து உனை அருச்சித்து அயர்ச்சியோடும் போனவாறும் என் என யான் வினவியதும் வலாரி இறை கொடுத்ததும் அவ் இறைக்கு நேர் யான் பின்னை வினாயதும் அவன் சொல் வழி உன்னை சோதித்த பெற்றி தானும் முன்னவனே உன் அருளால் என் பிணிக்கு மருந்தாகி முடிந்த வாறே. | 23 |
1330 |
ஆறு மதி முடி அணிந்த அருள் கடலே வயிற்று நோய் அன்றி மேல் நாள் மாறுபடு இரு வினையும் மனவலியும் கெட வீட்டின் வழியும் பெற்றேன் வேறு இனி மந்திரம் என்னை மணி என்னை மருந்து என்னை மெய்ம்மை ஆகத் தேறும் அவர்க்கு இப்புனித தீர்த்தமே பிணி அனைத்தும் தீர்ப்பது அன்றோ. | 24 |
1331 |
அடியனேன் முன்னம் செய்த அபராதம் இரண்டும் தீரும் படி பொறுத்து அருள்வாய் என்று பன் முறை பரவித் தாழ்ந்து மடி விலா மகிழ்ச்சி பொங்க வரங்களும் சிறிது வேண்டிக் கடியதன் நகரம் புக்கான் குடதிசை காவல் வேந்தன். | 25 |
1332 |
வன் திறல் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன் மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும் குன்று போல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே அன்று நான் மாடக் கூடல் ஆனது ஆன் மதுரை மூதூர். | 26 |
---------------
20. எல்லாம் வல்ல சித்தர் திருவிளையாடற் படலம் (1333- 1356 )
1333 |
சத்த நால் மறைப் பொருள் வரை தள்ளு நீள் முடிமேல் வைத்த கார்கள் நான் மாடமாய் மதுரை மேல் வருணன் உய்த்த மாரியைத் தடுத்தவாறு உரைத்துமே உயர்த்தோர் சித்தராய் விளையாடிய செயல் சிறிது உரைப்பாம். | 1 |
1334 |
தேட அரும் கதிர் மணி முடிச் செழியனும் பாண்டி நாடரும் திரு எய்தி மேல் நல்ல வீடு எய்தக் கூடல் அம் பதி மேவிய குணம் குறி கடந்த வேடர் அங்கு ஒரு சித்த மெய் வேடராய் வருவார். | 2 |
1335 |
வட்ட வார் சடைக் குஞ்சியும் பூண நூல் மார்பும் இட்ட நீறு அணி திலகமும் இணைக் குழை தூங்க விட்ட வெள்ளை முத்திரையும் தோல் விரித்த பட்டிகையும் சுட்ட வெண் பொடிப் பொக்கணம் தூக்கிய தோளும். | 3 |
1336 |
துய்ய வெண் பொடி அழிந்து மெய் சிவந்திடச் சுவடு செய்யும் வெண்திரள் படிக நீள் மாலையும் சிவந்த கையில் அங்கு கட்டங்கமும் கண்டவர் மனம் சென்று உய்ய வன்புற வீக்கிய உதர பந்தனமும். | 4 |
1337 |
அட்ட வேங்கை ஈர் உரிவை கீண்டு அசைத்த கோவணமும் ஒட்ட வீக்கிய புலி அதன் உடுக்கையும் இடத் தோள் இட்ட யோக பட்டிகையும் பொன் இடை இடை கட்டப் பட்ட சுறொலி வேத்திரப் படைக்கையும் படைத்து. | 5 |
1338 |
வேத கிங்கிணி சிலம்பு சூழ்ந்த அடிகளில் மிழற்ற ஓத அரும் பத முளரி ஊறு அருண் மது ஒழுகப் போத ஆனந்த மது நுகர்ந்து அலர் முகம் பொலியப் பாத பங்கய உப நிடதப் பாதுகை சூட. | 6 |
1339 |
சிறிது மூரலும் வெயர் வையும் திருமுகத்து அரும்பக் குறுகி ஆவணம் சித்திர கூட நால் சந்தி மருகு சூளிகை உபரிகை மாளிகை வாயில் அறுகு சூழ் நிரைத்த தெற்றி இவ் விடம் தொறும் அடைந்து. | 7 |
1340 |
தெற்கு இருப்பவர் போல் வடதிசை வயில் சென்று புக்கு இருப்பதும் கிழக்கு உள்ளார் போல மேல் திசையில் நக்கு இருப்பதும் யாவரும் நாடினர் அறியத் தக்கது அன்றியே இந்திர சாலமாத் தணந்தும். | 8 |
1341 |
சேய வெற்பினை அணியதாச் செய்து மற்று அணித்தாய் மேய வெற்பினைச் சேயதா விடுத்தும் மெய்ம் முது மூப்பு ஆய மக்களை இளையவர் ஆக்கியும் குதலை வாய மக்களைக் கழிமுது மக்களாய் வகுத்தும். | 9 |
1342 |
ஆணைப் பெண் உரு ஆக்கியும் பெண்ணை ஆண் உருவாய் மாணக் காட்டியும் மலடியை மகப் பெறச் செய்தும் கோணல் கூன் செவிடு ஊமை கண்குருடு பங்கு எவரும் காணத் தீர்த்து நாலு லோகமும் கனகமாச் செய்தும். | 10 |
1343 |
செல்வர் தம் மனைப் பொருள் எல்லாம் வறுமையில் சிறந்தோர் இல்லம் எய்தவும் நட்டவர் இகல் இன்றித் தம்மின் மல்லு வெம் சமர் இழைப்பவும் காஞ்சிர மரத்தின் நல்ல தீம் கனி பழுப்பவும் விஞ்சைய கண் ஐந்தும். | 11 |
1344 |
பருவம் மாரிய பருவத்தில் வைகை நீர் பரந்து வருவது ஆக்கியும் மீளவும் வறந்திடச் செய்தும் பொருவி தீம் சுவையோடு அடையும் பொய்கையும் உவர்ப்புத் தருவ ஆக்கியும் உவரியின் சுவையவாத் தந்தும். | 12 |
1345 |
வீசி மாத்திரைக் கோலினை விண்ணில் நட்டு அதன்மேல் ஊசி நாட்டி இட்டு ஊசிமேல் பெருவிரல் ஊன்றி ஆசு இல் ஆடியும் ஊசிமேல் அவை கிழக்காக மாசு இல் சேவடிப் போதுவான் மலர்ந்திடச் சுழன்று | 13 |
1346 |
சண்ட வெம் பணிப் பகை எனப் பறந்து விண் தாவிக் கொண்டலைப் பிடித்து இடி யொடும் குடித்த நீர் பிழிந்து கண்டவர்க்கு அதிசயம் பெறக் காட்டியும் காண விண் தலத்தினில் பண்டுபோல் இறை கொள விடுத்தும். | 14 |
1347 |
எல் இடைப் படும் பொருள் களை இரா எழப் பார்த்தும் அல் இடைப் படும் பொருள் களைப் பகல் வர அமைத்தும் வல் அழல் புனல் உளர் வலி கெடப் பார்த்தும் நல்ல போது காய் கனி இலா நாள் படக் கண்டும். | 15 |
1348 |
பீளையால் விழிக் கிழவரைப் பிரம்பினால் வருடிக் காளை ஆடவர் ஆக்கி அக் கணவருக்கு இசைய ஈளை வாய் முது கற்பினார் கரு அடைந்து இளமை ஆள வேத்திரம் வருடி நீறு அளித்து அருள் செய்தும். | 16 |
1349 |
அகரம் ஆதி மூன்று ஆகிய ஆகருடணமே புகர் இலா அதிரிச்சிய அஞ்சனம் பொருவில் வகரம் ஆதி மூன்று ஆகிய வசியமே வாதம் இகல் இலா வயத்தம்பம் என்று இன்னவை செய்தும். | 17 |
1350 |
வேத நூல் தௌ¤யார்கள் எக் கலைகளும் விளங்கப் பூதி நாவினில் சிதறியும் பூழியன் காதன் மாதராரொடும் பயில் புது மணமலர்க் காவில் காதநீண்ட கோள் தெங்கினைக் கரும் பனை செய்தும். | 18 |
1351 |
ஏனை வான் தருக் குலங் களைப் புட்களை இருகோட்டு ஆனை ஆதி பல் விலங்கினை ஒன்றை ஒன்று ஆக நான நோக்கினால் நோக்கியும் நாடிய இளையோர் மானின் நோக்கியர் ஆகிலோம் என எழில் வாய்த்தும். | 19 |
1352 |
நாக நாடு பொன் நாட்டு உள பொருளும் அந் நகருள் ஆக ஆக்கியும் இன்னணம் விச்சைகள் அனந்தம் மாக நாயகன் மலைமகள் நாயகன் மதுரை ஏக நாயகன் திரு விளையாடல் செய்து இருந்தான். | 20 |
1353 |
சித்த யோகிகள் செய்கின்ற ஆடல் மேல் செலுத்தி வைத்த கண்களும் சிந்தையும் வாங்கலர் திகைத்துத் தந்த மாள் வினைத் தொழில் மறந்து இருந்தனர் தகைசால் முத்த வேதியர் ஆதிய முதுநகர் மாக்கள். | 21 |
1354 |
இனைய செய்தியை உழையரால் இறைமகன் அறிந்தான் அனைய சித்தரை இங்ஙனம் தருக என அடுத்தார் தனை அகற்றினன் சித்தரைச் சார்ந்தவர் தாமும் வினைய வென்றவர் ஆடலை வியந்து கண்டு இருந்தார். | 22 |
1355 |
அமைச்சர் தங்களை விடுத்தனன் அமைச்சரும் சித்தர் அமைச்சர் அண் பணிந்து அரசன் முன் வருக எனத் தவத்தோர் எமக்கு மன்னனால் என் பயன் என மறுத்திட மண் சுமக்கும் மன்னவன் தம்மவர் தொழுதனர் போனார். | 23 |
1356 |
மன்னன் முன் அமைச்சர் சித்தர் மறுத்து உரை மாற்றம் கூற முன்னவன் அருள் பெற்று இம்மை மறுமையும் முனிந்த யோகர் இந் நில வேந்தர் மட்டோ இந்திரன் அயன் மால் ஏனோர் தன்னையும் மதிப்பரோ என்று இருந்தனன் தரும வேந்தன். | 24 |
------------------------
21. கல்லானைக்குக் கரும்பருத்திய படலம் (1357 - 1385)
1357 |
செல்லார் பொழில் சூழ் மதுரா புரிச் சித்தர் எல்லாம் வல்லார் அவர் ஆடலை யார் உரை செய்ய வல்லார் எல்லாரும் வியப்பு உற இத் தனிச் சித்த சாமி கல்லானை தின்னக் கரும்பு ஈந்த கதையும் சொல்வாம். | 1 |
1358 |
பின்னேய அச்சம் பெருகப் பெரியோரை எண்ணாது என்னே எளியார் என யான் இகழ்ந்து இங்ஙன நீண்டச் சொன்னேன் அவர்க்கு என்குறை என்னில் உருவி நானே தன்னேர் இலாதார் தமைக் காணத் தகுவன் என்னா. | 2 |
1359 |
ஆனந்த சித்தர் தமைக் காண்பல் என்று அன்பு கூர்ந்த மீனம் தரித்த கொடி வேந்தன் குறிப்பு நோக்கி மோனம் தரித்த சிவயோகரும் முந்தித் தம்பொன் மானம் தனக்கு வட மேல் திசை வந்து இருந்தார். | 3 |
1360 |
அருகாத செல்வத்து அவன் அன்று தைத் திங்கள் தோற்றம் வரு காலம் ஆக மதுரேனை வந்து வந்தித்து உருகா தரத்தால் கழிந்து உள் வலமாக மீள வருவான் அவன் முன் வரு காஞ்சுகி வன்கண் மாக்கள். | 4 |
1361 |
சீறிட்ட வேங்கை அதள் சேக்கையர் சீறி ஐந்தும் பாறிட்ட வேடர் யோக பட்டத்தர் கட்டங் கத்தில் ஏறிட்ட கையர் இறுமாந்து இருப்பாரை நோக்கி மாறிட்டு நீக்கி எழப் போக என வந்து சொன்னார். | 5 |
1362 |
பின்னா வரு தென்னர் பிரான் பெரியோரை நோக்கி என் நாடு நும் ஊர் நுமக்கு என் வரும் யாது வேண்டும் நும் நாமம் ஏது நுவல் மின் என வைய எந்தன் நல் நாது எந்த நகர் உள்ளும் திரிவம் அப்பா. | 6 |
1363 |
ஆனாலும் இப்போது அணி கான்மிர நாட்டில் காசி தான் நாம் இருக்கும் தலம் ஆகும் அநாதர் ஆகி ஆனாத பிச்சைப் பெரு வாழ்வு உடையார் நமரா நாள் நாளும் விஞ்சை நடாய்த் திரி சித்தரேம் யாம். | 7 |
1364 |
ஆனந்த கானம் தொடுத்து இங்கு உள ஆன சைவத் தானம் பலவும் தொழுதல் பரமாகி வந்தேம் ஞானம் தரும் இந் நகர் இம்மையில் சிவன் முத்தி ஆனந்தம் ஆன பர முத்தி மறுமை நல்கும். | 8 |
1365 |
ஈண்டு உள்ளவர்க்கு எம் விளை யாடலைக் காட்டி இச்சை வேண்டும் பலசித்தியும் நல்குவம் வேதம் ஆதி மாண்டு அங்கு எண் எண் கலை ஞானமும் வல்லம் அல்லால் சேண் தங்கு எல்லாப் பொருளும் வல்ல சித்தரேம் யாம். | 9 |
1366 |
உன்னால் நமக்குப் பெறல் வேண்டுவது ஒன்றும் இல்லை தென்னா என உள் நகை செய்தனர் சித்தயோகர் மன்னா இவர் தம் இறுமாப்பும் செருக்கும் வீறும் என்னால் அளவிட்டு அறிவேன் என எண்ணித் தேர்வான். | 10 |
1367 |
தேறும் பொழுது ஓர் உழவன் ஒரு செல்வக் கன்னல் ஆரும் கமுகு என்ன வயிர்ப் உறக் கொண்டு தாழப் பாரும் திசையும் புகழ் பங்கயச் செங்கை தாங்கி நீரும் பிறையும் கரந்தார் தமை நேர்ந்து சொல்வான். | 11 |
1368 |
வல்லாரில் வல்லேம் என உம்மை மதித்த நீர் இக் கல் ஆனைக்கு இந்த கரும்பை அருத்தின் எல்லாம் வல்லாரும் நீரே மதுரைப் பெருமானும் நீரே அல்லால் எவர் நும் மனம் வேட்டது அளிப்பன் என்றான். | 512 |
1369 |
என்னா முகிலைத் தளை இட்டவன் கூறக் தென்னா வருதி எனப் புன்னகை செய்து நின்னால் வருவது எமக்கு ஏது நினக்கு நாமே உன் ஆசை தீரத் தருகின்றது அலாமல் உண்டோ. | 13 |
1370 | செல்லா உலகத்தினும் சென்று ஒரு விஞ்ஞை கற்றோர் பல்லாரும் நன்கு மதிக்கப் பயன் எய்துவார்கள் எல்லாம் அறிந்த எமக்கு ஒன்றிலும் ஆசை இல்லை கல் ஆனை கன்னல் கறிக்கின்றது காண்டி என்றார். | 14 |
1371 |
கடைக்கண் சிறிதே குறித்தார் முன் கடாக் கல் யானை மடைக் கண் திறந்து மதம் மூன்றும் வழிய விண் வாய் அடைக்கும் படிவாய் திறந்து ஆர்த்துப் புழைக்கை நீட்டித் தொடைக் குன்று அனான் கைச் சுவைத் தண்டைப் பறித்தது அன்றே. | 15 |
1372 |
பறித்துக் கடைவாய் வழிசாறு அளி பாய்ந்து நக்கக் கறித்துக் குதட்டிப் பருகிக் கரம் ஊசல் ஆட நெறித்துத் தருக்கி நிழல் சீறி நிமிர்ந்து நிற்ப மறித்துக் கடைக்கண் குறித்தார் பினும் மாயம் வல்லார். | 16 |
1373 |
மட்டு உற்ற தாரான் கழுத்தில் கண்ட மாலை தன்னை எட்டிப் பறித்த இகல் காஞ்சுகி மாக்கள் சீறிக் கிட்டிக் களிற்றைப் புடைப்பான் கிளர் கோல் கொண்டு ஓச்சச் சிட்டத்தவர் கண் சிவந்து ஆனையைச் சீறி நோக்க. | 17 |
1374 |
கண்டா வளியைச் களிறு உண்டது கண்கள் சேப்புக் கொண்டான் அரசன் சிவ யோகரில் கோபம் மூளத் தண்டா அரசன் தமருள் தறு கண்ணர் சீறி வண்டார் இதழி மறைத்தாரை அடிக்க வந்தார். | 18 |
1375 |
அப்போது இள மூரல் அரும்பியச் சித்த சாமி கைப்போது அமைத்துக் கடிந்தோர் தமை நின்மின் என்ன மைப் போதக மன்னவர் வைத்த அடி போக்கல் ஆற்றாது ஒப் போது அரிய நிலை ஓவியம் போல நின்றார். | 19 |
1376 |
மத்தக் களிற்றான் வெகுளித் தழல் மாறி அன்பு பொத்தப் புதைந்த மனத்து அற்புதம் பொங்கிச் சோரச் சித்தப் பெருமான் அடிமா முடி தீண்டப் பாச பெத்தத் தமியேன் பிழையைப் பொறும் என்று வீழ்ந்தான். | 20 |
1377 |
அன்புக்கு இரங்கும் கருணைக் கடல் ஆன வையர் இன்பு உற்று வேண்டும் வரம் கேள் எனத் தாழ்ந்து வேந்தன் நல் புத்திரப் பேறு அருள் வாய் என நல்கிச் செம் கை வன்பு உற்ற வேழ மிசை வைத்து அருள் நாட்டம் வைத்தார். | 21 |
1378 |
தழைக்கும் நீள் கதிர்த் தண் முத்த மாலையைப் புழைக்கை நீட்டிக் கொடுத்தது போதகம் மழைக்கை நீட்டினன் வாங்கினன் நீதியில் பிழைக்கல் ஆத பெருந்தகை வேந்தனே. | 22 |
1379 |
முத்த மாலிகை வாங்குமுன் முன் நின்ற சித்த சாமி திரு உருக் கண்டிலன் மத்த யானை வடிவமும் ஏனைய ஒத்தது ஆக உரவோன் வெருவினான். | 23 |
1380 |
இந்த ஆடல் எமக்கு உயிர் ஆய இவ் அந்தம் இல்லி அருள் விளையாட்டு எனா முந்தை வேத முதல் வனை மீளவும் வந்து வந்தனை செய்தனன் மன்னனே. | 24 |
1381 |
முழுது உணர்ந்த முதல்வ நின் ஆடலை இழுதையேன் அறியாது அளந்தேன் எனா அமுது இறைஞ்சி அபராதம் ஈந்து கை தொழுது நின்று துதிக்கத் தொடங்கினான். | 25 |
1382 |
வேதியாய் வேத விளை பொருளாய் வேதத்தின் நீதியாய் நீதி நெறி கடந்த நீள் ஒளியாய் ஆதியாய் ஈராய் நடுவாய் அவை கழிந்த சோதியாய் நின்றாய் என் சோதனைத்தோ நின் இயல்பே. | 26 |
1383 |
நின்னான் மொழிந்த மறை நின் அடிகள் வந்தித்தும் பல் நாள் அருச்சித்தும் பாதம் தலை சுமந்தும் உன் நாமம் வாசித்தும் உன்னை அறியேன் என்று சொன்னால் அடியனேன் சோதனைத்தோ நின் இயல்பே. | 27 |
1384 |
பெரியதினும் பெரியதும் ஆய்ச் சிறியதினும் சிறியதும் ஆய் அரியதினும் அரியதும் ஆய் எளியதினும் எளியதும ஆய்க் கரியதும் ஆய் காண்பானும் காட்சியும் ஆய் அவை கடந்த துரியமும் ஆய் நின்றய் என் சோதனைத் தோ நின் இயல்பே. | 28 |
1385 |
என்று பல முறை பழிச்சி மனை எய்தி விக்கிரமனை ஈன்று பன்னாள் ஒன்று முறை கோல் ஓச்சி விக்கிரமன் சுவன் மிசைப் பார்சுமத்திப் பாசம் வென்று களைந்து அருள் சித்த சாமி திரு அருள் நோக்கால் விளை பேரின்ப மன்றல் மது வீழ் வண்டில் கலந்து இருந்தான் அபிடேக மாறன் மன்னோ. | 29 |
------------------
22. யானை எய்த படலம் (1386-1427)
1386 |
கட்டு அவிழ் கடுக்கையர் கல்யானை கழை தின்ன இட்டது இது பஞ்சவன் இடத்து அமணர் ஏவி விட்ட மத யானை விழ மேவலர் புரத்தைச் சுட்ட கணை விட்டு உயிர் தொலைத்த முறை சொல்வாம். | 1 |
1387 |
விக்கிரம பாண்டியன் வெலற்கு அரிய செம் கோல் திக்கு நிலனும் திறை கொள் செல்வம் நிறைவு எய்த அக்கிரம வெம்கலி அரும் பகை ஒதுங்கச் சக்கரம் உருட்டி இடர் சாய்த்து முறை செய்வான். | 2 |
1388 |
புத்தர் அமண் அதிய புறக்களை அகழ்ந்து நித்த மறை ஆகம நெறிப் பயிர் வளர்த்து மெய்த்த விதி பத்தியின் விளைந்த பயன் யாரும் துய்த்திட மனுத் தொழில் நடத்தி வரு தூயோன். | 3 |
1389 |
மரு இதழியான் உறையும் வான் இழி விமானத்து அருகு வட பக்கம் உற ஆலயம் எழுப்பி உருவரு இரண்டினையும் ஒருவி வரு சித்தர் திரு உருவு கண்டு பணி செய்து ஒழுகு நாளில். | 4 |
1390 |
செய்ய கதிரோன் வழிய செம்பியன் ஒருத்தன் கையன் அவன் வென்றி பயில் காஞ்சி நகர் உள்ளான் பொய் அமணர் கட்டுரை புறத் துறையின் நின்றான் மையின் மதி மாற னொடு மாறு பட நின்றான். | 5 |
1391 |
முடங்கல் மதி செம் சடை முடித்து விடை ஏறும் விடங்கரது சேவடி விழுங்கிய மனத்து மடங்கல் நிகர் தென்னன் எதிர் வந்து பொர ஆற்றாது தடங்கல் ஓர் வஞ்சனையினால் அட மதித்தான். | 6 |
1392 |
அஞ்சனம் கவுஞ்சம் கோவர்த்தனம் திரிகூடம் காஞ்சிக் குஞ்சரம் சையம் ஏம கூடமே விந்தம் என்னும் மஞ்சு இவர் வரைகள் எட்டும் வைகுறு அமணர் தம்மில் எஞ்சல் இல் குரவர்க்கு ஓலை வேறு வேறு எழுதி விட்டான். | 7 |
1393 |
வடிவு போல் உள்ளம் எல்லாம் மாசு இருள் புதைய நின்ற அடிகள்மார் ஆவார் எண்ணாயிர வரும் ஆர்த்தார் வேய்ந்த முடி கெழு வேந்தன் விட்ட முடங்கலை நிமிர்த்து வாசித்து இடி கெழு கார் போல் குன்றின் இழிந்து வேறு இடத்தில் செல்வார். | 8 |
1394 |
யாவரும் ஒருங்கு கூடி இருள் வழி கொள்வது ஏய்ப்பக் காவல் வல் அரணம் சூழ்ந்த காஞ்சி மா நகரத்து எய்திப் பூ அலர் தாரான் கோயில் புறம் கடை புகுந்து வேந்தன் ஏவலர் விடுப்ப உள் போய் இறைமகன் இருக்கை புக்கார். | 9 |
1395 |
மன்னவன் முடிமேல் பீலி வைத்தனர் ஆக்கம் கூற அன்னவன் அவரை நோக்கி வசிய முன் ஆறும் வல்லீர் தென்னனை யாபி சாரம் செய்து உயிர் செகுத்தால் உங்கட்கு என்னது நாடு பாதி தருவல் போய் இயற்றும் என்றான். | 10 |
1396 |
தவம் புரிந்து அவமே செய்வார் தாம் அதற்கு உடன் பட்டு ஏகி சிவந்த தெண் திரை நீர்ப் பாலி நெடும் கரைக் காதம் மூன்றில் கவர்ந்து அகன் சாலை கோலி யோசனை அகலம் கல்லி அவம் படு வேள்விக் குண்டம் கோணம் எட்டு ஆகக் கண்டார். | 11 |
1397 |
விடம் பொதி காட்டம் பெய்து நிம்ப நெய் விராய நஞ்சின் உடம் புடை உயிரின் கோ ழூன் கறிப் பொடி ஊறு எண்ணெய் இடம் பட வாயம் காத்த வெரிக் குழி புதையப் பெய்து கொடும் பழி வேள்வி செய்தார் கொல்லாத விரதம் பூண்டார். | 12 |
1398 |
மாடு உள பொதும்பர் நந்த வனம் உள சோலை உள்ள காடு உள கருகிச் சயக் கயல் உள ஓடை உள்ள கோடு உள வாவி உள்ள குளம் உள வறப்பத் தாவிச் சேடு உள முகிலும் தீயச் சிகை எழு குண்டத் தீவாய். | 13 |
1399 |
கூற்று எழு தோற்றம் போல அஞ்சனக் குன்றம் போலக் காற்று எழு செவியும் நால்வாய் கௌவிய மருப்பும் மாறா ஊற்று எழு மதமும் ஊசல் ஆடிய ஒற்றைக் கையும் ஏற்று எழு விடம் போல் சீறி எழுந்தது ஓர் தறுகண் யானை. | 14 |
1400 |
அந்த மா வேள்வித் தீயும் அவிய மும் மதமும் சோர வந்தமா களிற்றை நீ போய் வழுதியை மதுரை யோடும் சிந்தவே தொலைத்தி என்னாத் தென் திசைச் செல்ல ஏவி முந்தவே விடுத்த மாசு மூழ்கு உடல் அமணப் பேய்கள். | 15 |
1401 |
அருள் அற்று இருள் உடலில் புதை அமணக் கயவர்களுள் அருள் அற்று மறையில் படர் செயல் அற்று இக பர மெய்ப் பொருள் அற்றவன் அனிகத் தொடு புறம் மொய்த்திட மதமா வெருள் அற்று இடி குரலில் வெடி பட்டிட வரும் ஆல். | 16 |
1402 |
அடியின் அளவு அகல் பாதல முடியின் அளவு அண்டம் இடியின் அளவு எழுகார் செவி எறி கால அளவு அகிலம் மடியும் அளவு உளர் கான் மத மழையின் அளவு உலக முடிவின் எழு கடல் கண் அழல் அளவாம் முது வடவை. | 17 |
1403 |
கூற்று அஞ்சிய வரும் இக் கரி குரல் அம் செவி முழைவாய் ஏற்றம் செய மடங்கும் செவி எறி கால் வழி விழித்தீ ஊற்றம் செய மடைவாய் உடைத்து ஒழுகும் கட மத நீர் நாற்றம் செயத் திசை வேழமும் நடுக்கம் செய்து நலியும். | 18 |
1404 |
இடிக்கும் புயல் வயிற்றைக் கிழித்து இடி ஏற்றினை உதிர்க்கும் வெடிக்கும் பிளிர் ஒலியால் திசை விழுங்கிச் செவிடாக்கும் துடிக்கும் புழைக் கை ஓச்சிவிண்தொடு குன்றினைச் சுற்றிப் பிடிக்கும் கடல் கலக்கும் தனிப் பெரு மத்து எனத் திரிக்கும். | 19 |
1405 |
உருமுக் குரல் ஒலி இற்றுளர் ஒலி விட்டுஎறி செவியிற்று இரு முள் பிறை எயிற்றில் அழல் எரி கண் இரு உடலில் தருமுக் கடல் வருவித்து உரல் அடி இற்றென நிலம் மேல் வரும் உக்கிர வடவைக் கனல் வரின் ஒப்பது மதமா. | 20 |
1406 |
தெழிபட்ட திக் கயத்தின் செவி தீயப் பகையோடும் வழிபட்டு ஒரு கடும் கூற்று என வரு குஞ்சர வரவை விழிபட்டவர் மொழியால் உணர் விரை பட்டலர் வேம்பன் சுழி பட்டலை புனல் போல் மனம் சுழன்றான் நினைந்து அழன்றான். | 21 |
1407 |
மைப் போதகம் பொறை ஆற்றிய மணிக் கோயின்முன் குறுகாக் கைப் போதகம் உரித்தான் கழல் கால் போதகம் உறத் தாழ்ந்து இப் போதகம் தனையும் தொலைத்து எனைக் காத்தி என்று இரந்தான் அப் போது அகல் வானின்று ஒரு திருவாக்கு எழுந்தன்றே. | 22 |
1408 |
விட்டார் வலி கெட நாம் ஒரு வில் சேவகனாகி ஒட்டார் விட வரும் வெம் கரி உயிர் வெளவுது முதல் நின் மட்டார் பொழில் கடி மாகர் அயல் கீட்டிசை மருங்கு ஓர் அட்டாலை மண்டபம் செய்க என அது கேட்டு எழுந்து அரசன். | 23 |
1409 |
அகம் கவ்விய களிப்பு எய்தி வந்து அட்டாலை மண்டபம் பொன் நகம் கவ்வியது எனத் தூண் ஒரு நானான் கினில் எடுத்தே சகம் கவ்விய புகழான் செயத் தறுகண் கனை மதமா முகம் கவ்விய வில் சேவகன் வருவான் அது மொழிவாம். | 24 |
1410 |
நீல் நிறம் நீத்த நிழல் மதி இரண்டு உண்டு என்ன வானிற வலயக் சங்கவார் குழை நுழைவித்து அம் பூம் பால் நிற வெகினம் காணப் படர் சடை மறைத்துத் தோற்றும் கான் நிறை குஞ்சிச் சூட்டில் களிமயில் கலாபம் சூடி. | 25 |
1411 |
கரும் கடல் முளைத்த செக்கக் கதிர் எனக் குருதிக் கச்சை மாங்குற வீக்கிச் சோரி வாய் உடை வாளும் கட்டி இரங்கு நான் மறைகள் ஏங்க இருநிலம் தீண்டு தாளில் பொருங்கழல் வளைத்து வாளிப் புட்டிலும் புறத்து வீக்கி. | 26 |
1412 |
வீங்கிய தடம் தோள் இட்ட வார் சிலை வில்லினோடும் பாங்குறை இமயப் பாவை பாதியே அன்றி முற்றும் வாங்கிய வண்ணம் போன்றும் அல்லது மாலும் ஓர்பால் ஓங்கிய வண்ணம் போன்று ஒளி நிறம் பசந்து தோன்ற. | 27 |
1413 |
காமனும் காமுற்று அஞ்சும் காளை ஆம் பருவத் தோன்றத் தாம் உலகு அளந்த வென்றித் தனிவில் சேவகனாய்த் தோன்றி மா மறை மகுடம் அன்ன மண்டபத்து ஏறித் தென்னர் கோமகன் இடுக்கண் தீர்ப்பான் குஞ்சர வரவு நோக்கா. | 28 |
1414 |
அஞ்சு கூவிளிச் சேய்த்து என்ன வதுவர வறன் இலாதான் வெம் சினக் கோலி நோன்தாள் மிதித்து மெய் குழைய வாங்கிச் செம் சிலை நெடு நாண் பூட்டித் திரு விரல் தெறித்துக் தாக்கிக் குஞ்சரம் எட்டும் அஞ்சக் கோளரி முழக்கம் காட்டி. | 29 |
1415 |
இங்கித நெடும் கோதண்டம் இடம் கையில் எடுத்து நார சிங்க வெம் கணை தொட்டு ஆகம் திருக முன இடத்தாள் செல்ல அங்குலி இரண்டால் ஐயன் செவி உற வலித்து விட்டான் மங்குலின் முழங்கும் வேழ மத்தகம் கிழிந்தது அன்றே. | 30 |
1416 |
கொண்டலின் அலறிச் சீறி வீழ்ந்தது கொடிய வேழம் பிண்டது பாரும் சேடன் சென்னியும் பிளந்த தண்டம் விண்டது போலும் என்னத் துண் என வெருவிப் போன பண்டைய தருக்கும் வீறும் படைத்தன திசை மால் யானை. | 31 |
1417 |
புதை படக் கரித்தோல் போர்த்த புண்ணிய மூர்த்தி தாளால் உதை படக் கிடந்த கூற்றம் ஒத்தது மத்த யானை சுதைபடு மதிக்கோ வேந்தன் தொழுகுலச் சிறுவன் ஒத்தான் பதை படும் அமணர் கால படர் எனப் படரில் பட்டார். | 32 |
1418 |
இருள் கிடந்தது அனைய தானை இட்ட சிந்துரங்கார் மாலை இருள் முகத்து ஒதுங்கிச் செல்லும் இரவி செம் கிரணம் போன்ற இருள் முழுதும் உண்ணக் காலை எழு கதிர் வட்டம் அன்ன இருளினை மறைத்த கண்டன் எய்தவாய் பெய்யும் செந்நீர். | 33 |
1419 |
பொய் அறா மனத்தார் தேற்றும் புன்நெறி ஒழுக்கம் பூண்ட வெய்ய கோன் கொடுங்கோல் தன்னை வெண் மருப்பு ஆகத் தாங்கி மையன் மா வடிவம் கொண்டு வந்த வெம் கலியைத் தென்னன் செய்ய கோல் ஐயன் சிங்க வாளியாய்ச் சிதைந்தது அன்றே. | 34 |
1420 |
உருமு வீழ்ப் உண்ட குன்றினும் பன்மான் அம்பு தொட்ட பெருமுழை வாயும் வாயும் பெருகின அருவிச் சோரி கருமுகில் மானச் சேனம் கழுதுகள் பூதம் மொய்த்த திருமணித் தடம் தோள் வீங்கத் தென்னவன் உவகை பூத்தான். | 35 |
1421 |
ஆனையின் புண் நீர் உண்ண அடுத்த கார் உடல பேய் என்ன சேனை பின் செல்லப் போந்த திணி இருள் அமணர தம்மை மீனவன் கண்டு சீற வேந்து அவன் குறிப்பில் நிற்கும் மான வெம் சின வேல் மள்ளர் வல்லை போய் முடுகல் உற்றார். | 36 |
1422 |
எடுத்தனர் கையில் தண்டம் எறிந்தனர் மறிந்து சூழ் போய்த் தடுத்தனர் கரகம் தூள் ஆத் தகர்த்தனர் பீலி யோடும் தொடுத்தனர் உடுத்த பாயை துணி படக் கிழித்துக் கால்வாய் விடுத்தனர் மானம் போக்கி விட்டனர் சில்லோர் தம்மை. | 37 |
1423 |
எறி உண்டு செய்த மாயம் இழப் புண்டு சேனையோடு முறியுண்டு நடுக்கம் பாவம் மூழ்குண்டு மாழ்கிச் சாம்பிப் பறி உண்ட தலையர் யாரும் பழிப்பு உண்டு பாயும் தாமும் உறி உண்ட கரகத்தோடும் ஒதுங்கு உண்டு பதுங்கிப் போனார். | 38 |
1424 |
மாதங்கம் தடிந்து தட்டாலை மண்டபத்து இருந்த வீரன் பாதங்கள் கையால் பற்ரிப் பாண்டியன் இரந்து வேண்டிப் போதங்கள் கடந்தாய் என்றும் பொலிய இங்கு இருத்தி என்ன வேதங்கள் அருத்தம் சொன்ன வேதியன் அதற்கு நேர்ந்தான். | 39 |
1425 |
பின்னும் சில் வரங்கள் நல்கப் பெற்று நான் மாடக் கூடல் மன்னும் சின் மயனை வந்து வந்தித்து வருநாள் காமன் என்னும் சில் மலர்ப் பூம் தண்தார் இராச சேகரனைப் பெற்று மின்னும் சில்லியம் தேர் வேந்தன் மேதினி புரக்கும் மன்னோ. | 40 |
1426 |
வம்புளாய் மலர்ந்த வார் ஆன் வரவிடு மத்தக் குன்றில் சிம்புளாய் வடிவம் கொண்ட சேவகன் ஏவல் செய்த அம்புளாய்த் தூணம் வள்ளவன் அவதரித்தவா போல் செம்புளாய்க் கொடிய நார சிங்கம் ஆய் இருந்தது அன்றெ. | 41 |
1427 |
உலகு எலாம் அழித்து மீள உண்டாக்கும் உருத்திரன் விர சத்தியினில் சில தரித்து இறவா அவுணன் பிடந்த சிங்க நாயகனை அங்கு எய்தி அலகுஇல் மாதவம் செய் உரோமசன் தன் பேர் அறிய ஓர் தீர்த்தம் உண்டாக்கி இலகு பேர் அடைந்தான் பிரகலாதனும் நோற்று ஈறு இலாப் பெருவரம் அடைந்தான். | 42 |
-----------------
23. விருத்த குமார பாலரான படலம் (1428 - 1460 )
1428 |
தழை உலாங் கையர் ஏவிய தந்திமேல் விடை மேல் அழகர் சேவகம் செய்தவாறு அறைந்தனம் அவரே கிழவன் ஆகிப் பின் காளை யாய்க் கிஞ்சுகச் செவ்வாய் குழவியாய் விளையாடிய கொள்கையைப் பகர்வாம். | 1 |
1429 |
தென்னன் விக்கிரமன் புயத் திரு நிலச் செல்வி மன்னி வாழும் நாள் மதுரையின் மறையவன் ஒருவன் அன்னவன் விருபாக்கன் ஆம் அவன் குடி வாழ்க்கை மின்னல் ஆள் வட மீன் ஆள் பெயர் சுப விரதை. | 2 |
1430 |
அனையர் தங்களுக்கு அரும் பெறல் மகவு இன்றி அநந்தம் புனித நல் அறம் செய் தொழில் ஒழுக்கமும் பூண்டு நனைய வார் குழல் அன்னையர் எழுவர் பால் அண்ணி இனிய மாதவம் செய்து ஒரு பெண் மகவு ஈன்றார். | 3 |
1431 |
பேரும் கௌரி என்று அழைத்தனர் பிராயம் ஒர் ஐந்தில் சாரும் கௌரியும் பிறவிநோய் தணிப்பதற்கு உறுதி தேறும் சிந்தையால் தன் தந்தையை வணங்கிச் செனனம் ஈரும் தெய்வத மந்திரம் யாது என வினவ. | 4 |
1432 |
அந்தணாளனும் அதிசயித்து அரும் பெறல் மகட்குச் சிந்தை ஆர்வமோடு இறைவி தன் மனுவினைச் செப்பத் தந்தை பால் அது தௌ¤ந்து நாத் தழும்பு உறப் பயின்றாள் முந்தை நாள் அரும் தவக் குறை முடித்திட வந்தாள். | 5 |
1433 |
தாதை தன் தவக் கொழுந்தினுக்கு இசைய மா சைவ மாதவத்தனா ஆதி ஆச்சிரமத்தில் வழங்கும் வேத வித்தும் ஆய் மரபினான் மேம் படுவான் எப் போது போதும் என்று உளத்தொடு புகன்று கொண்டு இருந்தான். | 6 |
1434 |
பருவம் நால் இரண்டு ஆக மேல் கடிமணப் பருவம் வருவது ஆக அங்கு ஒரு பகல் வைணவப் படிவப் பிரம சாரியாய்க் கடை தொறும் பிச்சை புக்கு உண்பான் ஒருவன் வந்தனன் பலிக்கு அவண் அயல் புலத்து உள்ளான். | 7 |
1435 |
பிச்சை வேண்டினான் அவற்குத் தன் பெண்ணினைக் கொடுப்பான் இச்சை கூர்ந்து அரும் தவத்தினால் வருந்தி ஈன்று எடுத்த விச்சை வேதியன் மனையொடு சுற்றமும் வினவாது அச்சம் இன்றி நீர் எடுத்து அவன் அங்கையில் பெய்தான். | 8 |
1436 |
கலிக்கும் நூபுரச் சீறடிக் கன்னி தன் விதியும் பலிக்கு வந்தவன் நல் வினைப் பகுதியும் துரப்ப ஒலிக்கும் மந்திரக் சிரக நீர் ஒழுக்கினான் முந்திச் சலிக்கும் அன்னையும் தமர்களும் கேட்டு உளம் தளர்வார். | 9 |
1437 |
குலனும் ஓர்கிலன் கோத்திரம் ஓர்கிலன் குடிமை நலனும் ஓர்கிலன் ஒழுக்கமும் கல்வியும் நண்ணும் தலனும் ஓர்கிலன் கன்னியைத் தத்தம் செய்தான் எப் புலனும் ஓர்ந்தவன் விதி வழி மதி எனப் புலர்ந்தார். | 10 |
1438 |
மற்று அவன் குடி கோத்திரம் சூத்திரம் மற்றும் உற்று அறிந்து நம் மரபினுக்கு ஒக்கும் மான் மாயோன் சொற்ற தந்திர வைணவத் தொடக்குண்டு திரியும் குற்றம் ஒன்று இனி மறுப்பது என் கொடுப்பது என்று இசைந்தார். | 11 |
1439 |
தாயும் ஒக்கலும் ஒத்தபின் தாதையும் வேதத்து ஆயும் எண் மணத்து ஆதி ஆம் அறநிலை ஆற்றால் தேயும் நுண் இடைக் கன்னியைச் செம் பொனால் புதைத்துக் காயும் ஆர் அழல் முன்னர் அக் காளை கைக் கொடுத்தான். | 12 |
1440 |
தெய்வ மங்கல வரிசைகள் செய்து தான் பயந்த மௌவல் அம் குழல் கன்னியை மணமக னோடும் கௌவை அம் புனல் வேலி சூழ் கடிநகர் விடுத்தான் சைவ மங்கல வேதியத் தாபதன் இப்பால். | 13 |
1441 |
இல்லார்க்கு கிழிஈடு நேர் பட்டால் எனப் பல்லார் இல்லந் தோறும் செல்லா நின்று இரந்து உண்டு திரிந்த மகன் மணமகனாய்ச் செல்வ நல்க வல்லாளை மணந்து வருவான் போற்றும் மனை புகுத வன்கண் சீலப் பொல்லாராய் வைணவத்துப் புக்கு ஒழுகு தாய் தந்தை பொறார்கள் ஆகி. | 14 |
1442 |
வந்த மணவாட்டி சிவ சிந்தனையும் சைவ தவ வடிவு நோக்கி வெந்த உடல் போல் மனமும் வெந்தவளை வேறு ஒதுக்கி வேண்டார் ஆகி நிந்தனை செய்து ஒழுகுவார் அவளை ஒரு நாணீத்து நீங்கி வேற்றூர்த் தந்த அமர் மங்கலம் காண்பார் தனியே வைத்து அகம் பூட்டித் தாங்கள் போனார். | 15 |
1443 |
உள் மாசு கழுவுவது நீறு என்றே உபநிடதம் உரைப்பக் கேட்டும் மண் மாசு படப் பூசும் வடிவு உடையார் அகன்ற அதன் பின் மனையில் வைகும் பெண் மாசு கழிய ஒரு சிவன் அடியார் தமைக் காணப் பொறாமல் இன்று என் கண் மாசு படுவது எனக் கனிந்து ஒழுகு தலையன் பால் கவலை கூர்வாள். | 16 |
1444 |
சிவன் அடியார்க்கு அன்பு இலாச் சிந்தையே இரும்பு ஏவல் செய்து நாளும் அவன் அடியார் திறத்து ஒழுகா ஆக்கையே மரம் செவி கண் ஆதி ஐந்தும் பவன் அடியார் இடைச் செலுத்தாப் படிவமே பாவை மறை பரவுஞ் சைவ தவ நெறி அல்லா நெறியே பவ நெறியான் தனியாளாத் தளர்வாள் பின்னும். | 17 |
1445 |
எனைத்து உயிர்க்கும் உறுதி இக பரம் என்ப அவை கொடுப்பார் எல்லாம் தானாய் அனைத்து உயிர்க்கும் உயிராகும் அரன் என்ப அவன் அறிவார்க்கு அங்கம் வாக்கு மனத்து உறு மெய்ப் பத்தி வழி வரும் என்ப அப் பத்தி வழி நிற்பார்க்கு வினைத் துயர் தீர்த்திட எடுத்த வடிவு என்பது அவன் அடியார் வேடம் அன்றோ. | 18 |
1446 |
என்ன இருந்து அலமருவாள் இருக்கும் இடத்து அவள் உள்ளத்து எண்ணி ஆங்கே தென்னவனாய் இருந்து அரசு செய்த பிரான் அவட்கு அருளும் செவ்வி நோக்கிக் கன்னம் உரம் கரம் சிரம் தோள் கண்டமும் கண்டிகை பூண்டு கையில் தம்போல் பல் நெடும் நாள் பழகியது ஓர் தனிப் பெரிய புத்தகமும் பக்கம் சேர்த்தி. | 19 |
1447 |
கரிந்த நீள் கயல் உன்னின் அரையும் முது திரை கவுளும் கனைக்கும் நெஞ்சும் சரிந்த கோவண உடையும் தலைப் பனிப்பும் உத்தரியம் தாங்கும் தோளும் புரிந்த நூல் கிடந்து அலையும் புண்ணிய நீறு அணி மார்பும் பொலிய நீழல் விரிந்தது ஓர் தனிக் குடையும் தண்டு ஊன்றிக் கவிழ்ந்த அசையும் மெய்யும் தாங்கி. | 20 |
1448 |
ஒருத்தராய் உண்டி பல பகல் கழிந்த பசியினர் போல் உயங்கி வாடி விருத்த வேதியராய் வந்து அகம் புகுதக் கண்டு எழுந்து மீதூர் அன்பின் கருத்தளாய்த் தவிசு இருத்திக் கை தொழுது சிவனை இங்குக் காண என்ன வருத்த மா தவம் உடையேன் என முனிவர் பசித் துன்பால் வந்தேம் என்றார். | 21 |
1449 |
இல் பூட்டிப் போயினர் எமரங்கள் எனக் கௌரி இயம்ப மேரு வில் பூட்டிப் புரம் பொடித்த வேதியர் நின் கை தொட்டு விடு முன் யாத்த கொல் பூட்டு விடும் திறந்து கடிது அடிசில் சமைத்து இடுதி எனக் குமரி தாளில் அல் பூட்டு மடவாலும் அவ்வாறே அட்டில் புகுந்து அடிசில் ஆக்கி. | 22 |
1450 |
தையல் மா தவக் கொழுந்து புறம் போந்து சிரக நீர் தளிர்கை தாங்கி ஐயனே அமுது செய எழுந்து அருளும் என எழுந்த அடிகள் பாதச் செய்ய தாமரை விளக்கி அந்நீர் தன் சென்னின் மேல் தௌ¤த்துப் பாச ஐயன் மாசு இருள் கழுவி அகம் புகுவித்துத் ஆசனம் மேல் வைத்துப் பின்னர். | 23 |
1451 |
நகை மலர் இட்டு அருச்சித்து நல்ல பரிகலம் திருத்தி நறு வீ முல்லை முகை அனைய பால் அடிசில் வெள்ளி மலை எனப் பருப்பு முதுகில் செம்பொன் சிகரம் எனப் பல்வேறு அருகு அனை புறம் தழீக் கிடந்த சிறு குன்று ஈட்ட வகை என நெய் அருவி எனப் படைத்து அனைய சிற்றுண்டி வகையும் பெய்து. | 24 |
1452 |
செய்ய வாய் இடை இடையே முகமன் உரை இன் அமுது செவியில் ஊட்டத் தையலாள் வளைக்கை அறு சுவை அமுது வாய் ஊட்டத் தளர்ந்த யாக்கை ஐயர் தாம் திரு அமுது செய் அமுது உண்டவர் என மூப்பு அகன்று பூவில் கையதே மலர் வாளிக் காளை வடிவாய் இருந்தார் கன்னி காண. | 25 |
1453 |
பூசிய வெண் நீறு போய் கலவை ஆய் கண்டிகை போய்ப் பொன் செய் பூணும் காசு அணி பொன் குண்டலமும் கடகமும் ஆய் மூப்பு போய் காளை ஆன தேசு உருவம் கண்டு நடு நடுங்கி வளைக் கரம் நெரித்துத் திகைத்து வேர்த்துக் கூசி ஒரு புறத்து ஒதுங்கி நின்றாள் அக் கற்பு மலர் கெம்பர் அன்னாள். | 26 |
1454 |
ஆன பொழுது அரும் கடி நல் மணம் குறித்து மனையில் தீர்ந்து அயலூர் புக்க தேன் ஒழுகு துழாய் அலங்கல் தீர்த்தனுக்கு அன்பு உடையார் போல் திரியும் வஞ்ச மானம் உடையார்மீண்டு மனை புகலும் பதினாறு வய வயதின் மேய பால் நல் மணி கண்டன் நுதல் காப்பு அணிந்தோர் பசும் குழவி படிவம் கொண்டான். | 27 |
1455 |
எழுத அரிய மறைச் சிலம்பு கிடந்து புறத்து அலம்ப அன்பர் இதயம் என்னும் செழு மலர் ஓடையின் மலர்ந்து சிவானந்தத் தேன் ததும்பு தெய்வக் கஞ்சத் தொழுதகு சிற்றடிப் பெரிய விரல் சுவைத்து மைக் கணிர் துளும்ப வாய்விட்டு அழுது அணையா ஆடையில் கிடந்தான் தனை அனைத்து உயிரும் ஈன்று காத்து அழிக்கும் அப்பன். | 28 |
1456 |
தாய் விட்டுப் போனது ஒரு தனிக் குழவி எனக் கலங்கித் தாங்கித் தேடி ஆய் விட்டுப் பிரமன் அழ மறைகள் அழ அன்புடையாள் அன்பில் பட்டு வாய்விட்டுக் கிடந்து அழுத மகவினைக் கண்டு அணங்கு அனையாள் மாமி என்னும் காய் விட்டு மதக் கொடியாள் இம் மகவு ஏது எனக் கேட்டாள் கௌரி தன்னை. | 29 |
1457 |
நத்தம் அனயன் தனக்கு அரிய நாயகனுக்கு அன்பு உடையாள் நவில்வாள் தேவ தத்தனயன் தரு மனைவி யொடு போந்து சிறு போது தையல் ஈண்டு இத் தனயன் தனைப் பார்த்துக் கோடி என வைத்து அகன்றான் என்னா முன்னம் சித்த நயனம் கலங்கச் சீறி மணவாட்டி தன் மேல் செற்றம் கொண்டாள். | 30 |
1458 |
என்பு பூண்டு இடு காட்டில் பொடி ஆடும் உருத்திரனுக்கு இடை அறாத அன்பு பூண்டான் மகவுக்கு அன்பு உடையாய் நீயும் எமக்கு ஆகா என்னாத் துன்பு பூண்டு அயர்வாளை மகவையும் கொண்டு அகத்தை துரத்தினார்கள் வன்பு பூண்டு ஒழுகு வைணவம் பூண்டு பொறை இரக்க மான நீத்தோர். | 31 |
1459 |
தாய் இலாப் பிள்ளை முகம் தனை நோக்கித் தெருவின் இடைத் தளர்வாள் உள்ளம் கோயிலாக் கொண்டு உறையும் கூடல் நாயகனை மனக் குறிப்பில் கண்டு வேயில் ஆக்கிய தடம் தோள் கௌரி திரு மந்திரத்தை விளம்ப லோடும் சேயிலாய்க் கிடந்து அழுத குழவி விசும்பு இடை மேல் தெரியக் கண்டாள். | 32 |
1460 |
மழவு உருநீத்து அடல் ஏற்றின் வருவார் தம் இடத்து அணங்கின் மனுவை ஓதிப் பழகிய பார்ப்பன மகளைப் பார்ப்பதியின் வடிவு ஆக்கிப் பலரும் கண்டு தொழ விடை மேல் ஏற்றி விசும்பு ஆறு ஆக மலர் மாரி சுரர்கள் ஊற்ற அழகர் எழுந்து அருளினார் களிதூங்கி அதிசயித்தார் அவனி மாக்கள். | 33 |
-----------------
24. கால் மாறி ஆடின படலம் (1461 -1489 )
1461 |
திருத்தராய் மதுரா புரி மேவிய சித்தர் ஆகியச் செல்வர் விருத்தராய் இளையவரும் ஆய் மழவும் ஆய் வேடம் கொண்டு அடல் ஏற்றின் ஒருத்தர் ஆய் விளையாடிய ஆடலை உரைத்தனம் இனி மன்றுள் நிருத்தர் ஆயவர் மாறி நின்று ஆடிய நிலை சிறிது உரை செய்வாம். | 1 |
1462 |
வேந்தன் மீன வண் கொடியவன் ஆகிய விக்கிரமன் தன் தோள் வந்து மண் பொறை இராச சேகரன் புயத்து இறக்கி ஐந்தரு நாடன் பூம் தண் மா மலர் வேதியன் மாதவன் புரத்தின் மேல் பொலிந்து ஓங்கும் சாந்த நீறு எனக் கண்ணித்த புண்ணியத் தனி முதல் நகர் சார்ந்தான். | 2 |
1463 |
கண்ணகன் புவி இராச சேகரன் பொதுக் கடிந்து செங்கோல் ஓச்சி வண்ண வெண் குடை நிழற்றுவான் ஆனந்த வடிவமாய தனி மன்றுள் அண்ணால் ஆடிய திரு நடனத்து அன்பினால் ஆடல் நூல் ஒழித்து ஏனை எண்ணி மூ இரு பத்து முக்கலையும் கற்று இறை முறை செய்யும் நாளில். | 3 |
1464 |
சிலம்பி வாயின் நூல் இழைத்திடும் பந்தரில் செம் கண் மால் தொழ வைகும் அலம்பு தெண் திரைப் பொன்னி அம் தண் துறை ஆனைக்கா இறைக்கு அன்பு கலந்த சிந்தையான் மூ இருபத்து நால் கலைகளும் பயின்று உள்ளம் மலர்ந்தவன் கரிகால் பெருவளத்தவன் வையம் புரக்கின்றான். | 4 |
1465 |
பொன்னி நாடவன் வாயில் உள்ளான் ஒரு புலவன் வந்து அலர் வேம்பின் கன்னி நாடனைக் கண்டு முன் பரவுவான் கனைகழல் கரிகால் எம் மன்னவற்கு அறுபத்து நால் கலைகளும் வரும் வாராது உனக்கு ஒன்று தென்னர் ஏறு அனையால் அது பரத நூல் தெரிந்திலை எனச் சொன்னான். | 5 |
1466 |
கேட்ட மீனவன் மறு புல விஞ்சையன் கிளத்து சொல் இகல் மானம் மூட்ட ஆகுலம் மூழ்கிய மனத்தனாய் முது மறைச் சிர மன்றுள் நாட்டம் மூன்று உடை நாயகன் ஆடலை நானும் ஆடுதற்கு உள்ளம் வேட்டதே கொலாம் இதுவும் எம் பிரான் விதி என அது கற்பான். | 6 |
1467 |
ஆடல் நூல் வரம்பு கண்டவர் ஆகி அவ்வழி ஆடாலும் பயின்ற நாடக நடை தேர் புலவரைத்துருவி நண்ணிய அவர்க்கு எலாம் மகிழ்ச்சி வீடரும் சிறப்பால் அறுவையும் பூணும் வெறுக்கையும் வெறுத்திடக் கொடுத்துப் பாடல் வண்டாற்றும் தாரினான் பரதப் பனுவலும் கசடு அறப் பயில்வான். | 7 |
1468 |
பாவமோடு ராகம் தாளம் இம் மூன்றும் பகர்ந்திடும் முறையினால் பரதம் ஆவியின் அங்கம் முபாங்கமே பிரத்தியாங்கமே அலர் முக ராகம் ஓவறு சீர்சால் கரப்பிரசாரம் உவமையில் சிரக்கர கருமம் தாவறு கரகேந்திரம் கரகரணம் தானகமே சுத்த சாரி. | 8 |
1469 |
விண்டிடாத் தேசி சாரியே நியாயம் விருத்தியே பிரவி சாரம் பூ மண்டலம் உடனா ஆகாச மண்டலமே மாசு இல் சுத்தக் கரணம் சீர் கண்ட உற் புலித கரணமே அங்க காரமே இரேசதம் என்னக் கொண்ட நாலைந்து பேதமும் கற்று கோது அறப் பயின்றபின் அவற்றுள். | 9 |
1470 |
வருத்தம் இல் மனோ பாவம் ஆதி ஆம் எட்டுவகை நிருத்தங்களில் சாரி நிருத்தம் ஆகிய தாண்டவம் அக மார்க்கம் நிகழ்த்திடும் தேசியும் வடுகே அருத்தம் ஆகிய சிங்களம் என மூன்றாம் அது நிலை ஆறு மூ இரண்டு திருத்தம் ஆம் பதமும் திகழ் இரேகை ஆதி செப்பிய அங்கம் ஈர் எட்டும். | 10 |
1471 |
நால் வகைத்து ஆகும் கரணமும் மேலோர் நாட்டிய இருவகைக் கரமும் கால்வகை புரிகை முதல் பதினாறும் கவான் மனை ஆதி ஆம் இரண்டும் பாலது மடிப்பு வகை எழு நான்கும் பழிப்பு அறு சுத்த சாரி எனும் ஏல் உறு பூ சாரிகள் பதினாறும் இத்துணை ககன சாரிகளும். | 11 |
1472 |
ஏற்ற திக்கிரந்தம் ஆதி ஆம் முப்பது இருவகைத் தேசி சாரிகளும் காற்றினும் கடும் தேர்ச் சக்கர முதல் ஆம் ககன சாரிகை கள் ஏழ் ஐந்தும் சாற்று வித்து வற்பிராந்தம் ஆதிய வாம் சாரிபத்து ஒன்பதும் ஆகப் போற்றி இவை அனைத்தும் உட்படப் புட்ப கடத்து இலக்கண முதல் பொருள்கள். | 12 |
1473 |
ஆச வாத்தியம் முன் பொருள் முதல் களாசம் ஆதி ஆம் பாட பேதங்கள் பேசிய பதினாறு ஒன்பதும் படக பேதம் ஒன்று ஒழிந்த நால் ஐந்தும் மாசு அறும் அளகம் ஆதி ஆம் பாட வகைகள் நால் ஏழும் மற்று அவற்றில் பூசல் வார்த்திகம் தொட்டு ஐவகை சச்சபுட ஆதி ஆம் தாள மாத்திரையும். | 13 |
1474 |
கிளந்த மாத்திரையின் கதிகளும் சொல்லும் கீதமும் படமும் எழுத்தும் வளம் தரு மணிபந்தம் ஆதி கீதத்தின் வகுத்த கட்டளை எழு நான்கும் அளந்திடும் சரளை ஆதி கட்டளை ஏழ் ஐந்து நன்கு அமைந்த பா ஆதி விளம்பிய மூன்று கலப்பும் ஈறு ஆக விளைத்திடும் கூத்த மார்க்கம். | 14 |
1475 |
உரைத்த இக் கூத்துக் கற்கும் போது தன் உடன் பிறப்பில் சால வருத்த நோய் எய்தி இந்த வருத்த நான் மறையும் தேறா அருத்தமாய் அறிவாய் வெள்ளி அம்பலத்து ஆடி நின்ற நிருத்தனார் தமக்கும் உண்டே என்பது நினைவில் கொண்டான். | 15 |
1476 |
கரிய தாமரைக் கண்ணானும் கமல நான் முகனும் காண்டற்கு அரிய தாள் ஒன்றெ நோவ வாற்ற நாணி நிற்பது அந்தோ உரியதாம் இதனைக் கற்று வருத்தம் உற்று ஓர்ந்தும ஈது தெரிய நான் இருப்பதே யோ அறன் எனச் சிந்தை நோவான். | 16 |
1477 |
வடுப்படு பிறவிப் பௌவ வரம்பு காண்கின்ற நாள் வந்து அடுப்பவர் யாவரேனும் அவர்க்கு எலாம் போகம் வீடு கொடுப்பவர் செய்யும் இந்தக் கூத்தை எப்படி நான சென்று தடுப்பது தகாது அன்று ஏனும் வருந்துமே சரணம என்னா. | 17 |
1478 |
இதற்கு இது துணிவு என்று உன்னி எழுந்து போய்ச் சிவன் இராவில் கதக் களிற்று ஒருத்தல் ஏந்தும் கதிர்மணிக் குடுமிக கோயில் மதக்கரி உரியினாற்கு வரம்பு அறச் சிறந்த பூசை விதப்பட யாமம் நான்கும் விதிவழி இயற்றல் செய்யா. | 18 |
1479 |
விண்டக மலர்த்தாள் ஏத்தி வெள்ளி அம் பலத்துள் அன்பர் தொண்டகம் மலர நின்ற சோதி மெய்ஞ் ஞானக் கூத்தைக் கண்டக மகிழ்ந்து தாழ்ந்து கண்புனல் சேரச் செம்கை முண்டக முடிமேல் ஏற்றி முகிழ்த்து நின்று இதனை வேண்டும். | 19 |
1480 |
நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம் பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின் குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா. | 20 |
1481 |
நாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக் காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும் வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே. | 21 |
1482 |
விளைகள் வாய் வீழ்ந்த வண்டின் மெய் அறி இன்பம் என்னும் அளவு இலா முந்நீர் வெள்ளத்து ஆழ்ந்தவன் எழுந்து பின்னும் உளமும் வாசகமும் மெய்யும் உடையவன் அதுவே ஆகப் பளகிலா அன்பு தானே படிவமாய்ப் பழிச்சல் உற்றான். | 22 |
1483 |
பெரியாய் சரணம் சிறியாய் சரணம் கரி ஆகிய அம் கணனே சரணம் அரியாய் எளியாய் அடி மாறி நடம் புரிவாய் சரணம் புனிதா சரணம். | 23 |
1484 |
நதி ஆடிய செம் சடையாய் நகை வெண் மதியாய் மதியாதவர் தம் மதியில் பதியாய் பதின் எண் கணமும் பரவும் துதியாய் சரணம் சுடரே சரணம். | 24 |
1485 |
பழையாய் புதியாய் சரணம் பணிலக் குழையாய் சரணம் கொடுவெண் மழுவாள் உழையாய் சரணம் உருகாதவர் பால் விழையாய் சரணம் விகிர்தா சரணம். | 25 |
1486 |
இருளாய் வெளியாய் சரணம் எனையும் பொருளாக நினைந்து புரந்தரன் மால் தெருளாத நடம் தெரிவித்து எனை ஆள் அருளாய் சரணம் அழகா சரணம். | 26 |
1487 |
அயனத்தன் எனப்படும் ஆடு அரவச் சயனத்தவனைத் தரு தத்துவ நால் வயனத்து தவ வானவர் வானவ சேல் நயனத்தவள் நாயகனே சரணம். | 27 |
1488 |
கத வெம் கரியின் உரியாய் சரணம் முதல் அந்தம் இலா முதலே சரண் என்று அதிர் பைங் கழல் நூபுர வண்டு அலரும் பத பங்கயன் முன்பு பணிந்து அரசன். | 28 |
1489 |
என்று இப்படியே இந்தத் திருநடம் யாரும் காண நின்று அருள் செய்ய வேண்டும் நிருமலமான வெள்ளி மன்றவ அடியேன் வெண்டும் வரம் இது என்று தாழ்ந்தான் அன்று தொட்டு இன்று எம் கோன் அந் நட நிலையாய் நின்றான். | 29 |
--------------
25. பழி அஞ்சின படலம் (1490 -1533 )
1490 |
ஈறு இலான் செழியன் அன்புக்கு எளியவன் ஆகி மன்றுள் மாறி ஆடிய கூத்து என்சொல் வரம்பினது ஆமே கங்கை ஆறுசேர் சடையான் தான் ஓர் அரும் பழிக்கு அஞ்சித் தென்னன் தேறலா மனத்தைத் தேற்றும் திருவிளை ஆடல் சொல்வாம். | 1 |
1491 |
இனைய நாள் சிறிது செல்ல இராச சேகரன் காதல் தனையன் ஆம் குலோத்துங்கற்குத் தன் அரசு இருக்கை நல்கி வினை எலாம் வென்று ஞான வெள்ளி அம்பலத்துள் ஆடும் கனை கழல் நிழலில் பின்னிக் கலந்து பேரின்பம் உற்றான். | 2 |
1492 |
குரவன் செம்கோல் கைக் கொண்ட குலோத்துங்க வழுதி செம்கண் அரவு அங்கம் பூண்ட கூடல் ஆதி நாயகனை நித்தம் பரவு அன்பின் வழிபாடு ஆனாப் பத்திமை நியமம் பூண்டான் இரவு அஞ்சும் கதுப்பின் நல்லார் ஈர் ஐயா இரவர் உள்ளான். | 3 |
1493 |
அப்பதின் ஆயிரவர்க்கு ஒவ் வொருத்திக்கு அவ் ஆறாய் ஒப்பரிய அறுபதினாயிரம் குமரர் உளர் அவருள் செப்ப அரிய வல் ஆண்மைச் சிங்க இள ஏறு அனையான் வைப்பு அனையான் முதல் பிறந்த மைந்தன் பேர் அனந்த குணன். | 4 |
1494 |
கலை பயின்று பரி நெடும் தேர் கரி பயின்று பல கைவாள் சிலை பயின்று வருகுமரர் திறல் நோக்கி மகிழ் வேந்தன் அலை பயின்ற கடலாடை நில மகளை அடல் அணி தோள் மலை பயின்று குளிர் தூங்க மகிழ்வித்து வாழும் நாள். | 5 |
1495 |
செய் ஏந்து திருப்புத்தூர் நின்று ஒரு செழு மறை யோன் பை ஏந்தும் அரவு அல்குல் மனைவி யொடும் பால் நல் வாய் கை ஏந்தும் குழவி யொடும் கடம் புகுந்து மாதுலன் பால் மை ஏந்தும் பொழில் மதுரை நகர் நோக்கி வருகின்றான். | 6 |
1496 |
வருவான் உண்ணு நீர் வேட்டு வருவாளை வழி நிற்கும் பெரு வானம் தடவும் ஒரு பேர் ஆலின் நீழலின் கீழ் ஒருவாத பசுங் குழவி உடன் இருத்தி நீர் தேடித் தருவான் போய் மீண்டு மனை இருக்கும் இடம் தலைப் படுமுன். | 7 |
1497 |
இலைத்தலைய பழு மரத்தின் மிசை முன் நான் எய்த ஒரு கொலைத் தலைய கூர் வாளி கோப்புண்டு கிடந்தது கால் அலைத்து அலைய வீழ்ந்து உம்மை வினை உலப்ப ஆங்கிருந்த வலைத் தலைய மான் நோக்கி வயிறு உருவத் தைத்தது என்றால். | 8 |
1498 |
அவ்வாறு அவ் அணங்கு அனையாள் உயிர் இழந்தாள் உவ் வேலைச் செவ் வாளி ஏறிட்ட சிலை உடையான் ஒரு வேடன் வெவ் வாளி ஏறு அனையான் வெயிற்கு ஒதுங்கும் நிழல் தேடி அவ் ஆல நிழல் எய்தி அயல் நின்றன் இளைப் பாற. | 9 |
1499 |
தண்ணீருக்குப் போய் ஆவி தலைப் பட்ட மறையவனும் உண் நீர்க் கைக் கொண்டு மீண்டு ஒருங்கு இருந்த குழவி யோடும் புண் நீர் வெள்ளத்துக்கா தாழ்ந்து உயிரைப் புறம் கொடுத்த பண் நீர மழலை மொழிப் பார்ப்பனியைக் கண் உற்றான். | 10 |
1500 |
அயில் போலும் கணை ஏறுண்டு அவ்வழிப் புண் நீர் சோர மயில் போல உயிர் போகிக் கிடக்கின்றாள் மருங்கு அணைந்து என் உயிர் போல்வாய் உனக்கு இது என் உற்றது என மத்து எறி தண் தயிர் போலக் கலங்கி அறிவு அழுந்து மனம் சாம் பினான். | 11 |
1501 |
இனையது ஒர் பெண் பழியை யார் ஏற்றார் எனத் தேர்வான் அனையது ஒர் பழு மரத்தின் புறத்து ஒரு சால் அழல் காலும் முனையது ஒர் கணையோடு முடக்கி அகைச் சிலை ஏந்தி வினையது ஓர்ந்து எதிர் நின்ற விறல் வேடன் தனைக் கண்டான். | 12 |
1502 |
காப்பு அணி தானன் வாளடு வீக்கிய கச்சாளன் கூர்ப் பகழிக் கோல் ஏறிடு வில்லன் கொலை செய்வான் ஏற்பன கைக் கொண்டு இவ் இடை நின்றான் இவனே என் பார்ப் பனியைக் கொன்று இன் உயிர் உண்டு பழி பூண்டான். | 13 |
1503 |
என்ன மதித்தே ஏடா வேடா என் ஏழை தன்னை வதைத்தாய் நீயே என்னா அழல் கால் கண் மின்னல் எயிற்றுக் குற்று என வல் வாய் விட்டு ஆர்த்து மன்னவன் ஆணைப் பாசம் எறிந்து வலித்து ஏகும். | 14 |
1504 |
மாண்டவளைத் தன் வெந் இடை இட்டான் மகவு ஒக்கல் தாண்ட அணைத்தான் தாய் முலை வேட்டு அழும தன் சேயைக் காண் தொறும் விம்மாக் கண் புனல் சோரக் கடிது ஏகா ஆண் தகை மாறன் கூடல் அணைந்தான் அளி அன்றான். | 15 |
1505 |
மட்டு அவிழ் தாரான் வாயின் மருங்கே வந்து எய்தா உள் துகள் இல்லா வேடனை முன் விட்டு உயிர் அன்னாள் சட்டக நேரே இட்டு எதிர் மாறன் தமர் கேட்பக் கண்துளி சிந்தா முறை யிடு கின்றன் கை ஓச்சா. | 16 |
1506 |
கோமுறை கோடாக் கொற்றவர் ஏறே முறையே யோ தாமரையாள் வாழ் தண் கடி மார்பா முறையேயோ மா மதி வானோன் வழிவரு மைந்தா முறையே யோ தீமை செய்தாய் போல் செங்கை குறைத்தாய் முறையே யோ. | 17 |
1507 |
பிறங்கும் கோலான் மாறடு கொற்றம் பெறு வேந்தன் உறங்கும் போதும் தன் அருள் ஆணை உலகு எங்கும் அறம் குன்றாவாக் காப்பதை என்ப அஃதி யாதி இம் மறம் குன்றாதான் செய் கொலை காவா வழி என்றான். | 18 |
1508 |
வாயில் உளார் தம் மன்னவன் முன் போய் மன்னா நம் கோயிலின் மாடு ஓர் வேதியன் மாதைக் கொலை செய்தான் ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு அவிந்தாளைத் ஆயினன் வந்து இங்கு இட்டு அயர் கின்றான் தமியன என்றார். | 19 |
1509 |
இறை மகன் அஞ்சா என் குடை நன்று ஆல் என் காவல் அறம் மலி செம்கோல் அஞ்சு பயம் தீர்த்து அரசு ஆளும் முறைமையும் நன்றன் மண் கலி மூழ்கா முயன்று ஏந்தும் பொறைமையும் நன்றல் என்று புலந்து புறம் போந்தான். | 20 |
1510 |
வேதியன் நிற்கும் தன்மை தெரிந்தான் மெலிவு உற்றான் சாதியின் மிக்காய் வந்தது உனக்கு என் தளர் கின்றாய் ஓதுதி என்னக் காவலனைப் பார்த்து உரை சான்ற நீதி உளாய் கேள் என்று உரை செய்வான் நிகழ் செய்தி. | 21 |
1511 |
இன்று இவளைக் கொண்டு ஓர் வட நீழல் இடை விட்டுச் சென்று தணீர் கொண்டு யான் வருமுன் இச் சிலை வேடன் கொன்று அயல் நின்றான் என்று உலை ஊட்டும் கொலை வேல்போல் வன்திறல் மாறன் செவி நுழைவித்தான் மறையோன் ஆல். | 22 |
1512 |
அந்தணன் மாற்றம் தன்னையும் உட் கொண்டு அற நோக்கும் சந்தன வெற்பன் மறவனை நோக்கத் தாழ்ந்து அன்னான் எந்தை பிரானே நாய் அடியேன் நின்று எய்ப்பாற வந்து புகுந்தேன் அந்த மரத்தின் மருங்கே ஓர் சார். | 23 |
1513 |
ஐயே நானும் கொன்றவன் அல்லேன் கொன்றாரைக் கையேன் வேறும் கண்டிலன் என்றான் இவள் ஆகத்து எய்யேறு உண்ட வாறு என் என்றார் எதிர் நின்றார் மெய்யே ஐயா யான் அறியேன் இவ் விளைவு என்றான். | 24 |
1514 |
இக் கொலை செய்தான் யான் அலன் என்னா துள என்னத் தக்கவ னேயோ தறுகண் மறவன் உரை மெய்யோ சிக்க ஒறுத்தால் அல்லதை உண்மை செப்பான் என்று ஒக்க உரைத்தார் மந்திரர் உள்ளார் பிறர் எல்லாம். | 25 |
1515 |
மன்னன் தானும் மற்று அது செய்மின் என மள்ளர் பின்னம் தண்டம் செய்தனர் கேட்கப் பிழை இல்லான் முன்னம் சொன்ன சொல் பெயரானாய் மொழியா நின்று இன்னல் தீரத் தேருமின் என்றான் என்செய்வான். | 26 |
1516 |
ஆற்ற ஒறுக்கும் தண்டமும் அஞ்சான் அறைகின்ற கூற்றமும் ஒன்றெ கொன்ற குறிப்பு முகம் தோற்றான் மாற்றவரேயோ மாவோ புள்ளோ வழி வந்த கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான் கொலை செய்வான். | 27 |
1517 |
கைதவன் ஆம் இக் கானவனேயோ பிறரேயோ செய்தவர் யாரே இக் கொலை வேட்டம் செய்தோர் மா எய்த இலக்கில் தப்பிய கோல் தான் ஏறு உண்டு இம் மை தவழ் கண்ணான் மாய்ந்தன ளேயோ அறியேன் ஆல். | 28 |
1518 |
என்னா உன்னித் தென்னவன் இன்னம் இது முன்னூல் தன்னால் ஆயத்தக்கது அதை என்றன் தகவிற்று தன் அன்னார் அந்நூல் ஆய்ந்து இது நூலால் அமையாது ஆல் மன்னா தெய்வத் தாலே தேறும் வழி என்றார். | 29 |
1519 |
வேந்தர்கள் சிங்கம் வேதியனைப் பார்த்து இது தீர ஆய்ந்து உனது உள்ளக் கவலை ஒழிப் பேன் அஞ்சேன் இந் ஏந்திழை ஈமக்கடன் நிறுவிப்போது என்றேஇத் தேந்து உணர் வேங்கைத் தார் மறவோனைச் சிறை செய்தான். | 30 |
1520 |
மின் அனையாள் செய்கடன் முற்றா மீண்டோனைத் தன்னமர் கோயில் கடை வயின் வைத்துத் தான் ஏகிக் கொன்னவில் வேலான் தங்கள் குடிக்கு ஓர் குல தெய்வம் என்ன இருந்தார் அடிகள் பணிந்தான் இது கூறும். | 31 |
1521 |
மன்று ஆடும் மணியே இம் மறவன் தான் பார்ப்பனியைக் கொன்றானோ பிறர் பிறிதால் கொன்றதோ இது அறநூல் ஒன்றலும் அளப்பரிது ஆக் கிடந்தது ஆல் உன் அருளால் என் தாழ்வு கெடத் தேற்றாய் என்று இரந்தான் அவ் வேலை. | 32 |
1522 |
திரு நகரின் புறம்பு ஒரு சார் குலவணிகத் தெருவின் கண் ஒரு மனையின் மணம் உளது அங்கு அந்தணனோடு ஒருங்கு நீ வருதி உனது உளம் தேறா மாற்றம் எலாம் தேற்றுதும் என்று இரு விசும்பின் அகடு கிழித்து எழுந்தது ஆல் ஒருவாக்கு. | 33 |
1523 |
திரு வாக்குச் செவி மடுத்துச் செழியன் தன் புறம் கடையில் பெருவாக்கு மறையவனோடு ஒருங்கு எய்தி பெரும் பகல் போய்க் கருவாக்கும் மருள் மாலைக் கங்குல் வாய்த் தன்னை வேற்று உருவாக்கிக் கடிமனைபோய் ஒரு சிறை புக்கு இனிது இருந்தான். | 34 |
1524 |
அன்று இறைவன் அருளால் அங்கவர் கேட்க அம் மனையின் மன்றல் மகன் தனக்கு அளந்த நாள் உலப்ப மறலி இருள் குன்றம் இரண்டு என விடுத்த கொடும் பாசக் கையினர் வாய் மென்று வரும் சினத்தவரில் ஒருவன் இது வினவும் ஆல். | 35 |
1525 |
இன்றே இங்கு இவன் உயிரைத் தருதிர் எனும் இரும் பகட்டுக் குன்று ஏறும் கோன் உரையால் கொள்வது எவன் பிணி உடம்பின் ஒன்றேன் உமிலன் ஒரு காரணம் இன்றி உயிர் கொள்வது அன்றே என் செய்தும் என மற்றவன் ஈது அறைகிற்பான். | 36 |
1526 |
ஆற்று ஆல் ஏறு உண்ட கணை அருகு ஒதுங்கும் பார்ப்பனியைக் காற்றுஆல் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் அப்படி இந்தச் சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்துப் புறம் நின்ற ஈற்று ஆவை வெருள விடுத்து இவன் ஆவி கவர்க என்றான். | 37 |
1527 |
அந்த மொழி கேட்டு அரசன் அரு மறையோய் கேட்டனையோ இந்த மொழி எனப் பனவன் இவன் இவ்வாறு சிறந்தால் என் பைந்தொடியாள் இறந்ததும் அப்படியே என் மனக்கவலை சிந்த இது காண்பேன் என்று ஒருங்கு இருந்தான் தென்னனோடும். | 38 |
1528 |
ஒட்டிய பல் கிளை துவன்றி ஒல் ஒலிமங்கலம் தொடங்கக் கொட்டிய பல்லியம் முழங்கக் குழுமிய ஓசையின் வெருண்டு கட்டிய தாம்பிறப் புனிற்றுக் கற்றா ஒன்று அதிர்ந்து ஓடி முட்டிய தால் மண மகனை முடிந்தது ஆல் அவன் ஆவி. | 39 |
1529 |
மண மகனே பிண மகனாய் மணப் பறையே பிணப்பறையாய் அணி இழையார் வாழ்த்து ஒலிபோய் அழுகை ஒலியாய்க் கழியக் கணம் அதனில் பிறந்து இறும் இக் காயத்தின் வரும் பயனை உணர்வு உடையார் பெறுவர் உணர் ஒன்றும் இலார்க்கு ஒன்றும் இலை. | 40 |
1530 |
கண்டான் அந்தணன் என்ன காரியம் செய்தேன் எனத்தன் வண்டு ஆர் பூம் குழல் மனைவி மாட்சியினுங் கழி துன்பம் கொண்டான் மற்று அவனொடும் தன் கோயில் புகுந்து அலர் வேப்பந் தண் தாரான் அமைச்சர்க்கும் பிறர்க்கும் இது சாற்றினான். | 41 |
1531 |
மறையவனை இன்னும் ஒரு மண முடித்துக் கோடி என நிறைய வரும் பொருள் ஈந்து நீ போதி என விடுத்துச் சிறை அழுவத்து இடைக்கிடந்த செடித் தலையஇடிக் குரல கறை உடல் வேடனைத் தொடுத்த கால் யாப்புக் கழல்வித்து. | 42 |
1532 |
தௌ¤யாதே யாம் இழைத்த தீத்தண்டம் பொறுத்தி என விளி ஆவின் அருள் சுரந்து வேண்டுவன நனி நல்கி அளி ஆனாம் மனத்து அரசன் அவனை அவன் இடைச் செலுத்திக் கனி யானை விழ எய்த கௌரியனைப் போய்ப் பணிவான். | 43 |
1533 |
ஆதரம் பெருகப் பாவியேன் பொருட்டு எம் மடி கணீர் அரும் பழி அஞ்சு நாதராய் இருந்தீர் எந்தையர்க் குண்டோ நான் செயத் தக்கது ஒன்று என்னாக் காதலில் புகழ்ந்து பன் முறை பழிச்சிச் கரையின் மா பூசனை சிறப் பித்து ஏதம் அது அகற்றி உலகினுக்கு குயிராய் இருந்தனன் இறை குலோத்துங்கன். | 44 |
-----------------
26. மாபாதகம் தீர்த்த படலம் (1534 - 1574)
1534 |
வேத நாயகன் வெம் பழி அஞ்சிய நாதன் ஆன நலன் இது நல்கிய தாதையைக் கொலை செய்த தனயன் மா பாதகம் தனைத் தீர்த்தமை பாடுவாம். | 1 |
1535 |
விரை செய் மாலைக் குலோத்துங்க மீனவன் திரை செய் நீர் நிலம் செம் கோல் செலத் தனி அரசு செய்யும் அந் நாளில் அவந்தி என்று உரை செய் மா நகர் ஆன் ஒரு பூசுரன். | 2 |
1536 |
வெருவும் காய் சின மாறிய வேதியன் மருவும் காதல் மனை எனும் பேரினாள் திருவும் காமன் நல் தேவியும் மண் புனை உருவும் காமுறு ஒப்புஇல் வனப்பினாள். | 3 |
1537 |
படி இல் ஓவியப் பாவை ஒப்பு ஆகிய வடிவில் ஆள் அவள் பான் மகன் என்று ஒரு கொடிய பாவி பிறந்து கொலை முதல் கடிய பாவக் கலன் போல் வளரும் நாள். | 4 |
1538 |
கோடி கோடி அடும் சிலை கோட்டியே கோடி கோடி கொடும் கணை பூட்டியே கோடி கோடி விகாரமும் கூட்டியே கோடி கோடி அனங்கர் எய்தார் கொலோ. | 5 |
1539 |
இளமைச் செவ்விய யாக்கையன் மையல்கூர் வளமைக் காமமும் வல் வினையும் நிறைத் தளைவிட்டு ஈர்த்தலில் தன்னை வயிற்று இடை விளைவித்து ஈன்றவள் தன்னை விரும்பினான். | 6 |
1540 |
அன்னை எனும் அழிதகை யாள் அகத்து இன் உயிர்த் துணையும் மனக் காவலாய் மன்னும் நாணம் மடம் முதல் நால்வரும் தன்னை நீங்கலில் ஊனும் ஒத்தாள் அரோ. | 7 |
1541 |
இன்பமோ சிறிது ஆகும் இதில் வரும் துன்பமோ கரை இல்லாத் தொடு கடல் என்பது ஆரும் இவனால் அறிய இவ் வன்பது ஆன வினையால் வருந்துவான். | 8 |
1542 |
மையன் ஆக மதியை விழுங்க அக் கையன் ஆயைக் கலந்து ஒழுகும் செயல் ஐயன் தான் குறிப்பால் கண்டு அயல் செவிக்கு உய்யலா வண்ணம் உள்ளத்து அடக்கினான். | 9 |
1543 |
வேற்று ஓர் வைகல் வெளிப்படக் கண்டு அறம் சாற்று நாவினன் வேறு ஒன்றும் சாற்றிலன் சீற்றம் மேல் கொடு செல்வன் கொல்வேன் என ஏற்று எழுந்தனன் ஈன்றாள் விலக்குவாள். | 10 |
1544 |
தாயிலின் இன்பம் நுகர்ந்தனை தந்தையைக் காயில் என் பெறுவாய் எனக் காமுகர்க்கு ஆயில் அன்னையில் அப் பனி என் பயன் ஏயிலின் அருள் என் அறம் என் என்றான். | 11 |
1545 |
மண் தொடும் கருவிப்படை வன் கையில் கொண்டு தாதை குரவன் என்று ஓர் கிலான் துண்டம் ஆகத் துணித்தான் ஆய் வாய்முகம் துண்ட காம நறவால் உணர்வு இலான். | 12 |
1546 |
மைக் கரும் கங்குல் வாய்க் கொன்ற தாதைக்குத் தக்க தீத் தவிசு இட்டு அன்னை தன்னொடும் கைக்கு அடங்கு பொருளடும் கல் நெறி புக்கனன் புடைசூழ்ந்தார் புளி நரே. | 13 |
1547 |
எய்யும் கோலொடு வில்லர் இடிக்கு நேர் செய்யும் சொல்லினர் செல்லலை நில் எனக் கையில் உள்ளவும் கைக் கொண்டு காரிகைத் தையல் தன்னையும் தாம் கொடு போயினார். | 14 |
1548 |
சென்று சேண் இடைச் சிக்கு அற வாழலாம் என்ற எண்ணம் ஒன்று எய்திய வண்ணம் ஒன்று ஒன்று நாம் என்னத் தெய்வம் ஒன்று எண்ணியது என்ற வார்த்தை இவன் இடைப் பட்டது ஆல். | 15 |
1549 |
தாதை தன் தனயற்கு இனி யார் துணை மாதர்யாயை மறவர் கைக் கொள்ள இப் போது தான் துணை என்பவன் போன்றுமா பாத கத்து உருவாய் வந்து பற்றினான். | 16 |
1550 |
ஆவ என்னும் அழும் சிவ தா எனும் பாவம் பாவம் பழி இதுவோ வைய கோ எனும் கை குலைத்து எறியும் நிழல் பாவை போல விடாது பின் பற்றும் ஆல். | 17 |
1551 |
நல்ல தீர்த்தம் சிவ தலம் நலோர் பக்கமும் செல்ல ஒட்டாது அரன் சீர்த்தி நாமம் செவிப் புல்ல ஒட்டாது உளம் புகுத ஒட்டாது நாச் சொல்ல ஒட்டாது கண்துயில ஒட்டாது அரோ. | 18 |
1552 |
சுற்று முன் பின் புறச் சூழ்ந்து தன் கொடுக்கினில் பற்றிநின்று ஈர்க்கு மா பாதகத்தால் அலைந்து எற்றினில் செய்வது என் ஆற்றலால் இடர் உழந்து உற்றவே உலகு எலம் அச்சம் உற்று உழலும் ஆல். | 19 |
1553 |
உறுகணோ ஆற்ற நாள் உற்று உழன்று உலகு எலாம் மறுகவே திரியும் மா பாதகன் வலி எலாம் சிறுகுவான் சிவன் அருள் செயலினில் பாதகம் குறுகு நாள் குறுகு நாள் கூடலைக் குறுகினான். | 20 |
1554 |
அழிதகன் குறுகு வான் முன் அங் கயல் கண்ணி தந்தக் குழை இரு காதும் கோத்துக் கொலை கெழு புலி பல் தாலி நுழை மயிர் நெடு நாள் பின்னல் நோன் பிடர் அலைப்பப் பூண்டோர் பழி தகையாத வேடப் பாவை யாய்ப் படிவம் கொள்ள. | 21 |
1555 |
கொலை இரும் பழிக்கு அன்று அஞ்சும் கூடல் எம் பெருமான் கொன்றை மிலை இரும் குஞ்சி வேங்கை மெல் இணர்க் கண்ணி வேய்ந்து கலை இரு மருப்பில் கோடிக் காது அளவோடும் தாடி சிலை இரும் தடக்கை வேடம் திரு உருக் கொண்டு தோன்றி. | 22 |
1556 |
கொண்டல் கண் படுக்கும் மாடக் கோபுர மருங்கில் போந்து இன் கண்டகக் கருக்கு வாய குரைக்கும் நாய் கதுவிக் காப்பப் புண் தளை வாளி வில்லோர் புறம் கிடந்து இமைப்ப திங்கள் உண்ட வாள் நுதலாளோடும் சூது போர் ஆடல் செய்வான். | 23 |
1557 |
வெரு வரு வேழம் உண்ட வெள்ளில் போல் வறியன் ஆகிப் பருவரல் உடன் ஆங்கு எய்தும் பாதகன் வரவு நோக்கி ஒருவரு உள்ளத்தாலும் உன்னரும் கொடிய பாவி வருவது காண்டி என்னா மாதரை நோக்கிக் கூறும். | 24 |
1558 |
அணங்கு நோய் எவர்க்கும் செய்யும் அனங்கனால் அலைப்பு உண்டு ஆவி உணங்கினார் உள்ளம் செல்லும் இடன் அறிந்து ஓடிச் செல்லா குணம் குலம் ஒழுக்கம் குன்றல் கொலை பழி பாவம் பாரா இணங்கு இன் உயிர்க்கும் ஆங்கே இறுதி வந்து உறுவது எண்ணா. | 25 |
1559 |
கள் உண்டல் காமம் என்ப கருத்து அறை போக்குச் செய்வ எள் உண்ட காமம் போல எண்ணினில் காணில் கேட்கில் தள் உண்ட விடத்தின் நஞ்சம் தலைக் கொண்டால் என்ன ஆங்கே உள் உண்ட உணர்வு போக்கா உண்டபோது அழிக்கும் கள் ஊண். | 26 |
1560 |
காமமே கொலை கட்கு எல்லாம் காரணம் கண் ஓடாத காமமே களவுக்கு எல்லாம் காரணம் கூற்றம் அஞ்சும் காமமே கள் உண்டற்கும் காரணம் ஆதலாலே காமமே நரக பூமி காணியாக் கொடுப்பது என்றான். | 27 |
1561 |
கொலைப்பழி கோட் பட்டு ஆங்கே குறுகியான் முகம் கண்டு ஏட அலைப்படர் உழந்து சாம்பி அழிவது என் பார்ப்பான் என்னக் கலைப்படு திங்கள் வேணிக் கானவன் அருள் கண் நோக்கம் தலைப்படச் சிறிது பாவம் தணிந்து தன் அறிவு தோன்ற. | 28 |
1562 |
முற் பகல் இழைத்த பாவ முதிர்ச்சியால் பிறந்து தந்தை தன் பகன் ஆன ஆறும் தாதையை வதைத்த ஆறும் பிற் பகல் அந்தப் பாவம் பிடித்து அலைத்து எங்கும் தீராது இப்பதி புகுந்த வாறு எடுத்து உரைத்து இரங்கி நின்றான். | 29 |
1563 |
மறப் பெரும் படிவம் கொண்டு மனத்து அருள் சுரந்து நின்ற அறப் பெரும் கருணை மூர்த்தி அழி தகை அவனைப் பார்த்து இத் திறப் பழி ஆங்குச் சென்று ஈங்கு அன்றித் தீராது என்றக் கறை பழி தீரும் வண்ணம் கருதி ஓர் உறுதி கூறும். | 30 |
1564 |
வருதி நின் நாமம் சொன்னோர் வருக்கமும் நரகில் வீழக் கருதி நீ செய்த பாவம் கழிப்பவர் எவர் யா நோக்கம் தருதலால் எளிதில் தீரச் சாற்றுதும் அய்யம் கை ஏற்று ஒருபொழுது உண்டி ஈசன் உறுதவர் ஏவல் செய்தி. | 31 |
1565 |
செம்கதிர்க் கடவுள் வானம் தீண்டு முன் எழுந்து தீம் தண் பைங் கதிர் அறுகு கொய்து பசுக்களை அருத்தி ஆர்வம் பொங்கமுப் போதும் கோயில் புறத் தொட்டித் தீர்த்தம் ஆடிச் சங்கரன் தனை நூற்று எட்டு மெய்வலம் சாரச் செய்தி. | 32 |
1566 |
இத்தவ நெறியில் நின்றால் இப்பழியும் கழியும் என்னாச் சித்த அன்பு உடைய வேடத் திரு உருக் கொண்ட கொன்றைக் கொத்தவன் உரைத்தான் கேட்டு கொடிச்சியாய் இருந்த அம்மை மத்தவன் கரித்தோல் போர்த்த மறவனை வினவுகின்றாள். | 33 |
1567 |
ஐய இக் கொடியோன் செய்த பாவத்துக்கு அளவு இல் காலம் வெய்ய நால் ஏழு கோடி நரகு இடை வீழ்ந்தாள் ஏனும் உய்வகை இலாத பாவி இவனுக்கு என் உய்யும் தேற்றம் செய்வகை என்று கேட்பச் செம்கண் மால் விடை யோன் செப்பும். | 34 |
1568 |
அடுபழி அஞ்சா நீசர் ஆயினும் நினைக்கின் அச்சம் படு பழி அஞ்சான் செய்த பாதகத் தொடக்கு உண்டு எங்கும் விடு வகை இன்றி வேறு களை கணும் இன்றி வீயக் கடவனைக் காப்பது அன்றோ காப்பு என்றன் கருணைமூர்த்தி. | 35 |
1569 |
நெய்தல் போது அனைய உண் கண் நேரிழை நீயாது ஒன்றும் செய்தற்கும் செய்யாமைக்கும் வேறு ஒன்று செயற்கும் ஆற்றல் மெய் தக்க கருணை வள்ளல் வேண்டின் எவ் வினைஞர் ஏனும் உய்தக்கோர் ஆதல் செய்கை உன் அருள் விளையாட்டு அன்றோ. | 36 |
1570 |
என்று அக மகிழ்ச்சி பொங்க இயம்பினாள் இயம்ப லோடும் குன்றக நாட்ட வேடக் குழகனும் மறைந்து வெள்ளி மன்று அகம் நிறைந்தான் மேகம் மறைந்திட மறைந்து செல்லும் மின் தக விடாது பின் போம் விளங்கு இழை மடந்தை யோடும். | 37 |
1571 |
ஆததாய் இயும் கண்டு ஆனா அற்புதம் அடைந்து கூடல் நாதனார் நவின்ற ஆற்றான் நல்நெறி விரதச் செய்கை மாதவ ஒழுக்கம் தாங்கி வரு முறை மதிய மூன்றில் பாதகம் கழிந்து தெய்வப் பார்ப்பன வடிவம் ஆனான். | 38 |
1572 |
சொல்பதம் கடந்த எந்தை சுந்தர நாதன் தாளில் பல பல வடசொல் மாலை பத்தியில் தொடுத்துச் சாத்திச் தற்பர அறிவு ஆனந்தத் தனி உரு உடைய சோதி பொன் பத மருங்கில் புக்கான் புண்ணிய மறையோன் அம்மா. | 39 |
1573 |
அன்னையைப் புணர்ந்து தாதை குரவன் ஆம் அந்தணாளன் தன்னையும் கொன்ற பாவம் தணித்து வீடு அளித்தது என்றால் பின்னை நீர் இழி நோய் குட்டம் பெரு வயிறு ஈளை வெப்பு என்று இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம் என்பதோ இதற்கு மேன்மை. | 40 |
1574 |
அழிந்த வேதியன் மா பாதகம் தீர்த்தது அறிந்து வேந்து அமைச்சர் ஊர் உள்ளார் ஒழிந்த பார் உள்ளார் வான் உளார் வியப்பம் உற்று நல் உரை உணர்வு எல்லாம் கழிந்த பேர் அருளிக் கயவன் மேல் வைத்த காரணம் யாது எனக் கண்ணீர் வழிந்து நான் மாடக் கூடல் நாயகனை வழுத்தினார் மகிழ்ச்சியுள் திளைத்தார். | 41 |
மாபாதகம் தீர்த்த படலம் சுபம்
------------------
27. அங்கம் வெட்டின படலம் (1575 -1602 )
1575 |
வேதகம் தரத்து முக்கண் வேதியன் மறையோன் செய்த பாதகம் தவிர்த்தவாறு பகர்ந்தனம் விஞ்சை ஈந்த போதகன் மனைக்குத் தீங்கு புந்தி முன்னாகச் செய்த சாதகன் தனைப் போர் ஆற்றித் தண்டித்த தண்டம் சொல்வாம். | 1 |
1576 |
கூர்த்த வெண் கோட்டி யாவைக் குலோத்துங்க வழுதி ஞாலம் காத்து அரசு அளிக்கும் நாளில் கடிமதில் உடுத்த கூடல் மாத் தனி நகருள் வந்து மறு புலத்தவனாய் யாக்கை மூத்தவன் ஒருவன் வைகி முனைய வாள் பயிற்றி வாழ்வான். | 2 |
1577 |
வாள் வினைக் குரவன் அன்னான் வல் அமண் விடுத்த வேழம் தோள் வினை வலியால் அட்ட சுந்தரவிடங்கன் தன்னை ஆள் வினை அன்பும் தானும் வைகலும் அடைந்து தாழ்ந்து மூள் வினை வலியை வெல்லும் மூது அறிவு உடையன் அம்மா. | 3 |
1578 |
கை வினை மறவாள் விஞ்சைக் காவலன் அவனைத் தாழ்ந்து தெவ் வினை வெல்வான் கற்கும் சிங்க ஏறு அனையார் தம் முன் உய்வினை உணராப் பாவி சித்தன் என்று ஒருவன் உள்ளான் அவ்வினை நிரம்பக் கற்றன் ஆகல் ஊழ் வலியால் அன்னான். | 4 |
1579 |
மானவாள் விஞ்சை யாலே தனை நன்கு மதிக்கத் தக்க ஆனது ஓர் செருக்கின் ஆற்றல் தன் ஆசிரியற்கு மாறாய்த் தானும் ஒர் விஞ்சைக் கூடம் சைமத்து வாள் பலரும் கற்க ஊன் உலாம் படை வல்லானில் ஊதியம் மிதப்பக் கொள்வான். | 5 |
1580 |
ஒருத்தனே இருவர் வாளின் விருத்தியும் ஒருங்கு கொள்ளும் கருத்தனாய் விருத்தன் ஊரில் கழிவது கருதி அன்னான் வருத்து வாள் இளையர் தன் பால் வர மனம் திரித்து நாளும் விருத்தமே செய்வான் தாயை விரும்பினோன் கிளையோன் அன்னான். | 6 |
1581 |
தொடத் தொடத் பொறுக்கும் திண்மைத்து ஒன்னில மனையான் இல்லா இடத்தவன் தேவிபால் போய் இடன் உண்டே இடன் உண்டே என்று அடுத்து அடுத்து அஞ்சாது என்றும் கேட்டுக் கேட்டு அகல்வான் ஆக நடைத் தொழில் பாவை அன்ன நங்கை வாளாது இருந்தான். | 7 |
1582 |
1582. பின் ஒரு பகல் போய்ச் செம்கை பிதித்தனன் வலிப்பத் தள்ளி வல்நிலைக் கதவு நூக்கித் தாழக்கோல் வலித்து மாண்ட தன் நிலைக் காப்புச் செய்தாள் தனி மனக் காவல பூண்டாள் அந்நிலை பிழைத்த தீயோன் அநங்கத் தீ வெதுப்பப் போனான். | 8 |
1583 |
அறம் கடை நின்றாள் உள்ளம் ஆற்றவும் கடையன் ஆகிப் புறம் கடை நின்றான் செய்த புலமை தன் பதிக்கும் தேற்றாள் மறம் தவிர் கற்பினாள் தன் மனம் பொதிந்து உயிர்கள் தோறும் நிறைந்த நான் மாடக் கூடல் நிமலனை நினைந்து நொந்தாள். | 9 |
1584 |
தாதக நிறைந்த கொன்றைச் சடையவன் புறம்பு செய்த பாதகம் அறுக்கும் கூடல் பகவன் எவ்வுயிர்க்கும் தானே போதகன் ஆகித் தேற்றும் புண்ணியன் புலைஞன ்செய்த தீது அகம் உணர்ந்து தண்டம் செய்வதற்கு உள்ளம் கொண்டான். | 10 |
1585 |
கோள் உடைக் குரவனே போல் சித்தனைக் குறுகிச் சித்தா காளையாய் நீயும் சாலக் கழிய மூப்பு அடைந்த யாமும் வாள் அமர்ஆடி நம் தம் வலிகளும் அளந்து காண்டும் நாளைவா வருதும் நாமும் நகர் புறத்து ஒரு சார் என்றான். | 11 |
1586 |
நாதன் ஆம் குரவன் கூற நன்று என உவந்து நாலாம் பாதகன் அதற்கு நேர்ந்தான் படைக்கலக் குரவன் மீண்டும் போதரும் அளவில் வையம் புதை இருள் வெள்ளத்து ஆழ ஆதவன் வைய முந்நீர் வெள்ளத்து ஆழ்ந்தது அம்ம. | 12 |
1587 |
ஆசி நல் குரவற்கு இன்னா ஆற்றினோன் பாவம் போல மாசு இருள் திணிந்த கங்குல் வலிகெட வடிவாள் விஞ்சைத் தேசிகன் ஒருவன் அன்னான் திணி உடல் சிதைப்பத் தீட்டும் காய் சின வாள் போல் கீழைக் கல் இடை முளைத்தான் வெய்யோன். | 13 |
1588 |
நன்றியைக் கொன்று தின்றோன் நாயகன் ஆணைக்கு அஞ்சம் வன் திறல் அரி மான் ஊர்தித் தெய்வதம் வழிபட்டு ஏத்தி வென்றி வாள் பரவிக் கச்சு வீக்கி வாள் பலகை ஏந்திச் சென்று வாள் உழவன் சொன்ன செருக்களம் குருகினானே. | 14 |
1589 |
மதுகை வாள் அமர்க்கு நென்னல் வந்து அறை கூவிப ்போன முதுகடும் புலி ஏறு அன்ன முடங்கு உடல் குரவன் தானும் அதிர் கழல் வீக்கிக் கச்சும் அசைத்து வெண் நீறும் சாத்திக் கதிர் கொள்வாள் பலகைதாங்கிக் கயவனுக்கு எதிரே வந்தான். | 15 |
1590 |
மடங்கல் ஏறு ஒன்றும் பைம் கண் அரி ஒன்று மலைந்தால் என்ன முடங்கல் வான் திங்கள் ஒன்று முக்கணும் நான்கு தோளும் விடம் கலும் மிடறும் தோறா வென்றி வாள் விஞ்சை வேந்தும் அடங்கல் தானும் நேரிட்டு அமர் ஆடல் செய்வார். | 16 |
1591 |
எதிர்ப்பர் பின் பறிவர் நேர் போய் எழுந்து வான் ஏறு போல அதிர்ப்பர் கேடகத்துள் தாழ் உற்று அடங்குவர் முளைப்பவர் வாளை விதிர்ப்பர் சாரிகை போய் வீசி வெட்டுவர் விலக்கி மீள்வர் கொதிப்பர் போய் நகைப்பர் ஆண்மை கூறுவர் மாறி நேர்வர். | 17 |
1592 |
வெந் இடுவார் போல் போவர் வட்டித்து விளித்து மீள்வர் கொன் இடு வாண் மார் பேற்பர் குறி வழி பிழைத்து நிற்பர் இந்நிலை நாலைங் கன்னல் எல்லை நின்று ஆடல் செய்தார் அந்நிலை அடு போர் காண்பார் அனைவரும் கேட்க ஐயன். | 18 |
1593 |
குரத்தியை நினைத்த நெஞ்சைக் குறித்து உரை நாவைத் தொட்ட சரத்தினைப் பார்த்த கண்ணைக் காத்தனை கோடி என்று என்று உரைத்து உரை தவற்றுக்கு எல்லாம் உறும் முறை தண்டம் செய்து சிரத்தினைத் தடிந்து வீட்டித் திரு உரு மறைந்து நின்றான். | 19 |
1594 |
போர் கெழு களம் கண்டாருள் பொரு படைக் கேள்விச் செல்வர் வார் கெழு கழல் காலானைக் கண்டிலர் மனையில் தேடி ஏர் கெழு கற்பினாளை எங்கு உற்றான் குரவன் என்னக் கூர் கெழு வடிவேல் கண்ணாள் போயினார் கோயிற்கு என்றாள். | 20 |
1595 |
என்ற அப்போதே கோயிற்கு ஏகினான் மீண்டான் தேடிச் சென்றவர் சித்தன் தன்னைக் செருக் களத்து அடுபோர் செய்து வென்றனையே பின் அந்த வெம் களத்து எங்கும் தேடி நின்றனைக் காணாது இங்கு நேர்ந்தனம் யாங்கள் என்றார். | 21 |
1596 |
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள் உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத் திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான். | 22 |
1597 |
மட்டித்த கலவைக் கொங்கை மனைவியும் சித்தன் தன்னைக் கிட்டிப் பல் காலும் வந்து கேட்டது நெருநல் வாய் வந்து தொட்டுத் தன் கையைப் பற்றி ஈர்த்ததும் உள்ளம் வெந்து தட்டிப் போய் கதவம் தாழ் இட்டு இருந்ததும் சாற்றினாளே. | 23 |
1598 |
அம்மனை அருளிச் சொன்னபடி எலாம் அருளிச் செய்து தெம் முனை அடுவாள் வீரர் சித்தனை மாய்த்தார் ஈது மெய்மை ஆம் என்று கண்ட மைந்தரும் விளம்பக் கேட்டான் எம்மை ஆளுடை கூடல் இறை விளையாடல் என்றான். | 24 |
1599 |
கொடியை நேரிடையாள் ஓடும் கொற்ற வாள் இளைஞ ரோடும் கடிய நான் மாடக் கூடல் கண்ணுதல் அடிக்கீழ்த் தாழ்ந்து நெடியன் நான் முகனும் தேறா நெறியது சிறிய ஏழை அடியனேன் அளவிற்றே நின் அருள் விளையாடல் என்றான். | 25 |
1600 |
தண்மதி வழி வந்தோனும் நகர் உளார் தாமும் பாதி விண் மதி மிலைந்த வேணி விடையவன் ஆடல் நோக்கிக் கண்மலர் வெள்ளத்து ஆழ்ந்து கனை கழல் அடியில் தாழ்ந்து பண் மலர் கீதம் பாடி ஆடினார் பழிச்சி நின்றார். | 26 |
1601 |
அடியவருக்கு எளியர் இவர் பரதேசி காவலர் என்று அடி வீழ்ந்து ஏத்தி வடி அயில் வேல் குலோத்துங்கன் மாணிக்க மாலை எனும் மனையா ளோடும் தொடி அணி தோள் முது மகனைக் களிறு ஏற்றி நகரை வலம் சூழ்வித்து இப்பால் முடி அணிவித்து அனந்த குண பாண்டியற்குத் தன் இறைமை முழுதும் ஈந்தான். | 27 |
1602 |
நிலை நிலையாப் பொருள் உணர்ந்து பற்று இகந்து கரணம் ஒரு நெறியே செல்லப் புலன் நெறி நீத்து அருள் வழி போய்ப் போதம் ஆம் தன் வலியைப் பொத்தி நின்ற மலவலி விட்டு அகல அரா உமிழ்ந்த மதி போல் விளங்கி மாறி ஆடும் தலைவன் அடி நிழல் பிரியாப் பேரின்பக் கதி அடைந்தான் தமிழ்ர் கோமான். | 28 |
-------------------
28. நாகமெய்த படலம் (1603- 1625)
1603 |
செம் கண் மால் விடை மேல் விடங்கர் செருக்களத்து இடை வாள் எடுத்து அங்கம் வெட்டிய சேவகத்தை அறைந்தனம் தமிழ் மாறன் மேல் சங்கை இட் அமனிசரார் ஆற்றிய தறு கண் வேள்வி முளைத்து ஓர் வெம் கண் வாள் அரவைத் துணித்து விளித்தவாறும் விளம்புவாம். | 1 |
1604 |
கோது இலாத குனத்து அனந்த குணப் பெரும் தகை மீனவன் ஆதி நாயகன் உருவம் ஆகிய ஐந்து எழுத்தொடு கண்டி வெண் பூதி சாதனம் ஆவதே பொருள் என்று பத்திமை பூண்டு தன் தாதையே முதலாய மன்னவர் தம் மினும் தலை ஆயினான். | 2 |
1605 |
அத்தகைச் சிவ சாதனம் தனில் அன்பு மிக்கவன் ஒழுகலால் அத்தன் மெய்த் திரு ஐந்து எழுத்து ஒலியால் நீற்று ஒலியாலும் உள் பைத்த வல் இருளும் புற இருளும் சிதைந்து பராபரன் வித்தக திருவேடம் ஆனது மீனவன் திரு நாடு எல்லாம். | 3 |
1606 |
நாயினும் கடை ஆன மாசுடன் இருள் புரை நெஞ்சு அரண் ஆயினும் சமண் வேடர் அன்ன தறிந்து கொண்டு வெகுண்டு அழற்று ஓ இரும்பு என மான வெம் கனல் சுட்டிடத்தரியார் களாய் மாயிரும் தமிழ் மாறனைத் தெற வஞ்ச வேள்வி இயற்றுவார். | 4 |
1607 |
எல்லை காதம் அளந்து சாலை எடுத்து அழல் படு குண்டமும் கல்லி ஆர் அழல் இட்டு எழும் புகை கௌவி எண் திசைகளும் உறச் செல்லவான உடுக்களும் பொரியில் பொரிந்தன சிதற நீள் ஒல்லைதாவி விசும்பு தைவர ஒட்டி வெம் கனல் மூட்டினார். | 5 |
1608 |
அத்து அழன்று எரி குண்டம் நின்றும் அகன் பிலத்து எழுவான் என பத்து துஞ்சிருள் வாயும் வாய் இருபாலும் வலிய பகிர் மதிக்கு ஒத்தும் நஞ்சு இனம் ஒழுகு பற்களும் ஊழி ஆரல் விழிகளும் வைத்து அசைந்து ஒரு வெற்பு வந்து என வந்துளான் ஒரு தானவன். | 6 |
1609 |
உதித்த செம் கண் அரக்க வஞ்சகன் உருத்து எழுந்து எரிவடவையில் கொதித்து அடும் பசி தாகமும் கொடிதால் எனக் கொடியோரை நீர் விதித்திடும் பணி யாது எனக்கு என மீனவன் தனை மதுரை யோடு எதிர்த்து எடுத்து விழுங்கிவா என ஏவினார் உடன் ஏகினான். | 7 |
1610 |
பாய் உடை அவர் விட நாகப் படிவு கொள் இசி சர நிலன் அண்டம் தோய் உடலின் உடல் விட மூறிச் சொரி துளை எயிற்றினன் வடவைச் செந்தீ தீ உடையன என எரி கண்ணன் திணி இருள் வரை முழை என விண்ட வாய் உடையவ னொடு நெறி முன்னி மழைநுழை வரை என வருகின்றான். | 8 |
1611 |
அரவு இறை உறை பிலம் வெளி காண வரை உடல் புதை பட நிலம் விள்ள வரு விழி அழல் எழ உயிர் கான் முன் வளி உளர் கிளர் வலி விளி எய்தப் பொருசின விழி எதிர் படு பைங்கூழ் புகை எழ வன மரை பொரி பொங்கர் கருகிட முது சினை இறை கொள்ளும் கக நிரை சிறை சுருள் படவீழ. | 9 |
1612 |
அகல் நிலம் வெரு உற நிலன் ஏந்து மர இறை வெரு உற வெயில் காலும் பகல் மதி வெரு உற இவை கௌவும் பணிகளும் வெரு உற அகல் திக்கின் புகர் மலை வெருஉற வடு தண்டப் புரவலன் வெரு உற வரு செம் கண் நகை மதி புரை எயிறவன் மாட மகர் எதிர் குடவயின் வரும் எல்லை. | 10 |
1613 |
கண்டவர் கடிநகர் கடிது ஓடிக் கௌரியன் அடி தொழுது அடி கேள் அம் கொண்டல் கண் வளர் மதில் வளை கூடல் குடவயின் ஒரு பெரு விடநாகம் அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு அயிர வருவதை என நீள் வாய் விண்டு கொண்டு அனைவதை என லோடும் வெரு வலன் மதிகுல மறவீரன். | 11 |
1614 |
மற்று இது முன் மதகரி விட்டோர் வரவிட வருவதை என எண்ணம் உற்று இது அனையும் விளத்தற்கு எம் உடையவர் விடையவர் விட நாகம் சுற்றிய சடையினர் உளர் என்னாச் சுரர் உலகு இழி சுடர் என நிற்கும் கல் தளி இடை உறை இறை முன் போய்க் கனைகழல் அடி தொழுது அறை கிற்பான். | 12 |
1615 |
வழி வழி அடிமை செய்து ஒரு போது மறவலன் வழிபடும் அடியேனின் மொழி வழி முறை செய்து வருவேன் இம் முது நகர் அடையவும் அமண் ஈசர் அழிவது கருதினர் விடு நாகம் அடைவது அருள்வழி அதன் ஆவி கழிவது கருதிய அடியேனைக் கருணை செய்து அருளியது கடன் என்றான். | 13 |
1616 |
அனுமதி கொடு தொழுது இறை பாத மகமதி கொடு புறன் அடைகின்ற பனிமதி வழி வரு தமிழ் மாறன் பகழி யொடு அடுசிலை யினன் ஏகிக் குனி மதி தவழ் தரு மதி நீடும் கொடி அணி குட கடை குறுகா முன் தனிவரை என நிகர் தரு கோபத்தழல் விழி அரவினை எதிர் கண்டான். | 14 |
1617 |
பல் பொறிப் பகுவாய்ப் படம் புடை பரப்பிப் பக்கம் எண் திசை யொடு விசும்பில் செல் கதிர் புதைத்துத் திணி இருள் பரப்பத் திங்களின் பகிர் புரை நஞ்சம் பில் எயிறு அதுக்கிப் பெரிது உயிர்த்து அகல் வாய் பிளந்து மா நகர் எலாம் ஒருங்கே ஒல் எனக் கௌவி விழுங்கு வான் சீறி உறுத்தனன் உரக வாள் அவுணன். | 15 |
1618 |
அடுத்தனன் அரச சிங்க ஏறு இடி ஏறு அஞ்ச ஆர்த்து அம் கையில் சாபம் எடுத்தனன் நெடு நாள் இருதலை வணக்கி எரி முகக் கூர்ங்கணை தொடுத்து விடுத்தனன் விடுத்த சரம் எலாம் உரகன் வெறும் துகள் படக் கறித்து உமிழ்ந்து படுத்தனன் பொறது பஞ்சவன் புராரி பங்கயச் சேவடி நினையா. | 16 |
1619 |
கொடிய தோர் பிறைவாய் அம்பினை விடுத்துத் கோள் அரா வளை உடல் துணித்தான் இடியதோ என ஆர்த்து எரி நிறக் குருதி இரங்கி வீழ் அருவியில் கவிழ நெடியது ஓர் உடலம் புரள் படக் கூர் வான் எளி விளிபவன் மேலைக் கடியது ஓர் ஆல கால வெள்ளம் போலக் கக்கினான் கறை இருள் நஞ்சம். | 17 |
1620 |
தீவிடம் உருத்துத் திணி இருள் கடுப்பத் திருநகர் எங்கணும் செறிந்த காவிடம் கூவல் கயம் தலை சதுக்கம் கழகம் ஆவணம் அகழ் இஞ்சி கோவிடம் மாடம் உபரிகை மேடை கோபுர அரங்கம் எலாம் பரந்து தாவிட மயங்கி உறங்கினார் போலச் சாம்பினார் தனிநகர் மாக்கள். | 18 |
1621 |
நிலை தளர்ந்து உடலம் திமிர்ந்து வேர் அரும்பி நிறை புலன் பொறி கரணங்கள் தலை தடுமாறி உரை மொழி குழறித் தழு தழுப்பு அடைந்து நா உணங்கி மலை தரு கபம் மேல் நிமிர்ந்து உணர்வு அழிந்து மயங்கி மூச்சு ஒடுங்கி உள் ஆவி அலை தர ஊசல் ஆடினார் கிடந்தார் அன்ன தொல் நகர் உளார் எலாம். | 19 |
1622 |
தென்னவன் விடம் கண்டு அஞ்சும் ஆல் போலச் சினகரம் அடைந்து தாழ்ந்து எந்தாய் முன்னவ ஆதி முதல்வ வித்தின்றி முளைத்தவ முடிவு இலா முனிவ என்னவ அன்பர்க்கு எளிய யாவர்க்கும் இறையவ இந் நகர்க்கு என்றும் மன்னவ அநாதி மறையவ முக்கண் வானவ நினைச் சரண் அடைந்தேன். | 20 |
1623 |
அடுத்து வந்து அலைக்கும் ஆழியைத் துரந்தும் ஆழி உண்டு ஏழும் ஒன்றாகத் தொடுத்து வந்து அலைக்கும் பெருமழை தடுத்து துளைக்கை விண் துழவ வெண் பிறைக் கோடு எடுத்துவந்து அலைக்கும் களிற்றினை விளித்து இந்நகர் புரந்தனை இன்று மடுத்து வந்து அலைக்கும் விடத்தினான் மயங்கும் வருத்தமும் களைதி என்று இரந்தான். | 21 |
1624 |
அருள் கடல் அனைய ஆதிநாயகன் தன் அவிர் சடை அணி மதிக் கொழுந்தின் பெருக்கு அடை அமுதத் தண் துளி சிறிது பிலிற்றினான் பிலிற்றிடலோடும் பொருக்கு என எங்கும் பாலினில் பிரை போல் புரை அறக் கலந்து பண்டு உள்ள திருக்கிளர் மதுரா நகரம் ஆப் புனிதம் செய்த அச்சிறுதுளி அம்மா. | 22 |
1625 |
இரவி முன் இருள் அது என இறை அருண் முன் இருண் மல வலி என எங்கும் பரவிய அமுதால் விடம் அகன்று அவசப் படி ஒழிந்து யாவரும் இன்பம் விரவிய களிப்பின் மேவினார் இருந்தார் மீனவர பெரும் தகை வேந்தன் அரவு அணி சடையார்க்கு அன்பு உருத் தானே ஆகி மண் காவல் செய்தி இருந்தான். | 23 |
நாகமெய்த படலம் சுபம்
------------------
29. மாயப் பசுவை வதைத்த படலம் (1626 - 1663)
1626 |
சுருதி இன்புறத்து அவர் விடு அராவினைச் சுருதி கருதரும் பரன் அருள் உடைக் கௌரியன் துணித்த பரிசிதங்கது பொறாத அமண் படிறர் பின் விடுப்ப வரு பெரும் பசு விடையினான் மாய்த்ததும் பகர்வாம். | 1 |
1627 |
பணப் பெரும் பகுவாய் உடைப் பாந்தளை அனந்த குணப் பெருந்தகை துணித்த பின் பின் வரு குண்டர் தணப் பரும் குழாம் காலினால் தள்ளுண்டு செல்லும் கணப் பெரும் புயல் போல் உடைந்து ஓடின கலங்கி. | 2 |
1628 |
உடைந்து போனவர் அனைவரும் ஓர் இடத்து இருள்போல் அடைந்து நாமுன்பு விடுத்த மால் யானை போல் இன்று தொடர்ந்த பாம்பையும் தொலைத்தனர் மேலினிச் சூழ்ச்சி மிடைந்து செய்வதை யாது என வினயம் ஒன்று ஓர்வார். | 3 |
1629 |
ஆவை ஊறு செய்யார் பழி அஞ்சுவார் அதனை ஏதுவாம் இதுவே புணர்ப்பு என்று சூழ்ந்து இசைந்து பாவ காரிகள் பண்டு போல் பழித்து அழல் வளர்த்தார் தாவிலா உரு ஆகி ஓர் தானவன் முளைத்தான். | 4 |
1630 |
குண்டு அழல் கணின் எழுந்த அக் கொடிய வெம் பசுவைப் பண்டு போல் அவர் விடுத்தனர் கூடல் அம் பதிமேல் உண்டு இல்லையும் எனத் தடுமாற்ற நூல் உரைத்த பிண்டியான் உரை கொண்டு உழல் பேய் அமண் குண்டர். | 5 |
1631 |
மாட மலி மாளிகையில் ஆடு கொடி மானக் கோடுகளி னோடு முகில் குத்தி மிசை கோத்துச் சேடன் முடியும் கதிர் கொள் சென்னி வரையும் தூள் ஆட அடி இட்டு அலவை அஞ்சிட உயிர்த்தே. | 6 |
1632 |
விடுத்திடும் உயிர்ப்பின் எதிர் பூளை நறை வீபோல் அடுத்திடும் சரா சரம் அனைத்தும் இரிவு எய்தக் கடுத்திடும் சினக் கனலிக்கு உலகம் எல்லாம் மடுத்திடும் அழல் கடவுள் வார் புனலை மான. | 7 |
1633 |
உடன்றி இறை கொள் புள்ளடு விலங்கு அலறி ஓட மிடைந்த பழுவத்தொடு விலங்கலை மருப்பால் இடம் தெறி மருத்து என வெறிந்து அளவி லோரைத் தொடர்ந்து உடல் சிதைத்து உயிர் தொலைத்து இடியின் ஆர்த்தே. | 8 |
1634 |
மறலி வரும் ஆரு என மறப் பசு வழிக் கொண்ட அறலிவர் தடம் பொருனை ஆறு உடைய மாறன் திறலி மலர் மங்கை உறை தென் மதுரை முன்னா விறலி வாலி வருகின்றதது மீனவன் அறிந்தான். | 9 |
1635 |
மீனவனும் மா நகருள் மிக்கவரும் முக்கண் வானவனை மாமதுரை மன்னவனை முன்னோர் தானவனை ஆழிகொடு சாய்த்தவனை ஏத்தா ஆனது உரை செய்தும் என ஆலயம் அடைந்தார். | 10 |
1636 |
நாத முறையோ பொதுவின் மாறி நடமாடும் பாத முறையோ பல உயிர்க்கும் அறிவிக்கும் போத முறையோ புனித பூரண புராண வேத முறையோ என விளித்து முறை இட்டார். | 11 |
1637 |
நின்று முறை இட்டவரை நித்தன் அருள் நோக்கால் நன்று அருள் சுரந்து இடப நந்தியை விளித்துச் சென்ற அமணர் ஏவ வரு தீப் பசுவை நீ போய் வென்று வருவாய் என விளம்பினன் விடுத்தான். | 12 |
1638 |
தண்டம் கெழு குற்றமும் அஞ்ச தறுகண் செம்கண் குண்டம் தழன்று கொதிப்பக் கொடு நாக்கு எறிந்து துண்டம் துழாவக் கடைவாய் நுரை சோர்ந்து சென்னி அண்டம் துழாவ எழுந்தன்று அடல் ஏறு மாதோ. | 13 |
1639 |
நெற்றித் தனி ஒடை நிமிர்ந்து மறிந்த கோட்டில் பற்றிச் சுடர் செம் மணிப் பூண் பிறை பைய நாகம் சுற்றிக் கிடந்தால் எனத் தோன்று வெள் ஆழி ஈன்ற கற்றைக் கதிர் போல் பருமம் புறம் கௌவி மின்ன. | 14 |
1640 |
கோட்டுப் பிறைகால் குளிர் வெண் கதிர்க் கற்றை போலச் சூட்டுக் கவரித் தொடைத் தொடங்கலும் நெற்றி முன்னாப் பூட்டுத் தரள முகவட்டும் பொலியப் பின்னல் மாட்டுச் சதங்கைத் தொடை கல் என வாய் விட்டு ஆர்ப்ப. | 15 |
1641 |
பணி நா அசைக்கும் படி என்னக் கழுத்தில் வீர மணி நா அசைப்ப நகைமுத்தின் வகுத்த தண்டை பிணி நாண் சிறு கிண் கிணி பிப்பல மாலைத் தொங்கல் அணி நாண் அலம்பச் சிலம்பு ஆர்ப்ப வடிகண் நான்கும். | 16 |
1642 |
அடி இட்டு நிலம் கிளைத்து அண்டம் எண் திக்கும் போர்ப்பப் பொடி இட்டு உயிர்த்துப் பொரு கோட்டினில் குத்திக் கோத்திட்டு அடி இட்டு அதிர் கார் எதிர் ஏற்று எழுந்தாங்கு நோக்கிச் செடி இட்டு இரு கண் அழல் சிந்த நடந்தது அன்றே. | 17 |
1643 |
பால் கொண்ட நிழல் வெண் திங்கள் பகிர் கொண்ட மருப்பில் கொண்மூச் சூல் கொண்ட வயிற்றைக் கீண்டு துள்ளி ஓர் வெள்ளிக் குன்றம் கால் கொண்டு நடந்தால் என்ன கடிந்து உடன்று ஆவைச் சீற்றம் மேல் கொண்டு நாற்றம் பற்றி வீங்கு உயிர்ப்பு எறிந்து கிட்டா. | 18 |
1644 |
குடக்கது குணக்கது என்னக் குணக்கது குடக்கது என்ன வடக்கது தெற்கது என்னத் தெற்கது வடக்கது என்ன முடுக்குறு மருப்பில் கோத்து முதுகு கீழாகத் தள்ளும் எடுக்குறு மலையைக் கால் போர்த்து எனத் திசை புறத்து வீசும். | 19 |
1645 |
கொழு மணிச் சிகர கோடி சிதை படக் குவட்டில் வீசும் பழுமரச் செறிவில் வான்தோய் பணை இற எறியும் வானின் விழும் அறப் பசு போல் வீழ வேலை வாய் வீசும் இங்ஙன் செழு மதிக் கோட்டு நந்தித் தேவிளையாடல் செய்து. | 20 |
1646 |
பூரியர் எண்ணி ஆங்கே பொருது உயிர் ஊற்றம் செய்யாது ஆரிய விடைதன் மாண்ட அழகினைக் காட்டக் காமுற்று ஈரிய நறும் பூ வாளி ஏறு பட்டு ஆவியோடும் வீரியம் விடுத்து வீழ்ந்து வெற்பு உரு ஆயிற்று அன்றெ. | 21 |
1647 |
வாங்கின புரிசை மாட மா நகர் ஆனா இன்பம் தூங்கின வரவாய் வேம்பின் தோடு அவிழ் தாரான் திண் தோள் வீங்கின இரவி தோன்ற வீங்கு இருள் உடைந்தது என்ன நீங்கின நாணமோடு நிரை அமண் குழாங்கள் எல்லாம். | 22 |
1648 |
உலகு அறி கரியாத் தன் பேர் உருவினை இடபக் குன்றாக் குல உற நிறுவிச் சூக்க வடிவினால் குறுகிக் கூடல் தலைவனை வணங்க ஈசன் தண் அருள் சுரந்து பண்டை இலகு உரு ஆகி இங்ஙன் இருக்க என இருத்தினானே. | 23 |
1649 |
அந் நிலை நகர் உளாரும் அரசனும் மகிழ்ச்சி தூங்கிச் சந்நிதி இருந்த நந்தி தாள் அடைந்து இறைஞ்சிப் போக மின் அவிர் சடையான் நந்தி வென்றி சால் வீறு நோக்கி இன் அமுது அனையா ளோடும் களி சிறந்து இருக்கும் நாளில். | 24 |
1650 |
அவ் இடை வரை மேல் முந்நீர் ஆர்கலி இலங்கைக்கு ஏகும் தெவ் அடு சிலையில் இராமன் வானர சேனை சூழ மை வரை அனைய தம்பி மாருதி சுக்கிரீவன் இவ் அடல் வீரரோடும் எய்தி அங்கு இறுத்தான் மன்னோ. | 25 |
1651 |
அன்னது தெரிந்து விந்தம் அடக்கிய முனி அங்கு எய்தி மன்னவற்கு ஆக்கம் கூறி மழவிடைக் கொடியோன் கூடல் பன்னரும் புகழ்மை ஓது பனு வலை அருளிச் செய்ய முன்னவன் பெருமை கேட்டு முகிழ்த்தகை முடியோன் ஆகி. | 26 |
1652 |
முனியொடு குறுகிச் செம் பொன் முளரி உள் மூழ்கி ஆதித் தனிமுதல் அடியை வேணி முடி உறத் தாழ்ந்து வேத மனு முறை சிவ ஆகமத்தின் வழி வழாது அருகித்து ஏத்திக் கனி உறும் அன்பில் ஆழ்ந்து முடிமிசைக் கரங்கள் கூப்பி. | 27 |
1653 |
புங்கவ சிவன் முத்தி புராதிப புனித போக மங்கலம் எவற்றினுக்குங் காரண வடிவம் ஆன சங்கர நினது தெய்வத் தானங்கள் அனந்தம் இந்த அங்கண் மா ஞாலம் வட்டத்து உள்ளன வைக தம்மில். | 28 |
1654 |
அற்புதப் பெரும் பதி இந்த மதுரை ஈது ஆற்றப் பொற்பு உடைத்து என்பது எவன் பல புவனமும் நின்பாற் கற்பு வைத்துய நீ செய்த கருமத்தின் விருத்தம் வெற்பு உருக்களாய்ப் புடை நின்று விளங்கலான் மன்னோ. | 29 |
1655 |
கண்ட எல்லையில் துன்பங்கள் களைதற்கும் அளவை கண்டரும் பெரும் செல்வங்கள் அளித்தற்கும் கருணை கொண்டு நீ உறை சிறப்பினால் குளிர் மதிக் கண்ணி அண்ட வாண இவ் இலிங்கதுக்கு ஒப்பு வேறு ஆமோ. | 30 |
1656 |
தோய்ந்திடும் பொழுது தீட்டிய தொல்வினைப் படலம் மாய்ந்திடும் படி மாய்த்து நின் மங்கல போகம் ஈந்திடும் படிக்கு இருந்த மா தீர்த்தத்தின் இயல்பை ஆய்ந்திடும் பொழுது அதற்கு ஒரு தீர்த்தம் ஒப்பு ஆமோ. | 31 |
1657 |
எத் தலத்தினும் ஒவ் வொன்று விழுமிதாம் இந்த மெய்த் தலத்தில் இம் மூவகை விழுப்பமும் விளங்கும் அத்த ஆதலால் இத்தலம் அடைந்தவர் எவர்க்கும் சித்த சுத்தியும் பலவகைச் சித்தியும் பயக்கும். | 32 |
1658 |
அடியனேன் எண்ணும் கருமமும் சரதமே ஆக முடியும் மா அரிது அச்செயன் முடியும் எப்படி அப் படி புரிந்து அருள் கடிது என பணிந்தனன் பரனும் நெடிய வான் படும் அமுது என எதிர் மொழி நிகழ்த்தும். | 33 |
1659 |
இரவி தன் மரபின் வந்த இராம கேள் எமக்குத் தென் கீழ் விரவிய திசையில் போகி விரிகடல் சேதுக் கட்டிக் கரவிய உள்ளக் கள்வன் கதிர் முடி பத்தும் சிந்தி அரவ மேகலை யினாளை அரும் சிறை அழுவம் நீக்கி. | 34 |
1660 |
மீண்டு நின் அயோத்தி எய்தி வரிகடல் உலகம் பல்நாள் ஆண்டு இனிது இருந்து மேல் நாள் வைகுண்டம் அடைவாயாக ஈண்டு நீ கவலை கொள்ளேல் எனும் அசரீரி கேட்டு நீண்டவன் மகிழ்ந்து தாழ்ந்து நிருத்தனை விடை கொண்டு ஏகி. | 35 |
1661 |
மறைப் பொருள் உரைத் தோன் சொன்ன வண்ணமே இலங்கை எய்தி அறத்தினைத் தின்ற பாவி ஆவி தின்றனை யான் செல்வத்து திறத்தினை இளவற்கு ஈந்து திரு விரா மேசம் கண்டு கறைப்படு மிடற்றினானை அருச்சித்துக் கருணை வாங்கி. | 36 |
1662 |
பற்றிய பழியின் நீந்தி இந்திரன் பழியைத்தீர்த்த வெற்றிகொள் விடையினானை மீளவும் வந்து போற்றி அல் திரள் அனைய கோதைக் கற்பினுக்கு அரசி யோடும் சுற்றிய சடையின் இராமன் தொல் நகர் அடைந்தான் இப்பால். | 37 |
1663 |
செங்கோல் அனந்த குண மீனவள் தேயம் காப்பக் கொங்கோடு அவிழ்தார்க் குல பூடனன் தன்னை ஈன்று பொங்கு ஓத ஞாலப் பொறை மற்றவன் பால் இறக்கி எம் கோன் அருளால் சிவமா நகர் ஏறினானே. | 38 |
மாயப் பசுவை வதைத்த படலம் சுபம்
-----------------------
30. மெய்க் காட்டிட்ட படலம் (1664 -1704 )
1664 |
பாவம் என வடிவு எடுத்த படிற்று அமணர் பழித்து அழல் செய் தேவ வரு மறப்பசுவை ஏறு உயர்த்தோன் விடை நந்திக் காவலனை விடுத்து அழித்த கதை உரைத்தும் அட்டாலைச் சேவகன் மெய்க் காட்டிட்டு விளையாடும் திறம் உரைப்பாம். | 1 |
1665 |
வெவ்வியமும் மதயானை விறல் குல பூடணன் சமணர் அவ்வியம் வஞ்சனை கடந்த அனந்த குணச் செழியன் பால் செவ்விய செம் கோல் வாங்கித் திகிரி திசை செல உருட்டி வவ்விய வெம் கலி துரந்து மண் காத்து வருகின்றான். | 2 |
1666 |
சவுந்தர சாமந்தன் எனத் தானை காவலன் ஒருவன் சிவந்த சடை முடி அண்ணல் அடியவரே சிவம் ஆகக் கவர்ந்து ஒழுகி அருச்சிக்கும் கடப்பாட்டின் நெறி நின்றோன் உவந்து அரசற்கு இருமைக்கும் துணை ஆகி ஒழுகு நாள். | 4 |
1667 |
வல் வேடர்க்கு அதி பதியாய் வரு சேதி ராயன் எனும் வில் வேடன் ஒருவன் அவன் விறல் வலியான் மேல் இட்டுப் பல் வேறு பரிமான் தேர்ப் பஞ்சவன் மேல் படை எடுத்துச் செல்வேன் என்று உற வலித்தான் தென்னர் பிரான் அஃது அறிந்தான். | 5 |
1668 |
தன்னு தாள் நிழல் நின்ற சாமந்தன் தனைப் பார்த்து எம் பொன் அறை தாழ் திறந்து நிதி முகந்து அளித்துப் புதிதாக இன்னமும் நீ சில சேனை எடுத்து எழுதிக் கொள்க என்றான் அன்னது கேட்டு ஈசன் அடிக்கு அன்பு உளான் என் செய்வான். | 6 |
1669 |
தென்னவர் கோன் பணித்த பணி பின் தள்ளச் சிந்தையில் அன்பு உன்ன அரன் அருள் வந்து முன் ஈர்ப்ப ஒல்லை போய்ப் பொன் அறை தாழ் திறந்து அறத்து ஆறு ஈட்டி இடும் பொன் குவையுள் அன்ன உள்ளத்து அவா அமையத்து தக்க நிதி கைக்கவரா. | 7 |
1670 |
எண் இறந்த களிப்பினொடும் திருக் கோயில் இடத்து அணைந்து கண் நிறைந்த பொன் முளரிக் கயந்தலை நீர் படிந்து தனது உள் நிறைந்த மெய் அன்பின் ஒளி உருவாய் முளைத்து எழுந்த பண் நிறைந்த மறைப் பொருளைப் பணிந்து இறைஞ்சி இது வேண்டும். | 8 |
1671 |
பண்ணியன் ஆன் மறை விரித்த பரமேட்டி எம் கோமான் எண்ணிய காரியம் முடிப்பாய் இவை உனக்கும் உன் அடிக்கீழ் அண்ணிய மெய் அடியவர்க்கு மா தக்க என இரந்து அப் புண்ணிய மா நிதி முழுதும் அவ்வழியே புலப்படுப்பான். | 9 |
1672 |
அண்ட முகடு உரிஞ்சி நிமிர் கோபுரமும் ஆயிரக்கால் மண்டபமும் கண்டிகையும் வயிர மணிக் கோளகையும் குண்டலமும் தண் தரளக் குடை நிரையும் கொடி நிரையும் கண்டனன் முன் அவன் அருளால் பிறப்பு ஏழும் கரை கண்டோன். | 10 |
1673 |
வான் நாடர்க்கு அவி உணவின் வகை முந்நூல் மன்றல் முதல் நானா ஆம் சிறு வேள்வி நான் மறையோர்க்கு அறுசுவையின் ஆனாத பேர் உண்டி துறவு அடைந்தோர்க்கு அருத்துபலி தான் ஆதி பல வேறு தருமம் நனி தழைவித்தான். | 11 |
1674 |
எவரேனும் உருத்திர சாதனம் கண்டால் எதிர் வணங்கி அவரே நம் பிறப்பு அறுக்க வடிவு எடுத்த அரன் என்று கவராத அன்பு உள்ளம் கசிந்து ஒழுக அருச்சித்துச் சுவை ஆறின் அமுது அருத்தி எஞ்சிய இன் சுவை தெரிவான். | 12 |
1675 |
இன்றைக்கு ஆயிரம் நாளைக்கு இரு மடங்கு வரு நாட்கும் அன்றைக்கு அன்று இரு மடங்கா அரசனது பொருள் எல்லாம் கொன்றைச் செம் சடையார்க்கும் அடியார்க்கும் கொடுப்பதனைத் தென்றல் கோன் கெவிமடுத்தார் சேனைக்கோன் இது செய்வான். | 13 |
1676 |
காவலன் அவையத்து எய்திக் காரியம் செய்வா ரோடு மேவினன் பிற நாட்டு உள்ள வீரர்க்கு வெறுக்கைப் போக்கிச் சேவகம் பதிய ஒலை செலவிடுத்து அழைப்பான் போலப் பாவகம் செய்து தீட்டிப் பட்டிமை ஓலை உய்ப்பான். | 14 |
1677 |
எழுதுக தெலுங்கர்க்கு ஓலை எழுதுக கலிங்கர்க்கு ஓலை எழுதுக விராடர்க்கு ஓலை எழுதுக மராடர்க்கு ஓலை எழுதுக கொங்கர்க்கு ஓலை எழுதுக வங்கர்க்கு ஓலை எழுதுக துருக்கர்க்கு ஓலை என்று பொய் ஓலை விட்டான். | 15 |
1678 |
எங்கும் இப்படியே ஓலை செலவிடுத்து இருப்ப ஆறு திங்களின் அளவு அந்தச் சேவகர் வரவு காணா தம் கதிர் வேலோன் சேனைக்கு அரசனை அழைத்து நாளை வெம் கதிர் படு முன் சேனை யாவையும் விளித்தி என்றான். | 16 |
1679 |
என்ற மன்னவனுக்கு ஏற்கச் சாமந்தன் இசைந்து வெள்ளி மன்றவன் அடிக்கீழ் வீழ்ந்து வள்ளலே அரசன் ஈந்த குன்று உறழ் நிதியம் எல்லாம் கொண்டு எனைப் பணிகொண்டாயே வன்திறல் சேனை ஈட்டும் வண்ணம் யாது என்ன நின்றான். | 17 |
1680 |
அடியவர் குறைவு தீர்த்து ஆண்டு அருள்வதே விரதம் பூண்ட கொடி அணி மாடக் கூடல் கோ மகன் காமன் காய்ந்த பொடி அணி புராணப் புத்தேள் புண்ணியன் அருளினாலே இடி அதிர்விசும்பு கீறி எழுந்தது ஓர் தெய்வ வாக்கு. | 18 |
1681 |
சூழ்ந்து எழும் சேனை யோடும் தோற்றுதும் நாளை நீயும் வீழ்ந்து அரச அவையை எய்தி மேவுதி என்ன விண்ணம் போழ்ந்து எழு மாற்றம் கேட்டுப் பொருநரே உவகை வெள்ளத்து தாழ்ந்தனன் முந்நீர் வெள்ளது அலர் கதிரவனும் ஆழ்ந்தான். | 19 |
1682 |
மீனவன் காண மேரு வில்லி தன் தமரை வன்கண் மான வேல் மறவர் ஆக்கி வாம் பரி வீரன் ஆகத் தானும் ஓர் கூத்துக் கோலம் சமைந்து வந்து ஆடவிட்ட நீல் நிற எழினி போலக் கார் இருள் வந்தது எங்கும். | 20 |
1683 |
புண்ணிய மனையில் போகிப் புலர்வது எப்போழ்து என்று எண்ணி அண்ணல் சாமந்தன் துஞ்சான் அடிகடி எழுந்து வானத்து எண் நிறை மீனம் நோக்கி நாழிகை எண்ணி எண்ணிக் கண்ணிதல் எழுச்சி காண்பான் அளந்தனன் கங்குல் எல்லாம். | 21 |
1684 |
தெருட்டு அரு மறைகள் தேறா சிவபரம் சுடரோர் அன்பன் பொருட்டு ஒரு வடிவம் கொண்டு புரவி மேல் கொண்டு போதும் அருள் படை எழுச்சி காண்பான் போல ஆர் கலியின் மூழ்கி இருட்டுகள் கழுவித் தூய இரவி வந்து உதயம் செய்தான். | 22 |
1685 |
பொருநரே அனையான் நேர்ந்து போந்து நான் மாடக் கூடல் கருணை நாயகனைத் தாழ்ந்து கை தொழுது இரந்து வேண்டிப் பரவி மீண்டு ஒளி வெண் திங்கள் பல் மணிக் குடைக்கீழ் ஏகிக் குரு மதி மருமான் கோயில் குறுகுவான் குறுகும் எல்லை. | 23 |
1686 |
கரை மதி எயிற்றுச் சங்கு கன்னன் முன் ஆன வென்றிப் பிரமத கணமும் குண்டப் பெரு வயிற்று ஒருவன் ஆதி வரை புரை குறும் தாள் பூத மறவரும் குழுமி வீக்கு குரை கழல் வலிய நோன் தாள் கோள் உடை வயவர் ஆகி. | 24 |
1687 |
நெட்டு இலை வடிவாள் குந்தம் தோமர நேமி நெய்த்தோர் ஒட்டிய கணிச்சி சாபம் உடம் பிடி முதலா எண்ணப் பட்ட வெம் படை மூ ஆரும் பரித்த செம் கையர் காலில் கட்டிய கழலர் காலில் கடியராய்ப் புறம்பு காப்ப. | 25 |
1688 |
வார் கெழு கழல்கால் நந்தி மாகாளன் பிருங்கி வென்றித் தார் கெழு நிகும்பன் கும் போதரன் முதல் தலைவர் யாரும் போர் கெழு கவசம் தொட்டுப் புண்டரம் நுதலில் திட்டிக் கூர் கெழு வடிவாள் ஏந்தி குதிரைச் சேவகராய்ச் சூழ. | 26 |
1689 |
கற்றைச் சாமரைகள் பிச்சம் கவிகை பூம் கொடிக்காடு எங்கும் துற்றக்கார் ஒலியும் நாணத் தூரியும் முழுதும் ஏங்கக் கொற்றப் போர் விடையைத் தானே குரங்கு உளைப் பரியா மேல் கொண்டு ஒற்றைச் சேவகராய் மாறி ஆடிய ஒருவர் வந்தார். | 27 |
1690 |
பல்லியம் ஒலிக்கும் மார்பும் பாய் பரி கலிக்கும் மார்ப்பும் சொல் ஒலி மழுங்க மள்ளர் தெழித்திடும் மார்பும் ஒன்றிக் கல் எனும் சும்மைத்து ஆகிக் கலந்து எழு சேனை மேனாள் மல்லன் மா நகர் மேல் சீறி வருகடல் போன்றது அன்றே. | 28 |
1691 |
சேனையின் வரவு நோக்கித் திருமகன் திருமுன் ஏகும் தானை அம் தலைவன் தென்னன் தாள் நிழல் குறுகிக் கூற மீனவன் உவகை பூத்து வெயில் மணி கடையில் போந்து அங்கு கான மண்டபத்தில் செம் பொன் அரியணை மீது வைகி. | 29 |
1692 |
தெவ் அடு மகிழ்ச்சி பொங்கச் சேனையின் செல்வ நோக்கி எவ் எவ் தேயத்து உள்ளோர் இவர் என எதிரே நின்று கௌவையின் மனச் சாமந்தன் கையில் பொன் பிரம்பு நீட்டி அவ் அவர் தொகுதி எல்லாம் மணி அணி நிறுவிக் கூறும். | 30 |
1693 |
கொங்கர் இவர் ஐய குரு நாடர் இவர் ஐய கங்கர் இவர் ஐய கருநாடர் இவர் ஐய அங்கர் இவர் ஐய இவர் ஆரியர்கள் ஐய வங்கர் இவர் ஐய இவர் மாளவர்கள் ஐய. | 31 |
1694 |
குலிங்கர் இவர் ஐய இவர் கொங்கணர்கள் ஐய தெலுங்கர் இவர் ஐய இவர் சிங்களர்கள் ஐய கலிங்கர் இவர் ஐய கவுடத்தர் இவர் ஐய உலங்கெழு புயத்து இவர்கள் ஒட்டியர்கள் ஐய. | 32 |
1695 |
கொல்லர் இவர் ஐய இவர் கூர்ச்சர்கள் ஐய பல்லவர் இவர் ஐய இவர் பப்பரர்கள் ஐய வில்லர் இவர் ஐய இவர் விதேகர் இவர் ஐய கல் ஒலி கழல் புனை கடாரர் இவர் ஐய. | 33 |
1696 |
கேகயர்கள் இவர்கள் கேழ் கிளர் மணிப் பூண் மாகதர் ஆல் இவர் மராடர் இவர் காஞ்சி நாகர் இகரால் இவர்கள் நம்முடைய நாட்டோர் ஆகும் இவர் தாம் என மெய்க் காட்டி அறிவித்தான். | 34 |
1697 |
இத்தகைய சேட் புலன் உளாரை இவண் உய்த்த இத்தகைமை என் என வினாவி அருள் செய்யேல் அத்த நின்னரும் பொருள் அனைத்தும் வரையாதே உய்த்தலின் அடைந்தனர்கள் என உரைத்தான். | 35 |
1698 |
அந் நெடும் சேனை தன்னுள் சேண் இடை அடல் மா ஊர்ந்து பின் உற நிற்கும் ஒற்றைச் சேவகப் பிரானை நோக்கி மன்னவன் அவர் யார் என்னச் சாமந்தன் வணங்கி ஐய இன்னவர் சேனை வெள்ளத்து யாரை என் அறிவது என்றான். | 36 |
1699 |
அவரை இங்கு அழைத்தி என்றான் அரசன்தன் வழிச செல்வார் போல் கவயம் இட்டவரும் போந்தார் காவலன் களி கூர்ந்து அம் பொன் நவமணிக் கலன் பொன் ஆடை நல்கினான் உள்ளத்து அன்பு தவறிலான் பொருட்டு வாங்கித் தரித்து தன் தமர்க்கும் ஈந்தார். | 37 |
1700 |
ஆய்ந்த வெம் பரிமாத் தூண்டி ஐங்கதி நடத்திக் காட்டி ஏய்ந்த தம் சேனை வெள்ளத்து எய்தினார் எய்தும் எல்லை வேய்ந்த தார்ச் சேதிராயன் வேட்டை போய்ப் புலி கோட் பட்டு மாய்ந்தனன் என்று ஓர் ஒற்றன் வேந்தன் முன் வந்து சொன்னான். | 38 |
1701 |
முரசு அதிர் அனிகம் நோக்கி முகம் மலர்ந்து உவகை பூத்த அரசனும் அனிக வேந்தற்கு அளவு இல் சீர்த் தலைமை யோடும் வரிசை கண் மிதப்ப நல்கி வந்து மெய்க் காட்டுத் தந்து பரசிய பதாதி தத்தம் பதி புகச் செலுத்துக என்றான். | 39 |
1702 |
அறைந்தவர் கழல் கால் சேனை காவலன் அனிகம் தம்தம் சிறந்த சேண் நாட்டில் செல்லத் செலுத்துவான் போன்று நிற்ப நிறைந்த நான் மாடக் கூடல் நிருத்தன் அந் நிலை நின்று ஆங்கே மறைந்தனன் மனித்த வேடம் காட்டிய மறவ ரோடும். | 40 |
1703 |
கண்டனன் பொருனை நாடன் வியந்தனன் கருத்தா சங்கை கொண்டனன் குறித்து நோக்கி ஈது நம் கூடல் மேய அண்டர் தம் பெருமான் செய்த ஆடல் என்று எண்ணிக் கண்ணீர் விண்டனன் புளகம் போர்ப்ப மெய்யன்பு வடிவம் ஆனான். | 41 |
1704 |
தனக்கு உயிர்த் துணையா நின்ற சாமந்தன் தன்னை நோக்கி உனக்கு எளி வந்தார் கூடல் உடைய நாயகரே என்றால் எனக்கு அவர் ஆவார் நீயே என்று அவற்கு யாவும் நல்கி மனக்கவல்பு இன்றி வாழ்ந்தான் மதி வழி வந்த மைந்தன். | 42 |
-----------------------
31. உலவாக்கிழி அருளிய படலம் (1705 -1723 )
1705 |
அடியார் பொருட்டுப் பரிவயவர் ஆகிச் செழியன் காண விடைக் கொடியார் வந்து மெய்க் காட்டுக் கொடுத்த வண்ணம் எடுத்து உரைத்தும் கடியார் கொன்றை முடியார் அக் கன்னி நாடன் தனக்கு இசைந்த படியால் உலவாக் கிழி கொடுத்த படியை அறிந்தபடி பகர்வாம். | 1 |
1706 |
வள்ளல் குல பூடணன் திங்கள் வாரம் தொடுத்து சிவதருமம் உள்ள எல்லாம் வழாது நோற்று ஒழுகும் வலியால் தன் நாட்டில் எள்லல் இல்லா வேதியரை இகழ்ந்தான் அதனான் மழை மறுத்து வெள்ளம் அருக வளம் குன்றி விளைவு அஃகியது நாடு எல்லாம். | 2 |
1707 |
அறவோர் எல்லாம் நிரப்பு எய்தி ஆகம் இடந்த நூல் அன்றி மறை நூல் இழந்து முனி வேள்வி வானோர் வேள்வி தென் புலத்தின் உறைவோர் வேள்வி இழந்து இழிந்த தொழில் செய்து ஆற்றாது உயிர் வளர்ப்பான் புற நாடு அணைந்தார் பசியாலே புழுங்கி ஒழிந்த குடி எல்லாம். | 3 |
1708 |
எந்த நாடு அணைவோம் என இரங்க இரங்கி மதிக்கோன் மதிநாளில் பொன் நாண் முளரித் தடம் குடைந்து சித்திக் களிற்றைப் பூசித்துத் தன் ஆதரவால் கயல் கண்ணி தலைவன் தன்னை அருச்சித்து முன்னா வீழ்ந்து கரம் முகிழ்த்துப் பழிச்சி மகிழ்ந்து மொழி கின்றான். | 4 |
1709 |
அந்த உலகில் உயிர்க்கு உயிர் நீ அல்லையோ அவ் உயிர் உயிர் பசியால் எய்த்த வருத்தம் அடியேனை வருத்தும் மாறு என் யான் ஈட்டி வைத்த நிதியம் தருமத்தின் வழியே சென்றது இளியடிகள் சித்த மலர்ந்து என் இடும் பை வினை தீர அருள்கண் செய்க என. | 5 |
1710 |
கோளா அரவம் அரைக்கு அசைத்த கூடல் பெருமான் குறை இரக்கும் ஆளாம் அரசன் தவறு சிறிது அகம் கொண்டு அதனைத் திருச் செவியில் கேளர் போல வாளாதே இருப்ப மனையில் கிடைத்த அமலன் தாள் ஆதரவு பெற நினைந்து தரையில் கிடந்து துயில் கின்றான். | 6 |
1711 |
அம்கண் வெள்ளி அம் பலத்துள் ஆடும் அடிகள் அவன் கனவில் சங்கக் குழையும் வெண்ணிறும் சரிகோவணமும் தயங்க உரன் சிங்க நாதம் கிடந்து அசையச் சித்த வடிவா எழுந்து அருளி வெம் கண் யானைத் தென்னவர் கோன் முன் நின்று இதனை விளம்புவார். | 3 |
1712 |
ஏடார் அலங்கல் வரை மார்ப வெம்பால் என்றும அன்பு உடைமை வாடா விரத விழுச் செல்வம் உடையாய் வைய மறம் கடிந்து கோடாது அளிக்கும் செம் கோன்மை உடையாய் உனக்கு ஓர் குறை உளது உன் வீடா வளம் சேர் நாட்டி இந் நாள் வேள்விச் செல்வம் அருகியதால். | 7 |
1713 |
மமறையே நமது பீடிகையாய் மறையே நமது பாதுகையாம் மறையே நமது வாகனம் மா மறையே நமது நூபுரம் ஆம் மறையே நமது கோவணம் ஆம் மறையே நமது விழியாகும் மறையே நமது மொழியாகும் மறையே நமது வடிவாகும். | 8 |
1714 |
வேதம் தானே நமது ஆணைச் சத்தி வடிவாய் விதிவிலக்காய் போதம் கொளுத்தி நிலை நிறுத்திப் போகம் கொடுத்துப் பல் உயிர்க்கும் பேதம் செய்யும் பிணி அவிழ்த்து எம் பிரியா வீடு தருவது ஏன் நாதம் செய்யும் தார் வேந்தே நமது செம் கோல் அது ஆகும். | 9 |
1715 |
அந்த மறைகள் தமக்கு உறுதி ஆவார் அந்நூல் வழி கலி நோய் சிந்த மகத் தீ வளர்த்து எம்பால் சிந்தை செலுத்தும் அந்தணரால் இந்த மறையோர் வேள்வி மழைக்கு ஏது வாகும் இவர் தம்மை மைந்த இகழ்ந்து கை விட்டாய் அதனான் மாரி மறுத்தன்று ஆல். | 10 |
1716 |
மும்மைப் புவனங்களும் உய்ய முத்தீ வேட்கும் இவர் தம்மை நம்மைப் போலக் கண்டு ஒழுகி நாளும் நானா வறம் பெருக்கிச் செம்மைத்தருமக் கோல் ஓச்சித் திகிரி உருட்டி வாழ்தி என உம்மைப் பயன் போல் எளி வந்தார் உலவாக் கிழி ஒன்று உதவுவார். | 11 |
1717 |
இந்தக் கிழியில் எத்துணைப் பொன் எடுத்து வழங்கும் தொறும் நாங்கள் தந்த அளவில் குறையாத தன்மைத்து ஆகும் இது கொண்டு வந்த விலம்பாது அகற்று என்று கொடுத்து வேந்தன் மனக் கவலை சிந்தத் திரு நீறு சாத்தி மறைந்தார் ஐயர் திரு உருவம். | 12 |
1718 |
கண்ட கனவு நனவு ஆகத் தொழுதான் எழுந்து எளரியர் கோன் அண்டர் பெருமான் திருவடிபோல் அம் பொன் கிழியை முடித்தலை மேல் கொண்டு மகிழ்ச்சி தலை சிறப்ப நின்றோர் முகூர்த்தம் கூத்தாடித் தண்டா அமைச்சர் படைத் தலைவர் தமக்கும் காட்டி அறிவித்தான். | 13 |
1719 |
செம் கண் அரி மான் பிடர் சுமந்த தெய்வ மணிப் பூந்தவிசு ஏற்றிச் சங்கம் முழங்க மறை முழங்கச் சாந்தம் திமிர்ந்து தாது ஒழுகத் தொங்கல் அணிந்து தசாங்க விரைத் தூப நறு நெய்ச் சுடர் வளைத்து கங்கை மிலைந்த கடவுள் எனக் கருதிப் பூசை வினை முடித்தான். | 14 |
1720 |
அடுத்து வணங்கி வலம் செய்திட்டு அம் பொன் கிழியைப் பொதி நீக்கி எடுத்து முத்தீ வினைஞர்க்கும் யாகங்களுக்கும் யாவர்க்கும் மடுத்து நாளும் வரையாது வழங்க வழங்க அடியார்க்குக் கொடுக்கக் குறையா வீட்டு இன்பம் ஆயிற்று ஐயர் கொடுத்த கிழி. | 15 |
1721 |
ஆய பொதியில் விளை பொன்னால் அசும்பு செய்து விசும்பு இழிந்த கோயில் அதனை அகம் புறமும் குயின்று ஞானக் கொழுந்து அனையது ஆயில் அறுகால் பீடிகை வான் தடவு கொடிய நெடிய பெரு வாயில் பிறவும் அழகெறிப்ப வேய்ந்தான் மறையின் வரம்பு அறிந்தான். | 16 |
1722 |
முந்திக்குறையா நிதிக்கடலை முகந்து முகந்து நாள் தோறும் சிந்திக் குலபூடணக் கொண்ட தெய்வ தரும்ப பயிர் வளர்ப்பப் பந்தித் திரை முந் நீர் மேகம் பருகிச் சொரியப் பல வளனும் நந்திக் கன்னி நாடு அளகை நகர் போல் செல்வம் தழைத்தன்றே. | 17 |
1723 |
வையா கரணர்கணையா இகர் மறை வல்லோர் மறை முடி சொல்லாய் ஓர் மெய்யா மிருதிகள் பொய்யா விரதிகள் வேள்வித் தழல்களை வாழ்விப் போர் பை ஆடு அரவு அணி ஐயா னனனுரை பகர் வோர் உலகியல் அகல் வோர்கள் எய்யாது உறைதலின் ஐயா தளகையது என்னப் பொலிவது தென்னாடு. | 18 |
--------------------
32. வளையல் விற்ற படலம் (1724 - 1759)
1724 |
வேதம் தனது வடிவு என்று விண்ணின்று இழிந்த விமான மறைக் கீதன் செழியன் தனக்கு உலவாக் கிழி தந்து அளித்த வழி இது அப் போதம் கடந்த பொருள் வணிகப் புத்தேள் மாட மணி மறுகு பாதம் தடவ நடந்து வளை பகர்ந்த பரிசு பகர் கிற்பாம். | 1 |
1725 |
இறைவன் குல பூடணன் திகிரி இவ்வாரு உருட்டு நாள் முன்னாள் சிறை வண்டு அறையும் தாருவன தெய்வ முனிவர் பன்னியர் தம் நிறை அன்று அளந்து கட்டுக என நெடியோன் மகனைப் பொடி ஆக்கும் அறவன் தானோர் காபாலி ஆகிப் பலிக்கு வரு கின்றான். | 2 |
1726 |
வேதம் அசைக்கும் கோவணமும் மெய்யில் நீறும் உள் ஆகக் கீதம் இசைக்கும் கனிவாயும் உள்ளே நகையும் கிண்கிணி சூழ் பாதமலரும் பாதுகையும் பலி கொள் கலனும் கொண்டு ரதி மாதர் கணவன் தவ வேடம் எடுத்தால் ஒத்து வரும் எல்லை. | 3 |
1727 |
விள்ளும் கமலச் சேவடி சூழ் சிலம்பின் ஒலியும் மிடறு அதிரத் துள்ளும் கீத ஒலியும் கைத்துடியின் ஒலியும் துளைச் செவிக் கீண்டு உள்ளம் பிளந்து நிறை களைந்து ஈர்த் தொல்லைவரும் முன் வல்லியர்கள் பள்ளம் கண்டு வருபுனல் போல் பலிகொண்டு இல்லின புறம் போந்தார். | 4 |
1728 |
ஐயம் கொண்டு அணைவார் ஐயர் பரிகலத்து ஐயம் அன்றிக் கை அம் பொன் வளையும் பெய்வார் கருத்து நாண் அன்றிக் காசு செய்யும் பொன் மருங்கு நாணும் இழப்பர் வேள் சிலை அம் பன்றிச் கொய்யும் தண் மலர்க் கண் அம்பும் கொங்கையில் சொரியச் சோர்வார். | 5 |
1729 |
மட மயில் அனையார் எங்கள் வளையினைத் தருதிர் என்றார் கடல் விடம் அயின்றான் உங்கள் கந்தரத்து உள்ளது என்றான் தடமதி கொம்பு அனார் எம் கலையினத் தருதிர் என்றார் முட மதி மிலைந்தான் உங்கள் முகமதி இடத்தது என்றான். | 6 |
1730 |
இடை அறிந்து எம்மைச் சேர்மின் என்றனர் இளையர் எம் கோன் கடல் அமுது அனையீர் நுங்கள் இடை இனிக் காணாது என்றான் மட நலார் அஃதேல் பண்டை வண்ணம் ஈந்து இல்லில் செல்ல விடை அளித்து அருண் மின் என்றார் வேலைபுக்கு உறங்கும் என்றான். | 7 |
1731 |
நங்கையர் கபாலிக்கு என்று நடு இலை போலும் என்றார் அம் கண் நடுவு இலாமை நும்மனோர்க் அடுத்தது என்றான் மங்கையர் அடிகள் நெஞ்சம் வலிய கல் போலும் என்றார் கொங்கு அலர் கொன்றை யானும் கொங்கையே வன் கல் என்றான். | 8 |
1732 |
காது வேல் அன்ன கண்ணார் கங்கை நீர் சுமந்தது ஏதுக்கு ஓதுமின் என்றார் நும்பால் உண் பலி ஏற்க என்றான் ஏது போல் இருந்தது ஐய இசைத்த செப்பு என்றார் ஈசன் கோது உறா அமுது அன்னீர் நும் கொங்கை போல இருந்தது என்றான். | 9 |
1733 |
கறுத்ததை எவன் கொல் ஐய கந்தரம் என்றர் வேளை வெறுத்தவன் மாரி பெய்தற்கு என்றனன் விழியால் வேலை ஒறுத்தவர் ஆவது என்றீர் உத்தரம் என்றார் கூற்றைச் செறுத்தவன் தென்பால் நின்று நோக்கினால் தெரிவது என்றான். | 10 |
1734 |
செக்கர் அம் சடையான் கண்ணில் தம் உருத் தெரிய நோக்கி இக் கொடியார் போல் கண் உள் எம்மையும் இருத்திர என்றார் நக்கன் உம் தனை அன்னார் கண் இடைக் கண்டு நகைத்து நம்மின் மிக்கவர் நும் கண் உள்ளார் விழித்து அவர்க் காண்மின் என்றான். | 11 |
1735 |
அஞ்சலிப் போது பெய்வார் சரணம் என்று அடியில வீழ்வார் தஞ்சு எனத் தளிர்க்கை நீட்டித் தழுவிய கிடைக்கும் தோறும் எஞ்சுவான் எஞ்சாது ஏத்தி எதிர் மறை எட்டும் தோறும் வஞ்சனாய் அகல்வான் மையல் வஞ்சியர்க்கு அணியன் ஆமோ. | 12 |
1736 |
அடுத்து எமைத் தழாதிர் ஏனீர் அவிழ்த்த பூம் கலையை மீள உடுத்துமின் உம்பால் யாங்கள் மையல் நோய் உழப்ப நோக்கிக் அடுத்து எமர் முனியா முன்னம் கழற்றிய வளையும் கையில் எடுத்து இடும் என்றார் நாளை இடுதும் என்று ஏகினானே. | 13 |
1737 |
பிள்ளை வெண் திங்கள் வேய்ந்த பிரான் கொண்டு போன நாணும் உள்ளம் மீட்கல் ஆற்றாது உயங்கினார் கலையும் சங்கும் துள்ள ஐம் கணையான் வாளி துளைப்ப வெம் பசலை யாகம் கொள்ளை கொண்டு உண்ண நின்றார் அந்நிலை கொழுநர் கண்டார். | 14 |
1738 |
பொய் தவ வடிவாய் வந்து நம் மனைப் பொன்னின் அன்னார் மெய் தழை கற்பை நாண வேரொடும் களைந்து போன கைதவன் மாடக் கூடல் கடவுள் என்று எண்ணித் தேர்ந்தார் செய் தவவலியால் காலம் மூன்றையும் தெரிய வல்லார். | 15 |
1739 |
கற்புத் திரிந்தார் தமை நோக்கிக் கருத்துத் திரிந்தீர் நீர் ஆழி வெற்புத் திரிந்த மதில் கூடல் மேய வணிகர கன்னியராய்ப் பொற்புத் திரியாது அவதரிப்பீர் போம் என்று இட்ட சாபம் கேட்டு அற்புத் திரிந்தார் எங்களுக்கு ஈது அகல்வது எப்போது என முனிவர். | 16 |
1740 |
அந்த மாட மதுரை நகர்க்கு அரசு ஆகிய சுந்தரக் கடவுள் வந்து நும்மைக் கைதீண்டும் வழி இச்சாபம் கழியும் எனச் சிந்தை தளர்ந்த பன்னியரும் தென்னர் மதுரைத் தொல் நகரில் கந்த முல்லைத் தார் வணிகர் காதல் மகளிராய்ப் பிறந்தார். | 17 |
1741 |
வளர்ந்து பேதை இளம் பருவ மாறி அல்குல் புடை அகன்று தளர்ந்து காஞ்சி மருங்கு ஒசியத் ததும்பி அண்ணாந்து அரும்பு முலை கிளர்ந்து செல்லும் பருவத்தில் கிடைத்தார் ஆக இப்பான்மண் அளந்த விடையான் வந்து வளை பகரும் வண்ணம் அறைகிற்பாம். | 18 |
1742 |
கங்கை கரந்து மணி கண்டம் கரந்து நுதல் கண் கரந்து ஒரு பால் மங்கை வடிவம் கரந்து உழையும் மழுவும் கரந்து மழ விடை ஊர் அம் கண் அழகர் வளை வணிகர் ஆகி ஏனம் அளந்து அறியாச் செம் கமலச் சேவடி இரண்டும் திரை நீர் ஞால மகள் சூட. | 19 |
1743 |
பண்டு முனிவர் பன்னியர் பால் கவர்ந்த வளையே பட்டு வடம் கொண்டு தொடுத்து மீண்டு அவர்க்கே இடுவோம் என உள் கோளினர் போல் தொண்டர் தொடுத்த கை வண்ணத்து உணர்ந்தார போலத் தோள் சுமந்து மண்டு வளையை விலை பகர்ந்து வணிக மறுகில் வருகின்றார். | 20 |
1744 |
மன்னு மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து வளை கொண்மின் என்னும் அளவில் பருவ முகில் இமிழ் இன்னிசை கேட்டு எழில் மயில் போல் துன்னு மணி மேகலை மிழற்றத் தூய வணிகர் குல மகளிர் மின்னு மணி மாளிகை நின்றும் வீதி வாயில் புறப்பட்டார். | 21 |
1745 |
வளைகள் இடுவார் எனத்தங்கள் மனம் எல்லாம் தம் புடை ஒதுங்கத் தளைகள் இடுவார் வருகின்றர் தம்மைக் கொம்மை வெம் முலையார் துளைகள் இடும் தீம் குழல் இசை போல் சுரும்பு பாடக் கரும் குழல் மேல் விளை கள் ஒழுக நுடங்கி வரு மின் போல் அடைந்து கண்டார்கள். | 22 |
1746 |
கண்ட வடிவால் இளைப்பதற்குக் கழிபேர் அன்பு காதல்வழிக் கொண்டு செல்ல ஒருசார் தம் குணனா நாணமுதல் நான்கும் மண்டி ஒரு சார் மறு தலைப்ப மனமும் உழன்று தடுமாற அண்டர் பெருமான் விளையாடற்க் அமையச் சூழ்ந்து ஆர் அமுது அனையார். | 23 |
1747 |
இரங்கும் மேகலை சிலம்பு அன்றி ஏனைய விரும்பிய குழை தொடி மின் செய் கண்டிகை மருங்கு இறச் சுமப்பினும் வளைகைக்கு இல் எனின் அரும்பிய முலையினார்க்கு அழகு உண்டாகுமோ. | 24 |
1748 |
செல்வ நல் வணிகிர் எம் செம் கைக்கு ஏற்பன நல் வளை தெரிந்திடும் என்று நாய்கர் முன் வல்வளர் இள முலை மகளிர் மின் உமிழ் கல்வளர் கடக மெல் காந்தள் நீட்டினார். | 25 |
1749 |
பண் தரும் கிளவி அம் கயல் கண் பாவை கைத் தண் தளிர் பற்றிய தடக்கை மாடர் கைம் முண்டகம் பற்றியே முகிழ்த்துப் பல் வரி வண்டுகள் ஏற்றுவார் மையல் ஏற்றுவார். | 26 |
1750 |
புங்கவன் இடுவளை புடைத்து மீள வந்து எங்களுக்கு இடவிலை இடுதி ரால் எனக் கொங்கு அவிழ் பைங்குழல் எருத்தம் கோட்தி நின்று அம் கரம் நீட்டுவார் ஆசை நீட்டுவார். | 27 |
1751 |
எமக்கு இடும் எமக்கு இடும் எனப் பின் பற்றியே அமைத் தடம் தோளினார் அனங்கள் பூம் களை தமைத் துளை படுத்த ஒர் சார்பு இலாமையால் அமைப்புறு நாண் முதல் காப்பு நீங்கினார். | 28 |
1752 |
முன் இடும் வளை எலாம் கழல முன்பு சூழ்ந்து இன்னவை பெரிய வேறு இடும் என்று இட்டபின் அன்னவும் அனையவே ஆக மீள வந்து இன்னமும் சிறிய வா விடும் என்று ஏந்துவார். | 29 |
1753 |
பின் இடும் வளைகளும் சரியப் பேது உறா முன் எதிர் குறுகி நீர் செறித்த மொய்வளை தன்னொடு கலைகளும் சரிவதே என மின் என நுடங்கினார் வேல் நெடும் கணார். | 30 |
1754 |
இவ்வளை போல் வளையாம் முன் கண்டிலேம் மெய்வளை வணிகிர் இவ் அரிய வெள் வளை எவ்வயின் உள்ள இன்று இனிய ஆகி எம் மெய்ம் மயிர் பொடிப்பு எழ வீக்கம் செய்தவே. | 31 |
1755 |
நாளையும் வளை இட நண்ணும் இங்கு என்பார் கோள்வளை விலை இது கொண்டு போம் என்பார் வாள் விழி ஈர் பினாள் வாங்கிக் கோடும் என்று ஆள் அரி யேறு அனார் ஆடிப் போயினார். | 32 |
1756 |
போயின வணிகர் தம் புடையின் மின் எனப் பாயின மகளிரும் பலரும் காண முன் மேயின விண் இழி விமானத்து உள் ஒளி ஆயின திரு உரு ஆகித் தோன்றினார். | 33 |
1757 |
மட்டு அலம்பு கோதையார் முன் வளை பகர்ந்த வணிகர் தாம் பட்டு அசைந்த அல்குல் நங்கை பாகர் ஆகும் என வியந்து உட்ட தும்பு உவகை வெள்ளம் உற்று எழுந்த குமிழி போல் சுட்ட தும்பு புனலில் ஆழ்ந்த களி அடைந்த நகர் எலாம். | 34 |
1758 |
உருவிலாளி உடல் பொடித்த ஒருவர் கூட இருவரான் மரு இலார் திருக் கை தொட்டு வளை செறித்த நீர்மையால் கருவின் மாதர் ஆகி நாய்கர் கன்னிமார் கண் மின்னு வேல் பொருவில் காளை என வரம்பில் புதல் வரைப் பயந்தனர். | 35 |
1759 |
பிறந்த மைந்தர் அளவு இறந்த பெருமை கொண்ட பெருமிதம் சிறந்த வீரம் ஆற்றல் ஏற்ற திறல் புனைந்து வைகினார் மறந்த தும்பு வேல் நெடும் கண் வணிக மாதர் சிறிது நாள் துறந்து அன்று அருள் அடைந்து துணை அடிக்கண் வைகினார். | 36 |
----------------------
33. அட்டமா சித்தி உபதேசித்த படலம் (1760-1788)
1760 |
கொத்து இலங்கு கொன்றை வேய்ந்த கூடல் ஆதி மாட நீள் பத்தியம் பொன் மருகு அணைந்து வளைபகர்ந்த பரிசு முன் வைத்து இயம்பினாம் இயக்க மாதர் வேண்ட அட்டமா சித்தி தந்த திறம் இனித் தெரிந்த வாறு செப்புவாம். | 1 |
1761 |
மின் அலங்கள் வாகை வேல் விழுப் பெரும் குலத்தினில் தென்னவன் தன் ஆணை நேமி திசை எலாம் உருட்டும் நாள் முன்னை வைகல் ஊழி தோறும் ஒங்கும் மொய்வரைக்கணே மன்னு தண் பராரை ஆல நிழல் மருங்கு மறை முதல். | 2 |
1762 |
அடுப்ப மாசு இல் வெள்ளி வெற்பின் அருகு இருக்கும் மரகதம் கடுப்ப வாம மிசை இருந்து கனக வெற்பன் மகள் எனும் வடுப்படாத கற்பினாள் மடித்து வெள் இலைச் சுருள் கொடுப்ப நேசம் ஊறு போக குரவன் ஆகி வைகினான். | 3 |
1763 |
பிருங்கி நந்தியே முதல் பெரும் தகைக் கணத்தரும் மருங்கு இருந்த சனகாதி மா தவத்தர் நால்வரும் ஒருங்கு இறைஞ்சி உண்ண உண்ண அமுதம் ஊறு சிவ கதைக் கரும்பு அருந்த வாய் மலர்ந்து கருணை செய்யும் எல்லை வாய். | 4 |
1764 |
பௌவம் மூழ்கு சூர் தடிந்த பாலனுக்கு முலை கொடுத்து தெவ்வம் ஆய வினைகள் தீர் இயக்க மாதர் அறுவரும் தெய்வ நீறு முழுதும் அணிந்து செய்ய வேணி கண்டிகைச் சைவ வேட மாதவம் தரித்து வந்து தோன்றினார். | 5 |
1765 |
மந்திரச் சிலம்பு அலம்பும் மலரடிக் கண் வந்தி செய்து எந்தை அட்ட சித்தி வேண்டும் எங்களுக்கு எனத் தொழா அம் தளிர்க் கையவர் இரப்ப அண்ணல் தன் மடித்தலம் தந்திருக்கும் மாதை அங்கை சுட்டி ஈது சாற்றும் ஆல். | 6 |
1766 |
அலர் பசும் பொலங் கொம்பு அன்ன வணங்கி இவண் நிறைவால் எங்கும் மலர் பரா சத்தி ஆகி மகேசையாய் அணிமா ஆதிப் பலர் புகழ் சித்தி எட்டும் பணிந்து குற்றேவல் செய்யும் சிலதியர் ஆகிச் சூழ்ந்து சேவகம் செய்ய வைகும். | 7 |
1767 |
இவளை நீர் சிந்தித் தான் முன் நீட்டிய வினையை நீக்கித் தவலரும் சித்தி எட்டும் தரும் எனக் கருணை பூத்துச் சிவபரம் சோதி எட்டுச் சித்தியும் தௌ¤த்தல் செய்தான் அவர் அது மறந்தார் உம்மை ஆழ் வினை வலத்தான் மன்னோ. | 8 |
1768 |
செழுமதிப் பிளவு வேய்ந்த தேவும் அக் குற்றம் நோக்கி முழுமதி முகத்தினாரை முனிந்து நீர் பட்ட மங்கைப் பழுமரம் முதலாம் ஞானப் பாறையாய் கிடமின் என்னக் கழுமல் உற்று அவர் தாழ்ந்து கழிவது இச் சாபம் என்றார். | 9 |
1769 |
இப்படிக் கரும் கலாகிக் கிடத்தி ஆயிரம் ஆண்டு எல்லைக் அப்புறம் மதுரை நின்று அடுத்து உமை தொடுத்த சாபத்து உப்பற நோக்கி நுங்கள் தொல் உரு நல்கிச் சித்தி கைப்படு கனிபோல் காணக் காட்டுதும் போதிர் என்றான். | 10 |
1770 |
கொடி அனார்கள் அறுவரும் நெடிய வான் நிமிர்ந்து கார் படியும் பட்ட மங்கையால் அடியில் பாறை ஆயினார். | 11 |
1771 |
கதிர் கலம் பெய் காட்சி போல் உதிர் பழத்தின் உடல் எலாம் புதை படக் கிடந்தனர் மத அரித் தடம் கணார். | 12 |
1772 |
பருவம் ஆயிரம் கழிந்து ஒருவ மாட மதுரை எம் குரவன் எண்குணத்தினான் திரு உளம் திரும்பினான். | 13 |
773 |
தன்னது இச்சை கொண்டது ஓர் இன் அருள் குரவனாய் அந் நெடும் கல் ஆயினார் முன்னர் வந்து தோன்றினான். | 14 |
1774 |
இருட்ட தும்பு கோதையார் மருட்ட தும்பு வினை கெட அருள்ததும்பு கண்ணினால் தெருள்ததும்ப நோக்கினான். | 15 |
1775 |
அடிகள் நோக்க அம்புயம் கடிகொள் நெய்தல் காந்தள் பைங் கொடி கொள் முல்லை குமுத மேல் படியப் பூத்த பாறையே. | 16 |
1776 |
தாக்க வேத கத் திரும் பாக்கம் உற்ற பொன் என நீக்கம் அற்ற இருள் மல வீக்கம் அற்று விட்டதே. | 17 |
1777 |
நிறையும் அன்பு எனும் நதி பொறை எனும் கரை கடந்து இறைவனின் அருள் கடல் துறையின் வாய் மடுப்ப வே. | 18 |
1778 |
எழுந்து இறை அடிக் கணே அழுந்து நேச மொடு தவக் கொழுந்து அனார்கள் அறுவரும் விழுந்து இறைஞ்சினார் அரோ. | 19 |
1779 |
குமரற்கு ஊட்டும் இள முலை உமை ஒப்பார்கள் சென்னி மேல் அமலச் சோதி அம்கை ஆங்கு கமலப் போது சூட்டினான். | 20 |
1780 |
சித்தி எட்டும் அந் நலார் புத்தியில் கொளுந்தவே கைத்தலத்தில் வைத்தது ஒர் முத்து எனத் தெருட்டுவான். | 21 |
1781 |
அணிமா மகிமா இலகிமா அரிய கரிமாப் பிராத்திமலப் பிணி மாசு உடையோர்க்கு அரிய பிர காமியம ஈசத்துவம் மெய் துணிமா யோகர்க்கு எளிய வசித்துவம் என்று எட்டாம் இவை உளக் கண் மணி மாசு அறுத்தோர் விளையாட்டின் வகையாம் அவற்றின் மரபு உரைப்பாம். | 22 |
1782 |
அறவும் சிறிய உயிர் தொறும் தான் பரம காட்டை அணுவாய்ச் சென்று உறையும் சிறுமை அணி மா ஆம் உவரி ஞாலம் முதல் மேல் என்று அறையும் சிவா அந்தம் ஆறா ஆறும் முள்ளும் புறனும் அகலாதே நிறையும் பெருமை தனை அன்றோ மகிமா என்னும் நிரம்பிய நூல். | 23 |
1783 |
இலகு மேரு பாரம் போல் இருக்கும் யோகி தனை எடுத்தால் இலகுவான பர அணுப் போல் இருப்பது இலகிமா ஆகும் இலகு வான பர அணுப் போல் இருக்கும் யோகி தனை எடுத்தால் இலகு மேரு பாரம் என இருப்பது அன்றோ கரி மாவாம். | 24 |
1784 |
பிலத்தில் இருந்தோன் அயன் உலகில் புகுதன் மீண்டும் பிலம் அடைதல் பலத்தின் மிகுந்த பிராத்திய தாம் பரகாயத்தின் நண்ணுதல் வான் புலத்தின் இயங்கல் இச் சித்த போகம் அனைத்தும் தான் இருக்கும் தலத்தின் இனைந்த படிவருதல் பிரகாமியம் ஆம் தவக் கொடியீர். | 25 |
1785 |
விண்ணில் இரவி தன் உடம்பின் வெயிலால் அனைத்தும் விளக்குதல் போல் மண்ணில் உள ஆம் பொருள் பலவும் காலம் மூன்றும் வானத்தின் கண்ணில் உள ஆம் பொருளும் தன் காயத்து தௌ¤யாது இருந்து அறிதல் எண்ணில் இதுவும் மறை ஒரு சார் பிரகாயம் என்று இயம்பும் ஆல். | 26 |
1786 |
ஈசன் என முத் தொழிலும் தன் இச்சை வழி செய்து எழு புரவித் தேசன் முதல் கோள் பணி கேட்பத் திகழ்வது தீசத்துவம் ஆகும் பூசல் அவுணர் புள் விலங்கு பூத மனிதர் முதல் உலகும் வாச வாதி எண் மருந்தன் வசமாக் கொள்கை வசித்துவம் ஆம். | 27 |
1787 |
எம்மை உணர்ந்த யோகியர்கள் இவற்றை விரும்பார் எனினும் அவர் தம்மை நிழல் போல் அடைந்து உலகர்க்கு அனையார பெருமை தனை உணர்த்தும் செம்மை உடைய இவை என்னச் சித்தி எட்டும் தௌ¤வு எய்தக் கொம்மை முலையார் அறுவருக்கும் கொளுத்தினான் எண் குணச் செல்வன். | 28 |
1788 |
தேவதேவு உபதேசித்த சித்தியைச் சிலம்பன் செல்வி பாவனை வலத்தால் நன்கு பயின்றுவான் வழிக் கொண்டு ஏகிப் பூவலர் கதுப்பின் நல்லார் அறுவரும் புரம் மூன்று அட்ட காவலன் விரும்பி வைகும் கயிலை மால் வரையில் புக்கார். | 29 |
அட்டமா சித்தி உபதேசித்த படலம் சுபம்
-----------------
34. விடை இலச்சினை இட்ட படலம் (1789 -1818)
1789 |
சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க் அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில் திறந்து அழைத்து இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம். | 1 |
1790 |
தோடு வெட்டி மலைத்து வாள் விதிர் துணை விழிக்குயில் இள முளை கோடு வெட்டிய குறி கொள் மேனியர் குடி கொள் மா நகர் கடி கொள் பைங் காடு வெட்டிய காரணக் குறி காடு வெட்டிய சோழன் என்று ஏடு வெட்டிய வண்டு சூழ் பொழில் எயில் கொள் கச்சி உளான் அவன். | 2 |
1791 |
உத்தம சிவ பத்திரில் பெரிது உத்தமன் புது விரைகலன் மித்தை என்று வெண் நீறு கண்டிகை ஆரம் என்று அணி மெய்யினான் நித்த வேத புராணம் ஆதி நிகழ்த்திடும் பொருள் கண்ணுதல் அத்தனனே பர தத்துவப் பொருள் என்று அளந்து அறி கேள்வியான். | 3 |
1792 |
அங்கம் ஆறோடு வேதம் நான்கும் அறிந்து மெய்ப்பொருள் ஆய்ந்து உளம் சங்கை கொண்டு அனுதினம் அரன்புகழ் சாற்று சைவ புராண நூல் பொங்கும் இன் சுவை அமுது தன் செவி வாய் திறந்து புகட்டி உண்டு எங்கள் நாயகன் அடி இணைகண் இருத்தும் அன்பு கருத்துளான். | 4 |
1793 |
முக்கண் நாயகன் முப்புரத்தை முனிந்த நாயகன் மங்கை ஓர் பக்க நாயகன் மிக்க வானவர் பரவு நாயகன் அரவு அணிச் சொக்க நாயகன் உடலும் செவியான் முகந்து சுவைத் தரும் தக்க பாலோடு தேன் கலந்து தருக்கி உண்பவன் ஆயினான். | 5 |
1794 |
அம் கயல் கண் மடந்தை பாகன் அடித்தலம் தொழும் ஆசை மேல் பொங்கி மிக்கு எழும் அன்பனாய் மது ரேசன் மின்னு பொலங்கழல் பங்கயப் பதம் என்று நான் பணிவேன் எனப் பரிவு எய்தியே கங்குலில் துயில்வான் கயல் புரை கண்ணி பங்கனை உன்னியே. | 6 |
1795 |
அன்று செம்பியர் கோமகன் கனவின் கணே அருள் வெள்ளிமா மன்றுள் நின்றவர் சித்தராய் எதிர்வந்து மன்னவ நின் உளத்து ஒன்றும் அஞ்சல் ஒருத்தனாகி உருத்திரிந்து தனித்து வந்து இன்று வந்தனை செய்து போதி எனப் புகன்றனர் ஏகினார். | 7 |
1796 |
கேட்டு வேந்தன் விழித்து உணர்ந்து கிளர்ந்த அற்புதன் ஆகிய ஈட்டு சேனை அமைச்சுளார் பிறர் யாரும் இன்றி வழிக் கொளீஇ நாட்டம் மூன்றவன் ஆம்வாள் கொடு நல் அருட் துணையாய் வழி காட்ட அன்பு எனும் இவுளி மேல் கொடு கங்குல் வாய் வருவான் அரோ. | 8 |
1797 |
கல்லும் ஆர் அழல் அத்தமும் பல கலுழியும் குண கனை கடல் செல்லும் மா நதி பலவும் வான் நிமிர் கன்னலும் செறி செந் நெலும் புல்லு மாநிலனும் கழிந்து புறம் கிடக்க நடந்து போய் வல்லு மா முலையார் கணம் பயில் வைகை அம் துறை எய்தினான். | 9 |
1798 |
குறுகு முன்னர் அதிர்ந்து வைகை கொதித்து அகன் கரை குத்திவேர் பறிய வன் சினை முறிய விண் தொடு பைந் தருக்களை உந்தியே மறுகி வெள்ளம் எடுத்து அலைத்தர மன்னவன் கரை தன்னில் நின்று இறுதியில் அவனைத் தொழற்கு இடையூறு இது என்று அஞர் எய்துவான். | 10 |
1799 |
இழுதொடும் சுவை அமுது பென் கலன் இட்டு உணாது இரு கண் கணீர் வழிய வந்து விலக்குவாரின் வளைந்தது ஆறு பகல் செய்யும் பொழுது எழும் பொழுதோ மறுக்கம் விளைக்குமே இகல் பூழியன் வழுதி அன்றியும் வைகையும் பகை ஆனது என்று வருந்தினான். | 11 |
1800 |
வெள்ளம் நோக்கி அழுங்கு செம்பியன் மெலிவு நோக்கி விரைந்தெழீஇக் கள்ள நோக்கில் அகப்படாதவர் கனவு போல் அவன் நனவில் வந்து துள்ள நோக்கு உடை அன்பருக்கு அருள் உருவம் ஆகியசித்தர்தாம் பள்ளம் நோக்கி வரும் பெரும் புனல் வற்ற நோக்கினர் பார்த்தரோ. | 12 |
1801 |
வறந்தவாறு கடந்து வந்து வடக்கு வாயில் திறந்து போய் நிறைந்த காவல் கடந்து வீதிகள் நிந்தி நேரியர் வேந்தனைச் சிறந்த வாடக புனித பங்கய திப்பியப் புனல் ஆடுவித்து அறம் தவாத அறை கான கண்டர் தம் ஆலயம் புகுவித்தரோ. | 13 |
1802 |
வெம்மை செய் கதிர்கால் செம்பொன் விமான சேகரத்தின் மேய தம்மையும் பணிவித்து எண் இல் சராசரம் அனைத்தும் ஈன்ற அம்மை அம் கயல் கணாளம் அணங்கையும் பணிவித்து உள்ளம் செம்மை செய் இன்ப வெள்ளத்து அழுத்தினார சித்தசாமி. | 14 |
1803 |
பண்ணியன் மறைகள் தேறா பால்மொழி மணாள போற்றி புண்ணியர் தமக்கு வேதப் பொருள் உரை பொருளே போற்றி விண் இழி விமான மேய சுந்தர விடங்க போற்றி. | 15 |
1804 |
எவ்வுடல் எடுத்தேன் மேல் நாள் எண் இலாப் பிறவி தோறும் அவ் உடல் எல்லாம் பாவம் மறம் பொருட்டாக அன்றோ தெவ் உடல் பொடித்தாய் உன்றன் சேவடிக்கு அடிமை பூண்ட இவ் உடல் ஒன்றே அன்றோ எனக்கு உடல் ஆனது ஐயா. | 16 |
1805 |
மின் நகு வேலினானை வேந்த நீ போந்த வண்ணம் தென்னவன் அறிந்தால் ஏதம் செய்யும் என்று ஆர்த்தார்க் கண்ணி மன்னைச் சித்த சாமி உத்தர வழிக் கொண்டு ஏகா. | 17 |
1806 |
மண்ணினை வளர்க்கும் வைகை வடகரை அளவு நண்ணிப் புண்நிய நீற்றுக் காப்புப் புண்டர நுதலில் சாத்தி உள் நிறை கருத்துக்கு ஏற்ப உறுதுணை உனக்கு உண்டாகி நண்ணுக என்று பொன்னி நாடனை விடுத்து மீண்டு. | 18 |
1807 |
காப்புச் செய்த கதவில் விடைக்குறி யாப்புச் செய்து அமைத்து ஈர்ஞ்சடைச் சித்தர் போய்த் துப்புக் கைவரை சுழ் வட மேருவில் கோப்புச் செய்த பொன் கோயிலின் மேயினார். | 19 |
1808 |
செம் கை நீட்டித் தினகரன் தோன்றலும் எங்கள் நாயகன் இட்ட குறி அறிந்து அங்கண் வாயில் திறப்பவர் ஐயுறா. | 20 |
1809 |
உற்று நோக்கினர் தாம் நென்னல் ஒற்றிய கொற்ற மீனக் குறி பிழை யாமை கண்டு எற்றி இது ஆம் கொல் என்று ஏந்தல் முன் எய்தினார். | 21 |
1810 |
போற்றி மன்ன நம் பொன் அம் கயல் குறி மாற்றி உத்தர வாயில் கதவு அதில் ஏற்று இலச்சினை இட்டனர் யாரை என்று ஆற்றல் வேந்த அறிகிலம் யாம் என்றார். | 22 |
1811 |
ஐய இன்னது ஓர் அற்புத மாயையைச் செய்ய வல்லவர் யார் எனத் தேர் இலன் ஐயம் எய்தி அகன் மனை நண்ணினான். | 23 |
1812 |
வெறுத்து அகன்று தரை மேல் பள்ளி கொள்ளவும் பொறுத்தனன் அன்று துயின்றான் இன் அருள் போழ்தினில் கறுத்த கண்டர் கன வினில் கூறுவார். | 24 |
1813 |
மட்டது அலம்பிய தாதகி மாலையான் உட்ட தும்பி ஒழுகிய அன்பினால் கட்டு இல் அங்கு எயில் கச்சியில் காடு எலாம் வெட்டி நம் புடை வித்திய பத்தியான். | 25 |
1814 |
வந்து நமை வழி பட வேண்டினான் இந்த வாயில் திறந்து அழைத்து இன் அருள் தந்து மீள விடுத்துப் பின் ஆட் கொளீஇ நந்த மால் விடை நாம் பொறித்தேம் எனா. | 26 |
1815 |
அருளினான் ஐயம் தேற்றி அகன்றபின் மருளின் நீங்கி மலர்க்கண் விழித்து எழீஇ வெருளினான் வெயர்த்தான் விம்மினான் பல பொருளின் ஆற்றுதித்தான் குல பூடணன். | 27 |
1816 |
வள்ளல் அன்புக்கு எளிவந்த மாண்பு கண்டு உள்ள உள்ள நின்று நூற்று எழும் அற்புத வெள்ளமும் பரமானந்த வெள்ளமும் கொள்ளை கொண்டு தன் கோமனை நீங்கினான். | 28 |
1817 |
எளியர் ஆடலை யார்க்கும் வெளிப்படத் தௌ¤யு மாறு தௌ¤வித்துத் தன்னைப் போல் விளி இலா இன்ப வெள்ளத்து அழுத்தினான். | 29 |
1818 |
கோடாத செங்கோலும் வெண் குடையும் கோ முடியும் ஏடார் அலங்கல் இரா சேந்திரற்கு அளித்துத் தோடார் இதழியான் தாள் கமலம் சூடி வான் நாடாள அரசு உரிமை பெற்றான் னரபதியே. | 30 |
----------------
இப்பணியைச் செய்து அளித்த செல்வி. கலைவாணி கணேசன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு நன்றி.
--------------------
கருத்துகள்
கருத்துரையிடுக