தேவநேயம் - 7
கட்டுரைகள்
Back
1.தேவநேயம் - 7
2.தமிழ் வளர்ச்சி
3.ஐவகைப் பொருள்திரிபு
4.தமிழத் துறவி
5. தமிழப்பார்ப்பார்
6. தமிழப்பூசாரி
7. தமிழம் (1)
8. தமிழம் (2)
9. தமிழர் தோற்றமும் பரவலும்
10.தமிழர் வரலாறு அமையும் வகை
11. தமிழர் வாழ்க்கைக் குறிக்கோள்
12. தமிழரசர் கால மக்கள் நிலைமை
13. தமிழரும் பிராமணரும் ஒத்து வாழ்தல்
14. தமிழன் ஆரியத்தால் கெட்டது
15. தமிழன் குறிபார்த்தலால் கெட்டது
16. தமிழன் கொடை மடத்தால் கெட்டது
17. தமிழன் தன் இனப் பகைமையால் கெட்டமை
18. தமிழன் துறவியைப் பின்பற்றலால் கெட்டது
19. தமிழன் பள்ளியெழுச்சி
20.தமிழன் பிறந்தகம்
21. தமிழன் மதப் பைத்தியத்தால் கெட்டது
22. தமிழிலக்கியத்தின் உச்சநிலைக் காலம்
23. தமிழிலக்கியத் தோற்றம்
24. தமிழிலக்கிய வரலாறெழுதத் தக்கார் யார்?
25. தமிழின் தலைமை
26. துரு
27. நுரு
28. புரு
29. முரு
30.தமிழின் தனியியல்புகள்
31. தமிழின் தொன்மை
32. தமிழின ஒற்றுமை
33. தமிழுக்குத் தமிழ்நாட்டிற் செய்யவேண்டியவை
34. தமிழுக்கு வெளிநாட்டிற் செய்யவேண்டியவை
35. தமிழே உலகமுதல் தாய்மொழி
36. தயிர் - ததி (dadhi) - இ.வே.
37. தருக்கம் - தர்க்க.
38. தலைக்கட்டு
39. தலைக்கழகம்
40. தலைமைக் குடிமகன்
41. தலைவன் ஒழுக்கம்
42. தவ்வுதல்
43. தவம்(1):
44. தவளை வகை
45. தவி
46.தழுவுதொடரும் தழாத் தொடரும்
47. தழையுடை
48. தளம்
49. தற்றுடுத்தல்
50. தன்னலமின்மையால் கொள்கை தளராமை
51. தா(1)
52. தாகம்
53. தாடி
54.தாண்டகம்
55. தாத்தா
56. தாம்பு
57. தாம்பணி
58. தாமரை
59. தாய்மொழிக் கரணம்
60. தாயம் விளையாட்டு
61. தாலிகட்டும் வழக்கம் தமிழரதே
62. தாவு
63. தாளம்
64. தாளி
65. தானம் (1)
66. தானம் வகை
67. தானை
68. திசைச்சொல் எவை?
69. திசைச்சொல் பயன்பாடு
70. திடம்
71.திண்டாட்டம்
72. தித்தி
73.திமி
74. திரவிடம் என்பதே தீது
75. திரவிடம் தென்சொல்லின் திரிபே
76. திரவிட மொழிப் பகுப்பு
77. திராவிடம் என்னுஞ் சொன்மூலம்
78. திராவிடம் வடக்குநோக்கித் திரிதல்
79. திரிபன்றி யெய்தல்
80. திரு (1)
தேவநேயம் - 7
இரா. இளங்குமரன்
நூற்குறிப்பு
நூற்பெயர் : தேவநேயம் - 7
தொகுப்பாசிரியர் : புலவர். இரா. இளங்குமரன்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதற்பதிப்பு : 2004
மறுபதிப்பு : 2015
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
பக்கம் : 8 + 312 = 320
படிகள் : 1000
விலை : உரு. 300/-
நூலாக்கம் : பாவாணர் கணினி
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன்
அச்சு : வெங்கடேசுவரா
ஆப்செட் பிரிண்டர்
இராயப்பேட்டை, சென்னை - 14.
கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
மொழி மீட்பின் மீள் வரவு
தனித் தமிழ் வித்தை ஊன்றியவர் கால்டுவெலார். அதை முளைக்கச் செய்தவர் பரிதிமால் கலைஞர்; செடியாக வளர்த்தவர் நிறைமலையாம் மறைமலையடிகள்; மரமாக வளர்த்து வருபவன் யானே என்ற வீறுடையார் பாவாணர்.
கிறித்து பெருமான் சமய மீட்பர்; காரல்மார்க்கசு பொருளியல் மீட்பர்; மொழிமீட்பர் யானே என்னும் பெருமித மிக்கார் பாவாணர்.
ஆரியத்தினின்று தமிழை மீட்பதற்காக யான் அரும்பாடு பட்டு இலக்கிய இலக்கண முறையோடு கற்ற மொழிகள் முப்பது என்று எழுதிய பெருமிதத் தோன்றல் பாவாணர்.
மாந்தன் தோன்றியது குமரிக் கண்டத்திலேயே; அவன் பேசிய மொழியே உலக முதன்மொழி; ஆரியத்திற்கு மூலமும், திரவிடத்துக்குத் தாயும் தமிழே என்னும் மும்மணிக் கொள்கைளை நிலை நாட்டிய மலையன்ன மாண்பர் பாவாணர்.
அவர் சொல்லியவை எழுதியவை அனைத்தும் மெய்ம்மையின் பாற்பட்டனவே என இன்று உலக ஆய்வுப் பெருமக்களால் ஒவ்வொன்றாக மெய்ப்பிக்கப்பட்டு வருதல் கண்கூடு.
இருபதாம் நூற்றாண்டைத் தம் ஆய்வு மதுகையால் தேவநேய ஊழி ஆக்கிய புகழும் வேண்டாப் புகழ் மாமணி தேவநேயப் பாவணர்.
அவர் மொழியாய்வுச் செய்திகள் ஒரு நூலில், ஓர் இதழில், ஒரு மலரில், ஒருகட்டுரையில், ஒரு கடிதத்தில், ஒரு பொழிவில் ஓர் உரையாடலில் அடங்கியவை அல்ல. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக அவற்றை யெல்லாம் தொகுத்து அகர நிரலில் தொகுக்கப்பட்ட அரிய தொகுப்பே தேவநேயம் ஆகும்.
நெட்ட நெடுங்காலமாகத் தேவநேயத்தில் ஊன்றிய யான் அதனை அகர நிரல் தொகையாக்கி வெளியிடல் தமிழுலகுக்குப் பெரும்பயனாம் என்று எண்ணிய காலையில், தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் தாங்கிப் பிடித்து ஊக்கும் - வளர்க்கும் - வண்மையராய் - பாவாணர்க்கு அணுக்கராய் - அவரால் உரையும் பாட்டும் ஒருங்கு கொண்ட பெருந்தொண்டராய்த் திகழ்ந்த சிங்க புரிவாழ் தமிழ்த்திரு வெ. கோவலங்கண்ணனார் அவர்கள் தமிழ் விழா ஒன்றற்காகச் சென்னை வந்த போது யானும், முனைவர் கு. திருமாறனாரும் சந்தித்து அளவளாவிய போது இக்கருத்தை யான் உரைக்க உடனே பாவாணர் அறக்கட்டளை தோற்றுவிப்பதாகவும் அதன் வழியே தேவநேயம் வெளிக் கொணரலாம் எனவும் கூறி அப்பொழுதேயே அறக்கட்டளை அமைத்தார்.
தேவநேயர் படைப்புகள் அனைத்திலும் உள்ள சொல்லாய்வுகளைத் திரட்டி அகர நிரல் படுத்திப் பதின்மூன்று தொகுதிகள் ஆக்கினேன். பதிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது; அச்சிடும் பொறுப்பு, பாவாணர் பல காலத்துப் பலவகையால் வெளியிட்ட நூல்களையும் கட்டுரைகளையும் ஒருங்கே தொகுத்து ஒரே நேரத்தில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் நாடு மொழி இனப் போராளி கோ. இளவழகனாரிடம் ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அத்தேவநேயம் தமிழ் ஆய்வர், தமிழ் மீட்பர் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டும் என்னும் வேணவாவால் மீள்பதிப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது.
பாவாணர் அறக்கட்டளை நிறுவிய கோவலங்கண்ணனார் புகழ் உடல் எய்திய நிலையில், அவர் என்றும் இறவா வாழ்வினர் என்பதை நிலைப் படுத்தும் வகையில் அவர்க்குப் படையலாக்கி இப்பதிப்பு வெளிப்படுகின்றது.
மொழி இன நாட்டுப் பற்றாளர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல், பல் பதிப்புகள் காண வேண்டும். வருங்கால இளைஞர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அதற்குத் தூண்டலும் துலக்கலுமாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் மீட்டெடுப்புப் பற்றுமையரும் தொண்டருமாவர்.
வெளியீட்டாளர்க்கும் பரப்புநர்க்கும் பெருநன்றியுடையேன்.
வாழிய நலனே! இன்ப அன்புடன்
வாழிய நிலனே! இரா. இளங்குமரன்
பதிப்புரை
20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வின் முழுப் பொழுதையும் செலவிட்டவர்.
திராவிட மொழிகளுக்குத் தாய்மொழித் தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமொழித் தமிழ், உலக மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என்பதைத் தம் பன்மொழிப் புலமையால் உலகுக்கு அறிவித்தவர்.
இவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சேர தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டதைத் தமிழ் உலகம் அறியும்.
முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பாவாணர் வழி நிலை அறிஞர். வாழும் தமிழுக்கு வளம் பல சேர்ப்பவர். பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேவநேயம் என்னும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்கொள்ளும் வகையில் தொகுத்துத் தந்துள்ளார். இத்தேவநேயத் தொகுப்புகள் தமிழர்களுக்குக் கிடைத்த வைரச்சுரங்கம். இத் தொகுப்புகளை வெளியிடு வதில் பெருமைப் படுகிறோம்.
அறிஞருலகமும், ஆய்வுலகமும் இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை வாங்கிப் பயன் கொள்வீர்.
பதிப்பாளர்
கோ. இளவழகன்
தமிழ் வளர்ச்சி
I. உரைநடை H
கிளவியாக்கம்
1. சொற்றிரிவு முறைகள்
கிளவியின் இயல்விளக்கம் : மூவகைக்கிளவி - ஓரெழுத்து, ஈரெழுத்து, பலவெழுத்து.
கிளவி என்பது நால்வகை இலக்கணவியற் சொல்லிற்கும் பொதுவான சொல். கிளத்தல் சொல்லுதல். கிளப்பது கிளவி.
மாந்தன் நாகரிகம் வளர வளரக் கருத்துக்கள் பல்குகின்றன. அடிப்படைக் கருத்துக்களினின்று வேறுபட்ட கருத்துக்கள் கிளைக்கும்போது, முன்னவற்றைக் குறிக்கும் சொற்கள் பல்வேறு வகையில் திரிபடைகின்றன. அல்லாக்கால் பலபொருளொரு சொல்லும் (Polysemy) புலசொல்லொரு வடிவும் (Homonymy) மிக்குப் பொருள் மயக்கு ஏற்படும். அதைத் தடுக்கச் சொல் வடிவை மாற்ற வேண்டியுளது. சுள் என்னும் அடி பொருந்தற் பொருளிற் செள் என்று திரியாவிடின் சுடுதலையும் உறைத்தலை யும் குறிக்குஞ் சொல்லொடு அதை மயக்க நேரும். செள் என்னும் வடிவினின்றே செண்டு, செண்டை, செடி, செண்ணு, செரு, செறு, செறி, செற்றை, செழி, சேர் முதலிய சொற்கள் பிறந்துள்ளன. நுள் என்பது நெருங்கற்பொருளில் நள் என்று திரியாவிடின், கிள்ளு தலைக் குறிக்கும் சொல்லொடு அதை மயக்க நேரும். மேலும், ஆயிரக்கணக்கான கருத்துக்கட்கு வெவ்வேறு சொல்லும் சொல் வடிவும் வேண்டியிருப்பதால், வேர்ச்சொல்லும் அடிச்சொல்லும் பல்வேறு திரிபுகொண்டா லொழிய மொழிவளர்ச்சிக்கிட மில்லை.
1. அறுவகைத்திரிபு
எ.டு.
வலித்தல் : ஊங்கு - ஊக்கு, குண்டு - குண்டம்குட்டம்;
நந்து - நத்தை, குறிஞ்சி - குறிச்சி.
மெலித்தல் : ஒப்பு - ஒம்பு, குத்து - குந்து. போக்கு - போங்கு.
நீட்டல் : உண்-ஊண், குட-குடா, நகரகம்-நாகரிகம்.
குறுக்கல் : ஆங்கு-அங்கு, தேவு-தெய்வம், வணங்கு- வாங்கு- வங்கு-
வங்கி=வளைந்தகத்தி, நெளிவளையல்.
தொகுத்தல் : துருத்தி - துத்தி, பெட்டை - பெடை,
வெய்ம்மை - வெம்மை, வேய்ந்தோன் -
வேந்தன்.
விரித்தல் : பரவர் - பரதவர், மாடம்-மாடகம்.
(2) முக்குறை
மூதற்குறை : சிப்பி-இப்பி, நீரம்-ஈரம் உகை-கை கைத்தல்
= செலுத்துதல்.
இடைக்குறை : கூண்டு-கூடு, முழுங்கு-முங்கு.
கடைக்குறை : சாய்-சா, நல்-ந.
(3) மும்மிகை
முதன்மிகை : ஏண்-சேண், இளை-சிளை.
இடைமிகை : இலகு-இலங்கு, பிறகு-பிறக்கு, மூசு-மூஞ்சு,
மெது-மெத்து.
கடைமிகை : திரும்-திரும்பு, கடை-கடைசி.
தொகுத்தலும் விரித்தலும் பகுகிளவிக்கும், இடைக் குறையும் இடைமிகை யும் பகாக்கிளவிக்கும், உரியவென வேறுபாடறிக. ஆயினும் இவ்வேறுபாடு முதற்காலச் சொன்னிலைக்கு ஏற்காது.
4. பல்வேறு உயிர்த்திரிபு
அ
அ-ஆ : நடத்து-நடாத்து, பண்-பாண், வரு-வார், மறு-
மாறு.
அ-இ : வளார் - விளார், வளாவு-விளாவு, பட்டனம்-பட்டினம்.
அ-எ : பரு-பெரு, கட்டி-கெட்டி.
அ-ஐ : பசு-பை, இளமை-இளைமை, அம்ம-அம்மை.
ஆ
அ-ஆ : சாவு-(சாவம்) - சவம்
அ-ஐ : துலா-துலை, நறா-நறை
ஆ-ஓ : ஆம்-ஓம், முன்னார்-முன்னோர்
இ
இ-ஈ : கில்-கீள்
இ-அ : விளிம்பு-வடிம்பு
இ-உ : பிறகு-புறகு
இ-எ : பிணை-பெண், இருமை-எருமை
ஈ
ஈ-இ : அறிதீ-அறிதி
ஈ-ஊ : பீட்டை-பூட்டை
ஈ-எ : நீள்-நெடு
ஈ-ஏ : செய்யா தீ - செய்யாதே, மீ-மே.
ஈ-ஆ : சாப்பீடு - சாப்பாடு, கூப்பீடு - கூப்பாடு.
உ
உ-ஊ : புழை-பூழை, குனி-கூன், சுள்ளை-சூளை.
உ-அ : முடங்கு-மடங்கு, குட்டை-கட்டை.
உ-இ : புரள்-பிறழ், பஞ்சு-பஞ்சி, கடு-கடி, உவர்-இவர்.
உ-எ : குழு-கெழு.
உ-ஒ : துளை-தொளை, உடன்-ஒடு.
ஊ
ஊ-உ : கூ(வு) - குயில்.
ஊ-ஈ : தூண்டு-தீண்டு, நூறு-நீறு.
ஊ-ஓ : சூம்பல்-சோம்பல்.
ஊ-ஏ : ஊர்-ஏர் (எழு, உயர்).
எ
எ-ஏ : பெடை-பேடை, எல்லா-ஏலா.
எ-அ : வெறுமை-வறுமை, நெடு-நட. ஏட்டி- செட்டி.
எ-இ : செந்தூரம்-சிந்தூரம்,செத்து-சித்து.அறிவு (கருத்து).
எ-ஒ : செப்பட-சொப்பட
ஏ
ஏ-எ : தேவு-தெய்வம்
ஏ-இ : கேடகம்-கிடுகு
ஏ-ஈ : தேம்-தீம்
ஏ-ஐ : செய்யாதே-செய்யாதை.
ஏ-யா : ஏன்-யான், ஏது-யாது, ஏனை-யானை.
ஐ
ஐ-ஏ : செய்யாமை-செய்யாமே
ஐ-ஆய்: குழை-குழாய், கழை-கழாய், உரை-உராய்.
ஒ
ஒ-ஓ : கொடு-கோடு, பொள்-போழ்
ஒ-அ : கொம்பு-கம்பு, ஒட்டு-அட்டு, மொண்டை-மண்டை
ஒ-எ : சொருகு-செருகு.
ஓ
ஒ-ஓ : கோவை-கொவ்வை.
ஒ-ஆ : ஓட்டம்-ஆட்டம், (உவமையுருபு), நோடு-நாடு, கோல்-கால்.
ஓ-ஏ : கோடகம்-கேடகம், நோம்பு-நேம்பு.
மோனைத்திரிபு
பசி-பச்சை, பாசி, பைது.
கிள்-கிண்டு, கீள், கெண்டு, கேணி.
உடு-உடன், ஒடு, ஓடு.
உயிர்த்திரிபுகளெல்லாவற்றுள்ளும், உ-ஒ, உ-அ, உ-இ என்னும் மூன்றும் பலதென்சொற்களின் மூலங்காணவும், தென் சொல்லா வடசொல்லா என்னும் ஐயத்திற்கிடமான சில சொற்களைத் தென்சொல்லென்று துணியவும், பெருந்துணையாயிருத்தலால், மிக முதன்மை வாய்ந்தனவாகும். இவற்றை முறையே, முன்னைத் திரிபு, அள்ளைத்திரிபு. பின்னைத்திரிபு என அழைக்கலாம். முன்னைத்திரிபும் மோனைத்திரிபும் ஒன்றே.
(5) பல்வேறு மெய்த்திரிபு
க-ச : குடிகை-குடிசை, பொலிகை-பொலிசை. முழுகு-முழுசு, கேடகம்-சேடகம்.
க-ஞ : கடிகை-கடிஞை
க-த : கொப்பூழ்-தொப்புள்
க-ப : இறக்க-இறப்ப
க-வ : குழை-குகை-குவை.
ச
ச-க : செய்-(கெய்)-கை, செம்பு-கெம்பு.
ச-ய : குசவன்-குயவன்.
ச-ன : பிசை-பினை, பூசை-பூனை.
ட
ட-ண : படம்-பணம்.
ட-ச : ஒடி-ஒசி, புடி-பிடி-பிசி, குடவன்-குசவன்.
ட-ர : படவர்-பரவர், விடிச்சி-விரிச்சி, (oracle) குடம்பை
குரம்பை.
ட-த : படாகை-பதாகை.
ட-ள : வெடிச்சி-வெளிச்சி (காது நோய்வகை). சூடாமணி
சூளாமணி.
ண
ண-ட : கோணு - கோடு, சேண் - சேடு, ஆண் - ஆடூஉ
ஆடவன்.
ண-ன : நாத்தூணார்-நாத்தனார்.
த
த-ச : ஒதை-ஓசை, அத்தன்-அச்சன், மதி-மசி.
த-ட : மதம்-மடம், மத்து-மட்டு, துவர்த்து-துவட்டு.
த-ர : விதை-விரை, மூதி-மூரி.
த-ற : குத்து-குற்று, ஒத்து-ஒற்று.
ந
ந-ஞ : நாண்-ஞாண், நாயிறு-ஞாயிறு
ந-ன : வெரிந்-வென்.
ப
ப-வ : பகு-வகு, பண்டி-வண்டி.
ம
ம-க : தமப்பன்-தகப்பன்
ம-ப : அண்மு-அண்பு
ம.வ : மிஞ்சு-விஞ்சு, முழுங்கு-விழுங்கு, செம்மை
செவ்வை.
ம-ர : முகம்-முகர்.
ம-ன : கடம்-கடன், அம்மை-அன்னை
ம-ல : பக்கம்-பக்கல்.
ய
ய-ச : ஈயல்-ஈசல், நெயவு-நெசவு.
ய-ஞ : வலையன்-வலைஞன், உயற்று-உஞற்று, அயர்
அஞர்
ய-ந : யான்-நான்.
ய-வ : நீயிர்-நீவிர்.
ர
ர-த : பரண்-பதணம், குரல்வளை-குதவளை (கொச்சை)
ர-ற : முரி-முறி, ஒளிர்-ஒளிறு.
ர-ல : நீர்-நீல்-நீலம், வார்-வால்-வாலம்,
துருக்கன்-துலுக்கன்.
ல
ல-த : சலங்கை - சதங்கை, மெல் - மெது.
ல-ச : அலை-அசை
ல-ர : குதில் - குதிர், கூதல் - கூதர், அலத்தம் - அரத்தம்.
ல-ழ : மால் - மழை, வியல் - வியலன் - வியாழன்.
ல-ள : செதில் - செதிள்.
ல - ற : மல் - மறு. (மாசு)
ல - ற : மல் - மறு. (மாசு)
ல-ன : மேல - மேன, வெல்-வென், புலம் - புனம்
ல-ஃ : அல்கு - அஃகு
வ
வ-க : ஆவா! - Mfh!, சிவப்பு - சிகப்பு, துவர்-துகிர்
வ-ச : பரவு - பரசு, விரவு - விரசு
வ - ப : அளவு - அளபு, செய்வ - செய்ப
ழ
ழ-க : தொழுதி - தொகுதி, நிழல் - நிகர் (ஒளி)
ழ-ச : இழு-இசு, இசி-இசிவு
ழ-ட : குழல்-குடல், புழல்-புடல்-புடவை
ழ-ண : தழல் - தணல், நிழல் - நிணல்
ழ-த : மழலை - மதலை
ழ-ய : பழம் - பயம் - பயன், காழ் - காய்
ழ-ர : பழுவம் - பருவம்
ழ-ள : கொப்பூழ் - கொப்புள்
ழ-ற : தொழு - தொறு
ழ-ன : புழுகு - புனுகு
ள
ள-ச : உளி - உசி - ஊரி, உளு - உசு, வளை - வசை, வாளி –
வாசி, கோளம் - கோசம்
ள-ட : களவன் - கடப்பான், மகள் - மகடூஉ, வெள் - வெளி –
வெடி - விடி
ள-ண : வளரி - வணரி, களவாளி - களவாணி,பெள் - பெண்
ள-ய : கொள் - கோள் - கோய், வெள் - வெய் - வெய்ம்மை - வெம்மை (விருப்பம்), மாள் - மாய்
ள-ர : வள் - வார், நீள் - நீர்
ள-ழ : உளி - உழி, காள் - காழ், துளசி - துழாய்
ள-ற : வெள் - வெறு, வெள்ளிலை - வெற்றிலை
ள-ஃ : எள்கு - எஃகு, வெள்கு - வெஃகு
ள-ல : கொள் - கொல்
ள-ன : முளை-முனை, வளை-வனை
ற
ற-ச : முற்றில் - முச்சில், குற்றில் - குச்சில், பொற்றை –
பொச்சை
ற-ட : முசிறு - முசிடு
ற-த : அங்குற்றை - அங்கத்தை, குறுவாய் - கதுவாய்
ன
ன-ஞ : அன்னை - அஞ்ஞை, முன்னை - முஞ்ஞை
ன-ந : பொருகின்றார் - (பொருன்னார்) - பொருநர்
ன-ல : செய்வென் - செய்வன் - செய்வல்
ன-ற : மன்-மறு-மற்று, தென்னு-தெற்று
ன-ண : பட்டனம் - பட்டணம்
சில இணை மெய்களும் வேறிணையாகத் திரியும்.
எ.டு : ங்க-ஞ்ச : பொங்கு - பொஞ்சு.
ண்ட-ந்த : மொண்டை-மொந்தை.
ந்த-ஞ்ச : நீந்து-நீஞ்சு.
ன்ற-ந்த : மன்று-மந்து, பின்று-பிந்து.
பல்வகை ஈறுகள்
பொருள் மாறும்போது சொல்லும் மாறவேண்டுமென்பது, சொல்லாக்க அடிப்படை நெறிமுறை, அல்லாக்கால், பொருள் அதுவோ இதுவோ என மயங்க நேரும். மண் என்னுஞ் சொல் மணலைக் குறித்தற்கு அல்லீறு பெற்று மணல் என்றானமையும், கம்பு என்னுஞ் சொல், மரக்கோலைக் குறியாது கனிய (உலோக)க் கோலைக் குறித்தற்கு இகர வீறு பெற்றுக் கம்பியென் றானமையும், காண்க. பக்கத்தையும் இடுப்பையும் குறிக்கும் மருங்கு என்னும் சொல், மருங்கல் என உல்லீறு பெற்றே தனிப்பட இடுப்பைக் குறித்தது.
முதன் முதலாகத் தோன்றிய ஈறுகள், சுட்டுக்களும் சுட்டடிச் சொற்களுமாகவேயிருந்திருக்கின்றன. சுட்டெழுத்துக்கள், முதற்காலத்தில் பெயரெச்சமாக மட்டுமன்றிப் பெயராகவும் இருந்திருக்கின்றன.
எ.டு. M = mJ (bg.), அந்த (பெ.எ.) இக்காலத்தும் அது போது என்று, சுட்டுப் பெயர் பெயரெச்சமாய் வழங்குதல் காண்க.
உயிரொலிகளைத் தனித் தொலிக்கும் போது, குறிலினும் நெடிலே இளஞ்சிறார்க்கும் முந்தியல் மாந்தர்க்கும் எளிதாம். குறிலை விட்டொலிக்கும் போது மூச்சுப்பை முயற்சி மிக்கு வேண்டியிருத் தலின், கீழ்வகுப்பு மாணவர் குறில் நெடில் வேறுபாடின்றியே உயிரெழுத்துக்களை ஒலித்துப் போதல் காண்க. இதனால் உயிரெழுத்துக்கள் முதலில் நெடிலாகவே தோன்றியிருத்தல் வேண்டுமென்பது உய்த்துணரப்படும்.
அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு (31)
என்று கூறிய தொல்காப்பியனார், சற்றுப் பின்பு,
நெட்டெழுத் தேழே ஓரேழுத் தொருமொழி (43)
குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே (44)
என்று அதை ஒருமருங்கு மறுத்திருப்பதும், வினாவெழுத்துக் களைக் குறிக்குமிடத்து.
ஆ ஏ ஒ அம் மூன்றும் வினாஅ (32)
என எகரத்தை விட்டிருப்பதும், தொல்காப்பியம் நெடுகலும் ஆயிடை என்னும் தொடரே பயின்று வருவதும், ஆண்டு ஈண்டு என்னும் சொற்கட்குக் குறுகிய வடிவின்மையும், ஏகார ஓகாரங்கட்கு இனக்குறில் பிந்தித் தோன்றி யுள்ளமையும், இதற்குச் சான்றுகளாகும்.
சுட்டீறுகள்
ஆ-உணா, நிலா, இரா, விளா, களா, நுணா, கடா, மிழா.
ஈ-குரீ (குரீஇ = குருவி).
ஊ - கொள் - கொளும் - கொளுமூ - கொண்மூ (முகில்).
சிறு பறவை (குருவி) என்று பொருள்படும் குரீ என்னும் சொல்லைப் பிற்காலத்தார் குரீஇ என அளபெடையாக்கி விட்டனர்.
கொண்மூ - கடல்நீரைக் கொள்ளும் முகில். கொள்ளுதல் = முகத்தல். கொளுமுதல் = முகத்தல்.
ஆவீறு முறையே அ, அவு எனத் திரியும்,
எ.டு. நிலா - நிலவு, இரா-இர-இரவு, களா-கள-களவு. அவு ஈறு அவம் என்றும் திரியும்.
எ.டு. அரா - அர - அரவு - அரவம், களா - கள - களவு - களவம்.
முதற்காலத்தில் நெடிலாகவேயிருந்த முச்சுட்டுக்களும் பிற்காலத்தில் குறிலாகவும் மாறின.
எ.டு. ஆ - அ, ஆது - அது, ஆங்கு - அங்கு.
ஈ - இ, ஈது - இது, ஈங்கு - இங்கு.
ஊ - உ, (ஊது) - உது, ஊ - உங்கு.
எழுத்துக்கள் தனிநிலையின்றிப் புணர்நிலைப்பட்டுச் சொற் களாகும் போது, நெடில் வடிவினுங் குறில்வடிவே பலுக்க (உச்சரிக்க) எளிதாம்.
ஈகார ஊகாரச் சுட்டீறுகள் இக்காலத்து இறந்துபட்டன. அவற்றின் குறில் வடிவுகளே இன்று வழங்குவன.
எ.டு. அ - உண, நில, விள, இர, (செ. வ.)
இ - கண்ணி, கிளி, நரி, புலி, உறுமி, கொடி, வெள்ளி,
உ - கொழு (கலப்பைக் காறு), கரு (சூல்), உருமு, வரகு.
சில அகரவீறு அவு என்று திரியும்.
எ.டு. குழ - குழவு, மழ - மழவு.
சுட்டடியீறுகள்
எல்லா மெய்களுள்ளும் இயல்பானதும் எளிதானதும் மகர மாதலின், முதலாவது தோன்றிய சுட்டடியீறு மகரமெய் யீற்றதே. அது பின்னர்ப் பிற மெய்யீற்றதாகத் திரிந்தும், இறுதியிலும் இடையிலும் வேறெழுத்துப் பெற்று விரிந்தும், ஏனையீறு களோடு கூடியும், பல்வேறு தனியீறுகளையும் கூட்டீறுகளையும் பிறப்பித்துள்ளது.
அம் இக்காலத்தில் தனியீறு; முதற்காலத்தில் கூட்டீறு (அ+ம்)
அம் - அன் - அல். எ.டு. திறம் - திறன் - திறல்.
உயிரும் உயிர் மெய்யுமாகிய ஈறுகளெல்லாம் சொற்களும் சொற் சிதைவுகளுமே யாதலின், அத்தகை ஈறு பெற்ற சொல்லெல்லாம் முதற்காலத்தில் இரு சொல்லாகவே கொள்ளப்பட்டன.
எ.டு. உணா (உண் + ஆ) = உண்ணும் அது, உண்ணும் பொருள்.
மெய்யீற்று முச்சுட்டடி யீறுகள்
எ.டு.
ஆம்-குழாம் ஆன்-வயான் ஆல்-வரால்
ஈம்- ——- ஈன் - ——- ஈல் - ——-
ஊம் - ——- ஊன் - ——- ஊல் - ——-
அம் - மரம் அன் - அழன் அல் - குழல்
இம் - ——- இன் - வெரிந் இல் - அணில்
உம் - உரும் உன் - பொருந் உல் - ——-
எடுத்துக் காட்டில்லன இறந்துபட்டன.
முதற்காலத்தில், தமிழில் றன்னகரம் தோன்றவில்லை; தந்நகரமே யிருந்தது. அக்காலத்துச் சொற்களே வெரிந், பொருந் என்பவை.
ல ள ழ மூன்றும் ஒரே காலத்துத் தோன்றவில்லை; ல முன்னும் ள இடையும், ழ பின்னும் தோன்றின. ஆதலால், அல்லீறு பின்னர் முறையே அள், அழ் எனத் திரிந்தது.
லகர மெய்யீறு ரகர மெய்யீறாகத் திரியும்.
எ.டு. குடல் - குடர்.
லகரம் தகரமாகவும் திரியும். ஆயின், வல்லின மெய் தமிழில் ஈறாகாமையால் உகரம் ஏறப் பெறும்.
எ.டு. மெல் - மெது, அல் - அது.
அள்-குறள் அழ்-புகழ் அர்-வளர் அது-(வலது)
இள்-செதிள் இழ்-குமிழ் இர்-குளிர் இது-(சிறிது)
உள்-உருள் உழ்-சுலுழ் உர் - ——- உது - மருது
துளிரைத் துளுர் என்பது கல்லா மக்கள் உலகு வழக்கு.
ரறவும் தமிழில் ஒரே காலத்துத் தோன்றவில்லை. ர முன்னும் ற பின்னும் தோன்றின. ரகர மெய்யீறு சிலவிடத்து றகரமாகத் திரியும். றகரம் வல்லின மெய்யாதலின், உகரம் ஏறப்பெறும்.
எ.டு. ஒளிர் - ஒளிறு
அர் - அறு : எ.டு. சிதறு
இர் - இறு : எ.டு. குளிறு, வெளிறு
உர் - உறு : எ.டு. குமுறு
நால்வகை யீறுகள்
தனியீறு, கூட்டீறு, திரியீறு, விரியீறு, என ஈறுகள் நால்வகைப் படும். அம் போன்றது தனியீறு; அம்பு (அம்+பு), அம்பம் (அம்+பு+அம்) போன்றவை கூட்டீறு. அன், அல், அள், அழ், அர், அது, அறு என்பனவும் இவற்றிற் கொத்த இகர வுகர முதலீறுகளும் திரியீறு; அக்கு (அகு-அக்கு), அத்து (அது-அத்து) போன்றன விரியீறு.
இவற்றிற்கெடுத்துக் காட்டு வருமாறு :
ஈறு எடுத்துக்காட்டு
அம்-அம்பு புறம்-புறம்பு
அம்-அம்பு-அம்பம் அரம்-அரம்பு-அரம்பம்
அம்பு விள்-விளம்பு
அம்பு-அம்பம் சிலம்பு-சிலம்பம்
அம்பு-அம்பி-அம்பி சிலம்பி
அம்பு-அம்பை கரம்பு-கரம்பை, குடம்பு-குடம்பை
அம்பு-அப்பு வரம்பு-வரப்பு
அப்பு கல் (கல) - கலப்பு
அப்பு - அப்பம் வளப்பு - வளப்பம்
அப்பு - அப்பை படப்பு - படப்பை,
சணப்பு - சணப்பை
அம்-அவ்-அவ-அவை (குறவ) - குறவை
(அவை) - வை கலவை, பார்வை
(அவ்) - அவு உறு-உறவு, செல்-செலவு, வள்- வளவு
(அவு) - வு செல்-செல்வு, வாழ்-வாழ்வு.
வு+அம் செல்வு - செல்வம்
அவு-அவி குளவி, வளவி.
அவி-வி கல்வி, கேள்வி.
அவு-அவம் சொலவு - சொலவம், கதவு - கதவம்
அவம்-வம் வில்வம்
அவு-அவல் கதவு-கதவல்
அவம்-அபம் களவம்-களபம்
அவு-அகு குழவு-குழகு, படவு-படகு, பழகு
அகு-கு வெள்-வெள்கு, பல்-பல்கு.
அகு-அகம் உலகு-உலகம், குடகு-குடகம்.
அகம்-அகை கோளகம்-கோளகை.
அகம்-அபம்
அகு-அகி மிளகு-மிளகி
அகு-அகை பலகை, கொட்டகை, வட்டகை
அகை-கை
அகு-அக்கு பிறகு-பிறக்கு, இலகு-இலக்கு.
பழகு-பழக்கு
அக்கு அரக்கு, இலக்கு (குறி), கணக்கு.
அக்கு-அக்கம் இலக்கு-இலக்கம் (குறி)
அக்கு-அக்கல்
கல் அடக்கல்
அக்கு-அக்கர் இடக்கு-இடக்கர்
அக்கர் அளக்கர்
அக்கு-அக்கை பரக்கை, மசக்கை
அகு-அங்கு இலகு-இலங்கு, பழகு-பழங்கு
அங்கு குரங்கு, விளங்கு, முழங்கு, கறங்கு
அங்கு-அங்கம் அரங்கு-அரங்கம்
அங்கு-அங்கை இலங்கை
அங்கு-அக்கு-அக்கம் விளங்கு-விளக்கு-விளக்கம்
அவு-அபு அளவு-அளபு
அபு-பு போர்பு, சண்பு, வள்பு, வெற்பு, கற்பு
அவு-அப்பு உழவு-உழப்பு
அல்-அது
அது-து கட்டு (கள்+து), வட்டு (வள்+து).
அது-அதம்
அது-அதி மறதி
(அதி)-தி ஊர்தி, வட்டி (வள்+தி)
அது-அதை சிவதை
அதை-தை பெட்டை (பெள் + தை),
வட்டை (வள் + தை)
அது-அத்து வரத்து, கிளத்து
அத்து-அத்தம் விளத்து - விளத்தம்
அத்தம் அரத்தம்
அத்து-அத்தி குடத்தி, இரத்தி, வளர்த்தி
அத்து-அத்தை அரத்தை, குறத்தை
(அதம்)-அரம் விளம்பரம், சப்பரம்
(அரம்)-அரவு தேற்றரவு
அது-அந்து (ஐது) - ஐந்து
அந்து வளந்து
அந்து-அந்தம்
அந்தம் குடந்தம், வலந்தம்
அந்து-அந்தி
அந்தி சிலந்தி
அந்து-அந்தை
அந்தை இலந்தை, குழந்தை, கரந்தை,
கடந்தை.
அது-அசு இளது-இளசு
அசு-சு கஃசு
அசு-அசி (துளவு-துளசு) - துளசி
அசி-சி அரிசி, வல்சி, வெட்சி, கட்சி.
(அசு) - அசம் உப்பசம்
அந்து - அஞ்சு
அஞ்சு கழஞ்சு
அஞ்சு-அஞ்சி
அத்து-அச்சு
அச்சு-அச்சம்
அச்சு-அச்சல்
அச்சு-அச்சி
அச்சு-அச்சை
(அத்து)-அற்று அரற்று
(அல்)-அலம் பொட்டலம், உடல்-உடலம்,
படல்-படலம்.
அல்-அலை சிதல்-சிதலை
அல்-அன்று வரன்று
அலம்-அனம் நடலம்-நடனம், பதலம்-பதனம்.
அனம்-அனை குதனம்-குதனை.
அல்-அள்-அளம் தப்பளம்
அளம்-அணம் சப்பளம்-சப்பணம்
அள்-அளை திரள்-திரளை, கரள்-கரளை
அளை-அணை திரளை-திரணை, கரளை-கரணை
அள்-அண் முரள்-முரண்
அண் அவண், நடுவண்
அண்-அண்டு முரண்-முரண்டு
அண்டு சுறண்டு, பறண்டு
அள்-அடு கரள்-கரடு, திரள்-திரடு
அடு-அட்டு-அட்டி துறடு-துறட்டி
அட்டி குடட்டி
அட்டு-அட்டை குறட்டு-குறட்டை
அட்டை சிரட்டை, பறட்டை
அண்-அணம் அரண்-அரணம்
அனம்-அணம் பட்டனம்-பட்டணம்
அணம் கட்டணம், பொட்டணம்
அணம்-அடம் ஒத்தணம்-ஒத்தடம்
அடம் கட்டடம்
அம்-அன்-அனம் மதம்-மதன்-மதனம்
இங்ஙனமே ஏனையிரு சுட்டடிகட்கும் ஒட்டிக்கொள்க. எடுத்துக்காட்டில்லன இறந்துபட்டன.
இறந்துபட்டிருக்கும் அகரச்சுட்டியீறுகட் கொத்த இகர அல்லது உகரச் சுட்டடியீறுகளுட் சிலபல, இறந்துபடாதிருக்கலாம்.
எ.டு.
இதம்-தப்பிதம் இச்சி-புளிச்சி
இச்சு-வரிச்சு இச்சை-பனிச்சை
இச்சல்-வரிச்சல் இஞ்சி-குறிஞ்சி
இச்சம்-வெளிச்சம்
அகு, அசு, அடு, அது, அபு, அவு, அறு, அக்கு, அச்சு, அட்டு, அத்து, அப்பு, அற்று, அண், அம், அர், அல், அழ், அள், அன் என்னும் ஈறுகளும், இவற்றிற்கொத்த இகரவுகர முதல் வடிவுகளுமே, இன்று முறையே கு, சு, டு, து, பு, வு, று, க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று, ண், ம், ர், ல், ழ், ள், ன் எனத் தோன்றுகின்றன. இவையெல்லாம் உண்மையிற் சுட்டடியினவாகும்.
இங்குக் காட்டப்பட்டுள்ள அன், அள், அர், அது, அவை, அ என்பன பாலீறுகளல்ல; அண், அழ் என்பன போன்று இயல்பான பொதுவீறுகளே.
சில இடப்பெயர்கள் சிலவிடத்துச் சுட்டடியீறுகள் போல் தோன்றும். அவற்றின் வேறுபாடறிதல் வேண்டும்.
எ.டு. சுட்டடியீறு : அகம் - கழகம் என்பதிற்போல் ஒரு
பெயரீறு (அகு + அம்).
இடப்பெயர் : அகம் = மனை, இடம், கல்லகம் =
கல்விச்சாலை (கற்குமிடம்), கன்
மனை, கல்லுள்ள இடம்.
சுட்டடியீறு : இடம்-ஓர் ஈறு. v.L.: கட்டிடம் = மனை
இடப்பெயர் : இடம்-ஒரு பெயர்ச்சொல்.
எ.டு. இருப்பிடம் = இருக்குமிடம்.
கட்டிடம் = கட்டுகின்ற இடம்.
ஓர் ஈறு பல வகையில் தோன்றலாம்.
எ.டு. அவு : இரா-இர-இரவு, செல்-செலவு.
அன் : அம்-அன், அல்-அன்.
அந்து : அம்-அந்து, அது-அந்து, அத்து-அந்து.
பல சொற்களில் லகரம் தகரமாகத் திரிவதாலும், மெல் என்னுஞ் சொல் மெது என்று திரிந்திருப்பதாலும் அது என்னும் சுட்டடியீறு அல் என்பதன் திரிபாகவே கொள்ளப் பட்டது. அஃது என்பது அது எனத் தொக்கதென்று கொள்வதற் கிடமுண்டேனும், அது எனத் தொக்கதென்று கொள்வதற்கிடமுண்டேனும், அது என்பதன் வலி இரட்டிய வடிவமான அத்து என்பது பஃது என்ப தோடொப்ப ஆய்தமிடையிட்ட மறுவடிவு கொண்டதென்பது பொருத்தமாம். மெது மெத்தென்றாயது போல் அது அஃதென்றாயது; பது பத்தென்றாயது. ஆய்தத்தை யடுத்த தகரம், அஃறிணை, கஃறீது, பஃறி, பஃறுளி என்பவற்றிற் போல் றகரமாகத் திரிவதே புணர்ச்சியிலக்கண மாதலால் அஃது, பஃது, என்பவற்றிலுள்ள ஆய்தம் இயல்பான இடையெழுத்தன் றென்றும், தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்ட இடைக்காலத் திரிபென்றும், அறிந்து கொள்க.
சொல்லீறுகள் திரியும்போது, மெலி வலியாகலாம், வலி மெலியாகலாம்.
எ.டு. நீங்கு-நீக்கு, போக்கு-போங்கு.
பல்வகைக் குறிப்புச் சொற்கள்
அச்சம், விரைவு, ஓசை, ஒளி, வண்ணம், அசைவு, ஊறு, முதலிய பல்வேறு பொருள் பற்றிய குறிப்புச் சொற்கள், ஓரொழுங்கு பட்ட ஈறுகளைக் கொண்டிரா விடினும், மக்கள் கருத்தைத் தெளிவாய்ப் புலப்படுத்தற்கு இன்றியமையாதன
வாயிருக்கின்றன.
எ.டு.
அச்சக்குறிப்பு - கபீர். திடுக்கு, துணுக்கு, வெருக்கு.
விரைவுக்குறிப்பு - அவக்கு, குபீல்-குபீர், சரேல்-சரேர், திடும்,
திடீர், படக்கு, புசுக்கு, பொசுக்கு, விசுக்கு, விருட்டு, வெடுக்கு.
ஓசைக்குறிப்பு - கணீர், கிறிச்சு, கீச்சு, சளார், தடால் - தடார், துருட்டு, புளிச்சு, படார், மொலோர்.
ஒளிக்குறிப்பு - பளிச்சு, பளீர், மினுக்கு.
வண்ணக்குறிப்பு - சிவீர், செவேர், வெளேல் - வெளேர்.
அசைவுக்குறிப்பு - கிணுக்கு, கிணுக்கட்டி, சவக்கு, தொதுக்குப் புதுக்கு.
ஊற்றுக்குறிப்பு - கடுக்கு, சுறுக்கு, சுளீர், பரபர, பொதுக்கு, நொளுக்கு, மெதுக்கு.
ஒலிக்குறிப்பில்லாத சொற்களெல்லாம் இயற்சொற்களல்ல; ஈறு பெற்ற திரிசொற்களே.
எ.டு. மின்-மினுக்கு, மெலு-மெலுக்கு, பள்-பளிச்சு, வெள்-வெளேர்.
வலியிரட்டல்
எ.டு. பகு - பக்கம், பேசு - பேச்சு, நெடு - நெட்டை, கருது - கருத்து, குறு - குற்றம், குற்றி, நெறு நெற்றி.
எழுத்திரட்டல் (Germination or Doubling of Consonants) என்னும் சொல்லமைதி, ஆரிய மொழிக் குடும்பக் கிளைகளும் ஐரோப்பாவின் வடமேலைக் கோடியிலுள்ளதும், ஆங்கிலத்தை உள்ளிட்டதுமான, தியூத்தானியத்திற்கே சிறப்பானதென்று (இ)ரிச்சார்டு மாரிசு கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.
தனிக்குறிலையடுத்த மெய் உயிரோடு புணரும்போது இரட்டுவது, தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் பொதுவாம்.
எ.டு. தமிழ் - கண் + இ = கண்ணி, கொள் + ஐ = கொள்ளை, இல் + அம் = இல்லம், இன் + உம் = இன்னும்.
E. thin + er = thinner, sit + ing = sitting.
பல்வகைத் திரி சொற்கள்
விள்
விள் - விள, விளத்து, விளம்பு.
விள் - விடு - விடர், விடை, விடுதி, விடல்.
விள் - விர் - விரி, விரிவு, விரல், விரிப்பு.
விள் - வில் - வியன். (ல்)
விளர் - விளா, விள, விளவு, விளவம், விளத்தி
விள் - விண் - வீண் - வீண்பு - வீம்பு, வீணி
வெள் வெள்ளம் வெள்ளந்தி
வெள்ளி வெள்ளில் வெள்ளென வெள்ளை
வெளி வெளிச்சம் வெளிச்சி வெளில்
வெளிறுவெளு, ப்பு வெடி
வெடி - விடி - விடிச்சி - விரிச்சி
விடியல் - வெடிச்சி - ளி
வெண் வெட்டம் வெட்டி வெட்டை
வெட்டு வேட்டு வேட்டி
வெறு வெற்று வெறி வெறிச்சு
வறு வறுமை வறியன்
போலி (INTERCHANGE OF LETTERS)
ஒரு சொல்லில், ஓரிடத்தில், ஒரு தனியெழுத்திற்கு அல்லது இணையெழுத்திற்குப் பகரமாக (பதிலாக) முறையே மற்றொரு தனியெழுத்து அல்லது இணையெழுத்து வந்து, பொருள் மாறா திருப்பது போலியாம். போலிருப்பது போலி. போலுதல் - ஒத்தல். இடம் நோக்கி, முதற்போலி, இடைப் போலி, கடைப் போலி எனப் போலி மூவகைப்படும்.
எ.டு. முதற்போலி : நாயிறு - ஞாயிறு, மடலி - வடலி;
இடைப்போலி : குடவன் - குசவன் - குயவன்;
நெயவு : நெசவு, அரசு - அரைசு, நீந்து - நீஞ்சு;
கடைப்போலி : கடம் - கடன், கூதல் - கூதர்.
பொருள் மாறாதிருக்கும் போலியால், செய்யுளில் எதுகை யமைப்பிற்கன்றி மொழிவளர்ச்சிக்கிடமில்லை. ஆயின் போலி முறையைத் தழுவிப் பொருள் வேறுபடும் சொற்கள் மொழியை மிக வளம்படுத்தும்.
எ.டு. : தருக்கு - செருக்கு, பகு-வகு, மீறு-வீறு, கதலி-கசளி, குழல்- குடல், பழம்-பயம்-பயன், வாயில்-வாசல், மொத்தை-மொச்சை, இடம்-இடன், நாளி-நாழி, நாளி-நாடி.
இலக்கணப்போலி (METATHESLS)
ஒரு தனிச்சொல்லின் எழுத்துக்களும் ஒரு கூட்டுச் சொல்லின் உறுப்புக்கள் அல்லது உறுப்புச்சொற்களும், முன்பின்னாக முறை மாறி வரின் இலக்கணப் போலி எனப்படும்.
எ.டு. தனிச்சொல் அலரி-அரளி, கொப்புளம் -
பொக்குளம், சதை-தசை, ஞிமிறு-மிஞிறு
விசிறி-சிவிறி.
கூட்டுச்சொல்
இல்வாய் - வாயில், இல்முன்று - மூன்றில் - முற்றம், கதுவாலி - கவுதாரி தானைமுன் - முன்றானை.
மூவகைச் சொற்கிடக்கை
தனிச்சொல், கூட்டுச்சொல், தொடர்ச்சொல் எனச் சொற்கிடக்கை மூவகைப்படும். அவை முறையே ஒரு சொல்லும் இரு சொல்லும் இரண்டிற்கு மேற்பட்ட பல சொல்லுமாகும்.
எ.டு. நிலம், தண்ணீர், செங்கால் நாரை, வடிம்பலம்ப நின்ற பாண்டியன்.
கூட்டுச்சொல் வகைகள்
1. இரட்டைக்கிளவி எ.டு. கலகல, விருவிரு
2. இரட்டித்த சொல் எ.டு. செக்கச் செவேர், சின்னஞ்சிறு
3. அடுக்குத் தொடர் எ.டு. பலபல, திரும்பத் திரும்ப
4. மீமிசைச் சொல் எ.டு. கன்றுக்குட்டி, ஓங்கியுயர்ந்த
5. இரு பெயரொட்டு எ.டு குமரிமலை, மக்கட்செல்வம்
6. மிகவுச்சொல் எ.டு. ஆண்மகன், பெண் பெண்டாட்டி
7. முரண்படுசொல் எ.டு. பெண்மகள், பெட்டைப் பசன்கள்
8. இணைமொழி எ.டு. காய்கறி, வாழ்வு தாழ்வு
9. அடைபெற்ற சொல் எ.டு. நன்செய், தலைக்கழகம்
10. கிளவியம்
(எச்சத்தொடர்) எ.டு. ஆட்சி மாறி, இந்தியொழியின்
11. தொடரியம் எ.டு. தமிழ் வாழும், தமிழன் உயர்வான் (முற்றுத்தொடர்)
அடுக்குத்தொடர் ஒற்றிடை மிக்கும் திரிந்தும் தொக்கும் வரும்.
எ.டு. பலப்பல, பற்பல, மென்மேலும், நந்நான்கு, வெவ்வேறு, சில சொற்கள் தனிச்சொற்கும் கூட்டுச்சொற்கும் பொதுவாயிருக்கும்.
ஒரு பொருள் தந்து ஒரு சொல்லாயும் இருபொருள் தந்து இரு சொல்லாயும் இருப்பது பொதுச்சொல்.
அளித்தேன் = தந்தேன் (ஒருசொல்), வண்டுத்தேன் (இருசொல்).
செய்வோன் = புரிவான் (ஒருசொல்), செயற்கை மழை (இருசொல்).
தொடர்ச்சொல் வகைகள்
1. அடுக்குக்கிளவி எ.டு. குடுகுடுகுடு
2. மீமிசைச்சொல் எ.டு. முதுபழந்தொன் (மொழி)
3. அடுக்குத்தொடர் எ.டு. தீத்தீத்தீ
4. மிகவுச்சொல் எ.டு. அரைஞாண்கயிறு, பெண்
பிள்ளைப் பிள்ளை
5. அடைபெற்றசொல் எ.டு. தூங்கெயிலெறிந்த, தொடித்தோட்
செம்பியன், மதுரைக்
கணக்காயனார் மகனார் நக்கீரர்
6. கிளவியம் எ.டு. தமிழன் உரிமைபெற வேண்டின்
7. தொடரியம் எ.டு. இந்திய அரசியற் சட்டத்தை
மாற்றியமைத்தல் வேண்டும்
பொருட்கேற்ற ஒலியமைப்பு
பொதுவாக, மெல்லோசைச் சொற்கள் செயலின் மென்மையையும் வல்லோசைச் சொற்கள் செயலின் வன்மையையும், உணர்த்தும்.
எ.டு. குத்துதல் = சதையுள்ள இடத்தில் முட்டியால் அல்லது கத்தியால் தாக்குதல். குட்டுதல் = வன்மையான மண்டையில் முட்டியால் தாக்குதல்.
முத்துதல் = முகத்தோடு அல்லது வேறுறுப்பொடு முகம் மெல்லப் பொருந்துதல். முட்டுதல் = மண்டையொடு மண்டை இடித்தல்.
அரிதல் = சிறிதாய் நறுக்குதல். அறுத்தல் = பெரிதாய் நறுக்குதல். அரிவது அரிவாள்; அறுப்பது அறுவாள்.
கறித்தல் = கன்று இளம்புல்லை மெதுவாய்க் கடித்தல்.
கடித்தல் = பெரிதான விலங்கு முதிர்ந்த பயிரை வலிதாகக் கடித்தல்.
சன்னம் = மெல்லியது. திண்ணம் = திரண்டது.
குஞ்சு = மெல்லிதான இளம்பறவை. குச்சு = வல்லிதான சிறுகோல்.
திண்டு = மெல்லிய பஞ்சணை. திட்டு = வன்னிலமான சிறுமேடு.
கருப்பு = இயல்பான கருநிறம். கறுப்பு = சினத்தால் அல்லது முதிர்ச்சியால் நேரும் இருண்ட நிறம்.
மரூஉ
சில தனிச்சொற்களும் கூட்டுச்சொற்களும் தொடர்ச் சொற்களும் வழக்காற்றில் மருவி, அதாவது இலக்கணியரால் ஒப்புக் கொள்ளப் பெறும் வகையில் குறுகியும் திரிந்தும், வழங்குகின்றன.
எ.டு.
தனிச்சொல்
எலும்பு - என்பு, தென்கு - தெங்கு, நடுவண் - நாப்பண், நெருதல், நெருநற்று - நேற்று, பகுதி - பாதி, பெயர் - பேர், பெருமகன் - பெருமான் - பெம்மான், பிரான்; பொழுது - போழ்து, போது, யானை - ஆனை, வியர் - வேர்.
கூட்டுச்சொல்
அரையுழக்கு - ஆழாக்கு, கொண்டுவா - கொண்டா - கொணா - கொணர், சுமையடை - சுமடு - சும்மாடு, சோழ நாடு - சோணாடு, தெங்கங்காய் - தேங்காய், புகவிடு - புகட்டு - போட்டு - புழைக்கை - பூழ்க்கை - பூட்கை, போகவிடு - போகடு - போடு, வரையாடு - வருடை, மார்யாப்பு - மாராப்பு, முகக்கூடு - முக்காடு.
தொடர்ச்சொல்
அருமருந்தன்ன - அருமாந்த - அருமந்த.
கரிவலம் வந்த நல்லூர் - கருவை.
பூட்கை, போடு என்பனபோன்ற சொற்கள், மூல நிலையில் கூட்டுச் சொல்லாயினும், மரூஉ நிலையில் ஒரு சொற்போல் நின்று ஒரேபொருள் தருதலால், தனிச் சொல்லாகவே கொள்ளப்படும்.
முன்னொட்டுக்களும் அடைகளும் (Prefixes and Epithets)
பொருள் முன்னொட்டு எடுத்துக்காட்டு
காலமும் முன், பின், உடன் முன்னேறு, பின்வாங்கு
இடமும் உடன்படு
மூவிடம் எம், உம்(நும்), தம் எம்பி, உம்பி(நும்பி) தம்பி
சிறுமை அரி அரிநெல்லி, அரிக்குரல்
அரிசி அரிசிப்பல், அரிசிக்களா
அரை அரைத்தவளை
உமி உமித்தூறல்
ஊசி ஊசிமிளகாய், ஊசித் தொண்டை,
ஊசிவெடி
எலி எலியாமணக்கு
கண் கண்விறகு
கதலி கதலிவாழை
கிளி கிளியஞ்சிட்டி, கிளிவாய்தல்
குட்டி குட்டித்தக்காளி, குட்டிப்பல்
குருவி குருவித்தலை, குருவித்தேங்காய்
குள்ளம் குள்ளநரி
குறு குறுநொய், குற்றில் - குச்சில்
கை கைக்குட்டை, கைந்நாழி
சல்லி சல்லிவேர், சல்லிக்காசு
சிட்டு சிட்டுக்குருவி
சில் சில்லுக்கருப்புக்கட்டி
சிறியாள் சிறியாள் நங்கை
சிறு சிறுமணி, சிற்றெறும்பு
சின்ன சின்னம்மை, சின்னச்சம்பா
சீனி சீனிமிளகாய், சீனிவெடி, சீனியவரை
சுண்டு சுண்டுவிரல், சுண்டெலி
திட்டு திட்டிவாசல்
துண்டு துண்டுவெளியீடு
நண்டு நண்டுவண்டி
நரம்பு நரம்புச்சிலந்தி
நரி நரிக்கெளிறு, நரிப்பயறு
நாழி நாழிக்கிணறு
பிட்டு பிட்டுக்கருப்புக்கட்டி
பிழுக்கை பிழுக்கைமாணி
பிள்ளை பிள்ளைக்கிணறு, பிள்ளைக் கோட்டை
பூ பூஞ்சிட்டு, பூங்குறடு
பூச்சி பூச்சிமுள்
பூனை பூனைக்காஞ்சொறி
பொட்டு பெட்டிக்கடை
பொட்டு பொட்டுப்பூச்சி
பொடி பொடியிழைப்புளி
மணி மணிக்குடல், மணித்தக்காளி
குறுமை
கட்டை கட்டைவிரல், கட்டைமண்
குட்டை குட்டைப்புடல்
குள்ளம் குள்ளக்கத்தரி
குறள் குறளடி, குறள்வெண்பா
குறு குறுங்கணக்கு
கூழை கூழைவால்
துட்டு துட்டுத்தடி
தட்டு தட்டுக்கூடை
பள்ளை பள்ளையாடு
பருமை (பெருமை)
ஆனை ஆனைநெருஞ்சில், ஆனைவெடி,
ஆனைக்குவளை
எருமை எருமைத்தக்காளி
கட்டு கட்டெறும்பு
கட்டை கட்டை விறகு
கண்டை கண்டை மணி
கடா கடாநாரத்தை
கழு கழுமுரடு
கொட்டை கொட்டையெழுத்து
கோ கோக்கதவு
சட்டி சட்டித்தலை
தடி தடிவழி (Trunk road)
தாழி தாழிப்பனை, தாழிவயிறு
நல் நன்கொடை (பெருங் கொடை)
பரவை பரவைச் சட்டி
பரு பருநன்னாரி, பருமணல்
பாம்பு பாம்புமுள்
பூதம் பூதக்கால்
பெரு பெரு நாரை, பேரகத்தி
பெருத்த பெருத்த எலி - பெருச்சாளி
பேழ் பேழ்வாய்
பொத்தை பொத்தை மிளகாய்
பொந்த பொந்தந்தடி
போந்தான் போந்தான் கோழி
போந்தி போந்திக் கால்
மலை மலையிலக்கு, மலம் பூண்டு
மாடு மாட்டுப்பல்
மிடா மிடாத்தவளை
முழு முழுமுதல்
மொக்கை மொக்கைச்சோளம் - மக்காச் சோளம்
மொங்கான் மொங்கான் தவளை
மொந்தன் மொந்தன் வாழை
மோடு மோட்டெருமை
விழு விழுத்தண்டு
சிறுபருமை குதிரை குதிரைவெடி
நெடுமை ஒட்டகம் ஒட்டகச்சிவிங்கி
நாரை நாரைக் கொம்பன்
நெட்டை நெட்டை நாரத்தை
நெடு நெடுங் கணக்கு
பனை பனங்கோரை
இளமை இள இளநீர், இளவேனில்
கன்னி கன்னிக்கோழி
குமரி குமரிவாழை
குஞ்சி குஞ்சி யாச்சி
குட்டி குட்டியப்பன்
சிறிய சிறியதாய்
சிறு சிறுகாலை, சிறுபிள்ளை
சின்ன சின்னப்பாட்டி
நுழாய் நுழாய்ப் பாக்கு
நொரு நொருப்பிஞ்சு
பச்சை பச்சைப்பிள்ளை
பசு பசுங்காய், பசுங்குழவி
பிள்ளை பிள்ளையாண்டான், பிள்ளைப் பிறை
பூ பூம்பிஞ்சு, பூங்குஞ்சு
பை பைஞ்கூழ்
முட்டு முட்டுக்குரும்பை
அழியாமை கன்னி கன்னித்தமிழ்
குமரி குமரிமதில்
மென்மை நொய் நொய்யம்மை
பட்டு பட்டுப் பருத்தி
புன் புன்சிரிப்பு
பூ பூங்கோரை
பூனை பூனை மயிர்
வன்மை இரும்பு இருப்பு நெஞ்சு
கட்டு கட்டுடம்பு
கடு கடுக்காய்
கல் கல்மூங்கில், கன்மனம்
கள்ளம் கள்ளப் பயறு
காடு காட்டுத்தனம்
கெட்டி கெட்டிக்கம்பி
முரடு முரட்டுக் கம்பளி, முரட்டுப் பெண்
நன்மை செம் செங்கோல்
நல்ல நல்ல தண்ணீர்
நல் நல்வினை, நன்பொருள் நற்செய்தி
ந நக்கீரன், நப்பசலை, நச்செள்ளை
நறு நறுமணம்
இனிமை இன் இன்சொல்
சருக்கரை சருக்கரை வள்ளி
சீனி சீனிக்கிழங்கு
தேன்-தேம் தேன்கதலி, தேங்குழல், தேமா
தேம்-தீம் தீங்கனி, தீஞ்சுவை, தீந்தமிழ், தீம்புளி
தீமை கடு கடும்புலி, கடுஞ்சொல்
கொடு கொடுங்கோல், கொடும்பாடு
தீ தீவினை, தீக்கனா
நஞ்சு நச்சுக்காற்று, நச்சுக் காய்ச்சல்
படு படுகொலை, படுகாலி - படுக்காளி (மாடு)
பேய் பேய்நாய், பேய்வெள்ளரி
அழகு அணி அணியொட்டிக்கால்
அம் அங்கயற்கண்ணி
அழகு அழகு தேமல்
தங்கம் தங்கமேனி
பூ பூஞ்செடி
பொன் பொன்வண்டு
மணி மணிமாடம், மணிவாசல்
சிறப்பு அரசு அரசமருத்துவம்
ஆணி ஆணிமுத்து
குலம் (சாதி) குலமகள், குலக்கோழி
செம் செந்தமிழ்
தங்கம் தங்கக்குணம், தங்கத்துரை
நல் நல்லம்மான், நற்றாய்
நல்ல நல்லவேம்பு
பொன் பொற்காலம்
மணி மணிப்பயல்
மாணிக்கம் மாணிக்கவாசகம்
முத்து முத்துமழை, முத்துவிலை
வீடு வீட்டுப்பெண்டாட்டி (மனைவி)
தலைமை அரசு அரசப்பிளவை
கோ கோப்பெருந்தேவி கோநாய்-ஓநாய்
தலை தலைமகன்
நாயகம் நாயகப்பத்தி, நாயகத் தொங்கல்
பெரிய பெரியதனக்காரன்
மேல்நிலை தலைமை தலைமையாசிரியர்
பெரு பெருந்தரம், பெரும்பாணர்
பெரிய பெரிய மூப்பன், பெரிய பட்டம், பெரிய
திருவடி
முது முதுகண், முதுகண்ணன்
துணைமை கீழ்நிலை
இள இளங்கண்ணன், இளங்கேள்வி
குட்டி குட்டிமணியம், குட்டித்தம்பிரான்
சிறு சிறுபாணர், சிறுதரம்
சிறிய சிறியதிருவடி
சின்ன சின்ன மூப்பன், சின்னப்பட்டம்
முன்மை அடி அடிநாள்
கன்னி கன்னிவேட்டம்
தலை தலைப்பிள்ளை, தலைக்கழகம்
புது புதுப்பெயல்
தாழ்வு கட்டை கட்டைப்பொன், கட்டைக்குரல்
கழுதை கழுதைப் பொன்வண்டு, கழுதைமொச்சை
காக்கை(கருமை) காக்கைச்சோளம் காக்கைப்பிசின்
காடு காட்டுப்பெண்டாட்டி (வைப்பு),
காட்டுமுருங்கை
கொடு கொடுந்தமிழ்
சின்ன சின்னப்பயல், சின்னக்குலம்
தக்கு தக்குத்தொண்டை
நாடு நாட்டுத்தட்டு
நாய் நாய்வேம்பு, நாய்வேளை
பரு பருவேலை
பன்றி பன்றிவாகை
பீ பீக்கருவேல், பீக்காக்கை
புல் புன்செய்
தாழ்வு போலி போலிப்பட்டு
போன்றான்
போஞ்சான் போஞ்சான்வேலை
மட்டம் மட்டக்குதிரை, மட்டப்பொன்
மட்டி மட்டித்தையல்
மட்டை மட்டையரிசி
மடையன் மடையன் சுராலை (சாம்பிராணி)
மண் மண்பாக்கு
இழிவு கொச்சை கொச்சைத் தமிழ்
சிறு சிறுநீர்
பட்டி பட்டிமகன்
பச்சை பச்சைப்பொய்
வண்டை வண்டைப்பேச்சு
தூய்மை தனி தனித்தமிழ்
தூ தூமலர்
பச்சை பச்சைமலையாளம்
வால் வாலறிவு
வெள் வெண்பா
வெள்ளை வெள்ளை மனம்
தெய்வத்தன்மை திரு திருமால், திருநாவுக்கரசு, திருக்குறள்,
திருநீறு, திருவரங்கம்
தே தேவாரம்
தமிழகத்தில் பிறப்போடு தொடர்புடைய ஆரியக்குலப் பிரிவினை ஏற்பட்டபின், பொன்னிற உயிரிகள் பார்ப்பார என்றும், கருநிற வுயிரிகள் பறை என்றும், அடை பெற்றுள்ளன.
எ.டு. பார்ப்பார நாகம், பறை நாகம்.
சில பொருள்களின் சிறப்பியல்பைக் காட்டும் அடைமொழி, அப்பொருள்களைச் சிறப்பாகக் கையாளும் வகுப்பாரின் பெயராகும்.
எ.டு. குறவன் போகணி = பெரிய போகணி அரச மருத்துவம் = அரசருக்குச் செய்யும் விலக்கூணில்லா மருத்துவம்.
சில கருவிப்பெயர்களின் அடைமொழி, அக்கருவியாற் செய்யப்படும் அல்லது செப்பஞ் செய்யப்படும் பொருளின் பெயராகும்.
எ.டு. கோணியூசி = பெரியவூசி.
பின்னொட்டுக்களும் ஈறுகளும் (Suffixes)
பொருள் பின்னொட்டு எடுத்துக்காட்டு
சிறுமை இல் குடி- குடில், தொட்டி - தொட்டில்,
முறம் - முற்றில் - முச்சில்
கை கன்னி - கன்னிகை, குடி - குடிகை -
குடிசை
பெருமை அம் கம்பு - கம்பம், விளக்கு - விளக்கம்,
மதி - மதியம் (முழுநிலா), நிலை -
நிலையம்
இடம் ஆரம் கொட்டாரம், பண்டாரம் (பண்ட
சாலை), வட்டாரம்
இறையிலி புறம் அடிசிற்புறம், அறப்புறம்,
நிலம் புதுக்குப்புறம்
புணர்ச்சி
இருசொற் புணர்வது புணர்ச்சி. மொழி பொதுமக்களால் ஆக்கப் பெற்றதாகலின், அதன் புணர்ச்சியும் அவரது அமைப்பே, கவனித் தறியப்பெறாது ஏற்கெனவேயிருந்த சொற்கட்டு நெறிமுறை களையே, புணர்ச்சி நெறிமொழிகள் (விதிகள்) என எடுத்துக் கூறினர் இலக்கணியர், இயல்புப் புணர்ச்சி, திரிபுப்புணர்ச்சி எனப் புணர்ச்சி இரு வகைப்படும். ஒருவகை வேறுபாடுமின்றி இயல்பா யிருப்பது இயல்புப் புணர்ச்சி, ஏதேனுமொரு வகையில் திரிவது திரிபுப் புணர்ச்சி, திரிதல் வேறுபடுதல். அது தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும். முன்னில்லாத எழுத்தோ அசையோ தோன்றுவது தோன்றல்; ஓரெழுத்து மற்றோரெழுத்தாக மாறுவது திரிதல்; முன்னுள்ள எழுத்தோ அசையோ மறைவது கெடுதல்.
புணர்ச்சியிற் புதிதாய்த் தோன்றும் அசை, இரு சொற்களை அல்லது ஒரு சொல்லையும் ஒரு சொல் உறுப்பையும் சார்ந்து நின்று இயைப்பதால் (இசைப்பதால்), சாரியை எனப்படும்.
இயல்புப்புணர்ச்சி
சாத்தன் + வந்தான் = சாத்தன் வந்தான்
நல்ல + பையன் = நல்ல பையன்
பால் + இனிது = பாலினிது
மெய்யோடு உயிர் சேரின் உயிர்மெய்யாம். இது இயல்பே.
வேற்றுமை : 1,8
பெ-எ. - க.கா. நி. கா. அகரவீற்றுக் குறிப்பு.
வி. எ. - இ. கா.
திரிபுப் புணர்ச்சி
தோன்றல் : (Insertion)
வாழை + காய் = வாழைக்காய்
அவரை + பந்தல் = அவரைப்பந்தல்
களா + பழம் = களாப்பழம், களாம்பழம்
பூ + செடி = பூச்செடி (பூக்கும் செடி)
… … … = பூஞ்செடி (அழகிய செடி)
பணத்தை + கொடு = பணத்தைக் கொடு
ஊருக்கு + போ = ஊருக்குப் போ
வர + சொல் = வரச்சொல்
இ + நாள் = இந்நாள்
வெள் + ஆடு = வெள்ளாடு
நாடு + ஆண்மை = நாட்டாண்மை
வேற்றுமை - 2, 4
பெ. எ. - அகர வீற்று
இரட்டல்
குறிலடுத்தமெய் + உயிர் குறிலடுத்த வல்லின மெய்யேறிய உகாம் + உயிர்
எ.டு. குறு, சிறு புது, நெடு, உறு, வேற்றுமை.
இவை எழுத்துத் தோன்றல்
செக்கார் + குடி = செக்காரக்குடி சாரியையும் எழுத்தும்
புளி + பழம் = புளியம் பழம்
கண் + பொத்தி = கண்ணாம்பொத்தி சாரியையும் இரட்டலும்
இவை சாரியை தோன்றல்.
திரிதல் (Mutation)
நல் + செய் = நன்செய்
வெள் + கலம் = வெண்கலம்
செம் + தாமரை = செந்தாமரை
வெம் + நீர் = வெந்நீர்
வேம்பு + இலை = வேப்பிலை
தண் + நீர் = தண்ணீர்
உள் + நாக்கு = உண்ணாக்கு
கல் + தாழை = கற்றாழை
நல் + நிலம் = நன்னிலம்
உள் + து = உண்டு, ஈன் + து = ஈற்று.
இவை திரிதல்,
கெடுதல் (Omission) or Elision
மகர வீற்றுப்பெயர் பெயரைத் தழுவல்
மரம் + வேர் = மரவேர்
தொல்காப்பியம் + நூல் = தொல்காப்பிய நூல் இவை கெடுதல்.
அன்று + கூலி = அற்றைக்கூலி
மண் + கட்டி = மண்ணாங்கட்டி
இவை தோன்றலும் திரிதலும்.
பட்டினம் = பிள்ளையார் = பட்டினத்துப் பிள்ளையார்
நகரம் + ஆன் = நகரத்தான்
இவை தோன்றலும் கெடுதலும்
வேம்பு + காய் = வேப்பங்காய்
பனை + தோப்பு = பனந்தோப்பு
இவை தோன்றலும் திரிதலும் கெடுதலும்.
மரூஉப்புணர்ச்சி
சில சொற்கள் ஒலிநெறிப்படி ஒழுங்காய்ப் புணராது மருவிப்புணரும், அப்புணர்ச்சி மரூஉப்புணர்ச்சியாம். மருவுதல் நெறி திறம்புதல்.
எ.டு. ஆதன் + தா = (ஆந்தா) - ஆந்தை
அகம் + கை = அங்கை
நாழி + உரி = நாழுரி - நாடுரி
மக + கள் = மக்கள்
உள்ளங்கை (உள் + அங்கை) என்பது அங்கையின் நடுப்பகுதி. இதில் அம் என்பது சாரியையன்று.
எந்தை, தந்தை என்பன மரூஉப்புணர்ச்சியல்ல; இவை எம் + தா, தம் + தா எனப் பிரியும், தா என்பது தந்தையைக் குறிக்கும் பெயர்ச்சொல்.
தா + தா = தாதா - தாதை (தந்தையின் தந்தை) - இயல்புப் புணர்ச்சி
… … … = தாத்தா (தந்தையின் தந்தை) - திரிபுப்புணர்ச்சி.
தாதை என்பதிற் போன்றே, எந்தை, தந்தை, ஆந்தை, பூந்தை என்பவற்றிலும் தை என்பது தா என்பதன் திரிபாகும்.
ஒ.நோ. எம்பி(ன்) எங்கை எவ்வை எம்முன் எந்தை
நும்பி(ன்) நுங்கை நுவ்வை நும்முன் நுந்தை
தம்பி(ன்) தங்கை தவ்வை தம்முன் தந்தை
எம்பின் = எமக்குப் பின் பிறந்தான். கை = தங்கை (பிங்.). இளங்கிளை எங்கை = எமக்குச் சிறியவள். எம் + அவ்வை = எவ்வை. இதில் அவ்வை என்னும் அன்னையின் பெயர் அன்னை போலும் அக்கையைக் குறித்தது. இச்சொல் சில பழஞ்செய்யுட் களில் தங்கையைக் குறிப்பது. காதல் பற்றிய மரபு வழுவமைதி யென அறிக. என் நந்தை, என் தம்பி, என் தங்கை என்பன வெல்லாம் வழக்குப் பற்றிய இடவழுவமைதியே,
எமப்பன் நுமப்பன் தமப்பன் - தகப்பன்
எமக்கை நுமக்கை தமக்கை
எமையன் நுமையன் தமையன்
கார்காலம், வடகோடு, கோவூர்கிழார், நாடுகிழவோன் எனச் செய்யுள் வழக்கிலும், கேடுசாலம், வேறுகாலம், விறகு தலையன், விறகு காடு, வடகரை, மழைகாலம் என உலக வழக்கிலும், வலிமிகாது வழங்குவதாலும்; நான்கு, வெட்கு என்னும் திரிபு வடிவுகளுடன் நால்கு, வெல்கு என்னும் இயல்பு வடிவுகளும் வழங்கி வருவதாலும்; பல்கு, பல்பொருள், சில்கால், வல்சி, வல்பு எனச் சில சொற்கள் என்றும் இயல்பாகவே யிருப்பதனாலும்; முதற்காலத்தில் தோன்றல் திரிதல் புணர்ச்சி அத்துணைக் கண்டிப்பாயிருந்த தில்லையென உய்த்துணரலாம்.
மூவகைப் புணர்ச்சியும் ஒலியிசைவை மட்டுமன்றி, இரு பொருட் கிடைப்பட்ட நெருங்கிய தொடர்பையும் உணர்த்துதல் காண்க.
அவரை x துவரை
வாழை x தாழை
புன்னை x தென்னை
விளா x பலா, தளா
ஓரியலமைப்பு (Uniformity of Words)
ஒருதுறைப்பட்ட சொற்களையெல்லாம், முதலோ ஈறோ எதுகையோ பற்றி ஒத்தவடிவாக்குவது ஓரியலமைப்பாம்.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, தொண்டு (ஒன்பது), பத்து, நூறு என்னும் முதற்காலத்து எண்ணுப் பெயர் களெல்லாம் உகரத்தில் இறுதல் காண்க.
தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்னும் திசைப்பெயர்களும் அங்ஙனமே.
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, என்னும் பெண்பாற் பருவப் பெயர்கள் ஐகாரத்தில் இறுகின்றன.
அதோ, அந்த, அவன், அவள், அவர், அது, அவை, அம்பர், அங்கு, அவண், அதோள் - அதோளி.
இதோ, இந்த, இவன், இவள், இவர், இது, இவை, இம்பர், இங்கு, இவண், இதோள் - இதோளி.
உதோ, உந்த, உவன், உவள், உவர், உது, உவை, உம்பர், உங்கு, உவண், உதோள் - உதோளி.
எதோ, எந்த, எவன், எவள், எவர், எது, எவை, எம்பர், எங்கு, எவண், எதோள் - எதோளி.
இத்தகைய ஓரியலொழுங்குபட்ட சுட்டு வினாச் சொற்கள் வேறெம் மொழியிலும் இல்லை. அதா, அந்தா, அன்னா, அன்ன முதலிய சொற்கட்கும் இங்ஙனமே ஒட்டிக்கொள்க.
ஒப்புமை யமைப்பு (ANALOGY)
ஒரு சொல்லின் எதுகை வடிவில் இன்னொரு சொல்லை அமைப்பது ஒப்புமை யமைப்பாம்.
எதிர்மறைச் சொற்கள் :
இயற்கை என்னும் சொல்லமைப்பைப் பின்பற்றி, செயல் என்னும் தொழிற்பெயரோடு கை யீறு சேர்த்துச் செயற்கை என்றமைத்தது ஒப்புமை யமைப்பே. ஏனையெடுத்துக் காட்டுகள் வருமாறு :
அறம், மறம், இறப்பு, பிறப்பு; இதை (புதுக்கொல்லை), முதை (பழங்கொல்லை); இணங்கு, பிணங்கு; இன்பு (இன்பம்), துன்பு (துன்பம்); குற்றம், நற்றம்; சிறு, பெரு; சிற்று, பெற்று (பெரியது), சின்னஞ்சிறிய பென்னம்பெரிய; தாய், சேய், தெருள், மருள்; நலம்; பொலம்; நன்செய், புன்செய்; நாடு, காடு; பேரடி, சீறடி, நாட்டம், பாட்டம்; முந்து, பிந்து.
இனப்பொருட் சொற்கள்;
நாற்றிசைக் காற்றுப் பெயர்களுள், வாடை கோடை என்பவும் கொண்டல் தென்றல் என்பவும் ஒப்புமை யமைப்பாம்.
ஒருபொருட் சொற்கள் :
கொற்றம், வெற்றம்.
தொடர்பற்ற சொற்கள் :
விடை - விடலை, கடை - கடலை, தொடை - தொடலை, முடை - முடலை; ஐ - (ஐந்து) அஞ்சு, பை - பஞ்சு, மை - மஞ்சு, நை - நஞ்சு. (நற்றிணை 353).
நானிலக் கருப்பொருட் சொற்கள்
நிலைத்திணை (தாவரம்), இயங்குதிணை (சங்கமம்) என்னும் இரு வகுப்புயிரிகளுள், சில பல ஒவ்வொரு நிலத்திற்கும் சிறப்பாக உரியனவாகும். முந்தியல் தமிழர் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்திருந்த போதே, மூவிடச் சுட்டுப் பெயர், வினாப் பெயர், முறைப்பெயர், வண்ணமும் வடிவும் அளவும் சுவையும் ஊறும் பற்றிய குணப்பெயர், இன்றியமையாத வினைச்சொற்கள் முதலிய அடிப்படைத் தமிழ்ச் சொற்கள் அமைந்துவிட்டன. பயிர் பச்சை, விலங்கு பறவை, உணவு வகை, தொழில் முறை, கருவி படைக்கலம், பழக்க வழக்கம், கொள்கை கோட்பாடு, குடியிருப்பிடம் முதலிய பல்வேறு கருப்பொருள்கள் பற்றிய சொற்களும் தோன்றிவிட்டன. அதன்பின் குறிஞ்சியடுத்த முல்லை நிலத்திற்குப் பரவியபோது, அந்நிலத்திற்குச் சிறப்பாகவுரிய கருப்பொருள்கள் பற்றிய சொற்கள் பிறந்தன. அதன்பின் முல்லையடுத்த மருதநிலத்திற்குப் பரவிய போது, அந்நிலத்திற்குச் சிறப்பாகவுரிய கருப் பொருள்கள் பற்றிய சொற்கள் தோன்றின. அதன்பின், மருதத்தையடுத்த நெய்தல் நிலத்திற்கு மருத நகர் மீன்பிடியாளர் குடியேறி வாழ்ந்த போது, அந்நிலத்திற்குச் சிறப்பாகவுரிய கருப்பொருள்கள் பற்றிய
சொற்கள் எழுந்தன.
குறிஞ்சியும் முல்லையும் முதுவேனிலில் வறண்டநிலையே பாலை யாதலின், அந்நிலத்துப் பிற்காலத் துண்டான சொற்களெல்லாம் தொழிலும் கருவியும் பழக்க வழக்கமும் கொள்கையும் பற்றியனவே.
குறிஞ்சியடுத்தும் முல்லையடுத்தும் நெய்தலிருக்கவுங் கூடுமாயினும், குமரிக் கண்டத் தமிழர் குறிஞ்சியினின்று ஆற்றையொட்டியே படிப்படியாகப் பரவியதாகத் தெரிவதால், மருத நிலைக்குப் பின்பே நெய்தல் சென்றிருத்தல் வேண்டும். முதற்கால மாந்தர் செயற்கை நீர்நிலை அமைக்கத்
தெரியாதிருந்த காலத்தில் இயற்கை நீர்நிலையான ஆற்றையே நம்பியிருந்தனர். இற்றைத் தமிழகத்திற் போன்றே பழம்பாண்டி நாடான குமரிக் கண்டத்திலும், பெருமலைத்தொடர்கள் மேல் கோடியிலே இருந்தன. அவற்றினின்று பஃறுளியும் குமரியும் போன்றே ஆற்றையடுத்தே மக்கள் பரவின், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்ற முறையிலேயே நிலங்களை அடைந்திருக்க முடியும். இந்நிலைமை இற்றைத் தமிழகத்திற்கும் ஏற்றதாதல் காண்க. முந்தியல் மாந்தர் முந்நிலை நாகரிகத்தையும் முறையே அடைதற்கேற்றவாறு, குறிஞ்சி முல்லை மருதம் ஆகிய
முந்நிலமும் அடுத்தடுத்திருத்தல் தமிழ்நாட்டிற்போல் வேறெங்கணுமில்லை.
வெற்பன், குறும்பொறைநாடன், ஊரன், துறைவன், விடலை என்னும் ஐந்திணைத் தனியூர்த் தலைவராட்சிக்குப் பின், பலவூர்க் கிழமை பூண்ட வேளிரின் குறுநில ஆட்சி வந்து, அதன்பின் சேர சோழ பாண்டியரின் பெருநில ஆட்சி தோன்றியபோது, தமிழ் ஐந்திணைச் சொற்களும் சேர்ந்த பெருவள மொழியாயிற்று, மருத நிலத்தில் நகர்கள் தோன்றி நாகரிகம் வளர்ந்து பல்வேறு தொழில்களும் கலைகளும் அறிவியல்களும் ஏற்பட்டபின், தமிழ் மேன்மேலும் வளர்ந்தோங்கிற்று.
தமிழ் ஐந்திணை மக்கட்கும் பொதுவாயிருக்கும் இஃதொன்றே, தமிழரெல்லாம் ஓரினமென்றும், தொன்று தொட்டுத் தென்னாட்டி லேயே வாழ்ந்து வருபவரென்றும், தொழில்தழுவாது பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக் குலப்பிரிவினையால் தூய மாபெருந் தமிழினம் சின்ன பின்னமாகச் சிதைவுண்டதென்றும், தெரிவிக்கப் போதிய சான்றாம்.
பொருட்டிரிவு முறைகள் (SEMANTIC CHANGES)
1. உவமையாகு பெயர்
சில பெயர்கள் உவமை யடிப்பபையில் அமைந்துள்ளன.
எ.டு. மாங்காய் - மாங்காய் போன்ற நெஞ்சாங்குலை (Heart).
தக்கட்டி - தக்கட்டிக்காய் அல்லது கனிபோன்ற கண் பட்டைக் கட்டி (Sty).
எருமை நாக்கு - எருமை நாக்குப் போன்ற மீன்.
கிளிமூக்கு - கிளிமூக்கு வடிவான மாம்பழம்.
சில பொருள்களின் பெயர், பண்பியாகுபெயர் முறையில் அப் பொருள்களின் நிறத்தைக் குறிக்கின்றன.
எ.டு. : சாம்பல் வாழை, காக்கைப் பிசின், பவழச் சோளம், குருதிக்காந்தள், பொற்கொன்றை, மயிற்கழுத்துச் சேலை.
சில பெயர்கள் உவமைத் தொகையாய் அமைந்துள்ளன.
எ.டு. ஆரால்மீ னவரை, கோழிக்கால் தையல், பாம்புக் கற்றாழை, வௌவால் மீன்.
சில பெயர்கள் உவமை யடிப்படையில் அமைந்து, தெளிவுபற்றி ஈறு பெற்றும் திரிந்தும் உள்ளன.
எ.டு. ஆனைக்கொம்பன் - ஒருவகைச் சம்பாநெல்.
காடைக்கண்ணி - காடைக்கண் போன்ற ஒருவகைச் சிறு
தவசம் (தானியம்), அதன் பயிர்.
குதிரைவாலி - குதிரைவால்போற் சுதிர்தள்ளும் ஒரு வகைச்
சிறு தவசப் பயிரும் அத்தவசமும்.
நுணா - நுணல் (மணல் தவளை) போன்ற காய் காய்க்கும்
மரவகை.
மூவகைத் தகுதி வழக்கு
இடக்கரடக்கல் (Euphemism) மங்கலம் (Euphemism) குழூஉக் குறி (Coventional terms) என்னும் மூவகைத் தகுதி வழக்கு முறையிலும், சில சொற்களும் வழக்காறுகளும் தோன்றியுள்ளன.
எ.டு.
இடக்கரடக்கல் ஒன்றிற்கு இரண்டிற்குப் போதல், பவ்வீ,
முதற்குறை கமலம்.
மங்கலம் கொடித்தட்டுதல் = பாம்பு கடித்தல்;
பெரும்பிறிது = சாவு.
குழுஉக்குறி செந்தலை = அரைக்கால்,
கருந்தலை = கால், தங்கான் = அரை.
அரும்பு = அரிசி.
ஓரினப்படுத்தலும் (Generalisation) வேறினப்படுத்தலும் (Discrimination).
ஓரினப்படுத்தல் பல்வேறு வகைப்பொருள்களை, ஒரு
பொதுத் தன்மை பற்றி ஒரு சொல்லாற்
குறித்தல் ஓரினப் படுத்தலாம்.
எ.டு. மாடு - பெற்றமும் (காளையும் ஆவும்) எருமையும்.
மான் - உழை, புல்வாய், நவ்வி, புகர் (புள்ளிமான்), மரை, வருடை, கடமை, மிழா, காசறை, (கத்தூரி) கவரி, குதிரை முதலியன.
தும்பி - முன்தூம்பு (Proboscis) உடைய யானையும் குளவியும்.
விலங்கு, பறவை, மரம், மீன் என்பன மிகவிரிவாக ஓரினப்படுத்தும் சொற்கள்.
பெருநெல்லி, அரிநெல்லி, கீழ்வாய்நெல்லி என்பவற்றை நெல்லியினப்படுத்தியதும் ஓரினப்படுத்தலே.
வேறினப்படுத்தல்
ஒரே இனமான அல்லது ஒத்த தோற்றமுள்ள பொருள்களை, நுண்ணிய வேறுபாடு பற்றி வெவ்வேறு சொல்லாற் குறித்தல் வேறினப்படுத்தலாம்.
எ.டு. இலை - இலை, தாள், தோகை, ஓலை, பிஞ்சு, காய்.
நிலைத்திணை - பூஞ்சணம், பாசம், பாசி, காளான், புல், பூண்டு, கோரை, பயிர், தட்டை, கொடி, தூறு, செடி, மரம்.
நுளம்பு - நுள்ளான், உலங்கு, முதலை, இடங்கர், அரவம்.
சமைத்த தவசவுணவு - சோறு, கஞ்சி, கூழ், களி.
இனி, சிறப்புச்சொற்களன்றிப் பொதுப்சொற்களே வெவ்வேறடை பெற்றுப் பொருள்களை வேறினப்படுத்தலும்முண்டு.
எ.டு. சிற்றெறும்பு, பொடியெறும்பு, ஆயெறும்பு, குறுவெறும்பு, (செவ்வெறும்பு), மழையெறும்பு, மண்டையெறும்பு, பிள்ளையார் எறும்பு, கட்டெறும்பு.
ஐவகைப் பொருள்திரிபு
1. வேறுபாடு (Variation)
சொற்கள் குறித்தற்குரிய பொருளை விட்டுவிட்டு வேறொன்றைக் குறிப்பது வேறுபாடாம். அது உயர்பு, இழிபு, தொல்வியல்பு என முத்திறப்படும்.
உயர்பு (ELEVATION)
சொல் இயற்பொருள் உயர்புப்பொருள்
களிப்பு கட்குடிப்பு, குடிவெறி மகிழ்ச்சி
குட்டி அஃறிணையிளமை இருதிணையிளமை
கடைக்குட்டி குட்டியப்பன் பிள்ளைகுட்டி முதலிய
வழக்குக்களை நோக்குக
இழிபு (DEGRADATION)
சொல் இயற்பொருள் இழிபுப்பொருள்
சூழ்ச்சி நற்சூழ்ச்சி தீயசூழ்ச்சி
தேவடியாள் தேவத்தினி விலைமகள்
கூத்தி கணிகை, நடிகை வைப்பாட்டி
சேரி முல்லைநிலத்தூர் தாழ்த்தப்பட்டோர்
குடியிருப்பு
சிறுக்கி சிறுமி கீழ்மகள்
பறை தோற்கருவி பிணப்பறை
காமம் திருமணக்காதல் இணைவிழைச்சு ஆசை
அந்தணன் அருளாளும் துறவி பிராமணன்
தொல்லியல்பு
சொல் முற்பொருள் பிற்பொருள்
கோயில் அரண்மனை தெய்வப்படிமை இருக்கும் இடம்
பண்டாரம் களஞ்சியம், சிவமடத்தம்பிரான், ஆண்டி
பொக்கசச்சாலை
தோள் மேற்கை (arm) சுவல் (தோட்பட்டை)
கோயில் என்னும், சொல் உயர்படைந்ததாகவும், பண்டாரம் என்னும் சொல் ஆண்டி என்னும் பொருளில் இழிபடைந்ததாகவும், கொள்ளலாம்.
விரிவு (EXTENSION)
ஒரு சொல் தன்பொருட்கு இனமானவற்றையும் குறிக்குமாறு ஆளப்பெறுவது விரிவாம்.
சொல் இயற்பொருள் புதிதாய் விரிவடைந்த பொருள்
கொல்லன் தச்சன் ஐங்கொல்லருள் ஒருவன்
தோடு காதோலை காதிலணியும் பொன்னோலை,
பொற்கம்மல், கற்கம்மல்
பொன் தங்கம் கனியம் (metal)
ஊறுகாய் ஊறும்காய் ஊறும் காய்கனி கிழங்கு மலர்
வரையறை (Restriction)
ஒரு சொல், தான் குறிக்கக்கூடிய பல பொருள்களுள் ஒன்றற்கே அல்லது அதன் ஒரு கூற்றிகே, சிறப்பாக ஆளப்பெறுதல் வரையறையாம்.
சொல் குறிக்கும்பொருள்கள் வரையறைப்பொருள்
ஆடவன் ஆண்மகன் 32-48
மனை வீடு, மனைவி வீட்டுநிலம்
யாம் இருவகைத் தனித்தன்மைப் பன்மை
தன்மைப்பன்மை
நாம் இருவகைத் உளப்பாட்டுத்
தன்மைப்பன்மை தன்மைப் பன்மை
பிள்ளை ஆண், பெண் ஆண் (கொங்கு நாடு)
பெண் (பாண்டி நாடு)
மணம், குணம், ஒழுக்கம் என்னும் பொதுச்சொற்களை நல்வகைக்கும், நாற்றம், வீச்சம், வினை என்னும் பொதுச் சொற்களைத் தீயவகைக்கும், வழங்குவதும் வரையறையே.
சிறப்பிக்கை (SPECIALISATION)
பல பொருள்கட்குப் பொதுவான சொல்லை அவற்றுள் தலை சிறந்ததற்கு ஆள்வது சிறப்பிக்கையாம்.
சொல் பொதுப்பொருள் சிறப்புப்பொருள்
அடியார் பல்வேறு அடியார் இறைவனடியார்
பேறு (காலம்) பல்வகைப்பேறு மக்கட்பேறு
நெய் பல்வகை நெய் ஆவின் நெய்
மலர் (அடி) பல்வேறு மலர் தாமரை மலர்
மக்கட்பேறு இல்லற வாழ்க்கையிற் சிறந்த பேறாகக் கருதப் பட்டமை,
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.
என்னுந் திருக்குறளாலறிக, பெற்றோர் = சிறந்த பேறு பெற்ற தாய்தந்தையர்.
புலாலுண்பார் கறி என்னும் சொல்லாற் புலாலைக் குறித்தலும் சிறப்பிக்கையே.
பொதுப்பிக்கை (GENERALISATION)
சிறப்புப் பொருட்சொல்லைப் பொதுப்பொருளில் ஆள்வது பொதுப்பிக்கை யாம். இது சிறப்பிக்கையின் மறுதலை.
சொல் சிறப்புப்பொருள் பொதுப்பொருள்
எலி வெள்ளெலி எலி
தாமரை செந்தாமரை தாமரை
பயறு பச்சைப்பயறு பயறு
தூங்குதல் தொங்குகட்டிலில் உறங்குதல்
அல்லது தொட்டிலில்
உறங்குதல்
பொருட்பெருக்கமும் பொருளிழப்பும்
ஒரு கருத்தினின்று வேறொரு கருத்துத் தோன்றுவதால், பொதுவாகச் சொற்களின் பொருள்கள் இரண்டும் பலவுமாகப் பெருகுவதுண்டு. ஏதேனுமொரு சிறப்புப்பொருள் குறித்த அடைபெற்ற சொல்லைப் பொதுப்பொருளில், வழங்கின், அச்சிறப்புப் பொருளடை தன் பொருளை இழந்துவிடும்.
எ.டு.
பொருட்பெருக்கம்
காளை = எருது, மறவோன்.
திரு = செல்வம், அழகு, தெய்வத்தன்மை,
பள்ளி = படுக்கை, படுக்கையறை, வீடு, கோயில், கல்விச்சாலை.
பொருளிழப்பு.
அடைபெற்றசொல் சிறப்புப்பொருள் பொதுப்பொருள்
எண்ணெய் எள்ளின் நெய் நெய்ப்பொருள்
தமப்பன் (தகப்பன்) தம் அப்பன் அப்பன்
தண்ணீர் குளிர்ந்த நீர் நீர்
ஆகுபெயரும் ஆகுவினையும் ஐவகைத்திரிபு இருவகை :
1. முதற்பொருள் தழுவியது
2. முதற்பொருள் தழுவாதது.
சொற்றொடராக்கம் (தோரா. கி.மு. 25,000)
தொடரியம் என்னும் முற்றுச் சொற்றொடர், இக்காலத்திற் போன்றே முதற்காலத்திலும் (எழுவாய் பயனிலையென்னும்) ஈருறுப்புக்களையோ, (அவற்றொடு செயப்படுபொருளும் சேர்ந்த) மூவுறுப்புக்களையோ கொண்டிருத்தல் வேண்டும். ஆயின், அவை ஈறும் இடைநிலையுமற்ற பகாச்சொற்களாகவே யிருந்திருக்கும். அறி என்பது அறிவு என்றும், கெடு என்பது கேடு என்றும், செய் என்பது செய்கையென்றும், இன்றும் பொருள்படுதல் காண்க.
அறிகொன் றறியா னெனினும் (குறள். 638)
கெடுவின்றி மறங்கெழு சோழர் (புறம். 39, 7)
களிறு களம்படுத்த பெருஞ்செய் யாடவர் (நெடு. 171)
அடி, விழி, தள், சொல், முதலிய எத்துணையோ வினையடிகள், இன்றும் உலக வழக்கிற் பெயராகவும் வழங்குகின்றன. சில மலையாளப் பழமொழிகளில் நல் (நல்லு) என்னும் பண்படி நன்று என்று பொருள்படுகின்றது. உண்டு இல்லை என்பனவும், இவை போன்ற பிறவும், இன்றும் முக்காலத்திற்கும் பொதுவாம். குறிப்பு வினைகள் முன்பின் வரும் சொற்றுணை கொண்டு இக்காலத்தில் ஒரு காலத்தை உணர்த்துதல் போன்றே, தெரிநிலை வினையடிகளும் முதற்காலத்தில் உணர்த்தியிருத்தல் வேண்டும்.
பண்டைத் தமிழிலக்கியமெல்லாம் செய்யுள் வடிவாகவே இருப்பினும், பொதுமக்கள் பேச்சு என்றும் உரைநடையே யென்பதை மறந்துவிடல் கூடாது.
செய்யுள் நடை (தோரா. கி.மு. 15,000)
தமிழ மாந்தர் நீண்ட காலமாக உரைநடையிலேயே பேசி வந்தபின், மதி விளக்கத்தாலும் உணர்வெழுச்சியாலும் தூண்டப் பட்டு, தெய்வப்பற்று, காதல், போர், வாழ்த்து, கதை, வரலாறு முதலிய பல பொருள்கள் பற்றி, எளிய நடையில் தென்மாங்கும் சிந்தும் போன்ற இசைப்பாட்டுக்களும், அகவலும் வெண்கலிப் பாவும் இராமப்பய்யன் அம்மானையும் போன்ற செய்யுட்களும், இயற்றத் தொடங்கினர். மோனையெதுகை யமைப்பும் சொற் சுருக்கமும் பொருட்செறிவும் அவர் உள்ளத்தைக் கவர்ந்ததினால், பல்வேறு பொருள்பற்றிய பழமொழிகளும் ஒவ்வொன்றா யெழுந்தன.
நால்வகை எழுத்து (நோரா. கி.மு. 12,000)
அன்றாட வாழ்க்கைப் பேச்சும் பண்டமாற்றுரையாட்டும் காதலறிவிப்பும், வாய்மொழியாக நிகழ்த்துவது நேரிலன்றித் தொலைவிற் கூடாமையின், நாளடைவில் நால்வகையெழுத்து முறைகள் ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றின. அவை,
1. படவெழுத்து (Pictograph)
2. கருத்தெழுத்து (Ideograph)
3. அசையெழுத்து (Syllabary)
4. ஒலியெழுத்து (Phoretic characters)
என்பன. எழுத்து என்பதன் முதற்பொருள் படம் அல்லது ஓவியம் என்பதே. எழுதுதல் வரைதல். இன்றும் படமெழுதுதல் என்னும் வழக்கிருத்தல் காண்க.
எழுதப்பெற்ற இலக்கியம் (தோரா : கி.மு. 11,000)
ஒலியெழுத்துத் தோன்றியபின், கதை, வரலாறு, கணக்கு, அறம், அரசியல், மணவின்பம், போர், மருத்துவம், கணியம்.
இசை, நாடகம், சமயம், புகழ்ச்சி, வழுத்து முதலிய பல துறைகள் பற்றிப் பனுவல்களும் எழுந்தன.
இலக்கு என்பது குறி அல்லது குறிக்கோள், மக்கள் வாழ்க்கையின் சிறந்த குறிக்கோளை எடுத்துக்கூறி, அவரைத் திருத்துவதும் உயர்த்துவதுமே பனுவலின் அல்லது நூலின் நோக்கமாதலின், அவையிரண்டும் இலக்கியம் எனப்பெயர் பெற்றன. இலக்கு + இயம் = இலக்கியம்.
பண்டை விற்பயிற்சியாளர், முறையே, பருப்பொருள், நுண்பொருள், சுழலாப் பொருள், சுழல்பொருள் ஆகிய நால்வகை இலக்கினூடு எய்து பயின்றனர். இவற்றையே,
பெருவண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம்
என்று பாரதம் (வாரணா. 56) கூறும், பெருவண்மை என்பது மரத்தின் அடி போல்வது; சிறு நுண்மை என்பது மரத்தின் மேலுள்ள சிற்றிலை போல்வது; சலம் நிச்சலம் என்பன மரத்துச்சியில் அமைக்கப்பெறும் திரிபன்றியும் சுழலாச் சக்கரமும் போல்வன.
இலையை இலக்கென்பது இன்றும் தென்பாண்டி நாட்டு வழக்காகும். சிறுநுண்மைக்குப் பெரும்பாலும் இலையையே குறியாகக் கொண்டமையால், இலக்கு என்னும் சொற்குக் குறி என்னும் பொருள் தோன்றிற்று.
இலக்கணம் (தோரா. கி.மு. 10,000)
இலக்கணமும், மொழியின் அல்லது இலக்கியத்தின் சிறந்த அமைப்பையும் நடையையும் எடுத்துக்கூறுவதையே குறிக் கோளாகக் கொண்டமையின், அப்பெயர் பெற்றது. இலக்கு + அணம் = இலக்கணம்.
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக்
கொள்ளு மென்ப குறியறிந் தோரே
என்னும் தொல்காப்பிய நூற்பாவில் (993), குறி என்னுஞ்சொல் இலக்கணத்தைக் குறித்தல் காண்க. இலக்கியம் இலக்கணம் என்னும் இருசொல்லும் ஒரே முதனிலையே. பொருள் வேறுபாடு பற்றி ஈறு வேறுபட்டன. இவையிரண்டும் முதனிலையினாலும் ஈற்றினாலும் தூய தென்சொல்லேயென்று தெளிக. இவை வடமொழியில் முறையே லக்ஷய லக்ஷண என்று திரியும். ஆயின், அங்கு இலக்கண விலக்கியங்களைக் குறிப்பவை வ்யாகரண, ஸாஹித்ய என்னுஞ் சொற்களே. லக்ஷ்ய லக்ஷண என்னும் சொற்கட்கு மூலமாக வடமொழியில் காட்டப்பெறும் லக்ஷ் என்னும் சொற்கு, இலக்கு (குறி) என்பதே பொருள். ஆகவே, இவ்விரு வடசொல்லும் தென் சொல்லின் திரிபென்பது தெரிதரு தேற்றமாம். மேலும், தமிழிலக்கண முதனூல் ஆரிய வருகைக்கு 8000 ஆண்டு முற்பட்டதென்னும் உண்மையும், இதை வலியுறுத்துவது காண்க.
இலக்கணத்திற்கு அணங்கம் என்றொரு பெயர் குறிக்கின்றது சிந்தாமணி (103). கதிரைவேற்பிள்ளை அவர்கள் தொகுத்த தமிழ்மொழியகராதியில், அஞ்சணங்கம்-பஞ்ச விலக்கணம். அஞ்சணங்கியம்-பஞ்சவிலக்கிய எனக் குறிக்கப் பட்டுள்ளது. அணங்கம் அணங்கியம் என்னும் இருசொற்கும், அணங்கு என்பது முதனிலையாயிருத்தல் வேண்டும். அணங்குதல் ஒலித்தல்.
மிகையணங்கு மெய்ந்நிறீஇ மீளி மறவர்
புகையணங்கப் பூமாரி சிந்தி
என்பது புறப்பொருள் வெண்பாமாலை (பொதுவியற் படலம், 8). அணங்கு என்பது எழுத்தையுங் குறிக்குமாயின், அணங்கம் அணங்கியம் என்னும் சொற்கள், முறையே, இலக்கணத்தையும் இலக்கியத்தையுங் குறிப்பது பொருத்தமே, ஆயின், இச்சொற்கள் தமிழகத்தில் என்றும் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. இலக்கியம் இலக்கணம் என்பனவே தொன்றுதொட்டு வழங்கி வருவன.
தமிழெழுத்துக்கள், (1) முதல், (2) சார்பு என இரு வகைப்படும். முதலாவது இயல்பாகத் தோன்றிய எழுத்துக்கள் முதலெழுத் துக்கள், பின்பு அவற்றுட் சிலவற்றின் சார்பாகத் திரிந்த எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள். உயிரெழுத்துப் பன்னிரண்டும் மெய்யெழுத்துப் பதினெட்டுமாக முதல் எழுத்துக்கள் முப்பதாம். சார்பெழுத்துக்கள் மூன்றாம். ஆகவே, தமிழெழுத்துக்கள் அல்லது ஒலிகள் மொத்தம் முப்பத்து மூன்றாம்.
உயிரெழுத்துக்கள், குறிலைந்தும் நெடிலேழுமாக இரு வகைப் படும். மெய்யெழுத்துக்களும், வல்லினம் ஆறும் மெல்லினம் ஆறும் இடையினம் ஆறுமாக மூவகைப்படும்.
முதலெழுத்துக்கள் (PHONEMES)
மாந்தன் தன் வாயைத் திறந்தவுடன் இயல்பாக ஒலிக்கும் ஒலி அகரம் அல்லது ஆகாரம். குழந்தை பிறந்த உடன் அழும் ஒலியும் முழைத்தல் முறைப்பட்ட அகர ஆகாரமே. ஆகவே, முதலாவது மாந்தன் வாயில் தோன்றியது உயிரொலியே; அது அகரமே.
வாய் திறவாத நிலையில், மூக்குவளியால் ஒலிக்கும் ஒலி மகரம். ஆகவே, மெய்யொலிகளுள் முதலாவது தோன்றியது, இதழ் மட்டும் பொருத்தி எளிதாக வொலிக்கும் மகரமாகும்.
இங்ஙனம் முதன் முதலாகத் தோன்றிய அகரமும் மகரமுஞ்சேரின், அம் என்னும் அசை பிறக்கும். ஒருகால் இதனின்று. அம்ம முறைப்பெயர் குழவிவளர்ப் பொலியாய்த் தோன்றியிருக்கலாம். பாலுறுப்பைக் குறிக்கும் அம்மம் என்னும் சொல் மருமம் என்பதன் திரிபாகும். மருமம் - மம்மம் - அம்மம்.
மாந்தன் வாயில் தோன்றிய மொழியொலிகளுள், உயிரெல்லாம் முன்பும் மெய்யெல்லாம் பின்புமாகத் தோன்றவில்லை. உயிரும் மெய்யும் ஒழுங்கின்றி மாறிமாறியே தோன்றின. அம்முறையை இன்று காண்பது அரிது. ஆயினும், உயிரினத்தையும் மெய்யினத் தையும் வேறு பிரித்து ஒவ்வோர் இனத்தையுஞ் சேர்ந்த ஒலிகள் தோன்றிய முறையை ஒருவாறு அறியலாம்.
உயிர் தோன்றிய முறை
முதல் தோன்றியவை : நெடில் - ஆ, ஈ, ஊ
இடைத்தோன்றியவை : நெடில் - ஏ, ஓ குறில் - அ, இ, உ
கடைத்தோன்றியவை : நெடில் - ஐ, ஔ குறில் - எ, ஒ
உயிர்களுள், நெடில் முன்பும் குறில் பின்பும் தோன்றின.
முதலில் தோன்றிய மூவுயிரும், முறையே, சேய்மை யண்மை முன்மைச் சுட்டுக்களாகவே தோன்றின.
அண்மைச் சுட்டினும் முன்மைச் சுட்டு பிந்தியதாதலாலும், சற்று மிகுந்த முயற்சி வேண்டுதலானும், ஈகாரம் ஊகாரத்திற்கு முந்திய தாதல் வேண்டும்.
இகர ஈகாரத்தில் மோனையாக எகர ஏகாரமும், உகர ஊகாரத்தின் மோனையாக ஒகர ஒகாரமும் தோன்றுதலானும்; கொச்சை வழக்கில் இடம் என்பது எடம் என்றும், உனக்கு என்பது ஒனக்கு என்றும், இகரம் எகரமாகவும் உகரம் ஒகரமாகவும் ஒலிப்பதாலும், அண்மைச் சுட்டிலிருந்தே எகர ஏகாரமும், முன்மைச் சுட்டிலிருந்தே ஒகர ஓகாரமும் தோன்றியிருத்தல் வேண்டும்.
அளபு வகையில்,
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ எ(ன்)னும்
அப்பால் ஏழும்
ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப (4)
என்று, அமைப்பு வகையில்,
அகர இகரம் ஐகார மாகும் (54)
அகர உகரம் ஔகார மாகும் (55)
என்றும், தொல்காப்பியங் கூறுவதால், அகர இகரம் சேர்ந்து ஐகாரமும் அகரவுகரம் சேர்ந்து ஔகாரமும் புணரொலிகளாய்த் (Diphthongs) தோன்றினவென அறியலாம். இகரம் உகரத்தினும் முந்தியதாதலின், இகரக் கூறுள்ள ஐகாரம் உகரக் கூறுள்ள ஔகாரத்தினும் முந்தித் தோன்றியிருத்தல் வேண்டும்.
வடநூலார் புணர்ச்சித் திரிபைப் பற்றுக்கோடாகக் கொண்டு, ஏகார ஓகாரங்களையும் புணரொலிகளாகக் கொள்வர். அக்கொள்கை தமிழுக்கு ஏற்காது. அவை மோனைத் திரிபாய் எழுந்தவையே.
ஓரிரு சொன் முதலில் வரும் அகர இகரம் ஐகாரமாகவும் எழுதப் பெறும்.
எ.டு. வள்-வய்-வயிர்-வயிரம்-வைரம்.
ஓரிரு சொன் முதலில் வரும் அகர உகரம் ஔகாரமாகவும் எழுதப்பெறும்,
எ.டு. கதுவாலி (= குறுகிய வாலையுடைய பறவை இனம் - கவுதாரி (இலக்கணப்போலி - கௌதாரி).
இனி, அகரத்தையடுத்த யகரமெய்யும் எல்லாவிடத்தும் ஐகார மாகவே எழுதப்பெறும்.
அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத்தோன்றும் (தொல். 56)
எ.டு. வள் (= கூர்மை) - (வய்) - வை = கூர்மை. ளகர மெய் யகர மெய்யாகத் திரிவது பெருவழக்கு.
எ.டு. கொள் - கோள் - கோய், தொள் - தொய், நொள் - நொய், பிள் - பிய், மாள் - மாய், வெள் - வெய் - வெய்யோன் = விரும்புகின்றோன். வெய் - வெய்ம்மை - வெம்மை = விருப்பம்.
வெம்மை வேண்டல் (தொல். உரி, 36)
யகர மெய்யீற்று ஒகர முதற்சொல், ஈரெழுத்துச்சொல்லாயிருந்து அகர முதலாய் மாறின், ஐகார வடிவு பெறும்.
எ.டு. பொள் - பொய் (உட்டுளை) - (பய்) - பை.
அகரத்தை யடுத்த வகரமெய், ஒரு சில சொற்களில் ஔகாரமாகவும் எழுதப்பெறும்.
எ.டு. அவ்வியம் - ஔவியம், கவ்வு - கௌவு, வவ்வால் = வௌவால்.
ஔவை என்னும் சொல் அவ்வை என்பதன் திரிபேயாயினும், ஒரு புலத்தியாரின் இயற்பெயராதலின், ஔகார முதலதாகவே எழுதப்படல் வேண்டும்.
அம்மை - அவ்வை - ஔவை.
அவ், அவ்வாறு, சவ்வு, தவ்வு முதலிய சில சொற்களில், அகரமடுத்த வகரமெய் ஔகாரவீறாக எழுதப்படுவதேயில்லை. ஆயின், அய் என்னும் வடிவம் அய் என்னும் அசையைக் குறித்தாலன்றி, எழுத்துத்தமிழில் நிகழ்தற்கு இடமேயில்லை. இதை நோக்கிப் போலும்,
அகரத் திம்பர் வகரப் புள்ளியும்
ஔ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்
என்று தொல்காப்பியர் கூறாதுவிட்டது! உயிரெழுத்துக்களுள்,
ஐ, ஔ இரண்டும் புணரொலியன்கள் (Dipthongs or Compound Phonemes); ஏனைய தனியொலியன்கள் (Monophthongs or Simple Phonemes).
உயிர் தோன்றிய வகைகள்
1. அங்காத்தல் (வாய்திறத்தல்) - அ, ஆ
2. சுட்டல் - ஆ, ஈ, ஊ
3. மோனைத்திரிபு - இ - எ, உ - ஒ
4. உணர்ச்சியொலி - ஐ!
5. வாய்ச்செய்கை - அவ் - ஔ
6. குறுக்கம் - ஆ - அ, ஏ - எ
7. ஒப்பொலி - ஊ (கூ)
அங்காத்தல் என்பது மற்றெல்லா வகைகட்கும் அடிப்படைத் துணையே யன்றி, தனிவகை யன்று.
மெய் தோன்றிய முறை
ம
ப, க, ங
ல, ர, த, ந
ச, ஞ, ய, வ
ட, ண, ள, ழ
ற, ன
குறிப்பு : (1) உயிரும் மெய்யும் தோன்றிய முறையாக இங்குக் காட்டப் பட்டுள்ள ஈரொழுங்கும், தோராய (உத்தேச) முறையே யன்றி இம்மியும் வழுவாத அறிவியலின் பாற்பட்ட துல்லிய முறையல்ல.
2. உயிரும் மெய்யும் வெவ்வேறாகக் காட்டப்பட்டிருப்பினும், உயிரெல்லாந் தோன்றியபின் மெய் தோன்றின வென்றாகாது. இருவகையும் ஒவ்வொன்றாய் அல்லது ஒன்றும் பலவுமாய் மாறி மாறியே தோன்றின.
முதலில் ஆகாரவுயிரும் அதையடுத்து மகரமெய்யும் தோன்றி யிருத்தல் வேண்டும்.
யகரம் தோன்றுமுன் ஈகார இகரமும், வகரம் தோன்றுமுன் ஊகார உகரமும், தோன்றியிருத்தல் வேண்டும்.
ள, ழ, ற, ன தோன்றுமுன் எல்லா வுயிர்களும் தோன்றியிருக்கலாம்.
3. மெல்லின மெய்களுள், மகரம் ஒன்றே தனியே தோன்றியிருத்தல் வேண்டும். ஏனையவெல்லாம் ங்க, ஞ்ச், ண்ட, ந்த, ன்ற எனத் தன்தன் வல்லின மெய்யுடன் இணைந்தே தோன்றியிருத்தல் கூடும்.
குழவிகளின் தொண்டையில் ங்க என்னும் ஒலி பிறத்தல் காண்க.
வல்லினமெய்கள் தனித்தனித் தோன்றியிருத்தல் கூடும்.
4. மாந்தன் அல்லது முந்தியல் தமிழன் பேசிய இயற்கை மொழி, உயிர், மெய் என்னும் பகுப் புணர்ச்சியின்றி, ஓரசையும், பலவசை யுமாகிய ஒலிகளையும் ஓசைகளையுமே கொண்டிருந்தது.
மெய்தோன்றிய வகைகள்
1. ஒப்பொலி - க் (காக்கா), ண் (கிண்)
2. வாய்ச்செய்கை - வ் (அவ்), ம் (அம்)
3. இனத்தோன்றல் - ங் (ங்க), ன் (ன்ற)
4. புணர்ச்சி - ஞ் (பூ + சோலை = பூஞ்சோலை)
5. திரிபு - ந் (பொரும் - பொருந்), ர் (ல்-ர்)
6. முதிர்ச்சி - ழ் (ள-ழ), ற் (ர-ற)
7. இயற்கை - த், ப்
அளவு (மாத்திரை)
எழுத்துக்களின் ஒலியளவு அளபு அல்லது மாத்திரை யெனப்படும். மாத்தல் அளத்தல், இது ஒரு வழக்கற்ற வினை. மாத்திரம் என்னும் சொல்லும் இதனடிப் பிறந்ததே. மா என்னும் அளவுப் பெயர் முதனிலைத் தொழிற்பெயராம்.
ஓர் இமை அல்லது நொடியளவு ஒரு மாத்திரை. உயிராயினும் உயிர்மெய்யாயினும், குறிலுக்கு ஒன்றும் நெடிலுக்கு இரண்டும் மாத்திரையாம். உயிர்மெய்யில் உயிரும் மெய்யும் ஆகிய ஈரெழுத் திருப்பினும், அம்மெய்க்கு மாத்திரையில்லை. தனிமெய்க்கு மாத்திரை அரை.
ஐ, ஔ என்னும் இரு நெடிலும் தனித்து நில்லாதும் அளபெடுக் காதும் சொல்லுறுப்பாய் வரின், ஒன்றரை மாத்திரையாய்க் குறுகியொலிக்கும். ஐகாரம் சொல்லிடையில் ஒரு மாத்திரை யாகவும் குறுகும்.
2. சார்பெழுத்துக்கள்
உயிரும் மெய்யும் ஆகிய முதலெழுத்துக்களுட் சிலவற்றின் சார்பினால் தோன்றுவன சார்பெழுத்துக்கள், சார்தல் ஒன்றை யொன்று அடுத்தல். உயிரினத்தைச் சேர்ந்தவை இரண்டும் மெய்யினத்தைச் சேர்ந்தது ஒன்றும் ஆக, சார்பெழுத்துக்கள் மொத்தம் மூன்றாம். அவை குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்பனவாகும். இவற்றுள் கு, உ இயற்கை, ஏனையிரண்டும் புணர்ச்சி வினை.
தொல்காப்பியர் கூறியவாறு இம்மூன்றே சார்பெழுத்துக்கள். நன்னூலார் உயிர்மெய்யையும் வேறு சில எழுத்துக் குறுக்கங் களையும் அளபெடையையும் சேர்த்துத் தவறாகப் பத்தென விரித்து விட்டார். உயிர்மெய் உயிரும்மெய்யும் சேர்ந்த கூட்டெழுத்தே யன்றி வேறெழுத்தாகாது. எழுத்துக் குறுக்கங்களை யெல்லாம் சார்பெழுத்தென்று கொள்ளின், ஆய்தக் குறுக்கத்தைச் சார்பிற் சார்பென்று கொள்ளல் வேண்டும். அளபெடை என்பது எழுத் தொலி நீட்டமே யன்றித் தனியெழுத்தாகாது. இவ்வுண்மைகளை யெல்லாம் நோக்காது, சாப்பெழுத்துத் தொகையைப் பெருக்கி யதற்கு, மாணவரை மயக்குதலன்றி வேறொரு பயனுமின்றாம்.
குற்றியலிகரம்
அரையளபாய்க் குறுகியொலிக்கும் இகரம் குற்றியலிகரம், அது மூவகையில் தோன்றும்.
1. யகரத்தோடு புணர்ந்த குற்றியலுகரத்திரிபு.
எ.டு. வரகு + யாது = வரகியாது.
2. புணர்ச்சியால் அமைந்த மியா என்னும் முன்னிலையசைச் சொல்.
கேளும் + ஐயா = கேளுமையா - கேளுமியா - கேண்மியா. ஒ.நோ: மருளும் - மருண்ம்.
3. மெல்லின இடையின மெய்யீறு யகரத்தோடு புணர்ந்த புணர்ச்சி விளைவு.
மண் + யானை = மண்ணியானை
வேள் + யாவன் = வேளியாவன்
இவ்வகைப் புணர்ச்சி எல்லார்க்கும் உடன்பாடன்று.
குற்றியலுகரம்
தனிநெடிற்கும் இரு அல்லது பலவெழுத்திற்குப் பின், வல்லின மெய்யோடு கூடிச் சொல்லீறாய் வரும் உகரம், இதழ் குவியாது, இகரத்திற்கும் உகரத்திற்கும் இடைப்பட்டு, அரை மாத்திரையாய்க் குறுகியொலிக்கும் அது குற்றியலுகரம்.
எ.டு. மாடு, செக்கு, பருப்பு, பிண்ணாக்கு, வந்ததற்கு.
ஆய்தம்
தனிச்சொல்லிலும் புணர்ச்சொல்லிலும், குறிலுக்கும் வல்லின உயிர்மெய்க்கும் இடையில், நுண்ணிய ககரமாக ஒலித்து நிற்கும் எழுத்து ஆய்தமாம். ஆய்ந்தது ஆய்தம். ஆய்தல் நுணுகுதல்.
ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சா அய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்
என்று தொல்காப்பியம் (813) கூறுதல் காண்க.
ஆய்தம் பின்வருமாறு நால்வகையில் தோன்றும்
1. புணர்ச்சித்திரிபு
சொல்லுறுப்புப் புணர்ச்சி
எ.டு. அல் + கு = அல்கு - அஃகு
வெள் + கு = வெஃகு
அல்குதல் = சுருங்குதல். வெள்ளுதல் = விரும்புதல், வெள் - வெண்டு (ஆசைப்படு). வெள் - வெய் - வெய்யோன் = விரும்பியோன்.
சொற்புணர்ச்சி
எ.டு. பல் + துளி = பஃறுளி
கல் + தீது = கற்றீது, கஃறீது
முள் + தீது = முட்டீது, முஃடீது
அல் + கடிய = அஃகடிய
2. தனிச்சொல் திரிப்பு
எ.டு. அத்து - அஃது, பத்து - பஃது
பகுதி - பஃதி
3. சாரியைப்புணர்ப்பு
எ.டு. அஃகான், மஃகான்
4. இடைச்செருகல் (ஒற்றில்வழி யொற்று)
எ.டு. இலகு - இலஃகு, விலகு - விலஃகு
இவ்வகை செய்யுட்கே யுரியதாம்.
ஆய்தம் ஓருயிரோடுங் கூடாது தனித்து நிற்பதால் தனிநிலை என்றும், புள்ளிவடிவாயிருப்பதால் புள்ளி என்றும், முப்புள்ளி என்றும், தனக்குப்பின் வரும் வல்லின மெய்யை மெலிவிப்பதால் நலிபு என்றும், பெயர்பெறும்.
பத்து, பஃது; கற்றீது, கஃறீது; என்னும் சொல்லிணைகளை ஒலித்துக் காண்க.
இயன்மொழியாகிய தமிழுக்குரிய ஆய்தம், திரிமொழி கட்குரிய பொலிவொலிகளைப் (Voiced Sounds) பிறப்பிக்கும் என்னும் கூற்று, திரிபுணர்ச்சியின் விளைவென அறிக. ஆய்த வொலியின் ககரவினத் தன்மையை அஃகேனம், மஃகான் என்னும் சாரியைப் புணர்ப்பாலும் கண்டுகொள்க.
சார்பெழுத்து மூன்றனுள், குற்றியலிகரமும் குற்றியலுகரமும் தாம் நிற்குமிடத்து வேறொன்றற்கும் இடந்தாராமையால், அவ்விரண் டையும் மறுவொலியன்கள் (Allophones) என்னலாம். ஆய்தம் அத்துணை ஒழுங்கும் யாப்புறவும் பெறாமையும் மறுவொலி யனாகாது.
எண்
உண்மையில், தமிழெழுத்துக்கள் முதலெனப்படும் முப்பதே. அதனாலேயே,
எழுத்தெனப் படுப
அகரமுதல் னகரலிறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்து வரல்மரபின் மூன்றலங் கடையே (1)
எனத் தொல்காப்பியர், நூன்மரபு என்னும் முதல் இயலில். முந்து நூலார் மொழிந்தவாறு முதலெழுத்திற்கே சிறப்புக் கொடுத்துக் கூறினார்.
மூன்றுறழ்ந்த பதிற்றெழுத்தான் முழுவதுமாய் உனக்
கினிதாய்த்தோன்றிடும் அத் தமிழ்
என்று சிவஞான முனிவர் கூறியதுங் காண்க. (காஞ்சி தழுவ. 244)
உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முப்பதெழுத்துக் களை மட்டும் கொண்ட தொகுதிக்குக் குறுங்கணக்கு என்றும், அதனொடு 216 உயிர்மெய்யெழுத்துங் கொண்ட தொகுதிக்கு நெடுங்கணக்கு என்றும், பெயர். பன்னீருயிரும் பதினெண் மெய்யொடுங் கூட, உயிர்மெய்மொத்தம் இரு
நூற்றுப்பதினாறாம்.
எல்லா மொழிகளிலும் உயிர்மெய்கள் கலந்துதான் ஒலிக்கின்றன.
ஆயின், அவற்றிற்குக் கூட்டு வடிவம் முதன்முதல் அமைத்தவர் தமிழரே, தமிழைப் பின்பற்றியே வடமொழியிலும் பிற இந்திய மொழிகளிலும் உயிர்மெய் வடிவுகள் அமைந்தன. இன்னும் மேலை ஆரியத்திலும் சேமியத்திலும் உயிரும் மெய்யும் தனித்தனி நிறுத்தப்படுகின்றன. அமெரிக்கு, சப்பான் முதலிய ஒரு சில மொழிகளில் மட்டும், தனிவரிக்கும் கூட்டு வரிக்கும் இடைப் பட்ட அசைவரிகள் (Syllabaries) ஏற்பட்டுள்ளன. அவையும் காலத்தாற் பிற்பட்டவையே.
ஆய்தம் உயிரேறப்பெறாத மெய்யாயினும், அதற்குத் தனி வடிவ முண்மை பற்றி அதையும் ஓர் எழுத்தாகக் கொள்ளின், தமிழெழுத்துக்கள் மொத்தம் இரு நூற்று நாற்பத்தேழாம்.
பெயர் முதல், சார்பு
செவிப்புலனான மொழியொலிகள் கட்புலனான வரிவடிவில் எழுதப்பெற்றதனால், எழுத்தெனப் பெயர் பெற்றன. எழுத்து என்பது வரிவடிவைக் குறிப்பின் தொழிலாகுபெயர்; ஒலிவடிவைக் குறிப்பின் குறியாகுபெயர்.
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும் (1594)
என்று தொல்காப்பியர் கூறியுள்ளபடி, தமிழில் முதலிலக்கண நூலியற்றியவன், முற்றத் துறந்தவனும் மெய்ப்பொருளறிவு நிரம்பியவனுமான முனிவனாவான்.
முனிதல் = (உலக வாழ்வை) வெறுத்தல், வெறுத்துத் துறத்தல், முனி, முனை என்னும் இரண்டும் ஒரே சொல்லின் வேறுபட்ட வடிவமாம். முனிந்தவன் முனிவன், முனைந்தவன் முனைவன்.
முனைவு முனிவாகும் (தொல். சொல். 386)
அந்தணர் நூற்கும் (543)
இன்றீம் பாலை முனையின் (பெரும்பாண். 180)
உலகிலுள்ள பொருள்கள் எல்லாம், உயிர், மெய், உயிர் மெய் என மூவகை. உயிர் தானே இயங்கும் காற்று வடிவினது; மெய் உயிரின் உதவியின்றி இயங்காத உடம்பு அல்லது கனப்பொருள்; உயிர்மெய் உயிரொடு கூடிய உடம்பு. பிராணி (பிராணனையுடையது) என்ற வடசொல் தமிழில் வழக்கூன்றியபின், அதற்கு நேரான உயிர்மெய் என்னும் தமிழ்ச் சொல் வழக்கற்றுப்போனதுடன், தன் பொருளையும் இழந்தது. தமிழில் முதனூல் கண்ட முனைவன், மூவகையெழுத்துக்களும் ஒலியியக்கத்தில் மூவகைப் பொருள் களை ஒத்திருப்பது கண்டு, அப்பொருள்களின் பெயர்களையே அவ்வெழுத்துக்கட்கும் உவமையாகு பெயராக இட்டான். தானே ஒலிக்கும் எழுத்து உயிரெழுத்து; உயிரொடு கூடியல்லது ஒலிக்காத எழுத்து மெய்யெழுத்து; உயிர்மெய்யைப் போன்ற எழுத்து உயிர் மெய்யெழுத்து. இத்தகைய அமைப்பு வேறெம்மொழியிலும் காண்பதற்கரிதாம்.
குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன வெளிப்படை.
உயிர், ஆவி என்பனவும்; மெய், உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று புள்ளி என்பனவும்; ஒருபொருட் சொற்கள்.
முறையும் பிறப்பும்
தமிழ் எழுத்திலக்கணம் பன்னிரண்டுள், முறையும் ஒன்றாம். இது மேலை மொழிகட்கில்லை. வடமொழியுட்பட ஏனையிந்திய மொழிகளெல்லாம் நெடுங்கணக்கு முறையில் தமிழைப் பின்பற்றியனவே.
உயிர், முந்தித்தோன்றியது பற்றியும், தானாய் ஒலிப்பது பற்றியும், நெடுங்கணக்கில் முன்வைக்கப்பெற்றது. குறுமை பற்றிக் குறில் முன்னும், நெடுமை பற்றி நெடில் பின்னும் வைக்கப்பட்டன.
ஆ, ஈ, ஊ மூன்றும், முறையே சேய்மைச் சுட்டாகவும் அண்மைச் சுட்டாகவும் முன்மைச் சுட்டாகவும் இயல்பாகத் தோன்றின மையால், பிறவுயிர்களுக்கு முன் வைக்கப்பட்டன. அவற்றுள், ஆகாரம் வாய்திறந்த மட்டில் ஒலிப்பதால் முதலிலும், ஈகாரம் வாயின் பின்பக்கத்தில் அடிநாவிளிம்பு மேல்வாய்ப் பல்லைப் பொருந்தியொலிப்பதால் இடையிலும், ஊகாரம் வாயின் முன்பக்கத்தில் இதழ் (உதடு) குவிந்தொலிப்பதால் கடையிலும், வைக்கப்பட்டன. இதினின்று, வாயின் பின்புறத்திலிருந்து முன்புறம் நோக்கிய வரிசையில் தமிழ் எழுத்துக்கள் அமைக்கப் பட்டதை அறியலாம்.
ஏகார ஓகாரங்கள் முறையே ஈகார ஊகாரங்களின் மோனைத் திரிபாதலால், இயல்பாகத் தோன்றிய முதல் மூன்றுயிர்கட்கும் பின் வைக்கப்பட்டன. அவற்றுள், ஏகாரம் அடிநாவிளிம்பு மேல்வாய்ப் பல்லைப் பொருந்தியொலிப்பதால் முன்னும், ஓகாரம் இதழ் குவிந்தொலிப்பதால் பின்னும், வைக்கப்பட்டன.
ஐ, ஔ இரண்டும் முறையே அஇ, அஉ என்னும் புணரொலி களாதலால், அடிநாவிளிம்பு மேல்வாய்ப் பல்லைப் பொருந்தி யொலிக்கும் ஐகாரம் ஏகாரத்தின் பின்னும், இதழ் குவிந்தொலிக்கும் ஔகாரம் ஓகாரத்தின் பின்னும் வைக்கப்பட்டன.
ஆய்தம் நுண்ணிய ககரமாதலால், ககரத்தின் முன் வைக்கப்பட்டது.
மெய்களுள் வல்லினமும் மெல்லினமும் எதிரினங்களாதலால், முதற்கண் தோன்றியவையெல்லாம் வலியும் மெலியுமாக இவ் விரண்டாய் முன் அமைக்கப்பெற்றன. இடையினம் அவற்றின் பின் வைக்கப்பட்டது. ள, ழ, ற, ன நான்கும் பிறமெய்கள் ஒழுங்கு படுத்தப்பட்டதற்குப் பிந்தித் தோன்றியமையால், இறுதியில் வைக்கப்பட்டன.
மெய்களுள், க, ங அடியண்ணப் பிறப்பினவும், ச, ஞ இடை யண்ணப் பிறப்பினவும், ட, ண முன்னண்ணப் பிறப்பினவும் த, ந பல்லண்ணப் பிறப்பினவும், ப, ம இதழகப் பிறப்பினவும், ஆதலால் அம்முறையே வைக்கப்பட்டன.
மகரமொழிந்த மெல்லின மெய்களெல்லாம் தன்தன் வல்லின மெய்க்குப்பின் தோன்றியமையாலும், வலியொலித்த பின், மெலியொலிப்பதே முயற்சிக் கெளிமையாதலாலும், வலியும் மெலியும் அடுத்தடுத்து நிற்பது ஒலிவேற்றுமை யைத் தெளிவாய்க் காட்டுவதாலும், வலிமுன்னும் மெலிபின்னுமாக இணையிணை யாய் நிறுத்தப்பெற்றனவென அறிக.
இடையின வொலியின் இடைத்தன்மை வல்லொலியும் மெல் லொலியும் அறிந்த பின்னரே அறியக் கிடத்தலின், வலிமெலி களின் பின் இடையினம் வைக்கப்பட்டது. இடையின மெய்களுள், யகரம் இடையண்ணத்திலும், ரகரம் முன்னண்ணத்திலும், லகரம் பல்லண்ணத்திலும், வகரம் பல்லிதழிலும், பிறப்பதால், அவை அம்முறையே வைக்கப்பட்டன.
குமரிக்கண்டத்தில் நெடுங்கணக்குத் தொடங்கியபோது, அதில் அமைந்திருந்த எழுத்துக்கள் இத்தனையே. பின்னர், நாளடைவில் ள, ழ, ற, ன என்னும் நான்கும் தோன்றின, அதனாலேயே அவை இறுதியில் வைக்கப்பட்டன.
அந்நான்கனுள் ள ழ முன்தோன்றியமையால் முன்னும்; ற ன பின்தோன்றியமையாற் பின்னும் வைக்கப்பட்டன.
ள, ழ இரண்டும் முன்னண்ண வருடொலிகளாயினும் (Linguals or Cerebals), ழகரம் ளகரத்தினும் சற்றுப் பின்னிருந்து வருடப் பெறுவதால், முன்வைக்கப்பெற்றது.
இறுதிமெய் நான்கும் பிந்தித் தோன்றினவென்பதற்கு ஏதுக் களாவன :
1. ள, ழ இரண்டும் இடையினத்துள்ளும் லகரத்திற்கு முன்னும் வைக்கப் பெறாமை.
2. ற, ன இரண்டும் வலிமெலி யிணைகளுள் த ந இணைக்கு முன் வைக்கப் பெறாமை.
3. லகரம் திரண்டு ளகரமும் ளகரம் திரண்டு ழகரமும் ஆதல்.
எ.டு. கல்-கருமை. கல் + து = கஃது. கஃறெனல் = கருமைக் குறிப்பு. கல் - கால் = கருமை. கால் - காள் = கருமை. காள் - காழ் = கருமை.
4. ரகரம் திரண்டு றகரம் ஆதல்.
எ.டு. அர்-அறு, ஒளிர்-ஒளிறு, முரி-முறி :
5. னகரந்தோன்றுமுன் நகரமே சொல்லிறுதியிலும் வழங்கியமை
எ.டு. வெரிந், பழுநு
6. தமிழின் தொன்மையும் ஏனையொலிகளின் மென்மையும்.
றகரம் தோன்றியபோது அதற்கினமாகவே னகரமும் உடன் தோன்றிற்று. தந்நகரம் றகரத்திற்கு இனமாகாமை காண்க.
தமிழின் தொன்மை, தென்மை முன்மை, மென்மை முதலிய தன்மைகளை அறியாமையால், கால்டுவெல் உள்ளிட்ட மேலை யாராய்ச்சியாளர் தமிழைச் சமற்கிருத அடிப்படையிலாய்ந்து, பேரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில்,தமிழ்
நெடுங் கணக்கு சமற்கிருதத்தைப் பின்பற்றிய தென்று முடிவு கொண்டு விட்டனர். இதனால் சில கொண்டான மாரும் தமிழ்ப்பற்றற்ற திரவிடத் தமிழ்ப் புலவரும், ழ, ள, ற, ன நான்கும் வடமொழி யிலில்லாமையால் நெடுங்கணக்கிறுதியில் வைக்கப்பட்டன வென்று, பிதற்றலாயினர். வடமொழியிலின் மையே இறுதிவைப் பிற்குக் கரணியமாயின், வடமொழியி லில்லாத எகர ஒகரமும் இறுதியில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டுமே! அங்ஙனமின்மை யின், அதுபோலியுரையென மறுக்க.
உருவம்
எழுத்து என்னும் பெயரே, தமிழுக்கு இலக்கணந் தோன்றுமுன்னரே எழுந்திருந்தமையை உணர்த்தும், எழுதுவது எழுத்து. எழுதுதல் வரைதல்.
எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோல் (குறள், 1285)
இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் (பரிபா. 19,53)
எழுவுதல் என்பது இசைக்கருவியினின்று ஒலியெழுப்பு தலைக் குறிக்குமேயன்றி எழுதுதலைக் குறிக்காது.
பண்டைத் தமிழெழுத்துக்களெல்லாம் பிராமியின் திரிபான வட்டெழுத்துக் களென்றும், கிரந்தவெழுத்து தென்னாட்டில் பிற்காலத்தில் வடமொழிக் கென்றேற்படுத்தப் பட்டதென்றும், பொதுவாகக் கருதப்படுகின்றது. ஆயின், எழுத்துவடிவம் பற்றிய சில தொல்காப்பிய நூற்பாக்களையும் நன்னூல் நூற்பாக்களையும், பண்டையேட்டுச் சுவடிகளையும் நோக்குமிடத்து, இக்கருத்துப் பொருத்தமுடையதாய்த் தோன்றவில்லை. இற்றை வழக்கிலுள்ள தமிழ் எழுத்து முறையே பண்டை வழக்கிலும் இருந்ததென்றும், பட்டயங்களிற் பொறிக்கப்பட்டுள்ள வட்டெழுத்து வெட் டெழுத்து எனப் பெயர் பெற்றிருக்கலாமென்றும், கிரந்தலெழுத்து பண்டைத் தமிழெழுத்தின் திரிபேயென்றும், அது ஏட்டிற்குரிய ஆணியெழுத்தென்றும் கொள்வதே பொருத்தமாகத் தோன்று கின்றது. இதற்குச் சான்றுகளும் ஏதுக்களுமாவன :
1. மிகப் பழைமையான தமிழேட்டிலும் இற்றையெழுத்து வடிவேயிருத்தல்.
2. இலக்கண நூல்கள் இற்றையெழுத்து வடிவைத் தொன்று தொட்டதெனக் கூறல்.
தொல்லை வடிவின எல்லா வெழுத்தும் ஆண்(டு)
எய்தும் எகர ஒகரமெய் புள்ளி. (98)
என்று 13 ஆம் நூற்றாண்டிலிருந்த பவணந்தி முனிவர் கூறினார்.
கி.மு. 7 ஆம் நூற்றாண்டினதான தொல்காப்பியத்தின் நூன்மரபு என்னும் முதலியலில்,
குற்றிய லிகரம் குற்றிய லுகரம் (2)
ஆய்தம் என்ற - முப்பாற் புள்ளியும்.
உட்பெறு புள்ளி உருவா கும்மே (14)
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (15)
எகர ஒகரத் தியற்கையும் அற்றே (16)
புள்ளி யில்லா … உயிர்த்த லாறே (17)
எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வியல்புகளிற் சில பட்டய வெழுத்திற்குப் பொருந்தவில்லை.
3. பட்டயவெழுத்து வட்டமாயிராமை. வட்டெழுத்து என்பது வடிவு பற்றியதாயின், அது ஏட்டெழுத்திற்கே (கிரந்த வடிவெழுத்திற்கே) பொருந்து வதாகும்
4. ஏட்டிற்கு வளைகோட்டெழுத்தும் பட்டயத்திற்கு நேர் கோட்டெழுத்துமே இசைவாயிருத்தல்.
5. தமிழெழுத்து அசோகக் கல்வெட்டிற்கும் வடமொழி வரவிற்கும் முந்தியதாதல்.
6. வடமொழி நெடுங்கணக்கு தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றியே அமைத்திருத்தல்.
7. மேனாடுகளிலும் கருவிக்கேற்ப எழுத்து வடிவு வேறுபட்டிருந் தமை.
இந்திய நாகரிகம் ஆரியரதென்றும், தமிழ் எல்லா வகையிலும் வடமொழி யைப் பின்பற்றியதென்றும் மேலையறிஞர் குருட்டுத் தனமாகக் கொண்டிருந்த அடிப்படைத் தவறுகளே, தமிழெழுத்து பிராமியினின்று திரிந்ததென்று கொள்ளற் கிடந்தந்தன.
பண்டையெழுத்து வடிவங்களிற் சில இன்று மாறியுள்ளன. அவை வருமாறு :
எழுத்தின் பெயர் பண்டைவடிவம் இற்றையவடிவம்
ஈகாரம் இ (சுழியுடன்) ஈ
குற்றிய லிகரம் வீடியாங்கு வீடியாங்கு
குற்றிய லுகரம் வீடு வீடு
எகரம் எ. கெ எ, கெ
ஏகாரம் எ. கெ ஏ, கே
ஒகரம் ஒ. கொ ஒ, கொ
ஒகாரம் ஒ. கொ. ஓ. கோ
மகரம் ப (முன் இவற்றின் மேல் ம புள்ளியிருந்தன)
எகர ஒகரக் குறில்கள் அவற்றின் நெடில்கட்குப் பிந்தித் தோன்றிய மையால், அவற்றை வேறுபடுத்திக்காட்ட அவற்றின் மேற் புள்ளியிடப்பட்டது. வட இந்திய மொழிகளைப் பேசுவோரின் முன்னோர், எகர ஒகரக்குறில்கள் தமிழில் தோன்றுமுன் குமரிக் கண்டத்தினின்று வடக்கே சென்றதினாலேயே, அம்மொழிகளில் இன்றும் அக்குறில்கள் இல்லை. அம்மொழிகளின் மூலமாகிய பிராகிருதங்களை வேத ஆசிரியர் பேசினதினாலேயே, அவர் வேதத்திலும் அவை இல்லை.
தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்(டு)
எய்தும் எகர ஒகரமெய் புள்ளி
என்று 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தினதான நன்னூல் (98) கூறுவதால், தமிழ் ஏட்டெழுத்து தொன்றுதொட்டு வழங்கி வருவதெனத் துணியலாம். ஆண்டு என்பது அக்காலத்து (முற் காலத்தில்) என்று பொருள்படுவதாகும். எகர ஒகர உயிரும் உயிர் மெய்யும் புள்ளிபெற்ற ஒன்றே, பண்டையெழுத்தின் வேற்றுமை யெனக் குறிப்பிடுகின்றார் பவணந்தி முனிவர். அவர் காலத்திலும் அவை புள்ளி பெற்றனவெனின், அதை ஏன் விதந்து கூறல் வேண்டும்? தொல்லை வடிவின எல்லா எழுத்தும் என்பதி லேயே அது அடங்கிவிடுமே! ஆதலால், அது உரையன்றென்க.
எய்தும் என்பது வழக்கம் பற்றிய காலவழுவமைதி.
பிற்காலத்தில் வேற்றரசு வந்துவிட்டதனாலும், தமிழைக் காக்கும் பொறுப்பு செந்தமிழ்ப்புலவர் கையிலின்மையாலும், இலக்கண மறியா மாந்தர் ஏட்டிலும் கல்லிலும் தப்புந்தவறுமாய் எழுதி வந்தமையே, வீரமா முனிவர் முன்னை முறைப்படி திருத்தினார் என அறிக.
மாத்திரை
எழுத்துகட்கு மாத்திரை இன்னின்ன அளபென்று குறிக்கப் பட்டிருப்பினும், கூப்பீடு (விளி), ஒப்பாரி (புலம்பல்), இசைப் பாட்டு, தெருவிற்பனை (பண்டமாற்று) முதலிய உலகியற் செய்திகளில், அவை செவிப்பாடு, துயரம், இனிமை முதலியன பற்றி, வேண்டுமளவு அல்லது இயன்ற அளவு நீண்டொலிக்கும். அது அளபெடை எனப்படும். அளபெடுத்தல் மாத்திரை கடந் தொலுத்தல். உயிரளபெடை, ஒற்றளபெடை என அளபெடை இருவகை. ஒற்றுமெய்.
உயிரளபெடையை வரிவடிவிற் குறிக்கும்போது நெடிலின் பின்னும், குறிலின் பின்னும் இயல்பாகவுரிய அளவிற்கு மேற்பட்ட ஒவ்வொரு மாத்திரைக்கும் ஒவ்வொரு முறையாக, அவ்வக்குறில் அல்லது இனக்குறில் வடிவு சேர்த்தெழுதப்படும். இசையில் அளபெடைக்குறில்கள் மட்டுமன்றி நெடில்களும் தொடர்ந்தும் விட்டும் ஒலிக்கும்; பிறவற்றில் தொடர்ந்தே ஒலிக்கும்.
ஒற்றளபெடையாயின், எல்லாவிடத்தும், கூடிய ஒவ்வோர் அரைமாத்திரைக் கும் ஒரு முறையாக அவ்வம் மெய்வடிவே சேர்த்தெழுதப்படும்.
மெய்யெழுத்துக்களுள் வல்லினம் அளபெடுக்கா.
இசை குறைந்தவிடத்து அதை நிறைக்கச் செய்யுளிலும் அளபெடை நிகழும்.
உலகவழக் களபெடையும் செய்யுள்வழக் களபெடையும் பின்வருமாறு பெயர்பெறும்.
உலக வழக்கு செய்யுள் வழக்கு
இயற்கை யளபெடை செயற்கை யளபெடை
உலகிய லளபெடை செய்யுளிய லளபெடை
செய்யுளிற் குறில் அளபெடுப்பினும், நெடில்வடிவின் பின்னரே குறில் வடிவு குறிக்கப்படும். வல்லினத்துடன் ளகர ழகரமும் செய்யுளில் அளபெடுக்கா.
குற்றியலுகர மேறிய ககரம் ககரத்தோடு புணரின், அக்குற்றியலு கரம் கால்மாத்திரையாய்க் குறுகும்.
எ.டு. கொக்குக்கால்.
நொடித்தல் வினையில் நொடிக்கக் கருதுதல் கால்மாத்திரைக்கும், விரல் பொருத்துதல் அரை மாத்திரைக்கும், விரல் திரித்தல் முக்கால் மாத்திரைக்கும், வெடித்தல் ஒருமாத்திரைக்கும் அளவு நிகழ்ச்சியாம்.
உன்னல் காலே ஊன்றல் அரையே
முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே
பலுக்கொலியம் (PHONETICS)
உயிரெழுத்துக்களுள், மூக்கொலியுயிர் அல்லது மெல்லின உயிர் (Nasal vowel) என ஒன்று தமிழில் இல்லவே யில்லை.
அவன், வந்தேன், மரம், போனோம் முதலிய சொற்களின் ஈற்றிலுள்ள மெல்லின மெய்களே, சோம்பலாற் செவ்வையாய்ப் பலுக்கப் பெறாமல் மூக்கொலியளவாய் ஒலிக்கின்றன. இவ்வொலியை ஈற்றயலுயிர்மேலேற்றி, அதனை மூக்கொலி உயிர் என்பது திரிபுணர்ச்சியே. அவர், தாய், மகள், வந்தால் முதலிய சொற்களின் இறுதியிலுள்ள இடையினமெய், ஓரிடத்தும் மூக்கொலியாய் ஒலியாமையை ஒலித்துக் காண்க.
மொழிமுதல் உகரம் இதழ்குவித்தே ஒலிக்கப்பெறுவதால், குற்றியலுகரம் சொன்முதற்கண் வரவே வராது. திரவிடப் புலவர் சிலர் கருதுகிறபடி குற்றியலுகரம் மெய்யீறுமன்று; ஒலிக்குறுக் கத்தை அல்லது திரிபைக் காட்டுதற்கே, அதன்மீது புள்ளியிடப் பெற்றது.
இதனையே,
மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் (104)
குற்றிய லுகரமும் அற்றென மொழிப (105)
என மாட்டெறிந்து கூறினார் தொல்காப்பியர், ஆயின், இதை யுணராது குற்றிய லுகரமும் மெய்யீறெனப் பிறழக் கொண்டனர் ஆரியவழித் தமிழாசிரியர் சிலர்.
ஐ, ஔ இரண்டும் தமித்து நிற்கும்போது, அஇ, அஉ என இரு மாத்திரையே ஒலிக்கும்; சொல்லுறுப்பாய் வரும்போதே அய், அவ் என ஒன்றரை மாத்திரையாய்க் குறுகும்.
ஆய்தம் ககரவொலியைச் சார்ந்த தென்பதை, அது தொன்று தொட்டு ஒலிக்கப்பட்டுவரும் முறைமையினாலும், ஏனச்சாரியை ஏற்கும்போது அஃகேனம் எனக் ககரத்தைப் பற்றுக் கோடாகக் கொள்வதாலும், குறுங்கணக்கிலும் நெடுங்கணக்கிலும் ககர மெய்க்கு முன் வைக்கப்பட்டிருப்பதாலும், பண்டை நெடுங் கணக்கேட்டுச் சுவடியில் க - ஃ என வரையப் பெற்றமையாலும், அறியலாம்.
ஆய்தம் வரும் சொற்களையெல்லாம் ஆய்ந்து பார்ப்பின், அது பெரும்பாலும் லகர ளகரத் திரிபாகவே காணப்படுகின்றது. இதை நோக்குமிடத்து, குமரிக்கண்டத்தில் ஓரிடத்து ஒலித்திரி பாகவோ புணர்ச்சித் திரிபாகவோ ஆய்தம் தோன்றி இருத்தல் வேண்டுமென்று தெரிகின்றது.
சிலர் ஆய்தத்தை வடமொழி விசர்க்கமெனக் காட்டல் வேண்டி, அது அகரமேறியும் ஒலிக்குமெனக் கூறி,
அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு. (943)
என்னும் குறளையும் எடுத்துக் காட்டுவர் அளவறிந் துண்ணுக என்னும் பாடத்தில் தளை சரியா யிருத்தலின், அங்ஙனங் கொள்ள வேண்டிய தின்றாம். நயனில சொல்லினுஞ் சொல்லுக என்னும் குறளில் (197). சொல்க என்பது தளைக்கேற்பச் சொல்லுக என வந்திருத்தல் காண்க.
இனி, லகர ளகர வகரம் எங்ஙனம் ஆய்தமாகத் திரிய முடியுமென்று பலர் மயங்கலாம். பல ஒலித்திரிபுகள் எல்லார் வாய்க்கும் ஏற்றனவாகவும், சில ஒலித்திரிபுகள் ஓரிடத்து ஒரு சிலர் வாய்க்கே இசைந்தனவாகவும், அமைந்துள்ளன. இதனாற் பின்னவை பிறர் மயங்குதற்கு இடமாகின்றன.
ழகரம் பல சொற்களில் ககரமாகத் திரிகின்றது.
எ.டு. குழை-குகை, முழை-முகை, சுழியம்-சுகியம், தொழுதி-தொகுதி, நிழல் - நிகர் = ஒளி, மழவு - மகவு.
ஒ.நோ : விழி - L. vigil, E. wake.
லகர ளகரம் ழகரத்தின் இனமாகவும் அதனினும் மெலிந்தும் இருப்பதனால், ககரத்தின் மெலியாகிய ஆய்தமாகத் திரிந்தன.
வகரம் ககரமாவது பெருவழக்காதல் தெள்ளிது.
எ.டு. ஆவா-ஆகா, சிவப்பு - சிகப்பு, செவிள்-செகிள், துவர்-துகிர்.
ஆய்தம் ககர மெலியாதலின், வகரம் ஆய்தமாகத் திரிதலும் இயல்பே. இதற்கு வருமொழி முதற் ககரமும் துணை செய்யும்.
அவ் + கடிய = அஃகடிய
இனி, இக்காலத்துச் சிலர் ஆய்தவெழுத்தைப் பிற தமிழெழுத்துக் களின் முன்னும் பின்னும் இட்டு ஜ, ஷ F, Z முதலிய பிறமொழி யெழுத்துக்களைக் குறிப்பது, தமிழிய்ல் பிற்கும் மரபிற்கும்
முற்றும் மாறானதும் தொல்லாசிரியர் கட்டளைக்கு முரணானதும் ஆகுமென்றும், தமிழைப் பிற மொழிகட்குப் பிந்தியதாகக் காட்டுமென்றும், பிறமொழிச் சொற்களை யெல்லாம் தமிழெழுத் திலேயே திரித்தெழுதுதல் வேண்டுமென்றும், அல்லாக்கால் தமிழ் நாளடைவில் வேறு மொழியாக மாறிவிடுமென்றும், அறிதல் வேண்டும். ஆய்தவொலிக்குத் தமிழொலிகளை அயலொலிகளாக மாற்றும் மந்திர வாற்றல் இல்லை. ஒலியைப் பொறுத்தமட்டில், ஆய்தவரிவடிவெழுதுவதும் அயன்மொழி வரிவடிவெழுது வதும் ஒன்றே. எழுத்தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரிவடிவன்று.
தமிழ் மிகத்தொன்மையும் முன்மையும் மென்மையும் வாய்ந்த மொழியாதலின், அதன் வல்லினமெய்களும் பிறமொழி வல்லின மெய்களை நோக்க மெல்வல்லினமே. இதைக் கால்டுவெலாரும் நோக்காது, தமிழ் வல்லினத்தை வடமொழி ஐவகுப்பின் முதல் வரிசைக் கொப்பாகக் கொண்டு விட்டனர். தமிழ் வல்லினமெய்கள் இரட்டித்தாலன்றி ஆரிய வல்லினமெய்க்கு ஈடாகா.
எ.டு. ஆங்கிலம் தமிழ் வடமொழி தமிழ்
Booking புக்கிங் kaka காக்கா
மேலும், தமிழ் வல்லினமெய்கள் பொலிவொலிகளும் (Voiced) ஆகா, பிறமொழிகளின் பொலிவொலிக்கும் பொலியா வொலிக்கும் (Voiceless) இடைப்பட்டதே தமிழ் வல்லினவொலி. அது இரட்டித்த விடத்தே நன்றாய் வலித்தும், தனித்துவரின், சொன்முதலில் ஒலி விழுத்தத்தினால் (Accent) சற்றே வலித்தும், சொல்லிடையிலுங் கடையிலும் மெல்லின மெய்யை அடுப்பினும் அடுக்காவிடினும் பொலிந்தும், ஒலிக்கும். இவ்வியல்பை நெல்லை மாவட்டத்து நாட்டுப் புற மக்கள் பேச்சில்தான் நன்றாய்க் காண முடியும்.
ற்ற, ன்ற என்னும் இணை மெய்யொலிகளை, முறையே, tt, nd என்னும் ஆங்கில மெய்யிணை போலப் பிளவின்றி யொலிப்பதே தமிழ்மரபாம், அங்ஙன மன்றிப் பிராமணரைப் பின்பற்றி, ttr, ntr என விதிரொலியுடன் (trill) பிளவுபடப் பலுக்குவது வழுவாம்.
பிரான்மேயர் (Fronhmeyer) எழுதிய படிமுறை மலையாள இலக்கணம் (A Progressive Grammar of the Malayalam Language) என்னும் நூலின் 9 ஆம் பக்கத்தில் கூறியிருப்பதைக் கவனிக்க. பண்டைச் சேரநாட்டுத் தமிழே ஆரியத்தோடு சேர்ந்து மலையாளமாகத் திரித்திருப்பதால், மலையாள றகரத்திற்குச் சொன்னது தமிழ் றகரத்திற்கும் ஒக்கும்.
றகரம் தனித்தும் இரட்டியும் னகரமெய்யடுத்தும் வரும் மூவேறு நிலைமை பற்றி, மூவேறு ஒலிகளை அடையும்.
1. ற
இது வலிய அல்லது முரட்டு ரகரம். இதற்கொப்பானது ஆங்கிலத்தி லில்லை.
2. ற்ற
இது sit என்பதிலுமுள்ள t போல், அல்லது sitting என்பதிலுள்ள tt போல் ஒலிப்பது.
3. ன்ற
இது send என்பதிலுள்ள nd போல் ஒலிப்பது.
ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் மெலிவலியிணைகளே தமிழிலுண்டு, ங்க்க (nk), ஞ்ச்ச (nc), ண்ட்ட (nt), ந்த்த (nth) ம்ப்ப (mp) ன்ற்ற (nt) என்னும் வன்மெலிவலியிணைகள் தமிழில் நிகழ இம்மியும் இடமில்லை.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, தமிழ் இயல்பை அறியாது, ஆங்கில வரிபெயர்ப்பில் (Transliteration) கொடு என்பதைக் கொட்டு என்றும், பாம்பு என்பதைப் பாம்பு என்றும் ஒலிக்குமாறு தவறாகக் குறித்திருப்பதினால், அதைப் பின்பற்றிய பரோ-எமெனோ திரவிட ஒப்பியல் அகரமுதலியும் அங்ஙனம் வழுப்படக் குறித்துள்ளது.
முந்நிலை யெழுத்துக்கள்
தமிழ் உலகப் பெரு மொழிகட்குள் மிக முந்தித் தோன்றிய மெல்லிய இயன்மொழியாதலால். அதிற் பிறமொழிகளிற் போல் எல்லா எழுத்துக்களும் சொன் முதலிடை கடையாகிய மூவிடத்தும் வருவதில்லை.
முதனிலையெழுத்துக்கள்
சொன்முதலில் உயிரும் உயிர்மெய்யுந்தான் வரும்; ஆய்தமும் மெய்யும் வரவே வரா.
ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் ஒன்பதுமெய்யும் உயிரோடு கூடி உயிர்மெய்யாகவும் சொன்முதல் வரா. உயிரோடு கூடிச் சொன்முதல் வரும் மெய்களுள்ளும், க த ந ப ம என்னும் ஐந்தே பன்னீருயிரொடுங் கூடிவரும். ஏனையவற்றுள், ஞகரம் நாலுயிரொடும், யகரம் ஈருயிரொடும், வகரம் எட்டுயிரொடும், கூடிவரும். ஏனையவற்றுள், ஞகரம் நாலுயிரொடும், யகரம் ஈருயிரொடும், வகரம் எட்டுயிரொடும், கூடிவரும், அவையாவன:
ஞ, ஞா, ஞெ, ஞொ, ய (யவனர்), யா : வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ.
இடைநிலையெழுத்துக்கள்
சொல்லிடையில் ஆய்தமும் மெய்யும் உயிர்மெய்யுமே வரும்; தனியுயிர் வராது. உயிருள், குறில்மட்டும் அளபெடைக் குறியாக வரும்.
க், ச், த், ப் ஆகிய நால் வல்லின மெய்கட்குப்பின், தன்னுயிர் மெய்யேயன்றி வேற்றுயிர்மெய் வராது. இது உடனிலை மெய்ம் மயக்கம் எனப்படும். பிற மெய்கட்குப்பின் பிறவுயிர்மெய்கள் சிலவும் பலவும் வரும். இது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும். மயக்கம் கூட்டம்.
ர், ழ் ஆகிய இருமெய்யும் இரட்டா; ஏனைய இரட்டும்.
ய், ர், ழ்; ஆகிய மும்மெய்க்குப்பின் தனிமெய் வரலாம். பிறவற்றின் பின் வரா.
எ.டு. வாய்ப்பு, தேர்ச்சி, சீழ்க்கை.
ம்ர, ம்ல; வ்ர, வ்ல என்னும் கூட்டுக்கள் தமிழில் எவ்வகையிலும் நிகழா.
ண்ஞ, ன்ஞ; ஞ்ய, ண்ய, ந்ய, ம்ய, வ்ய, ன்ய; ம்வ என்னுங் கூட்டுக்கள் கூட்டுச் சொல்லிடையிலன்றி வரா.
இறுதிநிலையெழுத்துக்கள்
ஆய்தமும் வல்லினமெய்யும் சொல்லிறுதியில் வரவே வரா. பிற மெய்களும் உயிர்மெய்யும்தான் வரும்.
நாஇ (நாய்) என்று எழுதப் பெற்ற பண்டை வழக்கு இன்றில்லை. உயிர்க்குறில் சொல்லிடையிற்போன்றே சொல்லிறுதியிலும் அளபெடைக் குறியாய் வரும்.
ர், ழ், என்பன தனிக்குறிலுக்குப்பின் சொல்லீறாய் வருவதில்லை.
தமிழில் எச்சொல்லிலும் எவ்விடத்திலும் பிறமொழி யெழுத்தும் எழுத்துமுறையும் வருதல் கூடாது. பிறமொழிச் சொல் இன்றியமையாததும் மொழிபெயர்க்க முடியாததுமாயின், தமிழ் முறைக்கேற்பத் திரித்தெழுதப் பெறும். இங்ஙனம் வரம்பீடு செய்யாக்கால், தமிழ் நாளடைவில் வேறு மொழியாய்
மாறிவிடும். இதனாலேயே வடசொல்லைச் செய்யுட் சொல்வகை நான்கனுள் ஒன்றாகக் குறித்த தொல்காப்பியரும், முன்னோரிட்ட வரம்பை மீறாது.
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (883)
என நெறிவகுத்தார்.
சொன்முதல் வராவெழுத்தை முதலிற்கொண்ட பிற மொழிச் சொற்கள் தமிழில் எழுதப்பெறின், அவற்றின் முதலெழுத்து நீக்கப் பெறும், அல்லது மாற்றப்பெறும்; அல்லது அதை மாற்றியோ மாற்றாதோ அதன்முன் ஓர் உயிர்க்குறில் சேர்க்கப்பெறும்.
எ.டு. பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல்
காட்லாந்த் காட்டிலாந்து, காத்திலாந்து
யூரோப்யன் ஐரோப்பியன்
பெயின் இசுப்பெயின்
ரஷியா இரசியா
தமிழுக்கொவ்வாத மெய்ம்மயக்கத்தை இடையிற்கொண்ட சொல்லாயின், அது தமிழுக்கேற்றவாறு மாற்றப்பெறும்.
எ.டு. ஷேக்பியர் – சேக்கசுப்பியர்
வல்லினமெய்யும் அயலெழுத்தும் இறுதியிற் கொண்ட சொல்லாயின், அதன்பின் ஓர் உயிர் அல்லது உயிர்மெய் சேர்க்கப்பெறும், அல்லது அதன் இறுதி மாற்றப்பெறும்.
எ.டு. பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல்
நியூயார்க் நியூயார்க்கு
யூரொப் ஐரோப்பா
டேனிஷ் தேனியம்
தனிச்சொல்லின் முதலில் மெய்யும், இடையிற் சில மெய்ம் மயக்கமும், இறுதியில் வல்லினமெய்யும், வரக்கூடாதென்று விலக்கியது. பண்டைத்தமிழரின் மெல்லொலிவாயியல்பு பற்றியது மட்டுமன்று, எதிர்காலத் தமிழரின் வாழ்நாள் நீடிக்குமாறு, இயன்ற வரை மொழியொலிப்பு முயற்சியைக் குறைக்கவேண்டுமென்னுங் குறிக்கோளுங் கொண்டதாகும்.
விழுத்தம் (ACCENT)
ஒரு சொல்லின் ஓர் அசையில் விழும் ஒலியுறைப்பு விழுத்தம் எனப்படும். தமிழில் விழுத்தம் (1) இயல்புவிழுத்தம், (2) சொற்பிரி விழுத்தம் (3) சொல்வகை விழுத்தம் என மூவகைப்படும்.
(1) இயல்புவிழுத்தம்
இயல்பு விழுத்தம் இயல்பாக நிகழ்வது; அது என்றும் சொல்லின் முதலில் விழும்.
எ.டு. கொற்றன், வந்தான்
ஒலியுறைப்பு வரவரக் குறையுமாதலால், சொன்முதலில் எடுத்தலும் (Acute), இடையில் நலிதலும் (Circumflex), இறுதியிற் (Grave), படுத்தலும் நிகழும்.
- ).
எ.டு. வந்தது.
ஈருயிர்ச் சொல்லாயின் : எடுத்தலும் படுத்தலும் மட்டும் நிகழும்.
- . - .
எ.டு. வந்தான், மகன்
2. சொற்பிரி விழுத்தம்
இது ஒரு கவர்படு பொருண்மொழியில் (பல்பொருட் சொற் றொடரில்), சொல்வான் கருத்திற்கேற்ப ஏதேனும் ஒரு சொன் முதலில் நிகழும்.
எ.டு. செம்பொன்பதின் பலம் = செம்பு ஒன்பது பலம்
செம்பொன்பதின் பலம் = செம்பொன் பத்துப்பலம்
குன்றேறாமா = குன்றேறு ஆமா
குன்றேறாமா = குன்றேறா மா
3. சொல்வகை விழுத்தம்
இது சொல்வகைக்கேற்பச் சொன் முதலிலாவது இறுதியிலாவது நிகழும்.
எ.டு. கட்டு - ஏவலொருமை வினை.
கட்டு - முதனிலைத்தொழிற்பெயர், முதனிலைத்
தொழிலாகுபெயர்.
தபு = (நீ) சா - தன்வினை.
தபு = சாவி (கொல்) - பிறவினை.
சிலர் விழுத்தத்தைக் குற்றியலுகரவொலியொடு மயக்கி, கட்டு என்னும் ஏவல் வினையீறு முற்றியலுகரமென்றும், கட்டு என்னும் முதனிலைத் தொழிற் பெயரீறு குற்றியலுகர மென்றும், உரைப்பர். விழுத்தம் வேறு; முற்றியலுகரம் வேறு. குற்றியலுகரம் ஒருபோதும் இதழ்குவிந்து முற்றியலுகரமாகாது.
அழுத்தம் (STRESS OR EMPHASIS)
பொருளை வலியுறுத்தற் பொருட்டு, ஒரு சொல்லையேனும் சொல்லுறுப்பையேனும் அழுத்தி யொலிப்பது அழுத்தமாம்.
எ.டு. மறைமலையடிகள் தமிழில் மாபெரு மலை - பெயர்ச்சொல்
மறைமலையடிகள் ஆங்கிலத்திலும் வடமொழியிலும் வல்லுநர் - (குறிப்பு) வினைச்சொல்
மறைமலையடிகள் இந்தியும் கற்றார்கள் - இடைச்சொல்.
மூவகைச்சொல்
முதற்காலத்தில் இலக்கணவகைச்சொல் பெயர், வினை, இடை என மூன்றாகவே யிருந்தன. இதுவே எல்லாமொழி கட்கும் பொதுவான அறிவியன் முறைப் பாகுபாடாம்.
நால்வகைச்சொல்
ஆரியர் தென்னாடு வந்து தமிழ் கற்றுத் தமிழாசிரியரான பின், இயற்சொல், திரிசொல், திசைச்சொல் என்னும் மொழி இயல்வகைச் சொற்களொடு வடசொல்லையும் சேர்த்துக் கொண்டது போன்றே, பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் என்னும் இலக்கணவகைச் சொற்களொடும் உரிச்சொல் என்பதைச் சேர்த்து, இரு வகையிலும் சொற்களை நந்நான் காக்கினர்.
உரிச்சொல் என்பது செய்யுட்கேயுரிய சொல். சொல் என்பது சொல்வடிவையுங் குறிக்கும். ஆரியர் அயலாரானதினால், தமக்குத் தெரியாத அருஞ்சொற்களைத் தொகுத்துப் பொருள் உரைத்துக் கொண்டனர்.
1. பெயர்ச்சொல்
ஒரு பொருளின் பெயரே பெயர்ச்சொல், பெய்வதுபெயர், பெய்தல் இடுதல் பெயரிடுதல் என்னும் வழக்கை நோக்குக.
பெயர்ச்சொல், பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுபொருள் பற்றி, அறுவகைப்படும். இருதிணை பற்றி, உயர்திணை, அஃறிணை, விரவுத்திணை என மூவகைப்படும்; மூவிடம் பற்றி, தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப்படும். சினை = உறுப்பு.
இருதிணைக்கும் பொதுவான பெயர் விரவுத்திணைப் பெயர் அல்லது விரவுப்பெயர் எனப்படும்.
v.L.: ஆண், பெண், தாய், பிள்ளை.
தன்மை முன்னிலைப்பெயர்கள், எண் பற்றி ஒருமை பன்மை என இருவகைப்படும். படர்க்கைப் பெயர்கள், பால் பற்றி ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐவகைப்படும்.
மூவிடப் பகரப்பெயர் (PERSONAL PRONOUNS)
தன்மைப்பெயர் ஒருமை பன்மை இரட்டைப்பன்மை
முதல்நிலை ஏன் ஏம் ஏங்கள்
2 ஆம் நிலை யான் யாம் யாங்கள்
3 ஆம் நிலை நான் நாம் நாங்கள்
இலக்கணவகைச்சொல் மூன்றும் இயல்பாகத் தோன்றிய முறை, பொதுவாக நோக்கின், இடை, வினை, பெயர் என்பதாகும்.
உணர்ச்சியொலிகளும் விளியொலிகளும் குறிப்பொலிகளும், மாந்தன் வாயில் முந்தித் தோன்றியவையாகும். இவை இடைச் சொல் என்பது தெளிவு. சப்பு, துப்பு, விக்கு, முக்கு. விம்மு, தும்மு, இசி, சிரி முதலிய முந்தியற்சொற்கள், வினையாகத் தோன்றிப் பின்பு பெயருமாயின.
சில இடைச்சொற்கள் வினையாகிப் பின்பு பெயராகின்றன.
எ.டு. ஒல் (இடை) - ஒலி (பெயரும் வினையும்).
முதற்காலத்தில் ஒல் என்பதே வினையாகவுமிருந்தது. இடை-வினை பெயர் என்னும் இம்முறை எல்லாச்சொற்கும் தனிப்பட்ட நிலையில் ஒத்ததன்று. சில இடைச்சொற்கள் நேரடியாய்ப் பெயராகிவிடுகின்றன.
எ.டு. எல்ல (எல்லா) - எலுவ - எலுவன் (தோழன்), எலுவை (தோழி).
எல்லா என்னும் விளியொலி இன்று ஏல, ஏலா என்று வடிவிலும் பொருளிலும் திரிந்து வழங்குகின்றது.
சில சொற்கள் முதலடியிலேயே பெயராகவோ வினையாகவோ தோன்றி விடுகின்றன.
எ.டு. காகா- காகம், காக்கா - காக்கை (பெயர்) கர - கரை (வினை).
இவ்விருசொல்லும் ஆங்கிலத்தில் நேர்மாறாய் ஆளப்பெறுகின்றன.
நாம் காகம் கரைகிறது என்கிறோம், ஆங்கிலரோ ‘The crow caws’ என்கின்றனர்.
சில வினைச்சொற்கள் பெயரினின்றே பிறக்கின்றன.
எ.டு. உள் - உண்
கள் - களி, காதல் - காதலி, தேன் - தேனி
உள் = உள்ளிடம். உண்ணுதல் = உள்ளிடுதல்.
களித்தல் = கட்குடித்தல். தேனித்தல் - இனித்தல்.
ஏன், ஏம் என்பவை இன்று தமிழிற் பெயராக வழங்காவிடினும் வினைமுற்றீறாக வழங்கிவருகின்றன.
எ.டு. வந்தேன், வந்தேம்.
தன்மைப் பெயரின் வேற்றுமை யடிகள்
ஏன் ஏம் ஏங்கள்
என் எம் எங்கள்
யான் யாம் யாங்கள்
நான்-நன் நாம்-நம் நாங்கள்-நங்கள்
நன் என்பது இற்றைத்தமிழில் வழக்கற்றுப் போனாலும் தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்கி வருகிறது.
நங்கள் என்று இன்றும் தமிழில் செய்யுள் வழக்காயிற்று;
நங்கள் இதன் வந்தேன்
யாங்கள் என்னும் தனித்தன்மைப் பன்மைப் பெயர் வழக்கற்றுப் போனதினால், இன்று அதன் இடத்தில் நாங்கள் என்னும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப்பெயர் தன் உளப்பாட்டுப் பொருளையிழந்து வழங்குகின்றது.
ஏ என்பது உயர்ச்சி குறித்தலால், இயல்பாக மாந்தனுக்குள்ள நான் என்னும் செருக்கு அல்லது தன்னலம் பற்றி, அதை அடியாகக் கொண்டு தன்மைப் பெயர்கள் தோன்றியிருக்கலாம். வடமொழி யிலக்கணியர் தன்மையிடத்தை உத்தம புருடன் என்றும், ஆங்கிலர் அதனை First Person என்றும், குறித்ததையும் நோக்குக.
ஏபெற் றாகும். (தொல். உரி. 7)
எக்கு, எட்டு, எண், எம்பு, எவ்வு, எழு, ஏண், ஏந்து, ஏர், ஏறு முதலிய சொற்களில் எகர ஏகாரம் உயர்ச்சி குறித்தல் காண்க.
இன்று வழக்கிலில்லாத வடிவங்களெல்லாம் பண்டைத் தமிழில் வழங்கினவென அறிக.
முன்னிலைப் பெயர்
ஒருமை பன்மை இரட்டைப்பன்மை
முதல்நிலை (ஊன்) (ஊம்) (ஊங்கள்)
2-ஆம் நிலை (நூன்) (நூம்) (நூங்கள்)
3-ஆம் நிலை நீன் நீம் நீங்கள்
4-ஆம் நிலை நீ நீயி (நீ+இர்) நீங்கள்
பிறைக்கோட்டிலுள்ளவை வழக்கு வீழ்ந்தன.
நீ என்பது நீன் என்பதன் கடைக்குறை. அது இர் ஈறுபெற்ற நீயிர் என்றாகிப் பின்பு நீவிர் எனத் திரிந்து, நீர் எனத் தொக்கது.
நீன், நீம் என்னும் வடிவங்கள் இன்றும் நெல்லை வட்டாரத்தில் வழங்குகின்றன.
முன்னிலைப் பெயரின் வேற்றுமை யடிகள் :
(ஊன்) - உன் (ஊம்) - உம் (ஊங்கள்) - உங்கள்
(நூன்) - (நுன்) (நூம்) - நும் (நூங்கள்) - நுங்கள்
நீன்-நின் நீம் - (நிம்) நீங்கள் - (நிங்கள்)
இன்று 4-ஆம் நிலை எழுவாய் வடிவங்கட்கும் முதல் நிலை வேற்றுமையடிகளே வழங்குகின்றன.
முன்னிலைப் பெயர்கள் ஊ என்னும் முன்மைச் சுட்டடியாய்த் தோன்றியுள்ளன.
முதற்காலப் படர்க்கைச் சுட்டுப்பெயர்
ஒருமை பன்மை இரட்டைப்பன்மை
முதல்நிலை (ஆன்) (ஆம்) (ஆங்கள்)
2 ஆம் நிலை தான் தாம் தாங்கள்
படர்க்கைப் பகரப்பெயரின் வேற்றுமையடிகள்
தான்-தன் தாம்-தம் தாங்கள்-தங்கள்
ஆ என்னும் சேய்மைச் சுட்டடியினின்று பிறந்துள்ள தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்கள், அவன், அவள் முதலிய ஐம்பாற் சுட்டுப் பெயர்கள் தோன்றியபின், தற்சுட்டுப் பெயர்களாய் (Reflexive Pronouns) மாறிவிட்டன. (Auto) என்னும் கிரேக்கச்சொல்லும், முதலிற் சுட்டுப் பெயராயிருந்து பின்பு தற்சுட்டுப் பெயராய் மாறியுள்ளமை இங்குக் கவனிக்கத் தக்கது.
இக்காலப் படர்க்கைச் சுட்டுப் பெயர்கள் (Demonstrative Pronouns)
சேய்மைச் சுட்டுப் பெயர் : அவன், அவள், அவர், அது, அவை
அண்மைச் சுட்டுப் பெயர் : இவன், இவள், இவர், இது, இவை
முன்மைச் சுட்டுப் பெயர் : உவன், உவள், உவர், உது, உவை
இவை அவ், இவ், உவ்; அல், இல், உல்; என்னும் சுட்டடிகளி னின்று தோன்றியவையாகும்.
அல்-அது, இல்-இது, உல்-உது.
உகரச் சுட்டடிப் பெயர்கள் இற்றைத் தமிழ்நாட்டில் வழக்கற்றன; ஆயின், யாழ்ப்பாணத்தில் வழங்குவதாகத் தெரிகின்றது.
அவர்கள், இவர்கள் உவர்கள் என்பன இரட்டைப் பன்மை வடிவங்களாகும்.
மக்கள் நாகரிகமடைந்தபின், அகவை அறிவு அதிகாரம் முதலியவற்றில் இழிந்தோனைக் குறிக்க ஒருமைப்பெயரையும், ஒத்தோனைக் குறிக்கப் பன்மைப் பெயரையும், உயர்ந்தோனைக் குறிக்க இரட்டைப் பன்மைப்பெயரையும், முன்னிலையிலும் படர்க்கையிலும் பயன்படுத்தினர். இது உலகவழக்கேயன்றிச் செய்யுள் வழக்கன்று. தன்மையிடத்திற்கு இரட்டைப்பன்மை வேண்டாவிடினும், ஒப்புமை பற்றி அதிலும் அமைந்துள்ளது.
மேற்காட்டிய மூவிடப்பெயர்களுள், தன்மையும் முன்னிலையும் (ஐம்பாற் சுட்டும்பெயர் தவிர ஏனையவெல்லாம்), னகர மெய்யீற்றால் ஒருமையையும் மகர மெய்யீற்றாற் பன்மையையும், ஒழுங்காய் உணர்த்துகின்றன. இவ்வீறுகள் தோன்றிய வகை வருமாறு:
ஒல்லுதல் = பொருந்துதல், ஒன்றாதல்.
ஒல் - ஒன் = ஒன்று, ஒன் - அன், ஒ. நோ : E one-an.
ஒன் என்னுஞ் சொல்லே அன் என்று திரிந்து யான் (நான்), நீன், தான், என்னும் பெயர்களில் னகர மெய்யளவாக நின்று ஒருமை யுணர்த்துகின்றது. அன்னீறு உயிரொடு புணரின் முதல் கெடும்.
ஏ + அன் = ஏன், ஊ - அன் = ஊன், ஆ + அன் = ஆன்.
ஒ.நோ: மக + அன் = மகன். கோ + அன் = கோன் (கோவன்)
உம்முதல் கூடுதல், உம் என்னும் வினை இன்று வழக்கற்று, அதன் அள்ளைத் திரிபான அம் என்னும் சொல்லும், அதன் வழியடியான கும் என்னுஞ் சொல்லுமே வழக்கிலுள்ளன.
அம்-அமல் - அமலை = திரளை. அமல்-அமர். அமர்தல் = பொருந்துதல். அம்-அமை. அமைதல் = நெருங்குதல், கூடுதல், அம்-அம்பு-அம்பல் = குவிதல், குவியும் முகிழ். அம்பல் - அம்பலம் = அவை, கூட்டம், மன்றம்.
ம. அம்பலம், க. அம்பல, து. அம்பில.
அம்பலம் - வ. அம்பர. சிற்றம்பலம் - வ. சிதம்பர (Cidambara)
உம் - கும். கும்முதல் = கூடுதல். கும் - கும்மல். கும் - கும்பு - கும் பல்.
உம் என்னும் சொல் கூடுதலைக் குறித்ததனாலேயே, அது எண்ணுப்பொருள் அல்லது கூட்டுப்பொருளிடைச் சொல்லாகக் கொள்ளப்பட்டது.
எ.டு. எழுத்தும் சொல்லும் பொருளும்.
நானும் வருவேன் = நான் கூட வருவேன், இதை ஒரு சிறு பிள்ளையும் செய்துவிடும் = இதை ஒரு சிறு பிள்ளை கூடச் செய்துவிடும்.
இவ்வழக்குக்களில், உம்மைச் சொல்லும் கூடற்சொல்லும் முற்றும் பொருளொத்திருத்தல் காண்க.
இவ்வும்மைச் சொல்லே, யாம், நீம், தாம் என்னும் பெயர்களில் மகரமெய்யளவாக நின்று பன்மையுணர்த்துகின்றது. கால்டுவெலார் கருத்தும் இதுவே. அம்மீறு போன்றே உம்மீறும், உயிரொடு புணரின் முதல் கெடும்.
ஏ + அம் = ஏம், ஊ + அம் = ஊம், ஆ + அம் = ஆம்
ஒ.நோ : மண + அம் = மணம், கா + அம் = காம் (ஆசை)
மூவகைச் சுட்டுப்பெயர் முறையிலேயே, எ, ஏ, யா, என்னும் வினாவடி களினின்று ஐம்பால் வினாப்பெயர்கள் தோன்றியுள்ளன.
வினாப்பெயர்கள் (INTERROGATIVE PRONOUNS)
எ : எவன், எவள், எவர் (எவர்கள்), எது, எவை
ஏ : ஏவன், ஏவள், ஏவர் (ஏவர்கள்), ஏது, ஏவை
யா : யாவன்,. யாவள், யாவர் (யாவர்கள்), யாது, யாவை
ஏ-எ : ஏ-யா, எ-எவ், எ-எல்-எது-எத்து-எந்து. ஏ-ஏல்-ஏது.
உயர்திணை ஆண்பாலைக் குறிக்கும் எவன் என்னும் வினாப்பெயரும், அஃறிணை யிருபாலையும் உணர்த்தும் எவன் என்னும் வினாப் பெயரும், வெவ்வேறாம்.
ஏது என்னும் சொல், ‘எப்படிக் கிடைத்தது? என்னும் பொருளில் குறிப்பு வினைமுற்றாகவும் வரும்.
எ.டு. உனக்கு இது ஏது?
எது என்னும் சொல் சிறிது அறியப்பட்ட பொருள் பற்றியும், யாது என்னும் சொல் சிறிதும் அறியப்படாத பொருள் பற்றியும் வினாவாக வரும்.
எ.டு. குதிரைவாலி யாது? - சிறிதும் அறியப்படாதது. வரகு இக்கூலங்களுள் எது? - சிறிது அறியப் பட்டது.
யாவர் என்னுஞ் சொல், யார் எனத் தொக்கு உயர்திணை முப்பாலையுங் குறிப்பதுடன், உலக வழக்கில் ஆர் என்றும் மருவும்.
யா என்னும் வினாவடி, செய்யுள் வழக்கிற் பலவின்பால் வினாப் பெயராகவும் வழங்கும்.
எல்-என்-என்னது (ஒருமை), என்ன (பன்மை).
ஏல்-ஏன்.
ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ.
என்று தொல்காப்பியம் (32) கூறுவதால், வினாவெழுத்து முதற்காலத்தில் நெடிலாகவே யிருந்ததென்பதும், அது ஏகாரமே யென்பதும், உய்த்துணரப்படும்.
ஏ-யா-ஆ-ஓ
யா சொல்லின் முதலிலும், ஆ-ஓ சொல்லின் ஈற்றிலும், ஏ அவ்வீரிடத்தும், வினாவாக வரும்.
ஒரு பொருளைப் பற்றி எது என்று வினவுவது, ஓரிடத்திலுள்ள பல பொருள்களுள் ஒன்றை எடுத்துக்காட்டச் சொல்வது போலிருத்தலால், எழுச்சியை அல்லது உயர்ச்சியை உணர்த்தும் ஏகாரம் வினாவெழுத்தாகக் கொள்ளப்பட்டது என்று கருத இடமுண்டு.
படர்க்கைப்பெயர்ப் பாகுபாடுகள்
தன்மையும் முன்னிலையுமன்றிப் படர்வது படர்க்கை படர்தல் = பரந்து செல்லுதல்.
அறுபொருட்பெயர்
எல்லாப் பொருள்களும், பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என அறுவகைப்படும். ஆதலால் அவற்றின் பெயரும் அறுவகையாம்.
பொருள் என்றது. காட்சிப்பொருளாகவோ கருத்துப் பொருளாகவோ உள்ள ஒரு தனிப்பொருளை.
ஏதேனும் ஒரு பொருளிருப்பின், அது இருக்க இடமும் காலமும் வேண்டும். பொருள்கள், இயற்கையாயினும் செயற்கையாயினும், பெரும்பாலும் பல வுறுப்புகளை யுடையன. ஒவ்வொரு பொருட்கும் சில தன்மைகளுண்டு. அத்தன்மைகளே உறுப்பையும் உடலையும் துணைக்கொண்டு தொழிலாக வெளிப்படும். இங்ஙனம் ஆய்ந்து பொருள்களை ஆறாக வகுத்ததும் அவற்றை முறைப்படுத்தியதும், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனான முதனூலா சிரியனின், மெய்ப்பொருளறிவையும் தருக்கத் திறனையும் தெள்ளிதிற் காட்டும்.
பொருட்பெயர் இயல்வரையறை
பொல்-பொரு-பொருள்.
குறியீட்டைப் பொறுத்தமட்டில், குணம் எனினும் பண்பு எனினும் ஒக்கும்.
முத்திணைப் பெயர்
உயர்திணை, அஃறிணை, அவ்விரண்டிற்கும் பொதுவான விரவுத்திணை எனத் திணை மூவகைப்படும்.
எ.டு. உயர்திணைப்பெயர் - அவன், மாந்தன், முருகன்
அஃறிணைப்பெயர் - அது, மரம், கல்
விரவுத்திணைப்பெயர் - தாய், பிள்ளை, ஆண், பெண்
திண் - திணை = திரட்சி, தொகுதி, வகுப்பு.
ஐம்பாற்பெயர்
ஆண்பால், பெண்பால், பலர்பால் என உயர்திணைப்பால் மூன்றும், ஒன்றன்பால், பலவின்பால் என அஃறிணைப்பால் இரண்டும் ஆகப் பால் ஐந்தாம்.
பகு-பகல்-பால் = பிரிவு.
ஆண்பால், பெண்பால் என்னும் இரண்டும் ஒருமைப் பால்கள், ஆண்பெண் வேறு அஃறிணையுயிரிகளுள்ளும் இருப்பினும், முதுனூலாசிரியன் அதற்கு இலக்கணத்தில் இடந்தரவில்லை. ஏனெனின், மொழியை அமைத்த பொது மக்களே அங்ஙனம் அமைத்துவிட்டனர். இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்புதலே நூலாசிரியன் செயல்.
குமரிக்கண்டப் பொதுமக்கள் கூர்மதியும் உயரிய ஒழுக்கமும் உடையராதலின், நல்லதைக் கடைப்பிடித்துத் தீயதை நீக்கும் நாகரிகப் பண்பாட்டிற்கு இன்றியமையாத பகுத்தறிவை அளவை யாகக் கொண்டு, அதையுடைய மக்களை உயர்திணையென்றும், அஃதில்லாதவற்றை யெல்லாம் உயிரிருப்பினும் இல்லாவிடினும் அஃறிணை யென்றும் வகுத்து, அதற்கேற்ப, மகன் வருகிறான், மகள் வருகிறாள் என்று உயர்திணையிற் பால் பிரித்தும், காளை வருகிறது, ஆவு வருகிறது என்று அஃறிணையிற் பால் பிரிக்காதும், எல்லாப் பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் அமைத்துவிட்டமை, என்றும் தமிழன் எண்ணி மகிழ்தற்கும் தன் முன்னோரைப் பற்றிப்
பெருமை பாராட்டுதற்கும் உரியதொன்றாம். இங்ஙனம் வேறேம் மொழியிலு மில்லாத சிறந்த இலக்கண வமைப்பு, இற்றைப் புல மக்களினும் அற்றைப் பொதுமக்கள் அறிவாற்றலிலும் நாகரிகப் பண்பாட்டிலும் சாலச் சிறந்தவ ரென்பதற்குத் தக்க மொழிச்சான்றாம்.
ஆண்பால் பெண்பாற்பெயர் (Masculine and Feminine Nouns)
ஆண்பால்
உயர்திணை அஃறிணை
ஆண் ஆடவன், ஆடூஉ ஆண், அப்பர், அலவன்,
ஆண்பிள்ளை, ஆண்மகன், இரலை, உதள், ஏறு-ஏற்றை,
மகன், மாந்தன் ஒருத்தல், கடா, கடுவன், குண்டு, கண்டி, கலை, களிறு, காளை, கேழல், சலகன், சே, சேவல், தகர், புகல்வி, போத்து, மோத்தை, மோழல் விடை.
பெண்பால்
பெண், பெண்டு, அளகு, ஆன் (ஆ, ஆவு) இதடி,
பெண்டாட்டி, பெண் கடமை, கடாரி (கிடேரி), நாகு,
பிள்ளை, மகள் மகடூஉ, பாட்டி, பிடி, பிணா-பிணவு-
மாந்தை பிணவல், பிணை, பெண்,
பெட்டை - பெடை, பேடு, பேடை,
மந்தி, மறி, முடுவன், மூடு.
திரிபால்
ஆண்டன்மை மிக்க பெண் - பேடன் பெண்டன்மை மிக்க ஆண் - பேடி இரண்டிற்கும் பொதுப்பெயர் - பேடு ஆணும் பெண்ணும் அல்லாதது - அலி, அழிதூஉ.
ஆண் தோற்றமுள்ள அலி - ஆணலி.
பெண் தோற்றமுள்ள அலி - பெண்ணலி.
இளமைப்பெயர், முதுமைப்பெயர்
இளமைப்பெயர்
உயர்திணை அஃறிணை
மக-மகவு, குழவி, குழகு அணங்கு, கசளி, கயந்தலை,
குழந்தை சேய், மழ-மழவு, கரு, கருந்து, களவு-களவம்,
மதலை, புதல்வு, பிள்ளை கன்று, குஞ்சு, குட்டி, குருமன்,
(குட்டி) குருளை, குழவி, செள், சேய், நவ்வி,
நாகு, நாற்று, பறழ், பார்ப்பு,
பிள்ளை, பொடி, போக்கு, போந்து
போந்தை, மடலி-வடலி, முனி
முதுமைப் பெயர்
கிழவன் - கிழவி முதியன்- கிழம், கிழடு, கெட்டை, மூரி.
முதியள் முதுமகன் -
முதுமகள்
முறைப்பெயர் (NAME OF RELATIONSHIP)
தந்தை - அப்பன் (தமப்பன்-தகப்பன்), அத்தன் - அச்சன், ஆயன் - ஆஞன், ஆஞா, ஆஞான் - ஆஞி, ஐ, ஐயன், தா, நாயன், (நாயனார்) அப்பு.
தாய் - அம்மை - அவ்வை, அன்னை - அஞ்ஞை, அத்தி - ஆத்தி - ஆத்தை.
அச்சி, ஆச்சி, ஐயை - ஆய், தள்ளை.
மகன் - புதல்வன்.
மகள் - புதல்வி.
மக(பொது) - மகவு, பிள்ளை, சேய், மதலை, கான்முளை (ஒருமை); மக்கள் (பன்மை).
அண்ணன் - ஐயன் (தமையன்), ஆயான், அண்ணாட்சி (அண்ணாத்தை), அண்ணாள்வி, தம்முன், மூத்தோன், முன்னோன்.
தம்பி - தம்பின் - தம்பி, இளவல், இளையான், பின்னோன். தம்பி மனைவி கொழுந்தி.
அக்கை - அக்கைச்சி (அக்கையச்சி), (தமக்கை). தவ்வை (தம் அவ்வை), தந்தை, மூத்தாள், முன்னை, அத்தி - அச்சி, அச்சன்.
தங்கை-கை, தங்கைச்சி (தங்கையச்சி), செள்ளை, இளையாள், இளங்கிளை, இளைச்சி, பின்னை, பின்னி.
அண்ணன் தம்பி (பொது) - உடன் பிறந்தான் - உடப்பிறந்தான், உடன் வயிற்றோன்.
அக்கை தங்கை (பொது) - உடன் பிறந்தாள் - உடப்பிறந்தாள், உடன்வயிற்றோன்.
அண்ணன் மனைவி - அண்ணி, ஆயந்தி (ஐயன்தேவி), நங்கை, அத்தாச்சி.
அக்கை கணவன் - அத்தான், மாமன்.
மருமகன் - மருமான், மருகன், மணவாளப்பிள்ளை.
மருமகள் - மருமாள், மருகி, மணாட்டுப் பெண்.
பெண்கொடுத்தோன் - மாமன்.
மாமன்மனைவி - மாமி.
கணவன் - ஆண்மகன், அகமுடையான், கண்ணாளன், கொழுநன், கொண்கன், கொண்டான், நாயகன், மணவாளன் - மணாளன், வீட்டுக்காரன்.
மனைவி - அகமுடையாள், இல்லாள், நாயகி, பெண்-பெண்டு - பெண்டாட்டி, கண்ணாட்டி, மணவாட்டி, வீட்டுக்காரி.
கணவன் தம்பி - கொழுந்தன், கணவன் தாய் அத்தை.
கணவன் தங்கை - கொழுந்தி.
கணவன் அண்ணன் - அத்தான், மூத்தார் (மச்சாண்டார்)
கணவன் அக்கை - நாத்தூண், நாத்தூணாள், அத்தாச்சி.
மனைவி அண்ணன் - மூத்த அளியன், அத்தான் (அத்தைமகன், அம்மான் மகன்)
மனைவி தம்பி - இளைய அளியன்.
மனைவி அக்கை - மூத்த அளியாள், அண்ணி.
மனைவி தங்கை - இளைய அளியாள், கொழுந்தி.
ஒரகத்தான் - ஓர்குடி. மணாளன், ஓர்குடியிற்கொண்டோன் (சகலன்).
ஓரகத்தி - ஓரகத்தாள், ஓர்ப்படி, ஓர்ப்படியாள், ஓர்ப்படைச்சி.
தந்தையண்ணன் - பெரியப்பன், மூத்தப்பன், பெரியையா.
தந்தை தம்பி - சின்னப்பன், சிறியதகப்பன், சின்னையா, குட்டியப்பன் குஞ்சியப்பன்.
தந்தையுடன் பிறந்தாள் - அத்தை (சின்னத்தை, பெரியத்தை), தாயின் அண்ணன் - பெரியம்மான்.
மூத்தம்மான் அம்மான்
அம்மாச்சன்
தம்பி - சின்னம்மான், இளையம்மான் அம்மாண்டார்
தாயின் தம்பி அக்கை - பெரியம்மை, பெரியதாய், பெரியாய் பெரியாத்தை; அம்மான் மனைவி - அம்மான் தேவி - அம்மந்தி அம்மாமி (பிரா), தம்மாமி, தந்துவை, பாட்டனுடன் பிறந்தாள். அத்தைப்பாட்டி அப்பி - அக்கை (யா).
தாயின் தங்கை - சின்னாத்தாள், சின்னம்மை, சிறியதாய், சின்னாய், செய்யாள் சிற்றாத்தை, தொத்தா, சித்தி (சிற்றி, சிற்றாய்), பின்னி, குஞ்சியாத்தை, குஞ்சி யாச்சி (தந்தையின் தம்பி மனைவி).
தந்தையின் தந்தை - அப்பச்சன், தாதா, தாதை, தாத்தா, மூத்தப்பன்.
தந்தையின் தாய் - அப்பச்சி, அப்பாத்தை, அப்பாத்தாள் அப்பத்தி, அப்பாய்.
தாயின் தந்தை - அம்மாச்சன்.
தாயின் தாய் - அம்மாச்சி, அம்மாய், அமிஞை, அம்மாத்தாய், ஆய்ச்சி.
பெற்றோர் தந்தை (பொது) - பாட்டன், போற்றி - போத்தி - மூத்தப்பன்.
பெற்றோர் தாய் (பொது) - பாட்டி, ஆச்சி, ஆய், (ஆயள்).
பாட்டன் தந்தை - பூட்டன், (அப்பாட்டன்), கொள்ளுப் பாட்டன் கொப்பாட்டன் (கொட்பாட்டன்).
பாட்டன் தாய்-பூட்டி, கொள்ளுப்பாட்டி (கொட்பாட்டி) கோப்பாட்டி, பாட்டன் உடன் பிறந்தாள்.
பூட்டன் தந்தை - ஒட்டன், சீயான் (சேயான்).
பூட்டன் தாய் - ஓட்டி, சீயாள் (சேயாள்) அப்பாட்டன்.
மகன் மகன் பெயரன் - பேரன் - பேராண்டி
மகள் மகன்
மகன் மகள் பெயர்த்தி - பேர்த்தி
மகள் மகள்
பேரன் மகன் - கொள்ளுப்பேரன், கொட்பேரன்.
பேரன் மகள் - கொள்ளுப் பேர்த்தி, கொட்பேர்த்தி.
சக்களத்தி (சகக்களத்தி) என்னும் இருபிறப்பிச் சொல்லை (Hybrid) ஒக்களத்தி என்றும், சம்பந்தி என்னும் வடசொல்லை உறவாடி என்றும், மொழிபெயர்த்துச் சொல்லல் வேண்டும்.
இயற்பெயர் (பெற்றோர் இட்டபெயர்)
எ.டு. அருண்மொழித்தேவன், திருவரங்கம், பரிமேலழகன்.
சிறப்புப் பெயர்
எ.டு. காக்கைபாடினி, மகனை முறைசெய்தான்.
பட்டப்பெயர்
எ.டு. தொண்டர்சீர்பரவுவார், தலைக்கோல் (கணிகையர் பட்டம்), கலையிளைஞன் (B.A.) புலவன்.
விருதுப் பெயர்
எ.டு. மும்முடிச்சோழன், கங்கைகொண்டான்.
புலமைப் பெயர்
எ.டு. அறிஞன், பண்டிதன், புலவன், நாவன், பாவலன்
பகடிப்பெயர் (NICKNAME)
எ.டு. ஊன்பொதிபசுங்குடையன், நரிகுளிப்பாட்டி (வலக்காரம் மிக்கவன்).
குலப்பெயர்
எ.டு. வேளாளன், பாணன்.
குலப்பட்டப்பெயர்
எ.டு செட்டி நாடான், பிள்ளை, முதலி, இது இக்கால வழக்கு.
குடிப்பெயர்
எ.டு. குறுக்கையன், சேக்கிழான்.
இட(நில) வியற்பெயர்
எ.டு. திணைநிலை - குன்றவன், காடவன், பொதுவன், மருதவாணன், நாட்டுநிலை - சோழியன், கொங்கன், மாறோக்கத்தான், ஊர்நிலை - உறந்தையான், கூடலான், நகரமாந்தர்.
காலவியற்பெயர்
எ.டு. மூதிரையான், வேனிலான்
தலைமைப் பெயர்
எ.டு. திணைநிலை - வெற்பன், குறும்பொறைநாடன், ஊரன்.
குலநிலை - அம்பலகாரன், நாட்டாண்மைக் காரன், பட்டக்காரன்.
வாழ்நிலைப்பெயர்
எ.டு. இல்லறத்தான், இல்வாழ்வான், துறவி, அடிகள், முனிவன்.
சினைமுதற்பெயர்
எ.டு. கரிகாலன், பெருந்தலையன்.
உடைமையியற்பெயர்
எ.டு. செல்வன், நாடுகிழவோன்.
பண்பியற்பெயர்
எ.டு. அன்பன், நல்லோர்
தொழிலியற் பெயர்
எ.டு. எழுத்தாளன், தச்சன், பொருநன், கடுநடையன்.
மதவியற் பெயர்
எ.டு. சிவநெறியன், திருமால்நெறியன், சமணன்.
இடப்பெயர்
எ.டு.
குறிஞ்சி : சிறுகுடி, குறிச்சி, மலை, கோடு, குன்று-குன்றம், கா, சோலை, புழை, கடவு, கணவாய்.
முல்லை : பாடி, சேரி, பட்டி, வாடை, ஆநந்தல்.
மருதம் : முற்காலம் - ஊர், சிற்றூர், பேரூர், மூதூர், புத்தூர், நல்லூர், ஆற்றூர், குளத்தூர், சேற்றூர், ஆமூர், இல், குடி, இருப்பு, வாழ்வு, வயல், பண்ணை, நாடு, மங்கலம், குளம், இலஞ்சி, ஏரி, ஆறு - ஆறை, கிணறு, ஊருணி, (நெல்லூர், நெல்வேலி, நென்மேனி, நெற்கோட்டை).
பிற்காலம் - நகர் - நகரம், எயில், கோட்டை, புரி, புரம், கோவில் - கோயில்.
நெய்தல் :
முற்காலம் - குப்பம், கழி, காயல், கானல், கரை, துறை, கொண்கு, சேர்ப்பு.
பிற்காலம் - பட்டினம், பாக்கம் (அலைவாய், புகார், கூடல்).
பாலை : கடம், காடு, கானம், குடிக்காடு, முதுகுடி, பறந்தலை, நத்தம், வலசை.
முதற்காலத்தில், ஒவ்வொரு திணைநிலத்திலும் ஒவ்வொரு வகுப்பாரே வாழ்ந்திருந்தனர். மருதநிலத்தில், நாளடைவில், ஊர் விரிவும் தொழிற்பெருக்கமும் கல்வியறிவும் நாகரிகவளர்ச்சியும் வணிக முன்னேற்றமும் பேரரசாட்சியும் மதில் சூழ்ந்த மாநகர மைப்பும் ஏற்பட்டபின், நீர் வாணிகத்தின் பொருட்டு, பேரியாறுகள் கடலோடு கலக்கும் கயவாயில் பட்டினம் என்னும் துறைநகர்கள் கட்டப்பெற்றன.
சில சிறப்புவகை யிடப்பெயர்கள்
உரிமை நிலங்கள்
காணி அல்லது பற்று-பொதுவூழியம் செய்தவர் குடும்பத்திற்கும் போரில் இறந்த மறவர் குடும்பத்திற்கும், நன்கொடையாகக் கொடுக்கப் பெற்ற முழுவுரிமை நிலம்.
முற்றூட்டு - புலவர் முதலியோர்க்குக் கொடுக்கப்பெற்ற முழுவுரிமை நிலம்.
இறையிலி - வரிநீக்கப்பெற்ற மானியநிலம்.
அறப்புறம் - கல்விச்சாலைகட்கும் மடங்கட்கும் விடப் பெற்ற இறையிலி.
அடிசிற்புறம் - சோற்றுச்சத்திரத்திற்கு விடப்பெற்ற இறையிலி.
கோயிற்புறம் - கோயில் வழிபாட்டிற்கு விடப்பெற்ற இறையிலி.
பண்டாரவாடை - குடிகளுக்கு உரிமையானவூர்.
சில வூர்ப்பெயர்கள்
நத்தம் - போரினாற் பாழான வூர். வலசை
குடியேற்றம் - மக்கள் புதிதாய்க் குடியேறிய வூர்.
ஆவடி - Deot.
தங்குமிடங்கள்
பாசறை அல்லது கட்டூர் - போர்க்களத்திற் படை மறவர்க்கமைத்த இலைக்குடில் தொகுதி (War-camp).
பாளையம் - படைகளுடன் பொதுமக்களும் தங்கியிருப்பதும் கடைத் தெருவுடன் கூடியதுமான இடம் (Military Encampment).
படைவீடு - படைமறவர் நிலையாக வதியும் இடம் (Cantoment).
தாவளம் - அயலூரில் தங்கியிருக்குமிடம் (Lodging).
நிலப்பாங்குகள்
கரிசல் - களிமண் நிலம்.
சிவல் - செம்மண் நிலம்.
தேரி - பரந்த கடற்கரை மணல் நிலம்.
கல்லாங்குத்து - வன்னிலம்.
முரம்பு - கன்னில மேடு (தென்பாண்டி வழக்கு).
நாட்டுப் பிரிவுகள்
மடப்பம் - 500 சிற்றூர்க்குத் தலைமையானவூர்.
பெரும்பிரிவு - மண்டலம்.
சிறுபெரும்பிரிவு - கோட்டம், வளநாடு.
சிறுபிரிவு - கூற்றம், நாடு.
கீழ்ச்சிறுபிரிவு - தனியூர், பற்று (பல சிற்றூர்த் தொகுதி)
சிற்றூர் - உட்கிடை.
காலப்பெயர்
கோல் - கால் - காலம்.
விடியலிலிருந்து ஒரு நாள் பப்பத்து நாழிகை கொண்ட ஆறு சிறுபொழுதாகவும், மேழ (சித்திரை) மாதத்திலிருந்து ஓர் ஆண்டு இவ்விரு மாதங்கொண்ட ஆறு பெரும்பொழுதாகவும் வகுக்கப் பட்டுள்ளன.
சிறுபொழுது
காலை, நண்பகல், எற்பாடு (சாயுங்காலம்), மாலை, யாமம், வைகறை.
நண்பகல் நடுவிற்கு உச்சிவேளை, உருமம் என்பன தூய உலக வழக்குத் தமிழ்ச்சொற்கள். உச்சி வேளைக்கு முந்திய பகல் முற்பகல்; பிந்திய பகல் பிற்பகல்.
பெரும்பொழுது
இளவேனில், முதுவேனில், கார் (மழை), கூதிர் (குளிர்), முன்பனி, பின்பனி, வேனில் என்பது கோடை.
சினைப்பெயர் (Name of Organs)
சில்-சின்-சினை.
நிலைத்திணை : வேர், அடி, கிளை, இலை, பூ, காய், கனி, முதலியன.
இயங்குதிணை : பாதம், கால், அரை, வயிறு, மார்பு, கழுத்து, தலை முதலியன.
குணப்பெயர் (ABSTRACT NOUN)
வண்ணம், வடிவு, அளவு சுவை, ஊறு, நாற்றம், இயல், செயல் எனக் குணம் எண்வகைப்படும்.
வண்ணம்
வெள்ளை, கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு, கத்தரி (Violet) என வண்ணம் எழுவகை.
நீர்-நீல்-நீலம் = கடல் நீரின் நிறம். நீர் = கடல், தலை சிறந்த நீர்நிலையும் பிற நீர்நிலைகட்கு மூலமுமாயிருப்பது கடலே.
நீரொலித் தன்ன (மதுரைக்காஞ்சி, 569)
கானக்கோழியு நீர்நிறக் காக்கையும் (சிலப். 10:116)
கடல்வண்ணன் = திருமால்.
நீள்-நீர், நிலம் நிற்பது; நீர் நீள்வது. கத்தரி(ப்பூ) என்பது உலகவழக்கு. சிலர் அதை ஈரல் நிறம் என்பர். ஈரல் என்பது சுவரொட்டி.
காளை வகையில் புகர் (கபிலம்), புல்லை, மயிலை, கருமயிலை முதலிய நிறப்பெயர்களும்; கோழிவகையில் சாம்பல், கம்பரிசி முதலிய நிறப்பெயர்களும், ஆடைவகையில் கெம்பு, காவி, நீர்க்காவி, பழுக்காவி, (Orange) துவர், களிப்பாக்கு, வெங்காயம், மாந்துளிர், கிளிப்பச்சை, பாசிப் பயறு, ஈயம், இளநீலம், மயிற் கழுத்து, வானவில், முகில் வண்ணம் (மேகவர்ணம்) முதலிய நிறப்பெயர்களும், மக்கள் மேனிவகையில் தங்கம், பசலை, புதுநிறம், மா முதலிய நிறப்பெயர்களும் வழங்கிவருகின்றன.
குமரிக் கண்டத் தமிழர் எஃகுச் செவியும் கூர்ங்கண்ணும் நுண் மதியும் உடையராதலின், வண்ணங்களையெல்லாம் நுட்பமாய் வகுத்து அவற்றிற்கு வெவ்வேறு பெயரிட்டிருந்தனர். பண்டை யிலக்கிய மெல்லாம் செய்யுள் வடிவிலேயே இருந்ததினாலும், அவையும் அடியோடு இறந்துபட்டமை யாலும், பல வண்ணப் பெயர்களும் இறந்தொழிந்தன. இன்றும் மீன்பெயர்களில் வெண்ணிறவகைகளைக் குறிக்க, வெள்ளி, வெள்ளை, வெண்ணெய், வெளுவை முதலிய சொற்கள் ஆளப்பெற்றிருப்பது கவனிக்கத் தக்கது.
வடிவு
வட்டம், சதரம், முக்கோணம் முதலிய பரப்பு வடிவுகளும், உருண்டை, உருளை, கூம்பு முதலிய கன வடிவுகளும், பல்வகைய, வட்டம் சதரம் என்பவை தென்சொற்களே.
அளவு
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என அளவை நால்வகை.
எண்ணல்
எண்ணுப்பெயர்கள் சிற்றிலக்கம் (கீழ்வாயிலக்கம்), பேரிலக்கம் (மேல்வாயிலக்கம்) என இருவகைப்படும். சிற்றிலக்கமும் கீழ்வாய்,மேல்வாய் என இருதிறத்தது.
1
தேர்த்துகள் _____________________
2, 3238245, 3022720, 0000000
1 1 1
இம்மி ______ கீழ் முந்திரி _____ கீழ்க்காணி _____
2150400 102400 25600
1 1
கீழ்மா _____ கீழ்வீசம் அல்லது கீழ்மாகாணி ______
6400 5120
1 1 1
கீழரைக்கால் ____ கீழ்க்கால் _____ கீழரை _____
2560 1280 640
என்பன கீழ்வாய்ச்சிற்றிலக்கம்.
1 1 1
முத்திரி ___ காணி ___ ஒருமா ___ வீசம் அல்லது
320 80 20
1 1 1 1
மாகாணி ___ அரைக்கால் ___ கால் __ அரை ___ என்பன
16 2 4 2
மேல்வாய்ச் சிற்றிலக்கம்.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு, ஆயிரம், இலக்கம், கோடி, தாமரை, பரதம், நெய்தல், ஆம்பல் முதலியன பேரிலக்கம்.
இம்மி என்பது மிகச்சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி. அது எள் தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையை யுணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.
முந்திரி என்னும் சொல் ஒரு சிற்றெண்ணையும் ஒரு பழவகை யையுங் குறிக்கும். முந்திரிப் பழத்தின் கொட்டை பழத்திற்கு வெளியே முன்துருத்திக் கொண்டிருப்பதால், அப்பழம் அப்பெயர் பெற்றது. முன் + துரி = முந்துரி - முந்திரி - முந்திரிகை. முந்து உருத்தது முந்திரி என்றுமாம். உருத்தல் - தோன்றுதல். முந்திரி என்னும் கீழ் வாயிலக்கப் பெயரும் முந்தித் தோன்றியதென்னும் பொருளதே.
பரப்பளவில் மா என்பது ஒரு வேலியில் 1/20. ஒரு நில அளவான காணி அதிற் காற்பங்கா யிருந்திருக்கலாம். இவ்வீரளவைப் பெயர்களும் நீட்டலளவை யினின்று எண்ணலளவைக்கு எடுத்தாளப்பெற்றதாகத் தெரிகின்றது. மாத்தல் என்பது ஒரு வழக்கற்ற வினை. மாத்தல் - அளத்தல், மா + அனம் = மானம் = அளவு. படி (மேலை வடார்க்காட்டு வழக்கு). மா + திரம் = மாத்திரம் - மாத்திரை.
காணி காணிக்கப்பட்ட நில அளவு. காணித்தல் - மேற்பார்த்தல்.
பிசு - விசு - விசுக்கு - விசுக்காணி = சிறியது. விசு - வீசம் = சிற்றளவு. மாவும் காணியும் சேர்ந்தது மாகாணி.
கோல் - கால் = மரத்தூண், தூண், தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு, (முட்டியின் கீழ்) உடம்பின் நாலிலொரு பகுதி.
அரு - அரை = அருகிய (ஒடுங்கிய) இடை, உடம்பின் பாதியள வான இடம், பாதி.
ஒ.நோ : இடு (இடுகு) - இடை. இடு - இடுப்பு. இடை = உடம்பின் நடு, நடு. இடுத்தல் - சிறுத்தல். இடு - இடுகு - இடுக்கு - இடுக்காடு.
ஒன்று : ஒல் - ஒன் - ஒன்று. ஒல்லுதல் = பொருந்துதல், ஒன்று சேர்தல்.
ஒல் - ஓர் - ஒரு (பெ. எ.) - ஓர் (பெ. எ.)
இரண்டு : ஈர் - இர் - (இரது) - (இரடு) - இரண்டு.
ஈர்தல் = ஒன்றை இரண்டாக அறுத்தல்.
ஈர் - இர் - இரு (பெ.எ.).
மூன்று : இது முப்பட்டையான மூக்கின் பெயரினின்று தோன்றியிருக்கலாம்.
மூசு - மூகு - மூ - (மூது) - மூறு - மூன்று.
மூ (பெ.எ.) - மு (பெ.எ.).
நான்கு : இது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகைப்பட்ட நிலத்தொகையினின்று தோன்றியதாகும். ஞாலத்திற்கு நானிலம் என்னும் பெயருண்மை காண்க.
அவற்றுள் நடுவண் … பண்பே (தொல். பொ. அகத். 2)
நல்-நன்று. நன்று பெரி தாகும் (தொல். உரி. 45)
நனி = மிக. நனந்தலை = அகன்ற இடம்,
நனவே களனும் அகலமுஞ் செய்யும் (தொல். 859)
நல்-நால்-(நாலம்) - ஞாலம் = பரந்த உலகம்,
ஒ-நோ: பர-பார் = ஞாலம், உலகம்.
நால்-நால்கு-நான்கு. நால் = நான்கு.
பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் (பெருந்தொகை)
வாலுளைப் புரவி நால்குடன் பூட்டி (பெரும்பாண். 430)
நால் (பெ.எ.)
நிலப்பகுதியும் உலகம் எனப்படும். எ.டு. மாயோன் மேய காடுறை யுலகமும் (தொல். பொ. 5).
ஐந்து : கை - ஐ - (ஐது) - ஐந்து - அஞ்சு கை = ஐந்து, ஒரு கையில் ஐந்து விரலிருப்பதால் கை என்னும் சொல் ஐந்தென்னும் எண்ணைக் குறித்தது. இன்றும் வறட்டி விற்கும் பெண்டிர். ஒவ்வோர் ஐந்தையும் ஒவ்வொரு கை என்று சொல்லுதல் காண்க. கை என்னும் சொல்லின் மெய்ந்நீக்கமே ஐ என்பதும். கை-ஐ (பெ.எ.).
ஆறு : ஆறு = வழி, நெறி, மதம். பண்டைத் தமிழகத்தில் ஐந்திணைச் சிறுதெய்வ வணக்கமும் கடவுள் வழிபாடும் சேர்ந்து அறுவகை ஆறாய் (மதமாய்) இருந்ததினால், ஆறென்னும் மதப் பெயர் ஆறென்னும் எண்ணைக் குறிக்கலாயிற்று. இன்றும் மதம் என்னும் பெயர் ஆறென்னும் எண்ணுப் பொருளில் வழங்குதல் காண்க. ஆறு என்னுஞ் சொல்,
நல்லா றெனினும் கௌல்தீது (222)
என்னுங் குறளடியில் ஒழுக்க நெறியையும்,
சைவநல்லா றோங்க (பெரியபு. சண்டேசு. 57)
என்னுந் தொடரில் சமய நெறியையுங் குறித்தல் காண்க.
ஆறு - அறு (பெ. எ.)
ஏழு : எழு - எழுவு. எழுவுதல் = இசைக்கருவியினின்று ஒலியெழச் செய்தல்.
சாத்தி யாழெழூஉம் (சேனா. உரை).
எழுவும் முரசு (சூளா. கலியாண. 243)
இன்னிசை யேழாதலால், அது எழுதலைக் குறிக்கும் சொல்லினின்று ஏழ் என்னும் எண்ணுப் பெயர் தோன்றிற்று.
எழு - எழால் - யாழிசை.
எழாலை யனனசொ லேந்திழை மாதரார் (கந்தபு) திருக்கல். 15.
எழு - ஏழ் - ஏழு, எழு (பெ. எ.) - ஏழ் (பெ.எ.).
எட்டு : தமிழில் எல்லை என்னுஞ் சொல் இடவரம்பையும் திசையையும் குறிக்கும்.
ஐந்தா வதனுரு பில்லும் இன்னும்
நீங்கல்ஒப் பெல்லை ஏதுப் பொருளே
என்னும் நன்னூல் நூற்பாவும் (299) மதுரையின் வடக்கு சிதம்பரம் என்னும் உரையாசிரியன்மார் எடுத்துக்காட்டும், எல்லை என்னும் சொல்லைத் திசையென்னும் பொருளில் ஆண்டிருத்தல் காண்க.
எல்லை என்பதற்கு ஒரு பொருள் மறுசொல் எண் என்பதாம்.
எண் = வரையறை (தொல். எழுத். 308, உரை).
எண்-ஏண் = எல்லை. (திவ். திருவாய். 2.8.8 பன்னி ஏண் - ஏணி = எல்லை. நளியிரு முந்நீர் ஏணியாக (புறம். 35:1)
நேர்த்திசை நான்கும் கோணத்திசை நான்குமாகத் திசை எட்டாதலின், திசையைக் குறிக்கும் எண் என்னுஞ் சொல் எட்டென்னும் எண்ணுப் பெயரைத் தோற்றுவித்தது.
எண் - எட்டு. எண் (பெ.எ.).
தொண்டு
தொள் - தொண்டு = தொளை, தொண்டு - தொண்டி = தொளை. மாந்தன் உடம்பில் ஒன்பது தொளையிருத்தலால். தொளைப் பெயர் அதன் தொகைப் பெயராயிற்று.
ஒன்பதிற்கு முதலாவது வழங்கிய பெயர் தொண்டு என்பதே.
தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற்று (தொல். 1358)
தொடித்திரித் தன்ன தொண்டுபடு திவவின் (மலைபடு. 21)
ஒன்றென … தொண்டென (பரிபா. 3)
தொண்டுபடு திவவின் முண்டக நல்யாழ் (சிலப். பக். 221, குறிப்புரை)
தொண்டு என்னுஞ்சொல் வழக்கற்றுப் போகவே, அஃதிருந்த ஒன்றாம் இடத்திற்குத் தொண்பது (-ஒன்பது) என்னும்
இரண்டாம் இடப்பெயரும், இரண்டாம் இடத்திற்குத் தொண்ணூறு என்னும் மூன்றாம் இடப்பெயரும், மூன்றாம் இடத்திற்குத் தொள்ளாயிரம் என்னும் நாலாம் இடப்பெயரும், வந்து வழங்குகின்றன. நாலாம் இடப்பெயருக்கு மேலிடச்சொல் இன்மையால், தொண்பது என்பதன் திரிபான ஒன்பது என்னுஞ் சொல்லொடு ஆயிரம் என்பதைச் சேர்த்து, ஒன்பதாயிரம் அல்லது ஒன்பதினாயிரம் என்று சொல்ல வேண்டியதாயிற்று.
ஒன்று முதல் பத்துவரையுள்ள பெயர்களெல்லாம் தனிச் சொல்லாயி ருப்பதையும், ஒன்பது என்பது கூட்டுச்சொல்லாயும் பது(பத்து) என்று முடிவதாயும் இருப்பதையும் நோக்குக.
பத்து : பல் = பல. பல் - பது - பத்து - பஃது.
ஒ.நோ : அல் - அது - அத்து - அஃது.
மெல் - மெது - மெத்து.
பல்-பன்; எ.டு. பன்னொன்று, பன்னிரண்டு, பன்மூன்று, பன்னான்கு, பன்னாங்குழி.
பன்-பான். எ.டு. ஒருபான் (ஒருபது), இருபான். (இருபது).
நூறு : நுறு-நூறு=பொடி. நுறு-நுறுங்கு-நொறுங்கு. நூறு (பொடி) எண்ண முடியாததாயிருப்பதால். அதன் பெயர் முதற் பெருந்தொகையைக் குறித்தது. நூறு-நீறு.
ஆயிரம் : அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம். ஆற்று மணலும் கடற்கரை மணலும் ஏராளமாயிருப்பதால், மணற்பெயரும் ஒரு பெருந் தொகைப் பெயராயிற்று.
வாழிய … நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறம். 9)
வானத்து வெள்ளிகளையும் கடற்கரை மணலையும்
போல் உன் மரபைப் பெருகப் பண்ணுவேன் (விவிலிய மொழிபெயர்ப்பு)
நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. …..
வடுவாழ் எக்கர் மணலினும் பலவே (புறம். 55: 17-21)
இலக்கம் : இலக்கு = குறி. இலக்கு - இலக்கம் = குறி, எண்குறி, எண், பேரெண்.
கோடி : குடு - குடுமி = உச்சி. தலையுச்சி, ஆடவர் தலை மயிர்க்கற்றை, பறவைச்சூட்டு, மகுடம், மாடவுச்சி, மலையுச்சி, நுனி. குடு-கொடு. கொடுமுடி = மலையுச்சி, கொடு - கோடி = நுனி. முனை, கடைசி, எல்லை, முடிமாலை, கோடம் = எல்லை. கடை கோடி என்னும் வழக்கை நோக்குக. தெருக்கோடி விற்கோடி என்பனவும் முனையைக் குறித்தல் காண்க. கோடகம் = முடிவகை.
கோடி கடைசி யெண்ணாதலால் அப்பெயர் கொண்டது.
தாமரை, குவளை, நெய்தல், ஆம்பல் முதலிய மலர்ப் பெயர்கள் ஒவ்வோர் இதழுக்கும்; சங்கம் (சங்கு) என்பது ஒவ்வொரு புரிக்கும் (வளைவிற்கும்); ஒரு பெருந்தொகையாக உறையிடல் முறையிலும்; நாடு, வாரணம், வெள்ளம் என்பன பேரளவு பற்றியும்; கணிகம் (நூறுகோடி) என்பது கணிப்புப் பற்றியும், பல்வேறு அடுக்கிய கோடிப்பெயராயின; எட்டுத் தாமரை கொண்டது ஒரு நாடு.
பரதம் = இலக்கம் கோடிக் கோடாகோடி, இது 1 - இன் பின் 24 சுன்னங்கொண்டது. பரதம் என்பது கடல் வணிகத்தின் பெயர்.
படவன் - பரவன் - பரதவன் - பரதவம் - பரதம். இனி, பரத கண்டம் எனினுமாம். பரதன் திங்கட் குலத்தைச் சேர்ந்த ஒரு பழம் பாண்டியனே.
எடுத்தல்
4. கஃசு = 1 தொடி அல்லது பலம்
8 பலம் = 1 சேர்
5 சேர் = 1 வீசை
2 வீசை = 1 தடியம்
5 வீசை = 1 துலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 கண்டி
பொன்னளவை
5 கடுகு = 1 சீரகம்
5 சீரகம் = 1 நெல்
4 நெல் = 1 குன்றி மணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி = 1 பணவெடை
10 பணவெடை = 1 கழஞ்சு
முகத்தல்
360 நெல் = 1 செவிடு அல்லது சுண்டு
2 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 நாழி அல்லது படி (வட்டி)
8 நாழி = 1 குறுணி அல்லது மரக்கால்
2 குறுணி = 1 பதக்கு (பாண்டி நாட்டில் 10 படி)
2 பதக்கு = 1 தூணி
2 தூணி = 1 கோணி
3 தூணி = 1 கலம் (தஞ்சை வட்டார வழக்கு)
21 மரக்கால் = 1 கோட்டை (பாண்டிநாட்டு வழக்கு)
18 மரக்கால் = 1 புட்டி (மேலை வடார்க்காட்டு வழக்கு)
4 படி = 1 வள்ளம்
40 வள்ளம் = 1 கண்டகம் (சேலம் வட்டார வழக்கு)
6 மரக்கால் = 1 மூட்டை
64 மூட்டை = 1 கரிசை
5 மரக்கால் = 1 பறை
80 பறை = 1 கரிசை
படியை இடங்கழி என்பது சேரநாட்டு வழக்கு, சிறு படியை மானம் என்பது மேலை வடார்க்காட்டு வழக்கு.
நீட்டல், நீட்டளவு
8 அணு = 1 தேர்த்துகள்
8 தேர்த்துகள் = 1 பஞ்சிழை
8 பஞ்சிழை = 1 மயிர்
8 மயிர் = 1 நுண்மணல்
8 நுண்மணல் = 1 கடுகு
8 கடுகு = 1 நெல்
8 நெல் = 1 பெருவிரல்
12 பெருவிரல் = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் - 1 கோல் அல்லது பாகம்
500 கோல் = 1 கூப்பீடு
4 கூப்பீடு = 1 காதம்.
பரப்பளவு
(144 சதுர அடி) = 1 குழி
100 குழி = 1 மா
20 மா = 1 வேலி
சிறுகுழி, பெருங்குழி குழிப்பெருக்கம், குழிமாற்று, குழிமாறுதல்.
சுவைப்பெயர்
கைப்பு (சகப்பு), கார்ப்பு (உறைப்பு), இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு எனச் சுவை ஆறாம்.
ஊற்றுப்பெயர்
வெம்மை, தண்மை, வன்மை மென்மை, நொய்ம்மை (பளு வின்மை), சீர்மை (பளுவு), இழுமெனல் (வழுவழுப்பு), சருச்சரை (சுரசுரப்பு) என ஊறு எட்டாம்.
நாற்றப்பெயர்
நறு நாற்றம், தீ நாற்றம் என நாற்றம் இரண்டாம்.
இயற்பண்புப் பெயர்
எ.டு. நன்மை, தீமை, மதிமை, மடமை.
செயற்பண்புப் பெயர்
எ.டு. அன்பு, பகை, அடக்கம், சினம், பொறுமை பொறாமை. வினையாக வெளிப்படுத்தும் வினைப்பெயராக குறிக்கப்படுவதும் செயற்பண்பாம்.
அல் + பு = அன்பு, அல்லுதல் பொருந்துதல்.
தொழிற்பெயர் (VERBAL NOUN)
தொழிற்பெயர் எனினும் வினைப்பெயர் எனினும் ஒக்கும், சிறுவினை பெருவினை என வினை (தொழில்) இருவகைப்படும். வருதல், போதல், உண்டல், உடுத்தல் போன்றவை சிறுவினை; உழவு, நெசவு, தச்சு, கல்வி, ஆட்சி போன்றவை பெருவினை.
எல்லாப்பெயர்களும் பின்வருமாறு வெவ்வேறு வகையில் இவ்விரு பாற்படும்.
1. பொதுப்பெயர் x சிறப்புபெயர்
பலபொருட்குப் பொதுவானபெயர் பொதுப்பெயர் : ஒன்றற்கே சிறப்பாக வுரியது சிறப்புப்பெயர்.
எ.டு.
ஆறு, நகர், புலவன் - பொதுப்பெயர் (Common Noun)
காவிரி, மதுரை, நக்கீரன் - சிறப்புப்பெயர் (Proper Noun)
அரசன் அல்லது வேந்தன் என்னும் பெயரை நோக்க, பாண்டியன் என்பது பொதுவிற் சிறப்பும், நெடுஞ்செழியன் என்னும் பெயரை நோக்க, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பது சிறப்பிற்சிறப்பும் ஆகும்.
2. இயற்பெயர் x ஆகுபெயர்
இயல்பாக ஒரு பொருட்கு உண்டான பெயர் இயற்பெயர்; ஒரு பொருளின் பெயர் இன்னொன்றற்கு ஏதேனுமொரு தொடர்பில் ஆகிவருவது ஆகுபெயர்.
எ.டு. காளை (பாடு), பொன் (கனியம்), வற்றல் (வினை) - இயற் பெயர் காளை (மறவன்). பொன் (பொற்காசு), வற்றல் (வற்றிய காய்கனி) - ஆகுபெயர் (Metonymy, Synecdoche).
தனிநிலைப்பெயர் x குழூஉப்பெயர்
ஒரு தனிப்பட்ட பொருளின் பெயர் தனிநிலைப்பெயர்; பல பொருள் சேர்ந்த கூட்டத்தின் பெயர் குழூஉப்பெயர்.
எ.டு. காய், ஆடு, தமிழன் - தனிநிலைப்பெயர்
குலை, மந்தை, கழகம் - குழூஉப்பெயர் (Collective Noun)
இடுகுறிப்பெயர் என்பதே தமிழில் இல்லை. எல்லாப் பெயரும் கரணியப்பெயரே. இதன் விளக்கத்தை என் பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும் என்னும் நூலிற் காண்க.
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.
என்னும் தொல்காப்பிய நூற்பாவையும் (640) நோக்குக. தமிழ் இயன்மொழியாதலாலும் பொதுமக்கள் அமைத்த வழக்கு மொழியாதலாலும், அதன் எல்லாச்சொற்களும் கரணியக் குறிகளாகவே அமைந்துள்ளன. வடமொழி திரிமொழியாத லாலும் புலமக்கள் அமைத்த செயற்கை நூன் மொழியாதலாலும், அதில் இடுகுறிப்பெயர்கள் பல அமைந்துள்ளன.
ஒருவர் தம் மக்களுக்கிடும் ஆட்பெயர் தெய்வப்பெயர்களும், தமக்குச் சிறந்தாரையும் தம் வழிபடு தெய்வத்தையும் நினைவுகூர்தற் பொருட்டேயென அறிக.
வினையும் இடையும் பெயராகும் வழிகள்.
2. வினைச்சொல்
விளை-வினை. ஒ.நோ: வளை-வனை, முளை-முனை (கலித்.4).
விளைவது அல்லது விளைந்து பயன் (நன்று அல்லது தீது) தருவது வினை.
முற்பகற் செய்யிற் பிற்பகல் விளையும் (கொன்றை வேந்தன், 74)
வினைவிளை கால மாதலின் (சிலப். 16 : 148)
நல்வினை தீவினையைக் குறித்த சிறப்புச்சொல், இலக்கணத்தில், நல்லதும் தீயதும் இரண்டுமல்லதும் சிறியதும் பெரியதுமான எல்லாச் செயல்கட்கும் பொதுப்பெயராயிற்று.
முதற்காலத்தில், வினைமுதனிலையே இருதிணை ஐம்பால் மூவிட முக்காலப் பொது வினையாகவும் தொழிற் பெயராகவும், இருந்ததாகத் தெரிகின்றது. அக்காலத்து, முற்று எச்சம் என்னும் வேறுபாடிருந்திருக்க முடியாது.
எ.டு. செய் = செய்கை. பெருஞ்செய் யாடவர் (நெடுநல். 171)
இல் = இல்லை. பித்தரிற் பேதையார் இல் (நாலடி. 52).
கரயுன்ன குட்டிக்கே பால் உள்ளு. வம்பனோடு வழுது நல்லு என்னும் மலையாளப் பழமொழிகளில், உள், நல் என்னும் குறிப்பு வினைமுற்றடிகளே, உண்டு, நன்று என்று பொருள்படுதல் காண்க. இன்றும், அடி, குதி, கொல், சிரி, தாங்கு, நடி, பறி, மிதி, விழி முதலிய எண்ணிறந்த வினைமுதனிலைகள் முக்காலத்திற்கும் பொதுவான தொழிற்பெயராக வழங்கி வருகின்றன. குறிப்பு வினைபோன்றே முதனிலை யளவாயுள்ள முதற்கால வினையும் முன்பின் வரும் சொற்றுணைகொண்டு முக்காலமும் குறித்திருத்தல் வேண்டும்.
வினையின் நால் நிலைகள்
இ.கா. நி.கா. எ.கா.
முதல்நிலை செய் செய் செய்
இரண்டாம்நிலை செய்து செய்யும் செய்யும்
மூன்றாம் நிலை செய்து செய்கின்று செய்யும்
நாலாம் நிலை 1. செய்தான் செய்கின்றான் செய்வான்
2. செய்தனன் செய்கின்றனன் செய்வனன்
இரண்டாம் நிலையில், இறந்தகாலத்திற்குத் தனிவடிவம்
ஏற்பட்ட தேனும், நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஒரே வடிவே யிருந்தது, இப்பொது வடிவம் நீண்டகாலம் வழக்கூன்றியிருந்த தால், நாலாம் நிலை தோன்றிய பின்பும் செய்யுள் வழக்கில் அட்டைபோல் ஒட்டிக் கொண்டிருந்தது. இதை,
நிலனும் பொருளுங் காலமுங் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய
செய்யும் செய்த வென்னுஞ் சொல்லே.
என்னும் தொல்காப்பியப் பெயரெச்ச வாய்பாட்டு நூற்பாவும் (719),
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொட கொள்ளா
என்னும் செய்யும் என்னும் முற்று நூற்பாவும் (712), கடைக் கழக நூல்களும் செய்யுளும், உணர்த்தும்.
காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய் (1227)
பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை
மாயுமென் மாயா வுயிர் (1230)
என்னுங் குறள்களில், மலரும் மாயும் என்பன மலர்கின்றது, மாய்கின்றது என்று பொருள்படுதல் காண்க. ஆயினும், தொல்காப்பியர் காலத்தில் முக்கால வினையும் நிகழ்கால வினைத் தனி வடிவும் இல்லை போலும் என மயங்கற்க.
காலந் தாமே மூன்றென மொழிப (684)
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளும் (685)
என்று அவரே கூறியிருத்த லானும்,
கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும் (483)
புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதநவும்
வினைசெயல் மருங்கின் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. …..
தத்தம் குறிப்பிற் பொருள்செய் குநவும் (735)
அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும் (1177)
என்று செய்கின்றன என்னும் பலவின்பாற் படர்க்கை நிகழ் கால வினைமுற்றின் மரூஉ வடிவாகிய செய்குந என்னும் வாம்பாட்டுச் சொற்களை அவரே ஆளுதலானும், அவர் காலத்தும் அவை உண்டெனத் தெளிக.
3-ஆம் நிலைப்பட்ட செய்கின்று என்னும் நிகழ்கால வினைமுற்று. முறையே, செய்குன்னு, செய்யுன்னு எனத் திரியும். அங்ஙனமே, 4-ஆம் நிலைப்பட்ட செய்கின்றான் என்னும் நிகழ்கால வினை முற்றும், முறையே, செய்குன்னான், செய்யுனன் எனத்திரியும். ஆயின், இறுதி வடிவில் ஈற்றயவெழுத்துத் தந்நகரமாக எழுதப் பெறும். அதனால் செய்யுநன் என்றாகும். அது நிகழ்கால வினை யாலணையும் பெயர்.
பாலறி மரபிற் பொருநர் கண்ணும் (102)
என்னும் தொல்காப்பிய அடியிலுள்ள பொருநர் என்பது இங்ஙனம் அமைந்த வினையாலணையும் பெயரே. மகிழ்நன், வாழ்நன் (வாணன்) என்பனவும் இத்தகையவே.
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு (1193)
என்னுங் குறளில், வீழுநர் என்பது நிகழ்கால வினையாலணையும் பெயர்; வாழுநம் என்பது தன்மைப் பன்மை நிகழ்கால வினை முற்று, வாழ்கின்றாம் - வாழுன்னாம் - வாழுநம்.
செய்யுன்னு என்னும் நிகழ்கால வினைமுற்று வடிவம், இன்றும் பழஞ்சேரநாட்டுத் தமிழ்த்திரிபாகிய மலையாளத்தில் வழங்கு கின்றது.
3-ஆம் நிலைப்பட்ட செய்யும் என்னும் எதிர்கால வினைமுற்று, மலை யாளத்திற்போன்றே தமிழிலும் இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவினையாயிருந்தது. பின்பு தன்மை முன்னிலை யிடங்கட்கும் பலர்பாற்படர்க்கைக்கும் விலக்கப்பட்டது.
3 ஆம் நிலையிற் பாலீறு பெறாதிருந்த முக்கால வினைமுற்றுக்கள் 4 ஆம் நிலையில் அவற்றைப் பெற்றன.
எ.கா.
இ.கா. நி.கா. எ.கா.
செய்தான் செய்கின்றான் செய்வான்
செய்தாள் செய்கின்றாள் செய்வாள்
செய்தார் செய்கின்றார் செய்வார்
செய்தது செய்கின்றது செய்வது
செய்த செய்கின்ற செய்வ
செய்தான் என்பது செய்தனன் என்னும் வடிவுங் கொள்ளும் செய்தனன் என்பதிலுள்ள அனன் என்னும் ஈற்றை அன் + அன் என்று பிரித்து, முன்னதைச் சாரியை யாகவும், பின்னதைப் பாலீறாகவுங் கொள்வர். இங்ஙனம் கொள்ளாது அனன் என்பதே ஓர் ஈறென்று கொள்ளினும் பொருந்தும். அன்னன், அன்னவன், அன்னான் என்னும் சொற்கள், அத்தகையன் என்று மட்டுமன்றி அவன் என்றும் பொருள்படும். ஆதலால் அனன் என்பதே ஈறாகவு மிருக்கலாம்.
எ.கா.
இ.கா. நி.கா. எ.கா.
செய்தனன் செய்கின்றனன் செய்வனன்
செய்தனள் செய்கின்றனள் செல்வனள்
செய்தனர் செய்கின்றனர் செய்வனர்
செய்தன்று ….. …… …. ….. ……
செய்தன செய்கின்றன செய்வன
நினைவனள் என்னும் கலித்தொகைச் சொல்லையும் (44), பார்ப்பனப்பக்கம் என்னும் தொல்காப்பியத் தொடரையும் (1021) நோக்குக.
செய்தனது என்றிருக்கவேண்டிய ஒன்றன்பால் இறந்த காலவினை முற்று, இன்னோசை பற்றிச் செய்தன்று எனத்தொக்கது. னகரம் தகரத்தோடு புணரின் றகரமாம். அனது என்பது ஒர் ஈறாயினும், அன் + அது என்று பிரியும். அன் சுட்டடியும் அது ஒன்றன் பாலீறும் ஆகும். அன் + து - அன்று. இம்முறையிலேயே, அணிந்தன்று (1), இழிந்தன்று (77), இறந்தன்ற (217), கண்டன்று (61), களைந்தன்று (77), சிறந்தன்று (75), செயிர்த்தன்று (226), செற்றன்று (226), தீர்ந்தன்று (42), மகிழ்ந்தன்று (192), மலிந்தன்று (77), வியந்தன்று (77) என்னும் புறநானூற்றுச் சொற்களெல்லாம் தோன்றியுள்ளன. இவ்வீறுபெற்ற நிகழ்கால எதிர்கால ஒன்றன்பால் வினைமுற்றுக்கள் வழக்கிறந்தன.
இறந்தகால வினை
இறந்தகால வினைமுற்று இற்றை வினையெச்ச வடிவில் நின்றே பாலீறு பெற்றதினால், அதைப் பகுக்கும்போதும் வினையெச்ச வடிவும் பாலீறுமாகவே பகுத்தல் வேண்டும்.
எ.டு. செய்தான் = செய்து + ஆன்
கண்டான் = கண்டு + ஆன்
சென்றான் = சென்று + ஆன்
தூங்கினான், ஓடினான் என்பவை, முறையே, தூங்கியான் (தூங்கி + ஆன்), ஓடியான் (ஓடி + ஆன்) என்பவற்றின் திரிபாகும். யகரம் நகர (னகர) மாகத் திரிதல் இயல்பே.
x.neh.: யான் - நான், ஓடிய - ஓடின.
தூங்கினன், ஓடினன் என்பன, தூங்கினான், ஒடினான் என்பவற்றின் குறுக்கலாகும்.
செய்தன்று என்னும் வால்பாட்டுச் சொல்லான ஆகின்று என்னும் புறப்பாட்டுச்சொல் (148) இகரம் தொக்கது.
ஆனான், போனான் என்பவை ஆயான் (ஆய் + ஆன்), போயான் (போய் + ஆன்) என்பவற்றின் திரிபாகும். செய்தான் என்னும் வினைமுற்று வாய்பாட்டை ஆயான் என்பது ஒத்திருப்பது போன்றே, செய்த என்னும் பெயரெச்ச வாய்பாட்டையும் ஆய (ஆய் + அ) என்பது ஒத்திருத்தல் காண்க.
இனி, ஆயினான், போயினான் என்பவையும் ஆயியான், போயியான் என்பவற்றின் திரிபே.
ஆய், போய், என்னும் இறந்தகால வினையெச்சங்கள் முதலில் ஆயி, போயி என இகரவீற்றனவாயிருந்து, பின்பு யகர மெய்யீற் றனவாக மருவியதாகத் தெரிகின்றது.
x.neh.: நா + இ = நாஇ - நாயி - நாய் = நீண்டு தொங்கும் நாவையுடையது. இகர யகரம் இறுதி விரவும். என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு, இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும் நாய், நாஇ என எடுத்துக்காட்டியிருத்தல் காண்க. இவ்வகையிலேயே, பா + இ = பாஇ - பாயி - பாய் (பரந்தது) எனவரும். இவை பெயராயினும், இ-ய் எனத் திரிந்த முறை ஒன்றே.
ஆயின், ஆ, போ என்னும் வினைமுதனிலைகள் இகரத்தோடு கூடின் வகரவுடம்படுமெய்யன்றோ வருமெனின், ஆயிடை, மாயிரு, பாயிருள், கோயில் என வருபவற்றை நோக்கித் தெளிக. வகரவுடன்படுமெய் வடிவினும் யகர வுடம்படுமெய் வடிவே பலுக்கற்கெளிதாயிருத்தல் காண்க.
போயியது என்பது, போயினது போயின்று - போயிற்று எனத் திரியும். அது என்னும் ஈறு து எனக் குறுகும்போது, புணர்ச்சியால் று, டு எனத் திரியும்.
எ.டு. நல் + து = நன்று, பால் + து = பாற்று
உள் + து = உண்டு, தாள் + து = தாட்டு
மன் + து = மன்று, அன் + து = அற்று
விண் + து = விண்டு, கண் + து = கட்டு
மன்னுதல் = கூடுதல், பொருந்துதல்.
சொல்லியான், சொல்லியது என்பன, சொல்லினான், சொல்லினது என்று திரிந்து, பின்பு சொன்னான், சொன்னது என மருவும். சொல்லினது என்பது, சொல்லின்று - சொல்லிற்று என்றும் திரியும்.
போய - போன, எண்ணிய - எண்ணின, போயது = போனது, ஏவி யோன் - ஏவினோன் எனப் பல வினைச்சொற்கள் இரு வடிவுங் காட்டி நிற்பினும், போயியான், தூங்கியான் முதலிய வழக்கற்ற ஆனீற்று வினைமுற்று வடிவங்கள் இயற்கைக்கு மாறாகத் தோன்றலாம். இதற்கு அவற்றின் வழக்கற்ற தன்மையே கரணியம். முங்கினால் என்பதுபோல் தமிழில் னகரவடிவில் வரும் வினை யெச்சங்களெல்லாம், சேரநாட்டு அல்லது மலையாளப் பழ மொழிகளில் யகரவடிவிலேயே இன்றும் வழங்குதல் காண்க.
எ.டு.
ஆணாயால் ஒரு பெண்ணு வேண்டே !
ஆழம் முங்ஙியால் குளிரில்ல
எல்லாரும் தண்டில் கயறியால் எடுப்பான் ஆள்வேண்டே !
ஏறக் கிழக்கோட்டுப் போயால் படிஞ்ஞாட்டு
கக்குவான் துடங்ஙியால் நில்க்குவான் பரிக்கேணம்
கொஞ்சன் துள்ளியால் முட்டோளம், ஏற துள்ளியால் சட்டியில்
சக்கர கூட்டியால் கம்பிளியும் தின்னாம்
சாண் வெட்டியால் முழம் நீளும்
செறுவிரல் வீங்ஙியால் பெருவரலோளம்
தலயண மாறியால் தலக்கேடு பொறுக்குமோ ?
தூபம் காட்டியாலும் பாபம் போகா,
பாற்றி துப்பியால் பள்ளியாயிலும் துப்பாம்.
பொன் சூசி சுத்தியாலும் கண்ணுபோம்
மூவர் கூடியால் முற்றம் அடிக்கா.
வளச்சுக் கெட்டியால் எத்தி நோக்கும்.
இனி, தமிழிலும், தூங்கியாள்; தாவியான் எனவரும் ஆனீற்று வினை முற்றுக்கள், தூங்கியோன், தாவியோன் என ஓவிற்று வினையாலணையும் பெயர்களாயின் இயல்பா யிருத்தலையும்.
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
என்னுங் குறளில் (494), வினைமுற்றாக ஆளப்படக்கூடிய எண்ணியார், துன்னியார் என்னும் வினையாலணையும் பெயர்கள் யகரங் கொண்ட வடிவில் வந்திருத்தலையும், கண்டு தெளிக.
இனி, செய்து என்னும் வாய்பாட்டு உகரவீற்று இறந்த காலவினை யெச்சத்தின் அமைப்பை நோக்கின், அது துவ்வீற்றொடு கூடிய வினை முதனிலையென்றே தெரிகின்றது.
எ.டு. செய் + து = செய்து, படி + து = படித்து
கொள் + து = கொண்டு, உண் + து = உண்டு
கேள் + து = கேட்டு
நில் + து = நின்று, என் + து = என்று
கல் + து = கற்று
இத்துவ்வீறு, அது என்னும் ஈற்றின் முதற்குறையே, அகரம்.
சேய்மைச் சுட்டாதலால், அது இறந்தகாலத்தை உணர்த்திற்று.
சில தனிக்குறிலடுத்த கு, டு, று, ஈற்றுவினை முதனிலைகள், இறுதிவலி யிரட்டித்து இறந்தகாலங் காட்டுகின்றன.
எ.டு. புகு - புக்கு, புக்க, புக்கான்
சுடு - சுட்டு, சுட்ட, சுட்டான்
அறு - அற்று, அற்ற , அற்றான்
இங்ஙனம், வினைமுதனிலைகள் து, இ, ய், ஈறுபெற்றும், இறுதி வலியிரட்டித்தும், இருவகையாக இறந்தகாலங் காட்டும்.
அளபெடுத்து இறந்தகாலம் காட்டுவது செய்யுள் வழக்கு.
ஆகவே,
தடறவொற் றின்னே ஐம்பால் மூவிடத்
திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை.
என்று பவணந்தியார் கூறியது (நன். 142), மொழியாராய்ச்சி மிக்க இக்காலத்திற் கேற்காதென அறிக.
இரண்டாம் மூன்றாம் நிலைகட்குரிய செய்து என்னும் வாய் பாட்டுப் பண்டை இறந்தகால வினைமுற்று, பிற்காலத்தில் சோழபாண்டி நாடுகளில் உலகவழக்கற்றுப் போய், செய்யுள் வழக்கில் தன்மை யிடத்திற்கே வரையறுக்கப்பட்டு, பன்மைக்கு உம்மீறு பெற்றது.
எ.டு. வந்து = வந்தேன், வந்தும் = வந்தோம்
கண்டு = கண்டேன், கண்டும் = கண்டோம்
சென்று = சென்றேன், சென்றும் = சென்றோம்
இடு என்னும் வினைபோன்றே, ஈ என்னும் வினையும் இறந்தகால வினையெச்சத்தோடு கூடித் துணைவினையாய் வரும்.
எ.டு. வந்திடு, வந்திடார்.
அறிந்தீயார் = அறியார் (புறம். 136)
ஈந்தார் என்னும் இறந்தகால வினைமுற்று ஈயினார் என்றும் வரும். ஒ.நோ : போந்தார், போயினார்.
அறிந்தீயினார் - அறிந்தீயினோர் (வினையாலணையும் பெயர்) - அறிந்தீசினோர் - அறிந்திசினோர்.
என்றீயினார் - என்றீயினோர் - என்றீசினோர் - என்றிசினோர். யகரம் சகரமாகத் திரிவது இயல்பே.
எ.டு. : ஈ + அல் = ஈயல் - ஈசல். இள் - (இய்) - ஈ - ஈயம் = எளிதாய் இளகும் கனியம் (உலோகம்), ஈயம் - ஸீஸம். (வ.) நெயவு - நெசவு. நேயம் - நேசம். பையன் - பயன் - பசன் வாயில்; வாயல் - வாசல். மயங்கு - மசங்கு. இழியினன் - இழிசினன்.
பிற்காலத்தார், சொல்வரலாறறியாது அறிந்திசினோர், என்றிசினோர் என்பவற்றின் இசின் என்னும் இடைப் பகுதியைப் பிரித்தெடுத்து, அதை இறந்தகால இடைநிலை என்றனர்.
2. நிகழ்கால வினை
இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இருப்பதுபோல் திட்டமான எல்லைவரம்பு நிகழ்காலத்திற்கு இன்மையானும், மிகக் குறுகிய கால அளவில் நிகழ்காலத்திற்கே இடமின்மை யானும், எதிர்காலத்தோடு அதற்கு நெருங்கிய தொடர்பு உள்ள மையானும், செய்யும் என்னும் எதிர்கால வினைமுற்றே நிகழ் காலத்தையும் முதலில் உணர்த்தி வந்தது.
பின்பு, கில் என்னும் ஆற்றல் வினையின் இறந்தகால வினையெச்ச மாகிய கின்று என்பது, வினைமுதனிலையொடு கூடி ஐம்பால் மூவிடப்பொதுவான நிகழ்கால வினைமுற்றாய் அமைந்தது.
எ.டு. ஒரு தனி வைகிற் புலம்பா பின்றே. (குறுந். 166)
கிற்றல் = ஆற்றுதல், செய்யமாட்டுதல்; செய்ய கிற்பேன் = செய்ய மாட்டுவேன், என்னால் செய்யமுடியும். முதலாம் புறப்பாட்டில் வரும் ஆகின்று என்பது, கின்று என்னும் ஈறு கொண்டதன்று, ஆயிற்று என்று இறந்தகாலப் பொருள்தரும் ஆயின்று என்னும் வாய்பாட்டது. ஆயினது - ஆயின்று - ஆயிற்று. ஆகியது ஆகினது - ஆகின்று.
செய்கின்று என்னும் நிகழ்கால வினைமுற்று, பின்பு, பாலீறு பெற்றுச் செய்கின்றான் என்றாயிற்று.
செய்கின்று என்னும் நிகழ்கால வினைமுற்று செய்யுன்னு என மருவிற்று. செய்கின்றான் என்னும் வினையாலணையும் பெயரும், செய்யுன்னான் - செய்யுனன் - செய்நன் என்றும், செய்குன்னான் செய்குனன் - செய்குநன், என்றும் மருவும், அறிநன் - (அறிஞன்) என்பதும் இத்திரிபே.
செய்கின்றான் என்பது செய்கிறான் எனத் தொக்கபின், கிறு என்னும் வடிவும் நிகழ்கால இடைநிலையாகக் கொள்ளப் பட்டது.
36 ஆம் புறப்பாட்டில், அடுநை, விடுநை என்பவை நிகழ்காலச் சொல்லேயாயினும், நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்குமுள்ள தொடர்பு பற்றியும், எதிர்காலவினையை நிகழ் காலச்சொல்லாற் குறிக்கும் வழக்குப் பற்றியும், அவற்றிற்கு எதிர்காலப்பொருள் கூறப்பட்டது. நாளை வருகிறேன். அடுத்த ஆண்டு தருகிறேன், என்னும் வழக்கை நோக்குக.
அடுகின்றை - அடுகுன்னை - (அடுன்னை) - அடுநை.
ஆநின்று என்பது உண்மையான நிகழ்கால இடைநிலையன்று. அது செய்துநின்றான் என்று பொருள்படும் செய்யா நின்றான் என்னும் வினையெச்சத்தொடருக்கு நிகழ்கால வினைமுற்றுப் பொருள் கற்பித்து, அதன் இடைப்பகுதியைப் பிரித்துக்கொண்ட உரையாசிரியர் படைப்பே. அதைத் தழுவியே, நன்னூலாரும் நிகழ்காலவிடை நிலைகளுள் ஒன்றாக அதனைச் சேர்த்துக் கொண்டார்.
எதிர்காலவினை
செய்யும் என்னும் எதிர்கால வினைமுற்றின் ஈறான உம் என்பது முன்மைச் சுட்டான உகர வடியிற் பிறந்து, கால முன்னான முற்காலத்தையும் இடமுன்னான எதிர்காலத்தையும் உணர்த்தும் சொல்லுறுப்பாகும்.
உம்மை வினைவந் துருத்த லொழியாது (மணி. 26, 32) என்பதில் முற்பிறப்பையும்,
உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் (நாலடி. 58) என்பதில் மறுமையையும் உம்மைச்சொல் உணர்த்துதல் காண்க.
செய்யும் என்பது பின்பு பாலீறு பெற்று, செய்யுமான் - செய்யுவான் - செய்வான் எனத் திரிந்தது. இம்முறையில் அமைந்த மூவிட ஐம்பால் வினைமுற்றுக்களாவன : -
தன்மை ஒருமை : (செய்யுமேன்) - செய்யுவேன் - செய்வேன் - செய்வென் - செய்வன் - செயவல்.
பன்மை : (செய்யுவாம் - செய்வாம் - செய்வம்.
(செய்யுமோம்) - செய்யுவோம் செய்வோம்.
முன்னிலை ஒருமை
செய்யுமீ - செய்யுமே (செய்மே) - செய்மை - செய்வை - செய்வாய்.
பன்மை
(செய்யுமீர்) - செய்மீர் - செயவீர்
படர்க்கை - ஆ - பா
(செய்யுமான்) - செய்மான் - செய்வான் - செய்வன் செய்மான் - செய்மன்.
பெ. பா :
(செய்யுமாள்) - செய்மாள் - செய்வாள் - செய்வள் செய்மாள் - செய்மள்.
ப.பா
(செய்யுமார்) - செய்மார் - செய்வார் - செய்வர் செய்மார் - செய்மர்.
ஒ.பா
(செய்யுமது) - செய்மது - செய்வது.
பல. பா
(செய்யும) - செய்ம - செய்வ
செய்யும் + அன = செய்யுமன - செய்யுவன - செய்வன.
(உண்ணும) - உண்ணுவ
(நடக்கும்) - நடக்குவ - நடப்ப
ஆயிரு திணையில் இசைக்குமன் சொல்லே (தொல். சொல். 1)
செய்மார் என்னும் பலர்பால் எதிர்கால வினைமுற்று, பிற்காலத்தில் முற்றெச்சமாகவே ஆளப்பெற்றது.
மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியும் என்ப (தொல். 692)
எ.டு. உண்மார் வந்தார்
என்மரும் உளரே என்னும் நன்னூல் தொடரில் (421) = உள்ள என்மர் என்னும் சொல், செய்மர் என்னும் வாய்பாட்டதாகும்.
என்மனார் புலவர் என்னும் தொல்காப்பியத்தொடரில் (6) உள்ள என்மனார் என்னும் சொல், மகனார் என்னும் உயர்வுப் பன்மைப்பெயர் போல் ஆரீறேற்ற செய்மன் என்னும் வாய்பாட்டுச் சொல்லாய், என்ப என்னும் பொருளில் வழக்கம் பற்றி வந்த காலவழுவமைதி.
செய்ப என்னும் பலர்பால் எதிர்கால வினைமுற்று, செய்வ என்னும் பலவின்பாற் சொல்லினின்று திரிக்கப்பெற்ற தாகும்.
வகரத்திற்கு இனமான பகரம், சிறுபான்மை வகரம்போற் ககரத்திற்குப் போலியாக வரும்.
எ.டு. இறக்க-இறப்ப, விழிக்க-விழிப்ப.
செய்யுமார் என்னும் பலர்பால்வினைமுற்று வினையாலணையும் பெயராகும்போது, செய்யுமோர் என்றுந் திரியும்.
எ.டு.
வேற்றுமை தெரிப உணரு மோரே (தொல். 580)
மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே (புறம். 297)
செய்வேன் என்னும் தன்மையொருமை எதிர்கால வினைமுற்று, போலிவகையில் செய்கேன் என்று திரியும்.
வ-க, போலி, ஒ.நோ : சிவப்பு - சிகப்பு, துவர் - துகிர்.
ஆவா - ஆகா (இடைச்சொல்).
செய்கேன் என்னும் வடிவில் ஈறு நீங்கியபின் எஞ்சி நிற்கும் செய்கு என்பதும், தன்மையொருமை வினைமுற்றாய் ஆளப்பெற்றது. அது செய்கும் என உம்மீறு பெற்றுப் பன்மையாயிற்று. இவை யிரண்டும் முற்றாயும் முற்றெச்சமாயும் வரும்,
முற்று : செய்கு = செய்வேன், செய்கும் = செய்வோம்.
முற்றெச்சம் : செய்குவந்தேன், செய்கும் வந்தோம்.
அவற்றுள்,
செய்கென் கிளவி வினையொடு முடியினும்
அவ்வியல் திரியா தென்மனார் புலவர் (689)
என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க.
இனி, உகரச்சுட்டடிப் பிறந்து காலத்தை யுணர்த்தும் உது என்னும் ஈறுபெற்றும், வினைமுதனிலைகள் தன்மையொருமை யெதிர் கால வினை முற்றாம். அதனொடு உம்மீறு சேரின் பன்மை யாம். உகரம் முன்மைச் சுட்டாதலால், உது எதிர்காலத்தை உணர்த்தும்.
எ.டு. கூறுது = கூறுவேன்; கூறுதும் = கூறுவோம்.
அது என்னும் ஈறுபோன்றே உது என்னும் ஈறும், துவ்வென முதற் குறையாய் நின்று அல்லது தொக்கு. புணர்ச்சியில் று,டு எனத் திரியும்.
எ.டு. செல் - சேல் + து = சேறு ( = செல்வேன்)
சேறு + உம் = சேறும் ( = செல்வோம்)
கொள் - கோள் + து = கோடு (= கொள்வேன்)
கோடு + உம் = கோடும் ( = கொள்வோம்)
லகர ளகரம் சேறல், கோடல் என்னும் தொழிற்பெயரிற் போன்றே, ஈண்டும் திரிந்தனவென அறிக.
செய்தி என்னும் முன்னிலை யொருமை எதிர்கால வினைமுற்று, உது என்னும் இடைநிலை பெற்றதாகும்.
செய் + உது + ஈ = செய்யுதீ - செய்யுதி - செய்தி = செய்வாய்.
வழிபடுவோரை வல்லறி தீயே (புறம். 10)
செய் + உது + இர் = செய்யுதிர் - செய்திர் = செய்வீர்.
இ ஒருமை யீறு : இர் பன்மையீறு. நீ - ஈ - இ. நீயிர் - நீர் - ஈர் - இர்.
செய்தி, செய்திர் என்னும் எதிர்கால முற்றுக்கள், பின்பு ஏவலாகவும் ஆளப்பட்டன.
செய்தி என்பதில் த் எழுத்துப்பேறு என்பது மொழியாராய்ச்சி யில்லார் கூற்றாம்.
அம்மை, அக்காலம் என்னும் சேய்மைச்சுட்டுக்கள் பண்டைக் காலத்தையும், உம்மை என்னும் முன்மைச்சுட்டு
எதிர்காலத்தையும், உணர்த்துவதால், அது என்பது இறந்த கால ஈறாகவும் உது என்பது எதிர்கால ஈறாகவும்
பயன்படுத்தப்பட்டன.
செய் + அது = செய்யது - செய்து (இ.கா. முற்றும் எச்சமும்)
செய் + உது = செய்யுது. (எ.கா.முற்று)
செய்து, செய்யுது என்னும் இருவகை முற்றுக்களும் பிற்காலத்தில் தன்மைக்கே வரையறுக்கப்பட்டன.
காலவகைப் பிரிவுகள்
வினைச்சொல் காட்டும் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றும், தனித்தனி, தனிப்பு, தொடர்ச்சி, நிறைவு, நிறைவுத் தொடர்ச்சி என நால்வகைப்படும். பண்டை யிலக்கணமெல்லாம் செய்யுள் நடைக்கே எழுதப்பெற்றமையால், இந்நால்வகைப் பிரிவைக் கூறாது விட்டன.
இறந்தகாலப் பிரிவுகள்
எ.டு. வந்தான் - இறந்தகாலத் தனிப்பு (Past Indefinite)
வந்துகொண்டிருந்தான் - இறந்தகாலத் தொடர்ச்சி (Past Con-tinuous)
வந்திருந்தான் - இறந்தகால நிறைவு (Past Perfect)
வந்துகொண்டிருந்திருந்தான் - இறந்தகால நிறைவுத் தொடர்ச்சி (Past Perfect Continuous)
நிகழ்காலப்பிரிவுகள்
வருகிறான் - நிகழ்காலத் தனிப்பு (Present Indefinite)
வந்துகொண்டிருக்கிறான் - நிகழ்காலத்தொடர்ச்சி (Present Con-tinuous)
வந்திருக்கிறான் - நிகழ்கால நிறைவு (Present Perfect)
வந்துகொண்டிருந்திருக்கிறான் - நிகழ்கால நிறைவுத் தொடர்ச்சி (Present Perfect Continuous)
எதிர்காலப் பிரிவுகள்
வருவான் - எதிர்காலத் தனிப்பு (Future Indefinite)
வந்துகொண்டிருப்பான் - எதிர்காலத் தொடர்ச்சி (Future Con-tinuous)
வந்திருப்பான் - எதிர்கால நிறைவு (Future Perfect)
வந்துகொண்டிருந்திருப்பான் - எதிர்க்காலநிறைவுத் தொடர்ச்சி (Future Perfect Continuous)
இப்பிரிவுகள் உலக வழக்கிற்கே உரிய வடிவில், செய்யுள் வழக்கிற் கேயெழுந்த பண்டையிலக்கணங்களிற் கூறப்படவில்லை.
வினைகள், வெவ்வேறு வகையில், ஒவ்வொன்றாகவும் இவ்விரண் டாகவும் பற்பலவாகவும் வகுக்கப்பெறும்.
1. தெரிநிலைவினை x குறிப்புவினை
செயலுங் காலமும் வெளிப்படையாய்த் தெரிய நிற்பது தெரிநிலை வினை; அவற்றைக் குறிப்பாகக் காட்டுவது குறிப்புவினை.
எ.டு. வந்தான், போய், இருந்த - தெரிநிலைவினை உண்டு, இல்லை, வேறு – குறிப்புவினை
குறிப்புவினை
குறிப்புவினை, பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் அறுவகைப்பொருட், பெயரை அடியாகக் கொண்டு தோன்றி, உடைமை, உரிமை, செய்கை என்னும் மூவகைப் பொருள் நிலைக்களத்தில் நின்று, இருத்தல் அல்லது ஆதல்வினையைக் குறிப்பாக உணர்த்தும்.
இருத்தல்வினை முக்காலத்திற்கும் பொதுவாகவோ, ஒரு காலத்திற்கே சிறப்பாக வுரியதாகவோ, இருக்கும். ஆதல் வினை என்றும் ஒரு காலத்திற்குச் சிறப்பாக வுரியதாகவே யிருக்கும்
எ.டு.
பொருள்நிலைக்களம் அடிப்பெயர் குறிப்புவினை
உடைமை குழை (பொருள்) குழையன்
உரிமை மதுரை (இடம்) மதுரையான்
உரிமை மூதிரை (காலம்) மூதிரையான்
உடைமை கை (சினை) கையன்
உடைமை பெரு(மை) பெரியன்
உடைமை ஒப்புமை(குணம்) அன்னன்
செய்கை நடை(தொழில்) நடையன்
நேற்றுவரை பொன்னன் (பொன்னனாயிருந்தான்) - இ.கா.
இன்று பொன்னன் (பொன்னாயிருக்கின்றான்) - நி.கா.
இனிமேற் பொன்னன் (பொன்னனாயிருப்பான்) - எ.கா.
கடவுள் ஒப்புயர் வில்லாப் பெரியன் - முக்காலம்.
மழைபெய்து பயிர் நல்ல (நல்லவாயின) - இ.கா.
இவன் பொன்னன் என்பதில், பொன்னன் என்பது ஆளைக் குறிப்பின், பெயர்ப்பயனிலையாம்.
மூதிரை = ஆதிரை (வ.)
கடவுள் = பெரியன் என்பதில் பெரியன் என்பது முக்காலத்திற்கும் பொதுவாயினும், பெரியனாயிருக்கின்றான் என்று நிகழ்கால வடிவிலேயே கூறப்பெறும்.
முக்கா லத்தினும் ஒத்தியல் பொருளைச்
செப்புவர் நிகழுங் காலத் தானே (நன். 389)
2. முற்றுவினை x எச்சவினை
முற்றிய வினைச்சொல் வடிவில் எழுவாய்க்கு முற்றுப் பயனிலையாக வருவது முற்றுவினை; முற்றாத வினைச்சொல் வடிவிற் பெயரையாவது வினையையாவது தழுவி எச்சப் பயனிலையாய் வருவது எச்சவினை.
எ.டு. வந்தான், இல்லை - முற்றுவினை (Finite Verb)
வந்து, போன, உள்ள, இன்றி - எச்சவினை (Relative or Verbal
Participle)
எச்சவினை பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப்படும்.
எ.டு. வந்த, நல்ல-பெயரெச்சம் (Relative Participle)
வந்து, இன்றி - வினையெச்சம் (Verbal Participle)
3. மூவிடவினை
தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்கட்குரிய வினைகள் மூவிடவினையாம்.
எ.டு. வந்தேன், வந்தோம் - தன்மைவினை
வந்தாய், வா, வராதே - முன்னிலைவினை
வந்தான், வருவான் - படர்க்கைவினை
நிகழ்ச்சிவினை, ஏவல்வினை என முன்னிலைவினை இருவகைப் படும்.
எ.டு. வந்தாய், வருவாய் - நிகழ்ச்சிவினை
வா, வருக-ஏவல்வினை (Imperative Mood)
ஏவல்வினையும், கட்டளை, வியங்கோள் என இருதிறப்படும். கட்டளை அதிகார ஏவல்; வியங்கோள் வேண்டுகோள் அல்லது மதிப்பான ஏவல்.
எ.டு. வா, வாருங்கள் - கட்டளைவினை
வருக - வியங்கோள்வினை
ஏவல்வினை மீண்டும் தூண்டல், விலக்கல் என இருவகைப்படும்.
எ.டு. வா, வருக - தூண்டுவினை
வராதே, வரற்க - விலக்குவினை (Prohibitive Mood)
ஏவல் பலமடியாகவும் வரும்
எ.டு. வருவி, போக்கு - இருமடியேவல்
வருவிப்பி, போக்குவி - மும்மடியேவல்
வருவிப்பிப்பி, போக்குவிப்பி - நான் மடியேவல்
தனியேவல் போன்றே பன்மடியேவல்களும் வினை முதனிலையாக அமையும்.
எ.டு. வருவித்தான், போக்குவிப்பித்தான்.
4. உடன்பாட்டுவினை x எதிர்மறைவினை
வினை நிகழ்ச்சியை உள்ளதாகக் குறிக்கும்வினை உடன்பாடுவினை; இல்லதாக மறுக்கும் வினை எதிர்மறைவினை.
எ.டு. வா, வந்தான், உண்டு - உடன்பாடு (Affirmative or Positive Verb)
வராதே, வந்திலன், இல்லை - எதிர்மறை (Negative Verb)
5. செயப்படுபொருள் குன்றியவினை x செயப்படுபொருள் குன்றாவினை
இவை முறையே செயப்படுபொருள் கொள்வதும் கொள்ளாதது மாம்.
எ.டு. நடக்கிறான், வருகிறான் - செ. பொ. குன்றியவினை (Intransitive Verb)
செய்கிறான், உண்பான் - செ. பொ. குன்றாவினை (Transitive Verb)
6. தன்வினை x பிறவினை
ஒருவன் தானே செய்வது தன்வினை; பிறனைக் கொண்டு செய் விக்கும் வினை பிறவினை.
எ.டு. வந்தான், கற்றான் - தன்வினை
வருவித்தான், கற்பித்தான் - பிறவினை (Causal or Causative Verb)
வருவித்தான், கற்பிப்பித்தான் - பன்மடிப்பிறவினை
7. செய்வினை x செயப்பாட்டுவினை
வினைமுதலே எழுவாயாய் நின்று ஒன்றைச் செய்தலைக் குறிக்கும் வினை செய்வினை; செயப்படுபொருள் எழுவாயாகி வினை முதலால் தான் ஏதேனும் செயப்படுதலைக் குறிக்கும் வினை செயப்பாட்டு வினை.
எ.டு. நாய் சோற்றைத் தின்கிறது - செய்வினை (Active Voice)
சோறு நாயால் தின்னப்படுகிறது - செயப்பாட்டுவினை
(Passive Voice)
மறைமலையடிகள் இற்றைத் தமிழைத் தூய்மைப்படுத்தி
னார்கள் - செய்வினை
இற்றைத்தமிழ் மறைமலையடிகளால் தூய்மைப் படுத்தப்
பெற்றது - செயப்பாட்டுவினை
அகத்தியர் தொல்காப்பியருக்குத் தமிழ் கற்பிக்கவில்லை -
செய்வினை
அகத்தியரால் தொல்காப்பியருக்குத் தமிழ் கற்பிக்கப்படவில்லை - செயப்பாட்டுவினை
8. தலைமைவினை x துணைவினை
கீழே இருக்கிறான், கூட்டம் முடிகிறது - இவற்றில் இரு, முடி என்னும் இரண்டும் தலைமைவினை (Main Verb).
அவன் வந்திருக்கிறான், எனக்கு நடக்கமுடிகிறது. இவற்றில் இரு, முடி என்னும் இரண்டும் துணைவினை (Auxiliary Verb).
9. நிறைவினை x குறைவினை
ஈரெண் மூவிடத்தும் முக்காலத்திலும் புடைபெயரும்வினை நிறைவினை; அங்ஙனம் புடைபெயராவினை குறைவினை.
எ.டு. வா, போ - நிறைவினை (Perfect Verb)
மாட்டு, வேண்டும் - குறைவினை (Defective Verb)
(செய்ய) மாட்டுவேன், (எனக்கு) வேண்டும் என்பன வா, போ என்பனபோல், இறந்தகாலத்திலும் வராமை காண்க.
10. தொடங்கல்வினை x முடித்தல்வினை
தொடங்கல்வினை தொழிற்பெயருடன் உறு என்னும் துணை வினை கொள்ளும்; முடித்தல்வினை இறந்தகால வினையெச்சத் துடன் விடு என்னும் துணைவினைகொள்ளும், விடு-இடு.
எ.டு. சொல்லலுற்றான் - தொடங்கல்வினை (Inceptive or Inchoative Verb)
எழுதிவிட்டான், வந்திட்டான் - முடித்தல் வினை.
11. தற்பொருட்டு வினை x மற்பொருட்டு வினை
ஒருவன்தானே தனக்குச் செய்துகொள்ளும் வினை தற்பொருட்டு வினையாம் (Reflexive Verb or Middle Voice). இது இறந்தகால வினை யெச்சத்துடன் கொள் என்னும் துணைவினை சேர்ந்துவரும். ஒருவன் பிறனுக்குச் செய்து கொடுக்கும் வினை மற்பொருட்டு வினையாம். இது இறந்த கால வினையெச்சத்துடன் கொடு என்னும் துணைவினை சேர்ந்துவரும்.
எ-டு: எழுதிக்கொள், முகம்வழித்துக் கொண்டான் - தற் பொருட்டுவினை.
எழுதிக்கொடு, கற்றுக்கொடுத்தான் - மற்பொருட்டுவினை.
இனி, ஒன்றிற்கொன்று எதிரான இணையன்றித் தனித் தனி வெவ்வேறு பொருள்பற்றி வரும் பலவினைகளுமுள. அவையாவன:
1. வாழ்த்துவினை (Optative Mood)
ஒருவரை அல்லது ஒரு பொருளை அல்லது ஓர் அமைப்பை, நீடு நிற்குமாறு அல்லது தழைத்தோங்குமாறு வாழ்த்துவது வாழ்த்து வினையாம். இது தன்மையிடத்தில் வராது.
எ.டு.
வரையாது கொடுத்தோய் ….. நடுக்கின்றி நிலியர்! (புறம். 2)
தென்னவன் வாழி! (சிலப். 11:22)
வரப்புயர! (ஔவையார்)
தமிழ்வாழ்க! தமிழ் வெல்க!
2. கட்டாயவினை
நிகழ்கால வினையெச்சம் என்னும் அகரவீற்று வினையெச்சத் தோடு, வேண்டும் என்னும் துணைவினை சேரின் கட்டாய வினையாம்.
எ.டு. தேர்விற்குப் பணங் கட்டவேண்டும்.
3. தேவைவினை
இது இருவகையில் அமையும்.
4. அகரவீற்று வினையெச்சத்துடன் அல்லது அல்லீற்று (அல்லது தல்லீற்று)த் தொழிற்பெயருடன் வேண்டும் என்னும் துணை வினை சேர்தல்.
எ.டு. கூழானாலுங் குளித்துக் குடிக்கவேண்டும். நுண்ணிய கருமமும் எண்ணிச் செய்தல் வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வேளையாகிலும் உண்ணல் வேண்டும்.
2. அகரவீற்று வினையெச்சத்துடன் படும் என்னும் துணை வினை சேர்தல்.
எ.டு.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப்படும் (குறள். 235)
4. கடமைவினை
எ.டு. பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கவும், பிள்ளைகள் பெரியோரான பின் பெற்றோரைப் பேணவுங் கடவர்.
5. கற்பனைவினை
இறைவன் மக்களுக்கு இட்ட கட்டளையை அல்லது கட்டளை யாகக் கூறுவது கற்பனைவினை. இது முன்னிலை எதிர்கால வினை முற்றோடு ஆக என்னும் துணைவினை சேர்ந்துவரும்.
எ.டு.
உன்னைப்போற் பிறனை நேசிப்பாயாக.
களவு செய்யா திருப்பாயாக.
6. சூளுறவுவினை
இது இருவகையில் வரும்.
1.தன்மையெதிர்கால வினைமுற்றொடு (வியங்கோள் வடிவி லுள்ள) ஆக என்னும் துணைவினை சேர்தல்
எ.டு. நான் இவளைக் கைவிடின், அன்னையைக் கொன்றான் அடையும் உலகை அடைவேனாக,
2.வியங்கோள் வினை
எ.டு.
அவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக. (புறம், 71)
7. செயவிடல்வினை
படர்க்கையானை ஒன்று செய்யவிடுமாறு முன்னிலையானை ஏவுவது செயவிடல் வினையாம். இதை இசைவிப்பு வினை என்றும் சொல்லலாம், இது அகரவீற்று வினையெச்சத்துடன் அட்டு என்னம் துணைவினை சேர்ந்தது. இது எதிர் மறையில் வராது.
எ.டு: ஒருமை : அவன் வரட்டு = நீ அவனை வரவிடு.
பன்மை : அவன் வரட்டும் = நீர் அவனை வரவிடும்.
வரட்டு என்பது வரவொட்டு என்பதன் தொகுத்தல். ஒட்டுதல் இசைதல், ஒட்டு - அட்டு. வர + அட்டு = வரட்டு, வர + அட்டும் = வரட்டும், செய்யவொட்டு என்னும் திரியா வடிவம் வினையாயின் மூவிடத்தும் வரும். அது பெரும்பாலும் எதிர்மறையிலேயே வரும்.
எ.டு.
தூங்கவொட்டேன், தூங்கவொட்டாய், தூங்கவொட்டார்.
8. தடை நீக்கவினை
பிறர் விரும்பின் ஒன்றைச் செய்வதற்குத் தடையின்மையைக் குறிக்கும் வினை தடை நீக்க வினையாம்.
எ.டு.
நீங்கள் போகலாம், அவன் வரலாம்.
9. ஆற்றல்வினை (Potential Mood)
ஒன்றைச் செய்ய முடிதலைக் குறிக்கும் வினை ஆற்றல் வினையாம். இது மூவகையில் அமையும்.
10. அகரவீற்று வினையெச்சத்தோடு இயல் (ஏல்), ஒண்ணு, ஒல்லு, மாள், முடி, கூடு முதலிய துணைவினைகளுள் ஒன்று சேர்தல்.
கூடு என்னும் துணைவினை உடன்பாட்டில் மட்டும் வரும், ஏனைய உடன்பாடு எதிர்மறை ஆகிய இருவடிவிலும் வரும்.
இவையெல்லாம் தமித்துத் தலைமை வினையாகவும் வரும்.
எ.டு.
வரவியலும், தரவொண்ணும், செய்யவொல்லும், செய்ய மாளும், எழுதமுடியும், தேறக்கூடும்.
அது என்னால் இயலும், ஒண்ணும், ஒல்லும், மாளும், முடியும் கூடும்.
வரவியலாது, தரவொண்ணாது, செய்யவொல்லாது, செய்ய மாளாது, எழுத முடியாது.
அது என்னால் இயலாது, ஒண்ணாது, மாளாது, முடியாது.
2. அகரவீற்று வினையெச்சத்தோடு கில் அல்லது மாட்டு என்னும் துணைவினையின் முற்றுச்சேர்தல்.
கில் என்பது முக்காலத்திலும் வரும்; மாட்டு என்பது எதிர் காலத்தில் மட்டும் வரும்.
மாட்டு என்பது மாள் என்பதன் பிறவினை. மாளுதல் முடிதல்; மாட்டுதல் முடியச் செய்தல்.
எ.டு. செய்யகின்றேன், செய்யகிற்கின்றேன், செய்யகிற்பேன்.
செய்யமாட்டுவேன் = முடியச்செய்வேன், என்னாற்செய்ய முடியும்.
3. அகரவீற்று வினையெச்சத்தோடு படவில்லை என்னும் கூட்டு வினைச்சொல் சேர்தல். இது உடன்பாட்டில் வராது.
எ.டு. (என்னால்) எழுந்திருக்கப்படவில்லை = எழுந்திருக்க முடிய வில்லை.
கூடு, படு என்னும் துணைவினைகள் எதிர்மறை வடிவில் விலக்கு வினையாம்.
எ.டு. நீ போகக்கூடாது, நீ போகப்படாது.
மாட்டு, முடி என்னும் துணைவினைகள் தன்மை எதிர்மறை வடிவில் மறுப்பு வினையாம்.
எ.டு. நான் வரமாட்டேன், நான் வரமுடியாது.
10, கேள்விப்பாட்டுவினை
பிறர் வாயிலாய்க் கேள்விப்பட்டதைக் குறிக்கும் வினை கேள்விப் பாட்டு வினையாம். இது வினைமுற்றோடும் பெயரோடும் ஆம் என்னும் துணைவினை சேர்ந்துவரும்.
எ.டு. நேற்று வந்தானாம், நாளைக்கு விடுமுறையாம்.
11. உய்த்துணர்வினை
இது மூவகையில் வரும்.
12. வினைமுற்றுடன் போலும் அல்லது போலிருக்கிறது என்னும் சொற்சேர்தல்.
எ.டு. அவன் தேறிவிட்டான் போலும்! இன்று மழைவரும் போலி ருக்கிறது.
2.வினைமுற்றுடன் ஆம் காட்டியும் என்னும் ஈரிடைச் சொற் சேர்தல்.
எ.டு. நேற்றுவந்தானாங் காட்டியும்.
3.வினைமுற்றுடன் ஆக்கும் என்னும் சொற்சேர்தல். ஆகும் - ஆக்கும்.
எ.டு. அவன் வீட்டில்லையாக்கும்.
12. உயர்வு குறித்தல்வினை
பெயரொடு ஆக்கும் என்னும் துணைவினை சேர்ந்து ஒருவரின் உயர்வு குறிப்பது உயர்வு குறிப்புவினையாம்.
எ.டு. அவர் யார் தெரியுமா? அமெரிக்கச் செல்வருள் தலைமை யானவராக்கும் !
13. தேற்றவினை
ஒரு வினைநிகழ்ச்சியை உறுதிப்படுத்துவது தேற்ற வினையாம். தேறுதல் தெளிதல், தேற்றுதல் தெளிவித்தல், தேற்றுவது தேற்றம். இது அறுவகையில் அமையும்.
14. ஏகாரவிடைச் சொல்லொடு புணர்ந்த அகரவீற்று வினை யெச்சத்தின் பின் முற்றுவினை.
எ.டு. வரவே வருவான்.
15. தான் என்னும் இடைச்சொல்லொடு புணர்ந்த அகரவீற்று வினை யெச்சத்தின் பின் முற்றுவினை.
எ.டு. வரத்தான் செய்வான்.
16. ஏகாரவிடைச் சொல்லொடு புணர்ந்த இறந்தகால வினையெச்சத்தின் பின் வினைமுற்று.
எ.டு. வந்தே தீர்வான்.
17. ஏகாரவிடைச்சொல்லொடு புணர்ந்த வினைமுற்று.
எ.டு. வந்தானே!
18. வினைமுற்றின்பின் தான் என்னும் இடைச்சொல்.
எ.டு. வருவான் தான்.
இது சென்னைவழக்கு; அத்துணைச் சிறந்ததன்று.
19. வினைமுற்றின்பின் மன்ற என்னும் இடைச்சொல்.
எ.டு. மடவை மன்ற (தற். 14)
இது செய்யுள் வழக்கு
20. அருள்வினை
இறைவனும் முற்றுத்துறந்த முழுமுனிவரும் செய்யும் செயலைக் குறிக்கும் வினை அருள்வினை. இது இறந்த கால வினையெச்சத் துடன் அருள் என்னும் துணைவினை சேர்ந்துவரும்.
எ.டு. எழுந்தருளினார் சொல்லியருளினார். திருவாய்மலர்ந்தார், திருவுருக்கரந்தார் என்பவற்றைத் திருவினை என்னலாம்.
21. உதவிவினை
இறந்தகால வினையெச்சத்துடன் ஈ, தா, கொடு என்னும் வினைகளுள் ஒன்று சேர்ந்து, இலவசச் செயலைக் குறிப்பது உதவி வினையாம்.
எ.டு. சென்றீ, வந்தீ, சொல்லித்தா, எழுதிக்கொடு எழுதிக் கொடுத்தல் கைம்மாறு கருதின் மற்பொருட்டு வினையாம்.
16. ஆர்வவினை (Desiderative Verb)
வினை நிகழ்ச்சியின்மீது ஆர்வங்காட்டும்வினை ஆர்வ வினையாம். இது அறுவகையில் அமையும்.
17. ஏன் என்னும் இடைச்சொல்லொடு புணர்ந்த ஏவல்வினை.
எ.டு. வாருங்களேன்
18. வேண்டும் என்னும் துணைவினையொடு கூடிய தொழிற் பெயர் q அல்லது அகரவீற்று வினையெச்சம்.
எ.டு. தாங்கள் எங்கள் இல்லத்திற்குத் தப்பாது வரல் வேண்டும்.
இறைவ, நீ எங்ஙனமும் எனக்கு அருள வேண்டும்.
19. தன்மை வாழ்த்து.
எ.டு. யான் வாழ்க !
20. ஏயிடைச் சொல்லொடு புணர்ந்த ஏவல்வினை.
எ.டு. நில்லுமே - நின்மே, வரட்டுமே.
21. ஓவிடைச்சொல்லோடு புணர்ந்த ஏவல்வினை.
எ.டு. மொழியுமோ - மொழிமோ.
22. தில்லிடைச் சொல்லொடு கூடிய வியங்கோள்வினை.
எ.டு. வருகதில்
இவற்றுடன் பின் மூன்றுஞ் செய்யுள் வழக்கென அறிக.
23. அணியவினை
ஒன்றைச் செய்வதற்கு அணியமாய் (ஆயத்தமாய்) இருக்கும் நிலையைக் குறிக்கும் வினை அணியவினையாம். இது இருவகையில் அமையும்.
24. அகரவீற்று வினையெச்சத்தின் போ என்னும் துணை வினை.
எ.டு. சொல்லப் போனான்.
25. நாலாம் வேற்றுமைத் தொழிற்பெயர் அல்லது அகர வீற்று வினையெச்சத்தின் பின் இரு என்னும் துணை வினை.
எ.டு. எழுதுவதற்கிருந்தான், எழுதவிருந்தான்.
26. தொடர்ச்சிவினை
வினைத்தொடர்ச்சியைக் குறிக்கும் வினை தொடர்ச்சி வினையாம். இது இருவகையில் அமையும்.
27. இறந்தகால வினையெச்சத்தின் பின் அல்லது நிகழ்கால வினை யெச்சத்தின் (Present Participle) பின் வா என்னும் துணைவினை.
எ.டு. எழுதிவருகிறான், எழுதிக்கொண்டு வருகிறான்.
28. ஏயிடைச்சொல்லொடு புணர்ந்த நிகழ்கால வினையெச்சத்தின் பின் போ என்னும் துணைவினை.
எ.டு. படித்துக்கொண்டே போகிறான்.
29. ஆதல்வினை
ஒன்றைச் செய்வதற்கு ஆன நிலைமையை உணர்த்தும் வினை ஆதல் வினையாம்.
எ.டு. வரலானான், எழுதலானேன்.
20. இரட்டைக்கிளவிவினை (Frequentative Verb)
என்றும் அடுக்குத் தொடரான இரு குறிலிணையாகவே வரும் வினை இரட்டைக்கிளவி வினையாம்.
எ.டு. குறுகுறுக்கும், சலசலக்கிறது.
21. மிகுப்புவினை (Intensive Verb)
ஒரு செயலை அல்லது நிகழ்ச்சியை மிகுத்துக் காட்டும் வினை மிகுப்பு வினையாம்.
எ.டு. பொதுவினை மிகுப்புவினை
ஆரிக்கிறது ஆரவாரிக்கிறது
ஆய்ந்தான் ஆராய்ந்தான்
காப்பான் பாதுகாப்பான்
ஆரித்தல் ஒலித்தல், ஆர்தல் நிறைதல். ஆர = நிரம்ப, மிக, ஆர - ஆர், பாது = ஓம்பும் வெட்சி ஆநிரைப்பகுதி.
22. வழுவமைதி வினை (Anomalous Verb)
வழுவாயினும் வழுவற்றதுபோல் இலக்கணியரால் அமைக்கப் பெற்ற வினை வழுவமைதி வினையாம்.
உண்டு (உள் + து) என்னும் குறிப்புவினைமுற்று, முதற்கண் படர்க்கை ஒன்றன்பால் வினையாயிருந்து, பின்பு ஐம்பால் மூவிட ஈரெண் பொதுவினையாய் வழங்குகின்றது.
உண்டு என்பதற்கு எதிர்வினை இன்று என்பது. அது இன்றும் ஒன்றன்பால் வினையாகவே வழங்குதல் காண்க.
உண்டு = உள்ளது (குறிப்புவினையாலணையும் பெயர்). உண்டு பண்ணுதல் உள்ளதாய்ச் செய்தல். உண்டாக்குதல் உள்ள தாக்குதல். இத்துணைவுண்டு = இவ்வளவுள்ளது.
வேண்டும், வேண்டாம், வேண்டா
வேண்டும் என்னும் துணைவினை, வேண்டு என்னும் வினையின் (செய்யும் என்னும் வாய்பாட்டு) எதிர்கால முற்றாம், இவ்வாய் பாட்டு வினைமுற்று, இற்றை மலையாளத்திற்போல் தமிழிலும் முதற்காலத்தில் ஐம்பால் மூவிட ஈரெண் பொதுவினையா யிருந்தது. அது பின்னர்ச் செய்யுள் வழக்கில், பலர்பா லொழிந்த நாற்பாற் படர்க்கைக்கே வரையறுக்கப்பட்டது. இது,
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா
என்னும் தொல்காப்பிய நூற்பாவால் (வினையியல், 30) அறியப் படும், செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று நிகழ்காலத் திற்கும் எதிர்காலத்திற்கும் பொதுவென்று தொல்காப்பியர் காலத்திற் கருதப்பட்டதினால், அவர் அதை நிகழுங் காலத்துச் செய்யும் என்னும் கிளவி என்றார்.
இவ் வாய்பாட்டு வினைமுற்று, உலகவழக்கிற் பலர்பாற்கு மட்டுமன்றி ஆண்பால் பெண்பாற்கும் விலக்கப்பட்டு விட்டது. அதனால், அது இன்று அஃறிணை யிருபாலிலேயே வழங்கி வருகின்றது.
எ.டு. மாடு வரும், மாடுகள் வரும்.
அவள் வருவாள் என்னும் பெண்பாலீற்றுக் கூற்றுஇழிவாகக் கருதப்படுவதால், மதிப்பு வாய்ந்த பெண்டிரைப் பற்றிக் கூறுமிடத்து அந்த அம்மா வரும் என்று செய்யும் என்னும் வாய்பாட்டு வினைகொடுத்துக் கூறுவது, இழிவு நீக்கப் பொருட் டேயன்றி இயல்பான வழக்குப்பற்றிய தன்று.
வேண்டு என்னும் வினைச்சொல்லின் இயற்பொருள் விரும்பு என்பதே. வேள்-வேண்-வேண்டு. வேட்டல் விரும்புதல், வேட்கை விருப்பம்.
வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை யில (4)
என்னுங் குறளில், வேண்டுதல் வேண்டாமை என்னுந் தொடர் விருப்பு வெறுப்பைக் குறித்தல் காண்க.
ஒருவரின் உதவியை மிகவிரும்பினால், அவரைக் கெஞ்சிக் கேட்க நேரும். அதனால், வேண்டற் சொல்லுக்கு மன்றாடற் பொருள் தோன்றிற்று. வேண்டுகோள், வேண்டிக்கொள், இறைவேண்டல் முதலிய சொற்களும் சொற்றொடர்களும் இப்பொருளனவே.
பொதுவாக, தேவையான பொருளே விரும்பப்படும். ஒரு பொருள் ஒருவரால் விரும்பப்படின், பெரும்பாலும் அது அவர்க்குத் தேவை என்பதையே உணர்த்தும். இதனால், விரும்பற் கருத்தினின்று தேவைக் கருத்துப் பிறந்தது. ஆங்கிலத்திலும் Want என்னும் சொல் விருப்பத்தையும் தேவையையும் உணர்த்துதல் காண்க.
வேண்டி = விரும்பி, தேவைப்பட்டு, வேண்டாது = விரும்பாமல், தேவையின்றி. வேண்டியதைக் கேள், வேண்டிய மட்டும் எடுத்துக் கொள், என்னும் தொடர்களும் இவ்விரு கருத்தையும் உணர்த்துதல் காண்க.
ஆயின், இப்பொருளிலும் இதன் வழிப்பொருள்களிலும், வேண்டற்சொல் வரும் சொற்றொடரமைப்பு மாறிவிட்டது. நான் குடிக்கத் தண்ணீர் வேண்டும் (தண்ணீரை வேண்டுகிறேன்) என்று இருக்கவேண்டிய உயர்திணைப் பயனிலை முடிபு, எனக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று, அஃறிணைப் பயனிலை முடிபாய் மாறிற்று. ‘Ú v‹d nt©L»whŒ? என்பது, உனக்கு என்ன வேண்டும்? என்று மாறிற்று. நான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும், நான் தண்ணீர் குடிக்க விரும்புகிறேன், என்னும் பொருளதே.
மிகத் தேவையான செயலைக் கட்டாயமாய்ச் செய்து முடிக்க வேண்டியிருத்தலின், தேவைக்கருத்தினின்று கட்டாயக் கருத்துப் பிறந்தது.
எ.டு. கடல் வணிகர் கப்பலிற் கொண்டுவரும் சரக்கு கட்கு ஆயம் (வரி) செலுத்தவேண்டும்.
கட்டும் ஆயம் கட்டாயம், கட்டாயவினை அதிகாரத்தை யன்றி அன்பைப்பொறுத்ததாயின் ஆர்வவினையாம். எ.டு. என்மகன் திருமணத்திற்குத் தாங்கள் கட்டாயம் வரல்வேண்டும்.
கட்டாயவினை பெரும்பாலும் தவறாது செய்யப்படுதலின், வேண்டற்சொல் தவறில்லா உண்மையையும் உணர்த்தலாயிற்று.
எ.டு. ஐயன் என்னும் பெற்றோன்பெயர், தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையும் தொன்றுதொட்டு வழங்கிவருவதால், அது தூய தமிழ்ச் சொல்லாயிருத்தல் வேண்டும்.
இவ்வுண்மை யுணர்த்தற் கருத்தினின்றே உறவுமுறை யுணர்த்தற் கருத்தும் கிளைத்தது.
எ.டு. அவன் உனக்கு என்ன வேண்டும்?
இது ‘அவன் உனக்கு என்ன உறவுமுறையாதல் வேண்டும்? என்பதன் தொகுத்தலாம்.
இனி, வேண்டும் என்னும் சொல் கட்டாய வினையாய் அல்லது விருப்ப வினையாய் வரும் தொடரியம், ஒருவர் வினையையே யன்றி இருவர் வினையைக் கொண்டதாகவும் இருக்கும்.
இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
தன்பா லானும் பிறன்பா லானும்.
என்னும் தொல்காப்பிய நூற்பாவையும் (வினை. 46), அதற்கு,
இது செயல்வேண்டுமென்பதுபட வருங்சொல் தன்பாலானும் பிறன்பாலானும் என ஈரிடத்து நிலைபெறும் பொருண்மையை யுடைத்தாம் என்றவாறு.
தானென்றது செயலது வினைமுதலை
ஓதல்வேண்டும் என்றவழி, வேண்டுமென்பது ஒதற்கு வினை முதலாயினாற்கும் அவனோதலை விரும்பும் தந்தைக்கும் ஏற்றவாறு கண்டுகொள்க. என்று சேனா வரையர் உரைத்த உரையையும் நோக்குக.
ஆகவே, நீங்கள் தமிழிற் பெயர் தாங்கள் வேண்டும் என்பது நீங்கள் தமிழிற் பெயர்தாங்குவதை நான் விரும்புகின்றேன் என்றும் பொருள்படுவது காண்க. இதனால்வேண்டற் சொல்லின் அடிப்படைப்பொருள் வெளிப்படுவதையும்
நோக்குக.
சொற்கள் தம் இயற்பொருளடிப்படையில் பல்வேறு புதுப் பொருள்களைப் பெறுகின்றன. பெயர்களுள் ஆகுபெயரிருப்பது போன்றே. வினைகளுள்ளும் ஆகுவினைகள் உளவென அறிக.
வேண்டும் என்பதன் எதிர்மறை வேண்டாம் என்பது. இது செய்யாம் என்னும் வாய்பாட்டுத் தன்மைப்பன்மை எதிர் கால எதிர்மறை வினைமுற்று. வேண்டாம் = வேண்டோம். காணேன் என்னும் ஒருமைப்பொருளில் காணோம். என்னும் பன்மைச் சொல் வழங்கிவருவது போன்றே, வேண்டேன் என்னும் ஒருமைப் பொருளிலும் வேண்டாம் என்னும் பன்மைச் சொல் வழங்கிவருகின்றதென அறிக. வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே என்னும் தனிப்பாடலடியை நோக்குக.
வேண்டா என்பது, வேண்டாம் என்பதன் ஈறுகெட்ட வடிவும் வேண்டாத என்னும் எதிர்மறை வினையாலணையும் பெயரின் ஈறுகெட்டவடிவும், ஆக இருவகையில் நிற்கும்.
3. இடைச்சொல்
பெரும்பாலும் தமித்துவராது, பெயருக்கும் வினைக்கும் உறுப்பாக அவற்றினிடத்து வரும் சொற்கள் இடைச் சொல்லாம். இடை இடம். சிறுபான்மை தமித்தும் வருவதாம், தமித்து வருவன சொல்லிடத்து என வருவன இடைச் சொற்கள் இருபாற் படும். தமித்து வருவனவும், இயற்கையிடைச் சொல்லும் செயற்கையிடைச் சொல்லும் ஆக இரு திறப்படும். இடைச் சொல்லாகவே தோன்றியவை இயற்கை; பெயரும் வினையும் பல்வேறு பொருளுணர்த்தி இடைச் சொல்லாகத் திரிந்தவை செயற்கை.
1. தமித்து வருவன
சுட்டிடைச் சொற்கள்
எ.டு. அந்தா, அதோ, அன்னா இந்தா, இதோ, இன்னா உவ, உது.
ஆ, அ, ஈ, இ, ஊ, உ என்பன அந்த, இந்த, உந்த என்று பொருள் தரும் சுட்டுக் குறிப்புப் பெயரெச்சங்களாயினும் (Demonstrative Adjectives) தமித்து வழங்காமையிள், இடைச்சொல்லாகக் கொள்ளப்படும்.
வினாவிடைச்சொற்கள்
எ.டு. எந்தா, எதோ, எதா.
ஏ, எ, யா என்பன எந்த என்று பொருள்படும் வினாக் குறிப்புப் பெயரெச்சங் களாயினும் (Interrogative Adjectives) தமித்து வழங்காமையின், இடைச்சொல்லாகக் கொள்ளப்படும்.
உவமை வுருபுகள்
1. சுட்டடி : எ.டு. அன்னன், ஆங்க
2. வினையடி
எ.டு. போல், நிகர் - (முதனிலை)
போன்று, செத்து - (இ.கா.வி.எ.)
போல, புரைய - (எ.கா.வி.எ.) - (Infinitive Mood)
போன்ற, ஒத்த - (இ.கா.பெ.எ.)
போலும், ஒக்கும் - (எ.கா.பெ.எ.)
போலும், ஒக்கும் - (எ.கா.வி.மு.)
உடன்பாட் டிடைச்சொற்கள் :
எ.டு. சரி, சரிசரி, ஆகட்டும்.
ஒத்துக்கோ ளிடைச் சொற்கள் :
எ.டு. ஆம், நல்லது, மதி (புத்தி-வ)
ஆவலாதி யிடைச்சொற்கள் :
எ.டு. பார்த்தையா பார்த்தையா, கேட்டையா கேட்டையா - ஆவலாதி முறையீடு.
அரற்ற லிடைச்சொற்கள் :
எ.டு. கூகேகூ, குய்யோ முறையோ.
வேசாற் றிடைச்சொற்கள் :
எ.டு. அக்கடா, சிவசிவா வேசாறல் இளைப்பாறல்
விளி யிடைச்சொற்கள் :
எ.டு. இந்தா, ஏன்காணும் - உலக வழக்கு
அம்ம - செய்யுள் வழக்கு
ஏ, ஓய், வே என்பன இழி வழக்காம்.
உரைமுக இடைச்சொற்கள் :
எ.டு. அந்த, இந்த - உலக வழக்கு
ஆங்க - செய்யுள் வழக்கு
தொகைமுக இடைச்சொற்கள் :
எ.டு. ஒரு, ஒருபத்து.
விழுக்காட் டிடைச்சொற்கள் :
பேச்சில் இடையிட்டுத் திரும்பத்திரும்ப வரும் பொருளற்ற சொல் விழுக்காட்டுச் சொல்லாம்.
எ.டு. வந்து, பின்னே
தோல்வியாட் டிடைச்சொற்கள் :
எ.டு. குழமணிதூரம், பொங்கத்தம் பொங்கோ, தோலே தோலே.
அடைக்கலம் வேண்டிடைச் சொல்; ஒலம்.
இணைப்புச் சொற்கள் (CONJUNCTIONS).
1. அடுக்கிணைப்புச் சொற்கள் (Cumulative Conjunctions)
எ.டு. என, எனவும், எனா, என்று, என்றும், என்றா.
இவை சொற்களையும் சொற்றொடர்களையும் இணைக்கும்.
2. மறுப்பிணைப்புச் சொற்கள் (Adversative Conjunctions)
எ.டு. ஆனால், ஆனாலும், ஆயின், ஆயினும், இருந்தாலும், இருந்த போதிலும், இருந்தாற்கூட, எனினும், என்றாலும்.
இவை சொற்றொடர்களையே இணைக்கும்.
3. மறுநிலை யிணைப்புச் சொற்கள் (Alternative Conjunctions)
எ.டு. அல்லது, எனினும், என்றாலும், என்றோ, இவற்றுள், அல்லது சொல்லையும் சொற்றொடரையும் இணைக்கும், சொல்லையிணைப்பின், ஒவ்வோர் இரு சொல்லிடையும் ஒவ்வொரு முறை வரும்; ஏனைய சொற்களை மட்டும் இணைக்கும்.
4. உய்த்துணர் விணைப்புச் சொற்கள் (Illative Conjunctions)
எ.டு. ஆகையால், ஆகையினால், ஆதலால், ஆகவே, எனவே இவை சொற்றொடர்களை இணைப்பன.
தனிப் பொருளிடைச் சொற்கள் :
என.
இது கரணியம் (காரணம்), பொருட்டு, பெயரீடு, இணைப்பு, ஒலிக்குறிப்பு, விரைவுக் குறிப்பு, வண்ணக் குறிப்பு, காலக்குறிப்பு முதலிய பொருள்களில் வரும்.
இது என் என்னும் வினையின் அகரவீற்று எச்சமாகும்.
வெள்ளென வா - காலக்குறிப்பு
வெள்ளென = கிழக்கு வெளுக்கும்போது, விடிகாலையில், குறித்த நேரத்திற்கு முன்பே.
வெள்ளெனக்காட்டி - வெள்ளெங்காட்டி = விடிகாலை.
என்று.
இது பெயரீடு, இணைப்பு. ஒலிக்குறிப்பு, விரைவுக் குறிப்பு, வண்ணக் குறிப்பு முதலிய பொருள்களில் வரும்.
இது என் என்னும் வினையின் இறந்தகால எச்சமாகும்.
உலக வழக்கில், நேர் கூற்றை (Direct Speech) முடிக்குஞ் சொல்லோடு இணைப்பது இஃதொன்றே.
எ.டு. அவன் நாளை வருவான் சொன்னான்.
முடிக்குஞ்சொல் என்றான் என்றும் வினைமுற்றாயின், இணைப்புச் சொல் வராது.
எ.டு. அவன் நாளை வருவேன் என்றான்.
அடி அடி என்று அடித்தான், தின் தின் என்று தின்றான், என்ப வற்றில், என்று என்னும் சொல் கூற்றைக் குறியாது வினை மிகுதியை அல்லது கடுமையை உணர்த்தும்.
மன்ற என்பது தேற்றமும், தஞ்சம் என்பது எளிமையும் எல்லே என்பது இரக்கமும் உணர்த்தும்.
எல்லே யிலக்கம். (தொல். இடை. 21) என்னும் பாடம் தவறான தாகும். எல் என்பது ஒளியையும் பகலையும் கதிரவனையும் குறிக் கும் பெயர்ச்சொல்லாதலால், இடைச் சொல்லாகாது. ஏதிலேன் அரங்கற் கெல்லே என்று, நாலாயிரத் தெய்வப் பனுவலில் (திருமாலை. 26) எல்லே என்பது இரங்கற்பொருளில் வந்திருத்தல் காண்க.
தாலாட் டிடைச்சொற்கள் :
எ.டு. லாலா, ரோரோ.
இவை இலக்கிய நடையில் தாலா ஒரோ என்றெழுதப் பெறும்.
புள்ளோப்ப லிடைச்சொல் : ஆலோலம், ஆயோ.
பிதற்றற்குறிப் பிடைச்சொற்கள் :
எ.டு. ஆலே பூலே, கன்னா பின்னா, கன்னாரை பின்னாரை, காமா சோமா.
ஆளத்தி யிடைச்சொற்கள் :
எ.டு. தரனன்னா தன்னானா, தரனான தோம்நோம்.
வண்ணமெட் டிடைச்சொற்கள் :
எ.டு. தன்னன்னே நானனன்னே நானனன்ன நானா.
வண்ணக்குழிப் பிடைச்சொற்கள் :
எ.டு. தான, தத்த, தந்த, தய்ய, தன்ன தனன, தனதான.
தில்லானா இடைச்சொற்கள் :
எ.டு. தீம் தீம் உதரிதான தனதிரனா தீம்
மகுட இடைச்சொற்கள் :
தாலாட்டும் பாட்டு - தாலோ தாலேலோ
கப்பற் பாட்டு - ஏல ஏலோ ஏல ஏலோ
கூப்பீட் டிடைச்சொற்கள் (அஃறிணை பற்றியன) :
எ.டு. தோதோ (துவா துவா), பேபே (போ போ).
நாயேவ விடைச்சொற்கள் :
எ.டு. உசு, உரீசு.
இரக்கக்குறிப் பிடைச்சொற்களும் வியப்புக்குறிப் பிடைச் சொற்களும் :
பிள்ளைகள் துன்புறுமிடத்தும் வியக்கத்தக்க பொருளைக் காணும் போதும், தம் பெற்றோரை விளிப்பது இயல்பாதலால், பெற்றோர் பெயர்களினின்று இரக்கக்குறிப் பிடைச்சொற்களும் வியப்புக் குறிப்பிடைச் சொற்களும் தோன்றியுள்ளன.
இரக்கம் வியப்பு
பெற்றோர்பெயர் இடைச்சொல்
ஐயன் ஐயோ, ஐயவோ - ஐயகோ, ஐயே
அன்னை அன்னோ
அத்தன் அத்தோ-அந்தோ, அந்தவோ-அந்தகோ
அச்சன் அச்சோ
அக்கை அக்கோ - அகோ
அப்பன் அப்ப, அப்பா
அம்மை அம்ம, அம்மா
அச்சன் அச்சோ
அக்கை அகோ
ஆத்தை ஆத்தே
ஐயையோ, அப்பப்பா, அம்மம்ம என்பன அடுக்குத் தொடர்த் தொகுத்தல்.
உலகவழக்கில், வியப்புக்குறிப் பிடைச்சொற்கள் ஆண்பாற் பெயர்த்திரிபாயின் அடா (அடே) என்னும் சொல்லையும் பெண் பாற் பெயர்த்திரிபாயின் அடி (அடீ) என்னும் சொல்லையும், முற்கொள்ளும்.
ஆஆ என்னும் உணர்ச்சியொலியடுக்கு, ஆவா என்று புணர்ந்து இரக்கக்குறிப் பிடைச்சொல்லும், அதன்பின் ஆகா என்று திரிந்து வியப்புக்குறிப் பிடைச்சொல்லும் ஆகும்.
அட, அடா, அடடா என்பன வியப்பும் கழிவிரக்கமும் உணர்த்தும் இடைச்சொற்களாம். அளிது, கெட்டேன் என்னும் இரக்கச் சொற்களுள் முன்னது செய்யும் வழக்காம்.
பல்குறிப் பிடைச்சொற்கள்
எ.டு.
சுவை சுள், சள், சப்பு
ஒளி தகதக, நிகுநிகு, பட்டுப்பட்டு, பளபள.
ஊறு தண்மை - குளுகுளு, சில், சிலுசிலு
வெம்மையும் தண்மையும் - குதுகுது
வெம்மை - கணகண, கதகத, சுள், வெதுவெது
வன்மை - கட்டுக்கட்டு, திட்டுத்திட்டு
இழுமெனல் - வழுவழு, மொழுமொழு
சருச்சரை - கொரகொர, சுரசுர
ஒட்டுதல் - பிசுபிசு, வழவழ
மேலுணர்ச்சி - நமநம, பரபர, பொசுபொசு
குத்துதல் - சுள்சுள்
நோதல் - கடுகடு, சிவ், விண்விண்
வியர்வை யழுக்கு – கசகச
பதநிலை - குருகுரு (உறைந்த நெய்), குழகுழ, (குழைவு), தெடுதெடு (நீர்ப்பதம்), சகசக (சகதி), சொதசொத (சாந்து, சேறு, கரைகஞ்சி), நொளு நொளு (கூழ்), மொறுமொறு (அப்பளம், முறுக்கு).
ஓசை உருட்டு உருட்டு, ஊசுஊசு, கசுகுசு, கடாமுடா,
கடுபுடு, கதக்குக் கதக்கு, கிசுகிசு, கிண்கிண்,
குப்புக் குப்பு, குறட்டுக்குறட்டு, கொல்.
சக்குச்சக்கு, சடக்கு, சடார், சதக்கு, சலக்கு, சருக்குச்
சருக்கு, சவக்குச்சவக்கு, சளப்புச்சளப்பு, சொத்துப்
பொத்து.
தங்குதிங்கு, தடதட, தரதர, திடுதிடு, திண்திண்,
துருட்டுத்துருட்டு, தொப்புத்திப்பு.
நறநற, நைநை, நொட்டுநொட்டு.
பக்குப்பக்கு, பட்டுப்பட்டு, படக்கு, படபட, பரபர,
பளார், பளிச்சுப் பளிச்சு, பறட்டுப்புறட்டு, புளிச்சுப்
புளிச்சு, பொடுபொடு, பொத்துப்பொத்து.
மடமட, மடக்குமடக்கு, மடார், முணுக்குமுணுக்கு,
மொட்டு மொட்டு, மொடு மொடு, விண், விர்விர்,
வீர்வீர் (வீரா, வீரா)
நாற்றம் கம், கமகம.
அச்சம் திக்குத்திக்கு, வெருக்குவெருக்கு
விரைவு அவக்கவக்கு
கடகட, கிசுக்கு, குடுகுடு, குப்பு, குபுக்கு, சட்டு, சரசர,
சரட்டு, திடுதிப்பு, படபட பசக்கு பரபர, பொருக்கு,
மடமட, மழமழ, மொடுக்கு, விசுவிசு, விசுக்கு
விசுக்கு, விருவிரு, வேகுவேகு.
சுறுசுறுப்
பின்மை பூனாம் பூனாம்
அசைவு கறங்கறம், கிடுகிடு, கிணுக்குக்கிணுக்கு, கிணுக் கட்டிக் கிணுக்கட்டி, கிறுகிறு, கொடுகொடு; தளதள, படக்குப்படக்கு; வடவட
இயக்கம் சவக்குசவக்கு, தத்தக்கப் பித்தக்க, தொதுக்குப்
(செலவு) பொதுக்கு, நெளுநெளு
அமைதி கம், நள்
சிந்துகை குபுகுபு, சொளுசொளு, பொலுபொலு
குளநிறைவு கெத்துக்கெத்து
நனைவு தொப்புத்தொப்பு
உலர்வு கலகல, வறவற
செறிவு கொசகொச, செளுசெளு, திமுதிமு, பொதபொத
இறுக்க
மின்மை தொளதொள
செழிம்பு கறுகறு, கிளுகிளு, செழுசெழு, புசப்புசு
பருமை பொந்துபொந்து, பொம்
சுருங்குதல் சிவுக்கு, புசுக்கு
அயர்வு வலவல
விழித்தல் திருதிரு, பசபச
விடிதல் பலார்
சினத்தல் கடுகடு, சள்சள், சுடுசுடு-சிடுசிடு, வெடுவெடு
பேச்சு கொணங்கொணம், சளசள, தொணதொண, வளவள.
இச்சொற்களையெல்லாம் என்று என்னும் இடைச்சொல் வினை முற்றோடு இணைக்கும். எ.டு. சுள் என்று வெயிலடிக்கிறது.
2. சொல்லிடத்து வருவன
சொல்லிடத்துவரும் இடைச்சொற்கள், (1) முன்னொட்டுக்கள், (2) வரிசை யிடைச்சொற்கள் (3) இணைப்புச் சொற்கள் (4) பல்பொரு ளிடைச்சொற்கள் (5) ஈறுகள், (6) இடைநிலைகள், (7) சாரியைகள், (8) வேற்றுமை யுருபுகள், என எண்வகைப்படும்.
3. முன்னொட்டுக்கள் (Prefixes)
எ.டு.
அல்-அ : அவலம்.
அல் : அஃறிணை, அல்வழி, அஃமொழி.
மிகு - மீ : மீக்கூற்று, மீக்செலவு, மீந்தோல்.
நல் - ந : நக்கீரன், நச்செள்ளை, நத்தத்தன், நப்பசலை.
அகவலைப்படுத்துதல், இடைச்செருகல், உட்கோள், உடன்பிறப்பு, உழிதருதல், உழைச்செல்வான், ஊடுருவல், கடைத்தேறல், கீழ்ப்படிதல், தலைக்கூடல், நடுத்தீர்ப்பு, பிற்போக்கு, புறங்கூற்று, மறுமுள்பாய்தல், முன்னேற்றம், மேற்பார்வை, வழிமொழிதல், வெளியிடுதல் என்னும் சொற்களின் முதலிலுள்ள அகம் இடை, உள், உடன், உழி, உழை, ஊடு, கடை, கீழ், தலை, நடு, பின், புறம், மறு, முன், மேல், வழி, வெளி என்னும் முன்னொட்டுக்களும் இடைச்சொல்லாக ஆளப்பெற்ற பிறசொற்களே. இவற்றின் நேர் ஆங்கில அல்லது ஆரியச்சொற்கள் பெரும்பாலும் தூய முன்னொட்டுக் களாயிருத்தல் காண்க. ஆரியச்சொற்கள் திரிசொற்களாதலின், தோற்றம் மறைந்துள்ளன; தமிழ்ச்சொற்கள் எல்லாம் இயற்சொற்களாதலின், தோற்றந்தெளிவாயும் தமித்து வழங்குவன வாயுமுள்ளன. இதுவே இவைதம்முள் வேற்றுமை.
2. வரிசை யிடைச்சொற்கள்
ஆம்-ஒன்றாம், முதலாம், நூறாம்.
ஆவது - ஒன்றாவது, நூறாவது, ஆயிரத்தாவது.
3. இணைப்புச்சொற்கள் (Conjunctions)
அடுக்கிணைப்புச் சொற்கள்
உம்-அறமும் பொருளும் இன்பமும் வீடும் என உறுதிப் பொருள் நான்கு.
ஏ-எழுத்தே அசையே சீரே தளையே அடியே தொடையே எனச் செய்யுளுறுப்புக்கள் ஆறு.
மறுநிலை யிணைப்புச் சொற்கள் :
எ.டு. ஆயினும், ஆகிலும் –
வீடாகிலும் மனையாகிலும் உடனே வாங்கியாக வேண்டும்.
ஆதல் - புலவர் சின்னாண்டாராதல் புலவர் கந்தாண்டாராதல் புகைவண்டி நிலையத்தில் உங்களொடு தலைக்கூடுவார்.
ஆவது - ஒருவனுக்குத் தன்மதியாவது சொன்மதியாவது இருத்தல் வேண்டும்.
எனினும் - செல்வரெனினும் வறியவரெனினும் இச் சத்திரத்தில் வந்து தங்கலாம்.
எனினும் - ஏனும்
செந்தமிழ்ச் செல்விக் குக் கட்டுரையேனும் செய்யுளேனும் எழுதி விடுக்க.
ஒ-இன்றோ நாளையோ மழை தப்பாது வரும்.
ஆயினும், ஆகிலும், ஆதல், ஆவது, ஏனும் என்னும் இணைப்புச் சொற்கள், யார், ஏது முதலிய வினாப்பெயரின் பின் வரின், ஒரே முறை அமையும்.
எ.டு. யாராகிலும் ஒருவர் வருக.
ஏதேனும் ஒன்று கொடு.
உடனுற விணைப்புசொற்கள் (CORRELATIVE CONJUNCTIONS).
மட்டுமன்று ….. உம். எடு. இக்காலத்தில் ஒருவர் ஏந்தாக (வசதியாக) வாழவேண்டுமெனின் தமிழை மட்டு மன்று, ஆங்கிலத்தையும் கற்க வேண்டும்.
ஆக என்னும் சொல் நேரல்கூற்றை (Indirect Speech) முடிக்குஞ் சொல்லோடு இணைக்கும்.
எ.டு. அவன் நாளை வருவதாகச் சொன்னான்.
4. பல்பொரு ளிடைச்சொற்கள்
ஆ.
இது சுட்டு, வினா, எதிர்மறை, இரக்கம், வியப்பு, நோவு, விளி முதலிய பல பொருள்களை உணர்த்தும்.
உம்.
இது இணைப்பு, உயர்வு, இழிவு, எதிர்மறை, எச்சம், முற்று, உகப்பு (choice) இசைநிறை முதலிய பலபொருள்களை உணர்த்தும்.
உரைநடைக்கும் சிறுபான்மை இசைநிறை வேண்டப்பெறும்.
எ.டு. பெரும்பாலும், பொதுவுடைமைக்காரர் கடவுள் நம்பிக்கை யில்லாதவரே.
தன்மகன் கலைத்தலைவன் தேர்வில் முதற்றரமாய்த் தேறினா னென்று கேள்விப்பட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதினும் பெரிதும் மகிழ்ந்தாள்.
ஏ.
இது வினா, பிரிநிலை, தேற்றம். இணைப்பு இசைநிறை, ஈற்றசை, விளி முதலிய பல பொருள்களை உணர்த்தும்.
ஏரோது அரசன் காலத்திலே, யூதேயாநாட்டிலே, பெத்தலகேம் என்னும் சிற்றூரிலே, ஒரு மாட்டுத் தொழுவத்திலே, இயேசு பெருமான் பிறந்தார். இதில் இசைநிறை வந்தமை காண்க.
ஓ.
இது வினா, எதிர்மறை, பிரிநிலை, மறுநிலை, ஐயம், இரக்கம், வியப்பு, இழிவு, ஒழியிசை, விளி முதலிய பல பொருள்களை உணர்த்தும்.
5. பல்வகை இலக்கண வீறுகள்
தன்மைப்பெய ரீறுகள்
ஒருமை : ஒன்-ன்
பன்மை : உம்-ம், ம்(உம்) + கள்
முன்னிலைப்பெய ழீறுகள்
ஒருமை : ஒன்-ன், (நீன்-நீ)
பன்மை : உம்-ம், ம்(உம்) + கள்
(நீ + இர் = நீயிர்-நீவிர், நீர்)
படர்க்கைப்பெய ரீறுகள்
ஆன்பாலீறுகள்
ஆள் என்னும் உயர்திணைச்சொல், ஆள்கிறவன் என்னும் கருத்தில் ஆண்பாலையும், ஆளப்படுகிறவள் என்னும் கருத்தில் பெண்பாலையும் உணர்த்தும்.
ஆண்பாலை யுணர்த்தும் இடங்கள் :
1. ஆடவன் நல்லா ளிலா தகுடி (குறள். 1030)
2. திறவோன். ஆளல்லான் செல்வக்குடியுட் பிறத்தலும் (திரி. 7).
3. போர்மறவன் பிணம்பிறங்க ஆளெறிந்து (பு.வெ. 2, 7)
4. காலாள். ஆள்வெள்ளம் போகவும் (பு.வெ. 7,13)
5. கணவன். ஆளில்லா மங்கைக் கழகு (வாக்குண்டாம், 3)
ஆளன் = 1. ஆள்பவன்
2. கணவன். ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும்
தீராது.
பெண்டாளுதல் என்னும் வழக்காறு, மனைவி கணவனால் ஆளப் பெறுதலை உணர்த்தும்.
ஆள் என்னுஞ் சொல் பாற்பொதுமை நீங்கி ஆடவனைக் குறித்தற்கு, ஆண் என்று திரிந்தது. ஆண் என்னும் சொல்லே, ஆன் என்று திரிந்து ஆண்பாலீறானதாகத் தெரிகின்றது. ணகரம் வடதிரவிட மொழிகளிற் பொதுவாக னகரமாகத் திரிவதால், ஆண் என்னும் சொல் அங்கு ஆன் என்றுதான் இருக்கும், ஆனீறு பின்னர் அன் என்று குறுகிற்று.
எ.டு. அவன், செல்வன்.
அன்னீறு பின்பு அல் எனத் திரிந்தது. னகர மெய்யீறு லகர மெய்யீறாகத் திரிதல் இயல்பே.
எ.டு. திறம் - திறன் - திறல், செய்வென் - செய்வன் - செய்வல், ஆல் - ஆன் (3-ஆம் வே.உ.). மேல் - மேன்.
அண்ணல், இளவல், செம்மல், வள்ளல் முதலிய பெயர்களின் அல்லீறு ஆண்பாலீறே. குரிசில் என்பது குருசல் என்பதன் திரிபாயிருக்கலாம். ஒ.நோ. பரிசல் - பரிசில். ஆனீறு ஒன் என்றும் திரியும்.
எ.டு. முன்னான் - முன்னோன்.
மாந்தனையும் பிள்ளையையும் குறிக்கும் மக என்னும் சொல் அன்னீறுபெற்று மகன் என்றாகும். அதுவும் ஓர் ஆண் பாலீறாம்.
எ.டு. பெருமகன், திருமகன், துரைமகன்.
மகன் என்னும் ஈறு மான் என்று மருவும்.
எ.டு. பெருமகன் - பெருமான், திருமகன் - திருமான். மருமகன் - மருமான்.
மான் ஈறு மன் என்று குறுகும்.
எ.டு. வடமன்.
அன்னீறு பெற்ற அப்பன், ஐயன், அண்ணன் என்னும் முறைப் பெயர்களும், அருமை குறித்த ஆண்பாலீறாக வழங்கும்.
எ.டு. கண்ணப்பன், பொன்னையன், கருப்பண்ணன்.
பால் தோன்றாத முதற்காலத்தில் இகரவீறு ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் ஆகிய ஒருமைப்பால் மூன்றையும் உணர்த்தி வந்தது அவ்வழக்கு இன்றுமுளது.
எ.டு. தொழிலாளி, விறகுவெட்டி - ஆண்பால்
கிளவி, கயற்கண்ணி - பெண்பால்
மண்வெட்டி, காடைக்கண்ணி - ஒன்றன்பால்.
அன்னீறு பெற்ற ஆளன் என்னும் சொல்லும், இகரவீறு பெற்ற ஆளி என்னும் சொல்லும் ஆண் பாலீறு போன்றும் வழங்கும்.
எ.டு. வேளாளன், தாளாளன்,
முதலாளி, மலையாளி.
இனி, உடைமையும் உரிமையும் உணர்த்தும் காரன் என்னும் சொல்லும் ஆண்பாலீறாம்.
எ.டு. வீட்டுக்காரன், வண்டிக்காரன்.
தையற்காரன், வேலைக்காரன், கொள்ளைக்காரன், கூலிக்காரன் என்னும் சொற்களும், தையல் வேலைக்கும் வேலை செய்தற்கும் கூலித் தொழிலுக்கும் உரியவன் அல்லது அத்தொழில்களை உடையவன் என்றே பொருள்படும்.
கடுமை = மிகுதி, வலிமை. கடு-கடி-கரி-காரம் = கடுமை, மிகுதி, வலிமை, அதிகாரம், உரிமை. காரம் - காரன் = உரிமையாளன், உடையவன்.
வடமொழியிலுள்ள க்ரு என்னும் வினையடியாகப் பிறந்து, செய்பவனைக் குறிக்கும் கார என்னும் சொல்லினின்று காரன் என்னும் ஆண்பாலீறு திரிந்ததாக வடவர் கூறுவது பொருந்தாது. ஆட்டுக்காரன், கடைக்காரன், கப்பற்காரன், காய்ச்சற்காரன், குடைக்காரன், குருவிக்காரன், கோழிக்காரன், சொந்தக்காரன், தட்டுக்காரன், தோட்டக்காரன், நிலத்துக்காரன், பட்டக்காரன், பணக்காரன், பாளையக்காரன், பிள்ளைகுட்டிக்காரன், புன்செய்க்காரன், புள்ளிக்காரன், பெருமைக்காரன், பொறாமைக் காரன், மாட்டுக்காரன், முட்டைக்காரன், வெள்ளைக்காரன் முதலிய எண்ணிறந்த பெயர்கட்கு, உரிமைப் பொருளன்றிச் செய்கைப்பொருள் சிறிதும் பொருந்தாமை காண்க.
அண்ணக்காரன், தம்பிக்காரன் முதலிய பெயர்களில் காரன் என்பது முறைப் பெயரினதாயும் மாறியுள்ளது. இவ்வுலக வழக்கு இலக்கிய நடைக்கு ஏற்காது.
பெண்பாலீறுகள்
ஆள் என்னும் சொல், ஆடவனுக்கு ஆட்படுகிறவள் என்னும் கருத்தில் பெண்பாலீறாயிற்று. சேரநாட்டுத் தமிழின் திரிபாகிய மலையாளத்தில், ஆள் என்னுஞ் சொல் அந்நாட்டு வழக்கிற் கேற்ப ஓகாரமுதற் சொல்லாய்த் திரிந்து, மனைவியைக் குறிக் கின்றது. அது தெலுங்கில் ஆலு என்று திரிந்து பெண்ணைக் குறிக் கின்றது. கூமொழியிலும் இங்ஙனமே ஆதலால், பண்டைத் தமிழி லும் இவ்வழக்கு இருந்திருத்தல் வேண்டும். இன்றும் மனையாள் என்னும் முறைப் பெயரும் வந்தாள் என்னும் வினையாலணையும் பெயரும், மனையோள், வந்தோள் என மலையாளத்தை யொத்துத் தமிழிலும் திரிதல் காண்க.
ஆள் ஈறு அள் என்று குறுகும்.
எ.டு. அவள், மகள்.
அள்ளீறு பெற்ற மகள் என்னும் பெயரும் மாள் என்று மருவிப் பெண்பாலீறாம்.
எ.டு. வேண்மகள் - வேண்மாள், பெருமகள் - பெருமாள்.
(பெருமால் - பெருமாள் = மகாவிட்டுணு)
சில அன்னீற்று ஆண்பாற் பெயர்கள் பெண்பாலில் ஐ யீறாகத் திரியும்.
எ.டு. ஆசிரியன் - ஆசிரியை, ஐயன் - ஐயை, சிவன் - சிவை, பண்டிதன் - பண்டிதை, பரத்தன் - பரத்தை, பரன் - பரை, வலவன் - வலவை. பண்டையொருமை யீறாகிய இகர வீறும் பெண்பாலீறாம்.
எ.டு. செல்வன் - செல்வி, புலவன் - புலத்தி.
கள்வன் - கள்ளி, கிழவன் - கிழத்தி.
சில ஆண்பால் அன்னீறு பெண்பாலின் இனி என்று திரியும்.
எ.டு. பாணன் - பாணினி - பாடினி.
சில ஆண்பால் அன் ஈறு பெண்பாலில் அனி என்று திரியும்.
எ.டு. பார்ப்பனன் - பார்ப்பனி.
அன்னையைக் குறிக்கும் அம்மை, அச்சி என்னும் பெயர்கள் அருமை பற்றிப் பெண்பாலீறாம்.
எ.டு. கண்ணம்மை, தங்கைச்சி.
அத்தி அச்சி என்னும் அன்னைப் பெயர்கள், குலமும் தொழிலும் பற்றிய பெண்பாலீறாய் வழங்கும்.
எ.டு. மறத்தி, மருத்துவச்சி.
அத்தி, அச்சி என்பன இத்தி, இச்சி என்றுந் திரியும்.
எ.டு. வேட்டுவித்தி, கட்டுவிச்சி.
சில பெண்பாற் பெயர்கள், ஆண்பாற்குரிய மறமும் ஆண்மையு முணர்த்த ஆண்பாலீறு கொள்ளும்.
எ.டு. அம்மை - அம்மன், பேடு-பேடன்.
அம்மை என்னுஞ் சொல்லையொத்து, அக்கை என்னும் சொல்லும் அக்கன் என்று திரியும்.
ஆண்மை கொண்ட பெண்ணைப் பேடன் என்பது போல் பெண்மை (பெண்டன்மை) கொண்ட ஆணைப் பேடி என்பது மரபு. இவ்விரண்டிற்கும் பொதுவானது பேடு என்னுஞ் சொல். ஆணும் பெண்ணும் அல்லாதது அல்லது கலந்தது அலி. இப்பெயர்கள் வினை கொள்ளும்போது, பேடன் வந்தான், பேடி வந்தாள், பேடு வந்தது,அலி வந்தது என ஆண்தன்மையும் சொல்லீறும் பற்றி வரும். இது இலக்கண மரபு.
உலக வழக்கில், பேடியைப் பெட்டையன் என்றும், ஆண்மையற் றவனைப் பெண்ணையன் அல்லது அண்ணகன் என்றும், உருவம் பற்றிப் பேடி வந்தான், பெண்ணையன் வந்தான், அண்ணகன் வந்தான் என்றும், கூறுவதே மரபாம். அலியாயின், ஆணலியை வந்தான் என்றும், பெண்ணலியை வந்தாள் என்றும், உருவத்திற் கேற்பக் கூறுவர்.
ஆளன் என்னும் ஆண்பாலீறு, பெண்பாலில் ஆட்டி என்று திரியும். ஆள் + தி = ஆட்டி. தி என்பது அத்தி என்பதன் குறுக்கம்.
எ.டு. கண்ணாளன் - கண்ணாட்டி, திருவாளன் - திருவாட்டி, வெள்ளாளன் - வெள்ளாட்டி.
காரன் என்னும் ஆண்பாலீறு, பெண்பாலிற் காரி என்று திரியும்.
எ.டு. கெட்டிக்காரன் - கெட்டிக்காரி, பணக்காரன் - பணக்காரி.
மானீற்று ஆண்பாற் பெயர்கட் கொத்த பெண்பாற் பெயர்கள், மாட்டி என்னும் ஈறு கொள்ளும்.
மகள் - மாள் + தி = மாட்டி.
எ.டு. திருமான் - திருமாட்டி, பெருமான் - பெருமாட்டி.
திரு என்னும் சொல் ஸ்ரீ என்றும், திருமான் என்னும் சொல் ஸ்ரீமத் என்றும், வடமொழியில் திரியும். ஸ்ரீமத் என்பதன் பெண்பால் ஸ்ரீமதி - திருமதி.
சில பெண்பாற் பெயர்கள் வடமொழியிலும் தென் மொழியிலும் வெவ்வேறு வகையில் அமைந்து, ஒன்றுபோல் தோன்றும்.
எ.டு. பதி-பத்நீ (வ.) = மனைவி.
பத்தன் - பத்தினி (தெ.) = கணவனிடத்திற் பத்தி பூண்டவள், கற்புடை மனைவி.
சில பெண்பாற் பெயர்கள் இகர வீற்றுடன் இச்சி யீறுங் கொள்ளும். இவை இரட்டைப் பெண்பாலாம்.
எ.டு. குருவிக்காரன் - குருவிக்காரிச்சி, வெள்ளைக்காரன் - வெள்ளைக்காரிச்சி.
மாறோக்கம் என்னும் கொற்கை நாட்டார், பண்டை நாளில் சிறுமியைப் பெண்மகள் என்றனர்; இன்று வடார்க் காட்டார் பெட்டைப் பசன் என்பார். பையன் - பயன் - பசன்.
பலர்பாலீறுகள்
ஆர்தல் = பொருந்துதல், கூடுதல், நிறைதல்.
ஆர் = பொருத்து, நிறைவு.
பலர் கூடுதல் என்னும் கருத்தில் ஆர் என்னுஞ் சொல்லே பலர்பாலீறாயிற்று.
எ.டு. தட்டார், பொல்லார்.
ஆரீறு அர் எனக் குறுகும்.
எ.டு. அவர், பலர், கொல்லர்.
ஆரீறு ஓர் என்றும் திரியும்.
எ.டு. பெரியார் - பெரியோர், முன்னார் - முன்னோர்.
ஆர் ஈறு பெற்ற மகார் என்னும் பெயரும் மார் என மருவிப் பலர் பாலீறாம். மக - மகார் - மார்.
எ.டு. அண்ணன்மார், தேவிமார்.
செய்யும் என்னும் எதிர்காலவினைமுற்றோடு ஆரீறு சேரும்போது, ஒரு மார் தோன்றும். அது வினையீறு. செய்யும் + ஆர் = செய்யுமார் - செய்மார் - செய்வார்.
உயர்திணைக்கு உரியதன்றென்று விலக்கப்பட்ட கள் ஈறு, சிறுபான்மை அத்திணைக்கும் வரும்.
எ.டு. மக்கள், கோக்கள், குருக்கள், திருக்கள், நாங்கள், நீங்கள், அவர்கள், தாங்கள், ஆட்கள், ஆண்கள், பெண்கள், பையன்கள், மக்கள் என்னும் பெயர் தொல்காப்பியத்திலும் உள்ளது.
உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே (484)
மக்கள் தாமே ஆறறி வுயிரே (1532)
மக + கள் = மக்கள். இது மரூஉப்புணர்ச்சி.
ஒ.கோ: அக + களிப்பு = அக்களிப்பு.
மக்களை இழிந்தோர், ஒத்தோர், உயர்ந்தோர் என முத்திறத்தாராக வகுத்து, அவரை முறையே, நீ, நீர், நீங்கள்; அவன் (அவள்), அவர், அவர்கள் என்னும் சொற்களாற் குறிப்பது தூய உலகவழக்கம். பண்டையிலக்கணமெல்லாம் செய்யுள் நடைக்கே எழுதப்பெற்ற தினால் இவ்வழக்கு அதில் இடம்பெறவில்லை.
அடிகள் என்பது திருவடி நோக்கிக் கடவுளைக் குறிக்கும். அது துறவினால் தெய்வத்தன்மை பெற்ற பெரியோரைக் குறிக்கும் போது இருபாற் பொதுவாம்.
எ.டு. இளங்கோவடிகள், கவுந்தியடிகள்.
ஆரீறும் கள்ளீறும் உயர்வுபற்றி ஒருமைக்கும் வரும்.
எ.டு. மகனார், நக்கீரனார், அடிகளார், வள்ளலார், நீங்கள், அவர்கள், தாங்கள், குருக்கள்.
செய்யுள்நடை, உரைநடை என இலக்கிய நடை இரு வகைப்படும். செய்யுள்நடைக்கு விலக்கப்பட்ட உலக வழக்கு உரைநடைக்கு வரும் என அறிக. உலகவழக்கென்பது உயர்ந்தோர் வழக்கேயன்றி இழிந்தோர் வழக்கன்று.
ஒன்றன்பாலீறுகள்
திணைபால் தோன்றாத முதுபண்டைக் காலத்தில், ஒன்று என்று பொருள்படும் ஒன் என்னுஞ் சொல் ஒருமையுணர்த்திற்று. அது புணர்ச்சியில் தொக்கு ன் அளவாயும் நிற்கும்.
எ.டு. நான், நீன், தான்.
ஒன்னீறு அன்னீறாகவும் திரியும். அன்னீறும் ஆனீறாம்.
எ.டு. நெடுங்கழுத்தன் (ஒட்டகம்), சொறியன், (தவளை), கடுவன்; உள்ளான், கரிப்பான், கத்தரிப்பான்.
ஆண்பால் அன்னீறுபோல், பண்டை யொருமை அன்னீறும் அல் எனத் திரியும்.
எ.டு. உள்ளான் - உள்ளல், நெடுங்கழுத்தன் - நெடுங்கழுத்தல்.
சுட்டெழுத்துக்களும் முதற்காலத்தில் ஈறாயிருந்து ஒருமை யுணர்த்தினதாகத் தெரிகின்றது. அவற்றுள் இகரமே இன்று வழக்கிலுளது. இ=இது.
எ.டு. குதிரைவாலி, பனையேறி, (மீன்).
அல்லி, பல்லி, புலி (புல்லி), கிளி (கிள்ளி) முதலியனவும், குன்னி, நன்னி முதலியனவும், இகரவீற்றுப் பெயர்களே.
ஐம்பாலீறு தோன்றியபோது, அது, இது, உது என்னும் சுட்டுப்பெயர்கள் ஒன்றன்பா லீறாயின.
அ-அம்-அன்-அல்-அது. இ-இம்-இன்-இல்-இது. உ-உம்-உன்-உல்-உது.
எ.டு. (கிழது) - கிழடு, கரிது - கரிசு, ஏருது - எருது.
சிறிது பெரிது எளிது வலிது என்னும் சொற்களின் ஈறு, இது என்னும் சுட்டுப்பெயரே.
வலத்தை, கருத்தை, சிறுத்தை, வெந்தை என்னும் சொற்கள், முறையே, வலத்தது, கருத்தது, சிறுத்தது, வெந்தது என்று பொருள்படுவதையும், ஐகாரவீற்றுச் சொற்கள் பல முதலில் அகர வீற்றாவாயிருந்ததையும், நோக்கும் போது, அகரமும் அது என்னும் சுட்டடியீறுபோற் பயன்பட்டிருக்கலாம் என்று கருத இடமேற்படுகின்றது.
பலவின்பா லீறுகள்
முதற்காலத்திலிருந்த பன்மையீறு, கூடுதல் என்னும் பொருள் கொண்ட உம் என்னும் சொல்லே. அறமும்பொருளும் என்னுந் தொடரில், உம் என்பது கூடுதற் பொருளைக் குறித்தல் காண்க. அச்சொல் இன்று அப்பொருளில் வழக்கற்றுப்போயினும், அதன் அடிப்பிறந்த கும் என்னுஞ் சொல் அப்பொருளில் வழங்குதலை நோக்குக.
கும்முதல் கூடுதல். கும் - கும்மல், கும் - கும்பு - கும்பல்.
உம்மீற்றின்பின் தோன்றிய பன்மையீறு கள் என்பதே. அதுவும் கூடுதல் என்னும் பொருளதே.
கள்ளுதல் = கூடுதல், கலத்தல், பொருந்துதல், ஒத்தல். கள் - களம் = கூட்டம், கூடுமிடம், அவைக்களம், ஏர்க்களம்,போர்க்களம், திணைக்களம் முதலிய சொற்களை நோக்குக. களம் - களன். களம் - களர் - களரி. களம் - (களகு) - கழகு - கழகம்.
கள்ள என்பது ஓர் உவமவுருபு.
கள்ள மதிப்ப வெல்ல வீழ (தொல். 1235)
கள்ள = பொருந்த, ஒக்க.
பலபொருள்கள் கூடுதல் என்னுங்கருத்தில், கள் என்னுஞ் சொல் பன்மையீறாயிற்று. மரங்கள் = மரக்கூட்டம்.
ஐம்பாலீறு தோன்றியபோது, அகரச்சுட்டும் அதனடிப் பிறந்த அவை என்னும் சொல்லின் வையீறும் பலவின் பாலீறாக வரையறுக்கப்பெற்றன.
அ-அம்-அவ்-(அவ)-அவை.
இ-இம்-இவ்-(இவ)-இவை.
உ-உம்-உவ்-(உவ)-உவை.
எ.டு. பல, நல்லவை.
பால்பகா அஃறிணைப் பெயர்
ஒருமையீறும் பன்மையீறும் பெறாது இயல்பாக இருக்கும் அஃறிணைப் பெயர்களெல்லாம், ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாம். அவற்றின் எண், அவற்றின் வினைமுற்றாலும் முன்பின் வரும் சொல்லாலும் அறியப்படும். இது வழா நிலையாம்.
எ.டு. மரம் வளர்கிறது.
குதிரை ஓடுகிறது. ஒருமை
ஒரு காய் என்ன விலை? }
மரம் வளர்கின்றன.
குதிரை ஓடுகின்றன. பன்மை
நூறுகாய் வாங்கினேன். }
உயர்திணையிலும், ஆண்பாலீறும் பெண்பாலீறும் பெறாது அவ்விரண்டிற்கும் பொதுவாயிருக்கும் ஒரு சில பெயர்கள் இம் முடிபு கொள்ளும், இது வழுவமைதியாம்.
எ.டு.
பேருக்கு ஐந்துவரும். – ஒருமை
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை மருத்துவன் (பன்மை)
பெற்றதாயைப் பேணாத மூடர் என்பதில், தாய் என ஒருமையில் வந்தது வகுப்பொருமை யெனப்படும். தாயர் என்று பன்மைவரின், ஒவ்வொருவர்க்கும் நற்றாயர் பலர் என்று பொருள்படுதலும் அங்ஙனம் கூடாமையும், காண்க.
பண்புப்பெயரீறுகள்
பண்புப்பெயரீறுகள் சுட்டடிச்சொல், சினைப்பெயர், இடப் பெயர், நீர்ப்பெயர் என்னும் நால்வகையில் தோன்றியுள்ளன. சுட்டடிச்சொல்.
அ-ஐ எ.டு. தொல்லை, பச்சை
அ-அம் நலம், சினம் ஆழம், தனம் (தன்மை)
அம்-அன் திறம் - திறன்
அன்-அல் திறன்-திறல்
அல் இயல்
அந்து + ஐ அரந்தை
அது-து சேது (சிவப்பு)
து-று நன்று
அது-அதி-தி மறதி, அமைதி
தி-றி நன்றி
தி-சி மாட்சி, வறட்சி
அல்-அள் மஞ்சல்-மஞ்சள்
அள்-அண் முரண்
அல்-அர் மயல்-மயர்
அர் நன்னர்
அம்-அவ்-அவு மழவு
அவு-அவி-வி மறவி
அவு-அபு-வி மாண்பு, பண்பு, அன்பு
பு + அம் நுண்-நுட்பு-நுட்பம், இன்-இன்பம்
அல்+பு இயல்பு
அவு-அகு குழவு-குழகு
அகு-கு நன்கு, அழகு
இங்ஙனமே ஏனை யிருசுட்டிற்கும் ஒட்டிக்கொள்க.
எ.டு. இ-வெகுளி, இல்-எழில் (அழகு), இதம் - பெருமிதம்.
சினைப்பெயர்
எ.டு. தறுகண் (அஞ்சாமை)
இடப்பெயர்
எ.டு. அகம்-வஞ்சகம், தலை-உறுதலை, கண்-இடுக்கண் நீர்ப்பெயர் நீர்-நெடுநீர் (மறவி). மை-தன்மை, நன்மை.
குணங்கள் பெரும்பாலும் வினைவாயிலாய் வெளிப்படுவதால் குணப்பெயர்களும் பெரும்பாலும் வினையடிப்பெயர்களாகவே யுள்ளன.
இனிப்பு புளிப்பு முதலியன சொல்லால் தொழிற்பெயராயினும், பொருளாற் பண்புப்பெயராம்.
அஞ்சாமையும் மறமும் கண்ணால் வெளிப்படுதலின், அக் குணத்தைக் குறிக்கக் கண் என்னும் சொல் ஈறாயிற்று. கடுங்கண் மறவர் என்னும் வழக்கை நோக்குக.
கண் கால் கை தலை முதலிய சினைப்பெயர்கள், இடப் பெயராகவும் இருவகை வழக்கிலும் ஆளப்பெறும்.
தமிழ்நாடு வெப்பநாடாதலின், குளிர்ச்சியைத் தரும் நீரின் பெயரும் மழையின் பெயரும் இனிய தன்மையைக் குறிக்கலாயின. பின்னர் அவை தன்மை என்னும் பொதுப் பொருளில் ஆளப் பெற்றன.
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள (527)
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின் (195)
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின் (17)
என்னும் குறள்களை நோக்குக.
நீர் = நீரின் குளிர்ந்த தன்மை, தன்மை. நீர்மை = சிறந்த தன்மை - தன்மை. மை = கருமுகில், மழைநீர், நீர்.
நீர், மை என்னும் இருசொல்லும் பண்புப்பெயரீறான பின், நீர் என்னும் சொல்லும் தன்மை யென்னும் பொதுப் பண்புப் பெயர் போல் மையீறு பெற்றதென்க.
தொழிற் பெயரீறுகள்
தொழிற்பெயர் வகைகள்
1. முதனிலைத் தொழிற்பெயர் : எ.டு அடி, கட்டு.
2. முதனிலைநீண்ட தொழிற்பெயர். எ.டு. உண்-ஊண் புறப்படு-புறப்பாடு, கூப்பிடு-கூப்பீடு - கூப்பாடு.
3. முதனிலை வலித்த தொழிற்பெயர், எ.டு. விரும்பு - விருப்பு, நீந்து-நீத்து.
4. முதனிலை வலியிரட்டித்த தொழிற்பெயர். எ.டு. கருது, கருத்து, பேசு-பேச்சு.
5. முதனிலை ஈறுபெற்ற தொழிற்பெயர். எ.டு. செய்கை, படிப்பு.
6. முதனிலை நீண்டு ஈறுபெற்ற தொழிற்பெயர். எ.டு. நடி-நாடகம், படி-பாடம்.
7. முதனிலை வலியிரட்டித்து ஈறுபெற்ற தொழிற்பெயர். எ.டு. ஆடு-ஆட்டம், அ, ஆ.
ஆட்டம் ஆக்கம் என்பன ஆடுதல், ஆகுதல் என்று பொருள் படுங்கால், தன்வினையடிப் பிறந்தவையே.
8. முதனிலை வலித்து ஈறுபெற்ற தொழிற்பெயர். எ.டு. அஞ்சு-அச்சு-அச்சம், விரும்பு-விருப்பு-விருப்பம்.
9. ஈறு திரிந்த தொழிற்பெயர். எ.டு. வெல்-வென், வேள் - வேண்.
10. பலவீற்றுத் தொழிற்பெயர். எ.டு. கல-கலப்பு, கலப்படம், யா-யாப்பு-யாப்புறவு.
தொழிற்பெயரீறு வகைகள்
(1) சினைப்பெயர்கள் (2) இடப்பெயர்கள் (3) சுட்டடிகள், (4) அளவுகுறித்த சொற்கள், (5) பண்புப்பெயரீறு, (6) வினைமுற்றீறு.
1. சினைப்பெயர்கள்
கை என்பது ஆகுபெயராய்க் கையினாற் செய்யும் தொழிலையுங் குறிக்கும். இது கருவியாகுபெயர்.
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் (1035)
என்னுங் குறளிலுள்ள கைசெய்து என்னும் தொடருக்கு, கையினாற் செய்து என்று உரை கூறுவதினும், சிறந்த தொழிலாகிய உழவைச் செய்து என்று கூறுவது பொருத்தமாம்.
தொழிலைக் குறிக்கும் கை என்னும் சொல் தொழிற் பெயரீறாவது பொருத்தமே.
எ.டு. செய்-செய்கை, கல்-கற்கை, நம்பு-நம்பிக்கை.
கை என்னும் சினைப்பெயரும் செய் என்னும் வினையினின்று திரிந்ததே. செய்-(கெய்)-கை.
தொழிற்பெயரீறான மற்றொரு கைப்பெயர் பாணி என்பதாம்.
எ.டு. சிரி-சிரிப்பாணி = சிரிக்கை (சிரிப்பு).
இது நெல்லை வட்டார வழக்கு. பாணி கை, பண்ணுவது பாணி. கையினாற் செய்யும் இசைக்காலவறுப்பும் பாணி யெனப்படும்.
2. இடப்பெயர்கள்
அகம் - நம்பகம், வஞ்சகம், தாண்டகம் - தாண்டவம்.
தலை - விடுதலை.
சுட்டடிச்சொற்கும் இடப்பெயர்க்கும் வேறுபாடறிதல் வேண்டும். அகம் என்பது சுட்டடிச் சொல்லாயின் அகு + அம் என்று பிரியும்; இடப்பெயராயின் பிரியாது.
எ.டு. கழகு-கழகம், உலகு- உலகம்.
நம்பு - நம்பகம், வஞ்சி-வஞ்சகம், நடி-நாடகம்.
3. சுட்டடியசைகள்
எ.டு. அம்-மணம், கணியம், ஒட்டம்;சம்-கணிசம்; தம்-கணிதம்.
அல்-பாடல், நிட்டல்; கல்-கொடுக்கல்; சல்-வளைசல்; தல்-வாழ்தல், கேட்டல், காண்டல், கற்றல், தின்றல்; வல் (வு+அல்) - பார்வல்.
இ-போற்றி; சி-நீட்சி, காட்சி, வீழ்ச்சி, தி-மறதி, குளிர்த்தி, கொண்டி; வி-அளவி, கேள்வி.
(உ)-கு-கணக்கு, சு-(தொடுசு)-தொடிசு, முடிச்சு; து-வரத்து; பு-நடப்பு, படிப்பு, கொடுப்பு, நட்பு, வு-களவு, இழிவு, உழவு, சோர்வு.
ஆ-உணா
(ஆ)-ஐ-கொள்ளை, கொலை நடை, தடை; தை-நடத்தை; வை(வு+ஐ)-அளவை, இழுவை, பார்வை.
ஆம்-குழாம்
ஆல்-எழால்
சுட்டடியீறுகள் உயிரெழுத்துப்பற்றி ஒரு வகையாக ஒழுங்கு படுத்தப் பட்டிருப்பினும், அவற்றிற்கெல்லாம் மூலம் முற்கூறிய வாறே என்று அறிந்து கொள்க.
எ.டு. அ-அவ்-அவு-அகு-கு.
அகு-அக்கு-கு.
சில ஈறுகள் போலி முறையில் வேறீறாகவும் திரியும்.
எ.டு. கடையல்-கடைசல்-கடைதல்.
கணியம்-கணிசம்-கணிதம்
அடைவு-அடவு-அடகு
உழவு-உழப்பு (உழப்பெருது=உழவெருது)
சில வினை முதனிலைகள் பல்வடிவு கொண்டு வடிவிற் கேற்ப ஈறேற்கும்.
எ.டு. போ-போதல், போகு-போக்கு (வலியிரட்டல்), போது-போதுகை. இங்ஙன மிருப்பினும், கை தல் என்னும் ஈரீறுகளை எல்லா வினை முதனிலையும் அவற்றின் பல்வடிவுகளும் ஏற்கும்.
சில வினை முதனிலைகள் தொழிற்பெயராகும் போது சிறிதும் பெரிதும் திரியும்.
எ.டு. நம்பு-நம்பிக்கை, குதி-கூத்து.
சில ஈறுகள் இரண்டும் பலவும் சேர்ந்து கூட்டீறாம்.
எ.டு. அல்+அம் - அலம். எ.டு. பொட்டலம்.
அலம் ஈறு பின்வருமாறு திரியும்.
அலம்-அளம் அணம் - அடம்.
அலம்-அனம்-அனை-ஆனை.
அலம்-அதம்-அரம்-அரவு. அதம்-அசம்.
எ.டு. தப்பளம், கட்டணம், கட்டடம்.
வஞ்சனம், வஞ்சனை, வாரானை.
விளம்பரம்,தேற்றரவு, உப்பசம்.
அகர முதலீறுகள் ஒத்த இகர உகர முதலீறுகளுள் உள.
இல்-எழில் (எழுச்சி). இதம்-தப்பிதம், இம்-(உரிம்) - (உரிந்) - உரிஞ் = உராய்தல்.
உம்-பொரும் - பொருந் = பொருந்துதல்.
4. அளவு குறித்த சொற்கள்
மானம் = அளவு. வருமானம் = வரும் அளவு. பெறுமானம் = பெறுமதிப்பு.
காடு = மிகுதி. கடுத்தல் மிகுதல். கடு-காடு, வெள்ளக்காடு, பிள்ளைக்காடு என்னும் வழக்குகளை நோக்கு.
மானம் - தீர்மானம், காடு - வேக்காடு. விதைப்பு என்று பொருள் படும். விதைப்பாடு என்னுஞ் சொல், அகப்பாடு, அடிப்பாடு, அருளப்பாடு, கடப்பாடு, குறைபாடு, வெளிப்பாடு என்னும் சொற்கள் போல், படு என்னும் துணைவினை நீண்ட தொழிற் பெயரே.
சாப்பாடு கூப்பாடு என்பவை, சாப்பீடு கூப்பீடு என்பவற்றின் திரிபாம்.
5. பண்புப் பெயரீறு
எ.டு. மை - வந்தமை, வருகின்றமை, வாராமை.
6. வினைமுற்றீறு
அது-து-வந்தது, வருகின்றது வருவது, வராதது.
இதுவும் சுட்டடிச் சொல்லாயினும், வினைமுற்றீறா யிருத்தல் பற்றி வேறு கூறப்பெற்றது. வந்தது = வந்த அது வராதது -வராத அது.
தொழிற்பெயரீறுகளின் சிறப்புப் பொருள்
ஒரு வினை முதனிலை பல ஈறுகள் பெற்றுப் பல்வேறு தொழிற் பெயரும் பண்புப் பெயரும் தொழிலாகு பெயரும் ஆகலாம். முதனிலை ஒன்றேனும் ஈறு வேறுபடப்பொருள் வேறுபடும்.
எ.டு.
நம்பு- நம்பிக்கை = உண்மையாகக் கொள்ளுதல் (Belief)
நம்பகம் (Faith) = விசுவாசம் (வ.)
நம்பு (முதனிலைத் தொ. பொ.) = நம்பாசை (Hope)
நம்பும் மேவும் நசையாகும்மே (தொல். உரி. 31)
கல்-கற்றல் = கற்குஞ் செயல்
கற்கை = படிப்பு (Learning)
கல்வி = (Education) நாட்டுப் படிப்பு முறை.
கலை = கல்வித்துறை அல்லது பயிற்சிக்கல்வி.
கற்பு = தனிக்காதலொழுக்கம்.
நட - நடத்தல் = நடக்குஞ் செயல்
நடக்கை = நாட்டு வழக்கு, ஒழுகும் முறை.
நடத்தை = ஒழுக்கம்
நடப்பு = நிகழ்காலத்தது (That which is current)
நடை = மொழிப்போக்கு (Style) வாசலுக்கு
அடுத்த உட்பக்கம் (THRESHHOLD)
நடவை = வழி, மொழிவழங்குமிடம்
நடவு = ஆட்சி
வினையாலணையும் பெயரீறுகள்
(1) வினைமுற்றீறுகள்
தன்மை ஒருமை : ஏன் எ.டு. வந்தேன்
தன்மைப் பன்மை : ஏம், ஓம் எ.டு. வந்தேம், வந்தோம்
முன்னிலை ஒருமை : ஆய்
(ஈ-ஏ-ஐ-ஆய்) எ.டு. வந்தாய்
முன்னிலைப் பன்மை : ஈம், ஈர் எ.டு. வந்தீம், வந்தீர்
ஈங்கள், ஈர்கள் எ.டு. வந்தீங்கள், வந்தீர்கள்
படர்க்கை -
ஆ. பா. ஆன் எ.டு. வந்தான்
பெ. பா. ஆள் எ.டு. வந்தாள்
ப.பா. ஆர் எ.டு. வந்தார், வந்தார்கள்
ஒ. பா. அது எ.டு. வந்தது
பல. பா. அ, அவை, அன எ.டு. வந்த, வந்தவை, வந்தன
(2) சுட்டுப் பெயர்கள்
செய்தவன், செய்தவள், செய்தவர் (செய்தவர்கள்), செய்தது, செய்தவை
செய்தவன் = செய்த அவன், இங்ஙனமே ஏனையவும். இவ்வடிவம் படர்க்கைக்கே யுரியது.
3. ஆ ஓ ஆன ஈறுகள்
எ.டு. வந்தோன் வந்தோள், வந்தோர் (வந்தோர்கள்)
இவ்வடிவம் உயர்திணைப் படர்க்கைக்கே உரியதாம்.
பல்வகை வினைமுதலீறுகள்
(1) செய்வானீறுகள்
இ. இது மூவிட வொருமைப்பாலிலும் எண்ணிலும் வரும்.
எ.டு. மரமேறி, கல்லுப்பொறுக்கி, தொட்டாற் சிணுங்கி, கொல்வி, வெட்டி முதலிய பெயர்கள் அடையில்லாதுவரின், மூவிட வொருமைப் பாற்கும் எண்ணிற்கும் பொதுவாம்.
ஆன், இது பெண்பாலொழிந்த மூவிட வொருமைப் பாற்கும் எண்ணிற்கும் பொதுவாய் வரும்.
எ.டு. ஓதுவான், காற்றடிப்பான் (Air-pump).
உயர்திணை ஆனீறும் அஃறிணை ஆனீறும் வெவ்வேறாயினும், வடிவொருமை பற்றி ஒன்றாய்க் கூறப்பட்டன.
2. உடையானீறுகள்
அன்-ஆன் : இவை பெண்பாலொழிந்த படர்க்கை யொருமைப் பால்களில் வரும்.
எ.டு. கரிகாலன், வேலான், அரைவயிறன் (அரை விளைச்சல் நெல்மணி), களையான் (வானம்பாடி)
இ. இது ஆண்பாலொழிந்த மூவிட வொருமைப்பால்களில் வரும்.
எ.டு. தடங்கண்ணி, நீர்முள்ளி.
3. இல்லானீறுகள்
இலி, அறை. இவை மூவிட வொருமைப்பாலிலும் எண்ணிலும் வரும்.
எ.டு. அறிவிலி = அறிவில்லாத நான், நீ.
அறிவில்லாதவன் - வள் - து.
காதறை = காதில்லாத நான், நீ.
காதில்லாதவன் - வள் - து.
4. கொண்டானீறு
கொள்ளி கொளி. இவை மூவிட வொருமைப்பாற்கும் எண்ணிற்கும் பொதுவாம்.
எ.டு. பித்துக்கொளி = பித்துக்கொண்ட நான், நீ பித்துக் கொண்டவன் - வள் - து.
அடைகொளி = அடைகொண்டது.
5. செயப்படு பொருள் ஈறு
அம்-ம். எ.டு. தொல்காப்பியன் - தொல்காப்பியம் = தொல்காப்பி யனால் இயற்றப்பட்டது.
சேனாவரையன் - சேனாவரையம் = சேனாவரையனால் உரைக்கப் பெற்றது.
6. இடப்பெயர் மரூஉஈறுகள்
எ.டு. அந்தை - உறந்தை, கரந்தை, களந்தை, குடந்தை.
ஐ - அளகை, உஞ்சை, தஞ்சை, தருமை, கருவை, மழவை, முகவை, நெல்லை, ஆறை, சென்னை.
சை - இளசை, துறைசை, பனசை.
வை - கோவை, புதுவை.
காஞ்சி, திருச்சி முதலியவை ஈறு கருதாத குறுக்கங்கள்.
4. வேற்றுமை யுருபுகள்
மொழி பொதுமக்கள் அமைப்பாதலின், அதன் இன்றியமையாத கூறுகளான வேற்றுமையுருபுகளும் அவர்கள் அமைத்தனவே. வேற்றுமைகளை ஏழென்றும் எட்டென்றும் வரையறுத்ததும், அவற்றை வரிசைப்படுத்தியதும், அவற்றிற்குப் பெயரிட்டதும், கருவி வேற்றுமையையும் உடனிகழ்ச்சி வேற்றுமையையும் ஒன்ற சேர்த்து ஒரு வேற்றுமை யாக்கியதுமே, முதனூலாசிரியனும் வழிநூலாசிரியருமான, இலக்கணியர் செய்த வினைகளாம்.
வேற்றுமை யெட்டும் அல்லது ஒன்பதும். இலக்கண நூலார் வகுத்த வரிசை யொழுங்கில் தோன்றியிருக்க முடியாது. அவ்வவ் வேற்றுமைக்கருத்துத் தோன்றியபோது அவ்வவ் வேற்றுமையுருபு தோன்றியிருத்தல் வேண்டும்.
ஒருவன் முதலில் தானே வினைமுதலாயிருந்து ஒன்று செய்வதே இயல்பாதலாலும், ஒருவன் வரலாற்றை ஓரூரில் ஒருவன் இருந்தான் என்று தொடங்குவதே மரபாதலாலும், முதலாவது எழுவாய்க் கருத்துத் தோன்றியிருத்தல் வேண்டும். அதற்கு உருபு தேவையில்லை; இயல்பான பெயரே போதும். திரிமொழிகளி லேயே எழுவாய் வேற்றுமைக்கும் உருபு அமைக்கப்பட்டுளது. தமிழ் இயன்மொழி யென்பதற்கு, அதில் எழுவாயுரு பின்மையும் ஒரு சான்றாம்.
ஒருவன் ஒருத்தியுடன் அல்லது இன்னொருவனுடன் பேசுமுன், அவரை விளிக்காது இருக்கமுடியாது. இது மொழி தோன்றாத நிலையிலும் நிகழும்.
ஒருவன் ஒரு வினை செய்யினும் ஒன்றும் செய்யாது சும்மா விருப்பினும், அவன் இருக்க ஓர் இடம் வேண்டும். ஆதலால், இடக்கருத்து அடுத்துத் தோன்றி யிருக்கலாம்.
மலைக்குகையில் வதிந்த அநாகரிக மாந்தனுக்கும் நிலையான தனியிடம் வேண்டியிருத்ததினால், உடைமைக் கருத்துத் தோன்றி யிருக்கும்.
மாந்தன் வினைகளுள், சிலவற்றிற்கு ஒன்றும் தேவையில்லை; சில வற்றிற்கு ஏதேனும் வேண்டும். எழுதலும் நடத்தலும் தாமாக நிகழும் ஆயின் பறித்தலும் உண்டலும் காய்கனிபோன்றவை யின்றி நிகழா. உண்ணுதல் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத வினை. ஒன்றும் புதிதாய்ச் செய்யாத அநாகரிகக் காலத்திலும் மாந்தன் இயற்கையுணவை உண்டு வந்தான். அதனால், செய்பொருட் கருத்துத் தோன்றி இருக்கும்.
கிழங்கைத் தோண்டுவதற்கும் விலங்கு பறவைகளைக் கொல் வதற்கும், கல்லும் கோலும் போன்ற கருவிகள் தேவைப்பட்ட போது, கருவிக் கருத்துத் தோன்றியிருக்கும்.
பறித்தும் அகழ்ந்தும் வேட்டையாடியும் கொண்டு வந்த பொருள் களை, மனைவிமக்கட்கும் உற்றார் உறவினர்க்கும் கொடுத்த போது, கொடைக்கருத்துத் தோன்றியிருக்கும்.
மரமேறிக் கனிபறித்தவனும் மலையேறித் தேனெடுத்தவனும், கீழிறங்கியபோது அல்லது தவறி விழுந்தபோது, அல்லது காய்கனி மரத்தினின்று கீழே விழுந்தபோது, நீக்கக் கருத்து தோன்றியிருக்கும்.
மாந்தன் கூடிவாழும் உயிரியாதலால், ஓரிடத்தில் இருப்பினும், ஒன்றைச் செய்யினும், ஓரிடம் செல்லினும், பெற்றோருடன் அல்லது மனிவியுடன் அல்லது மக்களுடன் அல்லது நாயுடன் (அல்லது கருவியுடன்) இருக்கவும் செய்யும் செல்லவும் நேர்ந்த போது, உடனிகழ்ச்சிக் கருத்துத் தோன்றியிருக்கும்.
இங்ஙனம் எண் அல்லது தொண்வேற்றுமைகளும், குறிஞ்சி வாழ்க்கை நிலையிலேயே முந்துதமிழர் மொழியில் தோன்றி யிருத்தல் வேண்டும்.
வேற்றுமையுருபுகளின் வரலாறு
உருத்தல் தோன்றுதல், உரு = தோற்றம், வடிவம், உடம்பு, தனிப்பொருள். உரு - உருவு - உருவம். உருவு - உருபு = வேற்றுமை வடிவமான சொல் அல்லது அசை.
முதல் வேற்றுமை யுருபு அல்லது வடிவம் இயல்பான பெயரே.
2 ஆம் வேற்றமையுருபு (செய்பொருள்).
ஐ. ஆய் - ஐ. பெட்டியாய்ச் செய்தான் = பெட்டியைச் செய்தான்.
3 - ஆம் வேற்றுமையுருபு
ஆல் - ஆன் (கருவி)
இல் என்னும் (7-ஆம் வேற்றுமை) இடப்பொருளுருபு கருவிப் பொருளிலும் ஆளப் பெறும்.
எ.டு. மையில் எழுது = மையால் எழுது.
செருப்பிலடித்தான் = செருப்பாலடித்தான் (மேலை வடார்க் காட்டு வழக்கு).
ல-ன். ஒ.நோ : மேல-மேன. இல்-ஆல்-ஆன்.
உடன்-ஓடு-ஓடு (உடனிகழ்ச்சி), கூட.
உல்லுதல் = பொருந்துதல், கூடுதல். உல்-உள்-உடு-உடன்.
4-ஆம் வேற்றுமையுருபு (கொடை)
கு. ஒக்க என்னும் சொல் கு என்று திரிந்திருக்கலாம்.
அவனொக்கக் கொடுத்தான் - அவனுக்குக்கொடுத்தான்
5-ஆம் வேற்றுமையுருபு (நீக்கம்)
இன், இது இடப்பொருளுருபான இல் என்பதன் திரிபே.
இலிருந்து (இல்+இருந்து) அல்லது இனின்று (இல்+நின்று) என்னும் உலகவழக்குக் கூட்டுச்சொல்லுருபே. செய்யுள் வழக்கில் இன் எனத் தனிச் சொல்லுருபாய்க் குறுகித்திரிந்தது. இனின்று என்னும் புணர்ச்சியும் இதற்குப் பெரிதும் உதவிற்று.
மரத்திலிருந்து, மரத்தினின்று என்னும் உலகவழக்கே, இயற்கை யாகவும் பொருள்நிரம்பியும் மூலத்தைத் தெளிவாய்க் காட்டு வதாகவும் இருத்தல் காண்க. இறங்கும் அல்லது விழும் நிலை, இருத்தல் நிற்றல் ஆகிய இரண்டில் ஒன்றாகவே யிருக்கும்.
6 - ஆம் வேற்றுமையுருபு (உடைமை)
அது - ஆது (ஒருமை); அ (பன்மை).
இவை உடைமைப் பொருளுணர்த்தும் குறிப்பு வினைமுற்றுக் களின் முறைமாற்றம். ஆதலால், இவை யிரண்டும் எண்காட்டும்.
எ.டு.
குறிப்புவினைமுற்று ஆறாம் வேற்றுமைப்பெயர்
கை எனது (ஒருமை) எனது கை
கைகள் என (பன்மை) என கைகள்
உடைய என்பது ஈரெண்ணிற்கும் பொதுவான வுருபாம்.
அன், இன் என்பனவும் உடைமை வேற்றுமை யுருபாக வரும்.
எ.டு. இதன் பொருள், நீரின் தன்மை.
7 ஆம் வேற்றுமையுருபு (இடம்)
இடைச்சொல்லாக நின்று இடப்பொருளுணர்த்தும் எல்லாச் சொற்களும் 7 ஆம் வேற்றுமையுருபாம். வேற்றுமை யென்றது பொருள் பற்றியே யன்றிச் சொற்பற்றியன்று. ஆயின், ஆரியம் போன்ற திரிமொழிகளில் வேற்றுமை சொல்லையே தழுவி நிற்கும்.
இடப்பொருளுருபுகளுள், சிறப்பாகக் கொள்ளப்பெறுவது உலக வழக்கில் இல்; செய்யுள் வழக்கில் கண்.
இடம், பக்கம்; ஓரம், நடு; உள், வெளி; கீழ், மேல்; முன், பின்; ஆகிய எல்லா வகை யிடப்பொருளிலும் 7 ஆம் வேற்றுமை யுருபுகள் வரும். இடம் என்னும் சொல்லும் இல்லுருபேற்ப துண்டு.
எ.டு. என்னிடம், என்னிடத்தில்.
8 ஆம் வேற்றுமையுருபு (விளி)
பெயர்கள் விளிக்கப்படும் நிலையில் அடையும் வடிவே 2 ஆம் வேற்றுமையுருபாம். அவ்வடிவு பெயர்களின் ஈற்றைப் பொறுத் தது. விளியேற்ற பெயர்கள் பெரும்பாலும் திரியும், சிறுபான்மை திரியா.
திரியும் பெயர்கள் சேய்மைச் சுட்டாயின், அளபெடுக்கும்; திரியாப் பெயர்கள் சேய்மைச் சுட்டாயின், அவற்றிற்கு முன் அளபெடுத்த ஏ அல்லது ஓ என்னும் விளியொலி சேர்க்கப்பெறும்; அப்பெயர் களின் ஈறும் சிறுபான்மை அளபெடுக்கும். திரியும் பெயர்க்கு முன்னும் ஏ அல்லது ஓ சேர்க்கப் பெறுவதுண்டு.
எ.டு. இயல்புவிளி : பேரின்பம், நம்பிக்கை, திரிபுவிளி :
ஈறு மிகுதல் - தெய்வமே, மகனே
ஈறு கெடுதல் - ஐய, இளஞ்செழிய
ஈறு திரிதல் - தம்பீ, பிள்ளாய்
ஈற்றயல் திரிதல் - மாணவீர், நம்பிமீர்
ஈறுகெட்டு அயல் திரிதல் - அழகா, நண்பா
ஈறு கெட்டு அயல் திரிந்து ஈறு மிகுதல் - ஐயவோ, அம்மேயோ
சேய்மை விளி
கண்ணா அஅஅஅ
ஏஎஎ அண்ணா அஅஅஅ
ஓஒஒ ஐயா அஅஅஅ
ஏஎஎ பேரின்பம்
ஏஎஎ மதுரம்ம்ம்ம்
எல்ல என்னும் விளிச்சொல்
விளியொலிகளுள், எல்ல என்பது தொன்றுதொட்டு வருவதும், இருவகை வழக்கிலும் வழங்குவதும், இலக்கணத்தில் இடம் பெற்றதும் தமிழின் முன்மையையும் பிறமொழிகளின் பின்மை யையும் உணர்த்துவதும், ஆங்கிலத்திற்கும் தமிழுக்குமுள்ள அணுக்கத்தைக் காட்டுவதும் ஆகும்.
எல்ல என்பது, முதற்காலத்தில் கணவனும் மனைவியும் ஒருவரை யொருவர் விளிக்கும் பொதுவொலியாயிருந்தது. இதையே,
முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச்சொல்
நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே (1166)
என்று தொல்காப்பியம் கூறும். இது எல்லா என்று ஈறு நீண்டு எல்லே என்றும் திரிந்தது.
நில்லாங்கு நில்லாங் கிவர்தரல் எல்லா நீ என்னும் மருதக்கலியில் (30), எல்லா என்பது தலைவி தலைவனை விளித்தது.
எல்லா விஃதொத்தன் என்பெறான் கேட்டைக்காண் என்னும் குறிஞ்சிக்கலியில் (25), எல்லா என்பது தோழி தலைவியை விளித்தது.
எல்லே! - துடிகொளிடை மடத்தோழீ என்னுந் திருவாய் மொழியடியில் (5,3,5). எல்லே என்பது தலைவி தோழியை விளித்தது.
எல்லா என்பது பின்பு ஏலா என்று முதல் நீண்டது. குறவன் மகளாணை கூறேலா கூறேல் என்னும் பரிபாடலடியில் (8:69) ஏலா என்பது தோழி தலைவனை விளித்தது.
கரூர்ப்பக்கத்தில், கணவன் மனைவியை ஏலா என்ற விளிப்பது, இன்றும் கல்லா மக்களிடை வழக்கமாயிருக்கின்றது.
நெல்லை நாட்டார், சிறுவரையும் கீழோரான ஆடவரையும் இன்று ஏல, ஏலே என்று விளிக்கின்றனர். கணவன் மனைவியை ஏழா என்று விளிப்பது அந்நாட்டுக் கீழோர் வழக்கம். ஏல ஏழ-ஏழா.
ஏழ என்பது பின்பு ஏட என்று திரிந்தது.
ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய்
என்னும் மணிமேகலையடியில் (14, 12), ஏடா என்பது சிந்தாதேவி ஆபுத்திரனை விளித்தது. ஏட-ஏடா; இவை ஆடூஉ (ஆண்பால்) விளி. ஏடி, ஏடீ என்பன மகடூஉ (பெண்பால்) விளி.
ஏட என்பது பின்பு அட - அடா - அடே எனத் திரிந்தது. இத்திரிபுகளும் ஆடூஉ விளியாம். அடி-அடீ என்பன மகடூஉ விளியாம்.
நில்லடீஇ யெனக் கடுகினன் பெண்ணென நினைத்தான் என்பதில் (கம்ப. ஆரணி. 93), அடி என்பது இலக்குமணன் சூர்ப்பனகையை விளித்தது.
அட, அடா என்னும் சொற்கள் கழிவிரக்கக் குறிப்பாகவும் வழங்கும்.
அடா என்பது தெலுங்கில் அரா - ரா என்றும், அடே என்பது வடமொழியில் அரே -ரே என்றும், திரிந்து வழங்குகின்றன. இந்தியில் அடே என்பது அரே-ரே என்றும், அடட என்பது அரர என்றும், வழங்குகின்றன. ட-ர, போலித்திரிபு. ஒ.நோ: குடம்பை - குரம்பை, படவர் - பரவர்.
எல்ல என்னும் விளியிடைச் சொல்லிலிருந்து, சில பெயர்ச் சொற்களும் பிறந்துள்ளன.
எல்ல-எலுவன் = தோழன் எலுவன்-எலுவல். எலுவை = தோழி. ஏட-ஏடன் = அடியான்.
எல்லா என்னும் தமிழ்ச்சொல்லும், hallo என்னும் ஆங்கிலச் சொல்லும், ஒலியும் பொருளும் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.
முதற்காலத்தில், வேளும் வேளினியுமாகிய தலைவனும் தலைவி யும் ஒருவரையொருவர் மதிப்பாக விளித்த எல்லா என்னும் சொல், ஏல, ஏழ, ஏட, அட, அடா, அடே, அடீ எனப் படிப்படி யாய் வடிவுதிரிந்தும் மதிப்புக்குன்றியும் பால்பிரிந்தும், நாளடை வில் இழிமக்களை விளிக்கும் சொல்லாயிற்று.
சில வேற்றுமை மரபுகள்
உடனிகழ்ச்சியை ஒரு தனிவேற்றுமையாக்கின், வேற்றுமை மொத்தம் ஒன்பதாம்.
ஒவ்வொரு வேற்றுமையும், ஒவ்வொரு அல்லது ஒரு சில இடைச் சொல்லால் உணர்த்தப்பெறும் பல்வேறு கருத்துக்களின் தொகுதியேயன்றி, ஒரு தனிப்பட்ட கருத்தன்று. இரண்டாம் வேற்றமைப்பொருளாக, இருபத்தெண் கருத்துக்களை எடுத்துக் கூறினார் தொல்காப்பியர். ஆயினும், அவற்றுள் எல்லாம் அடங்க வில்லை. செயப்படு பொருள் குன்றாவினை என இலக்கணியர் வகுத்த வினைச் சொல்வகைக்கு அல்லது ஐகார வேற்றுமைக்கு ஏற்ற கருத்துக்களெல்லாம் இரண்டாம் வேற்றுமைப் பொருளே அல்லது செய்பொருள்வகையே. இங்ஙனமே ஏனை வேற்றமை களும் கருத்துத் தொகுதிகளே என அறிக. ஒரு வேற்றுமைக்குப் பல கருத்துக்களிருப்பினும் அவையெல்லாம் ஒரு பருப்பொருளின் நுண் விரிவுகளில் அடங்கும். அப்பருப்பொருள் பற்றிய வேற்றுமை எட்டு அல்லது ஒன்பது ஆயின.
அசையுருபு, சொல்லுருபு என வேற்றமையுருபு இருவகைப்படும். சில கருத்துக்களைச் சொல்லுருபாற் குறிப்பதே உலக வழக்கிற் பெருவழக்காம். சொல்லுருபு ஏதேனுமோ ரசையுருபொடு கூடி வருவதே பெரும்பான்மை. அங்ஙனம் வருங்கால் ஒரு வேற்றுமைப் பொருட்கு வேறொரு வேற்றுமையுருபும் வரும்.
வேற்றுமை பொருள் சொல்லுருபு எடுத்துக்காட்டு
3-ஆவது துணைக்கருவி கொண்டு எழுத்தாணிகொண்டு
ஐ+கொண்டு கல்லைக்கொண்டு
இட்டு உளியிட்டு
5-ஆவது உறழ்பொருவு ஐ+விட அதைவிட
ஐ+காட்டிலும் அதைக்காட்டிலும்
6-ஆவது உடைமை உடைய கண்ணனுடைய
உடைமைக் கருத்தை வேற்றுமைத் தொகையாற் குறிப்பதே உலக வழக்கிற் பெரும்பான்மையாம். மூவிடப் பகரப் பெயர்கள் இவ்வழக்கில் நெடுமுதல் குறுகும்.
எ.டு. மறைமலையடிகள் மாளிகை, என் மகன்.
அசையுருபாற் பொருள் நிரம்பாத போது ஒரு சொல்லும் அதனுடன் சேர்க்கப்பெறும்.
எ.டு. அவன் எனக்காக இங்கு வந்தான்.
ஒரே பொருள், சொல்வான் கருத்துப்பற்றியும் முடிபுச் சொல் பற்றியும், வெவ்வேறு வேற்றுமையாற் குறிக்கப் பெறும்.
எ.டு.
அஞ்சியின் மகன் பொகுட்டெழினி (உடைமை) - 6 ஆம் வே.
அஞ்சிக்கு மகன் பொகுட்டெழினி (உறவுமுறை) - 4 ஆம் வே.
திருவள்ளுவரை நிகர்ப்பார் யார்? (வினைமுடிபு) - 2 ஆம் வே.
திருவள்ளுவருக்கு நிகர் யார்? (பெயர்முடிபு) - 4 ஆம் வே.
ஒரு வேற்றுமை வேறொரு வேற்றுமையையுந் துணைக் கொள்ளும்.
எ.டு. அறைக்குள் என்பதில் 7 - ஆவது 4 - ஆவதைத் துணைக் கொண்டமை காண்க.
5. சாரியைகள்
தாமாகச் சேராத சொல்லுறுப்புக்களையும் சொற்களையும் சார்ந்து இயைக்கும் அசைகளும் சொற்களும், சாரியை எனப்படும். இயைத்தல் இசைத்தல். தாமாக ஒலிக்காத எழுத்துக்களை ஒலித்தற்கும், ஒலிக்கும் எழுத்துக்களை எளிதாய் ஒலித்தற்கும், அவற்றைச் சார்ந்துவரும் ஒலிகளும் சாரியை எனப்படும். ஆகவே, எழுத்துச் சாரியை, சொற்சாரியை எனச் சாரியை இருவகையாம்.
எழுத்துச்சாரியை
உயிரெழுத்துக்களுள் குறிலுக்குக் கரமும் நெடிலுக்குக் காரமும் சாரியையாம், நெடில்களுள், ஐ, ஔ என்னும் இரண்டிற்கும் கான் என்பது சிறப்புச் சாரியை.
ஆய்தத்திற்குச் சாரியை ஏனம் என்பதாம். அது சேரும்போது ஆய்தத்திற்கு முன் அகரமும் பின் ககரமெய்யும் சேர்ந்து அஃகேனம் என்றாகும்.
மெய்யெழுத்திற்கு அ சாரியை. அது மெய்க்குப்பின் வரும். க என்பது சாரியை யேற்ற மெய்யெழுத்திற்கும் க என்னும் குறிலுக்கும் பொது வாயிருப்பதால், மெய்யெழுத்தை விதந்து குறிக்கும் போது ககரமெய் என்பது மரபு.
உயிர்மெய்யெழுத்துக்களுள், குறிலுக்குக் கரம் சாரியை; நெடிலுக்குத் தனிச்சாரியை இல்லை. அதனால் மெய்யையும் நெடிலையும் பிரித்துக் ககர ஆகாரம் (கா), ககர ஈகாரம் (கீ) என்ற முறையிற் சொல்லப்பெறும்.
சொற்சாரியை
அ, அத்து, அம், அற்று, அன், ஆம், இற்று, இன், உ, ஐ முதலியன சொற்சாரியை.
எ.டு. தட்டாரப்பாட்டம், எனக்கு, பட்டினத்தான், குளத்துப் பாய்ச்சல், புளியம்பழம், அவற்றை, அதனை, கல்லாங்கொள்ளி பதிற்றுப்பத்து, பதினொன்று, வேரினை, அவனுக்கு, பண்டைக் காலம்.
இவற்றுள், அற்றுச்சாரியைப் புணர்ச்சியும் இற்றுச் சாரியைப் புணர்ச்சியும் இன்று உலக வழக்கற்றன. அவைகள் என்பது மிகை படக்கூறும் வழூஉச்சொல்லும், அதுகள் என்பது இழிவழக்கும், ஆகும். ஆதலால், அவற்றை இவற்றை எவற்றை என்றே குமரி நாட்டுப் பொதுமக்கள் வழங்கியிருத்தல் வேண்டும்.
சாரியைகளும் சுட்டடியினவே.
தன்மைவினை யீறுகள்
1. தன்மையொருமைப் பெயரினின்று தோன்றியவை. ஏன்-என்-அன்-அல். அன், அல் எதிர்காலத்தில் மட்டும் வரும்.
2. செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினை யினின்று தோன்றியவை
செய் + அது = (செய்யது) - செய்து-து.
து-டு, து-று.
3. எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது செய்யும் + ஏன் = (செய்யுமேன்) - செய்யுவேன் - செய்வேன் - செய்கேன் - செய்கு - கு.
வ. க, போலி. ஒ.நோ: ஆவா - ஆகா, சிவப்பு - சிகப்பு.
4. உகரச்சுட்டடியாய்ப் பிறந்தது (எதிர்காலம்).
உது. எ.டு. செய்யுது, கூறுது, வருது.
உது ஈறு துவ்வளவாகக் குறுகி, அடிநீண்ட லகர ளகர வீற்று வினை முதனிலைகளோடு கூடும்போது, றுகர டுகரமாகத் திரியும்.
எ.டு. செல்-சேல்+து = சேறு.
கொள்-கோள்+து = கோடு.
ஒ.நோ. செல்-செல்+தல் = சேறல் ( தொழிற்பெயர்)
கொள்-கோள்+தல் = கோடல் (தொழிற்பெயர்)
தன்மைப்பன்மை யீறுகள்
1. தன்மைப் பன்மைப் பெயர்களினின்று தோன்றியவை. ஏம்-எம், (நாம்) - ஆம்-அம், ஆம்-ஓம்.
2. செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையினின்று தோன்றியவை.
து + உம் (பன்மையீறு = தும்.)
தும் - டும். தும்-றும்.
3. எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது.
கு + உம் (பன்மையீறு) = கும்.
4. உகரச்சுட்டடியாய்ப் பிறந்தது (எதிர்காலம்).
உது + உம் (பன்மையீறு) எ.டு. செய்யுதும், கூறுதும், வருதும்.
து-று. சேறு + உம் (பன்மையீறு) = சேறும்.
து-டு. கோடு + உம் (பன்மையீறு) = கோடும்.
5. செய்யும் என்னும் முற்றினின்று தோன்றியது.
செய்யும் - உம்.
முன்னிலைவினை யீறுகள்
முக்கால நிகழ்ச்சிவினை யீறுகள் :
முன்னிலைப் பெயர்களினின்று தோன்றியவை
ஒருமை (நீ) - ஈ - இ.
ஈ - ஏ - ஐ - ஆய்.
எ.டு வந்தீ - வந்தே - வந்தை - வந்தாய்.
ஒ.நோ: சீ-சே.சை (இகழ்ச்சிக் குறிப்பு).
உரை - உராய், குழை - குழாய்.
பன்மை : (நீம்) - ஈம். ஈம் + கள் = ஈங்கள்.
(நீர்) - ஈர் - இர். ஈர் + கள் = ஈர்கள்.
(நீர்) - ஈர் - இர். ஈர் + கள் = ஈர்கள்.
நீம் செய்தீம் என்பது இன்றும் தென்னாட்டு வழக்கு.
எப்போது வந்தீங்கள் என்னும் வழக்கையும் நோக்குக.
ஏவல்வினை யீறுகள்
ஒருமை (1) ஈறற்றது. எ.டு. செய்.
2. எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது. செய் + உது + ஈ = செய்யுதீ - செய்தி.
வழிபடுவோரை வல்லறிதீயே என்னும் புறப்பாட்டில் (10:1) வரும் அறிதீ என்பதற்கு, அறிவை என்று பழையவுரை பொருள் கூறி யிருப்பதையும், அறிதீ - அறிதி = அறிவாய் என்று சாமிநாதையர் அருஞ்சொற்குறிப்பு வரைந்திருப்பதையும், ஊன்றி நோக்குக.
சென்றீ (சென்று+ஈ) என்பது. சென்றுதவுக என்று பொருள்படும் உதவிவினை. நின்மே (நில்லும் + ஏ) என்பது நில்லுங்களேன் என்று பொருள்படும் ஆர்வவினை. நில்லும் என்பது உகரந்தொசின் நின்ம் என்றாகும். ஒ.நோ: போலும் - போன்ம். ஏன் என்பது ஏ எனக்குறைந்து நின்றது. உலக வழக்கிலும் வரட்டே என வழங்குதல் காண்க. நின்+மே என்னும் தவறான பகுப்பு, அதை ஒருமையெனக் கொள்ளச் செய்திருக்கின்றது. இதையறியாது
முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே
என நூற்பா யாத்தார் தொல்காப்பியர் (934) அதைப் பின் பற்றினார் பவணந்தியார்.
3. செய்யாய் என்னும் முன்னிலை யொருமைவினை குரல்வேறு பாட்டால், செய் என்று பொருள்படும். ஆய் என்பது ஏவலொரு மையீறென்று கூறாது.
செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே
என்றே தொல்காப்பியர் கூறுவதால் (933), அதன் அகுகிய
வழக்குப் புலனாம். ஆய் என்பது முன்னிலை யொருமை யீறேயாயினும். ஏவலொருமை வினை அதை ஏற்கவேண்டு மென்னும் யாப்புற வில்லை. என அறிக.
பன்மை :
(1) முன்னிலைப் பன்மைப் பெயரினின்று தோன்றியவை
(ஊம்) - உம். எ.டு. செய்யும்
உம்+கள் எ.டு. செய்யுங்கள்
உம்+(நீம்-ஈம்-இம்-)இன் எ.டு. செய்யுமின்-செய்ம்மின்
மின்+கள் எ.டு. செய்ம்மின்கள்
மின் என்னும் ஈற்றின் மகரம் நெறி (விதி) முதல் என அறிக.
கள் என்பது படர்க்கை யீறேனும் இரட்டைப் பன்மை குறித்து மூவிடத்தும் வரும்.
எ.டு. நாங்கள், நீங்கள், அவர்கள்.
செய்யுமின் என்பதிலுள்ள உம்மின் (உம்+இன்) என்னும் இரட்டைப் பன்மையை, செய்யுங்கள் என்பதிலுள்ள உங்கள் (உம்+கள்) என்பது போலக் கொள்க. செய்ம்மின் என்பதன் இரட்டைப் பன்மைப் பொருள் மறைந்தபின், கள்ளீறு பிறவற்றோடு சேர்ந்தது போல் அதனோடும் சேர்ந்தது. இம் முக்கைப் பன்மையைப் பெண் பெண்டாட்டி என்பது போன்ற மீமிசைச் சொல்லாகக் கொள்க.
2. எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது செய் + உது + ஈர் = செய்யுதீர் - செய்யுதிர் - செய்திர்.
3. செய்யாய் என்பதற்கொத்தது செய்யீர் என்னும் வடிவம்.
வியங்கோள்வினை யீறுகள்
வியங்கோள்வினை யீறுகள் மூவகையில் தோன்றும்.
1. தொழிற்பெய ரீறுகள்
அல் எ.டு. செயல்
ஒல்லும் வகையால் அறவினை யோவாதே
செல்லும் வாயெல்லாம் செயல் (குறள். 33)
தல். எ.டு. செய்தல்.
இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் (தொல். 502)
(2) அகரவீற்று வினையெச்ச ஈறு.
செய்ய-அ. எ.டு. வரப்புயர !
நடக்க-க. எ.டு. வாழ்க !
(3) செயல் வாய்பாட்டு ஈயல் என்னும் துணைவினைத் தொழிற் பெயர்.
ஈயல்-ஈயர்-இயர்-இய-இ.
எ.டு. நிலியல் - நிலீயர்-நிலியர், வாழியர்-வாழிய-வாழி
நிலீஇயர் அத்தை நீயே யொன்றே (புறம். 3:5)
நடுக்கின்றி நிலியரோ அத்தை யடுக்கத்து (புறம். 2)
உள்ளேன் வாழியர் யானெனப் பன்மாண் (புறம். 365)
எங்கோ வாழிய குடுமி தங்கோ (புறம். 365)
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:22)
வியங்கோள்வினை ஏவல், வாழ்த்து, சாவிப்பு, வஞ்சினம் என்னும் நாற்பொருள்பற்றி வரும். ஏவல் என்றது வேண்டுகோள் அல்லது மதிப்பேவல்.
பிறனா யினன்கொல் இரீஇயர்என் னுயிரென
என்பது சாவிப்பு (புறம் 210)
அவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக
என்பது வஞ்சினம் (புறம். 71).
வியங்கோள்வினை மூவிட ஐம்பாலீரெண்ணிற்கும் பொதுவாம்! ஆயின், ஏவலும் வாழ்த்தும் பற்றித் தன்மை யிடத்தில் வராது.
பிறவினை யீறுகள்
தன்வினை பிறவினையாகும் வகைகள்
1. முதனிலை வலித்தல்
எ.டு. நீங்கு-நீக்கு, பொருந்து - பொருத்து.
2. இடைநிலை வலித்தல்
எ.டு. தேய்ந்தது-தேய்த்தது, தீர்ந்தான்-தீர்த்தான்.
3. முதனிலை வலியிரட்டல்
எ.டு. போகு-போக்கு, தேறு-தேற்று.
4. ஈறுபெறுதல்
ஈ-வீ-வி.பி.
செய்ய + ஈ = செய்யவீ-செய்வீ-செய்வி.
நடப்ப+ஈ=நடப்பவீ-நடப்பீ-நடப்பி.
செய்யவீத்தான் = செய்யவுதவினான், செய்யவிட்டான், செய்யச் செய்தான்.
ஈத்துவக்கும் இன்பம் (குறள் 228.) எமக்கீத்தனையே (புறம். 911) என ஈதல்வினை வலித்தும் இறந்த காலங் காட்டுதல் காண்க.
வி.பி. பிறவினை யீறுகளானபின், வினைகள் அவற்றை ஏற்ற பெற்றி ஒன்றும் பலவும் ஏற்றன.
செய்விப்பி, நடத்துவி - இருமடிப்பிறவினை.
செய்விப் பிப்பி, நடத்து விப்பி - மும்மடிப்பிறவினை.
இவை செய்விப்பித்தான், செய்விப்பிப்பித்தான் என நிகழ்ச்சி வினையாம். எல்லாவினைகளும் முதனிலையளவில் ஏவல்வடி வாயிருத்தலின், பிறவினை முதனிலைகளை ஏவல் வினையென்று விதந்து கூற வேண்டியதில்லை.
ஒத்து-அத்து-து. ஒத்து-ஒட்டு-அட்டு. ஒத்துதல் = பொருந்துதல், ஒற்றுதல், இசைதல்.
ஒ-அ. ஒ.நோ : கொம்பு-கம்பு, மொண்டை-மண்டை. மொத்திகை-மத்திகை.
வாழ + அத்து = (வாழத்து) - வாழ்த்து - வழுத்து.
தாழ + அத்து = (தாழத்து) - தாழ்த்து.
ஒட்டு - அட்டு. வர + அட்டு = வரட்டு.
அத்து என்னும் துணைவினை துவ்வீறாகக் குறைந்த பின், அதன் திரிபாகச் சு டு று ஈறுகள் தோன்றின.
எ.டு. பாய் + து = பாய்த்து - பாய்ச்சு
நீள் + து = நீட்டு, காண் + து = காட்டு.
நால் + து = நாற்று, தின் + து = தீற்று.
ஒரு சில வினைகள் உவு ஈறு பெற்றுப் பிறவினையாகின்றன.
எ.டு. எழு-எழுவு, கொள்-கொளுவு.
எழுவுதல் = எழச்செய்தல், ஓசையெழுப்புதல்.
கொளுவுதல் = கொள்ளச்செய்தல்.
இவ் உவு ஈறு ஒவ்வு என்னும் துணைவினையின் சிதைவாகும். ஒவ்வுதல் = ஒத்தல், பொருந்துதல், இசைதல்.
எழ + (ஒவ்வு) = எழுவு, கொள + (ஒவ்வு) = கொளுவு. உகரத்தின் முன் அகரம் தொக்கது.
5. துணைவினைபெறுதல்
எ.டு. ஊறவை, காயப்போடு, நிற்பாட்டு, (நிற்பு + ஆட்டு) மறக்கடி, (மறக்க + அடி) எழச்செய், வரப்பண்ணு.
6. அளபெடுத்தல்
இக்காலத்தில் கட்டு, மண்டு முதலிய குற்றுகர வீற்று வினைச் சொற்கள் கட்டி, மண்டி என இகரவீறேற்று இறந்த கால வினையெச்சமாவது போல், முதற்காலத்தில் இரு, உடு முதலிய முற்றுகரவீற்று வினைச்சொற்களும் இகரவீறேற்று இரி, உடி என இறந்தகாலவினை யெச்சமாகியிருக்கலாம். இவ்வடிவங்களை அளபெடைப்படுத்திப் பிறவினையாக்கி யிருக்கலாம்.
இரி-இரீஇ = இருத்தி, உடி - உடீஇ = உடுத்தி, உறூஉ = உறுத்தி, கொளி - கொளீஇ = கொளுத்தி.
கொளி (கொள்ளி) என்பதை அள்ளி, எள்ளி, தள்ளி, துள்ளி என்பனபோற் கொள்க.
7. இயல்பாயிருத்தல்
எ.டு. கதவு திறந்தது-கதவைத் திறந்தான், குறவி பிறந்தது - விறகைப் பிளந்தான்.
செயப்பாட்டு வினையீறுகள்
செயப்பாட்டுவினை வடிவங்கள்
1. அகரவீற்று வினையெச்சம் + துணைவினை
எ.டு. எழுதப்படு, எழுதப்பட்டது.
வாழ்த்துப்பெறு, வாழ்த்துப் பெற்றான்.
பெறு என்பது பெரும்பாலும் பேறுபற்றியும் படு என்பது பெரும் பாலும் பாடு பற்றியும், வரும். பாடு = கேடு, செய்யப்படுகை.
எ.டு. பரிசளிக்கப் பெற்றான், உயர்த்தப்பெற்றான். கொல்லப் பட்டான், தள்ளப்பட்டான், உண்ணப் பட்டது.
2. தொழிற்பெயர் + துணைவினை.
எ.டு. கொலையுண்டான், கொலைப்பட்டான், குத்துப்பட்டுச் செத்தான்.
3. வினைமுதனிலை + துணைவினை
எ.டு. கொல்லுண்டான், வெட்டுண்டான்.
இவற்றின் வினைமுதனிலையை முதனிலைத் தொழிற் பெயராகவுங் கொள்ளலாம்.
தமிழிற் செயப்பாட்டுவினை பெருவழக்கன்று. பெரும்பாலும், செயப்பாட்டுவினைப் பொருளைச் செய்வினை வடிவிற் கூறுவதே தமிழர் வழக்கம்.
எ.டு. புலியடித்துச் செத்தான்
மறைமலையடிகள் எழுதிய நூல்
தச்சன் செய்த பெட்டி
பெயரெச்ச வீறுகள்
தெரிநிலைப் பெயரெச்சம்
அ-இ, கா, ஈறு, எ.டு. செய்த (செய்து + அ)
அ-நி. கா, ஈறு, எ.டு. செய்கின்ற (செய்கின்று + அ) - செய்கிற.
உம்.எ.கா. ஈறு. எ.டு. செய்யும் (செய்+உம்).
உ-உம் (முன்மைச் சுட்டடிச்சொல்).
குறிப்புப் பெயரெச்சம்
அ (முக்காலப்பொது), எ.டு. நல்ல.
இறந்தகால நிகழ்கால குறிப்புப்பெயரெச்ச வீறாகிய அ அந்த என்று பொருள்படும் சேய்மைச்சுட்டாகும். செய்து, செய்கின்று, நல் என்பன முற்காலத்தில் முற்றுச் சொற்களாயும் இருதிணை யைம்பால் மூவிடப்பொதுவாயும் இருந்ததினால், வினையா லணையும் பெயராகி,
செய்த என்பது, செய்தேனாகிய அந்த, செய்தேமாகிய அந்த, செய்தாயாகிய அந்த, செய்தீராகிய அந்த, செய்தானாகிய அந்த செய்தாளாகிய அந்த, செய்தாராகிய அந்த, செய்ததாகிய அந்த, செய்தனவாகிய அந்த என்று பொருள் பட்டிருக்கும்.
இங்ஙனமே ஏனையிருசொற்கட்கும் ஒட்டுக.
செய்யும் என்னும் பெயரெச்சம், 6 ஆம் வேற்றுமைப் பெயர் போல முன்பின்னாக மாறிய செய்யும் என்னும் எதிர் காலவினை முற்றாயிருக்கலாம்.
எ.டு.
முற்று எச்சம்
நான் செய்யும் செய்யும் நான்
நாம் செய்யும் செய்யும் நாம்
நீ செய்யும் செய்யும் நீ
நீர் செய்யும் செய்யும் நீர்
அவன் செய்யும் செய்யும் அவன்
அவள் செய்யும் செய்யும் அவள்
அவர் செய்யும் செய்யும் அவர்
அது செய்யும் செய்யும் அது
அவை செய்யும் செய்யும் அவை
செய்யும் என்னும் முற்று முதற்காலத்தில், மலையாளத்திற் போன்றே முந்நாட்டுத் தமிழிலும் இருதிணை யைம்பால் மூவிடப் பொதுவாயிருந்ததென்பதை நினைவில் இருத்துதல் வேண்டும்.
வினையெச்ச வீறுகள்
தெரிநிலை வினையெச்சம்
இறந்தகால ஈறுகள்
அது-து எ.டு. செய்து
து+என எ.டு. செய்தென (செ.வ.)
பு எ.டு. செய்பு (செ.வ.)
ஆ எ.டு. செய்யா (செ.வ.)
ஊ எ.டு. செய்யூ (செ.வ.)
இ எ.டு. ஓடி
இ-ய் எ.டு. போய்
டு,று என்பன துவ்வீற்றின் புணர்ச்சித்திரிபு.
செய்தென = செய்தானென்று சொல்லும்படி, செய்தபின்; செய்ததினால்.
இப்பொருளை ஏனைப்பா லெண்ணிடங்கட்கும் ஒட்டுக.
இ என்பது இகரச்சுட்டு. அது அண்மை குறியாது சுட்டளவாய் நின்றது. வலது, பெரிது என்பவற்றில் அது, இது என்பன சேய்மை யண்மை குறியாது நிற்றல் காண்க.
அது, இ என்பன முதற்காலத்தில் வினைமுதலீறாய் இருந்திருக் கலாம்.
ஒ.நோ: இ: கா.வி.எ. வினைமுதற்பெயர்
ஓடி ஓடி = ஓடினவன்
எச்சம் வினைமுதற் பெயர்
நன்று = நன்றாய் நன்று = நல்லது.
பு, ஆ, ஊ என்பவற்றின் மூலமும் பொருளும் விளங்க வில்லை. இவை செய்து, ஓடி என்பவற்றிற்குப் பிற்பட்டவையாகும்.
ஆ என்பது வடதிரவிட வழிப்பட்ட இந்தியில், இறந்தகால வினை முற்றீறாகவும் வினையெச்சவீறாகவும் வழங்குகின்றது. செய்து என்பது முதற்காலத்தில் வினைமுற்றாகவும் இருததினால், ஆவீறும் தமிழில் அங்ஙனம் இருந்திருக்கலாம்.
நிகழ்கால வினையெச்ச வீறு
செய்ய என்னும் வாய்பாட்டுச்சொல்லே, நிகழ்கால வினையெச்ச மாகப் பண்டைத் தமிழிலக்கண நூல்களெல்லாவற்றிலும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அது ஆங்கிலத்தில் Infinitive Mood என்று சொல்லப்பெறும் எதிர்காலவினை யெச்சமேயன்றி வேறன்று.
உரையும் இலக்கணமும் உட்பட, பண்டைக் தமிழிலக்கிய மெல்லாம், பொதுவாயினும் சிறப்பாயினும், செய்யுள் வடிவி லேயே இருந்தன அதனால், பண்டைத் தமிழிலக்கணங்களும் செய்யுள் நடைக்கே எழுதப்பெற்றன. பல சொற்களும் சொல் வடிவுகளும் செய்யுள் நடையில் இடம் பெறுவதில்லை. முன்னூல் நடையையே பின்னூல்களும் மரபாகப் போற்றி வந்தன. ஆரியர் தென்னாடு வந்து தமிழ்கற்றுத் தமிழிலக்கண நூலாசிரியருமான தினால், தம் அறியாமையால் கால்டுவெலாரைப் போன்றே பல தவறுகள் செய்துள்ளனர். கின்று என்னும் இடைநிலைகொண்ட செய் கின்றான். செய்கின்ற என்னும் நிகழ்கால வினைவடிவம், எங்ஙனமோ இடைக்கழகத்திற்குப் பின் செய்யுளில் இடம் பெறாது போயிற்று. அதனால் செய்யும் என்னும் எதிர்கால வினையையே நிகழ்காலத்திற்கும் புலவர் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஆயினும், பண்டை நிகழ் காலவினையின் எஞ்சுகுறிகள், இலக் கியத்திலும் இலக் கணத்திலும் தொடர்ந்து இருந்தே வந்திருக் கின்றன.
கின்று இடைநிலைகொண்ட வினையாலணையும் பெயரின் மரூஉக்கள், தொல்காப்பியத்தில் ஆங்காங்கு தனிப் படவருவதுடன், ஒரே நூற்பாவிற் பல ஒருங்கு கூடியும் வருகின்றன.
எ.டு.
புணரியல் நிலையிடைப்பொருணிலைக் குநவும்
வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி யாகி வருநவும்
இசைநிறைக் கிளவி யாகி வருநவும்
தத்தம் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும் (தொல்.735)
உதந என்பது உதவுந என்பதன் தொகுத்தல். உதவுகின்ற - உதவு குன்ன - உதவுகுந - உதவுந. செய்கின்ற - செய்குன்ன - செய்குந. உதவுகின்ற = உதவுகின்றவை.
பொருகின்றான் - பொருகுன்னான் - பொருன்னான் - பொருநன்.
செய்யின் அல்லது செய்தால் என்னும் வாய்பாட்டெச்சம் நிலைப்பாட்டு வினையெச்சமாதலின் (Subjunctive or Conditional Mood). சரியான எதிர்கால வினையெச்சமாகாது. இலக்கண முறைப்பட்ட முக்கால வினையெச்ச வாய்பாடு கீழ்க்காணும் முறையிலேயே இருத்தல் கூடும்.
இ.கா. நி.கா. எ.கா.
செய்து செய்துகொண்டு செய்ய
(Past Participle) (Present Participle) (Future Participle or
Infinitive Mood)
செய்துகொண்டு என்று தமிழிலும், சேசிக்கொனி என்று தெலுங் கிலும்,
நிகழ்கால வினையெச்சம் உலகவழக்கில் தொன்று
தொட்டு வழங்கிவருகின்றது. செய்துகொண்டு என்னும் சொல்லேயன்றி, செய்ய என்னும் சொல் நிகழ் காலத்தை உணர்த்தாது. செய்து கொண்டு இருக்கிறான், செய்ய இருக்கிறான் என்னும் இரு தொடரின் பொருளையும். ஒப்புநோக்கி உண்மை தெளிக.
செய்ய என்னும் சொல் இயல்பாக எதிர்காலத்திற்கே உரியதேனும், முன்னிகழ்ச்சி, ஒருங்கு அல்லது உடன் நிகழ்ச்சி, பின்னிகழ்ச்சி என்னும் முக்கால நிலையையும் உணர்த்துமாற ஆளப்பெறும்.
எ.டு. மழைபெய்யக் குளம் நிறைந்தது - முன்னிகழ்ச்சி
மணியடிக்கக் கழுதை கத்திற்று - ஒருங்கு நிகழ்ச்சி
பயிர்விளைய மழை பெய்தது - பின்னிகழ்ச்சி (எ.கா.)
இவற்றுள், முன்னிகழ்ச்சி பின்வருந் தொடராலும், ஒருங்கு நிகழ்ச்சி ஆட்சியினாலுமே அறியப்படும், செய்து எனும் சொற்போல், செய்ய என்னும் சொல் தனிநின்று இறந்தகாலத்தை யுணர்த்தாது. அங்ஙனம், செய்துகொண்டு என்னும் சொற்போல், அது தனி நின்று நிகழ்காலத்தை யுணர்த்தாது. மேலும், நிகழ்கால நிகழ்ச்சி வேறு; ஒருங்கு நிகழ்ச்சிவேறு. ஆயினும், நீரில் ஆழ்பவன் சிறு கோலையும் பற்றுவதுபோல்,இலக்கணியர் ஒருங்கு நிகழ்ச் சியைப் பற்றுக் கோடாகக் கொண்டு, செய்ய என்னும் சொல்லை நிகழ்கால வினையெச்சமாகக் காட்டியுள்ளனர். ஆயின், அதற்கு நிகழ்கால முணர்த்தும் ஆற்றலின்மையின், மூவகைத் தொடர்ச்சிக் காலத்தையும் (Continuous Tenses), முறையே, 7 ஆம் வேற்றுமைத் தொழிற்பெயராலும் இறந்தகால வினையெச்சத்தாலும் முற்றெச்சத்தாலுமே உணர்த்திவந்திருக் கின்றனர்.
எ.டு.
தட்டுப்புடைக்கண் வந்தான் (தொல். சொல். 77, இளம் உரை) - இ.கா.
தொடர்ச்சி
கண்கவ ரோவியங் கண்டுநிற் குநரும் (மணி. 3:13) - நி.கா. தொடர்ச்சி
நீர்வார்த்துக் கால்கழுவா நின்று (நள. 232) - .
ஆடினிர் பாடினிர் செலினே (புறம். 109) - எ.கா. தொடர்ச்சி
செய்துகொண்டு என்னும் நிகழ்கால வினையெச்சம் (Present Participle) உலகவழக்கில் இருக்கவும், அதைப் பயன்படுத்தாது இங்ஙனம் இடர்ப்படுவது, கனியிருக்கப் பூம்பிஞ்சைக் கவர்வ தொப்பதே.
பண்டை யிலக்கியத்தில் இல்லாத சொல்லெல்லாம் பிற்காலத்தவை யெனக்கொள்வது பெருந்தவறாம். பண்டை நூல்கள் இற்றை அகரமுதலிகளல்ல. பொதுமக்கள் பழஞ்சொற்றொகுதி தலைக் கழகக் காலத்தினின்று சற்றம் மாறாது இருந்துவந்திருக்கின்றது.
செய்துகொண்டு என்னும் சொல், தமிழின் அடிப்படைச் சொற் களுள் ஒன்றாயும், நாட்டுப்புற மக்கள் பேச்சில் ஆழவேரூன்றிய தாயும், தமிழ்நாடெங்கணும் இன்றும் செய்துவிட்டு, செய்துகிண்டு, செய்துகினு எனப் பல்வேறு கொச்சை வடிவில் வழங்குவதாயும், தமிழினின்று நீக்கமுடியாததாயும், உள்ளது.
காடைக்கண்ணி, குதிரைவாலி என்னும் சிறு தவசங்கள் தொன்று தொட்டுப் பாண்டிநாட்டில் விளைந்துவரினும், அவை இன்றுள்ள பண்டையிலக்கியத்தில் இடம்பெறவேயில்லை. இங்ஙனமே செய்துகொண்டு என்னும் நிகழ்கால வினையெச்சமும் என்க.
ஆங்கில நிகழ்கால வினையெச்சத்தின் ஈறாகிய ing என்பதன் தொல்வடிவாகச் சொல்லப்பெறும் inde என்பதும், செய்திண்டு என்னும் கொச்சைவடிவீற்றை ஒத்திருப்பது பெரிதும் கவனிக்கத் தக்கதாம்.
செய்ய என்னும் வாய்பாட்டெச்சம் நிகழ்காலச்சொல்லன்மை யாலேயே, அகரவீற்று வினையெச்சம் என இதுகாறும் குறிக்கப் பட்டது. இனி, எதிர்கால வினையெச்சம் என்றே தெளிவாய்க் குறிக்கப்பெறும்.
எதிர்கால வினையெச்ச ஈறு :
அ, எ.டு. செய்ய, கொடுக்க, இறப்ப.
செய்ய என்பது செய்யல் என்னும் அல்லீற்றுத் தொழிற் பெயரின் ஈறுகேடாம்.
செய்யல் (செயல்) வேண்டும் = செய்யவேண்டும்.
கொடுக்கல் வேண்டும் = கொடுக்கவேண்டும்.
ஒல்வழி ஒற்றிடை மிகுதல் வேண்டும் (114)
ஈறா ககரமுனைக் கெடுதல் வேண்டும் (115)
வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும் (156)
மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும் (725)
என்னும் தொல்காப்பிய அடிகளிலெல்லாம் அல் அல்லது தல் லீற்றுத் தொழிற்பெயர் செய்ய என்னும் நிகழ்கால வினையெச்சப் பொருள்படுதல் காண்க. தொழிற்பெயரீறுகள் பற்பலவேனும், அல்லீற்றுத் தொழிற்பெயரே ஈறுகெட்டு அகரவீற்றைக் கொண் டிருக்கும். ஆதலால், அதனின்றே v.fh.É.ஈW பிறந்ததாகும். செய்தல் என்பது தல்லீற்றது; அல்லீற்றதன்று.
இறக்க, சிறக்க, விழிக்க, கழிக்க முதலியவற்றை, உயர் நடையாளர் இன்னோசைகருதி இறப்ப, சிறப்ப, விழிப்ப, கழிப்ப எனத் திரிப்பர்.
செய்ய என்பது நோக்கங் குறித்த சொல்லாதலின், செய்யுமாறு, செய்யும்படி, செய்தற்கு, செய்தற்காக செய்தற்கென்று, செய்ய வேண்டுமென்று, செய்தற்பொருட்டு, செய்ய வேண்டி, செய்வான் வேண்டி, செய்யும் நோக்கத்துடன் என்று இத்தொடக்கத்துச் சொற்றொடர்களும் எதிர்காலவினையெச்சப் பொருளில் வரும்.
இயர் எ.டு. செய்யியர்
இயர்-இய எ.டு. செய்யிய
அல்+கு எ.டு. செயற்கு (செயல்+கு)
தல்+கு எ.டு. செய்தற்கு (செய்தல்+கு)
உம்+என எ.டு. செய்யும் + என = செய்யு
மென-செய்ம்மென - செய்ம்மன.
-வான் எ.டு. செய்வான் (வி.மு.) - செய் வான் (வி.எ.)
-பான் எ.டு. உண்பான் (வி.மு.) - உண்பான் (வி.எ.)
-மான் எ.டு. செய்மான் (வி.மு.) - செய்மான் (வி.எ.)
-வார் எ.டு. செய்மார் (வி.மு.) - செய்மார் (வி.எ.)
-பாக்கு எ.டு. செய்பாக்கு, உண்பாக்கு.
செய்ம்மன என்பதைச் செய்தென என்பதனொடு ஒப்பு நோக்குக. செய்ம்மன = செய்யும் என்று சொல்லும்படி.
ஈ என்பது ஒரு துணைவினை. ஈயல் = ஈதல். ஈயல் வேண்டும் - ஈய வேண்டும். ஈயல் - ஈயர். ல-ர. போலி, ஈயர் - இயர் - இய. இது உதவி வினையீறு; பின்னர்ப் பொதுவினை யீறாயிற்று.
வான், பான், மான், மார், என்பன முற்றெச்ச வீறுகளே. இவற்றுள் முதலிரண்டுமட்டும் இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவாக் கப்பட்டன.
பாக்கு = பகுதி. ப-பாகு-பாக்கு-பாக்கம், செய்பாக்கு = செய்யும் பகுதி, செய்யுமாறு வந்தால் என்பதை வரும் பக்கத்தில் (வரும் பட்சத்தில்) என்று கூறும் வழக்கை இதனொடு ஒப்பிடுக. பகு-பக்கம். செய்யும் + ஆறு (வழி) = செய்யுமாறு, செய்யும் + படி (வகை) = செய்யும்படி. செய் + பாக்கு (பகுதி) = செய்பாக்கு.
நிலைப்பாட்டு வினையெச்ச ஈறுகள்.
ஆல் எ.டு. செய்தால் (செய்து + ஆல்)
இல் எ.டு. வரில்
இல்-இன் எ.டு. செய்யின்-செயின்
கால் எ.டு. செய்தக்கால்.
இல் என்பது இடப்பொருள் அல்லது கருவிப் பொருளுருபு. வரில் என்பது வருகையில் அல்லது வருகையினால் என்று பொருள்படுவது. ஆதலால், அது வினைமுதனிலையெல்லாம் தொழிற்பெயராய் ஆளப்பட்டகாலத்துத் தோன்றிய தாகும். வருகையில் = வருகையின் பேரில்.
ல்-ன். வரில்-வரின்.
ஆல் என்பது இல் என்பதன் திரிபு. காலத்திலே என்பதைக் காலத்தாலே என்று கூறும் வழக்கை நோக்குக.
வந்தது என்னும் வினைவடிவு தொழிற்பெயராயும் வழங்குவது போல், செய்து என்னும் பண்டை வினைமுற்று வடிவும் தொழிற் பெயராயும் வழங்கியிருத்தல் கூடும். வந்தால் = வந்ததினால், வருகையால் வருவதினால் ஓடியால் - ஓடினால் = ஓடினதினால், போயியால் - போயினால் = போனதினால், போவதினால்.
கால் என்பது காலத்தைக் குறிக்கும் சொல்லே; ஆயின், வலிமிக்குப் புணரும். செய்தகால் = செய்த காலம். செய்தக் கால் = செய்தால், கடத்தி, கண், கடை என்பனவும் எதிர்கால வினையெச்சவீறாய் வரும். எ.டு. செய்தக்கண், செய்தக்கடை, கண், கடை என்பன இடப் பெயர்கள். இயல்புவடிவம் இறந்த காலமும் வலிமிகு வடிவம் எதிர்காலமும் உணர்த்துமென்றறிக.
துவ்வீறு புணர்ச்சியில் டுறு வாகத் திரியுமாதலால், செய்து என்பது உண்டு, சென்று என்பவற்றையும்; செய்தென என்பது உண்டென, சென்றென என்பவற்றையும் செய்தால் என்பது உண்டால், சென்றால் என்பவற்றையும்; செய்தக்கால் என்பது உண்டக்கால், சென்றக்கால் என்பவற்றையும் தழுவும்.
குறிப்பு வினையெச்ச வீறுகள்
அ எ.டு. வலிய, மெல்ல
து எ.டு. சிறிது, பெரிது
து-று எ.டு. நன்று
ஆய் எ.டு. அழகாய்
ஆக எ.டு. விரைவாக
எதிர்மறை யிடைநிலைகளும் ஈறுகளும்
எதிர்மறைவினைமுற்று
இ.கா. நி.கா. எ.கா.
செய்திலன் செய்கின்றிலன் செய்கிலன்-இல் (இடைநிலை)
செய்ததில்(லை) செய்கின்றதில்(லை) செய்வதில்(லை)இல்(லை)(ஈறு)
செய்யவில்லை செய்யவில்லை செய்யவில்லை-இல்லை (ஈறு)
இல், இல்லை என்னும் இரண்டும், இயல்பாக எதிர்மறைப் பொருள் கொண்ட துணைவினைகளே, இவற்றை ஏனைப்பாட லிடங்கட்கும் ஒட்டுக.
இல், இல்லை என்பன ஈறாய்வரிள், இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவாம். செய்யவில்லை என்னும் எதிர்மறை முற்றும் இங்ஙனம் பொதுவாம்.
எதிர்கால வினைமுற்று எதிர்மறை யிடைநிலையும் ஈறும் பெறாது, பாலீற்றின் அடி நீட்சியினாலேயே எதிர்மறை குறிப்பது முண்டு.
எ.டு.
தன்மை முன்னிலை படர்க்கை
செய்யேன் செய்யாய் செய்யான்
செய்யேம் செய்யீர் செய்யாள்
செய்யார்
செய்யாது
செய்யா
பிற தன்மைப் பன்மை யெதிர்மறைவினைகள் செய்யாம், செய்யோம் என்பன.
மாட்டு என்னும் துணைவினையும் இங்ஙனமே புடை பெயரும்.
இவற்றிற் கால விடைநிலையின்மை, வினையின்மையையும் அதனால் எதிர்மறையையும் காட்டுவதாகக் கருதுவர் கால்டு வெலார்.
எதிழ்மறை ஏவல்வினை யீறுகள்
ஒருமை :
அல் எ.டு. செய்யல், செயல்.
அல்-ஆல் எ.டு. அழால்
ஆல்-ஏல் எ.டு. செய்யேல்
அரிது-ஆது+இ எ.டு. செய்யாதி
அரிது-ஆது+ஐ எ.டு. செய்யாதே.
பன்மை :
அல் + மின் எ.டு. செய்யன்மின்
ஆது + இர் எ.டு. செய்யாதிர்
ஆது + ஈர் எ.டு. செய்யாதீர்
ஆது + ஈர் + கள் எ.டு. செய்யாதீர்கள்
ஆது + ஏ + உம் எ.டு. செய்யாதேயும்
ஆது+ஏ+உம்+கள் எ.டு. செய்யாதேயுங்கள்
அல் என்னும் ஈறு அன்மை குறிக்கும் அல் என்னுஞ் சொல்லே.
அரிது என்னும் குறிப்பு வினை, அருமைப் பொருளிலும் இயலாமைப் பொருளிலும் வரும்.
எ.டு.
காரோதிமத்தைக் காண்பது அரிது. - அருமை
மாந்தன் பறப்பது அரிது - இயலாமை.
இயலாமைப் பொருளுணர்த்தும் கூடாது என்னும் துணை வினை, விலக்குப்பொருளில் வருவதுபோன்றே, அரிது என்னும் துணைவினையும் வரும். அரிது என்பது மலையாளத்தில் அருது எனத்திரியும்.
மழையத்துப் போகருதெ, வெயிலத்துப் போகருதெ, என்பன, மழையிற் போகாதே, வெயிலிற் போகாதே, என்று பொருள்படும் மலையாள (சேர) நாட்டு வழக்காம், ஆர்க் கானும் கொடுக்கும் போழ் அருதென்று விலக்கருது. என்னும் மலையாளப்பழ மொழியில், அருதென்று விலக்கருது என்னும் தொடர், கூடா தென்று தடுக்கக் கூடாது என்று பொருள்படுதல் காண்க.
கூடாது என்னும் சொற்போன்றே, அருது என்பதும் மலை யாளத்தில் தனிவினையாக வரும்.
எ.டு. ஈஆள்க்கு வேறே பணி அருது = இந்த ஆளுக்கு வேறு வேலை கூடாது.
போகருதெ என்னும் மலையாளவினையொடு போகாதே என்னும் தமிழ்வினையை ஒப்புநோக்கும்போது. அருது என்பது ஆது என்று மருவினதாகத் தெரிகின்றது. இதினின்று, செய்யரி யேன், செய்யரியேம், செய்யரியாய், செய்யரியீர், செய்யரியான், செய்யரியாள், செய்யரியார், செய்யரிது, செய்யரிய என்னும் வடிவங்களே, முறையே, செய்யேன், செய்யேம், செய்யாய், செய்யீர், செய்யான், செய்யாள், செய்யார், செய்யாது, செய்யா எனத்தொக் கன என எண்ண இடம் ஏற்படுகின்றது. அரிது என்பதன் மூல மான அருமைச் சொற்கு இன்மைப் பொருளுண்மையும், இய லாமைப் பொருளுணர்த்த வேண்டிய செய்யக்கூடாது என்னும் சொல் செய்யாதே என்று பொருள் படுவதும், இவ்வெண்ணத்தை வலியுறுத்துகின்றன.
படர்க்கை யெதிர்மறை யேவற்பன்மை யீறு
அல் + மார். எ.டு. செய்யன்மார்.
பீடின் மன்னரைப் பாடன்மார் எமரே (புறம். 315)
நோய்மலி வருத்தங் காணன்மார்எமரே. (நற். 64)
மார் என்பது செய்மார் என்னும் பலர்பால் எதிர்கால வினை முற்றீறாம்.
எதிர்மறை வியங்கோள்வினை யீறு :
அல். எ.டு. எனல் = என்னற்க.
பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல் (குறள். 196)
அல் + க. எ.டு. செய்யற்க.
எதிர்மறைப் பெயரெச்ச வீறு :
தெரிநிலை,
ஆ + அது, எ.டு. செய்யாத
செய்யாத - செய்யா (ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்).
குறிப்பு : ஆது + அ. எ.டு. அல்லாத, இல்லாத. அல்லா, இல்லா, என்பன ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
எதிர்மறை வினையெச்ச வீறுகள்
தெரிநிலை
ஆது. எ.டு. செய்யாது.
ஆ + மை. எ.டு. செய்யாமை (ஆ, இடைநிலை)
மை - மே. எ.டு. செய்யாமை (ஆ, இடைநிலை)
மை - மல், எ.டு. செய்யாமல் (ஆ, இடைநிலை)
ஆ என்பது, அருமை என்னும் பண்புப்பெயரின் முதனிலையான அரு என்னும் சொல்லின் திரிபாயிருக்கலாம். அரிது என்னும் சொற்கும் அரு என்பதே மூலம்.
மை என்பது பண்புப்பெயரீறு.
குறிப்பு
அது எ.டு. அல்லது, இல்லது
ஆது எ.டு. அல்லாது, இல்லாது
ஆது+ஏ எ.டு. அல்லாதே, இல்லாதே
அது-து-று எ.டு. அன்று, இன்று
து-று-றி எ.டு. அன்றி, இன்றி
மை எ.டு. அல்லாமை, இல்லாமை
மை-மே எ.டு. அல்லாமே, இல்லாமே
மை-மல் எ.டு. அல்லாமல், இல்லாமல்
ஆல் எ.டு. அல்லால்
கால் எ.டு. அல்லாக்கால்
கடை எ.டு. அல்லாக்கடை
அது, ஆது என்பன சுட்டடிச்சொற்கள். ஏ என்பது இசை நீட்டம், அன்று, அன்றி என்பவற்றை நன்று, நன்றி என்பவை போலக் கொள்க. அல்லா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். மை பண்புப்பெயரீறு. அல்லால் என்பது அல்லாமல் என்பதன் தொகுத்தலாயிருக்கலாம். கால் காலப்பெயர். கடை இடப்பெயர். கட - கடை = கடந்துசெல்லும் இடம், இடம்.
அல், இல் என்னும் எதிர்மறைச்சொற்களின் வரலாறு
அல், இல் என்னும் இருசொல்லும் ஒலியிலும் பொருளிலும் பேரளவு ஒத்திருப்பினும், ஒரே வேரினின்று தோன்றியவையல்ல. அன்மை வேறு; இன்மை வேறு.
அல்லுதல் = பொருந்துதல், முடைதல், பின்னுதல், ஒல்லுதல் பொருந்துதல். ஒல் - அல்.
அல்-அள் = செறிவு அள்-அள்ளல் = நெருக்கம். அள்ளுதல் = செறிதல் அள்-அண்-அண்மை = நெருக்கம். அண்-அடு. அடுத்தல் = அண்மையாதல், நெருங்குதல். அடுத்த = அண்மையான, இன்னொரு. அடுத்தவன் = நெருங்கியவன், நெருங்கிய இன்னொ ருவன், இன்னொருவன், அல் என்னுஞ் சொல்லும் இங்ஙனமே அண்மைக் கருத்தினின்று மறுபொருண்மைக் கருத்தைப் பெறும்.
அல்லது = அண்ணியது, அண்ணிய இன்னொன்று, இன்னொன்று,
இம் மறுபொருண்மைக் கருத்தினின்றே, தெரிப்புக் கருத்தும் அன்மைக்கருத்தும் தோன்றியுள்ளன.
எ.டு.
திருக்குறள் அல்லது நாலடியார் தெரிப்பு (Alternative
தமிழ் அல்லது பிறமொழி or Choice)
தமிழ் அல்லாதது பிறமொழி அன்மை
தமிழ் இன்னொன்று பிறமொழி என்னும் கருத்தினின்று, தமிழினின்று வேறானது பிறமொழி என்னும் கருத்துத் தோன்றி யுள்ளமை காண்க.
அன்மைப்பொருட்கு ஆகார விடைநிலை வேண்டா விடினும், அல்லது என்னும் சொல், சொல்லாது, பொல்லாது,
சொல்லாதது, பொல்லாதது, சொல்லாமை, பொல்லாமை
முதலிய சொற்களோ டொப்புமைகொண்டு ஈற்றடி நீளப்பெற்றது. அதனால், பொருளும் தெளிவுற்றது. சொல்லாது என்னும் தெரிநிலை வினைச்சொல் வடிவம் முற்றாயும் எச்சமாயும் இருப்பதுபோன்றே, அல்லது என்னுங் குறிப்பு வினைச்சொல் வடிவும் முற்றாயும் எச்சமாயு மிருக்கமுடியும்.
அன்மைப்பொருட் சொற்றொடரில் வரும் இரு வினை முதலை யும் அன்மைப்பொருள் சார்தலின், சொற்றொடர் தலைமாறினும் பொருள் மாறாது.
எ.டு.
இளம்பூரணர் உரையாசிரியரல்லர்.
உரையாசிரியர் இளம்பூரணரல்லர்
இளம்பூரண்ரல்லர் உரையாசிரியர்
உரையாசிரியரல்லர் இளம்பூரணர்
அல் என்னுஞ் சொல்லடியாய், அஃறிணை, அல்வழி, அன் மொழித் தொகை, அல்லகுறி, என்னும் இலக்கணக் குறியீடுகள் தோன்றியுள்ளன.
இல் என்னும்சொல், அடிப்படையில் சிறுமை அல்லது குன்றற் பொருளது. குன்றற் கருத்தினின்று இன்மைக்கருத்தும் தோன்றும் ஒ.நோ. செய்யப்படுபொருள் குன்றியவினை = செய்யப்படு பொருள் இல்லாவினை. Less = of smaller quantity, senselessness = absence of sense.
இல் என்பது ஒரு சிறுமைப்பொருள் பின்னொட்டு. எ.டு. தொட்டி - தொட்டில், முறம் - முற்றில் - முச்சில், இலை என்பது திண்மையிற் சிறிய இலைவகை- இலவு என்பது நொய்ய பஞ்சு. இல்லி சிறுதுளை. இறை என்பது சிறிது என்றும் பொருள் படுவது. இடுகியது இடை. இட்டிகை சிறு செங்கல். இட்டேறி இரு வரப்பிடைப்பட்ட சிறுபாதை. உல்லி, ஒல்லி என்பன ஒடுக்கங் குறிப்பதால் உல் என்பதினின்று இல் என்னுஞ் சொல் தோன்றி யிருக்கலாம்.
சிறுமையுணர்த்தும் இவ் இல்லென்னுஞ் சொல்லே, இன்மை யுணர்த்தும் குறிப்புவினையா யிருக்கலாம்.
அல் என்னும் சொற்போன்றே, இல் என்பதும் ஒப்புமை யமைப்பால் இல்லா, இல்லாது, இல்லாதவன், இல்லாமை என்னும் வடிவுகளைப் பெற்றுள்ளது.
இல், இல்லை என்னும் இருவடிவும் இரு திணையைம்பால் மூவிடப் பொதுவான குறிப்பு வினைமுற்றுக்களாம். இல் என்பது பாலீறு பெற்றுத் திணைபால் எண்ணிட வேறுபாடு காட்டும்.
அல் என்பது இல் என்பதுபோல் தனித்து நின்று பயனிலை யாகாது என்றும் பாலீறுபெற்றே வரும்.
இல் - இலம் = இன்மை, வறுமை. இலம்படு - இலம்பாடு = வறுமை.
அல், இல் இரண்டும் ஆரியமொழிகளிலும் சென்று வழங்கு கின்றன.
எதிர்மறைத் தொழிற்பெயரீறுகள்
ஆ + மை எ.டு. செய்யாமை
ஆது + அ + (அ)து எ.டு. செய்யாதது = செய்யாத அது.
ஆ என்பது எதிர்மறையிடைநிலை; அரு என்பதன் திரிபு.
எதிர்மறை வினையாலணையும் பெயரீறுகள்
தெரிநிலை
1. இயல்பு வினைமுற்றீறு.
எ.டு. செய்திலன், செய்கின்றிலன், செய்யான்.
2. சுட்டுப்பெயர்
எ.டு. செய்யாதவன் - செய்யாதான்.
செய்யாதவன் = செய்யாத அவன்.
3. ஆ ஓவான ஈறு.
எ.டு. செய்திலான் - செய்திலோன்.
செய்யாதான் - செய்யாதோன்.
குறிப்பு
1. இயல்பீறு எ.டு. அல்லான், இல்லான்.
2. சுட்டுப்பெயர் எ.டு. அல்லாதவன் - அல்லாதான்
அல்லாதவன் = அல்லாத அவன்
3. ஆ ஓனான ஈறு எ.டு. இல்லான் - இல்லோன்.
இசின் என்னும் இடைநிலை
இசின் என்பது ஓர் இறந்தகால இடைநிலை என்று சங்கர நமச்சிவாயரும் (நன். 145, உரை), ஓர் அசைநிலையென்று நச்சினார்க்கினியரும் (தொல். சொல், 296), உரைத்தனர்.
இசின் என்பது வினையுறுப்பாக வரும் இடமெல்லாம், அது இறந்தகால வினையெச்சத்தோடு சேர்ந்தேயிருக்கின்றது. இசின் என்பதைக்கொண்ட வினைகளெல்லாம் இறந்தகால முற்றாகவே யிருப்பினும், படர்க்கை வினைமுற்றுக்களே பெரும்பாலும் பாலீறு கொண்டனவாகவும், ஏனை யீரிட முற்றுக்களும் பாலீறற்றனவாகவுமே யிருக்கின்றன.
இறந்தகால விடைநிலைகளெல்லாம் இறந்தகால வினையெச்சத் துள்ளேயே அடங்கிநிற்றலின். அதனொடு சேர்ந்துள்ள இசின் என்பது ஒரு துணைவினையாகவே யிருத்தல் வேண்டும். அது ஈ என்பதே. அது உதவிவினை யீறுகளுள் ஒன்று.
ஆயினோர், போயினோர், மேயினோர், தாயினோர் என்பன போன்று, ஈயினோர் என்பதும் படர்க்கைப் பலர்பால் இறந்த கால வினையாலணையும் பெயராம். யகர சகரப் போலியில் அது ஈசினோர் என்றாகி இசினோர் என்று குறுகும். பின்பு அது இறந்த கால வினையெச்சத்துடன் துணைவினையாகச் சேர்ந்து.
சிறந்திசினோர் (தொல். 295)
உணர்ந்திசினோர் (தொல். 601)
அறிந்திசினோர் (தொல். 643)
முதலிய சொற்களைப் பிறப்பிக்கும்.
தொல்காப்பியர் இவ்வினையின் அமைப்பை முற்றும் அறியா திருந்ததினால், இசின் என்பதை அசைநிலையாகக் கொண்டு, அதையும் சின் என்று தவறாகப் பிரித்து,
மியாஇக மோமதி இகும்சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல். (759)
அவற்றுள்
இகுமும் சின்னும் ஏனை யிடத்தொடுந்
தகுநிலை யுடைய என்மனார் புலவர் (760)
என்று வழுப்பட நூற்பா யாத்து.
மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே (102)
எனத் தன்மையொருமை யிறந்தகால வினைமுற்றை எண்ணீ றின்றியும் அமைத்துவிட்டார். அதனால், பிற்காலப் புலவர்.
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே (குறுந். 11)
கேட்டிசின் வாழி தோழி (குறுந். 30)
எனத் தன்மை முன்னிலை வினை முற்றுக்களை மட்டுமன்றி,
வேந்தனும்மே ………. புறம்பெற்றிசினே
பாடினியும்மே ………. இழைபெற்றிசினே
பாண்மகனும்மே ………. பூப்பெற்றிசினே
எனப்படர்க்கை வினைமுற்றுக்களையும் (புறம். 11), எண்ணீறும் பாலீறும் அற்றனவாக அமைத்துவிட்டனர். இது பெரிதும் மயக்கத்தை விளைத்துவிட்டது. அதனால், தொல்காப்பியர்க்குப் பதினெண்நூற்றாண்டு பிந்திய பவணந்தியாரும்,
………. சின் ………. அசைமொழி (441)
என மயங்கிவிட்டனர்.
சின் என்பது அசைநிலையாயின்; அது நீங்கியபின், நுவன்றிசினே என்னும் தன்மையொருமை வினைமுற்று நுவன்றியே என்றும்; புறம்பெற்றிசினே என்னும் படர்க்கை ஆண்பால் வினைமுற்றும் அறிந்திசினோரே (தொல். 643) என்னும் படர்க்கைப் பலர்பால் வினைமுற்றும், முறையே, புறம் பெற்றியே, அறிந்தியோரே என்றும்; நிற்கும். அவை ஆசிரியர் குறித்த சொல்லாகாமை கண்டு கொள்க.
தன்மையொருமை : ஈயினேன்-ஈசினேன்
முன்னிலையொருமை : ஈயினை-ஈசினை-இசினை
படர்க்கையொருமை : ஈயினன்-ஈசினன்-இசினள்
ஈயினள் - ஈசினள் – இசினள்
4. உரிச்சொல்
உரிச்சொல் என்பது இலக்கணவகைச்சொல் அன்று, அது பொருள்கூறப்பட்ட சொற்களும் சொல் வடிவுகளுமாகிய அருஞ்சொற்றொகுதியே அவற்றை,
உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. …..
பெயரினும் வினையினும் மெய்தடு மாறி
….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. …..
பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்
என்னும் தொல்காப்பிய உரிச்சொல் இயல்விளக்க நூற்பாவும் (782), தொல்காப்பியர் உரிச்சொற்கட்கு அகரமுதலிமுறையிற் பொருளே கூறிச்செல்வதும், உரிச்சொற்குத் தனியிலக்கண வகைத் தன்மையின்மையும்,
பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல் (442)
இன்ன தின்னுழி யின்னணம் இயலும்
என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலாம்
நல்லோர் உரிச்சொலில் நயந்தனர் கொளலே (460)
என்னும் நன்னூல் நூற்பாக்களும், வலியுறுத்தும்.
5. ஐவகைச் சொன்னிலை
1. அசைநிலை (Isolating or Monosyllabic Stage)
எ.டு. இல், ஆள்.
2. புணர்நிலை (Compounding Stage)
எ.டு. இல்-ஆள்.
3. பகுசொன்னிலை அல்லது ஈறுபேற்றுநிலை (Inflexional Stage)
எ.டு. இல்லாள்
4. கொளுவுநிலை (Agglutinative Stage)
எ.டு. செய்விப்பி.
5. தொகைநிலை (Synthetic Stage)
எ.டு. மக + கள் = மக்கள், தம் + ஆய் = தாய், ஆதன் + தா = ஆந்தா –
ஆந்தை.
6. சொற்படை வளர்ச்சி
நிலம் ஒன்றன்மேலொன்றாய் அடுக்கப்பட்டிருக்கும் பல படை களாய் அமைந்திருப்பதுபோல், சொற்களும் ஒன்றன் மேலொன் றாய் வளர்ந்துள்ள எழுத்துக்களும் அசைகளுமாகிய பல படை களைக் கொண்டுள்ளன.
1. சொன்னீட்சி
அ-அல்-அது-அந்து-அந்த-அந்தா
உ-உம்-உம்பு-உம்பர்-உம்பரம்
உ-உம்-அம்-அம்பு-அம்பல்-அம்பலம்
உ-உல்-உள்-உடு-உடல்-உடன்-உடம்பு
உ-இ-எ-ஏ-ஏண்-யாண்-யாணம்-யாணர்
உ-உல்-உள்-சுள்-சுண்-சுண்ணம்-சுண்ணம்பு-சுண்ணாம்பு
உ-உல்-முல்-மல்-மன்-மன்று-மந்து-மந்தை
2. தொழிற்பெயர் முதனிலையாதல்
நகு-நகை (தொ.பெ.) - நகைப்பு
கள்-களி (தொ.பெ.) - களிப்பு
வள்-வளை (தொ.பெ.) - வளைவு
குள் - கொள் - கொளும் - (தொ. பெ) - கொளுமு - கொளுமூ - கொண்மூ.
3. இயலொலிச்சொல் திரியொலிச்சொற் பொருள் தரல்
பள்-பண்டு, பள்-பழ-பழமை
அர்-அரங்கு. அர்-அறு-அறை
4. இயற்சொல் திரிசொற்பொருள் தரல்
தில்-திள்-திண்-திண்ணை. திள்-திர்-திரள்-திரளை. திரணை
வல்-வள்-வண்-வண்ணம்-வண்ணகம். வள்-வர்-வரி-வரணம்.
வளைத்தல் = வளைத்தெழுதல், எழுதுதல்.
உருவப் பல்பூ வொருகொடி வளைஇ (நெடுநல் 113)
வரி = வளைகோடு, எழுத்து
வரிதல் = எழுதுதல் (பிங்.) 2. சித்திரமெழுதுதல்.
வல்லோன் றைஇய வரிவனப் புற்ற, வல்லிப்பாவை (புறம். 33)
வரித்தல் = 1. எழுதுதல் வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை (சீவக. 2532).
2. சித்திரமெழுதுதல்.
திரணை என்னும் சொற்பொருளைத் திண்ணை என்னும் சொல்லே குறித்தல்போல், வரணம் என்னும் சொற் பொருளை வண்ணம் என்னும் சொல்லே குறிக்கும் என அறிக.
வள்ளுதல் = வளைதல், வளைத்தெழுதுதல்.
5. வினைவளர்ச்சி
செய் - செய்கின்று - செய்கின்றான் - செய்கின்றனன்.
6. வினைமுதனிலை வளர்ச்சி
கல்-கற்பி-கற்பிப்பி-கற்பிப்பிப்பி
நட-நடத்து-நடத்துவி-நடத்துவிப்பி-நடத்துவிப்பிப்பி
7. பெயர்வளர்ச்சி
நடத்துவிப்பிக்கின்றவனிடத்தில் (7 ஆம் வே.)
7. பின்னமைப்பு (Backformation)
ஒரு திரிசொல்லின் முதலை அல்லது ஈற்றை நீக்கி மற்றொரு சொல்லை அமைத்துக்கொள்வது பின்னமைப்பாம்.
எ.டு.
முழுத்தல் = திரளுதல், பருத்தல். முழு - முழா = திரண்ட முரசு. முழா - முழவு.
முழா - மிழா = பருத்த மான்வகை (Stag). மிழா - மேழம் - மேழகம் - ஏழகம் - ஏடகம் - ஏடு - யாடு - ஆடு.
மேழம் = பருத்த செம்மறியாட்டுக்கடா; மேழகம் = செம்மறிக்கடா.
வெம்பரி மேழக மேற்றி (சீவக. 521)
ஏழகம் = செம்மறிக்கடா, செம்மறி, வெள்ளாடு.
யாடு = ஆட்டின்பொது (தொல் : பொ. 567)
மேழகம் என்னும் சொல்லின் திரிபினின்று ஆடு என்னும் சொல்லை அமைத்துக்கொண்டது பின்னமைப்பாம்.
வேந்தன் என்னும் சொல்லினின்று வேந்து என்னும் வடிவை அமைத்ததும் பின்னமைப்பே. வேய்ந்தோன் = முடியணிந்தோன்.
வேய்ந்தோன் - வேந்தன் = முடியணிந்த சேர சோழ பாண்டியருள் ஒருவன். வேந்தன் - வேந்து.
8. சொற்பண்படுத்தம்
1. மொழிமுதலாகா முதலெழுத்தை மொழிமுதலெழுத்தாக்கல்.
எ.டு. லாலாட்டு-லோலாட்டு, லாலாட்டு-ராராட்டு - ரோராட்டு.
என்பன பண்படாத உலகவழக்கு. லாலா என்று ஆட்டுவது லாலாட்டு, ரோரோ என்று ஆட்டுவது ரோராட்டு,
தாலாட்டு - தாராட்டு, ஓலாட்டு - ஓராட்டு என்பன பண்பட்ட தமிழ் வழக்கு.
ல-த, போலி, ஒ.நோ : சலங்கை-சதங்கை, கலம்பம் - கதம்பம்.
லொளுலொளு என்பதை நொளுநொளு என்பதும், லொள் லொள் என்று குலைக்கும் நாயை ஞெள்ளை என்பதும், அஃதே.
டகரமுதல் தகரமுதலாக எழுதப்படும்.
எ.டு.
டவண்டை - தவண்டை (ஒருவகைப்பறை).
அவரை, துவரை, பனை, மலை முதலிய சொற்களின் ஐகாரவீறு, அகரவீற்றின் பண்படுத்தத் திரிபாயிருக்கலாம்.
2. சொற்களைப் பொருட்கேற்ப வேறுபடுத்தல்.
எ.டு.
தலையன், தலைவன், தலைச்சன், தலையாரி, தலைக்காரன்
கடிய, கடிக்க; கடிதல், கடித்தல்; கடிந்தான், கடித்தான்.
கடிதல் = நீக்குதல், கடித்தல் = பல்லால் வெட்டுதல்.
வெள்கு - வெட்கு, வெள்கு - வெஃகு.
வெட்குதல் = நாணுதல். வெஃகுதல் = பிறர்பொருளை விரூம்புதல்.
நீர்நிலையைக் குறிக்கும் ஆறு என்னும் சொல்லை வேற்றுமைப் புணர்ச்சியில் வலியிரட்டித்தலும், எண்ணைக் குறிக்கும் ஆறு என்னும் சொல்லை அங்ஙனம் இரட்டிக்காமையும், பண்படுத் தத்தின் பாற்பட்டதே.
தோன்றற்புணர்ச்சி வேறுபாடு :
பூக்குழல் x பூங்குழல், பனைக்கொடி x பனங்கொடி.
திரிபுப்புணர்ச்சியால் மகன்மை குறித்தல்
கீரன் + கொற்றன் = கீரங்கொற்றன் (கீரன் மகனாகிய கொற்றன்)
கண்ணன் + சேந்தனார் = கண்ணஞ்சேந்தனார் (கண்ணன் மகனாகிய சேந்தனார்)
பிட்டன் + தத்தன் = பிட்டந்தத்தன் (பிட்டன் மகனாகிய தத்தன்)
இவற்றின், நிலைமொழியீற்று னகரமெய், வருமொழிமுதல் வல்லின மெய்க்கு இனமெல்லினமாய்த் திரிதல் காண்க. வடுகஞ்சாத்தன் என்பது வடுகச்சாத்தன் என்று வலிப்பின், வடுகன் மகனாகிய சாத்தன் என்று பொருள்படாது, வடுகன் (தெலுங்கன்) ஆகிய சாத்தன் என்றே பொருள்படும்.
9. சொற்றூய்மை
தமிழ் தானே தோன்றிய பெருவளத் தாய்மொழியாதலின், சொற்றூய்மை அதன் சிறந்த பண்புகளுள் ஒன்றாம். அதனால், பண்டைத் தமிழர் அதைத் கண்ணுங்கருத்துமாய்ப் பேணி, அயல்நாட்டிலிருந்து வந்த பொருள்கட்கெல்லாம் உடனுடன் தூய தமிழ்ச்சொற்பெயர்களையே புனைந்திட்டிருக்கின்றனர்.
எ.டு.
பொருள் தோன்றிய இடம் பொருட்பெயர்
அரபி குதிரை, பேரீந்து
சீனம் கரும்பு
அமெரிக்கா, பாரசீகம் புகையிலை
அமெரிக்கா உருளைக்கிழங்கு மிளகாய்
தென் அமெரிக்கா அண்டிமா, முந்திரி, (Cashew).
மேலையாசியா (கொடி) முந்திரி
துருக்கி வான்கோழி
தென்னமெரிக்கா, செந்தாழை
மேலையிந்தியத் தீவுகள் (Pineapple)
மலையா அடைக்காய், பாக்கு புகைவண்டி
இங்கிலாந்து மிதிவண்டி (Cycle)
ஒட்டகமும் குதிரைபோல் அரபிநாட்டினின்று வந்ததே, தொல்காப்பிய மரபியலில் ஒட்டகம் குறிக்கப்படுகின்றது. தமிழ்நாடு அரபி நாட்டொடு தொன்றுதொட்டு வணிகம் செய்து வந்ததினால், ஒட்டகம் தமிழ்நாட்டிற்கு வந்ததொடு அதன்பெயரும் இலக்கியத்தில் மட்டுமன்றி இலக்கணத்திலும் இடம் பெறலாயிற்று. அதன் அரபிப் பெயர் சமல் (Jamal) என்பதாம். ஆகவே, ஒட்டகம் என்பது அக்கால மரபுப்படி தமிழ்ச்சொல்லாகவே யிருத்தல்வேண்டும். ஒரு மாதம்வரை பட்டினியிருக்கும் திறம் ஒட்டகத்தின் சிறப்பியல்பாம். ஒட்டப்போடுதல் = பட்டினியிருத்தல். ஆதலால், அத்திறம் பற்றி அதற்கு அப்பெயர் இடப்பட்டிருக்கலாம். சமற்கிருதத்தில் அதை உஷ்ட்ரக்க என்று திரித்து, அதினின்று ஒட்டகம் என்னும் சொல் வந்ததாகக் கூறுவர்; சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகர முதலியிலும், இங்ஙனமே குறிக்கப்பட்டுளது. எரிதல் வினையைக் குறிக்கும் உஷ் என்னும் அடியினின்று உஷ்ட்ரக்க என்னும் பெயர் தோன்றியதாகக் கூறுவர் வடவர். இது பொருந்தப்பொய்த்தல் என்னும் உத்தியே. ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னரே ஒட்டகம் தமிழகத்திற்குட் புகுந்து விட்டது. மேலும், உஷ் என்னும் வடசொல்லும் உள் (ஒள்) என்னும் தென் சொல்லின் திரிபே.
ஒட்டகத்திற்கு நெடுங்கழுத்தன் - நெடுங்கழுத்தல், நெடுங்கோணி என்றும் பெயருண்டு.
தமிழர் மீண்டும் தழைக்கவேண்டின். தம் முன்னோரைப்போல் தமிழைப் போற்றல்வேண்டும். ஆகவே, மோட்டார் என்பதை இயங்கி என்றும், காப்பி என்பதைக் குளம்பி என்றும், தேநீர் என்பதைக் கொழுந்து நீர் என்றும், சொல்வதே தக்கதாம்.
பிறமொழிச்சொல்லைக் கடன்கொள்வதால் தமிழ் வளரும் என்பார், தமிழறியாதவரும் தமிழ்ப்பகைவரும் தமிழைக் காட்டிக் கொடுப்பவருமே யாவர்.
10. சொல்வளம்
தமிழ் மிகுந்த சொல்வளமுடையதென்பதை, நால்வகையிலைப் பெயராலும், ஐவகைப் பூநிலைப் பெயராலும், முக்கனிகளின் பிஞ்சு நிலைப்பெயராலும், வெவ்வேறு சிறப்புப் பொருளிற் சொல்லுதலைக் குறிக்கும் அறை, இயம்பு, இசை, உரை, என், ஒது, கிள, கிளத்து, கூறு, சாற்று, செப்பு, சொல், நவில், நுதல், நுவல், நொடி, பகர், பறை, பன்னு, பனுவு, புகல், புலம்பு, பேசு, மாறு, மிழற்று, மொழி, விளத்து, விளம்பு, முதலிய சொற்ளாலும், எழுநிலைப் பெண்ணிளமைப் பெயர்களாலும், பிறவற்றாலும், அறியலாம்.
வெளிநாட்டினின்று வந்த குதிரையினத்தைக்கூட, எண் வகை யாகவும் தமிழர் வகுத்து. அவற்றிற்கேற்பப் பெயரிட்டிருக் கின்றனர். மூவேந்தர் குதிரைகளும் குறுநில மன்னர் குதிரையும் வெவ்வேறினத்தைச் சேர்ந்தவை. பாண்டியன் குதிரை கன வட்டம்; சோழன் குதிரை கோரம். இவை எண்வகையுள் அடங்காதவை.
கொடை வேண்டல் பற்றிய சொற்கள் :
ஈ என்பது இழிந்தோன் ஆளும் சொல்
தா என்பது ஒத்தோன் ஆளும் சொல்
கொடு என்பது உயர்ந்தோன் ஆளும் சொல்
தவசமணி பற்றிய சொற்கள் :
முற்ற விளைந்தது மணி; அரைவிளைச்சலானது அரைவயிறன்; உள்ளீடற்றது பொக்கு அல்லது பதர்.
சொத்தைத்தேங்காய் பற்றிய சொற்கள் :
கோட்டான் உட்கார்ந்து கோட்டான்காய் அல்லது கூகைக்காய்; தேரை அமர்ந்தது தேரைக்காய். ஒற்றையாள் தென்னை மரத்தடி யில் இளநீர் குடித்ததால் ஏற்பட்டது ஒல்லித்தேங்காய்; முற்கூறிய இருவகையும் அல்லித்தேங்காய். ஒற்றையாள் குடித்தால் ஒல்லி படும் என்பது சொலவடை. இது, பக்கத்திலிருப் பவரையும் குடிப்பியாது தனியாய்க் குடித்தல் கூடாதென்னும் தமிழப் பண்பாட்டை உணர்த்துவதாகும்.
தெண்டில் (ஓணான்) வகைபற்றிய சொற்கள் :
சில்லான், தெண்டில், ஓணான், கரட்டை, கோம்பி (பச்சோந்தி)
பிணம்பற்றிய சொற்கள்
செத்தணிமையானது சவம்; இறந்து ஒரு நாட்கு மேற்பட்டுக் கட்டுவிட்டது பிணம்; பன்னாளாகி அழுகிப்போனது அழன்.
யானை பற்றிய சொற்கள்
ஆம்பல், உம்பல், உவா, ஓங்கல், கடமா, கம்பமா, கரி, கவளமா, களிறு, கறையடி, குஞ்சரம், கும்பி, கைம்மலை, கைம்மா, சிந்துரம், தும்பி, நால்வாய், பகடு, பிணிமுகம், புகர்முகம், புழைக்கை - பூட்கை, மதமா, வழுவை, வாரணம், வேழம்.
இங்ஙனம் வேறெம்மொழியிலும் காண்டற்கரிது. வட மொழியி லிருப்பவை, பெரும்பாலும் தமிழிலிருந்து கடன் கொண்டனவும் தமிழ்ச்சொற்களின் மொழிபெயர்ப்புமே.
ஈராயிரங்கல் தெற்கு நீண்டிருந்த பழம்பாண்டி நாட்டுலக வழக்குச் சொற்களும், முதலிரு கழகத்துப் பல்லாயிரம் தனித் தமிழ் நூல்களின் இலக்கியச் சொற்களும், இன்றிருந்திருப்பின், தமிழ்ச் சொல்வளம் எத்துணைப் பரந்துபட்டிருக்கும் என்பதை உய்த் துணர்ந்து கொள்க.
11. மொழிச்செம்மை
தமிழர் அறியாமையாலும் சோம்பலாலும் தாழ்வுணர்ச்சியாலும் தமிழ்ப்பற்றின்மையாலும் ஏற்பட்ட கொச்சைவழக்கு, நீண்ட காலமாக இருந்து தான் வந்திருக்கின்றது. ஆயினும், ஏடெடுத் தெழுதும் போதும் மேடையேறிப் பேசும்போதும் திருந்திய நடையையே கையாள வேண்டுமென்று, தொன்னூலாசிரியர் ஓர் அழியா வரம்பிட்டு விட்டனர். அவ் வரம்பே, புரவலரும் புலவரும் இல்லாக்காலத்தும், பகைவரும் கொண்டான்மாரும் பல்கிய போதும், பைந்தமிழை வேலியாகக் காத்து வந்திருக்கின்றது. இவ்வரம்பு ஏனை மொழிகட்கில்லை. அதனால் அவை மக்கள் வாய்க்கு வந்த வகையெல்லாம் வழங்கி, அவற்றின் சொற்கள் பல ஒழுங்கின்றியும் உருத்தெரியாதும் போயின. தமிழுக்கு எது வழுநிலையோ அது பிறமொழிகட்கு வழாநிலையாயிற்று.
செருப்பு, திருப்பு, நெருப்பு, பருப்பு, என்பன முறையே, செப்பு, திப்பு, நிப்பு, பப்பு எனத் தமிழில் வழங்கின் வழு நிலையாம்; தெலுங்கில் வழங்கின் வழாநிலையாம்.
இகர ஐகாரவீற்றுப் பெயர்கள் 4 ஆம் வேற்றுமையேற்கும் போது, குவ்வுருபு கிய்யாகத் திரிவது தமிழுக்கு வழுநிலையாம்; தெலுங்கு முதலிய பிறமொழிகட்கு வழா நிலையம்.
எ.டு.
கிளிக்கி, மலைக்கி - தமிழ் (வழுநிலை)
புலிக்கி, அக்கடிக்கி - தெலுங்கு (வழாநிலை)
அம்மை, கரை, குடை, பனை, மழை முதலிய ஐகார வீற்றுச் சொற்களை அகரவீறாக ஒலிப்பதும், செய்ய வேண்டும் என்பதைச் செய்யேணம் என்று சொல்வதும், தமிழுக்கு வழுநிலையாம், மலையாளத்திற்கு வழாநிலையாம்.
சொற்களின் ஈற்றில் வரும் மெல்லினமெய்கள், முயற்சியொடு பலுக்கப்பெறாது மூக்கொலியளவாய் நின்றுவிடின், தமிழுக்கு வழுநிலையாம், மராத்தி, இந்தி முதலிய மொழிகட்கு வழாநிலையாம்.
ழகரத்தை லகரமாகவும், ஆகாரத்தை ஈகார ஏகாரங்கட்கிடைப் பட்ட ஒலியாகவும், ஒலிப்பது தமிழுக்கு வழுநிலையாம், ஆங்கிலத்திற்கு வழாநிலையாம்.
சொற்கள் தம் சிறப்புப் பொருளிழந்தும் வடிவு சிதைந்தும் வழங்குவது. தமிழுக்கு வழுநிலையாம்; பிறமொழிகட் கெல்லாம் வழா நிலையாம்.
பாண்டிநாட்டுத் தமிழைச் செந்தமிழ் என்றும், பிற நாட்டுத் தமிழைக் கொடுந்தமிழ் என்றும், பண்டைக்காலத்தில் பிரித்து வழங்கியது, அவற்றிற்குச் செம்மையென்னும் பண்பு உண்மை யின்மைபற்றியே, இக்காலத்துச் சில கொண்டான்மார் தலைமைத் தமிழ்ப் பேராசிரியப் பதவி பெற்று, மேனாட்டாரைப் பின்பற்றி, பொதுமக்கள் பேசுவதே மொழியென்று, பிறமொழிகளின் வழு நிலையைத் தமிழிற் புகுத்தி, அதன் செம்மையரணைத் தகர்க்கப் பார்க்கின்றனர். நக்கீரன்மார் அவரைக் கடுத்துத் திருத்துதல் வேண்டும். உலக மொழிகள் எல்லாவற்றுள்ளும், செம்மை என்னும் வரம்புள்ளது தமிழ் ஒன்றே.
12. மரபு வழக்கு
மரபாவது, இளமைப்பெயர், ஆண்பாற்பெயர், பெண்பாற் பெயர், நிலைத்திணைச் சினைப்பெயர், விலங்குக் காவலர் பெயர், அஃறிணையுயிரிகள் கத்தல்வினைகள், முதலியன பற்றி, உயர்ந் தோர் தொன்றுதொட்டு எச்சொற்களை வழங்கினார்களோ அச் சொற்களையே வழங்குதல்.
பொதுவாகப் பறவைகளின் இளமையைக் குஞ்சு என்றும் விலங்குகளின் இளமையைக் குட்டி என்றும், சொல்ல வேண்டும். ஊருயிரிகளின் இளமைப்பெயர் இவ்விரண்டில் ஒன்றாயிருக்கும். நண்டுக்குஞ்சு என்றும் எலிக்குட்டி என்றும் வழக்குமுண்டு. ஆயின், நண்டுக்குஞ்சை நண்டுக்குட்டி யென்னும் வழக்கம் இல்லவேயில்லை. மக்கள் இளமையை மகவு, குழவி, பிள்ளை என்று சொல்வதே மரபாயினும், கடைசிப்பிள்ளையைக் கடைக் குட்டி என்னும் வழக்குண்டு.
பிள்ளை என்னும் இளமைப்பெயர் ஏறத்தாழ எல்லா வுயிரினத்திலும் சென்று வழங்கும். இருக்கும் பிள்ளை மூன்று, ஓடும் பிள்ளை மூன்று. பறக்கும்பிள்ளை மூன்று என ஒரு சொலவடையுண்டு. ஆயின், இவ் வரம்பிறந்து பிள்ளைச்சொல் வழங்குவது தவறாம்.
கிழவன் என்னும் சொல் பெண்பாலிற் கிழத்தி என்றாவது போல் புலவன் என்னும் சொல் புலத்தி என்றாகும். இங்ஙனம் அமைக் காது பெண்பாற்புலவர் என்பது வழுவாம்.
தன்சொல்லைத் தவறாய் வழங்குவதுபோன்றே, அயற்சொல்லை ஆள்வதும் மரபு வழுவாம். வாலிபன், வாலிபப் பெண் என்பவற் றிற்குப் பகரமாக, இளைஞன், இளைஞை என்னும் தென்சொற் களையே வழங்கவேண்டும்.
வெங்காயப்பல், பலாச்சுளை, பனைநுங்கு, வாழைப்பழச் சதை, கற்றாழஞ் சோறு என்று கூறுவது மரபாம்.
ஆட்டிடையன், பன்றிமேய்ப்பன், குதிரைவாதுவன், யானைப் பாகன் என்றே கூறுதல் வேண்டும்.
காகம் கரைகிறது, குயில் கூவுகிறது, மயில் அகவுகிறது, ஆந்தை கிளைகூட்டுகிறது, கூகை குழறுகிறது, அல்லது (இரட்டுகிறது), தவளை பறையடிக்கிறது, பல்லி முற்கந்தெறிக்கிறது, குதிரை கனைக்கிறது, யானை பிளிறுகிறது, புலி உறுமுகிறது, அரிமா உரறுகிறது என்பன கத்தல் வினை மரபாகும்.
சோறு சாப்பிடுதல், குளம்பி (காப்பி) குடித்தல், பலகாரம் தின்னுதல் என்பதே மரபு. குளம்பி சாப்பிடுதல் என்பது மரபு வழுவாம்.
இப்பொலி ஒரு கோட்டை காணும், இம்மருந்து காது வலியைக் கேட்கும், என் வண்டி பழுதுபட்டு நூறு உருபாவைக் கேட்டு விட்டது, புதுவீடு ஒரு பெரிய உருபாவை விழுங்கி விட்டது - இவை போன்றனவும் மரபு வழுக்கே.
13. சொற்றொடர் வகைகள்
பண்டைத் தமிழிலக்கிய மெல்லாம் செய்யுள் நடையிலிருந்தமை யாலும் இலக்கணமெல்லாம் செய்யுள் மொழிக்கே எழுதப் பட்டமையாலும், உரைநடைக்குச் சிறப்பான இலக்கணக் கூறுகளைப் பழந் தமிழிலக்கண நூல்கள் எடுத்துக் கூறவில்லை.
சொற்றொடர்வகையிற் பண்டைத் தமிழிலக்கணங்கள் கூறிய வெல்லாம், அறுவகைத் தொகைநிலைத் தொடரும் எண்வகைத் தொகாநிலைத் தொடருமே. அவற்றுள், எழுவாய்த்தொடரும் விளித் தொடரும் வினைமுற்றுத் தொடரும் தொடரியம் அல்லது முற்றுச் சொற்றொடராகும். ஆயின், அவை இருசொற்றொட ரான தனித்தொடரியமே.
உரைநடைக்கு இலக்கணம் எழுதப்படாவிடினும், சொற்றொடர மைப்பு, இன்றுபோன்றே அன்றும் உலகவழக்கு மொழியில் இருந்தது. அதனால், தனித் தொடரியம், (Simple Sentence), கூட்டுத் தொடரியம் (Compound Sentence), கலப்புத் தொடரியம் (Complex Sentence), கலவை அல்லது கதம்பத் தொடரியம் (Mixed Sentence), என்னும் தொடரிய வகை நான்கும், நேர் கூற்று (Direct Speech) நேரல்கூற்று (Indirect Speech) என்னும் கூற்றுவகை யிரண்டும், இலக்கியந் தோன்றுமுன்னரே தமிழில் அமைந்திருத்தல் வேண்டும்.
iii. பொருள்
தமிழ இலக்கணத்தின் மூன்றாம் பகுதி பொருள் என்பதாகும். சொல்லிற்கே பொருளுண்மையாலும், பண்டையிலக்கிய மெல் லாம் செய்யுள் வடிவிலிருந்தமையாலும், செய்யுட்குத் தொடரிய மன்றி எழுத்து அசை சீர் தளை அடி தொடை என்பனவே உறுப் பாகையாலும், சொல்லிற்கடுத்த மொழியுறுப்பை அல்லது இலக்கணப் பகுதியைப் பொருள் என்றே கொண்டனர், முதனூ லாசிரியனும் வழி நூலாரியருமான முன்னூலாசிரியர்.
இலக்கியமெல்லாம் அல்லது எழுதப்பெற்றனவெல்லாம் செய்யு ளாயிருந்தமையால், பொருளில் யாப்பும் அடங்கிற்று. வல்லோர் அணிபெறச் செய்வனவே செய்யுளாதலால், யாப்பிவ் அணியும் அடங்கிற்று.
பொருளை அகம், புறம் என இருபாலாய் வகுத்து அவ்விருபாற் றுள்ளும் எல்லாப்பொருள்களையும் தம் நுண் மாண் நுழைபுலத் தால் வியக்கத்தக்கமுறையிவ் அடக்கியிருக்கின்றனர். இப்பொரு ளிலக்கணமே, பண்டைப்புலவரையும் புலமைமிக்க இறைவனடி யாரையும் இன்பக்கடலுள் ஆழ்த்தியது. குமரிக்கண்டப் பொது மக்கள் மொழியமைப்பில் தம் நுண்ணுணர்வைப் புலப்படுத்தி யிருப்பது போன்றே, புலமக்களும் பொருளிலக்கணத்தில் தம் நுண்மதியைச் சிறப்பக் காட்டியுள்ளனர். ஆயின், இதை இக் காலப்புலவர் காதற் சிறப்பையும் போர்த்திறத்தையுமே விளக்குவ தாகப் பிறழ வுணர்ந்துள்ளனர்.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் தலை சிறந்த செய்யுள் வகைகளைக்கண்டு, யாப்பினும் தமிழை ஒப்புயர்வற்றதாக்கியுள்ளனர் பண்டைத் தமிழிப்புலவர்.
மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு,
தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம் என்னும் இருபத்தாறு றுப்புக்களைக் கொண்டு; பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் (பழிமொழி) என்றும் எழுநிலத்தெழுந்த நால்வகைச் செய்யுட் களாலான; அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு. புலன், இழைபு என்னும் எண்வகை வனப்புக்களை (காவியங் களை) கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்னரே, முதன்முதலாக உலகில் இயற்றியவர் குமரிக்கண்டத் தமிழ்ப்புலவர். அவர் செய்யுளிற் பேச்சுவன்மையும் பெற்றிருந் தனர். அறிவிலும் ஆற்றலிலும் அவரையொத்தவர் இக்காலத் தொருவருமில்லை. இந்நாளைய தலை சிறந்த பாவலரும்,
பண்டை நல்லிசைப் புலவரை நோக்க, பாணரும் புல்லிசைப் புலவருமே (Bards and Poetasters), இற்றைத் தமிழ்ப்புலவரோ குமரிக்கண்டப் பொது மக்கட்கும் ஈடாகார்.
செய்யுள் சிறந்த கலமாகவும் அதன் பொருள் சிறந்த அமுதாகவும் கருதப்பெற்றதினால், வேறெம்மொழியிலுமில்லாத பொருளிலக் கணம், தமிழிலக்கணத்தின் கொடுமுடியும் முடிமணியும் முதிர் வினைவும் உயிர்நாடியும் தமிழனின் தனிப்பெரும் பெருமையும், ஆகக் கொள்ளப்பெற்றது.
தமிழத் துறவி
அந்தணன் ஐயன் என்னும் பெயர்கள் முதன் முதல் தமிழத் துறவியரையே குறித்தது. (த.தி.உ)
தமிழப்பார்ப்பார்
பண்டாரம், புலவன், குருக்கள், திரு(க்கள்), பூசாரி, உவச்சன், ஓதுவான், போற்றி, நம்பி, அருமைக்காரன் (புடவைக்காரன்), வள்ளுவன் முதலிய பல்வேறு வகுப்பார் ஆவர். (த.தி.உ.)
தமிழப்பூசாரி
பார்ப்பான் என்னும் பெயரும் முதன் முதல் தமிழப் பூசாரியையே குறித்தது. (த.தி.உ)
தமிழம் (1)
தமிழம் - த்ரமில (த்ரமிள) த்ரமிட, த்ரவிட.
தமிழ் - தமிழம்(பெ.) - தமிழ (பெ.எ.) (வ.வ. 172)
தமிழம் (2)
இனம் மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு என்னும் ஐங்கூறு அமைந்தது தமிழம். (த.இ.வ. முகவுரை).
தமிழர் தோற்றமும் பரவலும்
குமரிநாட்டு மக்கள் தமிழின் வெவ்வேறு நிலையில் வெவ்வேறு திசை சென்று பரவியுள்ளனர். தமிழின் முக்கட்டுகளினின்று தோன்றிய மூவிடப் பெயர்கள் ஒரு காலத்தில் குமரிநாட்டு மக்களொடு ஆத்திரேலியர்க்கும் சீனருக்கும் இருந்த உறவைக் காட்டுகின்றன. கால்டுவெல் திரவிட ஒப்பியல் இலக்கணம் (சென்னைப் பதிப்பு) 361 ஆம் பக்கம் பார்க்க.
எ.டு.
தமிழ் ஆத்திரேலியம்
ஏன், யான், நான் nga, ngali, ngatsa, nganya
நீன், நீ ninna, nginne, ngintoa, ningte
நீம், நீயிர், நீவிர், நீர் nimedoo, nura, niwa, ngurle
தமிழ் சீனம்
நான், நாம் ngo wo; women
நீன் - நீ, நீம் ni, nimen
தான், தாம் ta, tamen
நகரம் ஞகர மகரமாகவும், மகரம் வகரமாகவும், திரிதல் இயல்பே, தன்மைப் பன்மைப் பெயர் ஆங்கிலத்தில் ‘we’ என்றும் வடமொழியில் வயம் என்றும் திரிந்திருத்தல் காண்க.
மேன் (men) என்பது சீனத்தில் வகுப்பைக் குறிக்கும் தொகுதிப் பெயர். அது மன் என்னும் தென்சொல்லோடு தொடர்புடைய தாயிருக்கலாம்.
மன் - மன்று - மந்து - மந்தை. மன்னுதல் = கூடுதல், மிகுதல், பெருத்தல்.
ஐம்பாற் படர்க்கைச் சுட்டுப் பெயர்கள் தோன்றுமுன் தான் தாம் என்பன படர்க்கைச் சுட்டுப் பெயர்களாகவே யிருந்தன.
பர். (Dr.) (N.) இலாகோவாரி (Lahovary) தம் திரவிடத் தோற்றமும் மேற்கும் (Dravidian Origins and the West) என்னும் ஒப்பியன் மொழி நூலில், தமிழொடு தொடர்புள்ள மேலையாசிய மேலை யைரோப்பிய இடப் பெயர்கள், பூதப் பெயர்கள், மக்கட் பெயர்கள், உறவுப் பெயர்கள், பல்வகை உயிரினப் பெயர்கள், நிலைமைப் பெயர்கள், பல்வேறு வினைச்சொற்கள், பெயரெச்சங்கள் முதலிய நூற்றுக்கணக்கான சொற்களின் மூலத்தை அறியாது, அவற்றைத் தம் கொள்கைக்குச் சான்றுபோல் எடுத்துக் காட்டி, உண்மையில் தம் கொள்கையைத் தாமே மறுத்திருக்கின்றார்.
எ.டு. மல் = வளம். மல் - மல்லல் = வளம். மல்லல் வளனே
(தொல். உரி. 7). மல் - மலை = இயற்கை வளம் மிக்கது.
வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே (நன். பாயி. 28), இப் பொருளை மேலை மொழிகளிற் காண முடியாது. இங்ஙனமே ஏனையவும்.
“Compare Cymri (Wales). “It is stated that the original home of the Cwmry, Cumri, or Cymry was in Southern Hindustan, the Southern extremity of which Cape Comorin, takes the name from the same root” - From a Historical Souvenir issued on the occasion of the meeting of the British Medical Association at Swansea, 1903 - Editors.”
A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages, Third Edition, Introduction, p., foot-note.
பேரா. V.R. இராமச்சந்திர தீட்சிதரின், Origin and Spread of the Tamils, Pre-Historic South India என்னும் வரலாற்று நூல்களைப் பார்க்க.
தமிழன் பிறந்தகமே மாந்தன் பிறந்தகம்
ஏதேன் தோட்டத்தை (மாந்தன் பிறந்தகத்தை) மடகாசுக்கர்த் தீவின் பாங்கர்க் காணவேண்டும் என்பது எக்கேல் (Ernest Haeckel) T‰W-History of Creation.
கென்யாவிற் (Kenya) கண்டெடுக்கப்பட்ட மாந்தன் மண்டை யோடு இதுவரை கண்டவற்றுள் மிகப் பழைமையானதா யிருக்கலாம் என்பது. இலீக்கி (Richard Leakey) என்னும் ஆங்கில மாந்தனூலாராய்ச்சியாளர் கருத்து.
மடகாசுக்கர் மட்டத்திற் சற்றுக் கிழக்கே தள்ளியிருந்ததே தமிழன் பிறந்தகம்.
தமிழர் வரலாறு அமையும் வகை
காட்சிப் பொருளும் கருத்துப்பொருளும் ஆகிய ஒவ்வொன்றிற்கும் தனித்தனி வரலாறுண்டு. ஆயின், ஒரு நாட்டின் (National) அல்லது மக்கள் வகுப்பு வரலாறே பொதுவாக வரலாறெனப்படுவது. அதுவும், மக்கள் வரலாறு, மொழி வரலாறு, அரசியல் வரலாறு, சட்ட அமைப்பியல் வரலாறு முதலியனவாகப் பலதிறப்படும். அவற்றுள், அரசியல் வரலாறே கல்வித் துறையில் வரலாறெனச் சிறப்பாக வழங்குவது.
வரலாற்று மூலங்கள் (SOURCES OF HISTORY)
பொதுவாக ஒரு நாட்டு வரலாற்று மூலங்கள் பின்வருமாறு எழுவகைப்படும்.
1. தொல்பொருள்கள் (Antiquities).
பழங்காலக் கருவி, ஏனம் (கலம்), கட்டிடம், காசு, நடுகல், கல்லறை, மாந்தனெலும்பு முதலியன.
2. இலக்கியம்.
வெட்டெழுத்து. (Epigraph), திருமுகம் (Royal letter or order), திருமந்திரவோலைச்சுவடி, நாட்குறிப்பு (Diary), வழிப்போக்கர் வண்ணனை, வரலாற்றுக் குறிப்புகள், வரலாற்றுப் பனுவல்கள் அல்லது பொத்தகங்கள் முதலியன.
வெட்டெழுத்தும் பட்டைப் பொறிப்பு, (சுடுமுன்) களிமட் குழிப்பு, கல்வெட்டு, செப்புப் பட்டையம் முதலியனவாகப் பலதிறப்படும்.
3. செவிமரபுச் செய்திகள். (Traditions).
4. பழக்க வழக்கங்கள்.
5. மொழிநூற் சான்றுகள்.
6. நிலநூற் சான்றுகள். (Geological evidence).
7. கடல்நூற் சான்றுகள். (Oceanographic evidence).
நிலம், தட்பவெப்பநிலை, பழக்கவழக்கம், தொழில், உணவு முதலியவற்றால் மக்கள் உடலமைப்பும் நிறமும் வேறுபடுவத னாலும், ஒரேயினத்தில் மட்டுமன்றி ஒரே குடும்பத்திலும் நீள் மண்டை (Dolichocephalic), குறுமண்டை (Brachycephalic), இடைமண்டை (Mesaticephalic) என்னும் மூவகை மண்டையர் பிறப்பதனாலும், இங்ஙனமே ஏனையுறுப்புக்களும் நிறமும் இயற்கையாலும் செயற்கையாலும் வேறுபடுவதனாலும்,
மாந்தன் மெய்யளவியலும் (Anthropometry) குலவரைவியலும் (Ethnography) ஒரு மக்களின வரலாற்றிற்குப் பிற சான்றுகள் போல் அத்துணைத் தேற்றமாகப் பயன்படுவனவல்ல.
தமிழன் பிறந்தகமும் பழம்பாண்டிநாடுமாகிய தென்பெரு நிலப்பரப்பு மூழ்கிப்போனமையால், தொல்பொருளியற் சான்று (Archaeological evidence) இன்று அறவே இல்லாத தாயிற்று. நீலமலை, ஆனைமலை, சேரவரையன்மலை முதலிய மலைகளிலுள்ள இற்றைப் பழங்குடி மாந்தரெல்லாம், கொள்ளைக்கும்
போருக்குந் தப்பிக் கீழிருந்து மேற்சென்றவரே. அவர் மொழிகளெல்லாம், செந்தமிழ்ச் சிதைவான கொடுந்தமிழுங் கொச்சைத் தமிழுமே யன்றிக் குமரி நாட்டுத் தமிழ் வளர்ச்சி காட்டும் முந்து நிலைகளல்ல. கற்றார் தொடர்பும் நாகரிக மக்களுறவு மின்மையால், மலை நிலத்திற் கேற்றவாறு அவர்களின் வாழ்க்கைநிலை தாழ்ந்துள்ளது. தமிழரின் கற்கால நிலையெல்லாம் குமரி நாட்டிலேயே கழிந்து விட்டது. எந்தக் காலத்திலும், நாகரிக மக்கள் வாழும் நாட்டில் அநாகரிக மாந்தரும் வதியலாம். நாகரிகம் மிக்க இவ்விருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், தமிழ்நாட்டு வேட்டுவப் பெண்டிர் தழையுடையும் மலையாள நாட்டுத் தந்தப் புகைமகளிர் கோரையுடையும் அணிந்திருந்தனர். இதனால் தமிழ்ப் பெண்டிர் அனைவரும் அங்ஙனமே அணிந்திருந்தனர் என்று கூறிவிட முடியாது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, பஞ்சு மயிர் பட்டு நூலால் நூற்றுக்கணக்கான ஆடைவகைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டன. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு, சிறந்த ஆடைவகைக ளெல்லாம் தமிழகத்தினின்றே மேலை நாடுகட்கு ஏற்றுமதியாயின.
துடவரையும் கோத்தரையும் முந்தியல் (Primitive) தமிழராகக் கொண்டு, நீலமலையைத் தமிழன் பிறந்தகம் போலப் பேரா. எக்கேல் (Haeckel) கூறுவதும், திரு. புரூசுபூட்டு (Bruce Foote) தொகுத்த பழம்பொருட்களைக் கற்காலத் தமிழர் கருவிகளுங் கலங்களுமென்று கருதுவதும், இங்ஙனமே ஆதிச்சநல்லுர் முதலிய பிறவிடத்துப் பொருள்களை மதிப்பிடுவதும், தமிழின் தொன்மையறியார் தவறாகும். புதைந்து கிடக்கும் கற்கருவி களெல்லாம் கற்காலத்தன வல்ல. கடைக்கழகக் காலத்தில், ஓரி பாரி முதலிய சிற்றரசரும் அவர் படையினருமாகிய நாகரிக மக்களே, பறம்பு கொல்லி முதலிய மலைகளை அரணாகக் கொண்டு, அவற்றின்மேல் வாழ்ந்திருந்தமையை நோக்குக. தென்மாவாரியில் மூழ்கிக் கிடக்கும் குமரிமாநிலம் மீண்டும் எழுந்தாலொழிய, கற்காலத் தமிழரின் கருவிகளைக் காண முடியாது. இன்று கிடைக்கும் கற்கருவிகளெல்லாம் பிற்காலத்துக் காடுவாழ் குலங்கள் செதுக்கிப் பயன்படுத்தினவையே.
இனி, பல்துறைப்பட்டனவும் அயற்சொல்லுங் கருத்தும் அறவே யில்லவுமான முதலிரு கழக ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களும், இயற்கையாலும் செயற்கையாலும் அழியுண்டு போனமை யாலும்; அவற்றிக்குப் பிற்பட்ட கிறித்துவிற்கு முன்னைத் தமிழ் நூல்களும் ஒன்றிரண்டு தவிர ஏனைய வெல்லாம், சிதலரித்தும் அடுப்பி லெரிந்தும் குப்பையிற் கலந்தும் பதினெட்டாம் பெருக்கில் வாரி யெறியப்பட்டும் பல்வேறு வகையில் இறந்து பட்டமையாலும்; முதுபண்டை வரலாற்றிற்கு அக்காலத்து இலக்கியச் சான்றும் இல்லாது போயிற்று.
ஆரிய வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ் இலக்கியம் அனைத்தும் அழியுண்டு போயினும், தொல்காப்பியம், இறையனாரகப் பொருளுரை முதலிய நூல்களிலுள்ள வரலாற்றுக் குறிப்புக்கள் குமரிநாட்டுத் தமிழர் வாழ்க்கையையும் அந்நாட்டியல்பையும் பற்றியன வாதலால், அவை தமிழரின் முது பண்டை வரலாற்றிற் குதவுவனவே.
தொல்காப்பியம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு நூலேயாயினும் அதிற் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கி.மு. 50-ஆம் நூற்றாண்டிற்கு முந்தினவையாகும்.
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
என்று தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம்பாரனார் கூறி யிருப்பதோடு, நூல்முழுதும் என்ப என்மனார் புலவர் எனச் சார்பிற் சார்பு நூன்முறையில், முன்னூலாசிரியரைத் தொல்காப்பியர் தொகுத்துக் குறித்திருத்தல் காண்க.
உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-இல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும், பிரித்தானியக் கலைக் களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்னும் உண்மையை, பேரா. இராமச்சந்திர தீட்சிதர் எழுதியுள்ள தமிழரின் தோற்றமும் பரவலும் (Origin and Pread of the Tamils) என்னும் நூலிற் கண்டு தெளிக.
தமிழிலக்கணம், தமிழிலக்கியப் பாகுபாடு, தமிழ் மரபு, குமரிநாட்டுத் தமிழர் வகுப்புக்கள், அவர் தொழில்கள், அவர் மணமுறை, அவர் பழக்கவழக்கம், அக்காலத்து அரசியல், அக்காலப் போர்முறை முதலியன தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ளன.
இறையனா ரகப்பொருளில், முக்கழக வரலாறும், தென்மதுரை கதவபுரம் (கவாடபுரம்) என்னும் பழம்பாண்டி நாட்டுத் தலைநகர்ப் பெயர்களும், கழகப் பாண்டியர் புலவர் தொகையும்; சிலப்பதிகாரத்தில், பஃறுளியாறும் குமரிமலையும் முதற்கடல் கோளும் பாண்டிய ஆள்குடி முன்மையும்; அடியார்க்கு நல்லாருரையில், முழுகிப்போன பழம்பாண்டி நாட்டு நிலப் பரப்பும், அதன் தென் வட வெல்லைகளும், அவற்றிடைப்பட்ட பல்வேறு நாடுகளும்; புறநானூற்றில், பஃறுளியாறும் அவ்வாற்றை யுடைய பாண்டியன் பெயரும்; கலித்தொகையில், இரண்டாங் கடல்கோளும் அதற்குத் தப்பிய பாண்டியன் செய்கையும்; குறிக்கப்பட்டுள்ளன.
முதலிரு கழகமும் வரலாற்றிற்கு முற்பட்ட நெடுஞ் சேய்மைக் காலத்தன வாதலின், அக்காலத்துப் புலவர் பெயர்களும் நூற்பெயர்களும் தவறாகக் கூறப்பட்டுள்ளன. குமரி நாட்டின் தொன்மையையும் அந்நாட்டையாண்ட பாண்டியர் தொகை யையும் தமிழின் முன்மையையும் நோக்கின், முக்கழக வரலாற்றிற் குறிக்கப்பட்டுள்ள கால அளவுகள் நம்பத் தகாதனவும் நிகழ்ந் திருக்கக் கூடாதனவும் அல்ல. கடைக் கழகத்திற்குக் குறிக்கப் பட்டுள்ள கால அளவில், இடைக் கழகத்திற்கும் அதற்கும் இடைப்பட்ட காலமும் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும்.
பஃறுளியா றென்பது திருவாங்கூர் நாட்டிலுள்ள பறளியா றென்றும், அதன் கயவாயில் கடலரிப்பாற் கரைநிலங் கரைந்து போனதையே, இளங்கோவடிகளும் பிறரும் ஒரு தென்பெரு நிலத்தைக் கடல்கொண்டதாகக் கூறி விட்டனரென்றும், தமிழ்ப் பகைவரான சில ஆரியர் ஒரு புரளியை உண்டு பண்ணியுள்ளனர். தென்பாலிமுகம், தென்மதுரை, பன்மலைத் தொடரான குமரிமலை, ஏழேழ்நாடுகள், பிறநாடுகள், குமரியாறு, எழுநூற்றுக் காதவழி முதலிய செய்திகளுள் ஒன்றுகூட அவர் கூற்றால் விளக்கப்படா திருத்தல் காண்க.
இடைக்கழகத்தில் எண்ணாயிரத் தெச்சம் தமிழ் நூல்கள் இருந்தன, என்பது போன்றவை செவிமரவுச் செய்திகள்.
பழக்க வழக்கங்கள் என்பன, இலக்கியத்திற் சொல்லப்பட்டுள்ள னவும் இன்று நடைமுறையிற் காண்பனவுமான பல்துறை மரபு வினைகள்.
தமிழின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, (சொல்) வளம், தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய நிலைமைகளையுணர்த்தும் சொற்களும் சொல்லமைப்பும் சொற்றொடரமைப்பும் மொழியியற் சான்றுகளாம்.
பல்வேறு ஊழிகளில், நீர்வினையாலும் நெருப்புவினையாலும் தோற்றமும் மாற்றமுமடைந்த, நிலப்படைகளும் பாறைகளும் மலைகளும் நிலநூற் சான்றுகளாம்.
நாடும் நகரும் ஆறும் மலையும் கடற்குள் மூழ்கியிருப்பதும், கடலின் பரப்பும் எல்லையும் ஆழமும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வகையில் மாறியிருப்பதும், கடற்நூற் சான்றுகளாம்.
கடைக் கழகத்திற்குப் பிற்பட்ட தமிழக வரலாறு, ஆள்குடி (dynasty) வாரியாகவும் ஆள்நில (territory) வாரியாகவும் நூற்றாண்டு வாரியாகவும், அரச வாரியாகவும் வெவ்வேறு வரலாற்றா சிரியரால் இயன்றவரை காலக்குறிப்புடன் விளத்தமாக வரையப் பட்டுள்ளது. ஆதலால், கடைக்கழகத்திற்கு முற்பட்டது மக்கள் வரலாறாகவே யிருக்க, பிற்பட்டதே மக்கள் வரலாற்றோடு அரசியல் வரலாறாகவும் அமைதல் கூடும்.
கி.பி. 900-இற்கு முற்பட்ட தென்னாட்டுத் தமிழரையங்களின் துல்லிபமான காலக்குறிப்போடு கூடிய தூய கிளத்தியல் (narrative) அரசியல் வரலாற்றை இன்றெழுத வியலாது ….. இதற்கு மறுதலையாக, துல்லிபமான காலக்குறிப்பை நீக்கியமைவோ மாயின், திரவிடரின் குமுகாய வரலாற்றைத் தொகுத்து வரைதற்கு வேண்டிய கருவிச் சான்றுகள் பேரளவில் உள்ளன என நம்புகின் றேன். அத்தகைய வரலாறு, திரவிட இனங்களின் மொழிகளிலும் இலக்கியங்களிலும் பழக்க வழக்கங்களிலும் போதிய அளவு தேர்ச்சிபெற்ற புலவரால் வரையப்பெறின், அது அனைத்திந்திய வரலாற்றாசிரியனுக்கு இன்றியமையாத துணை யாயிருப்பதுடன், இந்திய நாகரிக வளர்ச்சி மாணவன் தன் துறைப்பொருளை உண்மையான அமைப்பிற்காணவுஞ் செய்யும். என்று வின்சென்று சிமிது வரைந்திருத்தல் காண்க. (Early India, pp. 7 and 8.) அவர் காலத்திற்குப்பின் பல கருவி நூல்கள் வெளிவந்துள்ளமையால் இன்று தமிழக அரசியல் வரலாற்றை 7-ஆம் நூற்றாண்டினின்று தொடங்குதல் கூடும்.
தமிழ்மொழி, குமரி நாட்டு மாந்தர் தம் கருத்தை யறிவித்தற்கு முதன் முதலாக வாய்திறந் தொலித்த காலந்தொட்டு, இன்று வரை இடையறாது தொடர்ந்து வழங்கிவருவதனாலும்; இயற்கை யாலும் செயற்கையாலும் சிதைவுண்டு மிக வளங்குன்றியுள்ள இந்நிலையிலும், தமிழரின் கொள்கை கோட்பாடுகளையும் நாகரிகப் பண்பாடுகளையும் மதிநுட்பத்தையும் பேரளவு தெரிவிப்பதனாலும்; எழுவகை வரலாற்று மூலங்களுள்ளும் தலை சிறந்தது மொழியியலே யாம்.
தமிழர் வாழ்க்கைக் குறிக்கோள்
உலகில் இன்பத்தை நுகரவேண்டுமென்பதே பொதுவாக எல்லா மாந்தர்க்கும் இயல்பான நோக்கம். அவ்வின்பத்திற்குப் பொருள் இன்றியமையாதது. பொருள் சிறந்தபின், தனக்கு
மிஞ்சித்தானம், பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே. என்னும் நெறிமுறைப் படி, தான் நுகர்ந்ததுபோக எஞ்சியதை உழைக்கவியலாதவரும் துறவியருமான பிறர்க்கு அளிப்பதும் இயல்பே. இதுவே அறமெனப்படுவது. இங்ஙனம் இன்பம், பொருள், அறம், என்னும் முக்குறிக்கோள் இயற்கையாகத் தோன்றின. அறத்தைச் சிறப்பாக நோக்காது இன்பத்தையே நோக்கும் இன்பநூல்களும் இலக்கண நூல்களும் இம்முப்பொருளையும் இம்முறையிலேயே குறிக்கும்.
இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டங் காணுங் காலை (கள.1)
என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க.
தமிழர் புறநாகரிகத் துறைகளில் மட்டுமன்றி அகநாகரிகமான பண்பாட்டுத்துறையிலும் மறுமைக்குரிய சமயத்துறையிலும் தலைசிறந்திருந்த தினால், சமயநூலாரும் அறநூலாரும் அறத்திற்கே சிறப்புக் கொடுத்து அறம்பொருளின்பம் எனத்தலைமாற்றிக் கூறினர்.
அந்நிலை மருங்கின் அறமுத லாகிய
மும்முதற் பொருட்கு முரிய வென்ப (செய்.105)
என்று தொல்காப்பியமும்,
அறனும் பொருளும் இன்பமு மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம் (28)
சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்
அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல (31)
என்று புறநானூறுங் கூறுதல் காண்க. அறவழியிற் பொருளையீட்டி அதைக் கொண்டு அறவழியில் இன்பம் நுகர வேண்டுமென்பது கருத்து. இன்பம் என்பது முதற்கண் இவ்வுலக வின்பத்தையும் பின்பு அதனோடு விண்ணுலக வின்பத்தையும் அதன்பின் அவற்றோடு வீட்டுலக வின்பத்தையுங் குறித்தது. இது சமயத்துறை பற்றிய நாகரிக வளர்ச்சியைக் காட்டும். வீட்டின்பம் பலவகையில் ஏனையிரண்டினும் வேறுபட்டதாதலின், பின்னர் அறம் பொருளின்பம் வீடு எனப் பிரித்துக் கூறப்பட்டது. ஆயினும் வீடென்பது அறம் என்னும் வாயில் வகையிலும் காதலின்பம் என்னும் உவமை வகையிலுமன்றி வண்ணனை வகையிற்
கூறப்பட வியலாதாதலின், நாற்பொருளும் நூலளவில் என்றும் முப்பாலாகவே இருக்கும். அதனாலேயே திருக்குறட்கும் முப்பால் என்று பெயர். நாற்பொருளும், மாந்தர்க்கு நன்மை செய்தல் பற்றி உறுதிப் பொருள் என்றும், சிறப்புடைமை பற்றி மாண்பொருள் என்றும் கூறப்படும். கல்வியின் பயன் கடவுள் திருவடியடைதல் என்னுங் கருத்தெழுந்தபின், நாற்பயனே நூற்பயன் என்றாயிற்று.
அறம்பொரு ளின்பம்வீ டடைதல் நூற்பயனே.
என்பது நன்னூற்பாயிரம் (10).
அறம், பொருள், இன்பம், வீடு, என்னும் நாற்சொல்லையும், முறையே தர்ம அர்த்த காம மோக்ஷ என மொழிபெயர்த்தனர் வடமொழியாளர். ஆயின், தமிழில் அறம் என்பது நல்வினையையும், வடமொழியில் தர்ம என்பது வருணாச்சிரம தருமம் என்னும் குலவொழுக்கத்தையுமே குறிக்கும்.
தமிழரசர் கால மக்கள் நிலைமை
தமிழரசர் காலத்தில், தமிழ் மக்கள், திணைநிலை திணை மயக்க நிலை ஆகிய இருநிலைப்பட்டு வாழ்ந்துவந்தனர். குறிஞ்சியில் குறவரும், முல்லையில் இடையரும், மருதத்தில் உழவரும், நெய்த லில் செம்படவரும், பாலையில் கள்ளர் மறவர் முதலியோருமாக, ஒவ்வொரு திணைக் குலமும் தனித்தனி வாழ்வது திணை நிலை: சிற்றூரிலும் பேரூரிலும் நகரிலும் மாநகரிலும் பலதிணைக்குலம் கலந்து வாழ்வது திணை மயக்க நிலை.
முதலாவது மருதநிலத்தூர்களிலும், பின்னர்ப் பிற நிலத்தூர் களிலும் திணைமயக்க நிலையாலும் தொழிற் பிரிவினாலும் பல குலங்கள் ஏற்பட்டிருந்தன. ஆசிரியரும் பூசாரியரும் துறவியரும் அந்தணர் என்றும், ஆட்சி வினை பூண்டோர் அரசர் என்றும், விற்பனையும் இருவகை வாணிகமும் மேற்கொண்டோர்
வணிகர் என்றும், உழுதும் உழுவித்தும் உண்போர் வேளாளர் என்றும் கைத்தொழில் செய்பவர் வினைவலர் என்றும், குற்றேவல் செய்பவர் ஏவலர் என்றும்,இரந்துண்போர் இரப்போர் என்றும் மருதநிலை மக்கள் எழுபெரு வகுப்பினராக வகுக்கப்பட்டு நால்வகை நிலத்தும் நாடுமுழுவதும் பரவினர்.
முற்கூறியவாறு பெருநகரங்களில் வந்து தங்கிய அயல்நாட்டார், நாடுபற்றிய குலத்தினராய் வாழ்ந்து வந்தனர்.
மக்களெல்லாரும் பெரும்பாலும் முன்னோர் தொழிலையே செய்துவந்தாலும், அவருக்கு விரும்பிய தொழிலை மேற்கொள்ள உரிமையிருந்தது. பிறப்புப்பற்றிய குலப்பிரிவும், அப்பிரிவுபற்றிய ஏற்றத்தாழ்வும், தீண்டாமையும், முற்காலத்திலில்லை. தொழில் பற்றிய குலப்பிரிவும், அறிவும் துப்புரவும் ஒழுக்கமும் பற்றிய ஏற்றத்தாழ்வுமே இருந்து வந்தன. கல்வி எல்லாருக்கும் பொது வாயிருந்தது. பாணர் இசை நாடகத் தொழிலையும், வள்ளுவர் கணியத் தொழிலையும், மழிவினைஞர் செல்லியத் தொழிலையும் (Surgery), எங்கும் நடத்திவந்தனர்.
கரும்பு தின்னக் கைக்கூலி கொடுக்கவும், குழை கொண்டு கோழியெறியவும், விளைவுஞ் செல்வமும் விஞ்சியிருந்தன.
அறிவும் அருளுஞ்சான்ற அந்தணரும், தம்மையுந்தம் புதல்வரையும் முறைசெய்யும் அரசரும்,
வடுவஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும் (பட்டினப்பாலை, 208 - 211)
வணிகரும், விருந்திருக்க வுண்ணாத வேளாளரும் பல்கியிருந்தனர்
.
பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டு, உழவனையே தலைமைக் குடிவாணனாகப் பண்டைத் தமிழ்நாடு போற்றி வந்தது. மக்களிடை ஒற்றுமையும், அரசனுக்கும் குடிகட்கும் இடையே இருதலையன்பும், இருந்துவந்தன. அரசனாணை என்ற தொடர்மொழிக்குக்கூட அனைவரும் கட்டுப்பட்டிருந்தனர்.
பிறப்புப்பற்றிய குலப்பிரிவு தமிழ்நாட்டில் ஏற்பட்டதிலிருந்து, தமிழ்நாட்டு நிலை மாறிவிட்டது. தமிழருக்குள் குலப்பற்று மிகுந்து இனவுணர்ச்சி (National feeling) குன்றிப் போயிற்று. தீண்டாமையாலும் அதனிலுங்கொடிய காணாமையாலும் தாக்குண்ட ஒருசார்த்தமிழினம் தன் சீரிய நிலைமையையும், மக்க ளுரிமையையும் இழந்தது. சுருங்கச் சொல்லின், தமிழினம் முழு வதும் பல்வேறுவகையில் சின்னபின்னப்பட்டுத் தாழ்வடைந்து விட்டது.
அடிக்கடி நிகழ்ந்த போராலும், இடையும் இறுதியும் ஏற்பட்ட அயலார் ஆட்சியாலும், படையேறு குழப்பத்தாலும், கொள்ளை யாலும், வெள்ளத்தாலும், பஞ்சத்தாலும், வரிக்கொடுமை
யாலும், பொதுமக்கள் நிலைமை வரவரச் சீர்கெட்டுவந்தது. வறுமையும் அடிமைத்தனமும் வளர்ந்தோங்கின. தனியடிமையும் கொத்தடி மையும் குலவடிமையுமாகப் பற்பலர் மீளா அடிமைப் பட்டு, அவர் வழியினரும் அந்நிலையராயினர். வெளியார் திரள் திரளாய் வந்து குவிந்ததினாலும், மக்கள் தொகை மிக்கதினாலும், பொருளா தார வீதங் குன்றிற்று. குடிகள் வலசைபோனதினால் சில ஊர்கள் குடிப்பாழாயின. அன்பாட்சி நீங்கி அதிகாரவாட்சி ஓங்கியதால், குடிகள் பெரும்பாலும் அஞ்சி வாழ வேண்டிய தாயிற்று. மக்களி டையே ஒற்றுமையும் நாட்டுப் பற்றும் அரசப் பற்றும் மறைந்தன.
இங்ஙனம், தமிழாட்சி முடிவுற்ற 17ஆம் நூற்றாண்டுத் தமிழகம், பலவகையிலும் அலைப்புண்டு அல்லற்பட்டிருந்தது.
தமிழரும் பிராமணரும் ஒத்து வாழ்தல்
ஆரியர் இந்தியாவிற்குட் புகுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, தமிழர்க்கு முழு வளர்ச்சி யடைந்த மெய்ப்பொருளறிவு மிக்க இரு மதமும் இருந்தன. அவருக்குப் புதுமொழியும் மதமும் இம்மியும் தேவையில்லை. ஆயின், தமிழரொடு தொடர்பு கொண்ட பின் பிராமணர் எனப் பெயர் பூண்ட ஆரியப் பூசாரியர், பழந்தமிழ் மக்களின் மதப்பித்தத்தையும் கொடைமடத்தையும் ஏமாளித் தனத்தையுங் கண்டு, அவரை என்றைக்கும் அடிப்படுத்தியாள எண்ணங் கொண்டு, உரோமை நகரிலிருக்கும்போது உரோமையர் போல் நடந்துகொள். (“ When you are at Rome do as Rome does.”) என்னும் பழமொழிக்கு மாறாக, தமிழரையே தம் விருப்பப்படி நடக்கச் செய்துவிட்டனர். அதற்கு அவர் வகுத்த திட்டங்கள் தமிழரைத் தாழ்த்துவதும் அவர் மதத்தை மாற்றுவதும் அவர் மொழியைத் தாழ்த்திப் படிப்படியாய் ஒழிப்பதுமாகும். ஆகவே, தமிழன் தாழ்வே பிராமணன் வாழ்வு என்றும், தமிழின் தாழ்வே சமற்கிருதத்தின் வாழ்வு என்றும், ஆகிவிட்டன. அதனால் ஈரின மும் சமமாக வாழ்தல், புலியும் மானும் ஒருகாட்டுள்ளும், பருந்துங் கிளியும் ஒரு கூட்டுள்ளும், கீரியும் பாம்பும் ஒரு வளைக்குள்ளும், சமமாக வாழ்தல் போலாயிற்று.
ஏமாற்று வாழ்வு நீடிக்காது. (“Cheating play never thrives.”) ஒரு குற்றத்தை மறைக்குந்தொறும் குற்றம் பெருகும் ஓர் உண்மையை மறைக்குந்தொறும் பொய் பல்கும். எண்ணையும் உண்மையும் இறுதியில் மேற்படும். (Oil and truth will get uppermost at lost.”)
பிராமணப் புலவர் பலர் செய்த தமிழ்த் தொண்டைச் சுட்டி, பிராமணரெல்லாரும் தமிழ்ப் பற்றாளர் என்று நாட்டிவிட முடியாது. பிராமணர் தமக்கென நாடும் மொழியுமின்றி, இந்தியாவிற் பல நாடுகளிலுஞ் சென்று தங்கி அவ்வந்நாட்டு மொழியைத்தத்தம் தாய்மொழியாகக் கொண்டு வாழ்கின்றனர். இதனால், வேதம் ஓதுவதிலும் சமற்கிருதத்தை வளர்ப்பதிலும் பிராமண வுயர்வைக் காத்துக்கொள்வதிலும் ஒன்றுபட்டிருப் பினும், தாய்மொழி வகையிலும் வாழிட வகையிலும் வேறு பட்டுள்ளனர். தாய்மொழியைப் பேசாதும் பேணாதும் ஒருவன் வாழவும், அதிற் புலமை பெறாது ஒருவன் உயரவும். முடியா தாகையால், தமிழ்நாட்டுப் பிராமணர் தமிழ்ப் புலமை பெறுவதும் சிறந்த தமிழ் நூலியற்றுவதும் அடிப்படையில் தந்நல வினையே என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆதலால், கடமையை அறமாகக் கூறுதல் பொருந்தாது. இனி, பிராமணர் எத்துணைப் பெரும்புலவரேனும், அவருக்கு முதற்பற்று சமற்கிருதத்தின் மீதேயுள்ளது. அதனால், சமற்கிருதத்தைத் தலைமையாகவும் தமிழைக் கீழ்த்துணையாகவுமே கொள்கின்றனர்; இயன்ற விடமெல்லாம் தமிழ்ச்சொற்கட்குத் தலைமாறாகச் சமற்கிருதச் சொற்களையே ஆள்கின்றனர். அதோடு, ஆங்கிலம் முதலிய அயன்மொழிச் சொற்களை மொழி பெயர்ப்பதுமில்லை. இது தனித்தமிழ் மீதுள்ள வெறுப்பையே காட்டுகின்றது. சமற்கிருதச் சொற்களையும் எழுத்துப் பெயர்க்காது வடவெழுத் தோடு தற்சம வடிவில் எழுதுவதே அவர் வழக்கம்.
வடமொழி தேவமொழி யென்னுங் காலம் மலையேறி விட்டது. தமிழ் வடமொழிக்கும் மூலமாதலால், வடமொழியைத் தேவமொழி யெனின், தமிழைத் தேவதேவ மொழி யெனல் வேண்டும்.
ஆகவே, பிராமணர் பழைய செருக்கை விட்டுவிட்டுத் தமிழரொடு உடன்பிறந்தார் போல் ஒன்றி வாழ்வதே தக்கது. அதனாற் பகைமை நீங்கும். பிராமணர் முதலமைச்சருமாவர். தலைமைப் பதவிகளை அவர் தாங்கத் தடையிராது. தகுதி பற்றி வேலை கிடைக்குமாதலால், பெருந்தொகையான பிராமணர் அரசியல் அலுவல்களைப் பெறவும் வாய்ப்பிருக்கும் பிராமண வுண்டிச் சாலைகள் பற்றியோ, பிராமணர் கோயிற் போற்றியர் (அர்ச்சகர்) ஆதல் பற்றியோ, எதிர்ப்பிருக்காது.
தமிழ்நாட்டுப் பிராமணர், இன்று தமிழ்நாட்டாரும் தமிழ் பேசுவோருமா யிருக்கின்றனரே யன்றித் தமிழராயில்லை. பரிதிமாற்கலைஞன் போல் தமிழை ஒரே உண்மையான தாய் மொழியாகக் கொள்ளின், முழுவுரிமைத் தமிழராவர். அதுவரை அயலார் போன்றே கருதப்படுவர்.
பாரதக் காலத்தையோ இராமாயணக் காலத்தையோ ஆரியர் வந்த காலத்தையோ, பல்லாயிர வாண்டு முன்தள்ளிப் போட்டு விடுவதனால் ஒரு பயனும் விளையாது. தம்பி அகவை பதிவேட்டிற் குறித்திருப்பதினும் மிகுந்த தென்று கணிக்கப்படின், அவனுக்குப் பல்லாண்டு முன் பிறந்த தமையன் அகவை தானே மிகுதலையும், அதனால் தந்தை பாட்டன் முதலிய முன்னோரகவையும் தாமே மிகுதலையும் காண்க. தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலக முதன்மொழியாதலால், எந்த வானநூற் கணிப்பும் அதன் முதன்மையைக் கடுகளவுந் தாக்காதென்பதைத் தெற்றெனத் தெறிந்துகொள்க.
இனி, பம்மல் சம்பந்த முதலியாரின் தந்தையார் திருமணம் பொருத்தமில்லதெனக் கணித்த அற்றைச் சென்னைத் தலைமைக் கணியர் தவற்றையும், கோவலன் புகாரினின்று மதுரை சென்ற காலத்தைக் கி.பி. 8ஆம் நூற்றாண்டென்று சாமிக்கண்ணுப் பிள்ளை தவறாகக் கணித்ததை, கி.பி.2ஆம் நூற்றாண்டென்று ஏ.சு. இராமச்சந்திர தீட்சிதர் திருத்தியதையும், நோக்குக.
ஊமைப்போர்
குலவியல், மொழியியல், மதவியல், பொருளியல் ஆகிய நால் துறையிலும், பிராமணர்க்குந் தமிழர்க்கும் இடையே நடந்து வரும் ஊமைப்போர் வரவர வலுத்துவருவது, இருவகுப்பாரும் அறிந்ததே. பிராமணர் தம் முன்னோரின் ஏமாற்றுக்கலையை அறவே விட்டுவிட்டுத் தமிழருடன் ஒன்றி, உண்மையான தமிழராக மாறி நாட்டிற்கும் மொழிக்கும் உண்மையாக ஒழுகி வருவதே அறிவுடைமையாம்.
நெல்லை அருளூண் வெள்ளாளரும் வெள்ளாண் முதலியாரும் வெள்ளாண் செட்டியாரும் அவர் போன்ற பிறரும், பிரா மணர்க்கு எவ்வகையிலும் இம்மியுந் தாழ்ந்தவ ரல்லர். குலத்தில் ஒன்றாவிடினும் மொழியில் ஒன்றுவது இன்றியமையாததாம்.
தமிழன் அரசியற் கட்சிகளால் கெட்டது
1. நீதிக்கட்சி: ஆரியர்க்கும் தமிழர்க்கும் மொழிப்போர் தொன்று தொட்டு நடந்து வருகின்றதேனும், அது பொது மக்களுக்குத் தெரிவதன்று.
ஆரியரால் திராவிடர்க்கு நேரிந்துள்ள சமுதாயத் தீங்குகளை, முக்கியமாய் அலுவற்குறைவை, நீக்குவதற்கு, நீதிக்கட்சி தோன்றினது. ஆனால், அக் கட்சியில் சில குறைபாடுகள் இருந்தன. அதனால், தமிழர்க்கு ஒரேயொரு துறையில்தான் நலம் பிறந்தது. அதுவும் நீடிக்கவில்லை.
நீதிக்கட்சித் தலைவர்கள் தெலுங்கரும், மலையாளியரும் தமிழறியாதவருமாக இருந்ததினால், தமிழ் வளர்ச்சிக்கோ தமிழ்ப்புலவர் முன்னேற்றத்திற்கோ ஒன்றும் செய்யவில்லை. அவருட் பலர் கிழார் (ஜமீன்தார்)களாக இருந்தமையால் குடியரசுக்கு ஏற்காதவர்களாயும் பொது மக்களோடு தொடர் பில்லாதவர்களாயுமிருந்தார்கள். விடுதலைக்கட்சியே வெல்லும் என்பதையும், ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் ஒரு காலத்தில் நீங்குமென்பதையும் அறியாமல், ஆங்கிலேயருடன் அளவிறந்து ஒத்துழைத்து பழியையுங் கட்டிக் கொண்டார்கள். கடைசியில் தங்கள் கட்சி வேலையும் செய்யாமல் தேர்தலில் தோல்வியுற்ற பின் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டார்கள். இது அவர்கள் செய்த தவறுகளில் மிகப் பெரிது.
தமிழன் ஆரியத்தால் கெட்டது
தமிழன் கெட்டவழிகளில் மிகக்கொடியது ஆரியமே. ஆரியரைப் போலக் குலப்பற்றுள்ள வகுப்பார் வேறெவரும் இல்லையென்றே கூறலாம்; ஆரியர் தமிழ் நாட்டிற்கு வந்ததைப்பற்றியும், தமிழர் அவரை வளம்படுத்தியதைப் பற்றியும் யாம் ஒன்றும் சொல் வதற்கில்லை. ஆனால், ஆரியர் தம்மை தாங்கிய தமிழரையே கெடுக்கின்ற நன்றிக்கேடு பொறுக்குந்தரத்தன்று.
ஆரியத்தால் தமிழர்க்கு விளைந்த தீங்குகளை இரு வழியாகப் பிரிக்கலாம்:
1. குலப்பிரிவினை
மேனாட்டாரைப் போல ஒரே சமூகமாய் உறவாடிக்கொண்டிருந்த தமிழரைப் பற்பல உறவு கலவாத தனிக் குலங்களாகப் பகுத்து, அவற்றுக்கு உயர்வு தாழ்வும் பிறப்பாற் சிறப்பும் கற்பித்து, அவை யெல்லாம் தமக்குத் தொண்டுசெய்யும்படி தம்மைத் தலையாகச் செய்து கொண்டனர் ஆரியர். அவர் வருமுன் தமிழர்க்குள் இருந்த குலப்பகுப்பு ஒழுக்கமும் தொழிலும் பற்றியதேயன்றிப் பிறப்புப்பற்றியதன்று.
ஒழுக்கமுடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்று தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனாரே, ஆரியர் வகுத்த குலப்பகுப்பைக் கண்டித்திருக்கின்றார்.
ஆட்சியதிகாரம் அக்காலத்தில் அரசரிடமிருந்தது; அதனால், ஆரியர் முதலாவது அரசரையே அடுத்தனர். இக்காலத்தில் குடி களிடமிருப்பதால் இன்று அவர்களை அடுக்கின்றனர். அரசனிடம் அதிகாரமிருந்த அக்காலத்தில், ஆரியர் பல வலக்காரங்களால் அரசரை வசப்படுத்தினதினால், குடிகள் ஆரியத்தீங்கைத்தடுக்க முடியவில்லை. ஆயினும் ஆரிய அன்முறையை (அநியாயத்தை)ப் பொறாத சில புலவரும் துறவிகளும் ஆரியத்தைக் கண்டித்தே வந்தனர். சித்தரின் பார்ப்பனீயக் கண்டனத்தைப் பதினெண்சித்தர் ஞானக்கோவையிற் பரக்கக் காண்க.
தமிழர் மதிநுட்பமுள்ளவரானாலும் பழைமையான குலத்தைச் சேர்ந்தவராதலாலும், பிறர்க்குத் தீங்கு கருதாதவராதலாலும், தம்மைப் போலப் பிறரை எண்ணி அயலாரையெல்லாம் நம்பி வேளாண்மை செய்யும் தன்மையராயிருந்தனர். ஆரியர் ஏற்பாடும் சிறிது சிறிதாய் நெடுங்காலம் நடைபெற்றதன்றித் திடுமென்று தோன்றியதன்று. மதத்தினால் எவரையும் நம்பும் சில மதப் பித்தரான தமிழரும் இருந்தனர்.
குலப்பிரிவினையால் முதலாவது தமிழரின் வலிமை அழிந்தது. ஒரு பெரிய நாட்டைக் கெடுப்பதற்குப் பிரிவினை ஒரு சிறந்த வழி. குலப்பிரிவினை போன்றே மதப் பிரிவினை கட்சிப் பிரிவினை களாலும் தமிழக்குலம் சிதைக்கப்பட்டுக் கிடக்கின்றது.
குலப்பிரிவினையால் தமிழரின் வீரமும் அழிந்தது. ஒருவன் தன்னினும் மேற்குலத்தானாகக் கருதப்படுகிறவனைக் கண்டவுடன் தன்னைத் தாழ்ந்தவனாக நினைத்துக் கொள்கிறான். அவனுக்கு எப்படி வீரம் பிறக்கும்? தாழ்த்தப்பட்டோரோ தீண்டவும் அண்ட வும் பெறாமையால், அவரது வீரம் அறவே அழிந்த தென்றுங் கூறலாம். தீண்டாதவன் ஒருவன் ஒரு பார்ப்பனரைக் காணின் அஞ்சி ஒடுங்குகிறான். அவன் நரம்பு தளர்ந்து விடுகின்றது, தாழ்த்தப்பட்டோர்க்குத் தீண்டாமையால் வந்த தீமை கொஞ்ச நஞ்சமன்று. உயர்குலத்தால் வாழும் அல்லது பயிலும் இடத்தில் குற்றேவலும் கூலிவேலையுங்கூட அவனுக்குக்கிடைப்பதில்லை. ஒரு நீதிமன்றத்தில் அல்லது அலுவலகத்தில் (Office) சேவகன் அல்லது வாயிற் காவலன் வேலை அவனுக்குக் கிடைப்பதும் பெறற்கரும் பேறாயிருக்கின்றது.
சில ஊர்களில், தாழ்த்தப்பட்டோர் அக்கிராகரத் தெரு வழியே செல்லவும், ஊர்க்குளங்களிற் குளிக்கவும், இன்னும் வியப்பாக, மேலாடையும் சட்டையும் அணியவும் விடப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டோரின் சிறாரைப் பிறகுலச்சிறார் பயிலும் பள்ளிக் கூடங்களிலும் சேர்ப்பதில்லை. இதனாற் கல்வியும் அவர்க் கில்லாது போயிற்று. இத் தீமைகளெல்லாம், விடையூழியரின் (மிஷனரி மாரின்) துணிவாலும், நீதிக்கட்சியினரின் முயற்சியினா லும், நீங்கி வருகின்றது. ஆயினும், இன்னும், தாழ்த்தப்பட்டோர் இந்துக்களாயிருந்த விடத்தும், அவர் சிறார் சில திண்ணைப் பள்ளிக் கூடங்களிலும், திருவாவடுதுறை, தருமபுரம் முதலிய இடத்து மடத்துப் பள்ளிகளிலும் சேர்க்கப்படுவதில்லை.
பண்டைக்காலத்தில், பறையருள் ஒருபிரிவினரான பாணர் இசைத்தொழிலராயிருந்து இசைத் தமிழை வளர்த்துவந்தனர். தீண்டாமையால் பிற்காலத்தில் அவர்க்கு உயர்குலத்தாரிடத்தில் இடங்கிடையாமற் போனதினாலும், பார்ப்பனர் இசைத் தொழிலிற் புகுந்தமையாலும், பாணர்க்குப் பிழைப்புக் கெட்டதுடன் இசைத்தமிழும் மறைந்து போயிற்று.
வள்ளுவர்க்குரிய கணிய (ஜோதிட)த் தொழிலையும் பார்ப்பனர் கைப்பற்றிக்கொண்டனர்.
மருத்துவம் பண்டைக்காலத்தில் பல அம்பட்டரால் செய்யப் பட்டு வந்தது. சத்திரவித்தை என்னும் அறுப்பு மருத்துவமும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மருத்துவத்தினாலேயே அம் பட்டர்க்குப் பண்டிதன், பரிகாரி என்ற பட்டங்கள் உண்டாயின. பரிகாரி என்பது இன்று பரியாரி என மருவி வழங்குகின்றது. இன்றும் பலவிடங்களில் அம்பட்டர் மருத்துவராயிருக்கின்றனர். ஆயினும், குலத்தாழ்வு பற்றி அவரை ஊக்காமையால் தமிழ அறுப்பு மருத்துவம் அடியோடொழிந்தது.
தாழ்த்தப்பட்டோர்க்குத் தம் தெய்வத்தைக் கோயிலில் வணங்கும் உரிமையும் இல்லாது போயிற்று.
முற்காலத்தில், தமிழ்நாட்டில் வேளாளனே தலைவனாகவும், பிறரெல்லாம் அவனுக்குத் துணைவராகவும் கருதப்பட்டனர். பிற்காலத்தில் பார்ப்பனன் தலைவனாகவும் பிறரெல்லாம் அவனுக்குத் தொண்டராகவும் கருதப்படலாயினர். பார்ப்பனர் தம்மைக் குலமுறையில் தலைமையாகக் செய்து கொண்டதால், எந்த வேலையிலும் தொழிலிலும் அவருக்கு முதலிடங் கிடைப்ப துடன், அவர் தாழ்ந்த வேலையைச் செய்தாலும் உயர்வை இழவாதிருக்கின்றனர். ஒரு பார்ப்பனர் தண்ணீர்க்காரனாயிருந் தால் அவரைச்சாமி சாமி என்கின்றனர்; வேறொரு குலத்தான் அவ்வேலையைச் செய்தால், அவனுக்கு மதிப்பில்லை. தோட்டி வேலை செய்தாலுங்கூடப் பார்ப்பனர் சாமி சாமி யென்றே அழைக்கப்படுவர் போலும்!
சிலர், தாழ்த்தப்பட்டோர் துப்புரவு (சுத்தம்) இல்லாமலும் ஒழுக்கக் கேடாயுமிருப்பதால் அவரொடு எங்ஙனம் பழகமுடியும் என்கின்றனர். தாழ்த்தப்பட்டோர் பிறரால் தள்ளப்படுவதனா லேயே அங்ஙனமிருக்கின்றனர். வெள்ளைக்காரரின் சமையற்காரர் தாழ்த்தப்பட்டோராயிருந்தும் துப்புரவாயும் ஒழுக்கமாயும் இருப்பதால், பார்ப்பனரும் அவர் சமைத்ததை உண்கின்றனர். ஒழுக்கக்கேடு பிற குலத்தார்க்குமுள்ளது.
தாழ்த்தப்பட்டோர்க்குக் கல்வி மட்டும் அளிப்பின் மிகத்திருந்தி விடுவர். பறையைப் பள்ளிக்கு வைத்தாலும் பேச்சில் ஐயே என்னும் என்றொரு பழமொழி வழங்குகின்றது. குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்டுக்கிடப்பவரை ஓரிரு ஆண்டுகளில் முற்றிலும் திருத்திவிடமுடியாது. சில தலைமுறை களாகத் தொடர்ந்து நாகரிகம்பெறின். பின்பு தாழ்த்தப் பட்டோர்க்கும் பிறர்க்கும் எதிலும் வேறுபாடில்லாமற் போம் என்பது திண்ணம்.
பார்ப்பனர் சமுதாயத்தில் தலைமை பெற்றதினால், தமிழர் அவரைப் பேச்சிலும் பழக்கத்திலும் பின்பற்றித் தமிழைக் கெடுத்துக் கொண்டதோடு, சில கலைகளுக்கும் இடமில்லாது செய்துவிட்டனர். உதாரணமாக, மட்கலக்கலை பார்ப்பனரைப் போல உலோகப்பாண்டங்களைப் பழங்குவதே உயர்வென்றும், மட்பாண்டங்களைப் பழங்குவது இழிவென்றும் கருதப்பட்ட தால், மட்கலக்கலை வளர்வதற்கிடமில்லாது போயிற்று.
குலப்பிரிவால் - குரங்கானாலும் குலத்திலே கொள்ளவேண்டு மென்று, ஒரு குலத்திற்குள்ளேயே அல்லது குடும்பத்திற் குள்ளேயே மணஞ்செய்து கொள்வதால் மதிநுட்பம், உடலுரம், நெடுவாழ்வு முதலிய குணங்களில்லாத பிள்ளைகள் பிறந்து நாடு சீர் கேடடைகின்றது.
கிறிதவர், மகமதியர் முதலிய பிற மதத்தாரை இக்கால இந்துக்கள், இழிவா யெண்ணுவதால், குலப் பிரிவினை மதத்தையும் தாக்கி, இந்துக் கோயில்களிலுள்ள கல்வெட்டுக்களைப் பிற மதத்தார் கண்டாராய்வதற்கிடமில்லை.
சிலவூர்களில் வித்துவசபை யென்றும் புலவர் கழகம் என்றும் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் தமிழர் செல்வம் கொடை வழங்கப்படுகின்றது. அங்கு கிறிதுவ மகமதியப் புலவர்க்கு இடமில்லை. நோபெல்பரிசுபோலத் தேசகுலமத வேறுபாடின்றி, புலமைத் தகுதியறிந்து பரிசளிக்கப்பட்டாலொழியத் தமிழும், தமிழரும் முன்னேறுவதில்லை யென்பது திண்ணம்.
பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டில் மதப் பொறுதி (Religious tolerance) இருந்தது. தமிழ்க்கழகங்களில் சைவர், மாலியர் (வைணவர்), பௌத்தர், சமணர், உலகாயதர் ஆகிய பல மதத்தினரும் இருந்தனர். தமிழரசர் பல மதக் கோயில்கட்கும் அறநிலையங் கட்கும் மானியம் அளித்தனர்; பல மத ஆசிரியரையும் பட்டி மண்டபமேற்றித் தருக்கம் செய்வித்து உண்மைகண்டு வந்தனர். ஒரு குடும்பத்திற்குள்ளேயே, சேரன் செங்குட்டுவனும் இளங் கோவடிகளும் போல, பல மதத்தினர் இருக்க இடமிருந்தது.
இவ்வகை மதப் பொறுதியுள்ள வரையில் தமிழ்நாடு அமைதி யாகவும் சீராகவுமிருந்து வந்தது. பிற்காலத்தில், ஒரு தன்னலக் கூட்டத்தார், பிறமதங்களால் தமது தலைமை கெடுதல் நோக்கி குலமதப்போர்களைக் கிளப்பிவிட்டனர். தமிழ்நாடு அலைக் கழிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பொருளைப்பற்றியும் மனிதனுக்குக் கருத்து வேறுபாடுண்டு. மதமோ மிகுதியும் கருத்து வேறு பாட்டிற் கிடமானது. ஆகையால், கருத்துரிமையுள்ள நாட்டில் மதப்பொறு தியுமிருத்தல் வேண்டும்.
2. கல்வியிழப்பு:
பார்ப்பனர் தம்மை ஞாலத்தேவர் (பூசுரர்) என்றும், வட மொழியைத் தேவமொழி யென்றும் உயர்த்திக்கொண்டதால், தமிழர் அவரைப்பின்பற்றி வட சொற்களை வேண்டாது வழங்க, பல தென் சொற்கள் அறவே மறைந்து போயின. புதுக் கருத்துக் கட்கெல்லாம், தமிழில் புதிதாய்ச் சொற்களை புனையாமல், வட மொழியிற் புதிதாய்ப்புனையப்பட்ட சொற்களையேவழங்கிய தால், தமிழிற் சொல்வளர்ச்சியில்லாதும் போயிற்று.
கடவுள் வழிபாட்டையும், இல்லறச் சடங்குகளையும் வட மொழியில் நடத்துவித்ததால், தமிழின் மதிப்புக்குன்றிற்று. கல்வெட்டுக்களைக் கூடப் பிற்காலத்தில் வழக்கற்ற வடமொழி யில் பொறிக்கத் தொடங்கினர்.
தமிழர்க்கு உயர்தரக் கல்வியில்லாதும், தப்பித்தவறிக் கற்றவர்க்கும் பிழைப்பில்லாதும் போனதால், பல புலவர் வழிமுறைகள் அற்றுப்போயின. கடல் கோட்பட்டவைபோக, எஞ்சிய நூல்கள் பல செல்லுக்கிரையாகியும், அடுப்பில் இடப்பட்டும், பதினெட் டாம் பெருக்கில் எறியப்பட்டும், குப்பையிற் கொட்டப்பட்டும் அழிந்துபோயின. அதனாற் பல கலைகள் மறைந்தன. ஆயிரக் கணக்கான புலவரும் செய்யுள் செய்யவல்ல குடிமக்களும் தொழிலாளரும் நிறைந்திருந்த தமிழ்நாடு, இன்று நூற்றுக்குத் தொண்ணூறு பேரைத் தற்குறிகளாகக் கொண்டுள்ளது.
வடநாட்டிலிருந்து பார்ப்பனர் கூட்டங் கூட்டமாக வந்து தமிழ் நாட்டிற் குடியேறினர், குடியேற்றவும் பட்டனர். அவர் வரவரத் தமிழர்க்கு அலுவற்பேறு குறைந்து கொண்டே வந்தது. வடமொழிக் கல்வியை வளர்க்கவும் பார்ப்பனரையே முன்னேற்றவும் பல வழிதுறைகள் வகுக்கப்பட்டன.
தமிழர்க்குத் தாய்மொழி யுணர்ச்சியும் தாய்நாட்டுச் சரித்திர அறிவும் இல்லாது போயின. தமிழில் எத்தனை வடசொற்கள் கலக்கின்றனவோ அத்துணைச் சிறப்பு என்று எண்ணப்பட்டது. அதனால்தான் ஆங்கிலம் வந்தபின் ஆங்கிலச்சொற்களையும் கலந்து பேசுகின்றனர். தமிழர் தென்னாட்டிற்கே யுரியவராய், ஆரியர் வருமுன்பே சிறந்த நாகரிக மடைந்தவராயிருப்பதாகவும், வடநாட்டிலிருந்து வந்தவரென்றும் ஆரியரால் துரத்தப்பட்டவ ரென்றும் அவராலேயே நாகரிகமடைந்தவறென்றும் தவறாய்க் கருதப்பட்டனர்.
தமிழுக்கும் தமிழர்க்கும் மாறான பல ஆரியக் கதைகள் தமிழ் நாட்டில் புகுத்தப்பட்டன. மதியை விளைக்காதனவும், அடிமைத் தனத்தில் ஆழ்த்துவனவும், கலையிலக்கியங்களில் பொய்யும் புனைந்துரையுமானவுமான பல தீமைகள் தமிழர்க்குப் புகட்டப் பட்டன.
இன்றும் ஆங்கிலேயரினின்று விடுதலை யாவதினும் ஆரியரி னின்று விடுதலையடைவதே தமிழர்க்கு அரியதாகின்றது.
தமிழன் குறிபார்த்தலால் கெட்டது
பண்டைக்காலத்தில் உலக முழுவதும் குறிபார்த்தல் பெருவழக் காயிருந்திருக்கின்றது. மேனாட்டார் நாகரிகமடைந்த பின் அவ்வழக்கத்தை விட்டுவிட்டனர். தமிழரோ இன்றும் அதில் பெருநம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
வானக்குறி, உலகக்குறி என, குறி இருவகைப்படும். இவற்றை முறையே காலக்குறி, பொருட்குறி என்றுங் கூறலாம். வானக்குறி ஜோசியம் என்றும் உலகக்குறி சகுனம் என்றும் வழங்குகின்றன. நாள் (நட்சத்திரம்) கிழமை முதலியன வானக்குறியாம். பூனை குறுக்கிடல் வாணியன் எதிர்ப்படல் முதலிய உலகக்குறியாம். இவ் விருவகைக் குறிகளையும் பார்ப்பதால் நன்மையுமில்லை; பாராத தாற் கேடுமில்லை. மேனாட்டார் இவற்றைப் பாராததி னால் விதப்பாக ஒரு தீங்கும், கீழ்நாட்டார் பார்ப்பதினால் சிறப்பாக ஒரு நலமும் அடைவதில்லை.
குறிபார்ப்பதால் பல தீமைகள்தான் உண்டாகின்றன. அவை வீண் செலவு, காலக்கேடு, மனக்கவலை, முயற்சியழிவு முதலியன. இதனால் தான் சாத்திரம் பார்க்காத வீடு சமுத்திரம் என்னும் பழமொழி எழுந்ததது.
கலியாணம் செய்யுமுன், பெண் மாப்பிள்ளைக்குப் பொருத்தம் பார்ப்பதால், சண்டை சச்சரவோ பிணி மூப்புச்சாக்காடோ வராமலிருக்கப்போவதில்லை. இருபத்தைந்தாம் ஆண்டில் இறக்கும் விதியுள்ளவனுக்கு, இருபதாம் ஆண்டில் பொருத்தம் பார்த்து மணஞ் செய்துவிட்டால், அவனுக்குச் சாவு வராதிருக் குமா? மேனாட்டார் பொருத்தம் பாராமல் மணப்பதால், கேட்டையாமலிப்பதோடு நம்மினுஞ் சிறப்பாய் வாழ்கின்றனர். பொருத்தம் பார்ப்பதால் சில சமையங்களில் உண்மையான பொருத்தங்களே தப்பிப்போவதுமுண்டு. பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கு முள்ள மனப்பொருத்தமே உண்மையான மணப்பொருத்தமாகும்.
நாட்பார்க்கிறவர்கள் எல்லாக் காரியங்களுக்கும் பார்ப்பது மில்லை, பார்க்கவும் முடியாது. ஒருவன் நோய்ப்பட்டிருக்கும் போதாவது, வீடு பற்றி வேகும் போதாவது, நாளும் வேளையும் பார்த்து மருந்துண்ணவாவது நெருப்பணைக்கவாவது முடியுமா?
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை என்றார் ஔவையார். மேலும் புகைவண்டியிற் பயணஞ்செய்வோர் இராகுகாலம் குளிகை காலம் பார்க்க முடியுமா? முடியாதே!
வடார்க்காட்டைச் சேர்ந்த ஆம்பூரில், பல ஆண்டுகளுக்கு முன் ஒருவர் 40ம் அகவை (வயது)யில்சிலநாள் நோய்ப்பட்டிருந்து இறந்துபோனார். அவருடைய பிறப்பியலில் (சாதகத்தில்) 60 அகவையென்று குறித்திருந்ததால், சரியாய் மருந்துவம் பார்க்க வில்லை என்று அவர் இறந்தபின், பிறப்பியற் குறிப்பை எடுத்துக் கூறி அவருடைய வீட்டார் வருந்தினார். ஒருவனுக்குச் சாவு வரும் நாளும் வேளையும் இறைவன் தவிர வேறு ஒருவரும் அறியார். பிறப்பியல் கணிக்கிற கணியர்க்குத் தமது இறப்பு நாளே தெரியாதிருக்க, பிறர் இறப்பு நாள் எங்ஙனம் தெரியும்? ஒவ்வொருவர்க்கும் இறப்பு நாள் முன்னமே தெரிந்திருந்தால் அதற்குள் எத்தனையோ காரியங்கள் செய்து கொள்ளலாமே!
சிலர் பிறப்பியற் கணிப்பு உண்மையானதென்று, அதைக் கணிக் கிறவர் சரியாய்க் கணியாமையாலேயே தவறு நேர்கிறதென்றும் சொல்கின்றனர். அப்படியானால் உண்மையாய்க் கணிக்கிறவர் யார்? எந்தத் திறவோரை (நிபுணரை)க் கேட்டாலும், தமது கணிப்பு ஐந்துக்கிரண்டு பழுதில்லாமலிருக்குமென்றே கூறுகின் றனர். இனி, அந்த ஐந்துக்கிரண்டு தான் எவையென்று திட்ட மாய்த் தெரியுமா(?) அதுவுமில்லை. அங்ஙனமாயின், பிறப்பிய லால் என்னதான் பயன்? உண்மையாய்க் கணிப்பவர் இனிமேல் தோன்றுவாராயின் அப்போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை பிறப்பியலில் நம்மிக்கை வையாதிருப்போம்.
பிறப்பியலானது, ஒருவன் பிறந்தவேளையில் நாளும் (நட்சத் திரமும்) கோளும் (கிரகமும்) நிற்கும் நிலையை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படுவது. ஒவ்வொருவன் பிறப்பையும் நாட்கோள் நிலை தாக்கும் என்று கொள்வது பொருந்தாது. அரசர் காரியத்தில் அது உண்மையாயிருக்கலாம். ஒரு புகை வண்டி புறப்பட்டபின் பொதுமக்களுக்கு நிறுத்தப்படாவிடினும், ஒரு பெரிய அதிகாரிக்கு நிறுத்தப்படுகின்றது. அதுபோல, கடவுளாட்சியில், ஓர் அரசன் காரியத்தில் அல்லது ஒரு நாட்டுக்காரியத்தில், நாட்கோள்நிலை மாறலாம். முதன் முதலிற் கணித்தவர்கள் அரசர்க்கே பிறப்பியல்கணித்து, பிற்காலக் கணியர் பிழைப்புக்குன்றிய போது முறையே சிற்றரசர்க்கும், கிழார் (ஜமீன்தார்)கட்கும், செல்வர்க்கும் அவருடைய இனத் தார்க்கு மாகக் கடைசியிற் பொதுமக்களிடம் வந்திருக்கலாம். எப்படியிருப்பினும் பிறப்பியற் கணிப்பாற் பொதுமக்களுக்கு ஒரு நன்மையுமில்லையென்பதே முடிபாம்.
ஒருவர் ஒரு காரியம் ஆகுமா ஆகாதா என்று கேட்டால் கணியர்கள் பொதுவாய் வேகடையாகவும், இரட்டுறலாகவும் வலக்கார(தந்திர)மாகவுமே கூறுவர். சில சமையங்களில் அவர் கூறியது வாய்ப்பின், அது குருட்டடியேயாகும். தாம் கூறப்போகிற செய்தியைப்பற்றி முன்னமே பிறரிடம் மறைவாகக் கேட்டறிந்து கொள்வதும் அவர் வழக்கம். சிலர், சில இளந்த மனக்காரரை, அவருக்கு இத்தனை நாளிற் சாவென்று அச்சுறுத்தி, அதைத் தீர்த்தற்கென்று ஏமாற்றிப் பணம் பறிப்பதுண்டு.
நாட்பார்ப்பது போன்றே வேளைபார்ப்பதும் தீயதாகும். சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் ஓர் இளைஞனுக்கு ஒரு பெரியார் ஓர் ஆங்கிலக்கும்பனியில் வேலைக்கு மதித்துரை (சிபார்சு) செய்திருந்தார். கும்பனித் தலைவர் அவ்விளைஞனை அடுத்த திங்கட்கிழமை காலை 8 மணிக்கு வந்து தம்மைப்
பார்க்கச் சொல்லியிருந்தார். அவ்விளைஞன் வேளை பார்ப்பவ னாதலால், காலை 7.30 யிலிருந்து 9 மணி வரை இராகுகால மென்று அவ்வேளை கழித்து 9.30 மணிக்குச் சென்றான். உடனே கும்பனித் தலைவர் அவனுக்கு ஒழுங்கீனமான பயலென்று பட்டந்தந்து, கண்டபடி திட்டி வெளியே போகச் சொல்லி விட்டார்.
ஆகையால், ஒரு காரியஞ் செய்வதற்குக் காலம்பற்றிக் கவனிக்கக் கூடியவையெல்லாம், தட்பவெப்பநிலை (சீதோஷ்ண திதி)யும் செல்வ வறுமை நிலையும் தூக்க ஊக்க வேளையும் ஒளியிருட் காலமுமே யன்றி வேறன்று.
இனி, பொருட்குறிகளைக் கவனிப்போம். ஒருவன் தன் வீட்டை விட்டுப் புறப்படும்போது, வாசல்நிலை தலையில் தட்டிவிட்டால், உடனே தடையென்று நின்று விடுகிறான். இதற்குக் காரணமென்ன வென்றால், வாசல் குட்டையாயிருப்பதே. குட்டையான வாசலில் குனிந்து போனால் தட்டாது. சில சமையங்களில் குனிந்து போக மறந்து விடுவதால் தட்டிவிடுகிறது. இது மனிதனால் நேரும் குற்றமேயன்றி வாசலால் வந்த குற்றமன்று. தானே வாசலை முட்டிவிட்டு, வாசல் தட்டிவிட்டது என்று கூறுகிறவன் முட்டாள், முட்டுகிற ஆள் முட்டாள்தானே! வாசலை நெடிதாக்க வேண்டும் அல்லது குனிந்து போக வேண்டும். நெடிய வாசலானால் நிமிர்ந்து போகலாம். மேனாட்டார், நெடிய வாசல்களை அமைப்பதால் முட்டாள்களாவதில்லை. வாசல் தட்டுவது தீக்குறியானால், நெடிய வாசலுள்ளவர்க்கெல்லாம் அக்குறி தோன்றுவதில்லையே! இதனால், முட்டாள் குட்டை வாசலை வைத்து முட்டாளாகிறான் என்று வெட்ட வெளியாக வில்லையா?
இங்ஙனமே பிற குறிகளும். பூனை, வாணியன், மொட்டைப் பார்ப்பாத்தி முதலியவர்கள் எல்லா விடங்களிலு மில்லையே ! அவர்கள் இல்லாவிடங்களில் அவர்களால் நேரும் தீக்குறிகள் எங்ஙனம் தோன்றும்? ஆகையால் இவையெல்லாம் மனப்பான் மையால் தோன்றுவனவெயன்றித் தாமாகத் தோன்றுவனவல்ல.
மேலும், ஒருவனுக்கு ஒரு மொட்டைப் பார்ப்பாத்தி எதிர்ப் பட்டால், அவள் மட்டும் அவனுக்கு எதிர்ப்பட்டாள் என்று ஏன் கொள்ள வேண்டும்? அவளுக்கு அவன் அல்லது அவனும் எதிர்ப்பட்டான் என்று ஏன் கொள்ளக் கூடாது?
ஓர் ஊரில் ஓர் அரசனிருந்தான். அவன் ஒரு நாட்காலை ஒரு திட்டி வாசல் வழியாய் வெளியே தெருவை எட்டிப் பார்த்தான். அவ்வாசல் குட்டையாயிருந்ததால், அவன் தலையைத் தட்டி ஒரு காயமும் ஏற்பட்டது. வெளியே ஒரு இரவல (பிச்சைக்கார)ப் பையன் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்ததினால் தான் அக்காயம் ஏற்பட்டதென்று, அவ்வரசன் அவனைத்
தூக்கிலிடச் சொன்னான். அப்போது அப்பையன், ஆண்டவனே! தாங்கள் என்னைப் பார்த்ததினால் எனது உயிருக்கே இறுதி வந்து விட்டதே! இதற்குத் தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டான். உடனே அரசனுக்கு அறிவு பிறந்து, அவனை விடுதலை செய்து விட்டான்.
குறியில் அல்லது கணியத்தில் (ஜோசியத்தில்) நம்பிக்கையுள்ள ஒருவன், ஒரு குறி ஒரு காரியத்திற்குத் தடையென்று நினைத்தால், அக்காரியத்தைச் செய்யாதே விட்டுவிடுகிறான்.
தெய்வத்தா லாகாதெனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும்
என்றார் தெய்வப் புலவர்.
ஒரு காரியம் ஆகும் ஆகாதென்று முடிவில்தான் சொல்ல
முடியும். சில காரியம் ஒரே முயற்சியில் முடியும். சில காரியம் பல முயற்சியில் முடியும். ராபட் புரூ ஆறுமுறை தோற்று ஏழாம் முறை வெற்றி பெற்றார்.
ஒரு காரியம் பலமுறை முயன்றும் முடியாமற் போனாலும், பட்டபாட்டிற்குப் பலனில்லாமற் போகாது. குறியில் நம்பிக்கை யுள்ள ஒருவன், ஒரு குறியைக் கண்டபின் முயன்றும் ஒரு காரியம் முடியாமற்போனால், அதற்கு அவனது மனத்தளர்ச்சி காரணமா யிருக்கும், அல்லது முயற்சி போதாதிருக்கும், அல்லது
குறியல்லாத வேறு காரணங்களிருந்திருக்கும். இவ்வுண்மைகளை அறியாமல், ஒரு குறியே காரணமென்று கொள்வது அறியாமை யாகும்.
சில சமையங்களில் கலை (Science) யியற்படியோ தெய்வ ஏற்பாட் டாலோ, சில தீக்குறிகள் தோன்றிப் பின்னால் நேரப் போகும் துன்பங்களைக் குறிக்கலாம். அது வேறு செய்தி. இங்குக் கண்டிக் கப்படுவதெல்லாம் முயற்சியழிவிற்குக் காரணமான குறிபார்ப்பே. உண்மையில் நேரப்போகும் துன்பங்களைக் குறிக்கும் குறிகளைக் காணின், இயன்றவரை அத்துன்பங்களை விலக்க முயற்சி செய்ய வேண்டும்; முயன்றும் முடியாதாயின் தெய்வ ஏற்பாடென்று தெரிதல் வேண்டும்.
தமிழன் கொடை மடத்தால் கெட்டது
மிகுந்த வளத்தினாலும், முதலியற் (Primitive) குலத்தினாலும், வழிமுறை (பரம்பரை) வேளாண்மையாலும், தமிழர் சிறந்த கொடையாளிகளாயிருந்தது பாராட்டத்தக்கதே. ஆனால், அவருட்சிலர் தகுதி பாராதும் மிதமிஞ்சியும் தானம் செய்தது அங்கணத்திற்கொட்டிய அமிழ்து போலப் பயன்படாதொழிந்த தன்றி, அவரை மடமையராகவும் காட்டுகின்றது.
கடையெழு வள்ளல்கள் என்று புகழப்படுவாருள், பேகன் என்ப வன் தனக்கு அருமையாகக் கிடைத்த ஒரு சிறந்த போர்வையைக் குளிரால் நடுங்குகிறதென்று கருதி ஒரு மயிலின் மீதெறிந்ததும், பாரி என்பவன் ஒரு முல்லைக் கொடிக்குக் கொழுகொம்பில்லை யென்று தன் விலையுயர்ந்த தேரை நிறுத்தியதும், தமிழன் கொடைமடத்திற்கு எடுத்துக்காட்டு (உதாரணம்) களாகும்.
தமிழன் மதத்திலும் கொடையிலும் பைத்தியங் கொண்டவன் என்று தெரிந்த பார்ப்பனர், மதாசிரியராகிக் கோவில் வழி பாட்டாலும், இல்லச் சடங்காலும், ஏராளமாய்க் காணியும் பொருளும் தேடிக்கொண்டனர். சில அரசர்கள் அளவிறந்த தமிழ்ப்பற்றுடையவராயும் புலவரைப் போற்றுபவராயுமிருந்ததால், சில பார்ப்பனர் தமிழ்ப்புலவருமாகிப் பல்லாயிரக்கணக்கான பொற்காசுகளையும் நூற்றுக்கணக்கான ஊர்களையும் பரிசிலாகப் பெற்றிருக்கின்றனர். இது குற்றமன்று. ஆனால் அவர் இங்ஙனம் பெறுதற்கு அவர்தம் குலத்திற்கு உயர்வு தேடிக் கொண்டமையும் ஒரு காரணம் என்பதையும் அவர் தமிழ் கற்று பெரும்பாலும் தம் பிழைப்பிற்கும் தமிழ்நாட்டில் தமக்கு ஆதிக்கம் தேடிக் கொள்வதற்கும் ஆரியத்தைச் சிறிது சிறிதாகப் புகுத்தித் தமிழைக் கெடுத்தற்குமே என்பதையும் அறிய வேண்டும்.
ஆற்றிலே போட்டாலும் அளந்துபோடு என்பது பழமொழி. வளவனாயினும் அளவறிந்தளித் துண்ண வேண்டுமன்றோ! சில தமிழரசரோ அங்ஙனமன்றித் தமக்குரிய நாடு நகரையும் செல்வ மனத்தையும் தானம் செய்து விட்டுப் பின்பு திண்டாடியிருக் கின்றனர். இதைப் புறநானூற்றிற் காணலாம். அன்றியும் சிலர் தகுதியறிந்தும் தேவையறிந்தும் கொடை செய்வதுமில்லை. நூறு பொற்காசளிக்க வேண்டிய இடத்தில் பதினாறாயிரம் பொற் காசளிப்பதும் குடிக்கக் கஞ்சியில்லாமற்போய் இரந்தவனுக்கு நூற்றுக்கணக்கான யானைகளைக் கொடுப்பதும் அவர் வழக்கம்.
இக்காலத்திலும் ஒருவன் பிறக்கு முன்பே தொடங்கி, அவன் இறந்த பின்பும் ஒரு குலத்தாருக்கே தானஞ் செய்வது தமிழரின் பேதைமையாகும். இதனால் வடநாட்டினின்று காலும் கையுமாய் வந்த ஒரு சிறு கூட்டத்தினர் செல்வத்தால் சிறந்து வாழ தமிழருட் பெரும்பாலார் வறியராய் வருந்துகின்றனர்.
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ் செல்வம் உற்றக் கடை
பார்ப்பனர் தாம் பெற்ற செல்வத்தைத் தம்மாலியன்றவரை தம் குலத்தாருக்கே பயன்படுத்துவது வழக்கம். இதனால் அவரிடம் செல்லும் பணம் அவர்க்குள்ளேயே சுற்றிக் கொண்டு தமிழர்க்குப் பெரிதும் பயன்படாது போகின்றது.
ஒரு பார்ப்பார் ஒரு கொடையாளியொடு பழகப் பெறின் அவர் கொடையைப் பெரும்பாலும் பிற குலத்தார் பெறாதபடி தம் குலத்தார்க்கே இயன்றவரை வரையறுத்துக் கொள்வது அவர் இயல்பு. சில அறநிலையங்களில் தமிழ் இரவலர் வெளியே நின்று பசியும் பட்டினியுமாய் ஒரு கவளம் பெறாது தவிக்க ஒரு சாரார் உள்ளேயிருந்து கொழுக்கக் கொழுக்கச் சிறந்த உண்டிகளை உண்டி கின்றனர். இவற்றிற்குச் செல்லும் செலவோ தமிழருடையவை.
பார்ப்பனருக்கே ஒன்றும் கொடுக்கக் கூடாதென்று யாம் கூற வில்லை. அவரது தந்நலத்தையும் தமிழர் நலம் பேணாமையை யுமே கண்டிக்கின்றோம்.
இக்காலத்தில் தமிழ்நாட்டில் கொடையாளிகளைக் காண்பது அரிதாயிருக்கின்றது. எங்கேனும் அத்தி பூத்தாற்போலும் கார்த்திகைப் பிறை கண்டாற் போலும் ஒருவர் தோன்றின், அவர் இலக்கக் கணக்காகவும் கோடிக் கணக்காகவும் ஆங்கிலக் கல்விக்கே கொட்டிக் கொடுக்கின்றவராயும் தமிழை அவமதிப்பவ ராயு மிருக்கின்றனர். திருப்பனந்தாள் காசி மடத்தம்பிரான் திருபெருந்திரு காசிவாசி சுவாமி நாதத் தம்பிரான் அவர்கள் தமிழுக்காகப் பல பெரும் பரிசுகள் அளிக்கிறார்கள் என்று மகிழ்ந்திருந்தால் அவர்கள் தமிழ்ப் பகைவர் கட்கும் தமிழைப் பழிக்கும் அல்லது கெடுக்கும் புத்தக வெளியீடுகட்காகப் பணம் தருவது மிகுந்த வருத்தத்தைத் தருகின்றது.
இந்நிலையில் செட்டி நாட்டரசர் (வயவர்) அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் அண்மையில் தமிழிசைக்காகப் பதினையாயிரம் உருபா அளித்தது பஞ்ச காலத்துப் பெய்த பெரு மழை போலிருக்கின்றது. ஆனால் இதையும் ஒருசார் பார்ப்பனர் கெடுக்கப் பார்க்கின்றனர். ஆரியர் இந்தியாவில் கால் வைக்கு முன்னரும் தெலுங்கில் இலக்கியம் தோன்றும் முன்னரும் தியாக ராய ஐயர் பிறக்கு முன்னமும் தமிழர்க்கு இசைத் தமிழ் இருந்த தென்பதையும், ஐயரவர்கள் தமிழ்நாட்டில் பிறந்ததினாலேயே அவர்கட்கு இசையறிவ அமைந்த தென்பதையும் இந்திய இன்னிசைக்கு இசைத் தமிழே மூலமென்பதையும் தெலுங்கு தமிழின் கிளை மொழியே என்பதையும் அவர் அறிவாராக (த.எ.கெ.)
தமிழன் தன் இனப் பகைமையால் கெட்டமை
உறவின் முறையாலோ குலத்தாலோ மதத்தாலோ நாட்டாலோ தனக்கு இனமாயினர் நன்றாய் வாழ்ந்தாலும் ஒரு நல்ல பதவியைப் பெற்றாலும் அதைப் பொறாது புழுங்கி அவரைக் கெடுத்து விட்டு அயலாரையோ மாற்றாரையோ அவருக்குப் பதிலாய் அமர்த்துவது, இன்றும் தமிழருக்கு வழக்கமாயிருக் கிறது. இது அவரது நலத்தைக் கொல்லும் நச்சுக் காய்ச்சல். வலிமையை அறுத்தெறியும் கூர்வாள்.
தமிழரசர்களான சேர சோழ பாண்டியர் மூவரும் ஒற்றுமையாய் இருந்தவரையில் அவர்க்கும் தமிழ்நாட்டிற்கும் கேடில்லை. அவர் ஒருவர் மீதொருவர் பொறாமை கொண்டு தமக்குள்ளோயே போர் செய்யத் தொடங்கியபின் அவரது வலிமை குன்றியது. அருமையான வேலைப்பாடுள்ள பண்டை மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் இருந்த இடமும் தெரியாமல் இடிக்கப் பட்டுப் போயின. முத்தமிழரசரும் மறைந்தனர். அவரது அரசியல் மொழியாகிய செந்தமிழும் வரவர மங்கி வருகின்றது. ஓர் அரசன் இன்னோர் அரசனை வென்றபின் அவனது தலைநகரையும் நாட்டையும் எரியூட்டுவதும் அரண்மனையையும் கோட்டையை யும் இடித்துவிட்டுக் கழுதையேர் பூட்டிக் கவடி (எள்) விதைப் பதும் அக்கால வழக்கம்.
தமிழரசர் வலிகுன்றிய பின்னரே, பல்லவர், தெலுங்கர், மராட்டியர் முதலிய வடநாட்டாரும், துருக்கர், ஆங்கிலர், பிரஞ்சுக்காரர் முதலிய மேல்நாட்டாரும் முறையே தமிழ் நாட்டிற் படையெடுத்து அதைக் கைப் பற்றவும், தமிழர் அடிமை யரும் வறியருமாகவும் நேர்ந்தது.
இப்போது, தமிழர்க்குள், ஒவ்வொரு தொழிலாளர்க்குள்ளும் பொறாமையிருந்து வருகின்றது. புலவன் புலவனையும், மருத்து வன் மருத்துவனையும், அமைச்சன் அமைச்சனையும் பகைக்கி றான். ஒரே குலத்திலும் ஒரே மதத்திலும் ஒருவன் இன்னொரு வனைப் பகைக்கிறான். இது தமிழ்நாட்டில் அயலார் ஆதிக்கம் கொள்வதற்கே ஏதுவாயிருக்கிறது.
பண்டைக்காலத்திலேயே, திருவள்ளுவர் மீது பொறாமை கொண்டு, அவரது திருக்குறளை முதலாவது போற்றாதிருந்திருக் கின்றனர் புலவர்.
இக்காலத்தில், அரசியற் கட்சியிலும் பொறாமைப் பேய் புகுந்து அலைக்கழிக்கின்றது. ஒரு தமிழன் தன் இனத்தானைப் பகைத்தா னானால், அப்பகையைக் காட்டுவதற்கு உடனே தமிழர்க்குக் கேடு செய்யும் ஓர் அரசியற் கட்சியில் சேர்ந்து கொண்டு யானை கொழுத்துத் தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டது போலத் தன்குலத்தை அல்லது நாட்டைத் தானே கெடுத்துக் கொள்ளுகிறான்.
இனி, தமக்கு ஒரு வேலையோ அமைச்சர் பதவியோ கிடைக்க வில்லையென்று, தன்னலமேபற்றி, எதிர்க்கட்சியில் சேர்ந்து கொண்டு சமூகத்தைக் காட்டிக் கொடுத்த தமிழரும் உளர்.
தமிழர்க்கு முன் காலத்தில் மேனாட்டாருக்குத் தெரியாத எத் துணையோ அரிய கலைகள் தெரிந்திருந்தன. அவற்றை யெல்லாம் விளக்கைக் கொளுத்தி மரக்காலால் கவிழ்த்து வைப்பதுபோலப் பிறர்க்குச் சொல்லாமல் மறைத்து மறைத்து வைத்து, அவை அவருடன் அழிந்தன. மந்திரம், மருத்துவம், சித்து, மல்லம், பொன்னாக்கம் (இரசவாதம்) யோகம் முதலிய பல கலைகளிலும் நூல்களிலும் பல அரிய மறைபொருட்கள் (இரகசியங்கள்) இருந்து அறிவிக்கப் படாமலே மறைந்து போயின. இக்காலத்தில் நாயை மந்திரத்தால் வாயைக் கட்டுவது போலவே, முற்காலத்தில் அரிமா (சிங்கம்) புலி முதலிய கொடிய விலங்குகளையும் வாயைக் கட்டினர். இதையே, கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம் என்று குறித்தார் தாயுமான அடிகள்.
இக்காலத்தில் அறுப்பு முறையாற் குணமாக்கக் கூடிய பல கட்டிகளையும், நோய்களையும் முற்காலத்தில் மருந்தினாலேயே குணமாக்கினார். முற்கால மருத்துவர் நாடி பார்த்து மட்டுமன்று, நோயாளியின் முகத்தைப் பார்த்தவளவிலும், நோயையும், நோய் நிலையையுங் கூறத்தக்கவராயிருந்தனர். நல்ல பாம்பின் நஞ்சைப் போக்கும் மை இன்றுமுள்ளது. சித்தர் தாழ்ந்த உலோகங்களை யெல்லாம் மாற்றுயர்ந்த பொன்னாக மாற்றக்கூடியவராயும், தம் உடம்பை எஃகினும் உறுதியாக இறுக்கிக் கொள்ளக் கூடியவ ராயும், யோகியரைப் போன்றே பன்னூறாண்டுகள் உடலோடி யிருக்கக் கூடியவராயும், கூடுவிட்டுக் கூடுபாய்தல், வான்வழிச் செல்லல், மறைந்தியங்கல், நிலத்தூடு காண்டல், நீர்மேல்
நடத்தல், நெருப்பிலிருத்தல், மூச்சையடக்கல் முதலிய அரிய சித்திகளை யடைந்தவராயுமிருந்தனர்.
ஆயுதமில்லாமலே, ஒருவனைப் பிடித்து நிறுத்தவோ கொல்லவோ ஏதுவான, சில மருமப்பிடிகளும் தட்டுகளும் தெரிந்த சிலர் இன்று முளர் என்ற சொல்லப்படுகின்றது.
படிமைக்கலை (Sculpture)Æš, எந்தக்கல்லையும் மெழுகுபோல் இளக்கக்கூடிய ஒரு முறை முற்காலத்தார்க்குத் தெரிந்திருந்ததாக, அக்கலையறிஞர் சிலர் கூறுகின்றனர். தமிழ்நாட்டினின்றே படிமைக்கலை, கிரேக்க, ரோம நாடுகளுக்குச் சென்றிருக் கின்றது.
இராவணன் தலை வெட்டவெட்டத்தளிர்த்தது என்பதிலும், சூரபதுமன் வேண்டியபடியெல்லாம் தன் உருவை மாற்றினான் என்பதிலும், குபேரனின் புட்பகவானூர்தியிலும், சச்சந்தனின் மயில்வானூர்தியிலும், ஒவ்வொர் உண்மையுள்ளதாக ஊகிக்கப் படுகின்றது. இவையெல்லாம் மறைத் துவைக்கப்பட்டு மறைந்து போயின. இக்காலத்திலும், கம்மியர் சில நுட்ப வேலைப்பாடு களையும், மருத்துவர் சில மருந்துகளையும், பிறர் பிறவற்றையும், தம் சொந்த மாணவர்க்கும் மக்களுக்குங் கூட மறைத்து வைக்கின்றனர்.
ஒரு மருத்துவர் தாம் இறக்கும்போது தான், தமது மருத்துவ நுட்பங்களைத் தம் மாணவர்க்குச் சொல்வது வழக்கம். அதுவும் ஒன்றிரண்டு குறைத்தே சொல்லுவர். இங்ஙனம் ஒவ்வொரு குரு மாணவத்தலைமுறையிலும் சிறிது சிறிதாய்க்குறைந்து
கொண்டே போனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, கட்டெறும்பு சிற்றெறும்பாகி, சிற்றெறும்பு ஒன்றுமில்லாமற் போனது போல தான். ஒவ்வோர் அரிய கலையும் இங்ஙனமே குறைந்தும் மறைந்தும் போயிருக்கின்றது.
சிலர் தாம் புதைத்து வைத்த பணத்தைத் தம் மனைவி மக்கட்குக் கூடச் சொல்லாது இறந்துவிடுகின்றனர். இவ்வகைப் பொறாமை யுள்ளவரையில் தமிழர் உருப்பட வழியில்லை. ஒரு கலையை அல்லது தொழிலை வெளிப்படுத்தினால் தான், அதை மேலும் மேலும் திருத்தவும் வளர்க்கவும் முடியும்; அதனால் ஒரு நாடும் உலகமும் முன்னேறும்.
கடவுள் உலகுக்கெல்லாம் தந்தை. உலகமுழுமைக்கும் பயன்படு வதற்கென்றே. அவர் ஒரு குலத்தானுக்கோ ஒரு நாட்டானுக்கோ அறிவை அளிக்கின்றார். அவன் அவ்வறிவைத் தனக்குள் மறைத்து வைப்பானாயின், அது அழிவதுடன் அரசியற் பணத்தை அல்லது பொதுவுடமையைக் கவர்ந்த சேவகனின் குற்றமும் அவனைச் சாரும்.
தமிழன் துறவியைப் பின்பற்றலால் கெட்டது
மக்கள் வாழ்க்கை முறை இல்லறம் துறவறம் என இருவகைப் படும். கடவுள் மக்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்திருப்ப தாலும், உலகம் நடந்து வருதலேஇறைவனுடைய முத்தொழில் களில் ஒன்றாகிய காப்புத் தொழிலாதலாலும், துறவியை நெடுங் காலம் தாங்குபவன் இல்லறத் தானாதலாலும், உண்மையான துறவு மிக அரிதாதலாலும், இல்லறத்திலும் வீடு பேறு கிட்டுமாத லாலும், துறவறத்தினும் இல்லறம் சிறந்ததெனக் கூறலாம்.
இல்லறமல்லது நல்லறமன்று என்றார் ஔவையார்.
அறனெனப்பட்டதே யில்வாழ்க்கை என்றார் திருவள்ளுவர்.
இல்லறம் துறவறம் ஆகிய இரண்டிற்கும் தனித்தனி சில சிறப் பியல்கள் உண்டு. அவற்றில் அவை ஒன்றையொன்று பின்பற்று தல் தவறாம். உண்மைத்துறவிகள் பெரும்பாலும் கற்றோராயும், ஆசிரியராயு மிருந்தமையால், இல்லறத்தார் அவரை அளவிறந்து பின்பற்றித் தாமுங்கெட்டுப் பிறரும் கெடுவதற்குக் காரணமாய் இருந்திருக்கின்றனர். சில துறவிகளும், சிறப்பாக பௌத்த சமணத் துறவிகள், உலகிலுள்ள பலவகை நிலையாமைகளையும், துன்பங்களையும் மிகுத்துக் கூறி, இல்லறத்தார்க்கு உலக வாழ்க்கையில் மிகுந்த வெறுப்பையூட்டியிருக்கின்றனர். இதுவே கலைவளர்ச் சிக்குப் பெரிதும் தடையாயுள்ளது.
உலக வாழ்க்கை நிலையாததாயிருந்தாலும், இன்றைக்கும் நீண்ட வாழ்வினர் பெரும்பாலும் அறுபதாண்டுகளிருக்கக் காண் கின்றோம். ஒருவன் முப்பதாண்டுகளிருந்தாலுங் கூட அதற்குள் எத்தனையோ இன்பங்களையும் நுகர (அனுபவிக்க)லாம், காரியங்களையுஞ் செய்யலாம். பரிதிமாற்கலைஞர் என்னும் சூரிய நாராயண சாத்திரியார் 35 - ம் ஆண்டில் இறந்து போயினர். ஆயினும் அதற்குள் 80 ஆட்டைப் பருவத்தினரும் செய்திராத பல முயற்சிகளையும் தொண்டுகளையும் செய்திருக்கின்றனர்.
இன்றைக்கிருந்தாரை நாளைக்கிருப்பரென் றெண்ணவோ திடமில்லை அது போன்றே இன்றைக்கிருந்தாரை நாளைக்கிரார் என்று எண்ணவும் திடமில்லை.
ஓர் இடத்தில் ஒருவன் இரண்டொரு நாளே குடியிருப்பதாக இருந்தால், அதைச் செவ்வைப்படுத்த மாட்டான். நீடித்திருந்தால் நிலையானதென்று அதைச் சீர்ப்படுத்துவான். அது போன்றே உலகம் நிலையில்லதென்று கருதி இடைக்காலத்தமிழர் இம்மைக் குரிய கலைகளிற் கவனஞ்செலுத்தாது, மறுமைக்குரிய மதவாராய்ச் சியிலேயே ஈடுபட்டிருந்திருக்கின்றனர். மேனாட்டினரோ, அங்ஙனமன்றி உலகத்திலுள்ளவரை சிறப்பாய் வாழலாமென்று, இம்மைக்குரிய கலைகளையெல்லாம் ஆழ ஆராய்ந்து உலக நலமான பல புதுப்புனைவுகளை (Inventions) இயற்றியிருக் கின்றனர். தமிழர் புதிதாகக் கலையாராய்ச்சி செய்யாமலிருந்த தோடு, தம்முன்னோர், பன்னூறாண்டுகளாகப் பயின்றமைத்து வைத்த இசை நாடகம் ஓவியம் முதலிய கலைகளையும் சிற்றின் பத்திற் கேதுவானவை யென்று பெரிதும் அழியவிட்டிருக்கின்றனர்.
உலகத்தில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. ஆயினும், துன்பத்தை மட்டும் கவனித்தனர் சில துறவிகள்.
பிறந்தார் உறுவது பெருகிய துன்பம் என்றனர் பௌத்தர். வெறியயர் வெங்களத்து… மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி என்றனர் சமணர். இங்ஙனமே பிற மதத் துறவிகள் சிலரும் கூறினார். பேரின்பம் போன்றே சிற்றின்பமும் கடவுளால் அளிக்கப்பட்டதே. சிற்றின்பம் நுகர்ந்தவரே பேரின்பத்தையும் நன்றாய் உணர முடியும். அதனால் அவர்க்கு அதன் மேல் விருப்பமுண்டாகவும் இடமுண்டு. இக்கருத்துப் பற்றியே திருச்சிற்றம்பலக் கோவை பாடினார் மாணிக்கவாசக அடிகள். அறவழியில் சிற்றின்பத்தை நுகர்ந்தால் யாதொரு குற்றமுமில்லை. மேன்மக்களானும் புகழப்பட்டு மறுமைக்கும் உறுதி பயக்கு மாதலின் இக்காமம் பெரிதும் உறுதியுடைத்து என்றார் நக்கீரர்.
சில துறவிகள் செல்வமும் பெண்டிரும் சிற்றின்பத்திற்கேது வென்று அவரை வரம்பு கடந்தும் பழித்தனர். சிலர் மனித உடம்பையும் மிகமிக இழிவாகக் கூறினர். இவரது கூற்றின்படி நடந்தால் அது ஒருவகைத் தற்கொலையேயாகும். செல்வத்தைப் பழித்ததே தமிழரின் சோம்பலுக்கும் காலந்தவறுந்தன்மைக்கும் காரணமாகும்.
கடவுள் தம் முற்றறிவால் எல்லாப் பொருள்களையும் மனிதர் நன்மைக்கென்று படைத்திருக்க, பன்னாடை போல அவற்றின் நற்கூறுகளையுணராது, தீக்கூறுகளையே தவறாக உணர்வது கடவுளின் படைப்பிற்கே குற்றங்கூறியதாகும்.
பொருளில்லா விட்டால் ஒருவர் உயிர்வாழ முடியாது பெண்டிர் இல்லாவிட்டால் இல்லறம் நடவாது. மக்கள் குலம் அழியும்; உடம்மைப் பேணாவிட்டால், நோய்ப்பட்டு ஒருவினையுஞ் செய்யமுடியாது. பிறர்க்குப் பாரமாயிருக்க நேரும். அதோடு வீடு பேற்று முயற்சியும் கெடும், பின்பு சாவும் வரும்.
உடம்பின் பயனை நன்றாயறிந்தே,
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
உடம்பினைமுன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்
றுடம்பினை யான் இருந்தோம்புகின் றேனே
என்றார் திருமூல நாயனார்.
உடம்பைப் பேணாமையால், நலவழி (சுகாதாரம்), மருத்துவம், சமையல் முதலிய கலைகள் வளர்தற்கிடமில்லை.
பல துறவிகள் கோவணந்தவிர வேறொன்றும் அணியாமையாலும், இல்லறத்தார் பலர் அவரை மதித்ததனால் தம் உடம்பை வேட்டியால் போர்த்ததன்றிச் சட்டையணியாமையாலும், நெசவு, தையல் முதலிய கலைகளும் சிறிது கெட்டன.
சட்டையணிதல் பண்டைக்காலத்துமிருந்தது. அதை விரும்புவோர் கோடை காலத்திலில்லாவிட்டாலும் குளிர்காலத்திலாவது அணிந்திருக்கலாம்.
துறவிகள் அருள் காரணமாகவும் உடம்பை ஒடுக்குதற்கும் ஊனுணவை யொழித்து மரக்கறியே உண்டு வந்ததால், இல்லறத் தாரும் அவரைப் பின்பற்றி ஊனுணவை ஒழித்திருக்கின்றனர். இவரே சைவ வேளாளர் எனப்படுவார். இவரைப் பின்பற்றி வேறு சில குலத்தாரும் அண்மையில் ஊனுணவை விலக்கியிருக் கின்றனர். இதை யாம் குற்றமாகக் கூறவில்லை. ஆனால், மரக்கறி யுணவே தூயதென்றும், ஊனுணவு தூயதன்றென்றும் கூறுவதை யாம் ஒப்புக்கொள்ள முடியாது.
ஊனுணவு கொலையுள்ள தென்றால், மரக்கறியுணவும் கொலை யுள்ளதே.
சில அஃறிணை உயிரி (பிராணி)களுக்கு ஊனே உணவாக இருக் கின்றது. ஊனுணவு குற்றமுள்ளதாயின், அக்குற்றம் கடவுளையே சாரும். ‘òÈ’ gá¤jhY« òšiy¤â‹Dkh? குளிர் நாடுகளில் ஊனுணவு தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. குறிஞ்சிநாடு களில் மக்கட்கு விலங்குணவு இயற்கையாயிருக்கின்றது. கண்ணப்ப நாயனார் பன்றி யூனைத் தாமும் தின்று சிவ பெருமானுக்கும் கொடுத்தார்.
துறவறத்திற்குரிய அருள் இல்லறத்தார்க்கிருக்க முடியாது. அதனாலேயே, அருளுடைமை, புலான் மறுத்தல், கொல்லாமை என்ற மூன்றதிகாரங்களையும் துறவறத்தில் வைத்துக் கூறினார் திருவள்ளுவர்.
ஊனுணவால் வீரத் தன்மையும், மரக்கறியுணவால் சாந்தத் தன்மையும் உண்டாகும். அரிமா சிறியதாயும், யானை பெரிய தாயுமிருந்தாலும், முன்னது பின்னதை எளிதிற் கொன்று விடுகின்றது. இதற்கு அவற்றின் ஊனுணவும், மரக்கறியுணவுமே காரணம். உலகத்தில் ஊனுண்ணாத வீரக்குலத்தார் எங்கு மில்லை. இதனாலேயே ஊனுண்டிச்சாலை ஆங்கிலத்தில் மிலிட் டரி ஹோட்டல் எனப்படுகின்றது. வீரம் ஒரு நாட்டுக்காப்பிற்கு இன்றியமையாதது. பண்டைத் தமிழரசரும் பொருநரும் (Soldiers) சிறக்க ஊனுண்டனர். திருவள்ளுவர் அரசியலாராய்ந்தவ ராதலின், இவ்வுண்மைகளை அறிந்திருந்தார்.
சில உயிரிகளின் ஊன்கள் சில கொடிய நோய்கட்குச் சிறந்த மருந்தாயுள்ளன.
கல்விக்குரிய உயர்ந்த வகுப்பார் ஊனுணவை விலக்கியதால், உடல்நூல் (Physiology), அக்கறுப்பு நூல் (Anatomy), அறுப்பியம் (Surgery) முதலியன தோன்றற்கும் வளர்தற்கும் இல்லை.
ஊனுணவு பழிக்கப்படுவதால், உயர்ந்த குலத்தார் ஆடு கோழிப் பண்ணைகள் வைத்து, நாட்டின் உணவு வசதியையும் பொருளா தாரத்தையும் பெருக்கவில்லை. தாழ்ந்த குலத்தார்க்கோ பொருளிட வசதியில்லாதிருப்பதுடன், ஊனும் பாலும் அவர் கைபடின் விலையாதற் கிடமில்லாமலுமிருக்கின்றது. ஆதிரேலியா, நார்வே முதலிய நாடுகளுக்கு ஆட்டுப்பண்ணையே உயிர்நாடி. தமிழரும் இதை மேற்கொள்ளின் மிகுந்த நல முண்டாகும்.
தமிழன் பள்ளியெழுச்சி
மனோன்மணீயத் தமிழ்த்தெய்வ வணக்கம்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைப்போ லனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே.
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ யநாதியென மொழிகுவதும் வியப்பாமே.
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையு மிலக்கணமில் கற்பனையே.
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி யொருகுலத்துக் கொருநீதி.
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.
சென்ற நூற்றாண்டிறுதியில், சித்தூர் மார்க்க சகாய ஆச்சாரியார், பஞ்சாங்கங் குண்டையனொடு போராடி வென்று, பிராமண னின்றித் திருமணம் நடத்தி, கம்மாளர்க்கு விசுவப் பிராமணர் என்னும் பட்டமும் நாட்டிவைத்தார்.
ஆங்கில ஆட்சியின் விளைவாகவும் ஆங்கிலக் கல்வியின் பயனாகவும், திரவிடர் கண் விரிவாகத் திறக்கப்பட்டு, நயன்மைக் கட்சி தோன்றி, 1920-இலிருந்து 1937 இடைவரை இரட்டை யாட்சியைத் (Diarchy) திறம்பட நடத்தி, தமிழரையும் திரவிடரையும் முன்னேற்றியது. அதனால், வகுப்புவாரிச் சுழல் பதவிகளும், குலத்தொகை விழுக்காட்டு அலுவற்பேறும், பிற்பட்டோர்க்குப் பலவகைச் சலுகைகளும், ஏற்பட்டன. பேராய ஆட்சியிலும், தமிழ்நாட்டில் மட்டுமன்றி மலையாள தெலுங்கு கன்னட நாடுகளிலும் பிராமணரல்லார் முதலமைச்சராக வரவும், தமிழ் நாட்டிற் பிராமணரில்லா அமைச்சுக்குழு ஏற்படவும், முடிந்தது.
கல்வித் தொழில் பிராமணர்க்கே யுரிய தென்னுங் கொள்கைக்கு மாறாக, ஆங்கிலர் எல்லா வகுப்பார்க்கும் அதைப் பொது வாக்கித் தமிழரைப் பிராமணர்க்குச் சமமாக்கினதனால், தம் மேம்பாடும் பிழைப்பும் குன்றுவதுகண்டு, ஏற்கெனவே ஆங்கில ராட்சியில் வெறுப்புற்றிருந்த பிராமணர், நூற்றிற்கு மூவராயுள்ள பிரா மணர்க்கு அரசியல் அலுவற்பேறு நூற்றிற்கு மூன்றே யென்று நயன்மைக் கட்சி யாட்சி திட்டஞ்செய்தபின், கிளர்ந் தெழுந்து ஒன்றுகூடிச் சூழ்ந்து, ஆங்கில அரசை அடியோ டொழித்தா லொழியத் தமக்கு உயர்வாழ்வில்லை யென்றறிந்து, மும்மொழிக் கூட்டு நாடாயிருந்த சென்னை மண்டலத்தில், தமிழருள்ளும் திரவிடருள்ளும் இளைஞரையும் தன்னலக் காரரையும் தமிழின் பெருமையை அறியாதவரையும் துணைக் கொண்டு, தேசியக் கட்சியைத் தோற்றுவித்து, வெள்ளைக்காரன் கொள்ளைக்காரன் என்றும், அவனை அகற்றிவிட்டால் விண்ணுலக வாழ்வு வந்துவிடு மென்றும், நயன்மைக் கட்சி அயலானுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றதென்றும், பொது மக்களிடம் சென்று புகட்டலாயினர்.
நூற்றிற்குத் தொண்ணூற்றுவர் கல்லாதவராயும் ஏழைகளாயும் இருந்ததனால், அடிமேலடி யடித்தால் அம்மியும் நகர்வதுபோல், நாளடைவிற் பொது மக்கள் தேசியக் கட்சித் தொண்டர்க்குச் செவிசாய்த்தனர்.
நயன்மைக் கட்சி யமைச்சர், எறும்புக்கடி போன்ற பிரித்தானியத் தினும் பாம்புக்கடி போன்ற பிராமணியம் கொடிதென்றும், ஆங்கிலர் ஒருகாலும் இந்தியாவினின்று நீங்காரென்றும். கருதினதனால், ஆங்கிலராட்சிக்கு மாறாகப் பேசினவரையும் ஒழுகினவரையும் தடியடி யடித்தும் சிறையிலிட்டும் துன்புறுத்தினர். இது பொதுமக்கட்கு நேரிற் சொல்லப்பட்ட போது அவர்க்குச் சினம் மூண்டது. அதனால் தேசியக் கட்சி விரைந்து வளர்ந்தது. இறுதியில், பிராமணரல்லாத காந்தியடிகள் முனிவர் கோலம் பூண்டு, தாழ்த்தப்பட்டவரை யணைத்துப் பொது மக்களொடு தொடர்பு கொண்டபின், வெற்றி கிட்டிற்று; விடுதலையும் கிடைத்தது. விடுதலைப்பற்றும் நாட்டுமொழி யறிவும் பொது மக்கள் தொடர்பும் இன்மையால், நயன்மைக் கட்சித் தலைவர் 1937-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிற் படுதோல்வியடைந்தனர். பேராயம் ஆட்சியைக் கைப்பற்றியது.
தனித் தமிழ் முன்னோடியர் இருவர்
நாட்டுப் பற்றிற்கு உயிர் மொழிப் பற்று, முன்னது எல்லார் வாயிலாகவும் வெளிப்படும்; பின்னது புலவர் வாயிலாக மட்டுமே வெளிப்படும்.
இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில், சூரிய நாராயண சாத்திரியார் தம் பெயரைப் பதிரிமாற்கலைஞன் என்று மாற்றி, மறுமலர்ச்சித் தனித் தமிழ்த் தொண்டைத் தொடங்கிவைத்தார்.
பாம்பன் குமர குருதாச அடிகள், சேந்தன் செந்தமிழ் என்னும் ஐம்பான் வெண்பாத் தனித்தமிழ் நூலியற்றி நூற்றுக்கணக்கான வடசொற்கட்கு நேர்த் தென்சொற்களும் மொழிபெயர்த்தும், ஆக்கியும் வைத்தார்.
தனிப் பெருந் தமிழ் மீட்பர் மறைமலையடிகள்
கல்விக் கடல்; தமிழ் ஆங்கிலம் சமற்கிருதம் ஆகிய மும்மொழி வல்லுநர்; மருத்துவம், கருநூல் (Embryology), தொலைவுணர்வு (Telepathy), மனவசியம் (Mesmerism), அறிதுயில் (Hypnotism) முதலிய பல்கலையறிஞர்; நூலாசிரியர் நுவலாசிரியர் உரையாசிரியர் இதழாசிரியர் பதிப்பாசிரியர் ஆய்வாசிரியர் ஆகிய பல்வகை யாசிரியர்; அடக்கமும் அஞ்சாமையும் உண்மையொப்பு கொள்வும் குலமத வேற்றுமையின்மையும் கொள்கைக் கடைப் பிடிப்பும் கொண்ட பண்பாட்டாளர்; நாட்டிற்கும் மொழிக்கு மன்றித் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்; மாபெருந் தமிழ்ப் புலவரும் தமிழ்ப் பேராசிரியரும் தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு தெரியாது, நூற்றிற் கெண்பது விழுக்காடு வடசொற் கலந்து தமிழைப் பேசியும் எழுதியும் பாடியும் வந்த காலத்தில், தமிழ்ப் பயிர் அயற்சொற்களால் நெருக்குண்டு அடியோடழிந்து போகவிருந்த நிலையில், 1916-ஆம் ஆண்டிலிருந்து வடசொற்களை அறவே களைந்து, தூய தீந்தமிழில், உரைநடையும் செய்யுளு மாகிய இருவகை வடிவிலும், அறிவியல், சமயம், வரலாறு, ஆராய்ச்சி, திருமுகம், உரை, மொழிபெயர்ப்பு, முதலிய பல துறையிலும், ஐம்பான் அருநூல்களை வெளியிட்டு, தமிழில் எந்நூலையும் இயற்றவும் மொழிபெயர்க்கவும் இயலும்
என்பதைக் காட்டி, தமிழ் வரலாற்றின் மூன்றாங் காலமாகிய மறுமலர்ச்சித் தனித் தமிழ் ஊழியைத் தொடங்கி வைத்தவர்; முதன் முதல் தனித்தமிழ்த் திருமணஞ் செய்து வைத்தவர்; Can Hindi be the Lingua Franca of India? (இந்தி இந்தியப் பொது மொழியா யிருக்க இயலுமா?) என்னும் ஆங்கிலச் சிறுநூலில், அறிவியன் முறையிலும் ஏரண முறையிலும் கட்டாய இந்திக் கல்வியை வன்மையாகக் கண்டித் தவர்; இறுதிவரை எழுத்தாலும் சொற்பொழிவாலும் அருந்தமிழ்த் தொண்டாற்றியவர்; இன்றும் இனி என்றும் ஈடிணையற்றவர்; பல்லவபுரம் பொது நிலைக் கழகத் தலைவர் மறைமலையடிகள்.
மறைமலை யென்னும் மறையா மலையின்
நிறைநிலை வாரத்தே நிற்க - இறையும்
தமிழன் வடமொழித்தீத் தாழ்வின்றி வாழ
இமிழுங் கடல்சூழ் இகம்.
தமிழன் பிறந்தகம்
தமிழன் என்னும் இனம் தமிழ் பற்றியதே யாதலால், தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப்போன குமரிநாடே. அதற்குச் சான்றுகள்:-
1. தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிட மொழிகளும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென் மொழி வடக்கிற் செல்லச்செல்ல ஆரியப் பாங்கில் வலித்தும் உருத் தெரியாது திரிந்தும் சிதைந்தும் ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும், தெற்கில் வரவர மெல்லோசை
கொண்டும் திருந்தியும் விரிந்தும் இலக்கிய முற்றும் செறிந்தும், இருத்தலும்.
2. நாவலந்தேயத்திற்கு வெளியே திரவிட மொழி யின்மையும், மேலைமொழிகளிலுள்ள தென்சொற்கட்செல்லாம் தமிழி லேயே வேர் அல்லது வேர்ப்பொருளிருத்தலும்.
3. தென்மொழிக் குடும்பத்து இற்றை நாற்பெரு மொழிகளும் தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே வழங்குதலும், அவற்றுள் முழுத் தூய்மையுள்ள தமிழ் அந்நாட்டின் தென் கோடியிலிருத்தலும்.
4. தமிழ்நாட்டுள்ளும் தெற்கே செல்லச் செல்லத் தமிழ் திருந்தியும் சொல்வளம் மிக்கும் ஒலியெளிமையுற்றும் இருத்தலும், திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்னும் வழக் குண்மையும்.
5. வடநாட்டு முன்வட (பிராகிருத) மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட மொழிகளிலுமுள்ள வன்மெய்களின்றிப் பதினெண் மெய்களே தமிழிலிருத்தலும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனையடுத்துள்ள தீவுகளிலும் வழங்குதலும்.
6. தமிழ் முழுவளர்ச்சியடைந்து முத்தமிழான பின் ஏற்பட்ட தலைக்கழகம் குமரிக்கண்டத் தென்கோடிப் பஃறுளியாற்றங் கரை மதுரையில் இருந்தமையும், குமரிக்கண்டத் தோற்றத் தின் எண்ணிற்குமெட்டாத் தொன்மையும், அக்கண்டம் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே முழுகிப் போனமையும்.
7. தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிறதென் கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்படு வதும், குமரிக்கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந்தமையும், தென் என்னும் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.
8. பண்டைத் தமிழ்ச் செய்யுட்களிற் கூறப்பட்டுள்ள நீர் நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிமமும் (காரன் னமும்), ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத் தீவில் இன்றுமிருத்தல்.
9. வாணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்குகளும் நிலைத்திணை (தாவர) வகைகளுந் தவிர, மற்றெல்லாக் கருப்பொருள்களும், காலவகைகளும் நிலவகைகளுமாகிய முதற்பொருளும், இன்றும் தென்னாட்டிற்கு இயற்கையாக வுரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல்.
10. தென்னாடு, தென்னர் (தென்னாட்டார்), தென்மொழி, தென்னவன் (பாண்டியன்), தென்கலை என்னும் பெயர்கள் தொன்று தொட்டு வழங்கி வந்துள்ளன.
11. தென்வடல், தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்கு மாய்த்திரிகின்றவன், தென்பல்லி வடபல்லி (தலையணிகள்) முதலிய வழக்குக்களில் தென்திசை முற்குறிக்கப் பெறுதல்.
12. கடைக்கழகக் காலத்தமிழர் தம் இறந்த முன்னோரைத் தென் புலத்தார் எனக் குறித்தமையும், கூற்றுவன் தென்றிசைக் கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் எனப்பெயர் பெற்றிருத்தலும்.
13. தென்மொழி வளர்ச்சியின் முந்துநிலைகளையெல்லாம் தமிழே காட்டிநிற்றல்.
14. கோதுமை, வாற்கோதுமை, உறைபனி, பனிக்கட்டி முதலிய குளிர்நாட்டுப்பொருள்கள் பண்டைத் தமிழிலக்கியத்திற் சொல்லப்படாமையும், தமிழர்க்கு வந்தேறிக கருத்தின்மையும்.
15. கடைக்கழகப் புலவர் நாற்பத்தொன்பதின்மராயும் இடைக் கழகப் புலவர் ஐம்பத்தொன்பதின்மராயும் இருக்க, தலைக் கழகப் புலவர் மட்டும் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மரா யிருந்தமை.
குறிப்பு:- தலைக்கழகப் பாண்டியநாடு தெற்கே ஈராயிரங்கல் தொலைவு நீண்டு பரந்திருந்ததனால், அதற்கேற்பப் புலவர் தொகையும் மிக்கிருந்ததென அறிக.
16. தமிழ்ஞாலத்தின் நடுவிடமாக, நடவரசன் தில்லை மன்று குமரிநாட்டுப் பாண்டியனால் அமைக்கப் பெற்றமை.
குறிப்பு- தில்லைமன்று வடபாற் பனிமலைக்கும் தென்பாற் குமரி மலைக்கும் நடுவிடையே அமைந்ததனாலேயே, பேரு லகத்தின் நெஞ்சத்தாவை நிகர்த்ததாயிற்று.
தமிழன் மதப் பைத்தியத்தால் கெட்டது
கடவுளை வணங்குவதும் மதவொழுக்கத்தில் உறைத்து நிற்பதும் நல்லதே
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
என்றார் திருவள்ளுவர். ஆண்டவனுக் கஞ்சவதே அறிவின் தொடக்கம் என்றார் சாலோமோன் அறிஞர். ஆனால், அள விறந்த மதப் பித்துக்கொண்டு எங்கே விழுந்து சாகலாமென்று முட்டிக் கொண்டு திரிய, ஒருவருஞ் சொல்லவில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது மதப்பற்றிற்கும் ஏற்கும்.
பொதுவாக ஒரு மதம் ஏற்படும்போது, அதன் அடியார்கள் அல்லது அதை ஏற்படுத்துவோர் தங்கள் மதக் கருத்துக்களையும், தங்கள் முன்னோரைப் பற்றிய சில சரித்திரப் பகுதிகளையும் தொகுத்து நூல்கள் எழுதி வைக்கிறார்கள். அல்லது பாட்டுப் பாடி வைக் கிறார்கள். அவை அம்மதத்திற்கு மறை (வேத) நூல்களாகின்றன. அவற்றில், கலையியல் உண்மைக்கு மாறான சில கருத்துக்கள் இருக்கலாம். கலை வரவர வளர்ந்து வருகிறது. கலை வளர்ச்சி யடைந்த காலத்தில், அதன் உண்மைக்கு மாறான கருத்துக்கள் மறை நூல்களில் இருக்குமானால், அவற்றை விலக்கிக் கொள்ளுவது கடமையாகும். மனிதனுக்கு மதமேயன்றி மதத்திற்கு மனிதன் அல்லன். மறைநூலும் கடவுளால் தோன்றியதே, கலைநூலும் கடவுளால் தோன்றியதே, அறிவு பலதுறைப்பட்டது. கடவுளே அறிவுக்கு உறைவிடம். அவர் சித்தாந்தவறிவை மனிதர்க்குப் புகட்டியது போலவே கலையறிவையும் புகட்டி வருகிறார். மறை நூலாசிரியரைப் போன்றே, கலை நூலாசிரியரும் கடவுளடியார்கள். ஓர் இசைப்புலவன் எத்துணை வல்லவனாயிருப்பினும், கருவியின் சிறப்புக்குத் தக்கபடியே தன் திறமையைக் காட்டமுடியும். அது போலக் கடவுளே அறிவித்தாலும், அது அடியாரின் அறிவுக்கும் திறமைக்கும் தக்கபடியே வெளிப்படும். ஒவ்வொரு துறையிலும் மனிதன் தன் அறிவை வளர்த்து வருகிறான். அறிவு வளர வளரத் தன் கருத்துக்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். தன் அறியாமையை மதத்தின் மேலேற்றி மதநூலைக் கலைநூலோடு முரண்படக் கூறின், கடவுளின் தன்மைக்கே முரண்பாடு கூறிய தாகும். அதோடு கலையும் வளராது. நாடும் கீழ் நிலையடையும்; அறியாமையும் அடிமைத்தனமும் ஓங்கும்.
சில மத நூல்களில், அவற்றை எழுதியவரின் அறியாமையாலோ தன்னலத்தாலோ, மன்பதைய (சமுதாய) முன்னேற்றத்திற்குத் தடையாயுள்ள சில தீய கருத்துக்கள் புகுத்தப்பட்டுள்ளன. பிறப்பாற் சிறப்பென்பதும் தாழ்த்தப்பட்டோர்க்குக் கோயிற்புகவு (ஆலயப்பிரவேசம்) இல்லையென்பதும் இத்தகையன. இதனால் தான், மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை எனச்சிலர் கருதுகின்றனர்.
கடவுள் மக்களெல்லாருக்கும் தந்தை. அவர் மக்களின் அகத் தூய்மையைக் கவனிக்கின்றாரேயன்றிப் புறத்தூய்மையைக் கவனிக்கிறதில்லை. கடவுள் தாழ்த்தப்பட்டோரை ஏற்றுக் கொள்ளத் தயாராயிருப்பவும், தொழுகையாசிரியர் (அர்ச்சகர்) அவர்களை மறுப்பது சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி வரங்கொடுக்கமாட்டான் என்னும் பழமொழியையே விளக்கு கின்றது.
சிவனடியாருள் சிறந்தவராகச் சொல்லப்படும் அறுபத்துமூவருள், இயற்பகை நாயனார் சிவனடியார்போல வேடம்பூண்டு வந்த ஒருவனுக்குத் தம் மனைவியைக் கொடுத்ததுமல்லாமல் அதைத் தடுக்கவந்த தம் இனத்தாரையெல்லாம் வெட்டிக் கொன்று முன்பின் அறியாத அக்காமுகனை ஊருக்கு நெடுந்தூரம் யாதோர் இடையூறுமின்றிக் கூட்டிக்கொண்டு போயும் விட்டனர். இது ஒரு பெரிய மானக்கேடு. ஏனாதிநாதநாயனார் தம் எதிரியாகிய அதிசூரனோடு வாட்போர் செய்யுங்கால், அவன் வஞ்சனையால் நீற்றைப்பூசி நெடுநேரம் கேடகத்தால் மறைத்துவைத்திருந்த தன் நெற்றியைத்திடீரென்று காட்ட, அவர் ஆகெட்டேன்! இவர் பரமசிவனுக்கு அடியவராய் விட்டார் என்று வாளையும் கேடகத்தையும் விட்டுவிடக் கருதி, பின்பு, ஆயுதமில்லாதவரைக் கொன்ற குற்றம் இவரை அடையாதிருக்க வேண்டுமென்று எண்ணி, அவற்றை விடாமல், உண்மையில் எதிர்ப்பவர் போல நடித்து நேரேநிற்க, பழிகாரனாகிய அதிசூரன் அவரை வெட்டிக் கொன்றான். மெய்ப்பொருள் நாயனார் சிவனடியார் போல வேடம் பூண்டு வந்த தம் பகைவனாகிய முத்திநாதனாற் குத்துண் டிறக்கும்போதும், அவனைச்சேதமின்றி ஊருக்கு வெளியே கொண்டுபோய் விடும்படி தம் வாயிற்காவலனாகிய தத்தனுக்குக் கட்டளையிட்டார். இவை போன்ற சிவனடியார் சரிதங்கள் இன்னும் பலவுள. இவற்றால், சிவனடியாரான தமிழர் தம் உயிரையும் மானத்தையும் பொருட்படுத்தாமல் மதப்பித்தங் கொண்டு பகைவருக்குக்கூட எதையும் கொடுக்கத் தயாராயிருந் தனர் என்பது வெளியாகும். இயற்பகை நாயனார் சரிதம் பெரிய புராணத்தில் மங்கல முடிவாக மாற்றிக் கூறப்பட்டுள்ளது. அது செவிவழக்காய்மட்டும் வழங்கிய காலத்திலேயே இங்ஙனம் மாற்றப்பட்டிருத்தல் வேண்டும். பிராமண வடிவம் கொண்டு அவருடைய மனைவியைக் கேட்கவந்த, சிவபெருமானாகக் கருதப்படுகிறவன், உண்மையில் ஒரு மனிதனாகவே யிருந்திருந்தல் வேண்டும். மேன்மேலும் இனத்தார் எதிர்த்து வந்ததை அக் காமுகன் கண்டஞ்சி இறுதியில் ஓடி ஒளிந்திருக்க வேண்டும். இறுதியில் சிவபெருமான் காட்சி கொடுத்தாகக் கூறுவது அடியார்க்கெல்லாம் பொதுவாகக் கூறப்படும் மங்கல முடிவு. சிவபெருமானே இயற்பகையாரின் மனைவியைக் கேட்டதாக வைத்துக் கொண்டாலும், அது முடிவிலன்றி முன்னதாத் தெரியாமையால், சிவனடியார் வேடம் பூண்டுவந்த எவர்க்கும் தம் மனைவியைக் கொடுத்திருப்பார் என்பது வெட்டவெளியா கின்றது. மேலேகூறப்பட்ட மற்ற ஈரடியார்களும் பகைவரென்று தெரிந்த பின்பும் போலிச் சிவவேடத்தாருக்கு இணங்கியமையும் இதை வலியுறுத்தும்.
சில திருப்பதிகளில் தேரோட்டக் காலத்தில் தேர்க்காலின் கீழ்த்தலையைக் கொடுத்திறப்பதும், கும்பகோணத்தில் மகாமகக் குளத்தில் மிதியுண்டு சாவதும், சில கோயில்கட்குப் பிள்ளை வரத்திற்குச் சென்று தெரிந்தோ தெரியாமலோ தம்மனைவி யரைக் கற்பழிவிப்பதும் அல்லது இழப்பதும் கோவில்வழிபாட் டிற்குச் சென்ற விடத்துத் தம்அழகான அருமந்த மகளிரைத் தேவ கணிகையராக விட்டுவிட்டு வருவதும், பண்டைத் தமிழருள் பகுத்தறிவற்று மானங்கெட்ட மதப்பித்தர் சிலரின் செயல் களாகும்.
இத்தகைப் பேதையரையே படிமையின் (விக்கிரகத்தின்) பின் மறைந்து நின்று தேவவாக்குப் போற்கூறி ஏமாற்றி, வேண்டிய தெல்லாம் பெற்றுவந்தனர் ஒருசாரார்.
இந்த 20 - ஆம் நூற்றாண்டிலுங்கூட, சில மதப்பித்தர் ஆங்கிலக் கல்வி சிறப்பப்பெற்றிருந்தும் தாய்மொழி கெட்டாலும் தமது மதம் கெடக்கூடாதென்று கருதி, வேண்டாத வட சொற்களையும் புறம்பான ஆரியக் கொள்கைகளையும் தழுவுகின்றனர். உயிரை யும் மானத்தையும் வீணாய் இழக்கத் துணியும் மதப்பித்தர்க்கு இது எம்மட்டு?
மேலும், தமிழைவளர்ப்பதால் மதம் கெடப்போவதுமில்லை. தாய்மொழியையும் மதத்தையும் தூய்மைப் படுத்துவதால் அவை வளர்ந்தோங்கு மென்பதையும் தமக்குப் பெருமை உண்டாகு மென்பதையும் அவர் ஆராய்ந்தறிவதுமில்லை; ஆராய்ந்தவர் சொல்லினும் உணர்வதுமில்லை. இத்தகையோர் இருப்பின் என்! இறப்பின் என்!
சிலர் மதம் பற்றிய வடசொற்கட்குத் தென்சொற்கள் இல்லை யென்றும், மதத்துறையில் வட சொற்கள் வந்துதான் ஆக வேண்டுமென்றுங் கூறுகின்றனர். இது தாய்மொழி யுணர்ச்சியும் சொல்லாராய்ச்சியும் சரித்திர அறிவும் இல்லாமையால் வந்தகேடு. மேலும், சைவ மாலியமும் (வைஷ்ணவ) அவற்றின் முதல் நூல்களும் தமிழருடையவாயும் தமிழிலும்இருக்க அல்லது இருந்திருக்க, அவை ஆரியர் கொண்டுவந்தவை யென்றும் அவற்றின் முதல் நூல்கள் வடமொழி மறைகளே யென்றுங் கொள்கின்றனர். தம்மானை யறியாத சாதியார் உளரோ! இவர்க்கு எத்தனை மொழி நூல்கள் வெளி வந்தென்ன? எத்தனை மோகெஞ்சோ -தாரோக்கள் அகழப்பட்டென்ன?
வடமொழியிற் சொற்கள் ஆனது போன்றே தமிழிலும் ஆக முடியும். ஈராயிரம் ஆண்டுகளாக வடமொழியைத் தழுவி வந்ததால் தமிழில் சொல்வளர்ச்சியில்லாது போயிற்று. இன்றும் தமிழர் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் அஞ்சுவதினும் மிகுதியாகப் பார்ப்பனருக்கு அஞ்சுவதே தமிழ் வளர்ச்சிக்குத் தடையாயுள்ளது.
ஒரு நாட்டின் நாகரிக அல்லது முன்னேற்ற நிலைக்கு மதப் பொறுதியும் ஓர் அறிகுறியாகும். பண்டைக்காலத்தில், தமிழ் நாட்டில் தற்கால இங்கிலாந்திற் போன்றே, மதப் பொறுதி யிருந்து வந்தது. கடைத் தமிழ்ச் சங்கத்தில், சைவர், வைணவர் (மாலியர்), பௌத்தர், சமணர், உலகாயதர் முதலிய பல
மதத்தினரும் புலவராயிருந்தனர். செங்குட்டுவன் என்னும் சேர மன்னன் வைணவனாயும் அவன் தம்பி இளங்கோவடிகள் சமணராயும் இருந்தனர். இங்ஙனம் பல மதத்தினரும் ஒற்றுமையாய் வாழ்ந்ததால், தமிழ்நாட்டில் அமைதி நிலவியது; கல்வியும், கைத்தொழிலும், வாணிகமும், அரசியலும் ஓங்கி நாடு நலம் பெற்றது. இக்காலத்திலோ, சில குறும்பர் மதப்பிரிவினை யுண்டாக்கித் தமிழ்நாட்டைச் சீர்குலைக்கின்றனர்.
இனி, இக்காலத்தில் சில தமிழர் மதப்பித்திற்கு நேர்மாறாக மதமே இருக்கக் கூடாதென்கின்றனர். மதத்திலுள்ள சில தீய கூறுகளை நீக்குவதற்குப் பதிலாக, மதத்தையே நீக்க வேண்டுமென்பது சோற்றிலுள்ள சில சிறு கற்களை எடுப்பதற்குப் பதிலாகச் சோற்றையே கொட்டி விடுவதொக்கும்.
தமிழிலக்கியத்தின் உச்சநிலைக் காலம்
(The Augustan Age of Tamil Literature)
தமிழிலக்கியத்தின்உச்சநிலைக்காலம் தலைக்கழகக் காலமே யென்பதற்குக் காரணங்கள்:
1. தமிழ்ப் பயிற்சி வரவரக் குறைதல்
தலைக்கழகக் காலத்தில், தமிழ் முத்தமிழாயிருந்து, பின்பு இடைக் கழகக் காலத்தில் வெவ்வேறாய்ப் பிரிந்தது. கடைக்கழகக் காலத்தில் இசை நாடக நூல்களிருந்தும் புலவராற் பெரும்பாலும், பயிலப் படவில்லை. இதுபோதோ, இசை நாடக நூல்கள் இல்லாமை யுடன், இயற்றமிழும் சரியாய்க் கற்கப்படவில்லை, இயற்றமிழ்ப் பகுதிகளில் முக்கியமான பொருளிலக்கணம் தெரிந்த புலவர் இதுபோது மிகச் சிலரேயாவர்.
2. முக்கழகங்களும் முறையே ஒடுங்கல்
முக்கழகங்களும் காலத்தினாலன்றித் தன்மையினாலும் தலையிடை கடையாயினமை, கீழ்க்காணும் குறிப்பால் விளங்கும்.
தலை இடை கடை
உறுப்பினர் தொகை 549 59 49
பாடினார் தொகை 4449 3700 449
கழகமிருந்த ஆண்டுத்தொகை 4440 3790 1850
இரீயினார் தொகை 89 59 49
அரங்கேறிய அரசர் தொகை 7 5 3
3. கலைகள் வரவர மறைதல்
தலைக்கழகக் காலத்தில் எத்துணையோ கலைகள் தமிழிலிருந்தன. அவை ஒவ்வொன்றாய் மறைந்துபோயின. இன்றும் நூல்வழக்கி லில்லாவிடினும் செயல்வழக்கிற் பல கலைகளுள்ளன. அவற்றுள் ஒன்று சிற்பம், சிற்பக் கலைக்குரிய அக்கிரபட்டியல், பலகை, முனை, இதழ், குடம், தாடி, கால், நாகபந்தம், போதிகை, பாளம், கூடு, நாணுதல், மதலை, பூமுனை, கொடி, சாலை, கும்பம், பீடம், மண்டபம், கோபுரம், கொடுங்கை, சுருள்யாளி, தூண், பட்டம், அளவு, உத்திரம், முட்டி பந்தம், கொடிவளை, ஆளாங்கு, அணிவெட்டிக்கால், கோமுகம் முதலிய குறியீடுகள் இன்றும் தமிழாயுள்ளன. பிற குறியீடுகளும் தற்போது வடசொல்லா யிருப்பினும், தமிழினின்றும் மொழிபெயர்க்கப்பட்டவையே. இன்றும் தமிழ்நாட்டிற் கட்டடத் தொழில் தமிழராலேயே செய்யப்படுவதும் பார்ப்பனராற் செய்யப்படாமையுங் காண்க.
4. இலக்கணம் வரவரப் பிறழ்தல்
தொல்காப்பியர் காலத்திலேயே நூலில் இலக்கணப் பிழைகள் தோன்றினமை முன்னர்க் கூறப்பட்டது. அதோடு வழக்கிலும் பல வழூஉ முடிபுகள் பிற்காலத்தில் தோன்றியுள்ளன.
அல்ல என்னும் படர்க்கைப் பலவின்பால் எதிர்மறைக்குறிப்பு வினைமுற்றே, ஏனை எண்ணிடங்கட்கும் வழங்கி வருதல் காண்க.
5. சொற்கள் வரவரப் பொருளிழத்தல்
தலைக்கழகத்திற்குப் பின், ஒரு பொருட் பலசொற்களைப் புலவர்கள் பெரும்பாலும் திட்டமில்லாது வழங்கி வந்திருக் கின்றனர்.
ஈ, தா, கொடு என்பன, முறையே இழிந்தோன் ஒத்தோன் உயர்ந்தோன் சொற்களாகும். இவை பிற்காலத்தில் வேறுபாடின்றி வழங்கப்பட்டுள்ளன.
6. தமிழ் வரவரத் தூய்மைகெடல்
தொல்காப்பியம் முழுமையிலும், ஐந்தாறே வடசொற்கள் உள்ளன. பிற்காலத்தில் அவை வரவரப் பெருகினமையை, முறையே, கடைக்கழக நூல்கள், திருவாசகம், கம்பராமாயணம், வில்லிபுத் தூராழ்வார் பாரதம் முதலியவற்றை நோக்கிக் காண்க. பிற்காலத்திற் செய்யுள் செய்தார் தமிழின் தூய்மையைச் சிறிதுங் கருதாமல், மோனையெதுகையொன்றே நோக்கி, வடசொற் களை ஏராளமாயும் தாராளமாயும் வழங்கிவிட்டனர்.
7. நூற்செய்யுள் வரவர இழிதல்
முக்கழகக் காலங்களிலும், பாக்களாலேயே பெரும்பாலும் நூல்களி யற்றப்பட்டன. பிற்காலத்தார் பெரும்பாலும் பாவினங்களையே தெரிந்து கொண்டனர், பாவினும் பாவினம் இயற்றுதற்கெளிதா யிருத்தலின்.
8. பொருளினும் சொல்லே வரவரச் சிறத்தல்
கழகக் காலங்களில் சொல்லினும் பொருளே சிறந்ததென்று, செந்தோடையாயினும் பொருள் சிறப்பச் செய்யும் செய்தனர். பிற்காலத்தில், மடக்கு, திரிபு முதலிய சொல்லணிகளையும், பலவகை ஓவிய(சித்திர)ச் செய்யுள்களையும் சிறப்பாகக் கொண்டு, அவற்றிலேயே தம் திறமையைக் காட்டினர். பொரு ளணியில் இயற்கைக் கருத்தும் சொல்லணியில் செயற்கைக் கருத்தும் அமைதல், செய்யுளியற்றிப் பயின்றவர் யாவர்க்கும் புலனாம்.
9. நூற்பொருள் வரவர இழிதல்
முற்காலப் புலவர் மேனாட்டார்போலப் பல்வகைக் கலை நூல்களை இயற்றினர்; பிற்காலப் புலவரோ கோவை, உலா, அந்தாதி, கலம்பகம் முதலிய புகழ்நூல் வகைகளையே இயற்று வாராயினர். ஒருவர் கோவை பாடிவிட்டால், தலைசிறந்த புலவராக மதிக்கப்படுவர். யாவையும் பாடிக் கோவையைப் பாடு என்பது பழமொழி.
பிற்காலத்தில் வகுத்த 96 பனுவல்களும் பெரும்பாலும் புகழ் நூல்வகைகளே. இதனால் பிற்காலத்தாரது கலையுணர்ச்சியின்மை வெளியாகும்.
செய்யுள்கட்கும் நூலளவுக்கும் குலமுறை வகுத்ததும், பிற் காலத்தார் புல்லறிவாண்மையைக் காட்டும்.
கடைக்கழகக் காலத்தில் நால்வர் தனித்தனி நாற்பது செய்யுள் கொண்ட நூலொன்றையியற்றினர். பிற்காலத்துப் பாட்டியல்கள் அவற்றின் தொகையிலிருந்தும், நானாற்பது என்றொரு நூல்வகையை வகுத்துக்கொண்டது நகைப்பிற்கிட மானதே. கலையுணர்ச்சி யிழந்தமையாலும், வடமொழியி னின்றும் வந்த பழமைக் கல்வியினாலும், சரித்திரம் திணைநூல் என்னும் ஈர் அறிவியற்கலைகட்கும் மாறாகப் பாவியங்(காவியம்) களில், நாட்டுப் படலம் நகரப் படலம் முதலிய பகுதிகளில், தம் மதி நுட்பத்தைக் காட்டுவதொன்றே குறிக்கோளாகக் கொண்டு, பொய்யும் புலையுமானவற்றையெல்லாம் புனைவாராயினர் பிற்காலப் புலவர்.
10. ஆட்பெயர்கள் வரவர வடசொல்லாதல்
கடைக்கழகத்திற்கு முன்காலத்தில், அரசர் பெயர்கள் கடுங்கோன் காய்சினன் எனச் செந்தமிழ்ப் பெயர்களா யிருந்தமையும், பின்காலத்தில் ஜடிலவர்மன் பராக்கிரமன் என வடமொழிப் பெயர்களானமையும், படைத்தலைவன், மேலோன் என்னும் தனித்தமிழ்ப் பெயர்களிருப்பவும், அவற்றுக்குப் பதிலாய், முறையே ஏனாதி (சேனாபதி), எட்டி (சிரேஷ்டன்) என்னும் வடமொழிப் பெயர்கள் பட்டப்பெயர்களாய் வழங்கினமையுங் காண்க.
11. வரவர வடநூல் தமிழ்நூலுக் களவையாதல்
12. தமிழர் பலதுறைகளிலும் வரவரக் கெட்டுவருதல்
தமிழிலக்கியத் தோற்றம்
ஒரு மொழியில் முதலிலக்கியம், காதல் திருமுகங்கள், முன்னோர் சரித்திரம், முன்னோர் போர்ப்பாடல்கள், திருமன்றாட்டுகள், மறைநூல் என்ற வகையாகவே யிருக்கும். பின்னரே பிற நூல்களும் கலைகளும் தோன்றும்.
நிறைமொழி மாந்தர் என்னும் தொல்காப்பிய நூற்பாவுரையில், தானே என்று பிரித்தான், இவை தமிழ் மந்திரமென்றற்கும், பாட்டாகி அங்கதமெனப்படுவனவும் உள, அவை நீக்குதற்குமென உணர்க என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல் காண்க.
தமிழிலக்கியப் பல்வேறு பொருட்பாகுபாடு
தமிழிலக்கியத்தின் இயல்பை அறியாத ஆரியவழியினரும் ஆராய்ச்சி யில்லாரும், பொருளிலக்கணப் பாகுபாடொன்றையே தமிழர் பொருட்பாகு பாடென்று கொண்டு, அறம் பொரு ளின்பம் வீடென்னும் அறநூற் பாகுபாட்டை ஆரியரதென்றும் தமிழர் அதைத் தழுவினரென்றும், முறையே துணிந்தும் மயங்கியும் கூறுவாராயினர். பொருட்பாகுபாடு பெரும்பாலும் நூல்தொறும் வேறுபடுவதாகும்.
பொருள், குணம், கருமம், பொது, சிறப்பு, ஒற்றுமை, இன்மை எனப்பொருள் ஏழென்பது ஏரண(தருக்க) நூல்.
பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை
இன்மை யுடன்பொரு ளேழென மொழிப
எனபது அகத்தியத் தருக்க நூற்பா.
இறை (பதி), உயிர் (பசு), தளை(பாசம்) எனப்பொருள் மூன்றென்பது சிவனியக் கொண்முடிபு(சைவசித்தாந்த) நூல்.
அறம், பொருள், இன்பம், வீடு எனப்பொருள் நான்கென்பது அறநூல்.
இலக்கண நூலில் அதிகாரந்தொறும் பொருட்பாகுபாடு வேறு படும்.
உயிர், மெய், உயிர்மெய், (பிராணி) எனப் பொருள்களை மூன்றாகப் பகுப்பது எழுத்ததிகாரம்; பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என ஆறாகவும், உயர்திணை அஃறிணை என இரண் டாகவும் பகுப்பது சொல்லதிகாரம்; அகம் புறம் என இரண்டாகப் பகுப்பது பொருளதிகாரம்.
அன்பே அறனே இன்பம் நாணொடு (பொருள் 21)
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் (கற். 51)
ஒன்றாப் பொருள்வாயின் ஊக்கிய பாலினும் (அகத். 41)
பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே (பொருள். 20)
எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது (பொருள்.21)
என அறம் பொருளின்பங்கள் தனித்தனியாகவும், மூன்றன் பகுதியும் (அகத் 41) எனத் தொகுத்தும், அகப்பொருளிலக் கணத்திற் கூறப்பட்டிருப்பதால், எல்லார்க்கும் பொதுவான இருவகை வாழ்க்கைக்குமுரிய அறநூற் பாகுபாடும் புலவரே செய்யும் இலக்கணஆராய்ச்சிக்குரிய பொருளதிகாரப் பாகுபாடும், வெவ்வேறு நூலனவென்றும் வெவ்வேறு பயனோக்கியன வென்றும் அறிந்துகொள்க. மூன்றன் பகுதியாவது அறத்தாற் பொருளீட்டி அப்பொருளால் இன்பம் நுகர்வேன் எனல். இதனால் அறநூற்பாகுபாடு தமிழரதே என்று தெளிக.
தமிழ நாகரிகத்தின் சிறந்த கூறுகளையெல்லாம் தழுவிக்கொண்டு அவற்றைத் தமவெனக் கூறல், ஆரியரின் தொன்றுதொட்ட வழக்கமே. அறம்பொருளின்பம் வீடெனத் தமிழற நூலார் வகுத்த பொருட்பாகுபாட்டையே இலக்கண நூலார் இன்பம் அகமென்றும் ஏனை மூன்றும் அஃதல்லாத புறமென்றும் இரண்டுள் அடக்கி மாற்றி வகுத்தனர் என்க. இதையுணர்த்தற்கே
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
………………………..
காமக் கூட்டங் காணுங் காலை என்று தொல்காப்பியங் கூறியதும் என அறிக. முழுத் தமிழிலக்கணந் தோன்றியது தலைக் கழகக் காலம் (கி.மு. 10,000). அது தோன்றிய போதே முத்தமி ழாகத் தோன்றிற்று. அவற்றுள் அடிப்படையான இயற்றமிழ் இலக்கணமும் மூவதிகாரப் பிண்டமாகவே தோன்றிற்று. இதனால் பொருளதிகார அகப்புறப் பொருட்பாகுபாட்டிற்கு மூலமான அற நூற்பொருட்பாகுபாடு, தலைக்கழகத்திற்கும் முந்தியதென அறிக. அது ஆரியம் என்னும் பேரும் இனமுந் தோன்றாத முதுபண்டைக் காலம். அகம் புறம் என்பதே தமிழர் பொருட் பாகுபாடென்பது, பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழில் என்பதே தமிழர் பொருட் பாகுபாடென்பது போன்றதே.
தமிழிலக்கிய வரலாறெழுதத் தக்கார் யார்?
தமிழ், திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகக் குமரிக் கண்டத்தில் தோன்றிய உலகமுதல் உயர்தனிச் செம்மொழி.
ஆயின், ஈராயிரங் கல்தொலைவு தெற்கே நீண்டு பரந்திருந்த பழந்தமிழ்நாடு, மூவேறு கடல்கோளால் முழுகிப் போனதினால் பல்லாயிரக் கணக்கான உலக வழக்குச் சொற்களும் பல்துறைப் பட்ட முதனூ லிலக்கியமும் இறந்தொழிந்தன. ஆதலால், தமிழ்நாட்டுப் பண்டைவரலாற்றிற்குத் தொல்பொருட்கலை இம்மியுந் துணை செய்யாது.
கடல்கோட்குத் தப்பிய தனித்தமிழ் நூல்களும் ஆரியத்தால் அழியுண்டு போயின. அதுவுமன்றி, அக்காலத்தினின்றே ஆரியத் திற்கும் தமிழுக்கும் இடையே தீராக் கடும்பகையும் இருந்து வந்திருக்கின்றது.
கிரேக்கத்திற்கு இனமான இந்திய ஆரியரின் தாய்மொழி, அவர் இந்தியாவிற்குட் புகுந்தவுடன் வழக்கற் றொழிந்தது. அம்மொழியும் அக்கால வடநாட்டு வட்டார மொழிகளாகிய பிராகிருதமுங் கலந்ததே வேதமொழி. அவ்வேதமொழி தமிழொடு கலந்து வளர்ந்த பல்துறை உலகியல் இலக்கிய மொழியே சமற்கிருதம்.
பிராமணர் நிலத்தேவரென்றும், சமற்கிருதம் தேவமொழி யென்றும் இரு நச்சுக்கருத்துக்கள் மூவேந்தர் உள்ளத்திலும் ஆழப்பதிக்கப்பட்டு விட்டதனால், தமிழ்மொழியும் இலக்கியமும் படிப்படியாகக் குன்றியும் கலப்புண்டும் இழிந்தும் போயின. ஆதலால், தமிழ் வேர்ச்சொல் லாராய்ச்சியும் பிராமணியத்தையும் இந்தித் திணிப்பையும் எதிர்க்கும் நெஞ்சுரமும் உள்ளவரே யன்றி, அவை இல்லாது தமிழைக் காட்டிக்கொடுக்கும் வையாபுரிகள், எத்துணை இலக்கியங்கற்றும் பண்டாரகர்ப்பட்டம் பெற்றும் பல்கலைக் கழகத் துணைவேந்தராகியும், தமிழ்வரலாறும் தமிழிலக்கிய வரலாறும் எழுத எட்டுணையும் தகுதியுள்ளவ ராகார் என்பது திண்ணம்.
தமிழின் தலைமை
தமிழ், திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்க மூலமுமான உலக முதல் உயர்தனிச் செம்மொழி. அதன் வளர்ச்சி நிலைகள், முழைத்தல் மொழி, இழைத்தல் மொழி என இரண்டு.
1. முழைத்தல் மொழி அல்லது இயற்கை மொழி - Natural Language or Rudimentary Speech
விளி யொலிக் கிளவிகள் - எ.டு. ஏ, ஏய், ஏல், ஏல, எல்லா
ஒப்பொலிக் கிளவிகள் - எ.டு. காகம், குரங்கு, மாடு, விக்கு
உணர்ச்சி யொலிக் கிளவிகள் - எ.டு. ஆ, ஆவா - ஆகா, எல்லே
குறிப்பொலிக் கிளவிகள் - எ.டு. ஊம், சீ, சே, சை, பூ
வாய்ச்செய்கை யொலிக் கிளவிகள் - எ.டு. ஊது, துப்பு, கவ்வு, அங்கா
சுட்டொலிக் கிளவிகள் - எ.டு. ஆ, ஈ,ஊ
2. இழைத்தல் மொழி அல்லது வளர்ச்சி மொழி - Developed Language or Articulate Speech.
இழைத்தல் மொழிச்சொற்கள் பெரும்பாலும் முச்சுட்டொலி களினின்றே, அவற்றுள்ளும் சிறப்பாக உகரச்சுட்டினின்றே, தோன்றியுள்ளன.
சேய்மையைச் சுட்டுவதற்கு விரிவாக வாயைத் திறக்கும்போது ஆகார அகரமே ஒலித்தற் கியலுதலும், அண்மையைச் சுட்டுவதற்கு வாயிதழைப் பின்னோக்கி இழுக்கும்போது ஈகார இகரமே ஒலித்தற்கியலுதலும், முன்மையைச் சுட்டுவதற்கு வாயிதழைக் குவிக்கும் போது ஊகார உகரமே ஒலித்தற்கியலுதலும், ஒலித்துக் காண்க. இங்ஙனம் ஆ ஈ ஊ எல்லது அ இ உ என்னும் மூவுயி ரெழுத்துக்களும், வாய்ச் செய்கை யுதவியால், வையினாற் சுட்டுவது போன்றே சேய்மை யண்மை முன்மைகளைச் சுட்டுவதால், சுட்டெழுத்துக்கள் எனப்பட்டன. இவ்வியல்பைத் தமிழிலும் திரவிடமொழிகளிலுந்தான் காணவியலும்.
இம்முச்சுட்டெழுத்துக்களினின்றே, ஆரியமொழிச் சுட்டுச் சொற்களெல்லாந் தோன்றியுள்ளன. ஆயின், அம்மொழிகள் திரிமொழிகளாதலின், அவற்றின் சுட்டுச்சொற்கள் இடத்தையும் பொருளையும் இடம் மாறியுஞ் சுட்டுகின்றன.
எ.டு. ஆங்கிலம் - it = அது, இது
இலத்தீனம் - is = அவன், அவள், அது
சமற்கிருதம் - அத்ர = இங்கே, அத்ய = இன்றைக்கு,
அதுநா = இப்போது.
இனி, சுட்டெழுத்துக்கள் ஆரியமொழிகளில் வேறெழுத்தாக மாறியும் உள்ளன.
எ-டு. ஆங்கிலம் - there = அங்கே, ளடி = அப்படி.
இலத்தீனம் - hoc = இது
சமற்கிருதம் - ஏதத் = இது
உகரச் சுட்டு, லகர மெய்யொடு சேர்ந்து உல் என்னும் மூலவேரையும், க ச த ந ப ம என்னும் சொன்முதல் மெய்களோடு கூடிக் குல், சுல், துல், நுல், புல், முல் என்னும் அறு சினைவேர்களையும், அதன்பின் லகரவீறு வேறெழுத்துக்களாக மாறும் முதலடியையும் அறு வழியடிகளையும், தோற்றுவித்துள்ளது. இவ் வேர்களி னின்றும் அடிகளினின்றும், தமிழ்ச்சொற்களுள் முக்காற் பங்கிற்கு மேற் பட்டவை தோன்றியுள்ளன.
எ-டு : உரு. உல் - உர் - உரு.
உருத்தல் = தோன்றுதல். உரு = தோற்றம், வடிவம், வடிவுடைப் பொருள், தனிப்பொருள், உடம்பு, பாட்டு, மனப்பாடம், உருப்படி = தனிப்பொருள், நிறைவான பொருள், உரு - உருவு = தோற்றம், வடிவம். உருவு - உருவம் = வடிவம், வடிவுடைப் பொருள், உருவப்படம், படிமை, சிலை, உருவு - உருபு = வேற்றுமை வடிவமான சொல் அல்லது அசை. உருச்செய்தல், உருப்போடு தல், உருவடித்தல், உருவேற்றுதல் என்பன, மந்திரத்தின் அல்லது பாட்டின் அல்லது பாடத்தின் வடிவை அப்படியே மனதித்திற்பதித் தலாகிய மனப்பாடஞ் செய்தலைக் குறிக்கும். உருவம் - வ. ரூப. இச்சொல் இருக்குவேதத்திலும் உள்ளது. உருபா(ரூபா) என்னுஞ் சொல்லும் இதினின்று திரிந்ததே. அரசன், தெய்வம், தோற்றரவு, சின்னம் முதலியவற்றின் உருவம் பொறித்த காசு உருபா. (உருவு - உருவா, உருபு = உருபா)
உரு - அரு - அரும்பு = மொட்டு. அரும்புதல் = தோன்றுதல்.
அரும்பு - அருப்பு - அருப்பம் = தோன்றும் இளமீசை.
#குரு
குருத்தல் = தோன்றுதல். கரு = சிறு கொப்புளம் (வேர்க்குரு), கொட்டை. குரு -குருகு = குருத்து, இளமை, குட்டி. குருகு - குருக்கு = இளம் பனந்தோப்பு. குரு - குருத்து = தாள், தோகை, ஓலை முதலியவற்றின் இளங்கொழுந்து. குருத்து - குருந்து = வெண் குருத்து, குழந்தை. குரு - குருப்பு = தோன்றிய பரு. குரப்பு - குரும்பு - குரும்பை = தென்னை மணை யிளம்பிஞ்சு. குருமா - குருமான் - குருமன் = விலங்குக்குட்டி. குரு - குருள் - குருளை = குட்டி.
குரு (=பரு.) - k., f., தெ, குரு, குருப்பு.
குரு - கரு = சூல் (கருப்பம்), முட்டைக்கரு, முட்டை, பிறப்பு, குழந்தை, குட்டி, உடம்பு, நிலத்தில் தோன்றும் பொருள்.
ம.கரு. கரு - கருந்து = மரக்கன்று,
சுரு (வழக்கற்றது)
துரு
துருத்தல் = தோன்றுதல். துரு - துருத்து. துருத்துதல் = தோன்றச் செய்தல், கொட்டை, காற்று முதலியவற்றை முன்தள்ளுதல். துருத்து - துருத்தி.
நுரு
நுருத்தல் = தோன்றுதல். நுரு = அறுத்ததாளில் முளைக்குந்தளிர். நுரு - நொரு = முதிர்ந்த பயிரின் அடியில் முளைக்குந் தளிர், காய்ப்பு ஓய்ந்தபின் தோன்றும் பிஞ்சு. நொருப்பிஞ்ச. நொருப் பிடித்தல் என்பன உலக வழக்கு.
புரு
புருத்தல் = தோன்றுதல் (வழக்கற்றது). புரு = குழந்தை
புரு - வ. புரூண (bhruna).
முரு
முருத்தல் = தோன்றுதல் (வழக்கற்றது).
முரு - முருகு = இளமை, இளமை யழகு, இளமையான முருகன். முருகு - முருகன் - இளைஞனான குறிஞ்சித் தெய்வம்.
முரு - முறு = முறி. முறிதல் = தளிர்த்தல். முறி = தளிர், கொழுந்து. முறி - மறி = குட்டி.
இங்ஙனமே, முன்வருதல் என்னும் பொருளில், உது, குது, - துது, நுது, புது, முது என்றும்;
கூறிய நுனியாற் குத்துதல் என்னும் பொருளில், உள், குள், குள், துள், நுள், புள், முள், என்றும்;
வளைந்தியங்குதல் என்னும் பொருளில், உருள், குருள், குருள், (துருள்), நுருள், புருள், முருள், என்றும்;
துளைத்தல் அல்லது துளை என்னும் பொருளில், உளை, குழை, - , துழை, நுழை, புழை, முழை என்றும்;
துருவுதல் என்னும் பொருளில், உருவு, குருவு,
சுருவு, துருவு, - புருவு, என்றும்; இங்ஙனமே பிறவாறும்,
ஏழடிகளினின்றும் சொற்கள் தோன்றியிருத்தல் காண்க. இங்ஙனம் சொற்கள் அமைந்திருத்தலை வேறெம் மொழியிலுங் காண முடியாது. பழம் பாண்டி நாடான பண்டைத் தமிழகம் முழுவதும் முழுகிப் போனமையாலும், ஆரியர் வருகைக்கு முற்பட்ட இலக்கியமனைத்தும் அழிவுண்டமையாலும், இருவகை வழக் கினின்றும் பல இணைப்பண்டுச் சொற்களை எடுத்துக்காட்ட இயலவில்லை என அறிக.
இற்றை நிலையதே பண்டைத்தமிழும் என்று கருதிக் கொண்டும், சமற்கிருதத்தை உண்மையில் தேவமொழி யென்று நம்பிக் கொண்டும், திரவிடமொழியாளரெல்லாம் தமிழின் தலைமையை ஒப்புக்கொள்வதில்லை, ஆரிய மயக்கும் இதற்கொரு காரணம், பொருளிலக்கணமும் எழுநிலத்தெழுந்த பண்டைச் செய்யுளிலக் கியமும் முத்தமிழ்ப்புணர்ப்பும் திரவிட மூலங்காண்டற்கேற்ற வரலாற்றுக் குறிப்பும் திருக்குறளும், தமிழின் தலைமையை நாட்டப் போதிய சான்றுகளாம். இனி, தமிழ்ச் சொற்களின் செம்மையும் திரவிடச் சொற்களின் கொடுமையும், துணைச் சான்றுகளாம்.
தமிழ் மொழியின் வளர்ச்சி நிலைகள்.
(1) அசைநிலை - Isolating or Monosyllabie Stage
(2) புணர்நிலை - Compounding Stage
(3) பகுசொன்னிலை - Terminational State
(4) கொளுவுநிலை - Agglutinetive Stage
(5) பிரியாநிலை - Inflexional Stage
(6) தொகுநிலை - Synthetic Stage
(7) பல்தொகுதிநிலை - Polysynthetic Stage
(8) பிரிநிலை - Analytical Stage
என எண்வகைப் பட்டுள்ளன.
ஆப்பிரிக்கரும் ஆத்திரேலியரும் சீனரும், அசைநிலைக் காலத்தில் குமரிநாட்டினின்று பிரிந்துபோனதாகத் தெரிகின்றது.
துரேனியர் அல்லது சித்தியர் எனப்படும் மக்கள், கொளுவு நிலைக் காலத்திற் பிரிந்து போயிருக்கலாம்.
அவருக்குச் சற்றே பிற்பட்ட தமிழருள் ஒருசாரார் வடக்கே சென்று பிராகிருதராக மாறினர். அவருக்கப் பிற்பட்டவர் திரவிடராகத் திரிந்தனர்.
பிராகிருதருந் திரவிடருங் கலந்த வகுப்பார் ஒருசாரார் வட மேற்காகச் சென்று ஐரோப்பாவில் ஆரியராக மாறினர். அவருள் ஒரு பிரிவினரே இந்தியாவிற்குட் புகுந்து வேத ஆரியராயினர்.
ஆரியன் என்ற பெயர் தோன்றியது இந்திய நிலத்திலேயே. ஐரோப்பியரை ஆரியர் என்றது மொழியினம் பற்றியே.
ஆரி = மேன்மை. ஆரியன் = மேலோன். இத்தென்சொல்லையே ஆரியர் தங்கட்கு இட்டுக்கொண்டனர். இந்திய வரலாற்று நூலில், ஆரியர் என்பது, பூசகரோடு கூடிய ஆரிய ஆயர் கூட்டத்தையே குறிக்குமேனும், தமிழாரியப் போராட்டத்தில் ஆரியர் என்பது, ஆரியப் பூசாரியரையே என்பதை அறிதல் வேண்டும்.
ஐரோப்பா சென்று ஆரியராக மாறிய பிராகிருத திரவிடர், முதற்கண் காண்டினேவியம் (Scandinavia) சென்று தங்கியதனால், அதையடுத்து தியூத்தானிய மொழி தமிழுக்குச் சற்று நெருங்கிய தாகவும், அதற்குத் தெற்கிலுள்ள இலத்தீனம் அதினுஞ் சற்று விலகியதாகவும், அதற்குத் தென்கிழக்கிலுள்ள கிரேக்கம் மிக விலகினதாகவும், இந்தியா வந்த ஆரியம் மிகமிக விலகினதாகவும், உள்ளன.
தமிழ் தியூத்தானியம் இலத்தீனம் கிரேக்கம் இந்திய ஆரியம்
உகை-அகை -அகோ (ago) அகோ (ago) அஜ்
இதோள் ஹிதெர் சித்ர (citra) – அத்ர
காண் கன்,கான், க்னோ (gno) க்னோ (gno) ஜ்ஞா
கென், கேன்
(Cun Con,
Ken,Can)
க்னோ (know)
கும் – கும் சும் ஸம்
பொறு பெர், பேர் ப்வெர் பெர் ப்ரு, பர்
(ber,bear) (fer) (pher) (bhr,bhar)
விடலை வெலெ விதுவ இதலொ வத்ஸ
வடமொழியின் ஐந்நிலைகளில் தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளன.
அவையாவன:-
1. வடுகநிலை (2) ஐரோப்பிய நிலை. (3) பிராகிருத நிலை. (4) வேத நிலை. (5) சமற்கிருத நிலை.
இவ்வைந் நிலைகளிலும் கலந்துள்ள தென்சொற்கள் வட மொழியில் ஐந்திலிரு பகுதியாகும். தமிழ்த்துணையின்றி வடமொழி இயங்க இயலாது. வடமொழி தேவமொழியென்று கூறி, தென்சொற்கட்கெல்லாம் பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும், வலிந்தும் நலிந்தும் பொருளும் பொருட்காரணமுங் கூறும் வழக்கம், இனிப் பயன்படாது. அதை அடியோடு விட்டு விடல் வேண்டும்.
பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ் தலைமை யாகவும் (Main) வடமொழி கீழ்த்துணையாகவும் (Subsidiary) இருத்தல் வேண்டும். பொதுத் திருக்கோவில் வழிபாடெல்லாம் தமிழிலேயே நடைபெறல் வேண்டும். பிராமணரே தமிழ் வழிபாட்டை நடத்தி வைக்கலாம். பிராமணக் குடியிருப்புகளிற் பிராமணருக்கென்று கட்டிய கோவில்களில் சமற்கிருத வழிபாடு நடத்திக்கொள்ளலாம்.
முதலமைச்சர், கல்வியமைச்சர், பல்கலைக்கழகத் துணை வேந்தர், தமிழ்த்துறைத் தலைவர், கல்வித்துறை இயக்குநர்கள், கல்விநிலை யங்களில் தமிழாசிரியன்மார், வரலாற்றுத்துறை தொல் பொருட் டுறை ஆசிரியரும் ஆராய்ச்சியாளரும் தலைவரும் ஆகிய அனைவர் பதவிகட்கும், நல்ல தமிழரே அமர்த்தப் பெறல் வேண்டும். பரிதி மாற்கலைஞன் போன்றவராயின் பிராமணரும் அமர்த்தப் பெற லாம்.
ஆங்கிலப்பட்டம் பெற்ற பிறபாட ஆசிரியர்க்குரிய சம்பளமே, புலவர் பட்டம் பெற்ற தமிழாசிரியர்க்கும் அளிக்கப்படல் வேண்டும்.
ஆராய்ச்சிப்பட்டங்கட்குரிய இடுநூல்களை (Thesis)¤ தமிழிலும் எழுதி விடுக்க, அரசும் பல்கலைக் கழகங்களும் இசைவுதரல் வேண்டும்.
எவ்வகையிலும் தமிழுக்குத் தாழ்விருத்தல் கூடாது.
இரவில் மதியொளி எத்துணை விளக்கமாயிருப்பினும் கதி ரொளியின் மறுநிழலாகவே யிருப்பது போன்று, இற்றைச் சமற்கிருத இலக்கியம் எத்துணை விரிவுபட்டிருப்பினும் தமிழ் மூலத்தின் பெருக்கமே என்பதை, உணர்தல் வேண்டும்.
தமிழின் தனியியல்புகள்
தமிழ், வரலாற்றிற் கெட்டாத முதுபழந் தொன்மொழியாத லாலும், அது தோன்றிய பழம் பாண்டிநாடு தென்மாவாரியில் முழுகியும், அந் நிலத்தெழுந்த முதலிரு கழக நூல்களும் தமிழ்ப் பகைவரால் அழியுண்டும் போனதனாலும், அதன் தனியியல் புகள் நெடுங்காலத் திடமான நடுநிலை ஆராய்ச்சியின்றித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராலும் அறியவொண்ணாதனவா யிருக்கின்றன. அவ்வியல்பு களாவன:-
1. தொன்மை
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்
என்பது, தண்டியலங்கார உரையில் மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ள பழம் பா.
தமிழை உலகத் தகவிருளை யகற்றும் சுடராகச் சொன்னதின் கருத்து. அது உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி யென்பதே. அதனாலேயே, அப் பாவைப் பாடியவர், தமிழை ஒப்புயர்வற்ற மொழியென்றுங் கூறி முடித்தார்.
எட்டாம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் புறப்பொருள் வெண்பா மாலையின் ஆசிரியராகிய ஐயனாரிதனார், குறிஞ்சியும் முல்லையுங் கலந்த பாலை நிலத்து மறவர் குடியின் பழைமை யைக் குறிக்குமிடத்து.
பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி (பு.வெ. 35)
என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது, குறிஞ்சி முல்லைவாணர் மிகப் பழமையான தமிழ் வகுப்பார். அவர் குடியின் தொன்மை கூறவே. தமிழின் தொன்மையும் உடன் கூறியவாறாம்.
இனி, முத்தமிழ்த் துறைபோகி முற்றத் துறந்து மூவேந்தரையும் முத்தமிழ் நாட்டையும் ஒப்பப் புகழ்ந்த சேரமுனிவர் இளங் கோவடிகள், கி.பி. 2ஆம் நூற்றாண்டிறுதியில் தாமியற்றிய சிலப்பதிகாரத்துள்.
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (11:19-22)
என்று பாடியிருப்பதும்: அடியார்க்குநல்லார், தொடியோள் பௌவமும் என்னும் சிலப்பதிகார வேனிற்காதைத் தொடருக்கு,
அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லை யாகிய பஃறுளியென்னு மாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின்காறும், கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றாரென்றுணர்க என்று விளக்கவுரை வரைந்திருப்பதும்: தென்மாவாரியில் மூழ்கிப்போன பழம்பாண்டி நாட்டையும் அதன் பரம்பையு முணர்த்தும்.
பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடைப்பட்ட தொலைவின் அளவும், பல்வேறு நிலப்பகுதிகளின் பெயர்களும், இறந்துபட்ட முந்து நூல்களுள் அல்லது உரைகளுள் குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அடியார்க்குநல்லார் அவற்றைக் கட்டிக் கூறியிருக்க முடியாது.
இறையனா ரகப்பொருளுரையிற் காணும் முக்கழக வரலாற்றிற் குறிக்கப் பட்டுள்ள, தென்மதுரைத் தலைக்கழகமும் கபாட (கதவ?) புர இடைக்கழகமும், முழுகிப்போன பழம்பாண்டி நாட்டுட்பட்டனவே.
ஒரு காலத்தில், தென்னிந்தியா, முழுகிப்போன தென்னில வாயிலாக ஆத்திரேலியாவுடனும், தென்னாப்பிரிக்காவுடனும் இணைக்கப் பட்டிருந்த தனாலும், தமிழ் உலக முதன்மொழியாதலாலும், மாந்தன் பிறந்தகம் மடகாசுக்கர்ப் (Madagascar) பக்கம் என்று (Haeckel) எக்கேல் பேராசிரியரும், தங்கனியிக்காப் (Tanganyika) பக்கம் என்று இலீக்கி (Leakey) என்னும் மாந்தனூல் ஆராய்ச்சி யாளரும், கூறியிருப்பவை, பழம் பாண்டிநாட்டை ஒரு பகுதி யாகக் கொண்ட குமரிக்கண்டம் என்னும் ஒரு பெருந் தென்னிலப் பரப்பு, ஒரு காலத்திருந்த மைக்குப்
புறச்சான்றுகளாம்.
தமிழரின் முன்னோர் தென்னாட்டுப் பழங்குடி மக்களாதலால், தமிழ் வரலாற்றிற்குக் குமரிநாட்டுக் கொள்கை இன்றியமையாத அடிப்படைச் செய்தியாகும்.
மூவேறு கடல்கோள்களாற் படிப்படியாக முழுகிப்போன குமரி நாட்டின் தென்கோடியிலிருந்தது குமரிமலை யென்றும், வட கோடியிலிருந்தது குமரியாறு என்றும், வேறுபாடறிதல் வேண்டும்.
2. மென்மை
மாந்தன் பிறந்தகமும் தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டிநாடும் ஆகிய குமரிநாடு, நாகரிக நாடாயினும், உலக முதல் நாடாதலால், அதில் வாழ்ந்த பழங்குடி மக்களான தமிழரின் வாயில், உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாக முப்பதெழுத்துகளே தோன்றின. அவற்றுள்ளும், ழ,ள,ற,ன என்னும் நான்கும் பிந்தித் தோன்றியவையாகும்.
தமிழ்ச்சொன் முதலில் தனிமெய்யும் சில உயிர்மெய்யும், சொல் லிடையில், சில மெய்கட்குப் பின் சில வேற்றுமெய்யும், சொல் லிறுதியில் வல்லின மெய்யும், வருவதேயில்லை. இக் கட்டுப் பாடும் விலக்கும் வேண்டுமென்று செய்யப்பட்டவை யல்ல. மாந்தன் வாயொலி வளர்ச்சி நோக்கின், அக்காலத் தமிழர் சிறு பிள்ளை நிலையிலிருந்ததனால், அவர் வாயில் எளிய முறையில் ஒலிக்கக் கூடிய தனியொலிகளும் கூட்டொலிகளுமே பிறந்தன. இக் காலத்தும், நெல்லை மாவட்ட நாட்டுப்புற மக்கள், சாக்ஷி என்னும் வடசொல்லைச் சாக்கி என்றும், ஜாதி என்னும் வடசொல்லைச் சாதி என்றும் ஒலிப்பதைக் காணலாம்.
இங்ஙனம் எளிய வொலிகளைக் கொண்டிருந்தும், தமிழின் ஓசையினிமைக்கு எள்ளளவுங் குறைவில்லை.
தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கள் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத்
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ (நாட்டுப். 41)
என்னுங் கம்பராமாயணச் செய்யுளைப் பாடிக் காண்க.
ஒரு மொழிக்கு வேண்டியவை சொற்களே யன்றித் தனியெழுத்து களல்ல. குமரிநாட்டுப் பொதுமக்கள், முப்பதொலிகளைக் கொண்டே, அக்காலத்தில் மட்டுமன்றி இனிவருங் காலத்தும் மாந்தன் மனத்தில் தோன்றக்கூடிய எல்லாக் கருத்துக்களையும் குறிக்கத்தக்க, வேர்ச்சொற்களைப் பிறப்பித்திருப்பதால், தமிழுக்குப் பிறமொழி யொலிகளே தேவையில்லை.
உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கும் மூவகைச் செயற்கை வல்லொலிகளும், மூச்சொலியும், தமிழிலின்மையால் அது சிறு பிள்ளைகளும் நோயாளியரும் கழிபெரு மூப்பினரும் எளிதாய் ஒலிக்கத் தக்கதாயிருப்பதுடன், ஏனை மொழிகளி லியலாத நூற்றுக்கணக்கான திருப்புகழ் வண்ணங்களும்: வல்லினப் பாட்டு, இடையினப் பாட்டு, அடிமடக்கு, இரு பொரு ளிரட்டுறல், பல்பொரு ளிரட்டுறல், நடுவெழுத்தணி, முப்பாகி, பதின்பங்கி, பதிற்றுப் பதின்பங்கி முதலிய சொல்லணிகளும்: கோமூத்திரி, சுழிகுளம், தாமரைக் கட்டு, சக்கரக்கட்டு, தேர்க்கட்டு, இருநாகப் பிணையல், எண்ணாகப் பிணையல் முதலிய மிறைப் பாக்களும் (சித்திரக் கவிகளும்): பாடற்கேற்றதாயு மிருக்கின்றது.
3. தாய்மை
மக்கட் பெருக்கம், வணிகம், கொள்ளைக்கும் போருக்கும் பழிக்கும் தப்பல், புதுநாடு காணல், கடல்கோள் முதலிய பல கரணியங்களால், தமிழர் வடக்கு நோக்கிச் சென்று, நாளடைவில் தமிழ் திராவிடமாகத் திரிந்ததால் தாமும் திராவிடராயினர். பின்னர்த் திராவிடருள் ஒரு சாரார், மேற்கூறிய கரணியம் பற்றியே வடமேற்காகச் சென்று, ஐரோப்பாவை யடைந்து ஆரியராக மாறினர்.
ஆதலால், குமரிநாட்டுத் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாயிற்று.
தமிழ் எங்ஙனந் திரவிடமாகத் திரிந்ததென்பதற்கு, ஒரு தெலுங்கு வினைச்சொல்லின் கூறுகளே போதுமானவை.
எ-டு: ஆகு என்னும் வினைச்சொல்
சொல்வகை தமிழ் தெலுங்கு
முதனிலை ஆ.ஆகு அவு
ஏவல் ஒருமை ஆ.ஆகு கா
ஏவல் பன்மை ஆகும்,ஆகுங்கள் கம்மு, கண்டி
இ.கா. ஆ.பா.வினைமுற்று ஆயினான் அயினாடு
இ.கா. பெயரெச்சம் ஆன அயின, ஐன
இ.கா. வினையெச்சம் ஆய்,ஆகி அயி,ஐ
எ. கா. வினையெச்சம் ஆக கா,அவ
நிலைப்பாட்டு வினையெச்சம் ஆயிற்றேல் அயித்தே
எ.கா. வினைமுற்று ஆகும்,ஆம் அவுனு
மறுப்பிணைப்புச் சொல் ஆனால், கானி
ஆயின், அயினனு
ஆயினால்
ஒத்துக்கொள் விடைச்சொல் ஆம் (yes) அவுனு
படர்க்கை ஒன்றன்பால்
எ.கா. எதிர்மறை வினைமுற்று ஆகாது காது
தொழிற்பெயர் ஆதல், அவுட்ட,
ஆகுதல் காவடமு
கூட்டுவினை ஆகவேண்டும் காவலெனு
திராவிட மொழிகளெல்லாம் பிற்காலத்துத் திரிமொழிகளா தலால், அவற்றில் தமிழிலில்லாத வல்லொலிகள் தோன்றியுள்ளன.
எ-டு:
தமிழ் தெலுங்கு
குடி ( = வீடு, கோவில்) பரனை
செய் ceyu (சேயு)
சறுகு ஜறு (jaru)
தேங்காய் tenkaya (தெங்க்காய)
மிஞ்சு mincu (மிஞ்ச்சு)
குண்டு (சிறுகுட்டை) kunta (குண்ட்ட)
மொந்தை munta (முந்த்த)
கும்பு gumpu (கும்ப்பு)
என்றார் antaru (அண்ட்டாரு)
எடுப்பொலிகள் (voiced sounds) ஆரியத்திற் போன்றே திரவிட மொழிகளில் வழங்குவதால், குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தை அறியாதவரும் ஒப்புக்கொள்ளாதவரும், தமிழிலும்
முற்காலத்தில் பய, தய, னய, னய,யெ என்னும் எடுப்பொலிகள் வழங்கிப் பின்னர்க் க, ச, ட, த, ப என்னும் எடுப்பில (unvoiced) வொலிகளாக மாறிவிட்டன என்பர். இங்ஙனங் கொள்பவர் அயல்நாட்டாரும் தமிழ்ப் பகைவரும் ஆவர். பிஞ்சு முற்றிக் காயான பின் மீளப் பிஞ்சாகாததுபோல், எடுப்பிலா வொலி பொலிந்து எடுப்பொலி யானபின், மீள எடுப்பிலா வொலியாக மாறாதென அறிக. தென் னாட்டுப் பழங்குடி மக்களை மேனாட் டினின்று வந்தேறிகளாகத் தலைகீழாய்க் கொண்டதனாலேயே, இங்ஙனம் தலைகீழான முடிபிற்கு வர நேர்ந்தது. இது இயற்கைக்கு மாறான தென்பதை, குழந்தை வாயொலிகளையும் வளர்ந்தோன் வாயொலிகளையும் ஒப்புநோக்கிக் காண்க.
தமிழ் ஆரியத்திற்கு மூலம் என்பதை, பல்வேறு தமிழ் வேர்ச்சொற் களினின்றும் திரிந்து குடும்பங் குடும்பமாகவும் குலங்குலமாகவும் வழங்கும் சொற்களுட் சிற்சில. ஆரியத்திற் குடும்பத் தொடர்புங் குலத்தொடர்புமின்றித் தனித்தனியாய் வழங்குவதனால் அறியலாம்.
எ-டு: குல் - குலவு. குலவுதல் = வளைதல்.
L. clino = to bend. Gk. klino = to slope.
குல் - குலி - குளி - குளிகை = மாத்திரை யுருண்டை.
குளி - குழி - குழியம் = 1. வளைதடி, 2. நறுமண வுருண்டை.
குல் - குள் - குளு - குழு - குழவி = உருண்டு நீண்ட அரைகல் (அம்மிக்குழவி).
குளிகை - வ. (Skt.) குளிகா.
L. globus. E. globe = spherical body குலவு - குரவு, குரவுதல் = வளைதல்.
L. curvo= வடி bend. E. curve.
குரவு - குரவை = எழுவர் அல்லது பன்னிருவர் வட்டமாக நின்று ஆடிப்பாடிச் சுற்றிவருங் கூத்து.
Gk. choros = (orig.)a dance in a ring. L. and E. chorus.
குரவு - குரகு - குரங்கு, குரங்குதல் = வளைதல்.
AS. crigan, crincan, E. cringe, crinkle, crank, D. krinkel, W. crom (bent).
குல் - குர் - குரு - குருள், குருளுதல் = சுருளுதல்.
E. curl (formerly‘crull’), D. krullen, Dan, krolle, E. scroll, scrowl
குரு - குருகு = 1. வளையல், 2. வளைந்த கழுத்துள்ள நாரை, கொக்கு, ஓதிமம் (அன்னம்) முதலிய நீர்ப்பறவைப் பொது.
AS. cran, E. crane, D. craan, Ger. krahn, kraniah, Ice. trani,Dan. trane.
Amor, karan, W. garan, Gk. geranos. L. grus. OF. grue.
குரு - குறு - கிறு. கிறுகிறுத்தல் = 1. சுற்றுதல், 2. சுழலுதல்.
கிறுகிறுப்பு = தலை சுற்றுவது போன்ற மயக்கம்.
கிறுகிறுவாணம் = சுழற்றி வீசும் பொறிவாணம்.
Gk. guros = ring, E. gyre, gyrate = to go in circle, to whirl.
குறு - கறு - கறகு - கறங்கு = 1. சுழற்சி, 2. காற்றாடி. கறங்கு - கறங்கல் = வளைதடி.
OE., OS., OHG. hring, ON. hringr, E. ring = circle, circular ornament, (மோதிரம்).
குல் - குள் - குளம் = 1. வளைந்த நெற்றி. 2. வெல்லவுருண்டை.
குள் - குண்டு = உருண்டையானது.
மரா.குண்ட. குண்டு - குண்டலம் = வட்டம், சுன்னம், காது வளையம்.
வ. குண்டல.
குண்டு - குண்டான், குண்டா =உருண்டு வாயகன்ற கண்ணாடிச் சட்டி. மரா. குண்டா (gunda)
குளம் - குடம் = 1. வளைவு. 2. உருண்டையான நீர்க்கலம். வ. குட, கட (ghata)
குடம் - குடந்தம் = உடம்பை வளைத்துக் (குனிந்து) கும்பிடும் வழிபாடு.
குடந்தம் - குடந்தை = வளைவு.
குடம் - குடி = 1. வளைந்த புருவம். வ. (Skt) ப்ரு - குடீ.
(முதற்காலத்தில் வட்டமாக அமைக்கப்பட்ட) சிறுவீடு, வீடு.
AS. cote, cyte, OE, E., cot, Ice., MDu., ON. kot, ஆடு G. kot, kote, koth,
E. cot, Skt. kuti.
குடி - குடிகை - குடிசை = கூலிக்காரர் வாழும் சிறு கூரைவீடு.
E. cottage.
குடி - குடில் = 1. ஆட்டுக்குட்டிகளை யடைக்கும் வட்டமான கூடு. 2. சிறு குடிசை.
Skt. kutira (Fouh).
குடில் - குடிலம் = வளைவு. Skt. kutila
குல் - கொல் - கோல் = உருண்டு நீண்ட கம்பு.
கோல் - கோலி = சிறு விளையாட்டுக் குண்டு. மரா. கோலீ (goli).
குள் - கொள் - கொடு = வளைந்த. கொடுங்கோல் = வளைந்த கோல்.
கொடு - கொடுக்கு = வளைந்த உறுப்பு, கொட்டும் முள்.
Ice. krokr, Sw. krok, Dan. krog, D. cruk, W. crwg, Gael.
crocan, OF. crok, E. crook.
ட - ர.ஒ. நோ: படவர் - பரவர். முகடி - முகரி.
குடகு - Coorg, தரங்கம்பாடி - Tranquebar.
கொள் - கொள்ளு - கொட்கு - கொட்கு - கொக்கி.
AS. hoc, hooc, D. hock, Ice. haki, Ger. haken, OHG. hako, L.G. hakc, E. hook.
கொள் - கோள் - கோளம் = உருண்டை. Skt. gola (nfhy).
கோள் - கோண் - கோணம். Gk. gonia, E. penta gon.
கோண் - கோடு - கோட்டம் = 1. வளைவு. 2. மதில் சூழ்ந்த கோவில்.
மதில் சூழ்ந்த சிறைச்சாலை. Skt. kostha (கோஷ்ட).
கோட்டம் - கோட்டை = 1. நிலாவைச் சூழும் வட்டக்கோடு. 2. மதில் சூழ்ந்த அரண்மனை அல்லது நகர், 2. (Skt.) கோட்ட. L. castrum.
இவற்றை ஒரு பானைச் சில் பருக்கைப் பதம் போலக் கொள்க. இங்ஙனம் ஏராளமான தமிழ்ச்சொற்கள் ஆரியச் சொற்களோடு ஒலியும் பொருளும் ஒத்திருப்பது, கொடிவழித் தொடர்பினாலன்றித் தற்செயலாக இருக்க முடியாது.
4. தூய்மை
உலக மொழிகளுள், தூய்மையை வேண்டுவதும், அதைக் காத்துக் கொள்ள வல்லதும் தமிழ் ஒன்றே.
5. செம்மை
தமிழர் பேரினமாய்ப் பெருகிப் பெருநிலத்திற் பரவியபின், சொற் களின் வடிவு பொதுமக்கள் வாயில் இடந்தோறும் வேறுபடு வதையும், அவ்வேறு பாட்டிற்கு எல்லையின்மையையும், கண்ட இலக்கண நூலார், திருத்தமான வடிவையே அளவைப்படுத்தி அதற்குச் செந்தமிழ் எனப் பெயரிட்டனர்.
இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு, கீது என வெவ்வேறிடத்தில் வெவ்வேறு வடிவில் வழங்கினாலும், ஏடெடுத்தெழுதும் போதும் மேடையேறிப் பேசும் போதும், இருக்கின்றது அல்லது இருக்கிறது என்னும் வடிவையே ஆளவேண்டுமென்பது, தொல்லாசிரியர் கட்டளையிட்ட செம்மையென்னும் வரம்பாம்.
மக்கள் தாமே ஆறறி வுயிரே. உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே என்று மக்கள் இயல் வரையறை செய்யப்பட்டிருப் பதால் அதற்கேற்ப எல்லா வினைகளையும் பண்பட்ட முறை யில் இயற்றுவதே விலங்கினும் உயர்ந்த நிலைமையைக் காட்டுவ தாகும்.
ஆயினும், இச் செம்மையைத் தமிழளவு ஏனை மொழிகள் பேண இயலாது. தமிழில் வழுநிலையாயிருப்பன பல ஏனைமொழிகளில் வழாநிலையாம். ஆதலால், தென்மொழிகள் தமிழும் திராவிட மும் என இரண்டாகப் பிரித்தறிப்படும். தூய்மையுஞ் செம்மை யும் உண்மையின்மைகளே இதற்குக் கரணியம்.
6. மும்மை
இலக்கிய நிலையில், இசையும் நாடகமும் இயலொடு சேர்க்கப் படுவதால், தமிழ் முத்தமிழ் எனப்படும்.
7. இயன்மை
ஏனை யிலக்கியப் பெருமொழிகளிலும், இலக்கணம் எழுத்தும் சொல்லும் யாப்பும் அணியும் என நாற்கூறே கொண்டது. தமிழிலோ எல்லாப் பொருள்களையும் அறிவியல் முறையிற் பாகுபடுத்தும் பொருளிலக்கணமும் உண்டு.
சிலர், காதலும் போரும் ஆகிய இரண்டையே பொருளிலக்கணங் கூறுமென்பர். அவர் அறியார். காதலல்லாத எல்லாப் பொருள் களும் புறப்பொருளாக வாகைத் திணையுள் அடங்கும்.
8. வியன்மை
சில தமிழ்ச்சொற்கள் உலகெங்கும் பரவியுள்ளன.
எ-டு: அம்மை அப்பன் முதலிய பெற்றோர் பெயர்கள்.
9. வளமை
தெற்கில் ஈராயிரங் கல் தொலைவு நீண்டிருந்த பழம் பாண்டிநாடு நீருள் மூழ்கிவிட்டதனாற் பல்லாயிரக்கணக்கான உலக வழக்குச் சொற்களும், முதலிரு கழக நூல்களும் அழிக்கப்பட்டுவிட்ட தனாற் பல்லாயிரக்கணக்கான இலக்கிய வழக்குச் சொற்களும், இறந்துபட்டு மீளா நிலையடைந்தன.
ஆயினும், இக்காலத்தும், இலை, தாள், தோகை, ஓலை என்னும் நால்வகை இலைப் பெயர்களும்: அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என்னும் ஐந்நிலைப் பூப்பெயர்களும்: கச்சல் (வாழை), வடு (மா), மூசு (பலா), குரும்பை (தென்னை, பனை) என்னும் பல்வேறு பிஞ்சுகளின் சிறப்புப் பெயர்களும், உள்ளன.
யானையைக் குறிக்க இருபத்தைந்திற்கு மேற்பட்ட பெயர்கள் உள்ளன.
தொத்துநோய் (Infectious disease), ஒட்டுவாரொட்டி (Contagious disease), திக்குதல் (to stammer), கொன்னுதல் (to stutter) என நுட்ப வேறுபாடு குறிக்கும் ஒரு பொருட் பலசொற்களும் நிரம்பவுள்ளன.
இவ்வியல்பை யறியாதார் வடசொற் கடன்கோள் தமிழுக்கு இன்றியமையாத தென்பர். வடசொற் கலப்பால், தென்சொற்கள் வழக்கிறந்தும் வழக்குக் குன்றியும் பொருள் மாறியும் வேர்ப் பொருள் மறைந்தும் இறந்துபட்டுமே போயின. அதனால் தீமையேயன்றி நன்மையில்லை.
எ-டு:
தென்சொல் வடசொல்
வழக்கிறத்தல்:
சூள், கழுவாய் ஆணை, பிராயச்சித்தம்
வழக்குக் குன்றல்:
ஆண்டு, மகிழ்ச்சி வருஷம், சந்தோஷம்
பொருள்மாறல்:
உயிர்மெய், தோள் பிராணி, புஜம்
வேர்ப்பொருள் மறைதல்
அகங்கரி, பத்திரினி அஹங்கார, பத்நீ
மேலும் வடமொழியென்னும் சமற்கிருதமே ஆயிரக்கணக்கான அடிப்படைச் சொற்களைத் தமிழினின்று கடன் கொண் டுள்ளது. அம்மொழிச் சொற்களுள், ஐந்தி லிருபகுதி தமிழ்: ஐந்தி லொருபகுதி மேலையாரியம்: ஐந்தி லொருபகுதி வடநாட்டுப் பிராகிருதம்: ஐந்தி லொரு பகுதி புதிதாகப் புனையப்பட்டவை. வட மொழித்துணையின்றித் தமிழ் வழங்க முடியும்: ஆயின் தமிழ்த் துணையின்றி வடமொழி வழங்கமுடியாது.
10. இளமை
தமிழ் உலக முதற்றாய் மொழியாயிருந்து பதினெண் திராவிட மொழிகளைப் பிறப்பித்தும், ஏறத்தாழ ஐம்பான் ஆரிய மொழிகளைத் தோற்றுவித்தும், இன்றும் இளமையாயிருப்பது, அதன் அழியாத் தன்மையைக் காட்டும். என்றுமுள தென்றமிழி யம்பியிசை கொண்டான் என்றார் கம்பர். ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன், சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே என்றார் சுந்தரம்பிள்ளை. காண்க: தமிழின் தனிப்பெருந்தன்மைகள் கழகப் பொன்விழாமலர் 1970. (உரிமை வேட்கை பொங்கல் மலர் 1974)
தமிழின் தொன்மை
நிலநூலியல் ஊழிகள் (Geological Eras)
1. தொடக்கநிலையுயிர் ஊழி (Archezoic Era)
2. முந்துநிலையுயிர் ஊழி (Proterozoic Era)
3. பண்டைநிலையுயிர் ஊழி (Paleozoie Era-Primary Period)
4. இடைநிலையுயிர் ஊழி (Mezozoic Era-Secondary Period)
5. அண்மை நிலையுயிர் ஊழி (Cainozoic Era)
அண்மை நிலையுயிர் ஊழிப் பிரிவுகள்
1. மூன்றாம் மண்டலம் (Tertiary Period):-
(1) விடியண்மை (Eocene)
(2) சில்லண்மை (Miocene)
(3) பல்லண்மை (Pliocene)
2. நான்காம் மண்டலம் (Quarternary Period):-
1. கழிபல்லண்மை (Pleistocene)
2. அண்ணணிமை (Recent)
நான்காம் மண்டலப் பிரிவும் காலமும்
1. கழிபல்லண்மை
1. முதற் பனிக்கட்டிப்படல முற்படர்ச்சி (1st Glacial Advance) - கி.மு. 450,000 - 475,000.
2. முதற் பனிக்கட்டிப் படல இடைக்காலம் (1st Inter-Glacial Epoch) - கி.மு. 400,000 - 450,000.
3. இரண்டாம் பனிக்கட்டிப்படல முற்படர்ச்சி (2nd Glacial Advance) கி.மு. 375,000-400,000
4. இரண்டாம் பனிக்கட்டிப்படல இடைக்காலம் (2nd Inter Glacial Epoch) - கி.மு.175,000-375,000.
5. மூன்றாம் பனிக்கட்டிப்படல முற்படர்ச்சி (3rd Glacial Advance) - கிமு. 150,000 - 175,000.
6. மூன்றாம் பனிக்கட்டிப்படல இடைக்காலம் (3rd Inter Glacial Epoch) - கி.மு. 50,000 - 150,000.
7. நாலாம் பனிக்கட்டிப் படல முற்படர்ச்சி (4th Glacial Advance) - கிமு. 25,000 - 50,000.
2. அண்ணணிமை
பனிக்கட்டிப் படலப் பின்னைக் காலம் (Post Glacial Advance) - தோரா. 25,000 ஆண்டுகள்.
மாந்தக் குரங்கின் வளர்ச்சிக் காலம்.
1. நெற்றுடைப்பான் குரக்கு மாந்தன் (Nut-cracker man or Sinjanthropos Boisi) காலம் - தோரா. கி.மு. 600,000.
2. நிமிர்ந்த குரக்கு மாந்தன் (Pithecanthropos erectus) காலம் - தோரா. கி.மு. 500,000.
மாந்தன் தோற்ற வளர்ச்சிக் காலம்
3. மாந்தன் தோற்றம் - தோரா. கி.மு. 100,000.
4. தமிழன் (நாகரிக மாந்தன்) தோற்றம் - தோரா. கி.மு. 50,000.
5. முழு நாகரிகத் தமிழன் தோற்றம் - தோரா. கி.மு. 10,000
மேலைநாடுகளுள் முதன்முதலாக நாகரிகமடைந்தது எகிபது. அதன் நாகரிகத் தோற்றம் கி.மு. 6000 என்று சொல்லப்படு கின்றது. அங்ஙனமாயின், எகிபதிய நாகரிகத்திற்கு முந்திய குமரிநாட்டுத் தமிழ் நாகரிகத் தோற்றம் கி.மு. 10,000 என்று கூறுவதில், ஒரு சிறிதும் உயர்வு நவிற்சியில்லை. பஃறுளியாற்றங் கரைத் தென்மதுரைத் தலைக்கழகத் தோற்றக் காலமும் அதுவே.
மாந்தனூற் பிரிவுகள்
1. உடலியல் மாந்தனூல் (Physical Anthropology)
2. குமுகவில் மாந்தநூல் (Social Anthropology)
3. பண்பாட்டியல் மாந்தனூல் (Cultural Anthropology)
தமிழின் தொன்மை
கி.மு. 1000 ஆண்டுகட்குமுன் எபிரேயத்தில் எழுதப்பட்ட யூத அரசர் வரலாற்றிலும் நாட்பொத்தகத்திலும் (Chronicles) உள்ள துகி (தோகை) என்னுஞ் சொல்லை, தமிழின் தொன்மையைக் குறிக்கும் முதலிலக்கியச் சான்றாக எடுத்துக்காட்டினார் கால்டுவெலார்.
ஆயின், கி.மு. 1200 ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்ட ஆரிய வேதத்தில் நூற்றுக்கணக்கான தென்சொற்கள் உள்ளமையே, தமிழின் தொன்மைக்கு அதினும் சிறந்த இலக்கியச் சான்றாம்.
1. சாயம்
எ.டு. சாயம் (ஸாயம்) = சாயுங்காலம்.
சாய் - சாயும் (எதிர்காலப் பெயரெச்சம்).
சாயுங்காலம் = பொழுது சாயும் வேளை.
பொழுது சாய்கிறது, பொழுது சாய வந்தான், என்பது இன்றும் வழக்கம்.
சாயுங்காலம் என்பது, சாயங்காலம், சாய்ங்காலம் என உலக வழக்கில் திரியும்.
இங்ஙனமே, சாயுந்தரம் என்னும் சொல்லும் சாயந்தரம், சாய்ந்தரம் எனத் திரியும். சாய்தல் என்னும் சொல் தனித்தும் பொழுது சாய்தலைக் குறிக்கும். செய்கையிலே என்னும் 7-ஆம் வேற்றுமை யுருபேற்று ஏகார வீறு பெற்ற தொழிற் பெயர் ஒரு நிகழ்கால வினையெச்சத்துடன் சேர்ந்து, அவ்வினைச் சொல்லாற் குறிக்கப்படும் செயல் நிகழும் நிலையை உணர்த்துவது மரபு.
எ.டு. வரச்செய்கையிலே (வரும்போது), போகச் செய்கையிலே
(போகும் போது)
இச் செய்கையிலே என்னும் சொல், சிலே, சே என்று கொச்சை வடிவுங்கொள்ளும்.
எ.டு. வரச்சிலே, போகச்சிலே
வரச்சே, போகச்சே
இக் கொச்சை வடிவு கொண்ட சாயச்சே என்னும் சொல், சாய்கிற வேளை என்று பொருள்படுவது போல் சாய்கிறச்சே என்னும் தவறான வடிவு கொண்ட பின், சாயரட்சை என்று திரித்து வழங்கப்படுகிறது.
சாயங்காலம் என்னும் வடிவிலுள்ள சாயம் என்னும் நிலை மொழியே, சாயுங்காலம் (எற்பாடு) என்னும் பொருளில் முன்பு வட திராவிடத்தில் வழங்கிப் பின்பு ஆரிய வேதத்திற் புகுந்து அதன்பின் சமற்கிருதத்தில் வழங்கி வருகின்றது. ஆயின், வடமொழியாளர் இவ்வுண்மையை மறுத்தும் மறைத்தும் தலைகீழாய் மாற்றியும் ஸாயம் என்னும் வடசொல்லினின்றே சாயங்காலம் என்னும் தென்சொல் வந்ததென்று துணிந்து ஏமாற்றுவர். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகர முதலியிலும், இதை வட சொல்லென்று குறித்ததுடன் இவ்வேமாற்றுக் கொள்கையை வலியுறுத்தவே, சாயுங்காலம், சாயுந்தரம் என்னும் மொழிப் பொருட் காரணம் தோன்றும் வடிவுகளை வேண்டு மென்றே காட்டாது விட்டிருக்கின்றனர்.
ஸாயம் என்னும் சொல்லிற்கு வடவர் பொருந்தப் பொய்த்தலாகக் காட்டும் வேர் முடித்தற் பொருளை உணர்த்தும் ஸோ என்னும் சொல். அதுவும் சாய் என்பதனின்று திரிந்த சா என்னும் தென் சொல்லின் திரிபே.
2. தா.
இச்சொல் (இலவசமாகக்) கொடுத்தல் என்னும் பொருளில், வடமொழியில் தா (da) என்றும், இலத்தீனில் தோ (do) என்றும் வழங்குகின்றது. இதன் தமிழ்ப் பொருள் ஒத்தோனுக்குக் கொடுத்தல் என்பது.
ஈதா கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகிடன் உடைய.
அவற்றுள்,
ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே.
தா என் கிளவி ஒப்போன் கூற்றே.
கொடு என கிளவி உயர்ந்தோன் கூற்றே.
என்பன தொல்காப்பியம் (927, 28, 29, 30).
புதுப் பெருக்கு நீரைக் குறிக்கும் வெள்ளம் என்னும் சொல் தன் சிறப்புப் பொருளையிழந்து நீர் என்னும் பொதுப் பொருளில் மலையாளத்திலும், விடை சொல்லுதலைக் குறிக்கும் செப்பு என்னுஞ் சொல் தன் சிறப்புப் பொருளையிழந்து சொல்லுதல் என்னும் பொதுப் பொருளில் தெலுங்கிலும், வழங்குவது போன்றே; ஒத்தோனுக்குக் கொடுத்தலைக் குறிக்கும் தா என்னும் சொல்லுந் தன் சிறப்புப் பொருளையிழந்து கொடுத்தல் என்னும் பொதுப் பொருளில் ஆரிய மொழிகளில் வழங்குகின்றதென்றறிக. தொன்று தொட்டு இருவகை வழக்கிலும் வழங்கி வருதலும், அடிப்படையைச் சேர்ந்த எளிய சொல்லாயிருத்தல், சிறப்புப் பொருள் கொண்டு ஏனையிரு தூய தென் சொற்களுடன் தொடர்புடைமையும், தா என்பது தமிழ்ச் சொல்லே என்பதற்குத் தக்க சான்றுகளாம். தரவு, தருகை, தரகு, தத்தம், தானம் ஆகிய சொற்களெல்லாம் தா என்னும் முதனிலையினின்று திரிந்தவையே. இறுதியிரண்டும் வடமொழியில் வழங்குவதனாலேயே வடசொற் போல் தோன்றுகின்றன.
இனி, தா என்னும் வினைச்சொல் படர்க்கையிடத்தில் வராதென்று விலக்கப்பட்டிருப்பதும், அது தமிழ்ச்சொல்லே யென்பதை உணர்த்தும்.
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த. (தொல். 512)
3. முத்து
இச்சொல் உருண்டையானது என்னும் பொருளது. இதனொடு தொடர்புடைய சொற்கள் முத்தை, முண்டு, முண்டை, முட்டு, முட்டை, முட்டி, முட்டான் முதலியன.
முண்டு = உருண்ட கட்டை. முண்டை - முட்டை.
முண்டை விளைபழம் (பதிற்றுப் 60.6)
முண்டம் = உருண்ட கட்டை, கை கால் தலையில்லா உடம்பு.
முத்தை = சோற்றுருண்டை. முத்தை - மொத்தை.
முட்டு = நடத்திற்குரிய உருண்ட பறை.
முட்டி = கொம்மட்டி.
முட்டான் = திருநீற்றிற்குரிய சாணவுருண்டை, மஞ்சட்கிழங்கு.
மிதுக்கம் பழத்தைக் குறுமுத்தம் பழம் என்பது கரூர் வழக்கு. உருண்டு சிறத்திருக்கும் விதைகளையெல்லாம் முத்தென்பது பொதுவான உலக வழக்கு.
உலகில் முத்து விளையும் பலவிடங்களுட் சிறந்தது பாண்டி நாட்டு (மன்னார்குடா)க் கடல்.
முத்து பெரியதாயிருப்பின் முத்தம் எனப்படும். அம் என்பது ஒரு பெருமைப் பொருள் ஈறு (Augmentative suffix):
x.neh.: மதி = நிலா. மதியம் = முழுநிலா.
நிலை = தேர்நிலை போற் சிறிய இடம். நிலையம் = புகைவண்டி நிலையம் போற் பெரிய இடம்.
விளக்கு = வீட்டு விளக்குப் போற் சிறியது. விளக்கம் = கலங்கரை விளக்கம்போற் பெரியது.
முத்தம் என்னும் தென்சொல்லை வடமொழியாளர் முக்த என்று திரித்து, சிப்பியினின்று விடுதலை (முக்த) பெற்றதென்று வேர்ப் பொருட் கரணியங் கூறி வட சொல்லாகக் காட்ட முயல்வது, குறும்புத்தனமான குறிக்கோட் சொல்லியல் (Tendentious Etymology) ஆகும்.
முத்து என்பது, தமிழில் சிறிதாய் உருண்டு திரண்டிருக்கும் பல்வேறு பொருள்களைக் குறிக்கும்.
முத்து: 1. கிளிஞ்சிலில் விளையும் மணிவகை.
முறிமேறி முத்த முறுவல் (குறல்.1113)
2. உருண்டு திரண்ட விதை.
எ.டு. ஆமணக்கு விதை. முத்திருக்குங் கொம்பசைக்கும்
(தனிப்பா. 1.3.2).
3. உருண்டு திரண்ட ஆட்டக்காய்.
4. பெரியம்மைக் கொப்புளம்.
5. கண்ணீர்த்துளி பருமுத்துறையும் (சீவக.1318)
6. பனி முத்து நீர்த்துளி. நீர்ச் சாந்தடைந்த மூ உய் (பரிபா.10. 13).
உருண்டு திரண்டிருக்கும் எண்ணெயுள்ள விதைகள் முத்தென்றே பெயர் பெற்றுள்ளன.
எ.டு. ஆமணக்குமுத்து ( முத்துக்கொட்டை, கொட்டை முத்து),
குருக்கு முத்து, வேப்பமுத்து.
முத்துச்சம்பா, முத்துச்சோளம் என்பன உருண்டு திரண்டு முத்துப்போலி ருப்பன. உருண்டு திரண்டுள்ள கோரைக்கிழங்கு முத்தக்காசு எனப்படுகின்றது.
முத்துக்குளிப்பு வரலாற்றிற்கெட்டாத தொன்று தொட்டுப் பாண்டி நாட்டு மன்னார்குடாக் கடலில் நடைபெற்று வருகின்றது. முத்தூர்க்கூற்றம் என்று ஒர் ஆள்நிலப்பிரிவும் பழம்பாண்டி நாட்டிலிருந்து கிறித்துவிற்கு முன் பாண்டிநாட்டு முத்து மேனாடுகட்கு ஏராளமாய் ஏற்றுமதியானதும், உரோம் நகரப் பெருமாட்டியர் அளவற்ற பொன்னை அதற்குச் செல விட்டதும், வரலாறறிந்த உண்மையாகும். பாண்டிய கவாடம் என்னும் பருமுத்தவகை சாணக்கியரின் அர்த்த சாத்திரம் என்னும் பொருள்நூலிற் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. தொண்
(நவ) மணிகளுள் ஒன்றான முத்து வெண்ணிறமுள்ள தென்பது, சீர்கெழு வெண்முத்தம் (பாலைக்கலி,9) என்னும் செய்யுள் வழக்காலும், வாய்திறந்தால் முத்துதிர்ந்து விடுமா? என்னும் உலகவழக்காலும் அறியப்படும்.
இனி, வேத ஆரியர் நாவலந்தேயத்திற்குள் (இந்தியாவிற்குள்) கால் வைப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முந்திய பாபிலோனிய மொழியிலும், ஆரியம் என்னும் பேரே தோன்றுவதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முந்திய எகிப்து மொழியிலும், மறுக்க
முடியாத தமிழ்ச்சொற்கள் அடிப்படையாயுள்ளன. ஆகவே மேலையுலகில் (தோரா. கி.மு. 5,000) முதன்முதலாக நாகரிக மடைந்த எகிப்து நாட்டு மொழியில், ஒரு சொல், இருசொல் அல்ல, பல சொற்கள், அவையும் அடிப்படைச் சொற்கள், தமிழா யிருந்ததே தமிழின் தொன்மைக்குத் தலைசிறந்த இலக்கியச் சான்றாகும்.
எகிபதியத் தொல்வரலாற் றாராய்ச்சியாளரான வில்லியர்சு தூவர்ட்டு (Villiers Stuart) என்பவர், ஐரோப்பியரின் முன்னோருட பெரும்பாலார் ஆசியாவினின்று பாபெல் மந்தெபு (Babel Mandeb) என்னும் நீரிணைப்பு (Straits) வழியாக ஆப்பிரிக்கக் கரையேறி எத்தியோப்பியாவில் சிலகாலந் தங்கியபின் எகிபது நாட்டு நீலாற்று வெளிநிலத்திற்குப் பரவினரென்றும், பின்பு அங்கிருந்து நண்ணிலக் கடல் (Mediterranean Sea) கடந்து ஐரோப்பாவிற் குடியேறி ஆரியராய் மாறினாரென்றும், எகிபதியர் பனையோலை போல் எழுது கருவியாகப் பயன்படுத்திய பாப்பிரசு (Papyrus) என்னும் தாள் அல்லது தோகையுள்ள நாணல் முதலில் அபிசினியாவிலேயே இயற்கையாய் விளைந்ததென்றும், எகிபதியரின் தேவியல் (Sacred) உயிரிகளும் 3 -ஆம் 4 -ஆம் 5 -ஆம் ஆள்குடி (Dynasty) அரசரின் கல்லறைச் சுவர்களில் வரையப் பெற்ற விலங்குகளும் அபிசினியாவிற்கும் தென்னாப்பிரிக்கா
விற்குமே யுரியவையென்றும் எகிபதியக் குறுநில அரசுகளை யெல்லாம் முதன்முதலாக ஒன்றாக இணைத்து ஓரரசாட்சி நிறுவிய மெனெசு (Menes)ntªjD« தெற்கத்தியானேயென்றும், எகிபதிய மொழி ஐரோப்பிய மொழிகட்கெல்லாம் மூலமான அசைநிலை (Monosyllabic) மொழியென்றும், அது சமற்கிருதத் திற்கு 3,000 ஆண்டுகட்கு முற்பட்டதென்றும் தம் ஓர் எகிபதிய அரசியின் பள்ளிபடைப் படமாடம் (The Funeral Tent of An Egyptian Queen) என்னும் வரலாற்றாராய்ச்சி நூலின் இறுதியில், மொழிநூல் (Philology) என்னும் தலைப்பில், தக்க சான்று காட்டித் திட்ட வட்டமாய்க் கூறியுள்ளார்.
இதினின்று, கடல் கோளுக்குத் தப்பியும் வேற்று நாடு பரவியும் சென்ற முதுபண்டைக் குமரி மாந்தருள் வடமேற்காகச் சென்ற ஒரு பெரு வகுப்பார், சோமாலிநாடு (Somaliland) அபிசினியா (Abyssinia) என்னும் எத்தியோப்பியா, எகிபது ஆகிய நாடுகளில் முறையே பரவி, பின்பு ஐரோப்பாவிற்குச் சென்றதாகத் தெரிகின்றது. இதுவே, ஆத்திரேலியாவிற்கும் தென்னாப்பிரிக் காவிற்கும் இடைப்பட்டிருந்த குமரிக்கண்டத்தினின்று வடமேற்காச் செல்வார்க்கு ஏற்ற இயற்கையான வழி என்பதை ஞாலப்படம் (Atlas) நோக்கிக் கண்டுகொள்க.
இனவொப்புச் சொற்கள்
அரபிச் சொற்கள்
தமிழ் அரபி தமிழ் அரபி
அப்பன் ஆப் சருக்கரை சக்கர்
அம்மை உம் சேரி(தெரு) ஷாரி
அரிசி ரு(ண) சுக்கல் சுக்கூனஹ்
(காய்தல்) (காய்ச்சல்)
அல்(எதிர்மறை லா ஞாலம் ஆலம்
யிடைச்சொல்)
அல், க. அல்லி அல்(அந்த) துத்தம் தூத்திய
(அங்கு)
ஆவி ஹவா(காற்று) நீலம் நீலா
கடி கட் நெருப்பு நார்
கதம்(சினம்) கடப் மறி(பெண்
கருவா(ப்பட்டை) கிர்வா (க) குதிரை) பர
காழகம் (துணி) காம் மை(நீர்) மா
குப்பா ஜூப்பா
குயின் (முகில்) கைம் வாத்து பட்டா
கூலி கூலி
கொட்டை(பஞ்சு) குட்டுன்
க.கொத்தி(பூனை) குட்டா
பாபிலோனியச் சொற்கள்
தமிழ் பாபி. தமிழ் பாபி.
அப்பன் அப்பா() சமம் செவா (ளு)
அல் லா சின செனே(பகை)
இலது லேத் பிரி பெரா
இரு அர் வா பா ()
ஊர் ஊர்(நகர்)
எபிரேயச் சொற்கள்
தமிழ் எபிரேயம் தமிழ் எபிரேயம்
அப்பன் ஆப்() சீறு ஷாரக்
அம்மை ஏம் சும சாமக்
ஆறு யோர்(சஎநச) சுவர் ஷூர்
இல் லோ செவ்வை ஷாவாஹ்
அவா அவ்வாஹ் நட்டு-நாட்டு நாத்தா
ஆவு(அவாவு) ஆபாஹ்() நீட்டு நாத்தாஹ்
இரங்கு யாரத் (ன) நோக்கி நோக்கஹ்
உரு ஊர்(நெருப்பு) பழம் பெரி
ஊர் ஆர்,ஈர் பழு பாராஹ்
எறி யாராஹ் பால்(பிரிவு) பா, லல்
பாலக்(ப)
பாலா, பாலாஹ்
பாலா, பார
எருமை ரேம்
உயர்-ஊர் ரூம் மாறு மூர், மாஹர்
ஒள்-ஒளி ஓர் மிசுக்கன் மிகேன்
சாய் ஷா மெத்தை மித்தாஹ் (படுக்கை)
சின சானே வா போ()
எகிபதியச்சொற்கள்
பழைய எகிபதிய மொழியிலுள்ள தமிழ்ச்சொற்கட்கு எடுத்துக் காட்டு வருமாறு:-
தமிழ் எகிபதியம் தமிழ் எகிபதியம்
அது தெ துமி தெம் (வெட்டுங்
அந்த கருவி)
இரு அர் நக்கு லெக்கு
இறைவன் எர்ப்ப நவ்வி நொவ்வேர்(க)
(இளமை)
மடி-மரி மேர்
உமட்டு எமெத் மன் (நிலை மென்
பெறு)
உந்தி உவத்தூர் மனை மென்
ஓதம் நீர் மாத்திரை மெத்தெர்
மாது முத்(தாய்)
சப்பு உறிஞ்சிக் சௌ (குடி)
(குடி)
சும் - சம் சம்(கூட) வாரி மெர்(கடல்)
செம்மை சென்ப்()
தா து
மகள், மடந்தை, மாது முதலிய சொற்கள், இடத்திற்கேற்ப, பெண்,புதல்வி, மனைவி, தாய் என வெவ்வேறு பொருள்படும்.
எ.டு:
மகள் = 1. பெண். ஆயமகள் நீயாயின் (கலித்.107)
மகளிர் மலைத்தலல்லது (புறம்.10).மகள் -மகடூஉ.
2. புதல்வி, நல்கூர்ந்தார் செல்வ மகள் (கலித்.56).
3. மனைவி, மனக்கினியார்க்கு நீ மகளாயதூ உம்
(மணி 21:30)
4. தாய்
நிலமகள், மலைமகள், கலைமகள், திருமகள், தமிழ்மகள் முதலிய வழக்குகளைநோக்குக.
தமிழின ஒற்றுமை
இங்கிலாந்தில், ஐபீரியர், கெலத்தியர் (Celts), பித்தியர் (Piets), காட்டியர் (Scots), ஆங்கிலர், சாகசனியர் (Saxons), சூதியர் (Jutes),njÅa® (Danes), நார்மனியர் (Normans) முதலிய ஒன்பான் அல்லது பன்னிரு சிற்றினங்கள் கலந்த கலவைப் பேரினமாயிருப் பவர் இற்றை ஆங்கிலேயர். அதனால், மதி நுட்பமுள்ள மக்கள் பிறந்து, நீராவியும் நெய்யாவியும் மின்விசையும் கொண்டி யங்கும் பல்வேறு பொறிகளையும் ஊர்திகளையும் புனைந்து, இற்றை அறிவியல்களைத் தோற்றுவித் திருக்கின்றனர். தமிழ் நாட்டிலே, ஓரேயினம் ஆரியச் சூழ்ச்சியால் நூற்றுக்கணக் கான அகமணப் பிரிவுகளாகச் சிதைக்கப்பட்டு விட்டதனால், இன்றும் தமிழர்
………..tisɉ பொறியும்
கருவிர லூகமும்கல்லுமிœகவணு«
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் னுலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும்
…………………………………………………………………………………………….
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் (சிலப்.15:207-14)
நூற்றுவரைக் கொல்லி, தள்ளிவெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப்பொறி, புலிப்பொறி, குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி முதலியனவுமான, முன்னோர் செய்த மதிற்பொறிகளையுஞ் செய்யத் தெரியாது,
மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் நர வண்டியும் தொடர் வண்டிக் கூண்டுமே செய்யும் நிலையிலுள்ளனர்.
இங்கிலாந்திலுள்ள மக்கள் பெயரெல்லாம் பெயரளவில் வழங்குகின்றனவே யன்றி, தமிழ்நாட்டிற்போல் செம்பர்லேன் முதலியார், சர்ச்சில் செட்டியார், அத்திலீக் கவுண்டர், ஈடன் நாடார், வில்சன்பிள்ளை என்று பருளற்றவால்களுடன் வழங்குவதில்லை .(இங்ஙனமே ஏனை நாடுகளிலும்).
அன்றியும், அங்கு மக்கள் வகுப்பை வினவின், தொழிலடிப் படையில் உழவர் வணிகர் ஆசிரியர் கணக்கர் என்று சொல்லு கின்றனரேயன்றி, இங்குப்போல் ஆசிரியனைக் கம்மாளன் (ஆச்சாரி) என்றும், கணக்கனை வணிகன் (செட்டியார்) என்றும், கட்டடவேலை செய்பவனைப் படைத்தலைவன் (முதலியார்) என்றும், iதயற்காரனைப்படகன் (பாணன்) என்றும், ஒரேn வலை bசய்பவரைப்பல்வேறு bதாழிற்குலத்தாராகவும், இல்வாழ்வானைத்துறவி (ஐயர்)என்றும், பகுத்தறிவின்றி ச்bசால்வதில்லை. இனி, மாணவனின் அறியாமையைப் போக்கி அவனுக்கு உண்மையான செய்திகளை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ள ஆசிரியன், மாந்தனூலும் (Anthropology) உடல்நூலும் (Physiology) கற்றவனா யிருப்பினும், அவற்றிற்கு மாறாக, பிறப்படிப்படையில் அவனை ஓர் இனமாகவும் (Species) தன்னை மற்றோரினமாகவும் கூறுவதும், இங்ஙனமே கல்வியதிகாரியும் கல்வித்துறை இயக்குநரும் கல்வியமைச்சரும் பல்கலைக்கழகத் துணைக் கண்காணகருங் கூறுவதும், ஆசிரியன் மாணவனைப் பிறப்பில் தாழ்ந்தவனென்றும் ஆசிரியனைப் பிறப்பில் தாழ்ந்தவனென்றும் கொள்வதும், எத்துணைக் கேடான செயல்! இத்தகைக் கல்வியால் ஒரு நாடு முன்னேற முடியுமோ?
பிறவிக் குலப் பிரிவினையால் விளையும் பெருங் கேடுகள்
(1) உலகுள்ள அளவும் ஒற்றுமை யின்மை.
(2) இன முன்னேற்ற மின்மை.
(3) தமிழ் மொழி யிலக்கிய வளர்ச்சி யின்மை.
(4) தமிழப் பண்பாட் டழிவு.
(5) அடிமைத்தனமும் தாழ்வும் தொடர்கை.
(6) மதிவிளக்கமும் உடல் வலிமையுமுள்ள மகப்பேறின்மை.
(7) அயலார்க்கும் தகுதியில்லார்க்கும் பதவிப் பேறு.
(8) பகுத்தறிவைப் பயன் படுத்தாமை.
ஒருவர் எத்துணை யுயரினும், தம்மை நாடார் என்று சொல்லிக் கொள்ளின், குல ஏணியில் அவருக்குரிய படியில் தான் அவரை வைப்பர். அதனால் அவர் வெள்ளாளரொடு உறவாட முடியாது. அங்ஙனமே, வெள்ளாளரும் எத்துணை உயர்வா யிருப்பினும், அவர் பிராமணருக்குத் தாழ்ந்தவராகவே கருதப்படுவர். ஆதலால், ஆரியக் குல ஏணியைத் தூள்தூளாக்கிச் சுட்டெரித்தல் வேண்டும். ஒரு குலத்தாரிடை ஒரு நற்பழக்க மிருப்பின், அதைப் பிறரும் மேற்கொள்ள வேண்டும்; தீப்பழக்க மிருப்பின் அதை விட்டொழிக்க வேண்டும். நாகரிகம், துப்புரவு, ஒழுக்கம், கல்வி, செல்வம், அதிகாரம், மதிநுட்பம் முதலியவற்றாலேயே உண்மையான உயர்வுண்டாகும். நான் கார்காத்த வெள்ளாளன் என்றும், நான் படைத்தலைக் கவுண்டன் என்றும், சொல்வதால் மட்டும் உயர்வுண்டாகாது. துருக்கியைத் திருத்தி முன்னேற்றிய கமால் பாசா போல், ஒருவர் தமிழ்நாட்டிற்குத் தேவை.
தமிழுக்குத் தமிழ்நாட்டிற் செய்யவேண்டியவை
1. சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயரிட்டு மொழி யியற் கலைநாகரிகத் தன்னாட்சி (Linguistic and Cultural Autonomy) அமைத்தல்.
2. தனித்தமிழ்ப் பற்றும் தமிழிலக்கியவறிவும் உள்ள ஆசிரிய ரையே கல்வியமைச்சராக அமர்த்துதல்.
3. தனித்தமிழ்ப்பற்றும் தமிழறிவும் உள்ளவராய் ஓய்வுபெற்றுள்ள, கல்வித்துறையியக்குநர், பெருங்கல்லூரி முதல்வர், தலைமைப் பேராசிரியர் ஆகியோரையே, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் துணைக்கண்காணகராக (Vice-Chancellors) அமர்த்துதல்.
4. இருவகை வழக்குத் தமிழ்ச்சொற்களையும் அறிந்தவரும், வண்ணனை மொழியியலையன்றி வரன்முறை மொழி நூலையே கடைப்பிடிப்பவரும், வடமொழியிந்தித் தாக்குத லினின்று தமிழைக்காப்பவரும், உண்மையை யுரைக்கும் திண்மையுள்ளவருமான தமிழ்ப் பேராசிரியரையே, சென்னை அண்ணாமலை மதுரையாகிய முப்பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த் துறைத் தலைவராக அமர்த்துதல்.
5. தமிழுக்கு மாறாக வேலை செய்யும் தமிழாசிரியர், தலைமை யாசிரியர், முதல்வர், துணைக்கண்காணகர் ஆகியோரைப் பதவியினின்று நீக்குதல்.
6. இந்தியால் தமிழ் கெடுவது திண்ணமாதலால், தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழித் திட்டத்தையே, கல்வி, ஆள்வினை (Administration), வழக்குத் தீர்ப்பு ஆகிய முத்துறையிலும் எல்லா மட்டத்திலும் கையாளுதல்.
7. தமிழ்ப்பற்றற்ற பிராமணத் தமிழ்ப்பண்டிதர் கொண்டான் மாரைத் துணைக்கொண்டு தொகுத்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி என்னும் கலவைமொழி அகர முதலியை உடனே திருத்துதல்.
8. தமிழ்நாட்டு உண்மைவரலாற்றை எழுதுவித்துப் பாடமாக் கலும், தமிழ்ப்பகைவரால் எழுதப்பட்ட பொய் வரலாற்றைப் புறக்கணித்தலும்.
.9. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை முழு நிறைவாக உருவாக்குதல்.
10. செம்மையான ஆங்கிலத் தமிழகரமுதலி யொன்று தொகுப் பித்தலும், கலையறிவியல் கம்மியக்குறியீடுகளைத் தூய தமிழில் மொழிபெயர்த்தலும்.
11. பேராயக்கட்சியாளர் தொகுத்த கலைக்களஞ்சிய நடையையும், அதிலுள்ள தமிழைப்பற்றிய தவறான கருத்துக்களையும், திருத்துதல்.
12. அச்சிற்கு வராத தமிழ்ச்சொற்களையும் தமிழ் ஏட்டுப் பொத்தகங் களையும் தக்க அறிஞரைக்கொண்டு தொகுப் பித்தல்.
13. கல்வெட்டுத் தொகுப்பும் வெளியீடும் தக்க தமிழறிஞரைக் கொண்டு செய்வித்தல்.
14. பாடப்பொத்தகங்களைத் தூய தமிழில் எழுதுவித்தலும், தூயதமிழ் நூல்களை வெளியிடும் கழகங்களை ஊக்குதலும்.
15. தூய தமிழிற் பேசும் மாணவர்க்கும் தூய தமிழிற் சிறந்த நூலியற்றும் அறிஞர்க்கும் பரிசளித்தல்.
.16. ஆட்பெயர், இடப்பெயர், பொருட்பெயர், பட்டப்பெயர், சிறப்புப்பெயர் ஆகிய எல்லாப்பெயரையும் தூய தமிழாக்கல்.
17. இலக்கணம், இசை, நாடகம், கணியம், மருத்துவம் முதலிய பழந்தமிழ் அறிவியல்களையும் கலைகளையும் முன்போல் தூய்மைப்படுத்துதல்.
18. அரசினர் அறிவிப்புக்களும் விளம்பரங்களும் எழுத்துப் பிழையும் இலக்கணப் பிழையுமின்றி வெளிவரச் செய்தல்.
19. தமிழையும் பதினெண் திரவிட மொழிகளையும் ஒருங்கே கற்பிக்கும் ஒரு கல்லூரி நிறுவுதல்.
20.தமிழ்ப்பற்றுள்ளவரையே, சட்டசபை பாராளுமன்ற வேட் பாளரளாகத் தெரிந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கவும் செய்தல்.
21. வண்ணனை அடிப்படையின்றி வரலாற்றடிப்படையிலேயே மொழி நூலை வளர்த்தல்.
22. கோயில்வழிபாடும், இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெறச்செய்தல்.
23. தமிழுக்காக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வாழ்க்கை நடைப் பொருள் அளித்தல்.
24. தமிழ்ப்பற்றாற் பதவியிழந்தோரைப் பின்னோக்கிய வலிமை யொடு (Retrospective effect) மீண்டும் பதவியில் இருத்துதல்.
25. வருவாயற்ற பெருந்தமிழ்ப் புலவர்க்கு உதவிச் சம்பளம் அளித்தல்.
26. தமிழுணர்ச்சியைப் பரப்பிப் பொதுமக்கட்குத் தமிழறிவு புகட்டும் தனித்தமிழ் இதழ்கட்குப் பொருளுதவி செய்தல்.
27. மேனாட்டாரைத் துணைக்கொண்டு, தென்மாவாரியில் ஆழ மூழ்கிப் பழம்பொருளெடுத் தாராய ஏற்பாடு செய்தல்.
28. அலுக்கிற்கும் அளபெடைக்கும் போதிய இடைவெளி விட்டு, இம்மியும் பிசகாது தியாகராசையர் கீர்த்தனைகள் போன்றே இன்பமாய்ப் பாடக்கூடிய உயரிய மெட்டுப் பாடல் களை அறிவும் ஒழுக்கமும் தழுவிய பொதுப் பொருள்கள் பற்றி, இயற்றித்தரும் இசைவாணர்க்கும் பாவலர்க்கும் சிறந்த பரிசளித்தல்.
29. ஊர்காவலர் படைத்துறையினர் உடற்பயிற்சியும் மெய்க் காட்டும் (Parade) தமிழ் ஏவற் சொற்களைக்கொண்டு நடப்பித்தல்.
30. கூட்டங்களிலும் மாநாடுகளிலும் இறுதியில் உலக வாழ்த்துப் பாட்டு தமிழிற் பாடல்.
31. மறைமலையடிகள், (P.T.) சீநிவாசையங்கார், (V.R) இராமச் சந்திரதீட்சிதர் ஆகிய மூவர்க்கும் சென்னையில் படிமை நிறுவுதலும், அம்மூவர் முழுவுருவப்படங்களையும் முதன்மை யான அரசியல் அலுவலகங்களிலும் பொதுக் கூடங்களிலும் மாட்டிவைத்தலும்.
32. செய்யுட்கே சிறப்பாகவுரிய இலக்கணக்கூறுகளை நீக்கிவிட்டு, உரைநடை யிலக்கணத்தை மட்டும் விரிவாகவும் விளக்க மாகவும் எழுதிப் பொதுத்தமிழ் மாணவர்க்குப் பாடமாக வைத்தல்.
33. இகரத்தின் நெடிலைக் குறித்தற்கு, இடைக்காலத்தில் ஆரியராற் புகுத்தப்பட்ட, வாயிற்கால்போன்ற கிரந்த வரி வடிவை நீக்கி விட்டு, இறுதியில் சுழிகொண்ட பழைய இகர வடிவையே கையாளுதல்.
34. இங்கிலாந்தில் 1875ஆம் ஆண்டிற் செய்தவாறு, தமிழ்நாட்டில் இலவசக் கட்டாயத் துவக்கக்கல்வியைச் சட்ட வாயிலாய்ப் புகுத்துதல்.
35. அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தொடக்க விழாத்தலைவர் பர். சட்டர்சியின் அச்சிட்ட (தமிழுக்கு மாறான) தலைமையுரையை, அக்கழகத்தினின்று அகற்றுதல்.
36. பர். சட்டர்சியும் பர். கத்திரேயும் இந்திய ஞால நூலியல் வரலாறு - முதன்மடலத்தில் (Gazetteer of India - Vol.I) தமிழைப் பற்றி வரைந்துள்ள தவறான கருத்துக்களைத் திருத்துதல்.
37. திருவையாற்று அரசர் கல்லூரியில், சமற்கிருத முதல்வரின் கீழிருக்கும் தமிழ்த்துறையைப் பிரித்துத் தமிழ் முதல்வரின் கீழ் அமைத்தல்.
தமிழுக்கு வெளிநாட்டிற் செய்யவேண்டியவை
1. உண்மையான தமிழ் வரலாற்றை ஆங்கிலத்தில் வெளியிட்டு உலக முழுதும் பரப்புதல்.
2. வெளிநாடுகளிலுள்ள தமிழ்ச்சொற்கள், நூல்கள், கலைகள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றை ஆராயுமாறு, தக்க ஆராய்ச்சியாளரைக் கானா, எகிப்து, பிரனீசு மலைநாடு மெக்சிக்கோ (Mexico), காம்போதியா, சையாம், மலேயா, சாலித்தீவு முதலிய நாடுகட்கு அனுப்புதல்.
3. வெளிநாடுகளுடன் போன்றே, இந்திய நடுவணரசோடும் பிற இந்திய மாநிலங்களோடும், எழுத்துப்போக்குவரத்து ஆங்கிலத்திலேயே நடத்துதல்.
4. ஒவ்வொரு பெருநாட்டிலும் ஒரு தமிழ்ப் பேராசிரியர் பதவி ஏற்படச்செய்தல்.
5. தமிழ்மொழி நாகரிகப் பண்பாட்டை எடுத்துரைக்கும் ஒரு விடைமுகர் குழுவை (Delegation), உலகஞ் சுற்றிவரச்செய்தல்.
6. தமிழர் பெருந்தொகையினராயுள்ள இலங்கை போன்ற வெளி நாடுகளில், இந்தியத் தூதாண்மைக்குழுவில், தமிழ்ப் பற்றும் தமிழறிவுமுள்ள தூயதமிழர் ஒருவரும் இருக்கச் செய்தல்..
7. ஆக்கசுப்போர்டு (Oxford) ஆங்கில அகரமுதலியிலும் பிரித் தானியக் கலைக்களஞ்சியத்திலும், (Encyclopaedia Biritanica) தமிழைப் பற்றிய தவறான குறிப்புக்களையும் உடனே திருத்தச்செய்தல்.
தமிழே உலகமுதல் தாய்மொழி
சான்றுகள்:-
1. தமிழ் குமரிநாட்டில் தோன்றியமை.
2. பழந்தமிழ் திரவிடமொழிகட்குத் தாயாயிருத்தல்.
3. ஆரிய மொழிகளாகக் கருதப்படும் வடநாட்டு மொழிகளின் அடிப்படை தமிழாயிருத்தல்.
4. மேலையாரிய மொழிகளிலும் அடிப்படைச் சொற்கள் பல தமிழாயிருத்தல்
5. இருமுது குரவரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் தமிழ்ச் சொற்கள் திரிந்தும் திரியாதும் பெரும்பாற் பெருமொழிகளில் வழங்குதல்.
6. எல்லா மொழிக் குடும்பங்களிலும் ஒன்றிரண்டேனும் தமிழ்ச் சொல்லிருத்தல்.
7. ஆரியமொழிகளிலுள்ள சுட்டுச் சொற்களெல்லாம் தமிழ்ச் சுட்டெழுத்துக்களினின்றே தோன்றியிருத்தல்.
8. தமிழிலக்கண அமைதிகள் பல மொழிகளிற் காணப்பெறுதல்.
9. பல மொழிகட்கு அல்லது மொழிக்குடும்பங்கட்குச் சிறப்பாகச் சொல்லப்பெறும் இலக்கண அமைதிகளின் மூலநிலை, தமிழில் இருத்தல்.
தயிர் - ததி (DADHI) - இ.வே.
தை - தயிர். ஒ.நோ: ஐ - அயிர் (நுண்மை), மை - மயிர் (கரியது), வை - வயிர் (கூர்மை). பை - பயிர் (பசியது).
தைத்தல் = குத்துதல், முட்குத்துதல்.
கானவேல் முட்டைக்குங் காடு (பொய்யாமொழிப்புலவர்).
பாலிற்கு உறைமோரிடுதலை உறைகுத்துதல், பிரை குத்துதல் என்பது வழக்கு.
ததி - தஹீ (இ.) (வ.வ: 172).
தரங்கம் - தரங்க = அலை.
துளங்குதல் = 1. அசைதல்.
துளங்கிமில் நல்லேற்றினம் (சுலித்.106).
2. நிலைகலங்குதல்.
கடிமரந் துளங்கிய காவும் (புறம்.23.).
துளங்கு - தளங்கு - தயங்கு. தயங்குதல் = அசைதல்.
தயங்கிய களிற்றின்மேல் (கலித். 31:10).
தளங்கு - தரங்கு = அசைந்தியங்கும் அலை.
தரங்காடுந் தடநீர் (தேவா.461 : 1).
தரங்கு - தரங்கம் =1. அலை.
நீர்த்தரங்க நெடுங் கங்கை (பெரியபு. தடுத்தாட். 165).
2. இசையலை.
ஒண்டரங்க விசைபாடு மளியரசே (தேவா. 87: 1).
ஒ.நோ: அரங்கு - அரங்கம். அலைதல் = அசைதல்.
அலை = அலையும் நீர்த்திரை.
அம்போதரங்கம் = கரைநோக்கிவரும் நீரலைபோல் வரவரச் சிறுத்துவரும் கலிப்பாவுறுப்பு.
அம்போதரங்கம் அறுபதிற்றடித்தே (தொ. 1408).
தொல்காப்பியம் வழிநூலாதலால், ஆரிய வருகைக்கு முற்பட்ட இடைக்கழகக் காலத்திலேயே அம்போதரங்க வொத்தாழிசைக் கலி வழக்கிலிருந்திருத்தல் வேண்டும்.
வடவர் தரம் + க (பய) என்று பகுத்து, குறுக்கே செல்வது என்று மூலப் பொருளுரைப்பர். தரம் என்பதன் மூலம் த்ரூ. இது துருவு என்னும் தென்சொற் றிரிவு. க என்பது ஏ என்பதன் கான்முளை.
ஏ - யா - ஜா - கா - க. (வ.வ. 172, 173.)
தருக்கம் - தர்க்க.
தருக்குதல் = 1. செருக்குதல்.
தன்னை வியந்து தருக்கலும் (திரிகடு. 38).
2. மிகுத்துக் கூறுதல்.
தன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்து (தொல்.996).
3. போரூக்கங் கொள்ளுதல்.
வெம்போர்த் தருக்கினார் மைந்தர் (சீவக. 1679).
4. தாக்குதல், இடித்தல்.
தன்மருப்பால் வெண்பிண்டி சேரத் தருக்கி (பதினொ.திருவீங்கோய்.40).
5. தகர்த்தல்.
மரக்கல மியங்கவேண்டி … தருக்கியவிடத்து (கம்பரா.மீட்சிப் 171). (வ.வ:)
தருக்கு = 1. செருக்கு. 2. எதிர்க்கும் வலிமை.
எதிர்செயுந் தருக்கிலாமையின் (கம்பரா. தாடகை. 40).
3. சொற்போர். தருக்கினாற் சமண்செய்து (திவ். பெரியதி.2.1:7).
தருக்கு - தருக்கம் =1. சொற்போர்.
பொருவரு தருக்கஞ் செய்ய (கந்தபு. ததீசியுத். 157).
4. தருக்க நூல்.
தமிழ்த் தருக்க நூல் எழு பொருட் பாகுபாட்டை அடிப்படை யாகக் கொண்டது. தர்க்க பரிபாஷை என்னும் நூலிற் காட்டப் பெற்றுள்ள அகத்தியத் தருக்க நூற்பாக்களைக் காண்க. தமிழ்த் தருக்க நூலையே வடவர் வைசேடிகம் என வகுத்தனர். (வ.வ: 174 -175).
தலைக்கட்டு
கணவனும் மனைவியும் மட்டும் உள்ள குடும்பம்; குடும்பம் கணவனும் மனைவி மக்களும் சேர்ந்த கூட்டம்; குடும்பு பல குடும்பங்கள் சேர்ந்த கூட்டம்; இல் அல்லது குடி பல தலை முறையாகத் தொடர்ந்து வரும் பெருங் குடும்பு: மரபு தொடர்ந்து வரும் குடி வழி; குலம் பல குடிகள் சேர்ந்த தொகுதி (எ.டு) பள்ளியர், கவண்டர், அகம்படியர், குடியானவர் முதலிய பல குடிகள் சேர்ந்த தொகுதி வேளாண்குலம்; இனம் ஒரேவகையான மொழிபேசும் பல குலத்தொகுதி (Nalion) வரணம் நிறங் காரணமாக ஏற்பட்ட மாபெரும் குலம் (Race). (சொல்: 47)
தலைக்கழகம்
முத்தமிழும் ஒருங்கே கற்ற புலவர் நூற்றுக்கணக்கினர் தோன்றிய தனால், பழைய இலக்கியத்தை ஆராயவும் புதிய இலக்கியத்தை இயற்றவும், பாண்டியன் பஃறுளியாற்றங்கரை மேலிருந்த மதுரை யென்னும் தன் தலைநகரில் ஒரு கழகம் நிறுவினான். அதன் உறுப்பினர் ஐந்நூற்று நாற்பத்தொன் பதின்மர் என்றும், அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நான்பத்தொன்பதின்மர் பாடினாரென்றும், அவராற் பாடப் பட்டன முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் பல பரிபாடலும் பிறவுமென்றும், அக்கழகத்தை நடத்தி வந்த பாண்டியர் காய்சினவழுதி முதல் கடுங்கோன் ஈறாக எண்பத் தொன் பதின்மர் என்றும், அவருட் பாவரங்கேறினார் எழுவரென்றும், அக்கழகம் இருந்த காலநீட்சி நாலாயிரத்து நானூற்று நான்பதாண் டென்றும், இறைய னாரகப்பொருள் உரையிற் சொல்லப் பட்டுள்ளது.
அக்கழக வுறுப்பினர் பெயர்கள் இறந்துபட்டன. அகத்தியர் இடைக்கழகக் குலைவிற்குப்பின் வடநாட்டினின்று வந்த ஆரியர், முதலிரு கழக வுறுப்பினரும் தூய தமிழராவர். சிவன் பெயரும் முருகன் பெயருங் கொண்ட இருவர் தலைக்கழக வுறுப்பினரா யிருந்திருக்கலாம். முரஞ்சியூர் முடிநாகராயர் கி.மு. பத்தாம் நூற்றாண்டுப் பாரத காலத்தவர். நிதியின் கிழவன் என்பது, வடதிசைத் தலைவனைக் குறிக்கும் தொல்கதைக் கட்டுப்பெயர்.
தலைக் கழகம் கி.மு. 10,000 போல் தோன்றிற்று. அக் காலத்து மக்கள் இக்காலத்தாரினும் மிக நீண்டு வாழ்ந்திருப்பராதலால், சராசரி ஆளுக்கு 50 ஆண்டு வைத்துக்கொள்ளின், 89 பாண்டி யருக்கும் 4450 ஆண்டாகும். முக்கழக வரலாற்றிற் குறிக்கப்பட்டுள்ள காலநீட்சி 4440 ஆண்டு. இது முற்றும் பொருத்தமானதும் நிகழ்ந்திருக்கக் கூடியதுமாகும்.
தலைக்கழகத்திற்கு அளவை நூலாயிருந்த மாபிண்ட நூற் பெயரும் மறைந்து விட்டது. அகத்தியம் ஒரு மாபிண்டமாயினும், இடைக்கழகத்திற்குப் பிற்பட்டதாதலின், தலைக்கழக நூலா யிருந்திருக்க முடியாது. எழுத்து, சொல், பொருள் என்னும் முக்கூற் றிலக்கணமுங் கொண்ட இயற்றமிழ் நூல் பிண்டம்; இயலிசை நாடகம் என்னும் முத்தமிழிலக்கணமுங் கொண்ட நூல் மாபிண்டம். ஒவ்வொரு தமிழும் இலக்கணம் இலக்கியம் என்னும் இருபாற்பட்டது. முத்தமிழ்க்கும் இலக்கணம் ஒரே நூலாயிருக்கும்; ஆயின், இலக்கியம் வெவ்வேறு வனப்புக் களாகவும் பனுவல்களாகவும் இருக்கும். இயற்றமிழிக்கணப் பொருட்கூற்றில் யாப்பும் உவமை யென்னும் அணியும் அடங்கும்.
தலைக்கழகம் வரலாற்றிற் கெட்டாத தொன்மையதாதலால், அதைப் பற்றிய வண்ணனையிற் சில விளத்தங்கள் கி.பி. 6-ஆம் அல்லது 7-ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டவுரையில், தவறாகக் குறிக்கப்பட்டிருப்பது இயற்கையே.
தலைக்கழகம் தொடங்கினபின், உலகியற் கலைகளும் அறிவியல் களும் வளர்ந்து வந்ததுபோன்றே, மதவியல் ஆராய்ச்சியும் ஆழ்ந்து வளர்ந்தது. சிவ நெறிக்கும் திருமால் நெறிக்கும் மேற்பட்ட, கடவுள் நெறியென்னும் பொது நெறியும் கண் டறியப்பட்டது. பொது மக்கள் சிறுதெய்வ வணக்கத்தையும், புலமக்கள் பெருந்தேவ மதத்தையும், துறவியர் கடவுள் நெறியையும், கடைப்பிடித்தனர்.
ஆயின், காளி போர்வெற்றித் தெய்வமாகவும் அம்மை நோய்த் தெய்வமாகவுங் கருதப்பட்டதனால், நாளடைவில் ஐந்திணைப் பொதுத் தெய்வமானாள். தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டி நாடுமாகிய தென்னிலத்தின் தென்கோடியிலிருந்த பெருமலைத் தொடருக்கும், வடகோடியிலிருந்த பேராற்றிற்கும், குமரி யென்னும் காளியின் பெயரே இடப்பெற்றது.
பாண்டியன் மதிக்குலத்தானாதலால், அவன் முதல் தலைநகர் அவன் குல முதல்வன் பெயரை யொட்டி மதுரை யெனப்பட்டது. மதி - மதிரை - மதுரை. ஒ.நோ: குதி - குதிரை. குதித்தல் தாண்டுதல்.
வைகை மதுரை பிற்காலத்த தாதலால், மருத முன்றுறை என்னும் தொடரினின்று மதுரைப் பெயர் வந்த தென்பது பொருந்தாது. பஃறுளி மதுரைப் பெயரே வைகை மதுரைக்கும் பிற்காலத்தில் இடப்பட்டது.
தலைக்கழகக் கால நாகரிகமும் பண்பாடும்
ஆரியர் தென்னாடு வருகைக்கு முற்பட்ட முதலிரு கழகத் தனித் தமிழ் நூல்களனைத்தும் அழியுண்டு போயினும், மொழியமைப் பினின்றும் முக்கழக வரலாற்றினின்றும் கடைக்கழகப் பாடல் களிலும் பனுவல்களிலுமுள்ள குறிப்புக்களினின்றும், தலைக்கழகக் கால நாகரிகப் பண்பாட்டை ஒரு வாறுணரலாம்.
மொழி
அஃறிணையினின்று மக்களைப் பிரித்துக் காட்டுவதும், ஒரு நாட்டு மக்களின் நாகரிகப் பண்பாட்டு அளவுகோலும், மொழியே. மொழியினாலேயே மாந்தன் நரன் என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டும். நரலுதல் = 1. ஒலித்தல். ஆடுகழை நரலும் சேட்சிமை (புறம். 120). 2. கத்துதல். வெண்குருகு நரலவீசும் நுண்பஃறு வலைய (அகம். 14) 3. பேசுதல்.
நரல் - நரன் = மாந்தன். வறிதே நிலையாத விம்மண்ணுலகின் நரனாக வகுத்தனை (தேவா. 934:2).
நரன் - நரம் = மாந்தப்பிறவி. நரத்திலும் பிறத்திராத (திவ். திருச்சந். 29).
வானரம் (வால்நரம்) = வாலையுடைய மாந்தன் போன்ற விலங்கு. வானர முகன் (சீவக. 1168).
நரன் - வ. நர. வானரம் (வ. வாநர.)
நர என்னுஞ் சொல்லிற்கு வடமொழியில் வேரில்லை. வானர என்னுஞ்சொல்லை நர ஏவ என்று பிரித்து, நரனைப் போன்றது என்று பொருள் கூறுவர் வடமொழியாளர்.
மொழிக்கு அடுத்தபடியாக, மாந்தனின் சிறப்பாற்றல் முன்னுதல். முன்னு தல் கருதுதல். முன்னுவான் (வானீற்று நி. கா. வி. எ.) - முன்னான் (ம.) AS munan (to think).
முன் - முன்னம் =1. கருத்து. முன்ன முகத்தி னுணர்ந்து (புறம். 3). 2. மனம். (திவா.).
முன்னம் - முனம் - மனம் = உள்ளம்.
மனம் - வ. மன. டு. mens. ME mynd, E mind.
முன் - மன் = கருதும் ஆற்றலுள்ள மாந்தன்.
மன்பது = மக்கட் கூட்டம், மன்பது மறுக்கத் துன்பங் களைவோன் (பரிபா. 15:52).
மன்பது - மன்பதை = மக்கட்கூட்டம்.
மன்பதை காக்குநின் புரைமை (புறம். 210).
மன் - வ. மநு. OS, OHG man, E man.
மொழியிலுங் கருத்திலும் அன்றும் இன்றும் என்றும் சிறந்தவன் தமிழனே.
ஒவ்வொரு நாட்டிலும், மொழியை வளர்ப்பவர் பொது மக்கள்; இலக்கியத்தை வளர்ப்பவர் புலமக்கள். மொழிகள் இயன் மொழியும் திரிமொழியும் என இருவகைப்படும். தானே தோன்றியது இயன்மொழி; ஒன்றினின்று திரிந்தது திரிமொழி. ஆகு பெயர்கள் இருமடியும் மும்மடியுந் திரியும். திரவிடம் தமிழினின்று திரிந்த திரிமொழி; ஆரியம் திரவிடத்தினின்று திரிந்த இருமடித் திரிமொழி.
குமரிநாடு தமிழன் பிறந்தகம் மட்டுமன்றி மாந்தன் பிறந்தகமு மாதலால், தமிழே இம்மியும் ஏனைமொழி கலவாத முழுத் தூய இயன்மொழியாகும்.
இருதிணை ஐம்பால் ஈரெண் மூவிடங்களாகிய கிளவியிலக் கணமும், நுண்பிரிவுகளையுடைய எண் வேற்றுமைப் பெயரிலக் கணமும், நந்நான்கு வகைப்பட்ட முக்கால வினையிலக்கணமும்; வளமை, செம்மை, மரபு, தகுதி, தூய்மை முதலிய சொற்றிறங் களும்; சுருக்கம், தெளிவு, மதிப்புறவு, இடக்கரடக்கல், மங்கலம் முதலிய சொற்றொடரமைதிகளும் கொண்டு; பதினெண் திரவிட மொழிகட்குத் தாயும் பதினாறாரியப் பிரிவுகட்கு மூலமுமா யமைந்தது தமிழ்.
இருதிணை
எல்லாப் பொருள்களையும், உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் (உயிரியும்) என மூவகையாக வகுத்தாலும், தனக்கும் பிறர்க்கும் நல்லதுந் தீயதுமாகிய இரண்டையும் பகுத்தறியும் பண்பையே சிறப்பாகக் கொண்டு, அஃதுள்ளதை உயர்ந்த வகுப்பென்றும் அஃதில்லதைத் தாழ்ந்த வகுப்பென்றும் துணிந்து, அதற்கேற்ப, உயர்ந்த வகுப்பைக் குறிக்குஞ் சொற்கட்கே ஆண் பெண் என்னும் இருபாலீறும், தாழ்ந்த வகுப்பைக் குறிக்குஞ் சொற்கட் கெல்லாம் ஒருமை பன்மை யென்னும் ஈரெண்ணீறுமே கொடுத்து, மொழியை வளர்த்தவர் தமிழப் பொதுமக்களே. மக்களும் தேவரும் உயர்ந்த வகுப்பு; மற்றவை தாழ்ந்த வகுப்பு.
ஒருமை : முருகன் வந்தான், வள்ளி சென்றாள். உயர்திணை.
காளை உழுகிறது, ஆவு கறக்கின்றது, கல் குத்துகிறது,
அது பறக்கின்றது. - அஃறிணை.
பன்மையீறும் இருவகுப்பிற்கும் வெவ்வேறாம்.
பன்மை : அரசர் வாழ்ந்தனர் (வாழ்ந்தார்),
ஆசிரியன்மார் பேசினார். - உயர்திணை
காளைகள் உழுகின்றன, மாடுகள் மேய்கின்றன,
அவை இனிக்கின்றன, இலைகள் அசைகின்றன. -
அஃறிணை.
மக்கள், குருக்கள், அவர்கள் வந்தார்கள், என்பன வழுவதை தியாகக் கொள்ளப்பெறும்.
இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பல் என்னும் முறையில், பொதுமக்கள் வகுத்த வகுப்புகட்கே இலக்கண நூலார் உயர்திணை அஃறிணை யெனப் பெயர் கொடுத்தனர். இன்றும், கல்லா மாந்தர் இக்குறியீடுகளை அறியா விடினும், இருதிணை முறைப்படியே பேசுவர். உயிரையும் பாலையுமேயன்றிப் பகுத் தறிவை அடிப்படையாகக் கொண்டு வேறெம்மொழியாரும் பொருள்களைப் பகுத்திலர். தெலுங்கில் மகத், அமகத் என்றது தமிழைப் பின்பற்றிப் பிற்காலத்திலேயே.
வளமை
நால்வகையடை: வாழையிலை, நெல்தாள், கரும்புத்தோகை, பனையோலை.
பல்வகைப் பிஞ்சு : மா வடு, பலா மூசு, வாழைக் கச்சல், தென்னங் குரும்பை, பாக்கு நுழாய்.
காய்ப்பு மாறியபின் தோன்றும் பிஞ்சு நுரு (நொரு).
யானைப்பெயர்கள்: ஆம்பல், உம்பல், உவா, எறும்பி, ஓங்கல், கரி, கறையடி, கைம்மலை, கைம்மா, தூங்கல், தும்பி, தோல், நால்வாய், பகடு, புழைக்கை - பூட்கை, பெருமா, பொங்கடி, மதமா, மறமலி, மாதிரம், மொய், வழுவை, வாரணம், வேழம் முதலியன.
முகத்திற் செம்புள்ளி யுள்ளது சிந்துரம் அல்லது புகர்முகம். முருகன் ஊர்தி பிணிமுகம். ஆண்யானை களிறு; பெண்யானை பிடி. அயல்நாட்டினின்று வந்த குதிரையினத்தையும், பத்திற்கு மேற்பட்ட வகையாகப் பிரித்தனர்.
தமிழ் மொழி, தனக்குரிய வீடு என்னுஞ் சொல்லை மட்டுமன்றி, இல் என்னுந் தெலுங்குச் சொல்லையும், மனையென்னும் கன்னடச் சொல்லையும், சமற்கிருதத்திற்கும் பின்னிய (Finnish) மொழிகட்கும் பொதுவான குடி என்னுஞ் சொல்லையும், தன்னகத்துக் கொண்டுள்ளதென்று, கால்டுவெலார் தமிழ்ச் சொல் வளத்தைப் பாராட்டிக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
செம்மை
எழுத்துக்களையும் சொற்களையும் சொற்றொடர்களையும், ஒலியும் பொருளும் திரிக்காதும் சிதைக்காதும் இலக்கண நெறியிற் பேசுவது செம்மை. செம்மை தவறியது கொடுமை. செம்மையான தமிழ் செந்தமிழ். கொடுமையான தமிழ் கொடுந் தமிழ். தமிழை என்றுஞ் செந்தமிழாகவே வழங்கவேண்டுமென்பது, தொன்னூலாசிரியர் இட்ட நிலையான வரம்பு. அவ்வரம்பி னாலேயே, கடந்த மூவாயிரம் ஆண்டாக ஆரியர் எத்துணையோ கேடு செய்திருப்பினும், தமிழ் இன்னும் அழியாது இருந்து வருகின்றது.
இக்காலத்துப் பேராசிரியர் சிலர் உலக வழக்கிற்கும் கொச்சை வழக்கிற்கும் வேறுபாடறியாது, வச்சிருக்கோம் (வைத்திருக் கிறோம்) என்பதை உலகவழக்காகக் கொள்வர்.
நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலக மாதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழா அமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும். (தொல்.1589).
வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாகலான. ( 1592).
என்பவற்றைக் கண்டும் அவர் உணர்வதில்லை. பொதுமக்களுள் ஒரு சாராரான கீழ்மக்கள் பேச்சையுந் தழுவவேண்டுமெனின், அவர் ஒழுக்கத்தையும் பின்பற்ற வேண்டியதாகும். இது உயர்ந்தோக் குடம்பாடன்று. செய்யுள் வழக்கிற்கும் உலக வழக்கிற்கும் சிறிது வேறுபாடிருப்பினும், இரண்டும் செந்தமிழ் வழக்கேயென்றும், செம்மை தமிழின் உயிர்நாடிப் பண்பென்றும், தமிழுக்கு வழு நிலையானவை திரவிட மொழிகட்கு வழாநிலையாகு மென்றும், அதனாலேயே அவை தனிமொழிகளாக வழங்குகின்றன வென்றும், அறிதல் வேண்டும்.
மரபு
எப்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே. (நன். 388).
இளமை, ஆண்பால், பெண்பால், விலங்குக் காவலர், உறுப்புக்கள், வினைகள், கழிபொருள் முதலிய பல்வகைப் பொருளும்பற்றி, பண்டை மேன்மக்கள் எச்சொற்களை வழங்கினரோ அச்சொற் களையே வழங்குதல் மரபாம்.
ஊண்வினைகள்
உறிதல்,
உறிஞ்சுதல் - நீர்ப்பொருளையும் நெகிழ்ச்சிப் பொருளையும்
காற்றால் வாய்க்குள் இழுத்தல்.
குடித்தல் - நீர்ப்பொருளை இயல்பாக உட்கொள்ளுதல்.
பருகுதல் - நீர்க்கலத்திற் பற்படக் குடித்தல்.
அருந்துதல் - சிறிது சிறிதாகக் குடித்தல்.
மண்டுதல் - மண்டியுட்படக் குடித்தல்
மாந்துதல் - பேரளவாகக் குடித்தல்
சப்புதல் - ஒன்றை மெல்லாது நாவிற்கும் அண்ணத்திற்கும் இடையிலிட்டு நெருக்கி ,அதன்சாற்றை மெல்லமெல்ல உறிஞ்சுதல்; அல்லது அப்பொருளைச் சிறிது சிறிதாகக் கரைத்தல்.
சுவைத்தல் - ஒன்றை மென்று அதன் சுவையை நுகர்தல்.
சவைத்தல் - மெல்லிய பொருளை மெல்லுதல், குழந்தை தாய்ப்
பாலைச் சப்புதல்
சூம்புதல்,
சூப்புதல் - தித்திப்புக் குச்சும் மூளையெலும்பும் விரலும் போன்ற
வற்றை வாயிலிட்டுச் சப்புதல்
தின்னுதல் - பழமும் பலகாரமும் போன்ற சிற்றுண்டியை மென்று
உட்கொள்ளுதல்.
உண்ணுதல் - கவளங் கவளமாகச் சோற்றை உட்கொள்ளல்.
சாப்பிடுதல் - குழம்பும் சாறும் மோரும் (அல்லது அவற்றுள் ஒன்று)
கலந்த சோற்றைக் கவளங் கவளமாகக் கறிவகைகளுடன் (அல்லது அவையின்றி) உட்கொள்ளுதல்.
மடுத்தல்,
வாய்மடுத்தல் - கம்பங்கஞ்சியும் கேழ்வரகுக் கூழும் போன்றவற்றைக்
கட்டிகட்டியாகக் கூட்டில் தொட்டுண்ணுதல், கவளங்கவளமாகப் பிறர் ஊட்டுதல்.
அசைத்தல்,
அசைவு
செய்தல் - விலங்கு அசையிடுவதுபோல் அலகையசைத்து மென்று
உட்கொள்ளுதல்.
அயிலுதல் - குழந்தை அளைந்து சோறுண்ணுதல்.
அயில் - அயின் - அயினி = உணவு.
தாலி களைந்தன்று மிலனே பால்விட்
டயினியு மின்றயின் றனவே … (புறம். 77)
ஒ.நோ: பள் - (பய்) - பயில். பயிலுதல் பழகுதல்.
கப்புதல் - மொக்கி விரைந்து உட்கொள்ளுதல்.
மொக்குதல் = வாய்நிறையக் கொண்டுமெல்லுதல்
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணி (திருப்பு.விநாயக. 1).
மிசைதல் - விருந்தினரை யுண்பித்து மிஞ்சியதை
யுண்ணுதல்.
வித்து மிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம். (குறள் 85).
மொசித்தல் - பலர் கூடி யுண்ணுதல்.
விழவின் றாயினும் படுபதம் பிழையாது
மையூன் மொசித்த வொக்கலொடு (புறம். 96)
மொய்கொண் மாக்கள் மொசிக்கவூண்
சுரந்தனள் (மணி. 19:136).
மொய்த்தல் திரளுதல். மொய் - மொயி - மொசி.
மொசிதல் மொய்த்தல்.
கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும் (பதிற்றுப்.71:6).
ஆர்தல் - வயிறு நிரம்ப வுண்ணுதல்.
விழுங்குதல் - மெல்லாதும் சுவை பாராதும் ஒரே தடவையில் விரைந்து வாய்வழி வயிற்றுக்குள் இடுதல்.
உட்கொள்ளுதல் - எவ்வகையிலேனும் வயிறு சேர்ப்பித்தல். இது எல்லா ஊண்வினைகட்கும் பொதுவாம்.
கடைக்கழகக் காலத்திற் புலவர் பலர் மரபும் (Idiom) தகுதியும் (Pro-priety) போற்றாமையால், பலசொற்கள் தம் சிறப்புப் பொருளை இழந்துவிட்டன.
இன்று, குளம்பி (காப்பி) சாப்பிடுதல், சுருட்டுக் குடித்தல், கொசுவலை, தேட்கடி, என்பன மரபுவழுவாம். இவை, குளம்பி குடித்தல், சுருட்டுப் பிடித்தல் அல்லது புகைத்தல், உலங்கு வலை அல்லது நுளம்புவலை, தேட்கொட்டு என்றிருத்தல் வேண்டும். சம்பளத்தை (salary) ஊதியம் (profit, gain) என்பதும் வழுவாம். இலக்கணப்புலகை நிரம்பாதவர் நூலாசிரியரும் பொத்தக ஆகிரியரும் ஆவதனாலும் மரபு கெடுகின்றது.
தூய்மை
செம்மை போன்றே தூய்மையும் தமிழின் உயிர்நாடிப் பண்பாம்.
வெளிநாடுகளினின்று வந்த பொருள்கட் கெல்லாம், அவற்றின் சிறப்பியல்பு நோக்கி உடனுடன் தமிழ்ப்பெயர்கள் இடப்பட்டன.
எ-டு: அடைக்காய் (பாக்கு), அண்டிமா (முந்திரி, Cashew) உருளைக் கிழங்கு, ஒட்டகம், கரும்பு, கழுதை, குச்சுக் கிழங்கு (ஆழ்வள்ளிக் கிழங்க, ஏழிலைக்கிழங்க, கொம்புக்கிழங்கு, சவரிக்கட்டை, மரவள்ளிக்கிழங்கு), குதிரை, செந்தாழை, (Pine-apple), புகையிலை, புகைவண்டி, பேரீந்து, மிதிவண்டி, மிளகாய், முந்திரி (கொடி முந்திரி, grape), வான்கோழி.
காள் காள் என்று கத்துவது கழுதை.
தமிழின் இயல்பை அறியாதார் சிலர்,
குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்
மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும்
செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
வெவ்ய் வெருகினைப் பூசை என்றலும்
குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்
இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்
எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்
முடிய வந்த அவ்வழக் குண்மையின்
கடிய லாகா கடனறிந்த தோர்க்கே. (தொல். 1568).
என்பதைப் பிறழவுணர்ந்து, தமிழில் வரைதுறையின்றிப் பிற மொழிச் சொற்களை வழங்கத் தொல்காப்பியம் இடந்ததந்து விட்டதாகக் கூறுவர். இந்நூற்ளபாவிலுள்ள சொற்களெல்லாம் தூய தமிழ்ச்சொற்களே யென்பதையும், அவற்றுட் சில சிறிதே பொருள் திரிந்தவை யென்பதையும், அவர் அறிந்திலர்.
கடுவன் என்பது கணவன் என்பதன் திரிபு. கணவன் என்னுஞ்சொல் அஃறிணையிலும் வழங்கும்.
வங்காக் கடந்த செங்காற் பேடை
எழாலுற வீழ்ந்தெனக் கணவற்கா ணாது (குறுந். 151).
என்பதை நோக்குக. கோட்டான் மரக்கொம்பில் அல்லது பொந்தில் வாழ்வது. தத்தை இலைகளிலும் ஓலைகளிலும் தொத்தி நிற்பது. தொத்து - தொத்தை - தத்தை. தொத்தை - தோத்த (இந்தி). பூசை என்பது வீட்டுப் பூனையின் பெயர். சேவல் என்பது பறவை யாணின் பெயர். சே என்பது விலங்காணின் பெயர். எ-டு: சேங்கன்று = ஆண்கன்று. சே - சேவு - சேவல். ஏனம் என்பது கரியது என்னும் பொருளுள்ளது. ஏனல் =கருந்தினை. ஏனை - யானை. கண்டி கடியது (கடுமையானது).
ஆயினும், தொல்காப்பியர்க்கு இருபது நூற்றாண்டுகட்குப் பிற்பட்டுத் தோன்றிய நன்னூலார், தமிழின் தூய்மையைக் காவாது, எல்லா வடசொற் களையும் தமிழில் வழங்க இடந்தந்தது போன்றே,
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே. (462).
என்று வழுப்படக் கூறிவிட்டார். இது தழுவத் தக்கதன்று.
சுருக்கம்
சுருங்கச் சொல்லல் ஒரு பண்பாட்டுக் கூறாகப் பண்டைத் தமிழராற் கொள்ளப்பட்டது.
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல். (குறல். 196).
பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
சிலசொல்லல் தேற்றா தவர் ( 649)
என்றார் திருவள்ளுவர்.
ஒருவன் கூலக்கடைக்குச்சென்று, கடைக்காரனிடம் பாசிப்பயறு (பச்சைப்பயறு) உள்ளதா என்று வினவின், கடைக்காரன் அஃதில்லாவிடத்து, உழுந்தல்லதில்லையென்று த;னனிடமுள்ள வேறொரு பயற்றை அல்லது சரக்கைப்பற்றிச் சொல்ல வேண்டுமென்றும், வினவிய பொருள் மட்டுமே யிருக்குமாயின், அதை இப்பயறல்ல தில்லையென்று சுட்டிக்கூற வேண்டு மென்றும், இங்ஙனங் கூறின் மேற்கொண்டு பல வினாக்களும் விடைகளும் வீணாக எழாவாறு தடுக்குமென்றும், பண்டை யிலக்கண நூலார் வணிகர்க்குச் சொன்னது, மற்றெல்லாத் தொழிலாளர்க்கும் பொருந்தும் பொது வாய்பாடாகும்.
எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின்
அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்.
அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்.
என்பன தொல்காப்பியம் (சொல். 35.36).
தெளிவு
சுருங்கச் சொல்லல் சிறந்த பண்பாயினும், விளக்கமின்றிச் சொல்வது பயன்படாது குற்றமாகுமாதலின், மாப்பூத்தது என்று பலபொருளொருசொல்லின் சிறப்பு வினை குறியாது, மா வீழ்ந்தது என்று பொதுவினை குறிப்பது கூடாதென்றும், அதை மாமரம் வீழ்ந்தது, விலங்குமா வீழ்ந்தது என்று தெளிவு படுத்திக் கூறவேண்டுமென்றும்; ஒரு பொருளின் இயற்கைக்கு மாறான இயலையும் செயலையுங் கூறும்போது, அதற்குக் கரணியத்தையும் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ குறித்தல் வேண்டுமென்றும்; தொன்னூலாசிரியர் நெறியிட்டுள்ளனர்.
ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும்
வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல்
நினையுங் காலைக் கிளந்தாங் கியலும்.
குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி.
என்பன தொல்காப்பியம். (சொல்.54, 55).
இலக்கியம்
இசை, நாடகம், கணிதம், கணியம், ஏரணம், மந்திரம், மறை, பட்டாங்கு, மடை, மருத்துவம், அறம், அரசியல், மல், போர், நிலம், நீர் முதலிய பல்வேறு நூல்கள் பற்றிய சிறப்பிலக்கியமும்; அறுவகைப் பாவான தனிநிலைச் செய்யுளும், எண்வகை வனப்பான தொடர்நிலைச் செய்யுளும், ஆகிய பொதுவிலக்கி யமும்; மூலமும் உரையும் செய்யுளாகவே யிருந்தன. இங்ஙனம் வேறெம்மொழியிலும் இருந்ததில்லை, இருக்கப்போவது மில்லை.
இலக்கியம் முழுதும் செய்யுளாகவே இருந்ததனால், இலக்கிய வழக்கு செய்யுள்வழக்கெனப்பட்டது. எல்லாப்புலவரும் பாவலராயிருந்ததனால், பாவலர் எனப்படாது புலவர் என்றே பெயர் பெற்றனர். அவர் இக்காலத்துப் பாவலர்போல், ஏடும் எழுதுகோலும் எடுத்து ஓரிடத்தமர்ந்து எண்ணியெண்ணி அடித்துந்திருத்தியும் செய்யுளியற்றாது, உரைநடையிற் பேசுவது போல், எங்கும் என்றும் எப்பொருளும் பற்றிக் கடுத்துப் பாடியவராவர். ஆசிரியரும் அறிவுறுத்துவோரும் கணியரும் ஆகிய கல்வித் தொழிலாளர் மட்டுமன்றி; உழவர், வணிகர், மருத்துவர், கொல்லர் முதலிய பல்வகைப் பிறதொழிலாளரும், குறிஞ்சி நிலத்துக் குறவரும், பாலைநிலத்துக் கள்ளர் மறவரும், முல்லைநிலத்து ஆயரும், நெய்தல் நிலத்துப் பரவரும் ஆகிய வருள்ளும் சிலர் பாவலராயிருந்தனர். அதனாலேயே, தலைக் கழகத்துப் புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர் உள்ளிட்டு, நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர் பாடினர்.
இலக்கணம்
தமிழில் இலக்கண முதனூல் இயற்றியவர். முற்றத்துறந்து முழுமுனி வரான ஒரு மெய்ப்பொருளறிஞர்.
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூல் ஆகும். (தொல்.1594)
முனைதல் வெறுத்தல். முனை - முனைவு - முனைவன். முனிதர் வெறுத்தல். முனி - முனிவு - முனிவன் = உலகை வெறுத்துப் பற்றைத் துறந்தவன்.
எழுத்து
முதனூலாசிரியர் ஒரு சிறந்த மெய்ப் பொருளறிஞராயிருந்த தனாலேயே, உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் (உயிரியும்) போன்று எழுத்தொலிகள் மூவகைப்பட்டிருத்தலைக்கண்டு, முப்பொருட் பெயர்களையே எழுத்தொலிகட்கும் உவமையாகு பெயராக இட்டிருக்கின்றார். தானாக இயங்கும் உயிரைப் போன்று தானாக வொலிக்கும் உயிரெழுத்தும்; உயிரின் சேர்க்கை யின்றித்தானாக வொலிக்காத மெய்யெழுத்தும்; உயிரொடு சேர்ந்த வுடம்பு அதனால் இயக்கப்பட்டு அதனொடு ஒன்றி அதனினும் முற்பட்டுத் தோன்றும் உயிர்மெய் போன்று, உயிரெழுத்தொடு சேர்ந்த மெய்யெழுத்து ஒலிக்கப்பட்டு அதனொடு ஒன்றி அதனினும் முற்பட்டுத் தோன்றும் உயிர்மெய் யெழுத்தும்; இருத்தலைக் காண்க. உயிர்மெய் உயிரையுடைய மெய். பிராணி என்னும் வடசொல் வழக்கினால் உயிர்மெய் என்னுஞ் சொல்லின் பொருள் மறைந்தது.
ஒலியின் நிலைமையையே உருவத்திலுங் காட்டுவதற்கு, உயிர் மெய்க்கு மெய்யுருவமும் உயிர்க்குறியுஞ் சேர்ந்த தனிவடிவமைத் தார். இவ்வமைப்பு முதன்முதல் தமிழிலேயே ஏற்பட்டது. உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்த தொகுதிக்குக் குறுங்கணக்கு என்றும், அவற்றோடு உயிர்மெய்யெழுத்துக்களும் சேர்ந்த தொகுதிக்கு நெடுங்கணக்கு என்றும் பெயர். இவை உறவுக்குறியீடுகளாதலால் (Relative Terms), ஒருங்கே தோன்றின வையாகும்.
மேலைநாடுகள் உட்படப் பிறநாட்டு வண்ணமாலைகளெல் லாம் (Alphabets)FW§fz¡nf. சப்பானிலும் எத்தியோப்பியா விலும் உள்ள அசையெழுத்துக்களும் (Syllabaries), மெய்யின்மை யால் நெடுங்கணக்காகா.
மேனாட்டுக் குறுங்கணக்கெல்லாம் ஒழுங்கின்றி உயிரும் மெய்யுங் கலந்திருப்பதால், தமிழ்க் குறுங்கணக்குப்போல் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட முறையைக் (Order) காட்டுவதில்லை. சொல்லின் மூவிடத்திலும் எந்த எழுத்தும் வரலாமாதலால், முதனிலை இடைநிலை இறுதிநிலை என்னும் இடவரம்பும் மேலை மொழியெழுத்துக்கட்கில்லை. சொற்கள் நீண்டகாலமாக மேன்மேலுந் திரிந்து திரிந்து உருமாறி, துருப் பிடித்த இருப்புக்கருவிகள்போல் உறுப்புப் பிரிக்கமுடியாதிருப் பதால், பகுசொல்லமைப்பும் சொற்புணர்ச்சியும் ஆகிய எழுத்தின் புறத்திலக்கணங்களும் பெரும்பாலும் மேலைமொழிகட் கில்லை. ஆகவே, பத்து வகையகமும் இருவகைப் புறமும் ஆகிய பன்னீரெழுத் திலக்கணங்களும் நிரம்பிய மொழி தமிழ் ஒன்றே.
எழுத்திலக் கணமே யீரா றவைதாம்
எண்பெயர் முறைபிறப் புருவம் அளவே
முதலீ றிடைநிலை போலி யகமாம்
கிளவியும் புணர்ச்சியுங் கிளப்பின் புறமாம்.
மாத்திரை என்பதும் தென்சொல்லே. குமரிநாட்டார் பொதுவாக எஃகுச் செவியராயிருந்தமையின், கண்ணிமை யளவான ஒரு மாத்திரையின் அரையளவோடு காலளவையும் எழுத்தொலி களிற் கண்டறிந்தனர்.
தமிழில் எழுத்துத் தோன்றிய காலம் கி.மு. 10,000. வேத ஆரியர் நாவலந் தேயத்திற்குட் புகுந்த காலம் கி.மு. 1500. அவருக்கு எழுத்தில்லை. அவர் வேதம் நீண்ட காலமாக எழுதாக் கிளவியாகவே யிருந்தது. தென்னாடு வந்து தமிழரொடு தொடர்பு கொண்டபின், தமிழெழுத்தைப் பின்பற்றிக் கிரந்த எழுத்தை அமைத்துக் கொண்டனர். அதன்பின், கிரந்த எழுத்தை அடிப் படையாகக் கொண்டு, வடநாட்டில், கி.பி. 3ஆம் நூற்றாண் டிற்கும் 11ஆம் நூற்றாண்டிற்கும் இடையில், தேவநாகரி தோன்றிற்று. தமிழ் நெடுங்கணக்கையும் எழுத்திலக் கணத்தையும் தழுவி, எழுத்துமுறையும் உயிர்மெய்த் தனிவடிவும் சொற் புணர்ச்சியும், முதற்கண் சமற்கிருதத்திலும் பின்னர் ஏனை யிந்திய மொழிகளிலும், ஏற்பட்டன.
கி.மு.3-ஆம் நூற்றாண்டில், அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்து தமிழகத்துப் புகுந்தது. அதனின்றே வட்டெழுத்துத் தோன்றிற்று. ஆரியர் தம் தமிழொழிப்புத் திட்டத்தை அடிப் படையினின்று தொடங்கியதால், மூவேந்தரும் ஆரிய அடிமை யராய்ப் போன பிற்காலத்தில், தமிழ் நாட்டுக் கல்வெட்டில் வட்டெழுத்துப் புகுந்திருக்கின்றது. தமிழுக்கும் வட்டெழுத் திற்கும் யாதொரு தொடர்புமில்லை. இன்றுள்ள தமிழெழுத்துத் தொன்று தொட்டு வருவதே.
தொல்லை வடிவின எல்லா எழுத்துமாண்
டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி. (98)
என்று 13-ஆம் நூற்றாண்டுப் பவணந்தி முனிவர் கூறதல் காண்க. எகர ஒகரமெய் புள்ளி நீங்கியதும், ஏகார ஓகாரமெய் இரட்டைச்சுழிக் கொம்பு பெற்றதும், ஏகாரவுயிர் கீழிழுப்புக் கொண்டதுமே, பிற்காலத்து வேறுபாடாம்.
சொல்
சொற்களை முதனிலை, ஈறு, புணர்ச்சி, சாரியை, இடைநிலை, திரிபு என்னும் ஆறுறுப்பாகப் பகுத்தும்; இயற்சொல், திரிசொல், திசைச்சொல் என மூவகையாக வகுத்தும்; மொழிநூற்கு அடிகோலியது தமிழே.
பொருள்
தமிழிலக்கிய மெல்லாம் செய்யுள் நடையிலிருந்தமையால், சொல்லிலக்கணத்தை யடுத்துச் சொற்றொடரிலக்கணத்தைக் கூறாவிடினும், செய்யுளிலக்கணத்தைக் கூறி அதன்பின் பொருளி லக்கணத்தைக் கூறியிருக்கலாம். ஆயின், முதனூலாசிரியர் மெய்ப்பொருளறிஞரா யிருந்ததனால், மொழிநடை எதுவாயினும் பொருளே அதன் உள்ளீடென்றும், தனிச்சொற்கும் பொருளுண் டென்றும், கண்டு, அதனையே சொல்லிற்கடுத்துக் கூறியதோடு, அதற்கே சிறப்புக் கொடுத்துச் செய்யுளை அதனுள்ளடக்கி, மூன்றாம் அதிகாரத்தைப் பொருளதிகாரமெனப் பெயரிட்டு இயற்றமிழ் இலக்கண நூலின் முடிமணியாக்கினார். திருக் கோவிலின் முகமண்டபமும் இடைமண்டபமும் உண்ணா ழிகையும் போல, எழுத்தும் சொல்லும் பொருளும் முறையே ஒன்றினொன்று சிறந்தன வாகும்.
பிற்காலத்துப் பாண்டிய னொருவன், எழுத்ததிகாரமும் சொல் லதிகாரமும் வல்லாரைமட்டும் தலைப்பட்டுப் பொருளதிகாரம் வல்லாரைத் தலைப்படாதபோது, புடைபடக் கவன்று, என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட் டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம். என்று வருந்தியதாக,இறையனாரகப் பொருளுரை கூறியிருப்பது இங்குக் கவனிக்கத் தக்கது. இதனால், தமிழன் பெருமையையும் தமிழின் பெருமையையும் ஒருங்கே உணரலாம். ஏனைமொழியிலக்கண நூலாரெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என்னும் நாலொடு நின்றுவிட, தமிழிலக்கண நூலார் மட்டும் யாப்பின் பொருளுக்கும் இலக்கணம் வகுத்தது, குமரி நாட்டுத் தமிழரின் ஒப்புயர்வற்ற அகக்கரண வளர்ச்சியைக் காட்டும். பொருளிலக் கணம் போலப் பண்டைத் தமிழனின் புலமை நுணுக்கத்தைக் காட்டும் சான்று வேறெதுவுமில்லை.
எல்லாப் பொருள்களையும் அகம்புறம் என இரண்டாகப் பகுத்து, அவ்வொன்றையும் எவ்வேழு திணையாக வகுத்திருக் கின்றார் முதனூலார்.
கூலிக்காரன்முதல் கோமகன் வரை எந்நிலையராயினும் எத் தொழிலராயினும், மக்களையெல்லாம் ஆண்டு நடத்தும் குணம் இரண்டு. அவை காதலும் மறமும். மக்களெல்லாரும் ஆடவரும் பெண்டிருமாகப் படைக்கப்பட்டிருப்பதால், காதல் வாழ்க்கை மாபெரும்பாலர்க்கு இன்றியமையாததாகும். பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லையாதலால், ஒரு தொழிலை மேற்கொள்வது எல்லார்க்கும் இன்றியமையாதது. எத்தொழிலிலும் போட்டி தொன்று தொட்டுச் சிற்றளவாகவோ பேரளவாகவோ இருந்தே வந்திருக்கின்றது. எதிரிகளை வென்று வாழ்க்கை யைத் திறம்பட நடத்த மறமும் இன்றியமையாதது.
இனி, ஒரே பெண்ணைப் பலர் மணக்க விரும்புபோது, காதலிலேயே மறமுங் கலக்கின்றது.
இவ்விரு குணங்களுள்ளும் அல்லது குணவாழ்க்கையுள்ளும், உள்ளத்திற்கு மிக நெருங்கியது காதலே. ஆதலால் அதை அகம் என்றார். அகமல்லாதது புறமாதலின் மறத்தைப் புறம் என்றார். இங்ஙனம் இரண்டையும் வேறுபடுத்திக் கூறினும், அவை அகப்பகையும் புறப்பகையும் போலப் பிரிந்து நில்லாது, அகங்கையும் புறங்கையும்போல ஒன்றியே நிற்கும்.
தமிழனுக்குத் தமிழ் அகம்; திரவிடம் அகப்புறம்; ஆரியம் புறம்; சேமியம் புறப்புறம். இவ்வகைக் கூற்றினின்று, அகம் புறம் என்னும் சொற்களின் பொருளை ஒருவாறுணரலாம்.
அரசன் எல்லார்க்குந் தலைமையாகவும் பொதுவாகவும் எல்லாரையுந் தன்னுளடக்கியும் நிற்பதால், அரசனுக்குச் சொன்னது அனைவர்க்குஞ் சொன்னதாகு மென்றும், காதல் வாழ்க்கையிலும் மறவாழ்க்கையிலும் தலைசிறந்த நுகர்ச்சியும் பட்டறிவும் அரசனுக்கே யுண்டென்றுங் கண்டு, ஓர் இளவரச னையே காதலனாகவும் ஓர் இளவரசியையே காதலியாகவுங் கொண்டு, அகப்பொருளிலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இது புலனெறி வழக்கம் எனத் தமிழுக்கே சிறந்த மரபாகும். ஆயினும், இது நாடக வழக்கமும் உலகியல் வழக்கமும் கலந்ததாதலால், சிறுபான்மை பொதுமக்கள் காதல் வாழ்க்கையும் ஆங்காங்குக் கூறப்பெறும்.
அகப்பொருள் என்னும் காதல் அல்லது மணவாழ்க்கை, கைக்கிளை (ஒருதலைக்காமம்), ஐந்திணை (இருதலைக்காமம்), பெருந்திணை (பொருந்தாக்காமம்) என மூவகையாக வகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள், எல்லாவகையிலும் நல்லதென ஒப்புக்கொள்ளப் பட்ட இருதலைக்காமம் புணர்தல், பிரிதல். இருத்தல், இரங்கல், ஊடல் என்னும் ஐந்து உரிப்பொருளாகப் பிரிக்கப்பட்டும்; அவை முறையே குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம் ஆகிய நிலங்கட்கு உரிமையாக்கப்பட்டும்; உள்ளன. இப்பிரிப்பும் நிலவுரிமைப் படுத்தமும், முதனூலா சிரியரின் நெடுங்காலக் கூர்ங்கவனிப்பையும் நுண்மாண் நுழைபுலத்தையும் தெற்றெனக் காட்டுகின்றன.
தலைமைக் குடிமகன்
மக்கள் வாழ்க்கைக்கு எத்துணையோ பல பொருள்கள் வேண்டியிருப்பினும், அவை யெல்லாவற்றுள்ளும் இன்றியமை யாதது உணவு ஒன்றே. அதனால், உணவை விளைவிக்கும் உழவன் எல்லாருள்ளும் உயர்ந்தவனாகின்றான். இதுபற்றியே, திருவள்ளுவர் தம் ஒப்புயர்வற்ற உலகப் பொது நூலில், குடி செயல்வகையின் பின் உழவதிகாரத்தை வைத்தார்.
உணவளிப்பவன்
உழுவார் உலகத்தார்க் காணியஃ, தாற்றா(து)
எழுவாரை யெல்லாம் பொறுத்து. (குறள்.1032)
என்னுங் குறளால், உழவர் உலகமாகிய தேருக்கு அக்சாணியாவர் என்றுரைத்தார் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார். அச்சாணி யில்லாத தேர் முச்சாணும் ஓடாது. செயற்கை விளைவின்றி, மக்களினம் பெருத்த உலகம் ஒரு நாளும் நடைபெறாது. உணவு விளைத்தலை அதன் அருமை பற்றி அளித்தல் என்றது உயர்பு நவிற்சி.
விருந்தோம்பி வேளாண்மை செய்பவன்
விருந்து, புதுமை, புதிதாய் வந்த அயலார்க்கு அன்புடன் உணவளிப்பதே விருந்தோம்பல். வேளாண்மையாவது பிறரை விரும்பிச் செய்யும் பல்வகை யுதவி. இவை யிரண்டும் தாமாகவே உணவை விளைப்பவரும் தலைமுறை தலைமுறையாய்ப் பிறரைப் பேணிப் பண்பட்டு வருபவருமான உழவர் குடியினர்க்கே இயலும்.
புரப்போர் கொற்றத்தான்
அரசன் உட்பட அனைவர்க்கும் உணவு விளைவித்தும், ஆள் வினைக்கு வேண்டும் ஆறிலொரு கடமை யிறுத்தும், பகையரசன் படையெடுத்துவரின் பொருது வென்றும், ஊக்கமுள்ள தம் வேந்தன் பிறநாடுகளை வென்று புதுவிறல் தாயம் பெற உதவியும், அரசன் வெற்றிபெறக் காரணமாயிருப்பவர் வேளாண் பெரு மக்களே.
இதனால்,
பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். (குறள்..1034)
என்று திருவள்ளுவர் உழவரை உயர்த்துக் கூறினர்.
உழைப்பாளி
கடுங்கோடையிலும் புயல்மாரியிலும் இரவும் பகலும் உடலை வருத்தி உழைப்பவர் உழவரே.
உழுவா ருலகத்திற் காணி என்னுங் குறளில் அஃதாற்றாது என்னுந் தொடரும். சுழன்று மேர்ப் பின்ன துலகம் என்னுங் குறளில் உழந்தும் என்னும் சொல்லும், உழவுத் தொழிலின் உழைப்புக் கடுமையைக் குறிக்கும்குறிப்புகளாம். பயிர்செய்தலைப் பாடுபடுதல் என்னும் நெல்லையுழவர் வழக்கும் இங்குக் கருதத்தக்கது.
தன்னுரிமையாளன்
தன் நிலத்தில் உழுது பயிர் செய்பவன் தனக்குத் தானே தலைவனா தலின், பிற தொழிலாளர்போல் பிறர்முன் கைகட்டி நிற்க வேண்டியதும் ஒருவர்க்கு அஞ்சவேண்டியதும் இல்லை.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள். 1033)
என்று தமிழ்மறை கூறுதல் காண்க.
முதற்றொழிலாளி
உலகில் முதன் முதல் தோன்றியது உழவுத்தொழிலே. அதனால், பிற தொழிலாளரும் ஒவ்வொரு வகை உழவராகவே கூறப்படுவர்.
விற் படைஞரை வில்லேருழவர் என்றும், நூற் புலவரைச் சொல் லேருழவரென்றும், கூறினார் திருவள்ளுவர். களவுத் தொழிலைக் களவேர் வாழ்க்கை என்றார் சீத்தலைச் சாத்தனார். வாள் மறவனை வாளுழவன் என்றது திவாகரம்.
பழுதற்ற தொழிலான்
உழவுத் தொழிலில் ஒருவகைக் குற்றமுமில்லை.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேளோர் பணிக்கு,
என்றார் அருந்தமிழ் மூதாட்டியார் ஔவையார்.
உண்மை இங்ஙன மிருப்பவும், உழவுத் தொழிலில் பூச்சி புழுக்களும் செடி கொடிகளும் கொல்லப்படுவதால், அதை இழிந்ததென்று உயர்ந்தோர் கைவிட்டனர். என்று ஆரியப் போலி அறநூல்கள் கூறும்.
தலைமைக் குடிவாசி
மேற்கூறிய இயல்புகளால், cழவனேjலைமைக்Fடிவாசிvன்பதுbபறப்படும். இதை உட்கொண்டே
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் Éருந்தோம்பிntsh©ik bசய்தற்bபாருட்டு. (குறள்.81)
Éத்தும்ïடல்வேண்டும்bfல்லோவிUந்தோம்பி
மி¢áš மிசைவான் புலம். (குறள்.85)
என்று குறிப்பாக வேளாளனைப் பாராட்டிக் கூறினார் திருவள்ளுவர்.
வேதநூல் முதலாகி
விளங்குகின்ற தலையனைத்தும்
ஓதுவா ரெல்லாரும்
உழுவார்தந் தலைக்கடைக்கே
என்று கம்பர் கூறியதுங் காண்க. (ஏரெழுபது).
பண்டை நாளில், சிற்றூர் வாணராயினும், பேரூர் வாணராயினும், கொல்லன், தச்சன், கற்றச்சன், கன்னான், தட்டான், கொத்தன், குயவன், வண்ணான், மஞ்சிகன் (நாவிதன்), வாணியன், பாணன், பறையன் முதலிய பதினெண் தொழிலாளரும் குடிமக்கள் எனப்பட்டு, உழவர்க்குப் பக்கத்துணையாயிருந்து தத்தம் தொழிலைச் செய்து, கதிரடிக்களத்தில் அவ்வக்காலத்துக் கூலத்தைக் கூலியாகப் பெற்று வாழ்ந்தமை. அக் காலத்துக்
கூட்டரவு (சமுதாய) அமைப்பில் உழவரே தலைமையா யிருந்ததை உணர்த்தும்,
சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (குறள்.1031)
என்னும் குறட்கருத்தும் இதனாலேயே விளங்கும்.
பொங்கல் என்பது, உழவர் பண்டிகை. அறுவடையான பின், புதிரி என்னும் புது நெல்லைச் சமைத்து நன்றியறிவுடன் வழிபடு தெய்வத்திற்குப் படைத்துண்பதே பொங்கல். நீர்வளம் மிகுந்த பாங்கரில் முப்பூ விளையும். (பூவென்பது வெள்ளாமை) நீர் வள மில்லா இடங்களில் மாரி நீர்த்தேக்கத்தால் ஒரு வெள்ளாமை தான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி அல்லது தை மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். ஆதலால், தைப் பொங்கல் பெரும் பொங்கல் எனப்பெறும்.
செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலுந் தவிடு போக்காமல் சரி நீர் வைத்துச் சமைத்து, பருப்புக்குழம்புடன் உண்பது பொங்கல் மரபு. பருப்புக் கேட்கும் பச்சரிசிச் சோறு, செருப்புக் கேட்கும் சித்திரை மாத வெயில்! என்பது பழமொழி, பொங்கற் பானையில் உலை பொங்கி வந்தவுடன் சிறிது வழிய விடுவது பொங்கல் அடையாளமாகக் கருதப் பெறும். இதுவே உழுதுண்பார் பொங்கல்.
அக்காரடலை (சருக்கரைப் பொங்கல்), அக்காரவடிசில் (சருக் கரை நெய்ப்பொங்கல்), நெய்ப்பொங்கல், மிளகுப் பொங்கல், வெண் பொங்கல் முதலிய சுவைமிக்க பொங்கல் வகைகளெல் லாம் உழுவித் துண்பாரும் செல்வருமான பிறர் பொங்கல். பால் பொங்க வைப்பது இடையர் பொங்கல். சல்லிக் கட்டென்றும் மஞ்சு விரட்டென்றும் மாடுவிடுதல் என்றும் நடை பெற்று வருவது பண்டை முல்லை நில வழக்கம். (ஏறுதழுவல்).
âiz Ãiy¡ fhy¤âš cHt® tÊg£l bjŒt« É©nzh® jiytdhd ntªj‹ (ïªâu‹)., திணைமயக்கம் ஏற்பட்டபின், பாலை நிலத் தெய்வமான காளியும், நடுகல் தெய்வங்களும் வழிபடு தெய்வங்களாயின. சிவநெறியும் திருமால் நெறியுமான பெருமதங்கள் தோன்றியபின், உழுவித்துண்பார் தம் கொள்கைப் படி சிவனையோ திருமாலையோ வழிபட்டு வருகின்றனர்.
பொங்கல் உழவர்க்கே சிறப்பாக வுரிய பெரும் பண்டிகையா யினும், அரசியலாரும் உழவரல்லாத பிற பொது மக்களும் இப் பெருநாளைக் கொண்டாடி உழவரை ஊக்குவதுடன்; நன்றியறி வாகவும் தந்நலங்கருதியும், நிலமுள்ள ஏழையுழவர்க்குக் கடனடைக்கவும், குலவெருதுகள் வாங்கவும் பொருளுதவியும், பொறியியற் கருவிகள், நல்விதைகள், வல்லுரங்கள் முதலியன இலவசமாக வழங்கியும்; நிலமில்லாத வுழவர்க்கு அவற்றோடு நிலமும் வழங்கியும்; பெருநிலக் கிழவரும் சிறுநிலக்கிழவரும் நிலமில்லாவுழவருமாகிய முத்திறத்தார்க்கும் புதிய அறிவியல் முறைகளைக் கற்பித்தும்; உழைப்பினால் பெருவிளைவு காட்டுபவர் பண்ணையாராயின் (மிராசுதார்) பட்டம் சின்னம் சலுகை முதலியவற்றாலும் எளியவராயின் நன்கொடை யினாலும், சிறப்பித்தும்; சூத்திரன் என்னும் சிற்றிழிவையும் தீண்டாதான் என்னும் பேரிழிவையும் அடியோ டகற்றியும்; எதிர்கால வுழவராவது தாய்மொழிச் செய்தித்தாளைப் படித்துத் தம் அறிவைப் பெருக்கிக்கொள்ளுமாறு, இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியை விரைந்தேற்படுத்தியும்; உணவுப் பொருள் விளைவுப் பெருக்க இயக்கத்தை ஓங்கச் செய்வாராக.
பகடு நடந்த கூழ் என்று நாலடியார் கூறியபடி, உழவுத் தொழிற் குதவும் எருதுகளையும், பிந்தி யுதவக்கூடிய கன்றுகளையும், பாலுணவளிக்கும் பெற்றங்களையும் (பசுக்களையும்), போதிய ஊட்டங் கொடுத்தும், மிகைவேலை வாங்காதும், நோய் மருத்துவஞ் செய்தும், உடையவர் பேணுமாறு கருத்தாய்க் கவனித்தும்; பேணாத வரைத் தண்டித்தும்; கால்நடைப் பண்ணைகளை ஆங் காங்கு ஏற்படுத்தியும்; அரசியலார் உழவுத் தொழிலை ஊக்குவாராக.
தலைவன் ஒழுக்கம்
எக்கூட்டத்தையும் நடத்தும் தலைவனுக்கு ஒழுக்கம் இன்றி யமையாத தாகும். இக்கடமையை இக்காலத்தார் கவனிப்பதில்லை; உணர்வதுமில்லை. தலைவன் செம்மையாயிருந்தால்தான் அவனைப் பின்பற்றுவோரும் செம்மையாயிருப்பர். பிறர் ஒன்றைச் செய்யவேண்டுமென்று சொல்லுகிறவன் அல்லது விரும்புகிறவன் தானும் அதைச் செய்ய வேண்டும். சொல்லு
கிறவன் முந்திச் செய்தால்தான் கேட்போரும் பிந்திச் செய்வர். சொல்வ தெளிது; செய்வது அரிது. சொல்வதைச் செய்து காட்டினால் தான் சொல் வலியுறும். கேட்போரும் கைக்கொள்வர். பெரியோரைப் பின்பற்றுதலே சிறியோர் இயல்பாதலின், பெரியோரும் தலைவரும் தகாச் செயலை நீக்கித் தக்க செயலையே செய்தல் வேண்டும்.
தலைவனுக்குரிய பெயர்களுள் செம்மல் என்பது ஒன்று. இது செம்(பண்புச் சொற்களை மை விகுதி கொடுத்துக் கூறுவது இலக்கணவாசிரியர் வழக்கு. அவ்விகுதியின்றிச் சொல்லை மட்டும் கூறுவது மொழி நூலாசிரியர் வழக்கு எனவறிக). என்னும் சொல்லினின்று திரிந்தது. செம்மையாய் ஒழுகுபவன் செம்மல். இச்சொல்லால், எத்தலைவனுக்கும் ஒழுக்கம் இன்றியமையாதது என்பது பெறப்படும். ஒழுக்கத்தில். சிறியோர் பெரியோரைப் பின் பற்ற வேண்டுமென்னுங் கருத்துப் பற்றியே, பிறர்க்கு ஒல்லும் வகையில் செல்லும் வாயெல்லாம் நன்மை செய்தற்கு, ஒப்புரவு (அல்லது) ஒப்புரவொழுகுதல் என்று பெயர். (இம்மைச் செய்தது மறுமைக் காமெனும், அறவிலை வாணிகன் ஆயலன் பிறரும், சான் றோர் சென்ற நெறியென, ஆங்குப் பட்டன்றவன்கை வண்மையே (புறம்.134) என்றார் உறையூர் மோசியார்.) அலங்கரித்தலை ஒப்பனை செய்தல் என்பதும் இக் கருத்துப் பற்றியே. (சொல்: 109).
தவ்வுதல்
தவ்வுதல் - தாழ்தல்
ஏதேனுமொரு பாடத்துறையில் மாணவர் தாழ்வாயிருப்பதைத் தவ்வல் என்பது நெல்லை நாட்டு வழக்கு. (தி.ம.1144).
தவம்(1):
தவம் - தப
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. (குறள். 261).
உற்ற நோயுள், வெயிலின் வெம்மையும் பசிதாகத்தாலுண்டாகும் உடம்பின் வெம்மையும் அடங்கும். (வ.வ: 174).
தவம் (2):
தவம் என்பது ஐம்புல அடக்கம் பற்றித் துறவறத்தார் கடுமையாக வும், மகப்பேறு முதலியன கருதி இல்லறத்தார் எளிமையாகவும் உடலை வருத்துதல். (தி.ம.47)
தவம் (3):
தவம் என்ற சொற்கே எரித்தல் என்றுதான் பொருள்.
துலங்குதல் = விளங்குதல். துலங்கு - துளங்கு = திகழ்.
துள - தள. தளதளத்தல் = திகழ்தல்
தள - தழல் - தணல். தழ - தக. தகதகவெனல் - ஒளிவீசுதல்.
தக - தகம் - தங்கம் = விளங்கும் பொன்.
தக - திக - திகழ் - திங்கள் = இரவில் ஒளிதரும் சுடர்.
தகம் - எரிவு. சூடு. தகம் - தவம் = உடலை எரித்தல்போல் வருத்தும் துறவறப் பயிற்சி. க-வ. போலி ஒ.நோ: குழை - குகை. குவை - தக - தஹ் (வ)
தவம்
தவம் - தப (வ)
தக - தகை = தாகம். தகம் - தாகம் = உடற்சூட்டால் உண்டாகும் நீர்வேட்கை.
தக - தவ - தவி. தவித்தல் = நீர்வேட்கை உண்டாதல்.
தாகம் - தாஹ(வ). தவி - தப் (வ)
தவம் - தவன் = தவத்தோன். இதற்கு ஒத்தவடிவம் சமற்கிருதத்தில் இல்லை. தபவின் என்ற வடிவந்தான் உண்டு. (தி.ம. 155,156).
தவளை வகை
தவளை - தவிர்த்து அல்லது இடம் விட்டுப் பாய்வது.
அரைத்தவளை - வாலறாத குட்டித் தவளை
நுணல் - மண்ணுக்குள் நுழைந்திருப்பது.
தேரை - திரைந்த தோலையுடையது.
சொரியன் - சொறியுள்ளது.
மொங்கான் - மிகப்பெரியது (சொல். 40).
தவி
தவி - தப் (இ.வே.)
தவித்தல் = வெப்பமாக்குதல், நீர்வேட்கை யுண்டாக்குதல்.
தவிக்கிறது என்னும் வழக்கை நோக்குக.
தவிப்பு - தாகம்.நிரப்புறு தவிப்பினை யொழித்திட (அரிச்.பு. விவாக. 107)
தவி - தாவம் - தாகம் = நீர் வேட்கை.
தவி - தவம் = வெப்பத்தால் உடம்பை வருத்தி ஐம்புலனை யடக்குதல்.
தவம் - தவன் = தவஞ்செய்பவன். மாதவன் = பெருந்த தவஞ் செய்தவன். மாதவர் நோன்பு மடவார் கற்பும் (மணி.22:208). (வ.வ: 174).
தழுவுதொடரும் தழாத் தொடரும்
வேற்றுமை யைம்முத லாறா மல்வழி
தொழில்பண் புவமை யும்மை யன்மொழி
எழுவாய் விளியீ ரெச்சமுற் றிடையுரி
தழுவு தொடரடுக் கெனவீ ரேழே (நன்.152)
இதன் உரையில், வை.மு. சடகோபராமாநுஜாசாரியாரும், nr.கிUZzkhrhÇahU«,
இவை தழுவுதொடர் எனவே, அவ் விருவழியிலும், தழாத் தொட ரும் சில உள என்றாராயிற்று. நீர்க்குடம் என்பது நீரையுடைய குடம் என விரிதலால், நீர் என்பது உடைய என்பதைத் தழுவிக் குடம் என்பதைப் பொருளால் தழுவாமல் தொடர்ந்ததனால், இது தழாத்தொடராகிய வேற்றுமைத் தொகை………….மரத்தைச் சாத்தன் வெட்டினான் என்பதில், மரத்தை என்பது வெட்டினான் என்பதைத் தழுவிச் சாத்தன் என்பதைப் பொருளால் தழுவாமல் தொடர்ந்ததனால், இது தழாத்தொடராகிய வேற்றுமை விரி. சுரையாழ அம்மி மிதப்ப என்பது சுரைமிதப்ப அம்மி ஆழ எனக் கூட்டப்படுதலால், சுரை என்பது ஆழ என்பதையும் அம்மி என்பது மிதப்ப என்பதையும் பொருளால் தழுவாமல் தொடர்ந் தன. இவை தழாத்தொட ராகிய அல்வழிப்புணர்ச்சி. தழாத் தொடராவது நிலைமொழி யானது வருமொழியோடு பொருட் பொருத்தமுறத் தழுவாத தொடர். பொருட் பொருத்த முறத் தழுவிய தொடர் தழுவு தொடர் எனக் கூறியுள்ளனர்.
தழுவுதொடர், தழாத்தொடர் என்பன இலக்கணப் பொருத்தமுறத் தழுவுகின்ற தொடர். ïy¡fz¥ bghU¤jKw¤ jGthj bjhl® v‹nw bghUŸgL k‹¿., பொருட் பொருத்தமுறத் தழுவுகின்ற தொடர், பொருட் பொருத்தமுறத் தழுவாத தொடர் என்று பொருள்படா.
சூத்திரத்துட் கூறப்பட்ட பதினான்கு தொடர்களுள், முதற் பதின்மூன்றும் தழுவுதொடரும், கடையொன்றும் தழாத்தொடரு மாகும் என்பதைக் குறித்தற்கே, அடுக்குத் தொடர்க்கு முன் தழுவுதொடர் என்பதைக் கூறிப் பிரித்தனர். ஏனைப் பதின்மூன்றும் தழுவுதொடர் எனவே, இறுதியொன்றும் அதற்கெதிராகிய தழாத்தொடரென்பது அறியப்படும். மெய்ம்மயக்குச் சூத்திரத்தில் ஒன்றை உடனிலை என்றதினால் இன்னொன்று வேற்றுநிலை யென்றறியப்பட்டாற்போல. இது சூத்திரமாதலின் சொற்சுருங் கற்கு இங்ஙனம் யாக்கப்பட்டது.
வேற்றுமைத்தொகை முதலிய ஆறு தொகைகளும், எழுவாய்த் தொடர் முதலிய எட்டுத் தொடர்களும், நிலைமொழியும் வரு மொயியும் இலக்கணத்திற் சம்பந்தப்பட்டிருப்பதும், அடுக்குத் தொடர் ஒன்றுமட்டும் சம்பந்தப்படாது நிலைமொழி வரு மொழிகள் தனித்தனி நிற்பதும் எடுத்துக்காட்டு வாயிலாய்க் கண்டுகொள்க.
எ-டு. சோறுண்டான் - வேற்றுமைத் தொகை - தழுவுதொடர்
இராமன் வந்தான் - எழுவாய்த் தொடர் - தழுவுதொடர்
பாம்பு பாம்பு – தழாத்தொடர்
நீர்க்குடம் என்பது நீரையுடைய குடம் என்று விரியும்போது, நீரை என்பது உடைய என்பதையும், உடைய என்பது குடம் என்பதையும் தழுவுகின்றமை காண்க. நீர்க்குடம் என்று தொகையாய் நிற்கும் போதும் நீர் என்பது (தொக்குநிற்கும்) உடைய என்னுஞ் சொல்லையே அவாய் நிலையால் தழுவும். அல்லாக்கால், வந்தேன் என்னும் தொகை வாக்கியத்தில் நான் என்னும் எழுவாய் அவாய்நிலையால் வருவிக்கப்படாமை காண்க. சாத்தன் மரத்தை வெட்டினான் என்பதே இயல்பான தமிழுரை முறையாதலின், மரத்தைச் சாத்தன் என்பது ஒரு பயன் நோக்கிய முறை மாற்றாகும். சாத்தன் மரத்தை என்பதில் சாத்தன் என்பது எழுவாயும், மரத்தை என்பது எழுவாயின் தொழிலை யடைகின்ற செயப்படுபொருளாயும் எங்ஙனம் இயையுமோ, அங்ஙனமே மரத்தைச் சாத்தன் என்பதிலும் இயையும்.
வந்த சாத்தன் மகன் என்னுந் தொடரில் வந்த என்பது மகனைத் தழுவுமாயின், அஃது இடைப்பிறவரல் எனப் பொதுவியலில் வேறிலக்கணமாகக் கூறப்படுதலின் ஈண்டைக் கேலாதாகும். ஏற்பின், பொதுவியலின் கூறும் இடைப்பிறவரல் கூறியது கூறலாய்க் குற்றந் தங்கும்.
சுரை யாழ அம்மி மிதப்ப என்பது செய்யுட்குரிய மொழி மாற்றுப் பொருள்கோளாதலின், அதுவும் ஈண்டைக் கேலாது.
ஆங்கிலத்திலும் தழுவுதொடர் தழாத்தொடர்கட்கு இலக்கணப் பொருத்த முண்மை யின்மைகளையே இலக்கணமாகக் கொள்வர்.
Compound words (தொடர் மொழிகள்) are subdivided into two classes:
I. Unrelated (தழாத்தொடர்) or those in which the simple words are not connected together by any grammatical relation. (These have been also called juxta-positional).
II. Related, (jGî bjhl®) or those in which there is some grammatical relation between the component words.(These have been also called syntactical.) (Nesfield: Book IV)
பதினான்கு தொடர்களிலும் தழுவுதொடரும் தழாத்தொடரும் உண்டென்று நன்னூலார் கொண்டிருப்பின், அதை ஒரு தனிச் சூத்திரத்தில் விளங்க வைத்திருப்பாரேயன்றி, இத்துணை உய்த் துணர்விற்கும் மயக்கத்திற்கும் இடந் தந்திரார் என்க. (செந் தமிழ்ச் செல்வி மடங்கல் 1936)
தழையுடை
தழைகொண்டு சேறல், சந்தனத்தழை தகாதென்று மறுத்தல், தழை எதிர்தல், தழை ஏற்பித்தல், தழை விருப்புரைத்தல் முதலிய அகப்பொருள் துறைகள் மக்கள் குறிஞ்சி நிலையில் தழையுடை அணிந்திருந்ததைக் காட்டும்.
தழையுடையின் பின் மரவுரியாடை அணியப்பட்டது. மரவுரிக்குச் சீரை என்று பெயர். அப்பெயரே சீலை, சேலை எனத் திரிந்து இன்று பருத்தியாடையைக் குறிக்கின்றது. (சொல். 19)
தளம்
தளம் - தல
தள் - தளம் = அடி, அடிப்பரப்பு.
இதற்கு வடவர் காட்டும் த்ரு என்னும் மூலம் பொருந்தாமை காண்க. த்ரு = சிதறு.
சிதறு என்னும் தென்சொல்லே, Strew என்னும் ஆங்கிலச் சொற்கும் த்ரு என்னும் வடசொற்கும் மூலமாகத் தெரிகின்றது. (வ.வ: 174).
தற்றுடுத்தல்
ஆடவர் அரையில் ஆடை யணியும் முறை.
(1) சுற்றிக் கட்டுதல்,
(2) தாறு பாய்ச்சிக் கட்டுதல்,
என இருவகை. இவ்விரண்டும் தமிழருடையனவே. சிலர் தாறு பாய்ச்சிக் கட்டுதல் ஆரிய வழக்கம் எனக் கருதுகின்றனர். அது தவறு.
தாறு பாய்ச்சிக் கட்டுதலுக்கு முந் நிலைப்பாடு வேண்டும். அவை,
(1) மெல்லாடை,
(2) பல்வேறு மெய் யியக்கம்,
(3) வினைவிரைவு,
என்பன. பஞ்சினாலும் பட்டினாலும் செய்யப்பட்ட மெல் லாடை, வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழர் அணிந்து வந்தனர். உழவு, கூத்து, போர் முதலிய தொழில்கள் பல்வகை உடம் பசைவையும் விரைந்த செலவையும் கடுவுழைப்பையும் வேண்டுவன. ஆதலால், அவற்றைச் செவ்வையாய்ச் செய்தற்குத் தாறுபாய்ச்சிக் கட்டுதல் இன்றியமையாதது. இருந்தவிடத்தி லிருந்துகொண்டு நெசவாளி தன் வேட்டியைச் சுற்றிக் கட்டிக் கொண்டிருக்கலாம். ஆயின், விரைந்தியங்கும் வேட்டைக் காரனும், போர் செய்யும் மறவனும், நடஞ் செய்யுங் கூத்தனும், தாறுபாய்ச்சிக் கட்டாமல் தம் தொழிலைச் செய்யமுடியாது. கால் சட்டையும் சல்லடமும் (Drawers, அரைக்காற் சட்டை) பண்டைக் காலத்திலில்லை.
தாறுபாய்ச்சிக் கட்டுதல்,
(1) மொட்டைத்தாறு,
(2) வட்டத்தாறு,
(3) வால் தாறு,
என மூவகை. மொட்டைத் தாறாவது, சுற்றிலும் வேட்டியைத் திரைத்து, முழங்காற்குக் கீழ் மிகுதியாய் அல்லது ஒரு சிறிதும் வேட்டி தொங்காதபடி முன்புற முந்தியை அல்லது அடிப் பாகத்தை இருகாற்குமிடையே பாய்ச்சிப் பின்னால் இறுகச் செருகுதல். வட்டத்தாறாவது: ஒரு புற முந்தியைக் கணுக்கால் வரை இருகாலும் மறையத் தொங்கவிட்டு, மற்றொரு புறமுந்தியை இருகாற்குமிடையே பாய்ச்சிப் பின்னால் இறுகச் செருகுதல். வால்தாறாவது: வட்டத்தாற்றொடு பின்னால் வால் விட்டுக் கட்டுதலாம். இது ஒற்றை வால்தாறு: இரட்டை வால்தாறு என இருவகைப்படும். முன்பக்கத்திலிருந்து ஒரு கீழ் முந்தியை மட்டும் பின்னாற் கொண்டுபோய் இடக்காற் பக்கமேனும் வலக்காற் பக்கமேனும் நடுவிலேனும் வால்விட்டுச் செருகுவது ஒற்றை வால்தாறு என்பதாம். இரு கீழ் முந்தியையும் முன்போற் கொண்டு போய் வலக்காற் பக்கம் ஒன்றும் இடக்காற் பக்கமொன்றுமாக இருவால் விட்டுச் செருகுவது இரட்டை வால்தாறு என்பதாம். மொட்டைத் தாற்றுக்கு நான்கு முழமும், வட்டத் தாற்றுக்கு ஐந்து முழமும், வால் தாற்றுக்கு ஆறு முழமும், ஆடை வேண்டும். இவை, முறையே, ஒன்றினொன்று மதிப்பானவை. ஆதலால், கல்லாப் பொதுமக்களும் கல்லாப் பெருமக்களும் கற்ற பெருமக்களும் இவற்றை, முறையே, கையாள்வர். இது தொன்று தொட்ட வழக்கம்.
கல்லாப் பொதுமக்கள் பெரும்பாலும் உழைப்பாளிகளாதலின், மதிப்பு வேண்டாமையோடு உழைப்பு வசதியும் மொட்டைத் தாற்றையே அவர்க்குரியதாக்கும். ஊக்கமாய் வினைசெய்யும் உழைப்பாளிகள், சிறப்பாக உழவர், மொட்டைத்தாற் றுடையும் மிகையெனக் கருதி நீர்ச்சீலை (கோவணம்) யொன்றே யணிந்து வினைசெய்வர்.
எவ்வுழைப்பு வினையையும் ஊக்கமாய்ச் செய்ய முனையின், அரையாடையை இறுகக் கட்டிக்கொள்வது மாந்தர் இயல்பு. அதனால்,
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். (குறள். 1023)
என்று, தெய்வத்தின் மேலும் தற்றுடுத்தலை ஏற்றிக் கூறினார் திருவள்ளுவர். ஒரு வினையை முனைந்து செய்வதற்கு அரையில் ஆடையை இறுக்கிக்கட்டினால் மட்டும் போதாது: கீழ்ப் பாய்ச்சியுங் கட்ட வேண்டும்.
தற்றுடுத்தலெனினும் தாறு பாய்ச்சிக் கட்டுத லெனினும் ஒன்றே. தறுதல் - இறுகக் கட்டுதல் அல்லது உடுத்துதல். தற்றுடுப்பது தாறு. (முதனிலை நீண்ட தொழிலாகு பெயர்). தறு-தாறு. x.neh.: இறு - ஈறு, உறு - ஊறு.
தறுக்கணித்தல்:
(1) உணவுப்பொருள் இறுகுதல்,
(2) சதை அல்லது புண் காய்த்துப்போதல்,
(3) பழங் கன்றிப்போதல்.
வழி நடைக்குக்கூட, சுற்றிக் கட்டுவதினும் தாறுபாய்ச்சிக் கட்டுதலே வசதியானது: அல்லாக்கால், கால் தட்டும், வெட்டும்: துணி பிதிரும், கிழியும்.
கி.மு.3000 ஆண்டுகட்குமுன் மேனாடுகளில் துணி நெய்யப்பட வில்லை யென்றும்,இந்தியாவினின்றே ஏற்றுமதியாயிற் றென்றும், வயவர் சான் மார்சல் (Sir John Marshall) கூறுகின்றார். இதற்குச் சான்றாக, பருத்தியும் பஞ்சும் துணியும் பற்றிய தமிழ்ப் பெயர்கள் இன்றும் மேனாடுகளில் வழங்குகின்றன.
பன்னல் - பருத்தி
L. Punnus - Cotton.
It. Panno - Cloth.
கொட்டை, கொட்டான். - பஞ்சு.
Ar. Qutun, It. Cotone. Fr. Coton, E. Cotton.
பருத்திப் பஞ்சைக் கொட்டையென்றும் கொட்டானென்றும் கூறுவது நெல்லை நாட்டு வழக்கு.
E. Calico - Cotton Cloth.
மலையாள (பழஞ்சேர) நாட்டுத் துறைமுகங்களுள் ஒன்றான கோழிக்கோட்டிலிருந்து ஏற்றுமதியான துணி ஆங்கிலத்தில் காலிக்கோ எனப்பட்டது. கோழிக்கோடு இன்று கள்ளிக் கோட்டை என மருவி வழங்குகின்றது. இம் மரூஉ. (Calicut என்னும்) ஆங்கிலப் பெயர் வடிவைத் தழுவியது:
பண்டை மேனாட்டார்ஆடையைச் சுற்றிக் கட்டினரேயன்றித் தற்றுடுத்தின தில்லை. கி.மு. மூவாயிரம் ஆண்டுகட்குப்பின் இந்தியாவிற் புகுந்த வேத ஆரியர், ஆடுமாடு மேய்க்கும் முல்லை நாகரிகத்தையே அடைந்திருந்ததனால், அவரும் மெல்லாடை யைத்தற்றுடுத்தியது மில்லை: தமிழர்போற் கடுமையாய்ப் பலதுறையில் உழைத்தது மில்லை.
ஆகவே, தாறுபாய்ச்சிக் கட்டுதல் தொன்றுதொட்ட தமிழர் வழக்கே யென்றும், அதனைக் குறிக்குஞ் சொல்லும் தூயதமிழ்ச் சொல்லேயென்றும், பிராமணர் கட்டும் பஞ்சகச்சமும் தமிழர் தற்றுடுத்தலின் வேறுபாடேயென்றும், தெற்றெனத் தெரிந்து கொள்க. (தென்றல்)
தன்னலமின்மையால் கொள்கை தளராமை
ஒருவர் தன்னலத்தினால் கொள்கை தளர்வதும் அஃதின்மையால் உறைத்து நிற்பதும், ஒழுக்கம் குலம் மதம் கட்சி முதலிய பல துறை களிலும் கண்கூடாகக் காண்கிறோம். எந்தக் கொள்கையையும் உறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டுமாயின், தன்னல மிருத்தல் கூடாது. கொள்கையென்றது இங்குப் பொதுநலக் கொள்கையை.
ஆசையின்மையை யுணர்த்தும் விராகம் என்னும் வடசொல்லின் திரிபாகு பெயரான (தத்திதாந்தமான) வைராக்கியம் என்னும் சொல் விடாப்பிடியை யுணர்த்துதல் காண்க. ஆசையிருப்பின் விடாப்பிடி யிராதென்பதும், அஃதில்லா விடின் விடாப்பிடி யிருக்குமென்பதும், இச் சொல்லால் அறியக் கிடக்கின்றன. (சொல். 107).
தா(1)
தா - தாய் - தாய
ஒ.நோ: ஆ - ஆய் - ஆய. (குறள் 610)
தா(2)
தா தானம்: தள்ளுதல் = வாழை, தெங்கு முதலியன குலை தள்ளுதல், பயன்தருதல், தருதல். தள் - (தர்) - தரு - தா.
தா என்னும் சொல், ஒருவன் தனக்குச் சமமானவனிடமே ஒன்றை வேண்டும்போது பயன்படுத்தற் குரியதாம்.
தா என் கிளவி ஒப்போன் கூற்றே. (தொல்.929)
இனி, இச்சொல் தன்மை முன்னிலை ஆகிய ஈரிடத்திற்கே யுரிய தென்றும் இலக்கண வரம்புள்ளது.
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த. ( 512)
இதனால், தா என்னும் சொல் தமிழுக்கே யுரியதென்பது வெள்ளிடைமலை.
தா:- தா (வ.). L do, Gk (di) domi. (தி.ம: 743.)
தா + அனம் = தானம். பொதுவாக, மதம்பற்றிக் கோவிற்கும் அடியார்க்கும் கொடுப்பது தானம் என்றும், கல்வி பற்றிப் புலவர்க்கும் பாணர் முதலியோர்க்குங் கொடுப்பது கொடை யென்றும், அறம் பற்றி எளியார்க்கும் இரப்போர்க்குங் கொடுப்பது ஈகையென்றும், சொல்லப்படும்.
தானம் - தான (வ.). L. donem. (தி.ம: 743.)
தா - தா (da#) - இ.வே.
பழந்தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாம் என்னும் உண்மையைக் காட்டுஞ் சொற்களுள், தா என்பது ஒன்றாகும்.
தா என் கிளவி ஒப்போன் கூற்றே. (தொல்.929)
அவற்றுள்,
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீரிடத்த. (தொல். 512)
இப் பொருள் வரம்பு ஏனைமொழிகளில் இல்லை. ம. தா, க, தா. Gk didomi, L. do.
தா - தா (இ.வே.) = தருபவன்.
தாதா (தாத்தா) = தந்தையின் தந்தையாகிய பாட்டன். தெ. க. தாத்த. (வ.வ: 174 - 175).
தாகம்
தாகம் - தாஹ
தகு - தவு - தவி - தவம் = வெப்பம், வெப்பம் பசிதாகம் முதலிய வற்றால் உடலை வாட்டும் துறவுவினை, அல்லது இறைவேண்டல் வினை.
சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (குறள். 537).
தவு - தவி - தாவம். தவித்தல் = நீர்வேட்கை யுறுத்தல். ஒன்றைப் பெறப் பெருவேட்கை கொள்ளுதல்.
தாடி
தாடி - தாடிகா (d|h)
தாடி = 1. மோவாய். சுருளிடு தாடி (சிலப்.27:181).
2. மோவாய் மயிர். மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி (கலித்.15).
3. மாட்டின் அலைதாடி. பேருடற் றழைந்த தாடி (திருவாலவா. 36:24).
4. சேவற் கழுத்தின் தொங்கு சதை.
தாழ்தல் = தாழ்ந்திருத்தல், தொங்குதல். தாழி - தாடி.
ஒ.நோ: தாழ்வாய் = மோவாய் (பிங்.). தாழ்வாய் - தாழ்வாய்க் கட்டை. (வ.வ. 175).
தாண்டகம்
26 எழுத்திற்கு மேற்படாத 4 அடிகளைக் கொண்ட பாவினம் மண்டிலம் என்றும், அத்தொகைக்கு மேற்பட்ட எழுத்துக்களை யுடைய 4 அடிகளைக் கொண்ட பாவினம் தாண்டகம் என்றும் பெயர்பெறும். மண்டில (விருத்த) எழுத்தளவைத் தாண்டிச் செல்வது தாண்டகம். திருநாவுக்கரசர் தாண்டகங்களுள் மாபெரும்பாலன மண்டில அளவே கொண்டிருப்பதால்,
மூவிரண் டேனும் இருநாள் கேனும்
சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர்
கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றள்
அறுசீர் குறியது, நெடியதெண் சீராம்.
என்னும் பன்னிரு பாட்டியல் நூற்பாவால் (195) அமைக்கப்படும். (த.இ.வ. 33:74).
தாண்டவம்
தாண்டவம் – தாண்டவ
தாண்டுதல் = குதித்தாடுதல். (பிங்.) தாண்டு -தாண்டவம் =1..jhîif (பிங்). 2. கூத்துவகை (திவா.). (வ.வ:176).
தாத்தா
தாத்தா - தாத்த (வ.வ: 176).
தாம்பு
தாம்பு - தாமன் (ன) (வ.வ: 176).
தாம்பணி
தாம்பணி - தாமணீ
தாம்பு + அணி = தாம்பணி = மாடுகளை வரிசையாகக் பிணைக்கும் கயிறு.
தாம்பு = 1. கயிறு (பிங்.) 2. தாம்பணிக் கயிறு.
கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து (கலித். 111).
தாம்பு + இசை = தாப்பிசை = 1. ஊஞ்சல்.
2. செய்யுட் சொல் முன்னும் பின்னுஞ் சென்று பொருள் கூடும் பொருள்கோள் (வ.வ.176).
தாமரை
தாமரை - தாமரஸ
தும் = செம். தும் - தும்பு - துப்பு = சிவப்பு, பவழம், அரக்கு.
தும்பு - தும்பரம் = சிவப்பு, சிவப்பான அத்திப்பழம்.
தும் - (துமர்) - துவர் = சிவப்பு, பவழம், காவி, துவரை, துவர்ப்பு (காசுக்கட்டி). துவர்த்தல் = சிவத்தல், துவர்ப்புச் சுவையாதல்.
துவர் - துவரை = செம்பயறு, செப்புக்கோட்டை நகர்.
துவர் - துகிர் = பவழம்
துமர் - தமர் - தாமரம் = செம்பு. தாமரம் - தாமரை = செம்முளரி, முளரி.
தாமரஸ என்னும் வடசொல் வடிவைத் தாம+ரஸ என்று பகுத்துப் பகல் முளரி என்று பொருள் கூறுவர். ஆயின், தாம என்னுஞ் சொற்கு மூலமாகக் கொள்ளும் தம என்னுஞ் சொற்கோ இருள் அல்லது இரவு என்றுதான் பொருள். இனி, இக்குழறுபடையைப் பெருக்கற்குத் தம் என்பதை அடி மூலமாகக் காட்டுவர். அதற்குத் திணறுதல் அல்லது திக்குமுக் காடுதல் என்பது பொருள் இங்ஙனம் வடவர் திணறித் திண்டாடுவதெல்லாம், வேண்டுமென்றே மெய்ம்மையைப் புறக்கணித்துப் பொய்ம்மையை மேற்கொள்வதன் விளைவே.
தாமரம் - தாம்பர
தும்பரம் -உதும்பர, உடும்பர (அ.வே.). (வ.வ:176).
தாமரை: தும் - துமர் - துவர் = சிவப்பு, துவர் - துவரை = செம்பயறு. துமர் - தமர் (தாமரை) - தாமரை = செந்நிற நீர்ப்பூவகை. இச்சொல் இன்று தன் சிறப்புப் பொருளிழந்து, அவ்வகையின் இருநிற மலர்க்கும் பொதுப்பெயராக வழங்குகின்றது. தாமரை - தாமரஸ(வ.) (தி.ம:743).
தாய்மொழிக் கரணம்
தேவ மொழியென ஒன்றின்மையாலும், தமிழ் வடமொழிக்கு முந்தியதும் ஆரிய மொழிகட்கு மூலமும் ஆனதினாலும், ஆரியக் கரணம் தமிழனுக்கு மானக்கேட்டை விளைப்பதனாலும், பிராமணர் தென்னாடு வருமுன் எல்லாத் தமிழர் மணங்களும் தமிழிலேயே நடைபெற்று வந்ததினாலும், ஒவ்வொரு தமிழனும் தமிழிலேயே கரணம் செய்வித்தல் வேண்டும். பிராமணன் தமிழன்பனாகித் தமிழிற் கரணம் செய்ய இசையின் அதை ஏற்றுக் கொள்ளலாம். தமிழிற் கரணம் செய்வியாதவன் தமிழனாகான்.
ஒவ்வொரு தூய தமிழனும், தன் வீட்டுக் கரணத்தை மட்டு மன்றிப் பிறர் வீட்டுக் கரணத்தையும் தமிழிற் செய்விக்க முயற்சி செய்தல் வேண்டும். வடமொழியில் நடக்கும் கரணத்திற்குச் செல்லுதல் கூடாது. (த.தி.57).
தாயம் விளையாட்டு
இது பலவகைப்படும். அவற்றுள் பெருவழக்கானது பதினைந்து நாயும் புலியும் என்பதாம். இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஆடப்பட்டதென்பது,
வல்என் கிளவி தொழிற்பெய ரியற்றே (தொல். 373)
நாயும் பலகையும் வரூஉங் காலை
ஆவயின் உகரங் கெடுதலு முரித்தே
உகரங் கெடுவழி அகரம் நிலையும் (. 374)
என்னும் நூற்பாக்களால் (சூத்திரங்களால்) அறியலாம்.
பரமபதம், சிலுவைத்தாயம் என வழங்கும் குறுக்குக் கட்டத் தாயம், ஆகிய இரண்டும், பெரும்பான்மையாக வழங்கும் பெண்டிர் தாய விளையாட்டுக்களாம்.
தாலிகட்டும் வழக்கம் தமிழரதே
ஒரு காதலன் தன் காதலிக்கு, அல்லது ஒரு மணமகன் தன் மணமகளுக்கு, அல்லது கணவன் தன் மனைவிக்கு, கழுத்தில் தாலி கட்டுவதன் வாயிலாய், அவளைத் தன் வாழ்க்கைத்துணைவி என்று பிறர்க்குக் காட்டுவது, தமிழகத்துத் தொன்றுதொட்ட வழக்கமாயிருந்து வருகின்றது.
கட்டுதல் என்னும் சொல் மணத்தல் என்று பொருள்படுவது, தாலிகட்டும் வழக்கம் பற்றியே. X® ïisahid mšyJ ïisahis neh¡», ‘ Ú ahiu¡ f£l¥ngh»whŒ? என்று கேட்பது உலக வழக்கு. மணமக்கள் இருவருள்ளும் தாலி கட்டுவது மணமகனும் அவனால் கட்டப்படுவது மணமகளுமா யிருப்பினும், கட்டுதல் என்னும் சொல் மணத்தல் என்னும் பொருளில் வழங்கத்தலைப்பட்டபின், அது இருவர்க்கும் பொதுவான சொல்லாயிற்று.
முதற்காலத்தில், மக்கள் குடும்பப்பிரிவின்றிக் குலங்குலமாய் அல்லது தொகுதி தொகுதியாய் வாழ்ந்துவந்த நிலையில், ஒரு குலத்துப் பெண்டிர், பெரும்பாலும் குலத்தலைவன் மனைவியர் நீங்கலாக, அக்குலத்து ஆடவர் அனைவர்க்கும் பொது மனைவி யராகவே இருந்து வந்தனர். பின்பு நாகரிகந் தோன்றித் தனிமனை வியர் ஏற்பட்டபின், ஒருவன் தன் மனைவியை அல்லது மனைவி யரை வேறாகப் பிரித்து வைத்தற்கு தாலிகட்டும் வழக்கம் ஏற்பட்டது. ஈகையரிய இழையணி மகளிர் என்பது (புறம் 127), தமிழப்பெண்டிர் தாலியணியும் வழக்கத்தைக் குறிக்கும் சங்கநூற் சான்றாம்.
முந்துகாலத்தில், சிறப்பாகக் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்து வந்தபோது, இலையையும் பூவையும் ஆடையணியாக அணிவது தமிழர் வழக்கம். நால்வகையிலையுள்ளும் ஓலையென்பது உறுதியானதாதலின், பனங்குருத்தால் காதணி கழுத்தணி முதலிய பல்வேறு அணிகளை அவர் செய்து கொண்டனர். சேரன் பனம் பூமாலையை அடையாள மாலையாகக் கொண்டிருந்த தினாலும், ஓலையைக் குறிக்கும் தோடு என்னும் சொல் இன்றும் காதணிப்பெயராய் வழங்குதலாலும், காதில் ஓலையணிவதால் ஓலைப்பள்ளி யென்ற பெயர் பெற்ற ஒரு பள்ளி வகுப்பார் இன்றிருத்தலாலும், தாழ்த்தப்பட்ட சில குலத்துப் பெண்டிர் ஓலையையே காதில் அணிவதாலும், பழங்காலத்தில் ஓலையணி களைக் காதிலும் கழுத்திலும் தமிழப் பெண்டிர் அணிந்தனர் என்பதில், எள்ளளவும் வியப்பிற்கிடமின்றாம். காதிற்போன்றே கழுத்திலும் பனங்குருத்தணி அணியப்பட்டமை.
தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு
என்னும் நாலாயிரத் தெய்வப் பனுவலடியால் (திவ். பெரியாழ்.2,6,1) தெரியவரும்.
தாலத்தின் ஓலையினாற் செய்யப்பட்டதினாலோ, தால் போல்
தொங்குவதினாலோ, பெண்டிரின் திருமணக் கழுத்தணி தாலி யெனப் பெயர் பெற்றிருக்கலாம். தாலம் - பனை. தால்-நாவு. இனி, நாலி (தொங்குவது) என்பது தாலி எனத் திரிந்தது எனலுமாம்.
மக்கள் நாகரிகமடைந்து பொன்னால் அணி செய்யத் தொடங்கிய பின், தாலியும் பொன்னாற் செய்யப்பெற்றது.
பொற்றாலி யோடெவையும் போம்
என்றார் ஔவையார்.
சிலர் பொற்றாலியில் மணியும் பதித்துக்கொண்டனர்.
நாணுள்ளிட்டுச் சுடர்வீசு நன்மாணிக்க நகுதாலி
பேணி நல்லார் கழுத்தணிந்து
என்பது சிந்தாமணி (2697).
பன்மணிப்பூணுஞ் சின்மணித் தாலியும்
என்பது பெருங்கதை (19:119).
பண்டைக் காலத்தில் கழுத்திலணியப்படும் அணிகளெல்லாம் தாலியெனப்பட்டமை, அச்சுத்தாலி முளைத்தாலி புலிப்பற்றாலி ஐம்படைத்தாலி முதலிய பெயர்களால் அறியப்படும். அச்சுத்தாலி என்பது காசுமாலை. முளைத்தாலியென்பது சிறுமியர் கழுத்தி லணியப் பெறும் சிறுமணிமாலை. புலிப்பற்றாலி யென்பது குறிஞ்சி நிலச் சிறார் கழுத்திலும் பெண்டிர் கழுத்திலும் அணியப் பெறும் புலிப்பல் மாலை. ஐம்படைத்தாலி என்பது திருமாலின் ஐம்படையாகிய சங்கு சக்கர வில்வாள் தண்டவடிவிற் செய்யப் பட்டு, சிறுவர் கழுத்தில் பாதுகாப்பாக அணியப் பெறுவது. ஐம் படைத்தாலி, 77ஆம் புறப்பாட்டில் தாலியென்றே சொல்லப் பட்டது.
இனி, குதிரையின் கழுத்தில் அணியப்பெற்ற தாலியென்னும் அணியும் உண்டு.
வலியுடை யுரத்தின் வான்பொற் றாலி
என்று பெருங்கதை கூறுதல் காண்க (18:13). சில வெள்ளாட்டின் கழுத்தில் தொங்கும் சதையும், ஒப்புமைபற்றித் தாலியெனப்படும்.
கயிற்கடை யொழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவை
என்னும் சிலப்பதிகாரத் தொடரில் (6:101-2), கோவை என்பதற்குப் பின்றாலி யென்று அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் உரைத்திருப்பதால், அக்காலத்து முன்றாலி பின்றாலியென இருவகையணி யிருந்தமையும் பெறப்படும். முன்றாலி மார்பில் தொங்குவது; பின்றாலி முதுகில் தொங்குவது. இவற்றால், தாலி என ஒரு தனியணி முற்காலத்திருந்தமையும், பின்பு எழுந்த அதன் வேறுபாடுகள் அவற்றிற்கேற்ப வெவ்வேறு அடையடுத்துக் கூறப்பட்டமையும், பெறப்படும்.
தாலி என ஒரு குறிப்பிட்ட மங்கலஅணி பிற்காலத்துத் தோன்றிய பின், அது ஒவ்வொரு குலத்திற்கும் ஒன்றாக வெவ்வெறு வடிவிலும் அளவிலும் செய்யப்பட்டு அததற்கேற்பப் பெயரும் பெற்றது. ஆமைத்தாலி, பொட்டுத்தாலி, சிறுதாலி, பெருந்தாலி என்பன சில பெயர்கள்.
தாலிபோன்றே தாலிக்கொடியும் மங்கலமாகக் கருதப்பட்டு, மங்கலநாண் எனப்பெற்றது. அது முதற்கண் மஞ்சள் தோய்த்த நூற்கயிறாயிருந்ததினால், சில குலத்தார் இன்னும் அதன் பழநிலையை மரபாகப் போற்றிக்காப்பார். சில குலத்தார் அதைப்பொற்கொடியாகச் செய்துகொள்வர். இனி, மங்கல நாணையே தாலியாகக் கொண்டாரும் உண்டு.
தாலியையும், தனியாக அணிவதும் வேறு சில உருக்களுடன் சேர்த்து அணிவதுமாக, இருவேறு மரபுகள் எழுந்துள்ளன. தாலியையே அணியாக முது பண்டை நிலையில், இன்றும் பல அநாகரிகத் திரவிட மரபினர் உளர். கொங்கு நாட்டு வேளாளப் பெண்டிர் கனத்த தாலியை அணிவதால், சிறப்பு நாட்களில் அதை அணிவதும் பிறநாட்களிற் கழற்றி வைத்திருப்பதும் அவர் வழக்கம்.
தாலிகட்டுவது ஆரியர் வழக்கமன்றென்பது, பின்வரும் (P.T.) சீநிவாச ஐயங்கார் கூற்றால் அறியப்படும்.
திருமணச் சடங்குகளில், தலைமையானதாகத் தாலியணிவதும், மஞ்சள் தோய்த்த நாணைக் கழுத்திற் கட்டுவதும், போன்ற சில அனாரிய வழக்கங்கள், தெற்கத்துப் பிராமணப்பெண்டிர்க்கு அருமையாக உள்ளன - தமிழர் வரலாறு (History of the Tamils) பக்.57.
இது (தாலியணிவது) கிருகிய சூத்திரங்களிலேயே சொல்லப் படாத ஒரு தூய தமிழ வழக்கம். கையைப்பிடிக்கும் பாணிக் கிரகணத்தையும் ஏழடியிடும் சப்த பதீயையுமே, திருமணச் சடங்கின் உயிர்நாடிப் பகுதிகாளகக் கிருகிய சூத்திரங்கள் கொள்கின்றன. மேற்படி, அடிக்குறிப்பு.
பாணிக்கிரகணம் என்பது எங்ஙனம் ஆரியர்க்கு முதன்மை யானதோ, அங்ஙனமே தாலிகட்டு என்பதும் தமிழர்க்கு முதன் மையானதென்க.
மணமகன் தாலியை எடுத்து,பெண்ணே! அறப்பயன் பெறுவதற்குத் தாலி கட்டுகின்றேன் என்று சொல்லி, மணமகள் கழுத்தில் ஒரு கயிற்றாற் கட்டுகின்றான். இக்கூற்று வேதமந்திர மன்று. kz¢rl§»‹ ï¥gFâí« »U»a N¤âu§fˉ brhšy¥glÉšiy”.- தென்னாட்டுக் குலமரபு (Castes and Tribes of Southern India), பக். 285.
கழுத்திலணியும் தாலியினும் கையிலணியும் மோதிரமே கண்ணி யமும் நாகரிகமும் வாய்ந்ததெனின், கொத்துக் கொத்தாய்ப் பொற்றோடரியும், மொத்த மொத்தமாய்ப் பன்மணிமாலையும் கழுத்திலணியும்போது, தாலிக்கேன் இடமில்லையென எதிர் வினவி விடுக்க.
குறிப்பு:- தமிழரெல்லாரும் ஓரினமாயினும், பழக்க வழக்கங் களில் வேறுபட்ட பல்வேறு தமிழக் குலங்கள் தொன்றுதொட்டு இருந்து வருவதாலும், கடைக்கழகக் காலத்திலேயே சில தமிழக்குலங்கள் சில ஆரிய வழக்கங்களை மேற்கொண்டு விட்டதனாலும், இதுபோதுள்ள ஓரிரு சான்றுகளைமட்டுங் கொண்டு, கழகக்காலத்தில் தாலி ஒரு குலத்தார்க்கும் மங்கல வணியாகவில்லை என்று முழுவுறுதியாய்க் கூறிவிட முடியாது. ஆயின், அது முதற்காலத்தில் அழகு அல்லது காப்புப் பற்றிய பொதுவணியாகவே தோன்றிற்று என்பதும், அது தமிழர் அணியே என்பதும் தெள்ளத் தெளிவாம்.
தாவு
தாவு - தாவ் (dh) - இ.வே.
தாவுதல் = குதித்தல், தாண்டுதல், பாய்ந்தோடுதல். (வ.வ:176).
தாளம்
தாளம் - தால
தாள் = கால், அடி. தாள் - தாளம் = ஆடுபவர் காலால் தட்டும் காலக் கணிப்பு, ஆட்டிற்கும் பாட்டிற்கும் உரிய காலக்கணிப்பு, காலக் கணிப்பிற்குத் தக்க இசைக்கருவி (வ.வ:177).
தாளி
தாளி - தால
தள் - தாள் - தாளி = திரண்ட கூந்தற்பனை. (வ.வ:177)
தானம் (1)
தானம் என்பது நல்வழியில் ஈட்டப்பட்ட பொருளை, தெய்வப் பற்றுக் கரணியமாகக் கோவிற்கும் அடியார்க்கும், அருளுடைமை கரணியமாக இரப்போர்க்கும் ஈடின்றிக் கொடுத்தல் (தி.ம.47)
தானம்
தானம் - தான (இ.வே.)
தள்ளுதல் = ஈனுதல் (உள்ளிருந்ததை வெளித்தள்ளுதல்).
(வாழை) குலை தள்ளுதல் என்னும் வழக்கை நோக்குக.
தள் - தள்ளை = தாய். ம. தள்ள. தெ. தல்லி.
தள்ளுதற் சொல் போன்றே ஈனுதற் சொல்லும் இருதிணைக்கும் பொதுவாம். ஈன்றாள் = தாய்.
ஈனுமோ வாழை யிருகாற் குலை (பழ.221).
ஈ - ஈன். ஈனுதல் = இடுதல். மணற்கீன்ற முத்தம் = மணலிலிட்ட பருமுத்து.
தள் - (தர்) - தரு - தா -த.
தரு - தருகிறான், தருவான், தருகை, தரவு.
தா - தா, தானம்.
த - தந்தான், தத்தம்.
தருதல் =1. மகப்பெறுதல்.
தந்தவளைப் பணிந்தவளும் (சேதுபு. தேவிபுர.7). தந்தவள் =
தாய்.
2. மரஞ்செடிகள் பயன்தருதல். (வ.வ.175)
தானம், தவம்:
தானம் பிறர்க்குக் கொடுப்பது
தவம் தன்னை ஒடுக்குவது (தி.ம.47)
தானம் வகை
பிராமணர்களுக்குக் கொடுத்த தானங்கள் 16.
1. துலைநிறை (துலாபாரம்)
2. பொன்பிறப்பு (இரணிய கர்ப்பம்)
3. பெருங் கோளம் (பிரமாண்டம்)
4. விண்மரம் (கல்பபாதவம்)
5. ஆவாயிரம் ( கோஸகரம்)
6. பொன் ஆ (இரணியகாமதேனு)
7. பொற்பரி (இரணியஅசுவம்)
8. பொற்பரித்தேர் (இரணிய அசுவரதம்)
9. பொன் யானைத்தேர் (இரணிய ஹதிரதம்)
10. ஐயேர் நிலம் (பஞ்சலாங்கல பூ)
11. நாவலந்தீவு (தராதலம்)
12. உலகச் சக்கரம் (விவசக்கரம்)
13. விண்பெருங்கொடி (மகாகல்பலதா)
14. மணியா (ரத்நதேநு)
15. எழுகடல் (ஸப்தஸாகரம்)
16. ஐம்பூதக்குடம் (மகாபூத கடம்)
இவற்றுள் துலைநிறை, பொன்பிறப்பு, ஆவாயிரம் என்பவை பெருவழக்கானவை. (த.இ.வ.184)
தானை
தானை = சேலை, துணி, துணிக் கொடி பிடித்துச் செல்லும் படை. ஒ.நோ: தூசு = துணி, துணிக்கொடி. தூசு - தூசி = கொடிப்படை. E Colour = Flagi, Colours = regiment. (தி.ம.பின்)
திசைச்சொல் எவை?
தொல்காப்பியர் தம் காலத் தமிழ்ச் செய்யுட் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்லென நால் வகைப்படுத்தினார். அவற்றுள், இயற்சொல்லும், திரி சொல்லும் செந்தமிழ் நாட்டுச் சொல்லும், திசைச் சொல் கொடுந்தமிழ் நாட்டுச் சொல்லும் ஆகும். வட சொல் என்றது ஆரியச் சொல் லையும் வட நாட்டுச் சொல்லையும் ஆகும். வடநாட்டுச் சொல் லாவது, பிராகிருதம் என்னும் வட திரவிடச் சொல். அஃது ஆரியத்திற்கு முந்தியது.
அக்காலத்துத் தமிழில் வழங்கிய அல்லது புகுத்தப்பட்ட அயன் மொழிச் சொல் ஆரியச் சொல் ஒன்றே. அதனால் அதைத் திசை பற்றி வடசொல் என்று பிரித்துக் கூறினர். அவ்வாறே இக்லத்து அயன்மொழிச் சொற்களையும், ஆங்கிலச் சொல், இலத்தீனச் சொல், கிரேக்கச் சொல், சீனச்சொல் என அவ்வம் மொழிப் பெயராலேயே குறித்தல் வேண்டுமேயன்றித் திசைச் சொல்லுள் அடக்குதல் கூடாது.
மேற்குறித்த நால்வகைச் சொல்லும் பற்றிய தொல்காப்பிய நூற்பாக்கள் வருமாறு:
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே. (தொல். எச்ச.1)
அவற்றுள்,
இயற்சொற் றாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே. (தொல். எச்ச.2)
ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும்
வேறு பொருள் குறித்த ஒருசொல் லாகியும்
இருபாற் றென்ப திரிசொற் கிளவி. (தொல். எச்ச.3)
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். எச்ச.4)
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. (தொல்.எச்ச.5)
செந்தமிழ் சேர்ந்த …… திசைச் சொற் கிளவி
என்றதனால், கொடுந்தமிழ் நாட்டுச் சொல்லே திசைச்சொல் என்பது பெறப்படும். சேர்ந்த என்பது அடுத்த என்று பொருள் படுமே யன்றி, சூழ்ந்த என்று பொருள்படாது. தமிழின் பிறந்தகம் குமரிநாடேயாதலால், செந்தமிழ் நாடு தெற்கும் கொடுந்தமிழ் நாடு அதன் வடக்கும் உள்ளன என்றறிதல் வேண்டும். பாண்டி யனுக்கே தமிழ்நாடன் என்று சிறப்பாகப் பெயருண்மையும், திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்னும் வழக்கும், கவனிக்கத் தக்கன.
கொடுந்தமிழ் நாட்டுச் சொல் வேறு. கொடுந்தமிழ்ச் சொல் வேறு. கொடுந்தமிழ் நாட்டில் தோன்றிச் செந்தமிழ்ச் செய்யுளில் இடம் பெறத் தக்க திருந்திய சொல்லே திசைச்சொல்லாம். அது சமாளி (சமாளிசு) என்னுங் கன்னடச் சொல் போல்வது. தல்லி (தெ), தம்முடு (தெ.) என்பன போன்ற கொச்சைச் சொற்கள் செந்தமிழ்ச் செய்யுளில் இடம்பெறா. ஏமிரா வோரி யென்பாள் எந்துண்டி வதி யென்பாள் என்னும் கொண்டுகூற்றும், ஏமிரா வோரியென்பாள் எந்துண்டி வத்தி யென்பாள் என்றே யிருத்தல் வேண்டும். அல்லாக்கால், அயலெழுத்துப் புணர்ந்து அயன் மொழியாகிவிடும் என அறிக.
தொல்லிலக்கண நூலார் திசைச்சொல் வழக்கிற்கும் இடந்தந்தா ரென்று, அயன்மொழிச் சொற்களையெல்லாம் திசைச்சொல் லென்று கொள்வது திரிபுணர்ச்சியாகும்.
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். எச்ச.4)
இதன் இளம்பூரணர் உரை: செந்தமிழ் நாட்டை அடையும் புடையும் கிடந்த பன்னிரு நிலத்தார் தங் குறிப்பினையே இலக் கணமாக வுடைய திசைச்சொற் கிளவிகள் என்றவாற,
வரலாறு:
தாயைத் தள்ளை என்ப குடநாட்டார்.
நாயை ஞமலி என்ப பூழிநாட்டார்.
பிறவும் அன்ன.
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன: பொங்கர் நாடு, தென்பாண்டி நாடு, ஒளிநாடு, குட்ட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மலை நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, குடநாடு.
சேனாவரையர் உரை: செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாங்குறித்த பொருள் விளக்குந் திசைச்சொல் என்றவாறு என்றது, அவ்வந் நிலத்துத் தாங்குறித்த பொருள் விளக்குவதல்லது அவ் வியற்சொல் போல எந்நிலத்துந் தம் பொருள் விளக்கா வென்றவாறாம்.
பன்னிரு நிலமாவன: பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மலை நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு எனச் செந்தமிழ் நாட்டுத் தென் கீழ்ப்பான் முதலாக வடகீழ்ப்பா லிறுதியாக எண்ணிக் கொள்க.
தென்பாண்டி நாட்டார் ஆ, எருமை என்பவற்றைப் பெற்ற மென்றும், தம்மாமி யென்பதனைத் தந்துவை யென்றும் வழங்குப. பிறவுமன்ன.
நச்சினார்க்கினியர் உரை: திசைச்சொல்லாகிய சொல், செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும், பன்னிரண்டையும் புறஞ்சூழ்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாந்தாங் குறித்த பொருளையே விளக்குந் தன்மையை உடையன எ-று.
உம்மையை எச்சவும்மையாக்கிப் பொருளுரைக்க. எனவே, இயற்சொல் போல எந்நிலத்துந் தம் பொருள் விளக்காவாயின.
பன்னிரு நிலமாவன பொங்கர் நாடு, ஒளி நாடு, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மலையமா நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு எனத் தென்கீழ்ப்பால் முதலாக வடகீழ்ப்பா லீறாக எண்ணுக.
இனிப் பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரண்டாவன: சிங்களமும் பழந்தீவுங் கொல்லமுங் கூபமுங் கொங்கணமுந் துளுவுங்
கடகமுங் கருநடமுங் குடமும் வடுகுந் தெலுங்குங் கலிங்கமு மாம்.
தென்பாண்டி நாட்டார் ஆ, எருமை என்பவற்றைப் பெற்ற மென்றும்: குட்ட நாட்டார் தாயைத் தள்ளை என்றும் நாயை ஞெள்ளை யென்றும்: குட நாட்டார் தந்தையை அச்சனென்றும்: கற்கா நாட்டார் வஞ்சரைக் கையரென்றும், சீத நாட்டார் ஏடாவென்பதனை எலுவவென்றும், தோழியை இகுளையென்றும், தம்மாமி யென்பதனைத் தந்துவை யென்றும், பூழி நாட்டார் நாயை ஞமலியென்றும், சிறுகுளத்தைப் பாழியென்றும்: அருவா நாட்டார் செய்யைச் செறுவென்றும், சிறுகுளத்தைக் கேணி யென்றும்; அருவா வடதலையார் குறுணியைக் குட்டையென்றும் வழங்குப.
இனிச் சிங்களம் அந்தோவென்பது, கருநடம் கரைய, சிக்க, குளிர என்பன: வடுகு செப்பென்பது: தெலுங்கு எருத்தைப் பாண்டி லென்பது: துளு மாமரத்தைக் கொக்கென்பது. ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க.
தெய்வாச்சிலையார் உரை: செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்துமுள்ளார் தத்தங் குறிப்பினையுடைய, திசைச் சொல்லாகிய சொல் - எ-று.
பன்னிரு நிலமாவன: வையை யாற்றின்… ehL, xË ehL, bj‹gh©o ehL., கருங்குட்ட நாடு, குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மலாடு, அருவா நாடு, அருவா, வடதலை நாடு என்ப. இவை செந்தமிழ்நாட்டகத்த, செந்தமிழ் நாடென்றமையால், பிற நாடாகல் வேண்டுமென்பார் உதாரணங் காட்டுமாறு: கன்னித் தென்கரைக் கடற் பழந்தீபம், கொல்லங் கூபகஞ் சிங்களமென்னும் எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம், கலிங்கம், தெலிங்கம், கொங்கணம், துளுவம், குடகம், குன்றகம் என்பன குடபா லிருபுறச் சையத் துடனுறைபு கூருந் தமிழ்திரி நிலங்களும், முடியுடையவ ரிடுநிலவாட்சியின் அரசு மேம்பட்ட குறுநிலக் குடுமிகள் பதின்மரு முடனிருப் பிருவரு மாகிய பன்னிருவர் அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும் தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையன என நிறுத்துப் பின்னும்செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல் கண்டு என ஓதியவதனாற் சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன: குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமுந் துளுவமுங் கடகமுங் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப் படும்.
இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல் கொள்ளப்படுதலின் குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும். பஞ்சதிராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாக லான், அவை யைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமை யுணர்க.
அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறு பட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா எ-று.
குடாவடி யுளியம் என்றவழிக் குடா என்பது குடகத்தார் பிள்ளை கட்கு இட்டபெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற் கிட்ட பெயர். யான் தற்கரைய வருது என்றவழிக் கரைதல் என்பது கருநாடர் விளிப்பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. பாண்டில் என்பது தெலிங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்தவழிக் கண்டு கொள்க.
செஞ்சொல் = இயற்சொல்
செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப. (நன்.பெய.16)
சடகோப இராமாநுச கிருட்டிணமாச்சாரியார் உரை: செந்தமிழ் நாடாகிய பாண்டி நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளிலும், பதினெட்டுத் தேசங்களுள் தமிழ்நாடு ஒழிந்த பதினேழு நாடுகளிலும், வசிப்பவர்கள் தமது பேசும் பாழைகளி லுள்ள பதங்கள், அப் பொருளோடு செந்தமிழில் வந்து வழங்குவன திசைச் சொற்களாம் என்று சொல்வர் (புலவர்)எ-று.
திசைச்சொல் - திசைகளில் வழங்குகின்ற தேச பாழைகளிலிருந்து செந்தமிழில் வந்து வழங்கும் சொற்கள்.
கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டாவன: தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குடா நாடு, கற்கா நாடு, வேணாடு, பூழிநாடு, பன்றி நாடு, அருவாநாடு, அருவா வடதலை நாடு, சீதநாடு, மலையமானாடு, சோழ நாடு என்பன. தென்பாண்டி நாடு - செந்தமிழ்ப் பாண்டி நாட்டுக்குத் தென்திசையிலுள்ளது.
எ-டு:
1. பசுவைப் பெற்றம் என்பதும்
சோற்றைச் சொன்றி என்பதும் - தென்பாண்டி நாட்டுச்சொல்
2. தாயைத் தள்ளை என்பது - குட்டநாட்டுச் சொல்
3. தந்தையை அச்சன் என்பது - குடநாட்டுச் சொல்
4. வஞ்சகரைக் கையர் என்பது - கற்கா நாட்டுச் சொல்
5. தோட்டத்தைக் கீழார் என்பது - வேணாட்டுச் சொல்
6. சிறுகுளத்தைப் பாழி என்பது - பூழி நாட்டுச் சொல்
7. வயலைச் செய் என்பது - பன்றி நாட்டுச் சொல்
8. சிறுகுளத்தைக் கேணி என்பது - அருவா நாட்டுச் சொல்
9. புளியை எகின் என்பது - அருவாவடதலை நாட்டுச் சொல்
10. தோழனை எலுவன் என்பதும் தோழியை இகுளை என்பதும் - சீத நாட்டுச் சொல்
11. நல்ல நீரை வெள்ளம் என்பது - மலையமானாட்டுச் சொல்
12. தாயை ஆய் என்பது - புனனாட்டுச் சொல்
தமிழ்நாடு ஒழிந்த நாடு பதினேழாவன: சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம், குசலம்.
மாமரத்தைக் கொக்கு என்பது - துளுவநாட்டுச் சொல்
அகப்படுதலைச் சிக்குதல் என்பது - கன்னட நாட்டுச் சொல்
கருத்தாக இருத்தலை எச்சரிக்கை என்பதும்
சொல்லுதலைச் செப்புதல் என்பதும் - தெலுங்க நாட்டுச் சொல்
மற்றவையும் இப்படியே ஆங்காங்கு வருதல் கண்டுகொள்க.
ஐயோ என்பதை அந்தோ என்பது சிங்கள நாட்டுச் சொல் என்று முன்னைய உரையாசிரியர்கள் எழுதியிருந்தாலும், அது ஹந்த என்னும் வடசொல்லின் சிதைவு என்று தெரிதலால், இங்குக் கொள்ளப்படவில்லை.
பழஞ் செய்யுள்கள்
தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றி அருவா அதன்வடக்கு - நன்றாய
சீதம் மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டென்
சிங்களஞ் சோனகஞ் சாகஞ் சீனந் துளுக்குடகம்
கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுக்கங் கலிங்கவங்கம்
கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே
பண்டைக் கொடுந்தமிழ் மொழிகளே வரையிறந்து வடசொற் கலந்து, இன்று திரவிட மொழிகள் என்று வழங்குகின்றன. தமிழ், ஆரியச் சொல் ஒன்றும் வேண்டாத தூய மொழியாதலாலும், தெலுங்கு, கன்னட, மலையாளம் முதலிய ஏனைய இனமொழிகள் ஆரியத்தை யகற்றும் ஆற்றலற்றுப் போனமையாலும், தமிழையும் திரவிட மொழிகளையும் பிரித்தறிதல் வேண்டும்.
தலைக்காலக் கொடுந்தமிழ் மொழிகள் பிராகிருத மொழிகளாக வும், இடைக்காலக் கொடுந்தமிழ் மொழிகள் திரவிட மொழி களாகவும் பிரிந்து போனதினாலும்: கடல் தாண்டிய வெளி நாட்டு இடப் பெயர்கள் பல வணிகத் தொடர்பால் வந்து வழங்கியதனாலும், நச்சினார்க்கினியரும், தெய்வச்சிலை யாரும், பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரு நிலங்களையும் கொடுந் தமிழ் நிலங்களாகக் கொண்டனர். பவணந்தி முனிவரோ, பதினெண்மொழி நாடுகளுள் தமிழொழிந்த பிறவற்றையெல்லாம் கொடுந்தமிழ் நாடுகளாகக் கூறிவிட்டனர். இதுவே பிறமொழிச் சொற்களையெல்லாம் திசைச்சொல்லெனச் சிலர் மயங்குதற்கு இடந் தந்துவிட்டது.
அந்தோஎன்பது அத்தோ என்பதன் திரிபான செந்தமிழ்ச் சொல்லே. இது வடமொழியில் ஹந்த என்று திரியும். ஆதலால், இது சிங்களச் சொல்லுமன்று: வடசொற் சிதைவு மன்று.
வடசொல், மொழியாராய்ச்சி இல்லாக் காலத்தில் வேண்டாது புகுத்தப்பட்டதனால், அது இனி அறவே விலக்கப்படும். அதனோடு பிற அயன் மொழிச் சொற்களும் விலக்கப்படும். தூய்மையே தமிழுக்கு உயிர்நாடியாதலால், தமிழ் வாழ்தற்கு, அயன்மொழிச் சொல் விலக்கு இன்றியமையாததென அறிக. (தமிழம் 1.7.1974)
திசைச்சொல் பயன்பாடு
தமிழகம், தொன்றுதொட்டுக் கி.பி.12ஆம் நூற்றாண்டு வரை, சேர சோழ பாண்டியம் என்னும் முத்தமிழ் நாடாகவே யிருந்துவந்தது.
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு (தொல்.1336)
என்றார் தொல்காப்பியர்.
கடந்தடு தானை மூவிருங் கூடி (புறம்.110)
என்றார் கபிலர்.
பொதுமை சுட்டிய மூவ ருலகமும் (புறம்.337)
என்றார் பிரமனார்.
மும்மலையு முந்நாடும்
என்பது திருவள்ளுவமாலை.
மூவர் கோவையும் மூவிளங் கோவையும்
என்றார் ஔவையார்.
கி.பி.12ஆம் நூற்றாண்டிற்குப்பின் பழஞ்சேர மரபு அற்றுப் போய்ச் சேரநாடும் கேரளம் என வழங்கத் தலைப்பட்டதேனும், அது 16ஆம் நூற்றாண்டு வரை கொடுந்தமிழ் நாடாக இருந்து வந்திருக்கின்றது. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த துஞ்சத்து எழுத்தச்சனே. ஆரிய எழுத்து என்னும் சமற்கிருதங் கலந்த நெடுங்கணக்கைப் புகுத்தியும் வடமொழிப் பனுவல்களை மொழிபெயர்த்தும், அளவிறந்த வடசொற்களைத் தற்சம முறையில் தழுவியும், அடிப்படையிலிருந்தே வடமொழியிலக் கணத்தைக் கையாண்டும் சேரநாட்டுத் தமிழைக் கெடுத்தான். அன்றிருந்து, அது தமிழெனப்படாது கேரளம் அல்லது மலையாளம் என்னும் பெயரால் ஒரு திரிபுடைத் திரவிடமொழி யாகவே வழங்கிவருகின்றது.
மலையாளம், மூக்கொலி மிகையாலும் திசைச்சொற் றொகுதி யாலும் கொச்சைத் திரிபாலும் தமிழினின்றும் வேறுபட்டிருப் பினும், இன்றும் அதிற்கலந்துள்ள ஆரியக் கூறு நீக்கப்பெறின், எஞ்சி நிற்பது சொல்லளவில் தமிழேயாம். மலையாளம் என்னும் பெயரே தமிழ்ச்சொல்லாதல் காண்க. மலையில் அல்லது மலைநாட்டில் வாழ்பவன் மலையாளி. மலையாளியின் மொழி மலையாளம். கேரளம் என்பது சேரலம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. சேரல் - சேரலன் - கேரளம்.
மலையாளம் வடமொழி கலந்த பழந்தமிழே யாயினும், தமி ழொடும் தமிழரொடும் நெடுங்காலம் தொடர்பின்மையாலும் பண்டை வரலாற்றை அறியாமையாலும், இடைக்காலத்தில் ஆரியர்க்கும் ஆரியத்திற்கும் உயர்வும் திரவிடருக்கும் தமிழுக்கும் இழிவும் ஏற்பட்டுவிட்டதினாலும், மலையாளியர், தமிழின் பெருமையை உணராதிருப்பதுடன், மலையாளத்தினின்று தமிழ் வந்ததென்றும் வடமொழியே மலையாளத்திற்குத் தாய் என்றும், கூறிவருகின்றனர் தமிழருள் சில வகுப்பாரே தம்மை க்ஷத்திரியர் என்றும், வடசொற் கலவாது தனித்தமிழிற் பேசுவது தாழ் வென்றும் கொண்டிருப்பதை நோக்கும்போது, மலையாளியர் கூற்றில் எள்ளளவும் வியப்பிற்கிடமின்றாம்.
தமிழைச் சரியாய் அறிதற்குப் பிற திராவிட மொழிகளைப்பற்றிய அறிவும் இன்றியமையாததென்று கூறியுள்ளார் கால்டுவெல் கண்காணியார். இது உயர்வுநவிற்சிபோல் தோன்றினும் உண்மை நவிற்சியே. வரலாற்றுக் காலத் தமிழகத்திற்குப் புறம்பான வடுக, கோண்டு முதலிய வடபால் திரவிடமொழி அறிவே தமிழைச் செவ்வையாய் அறிதற்கு இன்றியமையாததெனின், தொன்று தொட்டுத் தமிழகத்தின் அகத்துறுப்பானதும் அதில் மூன்றி லொரு கூறானதுமான சேரநாட்டுத் தமிழும் வடமொழிக் கலப் பாலேயே அண்மையிற் பிரிந்துபோனதுமான மலையாளமொழி யறிவு, அதற்கு எத்துணை இன்றியமையாததெனச் சொல்லவும் வேண்டுமோ?
தமிழம் என்னும் பெயர் வடநாட்டில் அல்லது வடமொழியில் திரவிடம் (தமிழம் - த்ரமிளம் - த்ரமிடம் - த்ரவிடம்) என்று திரிந்திருப்பது போல் தமிழ்மொழியும் பல்வேறு திரவிடமொழி களாகத் திரிந்திருப்பதாலும், தமிழரல்லாத திரவிடமொழிகள் வழங்கும் நாடுகளில் ஆங்காங்குச் சிறப்பாக உரிய பொருள் கட்குப் புதுச்சொற்கள் தோன்றியிருப்பதாலும், பல திரவிட மொழிகள் தாய்மொழியாம் தமிழினின்று தெரிந்துகொண்ட கூறுகளுட் சில தமிழில் இறந்துபட்டமையாலும், சில திரவிட மொழிகள் தனித்தனி ஒரோவொரு கூற்றினை வளர்த்துள்ள மையாலும், எல்லாத் திரவிட மொழிகளும் சேர்ந்ததே முழுத் தமிழ் என்று கொள்வது இழுக்காகாது.
திரவிட மொழிகளுள் இடம் பற்றியும் இயல்புபற்றியும் தமிழுக்கு மிக நெருக்கமானது மலையாளமாகும். அதில் வடசொற்கள் அளவிறந்து கலந்துள்ளன என்று கால்டுவெல் கண்காணியார் கூறியுள்ள நிலைமை, அதன் நூல்வழக்கைச் சார்ந்ததேயன்றி உலகவழக்கைச் சார்ந்ததன்று. இன்றும், மலையாளப் பேச்சு வழக்கை நோக்கின், அது பெரிதும் வடசொற்கலப்பற்ற தென்பது புலனாம். இற்றைத் தமிழில் வழங்கும் சில வட சொற்கும் ஆங்கிலச் சொற்கும் நேர் தென்சொல் மலையாள மொழியில் தான் வழங்குகின்றன.
எ-டு:
வடசொல் தென்சொல்
மைத்துனன் அளியன்
மத்தியானம்-மதியம் உச்சி
வருஷம் ஆண்டு, கொல்லம்(நகர்)
ஆரம்பம் துவக்கம்
உபாத்தியாயர்-வாத்தியார் எழுத்தச்சன்
அமாவாசை கறுத்த வாவு(காருவா)
பூரணை-பௌர்ணமி வெளுத்த வாவு(வெள்ளுவா)
திடம்
திடம் - த்ருட (dr|d|ha) - இ.வே.
தில் - திள் - திண் - திண்மை = செறிவு, பருமன், வலிமை, உறுதி, கலங்கா நிலைமை.
திண் - திண்ணம் = இறுக்கம், வலிமை, தேற்றம் (நிச்சயம்) ம. திண்ணம்.
திண்ணன் = வலியன், வல்லுடற் கண்ணப்பன்.
திண்ணகம் = செம்மறியாட்டுக்கடா. திண்ணக்கம் = நெஞ்சுரம்.
திண்ணிமை = மனவுறதி. திண்ணியன் = வலியவன், திடமனத்தன்.
திண்ணை = திரண்டமேடு. ம. â©z, j., தெ. திண்ணெ. திணை = திரட்சி, குலம், வகுப்பு, பொருள் வகுப்பு, நிலவகுப்பு.
திண்ணம் - திணம் = திண்மை. திணம் - திணர் = செறிவு. திணர்த்தல் = செறிதல், கனமாகப் படிந்திருத்தல். (வ.வ.)
திண் - திணி. திணிதல் = செறிதல், இறுகுதல். க. திணி.
திணிகம் = நெருங்கிச் செய்யும் போர்.
திணிப்பு - திணிம்பு = செறிவு. க. திணிம்பு.
திணுங்குதல் = செறிதல், உறைதல். திணுக்கம் = செறிவு, கட்டி.
திண் - திண்பு = உறுதி. க. திண்பு.
திண்பு - திட்பு - திட்பம் = வலிமை, மனவுறதி, சொற் பொருளுறதி, தேற்றம்.
â© - â©L = gUk‹, áWâ©iz, gŠriz, bj., மெ. திண்டு.
திண்டு - திட்டு = சிறுமேட்டு நிலம். மணற்குன்று, ஆற்றிடைக் குறை. k., க. திட்டு.
திட்டு - திட்டம் = தேற்றம், நிலைபேறு, உறதியான ஏற்பாடு. தெ. திட்டமு, க. திட்ட. (வ.வ.)
திட்டு - திட்டை = திண்ணை, மணல்மேடு, மேட்டு நிலம். ம. திட்ட. திட்டாணி = மரத்தைச் சுற்றிய மேடை.
திட்டம் - திடம் = 1. பருமன், வலிமை, உறுதி, கலங்காநிலை, நிலை தவறாமை, மனவுறுதி, உண்மை, தேற்றம்.
திடம் - திடன் - திடல் = மேட்டுநிலம், பொட்டல்.
திடல் - திடர் = புடைப்பு, மேட்டுநிலம், குப்பை மேடு, சிறுதீவு.
திடர் - திடறு = மேட்டுநிலம், கரடு.
திடாரி = திடமனத்தன். தெ. திடமரி. திடாரிக்கம் = மனத்திடம்.
திண்டு - திண்டன் = தடியன். திண்டி = பருமன், தடித்தவள்,
யானை.
வடவர் காட்டும் த்ருங்ஹ் அல்லது த்ருஹ் என்னும் மூலம், திற என்னும் தென் சொற்றிரிபே. திறத்தல் = திறனாதல். (வ.வ. 178)
திண்டாட்டம்
சிற்றூர்களிலும் பேரூர்களிலும் உள்ள சந்தி சதுக்கங்களிலும் அம்பலங்களிலும் திண்டுகள் இருப்பதுண்டு. திண்டு, சிறு திண்ணை. அத் திண்டுகளில் குறச்சிறுமியர் சோற்றுக்குக் கூத்தாடுவது வழக்கம். அவரைப்போல் ஒருவன் சோறில்லாது இடர்ப்படும் போது அவன் சோற்றுக்குத் திண்டாடுகிறான் என்பர். (சொல். 11)
(தாளம் போடுதல், சிங்கியடித்தல் என்னும் இழிவழக்குகளும் இத்தகையவே. சிங்கி - தாளம்).
தித்தி
தித்தி - த்ருத்தி (இ.வே.)
துருத்துதல் = முன்தள்ளுதல். துருத்து - துருத்தி = காற்றை முன் தள்ளும் உலைக்களத் தோற்கருவி, நீரை முன்வீசுங் கருவி, ஊதும் தோலிசைக்கருவி, முன்தள்ளிய வயிறு.
துருத்தி - துத்தி - தித்தி.
வடவர் காட்டும் த்ரூ (d) என்னும் சொற்குப் பிளத்தல் என்பதே பொருள். (வ.வ.178)
திமி
திமி - திம, திமீ
திம்மை = பருமன், தெ. திம்மெ.
திம்மன் = பருத்த ஆண்குரங்கு. க. திம்ம, தெ. திம்மடு.
திம்மலி = பருத்தவள். திம் - திமி = எல்லாவற்றுள்ளும் பருத்த மீன். (வ.வ. 178)
திரவிடம் என்பதே தீது
நாடுகளெல்லாம் பெரும்பாலும் மொழி யடிப்படையிலேயே அமைந் திருப்பதனாலும், அதன் வழியாகவே முன்னேறுவ தாலும், தமிழர் யாவரும் தமிழ்ப் பற்றுக்கொண்டிருத்தல் வேண்டும். எந்நாட்டாராயினும், தமிழ்ப்பற்றுடையார் தமிழரே. இந் நாட்டா ராயினும், அஃதில்லார் அயலாரே.
தமிழ்ப் பெயரே தாங்குதலும், இயன்றவரை தூயதமிழிற் பேசுதலும், எழுதுதலும், திருமணமும், சடங்குகளும் கோயில் வழிபாடும் தமிழிலேயே நடப்பித்தலும், மக்கள் உலகத்தில் தேவமொழியில்லை யென நம்புதலும், இந்திக் கட்டாயக் கல்வியைத் தமிழ்நாட்டில் அடியோதொழித்தலும், தமிழ்நாட் டிற்குத் தமிழ் நாடென்று பெயரிடுதலும், தமிழன் என்பதற்கு அடையாளமாம். தமிழிற்கு இடைக்காலத்தில் நேர்ந்த இழிவினால் பல தென்சொற்கள் வழக்கற்றுப் போயின. அவற்றை மீண்டும் வழக்கிற்குக் கொண்டு வருதல் வேண்டும்.
கால்டுவெல் கண்காணியார் முதன்முறையாகத் திராவிட மொழிகளை ஆய்ந்ததினாலும், அக் காலத்தில் தமிழ்த் தூய்மை யுணர்ச்சி யின்மையாலும், தமிழைத் திரவிடத்தினின்று வேறு படுத்திக்காட்டத் தேவையில்லாதிருந்தது. இக் காலத்திலோ, ஆராய்ச்சி மிகுந்துவிட்டதனாலும், வடமொழியும் இந்தியும் பற்றிய கொள்கையில், தமிழர்க்கும் பிற இன மொழியாளர்க்கும் வேறுபாடிருப்பதனாலும், தமிழென்றும், பிற இனமொழி களையே திரவிடம் என்றும் வேறுபடுத்திக் காட்டுதல் இன்றியமை யாததாம்.
தமிழ் தூய்மையான தென்மொழி யென்றும், திரவிடம் ஆரியங் கலந்த தென்மொழி யென்றும் வேறுபாடறிதல் வேண்டும். பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாதது போல், வடமொழி கலந்து ஆரிய வண்ணமாய்ப் போன திரவிடம் மீண்டும் தமிழாகாது. வடமொழிக் கலப்பால் திரவிடம் உயரும்: தமிழ் தாழும். ஆதலால், வட சொல் சேரச் சேரத் திரவிடத்திற்கு உயர்வு: அது தீரத்தீரத் தமிழிற்கு உயர்வு. திரவிடம் என்ற மொழி
நிலையே வடமொழிக் கலப்பால்தான் நேர்ந்தது. அல்லாக்கால் அது கொடுந்தமிழ் என்றே பண்டுபோற் கூறப்படும். தமிழ் தனித்தியங்கும்: திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.
இங்ஙனம், வடமொழியை நட்பாகக் கொள்ளும் திரவிடத்திற்கும் பகையாகக் கொள்ளும் தமிழிற்கும், ஒரு சிறிதும் நேர்த்தம் இருக்கமுடியாது: ஆதலால் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றித் திரவிடம், திரவிடன், திரவிட நாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது. திரவிடம் அரையாரியமும் முக்காலாரியமு மாதலால், அதனோடு தமிழை இணைப்பின், அழுகலோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல் கெட்டுப்போம். பின்பு தமிழு மிராது, தமிழனு மிரான், இந்தியா முழுவதும் ஆரியமாய் விடும்.
தமிழ், திரவிட மொழிகளைப்போல ஆரியச் சார்பு கொள்ளாமை யாலும், வட மொழியையும் இந்தியையும் ஏற்காததாலும், தமிழ் நாட்டிற்கு மொழியியல் தன்னாட்சி (lingusitic autonomy) பெறுதல் வேண்டும். போக்குவரத்து, தற்காப்பு, வெளிநாட்டுறவு ஆகிய முத்துறையிலும், இந்தியக் கூட்டரசு அடங்கியிருக்கலாம்.
……….âuhÉl முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு என்னுங் கொள்கையை விட்டுவிட்டுத் திராவிட நாடு என்னும் பொருத்தமற்ற கொள்கையை¡கடைப்பிடித்தும்,தமக்கு¤தாkமுட்டுக்கட்டையிட்டு¡கொண்டது. இவை நீங்கினாலொழிய முன்னேற்றமும் வெற்றியு மில்லை.
தமிழ் என்னுஞ் சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும், திராவிடம்என்னுŠசொல்லிšஇல்லை. திராவிடம் பனிமலை (இமயம்)வரை பரவியுள்ளது.
தமிழ் சென்னையைத் தலைநகராகக் கொண்ட தென்னாட்டில் மட்டுமுள்ளது. தமிழ் வேறு, திராவிடம் வேறு. தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது, பாலையும் தயிரையும் கலப்பது போன்றதே.
தமிழ்நாடு பிரிந்தபின், குரைந்தபட்சம் தென்னாட்டுத் திரவிட ரெல்லாம் தமிழரொடு கூடி மிகப் பரந்த புலனங்களில் (விஷயங் களில்) ஒரு கூட்டொப்பந்தம் செய்யும்போதே தி.மு.க. சொல்லும் திரவிடம் தோன்றும். அதற்கு இன்று jமிழர்மட்டுமேKaல்வது,வhdத்துமீனு¡குவன்ùண்டிலிட்டகjயேயா«.
இதுfhW§ கூறியவற்றால், உண்மை நிலையை உள்ளவா றுணர்ந்து, நடைமுறைக் கொவ்வாத வீண் கொள்கைகளையும் வீறாப்புக்களையும் விட்டுவிட்டு, எடுத்த முயற்சி இடையூறின்றி வெற்றிபெறுதற் பொருட்டு, பொதுநலத்தை முன்வைத்து ஒற்று மையாகப் போராடி, முன்னேற்றப்பாதையில் முனைந்து செல்க. (தமிழ் இதழில் வெளியான கட்டுரையிலிருந்து)
திரவிடம் தென்சொல்லின் திரிபே
திரவிடம் அல்லது திராவிடம் என்னும் சொல் எம் மொழியது என்பது இன்றும் பலர்க்குத் தெரியாதிருப்பதானும், அண்மையில் அதுபற்றி ஓர் ஐயவினா தோன்றியதானும் அம் மயக்கை அறவே அறுத்தற்கு எழுந்ததிக் கட்டுரை.
நாட்டுப் பெயர்களும் மொழிப் பெயர்களும் பண்டைக் காலத்து அம் ஈறு பெற்றே வழங்கின என்பது,
அங்கம் வங்கம் கலிங்கம் கௌசிகம்
சிந்து சோனகம் திரவிடம் சிங்களம்
மகதம் கோசலம் மராடம் கொங்கணம்
துளுவம் சாவகம் சீனம் காம்போசம்
பருணம்பப் பரமெனப் பதினெண்பாடை
என்னும் திவாகர நூற்பாவும்,
சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம்
கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே
என்னும் பழஞ் செய்யுளும் உணர்த்தும், இம் முறைபற்றித் தமிழும் தமிழம் என வழங்கிற்று. இதனாலேயே, ஈறுகெட்ட மகர வீற்றுப் புணர்ச்சியாக, தமிழப்பிள்ளை, தமிழநாகன், தமிழவளவன் முதலிய புணர்மொழிகளும் தோன்றின. நன்னூலார் இவற்றைத் தமிழ் என்னும் நிலைமொழி அகரச் சாரியை பெற்றுப் புணர்ந்த தென்றும், தொல்காப்பியர் அம் மொழி அக்குச் சாரியை பெற்றுப் புணர்ந்ததென்றும், கூறினர். இவர் கூற்றின்படி, கொங்கவண்ணான் என்பதைக் கொங்கு என்னும் நிலைமொழி அகர அல்லது அக்குச் சாரியை பெற்றுப் புணர்ந்ததாகவும், துளுவ வேளாளன் என்பதைத் துளு என்னும் நிலைமொழி அவ்வாறு புணர்ந்ததாகவும், கொள்ளவேண்டி வருமாதலின், அது பொருந்தாதென விடுக்க.
தமிழ் என்னும் சொல் முதலாவது வடமொழியில் திரிந்த வடிவம் த்ரமிளம் என்பதே. ழகரம் வட மொழியிலின்மையாலும், உயிர்மெய்ம்முதலை மெய்ம்முதலாக்கி ரகரத்தை வழிச்செருகல் அம் மொழிக் கியல்பாதலானும், அச் சொல் அம் மொழியில் அவ்வடிவை அடைந்ததென்க. திரமிளம் என்பது தமிழ் எனத் திரிதலுமது என்று பிரயோக விவேக நூலார் (பக்.4) தலைகீழாகக் கூறிய கூற்றில், அவ்வடிவே ஆளப் பெறுதல் காண்க.
கால்டுவெல் புராணங்களின் பழைய மலையாள மொழிபெயர்ப்பு களிலெல்லாம் இவ்வடிவே பெருவழக்காயிருப்பதாகக் குண்டர்ட்டு கூறுவதாகவும் அவர் எடுத்துரைப்பார். திரமிளம் என்னும் சொல்லிற்கு (1) பஞ்ச திராவிட தேசங்கள், (2) தமிழ் என இரு பொருள் கூறும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியும்,
த்ரமிளம் என்பது பின்பு த்ரமிடம் எனத் திரிந்தது, த்ரமிடம் என்பதும் சிறிது காலத்தின்பின் த்ரவிடம் எனத் திரியலாயிற்று. இவ் விறுதி வடிவத்தின் நீட்சியே த்ராவிடம் என்பது, இது தமிழில் திராவிடம் என்றாகும்.
த்ரமிளம், த்ரமிடம், த்ரவிடம் என்னுஞ் ரகரஞ் செருகிய வடிவு களெல்லாம், வடமொழி வழக்கேயன்றிப் பிறமொழி அல்லது பிறநாட்டு வழக்கல்ல. பிறமொழிகளெல்லாம் தமிழிற்போல் ரகரமற்ற வடிவே வழங்கும். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இந்தியா விற்கு வந்த இவென் திசாங் (Hwen Thsang) என்னும் சீன வழிப் போக்கர் குறிப்பில், சிமொலொ (Tchimo - lo) என்னும் வடிவம் உள்ளது. இதைத் திமல (Dimala) அல்லது திமர (Dimara) என்றும் படிக்கலாம் என்பர் கால்டுவெல். பாலி மொழியிலுள்ள மகா வமிசம் (mahavamso)v‹D« இலங்கை வரலாற்றில் தமிலொ (Damilo) என்னும் வடிவம் உள்ளது. ஐரோப்பியர் பொதுவாகத் தமுல் (Tamul) என்றனர். அவருள் தேனிய விடையூழியர் (Danish missionaries) மட்டும் தமுலிக்க மொழி (Lingua Damulica)vd அழைத்தனர். ஆங்கிலத்தில் தமிழ் என்னும் வடிவம் வழங்கு கின்றது. தமிழகம் என்னும் பெயர், மேனாட்டுப் பழைய தேசப் படங்களிலும் ஞாலநூற் சுவடிகளிலும் தமிரிக்கெ (Damirice) என்றும், திமிரிக்க (Dimirica) என்றும் வழங்கப்பட்டுள்ளது.
முழுகிப்போன குமரிக்கண்டத்தில் கி.மு. (ஏறத்தாழ) ஐம்பதினா யிரம் ஆண்டுகட்குமுன் முளைத்தெழுந்ததும், திரவிட மொழிகட் கெல்லாந்தாயுமான பழந்தமிழ் ஒரு காலத்தில் பனிமலை (இமயம்)வரை பரவியிருந்ததாலும், கி.மு.1000 ஆண்டுகட்குப் பின்னரே தெலுங்கு முதலிய திரவிட மொழிகள் அதனின்று கிளைத்ததாலும், அவற்றுள்ளும் ஒரு மொழியிலும் கி.பி.9ஆம் நூற்றாண்டிற்குமுன் இலக்கியந் தோன்றாமையாலும், திரவிடம் என்னும் பெயர் தமிழையும் தமிழினத்தையும் தமிழ் நாட்டையுமே முதற்காலத்தில் குறித்துநின்றது. தமிழினின்று திரவிட மொழிகள் கிளைத்த பின்பும், திரவிடம் என்னும் சொல் தமிழைத் தனிப்படக் குறிக்கும் வழக்கும் கால்டுவெல் காலம் வரை தொடர்ந்து வந்திருந்ததாகத் தெரிகின்றது.
பிள்ளை லோகாரிய சீயர் (500 ஆண்டுகட்கு முன்)
நெஞ்சுக் கிறாள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம், தமிழ நன்னூற்றுறைகள்
அஞ்சுக் கிலக்கியம் ஆரண சாரம் பரசமயப்
பஞ்சுக் கனலின் பொறிபர காலன் பனுவல்களே
என்ற பெரிய திருமொழிச் சிறப்புப் பாயிரத்தில், தமிழ நன்னூற்றுறை களஞ்சுக்கு என்பதன் பொருளை விளக்குமிடத்து, திரவிட சாதிரம், எழுத்து சொல் பொருள் யாப்பு அலங்காரம் என்கிற விலக்கணமான பஞ்ச லக்ஷணத்தோடே கூடியவாறே நிற்பது என வரைந்திருக்கின்றார்.
18ஆம் நூற்றாண்டில் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்திருந்த தாயுமான அடிகள் பாடிய கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் செய்யுளில்,
……tlbkhÊÆny
வல்லான் ஒருத்தன்வர வுந்திரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன்
வல்லதமி ழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியில்
வசனங்கள் சிறிது புகல்வேன்
என்னும் பகுதியில், திரவிடம் தமிழ் என்னும் இரு சொல்லும் ஒரு மொழியையே குறிக்கின்றன. ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரத் தெய்வப்பனுவல்கள், தமிழ் வேதம், திரவிட வேதம், திரவிடப் பிரபந்தம் என்னும் பெயர்களால் வழங்குகின்றன.
பாகவத புராணத்தில், சத்திய விரதன் என்னும் பெயராற் குறிக்கப்படும் ஒரு தமிழரசன் திரவிடபதி எனப்படுகின்றான். திரவிடம் என்னும் சொல்லுக்கு, தமிழ்நாடு என்னும் பொருளும் அகராதிகளிற் குறிக்கப்பட்டுள்ளது.
ஆரியர் இந்தியாவிற் குடிபுகுந்து வட இந்தியா முழுதும் பரவியபின் குமரிலபட்டர் காலம் (7ஆம் நூற்றாண்டு) வரை தென்னாடும், தென்னாட்டு மக்களினங்களும் அவை பேசிய மொழிகளும், தமிழின் தலைமைபற்றி, திரவிடம் என்றே அழைக்கப்பட்டு வந்தன.
மனு, தம் (ஆரிய) அற நூலில் (10:43.44) ஆரியரல்லாத பல்வேறு
இனத்தாரைக் குறிக்குமிடத்துதமிழரையும்தெலுங்கர் முதலிய திராவிடரையும் வேறுபடுத்தாது அவரெல்லாரையும் ஒருங்கேதழுவுமாறு-திராவிடர் என்னும் சொல்லையே ஆண்டிருக்கின்றார். விந்தியமலைக்குத் தெற்கில்வந்து குடியேறியபிராமணரும், திராவிடப்பிராமணர் எனப்பட்டனர்.இது நாடு பற்றியதே யன்றி இனம்பற்றியதன்று. மலேயாத் தமிழர், தென்னாப்பிரிக்கத் தமிழர் என்னும் வழக்கை நோக்குக. இம்முறை பற்றியே, தேவார மூவருள் ஒருவரான திருஞான சம்பந்தரும் திராவிட சிசு எனப் பட்டார். வட நாட்டு மொழிநூலறிஞர்.முதற்கண், (ஆரிய)வேத காலத்து இந்திய வட்டார மொழிகளைச் சமற்கிருதத்திற்கு முந்தி யுண்மைபற்றிப் பிராகிருதம் என அழைத்தனர். அவற்றில் அளவிறந்த ஆரியர் சொற்கள் கலந்து சிதைந்த வடிவிற் காணப்படுவது பற்றி, பிற்காலத்தார் அம்மொழிகளை வடமொழி (சமற்கிருத )வழியினவாகப் பிறழவுணர்ந்தனர். இதே கரணம் பற்றி, பழஞ்சேர நட்டுத்தமிழ்த்திரிபாகியமiலயாளத்தைவடமழியினின்றுவந்ததாகஇன்றுசிலர்கூறுவதுகாண்க.
கி.மு.3ஆம் நூற்றாண்டினராகக் கருதப்படும் காத்தியாயனர், பைசாசி, சௌரசேனி, மாகதி, மகாராட்டிரி எனப் பிராகிருத மொழிகளை நான்காகவே கொண்டனர். திராவிடத்தை அவர் கொள்ளாதது அறியாமையோ புறக் கணிப்போ அறிகிலம்.ஒருகால் மகாராட்டிரியில் அதை அடக்கினர் போலும், பிற்காலத்தாசிரியர் சிலர் திராவிடி என்பது ஒரு சிறுதரப் பிராகிருதம் என்றனர். ஆயின் 19ஆம் நூற்றாண்டிலிருந்த பாபு ராசேந்திரலால் மித்திரா என்னும் வங்காளர், அதை சூரசேனியோ டொத்த பெரும் பிராகிருதம் எனக் கூறினர்.
தமிழினின்று முதலாவது பிரிந்த திரவிட மொழி, தெலுங்காகும். அது வட திசையில் தோன்றியமைபற்றி வடுகு எனப்பட்டது. குமரிலபட்டர் காலத்தில் தெலுங்கு தனித்துக் கூறப்படுமளவு வளர்ச்சியடைந்துவிட்டதனால், அவர் அதுவரை திராவிடம் என்னும் பொதுப் பெயராலேயே வழங்கிய செந்தமிழையும் கொடுந்தமிழ்களையும், தெலுங்கு தமிழ் மொழி என்னும் பொருள்பட ஆந்திர திராவிட பாசை என்றனர். தெலுங்கிற்குப் பின் தமிழினின்று பிரிந்த பெருமொழி கன்னடம். அதனால் வடகலை தென்கலை வடுகு கன்னடம் எனக் கம்பராமாயணச் சிறப்புப்பாயிரச் செய்யுளொன்றில் கன்னடமும் சேர்க்கப் பெற்றது. 12ஆம் நூற்றாண்டிற்குப்பின், மலையாளம், துளு, குடகம் முதலிய பிற கொடுந்தமிழ்களும் பிரிந்து போயின. சென்ற நூற்றாண்டில் கால்டுவெல் திரவிட மொழிகள் பதின்மூன்றெனக் கணக்கிட்டார். இன்றோ அவை பத்தொன்பதெனப் பரோ, எமனோ என்னும் இரு மேலை மொழி நூல் வல்லாரால் கணக் கிடப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் திரவிடம் பரவியிருந்த தென்பதற்கு, இன்றும் பெலுச்சித்தானத்தில் பிராகுவியும், வங்காளத்தில் இராசமகாலும் வழங்கிவருவதே போதிய சான்றாம். ஆரியர் வந்து வட இந்தியா முழுவதும் பரவியபின், விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள மொழிகளெல்லாம் திரவிடம் என்னுங் கொள்கையிருந்தது. அதனாலேயே, தெலுங்கு, கருநாடகம், மராத்தி, கூர்ச்சரம் (குசராத்தி), திராவிடம் என்னும் ஐந்தும் பஞ்ச திராவிடம் என்று வட நூல்களும் கூறின. இப் பட்டியல் திராவிடம் என்னும் பெயர் தமிழைமட்டுங் குறித்தல் கவனிக்கத்தக்கது. திராவிட(ம்) என்பது சில வட நூல்களில் திராவிர(ம்) என்றும் திரிந்தது. டகரம் ரகரமானது போலி.
இதுகாறுங் கூறியவற்றால், தொன்று தொட்டுத் தமிழையே தனிப்படவும் தலைமையாகவும் குறித்துவந்த திரவிடம் என்னும் சொல், தமிழம் என்பதன் திரிபே என்பது, வரலாற்றுணர்ச்சி யுடையார்க்கெல்லாம் தெற்றென விளங்குதல் திண்ணம். ஆயினும், ஆனைக்கும் அடி சறுக்கும் என்னும் பழமொழிக்கேற்ப, கால்டு வெல் திரவிடம் என்னும் சொல்லே முறையே, (த்ரவிடம் - த்ரமிடம் - த்ரமிள - தமிழ்) எனத் திரிந்ததென்று தலைகீழாகக் கொண்டார். ஆயின், கிரையர்சன் அதைத் திருத்தி உண்மையைக் கூறியது மகிழ்ச்சிக்குரியது. எனினும், இன்றும் சிலர் மயங்கு வதற்குக் காரணம் வரலாற்றறிவின்மையே. ஆரியர் இந்தியாவிற் கால் வைத்து கி.மு.3000 ஆண்டெல்லையென்றும், தமிழ் முழு வளர்ச்சியடைந்து முத்தமிழாய் வழங்கிய தலைக்கழகக் காலம் கி.மு.10,000 ஆண்டெல்லையென்றும், அறியின், ஒருவரும் ஐயுறார் என்பது தேற்றம். வடமொழியில் நூற்றுக்கணக்கான தென்சொற்க ளிருந்தும் அவற்றையெல்லாம் வடசொல்லெனக் காட்டுவதையே வடமொழி யகராதிகளெல்லாம் கோட் பாடாகக் கொண்டிருக்கின்றன. வடமொழி தேவமொழியெனும் மயக்கு புலவருள்ளத்திலு மிருந்ததினால் கம்பர் அதைத் தேவபாடை என்றார். தொல்காப்பியச் சொல்லதிகார வுரையில் (401) தமிழ்ச் சொல் வடபாடைக்கட் செல்லாமை யானும், வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாதலானும் எனவுரைத்தார் சேனாவரையர். இத்தகைய நிலைகள், வடவர் திரவிடம் என்னும் சொற்குப் பொருந்தப் பொய்த்தலாகச் சில பொருட் காரணம் காட்டத் தூண்டின. த்ரு என்னும் வடமொழி வேர் துரத்துதற் பொருள் தருவதென்றும், ஆரியரால் தெற்கே துரத்தப்பட்டவர் திரவிடர் எனப்பட்டனர் என்றும் கூறுவர் ஒரு சாரார். திரவிடம் என்பது தெற்கு என்று பொருள்படுவதென்றும், தென்கோடி மாகாணத்தார் திரவிடர் எனப்பட்டனர் என்றும் கூறுவர் மற்றொரு சாரார். திரவிடம் தெற்கேயிருப்பதினாலேயே, திரவிடம் என்னும் சொற்குத் தெற்கென்னும் வழிப்பொருள் தோன்றிற்று. சிவஞான முனிவர் உள்ளதைக் கொண்டு நல்லதைப் பண்ணும் முறையில், துரத்துதல் அல்லது ஓட்டுதல் என்னும் வேர்ப்பொருளை ஒப்புக் கொண்டு, தீவினை யகற்றும் அற நூல்கள் தமிழிற் சிறந்திருப்பது பற்றி, தம் காஞ்சிப்புராணத்தில்,
எவ்வினையும் ஓப்புதலால்
திராவிடம் என்றியல் பாடை
என்று பாடினார்.
த்ரு என்பது வடமொழி வேர் துர என்னும் தமிழ் வேரின் திரிவே. இத் தமிழ்வேர் மேலையாரியத்தில் தியூத்தானியம் என்னும் கிளையிலும் சென்று வழங்குகின்றது.
செருமன்: treiben - பண்டை ஆங்கிலம் drifen
ஆங்கிலம்: drive.
துரத்தல் என்பது ஓட்டுதல்.
ஆகவே, வடமொழியார் கூறும் இரு பொருளும், திராவிடம் என்னும் சொல்லை வடசொல்லாகக் காட்ட இயலாமை காண்க.
இனி, ஒரு சில தமிழர், திரு + இடம் = திருவிடம் - திரவிடம் - திராவிடம் என வந்ததாகக் காட்டுவர். இவ் வரலாறு உத்திக்குப் பொருந்தாமையோடு சான்றும் அற்றது. ஒருசார் இளம்புலவர், திரு + இடம் = திராவிடம் எனப் புணர்த்து,
அன்று வருகாலை ஆவாகுதலும்
செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப (258)
என்னும் தொல்காப்பிய விதியையும்,
அது முன் வருமன் றான்றாந் தூக்கின் (180)
என்னும் நன்னூல் விதியையும் துணையாகக் காட்டுவர். அது + அன்று என்பது. அதன்று என்று புணர்ந்து செய்யுளில் அதா அன்று என்று அளபெடுத்த நிலையையே மேற்காட்டிய விதிகள் குறிப்பதால், அவர் கூற்று சற்றும் பொருந்தாததென விடுக்க. மேலும், அவர் கருத்துப்படி, திரு + இடம் என்பது திரீடம் அல்லது திரீயிடம் என்றே புணரவேண்டும் என்க.
இதுகாறும் கூறியவற்றால், திரவிடம் என்பது தென் சொல்லே யென்று தெளிக.
தமிழ் என்பது தூய்மையான தமிழையும், திரவிடம் என்பது தமிழினின்று திரிந்த தெலுங்கு, கன்னட முதலிய இனமொழி களையும் இன்று குறிக்குமென்க. வடமொழியில் உயிர்மெய்ம் முதலை மெய்ம்முதலாக்கி ரகரத்தை வழிச்செருகற்கு, படி - ப்ரதி, பவழம் - ப்ரவாளம் என்பன எடுத்துக் காட்டுகள். (தென்றல் 19.9.1959.)
திரவிட மொழிப் பகுப்பு
தென்னிந்திய மொழிக்குடும்பத்தைக் கால்டுவெல் கண்காணியார் முதன்முதலாக ஆராய்ந்ததினால், தமிழையும் அதனோடு
தொடர் புள்ள பிறமொழிகளையும் வேறுபடுத்தாது, திரவிடம் என்னும் ஒரே பெயராற் குறித்தார். ஆயின், இன்று தெலுங்கு கன்னட மலையாள நாடுகள் வெவ்வேறு பிரிந்து போனமை யாலும், தமிழ் ஒன்றே ஆரியத்தை எதிர்த்துத் தன் தூய்மையைப் போற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளமையாலும், வடசொற்கள் சேரச் சேரத் தெலுங்கு கன்னட மலையாளத்திற்கும் தீரத்தீரத் தமிழுக் கும் உயர்வு ஏற்படுவதனாலும், இந்தியும் வடமொழியும் பற்றிய கொள்கையில் தமிழர்க்கும் அவர்தம் இனமொழியாளர்க்கும் நேர்மாறான கருத்துண்மையாலும், தெலுங்கு, கன்னடம் முதலிய இனமொழிகளையும் புறக்கணிக்கும் நிலை தமிழுக்கு ஏற்பட்டு விட்டதனாலும், தமிழைத் தமிழ் என்றும், அதன் இனமொழி களையே திரவிடம் என்றும் பிரித்துக்கூறல் வேண்டும். அவ்விரு கூறுகளையும் இணைத்துக் குறிப்பதற்குத் தென்மொழி என்னும் சொல்லை ஆளவேண்டும். இவற்றிற்கு ஆங்கிலத்தில் முறையே, Tamil, Dravidian, Tamilic or South Indian என்னும் சொற்களை ஆளலாம்.
தமிழ் என்னும் சொல் திரவிடம் என்று திரிந்தது போன்றே, தமிழம் என்னும் மொழியும் பல திரவிட மொழிகளாகத் திரிந்திருப்பதனால், திரவிடம் என்னும் சொல்லால் திரவிட மொழிகளைக் குறிப்பது தக்கதே. வடமொழி என்னும் பெயர் பல வடநாட்டு மொழிகளையும் ஆரியத்துள் அடக்குவதுபோல், தென்மொழி என்னும் பெயரும் பல தென்னாட்டு மொழி களையும் தமிழுள் அடக்கும்.
தியூத்தானியம் (Teutonic) என்னும் ஒரே வகுப்பைச் சேர்ந்த செருமானியம், தச்சம் (Dutch). ஆங்கிலம் முதலிய மொழிகள் எங்ஙனம் திரும்ப ஒன்று சேராவோ, அங்ஙனமே தென்மொழியம் என்னும் வகுப்பைச் சேர்ந்த தமிழும் திரவிடமும் ஒன்று சேரா. பால் திரைந்து தயிரானபின் மீளப் பாலாகாததுபோல், தமிழ் திரிந்து திரவிடமானபின் மீளத் தமிழாகாது. இங்கு மொழி கட்குச் சொன்னது நாடுகட்கும் ஒக்கும்.
திரவிடம் என்னுஞ் சொல் முதலாவது தமிழையே குறித்த தென்றும், நாலாயிரத் தெய்வப் பனுவல் திரவிட வேதமென்னும் மெய் கண்டான் நூலுக்குச் சிவஞான முனிவர் வரைந்த அகல வுரை திராவிட மாபாடியம் என்னும் பெயர் பெற்றுள்ளனவென் றும், தனித்தமிழாராய்ச்சியில்லாத பண்டை நிலைமையைக் கூறி, தமிழ்நாட்டையும் பிரிந்துபோன திரவிட நாடுகளையும் ஒன்றாய் இணைக்க முயல்பவர், கறந்த பாலைக் காம்பிற்கேற்றுபவரே யாவர்.ஆயின் அரசியற் கொள்கையொப்புமை பற்றி, தமிழ்நாடும் திரவிட நாடுகளும் ஒரு கூட்டாட்சி அமைக்கலாம்.
கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே, குமரிலபட்டர் ஆந்திர - திராவிட பாஷா என்று தெலுங்கைத் தமிழினின்று பிரித்துக் கூறிவிட்டார். கன்னடமும் மலையாளமும் அதன் பின்பே தமிழினின்று பிரிந்தன. தமிழ் நாடும் ஆந்திர மைசூர் கேரளமாகிய முத்திராவிட நாடுகளும் அண்மையில் தான் பிரிந்து போயின. அவை மீளவும் ஒன்று சேரும் நிலைமையிருப்பின், முன்னர்ப் பிரிந்தே போயிரா. மேலும்,
கன்னடமுங் களிதெலுங்குங் கவின் மலையாளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
என்று பேரா. சுந்தரம்பிள்ளையவர்கள் கூறியது, பழந்தமிழைப் பொறுத்தவரையில் உயர்வு நவிற்சியா யிராது உண்மை நவிற்சியா யிருப்பதால், தமிழையும் அதன் இன மொழிகளையும் வேறு பிரித்துக் கூறுதற்கு மற்றுமொரு கரணியமுள்ளது. பழந்தமிழுக்கும் இற்றைத் தமிழுக்குமுள்ள வேறுபாடு மிகச்சிறிதே. இலத்தீனுக்கும் இத்தாலியம், பிரரெஞ்சியம், இசுபானியம், போர்த்துக்கீசியம் முதலிய மொழிகட்கும் இடைப்பட்ட உறவே, தமிழுக்கும் தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழிகட்கும் இடைப்பட்டதாகும்.
தமிழல்லாத ஒரு மொழி திராவிடத்தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததேயில்லை. மொழித்துறைக்குச் சொன்னதே இனத் துறைக்கும், திரவிடமுன்னையர் (Pre-Dravidians”) என்றோ மூலத் திரவிடர் (Proto - Dravidians) என்றோ திரவிடர் (Dravidians) என்றோ வேறுபாடிருந்ததாக நமக்குத் தோன்றவில்லை. இவர் களெல்லாம் புதுக்காலத்தினின்றும் அதற்கு முன்பிருந்தும் வந்த மக்களின் நேர்வழித் தோன்றிய ஓரினத்தாரே. என்று இராம சந்திர தீட்சிதர் கூறியிருத்தலையும் காண்க. (Pre-Historic South India, p.246)
திராவிடம் என்னுஞ் சொன்மூலம்
பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும்அம் ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின.
கா: ஈழம், கடாரம், சீனம், யவனம்.
தமிழம் - த்ரமிள(ம்) - த்ரமிட(ம்) - த்ரவிட(ம்) -த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும்.
தமிழம் என்பது தமிள - தவிள - தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, பண்டிதர் கிரையர்சன் (Dr. Grierson) TWt®.Linguistic Survey of India, Vol.IV,p.298. எங்ஙனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை.
கால்டுவெல் ஐயர் இதுபற்றித் தலைகீழாகக் கூறினர். அவர் தவற்றைக் கிரையர்சனுங் குறித்துள்ளார்.
திராவிட மொழிகள் எல்லாவற்றிற்கும், தமிழம் என்னும் பெயரே பொதுப்பெயராக முதலாவது வழங்கி வந்தது. த்ராவிடம் என்னும் வடிவும், தமிழம் என்னும் பொருளிலேயே, முதன் முதல் வழங்கியதாகும். தெலுங்கு தமிழினின்றும் பிரிந்துபோன பின்பு, முன்பு ஒன்றாயெண்ணப்பட்ட திராவிட மொழி இரண்டாய்க் கருதப்பட்டு, ஆந்திர திராவிட பாஷா என்னும் இணைப்
பெயராற் குறிக்கப்பட்டது. அதன்பின், கன்னடம், மலையாளம் முதலிய மொழிகள் பிரிந்து திராவிடம் பல்கியபின், தமிழம் என்னும் பெயரின் மறுவடிவமான தமிழ் திராவிடம் என்னும் சொற்களுள், முன்னது தமிழ்மொழிக்கும் பின்னது திராவிட மொழிகள் எல்லாவற்றுக்குமாக வரையறுக்கப்பட்டன.
இதுகாறும் கூறியவற்றால், தமிழே திராவிட மொழிகட்குள் மிகத் தொன்மையானதும் மிகத் திருந்தியதும், மிக வளமுள்ள தும், அதனால் மிகச்சிறந்த திராவிட எச்சமானதும் என்றறிந்து கொள்க.
திராவிடம் வடக்குநோக்கித் திரிதல்
i. தமிழ்நாட்டில், பாண்டிநாட்டுப் பகுதியாகிய தென்பாகமே இன்றும் தமிழுக்குச் சிறந்ததாக வுளது.
பாண்டியனுக்குத் தமிழ்நாடன் என்ற பெயர் திவாகரத்திற் கூறப் பட்டுள்ளது. ஆகவே, பாண்டிநாடு தமிழ்நாடெனச் சிறப்பிக்கப் பட்டதாகும்.
சோழநாட்டைத் தமிழ்நாடென்றும், தொண்டைநாட்டைச் சான்றோருடைத்து என்றும் கூறியது பிற்காலமாகும். தமிழ ரசர்க்குள், முதலாவது ஆரியத்திற்கு முற்றும் அடிமைப் பட்டவன் பாண்டியன். அதனாலேயே, இன்று தென்பாகத்தில் வடபாகத்தி லிருப்பது போன்ற தமிழுணர்ச்சியில்லை. ஆயினும், நாட்டுப் புறத்திலுள்ள குடியானவர்களிடைப் பண்டைத் தமிழ்ச்சொற்களும் வழக்குகளும் பல இன்றும் அழியாதிருந்து, பாண்டி நாட்டின் பழம் பெருமையை ஒரு சிறிது காத்துக்கொண் டிருக்கின்றன.
2. தமிழ்நாட்டில் தென்பாகம் சிறந்ததென்பதற்குக் காரணங்கள்
1. தமிழை வளர்த்த அல்லது காத்த மூன்று கழகங்களும் பாண்டி நாட்டிலிருந்தமை.
2. வடபாகத்தில் வழங்காத பல சொற்களும் பழமொழிகளும் வழங்கல்.
3. வடசொற்கள் தற்பவமாக வழங்கல்.
கா: சாக்ஷி - சாக்கி.
சுத்தம், மிராசுதார் முதலிய சொற்களுக்குத் துப்புரவு, பண்ணை யார் முதலிய தனித்தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன.
4. சொற்கள் உண்மை வடிவில் வழங்கல்.
கா: இராமம் - (நாமம்).
5. அயல்நாட்டினின்று வந்த பொருள்கட்குத் தமிழ்ப்பெயர் வழங்கல்.
கா: Bicycle - மிதிவண்டி.
6. வடபாகத்திலில்லாத பல பயிர்கள் செய்யப்படல்.
கா: காடைக்கண்ணி, சாமை, குதிரைவாலி.
7. ஓவியவுணர்ச்சி சிறந்திருத்தல்.
8. சல்லிக்கட்டு, சிலம்பம் முதலிய மறவிளையாட்டுகள் சிறப்பாய் வழங்கல்.
திருச்சிராப்பள்ளி யெல்லையிற் சொற்கள் குறைதல்.
கா: பரசு (Sweep) என்ற சொல் வழங்காமை.
வடார்க்காட்டு அல்லது சென்னைத்தமிழ் கொச்சைமிகல்.
பரசு (பீராய்), மூஞ்செலி (மூஞ்சூறு).
சென்னைக்கு வடக்கில் மொழிபெயர்தல்.
வடவேங்கடம் என்று, வேங்கடம் தமிழ்நாட்டின் வடவெல்லை யாகத் தொல்காப்பியப் பாயிரத்திற் கூறப்பட்டுள்ளது. ஆயினும், தமிழ்கூறும் நல்லுலகத்து என்றதனால், அதைச் செந்தமிழ் நாட்டின் வடவெல்லையாகக் கொள்வதே பொருத்தமாகும்.
வேங்கடம் இப்போது தெலுங்க நாட்டிற்கு உட்பட்டு விட்டது.
தெலுங்கு மிகுதியும் ஆரியத்தன்மையடைந்து, ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ளது.
தெலுங்கில் எழுத்தொலிகள் வடமொழியிற்போல் வல்லோசை பெறுகின்றன; வகரம் பகரமாகவும் ழகரம் டகரமாகவும் மாறுகின்றன; வடசொற்கள் மிகத் தாராளமாய் வழங்குகின்றன. ஒரு செய்யுள் பெரும்பாலும் வடசொற்களாயிருந்தால், மிகவுயர்ந்த தெலுங்காக மதிக்கப்படுகின்றது.
தெலுங்கு வடிவாகப் பல தென்சொற்கள் மேலையாரிய மொழிகளிலும் வழங்குகின்றன.
கா: தமிழ் தெலுங்கு ஆரியம்
விளி பிலு(ச்)சு L. pello
E. appeal, repeal etc
அள்(காது) அடுகு L. audio
E. audience,audible etc.
வரை விராசு E. write. A.S. writan
சால் சாலு L. satis, E. satisfy.
வண்டி, பண்டி பண்டி E. bandy
வெள்ளு Ger. wenden, A.S. wendan,
E. wend, to go.
கேள் என்னும் சொல், வினவு என்னும் பொருளில் தமிழில் வழங் குவதுபோல, அடுகு என்னும் சொல் தெலுங்கில் வழங்குகின்ற தென்க.
தெலுங்கிற்கு வடக்கில் ஆரியமொழி வழங்கல்
பண்டைக் காலத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குஜராத்தி என்னும் ஐந்தையும், ஆரியரே பஞ்ச த்ராவிடீ என்று அழைத்தனர். கால்டுவெல் ஐயர் இத்தொகுப்பை ஒப்புக்கொள்ள வில்லை. ஆயினும், இத்தொகுப்பு சரியானதே.
வட இந்தியாவில் திராவிட மறைவு
கோண்டி (Gondi), பத்ரீ (Bhatri), மால்ற்றோ (malto), போய் (Bhoi) முதலிய திராவிட மொழிகள், மெள்ள மெள்ள ஆரியமயமாவதை அல்லது மறைந்துபோவதைப் பண்டிதர் கிரையர்சன் 1906ஆம் ஆண்டே தமது இந்திய மொழிக் கணக்கீடு என்னும் நூலிற் குறித்துள்ளார். (L.S.I. Vol. IV, pp. 446, 472-4).
(VII) வட இந்திய மொழிகளில் திராவிட அடையாளம்
ஆரியர் வருமுன் வட இந்தியாவில் வழங்கிய திராவிட மொழிகள், அவர் வந்தபின் ஆரியத்தொடு கலந்துபோனமையால், ஆரியத்திற்கு மாறான பல திராவிட அமைதிகள் இன்றும் வடநாட்டு மொழிகளி லுள்ளன. அவையாவன:
1. பிரிக்கப்படும் ஈற்றுருபால் வேற்றுமையுணர்த்தல்.
2. ஈரெண்ணிற்கும் வேற்றுமையுரு பொன்றாயிருத்தல்.
3. முன்னிலையை உளப்படுத்துவதும் உளப்படுத்தாததுமான இரு தன்மைப்பன்மைப் பெயர்கள்.
4. முன்னொட்டுக்குப் பதிலாகப் பின்னொட்டு வழங்கல்.
5. வினையெச்சத்தாற் காலம் அமைதல்.
6. தழுவுஞ் சொற்றொடர் தழுவப்படுஞ் சொற்றொடர்க்கு முன்னிற்றல்.
7. தழுவுஞ்சொல் தழுவப்படுஞ்சொற்கு முன்னிற்றல். (Caldwell’s Comparative Grammar : Introduction, p. 59)
இந்தியில் பல தமிழ்ச்சொற்களும் இலக்கண அமைதிகளும் வழக்குகளும் வழங்குகின்றன.
சொற்கள்
தமிழ் இந்தி பொருள்
ஆம் ஹாம் லநள
இத்தனை இத்னா இவ்வளவு
உத்தனை உத்னா உவ்வளவு
உம்பர் உப்பர் மேலே
உழுந்து உடத் (ஒரு பயறு)
ஒரம் ஒர் பக்கம்
கடு கடா கடினமான
கிழான் கிஸான் உழவன்
சவை சபா அவை
செவ்வை சாப்வ் துப்புரவு
தடி சடீ கம்பு
தண் தண்டா குளிர்ந்த
தண்டம் தண்ட தண்டனை
தாடி டாடி தாடிமயிர்
நேரம் தேர் வேளை
படு பட் விழு
படு படா பெரிய
புகல் போல் சொல்
பூ பூல் மலர்
மாமா மாமா மாமன்
மாமி மாமீ அத்தை
முத்து மோத்தீ யீநயசட
மேல் மே (7ஆம் வே.உருபு)
முட்டி முட்டி மொழிப் பொருத்து
மூக்கு நாக்கு நாசி
மோட்டு மோட்டா பருமனான
வெண்டை பிண்டீ வெண்டைக்காய்
இலக்கண அமைதி
1. 4ஆம் வேற்றுமையுருபு தமிழில் கு என்றும் இந்தியில் கோ என்று மிருக்கின்றது.
2. இரு மொழிகளிலும் வேற்றுமையடியுடன் உருபு சேர்ந்து மூவிடப்பெயர்கள் வேற்றுமைப்படுகின்றன.
கா: என்மேல், முஜ்மே
3. தமிழில்இயஎன்பதும், இந்தியில் (முன்னிலையில்) இயே என்பதும் வியங்கோள் ஈறாகவுள்ளன.
4. மாறே (புறம். 4,20,22, 92-3,271,380: நற்.231) (மாறு + ஏ) என்பது இருமொழியிலும்ஏதுப் பொரு ளிடைச்சொல்லா யுள்ளது.
இந்தியில் கே என்னும் உருபோடு சேர்ந்தே வரும்.
5. இந்தியில், செயப்படுபொருள் குன்றாவினைப் பகுதிகள் ஆவ் (வா ஜாவ் போ) என்னும் ஏவலொருமையுடன் கூடி, இறந்த கால வினையெச்சப் பொருள்படும்.
கா: ஸூன் ஜாவ் = கேட்டுவிட்டுப்போ.
இங்ஙனம் தமிழிலுமுண்டு. ஆனால், வினைப்பகுதிகள் இறந்தகால வினையெச்சப் பொருள்படாமல் நிகழ்கால வினையெச்சப் பொருள்படும்.
கா: கேள்வா = கேட்கவ; கேள்போ = கேட்கப்போ.
6. இந்தியில் இறந்தகால வினையெச்சங்களும் முற்றுகளும் ஆண்பாலொருமையில் ஆகார வீறாயுள்ளன.
கா. ஆயா = வந்தான், வந்து.
போலா = சொன்னான், சொல்லி.
இவை செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சமே பண்டைத் தமிழிலும் வினைமுற்றாய் வழங்கிற்று. பாலுணர்த்தும் ஈறு பிற்காலத்திற் சேர்க்கப்பட்டது.
வழக்கு: பல்லைப் பிடுங்கிவிடு என்னும் வழக்கு செருக்கடக்கு என்னும் பொருளில், தாந்த் கட்டேகர்தோ என்றும், உயிரைக் கையிலேந்திக்கொண்டு ஒடு என்பது ஜான்லேக்கர் பாக் என்றும் இந்தியில் வழங்குதல் காண்க.
viii. இந்தியாவிற்கு மேற்கே பெலுச்சிதான மலைநாட்டில்
பிராஹூயீ என்னும் திராவிடச் சிறுபுன்மொழி வழங்கல்.
ix. பெலுச்சிதானத்திற்கப்பால் திராவிடமொழி வழங்கா
மையும், திராவிடச் சொற்களே வழங்குதலும்.
ஒரு மொழி தன்னாட்டிற் செவ்வையாயிருந்து, அயல்நாடு செல்லச்செல்லத் திரிவது இயல்பு. ஆங்கிலம் இங்கிலாந்தில் செவ்வையாகவும், இந்தியாவில் திரிந்தும், ஆப்பிரிக்கா சீனம் முதலிய இடங்களிற் சிதைந்தும் வழங்குகின்றது. இங்ஙனமே தமிழ் அல்லது திராவிட மொழி தென்னாட்டிற் செவ்வையாயும் வடக்கே செல்லச்செல்ல திரிந்தும் வழங்குவதினால், திராவிடரின் தொல்லகம் குமரிநாடேயென்பது துணியப்படும்.
திரிபன்றி யெய்தல்
மிக வுயரத்தில் விரைவாகச் சுழன்று கொண்டிருக்கும் சிறிய பன்றியுருவை ஒரே தடவையில் எய்து வீழ்த்துதல். (த.தி.4)
திரு (1)
கடவுள் பெயர்க்கும் அவரோடு தொடர்புள்ள பொருட் பெயர்க்கும் திரு என்னும் முன்னொட்டுச் சேர்க்கப்படுவது போன்றே அரசனுடைய பெயர்க்கும் அவனோடு தொடர்புள்ள பொருட் பெயர்க்கும் சேர்க்கப்படும்.
எ.டு. திருவாய்க் கேள்வி, திருமந்திர ஓலை. (சொல். 24)
திரு (2)
திரு = செல்வம், அழகு, செல்வத்தெய்வம், தெய்வத் தன்மை, தெய்வத் தூய்மை. இத் தூயதென் சொல்லை வடவர் ச்ரி என்று திரித்து ஸ்ரீ என்று குறித்து வடசொல் போலாக்கி இருவகை வழக்கிலும் திருப்பொருட் பெயர்க்கு முன் அடைமொழியாக வழங்கச் செய்திருக்கின்றனர். அது சீயென்று சிதைந்துமுள்ளது எ.டு. திருவரங்கம் - ஸ்ரீரங்கம் - சீரங்கம். (த.இ.வ. 206).
திரு (3)
திரு - ச்ரீ (ஸ்ரீ) - இ.வே.
தில்லுமுல்லு = திண்டுமுண்டு. தில் - திர் - திரள்.
திர் - திரு = திரண்ட செல்வம், திருமகள், சிறப்பு, பொலிவு. அழகு, நற்பேறு, தெய்வத்தன்மை, தூய்மை.
ஒ.நோ. வெறுத்தல் = மிகுதல், வெறுக்கை = மிகுதி, செல்வம்.
செல்வத்தாற் சிறப்பும் பொலிவும், அரசச்செல்வத்தால் தெய்வத் தன்மையும், தெய்வத்தன்மையால் தூய்மையும், ஏற்படுமென்பது பண்டையுலகக் கருத்து. செல்வத்தாற் சிறப்பும் பொலிவும் இக்காலத்து முண்டு.
திரு என்பது தெய்வத்தன்மையை அல்லது தூய்மையைக் குறிக்கும் அடைமொழியாகக் கொள்ளப் பெற்றது.
எ.டு. திருமால், திருநாவுக்கரசு, திருக்குறள், திருச்சிற்றம்பலம்,
திருநீறு, திருப்பள்ளியெழுச்சி, திருமுறை, திருமேனி,
திருவிழா, திருவிளையாடல், திருவுளம்.
தொன்றுதொட்டுத் திருவரங்கம் என்று வழங்கிவந்த இடப் பெயர், இன்று ஸ்ரீரங்கம் எனத் திரிந்து வழங்குகின்றது.
வடவர் வடமொழியிலுள்ள சொற்கட்கு வலிந்தும் நலிந்தும் மூலங்காட்டும் தம் வழக்கத்திற்கேற்ப, ச்ரி என்னும் சொல் ச்ரி1 அல்லது ச்ரீ1 என்பதினின்று திரிந்ததாகக் கூறுவர்.
ச்ரி1 = சார் (to lean), ச்ரீ1 = ஒளி. மா. வி. அ. இரண்டையும் இணைத்துக் கூறும். (வ.வ. 178-179).
கருத்துகள்
கருத்துரையிடுக