தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை - முதற் பகுதி
பக்தி நூல்கள்
Back
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
ஏழாம் திருமுறை முதற் பகுதி
பாடல்கள் (1-517)
-
உள்ளுறை
- கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச்
சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ்
- சில்பூத மும்நீ ருந்திசை திசையன
சோத்திட்டு விண்ணோர் பலருந் தொழநும்
- அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந்
தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம்
- படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.01 - சில்பூத மும்நீ ருந்திசை திசையன
- முழுநீறு மெய்பூசு திர்மூக்கப் பாம்பைக்
கண்டத்தி லுந்தோளி லுங்கட்டி வைத்தீர்
- கடலைக் கடைந்திட்ட தோர்நஞ்சை உண்டீர்
பிண்டஞ் சுமந்தும் மொடுங்கூட மாட்டோ ம்
- பெரியா ரொடுநட் பினிதென் றிருத்தும்
அண்டங் கடந்தப் புறத்தும் இருந்தீர்
- அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.02 013 மூடாய முயலகன் மூக்கப் பாம்பு
- முடைநா றியவெண் டலைமொய்த்த பல்பேய்
பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல்
- பரிசொன் றறியா தனபா ரிடங்கள்
தோடார் மலர்க்கொன்றை யுந்துன் னெருக்குந்
- துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன்
றாடா தனவேசெய் தீர்எம் பெருமான்
- அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.03 014 மஞ்சுண்ட மாலை மதிசூடு சென்னி
- மலையான் மடந்தை மணவாள நம்பி
பஞ்சுண்ட அல்குல் பணைமென் முலையா
- ளொடுநீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்
நஞ்சுண்டு தேவர்க் கமுதங் கொடுத்த
- நலமொன் றறியோமுங் கைநாக மதற்
கஞ்சுண் டுபடம் அதுபோக விடீர்
- அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.04 015 பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர்
- புலால்வா யனபே யொடுபூச் சொழியீர்
எல்லாம் அறிவீர் இதுவே அறியீர்
- என்றிரங் குவேன்எல் லியும்நண் பகலுங்
கல்லால் நிழற்கீழ் ஒருநாட்கண் டதுங்
- கடம்பூர்க் கரக்கோயி லின்முன்கண் டதும்
அல்லால் விரகொன் றிலம்எம் பெருமான்
- அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.05 016 தென்னாத் தெனாத்தெத் தெனாவென்று பாடிச்
- சிலபூ தமும்நீ ருந்திசை திசையன
பன்னான் மறைபா டுதிர்பா சூர்உளீர்
- படம்பக்கங் கொட்டுந் திருவொற்றி யூரீர்
பண்ணார் மொழியாளை யோர்பங் குடையீர்
- படுகாட் டகத்தென்று மோர்பற் றொழியீர்
அண்ணா மலையே னென்றீரா ரூருளீர்
- அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.06 017 சிங்கத் துரிமூடு திர்தே வர்கணந்
- தொழநிற்றீர் பெற்றம் உகந்தே றிடுதிர்
பங்கம் பலபே சிடப்பாடுந் தொண்டர்
- தமைப்பற்றிக் கொண்டாண் டுவிடவுங் கில்லீர்
கங்கைச் சடையீர் உங்கருத் தறியோங்
- கண்ணுமூன் றுடையீர் கண்ணேயா யிருந்தால்
அங்கத் துறுநோய் களைந்தாள கில்லீர்
- அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.07 018 பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர்
- பெருங்காட் டகத்திற் பெரும்பேயும் நீருந்
துணிவண்ணத் தின்மேலு மோர்தோல் உடுத்துச்
- சுற்றும்நா கத்தராய்ச் சுண்ணநீறு பூசி
மணிவண்ணத் தின்மேலு மோர்வண்ணத் தராய்
- மற்றுமற் றும்பல் பலவண்ணத் தராய்
அணிவண்ணத் தராய்நிற் றீர்எம் பெருமான்
- அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.08 019 கோளா ளியகுஞ் சரங்கோள் இழைத்தீர்
- மலையின் றலையல் லதுகோயில் கொள்ளீர்
வேளா ளியகா மனைவெந் தழிய
- விழித்தீர் அதுவன் றியும்வேய் புரையுந்
தோளாள் உமைநங்கை யோர்பங் குடையீர்
- உடுகூறை யுஞ்சோறுந் தந்தாள கில்லீர்
ஆளா ளியவே கிற்றீர்எம் பெருமான்
- அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.09 020 பாரோடு விண்ணும் பகலு மாகிப்
- பனிமால் வரையா கிப்பரவை யாகி
நீரோடு தீயும் நெடுங்காற் றுமாகி
- நெடுவெள் ளிடையாகி நிலனு மாகித்
தேரோ டவரை எடுத்த அரக்கன்
- சிரம்பத் திறுத்தீர் உமசெய்கை எல்லாம்
ஆரோடுங் கூடா அடிகேள் இதுவென்
- அடியோம் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.10 021 அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்
- றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
- மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும்
படியா இவைகற் றுவல்ல அடியார்
- பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்
- குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.
7.2.11 - கடலைக் கடைந்திட்ட தோர்நஞ்சை உண்டீர்
- கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
- நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
- நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
- தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.01 - நிலவெண் மதிசூ டியநின் மலனே
- மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நெறிவார் குழலா ரவர்காண நடஞ்செய்
- நெல்வா யில்அரத் துறைநின் மலனே
வறிதே நிலையாத இம்மண் ணுலகில்
- நரனா கவகுத் தனைநா னிலையேன்
பொறிவா யிலிவ்வைந் தினையும் மவியப்
- பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்லே.
7.3.02 024 புற்றா டரவம் மரையார்த் துகந்தாய்
- புனிதா பொருவெள் விடையூர் தியினாய்
எற்றே ஒருகண் ணிலன்நின்னை யல்லால்
- நெல்வா யில்அரத் துறைநின் மலனே
மற்றேல் ஒருபற் றிலனெம் பெருமான்
- வண்டார் குழலாள் மங்கைபங் கினனே
அற்றார் பிறவிக் கடல்நீந்தி யேறி
- அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.03 025 கோடுயர் கோங்க லர்வேங் கையலர்
- மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீடுயர் சோலை நெல்வா யிலரத்
- துறைநின் மலனே நினைவார் மனத்தாய்
ஓடு புனற்க ரையாம் இளமை
- உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி
வாடி இருந்து வருந்தல் செய்யா
- தடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.04 026 உலவு முலகிற் றலைகற் பொழிய
- உயர்வே யோடிழி நிவவின் கரைமேல்
நிலவு மயிலா ரவர்தாம் பயிலும்
- நெல்வா யிலரத் துறைநின் மலனே
புலனைந் தும்மயங் கியகங் குழையப்
- பொருவே லோர்நமன் றமர்தாம் நலிய
அலமந்து மயங்கி அயர்வ தன்முன்
- அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.05 027 ஏலம் இலவங் கம்எழிற் கனகம்
- மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீலம் மலர்ப்பொய் கையிலன் னம்மலி
- நெல்வா யிலரத் துறையாய் ஒருநெல்
வாலூன் றவருந் தும்முடம் பிதனை
- மகிழா தழகா வலந்தேன் இனியான்
ஆலந் நிழலில் அமர்ந்தாய் அமரா
- அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.06 028 சிகரம் முகத்திற் றிரளார் அகிலும்
- மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும்
- நெல்வா யிலரத் துறைநின் மலனே
மகரக் குழையாய் மணக்கோ லமதே
- பிணக்கோ லமதாம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்
- அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.07 029 திண்டேர் நெடுவீ தியிலங் கையர்கோன்
- றிரள்தோ ளிருபஃ தும்நெரித் தருளி
நெண்டா டுநெடு வயல்சூழ் புறவின்
- நெல்வா யிலரத் துறைநின் மலனே
பண்டே மிகநான் செய்தபாக் கியத்தாற்
- பரஞ்சோதி நின்னா மம்பயிலப் பெற்றேன்
அண்டா வமரர்க் கமரர் பெருமான்
- அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.08 030 மாணா வுருவா கியோர்மண் ணளந்தான்
- மலர்மே லவன்நேடி யுங்காண் பரியாய்
நீணீள் முடிவா னவர்வந் திறைஞ்சும்
- நெல்வா யிலரத் துறைநின் மலனே
வாணார் நுதலார் வலைப்பட் டடியேன்
- பலவின் கனியீந் ததுபோல் வதன்முன்
ஆணோடு பெண்ணா முருவாகி நின்றாய்
- அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.09 031 நீரூ ரும்நெடு வயல்சூழ் புறவின்
- நெல்வா யிலரத் துறைநின் மலனைத்
தேரூர் நெடுவீதி நன்மா டமலி
- தென்னா வலர்கோ னடித்தொண்டு பண்ணி
ஆரூ ரனுரைத் தனநற் றமிழின்
- மிகுமாலை யோர்பத் திவைகற்று வல்லார்
காரூர் களிவண் டறையானை மன்ன
- ரவராகி யோர்விண் முழுதாள் பவரே.
7.3.10 - நெல்வா யில்அரத் துறைநின் மலனே
- சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே
அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே
- அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே
மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
- வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை
- அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.01 - அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே
- பிறங்குஞ் சடைமேற் பிறைசூடிற் றென்னே
பொடித்தான்கொண் டுமெய்ம்முற் றும்பூசிற் றென்னே
- புகரே றுகந்தேறல் புரிந்த தென்னே
மடித்தோட் டந்துவன் றிரையெற் றியிட
- வளர்சங்கம் அங்காந்து முத்தஞ் சொரிய
அடித்தார் கடலங் கரைமேன் மகோதை
- அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.02 034 சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே
- சிறியார் பெரியார் மனத்தேற லுற்றால்
முந்தித் தொழுவார் இறவார் பிறவார்
- முனிகள் முனியே அமரர்க் கமரா
சந்தித் தடமால் வரைபோற் றிரைகள்
- தணியா திடறுங் கடலங் கரைமேல்
அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால்
- அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.03 035 இழைக்கு மெழுத்துக் குயிரே ஒத்தியால்
- இலையே ஒத்தியால் இணையே ஒத்தியாற்
குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால்
- அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால்
மழைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
- வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டழைக்குங் கடலங் கரைமேல் மகோதை
- அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.04 036 வீடின் பயனென் பிறப்பின் பயனென்
- விடையே றுவதென் மதயா னைநிற்க
கூடும் மலைமங் கைஒருத் தியுடன்
- சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னே
பாடும் புலவர்க் கருளும் பொருளென்
- நிதியம் பலசெய் தகலச் செலவில்
ஆடுங் கடலங் கரைமேல் மகோதை
- அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.05 037 இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னே
- இறந்தார் தலையிற் பலிகோட லென்னே
பரவித் தொழுவார் பெறுபண்ட மென்னே
- பரமா பரமேட் டிபணித் தருளாய்
உரவத் தொடுசங்க மோடிப்பி முத்தங்
- கொணர்ந்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டரவக் கடலங் கரைமேல் மகோதை
- அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.06 038 ஆக்கு மழிவு மமைவும்நீ யென்பன்நான்
- சொல்லுவார் சொற்பொரு ளவைநீ யென்பன்நான்
நாக்குஞ் செவியுங் கண்ணும்நீ யென்பன்நான்
- நலனே இனிநான் உனைநன் குணர்ந்தேன்
நோக்கும் நிதியம் பலவெத் தனையுங்
- கலத்திற் புகப்பெய்து கொண்டேற நுந்தி
ஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை
- அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.07 039 வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன்
- விளங்குங் குழைக்கா துடைவே தியனே
இறுத்தாய் இலங்கைக் கிறையா யவனைத்
- தலைபத் தொடுதோள் பலஇற் றுவிழக்
கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டு கண்டங்
- கடுகப் பிரமன் றலையைந் திலுமொன்
றறுத்தாய் கடலங் கரைமேல் மகோதை
- அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.08 040 பிடிக்குக் களிறே ஒத்தியா லெம்பிரான்
- பிரமற் கும்பிரான் மற்றைமாற் கும்பிரான்
நொடிக்கும் அளவிற் புரமூன் றெரியச்
- சிலைதொட் டவனே உனைநான் மறவேன்
வடிக்கின் றனபோற் சிலவன் றிரைகள்
- வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டடிக்குங் கடலங் கரைமேல் மகோதை
- அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.09 041 எந்தம் அடிகள் இமையோர் பெருமான்
- எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன்
அந்தண் கடலங் கரைமேல் மகோதை
- அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை
மந்தம் முழவுங் குழலு மியம்பும்
- வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன
சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண்
- டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே.
7.4.10 - புகரே றுகந்தேறல் புரிந்த தென்னே
- நித்தல் பூசை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
- கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட ஆடி
- ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
- ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.01 - கழல டிதொழு துய்யி னல்லால்
- திரைகள் வந்து புரள வீசுங்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
- கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
- தேவி யார்கொற் றட்டி யாளால்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோ ம்
- ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.02 044 பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
- பேணி யுங்கழல் ஏத்து வார்கள்
மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
- மதியு டையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
- ஆவற் காலத் தடிகேள் உம்மை
ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
- ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.03 045 வல்ல தெல்லாஞ் சொல்லி யும்மை
- வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
- எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர்
பல்லை யுக்கப் படுத லையிற்
- பகலெ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
- ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.04 046 கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
- கொண்ட பாணி குறைப டாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்
- கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலுஞ்
- சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
- ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.05 047 வாரி ருங்குழல் வாணெ டுங்கண்
- மலைம கள்மது விம்மு கொன்றைத்
தாரி ருந்தட மார்பு நீங்காத்
- தைய லாளுல குய்ய வைத்த
காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்
- காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே
- ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.06 048 பொய்ம்மை யாலே போது போக்கிப்
- புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
- மேலை நாளொன் றிடவுங் கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
- ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மை என்றே எம்பெ ருமான்
- ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.07 049 வலையம் வைத்த கூற்ற மீவான்
- வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலைய மைத்த சிந்தை யாலே
- திருவ டிதொழு துய்யி னல்லாற்
கலைய மைத்த காமச் செற்றக்
- குரோத லோப மதம வருடை
உலைய மைத்திங் கொன்ற மாட்டேன்
- ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.08 050 வார மாகித் திருவ டிக்குப்
- பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே
ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்
- ஒற்றி யூரேல் உம்ம தன்று
தார மாகக் கங்கை யாளைச்
- சடையில் வைத்த அடிகேள் உந்தம்
ஊருங் காடு உடையுந் தோலே
- ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.09 051 ஓவ ணமேல் எருதொன் றேறும்
- ஓண காந்தன் றளியு ளார்தாம்
ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட
- வரைது கிலொடு பட்டு வீக்கிக்
கோவ ணமேற் கொண்ட வேடங்
- கோவை யாகவா ரூரன் சொன்ன
பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்
- பறையுந் தாஞ்செய்த பாவந் தானே.
7.5.10 - கணப தியேல் வயிறு தாரி
- பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
- அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
- மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
- வேலை சூழ்வெண் காட னீரே.
7.6.01 - அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
- இமைய வர்க்கும் உரைகள் பேணா
தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட
- உயர்த வத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காம வேளை
- அவனு டைய தாதை காண
விழித்து கந்த வெற்றி யென்னே
- வேலை சூழ்வெண் காட னீரே.
7.6.02 054 படைகள் ஏந்திப் பாரி டமும்
- பாதம் போற்ற மாதும் நீரும்
உடையோர் கோவ ணத்த ராகி
- உண்மை சொல்லீர் உம்மை யன்றே
சடைகள் தாழக் கரணம் இட்டுத்
- தன்மை பேசி இல்ப லிக்கு
விடைய தேறித் திரிவ தென்னே
- வேலை சூழ்வெண் காட னீரே.
7.6.03 055 பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர்
- பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
கண்ணு ளீராய்க் கருத்தி லும்மைக்
- கருது வார்கள் காணும் வண்ணம்
மண்ணு ளீராய் மதியம் வைத்தீர்
- வான நாடர் மருவி யேத்த
விண்ணு ளீராய் நிற்ப தென்னே
- வேலை சூழ்வெண் காட னீரே.
7.6.04 056 குடமெ டுத்து நீரும் பூவுங்
- கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
நடமெ டுத்தொன் றாடிப் பாடி
- நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம்
வடமெ டுத்த கொங்கை மாதோர்
- பாக மாக வார்க டல்வாய்
விடம்மி டற்றில் வைத்த தென்னே
- வேலை சூழ்வெண் காட னீரே.
7.6.05 057 மாறு பட்ட வனத்த கத்தில்
- மருவ வந்த வன்க ளிற்றைப்
பீறி இட்ட மாகப் போர்த்தீர்
- பெய்ப லிக்கென் றில்லந் தோறுங்
கூறு பட்ட கொடியும் நீருங்
- குலாவி ஏற்றை அடர ஏறி
வேறு பட்டுத் திரிவ தென்னே
- வேலை சூழ்வெண் காட னீரே.
7.6.06 058 காத லாலே கருதுந் தொண்டர்
- கார ணத்தீ ராகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம்
- புவனி யேத்த ஆட வல்லீர்
நீதி யாக ஏழி லோசை
- நித்த ராகிச் சித்தர் சூழ
வேத மோதித் திரிவ தென்னே
- வேலை சூழ்வெண் காட னீரே.
7.6.07 059 குரவு கொன்றை மதியம் மத்தங்
- கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவு கின்ற சடையு டையீர்
- விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர்
- பாக மாய மங்கை யஞ்சி
வெருவ வேழஞ் செற்ற தென்னே
- வேலை சூழ்வெண் காட னீரே.
7.6.08 060 மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர்
- நிச்ச யத்தால் நினைப்பு ளார்பாற்
பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர்
- பரவும் வண்ணம் எங்ங னேதான்
நாடுங் காட்டில் அயனும் மாலும்
- நணுகா வண்ணம் அனலு மாய
வேடங் காட்டித் திரிவ தென்னே
- வேலை சூழ்வெண் காட னீரே.
7.6.09 061 விரித்த வேதம் ஓத வல்லார்
- வேலை சூழ்வெண் காடு மேய
விருத்த னாய வேதன் றன்னை
- விரிபொ ழிற்றிரு நாவ லூரன்
அருத்தி யாலா ரூரன் தொண்டன்
- அடியன் கேட்ட மாலை பத்துந்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார்
- செம்மை யாளர் வானு ளாரே.
7.6.10 - உயர்த வத்தை அமரர் வேண்ட
- சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை
- சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
- வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி
- என்ப தடைவோமே.
7.7.01 - சிந்தையுள் வைம்மின்கள்
- துயரம் மனைவாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு
- நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர்
- நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி
- என்ப தடைவோமே.
7.7.02 064 செடிகொ ளாக்கை சென்று சென்று
- தேய்ந்தொல் லைவீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள்
- பட்டு மயங்காதே
கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர்
- கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி
- என்ப தடைவோமே.
7.7.03 065 வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்
- வஞ்ச மனத்தீரே
யாவ ராலும் இகழப் பட்டிங்
- கல்ல லில்வீழாதே
மூவ ராயும் இருவ ராயும்
- முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி
- என்ப தடைவோமே.
7.7.04 066 அரித்து நம்மேல் ஐவர் வந்திங்
- காறலைப் பான்பொருட்டாற்
சிரித்த பல்வாய் வெண்ட லைபோய்
- ஊர்ப்பு றஞ்சேராமுன்
வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர்
- வஞ்ச மதில்மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள் பாடி
- என்ப தடைவோமே.
7.7.05 067 பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்
- பொத்தடைப் பான்பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மோ டாடி
- நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை யேத்த
- அம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள் பாடி
- என்ப தடைவோமே.
7.7.06 068 கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச்
- செற்ற மனம்நீக்கி
வாசம் மல்கு குழலி னார்கள்
- வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி
- என்பணிந் தேறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி
- என்ப தடைவோமே.
7.7.07 069 இன்பம் உண்டேல் துன்பம் உண்டு
- ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்ன மோழை மையான்
- முட்டை மனத்தீரே
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை
- அடிக ளடிசேரார்
என்பர் கோயில் எதிர்கொள் பாடி
- என்ப தடைவோமே.
7.7.08 070 தந்தை யாரும் தவ்வை யாரும்
- எட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவி
- வான நெறிகாட்டுஞ்
சிந்தை யீரே நெஞ்சி னீரே
- திகழ்மதி யஞ்சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி
- என்ப தடைவோமே.
7.7.09 071 குருதி சோர ஆனையின் றோல்
- கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போன
- மாலய னும்மறியாச்
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்
- சோதியெம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடி
- என்ப தடைவோமே.
7.7.10 072 முத்து நீற்றுப் பவள மேனிச்
- செஞ்சடை யான்உறையும்
பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்
- பரமனை யேபணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்
- சடைய னவன்சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார்
- பாதம் பணிவாரே.
7.7.11 - நெஞ்ச மனத்தீரே
- இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வை
- பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர்
- செம்பொனும் மணியுந் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
- அப்பனே அஞ்சி னேனே.
7.8.1 - பற்றியான் நோக்கி னேற்குத்
- ஒருபொரு ளிலாத மாயம்
மான்மறித் தனைய நோக்க
- மடந்தைமார் மதிக்கு மிந்த
மானுடப் பிறவி வாழ்வு
- வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்
- அப்பனே அஞ்சி னேனே.
7.8.2 075 அறுபதும் பத்தும் எட்டும்
- ஆறினோ டஞ்சு நான்குந்
துறுபறித் தனைய நோக்கிச்
- சொல்லிற்றொன் றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும்
- நாடொறும் வணங்கு வார்க்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர்
- அப்பனே அஞ்சி னேனே.
7.8.3 076 சொல்லிடில் எல்லை இல்லை
- சுவையிலாப் பேதை வாழ்வு
நல்லதோர் கூரை புக்கு
- நலமிக அறிந்தே னல்லேன்
மல்லிகை மாடம் நீடு
- மருங்கொடு நெருங்கி யெங்கும்
அல்லிவண் டியங்கும் ஆரூர்
- அப்பனே அஞ்சி னேனே.
7.8.4 077 நரம்பினோ டெலும்பு கட்டி
- நசையினோ டிசைவொன் றில்லாக்
குரம்பைவாய்க் குடியி ருந்து
- குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை
- மாதவித் தொகுதி என்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர்
- அப்பனே அஞ்சி னேனே.
7.8.5 078 மணமென மகிழ்வர் முன்னே
- மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவர் பேர்த்தே
- பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலை தோறும்
- பைம்பொழில் விளாகத் தெங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர்
- அப்பனே அஞ்சி னேனே.
7.8.6 079 தாழ்வெனுந் தன்மை விட்டுத்
- தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்
- மறுமைக்கொன் றீய கில்லார்
ஆழ்குழிப் பட்ட போது
- வலக்கணில் ஒருவர்க் காவர்
யாழ்முயன் றிருக்கும் ஆரூர்
- அப்பனே அஞ்சி னேனே.
7.8.7 080 உதிரநீர் இறைச்சிக் குப்பை
- எடுத்தது மலக்கு கைம்மேல்
வருவதோர் மாயக் கூரை
- வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனுந் தேடிக்
- கழலிணை காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர்
- அப்பனே அஞ்சி னேனே.
7.8.8 081 பொய்த்தன்மைத் தாய மாயப்
- போர்வையை மெய்யென் றெண்ணும்
வித்தகத் தாய வாழ்வு
- வேண்டிநான் விரும்ப கில்லேன்
முத்தினைத் தொழுது நாளும்
- முடிகளால் வணங்கு வார்க்கு
அத்தன்மைத் தாகும் ஆரூர்
- அப்பனே அஞ்சி னேனே.
7.8.9 082 தஞ்சொலார் அருள் பயக்குந்
- தமியனேன் தடமு லைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர்
- அப்பனை ஊரன் அஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல்
- சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாங் கண்டத் தெங்கள்
- நாதனை நணுகு வாரே.
7.8.10 - மடந்தைமார் மதிக்கு மிந்த
- எரித்தீர் வருமுப் புரங்கள்
சிலைக்குங் கொலைச்சே வுகந்தேற் றொழியீர்
- சில்பலிக் கில்கள்தோறுஞ் செலவொழியீர்
கலைக்கொம் புங்கரி மருப்பும் இடறிக்
- கலவம் மயிற்பீலியுங் காரகிலும்
அலைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
- அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.9.1 - சில்பலிக் கில்கள்தோறுஞ் செலவொழியீர்
- தீரழற் சூலத்தில் அந்தகனைத்
திருமகள் கோனெடு மால்பல நாள்சிறப்
- பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் திற்குறை வாநிறை
- வாகவோர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித் தீர்பொழி
- லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
7.9.2 085 தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ்
- சந்திரன் சவிதாவிய மானனானீர்
சரிக்கும் பலிக்குத் தலையங்கை யேந்தித்
- தையலார் பெய்யக்கொள் வதுதக்கதன்றால்
முரிக்குந் தளிர்ச்சந் தனத்தொடு வேயும்
- முழங்குந் திரைக்கைக ளால்வாரிமோதி
அரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
- அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.9.3 086 கொடியுடை மும்மதில் வெந்தழி யக்குன்றம்
- வில்லா நாணியிற் கோலொன்றினால்
இடிபட எய்தெரித்தீர் இமைக்கும் அளவில்
- உமக்கார் எதிரெம் பெருமான்
கடிபடு பூங்கணை யான்கருப் புச்சிலைக்
- காமனை வேவக் கடைக்கண்ணினாற்
பொடிபட நோக்கிய தென்னை கொல்லோ
- பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.
7.9.4 087 வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும்
- வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கற்றலை யிற்பலி கொண்ட லென்னே
- உலகங்கள் எல்லாமுடை யீர்உரையீர்
இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய
- இனக்கெண்டை துள்ளக்கண் டிருந்தஅன்னம்
அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரை
- அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.9.5 088 *அகத்தடி மைசெய்யும் அந்தணன் றான்அரி
- சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்முடி
- மேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படி யும்வரு
- மென்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந் தீர்பொழி
- லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
*திரு அரிசிற்கரைப்புத்தூரென்னு மித்தலத்தில் ஆதிசைவப்
பிராமணகுலத்தில் திருவவதாரஞ்செய்து புகழ்த்துணை
நாயனாரெனப் பெயரும் பெற்று மிகுந்தஅன்புடன்
பரமசிவத்துக்குத் திருமஞ்சனமுதலிய உபசாரங்கள்
ஆகமமுறைவழுவாமல் செய்துகொண்டு வருநாளில்
பஞ்சம்நேரிட்டுச் சிலநாளுணவின்றித் திருமேனியிளைத்து
வலிவின்றியுமொருநாள் திருமஞ்சனஞ்செய்கையில்
அந்தக்குடம் நழுவிச் சிவலிங்கப்பெருமான் திருமுடிக்கண்விழலும்
நாயனார் அஞ்சி நடுங்குதல் திருவுளத்திற்கொண்டு
பரமசிவங் கிருபைகூர்ந்து பஞ்சம் நீங்குகிறவரைக்கும்
ஒருபடிக் காசு அருள்செய்த கிருபையின் பெருமை இந்த
ஆறாவது தேவாரத்தில் விளங்கக்கூறியது.7.9.6 089 பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப்
- பகலோன்முத லாப்பல தேவரையுந்
தெழித்திட் டவரங்கஞ் சிதைத்தரு ளுஞ்செய்கை
- என்னைகொலோ மைகொள் செம்மிடற்றீர்
விழிக்குந் தழைப்பீலி யொடேல முந்தி
- விளங்கும் மணிமுத்தொடு பொன்வரன்றி
அழிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
- அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.9.7 090 பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக்
- குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப்
பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம்
- பெருங்கா டரங்காகநின் றாடலென்னே
கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோ ள்களுங்
- கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்
பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும்
- பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.
7.9.8 091 மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர்
- புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள் அரவோ டென்பணி கலனா
- முழுநீறு மெய்பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங்
- கமுகின் பழுக்காயுங் கவர்ந்துகொண்டிட்
டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
- அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.9.9 092 கடிக்கும் அரவால் மலையால் அமரர்
- கடலைக் கடையவெழு காளகூடம்
ஒடிக்கும் உலகங் களைஎன் றதனை
- உமக்கேயமு தாகவுண் டீருமிழீர்
இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவி
- இருபாலுமோடி இரைக்குந் திரைக்கை
அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
- அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.9.10 093 காரூர் மழைபெய்து பொழியரு விக்கழை
- யோடகி லுந்திட் டிருகரையும்
போரூர் புனல்சேர் அரிசிற் றென்கரைப்
- பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதர்தம்மை
ஆரூரன் அருந்தமி ழைந்தினோ டைந்தழ
- காலுரைப் பார்களுங் கேட்பவருஞ்
சீரூர் தருதேவர் கணங்க ளொடும்
- இணங்கிச் சிவலோகம தெய்துவரே.
7.9.11 - பாகிய பூசனை செய்பொழுதில்
- மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை யெரித்தெரி யாடி இடங்குல
- வான திடங்குறை யாமறையாம்
மானை இடத்ததோர் கையனி டம்மத
- மாறு படப்பொழி யும்மலைபோல்
யானை யுரித்த பிரான திடங்கலிக்
- கச்சி அனேகதங் காவதமே.
7.10.1 - வான திடங்குறை யாமறையாம்
- பேயுகந் தாடநின் றோரியிட
வேறு படக்குட கத்திலை யம்பல
- வாணன்நின் றாடல் விரும்புமிடம்
ஏறு விடைக்கொடி யெம்பெரு மான்இமை
- யோர்பெரு மான்உமை யாள்கணவன்
ஆறு சடைக்குடை அப்ப னிடங்கலிக்
- கச்சி அனேகதங் காவதமே.
7.10.2 096 கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி
- லாலுமி டம்மழு வாளுடைய
கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக்
- கண்டனி டம்பிறைத் துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீருமி டந்திரு
- வாகுமி டந்திரு மார்பகலத்
தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக்
- கச்சி அனேகதங் காவதமே.
7.10.3 097 கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்
- கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
- பங்கினிற் றங்க உவந்தருள்செய்
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்
- பாய வியாத்தழல் போலுடைத்தம்
அங்கை மழுத்திகழ் கைய னிடங்கலிக்
- கச்சி அனேகதங் காவதமே.
7.10.4 098 பைத்த படத்தலை ஆடர வம்பயில்
- கின்ற இடம்பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்
- கின்ற இடந்திரு வானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
- வைத்த இடம்மழு வாளுடைய
அத்தன் இடம்அழல் வண்ண னிடங்கலிக்
- கச்சி அனேகதங் காவதமே.
7.10.5 099 தண்ட முடைத்தரு மன்தமர் என்றம
- ரைச்செயும் வன்துயர் தீர்க்குமிடம்
பிண்ட முடைப்பிற வித்தலை நின்று
- நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த
- பிரான திடங்கடல் ஏழுகடந்
தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்
- கச்சி அனேகதங் காவதமே.
7.10.6 100 கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழு
- தேத்து மிடங்கதி ரோன்ஒளியால்
விட்ட இடம்விடை யூர்தி யிடங்குயிற்
- பேடைதன் சேவலோ டாடுமிடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொரு
- மாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்
- கச்சி அனேகதங் காவதமே.
7.10.7 101 புல்லி இடந்தொழு துய்துமெ னாதவர்
- தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங்
- காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல்
- குராவகு ளங்குருக் கத்திபுன்னை
அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்
- கச்சி அனேகதங் காவதமே.
7.10.8 102 சங்கை யவர்புணர் தற்கரி யான்றள
- வேனகை யாள்தவி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
- நட்டம்நின் றாடிய சங்கரனெம்
அங்கையி னல்லனல் ஏந்து மவன்கனல்
- சேரொளி யன்னதோர் பேரகலத்
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்
- கச்சி அனேகதங் காவதமே.
7.10.9 103 வீடு பெறப்பல ஊழிகள் நின்று
- நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
- மேவினர் தங்களைக் காக்குமிடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
- உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடு மிடஞ்சிவ லோகன் இடங்கலிக்
- கச்சி அனேகதங் காவதமே.
7.10.10 - வாணன்நின் றாடல் விரும்புமிடம்
- நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
- உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
- பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
- இவரலா தில்லையோ பிரானார்.
7.14.1 - உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
- அடிகளே அமையுமென் றிருந்தேன்
என்னையும் ஒருவன் உளனென்று கருதி
- இறையிறை திருவருள் காட்டாய்
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி
- லாச்சிரா மத்துறை அடிகள்
பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில்
- இவரலா தில்லையோ பிரானார்.
7.14.2 136 உற்றபோ தல்லால் உறுதியை உணரேன்
- உள்ளமே அமையுமென் றிருந்தேன்
செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற
- செஞ்சடை நஞ்சடை கண்டர்
அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
- தடிகள்தா மியாதுசொன் னாலும்
பெற்றபோ துகந்து பெறாவிடில் இகழில்
- இவரலா தில்லையோ பிரானார்.
7.14.3 137 நாச்சில பேசி நமர்பிறர் என்று
- நன்றுதீ தென்கிலர் மற்றோர்
பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப்
- புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப்
பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம்
- பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர்
பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில்
- இவரலா தில்லையோ பிரானார்.
7.14.4 138 வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை
- வாட்டிய வகையின ரேனும்
புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை
- போகுநாள் வீழுநா ளாகிப்
பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
- தடிகள்தா மியாதுசொன் னாலும்
பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில்
- இவரலா தில்லையோ பிரானார்.
7.14.5 139 செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன்
- தீவினை செற்றிடு மென்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்
- ஆவதும் அறிவரெம் மடிகள்
படைத்தலைச் சூலம் பற்றிய கையர்
- பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிடித்தவெண் ணீறே பூசுவ தானால்
- இவரலா தில்லையோ பிரானார்.
7.14.6 140 கையது கபாலங் காடுறை வாழ்க்கை
- கட்டங்கம் ஏந்திய கையர்
மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல்
- வெண்டிங்கள் சூடிய விகிர்தர்
பையர வல்குற் பாவைய ராடும்
- பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
மெய்யரே ஒத்தோர் பொய்செய்வ தாகில்
- இவரலா தில்லையோ பிரானார்.
7.14.7 141 நிணம்படும் உடலை நிலைமையென் றோரேன்
- நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்
கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலுங்
- கருத்தினாற் கைதொழு தெழுவேன்
பணம்படும் அரவம் பற்றிய கையர்
- பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணம்படு காட்டில் ஆடுவ தாகில்
- இவரலா தில்லையோ பிரானார்.
7.14.8 142 குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே
- குற்றேவல் நாடொறுஞ் செய்வான்
இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும்
- எம்பெரு மானென்றெப் போதும்
அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
- தடிகள்தாம் யாதுசொன் னாலும்
பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில்
- இவரலா தில்லையோ பிரானார்.
7.14.9 143 துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந்
- தோற்றமுஞ் சிந்தித்துக் காணில்
மணிப்படு கண்டனை வாயினாற் கூறி
- மனத்தினாற் றொண்டனேன் நினைவேன்
பணிப்படும் அரவம் பற்றிய கையர்
- பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில்
- இவரலா தில்லையோ பிரானார்.
7.14.10 144 ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன்
- அடியவர்க் கடியனும் ஆனேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும்
- ஒண்மலர்ச் சேவடி காட்டாய்
அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி
- லாச்சிரா மத்தெம் மடிகள்
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில்
- இவரலா தில்லையோ பிரானார்.
7.14.11 145 ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல
- எம்பெரு மானென்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்
- தடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்
- வளவயல் நாவலா ரூரன்
பேசின பேச்சைப் பொறுக்கில ராகில்
- இவரலா தில்லையோ பிரானார்.
7.14.12 - இறையிறை திருவருள் காட்டாய்
- புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன்
- பிறவே னாகிலும் மறவேன்
காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற்
- கருதீ ராகிலுங் கருதி
நானே லும்மடி பாடுதல் ஒழியேன்
- நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.1 - பிறவே னாகிலும் மறவேன்
- டெல்லியில் ஆடலைக் கவர்வன்
துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை
- சொல்லாய் திப்பிய மூர்த்தி
வைச்சே யிடர்களைக் களைந்திட வல்ல
- மணியே மாணிக்க வண்ணா
நச்சேன் ஒருவரை நானுமை யல்லால்
- நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.2 148 அஞ்சா தேயுமக் காட்செய வல்லேன்
- யாதினுக் காசைப் படுகேன்
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை
- பங்கா எம்பர மேட்டீ
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த
- மணியே மாணிக்க வண்ணா
நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ
- நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.3 149 கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை
- கல்லா தேபல கற்றேன்
நில்லே னல்லேன் நின்வழி நின்றார்
- தம்முடை நீதியை நினைய
வல்லே னல்லேன் பொன்னடி பரவ
- மாட்டேன் மறுமையை நினைய
நல்லே னல்லேன் நானுமக் கல்லால்
- நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.4 150 மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்
- கருதா தார்தமைக் கருதேன்
ஒட்டீ ராகிலும் ஒட்டுவன் அடியேன்
- உம்மடி யடைந்தவர்க் கடிமைப்
பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்
- பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்
- நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.5 151 படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம்
- படுத்தா யென்றல்லல் பறையேன்
குடப்பாச் சிலுறை கோக்குளிர் வானே
- கோனே கூற்றுதைத் தானே
மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடும்
- மறையோ தீமங்கை பங்கா
நடப்பீ ராகிலும் நடப்பனும் மடிக்கே
- நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.6 152 ஐவாய் அரவினை மதியுடன் வைத்த
- அழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதர
- நினைந்தேன் உள்ளமுள் ளளவும்
உய்வான் எண்ணிவந் தும்மடி அடைந்தேன்
- உகவீ ராகிலும் உகப்பன்
நைவா னன்றுமக் காட்பட்ட தடியேன்
- நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.7 153 கலியேன் மானுட வாழ்க்கையொன் றாகக்
- கருதிடிற் கண்கணீர் பில்கும்
பலிதேர்ந் துண்பதோர் பண்புகண் டிகழேன்
- பசுவே ஏறிலும் பழியேன்
வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்
- மாட்டேன் மறுமையை நினையேன்
நலியேன் ஒருவரை நானுமை யல்லால்
- நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.8 154 குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்
- கொண்டா ராகிலுங் கொள்ளக்
கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்
- கண்ணா நின்னல தறியேன்
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு
- தொழுதேன் என்வினை போக
நண்டா டும்வயற் றண்டலை வேலி
- நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.9 155 கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
- கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
- நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
- திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர்
- பாடநும் பாவம்பற் றறுமே.
7.15.10 - சொல்லாய் திப்பிய மூர்த்தி
- குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
- விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
- அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
- கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.
7.16.1 - விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில்
- செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி
இருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சி
- இந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவிற்
பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்
- பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருக
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்
- களிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே.
7.16.2 158 இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது வியற்றி
- இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்
- தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில்
மண்டபமுங் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்
- மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
கண்டவர்கண் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
- காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.
7.16.3 159 மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்
- மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி
- ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்
அலையடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி
- அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்றென் கரைமேற்
கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையாற்
- கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே.
7.16.4 160 நிற்பானுங் கமலத்தில் இருப்பானும் முதலா
- நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்
வெற்பார்வில் அரவுநாண் எரியம்பால் விரவார்
- புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவிற்
சொற்பால பொருட்பால சுருதியொரு நான்குந்
- தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் றிறத்தே
கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார்
- கலைபயிலந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே.
7.16.5 161 பெற்றிமையொன் றறியாத தக்கனது வேள்விப்
- பெருந்தேவர் *சிரந்தோள்பல் கரங்கண்பீ டழியச்
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலாற் றேய்வித்
- தருள்பெருகு சிவபெருமான் சேர்தருமூர் வினவில்
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமுந்
- திரைபொருது வருபுனல்சேர் #அரிசிலின்றென் கரைமேற்
கற்றினநன் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
- கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே.
*எச்சன்சிரம், இந்திரன்றோள், சூரியன்பல், அக்கினிதேவன்
கரம், பகன் என்னும் பெயருள்ள மற்றொரு சூரியன்கண்
இவை பீடழிந்தவை.
#விஷ்ணுவினால் சொல்லப்பட்டுவந்தமையால் அரிசொல்
நதியென்று பெயர். அது அரிசில் என மருவியிருக்கின்றது.
இதனைக் கும்பகோணப்புராணத்திற் கண்டுகொள்க.7.16.6 162 இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் டோ ளும்
- இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றி
நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாச மாகி
- நிற்பனவும் நடப்பனவாம் நின்மலனூர் வினவிற்
பலங்கள்பல திரையுந்திப் பருமணிபொன் கொழித்துப்
- பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்
கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்றென் கரைமேற்
- கயலுகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே.
7.16.7 163 மாலயனுங் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன்
- வன்னிமதி சென்னிமிசை வைத்தவன்மொய்த் தெழுந்த
வேலைவிட முண்டமணி கண்டன்விடை யூரும்
- விமலனுமை யவளோடு மேவியஊர் வினவிற்
சோலைமலி குயில்கூவக் கோலமயி லாலச்
- சுரும்பொடுவண் டிசைமுரலப் பசுங்கிளிசொற் றுதிக்கக்
காலையிலும் மாலையிலுங் கடவுளடி பணிந்து
- கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.
7.16.8 164 பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது
- பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்
கரும்புவிலின் மலர்வாளிக் காமனுடல் வேவக்
- கனல்விழித்த கண்ணுதலோன் கருதுமூர் வினவில்
இரும்புனல்வெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம்
- இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்றென் கரைமேற்
கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்
- கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே.
7.16.9 165 தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்திற்
- றடங்கொள்பெருங் கோயில்தனிற் றக்கவகை யாலே
வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய
- மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்
- விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்றென் கரைமேற்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த
- கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே.
7.16.10 166 தண்புனலும் வெண்மதியுந் தாங்கியசெஞ் சடையன்
- தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலிகொண் டுழல்பரமன் உறையுமூர் நிறைநீர்
- ஒழுகுபுனல் அரிசிலின்றென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
- நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்
பண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம்
- பாடவல்லா ரல்லலொடு பாவமிலர் தாமே.
7.16.11 - இந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவிற்
- கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரந் தீயெழு
- வித்தவன் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
- வைத்தெனை யாளுங்கொண்ட
நாவல னார்க்கிட மாவது
- நந்திரு நாவலூரே.
7.17.1 - வித்தவன் ஓரம்பினால்
- ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்
- என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்
- தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிட மாவது
- நந்திரு நாவலூரே.
7.17.2 169 வேகங்கொண் டோ டிய வெள்விடை
- ஏறியோர் மெல்லியலை
ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
- வைத்தெனை ஆளுங்கொண்டார்
போகங்கொண் டார்*கடற் கோடியின்
- மோடியைப் பூண்பதாக
நாகங்கொண் டார்க்கிட மாவது
- நந்திரு நாவலூரே.
*கடற்கோடி என்பது கோடிக்குழகரென்னுந்தலம்.மோடி என்பது
அங்குக் கோயில் கொண்டிருக்கும் துர்க்கை.7.17.3 170 அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்
- சேவினை ஆட்சிகொண்டார்
தஞ்சங்கொண் டாரடிச் சண்டியைத்
- தாமென வைத்துகந்தார்
நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
- வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சங்கொண் டார்க்கிட மாவது
- நந்திரு நாவலூரே.
7.17.4 171 உம்பரார் கோனைத்திண் டோ ள்முரித்
- தாருரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண
- நீற்றரோர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்
- வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிட மாவது
- நந்திரு நாவலூரே.
7.17.5 172 கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங்
- கோவலுங் கோத்திட்டையும்
வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
- வைத்தெனை ஆளுங்கொண்டார்
ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்
- பலத்தே அருக்கனைமுன்
நாட்டங்கொண் டார்க்கிட மாவது
- நந்திரு நாவலூரே.
7.17.6 173 தாயவ ளாய்த்தந்தை யாகிச்
- சாதல் பிறத்தலின்றிப்
போயக லாமைத்தன் பொன்னடிக்
- கென்னைப் பொருந்தவைத்த
வேயவ னார்வெண்ணெய் நல்லூரில்
- வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயக னார்க்கிட மாவது
- நந்திரு நாவலூரே.
7.17.7 174 வாயாடி மாமறை ஓதியோர்
- வேதிய னாகிவந்து
தீயாடி யார்சினக் கேழலின்
- பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்
- வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடி யார்க்கிட மாவது
- நந்திரு நாவலூரே.
7.17.8 175 படமாடு பாம்பணை யானுக்கும்
- பாவைநல் லாள்தனக்கும்
வடமாடு மால்விடை ஏற்றுக்கும்
- பாகனாய் வந்தொருநாள்
இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில்
- வைத்தெனை ஆளுங்கொண்ட
நடமாடி யார்க்கிட மாவது
- நந்திரு நாவலூரே.
7.17.9 176 மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்
- தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்
- வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கவொண் ணாததோர் வேழத்தி
- னையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிட மாவது
- நந்திரு நாவலூரே.
7.17.10 177 நாதனுக் கூர்நமக் கூர்நர
- சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும்
- ஊரணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்டனா
- ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர்
- தம்வினை கட்டறுமே.
7.17.11 - என்பதோர் வாழ்வுதந்தார்
- இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினு
- மாகச்சிந் திக்கினல்லாற்
காப்பது வேள்விக் குடிதண்
- டுருத்தியெங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்
- நாமிவர்க் காட்படோ மே.
7.18.1 - மாகச்சிந் திக்கினல்லாற்
- யாவர்க்குங் காட்சியொண்ணார்
சுட்டவெண் ணீறணிந் தாடுவர்
- பாடுவர் தூயநெய்யால்
வட்டக்குண் டத்தில் எரிவளர்த்
- தோம்பி மறைபயில்வார்
அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல்
- நாமிவர்க் காட்படோ மே.
7.18.2 180 பேருமோர் ஆயிரம் பேருடை
- யார்பெண்ணோ டாணுமல்லர்
ஊரும தொற்றியூர் மற்றையூர்
- பெற்றவா நாமறியோம்
காருங் கருங்கடல் நஞ்சமு
- துண்டுகண் டங்கறுத்தார்க்
காரம்பாம் பாவ தறிந்தோமேல்
- நாமிவர்க் காட்படோ மே.
7.18.3 181 ஏனக்கொம் பும்மிள ஆமையும்
- பூண்டங்கோர் ஏறுமேறிக்
கானக்காட் டிற்றொண்டர் கண்டன
- சொல்லியுங் காமுறவே
மானைத்தோல் ஒன்றை உடுத்துப்
- புலித்தோல் பியற்குமிட்டு
யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல்
- நாமிவர்க் காட்படோ மே.
7.18.4 182 ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர்
- ஊரிடு பிச்சையல்லாற்
பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர்
- ஏறியோர் பூதந்தம்பாற்
பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ
- றும்பல பாம்புபற்றி
ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல்
- நாமிவர்க் காட்படோ மே.
7.18.5 183 குறவனார் தம்மகள் தம்மக
- னார்மண வாட்டிகொல்லை
மறவனா ராயங்கோர் பன்றிப்பின்
- போவது மாயங்கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதிய
- ராயங்கோர் சோர்வுபடா
அறவனார் ஆவத றிந்தோமேல்
- நாமிவர்க் காட்படோ மே.
7.18.6 184 பித்தரை ஒத்தொரு பெற்றியர்
- நற்றவை என்னைப்பெற்ற
முத்தவை தம்மனை தந்தைக்குந்
- தவ்வைக்குந் தம்பிரானார்
செத்தவர் தந்தலை யிற்பலி
- கொள்வதே செல்வமாகில்
அத்தவம் ஆவத றிந்தோமேல்
- நாமிவர்க் காட்படோ மே.
7.18.7 185 உம்பரான் ஊழியான் ஆழியான்
- ஓங்கி மலருறைவான்
தம்பரம் அல்லவர் சிந்திப்ப
- வர்தடு மாற்றறுப்பார்
எம்பரம் அல்லவர் என்னெஞ்சத்
- துள்ளும் இருப்பதாகில்
அம்பரம் ஆவத றிந்தோமேல்
- நாமிவர்க் காட்படோ மே.
7.18.8 186 இந்திர னுக்கும் இராவண
- னுக்கும் அருள்புரிந்தார்
மந்திரம் ஓதுவர் மாமறை
- பாடுவர் மான்மறியர்
சிந்துரக் கண்ணனும் நான்முக
- னும்முட னாய்த்தனியே
அந்தரஞ் செல்வத றிந்தோமேல்
- நாமிவர்க் காட்படோ மே.
7.18.9 187 கூடலர் மன்னன் குலநாவ
- லூர்க்கோன் நலத்தமிழைப்
பாடவல் லபர மன்னடி
- யார்க்கடி மைவழுவார்
நாடவல் லதொண்டன் ஆரூரன்
- ஆட்படு மாறுசொல்லிப்
பாடவல் லார்பர லோகத்
- திருப்பது பண்டமன்றே.
7.18.10 - பாடுவர் தூயநெய்யால்
- காயிழை பங்கினராம்
பற்றவ னாரெம் பராபர
- ரென்று பலர்விரும்பும்
கொற்றவ னார்குறு காதவர்
- ஊர்நெடு வெஞ்சரத்தால்
செற்றவ னார்க்கிட மாவது
- நந்திரு நின்றியூரே.
7.19.1 - ரென்று பலர்விரும்பும்
- ளார்வடி வார்ந்தநீறு
பூசத்தி னார்புக லிந்நகர்
- போற்றுமெம் புண்ணியத்தார்
நேசத்தி னாலென்னை யாளுங்கொண்
- டார்நெடு மாகடல்சூழ்
தேசத்தி னார்க்கிட மாவது
- நந்திரு நின்றியூரே.
7.19.2 190 அங்கையின் மூவிலை வேலர்
- அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித்
- தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையோர் பாகர் மகிழ்ந்த
- இடம்வள மல்குபுனற்
செங்கயல் பாயும் வயல்பொலி
- யுந்திரு நின்றியூரே.
7.19.3 191 ஆறுகந் தாரங்கம் நான்மறை
- யாரெங்கு மாகியடல்
ஏறுகந் தாரிசை ஏழுகந்
- தார்முடிக் கங்கைதன்னை
வேறுகந் தார்விரி நூலுகந்
- தார்பரி சாந்தமதா
நீறுகந் தாருறை யும்மிட
- மாந்திரு நின்றியூரே.
7.19.4 192 வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில்
- லார்நறு நெய்தயிர்பால்
அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி
- னாரதி கைப்பதியே
தஞ்சங்கொண் டார்தமக் கென்றும்
- இருக்கை சரணடைந்தார்
நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது
- நந்திரு நின்றியூரே.
7.19.5 193 ஆர்த்தவர் ஆடர வம்மரை
- மேற்புலி ஈருரிவை
போர்த்தவர் ஆனையின் தோலுடல்
- வெம்புலால் கையகலப்
பார்த்தவ ரின்னுயிர் பார்படைத்
- தான்சிர மஞ்சிலொன்றைச்
சேர்த்தவ ருக்குறை யும்மிட
- மாந்திரு நின்றியூரே.
7.19.6 194 தலையிடை யார்பலி சென்றகந்
- தோறுந் திரிந்தசெல்வர்
மலையுடை யாளொரு பாகம்வைத்
- தார்கல் துதைந்தநன்னீர்
அலையுடை யார்சடை எட்டுஞ்
- சுழல அருநடஞ்செய்
நிலையுடை யாருறை யும்மிட
- மாந்திரு நின்றியூரே.
7.19.7 195 எட்டுகந் தார்திசை ஏழுகந்
- தார்எழுத் தாறுமன்பர்
இட்டுகந் தார்மலர்ப் பூசையிச்
- சிக்கும் இறைவர்முன்னாள்
பட்டுகும் பாரிடைக் காலனைக்
- காய்ந்து பலியிரந்தூண்
சிட்டுகந் தார்க்கிட மாவது
- நந்திரு நின்றியூரே.
7.19.8 196 காலமும் ஞாயிறு மாகிநின்
- றார்கழல் பேணவல்லார்
சீலமுஞ் செய்கையுங் கண்டுகப்
- பாரடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன்
- மந்திரத் தால்வணங்க
நீலநஞ் சுண்டவ ருக்கிட
- மாந்திரு நின்றியூரே.
7.19.9 197 வாயார் மனத்தால் நினைக்கு
- மவருக் கருந்தவத்தில்
தூயார் சுடுபொடி யாடிய
- மேனியர் வானிலென்றும்
மேயார் விடையுகந் தேறிய
- வித்தகர் பேர்ந்தவர்க்குச்
சேயார் அடியார்க் கணியவர்
- ஊர்திரு நின்றியூரே.
7.19.10 198 சேரும் புகழ்த்தொண்டர் செய்கை
- அறாத்திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதி யாயிருந்
- தானைத் திருநாவலா
ரூரன் உரைத்த உறுதமிழ்
- பத்தும்வல் லார்வினைபோய்ப்
பாரும் விசும்புந் தொழப்பர
- மன்னடி கூடுவரே.
7.19.11 - போற்றுமெம் புண்ணியத்தார்
- நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மட வாளவள்
- வாடி வருந்தாமே
கோளிலி எம்பெரு மான்குண்டை
- யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெரு மானவை
- அட்டித் தரப்பணியே.
7.20.1 - வாடி வருந்தாமே
- நங்கையோர் பங்குடையாய்
விண்டவர் தம்புர மூன்றெரி
- செய்தவெம் வேதியனே
தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்
- கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவ னேயவை
- அட்டித் தரப்பணியே.
7.20.1 201 பாதியோர் பெண்ணைவைத் தாய்பட
- ருஞ்சடைக் கங்கைவைத்தாய்
மாதர்நல் லார்வருத் தம்மது
- நீயும் அறிதியன்றே
கோதில் பொழில்புடை சூழ்குண்டை
- யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆதியே அற்புத னேயவை
- அட்டித் தரப்பணியே.
7.20.3 202 சொல்லுவ தென்னுனை நான்தொண்டை
- வாயுமை நங்கையைநீ
புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு
- பூசல்செய் தாருளரோ
கொல்லை வளம்புற விற்குண்டை
- யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
அல்லல் களைந்தடி யேற்கவை
- அட்டித் தரப்பணியே.
7.20.4 203 முல்லை முறுவல் உமையொரு
- பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்டலை யிற்பலி
- கொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புற விற்றிருக்
- கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடி யேற்கவை
- அட்டித் தரப்பணியே.
7.20.5 204 குரவம ருங்குழ லாளுமை
- நங்கையோர் பங்குடையாய்
பரவை பசிவருத் தம்மது
- நீயும் அறிதியன்றே
குரவம ரும்பொழில் சூழ்குண்டை
- யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
அரவ மசைத்தவ னேயவை
- அட்டித் தரப்பணியே.
7.20.6 205 எம்பெரு மானுனை யேநினைந்
- தேத்துவன் எப்பொழுதும்
வம்பம ருங்குழ லாளொரு
- பாகம மர்ந்தவனே
செம்பொனின் மாளிகை சூழ்திருக்
- கோளிலி எம்பெருமான்
அன்பது வாயடி யேற்கவை
- அட்டித் தரப்பணியே.
7.20.7 206 அரக்கன் முடிகரங் கள்அடர்த்
- திட்டவெம் மாதிபிரான்
பரக்கும் அரவல்கு லாள்பர
- வையவள் வாடுகின்றாள்
குரக்கினங் கள்குதி கொள்குண்டை
- யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
இரக்கம தாயடி யேற்கவை
- அட்டித் தரப்பணியே.
7.20.8 207 பண்டைய மால்பிர மன்பறந்
- தும்மிடந் தும்மயர்ந்துங்
கண்டில ராயவர் கள்கழல்
- காண்பரி தாயபிரான்
தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்
- கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவ னேயவை
- அட்டித் தரப்பணியே.
7.20.9 208 கொல்லை வளம்புற விற்றிருக்
- கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பர வுந்திரு
- நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண் டிநினைந்
- தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துல கின்அண்டர்
- வானுல காள்பவரே.
7.20.10 - செய்தவெம் வேதியனே
- வைத்துகந்து திறம்பா வண்ணங்
கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக்
- கண்டானைக் கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட
- மயிலாடுங் கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோ
- தவர்நமக் கினிய வாறே.
7.30.1 - கண்டானைக் கருப்ப றியலூர்க்
- உள்ளத்தே நிறைந்து தோன்றுங்
காற்றானைத் தீயானைக் கதிரானை
- மதியானைக் கருப்ப றியலூர்க்
கூற்றானைக் கூற்றுதைத்துக் கோல்வளையாள்
- அவளோடுங் கொகுடிக் கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ
- தவர்நமக் கினிய வாறே.
7.30.2 301 முட்டாமே நாடோ றும் நீர்மூழ்கிப்
- பூப்பறித்து மூன்று போதுங்
கட்டார்ந்த இண்டைகொண் டடிச்சேர்த்தும்
- அந்தணர்தங் கருப்ப றியலூர்
கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக்
- குழகனைக் கொகுடிக் கோயில்
எட்டான மூர்த்தியை நினைந்தபோ
- தவர்நமக் கினிய வாறே.
7.30.3 302 விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி
- வினைபோக வேலி தோறுங்
கருந்தாள வாழைமேற் செங்கனிகள்
- தேன்சொரியுங் கருப்ப றியலூர்க்
குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையாள்
- அவளோடுங் கொகுடிக் கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்தபோ
- தவர்நமக் கினிய வாறே.
7.30.4 303 பொடியேறு திருமேனிப் பெருமானைப்
- பொங்கரவக் கச்சை யானைக்
கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை
- குதிகொள்ளுங் கருப்ப றியலூர்க்
கொடியேறி வண்டினமுந் தண்டேனும்
- பண்செய்யுங் கோகுடிக் கோயில்
அடியேறு கழலானை நினைந்தபோ
- தவர்நமக் கினிய வாறே.
7.30.5 304 பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப்
- போற்றிசைத்துப் பூசை செய்து
கையினா லெரியோம்பி மறைவளர்க்கும்
- அந்தணர்தங் கருப்ப றியலூர்க்
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ
- மயிலாலுங் கொகுடிக் கோயில்
ஐயனையென் மனத்தினால் நினைந்தபோ
- தவர்நமக் கினிய வாறே.
7.30.6 305 செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந்
- தீர்ந்தொழியச் சிந்தை செய்ம்மின்
கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி
- கண்படுக்குங் கருப்ப றியலூர்க்
கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையாள்
- அவளோடுங் கொகுடிக் கோயில்
அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ
- தவர்நமக் கினிய வாறே.
7.30.7 306 பறையாத வல்வினைகள் பறைந்தொழியப்
- பன்னாளும் பாடி யாடிக்
கறையார்ந்த கண்டத்தன் எண்டோ ளன்
- முக்கண்ணன் கருப்ப றியலூர்க்
குறையாத மறைநாவர் குற்றேவல்
- ஒழியாத கொகுடிக் கோயில்
உறைவானை மனத்தினால் நினைந்தபோ
- தவர்நமக் கினிய வாறே.
7.30.8 307 சங்கேந்து கையானுந் தாமரையின்
- மேலானுந் தன்மை காணாக்
கங்கார்ந்த வார்சடைகள் உடையானை
- விடையானைக் கருப்ப றியலூர்க்
கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள்
- பலவுதிர்க்குங் கொகுடிக் கோயில்
எங்கோனை மனத்தினால் நினைந்தபோ
- தவர்நமக் கினிய வாறே.
7.30.9 308 பண்டாழின் இசைமுரலப் பன்னாளும்
- பாவித்துப் பாடி யாடிக்
கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம்
- பூஞ்சோலைக் கருப்ப றியலூர்க்
குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும்
- புறங்கூறுங் கொகுடிக் கோயில்
எண்டோ ளெம் பெருமானை நினைந்தபோ
- தவர்நமக் கினிய வாறே.
7.30.10 309 கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம்
- மிடர்தீர்க்குங் கருப்ப றியலூர்க்
குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும்
- பூஞ்சோலைக் கொகுடிக் கோயில்
இலைமலிந்த மழுவானை மனத்தினா
- லன்புசெய் தின்ப மெய்தி
மலைமலிந்த தோள்ஊரன் வனப்பகையப்
- பன்னுரைத்த வண்ட மிழ்களே.
7.30.11 - மதியானைக் கருப்ப றியலூர்க்
- தலையரோமலைப் பாவையோர்
கூறுதாங்கிய குழகரோகுழைக்
- காதரோகுறுங் கோட்டிள
ஏறுதாங்கிய கொடியரோசுடு
- பொடியரோஇலங் கும்பிறை
ஆறுதாங்கிய சடையரோநமக்
- கடிகளாகிய அடிகளே.
7.33.1 - காதரோகுறுங் கோட்டிள
- கிசையுமாநினைந் தேத்துவீர்
கட்டிவாழ்வது நாகமோசடை
- மேலும்நாறு கரந்தையோ
பட்டியேறுகந் தேறரோபடு
- வெண்டலைப்பலி கொண்டுவந்
தட்டியாளவுங் கிற்பரோநமக்
- கடிகளாகிய அடிகளே.
7.33.2 332 ஒன்றினீர்கள்வந் துரைமினோநுமக்
- கிசையுமாநினைந் தேத்துவீர்
குன்றிபோல்வதோ ருருவரோகுறிப்
- பாகிநீறுகொண் டணிவரோ
இன்றியேயிலர் ஆவரோஅன்றி
- உடையராயிலர் ஆவரோ
அன்றியேமிக அறவரோநமக்
- கடிகளாகிய அடிகளே.
7.33.3 333 தேனையாடுமுக் கண்ணரோமிகச்
- செய்யரோவெள்ளை நீற்றரோ
பானெய்ஆடலும் பயில்வரோதமைப்
- பற்றினார்கட்கு நல்லரோ
மானைமேவிய கண்ணினாள்மலை
- மங்கைநங்கையை அஞ்சவோர்
ஆனையீருரி போர்ப்பரோநமக்
- கடிகளாகிய அடிகளே.
7.33.4 334 கோணல்மாமதி சூடரோகொடு
- கொட்டிகாலர் கழலரோ
வீணைதானவர் கருவியோ
- விடையேறுவேத முதல்வரோ
நாணதாகவோர் நாகங்கொண்டரைக்
- கார்ப்பரோநல மார்தர
ஆணையாகநம் மடிகளோநமக்
- கடிகளாகிய அடிகளே.
7.33.5 335 வந்துசொல்லுமின் மூடனேனுக்கு
- வல்லவாநினைந் தேத்துவீர்
வந்தசாயினை அறிவரோதம்மை
- வாழ்த்தினார்கட்கு நல்லரோ
புந்தியாலுரை கொள்வரோஅன்றிப்
- பொய்யில்மெய்யுரைத் தாள்வரோ
அன்றியேமிக அறவரோநமக்
- கடிகளாகிய அடிகளே.
7.33.6 336 மெய்யென்சொல்லுமின் நமரங்காளுமக்
- கிசையுமாநினைந் தேத்துவீர்
கையிற்சூலம துடையரோகரி
- காடரோகறைக் கண்டரோ
வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடை
- ஏறரோகடை தோறுஞ்சென்
றையங்கொள்ளுமவ் வடிகளோநமக்
- கடிகளாகிய அடிகளே.
7.33.7 337 நீடுவாழ்பதி உடையரோஅயன்
- நெடியமாலுக்கு நெடியரோ
பாடுவாரையும் உடையரோதமைப்
- பற்றினார்கட்கு நல்லரோ
காடுதானரங் காகவேகைகள்
- எட்டினோடில யம்பட
ஆடுவாரெனப் படுவரோநமக்
- கடிகளாகிய அடிகளே.
7.33.8 338 நமணநந்தியுங் கருமவீரனுந்
- தருமசேனனு மென்றிவர்
குமணமாமலைக் குன்றுபோனின்று
- தங்கள்கூறையொன் றின்றியே
ஞமணஞாஞண ஞாணஞோணமென்
- றோதியாரையு நாணிலா
அமணராற்பழிப் புடையரோநமக்
- கடிகளாகிய அடிகளே.
7.33.9 339 படிசெய்நீர்மையிற் பத்தர்காள்பணிந்
- தேத்தினேன்பணி யீரருள்
வடிவிலான்றிரு நாவலூரன்
- வனப்பகையப்பன் வன்றொண்டன்
செடியனாகிலுந் தீயனாகிலுந்
- தம்மையேமனஞ் சிந்திக்கும்
அடியனூரனை ஆள்வரோநமக்
- கடிகளாகிய அடிகளே.
7.33.10 - மேலும்நாறு கரந்தையோ
- சார்வினுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை
- புகலூர்பாடுமின் புலவீர்காள்
இம்மையேதருஞ் சோறுங்கூறையும்
- ஏத்தலாமிடர் கெடலுமாம்
அம்மையேசிவ லோகமாள்வதற்
- கியாதுமையுற வில்லையே.
7.34.1 - புகலூர்பாடுமின் புலவீர்காள்
- விசயனேவில்லுக் கிவனென்று
கொடுக்கிலாதானைப் பாரியேயென்று
- கூறினுங்கொடுப் பாரிலை
பொடிக்கொள்மேனியெம் புண்ணியன்புக
- லூரைப்பாடுமின் புலவீர்காள்
அடுக்குமேலம ருலகமாள்வதற்
- கியாதுமையுற வில்லையே.
7.34.2 342 காணியேற்பெரி துடையனேகற்று
- நல்லனேசுற்றம் நற்கிளை
பேணியேவிருந் தோம்புமேயென்று
- பேசினுங்கொடுப் பாரிலை
பூணிபூண்டுழப் புட்சிலம்புந்தண்
- புகலூர்பாடுமின் புலவீர்காள்
ஆணியாயம ருலகமாள்வதற்
- கியாதுமையுற வில்லையே.
7.34.3 343 நரைகள்போந்துமெய் தளர்ந்துமூத்துடல்
- நடுங்கிநிற்குமிக் கிழவனை
வரைகள்போல்திரள் தோளனேயென்று
- வாழ்த்தினுங்கொடுப் பாரிலை
புரைவெள்ளேறுடைப் புண்ணியன்புக
- லூரைப்பாடுமின் புலவீர்காள்
அரையனாயம ருலகமாள்வதற்
- கியாதுமையுற வில்லையே.
7.34.4 344 வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப்
- பாவியைவழக் கில்லியைப்
பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று
- பாடினுங்கொடுப் பாரிலை
பொன்செய்செஞ்சடைப் புண்ணியன்புக
- லூரைப்பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில்நோயறுத் துஞ்சுபோவதற்
- கியாதுமையுற வில்லையே.
7.34.5 345 நலமிலாதானை நல்லனேயென்று
- நரைத்தமாந்தரை இளையனே
குலமிலாதானைக் குலவனேயென்று
- கூறினுங்கொடுப் பாரிலை
புலமெலாம்வெறி கமழும்பூம்புக
- லூரைப்பாடுமின் புலவீர்காள்
அலமராதமர் உலகமாள்வதற்
- கியாதுமையுற வில்லையே.
7.34.6 346 நோயனைத்தடந் தோளனேயென்று
- நொய்யமாந்தரை விழுமிய
தாயன்றோபுல வோர்க்கெலாமென்று
- சாற்றினுங்கொடுப் பாரிலை
போயுழன்றுகண் குழியாதேயெந்தை
- புகலூர்பாடுமின் புலவீர்காள்
ஆயமின்றிப்போய் அண்டமாள்வதற்
- கியாதுமையுற வில்லையே.
7.34.7 347 எள்விழுந்திடம் பார்க்குமாகிலும்
- ஈக்கும்ஈகிலன் ஆகிலும்
வள்ளலேயெங்கள் மைந்தனேயென்று
- வாழ்த்தினுங்கொடுப் பாரிலை
புள்ளெலாஞ்சென்று சேரும்பூம்புக
- லூரைப்பாடுமின் புலவீர்காள்
அள்ளற்பட்டழுந் தாதுபோவதற்
- கியாதுமையுற வில்லையே.
7.34.8 348 கற்றிலாதானைக் கற்றுநல்லனே
- காமதேவனை யொக்குமே
முற்றிலாதானை முற்றனேயென்று
- மொழியினுங்கொடுப் பாரிலை
பொத்திலாந்தைகள் பாட்டறாப்புக
- லூரைப்பாடுமின் புலவீர்காள்
அத்தனாயம ருலகமாள்வதற்
- கியாதுமையுற வில்லையே.
7.34.9 349 தையலாருக்கோர் காமனேயென்றுஞ்
- சாலநல்வழக் குடையனே
கையுலாவிய வேலனேயென்று
- கழறினுங்கொடுப் பாரிலை
பொய்கையாவியின் மேதிபாய்புக
- லூரைப்பாடுமின் புலவீர்காள்
ஐயனாயம ருலகமாள்வதற்
- கியாதுமையுற வில்லையே.
7.34.10 350 செறுவினிற்செழுங் கமலமோங்குதென்
- புகலூர்மேவிய செல்வனை
நறவம்பூம்பொழில் நாவலூரன்
- வனப்பகையப்பன் சடையன்றன்
சிறுவன்வன்றொண்டன் ஊரன்பாடிய
- பாடல்பத்திவை வல்லவர்
அறவனாரடி சென்றுசேர்வதற்
- கியாதுமையுற வில்லையே.
இது பொன்வேண்டுங் குறிப்புடன் பதிகமோதித் துதி
செய்யவுஞ் சுவாமி கிருபைசெய்யாமையால் மனவெறுப்
புடன் திருமடத்துக்கெழுந்தருளாமல் ஆலயத்தில்
திருப்பணிக்காக வந்திருந்த செங்கற்களைப் பரப்பி
அதன்மேற் பள்ளிகொண்டு துயில்கூர்ந்து அது நீங்கி
யெழுந்தபோது செங்கற்கள் பொன்னாயிருக்கக்கண்டு
மகிழ்ந்து ஓதித் துதிசெய்தருளியது.7.34.11 - கூறினுங்கொடுப் பாரிலை
- நின்றும்போந்துவந் தின்னம்பர்த்
தங்கினோமையும் இன்னதென்றிலர்
- ஈசனாரெழு நெஞ்சமே
கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள்
- ஏத்திவானவர் தாந்தொழும்
பொங்குமால்விடை யேறிசெல்வப்
- புறம்பயந்தொழப் போதுமே.
7.35.1 - ஈசனாரெழு நெஞ்சமே
- பண்டையாரலர் பெண்டிரும்
நெதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும்
- நினைப்பொழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம்
- மகிழும்மல்லிகை செண்பகம்
புதியபூமலர்ந் தெல்லிநாறும்
- புறம்பயந்தொழப் போதுமே.
7.35.2 353 புறந்திரைந்து நரம்பெழுந்து
- நரைத்துநீயுரை யாற்றளர்ந்
தறம்புரிந்து நினைப்பதாண்மை
- அரிதுகாண்இஃ தறிதியேல்
திறம்பியாதெழு நெஞ்சமேசிறு
- காலைநாமுறு வாணியம்
புறம்பயத்துறை பூதநாதன்
- புறம்பயந்தொழப் போதுமே.
7.35.3 354 குற்றொருவரைக் கூறைகொண்டு
- கொலைகள்சூழ்ந்த களவெலாஞ்
செற்றொருவரைச் செய்ததீமைகள்
- இம்மையேவருந் திண்ணமே
மற்றொருவரைப் பற்றிலேன்மற
- வாதெழுமட நெஞ்சமே
புற்றரவுடைப் பெற்றமேறி
- புறம்பயந்தொழப் போதுமே.
7.35.4 355 கள்ளிநீசெய்த தீமையுள்ளன
- பாவமும்பறை யும்படி
தெள்ளிதாவெழு நெஞ்சமேசெங்கண்
- சேவுடைச்சிவ லோகனூர்
துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல்
- தோன்றுதாமரைப் பூக்கள்மேல்
புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும்
- புறம்பயந்தொழப் போதுமே.
7.35.5 356 படையெலாம்பக டாரஆளிலும்
- பௌவஞ்சூழ்ந்தர சாளிலுங்
கடையெலாம்பிணைத் தேரைவால்கவ
- லாதெழுமட நெஞ்சமே
மடையெலாங்கழு நீர்மலர்ந்து
- மருங்கெலாங்கரும் பாடத்தேன்
புடையெலாம்மணம் நாறுசோலைப்
- புறம்பயந்தொழப் போதுமே.
7.35.6 357 முன்னைச்செய்வினை இம்மையில்வந்து
- மூடுமாதலின் முன்னமே
என்னைநீதியக் காதெழுமட
- நெஞ்சமேயெந்தை தந்தையூர்
அன்னச்சேவலோ டூடிப்பேடைகள்
- கூடிச்சேரு மணிபொழிற்
புன்னைக்கன்னி கழிக்கணாறும்
- புறம்பயந்தொழப் போதுமே.
7.35.7 358 மலமெலாமறும் இம்மையேமறு
- மைக்கும்வல்வினை சார்கிலா
சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள்
- சங்கரன்வந்து தங்குமூர்
கலமெலாங்கடல் மண்டுகாவிரி
- நங்கையாடிய கங்கைநீர்
புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும்
- புறம்பயந்தொழப் போதுமே.
7.35.8 359 பண்டரியன செய்ததீமையும்
- பாவமும்பறை யும்படி
கண்டரியன கேட்டியேற்கவ
- லாதெழுமட நெஞ்சமே
தொண்டரியன பாடித்துள்ளிநின்
- றாடிவானவர்தாந் தொழும்
புண்டரீக மலரும்பொய்கை
- புறம்பயந்தொழப் போதுமே.
7.35.9 360 துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந்
- துயக்கறாத மயக்கிவை
அஞ்சிஊரன் திருப்புறம்பயத்
- தப்பனைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயந்தொழு
- துய்துமென்று நினைத்தன
வஞ்சியாதுரை செய்யவல்லவர்
- வல்லவானுல காள்வரே.
7.35.10 - நினைப்பொழிமட நெஞ்சமே
- கண்டவெண்டலை யோடுகொண்
டூரெலாந்திரிந் தென்செய்வீர்பலி
- ஓரிடத்திலே கொள்ளும்நீர்
பாரெலாம்பணிந் தும்மையேபர
- விப்பணியும்பைஞ் ஞீலியீர்
ஆரமாவது நாகமோசொல்லும்
- ஆரணீய விடங்கரே.
7.36.1 - ஓரிடத்திலே கொள்ளும்நீர்
- வாயபாம்பது மூசெனும்
பலிக்குநீர்வரும் போதுநுங்கையிற்
- பாம்புவேண்டா பிரானிரே
மலைத்தசந்தொடு வேங்கைகோங்கமும்
- மன்னுகாரகில் சண்பகம்
அலைக்கும்பைம்புனல் சூழ்பைஞ்ஞீலியில்
- ஆரணீய விடங்கரே.
7.36.2 363 தூயவர்கண்ணும் வாயும்மேனியுந்
- துன்னஆடை சுடலையிற்
பேயொடாடலைத் தவிரும்நீரொரு
- பித்தரோவெம் பிரானிரே
பாயும்நீர்க்கிடங் கார்கமலமும்
- பைந்தண்மாதவி புன்னையும்
ஆயபைம்பொழில் சூழ்பைஞ்ஞீலியில்
- ஆரணீய விடங்கரே.
7.36.3 364 செந்தமிழ்த்திறம் வல்லிரோசெங்கண்
- அரவமுன்கையில் ஆடவே
வந்துநிற்குமி தென்கொலோபலி
- மாற்றமாட்டோ ம் இடகிலோம்
பைந்தண்மாமலர் உந்துசோலைகள்
- கந்தம்நாறும்பைஞ் ஞீலியீர்
அந்திவானமும் மேனியோசொல்லும்
- ஆரணீய விடங்கரே.
7.36.4 365 நீறுநுந்திரு மேனிநித்திலம்
- நீணெடுங்கண்ணி னாளொடுங்
கூறராய்வந்து நிற்றிராற்கொணர்ந்
- திடுகிலோம்பலி நடமினோ
பாறுவெண்டலை கையிலேந்திபைஞ்
- ஞீலியேனென்றீர் அடிகள்நீர்
ஆறுதாங்கிய சடையரோசொல்லும்
- ஆரணீய விடங்கரே.
7.36.5 366 குரவம்நாறிய குழலினார்வளை
- கொள்வதேதொழி லாகிநீர்
இரவும்இம்மனை அறிதிரேயிங்கே
- நடந்துபோகவும் வல்லிரே
பரவிநாடொறும் பாடுவார்வினை
- பற்றறுக்கும்பைஞ் ஞீலியீர்
அரவம்ஆட்டவும் வல்லிரோசொல்லும்
- ஆரணீய விடங்கரே.
7.36.6 367 ஏடுலாமலர்க் கொன்றைசூடுதிர்
- என்பெலாமணிந் தென்செய்வீர்
காடுநும்பதி ஓடுகையது
- காதல்செய்பவர் பெறுவதென்
பாடல்வண்டிசை யாலுஞ்சோலைப்பைஞ்
- ஞீலியேனென்று நிற்றிரால்
ஆடல்பாடலும் வல்லிரோசொல்லும்
- ஆரணீய விடங்கரே.
7.36.7 368 மத்தமாமலர் கொன்றைவன்னியுங்
- கங்கையாளொடு திங்களும்
மொய்த்தவெண்டலை கொக்கிறகொடு
- வெள்ளெருக்கமுஞ் சடையதாம்
பத்தர்சித்தர்கள் பாடியாடும்பைஞ்
- ஞீலியேன்என்று நிற்றிரால்
அத்தியீருரி போர்த்திரோசொல்லும்
- ஆரணீய விடங்கரே.
7.36.8 369 தக்கைதண்ணுமை தாளம்வீணை
- தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை
- கூடிப்பாடிநின் றாடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ்
- ஞீலியேனென நிற்றிரால்
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும்
- ஆரணீய விடங்கரே.
7.36.9 370 கையோர்பாம்பரை யார்த்தோர்பாம்பு
- கழுத்தோர்பாம்பவை பின்புதாழ்
மெய்யெலாம்பொடிக் கொண்டுபூசுதிர்
- வேதமோதுதிர் கீதமும்
பையவேவிடங் காகநின்றுபைஞ்
- ஞீலியேனென்றீர் அடிகள்நீர்
ஐயம்ஏற்குமி தென்கொலோசொல்லும்
- ஆரணீய விடங்கரே.
7.36.10 371 அன்னஞ்சேர்வயல் சூழ்பைஞ்ஞீலியில்
- ஆரணீய விடங்கரை
மின்னும்நுண்ணிடை மங்கைமார்பலர்
- வேண்டிக்காதல் மொழிந்தசொல்
மன்னுதொல்புகழ் நாவலூரன்வன்
- றொண்டன்வாய்மொழி பாடல்பத்
துன்னிஇன்னிசை பாடுவார்உமை
- கேள்வன்சேவடி சேர்வரே.
7.36.11 - பாம்புவேண்டா பிரானிரே
- சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல்
- உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
- ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
- துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.1 - உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
- தொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்
பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக்
- குன்றமே ஈசனென் றுன்னையே புகழ்வேன்
அன்னேயென் அத்தாவென் றமரரால் அமரப்
- படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னேயென் எறிகெடில வடவீரட் டானத்
- துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.2 385 விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியே
- விண்ணவர்தம் பெருமானே மண்ணவர்நின் றேத்துங்
கரும்பேயென் கட்டியென் றுள்ளத்தால் உள்கிக்
- காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும்புனலுஞ் சடைக்கணிந்து வளராத பிறையும்
- வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை
இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட் டானத்
- துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.3 386 நாற்றானத் தொருவனை நானாய பரனை
- நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக்
காற்றானைத் தீயானைக் கடலானை மலையின்
- றலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள
ஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான்
- தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண்
ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத்
- துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.4 387 சேந்தாய மலைமங்கை திருநிறமும் பரிவும்
- உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக்
கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள்
- சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி
வாய்ந்தநீர் வரவுந்தி மராமரங்கள் வணக்கி
- மறிகடலை இடங்கொள்வான் மலையாரம் வாரி
ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத்
- துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.5 388 மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான்
- வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்பும்
- தடுமாறுஞ் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற
வெம்மான மதகரியின் உரியானை வேத
- விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
- துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.6 389 வெய்தாய வினைக்கடலிற் றடுமாறும் உயிர்க்கு
- மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம்
பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத்
- தெண்டோ ளெம் பெருமானைப் பெண்பாகம் ஒருபாற்
செய்தானைச் செக்கர்வான் ஒளியானைத் தீவாய்
- அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ
எய்தானை எறிகெடில வடவீரட் டானத்
- துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.7 390 பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை
- பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்
- சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி
அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமானின்
- உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னானை எறிகெடில வடவீரட் டானத்
- துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.8 391 திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச்
- சிலைவளைவித் தொருகணையாற் றொழில்பூண்ட சிவனைக்
கருந்தாள மதகளிற்றின் உரியானைப் பெரிய
- கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன்
பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும்
- உடையானைப் பேயுருவ மூன்றுமுற மலைமேல்
இருந்தானை எறிகெடில வடவீரட் டானத்
- துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.9 392 என்பினையே கலனாக அணிந்தானை எங்கள்
- எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்
- வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கும் அறிவரிய அத்தர்
- பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத்
- துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
7.38.10 - குன்றமே ஈசனென் றுன்னையே புகழ்வேன்
- திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
- இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
- விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
- ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
7.39.1 - இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
- ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
- கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
- எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
- ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
7.39.2 395 *மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
- முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
- திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
- வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
- ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.
*விபூதி, ருத்திராட்சம், சடைமுடி இவைகளுடன் அரசு
செய்தமையால் மும்மையால் உலகாண்ட மூர்த்தியென்றது.7.39.3 396 திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
- திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
- பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
- ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
- ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
7.39.4 397 வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
- மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
- ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
- *நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
#அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
- ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
*பிறவி அந்தகராயிருந்து திருவாரூர்க் கமலாலயத்
தீர்த்தத்தில் மூழ்கியெழுந்திருக்கும்போது சுவாமி
யினுடைய திருவருளால் நாட்டம் விளங்கப்பெற்றவ
ரென்பது தோன்ற நாட்டமிகு தண்டிக்கும்
என்றருளிச்செய்தது.
#அம்பரான் சோமாசி - திருஅம்பர் என்னுந் தலத்தில் வாழ்பவர்.7.39.1 398 வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
- மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
- செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன்
- கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
- ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
*கழறிற்றறிவார் - சேரமானாயனார்.7.39.6 399 பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
- பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
- விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
- கழற்*சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
- ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
*சத்திவரிஞ்சையர்கோன் என்பதை வரிஞ்சையூர்ச்
சத்தியாரென மாற்றுக.7.39.7 400 கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
- கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
- நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
- தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
- ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
7.39.8 401 கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
- காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
- மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
- பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
- ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
7.39.9 402 பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
- பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
- திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
*முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
- முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
- ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
*இவர்கள் ஆதிசைவப்பிராமணர்கள்7.39.10 403 மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
- வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
- திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
- இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
- ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.
7.39.11 - கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
- இது சுந்தரமூர்த்திசுவாமிகள் திருவாரூர்ப் பரவை நாச்சியார்
திருமாளிகையிலிருந்து வீதிவிடங்கப் பெருமானைத்
தரிசுக்கும்பொருட்டு ஆலயத்துக்குள் எழுந்தருழும்போது
தேவாசரியமண்டபத்தில் வீற்றிருக்குஞ் சிவனடியார்களை
உள்ளத்தால் வணங்கி "இவர்களுக்குநானடியே"னாகும்படி
பரமசிவம் எதிரில் தரிசனங்கொடுத்தருளித் "தில்லைவாழ்
பரமசிவம் எந்நாள் கிருபைசெய்யுமென்று செல்லுகையில்
அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று முதலடி
எடுத்துக்கொடுக்கப் பாடித் துதிசெய்த பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.40 திருக்கானாட்டுமுள்ளூர்
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
404 வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
- மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்
- பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
- மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
- கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.1 405 ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய்
- ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்
- புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த
- திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்குங்
கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்
- கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.2 406 இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
- இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
- சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
- அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
- கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.3 407 பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்
- புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி
- ஞாயிறாய் மதியமாய் நின்றவெம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின்
- படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்
- கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.4 408 செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத்
- தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை
முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை
- முன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்பு ளெங்கும்
- வேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
- கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.5 409 விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை
- வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய
- சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்
- குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேற்
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்
- கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.6 410 அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும்
- அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்
- தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க்
- கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேற்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்
- கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.7 411 இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்
- ஈசன்றன் எண்டோ ள்கள் வீசியெரி யாடக்
குழைதழுவு திருக்காதிற் கோளரவ மசைத்துக்
- கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத்
தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே
- தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கி னருகே
கழைதழுவித் தேன்றொடுக்குங் கழனிசூழ் பழனக்
- கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.8 412 குனிவினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக்
- குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப்
பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப்
- பலவுருவுந் தன்னுருவே ஆயபெரு மானைத்
துனிவினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்
- தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே
கனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக்
- கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.9 413 தேவியம்பொன் மலைக்கோமன் றன்பாவை யாகத்
- தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான்
மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு
- மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத்
தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத்
- துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக்
காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக்
- கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.10 414 திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
- செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்
- கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது
உரையினார் மதயானை நாவலா ரூரன்
- உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்குந் தாம்போய்
- வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.
7.40.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பதஞ்சலியீசுவரர், தேவியார் - கானார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.41 திருக்கச்சூர் ஆலக்கோயில்
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
415 முதுவாய் ஓரி கதற முதுகாட்
- டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
- மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
- கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர்
- ஆலக் கோயில் அம்மானே.
7.41.1 416 கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
- கழலுஞ்சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்
- கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான்
- ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
- ஆலக் கோயில் அம்மானே.
7.41.2 417 சாலக் கோயில் உளநின் கோயில்
- அவையென் றலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்
- வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
- குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
- அறங்கட் டுரைத்த அம்மானே.
7.41.3 418 விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
- மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
- கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
- பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
- ஆலக் கோயில் அம்மானே.
7.41.4 419 மேலை விதியே வினையின் பயனே
- விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
- கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
- மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
- ஆலக் கோயில் அம்மானே.
7.415 420 பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
- பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும்
- இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
- கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்
- ஆலக் கோயில் அம்மானே.
7.41.6 421 பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
- அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
- நினைவார் அவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மங்கை பங்கா
- கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
- ஆலக் கோயில் அம்மானே.
7.41.7 422 ஊனைப் பெருக்கி உன்னை நினையா
- தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்
- கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென் னோக்கி
- மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
- ஆலக் கோயில் அம்மானே.
7.41.8 423 காதல் செய்து களித்துப் பிதற்றிக்
- கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
- ஐயங் கொள்வ தழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
- உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர்
- ஆலக் கோயில் அம்மானே.
7.41.9 424 அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
- ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்தா ரூரன்
- ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
- செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்
- அவரெந் தலைமேற் பயில்வாரே.
7.41.10
இந்தத் தலத்தில் பரமசிவம் அக்கிராகாரத்தில் அன்னம் பிட்சை
வாங்கி வந்தளிக்க அருந்திப் பசிதீர்ந்து துதிசெய்த பதிகம்.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தினம்விருந்திட்டநாதர், தேவியார் - கன்னியுமையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.42 திருவெஞ்சமாக்கூடல்
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
425 எறிக்குங் கதிர்வே யுதிர்முத் தமொடு
- மிலவங்கந் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
- திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல்
- குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல்
- விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.1 426 குளங்கள் பலவுங் குழியுந் நிறையக்
- குடமாமணி சந்தனமும் அகிலுந்
துளங்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
- திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும்
- மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள்
விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
- விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.2 427 வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார்
- வடிவேற்கண் நல்லார்பலர் வந்திறைஞ்சத்
திரையார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
- திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
நிரையார் கமுகும் நெடுந்தாட் டெங்குங்
- குறுந்தாட்பலவும் விரவிக் குளிரும்
விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல்
- விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.3 428 பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய்
- படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணா ரகிலுந் நலசா மரையும்
- அலைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார் முழவுங் குழலும் இயம்ப
- மடவார் நடமாடு மணியரங்கில்
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
- விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.4 429 துளைவெண் குழையுஞ் சுருள்வெண் டோ டுந்
- தூங்குங்காதிற் றுளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க்கொன் றையினாய்
- கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே
பிளைவெண் பிறையாய் பிறங்குஞ் சடையாய்
- பிறவாதவனே பெறுதற் கரியாய்
வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல்
- விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.5 430 தொழுவார்க் கெளியாய் துயர்தீர நின்றாய்
- சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ்சடையாய்
உழுவார்க் கரிய விடையேறி ஒன்னார்
- புரந்தீயெழ ஓடுவித்தாய் அழகார்
முழவா ரொலிபா டலோடா டலறா
- முதுகாடரங்கா நடமாட வல்லாய்
விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல்
- விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.6 431 கடமா களியா னையுரித் தவனே
- கரிகாடிடமா அனல்வீசி நின்று
நடமா டவல்லாய் நரையே றுகந்தாய்
- நல்லாய் நறுங்கொன்றை நயந்தவனே
படமா யிரமாம் பருத்துத்திப் பைங்கண்
- பகுவாய் எயிற்றோடழ லேஉமிழும்
விடவார் அரவா வெஞ்சமாக் கூடல்
- விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.7 432 காடும் மலையுந் நாடு மிடறிக்
- கதிர்மாமணி சந்தனமும் அகிலுஞ்
சேட னுறையும் மிடந்தான் விரும்பி
- திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற்
பாடல் முழவுங் குழலு மியம்பப்
- பணைத்தோளியர் பாடலோ டாடலறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்
- விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.8 433 கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே
- கொடுகொட்டி யோர்வீணை யுடையவனே
பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற்
- பொதியும்புனிதா புனஞ்சூழ்ந் தழகார்
துங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
- திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல்
- விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.9 434 வஞ்சிநுண் ணிடையார் மயிற்சாய லன்னார்
- வடிவேற்க ணல்லார்பலர் வந்திறைஞ்சும்
வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும்
- வேண்டுதி யேயென்று தான்விரும்பி
வஞ்சியா தளிக்கும் வயல்நா வலர்கோன்
- வனப்பகையப்பன் வன்றொண்டன் சொன்ன
செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும் வல்லார்
- சிவலோகத் திருப்பது திண்ணமன்றே.
7.42.10
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - விகிர்தேசுவரர், தேவியார் - விகிர்தேசுவரி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.43 திருமுதுகுன்றம்
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
435 நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார்
துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ தென்னடி கேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறு மோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே.7.43.1 436 ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி
ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ
வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய்
மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே.7.43.2 437 தொண்டர்கள் பாட விண்ணோர்க ளேத்த உழிதர்வீர்
பண்டகந் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே
கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர்
மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே.7.43.3 438 இளைப்பறி யீரிம்மை யேத்து வார்க்கம்மை செய்வதென்
விளைப்பறி யாதவெங் கால னையுயிர் வீட்டினீர்
அளைப்பிரி யாவர வல்கு லாளொடு கங்கைசேர்
முளைப்பி றைச்சென் னிச்சடை முடிமுது குன்றரே.7.43.4 439 ஆடி அசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும்
பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ
மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம்
மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே.7.43.5 440 இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக்
குழைவளர் காதுகள் மோத நின்று குனிப்பதே
மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள்
முழைவளர் ஆளி முழக்க றாமுது குன்றரே.7.43.6 441 சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச்சே டிச்சிகள்
மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே
குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள்
முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே.7.43.7 442 அந்தி திரிந்தடி யாரும் நீரும் அகந்தொறுஞ்
சந்தி கள்தோறும் பலிக்குச் செல்வது தக்கதே
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
முந்தி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே.7.43.8 443 செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய
அட்டு மின்சில் பலிக்கென் றகங்கடை நிற்பதே
பட்டிவெள் ளேறுகந் தேறு வீர்பரி சென்கொலோ
முட்டி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே.7.43.9 444 எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிற ரென்சொலார்
பத்தியி னாலிடு வாரி டைப்பலி கொண்மினோ
எத்திசை யுந்திரை யேற மோதிக் கரைகள்மேல்
முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரே.7.43.10 445 முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப்
பித்தனொப் பானடித் தொண்ட னூரன் பிதற்றிவை
தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார்
எத்தவத் தோர்களு மேத்து வார்க்கிடர் இல்லையே.7.43.11
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பழமலைநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.44 முடிப்பதுகங்கை
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
446 முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார்
கடிப்பது மேறுமென் றஞ்சு வன்றிருக் கைகளாற்
பிடிப்பது பாம்பன்றி இல்லை யோவெம் பிரானுக்கே.7.44.1 447 தூறன்றி ஆடரங் கில்லை யோசுட லைப்பொடி
நீறன்றிச் சாந்தமற் றில்லை யோஇம வான்மகள்
கூறன்றிக் கூறுவ தில்லை யோகொல்லைச் சில்லைவெள்
ளேறன்றி ஏறுவ தில்லை யோவெம் பிரானுக்கே.7.44.2 448 தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் காள்தடு மாற்றத்தை
ஒட்டெனும் ஒட்டெனும் மாநி லத்துயிர் கோறலைச்
சிட்டன் திரிபுரஞ் சுட்ட தேவர்கள் தேவனை
வெட்டெனப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே.7.44.3 449 நரிதலை கவ்வநின் றோரி கூப்பிட நள்ளிருள்
எரிதலைப் பேய்புடை சூழ ஆரிருள் காட்டிடைச்
சிரிதலை மாலை சடைக்க ணிந்தவெஞ் செல்வனைப்
பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே.7.44.4 450 வேயன தோளி மலைம களைவி ரும்பிய
மாயமில் மாமலை நாட னாகிய மாண்பனை
ஆயன சொல்லிநின் றார்கள் அல்லல் அறுக்கிலும்
பேயனே பித்தனே என்ப ராலெம் பிரானையே.7.44.5 451 இறைவனென் றெம்பெரு மானை வானவ ரேத்தப்போய்த்
துறையொன்றித் தூமல ரிட்ட டியிணை போற்றுவார்
மறையன்றிப் பாடுவ தில்லை யோமல்கு வானிளம்
பிறையன்றிச் சூடுவ தில்லை யோவெம் பிரானுக்கே.7.44.6 452 தாருந்தண் கொன்றையுங் கூவி ளந்தனி மத்தமும்
ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும்
ஊருமொன் றில்லை உலகெ லாமுகப் பார்தொழப்
பேருமோ ராயிரம் என்ப ராலெம் பிரானுக்கே.7.44.7 453 அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த எம்புனி தற்கினி
எரியன்றி அங்கைக்கொன் றில்லை யோவெம் பிரானுக்கே.7.44.8 454 கரிய மனச்சமண் காடி யாடு கழுக்களால்
எரிய வசவுணுந் தன்மை யோஇம வான்மகள்
பெரிய மனந்தடு மாற வேண்டிப்பெம் மான்மதக்
கரியின் உரியல்ல தில்லை யோவெம் பிரானுக்கே.7.44.9 455 காய்சின மால்விடை மாணிக் கத்தெங் கறைக்கண்டத்
தீசனை ஊரனெட் டோ டி ரண்டுவி ரும்பிய
ஆயின சீர்ப்பகை ஞானியப் பன்னடித் தொண்டன்றான்
ஏசின பேசுமின் தொண்டர் காளெம் பிரானையே.7.44.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.45 திருஆமாத்தூர்
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
456 காண்டனன் காண்டனன் காரிகை யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத் தூரெம் அடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே.7.45.1 457 பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான்
தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளைக்
கூடுவன் கூடுவன் குற்றம தற்றென் குறிப்பொடே.7.45.2 458 காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ லாலன்று காமனைப்
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி னாலன்று கூற்றத்தை
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத் தூரெம் மடிகளார்
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி ராட்டியைப் பாகமே.7.45.3 459 ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச்
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள் தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத் தூரையன் அருளதே.7.45.4 460 வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களைச்
சென்றவன் சென்றவன் சில்பலிக் கென்று தெருவிடை
நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர் தங்கள்பால்
அன்றவன் அன்றவன் செய்யருள் ஆமாத்தூர் ஐயனே.7.45.5 461 காண்டவன் காண்டவன் காண்டற் கரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத் தூரையும் எனையுமாட்
பூண்டவன் பூண்டவன் மார்பிற் புரிநூல் புரளவே.7.45.6 462 எண்ணவன் எண்ணவன் ஏழுல கத்துயிர் தங்கட்குக்
கண்ணவன் கண்ணவன் காண்டுமென் பாரவர் தங்கட்குப்
பெண்ணவன் பெண்ணவன் மேனியோர் பாகமாம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத் தூரெம் அடிகளே.7.45.7 463 பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந் தென்னைப்போ கவிடா
மின்னவன் மின்னவன் வேதத்தி னுட்பொரு ளாகிய
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன் என்மனத் தின்புற் றிருப்பனே.7.45.8 464 தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளே.7.45.9 465 உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்துள்ளத் துளபொருள்
பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக் கேசெல்ல
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயானடி யார்கட்காட்
பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும்பிற வாமைக்கே.7.45.10 466 ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு ளான விமலனை
மையனை மையணி கண்டனை வன்றொண்டன் ஊரன்சொல்
பொய்யொன்று மின்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே.7.45.11
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதர், தேவியார் - அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.46 திருநாகைக்காரோணம்
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
467 பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
- பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
- செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
- அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
- கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.1 468 வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி
- விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்
பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்
- பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்
- திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்
- கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.2 469 பூண்பதோர் இளவாமை பொருவிடையொன் றேறிப்
- பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்
பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்
- பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்
வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்
- வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்
காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடுவீதிக்
- கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.3 470 விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக
- வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்
துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்
- சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்
- மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்
கட்டியெமக் கீவதுதான் எப்போது சொல்லீர்
- கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.4 471 மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து
- வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்
தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்
- சுந்தரனே கந்தமுதல் ஆடையா பரணம்
பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்
- பண்டுதான் பிரமாணம் ஒன்றுண்டே நும்மைக்
கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்
- கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.5 472 இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்
- இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது
பலவகம்புக் குழிதர்வீர் பட்டோ டு சாந்தம்
- பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ
உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட
- உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே
கலவமயில் இயலவர்கள் நடமாடுஞ் செல்வக்
- கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.6 473 தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
- தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்
- திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
- நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீரின் றெனக்கருள வேண்டும்
- கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.7 474 மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர்
- வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு
ஆற்றவேற் றிருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர்
- அணியாரூர் புகப்பெய்த அருநிதிய மதனில்
தோற்றமிகு முக்கூற்றி லொருகூறு வேண்டுந்
- தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்
காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும்
- கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.8 475 மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
- மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
எண்ணிலியுண் பெருவயிறன் கணபதியொன் றறியான்
- எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்வீர்
திண்ணெனவென் உடல்விருத்தி தாரீரே யாகில்
- திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
- கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.9 476 மறியேறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர்
- மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்
கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்
- கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்
பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்
- பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்
கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்
- கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.10 477 பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
- பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
- ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவுங்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்
- கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென்
றண்மயத்தால் அணிநாவ லாரூரன் சொன்ன
அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.7.46.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர், தேவியார் - நீலாயதாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.47 ஊர்த்தொகை
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
478 காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே.7.47.1 479 கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
மங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
கங்குற் புறங்காட் டாடீ அடியார் கவலை களையாயே.7.47.2 480 நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே.7.47.3 481 ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே.7.47.4 482 மருகல் உறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானே
அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே
கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே
பருகப் பணியாய் அடியார்க் குன்னைப் பவளப் படியானே.7.47.5 483 தாங்கூர் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே.7.47.6 484 தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்
வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
ஆனைக் காவில் அரனே பரனே அண்ணா மலையானே
ஊனைக் காவல் கைவிட் டுன்னை உகப்பார் உணர்வாரே.7.47.7 485 துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய் சொல்லாய் கல்லாலா
பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய்
திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா
அருத்தித் துன்னை அடைந்தார் வினைக ளகல அருளாயே.7.47.8 486 புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா
பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற புரிபுன் சடையானே
வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடீ
கலிசேர் புறவிற் கடவூ ராளீ காண அருளாயே.7.47.9 487 கைம்மா உரிவை யம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி
மைம்மாந் தடங்கண் மதுர மன்ன மொழியாள் மடச்சிங்கடி
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் றமிழ்மாலை
செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோ கத்தாரே.7.47.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.48 திருப்பாண்டிக்கொடுமுடி
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
488 மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
- பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
- வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
- யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
- சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.1 489 இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந்
- திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாளிவை என்ற லாற்கரு
- தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
- தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ்
- சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.2 490 ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்
- போகும் நாளுயர் பாடைமேல்
காவு நாளிவை என்ற லாற்கரு
- தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
- சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
- சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.3 491 எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை
- தம்பி ரானென்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
- காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
- யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்
- சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.4 492 அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி
- யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
- நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
- தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
- சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.5 493 ஏடு வானிளந் திங்கள் சூடினை
- என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பத ரைக்க சைத்த
- அழக னேயந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
- சோதி பாண்டிக் கொடுமுடி
சேட னேயுனை நான்ம றக்கினுஞ்
- சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.6 494 விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
- தேன்வி னைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
- நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
- தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
- சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.7 495 செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
- தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாகம
- மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயி
- லாடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
- சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.8 496 சார ணன்தந்தை எம்பி ரானெந்தை
- தம்பிரா னென்பொன்மா மணியென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
- பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்றொ ழுங்கறை
- யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாவுனை நான்ம றக்கினுஞ்
- சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.9 497 கோணி யபிறை சூடியைக் கறை
- யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
- பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
- தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
- சொல்லு வார்க்கில்லை துன்பமே.
7.48.10
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுமுடிநாதர், தேவியார் - பண்மொழியாளம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.49 திருமுருகன்பூண்டி
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
498 கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
- விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
- டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
- பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
- எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.1 499 வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
- விரவ லாமை சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
- கூறை கொள்ளு மிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன்
- பூண்டி மாநகர் வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
- எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.2 500 பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
- பாவ மொன் றறியார்
*உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங்
- கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன்
- பூண்டி மாநகர் வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
- எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
*உயிர் - உசிர் என மருவியது.7.49.3 501 பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்
- கட்டி வெட்டன ராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாடொறுங்
- கூறை கொள்ளு மிடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்
- பூண்டி மாநகர் வாய்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில்
- எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.4 502 தயங்கு தோலை உடுத்த சங்கரா
- சாம வேத மோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
- மார்க்க மொன்றறி யீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன்
- பூண்டி மாநகர் வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
- எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.5 503 விட்டி சைப்பன கொக்க ரைகொடு
- கொட்டி தத்த ளகங்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
- குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன்
- பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
- எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.6 504 வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண்
- கோவணந் தற்ற யலே
ஓதம் மேவிய ஒற்றி யூரையும்
- முத்தி நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன்
- பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் எது காவல்கொண்
- டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.7 505 படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
- தோள்வ ரிநெடுங் கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையோர்
- பாகம் வைத்து கந்தீர்
முடவ ரல்லீர் இடரிலீர் முருகன்
- பூண்டி மாநகர் வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
- எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.8 506 சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
- பற்ற லைக லனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர்
- பாகம் வைத்து கந்தீர்
மோந்தை யோடு முழக்கறா முருகன்
- பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
- எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.9 507 முந்தி வானவர் தாந்தொழு முருகன்
- பூண்டி மாநகர் வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையோர்
- பாகம் வைத்த வனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
- உரைத்தன பத்துங் கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர்
- ஒன்றுந் தாமி லரே.
7.49.10
கழறிற்றறிவாரென்னுஞ் சேரமான்பெருமானாயனார் கொடுத்த
திரவியங்களை பரிசனங்கள் தலையில் எடுப்பித்துக்கொண்டு
திருமுருகன்பூண்டிக்குச் சமீபத்தில் எழுந்தருளும்போது பரமசிவத்தின்
கட்டளையினால் பூதங்கள் வேடுவர்களாகிவந்து அந்தப்பரிசனங்களை
அடித்துப் பொருள்களைப் பறித்துப் போயின. அப்போது சுந்தரமூர்த்தி
சுவாமிகள் இந்தப் பதிகமோதிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டது.
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆவுடைநாயகர்,
தேவியார் - ஆவுடைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.50 திருப்புனவாயில்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
508 சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.7.50.1 509 கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது
மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர்
பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே.7.50.2 510 தொக்கா யமனம் என்னொடு சூளறும் வைகலும்
நக்கான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
அக்கோ டரவார்த் தபிரா னடிக் கன்பராய்ப்
புக்கா ரவர் போற்றொழி யாப்புன வாயிலே.7.50.3 511 வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு சூளறும் வைகலும்
பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன் னாமது வேபுகல்
கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்
புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே.7.50.4 512 நில்லாய் மனம் என்னொடு சூளறும் வைகலும்
நல்லான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
வில்லாய்க் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டுபோய்ப்
புல்வாய்க் கணம் புக்கொளிக் கும்புன வாயிலே.7.50.5 513 மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
உறவும் ஊழியு மாயபெம் மாற்கிட மாவது
பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப்
புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே.7.50.6 514 ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும்
பாசற் றவர் பாடிநின் றாடும் பழம்பதி
தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
பூசற் றுடிபூச லறாப் புன வாயிலே.7.50.7 515 கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே
தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை
கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.7.50.8 516 எற்றே நினை என்னொடுஞ் சூளறும் வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக்
கற்றூறு கார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.7.50.9 517 பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை
அடியார் அடியன் நாவல வூரன் உரைத்தன
மடியாது கற்றிவை யேத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க்
குடியாகப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே.7.50.10
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பழம்பதிநாயகர்,
தேவியார் - பரங்கருணைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப்பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி முற்றும்.
- மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
7.001 | திருவெண்ணெய்நல்லூர் | (1-10) | மின்பதிப்பு |
7.002 | திருப்பரங்குன்றம் | (11-21) | மின்பதிப்பு |
7.003 | திருநெல்வாயில் அரத்துறை | (22-31) | மின்பதிப்பு |
7.004 | திருஅஞ்சைக்களம் | (32-41) | மின்பதிப்பு |
7.005 | திருஓணகாந்தன்தளி | (41-51) | மின்பதிப்பு |
7.006 | திருவெண்காடு | (52-61) | மின்பதிப்பு |
7.007 | திருஎதிர்கொள்பாடி | (62-72) | மின்பதிப்பு |
7.008 | திருவாரூர் | (73-82) | மின்பதிப்பு |
7.009 | திருஅரிசிற்கரைப்புத்தூர் | (83-93) | மின்பதிப்பு |
7.010 | திருக்கச்சிஅனேகதங்காவதம் | (94-103) | மின்பதிப்பு |
7.011 | திருப்பூவணம் | (104-111) | மின்பதிப்பு |
7.012 | திருநாட்டுத்தொகை | (112-122) | மின்பதிப்பு |
7.013 | திருத்துறையூர் | (123-133) | மின்பதிப்பு |
7.014 | திருப்பாச்சிலாச்சிராமம் | (134-145) | மின்பதிப்பு |
7.015 | திருநாட்டியத்தான்குடி | (146-155) | மின்பதிப்பு |
7.016 | திருக்கலையநல்லூர் | (156-166) | மின்பதிப்பு |
7.017 | திருநாவலூர் | (167-177) | மின்பதிப்பு |
7.018 | திருவேள்விக்குடி | (178-187) | மின்பதிப்பு |
7.019 | திருநின்றியூர் | (188-198) | மின்பதிப்பு |
7.020 | திருக்கோளிலி | (199-208) | மின்பதிப்பு |
7.021 | திருக்கச்சிமேற்றளி | (209-218) | மின்பதிப்பு |
7.022 | திருப்பழமண்ணிப்படிக்கரை | (219-228) | மின்பதிப்பு |
7.023 | திருக்கழிப்பாலை | (229-238) | மின்பதிப்பு |
7.024 | திருமழபாடி | (239-248) | மின்பதிப்பு |
7.025 | திருமுதுகுன்றம் | (249-258) | மின்பதிப்பு |
7.026 | திருக்காளத்தி | (259-268) | மின்பதிப்பு |
7.027 | திருக்கற்குடி | (269-278) | மின்பதிப்பு |
7.028 | திருக்கடவூர்வீரட்டம் | (279-288) | மின்பதிப்பு |
7.029 | திருக்குருகாவூர் | (289-298) | மின்பதிப்பு |
7.030 | திருக்கருப்பறியலூர் | (299-309) | மின்பதிப்பு |
7.031 | திருஇடையாற்றுத்தொகை | (310-319) | மின்பதிப்பு |
7.032 | திருக்கோடிக்குழகர் | (320-329) | மின்பதிப்பு |
7.033 | நமக்கடிகளாகிய - அடிகள் | (330-339) | மின்பதிப்பு |
7.034 | திருப்புகலூர் | (340-350) | மின்பதிப்பு |
7.035 | திருப்புறம்பயம் | (351-360) | மின்பதிப்பு |
7.036 | திருப்பைஞ்ஞீலி | (361-371) | மின்பதிப்பு |
7.037 | திருவாரூர் | (372-382) | மின்பதிப்பு |
7.038 | திருவதிகைத்திருவீரட்டானம் | (383-392) | மின்பதிப்பு |
7.039 | திருத்தொண்டத்தொகை | (393-403) | மின்பதிப்பு |
7.040 | திருக்கானாட்டுமுள்ளூர் | (404-414) | மின்பதிப்பு |
7.041 | திருக்கச்சூர் ஆலக்கோயில் | (415-424) | மின்பதிப்பு |
7.042 | திரு வெஞ்சமாக்கூடல் | (425-434) | மின்பதிப்பு |
7.043 | திருமுதுகுன்றம் | (435-445) | மின்பதிப்பு |
7.044 | முடிப்பதுகங்கை | (446-455) | மின்பதிப்பு |
7.045 | திருஆமாத்தூர் | (456-466) | மின்பதிப்பு |
7.046 | திருநாகைக்காரோணம் | (467-477) | மின்பதிப்பு |
7.047 | ஊர்த்தொகை | (478-487) | மின்பதிப்பு |
7.048 | திருப்பாண்டிக்கொடுமுடி | (488-497) | மின்பதிப்பு |
7.049 | திருமுருகன்பூண்டி | (498-507) | மின்பதிப்பு |
7.050 | திருப்புனவாயில் | (508-517) | மின்பதிப்பு |
7.01 திருவெண்ணெய்நல்லூர்
பண் - இந்தளம்திருச்சிற்றம்பலம்
001 |
பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.01 | 002 | நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன் வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.02 | 003 | மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.03 | 004 | முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.04 | 005 | பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய் ஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.05 | 006 | தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய் மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.06 | 007 | ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய் வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.07 | 008 | ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர் ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.08 | 009 | மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.09 | 010 | காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற் பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே. | 7.1.10 |
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தடுத்தாட்கொண்டவீசுவரர்,
தேவியார் - வேற்கண்மங்கையம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.2 திருப்பரங்குன்றம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
011 |
கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண் டீருமைக் | 012 | முண்டந் தரித்தீர் முதுகா டுறைவீர் |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பரங்கிரிநாதர், தேவியார் - ஆவுடைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.3 திருநெல்வாயில் அரத்துறை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
022 |
கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங் | 023 | கறிமா மிளகும் மிகுவன் மரமும் |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அரத்துறைநாதர், தேவியார் - ஆனந்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.4 திருஅஞ்சைக்களம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
032 |
தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே | 033 | பிடித்தாட்டி யோர்நாகத் தைப்பூண்ட தென்னே |
இத்தலம் மலைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அஞ்சைக்களத்தீசுவரர், தேவியார் - உமையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.5 திருஓணகாந்தன்றளி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
042 |
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு | 043 | திங்கள் தங்கு சடைக்கண் மேலோர் |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஓணகாந்தீசுவரர்,
தேவியார் - காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.6 திருவெண்காடு
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
052 |
படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப் | 053 | இழித்து கந்தீர் முன்னை வேடம் |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்,
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.7 திருஎதிர்கொள்பாடி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
062 |
மத்த யானை ஏறி மன்னர் | 063 | தோற்றம் உண்டேல் மரணம் உண்டு |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அயிராவதேசுவரர்,
தேவியார் - வாசமலர்க்குழன்மாதம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.8 திருவாரூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
073 |
இறைகளோ டிசைந்த இன்பம் | 074 | ஊன்மிசை உதிரக் குப்பை |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.9 திருஅரிசிற்கரைப்புத்தூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
083 |
மலைக்கு மகள்அஞ்ச மதகரியை உரித்தீர் | 084 | அருமல ரோன்சிரம் ஒன்றறுத் தீர்செறுத் |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படிக்காசுவைத்தவீசுவரர்,
தேவியார் - அழகம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.10 திருக்கச்சிஅனேகதங்காவதம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
094 |
தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு | 095 | கூறு நடைக்குழி கட்பகு வாயன |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காவதேசுவரர்,
தேவியார் - காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.11 திருப்பூவணம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
104 |
திருவுடை யார்திரு மாலய னாலும் உருவுடை யார்உமை யாளையோர் பாகம் பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும் புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ. | 7.11.1 | 105 | எண்ணி இருந்து கிடந்து நடந்தும் அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார் பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப் புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ. | 7.11.2 | 106 | தெள்ளிய பேய்பல பூதம வற்றொடு நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர் புள்ளுவ ராகும வர்க்கவர் தாமும் புள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ. | 7.11.3 | 107 | நிலனுடை மான்மறி கையது தெய்வக் கனலுடை மாமழு ஏந்தியோர் கையில் அனலுடை யார்அழ கார்தரு சென்னிப் புனலுடை யார்உறை பூவணம் ஈதோ. | 7.11.4 | 108 | நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார் கடைகடை தோறிடு மின்பலி என்பார் துடியிடை நன்மட வாளொடு மார்பில் பொடியணி வார்உறை பூவணம் ஈதோ. | 7.11.5 | 109 | மின்னனை யாள்திரு மேனிவி ளங்கவோர் தன்னமர் பாகம தாகிய சங்கரன் முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ. | 7.11.6 | 110 | மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட நக்கிறை யேவிர லாலிற வூன்றி நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம் புக்குறை வான்உறை பூவணம் ஈதோ. | 7.11.7 | இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 7.11.8-9 | 111 | சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம் ஆர விருப்பிட மாஉறை வான்றனை ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே. | 7.11.10 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர், தேவியார் - மின்னாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.12 திருநாட்டுத்தொகை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
112 |
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான் கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர் தாழை யூர்தக டூர்தக்க ளூர்தரு மபுரம் வாழை காய்க்கும் வளர்மரு கல்நாட்டு மருகலே. | 7.12.1 | 113 | அண்டத் தண்டத்தின் அப்புறத் தாடும் அமுதனூர் தண்டந் தோட்டந்தண் டங்குறை தண்டலை யாலங்காடு கண்டல் முண்டல்கள் சூழ்கழிப் பாலை கடற்கரை கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக் கைநாட்டுக் குறுக்கையே. | 7.12.2 | 114 | மூல னூர்முத லாயமுக் கண்ணன் முதல்வனூர் நால னூர்நரை ஏறுகந் தேறிய நம்பனூர் கோல நீற்றன்குற் றாலங் குரங்கணின் முட்டமும் வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே. | 7.12.3 | 115 | தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி பாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறை பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர் நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே. | 7.12.4 | 116 | குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம் மழலை யேற்று மணாளன் இடந்தட மால்வரைக் கிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும் மிழலை நாட்டு மிழலைவெண் ணிநாட்டு மிழலையே. | 7.12.5 | 117 | தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர் பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம் என்னூர் எங்கள் பிரானுறை யுந்திருத் தேவனூர் பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி சைநாட்டுப் புரிசையே. | 7.12.6 | 118 | ஈழ நாட்டுமா தோட்டந்தென் னாட்டிரா மேச்சுரம் சோழ நாட்டுத் துருத்திநெய்த் தானந் திருமலை ஆழி யூரன நாட்டுக்கெல் லாம்அணி யாகிய கீழை யில்லர னார்க்கிடங் கிள்ளி குடியதே. | 7.12.7 | 119 | நாளும் நன்னிலந் தென்பனை யூர்வட கஞ்சனூர் நீள நீள்சடை யான்நெல்லிக் காவு நெடுங்களங் காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர் வேளார் நாட்டுவே ளூர்விளத் தூர்நாட்டு விளத்தூரே. | 7.12.8 | 120 | தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன் தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதிசோற் றுத்துறை கழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம் பழனம் பாம்பணி பாம்புரந் தஞ்சைதஞ் சாக்கையே. | 7.12.9 | 121 | மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணன் வலஞ்சுழி பைகொள் வாளர வாட்டித் திரியும் பரமனூர் செய்யில் வாளைகள் பாய்ந்துக ளுந்திருப் புன்கூர்நன் றையன் மேய பொழிலணி ஆவடு துறையதே. | 7.12.10 | 122 | பேணி நாடத னிற்றிரி யும்பெரு மான்றனை ஆணை யாவடி யார்கள் தொழப்படும் ஆதியை நாணி ஊரன் வனப்பகை யப்பன்வன் றொண்டன்சொல் பாணி யாலிவை யேத்துவார் சேர்பர லோகமே. | 7.12.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.13 திருத்துறையூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
123 |
மலையார் அருவித் திரள்மா மணியுந்திக் குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற் கலையார் அல்குற்கன் னியராடுந் துறையூர்த் தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.1 | 124 | மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற் பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர் அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.2 | 125 | கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச் செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால் மந்தி பலமா நடமாடுந் துறையூர் எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.3 | 126 | அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச் சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் கரும்பார் மொழிக்கன் னியராடுந் துறையூர் விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.4 | 127 | பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால் மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர் வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.5 | 128 | மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் கொட்டாட் டொடுபாட் டொலியோவாத் துறையூர்ச் சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.6 | 129 | மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித் தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர் நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.7 | 130 | கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச் செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் மையார் தடங்கண் ணியராடுந் துறையூர் ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.8 | 131 | விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் பண்ணார் மொழிப்பா வையராடுந் துறையூர் அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.9 | 132 | மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும் ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார் பூவார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்த் தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.10 | 133 | செய்யார் கமல மலர்நாவ லூர்மன்னன் கையாற் றொழுதேத்தப் படுந்துறை யூர்மேற் பொய்யாத் தமிழூரன் உரைத்தன வல்லார் மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே. | 7.13.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - துறையூரப்பர், தேவியார் - பூங்கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.14 திருப்பாச்சிலாச்சிராமம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
134 |
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும் | 135 | அன்னையே என்னேன் அத்தனே என்னேன் |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.15 திருநாட்டியத்தான்குடி
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
146 |
பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் | 147 | கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட் |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கரிநாதேசுவரர், தேவியார் - மலர்மங்கையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.16 திருக்கலையநல்லூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
156 |
குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு | 157 | செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகலைநாதர், தேவியார் - அமிர்தவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.17 திருநாவலூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
167 |
கோவலன் நான்முகன் வானவர் | 168 | தன்மையி னாலடி யேனைத்தாம் |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நாவலீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.18 திருவேள்விக்குடி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
178 |
மூப்பதும் இல்லை பிறப்பதும் | 179 | கட்டக்காட் டில்நட மாடுவரி |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.19 திருநின்றியூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
188 |
அற்றவ னாரடி யார்தமக் | 189 | வாசத்தி னார்மலர்க் கொன்றையுள் |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மகாலட்சுமியீசுவரர், தேவியார் - உலகநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.20 திருக்கோளிலி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
199 |
நீள நினைந்தடி யேனுமை | 200 | வண்டம ருங்குழ லாளுமை |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோளிலிநாதர்,
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.21 திருக்கச்சிமேற்றளி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
209 |
நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன் வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்ற சிந்தாய் எந்தைபிரான் திருமேற் றளியுறையும் எந்தாய் உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே. | 7.21.1 | 210 | ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக் கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன் சேட்டார் மாளிகைசூழ் திருமேற் றளியுறையும் மாட்டே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே. | 7.21.2 | 211 | மோறாந் தோரொருகால் நினையா திருந்தாலும் வேறா வந்தென்னுள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே சேறார் தண்கழனித் திருமேற் றளியுறையும் ஏறே உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே. | 7.21.3 | 212 | உற்றார் சுற்றமெனும் அதுவிட்டு நுன்னடைந்தேன் எற்றால் என்குறைவென் இடரைத் துறந்தொழிந்தேன் செற்றாய் மும்மதிலுந் திருமேற் றளியுறையும் பற்றே நுன்னையல்லால் பணிந்தேத்த மாட்டேனே. | 7.21.4 | 213 | எம்மான் எம்மனையென் றவரிட் டிறந்தொழிந்தார் மெய்ம்மா லாயினதீர்த் தருள்செய்யும் மெய்ப்பொருளே கைம்மா வீருரியாய் கனமேற் றளியுறையும் பெம்மான் உன்னையல்லால் பெரிதேத்த மாட்டேனே. | 7.21.5 | 214 | நானேல் உன்னடியே நினைந்தேன் நினைதலுமே ஊனேர் இவ்வுடலம் புகுந்தாயென் ஒண்சுடரே தேனே இன்னமுதே திருமேற் றளியுறையுங் கோனே உன்னையல்லாற் குளிர்ந்தேத்த மாட்டேனே. | 7.21.6 | 215 | கையார் வெஞ்சிலைநா ணதன்மேற் சரங்கோத்தே எய்தாய் மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான் செய்யார் பைங்கமலத் திருமேற் றளியுறையும் ஐயா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.21.7 | 216 | விரையார் கொன்றையினாய் விமலாஇனி உன்னையல்லால் உரையேன் நாவதனால் உடலில்லுயிர் உள்ளளவும் திரையார் தண்கழனித் திருமேற் றளியுறையும் அரையா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.21.8 | 217 | நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைதலுமே தலைவா நின்னினையப் பணித்தாய் சலமொழிந்தேன் சிலையார் மாமதில்சூழ் திருமேற் றளியுறையும் மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே. | 7.21.9 | 218 | பாரூர் பல்லவனூர் மதிற்காஞ்சி மாநகர்வாய்ச் சீரூ ரும்புறவிற் றிருமேற் றளிச்சிவனை ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் ஆரூரன்சொன்ன சீரூர் பாடல்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. | 7.21.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேற்றளியீசுவரர், தேவியார் - காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.22 திருப்பழமண்ணிப்படிக்கரை
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
219 |
முன்னவன் எங்கள்பிரான் முதற்காண்பரி தாயபிரான் சென்னியில் எங்கள்பிரான் திருநீலமி டற்றெம்பிரான் மன்னிய எங்கள்பிரான் மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப் பன்னிய எங்கள்பிரான் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.1 | 220 | அண்ட கபாலஞ்சென்னி அடிமேலல ரிட்டுநல்ல தொண்டங் கடிபரவித் தொழுதேத்திநின் றாடுமிடம் வெண்டிங்கள் வெண்மழுவன் விரையார்கதிர் மூவிலைய பண்டங்கன் மேயவிடம் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.2 | 221 | ஆடுமின் அன்புடையீர் அடிக்காட்பட்ட தூளிகொண்டு சூடுமின் தொண்டருள்ளீர் உமரோடெமர் சூழவந்து வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந்தாமல் திருந்தச்சென்று பாடுமின் பத்தருள்ளீர் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.3 | 222 | அடுதலை யேபுரிந்தான் அவைஅந்தர மூவெயிலுங் கெடுதலை யேபுரிந்தான் கிளருஞ்சிலை நாணியிற்கோல் நடுதலை யேபுரிந்தான் நரிகான்றிட்ட எச்சில்வெள்ளைப் படுதலை யேபுரிந்தான் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.4 | 223 | உங்கைக ளாற்கூப்பி உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மங்கையோர் கூறுடையான் வானோர்முத லாயபிரான் அங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலைய பங்கய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.5 | 224 | செடிபடத் தீவிளைத்தான் சிலையார்மதில் செம்புனஞ்சேர் கொடிபடு மூரிவெள்ளை எருதேற்றையும் ஏறக்கொண்டான் கடியவன் காலன்றன்னைக் கறுத்தான்கழற் செம்பவளப் படியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.6 | 225 | கடுத்தவன் தேர்கொண்டோ டிக் கயிலாயநன் மாமலையை எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்கன்முடி பத்தலற விடுத்தவன் கைநரம்பால் வேதகீதங்கள் பாடலுறப் படுத்தவன் பால்வெண்ணீணற்றன் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.7 | 226 | திரிவன மும்மதிலும் எரித்தான்இமை யோர்பெருமான் அரியவன் *அட்டபுட்பம் அவைகொண்டடி போற்றிநல்ல கரியவன் நான்முகனும் அடியும்முடி காண்பரிய பரியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக் கரையே. *அட்டபுட்பமாவன து புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னுமிவற்றின் புட்பங்களாம். இவை புலரி முதலிய காலங்களிற் சாத்தும் அட்டபுட்பம். மற்றுமுள்ளவைகளைப் புட்பவிதியிற் காண்க. | 7.22.8 | 227 | வெற்றரைக் கற்றமணும் விரையாதுவிண் டாலமுண்ணுந் துற்றரைத் துற்றறுப்பான் றுன்னஆடைத் தொழிலுடையீர் பெற்றரைப் பித்தரென்று கருதேன்மின் படிக்கரையுள் பற்றரைப் பற்றிநின்று பழிபாவங்கள் தீர்மின்களே. | 7.22.9 | 228 | பல்லுயிர் வாழுந்தெண்ணீணர்ப் பழமண்ணிப் படிக்கரையை அல்லியந் தாமரைத்தார் ஆரூரன் உரைத்ததமிழ் சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும் எல்லியும் நன்பகலும் இடர்கூருதல் இல்லையன்றே. | 7.22.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர்,
தேவியார் - வடிக்கண்ணமுதகரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.23 திருக்கழிப்பாலை
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
229 |
செடியேன் தீவினையிற் றடுமாறக் கண்டாலும் அடியான் ஆவவெனா தொழிதல் தகவாமே முடிமேல் மாமதியும் அரவும் உடன்றுயிலும் வடிவே தாமுடையார் மகிழுங்கழிப் பாலையதே. | 7.23.1 | 230 | எங்கே னும்மிருந்துன் அடியே னுனைநினைந்தால் அங்கே வந்தென்னோடும் உடனாகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட் டெனையாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே. | 7.23.2 | 231 | ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச் செறுத்தாய் வேலைவிட மறியாமல் உண்டுகண்டங் கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே. | 7.23.3 | 232 | சுரும்பார் விண்டமலர் அவைதூவித் தூங்குகண்ணீர் அரும்பா நிற்குமனத் தடியாரொடும் அன்புசெய்வன் விரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தாற் கரும்பா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே. | 7.23.4 | 233 | ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்தருளித் தெழிப்பாய் மோதுவிப்பாய் விலையா வணமுடையாய் கழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகிற் கழிப்பா லைமருவுங் கனலேந்து கையானே. | 7.23.5 | 234 | ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலியதள்மேற் போர்த்தாய் ஆனையின்றோல் உரிவை புலால்நாறக் காத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப் பார்த்தா னுக்கிடமாம் பழியில்கழிப் பாலையதே. | 7.23.6 | 235 | பருத்தாள் வன்பகட்டைப் படமாகமுன் பற்றியதள் உரித்தாய் ஆனையின்றோல் உலகந்தொழும் உத்தமனே எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர்கடியுங் கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே. | 7.23.7 | 236 | படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா உடைத்தாய் வேள்விதனை உமையாளையோர் கூறுடையாய் அடர்த்தாய் வல்லரக்கன் றலைபத்தொடு தோள்நெரியக் கடற்சா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே. | 7.23.8 | 237 | பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான் செய்யா னுங்கரிய நிறத்தானுந் தெரிவரியான் மையார் கண்ணியொடு மகிழ்வான்கழிப் பாலையதே. | 7.23.9 | 238 | பழிசே ரில்புகழான் பரமன் பரமேட்டி கழியார் செல்வமல்குங் கழிப்பாலை மேயானைத் தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ் வழுவா மாலைவல்லார் வானோருல காள்பவரே. | 7.23.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்,
தேவியார் - பொற்பதவேதநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.24 திருமழபாடி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
239 |
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.1 | 240 | கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன் தாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீ வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.2 | 241 | எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார் இம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன் மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.3 | 242 | பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந் தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன் வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.4 | 243 | கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப் பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.5 | 244 | நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.6 | 245 | சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.7 | 246 | வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாஞ் செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.8 | 247 | நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங் குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.9 | 248 | ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச் சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ் பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. | 7.24.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பநாதர், தேவியார் - அழகம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.25 திருமுதுகுன்றம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
249 |
பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர் முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர் மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள் அடியே*னிட் டளங்கெடவே. *இட்டளம் து துன்பம். | 7.25.1 | 250 | உம்பரும் வானவரும் உடனேநிற்க வேயெனக்குச் செம்பொனைத் தந்தருளித் திகழும்முது குன்றமர்ந்தீர் வம்பம ருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள் எம்பெரு மானருளீர் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.2 | 251 | பத்தா பத்தர்களுக் கருள்செய்யும் பரம்பரனே முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே மைத்தா ருந்தடங்கண் பரவையிவள் வாடாமே அத்தா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.3 | 252 | மங்கையோர் கூறமர்ந்தீர் மறைநான்கும் விரித்துகந்தீர் திங்கள் சடைக்கணிந்தீர் திகழும்முது குன்றமர்ந்தீர் கொங்கைநல் லாள்பரவை குணங்கொண்டிருந் தாள்முகப்பே அங்கண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.4 | 253 | மையா ரும்மிடற்றாய் மருவார்புரம் மூன்றெரித்த செய்யார் மேனியனே திகழும்முது குன்றமர்ந்தாய் பையா ரும்மரவே ரல்குலாளிவள் வாடுகின்றாள் ஐயா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.5 | 254 | நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும் முடியால் வந்திறைஞ்ச முதுகுன்ற மமர்ந்தவனே படியா ரும்மியலாள் பரவையிவள் தன்முகப்பே அடிகேள் தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.6 | 255 | கொந்தண வும்பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல் வந்தண வும்மதிசேர் சடைமாமுது குன்றுடையாய் பந்தண வும்விரலாள் பரவையிவள் தன்முகப்பே அந்தண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.7 | 256 | பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழ முரசார் வந்ததிர முதுகுன்ற மமர்ந்தவனே விரைசே ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே அரசே தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.8 | 257 | ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனே மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்ற மமர்ந்தவனே பூத்தா ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே கூத்தா தந்தருளாய் கொடியேனிட் டளங்கெடவே. | 7.25.9 | 258 | பிறையா ருஞ்சடையெம் பெருமான் அருளாயென்று முறையால் வந்தமரர் வணங்கும்முது குன்றர்தம்மை மறையார் தங்குரிசில் வயல்நாவலா ரூரன்சொன்ன இறையார் பாடல்வல்லார்க் கெளிதாஞ்சிவ லோகமதே. திருமுதுகுன்றமென்னும் விருத்தாசலத்தில் பரமசிவம் அருளிச்செய்த பொன்னை மணிமுத்தா நதியில் விட்டுப்போய்த் திருவாரூர்க்கமலாலயமென்னுந் திருக்குளத்திலிறங்கிக் கையால்தடவும்போதோதிய பதிகம். அவ்வாறு தடவும்போது, "எத்தாதிருந்தறியே னென்னுந்" தேவாரமோதுகையில் பொருளகப்பட்டது. | 7.25.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பழமலைநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.26 திருக்காளத்தி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
259 |
செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே வண்டாருங் குழலா ளுமைபாகம் மகிழ்ந்தவனே கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய் அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.26.1 | 260 | இமையோர் நாயகனே இறைவாவென் னிடர்த்துணையே கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய் உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள் அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.26.2 | 261 | படையார் வெண்மழுவா பகலோன்பல் லுகுத்தவனே விடையார் வேதியனே விளங்குங்குழைக் காதுடையாய் கடையார் மாளிகைசூழ் கணநாதனெங் காளத்தியாய் உடையாய் உன்னையல்லால் உகந்தேத்த மாட்டேனே. | 7.26.3 | 262 | மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே குறியே என்னுடைய குருவேயுன்குற் றேவல்செய்வேன் நெறியே நின்றடியார் நினைக்குந்திருக் காளத்தியுள் அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.26.4 | 263 | செஞ்சே லன்னகண்ணார் திறத்தேகிடந் துற்றலறி நஞ்சேன் நானடியேன் நலமொன்றறி யாமையினாற் துஞ்சேன் நானொருகாற் றொழுதேன்றிருக் காளத்தியாய் அஞ்சா துன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.26.5 | 264 | பொய்யவன் நாயடியேன் புகவேநெறி ஒன்றறியேன் செய்யவ னாகிவந்திங் கிடரானவை தீர்த்தவனே மெய்யவ னேதிருவே விளங்குந்திருக் காளத்தியென் ஐயநுன் றன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.26.6 | 265 | கடியேன் காதன்மையாற் கழற்போதறி யாதவென்னுள் குடியாக் கோயில்கொண்ட குளிர்வார்சடை யெங்குழகா முடியால் வானவர்கள் முயங்குந்திருக் காளத்தியாய் அடியேன் உன்னையல்லால் அறியேன்மற் றொருவரையே. | 7.26.7 | 266 | நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக் கூறேன் நாவதனாற் கொழுந்தேயென் குணக்கடலே பாறார் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய் ஏறே உன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே. | 7.26.8 | 267 | தளிர்போல் மெல்லடியாள் தனைஆகத் தமர்ந்தருளி எளிவாய் வந்தென்னுள்ளம் புகுதவல்ல எம்பெருமான் களியார் வண்டறையுந் திருக்காளத்தி யுள்ளிருந்த ஒளியே உன்னையல்லால் இனியொன்றும் உணரேனே. | 7.26.9 | 268 | காரா ரும்பொழில்சூழ் கணநாதனெங் காளத்தியுள் ஆரா வின்னமுதை அணிநாவலா ரூரன்சொன்ன சீரூர் செந்தமிழ்கள் செப்புவார்வினை யாயினபோய்ப் பேரா விண்ணுலகம் பெறுவார்பிழைப் பொன்றிலரே. | 7.26.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளத்திநாதர், தேவியார் - ஞானப்பூங்கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.27 திருக்கற்குடி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
269 |
விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய் படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.1 | 270 | மறையோர் வானவருந் தொழுதேத்தி வணங்கநின்ற இறைவா எம்பெருமான் எனக்கின்னமு தாயவனே கறையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.2 | 271 | சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே மலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனே கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.3 | 272 | செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே மையார் கண்ணிபங்கா மதயானை உரித்தவனே கையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.4 | 273 | சந்தார் வெண்குழையாய் சரிகோவண ஆடையனே பந்தா ரும்விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே கந்தார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே. | 7.27.5 | 274 | அரையார் கீளொடுகோ வணமும் அரைக்கசைத்து விரையார் கொன்றையுடன் விளங்கும்பிறை மேலுடையாய் கரையா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.6 | 275 | பாரார் விண்ணவரும் பரவிப்பணிந் தேத்தநின்ற சீரார் மேனியனே திகழ்நீல மிடற்றினனே காரார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.7 | 276 | நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யுங் கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.8 | 277 | வருங்கா லன்னுயிரை மடியத்திரு மெல்விரலாற் பெரும்பா லன்றனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே கரும்பா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே. | 7.27.9 | 278 | அலையார் தண்புனல்சூழ்ந் தழகாகி விழவமருங் கலையார் மாதவர்சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச் சிலையார் வாணுதலாள் நல்லசிங்கடி யப்பன்உரை விலையார் மாலைவல்லார் வியன்மூவுல காள்பவரே. | 7.27.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உச்சிவரதநாயகர், தேவியார் - அஞ்சனாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.28 திருக்கடவூர்வீரட்டம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
279 |
பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங் கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம் அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.1 | 280 | பிறையா ருஞ்சடையாய் பிரமன்றலை யிற்பலிகொள் மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே கறையா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம் இறைவா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.2 | 281 | அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான் கன்றாருங் கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள் என்றா தைபெருமான் எனக்கார்துணை நீயலதே. | 7.28.3 | 282 | போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல் வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத் தாரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.4 | 283 | மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே பொய்யா தென்னுயிருள் புகுந்தாயின்னம் போந்தறியாய் கையார் ஆடரவா கடவூர்தனுள் வீரட்டத்தெம் ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.5 | 284 | மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும் பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம் அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.6 | 285 | எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே நரியா ருஞ்சுடலை நகுவெண்டலை கொண்டவனே கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம் அரியாய் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.7 | 286 | வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய் தேறேன் உன்னையல்லாற் சிவனேயென் செழுஞ்சுடரே காறார் வெண்மருப்பா கடவூர்த்திரு வீரட்டத்துள் ஆறார் செஞ்சடையாய் எனக்கார்துணை நீயலதே. | 7.28.8 | 287 | அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே கயமா ருஞ்சடையாய் கடவூர்த்திரு வீரட்டத்துள் அயனே என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.9 | 288 | காரா ரும்பொழில்சூழ் கடவூர்த்திரு வீரட்டத்துள் ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன் ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ் பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. | 7.28.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர்,
தேவியார் - அபிராமியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.29 திருக்குருகாவூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
289 |
இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான் பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம் முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.1 | 290 | ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங் காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும் மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.2 | 291 | பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும் வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.3 | 292 | வெப்பொடு பிணியெல்லாந் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை அப்படி அழகாய அணிநடை மடவன்னம் மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.4 | 293 | வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும் விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.5 | 294 | பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய் மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.6 | 295 | போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை நோந்தன செய்தாலும் நுன்னல தறியேன்நான் சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.7 | 296 | மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய் சலச்சல மிடுக்குடைய தருமனார் தமரென்னைக் கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.8 | 297 | படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாமே தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.9 | 298 | வளங்கனி பொழில்மல்கு வயலணிந் தழகாய விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை இளங்கிளை ஆரூரன் வனப்பகை யவளப்பன் உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. | 7.29.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெள்ளிடையப்பர்,
தேவியார் - காவியங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.30 திருக்கருப்பறியலூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
299 |
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் | 300 | நீற்றாரும் மேனியராய் நினைவார்தம் |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தவீசுவரர்,
தேவியார் - கோல்வளைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.31 திருஇடையாற்றுத்தொகை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
310 |
முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம் சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர் பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.1 | 311 | சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர் ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப் பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர் எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.2 | 312 | கடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம் விடங்களூர் திருவெண்ணி அண்ணா மலைவெய்ய படங்களூர் கின்றபாம் பரையான் பரஞ்சோதி இடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.3 | 313 | கச்சையூர் காவங் கழுக்குன்றங் காரோணம் பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர் கச்சியூர் கச்சிசிக்கல் நெய்த்தானம் மிழலை இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.4 | 314 | நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர் மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.5 | 315 | திங்களூர் திருவா திரையான் பட்டினமூர் நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர் தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.6 | 316 | கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன் தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல் எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.7 | 317 | தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர் பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த ஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.8 | 318 | பேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர் தேறனூர் திருமா மகள்கோன் றிருமாலோர் கூறனூர் குரங்காடு துறைதிருக் கோவல் ஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.9 | 319 | ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன் தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக் கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே. | 7.31.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.32 திருக்கோடிக்குழகர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
320 |
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற் குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர் அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே. | 7.32.1 | 321 | முன்றான் கடல்நஞ்ச முண்ட அதனாலோ பின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோ குன்றாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா என்றான் தனியே இருந்தாய் எம்பிரானே. | 7.32.2 | 322 | மத்தம் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால் பத்தர் பலர்பாட இருந்த பரமா கொத்தார் பொழில்சூழ் தருகோடிக் குழகா எத்தாற் றனியே இருந்தாய் எம்பிரானே. | 7.32.3 | 323 | காடேல் மிகவா லிதுகா ரிகையஞ்சக் கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகைகுழற வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர் கோடிக் குழகா இடங்கோயில் கொண்டாயே. | 7.32.4 | 324 | மையார் தடங்கண்ணி பங்காகங் கையாளும் மெய்யாகத் திருந்தனள் வேறிடம் இல்லை கையார் வளைக்காடு காளோடும் உடனாய்க் கொய்யார் பொழிற்கோடி யேகோயில் கொண்டாயே. | 7.32.5 | 325 | அரவேர் அல்குலாளை ஓர்பாக மமர்ந்து மரவங் கமழ்மா மறைக்கா டதன்றென்பாற் குரவப் பொழில்சூழ் தருகோடிக் குழகா இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே. | 7.32.6 | 326 | பறையுங் குழலும் ஒலிபாட லியம்ப அறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே குறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே. | 7.32.7 | 327 | ஒற்றியூ ரென்றஊ னத்தினா லதுதானோ அற்றப் படஆ ரூரதென் றகன்றாயோ முற்றா மதிசூடிய கோடிக் குழகா எற்றாற் றனியே இருந்தாய் எம்பிரானே. | 7.32.8 | 328 | நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப் படியான் பலிகொள்ளும் இடங்குடி இல்லை கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல் அடிகேள் அன்பதா யிடங்கோயில் கொண்டாயே. | 7.32.9 | 329 | பாரூர் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால் ஏரார் பொழில்சூழ் தருகோடிக் குழகை ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார் சீரார் சிவலோகத் திருப்பவர் தாமே. | 7.32.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமுதகடநாதர், தேவியார் - மையார்தடங்கணம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.33. நமக்கடிகளாகிய - அடிகள்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
330 |
பாறுதாங்கிய காடரோபடு | 331 | இட்டிதாகவந் துரைமினோநுமக் |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.34 திருப்புகலூர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
340 |
தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ் | 341 | மிடுக்கிலாதானை வீமனேவிறல் |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினியீசுவரர்,
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.35 திருப்புறம்பயம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
351 |
அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி | 352 | பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும் |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதேசுவரர்,
தேவியார் - கரும்படுசொல்லம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.36 திருப்பைஞ்ஞீலி
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
361 |
காருலாவிய நஞ்சையுண்டிருள் | 362 | சிலைத்துநோக்கும்வெள் ளேறுசெந்தழல் |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர்,
தேவியார் - விசாலாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.37 திருவாரூர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
372 |
குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப் பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந் துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. | 7.37.1 | 373 | பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள் அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூரரை மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும் உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே. | 7.37.2 | 374 | சூழுமோ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள் ஆளும்அம் பொற்கழல் அடிகளா ரூரர்க்கு வாழுமா றும்வளை கழலுமா றும்மெனக் கூழுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. | 7.37.3 | 375 | சக்கிரவா ளத்திளம் பேடைகாள் சேவல்காள் அக்கிரமங் கள்செயும் அடிகளா ரூரர்க்கு வக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும் உக்கிரமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே. | 7.37.4 | 376 | இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள் அலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக் கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும் முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே. | 7.37.5 | 377 | வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள் அண்டவா ணர்தொழும் அடிகளா ரூரரைக் கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய் உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. | 7.37.6 | 378 | தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள் ஆனலங் கொண்டவெம் மடிகளா ரூரர்க்குப் பானலங் கொண்டவெம் பணைமுலை பயந்துபொன் ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே. | 7.37.7 | 379 | சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் நாரைகாள் அற்றமுற் றப்பகர்ந் தடிகளா ரூரர்க்குப் பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும் உற்றுமற் றின்மையும் உணர்த்த வல்லீர்களே. | 7.37.8 | 380 | குரவநா றக்குயில் வண்டினம் பாடநின் றரவமா டும்பொழில் அந்தணா ரூரரைப் பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும் உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே. | 7.37.9 | 381 | கூடுமன் னப்பெடை காள்குயில் வண்டுகாள் ஆடும்அம் பொற்கழல் அடிகளா ரூரரைப் பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி ஊடுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. | 7.37.10 | 382 | நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும் அத்தன்அம் பொற்கழல் அடிகளா ரூரரைச் சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப் பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே. | 7.37.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.38 திருவதிகைத்திருவீரட்டானம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
383 |
தம்மானை அறியாத சாதியார் உளரே | 384 | முன்னேயெம் பெருமானை மறந்தென்கொல் மறவா |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.39 திருத்தொண்டத்தொகை
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
393 |
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் | 394 | இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் |
கருத்துகள்
கருத்துரையிடுக