திருத்தொண்டர் புராண வரலாறு
பக்தி நூல்கள்
Backஉ
சிவசிவ
திருச்செந்திலாண்டவன் துணை
கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
அருளிச்செய்த
"திருத்தொண்டர் புராண வரலாறு" என்னும்
"சேக்கிழார் சுவாமிகள் புராணம் "
பாயிரம்
விநாயகர் வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம் | 1 |
பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும் பாளைவிரி மணங்கமழ் பூஞ்சேநலை தோறும் காலாறு கோலிஇசை பாடநீடும் களிமயில்நின் றாடும்இயல் தொண்டை நாட்டுள் நாலாறுக் கோட்டத்துப் புலியூர்க் கோட்டம் நன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க சேலாறு கின்றவயற் குன்றத் துரில் சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே - 11 |
கருத்துகள்
கருத்துரையிடுக