திருமுறை இரண்டாம் பகுதி
பக்தி நூல்கள்
Back
பதினோராந் திருமுறை (நம்பியாண்டார் நம்பி தொகுப்பு)
இரண்டாம் பாகம் - பாசுரங்கள் 826-1419
( பட்டினத்துப் பிள்ளையார் & நம்பியாண்டார் நம்பி அருளியது )
11. பட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள் 11.1 கோயில் நான்மணிமாலை 40 (826 - 865) 11.2 திருக்கழுமல மும்மணிக் கோவை 30 (866 - 895) 11.3 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 30 (896 - 925) 11.4 திருஏகம்பமுடையார் திருவந்தாதி 100 (926 - 1025) 11.5 திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது 10 (1026 - 1035) 12. நம்பியாண்டார் நம்பி பாசுரங்கள் 12.1 திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை 20 (1036-1055) 12.2 கோயில் திருப்பண்ணியர் விருத்தம் 70 (1056 - 1125) 12.3 திருத்தொண்டர் திருவந்தாதி 90 (1126 - 1215) 12.4 ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி 101 (1216 - 1316) 12.5 ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 11 (1317 - 1327) 12.6 ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை 30 (1328 - 1357) 12.7 ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை 1 1358 12.8 ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம் 49 (1359 - 1407) 12.9 ஆளுடையபிள்ளையார் திருத்தொகை 1 1408 12.10 திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை 11 (1409 - 1419) |
11. பட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள்
11.1 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
கோயில் நான்மணிமாலை (826 - 865)
826. |
பூமேல் அயன்அறியா மோலிப் புறத்ததே நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் -பாமேவும் ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே கூத்துகந்தான் கொற்றக் குடை. | 1 |
827 |
குடைகொண்டிவ் வையம் எலாங்குளிர் வித்தெரி பொற்றிகிரிப் படைகொண் டிகல்தெறும் பார்த்திவர் ஆவதிற் பைம்பொற் கொன்றைத் தொடைகொண்ட வார்சடை அம்பலத் தான்தொண்டர்க் கேவல்செய்து கடைகொண்ட பிச்சைகொண் டுண்டிங்கு வாழ்தல் களிப்புடைத்தே. | 2 |
828 |
களிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம் வௌிவந் தடியேன் மனம்புகுந்த தென்றால் ஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும் எளிவந் தினிப்பிறர்பால் சென்றவர்க்குப் பொய்கொண் 3 | |
829 |
உரையின் வரையும் பொருளின் அளவும் இருவகைப் பட்ட எல்லையும் கடந்து தம்மை மறந்து நின்னை நினைப்பவர் செம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம் ஆடும் அம்பல வாண நீடு .........(5) குன்றக் கோமான் தன்திருப் பாவையை நீல மேனி மால்திருத் தங்கையைத் திருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின் தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில் வீர வெள்விடைக் கொடியும் போரில் ....(10) தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித் தெய்வக் கங்கை ஆறும் பொய்தீர் விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின் வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல் ......(15) வைதிகப் புரவியும் வான நாடும் மையறு கனக மேருமால் வரையும் செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்று ஒருபதி னாயிரந் திருநெடு நாமமும் உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள் .......(20) அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின் தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள் ஆணை வைப்பிற் காணொணா அணுவும் வானுற நிமிர்ந்து காட்டும் (25) கானில்வால் நுளம்பும் கருடனா தலினே. | 4 |
830. |
ஆதரித்த மாலும் அறிந்திலனென் றஃதறிந்தே காதலித்த நாயேற்கும் காட்டுமே - போதகத் தோல் கம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர் அம்பலத்தான் செம்பொன் அடி. | 5 |
831. |
அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால் முடியொன்றிவ் அண்டங்கள் எல்லாம் கடந்தது முற்றும்வெள்ளைப் பொடியொன்று தோள்எட்டுத் திக்கின் புறத்தன பூங்கரும்பின் செடியொன்று தில்லைச்சிற் றம்பலத் தான்தன் திருநடமே. | 6 |
832 |
நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால் தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர் 7 | |
833. |
நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம் தன்முதல் முருக்க நென்முதற் சூழ்ந்த நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த தேரையை வவ்வி யாங்கு யாம்முன் கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி .....(5) மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய் அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்கு அருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப் பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி அயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்த்துநின்று .........(10) எண்டோள் வீசிக் கண்டோர் உருகத் தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர் ஆடும் அம்பலக் கூத்தனைப் பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே. | 8 |
834 |
இலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம் கலவி கடைக்கணித்தும் காணேன் - இலகுமொளி ஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும் நாடகங்கண் டின்பான நான். | 9 |
835 |
நானே பிறந்த பயன்படைத் தேன்அயன் நாரணன்எம் கோனே எனத்தில்லை அம்பலத் தேநின்று கூத்துகந்த தேனே திருவுள்ள மாகியென் தீமையெல் லாம்அறுத்துத் தானே புகுந்தடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே. | 10 |
836 |
சந்து புனைய வெதும்பி மலரணை தங்க வெருவி இலங்கு கலையொடு பந்து கழல்கள் மறந்து தளிர்புரை பண்டை நிறமும் இழந்து நிறையொடு நந்தி முழவு தழங்க மலைபெறு நங்கை மகிழ அணிந்த அரவுகள் அந்தி மதியொ டணிந்து திலைநகர் அம்பொன் அணியும் அரங்கின் நடநவில் 11 | |
837 |
வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்துக் கடல்தட வாக மிடலொடும் வாங்கித் திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்கு அமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள் கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம் .....(5) ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅது அஞ்சேல் என்று செஞ்சேல் ஆகித்தன் தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில் பௌவம் ஏழே பட்டது பௌவத்தோடு உலகு குழைத்தொரு நாஅள் உண்டதும் .....(10) உலக மூன்றும் அளந்துழி ஆங்கவன் ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில் உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே இனைய னாகிய தனிமுதல் வானவன் கேழல் திருவுரு ஆகி ஆழத்து .....(15) அடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும் காண்பதற் கரியநின் கழலும் வேண்டுபு நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும் அகில சராசரம் அனைத்தும் உதவிய ........(20) பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக் கண்டி லாதநின் கதிர்நெடு முடியும் ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச் சிறிய பொதுவில் மறுவின்றி விளங்கி ஏவருங் காண ஆடுதி அதுவெனக்கு .........(25) அதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம் விளையாது மொழிந்த தெந்தை வளையாது கல்லினும் வலிதது நல்லிதிற் செல்லாது தான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப வான்பொய் அச்சம் மாயா ஆசை ........(30) மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில் ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து மண்மகன் திகிரியில் எண்மடங்கு சுழற்ற ஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து நுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும் ..........(35) செய்ய வாயும் மையமர் கண்டமும் நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும் எடுத்த பாதமும் தடுத்தசெங் கையும் புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க நாடகம் ஆடுதி நம்ப கூடும் .........(40) வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும் ஆதி நின்திறம் ஆதலின் மொழிவது பெரியதிற் பெரியை என்றும் அன்றே சிறியதிற் சிறியை என்றும் அன்றே நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல் .........(45) இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த மறையவர் தில்லை மன்றுகிழ வோனே. | 12 |
838. |
கிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத் துழவரும்போய் ஓயுமா கண்டோம் - மொழிதெரிய வாயினால் இப்போதே மன்றில் நடமாடும் நாயனார் என்றுைப்போம் நாம். | 13 |
839 |
நாமத்தி னால்என்தன் நாத்திருத் தேன்நறை மாமலர்சேர் தாமத்தி னால்உன் சரண்பணி யேன்சார்வ தென்கொடுநான் வாமத்தி லேயொரு மானைத் தரித்தொரு மானைவைத்தாய் சேமத்தி னாலுன் திருத்தில்லை சேர்வதோர் செந்நெறியே. | 14 |
840. |
நெறிதரு குழலை அறலென்பர்கள் நிழலெழு மதியம் நுதலென்பர்கள் அறிகுவ தரிதிவ் விடை யென்பர்கள் அடியிணை கமல மலரென்பர்கள் மறிமழு வுடைய கரனென்கிலர் மறலியை முனியும் அரனென்கிலர் செறிபொழில் நிலவு திலையென்கிலர் திருநடம் நவிலும் இறையென்கிலர் 15 | |
841 |
அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும் கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும் இனையன பலசரக் கேற்றி வினையெனும் தொன்மீ காமன் உய்ப்ப அந்நிலைக் கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப் .....(5) புலனெனும் கோண்மீன் அலமந்து தொடரப் பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும் துயர்த்திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக் குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து நிறையெனும் கூம்பு முரிந்து குறையா ........(10) உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும் மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம் கலங்குபு கவிழா முன்னம் அலங்கல் மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப் பையர வணிந்த தெய்வ நாயக .....(15) தொல்லெயில் உடுத்த தில்லை காவல வம்பலர் தும்பை அம்பல வாணநின் அருளெனும் நலத்தார் பூட்டித் திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே. | 16 |
842. |
செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென் தையல் வளைகொடுத்தல் சாலுமே - ஐயன்தேர் சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே தாயே நமதுகையில் சங்கு. | 17 |
843. |
சங்கிடத் தானிடத் தான்தன தாகச் சமைந்தொருத்தி அங்கிடத் தாள்தில்லை அம்பலக் கூத்தற் கவிர்சடைமேல் கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென் றாய்எங்கை நீயுமொரு பங்கிடத் தான்வல்லை யேல்இல்லை யேல்உன் பசப்பொழியே. | 18 |
844. |
ஒழிந்த தெங்களுற வென்கொ லோஎரியில் ஒன்ன லார்கள்புரம் முன்னொர்நாள் விழந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த வில்லி தில்லைநகர் போலியார் சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை தொடக்க நின்றவர் நடக்கநொந் தழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர் சிந்தை யாயொழிவ தல்லவே. | 19 |
845 |
அல்லல் வாழ்க்கை வல்லிதிற் செலுத்தற்குக் கைத்தேர் உழந்து கார்வரும் என்று வித்து விதைத்தும் விண்பார்த் திருந்தும் கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும் ....(5) அருளா வயவர் அம்பிடை நடந்தும் இருளுறு பவ்வத் தெந்திரங் கடாஅய்த் துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும் ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும் தாளுழந் தோடியும் வாளுழந் துண்டும் ....(10) அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும் சொற்பல புனைந்தும் கற்றன கழறியும் குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி ஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில் பிறந்தாங் கிறந்தும் இறந்தாங்கு பிறந்தும் .......(15) கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும் கொப்புட் செய்கை ஒப்பின் மின்போல் உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும் நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும் தெய்வ வேதியர் தில்லை மூதூர் .........(20) ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் கடவுட் கண்ணுதல் நடமுயன் றெடுத்த பாதப் போதும் பாய்புலிப் பட்டும் மீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும் சேயுயர் அகலத் தாயிரங் குடுமி ..........(25) மணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும் அருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும் நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும் கங்கை வழங்கும் திங்கள் வேணியும் கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தியாங்கு ........(30) உள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன் நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான் உறுதற் கரியதும் உண்டோ பெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே. | 20 |
846 |
பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள் சுற்றோட ஓடித் தொழாநிற்கும் - ஒற்றைக்கைம் மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம் கோமறுகிற் பேதைக் குழாம். | 21 |
847 |
பேதையெங் கேயினித் தேறியுய் வாள்பிர மன்தனக்குத் தாதைதன் தாதையென் றேத்தும் பிரான்தண் புலிசைப்பிரான் கோதையந் தாமத்தண் கொன்றை கொடான்இன்று கொல்லஎண்ணி ஊதையும் காரும் துளியொடும் கூடி உலாவியே. | 22 |
848 |
உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவு ணாஎன நுகரும் ஒருவர் ஊழியின் இறுதி ஒருவர் ஆழிய புலவு கமழ்க ரோடிகை உடைய புனிதர் பூசுரர் புலிசை யலர்செய் போதணி பொழிலின் நிழலின் வாழ்வதோர் கலவ மயில னார்சுருள் கரிய குழலி னார்குயில் கருது மொழியி னார்கடை நெடிய விழியி னார்இதழ் இலவில் அழகி யாரிடை கொடியின் வடிவி னார்வடி வெழுதும் அருமை யாரென திதய முழுதும் ஆள்வரே. | 23 |
849 |
ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின் தாளின் ஏவல் தலையின் இயற்றி வழிவழி வந்த மரபினம் மொழிவதுன் ஐந்தெழுத் தவைஎம் சிந்தையிற் கிடத்தி நனவே போல நாடொறும் பழகிக் ......(5) கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக் கேட்பது நின்பெருங் கீர்த்தி மீட்பது நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென அருத்திசெய் திடுவ துருத்திர சாதனம் .......(10) காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன் ஆலயம் வலம் வரு தற்கே சால்பினில் கைகொடு குயிற்றுவ தைய நின்னது கோயில் பல்பணி குறித்தே ஓயாது உருகி நின்னினைந் தருவி சோரக் ...........(15) கண்ணிற் காண்பதெவ் வுலகினும் காண்பனஎல்லாம் நீயேயாகி நின்றதோர் நிலையே நாயேன் தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால் அலைகடல் பிறழினும் அடாதே அதனால் பொய்த்தவ வேடர் கைத்தகப் படுத்தற்கு .........(20) வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச் சமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின் மானுட மாக்களை வலியப் புகுத்தும் ஆனா விரதத் தகப்படுத் தாழ்த்து வளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு .........(25) நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும் வரையில் சீகர வாரியும் குரைகுடல் பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி எண்ணில வாகி இருங்கடல் அடங்கும் தன்மை போலச் சராசரம் அனைத்தும் ......(30) நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய் வானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய் நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச் செம்பொன் தில்லை மூதூர் .......(35) அம்பலத் தாடும் உம்பர் நாயகனே. | 24 |
850 |
நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத் தாயனைய னாயருளும் தம்பிரான் - தூயவிரை மென்றுழாய் மாலொடயன் தேட வியன்தில்லை மன்றுளே ஆடும் மணி. | 25 |
851 |
மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம் அணியாய் அருள்நடம் ஆடும் பிரானை அடைந்துருகிப் பணியாய் புலன்வழி போம்நெஞ்ச மேயினிப் பையப்பையப் பிணியாய்க் கடைவழி சாதியெல் லோரும் பிணம்என்னவே. | 26 |
852 |
என்னாம் இனிமட வரலாய் செய்குவ தினமாய் வண்டுகள் மலர்கிண்டித் தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள் அரனார் திருமுடி அணிதாமம் தன்னால் அல்லது தீரா தென்னிடர் தகையா துயிர்கரு முகிலேறி மின்னா நின்றது துளிவா டையும்வர வீசா நின்றது பேசாயே. | 27 |
853 |
பேசு வாழி பேசு வாழி ஆசையொடு மயங்கி மாசுறு மனமே பேசு வாழி பேசு வாழி கண்டன மறையும் உண்டன மலமாம் பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் ......(5) நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும் பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும் ஒன்றொன் றொருவழி நில்லா அன்றியும் செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர் கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர் ......(10) கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர் குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர் எனையர்எங் குலத்தினர் இறந்தோர் அனையவர் பேரும் நின்றில போலும் தேரின் நீயும்அஃ தறிதி யன்றே மாயப் .....(15) பேய்த்தேர் போன்று நீப்பரும் உறக்கத்துக் கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக் கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத் தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும் ........(20) நன்மையிற் திரிந்த புன்மையை யாதலின் அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி வளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும் பன்மீன் போலவும் மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும் .............(25) ஆசையாம் பரிசத் தியானை போலவும் ஓசையின் விளிந்த புள்ளுப் போலவும் வீசிய மணத்தின் வண்டு போலவும் உறுவ துணராச் செறுவுழிச் சேர்ந்தனை நுண்ணூல் நூற்றுத் தன்கைப் படுக்கும் ..........(30) அறிவில் கீடத்து நுந்துழி போல ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு இடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது குடர்கெழு சிறையறைக் குறங்குபு கிடத்தி கறவை நினைந்த கன்றென இரங்கி ......(35) மறவா மனத்து மாசறும் அடியார்க்கு அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை மறையவர் தில்லை மன்றுள் ஆடும் இறையவன் என்கிலை என்நினைந் தனையே. | 28 |
854 |
நினையார் மெலியார் நிறையழியார் வாளாப் புனைவார்க்குக் கொன்றை பொதுவோ - அனைவீரும் மெச்சியே காண வியன்தில்லை யான்அருளென் பிச்சியே நாளைப் பெறும். | 29 |
855 |
பெறுகின்ற எண்ணிலி தாயரும் பேறுறும் யானும்என்னை உறுகின்ற துன்பங்கள் ஆயிர கோடியும் ஒய்வொடுஞ்சென் றிறுகின்ற நாள்களும் ஆகிக் கிடந்த இடுக்கணெல்லாம் அறுகின் றனதில்லை ஆளுடை யான்செம்பொன் அம்பலத்தே. | 30 |
856 |
அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே அன்புடையர் என்னுமிதென் ஆனையை உரித்துக் கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக் கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே வம்பலர் நிறைந்துவசை பேசஒரு மாடே வாடைஉயிர் ஈரமணி மாமையும் இழந்தென் கொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக் கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளு வீரே. | 31 |
857. |
அருளு வாழி அருளு வாழி புரிசடைக் கடவுள் அருளு வாழி தோன்றுழித் தோன்றி நிலைதவக் கறங்கும் புற்பதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம் ...(5) அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி அதனினுங் கடிதே கதுமென மரணம் வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி நாணாள் பயின்ற நல்காக் கூற்றம் இனைய தன்மைய திதுவே இதனை .....(10) எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச் செய்தன சிலவே செய்வன சிலவே செய்யா நிற்பன சிலவே அவற்றிடை நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே ஒன்றினும் படாதன சிலவே என்றிவை .....(15) கணத்திடை நினைந்து களிப்பவும் கலுழ்பவும் கணக்கில் கோடித் தொகுதி அவைதாம் ஒன்றொன் றுணர்வுழி வருமோ அனைத்தும் ஒன்றா உணர்வுழி வருமோ என்றொன்றும் தௌிவுழித் தேறல் செல்லேம் அளிய ......(20) மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே அரியை சாலஎம் பெரும தெரிவுறில் உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே கண்டனை அவைநினைக் காணா அதுதான் நின்வயின் மறைத்தோய் அல்லை உன்னை .......(25) மாயாய் மன்னினை நீயே வாழி மன்னியும் சிறுமையிற் கரந்தோய் அல்லை பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே பெருகியும் சேணிடை நின்றோய் அல்லை தேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே ........(30) நண்ணியும் இடையொன்றின் மறைந்தோய் அல்லை இடையிட்டு நின்னை மறைப்பதும் இல்லை மறைப்பினும் அதுவும் நீயே யாகி நின்றதோர் நிலையே, அஃதான்று நினைப்பருங் காட்சி நின்னிலை இதுவே .......(35) நினைப்புறுங் காட்சி எம்நிலை அதுவே இனிநனி இரப்பதொன் றுடையம் மனம்மருண்டு புன்மையின் நினைத்துப் புலன்வழி படரினும் நின்வயின் நினைந்தே மாகுதல் நின்வயின் நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும் ........(40) நீயே அருளல் வேண்டும் வேய்முதிர் கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக இம்பர் உய்ய அம்பலம் பொலியத் திருவளர் தில்லை மூதூர் அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே. | 32 |
858 |
வானோர் பணிய மணியா சனத்திருக்கும் ஆனாத செல்வத் தரசன்றே - மால்நாகம் பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே வந்திப்பார் வேண்டாத வாழ்வு. | 33 |
859 |
வாழ்வாக வும்தங்கள் வைப்பாக வும்மறை யோர்வணங்க ஆள்வாய் திருத்தில்லை அம்பலத் தாய்உன்னை அன்றிஒன்றைத் தாழ்வார் அறியாச் சடுலநஞ் சுண்டிலை யாகில்அன்றே மாள்வார் சிலரையன் றோதெய்வ மாக வணங்குவதே. | 34 |
860 |
வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல் மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ டுணங்கிவள் தானுமெலி யப்பெறும் இடர்க்கே ஊதையெரி தூவியுல வப்பெறு மடுத்தே பிணங்கிஅர வோடுசடை ஆடநட மாடும் பித்தரென வும்இதயம் இத்தனையும் ஓரீர் அணங்குவெறி யாடுமறி யாடுமது ஈரும் மையலையும் அல்லலையும் அல்லதறி யீரே. | 35 |
861 |
ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக் குதிகொள் கங்கை மதியின்மீ தசைய வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ ஒருபால் தோடும் ஒருபால் குழையும் இருபாற் பட்ட மேனி எந்தை .....(5) ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர் ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் இமையா நாட்டத் தொருபெருங் கடவுள் வானவர் வணங்கும் தாதை யானே மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத் ....(10) தேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய தெய்வ மண்டபத் தைவகை அமளிச் சிங்கம் சுமப்ப ஏறி மங்கையர் இமையா நாட்டத் தமையா நோக்கத் தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும் .....(15) ஆனாச் செல்வத்து வானோர் இன்பம் அதுவே எய்தினும் எய்துக கதுமெனத் தெறுசொ லாளர் உறுசினந் திருகி எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் ........(20) வார்ந்தும் குறைத்தும் மதநாய்க் கீந்தும் செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும் புழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப் பன்னெடுங் காலம் அழுத்தி இன்னா வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர் .........(25) நிரயஞ் சேரினும் சேர்க உரையிடை ஏனோர் என்னை ஆனாது விரும்பி நல்லன் எனினும் என்க அவரே அல்லன் எனினும் என்க நில்லாத் திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது ........(30) இன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத் துன்பந் துதையினும் துதைக முன்பில் இளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது என்றும் இருக்கினும் இருக்க அன்றி இன்றே இறக்கினும் இறக்க ஒன்றினும் ........(35) வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே ஆண்டகைக் குரிசில்நின் அடியரொடும் குழுமித் தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும் அடையவும் அணுகவும் பெற்ற கிடையாச் செல்வம் கிடைத்த லானே. | 36 |
862 |
ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே - வானோங்கு வாமாண் பொழில்தில்லை மன்றைப் பொலிவித்த கோமானை இத்தெருவே கொண்டு. | 37 |
863 |
கொண்டல்வண் ணத்தவன் நான்முகன் இந்திரன் கோமகுடத் தண்டர்மிண் டித்தொழும் அம்பலக் கூத்தனுக் கன்புசெய்யா மிண்டர்மிண் டித்திரி வார்எனக் கென்னினி நானவன்தன் தொண்டர் தொண் டர்க்குத் தொழும்பாய்த் திரியத் தொடங்கினனே. | 38 |
864 |
தொடர நரைத்தங்க முன்புள வாயின தொழில்கள் மறுத்தொன்றும் ஒன்றி யிடாதொரு நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாவொரு நடலை நமக்கென்று வந்தன பேசிட மிடலொடி யப்பண்டி லங்கையர் கோன்ஒரு விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய தௌியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய 39 | |
865 |
சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள் ஆழி கொடுத்த பேரருள் போற்றி முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்து அளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய .....(5) செல்வங் கொடுத்த செல்வம் போற்றி தாள்நிழல் அடைந்த மாணிக் காக நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துப் பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க உதைத்துயிர் அளித்த உதவி போற்றி ....(10) குலைகுலை குலைந்த நிலையாத் தேவர் படுபேர் அவலம் இடையின்றி விலக்கிக் கடல்விடம் அருந்தின கருணை போற்றி தவிராச் சீற்றத் தவுணர் மூவெயில் ஒல்லனல் கொளுவி ஒருநொடி பொடிபட ......(15) வில்லொன்று வளைத்த வீரம் போற்றி பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக் காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக் கரியொன் றுரித்த பெருவிறல் போற்றி .......(20) பண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக் கொண்டு நடந்த கோலம் போற்றி விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள் ........(25) சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப் பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த தொண்டர் மனையில் உண்டல் போற்றி .......(30) வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த தாவுபுல் எலிக்கு மூவுல காள நொய்தினில் அளித்த கைவளம் போற்றி பொங்குளை அழல்வாய்ப் புகைவழி ஒருதனிச் ......(35) சிங்கங் கொன்ற சேவகம் போற்றி வரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய் உரகம் பூண்ட ஒப்பனை போற்றி கங்கையும் கடுக்கையும் கலந்துழி ஒருபால் திங்கள் சூடிய செஞ்சடை போற்றி .......(40) கடவுள் இருவர் அடியும் முடியும் காண்டல் வேண்டக் கனற்பிழம்பாகி நீண்டு நின்ற நீளம் போற்றி ஆலம் பில்குநின் சூலம்போற்றி கூறுதற் கரியநின் ஏறு போற்றி .......(45) ஏக வெற்பன் மகிழும் மகட் கிடப் பாகங் கொடுத்த பண்பு போற்றி தில்லை மாநகர் போற்றி தில்லையுட் செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத் தாடும் நாடகம் போற்றி என்றாங்கு .........(50) என்றும் போற்றினும் என்தனக் கிறைவ ஆற்றல் இல்லை ஆயினும் போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே. | 40 |
திருச்சிற்றம்பலம்
11.2 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருக்கழுமல மும்மணிக் கோவை (866 - 895)
866 |
திருவளர் பவளப் பெருவரை மணந்த மரகத வல்லி போல ஒருகூறு இமையச் செல்வி பிரியாது விளங்கப் பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த ...(5) வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக் கதிர்விடு நின்முகங் காண்தொறும் காண்தொறும் முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின் திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின் தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை ...(10) இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின் செவ்வாய்க் குமுதம் செவ்வி செய்யநின் செங்கைக் கமலம் மங்கை வனமுலை அமிர்த கலசம் அமைவின் ஏந்த மலைமகள் தனாது நயனக் குவளைநின் ....(15) பொலிவினொடு மலர மறையோர் கழுமல நெறிநின்று பொலிய நாகர் நாடு மீமிசை மிதந்து மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்கு ஒன்றா வந்த குன்றா வெள்ளத்து ....(20) உலகம்மூன் றுக்கும் களைகண் ஆகி முதலில் காலம் இனிது வீற் றிருந்துழித் தாதையொடு வந்த வேதியச் சிறுவன் தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த அன்னா யோவென் றழைப்பமுன் னின்று ....(25) ஞான போனகத் தருள்அட்டிக் குழைத்த ஆனாத் திரளை அவன்வயின் அருள அந்தணன் முனிந்து தந்தார் யாரென அவனைக் காட்டுவன் அப்ப வானார் தோஒ டுடைய செவியன் என்றும் ...(30) பீஇ டுடைய பெம்மான் என்றும் கையில் சுட்டிக் காட்ட ஐயநீ வௌிப்பட் டருளினை ஆங்கே. | 1 |
867 |
அருளின் கடல்அடியேன் அன்பென்னும் ஆறு பொருளின் திரள்புகலி நாதன் - இருள்புகுதும் கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார் அண்டத்தார் நாமார் அதற்கு. | 2 |
868 |
ஆரணம் நான்கிற்கும் அப்பா லவன்அறி யத்துணிந்த நாரணன் நான்முக னுக்கரி யான்நடு வாய்நிறைந்த பூரணன் எந்தை புகலிப் பிரான்பொழில் அத்தனைக்கும் காரணன் அந்தக் கரணங் கடந்த கருப்பொருளே. | 3 |
869 |
கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம் காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும் தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன் மையிருள் நிறத்து மதனுடை அடுசினத் ...(5) தைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித் துன்ப இருளைத் துரந்து முன்புறம் மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப் .....(10) பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச் சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு எந்தைநீ இருக்க இட்டனன் இந்த நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும் அடையப் பரந்த ஆதிவெள் ளத்து .....(15) நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப வரைபறித் தியங்கும் மாருதம் கடுப்ப மாலும் பிரமனும் முதலிய வானவர் காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி மற்றவர் உய்யப் பற்றிய புணையாய் ......(20) மிகநனி மிதந்த புகலி நாயக அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின் செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற அமையாக் காட்சி இமையக் கொழுந்தையும் உடனே கொண்டிங்கு .......(25) எழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே. | 4 |
870 |
மானும் மழுவும் திருமிடற்றில் வாழும்இருள் தானும் பிறையும் தரித்திருக்கும் - வானவர்க்கு வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென் உள்ளத்தே நின்ற ஒளி. | 5 |
871 |
ஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கஎன் உள்ளவெள்ளத் தௌிவந்த வாவந்து தித்தித்த வாசிந்தி யாததொரு களிவந்த வாஅன்பு கைவந்த வாகடை சாரமையத் தௌிவந்த வாநங் கழுமல வாணர்தம் இன்னருளே. | 6 |
872 |
அருள்பழுத் தளித்த கருணை வான்கனி ஆரா இன்பத் தீராக் காதல் அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை மாடக் கோபுரத் தாடகக் குடுமி மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின் ...(5) வழுவாக் காட்சி முதிரா இளமுலைப் பாவையுடன் இருந்த பரம யோகி யானொன் றுணர்த்துவன் எந்தை மேனாள் அகில லோகமும் அனந்த யோனியும் நிகிலமும் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி ....(10) எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித் தாய ராகியும் தந்தைய ராகியும் வந்தி லாதவர் இல்லை யான்அவர் தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும் .....(15) வந்தி ராததும் இல்லை முந்து பிறவா நிலனும் இல்லை அவ்வயின் இறவா நிலனும் இல்லை பிறிதில் என்னைத் தின்னா உயிர்களும் இல்லையான் அவை தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை அனைத்தே ....(20) காலமும் சென்றது யான்இதன் மேலினி இளைக்குமா றிலனே நாயேன் நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலும் தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம் பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும் ......(25) இயன்றதோர் பொழுதின் இட்டது மலராச் சொன்னது மந்திர மாக என்னையும் இடர்ப்பிறப்பு இறப்பெனும் இரண்டின் கடற்ப டாவகை காத்தல் நின்கடனே. | 7 |
873 |
கடலான காமத்தே கால்தாழ்வார் துன்பம் அடலாம் உபாயம் அறியார் - உடலாம் முழுமலத்தை ஓர்கிலார் முக்கட் பெருமான் கழுமலத்தைக் கைதொழா தார். | 8 |
874 |
தொழுவாள் இவள்வளை தோற்பாள் இவளிடர்க் கேஅலர்கொண் டெழுவாள் எழுகின்ற தென்செய வோஎன் மனத்திருந்தும் கழுவா மணியைக் கழுமல வாணனைக் கையிற்கொண்ட மழுவா ளனைக்கண்டு வந்ததென் றால்ஓர் வசையில்லையே. | 9 |
875 |
வசையில் காட்சி இசைநனி விளங்க முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகத்து வேறுவேறு பெயரின் ஊறின் றியன்ற மையறு சிறப்பின் தெய்வத் தன்மைப் புகலி நாயக இகல்விடைப் பாக .......(5) அமைநாண் மென்தோள் உமையாள் கொழுந குன்று குனிவித்து வன்தோள் அவுணர் மூவெயில் எரித்த சேவகத் தேவ இளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின் நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக் .......(10) காமனை விழித்த மாமுது தலைவ வானவர் அறியா ஆதி யானே கல்லா மனத்துப் புல்லறிவு தொடர மறந்து நோக்கும் வெறுந்தண் நாட்டத்துக் காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை ......(15) ஆயினும் பிறவும் என்னதும் பிறரதும் ஆவன பலவும் அழிவன பலவும் போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித் தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும் எண்ணில் கோடி எனைப்பல வாகி ......(20) இல்லன உளவாய் உள்ளன காணாப் பன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும் அன்ன தாதலின் அடுக்கும் அதென்னெனின் கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக் குழிவழி யாகி வழிகுழி யாகி .......(25) ஒழிவின் றொன்றின் ஒன்றுதடு மாற வந்தாற் போல வந்த தெந்தைநின் திருவருள் நாட்டம் கருணையின் பெறலும் யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை ....(30) ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித் தவிராது தடவினர் தமக்குச் சுவராய்த் தோன்றும் துணிவுபோன் றெனவே. | 10 |
876 |
எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம் சினவேறு காட்டுதிரேல் தீரும் - இனவேகப் பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம் பூம்புகலி யான்இதழிப் போது. | 11 |
877 |
போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு புனல்உண்டெங்கும் ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன் றேயிணை யாகச் செப்பும் சூதும் பெறாமுலை பங்கர்தென் தோணி புரேசர்வண்டின் தாதும் பெறாத அடித்தா மரைசென்று சார்வதற்கே. | 12 |
(பின்வரும் 13 முதல் 30 முடிய உள்ள பாசுரங்கள் பல அச்சுப் பிரதிகளில் கண்டவை. திருச்சிராப்பள்ளி திருமுறைக்கலைஞர் வித்துவான் திரு. பட்டுச்சாமி ஓதுவாரால் எடுத்துக் கொடுக்கப் பெற்றவை. மும்மணிக்கோவை முப்பது பாடல்களைக் கொண்டது என்பது இலக்கணம்.)
878 |
சார்ந்தவர்ப் புரக்கும் ஈர்ஞ்சடைப் பெரும கருணை முதுவெள்ளம் பெருகு திருநயன கைவலம் நெல்லியங் கனியது போலச் சைவசித் தாந்தத் தெய்வ ஆகமத்ை வரன்முறை பகர்ந்த திருமலர் வாய .....(5) பவளவரை மீதில் தவளமின் என்னச் செப்பரு மார்பணி முப்புரி நூல பேரிகல் ஆணவக் காரிரு ளினுக்கும் பின்றொடர் வல்வினை வன்றொட ரினுக்கும் மாயைமா மாயை ஆயபே யினுக்கும் ...... (10) அஞ்சல்என் றமைத்த கஞ்சமென் கரதல அருமறைச் சிரத்தும் பெருமைமெய் அன்பர் துங்க இதயத்தும் தங்கு பொற்பாத துன்னிய பயோதரம் மின்னினம் மிடைதலின் அளப்பரும் பெருமை வளத்தினை விளைத்தலின் ......(15) சந்திர திலகம் சிந்துரம் மருவலின் உறுகண் டீரவந் துறுமுழை உறுதலின் சாதமுறை சுழீஇச் சோதிமீ தமர்தலின் பணைஎழு மரவம் பிணையொடு மேவலின் காமரஞ் செவ்வழி காமரின் எய்தலின் ......(20) அளகை எதிரெனும் ஆசையுற் றுறைதலி னாடக மருவி நீடறை பெருதலின் நாட்டியத் தோகை ஈட்டமங் கணைதலின் அகத்தியன் மன்னும் மகத்துவம் சிவணலின் மலையா சலமென நிலைசேர் மாட .......(25) மாளிகை சூழ்ந்த சூளிகைப் புரிசை நேமிமால் வரைஎனப் பூமிமீ திலங்கும் காழிமா நகரம் தூழிதே ரமர்ந்த அமையா அன்பின் உமையாள் கொழுந தெரியநான் முகன்பணி பெரியநா யகநின் ......(30) பொன்மலர்ப் பாதம் சென்னிவைத் திறைஞ்சுதும் மேற்படும் இதயப் பாற்கடல் நடுவுள் பரம்பரை தவறா வரம்பெரு குரவன் மருளற இரங்கி அருளிய குறிஎனும் நிந்தையில் கனக மந்தரம் நிறுவி ......(35) மாண்அறிவென்னும் தூணிடைப் பிணித்த நேசம் என்னும் வாசுகி கொளுவி மதித்தல் என்னும் மதித்தலை உஞற்றிய பேரா இன்பச் சீர்ஆ னந்தம் பெறலறும் அமுதம் திறனொடும் பெற்று .......(40) ஞானவாய் கொண்டு மோனமாய் உண்டு பிறப்பிறப் பென்னும் மறப்பெரும் பயத்தால் பன்னாட் பட்ட இன்னாங் ககற்றி என்னையும் தன்னையும் மறந்திட் டின்ப மேலீ டெய்துதற் பொருட்டே. ......(45) | 13 |
879 |
பொருளாசை பெண்ணாசை பூவாசை என்னும் மருள்ஆசை யாமாசை மாற்றித் - தெருள்ஞான வேந்தராய் வாழலாம் மெய்யன்பால் நல்நெஞ்சே பூந்தராய் நாதரைநீ போற்று. | 14 |
880 |
போற்றும் பழமறை வாசிப் புனிதர் புகலிவெற்பன் ஆற்றும் தவத்தினைக் கண்டே நகைத்த தணிகொள்முல்லை தூற்றும் புயல்வட காற்றோ அடிக்கத் தொடங்குமதிக் கீற்றிங் கெனது மனங்குழம் பாகக் கிடைத்ததின்றே. | 15 |
881 |
இன்றென உளதென அன்றென ஆமென உரைதரு நூலையும் பொருளையும் தனித்தனி பல்வித மாகச் சொல்வகைச் சமய மாகிய பயம்பில் போகுதல் குறித்த நிலையில் துறைபல நிலையுள துறைசில .....(5) பொருந்திடும் உலகப் பெருங்கட லிடத்தின் மயிர்நூல் கிடத்திப் பயில்வுரு தோலெனும் வன்புறு பலகையின் என்பெனும் ஆணியில் நரம்பெனப் பெயரிய உரம்பெறு கயிற்றின் வெரிந்உறும் என்பெனும் பெரிய கூம்பின் .....(10) ஐம்பொறி யாகிய மொய்ம்புறு வாய்தலின் காயமென அமைத்த மாயநா வாயில் இருவினை என்ன வருசரக் கேற்றிக் காமம் உலோபம் ஏமமா மோகம் மிதமறு குரோதம் மதமாச் சரியமென் .....(15) றுரைபெறு யவனர் நிரையுற இருத்தி நெடுநீர் என்னப் படுநெடு நாணில் தங்கிய மடிஎனும் நங்குரஞ் சேர்த்தி அற்றமில் மனம்எனப் பெற்றபாய் விரித்துத் தடைபடா ஆசைக் கடுவளி துரப்பத் .......(20) தானம் ஆதி யான தீவுகளிற் செல்வுழிச் சென்று புல்வுழிப் புல்லி இவ்வா றியங்கும் அவ்வா றதனுள் முன்பார் கால வன்பார் தாக்கத் தொக்குறு மரக்கலம் பக்குவிட் டம்ம . ...(25) அக்கடல் நீருள் புக்கறி வழிவுழி மறலி என்னும் சுறவுபிடித் தீர்ப்பக் கடுநர கென்னும் படுகுழி அழுந்தி உளதுய ரினுக்கோர் அளவிலை அதனால் இம்முறை இயங்குதல் செம்மை அன்றென்று ....(30) முற்றுணர் பெரியோய் அற்றமில் வலியோய் ஓதா துணர்ந்த நாதா தீத அருவுரு என்னும் பொருள்முழு துடையோய் யாவரும் நின்வய மேவரப் புரிவோய் கரையறும் இன்பப் புரைதவிர் நிமல .......(35) சாந்தணி வனமுலை ஏந்திழை பாக ஞானமா மணநிறை மோனமா மலரே வித்தகம் பழுத்த முத்திவான் கனியே பரைமுதல் ஐம்பணை நிரைபெறக் கிளைத்த திருத்தகு நீழல் அருட்பெருந் தருவே ...(40) பத்திகொள் நித்திலம் ஒத்துற நிரைத்த பசும்பொனிற் செய்த நசும்பு பலதொக்க தோற்றம் போல வீற்றுவீற் றமைந்த தீங்கனி பணைதொறும் தாங்குமா தணையும் வித்துரு மத்திணை ஒத்தசெந் தளிரும் .....(45) ஒளிர்வயி டூரியக் குளிர்மது மலரும் மேலிடு வண்டெனும் நீலமா மணியும் மரகதம் என்ன விரவுகாய்த் திரளும் மறுவில்மா மணிஎனும் நறியசெங் கனியும் கிடைத்தசீர் வணிகரில் படைத்தமாந் தருவும் ....(50) எண்டிசை சூழ்ந்து விண்தொடும் புகலி மேவிய பெரும ஆவி நாயகனே கணபணக் கச்சைப் பணஅர வசைத்த மட்டலர் புழுகணி சட்டை நாயகன் எனுமீ காமன் மன்னினன் புரப்பநீ ....(55) வீற்றினி திருக்க ஏற்றமெய்ப் பிரணவத் தோணியே பற்றெனத் துணிந்து காணுறும் அறிவொடு கண்டு கொண்டேனே. | 16 |
882 |
கண்டேன் புகலிக் கருத்தனைத்தன் மெய்ஞ்ஞான வண்டேனுண் டேமகிழும் வண்டானேன் ௭ பண்டே அளியனுமா னேன்மனமெய் யார்பதம்வே றின்றிக் குளிர்சிவா னந்தமிலங் கும். | 17 |
883 |
கும்பிட்ட பத்தர்க் கழியாத இன்பம் கொடுக்குமுத்தர் வம்பிட்ட கொங்கை உமைபாகர் சண்பையர் வந்திலரேல் கொம்பிட்ட கோழிக் கொடிவேந்தன் கொச்சையைக் கொல்வதனால் அம்பிட்ட கட்சிச்சிற் றிடைச்சிக்கென் னோபயன் ஆகுவதே. | 18 |
884 |
ஆகுவா கனனைத் தோகைவா கனனை உற்றசீர் மகார்எனப் பெற்றசுந் தரனை ஞானவா ரிதியில் ஆனஆ ரமுதே கற்றவர் கருதும் நற்றவக் கரும்பே இருட்குறும் பெறிந்த அருட்கலா மதியே .......(5) கதிர்த்தொகை குன்றா துதித்த செங்கதிரே நிறைந்தஅன் பவரின் உறைந்த செந்தேனே துன்பமொன் றறியா இன்பவா ரிதியே மறைமுடி விளக்கும் சுடர்விடு மணியே விறலரி பிரமன் பெறலரும் பொருளே .....(10) சிற்பநூல் முழுதும் அற்பமின் றுணர்ந்த ஓவியர் அற்புத மேவுகைத் தொழிலர் சுத்தவெண் படிகப் பித்திகைத் தலத்தின் நவமணி தௌித்துக் குவவின கூர்நுதித் தூரியங் கொண்டு சீரிதிற் குயிற்றும் .......(15) இமைப்பிலா நாட்டத் தமைப்பருங் கலாப நீலமே காரமும் கோலமார் குயிலும் துப்பமர் வளைவாய் ஒப்பறு பச்சைத் தகைசிறைக் கிளியும் புகைநிறப் புறவும் மேல்நிமிர் தூவிப் பால்நிற அனமும் ......(20) நன்மது நிகர்த்த இன்மொழிப் பூவையும் இனமெனக் கருதி மனமுவந் தணைத்த உயிர்நிலை பெற்ற மயில்முதற் பறவையும் கூறுபட நோக்கினர் வேறுபா டறியா வளனொடு செறிந்த அளவிலா மாடத் ...(25) துறைதரு கற்பு நிறைகுல மடவார் அளிமுரல் குழலும் ஒளிகிளர் முகமும் குலாவிய புருவமும் நிலாவிரி குழையும் நறியமென் சொல்லுஞ் சிறிய நுண்ணிடையும் தத்துநீர் உவரி முத்தமா லிகையும் ......(30) பிரளய வெள்ளத் திரளினும் அழியாத் திருநகர் இதுவெனக் கருதிவான் முகிலும் சந்திர விம்பமும் இந்திரத் தனுவும் இலங்குசெங் கதிரும் துலங்குவா னமுதும் வாரா மின்னும் தாரா கணமும் ...(35) ஒருங்குவந் திருந்த பெருந்திறன் ஏய்ப்பக் காட்சியிற் பொலிந்த மாட்சிமை சிறந்த காழிநா யகனே வாழிபூ ரணனே ஏர்தரும் பொற்கிரி சேர்கருங் கொடியும் பொன்னிற மாமெனச் சொன்னதொல் மொழியும் ......(40) ஏதமில் நிறைமதிச் சீதள நிலவால் ஆரும்மெய் உருப்பம் தீரும் என்பதும் மொழிதரும் இரத குளிகைதற் சேர்ந்த காளிமச் சீருண நீள்இயற் கனக மாமெனக் கூறும் தோமறு மொழியும் .......(45) கருட தியானம் மருள்தப வந்தோர் நோக்கினில் தவிரும் தீக்கடு என்றலும் ஆயிரங் கிரணத் தலர்கதிர் முன்னம் பாயிருள் கெடுமெனப் பகர்பழ மொழியும் அங்கண்மா ஞாலத் தெங்கணும் ஒப்ப ....(50) இயலும் பட்டாங் கயல்அல என்னல் சரதமெய்ஞ் ஞான வரதநிற் சேர்ந்த பேதையேன் பாசத் தீவினை அகற்றித் திருவருட் செல்வம் பெருகுமா றுதவி அளித்தருள் பேரின் பாகும் ....(55) களித்திடும் முத்திக் காழிவான் கனியே. | 19 |
885 |
காழிக்கு வேந்தர் கருணா லயர்முனம்நீ காழிக் குமரன் கவிகையினை - ஆழிக்கட் கண்டமட்டில் சூடகமும் கார்விழியிற் கங்கணமும் கொண்டனள்என் றன்னமே கூறு. | 20 |
886 |
கூறுஞ் செனனக் குடில்நெடு நாள்நுழை கூன்முழுதும் மாறும்படிக்கு மருந்துளதோ சண்பை வாணர்கொண்ட நீறும் திருவெழுத் தோரைந்தும் கண்டியும் நித்த நித்தம் தேறும் பொருள்என் றுணராத மாயச் செருக்கினர்க்கே. | 21 |
887 |
செருக்குடன் இகலித் தருக்கமே தேற்றி எம்ம னோரின் இறந்துபிறந் துழலும் மம்மரிற் பெரிய வானவர் குழுவை மெய்ப்பொருள் என்று கைப்பொருள் உதவியும் வழுத்தியும் நெஞ்சத் தழுத்தியும் வறிதே ...(5) புறவார் பசும்புற் கறவாக் கற்பசு வாயிடைச் செருகித் தூயநீர் உதவி அருஞ்சுவைப் பால்கொளப் பெருஞ்சுரை வருடும் பேதையர் போலவும் ஓதுநஞ் சமரும் எட்டியை விரும்பி மட்டுநீர்த் தேக்கி ....(10) ஈநுழை கல்லா மேல்நிமிர் வேலி உறும்படி அமைத்து நருங்கனி கொள்ளக் கருதி முயலுந் திருவிலி போலவும் இலகுவால் அரிசி உலைபெய எண்ணி வெற்றுமி குற்றும் பற்றிலர் போலவும் ....(15) அருநிலம் உழுததின் எருமிகப் பெய்து வித்திட் டாங்கே விளைபயன் கொள்ளச் சித்தத் துன்னும் மத்தர் போலவும் வாழ்நாள் அனைத்தும் வீழ்நா ளாக்கி இம்மையும் மறுமையும் செம்மையிற் பொருந்தா ....(20) திடருறும் மாந்தர் புடவியிற் பலரால் அன்னவா றௌியனும் உன்னிமதி மயங்கா தெய்ப்பினில் உதவு மெய்ப்பொரு ளாகி என்றும்ஓர் இயல்பொடு நின்றகா ரணநின் சேவடி த் தாமரைப் பூவினைப் புனைந்து ......(25) நாத்தழும் பேற ஏத்திஉள் ளுருகிப் பெருகிய அன்பென வருநீர் நிறைந்த இதய வாவிப் பதுமமா மலரின் குணனெனப் பொருந்தும் மணமாம் நின்னைக் கண்டிறு மாந்து பண்டைவா தனைதீர்ந் ....(30) தறைகடல் அழுந்தும் நிறைகுட மதுபோன் றசைவற் றிருக்க இசையத் தருதி நிலைமிகப் பொருந்திப் பலமுறை சாரலால் உந்திய வன்ன உருமரு வுதலான் மந்திரத் துறுசுடர் மகத்துயர் தலினால் ......(35) இதம்பயில் இசைகொள் பதங்கவந் துறுதலால் வேதமே ஒப்பென ஓதுகோ புரமும் ஒழுக்குநெறி சிறிதும் வழுக்கில அதனால் நூற்பதப் பிரிவின் மேற்பதம் அதனால் பலகலை ஒளிர்மதி நிலவிய அதனால் ......(40) முத்தரை வியக்கும் பத்திமை அதனால் சிவாகமம் எனஒளிர் துவாமணி மேடையும் வெள்ளைவா ரணமேற் கொள்ளுமாங் கதனால் கட்டா மரைபல மட்டார் தலினால் அஞ்சுமந் தூரம் விஞ்சிஓங் குதலால் .........(45) இந்திரன் எனப்பொலி யந்திர வாவியும் எங்கணும் நிறைந்த வெங்குரு நாதா கருவலி தொலைக்கும் பெருமலை மருந்தே கருணைசூற் கொண்ட பெரியவான் முகிலே சிற்றிடைக் கருங்கட் பொற்றொடிக் கரத்தூள் ........(50) ஆகமார் வனமுலை அணையும் போகமார் இதழிப் பூங்கண் ணியனே. | 22 |
888 |
கண்ணின் றொளிருங் கருமணியின் உள்ளொளிபோல் உண்ணின் றொளிரும் ஒளிவிளக்கென் - றெண்ணிப் புகலிப் பெருமானைப் புண்ணியனைப் போற்றில் அகலுமே பாசவிருள் அன்று. | 23 |
889 |
இருள்அந் தகன்வரின் ஈர்எயி றேபிறை ஏய்ந்தசெவ்வான் சுருள்குஞ்சி பாசம் எனஅந்தி வந்தது தோகைசொற்றேன் பருகும் புகலிப் பிரான்எனும் பானுப் பலகிரணம் பெருகும் படிவந் துதித்தால் மின்ஆவி பெருகுவளே. | 24 |
890 |
பெறுவது பெற்ற உறுதிஉத் தமர்கட் காயினும் சிறந்த நேயநெஞ் சினனே யாகக் கழனியின் யோகத் தபோதனர் ஆனபேர் உழவர் மானமோ டாக்கிய முயலகன் என்னும் இயல்பெருங் கரும்பை ........(5) உதிரம் என்னும் முதிர்சா றொழுக நகையெனும் முத்தந் தொகையுறத் தோன்றச் சுந்தரப் பதமெனும் எந்திர ஆலையிட் டரைத்தக வயிரங் கரைத்த வித்தகனே குங்குமக் கொங்கை அங்கயற் செங்கட் .....(10) பெண்ணரசி பிரியா வண்ணமெய்ப் பாக பாடலம் புன்னை ஏடவிழ் இலஞ்சி வௌிய கற்பூரம் களிகொள் கத்தூரி நறுமணம் எவையும் உறுமுறை பொருந்தி உண்ணீர் பெற்ற தண்ணீர்ப் பந்தரும் ......(15) நெய்கமழ் கருணையும் குய்கமழ் கறியும் மதிதரு நிலவெனப் புதிய வெண்டயிரும் வருக்கையின் கனியும் சருக்கரைக் கட்டியும் முதல்உப கரணம் பதனொடு மரீஇத் தளவரும் பென்ன வளமலி போனகம் .....(20) மாதவர் எவர்க்கும் ஆதுலர் எவர்க்கும் நன்னயத் துடன்அருள் அன்னசத் திரமும் பாடகச் சீரடிப் பான்மொழி மடவார் நாடகத் தொழில்பயில் நீடரங் கெவையும் கலைபயில் கழகமும் பலர்பயில் மன்றமும் ......(25) உள்ளன கரவா துவந்தெதிர்ந் தளிக்கும் வள்ளியோர் வாழும் மணிநெடு வீதியும் பூமகள் உறையு ளாமென விளங்கும் பெரும்புகழ்க் காழி விரும்புசங் கரனே ஏந்தெழிற் புவன வேந்தன்நீ ஆதலின் .......(30) வளமலி நான்முகக் களமருன் ஏவலின் உரம்பெறு குலவரைக் குறும்பகப் பட்ட மண்டலம் என்னும் கண்டநீள் வயலுள் சராசரத் தொகுதி விராயவித் திட்டுப் பாதவ மிருகம் பறவை மானிடர் ......(35) ஆதிப் பைங்கூழ் அமைத்தனர் நிற்ப மாவுறை மருமக் காவ லாளர் வளமையின் ஓம்ப விளைவுமுற் றியபின் புரிபயன் பெறுவான் அரிதர வியற்றி மெய்வலிக் கூற்றுவக் கைவினை மாக்கனி .......(40) புலாலுடை யாக்கைப் பலாவம தகற்றி அற்றமில் உயிரெனப் பெற்றநெற் றிரளைப் பூதசா ரத்தனுப் பூத மகாதனு பூத பரிணாமம் புகலுறு யாக்கை மூவகைப் பண்டியின் மேவர ஏற்றிப் ........(45) பொன்னில நிரயம் இந்நிலம் என்னும் இடந்தொறும் ஆங்கவை அடங்கவைத் தவற்றுள் ஒருசில வற்றைநின் திருவடி வீட்டிற் சேர்த்தனை அன்னது கூர்த்து நோக்கில் அரசுகொள் கடமை ஆறிலொன் றென்னும் ....(50) புரைதீர் முறைமை புதுக்கினை போலும் அதனால் மாசுகம் நீயுறும் வண்மை பேசுக கருணைப் பெரியநா யகனே. | 25 |
891 |
பெருமானே கூடிப் பிரிந்தாலும் மங்கைக் கொருவா தருள்வரம் ஒன்றுண்டே - திருமால் விடையாய் புகலி விமலா மவுன விடையாய் பிறியா விடை. | 26 |
892 |
விடையம் பொருளென் றுணராத மார்க்கம் விரும்புமழுப் படையம் புயக்கரத் தெந்தாதை ஞான பரமஎன்றெண் சடையம் புனலணி வேணு புரேசன்அந் தாள்மலர்தூ விடையம் பொருளென் றிருநீஎன் றுண்மை விளம்பினனே. | 27 |
893 |
விளம்புவன் யான்ஒன் றுளம்புகு நெறியால் எழுத்தின் உறழாது வழுத்துபொருள் இன்றி குறிப்பொடு படாது வெறித்தபுன் சொல்லே ஆயினும் பயந்ததஞ் சேயவர் சொலுமொழி குழலினு மியாழினும் அழகிதாம் அதுபோல் .....(5) நற்றா யாகிஎற் பெற்றாய் என்சொல் திருச்செவிக் கேறும் பொருத்தமுண் டதனால் கேட்டி கேட்டி வாட்டமில் பெரியோய் மதுமழை பிலிற்றிப் புதுமணம் விரித்துப் பற்பல உதவுங் கற்பகத் தருவு ....(10) நந்தா வளன்அருட் சிந்தா மணியும் வாமமாம் மேனிய காம தேனுவும் அருளிய ஏவல் வரன்முறை கேட்பக் கடவுளர் அணிமணித் தடமகு டங்கள் காற்றுணை வருடப் போற்றினர் இறைஞ்சி ......(15) முனிவர் ஆசி நனிபல மொழியக் கரம்பயில் கவரி அரம்பையர் இரட்டக் கின்னரர் விபஞ்சி நன்னரம் புளரா இசையமு திருஞ்செவி மிசைஎடுத் தூற்ற முடங்குளைச் செங்கண் மடங்கல் அணைநாப்பண் ........(20) அமுதுகு மென்சொற் குமுதமென் செவ்வாய் இந்தி ராணி வந்தரு கிருப்பக் கருமுகில் ஆயிரந் திருமலர் பூத்துச் செங்கதிர்ச் சேகரம் துங்கவீற் றிருந்த பெருந்திறன் கடுப்ப இருந்துவிண் புரக்கும் .....(25) அண்ணல் புரந்தரப் பண்ணவன் அரசும் பழமறை கனிந்து மழவுபெற் றிருந்த செந்நாத் தவிசின் முன்னாள் தங்கிப் பனுவ லாட்டி இனிதுவந் திருப்ப வண்டுபாண் முரன்று கிண்டுபு ததைந்து .....(30) பொற்றா துண்ணா முற்றா இன்பப் பிரசமுற் றிருந்த வரசரோ ருகத்தன் நெருக்கிய புவனப் பெருக்கினைத் தனாது திண்ணிய மனத்திடை எண்ணியாங் கியற்றி எம்மால் எவையும் இயன்றன என்னச் .....(35) செம்மாந் திருக்கும் சிறிய வாழ்க்கையும் திதலைபூத் தலர்ந்து மதகளி றிகலி வருமுலை சுமந்த திருமகள் பச்சைப் பசுந்துழாய் அலங்கல் அசும்புதேன் துளித்துக் கடிகமழ் மார்பிற் குடிபுகுந் திருப்பத் ....(40) தண்ணில வெனவிரி வெண்ணிறப் பாற்கடல் ஒல்லொலித் தரங்கம் மெல்லடி வருடக் காமர்தென் கால்எனுஞ் சாமரை அசையத் துத்திநெய் பரந்து பைத்தபை அகலில் அணிகிளர் பலகதிர் மணிவிளக் கொளிரச் ......(45) சுடிகைவான் அரவ நெடியபூ அணைமேல் மறுவிலா நீல வரைகிடந் தென்ன அறிதுயில் அமர்ந்த அச்சுதன் வாழ்க்கையும் அழியா இன்பம்என் றொழியா துரைப்பினும் கற்றவர் கருத்தின் உற்று நோக்குழி ......(50) இந்திர சாலம் முந்துநீள் கனவு வெண்டேர் போல உண்டெனத் தோன்றி இலவாம் ஆதலின் நலமல ஆங்கவை நிலைபே றுடையது நின்னருட் செல்வம் அன்னதே பெறுதற் குன்னினன் தமியேன் .....(55) அதனால் எளிதினின் இரங்கி அளிசுரந் தருளுதி மரகதத் திடையிடை தரளமிட் டிழைத்த அரமியம் அதனை விரிகுழை பொதுளி அரும்பிய புன்னைப் பெரும்பொழில் எனவும் .....(60) ஆடக அலங்கல் அணியணி நிறைத்த சேடுயர் நீல்நிறச் செய்குன் றதனைத் துணர்த்தபூங் கொன்றை மணத்தகா எனவும் மொய்க்கும்வண் சிறையுளி மைக்கரு நிறங்கள் பளிங்கரிந் தியற்றிய துளங்கொளி மாடப் .......(65) பித்திகைத் தலத்திடைப் பத்திபாய் தலினால் வந்ததிங் கிரவெனச் சந்தத மடவார் வார்முலை ஆடவர் மார்பிடை குளிப்பப் புல்லிய கலவிப் புதியதேன் நுகரும் மல்லலங் காழி வளநகர் வாண .....(70) குறிகுணங் கடந்த மறுவில்மா மணியே உறைபொருள் எங்கணும் நிறைபரி பூரண அந்த மாதி முந்தையே தவிர்ந்த அனாதி முத்த என்ஆதி நித்த அருவுரு வில்லா ஒருபெரும் பொருளே .......(75) அளவையின் அடங்கா தொளிர்சுக நேய உருகுமெய் அன்பர் பருகுமா ரமுதே நலங்கனி பெரிய நாயகி கலந்தபே ரின்பிற் களித்தபண் ணவனே. | 28 |
894 |
பணமஞ் சரையிருக்கப் பாவையரைச் சும்மா புணர்கின்றீர் என்று புகலப் - புணர்வார்க் கரைக்காசு தந்தனம்என் றார்புகலி யார்மா வரைக்காசென் றான்அதற்கு மான். | 29 |
895 |
மானைக் கலந்த மணவாளன் காழி வரதன்செங்க ணானைப் புரந்தவன் பத்தர்க்கு முத்தி அளித்தருளும் ஏனைப் பெரும்பொருள் கல்விமெய் செல்வம் இருந்தளிப்பார் தேனைத் தருஞ்செழுந் தாமரை நாமகள் செந்திருவே. | 30 |
திருச்சிற்றம்பலம்
11.3 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (896 - 925)
896 |
தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து சிலம்பும் கழலும் அலம்பப் புனைந்து கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாது வலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்கு ...(5) ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து பத்தி அடியவர் பச்சிலை இடினும் முத்தி கொடுத்து முன்னின் றருளித் திகழ்ந்துள தொருபால் திருவடி அகஞ்சேந்து மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி ....(10) நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி நூபுரம் கிடப்பினும் நொந்து தேவர் மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் ...(15) திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத் தோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்து நச்செயிற் றரவக் கச்சையாப் புறுத்துப் பொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி ...(20) அரத்த ஆடை விரித்து மீதுறீஇ இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை செங்கண் அரவும் பைங்கண் ஆமையும் கேழற் கோடும் வீழ்திரன் அக்கும் ....(25) நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம் வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து செஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப் ....(30) பொற்றா மரையின் முற்றா முகிழென உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம் அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து மூவிலை வேலும் பூவாய் மழுவும் ....(35) தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச் சிறந்துள தொருபால் திருக்கரம் செறிந்த சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன் நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும் தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம் ...(40) இரவியும் எரியும் விரவிய வெம்மையின் ஒருபால் விளங்கும் திருநெடு நாட்டம் நவ்வி மானின் செவ்வித் தாகிப் பாலிற் கிடந்த நீலம் போன்று குண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று ...(45) எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம் நொச்சிப் பூவும் பச்சை மத்தமும் கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும் கங்கை யாறும் பைங்கண் தலையும் ...(50) அரவும் மதியமும் விரவித் தொடுத்த சூடா மாலை சூடிப் பீடுகெழு நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு நான்முகம் கரந்த பால்நிற அன்னம் காணா வண்ணம் கருத்தையும் கடந்து ...(55) சேண்இகந் துளதே ஒருபால் திருமுடி பேணிய கடவுட் கற்பின் மடவரல் மகளிர் கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக் கைவைத்துப் புனைந்த தெய்வ மாலை நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து ...(60) வண்டுந் தேனுங் கிண்டுபு திளைப்பத் திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி இனையவண் ணத்து நினைவருங் காட்சி இருவயின் உருவும் ஒரு வயிற்றாகி வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க ...(65) வாணுதல் பாகம் நாணுதல் செய்ய வலப்பால திருக்கரம் இடப்பால் வனமுலை தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்கு உலகம் ஏழும் பன்முறை ஈன்று மருதிடம் கொண்ட ஒருதனிக் கடவுள்நின் ....(70) திருவடி பரவுதும் யாமே நெடுநாள் இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும் சிறைக்கருப் பாசயம் சேரா மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே. | 1 |
897 |
பொருளும் குலனும் புகழும் திறனும் அருளும் அறிவும் அனைத்தும் - ஒருவர் கருதாஎன் பார்க்கும் கறைமிடற்றாய் தொல்லை மருதாஎன் பார்க்கு வரும். | 2 |
898 |
வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப் பொருந்தேன் நரகிற் புகுகின்றி லேன்புகழ் மாமருதிற் பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றில் ஆசையின்றி இருந்தேன் இனிச்சென் றிரவேன் ஒருவரை யாதொன்றுமே. | 3 |
899 |
ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த ஓவநூற் செம்மைப் பூவியல் வீதிக் குயிலென மொழியும் மயிலியற் சாயல் ..(5) மான்மற விழிக்கும் மானார் செல்வத்து இடைமரு திடங்கொண் டிருந்த எந்தை சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல் ஆரணந் தொடராப் பூரண புராண நாரணன் அறியாக் காரணக் கடவுள் ...(10) சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள் ஏக நாயக யோக நாயக யானொன் றுணர்த்துவ துளதே யான்முன் நனந்தலை உலகத் தனந்த யோனியில் பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித் ...(15) தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து யாயுறு துயரமும் யானுறு துயரமும் இறக்கும் பொழுதின் அறப்பெருந் துன்பமும் நீயல தறிகுநர் யாரே அதனால் யான்இனிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்று .....(20) உற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது பிறிதொரு நெறியின் இல்லைஅந் நெறிக்கு வேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றிற் படரா உள்ளமொன் றுடைமை வேண்டும்அஃதன்றி ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று ......(25) தானல தொன்றைத் தானென நினையும் இதுஎன துள்ளம் ஆதலின் இதுகொடு நின்னை நினைப்ப தெங்கனம் முன்னம் கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர் எற்பிறர் உளரோ இறைவ கற்பம் .....(30) கடத்தல்யான் பெறவும் வேண்டும் கடத்தற்கு நினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி உரைஎயிற் றுரகம் பூண்ட கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே. ...(35) | 4 |
900 |
கண்ணெண்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும் எண்ணென்றும் மூல எழுத்தென்றும் - ஒண்ணை மருதஅப்பா என்றும் உனை வாழ்த்தாரேல் மற்றும் கருதஅப்பால் உண்டோ கதி. | 5 |
901 |
கதியா வதுபிறி தியாதொன்றும் இல்லை களேவரத்தின் பொதியா வதுசுமந் தால்விழப் போமிது போனபின்னர் விதியாம் எனச்சிலர் நோவதல் லால்இதை வேண்டுநர்யார் மதியா வதுமரு தன்கழ லேசென்று வாழ்த்துவதே. | 6 |
902 |
வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்காது உண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி அவியடு நர்க்குச் சுவைபகர்ந் தேவி ஆரா உண்டி அயின்றன ராகித் ....(5) தூராக் குழியைத் தூர்த்துப் பாரா விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும் தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக் கூஉய்முன் னின்றுதன்ஏவல் கேட்கும் சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும் ......(10) பொய்யொடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும் மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத் தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த நன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச் சாவுழிச் சாஅந் தகைமையள் ஆயினும் ......(15) மேவுழி மேவல் செல்லாது காவலொடு கொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்ப எள்ளுக் கெண்ணெய் போலத் தள்ளாது பொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும் அருளில் மடந்தையர் ஆகந் தோய்ந்தும் .........(20) ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின் கற்புடை மடந்தையர் பொற்புநனி வேட்டுப் பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும் நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம் விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின் ........(25) அகமலர்ந் தீவார் போல முகமலர்ந்து இனிது மொழிந்தாங் குதவுதல் இன்றி நாளும் நாளும் நாள்பல குறித்தவர் தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேள்இகழந்து இகமும் பரமும் இல்லை என்று .......(30) பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி மின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித் தன்னையும் ஒருவ ராக உன்னும் ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்து யோசனை கமழும் உற்பல வாவியிற் .........(35) பாசடைப் பரப்பிற் பால்நிற அன்னம் பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள் போர்த்தொழில் புரியும் பொருகா விரியும் மருதமும் சூழ்ந்த மருத வாண சுருதியும் தொடராச் சுருதி நாயக .........(40) பத்தருக் கெய்ப்பினில் வைப்பென உதவும் முத்தித் தாள மூவா முதல்வநின் திருவடி பிடித்து வெருவரல் விட்டு மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும் பொருளென நினையா துன்அரு ளினைநினைந்து .......(45) இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும் வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச் சின்னச் சீரை துன்னல் கோவணம் அறுதற் கீளொடு பெறுவது புனைந்து சிதவல் ஓடொன் றுதவுழி எடுத்தாங்கு ....(50) இடுவோர் உளரெனின் நிலையினின் றயின்று படுதரைப் பாயலிற் பள்ளி மேவி ஓவாத் தகவெனும் அரிவையைத் தழீஇ மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும்நின் .......(55) செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும் பற்றிப் பார்க்கின் உற்ற நாயேற்குக் குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப் பிரளய சலதியும் இருவகைப் பொருளும் ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற் றாதலின் ......(60) நின்சீர் அடியார் தம்சீர் அடியார்க்கு அடிமை பூண்டு நெடுநாட் பழகி முடலை யாக்கையொடு புடைபட்டு ஒழுகிஅவர் காற்றலை ஏவல்என் நாய்த்தலை ஏற்றுக் கண்டது காணின் அல்லதொன் .......(65) றுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே | 7 |
903 |
பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம் அறிந்தேன் அநங்கவேள் அம்பிற் - செறிந்த பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன் மருதவட்டந் தன்னுளே வந்து. | 8 |
904 |
வந்தி கண்டாய்அடி யாரைக்கண் டால்மற வாதுநெஞ்சே சிந்திகண் டாய்அரன் செம்பொற் கழல்திரு மாமருதைச் சந்திகண் டாயில்லை யாயின் நமன்தமர் தாங்கொடுபோய் உந்திகண் டாய்நிர யத்துன்னை வீழ்த்தி உழக்குவரே. | 9 |
905 |
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ கழப்பின் வாராக் கையற வுளவோ அதனால் நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து அன்பென் பாத்தி கோலி முன்புற ......(5) மெய்யெனும் எருவை விரித்தாங் கையமில் பத்தித் தனிவித் திட்டு நித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று .....(10) சாந்த வேலி கோலி வாய்ந்தபின் ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக் கருணை இளந்தளிர் காட்ட அருகாக் காமக் குரோதக் களையறக் களைந்து சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி ....(15) மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்ந்திட் டம்மெனக் கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி காள கண்டமும் கண்ணொரு மூன்றும் தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும் ......(20) பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க் காணினும் கேட்பினும் கருதினுங் களிதரும் சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி பையப் பையப் பழுத்துக் கைவர ....(25) எம்ம னோர்கள் இனிதின் அருந்திச் செம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராது மனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக் காமக் காடு மூடித் தீமைசெய் ஐம்புல வேடர் ஆறலைத் தொழுக .....(30) இன்பப் பேய்த்தேர் எட்டா தோடக் கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர இச்சைவித் துகுத்துழி யானெனப் பெயரிய நச்சு மாமரம் நனிமிக முளைத்துப் பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும் ...(35) பாவப் பல்தழை பரப்பிப் பூவெனக் கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து தமக்கும் பிறர்க்கும் உதவாது (40) இமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே. | 10 |
906 |
உடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம் படமொடுங்கப் பையவே சென்றங் -கிடைமருதர் ஐயம் புகுவ தணியிழையார் மேல்அநங்கன் கையம் புகவேண்டிக் காண். | 11 |
907 |
காணீர் கதியொன்றும் கல்லீர் எழுத்தஞ்சும் வல்லவண்ணம் பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப் பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர் வீணீர் எளிதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே. | 12 |
908 |
மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர் பாவிய தோலின் பரப்போ தோலிடைப் புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்து இடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை ......(5) முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்து உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின்று ஊரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை வைத்த மலத்தின் குவையோ வைத்துக் கட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள் .....(10) பிரியா தொறுக்கும் பிணியோ தெரியாது இன்னது யானென் றறியேன் என்னை ஏதினுந் தேடினன் யாதினுங் காணேன் முன்னம் வரைத்தனி வில்லாற் புரத்தை அழல் ஊட்டிக் கண்படை யாகக் காமனை ஒருநாள் .......(15) நுண்பொடி யாக நோக்கி அண்டத்து வீயா அமரர் வீயவந் தெழுந்த தீவாய் நஞ்சைத் திருவழு தாக்கி இருவர் தேடி வெருவர நிமிர்ந்து பாலனுக் காகக் காலனைக் காய்ந்து ......(20) சந்தன சரள சண்பக வகுள நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப் புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த ...(25) திருவிடை மருத பொருவிடைப் பாக மங்கை பங்க கங்கை நாயகநின் தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின் மாயப் படலம் கீறித் தூய ஞான நாட்டம் பெற்றபின் யானும் ........(30) நின்பெருந் தன்மையும் கண்டேன் காண்டலும் என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன் நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே நின்னைக் காணா மாந்தர் தன்னையும் காணாத் தன்மை யோரே. | 13 |
909 |
ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும் நேராதே நீரும் நிரப்பாதே - யாராயோ எண்ணுவார் உள்ளத் திடைமருதர் பொற்பாதம் நண்ணுவாம் என்னுமது நாம். | 14 |
910 |
நாமே இடையுள்ள வாறறி வாம்இனி நாங்கள்சொல்ல லாமே மருதன் மருத வனத்தன்னம் அன்னவரைப் பூமேல் அணிந்து பிழைக்கச் செய் தார்ஒரு பொட்டுமிட்டார் தாமே தளர்பவ ரைப்பாரம் ஏற்றுதல் தக்கதன்றே. | 15 |
911 |
அன்றினர் புரங்கள் அழலிடை அவியக் குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றத்து நுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ கயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள் பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில் .....(5) பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக சிமையச் செங்கோட் டிமையச் செல்வன் மணியெனப் பெற்ற அணியியல் அன்னம் வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை குயிலெனப் பேசும் மயிலிளம் பேடை ....(10) கதிரொளி நீலம் கமலத்து மலர்ந்தன மதரரி நெடுங்கண் மானின் கன்று வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி வையம் ஏழும் பன்முறை ஈன்ற ஐய திருவயிற் றம்மைப் பிராட்டி ...(15) மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி எமையா ளுடைய உமையாள் நங்கை கடவுட் கற்பின் மடவரல் கொழுந பவள மால்வரைப் பணைக்கைபோந் தனைய தழைசெவி எண்தோள் தலைவன் தந்தை ...(20) பூவலர் குடுமிச் சேவலம் பதாகை மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல் அமரர்த் தாங்கும் குமரன் தாதை பொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும் மருதிடங் கொண்ட மருத வாண ...(25) நின்னது குற்றம் உளதோ நின்னினைந்து எண்ணருங் கோடி இடர்ப்பகை கடந்து கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு தேவர் ஆவின் கன்றெனத் திரியாப் ...(30) பாவிகள் தமதே பாவம் யாதெனின் முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த அறுசுவை அடிசில் அட்டினி திருப்பப் புசியா தொருவன் பசியால் வருந்துதல் அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத்து ...(35) ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை தெண்ணீர்க் குற்றம் அன்று கண்ணகன்று தேந்துளி சிதறிப் பூந்துணர் துறுமி வாலுகங் கிடந்த சோலை கிடப்ப ...(40) வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப அடிபெயர்த் திடுவான் ஒருவன் நெடிது வருந்துதல் நிழல்தீங் கன்றே. | 16 |
912 |
அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள் ஒன்றொன்றோ டொவ்வா துரைத்தாலும் - என்றும் ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும் மருதனையே நோக்கி வரும். | 17 |
913 |
நோக்கிற்றுக் காமன் உடல்பொடி யாக நுதிவிரலாற் தாக்கிற் றரக்கன் தலைகீழ்ப் படத்தன் சுடர்வடிவாள் ஓக்கிற்றுத் தக்கன் தலைஉருண் டோடச் சலந்தரனைப் போக்கிற் றுயர்பொன்னி சூழ்மரு தாளுடைப் புண்ணியமே. | 18 |
914 |
புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக் கண்ணி வேய்ந்த கைலை நாயக காள கண்ட கந்தனைப் பயந்த வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந பூத நாத பொருவிடைப் பாக ......(5) வேத கீத விண்ணோர் தலைவ முத்தி நாயக மூவா முதல்வ பத்தி யாகிப் பணைத்தமெய் யன்பொடு நொச்சி யாயினும் கரந்தை யாயினும் பச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர் ...(10) கருவிடைப் புகாமல் காத்தருள் புரியும் திருவிடை மருத திரிபு ராந்தக மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள் மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ மனையும் பிறவுந் துறந்து நினைவரும் ....(15) காடும் மலையும் புக்குக் கோடையிற் கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று மாரி நாளிலும் வார்பனி நாளிலும் நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும் ...(20) சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும் உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும் காயும் கிழங்கும் காற்றுதிர் சருகும் வாயுவும் நீரும் வந்தன அருந்தியும் களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும் ......(25) தளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர் அம்மை முத்தி அடைவதற் காகத் தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர் ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம் பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்தும் ...(30) செழுந்தா துதிர்ந்த நந்தன வனத்தும் தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும் தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும் பூவிரி தரங்க வாரிக் கரையிலும் மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும் ...(35) வேண்டுழி வேண்டுழி ஆண்டாண் டிட்ட மருப்பின் இயன்ற வாளரி சுமந்த விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த ஐவகை அமளி அணைமேல் பொங்கத் தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப் ...(40) பட்டினுள் பெய்த பதநுண் பஞ்சின் நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப் பாயல் மீமிசை பரிபுரம் மிழற்றச் சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப் பொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென ...(45) அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம் கண்ணும் மனமும் கவற்றப் பண்வர இரங்குமணி மேகலை மருங்கிற் கிடப்ப ஆடர வல்குல் அரும்பெறல் நுசுப்பு வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப ...(50) அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல் மணியியல் ஆரங் கதிர்விரித் தொளிர்தர மணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள் வரித்த சாந்தின்மிசை விரித்துமீ திட்ட உத்தரீ யப்பட் டொருபால் ஒளிர்தர ...(55) வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு பவளத் தருகாத் தரளம் நிரைத்தாங்கு ஒழுகி நீண்ட குமிழொன்று பதித்துக் காலன் வேலும் காம பாணமும் ஆல காலமும் அனைத்துமிட் டமைத்த ...(60) இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர மதியென மாசறு வதனம் விளங்கப் புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும் அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்தும் சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில் ....(65) அறுசுவை அடிசில் வறிதினி தருந்தாது ஆடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும் வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும் பூசுவன பூசியும் புனைவன புனைந்தும் தூசின் நல்லன தொடையிற் சேர்த்தியும் .......(70) ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும் மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்து இவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த ...(75) முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம் நின்னது பெருமை அன்றோ என்னெனின் வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும் மாட்டா ஒருவன் வாளா எறியினும் நிலத்தின் வழாஅக் கல்லேபோல் ...(80) நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே. | 19 |
915 |
நாமம்நவிற் றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து காமம் நவிற்றிக் கழிந்தொழியல் - ஆமோ பொருதவனத் தானைஉரி போர்த்தருளும் எங்கள் மருதவனத் தானை வளைந்து. | 20 |
916 |
வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதனன்அம்புக் கிளையார் தனங்கண் டிரங்கிநில் லார்இப் பிறப்பினில்வந் தளையார் நரகினுக் கென்கட வார்பொன் அலர்ந்தகொன்றைத் தளையார் இடைமரு தன்னடி யார்அடி சார்ந்தவரே. | 21 |
917 |
அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம் நிறையக் கொடுப்பினும் குறையாச் செல்வம் மூலமும் நடுவும் முடிவும் இகந்து காலம் மூன்றையும் கடந்த கடவுள் உளக்கணுக் கல்லா தூன்கணுக் கொளித்துத் ...(5) துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர் எறுப்புத் துளையின் இருசெவிக் கெட்டாது உறுப்பினின் றெழுதரும் உள்ளத் தோசை வைத்த நாவின் வழிமறுத் தகத்தே தித்தித் தூறும் தெய்வத் தேறல் ........(10) துண்டத் துளையிற் பண்டை வழியன்றி அறிவில் நாறும் நறிய நாற்றம் ஏனைய தன்மையும் எய்தா தெவற்றையும் தானே யாகி நின்ற தத்துவ தோற்றவ தெல்லாம் தன்னிடைத் தோற்றி .....(15) தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளை விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும் இருள்விரி கண்டத் தேக நாயக சுருதியும் இருவரும் தொடர்ந்துநின் றலமர மருதிடம் கொண்ட மருதமா ணிக்க ......(20) உமையாள் கொழுந ஒருமூன் றாகிய இமையா நாட்டத் தென்தனி நாயக அடியேன் உறுகுறை முனியாது கேண்மதி நின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு நெடுநாட் பழகிய கொடுவினை ஈர்ப்பக் ....(25) கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில் குடரென் சங்கிலி பூண்டு தொடர்பட்டுக் கூட்டுச்சிறைப் புழுவின் ஈட்டுமலத் தழுந்தி உடனே வருந்தி நெடுநாட் கிடந்து பல்பிணிப் பெயர்பெற் றல்லற் படுத்தும் ..(30) தண்ட லாளர் மிண்டிவந் தலைப்ப உதர நெருப்பிற் பதைபதை பதைத்தும் வாதமத் திகையின் மோதமொத் துண்டும் கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லாது இடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப் ....(35) பாவப் பகுதியில் இட்டுக் காவற் கொடியோர் ஐவரை ஏவி நெடிய ஆசைத் தளையில் என்னையும் உடலையும் பாசப் படுத்திப் பையென விட்டபின் யானும் போந்து தீதினுக் குழன்று ....(40) பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வௌவியும் பரியா தொழிந்தும் பல்லுயிர் செகுத்தும் வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும் பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும் ஐவரும் கடுப்ப அவாவது கூட்டி ....(45) ஈண்டின கொண்டு மீண்டு வந்துழி இட்டுழி இடாது பட்டுழிப் படாஅது இந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள் வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன் நின்னை அடைந்த அடியார் அடியார்க்கு ....(50) என்னையும் அடிமை யாகக் கொண்டே இட்டபச் சிலைகொண் டொட்டி அறிவித்து இச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமல் காத்தருள் செய்ய வேண்டும் தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே. ...(55) | 22 |
918 |
சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப் புடைமேல் ஒருத்தி பொலிய - இடையேபோய்ச் சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப தெங்கே இருக்க இவள். | 23 |
919 |
இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும் நான்மறையும் நெருக்கும் நெருக்கத்தும் நீளகத் துச்சென்று மீளவெட்டாத் திருக்கும் அறுத்தைவர் தீமையும் தீர்த்துச் செவ் வேமனத்தை ஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே முளைக்கின்ற ஒண்சுடரே. | 24 |
920 |
சுடர்விடு சூலப் படையினை என்றும் விடைஉகந் தேறிய விமல என்றும் உண்ணா நஞ்சம் உண்டனை என்றும் கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும் திரிபுரம் எரித்த சேவக என்றும் ...(5) கரியுரி போர்த்த கடவுள் என்றும் உரகம் பூண்ட உரவோய் என்றும் சிரகஞ் செந்தழல் ஏந்தினை என்றும் வலந்தரு காலனை வதைத்தனை என்றும் சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் ....(10) அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும் வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும் தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும் உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும் ஏனமும் அன்னமும் எட்டா தலமர .....(15) வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும் செழுநீர் ஞாலம் செகுத்துயிர் உண்ணும் அழல்விழிக் குறளினை அமுக்கினை என்றும் இனையன இனையன எண்ணில் கோடி நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல் ......(20) துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின் அளப்பரும் பெருமைநின் அளவில தாயினும் என்றன் வாயிற் புன்மொழி கொண்டு நின்னை நோக்குவன் ஆதலின் என்னை இடுக்கண் களையா அல்லற் படுத்தாது ......(25) எழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க அடித்துத் தட்டி எழுப்பவ போல நுண்துகில் பதாகை கொண்டுகொண் டுகைப்பத் துயிலின் நீங்கிப் பயிலும் வீதித் திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர் .......(30) அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்த கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன் நின்நினைந் தெறிந்த அதனால் அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே. | 25 |
921 |
இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய புன்தலைய மாக்கள் புகழ்வரோ - வென்றிமழு வாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை ஆளுடையான் செம்பொன் அடி. | 26 |
922 |
அடியா யிரந்தொழில் ஆயின ஆயிரம் ஆயிரம்பேர் முடியா யிரம்கண்கள் மூவா யிரம்முற்றும் நீறணிந்த தொடியா யிரங்கொண்ட தோள்இரண் டாயிரம் என்றுநெஞ்சே படியாய் இராப்பகல் தென்மரு தாளியைப் பற்றிக்கொண்டே. | 27 |
923 |
கொண்டலின் இருண்ட கண்டத் தெண்தோள் செவ்வான் உருவிற் பையர வார்த்துச் சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடை மூவா முதல்வ முக்கட் செல்வ தேவ தேவ திருவிடை மருத .....(5) மாசறு சிறப்பின் வானவர் ஆடும் பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி அயிரா வணத்துறை ஆடும் அப்ப கைலாய வாண கௌரி நாயக நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து .......(10) பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர் இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும் மழைக்கட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும் அமரர்த் தாங்கும் குமர வேளும் சுரிசங் கேந்திய திருநெடு மாலும் .......(15) வான்முறை படைத்த நான்முகத் தொருவனும் தாருகற் செற்ற வீரக் கன்னியும் நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும் பீடுயர் தோற்றத்துக் கோடி உருத்திரரும் ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும் .......(20) செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும் வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும் சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும் நிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும் வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும் .....(25) எட்டு நாகமும் அட்ட வசுக்களும் மூன்று கோடி ஆன்ற முனிவரும் வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும் தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும் வித்தகப் பாடல் முத்திறத் தடியரும் ......(30) திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும் அத்தகு செல்வத் தவமதித் தருளிய சித்த மார்சிவ வாக்கிய தேவரும் வெள்ளை நீறு மெய்யிற் கண்டு கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் ......(35) ஓடும் பல்நரி ஊளைகேட் டரனைப் பாடின என்று படாம்பல அளித்தும் குவளைப் புனலில் தவளை அரற்ற ஈசன் தன்னை ஏத்தின என்று காசும் பொன்னும் கலந்து தூவியும் .....(40) வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு பிடித்தலும் அவன்இப் பிறப்புக் கென்ன இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும் மருத வட்டத் தொருதனிக் கிடந்த ......(45) தலையைக் கண்டு தலையுற வணங்கி உம்மைப் போல எம்இத் தலையும் கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும் கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப வாய்த்த தென்றுநாய்க் கட்டம் எடுத்தும் ........(50) காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும் விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுண தேவரும் .......(55) இனைய தன்மையர் எண்ணிறந் தோரே அனையவர் நிற்க யானும் ஒருவன் பத்தி என்பதோர் பாடும் இன்றிச் சுத்த னாயினும் தோன்றாக் கடையேன் நின்னை இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும் .....(60) வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும் கருதி யிருப்பன் கண்டாய் பெரும நின்னுல கனைத்தும் நன்மை தீமை ஆனவை நின்செயல் ஆதலின் நானே அமையும் நலமில் வழிக்கே. ........(65) | 27 |
924 |
வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் - பொழில்சூழ் மருதிடத்தான் என்றொருகால் வாய்கூப்ப வேண்டா கருதிடத்தாம் நில்லா கரந்து. | 29 |
925 |
கரத்தினில் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்ல வரத்தினை ஈயும் மருதவப் பாமதி ஒன்றும் இல்லேன் சிரத்தினு மாயென்றன் சிந்தையு ளாகிவெண் காடனென்னும் தரத்தினு மாயது நின்னடி யாம்தெய்வத் தாமரையே. | 30 |
திருச்சிற்றம்பலம்
11.4 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருஏகம்பமுடையார் திருவந்தாதி (926 - 1025)
926 |
மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன்மிக நற்பணிசெய் கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண் டுவந்திலன் உண்பதற்கே பொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேஉன்னைப் போற்றுகின்ற இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி யோகச்சி ஏகம்பனே. | 1 |
927 |
ஏகம்பனே என்னை ஆள்பவ னேஇமை யோர்க்கிரங்கிப் போகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக பொங்கும்ஐவாய் நாகம்பொன் னாரம் எனப்பொலி வுற்றுநல் நீறணியும் ஆகம்பொன் மாமலை ஒப்பவ னேயென்பன் ஆதரித்தே. | 2 |
928 |
தரித்தேன் மனத்துன் திகழ்தரு நாமம் தடம்பொழில்வாய் வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப னேஎன்றன் வல்வினையை அரித்தேன் உனைப்பணி யாதவர் ஏழைமை கண்டவரைச் சிரித்தேன் உனக்கடி யாரடி பூணத் தௌிந்தனனே. | 3 |
929 |
தௌிதரு கின்றது சென்றென் மனம்நின் திருவடிவம் அளிதரு நின்னருட் கையம் இனியில்லை அந்திச் செக்கர் ஒளிதரு மேனிஎம் ஏகம்ப னேஎன் றுகந்தவர்தாள் தளிதரு தூளிஎன் றன்தலை மேல்வைத்த தன்மைபெற்றே. | 4 |
930 |
பெற்றுகந் தேன்என்றும் அர்ச்சனை செய்யப் பெருகுநின்சீர் கற்றுகந் தேன்என் கருத்தினி தாக்கச்சி ஏகம்பத்தின் பற்றுகந் தேறும் உகந்தவ னேபட நாகக்கச்சின் சுற்றுகந் தேர்விடை மேல்வரு வாய்நின் துணையடியே. | 5 |
931 |
அடிநின்ற சூழல் அகோசரம் மாலுக் கயற்கலரின் முடிநின்ற சூழ்முடி காண்பரி தாயிற்றுக் கார்முகிலின் இடிநின்ற சூழ்குரல் ஏறுடை ஏகம்ப யாம்எங்ஙனே வடிநின்ற சூலப் படையுடை யாயை வணங்குவதே. | 6 |
932 |
வணக்கம் தலைநின் திருவடிக் கேசெய்யும் மையல்கொண்டோர் இணக்கன்றி மற்றோர் இணக்கறி வோமல்லம் வல்லரவின் குணக்குன்ற வில்லி குளிர்கச்சி ஏகம்பம் பாடின் அல்லால் கணக்கன்று மற்றொரு தேவரைப் பாடும் கவிநலமே. | 7 |
933 |
நலந்தர நானொன்று சொல்லுவன் கேண்மின்நல் லீர்கள்அன்பு கலந்தர னார்கச்சி ஏகம்பம் கண்டு கனல்திகிரி சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத் தாய்தக்கன் வேள்வியெல்லாம் நிலந்தர மாகச்செய் தாயென்று பூசித்து நின்மின்களே. | 8 |
934 |
மின்கள்என் றார்சடை கொண்டல்என் றார்கண்டம் மேனிவண்ணம் பொன்கள்என் றார்வௌிப் பாடுதம் பொன்அடி பூண்டுகொண்ட என்களென் றாலும் பிரிந்தறி யார்கச்சி ஏகம்பத்தான் தன்களென் றார்உல கெல்லாம் நிலைபெற்ற தன்மைகளே. | 9 |
935 |
தன்மையிற் குன்றாத் தவத்தோர் இமையவர் தாம்வணங்கும் வன்மையிற் குன்றா மதிற்கச்சி ஏகம்பர் வண்கயிலைப் பொன்மயிற் சாயலும் சேயரிக் கண்ணும் புரிகுழலும் மென்மையிற் சாயும் மருங்குலும் காதல் விளைத்தனவே. | 10 |
936 |
தனமிட் டுமைதழு வத்தழும் புற்றவர் தம் அடியார் மனம்விட் டகலா மதிற்கச்சி ஏகம்பர் வான்கயிலைச் சினம்விட் டகலாக் களிறு வினாவியோர் சேயனையார் புனம்விட் டகலார் பகலாம் பொழுதும்நம் பூங்கொடியே. | 11 |
937 |
பூங்கொத் திருந்தழை யார்பொழில் கச்சிஏ கம்பர்பொற்பார் கோங்கத் திருந்த குடுமிக் கயிலைஎம் பொன்னொருத்தி பாங்கொத் திருந்தனை ஆரணங் கேபடர் கல்லருவி ஆங்கத் திருந்திழை ஆடிவந் தாற்கண் டடிவருத்தே. | 12 |
938 |
வருத்தம் தருமெய்யும் கையில் தழையும் வன்மாவினவும் கருத்தந் தரிக்கும் நடக்கவின் றைய கழல்நினையத் திருத்தந் தருளும் திகழ்கச்சி ஏகம்பர் சீர்க்கயிலைத் துருத்தந் திருப்பதன் றிப்புனங் காக்கும் தொழில்எமக்கே. | 13 |
939 |
எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் கம்பர் எழிற்கயிலை உம்மையும் மானிடம் இப்புனத் தேவிட்டு வந்தமைந்தர் தம்மையும் மானையும் சிந்தையும் நோக்கங் கவர்வஎன்றோ அம்மையும் அம்மலர்க் கண்ணும் பெரியீர் அருளுமினே. | 14 |
940 |
அருளைத் தருகம்பர் அம்பொற் கயிலையுள் எம்மையரம் பிருளைக் கரிமறிக் கும்இவர் ஐயர் உறுத்தியெய்ய வெருளக் கலைகணை தன்னொடும் போயின வில்லிமைக்கு மருளைத் தருசொல்லி எங்கோ விளையுண்டிவ் வையகத்தே. | 15 |
941 |
வையார் மழுப்படை ஏகம்பர் ஈங்கோய் மலைப்புனத்துள் ஐயார் வருகலை ஏனம் கரிதொடர் வேட்டையெல்லாம் பொய்யான ஐயர் மனத்தவெம் பூங்கொடி கொங்கைபொறாப் பையார் அரவிடை ஆயிற்று வந்து பரிணமித்தே. | 16 |
942 |
பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த யானை நுதல்பகுந்திட் டுருமொத்த திண்குரற் சீயம் திரிநெறி ஓங்குவைவாய்ப் பொருமுத் தலைவேற் படைக்கம்பர் பூங்கயி லைப் புனத்துள் தருமுத் தனநகை தன்நசை யால்வெற்பு சார்வரிதே. | 17 |
943 |
அரிதன் திருக்கண் இடநிரம் பாயிரம் போதணிய அரிதன் திருவடிக் கர்ச்சித்த கண்ணுக் கருளுகம்பர் அரிதன் திருக்கங் குலியால் அழிந்த கயிலையல்லிங் கரிதென் றிருப்பதெம் பால்வெற்ப எம்மையர்க் கஞ்சுதுமே. | 18 |
944 |
அஞ்சரத் தான்பொடி யாய்விழத் தீவிழித் தன்புசெய்வோர் நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி ஏகம்பர் நீள்கயிலைக் குஞ்சரத் தாழ்வரை வீழநுங் கொம்புய்யக் கும்பமூழ்கும் வெஞ்சரத் தாரன வோஅல்ல வோஇவ் வியன்முரசே. | 19 |
945 |
சேய்தந் தகைமை உமைகண வன்திரு ஏகம்பத்தான் தாய்தந்தை யாய்உயிர் காப்போன் கயிலைத் தயங்கிருள்வாய் வேய்தந்த தோளிநம் ஊச லொடும் விரை வேங்கைதன்னைப் பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட தோசைப் பகடுவந்தே. | 20 |
946 |
வந்தும் மணம்பெறின் பொன்னனை யீர்மன்னும் ஏகம்பர்தம் முந்தும் அருவிக் கயிலை மலையுயர் தேன்இழிச்சித் தந்தும் மலர்கொய்தும் தண்திசை மேயுங் கிளிகடிந்தும் சிந்தும் புகர்மலை கைச்சும்இச் சாரல் திரிகுவனே. | 21 |
947 |
திரியப் புரமெய்த ஏகம்ப னார்திக ழுங்கயிலைக் கிரியக் குறவர் பருவத் திடுதர ளம்வினையோம் விரியச் சுருள்முத லானும் அடைந்தோம் விரைவிரைந்து பிரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற தென்அங்குப் பேசுமினே. | 22 |
948 |
பேசுக யாவரு மைக்கணி யார்என்று பித்தர்எங்கும் பூசுகை யார்திரு நீற்றெழில் ஏகம்பர் பொற்கயிலைத் தேசுகை யார்சிலை வெற்பன் பிரியும் பரிசிலர்அக் கூசுகை யாதுமில் லாக்குலை வேங்கைப் பெயர்நும்மையே. | 23 |
949 |
பெயரா நலத்தொழில் ஏகம்ப னார்பிறை தோய்கயிலைப் பெயரா திருக்கப் பெறுகிளி காள்புன மேபிரிவின் துயரால் வருந்தி மனமும்இங் கோடித் தொழுதுசென்ற தயரா துரையும்வெற் பற்கடி யேற்கும் விடைதமினே. | 24 |
950 |
தம்மைப் பிறவிக் கடல்கடப் பிப்பவர் தாம்வணங்கும் மும்மைத் திருக்கண் முகத்தெழில் ஏகம்பர் மொய்கயிலை அம்மைக் கருங்கண்ணி தன்னொடின் பந்தரும் தண்புனமே எம்மைக் கவலை செயச்சொல்லி யோவல்லி எய்தியதே. | 25 |
951 |
இயங்கும் திரிபுரம் எய்தஏ கம்பர் எழிற்கயிலைத் தயங்கு மலர்ப்பொழில் காள்தையல் ஆடரு வித்தடங்காள் முயங்கு மணியறை காள்மொழி யீர்ஒழி யாதுநெஞ்சம் மயங்கும் பரிசுபொன் னார்சென்ற சூழல் வகுத்தெமக்கே. | 26 |
952 |
வகுப்பார் இவர்போல் மணத்துக்கு நாள்மணந் தன்னொடின்பம் மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம் இருவரை விள்ளக்கள்வாய் நெகுப்பால் மலர்கொண்டு நின்றார் கிடக்க நிலாவுகம்பர் தொகுப்பால் மணிசிந் தருவிக் கயிலைஇச் சூழ்புனத்தே. | 27 |
953 |
புனங்குழை யாதென்று மென்தினை கொய்ததும் போகலுற்ற கனங்குழை யாள்தற் பிரிய நமக்குறும் கையறவால் மனங்குழை யாவரும் கண்களி பண்பல பாடுந்தொண்டர் இனங்குழை யாத்தொழும் ஏகம்பர் இக்கயி லாயத்துள்ளே. | 28 |
954 |
உள்ளம் பெரியரல் லாச்சிறு மானுடர் உற்றசெல்வம் கள்ளம் பெரிய சிறுமனத் தார்க்கன்றிக் கங்கையென்னும் வெள்ளம் பெரிய சடைத்திரு ஏகம்பர் விண்அரணம் தள்ளம் பெரிகொண் டமைத்தார் அடியவர் சார்வதன்றே. | 29 |
955 |
அன்றும் பகையடர்க் கும்பரி மாவும் மதஅருவிக் குன்றும் பதாதியும் தேரும் குலவிக் குடைநிழற்கீழ் நின்றும் பொலியினும் கம்பர்நன் னீறு நுதற்கிலரேல் என்றும் அரசும் முரசும் பொலியா இருநிலத்தே. | 30 |
956 |
நிலத்திமை யோரில் தலையாய்ப் பிறந்து மறையொடங்கம் வலத்திமைப் போதும் பிரியா எரிவளர்த் தாலும்வெற்பன் குலத்துமை யோர்பங்கர் கச்சியுள் ஏகம்பம் கூடித்தொழும் நலத்தமை யாதவர் வேட்டுவர் தம்மின் நடுப்படையே. | 31 |
957 |
படையால் உயிர்கொன்று தின்று பசுக்களைப் போலச்செல்லும் நடையால் அறிவின்றி நட்பிடைப் பொய்த்துக் குலங்களினும் கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத் தெங்களையாள் உடையான் கழற் கன்ப ரேல்அவர் யாவர்க்கும் உத்தமரே. | 32 |
958 |
உத்துங்க யானை உரியார் விரலால் அரக்கன்சென்னி பத்துங்கை யான இருபதும் சோர்தர வைத்திலயம் ஒத்துங்கை யாலவன் பாடக் கயிலையின் ஊடுகைவாள் எத்துங்கை யான்என் றுகந்தளித் தார்கச்சி ஏகம்பரே. | 33 |
959 |
அம்பரம் கால்அனல் நீர்நிலம் திங்கள் அருக்கன்அணு அம்பரம் கொள்வதோர் வேழத் துரியவன் தன்னுருவாம் எம்பரன் கச்சியுள் ஏகம்பத் தான்இடை யாதடைவான் நம்பரன் தன்னடி யார்அறி வார்கட்கு நற்றுணையே. | 34 |
960 |
துணைத்தா மரையடி யும்பவ ளத்திரள் நன்குறங்கும் பணைத்தோள் அகலமும் கண்டத்து நீலமும் அண்டத்துமின் பிணைத்தா லனசடை யுந்திரு முக்கணும் பெண்ணொர்பக்கத் தணைத்தார் எழிற்கம்பர் எங்கள் பிரானார்க் கழகியவே. | 35 |
961 |
அழகறி விற்பெரி தாகிய ஏகம்பர் அத்தர்கொற்றம் பழகறி விற்பெரி யோர்தமைப் பற்றலர் பற்றும்அன்பின் குழகறி வேற்பினுள் ஒன்றறி யாரறி யாமைதெய்வம் கிழகெறி யப்பட் டுலந்தார் உலகிற் கிடந்தனரே. | 36 |
962 |
கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற பாம்பொரு பால்மதியம் தொடக்குண் டிலங்கும் மலங்கும் திரைக்கங்கை சூடுங்கொன்றை வடக்குண்டு கட்டத் தலைமாலை வாளால் மலைந்தவெம்போர் கடக்கும் விடைத்திரு ஏகம்பர் கற்றைச் சடைமுடியே. | 37 |
963 |
கற்றைப் பவளச் சடைவலம் பூக்கமழ் கொன்றையந்தார் முற்றுற் றிலாமதி யின்கொழுந் தேகம்பர் மொய்குழலாம் மற்றைத் திசையின் மணிப்பொற் கொழுந்தத் தரங்கழுநீர் தெற்றிப் பொலிகின்ற சூட்டழ காகித் திகழ்தருமே. | 38 |
964 |
தருமருட் டன்மை வலப்பால் கமலக்கண் நெற்றியின்மேல் திருமலர்க் கண்பிள வின்றிக ழுந்தழல் செல்வக்கம்பர் கருமலர்க் கண்இடப் பாலது நீலம் கனிமதத்து வருநுதற் பொட்டணங் குக்குயர்ந் தோங்கும் மலர்க்குழலே. | 39 |
965 |
மலர்ந்த படத்துச்சி ஐந்தினும் செஞ்சுடர் மாமணிவிட் டலர்ந்த மணிக்குண் டலம்வலக் காதினில் ஆடிவரும் நலந்திரு நீள்வயி ரம்வெயிற் பாய நகுமணிகள் கலந்தசெம் பொன்மக ரக்குழை ஏகம்பர் காதிடமே. | 40 |
966 |
காதலைக் கும்வலத் தோள்பவ ளக்குன்றம் அங்குயர்ந்து போதலைக் கும்பனிப் பொன்மலை நீற்றின் பொலியகலம் தாதலைக் குங்குழல் சேர்பணைத் தோள்நறுஞ் சாந்தணிந்து சூதலைக் கும்முலை மார்பிடம் ஏகம்பர் சுந்தரமே. | 41 |
967 |
தரம்பொற் பழியும் உலகட்டி எய்த்துத் தரந்தளரா உரம்பொற் புடைய திருவயி றாம்வலம் உம்பர்மும்மைப் புரம்பொற் பழித்தகம் பர்க்குத் தரத்திடு பூண்முலையும் நிரம்பப் பொறாது தளரிள வஞ்சியும் நேர்வுடைத்தே. | 42 |
968 |
உடைப்புலி ஆடையின் மேலுர கக்கச்சு வீக்கிமுஞ்சி வடத்தொரு கோவணந் தோன்றும் அரைவலம் மற்றையல்குல் தொடக்குறு காஞ்சித் தொடுத்த அரசிலை தூநுண்டுகில் அடல்பொலி ஏறுடை ஏகம்பம் மேய அடிகளுக்கே. | 43 |
969 |
அடிவலப் பாலது செந்தா மரையொத் ததிர்கழல்சூழ்ந் திடிகுரற் கூற்றின் எருத்திற வைத்த திளந்தளிரின் அடியிடப் பாலது பஞ்சுற அஞ்சுஞ் சிலம்பணிந்த வடிவுடைத் தார்கச்சி ஏகம்பம் மேய வரதருக்கே. | 44 |
970 |
தருக்கவற் றான்மிக்க முப்புரம் எய்தயன் தன்தலையை நெருக்கவற் றோட மழுவாள் விசைத்தது நெற்களென்றும் பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர் அத்தர்தம் பாம்புகளின் திருக்கவற் றாலிட் டருளும் கடகத் திருக்கரமே. | 45 |
971 |
கரத்தத் தமருகத் தோசை கடுத்தண்டம் மீபிளப்ப அரத்தத்த பாதம் நெரித்திட் டவனி தலம்நெரியத் தரத்தத் திசைகளுக் கப்புறம் போர்ப்பச் சடைவிரித்து வரத்தைத் தருகம்பர் ஆடுவர் எல்லியும் மாநடமே. | 46 |
972 |
நடனம் பிரான்உகந் துய்யக்கொண் டானென்று நான்மறையோர் உடன்வந்து மூவா யிரவர் இறைஞ்சி நிறைந்தஉண்மைக் கடனன்றி மற்றறி யாத்தில்லை அம்பலம் காளத்தியாம் இடம்எம் பிரான்கச்சி ஏகம்பம் மேயாற் கினியனவே. | 47 |
973 |
இனியவர் இன்னார் அவரையொப் பார்பிறர் என்னவொண்ணாத் தனியவர் தையல் உடனாம் உருவர் அறம்பணித்த முனியவர் ஏறும் உகந்தமுக் கண்ணவர் சண்டிஅன்புக் கினியவர் காய்மழு வாட்படை யார்கச்சி ஏகம்பரே. | 48 |
974 |
பரவித் தனைநினை யக்கச்சி ஏகம்பர் பண்ணும்மையல் வரவித் தனையுள்ள தெங்கறிந் தேன் முன் அவர்மகனார் புரவித் தனையடிக் கக்கொடி தாய்விடி யாஇரவில் அரவித் தனையுங்கொண் டார்மட வார்முன்றில் ஆட்டிடவே. | 49 |
975 |
இடவம் சுறுக்கெனப் பாயுமுஞ் சென்னி நகுதலைகண் டிடஅஞ் சுவர்மட வார்இரி கின்றனர் ஏகம்பத்தீர் படம்அஞ்சு வாயது நாகம் இரைக்கும் அதனுக்குமுற் படஅஞ் சுவர்எங்ங னேபலி வந்திடும் பாங்குகளே. | 50 |
976 |
பாங்குடை கோள்புலி யின்அதள் கொண்டீர்நும் பாரிடங்கள் தாங்குடை கொள்ளப் பலிகொள்ள வந்தீர் தடங்கமலம் பூங்குடை கொள்ளப் புனற்கச்சி ஏகம்பம் கோயில்கொண்டீர் ஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள வந்தீர் இடைக்குமின்றே. | 51 |
977 |
இடைக்குமின் தோற்கும் இணைமுலை யாய்முதி யார்கள்தஞ்சொல் கடைக்கண்நன் றாங்கச்சி ஏகம்பர் ஐயங் கொளக்கடவும் விடைக்குமுன் தோற்றநில் லேநின் றினியிந்த மொய்குழலார் கிடைக்குமுன் தோற்றநஞ் சங்கிது வோதங் கிறித்துவமே. | 52 |
978 |
கிறிபல பேசிச் சதிரால் நடந்து விடங்குபடக் குறிபல பாடிக் குளிர்கச்சி ஏகம்பர் ஐயங்கொள்ள நெறிபல வார்குழ லார்மெலி வுற்ற நெடுந்தெருவில் செறிபல வெள்வளை போயின தாயர்கள் தேடுவரே. | 53 |
979 |
தேடுற் றிலகள்ள நோக்கம் தெரிந்தில சொற்கள்முடி கூடுற் றிலகுழல் கொங்கை பொடித்தில கூறும்இவள் மாடுற் றிலமணி யின்மட அல்குலும் மற்றிவள்பால் நாடுற் றிலஎழில் ஏகம்ப னார்க் குள்ளம் நல்கிடத்தே. | 54 |
980 |
நல்கும் புகழ்க்கட வூர்நன் மறையவன் உய்யநண்ணிக் கொல்கின்ற கூற்றைக் குமைத்த வெங் கூற்றம் குளிர்திரைகள் மல்கும் திருமறைக் காட்டமிர் தென்றும் மலைமகள் தான் புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம் மேவிய பொன்மலையே. | 55 |
981 |
மலையத் தகத்தியன் அர்ச்சிக்க மன்னி வடகயிலை நிலையத் தமரர் தொழஇருந் தான்நெடு மேருஎன்னும் சிலையத்தன் பைம்பொன் மதில்திரு ஏகம்பத் தான்திகழ்நீர் அலையத் தடம்பொன்னி சூழ்திரு ஐயாற் றருமணியே. | 56 |
982 |
மணியார் அருவித் தடம்இம யங்குடக் கொல்லிகல்லின் திணியார் அருவியின் ஆர்த்த சிராமலை ஐவனங்கள் அணியார் அருவி கவர்கிளி ஒப்பும்இன் சாரல்விந்தம் பணிவார் அருவினை தீர்க்கும்ஏ கம்பர் பருப்பதமே. | 57 |
983 |
பருப்பதம் கார்தவழ் மந்தரம் இந்திர நீலம்வெள்ளை மருப்பதங் கார்கருங் குன்றியங் கும்பரங் குன்றம் வில்லார் நெருப்பதங் காகுதி நாறும் மகேந்திரம் என்றிவற்றில் இருப்பதங் காவுகந் தான்கச்சி ஏகம்பத் தெம்மிறையே. | 58 |
984 |
இறைத்தார் புரம்எய்த வில்லிமை நல்லிம வான்மகட்கு மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம் செங்குன்ற மன்னல்குன்றம் நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக் குன்றம்என் தீவினைகள் குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர் குன்றென்று கூறுமினே. | 59 |
985 |
கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த் தானம் துருத்தியம்பேர் தேறுமின் வேள்விக் குடிதிருத் தோணி புரம்பழனம் ஆறுமின் போல்சடை வைத்தவன் ஆருர் இடைமருதென் றேறுமின் நீரெம் பிரான்கச்சி ஏகம்பம் முன்நினைந்தே. | 60 |
986 |
நினைவார்க் கருளும் பிரான்திருச் சோற்றுத் துறைநியமம் புனைவார் சடையோன் புகலூர் புறம்பயம் பூவணம்நீர் புனைவார் பொழில்திரு வெண்காடு பாச்சில் அதிகையென்று நினைவார் தருநெஞ்சி னீர்கச்சி ஏகம்பம் நண்ணுமினே. | 61 |
987 |
நண்ணிப் பரவும் திருவா வடுதுறை நல்லம்நல்லூர் மண்ணில் பொலிகடம் பூர்கடம் பந்துறை மன்னுபுன்கூர் எண்ணற் கரிய பராய்த்துறை ஏர்கொள் எதிர்கொள்பாடி கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி ஏகம்பம் காண்மின் சென்றே. | 62 |
988 |
சென்றேறி விண்ணுறும் அண்ணா மலைதிகழ் வல்லம்மென்பூ வின்தேறல் பாய்திரு மாற்பேறு பாசூர் எழில்அழுந்தூர் வன்தே ரவன்திரு விற்பெரும் பேறு மதில்ஒற்றியூர் நின்றேர் தருகச்சி ஏகம்பம் மேயார் நிலாவியவே. | 63 |
989 |
நிலாவு புகழ்த்திரு வோத்தூர் திருஆமாத் தூர்நிறைநீர் சுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சைதொண்டர் குலாவு திருப்பனங் காடுநன் மாகறல் கூற்றம்வந்தால் அலாய்என் றடியார்க் கருள்புரி ஏகம்பர் ஆலயமே. | 64 |
990 |
ஆலையங் கார்கரு காவைகச் சூர்திருக் காரிகரை வேலையங் கேறு திருவான்மி யூர்திரு ஊறல்மிக்க சோலையங் கார்திருப் போந்தைமுக் கோணம் தொடர்கடுக்கை மாலையன் வாழ்திரு ஆலங்கா டேகம்பம் வாழ்த்துமினே. | 65 |
991 |
வாழப் பெரிதெமக் கின்னருள் செய்யும் மலர்க்கழலோர் தாழச் சடைத்திரு ஏகம்பர் தம்மைத் தொழதவர்போய் வாழப் பரற்சுரம் ஆற்றா தளிரடி பூங்குழல் எம் ஏழைக் கிடையிறுக் குங்குய பாரம் இயக்குறினே. | 66 |
992 |
உறுகின்ற வெவ்வழல் அக்கடம் இக்கொடிக் குன்பின்வரப் பெறுகின்ற வண்மையி னால்ஐய பேரருள் ஏகம்பனார் துறுகின்ற மென்மலர்த் தண்பொழில் கச்சியைச் சூழ்ந்திளையோர் குறுகின்ற பூங்குவ ளைக்குறுந் தண்பணை என்றுகொளே. | 67 |
993 |
கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி தீச்சில வேய்உலறி விள்ளும் வெடிபடும் பாலையென் பாவை விடலைபின்னே தெள்ளும் புனற்கச்சி யுள்திரு ஏகம்பர் சேவடியை உள்ளும் அதுமறந் தாரெனப் போவ துரைப்பரிதே. | 68 |
994 |
பரிப்பருந் திண்மைப் படையது கானர் எனிற்சிறகு விரிப்பருந் துக்கிறை ஆக்கும்வெய் யேன்அஞ்சல் செஞ்சடைமேல் தரிப்பருந் திண்கங்கை யார்திரு வேகம்பம் அன்னபொன்னே வரிப்பருந் திண்சிலை யேயும ராயின் மறைகுவனே. | 69 |
995 |
வனவரித் திண்புலி யின்அதள் ஏகம்ப மன்னருளே எனவரு பொன்னணங் கென்னணங் கிற்கென் எழிற்கழங்கும் தனவரிப் பந்தும் கொடுத்தெனைப் புல்லியும் இற்பிரிந்தே இனவரிக் கல்லதர் செல்வதெங் கே ஒல்கும் ஏழைநெஞ்சே. | 70 |
996 |
நெஞ்சார் தரஇன்பம் செய்கழல் ஏகம்பர் கச்சியன்னாள் பஞ்சார் அடிவைத்த பாங்கிவை ஆங்கவள் பெற்றெடுத்த வெஞ்சார் வொழியத்தன் பின்செல முன்செல் வெடுவெடென்ற அஞ்சா அடுதிறற் காளைதன் போக்கிவை அந்தத்திலே. | 71 |
997 |
இலவவெங் கான்உனை யல்லால் தொழுஞ்சரண் ஏகம்பனார் நிலவும் சுடரொளி வெய்யவ னேதண் மலர்மிதித்துச் செலவும் பருக்கை குளிரத் தளிரடி செல்சுரத்துன் உலவுங் கதிர்தணி வித்தருள் செய்யுன் உறுதுணைக்கே. | 72 |
998 |
துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன் இணையொத்த கொங்கையொ டேஒத்த காதலொ டேகினரே அணையத்தர் ஏறொத்த காளையைக் கண்டனம் மற்றவரேல் பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே. | 73 |
999 |
மின்நலிக் கும்வணக் கத்திடை யாளையும் மீளியையும் நென்னல்இப் பாக்கைவந் தெய்தின ரேல்எம் மனையிற்கண்டீர் பின்னரிப் போக்கருங் குன்று கடந்தவர் இன்றுகம்பர் மன்னரி தேர்ந்து தொழுங்கச்சி நாட்டிடை வைகுவரே. | 74 |
1000 |
உவரச்சொல் வேடுடைக் காடுகந் தாடிய ஏகம்பனார் அவரக்கன் போன விமானத்தை ஆயிரம் உண்மைசுற்றும் துவரச் சிகரச் சிவாலயம் சூலம் துலங்குவிண்மேல் கவரக் கொடிதிளைக் குங்கச்சி காணினும் கார்மயிலே. | 75 |
1001 |
கார்மிக்க கண்டத் தெழில்திரு ஏகம்பர் கச்சியின்வாய் ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு வோர்ஒலி பொன்மலைபோல் போர்மிக்க செந்நெல் குவிப்போர் ஒலிகருப் பாலையொலி நீர்மிக்க மாக்கட லின்ஒலி யேஒக்கும் நேரிழையே. | 76 |
1002 |
நேர்த்தமை யாமை விறற்கொடு வேடர் நெடுஞ்சுரத்தைப் பார்த்தமை யால்இமை தீந்தகண் பொன்னே பகட்டுரிவை போர்த்தமை யால்உமை நோக்கருங் கம்பர்கச் சிப்பொழிலுள் சேர்த்தமை யால்இமைப் போதணி சீதம் சிறந்தனவே. | 77 |
1003 |
சிறைவண்டு பாடும் கமலக் கிடங்கிவை செம்பழுக்காய் நிறைகொண்ட பாளைக் கமுகின் பொழில்இவை தீங்கனியின் பொறைகொண்ட வாழைப் பொதும்புவை புன்சடை ஏகம்பனார் நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும் இவ்வண்ணம் நன்னுதலே. | 78 |
1004 |
நன்னுத லார்கருங் கண்ணும் செவ்வாயும் இவ் வாறெனப்போய் மன்னித ழார்திரு நீலமும் ஆம்பலும் பூப்பவள்ளை என்னவெ லாம்ஒப்புக் காதென்று வீறிடும் ஏகம்பனார் பொன்னுத லார்விழி யார்கச்சி நாட்டுள்இப் பொய்கையுளே. | 79 |
1005 |
உள்வார் குளிர நெருங்கிக் கருங்கிடங் கிட்டநன்னீர் வள்வா ளைகளொடு செங்கயல் மேய்கின்ற எங்களைஆட் கொள்வார் பிறவி கொடாதஏ கம்பர் குளிர்குவளை கள்வார் தருகச்சி நாட்டெழில் ஏரிக் களப்பரப்பே. | 80 |
1006 |
பரப்பார் விசும்பிற் படிந்த கருமுகில் அன்னநன்னீர் தரப்பா சிகள்மிகு பண்பொடு சேம்படர் தண்பணைவாய்ச் சுரப்பார் எருமை மலர்தின்னத் துன்னுக ராஒருத்தல் பொரப்பார் பொலிநுத லாய்செல்வக் கம்பர்தம் பூங்கச்சியே. | 81 |
1007 |
கச்சார் முலைமலை மங்கைகண் ணாரஎண் ணான்கறமும் வைச்சார் மகிழ்திரு ஏகம்பர் தேவி மகிழவிண்ணோர் விச்சா தரர்தொழு கின்ற விமானமும் தன்மமறா அச்சா லையும்பரப் பாங்கணி மாடங்கள் ஓங்கினவே. | 82 |
1008 |
ஓங்கின ஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம் பாங்கினில் நின்ற தரியுறை பாடகம் தெவ்இரிய வாங்கின வாட்கண்ணி மற்றவர் மைத்துனி வான்கவிகள் தாங்கின நாட்டிருந் தாளது தன்மனை ஆயிழையே. | 83 |
1009 |
இழையார் அரவணி ஏகம்பர் நெற்றி விழியின்வந்த பிழையா அருள்நம் பிராட்டிய தின்ன பிறங்கல்உன்னும் நுழையா வருதிரி சூலத்தள் நோக்கரும் பொன்கடுக்கைத் தழையார் பொழிலிது பொன்னே நமக்குத் தளர்வில்லையே. | 84 |
1010 |
தளரா மிகுவெள்ளம் கண்டுமை ஓடித் தமைத்தழுவக் கிளையார் வளைக்கை வடுப்படும் ஈங்கோர் கிறிபடுத்தார் வளமாப் பொழில்திரு ஏகம்பம் மற்றிது வந்திறைஞ்சி உளரா வதுபடைத் தோம்மட வாய்இவ் வுலகத்துளே. | 85 |
1011 |
உலவிய மின்வடம் வீசி உருமதிர் வுள்முழங்கி வலவிய மாமதம் பாய்முகில் யானைகள் வானில்வந்தால் சுலவிய வார்குழல் பின்னரென் பாரிர் எனநினைந்து நிலவிய ஏகம்பர் கோயிற் கொடியன்ன நீர்மையனே. | 86 |
1012 |
நீரென்னி லும்அழுங் கண்முகில் காள்நெஞ்சம் அஞ்சலையென் றாரென்னி லுந்தம ராயுரைப் பார்அம ராவதிக்கு நேரென்னி லுந்தகும் கச்சியுள் ஏகம்பர் நீள்மதில்வாய்ச் சேரென்னி லும்தங்கும் வாட்கண்ணி தான்அன்பர் தேர்வரவே. | 87 |
1013 |
வரங்கொண் டிமையோர் நலங்கொள்ளும் ஏகம்பர் கச்சியன்னாய் பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம் அன்பர்தம் தேரின்முன்னே தரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன் னாகத்தண் காந்தட்கொத்தின் கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும் போந்தன கார்முகிலே. | 88 |
1014 |
கார்முகம் ஆரவண் கைக்கொண்ட கம்பர் கழல்தொழுது போர்முக மாப்பகை வெல்லச்சென் றார்நினை யார்புணரி நீர்முக மாக இருண்டு சுரந்தது நேரிழைநாம் ஆர்முக மாக வினைக்கடல் நீந்தும் அயர்வுயிர்ப்பே. | 89 |
1015 |
உயிரா யினஅன்பர் தேர்வரக் கேட்டுமுன் வாட்டமுற்ற பயிரார் புயல்பெற்ற தென்னநம் பல்வளை பான்மைகளாம் தயிரார்பால் நெய்யொடும் ஆடிய ஏகம்பர் தம்மருள்போல் கையிரா வளையழுந் தக்கச் சிறுத்தன கார்மயிலே. | 90 |
1016 |
கார்விடை வண்ணத்தன் அன்றேழ் தழுவினும் இன்றுதனிப் போர்விடை பெற்றெதிர் மாண்டார் எனஅண்டர் போதவிட்டார் தார்விடை ஏகம்பர் கச்சிப் புறவிடைத் தம்பொன் நன்பூண் மார்விடை வைகல் பெறுவார் தழுவ மழவிடையே. | 91 |
1017 |
விடைபாய் கொடுமையெண் ணாதுமே< லாங்கன்னி வேல்கருங்கண் கடைபாய் மனத்திளங் காளையர் புல்கொலி கம்பர்கச்சி மடைபாய் வயலின முல்லையின் மான்கன்றொ டான்கன்றினம் கடைபாய் தொறும்பதி மன்றில் கடல்போல் கலந்தெழுமே. | 92 |
1018 |
எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர் கச்சி இருங்கடல்வாய்க் கொழுமணப் புன்னைத் துணர்மணற் குன்றில் பரதர்கொம்பே ெசுழுமலர்ச் சேலல்ல வாளல்ல வேலல்ல நீலமல்ல முழுமலர்க் கூர்அம்பின்ஓர்இரண் டாலும் முகத்தனவே. | 93 |
1019 |
முகம்பாகம் பண்டமும் பாகமென் றோதிய மூதுரையை உகம்பார்த் திரேல்என் நலம்உயர் ஏகம்பர் கச்சிமுன்நீர் அகம்பாக ஆர்வின் அளவில்லை என்னின் பவளச் செவ்வாய் நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற வர்கொள்க நன்மயலே. | 94 |
1020 |
மயக்கத்த நல்லிருள் கொல்லும் சுறவோ டெறிமகரம் இயக்கத் திடுசுழி ஓதம் கழிகிளர் அக்கழித்தார் துயக்கத் தவர்க்கரு ளாக்கம்பர் கச்சிக் கடலபொன்னூல் முயக்கத் தகல்வு பொறாள்கொண்க நீர்வரும் ஊர்க்கஞ்சுமே. | 95 |
1021 |
மேயிரை வைகக் குருகுண ராமது உண்டுபுன்னை மீயிரை வண்டோ தமர்புக் கடிய விரிகடல்வாய்ப் பாயிரை நாகங்கொண் டோன்தொழும் கம்பர்கச் சிப்பவ்வநீர் தூயிரை கானல்மற் றார்அறி வார்நந் துறைவர்பொய்யே. | 96 |
1022 |
பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை யாரையும் போகவிடா மெய்வரும் பேரருள் ஏகம்பர் கச்சி விரையினவாய்க் கைவரும் புள்ளொடு சங்கினம் ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர் அவ்வரு தாமங் களினம் வந் தார்ப்ப அணைகின்றதே. | 97 |
1023 |
இன்றுசெய் வோம்இத னில்திரு ஏகம்பர்க் கெத்தனையும் நன்றுசெய் வோம்பணி நாளையென் றுள்ளிநெஞ் சேயுடலில் சென்றுசெ யாரை விடும்துணை நாளும் விடா தடிமை நின்றுசெய் வாரவர் தங்களின் நீள்நெறி காட்டுவரே. | 98 |
1024 |
காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப் பூப்பெய்யக் காதல்வெள்ளம் ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர் ஏதும் இலாதஎம்மைப் பூட்டிவைத் தார்தமக் கன்பது பெற்றுப் பதிற்றுப் பத்துப் பாட்டிவைத் தார்பர வித்தொழு வாம்அவர் பாதங்களே. | 99 |
1025 |
பாதம் பரவியோர் பித்துப் பிதற்றினும் பல்பணியும் ஏதம் புகுதா வகையருள் ஏகம்பர் ஏத்தனவே போதம் பொருளால் பொலியாத புன்சொல் பனுவல்களும் வேதம் பொலியும் பொருளாம் எனக்கொள்வர் மெய்த்தொண்டரே. | 100 |
திருச்சிற்றம்பலம்
11.5 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது (1026 - 1035 )
1026 |
இருநில மடந்தை இயல்பினின் உடுத்த பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த ஒற்றி மாநகர் உடையோய் உருவின் பெற்றிஒன் றாகப் பெற்றோர் யாரே மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே. ....(5) மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே. பாவகன் பரிதி பனிமதி தன்னொடும் மூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம் தண்ணொளி ஆரந் தாரா கணமே விண்ணவர் முதலா வேறோர் இடமாக் ...(10) கொண்டுறை விசும்பே கோலநின் ஆகம் எண்திசை திண்தோள் இருங்கடல் உடையே அணியுடை அல்குல் அவனிமண் டலமே மணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கே ஒழியா தோடிய மாருதம் உயிர்ப்பே ...(15) வழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழி வானவர் முதலா மன்னுயிர் பரந்த ஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வே நெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும் சுருங்கலும் விரிதலும் தோற்றுநின் தொழிலே ..(20) அமைத்தலும் அழித்தலும் ஆங்கதன் முயற்சியும் இமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பே என்றிவை முதலா இயல்புடை வடிவினோ டொன்றிய துப்புரு இருவகை ஆகி முத்திறக் குணத்து நால்வகைப் பிறவி ...(25) அத்திறத் தைம்பொறி அறுவகைச் சமயமோ டேழுல காகி எண்வகை மூர்த்தியோ டூழிதோ றூழி எண்ணிறந் தோங்கி எவ்வகை அளவினிற் கூடிநின்று அவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே. | 1 |
1027 |
இடத்துறை மாதரோ டீருடம் பென்றும் நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும் புலியதள் என்பொடு புனைந்தோய் என்றும் பலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும் அருவமும் உருவமும் ஆனாய் என்றும் ...(5) திருவமர் மாலொடு திசைமுகன் என்றும் உளனே என்றும் இலனே என்றும் தளரான் என்றும் தளர்வோன் என்றும் ஆதி என்றும் அசோகினன் என்றும் போதியிற் பொலிந்த புராணன் என்றும் ...(10) இன்னவை முதலாத் தாமறி அளவையின் மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப் பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி அணங்கிய அவ்வவர்க் கவ்வவை ஆகி அடையப் பற்றிய பளிங்கு போலும் ...(15) ஒற்றி மாநகர் உடையோய் உருவே. | 2 |
1028 |
உருவாம் உலகுக் கொருவன் ஆகிய பெரியோய் வடிவிற் பிறிதிங் கின்மையின் எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின் அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின் முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித் ....(5) தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும் வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும் நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும் ஓங்கிய மறையோற் கொருமுகம் ஒழித்ததும் பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும் ......(10) திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும் குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும் என்றிவை முதலா ஆள்வினை எல்லாம் நின்றுழிச் செறிந்தவை நின்செய லாதலின் உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர .....(15) பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர் நிகழ்ச்சியின் நிகழின் அல்லது புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே. | 3 |
1029 |
பொருள்உணர்ந் தோங்கிய பூமகன் முதலா இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர் உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும் திருவினும் திறலினும் செய்தொழில் வகையினும் வெவ்வே றாகி வினையொடும் பிரியாது ....(5) ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம் மன்னிய வேலையுள் வான்திரை போல நின்னிடை எழுந்து நின்னிடை ஆகியும் பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும் விரவியும் வேறாய் நின்றனை விளக்கும் ...(10) ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர மூவா மேனி முதல்வ நின்னருள் பெற்றவர் அறியின் அல்லது மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே. | 4 |
1030 |
மயக்கமில் சொல்நீ ஆயினும் மற்றவை துயக்க நின்திறம் அறியாச் சூழலும் உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது கறைபட ஆங்கே கரந்த கள்ளமும் செய்வினை உலகினில் செய்வோய் எனினும் .....(5) அவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும் இனத்திடை இன்பம் வேண்டிநின் பணிவோர் மனத்திடை வாரி ஆகிய வனப்பும் அன்பின் அடைந்தவர்க் கணிமையும் அல்லவர்ச் சேய்மையும் நாள்தொறும் ......(10) என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின் கண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல் உண்டென உணர்ந்தனம் ஒற்றி யூர மன்னிய பெரும்புகழ் மாதவத் துன்னிய செஞ்சடைத் தூமதி யோயே. ........(15) | 5 |
1031 |
தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி ஆமதி யான்என அமைத்த வாறே அறனுரு வாகிய ஆனே றேறுதல் இறைவன் யானென இயற்று மாறே அதுஅவள் அவனென நின்றமை யார்க்கும் ....(5) பொதுநிலை யானென உணர்த்திய பொருளே முக்கணன் என்பது முத்தீ வேள்வியில் தொக்க தென்னிடை என்பதோர் சுருக்கே வேத மான்மறி ஏந்துதல் மற்றதன் நாதன் நான்என நவிற்று மாறே ..(10) மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல் மூவரும் யான்என மொழிந்த வாறே எண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில் உண்மை யான்என உணர்த்திய வாறே நிலம்நீர் தீவளி உயர்வான் என்றும் ......(15) உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும் பொருளும் நற்பூதப் படையோய் என்றும் தெருளநின் றுலகினில் தெருட்டு மாறே ஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும் ஓங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத் .......(20) தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த சொற்பொருள் வன்மையிற் சுழலும் மாந்தர்க் காதி யாகிய அறுதொழி லாளர் ஓதல் ஓவா ஒற்றி யூர சிறுவர் தம் செய்கையிற் படுத்து .......(25) முறுவலித் திருத்திநீ முகப்படும் அளவே. | 6 |
1032 |
அளவினில் இறந்த பெருமையை ஆயினும் எனதுளம் அகலா தொடுங்கிநின் றுளையே மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும் வையகம் முழுதும்நின் வடிவெனப் படுமே கைவலத் திலைநீ எனினும் காதல் ...(5) செய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயே சொல்லிய வகையால் துணையலை ஆயினும் நல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயே எங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை தங்கிய அவரைச் சாராய் நீயே, அஃதான்று .....(10) பிறவாப் பிறவியை பெருகாப் பெருமையை துறவாத் துறவியை தொடராத் தொடர்ச்சியை நுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை அகலா அகற்சியை அணுகா அணிமையை செய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை .....(15) வெய்யை தணியை விழுமியை நொய்யை செய்யை பசியை வௌியை கரியை ஆக்குதி அழித்தி ஆன பல்பொருள் நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி ஏனைய வாகிய எண்ணில் பல்குணம் .....(20) நினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின் ஓங்குகடல் உடுத்த ஒற்றி யூர ஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம் சொல்நிலை சுருங்கின் அல்லது நின்இயல் அறிவோர் யார்இரு நிலத்தே. ....(25) | 7 |
1033 |
நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு சொலத்தகு பெருமைத் தூரா ஆக்கை மெய்வளி ஐயொடு பித்தொன் றாக ஐவகை நெடுங்காற் றாங்குடன் அடிப்ப நரையெனும் நுரையே நாடொறும் வெளுப்ப .....(5) திரையுடைத் தோலே செழுந்திரை யாகக் கூடிய குருதி நீரினுள் நிறைந்து மூடிய இருமல் ஓசையின் முழங்கிச் சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக் குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப .......(10) ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து தோன்றிய பல்பிணிப் பின்னகஞ் சுழலக் கால்கையின் நரம்பே கண்ட மாக மேதகு நிணமே மெய்ச்சா லாக முழக்குடைத் துளையே முகங்க ளாக .......(15) வழுக்குடை மூக்கா றோதம்வந் தொலிப்ப இப்பரி சியற்றிய உடலிருங் கடலுள் துப்புர வென்னும் சுழித்தலைப் பட்டிங் காவா என்றுநின் அருளினைப் பெற்றவர் நாவா யாகிய நாதநின் பாதம் ...(20) முந்திச் சென்று முறைமையின் வணங்கிச் சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி உருகிய ஆர்வப் பாய்விரித் தார்த்துப் பெருகிய நிறையெனும் கயிற்றிடைப் பிணித்துத் துன்னிய சுற்றத் தொடர்க்கயி றறுத்து ...(25) மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக் காமப் பாரெனும் கடுவௌி அற்ற தூமச் சோதிச் சுடர்க்குற நிறுத்திச் சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி நெருங்கா அளவில் நீள்கரை ஏற்ற ... (30) வாங்க யாத்திரை போக்குதி போலும் ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே. | 8 |
1034 |
ஒற்றி யூர உலவா நின்குணம் பற்றி யாரப் பரவுதல் பொருட்டா என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின் ஆவலித் தழுதலின் அகன்ற அம்மனை ...(5) கேவலம் சேய்மையிற் கேளாள் ஆயினும் பிரித்தற் கரிய பெற்றிய தாகிக் குறைவினில் ஆர்த்தும் குழவிய தியல்பினை அறியா தெண்ணில் ஊழிப் பிறவியின் மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கே ...(10) தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம் வாய்தலை அறியா மயக்குறும் வினையேன் மல்கிய இன்பத் தோடுடன் கூடிய எல்லையில் அவாவினில் இயற்றிய வாகக் கட்டிய நீயே அவிழ்க்கின் அல்லது ....(15) எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன் துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி வெள்ளிடை காண விருப்புறு வினையேன் தந்தையும் தாயும் சாதியும் அறிவும்நம் சிந்தையும் திருவும் செல்கதித் திறனும் ...(20) துன்பமும் துறவும் தூய்மையும் அறிவும் இன்பமும் புகழும் இவைபல பிறவும் சுவைஒளி ஊறோசை நாற்றம் தோற்றம் என்றிவை முதலா விளங்குவ எல்லாம் ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து ...(25) நின்றனன் தமியேன் நின்னடி அல்லது சார்வுமற் றின்மையின் தளர்ந்தோர் காட்சிக் சேர்விட மதனைத் திறப்பட நாடி எய்துதற் கரியோய் யான்இனிச் செய்வதும் அறிவனோ தெரியுங் காலே. ...(30) | 9 |
1035 |
காலற் சீறிய கழலோய் போற்றி மூலத் தொகுதி முதல்வ போற்றி ஒற்றி மாநகர் உடையோய் போற்றி முற்றும் ஆகிய முதல்வ போற்றி அணைதொறும் சிறக்கும் அமிர்தே போற்றி ....(5) இணைபிறி தில்லா ஈச போற்றி ஆர்வம் செய்பவர்க் கணியோய் போற்றி தீர்வில் இன்சுவைத் தேனேபோற்றி வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி .......(10) விரிகடல் வையக வித்தே போற்றி புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி காண முன்பொருள் கருத்துறை செம்மைக் காணி யாகிய அரனே போற்றி வெம்மை தண்மையென் றிவைகுணம் உடைமையின் ......(15) பெண்ணோ டாணெனும் பெயரோய் போற்றி மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும் தீப மாகிய சிவனே போற்றி மாலோய் போற்றி மறையோய் போற்றி மேலோய் போற்றி வேதிய போற்றி .....(20) சந்திர போற்றி தழலோய் போற்றி இந்திர போற்றி இறைவ போற்றி அமரா போற்றி அழகா போற்றி குமரா போற்றி கூத்தா போற்றி பொருளே போற்றி போற்றி என்றுனை ....(25) நாத்தழும் பிருக்க நவிற்றின் அல்லது ஏத்துதற் குரியோர் யார்இரு நிலத்தே. | 10 |
திருச்சிற்றம்பலம்
12. நம்பியாண்டார் நம்பி பாசுரங்கள்
12.1 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை (1036 - 1055)
1036 |
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் - புன்னை விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண் அரசுமகிழ் அத்திமுகத் தான். | 1 |
1037 |
முகத்தாற் கரியன்என் றாலும் தனையே முயன்றவர்க்கு மிகத்தான் வௌியன்என் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார் அகத்தான் திகழ்திரு நாரையூர் அம்மான் பயந்தஎம்மான் உகத்தா னவன்தன் உடலம் பிளந்த ஒருகொம்பனே. | 2 |
1038 |
கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய் பின்னவலம் செய்வதெனோ பேசு. | 3 |
1039 |
பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியும்என் றேசத் தகும்படி ஏறுவ தேயிமை யாதமுக்கட் கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும்இந்தத் தேசத் தவர்தொழு நாரைப் பதியுள் சிவக்களிறே. | 4 |
1040 |
களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின் ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும் பின்நாரை யூர்ஆரல் ஆரும் பெரும்படுகர் மன்நாரை யூரான் மகன். | 5 |
1041 |
மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும் சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் சுரன்மகற்கு முகத்தது கைஅந்தக் கையது மூக்கந்த மூக்கதனின் அகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே. | 6 |
1042 |
மருப்பைஒரு கைக்கொண்டு நாரையூர் மன்னும் பொருப்பைஅடி போற்றத் துணிந்தால் - நெருப்பை அருந்தஎண்ணு கின்றஎறும் பன்றே அவரை வருந்தஎண்ணு கின்ற மலம். | 7 |
1043 |
மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப் புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற் சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே வலஞ்செய்து கொண்ட மதக்களி றேஉன்னை வாழ்த்துவனே. | 8 |
1044 |
வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத் தனஞ்சாய லைத்தருவான் அன்றோ - இனஞ்சாயத் தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும் நாரையூர் நம்பர்மக னாம். | 9 |
1045 |
நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத் தேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனே காரண னேஎம் கணபதி யேநற் கரிவதனா ஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே. | 10 |
1046 |
அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின் எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய் கொங்கெழுதார் ஐங்கரத்த கோ. | 11 |
1047 |
கோவிற் கொடிய நமன்தமர் கூடா வகைவிடுவன் காவிற் திகழ்தரு நாரைப் பதியிற் கரும்பனைக்கை மேவற் கரிய இருமதத் தொற்றை மருப்பின்முக்கண் ஏவிற் புருவத் திமையவள் தான்பெற்ற யானையையே. | 12 |
1048 |
யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை தானே சனார்த்தனற்கு நல்கினான் - தேனே தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலன்ஏந்தி எடுத்த மதமுகத்த ஏறு. | 13 |
1049 |
ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்இருந்தேன் நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச் சீறிய வெம்பணைச் சிங்கத்தி னுக்கிளை யானைவிண்ணோர் வேறியல் பால்தொழு நாரைப் பதியுள் விநாயகனே. | 14 |
1050 |
கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார் மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்கு மாசார மோசொல்லு வான். | 15 |
1051 |
வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ் தேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழும் கோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின் மானிற் பிறந்த களிறென் றுரைப்பர்இவ் வையகத்தே. | 16 |
1052 |
வையகத்தார் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர் மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான் ஆங்கனிநஞ் சிந்தைஅமர் வான். | 17 |
1053 |
அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதிஅமர்ந்த குமரா குமரர்க்கு முன்னவ னேகொடித் தேர்அவுணர் தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேஎனநின் றமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே. | 18 |
1054 |
அவமதியா துள்ளமே அல்லலற நல்ல தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம் கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர் நம்பன் சிறுவன்சீர் நாம். | 19 |
1055 |
நாந்தன மாமனம் ஏத்துகண் டாய்என்றும் நாண்மலரால் தாந்தன மாக இருந்தனன் நாரைப் பதிதன்னுளே சேர்ந்தன னேஐந்து செங்கைய னேநின் திரள்மருப்பை ஏந்தின னேஎன்னை ஆண்டவ னேஎனக் கென்னையனே. | 20 |
திருச்சிற்றம்பலம்
12.2 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் (1056 - 1125)
1056 |
நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீள்மலர்க் கண்பனிப்ப வஞ்சம் கடிந்துன்னை வந்தித்தி லேன்அன்று வானர்உய்ய நஞ்சங் கருந்து பெருந்தகை யேநல்ல தில்லைநின்ற அஞ்செம் பவளவண் ணாஅருட்கு யான்இனி யாரென்பரே. | 1 |
1057 |
என்பும் தழுவிய ஊனும் நெகஅக மேஎழுந்த அன்பின் வழிவந்த ஆரமிர் தேஅடி யேன்உரைத்த வன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்வளர் தில்லைதன்னுள் மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே. | 2 |
1058 |
அவநெறிக் கேவிழப் புக்கஇந் நான்அழுந் தாமைவாங்கித் தவநெறிக் கேஇட்ட தத்துவ னேஅத் தவப்பயனாம் சிவநெறிக் கேஎன்னை உய்ப்பவ னேசென னந்தொறுஞ்செய் பவமறுத் தாள்வதற் கோதில்லை நட்டம் பயில்கின்றதே. | 3 |
1059 |
பயில்கின் றிலேன்நின் திறத்திரு நாமம் பனிமலர்த்தார் முயல்கின் றிலேன் நின் திருவடிக் கேஅப்ப முன்னுதில்லை இயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துள்எந் தாய்இங்ஙனே அயர்கின்ற நான்எங்ங னேபெறு மாறுநின் னாரருளே. | 4 |
1060 |
அருதிக்கு விம்மி நிவந்ததோ வெள்ளிக் குவடதஞ்சு பருதிக் குழவி உமிழ்கின்ற தேஒக்கும் பற்றுவிட்டோர் கருதித் தொழுகழற் பாதமும் கைத்தலம் நான்கும்மெய்த்த சுருதிப் பதம்முழங் குந்தில்லை மேய சுடரினுக்கே. | 5 |
1061 |
சுடலைப் பொடியும் படுதலை மாலையும் சூழ்ந்தஎன்பும் மடலைப் பொலிமலர் மாலைமென் தோள்மேல் மயிர்க்கயிறும் அடலைப் பொலிஅயில் மூவிலை வேலும் அணிகொள்தில்லை விடலைக்கென் ஆனைக் கழகிது வேத வினோதத்தையே. | 6 |
1062 |
வேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள் நாதன் அவன்எச்சன் நற்றலை யும்தக்க னார்தலையும் காதிய தில்லைச்சிற் றம்பலத் தான்கழல் சூழந்துநின்று மாதவர் என்னோ மறைமொழி யாலே வழுத்துவதே. | 7 |
1063 |
வழுத்திய சீர்த்திரு மால்உல குண்டவன் பாம்புதன்னின் கழுத்தரு கேதுயின் றானுக்கப் பாந்தளைக் கங்கணமாச் செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம் பலத்தான் திருக்கடையிட அழுத்திய கல்லொத் தனன்ஆயன் ஆகிய மாயவனே. | 8 |
1064 |
மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையே போயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர்நெஞ் சேயவன் சிற்றம் பலத்துள்நின் றாடுங் கழல்எவர்க்கும் தாயவன் தன்பொற் கழல்என் தலைமறை நன்னிழலே. | 9 |
1065 |
நிழல்படு பூண்நெடு மால்அயன் காணாமை நீண்டவரே தழல்படு பொன்னகல் ஏந்தித் தமருகந் தாடித்தமைத் தெழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை அம்பலத்தே குழல்படு சொல்வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே. | 10 |
1066 |
கூத்தனென் றுந்தில்லை வாணன்என் றும்குழு மிட்டிமையோர் ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை யாதே இடுசுணங்கை மூத்தவன் பெண்டீர் குணலையிட் டாலும் முகில்நிறத்த சாத்தனென் றாலும் வருமோ இவளுக்குத் தண்ணெனவே. | 11 |
1067 |
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்பலந்தன்னில் மன்னிநின்ற விண்ணாள னைக்கண்ட நாள்விருப் பாயென் உடல்முழுதும் கண்ணாங் கிலோதொழக் கையாங் கிலோதிரு நாமங்கள்கற் றெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி லோஎனக் கிப்பிறப்பே. | 12 |
1068 |
பிறவியிற் பெற்ற பயனொன்று கண்டிலம் பேரொலிநீர் நறவியல் பூம்பொழில் தில்லையுள் நாடகம் ஆடுகின்ற துறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனைத் தொண்டர்தொண்டர் உறவியல் வாற்கண்கள் கண்டுகண் டின்பத்தை உண்டிடவே. | 13 |
1069 |
உண்டேன் அவரருள் ஆரமிர் தத்தினை உண்டலுமே கண்டேன் எடுத்த கழலும் கனலும் கவித்தகையும் ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கும் ஒளிநகையும் வண்டேன் மலர்த்தில்லை அம்பலத் தாடும் மணியினையே. | 14 |
1070 |
மணியொப் பனதிரு மால்மகு டத்து மலர்க்கமலத் தணியொப் பனஅவன் தன்முடி மேல்அடி யேன்இடர்க்குத் துணியச் சமைந்தநல் லீர்வாள் அனையன சூழ்பொழில்கள் திணியத் திகழ்தில்லை அம்பலத் தான்தன் திருந்தடியே. | 15 |
1071 |
அடியிட்ட கண்ணினுக் கோஅவன் அன்பினுக் கோஅவுணர் செடியிட்ட வான்துயர் சேர்வதற் கோதில்லை அம்பலத்து முடியிட்ட கொன்றைநன் முக்கட் பிரான்அன்று மூவுலகும் அடியிட்ட கண்ணனுக் கீந்தது வாய்ந்த அரும்படையே. | 16 |
1072 |
படைபடு கண்ணிதன் பங்கதென் தில்லைப் பரம்பரவல் விடைபடு கேதுக விண்ணப்பம் கேள்என் விதிவசத்தால் கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளுகண்டாய் புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதம்என் னுள்புகவே. | 17 |
1073 |
புகவுகிர் வாளெயிற் றால்நிலம் கீண்டு பொறிகலங்கி மிகவுகு மாற்கரும் பாதத்த னேல்வியன் தில்லைதன்னுள் நகவு குலாமதிக் கண்ணியற் கங்கணன் என்றனன்றும் தகவு கொலாந்தக வன்று கொலாமென்று சங்கிப்பனே. | 18 |
1074 |
சங்கோர் கரத்தன் மகன்தக்கன் தானவர் நான்முகத்தோன் செங்கோல இந்திரன் தோள்தலை ஊர்வேள்வி சீர்உடலம் அங்கோல வெவ்வழ லாயிட் டழிந்தெரிந் தற்றனவால் எங்கோன் எழில்தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே. | 19 |
1075 |
ஏவுசெய் மேருத் தடக்கை எழில்தில்லை அம்பலத்து மேவுசெய் மேனிப் பிரான்அன்றி அங்கணர் மிக்குளரே காவுசெய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத் தேவுசெய் வான்வாய்ப் புனலாட் டியதிறல் வேடுவனே. | 20 |
1076 |
வேடனென் றாள்வில் விசயற்கு வெங்கணை அன்றளித்த கோடனென் றாள்குழைக் காதனென் றாள்இடக் காதில்இட்ட தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை அம்பலத் தாடுகின்ற சேடனென் றாள்மங்கை அங்கைச் சரிவளை சிந்தினவே. | 21 |
1077 |
சிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள் வந்திக் கவும்மனம் வாய்கரம் என்னும் வழிகள்பெற்றும் சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண் ணார்தில்லை அம்பலத்துள் அந்திக் கமர்திரு மேனிஎம் மான்தன் அருள்பெறவே. | 22 |
1078 |
அருள்தரு சீர்த்தில்லை அம்பலத் தான்தன் அருளி னன்றிப் பொருள்தரு வானத் தரசாத லிற்புழு வாதல்நன்றாம் சுருள்தரு செஞ்சடை யோன்அரு ளேல்துற விக்குநன்றாம் இருள்தரு கீழேழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே. | 23 |
1079 |
சிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச் சிற்றம்பலத்துப் பிறைப்பிள வார்சடை யோன்திரு நாமங்க ளேபிதற்ற மிறைப்புள வாகிவெண் ணீறணிந் தோடேந்தும் வித்தகர்தம் உறைப்புள வோஅயன் மாலினொ டும்பர்தம் நாயகற்கே. | 24 |
1080 |
அகழ்சூழ் மதில்தில்லை அம்பலக் கூத்த அடியம்இட்ட முகிழ்சூழ் இலையும் முகைகளும் ஏயுங்கொல் கற்பகத்தின் திகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் சிந்தையராய்ப் புகழ்சூழ் இமையவர் போற்றித் தொழும்நின் பூங்கழற்கே. | 25 |
1081 |
பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசொம்பொன் அம்பலத்து வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல் ஆந்தண் பழைய அவிழைஅன் பாகிய பண்டைப்பறைச் சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே. | 26 |
1082 |
ஆகங் கனகனைக் கீறிய கோளரிக் கஞ்சிவிண்ணோர் பாகங் கனங்குழை யாய்அரு ளாயெனத் தில்லைப்பிரான் வேகந் தருஞ்சிம்புள் விட்டரி வெங்கதஞ் செற்றிலனேல் மோகங் கலந்தன் றுலந்ததன் றோஇந்த மூவுலகே. | 27 |
1083 |
மூவுல கத்தவர் ஏத்தித் தொழுதில்லை முக்கட்பிராற் கேவு தொழில்செய்யப் பெற்றவர் யாரெனில் ஏர்விடையாய்த் தாவு தொழிற்பட் டெடுத்தனன் மால்அயன் சாரதியா மேவிர தத்தொடு பூண்டதொன் மாமிக்க வேதங்களே. | 28 |
1084 |
வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை அம்பலத்து மேதகக் கோயில்கொண் டோன்சேய வன்வீ ரணக்குடிவாய்ப் போதகப் போர்வைப் பொறிவாள் அரவரைப் பொங்குசினச் சாதகப் பெண்பிளை தன்னையன் தந்த தலைமகனே. | 29 |
1085 |
தலையவன் பின்னவன் தாய்தந்தை இந்தத் தராதலத்து நிலையவம் நீக்கு தொழில்புரிந் தோன்நடு வாகிநின்ற கொலையவன் சூலப் படையவன் ஆலத்தெழு கொழுந்தின் இலையவன் காண்டற் கருந்தில்லை அம்பலத் துள்இறையே. | 30 |
1086 |
இறையும் தௌிகிலர் கண்டும் எழில்தில்லை அம்பலத்துள் அறையும் புனற்சென்னி யோன்அரு ளால்அன் றடுகரிமேல் நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்நிறை தார்பரிமேல் நறையுங் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே. | 31 |
1087 |
நல்வழி நின்றார் பகைநன்று நொய்யர் உறவிலென்னும் சொல்வழி கண்டனம் யாம்தொகு சீர்த்தில்லை அம்பலத்து வில்வழி தானவர் ஊர்எரித் தோன்வியன் சாக்கியனார் கல்வழி நேர்நின் றளித்தனன் காண்க சிவகதியே. | 32 |
1088 |
கதியே அடியவர் எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த நிதியே நிமிர்புன் சடைஅமிர் தேநின்னை என்னுள்வைத்த மதியே வளர்தில்லை அம்பலத் தாய்மகிழ் மாமலையாள் பதியே பொறுத்தரு ளாய்கொடி யேன்செய்த பல்பிழையே. | 33 |
1089 |
பிழையா யினவே பெருக்கிநின் பெய்கழற் கன்புதன்னில் நுழையாத சிந்தையி னேனையும் மந்தா கினித்துவலை முழையார் தருதலை மாலை முடித்த முழுமுதலே புழையார் கரியுரித் தோய்தில்லை நாத பொறுத்தருளே. | 34 |
1090 |
பொறுத்தில னேனும்பன் னஞ்சினைப் பொங்கெரி வெங்கதத்தைச் செறுத்தில னேனும்நந் தில்லைப் பிரான்அத் திரிபுரங்கள் கறுத்தில னேனுங் கமலத் தயன்கதிர் மாமுடியை அறுத்தில னேனும் அமரருக் கென்கொல் அடுப்பனவே. | 35 |
1091 |
அடுக்கிய சீலைய ராய்அகல் ஏந்தித் தசைஎலும்பில் ஒடுக்கிய மேனியோ டூண்இரப் பார்ஒள் இரணியனை நடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல இடுக்கிய பாதன்தன் தில்லை தொழாவிட்ட ஏழையரே. | 36 |
1092 |
ஏழையென் புன்மை கருதா திடையறா அன்பெனக்கு வாழிநின் பாத மலர்க்கே மருவ அருளுகண்டாய் மாழைமென் நோக்கிதன் பங்க வளர்தில்லை அம்பலத்துப் போழிளந் திங்கள் சடைமுடி மேல்வைத்த புண்ணியனே. | 37 |
1093 |
புண்ணிய னேஎன்று போற்றி செயாது புலன்வழியே நண்ணிய னேற் கினி யாது கொலாம்புகல் என்னுள்வந்திட் டண்ணிய னேதில்லை அம்பல வாஅலர் திங்கள் வைத்த கண்ணிய னேசெய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே. | 38 |
1094 |
கறுத்தகண் டாஅண்ட வாணா வருபுனற் கங்கைசடை செறுத்தசிந் தாமணி யேதில்லை யாய்என்னைத் தீவினைகள் ஒறுத்தல்கண் டால்சிரி யாரோ பிறர்என் உறுதுயரை அறுத்தல்செய் யாவிடின் ஆர்க்கோ வருஞ்சொல் அரும்பழியே. | 39 |
1095 |
பழித்தக் கவும்இக ழான்தில்லை யான்பண்டு வேட்டுவனும் பழித்திட் டிறைச்சி கலையன் அளித்த விருக்குழங்கன் மொழித்தக்க சீர்அதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும் இழித்தக்க என்னா தமிர்துசெய் தான்என் றியம்புவரே. | 40 |
1096 |
வரந்தரு மாறிதன் மேலும்உண் டோவயல் தில்லைதன்னுள் புரந்தரன் மால்தொழ நின்ற பிரான்புலைப் பொய்ம்மையிலே நிரந்தர மாய்நின்ற என்னையும் மெய்ம்மையின் தன்னடியார் தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன் பேசருந் தன்மைஇதே. | 41 |
1097 |
தன்றாள் தரித்தார் இயாவர்க்கும் மீளா வழிதருவான் குன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடைஉடையோன் மன்றாட வும்பின்னும் மற்றவன் பாதம் வணங்கிஅங்கே ஒன்றார் இரண்டில் விழுவர்அந் தோசில ஊமர்களே. | 42 |
1098 |
களைகண் இலாமையும் தன்பொற் கழல்துணை யாம்தன்மையும் துளைகள் நிலாம்முகக் கைக்கரிப் போர்வைச் சுரம்நினையான் தளைகள் நிலாமலர்க் கொன்றையன் தண்புலி யூரன்என்றேன் வளைகள் நிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே. | 43 |
1099 |
வரித்தடந் திண்சிலை மன்மதன் ஆதலும் ஆழிவட்டம் தரித்தவன் தன்மகன் என்பதோர் பொற்பும் தவநெறிகள் தெரித்தவன் தில்லையுள் சிற்றம் பலவன் திருப்புருவம் நெரித்தலுங் கண்டது வெண்பொடி யேயன்றி நின்றிலவே. | 44 |
1100 |
நின்றில வேவிச யன்னொடும் சிந்தை களிப்புறநீள் தென்தில்லை மாநடம் ஆடும் பிரான்தன் திருமலைமேல் தன்தலை யால்நடந் தேறிச் சரங்கொண் டிழிந்ததென்பர் கன்றினை யேவிள மேலெறிந் தார்த்த கரியவனே. | 45 |
1101 |
கருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன் விருப்புரு வத்தினொ டுள்ளம் உருகேன் விதிர்விதிரேன் இருப்புரு வச்சிந்தை என்னைவந் தாண்டதும் எவ்வணமோ பொருப்புரு வப்புரி சைத்தில்லை ஆடல் புரிந்தவனே. | 46 |
1102 |
புரிந்தஅன்பின்றியும் பொய்ம்மையி லேயும் திசைவழியே விரிந்தகங் கைமலர் சென்னியில் கூப்பில் வியன்நமனார் பரிந்தவன் ஊர்புகல் இல்லை பதிமூன் றெரியஅம்பு தெரிந்த எங் கோன்தன் திரையார் புனல்வயல் சேண்தில்லையே. | 47 |
1103 |
சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டும்அன்பு பூண்டிலை நின்னை மறந்திலை ஆங்கவன் பூங்கழற்கே மாண்டிலை இன்னம் புலன்வழி யேவந்து வாழ்ந்திடுவான் மீண்டனை என்னைஎன் செய்திட வோசிந்தை நீவிளம்பே. | 48 |
1104 |
விளவைத் தளர்வித்த விண்டுவும் தாமரை மேல்அயனும் அளவிற் கறியா வகைநின்ற அன்றும் அடுக்கல் பெற்ற தளர்விற் றிருநகை யாளும்நின் பாகங்கொல் தண்புலியூர்க் களவிற் கனிபுரை யுங்கண்ட வார்சடைக் கங்கையனே. | 49 |
1105 |
கங்கை வலம்இடம் பூவலம் குண்டலம் தோடிடப்பால் தங்கும் கரவலம் வெம்மழு வீயிடம் பாந்தள்வலம் சங்கம் இடம்வலம் தோலிடம் ஆடை வலம்அக்கிடம் அங்கஞ் சரிஅம் பலவன் வலங்காண் இடம்அணங்கே. | 50 |
1106 |
அணங்கா டகக்குன்ற மாதற வாட்டிய வாலமர்ந்தாட் கிணங்கா யவன்தில்லை எல்லை மிதித்தலும் என்புருகா வணங்கா வழுத்தா விழாஎழும் பாவைத் தவாமதர்த்த குணங்காண் இவள்என்ன என்றுகொ லாம்வந்து கூடுவதே. | 51 |
1107 |
கூடுவ தம்பலக் கூத்தன் அடியார் குழுவுதொறும் தேடுவ தாங்கவன் ஆக்கம்அச் செவ்வழி அவ்வழியே ஓடுவ துள்ளத் திருத்துவ தொண்சுட ரைப்பிறவி வீடுவ தாக நினையவல் லோர்செய்யும் வித்தகமே. | 52 |
1108 |
வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத் தெண்தோள் மத்தகக் கைம்மலைப் போர்வை மதில்தில்லை மன்னனைத்தம் சித்தகக் கோயில் இருத்தும் திறத்தா கமிகர்க்கல்லால் புத்தகப் பேய்களுக் கெங்குத்த தோஅரன் பொன்னடியே. | 53 |
1109 |
பொன்னம் பலத்துறை புண்ணியன் என்பர் புயல்மறந்த கன்னம்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற் கன்றுபுன்கூர் மன்னு மழைபொழிந் தீர்அறு வேலிகொண் டாங்கவற்கே பின்னும் பிழைதவிர்ந் தீர்அறு வேலிகொள் பிஞ்ஞகனே. | 54 |
1110 |
நேசன்அல் லேன்நினை யேன்வினை தீர்க்குந் திருவடிக்கீழ் வாசநன் மாமல ரிட்டிறைஞ் சேன்என்தன் வாயதனால் தேசன்என் னானை பொன்னார் திருச் சிற்றம் பலம்நிலவும் ஈசன்என் னேன்பிறப் பென்னாய்க் கழியுங்கொல் என்தனக்கே. | 55 |
1111 |
தனந்தலை சக்கரம் வானத் தலைமை குபேரன்தக்கன் வனந்தலை ஏறடர்த் தோன்வா சவன்உயிர் பல்லுடல்ஊர் சினந்தலை காலன் பகல்காமன் தானவர் தில்லைவிண்ணோர் இனந்தலை வன்அரு ளால்முனி வால்பெற் றிகந்தவரே. | 56 |
1112 |
அவமதித் தாழ்நர கத்தில் இடப்படும் ஆதர்களும் தவமதித் தொப்பிலர் என்னவிண் ஆளும் தகைமையரும் நவநிதித் தில்லையுட் சிற்றம் பலத்து நடம்பயிலும் சிவநிதிக் கேநினை யாரும் நினைந்திட்ட செல்வருமே. | 57 |
1113 |
வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத் திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப் பொருளைத் தெருளாத உள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே. | 58 |
1114 |
சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும் செழுஞ்சடைமேல் விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும் வெங்கதப் பாந்தளும்தீத் தரித்திட்ட அங்கையும் சங்கச் சுருளும்என் நெஞ்சினுள்ளே தெரித்திட்ட வாதில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே. | 59 |
1115 |
நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி வென்செய்யும் காமன்அன்று கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக் குளிர்ந்தனன் விற்கொடும்பூண் விடுஞ்சினத் தானவர் வெந்திலர் வெய்தென வெங்கதத்தை ஒடுங்கிய காலன்அந் நாள்நின் றுதையுணா விட்டனனே. | 60 |
1116 |
விட்டங் கொளிமணிப் பூண்திகழ் வன்மதன் மெய்யுரைக்கில் இட்டங் கரியநல் லான்அல்லன் அம்பலத் தெம்பரன்மேல் கட்டங் கியகணை எய்தலும் தன்னைப்பொன் னார்முடிமேல் புட்டங்கி னான்மக னாமென்று பார்க்கப் பொடிந்தனனே. | 61 |
1117 |
பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லா வடியே படஅமை யுங்கணை என்ற வரகுணன்தன் முடியே தருகழல் அம்பலத் தாடிதன் மொய்கழலே. | 62 |
1118 |
கழலும் பசுபாச ராம்இமை யோர்தங் கழல்பணிந்திட் டழலும் இருக்கும் தருக்குடை யோர்இடப் பால்வலப்பால் தழலும் தமருக மும்பிடித் தாடிசிற் றம்பலத்தைச் சுழலும் ஒருகால் இருகால் வரவல்ல தோன்றல்களே. | 63 |
1119 |
தோன்றலை வெண்மதி தாங்கியைத் துள்ளிய மாலயற்குத் தான்தலை பாதங்கள் சார்எரி யோன்தன்னைச் சார்ந்தவர்க்குத் தேன்தலை ஆன்பால் அதுகலந் தால்அன்ன சீரனைச்சீர் வான்தலை நாதனைக் காண்பதென் றோதில்லை மன்றிடையே. | 64 |
1120 |
மன்றங் கமர்திருச் சிற்றம் பலவ வடவனத்து மின்றங் கிடைக்குந்தி நாடக மாடக்கொல் வெண்தரங்கம் துன்றங் கிளர்கங்கை யாளைச் சுடுசினத் தீயரவக் கன்றங் கடைசடை மேல்அடை யாவிட்ட கைதவமே. | 65 |
1121 |
தவனைத் தவத்தவர்க் கன்பனைத் தன்அடி எற்குதவும் சிவனைச் சிவக்கத் திரிபுரத் தைச்சிவந் தானைச் செய்ய அவனைத் தவளத் திருநீ றனைப்பெரு நீர்கரந்த பவனைப் பணியுமின் நும்பண்டை வல்வினை பற்றறவே. | 66 |
1122 |
பற்றற முப்புரம் வெந்தது பைம்பொழில் தில்லைதன்னுள் செற்றரு மாமணிக் கோயிலில் நின்றது தேவர்கணம் சுற்றரு நின்புகழ் ஏத்தித் திரிவது சூழ்சடையோய் புற்றர வாட்டித் திரியும் அதுவொரு புல்லனவே. | 67 |
1123 |
புல்லறி வின்மற்றைத் தேவரும் பூம்புலி யூருள்நின்ற அல்லெறி மாமதிக் கண்ணிய னைப்போல் அருளுவரே கல்லெறிந் தானும்தன் வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த நல்லறி வாளனும் மீளா வழிசென்று நண்ணினரே. | 68 |
1124 |
நண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி நமனுலகத் தெண்ணினை நீக்கி இமையோர் உலகத் திருக்கலுற்றீர் பெண்ணினொர் பாகத்தன் சிற்றம் பலத்துப் பெருநடனைக் கண்ணினை யார்தரக் கண்டுகை யாரத் தொழுமின்களே. | 69 |
1125 |
கைச்செல்வம் எய்திட லாமென்று பின்சென்று கண்குழித்தல் பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்கே என்றும் பொன்றல்இல்லா அச்செல்வம் எய்திட வேண்டுதி யேல்தில்லை அம்பலத்துள் இச்செல்வன் பாதம் கருதிரந் தேன்உன்னை என்நெஞ்சமே. | 70 |
திருச்சிற்றம்பலம்
12.3 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
திருத்தொண்டர் திருவந்தாதி (1126 - 1215)
1126 |
பொன்னி வடகரை சேர்நாரை யூரில் புழைக்கைமுக மன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல் பன்னஅத் தொண்டத் தொகைவகை பல்கும்அந் தாதிதனைச் சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணைதுணையே. | 1 |
1127 | தில்லைவாழ் அந்தணர் செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர் ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர்எரித்த அப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த துப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே. | 2 |
1128 | திருநீலகண்ட நாயனார் சொல்லச் சிவன்திரு ஆணைதன்தூமொழி தோள்நசையை ஒல்லைத் துறந்துரு மூத்ததற் பின்உமை கோன் அருளால் வில்லைப் புரைநுத லாளோ டிளமைபெற் றின்பமிக்கான் தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே. | 3 |
1129 | இயற்பகை நாயனார் செய்தவர் வேண்டிய தியாதும் கொடுப்பச் சிவன்தவனாய்க் கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந் தெய்திய காவிரிப் பூம்பட் டினத்துள் இயற்பகையே. | 4 |
1130 | இளையான்குடிமாற நாயனார் இயலா விடைச்சென்ற மாதவற் கின்னமு தாவிதைத்த வயலார் முளைவித்து வாரி மனைஅலக் கால்வறுத்துச் செயலார் பயிர்விழுத் தீங்கறி ஆக்கும் அவன்செழுநீர்க் கயலார் இளையான் குடியுடை மாறன்எங் கற்பகமே. | 5 |
1131 | மெய்ப்பொருள் நாயனார் கற்றநன் மெய்த்தவன் போல்ஒரு பொய்த்தவன் காய்சினத்தால் செற்றவன் தன்னை அவனைச் செறப்புக லும்திருவாய் மற்றவன் `தத்தா நமரே' எனச்சொல்லி வான்உலகம் பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு ளாம்என்று பேசுவரே. | 6 |
1132 | விறன்மிண்ட நாயனார் பேசும் பெருமையவ் வாரூரனையும் பிரானவனாம் ஈசன் தனையும் புறகுதட் டென்றவன் ஈசனுக்கே நேசன் எனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல் வீசும் பொழில்திருச் செங்குன்றம் மேய விறன்மிண்டேனே. | 7 |
1133 | அமர்நீதி நாயனார் மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின் முண்டம் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர் கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமும் தன்னையுந்தன் துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே. | 8 |
1134 | சுந்தரமூர்த்தி நாயனார் தொழுதும் வணங்கியும் மாலயன் தேடரும் சோதிசென்றாங் கெழுதும் தமிழ்ப்பழ ஆவணம் காட்டி எனக்குன்குடி முழுதும் அடிமைவந் தாட்செய் எனப்பெற்ற வன்முரல்தேன் ஒழுகு மலரின்நற் றார்எம்பி ரான்நம்பி யாரூரனே. | 9 |
1135 | எறிபத்த நாயனார் ஊர்மதில் மூன்றட்ட உத்தமற் கென்றோர் உயர்தவத்தோன் தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்த ஊர்மலை மேற்கொள்ளும் பாகர் உடல்துணி யாக்குமவன் ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே. | 10 |
1136 | ஏனாதிநாத நாயனார் பத்தனை ஏனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள் அத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு கைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும் நித்தனை ஈழக் குலதீபன் என்பர்இந் நீள்நிலத்தே. | 11 |
1137 | கண்ணப்ப நாயனார் நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல் நலத்தில் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கி வலத்தில் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான் குலத்திற் கிராதன்நம் கண்ணப்ப னாம்என்று கூறுவரே. | 12 |
1138 | குங்குலியக்கலய நாயனார் ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள் சாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர் காதலி தாலிகொடுத் தாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன் காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரில் கலையனையே. | 13 |
1139 | மானக் கஞ்சாற நாயனார் கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை நலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும் அலசும் எனக்கரு தாதவன் கூந்தல் அரிந்தளித்தான் மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாறன் எனும்வள்ளலே. | 14 |
1140 | அரிவாட்டாய நாயனார் வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோன் உகலும்இங்கே வெள்ளச் சடையாய் அமுதுசெய் யாவிடில் என்தலையைத் தள்ளத் தகுமென்று வாட்பூட் டியதடங் கையினன் காண் அள்ளற் பழனங் கணமங் கலத்தரி வாட்டாயனே. | 15 |
1141 | ஆனாய நாயனார் தாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த தூயவன் பாதம் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும் வேயவன் மேல்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன் ஆயவன் ஆனாயன் என்னை உவந்தாண் டருளினனே. | 16 |
1142 | சுந்தர மூர்த்தி நாயனார் `அருட்டுறை அத்தற் கடிமைப் பட்டேன் இனி அல்லன்'என்னும் பொருட்டுறை யாவதென் னேஎன்ன வல்லவன் பூங்குவளை இருட்டுறை நீர்வயல் நாவற் பதிக்கும் பிரான்அடைந்தோர் மருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட வல்லவனே. | 17 |
1143 | மூர்த்தி நாயனார் அவந்திரி குண்டமண் ஆவதின் மாள்வனென் றன்றாலவாய்ச் சிவன்திரு மேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கை உவந்தொளிர் பாறையில் தேய்த்துல காண்டஒண் மூர்த்திதன்னூர் நிவந்தபொன் மாட மதுரா புரியென்னும் நீள்பதியே. | 18 |
1144 | முருக நாயனார் பதிகம் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்சீர் மதியம் சடையாற் கலர்தொட் டணிபவன் யான்மகிழ்ந்து துதியம் கழற்சண்பை நாதற்குத் தோழன்வன் றொண்டன்அம்பொன் அதிகம் பெறும்புக லூர்முரு கன்எனும் அந்தணனே. | 19 |
1145 | உருத்திர பசுபதி நாயனார் அந்தாழ் புனல்தன்னில் அல்லும் பகலும்நின் றாதரத்தால் உந்தாத அன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த பைந்தார் உருத்திர பசுபதி தன்னற் பதிவயற்கே நந்தார் திருத்தலை யூர்என் றுரைப்பர்இந் நானிலத்தே. | 20 |
1146 | திருநாளைப்போவார் நாயனார் நாவார் புகழ்த்தில்லை அம்பலத் தான்அருள் பெற்றுநாளைப் போவான் அவனாம் புறத்திருத் தொண்டன்தன் புன்புலைபோய் மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான் மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே. | 21 |
1147 | திருக்குறிப்புத்தொண்ட நாயனார் மண்டும் புனற்சடை யான்தமர் தூசெற்றி வாட்டும்வகை விண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவன்என்னா முண்டம் படர்பாறை முட்டும் எழிலார் திருக்குறிப்புத் தொண்டன் குலங்கச்சி ஏகா லியர்தங்கள் தொல்குலமே. | 22 |
1148 | சண்டேசுர நாயனார் குலமே றியசேய்ஞ லூரில் குரிசில் குரைகடல்சூழ் தலமே றியவிறல் சண்டிகண் டீர்தந்தை தாள்இரண்டும் வலமே றியமழு வால்எறிந் தீசன் மணிமுடிமேல் நலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே. | 23 |
1149 | சுந்தரமூர்த்தி நாயனார் `நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த மதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றி'டென்று துதியா அருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண் நதியார் புனல்வயல் நாவலர் கோன்என்னும் நற்றவனே. | 24 |
1150 | திருநாவுக்கரசு நாயனார் நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதம்தன் சென்னிவைக்கப் பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள் உற்றவன் உற்ற விடம்அடை யார்இட ஒள்ளமுதாத் துற்றவன் ஆமுரில் நாவுக் கரசெனும் தூமணியே. | 25 |
1151 |
மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால் திணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலிற் பிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே அணியன நாவுக் கரையர் பிரான்தன் அருந்தமிழே. | 26 |
1152 | குலச்சிறை நாயனார் அருந்தமிழ் ஆகரன் வாதில் அமணைக் கழுநுதிமேல் இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித் தோன்எழிற் சங்கம்வைத்த பெருந்தமிழ் மீனவன் தன்அதி காரி பிரசம்மல்கு குருந்தவிழ் சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே. | 27 |
1153 | பெருமிழலைக் குறும்ப நாயனார் சிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக் கிறைநன் கழல்நாளை எய்தும் இவனருள் போற்றஇன்றே பிறைநன் முடியன் அடியடை வேன்என் றுடல்பிரிந்தான் நறைநன் மலர்த்தார் மிழலைக் குறும்பன் எனும்நம்பியே. | 28 |
1154 | காரைக்கால் அம்மையார் `நம்பன் திருமலை நான்மிதி யேன்'என்று தாள்இரண்டும் உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும் செம்பொன் உருவன்'என் அம்மை' எனப்பெற் றவள் செழுந்தேன் கொம்பின் உகுகாரைக் காலினில் மேய குலதனமே. | 29 |
1155 | அப்பூதியடிகள் நாயனார் தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணம்என்னா மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்தமிழ்க்கே இனமாத் தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான் அனமார் வயல்திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே. | 30 |
1156 | திருநீலநக்க நாயனார் பூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலும்அஞ்சி ஊதித் துமிந்த மனைவியை நீப்பஉப் பாலவெல்லாம் பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன் நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்எனும் வேதியனே. | 31 |
1157 | நமிநந்தியடிகள் நாயனார் வேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத் தீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால் ஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான் நாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே. | 32 |
1158 | சுந்தரமூர்த்தி நாயனார் நந்திக்கும் நம்பெரு மாற்குநல் ஆருரில் நாயகற்குப் பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலிற் சிந்திப் பரியன சேவடி பெற்றவன் சேவடியே வந்திப் பவன்பெயர் வன்தொண்டன் என்பர்இவ் வையகத்தே. | 33 |
1159 | திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வையம் மகிழயாம் வாழ அமணர் வலிதொலைய ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச் செவ்வாய் பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின் தையல் அருள்பெற் றனன்என்பர் ஞானசம் பந்தனையே. | 34 |
1160 |
பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல சந்தார் அகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து கொந்தார் சடையர் பதிகத்தில் இட்டடி யேன்கொடுத்த அந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே. | 35 |
1161 | ஏயர்கோன் கலிக்காம நாயனார் கொற்றத் திறல்எந்தை தந்தைதன் தந்தைஎங் கூட்ட மெல்லாம் தெற்றச் சடையாய் நினதடி யேந்திகழ் வன்தொண்டனே மற்றிப் பிணிதவிர்ப் பான்என் றுடைவாள் உருவிஅந்நோய் செற்றுத் தவிர்கலிக் காமன் குடிஏயர் சீர்க்குடியே. | 36 |
1162 | திருமூல நாயனார் குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின் படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டென்உச்சி அடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்கணனே. | 37 |
1163 | தண்டியடிகள் நாயனார் கண்ணார் மணிஒன்றும் இன்றிக் கயிறு பிடித்தரற்குத் தண்ணார் புனல்தடம் தொட்டலும் தன்னை நகும்அமணர் கண்ணாங் கிழப்ப அமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண் விண்ணா யகனிடைப் பெற்றவன் ஆரூர் விறல்தண்டியே. | 38 |
1164 | மூர்க்க நாயனார் தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன் தருகவற்றால் கொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருள் முண்டநன் னீற்றன் அடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர் நண்டலை நீரொண் குடந்தையில் மேவுநற் சூதனையே. | 39 |
1165 | சோமாசிமாற நாயனார் சூதப் பொழில் அம்பர் அந்தணன் சோமாசி மாறன்என்பான் வேதப் பொருள்அஞ் செழுத்தும் விளம்பியல் லால்மொழியான் நீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னும் மாதுக்குக் காந்தன்வன் தொண்டன் தனக்கு மகிழ்துணையே. | 40 |
1166 | சுந்தரமூர்த்தி நாயனார் துணையும் அளவும் இல் லாதவன் தன்னரு ளேதுணையாக் கணையும் கதிர்நெடு வேலும் கறுத்த கயலிணையும் பிணையும் நிகர்த்தகண் சங்கிலி பேரமைத் தோள்இரண்டும் அணையும் அவன்திரு வாரூரன் ஆகின்ற அற்புதனே. | 41 |
1167 | சாக்கிய நாயனார் தகடன ஆடையன் சாக்கியன் மாக்கற் றடவரையன் மகள்தனந் தாக்கக் குழைந்ததிண் தோளர்வண் கம்பர்செம்பொன் திகழ்தரு மேனியிற் செங்கல் எறிந்து சிவபுரத்துப் புகழ்தரப் புக்கவன் ஊர்சங்க மங்கை புவனியிலே. | 42 |
1168 | சிறப்புலி நாயனார் புவனியிற் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்த தவநிய மற்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம் அவனியில் கீர்த்தித் தென் ஆக்கூர் அதிபன் அருமறையோன் சிவன்நிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே | 43 |
1169 | சிறுத்தொண்ட நாயனார் புலியின் அதளுடைப் புண்ணியற் கின்னமு தாத்தனதோர் ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வன் உடல்துணித்துக் கலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர் மலியும் பொழில்ஒண்செங் காட்டம் குடியவர் மன்னவனே. | 44 |
1170 | சேரமான்பெருமாள் நாயனார் மன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறிநீறார் தன்னர் பிரான்தமர் போல வருதலும் தான்வணங்க என்னர் பிரான்அடி வண்ணான் எனஅடிச் சேரன்என்னும் தென்னர் பிரான்கழ றிற்றறி வான்எனும் சேரலனே. | 45 |
1171 |
சேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவன்அளித்த வீரக் கடகரி முன்புதன் பந்தி இவுளிவைத்த வீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட சூரற் கெனதுள்ளம் நன்றுசெய் தாய்இன்று தொண்டுபட்டே. | 46 |
1172 | கணநாத நாயனார் தொண்டரை யாக்கி அவரவர்க் கேற்ற தொழில்கள் செய்வித் தண்டர்தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண் கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கள் தொறும் கண்டல்வெண் சோறளிக் குங்கடல் காழிக் கணநாதனே. | 47 |
1173 | கூற்றுவ நாயனார் நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல போதங் கருத்திற் பொறித்தமை யால்அது கைகொடுப்ப ஓதந் தழுவிய ஞாலம்எல் லாமொரு கோலின்வைத்தான் கோதை நெடுவேற் களப்பாளன் ஆகிய கூற்றுவனே. | 48 |
1174 | சுந்தரமூர்த்தி நாயனார் கூற்றுக் கெவனோ புகல்திரு வாரூரன் பொன்முடிமேல் ஏற்றுத் தொடையலும் இன்அடைக் காயும் இடுதருமக் கோற்றொத்துக் கூனனும் கூன்போய்க் குருடனும் கண்பெற்றமை சாற்றித் திரியும் பழமொழி யாம்இத் தரணியிலே. | 49 |
1175 | பொய்யடிமை இல்லாத புலவர் தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அ திற்கபிலர் பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர் அருள்நமக் கீயும் திருவால வாய்அரன் சேவடிக்கே பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே. | 50 |
1176 | புகழ்ச்சோழ நாயனார் புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன் நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள் வலமன் னியஎறி பத்தனுக் கீந்ததோர் வண்புகழே. | 51 |
1177 | நரசிங்க முனையரைய நாயனார் புகழும் படிஎம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன் இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலம்எங்கும் நிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன்இட்டவன்நீள் திகழு முடிநர சிங்க முனையர சன்திறமே. | 52 |
1178 | அதிபத்த நாயனார் திறம்அமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென் றுறஅமர் மாகடற் கேவிடு வோன்ஒரு நாட்கனக நிறம்அமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம் புறம்அமர் நாகை அதிபத்த னாகிய பொய்யிலியே. | 53 |
1179 | கலிக்கம்ப நாயனார் பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்அடியான் சைவத் திருவுரு வாய்வரத் தான்அவன் தாள்கழுவ வையத் தவர்முன்பு வெள்கிநீர் வாரா விடமனைவி கையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே. | 54 |
1180 | கலிய நாயனார் கம்பக் கரிக்கும் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன் உம்பர்க்கு நாதற் கொளிவிளக் கேற்றற் குடல்இலனாய்க் கும்பத் தயிலம்விற் றுஞ்செக் குழன்றும்கொள் கூலியினால் நம்பற் கெரித்த கலிஒற்றி மாநகர்ச் சக்கிரியே. | 55 |
1181 | சத்தி நாயனார் கிரிவில் லவர்தம் அடியரைத் தன்முன்பு கீழ்மைசொன்ன திருவில் லவரைஅந் நாவரி வோன்திருந் தாரைவெல்லும் வரிவில் லவன்வயற் செங்கழு நீரின் மருவுதென்றல் தெருவில் விரைகம ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே. | 56 |
1182 | ஐயடிகள் காடவர்கோன் நாயனார் சத்தித் தடக்கைக் குமரன்நல் தாதைதன் தானம்எல்லாம் முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசா மத்திற்கு மும்மைநன் தாள்அரற் காய்ஐயம் ஏற்றலென்னும் பத்திக் கடல்ஐ யடிகளா கின்றநம் பல்லவனே. | 57 |
1183 | சுந்தரமூர்த்தி நாயனார் பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ் சொல்லவன் தென்புக லூர்அரன் பால்துய்ய செம்பொன்கொள்ள வல்லவன் நாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு நல்லவன் தன்பதி நாவலூர் ஆகின்ற நன்னகரே. | 58 |
1184 | கணம்புல்ல நாயனார் நன்னக ராய இருக்குவே ளூர்தனில் நல்குவராய்ப் பொன்னக ராயநற் றில்லை புகுந்து புலீச்சரத்து மன்னவ ராய அரர்க்குநற் புல்லால் விளக்கெரித்தான் கன்னவில் தோள்எந்தை தந்தை பிரான்எம் கணம்புல்லனே. | 59 |
1185 | காரி நாயனார் புல்லன வாகா வகைஉல கத்துப் புணர்ந்தனவும் சொல்லின வும்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கான்என்பரால் கல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே. | 60 |
1186 | நெடுமாற நாயனார் கார்த்தண் முகில்கைக் கடற்காழி யர்பெரு மாற்கெதிராய் ஆர்த்த அமணர் அழிந்தது கண்டுமற் றாங்கவரைக் கூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவன் என்றுரைக்கும் வார்த்தை யதுபண்டு நெல்வேலி யில்வென்ற மாறனுக்கே. | 61 |
1187 | வாயிலார் நாயனார் மாறா அருளரன் தன்னை மனஆ லயத்திருத்தி ஆறா அறிவாம் ஒளிவிளக் கேற்றி அகமலர்வாம் வீறா மலரளித் தன்பெனும் மெய்யமிர் தம்கொடுத்தான் வீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவரே. | 62 |
1188 | முனையடுவார் நாயனார் என்று விளம்புவர் நீடூர் அதிபன் முனையடுவோன் என்றும் அமருள் அழிந்தவர்க் காக்கூலி ஏற்றெறிந்து வென்று பெருஞ்செல்வம் எல்லாம் கனகநன் மேருவென்னும் குன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே. | 63 |
1189 | சுந்தரமூர்த்தி நாயனார் கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிர்அன்று புக்கொளியூர்த் தொடுத்தான் மதுர கவிஅவி நாசியை வேடர்சுற்றம் படுத்தான் திருமுரு கன்பூண் டியினில் பராபரத்தேன் மடுத்தான் அவனென்பர் வன்தொண்ட னாகின்ற மாதவனே. | 64 |
1190 | கழற்சிங்க நாயனார் மாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்த போதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை அரியப் பொற்கை காதிவைத் தன்றோ அரிவதென் றாங்கவள் கைதடிந்தான் நாதமொய்த் தார்வண்டு கிண்டுபங் கோதைக் கழற்சிங்கனே. | 65 |
1191 | இடங்கழி நாயனார் சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு கொங்கிற் கனகம் அணிந்தஆ தித்தன் குலமுதலோன் திங்கட் சடையர் தமரதென் செல்வம் எனப்பறைபோக் கெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே. | 66 |
1192 | செருத்துணை நாயனார் கழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன் தேவிமுன் மோத்தலுமே எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந் தானென் றியம்புவரால் செழுநீர் மருகல்நன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே. | 67 |
1193 | புகழ்த்துணை நாயனார் செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தா உருவலி கெட்டுண வின்றி உமைகோனை மஞ்சனம்செய் தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியா தருவரை வில்லி அருளும் நிதியது பெற்றனனே. | 68 |
1194 | கோட்புலி நாயனார் பெற்றம் உயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர்தமது சுற்றம் அறுக்கும் தொழில்திரு நாட்டியத் தான்குடிக்கோன் குற்றம் அறுக்கும்நங் கோட்புலி நாவற் குரிசில் அருள் பெற்ற அருட்கடல் என்றுல கேத்தும் பெருந்தகையே. | 69 |
1195 | சுந்தரமூர்த்தி நாயனார் தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால் புகுமணக் காதலி னால் ஒற்றி யூர்உறை புண்ணியன்தன் மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளால்இவ் வியனுலகம் நகுவழக் கேநன்மை யாப்புணர்ந் தான்நாவ லூர்அரசே. | 70 |
1196 | பத்தராய்ப் பணிவார்கள் அரசினை ஆருர் அமரர் பிரானை அடிபணிந்திட் டுரைசெய்த வாய்தடு மாறி உரோம புளகம்வந்து கரசர ணாதி அவயவம் கம்பித்துக் கண்ணருவி சொரிதரும் அங்கத்தி னோர்பத்தர் என்று தொகுத்தவரே. | 71 |
1197 | பரமனையே பாடுவார் தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே மிகுத்த இயலிசை வல்ல வகையில்விண் தோயுநெற்றி வகுத்த மதில்தில்லை அம்பலத் தான்மலர்ப் பாதங்கள்மேல் உகுத்த மனத்தொடும் பாடவல் லோர்என்ப உத்தமரே. | 72 |
1198 | சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் உத்தமத் தானத் தறம்பொருள் இன்ப மொடியெறிந்து வித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச்சென்னி மத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக் கீழ்ச் சித்தம்வைத் தார்என்பர் வீடுபே றெய்திய செல்வர்களே. | 73 |
1199 | திருவாரூர்ப் பிறந்தார்கள் செல்வம் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார் செல்வன் திருக்கணத் துள்ளவ ரேஅத னால் திகழச் செல்வம் பெருகுதென் ஆரூர்ப் பிறந்தவர் சேவடியே செல்வ நெறியுறு வார்க் கணித் தாய செழுநெறியே. | 74 |
1200 | முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார் நெறிவார் சடையரைத் தீண்டிமுப் போதும்நீ டாகமத்தின் அறிவால் வணங்கி அர்ச் சிப்பவர் நம்மையும் ஆண்டமரர்க் கிறையாய்முக் கண்ணும்எண் தோளும் தரித்தீறில் செல்வத்தொடும் உறைவார் சிவபெரு மாற்குறை வாய உலகினிலே. | 75 |
1201 | முழுநீறு பூசிய முனிவர் உலகு கலங்கினும் ஊழி திரியினும் உள்ளொருகால் விலகுதல் இல்லா விதியது பெற்றநல் வித்தகர்காண் அலகில் பெருங்குணத் தாரூர் அமர்ந்த அரனடிக்கீழ் இலகுவெண் ணீறுதம் மேனிக் கணியும் இறைவர்களே. | 76 |
1202 | அப்பாலும் அடிச்சார்ந்தார் வருக்கம் அடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்தமிழால் பெருக்கு மதுரத் தொகையில் பிறைசூடிப் பெய்கழற்கே ஒருக்கு மனத் தொடப் பாலடிச் சார்ந்தவர் என்றுலகில் தெரிக்கு மவர்சிவன் பல்கணத் தோர்நம் செழுந்தவரே. | 77 |
1203 | சுந்தரமூர்த்தி நாயனார் செழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்ய மழுநீள் தடக்கையன் ஈந்தபொன் ஆங்குக்கொள் ளாதுவந்தப் பொழில்நீ டருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங்கொண்டோன் கெழுநீள் புகழ்த்திரு வாரூரன் என்றுநாம் கேட்பதுவே. | 78 |
1204 | பூசலார் நாயனார் பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையாம் கதுமெனச் செய்குவ தென்றுகொ லாமென்று கண்துயிலா ததுமனத் தேஎல்லி தோறும் நினைந்தருள் பெற்றதென்பர் புதுமணத் தென்றல் உலாநின்ற வூர்தனில் பூசலையே. | 79 |
1205 | மங்கையர்க்கு அரசியார் பூசல் அயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால் வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர் தேசம் விளங்கத் தமிழா கரர்க் கறி வித்தவரால் நாசம் விளைத்தாள் அருகந் தருக்குத் தென் னாட்டகத்தே. | 80 |
1206 | நேச நாயனார் நாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படைநல்கினர்தந் தாட்டரிக் கப்பெற்ற வன்என்பர் சைவத் தவர் அரையில் கூட்டுமக் கப்படங் கோவணம் நெய்து கொடுத்துநன்மை ஈட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே. | 81 |
1207 | கோச் செங்கட் சோழ நாயனார் மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத் தெய்வக் குடிச் சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்து சைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள் செய்வித்த வன்திருக் கோச்செங்க ணான்என்னும் செம்பியனே. | 82 |
1208 |
செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகம்எய்தி நம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர்நல்ல வம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான் நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க ணான்என்னும் நித்தனையே. | 83 |
1209 | திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் தனையொப் பரும்எருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன் நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள் சினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந் தமிழொடிசை புனையப் பரன்அருள் பெற்றவன் என்பர்இப் பூதலத்தே. | 84 |
1210 | சடைய நாயனார் தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையன்என்னும் குலம்விளங் கும்புக ழோனை உரைப்பர் குவலயத்தில் நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின் பலம்விளங் கும்படி ஆரூரனைமுன் பயந்தமையே. | 85 |
1211 | இசைஞானியார் பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக் கயந்தான் உகைத்தநற் காளையை என்றும் கபாலங்கைக்கொண் டயந்தான் புகும்அரன் ஆரூர்ப் புனித அரன்திருத்தாள் நயந்தாள் தனதுள்ளத் தென்றும் உரைப்பது ஞானியையே. | 86 |
1212 | சுந்தரமூர்த்தி நாயனார் ஞானஆ ரூரரைச் சேரரை அல்லது நாம்அறியோம் மானவ ஆக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண் வானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக் கோனவன் கோயிற் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே. | 87 |
1213 | திருத்தொண்டத்தொகையில் உள்ள தொகை அடியார்கள் தனியடியார்கள் கூட்டம்ஒன் பானொ டறுபத்து மூன்று தனிப்பெயரா ஈட்டும் பெருந்தவத் தோர்எழு பத்திரண் டாம்வினையை வாட்டும் தவத்திருத் தொண்டத் தொகைபதி னொன்றின்வகைப் பாட்டும் திகந்திரு நாவலூராளி பணித்தனனே. | 88 |
1214 | திருத்தொண்டத் தொகைப் பதிகக் கவிகளின் முதற்குறிப்பு பணித்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை இலைமலிந்த அணித்திகழ் மும்மை திருநின்ற வம்பறா வார்கொண்டசீர் இணைத்தநற் பொய்யடி மைகறைக் கண்டன் கடல்சூழ்ந்தபின் மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய சீர்மறை நாவனொடே. | 89 |
1215 | நூற் பயன் ஓடிடும் பஞ்சேந் திரியம் ஒடுக்கிஎன் ஊழ்வினைகள் வாடிடும் வண்ணம்நின் றெத்தவம் செய்தனன் வானினுள்ளோர் சூடிடும் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையின்உள்ள சேடர்தம் செல்வப் பெரும்புகழ் அந்தாதி செப்பிடவே. | 90 |
திருச்சிற்றம்பலம்
12.4 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி (1216 - 1316)
1216 |
பார்மண் டலத்தினில் பன்னிரு பேரொடு மன்னிநின்ற நீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த கார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளன் கருணைபெற்ற தார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே. | 1 |
1217 |
பதிகப் பெருவழி காட்டப் பருப்பதக் கோன்பயந்த மதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்தஎங்கள் நிதியைப் பிரமா புரநகர் மன்னனை என்னுடைய கதியைக் கருதவல் லோர்அம ராவதி காப்பவரே. | 2 |
1218 |
காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா மாப்பழி வாரா வகைஇருப் பேன்என்ன மாரன்என்னே பூப்பயில் வாளிகள் அஞ்சும்என் நெஞ்சரங் கப்புகுந்த ஏப்பயில் வார்சிலை கால்வளை யாநிற்கும் ஈண்டிரவே. | 3 |
1219 |
இரவும் பகலும்நின் பாதத் தலர்என் வழிமுழுதும் பரவும் பரிசே அருளுகண் டாய்இந்தப் பாரகத்தே விரவும் பரமத கோளரி யேகுட வெள்வளைகள் தரளம் சொரியும் கடல்புடை சூழ்ந்த தராய்மன்னனே. | 4 |
1220. |
மன்னிய மோகச் சுவைஒளி ஊறோசை நாற்றமென்றிப் பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்குந் தொடர்வரிய பொன்னியல் பாடகக் கிங்கிணிப் பாதநிழல் புகுவோர் துன்னிய காவமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே. | 5 |
1221 |
தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர வண்டினம் சூழ வருமிவன் போலும் மயில்உகுத்த கண்டினம் சூழ்ந்த வளைபிரம் போர்கழு வாஉடலம் விண்டினம் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே. | 6 |
1222 |
வித்தகம் பேசிநம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து முத்தகங் காட்டு முறுவல்நல் லார்தம் மனம்அணைய உய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறு புத்தகம் போலும் முதுபுலைப் பாணன் புணர்க்கின்றதே. | 7 |
1223 |
புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியிற் சிறகொதுக்கி உணர்ந்தனர் போல இருந்தனை யால்உல கம்பரசும் குணந்திகழ் ஞானசம் பந்தன் கொடிமதிற் கொச்சையின்வாய் மணந்தவர் போயின ரோசொல்லு வாழி| மடக்குருகே. | 8 |
1224 |
குருந்தலர் முல்லையங் கோவலர் ஏற்றின் கொலைமருப்பால் அருந்திறல் ஆகத் துழுதசெஞ் சேற்றரு காசனிதன் பெருந்திற மாமதிற் சண்பை நகரன்ன பேரமைத்தோள் திருந்திழை ஆர்வம் ............ .............. முரசே. | 9 |
1225 |
முரசங் கரையமுன் தோரணம் நீட முழுநிதியின் பரிசங் கொணர்வான் அமைகின் றனர்பலர் பார்த்தினிநீ அரிசங் கணைதலென் னாமுன் கருதரு காசனிதன் சுரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே. | 10 |
1226 |
மொழிவது சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள் தொழுவது மற்றவன் தூமலர்ப் பாதங்கள் தாமங்கமழ்ந் தெழுவது கூந்தலம் பூந்தா மரைஇனி யாதுகொலோ மொழிவது சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே. | 11 |
1227 |
வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரைஅன்று வான்கொடுத்த கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன் கடல்உடுத்த ஒலிதரு நீர்வைய கத்தை உறையிட்ட தொத்துதிரு மலிதரு வார்பனி யாம்மட மாதினை வாட்டுவதே. | 12 |
1228 |
வாட்டுவர் தத்தம் துயரைவன் கேழலின் பின்புசென்ற வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால் தோட்டியல் காதன் இவனென்று தாதைக்குச் சூழ்விசும்பிற் காட்டிய கன்றின் கழற்றிற மானவை கற்றவரே. | 13 |
1229 |
அவர்சென் றணுகுவர் மீள்வதிங் கன்னை அருகர்தம்மைத் தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணி சண்பைஎன்னப் பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் பல்கதி ரோன்பரியைக் கவர்கின்ற சூலத் தொடுநின்று தோன்றும் கடிநகரே. | 14 |
1230 |
நகரம் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைகள் பகர்அம் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம் மகரம் கிளர்கடல் வையந் துயர்கெட வாய்மொழிந்த நிகரங் கிலிகலிக் காழிப் பிரான்என்பர் நீள்நிலத்தே. | 15 |
1231 |
நிலமே றியமருப் பின்திரு மாலும் நிலம்படைத்த குலமே றியமலர்க் கோகன தத்தய னுங்கொழிக்கும் சலமே றியமுடி தாள்கண் டிலர்தந்தை காணஅன்று நலமே றியபுகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே. | 16 |
1232 |
நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கியஃதே போதின் மலிவய லாக்கிய கோன்அமர் பொற்புகலி ஓத நெடுங்கடல் வாருங் கயலோ விலைக்குளது காதின் அளவும் மிளிர்கய லோசொல்லு காரிகையே. | 17 |
1233 |
கைம்மையி னால்நின் கழல்பர வாதுகண் டார்க்கிவனோர் வன்மைய னேஎன்னும் வண்ணம் நடித்து விழுப்பொருளோ டிம்மையில் யான்எய்தும் இன்பம் கருதித் திரிதருமத் தன்மையி னேற்கும் அருளுதி யோசொல்லு சம்பந்தனே. | 18 |
1234 |
பந்தார் அணிவிரல் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க் கொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர் நந்தா விளக்கினைக் கண்டது நானெப் பொழுதும்முன்னும் சந்தா ரகலத் தருகா சனிதன் தடவரையே. | 19 |
1235 |
வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல் நிரைகொண்டு வானோர் கடைந்ததில் நஞ்ச நிகழக்கொலாம் நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளம் சுழலநொந்தோர் இரவும் திரைகொண் டலமரும் இவ்வகன் ஞாலம் செறிகடலே. | 20 |
1236 |
கடலன்ன பொய்ம்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத் திடநமன் ஏவுதற் கெவ்விடத் தான்இருஞ் செந்தமிழால் திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன் செந் தாமரையின் வடமன்னு நீண்முடி யான்அடிப் போதவை வாழ்த்தினமே. | 21 |
1237 |
வாழ்த்துவ தெம்பர மேயாகும் அந்தத்து வையமுந்நீர் ஆழ்த்திய காலத்தும் ஆழா ததுஅரன் சேவடியே ஏத்திய ஞானசம் பந்தற் கிடம்இசைத் தும்பிகொம்பர்க் காத்திகழ் கேதகம் போதகம் ஈனும் கழுமலமே. | 22 |
1238 |
மலர்பயில் வாட்கண்ணி கேள்கண்ணி நீண்முடி வண்கமலப் பலர்பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவர்என்னத் தலைபயில் பூம்புனங் கொய்திடு மேகணி யார்புலம்ப அலர்பயி லாமுன் பறித்தன மாகில் அரும்பினையே. | 23 |
1239 |
அரும்பின அன்பில்லை அர்ச்சனை இல்லை அரன்நெறியே விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலம் பொய்க்கமைந்த இரும்பன உள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால் கரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே. | 24 |
1240 |
அடியால் அலர்மிதித் தாலரத் தம்பிற் கமிர்தமின்றிக் கொடியா னொடும்பின் நடந்ததெவ்வா றலர்கோகனதக் கடியார் நறுங்கண்ணி ஞானசம் பந்தன் கருதலர்சேர் வெடியா விடுவெம் பரற்சுறு நாறு வியன்சுரத்தே. | 25 |
1241 |
சுரபுரத் தார்தந் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள் பரபுரத் தார்தந் துயர்கண் டருளும் பரமன்மன்னும் அரபுரத் தான்அடி எய்துவன் என்ப தவனடிசேர் சிரபுரத் தான்அடி யார்அடி யேன்என்னும் திண்ணனவே. | 26 |
1242 |
திண்ணன வார்சென்ற நாட்டிடை இல்லைகொல் தீந்தமிழோர் கண்ணென ஓங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்து விண்ணின வாய்முல்லை மெல்லரும் பீனமற் றியாம்மெலிய எண்ணின நாள்வழு வாதிறைத் தோடி எழுமுகிலே. | 27 |
1243 |
எழுவாள் மதியால் வெதுப்புண் டலமந் தெழுந்துவிம்மித் தொழுவாள் தனக்கின் றருளுங் கொலாந்தொழு நீரவைகைக் குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர்தங்கள் கழுவா உடலம் கழுவின ஆக்கிய கற்பகமே. | 28 |
1244 |
கற்பா நறவ மணிகொழுத் துந்து மலைச்சிலம்பா நற்பா மொழிஎழில் ஞானசம் பந்தன் புறவமன்ன விற்பா நுதலிதன் மென்முலை யின்னிளம் செவ்விகண்டிட் டிற்பா விடும்வண்ணம் எண்ணுகின் றாள்அம்ம எம்அனையே. | 29 |
1245 |
எம்அனை யாய்எந்தை யாய்என்னை ஆண்டென் துயர்தவிர்த்த செம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர் வெம்முனை வேல்என்ன என்ன மிளிர்ந்து வெளுத்தரிபோன் றும்மன வோஅல்ல வோவந்தென் உள்ளத்தொளிர்வனவே. | 30 |
1246 |
ஒளிறு மணிப்பணி நாட்டும் உலகத்தும் உம்பருள்ளும் வௌிறு படச்சில நிற்பதுண் டேமிண்டி மீன்உகளும் அளறு வயற்சண்பை நாதன் அமுதப் பதிகமென்னும் களிறு விடப்புகு மேல்தொண்டர் பாடும் கவிதைகளே. | 31 |
1247 |
கவிக்குத் தகுவன கண்ணுக் கினியன கேட்கில்இன்பம் செவிக்குத் தகுவன சிந்தைக் குரியன பைந்தரளம் நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்துதம் சிற்றில்தொறும் குவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே. | 32 |
1248 |
கழல்கின்ற ஐங்கணை அந்தியும் அன்றிலும் கால்பரப்பிட் டழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்பஅன் றாயிழைக்காச் சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் தன்னைத் தொடர்ந்துபின்போய் உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ இனியின் றுறுகின்றதே. | 33 |
1249 |
உறுகின்ற அன்பினோ டொத்திய தாளமும் உள்ளுருகிப் பெறுகின்ற இன்பும் பிறைநுதல் முண்டமும் கண்டவரைத் தெறுகின்ற வாறென்ன செய்தவ மோவந்தென் சிந்தையுள்ளே துறுகின்ற பாதன் கழுமலம் போலும் துடியிடைக்கே. | 34 |
1250 |
இடையும் எழுதா தொழியலு மாம்இன வண்டுகளின் புடையும் எழுதிலும் பூங்குழல் ஒக்கும்அப் பொன்னனையாள் நடையும் நகையும் தமிழா கரன்தன் புகலிநற்றேன் அடையும் மொழியும் எழுதிடில் சால அதிசயமே. | 35 |
1251 |
மேனாட் டமரர் தொழஇருப் பாரும் வினைப்பயன்கள் தானாட் டருநர கிற்றளர் வாரும் தமிழர்தங்கள் கோனாட் டருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப் பூநாட் டடிபணிந் தாரும்அல் லாத புலையருமே. | 36 |
1252 |
புலையடித் தொண்டனைப் பூசுர னாக்கிப் பொருகயற்கண் மலைமடப் பாவைக்கு மாநட மாடு மணியைஎன்றன் தலையிடைப் பாதனைக் கற்றாங் குரைத்தசம் பந்தனென்னா முலையிடைப் பொன்கொண்டு சங்கிழந் தாள்என்றன் மொய்குழலே. | 37 |
1253 |
குழலியல் இன்கவி ஞானசம் பந்தன் குரைகழல்போல் கழலியல் பாதம் பணிந்தேன் உனையும் கதிரவனே தழலியல் வெம்மை தணித்தருள் நீதணி யாதவெம்மை அழலியல் கான்நடந் தாள்வினை யேன்பெற்ற ஆரணங்கே. | 38 |
1254 |
அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கிஅமண் கணங்கழு வேற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப் பிணங்கலை நீர்எதிர் ஓடஞ் செலுத்தின வெண்பிறையோ டிணங்கிய மாடச் சிரபுரத் தான்தன் இருந்தமிழே. | 39 |
1255 |
இருந்தண் புகலிகோ லக்கா எழில்ஆ வடுதுறைசீர் பொருந்தும் அரத்துறை போனகம் தாளம்நன்பொன்சிவிகை அருந்திட வொத்தமுத் தீச்செய ஏறஅரன் அளித்த பெருந்தகை சீரினை எம்பர மோநின்று பேசுவதே. | 40 |
1256 |
பேசுந் தகையதன் றேஇன்றும் அன்றும் தமிழ்விரகன் தேசம் முழுதும் மழைமறந் தூண்கெடச் செந்தழற்கை ஈசன் திருவரு ளால்எழில் வீழி மிழலையின்வாய்க் காசின் மழைபொழிந் தானென்றிஞ் ஞாலம் கவின்பெறவே. | 41 |
1257 |
பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர மாபுரத்து மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால் வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடைஎடுத்த பொறியுறு பொற்கொடி எம்பெரு மான்அமர் பொன்னுலகே. | 42 |
1258 |
பொன்னார் மதில்சூழ் புகலிக் கரசை அருகர்தங்கள் தென்னாட் டரண்அட்ட சிங்கத் தினைஎஞ் சிவன்இவனென் றந்நாள் சூதலைத் திருவாய் மொழிகள் அருளிச் செய்த என்னானை யைப்பணி வார்க்கில்லை காண்க யமாலயமே. | 43 |
1259 |
மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று மணிகுறுக்கி வேலையைப் பாடணைந் தாங்கெழில் மன்மதன் வில்குனித்த கோலைஎப் போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினஞ்சூழ் சோலையைக் காழித் தலைவன் மலர்இன்று சூடிடினே. | 44 |
1260 |
சூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள் கூடுதற் கேசற்ற கொம்பினை நீயும் கொடும்பகைநின் றாடுதற் கேஅத்த னைக்குனை யேநின்னை ஆடரவம் வாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாண்மதியே. | 45 |
1261 |
மதிக்கக் தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில்வைகித் துதிக்கத் தகுசண்பை நாதன் சுருதி கடந்துழவோர் மிதிக்கக் கமலம் முகிழ்த்ததண் தேனுண்டு மிண்டிவரால் குதிக்கக் குருகிரி யுங்கொச்சை நாடு குறுகுமினே. | 46 |
1262 |
குறுமனம் முள்கல வாத்தமி ழாகரன் கொச்சையன்ன நறுமலர் மென்குழ லாய்அஞ்சல் எம்மூர் நகுமதிசென் றுறுமனை ஒண்சுவர் ஓவியக் கிள்ளைக்கு நும்பதியிற் சிறுமிகள் சென்றிருந் தங்கையை நீட்டுவர் சேயிழையே. | 47 |
1263 |
இழைவளர் ஆகத்து ஞானசம் பந்தன் இருஞ்சுருதிக் கழைவளர் குன்று கடத்தலும் காண்பீர் கடைசியர்நீள் முழைவளர் நண்டு படத்தடஞ் சாலிமுத் துக்கிளைக்கும் மழைவளர் நீள்குடு மிப்பொழில் சூழ்ந்த வளவயலே. | 48 |
1264 |
வயலார் மருகல் பதிதன்னில் வாளர வாற்கடியுண் டயலா விழுந்த அவனுக் கிரங்கி அறிவழிந்த கயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப் புயலார் தருகையி னான் என்னத் தோன்றிடும் புண்ணியமே. | 49 |
1265 |
புண்ணிய நாடு புகுவதற் காகப் புலன்அடக்கி எண்ணிய செய்தொழில் நிற்பதெல் லாருமின் றியானெனக்கு நண்ணிய செய்தொழில் ஞானசம் பந்தனை நந்தமர்நீர்க் கண்ணியன் மாடக் கழுமலத் தானைக் கருதுவதே. | 50 |
1266 |
கருதத் தவஅருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பை இரதக் கிளிமொழி மாதே கலங்கல் இவர்உடலம் பொருதக் கழுநிரை யாக்குவன் நுந்தமர் போர்ப்படையேல் மருதச் சினையில் பொதும்பருள் ஏறி மறைகுவனே. | 51 |
1267 |
மறைமுழங் குங்குழ லார்கலி காட்ட வயற்கடைஞர் பறைமுழங் கும்புக லித்தமி ழாகரன் பற்றலர்போல் துறைமுழங் குங்கரி சீறி மடங்கல் சுடர்ப்பளிங்கின் அறைமுழங் கும்வழி நீவரிற் சால வரும்பழியே. | 52 |
1268 |
பழிக்கே தகுகின்ற தின்றிப் பிறைபல் கதிர்விழுந்த வழிக்கே திகழ்தரு செக்கரைக் கொச்சை வயவரென்னும் மொழிக்கே விரும்பி முளரிக் கலமரும் ஓவியர்தம் கிழிக்கே தரும்உரு வத்திவள் வாடிடக் கீள்கின்றதே. | 53 |
1269 |
கீளரிக் குன்றத் தரவம் உமிழ்ந்த கிளர்மணியின் வாளரிக் கும்வைகை மாண்டனர் என்பர் வயற்புகலித் தாளரிக் கும்மரி யான்அருள் பெற்ற பரசமய கோளரிக் குந்நிக ராத்தமிழ் நாட்டுள்ள குண்டர்களே. | 54 |
1270 |
குண்டகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன்தன் குன்றகஞ்சேர் வண்டக மென்மலர் வில்லியன் னீர்வரி விற்புருவக் கண்டக வாளி படப்புடை வீழ்செங் கலங்கலொடும் புண்டகக் கேழல் புகுந்ததுண் டோநுங்கள் பூம்புனத்தே. | 55 |
1271 |
புனத்தெழு கைமதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய் வனத்தெழு சந்தனப் பைந்தழை யாய்வந்து வந்தடியேன் மனத்தெழு பொற்கழல் ஞானசம் பந்தன்வண் கொச்சையன்னாள் கனத்தெழு கொங்கைக ளாய்அல்கு லாய்த்திவர் கட்டுரையே. | 56 |
1272 |
கட்டது வேகொண்டு கள்ளுண்டு நுங்கைக ளாற்சுணங்கை இட்டது வேயன்றி எட்டனைத் தான்இவள் உள்ளுறுநோய் விட்டது வேயன்றி வெங்குரு நாதன்தன் பங்கயத்தின் மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின் பேதை மகிழ்வுறவே. | 57 |
1273 |
உறவும் பொருளும்ஒண் போகமும் கல்வியும் கல்வியுற்ற துறவும் துறவிப் பயனும் எனக்குச் சுழிந்தபுனல் புறவும் பொழிலும் பொழில்சூழ் பொதும்பும் ததும்பும்வண்டின் நறவும் பொழில்எழிற் காழியர் கோன்திரு நாமங்களே. | 58 |
1274 |
நாம்உகந் தேத்திய ஞானசம் பந்தனை நண்ணலர்போல் ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல் இஞ்சி இடிபடுக்கத் தீமுகந் தோன்றிகள் தோன்றத் தளவ முகைஅரும்பக் காமுகம் பூமுகம் காட்டிநின் றார்த்தன காரினமே. | 59 |
1275 |
காரங் கணைபொழிற் காழிக் கவுணியர் தீபன்நல்லூர்ச் சீரங் கணைநற் பெருமணந் தன்னிற்சிவபுரத்து வாரங் கணைகொங்கை மாதொடும் புக்குறும் போதுவந்தார் ஆரங் கொழிந்தனர் பெற்றதல் லால்அவ் வரும்பதமே. | 60 |
1276 |
அரும்பதம் ஆக்கும் அடியரொ டஞ்சலித் தார்க்கரிய பெரும்பதம் எய்தலுற் றீர்வந் திறைஞ்சுமின் பேரரவம் வரும்பத நான்மறைக் காழித் தலைவன் மலர்க்கமலத் தரும்பத ஞானசம் பந்தன்என் னானைதன் தாளிணையே. | 61 |
1277 |
தாளின் சரணம் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல் கீளின் மலங்க விலங்கே புகுந்திடுங் கெண்டைகளும் வாளுந் தொலைய மதர்த்திரு காதின் அளவும்வந்து மீளுங் கருங்கண்ணி மின்புரி யாவைத்த மென்னகையே. | 62 |
1278 |
நகுகின்ற முல்லைநண் ணார்எரி கண்டத் தவர்கவர்ந்த மிகுகின்ற நன்னிதி காட்டின கொன்றை விரவலர்ஊர் புகுகின்ற தீயெனப் பூத்தன தோன்றிப் புறமவன்கைத் தகுகின்ற கோடல்கள் அன்பரின் றெய்துவர் கார்மயிலே. | 63 |
1279 |
மயிலேந் தியவள்ளல் தன்னை அளிப்ப மதிபுணர்ந்த எயிலேந் தியசண்பை நாதன் உலகத் தெதிர்பவர்யார் குயிலேந் தியபொழிற் கொங்கேந் தியகொம்பின் அம்புதழீஇ அயிலேந் தியமலர் கண்டுள னாய்வந்த அண்ணலுக்கே. | 64 |
1280 |
அண்ணல் மணிவளைத் தோள்அரு காசனி சண்பையன்ன பெண்ணின் அமிர்தநல் லாள்குழல் நாற்றம் பெடையொடும்பூஞ் சுண்ணம் துதைந்தவண் டேகண்ட துண்டுகொல் தூங்கொலிநீர்த் தண்ணம் பொழில்எழிற் காசினி பூத்தமென் தாதுகளே. | 65 |
1281 |
தாதுகல் தோய்த்தநஞ் சன்னாசி யார்சட லம்படுத்துத் தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர் போதியிற் புத்தர்கள் வம்மின் புகலியர் கோனன்னநாட் காதியிட் டேற்றுங் கழுத்திறம் பாடிக் களித்திடவே. | 66 |
1282 |
களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல் வௌியுறு ஞாலம் பகல்இழந் தால்விரை யார்கமலத் தளியுறு மென்மலர்த் தாதளைந் தாழி அமைப்பவரும் துளியுறு வாடையி தாம்மட மானைத் துவள்விப்பதே. | 67 |
1283 |
தேறும் புனல்தில்லைச் சிற்றம்பலத்துச் சிறந்துவந்துள் ஊறும் அமிர்தைப் பருகிட் டெழுவதோர் உட்களிப்புக் கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித்தவன் கொழுந்தேன் நாறும் அலங்கல் தமிழா கரனென்னும் நன்னிதியே. | 68 |
1284 |
நிதியுறு வார்அறன் இன்பம்வீ டெய்துவர் என்னவேதம் துதியுறு நீள்வயற் காழியர் கோனைத் தொழாரின்நைய நதியுறு நீர்தௌித் தஞ்சல் எனஅண்ணல் அன்றோஎனா மதியுறு வாணுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே. | 69 |
1285 |
மன்னங் கனைசெந் தமிழா கரன்வெற்பில் வந்தொருவர் அன்னங்கள் அஞ்சன்மின் என்றடர் வேழத் திடைவிலங்கிப் பொன்னங் கலைசா வகைஎடுத் தாற்கிவள் பூண்அழுந்தி இன்னந் தழும்புள வாம்பெரும் பாலும்அவ் ஏந்தலுக்கே. | 70 |
1286 |
ஏந்தும் உலகுறு வீர்எழில் நீலநக் கற்கும்இன்பப் பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போகமார்ப்பைக் காந்துங் கனலிற் குளிர்படுத் துக்கடற் கூடலின்வாய் வேந்தின் துயர்தவிர்த் தானைஎப் போதும் விரும்புமினே. | 71 |
1287 |
விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய இன்னமிர்தம் அரும்பும் புனற்சடை யாய்உண் டருள் என் றடிபணிந்த இரும்பின் சுடர்க்களிற் றான்சிறுத் தொண்டனை ஏத்துதிரேல் சுரும்பின் மலர்த்தமி ழாகரன் பாதத் தொடர்வௌிதே. | 72 |
1288 |
எளிவந்த வாஎழிற் பூவரை ஞாண்மணித் தார்தழங்கத் துளிவந்த கண்பிசைந் தேங்கலும் எங்கள் அரன்துணையாம் கிளிவந்த சொல்லிபொற் கிண்ணத்தின் ஞான அமிர்தளித்த அளிவந்த பூங்குஞ்சி யின்சொற் சிறுக்கன்தன் ஆரருளே. | 73 |
1289 |
அருளும் தமிழா கரன்நின் அலங்கல்தந் தென்பெயரச் சுருளுங் குழலியற் கீந்திலை யேமுன்பு தூங்குகரத் துருளும் களிற்றினொ டோட்டரு வானை அருளியன்றே மருளின் மொழிமட வாள்பெயர் என்கண் வருவிப்பதே. | 74 |
1290 |
வருவார் உருவின் வழிவழி வைத்த வனமருந்தும் திருவார் இருந்த செழுநகர்ச் செவ்வித் திருவடிக்காள் தருவான் தமிழா கரன்கரம் போற்சலம் வீசக்கண்டு வெருவா வணங்கொண்டல் கள்மிண்டி வானத்து மின்னியவே. | 75 |
1291 |
மின்னார் குடுமி நெடுவெற் பகங்கொங்கில் வீழ்பனிநோய் தன்னார் வழிகெட் டழிந்தமை சொல்லுவர் காண்இறையே மன்னார் பரிசனத் தார்மேற் புகலும் எவர்க்கும்மிக்க நன்னா வலர்பெரு மான்அரு காசனி நல்கிடவே. | 76 |
1292 |
நல்கென் றடியின் இணைபணி யார்சண்பை நம்பெருமான் பல்கும் பெரும்புகழ் பாடகில் லார்சிலர் பாழ்க்கிறைத்திட் டொல்கும் உடம்பின ராய்வழி தேடிட் டிடறிமுட்டிப் பில்கும் இடம்அறி யார்கெடு வார்உறு பேய்த்தனமே. | 77 |
1293 |
தனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்அருள்போல் மனமே புகுந்த மடக்கொடி யேமலர் மேல்இருந்த அனமே அமிர்தக் குமுதச் செவ்வாய்உங்கள் ஆயமென்னும் இனமே பொலியவண் டாடெழிற் சோலையுள் எய்துகவே. | 78 |
1294 |
உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலைஉரிஞ்ச அகட்டிற் சொரிபால் தடம்நிறை கொச்சை வயத்தரசைத் தகட்டில் திகழ்மணிப் பூண்தமி ழாகரன் தன்னையல்லால் பகட்டில் பொலியினும் வேண்டேன் ஒருவரைப் பாடுதலே. | 79 |
1295 |
பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற நீடிய சீர்த்திரு ஞானசம் பந்தன் நிறைபுகழான் நேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழில்மிழலைக் கூடிய கூட்டத்தி னால்உள தாய்த்திக் குவலயமே. | 80 |
1296 |
வலையத் திணிதோள் மிசைமழ வேற்றி மனைப்புறத்து நிலைஎத் தனைபொழு தோகண்ட தூரனை நீதிகெட்டார் குலையக் கழுவின் குழுக்கண்ட வன்திகழ் கொச்சையன்ன சிலையொத்த வாள்நுதல் முன்போல் மலர்க திருக்கண்களே. | 81 |
1297 |
கண்ணார் திருநுத லோன்கோலக் காவில் கரநொடியால் பண்ணார் தரப்பாடு சண்பையர் கோண்பாணி நொந்திடுமென் றெண்ணா எழுத்தஞ்சும் இட்டபொன் தாளங்கள் ஈயக்கண்டும் மண்ணார் சிலர்சண்பை நாதனை ஏத்தார் வருந்துவதே. | 82 |
1298 |
வருந்துங் கொலாங்கழல் மண்மிசை ஏகிடின் என்றுமென்றார்த் திருந்தும் புகழ்ச்ண்பை ஞானசம் பந்தற்குச் சீர்மணிகள் பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன் காண்புண ரித்திகழ்நஞ் சருந்தும் பிரான்நம் அரத்துறை மேய அரும்பொருளே. | 83 |
1299 |
பொருளென என்னைத்தன் பொற்கழல் காட்டிப் புகுந்தெனக்கிங் கருளிய சீர்த்திரு ஞானசம் பந்தன் அருளிலர்போல் வெருளின மானின்மென் நோக்கியை விட்டு விழுநிதியின் திரளினை ஆதரித் தானன்று சாலஎன் சிந்தனைக்கே. | 84 |
1300 |
சிந்தையைத் தேனைத் திருவா வடுதுறை யுள்திகழும் எந்தையைப் பாடல் இசைத்துத் தொலையா நிதியம்எய்தித் தந்தையைத் தீத்தொழில் மூட்டிய கோன்சரண் சார்விலரேல் நிந்தையைப் பெற்றொழி யாதிரந் தேகரம் நீட்டுவரே. | 85 |
1301 |
நீட்டுவ ரோதத்தொ டேறிய சங்கம் நெகுமுளரித் தோட்டுவெண் முத்தம் சொரிசண்பை நாதன் தொழாதவரில் வேட்டுவர் வேட்டதண் ணீரினுக் குண்ணீர் உணக்குழித்த காட்டுவர் ஊறல் பருகுங் கொலாம்எம் கணங்குழையே. | 86 |
1302 |
குழைக்கின்ற கொன்றைபொன் போல மலரநுங் கூட்டமெல்லாம் அழைக்கின்ற கொண்டல் இயம்புன் னிலையகன் றார்வரவு பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண் சண்பைப் பிரான்புறவத் திழைக்கின்ற கூடல் முடியஎண் ணாத இளங்கொடிக்கே. | 87 |
1303 |
கொடித்தேர் அவுணர் குழாம்அனல் ஊட்டிய குன்றவில்லி அடித்தேர்கருத்தின் அருகா சனியை அணியிழையார் முடித்தேர் கமலம் கவர்வான் முரிபுரு வச்சிலையால் வடித்தேர் நயனக் கணையிணை கோத்து வளைத்தனரே. | 88 |
1304 |
வளைபடு தண்கடல் கொச்சை வயவன் மலர்க்கழற்கே வளைபடு நீண்முடி வார்புன லூரன்தன் நீரிலங்கு வளைபடு கண்ணியர் தம்பொதுத் தம்பலம் நாறும்இந்த வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன் வாயின் மணிமுத்தமே. | 98 |
1305 |
முத்தன வெண்ணகை யார்மயல் மாற்றி முறைவழுவா தெத்தனை காலம்நின் றேத்தும் அவரினும் என்பணிந்த பித்தனை எங்கள் பிரானை அணைவ தௌிதுகண்டீர் அத்தனை ஞானசம பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே. | 90 |
1306 |
அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினையன் றுடைத்தது பாணன்தன் யாழின் ஒலியை உரகவிடம் துடைத்தது தோணி புரத்துக் கிறைவன் சுடரொளிவாய் படைத்தது தண்மையை நள்ளாற் றரசு பணித்திடவே. | 91 |
1307 |
பணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதம்என்று தணிபடும் இன்சொற்க ளால்தவிர்த் தேற்குத் தழல்உமிழ்கான் மணிபடு பொற்கழல் ஞானசம் பந்தன் மருவலர்போல் துணிபடு வேலன்ன கண்ணியென் னோவந்து தோன்றியதே. | 92 |
1308 |
தோன்றல்தன் னோடுடன் ஏகிய சுந்தரப் பூண்முலையை ஈன்றவ ரேஇந்த ஏந்திழை யாரவர் இவ்வளவில் வான்றவர் சூழுந் தமிழா கரன்தன் வடவரையே போன்றபொன் மாடக் கழுமல நாடு பொருந்துவரே. | 93 |
1309 |
பொருந்திடு ஞானத் தமிழா கரன்பதி பொற்புரிசை திருந்திய தோணி புரத்துக் கிறைவன் திருவருளால் கருந்தடம் நீரெழு காலையில் காகூ கழுமலமென் றிருந்திட வாம்என்று வானவ ராகி இயங்கியதே. | 94 |
1310 |
இயலா தனபல சிந்தைய ராய்இய லுங்கொல்என்று முயலா தனவே முயன்றுவன் மோகச் சுழிஅழுந்திச் செயலார் வரைமதில் காழியர் கோன்திரு நாமங்களுக் கயலார் எனப்பல காலங்கள் போக்குவர் ஆதர்களே. | 95 |
1311 |
ஆதர வும்பயப் பும்இவள் எய்தினள் என்றயலார் மாதர் அவஞ்சொல்லி என்னை நகுவது மாமறையின் ஓதர வம்பொலி காழித் தமிழா கரனொடன்றே தீதர வம்பட அன்னைஎன் னோபல செப்புவதே. | 96 |
1312 |
செப்பிய என்ன தவம்முயன் றேன்நல்ல செந்தமிழால் ஒப்புடை மாலைத் தமிழா கரனை உணர்வுடையோர் கற்புடை வாய்மொழி ஏத்தும் படிகத றிட்டிவர மற்படு தொல்லைக் கடல்புடை சூழ்தரு மண்ணிடையே. | 97 |
1313 |
மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்அமணைப் பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினைஅறுக்கும் கண்ணைக் கதியைத் தமிழா கரனைஎங் கற்பகத்தைத் திண்ணற் றொடையல் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே. | 98 |
1314 |
சேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை யான்உரைத்த பேருந் தமிழ்ப்பா இவைவல் லவர்பெற்ற இன்புலகம் காருந் திருமிடற் றாய்அரு ளாய்என்று கைதொழுவர் நீரும் மலரும் கொளாநெடு மாலும் பிரமனுமே. | 99 |
1315 |
பிரமா புரம்வெங் குருசண்பை தோணி புகலிகொச்சை சிரமார் புரம்நற் புறவந் தராய்காழி வேணுபுரம் வரமார் பொழில்திரு ஞானசம் பந்தன் பதிக்குமிக்க பரமார் கழுமலம் பன்னிரு நாமம்இப் பாரகத்தே. | 100 |
1316 |
பாரகலத் துன்பம் கடந்தமர ராற்பணியும் ஏரகலம் பெற்றாலும் இன்னாதால் - காரகிலின் தூமம் கமழ்மாடத் தோணி புரத்தலைவன் நாமஞ் செவிக்கிசையா நாள். | 101 |
திருச்சிற்றம்பலம்
12.5 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் (1317 -1327)
1317 |
பாலித் தெழில்தங்கு பார்முகம் உய்யப் பறிதலையோர் மாலுற் றழுந்த அவதரித் தோன்மணி நீர்க்கமலத் தாலித் தலர்மிசை அன்னம் நடப்ப அணங்கிதென்னாச் சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே. | 1 |
1318 |
கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி பங்குதங்கும் மங்கை தன்னருள் பெற்றவன் பைம்புணரிப் பொங்குவங் கப்புனல் சேர்த்த புதுமணப் புன்னையின்கீழ்ச் சங்குதங் கும்வயற் சண்பையர் காவலன் சம்பந்தனே. | 2 |
1319 |
குவளைக் கருங்கண் கொடியிடை துன்பம் தவிரஅன்று துவளத் தொடுவிடம் தீர்த்த தமிழின் தொகைசெய்தவன் திவளக் கொடிக்குன்ற மாளிகைச் சூளிகைச் சென்னியின்வாய்த் தவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே. | 3 |
1320 |
கள்ளம் பொழில்நனி பள்ளித் தடங்கடம் ஆக்கிஅஃதே வெள்ளம் பணிநெய்தல் ஆக்கிய வித்தகன் வெண்குருகு புள்ளொண் தவளப் புரிசங்கொ டாலக் கயல்உகளத் தள்ளந் தடம்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே. | 4 |
1321 |
ஆறதே றுஞ்சடை யான்அருள் மேவ அவனியர்க்கு வீறதே றுந்தமி ழால்வழி கண்டவன் மென்கிளிமாந் தேறல்கோ தித்தூறு சண்பகம் தாவிச் செழுங்கமுகின் தாறதே றும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே. | 5 |
1322 |
அந்தமுந் தும்பிற வித்துயர் தீர அரனடிக்கே பந்தமுந் தும்தமிழ் செய்த பராபரன் பைந்தடத்தேன் வந்துமுந் தும்நந்தம் முத்தங் கொடுப்ப வயற்கயலே சந்தமுந் தும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே. | 6 |
1323 |
புண்டலைக் குஞ்சரப் போர்வையர் கோயிற் புகஅடைக்கும் ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா சனிஉம்பர் பம்பிமின்னும் கொண்டலைக் கண்டுவண் டாடப் பெடையொடும் கொக்குறங்கும் தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர் காவலன் சம்பந்தனே. | 7 |
1324 |
எண்டலைக் குந்தலை வன்கழல் சூடிஎன் உள்ளம்வெள்ளம் கண்டலைப் பத்தன் கழல்தந்த வன்கதிர் முத்தநத்தம் விண்டலைப் பத்தியில் ஓடும் விரவி மிளர்பவளம் தண்டலைக் கும்கடற் சண்பையர் காவலன் சம்பந்தனே. | 8 |
1325 |
ஆறுமண் டப்பண்டு செஞ்சொல் நடாத்தி அமண்முழுதும் பாறுமண் டக்கண்ட சைவ சிகாமணி பைந்தடத்த சேறுமண் டச்சங்கு செங்கயல் தேமாங் கனிசிதறிச் சாறுமண் டும்வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே. | 9 |
1326 |
விடந்திளைக் கும்அர வல்குல்மென் கூந்தல் பெருமணத்தின் வடந்திளைக் குங்கொங்கை புல்கிய மன்மதன் வண்கதலிக் கடந்திளைத் துக்கழு நீர்புல்கி ஒல்கிக் கரும்புரிஞ்சித் தடந்திளைக் கும்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே. | 10 |
1327 |
பாலித்த கொங்கு குவளைகள் ளம்பொழில் கீழ்ப்பரந்து ஆலிப்ப ஆறதே றுங்கழ னிச் சண்பை அந்தமுந்து மேலிட்ட புண்டலைக் குஞ்சரத் தெண்டலைக் குந்தலைவன் கோலிட்ட வாறு விடந்திளைக் கும்அர வல்குலையே. | 11 |
திருச்சிற்றம்பலம்
12.6 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை (1328 -1357)
1328 |
திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்கும் கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின் இதழியின் செம்பொன் இருகரை சிதறிப் புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன் திருவருள் பெற்ற இருபிறப் பாளன் ...(5) முத்தீ வேள்வி நான்மறை வளர ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன் ஏழிசை யாழை எண்டிசை அறியத் துண்டப் படுத்த தண்டமிழ் விரகன் காழி நாடன் கவுணியர் தலைவன் ...(10) மாழை நோக்கி மலைமகள் புதல்வன் திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது கடுந்துயர் உட்புகக் கைவிளிக் கும்இந் நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே. | 1 |
1329 |
அரியோடு நான்முகத்தோன் ஆதிசுரர்க் கெல்லாம் தெரியாமை செந்தழலாய் நின்ற - ஒருவன்சீர் தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள் என்தலையின் மேலிருக்க என்று. | 2 |
1330 |
என்றும் அடியவர் உள்ளத் திருப்பன இவ்வுலகோர் நன்று மலர்கொடு தூவித் துதிப்பன நல்லசங்கத் தொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன ஒண்கலியைப் பொன்றும் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே. | 3 |
1331 |
அடுசினக் கடகரி அதுபட உரித்த படர்சடைக் கடவுள்தன் திருவருள் அதனால் பிறந்தது கழுமலம் என்னும் கடிநக ரதுவே வளர்ந்தது தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு பூங்குழல் மாதிடு போனகம் உண்டே பெற்றது ...(5) குழகனைப் பாடிக் கோலக் காப்புக் கழகுடைச் செம்பொற் றாளம் அவையே தீர்த்தது தாதமர் மருகற் சடையனைப் பாடிப் பேதுறு பெண்ணின் கணவனை விடமே அடைத்தது அரைசோ டிசையா அணிமறைக் காட்டுக் ...(10) குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே ஏறிற்று அத்தியும் மாவும் தவிர அரத்துறை முத்தின் சிவிகை முன்னாள் பெற்றே பாடிற்று அருமறை ஓத்தூர் ஆண்பனை அதனைப் பெருநிறம் எய்தும் பெண்பனை யாவே கொண்டது ...(15) பூவிடு மதுவில் பொறிவண் டுழலும் ஆவடு துறையில் பொன்னா யிரமே கண்டது உறியொடு பீலி ஒருகையிற் கொள்ளும் பறிதலைச் சமணைப் பல்கழு மிசையே நீத்தது அவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும் ...(20) தமிழ்ச்சுவை அறியாத் தம்பங் களையே நினைந்தது அள்ளற் பழனக் கொள்ளம் பூதூர் இக்கரை ஓடம் அக்கரைச் செலவே மிக்கவர் ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல ஞானசம் பந்தன்இஞ் ஞாலத் திடையே. ...(25) | 4 |
1332 |
நிலத்துக்கு மேல்ஆறு நீடுலகத் துச்சித் தலத்துக்கு மேலேதான் என்பர் - சொலத்தக்க சுத்தர்கள்சேர் காழிச் சுரன்ஞான சம்பந்தன் பத்தர்கள்போய் வாழும் பதி. | 5 |
1333 |
பதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற் கதிகம் அணுக்கன் அமணர்க்குக் காலன் அவதரித்த மதியம் தவழ்மாட மாளிகைக் காழிஎன் றால்வணங்கார் ஒதியம் பணைபோல் விழுவர்அந் தோசில ஊமர்களே. | 6 |
1334 |
கவள மாளிகைத் திவளும் யானையின் கவுள்தலைக் கும்பத்து உம்பர்ப் பதணத் தம்புதம் திளைக்கும் பெருவளம் தழீஇத் திருவளர் புகலி விளங்கப் பிறந்த வளங்கொள்சம் பந்தன் ....(5) கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில் தேமரு தினைவளர் காமரு புனத்து மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா மூரி மருப்பின் சீரிய முத்துக் கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து ...(10) முற்பட வந்து முயன்றங் குதவிசெய் வெற்பனுக் கலது சுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே. | 7 |
1335 |
பழிஒன்றும் ஓராதே பாய்இடுக்கி வாளா கழியுஞ் சமண்கையர் தம்மை - அழியத் துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம் நிரந்தரம்போய் நெஞ்சே நினை. | 8 |
1336 |
நினைஆ தரவெய்தி மேகலை நெக்கு வளைசரிவாள் தனைஆவ என்றின் றருளுதி யேதடஞ் சாலிவயற் கனையா வருமேதி கன்றுக் கிரங்கித்தன் கால்வழிபால் நனையா வருங்காழி மேவிய சீர்ஞான சம்பந்தனே. | 9 |
1337 |
தனமலி கமலத் திருவெனும் செல்வி விருப்பொடு திளைக்கும் வீயா இன்பத்து ஆடக மாடம் நீடுதென் புகலிக் காமரு கவினார் கவுணியர் தலைவ பொற்பமர் தோள நற்றமிழ் விரக ...(5) மலைமகள் புதல்வ கலைபயில் நாவ நினாது பொங்கொளி மார்பில் தங்கிய திருநீறு ஆதரித் திறைஞ்சிய பேதையர் கையில் வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின் பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே. ...(10) | 10 |
1338 |
பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் துறவியெனும் தோற்றோணி கண்டீர் -நிறைஉலகிற் பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன் தன்மாலை ஞானத் தமிழ். | 11 |
1339 |
ஞானந் திரளையி லேஉண் டனையென்று நாடறியச் சோனந் தருகுழ லார்சொல் லிடாமுன் சுரும்புகட்குப் பானந் தருபங்க யத்தார் கொடுபடைச் சால்வழியே கூனந் துருள்வயல் சூழ்காழி மேவிய கொற்றவனே. | 12 |
1340 |
அவனிதலம் நெரிய எதிர்எதிர் மலைஇச் சொரிமதக் களிற்று மத்தகம் போழ்ந்து செஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப் படவர வுச்சிப் பருமணி பிதுங்கப் பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே இடையிடைச் ...(5) செறியிருள் உருவச் சேண்விசும் பதனிற் பொறியென விழுவன பொங்கொளி மின்னே உறுசின வரையால் உந்திய கலுழிக் கரையால் உழல்வன கரடியின் கணனே நிரையார் பொருகடல் உதைந்த சுரிமுகச் சங்கு ....(10) செங்கயல் கிழித்த பங்கய மலரின் செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும் பழனக் கழனிக் கழுமல நாடன் வைகையில் அமணரை வாதுசெய் தறுத்த சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற் ...(15) சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான் நெறியினில் வரலொழி நீமலை யோனே. | 13 |
1341 |
மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்து முலைத்டங்கள் நீத்தாலும் மூப்பர் - கலைத்தலைவன் சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித் தம்பந்தம் தீராதார் தாம். | 14 |
1342 |
தாமரை மாதவி சேறிய நான்முகன் தன்பதிபோல் காமரு சீர்வளர் காழிநன் னாடன் கவித்திறத்து நாமரு மாதவர் போல்அழ கீந்துநல் வில்லிபின்னே நீர்மரு வாத சுரத்தெங்ஙன் ஏகும்என் நேரிழையே. | 15 |
1343 |
இழைகெழு மென்முலை இதழிமென் மலர்கொயத் தழைவர ஒசித்த தடம்பொழில் இதுவே காமர் சுனைகுடைந் தேறித் துகிலது புனையநின்று எனையுங் கண்டு வெள்கிடம் இதுவே தினைதொறும் பாய்கிளி இரியப் பைவந் தேறி ...(5) ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே இன்புறு சிறுசொல் அவைபல இயற்றி அன்புசெய் தென்னை ஆட்கொளும் இடமே பொன்புரை தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப் ...(10) புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து நெய்த்துடுப் பெடுத்த முத்தீப் புகையால் நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன் நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப் ...(15) பூம்புனம் அதனிற் காம்பன தோளி பஞ்சில் திருந்தபடி நோவப் போய்எனை வஞ்சித் திருந்த மணியறை இதுவே. | 16 |
1344 |
வேழங்கள் எய்பவர்க்கு வில்லாவ திக்காலம் ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் - நீள்வயல்சூழ் வாய்ந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற் சாய்ந்தது வண்தழையோ தான். | 17 |
1345 |
தழைக்கின்ற சீர்மிகு ஞானசம் பந்தன் தடமலைவாய் அழைக்கின்ற மஞ்ஞைக் கலர்ந்தன கோடல்அம் பெய்திடுவான் இழைக்கின்ற தந்தரத் திந்திர சாபம்நின் எண்ணமொன்றும் பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து தோன்றிற்றுப் பெய்வளையே. | 18 |
1346 |
வளைகால் மந்தி மாமரப் பொந்தில் விளைதேன் உண்டு வேணுவின் துணியாற் பாறை யில்துயில் பனைக்கை வேழத்தை உந்தி எழுப்பும் அந்தண் சிலம்ப அஃதிங்கு என்னையர் இங்கு வருவர் பலரே ...(5) அன்னை காணில் அலர்தூற் றும்மே பொன்னார் சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி சேவடி புல்லிச் சில்குரல் இயற்றி அமுதுண் செவ்வாய் அருவி தூங்கத் தாளம் பிரியாத் தடக்கை அசைத்துச் ....(10) சிறுகூத் தியற்றிச் சிவன்அருள் பெற்ற நற்றமிழ் விரகன் பற்றலர் போல இடுங்கிய மனத்தொடும் ஒடுங்கிய சென்று பருதியுங் குடகடல் பாய்ந்தனன் கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே. ..(15) | 19 |
1347 |
தேம்புனமே உன்னைத் திரிந்து தொழுகின்றேன் வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் - தேம்பி அழுதகன்றாள் என்னா தணிமலையர் வந்தால் தொழதகன்றாள் என்றுநீ சொல்லு. | 20 |
1348 |
சொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில் தொல்அமணர் பற்செறி யாவண்ணம் காத்தசம் பந்தன் பயில்சிலம்பில் கற்செறி வார்சுனை நீர்குடைந் தாடும் கனங்குழையை இற்செறி யாவண்ணம் காத்திலை வாழி இரும்புனமே. | 21 |
1349 |
புனலற வறந்த புன்முளி சுரத்துச் சினமலி வேடர் செஞ்சரம் உரீஇப் படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத் தாடும் அரவின் அகடு தீயப் பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக் ...(5) கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும் பொறிவரிப் புறவே உறவலை காண்நீ நறைகமழ் தேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப் பையர வசைத்த தெய்வ நாயகன் தன்அருள் பெற்ற பொன்னணிக் குன்றம் ....(10) மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல் வினையேன் இருக்கும் மனைபிரி யாத வஞ்சி மருங்குல் அஞ்சொற் கிள்ளை ஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை ..(15) ஆதலின் புறவே உறவலை நீயே. | 22 |
1350 |
அலைகடலின் மீதோடி அந்நுளையர் வீசும் வலைகடலில் வந்தேறு சங்கம் - அலர்கடலை வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே ஒண்முத் தமிழ்பயந்தான் ஊர். | 23 |
1351 |
ஊரும் பசும்புர வித்தேர் ஒளித்த தொளிவிசும்பில் கூரும் இருளொடு கோழிகண் துஞ்சா கொடுவினையேற் காரும் உணர்ந்திலர் ஞானசம் பந்தன்அந் தாமரையின் தாரும் தருகிலன் எங்ஙனம் யான்சங்கு தாங்குவதே. | 24 |
1352 |
தேமலி கமலப் பூமலி படப்பைத் தலைமுக டேறி இளவெயிற் காயும் கவடிச் சிறுகாற் கர்க்கட கத்தைச் சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத் துன்னி எழுந்து செந்நெல் மோதும் ...(5) காழி நாட்டுக் கவுணியர் குலத்தை வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன் தெண்டிரைக் கடல்வாய்க் காண்டகு செவ்விக் களிறுகள் உகுத்த முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே ....(10) வாடை அடிப்ப வைகறைப் போதிற் தனிநீ போந்து பனிநீர் ஒழுகக் கூசிக் குளிர்ந்து பேசா திருந்து மேனி வெளுத்த காரணம் உரையாய் இங்குத் தணந்தெய்தி நுமரும் ...(15) இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே. | 25 |
1353 |
குருகும் பணிலமும் கூன்நந்தும் சேலும் பெருகும் வயற்காழிப் பிள்ளை - அருகந்தர் முன்கலங்க நட்ட முடைகெழுமு மால்இன்னம் புன்கலங்கல் வைகைப் புனல். | 26 |
1354 |
புனமா மயில்சாயல் கண்டுமுன் போகா கிளிபிரியா இனமான் விழிஒக்கும் என்றுவிட் டேகா இருநிலத்துக் கனமா மதிற்காழி ஞானசம் பந்தன் கடமலைவாய்த் தினைமா திவள்காக்க எங்கே விளையும் செழுங்கதிரே. | 27 |
1355 |
கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத் தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற அத்தன் காழி நாட்டுறை அணங்கோ மொய்த்தெழு தாமரை அல்லித் தவிசிடை வளர்ந்த ...(5) காமரு செல்வக் கனங்குழை அவளோ மீமருத் தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும் உருவளர் கொங்கை உருப்பசி தானோ வாருணக் கொம்போ மதனன் கொடியோ ஆரணி யத்துள் அருந்தெய்வ மதுவோ ....(10) வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும் வஞ்சி மருங்கும் கிஞ்சுக வாயும் ஏந்திள முலையும் காந்தளங் கையும் ஓவியர் தங்கள் ஒண்மதி காட்டும் வட்டிகைப் பலகை வான்துகி லிகையால் ...(15) இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே. | 28 |
1356 |
வடிக்கண்ணி யாளைஇவ் வான்சுரத்தி னூடே கடிக்கண்ணி யானோடும் கண்டோம் - வடிக்கண்ணி மாம்பொழில்சேர் வைகை அமண்மலைந்தான் வண்காழிப் பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு. | 29 |
1357 |
குருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள் பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம் பந்தன்பொற் றாமரைக்கா வருந்தும் திரள்கொங்கை மங்கையை வாட்டினை வானகத்தே திருந்தும் திரள்முகில் முந்திவந் தேறுதிங் கட்கொழுந்தே. | 30 |
திருச்சிற்றம்பலம்
12.7 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை (1358)
1358 |
திருந்தியசீர்ச் செந்தா மரைத்தடத்துச் சென்றோர் இருந்தண் இளமேதி பாயப் - பொருந்திய புள்ளிரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக் கள்ளிரியச் செங்கழுநீர் கால்சிதையத் - துள்ளிக் குருகிரியக் கூன்இறவம் பாயக் களிறு முருகுவிரி பொய்கையின்கண் மூழ்க -வெருவுற்ற கோட்டகத்துப் பாய்வாளைக் கண்டலவன் கூசிப்போய்த் தோட்டகத்த செந்நெல் துறையடையச் - சேட்டகத்த காவி முகமலரக் கார்நீலம் கண்படுப்ப வாவிக்கண் நெய்தல் அலமர - மேவிய | (5) |
அன்னம் துயில்இழப்ப அஞ்சிறைசேர் வண்டினங்கள் துன்னும் துணைஇழப்பச் சூழ்கிடங்கில் - மன்னிய வள்ளை நகைகாட்ட வண்குமுதம் வாய்காட்டத் தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட - மெள்ள நிலவு மலரணையின் நின்றிழிந்த சங்கம் இலகுகதிர் நித்திலங்கள் ஈன - உலவிய மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் - புல்லிய பாசடைய செந்நெல் படரொளியால் பல்கதிரோன் தேசடைய ஓங்கு செறுவுகளும் - மாசில்நீர் | (10) | |
நித்திலத்தின் சாயும் நிகழ்மரக தத்தோலும் தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய - மொய்த்த பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித் திவளக் கொடிமருங்கில் சேர்த்தித் - துவளாமைப் பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் - விட்டொளிசேர் கண்கள் அழல்சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத் தண்டலையின் நீழல் தறியணைந்து - கொண்ட கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி மலையு மரவடிவங் கொண்டாங் - கிலைநெருங்கு | (15) | |
சூதத் திரளும் தொகுகனிக ளால்நிவந்த மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் - போதுற் றினமொருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பு கனிநெருங்கு திண்கதலிக் காடும் - நனிவிளங்கு நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலஞ்சிறப்ப ஊற்று மடுத்த உயர்பலவும் -மாற்றமரும் மஞ்சள் எழில்வளமும் மாதுளையின் வார்பொழிலும் இஞ்சி இளங்காவின் ஈட்டமும் - எஞ்சாத கூந்தற் கமுகும் குளிர்பாட லத்தெழிலும் வாய்ந்தசீர் சண்பகத்தின் வண்காடும் - ஏந்தெழிலார் | (20) | |
மாதவியும் புன்னையும் மண்ணும் மலர்க்குரவும் கேதகையும் எங்கும் கெழீஇஇப் - போதின் இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம் வளந்துன்று வார்பொழிலின் மாடே - கிளர்ந்தெங்கும் ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும் சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் - ஆலும் அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி உறுதிரைநீர் வேலை ஒலிப்ப - வெறிகமழும் நந்தா வனத்தியல்பும் நற்றவத்தோர் சார்விடமும் அந்தமில் சீரார் அழகினால் - முந்திப் | (25) | |
புகழ்வாருந் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே - திகழ முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த புளகத்தின் பாம்புரிசூழ் போகி - வளர இரும்பதணஞ் சேர இருத்திஎழில் நாஞ்சில் மருங்கனைய அட்டாலை யிட்டுப் - பொருந்தியசீர்த் தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும் காமரமும் ஏப்புழையும் கைகலந்து - மீமருவும் வெங்கதிரோன் தேர்விலங்க மிக்குயர்ந்த மேருப்போன் றங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் - பொங்கொளிசேர் | (30) | |
மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் - வாளொளிய நாடக சாலையும் நன்பொற் கபோதஞ்சேர் பீடமைத்த மாடத்தின் பெற்றியும் - கேடில் உருவு பெறவகுத்த அம்பலமும் ஓங்கு தெருவும் வகுத்தசெய் குன்றும் -மருவினிய சித்திரக் காவும் செழும்பொழிலும் வாவிகளும் நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் - எத்திசையும் துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் - பொன்னும் | (35) | |
மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி இரவலர்கட் கெப்போதும் ஈந்தும் - கரவாது கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும் தப்பாக் கொடைவளர்க்குஞ் சாயாத - செப்பத்தால் பொய்ம்மை கடிந்து புகழ்பரிந்து பூதலத்து மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் - உண்மை மறைபயில்வார் மன்னு வியாகரணக் கேள்வித் துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் - முறைமையால் ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப் போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் - சோகமின்றி | (40) | |
நீதி நிலைஉணர்வார் நீள்நிலத்துள் ஐம்புலனும் காதல் விடுதவங்கள் காமுறுவார் - ஆதி அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக் கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் - ஒருங்கிருந்து காமநூல் கேட்பார் கலைஞானம் காதலிப்பார் ஓமநூல் ஓதுவார் உத்தரிப்பார் - பூமன்னும் நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர் தாம்மன்னி வாழும் தகைமைத்தாய் - நாமன்னும் ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார் ஏரணங்கு மாடத் தினிதிருந்து - சீரணங்கு | (45) | |
வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப் பாணம் பயில்வார் பயன்உறுவார் - பேணியசீர்ப் பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற்பயில்வார் பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவார் - ஆய்எங்கும் மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும் பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் - தங்கிய வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார் கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் - மாதரார் பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள் மேவும் ஒலியும் வியன்நகரம் - காவலர்கள் | (50) | |
பம்பைத் துடிஒலியும் பௌவப் படைஒலியும் கம்பக் களிற்றொலியும் கைகலந்து - நம்பிய கார்முழக்கும் மற்றைக் கடல்முழக்கும் போற்கலந்த சீர்முழக்கம் எங்கும் செவிடுபடப் - பார்விளங்கு செல்வம் நிறைந்தஊர் சீரில் திகழ்ந்தஊர் மல்கு மலர்மடந்தை மன்னும்ஊர் - சொல்லினிய ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்கள்ஊர் வேலொத்த கண்ணார் விளங்கும்ஊர் - ஆலித்து மன்னிருகால் வேலை வளர்வெள்ளத் தும்பரொடும் பன்னிருகால் நீரில் மிதந்தவூர் - மன்னும் | (55) | |
பிரமனூர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை அரன்மன்னு தண்காழி அம்பொற் - சிரபுரம் பூந்தராய்க் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல் வாய்ந்தநல் தோணி புரம்மறையோர் - ஏய்ந்த புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப் பகர்கின்ற பண்புற்ற தாகித் - திகழ்கின்ற மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர் ஒல்லைக் கழுவில் உலக்கவும் - எல்லையிலா மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும் மேதக்க வானோர் வியப்பவும் - ஆதியாம் | (60) | |
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும் ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும் - துன்றிய பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல் மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய சிந்தனையாற் சீரார் கவுணியர்க்கோர் சேயென்ன வந்தங் கவதரித்த வள்ளலை - அந்தமில்சீர் ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை மான மறையவற்றின் வான்பொருளை - ஆனசீர்த் தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை வித்தகத்தால் ஓங்கு விடலையை - முத்தமிழின் | (65) | |
செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வர்உயிர் அஞ்சத் திகழ்ந்த அடல்உருமை - எஞ்சாமை ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில் கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் - தீதறுசீர்க் காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும் மூலப் பொருளும் முழுதுணர்ந்த - சீலத் திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த ஒருநாமத் தால் உயர்ந்த கோவை - வருபெருநீர்ப் பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை - முன்னே | (70) | |
நிலவு முருகர்க்கும் நீலநக் கற்கும் தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் - குலவிய தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை மாழையொண்கண் மாதர் மதனனைச் - சூழொளிய கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில் வாதில் அமணர் வலிதொலையக் - காதலால் புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை வண்கழுவில் தைத்த மறையோனை - ஒண்கெழுவு ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது பாலை தனைநெய்தல் ஆக்கியும் - காலத்து | (75) | |
நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும் பாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்துமுன் - நேரெழுந்த யாழை முரித்தும் இருங்கதவம் தான்அடைத்தும் சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் - தாழ்பொழில்சூழ் கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும் துங்கப் புரிசை தொகுமிழலை - அங்கதனில் நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில் முத்தின் சிவிகை முதற்கொண்டும் - அத்தகுசீர் மாயிரு ஞாலத்து மன்னா வடுதுறைபுக் காயிரஞ் செம்பொன் அதுகொண்டும் - மாய்வரிய | (80) | |
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு வோத்தூரில் ஆண்பனைகள் பெண்பனைகள் ஆக்கியும் - பாண்பரிசில் கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற் சப்பாணி கொண்டு தராதலத்துள் - எப்பொழுதும் நீக்கரிய இன்பத் திராகம்இருக் குக்குறள் நோக்கரிய பாசுரம்பல் பத்தோடும் - ஆக்கரிய யாழ்முரி சக்கரமாற் றீரடி முக்காலும் பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய - ஊழி உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத் திருப்பதிகம் பாடவல்ல சேயை ௭ விருப்போடு | (85) | |
நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர் எண்ணில் முனிவரர் ஈட்டத்துப் - பண்ணமரும் ஓலக்கத் துள்ளிருப்ப ஒண்கோயில் வாயிலின்கண் கோலக் கடைகுறுகிக் கும்பிட்டாங் - காலும் புகலி வளநகருள் பூசுரர் புக்காங் கிகலில் புகழ்பரவி யேத்திப் - புகலிசேர் வீதி எழுந்தருள வேண்டுமென விண்ணப்பம் ஆதரத்தாற் செய்ய அவர்க்கருளி - நீதியால் கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த மாதவியின் போதை மருங்கணைத்துக் - கோதில் | (90) | |
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு மருவோடு மல்லிகையை வைத்தாங் - கருகே கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப் பெருகு பிளவிடையே பெய்து - முருகியலும் புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி தன்அயலே முல்லை தலையெடுப்ப - மன்னிய வண்செருந்தி வாய்நெகிழ்ப்ப மௌவல் அலர்படைப்பத் தண்குருந்தம் மாடே தலையிறக்க - ஒண்கமலத் தாதடுத்த கண்ணியால் தண்ணறுங் குஞ்சிமேற் போதடுத்த கோலம் புனைவித்துக் - காதிற் | (95) | |
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தின் இனமணியின் ஆரம் இலகப் - புனைகனகத் தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம் வைத்து மணிக்கண் டிகைபூண்டு - முத்தடுத்த கேயூரம் தோள்மேற் கிடத்திக் கிளர்பொன்னின் வாய்மை பெறுநூல் வலந்திகழ - வேயும் தமனியத்தின் தாழ்வடமும் தண்டரளக் கோப்பும் சிமைய வரைமார்பிற் சேர்த்தி - அமைவுற்ற வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில் ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து - திண்ணோக்கிற் | (100) | |
காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து - சீற்றத் தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப் புழைத்தடக்கை கொண்டெறிந்து பொங்கி - மழை மதத்தாற் பூத்த கடதடத்துக் போகம் மிகப்பொலிந்த காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் - கோத்த கொடுநிகளம் போக்கிநிமிர் கொண்டெழுந்து கோபித் திடுவண்டை யிட்டுக் கலித்து - முடுகி நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகர்நீத் திடிபெயரத் தாளந் திலுப்பி - அடுசினத்தால் | (105) | |
கன்ற முகம்பருகிக் கையெடுத் தாராய்ந்து வென்றி மருப்புருவ வெய்துயிர்த் - தொன்றிய கூடம் அரணழித்துக் கோபுரங்க ளைக்குத்தி நீடு பொழிலை நிகரழித் - தோடிப் பணப்பா கரைப்பரிந்து குத்திப் பறித்த நிணப்பாகை நீள்விசும்பின் வீசி - அணைப்பரிய ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக்கா ரர்கள்தாம் மாடணையக் கொண்டு வருதலுமே - கூடி நயந்து குரற்கொடுத்து நட்பளித்துச் சென்று வியந்தணுகி வேட்டம் தணிந்தாங் - குயர்ந்த | (110) | |
உடற்றூய வாசிதனைப் பற்றிமேல் கொண்டாங் கடற்கூடற் சந்தி யணுகி - அடுத்த பயில்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி அயர்வு கெடஅணைத்துத் தட்டி - உயர்வுதரு தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்ச்சிறுத் தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் - எண்டிசையும் பல்சனமும் மாவும் படையும் புடைகிளர ஒல்லொலியால் ஓங்கு கடல்கிளர - மல்லல் பரித்தூரங் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக் கருத்தோ டிசைகவிஞர் பாட - விரித்த | (115) | |
குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப் புடைபரந்து பொக்கம் படைப்பக் - கடைபடு வீதி அணுகுதலும் வெள்வளையார் உள்மகிழ்ந்து காதல் பெருகிக் கலந்தெங்கும் - சோதிசேர் ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும் சேடரங்கும் நீள்மறுகும் தெற்றியிலும் - பீடுடைய பேரிளம் பெண் ஈறாகப் பேதை முதலாக வாரிளங் கொங்கை மடநல்லார் - சீர்விளங்கப் பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும் பூணும் புலம்பப் புறப்பட்டுச் - சேண்மறுகில் | (120) | |
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல் ஈண்டு குடையின் எழில் நிழற்கீழ்க் -காண்டலுமே கைதொழுவார் நின்று கலைசரிவார் மால்கொண்டு மெய்தளர்வார் வெள்வளைகள் போய்வீழ்வார் - வெய்துயிர்த்துப் பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார் காம்பனைய மென்தோள் கவின்கழிவார் - தாம்பயந்து வென்றிவேற் சேயென்ன வேனில்வேட் கோவென்ன அன்றென்ன ஆமென்ன ஐயுற்றுச் - சென்றணுகிக் காழிக் குலமதலை என்றுதங் கைசோர்ந்து வாழி வளைசரிய நின்றயர்வார் - பாழிமையால் | (125) | |
உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை மெள்ள நடவென்று வேண்டுவார் - கள்ளலங்கல் தாராமை அன்றியும் தையல்நல் லார் முகத்தைப் பாராமை சாலப் பயன் என்பார் - நேராக என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது நன்மை நமக்குண் டெனநயப்பார் - கைம்மையால் ஒண்கலையும் நாணும் உடைதுகிலும் தோற்றவர்கள் வண்கமலத் தார்வலிந்து கோடுமெனப் - பண்பின் வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல் தொடுத்ததரந் தொண்டை துடிப்பப் - பொடித்தமுலைக் | (130) | |
காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால் பூசற் கமைந்து புறப்படுவார் - வாசச் செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார் கழுமலர்த்தார் கோவே கழல்கள் - தொழுவார்கள் அங்கோல் வளையிழக்கப் போவது நின்னுடைய செங்கோன்மை யோவென்று செப்புவார்-நங்கைமீர் இன்றிவன் நல்குமேல் எண்பெருங் குன்றத்தில் அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் - பொன்ற உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி நிரைகழுமேல் உய்த்தானை நேர்ந்து - விரைமலர்த்தார் | (135) | |
பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள் மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் - மற்றிவனே பெண்ணிரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின் நண்ணு கடுவிடத்தால் நாட்சென்று - விண்ணுற்ற ஆருயிரை மீட்டன் றவளை அணிமருகல் ஊரறிய வைத்த தெனஉரைப்பார் - பேரிடரால் ஏசுவார் தாம்உற்ற ஏசறவைத் தோழியர்முன் பேசுவார் நின்றுதம் பீடழிவார் - ஆசையால் நைவார் நலன்அழிவார் நாணோடு பூண்இழப்பார் மெய்வாடு வார்வெகுள்வார் வெய்துயிர்ப்பார் - தையலார் | (140) | |
பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன் சாந்தம் எனமெய்யில் தைவருவார் - வாய்ந்த கிளியென்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை ஒளிமே கலையென் றுடுப்பார் -அளிமேவு பூங்குழலார் மையலாய்க் கைதொழுமுன் போதந்தான் ஓங்கொலிசேர் வீதி யுலா. |
திருச்சிற்றம்பலம்
12.8 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் (1359 - 1407)
1359 |
அலையார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே நிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றி ஈங்கருளி யெம்போல்வார்க் கிடர்கெடுத்தல் காரணமாய் ஓங்குபுகழ்ச் சண்பையெனும் ஒண்பதியுள் உதித்தனையே. செஞ்சடைவெண் மதியணிந்த சிவன்எந்தை திருவருளால் வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை நற்கண்ணி அளவிறந்த ஞானத்தை அமிர்தாக்கிப் பொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே. தோடணிகா தினன்என்றும் தொல்லமரர்க் கெஞ்ஞான்றும் தேடரிய பராபரனைச் செழுமறையின் அகன்பொருளை அந்திச்செம் மேனியனை அடையாளம் பலசொல்லி உந்தைக்குக் காணஅரன் உவனாமென் றுரைத்தனயே. (இவை மூன்றும் நான்கடித் தாழிசை) வளமலி தமிழிசை வடகலை மறைவல முளரிநன் மலரணி தருதிரு முடியினை. கடல்படு விடமடை கறைமணி மிடறுடை அடல்கரி உரியனை அறிவுடை அளவினை. (இவை இரண்டும் அராகம்) கரும்பினு மிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண்ணவன்அடிமேல் பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே. பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும் நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே. (இவை இரண்டும் இரண்டடித் தாழிசை) அணிதவத் தவர்களுக் கதிகவித் தகனும்நீ தணிமனத் தருளுடைத் தவநெறிக் கமிர்தம்நீ அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனும்நீ தமிழ்நலத் தொகையினில் தகுசுவைப் பவனும்நீ (இவை நான்கும் நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்) மறையவர்க் கொருவன் நீ மருவலர்க் குருமு நீ நிறைகுணத் தொருவன் நீ நிகரில்உத் தமனும் நீ (இவை நான்கும் முச்சீர் ஓரடி அம்போதரங்கம்) அரியை நீ. எளியை நீ. அறவன் நீ. துறவன் நீ. பெரியை ந.ீ உரியை நீ. பிள்ளை நீ. வள்ளல் நீ. (இவை எட்டும் இருசீர் ஓரடி அம்போதரங்கம்) எனவாங்கு (இது தனிச்சொல்) அருந்தமிழ் விரகநிற் பரசுதும் திருந்திய நிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும் உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர் சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத் தார்கெழு தண்டலை தண்பணை தழீஇக் (5) கற்றொகு புரிசைக் காழியர் நாத நற்றொகு கீர்த்தி ஞானசம் பந்த நின்பெருங் கருணையை நீதியின் அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே. | 1 |
1360 | வெண்பா எனவே இடர்அகலும் இன்பமே எய்தும் நனவே அரன்அருளை நாடும் - புனல்மேய செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன் கொங்கமலத் தண்காழிக் கோ. | 2 |
1361 | கட்டளைக் கலித்துறை கோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தளவார் ஏலப் பொழிலணி சண்பையர் கோனை இருங்கடல்சூழ் ஞாலத் தணிபுகழ் ஞானசம் பந்தனை நற்றமிழே போலப் பலபுன் கவிகொண்டு சேவடி போற்றுவனே. | 3 |
1362 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் போற்று வார்இடர் பாற்றிய புனிதன் ஏற்ற வார்புகழ் ஞானசம் பந்தன் சேற்று வார்புனங் காவல் புரிந்தென் மாற்றம் நீர்எமக் கின்றுரை செய்தால் 4 | |
1363 | எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பம்நனி பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு பலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன்மிகு சலமலி தருங்கமல சரண்நினைவன் என்றனது 5 | |
1364 | பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வகைதகு முத்தமி ழாகரன் மறைபயில் திப்பிய வாசகன் திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ்புக லிக்கர சாகிய மிகமத வெற்றிகொள் வாரண மிடைவரு டைக்குலம் யாளிகள் நகையெழி லிற்குற மாதுன தருமை நினைக்கிலள் நீயிவள் 6 | |
1365 |
வாணில வும்புன லும்பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத் நாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன் கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக் 7 | |
1366 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அறிவாகி இன்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை நெறியால மண்டுன்றி முனைநாள்சி னங்கொண்டு வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற 8 | |
1367 | பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம் கொண்டதரன் உம்பர்பரன் எங்கள்பெரு மானருள் படைத்துக் கண்டதரு கந்தர்குலம் ஒன்றிமுழு துங்கழுவில் ஏறக் விண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாட 9 | |
1368 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பிரானை மெய்த்திரு ஞானசம் பந்தனை மறையவர் பெருமானைக் குராம லர்ப்பொழிற் கொச்சையர் நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித் தராத லத்தினில் அவனருள் நினைவொடு தளர்வுறு தமியேனுக் கிராவி னைக்கொடு வந்ததிவ் வந்திமற் றினிவிடி வறியேனே. | 10 |
1369 | பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஏனமு கத்தவ புத்தரை இந்திர சித்து மணம்புணர் வுற்றான் தானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர் ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார் சோனக னுக்குமெ னக்கு மெனத்தரை அம்மனை சூலது கொண்டாள் 11 | |
1370 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆர்மலி புகலி நாதன் அருளென இரவில் வந்தென் வார்முலை பயலை தீர மணந்தவர் தணந்து போன தேரதர் அழியல் உம்மைச் செய்பிழை எம்ம தில்லை கார்திரை புரள மோதிக் கரைபொருங் கடலி னீரே. | 12 |
1371 | கலிவிருத்தம் கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன் தடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல் திடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடி மடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே. | 13 |
1372 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன் எழிலா ருங்கவு ணியர்தீபன்திகழ் பொழியா நின்றன துளிதார் கொன்றைகள் பழிமேல் கொண்டது நுமர்தேர் அன்பொடும் 14 | |
1373 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மங்கை யிடத்தர னைக்கவி நீரெதிர் ஓட மதித்தருள்செய் தங்கு புகழ்ச்சதுர் மாமறை நாவளர் சைவசி காமணிதன் துங்க மதிற்பிர மாபுரம் மேவிய சூழ்பொழில் நின்றொளிர்மென் கொங்கை யுடைக்கொடி ஏரிடை யாள்குடி கொண்டனள் எம்மனமே. | 15 |
1374 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு தனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழும் கீர்த்திச் நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா 16 | |
1375 | சம்பிரதம் எழுகுல வெற்பிவை மிடறில் அடக்குவன் முழுதும் ஒளித்திர வியையி நிலத்திடை கழுமல நற்பதி அதிப தமிழ்க்கடல் தொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறு 17 | |
1376 | எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சயமி குத்தரு கரைமு ருக்கிய தமிழ்ப யிற்றிய நாவன் வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் போதன் கயலு டைப்புனல் வயல்வ ளத்தகு கழும லப்பதி நாதன் இயலு டைக்கழல் தொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே. | 18 |
1377 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத நாதன்அந் தணர்கோனென் ஆனைவண் புகழாளி நீதியன்றன பேசும் யாயுமிந் துவும்வாசம் மோதுதெண் திரைசேவல் சேரும்அன் றிலும்வேயும் 19 | |
1378 |
வன்பகை யாமக் குண்டரை வென்றோய் தன்பகை யாகச் சிந்தையுள் நையும் நின்புகழ் பாடிக் கண்பனி சோரா டன்பக லாமெய்ச் சிந்தையர் இன்பா 20 | |
1379 | மறம் கோவின்திரு முகமீதொடு வருதூதுவன் ஈர மாவீரியர் இவர்தங்கையென் மகுடன்திறம் அமண பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன் தூவேரியை மடுமின்துடி யடிமின்படை யெழுமின் 21 | |
1380 | எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இனியின் றொழிமினிவ் வெறியும் மறிபடு நனிசிந் தையி னிவள் மிகவன் புறுவதொர் புனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ் பனிமென் குழலியை அணிமின் துயரொடு 22 | |
1381 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சரத மணமலி பரிசம் வருவன வரதன் அணிதிகழ் விரகன் மிகுபுகழ் விரத முடையைநின் இடையின் அவள்மனம் இரதம் அழிதர வருதல் முனம்இனி 23 | |
1382 |
அயன்நெடிய மாலும்அவ ரறிவரிய தாணுவரன் வயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி செயநிலவு மாடமதில் புடைதழுவு வாசமலி பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர் 24 | |
1383 |
அரியாருங் கிரிநெறிஎங் ஙனம்நீர் வந்தீர் தெரியாபுன் சிறுநெறிகள் எந்தம் வாழ்விச் சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று வரியாரும் பொழிலுமெழில் மதிலும் தோற்றும் 25 | |
1384 | ஈற்றடி மிக்குவந்த நான்கடிக் கலித்தாழிசை ஆமாண்பொன் கூட்டகத்த அஞ்சொலிளம் பைங்கிளியே பாமாலை யாழ்முரியப் பாணழியப் பண்டருள்செய் மாமான சுந்தரன்வண் சம்பந்த மாமுனியெம் கோமான்தன் புகழொருகால் இன்புறநீ கூறாயே கொச்சையர்கோன் தன்புகழ்யான் இன்புறநீ கூறாயே. | 26 |
1385 | எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கூற தாகமெய் யடிமை தான்எனை உடைய கொச்சையர் அதிபதி வீற தார்தமிழ் விரகன் மேதகு புகழி னான்இவன் மிகுவனச் சேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத் தேறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே. | 27 |
1386 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சதுரன் புகலியர் அதிபன்கூர் முதல்வன் புகலியர் அதிபன்தாள் எதிர்வந்தனர்விறல் கெடவெம்போர் அதிர்கின் றனஇது பருவஞ்சே 28 | |
1387 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர் மிகுபொன் மாடப் புகலி நாதன் துன்னு ஞானத் தெம்பி ரான்மெய்த் தொகைசெய் பாடற் பதிகம் அன்னாள் பொன்னு மாநல் தரள முந்தன் பொருக யற்கண் தனம்நி றைந்தாள் இன்னும் ஏகிப் பொருள்ப டைப்பான் எங்ஙனேநான் எண்ணு மாறே. | 29 |
1388 | பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மாறி லாத பொடிநீ றேறு கோல வடிவும் ஊறி யேறு பதிகத் தோசை நேச நுகர்வும் வீற தேறும் வயல்சூழ் காழி ஞான பெருமான் தேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும் 30 | |
1389 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கைதவத்தால் என்னிடைக்கு நீவந்த மெய்தவத்தார் உயிரனைய மிகுசைவ செய்தவத்தால் விதிவாய்ந்த செழுமுலையார் எய்தவத்தால் விளிவெனக்கென் யாதுக்கு 31 | |
1390 |
மதங்கியார் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன் திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ் நசைமிகு வண்புகழ் பயிலு மதங்கிதன் வசைதகு மென்குல மவைமுழு துங்கொள 32 | |
1391 |
வருகின் றனன்என் றனதுள் ளமும்நின் தருகும் புனல்வெஞ் சுரம்யான் அமரும் கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக் பெருகுந் திருவார் அருள்பே ணலர்போற் 33 | |
1392 |
கொடிநீடு விடையுடைய பெருமானை அடிபரவு அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன் முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவன்நுமர் படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி 34 | |
1393 |
பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன பிற்றைமுறை உறுதுயர் அழிப்பனமுன் உமைதிரு வருட்பெருக நறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன துறுபொழில் மதிற்புறவ முதுபதிமன் ஒப்பரிய 35 | |
1394 | பன்னீருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தொகுவார் பொழில்சுற் றியவான் மதிதோ யுமதிற் கனமார் மிருகா ழிமன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார் மகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய் தகுவாழ் வுநிலைத் தெழில்சே ரறமா னபயிற் றுவர்மா 36 | |
1395 |
பாணாற்றுப்படை நேரிசை ஆசிரியப்பா கருமங் கேண்மதி கருமங் கேண்மதி துருமதிப் பாண கருமங் கேண்மதி நிரம்பிய பாடல் நின்கண் ணோடும் அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக் காந்திய உதரக் கனல்தழைத் தெழுதலின் (5) தேய்ந்துடல் வற்றிச் சின்னரம் பெழுந்தே இறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை உறுசெறித் தனைய உருவுகொண் டுள்வளைஇ இன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம் மன்னிய வளநகர் மனைக்கடை தோறும் (10) சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது நின்றுழி நிலாவு வன்றுயர் போயொழிந் தின்புற் றிருநிதி எய்தும் அதுநுன துள்ளத் துள்ள தாயின் மதுமலர் வண்டறை சோலை வளவயல் அகவ (15) ஒண்திறற் கோண்மீன் உலாவு குண்டகம் உயர்தரு வரையில் இயல்தரு பதணத்துக் கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக் கனகப் பருமுரட் கணையக் கபாட விலையக் கோபுர விளங்கெழில் வாயில் (20) நெகிழ்ச்சியில் வகுத்துத் திகழ்ச்சியில் ஓங்கும் மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைந்த செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய மாளிகை ஓளிச் சூளிகை வளாகத் தணிவுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய (25) நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச் செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக் கழுமல நாதன் கவுணியர் குலபதி (30) தண்டமிழ் விரகன் சைவ சிகாமணி பண்டிதர் இன்பன் பரசமய கோளரி என்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் னுள்ளத் தன்பினை அருளிய ஆண்டகை தன்புகழ் குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி (35) நாப்பொலி நல்லிசை பாட மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே. | 37 |
1396 | வஞ்சித் துறை நீதியின் நிறைபுகழ் மேதகு புகலிமன் மாதமிழ் விரகனை ஓதுவ துறுதியே. | 38 |
1397 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் உறுதி முலைதாழ எனையி கழுநீதி அறுதி பெறுமாதர் பெயல்த ருதறானும் பெறுதி இவைநீயென் அடிப ணிதல்மேவு நறைக மழுவாச வளர்பொ ழில்சுலாவும் 39 | |
1398 | ஆசிரியத் துறை நீமதித் துன்னி நினையேல் மடநெஞ்சமே காமதிக் கார்பொழிற் காழி நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடு பூமதிக் குங்கழல் போற்றே. | 40 |
1399 | கட்டளைக் கலிப்பா போற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதே மாற்றி யிட்டது வல்விட வாதையே ஆற்றெ திர்ப்புனல் உற்றதந் தோணியே நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே 41 | |
1400 | கைக்கிளை மருட்பா அம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும் வம்புந்து கோதை மலர்வாடும் - சம்பந்தன் காமரு கழுமலம் அனையாள் ஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே. | 42 |
1401 | பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தனமுந் துகிலுஞ் சாலிக் குவையுங் கோலக் கனமாடச் கனவண் கொடைநீ டருகா சனிதன் கமலக் கழல்பாடிக் புனைதண் டமிழின் இசையார் புகலிக் கரசைப் புகழ்பாடிப் சினவெங் கதமாக் களிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார் 43 | |
1402 | இன்னிசை வெண்பா யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத் தாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும் கொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சி அடிமைசெயப் பெற்றேன் அறிந்து. | 44 |
1403 | பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அறிதரு நுண்பொருள் சேர்பதி கம்மரன் கழல்மேல் செறிதரு பைம்பொழில் மாளிகை கலவுந் திகழ்சீர்த் எறிதிரை வந்தெழு மீனிரை நுகர்கின் றிலைபோய் உறுதுயர் சிந்தையி னூடுத வினரெந் தமர்போல் 45 | |
1404 | கலி விருத்தம் குருகணி மணிமுன்கைக் கொடியுநல் விறலவனும் அருகணை குவரப்பால் அரிதினி வழிமீண்மின் தருகெழு முகில்வண்கைத் தகுதமிழ் விரகன்தன் கருகெழு பொழில்மாடக் கழுமல வளநாடே. | 46 |
1405 |
நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண் சேடே றுங்கொச்சை நேர்வளஞ் செய்துனை மாடே றுந்தையல் வாட மலர்ந்தனை கேடே றுங்கொடி யாய்கொல்லை முல்லையே. | 47 |
1406 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் முல்லை நகையுமைதன் மன்னு திருவருளை நல்ல பொழில்சுலவு தொல்லை யணிபுகலி வில்லை இலர்கணையும் இல்லை பகழியுறு சொல்லை யிலர்விரக ரல்லர் தழைகொணர்வர் 48 | |
1407 | வஞ்சித் துறை வழிதரு பிறவியின்உறு தொழில்அமர் துயர்கெடுமிகு பொழிலணி தருபுகலிமன் எழிலிணை அடிஇசைமினே. | 49 |
திருச்சிற்றம்பலம்
12.9 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை (1408)
1408 |
பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக் கோவாக் குதலை சிலம்புரற்ற - ஓவா தழுவான் பசித்தானென் றாங்கிறைவான் காட்டத் தொழுவான் துயர்தீர்க்குந் தோகை - வழுவாமே முப்பத் திரண்டறமுஞ் செய்தாள் முதிராத | (5) |
செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன் அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத் திரளாகி முன்னின்ற செம்மல் - இருள்தீர்ந்த காழி முதல்வன் கவுணியர்தம் போரேறு ஊழி முதல்வன் உவனென்று காட்டவலான் | (10) | |
வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான் பாழி அமணைக் கழுவேற்றி னான்பாணர் யாழை முரித்தான் எரிவாய் இடும்பதிகம் ஆழி உலகத் தழியாமற் காட்டினான் ஏழிசை வித்தகன்வந் தேனோரும் வானோரும் | (15) | |
தாழுஞ் சரணச் சதங்கைப் பருவத்தே பாலையும் நெய்தலும் பாடவலான் - சோலைத் திருவா வடுதுறையிற் செம்பொற் கிழியொன் றருளாலே பெற்றருளும் ஐயன் - தெருளாத தென்னவன்நா டெல்லாம் திருநீறு பாலித்த . | (20) | |
மன்னன் மருகல்விடம் தீர்த்தபிரான் பின்னைத்தென் கோலக்கா வில்தாளம் பெற்றிக் குவலயத்தில் மாலக்கா லத்தே... ... மாற்றினான் - ஞாலத்து முத்தின் சிவிகை அரன்கொடுப்ப முன்னின்று தித்தித்த பாடல் செவிக்களித்தான் -நித்திலங்கள் | (25) | |
மாடத் தொளிரும் மறைக்காட் டிறைக்கதவைப் பாடி அடைப்பித்த பண்புடையான் - நீடும் திருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனையா கென்னும் பெருவார்த்தை தானுடைய பிள்ளை - மருவினிய கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யதுகொடுப்ப | (30) | |
உள்ளமே கோலாக ஊன்றினான் - வள்ளல் மழவன் சிறுமதலை வான்பெருநோய் தீர்த்த குழகன் குலமறையோர் கோமான் - நிலவிய வைகையாற் றேடிட்டு வானீர் எதிரோட்டும் செய்கையால் மிக்க செயலுடையான் - வெய்யவிடம் | (35) | |
மேவி இறந்தஅயில் வேற்கண் மடமகளை வாவென் றழைப்பித்திம் மண்ணுலகில் வாழ்வித்த சீர்நின்ற செம்மைச் செயலுடையான் நேர்வந்த புத்தன் தலையைப் புவிமேற் புரள்வித்த வித்தகப் பாடல் விளம்பினான் - மொய்த்தொளிசேர் . | (40) | |
கொச்சைச் சதுரன்றன் கோமானைத் தான்செய்த பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா வித்துப் பொருளை விளைக்க வலபெருமான் முத்திப் பகவ முதல்வன் திருவடியை அத்திக்கும் பத்தரெதிர் ஆணைநம தென்னவலான் | (45) | |
கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் தந்தபிரான் பத்திச் சிவமென்று பாண்டிமா தேவியொடும் கொற்றக் கதிர்வேல் குலச்சிறையுங் கொண்டாடும் அற்றைப் பொழுதத் தமணரிடு வெந்தீயைப் | (50) | |
பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை என்னவல்லான் வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ்முருகன் பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான் அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான் துத்த மொழிக்குதலைத் தூயவாய் நன்னுதலி | (55) | |
நித்திலப் பூண்முலைக்கும் நீண்டதடங் கண்ணினுக்கும் கொத்தார் கருங்குழற்கும் கோலச்செங் கைம்மலர்க்கும் அத்தா மரையடிக்கும் அம்மென் குறங்கினுக்கும் சித்திரப்பொற் காஞ்சி செறிந்தபேர் அல்குலுக்கும் முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க் | (60) | |
கொத்த மணமிதுவென் றோதித் தமர்கள்எல்லாம் சித்தங் களிப்பத் திருமணஞ்செய் காவணத்தே அற்றைப் பொழுதத்துக் கண்டுட னேநிற்கப் பெற்றவர்க ளோடும் பெருமணம்போய்ப் புக்குத்தன் அத்தன் அடியே அடைந்தான் அழகிதே. | (65) |
திருச்சிற்றம்பலம்
12.10 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை (1409 - 1419)
1409 |
புலனோ டாடித் திரிமனத்தவர் புனித நேசத் தொடுத மக்கையர் சுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர் துணிவி னான்முப் புரமெரித்தவர் உலகின் மாயப் பிறவி யைத்தரும் ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல அலகில் ஞானக் கடலி டைப்படும் அடிய ரேமுக் கருளி னைச்செயும் 1 | |
1410 |
திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில உருஞானத் திரள்மன முருகாநெக் கழுதுகண் குருவாகக் கொடுசிவ னடிசூடத் திரிபவர் 2 | |
1411 |
குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார் அழிந்த பொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ கழிந்த கழிகிடுநாள் இணங்கி தயநெகவே பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே 3 | |
1412 |
இலைமா டென்றிடர் பரியார் இந்திர நிலையா திச்செல்வ மெனவே கருதுவர் கலையார் சென்றரன் நெறியா குங்கரை சிலைமா டந்திகழ் புகழா மூருறை 4 | |
1413 |
என்பட்டிக் கட்டிய இந்தப்பைக் குரம்பையை முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்கெத் திக்கென வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை அன்பர்க்குப் பற்றிலர் சென்றர்ச்சிக் கிற்றிலர் 5 | |
1414 |
பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல் பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை 6 | |
1415 |
பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி அதிகைமா நகர்மேவி அருளினால் அமண்மூடர் நிதியரா குவர்சீர்மை உடையரா குவர்வாய்மை மதியரா குவர்ஈசன் அடியரா குவர்வானம் 7 | |
1416 |
தாமரைநகும் அகவிதழ் தகுவன தூமதியினை ஒருபது கொடுசெய்த ஓமரசினை மறைகளின் முடிவுகள் ஆமரசுயர் அகநெகு மவருள 8 | |
1417 |
அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித் கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக் பிடியாராப் பெறுதற் கரிதாகச் சொலும்அப் செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற் 9 | |
1418 |
சிவசம் பத்திடைத் தவஞ்செய்து கவசம் புக்குவைத் தரன்கழல் அவசம் புத்தியிற் கசிந்துகொ பவசங் கைப்பதைப் பரஞ்சுடர் 10 | |
1419 |
நன்று மாதர நாவினுக் கரைசடி ஒன்று மாவது கண்டிலம் உபாயமற் என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர் பொன்று வார்புகுஞ் சூழலிற் புகேம்புகிற் 11 | |
திருச்சிற்றம்பலம்
கருத்துகள்
கருத்துரையிடுக