பெண் விடுதலையும் சமூக விடுதலையும்
கட்டுரைகள்
Back
பெண் விடுதலையும் சமூக விடுதலையும்
சி. சிவசேகரம் க. தணிகாசலம் வெகுஜனன் ந. இரவிந்திரன் சோ. தேவராஜா
பெண் விடுதலையும் சமூக விடுதலையும்
சி. சிவசேகரம் க. தணிகாசலம் வெகுஜனன் ந. இரவிந்திரன் சோ. தேவராஜா புதிய பூமி வெளியீட்டகம்
புதியயூமி வெளியீடு
பெணி விடுதலையும் சமூக விடுதலையும் ஏப்ரல் 2002
புதிய பூமி வெளியீட்டகம்
கெளரி அச்சகம் ஓவியர். இரா. சடகோபன்
சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிறைவேற்) லிமிடட், 47, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி, கொழும்பு -11.
தொலைபேசி : 335844,
ரூபா. 125/=
Pen Viduthalaiyum Samooga
April, 2002 Puthiyapoomi Publication Gowry Printers Ra. Shadagophan South Asian Books, Vasantham (PVt) Ltd, No. 44, 3rd Floor, C.C.S.M. Complex, Colombo - ll. Tel: 335844 Rs. 125/=
பொருளடக்கம்
பெண்கள் இயக்கத்திற்கு என்ன நடந்தது?
BாBறா எப்ஸ்ாைன்
தமிழில் சி. சிவசேகரம்
மாக்சியமும் பெண்ணியமும் இலங்கையிற் பெண்ணுரிமையும்
சி. சிவசேகரம்
பெண் விடுதலை வேண்டும்
க. தணிகாசலம்
சீதனமும் பெண்ணடிமையும்
க. தணிகாசலம்
பெண் விடுதலைக்கான இயக்கம்
வெகுஜனன்
பண்பாட்டுத் தளத்தில் பெண் ஒரு முன்னுரை
- ந. இரவீந்திரன்
நாம் என்ன செய்ய வேண்டும்
சோ. தேவராஜா
பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் பற்றியும் அவற்றிலிருந்து விடுதலை பெறுவது என்பதும் பேசாப் பொருளாக இருந்து வந்தது. ஆனால் இன்று ஓரளவுக்குத் தானும் சமூகத்தின் சில மட்டங்களிலே பெண் விடுதலை பற்றிய குரல்கள் மேலெழும்பி ஒலிக்கவே செய்கின்றன. இருப்பினும் அவை அமைப்பு ரீதியாகவும் இலக்கு நோக்கியும் திருப்தி தருவதாக இல்லை என்பது ஏற்றுக் கொள்ள வேண்டியதாகும்.
பெண்களின் விடுதலை பற்றிய கோரிக்கைகள் பல்வேறு நிலைகளிலும் தளங்களிலும் வற்புறுத்தப்படுகின்றன. அவை தேசிய ரீதியாகவும் சர்வதேச மட்டங்களிலும் அதிக கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெறுகின்றன. ஆனாலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையினை அடையாளம் காண்பதிலும் அதற்குரிய விடுதலை மார்க்கத்தைத் தெரிவு செய்வதிலும் வேறுபாடுகளும் முரண்நிலைகளும் காணப்படுகின்றன. இதில் பிரதானமான கருத்துநிலை முரண்பாடு மார்க்சியர்களுக்கும் தீவிரப் பெண்ணியவாதிகளுக்குமிடையே தான் காணப்படுகின்றது.
குறிப்பாக சோஷலிசத்தின் தற்காலிகப் பின்னடைவிற்குப் பின், மாக்சிசம் தோல்வி கண்டு விட்டதான பிரசாரம் முன் தள்ளப்பட்ட சூழலில் பெண் விடுதலைபற்றிய நவீன கருத்தியல்கள் எனக் கூறப்படுபவை வேகமாகப் பரப்புரை செய்யப்பட்டன. பின்நவீனத்துவப் பின்புலத்தில் பெண்ணிய விடுதலை பற்றிய தீவிர கருத்தாக்கங்கள் நமது சூழலுக்கு பொருந்தாவிடினும் வலிந்து முன்வைக்கப்பட்டன. மேற்குலகிலே பேசப்படும் பெண்ணியக் கருத்துக்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் சிலர் நம்மிடையே நட்டுவைக்க முயன்றனர். ஆனால் அதனை தளிர்க்க வைக்கவோ வளரச் செய்யவோ, அத்தகையவர்களால் முடியவில்லை. ஆனால் அதன் மூலம் குறிப்பிட்ட மேல்தட்டுப் பெண்ணியக்காரர்கள் தங்களளவில் தம்மை உயர்த்திக் கொண்டனர். இப்படிக் கூறுவது நல்லவற்றைச் செய்வதற்கு முன் வந்துள்ளன பெண் விடுதலை விரும்பிகளையோ அன்றி மார்க்சிய ஆதரவுப் பெண் விடுதலைச் செயற்பாட்டாளர்களையோ சுட்டுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நம்மைப் பொறுத்து கருத்தும் அது உருவாக்கும் கொள்கையும் அதன் வழியாக உருவாகும் நடைமுறையும்தான் முக்கியமானதாகும். அவற்றின் அடிப்படையிலேயே எவ்வகைச் செயற்பாட்டாளர்களையும் நாம் நோக்குதல் வேண்டும்.
எனவே பெண் விடுதலையை சமூக விடுதலை சமூக மாற்றம் என்பதிலிருந்து பிரித்தெடுத்து தத்தமது அளவுக்கும் மேற்கத்திய முதலாளித்துவ ஏகாதிபத்தியத் தேவைகளுக்கும் ஏற்றவிதமாக முன்னெடுப்பதை மார்க்சியர்கள் கடுமையாக எதிர்க்கவே செய்வார்கள். ஏனெனில் முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்பு முறையினதும் அவற்றின் சுரண்டல் ஒடுக்கு முறைகளிலிருந்தும் விடுதலை வேண்டி நிற்கும் மனிதர்களிடையே ஆண்-பெண் முரண்பாட்டையே பிரதானமான தொன்றாகக் கொள்ளும் போக்கை மார்க்சியர்கள் தயவு தாட்சண்யமின்றி எதிர்த்தே நிற்பார்கள்.
மார்க்சிசம்தான் பெண்ஒடுக்குமுறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையை வழங்கியது. வெறுமனே சுட்டிக் காட்டியது மட்டுமன்றி நடைமுறைப் போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்து ஆண்-பெண் சமத்துவத்தை நாட்டிலும் வீட்டிலும் நடைமுறைப்படுத்த வழிகாட்டியது. சோஷலிசத்தின் கீழ் தான் முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத சுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அதில் முழுமையோ திருப்தியோ அல்லது முடிவான அம்சங்கள் யாவும் நிறைவுடையனவாக இருந்தன என்று கூறிவிட முடியாது.ஆனால் மனிதகுல வரலாற்றில் வர்க்கங்கள் தோற்றம் பெற்ற பின்னான சமூக அமைப்புகளில் சோஷலிச சமூக அமைப்பில் மட்டுமே பெண்கள் தமக்குரிய சமூக சமத்துவத்தை நிலைநாட்டக் கூடியதாக இருந்ததை மறுத்துவிட முடியாது.
கடந்த நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பிருந்தே பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்த குரல்கள் மார்க்சியர்களின் வழிகாட்டலிகளில் வெளிவரத் தொடங்கிவிட்டன. கடந்த நூற்றாண்டின் முற்கூறிலே மேற்கு நாடுகளில் சோஷலிசப் பெண்கள் இயக்கம் தோன்றிவிட்டது. அவர்களது பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் கோரிக்கைகளும் பெண் விடுதலையைச் சுட்டிநின்ற அதேவேளை கொலனிய முதலாளித்துவ ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்களோடும் போராட்டங்களோடும் பின்னிப்பிணைந்து நின்றன. இதன் வழியில் தான் சோஷலிசத்திற்கான போராட்டங்களில் பெண்கள் தலைமைப் பாத்திரங்களிலும் இருந்தனர்.
இதன்காரணமாகவே இன்று வருடா வருடம் மார்ச் 8ம் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாக நினைவு கூரப்படுகின்றது. மார்ச் எட்டாம் திகதி சர்வதேசப் பெண்கள் தினம் என்பது மேல்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி உண்டு கழித்து மகிழ்ந்து கலைந்து செல்லும் தினம் அல்ல. அதே தினம் பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு எதிரான தினம். பெண்கள் மீது ஏவிவிடப்பட்ட கொடுரங்களுக்கு எதிர்ப்புக் காட்டும் தினம். ஒட்டு மொத்தத்தில் பெண்கள் மீதான சகல வகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக விடுதலையைக் கோரி நிற்கும் தினமுமாகும். இத் தினத்திற்கான மூலாதாரமாக விளங்கியவர்கள் சோஷலிசப் பெண் விடுதலையை முன்னெடுத்தவர்களே என்பது நினைவு கூரப்பட வேண்டியதாகும்.
இன்று உலகமயமாதல் என்பதன் ஊடாக ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளை மேன்மேலும் சுரண்டிக் கொள்ளையிட்டு வருகின்றது. இதில் பெண்கள் பன்முகப்பட்ட வழிகளில் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் பெண் ஒடுக்குமுறைகளை அடையாளம் காணமுடிகிறது. ஆனால் அவற்றுக்கு எதிரான அமைப்பு ரீதியாகப் பெண்களை அணி திரட்டுவது கடினமான ஒரு பணியாகவே இருந்து வருகின்றது. பழமைவாதக் கருத்தியல் அமுக்கத்திலிருந்து பெண்களை விடுவிப்பது மிகப் பிரதானமான கடமையாகின்றது. அடுத்து இன்றுள்ள சமூகச் சூழலின் பன்முகத் தாக்கங்களிலிருந்தும் பெண்கள் அறிவு ரீதியாகவும் நடைமுறை வாயிலாகவும் விடுபட வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது.
அதன் அடிப்படையிலேயே இந்நூல் இவ்வாண்டு சர்வதேசப் பெண்கள் தினமான மார்ச் எட்டின் நினைவாக வெளியிடப்படுகின்றது. இந் நூலிலே ஆறு கட்டுரைகளும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரையும் இடம்பெறுகின்றன.
இக் கட்டுரையாளர்கள் மார்க்சியர்கள் என்பது கூறித் தெரிய வேண்டியதில்லை. ஆறு வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை இந்நூலிலே தந்துள்ளனர். இக் கட்டுரைகளை வெவ்வேறு அளவுகளில் பெண் விடுதலை பற்றிய கருத்துக்களை வழங்குகின்றன. அவை நமது பெண்கள் மத்தியில் சிந்திப்பதற்கான நடைமுறை சார்ந்து வைக்கப்பட்ட கருத்துக்களாகவும் காணப்படுகின்றன. ஆதலால் இக் கட்டுரைகள் கீழ் நோக்கிச் சென்று பெண் விடுதலை எவரெவர்களுக்குத் தேவையோ அவர்களைச் சென்றடைய வேண்டும். அந்த நோக்கில் இருந்தே புதிய பூமி வெளியீட்டகம் இக் கட்டுரைகளை நூலாக்கித் தந்துள்ளது.
இந்நூலில் அமெரிக்கப் பெண் மார்க்சியரான BாBறா எப்ஸ்Tைன் (Barbara Epstein) அறுபதுகளுக்கு பின் அமெரிக்கப் பெண்கள் இயக்கத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களையும் பெண்ணிய விடுதலையின் பல்வேறுபட்ட போக்குகளையும் தெளிவாக விளக்கியுள்ளார்.
ாBறாவின் இக் கட்டுரை மன்த்லி றிவ்யூ என்ற சஞ்சிகையில் மே 2001ல் வெளியிடப்பட்டதாகும். அதன் தமிழ் வடிவத்தை பேராசிரியர். சி. சிவசேகரம் மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.
இவ்வாண்டு சர்வதேசப் பெண்கள் தினத்தில் பெண் விடுதலை பற்றிய கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றை புதியயூமி வெளியிட்டகம் வெளியிடத் தீர்மானித்து அதற்குரியவர்களிடம் கட்டுரைகளைக் கேட்டுக் கொண்டது.
அதற்கிணங்க அவர்கள் கட்டுரைகளைத் தந்து உதவினர். அவர்களுக்கு எமது நன்றிகள். அட்டைப்படத்தை வரைந்து வழங்கிய ஓவியர். இரா. சடகோபன் அவர்களுக்கும், நூலை சிறந்த முறையில் வடிவமைத்து கணனிப் பிரதி செய்த சோபனா, சிந்தியா ஆகியோருக்கும் அச்சிட்டுத் தந்த கெளரி அச்சக நிறுவனத்தாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
47; 3ம் மாடி புதியயூமி வெளியீட்டகம் கொழும்பு மத்திய சந்தைக் தொகுதி;
கொழும்பு-11
O5.03.2002
பெண்கள், இயக்கத்திற்கு என்ன நடந்தது?
Bregon anators (Barbara Epstein)
தமிழில் - சி. சிவசேகரம்
அறுபதுகளின் பிற்கூறுகளினின்று எண்பதுகள் வரை அமெரிக்காவில் துடிப்புள்ள பெண்கள் இயக்கமொன்று இருந்தது. அது பண்பாட்டுத் துறையில் செல்வாக்கும் அரசியலில் வலிமையும் கொண்டிருந்தது. தன் தாராளவாதப் பக்கத்தில் அவ் இயக்கம் மகப்பேற்று உரிமை, சம உரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் பிற சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய நிறுவனங்களையும் பிரசார இயக்கங்களையும் உள்ளடக்கியிருந்தது. அதன் தீவிர முற்போக்குப் பக்கத்தில் பெண் விடுதலைக்கும் பெண்ணிய உணர்வு நிலையை வளர்த்தெடுப்பதற்குமான குழுக்களையும் பண்பாட்டு, வெகுசன மட்டச் செயற்திட்டங்களையும் கொண்டிருந்தது. அத்துடன், பெண்கள் இயக்கம் எண்ணற்ற அரசியற் குழுக்களைக் கொண்டிருந்தது மட்டுமன்றி உயர் தொழிற் துறைகள், தொழிற் சங்கங்கள், அரச நிருவாகம் ஆகிய துறைகளில் செயற்திட்டங்களை ஏற்பாடு செய்தும் வந்தது.
அமெரிக்காவின் பெண்கள் பலரது வாழ்விலும் அமெரிக்காவின் அன்றாட வாழ்விலும் அந்த இயக்கம் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. முற்றிலும் ஆண்கள் வசமிருந்த உத்தியோகங் களையும் உழைப்புத் துறைகளையும் அது பெண்களுக்குத் திறந்து விட்டது. தகவல் ஊடகங்களில் பெண்கள் பற்றிய சித்திரிப்பை அது மாற்றியது. அரசியல், நிறுவனமாக்கப்பட்ட மதங்கள்,விளையாட்டு மற்றும் எண்ணிறந்த பல்வேறு களங்களிலும் நிறுவனங்களிலும் பெண்களுக்கும் சமத்துவம் என்ற கோரிக்கையை அது முன்வைத்தது. இவற்றின் விளைவாகப் பங்குபற்றுதலிலும் தலைமைத்துவத்திலும் பால் அடிப்படையிலான விகிதாசாரம் மாறத் தொடங்கியது. குடும்பத்தினுள் சமமின்மையும் ஒடுக்குமுறையும் தனிமனித உறவுகளும் பற்றிய பிரச்சனைகளை அரசியற் பிரச்சனையாக வடிவமைத்ததன் மூலம், முன்னர் அந்தரங்கமானதாயும் அக் காரணத்தாற் பொதுசன நுண்ணாய்வுக்கு அப்பாற்பட்டதாயும் இருந்த பிரச்சனைகளைப் பற்றிய பொதுசனக் கலந்துரையாடலை விரிவுபடுத்தியது. நாம் பேசுகிற விதத்ததையும் நாம் சிந்திக்கிற விதத்ததையும் பெண்கள் இயக்கம் மாற்றிய மைத்தது.
இதன் விளைவாக இளம் பெண்களிற் பெருவாரி யானோர், தம்முன்னுள்ள தெரிவுகள் ஆண்களின் முன்னுள்ள வற்றின் அளவுக்குத் தடையற்றவை அல்லது தடையற்றிருக்க வேண்டுமென நம்புவதாகக் கூற ஆதாரமுண்டு.
பெண்கள் இயக்கத்தின் வியக்கத்தகு சாதனைகளும் அமெரிக்கச் சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளிற் பெண்களின் சமத்துவம் ஒரு இலக்காக ஏற்கப்பட்டதும் ஒருபுறமிருக்க, பால் அடிப்படையிலான சமத்துவம் இன்னும் வென்றெடுக்கப்படவில்லை. மேலும் அதிகளவிற் பெண்கள் வீட்டுக்குவெளியே வேலை செய்த போதும், அவர்கள் குறைந்த ஊதியம் தரும் தொழில்களிலேயே அதிகம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; பெண்கள் சராசரியாக, ஆண்களிலும் கணிசமான அளவு குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர்; பெண்கள் வறுமைக்குட்பட்டிருக்கும் வாய்ப்பு ஆண்களினதிலும் அதிகம், பெண்களுக்கெதிரான வன்முறை இன்னமும் பரவலாகவே உள்ளது. குழந்தைப் பராமரிப்பு, பெண்களுடைய பொறுப்பாகவே பெரும்பாலும் உள்ளது. பெரும்பாலான பெண்கள் வீட்டுக்கு வெளியே வேலை பார்த்த போதும், எங்கும் இது ஒரு குடும்ப பொறுப்பாகப் பார்க்கப்படுகிறதே ஒழியச் சமூகப் பொறுப்பாகப் பார்க்கப்படுவதில்லை.அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பெண்ணியவாதிகள் குடும்பத்தினுள்ளும் தனிமனித உறவுகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான அதிகாரச் சமமின்மை பற்றி ஆட்சேபித்தனர். ஆயினும், இவை யாவும் இன்றும் தொடர்கின்றன.
அனைத்திலும் மோசமாக, இப்போது பெண்கள் வெகுசன இயக்கமென ஒன்றில்லை. பொது நிறுவன மட்டத்திலும் தனியார் நிறுவனங்களிலும் பெண்களின் உரிமை வேண்டிச் செயற்படுகின்ற பல அமைப்புகள் உள்ளன. இவை பெண்கள் தேசிய நிறுவனம் (National Organization of Women) 9) - LL (o L60 56 அமைப்புக்களை உள்ளடக்குவதுடன், சுற்றுச்சூழல், உடல் நலம் பேணல், சமூகநீதி மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் சார்பாகவும் செயற்படுகின்றன. எனினும், முன்னர் பெருவாரியான அளவில் உறுப்பினர்கள் பங்குபற்றிய அமைப்புக்களினிடத்தில்; இன்று, ஊதியத்திற்குப் பணியாற்றும் அலுவலர் அதிகாரி அமைப்புக்கள் தாம் உள்ளன.
ஒரு காலத்தில் கிளர்ச்சியூட்டிச் சுயாதீனமாக இயங்கிய பெண்ணியக் கொள்கை, இன்று, பெண்களின் வாழ்நிலைமைகள் பற்றி அக்கறை இழந்து பம்மாத்தானதாகவும் சோர்வுடையதாகவும் ஆகி விட்டது. இது இரண்டு வினாக்களை எழுப்புகிறது. சில காலம் மட்டுமே முன்பு சமூகப் பண்பாட்டுப் பரப்பில் எத்தனையோ மாற்றங்களைக் கொண்டுவரவல்லதாக இருந்த ஒரு இயக்கம் ஏறத்தாழ இல்லாமலே போனமை பற்றி, இன்று ஏன் மிக அற்ப அளவிலேயே பேசப்படுகின்றது? அந்த இயக்கத்தின் சரிவின் காரணங்கள் எவை?
இம் மெளனம் ஏன்?
பெண்கள் இயக்கத்தின் சரிவும் பெண்ணியத்தின் மீதான வலதுசாரித் தாக்குதலும் பிற செயலூக்கவாத இயக்கங்களது சரிவும் ஒருசேர நிகழ்ந்துள்ளன. சிவில் உரிமைகட்கான இயக்கமும் கறுப்பர் சக்தி (Black Power) இயக்கமும் சில தசாப்தங்கட்கு முன்னிருந்ததை விடக் கணிசமாக வலுக் குறைந்தும் பிளவுண்டும் உள்ளன. சுற்றுச்சூழல் செயலூக்கவாதிகளும் சுயபாற் காம உரிமைகட்கான இயக்கங்களும் ஒருங்கிணைவிழந்து திசைகெட்டு உள்ளன. இந்த இயக்கங்களின் பலவீனங்களை ஒப்புக்கொள்வது வலதுசாரிகளுக்கே தாக்குதல் வலிமையை அளிக்கும் என்று கூறி இவை பற்றிக்கலந்துரையாடுவதைப் பல பெண்ணிய வாதிகளும் முற்போக்காளர்களும் எதிர்த்து வந்துள்ளனர். 69(5 இயக்கத்தின் குறைபாடுகளை ஆராயாமல் விட, இது போதுமான நியாயமாகாது.
பொதுசன அரங்கை விட அதிகமாக இக் கலந்துரையாடலை நடத்த ஏற்ற களம் இல்லை. இந்த இயக்கங்கங்களின் சரிவுக்கான காரணங்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுவதன் மூலம் அறியக் கூடியதை விடச் சிக்கலானவை. கருக்கலைப்பு உரிமை உட்பட்ட சில பெண்ணியப் போராட்டங்களைப் பலவீனப் படுத்துவதில் வலதுசாரி இயக்கங்கங்கள் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளன. எனினும், ஒட்டுமொத்தத்தில் பெண்கள் இயக்கத்தின் சரிவுக்கான காரணம் புறத்தாக்குதல்களை விட அதிகமாக இயக்கத்தின் அவசர அவசியம் பற்றிய உணர்வின் நலிவுடன் தொடர்புடையது.
இயக்கத்தினுள் விமர்சனங்களைத் தவிர்த்தலுக்கும் நசுக்குதலுக்கும் முக்கிய காரணம், அத்தகைய விமர்சனங்கள் ஏற்கெனவே இந்த இயக்கத்தில் நிகழ்ந்துவரும் கட்டுத் தளர்வை மேலும் துரிதப்படுத்தும் என்பதே என் எண்ணம். இயக்கங்கள் என்பன நொறுங்கும் இயல்புடையன; அவற்றை ஒன்றாய்ப் பிணைக்கும் பசை, வெறுமனே அவை உருவகம் செய்யும் இலட்சியங்கள் மட்டுமன்றித் தமது வளரும் ஆற்றல் மீதான நம்பிக்கையும் ஆகும். குறிப்பாக, ஒரு இயக்கம் நலிவடையும் போது, விமர்சனத்தை மெளனப்படுத்தி, யாருமே கவனிக்க மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்புடன், எல்லாமே நல்லபடி உள்ளதாகப் பாவனை செய்வதற்கான சபலம் வலிது. ஏற்க மறுப்பதாலோ அலசாமல் விடுவதாலோ பிரச்சனைகள் போயொழியா, மாறாக, அவை மேலும் மோசமாகலாம். ஒரு இயக்கம் ஏன் சரிவு கண்டது என விளங்கிக் கொள்வது அது முன்னிருந்த நிலைக்கு வர அதற்குப் புத்துயிரூட்டப் போதாதா யிருக்கலாம். ஆயினும், அது புதிய திசைகளைக் காண உதவலாம்.
சமகாலப் பெண்கள் இயக்கத்தின் பலவீனங்களைக் காண்பதற்கான தயக்கம், இரண்டாவது பெண்ணிய அலை, அதாவது சமகாலப் பெண்ணியம், முதலாவது பெண்ணிய அலையின் கதியையே அனுபவிக்கலாம் என்ற அச்சத்தினாலாகவும் இருக்கலாம். அமெரிக்காவில், முதலாவது பெண்கள் இயக்கம் 19ம் நூற்றாண்டின் முற்கூறு வரை செயற்பட்டது. பெண்ணியச் செயலூக்க அலைகள் இரண்டிற்கும் இடைப்பட்ட நான்கு தசாப்தங்களில், வரலாற்றின் நினைவுகளினின்று அது ஏறத்தாழ முற்றாகவே துடைத்தழிக்கப்படடிருந்தது.
பெண்ணியத்தின் இரண்டாவது அலையிற் காணப்படாதனவான அதன் பலவீனங்கள் சிலவே அதற்குக் காரணமெனலாம். முதலாவது பெண்ணிய அலை, பெரும்பாலும் வெள்ளைஇன நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு வரையறுக்கப்பட்டு இருந்தது. முதலாவது பெண்ணிய அலையும், வரலாற்றின் போக்கில், அதனைப் பிற முற்போக்கான இயக்கங்களினின்று தனிமைப்படுத்தும் ஒரு குறுகிய பார்வையை நோக்கி நகர்ந்தது. அமெரிக்காவின் முதலாவது பெண்ணிய இயக்கம், அடிமை முறை ஒழிப்பு இயக்கத்தினின்றே தோன்றியது. அடிமை முறை எதிர்ப்பு இயக்கங்களுடன் தொடக்க காலப் பெண்ணியத்தின் நட்புறவாலும் அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு முந்திய தசாப்தங்களின் எதிர்ப்பு இயக்கங்களுடன் அதன் உறவாலும், அமெரிக்காவின் முதலாவது பெண்ணிய இயக்கத்திற்கு ஒரு தீவிரப்பாங்கான அடையாளம் இருந்தது. உள்நாட்டுப் போர் முடிந்து முன்னாள் அடிமைகட்கு வாக்குரிமை வழங்கப்பட்டுப் பெண்களுக்கு வழங்கப்படாத நிலையில், பெண்கள் இயக்கத்தின் பெரும் பகுதி கறுப்பு இனத்தவருடன் தனது நட்புறவைக் கைவிட்டு விட்டது. உள்நாட்டுப் போருக்கும் இருபதாம் நூற்றாண்டின் பிறப்புக்கும் இடையிலான தசாப்தங்களில், நடுத்தர வர்க்கத்தினரிடையே நிறவாத உணர்வும் வந்தேறு குடிகட்கு எதிரான உணர்வு பரவலாயின.
இருபதாம் நூற்றாண்டின் முதலிரண்டு தசாப்தங்களிலும், பெண்களுக்கு வாக்குரிமையை வென்றெடுப்பதிலேயே பெண்கள் இயக்கம் தனது கவனத்தைக் குவித்தது. அத்துடன் முன்வரிசைப் பெண்ணியவாதிகள் தமது இலக்குக்கு வாய்ப்பான முறையில் நிறவாத, வந்தேறுகுடி விரோதச் சிந்தனைகளையும் நாடினர். பெண்களின் தொழிற்சங்க இயக்கம் போன்ற பிற பெண்ணிய நீரோட்டங்கள், நிறவாதத்தைத் தவிர்த்து பெண்ணியத்தை ஒரு தீவிரப்பாங்கான நோக்குடன் இணைப்பதிற் தொடர்ந்தும் ஈடுபட்டன. எவ்வாறாயினும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கூறு அளவிற் பெண்கள் இயக்கத்தின் மீது பெண்கள் வாக்குரிமை அமைப்புக்களின் ஆதிக்கம் ஏற்பட்டுவிட்டது. பெண்களின் வாக்குரிமை வெல்லப்பட்ட போது, முதலாவது பெண்ணிய அலை எதுவிதமான பரந்துபட்ட வேலைத்திட்டத்தையும் கைவிட்டுவிட்டதுடன் பிற முற்போக்கு இயக்கங்களிடமிருந்தும் எட்ட விலகி நின்றாயிற்று. 1920களில் ஆதிக்கத்துக்கு வந்த பழமைபேணல்வாதிகளால் எளிதாகவே பெண்ணியத்தை ஓரங்கட்ட இயலுமாயிற்று.
இரண்டாவது பெண் ணிய அலையின் தாக்கம் , முதலாவதினை விடப் பரந்தும் ஆழமாயும் அமைந்தது. அமெரிக்க அரசியலின் திசை இனி எவ்வாறு போயினும், 1930கள், 40கள், 50களிற் போல, பெண்ணியத்தை துடைத்தழிக்க முடியும் எனக் கற்பனை செய்யவும் இயலாது. பெண்களின் வாழ்க்கையையும் சிந்தனையையும் பழையபடி மாற்ற முடியாத விதமாகக் கடந்த மூன்று தசாப்தங்களிற் பெண்ணியம் அவற்றைப் பல வகைகளில் மாற்றியமைத்து விட்டது. முதலாவது பெண்ணிய அலை ஒரு பிரச்சனைக் குவியத்துக்குள் ஒடுங்கியதற்கு மாறாக, இரண்டாவது அலை, தன்னைப் பல வகைகளிலும் விரிவுபடுத்திக் கொண்டது. இரண்டாவது பெண்ணிய அலையின் தொடக்க நிலையிற் சில போதாமைகள் இருந்தன. வெள்ளையரல்லாத பெண்களும் தொழிலாளி வர்க்கப் பெண்களும் பங்குபற்றிய போதும், அவர்கள் அங்கு வந்தடைந்த வழி, வெள்ளை நடுத்தர வர்க்கப் பெண்களுக்குப் பெண்ணியத்தைக் காட்டிய மாணவ, உத்தியோக வட்டங்கள் மூலமானதாகவே இருந்தது.
வெள்ளையரல்லாத பெண்களும் தொழிலாளி வர்க்கப் பெண்களும் அதில் இருந்த காரணத்தால் இச் சமூகங்களுக்குள் பெண் ணியம் உள்வாங்கப்பட்டதாகக் கொள்ள இயலாதிருந்தது. இரண்டாவது அலையின் பெண்ணியவாதிகள், குறிப்பாக, இயக்கத்தின் போதையூட்டும் ஆரம்ப ஆண்டுகளில், தங்களாற் பெண்கள் அனைவரது சார்பாகவுமே பேச இயலும் என நம்ப முற்பட்டனர்) இந்தவிதமான கருத்துக்களில் ஓரளவு உண்மை இருந்தது எனினும், பெருவாரியாக இளம், வெள்ளை இன, பல்கலைக்கழகக் கல்வி பெற்ற ஆண்-பெண்பால் உறவை மட்டுமே அங்கீகரிக்கிற வர்களும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான நடுத்தர வர்க்கத்தினரிடையிலிருந்து வந்தவர்களு மானோரையே அந்த இயக்கம் கொண்டிருந்தது என்பதை அது கணிப்பிற் கொண்டிருக்க வில்லை.
முதலாவது பெண்ணிய அலையைப் போலல்லாமல், இரண்டாவது அலை, தன்உள்ளடக்கத்திலும் முக்கியமான விடயங்களில் தன் பார்வையிலும், காலப் போக்கில் விசாலித்தது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும், சமபாற்காமப் பெண்ணியம் (lesbian feminism) இயக்கத்தினுள் ஒரு போக்காக வெளிப்பட்டது. கறுப்பு இனப் பெண்கள் தங்கள் வகையிலான பெண்ணியச் சிந்தனைகளை வெளிப் படுத் தினர் . தொடக் கத்தில் மாணவர்களையும் தொழில் வல்லுனர்களையும் கொண்டிருந்த பெண்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக இராத தொழிலாளி வர்க்கப் பெண்கள், வேலைத்தலத்திலும் தொழிற் சங்கத்திலும் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டியும் பிள்ளைப் பராமரிப்பு, பிள்ளைப் பேற்று உரிமை என்பவற்றுக்காகவும் கோரிக்கைகளை முன்வைத்து அணிதிரண்டனர். முதலாவது பெண்ணிய அலை, காலப் போக்கிற் கறுப்பு இனத்தவரது இயக்கங்களுடனும் பிற தீவிரப்பாங்கான இயக்கங்களுடனுமான தனது நட்புறவைக் கைவிட்டதற்கு மாறாக இரண்டாவது அலை, தன்னை முற்போக்கு இயக்கங்களுடன், குறிப்பாக வெள்ளையரல்லாதோரது இயக்கங்களுடனும் சமபாற்காம இயக்கத்துடனும் மேலும் நெருக்கமாக்கிக் கொண்டது. இரண்டாவது அலையின் பெண்ணியவாதிகள், இயக்கத்தினுள் இருந்த நிற வேறுபாடுகள், பாலுணர்வு வேறுபாடுகள் ஆகியன பற்றிய நுண்ணுணர்வையும் விருத்தி செய்து கொண்டனர்.
இயக்கமாகத் தொடங்கி ஒரு கருத்தாக ஒருங்கியமை பெண்கள் இயக்கத்தின் வீறான காலம் 1960களும் 70களும் எனலாம். 1980களிலும் 90களிலும் பெண்ணியப் பார்வை அல்லது அடையாளம் எனப்படுவது பரவிப் படர்ந்து இன்று ஏறத்தாழ எங்குமே ஒரு வகையான ஊடுபாவிய பெண்ணிய உணர்வு நிலை காணப்படுகிறது.
பெண்ணியச் சிந்தனையை உள்வாங்கிய இலக்குகளையும் அணுகுமுறைகளையுங் கொண்ட எண்ணற்ற செயலூக்கக் குழுக்களும் சமூக, பண்பாட்டு வேலைத்திட்டங்களும் இன்று உள்ளன. பன்முகப்பட்டதும் வெகுசனத்தளத்தில் இயங்குவதுமான பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் இன்று தொழிலாளி வர்க்கப் பெண்களுக்கும் வெள்ளையரல்லாத பெண்களுக்கும் உள்ள முக்கியமான பிரச்சினைகள் பற்றிக் கவனங்காட்டுகின்றன. அண்டை அயல் LDITg5fair (85tful Flip(BLD6T60TLD (National Congress of Neighbourhood Women) தொழிலாளர் வர்க்கப் பெண்களதும் வெள்ளையரல்லாத பெண்களதும் பிரச்சினைகளைக் கையாளுகிறது. இதையொத்த அக்கறைகளைக் கொண்ட பல உள்ளூர்க் குழுமங்கள் உள்ளன.
கலிபோர்னியாவிலிருக்கும் கிழக்கு லொஸ் ஏஞ்ஜெலிஸ் தாய்மார் (Mothers of East Los Angels) 6163 g960)DÚL 333lóFog5p6ño gorjibg5 நியாயப் பிரச்சனைகள் தொடர்பான போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தது. (முன்னம் அணு ஆயுதக் களைவுக்கான பெண்கள் bL61 (9d560) 35, Women's Action for Nuclear Disarmanent 6T60T அறியப்பட்டதான) புதிய திசைவழிகட்கான பெண்கள் நடவடிக்கை (Women's Action for New Directions) 066ft 6061Tuuj6) 6) Tg5 பெண்களையும் வெள்ளையப் பெண்களையும் உடல் நலனும் சுற்றுச்சூழலும் தொடர்பான பிரச்சனைகளில் ஒருங்கிணைத் துள்ளது. இவ்வாறு பல உள்ளன. எவ்வாறாயினும், கீழ்மட்டத்துச் செயலூக்கம் என்பது பெண்கள் இயக்கத்தில் ஆதிக்கஞ் செலுத்திய ஒரு கூறாகவோ அதிகம் கவனத்தை ஈர்ந்த கூறாகவோ இருக்கவில்லை.
உயர் நடுத்தர வர்க்கப் பெண்களது அக்கறை களைக் கொண்டவையும் ஊழியர்களால் நடத்தப்படுகிறவையுமான அமைப்புக்களையும் கல்வித்தகமைசார் பெண்ணியவாதிகளின் கூற்றுக்களையும் வைத்தே பெண்ணியம் பற்றிய பொதுசனப் பார்வை வடிவமைக்கப்படுகிறது. பெண்ணிய உணர்வு நிலையின் வெகுசன ஊடுபாவுதலும் முன்வரிசைப் பெண்ணிய அமைப்புக்கள் பணித்துறை அதிகாரப் பண்புடையனவாகியதும் கல்வித் தகைமைசார் பெண்ணிய வாதிகளது பிரபல்யமும், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் பெண்ணியம் ஏற்புடையதாக மாறியதன் பின்விளைவுகளே. எனினும் இம் மாற்றங்கள் பெண்கள்
இயக்கத்தின் நன்மைக்கானவையே என்று கூற முடியாது. பெண்ணியம், ஏக காலத்தில், நிறுவன மயப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு விட்டது. பேரளவில் அது ஏற்புடையதாகிவிட்டது. எனினும், அதன் செயலாற்றல் இழக்கப்பட்டுவிட்டது.
பெண்ணியச் செயலூக்கம் நின்று போகவில்லை. பெண்ணியச் செயற்பாடுகளிலும் கலந்தாலோசனைகளிலும் பங்குபற்றும் பெண் கள் தொகை குறையவுமில்லை. கோடிக்கணக்கான பெண்கள், பெண்களுடைய பிரச்சினைகள் பற்றிப் பெண்ணியச் செல்வாக்கைப் பயன்படுத்தித், தம்மிடையே உரையாடுகின்றனர். குடும்ப வன்முறை, மகப்பேற்று உரிமைகள், பெண்கள் உடல் நலன் போன்றன பற்றிக் கவனங் காட்டும், திட்டமிட்ட பெண்ணியச் செயற்திட்டங்கள் எத்தனையோ உள்ளன. 1995ல் Bெய்ஜிங்ங்ல் நடந்த சர்வதேச மகளிர் சந்திப்பில் தொடக்கப்பட்ட முயற்சிகளைத் தொடர்ந்து செயற்படுத்தும் சர்வதேச மகளிர் வலைப்பின்னல்கள் உள்ளன. தங்கள் தலைமுறையினரை விளித்து அல்லது அவர்கள் சார்பாகக் குரல்கொடுக்கும் நூல்களை இளம் பெண்ணியப் படைப்பாளிகள் வெளியிடுகின்றனர்.
பெண்ணியச் செயலூக்கத்தில் ஏற்பட்டுள்ள பெருக்கம், பரவலானதொரு கோலத்தின் ஒரு பகுதியேயாகும். சம்பந்தப்பட்டோரின் எண்ணிக்கையை மதிப்பிட வழியேதும் இல்லையெனினும், சமுதாயம், சமூகநீதி, முற்போக்கான செயலூக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளோரின் தொகை 1970களின் பின் பொதுவாகவே கூடியுள்ளது எனலாம். சுற்றுச்சூழல், பொதுவான உடல் நலன் போன்ற விடயங்களில் பெண்கள் பிரச்சனைகளையும் கவனிப்பிலெடுக்கும் இயக்கங்களில் பெண்களின் பங்குபற்றுதலையும் உள்ளடக்குவோமாயின் இப் போக்கிற்குப் பெண்ணியச் செயலூக்கம் விலக்கல்ல எனக் காண்போம். பெண்ணிய நோக்குமுறைகள் பெண்கள் இயக்கத்திற்கு வெளியேயுள்ள ஆண்களையும் உள்ளடக்கிய இயக்கங்களால் சுவீகரிக்கப்பட்டுள்ளன என்பது கூட ஒரு சாதனையே.
குறைந்தளவில் ஆண்களுக்குச் சமமாகவேனும், சுற்றுச்சூழலிய, பெருமுதலாளிய நிறுவன விரோத இயக்கங்களில் பெண்கள் தலைமைப் பங்கு வகிக்கின்றனர். இத்தகைய குழுமங்களில், தமது உலக நோக்கிற் பெண்ணியம் மிக முக்கியமான ஒரு பங்கு வகிப்பதை யாரும் உணர்வர். எனினும், இத்தகைய செயலூக்கப் பணிகள், பெண்ணியம் பற்றிய பொதுவான பார்வையை வடிவமைக்கும் நிறுவனங்களும் கல்விசார் வலைப்பின்னல்களும் முன்னொரு காலத்திற் தமக்குப் புத்துணர்வூட்டிய களங்களினின்று விலகிச் சென்றுவிட்டதோடு, தமது பார்வைக் குவிவையும் செயலாற்றலையும் இழந்துவிட்டன.
பெண்ணியம் ஒரு இயக்கமாக இல்லாது ஒரு கருத்தாக மாறிவிட்டது. எதிர்காலம் பற்றிய ஆசைக் கனவு மிகுந்த ஒரு பண்பை அது இழந்துவிட்டது. இடதுசாரி இயக்கங்கள் பற்றியோ முற்போக்கு இயக்கங்கள் பற்றியோ பொதுப்பட இவ்வாறே கூறலாம். பெண்ணியச் சிந்தனைகளும் முற்போக்குச் சிந்தனைகளும் ஏற்புடையன எனக் கூறத்தக்க விரிவானதும் மரியாதைக்குரியதுமான ஒரு களம் இன்று நம்முன் உள்ளது. எனினும் முழு அமெரிக்காவினதும் அரசியலின் செல்நெறி மீது நமது செல்வாக்கு அற்பமானதே. பெண்ணிய/முற்போக்கு அரங்கின் மீதாக முகில் மூடியுள்ளது போற் தெரிகிறது. இது, அண்மைய தசாப்தங்களில் இடதுசாரி இயக்கத்தின் பலவீனத்தின் காரணமும் விளைவுமாகும்; முதலாளியத்திற்கு மாற்று இல்லை என்று பரவலாக ஏற்கப்பட்டுள்ளதன் எதிர் வினையுமாகும். கூட்டு முயற்சி சமூகமாற்றத்தைக் கொண்டு வரும் என்ற சாத்தியப்பாடு பற்றிய நம்பிக்கைத் தளர்ச்சியின் விளைவாகப் பிற முற்போக்கு இயக்கங்கள் போல பெண்கள் இயக்கமும் பலவீனப்பட்டுள்ளது.
பெண்கள் இயக்கத்தின் சரிவின் காரணமென்ன?
1960களிலும் 70களிலும் பெண்கள் இயக்கத்தில் ஆதிக்கஞ் செலுத்திய போக்கு, தீவிரப் பெண்ணியமாகும். அப்போது பெண்கள் இயக்கம் தெளிவாக வேறுபட்ட இரு போக்குகளை கொண்டிருந்தது. இவற்றுள் ஒன்று, சோஷலிச பெண்ணியம் என (சில சமயங்களில் மாக்ஸியப் பெண்ணியம் எனத்) தன்னை அழைத்துக்கொண்டதுடன், குறிப்பாக, நிற அடிப்படையிலும் வர்க்க அடிப்படையிலுமான, பிற ஒடுக்கல்களுடன் பின்னிப்பிணைந்த தாகவே பெண்கள் மீதான ஒடுக்குமுறையைக் கருதியதுடன் இவை யாவற்றையும் ஒரு சேரத் தீர்க்கக்கூடிய ஒரு அரசியலை விருத்தி செய்ய முனைந்தது. மற்றப்போக்குத், தன்னைத் தீவிரப் பெண்ணியம்’ என (Radical Feminits) என அழைத்துக் கொண்டது. 9.g5 g56ig Guó06T600fu6Istgas6ir (Large R, Radical Feminism) பெண்கள் மீதான ஒடுக்குமுறையே அடிப்படையானது எனவும் பிற ஒடுக் குமுறைகள் யாவும் பால் அடிப்படையிலான சமமின்மையினின்றே உருவெடுக்கின்றன என வாதிட்டனர்.
இரு வகையான பெண்ணியத் தீவிரவாதிகளும், பொது அலுவல்களில் உள்ள பாலடிப்படையிலான சமமின்மை தனிப்பட்ட வாழ்விலுள்ள சமமின்மையிலிருந்து பிரிக்க இயலாதது என வற்புறுத்தினர். தீவிர பெண்ணியம் இரு செயற்தளங்களிலும் பெண்களுக்குச் சமத்துவத்தை வேண்டி நின்றது. பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் பிறவகையான ஒடுக்குமுறைக்குமிடையே உள்ள உறவுபற்றிய கருத்து வேறுபாடுகளைத் தங்களிடையே கொண்டிருந்தாலும் தீவிர பெண்ணியவாதிகள் ஒரு விடயத்தில் உடன்பாடு கொண்டிருந்தனர். அதாவது, செல்வத்திலும், அதிகாரத்திலும் சமமின்மைகளால் பிரிவுபட்டுள்ள ஒரு சமூகத்தில், ஆண்கட்கும் பெண்கட்குமிடையிலான சமத்துவம் தன்னளவிலேயே செயற்பட முடியாது. தீவிர பெண்ணியத்தின் இலக்கு ஒரு சமத்துவமான சமுதாயம், சமத்துவ அடிப்படையிலான புது வகையான சமூகங்கள்.
1960களிலும் 70களிலும் பெண்கள் இயக்கத்தினுள் இருந்த தீவிரவாதப் போக்கு முழு இயக்கத்தையும் முன்னோக்கி உந்தியது. எனினும், ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் வேலைத்தலங்களிற் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே மிகுந்த வெற்றியைப் பெற்றது. அதிலும் தீவிரமான, சமத்துவமான சமுதாயமும் சமத்துவ அடிப்படையிலான புதுவகையான சமூகங்களும் என்ற கோரிக் கை, அவ்வளவு எளிதாக வெல் லக் கூடியதாக இருக்கவில்லை. பெண்கள் இயக்கத்தின் தாராளவாத தீவிரவாதப் பிரிவுகளிடையே எதற்கு முக்கியம் தருவது என்பதில் வேறுபாடுகள் இருந்த போதும், அவர்களது கோரிக்கைகள் பாரிய முறையில் முரண்பட்டு நிற்கவில்லை. தீவிர பெண்ணிய வாதிகள் வேலைத்தலத்திற் பால் அடிப்படையிலான சமத்துவத்தை வேண்டினர்.
தாராளவாதப் பெண்ணியவாதிகளிற் பெரும் பாலானோர் மேலும் சமத்துவமான சமுதாயத்தை வேண்டினர். பிற்பட்டோருக்கான சிறப்புச் சலுகை ஏற்பாடு (Affirmative Action) வெறுமனே மேட்டுக்குடிப் பெண்களுக்கு ஏதுவானது மட்டுமல்ல. “பெண்ணிய ஆய்வுகள்' சஞ்சிகையின் 1999 இளவேனிற் பருவ g556) (Feminist Studies, Spring 1999) bT6örd LD5656 (Nancy McLean) எழுதிய கட்டுரையில் அவர் பின் வருமாறு சுட்டிக் காட்டினார் : உழைக்கும் பெண் கள், தங்கள் வேலைத்தலங்களில் வழமையாக ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைப் பெண்களுக்கும் பெற்றுத் தருவதற்கும் பெண்கள் இயக்கத்திற்குள் ஒரு தொழிலாளி வர்க்கப் பகுதியை உருவாக்குவதற்கும் பயன்படும் முறையில் இக்கொள்கை மூலம் அங்கே சமத்தவத்துக்காக போராடினார்கள். பெண்கள் இயக்கம் வளர்ந்தும் செல்வாக்கில் அதிகரித்தும் வந்த வேளை, வேலைத்தலத்தில் சம வாய்ப்புகட்கான கோரிக்கையும் பரந்துபட்ட சமுதாயச் சமத்துவத்துக்கான கோரிக்கையும் ஒன்றை ஒன்று ஆதரித்து நின்றன.
ஒரு இயக்கத்தின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்ட பின்பு, அவற்றின் விளைவுகள் எதிர்பார்த்ததிலும் வித்தியாசமாக அமையலாம். சிறப்புச் சலுகை ஏற்பாடுகள் மூலம் கிட்டிய வாய்ப்புகளால் அதிகம் நன்மை காணக் கூடியவர்களாகப் பெருமளவும் வெள்ளை இனத்தவர்களான படித்த பெண்களே இருந்தனர். ஏனெனிற், சிறப்புச் சலுகை ஏற்பாடு, மற்ற எல்லாத் துறைகளையும் விட, உத்தியோகங்கள் தொடர்பாகவே அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெண்களையும் வெள்ளையர ல்லாதவர்களையும் ஸ்தாபனப்படுத்துவதில் தொழிலாளர் இயக்கம் தவறியது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
1970கள், 80கள், 90களில், அமெரிக்கச் சமுதாயம் ஏற்றத்தாழ்வுடைய பிரிவுகளாக வேறுபட்டுப், பொருளாதார அடிப்படையில் உயர்நிலையிலி ருந்தோருக்கும் தாழ்நிலையிலிருந்தோருக்கும் இடையிலான இடைவெளி அதிகமானதும் சிறப்புச் சலுகை ஏற்பாடுகளின் வர்க்க, நிற அடிப்படையிலான சாய்வுக்கு ஒரு காரணமாகும். உழைக்கும் வர்க்கப் பெண்கள் கூடிய ஊதியத்துடனான தொழில்களைப் பெற முடிந்ததால் ஏற்பட்ட நன்மைகளால் சமூகத்தின் வர்க்க வேறுபாடுகளின் விரிசலின் விளைவுகளை ஈடுசெய்ய முடியவில்லை. 1970கள் தொட்டுத் தொழிலாளரின் வாழ்க்கைத்தரம் பொதுவாகவே சரிவு கண்டது. ஏற்கெனவே வறுமைப்பட்டோராக இருந்த பெண்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.
தீவிரவாதப் பெண்ணியப் பார்வை குழுவாதத்தாலும் மும்முரமான சித்தாந்த மோதல்களாலும் பிளவுபட்டுத் தடுமாறியது. 1970களின் பிற்பகுதியில், பொதுவான சமூக உறவுகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு மாறாக, ஒரு பெண்ணிய ‘உப பண்பாட்டை உருவாக்கும் நோக்குடைய ஒரு பண்பாட்டுப் பெண்ணியம், தீவிரவாதப் பெண்ணியம் இருந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. அலிஸ் எஷொலின் (Alice Echo) “கெட்டவராக இருக்கத் துணிவு கொள்ளல்; அமெரிக்காவில் g56J6Irg, Guó06T60sfujub, 1967-75' (Daring to be Bad: American Radical Feminism, 1967-75) 6T6 is brief Syb g5 6.6m) 3 di போக்குகளைச் செம்மையாகவும் அழுத்தமாகவும் விவரிக்கிறது.
றுாத் றோஸன் (Ruth Rosen) எழுதிய “பிளந்து திறக்கப்பட்ட உலகம்: நவீன பெண்கள் அமெரிக்காவை மாற்றிய விதம்’ (The World Split Open: the Way Modern Feminism Transformed America) எனும், பெண்கள் இயக்கம் பற்றிய அண்மைய ஆய்வு நூலில், இந்த வளர்ச்சிப் போக்குக்கள் பெண்கள் இயக்கத்தின் மீது ஏற்படுத்திய பொதுவான தாக்கம் பற்றிய தெளிவான பார்வை கொண்ட விவரணம் உள்ளது. வழமையாகச், சரிவை எதிர்நோக்கும் இயக்கங்களிலேயே இத்தகைய பிளவுகள் உண்டாகின்றன. ஆனால், பெண்கள் இயக்கமோ, அவ்வேளையில் வலுவாகவும் வளர்ந்து கொண்டும் இருந்தது. தீவிரப் பெண்ணியவாதிகள் வேண்டி நிற்கின்ற சமுதாய மாற்றத்திற்கும் அதை வென்றெடுப்பதன் சாத்தியப்பாட்டுக்கும் இடையிற், குறுகியகால அளவிலேனும், இருந்த பெரிய இடைவெளியே பிரச்சனையாக இருந்தது. பெண்கள் இயக்கம், புதிய உலகத்தை உண்டாக்குவதற்கு இல்லாவிட்டாலும், புதிய பெண்ணை நிர்மாணிப்பதற்கான பிரதேசமாகியது. பெண்ணியவாதிகள் ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து எதிர்பார்த்த தூய்மையின் அளவு, ஏமாற்றங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் வழிவகுத்தது.
அக்காலத்தில் தீவிரவாத இயக்கம் குழம்பிப்போன காரணங்களாலேயே தீவிரப் பெண்ணிய இயக்கமும் கொஞ்சம் குழம்பிப்போனது என்று நினைக்கிறேன். 1960களின் பிற்கூற்றிலும் 1970களின் முற்கூற்றிலும் பல தீவிரவாதிகள் புரட்சியையே ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் அது அமெரிக்காவில் எய்தக் கூடிய நிலையில் இருந்தது எனவும் நினைத்தனர். பல குழுமங்கட்குப், புரட்சி பற்றிய பல்வேறு பார்வைகளும் இருந்தன. புரட்சிகர அரசியல் பற்றிய பெண்ணிய, கறுப்பு இன, அரச மறுப்பு, மாக்ஸிய லெனினிய மற்றும் பிற வகையான வியாக்கியானங்கள் இருந்தன. ஏதோ ஒரு வகையான புரட்சி ஏற்படும் என்ற நம்பிக்கை, இவர்களது வேறுபாடுகளை ஊடறுத்து நின்றது. புரட்சியை நோக்கிய முனைப்பு, ஒன்றும் தவறானது அல்ல.
ஏனெனில் அது இயக்கம் எதிர்நோக்கிய பிரச்சனைகளின் ஆழம் பற்றிய புரிதலைச் சுட்டிக் காட்டியது. ஆயினும் அமெரிக்காவிற் புரட்சி எட்டும் தொலைவில் இருந்தது என்ற எண்ணம் யதார்த்த விரோதமானது. வியற்நாம் போர், அமெரிக்கச் சமூகத்தில் ஒரு பாரிய நெருக்கடியை உண்டாக்கியிருந்தது. போருக்கு எதிர்ப்பு, நிறவெறிக்கும் பால் அடிப்படையிலான ஆதிக்கத்துக்கும் மீதான எதிர்ப்புடன் சேர்ந்து, ஒரு புதிய சமூகத்தை உருவாக்குவது இயலுமாகியுள்ளது என்று சிலரை எண்ணத் தூண்டியது. உண்மையில், எப்படி நோக்கினாலும், புரட்சிக்கான அணி பெரும் பாலும் மாணவர் களையும் இளைஞர்களையுமே கொண்டதாக இருந்தது. இது புரட்சிக்குப் போதுமானதாக இருக்கவில்லை.போர் முடிந்த பின்பு, எதிர்ப்பு இயக்கங்களது ஆட்பலம் கரைந்து போய், ஒரு தீவிரமான மையப்
பகுதியே எஞ்சியது. ஒட்டுமொத்தமாகப் பெண்கள் இயக்கத்தில் இருந்துவந்த வலிமை காரணமாயும் தீவிர கொள்கைகட்குப் பல பெண்ணியவாதிகள் நடுவே இருந்த ஏற்புடைமையாலும், பிற கிளர்ச்சிகளை விட நீண்ட காலத்துக்கு தீவிரப் பெண்ணியம் தாக்குப் பிடித்தது. 1980களில், தீவிரப் பெண்ணியம், ஒரு கட்டுக்கோப்பான செயற்திட்டம் கொண்ட ஒரு செயலூக்க இயக்கம் என்ற அளவிலேனும், அமெரிக்க அரசியலின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
பெண்களுக்கான சிறப்புச் சலுகை ஏற்பாடுகள், வேலைத்தலத்திற் பால் அடிப்படையிலான சமத்துவம் என்ற இலக்கைக் கொண்டிருந்தது. பெண்களுக்கு உத்தியோக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிற் பெண்கள் இயக்கம் கண்ட வெற்றி இயக்கத்தின் பார்வையையும் இலக் குகளையும் குறுகலாக்க உதவியது என்பது, முரண்நிலையானது. பெண்ணிய இயக்கம் பெரும்பாலும் இள வயதினரைக் கொண்டதாகவும் தீவிரவாதச் சிந்தனைகளை உள்வாங்கியதாகவும் இருந்த போது, அது பெருவாரியான பெண்ணியவாதிகள் எந்த வர்க்கத்தினின்றும் வந்தார்களோ அந்த வர்க்கத்தினின்று பல வகைகளிற் சுயாதீனமாகவும் அவ் வர்க்கம் பற்றிய விமர்சனப்பார்வை கொண்டதாகவும் இருந்தது. இன்று, முக்கியமான இளம் பெண்ணியவாதக் குரல்களைக் கேட்க முடியுமாயினும், ஒழுங்கமைக்கப்பட்ட பெண்கள் இயக்கத்தின் பெரும்பகுதியினர் இரண்டாவது பெண்ணிய அலையைத் தொடக்கி வைத்த எனது தலைமுறையினரே. வயது ஏற ஏற மனிதர் தீவிரங்குறைகின்றனர் என்று நான் சொல்லவில்லை.
மனிதரது கொள்கைகள், அவர்கள் வாழுகிற காலத்தின் மீதும் அவர்களது அரசியற் செயற்பாடுகள் மீதும் தங்கியுள்ளனவே ஒழிய, வயதின் மீதல்ல என நம்புகிறேன். இளவயதினருக்குங் கூடத் தீவிரப்போக்கு பொருந்தாது எனக் கருதப்படும் ஒரு காலத்தில், பெருமளவும் நடுத்தர வர்க்க நடுத்தர வயதினரைத் தலைமையிற் கொண்ட ஒரு இயக்கம் சுய திருப்திக்குள் போய் ஒதுங்குவது இலகுவாகவே நிகழும்.
மேற் கூறியது நிச்சயமாக முழுப் பெண் ணிய இயக்கத்தினதும் விவரணமல்ல, இன்று பெண்கள் இயக்கம் என, ஒருபுறம் , பெண்கள் தேசிய நிறுவனம், பெண் களின் அரசியலுக்கான தேசியப் பேரவை போன்றன உள்ளன. மறுபுறம், அவற்றினும் துணிவான ஆனால், அவ்வளவு அறியப்படாத, குறிப்பான பிரச்சினைகள் பற்றி வெகுசன மட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் உள்ளன. நம்மிடையே இல்லாதது ஏதெனில், தீவிரப் பெண்ணியம் ஒரு காலத்திற் செய்தது போல, பெண்கள் மீதான ஒடுக்குதலைப் பற்றிப் பொதுப்பட நோக்கி, அதை முழுச் சமுதாயத்தின் மீதுமான விமர்சனத்துக்குள் பொருத்தும் ஒரு பெண்கள் இயக்கப் பிரிவு ஆகும். தாராளவாதப் பெண்ணியம் சம உரிமைச் சட்டத் திருத்தத்திற் தோற்றது, ஆயினும் பல விடயங்களைச் சாதித்தது.
அனேகமாகத் தாராளவாதப் பெண்ணிய முயற்சிகளின் விளைவாகவே யுவதிகட்கும், சிறுமியர்க்கும் சில தசாப்தங்கள் முன்பு இல்லாதிருந்த வாய்ப்புகளும் முந்திய தலைமுறையினர் கற்பனை செய்திருக்கவும் பொருந்தாத எதிர்பார்ப்புக்களும் இன்று உள்ளன.
பெண்ணியத்தின் தீவிர வடிவங்கள் இன்னமும் உள்ளன. ஆயினும், அவை, செயற்படுவோர் மத்தியிலன்றிக் , கல்வித்தகைமை சார்ந்தும் ஆய்வறிவாளர் நடுவிலுமே பெரிதும் உள்ளன. இந்த இடைவெளியை நிரப்பப் பல பெண்ணியவாதிகள், தமது ஆய்வறிவு சார்ந்த கருமங்கள் மூலமும் வெகுசனமட்டத்து வேலைகளில் பங்குபற்றியும் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றனர். கல்வி நிறுவனங்களில் பெண்ணியவாதிகள் உட்படப் பெண்களின் எண்ணிக்கை கூடி வருவதால், பல மாணவர்கட்குப் பெண்ணிய, முற்போக்குச் சிந்தனைகளைத் தெரியவந்துள்ளது.
பெண்ணிய முற்போக்கு எழுத்துக்கள் ஒரு பரவலான வாசக வட்டத்தின் சிந்தனை மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மொத்தத்தில் கல்வி நிறுவனங்களில் உள்ள பெண்ணியவாதிகள், கல்வியாளரிடையே உள்ள முற்போக்கானவர்களைப் போலவே ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்க வில்லை, என்பதோடு பல்கலைக் கழகங்களின் தர்க்கமுறையிலும்
விழுமியங்களிலும் அவர்கள் சிக்குண்டுள்ளனர்.
பெண்ணியத்துடன் நெருக்கமான தொடர்புடைய மேல் நிலைக் கொள்கை விவகாரங்களிலும் பண்பாட்டுக் கல்விநெறி தொடர்பாக ஓரளவுக்கும் கெளரவம், அந்தஸ்து, பிரபல்யம் ஆகியனவற்றை நாடியதன் விளைவாகப்பெண்ணிய, முற்போக்கு விழுமியங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன. 1960களின் அதிகார அடுக்குகள் பற்றிய தீவிர பெண்ணிய விமர்சனத்திற்குப் பதிலாக, அதிகார அடுக்குகளிலும் அவற்றில் மேல்நிலை எய்துவதாற் கிட்டும் நன்மைகளிலும் திளைக்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது.
சம காலப் பெண் கள் இயக் கம் , நிற, இன அடிப்படையிலான பக்கச்சார்பையும் ஒற்றைப் பிரச்சனை மீதான கவனக்குவிப்பையும் தவிர்த்துள்ளபோதும், தனக்குரிய நடுத்தர, உயர் நடுத்தர வர்க்க நிலைப்பாடுகளிலிருந்து விலகி நிற்கும் ஆற்றலைப் படிப்படியாக இழந்துள்ள வகையில், அது முதலாவது பெண்ணிய அலையை ஒத்துள்ளது. முதலாவது பெண்ணிய அலை, தன் வரலாற்றின் போக்கில், நிறம் தொடர்பாக மட்டுமன்றி, மூலதனமும் வர்க்கமும் தொடர்பாகவும் தனது பார்வையைக் குறுகலாக்கி விட்டது. உள்நாட்டுப் போருக்கு முந்திய ஆண்டுகளில் முதலாவது பெண்ணிய அலை, மூலதனம் பற்றிய விமர்சனப் பார்வை உட்படத் தீவிர நிலைப்பாடுகளைக் கொண்ட பல்வேறு இயக்கங்களின் கூட்டமைப்பாக இருந்தது.
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மூலதனத்தின் அமைப்புக்கள் இறுக்கமடைந்து வர்க்க முரண்பாடுகள் உக்கிரமான போது, ஏழைகட்கும் தொழிலாளி வர்க்கத்தினருக்கும் ஆதரவான சீர்திருத்த இயக்கங்களில் பெண்ணியவாதிகள் முக்கிய பங்கு வகித்தனர். பெண்கள் இயக்கத்தில் ஒரு பகுதியினர், முதலாளியத்தை, விமர்சித்து தொழிலாளர் இயக்கத்துக்கு நேசக்கரம் நீட்டினர். எடுத்துக்காட்டாக, மகளிர் கிறிஸ்துவ மதுவிலக்கு இயக்கம் (Women Christian Temprerance Movement) Gigibit poorT6T) figs/T60T மூலதனச் சுரண்டலை எதிர்த்து “சுவிஷேச சோசலிசத்தை” (Gospel Socialsm) "Gafutibu(635 B 35.36ml)gl61 b” (Christianity in Action) என்று கூறி ஆதரித்தனர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் பெண்கள் இயக்கத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையிலான உறவு சோசலிசக் கட்சிக்குள் தொடர்ந்தது. ஆனால், புதிய நூற்றாண்டின் பிறப்பின் பின்னர், பெண்ணியத்தின் பெரும் போக்கு முதலாளியத்தை விமர்சிப் பதினின்றும் ஒதுங்கியதோடு பெண்ணிய நலன்களையும் விழுமியங்களையும் உயர் நடுத்தர வர்க்கத்தின் நலன்களுடனும் விழுமியங்களுடனும் இணைத்தது. முதலாவது பெண்ணிய அலை ஓய்ந்த போது, முதலாளியம் பற்றியும் தன் வர்க்க மூலவேர்கள் பற்றியுமான விமர்சனப் பார்வையைப் பெண்ணியம் இழந்துவிட்டது.
பெண்ணியம் நடுத்தர வர்க்கப் பார்வையை உறுஞ்சியாயிற்று முதலாவது பெண்ணிய அலை போன்று, சமகாலப் பெண்ணியமும் காலப்போக்கில், தன்னிற் பெரும்பாலோரது வர்க்கமான நடுத்தர வர்க்கத்தின் பார்வையை உள்வாங்கிக் கொண்டது. அதே வேளை, அந்த வர்க்கத்தின் பார்வை, மாறுதலுக் குள்ளாகியுள்ளது. கடந்த சில தசாப்தங்களில், அதிகரித்து வரும் பொருளாதாரப் பாதுகாப்பின்மையினதும் விரிந்து வந்த சமூக ஏற்றத்தாழ்வுகளினதும் தாக்கத்தின்விளைவாக, தனிமனித மேம்பாட்டுக்கான வேட்கை, நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகம் கவனிப்பைப் பெற்ற ஒரு விடயமாயிற்று.
பல, அநேகமாகப் பெரும்பாலான, நடுத்தர வர்க்கத்தினருடைய சமூக ஈடுபாடு பலவீனப்பட்டுள்ளது. பலருக்கு, குறிப்பாக உத்தியோகக்காரருக்கு, வேலை ஒரு வகையான மதம் போல ஆகிவிட்டது. வேலை மட்டுமே எஞ்சியுள்ள அடையாளங்களின் தோற்றுவாய்களில் செல்லுபடியானதாகத் தென்பட்டது. அதே வேளை, பலருக்குத் தமது வேலைத்தலங்கள் மேலும் மேலும் போட்டியும் மேலும் மன உளைச்சலும் கொண்டதாகின. இது வேலைத்தலத்தின் பிரச்சனை மட்டுமன்றி, முழுப் பண்பாட்டினதும் பிரச்சனையுமாகும். இந்த நாடு மேலும் தனிநபர் வாதமுடையதாகவும் நேயமற்றதாகவும் சுயநலம் மிக் கதாகவும் ஆகிவிட்டது. பெண் ணியம் , கவனிக்கத்தக்களவில் இதை எதிர்த்து நிற்கவில்லை. தொழில் பெறுவதற்குச் சமவாய்ப்பு என்ற பெண்ணியக் கோரிக்கை அன்றும் இன்றும் முக்கியமானதே. பெரும்பாலான பெண்களுக்கு இது இன்னமும் கைகூடவில்லை.
ஆயினும் பெண்கள் இயக்கத்தின் மிகக் கவனிப்புக்குரிய பகுதியினர் சமூகச் சமத்துவத்துக்கும் சமுதாய நலனுக்குமுரிய இடத்தை பொருள் சார்ந்த தமது ஆசைகளின் ஈடேற்றத்திற்கு வழங்கிவிட்டனர். பெண்கள் இயக்கத்தின் இரண்டாவது அலையின் தொடக்க நிலையிலிருந்த தீவிர, சமூக மாற்ற விழுமியங் களிலிருந்து இந்த நிலைக்கு வரும் வரையிலான பரிணாம மாற்றம் படிப்படியாகவே நிகழ்ந்ததால் அதிற் சம்பந்தப்பட்டோர் அதைக் கவனியாமல் விடுவது இலகுவாயிற்று. ஆயினும் ஒரு காலத்திற் தீவிர இயக்கமொன்றன் பகுதியாக இருந்த பெண்கள் இன்று முற்றிலும் மாறுபட்ட விழுமியங்களால் ஆளப்படும் ஒரு சூழலில் இருக்கக் காணப்படுவது அவர்களது பார்வையில் ஏற்பட்டுள்ள பெயர்ச்சியைச் சுட்டி நிற்கிறது.
1970களிலும் 80கள்லும் பெண்களை அதிகளவிற் பல்கலைக்கழகங்கட்கு அனுப்பினாற் பல்கலைக்கழகங்களது மேட்டுக்குடித்தன்மையும் போட்டியும் குறைந்து அவை அதிக மனிதப் பண்புடையனவாயும் சமூகப்பிரச்சினைகளை விளிப்பதில் கூடிய அக்கறையுடையனவாயும் மாறும் என்று பல பெண்ணிய வாதிகள் நம்பினர். இப்போதோ பல்கலைக்கழகங்களில் பெண்கள் நிறையவே உள்ளனர். என்றாலும் பல்கலைக்கழகங்களில் நன்மைக்கான மாற்றம் நடந்துள்ளதா என்பது நிச்சயமில்லை. உண்மையிற், பல வழிகளில், பல்கலைக்கழகங்கள் மோசமாகி யுள்ளன: குறிப்பாக அவை பெரிய கம்பெனிகளது நிதியுதவியை நாடுகின்றன. அதன் விளைவாக சந்தை மனோபாவம் பரவுகிறது.
எனினும் பொதுப்பட்ட முறையிற் பெண்களோ, குறிப்பாகப் பெண்ணியவாதிகளோ, இப் போக்குகளை எதிர்த்து, மேலும் மனிதப்பண்புடைய, போட்டி மனோபாவம் குறைந்த, அதிகார அடுக்குத் தன்மை குறைவான பல்கலைக்கழகங்களை வேண்டி நிற்கவில்லை. அண்மைக்காலங்களின் கல்வித்துறை சார்ந்த பெண்ணியவாதிகள் இத்தகைய முற்போக்கான விழுமியங்கள் கொண்டோராக அறியப்பட்டவர்களாக இல்லை. கல்வித்துறை சார்ந்த பெண்ணியத்திற் சில பகுதிகளிற் திறந்த விவாதம் உள்ளது. மனிதர் ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்துகின்றனர், சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு பொது நோக்கிற்காகச் செயற்படும் சமமான உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றனர்.
எனினும் மிக அதிகமான பெண்ணியவாதக் கல்வித்துறையினர் நடுவே, நிலைமை இவ்வாறில்லை. கல்வித்துறை சார்ந்த பெண்ணியத்தின் மிகவும் மதிப்புக்குரியதான உயர் கொள்கைக் களத்தில் போட்டியும் அந்தஸ்துக்கான தேடலும் பெரிதும் மேலோங்கியுள்ளன. பெண்கள் இயக்கத்தின் விழுமியங்களில் ஏற்பட்டுள்ள பெயர்ச்சி, பரவலான ஒரு போக்கின் ஒரு பகுதியேயாகும். மேலும் மேலும் அதிகரிக்கும் லாபத்துக்கான பெருமுதலாளிய வேட்கையாலும் பேராசையை ஒரு நற்பண்பாக்கும் செயல்களாலும் அடையாளப்படுத்தப்படுத்துவதும் 8 inj60)LD யடைந்து வரும் பொருளாதார, சமூக வேறுபாடுகளைக் கொண்டதுமான ஒரு காலத்தில், ஒரு தலைமுறை முழுவதுமே, எப்படியும் மேலேறுவது என்ற ஆவலின் பிடியில் சிக்குண்டுள்ளது.
பெண்ணியவாதிகள் இதற்கு விலக்கில்லை. பெண்ணியவாதி என்றால் பதவி மோகம் பிடித்தவர் என்ற படிமம் வெறுமனே பகைமையான ஊடகங்களின் புனைவு அல்ல. வேறுவிதமாகச் சொல்வதாயின், கல்வித்துறையிலும் உத்தியோகங்களிலும் உள்ள பெண்ணியவாதிகள் பிற நடுத்தர வர்க்கத்தினரை விட எவ் வகையிலும் அதிகளவில் இவ் விழுமியங்களால் ஆட்கொள்ளப்படவில்லை எனலாம். எனினும் இவ்வாறு கூறுவது, பெண்ணியவாதிகள் ஒரு புதிய உலகம் பற்றிய தமது பார்வையை நழுவ விட்டுவிட்டனர் என்று ஒத்துக்கொள்வதாகும்.
1960களிலும் 70களிலும், பால் அடிப்படையிலான அரசியலின் ஒரு அம்சம், இளம் பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடப்பதை எதிர்த்து வீட்டுக்கு வெளியே தொழில் வாய்ப்புகளைக் கோரிக் கிளர்ச்சி செய்ததிலிருந்து சமகாலப் பெண்ணியம் உருப் பெற்ற இன்னொரு அம்சம், ஏதெனின், பெருமுதலாளியத்தால் வழிநடத்தப்பட்ட சமுதாயத்திற்கு எதிராக எழுந்த “புதிய இடதுசாரி” இளைஞர்களின் கிளர்ச்சியையும் மேலும் அர்த்தமுள்ள சமூகம் ஒன்றுக் காக அவர் களால் முழுமையாக வரைவிலக்கணப்படுத்த இயலாது இருந்த கோரிக்கையும் ஆகும்.
க்றிஸ்தொட்பர் லாஷ் (Christopher Lasch) இறந்த பின்பு வெளியான அவரது கட்டுரைத் தொகுதியான, “பெண்களும் சாதாரண (Women and Common Life, Norton, 1997) 6T6örs நுாலில் “பால் அடிப்படையில் வேலையின் பங்கீடும் குடிசார் பண்பாட்டின் சரிவும் நகர அயற்குடியிருப்புக்களின் எழுச்சியும்” (The Sexual Division of Labour, The Decline of Civil Culture and the Rise of the Suburbs விமர்சன நோக்குகளும் அடிப்படையில் ஒன்றையொன்று நிறைவு செய்பவை என வாதிக்கிறது. ஒவ்வொரு பார்வையும் மற்றதைக் கணிப்பிலெடுக்காத குறையால் பாதிக்கப்பட்டுள்ளது என அவர் வாதித்துள்ளார்.
அத்துடன் அவற்றிடையிலான முரண்கள் தொழிற்துறைக்கும் குடும்பத் துறைக்கும் இடையிலான மிகையான இடைவெளியையே சுட்டி நின்றன எனவும் அவர் கருதினார். வீட்டிலும் பெண்ணிய விமர்சன நோக்கை உட்கொண்டு மேலும் மனிதப் பண்புடையதாக்கப்பட்ட ஒரு அலுவலகத்திலும் இரு பாலரினரும் சமமாகப் பங்கு பற்றுவதன் தேவைக்காக அவர் குரல் கொடுத்தார்.
1960களின் தீவிரவாதத்தின் நவீனமயமாக்கப்பட்ட ஒரு வடிவம் நமக்குத் தேவை என நினைக்கிறேன். அது சோசலிஷப் பார்வையும் பெண்ணியப் பார்வையும் கொண்டதாகவும் பெருமுதலாளிய நிறுவனங்களது மிகுதியான வலிமையையும் சந்தை சார்ந்த விழுமியங்களையும் கவனிப்பிற் கொண்டும் அமைய வேண்டும். பெண்ணியவாதிகள் பலர், அமெரிக்கப்பண்பாட்டின் முக்கியமான ஒரு பகுதியாகிவிட்ட தனிநபர்வாதத்தினதும் வெற்றிக்கான தேடலினதும் இருப்பை மறுப்பார்கள்.
ஆயினும் நம்மிற் பெரும்பாலானோர் எவ்வாறோ அந்த விழுமியங்களின் அடிப்படையிலேயே வாழ்கிறோம் என நினைக்கிறேன். நமது பெறுமதியை வேலைத்தளத்தில் நமது வெற்றியை வைத்து அளவிடுகிறோம் ; அதல் எதுவும் குறுக் கடுவதை அனுமதியாதிருக்கிறோம். வாழ்க்கையில் வெற்றி என்பது, பெருமளவும், தொழில் மூலம் பொருளும் அந்தஸ்தும் பெறுவதன் அடிப்படையில் அளக்கக் கூடியது எனப் பரவலாக ஏற்கப்பட்டுள்ளது. இவ் விழுமியங்கள் உத்தியோகம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தினரிடையே மிக வலிதாக வேரூன்றியிருக்கலாம். ஆயினும் இவை அதற்கு அப்பாலும் பரவுகின்றன: பொருளாதாரப் பாதுகாப்பின்மையாலும் பின்தங்கிப் போகக் கூடுமென்றும் வேலையை இழக்க நேரும் என்றும் அடிமட்டத்திற்குத் தாழ நேரும் எனவும் அஞ்சுவதாலும் அவை வலுப் பெறுகின்றன.
தொழிலுக்குப் புறம்பான நிறுவனங்களும் சமூக உறவுகளும் பலவீனமடைந்து, வேறெதையும் விடத், தொழிலிற் சாதிக்கின்றனவே சமூகப் பெறுமானங் கொண்டனவாகத் தெரியும் போது, தீவிரவாதிகட்குக் கூட, வேறுவகையான விழுமியங்களைக் கடைப்பிடிப்பது கடினமானதாகவே இருக்கும். நமது சமூகங்கள் ஒடுங்கிவிட்டன. நாம் இதை வெறுக்கிறோம், எனினும் அதற்கு எதிர்வினையாக நம்மை நமது தொழிலில் ஆழமாக ஈடுபடுத்திக் கொள்கிறோம்.
மேலும் மேலும் தளையற்று விளங்குகிற ஒரு முதலாளிய முறைக்கு சமூக முரண்பாடுகளைக் கூர்மையாக்கி எல்லாவற்றின் மீதும் ஒரு விலையை வைத்து வாழ்வின் சகல அம்சங்களையும் தன்னுள் இழுக்கும் ஒரு நீர்ச்சுழலான முதலாளிய முறை மீதான விமர்சனமும் அதற்கெதிரான ஒரு மாற்றும் தேவை என நம்புகிறேன். சமத்துவத்துக்கும் சமூகத்துக்குமான தீவிரப் பெண்ணியக் கோரிக்கை பழமைப்பட்டது என ஒருவர் கருதலாம்; மாறாக ஒரு சமகாலத் தீவிர வேலைத்திட்டத்திற்கேற்ற முன் நிபந்தனையாகவும் ஒருவர் அதைக் கருதலாம்.
நன்றி; மன்த்லி றிவ்யூ, மே 2001.
(Monthly Review, May 2001) தமிழில் - புவனம்
Draisnojupril 6L6 isoflupi இலங்கையிற் பெண்ணுரிமையும்
சி. சிவசேகரம்
பெண்ணியம் என்ற பதம் பலவாறாக விளங்கவும் விளக்கவும் பட்டுள்ளது. எவ்வாறாயினும், பெண்ணியம் என்பது, எல்லா இடத்தும், சமூகத் தளத்திலும் குடும்பத்தளத்திலும் ஆண் பெண் ஆகிய இரு பாலருக்கும் முழுமையான சமத்துவம் என்பதை அடிப்படையாகக் கற்றுக் கொள்கிறது. இந்த இடத்திற், பெண்ணியவாதிகள் மாக்ஸியத்துடன் முரண்பட வேண்டிய தேவை இல்லை.
வரலாற்று நோக்கில், மாக்ஸியமே பெண்ணுரிமையை ஒரு அரசியற் பிரச்சனையாக அடையாளங் கண்டது. ஆணாதிக்கத்தின் விளைவாகவே குடும்பம் என்ற அமைப்பும் அதனோடு உறவுடைய வேலைப் பிரிவினையும் ஆண்-பெண் உறவின் அதிகார அடுக்கும் உருவாயின என்பதை நிறுவியதும் மாக்ஸியமே, குடும்பம் என்பதை ஆண் பெண் மீது தனது ஆதிக்கத்தை நிறுவதற்கான அமைப்பு என்று மாக்ஸியத்துக்கு முன் யாரும் கற்பனை செய்தது கூட இல்லை.
பிற சிந்தனைமுறைகளெல்லாம் குடும்பம் என்பதை இயற்கையில் அமைந்த ஒன்றாகக் கொண்டிருந்தபோது, மாக்ஸியம் அதை வன்மையாகக் கேள்விக்குட்படுத்தியது. மாக்ஸியத்தின் இயங்கியல் பொருள் முதல்வாத ஆய்வின் உதவியில்லாமல் குடும்பம் என்கிற அமைப்பிற்கு வழங்கப்பட்டிருந்த 'புனிதமான’, “எக்காலத்துக்குமான’, ‘மீறக்கூடாத பண்புகள், இன்றைய பின்நவீனத்துவ பரிபாஷையில் சொல்வதானால், கட்ட விழ்க்கப்பட்டன. குடும்பம் பற்றிய மாயையான படிமங்கள் யாவும் தகர்க்கப்பட்டன.
மாக்ஸியச் சிந்தனையின் வரவாற் கேள்விக்குட் படுத்தப்பட்ட பல விடயங்கள் போல, குடும்பம் என்பதும், அதன் வரலாற்று வளர்ச் சியரின் அடிப் படையிலேயே விளங் கரிக் கொள்ளப்பட்டதல்லாமல், சரியா-பிழையா, தேவையா-இல்லையா என்கிற விதமாகக் கால இடச் சூழல்கட்கு அப்பாலான முறையில் மதிப்பிடப்படவில்லை. முற்போக்கான பெண்ணியச் சிந்தனைப் போக்குக்கள் மாக்ஸியச் சிந்தனை வழிப்பட்ட அணுகுமுறையை ஏற்றமை மாக்ஸ் தொடத்தவறிய அம்சங்களை மாக்ஸிய அணுகுமுறை மூலம் தொட முடியாது என்ற திரிப்பு முற்போக்கான பெண்ணியச் சிந்தனையாளர்கட்கு இருக்கவில்லை.
மாக்ஸின் பொருளியல் ஆய்வுகளில் பெண்ணின் குடும்பத்துக்கான உழைப்பு, அதாவது கூலியில்லாத உழைப்பு, கணிப்பில் எடுக்கப்படவில்லை என்று, மாக்ஸ் எதைப் பற்றி ஆராய்ந்தார் என்ற கணிப்புக் கூட இல்லாமல், மாக்ஸியத்தின் குறை தேடிக் காட்டுகிற போக்கை நாம் கண்டிருக்கிறோம். இவ்வாறான விஷமத்தனங்கள் மாக்ஸ் முதல் மாஒ வரையிலும் அவர்கட்குப் பின்பான மாக்ஸியச் சிந்தனையாளர்களும் போராளிகளும் தொடர்பாகத் தனிமனித மட்டத்திலான அவதூறுகளாகவும் சிந்தனைத் தளத்திலான திரிப்புக்களாகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டே, வருகின்றன.
ஒருவர் அதிக ஆராய்வின்றி இத்தகைய கருத்துக்களை ஏற்று அவற்றின் அடிப்படையிலேயே மாக்ஸியத்தை நிராகரிக்க முன்நிற்கிறாரென்றால், அது வெறுமனே அறியாமை சார்ந்த ஒன்று மட்டுமல்ல, குறுகிய தேசியவாதம் உயர்-நடுத்தர வர்க்கப் பெண்ணியம், தூய அழகியல்வாதம் என்பவற்றுக்குப் பொதுவாக ஒரு வர்க்க அடிப்படையும் உலக நோக்கும் இல்லாமலில்லை.
எனவேதான் இலங்கையின் பெண்ணுரிமைப் போராட்டத்தையும் அதன் பின்னடியாகத் தோன்றிய சமகாலப் பெண்ணியத்தையும் அவற்றின் வர்க்க அடிப்படையிலேயே நோக்க வேண்டியுள்ளது.
பெண் ணியம் தொடர் பாகவும் பெண் ணுரிமை தொடர்பாகவும், தன்னை மாக்ஸியர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரது நிலைப்பாடு எவ்வளவு தூரம் மாக்ஸிய அடிப்படையில் முழுமையானதும் செம்மையானதும் என்பதற்கு எதுவிதமான உத்தரவாதமும் இல்லை. ஏனெனில், பெண்ணுரிமை தொடர்பான சமூக நடைமுறைப்பிரச்சினைகளை, ஒவ்வொருவரும் தமது அனுபவமும் யதார்த்த நிலைமைகள் பற்றிய தமது மதிப்பீடும் தமது உலக நோக்கும் சார்ந்தே மேற்கொள்கின்றனர்.
சில சமயங்களில் தோற்றத்துக்கு மிகவும் முற்போக்காகவும் புரட்சிகரமானதாகவும் தோன்றும் ஒரு விடயம் உண்மையில் அதற்கு எதிர்மாறானதாக இருக்கலாம். உதாரணமாக, இடது தீவிரவாதமும் அரசு மறுப்புக் கொள்கையும் (அரசின்மைக் கொள்கை) பார்வைக்கு மிகவும் புரட்சிகரமானதாகவும் முற்போக்காகவும் தோன்றினாலும் நடைமுறையில் அவை புரட்சிகர இயக்கத்திற்கு பாதகமான முறையிலேயே பணியாற்றுகின்றன.
மறுபுறம், ஒருவர் மாக்ஸியச் சிந்தனையை உள்வாங்கிக் கொண்டதனால் அவர் எப்போதுமே மாக்ஸியத்துக்கு முரணற்ற விதமாகவே தனது நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பார் என்று கூற முடியுமா? மாக்ஸியம் என்பது விஞ்ஞான முறையிலான ஒரு சமூக ஆய்வுமுறை என்பதால், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் என அங்கு எதுவும் இல்லை. மாக்ஸிய அணுகுமுறை வழிப் பெறப்படும் அறிவு என்பது, சமூக நடைமுறையினின்று ஒதுங்கி நின்று பெறுவதல்ல. ஒருவரது சமூக நடைமுறையும் அனுபவமும் சிந்தனையைப் பதப்படுத்துகின்றன.
எனவே, எவரது நிலைப்பாடும் எடுத்த எடுப்பிலேயே சரியானதும் நிரந்தரமானதுமான ஒரு தன்மையைப் பெற இயலாது. ஒரு மாக்ஸியவாதியின் சிந்தனை அவரைச் சூழவுள்ள சமுதாயத்தின் வரலாற்று வழியிலான சிந்தனையினின்றோ சமகால நடைமுறையினின்றோ விடுபட்ட ஒன்றாக இருக்க முடியாது. அது அவரது உலக நோக்கின் விருத்திக்கு ஏற்ப மேலும் தெளிவும் உறுதியும் பெறலாம் அல்லது சீரழியலாம். எனவே, ஒரு மாக்ஸியவாதியின் சிந்தனை எப்போதும் சமூகநடைமுறை எனுஞ் சாணைக் கல்லில் தீட்டப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
மாக்ஸியவாதிகளினிடையே பெண்ணுரிமை பற்றிக் கருத்து வேறுபாடுகள் இல்லாமலிருக்க முடியாது. எனினும் வேறு எந்தச் சமூகப் பிரச்சனையும் பற்றிய கருத்து வேறுபாடுகளைப் போன்றனவே சமூக விடுதலை பற்றிய தெளிவான உறுதியான நிலைப்பாட்டிற்கும் பசப்பான மாக்ஸியத்துக்கும் உள்ள வேறுபாட்டை விலக்கியும், வேறுபாடுகள் இருப்பதற்கு ஒவ்வொருவரது சமூக அனுபவமும் பங்களிக்கிறது. ஆயினும் நேர்மையான எந்தவொரு மாக்ஸியவாதியும் ஆண்-பெண் சமத்துவம் பற்றி அடிப்படையில் முரண்பட இடமில்லை. நாம் வாழும் சமுதாயத்தின் ஆணாதிக்கத் தன்மையை மழுப்ப இடமில்லை. எந்த அறத்தின் பேராலும் வேறுபாட்டைப் புறக்கணிக்கும் போதே பால் வேறுபாட்டின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும் ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்த அங்கு இடமில்லை.
எந்தவொரு சமூகப் பிரச்சனையின் தீர்விலும் நீண்டகால மாக் ஸிய இலக்கிற்கும் உடனடியான சூழ்நிலையில் நடைமுறைப்படுத்தக் கூடிய காரியங்களுக்குமிடையே உள்ள “தீவிர இடதுசாரிப்” போக்கும் பிற குழப்பங்களும் உருவாகின்றன. இதன் விளைவாக, உடனடியாகச் செய்யக்கூடியனவற்றைச் செய்ய இயலாது போவது மட்டுமன்றி, நீண்டகால இலக்கும் தவற விடப்படுகிறது. இந்த விதமான சிறுபிள்ளைத்தனம் காலப்போக்கில் ஊசலாட்டமான சிந்தனையாகவும் முடிவில் வலதுசாரிச் சிந்தனையாகிச் சீரழிவதையும் நாம் கண்டுள்ளோம். இது மாக்ஸியத்துக்கு மட்டுமன்றி சமூக விடுதலைக்கான எந்தச் சிந்தனைப் போக்கிற்கும் உரிய ஒரு பண்பாகும்.
மாக்ஸியவாதிகள் பற்றிய பொதுவான பெண்ணிய நிலைப்பாடு என்று எதுவும் இல்லை. எனினும், ஒரு பெண்ணிய வாதி சமூகத்தின் பிற ஏற்றத்தாழ்வுகள் பற்றியும் ஒடுக்குமுறைகள் பற்றியும் அக்கறையுள்ளவராக இருக்கும் போது, முற்போக்கான ஒரு பெண்ணியச் சிந்தனை உருவாகிறது. பிற சமூக முரண்பாடுகளினின்றும் ஆண்-பெண் முரண்பாட்டைப் பிரித்து நோக்க இயலாது என்பதோடு ஒரு முரண்பாட்டின் தீர்வு பிற முரண்பாடுகளுடைய தீர்வுடன் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் தொடர்பு கொண்டுள்ளது என்பதும் தெளிவாகும் போது, மாக்ஸியத்தையும் சமூக விடுதலைக்கான அதன் செயற்பாட்டையும் நட்புணர்வுடன் பார்க்க இயலுமாகிறது. இதன் மூலம், பெண்ணியவாதமும் பெண்ணுரிமைக்கான போராட்டமும் வலுப்பெறுகின்றன. அதேவேளை, பிற சமூக ஒடுக்குமுறைகட்கு எதிரான போராட்டங்களும் வலுப்பெறுகின்றன.
மறுபுறம், பெண்ணியத்தை ஆண்-பெண் முரண்பாட்டுக்குள் குறுக்கிக் கொள்ளும் போது, ஆணைப் பிரதான எதிரியாக்கி, மற்ற முரண்பாடுகளை அலட்சியம் செய்யும் போக்கு எழுகிறது. இது உயர்-நடுத்தர வர்க்கம் சார்ந்த பெண்ணியவாதிகளிடையே பொதுவாகக் காணப்பட்டு வந்த ஒன்றாகும். இதற்கான உதாரணங்களை ஒவ்வொரு நாட்டிலும் காணலாம். இப்போக்கின் ஒரு முக்கிய விளைவாக, பெண் விடுதலை என்பதைத் தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணின் சமூக மேம்பாட்டை வைத்து அளக்கும் தன்மையையும் நாம் காணலாம். ஒரு பெண் பிரதமராவதோ, சனாதிபதியாவதோ புறக்கணிக்கத்தக்க ஒரு நிகழ்வல்ல. ஆயினும் அது சமூக அளவில் பெண்களது நிலையில் எந்த விதமான மேம்பாட்டின் அளவுகோலும் ஆகாது.
ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினர் அமைச்சராகியோ குடியரசுத் தலைவராகியோ இந்தியாவின் சாதி ஒடுக்குமுறை ஒழியவில்லை. தொழிலாளி வர்க்கத்தவர் அல்லது ஏழை விவசாயக் குடும்பத்தவர் ஆட்சி அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்ததன் மூலம் முதலாளியமோ நிலவுடைமைச் சமுதாயமோ எங்கும் முடிவுக்கு வரவில்லை. ஒரு தமிழர் இந்த நாட்டின் பிரதமராகியோ சனாதிபதியாகியோ பேரினவாத ஒடுக்குமுறை ஓயப்போவதில்லை.
அதேவேளை தனிப்பட்ட முறையில் பெண்களின் சமூக மேம்பாடும் சமவாய்ப்பும் தேயைான இடங்களில் சிறப்புச் சலுகைகளும் பற்றி நாம் அலட்சியமாக இருக்க முடியாது.
இவற்றை வலியுறுத்தும் அதே வேளை பெண்விடுதலை என்பது மேற்தட்டுப் பெண்களின் மேம்பாடும் ஆணுக்கு நிகரான நிலையும் மட்டுமல்ல என்பதையும் நாம் வலியுறுத்த வேண்டும்.
ஒவ்வொரு துறையிலும் மேல்நிலை கண்ட பெண்களின் எண்ணிக்கையை வைத்துச் சமுதாயத்தின் பெண்கள் நிலையை அளவிடும் ஒரு போக்கை நாம் காணலாம். இதற்கும் அரசாங்க உயர் பதவிகளில் எத்தனை சிறுபான்மைத் தேசிய இனத்தவர் உள்ளனர் என்ற அடிப்படையில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய முடிவுகட்கு வருவதற்கும் அதிக வேறுபாடு இல்லை. இந்த விதமான உயர்-நடுத்தர வர்க்கப் பார்வை ஒடுக்குமுறைக்கான சமூக அடித்தளத்தைப் பெயர்ப்பது பற்றிக் கவலைப்படுவதில்லை. வர்க்கம், சாதி, இனம் என்ற முறைகளில் ஆதிக்க நிலையில் இருந்து கொண்டு, பெண்ணியத்தைத் தனியே
காண்கிறோம்.
இது எவரதும் தனிப்பட்ட கோளாறு அல்ல. ஒருவரது வர்க்க நிலைப்பாடும் சமூகப் பார்வையுமே அவரது சிந்தனையையும் செயலையும் தீர்மானிக்கின்றன. இலங்கையின் சமகாலப் பெண்ணியவாதியிடையே உயர்-நடுத்தர வர்க்கப் பெண் களது ஆதிக் கமும் செல் வாக்கும் மிகுதியாக இருப்பதனாலேயே இலங்கையிற் பெண்ணிய இயக்கங்கள் பிற சமூக விடுதலை இயக்கங்களுடன் இணைந்து முன் செல்ல இயலாமலுள்ளது. ஆண்-பெண் முரண்பாடாக மட்டுமே வரையறுக்கிறவர்கள் பலர் தமது தனிப்பட்ட முறையில் முற்போக்குச் சிந்தனையும் சமூக மாற்றம் பற்றியும் அக்கறை கொண்ட பெண்களும் பெண்ணியவாதிகளும் இருந்துள்ளனர். குறிப்பிட்ட காலகட்டங்களில் பெண் உரிமை அமைப்புக்கள் சில பிற சமூக விடுதலைச் செயற்பாடுகளில் ஊக்கத்துடன் பங்குபற்றியுள்ளன. எனினும், இவற்றிற் பெரும்பாலானவை குறிப்பான சில சமூக விடுதலை இயக்கங்களின் பெண்கள் அமைப்புக்களாகவே இருந்து வந்துள்ளன என்பதை நாம் புறக்கணிக்க இயலாது.
நமது சமுதாயச் சூழலில் சென்ற நூற்றாண்டின் முற்கூற்றில் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட போது அதைப் பெண்களுக்காகவும் கோரியவர்களிற் பலர், பரந்தளவிலான சமூக விடுதலையையோ மனித சமத்துவத்தையோ கருத்திற் கொண்டிருக்கவில்லை. ஏற்கனவே சமூக மேம்பாடு கண்ட உயர் சமூகத்தின் பெண்கள் தமக்குப் பாலடிப்படையில் சமத்துவம் வேண்டியதும் வென்றதும் சரியானது, ஆயினும் போதுமானதல்ல.
ஆண்-பெண் சமத்துவத்தைச் சமூக விடுதலையுடன் சேர்த்துக் கருதும் ஒரு முனைப்பு இடதுசாரி இயக்கத்தின் எழுச்சிக்கு முன்னம் ஏற்பட்டிருக்கவும் இயலாது. எனினும், தோட்டத்துறை தவிர்ந்தால், பெண்கள் கூலி உழைப்பில் ஈடுபட்டிராத ஒரு சூழலும் அரை முதலாளிய-அரை நிலவுடைமைச் சமூக அமைப்பும் அதன் ஆதிக்கச் சிந்தனைகளும் இவற்றின் பின்னணியில் இடதுசாரி இயக்கத்தின் சீரழிவும் பாராளுமன்ற அரசியற் சந்தர்ப்பவாதமும் இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தடையாகிய அளவுக்கு முற்போக்கான பெண்ணுரிமை இயக்கமொன்றின் உருவாக்கமும் தடைப்பட்டது.
இலங்கையிற் பல துறைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் சட்டரீதியான சமத்துவம் வென்றெடுக்கப் பட்டுள்ளது. கல்வி, தொழில், சொத்துரிமை போன்றவற்றிலான சமத்துவத்தின் முக்கியம் பெரியதே ஆயினும் ஆணாதிக்கச் சிந்தனை இன்னமும் ஆழமாக வேரூன்றியே உள்ளது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, வாய்ப்புகளினதும் உரிமைகளினதும் மறுப்பு, பிள்ளை வளர்ப்பு முதல் பிற வீட்டு வேலைப்பொறுப்புகளையும் பெண்களே ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் என்பன இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுட் சில, இவற்றுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்று வரும்போது பெண்ணியம் ஒரு பெரிய கேள்வியை எதிர்நோக்குகிறது. பெண்ணுரிமையைப் பிற சமூகப் பிரச்சனை களினின்றும் தொடர்ந்தும் தனிமைப்படுத்திப் பெண்ணுரிமையை வெல்ல இயலுமா?
பெண்ணுரிமையை எவ்விதமான சமூகவிடுதலைப் போராட்டங்களுடன் இணைக்க முடியும் என்ற கேள்விக்கான விடையை உயர்-நடுத்தர வர்க்க நோக்கிற் கண்டவர்கள் மாக்ஸியத்தையும் தொழிலாளி வர்க்க அரசியலையும் தவிர்த்ததில் வியப்பில்லை. அது மட்டுமல்லாமல் பெண்கள் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதமேந்திப் போராடுவதையும் அவர்கள் விரும்பவில்லை. இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை. உதாரணமாகத், தீவிர பெண்ணியவாதிகள் சிலர் சீனாவில் பெண்கள் 1970 அளவிற் கடுமையான கூலி உழைப்பில் ஈடுபடுவது பற்றித் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர். ஆண்களும் அதே அளவு பாடுபடுவதோ அனைவரும் பாடுபடாமல் மக்களின் வாழ்வு உயர முடியாத அங்கு இருந்ததோ இப்பெண்ணியவாதிகட்கு ஒரு பொருட்டல்ல.
ஏனெனில் உடல் உழைப்பு என்பது இவர்களைப் பொறுத்தவரை இழிவானது. சமத்துவமும் சமூகமேம்பாடும் சொகுசான வாழ்க்கை சார்பானவை. எனவே இவர்களது பார்வையில் பெண்விடுதலை என்பது சமூக விடுதலைக்கான எந்தப் போராட்டத்துடனும் தொடர்புடையது பெண்கள் ஆயுதமேந்தித் தேசிய விடுதலைக்காகவோ சாதி ஒடுக்குமுறைக்கெதிராகவோ முதலாளியத்துக்கு எதிராகவோ கூடப் போராடுவது பெண்கள் விடுதலைக்கான உத்தரவாதமல்ல. ஆனால் அதை மட்டுமே முன்வைத்துப் பெண்கள் ஆணாதிக்கம் தவிர்ந்த எதற்கு எதிராகவும் போராடக்கூடாது என விதிப்பது உண்மையிற் சமூக ஒடுக்கு முறையாளர்கட்குத் துணை போகிற காரியமே ஒழிய வேறல்ல.
தேசிய விடுதலை இயக்கங்களுள்ளும் சாதிய எதிர்ப்பு இயக்கங்களுக்கும் பெண்ணுரிமை தொடர்பான சிந்தனைகள் ஆணாதிக்க மரபைக் கேள்விக்கு உள்ளாக்க அதிகம் இடமில்லை. தொழிலாளிவர்க்கப் போராட்டங்களிலும், குறிப்பாகத் தொழிற்சங்க இயக்கச் செயற்பாடுகளில், ஆணாதிக்கச் சிந்தனை இராது என்று யாரும் வாதிட முடியாது. எனினும் போராட்டங்களிற் பங்கு பற்றுவதன் மூலமே பெண்கள் தமது சமத்துவத்தை நிலை நாட்ட முடியுமாகிறது. அத்துடன் விடுதலை இயக்கமொன்றினுள் உள்ள ஆணாதிக்கத்தை அந்த இயக்கத்திற்கு உள்ளிருந்தும் வெளியில் நின்றும் எதிர்த்துப் போராடும் தேவை எப்போதுமே உள்ளது.
“மாக்ஸியம் வர்க்க முரண்பாட்டை முதன்மைப் படுத்துகிறது. எனவே அதற்கு வேறு முரண்பாடுகள் பற்றிய அக்கறையில்லை” என்பது, தேசியவாதிகள் முதல் பெண்ணிய வாதிகள் வரையிலான பலரும் பிரயோகித்து வந்துள்ள கொச்சைப் படுத்தப்பட்ட விளக்கம் மட்டுமன்றி மணமறிந்த பொய்யுமாகும். இது தமது அதிகார வர்க்கச் சார்பை மூடிக்கட்டுவதற்காகச் சிலரால் முன்வைக்கப்பட்டு வந்துள்ள ஒரு வாதமேயாகும். இதே வாதம் தேசிய இன விடுதலை தொடர்பாகத் தேசியவாதிகளாலும் சாதிய எதிர்ப்புத் தொடர்பாக தமிழகத்துத் தலித்தியர்களாலும் (அவர்களைப் போல செய்யும் சிலராலும்) முன்வைக்கப்பட்டு வந்துள்ள வாதங்களினின்றும் அதிகம் வேறுபட்டதல்ல.
இவ்வாறான வாதங்களிற் பல, தனிமனிதர்களின் தவறுகளை மிகைப்படுத்தி ஒரு முழு இயக்கத்தினதும் சிந்தனைப் போக்குடன் குழப்புவன. அதினும் முக்கியமாக, மாக்ஸியத்தக்குத் துரோகம் செய்த சந்தர்ப்பவாத "இடதுசாரி அரசியற் கட்சிகளது நடத்தையை நேர்மையான இடதுசாரிகள் மீதும் மாக்ஸிய லெனினியச் சக்திகள் மீதும் சுமத்துகிறவையாகும்.
இன்னொருபுறம், அரசியலைத் தவிர்த்தும் சமூக மாற்றத்தைத் தவிர்த்தும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்க முயலுகிற அரசுசாரா அமைப்புக்கள் (என்.ஜி.ஓ) மூலம் பிற பாரிய சமூகப் பிரச்சனைகள் போன்று பெண்ணுரிமைப் பிரச்சனையும் கூறு போடப்பட்டு வருகிறது. பெண்ணுரிமைக்கான இயக்கங்கள் வெகுசன இயக்கங்களாகவும் வெகுசன போராட்டத்துக்கான உந்து சக்திகளாகவும் செயற்படாத போது, அவற்றின் செயற்பாடுகள் தேக்கமடைகின்றன. இதன் விளைவாக, அவை, அவற்றிற் சம்பந்தப்பட்டவர்களது சமூகப்பார்வைக்கேற்பவும் நோக்கங்கட்கு அமையவும் இலகுவான வழிகளைத் தேடுகின்றன. இலங்கையின் பல நல்ல சக்திகளது சீரழிவுக்குக் காரணமாகி, யுள்ள என்.ஜி.ஓ பெண்ணிய வாதிகளையும் விட்டுவைக்கவில்லை.
என்.ஜி.ஒ.க்கள் செய்கிற கெடுதல் பல விதங்களில் முக்கியமானது. தனிமனித மட்டத்தில், அரசியல், சமூக உணர்வின் அடிப்படையில் ஒருவர் செய்கிற காரியங்கள் அவர் வாழுகிற சமுதாயத்துக்கு அந்நியமான ஒரு நிறுவன நிதியுதவியில் கூலிக்காகச் செய்யப்படுகின்றன. சாதாரணமாக உழைத்துப் பெறக்கூடிய ஊதியத்திலும் பெரிய தொகைகள் சன்மானமாகக் கிடைப்பதன் விளைவாக, என்.ஜி.ஓ.வையே சார்ந்து வாழும் தேவை நாட்போக்கில் அதிகமாகிறது. என்.ஜி.ஒ.க்களில் தம்மைத் தொடர்புபடுத்திக் கொண்ட பல முன்னாள் இடதுசாரிகளும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் மிகவும் சீரழிந்து அரசியற் செயற்பாட்டை நிராகரித்து என்.ஜி.ஓ. அறப்பணிகள் மட்டுமே சமூகநலனைப் பேண முடியும் என்று வாதிப்பதை நாம் கேட்கலாம்.
இந்தச் சீரழிவை விட, திட்டமிட்ட முறையிலேயே என்.ஜி.ஒ.க்கள் புரட்சிகர அரசியலை மறுதலிப்பதற்கான மாற்றுச் சிந்தனைகளைப் புகுத்துகின்றனர். அவர்களிடம் கை நீட்டிப் பணம் பெறுகிற ஆய்வறிவாளர்களை விட யார் இதை நன்கு செய்ய முடியும்? என்.ஜி.ஓ. ஆதரவு, அரசியல் நிலை தடுமாறுகிற ஒருவருக்கு முதலில் ஒரு ஊன்றுகோல் போல உதவுகிறது. பிறகு அந்த ஊன்றுகோலின்றி நடக்க முடியாதளவுக்கு ஒருவரது சிந்தனை முடமாக்கப்பட்டு விடுகிறது. போதை மருந்துக்குப் பழக்கப்பட்ட ஒருவர் போல என்.ஜி.ஒ.க்கு அடிமையான ஒருவரால் சுதந்திரமாகச் செயற்பட முடியாமற் போகிறது.
என்.ஜி.ஒ.க்களில் பெண்ணுரிமை அமைப்புக்கள் சார்ந்துள்ளவரையும், அவற்றால் பெண்ணிய அரசியலை அடிப்படையான பிற சமூகப் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்திச் செயற்பட முடியாது போய்விடும். அவை வெளியிடும் நூல்களோ அவை நடத்தும் நிகழ்ச்சிகளோ மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களோ ஒரு அலுவலர் தனது பணியைச் செய்கிற தோரணையில் “கடமையைச் செய் (மாதாந்த ஊதியத்தை விட அதிகமாக) பலனை எதிர்பாராதே’ என்ற விதமாகச் சமூக ஈடுபாடின்றி ஈடேறுகின்றன. இந்தவிதமான செயற்பாடு, ஒரு முதலாளியக் கட்சிக்கே ஏற்றதல்ல. சமூக நீதிக்காகச் செயற்பட வேண்டியவர்கள் இப்படியான ஒரு கூலிப் பட்டாளமாக முடங்கிவிடுவதன் மூலம் அவர்களது போராட்ட வலிமை நிர்மூலமாகி விடுகிறது.
நம் முன்னுள்ள பிரச்சனைகளை நாம் தெளிவாக அடையாளங் காணாமல் சமூக நீதிக்காப் போராட முடியாது. மறுபுறம் நம்முடைய மதிப்பீடுகளும் கொள்கைகளும் சரியானவை என்பதால் மட்டும் யாரும் ஒரு வலிய சக்தியாக வளரமுடியாது. மாக்ஸியவாதிகள் பற்றியும் மாக்ஸியம் பற்றியும் திட்டமிட்ட பொய்ப்பிரசாரங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப் படுகின்றன. அவற்றை உடனுக்குடன் திருத்தவும் சரியாயின் கருத்தைத் தெளிவுபடுத்தவும் வேண்டியுள்ளது. தவறான தகவல்களை நம்பி மாக்ஸியத்தையும் மாக்ஸியவாதிகளையும் எதிர்க்கின்ற பெண்ணிய வாதிகட்கும் தமது சுய லாபத்துக்காக வேண்டுமென்றே தகவல்களைத் திரிக்கிறவர்கட்குமிடையே நாம் வேறுபாடு காணவேண்டும்.
மாக்ஸியக் கட்சிக்குத் தொழிற்சங்க அமைப்பைப் போன்ற இளையோர் அணி, மாதர் அணி போன்ற அமைப்புக்கள் தேவை. பெண்ணுரிமைக்கான இயக்கங்களுடனான தொடர்பைப் பேணவும் வளர்க்கவும் இத்தகைய அமைப்புக்கள் அவசியமானவை. இலங்கையின் இடதுசாரி இயக்கம் எழுச்சி பெற்ற காலகட்டத்தில் மாதர் அணி ஆற்றிய பங்கு பெரியது. அதன் மூலமே பெண்களின் உரிமைக்கான பங்களிப்பை இடதுசாரிகளால் செய்யமுடிந்தது.
இன்றும் பெண்ணுரிமைக்காகவும் ஆண்-பெண் சமத்துவ த்திற்காகவும் எழுகிற காத்திரமான குரல்களில் மாக்ஸிய இயக்கங்களைச் சார்ந்த குரல்கள் மிக முக்கியமானவையாகவே உள்ளன. இந்தச் சிந்தனைகளைச் செயற்பாட்டுத்தளத்துக்கு நகர்த்துவதில் மாக்ஸியவாதிகள் இயலுமான ஒவ்வொரு வகையிலும் முனைப்புப் பெற வேண்டும்.
மறுபுறம், உயர் நடுத்தர வகுப்புப் பெண்ணியத்தின் சமூகவிடுதலை உணர்வற்ற போக்கால் நம்பிக்கை இழந்த பெண்ணியவாதிகள் பெண்ணுரிமைப் பிரச்சனையை முழுச் சமுதாய அமைப்பினதும் வர்க்க அடிப்படையுடனும் மனிதரை மனிதர் ஒடுக்குவதை இயலுமாக்குகிற அதன் இயல்புடனும் சேர்த்துப் பார்க்கப் பழக வேண்டும். பெண்ணுரிமைக்கான போராட்டத்தைப் பிற சமூக விடுதலைப் போராட்டங்களுடன் இணைப்பதன் மூலம் ஒவ்வொன்றும் மற்றதை எவ்வாறு வலுப்படுத்த இயலும் என்பதை ஆராய வேண்டும். இவ்விடயத்தில் மாக்ஸியச் சிந்தனையின் செழுமை அவர்கட்கு மிகவும் உதவும்.
எந்த ஒரு சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் தனித்து மேற்கொள்ளப்படும் போது அது போராட்டச் சக்திகளையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்தும் என்பதையும் நியாயமான ஒவ்வொரு போராட்டமும் மற்ற நியாயமான போராட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கின்றன என்ற உண்மையையும் மனதிலிருத்துவது பெண்களின் உரிமைகள் பற்றிய அக்கறையுள்ள அனைவரதும் கவனிப்புக்குரியது.
பெண் விடுதலை வேண்டும்.
க.தணிகாசலம்
பெண்கள் விடுதலைபெற வேண்டும் என்ற குரல் இன்று உலகின் பலபாகங்களிலும் பரவலாக ஒலித்துவருகிறது. சமுதாய நலனிலும், முன்னேற்றத்திலும் அக்கறையுள்ள அரசிய லாளர்கள்,மாதரியக்க முன்னோடிகள் அனைவரும் இன்று இதனை முதன்மைப்படுத்துகின்றனர். புதிய சமுக அமைப்பை உருவாக்கும் நோக்குடன் போராடிக் கொண்டிருக்கும் விடுதலை அமைப்புக்கள் அனைத்தும் பெண் விடுதலையை தமது பிரதான குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டுள்ளன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அங்கொன்றும் இங்கொன்று மாக எழுந்த இவ்விடுதலைக் குரல்கள் சமூகப் புரட்சி நடைபெற்ற நாடுகள் அனைத்திலும் ஓரளவு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. பொருளாதார வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மூன்றாம் உலக நாடுகள் உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் அனைத்திலும் பெண்கள் விழிப்படைவதும், விடுதலையுணர்வு பெறுவதும் மந்த நிலையிலேயே இருந்து வருகின்றது. இன்றைய பொருளாதார வளர்ச்சிப் போக்குகளால் பெண்கள் வாழ்வில் சில புறத்தோற்ற மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனினும் பல்வேறு நிலைகளிலும் பெண் ஒடுக்குமுறையும் அதனால் ஏற்படும் துன்ப துயர்களும் இன்றும் தொடரவே செய்கின்றன.
பெண்கள் உழைப்பில் ஈடுபட்டுப் பொருளிட்டும் இக்காலத்திலும் பெண் குழந்தை பிறக்கும் பொழுதே பெற்றோர் முகம் சுருங்கி விடுகின்றது. எந்தவித உழைப்புப் பெறுமானமும் இன்றி வீட்டு வேலைகளைச் செய்வதுடன், இரட்டைச் சுமையாக சமூக உழைப்பிலும் இன்று பெண்கள் ஈடுபடுகின்றனர். சீதனக் கொடுமையால் தற்கொலை செய்துகொள்பவர்களும், வயதெல்லை கடந்தும் மணமாகாமல் சமூகத்தால் ஒதுக்கப்பட்டுத் தனிமையில் வாடுபவர்களும் இருக்கின்றனர். இன்று மேற்கு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று தொழில் பார்க்கும் ஆண்களுக்கு மணப்பெண்களாகச் செல்வோர் பெற்றோரின் தீர்மானத்துடன் வெறும் நிழற்படங்களை நம்பி மணமகனை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மணப்பெண்கள் தங்களைவிட வயதில் மிகக்குறைந்தவர்களாகவும், வெள்ளைத் தோல் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களது பிரதான எதிர்ப்பார்ப்பாகவும் வளர்ந்து வருகின்றது. ஆணாதிக்க நோக்குடன் ஆண்களால் அடித்துத் துன்புறுத்தப்படும் குடும்பப் பெண்கள் சமூகக் கட்டுக்கோப்புக்களை மீறும் துணிவற்றவர்களாக கண்ணிரும் கம்பலையுமாக வாழும் நிலை இன்றும் நிலவுகின்றது. உயர்கல்வியும், வேலை வாய்ப்புக்களும் கூட இத்துயர்களைப் போக்கவில்லை.
எமது நாட்டின் கிராமப்புறங்களில் விவசாய வேலைகளில் ஈடுபடும் பெண்கள், ஆண்கள் பெறும் கூலியில் அரைப்பங்கிலும் குறைவானதையே பெறுகின்றனர் . நகர் ப் புறங்களில் தொழிற்சாலைகளிலும், வர்த்தக நிலையங்களிலும் குறைந்த சம்பளத்திற்கே வேலைக் கமர்த்தப்படுகின்றனர். தேசிய வருமானத்தில் ஒரு பகுதியை ஈட்டித்தரும் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் பணிபுரியும் பெருந்தொகையான பெண்கள் உயர்ந்த மலைகளில் மிகக் கடுமையாக உழைத்தும் குறைந்த சம்பளத்தையே பெறுகின்றனர்.
அரசின் திறந்த பொருளாதாரக் கொள்கையால் உருவான சுதந்திர வர்த்தக வலையத்தில் பெருந்தொகையான இளம்பெண்கள் தொழிற்சங்க உரிமைகள் எதுவுமற்று கொடுக்கின்ற கூலியைப் பெற்று இரவு பகலாக உழைக்கின்றனர். மத்தியகிழக்கில் பணிபுரியச் செல்லும் பெண்கள் இடையிடையே தற்கொலை செய்துகொள்ளும் நிலைமையே அங்கு அவர் கள் அனுபவிக் குங் கொடுமைகளுக்கு எடுத்துக் காட்டாகும். பாலியல் ரீதியான பாகுபாடுகளும், வன்முறைகளும், யுத்தகாலங்களிலும், இனமதக்கலவரங்களின் போதும் பெண்கள் எதிர்நோக்கும். பெருந்துயராகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
இத்தகைய துயர்நிலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறவேண்டும். இதற்குப் பெண்கள் அறிவியல் ரீதியில் விழிப்படைவதும், ஒருங்கிணைந்து செயற்படுவதும் அவசியமாகும். வரலாற்றுத் தரவுகளை தொகுத்து மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரால் வெளியிடப்பட்ட பெண்ணடிமையின் ஆரம்பம் பற்றிய கருத்துக்கள் பெண் விடுதலைக்கு உரமூட்டுவதாகும். மனிதகுல வரலாற்றின் ஆரம்பகாலத்தில் நிலைப்பெற்றிருந்த தாயுரிமைச் சமுதாயத்தில் பெண் தலைமை பெற்றிருந்தாள். தாயை வைத்தே பிள்ளைகளை அடையாளங் காணும் குழுமணமுறையும், கூட்டுவாழ்க்கையும் அன்று இருந்தது. தமக்கென எதையும் சேர்த்து வைக்க அறியாத, கூடி உழைத்ததை கூடியே உண்டு வாழ்ந்த அப்புராதன பொதுவுடைமைச் சமுதாயம் காலப்போக்கில் தகர்ந்து போனது.
தனியுடமைச் சமுதாயம் உருவானது. ஆண் தனது சொத்துக்குரிய சரியான வாரிசை அடையாளங்காணும் தேவை ஒருதார மணக்குடும்ப முறையை உருவாக்கியது. அன்றிலிருந்து பெண் சமூக உழைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு வீட்டு வேலைக்கு உரியவளாக்கப்பட்டாள். ஏங்கல்ஸ் அவர்களின் கூற்றுப்படி “வரலாற்றில் தோன்றியமுதல் வேலைப்பிரிவினை அதுவானது. முதல் அடிமையும் பெண்ணானாள்’ பிற ஆடவனை நிமிர்ந்து நோக்காத அடக்கமும், கணவனுக்கு அஞ்சி, நாணி ஒடுங்கும் தன்மையும், எதிருரை பேசாத அடிமை சிறுமதியும் பெண்களின் பண்பாக படிப்படியாகப் பேணிவளர்க்கப்பட்டது. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்று நாம் பெருமையுடன் பேசிக்கொள்ளும் பழைய பண்பாட்டு உறவுமுறைகள் தனிமையுடைமை அமைப்பின் வெளிப்பாடாக உலகெங்கும் தோற்றம் பெற்றவையே.
அடிமைகளின் உழைப்பில் உல்லாசமாக வாழ்ந்த ஆளும் வர்க்கம் தம் அனுபவிக்கும் போகப் பொருட்களில் ஒன்றாகவே பெண்களையும் ஆக்கிக்கொண்டது. இயற்கை பாலியல் கவர்ச்சிக்காக பெண்களுக்கு அளித்த உடலழகு அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்குப் போதவில்லை. பொட்டிட்டு, மையிட்டு, பூக்கள்சூடி, பட்டும் சருகையும் சுற்றி, உடலெங்கும் ஆபரணங்கள் மாட்டி, பெண்களை அழகு பார்த்தனர். உடலழகைக் கூட்ட உண்டியைச் சுருக்கியும், இடையை மெலிதாக்க ஒட்டியாணமும், கால்களை சிறுகவைக்க இரும்புக் காலணிகளையும் கூட மாட்டி வைத்து, உணர்வற்ற பாவைகளாக பெண்களை தமது மாளிகைகளில் கொலுவைத்திருந்தனர்.
தமிழ் இலக்கியங்களில் இதன் வெளிப்பாடாக பாடல்கள் பல இருந்தபோதும், கம்பராமாயணத்தில் தசரதன் இறந்தவுடன் தையற் கடலில் கிடந்தானை தைலக் கட்லில் அமிழ்த்துவதாக வரும் கம்பரின் எள்ளல் நடை வெளிப்படும் அடிகளையும், திமிங்கல உடலும், புன்சிறுமதியும், ஒரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்’ என எட்டயபுரத்து அரசரைக் குறிப்பிடும் பிரபுத்துவ அமைப்பின் மீது தனது வெறுப்பைக் கொட்டும் பாரதியின் பாடல் வரிகளையும் நாம் - இங்கு நினைவு கூரலாம்.
கலை என்ற பெயரில் நிர்வாணச் சிலைகளை கோவிற் கோபுரங்களிலும், மண்டபத்துாண்களிலும் செதுக்கி வைத்தனர். மதவாதிகள் தமது மனோநிலைக்கேற்ப மாயப்பிசாசுகளகவும், மறுபுறம் கோயில் தெய்வங்களாகவும் பெண்களை ஆக்கிக் கொண்டனர். அன்றைய புலவர்கள் கூட பிரபுத்துவ வர்க்கத்தின் பெருவெறியைத் தீர்க்க பெண்களின் அங்கங்களை பலவாறாக வர்ணித்துச் சென்றனர். அறநெறி உரைத்த அறிஞர்களும் ஆளும் வர்க்கத்தின் சுகபோகங்களுக்கு எப்படிப் பெண்கள் துணைபோக வேண்டும் என்பதையே பெண்களின் கடமைகளாக வகுத்து வைத்தனர்.
மனுதர்ம சாஸ்திரம் கூட ‘ஒரு பெண் சிறுவயதில் தந்தைக்கும், திருமணமானபின் கணவனுக்கும், முதுமையில் தன் மகனுக்கும் கட்டுப்பட்டவள்’ என்று அடிமை சாசனம் எழுதி வைத்தது.
ஆளும்வர்க்கம் அறிவியல், மத, கலை, கலாசாரங்களுக் கூடாக ஊட்டிய இக்கருத்துக்களை அடிமைத்தனத்திலும், ஏழ்மையிலும் அறியாமையிலும் மூழ்கியிருந்த அன்றைய ஆண்களும், பெண்களும் ஏற்று நடந்தனர். ஆளும்வர்க்கத்தினர் வாழ்ந்த வாழ்வே வாழ்க்கை முறையே அவர்களது வாழ்வுக்கும் இலக்கணமானது.
முதலாளித்துவ சமூக அமைப்புக் கூட பெண்களை ஒடுக்குவதில் தனது பங்கை விட்டுவைக்கவில்லை. பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விளம்பரக் காட்சிப் பொருளாகவும், புத்தக அட்டைகள் முதல் சினிமாப் படங்கள்வரை, பெண்களின் நிர்வாணக் கோலங்களைக் காட்டி பணம் சேர்க்கும் குறுக்கு வழிகளையே கையாள்கிறது. தமிழ்த் திரைப்படங்கள், தொலைக் காட்சி நாடகங்களில் பெரும்பாலானவைகூட கதாநாயகியை வில்லனிடமிருந்து காப்பாற்றும் பழமையான வீரயுகக் காதலையும், பெண்ணடிமையைப் பேணும் பழமைக் கருத்துக்களையுமே பெண்களிடம் மென்மேலும் திணித்து வருகின்றது.
இதனால் அறியா மையும் , Լյ լք 60) ԼD60) եւ եւ Լճ , மூடத்தனங்களையும் ஆண்களைவிட அதிகம் பேணுபவர்கள் பெண்களாகவே இன்றும் உள்ளனர். இவைகளை இவர்கள் மீறமுடியாத சமுதாய விதிகளாகவே கருதுகின்றனர். அடிமைத்தனத்தையும், அடக்குமுறைகளையுமே தமக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதி அன்பு, காதல், தாய்மை, பதிவிரதாதன்மை என்று ஏற்று வாழும் அடிமையுணர்வு இன்றும் இவர்களிடம் தொடர்கிறது. ஆள்பவருக்கும், ஆளப்படுபவருக்கும் இடையே அன்பும், காதலும், தியாகமும் உள்ளது என்பது எவ்வளவு பொய்யானது, ஏமாற்றமானது, சமத்துவமான ஒரு நிலையிலேயே அவை உருவாகி நிலைக்க முடியும்.
பல்லாயிரம் ஆண்டுகாலம் நீடித்து உறுதிபெற்ற ஆணாதிக்கச் சமுதாயம் மனிதகுலம் தாண்டிவந்த பிரபுத்துவ, முதலாளித்துவ ஏகாதிபத்தியக் காலகட்டங்கள் அனைத்திலும் பெருமளவு மாற்றமடையாமல் இன்றும் தொடர்ந்து வருகின்றது. அதனை உறுதிப்படுத்தும் ஒருதார மணமுறையும், தனியுடமைப் பொருளாதாரப் பிடிப்பும் மாற்றமடையவில்லை. அதுபோலவே ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தும் மொழி, மத, கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களும் பெருமளவு மாற்றமடையவில்லை. இவையே பெண்ணடிமை இன்றுவரை நீண்டு தொடரக் காரணமாகிறது.
முதலாளித்துவ அமைப்பின் தொழில்துறை வளர்ச்சியும், சுரண்டல் அமைப்பும் ஒரு ஆணின் உழைப்பில் மட்டும் தங்கிநின்று ஒரு குடும்பம் வாழமுடியாத நிலையை உருவாக்கியபோது பெண்களும் வீட்டுக்கு வெளியே சமூக உழைப்பிலும் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய இரட்டைச் சுமைகளும், ஆணதிகாரமும் அழுத்தியதால் பெண் விடுதலை இயக்கங்கள் பிரிட்டன், அமெரிக்கா போன்ற தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே முதலில் எழுந்தன. இன்று தீவிர பெண்நிலைவாதிகள், மார்க்ஸியப் பெண்நிலைவாதிகள் என்று பல பிரிவாக இவர்கள் வளர்ந்து வருகின்றனர். இதில் தீவிர பெண் நிலை வாதத் தை ஆதரிப் போர் ஆணி களால் முன்னெடுக்கப்படும் சமூகவிடுதலை இயக்கங்களை ஆதரிக்க மறுப்பதுடன், பாலியல் பிறழ்வுகளை ஊக்குவிக்கும் நிலைப் பாட்டைக் கொண்டுள்ளவர்களாகவும், மார்க்ஸியப் பெண்நிலை வாதிகள் தமது தனித்துவத்தைப் பேணுவதுடன் ஆண்களுடன் இணைந்து தமது பொதுப் போராட்டங்களை ஏற்றுக்கொள்வதுடன் புதிய ஒழுக்கமுறைக்கு வழிகோலுபவர் களாகவும் இருந்து வருகின்றனர்.
தவறான பழமைக்கருத்துக்களில் இருந்து முற்றாக விடுபடாத எமது சமூகத்தில் பெண்விடுதலைக்கு எதிரான கருத்துடையவர்களாகவும் இருக்கின்றனர். உயிரியல், உளவியல், உடற்கூற்றுக் காரணங்கள் எதைக்கூறினும் இரத்தமும், சதையும், உடலும், உயிரும், உணர்வும் கொண்ட ஒரு மானிட உயிரி என்ற வகையில் பெண் சுதந்திரமானவள். ஒடுக்கப்படும் பெண்களுக்கு ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடும் உரிமை உண்டு. பெண்கள் தமது விடுதலைக்கு தாமே போராட வேண்டும்.
பெண்விடுதலை என்பது சமூகவிடுதலையின் ஒருபகுதி என்றவகையில் பெண்கள் தமது விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை ஒடுக்கு முறைகளுக்கு எதிரான ஏனைய போராட்டங்களுடனும் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். பகுதியும், முழுமையும் இணையும் இத்தகைய போராட்டங்களினால்தான் முற்றுமுழுதான சமூக விடுதலையை விரைவுபடுத்த முடியும்.
நாம் வாழும் சமூகத்தில் பெண் ஒடுக்குமுறை போன்று பல்வேறு ஒடுக்குமுறைகள் நிலவுகின்றன. ஒரு சமூகத்தின் பொருளாதார அமைப்பு, கல்வி, கலை, கலாசாரம், மத நம்பிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி இயக்குகின்ற அதிகார நிறுவனம் அரசாகும். அந்த வகையில் அதன்கீழ் உள்ள அனைத்து அடக்குமுறைகளுக்கும் அரசே காரணமாகின்றது. முதலாளித்துவ அரசுகள் எங்கும் வசதி படைத்த ஒரு சாராரின் நலன்களைப் பேணுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
மனித வாழ்வைத் தீர்மானிப்பது எண்களோ, ஆண்டவன் தலையில் எழுதிய எழுத்துக்களோ, மாறும் கிரகங்களோ அல்ல. ஒரு நாட்டின் அரசும், அதன் ஆளும்முறையும்தான் என்பதே அனுபவப்பூர்வமான உண்மையாகும். மனிதர்களால் உருவாக்கப பட்ட பணமும், பண்டங்களும், சுதந்திரப் போட்டிச் சந்தைகளும் அவர்களையே அந்நியப்படுத்தி அநாதைகளாக்கி யுள்ளது. அதிஷ்டத்தையும், அமானுட சக்திகளையும் நம்பி வாழும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. அரசை அமைத்தவர் களும், அதனைச் சார்ந்தவர்களும் தம்மை அதிஷ்டசாலிகளாகவும், ஆண்டவனின் ஆசீர்வாதம் பெற்றவர்களாகவும் அன்றிலிருந்து இன்றுவரை கூறிக்கொள்கின்றனர். ஆளப்படுகின்ற மக்கள் பாவிகளாகவும், சமூகத்தில் பின்தங்கியவர்களாகவும் கருதப்படு கின்றனர்.
எனவே மனிதகுல விடுதலைக்கு வழிகாட்டிய மார்க்சியத் தத்துவம், மக்களை ஒடுக்கும் அரசுகளை ஒழித்து, மக்கள் தமக்கான அரசுகளை உருவாக்கும் மார்க்கத்தையே காட்டி நின்றது. அந்த வழியிலே நின்று விடுதலைபெற்ற நாடுகளில் பெண் ஒடுக்குமுறை முற்றுமுழுதாக இல்லாவிட்டாலும் பெருமளவு குறைந்துள்ளது.
மார்க்சியம் வளர்ச்சியடையாத மூடுமந்திரம் அல்ல. அது இயங்கியலை தனது தத்துவ அடிப்படையாகக் கொண்டது. மார்க்சியம் ஒடுக்கப்பட்ட மக்களின் பேராயுதம், வரலாறு என்பது என்றும் ஒருபக்கமானதல்ல, கிழக்கு ஐரோப்பிய நிகழ்வுகள் எவராலும் எதிர்பார்க்கப்படாததுமல்ல. ஒடுக்குபவர்களுக்கும் ஓர் வரலாறும் வளர்ச்சியும் உண்டு. மார்க்சியம் பிறந்தபோதே அதைப் பூதமாகக் கண்டு அஞ்சியவர்கள் அதன் போர்க்குணம் கண்டு மிரண்டிருக் கிறார்கள். நேர்நின்று எதிர்க்க வலுவற்று புறமுதுகிட்டிருக்கிறார்கள். இன்று வரலாற்றின் போக்கைப் புரிந்துகொண்டு மார்க்சியம், வளைந்து கொடுக்கவும் அதனால் நிமிர்ந்து நிற்கவும் கற்றுக் கொண்டுள்ளார்கள். இன்று ஏகாதிபத்திய அரசுகள் பலவகையான பொருளாதாரச் சீர்த்திருத்தங்களைச் செய்ய முன்வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான அரசசார்பற்ற உதவி நிறுவனங்கள் உலகின் பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் கிளைவிட்டுப் பரவியுள்ளன. இதன்மூலம் சிறுசிறு உதவிகளை வழங்கி விட் டு பெருந் தொகையான இலாபங்களைக் கொள்ளையடித்துச் செல்வதுடன், தமது கலாசார சிந்தனைகளை பரப்புவதிலும் இவர்கள் வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக சிறுமுதலாளித்துவ சிந்தனைகள் இன்று உலகெங்கிலும் ஊட்டி வளர்க்கப்படுகின்றது.
முழுமனித குலத்தையுமே ஒடுக்குகின்ற போர்வெறி கொண்ட அவர்கள் பொதுவுடமை அரசுகளையும், பொதுவுடமை அமைப்பை நோக்கிய விடுதலைப் போராட்டங்களையும் பலவீனப்படுத்து வதற்காக தாமும் சில ஒடுக்குமுறைகளுக் கெதிராக போராட்டங்களை வளர்த்தெடுக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு நல்குகின்றனர். மேலைத்தேய அதிதீவிர பெண்நிலைவாத இயக்கங்களையும் இவர்கள் தீயநோக்குடன் ஊக்குவித்து வருகின்றனர். இதனால் ஒடுக்கு முறைகளுக்கெதிரான போராட்டங்கள் தவறானதென்பதல்ல. அவை மக்களின் நலன்களிலிருந்தா, அல்லது ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களிலிருந்தா முன்னெடுக்கப்படுகின்றன என்பதே இங்கு பிரதான கேள்வியாகும். பெண்விடுதலை இயக்கங்கள் முன்னும் இப்பிரச்சினை எழவே செய்கிறது. மார்க்சிய பெண்நிலைவாதிகள் இதில் தெளிவாக உள்ளனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னர் நடந்த பல்வேறு விடுதலைப் போராட்டங்களிலும் பெண்விடுதலைக்கான குரல்கள் எழுந்தன. ருஷ்யப் புரட்சி, சீனப்புரட்சி, இந்திய சுதந்திரப் போராட்டம், கியூபா புரட்சி, கொரியா, வியட்நாம், கம்பூச்சிய மற்றும் தென்னமெரிக்க விடுதலைப் போராட்டங்கள் போன்ற அனைத்திலும் இக்குரல்கள் எழுந்தன. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் பாரதியின் பெண்விடுதலைக்கான அறைகூவல் தமிழர்களின் மத்தியில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் ஒலித்தது. ஆனால் பெண்விடுதலையை உறுதியான கொள்கையாக ஏற்காத இந்தியா போன்ற நாடுகளில் வெறும் போர்கால சமத்துவக் குரலாக அது நலிந்து ஒடுங்கியுள்ளது. போர் என்பது ஆயுதத்தை மட்டுமின்றி மனிதவளத் தேவையையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தவகையில் மக்கள் தொகையில் பாதிப்பேர்களான பெண்களும் ஆயுதம் ஏந்துவது வரலாற்றில் புதியதல்ல.
இன்று உலகெங்கும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்கள் அனைத்திலும் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். எமது நாட்டில் 1966ஆம் ஆண்டில் வடபகுதியில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டங்களிலும், 1971ஆம் ஆண்டில் தென்பகுதியில் ஜே.வி.பி. இயக்க நடவடிக்கைகளிலும் பெண்கள் பங்குகொண்டனர். 1983இல் இருந்து கூர்மை அடைந்துள்ள தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பங்குகொண்டு வருகின்றனர். சமூகத்தில் இன்றும் நிலவும் பெண் ஒடுக்குமுறையின் தூண்டலே பெருந்தொகையான இளம்பெண்கள் இவ்விடுதலை போராட்டங்களில் பங்குபற்றுவதற்கான காரணமாகும்.
பெண்கள் ஆயுதம் ஏந்திப் போர்முனைகளில் நிற்பதோடு மட்டும் நின்றுவிடாமல் பெண்விடுதலையை ஒரு உறுதியான கொள்கையாக ஏற்று செயற்படுவதன் மூலமே ஒரு புதிய சமூக மாறுதலை ஏற்படுத்த தனியுடமை அமைப்பை வரலாற்றில் உருவாக்கி உறுதிப்படுத்தியது ஒருதாரமணக் குடும்பமும் அதன் வழித் தோன்றிய அரசும் எனலாம். இரண்டும் இன்றுவரை தந்தை அதிகாரத்தையும், ஒடுக்குமுறைகளையும் இயல்பாகப் பேணும் நிறுனங்களாகவே உள்ளன. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காரணமான அரசை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றி காலப்போக்கில் உதிர்ந்து மறைந்து போகச்செய்துவிடும் என்ற மார்க்ஸியத்தின் அதி நீண்டகால இலட்சிய நோக்கு பெண்களை ஒடுக்கும் ஒருதார மணக் குடும்பத்தின் அழிவையும் அவ்வாறே சுட்டிக்காட்டுகிறது.
உலகில் எந்தவொரு நிகழ்வும், இயக்கமும் திடீரென நிகழ்வதில்லை. ஒரு இயங்கியல் வளர்ச்சிப் போக்கு எங்கும் வியாபித்திருக்கிறது. அரசின் தோற்றமும், வளர்ச்சியும்ழ உறுதிப்பாடும், உதிர்ந்துபோதலும் இவ் வியங்கியல் வரையறைக்குட்பட்டது. அதுபோன்றே ஒருதாரமணக் குடும்பத்தின் வளர்ச்சியும் மறைவும் அமைந்துள்ளது. ஒரு ஒடுக்கும் அரசுக்கெதிரான போராட்டத்தின் போதே விடுதலை பெற்று உருவாகப் போகும் சுதந்திரமான அரசின் கொள்கை அதிகாரம், ஆட்சிமுறை படிப்படியாக உருவாக்கப்படுகிறது. அதுபோன்றே ஒருதாரமணக் குடும்பத்தின் அழிவின்போதே படிப்படியாக ஒரு புதிய குடும்பத்தின் தன்மைகளும் வளர்ச்சியடைந்து வருகின்றது. அரசியலில் பழைய அரசை அழிப்பதோடு புதிய அரசை உருவாக்கும் நடைமுறையை மறுக்கும் அராஜகவாதம்போல, பெண்விடுதலையில் ஒருதாரமணக் குடும்ப அழிவைமட்டும் வற்புறுத்தும் தீவிர பெண்நிலைவாதத்தை ஆதரிப்போர், ஆடைகளை மாற்றுவது போல் ஜோடிகளை மாற்றவே விரும்புகின்றனர். சுதந்திரம் என்பது பழைய விலங்கு நிலைக்கு நாம் மீள்வதில்லை, மனிதர் தம்மை மென்மேலும் ஒழுங்கமைத்துக் கொள்ளவே சுதந்திரம் வேண்டப்படுகிறது.
இன்றைய சமூகத்தின் சிறிய அலகான குடும்பம் என்ற உறவுமையம் பல நிலைகளில் அதில் உள்ளவர்களுக்குச் சுமையாகப்படுகிறது. பெண்ணடிமையை நிலைநிறுத்தும் ஒரு களமாக குடும்பம் அமைவதால் பெண்நிலைவாதிகளுக்கு அது ஒரு சிறைகூடமாகத் தெரிகிறது. சமூகப் பொறுப்புள்ள ஆண்களுக்கு முதலாளித்துவப் பொருளாதார சிக்கல்களுடன் கூடிய குடும்பப் பொறுப்பு தமது ஆயுளை முடித்து ஆண், பெண் இருவரது ஆளுமைகளையும் அழிக்கும் பொருளியல் பிணைப்பாகப் படுகிறது. எதிலும் பொறுப்பற்று, கட்டற்று வாழவிரும்பும் மேலைத்தேய ஆண்களுக்கும், பெண்களுக்கும் முன்னால் குடும்பம் ஒருதடைச் சுவராக எழுந்து நிற்கின்றது.
பிரபுத்துவ அமைப்பு கட்டிக்காத்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைகளை முதலாளித்துவம் தகர்த்த போதிலும் மேற்கூறிய முரண்பாடுகள் நிறைந்த தனிக் குடும்ப அலகை தனது நலனுக்காகக் கட்டிக்காக்கவும் முற்படுகிறது. பழமைப் பிடிப்பும், பொருளாதாரப் பிணைப்பும் கொண்ட இக்குடும்ப உறவுமுறைகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், உழைக்கும் வர்க்கத்தின் சமூக மாற்றத்திற்கான எழுச்சியையும், பேராற்றலையும் மழுங்கடிக்கவும் உதவும் என்பதை இவ் அரசுகள் உணர்ந்துள்ளன.
இத்தகைய காரணங்களை வைத்து இக்குடும்ப அமைப்பு இல்லாதொழிய வேண்டும், மாற்றத்திற்குட்பட வேண்டும் என்ற இரு வகையான கருத்துக்கள் இன்று பெண்விடுதலையை முன்னெடுப்பவர் களிடம் காணப்படுகின்றது. குடும்பம் என்ற அமைப்பின் தோற்றத்திற்கும், அது நிலைபெற்றிருப்பதற்குமான வரலாற்றுக் காரணிகள் முற்றாக அழியும்வரை குடும்ப அமைப்பு நிலைத்திருக்கும். எனினும் உலகெங்கும் நடந்து வரும் பெண்விடுதலைக்கான சிறுசிறு போராட்டங்களின் பேறாகவும், பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்பவும் குடும்ப அமைப்பில் புதிய மாறுதல்கள் இன்று ஏற்பட்டு வருகின்றன.
முன்பு தாய், தந்தையர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் என்று இருந்த கூட்டுக்குடும்பங்கள் இன்று பொருளாதாரக் காரணங்களினால் சிதைவுற்று கணவனும் மனைவியும் கொண்ட தனிக்குடும்பங்கள் உருவாகின்றன. இதனால் கணவனின் பெற்றோர், உற்றார், உறவினருக்குக் கீழ்ப்படிந்து சேவை செய்யும் நிலையிலிருந்து பெண் விடுதலைபெற்று வருகின்றாள். சோஷலிச நாடுகளில் ஒருபுதிய குடும்ப உறவுமுறைக்கான கருக்கள் வளர்ந்து வருகின்றன. அங்கு குடும்ப திட்டமிட்ட கல்விமுறையும், வயது வந்த பெண்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
இதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வயது வந்த இளம்பெண்கள் பெற்றோரில் தங்கிநிற்கும் நிலைமாறுகின்றது. தனிச் சொத்தின் பெறுமதி அங்கு குறைக்கப்படுவதனால் பெற்றோரின் தலையீடு இன்றியே வாழ்க்கைத் துணைவனைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவள் பெறுகின்றாள். திருமணத்தின் பின்னும் சமூக உழைப்பில் அவள் தொடர்ந்தும் ஈடுபடுவதால் பொருளாதாரக் காரணங்களுக்காகக் கணவனில் தங்கி வாழ்ந்து அவனுக்கு அடிமையாகும் நிலையிலிருந்தும் அவள் விடுபடுகிறாள்.
இணைந்துவாழ முடியாத அளவிற்கு இருவரிடமும் மனமுறிவு ஏற்படும்போது நடுவராக இருந்து இருவருக்கும் மீண்டும் புரிந்து கொள்ளலை ஏற்படுத்தி இணைந்துவாழ வைப்பதற்கு அங்கு குடும்பநல மன்றுகள் உண்டு. முற்றிலும் இணைய முடியாத அளவிற்கு உறவுமுறிவுகள் ஏற்படும்போது பிரிந்து செல்வதற்கான சட்டரீதியான உரிமையும், அதற்கான சமூக அங்கிகாரமும் உண்டு.
இதனால் சமத்துவ அடிப்படையில் உண்மையான அன்பு, காதல் என்ற உறவுப் பிணைப்பில் பெண்களும், ஆண்களும் இணைந்துவாழும் புதிய குடும்ப உறவுக்கான ஆரம்பம் அங்கு நிகழ்கிறது.
அங்கு ஓரிரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பம் என்ற திட்டமிட்ட வாழ்க்கைமுறை பெண்களுக்கு இருந்த பெரும் சுமையைக்குறைக்கின்றது. அரசினாலும், தொழிற்சாலைகளினாலும் நடத்தப்படும் பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், தொழில் பார்க்கும் பெண்களின் வேலைப்பழுவைக் குறைக்கின்றது. சமத்துவ உணர்வு பெற்ற வாழ்க்கைத் துணைவன் வீட்டு வேலைகளிலும் பங்காளியாகின்றான். முதியவர்களானபோது அவர்களைப் பராமரிக்க முதியோர் இல்லங்கள் உண்டு. இதனால் சமூக நலனை நோக்கித் திட்டமிடப்படாத பிரபுத்துவ, முதலாளித்துவ அமைப்புக்களில் அடிமையாக இருந்த பெண் அங்கு விடுதலைபெறக்கூடிய வாய்ப்புக் கிட்டுகிறது.
அரசே அவர்களது நலன்களை உறுதிசெய்வதால் தனியுடமை அமைப்பு காலம் காலமாக வளர்த்துவந்த தன்னல வெறி உணர்வு தளர்வடைகின்றது. பிறர்நலம் பேணும் பொது நோக்கு உருவாகின்றது. ஆன்மீகவாதிகள் கற்பனையில் கண்ட ‘நான்’, ‘எனது' என்ற மமதையும், ஆணாதிக்க உணர்வின் அதியுயர்ந்தபடியான ஆணகம் என்ற பொருள் கொள்ளக்கூடிய ஆணவம்’ என்ற அகந்தையும் அழிந்த மனிதன் அங்கு உருவாகின்றான். ‘நாம்”, “எமது' என்ற சமூக உணர்வோடு, தனக்குள் உலகையும், உலகினுள் தன்னையும் காணும் புதிய மனிதன் உருவாகின்றான். பெண்களை மட்டுமல்ல இனம், மொழி, மதம், சாதி, நிறம், நாடு, தேசம் என்ற எல்லைகளைக் கடந்து மனிதரை மனிதர் நேசிக்கும் மானுடத்தின் உயர் பண்பு மலர்வதற்கான சமூகச்சூழல் இங்கு உருவாகின்றது.
பல்லாயிரம் ஆண்டுகாலம் நாம் அமிழ்ந்து கிடந்த சேற்றுக்குள் இன்றும் இருந்துகொண்டு சிந்திக்கும்போது இவைகள் கனவுகளாகலாம். இன்றைய கணனியுகத்தில் மனிதப்பதிலி களையும், பரிசோதனைக்குழாய்க் குழந்தைகளையும் உருவாக்கி விட்ட காலம் இது. மனிதகுலம் வளர்ந்து வருகின்றது, வரலாற்றில் என்றுமே இல்லாத அளவிற்கு மக்கள் சுதந்திரத்தை உணர்ந்து வருகிறார்கள், ஒடுக்குமுறைகளை இனம் காணுகிறார்கள், விழிப்படைகிறார்கள், அது வர்க்க விடுதலை, தேசிய இன விடுதலை, தேச விடுதலை என்ற பலமுனைகளில் இன்று வெளிப்படுகின்றது. இவைகளில் பெண்களின் பங்கும் இணைவதால் பெண்விடுதலையும் இவைகளால் உந்தித் தள்ளப்படுகின்றது. வளரும் இவ்விடுதலை உணர்வுகள் மக்கள் நலன் சார்ந்திருந்தால் வரலாறு முன்னே பாயும், ஏகாதிபத்தியங்களின் வழிகாட்டலுக்கு ட்பட்டால் சிறிது வேகம் தணியும், ஆனால் வரலாறு என்றும் முன்னோக்கியே செல்லும்.
பெண்விடுதலையும், சமுகவிடுதலையும் ஒன்றை ஒன்று சார்ந்து நிற்பவை. பல்லாயிரமாண்டின் பழைய சிந்தனையின் வெளிப்பாடான பெண் ஒடுக்குமுறை ஒரு சமூகப்புரட்சியினாலும் அதைத் தொடர்ந்த பல பண்பாட்டுப் புரட்சிகள் மூலமே முற்றுமுழுதாக ஒழிக்கப்பட முடியும். அதுபோன்றே மக்கள் தொகையில் பாதிப்பேர்களான பெண்களின் விழிப்புணர்வும் பங்குபற்றுதலுமன்றி அனைத்து ஒடுக்குமுறைகளையும் தகர்க்கும் சமூகப்புரட்சி சாத்தியமாகாது. எமது நாட்டின் சமூகத்தின் அடிப்பட்ை அலகான குடும்பங்கள் சுதந்திரத்தின் அடிப்படையில் உருவாகும்போதே ஏனைய சுதந்திரங்களும் நின்று நிலைக்கும். எனவே ஒருவரது சுதந்திரத்தை ஒருவர் மதித்து ஒன்றுபட வேண்டும். பெண்விடுதலையை வென்றெடுக்க வேண்டும்.
-சமகால சமூகப்பார்வைகள்
நன்றி
தனியுடமைப் பொருளாதார அமைப்பின் தோற்றத்தோடு உருவாகிய பெண்ணடிமை முறையை பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைநிறுத்திப் பாதுகாக்க உதவிவரும் பொருளாதார கலாசார நடைமுறைகளுள் சீதனமுறையும் ஒன்று, சமுதாய உழைப்பிலிருந்து பெண்கள் பிரிக்கப்பட்டு சொத்துக்களோடு சொத்துக்களாக-போகப்பொருட்களாக-வீட்டு அடிமைகளாக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ அமைப்பில் இது பெரு வழக்காகியது. அதிகாரத்தை இழந்த பெண்ணுக்கு புகுந்த இடத்தில் சிறு அந்தஸ்த்தை, கெளரவத்தைப் பெற்றுக்கொடுக்கும் முறையாக இது பரிணமித்தது.
அன்று சமயச் சடங்குகளிலும், திருமண வைபவங்களிலும் கோதானம், பூதானம் என்று பல்வேறு தானங்களையும் செய்தவர்கள், அவ் அட்றிணைப் பொருட்களோடு ஒன்றாகப் பெண்களைக்கருதி கன்னிதானம் செய்யும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள். இன்றுவரை அவை சடங்குகளாக எம்மிடையே நிலவிவருகின்றன. பெண்களைப் பரிவர்த்தனைப் பொருட்களாகக் கருதும் இத்தகைய நடைமுறைகள் காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்ப பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தன. பெண்களின் பெற்றோருக்கு வெகுமதிகள் கொடுத்து பெண்களை வாங்கும் வழக்கமும் உலகின் பல்வேறு இனக்குழுக்களிடையே நிலவியது போன்றே எம்மிடையே சில பிரிவினரிடம் நிலவி வந்தது. இளங்கோவடிகளின் சிலப் பதிகாரத்தில் இத்தகைய இருவழக்குகளும் வெவ்வேறு வடிவத்தில் அருகருகே இருக்கக் காண்கிறோம். பெரும் சீதனத்தோடு கண்ணகியை மணமுடித்த கோவலன், வெகுமதி கொடுத்தே மாதவியைப் பெற்றுக் கொள்கிறான்.
நிலவுடமையாளர்கள் பொன்னையும், மண்ணையும், பொருளையும் மட்டுமல்ல, அவர்களின் கீழ் இருந்த அடிமை குடிமைகளையும் அன்று சீதனமாகக் கொடுத்தார்கள். இந்த நூற்றாண்டின் தொடக்க காலம்வரை இத்தகைய கொடியமுறை இந்த மண்ணில் நிலவிவந்ததற்கான சான்றாதாரங்கள் நிறைய உள்ளன.
இந்த சீதனமுறை ஆரம்பத்தில் எண்ணிக்கையில் மிகக் குறைந்த ஆளும் வர்க்கத்தினரால் மட்டுமே பேணப்பட்டு வந்தது. மிகப்பெரும் எண்ணிக்கையைக் கொண்ட உழைக்கும் மக்கள் மத்தியில் இம்முறை பின்பற்றப்படவில்லை. காரணம் உரிமையற்று அடிமைகளாக இருந்த அவர்களிடம் சொத்துக்கள் இருக்கவில்லை. சந்ததி சந்ததியாக அவர்கள் உழைத்தும், அவர்களுக்கு நிலங்கள் சொந்தமாக இருக்கவில்லை. இந்தியாவில் எங்கோ இருந்த சிதம்பரம் ஆலயத்துக்குக்கூட ஏக்கர் கணக்கான நிலங்களை எழுதிவைத்த நிலவுடமையாளர்கள் இந்த மண்ணை உழுது வாழ்வு தந்த உழைப்பாளி மக்களுக்கு அவர்கள் குந்தியிருந்த நிலங்களைக்கூட சொந்தமாகக் கொடுக்கவில்லை. இதனால் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்த மக்களால் அண்மைக் காலம்வரை இச்சீதனமுறை பின்பற்றப்படவில்லை.
ஒரு இனத்தின் பண்பாடு, கலாசாரம் என்பது சாரம்சத்தில் அதன் ஆளும் வர்க்கத்தின் மேலாண்மைக்குரிய பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்து வருகின்றது. இவற்றை நாம் இருவகையாக அடையாளம் காணமுடியும். மனித சமூகம் தன் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் பெற்ற அனுபவங்கள், வாழ்க்கையின் உயரிய விழுமியங்கள், நாகரீகக் கூறுகளை ஒரு புறமாகவும், பலபேர் உழைப்பில் சிலபேர் வாழும் ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பை சிதைந்து போகாமல் பேணிக்காக்க உதவும், பொருளாதார ஒடுக்குமுறை அம்சங்களை உள்ளடக்கிய பண்பாட்டுக் கூறுகளை வேறாகவும் கொள்ள முடியும். சாதி, சமயசடங்குகள், சம்பிரதாயங்கள், பண்பாட்டுக் கூறுகளை வேறாகவும் கொள்ள முடியும். சாதி, சமயசடங்குகள், சம்பிரதாயங்கள், பண்பாட்டு மரபுகள் ஒவ்வொன்றின் பின்னாலும் சமத்துவமற்ற நிலையும், பொருளாதாரக் காரணிகளோடு பின்னிப் பிணைந்த ஒடுக்குமுறை வடிவங்களும் தொடர்ந்து வருவதை நாம் அவதானிக்கலாம். இவை சாதீயம், பெண்ணடிமை, சீதனமுறை என்பவற்றில் மிகவும் கூர்மையாகவே வெளிப்படுகிறது.
இதன் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் ஆளும் வர்க்க கலாச்சார நடைமுறைகளை உயர்வாக எண்ணி விமர்சனம் ஏதுமின்றி அதன் ஒடுக்குமுறை அம்சங்களை விலக்கிக் கொள்ளாமல் அப்படியே பின்பற்றி வாழும் ஒருபோக்கு என்றும் இருந்து வருகிறது. இத்தகைய குருட்டுத்தனமான பின்பற்றலுடன் கூடிய படிமுறை வளர்ச்சிப்போக்கே பல்வேறு அடிமைத்தனங்களும் எதிர்ப்பின்றி காலம்காலமாக வேரூன்றி இருப்பதற்கு காரணமாகிறது.
ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருந்த மக்களே சிறிது வாய்ப்பும், வசதியும் பெற்றபின் மற்றவர்களை ஒடுக்கும் மனப்பான்மை உடையவர்களாக மாறுகின்றனர். அதுபோன்ற ஒருகாலத்தில் பொருளாதாரக் குறுக்கீடின்றி, சீதன முறையைப் பின்பற்றாமல் தமது திருமணங்களை முடித்த உழைப்பாளி மக்கள், மத்தியதர வர்க்க உணர்வு நிலைக்குத் தள்ளப்பட்டதும் சீதனவிலங்கை தமக்குத் தாமே மாட்டிக்கொண்டு துயர்படுகின்றனர்.
இத்தகைய கலாசார ரீதியான ஒடுக்குமுறைகள் ஒப்பீட்டளவில் நேரடியான ஆயுத பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒடுக்குமுறைகளைவிட பன்மடங்கு பலம் வாய்ந்ததாகும். மூன்றாம் உலகநாடுகளில் குறிப்பாக ஆசியப் பெண்கள் மத்தியில் ஆணாதிக்க, பொருளியல் அடக்குமுறை அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார நடைமுறைகளை பொன்விலங்காக ஏற்று சகித்து வாழும் நிலை இன்றும் தொடர்கிறது. மனுநீதிமுதல் இன்றைய தமிழ் சினிமாவரை இலக்கியங்களும், மதக்கருத்துக்களும், சடங்கு முறைகளும் இவர்களுக்கு இவற்றையே தொடர்ந்தும் போதித்து பயிற்றுவித்து வருகின்றன. பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் தனியுடமை அமைப்பின் பொருளாதார நலன்களோடு பின்னிப் பிணைந்து கிடக்கும் சீதனமுறை போன்ற பல்வேறு ஒடுக்குமுறை வடிவங்களை சமுதாயத்திலிருந்து இல்லாதொழிப்பதற்கு மக்கள் மத்தியில் ஓர் புதிய கலாசார விழிப்புணர்ச்சி ஏற்படவேண்டும்.
பெண் ஒடுக்குமுறையின் பல்வேறு வடிவங்களுள் சீதனமுறை ஒன்றே பெண்களை மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களையும், உடன்பிறந்தவர்களையும் குறிப்பாக ஆண்களையும் பாதித்து வருகின்றது. மணவயதை எட்டியும் மணமாகாதிருக்கும் பெண்களைப் போலவே உடன்பிறந்த சகோதரிகளின் சீதனத்துக்காக மணமாகாது உழைக்கும் ஆண்களும் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். எனவே இதற்கு எதிராக ஏற்படும் விழிப்புணர்வு பெண்ணடிமை முறையின் ஏனைய வடிவங்களுக்கும் எதிரான முழுச் சமூகத்தின் எதிர்ப்பாகவும், சமூகத்தில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சமுதாய மாற்றத்திற்கான விழிப்புணர்வாகவும் பரிணமிக்கிறது.
இன்றைய வரலாற்று வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்டுவரும் பொருளாதார, கலாசார மாற்றங்களோடு இச் சீதனமுறையும் தொற்றுநோய் போலப் பரவி முழுச் சமுதாயத்தையுமே ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளுகின்றது. திறந்த பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்டுவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், “பொருளாதார அகதி வாழ்வும் எமது மக்களில் ஒரு பகுதியினரின் வர்க்க நிலைமைகளில் மாற்றங்களைச் செய்து வருகின்றன. பின்தங்கிய கிராமங்கள்வரை இறுகிக் கிடந்த வர்க்கத்தட்டுக்களை கருத்தியல் ரீதியாகவாவது அடித்து நொருக்குகின்றன. இதனால் பெரும்பாலான தொழிலாள விவசாயிகளின் வாழ்க்கை நிலை உயராவிடினும், தாமும் வெளிநாடு சென்று வந்தால் தமது வாழ்க்கைநிலை உயர்ந்துவிடும் என்று கருதுகின்றனர். உழைப்பின்மீது இருந்துவந்த பிடிப்பு தளர்வடைந்து உடலை வருத்தாமல் பொருளைச் சேர்க்க எண்ணும் மத்தியதர வர்க்க உணர்வு-சிறுமுதலாளித்துவ மனப்பாங்கு பெரும்பாலானவர்களிடம் வளர்ந்து வருகிறது.
இத்தகைய ஒரு சூழலில் சீதனமுறையை தமது பொருளாதாரநிலையை உயர்த்த உதவும் ஏணிப்படியாக இவர்கள் கருதுகின்றனர். பொருளாதார வளர்ச்சி என்பது எப்பொழுதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. அதற்குப் பெண்களையும், அவர்களது பெற்றோர்களையும், உடன்பிறந்தவர்களையும் ஏணிப்படிகளாக மிதிக்கும் இச்சீதனமுறை தொடரவேண்டுமா? குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கும், கொள்ளை லாபம் ஈட்டுவதற்கும், அடுத்தவன் உழைப்பைச் சுரண்டி வாழ்வதற்கும் இதற்கும் வேறுபாடு என்ன? இச்சீதனமுறைக்கு சமூகம் வழங்கும் அங்கீகாரம் சமூகத்தில் நிலவும் ஏனைய ஊழல்களுக்கும் உற்சாகம் தருவதில்லையா? இதுபோன்ற கேள்விகள் இன்று இளம் சந்ததியினர் மத்தியில் பரவலாக எழுகின்றன.
சீதனமுறையால் எமது சமூகத்தில் பொருளாதாரப் பாதிப்பு மட்டும் ஏற்படவில்லை. முதலாளித்துவ போட்டிச் சந்தையில் மனிதன் படைத்த பணத்திற்கு மனிதனே விலைபோகும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது. அவனால் படைக்கப்பட்ட பணம் அவனையே அளக்கும் அளவுகோலாக இங்கு மாற்றமடைகின்றது.
தனது மகளின் குடுமியைப் பிடித்து அதிகாரம் செலுத்தும் மணமகனை, தாம் விலை கொடுத்து வாங்கிவிட்டதாகக்கூறி ஆறுதல் அடைகிறாள் ஒரு தாய். சுண்டங்காயைக்கூடச் சந்தையில் விற்றுப்பணம் பெறுகிறோம். பெண்களைப் பொன்னோடும், பொருளோடும் சேர்த்தல்லவா கரைசேர்க்க வேண்டியுள்ளது என்று அங்கலாய்க்கிறார் ஒரு தந்தை. திருமணச் சந்தையில் மனிதத்துவத்திற்கு ஏற்படும் மதிப்பிறக்கங்கள் இவை.
இவை போன்ற பல்வேறு சமூகத் தாக்கங்களை விளைவிக்கும் சீதனமுறையை பழகிப்போய்விட்ட ஒரு மரபாக, இறுகிவிட்ட ஒரு பொருளியல் பரிமாற்ற முறையாக மட்டும் நோக்க முடியாது. பெண்ணடிமை முறையைத் தொடர்ந்து பேண உதவும் வலுவான பொருளாதாரக் காரணிகளில் ஒன்று என்பதற்காகவே சீதனமுறை ஒழிக்கப்பட வேண்டும்.
மேலாதிக்க சக்திகள் தமது ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து பேணுவதற்கு இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளை சாதகமாக்கிக் கொள்வது போலவே பெண் ஒடுக்குமுறைக்கும் அது பயன்படுத்தப்படுகிறது. பெண்பிள்ளை, களைச் சமுதாயச் சுமையாகக் கருதி, கொன்று புதைத்த சமுதாயம், இன்று கருச்சோதனை மூலம் பெண்சிசுக்களை கருவிலேயே அழித்துவருகிறது. ஆண், பெண் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் இக்கொடிய நிலை சீதனமுறை பேணப்படுவதால் மேலும் வளர்ச்சியடைய உதவுவதாகவே அமையும்.
சீதனமுறையைப் பேண விரும்புவோர் ஒரு புதிய குடும்பத்தின் பொருளாதார அடித்தளமாக பெற்றோரால் விரும்பி அளிக்கப்படும் அன்பளிப்பாக இதனைக் கொள்ள முனைகின்றனர். இருபகுதிப் பெற்றோரும் இணைந்து அந்த அடித்தளத்தை இடுவதை விடுத்து, பெண்ணின் பெற்றோர்கள் மட்டுமே இதனைச் செய்ய வேண்டும் என்பது ஆணாதிக்க சமூகத்தின் அப்பட்டமான ஒரு நடைமுறையாகும்.
பிள்ளைகளின் நல் வாழ் விற்கு சீதனம் என்பது நடைமுறையில் பொய்க்கூற்றாகவே உள்ளது.
உழைப்பாளி, உத்தியோகத்தர், வர்த்தகர் என்ற வேறுபாடுகளுக்கு ஏற்ப, ஏற்ற இறக்கமான விலைப்பட்டியல் இவற்றிலும் உண்டு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஏற்ற இறக்கத்திற்கேற்ப சீதனம் வழங்கும் வழமையும் எம்மிடம் இருந்து வருகின்றது) இங்கு “உள்ளவன் எவனோ அவனுக்கு மேலும் கொடுக்கப்படும், இல்லாதவன் எவனோ அவனிடம் உள்ளதும் எடுக்கப்படும்’ என்ற கூற்றைப்போல், வசதி பெற்றவர் மேலும் வசதியுடன் வாழவே இதனால் வழி செய்யப்படுகிறது. பிள்ளைகளின் நல்வாழ்வு என்பதைவிட போலி அந்தஸ்தையும், கெளரவத்தையும் வளர்த்துக் கொள்ளவே இச்சீதனமுறை பயன்படுகிறது.
உயரிய மனிதப் பண்புகளுக்கு மதிப்பளித்து அவைகளை வளர்ப்பதற்குப் பதிலாக போலித்தனமான பணவழிபாட்டு முறையையே இதுமென்மேலும் ஊக்குவிக்கின்றது.
படித்தவர்களிடையே குறிப்பாகப் படித்த பெண்கள் மத்தியிலேயே இப் பழமைவாதக் கருத்துக்களுக்கெதிரான உணர்வுகள் இன்றும் அதிகம் எழவில்லை. படித்துத் தொழில் பார்க்கும் பெண்களிடமிருந்தும், சீதனத்தை அதிகம் எதிர்பார்க்கும் நிலையும் எமது சமூகத்தில் உண்டு. எனவே, சீதனமுறைக் கெதிரான பெண்கள் இயக்கம் முன்னெடுக்கப்படாமல் வெறும், கல்வியும், பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் இதனை ஒழித்து விடாது.
பெண்கள் மேலும் விழிப்படைய வேண்டும் என்பது உண்மையே, ஆனால் பெண் ஒடுக்குமுறையைப் பேணும் ஆணாதிக்கக் கலாசார நடைமுறைகளை இறுகப் பற்றிக்கொண்டே பெண்கள் விழிப்படையவில்லை என்பது சரியாகுமா? விழிப்படைந்த ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் தேசியஇன ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தவும், தம்மை அர்ப்பணிக்கவும் முன்வந்தமை பெண் ஒடுக்குமுறைகளுக்கெதிரான பெரும் எழுச்சி அல்லவா? சமுதாயத்தில் ஊறிக்கிடக்கும் பழமைக் கருத்துக்களும், பிடிப்புக்களும் இயல்பாகவே ஆட்டங்காணும் நீணட போர்காலச் சூழலில் ஏற்படாத இச் சமுதாய விழிப்புணர்ச்சி சமாதான காலங்களில் ஏற்பட வாய்ப்புண்டா?
பெண் விடுதலைபற்றி அதிதீவிரவாத கருத்துக்களைக் கொண்டவர்கள், தனிமனிதவாத நிலைப்பாட்டிலிருந்து நோக்கி குடும்பம் எனும் சிறைக்குள் செல்ல நடத்தும் பேரமாக இதனை கருதி, சீதன ஒழிப்பை முதன்மைப்படுத்தாமல் விடுகின்றனர். பல்வேறுபட்ட கலாசார விலங்குகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஆசியப் பெண்களைப் பொறுத்தவரை சீதனமுறைக்கெதிரான உணர்வை வலுப்படுத்துவதன் மூலம் பெண்களின் விடுதலையை மேலும் முன்னெடுக்க முடியும்.
சீதனமுறை சமூகத்தில் ஊறிப் பழகிவிட்ட ஒரு நடைமுறை, இதனை ஒழிக்க முடியாது."மனமாற்றம்’, ‘பொருளாதார வளர்ச்சி’, ‘சமுதாய மாற்றம்’ இவைகளின் பின்தான் இது சாத்தியமாகும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்கள் எமது சமூகத்தில் நிலவிவருகின்றன.
எமது சமுதாயம் ஒருமுகப்பட்ட நிலையில் இன்று இல்லை. பல்வேறு வர்க்கங்கள், வாழ்க்கை நிலைகள், சிந்தனைகள், தேவைகள் இணைந்த ஒன்றாகவே உள்ளது. இவர்களிடையேயும் ஒடுக்குபவர்களும், ஒடுக்கப்படுபவர்களும் உள்ளனர். எந்த ஒரு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலும் ஒடுக்குமுறைக்கு உட்பட்டவர்களும் அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதை வாழ்க்கையின் தேவையாக வரித்துக் கொண்டவர்களுமே முன்னணியில் நிற்பர். பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலும் இதுவே உண்மையாகும். இவர்களிடம்தான் சீதனமுறை ஒழிக்கப்பட வேண்டுமா? இல்லையா என்பதை நாம் கேட்க வேண்டும்.
சீதனமுறையைப் பேண விரும்புகிறவர்களும், அதனால் பாதிப்படையாதவர்களும் சமூகத்தின் மனமாற்றத்தைப் பற்றியே உரக்கப் பேசுவர், இவர்கள் கூறுவதுபோல, தானாகவோ, அல்லது பிரசாரத்தால் மட்டுமோ மனமாற்றம் ஏற்படுவதில்லை. போராட்டத்துக்கூடாகவே பெரும்பாலான மக்களின் மனங்கள் மாற்றமடைவதை வரலாற்று அனுபவங்கள் கூறுகின்றன.
அனைவருக்கும் சுதந்திரமும், சுபீட்சமும், நல்வாழ்வும் தரவல்ல ஒர் அடிப்படைச் சமுதாய மாற்றத்திற்கான போராட்டமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் அத்தகைய மாற்றத்திற்கான போராட்டம் சடுதியாக ஏற்படுவதில்லை. இன்று நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு போராட்டமும் அதனை நோக்கிய நகர்வாகவே இருந்து வருகிறது. அத்தகைய போராட்டத்திற்கும் சரிபாதித் தொகையான பெண்களின் ஒடுக்குமுறைகளுக்கெதிரான விழிப்புணர்வு முன்நிபந்தனையாகின்றது.
சீதனமுறை என்பது தனியுடமை அமைப்புக்கு உட்பட்ட ஒரு சொத்துப் பரிமாற்றமே, இதனை ஒழிப்பதற்கு தனியுடமை ஒழிக்கப்படும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டத்தால் இதனைப் பூரணமாக ஒழிக்க முடியாவிட்டாலும் அதன் பாதகமான அம்சங்களை இல்லாமல் செய்ய முடியும்.
சுரண்டல், கைலஞ்சம், கறுப்புச் சந்தை, கொடுவட்டி, கொள்ளைலாபம், கொலை, களவு, பாலியல் வன்முறை இவற்றை யெல்லாம் சட்டத்தால் முற்றாக ஒழித்துவிட முடியாது என்பது உண்மை. அதற்காகச் சட்டங்கள் இயற்றப்படாதிருந்திருந்தால் எமது சமூகத்தின் இன்றைய நிலை என்னவாயிருக்கும்? அதுபோல பெண் ஒடுக்குமுறையைப் பேண உதவும் சீதனமுறையை ஒழிப்பதற்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
சட்டம் என்பது அதனை மீறுவோருக்கு எதிரான தண்டனையைத் தீர்மானிப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. தவறான நடத்தைக் கு எதிரான, அல்லது உரிமையை உறுதிப்படுத்தும் வலுவான ஒரு பிரச்சாரமாகவும் அமைகிறது. அது ஏற்று நடப்பவர்களுக்கு ஒழுக்கத்தைப் பேண உதவும் ஊக்கியாகவும், மீளமுயல்வோருக்கு தவறுகளைச் சுட்டிக்காட்டும் மன உறுத்தலாகவும் அமைகிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற சட்டங்கள் தோல்வியடைந்ததை உதாரணமாகக் கொண்டு சட்டத்தின் அவசியத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
இதற்கு அறுபதுகளின் நடுப்பகுதியில் இங்கு நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான வெகுஜன இயக்கப் போராட்டத்தின் அனுபவங்கள் உதவிகரமானதாகும். 1957ல் இயற்றப்பட்ட தீண்டாமைக்கு எதிரான தடைச்சட்டம் இயற்றப்பட்டபோது சமூகத்தில் எந்தவித மாறுதலையும் அது ஏற்படுத்தாதபோதும் 1966ற்குப் பின்னர் நடந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டத்தில் அதன் நியாயத்தன்மையை சட்டரீதியாக உறுதிப்படுத்தியதில் அச்சட்டம் உதவியாக அமைந்தது.
அதுபோன்றே சீதனமுறையை வலுப் படுத்திவரும் தேசவழமைச் சட்டத்தையே சாதி ஒடுக்குமுறையை நியாயப் படுத்தியவர்கள் அன்று தமக்குச் சாதகமாக முன்வைத்தனர். எனவே சீதன முறைக்கெதிரான சட்டம் இயற்றப்படுவதுடன் அதனை அமுல் நடத்துவதற்கான பெண்கள் இயக்கங்கள் நாடு முழுவதும் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
தேசவழமை என்ற பெயரில் காலனித்துவவாதிகள் தமது கால்களை இந்த மண்ணில் இறுகப்பதிக்க இயற்றிய சட்டங்களை சாட்டாக வைத்து நாம் எமது வாழ்வை மேலும் சுமையாக்க முடியாது. பெண் அடிமை முறையையும், ஆண், பெண் சமத்துவ மின்மையையும் சாதி, சமய வழக்காறுகளையும் பேணும் தேசவழமைச் சட்டத்தின் தவறான பகுதிகள் விலக்கப்பட வேண்டும். பெற்றோரின் சொத்துக்கள் பிள்ளைகள் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்போது, அங்கு ஏற்றத்தாழ்வுகள் நிலவ இடமிருக்காது. பெற்றோரிடமிருந்து இருவருக்கும் பங்கு கிடைப்பதால் இல்லறத்தில் இணையும்போது ஏற்படும் உறவு பொருளாதார உறவாக இல்லாமல் அன்பும், பண்பும், அறிவும் அதற்கு அடிப்படையாக அமையும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
பெண் ஒடுக்குமுறைக்கெதிராக சட்டத்தால் பாதுகாப்பு அளிக்கப்பட்டாலும் ஆணும், பெண்ணும் மணவாழ்க்கையில் சமத்துவமாக இணையும் இப்புதிய கலாசார வாழ்வை சட்டத்தால் கொண்டுவர முடியாது. இத்தகைய வாழ்வை சட்டத்தைத் துணையாகக் கொண்டு கருத்து மாற்றத்தை ஏற்படுத்த பத்திரிகைகள், வானொலிகள் போன்ற பிரச்சார சாதனங்களின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய திருமணங்களைச் செய்பவர்களை சமூகம் வாழ்த்தி வரவேற்பதுடன், அவர்களது நல் வாழ்விற்கான அடிப்படைத் தேவைகளிலும் சமூகமும், அரசும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
மாற்றப்பட முடியாதவை என்று எமது சமூகம் கருதிய பல்வேறு நடைமுறைகள் எமது கண்களின் முன்னால் மாற்றமடைந்துள்ளன. பெண்கள் தம் விழிப்புணர்வை மேலும் வளர்ப்பதுடன், மானிடநேயம் கொண்ட ஒரு புதிய சமுதாய மாறுதலை விரும்புகின்ற கல்வியாளர்கள், கலை இலக்கியத் துறையினர் அனைவரும் இச் சீதனமுறையை ஒழிப்பதில் துணை நின்றால் மக்களின் ஒத்துழைப்புடன் பெண் ஒடுக்குமுறையின் பொருளியல் வடிவங்களில் ஒன்றான சீதனத்தை இல்லாமல் ஒழிக்க முடியும்.
நமது தமிழ்ச்சூழலில் பெண்களின் விடுதலை பற்றிய சிந்தனையும் செயற்பாடுகளும் மிகத் தாழ்ந்த நிலையிலேயே இருந்து வருகின்றன. எழுபதுகளுக்குப் பின் மாக்ஸிசம் சோசலிசம் உலக அளவில் ஒரு தற்காலிகப் பின்னடைவைச் சந்தித்துக் கொண்ட பின் அதன் தாக்கம் பெண்களது இயக்கப் போக்கிலும் தளர்வை ஏற்படுத்தியது.
மேலும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் வருகையோடும், தமிழ்த் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியோடும் பெண்களின் அமைப்பு ரீதியிலான செயற்பாடுகள் முற்றிலும் செயலிழந்து போயின. அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவையாகி பெண்களின் பிரச்சினைகளைத் தனித்தனிக் கூறுகளாக்கி அவற்றுக்கும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கும் தொடர்பற்றவையாக்கிக் காண்பித்தன. அத்துடன் பெண் விடுதலைக்கான பாதை பற்றிய தெளிவான சிந்தனைகளை முன்வைக்காது ஒற்றைப் பரிமாண நிலை நின்று அடிப்படைப் பிரச்சினைகளை அடையாளம் காணத் தவறின. அத்துடன் மாக்சியத்தின் மீதான பல்வகைக் கணைகளையும் இந்த அரச சார்பற்ற பெண்ணிய அமைப்புகள் தொடுத்தன.
மேற்படி நிலை அரச சார்பற்ற நிறுவனங்களின் நோக்கிற்கும் போக்கிற்கும் தேவையானதாகும். மேற்குலக நிதி வழங்குவோர் மூலம் இயக்கப்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தொண்டின் உள்ளார்ந்த அடிப்படை வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் சகல அமைப்புகளையும் வேரறுத்துக் கொள்வதேயாகும். அதன் காரணமாகவே பல பெண்ணிய அரச சார்பற்ற நிறுவனங்கள் பெண்ணிய விடுதலைக்கு மாக்சிசம்-சோசலிசம் என்பவற்றின் ‘இயலாமை', 'போதாமை’, ‘செய்ய முடியாமல் போனவை பற்றிய பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் இவர்களது தொண்டு யாருக்கானது என்பதை இலகுவில் அடையாளம் காணமுடிகின்றது.
அடுத்து தமிழ்த்தேசியவாதம் ஆயுதப் போராட்ட வடிவம் எடுத்ததும் அதற்குள்ளேயே பெண்களின் விடுதலை உள்ளடங்கி நிற்பதாக எல்லா இயக்கங்களுமே கருத்துரைத்தன. இதன் மூலம் தமிழ் இளம் பெண்கள் பல நூற்றுக் கணக்கில் எல்லாத் தமிழ் ஆயுத இயக்கங்களாலும் ஈர்க்கப்பட்டனர். ஆனால் கருத்தியல் வாயிலாகவும் சிந்தனை செயற்பாட்டு வழிகளிலும் அவ் வியக்கங்களால் திரண்டு வந்த பெண்களுக்கு வழிகாட்ட முடியவில்லை. விடுதலை என நம்பி வந்தவர்கள் ஏமாந்து கொண்டதுடன் விரக்தி வெறுப்புக்கு ஆளாகினர்.
பலர் உயிர் வாழ்வதிலிருந்தே அகற்றப்பட்டடு பலியாக்கப்பட்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண்கள் அமைப்பின் செயற்பாடுகளில் ஆயுத நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுவது பற்றியும் கருத்தியல் ரீதியாகப் பெண்களின் விடுதலைக்கான செயற்பாடு களில் அவர்கள் எந்தளவு ஈடுபடுகிறவர்கள் என்பது பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. எவ்வாறாயினும் அவர்களைப் பெண் போராளிகள் என்ற வகையில் நோக்குதல் வேண்டுமே அன்றி முழுமையான பெண்களின் விடுதலைக்கான அமைப்பாகவோ அதற்கான மாற்றுக் கருத்தியல்களைக் கொண்டவர்களாகவோ காணுதல் இயலாததாகும்.
பெண்களது விடுதலை என்பது பொத்தம் பொதுவான ஒரு முழக்கமாக மட்டும் வைத்து விட்டு இருந்துவிட முடியாது. பெண் விடுதலை என்று உரத்துக் கூறும் போது எதிலிருந்து அல்லது எவற்றிலிருந்து விடுதலை என்ற வினா எழுகின்றது. பெண்கள் மீதான ஒடுக்குதல்களின் சமூக அடிப்படைகளையும் அவற்றின் தோற்றப்பாடுகளையும் அறிவியல் அடிப்படையில் அடையாளம் காணுதல் வேண்டும். நமது சமூக அமைப்பில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் பல்வேறு தளங்களில் நீடித்து வருகின்றன. அவற்றில் பல தம்மை வெளிப்படுத்துவதில்லை.
அல்லது வெளிப்படுத்தி அவற்றைப் பிரச்சினையாக்கி கோரிக்கை வைப்பதற்கு அனுமதிக்கப்படுவதும் இல்லை. சில ஒடுக்குமுறைகள் தம்மை துலக்கமாக வெளிப்படுத்திக் கொள்கின்றன. முன்னையது குடும்ப அலகுக்குள் என்றும் பின்னையது குடும்பத்திற்கு வெளியேயும் இடம்பெறும் ஒடுக்குதல்களாகக் கண்டுகொள்ளலாம்.
நாம் எதிர்கொள்ளும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும் அவற்றுக்கான நீண்டகால வேர் கொள்ளலும் ஐரோப்பிய அமெரிக்க சூழலிலிருந்து வேறுபட்டவைகளாகும். நாம் இன்றும் நிலவுடமை வழிவந்த பழமைவாதக் கருத்தியல்களால் கட்டுண்டவர்களாகவே இருந்து வருகின்றோம். பெண்கள் பற்றிய கண்ணோட்டத்திற்கும் மதிப்பீட்டிற்கும் அத்தகைய பழமைவாத அளவுகோல் கொண்டே அளக்கப்படுகின்றது. ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டு மென்பதை வரையறை செய்து நடைமுறையாக்கிக் கொள்ள இன்றும் “மனுதர்மம்’ கூறும் விதிகளைப் பின்பற்றுபவர்களாக நமது பெண்கள் இருந்து வருவதையே நமது சமூகம் உயர்வாகக் கருதுகிறது.
பெண்களைப் பிணைத்திருக்கும் கண்களுக்குத் தெரியாத அடிமைச் சங்கிலிகளை நமது சமூகச் சூழலில் ஒவ்வொரு வீட்டிலும் தெளிவாக அடையாளம் காண முடியும். அவை பெண்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் மீது பூட்டப்பட்ட நுகத்தடிகளாகவே காணப்படுகின்றன.
வீட்டில் பிள்ளை பிறந்ததும் ஆண் என்றால் கற்கண்டு கொடுத்துக் குதூகலித்துக் கொள்வதும், பெண் என்றால் சோகமடைந்து சர்க்கரை கொடுப்பதும் இன்றுவரை தொடரப்படும் வழக்கமாகும். பிறப்பிலிருந்தே பெண்கள் இரண்டாம் தர நிலையூடாகவே வளர்க்கப்படுகிறார்கள். சடங்கு சம்பிரதாயம் , கட்டுப்பாடு என்பவற்றால் பெண்கள் அடிமைத்தனத்துக்குள் அமுக்கப்படுகின்றனர். தொன்மை மதம் பண்பாடு என்பவற்றால் பெண்கள் குறிப்பிட்ட வட்டங்களுக்குள் இருத்தப்படுகின்றனர்.
சடங்குகள் அனைத்திலும் பெண்ணடிமைத்தனம் நிலை நிறுத்தப்படுகின்றது. பொட்டு,பூ, பட்டுப்புடவை, தங்க ஆபரணங்கள், காலுக்கு-மெட்டி,கொலுசு முதல் தலைப்பட்டம் வரை பெண்களை அழகுப் பதுமைகளாக்கி ஆண்களின் போகப் பொருளாக்கிக் கொள்கிறார்கள். அத்துடன் வாழ்விழந்தவள் -விதவை,அமங்கலி, வேசை-விபச்சாரி போன்றனவும் பெண்களுக்குரியனவாகவே சமூகத்தில் நிலைபெற்று நிற்கின்றன. எவ்வளவிற்கு பெண்கள் கல்வியில், உயர் தொழில்களில், கலைகளில், இலக்கிய ஆக்கங்களில், போராட்டங்களில் இன்னும் பிற சமூக செயற்பாடு களில் தகுதிகள் பெற்றிருந்தாலும் அவர்கள் ஆண்களுடன் சமத்துவத்தைப் பெற முடியாத நிலை காணப்படுகின்றது. மனிதன் என்னும் ஆண் உயிரியும் மனுவழி என்ற பெண் உயிரியும் சமத்துவமானவர்கள் என்றும் அவர்களே மனிதர்கள் என்றும் நோக்கப்படுவது இல்லை. “என்னதான் இருந்தாலும் அவன் ஆம்பிளையல்லோ, இவள் பெண், இப்படிப் பேசியிருக்கப்படாது” என்பதன் ஊடாகப் பெண்ணின் இரண்டாம் தர நிலையை அடையாளம் காணமுடியும்.
மதம் பண்பாடு நாகரீகம் என்பவற்றின் நீட்சியும் அவற்றின் ஊடாக உருவாக்கப்பட்ட சடங்கு சம்பிரதாய நடைமுறைகள் மூலம் பெண்கள் மீதான ஒடுக்குதல்கள் அன்றாட வாழ்வில் அவர்களுக்குரிய கடமைகள் என்ற பெயரில் சுமத்திக் கொள்ளப்படுகின்றன. இவற்றை பெண்களும் தமக்குரிய வாழ்வியல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என ஏற்று நடந்தும் கொள்கின்றனர். பெண்கள் பற்றி வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வரும் கருத்தியல் கள் யாவும் அல்லது நடைமுறைகள் எல்லாம் ஏன்? எப்படி? எதற்காக? என்ற கேள்விகளுக்கு அப்பாலே இருந்து வருகின்றன. அவற்றைத் தகர்ப்பதற்கு மாற்றுக் கருத்தியல் மூலமே முடியும்.
குடும்ப அலகு என எடுத்துக்கொள்ளும் போது ஆண் ஆதிக்கம் என்பது மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இந்த ஆண் ஆதிக்க சிந்தனையும் அதன் செயற்பாடும் வரலாற்றுரீதியாக வளர்ச்சி பெற்று வந்த ஒன்றாகும். பெண்கள் முதன்மை இடத்திலும் உயர்நிலையிலும் இருந்து வந்த ஒரு சமூக அமைப்புக் கட்டம் இருந்தது.
அது தாய்வழிச் சமூகம் என அழைக்கப்பட்டது. ஆனால் தனிச் சொத்துடமையின் வளர்ச்சியும் வர்க்கங்களின் தோற்றமும் பெண்களின் நிலையைப் பின்தள்ளிக் கொண்டது. சொத்துக்குரியவன் ஆண் என்றும் அவனது ஆதிக்கமே முதன்மை பெற்றுக் கொள்ளலும் என்ற நிலை வளர்ச்சி பெற்று சமூக இறுக்கம் பெற்றுக் கொண்டது. ஆண் எதிலும் முதன்மைக்குரியவன் என்பதும் பெண் அந்த ஆணுக்கு கட்டுப்பட்டு இரண்டாம் நிலையானவள் என்பதும் நிலைநிறுத்தப்பட்டது. குழந்தைகளைப் பெற்றுப் பராமரித்து வளர்த்துப் பெரியவர்களாக்கும் தாய்மார் களாலேயே மீறமுடியாத கருத்துக்களாக அவை ஊட்டி வளர்க்கப்படுகிறது.
இவற்றுக்கு அப்பால் உழைப்பு ரீதயாகப் பெண்களின் நிலையை நோக்கினால் அங்கேயும் பாகுபாடுதான். குடும்பத்தில் பெண்களால் செய்யப்படும் அன்றாட வேலைகளுக்கு எவ்வித பெறுமதியும் கணிக்கப்படுவதில்லை. பெண்ணானவள் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து தானே தீரவேண்டும் என்ற நோக்கே முனைப்படைகிறது.
குடும்பங்களுக்கு வெளியே வந்து பெண்கள் உழைப்பில் ஈடுபடும் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் பெண் என்ற காரணத்திற்காக குறைத்தே வழங்கப்படுகின்றது. நமது நாடு ஒரு விவசாய நாடாக இருப்பதாலும் கிராமப்புறங்கள் பரந்து காணப்படுவதாலும் விவசாய உற்பத்தியில் பெண்களின் உழைப்பு அதிக பங்கை வகிக்கின்றது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆண்களை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு குறைவானதாகும். மலையகத் தோட்டத் தொழிலாளப் பெண்களுக்கு சம சம்பளம் என்பது போராடிப் பெற்றுக் கொண்ட போதிலும் வேறு பல வழிகளில் அவர்களுக்குரிய சம்பளம் வெட்டிக் குறைக்கப்படுவது நுணுக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் சம்பளம் முதல் சகல நடவடிக்கைகளிலும் இரண்டாம் தரமாக நடாத்தப்படு கின்றனர். குறைந்த ஊதியத்தில் கூடிய வேலை வாங்கப் படுவதற்குப் பெண்களே பயன்படுத்தப்படுகின்றனர். தற்போதைய பல்தேசியக் கம்பெனிகளில் குறிப்பாக ஆடைத்தொழிற்சாலைகளில் தொண்ணுாறு வீதமானவர்கள் பெண்களாகவே உள்ளனர். கிராமப்புறங்களில் இருந்து வேலை தேடி வரும் இவ் இளம் பெண்களின் உழைப்பை இத்தொழிற்சாலைகள் மிகக் குறைந்த சம்பளத்தில் அடிமை கொள்கின்றன. அதனால் சகல இடங்களிலும் பெண்களை வேலைக்கு அமர்த்துவதால் குறைந்த சம்பளமும் தாழ்ந்த சலுகைகளுடன் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற நிலை காணப்படுகின்றது. தொழிற்சாலைகளில் மட்டுமன்றி வர்த்தக நிறுவனங்கள் காரியாலயங்கள் வியாபாரத் தலங்கள் யாவற்றிலும் பெண்களது உழைப்பு கடுமையாகச் சுரண்டப்படுகின்றது. இவற்றுடன் கூடவே பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
குடும்பத்திற்கு உள்ளும் அதற்கு வெளியேயும் பெண்கள் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகின்ற நிலை தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே செல்கின்றது. பெண்கள் வர்த்தகப் பொருட்கள் போன்று பயன்படுத்தப்படுகின்றனர். விளம்பரத்தில், சினிமாவில், நாடகத்தில் இன்னும் பிற துறைகளில் பெண்கள் நுகர்வுக்குரியவர்களாக்கப்படுகின்றனர். அழகு காட்டுபவர்களாக, ஆபாசம் செய்பவர்களாக, ஒழுக்கத்தை கெடுப்பவர்களாகப் பெண்களே காட்டப்படுகிறார்கள். இன்றைய சீரழிவுகளுக்குப் பெண்களே காரணமாக இருக்கிறார்கள் என்று பழமைவாதிகள் கூறிக் கொள்வது ஆணாதிக்க நிலை நின்றேயாகும்.
நமது மதங்களிலும் பண்பாட்டிலும் பழம் பெரும் இலக்கியங்களிலும் பெண்களைத் தெய்வங்களாகப் போற்றிப் புகழ்ந்து கொண்டே பெண் அடிமைத்தனம் வளர்க்கப்பட்ட வரலாற்றைக் காணலாம். அவற்றைக் காட்டியே பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் நியாயப்படுத்தப்பட்டும் வருகின்றன. பெண்களைத் தெய்வங்களாக்கிய நிலையில் காண முற்படுவது அவர்களுக்கு உயர்வான இடம் அளிப்பதற்கல்ல. ஆணாதிக்கப் பாலியல் நுகர்வுக்கான சுரண்டலை நடாத்தவேயாகும்.
பெண் ஒடுக்குமுறையை ஆழ்ந்து நோக்கும் போது வர்க்கம், இனம் சாதியம் நிறம் மதம் போன்றவற்றின் ஊடாகவும் குடும்ப சமூக உறவுகளின் அடிப்படையிலும் பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளை அடையாளம் கண்டுகொள்ளலாம். பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு ஒற்றைப் பரிமாணக் கண்ணோட்டம் தவறானதாகும். ஆணாதிக்கம் உட்பட பெண்களைப் பிணைத் திருக்கும் பல்வகை ஒடுக்குதல்களையும் அவற்றுக்கான சமூக உறவு வேர்களையும் கண்டு கொள்ளல் வேண்டும். அதன் மூலமே பெண் விடுதலைக்கான மார்க்கத்தைக் கண்டறிய முடியும்.
பெண்களின் விடுதலையை தனி ஒரு விடுதலையாக்கிக் கொள்ள முடியாது. அவ்வாறே பெண்கள் மட்டுமே அதில் பங்கு பெறுபவர்களாகவும் இருந்து விடமுடியாது. ஏனைய சமூக ஒடுக்குமுறைகளோடு பெண் ஒடுக்குமுறையானது கொண்டிருக்கும் உறவைக் காணுதல் வேண்டும். சமூக விடுதலைக்கான போராட்டங்களுடன் பெண் விடுதலையும் இணைக்கப்பட முடியும். அப்பொழுதுதான் பெண்களின் விடுதலை உட்பட ஏனைய விடுதலையும் சாத்தியமாகக் கூடிய சமூக அமைப்பு மாற்றம் நிகழ முடியும்.
இன்று உலகமயமாதல் என்னும் ஏகாதிபத்திய நிகழ்ச்சித்திட்டம் பல்வேறு தளங்களிலும் முன்தள்ளப்படுகின்றது. அதனைச் சாத்தியப்படுத்துவதற்கான நவீன கருத்தியல்கள் ஏற்கனவே மூன்றாம் உலக நாடுகளில் புகுத்தப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் ஒட்டுமொத்த விடுதலை, வர்க்கப் போராட்டம், அதன் வாயிலான சமூக மாற்றம் அதற்கான மாக்சிசக் கோட்பாடு, புரட்சிகரப் போராட்டங்கள் போன்ற யாவும் மறுத்து நிராகரிக்கப்படுகின்றன. இவற்றைச் செய்வதற்கே பல நூறு வகையான அரச சார்பற்ற நிறுவனங்கள் செயல்பட வைக்கப் பட்டுள்ளன. அந்த வகையிலேயே பெண்களின் விடுதலையைத் தனிக் கூறாக்கி ஏனைய சமூகப் பிரச்சனைகளில் சம்பந்தப் படாதவாறு விலக்கி வைக்கப்படுதல் நடைமுறையாக்கிக் கொள்ளப்படுகின்றது.
வரலாற்று ரீதியாகப் பெண்கள் மீதான ஒடுக்குமுறையை சரியானபடி அடையாளம் கண்டு அதனை சமூகப் புரட்சியுடன் இணைத்து சமூகமாற்றத்தின் மூலம் பெண் விடுதலையை கடந்த நூற்றாண்டில் நடைமுறையாக்கியது மாக்சிசம் மட்டுமேயாகும். எதிர்காலத்திலும் கூட மாக்சியக் கோட்பாட்டிற்கு மட்டுமே பெண்களின் விடுதலையை சாத்தியமாக்கக் கூடிய தகுதியும் வலிமையும் உண்டு. நமது சமூகத்தில் படிந்து இறுகிய நிலையில் இருந்து வரும் பழமைவாத ஆதிக்க கருத்தியல் உடைத்து நொறுக்கப்படல் வேண்டும்.
அதனின்று பெண்கள் வெளியே வரல் வேண்டும். சிந்தனையில் செயலில் புதிய திசை நோக்கிப் புறப்படல் வேண்டும். பெண்களைப் பிணைத்திருக்கும் விலங்குகள் எவை என்பதை சரியானபடி அடையாளம் காணுதல் வேண்டும். அறிவும் ஆற்றலும் செயலூக்கமும் கொண்ட பெண்கள் முன்னுக்கு வருதல் வேண்டும். பெண்களின் விடுதலைக்கான பாதையில் செயலாற்ற பெண்கள் முன் வராதவரை பெண் விடுதலை பற்றிப் பேசுவது அர்த்தமற்றதாகும். பெண்களின் விடுதலை என்பது சமூகத்தின் அடித்தள நிலையில் வாழ்ந்து வரும் பெண்களிடத்தில் இருந்தே தொடங்கப்படல் வேண்டும். அவர்கள் உழைப்பு ரீதியாகச் சுரணடப்படுகின்றனர். அதனால் வறுமை நோய் கல்வி அறிவின்மை சுகாதாரச் சீர்கேடு போன்ற குடும்பச் சுமைக்குப் பெண்கள் உள்ளாகி நிற்கிறார்கள். பண்பாட்டு வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியவர்களாகி பழமைவாத மூடநம்பிக்கைகளினால் கட்டுண்டவர்களாகிக் காணப்படுகின்றனர்.
நமது இன்றைய சமூக அமைப்பிலே சீதன முறைமை ஆணாதிக்க நடைமுறைகள் மற்றும் பண்பாட்டு அம்சங்களை பெண்களே உள்வாங்கி அவற்றோடு இணங்கி அவற்றையே பெண்களுக்குரிய சமூக வாழ்வியலாக்கிக் கொள்ளும் போக்கு முனைப்புடனேயே காணப்படுகின்றது. இவற்றைப் பேணிப் பாதுகாத்து வருவதில் சினிமா, ஒளி-ஒலி ஊடகங்கள் மற்றும் 66 வணிகப் பத்திரிகைகள் தமது பங்கை வழங்குகின்றன.
மதக் கருத்துக்கள் பண்பாட்டு நடைமுறைகள் தொடக்கம் ஆபாச சஞ்சிகைகள் வரை பெண்களை இரண்டாம் தரத்திலும் போகத்திற்குரியதாகவுமே வைத்து வருகின்றன. இந்நிலையில் பெண் விடுதலை என்று வெறுமனே மேற்கில் இருந்து சிலரது அகவிருப்புக்கு விரும்பியதை எடுத்து இங்குள்ள பெண்களின் விடுதலைக்குப் பொருத்திக் கொள்ள இயலாது, ஆணாதிக்கத்தை உரத்துக் கூறிக் கொண்டே, பாலியல் பிறழ்வுகளுக்கு நியாயங்கள் சொல்லியபடி அல்லது குடும்ப அலகு அவசியமற்றது என்ற விதமான நியாயங்களுடன் பெண்களை அவர்களுக்குரிய விடுதலைக்காக அணிதிரட்ட முடியாது. இவற்றை நகரங்களில் நல்ல வசதி வாய்ப்போடு இருந்து கொண்டு பெண்ணிய விடுதலை என முழங்கிக் கொள்ளலாம். அவை ஒரு போதும் உண்மையான அர்த்தத்தில் பெண் விடுதலையாகிக் கொள்ள முடியாது.
பதிலாக நமது சமூகச் சூழலில் ஏகப்பெரும்பான்மையான பெண்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து பெண் விடுதலை தொடங்கப்படல் வேண்டும். சமூக வாழ்வில் பெண்கள் பொதுவாகவும் குறிப்பாகவும் பின்தங்கி இருப்பதற்கான காரணங்களை விளங்க வைப்பதன் மூலமே அவர்களது கண்களுக்குத் தெரியாதவாறு பிணைக்கப்பட்டிருக்கும் பெண்ணடிமை விலங்குகளை அடையாளம் காட்ட இயலும். அவ்வாறு நடைமுறை ரீதியாகவும் அறிவு பூர்வமாகவும் கண்டு கொள்ளப்படும் போதே அவற்றை உடைப்பதற்கான சிந்தனையும் அமைப்பு ரீதியாக அணிதிரளும் தேவையும் உணரப்படும். இதற்குரிய தூர நோக்குடனும் தெளிவுச் சிந்தனையுடனும் புதுமைப் பெண்கள் நம்மிடையேயிருந்து முன்வரல் வேண்டும். பெண் விடுதலை வேண்டும் எனக் கவிதைகள் படைத்து விட்டு கதைகளும் நாவல்களும் எழுதிக் கொள்வதுடன் பெண்கள் பலர் தம்மை மட்டுப்படுத்தி குடும்ப வாழ்வுக்குள் கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். சமூக அக்கறையில் ஊக்கமுள்ளவர்களாகவும் தீவிர செயற்பாடுகள் கொண்ட நிலையிலும் இருந்து வந்த பெண்கள் பலர் திருமணத்திற்குப் பின்பு யாவற்றிலும் இருந்து தூர விலகி பழைமைவாத பண்பாட்டுக் குடும்ப சூழலுக்குள் தங்களை இழந்து விடுகின்றனர். இதனால் பெண்விடுதலையை அமைப்பு வழியில் முன்னெடுப்பதற்குரிய தளங்களில் பெண்களே முன்வராத நிலை காணப்படுகின்றது.
பாரதி பாடிய பெண்விடுதலை சமூகத்தில் சாத்தியப்பட வில்லையே எனக் குற்றம் சுமத்துவோர் உள்ளனர். சோஷலிசத்தின் கீழும் பெண்விடுதலை முழுமை பெறவில்லை என ஆதார விளக்கம் தரும் பெண்நிலைவாதிகள் இருக்கிறார்கள். இவர்கள் நடுத்தர வர்க்க அல்லது உயர் நடுத்தர வர்க்க நிலை நின்றே இத்தகைய தர்க்கங்களைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் நடைமுறை வாழ்வில் தூர நோக்குடன் கூடிய ஒரு பெண்கள் அமைப்பை உருவாக்க அத்தகைய தர்க்கங்கள் உதவப் போவதில்லை.
உலகில் இடம்பெற்ற வரலாற்றுத் திருப்பம் மிக்க போராட்டங்கள் புரட்சிகள் சமூக மாற்றங்களில் பெண்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்து வந்திருக்கிறது. ஒக்டோபர் புரட்சி, சீனப் புரட்சி, வியட்நாம் கொரிய கியூப புரட்சிகளில் மட்டுமன்றி சுதந்திரப் போராட்டங்களில் தேசிய விடுதலை இயக்கங்களில் பெண்கள் அளித்த பங்களிப்புகள் பாரியன. அங்கெல்லாம் பெண்கள் பால் வேறுபாடின்றி பங்கு கொண்டு சமூகவிடுதலையின் ஊடாகத் தமது விடுதலைக்கும் போராடினர். நமது நாட்டிலும் கூட இடதுசாரி இயக்கத்தை தோற்றுவிப்பதிலும் அதன் ஊடாக தொழிற்சங்க வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் பெண்களின் பங்கு கணிசமானதாகும்.
ஆதலால் இன்றைய சூழலில் பெண்கள் மேலும் பலவழிகளில் ஒடுக்குதல்களைச் சந்திப்பதற்கான நிலைமைகளே வளர்ந்து வருகின்றன. எனவே அவை அனைத்தையும் எதிர் கொள்ளக் கூடிய பெண் விடுதலைக்கான நேரிய சிந்தனையும் உறுதியான செயற்பாடும் தேவையாகின்றது. அத் தேவையை நிறைவு செய்ய பெண்கள் முன்னுக்கு வந்தால் மட்டுமே சாத்தியமாகும். சிந்தனைத் தெளிவுடனும் செயலூக்கத் திறனுடனும் முன்நிலை நோக்கி பெண் விடுதலை இயக்கத்திற்கான முன்னோடிகள் என்போர் வெளிவர வேண்டும்.
பண்பாட்டுத் தளத்தில் பெண்
எந்த வகை ஒடுக்குமுறையும் முன்னதாகப் பண்பாட்டுத் தளத்தில் கட்டமைக்கப்பட்டுவிடுகிறது. பெண்களை இரண்டாந்தர நிலையில் வாழப் பழக்கிவிட்டதில் வேறெந்த வழிமுறையைக் காட்டிலும் பண்பாட்டு வடிவம் அதிகம் பங்களித்துள்ளது. தமிழர் சமூகத்தில் அதற்குரிய இடங்களை அலசுவதாக இக்கட்டுரை அமையும். நாளாந்தம் சுமக்கும் வளிமண்டலத்தின் நிறை உணரப்படாமை போலவே, பண்பாட்டின் பேரால் நிகழும் ஒடுக்குதல் சகிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் தகர்த்துக் கட்டமைக்கும் புதிய பண்பாடு மிகப்பிரதானமாய்ப் பெண்விடுதலை சார்ந்து அமையும். அது மூடத்தனமான சகித்தலுக்கு அப்பால் கடந்தகாலத்தை விமர்சன பூர்வமாய் அணுகி மரபின் பேரால் ஒடுங்கிக் கிடத்தலை நிராகரிக்கும்.
எமது சமூகம் புராதன இனக்குழுக்குல முறையைப் பூரணமாகத் தகர்த்து வர்க்க சமூகமாய்த் தகர்ந்து வரலாற்றைத் தொடக்கவில்லை. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற வீரயுக முழக்கம், அனைத்துத் தமிழகத்தையும் ஒருர் எல்லைக்குட்படுத்தும் பேரரசு தொடக்கம் இன்றைய உலகமயமாதல் வரையான வரலாற்றுப் போக்குக்கு உதவியுள்ளது; அங்கே யாதும் ஒருர் ஆக முடிகிறதாயினும் யாவரும் கேளிர் ஆதல் ஒருபோதும் சித்தித்ததில்லை. ஒரூர் என அனைத்துப் பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் போது வென்றடக்கப்டுவோர் அடங்கிவாழப் பழகிவிட ஏற்ற பண்பாடு ஒன்றை இந்து மதம் வழங்கியிருந்தது. வடக்கிலிருந்து தமிழகம் கையேற்ற இந்து மதம் தமிழின் பக்திப் பேரியக்கத்தின் வாயிலாகப் புதிய பரிணமிப்பையும் கண்டிருந்தது.
இந்துப்பண்பாட்டின் விசேட குணாம்சம் இனக்குழு முறைமையைத் தகர்த்துவிடாமல் அவற்றைச் சாதிகள் ஆக்கிவிட்டமையாகும். தமக்குள் இரத்த உறவுடன் விளங்கிய இனக்குழுக்கள் அக மண முறை வாயிலாக சாதிகளான பின்னரும் ஏனைய குழுக்களை நிராகரித்துத் தமக்குள் ஒடுங்கியபடியே புதிய உற்பத்தி உறவுகளுக்கு அமைய ஒன்றுடனொன்றான ஊடாட்டங்களைப் பேணி வளர்ந்து வந்து ள்ளன. உடமையைக் கையகப்படுத்திய பிராமண-வெள்ளாள இனக்குழுக் குலங்கள் ஏனைய இனக்குழுக்களின் மேல் தமது ஆணையைச் செல்லுபடியாக்கும் பண்பாட்டைக் கட்டமைத்தனர்.
ஏனையவர்கள் மேல் செலுத்தும் சுமையின் ஒருபகுதி ஒடுக்கு பவர்கள் மீதும் ஏறாமல் போவதில்லை. பிரதானமாய் ஆளும் சாதியினரில் பெண்களே சுமையின் பெரும்பகுதியைத் தாங்க நிர்ப்பந்திக்கப்படுத்தப்பட்டனர்.
இனக்குழு வாழ்முறையில் ஒடுக்குதலின் வடிவமாக இல்லாதிருந்த புனிதம்xதீட்டு கோட்பாடு சாதியாகப் பரிணமித்தபின் ஒடுக்குமுறைக்கு உதவுவதானது. பெண் ருதுவானபின் மாதாந்த இரத்தப்போக்கை தீட்டாகக் கருதுவது இனக்குழு முறையிலே தொடங்கியது, சாதியச் சமூகத்தில் அதுவே பெண் ஒடுக்குமுறைக்குரிய முதன்மைக் காரணியாக ஆயிற்று. பேய் மகளிர் என சுடலைசென்று பிணங்களுடன் பல சடங்குகளைச் செய்த பெண் பூசாரிகள் பின்னர் வரலாற்றிலிருந்து மறைந்து, ஸ்தூல வடிவமற்ற, சூட்சுமப்பேய்களாகக் கருதப்படும் நிலை தோன்றியுள்ளது. கைலாசபதியின் ‘பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்” எனும் நூல் பேய்மகளிர் இந்த மண்ணில் வாழ்ந்த பெண்பூசாரிகள் என்பதை வலியுறுத்துவது.
அக்காலத்தில் பெருவழக்காகக் காணப்பட்ட தெய்வம் கொற்றவை எனும் பெண். சாதியச் சமூக மேலாதிக்கக் குணாம்சம் ஏற்படுத்திய முழுமுதற்கடவுள் அல்ல கொற்றவை, புராதன பொதுவுடமைப் பண்பு நிலவிய பெண்ணுரிமைச் சமூகக் கடவுளர் களில் தாயாக விளங்கியவள் கொற்றவை.
அந்த தாயுரிமைச் சமூக இயல்பின்படி முருகன் கொற்றவை மைந்தனாயே அடையாளம் பெற்றான். சாதியச் சமூகமாக மாறியபின்னர், பெண் பூசாரிகளின் சடங்கு உரிமையை மறுத்து வீட்டுக்குள் முடக்கிப் பூசகர் உரிமையை அபகரித்த பிராமணர், கொற்றவையை இரண்டாம் நிலைப்படுத்தி ஆணாதிக்க முழுமுதற்கடவுளை மேலாதிக்கம் கொள்ள வகை செய்தனர்.
பண்பாட்டுத் தளத்தில் பெண் பெற்ற இந்த இரண்டாம் நிலை சமூக வாழ்வில் அடைந்த தோல்வியின் வெளிபாடு தொடர்ந்தும் இரண்டாம் நிலைப்படுத்த இந்தப் பண்பாடே உதவியும் வந்தது. தீட்டுக்குரியவளான பெண் கோயிலினுள் மூலஸ்தானத்தை நெருங்க முடியாதவளாக்கப்பட்டாள். சாதியச் சமூகம் மக்களின் ஒரு பகுதியைத் தீண்டத்தகாதவராக்கிக் கோயிலுக்கு வெளியே நிறுத்தியதை ஒத்ததே இப்பெண் ஒடுக்கலும். மாதாந்தத் ‘தீட்டு’ உள்ள போது உயர்சாதிப் பெண்களும் மூலஸ்தானமென்ன, கோயில் எல்லையையே தொடமுடியாத தீண்டத்தகாதவள்தான்.
இத்தகைய சாதியச் சமூக மாற்றத்தைப் பெறுவதற்கு முன்னர் வீரயுகப் பண்பாடு நிலவியது வரை பெண்ணுரிமை பேணப்பட்டு வந்துள்ளமையைக் காண முடியும். காதல் வாழ்வில் பெண்ணுடைய விருப்பம் அவசியப்பட்டிருந்துள்ளது. மடலேறல், வரைபாய்தல் மூலமாகப் பெண்ணை இரக்கத்தின் பேராலாயினும் இணங்கச் செய்ய வேண்டியிருந்தது. விருப்பத்துக்குரியவனுடன் உடன் போக்கில் செல்லப் பெண்ணுக்கு வீரயுகக்காலத்தில் முடிந்திருக்கிறது. பின்னர் சாதியச் சமூகத்தில் பெண்ணுக்கிருந்த உடன்போக்கு உரிமை பண்பாட்டுத் தளத்தில் மறுக்கப்பட்டது.
விருப்பம் இருக்கிறதோ இல்லையோ ‘தூக்கிக்கொண்டு’ போகப்பட்டாள். இன்று “ஓடிப்போய்விட்டாள்’ என்று உடன்போக்கு மீள நிகழ்கிறதாயினும் அண்மைக் காலம்வரை ‘தூக்கிக்கொண்டு போய்விட்டான்' தான் இருந்தது.
பெண்ணின் விருப்பம் கருத்திற் கொள்ளப்படாமலே குடும்பச் சங்கிலியால் பிணைக்கப்படும் பெண், சாதியத் தூய்மையைப் பேணித் தற்கொண்டான் சொத்தாக ஒடுங்கி நல்மக்கட்பேறைத் தரவேண்டியவளாகிறாள். அதன் காரணத்தால் அவள் மீது கற்பு திணிக்கப்படுகிறது; கணவன் முன் நாணமும் பிற ஆடவர் முன் வராமையும் போதிக்கப்படுகிறது. இந்தக்கற்பும் நாணமும் முன்னர் வீரயுகப் பண்பாட்டில் வீரத்தின் இலக்கணங்களாக விளங்கியவை. கற்பெனப்படுவது சொற்திறம்பாமையாக இருந்தது. சொல்லைக் காக்க முடியாவிட்டால் உயிரைத்துறந்தாயினும் கற்பைப்பேணுதல் வீரம். சொற்திறம்புகையில் நாணம் கொள்வர். பகைவரால் இழித்துரைக்கப்படுவதைப் பொறுத்தலும் நானுக்கு இழுக்கு. நாணத்தை அடைந்தவர் அதற்குக் காலாயிருந்தவர்மாட்டுப் போர் மேற்சென்று வீரத்தை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறாக, வீரத்தின் மறுபக்கங்களாயிருந்த கற்பும் நாணமும் சாதியச்சமூகத்தில் அடங்கிப்போதலின் பண்புகளாய் இழிந்தன.
கற்பெனச் சொல்வதாயின் அதனை இருகட்சிக்கும் (ஆண்களுக்கும் பெண்களுக்கும்) உரியதாக்குவோம் எனப் பிரகடனப்படுத்திய பாரதியின் குரல் காதலரிருவர் கருத்தொருமித்து வாழும் புதிய கலாசாரத்தின் பாற்பட்டது. அத்தகைய சூழலில் அச்சமும் நாணமும் நாய்கட்குரியனவாகும். ஞானச்செருக்குடன் சரிநிகர் சமானமாய் வாழும் பெண் சக மனுவழியாக மதிப்படையும் காலம் இன்னும் கனியவில்லையாயினும், புதிய பண்பாட்டின் முழக்கமாக இவை பிறப்பெடுத்துவிட்டன.
இத்தகைய இலட்சிய வீறு இன்னும் எதிர்காலக் கனவாகத்தான் சாதியச் சமூகம் கட்டமைத்த பழமைப்பண்பாடே இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது.இந்தப் பழைமைப் பண்பாட்டில் பெண் போகப் பொருளாகவும் பிள்ளைபெறும் யந்திரமாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் இழிவுபடுத்தப்பட்டு வந்துள்ளாள். வத்ஸ்யாயனரால் தொகுக்கப்பட்ட காமசூத்திரம் பாலுறவில் பெண் திருப்திப்படும் அம்சத்தையும் வலியுறுத்துகிறதாயினும், பின்னால் குலவிளக்காக விளங்கவேண்டிய குடும்பப் பெண்ணுக்கு உரியனவாய் அவை கருதப்படவில்லை.
ஆண்களின் இச்சையைத் தீர்க்கும் பொதுமகளிர்க்கே காமசூத்திரம் போதனை நூல் ஆயிற்று. நாயக்கர் காலத்தில் தேவதாசியர் கொஞ்சநஞ்சம் இருந்த கலை பேண்பவர் என்ற அடையாளங்களையும் இழந்து முற்றிலும் இச்சைப்பொருட்களாய் இழிவுபடுத்தப்பட்டனர். முன்னர். சிற்பக் கலைக் குறியீடுகளாயிருந்த பல அம்சங்கள் நாயக்கர் காலத்தில் காமச் சுவையூட்டும் போகத்துக்குரிய சின்னங்களாக நசிவுற்றன.
இவ்வாறு பொதுமகளிர் என ஒரு பிரிவினர் மிக மோசமாக ஒடுக்கப்பட்ட அதேவேளை இல்லத்தரசிகள் வெறும் பிள்ளைபெறும் இயந்திரங்களாயும் வேலைக்காரிகளாயும் இழிவுபடுத்தப்படும் நிலை மென்மேலும் இறுக்கமடைந்து வந்திருக்கிறது. இந்த ஒடுக்கல் ஆளும் சாதியினர் மத்தியில் மிக அதிகமாய் இருந்துள்ளது. பிரதானமாகப் பிராமணர் மத்தியில் விதவையான போதே கணவனின் சிதையில் மனைவி உயிருடன் எரிக்கப்படுவது கட்டாயப்படுத்தப்பட்டது. ஆளும்சாதியினரின் சொத்துரிமைக் கொடுரத்தில் சொத்தைக் கையகப்படுத்தும் ஆணைச்சார்ந்தே விதவை வாழ வேண்டும். அத்தகைய வாழ்வின் கேவலங்களுடன் ஒப்பிட்டால் ஒரு கணத்தில் தீயில் வெந்துவிடுவது மேல் என்பதாலும் பல விதவையர் எரிந்துவிட இணங்கிவிடுவதுண்டு.
அதிகாரத்துவ வைப்பு முறையான சாதியப் படிநிலை இறக்கத்தில் கீழே வர வர பெண் மீதான ஒடுக்குமுறையின் பரிமாணங்கள் குறைவடைந்து வந்தபோதிலும் ஆணாதிக்க அடையாளங்கள் முற்றாக இல்லையென்பதற்கில்லை. அதை விடவும் ஒட்டுமொத்தமான ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான ஒடுக்கு முறையின் கொடுரம் கனதியானது. உயர்சாதியினரின் சாதிப் புனிதம் பேணும் வலுக்கட்டாயத்தில் பெண்ணின் கற்பை சிறைபோட்டுக் காப்பது போல ஒடுக்கப்பட்ட பெண்களிடம் பார்க்க முடியாது. அங்கும் திருமண பந்தத்தில் சாதிய இரத்த உறவு பேணப்படுகிறது; ஆயினும் வீட்டிலே முடக்கப்பட முடியாமல் வயல் வெளியிலும் தொழிற்கூடங்களிலும் வேலைக்கெனக் கிளம்பிய பின்னர் இறுக்கமான கற்புப் பற்றிப் பேச இடமிருந்ததில்லை.
குறிப்பாக வேலைத்தளங்களில் வேலைகொள்வோரால் உழைக்கும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர். அதைவிடவும் கொடுமையாக, பல பண்ணையார்கள் மணமுடித்து
வரும் ஒடுக்கப்பட்ட பெண்களுடனான முதலிரவை தமக்குரியதாய் அபகரித்தனர்.
பெண் மீதான இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போர்க்குரலை புதிய கலாசாரத்தின் முன்னோடியான பாரதி தொடுத்தார். சொத்தின் மீதான உரிமையைப் பெண்ணுக்கும் வலியுறுத்தினார். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். பருவமடையும் முன் பெண்ணை மணமுடிக்கும் மூடத்தனத்தை எதிர்த்தார். விதவைகளுக்கு மறுமணம் செய்யும் இயக்கத்தைப் படைப்பிலக்கியத்தில் முனைப்பாக்கினார்.
எதிர்க் கலாசாரத் தளத்தில் பெரியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன் போன்றோர் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான பன்முகப்பட்ட போராட்டங்களை முடுக்கிவிட்டனர். ஒடுக்கப்பட்ட பெண்கள் மீதான உயர்சாதியினரின் பாலியல் வக்கிரங்களை அம்பலப்படுத்தும் படைப்புகளை சின்னப்பபாரதியிலிருந்து டானியல் வரை பலர் படைத்தளித்தனர்.
கடந்த நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களில் பெண்ணியம் எழுச்சி பெற்றது. பெண் மீதான ஒடுக்கலின் பன்மைப் பரிமாணங்களைப் பெண்ணியம் வெளிப்படுத்தியிருந்தது. பல பேசாப்பொருட்கள் இலக்கியத் தளத்தில் பேசப்பட்டன. ஆயினும், ஏனைய பல சமூக ஒடுக்கலுக்கு எதிரான பன்முகப் போராட்டங் களுடன் பெண் விடுதலைப் போராட்டத்தை இணைக்காமல் ஒற்றைப் பரிமாணத்தில் பெண்ணியம் பெண்களின் போராட்டத்தை முடுக்கிவிட்டு இறுதி ஆய்வில் பெண் மீதான ஒடுக்குமுறையைப் பேணும் அதிகாரத்துவ சமூக அமைப்பு நிலைபெற உதவு வதாகவே அமைந்துவிட்டுள்ளது.
இத்தகைய ஒரு செல்நெறியைத் தூண்டுகிற பின் நவீனத்துவம் சமூகத்தைப் புறநிலை ரீதியாகக் காணும்' இயங்கியல்-பொருள் முதல்வாத நோக்கை ஒருவர் கையேற் பதற்குத் தடைகளை ஏற்படுத்திவருகிறது. இத்தகைய முடக்கம் யதார்த்தத்தை எவ்வாறு படைப்பில் மறுபடைப்பாக்கம் செய்வது என்பதற்கு ஏற்ற வழி முறையைக் காட்ட முடியாமல் தெளிவற்ற நிலையில் பல படைப்பாளிகளை இடருறச் செய்கிறது.
இதற்கு அண்மைக்கால உதாரணமாக உள்ள ஒரு படைப்பை எடுத்துப்பார்ப்பது சிறப்புடையது. ஷோபா சக்தியின் “கொரில்லா’ எனும் நாவல் பெண்ணியப் படைப்பு என அடையாளமிடத்தக்கது அல்லவெனினும் பெண்ணிய நோக்கையும் பின்நவீனத்துவ வெளிப்பாட்டையும் வெளிப்படுத்துவது. அந்நாவல் ஈழப்போராட்டத்தில் இணைந்து போராடிய இளைஞன் ஒருவன் தவறான புரிதலில் இயக்கத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்ட பின் ஐரோப்பாவுக்குப் புலம்பெயர்ந்த வாழ்க்கையைச் சித்திரிப்பது. அதன் ஓட்டத்தில் பெண் பார்க்கப்படுகிறாள் என்பது கவனிப்புக்குரியது.
இந்தப் புலம்பெயர்ந்த முன்னாள் போராளி பிரான்சில் ஒரு புலம்பெயர்ந்த தமிழ் மாக்ஸியரைச் சந்திக்கிறார். அந்த மாக்ஸியர் கருத்தைக் கருத்தாலே வெல்ல வேண்டுமேயன்றி அடி-தடி-வெடி கூடாதென்று விவாதிப்பவர். இந்த முன்னாள் போராளியோ இன்னமும் இயக்கப்பற்றும், வெடியன்றி வேறு மார்க்கம் எதுவுமில்லை என்றும் நம்புகிறவர். ஒரு விவாதத்தில் முன்னாள் போராளி, “உங்களுடைய மனைவியுடன் உறவு கொள்ளக் கேட்கிறேன். இதுவும் கருத்தா” என்பார். சற்று யோசித்த மாக்ஸியர் பின்னர் “ஓம் அதுவும் கருத்துத்தான்’என்று கூறி விவாதத்தை வளர்த்தெடுக்காமல் முறியடித்துவிடுவார்.
நாவலின் முடிவில் அந்த மாக்ஸியர் தனது மனைவி வேறொருவருடன் உறவுகொண்டதைக் கண்ட ஆத்திரத்தில் கண் மண் பாராமல் வெட்டிக் குதறிக் கொலை செய்திருப்பார். இங்கு படைப்பாளியின் நோக்கம் இறுதியில் மாக்ஸியரும் பெண்மீது வன்முறையைப் பிரயோகிப்பவர் என்பதைக் காட்டுவதுதான். முன்னர் குறிப்பிட்டவாறு, பெண்மீதான ஒடுக்கல் என்று மட்டுமன்றி எல்லாமே அதிகாரம் செலுத்தும் கருத்தியல்கள் தாம்- மாக்ஸிஸம் உட்பட - என்பதைக் காட்டுவது நாவலின் பிரதான குறிக்கோள்.
இந்தக்கொலையை அடுத்து, இறுதிப் பக்கத்தில் விடுதலைப் புலிகளால் சபாலிங்கம் கொலை செய்யப்பட்டதைக் காட்டி நாவல் முடிவதிலிருந்து இதனைக் கண்டுகொள்ள முடியும். (சபாலிங்கம் -தமிழீழப் போராட்ட வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் கூடியவரை களஞ்சியப்படுத்திப் பேணிவந்தவர்).
ஆயினும் நாவல் கட்டமைத்தது போல மாக்ஸியம் பெண் ஒடுக்கு முறையை அணுகியதில்லை. பொதுவுடைமை இலட்சியம் பெண்ணையும் பொதுவாக்கிவிடப் பார்க்கிறது என பிற்போக்கு சக்திகளால் பிரசாரப்படுத்தப்பட்டபோது, பெண்ணை உடைமைப் பொருளாகப் பார்ப்பதால் இப்படிக் கொச்சைப்படுத்துகிறீர்கள் எனக்கூறிய மாக்ஸ், பெண்ணை சக மனுவழியாகக் கருதி முழுச் சமூக விடுதலையுடன் பெண் விடுதலையை இணைத்துப் பார்த்தவர். அந்தவகையில் “கொரில்லா” நாவல் சித்தரித்த ‘மாக்ஸியர் உண்மையில் ஒரு பொதுவுடமைவாதியல்ல. அவர் மனைவியுடன் உறவுகொள்ளக் கேட்டவரிடம் “இந்த விடயத்தில் அவளுடைய அபிப்பிராயமும் கவனிக்கப்படுவது அவசியம்’ என்பதை வலியுறுத்தியிருக்க வேண்டும். தனது மனைவியை உடைமைப் பொருளாக உணரும் அவருக்குக் கருத்தைக் கருத்தால் வெற்றிகொள்வதை விடவும் எதிராளியை முறியடித்துவிடும் தன் முனைப்புத் தான் அவசியப்பட்டது.
அந்தவகையில், பின்நவீனத்துவவாதிகளும் பெண்ணிய வாதிகளும் பெண் ஒடுக்கலை ஒற்றைப் பரிமாணத்திலேயே பார்ப்பதைக் கண்டு கொள்ள முடியும். அந்தந்த நேரத்துக்கு அததை முனைப்பாக்கி ஒற்றைப் பரிமாணப் போராட்டங்களை வளர்க்கவே பின்நவீனத்துவம் தூண்டுகிறது. ஒரு போராட்டத்துக்கு எதிராக மற்றொன்றை அவர்கள் முன்வைப்பர். இதனால் மக்கள் விடுதலைக்கான வெகுஜன மார்க்கம் முறியடிக்கப்படுகிறது. அத்தகைய குறுகிய நோக்கங்களுக்கு அப்பால் மாக்ஸியம் பிரச்சனைகளைப் பன்மைப் பரிமாணத்தில் அணுகி, அவசியப்படும் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுத்து, ஒருமுகப்படுத்தி, மக்கள் விடுதலையைச் சாத்தியமாக்க வழிகாட்டுகின்றது.அந்த வெகுஜன மார்க்கத்திற்கு எதிராகவன்றி, ஒன்றுபட்டு உடன் செல்லும் போராட்டமாக பெண்விடுதலைப் போராட்டம் விளங்குவது அவசியம். அவ்வாறில்லாத அதிதீவிரவாத முழக்கங்கள் இறுதியில் சரணாகதியை அடையும்; அல்லது திட்டமிட்டே ஆளும் கும்பலின் பக்கம் நின்று ஒடுக்குமுறைகளுக்கு முண்டுகொடுக்கும்.
மாறாக, பண்பாட்டின் பேரால் மாதர்தம்மை இழிவுசெய்யும் அனைத்துச் சொல்லாடல்கள் கருத்தியல்கள் ஆகியவற்றைத் தகர்த்து, பெண் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களைத் தீர்க்கமான வேலைத்திட்டம் ஒன்றின் அடிப்படையில் வகுத்து, மக்கள் விடுதலையின் தவிர்க்கவியலாத ஒரு பகுதியாக அதனை வளர்த்தெடுப்போம். ஒரு சமூகத்தின் வளர்ச்சி மட்டத்தை பெண் வகிக்கும் இடத்தைக் கொண்டு மதிப்பிட முடியும் என்பதால், பெண்விடுதலைக் கருத்தியல் விருத்திசெய்யப்படுவது உடனடிப் பணியாகும்.
நாம் என்ன செய்ய வேண்டும்
சோ. தேவராஜா
‘நாம் என்று குறிப்பிடும்போது ஆண், பெண் என்ற இரு பாலாரையும் சுட்ட விளைகின்றேன். கடந்த காலத்தின் விளைச்சலான சமகால அறுவடைகளை அறுத்துக்கொண்டிருக்கும் இன்றைய மனிதரே நாளைய வரலாற்றைச் சமைக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள் என்பதை மறுக்கவொண்ணாது; சமூகக் கடமை என்று வரும்போது அதனைப் பிறர் வினையாகக் கண்டு தம் கடன் மறுக்கும் நிலை மாற்றவெண்ணி தன்மை பன்மையில் நாம்’ என்ற பதத்தைப் பாவிக்க விரும்புகின்றேன். எம் எல்லோரதும் கூட்டுப் பொறுப்பு என்பதைக் குறிக்கவே இவ்வாறு தன்மைப் பன்மைப் பலவின்பால் நிலை நின்று இக்கட்டுரையை எழுத முனைகின்றேன்.
“பெண்’ என்ற சொல்லின் பின்னால் எமது வரலாறு கட்டமைத்து வைத்திருக்கும் பல ஆயிரம் வருஷப் படிமங்கள், எமது எண்ணத்தில் எழுகின்றன.
“வார்த்துஞ் செதுக்கியும் கடைந்தும் குடைந்தும் கல்லிற் பொழிந்தெடுத்தும் வார்த்தை பல வரைந்தும் வர்ணங்கள் தீட்டியும் மந்தைகள் போற் பெண்குலத்தை மேய்த்த பரம்பரையோர் காத்துக் கவனமுடன்
பேணிப் பராமரித்த கல்லும் உலோகமும் களிமண்ணும் காகிதமும் ஒலைகளும் சீலைகளும் வேய்ந்த சிறைக்கூடம் பெண்ணடிமைப் பெருங்கோட்டை மதில்கள்’ எம் அனைவரதும் உள்ளங்களை ஆட்படுத்திக் கொண்டுள்ளன.
“இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை கொண்டுள்ள நாம் ‘பண்பாட்டின் பேரால் பல சோலி உடையோம். “கற்புநெறி நிற்பதுவும் கைம்மையிலே கருகுவதும் மாதர் குலச் சுமை’ என்போம்.
வரலாறும் பண்பாடும் சமகாலச் சமூகத்தின் சிந்தனை மீது ஆதிக்கப் பாறாங்கல்லைச் சுமத்தியுள்ளன.
வான்வழி ஆதிக்கப் பண்பாட்டுச் சிந்தனைகள் எங்கள் வீடுகளின் கூரைகளைப் பிய்த்துக் கொண்டு கதவுகளை உடைத்துக் கொண்டு எமது சமூகச் சிந்தனையின் மீது தொடர்பூடக நாட்டாண்மையை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.
சமூகப் பிராணியாக வாழ்ந்த மனிதர் தனித் தனித் தீவுகளாக, தனிமனித அகவயச் சிந்தனையுள் மூழ்கி தனியன்’களாக தவித்து கரையேற முடியாதபடி கல்லோடு கட்டிக் கடலுக்குள் வீசப்பட்டவர்களாக மூச்சுத் திணறிக் கொண்டுள்ளனர்.
பூகோளமயத்தின் விஷச் சுழியில் சிக்கிக் கொண்ட மனிதர், விட்டு விடுதலையாகி வினா எழுப்பி விடை தேட முனைவதையே பெரும் வில்லங்கமாகக் காணுகின்றனர்.
இச்சூழலில்தான் “பெண்’ சமூகத்தில் இன்னொரு சாதியாக, ஓரங்கட்டப்பட்டவளாக வாழம் நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப் பட்டுள்ளாள். தனக்காகத் தான் மட்டுமே தன்மீது அனுதாபம் கொண்டு இரங்கிக் கொள்வதாகவே வாழ்வு சிதைகிறது. தனக்குரிய ‘பிரத்தியேக விசேட காட்சியாகவே கதை முடிகிறது.
“தேடிச் சோறு நிதந்தின்று சின்னஞ் சிறு கதைகள் பேசி, பிறர் வாடப் பல செயல்கள் செய்யும் வேடிக்கை மனிதர்கள் வாழும் சமூகக் கட்டமைப்பில் பயமும் பாதுகாப்பின்மையும் பெண்ணை அச்சுறுத்திக் கொண்டுள்ளன. எனவே மெளனப் பண்பாட்டுக்குள் அவளது வாழ்வு தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.
“பெண் ஒரு சுமையாகக் காணும் சமூகத்தில் அக்குடும்பத்தில் உள்ள தந்தையோ, சகோதரனோ சுமைதாங்கி யாகி வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றான். குடும்ப விவகாரம் “அந்தரங்கமாகவே வைக்கப்படுகிறது. பகிரங்கப்படுத்துவதற்குரிய சமூகச் சூழல் இல்லை என்பதால் தனிமனித அகவயமான தீர்மானங்களே மேற்கொள்ளப்படுகின்றன. சமூக விடுதலை சாத்தியமற்ற சூழலில் “பெண்ணின் விடயங்கள் பேசாப் பொருளாகவே போய்விடுகின்றன. பெண் விடுதலை பற்றிய புறநிலை ஆய்வுகளும் அகநிலைத் தேடல்களும் சமூக விடுதலையின் அடிப்படைத் தேவையாகும். தேசிய விடுதலையையும் சமூக விடுதலையையும் சாத்தியப்படுத்துவதற்கு பெண் விடுதலை என்பது முன் நிபந்தனை யாகும். “பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீராது’ என்பது சத்திய வாக்காகும். சமகால ஆய்வு முயற்சிகள் எங்கிருந்தோ எவரெவராலோ திட்டமிடப்பட்டு மூன்றாமுலக நாடுகளில் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.
இதற்கு தனியன்களான இலங்கையின் உதிரிப் புத்திஜீவிகளும் பலியாகின்றனர். இதனால் பெண்விடுதலை பற்றிய முன்னெடுப்புள் வரலாறு, பண்பாடு, சமூகம், கல்வி, அரசியல், பொருளாதாரம், தேசியம் என்பவற்றில் இருந்து பெயர்க்கப்பட்டு தனித்து நோக்கப்படுகின்றது. ஆண், பெண் என்ற உயிரியல் பேதமையை பகைமைகொள் முரண்பாடாக்கி ‘ஆண்’ என்ற சமூக உயிரியை வில்லனாக்கி, கொலனித்துவம், நவகொலனித்துவம் திணித்த போதைப் பாவனைக்கு அடிமையாகிவரும் ‘ஆண்' களைப்போல் “பெண்களும் ஆவதையே சரிநிகர் சமானமாகக் கருதும் கொச்சைத்தனம் மேலோங்கியுள்ளது. தமிழர் விடுதலைக்குத் தமிழ்த் தேசியவாதியே குரல் கொடுக்கவேண்டும்; சாதிய விடுதலைக்கு தலித்தே முன்நிற்க வேண்டும்; அதேபோல் பெண் விடுதலைக்கு பெண் மட்டுமே போராடவேண்டும் என்று வேலியிட்டு எல்லைகள் போடும் குறுநலப் பித்தம் யானை பார்த்த குருடர்கள் போல் உண்மைக்கு அணுக்க மாக வர எப்போதும் உதவாது.
கூட்டத்தில் கூடிநின்று கூடிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாத புத்திஜீவித்தனம் மிக்கோரின் அடாவடித்தனம் அதிகரித்துள்ள இவ் அகால வேளையிலிருந்து ஆய்வுலகத்தையும் பெண் விடுதலைச் செயற்பாட்டாளர்களையும் மீட்பது அவசிய நடைமுறைத் தேவையாகும். பெண் விடுதலைபற்றித் தமிழ் இலக்கியத்திலும் எழுத்திலும் பேச்சிலுமே மாற்றம் ஏற்பட்டுள்ள அளவுக்கு சமூக நடைமுறையில் ஜனநாயகப் பண்பாட்டு விருத்தியில் எத்தகைய சலனம் ஏற்படுத்தப்பட்டுள்ளதென்பது கேள்விக்குரியதே. பெண்ணியம் பற்றிய ஆய்வுகள் பல புதிய விடயங்களை வெளிக்கொணர்ந்துள்ளன. பாரம்பரிய ஆணாதிக்க சமுதாயத்தின் மீது நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளன. பழமைவாத நிலமானியச் சிந்தனையில் கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க தந்தைவழிச் சமுதாயத்தின் அத்திவாரத்தின் மீது விவாதங்களைத் தொடுத்துள்ளன.
எனினும் சமுதாயத்தின் மாற்றத்துக்கான பெண்ணின் விடுதலை தொடர்பில் நடைமுறைச் சாத்தியமான சாதனைகள் எதனையும் எட்டத்தவறியுள்ளன. எந்தவொரு தேசியமும் தத்தமது பண்பாடுகளை தத்தமக்கேற்ப கட்டமைத்துக் கொள்கின்றன. நிலமானிய சமூகத்திலிருந்து முதலாளித்துவ ஜனநாயக சமூகத்துக்கு மாறிவரும் சூழலில் உருவாக்கப்படும் தேசியக் கட்டமைப்பில் பெண்களே பண்பாட்டின் மையப்பொருளாக்கப்படுகின்றனர். “தாய்வழி உண்மை, தந்தைவழி பொய்” என்ற எண்ணக்கருவின் அடியாக கற்பு பெண்களுக்கு மட்டுமே தொடர்ந்தும் வலியுறுத்த ப்படுகின்றது. பெண் பற்றிய கருத்தியல் நிலமானியத்தின் நீட்சியாகவே பொருளுற்பத்தி பெருகிவரும் முதலாளித்துவ ஜனநாயக சமூகத்திலும் பிணிக்கப்படுகிறது.
நிலத்தை அடிப்படையாகக் கொண்டு விவசாயம் செய்து வாழ்ந்த கிராமியச் சமுதாயத்தில் பெண்ணுக்குரிய இடம் வீடாகவும், அவள் வீட்டுக்கு அரசியாகவும் வாழ்ந்தாள். ஆனால் முதலாளித்துவ ஜனநாயக சமுதாயத்தில் மூலதனம் நகரங்களில் குவிக்கப்பட்டுள்ளமையினால் கிராமிய வாழ்வு சிதைந்து, குடும்ப உறவுகள் மோசமடைந்து இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து வாழும் சூழல் தோன்றியுள்ள நிலையில், பெண்கள் பொருளாதார நெருக்கடிகளால் பீடிக்கப்பட்டு இரட்டைச் சுமையுடையோராய் வீட்டுக்கடமையுடன் வெளித்தொழிலும் பிள்ளை வளர்ப்புமென பாரம் பெருமளவுக்குச் சுமப்பதனால் நிலமானியம் கட்டிக்காத்த விழுமியங்கள் வீழ்ச்சியடைகின்றன. குடும்பங்கள் குலைவது தவிர்க்கவியலா பண்பாகின்றன.
வாழ்க்கையில் நிச்சியமின்மையும் பாதுகாப்பின்மையும் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நிலமானிய சமூகத்தின் பண்பாட்டுத் தளத்தில் பெண்ணுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனக் குறிப்பிடும் குணநலன்களை தமிழிலக்கியத்தில் மக்கள் கவிஞர் பாரதி “நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்” என எள்ளி நகையாடியமை தமிழர் பண்பாட்டில் ஓர் புதிய குரலாக ஓங்கி ஒலித்தது.
பழமைப் பண்பாட்டிற்கெதிராகத் தோன்றிய புதுமைப்பெண் எதிர்ப்பண்பாட்டின் சின்னமாகத் தகவமைக்கப்பட்டாள்.
ஆண்களிடம் மட்டுமேயிருந்த ஆதிக்க அம் சங்களை பெண் களும் பெற்றுக்கொள்ள எதிர்ப்பண்பாட்டுச் சிந்தனையும் செயற்பாடுகளும் வழிசமைத்துக் கொடுத்தன. இதன் குரலாக “சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் அன்றோ’ என்ற அசைவியக்கம் தமிழர் சமூகத்திலும் மாற்றத்தை உண்டு பண்ணியது.
எனினும் இம்மாற்றம் நகரங்களில் தமிழர் சமூகத்தில் உள்வாங்கப்பட்ட அளவுக்கு கிராமங்களிலும் உழைப்பாளிப் பெண்கள் சமூகத்திலும் பாரிய மாற்றம் எதனையும் உண்டு பண்ணவில்லையெனலாம்.
இலங்கையின் சிங்கள-தமிழ்-முஸ்லீம்-மலையக மக்கள் வாழும் கிராமங்களிலும் உழைப்பாளி வர்க்கமாகிய பெண்கள் சமூகத்திலும் பூகோளமயமாதலின் பொல்லா விளைவின் சூழ்ச்சிகளால் கிராமங்களில் ஒரு வீட்டின் வேலிக்குள்ளும் எல்லைக்குள்ளும் ஒடுங்கியிருந்த பெண், நகர வீதிகளுக்கும், நாடுகளின் எல்லைகளைத் தாண்டிய வேற்று நாட்டார் வீடுகளுக்கும் தள்ளப்பட்டாள்.
கட்டுநாயக்கா பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலையங்களிலே சிங்களக் கிராமியப் பெண்களின் உழைப்பு சூறையாடப்பட்டுள்ளதுடன் அவர்களது உடல், பொருள், ஆவி எதற்கும் உத்தரவாதமற்ற சூழலில், இலங்கைத் தொழிலாளர்களுக்குரிய தொழிற்சங்க உரிமைகளுமின்றி வாழ நிர்பந்திக்கப் மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளப் பெண்ணின் பல்லாண்டுகால லயத்து வாழ்வும், காணிநிலம் எதுவும் சொந்தமற்ற இருப்பும், உத்தரவாதமற்ற உழைப்பும் சம்பளமும் அவர்களின் வாழ்வில் அன்றாடம் அச்சம் மட்டுமே கோலோச்சும் நிச்சயமற்ற வாழ்வும் அவர்களின் உடைமையாக்கப்பட்டுள்ளன.
இலங்கை ரூபாய் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளமையாலும் திறந்த பொருளாதார நெருக்கடிகளாலும் கிராமிய உற்பத்தி வீழ்ச்சிகளாலும் முஸ்லீம்-தமிழ்-சிங்கள-மலையகப் பெண்கள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்ல வைக்கப்பட்டமை மட்டுமின்றி வதைக்கப்பட்டு திருப்பியனுப்பப்படும் சம்பவங்களும் ஏராளம் ஏராளம்.
இலங்கை நாட்டிலும் சிங்கள-தமிழ்-முஸ்லீம் தேசியங் களைப் பேசும் இனக்குழுக்களின் தலைமைகளும், பெண்களை மையப்படுத்திக் கட்டியடிக்கும் தேசிய பண்பாட்டுப் பொதியைச் சுமக்கும் உழைக்கும் பெண்களின் மீது சுமத்தப்படும் அந்நிய ஆண்டகைகளின் பாரபட்சம், புறக்கணிப்பு, ஒடுக்கல் நடத்தை என்பவற்றைக் கண்டும் காணாதவர் போல் ஆதிக்க வர்க்கத் தினருடன் தமது வர்க்க பாசத்தைப் பரிமாறிக் கொள்கின்றமை யெதுவும் புரியாத புதிரல்ல. - மாக்ஸியப் பொருளாதாரம், மூலதனம் பற்றியும் குடும்பம், சொத்து, தனியுடமை, அரசு ஆகியவற்றின் தோற்றம் பற்றியும் மாக்ஸ்சும்- ஏங்கல்சும் ஐரோப்பிய நாடுகளிலே பிரகடனம் செய்த பொழுது, “உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பொதுவுடைமை யாக்கப்பட வேண்டும்” என சோசலிச சித்தாந்தத்தை முழக்கமிட்ட வேளை முதலாளித்துவ அறிஞர் சிலர் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுமா பொதுவுடமையாக்கப்பட வேண்டு மென எள்ளிநகையாடினர்.
அப்பொழுது மாக்ஸிச மூலவர்கள், மனிதப் பிறவிகளான பெண்களை பொருட்களாக கருதும் நிலப்பிரபுத்துவ ஆதிக்க மனோபாவமே இவ்வறிஞர்களின் சிந்தனையைக் குழப்புகின்றன என்று அவர்களின் ஆணாதிக்க குணாம்சத்தைத் தோலுரித்தனர்.
பழமைப் பண்பாட்டிற்கெதிராக பெண்ணியச் சிந்தனை எதிர்ப்பண்பாட்டுத் தளத்தில் தனது எழுச்சியைத் தோற்றுவிக்கும் பொழுதும் முற்போக்குப் பாத்திரத்தை வகித்த பொழுதும் பழைமைப் பண்பாட்டின் ஆதிக்க சக்திகளுடன் ஒட்டுறவும் கூட்டும் வைக்கின்றவேளை அதனுடைய போர்க்குணாம்சம் வலுவிழந்து வீரியம் குன்றி ஆதிக்க சக்திகளுடன் சங்கமமாகிவிடுவதனை சமகால நிகழ்வுகளின் தரிசனமாகக் கண்டறியலாம். முதலாளித்துவ மாற்றத்தில் பெண்கள் நகரங்களில் வேலை செய்கின்றமையும் தமிழ்த்தேசியப் போராட்டத்தில் பெண்கள் போராளிகளாக மாறுவதும் சிங்களப் பெண்கள் இராணுவத்தில் சேருவதும் மட்டுமே பெண்விடுதலையின் குணாம்சங்களாக காணுவது குறைபாடுடைய பார்வையாகும்.
கிராமிய வாழ்வின் சிதைவும், மத்திய- கீழ் மத்தியதர வர்க்கப் பெண்ணிடம் ஏற்படும் விரக்தியும்- வேலையின்மையால் விளையும் பொருளாதார நெருக்கடிகளும் நம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாக அதிருப்தியையும் அச்சத்தையும் சமூக அக்கறையின்மையையும் குழப்பத்தையும் கலவரத்தையுமே தோற்றுவிக்கின்றன. இதனால் பெண்ணின் ஆளுமை குறைவிருத்தியுடையதாகி ஆரோக்கியமான சமூக வளர்ச்சிக்கு ஊறுவிளைவிக்கின்றது.
பெண்ணின் ஆளுமை விருத்தியடைவதன் மூலமே சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பம் சிறப்படைய முடியும். அப்போது மட்டுமே கற்பெனப்படுவது சொற்திறம்பாமை என்ற பொருள் கோடலை அர்த்தபுஷ்டியாக்க முடியும்.
பெண் விடுதலை சமூக விடுதலையின் முன்நிபந்தனை யாகக் கொள்ளப்படும்போது மட்டுமே நாம் அனைவரும் ஒரே குரலில் பேசுவதும் செயற்படுவதும் நம்பிக்கை தருவனவாகும். பெண்கள் எழுச்சியினை ஏற்படுத்த வேண்டுமெனில் ‘உட்சுவர் தீத்திப் புறச்சுவர் தீத்தும் முறையில் உள மனச் சிக்கலை உடைக்கவேண்டும். பெண்ணொருவர் நினைப்பதைச் சொல்லவும் விரும்புவதை வெளிப்படுத்தவும் கருத்து வேறுபாடு களைப் பகிரங்கமாக முன்வைக்கவும் தவறுகளை கண்டிக்கவும் திருத்தவும் தேவையெனில் எதிர்த்துக் குரலெழுப்பவும் போராடவுமான ஆளுமைப் பண்பை உருவாக்கி வளர்க்கவும் துணிவு பெறுதல் அவசியமாகும்.
சரியென்று எண்ணுவதை வெட்கமின்றிக் கூச்சமின்றி எங்கும் எப்போதும் எவர் முன்னிலையிலும் எடுத்துச் சொல்வதற்கும் வாதிப்பதற்குமுரிய வல்லமை பெறல் வேண்டும். இதன்மூலம் பண்பாடு என்ற பெயரில் தலைகுனிந்து நடக்கவும், எதிர்ப்பை அழுகையின் மூலம் மட்டுமே வெளிப்படுத்தவும், கைநீட்டிப் பேசமுடியாமல் பொம்மையாகவும் வாய்த்தர்க்கமும் செய்யாமல் மெளனமாகவும் வாழும் பெண் சமூகத்தின் மீது பழைமைப்பண்பாடு விதித்த கோட்பாடுகளையும், கொள்கைகளையும் புனிதங்களையும் தூக்கியெறிந்து தலைநிமிர்ந்து நடக்கவும் வல்லமை பெறுதல் வேண்டும்.
கற்பும் அறநெறியும் எல்லார்க்கும் பொதுவென்போம். அஞ்சுதலும் நாணுதலும் ஏய்த்துப் பிழைப்போர்க்கும் எத்திப் பறிப்போர்க்கும் மானுடரைத் தாழ்த்திக் கொடுமை பல செய்வோர்க்கும் தீயோர்க்கும் உரித்தென்போம். அஞ்சாமை மனத்துணிவு அறிவு எமதுரிமை மானுடரை மானுடரே அழித்தல் அடிமை செயல் இன்றே ஒழியட்டும்.
பெண்காள் திரள்மின்! சூழுகின்ற வேலிச் சுவர்களெலாம் சாயட்டும்! மூடி மறைத்திருக்கும் கூரை பெயரட்டும்! தலைகள் நிமிரட்டும் கைகள் உயரட்டும் வானத்தில் ஒரு பாதி அங்கே அமரட்டும்.
கவிஞர் சி. சிவசேகரத்தின் ‘புதியபடிமம்' என்ற இந்தக் கவிதையை யாழ். மஹஜனாக் கல்லூரியிலே எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் நடிப்புப் பட்டறையில் பயின்ற மாணவி இன்று சமூகவியல் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
புத்தகம், கவிதை, இலக்கியம் என்பவற்றை நிராகரித்து பரீட்சைக்கு மட்டுமே கல்வி என்று கருதிய அதே சமகால மாணவியர் இன்று மனுஷிகளான போதும் அவர்களின் வாழ்வில் துன்பமும், சகிப்புத்தன்மையின்மையும், அவலமும், பெருங்கேடும் சூழ்வதைப் பார்க்க முடிகிறது.
பலவருடங்களுக்கு முன்னர் ‘பூவொன்று புயலானது' என்ற படத்தைப்பார்த்த ஒரு மாணவி அப்படத்தில் தன்னை இழந்தவராய் படமோ படம் கலரோ கலர் சீலையோ ஒரு. சுமை என்று போதையுண்டவராய் கூறியதையும் எண்ணும்போது சிந்தனை செய்யா வாழ்வில் சீரழிந்த சீவியமே பெரும் சுமையாகி விடுகிறது. தமிழ்ச்சினிமா காட்டும் கனவுலகப் பொய்மையும் அளவற்ற ஆசையும் சகமனிதரில் நம்பிக்கையீனமும் போட்டி மனப்பாங்கும் மற்றவர் பற்றிய அவதூறுகளும் தமது இருப்பை உறுதிப்படுத்தும் இயலாமையின் வெளிப்பாட்டுச் சுபாவமும் ஆளுமைப் பண்பைச் சிதைத்து அறியாமையை மேலோங்கச் செய்வதனைக் காண்கின்றோம்.
அறியாமையை அகற்றுவதும் உலகத்தோடு ஒட்ட ஒழுகும் பண்பை வளர்ப்பதுவும் நூல்பல கற்பதுவும் ஆய்வு மனப்பாங்கை விருத்தி செய்வதும் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவான அகவாழ்வில் ஏற்படுத்த வேண்டிய அவசிய நடவடிக்கைகளாகும்.
புறவாழ்வில் வறுமைக்கெதிராகப் போரிடுவதும், சகலரும் சமமெனக் கொள்ளும் அறிவுசார் ஆளுமைப் பண்பை விருத்தி செய்ய மனங்கொள்வதும் முக்கியமானதாகும்.
ஆணும் பெண்ணும் வேறுபட்டவர்கள். “ஈருடல் ஒருயிர்” என்று அன்பின் மிகுதியால் உருகினாலும், அது ஆண் அதிகாரத்தின் குரலாக மாறாமல் பார்ப்பது அவசியமாகும். அன்பு என்பதன் வெளிப்பாடாக அதிகாரத்தின் மூலம் ஆண் தனது கருத்தையும் விருப்பத்தையும் தேவையையும் பெண்மீது திணிப் பதையும் பெண்களின் கருத்துக்கும் விருப்பத்திற்கும் தேவைக்கும் முதன்மை கொடுக்க மறுப்பதும் அராஜகத்தின் வெளிப்பாடாக உருமாறும் என்பதுடன் குடும்ப வாழ்வைக் குட்டிச்சுவராக்கும் ஜனநாயக மறுப்பாகும். எனவே ஆணும் பெண்ணும் ஒருவரல்ல. இருவேறுபட்ட மனிதர் என்ற யதார்த்தத்தை அங்கீகரித்து புரிந்து கொள்வதன் மூலமே தம்பதியர், காதலர் மத்தியில் உண்மையான உறவு பரிணமிக்க முடியும்.
திருமணம் என்பது பல பெண்களுக்கு ஆயுள் தண்டனை யாகும் அவலமும் ஏற்பட்டு வருகின்றது. குழந்தை ம.சண்முகலிங்க த்தின் ‘உறவுகள்’ என்ற நாடகத்திலே வரும் பெண் கதாபாத்திரம் “சொந்தப் புருஷனுடன் பல வருடங்களாக வேசையாட நிர்ப்பந்தி க்கப்பட்டிருக்கிறேன்’ என்று வெம்பி வெடிப்பதுவும் நமது கவனத்துக்குரியது.
பெண்களின் வாழ்வில் திருமணம் என்பதுவே அவர்களின் இலக்காகவும் குறியாகவும் குறுக்கப்பட்டிருக்கும் வாழ்வுப் பெறுமானம் தமிழர் மத்தியில் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.
திருமணம் நிகழாவிடில் பெண்களுக்கு எதுவுமேயில்லை என்றாகி விடுகிறது. திருமணம் நிகழ்ந்து பிள்ளைகள் இல்லையென்றாலோ, கணவனை இழந்தாலோ அப்பெண் அவையத்து முந்தியிருக்கும் நிலை மறுக்கப்படுகிறது. பூவும் பொட்டும் வெறுக்கப்படுகின்றது. அமங்கலியென்றும் சுமங்கலி என்றும் பெண்ணின் கெளரவம், புருஷனை மையப்படுத்தியே வழங்கப்படுகிறது.
கணவன் அறநெறிபிழைத்தவனாயினும் குடிகாரனாயினும் ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற படிமந்தவறாது வாழும் 'படி சொற் தவறாத பாவை'யாக நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.
தமிழர் சமூகத்தில் விவாகரத்து செய்வதென்பது பெண்களுக்குப் பெரும் பாதிப்பாகவே அமைந்துவிடுகிறது. “செத்தவன் பெண்டிலைக் கட்டினாலும் விட்டவன் பெண்டிலைக் கட்டக் கூடாது’ என்பது பழமொழியானாலும் இன்றும் உயிர்ப்பிடிப்பாய்ப் பெண்மீது சுமத்துகின்ற வரலாறு தொடர்கிறது.
தமிழர் சமூகம் அகத்திருமண முறையென்று கருதப்படும் சொந்தச் சாதிக்குள் அல்லது இனம், மதம், பிரதேசம் ஆகிய வேறுபாடுகளுக்கமைய அவ்வவ் குழுமங்களுக்கிடையில் மட்டும் திருமணம் மேற்கொள்ளும் நடைமுறை இன்றும் தொடர்கிறது. எவ்வித கூச்சமோ குமைச்சலோ அன்றி தமிழர் என்ற அடையாளத் துடன் வாழ்வதற்குப் பதிலாக சாதி, மத, பிரதேச அடையாளங் களுடன் பத்திரிகையில் மணமகன்-மணமகள் விளம்பரம் செய்யப்படுவதும் பின்தங்கிய குழு அடையாளங்களையே இன்றும் பாதுகாப்பானதாகவும், தமது அடையாளமாகவும் பேண முயல்வது ஆரோக்கியமான சமூக உருவாக்கத்துக்கு உகந்ததல்ல.
சமகால வணிக சமுதாயத்தில் பெண்ணின் உடலும் அழகும் போகப் பொருட்களாக, பொருட்களின் விளம்பர மாக்கப்படும் அபத்தம் உலகம் முழுவதும் ஊக்குவிக்கப்படுகிறது. உலக அழகு ராணிப்போட்டிகள், பல்தேசியக் கம்பனிகளின் கட்டற்ற வியாபாரத்துக்கு திட்டமிட்ட முறையில் இடம் கொடுப்பதாக அமைகின்றன. மேற்கு நாட்டாரின் வரையறைக்குள் அழகின் அளவுகோல் தீர்மானிக்கப்படுவதும் வெள்ளை நிறமே அழகின் உச்சமாக கொள்ளப்படும் திணிப்பும் உருவாகிறது.
கறுப்பர் வாழும் நாட்டில் வியாபாரப் பொருள் பாவனைக்கு விளம்பரம் தேவையெனில் கறுப்பினப் பெண்ணையோ, ஆசிய நாடுகளில் பொருள் விற்பனை செய்வதற்குரிய மொடலாக விளம்பரம் செய்யப் பெண் வேண்டுமெனில் இந்தியப் பெண்ணையோ அழகுராணிகளாகத் தெரிவு செய்யும் போக்குகள் மலிவாகியுள்ளன. இதன் பின்னாலுள்ள பெண்ணுரிமைகளின் மறுப்புகளைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.
தமிழர் திருமண நடைமுறைகளிலும் சடங்குகளிலும் பெண்மீது பாராபட்சமான கருத்துத் திணிப்புக்கள் மேற்கொள்ளப் படுவதனை அவதானிக்கலாம்.'அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல் மூலம் கற்பிழக்கும் பெண் கல்லாவது கட்டாயம் என்று கட்டியம் கூறுவது பெண் ஒடுக்கலை ஊக்குவிப்பது ஆகும். பெண் மட்டும் தாலி கட்டிக் கணவனைச் சுமப்பதும் ஆணுக்கு அவ்வித அடையாளம் எதுவும் இல்லாதிருப்பதும் “சேறு கண்ட இடத்தில் மிதித்துத் தண்ணி கண்ட இடத்தில் கழுவுவது” என்ற ஆணாதிக்க கட்டற்ற களவியலை அங்கிகரிப்பதுமாகும். இத்தகைய சடங்குகளும் சம்பிரதாயங்களும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.
பெண்கள் உடலியல் மாற்றமேற்பட்டுப் பருவமடைந்ததும் பெண்களுக்கு மட்டும் சாமத்திய விழாச் சடங்கெடுப்பதுவும், பரத நாட்டியம் போன்ற பெண்ணின் பழைமை அரங்கப் பண்பாட்டினை விளம்பரம் செய்வதும் பெண்ணை மையப்படுத்தும் நிகழ்வுகளென ஏன் கருதக்கூடாதென்பதும் இவை மறு பரீசீலனைக் குட்படுத்தப்பட வேண்டியவையுமாகும்.
அழ.பகிரதனின் ‘அப்படியே இரு' என்ற கவிதையில் காட்டப்படும் பருவமடையும் பெண்ணுக்கு விதிக்கப்படும் சமூக இறுக்கம் கவனிக்கத்தக்கது.
“அப்படியே இரு மெல்ல சிரித்தபடி கமராவை நோக்கி கண்களைத் திருப்பு உடலைச் சுற்றியிருக்கும் மினுமினுக்கும் பட்டு மடிப்புக் குலையாது இருக்க கமராக் கண்களுக்கு காட்சி கொடு. நீ சமைந்து விட்டாய் ஆகையால் அப்படியே பதுமையாகஇரு உன் சுயத்தை இழந்து அப்படியே இரு”
நாம் நமது தாயைப் பற்றி என்ன கண்ணோட்டத்துடன் உள்ளோம். எமது மனைவி, எமது மகள், எமது சகோதரி பற்றி என்ன எண்ணம் கொண்டுள்ளோம். நாம் நாமாக - பெண்ணாக - ஆணாக எம்மை எதிர் கொள்ளும் சமூக அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
எமது சிந்தனை, கற்பனை, காதல், கல்யாணம், சடங்கு, வாழ்வு, மரணம், இருப்பு, எதிர்ப்பு, உயர்வு, தாழ்வு, எதனையும் தீர்மானிக்கும் ஆதிக்கக் கருத்தியலிலிருந்து விடுபட்டு - மானுடத்தை நேசிக்கும் மக்கள் சமூகத்தின் விடுதலையுடன் எமது பெண்கள் குலத்தின் நீதியை நிலைநாட்டுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். செயற்படுவோம். நடைமுறை மட்டுமே நமது வாழ்வில் மாற்றத்தை உண்டு பண்ணும். அத்தகைய நடைமுறைக்கு நாம் தீர்மானிக்கும் கொள்கையே அடிப்படையாகும். சிந்தனை செய்வதும் செயற்படுவதும் எமது மரபுகளையும் மாற்றங்களையும் மறுபரிசீலனை செய்யட்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக