தாமோதரம்
கட்டுரைகள்
Back
தாமோதரம்
தாமோதரம்
MADURA UNIVERSITY
T. P. MEENAKSHISUNDARAN UNIVERSITY BUILDINGS
Vice – Chancellor MADURA – 2
29 SEP 1970
யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம் காலம் சென்ற உயர் திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் உரைநடைப் பகுதிகளைத் தொகுத்து “தாமோதரம்” என்ற பெயரில் வெளியிடப்போவது கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். 1945 – லேயே இப்படிப்பட்ட தொகுதி ஒன்று வருகிற காலத்தையே எதிர்பார்த்திருந்தேன். இப்போது அது வருகின்ற செய்தி தமிழ் அன்பர் உள்ளத்தை எல்லாம் மகிழ்விக்கும். பிள்ளை அவர்களின் ஆராய்ச்சியையும் தமிழ் அன்பையும் இந்த உரைநடை நூல் தௌ;ளத் தெளிவுடன் எடுத்துக் காட்டும். இதனைப் பதிப்பித்தவர்களுக்கு தமிழின் வாழ்த்தும் தமிழ்நாட்டின் வணக்கமும் உரியன.
தெ. பொ. மீனாட்சிசுந்தரன்.
மனம் மகிழ் தாமோதரன்
நற்புலவர் ஏடெல்லாம் நாடிநலங் காணாமல்
உற்றசெல் உள்நுழைந் துய்ந்திடும் - பெற்றியைக்
காணாமற் காத்திட்ட சி. வை. தா மோதரனைப்
பேணுதலே நம்பெற்றிப் பேறு. 1
தோலா மொழித்தேவர் தொல்காப்பியர் விறலில்
தோலா வயித்தியன்சீர் நக்கீரன் - தோன்றவே
தாமே தவஞ்செய்து தாரணியிற் றோன்றினான்
தாமோ தரப்புலவன் தான். 2
கண்ணில் தசைபடர்ந்து கன்னித் தமிழரசி
மண்ணில் மறைய மறுகினனாய் - துண்ணுற்றே
வல்லறிவாம் ஊசியால் வள்ளல்தா மோதரனார்
தொல்லை வடிவளித்தான் தோய்த்து. 3
ஏடான பைந்தமிழின் ஏத்தரிய நூலெல்லாம்
தேடாமல் கையற்றுத் தேய்தல் - படாதே
தனம்தவம் கொண்டே தமிழ்நிலை காத்தான்
மனம்மகிழ் தாமோ தரன் 4
ஈழத் தமிழ்நூல்கள் ஈறுற் றழியாமல்
வீரத்தா மோதரன்போல் மேதினியில் - ஆர
நவமாய்ப் பதிப்பித்து நல்கும் பணியாம்
சிவகுரு நாதன் செயல் 5
- புலவர். நா. சிவபாதசுந்தரனார்.
அணிந்துரை
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்
வழங்கியது.
“நீடிய சீர்பெறு தாமோ தரமன்ன நீள் புவியில்
.......................................................................................
.......................................................................................
கோடி புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறரிதே”
- ஸ்ரீ வேதநாயகம்பிள்ளை.
“தாமோ தரம்பிள்ளை சால்பு எடுத்துச் சாற்ற எவர்
தாமோ தரம் உடையார்”
- ஸ்ரீ வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியார்.
“பிள்ளை அவர்கள் தமிழன்னைக்குப் புரியுந் திருத்தொண்டிற் பிற வித்துவான்களும் உழைத்துவர வேண்டுமென்ற கொள்கையே உடையவர்கள். ஒருசிலர் தம்மைத்தவிரத் தமிழ் நூல்களைப் பதிப்பிடும் பணியில் இறங்கிய பிறருக் கெல்லாம் நரக தண்டனை விதித்துச் சபித்துவந்துள்ளார்கள். பிள்ளையவர்கள் இவ்வினத்தைச் சேர்ந்தவர்களல்லர். உண்மையான அன்போடு உண்மையான தமிழ்த் தொண்டு புரிதலே பிள்ளையவர்களின் பெருநோக்கமா யிருந்தது”
- ஸ்ரீ வையாபுரிப்பிள்ளை.
ழூ ழூ ழூ
மேற்காட்டிய மூவரில் முதல் இருவரும் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்@ சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களை நேரில் அறிந்தவர்கள். வேதநாயகம்பிள்ளை தமிழ்ப் புலமை கனிந்து முதிர்ந்தவர்@ “பிரதாப முதலியார் சரித்திரம்” என்கின்ற பிரசித்திபெற்ற புனைகதையை உதவியவர்@ உ. வே. சாமிநாதையரின் ஆசிரியரான மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பாடிய “குளத்தூர் வேதநாயகன் கோவை” யின் பாட்டுடைத்தலைவர்.
சூரியநாராயண சாஸ்திரியார், பரிதிமாற்கலைஞன் என்று தம் பெயரை வழங்குபவர். தமிழிற் பெரிதும் ஈடுபாடுடையவர்@ பல நூல்கள் செய்து புகழ்படைத்தவர்@ நாவலரை, ‘தமிழ்வசனத்தின் தந்தை’ என்றவர்.
வையாபுரிப்பிள்ளை இந்த நூற்றாண்டிற் பிரசித்தமானவர்@ சென்னைச் சர்வகலாசாலையில் தமிழ்த்துறைத் தலைவராயிருந்து, தமிழாராய்ச்சி செய்தவர்@ ஆராய்ச்சித்துறையில் பெரும் புகழ் படைத்தவர்@ சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் அருமந்த நூல்களைப் பதித்தற்குப் பட்ட கஷ்டங்களை உள்ளவாறுணர்ந்தவர். பிள்ளையவர்களின் அழுக்காற்றை தூய இருதயத்தை நன்கு தெரிந்தவர்.
ழூ ழூ ழூ
சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் பதிப்புக்களில், இறையனார் களவியலுரையும், தொல்காப்பியப் பொருளதிகாரமும் தமிழன்னையின் இரு கண்மணிகள். இந்த இரண்டனையும் பதித்துதவியதே சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் போதுமானது.
ழூ ழூ ழூ
இறையனார் களவியலுரையில்,
‘இஃதென்னுதலிற்றோவெனின் தமிழ் நுதலிற்று’
என்ற வசனத்தையும்,
‘எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றோ! பொருளதிகாரம் பெறேமெனின் இவைபெற்றும் பெற்றிலேம்’ என்ற வசனத்தையும் பீஜமாக வைத்துக்கொண்டு, களவியலையும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தையும் ஆராய்ந்து, சங்கத்தார் ஆராய்ந்த தமிழினியல்பையும், அகத்திணை புறத்திணைகளின் சிறப்பியல்புகளையும், ஆரியத்துக்கும் தமிழுக்கும் உள்ள ஒருமையான தொடர்பையும், இன்னோரன்ன நூற்றுக்கணக்கான பல்வேறு துறைகளையுங் கண்டு, தம்மை யணுகியவர்கள் எட்டக்கூடியவைகளை எட்டத் தக்க அளவில் உபதேசித்துக்கொண்டு, ஒரு தத்துவப் பெரியார் இந்த நூற்றாண்டிலும் எங்கள் மத்தியிலிருந்ததை நான் நன்கு அறிவேன். அவர் இந்தச் சடஉலகுக்கு அப்பாற்பட்ட சித்துலகத் தொடர்புடையவராய், என்போன்றவர்களுக்கு எட்டாதவரா யிருந்தார். அந்த மகான் தமிழ்ப்பற்றியும் ஆரியம்பற்றியும் சொன்னவைகளில் ஒரு சிறு துளியைத்தானும், இன்று நடைபெறும் ஆராய்ச்சித் துறைகளிற் கண்டதுமில்லை@ கேட்டதுமில்லை.
தத்துவப்பெரியார் ஒருவருக்குத் தாமோதரம்பிள்ளை அவர்களின் பதிப்புக்களில் இரு புத்தகம் உபகாரப்பட்டு, அவர் சிந்தனைக்குத் தூண்டுகோலாயமைந்தமையை நினைக்குந்தோறும் பிள்ளைபால் ஓர் ஆராமை பிறக்கிறது@ உள்ளம் குளிருகிறது.
ழூ ழூ ழூ
பதிப்புத்துறையில் சென்ற நூற்றாண்டின் மத்திய பகுதியை நாவலர் காலம் என்று சொல்லலாம். அவர் மக்களை வாழ்வாங்கு வாழ்வைக்கும் முறையில், வசன நூல்களை எழுதியும், நூலுரைகள் செய்தும், பழைய நூலுரைகளை வெளிப்படுத்தியும் அச்சிற் பதிக்குந் துறையைப் பயன்படுத்தினார். நாவலரையடுத்துச் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதி தாமோரதம்பிள்ளை யவர்களின் காலமேயாம். அதனைத் தொடர்ந்து இந்த நூற்றாண்டு தொடக்கமான பகுதி சாமிநாதையர் காலம் ஆகும்.
பதிப்புத்துறையில் இங்கே குறிப்பிட்ட மூவருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பிள்ளையவர்களின் தமிழார்வத்தைக் கண்ட நாவலர், 1868இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையருரையைப் பரிசோதித்துப் பிள்ளையவர்களைக் கொண்டு பதி;ப்பித்துப் பிள்ளையவர்களைப் பதிப்புலகிற் பிரவேசிக்கச் செய்தார். அதன்மேல் முக்கியமான பஞ்சலக்கண நூல்களையும் தொல்காப்பியம் பொருளதிகாரத்தையும் பதித்து 1885 இல் பிள்ளையவர்கள் சற்றே மூச்சுவிட்டுச் சிரமபரிகாரஞ் செய்தார்கள். பின் கற்றறிந்தார் ஏத்துங்கலித் தொகையைப் பரிசோதித்து, அச்சிட்டுக் கொண்டிருக்குங் காலத்திலேதான். சீவகசிந்தாமணி ஏடுகளோடு போராடிக் கொண்டிருக்க உ. வே. சாமிநாதையர் அவர்களைச் சந்தித்தார்கள். அப்பொழுது ஐயர் அவர்களுக்கு வயசு 33. அச்சுத் துறைக்குப் புதியவராகையால் அத்துறையில் நீந்துதற்கு அச்சங்கொண்டிருந்தார்கள். பிள்ளையவர்களின் சந்திப்பு சிந்தாமணியை விரைந்து அச்சிடும் ஊக்கத்தை ஐயர் அவர்களுக்கு அளித்தது.
“இந்த நூலையும் (சீவகசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவிற் பதிப்பித்துப் பிரகடனஞ் செய்;யும்படி, யாழ்ப்பாணம் ம. ள. ள. ஸ்ரீ. சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்.’
என்கின்றார்கள் ஐயர் அவர்கள். இது 1887 இல் வெளிவந்த சீவக சிந்தாமணி முதற்பதிப்பு முகவுரையில் உள்ளது.
ழூ ழூ ழூ
பிள்ளையவர்களின் பதிப்புரைகள் பலதுறைப்பட்ட ஆராய்ச்சிகளைக் கொண்டவை. ஆராய்ச்சிகாரருக்கு நல்ல தூண்டுதல்கள் என்றுகொள்ளத்தக்கவை.
‘ஆராய்ச்சி அவ்வவர் அறிவா ற்றலுக்கேற்ற ஊகம் என்பது, ஆராய்ச்சித்துறையில் மேம்பட்ட மேலைத்தேசமேதை ஒருவரின் கூற்று.
தம் ஆராய்ச்சிகளை முடிந்த முடிபுகள் என்று பிள்ளையவர்கள் வற்புறுத்தவில்லை. நல்ல முடிபுகளை ஏற்றுக் கொள்ளும் நிலையில் பிள்ளையவர்களிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையவர்களின் தமிழார்வம், விடாமுயற்சி, மனப் புனிதம், பரோபகாரம் என்பவை நாம் எல்லாம் பி;ன்பற்றவேண்டியவை. பிள்ளையவர்களின் சரித்திரம் தமிழ்ச் சரித்திரத்தின் ஒரு பகுதி.
ழூ ழூ ழூ
இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன், இங்கே ஒரு சூழ்ச்சி நடந்தது. சேனாவரையத்தைப் பிள்ளையவர்கள் பதிப்பிக்கமுன் மற்றொருவர் பதித்தார் என்கின்ற தொரு எண்ணத்தை நிலைப்படுத்துவதே அச் சூழ்நிலையின் மர்மம். அந்தச் சூழ்ச்சியின் மர்மத்தை ஆராய்தற்கு இரண்டு வருடகாலங் கழிந்தது. மகாவித்துவான் சி. கணேசையர் அவர்களி;ன் உதவியால், மதுரைச் சங்கத்தார் மூலம் சூழ்ச்சியின் வஞ்சம் வெட்ட வெளியாயது. அதுபற்றி விரிவான கட்டுரை, ‘தொல்காப்பியப் பதிப்பு’ என்ற தலையங்கத்தில் 17-9-50 ஈழகேசரியில் வெளிவந்தது. அக்கட்டுரையின் முக்கியபாகம் இந்நூல் அநுபந்தத்திற் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ழூ ழூ ழூ
அப்பொழுது பிள்ளையவர்களின் பதிப்புரைகளைத் தொகுத்து அச்சிடவேண்டும் என்ற ஓர் எண்ணம் எனக்கு உதித்தது. சைவப்புலவர் திரு. இ. செல்வத்துரை அவர்களின் பரிபூரண ஒத்துழைப்பும் கிடைத்தது. கிடைத்தும் என் எண்ணம் சித்தியெய்தவில்லை. வருடங்கள் பறந்தன. நான் அவ்வெண்ணத்தை மறந்துவிட்டேன். பல வருடங்கள் கழிந்தும், பிள்ளையவர்களின் ஆன்மசத்தி திரு. இ. செல்வத்துரை அவர்களை அசைத்துக் கொண்டே யிருந்தது. அன்றி, திரு. சி. சிவகுருநாதன் ஆ.யு. அவர்களையும் பிள்ளையவர்களின் ஆன்மசத்தி ஆட்கொண்டு விட்டது.
குறிப்பிட்ட இருவர் வாயிலாகவும், பதி;ப்புரைத் தொகுப்பாகிய ‘தாமோரம்’ அன்றி, வேறுபல பயன்படும் நூல்கள் வெளிவருதற்கும் பிள்ளையவர்களின் ஆன்ம சத்;தி தூண்டுதல் செய்து கொண்டே யிருக்குமென்பது எனது நம்பிக்கை.
சி. க.
தாமோதர வரலாறு
பண்டிதர், சைவப்புலவர், சித்தாந்த பண்டிதர், சிறுப்பிட்டி திரு. இ. செல்லத்துரை அவர்கள் எழுதி உதவியது.
“சி. வை. தாமோதரம்பிள்ளை யாழ்ப்பாணத்திற் பிறந்த குற்றத்துக்காக அவர் சரித்திரமாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக்கேடு. அதற்குப் பரிகாரஞ் செய்யும் முறையில் அவர் பதித்த பதிப்புக்களில் உள்ள பதிப்புரைகளைத் தொகுத்துப் புத்தக உருவத்தில் ‘தாமோதரம்’ என்ற பெயரில் வெளியிடுதல் நன்று. பதிப்புரைகள் அவ்வக் காலத் தமிழ்ச் சரித்திரமாய், உயர் வகுப்பு மாணவர்களுக்கு இன்றியமையாதனவாய் அமையும்”
இப்படியொரு பந்தி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்கள் எழுதிய இலக்கியவழி – புதிய பதிப்பிலே, தமிழ் தந்த தாமோதரம்பிள்ளை என்ற கட்டுரையிலே வருகின்றது. இந்தப் பந்தியை வாசித்த பொழுது என் சிந்தனை பதினெட்டு வருடங்கள் பின்நோக்கி என்னை இழுத்துச் சென்று 1952 ஆம் ஆண்டிலே நிறுத்தியது.
அப்பொழுது, திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாலையிலே நான் பயிற்சி பெற்றுவந்தேன். பண்டிதமணியவர்களிடத்திலே நல்லதமிழை அறிந்து அநுபவிக்கும் ஒரு பெரும் பேறு, முன்னைத்தவ விசேடத்தினால் எனக்கு வாய்த்தது.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், இராவ் பஹதூர் சி. வைதாமோதரம்பிள்ளை முதலான சான்றோர்கள் ஆற்றிய அரிய பெரிய பணிகளின் சிறப்பியல்புகளை யெல்லாம் பண்டிதமணியவர்கள் மனமார வாயார எடுத்துச் சொல்லிக் கேட்போரின் உள்ளத்திலே என்றும் மாறாத பாஷாபிமான தேசாபிமான மதாபிமானங்களை வளர்த்து வந்தார்கள்.
சி. வை. தா. அவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அன்பளிப்புச் செய்த சின்னஞ் சிறிய கிராமத்திலே சிறுப்பிட்டியிலே, நான் தப்பித்தவறிப் பிறந்ததொரு பேற்றினாற் போலும், பண்டிதமணி யவர்கள், ‘சி. வை. தா’ அவர்களைப்பற்றி வகுப்பிலே விமர்சனம் பண்ணும் பொழுதெல்லாம், என்னையுமொரு பொருளெனக் கருதி, என்னுள்ளத்திலே பெருமிதமும் அபிமானமும் ஊற்றெடுக்குமாறு கிருபாநோக்கஞ் செய்யத் தவறுவதில்லை.
அந்தக் கிருபாநோக்க விசேடத்தினாலே, ‘சி. வை. தா’ அவர்களிடம் நான் கொண்ட அபிமானம் மேன்மேற் செழித்து வளருவதாயிற்று. அதுகாரணமாக, அந்தத் தமிழ்த் தந்தையின் பெயரினால் ஏதாவதொரு நல்ல காரியத்தைச் செய்யவேண்டும் என்னும் ஆர்வம் என்னைப் பிடர்பிடித்து உந்தியது.
இந்நிலையிலே ஒருநாள். பண்டிதமணியவர்கள் என்னை அழைத்து. “சி. வை. தாமோதரம்பிள்ளை பதித்த நூல்களிலுள்ள பதிப்புரைகளைத் தொகுத்து ஒரு நூல்வடிவில் வெளியிடுதல் நன்று” என்று சொல்லி அப்பதிப்புரைகளைத் தொகுக்குமாறு பணித்தார்கள். அப்பணிப்புரை கேட்டு எனக்கு உண்டான உவகை சொல்லுந் தரமன்று.
மற்றைநாள் முதற்கொண்டே ‘சி. வை. தா’ அவர்கள் பதித்து வெளியிட்ட நூல்களைத் தேடுவதிலும் பதிப்புரைகளைப் பிரதிபண்ணுவதிலும் ஈடுபடலானேன். நான் எடுத்துக் கொண்ட கருமம் இரண்டொரு மாசத்திலே ஒருவாறு நிறைவுற்றது. அரிதில் முயன்று தேடிய அப்பதிப்புரைகளின் தொகுப்பை மனமகிழ்ச்சியுடன் பண்டிதமணியவர்களிடம் சமர்ப்பித்தேன். அவர்கள் அதற்கோர் அணிந்துரையும் எழுதிச் சேர்த்துவைத்திருந்தார்கள். தொகுப்புத் தவறிவிட்டது போலும், அச்சில் வரவில்லை. கடவுள் கருத்தை ஆரறிவார்! பதினெட்டு வருடம் - ஏறக்குறைய ஒரு தலைமுறை – கழிந்தது. 1970-ஆம் ஆண்டும் ஆயிற்று.
பண்டிதமணியவர்கள் இலக்கியவழியிலே குறிப்பிட்ட பகுதி அடிக்கடி நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. அதனாலே “தாமோதரம்” என்ற பெயரில் பதிப்புரைத் தொகுப்புநூல் ஒன்று வரவேண்டும் என்ற எண்ணம் என்னை விழுங்கியது. இக்காரணத்தால், இரண்டாம் முறையாகப் பதிப்புரைத் தொகுப்புவேலை ஆரம்பமாயிற்று. ஆரம்பமாயிற்று என்பதெல்லாம் வீண் கால தாமதமே! ஆரம்பமானது ஆரம்பமாகு முன்னமே தாமோதரம் வெளிவந்து, இதோ உங்கள் கையிலே இருக்கின்றது. இந்நிகழ்ச்சி இந்நாளிலே காண்டற்கரிய மகா அற்புதமானது@ அடைதற்கரிய பேராச்சரியத்தை அளிப்பது.
இவ்வற்புதத்தை நிகழ்த்தியவன் நானல்லன்@ இது நிகழ்தற்குக் காரணர்களானோர் அறுவர் பெருமக்கள் உளர்.
அவர்களுள், பண்டிதர் பிரம்மஸ்ரீ ச. பஞ்சாட்சரசர்மா, பண்டிதர் திரு. ச. சுப்பிரமணியம், சைவப்புலவர் திரு. க. சி. குலரத்தினம், சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் புத்திரர் திரு. கு. அம்பலவாணபிள்ளை, பலாலி அரசியனர் ஆசிரியபயிற்சிக் கலாசாலை நூலகர் திரு. பொ. இராசரத்தினம் என்னும் ஐவரும் தேவையான நூல்களை உடனுக்குடன் உவந்து உபகரித்தவர்கள். ஆறாமவரான திரு. சி. சிவகுருநாதன். ஆ. யு. னுip – in – நுன.அவர்கள் இத்தாமோதரத்தின் அருமை பெருமைகளை உள்ளவாறுணர்ந்தவர்கள்@ இதனை அழகிய முறையில் விரைந்து வெளியிடுவதன்மூலம் இந்நூலுக்கும் எமக்கும் அபயமளித்தவர்கள்.
இந்த இருதிறத்து அற்புதர்கள் அறுவர்க்கும், பண்டிதமணி அவர்களுக்கும் நானும் நீங்களும் பெரு நன்றிக் கடப்பாடுடையோம்.
சி. வை. தா. வரலாற்றுச் சுருக்கம்
இராவ்பஹதூர்சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னுங் கிராமத்திலே வைரவநாதபிள்ளை என்பாருக்கும் அவர் பத்தினியாராகிய பெருந்தேவி என்பாருக்கும் சிரேட்ட புத்திரராய் 1832 ò செப்டம்பர் ñ 12 Œ பிறந்தார்கள்.
அவர்கள், பாடசாலைப் பரிசோதகராயிருந்த தமது தந்தையாரிடமே உரிய பருவத்திற் கல்வி பயிலத் தொடங்கி, வாக்குண்டாம், நன்னெறி, மூதுரை, திவாகரம், உரிச் சொல் நிகண்டு முதலிய நூல்களை ஐயந்திரிபறக் கற்றுணர்ந்து, சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர்பால் அடைந்து, நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியப் பயிற்சியும், இலக்கணப் பயிற்சியும் பெற்றுத் தமிழ் விற்பன்னராய் விளங்கினார்கள்.
தமிழோடு ஆங்கிலமும் பயில விரும்பிய பிள்ளையவர்கள், தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் கலாசாலையிலே ஆங்கிலக் கல்வியை ஆரம்பித்தார்கள். பின்னர் அம்மொழியிலே உயர்தரக்கல்வி பெறும் நோக்கமாக வட்டுக்கோட்டையிலுள்ள ‘யாழ்ப்பாணச் சர்வ சாத்திரக் கலாசாலை’யை அடைந்து 1844 ò அக்டோபர் ñ 12 Œ தொடக்கம் பயிற்சிபெற்று வருவாராயினார்கள். அக்கலாசாலையிலே, கறல் விஷ்வநாதபிள்ளை, வித்துவான் கதிரைவேற்பிள்ளை, நெவின்ஸ், சீ. டி. மில்ஸ் முதலான பேரறிஞர்கள் பிள்ளையவர்களுக்கு ஆசிரியர்களாயிருந்து கற்பி;த்து வந்தார்கள். பிள்ளையவர்கள், அங்குக் கற்பிக்கப்பட்ட பாடங்களுட் கணிதம், ஆங்கிலம், தமிழ், தத்துவம், வானசாத்திரம் என்னும் பாடங்களிலே விசேட திறமைபெற்று முதன் மாணவராய் விளங்கி, யாவரானும் நன்குமதிக்கப் பெற்றார்கள். பி;ள்ளையவர்களிடத்திலே விளங்கிய தமிழறிவைக் கண்டு இறும்பூதெய்திய ஆசிரியர் நெவின்ஸ் அவர்கள், பிள்ளையவர்களைப் ‘பண்டிதன்’ என்று அழைப்பது வழக்கமாயிற்று.
இவ்வாறு நன்மதிப்புப் பெற்று, எட்டுவருட காலத்தை ஆங்கில உயர்தரக் கல்வியிற் பயன்படுத்திய பிள்ளையவர்கள், 1852 ஆம் ò செம்டம்பர் ñ 23 Œ தமது இருபதாம் வயசிலே, கோப்பாயிலிருந்த போதனாசத்தி வித்தியாசாலையின் ஆசிரியர்களுள் ஒருவராக நியமிக்கப் பெற்றார்கள். இங்குக் கற்பித்துவரு நாளிலேயே நீதிநெறிவிளக்க உரை பிள்ளையவர்களால் வெளியிடப்பட்டது.
அந்நாளிற் சென்னையிலே வாழ்ந்த பார்சிவல்பாதியார் பிள்ளையவர்களது விவேகசாதுரியத்தையுந் தமிழ் புலமையையுங் கேள்வியுற்று. அவர்களைச் சென்னைக்கு அழைத்துத் ‘தினவர்த்தமானி’ என்னும் பத்திரிகை ஆசிரியராக நியமித்தார்கள். பிள்ளையவர்கள் பத்திரிகாதருமத்தினின்றிம் எட்டுணையுந் தவறாமல், நடுநின்று விடயங்களை ஆராய்ந்து, வசனநடையை அணிபட அமைத்துப் பத்திரிகையை நடத்தியும் லஷ்சிங்டன்துரை முதலான ஆங்கிலேயர்க்குத் தமிழ் கற்பித்தும் வந்தார்கள் இதனால், பிள்ளையவர்களது திறமையை நன்கு அறிந்த அரசினர், அவர்களைச் சென்னை இராசதானிக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதராக நியமித்தார்கள்.
பிள்ளையவர்கள், இராசதானிக் கல்லூரியிலே தமிழ் பண்டிதராயிருந்து கடமை புரிந்துவருநாளிற் சென்னை சர்வசாத்திரக் கலாசாலை ஸ்தாபிக்கப்பட்டது. அக்கலாசாலையில் 1857 ஆம் வருஷம் முதன்முதல் நடாத்தப்பட்ட பிரவேச பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்த மூவரிற் பிள்ளையவர்களும் ஒருவர். பிரவேச பரீட்சைக்குப்பின் நான்கு தினங்களுள். முதன்முதல் பி. ஏ. பரீட்சையும் நடைபெற்றது. இப்பரீட்சைக்கும் பிள்ளையவர்கள் தமது ஆசிரியரான காறல் விஷ்வநாத பிள்ளையவர்களுடன் தோற்றிச் சித்தியடைந்தார்கள். இதன்பின், கள்ளிக்கோட்டையிலுள்ள இராசாங்க வித்தியாசாலை உதவியாசிரியராக நியமிக்கப் பெற்றார்கள். இவ்வித்தியாசாலையிற் கடமையாற்றிய ஆறுமாசகாலத்துள், அவ்வித்தியாசாலையி லுண்டாக்கிய விசேட அபிவிருத்திகள் சீர்திருத்தங்கள் காரணமாகப் பிள்ளையவர்களுக்கு அரசாங்க வரவு செலவுக் கணக்குச் சாலையிற் கணக்காய்வாளர் பதவியும், அத்துறையிற் காட்டிய திறமை காரணமாக விசாரணைக்கர்த்தர் பதவியும் முறையே கிடைத்தன. இக்காலத்திலே (1871) பிள்ளையவர்கள் பி. எல். பரீட்சையிலும் வெற்றி பெற்றார்கள்.
சின்னஞ்சிறு பராயந்தொட்டே தமிழ்மொழியில் மிக்க பயிற்சியும் சிறந்த தமிழபிமானமு முடையராய் இருந்த பி;ள்ளையவர்களுக்கு, வரவுசெலவுக் கணக்குச்சாலையிற் கடமையாற்றிவருங் காலத்திலே – ஒய்வு நேரங்களிலே, பண்டைத் தமிழ்க் கிரந்தங்களை மேன்மேற்கற்பதிலும். பரிசோதனஞ் செய்வதிலும் ஈடுபாடு உண்டாயிற்று. கடல்கோளாலும் பிற காரணங்களினாலும் அரிய பெரிய தமிழ் நூல்களெல்லாம் அழிந்தொழிய, எஞ்சிநின்ற சில நன்னூல்களும். அந்நாளிலே “செல்துளைத்த துளையன்றி மெய்ப்புள்ளி விரவாத சென்னாளேடு” களாய், ஒரஞ் சிதைந்;தும் இதழ் ஒடிந்தும் ‘சீரழிந்தும் கெட்டுச் சிதைந்து நிரைமாறிப் - பேரழிந்து பூஞ்சு பிடித்துப் பிடியாகி – முன்பின் முரணி முழுதும் புழுவுழுது – கம்பை நடுமுரிந்து கட்டுவிட் டுச்சிதறி - மூலைக்கு மூலை மடங்கி முடங்கி” எடுப்பாரும் அடுப்பாருமின்றி மண்ணுக்கிரையாகிக் கிடந்தன. இந்நிலையைக் கண்ட பிள்ளையவர்கள், அழிந்தொழிவனவாய அக்கிரந்தங்களுட் சிறந்தனவற்றை விரைந்தச்சிட்டுப் பாதுகாக்க வேண்டியது எத்துணை இன்றியமையாப் பெருங் கடமை யென்பதை யுணர்ந்து, அதற்கான நன்முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
முன்னர் – தமது இருபதாம் வயசிலேயே நீதிநெறி விளக்கத்தை அச்சிட்டு வெளிப்படுத்திய பிள்ளையவர்களுக்கு ஏடுகளைப் பரிசோதனஞ் செய்து அச்சிடுவது புதியதொரு முயற்சியன்று. ஆயினும், இராசாங்க உத்தியோகத்திலிருந்த தமக்குத் தேசமெங்குஞ் சென்று பரிசோதனத்துக்குத் தேவையான ஏட்டுப் பிரிதிகளைப் பெறுதற்குப் போதிய அவகாச மின்மையானும், அந்நாளிலே தமிழ்நாடெங்கணும் மெய்யறிவுத்திய ஆசாரியரும் மகா வித்துவசிரோமணியுமாத் தமக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்கள் இப்பெருங் கடமையை மேற்கொண்டு அநேக நூல்களைத் திருத்தியும் விளக்கியும் விரித்தும் அச்சிடுவித்துவந்தமையானும் தாம் அச்சிட்டு வெளியிடத் தொடங்காமல், நாவலரவர்களது பரிசோதனம் பெற்று வெளியாவதே நன்றென்று கருதி, அவர்களுக்குத் தம்மாலியன்ற உதவிகளைப் புரிந்து வந்தார்கள். இத்தொடர்பினால் நாவலரவர்கள் பரிசோதித்துக் கொடுத்த தொல்காப்பிய சொல்லதிகாரத்தைப் பிள்ளையவர்கள் தம்பெயரால் அச்சிட்டு விபவ (1868) ò புரட்டாதி ñ வெளியிட்டார்களென்;பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்நூல் வெளிவந்தபின் பதினொரு வருடங்கள் கழித்து – 1879 ò கார்த்திகை ñ 21Œ நாவலரவர்கள் இறைவனடி யடைந்தாராக, அதனால்,
“வேதம்வலி குன்றியது மேதகுசி வாகம
விதங்கள் வலிகுன்றி னவடற்
சூதன்மொழி மூவறுபு ராணம்வலி குன்றியது
சொல்லவரி சைவ சமயப்
போதம்வலி குன்றியது பொற்பொதிய மாமுனி
புகன்றமொழி குன்றி யதுநம்
நாதனிணை ஞாலமிசை நாடரிய ஆறுமுக
நாவல ரடைந்த பொழுதே”
என்று வருந்தி, நாவலரவர்கள் மேற்கொண்ட பணியைத் தொடர்ந்து நன்னூல்களை யெல்லாம் அச்சிட்டுத் தமிழைப் பாதுகாத்தலே தம் வாணாட் கடமையாகுமெனத் துணிந்த பிள்ளையவர்கள், வீரசோழியம் என்னும் நூலை 1881 ò வெளியிட்டார்கள். நாவலரவர்களது மறைவுக்குப்பின் இரண்டு வருடங்கள் கழித்து இராசாங்க உத்தியோகத்தினின்றும் பிள்ளையவர்கள் இளைப்பாறினார்கள். அதன்பின், தமது முழு நேரத்தையும் தாம் ஆற்றத் துணிந்த நற்பணிக்குச் செலவிடுவாரானார்கள். அதன்பயனாய், 1883 ò ஓதணிகைப்புராணம் 0 இறையனார் அகப்பொருள் என்பனவும், 1885 ò தொல்காப்பியம் பொருளதிகாரமும், 1887 ò கலித்தொகையும், 1889 ò இலக்கண விளக்கம் சூளாமணி என்பனவும், 1891 ò தொல்காப்பியம் எழுத்ததிகாரமும், 1892 ò தொல்காப்பியம் - சொல்லதிகார (நச்சினார்க்கினிய)மும் வெளிவந்தன. (1897 ò பிற்பகுதியிலே புறநானூறு – மணிமிடை பவளம் வரை பிள்ளையவர்களாற் பரிசோதிக்கப்பட்டதாயினும், வெளியிடப் படவில்லை.
இந்நூல்களை வெளியிட்ட தோடமையாது, கட்டளைக் கலித்துறை என்னும் இலக்கண நூலையும், பொருட் பொலிவு உவமான உவமேயச்சிறப்பு நடையழகு முதலியன செறிந்து கற்றோர்க்கு வியப்பைத் தரும். ழூவசன சூளாமணியையும் மகத்துவம் என்னும் செய்யுளும் உரையும் செறிந்த சைவ நூலையும், ஆறாம், ஏழாம் வாசக புத்தகங்களையும் நட்சத்திர மாலை முதலியனவற்றையும் தாமே யாத்து வெளியிட்டார்கள்.
ஓ இந்நூலிற் பதிப்புரை இல்லை.
ழு இந்நூலிற் பதிப்புரைக்குப் பதிலாக ‘நன்றி கூறல்’ உளது.
ழூ இந்நூலை முதலில், தாவடி அம்பிகைபாக உபாத்தியாயரவர்களைக் கொண்டு எழுதுவித்தா ரெனவும், பின்னர்ப் பலரது வேண்டுகோளுக்கிணங்கத் தாமே திருத்தியும் புதுக்கியும் எழுதினாரெனவும் கூறுப.
பிள்ளையவர்கள் இராசாங்க உத்தியோகத்தினின்று ஒய்வுபெற்ற பின் 1887 ò தொடக்கம் புதுக்கோட்டைச் சமஸ்தான மகாமன்றத்து நியாயாதிபதிகளில் ஒருவராயும் நீதிபதியாயும் நான்;கு வருடங்கள் கடமையாற்றியவர்கள்@ சென்கைத் திராவிடக்கிரந்த பரிபாலனசபை, நியாய பரிபாலன சபை என்பவற்றில் அங்கத்தவராயும் சென்னைச் சர்வகலாசாலைத் தமிழ் பரீட்சகராயும் இருந்து பணிபுரிந்தவர்கள். சென்னை சர்வகலாசலையின் முதல் வித்தியார்த்தி என்ற பெருமைக்கும் உரிமையுடையவர்கள்.
தேச மத பாஷாபிமானமிக்கவரும் சிவபூசாதுரந்தரும் ஏடுகாத்த பீடுடையாரும் ஆகிய சி. வை. தாமோதரம்பிள்ளையவர்களது சால்புடைமையைக் கண்ட சென்னை அரசாங்கம் 1975 ò இராவ் பஹதூர் (சுயு ழு டீயுர்யு – னுருசு) என்னுங் கண்ணியப்பட்டம் நல்கிக் கௌரவித்தது. இத்துணைப் பெருஞ்சிறப்பெய்தித் தமிழரனைவர்க்கும் ஒரு தமிழ்த் தந்தையாய் வாழ்ந்த பி;ள்ளையவர்கள் 1901 ò தை ñ 1 உ செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவிலே வைகுந்த ஏகாதசி என்னும் புண்ணிய காலத்திலே சங்கமிருந்து தமிழாய்ந்த சிவனார்தந் திருவடிக்கீழ் எய்தி அயராவின்பத் தழுந்தினார்கள்.
வாழிய வமலன் பாதம வாழிய தமிழின் மாட்சி
வாழிய வதுகொள் சங்கம் வகுத்தநன் னூல்களெல்லாம்;
வாழிய ரருநூல் வல்ல வண்புகழ்ப் புலவர் மேலும்
வாழிய ரந்நூ லோம்பும் வள்ளலெந் தாம னன்னார்.
உ
நன்றியுரை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் அடிச்சுவட்டிற் சென்று பல அரிய தமிழ் நூல்களை அச்சேற்றினார் உயர் திரு. சி. வை. அவர்கள். அந்நூல்களுக்கு அவர்கள் எழுதிய பதிப்புரைகள் விலைமதித்தற்கரிய செல்வங்கள்.
1945-ம் ஆண்டில் வெளிவந்த “ஈழகேசரி” புதுவருட விசேட அநுபந்தத்தில் அப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியரா யிருந்தவரும், இப்போது மதுரைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராயிருப்பவருமாகிய உயர் திரு. வித்வான் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், ஆ. யு.இ டீ. டு.இ ஆ. ழு. டு. அவர்கள் “சைவத் தமிழ் அன்பரின் பாடல்கள்” என்ற தலைப்பில் நீண்டதொரு கட்டுரை எழுதி வெளியிட்டிருந்தார்கள். அது.சி. வை. தா. வின் கவிதைகளுக்கு ஒரு முன்னுரையாக அமையுமெனினும் அன்னாரது உரை நடையைப் பற்றியும் குறிப்பிடுவதாயிற்று:-
“தாமோதரம்பிள்ளை யவர்களின் திருநாளைத் தமிழுலகங் கொண்டாடுகின்றது. இத்திருநாளைப்பற்றிய எண்ணம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே பயின்று வரும் இலங்கை மாணவ ருள்ளத்தே அரும்பிவிட்டது என அறிந்து எனக்கு ஓர் இறுமாப்புண்டு. இல்லை@ செம்மாப்பே உண்டு. பிள்ளையவர்கள் எழுதிய உரைநடைப் பகுதிகளைத் தொகுத்துத் திருநாள் மலராக அச்சிட்டு வழங்கவும் அவர்கள் எண்ணினார்கள். ஆனால் அஃது ஆதற்கு ஒரு காலம் உண்டு@ அக்காலம் இன்னமும் வரவில்லை..........”
பேராசிரியப் பெருந்தகையாரின் அக்கட்டுரையே இந்நூல் வெளியீட்டுக்கு வித்து. வித்து முளையாகி வளர்ந்த வரலாற்றை நண்பர் இ. செல்லத்துரை அவர்களின் இந்நூலிலுள்ள “தாமோதர வரலாறு” கூறுகின்றது.
இந்நூல் வெளிவர வேண்டுமென்று பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் பேரூக்கங்காட்டி அணிந்துரையும் வழங்கினார்கள். அவர்களுக்குத் தமிழ்பேசும் மக்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளனர். எங்கள் நன்றியும் வணக்கமும் கூறாமலே யமையும்.
பன்மொழிப் புலவர், பல்கலைச் செல்வர் உயர்திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் 1945ம் ஆண்டிலே தாம் எழுதியதை நினைவுகூர்ந்து இவ் வெளியீட்டுக்குப் பராட்டுரை ஒன்று வழங்கியுள்ளார்கள். ஆழ்ந்தகன்ற கல்விக்கும், நேர்மையான ஆராய்ச்சிக்கும், அன்பு, பணி முதலாய பண்புகளுக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் தமிழ்ப் பெரியார் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர்கள் மீது பெருமதிப்பும், தம்மையடைந்த ஈழநாட்டுத் தமிழ் மாணவரிடம் ஆரா அன்பும் வைத்து எம்மையெல்லாம் மகிழ்விப்பவர். அவர்கட்கு நாம் நன்றிகூறி யமையாது.
சி. வை. தா. வின் நினைவைப் பரப்பப் பல வழிகள் முயன்று வெற்றியும் கண்ட புலவர் நா. சிவபாதசுந்தரனார் ஆசியுரை வழங்கும் உரிமையைப் பெற்றுள்ளார். அவர்களுக்கும் எங்கள் நன்றி உரியது.
இந்நூல் வெளிவருவது தனியொருவருடைய முயற்சியாலேயே. அவர்தான் பண்டிதர், சைவப் புலவர் செல்லத்துரை அவர்கள். அவர்களுக்கு யார் எப்படி நன்றி கூறுவது?
இந்நூலை இத்துணைச் சிறப்புற அச்சிலேற்றித் தந்த யாழ்ப்பாணம் சைவப் பிரகாச அச்சியந்திரசாலை அதிபர், தொழிலாளர் முதலியவர்கட்கு எங்கள் நன்றி உரியது.
சி. சிவகுருநாதன்
(பொங்கற்றிருநாள்) தலைவர்
14-1-71 யா. கூ. த. நூ. ப. வி. கழகம்.
1. வீரசோழியப் பதிப்புரை
தெய்வாசாரிய வணக்கம்
யானை யானனப் பிரணவச் சிகரனை யிதயத்
தான மேயவாஞ் சண்முகன் றனைமறை மூல
மான வாதியை யருட்கயி லாயநா தப்பேர்
ஞான சற்குரு நாதனை நாடொறு நவில்வாம்.
சரஸ்வதி வணக்கம்
வெள்ளிதழ்த் தாமரை நள்ளணங் கிணையடி
உள்ளுதூஉந் தமிழ்வளங் கொள்ளுதல் குறித்தே.
தமிழாசிரிய வணக்கம்
எழுத்தொடு விழுத்தமிழ் பழுத்தசெந் நாவினன்
முழுத்தகை யேற்கவை யழுத்தியோன் சுன்னா
கத்துயர் மரபினோன் முத்துக் குமார
வித்தக னடிதலை வைத்துவாழ்த் துவனே
அவையடக்கம்
செந்தமிழ் விந்தைகை வந்தபா வாணரென்
சிந்தையிற் சந்தத முந்திவாழ் குநரே.
மலர்தலை யுலகிற் குலவுபற் பலவள – நலமெலா மிலகிய தலமெனா நிலவிய – பொலிவுடைப் புண்ணிய பூமியாகிய பரதகண்டத்தில் வழங்கும் பாஷைகளுள் ஆதிகாலந் தொட்டுள்ளன சம்ஸ்கிருதமும் தமிழுமாம். இவற்றில் ஒன்று சிவபெருமானிடத்தும் மற்றது சுப்பிரமணியக் கடவுளிடத்தும் உற்பவித்தன என்னும் ஆகம ஐதீகப் பிரமாணங்களே இதற்குச் சான்றாகும். “ஆதியிற் றமிழ் லகத்தியற் குணர்த்திய – மாதொரு பாகனை வழுத்துதும்” எனவும் “வடமொழியைப் பாணிநிக்கு வகுத்தருளியதற்கிணையாத் - தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந்; தொழுதேத்தக் - குடமுனிக்கு வற்புறுத்தார் கொல்லேற்றுப் பாகர்” எனவுந் தமிழிற்கும் ஈசுவரோற்பத்தியே கூறுவாருமுளர். சம்ஸ்கருதத்திற்குப் பாணிநீயம் போலத் தமிழிற்கு ஆதியிலக்கணஞ் செய்தவரன்றித் தமிழ் மொழியைத் தந்தவர் அகத்தியரல்ல ரென்றறிக. அழகினானும் வலிமையானுமன்றிக் காலத்தினானும் ஒன்றற்கொன்று சமத்துவ முடையதென் றொப்பித் தற்கன்றே ஒன்றை வடமொழி யென்பார் மற்றதைத் தென்மொழி யென்பதூஉம் ஒன்றைச் சிவபெருமான் தந்ததென்பார் மற்றதைச் சுப்பிரமணியக் கடவுள் தந்தருளியதென்பதூஉம்@ வடக்குக்குத் தெற்கும் சுவாமிக்குச் சக்தியும் பிந்தியவென்றாற்; சம்ஸ்கிருதந் தமிழிற்கு முந்திய தென்க. சம்ஸ்கிருத தமிழ்க் கடல்களின் கரைகண்ட பேராற்றலுடைய சிவஞான யோகீசுவரர்.
“இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும்
இருமொழியு மான்றவரே தழீஇயினா ரென்றாலிவ்
இருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ”
என இரண்டனதும் ஒப்புமையை மெய்ப்படுத்தினர்.
ஆதிகாலத் தாரியரோடு சம்ஸ்கிருதம் இமயமலைக்கப்பாலிருந்து வந்ததென்றும்;, ஆரியர் வடபாலிற்புக்கு கங்காதீர தேசங்களை வென்று கைப்பற்றியபோது அங்;கே வசித்தவர்கள் தமிழரென்றும், ஆரியரைச் செயிக்க முடியாமையானும் அவர்க்குக் கீழ்ப்பட்டிருக்க மனமொவ்வாமையானுஞ் சுயேஷ்டபங்கம் உறுவதினுந்தமது நாட்டைக் கைவிட்டுப் பிறவிடஞ் சேர்ந்து சஞ்சரித்தலே தமக்குச் சிறப்பென்று கருதித் தமிழர் தென்றிசைச் சென்றுவதிந்து தமக்குள்ளே சேர சோழ பாண்டிய இராச்சியங்களை ஏற்படுத்தினார்களென்றுந் துணிவார் பலருளர். இவர் மதத்திற்குச் சார்பான அயற் சாட்சிகளும் பலவுள. இஃதுண்மையாயின் இந்தியாவிற்கு ஆதிபாஷை தமிழென்றே முடியும்.
காசியிலிருந்த வடமொழிச் சங்கத்தாரோடு மாறு கொண்டு, அவரிறுமாப்பை அடக்கும் பொருட்டு அகத்தியர் நெடுநாட் பொதிய மலையிற் றவம்புரிந்து, சுப்பிரமணிய சுவாமி வரத்தினாற் றமிழுக் கிலக்கணஞ் செய்து சமஸ்கிருத நூலாரைத் தலைகவிழச் செய்தாரெனிற் றமிழின் மான்மியம் வேறு சொல்லவும் வேண்டுமா? கலைக்கியான நூல்களுஞ் சாஸ்திரப் பயிற்சியுஞ் சம்ஸ்கிருதத்தில் முற்பட்டதும் அதிலிருந்து பல நூல்களும் அவற்றோடு பல்லாயிர மொழிகளுந் தமிழில் வந்ததும் மெய்யே. அதனால் றமிழ் பிந்தியதென் றெங்ஙனம் போதரும்! வடமொழி மாந்திரத்து வாழ்ந்தார் கொண்ட அகந்தையை ஆண்டுச் சிற்றில் நிகர்த்த தென் மொழியைச் சிறப்பித்துக் கூடகோபுரம் வகுத்து மாடமாளிகையாக்கி அடக்கினமையால் வடமொழி முந்தியதா? ஒருகாலத்திற் குடிசையாயிருந்து பின் மண்டபமாயினதால் அக்குடிசை தோன்றியகாலம் அயலில் வகுத்த மண்டபத்திற்குப் பிந்திய தென்று சாதிப்பது தர்க்கலºணமாகுமா? விபரீதம்! விபரீதம்!!
இகழ் இமிழ் உமிழ் கமழ் கவிழ் குமிழ் சிமிழ் என ழகரப் பேறு பெற்ற பதங்கள் போலத் தமிழ் என்னுஞ் சொல் தனிமைப் பொருள் குறித்த தமியென்னும் வினை அடியாற் பிறந்து, வினை முதற் பொருண்மை உணர்த்திய விகுதி குன்றித், தனக்கிணையில்லாப் பாஷை என்னும் பொருள் பயப்பது. அங்ஙனமாயின், தமியேன் என்பது போல இழிவுபொருளன்றோ பயக்கு மெனின், அற்றன்று, ஒரே தாதுவிற் பிறந்தும் அடியேன் அடிகள் எனவும் அளியேன் அளியாய் எனவும் நிற்பனவற்றுள் ஒன்று இழிவு பொருளும் மற்றையது உயர்வு பொருளும் உணர்த்தினவென்க. செவிக்கினிமை பயத்தலான் மதுரம் என்னும் பொருட்பேறுடைத்தாகித் தமிழென வழங்கிய தென்பாருமுளர். அஃதெவ்வாறாயினும் ஆகுக. தமிழ் என்பது தென்மொழிக்குத் தென் சொல்லாகிய பெயரே யாமெனக் கொள்க. இதை ஒழித்துத் திராவிடமென்னும் வடமொழியே தமிழென்றாகியதெனச் சற்று ஆலோசனையின்றிக் கூறுவாருமுளர். அவர் மதஞ் சாலவும் நன்றாயிருந்தது!! தமிழிலே தமிழ் என்;னம் பதம் வரமுன்னர்ச் சம்ஸ்கிருதத்திற் றிராவிடம் என்னும் மொழி உளதாகில் இப் பெயர் எப்பொருளை உணர்த்திற்றோ? உலகத்தில் எஞ்ஞான்றும் பெயரா பொருளா முந்தியது? பொருளெனில் அப்பொருள் இருக்கும் இடத்தா அஃதில்லாத பிறிது தேயத்திலா அதன் பெயர் முன்னர் நிகழும்? இ.ஃதுணராது தமிழ் வழங்கிய இடத்திற் றமிழுக்கோர் பெயரிருந்ததில்லை யென்றுஞ் சமஸ்கிருதத்திலிருந்து அதற்குப் பெயர் வந்ததென்றுஞ் சொல்வது யார்க்கும் நகைவிளைக்குமே. இஃதொன்றோ யாதொரு தமிழ்மொழியில் இரண்டொரெழுத்துச் சம்ஸ்கிருத மொழிக்கொப்ப நிகழுமாயின் அது சம்ஸ்கிருதத்தினின்று பிறந்ததெனச் சாதிக்கின்றனர். மேலைத்தேயவாசிகளின் இங்கிலீஷ் முதலிய அந்நிய பாஷைகளில் இன்றியமையா வீட்டுச் சொற்களாகித் தந்தை தாயரை குறிக்கும் பாதர் மதர் என்பனவாதியும் வடமொழி அடியாய்ப் பிறந்த தென்பரா? அப்படியாயின் வடமொழியைக் காணமுன் அத்தேசத்தா ரெல்லாந் தாய் தந்தையரை அழைத்தற்கோர் வீட்டுச்சொல் இல்லாதிருந்தனரென் றன்றோ முடியும்? ஆண்டுள்ள பாதர் மதர் ஒப்ப ஈண்டும் பிதா, மாதா ஆயிற்றெனில் யாது குற்றம்? தருக்கத்திற் காகதாலீய நியாயத்தினுண்மை அறியாமலும் ஆரியமொழிக்கும் அதன் அயல் நாட்டு மொழிகளுக்கும் உள்ள சம்பந்த சார்புகளின் காரணத்தை ஆராயாமலும் இவ்வாறு கழறும் இவர் கற்பனைக்கு யாது செய்யலாம். இவர் வாய்க்கு விலங்கிட யாராலும் முடியும்!
இன்னொரு சாரார் தமிழ் என்னுந் தென்மொழி பதமே வடமொழியிற் றிராவிடமென மரீஇயது என்பர். இவரும் உண்மை கண்டவரல்லர். இரு கூற்றாறுந் திராவிடமென்னுஞ் சொல் வந்த வரலாறும் அதன் பொருளும் அதன் வழக்கியலும் அறியாராயினார். இருவருந்தம் மனத்தின்கண் நிகழும் ஒரோர் துணிவுபற்றி, வல்லார்பாற் புல்லும் ஆயுதமென்றாற் போலத், தமது துணிவை நாட்டுவான் புக்கு மிக்கிடர்ப்பட்டுப் போலி யாதாரங்கள் காட்டி வாய்வல்லான் சொல்லே மன்று கொளுமென்று வாளா நம்பித் தம் வன்மை காட்ட முயன்ற யுத்திமான்களன்றி ஆகமப் பிரமாணங் கொண்டு சாதித்தவரல்லர். ஹேமசந்திரநாநார்த்தத் தின்படி திராவிடம் என்னுஞ் சொல் திரா என்னும் அடியாற் பிறந்து ஓடிவளைந்தது என்னும் பொருளுடையது. இது மகாநதி முதற் குமரியீறாக ஓடிவளைந்த கோடி மண்டலத்தை உணர்த்துவது. இது பலதேசத்தார் நிகழ்ச்சியும் நடையுந் தோன்ற வடமொழியில் ஈராயிரம் வருஷத்தின் முன் உச்சயினி புரத்தில் இயற்றி ஆடிய ஒரு நாடகத்தில் முதன்முதல் எடுத்தாளப்பட்ட தென்பதூஉம், அதில் விதர்ப்பநாடு மத்தியாகப் பிராச்சிய தºணாத்திய திராவிட பாரசீயமென அயனாடுகள் குறிப்பிக்கப்பட்டனவென்பதூஉம். பின்னர் இவற்றை இழிதகைமைத்தாய கொடுமொழியையும் பல்பாஷை விரவிய சங்கரமொழியையும் முறையே குறித்த சாண்டாளி சாவரி என்னும் பதங்களோடு சேர்த்து அவ்வத்தேச பாஷைகளைக் குறிக்கும்படி பிரயோகிக்கப்பட்ட தென்பதூஉம் பிராகிருத நிர்ணய வியாக்கியிற் கரதலாமலகம்போற் காட்டப்பட்டன. மேலுந் திராவிடம் மென்ப தென்னை? தமிழ் தெலுங்கு கன்னடம் மராஷ்டிரம் கூர்ச்சரம் என்னும் ஐந்து பாஷையையுந் திராவிடமெனவே அஃது இவ்வைந்து மொழியும் வழங்கும் நிலத்தின் பெயரென்பது தானே போதரும். ஆகவே இச்சொற் வடமொழியிற் கோடி மண்டலத்தின் குறியீடாகவே நின்றதென்க. அன்றியும் ஈராயிர ஆட்டைமொழியையா பதினாறாயிர வருஷப்பாஷைக்கிட்ட பெயரென்பது? இவற்றாற் றமிழ் திராவிடமாயதூஉந் திராவிடந் தமிழாயதூஉம் இரண்டுந் தவறென் றுணர்க.
தமிழ் தற்பாஷை என்பதற்குப் பூர்வாசிரியர்கள் கீழ்வாய்க்கணக்கிற்கும் விரவியல் செய்யுட்கும் மணிப்பிரவாளத்திற்கும் வேற்றுமை வகுத்த இலக்கணமே சாட்சிபகராதா? தற்காலத்தில் இங்கிலீஷ் பிராஞ்சியாதிக்க மொழிகள் சேர்ந்த தமிழ்ச் செய்யுட்குள்ள ஊனம் அக்காலத்தில் வடமொழிச் செறிவுக் குளதாயின் வடமொழி தமிழுக்குத் தாய்மொழி யென்றெவ்வாறு பெறப்படும். குறள் ஒளவையாடல் திரிகடுகம் நான்மணிக்கடிகை பஞ்சமூலம் ஏலாதி பழமொழி முதலியவற்றில் வரும் ஆரிய மொழி எத்துணைச் சிறுபான்மைய?
கற்றதனா லாய பயனென்கொல வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்
நன்றி யொருவற்குச் செய்தக்கா லந்நன்றி
யென்று தருங்கொ லெனவேண்டா – நின்று
சலியா திளந்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்றருத லால்.
கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கட் போற்றோ னுழவும் - இளைஞனாய்க்
கள்ளுண்டு வாழ்வான் குடிமையு மிம்மூன்று
முள்ளன போலக் கெடும்.
நல்லார்க்குந் தம்முரென் றூரில்லை நன்னெறியிற்
செல்வார்க்குந் தம்மூரென் றூரில்லை – யல்லாக்
கடையார்க்குந் தம்மூரென் றூரில்லைத் தங்கைத்
துடையார்க்கு மெவ்வூரு மூர்.
சிலம்பிக்குத் தன்சினை கூற்றநெடுங் கோடு
விலங்கிற்குக் கூற்ற மயிர்தான் - பலன்படா
மாவிற்குக் கூற்றம் வளைஞண்டிற் கும்பார்ப்பு
நாவிற்கு நல்லார் வசை.
அறுநால்வ ராய்ப்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேன் மண்ணொழிந்து விண்ணோர்க்
கிறைபுரிந்து வாழ்த லியல்பு.
பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய்
மணலின் முழுகி மறைந்து கிடக்கு
நுணலுந்தன் வாயாற் கெடும்.
இற்றையனவாகிய குமரகுருபரசுவாமிநூல்க ளெத்தன்மைய?
நீரில் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைக – ணீரி
லெழுந்தாகும் யாக்கை நமரங்கா ளென்னை
வழுத்தாத தெம்பிரான் மன்று.
இவையெல்லாஞ் சம்ஸ்கிருதத்தினின்று பிறந்தனவாமே!! இவ்வாறு மயங்குவார் கல்வியறிவில்லாதார் மாத்திரமன்று. தமிழிலக்கணக் கடன் முழுதுண்டு, இலக்கணக்கொத்து ஏப்பமிட்டு வடிந்து, நிலம் நீர் எனப் பொதுவெழுத்தான் வரினுந் தமிழ் தமிழே என்று வற்புறுத்துவான் ‘பொதுவெழுத்தானுஞ் சிறப்பெழுத்தானு மிரெழுத்தானு மிலங்குந் தமிழ்மொழி’ என்று சூத்திர மியற்றிய சுவாமிநாதசேதிகரே, தம்மரபின் முன்னோர் மதத்தையும் மறந்து, “நூலுரை போதகா சிரியர்மூவரு முக்குண வசத்தான் முறைபிறழ்ந் தறைவரே” என்னுந் தன்விதிக்குத் தன்னையே இலக்கியமாக ஒப்பித்தாற் போல, ‘அன்றியு மைந்தெழுத் தாலொரு பாடையென் - றறையவு நாணுவ ரறிவுடையோரே” யென்று மாழ்கினர். இது வடமொழிப் பயிற்சியே மிக்குடையராய் அதன்மேற் கொண்ட பேரபிமானத்தானும், அம்மொழியின்மேற் றென்மொழியன்றிப் பிறிதுமொழி தெரியாக் குறைவானும் நேர்ந்த வழுவன்றோ? உலகத்தில் எப்பாஷைக்குஞ் சிறப்;பெழுத்துச் சில்லெழுத்தேயாம் உரப்பியும் எடுத்துங் கனைத்தும் ஒவ்வொன்றையே வேறு மும்மூன்றாக விகற்பித்துச்சரிக்கும் ஐவர்க்கத்தையுங் கூட்டெழுத்தையும் ஒழித்தால் எட்டெழுத்தாலொரு பாஷையின்றேயென்று சம்ஸ்கிருதத்தையும் புரட்டிவிடலாமே. இங்கிலீஷ்பாஷையில் வடமொழிக்கில்லாத எழுத்துக்கள் குஇ ணு இரண்டாதலால் இரண்டெழுத்தாலொரு பாஷையின்றேயென அதனையும் மறுப்பார்போலும். இரண்டுக்குப் பொதுவாயுள்ளனவற்றை ஒன்றற்கே உரியனவாகத் தீர்த்து நடுவுநிலைமை குன்றல் இவர் போலியர்க்குப் பெருங் குற்றமாம். உண்மை உரைப்பின் உரோமாபுரிப் பாஷையாகிய லத்தீனுக்கும் இங்கிலீஷ{க்குமுள்ள சம்பந்தமே சம்ஸ்கிருதத்திற்குந் தமிழுக்குமுள்ளதெனக் கொள்க. அளவில்லாத கிரந்தங்களை யுடையதாயினும் லத்தீன்மொழி விரவாத கிரந்தமொன்றும் இங்கீலீஷில் இல்லாதவாறு போலவே சம்ஸ்கிருதமொழி சுற்றிலும் விரவாத கிரந்தந் தமிழுக்கில்லாத திருக்கலாமாகவே, “அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்று – ளொன்றே யாயினுந் தனித்தமிழுண்டோ” என இலக்கணக் கொத்துடையார் முழங்கிய முழக்கம் வெற்றொலியாயினமை அறிக. அன்றியும் வடமொழியில் இல்லாத புணர்ச்சி யிலக்கணங்களுங் குறியீடுகளும் வினைத்தொகை குறிப்புவினை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணைக் கூறுபாடும் பால் விதிகளும் அகம் புறம் என்னும் பொருட் பேதங்களும் ஐந்திணை யியல்புகளும் அவற்றின் துறைகளும் வெண்பா கலிப்பா கலித்துறை முதலிய செய்யுளிலக்கணங்களும் இவைபோல்வன பிறவுங் காலத்திற்குக் காலம் பிற்றை நாளிற் றோன்றாது ஆதியிலக்கணமாகிய அகத்தியத்தில் முற்ற உரைக்கப்பட்டமையால் தமிழ் சம்ஸ்கிருதத்தினின்று பிறவாத தற்பாஷை என்பது பசுமரத் தாணிபோல் நாட்டப்படும். இவை யெல்லாம் ஒருவர் காலத்தில் அவ்வொருவராலேயே நூதனமாகப் படைக்கப்படற் பாலனவா? அகத்தியர் மகாரிஷீ சுவரர், அன்னோர் இவற்றைக் கற்பித்தல் எளிதன்றே யெனின், நன்று கடாயினாய், ஐந்திர பாணிநீய வியாகரணங்களை நன்குணர்ந்தும், அவற்றுள்ள அதிகார முறைமை ஒத்து முறைமை சூத்திர முறைமைகளின் சிறப்பினைச் சீரிதிற் கண்டும். யாதொருகிரமமும் முன்னெடுபின் சம்பந்த சார்புமின்றித் தமிழுள் இயல் இசை நாடக இலக்கண விதிகளும் இயற்றமிழுள்ளும் எழுத்துச் சொற்பொருள் யாப்பு அணிவிதிகளும் நெறிமுறை பிறழக் கண்டபடி விரவத் தமது இலக்கணநூல் இயற்றியமையானே அஃது எத்துணை வல்லாராயினும் ஒருவருக்கரிய தென்று உணர்க. அன்றியும் இஃது எத்தேசத்து எந்தப் பாஷையினது அநுபவத்திற்கும் யுத்திக்கும் முழு விரோரதமென்க.
தமிழ்ப்பாஷையின் காலவருத்தமானம் அபோதகாலம், அºரகாலம், இலக்கணகாலம், சமுதாயகாலம், அநாதாரகாலம், சமணகாலம், இதிகாசகாலம், ஆதீனகாலமென எண் கூறுபடும். வரிவடிவின்றி ஒலிவடிவு மாத்திரமாய் நிகழ்ந்த காலத்தை அபோத காலமென்றாம். அஃது அகத்தியர்க்குமுன் சென்ற காலமாகும். அகத்தியர் தமிழ்மொழியை அவலோகித முனிவர்பாற் கற்றுணர்ந்தாரென்னும் அருகர் மதமுஞ், சுவாமியிடந் தமிழ்மொழியையுஞ், சுப்பிரமணியக் கடவுளிடம் அதன் இலக்கணத்தையும் ஒதியுணர்ந்தாரெனக் கூறுஞ் சைவர் மதமும் அகத்தியர்க்கு முன்னுந் தமிழுண்மைக்குச் சான்றாகும். சிலர் சுவடி எழுத்து நெடுங்கணக்கு முதலிய சொற்களை ஆதாரமாகக் கொண்டு ஒரு அளவுக்கு வரிவடிவெழுத்தும் முன்னர் இருத்தல் வேண்டும் எனக் கூறுவர். இங்ஙனமாகவும், வடமொழி தென்மொழி மகோததி பருகிப் படிமிசைத் தமிழ்மகா பாடியம் வகுத்துக் - குசைநுனியதனினுங் கூரிய மதிபெறீஇத் - திசையெலாந் தன்பெருமிசைநிறீஇ உயர்ந்த மகானாகிய (பெயர் சொல்லவும் வாய் கூசுகின்றதே) சிவஞான முனிவரர் இதனை மறந்து அகத்தியராற் றமிழ் பூமியில் உற்பத்தியாயின தெனகொண்டு, அகத்தியம் “அச்செந்தமிழ் நிலத்து மொழியோடு முற்பட்டுத் தோன்றுநூல்;” எனவுஞ் “செந்தமிழ் நிலத்து மொழிதோன்றுங் காலத்துடன் றோன்றியநூல்” எனவும் மயங்குவாராயினர். “சிறிய கேள்வியோர் கழியவுஞ் செருக்குடை யோரென் - றறிஞர் கூறிய பழஞ்சொல்லென் னளவிற்றே” யாயினுமாகுக. “முந்துநூல்” “முந்தைநூல்” என்பன முதனூற்குப் பெயர்களாகவும் இளம் பூரணரும் நச்சினாக்கினியாரும் அவ்வாறே பொருள் கூறி “நிலத்தோடு” என்பதற்குச் செந்தமிழ் நிலத்து வழக்கொடு எனப் பொருளுரைத்திருப்பது கண்டாராகவும் “நிலத்தோடு முந்துநூல் கண்டு” என்பதற்கு எண்ணுப் பொருளில் நிலத்தையும் (அதாவது நிலத்தின்கணுள்ள இயற்றமிழ் வழக்கையும்) முதனூலையும் கண்டு எனச் செம்பாகமாகப் பொருள் வெட்ட வெளி போலக் கிடப்பதாகவும், இவர் உடனிகழ்ச்சிப் பொருள் கொடுத்து “முந்து” என்பதை வினைத்தொகையாக்கி அறுகம்புல்லிற் றடக்கிய யானைபோல, இவ்வாறு இடர்பட்டது காலகதியோ அன்றேற் பிற ஆசிரியர் மதங்கனை மறுத்தலும் ஆங்காங்குத் தமது நூதன மதத்தை நாட்டுதலுந் தமக்கு என்றும் இயல்பாயினமை பற்றியோ அறியேம்.
நடுவினா யகமி லக்காய் நலமழிந் திடுவே மெங்க
ளிடையினக் கீருனில்லா திருப்பினென் றவைசொல் வோனை
விடையினான் றமிழ்நூல் கூறும் விதிவிலக் குணரா னென்றாற்
படியினில் யாவர் வல்லார் பாற்றமி ழடங்கிற் றம்மா!
“அகத்தியர் பயந்த செஞ்சொ லாரணங்கு” “பொற்பொதிய மாமலையான் மொழி”, “பொற் பொதியமாமுனிபுகன்ற தமிழ்”, “குறுமுனிவனார் தமிழ் என வில்லிபுத்தூரராதியர் கூறியவெல்லாம் உபசார வழக்கென்க. அல்லதூஉஞ் சுவிகாரபுத்திர தருமமென கொள்ளினும் அமையும்.
அகத்தியரால் நெடுங்கணக்கு ஏற்பட்டது முதல் அகத்தியம் நிறைவேறியவரைக்குஞ் சென்ற காலத்தை அºரகாலமென்றாம். அது சிறு காலமாயினுங் கைக்குழந்தை மழலைபயின்று சிற்றில்கோலி விளையாடிய பருவ மாதலிற் பெற்றா றாற்றார்க்குப் பேராநந்தந் தந்த வயதாயிற்று. பின் நிகழ்வது இலக்கணகால மாகலானும் இலக்கியம் பிறந்தவழியே இலக்கணம் அமைவதாதலானும் அºரகாலமே தமிழுக்கு ஆதியிலக்கிய காலமென்றுங் கொள்க. அன்றியுஞ் சுருதியொப்பச் செவிவாயிலாய் அதற்கு முன்காலத்தினி;ன்று வந்தனவும் பலவுளவாதல் வேண்டும். அவ்வாறிருந்தனவென்றே துணிவாரும் ழூபலருளர். இதனை இவ்வாறு அºரகாலம் ஏற்பட்ட பிற பாஷைகளின் உவமானப் பிரமாணத்தாலு முணர்க.
அப்பால் இலக்கண காலம். இது தொல்காப்பியன் அதங்கோட்டாசான் துராலிங்கன் செம்பூட்சேய் வையாபிகன் வாய்ப்பியன் பனம்பாரன் கழாரம்பன் அவினயன் காச்கைபாடினியன் நற்றத்தன் வாமனன் என்னும் பன்னிரு சீஷரும் அகத்திய ரிஷியிடத்தில் அவர் செய்த பேரகத்தியஞ் சிற்றகத்தியம் இரண்டும் முற்றக் கற்றுத் தத்தம் பெயரால் வேறுவேறிலக்கணமும் அனைவரும் ஒருங்கு சேர்ந்து புறப்பொருட் பன்னிருபடலமும் எய்திய காலமாம். அகத்திலிருந்து சிற்றில்கோலி ஆடிய சிறுமகவு ருதுவாயினாற் போல இதுவுந் தமிழணங்கிற்கோர் விசேஷ பருவமேயாம்.
ழூ திருவிளையாடற் புராணம்
விடைகோடு போவா னொன்றை வேண்டின னேகுந் தேயந்
தொடை பெறு தமிழ்நா டென்று சொல்லுப வந்த நாட்டி
னிடைபயின் மாந்த ரெல்லா மின்றமி ழாந்ந்து கேள்வி
யுடையவ ரென்ப கேட்டார்க் குத்தர முரைத்தல் வேண்டும்.
சித்தமா சகல வந்தச் செந்தமி ழியனூ றன்னை
அத்தனே யருளிச் செய்தி யென்றன னனையான் றேற
வைத்தனை முதனூ றன்னை மற்றது தெளித்த பின்னு
நித்தனே யடியே னென்று நின்னடி காண்பே னென்றான்.
அப்பாற் சமுதாயகாலம். அது மதுரைச்சங்கத்தார் காலமாகும். சர்வபூஷணாலங்காரநாரியாய்த் தமிழ்மாது தருணதாசசையடைந்து அரங்கேறிய மகோற்சவகாலம் அதுவேயாம். அப்பொழுது அவளுடைய சீருஞ் சிறப்பும் இத்துணையவென்று சொல்லற்பாலனவல்ல. அக்காலத்திற்றான் அவள் சம்ஸ்கிருதநாயகனை மணந்தது. மணந்து மென்! மாமியார்வீட்டு மருகன்போல இன்றியமையா வேட்கைக்குரியபோதன்றி மற்றும்படி ஒருசார் ஒதுங்கியிருந்தமையாற் றமிழ் தன் சிறப்பிற் சற்றுங் குறையாதிருந்தனள். இது தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கமென மூன்றாகும். இவற்றுள் முதற் சங்கத்தார் காலத்தே உற்பவித்து இடைச்சங்கத்தார் காலத்திற்கே உரியவாயினவெனவும் அகத்தியரோடு தொல்காப்பியரும் இடைச்சங்கத்தில் இருந்தனரெனவுங் கடைச்சங்கத்திலுந் தொல்காப்பியர் வீற்றிருந்தனரெனவுங் கூறுவாருமுளர். அது யுத்திக்கிசைந்ததன்று. அவரவர் நூற் பெருமையான் வந்த உபசார வழக்காகக் கொள்ளலாம். அகத்தியத்தோடு தொல்காப்பியராதியோர் நூல்களுந் தலைச் சங்கத்தார் காலத்து நிலவியம் அகத்தியத்தையே அஞ்ஞான்றார் ஆதாரமாகக் கெண்டாரென்றும் அகத்தியருடைய விரோதத்தினாற் றொல்காப்பியம் அப்போது தலையெடாம லிருந்ததென்றுந் தொல்காப்பியத்தின் சிறப்புத் தோன்றத் தோன்ற அஃது அகத்தியத்திற்குச் சரியா யெழுந்து இடைச் சங்கத்தாருக்கு இரண்டு ஆதாரமாயின வென்றும் ஈற்றில் அகத்தியம் மகத்துவந்தாழத் தொல்காப்பியம்; மேம்பட்டுக் கடைச்சங்கத்திற்றானே தனிநின்ற தென்றுங் கொள்வதே தகுதி. பான்டியன் அவைக்களத்து ‘அதங்கோட்டாசாற் கரிறபத் தெரித்து” எனப் பனம்பாரனாராற் கூறப்பட்டமையிற் றொல்காப்பியமும் ஏனைப் பதினொருவர்நூல்களும் முன்னர் உற்பத்தியாயும் பின் தலைச்சங்கத்தில் அரங்கேறியதாகக் கொள்க.
“நூலாநா லாயிரநா னூற்றுநாற் பத்தொன்பான்
பாலாநா னூற்றுநாற் பத்தொன்பான் - மேலாநாற்
பத்தொன்பான் சங்கமறு பத்துநா லாடலுக்குங்
கத்தன் மதுரையிற் சொக் கன்”
என்னுங் காளமேகப்புலவர் வாய்மொழியைத் துணைக்கொண்டு தலைச்சங்கத்து வீற்றிருந்த புலவர் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மரெனவும், இடைச் சங்கத்துப் புலவர் நானூற்று நாற்பத்தொன்பதின்மரெனவுங் கூறுவாருளர். அது சரியன்று. அவ்வச் சங்கத்து வீற்றிருந்தோர் முறையே அகத்தியனார் விரிசடையத்தனார், முருக முதல்வனார், முடிநாகராயர், நிதிக்கிழவனார், அதங்கோட்டாசிரியனார், பனம்பாரனார், தொல்காப்பியனார் முதலாய ஐஞ்Ä}ற்று நாற்பத்தொன்பதிமரும் இருந்தையூர்க் கருங்கோழிமோசியார் வெள்ðர்க் காப்பியன் சிறுபாண்டரங்கன் திரையன்மாறன் துவரைக் கோமான் கீரந்தையார் முதலாய ஐஞ்Ä}ற்று றொன்பதின்மாருஞ் சிறமேதாவியார் சேந்தன்பூதனார் மதுரையாசிரியர் நல்லந்துவனார் மருதனிளநாகனார் உருத்திரசன்மனார் கபிலர் பரணர் கணக்காயனார் மகனாநக்கீரனார் முதலாய ழூ நாற்பத்தொன்பதின்மருமெனவும், அவ்வச் சங்கத்திற் றத்தங் காவியம் அரங்கேற்றிய புலவர் தொகை நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பது மெனவும், நூலும் உரையும் இரண்டும் சங்கத்தார் காலத்தனவாகிய இறையனா ரகப்பொருளுரையாற் றெள்ளிதினுணர்க. அல்லாமலும் இதனையே:
ழூ நாற்பத்தொன்பதின்மர் பெயருந் திருவள்ளுவமாலையிற் காண்க.
“ஏழேழொ டைஞ்Ä}று மேழே ழொடுபஃதும்
ஏழேழுஞ் சங்க மிரீஇனார் – ஏழேழ்சேர்
நாற்பதினா நூறுமுப்பா னேர்நூறு நானூற்று
நாற்பதினொன் பான்கவிஞர் நாடு”
என்னுஞ் சங்கத்தார் காலத்துச் செய்யுளும் வற்புறுத்தும் மூன்று சங்கத்திற்குங் காலம் முதற்சங்கத்திற்கு முன்பின் நாலாயிரத்தைஞ்Ä}றும் இரண்டாஞ் சங்கத்திற்கு மூவாயிரத்தைஞ்Ä}றும் மூன்றாஞ் சங்கத்திற்கு இரண்டாயிரமுமாக ஆகப் 0 பதினாயிரம் வருஷமென்ப. அவற்றுள் முதற் சங்கங் காய்சினவழுதி முதற் கடுங்கோன்வழுதி ஈறாக எண்பத்தொன்பதிமர் பாண்டியரையும், இடைச் சங்கம் வெண்டொட்செழியன் முதல் மூடத்திருமாற னீறாக ஐம்பத் தொன்பதின்மர் பாண்டியரையு முடையன. பாண்டியருட் கவியரங்கேற்றினார் முதற் சங்கத் தெழுவரும் இடைச் சங்கத்தைவரும் கடைச் சங்கத்து மூவருமாம். தலைச் சங்கத் தரங்கேற்றிய நூல்கள் தொல்காப்பியம் காக்கைபாடினியம் அவினயம் நற்றத்தம் வாமனம் புறப்பொருட் பன்னிரு படலம் முறுல் சயந்தம் குணநூல் செயிற்றியம் பரிபாடல் பெருநாரை பெருங்குருகு களரியாவிரை முதலியன@ அவர்க்கு நூல் அகத்தியம். அதில் இயற்றமிழ் இசைத் தமிழ் நாடகத் தமிழ் மூன்றும் வகுத்துரைக்கப்பட்டன. அவற்றுட் டொல் காப்பியம் முதலியவற்றில் இயற்றமிழும், பெருநாரை பெருங்குருகு முதலியவற்றில் இசைத் தமிழும், முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் முதலியவற்றில் நாடகத் தமிழும் விரித்துரைக்கப்பட்டன. இவர் சங்கம் இரிஇயது கடல் கொள்ளபட்ட தெºண மதுரையென்ப. இடைச் சங்கத்தரங்கேறியன கலி குருகு வெண்டாளி முதலியன. இவர்க்கு நூல் அகத்தியம் தொல்காப்பியம் மாபுராணம் இசைநுணுக்கம் பூதபுராண மென்பன. இவர் இரீஇய இடங் கபாடபுரம். கடைச்சங்கத்தில் அரங்கேறியன நெடுந்தொகை நானூறு, ஐங்குறு நானூறு, எழுபது பரிபாடல், கலி, பதிற்றுப்பத்து நூற்றைம்பது, கூத்துவரி, சிற்றிசை, பேரிசை முதலியன. இவர்க்கு நூல் முற் கூறியவும் புதியாநுட்பம் பிரணிகை சாயித்திய மாதியவுமாம். இவர் சங்கம் இருந்த இடந் தற்காலத்துள்ள உத்தர மதுரை. இஃது இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் முடத் திருமாறன் காலத்துக் கடல் கொண்டபின் தோன்றியது. சங்கத்தார் காலத்து நூல்கள் அநேகம் இக் காலத்திலில்லாமல் அடியோடே இறந்துவிட்டன.
0 விவிலழியநூலோ டூடாடி அதன் கதைகளையுங் கால நிரூபணங்களையும் நம்பியவர்களுக்கு இஃதோர் கட்டுக்கதைபோற் றோற்றும். அவன் அறுபதினாயிரம் ஆண்டாண்டான் இவன் எழுபதினாயிரம் ஆண்டாண்டான் என்னுங் கற்பனைகள் போலாகாது. சங்கம் இரீஇய பாண்டியர்கள் பெயரும் முறையும் தொகையும் ஆகமப்பிரமாணமாக நமது கைக்கு வந்திருக்க, எவ்வெச்சாதியாரும் மனிதருக்கு மிக நெடிய வயது கூறிய பண்டைக்காலத்திற், சராசரி ஓரோரரசனுக்கு ஐம்பது வருடச் செங்கோன்மை வகுத்த இந்நிரூபணம் யாதாயினுமொரு சமுசயமுமின்றி முற்றவும் நம்பற்பாலதேயாம்.
இற்றைக்கு ஏறக்குறை ழூ ஈராயிரம் வருஷத்தின்முன்பு உக்கிரப் பெருவழுதி காலத்திற் சங்கத்தார் அதி அகந்தை கொண்டு தெய்வசிந்தனையில்லாராய்ப் புலவர்களை அவமதித்துத் தம்நெறி பிசகினபோது தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாராலும் ஒளவை இடைக் காடராலும் அவமானப்பட்டுக் கர்வபங்கமடைந்து அத்தோடே சங்கமுமுடிய வேதுவாயிற்று. சங்கத்துள் அரங்கேறியவற்றுட் டேவர்குறளே கடைசியானது. அதன்பின் ஏறக்குறைய இருநூறு வருஷஞ் சேர சோழ பாண்டிய அவைக்களத்திற் றனக்குப் பேராதரவில்லாதிருந்து செந்தமிழ்ச் செல்வி தன் சிறப்புக் குறையாமல் உலாவி கொண்டிருந்தனள். அக்காலத்தினையே ஐந்தாவதான அநாதார காலமென்று குறிப்பித்தோம். அதனை புத்தர் காலமெனினும் இழுக்காகாதென்று கொள்க.
ழூ சங்கம் ஒழிந்தது சுத்த சுந்திர வம்சத்திற் கடைசியாய் அரசு புரிந்த கூன்பாண்டியன் காலமென்று கொள்ளினும், அதன்பின் சோமசுந்தரன் முதற் பராக்கிரமன் வரைக்கும் நாற்பத்திரண்டு அநுலோம பாண்டியர்கள் அரசு செய்திருக்கின்றனராதலில். ஒவ்வோர் அரசனுக்குச் சராசரி இருபத்தைந்து வருடம் வைப்பினும் ஆயிரத்தைம்பதாகிறது. பராக்கிரம பாண்டியனை முறியடித்துத் துலுக்கர் முதன் முதல் மதுரையாண்டு எண்ணூற்றைம்பதுவருட மென்பது இதிகாசரால் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆதலிற் கூன் பாண்டியன் காலமே இரண்டாயிரம் வருஷத்திற்கு முன் பின்னாயிற் றென்றறிக. அன்றியும் ஸ்ரீ இராமர் இலங்கைக்கு வந்தது அநந்தகுல பாண்டியன் காலம். அவன் கூன் பாண்டியனுக்கு முன் அறுபத்து மூன்றாவது பாண்டியன். ஆதலாலும் இத்தொகை அதிகமல்லவென்று காண்க. மேலும் இற்றைக்;கு மூவாயிரத்தைஞ்Ä}று வருஷத்தின் முன் இருந்த வியாசர் காலத்தவனாகிய அர்ச்சுனனுக்குத் தன் மகளை கொடுத்த சித்திரவாகன் மதுரைக்குச் சமீபமான பூழி என்னும் மணலிபுரத்தில் அநந்தகுணபாண்டியனிலிருந்து பதினெட்டாவது பாண்டியனாகிய சித்திரவிக்கிரம பாண்டியன் காலத்திற் சிற்றரசு புரிந்தவன். இதனாலும் இக்கால நிர்ணயந் தவறென்பது தௌ;ளிதிற் புலப்படும் மேலும் கூன்பாண்டியன் காலத்து ஞானாசாரியராக எழுந்தருளிய திருஞானசம்பந்த மூர்த்திகள் மரபிற் றற்காலம் வரைக்கும் ஆசாரியாபிஷேகம் பெற்றோர் நுற்றுப் பதினால்வர் இஃதென்றே கூன்பாண்டியன் காலம் இற்றைக்கு ஈராயிரம் வருஷத்தின் மேற்பட்டதென்பதை எட்டுணையும் ஐயமறக் காட்டும்.
அப்பாற் சமணர்காலந் தொடங்கியது. தமிழில் மிக அருமையான இலக்கிய இலக்கண கலைக்கியான நூல்கள் அநேகஞ் சமணவித்துவான்களாற் செய்யப்பட்டிருக்கின்றன. சங்கத்தின் பிற்காலஞ் சமணர் தலைப்பட்டது தாயிறந்த பெண்ணுக்கோர் சற்குண நிறைந்த சிற்றாத்தாள் வாய்த்தது போலும். ழூ புத்த வைஷ்ணவ வித்துவான்கள் ஆண்டாண்டுத் தலைமைபெற்ற காலத்திற் றமது மத சார்பான சில நூல்கள் இயற்றினதன்றிச் சர்வ சனோபகாரமாகிய கிரந்தம் ஒன்றுஞ் செய்திலர். இது தமிழ் தம் பெயருக்கு மோனையாகாத கோபம் போலும். சமணரோ அங்ஙனமாகாது தமிழ் விருத்தியில் மிக முயன்றவர்கள். தமிழ் கற்கப்புகும் மாணாக்கர் பெரும்பான்மையும் படிக்கும் நிகண்டு நன்னூல் காரிகை நம்பியகப்பொருள் முதலிய சிறு கிரந்தங்கள் மாத்திரமல்ல புலவர் பெருமான்களாலுங் கல்விவல்ல அரசராதியோராலும் வியந்து துதிக்கப்படுஞ் சிந்தாமணி முதலிய பெருங் காப்பியங்களும் அநேகம் அவர்களாற் செய்யப்பட்டன. பெரியவுங் கடியவுஞ் சிறந்த நடையை யுடையவுமாகிய பல கிரந்தங்களுக்கு மிக மாண்பு பொருந்திய உரைகளெழுதிவைத்த நச்சினார்க்கினியாரும் பின்பு சைவ மதத்தை அநுசரித்தவராயினும் முன்னர்ச் சமணர் கூட்டத்தைச் சேர்ந்தவர். இதனால் மேற்கூறிய கிரந்தமெல்லாம் ஈண்டு வகுத்த சமணகாலத்திற் செய்யப்பட்டன வென்று கொள்ளற்க. இவற்றுட் சில பின்னரும் இதிகாசாதீன காலங்களிலும் எழுதப்பட்டன. அவர்கள் தன்மை இன்னதென்று மெய்ப்பித்தற்கு எடுத்துக்காட்டாக இதனை ஈண்டுக் கூறினோம். இவர்கணூலுட் சிந்தாமணி யெழுதி இப்போது ஆயிரத்தெண்ணூறு வருஷமிருக்கலாம். இவர்களிடந் தமிழ் பரிபாலனம் பெற்றது ஓருத்தேசம் முந்நூறு வருஷத்திற்குண்டு.
ழூ இலக்கண இலக்கிய கலைக்கியான கருத்தாக்களையன்றிச் சைவ நாயன்மாரை யொப்பச் சமயாதீதமான தொண்டர்கள் ஆழ்வாராதிரை ஈண்டுக் குறித்திலேம். வஞ்சகச் சூதினால் வடவேங்கடத்தைக் கைப்பற்றியது போலவும் விக்கினேசுவரரைத் திருநாமஞ் சாத்தித் தும்பிக்கை யாழ்வாரென்று கொண்டது போலவுந், தமிழ் நூலுடையார் தஞ்சமயத்தாரில் யாருமில்லாத குறையை நிவிர்த்திக்க முயன்று, வல்லடி வழக்காக. வைஷ்ணவர்கள், சாதியில் ஒச்சனுஞ் சமயாசாரத்திற் பிடாரிபூனுமாகிய கம்பருக்குஆழ்வார் நாமஞ் சாத்தியும் அடிப்பட்ட சிவாசாரிய குலத்துப்பிறந்து சாம்பரியந்தஞ் சிவார்ச்சனையே செய்த பரிமேலழகரை அரிமேலழகுறூம் அன்பமையந்தணன் பரிமேலழகனென வாய்ப்பகட்டுப் பேசியும் யாது பயன்? ஊரை உலைமூடியான் மறைக்கவா!! வைஷ்ண வருட்டமிழ்க் காப்பியஞ் செய்தார். வில்லிபுத்தூராழ்வார் ஒருவரே. இவர் அருணகிரியிற் சிவநிந்தனை செய்து கண்ணிழந்து அச்சாப நீங்கும்பொருட்டுச் சிவபரமாக ஒருநூல்செய்ய அஞ்ஞாபிக்கப்பட்டுங் கொடிய வைஷ்ணவராதலிற் றன்மதாபிமானத்திற்குப் பங்கம்வராது சிவஸ்துதி இடையிடைவிரவிவரவும் வெளித் தோற்றத்திற் கண்ணன் சரிதையாகவும் பிறர் மயங்கப் பாரதத்தைச் சாபநிவர்த்திக்காவே செய்தனரென்றுணர்க. இதனுண்மை அருணகிரியார் சரித்திரத்தால் நன்கு வெளிப்படும்.
இவர்கள் காலத்தில் அநேக சமஸ்கிருதப் பதங்கள் தமிழில் வந்து கலந்தனவாயினும் வண்டு கைக்கொண்ட கிருமிபோலவும் வேரின் வாய்ப்பட்ட எருப்போலவும் சமஸ்கிருத நிறமும் மணமுமின்றி ஆர்த்தபம் மயிடம் பகுதி விகுதி முதலியன போலச் சுத்த தமிழுருவமாகவே திரிந்து வந்தன.
அப்பால் முன்பின் எண்ணூறு வருஷம் இதிகாசகாலம். பற்பல புராண காவியங்களுங் கலைஞான நூல்களும் இக்காலத்தில் எழுதப்பட்டன வாயினுந் தமிழிற சிறந்த இதிகாசங்களாகிய நைடதம், பாரதம், இராமாயணம், இரகுவமிச மென்பன தோன்றிய காலமாதலில் இதிகாச காலமென்றாம். வடமொழியிலிருந்து புராணோதிகாசங்கள் சமயசாஸ்திர ஸ்தல மான்மியங்கள் கணித சோதிடாதிகள் சுத்த சம்ஸ்கிருதாகாரமாய்த் தமிழில் மொய்க்கத் தலைப்பட்டதும் வடமொழிப் பிரளயத்தைக் கண்டு தமிழ் சகிக்கலாற்றாது மூழ்கியதும் இக்காலத்திலேதான். அதுமட்டோ போகர் முதலிய ஆயணூலாரும் பிரகர் முதலிய கணிதவல்லாருஞ் ‘செந்தமிழணங்கின் திருமேனியெல்லாம் - வெந்தழல் கொழுத்தி வெதுப்பிய வாவெனக் - கொடுந்தமிழ் மலிந்து கொப்புளித் தெழுந்து” புண்படச் செய்ததும் இக்காலமே. இதில் அதிவீரராமன். புகழேந்தி, ஒட்டக்கூத்தர் கம்பர், அம்பிகாபதி, தமிழ்தண்டி, வில்லிபுத்தூரர், வரந்தருவார் முதலிய பெரும்புலவர்கள் சேர சோழ பாண்டிய தேசங்களில் எழுந்து சொலித்தனர். தொண்டை மண்டலத்திற் கச்சியப்ப சுவாமிகள் சேக்கிழார் முதலிய புராணகவீச்சுரர்கள் சிறப்புற் றோங்கினர். ஈழமண்டலத்தில் அரசகேசரி செகராச சேகரர் முதலிய தமிழ் வல்லோர் தலைப்பட்டனர். பின்பு படிப்படியாகத் தமிழ்க் கல்விக்கு அரசபரிபாலனங் குறைந்தது. சம்;ஸ்கிருதம் வல்லாருக்கு மேன்மையுண்டாயது. தமிழ் தனி நில்லாது தத்தளித்து, வடமொழி வல்லார் கைப்பட்டு அம்மை வார்த்த உடம்புபோலத் தேகமெல்லஞ் சம்ஸ்கிருதத் தழும்பு ஏறியது. கொப்புளித்த திருமேனியிற் கொடுமுள்ளுமேறிய தென்னத் திசைச் சொற்கள் வந்து மரீஇன. ஈற்றில் ஏழரை நாட்டுச் சனியும்பிடித்தாற் போல, “ஆவின மழைபொழிய இல்லம் வீழ அகத்தடிமை சாவமனையாள் மெய்நோவ – மாவீரம் போகுதென்று விதைகொண்டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் - சாவோலை கொண்டொருவ னெதிரே யெய்தத் தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் - கோவேந்தன் றூதர் நின்று கடமை கேட்கக் குருக்களுந் தட்சணைக்கு வந்து குறுக்கிட்டாரே” யென்று துலுக்கசேனை வந்து விழுந்து தேசத்தைச் சூறையாடி ஆங்காங்கு இறவாதெஞ்சிய புத்தகங்களையும் அழித்தகன்றனர்.
அப்பாற் தற்காலத்து நிகழும் ஆதீன காலமாம். இது சந்தான குரவர் காலத்தையும் சேர்த்து இற்றைக்கு ழூ எழுநூறு வருஷத்தின் முன் றொடங்கியது. சரஸ்வதியாலயமாய்க் கல்விக்களஞ்சியமாக முதன்முதற் றமிழ்நாட்டில் மடமேற்படுத்திய மகான்மா ஸ்ரீ கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்துப் பிரதம பரமாசாரியராய் எழுந்தருளிய ஸ்ரீலஸ்ரீ நமசிவாய தேசிகரே இவர் மரபில் முன்னர் நான்காஞ் சந்தானகுரவராகிய உமாபதி சிவாசாரியாராற் சில சித்தாந்த சமய சாஸ்திரங்களேயன்றிச் சாலிவாகன சகாப்தம் 1200 அளவிற் கோவிற்புராண முதலிய பல அரிய இலக்கியங்களுஞ் செய்யப்பட்டன. பின்னர் ஈசான தேசிகரெனத் திருநாமம் வழங்கப்பெற்ற சுவாமிநாத குரவரால் இலக்கண கொத்தும், அவரது மாணாக்கர் சங்கரநாதச்சிவாய தேசிகரால் நன்னூல் விருத்தியும். வேலப்ப தேசிகராற் பறியலூர்ப் புராணமும் அகத்தியர் வரத்தாற் செகத்தி லுற்பவித்து அவர் ஒரு கடலுண்டுமிழ்ந்தால் யாமிரு கடலுண்டு மிழேமா வெனத் தென்கலை வடகலைக் கடல்களை முற்றக் கற்றாநந்தித்த சிவஞான கோகீஸ்வரராற் றொல்காப்பியச் சூத்திரவிருத்தி தருக்க சங்கிரகம் அன்மன் பட்டீயம் புத்தம்புத்துரை காஞ்சிப்புராணம் முதுமொழி வெண்பா முதலிய மிக்க சாதுரிய கிரந்தங்களுங் கற்ற வல்லோர் அனைவராலும் நன்கு மதிக்கப்படும் பெருஞ் சிறப்பினையுடைய திராவிட மகாபாஷியமுஞ் செய்யப்பட்டன.
ழூ காஞ்சி நகரத்திற் காமக்கோட்டி பீடமும் கன்னட தேசத்திற் சிங்கேரி மடமும் இதற்கு வெகுகாலத்தின் முன்தோன்றி ஆண்டும் பல நூல்களும் பாஷ்யங்களுஞ் செய்யப்பட்டுள்ளனவாயினும் அவையெல்லாஞ் சம்ஸ்கிருதத்திலாயினமையால் அவற்றைச் சேர்த்திலேம். கூன்பாண்டியன் காலத்ததாதலிற் றிருஞானசம்பந்த மடம் இதற்கும் முந்தியதாயினும் முதலிலே மதுரையில் ஞானாசரிய பீடமாகமாத்திரம் ஏற்பட்டுப் பின் நாயகனார் காலத்திலே தானே திருநெல்வேலியைத் தனக்கு மூலஸ்தானமாக பெற்ற அம்மடம் அழிந்துபோனமையானும் அதிற் றமிழ் பரிபாலிக்கப்பட்டுங் கிரந்தங்கள் எழுதப்பட்டும் இருந்ததாகத் தோன்றாமையானும் அதனையும் ஒழித்தனம் அதற்கு உபயமடமாகிப் பின் மூலத்தானத்துவம் பெற்று ஒங்கிய மதுரை மடமே திருவிளையாடற் புராணம் இயற்றிய பரஞ்சோதி முனிவர் முதலியோர் எழுந்தருளப் பெற்றுத் தமிழ்க்கல்வியைப் பரிபாலனஞ் செய்தது.
கல்வி விருத்திசெய்து சமயஸ்தாபனம் பண்ணும் பொருட்டுத் தமிழ்நாட்டிற் றருமபுராதீனம், திருவண்ணாமலை யாதீனம், மதுரை யாதீனம். மங்கலபுரத்துச் சங்கமாதீனம் முதலிய மடங்கள் ஆதீனங்கள் வேறும் பல அங்கங்கே தர்மசீலோத்தமர்களால் ஏற்படுத்தப்பட்டன அவற்றின் கண்;ணும் இவ்வாறே காலத்திற்குக்காலங் சமய சாஸ்திரங்களன்றி இலக்கிய இலக்கண கலைஞான நூல்கள் செய்தோர் தருமபுரத்திற் குமரகுருபர சுவாமிகள் சம்பந்த சரணாலய சுவாமிகள் சம்பந்த சுவாமிகள் வெள்ளியம்பலத்தம்பிரான் சச்சிதானந்த தேசிகர் சிவப்பிரகாச சுவாமிகள் திருவாரூர் வைத்தியநாத நாவலர் முதலியோருந், திருவண்ணாமலை யாதீனத்தில் அமிர்தலிங்க சுவாமிகள் குகை நமச்சிவாயர் ஞானப்பிரகாச சுவாமிகள் ஆடியபாத சுவாமிகள் சுப்பிரமணிய சுவாமிகள் முதலியோரும். மங்கலபுரத்திற்சிவப்பிரகாச சுவாமிகள் முதலியோரும் அநேகர் உளர். தம்மை யடைந்தவர்களுக்குக் கல்வி கற்பிப்பதும் அவருட் பரிபக்குவ தசையுடையோரை ஞானாசாரிய அபிஷேகஞ் செய்து வைப்பதும் புலவராய்த் தம்பால் வந்தோருக்குப் பல பரிசளிப்பதும் அவருட் சிரேஷ்ட வல்லமை யுடையோரைத் தமது ஆதீனவித்துவான்களாக நியோகித்துச் சிறப்புச் செய்வதும் இன்னோரன்ன பிறவுமாகிய ஆதீன பரிபாலனம் இல்லாதொழியின் இது வரையிற் றமிழ் மிகவுங் குறைந்து போய்விடும்;. தமிழி;ன மகிமை இப்பொழுது இவர்களாலேயே நிலைபெற்றது.
அரசாட்சியாருந் தமது வித்தியாசாலை மாணாக்கருக்குஅவரவர் சொந்தப் பாஷையையுங் கற்பிக்கும் விருப்புடையராய்த் தமிழ்ப்பிள்ளைகளுக்கும் அவரது சுயபாஷையாகிய தமிழை ஒரேவழி ஓதுவி;க்கின்றனர். நீந்துதற் றொழிலைக் கற்பிப்பான் ஒர்நீராசிரியன் கற்பானை ஏரி நதி கிணறு குளங்களில் இறந்துவிடாது குடத்திற் றண்ணீர் மொண்டு சிறு குழலில் விட்டுக் கால்மறையாத் தண்ணீரில் மாரடிக்க விட்டாற்போலக், கடனீ ரெனில் உடல்கசியும் உப்புப் பூக்குங், குளநீரெனிற் சர்ப்பந்தீண்டும் முதலை பிடிக்கும், என்று ஓரோர் நூலுக்கு ஒரோர் குற்றஞ் சாற்றி ஒன்றிலும் இறங்கவிடாது ஒரு நூலில் ஒருகுடமும் இன்னொரு நூலிற் பின்னொரு குடமுமாக அள்ளிவைத்துப் படிப்பிக்கும் அவரது முயற்சியாற் பெரும் பயன் விளைவதேயில்லை. அவரிடங் கற்றுத் தமிழ் வல்லோராயினாரை யாண்டுங் கண்டிலேம். அன்றியும் இவ்வித்தியாசாலைகளில் ழூ நிகண்டுகற் றிலக்கிய வாராய்ச்சியில் லாதார்க்குச் சிற்றிலக்கணங்களை மாத்திரங் கற்பித்தலால் அன்னோர் வா வந்தானெனக் கண்டு கா கந்தா னென்றுஞ் சா செத்தா னெனக் கண்டு தா தெத்தா னெனவுங் கூறுவர் போலத் தமிழைப் பலவாறு விபரீதப்படுத்துகின்றனர். இதனாற் றமிழுக்கு வருங் கெடுதியைக் குறித்து மிக அஞ்சுகின்றோம். இவ்வாறு விளைந்த விபரீதங்களுக்குச் சில உதாரணங் காட்டல் தகுதியாயினும் பிறர்க்கு விரோதமா மென்று விடுத்தனம். இலக்கியங்களைப் போதுமான அளவு கற்பிப்பாராயின் இலக்கணத்தை ஒருங்கே ஒழித்து விடினுங் குற்றமுறாது. இலக்கிய வல்லாருக்கு இலக்கணந் தானாயமையும். இஃது எந்தப் பாஷைக்குஞ் சாதாரண தர்மம். இங்கிலீஷ் பாஷையில் மகா பாண்டித்தியமுள்ளோர் சிலர் தாம் இங்கிலீஷ் இலக்கணஞ் சிறிதுங் கற்றதே யில்லையென்று சொன்னதை நாம் காதாரக் கேட்டிருக்கின்றோம். தமிழில் நல்ல பிரபந்தங்கள் நூல்கள் எழுதினோர் பலர். அவ்வாறிலக்கணப் பயிற்சி இல்லாதா ரென்பது யாருமறிவர்.
ழூ ஐரோப்பிய பாஷைகள் போல ஒவ்வொரு மொழியுந் தன் சுயரூபமாகப் பக்குவிட்டு நில்லாது பலவாறு பிரியுந் தன்மையவாய்ப் புணர்ந்து நிற்குஞ் சம்ஸ்கிருதத் தமிழ் வாக்கியங்களை, அவற்றுள்ள பதங்களை அர்த்தத்தோடு முன்னர் உணர்ந்தாலன்றிப் பிரித்துப் பயன் கொள்ளுதல் அருமையாதலில், அமரம் நிகண்டு முதலிய முதலே கற்றல் மிக அவசியமென்பது இத்தேச மொழிவல்லார் துணிவு.
மேல்வகுத்த காலங்களுள் இந்நூலுடையார் காலஞ்சமணர் காலமென்று கொள்க. வீரராசேந்திர னெனவும் விக்கிரம சோழனெனவும் பெயர் வழங்கிய வீரசோழன் காலத்தில் அவன் கீழ்ப் பொன்பற்றி ய+ரிற் சிற்றரசு புரிந்த புத்தமித்திர அரசனால் எழுதப்பட்டு அவ்வீர சோழனது பெயர் வகிக்கப் பெற்றமையே இந்நூலெழுதி முன்பின் ஆயிரத் தைஞ்Ä}று வருஷஞ் சென்றிருத்தல் வேண்டுமென்பதற்குச் சான்றாகும். மேலும் “ஏதமறு சகாத்த மெழுநூற்றில்’ ஸ்ரீ கச்சியப்பசுவாமிகள் ஸ்காந்தம் அரங்கேற்றிய போது “திகட சக்கரம்” என மொழிபுணர்ந்ததற்கு விதிகாண்பிக்கும் பொருட்டு இந்நூல் கொண்டுவரப்பட்டமையானும், அக்காலத்துப் புலவர்களுக்கு இந்நூற்பெயருந் தெரியாமலிருந்தமையானும், தமது காலத்து நூலாயின் அவர்கள் தமக்கு நூதனமாயிருந்த அவ்விதியை ஆட்சேபியாமல் ஒத்துக் கொள்ளார்களாதலானும், இந்நூலின் அருமையை அவர்கள் மிகவியந்து கொண்டமையானும் இஃது அவர் காலத்திற்குப் பல நூறு வருஷங்களின் முன்னர்ச் செய்யப்பட்ட தென்பதற்கு மயக்கமில்லை.
இந்நூலாசிரியர் ஒரு சமணர். உரையாசிரியருஞ் சமணரே. அந்தச் சிறப்பில் அவர்க்குப் பெருந்தேவனென்று பெயர் குறித்திருப்பினுஞ் சமணர் தமது வித்துவான்களைத் தேவரென்று சாதாரணமாய்ச் சொல்லும் வழக்க முண்டாதலின் இவரதியற்பெயர் வேறாயிருக்கலாம். பாரதப் பெருந்தேவனாருங் கவிசாகரப் பெருந்தேவனாரும் ஆயிரம் வருஷத்துக்கு மேற்பட்ட இவர் காலத்துக்கு முன் இருந்தவர்களாதலின் அவர்கள் இவரினின்று வேறென்பது சொல்லவேண்டியதில்லை. அன்றியும் அவர்கள் சமணரல்லர். உரையில் எடுத்துக்காட்டாகப் பல செய்யுள்களை விக்கிரம சோழன் மகன் மகனாகிய அநுபமன சோழனது புகழாகப் பாடிச் சேர்த்ததனால் உரையாசிரியரும் ஆசிரியரும் ஒரே காலத்தினராயிருத்தல் வேண்டும். உரையைக் “கடனாகவே நவின்றான்” என்றுரைச் சிறப்புப்பாயிரத்தார் கூறினமையால் அவர் புத்தமித்திரனார் மாணாக்கரிலொருவரென உத்தேசிப்பாரும் பலருண்டு.
முதல் வழி சார்பு மொழிபெயர்ப்பு என்னு நாலினுள் இஃது சார்புநூல். அக்தியத்தின்வழி இயற்றமிழ் விரித்துணர்த்திய தொல்காப்பியமுங் காதந்திர காவியதரிசனங்களும் இதற்கு முதனூலென்ப. பொருளதிகாரத் துறையில் நாடகத் தமிழும் விரவிவரும் அலங்காரத்தைத் “தாண்டி சொன்னபடி வட நூலின் படியே யுரைப்பான்” என ஆசிரியர் கூறியது தண்டியாசிரியர் வடநூலில் இயற்றிய காவிய தரிசனமாமெனக் கொள்க. அதனைத் தமிழில் வடநூலின்படி தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்காரமெனச் சிலர் மயங்குப. சிலர் ஒருதண்டியே வடமொழி தென்மொழி இரண்டிலும் வல்லராய் உபயகவியென நாமம் வழங்கப் பெற்றிருந்தன ரென்றும் அவரே காவியதரிசனந் தண்டியலங்காரம் இரண்டிற்கும் ஆசிரியரென்றும் ஆதலால் அவற்றுள் எதனை முதலாகக் கொள்ளினும் அமையு மென்றுங் கூறுப. இருசாரார் கூற்றுந் தப்பென மறுக்க. தண்டியலங்காரமியற்றினார் அம்பிகாபதியின் புத்திரர். அம்பிகாபதி கம்பர் மகன். கம்பர் குலோத்துங்க சோழன் காலத்தில் வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியார் முன்னர் “எண்ணிய சகாத்த மெண்ணூற் றேழன்மேற்” றமது இராமாயணம் அரங்கேற்றியவர். இதற்கு நூற்றேழு வருஷத்தின் முன் குமர கோட்டத்தில் அரங்கேறிய ஸ்காந்தத்திற்கு வீரசோழியத்தினின்று இலக்கண விதிகாட்டப் பட்டதாதலால் இஃது பொருந்தாமை காண்க. அன்றியுங் காவிய தரிசனஞ் செய்த தண்டியாசிரியர் ஒரு சமணர். தண்டியலங்காரமுடையார் சைவர். ஆதலால் இருவரும் வேறு. மிகப் பழைய நூலாகிய காவிய தரிசனமே வீர சோழியவலங்காரந் தண்டியலங்காரம் இரண்டிற்கும் முதனூலாயிருந்ததென்க.
கரலிகிதங்களால் ஏட்டுப் பிரதிகளில் காலந்தோறும் புக்க அºரவழுவுஞ் சொற் சிதைவும் வாக்கியப் பிறழ்வும் இத்துணையவென்று சொல்லற்பாலதன்று. இதிகாச சிரோதத்தினமாகிய இராமாயணத்தை எழுதி அரங்கேற்றிய கம்பர் சோழன்மேற் கொண்ட சில வெறுப்பினால் அவனூரை விட்டு இருபது முப்பர் வருஷஞ் சேரனிடம் போயிருந்து பின்பு சோழனைக் காண அபேட்சையுடையாராய்த் திரும்பி வரும் வழியில் ஒரு மடத்திலே சில வித்துவான்கள் சேர்ந்து இராமாயணப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தனர். அஃது தனது இராமாயணப் பிரசங்கமெனத் தெரியாதிருந்துங் கற்றரைக் கற்றார் காமுறுதல் இயல்பாதலின் கம்பர் யாது பிரசங்கமாயினுமாகுக கல்விப்பிரசங்கங் கண்டுங் கம்பன் புறம்பொழுகலாமா வென்று. தன்னை இன்னானென்றன்னோர்க்குத் தெரிவியாது யாரோ வழிப் பிரயாணக் காரன் போல உள்ளே சிலநேரம் போயிருந்து ஒன்றையொன்று பார்த்தெழுத எழுதப் பிரதிகள் தோறும் புக்க வழுக்களுந் திரிபுகளும் அதிகப்பட்டிருந்தமையால் அஃது தனதிராமாயண மென்றுமட்டிடாமற் றன்வாக்குஞ் செய்யுட்;களும் இடைக்கிடை யாரோ சொருகுகவிகள் சேர்த்திருப்பதாகச் சொன்னாராம். ஒருவர் காலத்திலே இவ்வளவாயின் ஆயிரத்தைஞ்Ä}று வருஷத்துத்திரிவு எப்படியிருக்கலா மென்பதை அநுமானித்துக் கொள்க.
ஒரு தேசத்தில் வழங்கிவரும் பிரதிகளை மாத்திரம் பார்த்தார்க்கு இம்மாறுபாட்டின் பெருக்கந் தோன்றாது. மதுரைப்பிரதி திருநெல்வேலிப் பிரதிக்கு வேறு. யாழ்ப்பாணத்துப் பிரதி இவ்விரு தேசப் பிரதிகட்கும் வேறு தஞ்சாவூர்ப்பிரதி முதன் மூன்றிற்கும் வேறு. சென்னபட்டினப் பிரதிகள் இவையெல்லாவற்றிற்கும் வேறு எழுத்ததிகாரத்துஞ் சொல்லதிகாரத்தும் அத்துணை பெரும் வித்தியாசம் இல்லை. அதற்குநியாயம் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. அப்பால் மூன்றதிகாரங்களிலும் பிற்காலத்தோராற் செய்யுள் உரை உதாரணமென்றிவை யெல்லாந் தங்கடங்கள் மனம்போன வழியே மாற்றப்பட்டன. சில செய்யுளும் உரையும் ஒருங்கே தள்ளப்பட்டன. பழைய உதாரணங்களை நீக்கிப் புதிய உதாரணங்கள் பின்னூல்களிலிருந் தெடுத்துப் பதிலாகச் சேர்க்கப்பட்டன. தென்தேசப் பிரதிகளில் அலங்காரத்தின் பிற்பகுதி முழுவதும் யாப்பிற் சில பகுதியும் மூலமும் உரையும் ஒருங்கு பிறழ்ந்து செய்யுட்டொகையோடு மாறிப்போயின. இதனாற் பிற்காலத்தாராற் சேர்க்கப்பட்ட உதாரணங்கள் இப் பதிப்பிலும் பலவிடத்தும் செறிந்திருக்கு மென்றஞ்சுகிறோம். அது கொண்டு நூலின் பழமையை மறுக்கற்க.
மூன்று விரலைக் காட்டிக் கட்டிலிற் கால்போலப் பஞ்ச பாண்டவரையும் ஆறு கோணத்திலும் நிறுத்துக என்பான் தொகை விபரீதத்தோடு விரலை வாலென்றுங் கட்டிலைக் கடாலென்றும் பஞ்சபாண்டவரைப் பிஞ்சுப் பாகற்காயென்றும் மாற்றி எழுதிவைத்தால் அம்மொழியை சரிப்படுத்தல் இலேசாகுமா? அதுபோலவே, “விலாசம் பரிசர்ப்பம் விதூதம் சமம் நாபம் நமதூதி பிரகமம் நிரோதம் பரியுபாசனம் வச்சிரம் புட்பம் உபநியாசம் வருணசங்காரம் இவை பயிர்முகத்தில் அங்கம் பதின்மூன்று” என்பது “பிவாசம் விருத்தியபம் விவாசம் தாவனபம் சதூரகம் மரிசோதம் பரியானம் பாவைச்சிரம் செல்வம் வருணசங்காரம் இவை பிரதிமுகத்திலங்கும் பதின்மூன்று” எனக்கிடந்த ஏட்டுப் பிரதிகளோடு பட்ட பிரயாசைக்குப் பிரயாசையென்னுஞ் சொல் போதும் முதலினின்று முடிவுவரைக்கும் ஓரொருவரி ஒரொரு நொடியாகவே கொண்டுழைத்தோம். 0 ஏடுகளிலிருந்த பிரகாரம் 186வது பக்கத்திற் பதித்திருக்கும் “மாலாவன முதலிய” என்னுஞ் செய்யுளை எடுத்துத் திருத்த முயல்வோருக்கு இந்நூலில் யாமெடுத்த உழைப்புச் சிறிதே விளங்கும்.
0 வேறும் ஒரு பிரதியில் அகப்பட்ட நான்காவது ரூபத்தைத் திருநெல்வேலித் தாசில்தார் ம-ள-ள-ஸ்ரீ சின்னத்தம்பிப்பிள்ளை யவர்கள் அனுப்பி வைத்தனர். அச்செய்யுளைச் சரிப்படுத்த முயல்வோர்க்கு உபயோகமா மென்றெண்ணி அதனையும் ஈண்டுக் குறி;க்கின்றோம்.
“மாலவன முதலிய விமையவாதி பவானபுயிரெவண மிக்கால னெழிலல னனகாரிய வியலஙகிககெ செடனின் குருவாம தெவாகாங ககவான ஙகமில தாசில னெனற பொனறிவுன னெதிரிபவன பகவன மகாமுணாவா சொனன மணகாலன னறுவெத நானெனனான கழகுநாடன மிலக னறுன்னிய வெனறு கநது சொரிய மிரெயிலெய தாயொலினொங கூhதாhதம ரெரஙகூ மவாம மாணடார நதவிணாககொலபபூண மாலைசசாhபின மகிழடித தொ னறிக கயசசடை யெதபூணடினியுயிர் மெறப காடெண ணியலாhநன னெடுமாலை யிடககிளியை ததமால கொளாய விணணினிலாhமனல லாhவிழி ததனா சிறபபுக கூவிசி பன னொறக ரொபபெண ணாநதுநிக கிலுவாயத தாhங கொளகை யினொயதிh ததாh லிவிவி லொயவெக துதுணை யா வெலவென றுவள வினவிகுதிnh”
“கயிலிய கொவள னறனனை ககிhம”
“பாரிநனகுடை யினடஙகவெ – சொரிநிரதற கிருநத மாலனெ”
“கொவணமாலை மாவா ரெநதா வராமாலை மாறுச”
“காதமதணிடத்துல கணணினமான பெநது
மானிதாதுகுமா ணடதனது குறுமானி”
“புவிதானிட நதுலவி ரணடா hhடடயதுநா
டாளாகி முட்டவி hhhசெநதிரனி”
பிரதி எத்துணைப் பழையதோ அத்துணை அதன் மாறுபாடுகள் குறைவு. ஆனால் பூர்வ பிரதிகள் பாணவாய்ப்பட்டு எழுத்தோன்றற்குப் பாணவரி மூன்றென்றால் யாதுதான செய்யத்தக்கது!! “ஒளவையாராணை யொன்று” என்றுசாபம் பெற்றுக்கிடந்த பிரதிகளின் ஏடுகளை ஒன்றைவிட்டொன்று பிரித்தெடுத்ததே பேரற்புதமாயிற்று. பழம் பிரதிகளுள் ஸ்ரீலஸ்ரீ திருவாவடுதுறைப் பெரிய சற்குருநாத சுவாமிகள் தயை கூர்ந்து கட்டளையிட்டருளியது நெடுங்காலத்தது. கைவிட்டுக் கடன்கொடுத்த கைப்பிரதிகள் திரும்பி உடையார்பால் மீள்வதரிதாகிய இயல்பினையுடைய இக்காலத்தில். முன் நம்மை அறியாதவர்களாயினும் நமதுபிரார்த்தனையை மறாது கிருபை புரிந்ததுமன்றி ஆதீனத்துப் பழம்பிரதிகளுட் பல நாளாகத் தமது பரிசனத்தைக் கொண்டு தேடுவித்து எடுத்தனுப்பிய பரிபூரண கிருபைக்காக மிக்க கடமைப்பட்டிருக்கின்றோம். பெரிதும் ஈனஸ்திதியில் இருப்பதால் உங்கள் காரியத்திற்காக உபயோகமாகாதென்று எண்ணுகின்றோம். என்று சுவாமிகள் கட்டளையிட்டருளிய பிரதியே அவர்கள் ஆசீர்வாதத்தினால் நமக்;கு மற்றெல்லாவற்றிலுஞ் சிரேஷ்;ட பிரதியாயினது சமுசயம் நிகழ்ந்த இடமனைத்திலும் அதனையே ஆதாரமாகக் கொண்டு மற்றத் தேசத்துப் பிரதிகளை அதற்கு உபபலமாக வைத்துப் பரிசோதனை செய்து எடுத்த முயற்சியை ஒருவாறு நிறைவேற்றினோம்.
ஆயினுந் தற்காலத்திற் றமிழ் நாடுகளில் வழங்கும் பிரதிகள் அனைத்திலும் இப்பொழுது யாம் அச்சிட்டு வெளிப்படுத்தும் ரூபம் மேலானதென்று கொள்வதேயன்றி ஏட்டுப் பிரதியின் ஆதாரமில்லாது யாம் ஒரு மொழியும் மாற்றிலேமாயினும், இதுதான் ஆசிரியரெழுதிய சுத்தரூபமென்று கொள்ளற்க. அனைத்து மாறுபாடுந் திருத்தி ஆதிரூபங் காட்டுதல் இனி எத்துணை வல்லார்க்கும் அரிது. பிறநூற்றணிவிற்கு மாறுபட்டுந் தற்கால வழக்கத்தை விரோதித்துஞ் சரியான அர்த்தம் ஓ புலப்படாமலுஞ் சமுசயம் நிகழ்ந்த இடத்தும் எல்லாத் தேசத்துப் பிரதியும் ஒத்திருந்தனவற்றையும் யாம் சிறிதுந் திருத்திப் பதிப்பித்திலேம். அவற்றைத் தம் மதத்தின்படி திருத்துதல் அறிவுடையோர்க்கு இயல்பன்று.
ஓ அர்த்தம் புலப்படாதனவற்றிற்குச் சில உதாரணம் 127-வது பக்கத்தில் யாப்புப்படலம் 33-வது காரிகை யுரையில் வரும் மேற்கோட் சூத்திரங்களிற் காண்க. பெரும்பான்மைய பிரதிகளில் ஒழிக்கப்பட்டமையானும், அவற்றிற்கு ஆதாரம் வடநூல்களினுங் காணப்படாமையானும், அர்த்தந் தெரியாதன வற்றை அச்சிட்டும் பயனின்மையானுஞ் சில வித்வசனர்கள் அவற்றை நீக்கி விடும்படி சொன்னார்கள். இறந்துபோகவிடாது நிலை நிறுத்துவதேயன்றி உலகத்திற்கு வீரசோழியத்தை உணர்த்துவது நமது நோக்கமன்றாதலானும் இவ்வாறு பொருள் விள்ளாதிருந்தன சில பின்னர் வீசகணி தாதாரமாகக் கணக்கேற்றியபோது புலப்பட்டமையானுங் கூட்டுதலும் மாற்றுதலும் போலக் குறைத்தலும் ஒருவர் நூலைப் பதிப்பிப்போர்க்குப் பெருங் குற்றமாதலானும் அவற்றை இருந்த வண்ணம் ஒப்பித்தனம்.
முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும்
பொன்னேபோற் போற்றுவர் பொற்புலவர் – அன்னோர்
நடையிடையத் தம்வழியே நாட்டி மொழிமாற்றல்
கடையிடையர் மாட்டுவினை காண்.
என்னுஞ் செய்யுளிற் கூறியபடி அஃது துணிவு. திரிபு, ஐயம் இவற்றினை முறையே உடைய உத்தமர், மத்திமர், கடையருள் விபரீத அறிவினையுடைய மத்திமர்க்குஞ் சந்தேக ஞானத்தையுடைய அதர்மர்க்கும் உரிய தொழில் என்றுணர்க. பிரதிகள் அனைத்தும் ஒத்திருந்தமைபற்றி நாந் திருத்தாதொழிந்து விட்டவற்றை வழுவென கண்டுழித் திருத்திக் கொள்ளுதல் நூலை வாசிப்போர் கடனாம் ஆதலால் அவர்க்கு,
ஓரா தெழுதினே னாயினு மொண்பொருளை
ஆராய்ந்து கொள்வ தறிவுடைமை – சீராய்ந்து
குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்.
என்று உரையாசிரியரே எழுதியிருப்பதை இவ்விடம் நினைப்பூட்டுகின்றோம். நல்ல வித்துவான்களுள்ளும் அநேகர் தாம் வீரசோழியமென்னும் பெயரைக் கேட்டதன் நூலைப் பார்த்தறியேமெனப் பலபல சமயங்களில் நமக்கு நேரே சொல்லினர். ஆதலால் அழிந்திறந்து போன நூல்களுட்டானு மொன்றாகி இன்னுஞ் சில காலத்தில் மருந்துக்கு மகப்படாமற் போய்விடுமென் றஞ்சி, அதன் பாலிய யவ்வன சொரூபங் கிட்டாதாயினுங் கிடைத்தவரைக்கும் அதனைக் காப்பாற்றுதலே இதனை இப்போது அச்சிடுவித்த நோக்கமென் றுணர்க.
வடநூற் பயிற்சி யில்லாத எனக்குப் பொருள் யாப்பலங்காரங்களில் வரும் அரிய சம்ஸ்கிருத விதிகளிற் றுணை செய்தோராய, அடியேனது பரமாசாரியர் வேதாரணியாதீனம் ஸ்ரீலஸ்ரீ கைலாயநாத சந்நிதிக்கும், சென்னபட்டினம் பச்சையப்ப முதலியார் பாடசாலைச் சம்ஸ்கிருத பண்டிதராகிய ஸ்ரீமத், மண்டைக்குளத்தூர் கிருஷ்ணசாஸ்திரியாருக்கும். யாழ்ப்பாணம் நீர்வேலி ம-ள-ள-ஸ்ரீ சிவ சங் சிவப்பிரகாசபண்டிதருக்கும் மிக்க வந்தனஞ் சொல்லுகின்றனன்.
சந்தத் தருவைச் சார்ந்திடு வேம்புந் தகைமணமே
தந்திடு மென்பவச் சால்பெதற் காமிந்தத் தாரணியில்
அந்தமில் கேள்வி அறிஞரை நாளு மடைந்தவென் சொல்
சந்தமு றாதிருந் தாற்றவ றார்வயிற் சார்வதுவே.
சி. வை. தா.
சென்னபட்டணம்
விசு ò சித்திரை ñ
வீரசோழியப் பதிப்புப் பற்றிய
சிறப்புக் கவிகள்.
1
தஞ்சாவூர்
சதாவதானம் - சுப்பிரமணியஐயர் சொல்லிய
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
சொல்துளைத்த நாவலர்க ளெழுதிவைத்த
முதுவீர சோழி யத்தைச்
செல்துளைத்த புள்ளியன்றி மெய்ப்புள்ளி
விரவாத சென்னா ளேட்டிற்;
பல்துளைத்து வண்டுமண லுழுதவரி
யெழுத்தெனக்கொள் பரிசி னாய்ந்து
கல்துளைத்த வெழுத்தாவச் சிட்டனன்தா
மோதரனாங் கலைவல் லோனே.
2
புரசை
அஷ்டாவதானம் - சபாபதி முதலியார் சொல்லிய
நேரிசை வெண்பா
கல்லா மகலியைநீள் காசினிக்கு ராமனியல்
நல்லாளாச் செய்யு நலமென்கோ – சொல்லாருந்
தாமோ தரன்வீர சோழியமுன் தந்ததக்கோர்
தாமோ துருவாத் தரல்.
3
கோப்பாய்
வித்துவான் - சபாபதிப்பிள்ளை சொல்லிய
நேரிசைவெண்பா
மாயைதனி னின்றுலகம் வந்தவா வென்னுகோ
மேயவிந்திர சாலமென விள்ளுகோ – போயவுருத்
தொல்லையது போல்வீர சோழியந்தா மோதரன்றன்
வல்லமையா லின்றுபெற்ற மாண்பு
4
துரைத்தன வித்தியாசாலைத் தமிழ்ப்புலவர்
தொழுவூர் – வேலாயுதமுதலியார் சொல்லிய
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
புனனாடென் றுரைக்குமுரை போயடங்க
வொருகோழிப் பூழி யின்வீ
றினநாடா வகைபடைத்த வீரசோ
ழியமெங்கே யெங்கே யென்னத்
தினநாடு புலவர்மனங் களிதூங்க
வெளிப்படுத்த திறத்தை நோக்கிக்
கனநாடி யெவர்தாமோ தரமிவர்க்கென்
றியற்பெயராற் கருதி னாரே.
5
திரிசிரபுரம்
சோடசாவதானம் - சுப்பராய்ச்செட்டியார் சொல்லிய
நேரிசைவெண்பா
வழுவாகும் வன்மகர வாயப்பட்ட நூலைத்
தழுவாத்தா மோதரவேள் சாலவ் - வழுநீக்கித்
தந்ததுமுன் வன்றொண்டர் சார்கரா வாய்ப்பனவற்
றந்ததனை யொக்குந் தகைத்து:
6
சொர்னநாதபுரம்
துவாத்ரிம்சதவதானம் - இராமசாமிச் செட்டியார்
சொல்லிய
நேரிசைவெண்பா
இறந்தபூம் பாவை யெலும்பினைச்சம் பந்தர்
சிறந்தபெண்ணாச் செய்த சிறப்பாம் - திறம்பலசேர்
தாமோ தரன்வீர சோழியத்தார் சாற்றுருவம்
பூமீ தியைத்த தெனப் போற்று.
7
சுன்னாகம்
அ. குமாரசுவாமி உபாத்தியாயர் சொல்லிய
கட்டளைக்கலித்துறை
பொன்னிற் பொலிந்திடும் பூணாக்கு மாக்களைப் போன்ற சொல்விற்
பன்னரைப் பாரிற் பரவுவர் காண்வன் பரலுலத்தைச்
சொன்னம தாக்கிய தாமோத ரேந்திரன் றொல்புகழை
யென்னென்ப வோவிதற் கோர்ரச சாதமு மீடல்லவே.
பொன்பற்றிகாவலன், புத்தமித்திரனார் இயற்றிய இவ் வீரசோழியம்: யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளையால் பெருந்தேவனா ருரையோடு பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்துச் சென்னை சின்னையநாடார் அச்சுக்;கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. ஜய ò மார்கழி ñ@ 1895
2. கலித்தொகைப் பதிப்புரை
கயிலை மன்னிய கடவுட னனுக்கிர கத்தி
னியல்பு காட்டிமற் றேழையேம் பொருட்டுரு லேய்ந்த
செயல்கை லாயநா தக்குரு திருமறைக் காட்டிற்
பயில வாய்ந்ததென் றாய்ந்தவ னிணையடி பணிவாம்.
திங்க ளாம்பலுஞ் செங்கதிர்ச் செல்வன்
கொங்கவிழ் நறையிதழ்ப் யங்கய மலகு
நீர்மிசை மயலர்ந்துஞ் சீர்வறி தாக
வளமலி யுலகி லுளநிறை புலமைக்
கலைக்கதிர் கொடுகருஞ் சிலைக்கிணை கடந்த
என் இதயமுஞ் சிறிதறிவு உதயமாம்படி பார்மிசைப் பக்கவிட நெகிழ்த்திய மிக்க சிறப்பினையுடைய,
சுன்னை முத்துக் குமாரன் றுணைக்கழல்
சென்னி நாவொடு சிந்தை திருந்தவைத்
தன்ள மூதறி வாளர் பதந்துதித்
திந்நி லத்திவ் வுரையின் றியம்புகேன்.
தமிழ் சுயபாஷையென்பதூஉம், அதன்பெயர் திருவிடமரூஉவன்று தமிழ் மொழியே யென்பதூஉம். அஃது பரத கண்டத்தில் எப்பாஷைக்கு பிந்தியதன்றென்பதூம் எவ்வாற்றானும் பிறபாஷைகளுக்குத் தாழ்ந்த தொன்றன் றென்பதூஉம் வீரசோழியப் பதிப்புரையில் ஆNºப நிராகரணசகிதமாக லிவரித்தெழுதி யிருக்கின்றேன்.
ஆயினும் என்கூற்றை நன்குணராது, திராவிடமென்னுஞ் சம்ஸ்கிருதபதந் தமிழெனத் திரிதற்கு மார்க்க மில்லையென்று யான் மறுத்தது போலச் சிலர் மயங்கி, வெகு கஷ்டப்பட்டு விதிநாட்டித், திரவென்பது தவ்வாகியும் வகரடகரங்கள் மகர ழகரங்களாகியும் மருவி அம்மீறு கெட்டுத் தமிழாயிற்றென்று பல்லுதாகரணங்கள் காட்டி வாதித்து, இனியான் தம்மதத்திற்கு உட்படுத்தலே தக்கதென்றும் போதித்தனர். இப்படி மருவுதற்கு விதியிலதென்று யான் யாண்டுஞ் சாதித்திலேன். இதுவும் ஒரு பெருமயக்கே. தமிழென்பதற்குந் திரவிட மென்பதற்கும் உள்ள சப்த பேதத்தைக் குறித்து விசாரிப்புழியன்றே இது பயன்படுவது? அன்றியும் மடூஉ மொழியிலக்கணமுமொன்று உளதாக விதிவிதியென்று மாரடிக்க வேண்டிய தலைவிதிதா னென்னோ? மரூஉவிற்கு ஒருவழிப் பட்ட விதியுண்டா? திரவிடந் தமிழென மரீஇயிற்றென்றாற் போதாதா? தமிழென்னுஞ் சொல் தமிழ்ப்பாஷைச் சுயமொழியா திரவிடமென்னும் வடமொழித்திரிபா எஃதுண்மையென ஆராய்ச்சி செய்வான் புகுந்தபோதே திரவிட மென்பது தமிழென மாறுதற்கு விதியுண்டென்று யான் ஒத்துக்கொண்டதுதானே போதருமல்லவா?
இனி இவர் கூற்றின் சாராமிசத்தைச் சிறிது கவனிப்பேம். மதுரையில் ஒரு திருமலை நாயகன் இருந்தனன். சென்னையில் ஒரு திருமலை நாயக்கன் இருந்தனன். இருவரும் வடுகர். சென்னைக்கும் மதுரைக்கும் மிகச் சுளுவிலும் விரைவிலும் போய்வரத்தக்கதாகப் புகையிரத வீதியுண்டு, ஆதலால் இரண்டிடத்தும் இருந்தது ஒரே திருமலை நாயக்கன்தா னென்பதே. இஃதென்ன தர்க்க லºணம்! என்ன விபரீதம்!! ஒரே காலத்தில் இருந்தாரென்று கொள்ளினும் இது சித்தாந்தமாகாதே. பி;ன்னை அகத்தியர் காலத்தின்முன் பிறந்த திராவிடப்பதத்தையும் ஒன்றென்றால் யார்தான் நகையார்? மூதாதை திருமன்றலிற் பௌத்திரன் சந்தன தாம்பூலம் பரிமாறினா னென்பதற்கும் இதற்கும் யாது பேதம்? தமிழென்னும் பதத்தை எடுத்தாண்ட அகத்திய தொல்காப்பியர் காலத்துச் சம்ஸ்கிருத நூலுடையோராய நாரத வியாச வசிஷ்ட ராதியர் வாய்மொழியினின்று திரவிட சப்தம் வழங்கியதை முதற் காட்டியதன்றோ பின்னர் இம்மதம் நாட்டப்புகுதல் வேண்டும்? சிவபெருமான் அகத்தியரைப் பொதியிற்கு அனுப்பிய கதை ஸ்காந்தம் முதலிய பழைய புராணங்களில் உளதாகவும், ஆண்டுத் திராவிட சப்தத்தைக் காண்கிலமே. ஆலசியபுராணம் பாகவதம் முதலிய பிற்றைநாள் நூல்களிலன்றோ அது முளைத்தது? யான்போகும் இடங் கலைவல்லோரும் முனிவரும் நிறைந்த பெரு மாண்பினதாதலில் அவர்கள் மொழியை உபதேசித்து என்னை ஆண்டனுப்புக என்றதன்றித் திரவிடமென்று கேட்டதில்லையே.
வியாசர் புராணங்கள் செய்த காலத்திற் றமிழ் இல்லை. இருப்பினன்றோ அதன் பெயர் வரும். இஃதென்றே தமிழ் பிற்றைநாளது என்பதற்குச் சான்றாகுமென்றும் வாதிப்பார்போலும். புராண இதிகாசங்களினகத்துச் சேய்ஞ்ஞலூர் மணலியூர் முதலிய சுத்த தமிழ்ப் பெயர்கள் கூறப்பட்டுக் கிடப்பதே தமிழ் அவர்காலத்து உண்மைக்குச் சான்றாகும்.
ஒன்றினின்று ஒன்று பிறந்தது உண்மையாயின் அதற்கு வேறு ஏது காட்டி முடிவு செய்யாமல். எழுத்திலக்கண விதியினால் ஒன்றனை ஒன்றன் யாயென்று கூறி, அதுமாத்திரத்தாற் றமது மதந் தாபிக்கப்பட்டதென்று முழங்குவது ஆன்றோர் அறிவிற்குப் பெருமையன்று மேலும்ஸ்தாபனப் பொறுப்பும் அவரதே. எழுத்திலக்கண விதியொன்று மாத்திரமே கொண்டு நியாயம் பேசில் (றுயடட) உவால் என்னும் ஆங்கிலேய பதம் பந்தல் பந்தர் சாம்பல் சாம்பரென்றாற்போல லகரம் ரகரமாகியப் பிரவாளம் பவளம் யிரயாணம் பயணமென்றாற்போல ஆகாரங் குறுகிச் சீலம் சுசீலம் சுகம் சுசுகமென்றாற்போலச் சுப்பிரத்தியம் பெற்றுச் சுவரென்னுந் தமிழ்ச்சொற்சனித்த தென்றுஞ் சிவிறி விசிறி யென்றாற் போல (புழசளந) ஹோர்ஸ் குதிரையென்றும் (சுiஉந) றைஸ் சோறென்றும் ஆயிற்றென்றுஞ் சொல்லலாமே. (ளுரனெயல) ஸன்டே முதலிய வாரப் பெயர்களெல்லாம் ஸன்னினின்று சூரியனும் மூனிலிருந்து சோமனுந் தியூஸ் ஸ்யூத்தென மாறிச் செவ்வாயும் பிறந்ததென்று சாதிக்கலாமே. இதுவா அந்தோ! இவர்கள் கற்ற எழுத்திலக்கண முடிவு?
இனிக் கால நிர்ணயத்தையாவது கொஞ்சமேனுங் கவனிக்கின்றார்களா? சோமசுந்தர பாண்டியனென்ற பெயரை ஒருவற் கதிகம் வகித்தல் தகாதென்றாற் போலக் கிரேக்கர் இந்தியாவிலே ஒரு சோமசுந்தரபாண்டியனோடு இற்றைக்கு 1500 வருஷத்திற்கு முன் கொண்டாட்ட முடையராயிருந்தனராதலால் அவனே ஆதி சோமசுந்தர பாண்டியனென மயங்கி மதுரைத் திருவிளையாடற் சரிதை யெல்லாம் முந்தநாளைச் சரிதையென்று துணியுங் காலுவலாசிரியர் கூற்று எத்தன்மையது? இன்னோரன்னோர்க்குத் தமிழ்க்கு 16,000 வயதும் திராவிடத்துக்கு 2000 வயதுமென்று யாங் காட்டுவதனால் யாது பயன்?
மேலும் ஆனனம் பங்கசங் கிரீடமென் றின்னனவொப்பத் தமிழென்பதுந் திரவிடமென்பதும் ஒரு பொருளனவா? அதுவுமன்று. அங்கம் வங்கங் குலிங்கம் வங்காள மென்றாற்போலத் திராவிடம் முதலில் நாட்டைக் குறித்துப் பின்னர் ஆகுபெயராய் அந்நாட்டு மொழியைக் குறிப்பது. அங்கர் வங்கர்போலத் திராவிட ரென்பது திராவிட தேசத்தாரென்னும் பொருளதன்றித் திராவிடபாடை பேசுவோரென்னும் பொருளதன்றித் திராவிடபாடை பேசுவோரென்னும் பொருளுடையதன்று. தமிழ் அங்ஙனமன்று. தமிழரென்றாற் றமிழ் நாட்டாரென்னும் பொருளே தொனிப்பது. சம்;ஸ்கிருதத்தினின்று தமிழில் வந்த சொற்களுக்கு இவ்வாறாய பொருட்பேதமின்று. சமஸ்கிருதத்திற் குறிக்கும் பொருள் எதுவோ அதுவே தமிழகத்துங் குறிக்கப்படும். இதனானுந் தமிழுந் திரவிடமும் வேறுவேறென்பது போதரும்.
இன்னும் இரண்டொரு நியாயந் தமிழ் வழக்கை ஒட்டி ஈண்டுக் கூறுவன். தமிழ் திரவிடத்தின் திரிபாகிய வடமொழியாமாயிற் பஞ்ச திரவிடமென்பார். பஞ்ச குற்றம் பஞ்சகேள்வி பஞ்ச தொழில் பஞ்சதாயர் பஞ்சதிணை பஞ்சபாலென்று இன்னோரன்ன தொகைகளை ஒழித்துவிட்டாற் போலப் பஞ்ச தமிழென்பதனையும் விலக்கி விட்டதென்னோ? ஐவகைப் பொருள் தொக்க வடமொழிப் பெயர்களெல்லாம் பஞ்ச என்னும் எண்ணுப்பெயர் புணர்தற்பாலவன்றோ? முத்தீயைத் திரிதீ யென்னார் முப்பழத்தைத் திரிபழமென்னார் அஃதொப்ப முத்தமிழைத் திரிதமிழென்னார். மேலுந் திரிபுரத்தைத் திரிபட்டணமென்னார் பஞ்ச பாதகத்தைப் பஞ்சமறமென்னார் அவ்வாறே பஞ்சதிரவிடத்தையும் பஞ்சதமிழென்னார். வேறென்ன சாட்டி வேண்டும்? சிறுகால் அருகி வழங்குஞ் சதுர்மறை சத்தகடலென்னும் அற்பவழக்கு விலக்கென்றொழிக. அதுவும் அடிபட்ட ஆன்றோர் வழக்கன்று. கொடுந்தமிழின் பாற்பட்ட இழிவு வழக்கேயாம். பஞ்சதமிழ் திரிதமிழென்று அங்ஙனே இழிந்தும் வழங்கிற்றில தென்பது யான் கூறவேண்டியதில்லை.
உரியநெய் தாளதாமரை எனல்போலத் தமிழப் பிள்ளை தமிழப்பல்லவன் தமிழவண்ணல் தமிழநாகன் எனத் தமிழென்னுஞ் சொல் அகரச்சாரியை பெற்று வருதலும் அ.ஃது ஆரியமொழி யல்லாத சுத்த தமிழ்ச் சொல்லாதல் பற்றியே யென்றறிக. தமிழில் மகர ஈறுபெற்று அதுபற்றி அத்துச் சாரியை சேரப்பெற்ற சில மொழி தவிர யாதொரு சொல் தமிழ்ச் சாரியை பெற்றது அது தமிழ்ச் சொல்லென்றே துணிக.
இனி ஆரியத்தில் வழங்கிய திரிவிட மென்னும் பெயர் யாது பொருளைக் குறித்தது? அப்பொருள் உள்ள இடத்தில் யாது பெயர் அதற்கு நிகழ்ந்தது! பல்லாயிர வருஷமாகத் தமிழ் தனக்கொரு பெயரில்லாமலா இருந்தது? என்றுயான் கேட்டதற்கு முகமென்னும் பெயர் வடமொழியினின்று வருதற்கு முன்னே தமிழில் முகத்திற்கு யாது பெயர் வழங்கிற்றென்னுங் கேட்பாருளர். யாதாயினும் ஒருமொழியில் இரண்டோரெழுத்துச் சம்ஸ்கிருதத்திற்குந் தமிழிற்கும் பொதுவாயின் அது சம்ஸ்கிருதத்திலிருந்து வந்ததென்று சாதித்தல் சரியன்றென்றும் இங்கிலீஷிலுள்ள பாதர் மதர் ஒப்பத் தமிழிற் பிதா மாதா என்றிருத்தலால் ஒன்றினின்று ஒன்று வந்ததன் றென்னும் யான் வற்புறுத்தியதைச் சிந்தை செய்தனராயின் முகமென்பதும் அங்ஙளே இருமொழிக்கும் பொதுவென்று கொள்ளாது இவ்வாறு கேட்பது சாத்தியக் கோளென்;னும் போலி நியாயமல்லவா? சம்ஸ்கிருதமொழி ஒன்றாவது பயிலாத கலித்தொகை முதலிய சங்கத்தார் நூல்களில் முகமென்பது எத்தனையோ இடத்தில் வருகின்றதே. அன்றியும் முகமென்னும் பலபொருளொருசொல் தமிழ்த்திரிசொல்லென்பது அதற்;குச் சம்ஸ்கிருதத்தில் வழங்காத பொருள்களும் வழங்குவதினாற் போதரும். இதுபோலத் திருஅகம் புதன் தாமரை மனமென்றற்றொடக்கத்து அளவிறந்த சொற்கள் இரு மொழிக்கும் பொதுவாயுள்ளனவற்றை ஒன்றற்கே உரிய தென்று கோடல் நடுவுநிலைமையன்று. ஒருமொழி பலபாஷைக்குப் பொதுவாய் நிகழ்வது பாஷா சம்பந்தம் உணர்ந்தோர்க்கு நூதனமன்று. திருமண் திருநீறு திரு விழா அங்கை அஞ்செவி புதன்கிழமை செந்தாமரை முதலிய செந்தமிழ் வழக்கும் புணர்ச்சியும் சமஸ்கிருத மணமுமில்லாத பண்டைய சுத்த தமிழ் நூல்களில் ஆங்காங்குப் பல இடங்களிலுங் காணலாம்.
இவற்றோடு பெரும்பாலும் ஊடாடாது பிற்றைக் காலத்தனவாகிய இதிகாச புராணாதிகளிலும் சமய சாஸ்திரங்களிலும் மிக்க பயிற்சியுடையோரே தமிழின் தொன்மையையுஞ் சுவயத்துவத்தையும் நன்குணராமல் அதனை வடமொழியினின்று உற்பத்தியாயிற்றென்பர். இலக்கணக் கடலாகிய ஈசானதேசிகரே இவ்வாறு மயங்கின ரெனின் மற்றையோர் பிழைப்பது அதிசயமா? இவர், “அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்ற ளொன்றே யாயினுந் தனித்தமி ழண்டோ” என்று கூறியதே அவர் இந்நூல்களிற் பயிலாமைக்குச் சான்றாம் தமிழ்செய்த தவக்குறைவே அன்னோர் வடமொழிச் சாகரத்தில் மூழ்கி ஆனந்தித்துத் தமிழை அலட்சியஞ் செய்தது.
ழூ வடநூற் பயிற்சியில்லாத என்போலியர் இவ்வித ஆராய்ச்சியில் ஒருமுடிவுகாண அருகரன்றென்று சிலர் வாதித்தனர். காண்டல் கருதல் உரையென்னும் மூன்று பிரமாணங்களே அறிவிற்குக் கருவியாம். அவற்றுள் முன்னையது இவ்வாராய்ச்சிக்கு ஒவ்வாது. பன்னையவற்றுள்ளுங் கருதல் காண்டலானும் உரையானும் பெற்ற சாதனங்கள் மேற்சென்று நிகழ்வது. ஆதலால் உரையே ஈண்டு இன்றியமையாததாம். இனி இவ்வுரைப் பிரமாணங் கல்வி கேள்விகளால் அடைவது. இவற்றுட் கேள்வியில்லாக் கல்வி சிறப்புறாது. கல்வியின்றியுங் கேள்வி சிறப்புறும். “முற்றப்பலு முனியா தினிதோதிக் - கற்றலிற் கேட்டலே நன்று” திருவள்ளுவ நாயனாருஞ் “செல்வத்து ளெல்லாந்தலை” என்றது அதனையே. பின்னைச் சம்ஸ்கிருத நூற்களின் பொருள் அந்நூற்களில் வல்ல புலவர் வாயிலாகக் கேட்டறிந்த அறிவின் மேல் யுத்திபூர்வமாகக் கருதல் நடந்துழி வருங்குறைவு யாதோ? அன்றியுங் கல்வியாலாகும். அறிவிற் கேள்வியான் வருவது நூறுமடங்காகுமே. ஆதலாற் பலகாலும் விபரீத உணர்ச்சியையுந் தருவதாகிய கல்வியே இதற்கு உபகாரப் படுவதன்றென மறுக்க.
ழூ “வடநூற் பயிற்சியில்லாத எனக்கு” என்று யான் வீரசோழியப் பதிப்புரையில் எழுதியது அப் பாஷையறிவு சிறிதும் இன்மையானன்று. சம்ஸ்கிருதத்திற் சந்தியுங் கிரியையும் ஒதி இதோபதேசமும் ரகுவமிசமும் பார்த்துளேனாயினுஞ் சின்னூல் கற்றுப் பன்னூற்புலவர் போலத் தம்மை மதிப்பார்போலாது என் வடமொழியுணர்ச்சி தம்மை மதிப்பார் போலாது என் வடமொழியுணர்ச்சி ஒருணர்ச்சி யன்றேன்று யான் கருதியமைபற்றியே யெனக் கொள்க. தமிழிலேதானும் யான் என்னை ஒரு பொருளாக மதியாமை தொல்காப்பியப் பதிப்புரையிற் பண்டிதர் கவிராசர் வித்துவான் புலவனென்றின்னோரன்ன பட்டத்திற்கு அருகனாகாது இன்னும் பலகாலந் தமிழ்ப் படித்ததற்கு உரிமைபூண்டு நிற்கும் என்போலிய ரென்பதனான் விளங்கும். நமது தமிழ்நூல்களுக்கு வந்த விதியையும் கையெடுத்துப் பிரிதிகளின் கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்கமாட்டாமை யொன்றே என்னை இத்தொழிலில் வலிப்பது.
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண் தறிவு”
வடமொழியின் மகத்துவத்தை யான் எஞ்ஞான்றும் எட்டுணையும் அவமதித்திலேன். தமிழ் அனாதியென்றாவது சம்ஸ்கிருதத்திற்கு முந்தியதென்றாவது கொள்கிலேன். ஆரியர் வருதற்கு முன் பாதகண்டத்திலிருந்த பாஷை தமிழென்றும் ஆரியரால் முறியடிக்கப்பட்ட தமிழர் 0 தென்றிசைச் சென்று சேர சோழ பாண்டிய ராச்சியங்களை ஏற்படுத்தினார்களென்றும் ஆதலாற் பரதகண்டத்திற்குத் தமிழே முந்தியதென்று சாதிப்பா ருளராகவும், யான்
“இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரிசைவாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும்
இருமொழியு மான்றவரே தழீஇயினா ரென்றாலிவ்
இருமொழியு நிகரென்று மிதற்கைய முளதேயோ”
என்ற முனிவரர் பதத்தைச் சிரமேற்றாங்கி இருமொழியுஞ் சமத்துவ முடையன வென்றும் ஆகவே தமிழிற்குச் சம்ஸ்கிருதந் தாய்மொழியன்றென்றுந் தமிழின் பெயர் திராவிடமென்பதன் மரூஉவன் றென்றுஞ் சாதிப்பான் நின்றனன்.
0 இதற்கு அயற் சாட்சிகளும் பிற உளவென்றேன். சென்னை ஹைகோர்ட் சிரேஷ்ட நியாயாதிபதியா யிருந்த சர் சாள்ஸ் தேணர் துரையவர்கள் இமயமலைச் சாரலில் இருக்கும் ஒரு வேடச் சாதியாருடைய பாஷை தமிழோடொற்றுமையுடையதென்று தெரிவித்தனர். இதனால் தென்றிசைச் சென்றோர் பலராகச் சிலர் வடதிசைச் சென்று மலையடிவாரங்களிற் குடியுறைந்தன ரென்றுங் காலாந்தரத்திற் பல விகற்பங்களை யடைந்த அவர் தமிழ் இப்பொழுது பிறிதொரு பாஷையாயிற்றென்றுங் கொள்ளலாம். இங்கு வந்த தமிழரினின்று சிதறி நீலகிரியிலுங் குடகத்திலும் வதிந்த தோடர் குடகர் பாஷைகளும் அன்ன என்றறிக.
ஆயினுஞ் சுதேசமித்திரன் வாயிலாகத் தோன்றிய ஒருவர் யான் கூறாத கூற்றுக்களையும் என்தலைமேலேற்றிச் சம்ஸ்கிருதத்திலும் வைஷ்ணவத்திலும் அசூயை கொண்டிருக்கின்றேனென்று பழிசுமத்தினார். சைவருஞ் சமணரும் போல வைஷ்ணவர் தமிழைப் பரிபாலித்திலரென்று யான் சாற்றியதில் வைஷ்ணவ நிந்தை எவ்வாறு பெறப்பட்டதோ? “வைணவர்கள் திராவிடத்தைப் பள்ளித் தமிழென்று ஏளனமாயுரைப்பர்” “வைணவக் கிரந்தந் தமிழில் செய்தால் அது தமிழுக்குக் கவுரவம்” என்று கழறிய அவர் கூற்றே என் சொல்லை மெய்ப்பிக்கவில்லையா? பின்னை என்மேல் ஏன் அவர்க்கு இவ்வளவு நிந்தனை! விதவையை மொட்டையடிக்கும் உறவினர் அவள் அளகத்தின்மேற் கொண்ட வெறுப்பினாலா அவ்வாறு செய்விக்கின்றனர்?
யானை தன் தலைமேல் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதுபோல் இன்னும் பல சைவ நிந்தனைகளுக்கும் சைவாசிரிய நிந்தனைகளுக்கும் இவர் தம்மை ஆட்படுத்திக் கொண்டதனால் எனக்கு யாதும் மனக்கோட்டமிலது. ஆயினும் அவர் கடிதத்தில் என் கூற்றுக்கு ஆNºபமாகச் சிலவாதந் தொடுக்கப்பட்டமையால் அவற்றை மாத்திரம் ஈண்டு நிராகரிக்கின்றேன்.
“ஆரிய சம்பந்த மின்றித் தமிழ்க் கிரந்தங்கள் கிடையா” என்றார். இது பிறவிக் குருடன் சூரிய சந்திர ருண்மையை மறுத்த தொக்கும். இதனை முன்னரே நிராகரித்திருக்கின்றேன். இதன் பொய்மையை மதுரைச் சங்கத்து நூல்களுள் ஒன்றையாவது பார்த்து உணர்வாராக. இக் கலித்தொகையே இதற்குச் சான்று பகரும்.
“அகத்தியத்திற் கீர்வாணத் தோரணைகள் அநேகங் காணலாம். நாடகத்தை நாடகமெனவே அகத்தியர் கூறுவர்” என்றார். அகத்தியத்தை இப்பெருமான் யாண்டுக் கண்டனரோ! இரண்டொரு தோரணைகளைக்காட்டி உதாகரித்தாலன்றோ அஃது ஆரியச் சிறப்புத் தோரணையென்று தெரியலாம்? அங்கிலேய பிராஞ்சிய ஜர்மானிய ருஷிய கிரேக்க லத்தீனாதி பாஷைகளின் வியாகரணங்களிலெல்லாஞ் சம்ஸ்கிருதத் தோரணை காணலாமே. எழுவாய் பயனிலை கொண்டு முடியுமென்றால் இஃது எந்தப் பாஷைத் தோரணை? வியாகரணமென்றபோதே எல்லாப் பாஷை வியாகரணங்கட்கும் பொது இலக்கணமுண்டாயிருத்தல் அவசியமாமே. இயலிசை நாடகத் தமிழெனத் தமிழிற் கூறிய நாடகமும் புராண இதிகாச காவிய நாடகமென வடமொழியார் கூறும் நாடகமும் வேறு வேறென்று அவர் அறிந்திலர் போலும். ஒன்று மொழியியைபு விலாசங்களைக் குறிப்பது@ இவை தம்முள் வேற்றுமையாம்.
“தமிழெழுத்துக்களே கிரந்தாºரங்களின் திரிபு” என்றார். இதனாற் போந்ததென்? கிரந்தாºரம் முந்திய தென்றாகும். தருமன் துரியோதனனுக்கு மூத்தவனென்றாற் பாண்டு திரிதராட்டிரன் தமையனாவானா? இனி “ஆதிகாலத்தில் மனுமான்கள் தேவபாடை பேசினதாகத் தெரியவருகிறது@ மூலவாக்கிய வேதம் கர்வாணமே” என்றதனாற் சித்தாந்தமானது யாது? வடமொழி முந்தியதென்பதே. அவ்வாறு வடமொழியே முந்தியதாகுக. காலத்தால் முந்தியதெல்லாம் பிந்தியதற்குக் காரணமாமா? அதிதி முந்தியவளாதலால் தைத்தியருக்குத் தாயாயினாளா? ஒன்றைச் சித்தாந்தஞ் செய்யும்போது அதன் பூர்வோத்தர பºங்கள் திருட்டாந்தங்களை நிச்சயித்தன்றோ துணிதல் வேண்டும்?
“காசியிற் சங்கத்தை அடக்கத் தவம்புரிந்து வரம் பெற்றுத் தமிழையடைந்தது உலகம் அகத்தியன் மூலம்” என யான் எஞ்ஞான்றுங் கூறிற்றிலேன்.
“கீர்வாண நாயகனை மணந்தவன் வேட்கை வேளையில் மாத்திரம் அவனை இச்சித்துத் தன் மன வழியே நடந்ததினாலன்றோ அந்தப்பட்டி சோபியாமல் இழிவடைந்தாள்” என்று திட்டியுங் “காளமேகமே நீ எமது நாளை மேகம் போல் பொய்த்தனையே! சிறப்புத்தா னுனக்கு” என்று புலம்பியும் இன்னோரன்ன இழிமொழிகள் செறிந்தும் வருங் கூற்றுக்களுக்கு யான் விடையெழுதுவேனல்லேன். உலகத்தில் இவர் போலியராலே திட்டப்படுவதற்குத் தகுந்த யோக்கியதையாவது உள்ளவனாக யான் மதிக்கப்பட்டதே எனக்குப் பெருஞ் சிறப்பென்று கொண்டனன்.
தமிழுக்குக் காலாந்தரத்தில் இரண்டு பெரும் பூதங்களால் இரண்டு பேரிடையூறுகள் நிகழ்ந்தன. குமரியாறும் அதன் தெற்கணுள்ள நாடுகளுஞ் சமுத்திரத்தின் வாய்ப்பட் டமிழ்ந்தியபோது தமிழ்ச் சங்கத்திற்கு ஆலயமாய்ச் சர்வ தமிழ்க் கிரந்த மண்டபமாயிருந்த கபாடபுரம் அதன் கண் இருந்த எண்ணாயிரத்தொருநூற்று நாற்பத்தொன்பது கிரந்தங்களோடு வருண பகவானுக்கு ஆசமனமாயிற்று. பாண்டிய நாட்டின் வடபாலில் ஆங்காங்குச் சிதறுண்டு குலாவிய சாதாரண சன விநோதார்த்த மான சில கிரந்தங்களும் பள்ளிக்கூடங்களிற் சிறுவர்தங் கல்வித் தேர்ச்சிக்குரியவாய் வழங்கிய சிறுநூல்களுஞ் சில்லறை வாகட சோதிடாதிகளுமே பிற்காலத்தார் கைக்கு எட்டுவனவாயின.
ஏரண முருவம் யோக மிசைகணக் கிரதஞ் சாலந்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள்.
எனப் புலம்பிய நமது முன்னோரிடத்திலிருந்து நாம் அடைந்த பிதிரார்ச்சிதம் வெறும் பெயரினுஞ் சிலவேயாம்.
இப்பால் வடமதுரைச்சங்கம் ஏற்பட்டு. இடமிடந்தோறும் நடைபெற்றுள்ள சுவடிகளைச் சேகரித்துத் தமிழ்ப்பரிபாலனம் பண்ணித், தன்காலத்தும் நானூற்றைம்பது புது நூல்களை அரங்கேற்றி வைத்தது. அதன் பின்னர்ச் சமண வித்துவான்கள் தலையெடுத்துப் பலபல நூல்கள் இயற்றித் தமிழை வளர்த்தனர். அதன்மேல் இதிகாச புராணாதிகள் சம்ஸ்கிருத மொழியினின்று வித்துவான்களால் மொழிபெயர்க்கப்பட்டு மறுபடியுந் தமிழ் தலையெடுத்தபோது, நாடு முகமதீயர் கைப்பட, அவர்கள் கோறானுக்கு மாறாகவும் வீறாவதோ கிரந்தங்கள் மண்மேல் என்று மத வைராக்கியங் கொண்டு, அந்தோ! நமது நூற்சாலைகள் அனைத்தும் நீறாக அக்கினி பகவானுக்குத் தத்தஞ் செய்தனர். இவர்கள் கைக்குத் தப்பின சின்னூல்களே இந்நாளில் நமக்குப் பெரிய அரிய நூல்களாயின. அவையும் இக்காலத்து இன்னுந் தமக்கு என்ன பேரவதி வருமோவென்று பயந்தாற் போல இங்கும் அங்கும் ஒளித்துக் கிடந்து படிப்பாரும் எழுதுவாரும் பரிபாலிப்பாருமின்றிச் “செல்துளைத்த புள்ளியன்றி மெய்ப்புள்ளி விரவாத சென்னாளேட்டிற் - பல்துளைத்து வண்ட மண லுழுத வரியெழுத்து” உடையவாய்ச் செல்லினால் அரிக்கப்பட்டும் பாணங்களாற் றுளைக்கப்பெற்றும் மூன்றாவது பூதமான மண்ணின் வாய்ப்படுகின்றன.
என் சிறுபிராயத்தில் எனது தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ் நாடெங்குந் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களுங் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப் பார்த்தாலன்றோ தெரிவரும்! ஏடு எடுக்கும்போதே ஓரஞ் சொரிகிறது@ கட்டு அவிழ்க்கும்போது இதழ் முரிகிறது@ ஒற்றை புரட்டும்போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ வென்றால் வாலுந் தலையுமின்றி நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது.
இது நிற்க, இக்காலத்துப் புத்தகங்களைத் தேடிப் பரிசோதித்து அச்சியற்றும் வித்வசனர்களோ தமக்குப் பொருள் வரவையே கருதி விரைவில் விலைபோகும் விநோத நூல்களையும் பள்ளிக்கூடங்களுக்கு உபயோகமான பாடபுத்தகங்களையும் சர்வகலாசாலையாராற் பற்பல பரீiºகளுக்கு ஏற்படுத்தப்பட்ட போதனா பாகங்களையுமே அச்சிடுகின்றனர். சரஸ்வதியின் தீருநடனஞ் சொலிக்கப் பெற்றனவாகிய சங்க மரீஇய நூல்கள் சிதைந்தழியவும் அவைகளில் அவர்களுக்குச் சற்றேனுந் திருட்டி சென்றலது.
இதனைக்கண்டு சகிக்கலாற்றாது மனநொந்து அழிந்து போகுஞ் சுவடிகளை இயன்றமட்டுந் தேடி, அவற்றுட் டமிழிற்குப் பேரிலக்கணமாகிய தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், அதன்பொருளதிகாரம் நச்சினார்க்கினியம், வீரசோழியம், இறையனாரகப் பொருள், திருத்தணிகைப் புராணமென்று இன்னவற்றைப் பல தேசப் பிரதிகள் கொண்டு பரிசோதித்து அச்சிடுவித்தேன். இதனால் எனக்குப் பிரதிகள் விலைபோகாமல் மூவாயிரத்தைஞ்Ä}று ரூபாவரையிற் றிரவிய நஷ்டம் நேரிட்டது. இவ்வாறான நஷ்டத்தைத் தரும சீலரான பிரபுக்கள் நன்கொடை முதலிய சகாயஞ் செய்து பரிகரித்தாலன்றி என் முயற்சியைக் கைவிடும்படி நேரிடுவது கண்டு பரபவமுற்றுச் சென்ற வருஷம் ஆடிமாதம் ஹிந்து பத்திர வாயிலாக ஓர் அபயம் எழுதி என் குறைநிறையை உலகத்திற்குந் தெரிவித்ததுமன்றி எனது இஷ்டர்கள் பலர்க்குந் தமிழ்ப் பிரபுக்கள் சிலர்க்கும் அக்கடிதத்தின் பிரதியைப் பிரத்தியேகமாகவும் அனுப்பினேன். அதுகண்டு அநுதாபமுற்றோர் சிலரன்றி இலர்.
விசுò தொல்காப்பியம் பொருளதிகாரம் அச்சிட ஆரம்பித்தபோது மேல்வரும் நஷ்டத்தை முன்னுணர்ந்து யான் மனந் தளர்ந்தது கண்டு என்னை உற்சாகப்படுத்தி அதனை அச்சிடப் பிடிக்குங் காகிதச் செலவிற்காக, இப்பொழுது மைசூர் சீப் - கோர்ட்டு நியாயாதிபதிகளில் ஒருவராக இருக்குங் கவுரவ அ. இராமச்சந்திரையரவர்கள் 125 ரூவாவுஞ் சென்னை இராஜதானி வித்தியாசாலைக் கணிதாசிரியர் இராயபஹதூர் பூ. அரங்கநாத முதலியாரவர்கள் 100 ரூபாவும் முன்னேறக் கொடுத்ததுமன்றி, அந்நூலைப் பதிப்பித்தலால் எனக்கு நஷ்டம் நேரிடும் பட்சத்தில் தாங் கையளித்த பணத்தை யான் நமக்குத் திரும்பக் கொடுக்க வேண்டியதில்லையென்றும் மிக்க தயாளத்தோடு துணைபுரிந்தனர். இவர்களது பாஷாபிமான சிந்தை எவராலும் ஏத்தித் துதிக்கற்பாலதன்றோ?
திருத்தணிகைப் புராணச் செலவை எனது உயிர் நண்பரும் யாழ்ப்பாணத்தில் ஒரு வித்துவானும் பிரபுவுமாகிய கொழும்புத்துறை ஸ்ரீ தி. குமாரசாமிச் செட்டியாரவர்கள் தருவதாக ஒத்துக்கொண்டனர்.
இந்து பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்திய கடிதத்தைக் கண்டு ஈண்டுக் கீழே குறித்திருக்கும் பிரபுக்கள் தங்கள் தங்கள் பெயர்க்கு நேரே காட்டிய தொகையை எனது முயற்சிக்கும் பிரயாசைக்குந் தமது வெகுமதியாக அனுப்பி உபசரித்து என்னை மிகவுங் கௌரவப்படுத்தினர். அவர்கள் தயாளத்தையும் பரோபகார தேசோபகார சீலத்துவத்தையும் பாராட்டி யான் அவர்கள் அனைவர்க்கும் மிக்க நன்றி கூறுகின்றேன். சென்னைப் பாடசாலைப் புத்தக சமாசீயர் முதலியோர் என் முயற்சிக்குத் துணைசெய்யும் பொருட்டு வாங்கிய புத்தங்களின் கிரயமும் î வெகுமதிகளின் தொகையுஞ் சில்லறையில் விலையானதுஞ் சேர்ந்து இப்போது யான் செலவிட்ட பணத்தில் முக்காற் பங்கு வந்துவிட்டது எனக்குப் பேரூக்கத்தைக் கொடுத்தது.
ரூபாய்
இராஜா சர். த. மாதவராயர் 100. 00
சர். ச. இராமசாமி முதலியார் 100. 00
கௌரவ நியாயாதிபதி அ. இராமச்சந்;திரையர் 350. 00
கௌரவ இராயபஹதூர் சூ, சு. சுப்பிரமணியையர் 50. 00
கௌரவ ப. செனசல்ராயர் 10. 00
பேரூர் ஜமின்தார் முத்துவிஜய ரகுநாத தும்பையசாமி தும்பச்சி நாயக்கர் 50. 00
ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பதேவர் 100. 00
கும்பகோணம் சப் - கோர்ட் நீதிபதி தி. கணபதியையர் 20. 00
கும்பகோணம் சப் - கோர்ட் வக்கீல் சா. இராகவையங்கார் 25. 00
கும்பகோணம் துரைத்தன வித்தியாசாலைத் தலைவர்
ஜே. பி. பில்டர்பெக்துரை 20. 00
கும்பகோணம் துரைத்தன வித்தியாசாலை பாஷாசிரியர் சா. சேஷையர் 50. 00
ழூ கொழும்பு சுப்பிறீம்கோர்ட் நியாயதுரந்தரர் பொ. குமாரசாமி முதலியார் 25. 00
ழூ கொழும்பு சுப்பிறீம்கோர்ட் அத்வக்காத்து கௌரவ பொ.
இராமநாதமுதலியார் 25. 00
ழூ மாத்தறை டிஸ்திரிக் கோர்ட் நீதிபதி பொ. அருணாசல முதலியார் 25. 00
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு மணியம் ஆ. இரகுநாத முதலியார். 20. 00
0 சீகாழி கிஷ்ணசாமி முதலியார் 20. 00
ஸ்ரீமத். திருப்பனந்தாளாதீனம் குமாரசாமித் தம்பிரான் 50. 00
வித்தியா விசாரணைக் கருத்தர் கு. நாகோஜிராயர் 30. 00
கவித்தலம் துரைசாமி மூப்பனார் 10. 00
ராவு ஸாகிப் சேலம் இராமசாமி முதலியார் 20. 00
ழூ இவர்கள் மூவரும் யான் இனிமேற் பிரசுரஞ்செய்யும் ஒவ்வொரு கிரந்தத்திற்குத் தலைக்கு இருபத்தைந்து ரூபா உபகரிப்பதாக எழுதியிருக்கின்றனர்.
0 இவர் இதனை யான் அனுப்பிய பிரதிகளின் கிரயமென்றுந் தாம் யதாயினும் ஒரு நூலை முழுச் செலவுந் தந்து பதிப்பிப்பதாகவும் எழுதியனுப்பினார். இவரிடத்தும் எனது பரமாசாரியர் வேதாரணியாதீனம் சற்குருநாத சுவாமிகள் ஸ்ரீலஸ்ரீ கைலாசநாததேசிக மூர்த்திகளிடத்துந், திருப்பனந்தாளாதீனம் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மரபிலெழுந்தருளிய ஸ்ரீமத் குமாரசாமி முனிவரிடத்தும் பெரும் ஒத்தாசையை எதிர்பார்த்திருந்தேன். எனது தவக்குறையோ தமிழின் துரதிஷ்டமோ தெரிகிலேன் இம் மூவரும் இளம் வயதிலே சிவபதமடைய என் நம்பி;க்கை நிறைவேறாமற் போய்விட்டது.
தஞ்சாவூர் சப்கோர்ட்டு நீதிபதி ஸ்ரீ திரு. கனகசபை முதலியாரவர்கள் எனக்கு இம்முயற்சியிற் பணத்திலும் பார்க்கப் பிராசீன நூல்கள் தேடித்தருவதே மிக்க உபயோகமாமென உணர்ந்து மதுரையிலிருந்து 35 பூர்வக் கிரந்த ஏட்டுப் பிரதிகள் அழைப்பித்துத் தந்தார்கள். இவற்றை யான் அத்துணைப் பொன் மொகராவாக மதித்து அவர்களுக்கு வந்தனஞ் செய்கின்றேன்.
தொண்டமான் புதுக்கோட்டை மகாராஜாவின் மந்திரியும் பிரதிகாவலருமாகிய கவுரவ அ. சேஷையசாஸ்திரியாரவர்கள், பூர்வக் கிரந்த பரிபாலனங் காரணமாக யான்படும் பிரயாசையையும் அதனால் எனக்கு நேரிடும் நஷ்டத்தையும் சொல்லக் கேட்டலும், பரமதயாள சீலத்துவம் முகத்தே நின்று சொலிக்கத், தமிழாகிய தமது தாயாருக்கு வந்த நிலையான் மிக நாணமுற்றார் போல, “யான் யாது செய்தல் வேண்டும்” என்று என்னையே கடைக்கணித்தார்கள். ஏதாவது ஓர் பழைய நூல் தாங்கள் தங்கள் பொறுப்பிற் பதிப்பித்தால் நல்ல தென்று யான் சொல்லி முடிக்கா முன்னரே, தொல்காப்பியப் பதிப்புரையிலும் இந்து பத்திரிகையிற் கடிதத்திலும் யான் கூறியிருக்குமாறு, அப்படியாகுக என்று உத்தரவருளிச் சங்கத்தார் காலத்துப் பேரிலக்கியமாயுள்ள தொன்றைத் தெரிந்து கொள்;ளும்படி ஆஞ்ஞாபித்தார்கள். உடனே “கற்றறிந்தா ரேத்துங் கலியே” அவ் இலºணஞ் செறிந்த தெனவும் முன்னரே இதனை அச்சிடுவதற்கு யான்; கொண்ட அவா நிறைவேறுதற்கு இஃது சரஸ்வதி கடாº மெனவுந் துணிந்து, இதனை அவர்கள் காருண்ணிய திரவியோபகாரத்தைக் கொண்டு இப்பொழுது அச்சிட்டு முடிக்கலாயினேன். அதன் செலவு முழுவதும் அவர்களே கொடுத்தருளினமையாற், கலித்தொகைப் பிரதிகள் விற்பனவாகும் பணத்தைக் கொண்டு பின்னர்க் குறிக்கப்படும் எட்டுத் தொகையில் இன்னும் இரண்டொரு நூலை அவர்கள் பெயரால் அச்சிடுவிக்க உத்தேசித் திருக்கின்றேன்.
இந்து பத்திராதிபர்களாகிய ஸ்ரீ க. சுப்பிரமணியையர், ஸ்ரீ மு. விரராகவாசாரியாரிருவரும். 30 – 31 பாரத்திற்கு மேற்படாமல் ஒரு நூல் காகிதச் செலவோடு கூடத் தமது அச்சியந்திரசாலையிற் பதித்துத் தருவதாக உத்தரவு செய்தார்கள். இருவர்க்கும் மிக்க வந்தனை செய்து, இவர்களைக் கொண்டு பதிப்பிக்கும்படி, இன்னும் ஒருவராலும் அச்சிற் றோற்றாத தொல்காப்பியம் நச்சினார்க்கினியம் சொல்லதிகாரத்தையும். இஃது என் பொருளதிகாரத்தோடு கூடி நச்சினார்க்கினியம் பூரணமாதற் பொருட்டு, முன் மகாலிங்கையரால் அச்சிடப்பட்ட சொற்ப பாகமாகிய எழுத்ததிகாரத்தையுஞ் சேர்த்து ஏட்டுப் பிரதிகள் தேடிப் பரிசோதித்து வருகின்றேன். இவர்கள் முன்மாதிரியைப் பின்பற்றிப் பிற அச்சுக்கூடத்தலைவர்களுந் தலைக்கொரு பழைய நூலைத் தத்தம் யந்திர சாலையில் தக்க வித்துவான்களைக் கொண்டு பரிசோதிப்பித்துப் பதிப்பாராயின் எத்தனை நூல் அழியா தொழியும்? அன்றியும் அஃது அருந்தந்திரங்கள் இறவாமல் நிலைபெறுவதற்கானதோர் பெருந் தந்திர மாகுமன்றோ?
மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் முன்னர் அவ்வக் காலத்துப் புலவர் கொண்டுவந்து அரங்கேற்றிய நூல்கள் பல்லாயிரமாகும். அவையல்லாமல் அச்சங்கத்தார் தாமாக நமக்குஅருளிய நூல்கள் அனேகம் உண்டு. அவற்றுட்கடைச் சங்கத்தார் அருளியன எட்டுத்தொகை பத்துப்பாடல் பதினெண்கீழ்க் கணக்கென்று மூவகைய. அவை இன்னன வென்பது முறையே:
“நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்துங் கலியே யகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை”
“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வடமதுரைக் காஞ்சி – மருவினிய
கோல நெடுவாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடூஉம் பத்து”
“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி – மாமூல
மின்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு”
என்னுஞ் செய்யுட்களான் அறிக. இவற்றுட் கோவை யென்றது ஆசாரக் கோவையை, முப்பாலென்றது திரிகடுகம் ஆசாரக்கோவை பழமொழி பஞ்சமூலம் ஆகிய போன்று நாலடி வெண்பாவான் இயன்று அக்காலத்திலே வழங்கிய மூன்று சிறுத் தரும நூல்;களை யென்றும் இன்னிலை சொல் என்றது இன்னிலை இன்சொல் என்னும் பெயரிய இரண்டு நூல்களின் பெயரை யென்றும் உத்தேசிக்கின்றேன். அன்றேல் ஐந்திணை அகப்பொருட் டுறைத்தாய் ஐம்பது செய்யுளான் மாறன் பொறையனார் இயற்றியது ஒர் நூலாக, இவர்க்குக் கீழ்க்கணக்குத் தொகை பதினெட்டாய தெவ்வாறோ? இவ்விடர் நோக்கிப் போலுஞ் சிலர் ஐந்திணையை ஐந்தொகை யென்று பாடம் ஓதுவர். அன்னோர் நெடுந்தொகை யொன்றொழிய வேறு தொகையின்மையிற் சட்டி சுட்டதென்று நெருப்பிற் பாய்ந்த கள்வனார் போலப் பின்னர் எட்டுத் தொகைக்கு நூல் காணாது பேரிடப்படுவர். “இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பவே” என்றும் பாடமுண்டு. அதனால் இன்னும் இரண்டு குறைவன்றிக் கணக்குச் சரி பெறாது.
இவ்வாறு கொள்ளாது சிலர் கோவை முப்பால்களை வாதபுரீசராகிய மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக்கோவையாருஞ் சங்கத்தாரைப் பங்கப்படுத்தி அழித்துவிட்ட தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனாரது பொய்யாமொழித் திருக்குறளுமென்று மயங்கித் தடுமாறுப. பெயர் படைத்த வித்து வான்களுள்ளுஞ் சிலர் இவ்வாறு மயங்கினது நம்போலியரை மிக மயக்குகின்றது. இவ்விரண்டும் நமது தமிழ்வேத மென்றாவது சிந்தித்தாரில்லை. திருச்சிற்றம்பலமுடையார் கையெழுத்தா கீழக்கணக்கின் கீழகப்பட்டது!!! இதனை நிராகரித்த அயற்சாட்சியும் வேண்டுமா? பன்னிரண்டு திருமுறையையும் ஒருங்கு சேர்த்து முப்பதாக்கி விட்டாரில்லை! மேலும் “நாலடி நான்மணி” என்றற் றொடக்கத்துச் செய்யுள் யாரது? யார் காலத்தது? யாண்டையது? சங்கத்தார் காலத்துச் சங்கத் திருமுன்னர்ச் சங்கப் புலவரு ளொருவராற் சொல்லப்பட்ட தென்பது உண்மையாயின். நாயனார் திருக்குறளின்பின் சங்கம் எங்கே யிருந்தது? இருப்பினன்றோ குறளுங் கூட்டிக் கூறப்படும்! நாற்பத்தொன்பதிமர் புலவருங் கூடி மனத்தாலும் வாயாலும் வாழ்த்திய மாலையின் சாரம் அதனைத் தமது சிறு நூல்களோடு ஒக்கவைத்தற் கருத்தினை யுடையதா?
இந்நூல், முதலிற் குறித்த எட்டுத்தொகையுள் ஒன்று. அது மதுரைக் கடைச்சங்கத்துப் புலவர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவராகிய நல்லந்துவனார் இயற்றியது. சிலர் இவர் இஃது இயற்றினோரல்லர் சிறந்த கவிச் செய்யுட்களைப் பல நூல்களிலுமிருந்து திரட்டித் தொகுத்தவரென்பர். அவ்வாறு தொகுக்கப்பட்ட அகம் புறம் நற்றிணையென் றின்னோரன்ன நூலுளெல்லாம் அவ்வச் செய்யுளின் கீழ் அதன் ஆக்கியோன் பெயர் குறிக்கப்பட்டது போல இதனுட் குறிக்கப்படாமையானும், நல்லந்துவனார் தொகுத்தாரென்று பல்லாசிரியர்கள் கூறிய இடம் அனைத்தும் அவர் “முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” எனவும், “நடுவ ணைந்திணை நடுவண தொழியப் - படுதிரை வையம் பாத்திய பண்பே” எனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் அடுக்கி முறை பிறழப் பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தலெனக் கோத்த தொகுதியையே கொள்ளக்கிடத்தலானும், “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியார்” புரிவுண்ட புணர்ச்சி யென்றற் றொடக்கத்து நெற்தற்கலியின் கீழ்ச் “சொல்லொடுங் குறிப்பொடு முடிவுகொளியற்கை – புல்லிய கிளவி யெச்சமாகும்” என்பதனாற் சொல்லெச்சமுங் குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுட் செய்தாரெனக் கூறியமையானும் இஃது அவ்வாசிரியராற்றாமே இயற்றப்பட்டமை தௌ;ளிதின் விளங்கக் கிடந்ததெனக் கூறி மறுக்க.
இது சங்கத்தார் காலத்து இலக்கியங்களுக் கெல்லாம் பேரிலக்கியமாக மதிக்கப்பட்ட தென்பது அவராற்றாமே கொடுக்கப்பட்ட “கற்றறிந்தா ரேத்தும்” என்னும் விசேஷணத்தாற் பெறப்படும். ஆகவே இதன் சிறப்பு இத்துணைத்தென்பது எம்போலியரால் எடுத்துச் சொல்லக்கடவதொன்றன்று. இதன் மகத்துவத்திற்கு யான் காரணங் கற்பிக்கப்புகிற் பொன்னின் மாட்சிமைக்கு மங்கலகரமாகிய மஞ்சணிறத்தையும் வைரத்தின் பெருமைக்கு அதன் துல்லிய வெண்மையையுங் கூறி மெய்ப்பிக்கப் புகுவ தொக்கும்.
இது சம்ஸ்கிருத மொழிகள் தமிழோடு வந்து கலக்கப் பெறாத சுத்த தமிழ்க் காலத்த தென்பது இக்கவிகளுள் வட மொழியென்ற மணமும் இல்லாமையே தெரிவிக்கும். நற்றிணை முதற் புறநானூ றிறாகக் கிடந்த தொகையனைத்தும் இப்பெருஞ்சிறப்பு வாய்ந்தனவாகவும் “ஒன்றேயாயினுந் தனித்தமிழுண்டோ” என்று ஈசான தேசிகர் கூறியது. இற்றைக்கு இருநூறு வருஷத்தின் முன் இவர் காலத்தே தானே இந்நூற்கள் கற்போர் கைக்கு அகப்படாது அருமையாய் மறைந்துவிட்டன என்பதற்குச் சான்றாகுமெனிற் பிழையாமா? பின்னை இக்காலத்தில் இதன் அருமை கூறல் வேண்டுவதென்? இவற்றைக் கற்றோரைக் கண்டாரைக் காண்டலுங் கார்த்திகைப் பறையாயிற்று.
இக் கடைச் சங்கத்தார் காலத்து நடுக்கூற்றின்கட்டோன்றியது. கடைச்சங்கம் ஒழிந்து இரண்டாயிரம் வருடமாயிற் றென்பது வீரசோழியப் பதிப்புரையிற்றமிழின் கால நிரூபணம் கூறிய இடத்துச் சித்தாந்தஞ் செய்து காட்டியிருக்கின்றேன். ஆதலால் இந்நூல் உண்டுபட்டு இப்போது எவ்வாற்றானும் இரண்டாயிரத்தைஞ்Ä}று வருஷத்திற் குறையாது. மூவாயிரமெனினும் இழுக்காகாது.
இதற்கு உரை யெழுதினார் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினாக்கினியார். இம் மகான் இதற்குஉரை எழுதி வையாதொழியின் இந்நூலைப் படித்துணர்தல் இக்காலத்தார்க்கு இசையாது. ஆகவே இத் தமிழ் நமக்கு நச்சினாhக்கினியார் இட்டதோர் பி;ச்சையென்றுணர்க.
“பச்சைமா லனைய மேகம் பவ்வநீர் பருகிக் கான்ற
எச்சினாற் றிசையு முண்ணு மமிழ்தென வெழுநா வெச்சில்
மெச்சிநா ணாளும் விண்ணோர் மிசைகுவர் வேத போத
நச்சினார்க் கினியா னெச்சி னறுந்தமிழ் நுகர்வர் நல்லோர்”
என்றதன் வாய்மைக்கு இஃதொன்றே திருஷ்டாந்தமாம்.
“பாலெல்லா நல்லாவின் பாலாமோ” என்ற உவமைக்கு உவமேயமாக “நூலிற் றெரித்த வுரையெல்லாம் பரிமேலழகர் – பரித்தவுரையோ பகர்” என்ப அது பெரும்பான்மைபற்றி அவரது சொல்வன்மையையும் பொருணுண்மையையுமே நோக்கியது. இஃது அவற்றோடு, “உள்ளுறையுவமமும் இறைச்சிப் பொருளும் - வள்ளிய தவரச வாரிசமளைஇத் - தௌ;ளிதின் விளக்கிய தீந்தமிழ் செறிந்தது”
பரிமேலழகரும் நச்சினார்க்கினியாரும் ஒரே காலத்தினர். அவர் திருக்குறள் ஒன்றற்கே உரை யெழுதினவர். இவரோ தமது காலத்து உரைபெறாது சிக்குமுக்காய்க் கிடந்த பன்னூல்களைப் பட்டப்பகலில் வெட்டவெளி போல மயக்கறுத்துக் காட்டி உரை வகுத்த மஹாவியாக்கியானி. பேராசிரியரும் விளங்காமற் றடுமாறிய குறுந்தொகை இருபது பாட்டிற்குப் பொருள் இவரே யாவர்க்கும் இனிது புலப்பட மொழித்திறத்தின் முட்டறப் பிட்டுக் காட்டியவரென்றால் இவர் வல்லபத்திற்கு வேறு சான்று வேண்டிலது.
தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையருரையும் திருக்குறளுக்குப் பரிமேலழகருரையும் இவருரையினின்றும் வியந்து கொண்டாடப்படற்பாலன வென்றே கொள்ளினுங் கொள்க. அதனால் அவர்கள் இவரிலும் பெருஞ்சிறப்பும் பயனும் உடையவர்களாகார்கள். என்னை? அன்னோரிருவரும் தாந்தாம் தாமெடுத்த ஒரொரு நூலுக்கே உரையியற்றியவராதலின், இருவரும் வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்து அதன் இயைபு கொணர்ந்து நாட்டியவர்கள். இவரும் வடநூற் பயிற்சியில்லாதவரல்லர். தமிழிற்கு அவரினுங்காட்டிற் சிறந்த அதிகாரி. இது கருத்தானன்றே “நச்சினார்க்கினியார் சேனாவரையர் பரிமேலழகர் உரையாசிரியர் முதலாயினோர்” என நன்னூல் விருத்தியுரையார் முறைப் படுத்து வைத்தது! தமிழிலுள்ள நுணுக்கங்களை இவர் போல எடுத்துக்காட்டி மாணாக்கர்க்கு மிக உபயோகமாம்படி பெருநூல்கட்கு உரை செய்த ஆசிரியர் யாரும் இலர்.
இதனால் இவரினுந் தமிழ் வல்லோர் இருந்திலரென்று சொல்லப் புகுந்தேனல்லேன். அகத்திய மகாமுனிவர் வரத்திற் றோன்றி மிகக் கூரிய விவேகமும் வடகலைப்பயிற்சியும் நுண்ணிய தமிழறிவுமுடையராய், ஸ்ரீ கைலாச பரம்பரைத் திருவாவடுதுறையிலெழுந்தருளி விளங்கிய சிவஞானசுவாமிகள் இவரையும் புறங்காண வல்லரென்பது அவர் சங்கர நமச்சிவாய தேசிகரியற்றிய நன்னூல் விருத்தியுரையிற் செய்த திருத்தங்களானுந் தொல்காப்பிய முதற் சூத்திரத்திற்கு விரித்துரையாக இயற்றிய தொல்காப்பியச் சூத்திர விருத்தியானும் நன்கு துணியப்படும். ஆயினும் இலக்கிய இலக்கணங்களுள் யாதாயினுமோர் அரிய பெரிய நூற்கு அவர் உரையெழுதாமையானுஞ், சித்தாந்த சாத்திரத்தை விளக்குதலே முக்கிய கருத்தாயினுந், தமிழின் சிறப்பும் அதன் நுண்மையும் அருமையும் இடந்தோறுஞ் சொலிக்க அவர் செய்த சிவஞான பாடியம் அவராதீனத்து மடாதிபதிகட்கு ஒர் இரத்தின மகுடமாய்க் கிடந்து துலங்கப் பெறுவதன்றித் தமிழ்ப் புலவர்கைக்கு அகப்படாமையானும் அவர் சாமர்த்தியத்துக்குத் தக்க பெரும்பயனைத் தமிழுலகம் அடைந்திலது.
இவரது மகாபாடியத் திவ்வியாமிர்தத்தை உலகம் உண்டுகளிக்க வையாதது, சந்திரனுக்குக் களங்கமுஞ் சூரியனுக்குப் பன்முரிவும் போல, ஒன்றானுங் குறைவின்றி எல்லாச் சுகுணமும் நிறைந்திலங்கும் பரம தயாள மூர்த்திகளாகிய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகளுக்கும் ஒரு குறைவுண்டென்று சொல்வதற்கு ஏதுவாகின்றது. பூலோகத்தில் ஒரு குறைவாயினுந் தம்பால் இருக்கப் பெறாதார் இலராதலிற் திருஷ்டி பரிகார நிமித்தமாய் இக் குறைவைச் சகித்திருக்கின்றனர் போலும், சைவசமய சாத்திரமாதலிற் பரிபக்குவர்க்கன்றி அளித்தற்காக தெனிற், சித்தாந்த சாத்திரமெல்லாம் அச்சின்வாய்த் தோன்றி அகிலலோகமும் பரவிக்கிடக்கும் இஞ்ஞான்றைக்கு ஈதமையாதென்றன்றோ மறுக்கப்படும். மகா சந்நிதானத்தின் திருவுள்ளம் இதனைச் சற்றே சிந்தித்தற்குச் சிவபெருமான் கிருபை புரிவாராக.
நச்சினார்க்கினியார் சமணர் காலத்தராதலின் இந்நூற்கு இவர் உரையெழுதி ஆயிரத்திருநூறு வருஷத்திற் குறையாது. சங்கமரீஇய நூல்களிற் போலச் சீவக சிந்தாமணி முதலிய பிற்றை நூல்களினின்றுஞ் தமது உரைகட்கு வேண்டிய உதாரணங்கள் ஆங்காங்கு எடுத்து ஆண்ட இவர் அவைகள் மலிந்து கிடக்கும் பாரத ஸ்காந்த ராமாயணங்களிலிருந்து ஒர்இலக்கியமுங் காட்டாததே இவையனைத்தும் இவர் காலத்திற்குப் பிந்தியனவென்று உள்ளங்கை நெல்லிக்கனி போலக் கொள்ளக்கிடக்கின்றது. இந்நூற்களின் காலமே அவ்வளவாயிற்றே.
இந்நூற் பதிப்பை ஏட்டுப் பிரதிகளின் போக்கிலே விடாது சிற்சில இடங்களிற் சில விகற்பங்கள் செய்திருக்கின்றேன். அவை இன்னனவென உணர்த்தல் என் கடமையாகும்.
1. பாட்டுக்கடோறும் முதலிலே அவ்வப்பாட்டின் முதற்குறிப்பைச் சொல்லி இஃதின்ன துறைத்தென்று கிளவி கூறிப் பின்னர்ப் பாட்டுவரும். அதனை யான் மாற்றி முதலிலே பாட்டை அச்சிட்டு அதன்கீழ் இஃதின்ன கிளவியெனக் கூறுங் கருத்துரையை அச்சிட்டிருக்கின்றேன்.
2. பாட்டு முழுதும் ஒருங்கே தொடர்ந்துவராது எடுத்துக் கொண்ட உரைக்கு வேண்டிய அளவாய்ப் பிளவுபட்டுப் பின்னம் பின்னமாய்க் கிடந்ததை ஒரு தொடராகச் சேர்த்து ஒவ்வொரு கலிப்பாவையு முடித்த பின்னர் அவ்வப் பகுதியை முதலும் ஈறுங்காட்டி மீளவும் பகுத்து அப்பகுதியின் உரையைப் பதித்திருக்கின்றேன்.
3. விசேட உரைகள் சில உரைக்கு முன்னுஞ் சில உரைக்குப் பின்னுஞ் சில இடைப்பிற வரலாக உரைக்கிடையிலும் கிடந்தவற்றை ஒரு கிரமப்படுத்தி அனைத்தும் பாடமும் உரையுமான பின்னரே வரும்படி சேர்த்திருக்கின்றேன்.
4. தரவு தாழிசை தனிச்சொற் சுரிதகமென நிகழும் பாட்டுறுப்புக்களில் மூலம் ஒன்றினம் உரை ஒன்றினுமாகச் சில இடங்களிற் பிறழ்ந்து கிடந்தவற்றை இரண்டும் ஒரிடத்தாம்படி உரையிடத்தை மாற்றி யிருக்கின்றேன்.
இவைகளுக்கெல்லாம் உதாரணம் எடுத்துக்காட்டி விளக்கின் மிக விரியுமென் றஞ்சியும் அதனால் ஒரு பெரும் பயனில்லாமை நோக்கியும் ஒழித்தனன். இவ்விகற்பங்களி லெல்லாம் ஒரிடத்து கிடந்த வாக்கியத்தைப் பின்னோரிடத்தில் இடமாற்றி வைத்தததேயன்றி ஆசிரியர் மொழி நடைகளில் ஒரெழுத்தையாவது யான் மாற்றியதே யில்லை.
5. “முன்னோர் மொழி பொருளேயன்றி யவர் மொழியும் - பொன்னேபோற் போற்றுதல்” அவரினின்று வேறாக வழிநூல் சார்புநூல் செய்தோர்க்குங் கடனாகவே, அவர் நூலையே அச்சொரூபமாக எடுத்துப் பதிப்பிப்போர் ஓர் அºரமாவது மாற்றுதல் பெருந்தவறென்பது யார்க்கும் உடம்பாடே. ஆயினும் இந்நூல் துரைத்தனவித்தியா சாலைகளிலும் பிறகல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் பயிலல் வேண்டுமென்னும் அவாவினாலே தற்காலம் அவையிற்றுக்கு இணங்காததோர் இழிசொல்லும் மகளிரின் சிறப்பவயவத்தின் இடர்க்கர்ப் பெயருமாகிய குஃறொடர்ந்த அன்மொழி இந்நூல் முழுதினும் பதினோரிடத்திற் பிரயோகிக்கப்பட்டதை ஒழித்துஞ் செய்யுள் ஊனமுறாதிருத்தற்பொருட்டு அதற்குப் பதிலாக அவ்வவ்விடத்திற்கு இசைந்தபிற அவயவத்தின் பெயரைச் சந்தத்திற்கு வேண்டிய அளவு விசேஷணத்தோடு புணர்த்தியும் இருக்கின்றேன். அவ்வாறு சொருகியது இன்ன இன்ன மொழி இன்ன இன்ன பாட்டில் இன்ன இன்ன அடியிலென்பதை யாவரொருவராயினும் அறியவிரும்பின் அவற்றை ஈண்டுக் காண்க. மாற்றிவைத்த பிரதி மொழியின்பொருளே, உரையகத்தும் மாறியிருக்குமென்பது சொல்ல வேண்டியதில்லை. நாலாவது பந்தியில் நட்சத்திரக் குறி அக் குஃறொடர்ந்த அன்மொழித் தானத்தைக் காட்டும்.
கலி பா வரி முன்பாடம் பிரதி மொழி
கடவுள் வாழ் 6 அகல் ழூ அகல் குறி
பாலை 13 5 அகன்ற ழூ ஆரெழிற்றிதனி
குறிஞ்சி 14 24 ழூ என்றோழி ஆகத்தென்றோழி
,, 16 16 அகல் ழூ ஆள் அமர்நுசுப்பினாள்
,, 24 4 வரியார்ந்த ழூ ஆய் மயிலியன் மடநல்லாய்
மருதம் 2 10 அகல் ழூ பிறை நுதல்
,, 15 21 ழூ வரி ஒல்குமிடை
,, 22 37 அகல் ழூ காழகம் அரைசெறிகாழகம்
முல்லை 8 2 அகல் ழூ நகிலம்
,, 9 10 அகல் ழூ அகல்குறி
நெய்தல் 8 17 தடவர ழூ தடவரவாகம்
இவ்வாறு மாற்றியது குற்றமாயின் அதனை உலகம் மன்னிக்கும்படி பலமுறையும் பிரார்த்திக்கின்றேன்.
“நொந்திழ ரந்தனர் நுவல்குறை பொறுத்திடா ராக்கஞ்
சிந்து மென்பது செகத்தனிற் சுருதியா கமங்கள்
முந்து வாய்மையின் மொழிந்தது நீதியு மதுவே
தந்த தாமெனி லீண்டது தவிர்க்கலாந் தகைத்தே”
நெய்தற்கலி 29-ம் செய்யுள் 7-ம் அடியில் “உண்கணிறை மல்க” எனவும் 16-ம் அடியல் “தூவற” எனவும் பாடமாக, உரையில் அவற்றிற்கு முறையே “உண்கண் நீர் நிறைகையினாலே” எனவும் “வலியறும்படி” எனவும் பொருள் கூறியிருப்பது பிற்காலத்து ஏடெழுதுவோரால் நேரிட்டதவறென்றும் நீரென்றதற்கும் வலியென்றதற்கும் இயையுமாறு பாடத்தை உறையென்றுந் தாவென்றும் மாற்றிவிடுதல் தகுதியென்றுஞ் சில தக்கோர் சொல்லியும் யான அதற்கு உடம்பட்டிலேன். நீரிற்கு உறையென்பது போல இறையென்றும் வலிமைக்குத் காவென்பது போலத் தூவென்றும் முற்கால வழக்கு இருந்திருக்கலாமே. எத்தனை சொற்கள் தற்கால வழக்கில் எடுத்தாளாத பொருளிற் பண்டையோராற் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய இலக்கண ஆதாரமாக ஒன்றினைத் தவறென்;று ஒருதலையாக நிச்சயித்துழியன்றி ஏட்டுப் பிரதிகள் யாவும் ஒத்திருந்தனவற்றையான் மாற்றகில்லேன் அடியேன் சிற்றறிவுக்கேற்ற மட்டும் பரிசோதனை செய்து அச்சிட்டு அடியோடழிந்து போகும் பழைய நூல்களை நிலை நிறுத்துவான் புகுந்தேனாதலின் நூலைத் திருத்துவதும் பொருள் இசையச் செய்வதும் என் கடமையன்று. இயன்றளவும் பூர்வ ரூபம் பெறச் செய்வதும் இயலாத இடத்து இருந்தபடி உலகிற் கொப்பிப்பதுமே யான் தலையிட்ட தொழிலென்பதை இன்னும் ஒருகால் உலகத்தார் முன் விண்ணப்பஞ்செய்து கொள்கிறேன். பிழையாயினவற்றைத் திருத்திப் படித்தல் ஆன்றோர் கடன். கண்ணுக்கும் அகப்படாமற் கிடந்த ஏட்டு;ப்பிரதிகளைக் கடிதத்திற் பல பிரதிரூபஞ் செய்து கைக்கெட்டப் பண்ணுகின்றேனென்றே கொள்ளுக. முற்றும் வழுவறப் பரிசோதித்துப் பிரசுரஞ் செய்ய வல்லோர்க்குத், தொல்காப்பியப் பதிப்புரையில் யான் விவரித்துக் கூறிய பல ஏதுக்களால் இவ்வித முயற்சியிற் சிந்தை சென்றிலதாதலினன்றோ, சகிக்கலாற்றாத பரிதாப சிந்தனையோடு, பதினாலாம் நாளைப் போரிற் றுரியோதனன் தன் சேனாபதியிடஞ் சென்று முறையிட்டு இனி அர்ச்சுனனோடு சண்டையிட யானாவது போகின்றேனென்று போனதை யொப்ப யான் இத்தொழிலிற் பிரவேசித்தது. ஆதலால் என்னைக் கடந்து சிற்சில வழுக்கள் இலைமறை காய்போல் அங்குமிங்குங் கிடப்பின் அதையிட்டு என்மேற் குற்றமேற்றல் மறை முகத்தாற் றர்மமாகாது போவதினில்லாது நேர்முகத்தாற் பேரநியாயமா மென்றறிக.
இலக்கணக் கொத்துடையார், நூலாசிரியர் உரையாசிரியர் போதகாசிரியரென வகுத்த மூவகை ஆசிரியரோடு யான் பரிசோதனாசிரியரென இன்னுமொன்று கூட்டி, இவர் தொழில் முன் மூவர் தொழிலினும் பார்க்க மிக்க கடிய தென்றும் வற்புறுத்திச் சொல்லுகின்றேன். தூக்கினாலன்றோ தெரியுந் தலைச்சுமை? பரிசோதனாசிரியர் படுங் கஷ்டமும் ஒர் அரிய பழைய நூலைச் சுத்த மனச் சாட்சியோடு பரிசோதித்து அச்சிட்டார்க்கன்றி விளங்காது. இவையெல்லாம் அநுபவத்தாலன்றி அறியப் படாப் பொருள்கள், ஒன்றற்கொன்று ஒவ்வாத இருபது இருபத்தைந்து பிரதிகளையும் அடுக்கி வைத்துக் கொண்டு என் கண்காணச் சிந்தாமணி பரிசோதனை செய்து பதிப்பித்த கும்பகோணம் வித்தியாசாலைத் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமத். வே. சாமிநாதையரைக் கேட்டால் இந்நால்வகை யாசிரியர் பாட்டின் தாரதம்மியம் சற்றே தெரியலாம். எனக்கு அவரும் அவருக்கு நானுமே சாட்சி.
ஒரு நூலைப் பரிசோதித்து அச்சிடுவதற்கு முதலிற் கையெழுத்துப் பிரதிகள் சம்பாதிப்பதே மஹா பிரயாசை. அதிலும் ஒரு நூல் பழையதும் இலேசில் விளங்காததுமானால் எழுதுவாரும் ஒதுவாருமில்லாமல் இருக்கிற இடமுந் தெரியாமற் போய்விடுகின்றது. கலித்தொகைப் பிரதிகள் தேட யான்பட்ட கட்டம் வாயினால் கூறும் அளவைத்தன்று. முதன் முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூலபாடப் பிரதி. அது தலையுங் கடையுமின்றிய குறைப் பிரதி. மேலும் பெரும்பாலும் எழுத்துக்கள் சிதைந்து ஒரு பாட்டின் ஓருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப்புண்டாய் நீக்கி விட்டேன்.
பி;ன்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காகத் தேடியபோது ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்கள் பிரதி அகப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அருமையுணர்ந்து அதனை எப்படியும் உலகிற்குப் பயன்பட அச்சிடவேண்டுமென்னும் அவாவுற்று ஸ்ரீ ஆதீன மடாதிபதிகளுக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டேன். காருண்ணியமுங் கலாபரிபாலனமுமே தமது திருமேனியாகக் கொண்டு விளங்குந் திருவாவடுதுறைச் சற்குருநாத சுவாமிகள் உடனே தங்கள் மடத்துப் பிரதியுடன் வேறும் இரண்டு பிரதி தென்றேசத்தினின்று வருவித்தனுப்பி அச்சிட்ட பிரதியும் 20 எடுத்துக் கொள்வதாக உத்தரவு செய்தது. இப்பேருபகாரத்திற்கு யானே அங்கு அடிமையாவதன்றி வேறு யாது கைம்மாறுளது?
வி;ண்ணாடு கைலைவழித் தேசிகர் வௌ;வினைக்கு நெற்றிக்
கண்ணா னனசுப்ர மண்யசு வாமிகள் கான்மலரை
நண்ணாத தலையி னசைதீரத் தாங்கநற் கோகழிவாய்
மண்ணாய்ப் பிறந்தில னேஐய கோ! இந்த வையகத்தே@
சிரமாலை யாகவுஞ் சின்முடி யாகவுஞ் செய்யகண்ட
சரமாலை யாகவும் யானடி யேனினை யேன்றருவாய்
பரமார் கயிலைப் பரம்பரைக் கோகழிச் சுப்ரமண்யா
மரமாய்நின் பாத குறடாய் வருதற் கொருவரமே.
மதுரை மடாதிபதிகள் அத்தருணத்தில் தெºணத்திலே ஸ்தல யாத்திரையிற் பிரசன்னமாகி யிருந்தமையாற் றிரும்பி ஆதீனம் வந்த சேர்ந்ததன் மேல் என் விண்ணப்பங் கவனிக்கப்படுமென்று கட்டயையிட்டருளியது. பின்னர் அதனைத் திருவுள்ளத்து அமைத்திலது போலும். எஞ்சிய மடங்களிலிருந்து யாதும் பதில் வராமையால் இந்நூல் ஆண்டு இலதென்று தீர்மானித்துக் கொண்டேன்.
சுவாமிகள் அனுப்பிய பிரதிகளைக் கொண்டு மூலபாடத்தையாவது பரிசோதித்து, ஓர் அரும்பத அகராதியும் இலக்கணக் குறிப்புஞ் சேர்த்து முதலில் அச்சிட உத்தேசித்து, அதனை நல்ல பரம்பரைத் தமிழ் விற்பத்தியுங் கூரி விவேகமுமுடைய யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ சிற். கைலாயபிள்ளையைக் கொண்டு எழுதுவித்தேன். பின்னர் மேலே தெரிவித்தவாறு கவுரவ சேஷைய சாஸ்திரியாரவர்கள் அஞ்ஞை கிடைக்கப்பெற்றமையால் வேறு பிரதிகளுந் தேடுவான் முயன்று பல இடங்களுக்கும் எழுதலாயினேன்.
யாழ்ப்பாணத்து மல்லாகம் விசுவநாதபிள்ளையவர்கள் புத்திரருந் தமிழ்க்கலை விநோதந் தமக்குப் பொழுது போக்காக உடையவருமான ஸ்ரீ கனகசபைப்பிள்ளையவர்கள் தமது பிரதியுந், திருமணம் கேசவ சுப்பராய முதலியார் மயிலை இராமலிங்கப்பிள்ளை பிரதியுந் தயை செய்தார்கள். சென்னைப் பிராசிய கிரந்த மண்டபத்துந் தஞ்சைச் சரஸ்வதிமாலிலும் இங்கும் அங்குஞ் சிதறுண்ட சில ஒற்றைகளைச் சேர்த்துக் கட்டி ஓரொரு பிடியேடு கலித்தொகையென்று அபிதானஞ் சூட்டி வைக்கப்பட்டிருந்தது. இவற்றாற் பிரயோசனமிராதென்று நீக்கி விட்டு வேறு எவ்விடத்தும் பிரதி அகப்படாமையால் அகப் பட்ட பிரதிகளை வைத்துக்கொண்டு அச்சிட ஆரம்பித்தனன். போகப் போக ஒன்றொன்றாக ஆங்காங்கு முடிவு பெற்று நான்காவது முல்லைக்கவி முடியுமுன்னந் திருவாவடுதுறைப் பிரதி ஒன்றொழிய ஏனைய அனைத்துந் தலைகட்டிக் கொண்டன. இத்தசையில் யாது செய்வதென்று தெரியாது மயங்கி. வேலையை நிறுத்தி, இன்னும் பிரதிதேடும்படி ஓரொருதிசைக்கொருவராகக் குணாது தெனாது குடாது மூன்றற்கும் மூன்று பெயரை அவ்வத் திசையிலுள்ள தக்க உத்தியோகஸ்தர்கள் பெரிய மனுஷர்களுக்குக் கடிதமெழுதி அனுப்பிவைத்து விடாது தி;க்கிற்கு யானே பிரயாணமானேன்.
யான் முப்பத்தைந்து வருஷத்தின் முன் பிரமாதீத வருஷம் ஒருதரம் அருமையான தமிழ் நூல்கள் தேடி யாழ்ப்பாணத்தினின்று இக்கண்டத்தில் வந்து நடமாடியபோது, கூடலூரில் மஞ்சக்குப்பத்திற் சண்முக உபாத்தியாயரென்றோர் வயோதிகரும் புதுச் சேரியில் நெல்லித் தோப்பிற் சொக்கலிங்கபிள்ளையென்றோர் தமிழ்ப் பண்டிதருங் கலித்தொகை வைத்திருந்தது என் ஞாபகத்திற்கு வர, அந்த இடங்களிற் சென்று விசாரித்தேன். முன்னையவர் இருந்த இடங்களிற் சென்று விசாரித்தேன். முன்னையவர் இருந்த இடமுந் தென்பட்டிலது. பின்னையவர் இருந்த இடத்தில் விசாரித்து அவர் வமிசத்தில் அவரது தௌகித்திரியுங் குடும்பமும் அடுத்த ஊரில் இருப்பதாகக் கேள்வியுற்று, ஆங்கடைந்து தௌகித்திரியின் நாயகனை வினவியபோது, அவர் ஏதோ ஒரு கட்டுச் சுவடிகள் பூர்வார்ச்சிதமாக வைத்திருக்கின்றோம். நமக்கு அவற்றின் பெயருந்தெரியாது. தங்களுக்கு வேண்டிய திருந்தாற் பார்த்து எடுத்துக் கொள்ளலாமென்று மகா உதாரத்துவத்தோடு ஏட்டுக்கட்டை அளித்தனர். ஏடுகள் இருந்த நிலைமைகண்டு யானுற்ற பரிபவத்திற்கு என் விழியினின்று பெருகிய கண்ணீரே சாºp. கலித்தொகையும் அங்கும் இங்கும் மிக ஊனம் அடைந்திருந்தும் எனக்கு வேண்டிய நெய்தற் கலியிருந்தமையால் மிக மகிழ்வோடு வாங்கி வந்தேன்.
அப்பால். திண்டி வனத்திலும் ஒருபிரதி அகப்பட்டது. அதில் நெய்தற் கலியின் முதற்பாகம் இருந்தது.
திரிகோணமலை ஸ்ரீ த. கனகசுந்தரம்பிள்ளையவர்கள் சென்னைப் பிராசிய கிரந்த மண்டபத்திற் றான் நெய்தற் கலிபார்த்தேனென்று உறுதியாகச் சொன்னமையால் மீளவும் அவ்விடஞ்சென்று முன் யான் நீக்கி வைத்த ஏடுகளே இப்பொழுது எனக்கு வேண்டிய நெய்தற்கலியுடையவா யிருத்தல் கண்டு அளவற்ற சந்தோஷமடைந்தேன். அஃதல்லாமற் பின்னும் ஒருபிரதி நெய்தற்கலி 23-ம் செய்யுள் வரைக்கும் அம்மண்டபத்தே அகப்பட்டது. உடனே பிள்ளையவர்களும் யானுமாக இருந்து அதனை எனது பிரதியோடு ஒத்துப் பார்வையிட்டு ஆங்காங்குக் கண்டபாட பேதங்களைக் குறித்துக் கொண்டோம்.
பின்னர்த் திருத்தணிகைக்குருசாமி ஐயர் கிருகத்திற் சென்று, சென்னையில் மிகப் பெயர் பெற்றிருந்த வித்துவானாகிய அவரது பிதா மகன் ஸ்ரீ சரவணப்பெருமாளையருடைய புத்தக நாமாவலியைப் பார்வையிட்டதில், அவரது கலித்தொகைச் சுவடி கோயமுத்தூரில் ஒருவர் கையிற் போயிருப்பதாகத் தெரியவந்தது. அதனைச் சின்னாள் இரவலாக வாங்கியனுப்பும்படி அவ்வூரிற் பெரிய மனுஷர் சிலருக்குக் கடிதம் விடுத்தேன். அவர்கள் அரவின் சுடிகை அரதனத்திற்கும் ஆழிவாய் இப்பிரயுண் முத்திற்கும் அவை உயிரோடிருக்குங்காறும் ஆசை கொளல் வேண்டாவாறுபோல, இம்மஹானுடைய சீவதசையில் இவர் கைப்பட்ட புஸ்தகங்களை கண்ணாற் பார்க்கும் அவாவினை ஒழிகவென்று பதிலெழுதினர். சிவனே! சிவனே! இதுவுங் கலித்தொகையைப் பிடித்ததோர் கலித்தொகையோ என்று உளநொந்தேற்குக் கடைசியில். அஃதும் மற்றைப் பெரும்பான்மைய பிரதிகளொப்ப நெய்தல்வளம் பெறாது முல்லையோடு முடிந்த பிரதியெனக் கேள்வியுற்றுச் சஞ்சலம் ஒழிந்தேன்.
ஸ்ரீ இராமசாமி சாஸ்திரிகள், ஸ்ரீ கோபால கிருஷ்ண மச் செட்டியார், ஸ்ரீ வைத்தியலிங்கச் செட்டியார் முதலிய உத்தியோகஸ்தர்களும், ஸ்ரீ வெங்கட்ட ரமண சாஸ்திரிகள், ஸ்ரீ திருச்சிற்றம்பலபிள்ளை, ஸ்ரீ விசுவலிங்க பிள்ளை, ஸ்ரீ சொக்கலிங்கக் கவிராயர் முதலிய வித்துவான்களும் யான் கடித வாயிலாகக் கேட்டுக் கொண்ட படி தங்கடங்களாலான பிரயாசைப்பட்டும் பிரதி கிடையாமையால் அவர்களிடம் யான் அனுப்பி வைத்த மூவரும் வெறுங் கையாய் வந்து சேர்ந்தார்கள். ஆதலால் நெய்தற்கலி முழுமையும் பரிசோதித்தற்கு உபயோகப் பட்டது மூன்று பிரதியே.
குறைப் பிரதியாயினும் முழுப் பிரதியாயினும் அகப்பட்ட இப்பத்துப் பிரிதிகளையுங் கொண்டு கலித்தொகையைப் பதிப்பித்து நிறைவேற்றியதில், ஸ்ரீ தொண்டமான் புதுக்கோட்டை மஹாராஜாவின் மந்திரியும் பிரதி காவலருமாகிய கவுரவ சேஷைய சாஸ்திரியாரவர்கள் காருண்ணியத்திற்கு மிக்க கடமை பூண்டொழுகுகின்றேன். இன்னும் இவ்வகைப்பட்ட பழைய அருமையான நூல்களைத் தேடி எடுத்து உலோகோபகாரமாக அச்சிட்டுப் பரிபாலனம் பண்ணத்தக்க ஸ்திதியில் அவர்கள் என்னை வைத்திருப்பதற்காகத் தமிழ் நாடு முழுவதும் அவர்களுக்கு ஒருங்கு கடமைப் பட்டிருக்கின்றது.
இது நிற்க இக்காலந் தமிழிலக்கணங் கற்போர் பெரும்பாலும் நன்னூலொன்றையே கற்றுப் பொருள் யாப்பணிகளின் பயிற்சி குன்றிப் போவதால், இலக்கண விளக்கம் ஐந்திலக்கணமுஞ் சேர்ந்திருப்பதனானும். பேரறிவினர்க்கே புலப்படுந் தகைத்தாய தொல்காப்பியம் போலாகாது சாதாரண மாணவர்கர்களுக்கும் உபயோகமாதற் பாலதாதலானும், அது கற்போர்க்கு எளிதின் அகப்படாது ஏட்டுப் பிரிதிகளில் மிக அருமையாக மறைந்து கிடத்தலானும். அதனை அச்சிட்டாற் றமிழ் நாடனைத்திற்கும் பேருபகாரமாமென்று எண்ணினேன். அஃது இற்றைக்கு இருநூறு வருஷத்தின் முன், திருவாரூரிலுள்ள அபிஷேகத்தர் மரபிலுதித்த தமிழ் ஞானபானுவாகிய வைத்திநாத நாவலர் அருளிச் செய்தது. அதனது மகத்துவத்தை அதற்கு இன்றுகாறுஞ் சான்றோரால் வழங்கி வருங் குட்டித் தொல்காப்பியமென்னும் பெயரே இனிது விளக்கும். அன்றியும் அது தோன்றிய பி;ன்னர் நன்னூற் பயிற்சி குன்ற, அதுவே தலையெடுத்து வந்தமை ஒன்றுமே அதன் மாட்சியை நன்கு புலப்படுத்தும். ஐம்பது வருஷத்தின் முன் சரவணப் பெருமாளையர் நன்னூற் காண்டிகையை அச்சிட்டு யாவர்க்கும் மிக எளிதில் அகப்படச் செய்யும் வரைக்குங் கற்போர் யாரும் ஓதிவந்ததும் அதுவே.
சூறாவளி மாறாய் மோதியென்? சூத்திர விருத்திவான் ஆர்த்ததிர்த் திடித்தென்? கன்ன துரோண சயித்திரதர் என்ன துரோகம் இயைத்திடினுந் “தேரொன்று கிடையாத குறையன்றோ களத்தவிந்தான் சிறுவன்” அச்சுவாகனங் கிடையாத குறையன்றோ இலக்கண விளக்கம் மடங்கியது?
அதனை யான் எடுத்துப் பிரசுரஞ் செய்யத் துணிந்தும் இதுவரையும் அச்சிட்ட நூல்களால் எனக்கு நேரிட்டிருக்கும் நஷ்டம் இடங்கொடுத்தில தாதலாற் பிறர் திரவிய சகாயம அவசியம் வேண்டியதாய் அது விஷயத்தை ஆங்காங்குள்ள சில மஹான்களுக்குத் தெரிவித்தேன். அப்பொழுதுந் திருவாவடுதுறை மகா சந்நிதானம் அம் மடத்துப் பிரதிகளும் அனுப்பி 100 ரூபாவும் தருவதாக உத்தரவு செய்தது.
அதனை அச்சிட 1,000 ரூபா பிடிக்குமென்று யான் பகிரங்கஞ் செய்ததோர் விளம்பரத்தைக் கண்ணுற்று. இறங்கூன் கமிஷனராபீஸ் மானேஜர் எனது சகோதரன் செல்வச் சிரஞ்சீவி இளையதம்பிப்பிள்ளையும் அவரது இஷ்டர் சிலருஞ் சேர்ந்து 500 ரூபா அனுப்பி வைத்தார்கள். அவ்வுதவியை முன்னிட்டு இலக்கண விளக்கம் அச்சிடத் தொடங்குவதற்குள். மதுரை போடிநாயக்கனூர் ஜமீந்தார் ஸ்ரீ திருமலை போடய காமராஜ சயபாண்டிய நாயக்கர் துரையவர்கள் செலவு முழுவதுந் தாமே தருவதாக ஒத்துக்கொண்டு 500 ரூபா அனுப்பி, மீதி அச்சிட ஆரம்பித்தபின் தருவதாகத் தயைபுரிந்தார்கள். இவர்கள் தயாளத்துவம் யாவரானும் வியக்கற் பாலதே. இலக்கண விளக்கம் இப்போது அதிவிரைவில் அச்சாகி வருகின்றது. சர்வதாரி வருஷத்;தோடு பவனி வருமென்று நம்புகின்றேன்.
இறங்கூனிலிருந்து வந்த பணத்திற்கு அதனை அனுப்பி னோரது சம்மதி பெற்றுப் பஞ்ச காவியங்களுட் சிறந்த சூளாமணியை அச்சிடக் கருதிப் பரிசோதித்து வருகின்றேன். இஃது யாப்பருங்கலக் காரியையுரைக் குணசாகரமுனிவர் முதலியோராற் றமக்கு மேற்கோளாக எடுத்தாளப்பட்ட மாண்பினையுடையதோர் அரிய பூர்வக் கிரந்தம். தமிழ் நாடனைத்திலும் இதற்கு மூன்று கையெழுத்துப் பிரதியே அகப்பட்டது. பி;ன்னை இஃது எவ்வளவு சீக்கிரத்தில் அந்தரத்தானமடையும் ஸ்திதியிலிருந்த தென்பது வாசிப்போரே உணர்வாராக.
சங்கமரீஇய நூல்களாய் வகுக்கப்பட்ட எட்டுத் தொகை பத்துப் பாடல் பதினெண்கீழ்க் கணக்குட்டலைமை பெற்ற எட்டுத் தொகைகளில் இக்கலித் தொகையும் பத்துப்பாடலுள்ளே திருமுருகாற்றுப் படையுமே இப்பொழுது அச்சில் வந்தன. எஞ்சிய பதினாறனையும் பெயர் மாத்திரையானே அறிந்தாற் போதுமா? பதினெண் கீழ்க்கணக்குட்டானும் இன்னும் வெளிவராது கிடப்பன உள. இவைகளைத் தங்கள் தங்களால் நன்கு மதிக்கப்பட்ட சில வித்வாம்சர்களைக் கொண்டு பரிசோதிப்பித்து வெளியில் வரச் செய்யத்தக்க சீமான்கள் யாரும் இல்லையா! தமிழின் அருமையுணர்ந்த பெரியோர் மடாதிபதிகளென்றின்னோர் இவற்றிற் கடைக்கண் சாத்துமாறு சரஸ்வதியே அநுக்கிரகிப்பாளாக.
பழைய சுவடிகள் யாவுங் கிலமாய் ஒன்றொன்றாய் அழிந்து போகின்றன. புது ஏடுகள் சேர்த்து அவற்றை எழுதி வைப்பாரும் இலர். துரைத்தனத்தாருக்கு அதன் மேல் இலட்சியமில்லை. சரஸ்வதியைத் தம்பால் வகிக்கப் பெற்ற வித்துவான்களை அவர் மாமி எட்டியும் பார்க்கின்றாளில்லை. திருவிடையீர்! நுங்கருணை இந்நாட்டவறினால் பின்பு தவம் புரிந்தாலும் ஒருதரம் அழிந்த தமிழ் நூற்களை மீட்டல் அரிது. யானை வாய்ப்பட்ட விளாம்பழத்தைப் பின் இலண்டத்துள் எடுத்துமென்? ஒடன்றோ கிட்டுவது! காலத்தின் வாயப்பட்ட ஏடுகளைப் பின் தேடி எடுப்பினுங் கம்பையும் நாராசமுந்தான் மீரும். அரைக் காசுக் கழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. சங்கமரீஇய நூல்களுட் சில இப்போது தானுங் கிடைப்பது சமுசயம். முப்பால் அப்பாலாய் விட்டது. என்காலத்தில் யான் பார்க்கப்பெற்ற ஐங்குறு நூறு இப்பொழுது தேசங்கடோறுந் தேடியும் அகப்பட்டிலது. எத்தனையோ திவ்விய மதுர கிரந்தங்கள் காலந்தரத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்குச் சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? ஆச்சரியம்! ஆச்சரியம்!! அயலான் அழியக் காண்கினும் மனந் தளம்புகின்றதே! தமிழ் மாது நுந் தாயல்லவா! இவள் அழிய நமக்கென்னென்று வாளா இருக்கின்றீர்களா! தேசாபிமானம்; மதாபிமானம் பாஷாபிமானமென்று இவையில்லாதார் பெருமையும் பெருமையா! இதனைத் தயைகூர்ந்து சிந்திப்பீர்களாக.
இந் நூலைப் பதிப்பிக்கும் பொருட்டு ஏட்டுப் பிரதியளித்த கனவான்களுக்கும் இதனைப் பரிசோதித்து அச்சிடுவதில் எனக்கு அப்போதப்போது சகாயஞ்செய்த ஸ்ரீமத். ந. க. சதாசிவப்பிள்ளையவர்கட்கும் ஸ்ரீ யாழ்ப்பாணம் சிந்தாமணி உபாத்தியாயர் வேலுப்பிள்ளையவர்கட்கும் ஸ்ரீ நல்லூர் சிற். கைலாசபிள்ளையவர்கட்கும் ஸ்ரீ திருகோணமலை ந. க. கனகசுந்தரம்பிள்ளையவர்கட்கும் என் நன்றி கூறுகின்றேன்.
இந்நூற் பதிப்பில் யாவர்க்காயினுங் குற்றங்கூற இஷ்டமுளதாயின், அன்னோர் இன்னும் அச்சிற்றோற்றாத நற்றிணை பரிபாடல் அகம்புறமென்றிவற்றினொன்றைத் தாமாகப் பரிசோதித்து அச்சிடுவித்து அதன்மேற் குறைகூறும்படி வேண்டிக் கொள்கின்றேன். யான் வித்தியா கங்காரத்தினாலாவது திரவிய ஈட்டத்தினாலாவது இதில் ஏற்பட்டவனல்ல னென்பதை இன்னுமொருகால் வற்புறுத்துகின்றேன்.
“குற்றமே தெரிவார் குறுமாமுனி
சொற்றபாவினு மோர்குறை சொல்வராற்
கற்றிலாவென் கவிவழு வாயினும்
உற்றுநாடி வல்லோ ருய்த்துரைக்கவே!”
கயிலாயநாத குரவே நம.
திருச்சிற்றம்பலம்
புதுக்கோட்டை இங்ஙனம்
சர்வஜித்து ò ஆவணி ñ 3 Œ சி. வை. தா.
கலித்தொகை
உரையாசிரியர் சிறப்பு
பச்சைமா லனைய மேகம்
பௌவநீர் பருகிக் கான்ற
எச்சினாற் றிசையு முண்ணு
மமிழ்தென வெழுநா வெச்சில்
மெச்சிநா ணாளும் விண்ணோர்
மிசைகுவர் வேத போத
நச்சினார்க் கினியா னெச்சி
னறுந்தமிழ் நுகர்வர் நல்லோர்
நல்லந்துவனார் கலித்தொகை, மதுரை பாரத்துவாசி நச்சினார்க்கினியார் உரையோடும். யாழ்ப்பாணம் சி.வை. தாமோரதம்பிள்ளையால் பல தேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து, ஸ்ரீ தொண்டமான் புதுக் கோட்டை மகாராசாவின் மந்திரியும் பிரதிகாலவருமாகிய, கௌரவ அ. சேஷையசாஸ்திரிகள், ஊ. ளு. ஐ.இ காருண்யோபகார திரவியத்தைக் கொண்டு பதிப்பிக்கப்பட்டது. சர்வஜித்து ò ஆடி ñ, 1887. (Pசiவெநன யவ வாந ளுஉழவவiளா Pசநளளஇ டில புசயஎநளஇ ஊழழமளழn யனெ ஊழ. ஆயனசயள)
உ
கணபதி துணை
3. இலக்கண விளக்கப் பதிப்புரை
திங்க டங்கிய செஞ்சடை முடியினன் றிருத்தாட்
பங்க யங்கயி லாயநா தன்முனிப் பழிச்சிச்
சங்க மங்களத் தமிழ்முத்துக் குமாரன்றண் மலர்ப்பா
தங்கள் வங்கமாத் தமிழ்க்கட லிடைப்படி குவனே@
முத்தழ் வாணர்தம்
வித்தக வடியிணை
சித்தமெய் மொழிகளில்
வைத்து வாழ்குவனே
பூமிசைத் தென்மலைப் புங்கவன் புகன்ற சீர்மிகும் அகத்தியம் பார்மிசை இறந்து பட்டதாதலின், அன்னோன் மாணாக்கர் பன்னிருவருட் டலைமைபெற்ற திரணதூமாக் கினி யென்னும் இயற்பெயரினையுடைய தொல்காப்பிய மகாரிஷி அவ்வகத்தியத்தின் வழித் தத்தருளிய தொல்காப்பியமே மதுரைக் கடைச் சங்கத்தார் காலந் தொட்டு ஐயாயிர வருஷமாகத் தமிழுக்கு ஆதாரமான பேரிலக்கண மாயுள்ளது. அது மிக ஆழியதோர் கடலனையது. ஆதலாற் கற்று வல்லோர்க்கன்றி மற்றையோர் அறிதற்கு அரிய தாயிற்று. அதுகொண்டு சிறுவர் முதலியோர் இலக்கணம் பயிறற்கு உபயோகமாகப் பவணந்தியாதியோர் பலரும் நன்னூல் சின்னூல் காரிகை என்றின்னன சிற்றிலக்கண நூல்கள் பல செய்வாராயினார். அவை பெரும்பாலும் தமிழ் நன்கறிதற்கு இன்றியமையாத ஐந்து இலக்கணங்களையும் முற்றக் கூறாது ஒன்றொன்று ஒன்றிரண்டு மாத்திரம் உணர்த்தா நின்றன. சிறுபான்மை வீரசோழியம் போன்றன ஐந்தும் எடுத்துக் கூறினவேனும் மிகச் சுருங்கியவாய்க் கற்போர்க்கு வேண்டிய அளவு இலக்கண ஞானங் கொடாமையிற் பெரும்பயன் தருவனவல்லவாயின. இவ்விரு திறத்தனவும் போலாது பஞ்சலºணமும் மாணாக்கர்க்குப் போதுமான அளவு செறிந்தது. இலக்கண விளக்க மொன்றே. இதன் மகிமை இதற்குச் சான்றோரால் வழங்கி வரும் “குட்டித் தொல்காப்பியம்” என்னும் பெயரானே இனிது விளங்கும்.
இந்நூல் மூலமும் உரையுமாகச் செய்தவர். மன்னார்குடித் தாலுகாவிலுள்ள ஆதித்தேச்சரத்திற்கு அணித்தான திருக்களரில் இப்பொழுது அதிவயோதிப ராயிருக்கின்ற ஸ்ரீமத் சூரியமூர்த்தி தேசிகரைத் தமக்கு ஆறாவது சந்ததியாக உடையவரும், இற்றைக்கு 250 வருஷத்தின்முன் சுத்தவிடங்கத் திவ்விய Nºத்திரங்களில் முதன்மையுடைத்தாகிய திருவாரூரின்கண், அவ்வூர் அபிஷேகத்தர் மரபிற் சிறப்புற்றோங்கிய ஸ்ரீவன்மீகநாத தேசிகர் குமாரருமாகிய வைத்தியநா தேதிகர். இராமநாதபுரத்தில் 1685 – ம் ஆண்டுமுதல் 1723-ம் ஆ ண்டு வரையும் அரசு புரிந்த இரகுநாத சேதுபதியின் சமஸ்தான வித்துவானான படிக்காசுப் புலவர் இந்நூலாசிரியரிடங் கல்வி கற்றவராதலானும், சற்றேறக்குறைய 180 வருஷத்தின்முன் நன்னூல் விருத்தியுரை இயற்றிய சங்கர நமச்சிவாயப் புலவரது இயற்றமிழாசிரியராகிய சாமிநாத தேசிகர் இவர் காலத்துச் சிறு வயதினராயிருந்தமையானும். இவர் காலம் இற்றைக்கு 250 வருஷத்தின் முன்னென்பது போதரும்.
நூற்கு உரையும் பாயிரமும் அணியியலிற் சொல்லணிச் சூத்திரங்களும் வைத்தியநாத தேசிகருடைய புதல்வர் ஐவருள் மூத்தவராகிய சதாசிவ தேசிகரால் இயற்றப்பட்டன எனக் கூறுவாருமுளர். ஆயினும் ஆசிரியரை நேரிலே பார்த்து அறிந்தவரும் மகாவித்துவானுமாகிய ஸ்ரீகைலாச பரம்பரைத் திருவாவடுதுறை ஈசானதேசிக சுவாமிகள் தமது இலக்கணக்கொத்தில் ஓருரைச் சூத்திரத்தினகத்துத் தாமே தமது நூற்கு உரையியற்றியதற்கு மேற்கோளாக “எண்கண்காணத் - திருவாரூரிற் றிருக் கூட்டத்திற் - றமிழ்க்கிலக்காகிய வைத்தியநாத – னிலக்கணவிளக்கம் வகுத்துரை யெழுதினன்” எனக் கூறுமாற்றானும், “பொருளணி சொல்லணி யெனவலங்கார – மிருவகை நெறியா னியலு மென்ப” என நிறுத்திப் புகுந்து பொருளணி உணர்த்திய ஆசிரியர் நிறுத்த முறையானே சொல்லணியும் ஒருவாறாவது உணர்த்தாதொழியா ராகலானும், சதசிவதேசிகர் சொல்லணிச் சூத்திரங்களுட் சிலவும் பாயிரமும் மாத்திரமே செய்தவரென்றும் இலக்கண விளக்கம் மூலமும் உரையுமாகவே ஆசிரியரால் இயற்றப்பட்ட தென்றுங் கொள்வதே தகுதி. சொல்லணியகத்துத் தந்தையார் சூத்திரமிவை மைந்தனார் சூத்திரமிவை யெனப் பகுத்தறிய ஏதியாதுங் காண்கிலேம்.
இந்நூற் பாட்டியல் வைத்தியநாத தேசிகர் இயற்றிய தன்று. யாப்பிலக்கணஞ் செய்தார் பிறரநேகர்போல இவரும் அதனாற் பெரும்பய னின்றென்று கூறாதொழிந்தனர் போலும். ஆயினும் அஃதில்லாததோர் குறைவை அவரது இரண்டாவது புத்திரராகிய தியாகராச தேசிகர் நிவிர்த்தி செய்தனர். பாட்டியல் செய்தார் தியாகராச தேசிகர் என்ப நூற்பாயிரம் புனைந்தருளிய சதாசிவதேசிகர் குமாரர் தியாகராச தேசிகர் எழுதிய பதிகச் செய்யுளான் அறிக. இதனாற் பாட்டியலுடையார் தமது நூலுக்குத் தாமே பதிகம் பாடினவரல்ல ரென்பதூஉம் ஒரே பெயரினராயினும் இருவரும் வேறென்பதூஉம் பதிகத்தார்க்குப் பாட்டியலுடையார் சிறியதந்தை என்பதூஉம் உணர்க.
நமதாசிரியர் வமிசம் முன்னும் பின்னும் பல தலை முறையாகப் பேர்பெற்ற வித்துவான்களாற் சிறப்புற்ற தோர் வமிசமேயாம். வைத்தியநாத தேசிகர் தந்தையாகிய வன்மீகநா தேசிகர் தமது பாவன்மையாற் பரிசு பெற்ற சூனாம்பேட்டை மானியமும் உப்பளமும் நாளது வரைக்கும் அவர் சந்ததியார் அநுபவித்து வருகின்றார்கள். வைத்தியநாததேசிகர் கல்வித்திறமைக்கு இந்நூலின் வேறுசான்று வேண்டா. அவர் மலையாளத்திராசாவின் பேரிற் சில பிரபந்தம் பாடி அவ்வரசனாற் கிராமங்களுஞ் சன்மானங்ளும் அளிக்கப் பெற்றதும்.
அவை அரங்கேற்றியஞான்று
ஒதும்பிர பந்தங்க ளொருகோடி நிமிஷத்து
ரைக்கும்பிர சண்டவாக்கி
உத்தண்ட வமிர்தரச சித்திரவித்
தாரகவி யுபயகவி ராசராசன்
போதும் பசுந்தமிழ்ப் பலகையுங் குடிபுகப்
புலமக ளெனுங் குமாரி
புதுநலந் தனை நுகர்ந் தவனுநீ யாகிலுன்
புலமையை வழுத்த வசமோ
காதுங் கடுங்கொலைப் பாகடுங் கடதடக்
களியானை யரச வெள்ளங்
களிசுவைப் பரணிமட லந்தாதி தூதுலாக்
காதல்செய வோத வல்லாய்
மோதுந் தனிக்கொற்ற வாயிலாய் மூதண்ட
முழுதும் பரந்த சீர்த்தி
முருகுகமழ் தருகமலை வருவைத்திய நாதகுரு
முத்தமிழ்க் கவிராச னே.
என அவ்வரசு சபையாராற் றுதிக்கப்பட்டதும் உலகறியாதல்ல. இந்நூலன்றிப் பல பிரபந்தங்களும் அவரால் இயற்றப்பட்டுள்ளன. மேலும் இவர் கல்வித்திறமையை அவர் காலத்து வித்துவான்களில் ஒருவராகிய கவி வீரராகவ முதலியார் சொல்லிய,
“ஐம்பதின்மர் சங்கத்தா ராகிவிடா ரோநாற்பத்
தொன்பதின்ம ரென்றே யுரைப்பாரோ - இம்பர்புகழ்
வன்மீக நாதனருள் வைத்தியநா தன்புடலி
தன்மீதந் நாட்சரித்தக் கால்”
என்னும் வெண்பா நன்கு புலப்படுத்தும்.
அவர் மாணாக்கரி;ல் ஒருவராகிய படிக்காசுப்புலவர் ஒருகாற் செம்மற்பட்டிக்காடு வழியாகத் தமது குருபுத்திரர் சதாசிவநாவலரைக் காண வந்தபோது அச்சதாசிவ தேசிகர் மாணாக்கர்சிலர் வனத்திற் றூதுளங்காய் பறிக் கையிற் காரிகையைப் பாராயணம் செய்து கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு வியப்புற்று வந்து.
“கூடுஞ் சபையிற் கவிவார ணங்களைக் கோளரிபோற்
சாடுஞ் சதாசிவ சற்குரு வேமுன்னுன் றந்தைதம்மாற்
நாடும் புலவர்க ளானோமின் றிச்செம்மற் பட்டியெங்குங்
காடுஞ் செடியுமென் னோதமிழ்க் காரிகை கற்றதுவே”
என்று கொண்டாடினர்.
பாட்டில் செய்த தியாகராச தேசிகர் இன்னோர் இளவலென்பது முன்னர்ச் சொன்னோம். இவர் தம்பி சிதம்பரதேசிகர் சிவஞானசித்தியாருக்கு ஓர் சிறந்த பொழிப்புரை செய்திருக்கின்றனர்.
சதாசிவதேசிகர் மகன், பதிகச்செய்யுள் பாடிய தியாகராசதேசிகர் திருமுல்லைவாயிற் புராணம், தேவையந்தாதி, காழியந்தாதி முதலியன இயற்றி இராமநாதபுரத்தில் மந்திரியாயிருந்த தாமோதரம்பிள்ளையினாற் சூரிய கோட்டைக் கிராமம் பரிசுபெற்றும், விஜய அருணாசல வணங்காமுடியார்பேரிற் கோவையும் உலாவும் பாடித் தண்டிகை வரிசையும் மரவனேந்தல் முதலிய மூன்று கிராமமும் பெற்றும் மிகச் சிறப்புற்றிருந்தனர்.
இவர் குமாரர் சதாசிவதேசிகர் அவர் காலத்திற் ஸ்ரீ கைலாசபரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்தில் எழுந்தருளியிருந்த மகாசந்நிதானத்தின்முன் கேட்டோர் யாவரும் அதிசயிப்ப ஒரு பெரும் அம்பலவாணத் தம்பிரானால்,
“வன்மீக நாதன் வரத்தா லவதரித்த
வன்மீக நாதன் மரபினோன் - வன்மீகர்
தாமோர் தமிழுருவாய்ச் சார்ந்த சதாசிவனை
யாமோ புகழவல்லே மீண்டு”
எனத் துதித்து மதிக்கப் பெற்றவர். இவர் புத்திரனாகிய வன்மீகநாத தேசிகருடைய பிள்ளையே இப்பொழுது திருக்களரூரில் இருக்கும் ஸ்ரீமத் சூரிய மூர்த்தி தேசிகர். இவ் வருஷம் இவர்க்கு 77 வயதும் இவர்தனயன் ஸ்ரீ சண்முகதேசிகருக்கு 37 வயதும் நடக்கின்றது. இவர்கள் இருவரும் தமிழ் நன்கு கற்ற வித்துவான்களாகவே இருக்கின்றார்கள். ஒருகால் அவ்வூர் மிராசுதார் ஸ்ரீ சீநிவாச முதலியார் பெருமையைக் குறிப்பிட்டு,
“தேடிநிதி யங்கொடுக்குஞ் செல்வரைப்பார்த் தௌ;ளளவு
பாடிப் படிக்கப் படியாதே – நீடுபுகழ்
வாச மலர்த்தடஞ்சூழ் வண்களர்வாழ் வாஞ்சீநி
வாச னெனச் சொன்ன வாய்”
என்று துதித்தவர் இச்சூரியமூர்த்தி தேசிகரேயாம்.
படிக்காசுப் புலவர் இந்நூலாசிரியர்க்கு மாணாக்கராகவே, இராமநாதபுரத்தில் 1685 –ம் ஆண்டுவரையும் அரசாண்ட சேதுபதிபேரால் ஒருதுறைக் கோவை பாடிய அமிர்தகவிராயருங் கவிவீரராகவ முதலியாரை ஒப்ப இந்நூலாசிரியரோடு ஒருகாலத்தவரென்று கொள்ளத் தவறாகாது.
முதலில் இவர் நன்னூலிற்குச் சைனமுனிவருரை தக்க உரையல்லவென்று கண்டு தாமோர் உரைnழுதுவாராயினர். பின்னர் அதிற் பல இடங்களில் நன்னூலாரோடு தம்மதம் மாறுபட்டமையால் இந்நூலை இயற்றத் தொடங்கினர். அவ்வாறியற்றுவான் புகுந்தவர் நன்னூல்போல எழுத்துச் சொல்லிரண்டோடும் முடியாது உலகிற்குப் பெரும் பயன்பட ஐந்திலக்கணமும் முற்றுப்பெறச் செய்தனர். முற்றுப் பெற்றுமென்? அச்சின்வாய்த் தோற்றாமையாற் கற்போர்க்குக் கிடைத்தற்கரிதாகி அதனால் அடையற்பாலதாம் பயனை உலகம் பெறாமற் போகத்தக்கதாய் வந்துவிட்டது. இதனை உணர்ந்தே அடியேன் இப்பொழுது அதனை அச்சிட்டுப் பிரசுரஞ் செய்யத் தலையிட்டனன்.
அச்சின்வாய்த் தோற்றாமலும் பரிபாலனம் அடையாமலும் இருக்கும் நூல்கள் எத்துணைச் சீக்கிரம் இறந்து விடுகின்றன என்பதற்குச், சொற்ப காலத்திற்கு முன்னர் உதித்த இந்நூலின் கடைசி இயல்களுக்குத் தமிழ் நாட்டில் பிரதிகள் அகப்படாமையும், எங்கெங்குந் தேடியும் யாது முயற்சியும் செய்தும் பாட்டியலுக்கு இரண்டு பிரதி மாத்திரம் அகப்பட்டதுஞ் சான்று பகரும். சில சில இடங்களில் அகப்பட்ட பொருளதிகாரப் பிரதிகள் அவிழ்த்துப் பார்ப்பதற்கும் உபயோகமில்லாத தசை யடைந்து விட்டன.
இந்நூல் உலகிற்றோற்றிய காலமுதல், நூற்றைம்பது இருநூறு வருஷமாக, நன்னூல் முதலிய ஏனைய சிற்றிலக்கணங்களெல்லாம் பயிற்சி குன்ற, இதுவே தலையெடுத்து வந்தது. பதினேழாஞ் சகாப்தம் முதல் இற்றைக்கு ஐம்பத்தறுபது வருஷத்திற்கு முன் வரைக்குஞ் சென்னை, காஞ்சி, புதுவை, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, யாழ்ப்பாண மென்றின்னோரன்ன தமிழ்த் தேசங்களில் இலக்கணங் கற்போர் பெரும்பாலும் ஒதி வந்ததும் இதுவே.
இஃது இவ்வாறு பிரசித்தியடைந்து வருகையில் ஸ்ரீ கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தார், ஈழநாட்டிற் றமது ஆதீன மரபினை யொத்ததுஞ் சந்தான குரவர் வழித் தோன்றியதுமாயினும், பலகாலும் விஷயங்களிலே தம்மோடு முரணிய தருமபுராதீன சம்பந்தம் இதற்கு ஒரேவழி யுண்மைபற்றி இதன் மகிமையைக் குறைக்க நினைந்தோ, அல்லது நன்னூலின் பண்டைக் கொள்கையான் அதன்மேற் பச்சாத்தாபங் கொண்டோ, நன்னூலை மேன்மைப்படுத்த எண்ணி, இதற்குத் தமதாதீனத்துச் சங்கர நமச்சிவாயப் புலவரால் ஒரு விருத்தியுரை எழுதுவித்தும். நன்னூலினகத்தும் அதன் சமணவுரையினகத்தும் முன்னரில்லாத பல விதிவிலக்குகளை உரையிற் கோடலாற் புணர்ப்பித்தும், இன்னும் அவ்வுரை சிறக்கும்படி சம்ஸ்கிருத திரவிடக் கடல்கள் முழுதுண்டு தேக்கிய ஸ்ரீ சிவஞானமுனிவராற் றிருத்திப் புத்தம் புத்துரை எழுதுவித்தும், அதுவும் போதாதெனக்கண்டு அம்முனிவரால் இலக்கண விளக்கச் சூறாவளியென்று ஓர் அநியாய கண்டனம் இயற்றுவித்தும் இந்நூலை நசிக்க முயல்வாராயினர். சமணர் காலத்தின் பின்னர்த், தான்தோன்றிய காலமுதற் றென்னாடெங்குந் தமிழ்க் கல்வியை விர்த்தி செய்வதிலுஞ் சைவசயத்தை வளர்ப்பதிலும் முதன்மை பெற்றோங்கிய இவ்வாதீனத்தாருக்கு இஃதெஞ்ஞான்றும் ஒரு களங்கமேயாம். “திருவாரூரிற் றிருக்கூட்டத்திற் - றமிழ்க் கிலக்காகிய வைத்தியநாதன்” என ஆசிரியர் தமி;ழ் வல்லமையைப் புகழ்ந்த ஈசான தேசிகரும் “முன்னூலொழியப் பின்னூல் பலவினு – ணன்னூலார்தமக் கெந்நூலாரு – மிணையோ வென்னுந் துணிவே மன்னுக” என நன்னூலையே புகழ்ந்தது தமதாதீன வைராக்கியமென்றே கோடற்பாலதோ, அன்றேல் அவர் வைத்தியநாத தேசிகர் இந்நூலை மூலமும் உரையுமாகச் செய்து கொண்டிருந்ததைக் கண்டது மாத்திரமன்றி நூலைப் பார்த்தறிந்தவரல்லரோ அறிகிலேம்.
ஸ்ரீ கச்சியப்ப சுவாமிகள் திருத்தணிகையிற் கந்தப் பையர் முதலியோருக்குத் தமிழ் கற்பி;க்கையிற் றம் மாணாக்கர்கள் இலக்கியப் பயற்சிக்காகச் சீவக சிந்தாமணியைப் பாராட்டியது கண்ணுற்றபோதும் தம்பாலெழுந்த சமயாபிமானத்தானன்றோ அதற்கிணையாகச் சைவ இலக்கிய மொன்று நிலைபெறும்படி தணிகைப் புராணத்தைச் செய்தருளினார்!
பரசமய நூலை வாசித்தபோது அதிலோதிய பொருளை மெய்யென மயங்கி மகிழ்ந்த அநபாயசோழனை இடித்துரைத்துக் கண்டித்த அருண்மொழித் தேவர் போலாகாது சுவாமிகள் ஈண்டுச் சொற்சுவை பொருட்சுவைகளி;ன் மேற் றம்மாணாக்கர் மனஞ்செலுத்திய இடத்தன்றோ பரிதாபமடைந்தனர்? பின்னை அபிஷேகத்தர் மரபிலுதித்துச் சுத்த சித்தாந்த சைவசமயியார்ச் சைவசமயாசாரியாராய் எழுந்தருளிய இந்நூலாசிரியர் இயற்றிய நூலும் உரையுஞ் சிறப்புடையனவாகவும், பஞ்சலºணமும் பொருந்திக் கற்போர்க்கு மிக்க பயன் தருவனவாகவும் இருக்க, அதனை விரோதித்துப், பாற்கடலிலுள்ள மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை பூசித்தல் போல, இரண்டிலக்கணமாத்திர முடைத்தாய்ச் சமணாசிரியராற் செய்யப்பட்டுள்ள நன்னூலைச் சிறப்பி;க்க முயன்றது திருவாவடுதுறை யாதீனத்தார்க்குத் தகுந்த செய்கையன்றென்பது சைவ சமயாபிமான முடையோர் அனைவராலும் ஒப்புக் கொள்ளற்பாலதேயாம்.
சகல சற்குணமும் எல்லாக் கல்விச் சிறப்புமுடையதாய் வீற்றிருந்து இப்பொழுது அடைந்துபோன பரம தயாளுவாகிய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகமூர்த்திகள் இவ்வாறு தமது ஆதீனத்தார் செய்தது தப்பென்று நேரிலே ஒத்துக் கொண்டதுமன்றி, இலக்கணவிளக்கம் அச்சில் வெளிப்படுமாயின் மீளவும் முன்னைச் சிறப்பு அடையாமற் போகாதென்று சொல்லி. அதனை எவ்வாற்றானும் அச்சிடுவிக்க வேண்டுமென்று அடியேற்குக் கட்ளையிட்டருளியது. மேலும் சிறு காப்பியங்களில் ஒன்றாகிய சூளாமணி இப்பொழுது எங்ஙனுங் கிடைத்தற்கு அரிதாகி இறந்துபோகுந் தசையடைந்திருத்தலால் அதையும் அச்சிடுவித்தல் உலகிற்குபயோகமாகுமென உத்தரவு செய்தது. இஃது இலக்கண விளக்கம் அச்சில் வெளிப்படும்போது நன்னூற் பயிற்சி சிதைவுறு மென்னும் நிச்சயத்தாற் சமணர்க்குச் செய்ததோர் நஷ்ட பரிகாரம் போலும். யான் அப்பணிகளைச் சிரமேற்கொண்டு,
“குறிபப்பி னாலரிய குரவ ரெண்ணமது
கூறு முன்புரி குணத்தினேன்
பொறுப்ப னோவடிகள் புவியி லென்னையொரு
பொருளெ னக்கொடு புகன்றநூல்
சிறப்பு றப்பிழை திருத்தி யச்சில்வெளி
செய்தொ ரோர்பிரதி தேவரீர்
நறைப்பெ ருஞ்சரண நளின சந்நிதியி
னல்கி டாதினி யென்னாளினே”
என விண்ணப்பஞ் செய்தனன். உடனே மடத்திலருந்த இலக்கண விளக்கப் பிரதிகள் யாவுஞ் சூளாமணி மகாலிங்கையர் பிரதியொன்று தமது மடத்திலிருந்ததும் என்கைவசம் அனுப்பி, வழக்கப்பிரகாரம் மடத்திற்காக வாங்கும் பிரதிகளின் கிரயத்தோடு இந்நூல் ஒவ்வொன்றிற்கு 100 ரூபா உபகாரமுங் கொடுப்பதாக அநுக்கிரகித்தது. சுவாமிகளது சீவதசையில் இவை இரண்டன் பதிப்பும் முற்றுப்பெறாதது அடியேற்கோர் பெரும் விசனமே. ஆயினும் இவை விரைவில் அச்சாகிவருவதைச் சுவாமிகள் அறிந்திருந்தது என மனத்திற்கு ஒர் ஆறுதலாம்.
இந்நூல் அச்சில் வராமையே அதன் பயிற்சி இஞ்ஞான்றும் குன்றுவதற்குக் காரணமென்பது முன்பே கலித்தொகைப் பதிப்புரையிலும் “சூறாவளி மாறாய் மோதியென்? சூத்திரவிருத்தி வான் ஆர்த்ததிர்த் திடித்தென்? கன்ன துரோண சயித்திரதர் என்ன துரோகம் இயைத்திடினுந் தேரொன்று கிடையாத குறையன்றோ களத்தவிந்தான் சிறுவன்? அச்சுவாகனங் கிடையாத குறையன்றோ இலக்கண விளக்கம் மடங்கியது” எனக் குறித்திருக்கின்றேன்.
இங்ஙனம் இதனைப் பாராட்டுதலாற் றவத்தாற் றூயராய் முக்குணங்களையுங் கடந்து இறைவனருள் பெற்றுளாரது நூல்களோ டொத்த பெருஞ் சிறப்பினையுடைய தென்று சொல்கின்றேனல்லேன். சிற்றறிவினோர் இயற்றும் எந்தநூலினுந் தப்பில்லாமற்போகாது. இலக்கணவிளக்கமுடையார் மதங்களுள்ளுஞ் சில கற்றுவல்லோரால் அங்கீகரிக்கத் தகாதனவுள. ஆயினுந் தாரதம்மியச்சிறப்பானும் ஐந்திலக்கணமும் உடையானும் பின்னூலெவற்றினும் இதன் மாட்சி பெரிதெனக் கொள்க.
இலக்கண விளக்கச் சூறாவளியை ஓர் அநியாய கண்டன மென்று யான் கூறியதை ஈண்டுத் தாபிக்கப்புகின் மிக விரியும். அ ஃது அன்ன இயல்பின தென்பது நடுவு நிலைமை குன்றாது அதனை வாசிப்போர் அனைவர்க்கும் புலப்படும். ஆயினும், அநியாயமென்றோர் குற்றமேற்றி, பின் அதற்குச் சில உதாரணமாவது காட்டாமற் போதல் சரியன்றென்று உட்கொண்டு, அங்குமிங்குந் தேடியெடாமற் சூறாவளியில் முதன்முதற் சொல்லியவற்றையே சொற்ற முறைப்படி எடுத்துக் கொண்டு அவை சிவஞான யோகீசுவரர் உணர்த்தியவாறு நமதாசிரியர்மேற் போந்த குற்றமல்ல வென்பதை மாத்திரம் இங்ஙனம் காட்டுகின்றோம். காட்டுமுன் அடியேன் சொல்லவேண்டிய தொன்று உளது.
அகத்திய முனிவர் வரத்தினாற் றோன்றித், தென் மொழி வடமொழிக் கடல்களின் நிலைகண்டுணர்ந்து, முன்னும் பின்னுந் தமக்கிணையன்றி வீறித், தமிழிலுள்ள நூல்களுக்கெல்லாஞ் சிரோரத்தினமாய்ச் சொலியா நிற்கும் மகாபாடியத்தை அருளிச்செய்த யோகீஸ்வரரது பேரறிவு இமாசல மொப்பது, எளியேன் சிற்றறிவு அதன் முன் ஒரு பூதாளி போல்வ. அன்னோர் , தம்பை ஒப்பென்று தாபிக்கவும், ஒப்பைத் தப்பென்று வாதிக்கவும் வல்லர். அஃது அவர் காஞ்சிபுரத்து வைஷ்ணவவித்துவான்கள் கொண்ட இறுமாப்பை ஒழித்தற்பொருட்டு. அவர்கள் தலைமேற் கொண்ட இராமாயணத்து நாந்திச்செய்யுளை முதலிற் பங்கப்படுத்திப் பின்னர் அதனையே அவர்கள் தலைவணங்கித் தம் பிழையைப் பொறுத்தருள்கவென்று வேண்டியபொழுது சரியென்று நாட்டியதனான் விளங்கும். ஆதலால் இன்னோரன்ன பெருஞ் சிறப்பினரை எதிர்த்து இலக்கிய இலக்கணப் படைக்கலங்கள் தாங்கி அவர் சூறாவளியை மாறாயழிக்கப் புகுந்தேனென்று கொள்ளன்மின். அவரும் அவர் மரபினோரும் உவந்து பாராட்டிய நன்னூற்கு இந்நூல் இழிவுடைய தன்றென்னும் மாத்திரையே யான் சொல்லலாயினேனென்க.
1. “முன்னர்ப் பாயிரத்தை வைத்து இது பாயிரமென்று உரைத்துப் பின்னர் அது கேட்டமாணாக்கர்க்கு நூலுரைப்பான் தொடங்கினார். இப்பாயிரம் உரைக்க வேண்டுவதென்னை என்னுங் கடா நிகழ்தற்கு இடனுள தயாவழி, இவ்விவ் வேதுங்களான் முன்னர்ப் பாயிரம் உரைக்க வேண்டுமென்று இறுத்தல் அமையும். அவ்வாறோர் இயைபுமின்றித் ‘திருவிளங்கிய மாநகரம்’ முதலாக எடுத்துரைக்கும் உத்தரஞ் செப்புவழுவும் மற்றொன்று விரித்தலுமாய் முடியுமென்க” என்றார். “வலம்புரிமுத்திற் குலம்புரி பிறப்பும்” என்று தலையிட்ட ஆத்திரையன் பேராசிரியன் எந்தப் பாயிரத்தை முன்னர் வைத்து இது பாயிரமென்று உரைத்துப் போந்தனன்? ஆண்டு யாண்டையோ கடா நிகழ்ந்ததும் விடையறுத்ததும் அமையப் பெற்றது?
“முகவுரை பதிகம்” என்றற்றொடக்கத்துப் பொதுப் பாயிர முதலியன கூறிய நன்னூலார் “மாடக்குச் சித்திரமும்” என ஈற்றிலே கூறியதனை இந்நூலார் முதலிலே எடுத்து உரைத்தது தானா ஒரு தவறாயிற்று? இது குற்றமாயின் நன்னூலாரும் “முகவுரை பதிகம்” என்னுஞ் சூத்திரங் கூறற்கு முன்னர்த் தன்பாயிரத்தை வைத்து இஃதியாது? இதன் பெயரென்ன? என்று கடாநிகழ்தற்கு இடனாவியன்றோ அச்சூத்திரஞ் செய்தல் வேண்டும்! அவ்வாறின்றி “முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம் - புறவுரை தந்துர புனைந்துரை பாயிரம்” எனச் சொற்றது செப்புவழுவும் மற்றொன்று விரித்தலுமாகுமே. இதனைக் குற்றமென்று தெரிக்கப்; புகுந்ததே குற்றமாமென்றொழிக.
2. “அவயவமாகிய பாயித்துள் அவயவியாகிய நூல் அடங்காதென்றார். அவற்றியல்பு உணராமையின்” என்றனர். இதற்கு விடை “இன்னும் நூனுதல் பொருளைத் தன்னகத்தடக்கி’ என்பதனைத் தழீஇயனாராகலின்;, நூலியல்பு பாயிரத்து ளடங்காதென்றல் அவர்க்குங் கருத்தன்றென மறுக்க” என்னும் அவரது சொந்த வாய்மொழி யேயாமெனக் கூறுக. நூல்குணியும் நூலியல்பு குணமுமாகலின், பல்வேறு நூலியல்பு வேறென் றொழிக. ஆதலாற் பல அவயவங்களை உடையதோர் அவயவி அவற்றொன்றில் அடங்காதாகுதல் பொருத்தமுடைத்தென்றும் அடங்கமென்பார் கூற்றிற்குப் பொருள் வேறென்றுங் கூறிவிடுக்க.
3. “எழுத்ததிகாரம் என்புழி அதிகாரம் முறைமை யென்றார். அதிகாரமென்னும் வடசொற்கு அது பொருளுன்மை தொல்காப்பிய விருத்தியிற் கூறியவாற்றான் அறிக” எனச் சொற்றனர். இதற்கு விடை “அதிகாரம் முறைமை” எனவே உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியார் முதலியோர் கொண்டனரென்க. மேலும் இப்பொருள் வடமொழியிலும் உண்மை சம்ஸ்கிருத அகராதிகளிற் கூறிக்கிடத்தலாண் அறிக.
4. “மலைமக ளொருபான் மணந்துலகளித்த – தலைவனை வணங்கிச் சாற்றுவனெழுத்தே” என்னும் எழுத்ததிகாரத் தற்சிறப்புப் பாயிரத்தில் நான்கு குற்றம் பாரித்து, முதலாவது “மலைமகளென்பது மலையும் மகளெனவும் அமங்கலப் பொருள்தந்து “தொகையார் பொருள் பலவாய்த் தேன்ற’லின்” மலை தன் மங்கலப் ‘பயன்குறித்து வராமை யறிக’ என்றார். நன்னூலார் எடுத்தாண்ட “பூமலி” என்பது இலை நிறைந்த என்றும் இடம் அகன்ற என்றும் பொருள் தரத்தக்கதாதலால் ‘தொகையார் பொருள் பலவாய்த் தோன்ற’ இடமில்லையா, ‘நீடாழியுலகம்’ என்று மங்கலம் வகுத்த வில்லிபுத்தூராழ்வாரை அது நீள் தாழி எனவும் பகுக்கக் கிடந்ததென்று குற்றப்படுத்தல் பொருந்துமா? அன்றியுந் தாமே ஒரு கால் உவந்ததோர் மங்கலமொழியைப் பிறர் கொண்டற்காற் குற்றமென்றது பேரற்புதமே. மேலுந் தம்மரபினோர் அனைவருக்கும் அங்கீகாரமான சிவதருமோத்தரத்தில்,
“மலைக்குமகள் பெற்றமகனைக் கயமுகத்தனை மனத்தெழுதியா
னலற்பிணி பிறப்பறவணுக்களை யகத்திய முனிக்கருளினா
னுலப்பில் கருணைக்கடலுத்திரனுருத்தனி லுதித்தகுமர
னிலக்குமியலைக் கலியிளைக்கவுமுரெப்பலுல கிட்டமுறவே”
என மறைஞானசம்பந்தநாயனார் எடுத்தாண்ட மங்கலமொழியை அமங்கலப்படுத்தல் தன் தாயை வேசியென்று ஏசுதல் போலும். இரண்டாவது “மணந்து” என்றதும் ஒரு குற்றம்@ என்னை! இஃது ஈண்டு “இந்நூல் நின்று நிலவுதல் வேண்டியென்றார்க்கு” மறுதலையாகப் பொருளதிகாரத்தில் “உமையுரு வுருமடுத்தென்றது இந்நூல் நின்று நிலவாது இறுதல் வேண்டி எனப் பொருள் தருதலின் என்றார். ஏனையவற்றிற்கும் ஏற்குமாறு பொருள் விரித்துரைக்க” என்று ஆசிரியர் கூறினாராக, இவரை ஏலாமாறு பொருள் கொள்ளச் சொன்னதுயாரோ? மூன்றாவது, உறுபொருள் முதலிய எல்லாவற்றிற்கும் உரிய வேந்தனை உலகு பொருட்கு உரிய வேந்தனென்றல் அவன் இறைமைக்கு ஏலாத வாறு போல ஐந்தொழிற்கும் உரியதலைவனை உலகளித்த தலைவனென்பது தலையன்மையின்” உலகளித்த தலைவனென்றது குற்றம் என்றார். எழுத்ததிகாரத்தில் “உலகளித்தலைவன்” எனவுஞ் சொல்லதிகாரத்தில் “உலகுபுரந்தருளும் அமைவன்” எனவும். பொருளதிகாரத்தில் “உலகிளைப் பொழிக்கும் இமையவன்” எனவும் ஆசிரியர் இறைவன் முத்தொழிலுங் கூறிய புகுந்தாராகலின் ஈண்டுபட்ட குற்றமென்னோ? ஆன்றோர் ஆங்காங்குக் கூறிய கடவுள் வணக்கத்திற் கடவுளின் தலைமை அனைத்தும் ஒழுங்கு சொல்லாது இரண்டொரு குணமாத்திரையே விதந்து தலைமை கூறுவது பெருவழக்கேயாம். முனிவரர் இஃது உணராதவரா? இதனாற் “குற்றமே தெரிவார் குறுமாமுனி – சொற்றபாவினும் ஒர்குறை சொல்லுவர்” என்பதற்குத் தம்மை இலக்கியமாக்கினா ரன்றோ! நான்காவது “வணங்குதல் சிறப்பு வினையாவதல்லது பொதுவினையாகாமையின் வணங்கியென்பது” குற்றம் என்றனர். “மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே என்புழி ஒப்புமை பற்றிக் கூறியதே யாம்” எனத் தாமே கூறும் இவர் “மனத்தாற்றுணிவு தோன்ற நினைத்தலும் மொழியாற் பணிவு தோன்ற வாழ்த்தலுந் தலையாற் றணிவு தோன்ற இறைஞ்சலும் அடங்கப் பொதுப்பட வணங்கி” என்று கூறிய ஆசிரியர் மேற்குற்றஞ் சொல்வதென்ன? சிருஷ்டியுந் திதியுஞ் சங்காரத்தில் ஒடுங்குவதாற் சங்காரத்திற்கு முதன்மை கூறுஞ் சுத்த சைவசித்தாந்த சாகரமாகிய யோகீஸ்வரர் நினைத்தலுந் துதித்தலுஞ் சேர்ந்து அந்தர்ப்பித்து நடைபெறும் வணக்கத்திற்கு முதன்மை கொடுப்பதே முறையாகும். வில்வணக்கந் தீது குறிப்பது போலச் சொல்வணக்கம் நன்மை குறிக்குமே. ஆதியில் வளைதற்; பொருளிற் பிறந்த வணக்கம் ஒப்புமையால் இப்போது மனம் வாக்குக் காயம் மூன்றற்குஞ் செல்லுமென்று கொள்க.
5. “எண்பெயர் முறை பிறப்பு” என்னுஞ் சூத்திரத்தில் “எண்ணுதற்கும் பெயர் கருவியாதலின் அதனை முற்கூறாதது முறையன்று. எண்ணும் முறையும் போல்வனவற்றால் ஒரு பயனின்மையின், அவற்றை வகையுட் சேர்த்துக் கருவி செய்தல் பயனில் கூற்றாமாறறிக. போலியெழுத்தென ஒன்றில்லையென்பது தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியுட் காண்க” என்று மூன்று குற்றமேற்றினர். இஃது இலக்கண விளக்கச் சூறாவளியன்று நன்னூற் கருப்பைப் படையோடு சார்தற்பால தென்று விடுக்க.
சிவஞான முனிவர் தெரிவித்த குற்றங்களின் இலºணம் எத்தன்மைய என்பதற்கு மேலே காட்டிய ஐந்து உதாரணமும் போதுமாதலின் இவ்வளவில் நிறுத்துதும்.
இன்னோரன்ன குதர்க்கங்களான் இலக்கண விளக்கம் எட்டுணையுந் தாழ்வடையாது தமிழ் நாடெங்கும் பரவி வருகையிற், றிருத்தணிகைச் சரவணப் பெருமாளையர் நன்னூற் கோர் காண்டிகையுரை செய்து அச்சிற் பதிப்பித்தனர். பின்னர் அது மாணவர்கட்குஇலேசில் அகப் படற்பாலதாயினமையின் அதனையே யாவரும் வாங்கிப் படிப்பாராயினர். அதனால் அதன் விருத்தி யுரையையும் யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்கள் அச்சிட்டு யாவர் கைக்கும் எளிதில் அகப்படச் செய்தார்கள். இனி ஐந்திலக்கணமுஞ் செறிந்த இலக்கண விளக்கத்தையே தமிழ் மாணாக்கரனைவரும் ஆவலோடு வாங்கிப் படிப்பாரென்று நம்புகின்றேன்.
சூத்திரங்களைப் பாடம் பண்ணுவோர் ஒரு பொருளிற் பல சூத்திரத்தை நெட்டுருப் பண்ணுதல் வீண்காலக் கழிவென்று கொண்டு இலக்கணாசிரியர்கள் தத்தம் முதனூற் சூத்திரங்களையே தமக்கு வேண்டிய விகற்பத்தோடு எடுத்தாளுதல் பெருவழக்காதலின், இந்நூலாரும் பெரும்பாலுங் கற்போர்க்கு உபகாரமாகத் தமது காலத்தின் முன்னுள்ள சூத்திரங்களையே கூடிய வரையும் வைத்துக் கொண்டனர்.
கலித்தொகை வீரசோழியங்களி;ன் பதிப்புரைகளிற் றமிழைக் குறித்து யான் எழுதியவற்றிற் சில விஷயங்களுக்கு மாறாகக் கண்டனங்கள் எழுதினோர் இருவர் உளர். அக் கண்டனங்களை நிராகரிக்க வேண்டுமென்று எனதுஇஷ்டர்கள் பலர் கேட்டுக் கொண்டாலும் அவைகள் உலோகோபகாரங் கருதியும் எழுந்த வாதம்போல எனக்குத் தோற்றாமையால் யான் அவற்றைக் குறித்து யாதும் எழுதிற்றிலேன்.
இவருள் ஒருவர் ஸ்ரீமத் சபாபதி நாவலருடைய ஞானாமிர்தபத்திரிகாசிரியர். இவர் தாமோதரம்பிள்ளை யெனத் தன்பெயர் கைச்சாத்திட்டு அப்பத்திரிகையின் தமிழ் நடைக்கெல்லாந் தானே உத்தரவாதியென்று வி;க்கியாபனஞ் செய்தவர். பின்னர்க் கலியாண சுந்தரப் பெயர் கொண்டேழுந்து, யான் தாமோதரம்பிள்ளை யென என்பெயரெழுதுதல் தவறென்றும் அது தாமோதரப் பி;ள்ளை என்றிருத்தல் வேண்டுமென்றுங் கிளம்புகின்றார். அப்படிப்பட்டவரோடு யாது வாதம் புரிவது? தன் பெயர் எழுதுதற்கே இன்னுங் கற்றுக் கொண்டிருக்கின்றார் போலும் இவரை எதிர்த்தல், “வென்றாலுந் தோற்றாலும் வசையேயன்றோ”? இக்காலத்துப் புலவர் பெருமானென யாவருங் கொண்டாடுந் திரிசிரபுரம் மீனாºpசுந்தரம் பிள்ளையவர்கள், இராமநாதபுரம் வித்துவான் பொன்னுசாமித் தேவரவர்கள், நவீன பவணந்தி எனச் சிறப்புப் பெயர் விளங்கிய ஐயம்பிள்ளை உபாத்தியாயரவர்கள், திருமயிலை வித்துவான் சண்முகம்பிள்ளையவர்களென்று இன்னோ ரெல்லாந் தம்பெயர் வல்லொற்று மிகாமல் எழுதுபவராயின் யான் தாமோதரம்பிள்ளை யென்று எழுதுதலும் விலக்காகுமன்றிக் குற்றமாகாதே. விதி விலக்கு இரண்டும் உணர்ந்தாரன்றோ குற்றங் காட்டற்கு உரியராவர்? அப்பசுவாமிகளையும் அப்பச் சுவாமிகளாக்குவாரென் றஞ்சுகின்றேன். யான் சாதித்த மௌனத்தை என் இஷ்டர்கள்மன்னிக்க.
மற்றவர் தஞ்சை ஜனமித்திரனிற் றோன்றித் தூஷணப்படை கொண்டு ஒரு சிறுச்சண்டை செய்ய முயன்றனர் போலும். இன்னோரன்னோரோடு சண்டை செய்தற்கு யான் அருகனல்லேன். இவர் யான் வீரசோழியப் பதிப்புரையிற் றமிழ் என்னும் மொழி “எவ்வாறாயினும் ஆகுக” அது ‘தென்மொழிக்குத் தென் சொல்லாகிய பெயரேயாமெனக் கொள்க” என்று கூறியதனால் மொழியின் உற்பவத்தைக் குறித்து எனக்கு அதிகவாதமில்லை யென்றும் அது திராவிடமென்னும் வடமொழியினின்று வராததோர் தென்மொழியென்று சாதிப்பதே என் கருத்தென்றும் உணர்வாராக.
இன்னோர்போலாது ம-ள-ள-ஸ்ரீ. கொ. ஸ்ரீநிவாசராக வாசாரியாரவர்கள் தாம் எழுதிய நாலடியார் நூல்வரலாற்றில் “நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்பால் கடுகங் கோவை பழமொழி” என்பவற்றுள், “ஐந்திணை அகப்பொருட் டுறைத்தாய் ஐம்பது செய்யுளான் மாறன் பொறையனார் இயற்றியது ஒர் நூலாகக். கீழ்க்கணக்குத் தொகை பதினெட்டாய தெவ்வாறோ?” எனயான் கொண்ட 0 கொள்கைமாற, “ஐந்திணை என்றது திணைகளைப்பற்றிச் சொல்லும் ஐந்து நூல்கள்” எனக் கூறி ஐந்திணையைம்பது ஐந்திணையெழுபது திணைமொழியைம்பது திணைமாலை நூற்றைம்பது இந்நான்கும் அவ்வைந்திணையைச் சேர்ந்தன வென்றும் இவைபோன்றது இன்னும் ஒன்று இருத்தல் வேண்டு மென்றுஞ் சொற்றனர். கலித்தொகைப் பதிப்புரை எழுதிய பின்னர் மேற்கண்ட நான்கு நூல்கள் எனக்கும் அகப்பட்டன. ஐந்திணை விஷயத்தில் யான் கூறிய கூற்றுச் சரியன்றென்று ஒத்துக் கொள்வதுமன்றி ஆசாரியாரவர்கட்கு என் வந்தனமுங் கூறுகின்றேன். பிறர் சிலரொப்பக் கோவையைத் திருச்சிற்றம்பலக் கோவை என்று கொள்ளாது யான் சொல்லியது போல ஆசாரக்கோவை என்று இவர்கள் உரையிட்டது சாலவும் பொருத்த முடைத்தேயாம்.
முப்பால் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யாமொழித் தமிழ் வேதமாகிய திருக்குறளல்ல வென்பதற்கு யான் கூறிய நியாயங்களை முற்றச் சீhதூக்கி ஆராயாது “ஆலும் வேலும் பல்லுக்குறுதி – நாலு மிரண்டுஞ் சொல்லுக் குறுதி” என்னும் பிற்றைநாண் மொழியைச் சங்கத்தார் காலத்து முதுமொழிபோற் கொண்;டது ஆசாரியார்பால் ஒரு தவறென்றே இன்னும் வற்புறுத்துகின்றேன். கோவை திருக்கோவையாராகது ஆசாரக்கோவையாயினாற்போல முப்பாலும் நாயனார் தமிழ் வேதமாகாது நமது கைக்கு இன்னும் அகப்படாத பின்னொரு சிறு நூலேயாதல் வேண்டுமென்பது என்துணிவு மாத்திரமன்று. இது விஷயத்தில் யான் கண்டு பேசிய பல மடாதிபதிகள் வித்துவான்கட்கும் இ.ஃதொப் பென்றறிக.
0 கலித்தொகைப் பதிப்புரை 17-ம் பக்கம், (இந்நூலில் 51-ம் பக்கம்)
இஃதெழுதிய பின்னர், ஸ்ரீ திரு. த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் தமக்கு அகப்பட்டதோர் மிகப் பழைய கீழ்க்கணக்குச் சுவடியில், “நாலடி நான்மணி” என்னுஞ் செய்யுள் அதிகஞ் சிதைவுபட்டுக் கிடப்பதில், ஐந்திணை என்பதற்கு ஐந்திணையைம்பது ஐந்திணையெழுபது திணைமொழியைம்பது திணைமாலை நூற்றைம்பது என்னும் நான்குமே உரையிற் குறிக்கப் பட்டிருக்கின்றன வென்றும், முப்பால் என்பதன் உரை நாயனார் திருக்குறளை ஒருவாற்றானுஞ் சுட்டாது முப்பாலென்றே கூறப்பட்டிருக்கின்ற தென்றுங், கைந்நிலை யென்பது அப்பெயரான் உரையோடு உள்ளதோர் தனிநூலாகக் கண்டிருக்கிற தென்றும் எழுதியறிவித்தனர். இஃது என் கூற்றை நன்கு வற்புறுத்துகின்றது. இதனால் “நானாற்ப தைந்திணை” என்றதில் நாலென்னும்; அடையை நாற்பது ஐந்திணை என்னும் இரண்டனோடும் ஒட்டி நானாற்பது நாலைந்திணை யென்றுகோடல் வேண்டுமென்றும், ஐந்திணை, யான் கூறியவாறு ஒரு நூலுமன்று. ஆசாரியாரவர்கள் கூறுமாறு ஐந்து நூலுமன்று ஐந்திணைப்பொருள் உணர்த்திய நான்கு நூலகளென்று கொள்ளத்தக்க தென்றுஞ் சொல்ல ஏதுவாகின்றது. அங்ஙனமாயின் முப்பாலென்பது ஒரே நூலாகவும், இந்நிலை சொல்லென்றது இன்னிலை இன்சொல் என இரண்டு நூல்களாகாது காஞ்சிக்கு விசேஷணமாகவுங், கைந்நிலையென்றது வேறொரு தனி நூலாகவுங் கொள்ளல் தகும். இவ்வாறு கொள்ளிற் “கைந்நிலை யோடாங்கீழ்க் கணக்கு” என்று ஈற்றடிப் பாடந்திரிதல் வேண்டும். எட்டு;த்தொகை பதினெண் கீழ்க் கணக்குக்களுள் இன்னும் அச்சிற்றோற்றாதன தேடி வெளிப்படுத்தும் நோக்கமாகச், சில நாட்களுள், மதுரை திருநெல்வேலி, கோயமுத்தூர் முதலிய தேசங்களுக்கு ஒர் யாத்திரை செய்ய உத்தேசித்திருக்கின்றேன். அவ்வாறு போயத்திரும்பியபின் இது விஷயத்தைப் பற்றி மறுபடியும் எழுதுவேன்.
மாணவர்கள் தமிழ் இலக்கணம் ஐந்தும் எவ்வாற்றானும் ஓதி உணர்தல் வேண்டுமென்னும் விருப்பம் மிக்குளேனாதலானும், அவர்களுட் பெரும்பான்மையோர் அதிக செல்வரல்லராதலானும், வித்தியாசாலைகளிற் றமிழ் கற்கும் மாணாக்கர்கள் 25 பெயருக்குக் குறையாமல் ஒருங்கு சேர்ந்து தமது பாடசாலைத் தலைவர் மூலமாக நேரே என்னிடமிருந்து அழைப்பிப்பின் இப்புத்தகம் அவர்களுக்கு அரைவிலையாகக் கொடுக்கப்படும்.
உலோகோபகாரமுந் தமிழ்ப்பரிபாலனமுங் கருதி இந்நூலை அச்சிடும்படி திரவிய சகாயஞ் செய்து அடியேனை ஆதரித்த போடி நாயக்கனூர் ஜமீன்தார் ஸ்ரீ திருமலை போடய காமராச பாண்டியநாயக்கர் துரையவர்களுக்குப் பெருங்கடமைப்பட்டுள்ளேன். துரையவர்கள் வாய்மொழி தவறாது நிறைவேறச் செய்ய உடன்பட்டிருக்கும் அவர் தேவிமயராதியானோர்க்கு மிகவும் வந்தனங் கூறுகின்றேன்.
எடுத்த முயற்சியில் யான் தளர்வடையாவண்ணம் அடிக்கடி என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்குந் தொண்டமான் புதுக்கோட்டை இளவரசு ராஜா ஸ்ரீ பாலசுப்பிரமணிய ரகுநாத தொண்டமான் துரையவர்கள், பிரதிகாவல கௌரவ அ. சேஷைய சாஸ்திரிகள், மைசூர் நியாயாதிபதி கௌரவ அ. இராமச்சந்திரையரவர்கள் முதலிய கனவான்களுக்குந் தென்றேசப் பிரதிகள் தேடியழைப்பித்துத் தருவதில் அதிகபிரயாசை வகித்துக்கொள்ளும் மாஜி திருநெல்வேலி நீதிபதி ம-ள-ள-ஸ்ரீ திரு. கனகசபை முதலியாரவட்கட்கும், இவ்வேலை விரைவில் நடைபெறும்படி வேண்டிய ஒத்தாசைகள் செய்யும் ஸ்ரீமத் ந. க. சதாசிவம்பி;ள்ளையவர்கள் ம-ள-ள-ஸ்ரீ திரு. த. கனகசுந்தரம்பிள்ளையவர் களென்றிவர்களுக்கும் நன்றி சொல்லுகின்றேன்.
என் முயற்சிக்கு ஸ்ரீ கைலாசபரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்துக்கு சற்குருநாத சுவாமிகளாயிருந்து அடைந்து போன ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக மூர்த்திகள் செய்து வந்தது போலவும், இப்பொழுது î சுவாமிகள் பட்டத்திற்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் செய்து வருவது போலவும், மற்றைத் தமிழ்நாட்டு ஆதீனங்களில் ஆங்காங்கு எழுந்தருளி யிருக்கும் மகா சந்நிதானங்கள் கைகொடுத்து வருவார்களாயின் இன்னும் பல பண்டைக் காலத்துத் தமிழ்நூல்களை எடுத்துப் பரிசோதித்துப் பிரசுரிப்பதில் அதிக ஊக்கம் உடையவானாவேன்.
சென்னைப் பாடசாலைக் கிரந்த சுதேச பாஷாவித்தியா பரிபாலன சபையார் எனக்குச் செய்துவருஞ் சகாயம் யான் ஒரு பொழுதும் மறக்கற்பாலதன்று.
தொண்டமான் புதுக்கோட்டை சி. வை. தா.
விரோதி ò ஐப்பசி ñ
உ
கணபதி துணை
4. சூளாமணிப் பதிப்புரை
குரு வணக்கம்
இறைவனோ ருருவுகொண் டெழுந்தார்க்கு வீற்று
மறைசையா தீனத்து மன்னுபு வதிந்த
கரணை யம்பதிக் கைலாச நாத
குரவன திருபத மருமலர்
சிரமிசை யிருத்திவெங் கருமுதல் களைவாம்
தமிழாசிரிய வணக்கம்.
தௌ;ளுதமிழ்க் கடல்கடந்து செழியகலைத் துறைப்படிந்து திரிபில் ஞானக்
கொள்ளைகொண்டு நுகர்ந்தமுத்துக் குமாரகவி மேகமிதைக் கொடிச்சுன்னாக
வள்ளலென துள்ளமதி கொள்ளநறை விள்ளுதமிழ் மணஞ்சற் றேறி
வெள்ளறிவின் முடை நாற்றம் வீவித்தான் விரைமலர்த்தாள் மலைவன் மாதோ.
தமிழுஞ் சம்ஸ்கிருதமும் ஈஸ்வரன்பால் உதித்த இரட்டைப் பிள்ளைகளாம். சம்ஸ்கிருதத்திற்குப் பாணினியுந் தமிழிற்கு அகத்தியருஞ் செவிலித்தாய ராயினர். சம்ஸ்கிருதம் வடபாலில் நைமிசாரணியத்து ரிஷிகள் கோட்டத்திலும் தமிழ் தென்பாலில் மதுரைப் பாண்டியர் அவைக்களத்திலும் வளர்ந்து முறையே வடமொழி தென்மொழியெனும் நாமம் வழங்கப்பெற்றன.
“இருமொழிக்குங் கண்ணுதலே முதற்குரவ ரியல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தரிசைபரப்பும்
இருமொழியுந் தழீஇயினா ரான்றவரே யென்றாலிவ்
இருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ”
அகத்தியர்க்குத் தமிழிலக்கணம் அறிவுறுத்தியவர் சுப்பிரமணியக் கடவுளெனச் சைவர் கூறுவர்@ சமணர் அதனை மறுத்து அவர்க்கு அவ்வறிவுறுத்தினார் அவலோகிதனென்பர். அகத்தியர் சைவோத்தமராதலின் அது பொருந்தாது. அஃதெவ்வாறாயினும் ஆகுக@ தமிழணங்கிற்குப் பாலருத்தி வளர்த்தவர் அகத்திய ரென்பது அனைவருக்கும் உடம்பாடேயாம்.
வளர்ந்த இடம் மதுரையாயினுந் தமிழின் சனனபூமிகங்காதீரமே யென்பதூஉம், ஆரியர் வடமேற்றிசையினின்றுவந்து கங்காதீரத்திற் குடியேறின போது ஆண்டு இருந்த தமிழர் அவரோடு இணங்கியராது பிரிந்து பற்பல இடங்களிற் சென்று சிதறுண்டு வதிந்தன ரென்பதூஉம். அவர்களிற் றென்னாட்டிற்கு வந்தவர்களே ஈண்டுச் சேர சோழ பாண்டிய இராச்சியங்களை நாட்டினாரென்பதூஉம், மதுரைச் சங்கத்தில் வளர்ந்து விருத்தியடைந்து சிறப்புற்ற தமிழோடு அவ்வாறு சிறப்புறாதனவாய்க் காலவேற்றுமை சிறிதடைந்து வழங்குந் தென்மேற்கிற் புக்கு உறைந்தமலையாளரதும், மேற்கிற் புக்மகு உறைந்த குடகரதும், உதகமண்டலத்துப் புக்கு உறைந்த தோடரதும், வடக்கிற் புக்கு உறைந்த இமயமலைச்சாரலில் ஒருவகை வேடரதும் பாஷைகளுக்குள்ள ஒற்றுமையான் விளங்கும்.
சம்ஸ்கிருதம் உச்சாரண வன்மையானும் வேதாகம திகாரத்தானும் மந்திரோபதேசப் பயிற்சியினானும் ஆடூஉ லºணமுடையதாகத், தமிழ் தன் மிருதுத் தன்மையானுங் குயில் கிளி பூவைகள் தலைநாணும் ஓசையுங் கரும்பு தேன் பாகு பாலென் றிவற்றை வென்று தேவாமிர்தத் தோடொத்த இனிமையும் உடைமையானுந் தேவார திருவாசகாதிகளினாற் சாºhத் ஈஸ்வரனையும் மயங்கச் செய்யும் வசீகரணத்தினானுஞ் சங்கீத சாகித்ய செய்யுள் விநோதங்களானும் மகடூஉ லºணம் மேற்பட்டது. இரண்டும் ஒன்றோடொன்று கலவாது விந்தகிரிக்கும் வேங்கடமலைக்கும் இடையே கிடந்ததோர் பேராரணியத்தாற் காக்கப்பட்டு வளர்ந்தன. ஆயினும் மங்கைப்பருவமுற்ற கன்னித்தமிழ் பின்னர்த் தன் புரோணேதிகாச காலத்திற் சம்ஸ்கிருத நாயகனை மாலைசூட்டி மணம்புரிந்தது. ஆதலால் இஞ்ஞான்றைத் தமிழில் வழக்கினுஞ் செய்யுளினுஞ் சம்ஸ்கிருதம் எங்கணும் வியாபித்துக் கொண்டிருக்கின்றது. பண்டைத்தமிழோ அக்கலப்புடையதன்று. இஃது இரண்டு பாஷையின் இலக்கண விதிகளாலுஞ் சங்கமரீஇய பழைய தனித்தமிழ் நூல்களானும் உள்ளங்கை நெல்லிக் கனிபோலத் தௌ;ளிதிற் புலப்படும்.
நைமிசாரணிய ரிஷீஸ்வரர்கள் காலத்தின் பின்னர்ச் சம்ஸ்கிருதம் ஆரியப் பிராமணாசரியர்களாற் பராமரிக்கப் பட்டதுபோல மதுரைச் சங்கத்தார் காலத்தின் பின்னர்த் தமிழிற்குக் கைகொடுத்துப் பரிபாலனஞ் செய்தவர்கள் சமணரென்பதூஉம், இக்காலத்திற் றமிழ் கற்போர் இலக்கிய இலக்கணப் பயிற்சிக்காக ஒதிவரும் நூல்களிற் பெரும்பான்மையன சமணர்காலத்திற் சமணாசிரியர்களால் எழுதப்பட்டன வென்பதூஉம் முன் வீரசோழியப் பதிப்புரையிற் கூறியிருக்கின்றேன். அவற்றுட் சீவகசிந்தாமணி முதலிய பெருங்காப்பியங்களொத்த சிறப்புடைய தமிழிற் சமணர் எழுதிவைத்த யசோதர காவியம்; உதயண காவியம் நாககுமார காவியம் சூளாமணி நீலகேசியெனும் பெயரிய சிறு காப்பியங்களும் உள. இன்னும் அநேக பிரபந்தங்கள் இதிகாசங்கள் புராணங்கள் சமயாசார தத்துவ சாஸ்திரங்கள் உள. அவைகள் காலந்தரத்தில் ஏடெழுதுவோராற் பெருகிய பிழைகளினாற் பேதப்பட்டு மிக விகாரமுற்றுக் கிடக்கின்றன.
“இற்றவர் தேவராய்ப் பிறப்ப ரீண்டுடல்
பற்றிய விசும்பிடைப் பரவு மாமுகி
நெற்றென வீழ்ந்தெனச் சிதைந்து போகுமான்
மற்றினி மக்கடம் வண்ணஞ் செப்புவாம்”
என்னுஞ் சிந்தாமணி செய்யுளின் மூன்றாம் அடி ஓரோவொரு பிரதியில் “அற்றென முற்றிலு மழிந்து போகுமால்” எனவும் “தெற்றென வீந்தென வீந்து போகுமலால்” எனவும் “இற்றென விழிந்தென வீந்து போகுமால்” எனவுஞ் சில பிரதிகளில் முதலடி யொழித்து ஏனை மூன்றடியும் முற்றும் ரூபம் மாறி “அற்றமில் பறவைகளடையக் கொண்டு போய்ச் - சுற்றிய பாற்சுட றுளும்ப வீட்டிடும் - பொற்றிரள் வரையொடு மின்னுப் போலவே” எனவும் பிறழ்ந்து கிடப்பின் இவ்விகாரங்கள் இத்துணைவென்று கூறப்பாலவல்ல. பழஞ் சுவடிகளை ஒப்பிட்டுப் பரிசோதனை செய்பவர்களுக்கே இவைகளால் நேரிடும் வருத்தந் தெரியும்.
சூளாமணி இரண்டாவது காவியமென அதன் பிரதிகளிலிருக்குங் குறியீட்டினாற் றெரியவருகின்றது. முதலாவது காவியம் எதுவென்றும் மற்றைய காவியங்களின் வரிசைக்கிரமம் இன்னதென்றும் விளங்கவில்லை. நீலகேசி என் கைக்கு அகப்படவில்லை. ஆயிரத்து நானூற்றுச் சொச்சஞ் செய்யுளுள்ள மேருமந்தா புராணத்தில் முதற் பாகமும் யசோதரகாவியமுங் காஞ்சிபுரத்தி லிருந்த ஸ்ரீ பாகுபலி நயினாரால் அச்சிடப்பட்டன. எஞ்சியன அச்சில் வரவில்லை. சுரவிரத காவியம் என்று ஒன்று வடமொழியில் இருப்பினுந் தமிழிற் செய்யப்பட்டதாகத் தோற்றவில்லை.
யாப்பருங்கல விருத்தியிலும் அதனை முதனூலாகக் கொண்டு அமிதசகரர் இயற்றிய காரிகைக்குக் குணசாகரர் சகாப்தம் 200 – 300 அளவில் எழுதிய விரித்துரையிலுஞ் சூளாமணியிலிருந்து அநேக செய்யுள்கள் இலக்கியமாக எடுத்துக் காட்டப்பட்டிருத்தலானுஞ் சூளாமணியின் காலஞ் சோழமண்டலத்திற் கார்வெட்டி நகரத்திலிருந்து அரசு புரிந்த விசயராசன் காலமென்பது நூற்சிறப்பிற் “திக்கெட்டும் புகழ்படைத்த திறல் விசயன்” என்றற் றொடக்கத்துச் செய்யுளான் அறியக் கிடத்தலாலும், கார்வெட்டிநகரின் காலம் உறந்தைக்கு முக்கியதாதலானும் இந்நூலின் வயது ஆயிரத்தைஞ்Ä}று வருஷத்திற் குறையாது.
எவ்வெப் பாஷையினும் பெருங்காவியங்கள் தோற்றிய பின்னரும் ஆங்காங்குக் காலந்தோறுஞ் சிறுகாவியங்கள் உதித்து நடைபெறுதல் வழக்காயினும். சிலபல சிறுகாவியங்கள் செனித்த பின்னரே பெருங்காவியங்கள் பிறத்தல் இயல்பு. மேற்கூறிய சிறுகாவியங்களை ஒழித்தாற் சமணருக்குட் சிந்தாமணிக்கு முன்னர்த் தோற்றிய சிறுகாவியங்கள் வேறில்லை. இருந்து இறந்ததாகவும் கேள்வியில்லை. அன்றியுங் குணசாகரர் காலத்திற் சிந்தாமணி முதலிய பெருங் காவியங்கள் இருந்தனவாகில் விசேஷமாக அவற்றினின்றே உதாரணங்கள் காட்டியிருப்பர். ஆதலால் இந்நூல் ஆருகதப் பெருங்காப்பியங்களுக்கு முந்திய தென்று கொள்ளல் தவறாகாது.
யகர ஆசெதுகைக்குக் “காய்மாண்ட” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுள் காட்டாக எடுத்து ஆளப்பட்டிருக்கின்றதாலோவெனின், ஆண்டு உரையாசிரியர்கள் காட்டியது. ழூ “வேய்காயு மென்பணைத் தோள்” என்னுஞ் சூளாமணிச் செய்யுளென்றும். அஃது ஆசிரியராற் சவலை விருத்தத்திற்கு ஓர் இலக்கிய மாதற்பொருட்டுவைக்கப்பட்டது உணராது. 0 கொகுடி யென்பதோர் மரப்பெயருளதென்று அறியார் கோங்கமென்று மாற்றினாற் போல, அச்செய்யுளில் இரண்டாம் ஓ அடி சீர் குறைந்திருப்பது பிற்காலத்துச் சிதைவென்று கருதி, அதனை ஒழித்து, அதற்குப் பதிலாகக் “காய்மாண்ட்” என்றற் றொடக்கத்துச் செய்யுளை இக்காலத்தில் யாரோ சொருகிவிட்டார்களென்றும், எழுபது என்பது வருஷத்திற்கு முந்திய பழஞ் சுவடிகளில் “வேய்காயு மென்பணைத்தோள்” என்னும் உதாரணமே இன்னுங் காணலா மென்றும், ரகழ ழகர ஆசெதுகை மூன்றாமெழுத் தெதுகை முதலியவைகட்குச் சூளாமணி யிலக்கியங் கொண்ட உரையாசிரியர்கள் யகர மொன்றற்கு மாத்திரஞ் சிந்தாமணியிற் கைவைத்தற் கோர் அவசியம் இருக்கமாட்டா தென்றுஞ், சிந்தாமணியிற் புதிதாகத் தேடி எடுத்த தென்பதற்கு அஃது அக்காப்பியத்தின் முதலாவது இலம்பகத்தின் முதலிலே கிடப்பதே ஒரு சான்றென்றுங் கூறி விடுக்க நூல் முழுவதிலுஞ் சிந்தாமணி உதாரணம் வேறில்லையே.
நாலைந்து வருஷத்தின் முன் யான் ஸ்ரீ கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்துச் சற்குருநாதசுவாமிகள் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக மூர்த்திகளைத் தரிசிக்கப் போயிருந்தபோது சுவாமிகள் சூளாமணி ஓர் அருமையான நூலென்றும் அஃது இப்பொழுது மரண தசை அடைந்திருப்பதால் அதனை அச்சிட்டுக் காப்பாற்றுதல் தக்கதென்றுந் தமிழ்ப் புராதன நூல்களை என்னால் இயன்ற மட்டுந் தேடிப் பரிசோதித்து வெளியிடும் முயற்சியிற் கையிட்டிருப்பதால் யானே அதனைச் செய்தல் வேண்டுமென்றுங், கட்டளையிட்டதுமன்றிச், சென்னை மகாலிங்கையர் பிரதியொன்று தமது ஆதீனத்திலிருந்ததை எடுத்து என்வசம் அனுப்பியு மருளியது. அதனை வாங்கி வாசித்துப் பார்த்த போது, காரிகையில் இலக்கியமாகக் காட்டப்பட்டுள்ளனவுஞ் சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்தனவாயினும் யாது நூலகத்திருந்து எடுக்கப்பட்டனவென இக்காலத்து அதனை ஓதுவார்க்குத் தெரியாதனவுமாகிய விருத்தங்கள் ஆங்காங்குக் கிடத்தல் கண்டு, அஃதோர் அரிய இலக்கியமேயெனத் தேறிச் சுவாமிகள் கட்டளையைச் சிரமேற்றாங்கி, வேறு பிரதிகள் தேட ஆரம்பித்தனன். அவ்வவ் இடங்களில் இருக்கும் எனது இஷ்டர்களான உத்தியோகஸ்தர்கள் வித்துவான்களுக்குப் பிரதிகள் விசாரித்துச் சம்பாதிக்க எழுதியதில், அப்பொழுது கருவூரிலிருந்த பண்டிதர் ஸ்ரீமத் வெங்கட்டராமையங்காரவர்கள் தம்மிடம் இருந்ததோர் பிரதியை அனுப்பினதுமன்றி மன்னார் குடியிற் சைனதெருவில் ஒரு பிரதி இருப்பதாகவுந் தெரிவித்தார்கள். அந்தப் பிரதிக்காக ஆளனுப்பி, அது கும்பகோணத்துச் சாசனப்பதிவு சாலையில் உத்தியோகமாயிருந்த சைன மாணவர் ஒருவர் எடுத்துப் போயிருப்பதை அறிந்து அவரிடம் நேரிலே சென்று கேட்டதற்கு. அவர் யான் அப்பொழுது கலித் தொகைப் பரிசோதனையிற் கையிட்டிருந்தமை பற்றித் தன்னிடம் இருக்கும் புத்தகம் எனக்கு எப்போது வேண்டுமோ அப்போது அனுப்பி வைப்பதாக வாக்களித்தனர். மற்ற இடங்களிலிருந்து இப்பெயருள்ள தோர் நூலிருப்பதாகவும் அங்குள்ளவர்களுக்குத் தெரியவில்லை யென்று பதில் வந்தது. இம் மூன்று பிரதிகள் தாம் தமிழ் நாட்டிலுண்டென்று எண்ணிக் கொண்டு, அதுகாறும் பிரசுரஞ் செய்த நூல்களால் எனக்கு நேரிட்ட செலவைக் குறித்து ஆலோசித்து. இந்நூலைச் சென்னைச் சர்வகலா சங்கத்தார் தமது பொறுப்பில் அச்சிடுவித்து நாலைந்து வருஷத்திற்குப் பிரவேச பரீiºக்கு எற்படுத்தினால் உத்தமமாக இருக்குமென்று அச்சங்கத் தலைவர்களுக்கு விண்ணப்பஞ் செய்தேன். அவர்கள் தங்கள் உத்தியோகத் தவணையை ஆக்கிரமித்து நாலைந்து வருஷத்திற்குப் பாட நியமனம் பண்ணுதல் கிரமத் தாழ்வென்று உத்தேசித்துப் போலுஞ், சென்னைச் சம்ஸ்கிருத திராவிடக்கிரந்த பரிபாலன சபையாரால் என் விண்ணப்பங் கவனிக்கப்படும்படி அச்சங்க லிகிதருக்கு என் விண்ணப்பத்தை அனுப்பினார்கள். அச்சபையார் நூலை அச்சிடுதற்கு இசைந்து என் சந்தேகங்களைப் பூரணமாகத் தெரிவிக்கும்படி எனக்கு எழுதினர்.
இதற்குள் இந்நூற் பிரகடனாதி செலவுகட்கு யான் காத்திரவண்ணம் ஒருவழி ஏற்பட்டது. தமிழ் கற்கும் மாணாக்கருக்குப் பஞ்சலºணப் பயிற்சி உண்டாதற் பொருட்டுத் திருவாரூர் வன்மீகநாத தேசிகர் குமாரர் வைத்தியநாத தேசிகர் இயற்றியருளிய இலக்கண விளக்கம் மூலமும் உரையும் அச்சிட எண்ணி அதன் செலவிற்காக ஒரு விளம்பரஞ் செய்திருந்தேன். அப்பொழுது அச்செலவில் ஒரு பாதியைத் தாங்கள் பொறுத்துக் கொள்வதாக றங்கூன் டிப்டிக் கமிஷனராபீசில் மானேஜராக இருக்கும் எனது சகோதரன் செல்வச் சிரஞ்சீவி இளையதம்பிப்பிள்ளையும் அவர் இஷ்டர்கள் சிலருஞ் சேர்ந்து 500 ரூபா அனுப்பி வைத்தார்கள். பின்பு அந்நூற் பிரகடனச் செலவு முழுவதுந் தாமே தருவதாகப் போடி நாயக்கனூர் ஜமீன்தார் ம-ள-ள-ஸ்ரீ திருமலை போடய காமராச பாண்டிய நாயக்கர் துரை தெரிவித்தனர். அதனை அவர்களுக்கு அறிவித்து அவர்கள் அனுப்பிய பணத்தை வேறோரு பூர்வக்கிரந்த பிரகடனத்திற்காகச் செலவு செய்யலாமா எனக் கேட்பித்தேன். அவர்கள் அனைவரும் அதற்குச் சம்மதி கொடுத்தார்கள்.
இஃதிவ்வாறிருக்க என் கலித்தொகைப் பதிப்பு வெளிப்பட்டது. அது சென்னைச் சர்வகலா சங்கப் பரீiºகளுக்கு உபயோகமாதற் பொருட்டு, அதன் பதிப்புரையில் யான் தெரிவித்தவாறு அதிற் பதினோரிடத்திற் குஃறொடரன்மொழி வந்தனவற்றை மாற்றியிருந்தனன். பற்பல சிரேஷ்ட கனவான்கள் அச்செய்கையை மிகவுங் கண்டித்து எனக்குக் கடிதம் எழுதினார்கள். அதனால் அ.ஃதன்ன இடர்க்கர் மொழிகளைச் சிதைத்து அச்சிடுதல் தர்மமன்றென்று தெளிந்தும், î சபையார் அவற்றின் செறிவோடு நூல்களைப் பிரசரியாரெனத் துணிந்தும், அவ்வாறு பிரசுரித்தல் எனக்குக் கட்டளையிட்டருளிய சுவாமிகளின் அனுமதிகட்கு மாறாகுமென்று நினைந்துஞ். செலவிற்கு வேறு வழி ஏற்பட்டதைப் புகழ்ந்தும் யானே எவ்வாற்றானும் இந்நூலை அச்சிடத் தீர்மானித்தேன். இறங்கூன் பணம் அதற்கு உபயோகமாயினது.
இப்பால் முன் தஞ்சாவூர்க் கீழ்க் கோர்ட் நீதிபதியாயிருந்த ம-ள-ள-ஸ்ரீ திரு. கனகசபை முதலியாரவர்கள் என் முயற்சிக்கு எஞ்ஞான்றுந் தமது கஷ்டத்தைப் பாராமற் கையெழுத்துப் பிரதிகள் தேடி உபகரிப்பவர். அப்பொழுதும் பற்பல இடங்களினுந் தமதிஷ்டர்கள் மூலஞ் சூளாமணிப் பிரதிகள் தேடுவாராய் வேதாரணியம் ஸ்ரீ அருமைப் பெருமாள் முதலியார் மகன் அநந்த விஜயமுதலியார் பிரதியொன்றும் பெருமண்டூரிலுள்ள ஒரு சைவ வித்துவானுடைய பிரதியொன்றுமாக இரண்டு பிரதி தமக்கு அகப்பட்டன அனுப்பி வைத்தனர். அதன் மேல் விழுப்புரம் டிஸ்ற்றிக்ட் முன்சிப் ம-ள-ள-ஸ்ரீ இராமச்சந்திரையரவர்கள் வழியாக வீடூர்ச் சைன வித்துவ சிரோமணி ஸ்ரீமான் அப்பாசாமி சாஸ்திரிகள் பிரதியொன்று அகப்பட்டது. மன்னார் குடிப் பிரதியை வேண்டியபோது தருவோமென்று வாக்குப் பண்ணிய மாணவன் இதற்குள் இறந்துவிட, அப்பிரதி யாவர் கையிற் சிக்குண்டதென்று எவ்வளவு தூரம் விசாரித்துந் தெரிய வரவில்லை. கிடைத்த பிரதிகள் ஐந்தில் வேதாரணியப் பிரதியுங் கருவூர்ப் பிரதியும் வீடூர்ப்பிரதியைப் பார்த்து எழுதப்பட்டனவாதலாற் பரிசோதனைக்குப் பயன்படத் தக்க சுயபிரதிகளாகாமற் போய்விட எஞ்சிய மூன்று பிரதிகளையுங் கொண்டு அச்சிட ஆரம்பித்தேன்.
நூறுபக்கம் அளவு அச்சான பின்பு, தென்றேசப் பிரதியொன்று, எனது நண்பரும் பண்டைத் தமிழ்நூல் ஆராய்ச்சியே தமக்குப் பொழுதுபோக்கும் வினோதமாக உடையவருஞ் சென்னைத் தபாலபீசுகளன் மேல்விசாரணைத் தலைவருமாகிய ம-ள-ள-ஸ்ரீ மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளையவர்களுடையது. அவரிடந் திரிசிராப்பள்ளியிற் றமிழ் முனிஷி ஒருவர் வாங்கி வைத்திருந்து இறந்துபோகக், கும்பகோணத்தில் ஒரு ஹெட் கன்ஸ்டேபில் கையிற் சேர்ந்திருந்ததை அறிந்து, அதனை அவ்விடத்திற் போலிஸ் மேல் விசாரணையிலிருக்கும் ம-ள-ள-ஸ்ரீ கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் சகாயத்தாற் றருவித்தேன். அதற்கும் முதன் மூன்று பிரதிகளுக்கும் அநேக வேறுபாடுகள் இருந்தமையால் இன்னுஞ்; சில பிரதி எவ்விடத்தாயினும் இருக்குமாயின் அவற்றையுந் தேடி ஒத்துப் பார்த்துக்கொண்டே அச்சிடுதல் அத்தியாவசியகமென்று உட்கொண்டு, அங்கங்கே சமணர்கள் குடியிருக்கும் இடங்களுக்கெல்லாம் நேரிலே ஒரு சுற்றுப் பிரயாணம் பண்ணிக் காஞ்சிபுரத்தில் மாத்திரம் ஒரு மிகப் பழம் பிரதி கண்டு அதனை வாங்கி வந்தேன். இவ்விரண்டோடும் ஒத்துப்பார்த்ததில் முன்பு அச்சிட்ட அவ்வளவும் மறுபடி திருத்தி அச்சிடவேண்டியதாயிற்று. வேறு பிரதி எங்கும்அகப்படவில்லை. கும்பகோணத்திற் போயிருந்ததாக யான் முன்னர்ச் சொன்ன மன்னார் குடிப் பிரதி வீடூர்ப் பிரதியையே பார்த்தெழுதப்பட்ட தென்று அதன் சொந்தக்காரர் மன்னார் குடியிற் சொன்ன மையால் அதனை யான் பின்பு இச்சித்துத் தேடவில்லை.
காலாந்தரத்தில் ஏடெழுதுவோராற் பெருகிப் பெருகிவந்த பிழைகளினாற் காவியங்கள் மிகவும் பேதப்பட்டு விகாரம் அடைந்திருக்கின்றமை முன்னமே சொன்னேன். இம் மாறுபாடுகளைக்குறித்து இந்நூற் பதிப்பில் அடியேனுக்கோர் துணிவு புதிதாகப் பிறந்தது. இது காறும் அச்சிட்ட பழைய நூல்களில், ஒரு பிரதியின் ஆதாரமாவது இல்லாது பாட பேதத்தைத் திருத்துதல் ஒழிந்த யான், இப்பொழுது பிரதிகள் அனைத்தும் பிழையென்றும். பிரிதிகளில் இருக்கும் பாடம் ஆக்கியோன் வாய்மொழியாய் இருக்கமாட்டாதென்றும் , எந்தப் பிரதி வழிச் சென்றாலும் அச்சில் வருவது ஆசிரியரினின்றும் வேறுபட்ட பிழைப்பாடென்றும் நிச்சயிக்க ஏது உண்டான இடங்களில் இரண்டொரு எழுத்தையாவது மொழியையாவது சந்தர்ப்பத்திற்கும் பொருளுக்கும் இயையுமாறு திருத்தத் துணிந்தேன். அவ்வாறு செய்யாவிடின் நூலின் சிறப்பு அழிவதுமன்றிச் சில பாடங்கள் ஒரு பயனுந் தராமலுஞ் சில முன் பின்னோடும் பிறநூல்களோடும் விரோதப்பட்டும் நிற்குமாதலிற்றிருத்தம் அத்தியாவசிய மாயிற்று. இதனை உலகம் அறியச் சொல்லாமல் விடுவதே தப்பென்று உணர்ந்து இங்ஙனந் தெரிவிக்கலாயினேன்.
பிரகடனாசிரியர்கள் நூலிலுள்ள தப்பு ஒப்பிற்கு உத்தரவாதிகளல்லரே! ஆசிரியர் பாடம் இஃதென்று நிச்சயித்து உணராவழி இருந்த வண்ணம் நூலை உலகிற்கு ஒப்பிக்கிறதானே! வீரசோழியம் தொல்காப்பியம் முதலியவைகளில் அப்படி ஒப்பிக்கவில்லையா என்பாருளராயின், அன்னோர் மேல் வரும் நியாயங்களைச் சீர்தூக்கி என் செய்கையை மன்னித்தருள்வாராக. முதலாவது அந்நூல்களிற் பிரதிகளில் இருந்தபடி ஒப்பித்த வழுக்கள் மூல பாடத்தின் அர்த்தத்திலாவது உள்ளன அல்ல. மூலத்திலும் அர்த்தத்திலும் வரும் வழுக்கள் ஒன்றாலொன்றன் பூர்வ சொரூபம் அறிந்து திருத்தப்படற் பாலனவாம். உரையாசிரியர்கள் பிற நூல்களிலிருந்து எடுத்துக் காட்டிய உதாரணச் செய்யுளிலாவது மேற் கோள்களிலாவது புகுந்த வழுக்களே பிரதிகளிற் கண்ட படி ஒப்பிக்கப்பட்டன. அவைகள் அவ்வவ் நூலாராய்ச்சியாற் பிறர் அவ்வப்போது திருத்திக் கொள்ளக் கூடியன. இவை அவ்வாறு பின் எக்காலத்துந் திருத்தப்படா. இரண்டாவது, உதாரணங்கள் மேற்கோள்களிற் புகுந்திருக்கும் வழுக்கள் தாமும் ஆங்காங்கு எடுத்தோதிய பொருட்டுணிபிற்கு எம்மாத்திரம் வேண்டியதோ அதனுட் புகுந்த வழுவல்ல. எஞ்சிய பாகங்களில் ஏதாவது வழுக் கிடத்தலாற் கற்போர் பெறக் கருதிய பயன் எவ்வாற்றானுஞ் சிதைவுபடாது. உதாரணமாகச் “செய்யுளுளும் முந்தாகலு முரித்தே” என்னும் இலக்கணமும் அதனுரையும் வழுப்படாமல் ஆராய்ந்து பதித்திருக்க, அதற்கு இலக்கியமாகக் காட்டிய செய்யுள்கள் “தெண்டிரை மிசைப் பாயுந்து” “நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து” என்று பிரிந்தாலென்! “தெண்டிரை” என்றிருப்பினென்! “தண்டிரை” என்றிருப்பினென்! தெண்டிரையோ தண்டிரையோ என்பதும் “நீர்” எதனைச் சேர்தல் சரியென்பதும் அவ்விலக்கியங்கள் இருந்து எடுக்கப் பட்ட நூல்களாற் றிருந்த உணர்தற்பாலவாயினும் “பாயுந்து” “பெயர்க்குந்து” எனவரும் விதியினை உணரும் உணர்ச்சி அவ்வழுவாற் சிதைவுபடாதன்றோ? நீர்க் கோழிக்குக் கூவுதற் றொழிலில்லை யாதலானும் பாயுந்து என்னும் எச்சத்திற்கு முடியும் பெயர் வேண்டு மாதலானும் சிறிதாலோசனையால் “நீர்” முன்வாக்கியத்தோடு சேர்தற்பாலதென்றும் புத்தி நுட்பக் குறைவால் ஏட்டுத் தொடரெழுத்தைப் பிரிக்க அறியாமல் வழுப்பட்டதென்றுஞ் சொல்வீராயின், அற்றன்று@ கூவுதற்கு அழைத்தற் பொருளும் உண்டென்றும் நீர்க்கோழி தன் துணையைத் தன்னோடு செல்வான் அழைத்துப் பெயர்த்தல் இயல்பென்றும், பெயருந்து என்னாது பெயர்க்குந்து என்றதாற் றன்பெயர்ச்சியைக் கருதாது துணையைப் பெயர்தலைக் கொள்ளலுந் தகுமென்றும் “பாயுந்துநீர்” என முடியுஞ் சொல் சேர்ந்ததாயின் பெயர்க்குந்து யாண்டையோ முடிந்ததென்றும் விடுத்தொழிக. இன்ன நூலிலிருந்து உதாரணம் எடுக்கப்பட்ட தென்று அறிந்து அந்நூலையுந் தேடிப்பார்த்தாலன்றி யதார்த்தரூபம் அறிதல் அசாத்தியமென்க. அவ்வாறு எட்டுத்தொகை பத்துப்பாடலென்றின்னோரன்ன சங்கத்தார் காலத்து நூல்களைத் தேடிப்பார்த்து அவற்றால் அறியத் தக்கன பி;ன்னர்த் திருத்தற் பொருட்டாகவே தொல்காப்பியப் பொருளதிகாரத்து உதாரணச் செய்யுள்களிற் சில பிழைகளைப் பிழையென நிச்சயமாயுணர்ந்தும் பிரதிகளிற் கிடந்தபடி விட்டிருக்கின்றேன். நற்றிணையாகிய தொகைகளிலும் பத்துப் பாட்டிலும் பின்னாராய்ச்சியால் யான் இப்பொழுது செய்துவைத்திருக்கிற திருத்தங்களுள் அநேகம் அப்பொழுது செய்துவைத்திருக்கிற திருத்தங்களுள் அநேகம் அப்பொழுது யான் இவை இன்னவாறு இருத்தல் வேண்டுமென்று உத்தேசித்தபடியே இருக்கின்றன. ஆயினும் பூருவ சொரூபம் இதுதானென்ற நிச்சயமின்மையானும். ஒருகாலமில்லாதிருந்தால் வேறொரு காலத்தில் எப்படியும் பூருவசொரூபந் தேடி அறிதற்பாலவாயினமை யானும் அவற்றை என் உத்தேசத்தின் பிரகாரந் திருத்தத் துணிந்திலேன். மூன்றாவது, உரை எழுதப்பட்டிராததோர் இலக்கிய நூலின் மூலபாடத்திற் சாஸ்திரமுடிபுங் கதைப் பொருத்தமுமே அயனூலாராய்ச்சி கொண்டு துணிதற்பாலன. வாக்கிய முடிபு அங்ஙனமன்று. அது பலபல பிரதிரூபத்தின்சகாயத்தால் மாத்திரமே அறிதற்பாலது. நாடெங்குந் தேடியும் வேண்டிய அளவுக்குப் பிரதிகள் அகப்படாமல் வழுக்கள் நிறைந்து மாரணதசையும் அடைந்ததோர் உரையில்லா நூலை ஒன்றிற் பிரசுரஞ் செய்யாமல் இறந்துபோக விட்டு விட வேண்டும். அன்றேற் கற்போர்க்குப் பயன்படத்திருத்தியே அச்சிடல் வேண்டும். இவ்விரண்டில் எது தக்கது? எலும்பழுகிய நாசியைச் சத்திரம் பண்ணிப் பொன்னாசி பொருத்தினாற் போல பூர்வ சொரூபம் இறந்து பிறந்து இடத்தில் அஃதறிய வேறு வழியின்றேற் புதுத் திருத்தஞ் செய்வதைவழுவமைதியாக்கி மன்னிக்க. நான்காவது, ஒரு திருத்தமுஞ் செய்யாது பழம்பிரதி களின்படி ஒப்பிப்பதால் வரும்பயன் யாது? வீரசோழியத்திற் சில சில இடங்களிற் பிழைப்பட்டனவற்றை இருந்தவண்ணம் ஒப்பித்தேனன்றோ? யாவர் அவற்றுக்குப் பூர்வசொரூபங் கொடுத்தார்! தேடமுயன்றவராயினும் உளரா! என்பு நொறுங்கிய காலை வெட்டியெறிந்து பொய்க்கால் வைத்தாற் போல அவற்றிற்குப் புத்துதாரணங்கள் செய்து சேர்த்திருப்பேனாயின் கற்போர்க்குச் சிறிதாவது பயன் படத்தக்கதாயிருக்குமே! ஐந்தாவது, சிற்சில இடங்களிற் புதுத் திருத்தமான பின் இந்நூலைத் தோலாமொழித் தேவர் இயற்றியருளிய சூளாமணியெனல் பொய் படுமன்றோவெனின், புதுமொழி சில சேர்ந்தமையை உலகிற்குத் தெரிவியாது சொருகிவைத்த யாவும் ஆசிரியர் வாக்கென்று நடைபெற விடுவதே தவறாவது. நன்னூற்குச் சங்கர நமச்சிவாயப் புலவர் இயற்றிய விருத்தியுரை யென்று இக்காலத்தார் கொள்வதெது! அன்னோருரையில் அங்குமிங்குஞ் சிவஞான முனிவராற் றிருத்தப்பட்ட புத்தம் புத்துரை யன்றோ! முனிவர் திருத்தியமை உணர்ந்தோரால் அவராற்றிருத்தப்பட்ட விருத்தியுரையென்று அச்சுப் பிரதிகளின் நாமதேய பக்கத்திற் போட்டிருப்பது யான் அறிந்துளேன். ஊரில் வழங்குங் கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்து அதிற் படித்தோரை இஃதியாவருரை யென்று கேட்டறிக. 1842-ம் ò யான் நன்னூல் விருத்தியுரை எழுதிப் படித்த போது முனிவரால் அது திருத்தப்பட்ட தென்று கேள்விப்பட்டதுமில்லை. ஸ்ரீலஸ்ரீ நாவலரவர்கள் அச்சிட்டபின் எல்லாருஞ் சொல்லுவர். இப்பொழுதும் அதிற் புலவர் எழுதியதிது முனிவரர் திருத்தியதிது என்று பகுத்தறியக் கிடக்கின்றதா? “நன்னூ லுட்கருத்துலகோ ரறியவுரை செய்கவென நரேந்திர சிங்கந், தென்னூற்று மலைமருதப்பன் புகலப் பொருள் விளங்கச் செய்தான் பாரி, லெந்நூற்கு மெழுத்தொடுசொற் பொருளறிசங் கரநமச்சி வாயனென்னும், பன்னூற் செந்தமிழ்ப்புலவன் கரநமச்சி வாயனென்னும், பன்னூற் செந்தமிழ்ப்புலவன் சைவசிகாமணி நெல்லைப் பதியினானே” என்பது தான் வெளி. வைத்தியநாத தேசிகர் செய்த இலக்கண விளக்கத்து அணியியலிற் சில சூத்திரங்கள் அவர் மகன் சதா சிவதேசிகராற் சேர்க்கப்பட்டனவன்றோ! அதில் மைந்தனார் தந்தன இவையென யாவர் பிரித்துக் காட்ட வல்லார்? ஆதலால் உலகறியச் சொல்லித் திருத்தல் தவறிலதாக, முழுத் தோட்டமும் அகத்தி நாட்டினும், வெற்றிலைத்தோட்டம் வெற்றிலைத் தோட்டமேயாமென்க. ஆறாவது, சுவடிகளிற் பிழைப்பட்டிருக்கும் ரூபம் ஆசிரியரதன்று என்பது மலையிலக்கு பின்னை எப்படியும் யான் பிரசுரஞ் செய்யத்தக்கது ஆசிரியர் செய்த ரூபமல்லாத போது, பிழைப்பட்டு ஒரு பொருளுந் தராமலாவது விரோதப் பொருள் பயந்தாவது நிற்கும் ரூபத்தில் அவ்விரோதமில்லாதபடிக்கு யான் வைத்த ரூபந் தாழ்வுடையதன்று. ஏழாவது, ஆருகத நூலை இவ்வாறு திருத்துவது சமணர்க்கு வெறுப்பாயிராதோ வெனின், திருத்திய இடம் அனைத்திலுஞ் சுவடிகளின் பாடமும் அவற்றின் குற்றமும் அவைகளில் யான் செய்த திருத்தமுஞ் சைன வித்துவான்களிற் சிறந்தோர் பலர்க்குக் காண்பித்து அன்னோர் முழுச்சம்மதியுடனேயே பதிப்பித்தேனென்றறிக. இருந்தபடியே பதிப்பிப்பது நூலாசிரியரின் மகத்துவத்தை ஒரோவோரு இடத்தில் இழிவுபெறச் செய்யத் தக்கதாதலின் அதுவே அவர்க்கு வெறுப்பாயிருக்குமென்பது அவர் மேரு மந்தர புராணப் பதிப்பிற் காட்டும் அரோசிகத்தாற் றெளியலாம். மேலும் என் திருத்தங்களை அவர்கள் தங்கள் பிரதிகளிலுங் குறித்துக் கொண்டதே அவர்கள் சம்மதிக்குச் சான்றாகும். எட்டாவது, அப்படியாயின் இன்னாராற் றிருத்தப்பட்டதென்று நாமதேய முகத்திற் போடுவதுதானேயெனின், இலை மறைகாய்போல எங்கேயோ ஒவ்வொரு மாறுபாடு செய்ததால் நூல் என்னாற் றிருத்தப்பட்டதாகாது. அல்லாமலும் ஆக்கியோன் மொழியினை யான் திருத்தினவனல்லன். பின் புக்க வழுவையன்றோ யான் திருத்தியது. மேலும் எனது திருத்தமே பூர்வ சொரூபமாக இருப்பினும் இருக்கலாமே. நூலைத் திருத்தியவனென்ற மேன்மைக்கு யான் அருகனல்லேன். இக் காரணங்களால் உலகமென்னை மன்னிக்குமென்று முற்றிலும் நம்புகின்றேன். என் திருத்தங்கள் எப்படிப்பட்டனவென்று யாவரொருவர் அறிய விரும்புவராயின் அவர்க்கு அதனைத் தெரிவித்தல் என் கடன். தெரிந்து எடாதுகைக்கு எதிர்ப்பட்டபடியே அவற்றிற் சிலவற்றைக் குறிப்புப்பண்ணி ஓர் அனுபந்தமாகச் சேர்த்திருக்கின்றனன். ஆண்டுக் கண்டு கொள்க.
மேற்கண்ட பிரதிகளை வைத்துக் கொண்டு பரிசோதனை பண்ணுகையில் ஆருகத சமயக் கோட்பாடுகள், தத்துவ பேதங்கள், புராணக் கதைகள் சிறப்புப் பெயர்களிற் சில சமுசயங்கள் நேரிட்டன. அதற்காக வீடூர் வித்துவான் ஸ்ரீமான் அப்பாசாமி சாஸ்திரிகளை வர வழைத்து மூன்று மாதக் காலம் அவர்களைக் கூட வைத்திருந்து எனக்குள்ள சமுசயங்களைத் தீர்த்துக் கொண்டதுமன்றி அவர்கள் போன பின்பு நிகழ்ந்தன சிலவற்றை அவ்வப்போது அவர்களுக்குக் கடிதமெழுதித் தெரிந்து கொண்டேன். இன்னுஞ் சந்தேகந் தீராத இடங்களும் இரண்டொன்று உண்டு. அவர்கள் இத்தனை தூரம் வந்திருந்து எனக்குச் செய்த உதவியை எப்பொழுதும் மறவேன்.
இந்நூலுணர்ச்சிக்கு உபயோகமான சமண கிரந்தங்களை எனக்குக் காண்பித்தது மன்றிக் தமது கையிலிருக்கும் ஏடுகளில் எப்பொழுதேனும் யாதாயினும் வேண்டுமாயின் அதனை உடனே அனுப்பி வைப்பதாகத் தயை புரிந்த மன்னார்குடி ஸ்ரீ மு. அ. அப்பாண்ட முதலியாருக்குஞ் சித்தாம்பூர் முதலிய இடங்களிலுள்ள சமணர் வசம் இருக்கும் நூல்கள் வேண்டிய காலங்களில் வாங்கி அனுப்புவதாக வாக்களித்த காஞ்சிபுரம் பச்சையப்ப பாடசாலைத் தமிழ்ப் பண்டிதர் ம-ள-ள-ஸ்ரீ வ. கணபதிப்பிள்ளையவர்களுக்கும் என் வந்தனஞ் சொல்லுகின்றேன்.
இந்நூல் ஆருகத மகா புராணத்திற் கூறிய நவவாசுதேவப் பிரதிவாசுதேவர்களிற் திப்பிரஸ்ட வாசுதேவனதும் அவ்வாசு தேவனுக்குப் பகையாய் அவதரித்த அயக்கிரீவப் பிரதிவாசுதேவனதுஞ் சரித்திரத்தை விரித்துக் கூறிப், பெரும்பாலுஞ் சமண காவியங்கள் துறவும் முத்தியும் உணர்த்தி முடியுமாறுபோல, இருபத்துநாலு தீர்த்தங்கரருட் சிரேயசுவாமி தீர்த்த காலத்திற் சுரமை நாட்டின்கண் போதனமா நகரத்திலிருந்து அரசு புரிந்த பயாபதி அரசன் தன் குமாரனான அவ்வாசு தேவனைப் பூமியாள வைத்துத் துறந்து தன் தேவிமாரோடு முத்தி பெற்ற கதையை எடுத்துச் சொல்லும், இந்நூற் சீயவதையும் வித்தியாதர விவாகமுஞ் சேடியர் சங்காரமுங் கிருஷ்ண சரித்திரத்திற் சேர்ந்தனவல்லவாயினுந், திவிட்டராசன் குணாதிசயங்கள் திருமாலின் அவதாரமாகிய கண்ண பெருமானதுந், திவிட்டனுக்கு மூத்தோனாகிய விசயன் குணாதிசயங்கள் கண்ணன் அண்ணன் பல பத்திரனதும் இலºணங்களோடு ஒருவாறு ஒத்திருக்கும்.
சீவக சிந்தாமணிச் சரித்திரத்தைச் சிந்தாமணிப் பதிப்பின் முதலிற் ஸ்ரீமத் சாமிநாதையரவர்கள் சுருக்கிக் காட்டியதுபோல, இந்நூலை எளிதிற் படித்து உணர்தற்கு உபயோகமாக இதன் முதலிலுந் திவிட்டன் கதையைப் பொழிப்பாகக் காட்டும்படி எனது இஷ்டர் சிலர் கேட்டுக் கொண்டனர். இக்கதையை வசன ரூபமாக யாழ்ப்பாணம் வித்துவான் தாவடி ஸ்ரீ அம்பிகையாக உபாத்தியாயர் எழுதி வருவதால் அதன் சாரத்தை இவ்விடம் வேறாகப் பதித்தல் அவசியமன்றென நிறுத்தினன். அன்றியும் இக்காலத்து மிகச் சிறந்த வித்துவான் ஒருவர் இந்நூற்கு உரையெழுதி அச்சிடுவிக்கக் கருதி யிருப்பதாகவுந் தெரிய வருகின்றது.
இக்கதையில் வரும் அரசராதியோர் பெயர் ஊர் சம்பந்தம் முதலிய அறிதல் கதைத் தொடர்ச்சியை லேசில் உணர்தற்கு உபயோகமாகுமாதலின் அவற்றிற்கு ஓர் அகராதி சேர்த்திருக்கின்றேன்.
பிரதிகள் தேடிப் பரிசோதித்து இந்நூலைப் பதிப்பித்தற்கு உபயோகமான திரவியம் றங்கூனிலிருக்கும் என் சகோதரன் செல்வச் சிரஞ்சீவி இளையதம்பிப்பிள்ளையும் அவரது இஷ்டர் சிலருஞ் சேர்ந்து அனுப்பியதென்று முன் தெரிவித்தேன். அவர்களைப் போல்வார் பிறர்க்கும் இப்படிப்பட்ட விஷயத்தில் ஊக்கம் உண்டாதற் பொருட்டு அன்னோர் பெயர் விவரத்தை இவ்விடந் தருகின்றேன்.
பணம் அனுப்பினோர் பெயர்வழி
ம-ள-ள-ஸ்ரீ தி. எம் குட்டியாப்பிள்ளையவர்கள், றங்கூன்
கமிசேரியட்றொட்டிச்சாலை மனேஜர் ரூ. 100.00
ம-ள-ள-ஸ்ரீ ஏ. சரவணமுதலியாரவர்கள், றங்கூன், கன்டிறோலர்
ஆபீசு, சுப்பரின்டென்டன்ட் ரூ. 50.00
ம-ள-ள-ஸ்ரீ வி. நமசிவாயபிள்ளையவர்கள், எம். ஏ. வி. எல்.,
கல்கத்தா ஹைகோர்ட் வக்கீல் றங்கூன்,
றிக்கார்டர்ஸ் கோர்ட் அட்வக்கேட் ரூ. 50.00
ம-ள-ள-ஸ்ரீ பா. குப்புசாமி முதலியாரவர்கள் றங்கூன்,
கமிசேரியட் மானேஜர் ரூ. 50.00
ம-ள-ள-ஸ்ரீ தி. வி. கிருஷ்ணசாமி நாயுடுகாரு றங்கூன்
கண்டிறாக்ற்றர் ரூ. 50.00
ம-ள-ள-ஸ்ரீ பி; வேதாசல முதலியாரவர்கள் றங்கூன் பர்மா
ஸ்டேட் றேல்வே பொக்கிஷதாரர் ரூ. 50.00
ம-ள-ள-ஸ்ரீ தி. எம். பொன்னுசாமிப்பிள்ளை அவர்கள், றங்கூன்
பேப்பர் கறென்ஸி ஆபீசு. பொக்கிஷதாரர் ரூ. 50.00
ம-ள-ள-ஸ்ரீ சி. வை இளையதம்பிப்பிள்ளையவர்கள் றங்கூன் டிப்டி
கம்மிஷனர் ஆபீசு ஹெட் அக்கவுண்டன்ட் ரூ. 100.00
--------------------------
ஆக ரூ. 500.00
--------------------------
இவர்கள் செய்த இவ்வுபகாரத்தை யான் ஒரு போதும் மறவேன். இவர்கள் முன் மாதிரியைப் பின் பற்றி இன்னும் அநேகர் தத்தமக்கு ஏற்ற வித்துவான்களைக் கொண்டு பற்பல பழைய தமிழ் நூல்களை வெளிப் படுத்தி நிலை நிறுத்தக் கலைமகள் கடாட்சிப்பாளாக.
சி. வை. தா.
தொண்டமான் புதுக்கோட்டை
விரோதி ò கார்த்திகை ñ
ஜஇரண்டாவது காவியம், தோலாமொழித்தேவர் இயற்றியருளிய சூளாமணி, இஃது யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளையால் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து, இறங்கூனிலிருக்கும் சில தமிழ்ப் பிரபுக்களது காருண்ய திரவியோபகார சகாயத்தினால். சென்னபட்டணம் வித்தியாநுபாலன யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. விரோதி ò கார்த்திகை ñ. 1889. (இதன் விலை ரூபா. 1-50).ஸ
5. தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
பதிப்புரை
பேர ருட்கயி லாயநா தப்பெருங் குரவன்
சீர டித்துணை சிரத்தினிற் திருத்திமுத் துக்கு
மார நற்கவி ராசனை வழுத்திமா லயனுந்
தேர கிற்றிலா நடேசர்தாள் சிந்தனை செய்வாம்
சங்கம் மரீஇய இலக்கியங்களுக் கெல்லாம் இலக்கணமாயுள்ளது தொல்காப்பியம். இதன் உணர்ச்சியில்லார் அவ்விலக்கியங்களின் பொருட்டுறைகளை நுண்மையாக உணரப் பெறார். ஆதலாற் றமிழாராய்ச்சியிற் புகுவோர்க்கு இந்நூல் இன்றியமையாப் பெருஞ் சிறப்பிற்றாயது. இஃது அகத்தியர் மாணாக்கர் பன்னிருவருட் டலைமை பெற்றவருந் திரண தூமாக்கினி யென்னும் இயற் பெயரினை உடையவருமாகிய தொல்காப்பிய மகா ரிஷியினாற் செய்யப்பட்டு எழுத்துச் சொற்பொருளென்னும் மூன்று அதிகாரங்களை உடையது.
இதற்கு இளம்பூரணர் கல்லாடர் பேராசிரியர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் என்று ஐவரால் உரையெழுதப்பட்டதாயினும், பூரண உரையாய் நமது காலம் வரைக்கும் வந்திருப்பது நச்சினார்க்கினியராற் செய்யப்பட்டது ஒன்றுமே. அஃது ஆக்கியோன் பெயரினால் நச்சினார்க்கினியமென வழங்கும். சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மாத்திரம் உரையிட்டனர். இளம்பூரணர் ஆதியுரையாசிரிய ராதலின் அவர்க்கு உரையாசிரியரென்னுஞ் சிறப்புப் பெயர் கொடுத்தே யாருஞ் சுட்டுவர் அவர் உரையில் எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் பொருளதிகாரத்துச் செய்யுளியலும் ஒழிந்து எஞ்சிய பாகம் இக்காலத்து இறந்தது போலும். கல்லாடர் பேராசிரியர் உரைகளிற் சிற்சில பின்னங்கள் மாத்திரம் இங்கும் அங்குஞ் சிதைந்து கிடக்கின்றன. யாதாயினும், ஒர் இயலுக்காவது பூரணமாயிருப்பது தெரியவில்லை.
எழுத்ததிகாரத்திற்கு இளம் பூரணமுஞ் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையமுஞ் சிறந்தனவாயிருந்தன. ஆயினும் நச்சினார்க்கினியம் மூன்றதிகாரத்து உரையும் ஒருங்கொத்த சிறப்பினையுடையதாய். அனைத்துரைகட்கும் பின்னாக எழுந்து, ஏனையோர் மதங்களை ஆங்காங்குக் கண்டித்ததனால், அவ்வுரையே பிற்காலத்து அனைத்தினும் மேலாக உபயோகப்படுவதாயிற்று.
இதன் எழுத்ததிகாரவுரை சென்னபட்டணம் சகல கலாசாலைத் தமிழ்ப் புலமை நடாத்திய மழைவை மகா லிங்கையரால் ஐம்பது வருஷத்தின் முன் அச்சிடுவிக்கப் பட்டிருந்தது. எழுத்திற்கு இளம்பூரணமுஞ் சொல்லிற்குச் சேனாவரையமும் பின் அச்சாயின. ஆதலால் யாதோருரையாயினும் பிரசுரமாகாததும் எழுதுவாரும் படிப்பாருமின்றி மாரண தசை யடைந்ததுமான பொருளதிகாரத்தை முதலில் அச்சிடுவித்தல் அவசியமெனக்கண்டு அதனை நச்சினார்க்கினியருரையோடு சென்ற பார்த்திப வருடம் பதிப்பித்து வெளிப்படுத்தினேன். பின்னர்ச் சொல்லதிகாரத்தையும் அவருரையுடன் பதிப்பித்துவிட்டாற் றொல்காப்பியத்திற்கு நச்சினார்க்கினியருரை பூரணமாய் யாவர்க்கும் எளிதில் அகப்படற்பாலதா மென்று உட்கொண்டு, பலதேசத்தினின்றும் பிரதிகள் வரவழைத்துப் பரிசோதிக்கையில் , என் இஷ்டர் அநேகர் சொல்லதிகாரம் பிரசுரமான பின்னரும் உரை பூரணமாயகப்படுத்தற்கு எழுத்ததிகாரப் பிரதி கிடையாதென்றும். அதனையும் யான் சேர்த்து அச்சிடாதொழியின், பின் பிரதி வாங்குவோர் சொல்லும் பொருளும் பெற்றும் எழுத்தில்லாமற் றலையற்ற உடலையே தாங்கலாகுமென்றும், ஆதலால் எழுத்தையும் யானே சேர்த்துஅச்சிடுதல் வேண்டுமென்றுங் கட்டுரைத்தனர். அதனால் ஐயர் பதிப்புச் சென்னபட்டணப் பிரதிகளின் வழிப்பட்டது நோக்கி, அதனைத் தென்றேசப் பிரதிகளோடும் பரிசோதித்து அச்சிடுவித்தனன்.
புதுக்கோட்டைச் சமஸ்தானம் மகா மன்றத்து நியாயாதிபதிகளில் ஒருவராகிய ம-ள-ள-ஸ்ரீ. ம. அண்ணாமலைப்பிள்ளையவர்கள் இவ்வெழுத்ததிகாரத்தை அச்சிடுவதற்கு மிக்க திரவியோகாரஞ் செய்தனர். அவருடைய தயாள குணத்தையும் பிரபுத்துவத்தையும் அதிக நன்றி யறிவோடு பாராட்டுகின்றேன்.
ஒரு முறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களை மீள அச்சிடுவிக்காத எனக்கு இவ்வெழுத்ததிகாரம் ஒரு விலக்காயிற்று. அன்றியும் ஒரு நூலின் முதலிலேயுள்ள தேர் சொற்ப பாகத்தை மாத்திரம் ஒருவர் பிரசுரஞ் செய்து காலகதியடைந்து விட்டாற், பின்னர் அந்நூல் முழுவதையும் அச்சிடுவோர் முதற் பாகத்தையுஞ் சேர்த்து அச்சிடுதல் தவறன்றாம். உலக வழக்கமும் அதுவே.
இப்பொழுது நச்சினார்க்கினியம் சொல்லதிகாரம் அச்சாகி வருகின்றது. எட்டுத்தொகை பரிசோதனையிலிருக்கின்றது. இதிற் புறநானூற்றுரை ஈற்றில் 140 செய்யுளும் பரிபாடல் பூரண பிரதியும் பதிற்றுப்பத்தில் முதற்பத்துங் கடைசிப்பத்தும் இன்னும் அகப்படவில்லை. இவற்றை வைத்திருக்கும் மகான்கள் யாவராயினுஞ்சில நாளைக்கு அவற்றை இரவலாக அனுப்புவாராயின அவர்க்கு மிகக் கடமைப்படுவதுமன்றி அன்னோர் அனுப்பிய பிரதிகளோடு கூட எனது வழக்கப் பிரகாரம் இவ்விரண்டு அச்சுப் பிரதியும் அனுப்புவேன்.
தேடுவாரும் பரிபாலிப்பாருமின்றி ஒன்றொன்றாய் அழிந்துபோகும் அருமையான பழைய தமிழ் நூல்களைப் பாதுகாத்தற் பொருட்டு அடியேன் ஏட்டுப் பிரதிகள் தேடிப் பரிசோதித்து அச்சிடுவதிற், புத்தகங்கள் விலை போகாமல் நேரிடும் நஷ்டத்தைக் குறித்து விய ò ஆடி ñ ஹிந்து பத்திரிகை வாயிலாக ஒர் அபாயம் எழுதித், தமிழிபிமானமுந் தருமசிந்தையுமுடைய பிரபுக்கள் என நஷ்டத்தை நன்கொடை முதலிய சகாயஞ் செய்து பரிகரிக்குமாறு வேண்டிக் கொண்டேன். அப்பொழுது எனக்குக் கைகொடுத்து உதவிசெய்த கனவான்களின் பெயருந் தொகையும் அடுத்த சர்வசித்து ò ஆவணி ñ எனது கலித்தொகைப் பதிப்புரையிற் காட்டியிருக்கின்றேன். அதன்பின்பு சில பிரபுக்கள் அளித்த உதவிகளையும் உலகிற்குத் தெரிவிப்பது என் கடனாதலின் அதனை ஈண்டுக் குறிக்கின்றனன்.
சென்னபட்டணம் வித்தியாசாலை விசாரணாதரிசி ஸ்ரீ பம்மல்
விஜயரங்கமுதலியார் ரூ. 25-00
கொழும்பு சுப்ரீம்கோட் அத்வக்காத் கி. பிறிற்றோதுரை ரூ. 75-00
திருநெல்வேலி சப்கோர்ட் பழைய நீதிபதி ஸ்ரீ திரு. கனகசபைமுதலியார் ரூ. 125-00
சென்னபட்டணம் வித்தியா பரிபாலகரின் விசேஷ உபகிருதம் போதனாசிரிய
வித்தியாசாலைப் பிரதம உபதேசகருமாகிய ஸ்ரீ யாழ்ப்பாணம்
சிந்தாமணி வேலுப்பிள்ளை ரூ. 100-00
பாலக்காடு நகராதிகார மந்திரம் மாகாண விசாரணைச் சபைகளில்
ஒருவராகிய ஸ்ரீ. ஐ. சின்னச்சாமிபிள்ளை ரூ. 25-00
சென்னபட்டணம் பச்சையப்ப முதலியார் தருமபரிபாலன சபாதிபதி
ஸ்ரீபாளையம் சோமசுந்தரச் செட்டியார் ரூ. 100-00
இம்மகான்களை யொப்பப் பிறருந் துணைநின்று தத்தமக்கு இஷ்டமான அளவுக்குத் திரவிய சகாயஞ் செய்வாராயின் எட்டுத்தொகை தகடூர் யாத்திரை முதலியன விரைவில் வெளிவரும். எவ்வெம் முயற்சிக்குந் துணைக் காரணம் பணம். அதன் குறைவினால் எனது முயற்சி மிகத் தாமசப்பட்டு நடைபெறுகின்றது. லோகோபகாரமாய் யான் கையிட்ட இத்தொழிலைத் தற்காலஞ் சர்வகலா சோதனைச் சங்கத்தில் எனக்குவரும் பரீºh நிவேதனம் ஒன்றைக் கொண்டே நடத்தி வருகின்றேன். அது பிரதிகள் தேடி அப்பப்போ யான் செல்லும் பிரயாணங்களுக்கும் பரிசோதனைச் செலவிற்குமே முன்னோ பின்னோ வென்று கட்டிவருகின்றது.
சென்னபட்டணம் இங்ஙனம்,
கர ò வைகாசி ñ சி. வை. தா.
(தொல்காப்பியம், எழுத்ததிகாரம்: மதுரை யாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியா ருரையோடும்@ யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளையால் பலசேதப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து ஸ்ரீ தொண்டமான் புதுக்கோட்டை நியாயாதிபதி ம. அண்ணாமலைப் பிள்ளையவர்கள் திரவியோபகார சகாயத்தினால் சென்னபட்டணம் வித்தியாநுபாலனயந் திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. கர ò வைகாசி ñ)
விளம்பரம்
இதன் அடியிற் குறித்த புத்தகங்கள் சென்ன பட்டணத்தில் வித்தியாநுபாலன யந்திரசாலையில் ந. க. சதாசிவப்பிள்ளை அவர்களிடத்தும், கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் ஊ. முத்துக்குமாரசாமிச் செட்டியார் அவர்களிடத்தும், சிதம்பரத்திற் சைவப்பிரகாச வித்தியாசாலை விசாரணைக் கருத்தர் க. பொன்னுசாமிப் பிள்ளை அவர்களிடத்தும், யாழ்ப்பாணத்தில் ஏழாலைச் சைவப்பிரகாச வித்தியாசாலை உபாத்தியாயர் சுன்னாகம் அ. குமாரசாமிப்பிள்ளை அவர்களிடத்தும், தஞ்சாவூரிற் புத்தக வியாபாரம் தா. திருவேங்கடபிள்ளை அவர்களிடத்தும், கோயமுத்தூரிற் புத்தகவியாபாரம் இ. ஒன்னைய கவுண்டரவர்களிடத்தும் வாங்கிக் கொள்ளலாம்.
ரூ. ச.
தொல்காப்பியம் நச்சினார்க்கினியம் எழுத்ததிகாரம் 1-50
ழூ î î சொல்லதிகாரம் 1-50
î î சொல்லதிகாரம்; 6-00
0 î î முழுவதுஞ் சேர்த்து 7-50
î சொல்லதிகாரம் சேனாவரையம் 2-00
நல்லந்துவனார் கலித்தொகை 3-50
தணிக்கைப் புராணம் 3-00
வீரசோழியம் 1-50
இறையனாரகப் பொருள் 1-50
இலக்கண விளக்கம் 5-00
î பத்துப் புத்தகமும் ஒருமிக்க வாங்குவோருக்கு 22-00
கட்டளைக்கலித்துறை -06
நºத்திரமாலை -06
ழூ அச்சாகி வருகின்றது. வருஷமுடிவில் வெளிவரும்.
0 முழுவதிற்கும் பணஞ் செலுத்துவோருக்குச் சொல்லதிகாரம் வெளிவந்த உடனே அனுப்பப்படும்.
6. தொல்காப்பியம் - சொல்லதிகாரம்
நன்றி கூறல்
படிப்பாரும் எழுதுவாரு மின்றிப் பாணவாய்ப்பட்டுத் தேடுவாருந் தொடுவாரு மின்றிச் செல்லுக்கிரையாகியுங் காலாந்தரத்தில் ஒன்றொன்றாய் அழிந்துபோகும் பழைய தமிழ்நூல்களை இயன்றமட்டும் அச்சிட்டு நிலை நிறுத்தத் தொடங்கிய என் முயற்சிக்கு உதவியாக ஆங்காங்குள்ள தருமசீலர்கள். சென்றவருஷம் வைகாசி மாதம்வரையும், எனக்கு அவ்வப்பொழுது உபகரித்த பணத்தொகையைக் கலித்தொகை தொல்காப்பிய எழுத்ததிகாரம் இவற்றின் பதிப்புரையிலே அவரவர் நாமதேயத்தோடு தெரிவித்திருக்கின்றேன்.
அதன்பின்பு, இறங்கூனிலே கடை வைத்திருக்கும் நாட்டுக்கோட்டைச் செட்டிப்பிள்ளைகளுள் ஸ்ரீ இராமநாதன் செட்டியென வழங்கப் பெயர்பெற்ற ம-ள-ள-ஸ்ரீ ரா ம. சொ. சொக்கப்பசெட்டியார் ரூபா 50-00 அனுப்பி வைத்தார். அவரது தயாளகுணத்தை என்றும் மிகுந்த நன்றியறிவுடன் பாராட்டுவேன்.
தருமச் செலவுகளில் இக்காலத்தில் அதி பிரசித்தியடைந்திருக்கும் நாட்டுக்கோட்டைச் செட்டிப்பிள்ளைகளில் வேறு பெயர்களும் இம் முன்மாதிரியை அனுசரித்து இப்படிப்பட்ட அவர்கள் மனத்தில் எந்நாளுங் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ நடேசப்பெருமான் அருள்புரியுமாறு அவரது திருவடிகளைப் பிரார்த்திக்கின்றனன்.
சி. வை. தா.
நந்தன ò புரட்டாதி ñ
(தொல்காப்பியம் சொல்லதிகாரம்: மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியாருரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து, யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளையால் சென்னபட்டணம் விக்டோரியா ஜுபிலி யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. நந்தன ò புரட்டாதி ñ 1892)
7. தொல்காப்பியம் பொருளதிகாரப்
பதிப்புரை
யானை யானனனைத் தேனிமிர் கடம்பனை
வானமர் குழவியா லோனுறை சடையனை
இமய சிமிலமென் குமரியென் றமையும்
உமையைத் தமியேன் றமமலந் துமிப்பப்
போத சற்குருவாய் மாதொரு பாகன்
வேத வனத்தெழூஉ மேதகு கயிலாய
நா தேசிகன் பாதவருட் கொடுதொழீஇக்
கற்றறி வில்லாக் கடையனேன் றனக்கு
நற்றமிழ் கொளுத்திய நாவலன் சுன்னை
முத்துக் குமார வித்தக னடியிணை
சித்தத் திருத்திமற் றுத்தம புலவர்
அடிக்கம லங்களென் முடிக்கணி கொடுக்க நின்று
அடியேன் கூறுவது ஒன்றுளது.
உலகிலுள்ள கல்லெல்லாஞ் சாதி ரத்தினமாயின், அவை உயர்வுடையனவாமா? இழிந்தனவும் உளவாயினன்றே ஒழிந்;தன உயர்வாவது? ஆதலாற் றம் உயர்வு விளங்குதற் பொருட்டாகவாவது என புன்மொழியையும் பெரியோர் தம் பொன்மொழியி னடுவே வைத்தலொழி யாரெனத் துணிந்தனன்.
“வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென
வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக
ழானாப் பெருமை யகத்திய னென்னு
மருந்தவ முனிவ னாக்கிய முதநூல்”
புறப்பொருட் பன்னிருபடலம், சிறப்புப் பாயிரம்.
எனப் புகழப்பெற்ற அகத்தியம், முதற்சங்கத்தார் காலத்திற் றொல்காப்பியத்திற் றலைமை பெற்றும், இடைச்சங்கத்தார் காலத்தில் அதனோடு கூடநின்றுலவியுங். கடைச் சங்கத்தார் காலத்தில் இறந்துவிட்டது. அதன்பின் இது வரைக்குந் தமிழுக்குப் பேரிலக்கணமா யுள்ளது தொல்காப்பியமே. இஃது அகத்தியர்பாற் றமிழ் நன்குணர்ந்த அவர் மாணாக்கர். திரணதூமாக்கினி அதங்கோட்டாசான் துராலிங்கன் செம்பூட்சேய் வையாபிகள் வாய்ப்பியன் பனம்பாரன் கழாரம்பன் அவினயன் காக்கைபாடினியன் நற்றத்தன் வாமனன் என்னும் பன்னிருவருள் முதன்மாணாக்கரென்று தம்மனோரனைவரானுந் துதிக்கப் பட்ட திரணதூமாக்கினியென்னும் இயற்பெயரினையுடைய தொல்காப்பிய முனிவரர் அருளிச் செய்தது.
அகத்தியர் மாணாக்கர் அனைவருள்ளும் இவரே மிகச் சிறந்தவரென்பது “தொல்காப்பியன்ற னாணையிற் றமிழிந்தோர்க்குக் கடன்” எனவும், அகத்தியரிடம் “பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்” எனவும்பல்காப்பியத்தும் பன்னிரு படலத்தும் விதந்தோதப்பட்டமையானும், மற்றையோருட் சிறந்து இவரோடொருதலை அகத்தியனார் பொருட்டு முரணிய “அதங்கோட் டாசாற் கரிறபத் தெரித்து” எனப் பனம்பாரனாராற் றுதிக்கப்பட்டமையானும் உணர்க.
அகத்தியர் உத்தரதிசையினின்று நீங்கித் தெºணத்தில் வதிந்தபின் தமிழிற்கு இலக்கணஞ் செய்வான் கருதி, இயலிசை நாடகங்களில் ஆங்காங்குத் தமது ஆராய்ச்சியின் கண் எதிர்ந்தவாறே குறிக்கப்பட்ட விதிகளைப் பின்னர் ஒருங்குதிரட்டி அகத்தியமெனப் பெயரிட்டுக் கொடுத்தனர். அது நெறிமுறைமைப்பட இயைக்கப்பட்டிலாது, இயலிசை நாடகத் தமிழ்களும், இயலுள்ளம் எழுத்துச் சொற்பொருள்களும், ஒருங்கு விரவிப் பெரிதும் பரந்து கிடந்ததோர் நூலாயிற்று. அதனை வௌ;வேறு பிரித்து அடைவுபடுத்துத் தொல்காப்பியமுடையார் இயற்றமிழையும், பெருநாரை பெருங்குருகு முதலிய நூலுடையார் இசைத்தமிழையும், முறுவல் சயந்தங் குணநூல் செயிற்றியமென் றிவையுடையார் நாடகத் தமிழையும். வகுத்தும் விரித்தும் மயக்கற முறைகாட்டித் தத்தம் நூல் யாத்தனர்.
இவற்றுள்ளும் “முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி” “மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி” ஐந்திர நிறைந்தெழுந்த தொல்காப்பியத்தின் மாண்பு, இளங்கதிர் கான்றுதித்த பாலசூரியன் உச்சியடைந்து சொலித்தாற்போல வரவர அதிகரிக்கத், துரோணர்புக்க விடத்து முன் குலவி விளங்கிய கிருபாசாரி யாஞ்ஞையை யொத்து அகத்தியாப்பியாசங் குன்றினமையானுந், தவத் தான் மனந் தூயராய் முக்குணங்களையுங் கடந்து இறைவனருள் பெற்றுடையாராகிய தொல்காப்பியர் ஒருகாலத்துத் தமக்கு அகத்தியனாரால் வந்ததோர் மனத்தாபத்தினிமித்தம் இட்ட சாபத்தின் வலிமையினானும், அகத்தியம் இறந்துபோக நேர்ந்தது. அல்லாக்கால் என்றென்றுஞ் சிரஞ்சீவியா யிருக்கப் பெற்றுள்ள அகத்தியனார் அருளிச் செய்த நூல் சங்கத்தார் காலத்திற்றானோ வீழ்ந்து போகாது. ஆசாரிய வழிபாட்டிற் குறைவில்லாத திரண தூமாக்கினி அவ்வாறு சபித்தற்பாலரோ என்பாருமுளர் அஃதன்றே அவர் ஆசாரியரைச் சபியாது அவராற் செய்யப்பட்ட நூலைச் சபித்ததென்க. சீஷரது சாபத்தை ஆசாரியர் தடுக்க வன்மையிலரோ வெனில் ரிஷிகள் சாபத்தைக் கடவுளர் தடுக்கும் வன்மையிலரெனின் இது கடாவன்றென மறுக்க.
பராக்கிரம பாண்டியனை வென்றுதுலுக்கர் முதன் முதல் மதுரையாண்டு எண்ணூற்றைம்பது வருடத்தின் மேலாயிற்று. சங்கத்தார் காலத்திற்கும் பராக்கிரமபாண்டியன் காலத்திற்கும் இடையிலே சோமசுந்தர பாண்டியன் முதலாக நாற்பத்திரண்டு அனுலோம பாண்டியர் அரசு செய்திருக்கின்றனர். ஆதலாற் கடைச்சங்கம் ஒழிந்த காலம் இரண்டாயிரம் வருஷத்திற் குறையாது.
முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதியீறாகக் கடைச்சங்கம் இரீஇய நாற்பத்தொன்பதின்மர் பாண்டியர் அரசு புரிந்தகாலம் இரண்டாயிரம் வருஷமும், வெண்டேர்ச் செழியன் முதல் முடத் திருமாறனீறாக இடைச் சங்கம் இரீஇய ஐம்பத்தொன்பதின்மர் பாண்டியர் அரசு புரிந்தகாலம் மூவாயிரத்தைஞ்Ä}று வருஷமுங், காய் சினவழுதி முதற் கடுங்கோன்வழுதி யீறாக முதற்சங்கம் இரீஇய எண்பத் தொன்பதின்மர் பாண்டியர் அரசு புரிந்த காலம் நாலாயிரத்தைஞ்Ä}று வருஷமுமாம்.
ஆகவே, முதற்சங்கத்திற்கு முன்னரே முதனூல் கண்ட ஆசிரியர் அகத்தியனாரிடந் தமிழ்கற்று, அச்சங்கத்திற் றாமும் உடனிருந்து தமது நூல் நிலவச் செய்த திரணதூமாக்கினி முனிவரல் தொல்காப்பியம் இயற்றிய பின் சென்ற காலம் எவ்விதத்தானும் பன்னீராயிரம் வருடத்திற் குறையாது. இக்கால விவரணம் வீரசோழியப் பதிப்புரையில் விரிவாக ஆNºப நிவாரணத்தோடும் எழுதியிருக்கின்றேன். ஆங்குக் கண்டுணர்க.
இவ்வாறு பன்னீராயிர வருஷகாலத்தின் மேற்பட்ட நிலைபெற்றோங்கித் தமிழ்க்கோர் தனிச்சுடர் போலப் பிரகாசித்துவந்த தொல்காப்பியமுந், தற்காலத்து இலக்கணங் கற்போர் அனைவரும் அதன்வழித் தோன்றிய சிற்றிலக்கணங்களையே கற்று அம்மட்டோடு நிறுத்திவிடுதலால், எழுதுவாரும் படிப்பாருமின்றிப் பழம் பிரதிகளெல்லாம் பாணவாய்ப்பட்டுஞ் செல்லுக்கிரையாகியுஞ் சிதைவுபட்டுப் போக. யாவராயினும் ஒருவர் வாசிக்க விரும்பியவழியுங் கிடைப்பது அருமையாய்விட்டது. தமிழ் நாடனைத்திலும்உள்ள தொல்காப்பியப் பொருளதிகாரப் பிரதிகள் இப்போது இருபது இருபத்தைந்திற்கு மேற்படா. அவையும் மிக்க ஈனஸ்திதி அடைந்திருப்பதால் இன்னுஞ் சில வருஷத்துள் இறந்து விடுமென்று அஞ்சியே அதனை உலோகோபகாரமாக அச்சிடலானேன்.
இந்நூற்கு உரையெழுதினோர் இளம்பூரணர் கல்லராடர் பேராசிரியர் சேனாவரையர் நச்சினார்க்கினியார் ஐவர். இவருள் வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர் சொல்லதிகாரம் ஒன்றற்கே மற்றை உரைகளினும் மிகச் சிறந்ததோர் உரையெழுதினார். இளம் பூரணர் போராசிரயருரைகள் முழுவதும் இப்போது இல்லை. கல்லாடருரை மிகச் சுருங்கியது. நச்சினார்க்கினியா ருரையே பிற்காலத்தது. பூரணமாகவும் விரிவாகவும் உள்ளதும் பெரும்பாலும் ஓதிவரப் பெற்றதும் அஃதொன்றே.
அது கடைச் சங்கத்தார் காலத்தின்பின் சமணர் தமிழ்ப்பரிபாலனஞ் செய்த காலத்துத் தோன்றியதாதலானும், நச்சினார்க்கினியாரும் பரிமேலழகரும் ஒரே காலத்தினராதலானும், இற்றைக்கு ஆயிரத்திருநூறு வருஷத்தின் முன்பு எழுதப்பட்டிருத்தல் வேண்டும். அன்றியுந் தமிழிற் சிறந்த இதிகாசங்களாகிய இராமாயணம் பாரதங்களினின்றும் பெருங்காப்பியமாகிய கந்தப்புராணத்தினின்று உதாரணங்கள் கொள்ளப்படாமையே இதற்குச் சான்றாகும். இவைகள் எழுதப்பட்டு ஆயிரத்திருநூறு வருஷஞ் சென்றமை யாவரானும் மறுக்கப் படாது.
சென்னப்பட்டணத்தில் இற்றைக்கு ஐம்பதறுபது வருஷத்தின் முன்னிந்த வரதப்ப முதலியாரின் பின் எழுத்துஞ் சொல்லுமே யன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரையுதாரணங்களோடு பாடங்கேட்டவர்கள் மிக அருமை. முற்றாய் இல்லையென்றே சொல்லலாம். வரதப்ப முதலியார் காலத்திலுந் தொல்காப்பியங் கற்றவர்கள் அருமையென்பது அவர் தந்தையார் வேங்கடாசல முதலியார் அதனைப் பாடங்கேட்கும் விருப்பமுடையரானபோது பிறை யூரிற் றிருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறாரென்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிக திரவியச் செலவோடு அவ்விடம்போய் இரண்டு வருஷமிருந்து பாடங்கேட்டு வந்தமையானும், வரதப்பமுதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவ ரென்பதனாலும், அது காரணமாக அவருக்குத் தொல்காப்பியம் வரதப்ப முதலியாரென்று பெயர் வந்தமையானும், பின்பு அவர் காலத்திருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கண சமுசயம் நிகழ்ந்துழி அவரையே வினவி நிவாரணஞ் செய்தமையானும் நிச்சயிக்கலாம்.
பொருளிலக்கண ஆராய்ச்சி குறைவுபட்டது தற்காலத்து மாத்திரமன்று. கடைச் சங்கத்தார் காலத்திலேயே உக்கிரப் பெருவழுதி “நூல் வல்லாரைக் கொணர்க வென்று எல்லாப் பக்கமும் போக்க, எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் எல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலே மென்று வந்தார். வர, அரசனும் புடைபடக் கவன்று, என்னை? எழுத்துமஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே!! பொருளதிகாரம் பெறேமேயெனின் இவை பெற்றும் பெற்றிலேம். எனச் சொல்லி வருந்தினான்” என்றும், மதுரை ஆலவாயெம்பெருமான் இறைவனார் அகப்பொருட் சூத்திரம் அறுபதும் அருளிய வழியும் அவற்றின் பொருள் காண்பாரின்றி வருந்திக் கடவுளையே தன் சங்கத்தாரோடு சென்றிரந்து பொருள் காண வல்லா னொருவனைப் பெற்றானென்றுஞ், சங்கப் புலவர்சிகாமணி யாகிய நக்கீரர் வாயாற் கூறப்பட்டுக் கிடக்கின்றதே. பின்னை இக்காலத்து அதன் அருமை ஆச்சரியமாமா?
இந்நூலைப் பரிசோதித்து அச்சிட முயன்றபின் தமிழ் நாடுகளில் ஆங்காங்குத் தேடிப் பல பிரதிகள் சம்பாதிப்பது பெரும் பிரயாசையும் நெடுங்கால வேலையுமாயிற்று. இது தமிழ்நாட்டிற்கு ஒர் பேருபகாரமான முயற்சியென்று கண்டு ஸ்ரீ கைலாசபரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்து மஹாசந்நிதானமுந் தம்மை அடைந்தேர்க்குப் பெருங்கருணைத் திருவுருவமுமாகிய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகமூர்த்திகளுஞ், சைவ சமயாபிமானியுஞ் செந்தமிழ்ப் பரிபாலகருமாகிய ஸ்ரீமத் யாழ்ப்பாணம் ந. க. சதாசிவப்பிள்ளையவர்களும், எனது அதி இஷ்டராகிய திருநெல்வேலித் தாசில்தார் ஸ்ரீ கணிதசிங்கம் வை. சின்னத் தம்பியாபிள்ளை யவர்களும் பல பழைய ஏட்டுப் பிரிதிகள் அழைப்பித்துத் தந்தனர். இவர்கள் செய்த நன்றியை எஞ்ஞான்றும் மறக்கற்பாலனல்லேன். இப்பிரதிகளோடு, ஸ்ரீ திருத்தணிகைச் சரவணப்பெருமாளையர் பௌத்திரர் துரைசாமியையர் பிரதியொன்றும், புரசபாக்கம் ஸ்ரீசாமுவேற்பண்டிதரவர்கள் தமது சொந்தக் கையினாலே எழுதி வைத்திருந்த பிரதி ஒன்றும். அடியேன் வசமிருந்த தொல்காப்பியம் வரதப்பமுதலியார் பிரதியொன்றும், மதுரைப் பிரதியொன்றுஞ் சேர்த்து. இவற்றுள்ளே, திருநெல்வேலிப் பிரதி இரண்டு, மதுரைப் பிரதி இரண்டு. தஞ்சாவூர்ப் பிரதி மூன்று. சென்னபட்டணப் பிரதி மூன்று, யாழ்ப்பாணப்பிரிதி இரண்டாகப் பன்னிரண்டு பிரதி கொண்டு பரிசோதித்து என் விருப்பத்தை ஒருவாறு நிறைவேற்றினேன்.
ஆயினும் இஃ.து இப்போது வழுவறப் பிரசுரஞ் செய்யப்பட்ட தென்று கொள்ளற்க. எனக்குச் சந்தேகம் பிறந்துழியெல்லாந், தற்காலத்துப் பெயர் போந்த வித்துவான் களாயுள்ளோர் பலரையும் வினவியும் அயனூற்றுணிபுகள் மேற்கோள்களோடு சீர்தூக்கியும் இன்னும் ஐயமறுத்துக் கொள்ளாத இடங்கள் அநேகம் உள. அவைகளைக் கூடிய மாத்திரம் பிரதிகளிலிருந்தவாறு அச்சிடுவித்தனன். ஆயினும் பொருட்டொகுதி, போருட்டொகுதி பேரர் உட்டொகுதி, பேர் அருட்டொகுதி, பேரருட் டேர்குதி, போருட் டேர்குதி, பொருட் டேர்குதி என்றற் றொடக்கத்தனவாய் இன்னும் பல பாடபேதமாகப் படித்தற் கிடம்பெற்றுப் பொருட்டொகுதி என்றெழுதிக்கிடந்த தொன்றை யான் அவற்றுள் ஒன்றாக என் சிற்றறிவு சென்றவழிக் குறிப்பிட்டுப் பதிப்பித்தமைபற்றி அதுவே பாடமென்று நிச்சயிக்கற்க. சமுசய நிகழ்வுழி யெல்லாஞ் சந்தியை மீளவும் இலக்கணப்பிரகாரம் புணர்த்துத் தீர்க்கபேதத்தையும் புள்ளியையும் நீக்கிப் பாடபேதப் படுத்திப் பார்க்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
சம்பளத்திற்காக எடெழுதுவோரது சாதாரண கல்வித் திறமையையும், எழுத எழுத வழுக்கள் அதிகப்படும் வீதத்தையும், பழைய காலத்து ஏட்டுப்பிரதிகள் அடைந்திருக்கும் ஈன ஸ்திதியையும், பாடங் கேட்டோர் இல்லாத தன்மையையும் நோக்கில், அநேக வித்துவான்களாய் ஒரு சபை சேர்ந்து ஒருவரோ டொருவர் தீர்க்க ஆலோசனை செய்த பதிப்பினும் பல வழுக்கள் புகுதற்கிடனாய இவ்வரிய நூலை, யான் ஒருவனாய்ப் பரிசோதித்துப் பிரசுரஞ் செய்தமையால் இடமிடந்தோறும் பலபல வழுக்கள் செறிந்திருத்தல் இன்றியமையாமையாம்.
ஐயந்திரிபறத் தாங் கற்றறியாததோர் நூலை இவர் இங்ஙனம் வழுவுற அச்சிடவேண்டிய தென்னையென யாரும் வினவுவாராயின், வழுச்செறிந்ததாயினும் அடியோடழிந்து போகின்ற நூலை அடியேன் பாதுகாத்து பேருபகாரமன்றோ என்க. மேலும், இதனை உரையுதாரணங்களோடு பாடங்கேட்டவர் யாராவது உளராயினன்றோ அவரையன்றி யான் செய்தது தவறாவது? யார் செய்யினும் இதுவே முடிவாயின் அடியேன் மேற் குறை கூறுதல் தர்மமன்று.
அன்றியுஞ் சும்மாகிடந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா? காண்டற்கும் அரிய நூலைக் கைக்கெட்டப்பண்ணினது கேடாமா? பிரதி கிடைப்பதே மிக அருமையாயுங், கிடைப்பினுங் குறைப்பிரதிகளாகவும், அவைதாமும் ஒரோவொரு வரிக்குப் பல வழுவாக ஆயிரக்கணக்கான வழு உடையனவாகவும் இருக்க, அடியே அவ்வழுத் தொகையைக் குறைத்து நூற்றுக்கணக்காக்கி விட்டதா என்மேற் குறையாயிற்று.
அங்ஙனமாயின் இவரினும் வல்லோராய் இன்னும் அநேக வழுக்கள் குறையப் பிரசுரஞ் செய்யத்தக்க வித்துவான்கள் இலரோவெனின் உளராயின் ஏன் செத்திலரென விடுக்க. பல பெரும் வித்துவான்கள் இந்நூலை அச்சிட விரும்பியதும், முயன்றதும், இரண்டொரு பிரிதிகள் தேடிப் பார்வையிட்டதுந், தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான் இதனை அச்சிடிற் றம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலாற் பண்டிதர் கவிராஜபண்டிதர் மஹாவித்துவான் புலவரென்றின்னன பெரும் பட்டச் சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற் குரிமைபூண்டு நிற்கும் என்போலியரே இதிற் கையிடுவது பேரவசியமாயிற்று.
பஞ்சகாவியம் பஞ்சலக்கியம் அகநானூறு புறநானூறு நற்றிணை கலித்தொகை நெடுந்தொகை குறுந்தொகை திணைமரபு செய்யுட்டொகை கல்லாடம் பதிற்றுப்பத்து ஐங்குறுநூறு பரிபாடல் தகடூர்யாத்திரை பெருந்தேவனார் பாரதம் பதினெண் கீழ்க்கணக்கு வெண்பாமாலை யென்று இன்னோரன்ன இலக்கியங்களும் புறப்பொருட் பன்னிருபடலம் வையாபிகம் வாய்ப்பியம் அவினயம் காக்கைபாடினியம் நற்றத்தம் வாமனம் பல்காயம் பல்காப்பியமென்று இன்னோரன்ன இலக்கணங்களும் முற்றக் கற்று வல்லோரே இந்நூலைப் பரிசோதித்தற்கு அருகராவர். அப்படிச் சிறந்துளோர் தற்காலத் திலரென்பது யான் கூறவேண்டியதில்லை. “விடியல வெங்கதிர் காயும வெயமல கலறை” என்னும் வாக்கியத்தையும் ஓர் பரிபாற் செய்யுளையுஞ் சரியாய்ப் பிரித்துணதற்கு எத்தனை புலவரிடங் கொண்டுதிரிந்தேன்? எத்தனை வித்துவான்களுக்குக் கடிதமெழுதிக் கைசலித்தேன்? எனக்குவந்த மறுமொழிகளை வெளியிட்டுச் சொன்னால் மிகவும் வெட்கக்கேடென்றறிக. அவை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் மகத்துவத்தை நன்கு விளக்கின.
மேலுஞ், சரகத்தைச் சாகமென்றும், அளபை அன்பென்றும், இதரவிதரத்தை இதரவிதாவென்றும், திகந்த ராளத்தைத் திகந்தாரளமென்றும், மென்மையை மேன்மையென்றும் தபுதார நிலையைத் தபுதராநிலை யென்றும். முதலவன் என்பதை முதல்வனென்றும் இன்னும் பலவாறாக மயங்கினோர் பெயர்பெற்ற வித்துவான்களே யாதலின் ஏட்டுப் பிரதியோடு ஊடாடிய சிரேஷ்ட புலவர்கள் அடியேன் தவறுகளைப் பாராட்டாது பொறுத்தருளுவதுமன்றி இன்னும் இம்முயற்சியை வியந்துகொள்வார்க ளென்பதிற் சந்தேகமில்லை. ஏடுபிடித்து வாசிக்க அறியாத அச்சுப்பிரதி வித்துவான்களுந், தமதகத்து மெய்ப்பெருமை யொன்றிலராய்ப் பிறரைக் குறைதூற்றலாற் றாம் நிறைவுடையார் போலத் தோற்றலாமென மயங்கும் போலி வித்துவான்களுமே இவ்விதவழுக்களைக்குறித்து என்னை இகழ்வர். எனக்கு அதுகுறைவன்று. இவர் கூற்றைப் பெரியோருங் கவனியார்.
குறைகூற இஷ்டமுள்ளவர்கள் இன்னும் அச்சிலே தோற்றாதனவாய். அடியேன் காட்டுங் கிரந்தங்களில் இரண்டொரு ஏட்டையாயினம் எழுத்துப்பிழையறமாத்திரம் வாசித்துக் காட்டுவாராயின் அவர்கள் பாதாம் புயத்தை உச்சிமேற்சூடி அவர்கட்குத் தொண்டுபூண்டொழுகுவேனென்று அறிவாராக. ஏடு கையிற் பிடித்தவுடன் அதன் எழுத்துத் தேகவியோகமான தந்தை கையெழுத்துப்போற் றோன்றிற்றென்று கண்ணீர்பெருக அழுத கதையு முண்டன்றோ?
காலந்தரத்தில் நூல்களுஞ் செய்யுட்களும் அடைந்திருக்கும் இவ்வளவிற் றெனற்பாலதன்று. கம்பர் சேரதேசத்திலிருந்து வரும்வழியிற், பாலைக்காட்டிலே, சிலர் செய்த இராமாயணப் பிரசங்கத்தைக் கேட்டபோது, தமது பாட்டுக்களும் இடைக்கிடை வருவனவாகச் சொல்லிய கதை கேள்வியுற்றிருக்கலாமே. “அடிசிற்கினியாளே யாக்கஞ்செய் வாளே, படிசொற் கடவாத பாவா – யடிவருடிப், பின்றூங்கி முன்னெழூஉம் பேதையே போதியோ, வென்றூங்கு மென்கண் ணினி” எனத் திருவள்ளுவநாயனார் சொல்லியதாக இக்காலத்து வழங்கும் பாட்டுக்கும், நமது உரையாசிரியர் தமது காலத்து வழங்கியபடி எழுதியிருக்கும் “அடிசிற் கினையாளை யன்புடையாளைப், படுசொற் பழிநாணு வாளை-யடிவருடிப், பின்றூங்கி முன்னுணரும் பேதையை யான்பிரிந்தா, லென்றூங்கு மென்க ணெனக்கு” என்பதற்கும் எவ்வளவு பேதம்!
அடித்தொகை சீர்த்தொகைகள் மாறுபட்டுப் பாவே பேறுபட்டுப் போயினவும் அநேகம் உள. இப்போது அறுசீரடியாசிரியவிருத்தமாக வழங்குகின்ற “முன்னைத்தஞ்சிற்றின் முழங்கு கடலோத மூழ்கிப் பெயர, வன்னைக் குரைப்ப னறிவாய் கடலேயென் றலறிப் பெயருந். தன்மை மடவார் தணந்துகுத்த வெண்முத்தந் தகைசால் கானற், புன்னை யரும்பென்னப் போவாரைப் பேதுறுக்கும் புகராரே யெம்மூர்” என்னும் புகார்ச் சிறப்பை ஆசிரியர் மூன்றாம் அடி நான்கு சீரே யுடையதாக வேறு பாவின் பாற்படுத்தி உதாரணங் காட்டினர். இவ்வாறு மாறுபட்ட செய்யுட்கள் அநேகம் உரையகத்து ஆங்காங்குக் காணப்படும். அவைகள் ஆசிரியர் காலத்திற்கு முன்னர்த்தானே எத்துணைத் திரிபடைந்தனவோ, இனி, இவற்றின் பூர்வ சொரூபம் நிச்சயித்தல் யார்க்கும் அரிது. அரிது.
இந்நூலின் இயலடைவுகளேயன்றி அதிகாரத்தொகை தானும் உரையாசிரியர் காலத்திற்கு முன்னரே பிறழ்ந்து போயின. அவையிற்றை ஆசிரியர் பலவிடத்துங் குறித்த கண்டனைகளா னுணர்க.
உரையாசிரியர்காட்டிய உதாரணச் செய்யுட்களிலே தற்காலத்திலுள்ள வில்லங்கத்தைக் குறித்துஞ் சில மொழி சொல்வது யான் அவற்றோடு பட்ட பிரயாசத்தை ஒருவாறு விளக்கும்.
ஓ “விண்டு தாங்குகைம் மேலையோன் மால்வரை சென்றான்” எனவும், 0 “வாம்பெருந்திரை வளாகமென் மோழியசெவ் வழியாழ்” எனவும் மோனையுந் தவறாது அடியளவும் விகாரப்படாது இரண்டு உதாரணம் குறிக்கப்படுமாயின், இவற்றை ஒன்றொன்று ஒரோவொரு செய்யுளின் முதலும் ஈறுமென்பது அச்செய்யுட்களைக் கந்தப்புராணத்திலும் பெரியபுராணத்திலுங் கண்டறிந்தேர்க்கன்றி மற்றையோர்க்குப் புலப்படுவ தெங்ஙன்? “மண்டமாலோ” “தண்ணுறுங் கோங்கமலை” என்பன ‘மண்டமா..........லோ?” “தண்ணறுங் கோங்க.........மலை” என முன்னையதில் ஓரெழுத்தும் பின்னையதில் இரண்டெழுத்துமே மாத்திரம் அவ்வச் செய்யுளின் ஈற்றெழுத்து எனக் கண்டுபிடிப்பது எந்த ஞானக்காட்சி கொண்டோ! இவற்றுள் அநேகம் இக்காலத்து இல்லாத நூல்களில் உள்ளனவாயின் யாதுதான் செய்தற்பாலது? உள்ள நூற்கும் எல்லாவற்றுக்கும் பெயர் குறித்தாரா?
ஒ விண்டு தாங்குறு முலகுயிர் முழுதுமோர் விரவிற் கொண்டு தாங்குறு குறட்படை கோடிநூ றீண்டப்
இதுமட்டோ? ஒரோரிடத்தில் ஒன்றினின்று ஒன்றைப் பரிக்கும் அடைசொல்லாவது குறியாவது இன்றி, முதலும் ஈறும் முதலும் ஈறுமாகப் பல செய்யுட் குறிப்பு ஒரு தொடராய் வருவனவும் உள. இவற்றின் அடிமுடி தேடுவது ஸ்ரீ அருணாசலேஸ்வரனுடைய அடிமுடி தேடிய பிரம விஷ்ணுக்களின் பிரயாசைக்கு எட்டுணையேனுங் குறையுமா?
இதனால் உரையாசிரியர்மேற் குற்றஞ் சொல்கின்றேனென்று கொள்ளற்க. அவர்காலத்து அச்செய்யுட்களும் அவற்றையுடைய கிரந்தங்களும் வழக்கத்துள்ளனவாதலால் அவர் அப்படிச் செய்யலாயிற்று. நமது தேசத்துக் கிரந்த மண்டபங்கள் துலுக்கரால் அக்கினி பகவானுக்கு அளிக்கப்படுமென்றும், தப்பிக் கிடந்தனவும் எழுதுவாரும் படிப்பாருமின்றி ஒன்றொன்றாய் இத்தனை இலேசில் இறந்துவிடுமென்றும் அவர் கனவிலும் நினைத்தவரல்லர். அவை இறந்துபோன இக்காலத்திற்கே இஃதோர் பெருஞ் சங்கடமாயினது. அல்லதூஉம், அவர் குறியீடு கொடுத்துப் பிரத்தும் இருக்கலாமே.
பண்டு தாங்கலந் தரியர னிருவரும் குற்றஞ் சொல்கின்றே
செண்டுதாங்குகைம் மேலையோன் மால்வரைச் சென்றான்.
- கந்தபுராணம் கணங்கள்செல் படலம், 8
0 வாம்பெருந்திரை வளாகமுன குடிபயில் வரைப்பிற்
றாம்ப ரப்பிய கயல்களின் விழக்கய றவிரக்
காம்பி னோர்வரு தோளியர் கழிக்கயல் விலைசெய்
தேம்பொதிந்தசின் மழலைமென் மொழிய செவ்வழியாழ்.
- பெரியபுராணம், திருக்குறிப்புத்தொண்டநாயனார் புராணம், 38
இனிச் செய்யுண் முழுவதுங் காட்டப்பட்டவற்றுள்ளும் இஃது இன்ன பா இன்ன பாவினமென்று நிச்சயிப்பதும் பலவிடத்து மிக அருமையாயினது. கலியினமான சில செய்யுட்களை அடிபிரிப்பதிற் சந்தேகமுற்றுப் பல தக்க பண்டிதரை எழுதி விசாரித்தபோது அவர்களும் மயங்கி இணைக்குறளாசிரியப்பாவாகப் பிரித்தனுப்பினர். யாது செய்யுளைத்தான் இணைக்குறளாசிரியமாகப் பிரிக்கக் கூடாது?
முதலில் ஒரே செய்யுளென அடியேன் கொண்டதோர் உதாரணம் பின்னர் அயனூல் உதாரணச் செய்யுட்களால் வௌ;வேறு நூலிலிருந்து எடுத்துக் காட்டப்பட்ட இரண்டு செய்யுளெனக்கண்டு அவ்வாறு மாற்றலாயிற்று. பொருட்சுவையே பெரிதெனக் கொண்டு மோனைஎதுகை ஆகிய சிறப்புக்களைப் பாராட்டாத சங்கச் செய்யுட்களைப் பழம் ஏட்டுப் பிரதிகளில் வாசித்து அடிவகுத்தறிந்த பெரியோர்க்கு இதன் பிரயாசை தெரியாதிராது.
இனி “இனி ‘என்சொற் கொள்ளன் மாதோ” என்பதற்கு என் வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ? விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க” என்றாற் போலவும் ‘அறுசுவைக்கு முதலாகிய வேம்புங் கடுவும் உப்பும் புளியுங் கரும்பும் போல்வன’ என்றாற் போலவுஞ் சொன்னமுடிவு பொருண்முடிவு பூரணப்படாமல் நின்றுழியும், ஆNºப விடைகள் பிறர்கோட் கூறல் தன் மதங் கோடலென் றிவற்றில் ஆசிரியர் மதமிது பிறர் மதமிதுவெனக் காட்டற் கவசியமான அடைகள் சிதைவுற்றுக் கிடந்துழியும், இன்னோரன்ன பிறழ்ச்சி பிற அனுமானிக்கப் பெற்றுழியும், பிரதிகள் அனைத்தும் ஒத்திருப்பனவற்றை எட்டுணையும் யான் மாற்றிலேன். எவ்வகைப் பொருட்டிருத்தமும் யானாகச் செய்ததின்று. துடங்கல் கலிழ்தலாதியவற்றின் ரூபத்தை மாத்திரம் இக்காலத்ததாகத் தொடங்கல் கலுழ்தலென மாற்றியிருக்கின்றேன்.
இலக்கிய இலக்கணங்களில் வல்ல பெரியோர் இப்பதிப்பிலுள்ள குற்றங்களை அடியேனுக்குத் தெரிவிக்கும்படி பலமுறையும் பிரார்த்திக்கின்றேன். அன்னோர் அறிவிக்குந் திருத்தங்களைத் திரட்டி, இன்ன இன்ன வழு இன்ன இன்ன வித்துவான்களால் உணர்த்தப்பட்டனவென்று குறிப்பிட்டுத், தொல்காப்பியப் பதிப்புத் திருத்தமென்றொன்று உடனே அச்சிட்டு வெளியிடக் காத்திருக்கின்றேன். ஐம்பது புதுத் திருத்தங்களுக்கு ஒரு பிரதி என்நன்றியறிவிற்கோர் அடையாளமாக அனுப்புவேன். இந்நூல் பிழையற வழங்கச் செய்தல் ஓர் பெரும் லோகோபகாரமென்று உணர்வாராக.
இதனைப் பதிப்பித்ததில் அச்சிற்குங் காகிதத்திற்கும் வந்த செலவினும் பரிசோதனைச் செலவு இருமடங்கிற்கு மேலே சென்றதாகலானும், இப்பெயர்ப்பட்ட அரிய நூல்களைப் படிக்க விரும்பி வாங்குவோர் சிலரேயாதலானும், இதுவித முயற்சியிற் கையிடுவது கைம்முதலுக்கே நஷ்டத்தை விளைவிக்கின்றது. ஆதலாற் றமிழ்விருத்தியில் அபிமானமுள்ள பொருட்செல்வர்களாற் சிறிது சகாயம் பெற்றாலன்றி இன்னும்இதுபோல அழிகின்ற தசையை அடைந்திருக்கும் அரிய கிரந்தங்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தலில் ஊக்கஞ்செல்லாது. இதுவரையும் அச்சுமணமும் பெறாத பூர்வ கிரந்தங்களையே தேடிப் பதிப்பிக்கும் நோக்கமுடையேற்குக் கல்வியருமை தெரிந்த திரவிய சீலர்கள் கைகொடுப்பார்களென்று நம்புகின்றேன்.
ஒரொருவர் ஒரொருநூலைத் தமது செலவிற்றமக்கு இஷ்டமான வித்துவான்களைக்கொண்டு பரிசோதித்து அச்சிடுவிப்பினுந் தமிழ்த் தேசத்திற்கு எவ்வளவு பேருபகாரமாகும்? எத்தனை அரிய நூல்கள் இறவாதொழியும்? அடியேன் வேண்டுகோளின்படி, முன்பு திருவனந்தபுர அரசிற்கு மந்திரியாயிருந்த கனம்பொருந்திய ஸ்ரீமத், அ. சேஷையசாஸ்திரியாரவர்கள் கலித்தொகையையும், கூடலூர்ப் பிரபுக்களில் ஒருவருந் தர்மசீலருமாகிய ஸ்ரீமத். மஞ்சக்குப்பம் இராஜரத்தின முதலியாரவர்கள் தொல்காப்பியம் சொல்லதிகாரத்தையும். நச்சினார்க்கினியாருரையோடு தமது செலவாகப் பரிசோதித்துப் பதிப்பிக்கும்படி உத்தரவு செய்திருக்கின்றார்கள். இவர்கள் முன்மாதிரியைப் பிறரும் அனுஷ்டிப்பாராக. இதில் முந்தி நிற்க வேண்டியவர்கள் மடாதிபதிகள். இவர்கள் கருத்து இதிற் செல்லுமாறு சரஸ்வதி கிருபைபுரிவாளாக.
திரவியலாபத்தை எவ்வாற்றானுங் கருதி முயன்றிலேன். கைநஷ்டம் வராதிருப்பதொன்றே எனக்குப் போதும். இதுவரையிற் பதிப்பித்த நூல்களால் எனக் குண்டான நஷ்டங் கொஞ்சமன்று. இவ்வித முயற்சியிற் கையிடுவோர் நஷ்டமுறாதிருத்தற் பொருட்டுச் சர்வகலாசாலைப் பரீiºயிற் றேறி, ஆங்காங்குப் பெரும் உத்தியோகம் வகித்திருப்போர் தத்தஞ் சொயபாஷையில் அச்சிடப்படும் பூர்வ கிரந்தங்களில் ஒரு பிரதி வாங்குதல் அவர் கடமையென் றெண்ணுகின்றேன்.
இந்நூலைப் பதிப்பித்தற்கு வேண்டிய காகிதத்திற்காகத் திரவியசகாயஞ் செய்த கண்ணிய தருமசீலர் இருவர் உளர். அவர்களுக்கு மிக்க நன்றி கூறுகின்றேன்.
கும்பகோணம் சி. வை. தா
பார்த்திப ò ஐப்பசி ñ
(தொல்காப்பியம், பொருளதிகாரம்: இஃது பாரத்துவாசி நச்சினார்க்கினியார் இயற்றிய உரையோடும் பல தேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. பார்த்திபò ஆவணி ñ ஆயனசயள: Pசiவெநன யவ வாந ளுஉழவவiளா Pசநளளஇ டில புசயஎநளஇ ஊழழமளழn யனெ ஊழ. 1885)
அனுபந்தம்
ஈழகேசரி: ஞாயிறு. 17-9-50.
ழூஆங்கில மோகமும் அதிகரிக்கத் தொல்காப்பியப் பிரதிகள் வர வர அருகித் தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட் டெண்ணத்தக்க அளவில் சுருங்கு வதைத் தமிழ்;த் தாமோதரம்பிள்ளை கண்டார்@ கண்ணீர் வடித்தார்........... தொல்காப்பியக் கடலில் இறங்கினார்.
தொல்காப்பியப் பதிப்பு
தமிழ் தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம்
பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை
இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னே, 1847-ம் ஆண்டு பிலவங்க ò ஆவணி ñ முதன் முதல் மழைவை மகாலிங்கையர் அவர்கள் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிற் பதிப்பித்தார்கள். பன்னீராயிர வருஷகாலம் கற்றோர் மனசிலும் ஏட்டுச் சுவடிகளிலும் இருந்துவந்த தொல்காப்பிய மூலத்தில் எழுத்ததிகாரமும், பல நூறு வருஷங்களாக அவ்வாறு இருந்துவந்த நச்சினார்க்கினியர் உரையும் அச்சுவாகனம் ஏறின.
இந்த மகாலிங்கையர் அவர்கள்தாம், ஆறுமுகநாவலர் அவர்கள் நாவலர்பட்டம் பெறமுன், இளமைப்பருவத்தில் பார்சிவல் பாதிரியாருக்கு நல்லநடைப்படுத்திக் கொடுத்த பைபிளை, சென்னைப் புலவர்கள் அமைத்த நடையிலும் சிறந்ததென்று வியந்து நாவலர் அவர்களையும் அவர்கள் பிறந்த யாழ்ப்பாணத்தையும் பாராட்டினவர்கள். மகாலிங்ககையர் அவர்கள் பழுத்த தமிழ் அறிஞர். அவர்கள் போல அக்காலத்திலிருந்த வேறு இரு அறிஞர்கள், விசாகப்பெருமாளையர், சரவணப்பெருமாளையர் என்பவர்கள். இவர்கள் இருவருஞ் சகோதரர்கள். கந்தப்பையர் என்பவரின் புத்திரர்கள். கந்தப்பையர் சிறந்த வித்துவான்@ சிவஞானசுவாமிகளின் மாணவரான தணிகைப்புராணம் பாடிய கச்சியப்பமுனிவரின் மாணவர், விசாகப் பெருமாளையர் மூத்தவர். நாவலரவர்கள் ஒரு சமயம் விசாகப்பெருமாளையரை மெய்ப்புலவர் என்று பாராட்டியிருக்கின்றார்கள். அன்றி, நேரிலும் சந்தித்து அடிக்கடி சம்பாஷித்திருக்கிறார்கள். விசாகப் பெருமாளையர் இளமையில் தந்தையாருடன் சென்று – தந்தையாரின் குரு கச்சியப்பமுனிவர், முனிவரின் குரு சிவஞானசுவாமிகள் - 0 சுவாமிகளை வணங்குகிறவர். சுவாமிகளின் பெருமையை நன்கு தெரிந்தவர். பல வரலாறுகள் சிவஞானசுவாமிகளைப்பற்றி நாவலர் அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றார். இழவுகளிற் சந்தேகமானவர்கள் - ளகர ழகர பேத சந்தேகிகள் - விசாகப்பெருமாளையரோடு சம்பாஷித்தால். எளிதிற் சந்தேகம் தீர்த்துக் கொள்ளலாமென்று நாவலர் அவர்கள் - விசாகப்பெருமாளையரின் உச்சரிப்பை அடிக்கடி பாராட்டுவார்களாம். இது நிற்க.
மகான் மகாலிங்கையர் அவர்கள் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் பதிப்பித்து இருபது ஆண்டுகள் கழிந்தும். ஏனைய அதிகாரங்கள் தமிழுக்கு இன்றியமையாதனவும், தலைசிறந்தனவுமாம் என்பதை அறிந்துவைத்தும், தமிழ்நாட்டுப் புலவர்கள் அவற்றை அச்சிற் பதிப்பிக்க முன்வரவில்லை. அவர்கள் முன்வராமைக்குப் பொருண்முட்டுப்பாடு ஒரு காரணமேயாயினும், தொல்காப்பியந் தொலைந்தாலும் தமது புகழ்க் காப்பியந் தொலையக் கூடாதென்ற அந்தரங்க எண்ணமே முக்கிய காரணமென்பது கருதத்தக்கது. இந்தப் பைத்திய நிலையில் ஆங்கிலமோகமும் அதிகரிக்கத் தொல்காப்பியப் பிரதிகள் வர வர அருகித் தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டெண்ணத்தக்க அளவில் சுருங்குவதைத் தமிழ்த் தாமோதரம்பிள்ளை கண்டார்: கண்ணீர் வடித்தார். தமக்கு வரும் அவமானங்கள் ஏளனங்களுக்கு இளைக்காது தமிழ் அன்னைக்குப் பிராணவாயுப் பிரயோகஞ் செய்ய முன்வந்தார் தொல்காப்பியக் கடலில் இறங்கினார். சென்னைத் தமிழ் வித்துவ சூடாமணிகள் சிலர், தாமோதரம்பிள்ளை இமாசலத்தையும் கங்கையையும் யாழ்ப்பாணம் கொண்டுபோகப் போகிறார் என்று சிரித்தார்கள்.
1868-ம் ஆண்டு புரட்டாதி மாதம் இற்றைக்கு எண்பது வருடங்களுக்கு முன் முதன் முதல் தமிழ் மன்னன் தாமோதரம்பிள்ளை, தமிழ்நாடு உய்யும் பொருட்டுத் தொல்காப்பியம் சொல்லதிகாரத்தைத் தலைசிறந்த உரையாகிய சேனாவரையர் உரையோடு, நாவலர் அவர்களைக் கொண்டு பரிசோதிப்பித்து, அச்சிற் பதிப்பித்தார். 1868-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31-ம் தேதி முதல் சென்னைத் தினவர்த்தமானியில் தொடர்ந்து சேனாவரையப் பதிப்பைப் பற்றிய விளம்பரம் வந்தது.
சூரியநாராயண சாஸ்திரியார் “தாமோதரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்ற எவர் தாமோதரம்” என்றும், வேத நாயகம்பிள்ளை “கோடிப்புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறரிதே” என்றும் பிள்ளையைப் புகழ்ந்து பாடினார்கள். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, கலாநிதி பூண்டி அரங்கநாத முதலியார், சேஷைய சாஸ்திரி, சேர். பொன். அருணாசலம், தமிழ் தெரிந்த ஹைக்கோட் நீதிபதிகள், ஜமீந்தார்கள், மகாராசாக்கள் முதலிய பிரபலஸ்தர்கள் குதூகலித்தார்கள். ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் முதலிய மடாதிபதிகள் திருநோக்கஞ் செய்தார்கள்.
ஆனால், வித்துவசூடாமணிகளான கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, தொழுவூர் வேலாயுதமுதலியார் என்பவர்களுக்கு அடிவயிற்றிலே அக்கினிசூடாமணி வேலைசெய்யத் தொடங்கிற்று. அந்த அழுக்காற்று மன்னர்கள் திரைமறைவில் நின்று, நரசிங்கபுரம் வீராசாமிமுதலியாரைக் கிள்ளிவிட்டார்கள். இந்த வீராசாமி முதலியார் யாவரோ என்றால், அவர்தாம் இன்னாரென்று இதோ விம்புகின்றேன். இவர், இராமலிங்கசுவாமியின் முதற்சீடர். அருட்பாப்புராணத்தில் ‘தவக்கொழுந்து’ என்று புகழப்பட்டிருக்கிறார். இராமலிங்கரின் அடுத்தவாரிசு இவரே என்று சுத்தானந்த பாரதியார் முழங்குகின்றார். இந்த வீரசாமி முதலியார் யாழ்ப்பாணத்தையும் நாவலரையுந் திட்டிப் பன்னிரண்டு நூல்கள் அருளியிருக்கின்றார். “தீவாந்தர சைவ விநோதம்” என்ற நூலிலே நாவலரைப் படு கிறிஸ்தவரென்றும், நாவலருக்குக் கிறித்துவப் பெயர் ‘பைராட்’ என்றும் வாய்க்கு வந்தபடி வர்ணித்திருக்கின்றார். இந்த அருட்பாப் புலவராகிய வீராசாமி முதலியார், அந்தஇரு இலக்கண மேதைகளின் உதவிகொண்டு தாமோதரம்பிள்ளையின் சேனாவரைய விளம்பரத்தில் இலக்கணப் பிழைகள் கண்டு பிடித்து, ‘இலக்கண இலக்கியங்களில் மகாவல்லவரும், சென்னை முதல் ஈழமீறாகவுள்ள தமிழ்நாட்டு வித்துவான்களில் தமக்கு இணையில்லாதவருமாகிய” என்று நாவலர் அவர்களுக்குத் தாமோதரம்பிள்ளை கொடுத்த விசேடணத்தை ஆNºபித்து, “இணையில்லாதவர்” என்பதற்குப் “பெண்சாதியில்லாதவர்” என்று மெய்ப்பொருள் பண்ணி, தாமோதரம்பிள்ளையையும் நாவலரையும் தூஷித்து, 1869-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘விஞ்ஞானப் பத்திரிகை” என்று தூஷண பத்திரிகை வெளியிட்டிருக்கிறார். ழூ
ழூ தாமோதரம்பிள்ளை அவர்கள் அறிஞர்கள் பிரபுக்கள் சூழலிலும், உயரிய உத்தியோக அந்தஸ்திலும் இருந்தமையால், அழுக்காற்றுக் கண்டனங்களால் தளர்வடையவில்லை. ஆயினும், பிள்ளையவர்களைச் சோர்வடையாமல் ஊக்கும் பொருட்டுப் போலும், ‘நரசிங்கபுர வீராசாமி முதலியாரே’ என்று விளித்து, நல்லறிவுச் சுடர் கொளுத்தல் என்ற உக்கிர கண்டனம் நாவலர் அவர்களால் தீட்டப்பட்டது.
தாமோதரம்பிள்ளை கறையான் வாயிலிருந்து சேனாவரையத்தை மீட்டு வெளியிட்டதற்கு, இராசகோபாலபிள்ளை முதலிய சென்னைப் பண்டிதமணிகள் சிலர் செய்த கைம்மாறு, ‘பெண்சாதி’ நியாயம் பேசும், இந்த ‘விஞ்ஞாபனம் பத்திரிகை’த் தூஷணந்தான்.
இந்த இராசகோபாலபிள்ளை, ஒருவர் பதித்த புத்தகத்தில் நாலு ஆறு பக்கங்களை மாற்றி, முகப்பைப் புதிதுபண்ணித் தாமும் ஒரு பதிப்புப் பண்ணியதாகப் பாசாங்கு செய்ய வல்லார்@ கை வந்தவர். அவருடைய யோக்கியதை அவர் தேசத்தாராகிய கூடலூர்க் குமரகுரு சுவாமிகள் இயற்றி அச்சிற் பதிப்பித்த “பரமோத்தர ரசாபாச தருப்பணத்”தில் 35-ம் பக்கங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம் அது வருமாறு:-
“இராசகோபாலபிள்ளை திருத்தி அச்சிற் பதிப்பித்த புத்தகத்தைப் பாராதீர். ஏனெனில், அவர், முதனூற் கருத்தறியாதவராகையால், வில்லிபுத்தூராழ்வார் செய்த பாரதத்தைப் பெரியோர் செய்த வாக்கை அழிக்கக்கூடாதென்று சிறிதும் அஞ்சாது, சிவபரமாயிருந்த பாடல்கள் அநேகத்தைத் தள்ளியும், சில அடிகளை மாற்றியும், சில சொற்களைத் திரித்தும், மனம்போன வாறே அச்சிற் பதிப்பித்தனர். ஆதலால், அதனை நீக்கி வில்லிபுத்தூரார் பாடினபடியே ஆறுமுகநாவலர் அச்சிற் பதிப்பித்திருக்கும் புத்தகம் ஒன்று சம்பாதித்துப் பாரும் பாரும். உமது சந்தேகந் தீரும் தீரும். நாவலர் என்னும் பட்டம் அவருக்குத்தகுமேயன்றி உமக்கெல்லாமா தகும்! புலியை நோக்கிப் பூனை சூடிக்கொண்டால் புழுத்துச் சாமேயன்றிப் புலியாமா! அதுபோலக் கல்விக் கடலாகிய ஆறுமுகநாவலரை நோக்கி நீரும் அப் பெயர் தரித்துக் கொண்டாற் பழியும் பாவமும் அடைவீரேயன்றிப் புகழ் அடைவீரா! அடையீர் அடையீர்.”
இத்துணைப்பெருஞ் சிறப்பினராய இராசகோபால பிள்ளை யாழ்ப்பாணத்தில் எங்கேயோ ஒரு மூலைமுடக்கிலிருந்து வந்த தாமோதரம்பிள்ளை சென்னை மாநகரில் வீற்றிருந்து கொண்டு, அதுவும் ஒப்புயர்வில்லாததொரு சேனாவரையம் பதிக்கப் பார்த்துக் கொண்டிருப்பதா? மனிதர் ஒரு சூழ்ச்சி செய்தார். நினைக்க முடியாத சூழ்ச்சி@ திகைக்கக்கூடிய சூழ்ச்சி. அஃதாவது, தம் பெயராலும் ஒரு சேனாவரையப் பதிப்பு வழங்க ஒரு முயற்சி செய்தார். சிலர் இன்னுந்தான், இராசகோபாலபிள்ளையும் சேனாவரையம் பதித்தார் என்று சொல்லப் பார்க்கின்றார்கள். அப்படியொரு பதிப்புத் தமிழ்நாட்டில் வழங்கியதாக.......... வழங்குவதாகத் தெரியவில்லை. சென்னை அரசாங்க புத்தகப் பதிவில், சி.வை. தாமோதரம்பிள்ளை சேனாவரையம் பதித்தார் என்று இருக்கிறதேயன்றி, இராசகோபாலபிள்ளை பெயரேயில்லை. சென்னைச் சர்வகலாசாலையில் தமிழ்ப் பகுதி முக்கியஸ்தர்களான திரு. வையாபுரிப்பிள்ளை முதலியவர்கள், இராசகோபாலபிள்ளை சேனாவரையம் பதிப்பித்ததாகத் தாங்கள் கேள்விப்பட்டதுமில்லை@ அப்படி ஒருபதிப்பைக் கண்டதுமில்லை என்கிறார்கள் ஆனால்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திராசிரியர் இராமாநுஜையங்கார் அவர்கள், “சென்னை நார்மல்ஸ் ஸ்கூல் தலைமைத் தமிழ்ப் புலவர் கோமளபுரம் இராசகோபால பிள்ளையால் பரிசோதித்து, மு. கந்தசாமி முதலியார் வர்த்தமானதரங்கிணீசாகை அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டது” என்ற முகப்புடன் ஒரு சேனாவரையம் தம்மிடம் இருக்கிறதென்று தெரிவிக்கின்றார்கள். அந்த இராசகோபாலபிள்ளை பதிப்பு எப்பொழுது பதிக்கப்பட்டது என்று கேட்டபோது, (1868) ‘விபவ ò கார்த்திகை ñ என்று அம் முகப்பில் தானே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இராசகோபாலபிள்ளை பதிப்பு ஒன்று இருக்க வேண்டும் என்பவர்களுக்கு, இது மகிழ்ச்சிக்குரியதொரு சம்பவமேயாயினும், ‘தாமோதரம்பிள்ளை பதிப்புக்கு முன் இராசகோபாலபிள்ளை பதிப்பித்திருக்க வேண்டும்’ என்று மனப்பால் குடிக்கிறவர்களுக்கு, மெல்ல வாயை மெல்லுதற்கோ – மகிழ்ச்சி கொள்ளுதற்கோ இடமேயில்லை. தாமோதரம்பிள்ளை பதிப்பு இரண்டு மாசங்களுக்கு முன் (1868) விபவ வருஷம் புரட்டாதியிற் பதிப்பிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, இராசகோபாலபிள்ளை சேனாவரையப் பதிப்புப் பதித்தால் அது ஏடுகளைப் பரிசோதித்துப் பதித்த பதிப்பு என்றுசொல்ல முடியாது. 1906-ல் மதுரைச் சங்கத்தில் படித்த கோபாலையர் என்பவர் “சோனாவரைய ஆராய்ச்சி” என்று ஒரு கட்டுரை ‘செந்தமிழ்’ப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை தாமோதரம்பிள்ளை பதிப்பிலும் பார்க்க, ஒரு சில திருத்தஞ் சொல்லி இராசகோபால பிள்ளை பதிப்பைப் பாராட்ட முயற்சிக்கின்றது. ஆனால், இராசகோபாலபிள்ளையும், சேனாவரையம் பதித்திருக்கின்றார் என்று அறுதியிட்டுக் கூறாது. ‘இராசகோபாலபிள்ளை பதிப்புப் புத்தகம்’ என்று கருகல் செய்து நடக்கின்றது. இக் கருகலாலும், அராசங்க புத்தகப் பதிவில் இராசகோபால பிள்ளை பெயரால் சேனாவரையப் பதிப்பு இல்லாமையாலும், இராசகோபாலபிள்ளை திருட்டுப் பிரசிரத்தமாகையாலும், தாமோதரம்பிள்ளை பதித்து இரண்டு மாசத்துக்கிடையில் திடீரென்று தோன்றினமையாலும், தமிழ் நாட்டில் ஏட்டுப் பிரதி கிடைத்தாலும், இராசகோபாலபிள்ளை பதிப்புக் கிடையாமையாலும், தாமோதரம்பிள்ளை முதலிய யாழ்ப்பாணத்து அறிஞர்களில் இராசகோபாலபிள்ளைக்கு மாற்சரியம் உண்மையாலும், திரு. இராமாநுஜையங்கார் அவர்களிடமிருக்கும் இராசகோபாலபிள்ளை பெயராலுள்ள சேனாவரையம். “புதிய பதிப்புத்தானோ, தாமோதரம்பிள்ளை பதிப்புச் சிலதாள்கள் வேறுபட்டுத் தோற்றுந் தோற்றமோ” என்பதை அறிஞர்கள் ஊகிக்கக் கடவர்கள். எங்ஙனமாயினும். என்னைப் பொறுத்தவரையில், இராசகோபாலபிள்ளைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனென்றால். தாமோதரம்பிள்ளை பதிக்கமுன், தாம் பதித்ததாகக் காலத்தை முன்னுக்குத்தள்ளாமல், எக் காரணத்தினாலோ, (தாமோதரம்பிள்ளை பதிப்பில் பிழை காண்பான் போலும்) தம் பதிப்பைக் காலத்தால் பின்னுக்குத் தள்ளியதற்காக நன்றி செலுத்த வேண்டாமா! என்கின்றேன். இராசகோபாலபிள்ளை வாழ்க.
அதே விபவ ò (1868) கார்த்திகை ñ மற்றொரு தொல்காப்பியப் பதிப்பு வெளிவந்தது. அது தொல்காப்பிய எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை. இதனைப் பதித்தவர்கள் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரப்பிள்ளை அவர்களின் மாணவர் சுப்பராயச் செட்டியார் அவர்கள் எழுத்ததிகாரம் இளம்பூரணத்தை ஏட்டிலிருந்து, முதன் முதல் அச்சில் கொணர்ந்தவர்கள் செட்டியார் அவர்களே.
தமிழ்நாடு, தொல் எழுத்தையும் சொல்லையும், எழுத்துக்கு நச்சினார்க்கினியம் இளம்பூரணம் என்கின்ற உரைகளையும், சொல்லுக்குச் சேனாவரையத்தையும் பெற்றுக் கொண்டது. இவற்றை முதன்முதற் பதித்த பெருமைகளைக் காலக்கிரமஞ் செய்தால், மழைவை மகாலிங்கையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, சுப்பராயச் செட்டியார் என்றே கிரமஞ் செய்ய வேண்டும். எழுத்தையும் அதற்கு நச்சினார்க்கினியத்தையும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை மகாலிங்கையருக்குரியது. அவ்வாறே சொல்லையும் அதற்குச் சேனாவரையத்தையும் முதன் முதல் அச்சில் தந்த பெருமை சி. வை. தாமோதரம்பிள்ளைக்குரியது. எழுத்துக்குரியது இளம்பூரணத்தை முதன்முதல் அச்சில் தந்த பெருமை சுப்பராயச் செட்டியார்க்குரியது. சந்தேகப் பேர்வழியாகிய இராசகோபாலபிள்ளைக்குப் பதிப்பாளர் நாமாவலியில் இடங்கொடுக்க இடமில்லை. அப்படிக் கொடுப்பினும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை அவருக்குக் கிடையவே கிடையாது. இல்லையே இல்லை! இராசகோபால பிள்ளையின், அரசாங்கப் பதிவு புத்தகத்தை ஏமாற்றிய கள்ளச் சேனாவரையப் பதிப்புக் காலம் (1868) விபவ ò கார்த்திகை ñ. தாமோதரம்பிள்ளையின் அரசாங்க பதிவு புத்தகத்தை ஏமாற்றாத களவில்லாத சேனாவரையப் பதிப்புக் காலம் (1868) விபவ ò புரட்டாதி ñ. இரண்டு மாசங்கள் முந்தி.
மழைவை மகாலிங்கையர் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் பதித்து இருபது வருஷங்களுக்குப்பிறகு, சுப்பராச் செட்டியார் (1868) விபவ ò கார்த்திகை ñ எழுத்து இளம்பூரணம் அச்சிற் பதிக்க இரண்டு மாசங்களுக்கு முன், அஃதாவது இற்றைக்கு 80 வருஷங்களுக்கு முன்னமே.
இந்தப் பூமாண்டலத்திலே, தமிழ் நாட்டிலே தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையத்தை, ‘தமிழ் நாட்டிலே தமக்கிணையில்லாத ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களைக் கொண்டு பரிசோதிப்பித்து, முதன்முதல் அச்சுவாகனத்தில் ஆரோகணிப்பித்தவர்கள் தமிழ்மகார் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களே! ஒரு மயிர் நுனியைக் கேடாநுகோடி கூறிட்டு, அக்கூறுகளில், ஒரு கூறாகிய ஒரு மயிர்நுனி சந்தேகமும் இதில் இல்லையே இல்லை! இஃதிங்ஙனமாக,
எழுத்துச் சொல் பதித்தவர்கள் நாமாவலியை,
“மழைவை மகாலிங்கையர், சுப்பராயச் செட்டியார், இராச கோபாலபிள்ளை, சி.வை. தாமோதரம்பிள்ளை”
என்று வரிசைப்படுத்தி. காலத்தால் இரண்டாம் இடத்தினராய் முதன் முதல் பதித்தலாகிய செய்கையால், மகாலிங்கையரோ டொப்ப முதலாம் இடத்தினராய சி. வை. தாமோதரம்பிள்ளையை, நான்காம் இடத்தினராக்கி, ‘இராசகோபாலபிள்ளை பதிப்பையே தாமோதரம்பிள்ளை பார்த்துப் பதித்திருக்க வேண்டும்’ என்று படிக்கிறவர்கள் உணரும்படி வைப்புக் கிரமம் செய்யாமற் செய்து,
செய்ந்நன்றி கொல்வோரும் இப்பூமிக்குப் பாரமாய் உளராயின், அவர்தம் அதோகதிக்கு இரங்கி, (1868) விபவ வருஷத்திலும், ஏனைய வருஷத்திற்போலவே, கார்த்திகைக்குமுன் ஐப்பசி@ ஐப்பசிக்குமுன் புரட்டாதி, என்று விரல்விட்டுக் காட்டுவதோடு, மகாலிங்கையர் பதிப்பு 80 வருஷத்துக்கு முந்தியதன்று@ நூறு (100) வருஷத்துக்கு முந்தியது. தாமோதரம்பிள்ளை பதிப்புத்தான் 80 வருஷத்துக்கு முந்தியதென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
“உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்”
இனி அப்பாற் செல்வோம்.
“எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்”
என்று ஒரு குரல் கடைச்சங்க காலத்துப் பாண்டிய அரசனொருவன் வாயிலிருந்து கேட்கின்றோம். கடைச் சங்கத்துத் தலைமைப் புலவோராகிய நக்கீரரே அக்குரலைப் பெருக்கின்றார்.
இக் குரலிலிருந்து தொல்காப்பியத்தின் உயிர் நிலையம் எந்த அதிகாரம் என்பதை எவருந் தொட்டுக்காட்டலாம். அந்த உயிர் நிலையமாகிய பொருளதிகாரம் 1868-ம் ஆண்டு கழிந்து. 1878ம் ஆண்டும் போய், 1884-ம் ஆண்டும் நீங்கி இன்னும் அச்சில் வெளிவரவில்லை. ஒர் இராசகோபாலபிள்ளையோ, ஒரு தொழுவூர் வேலாயுத முதலியாரோ, இவர்கள் சூத்திரப் பாவையான வீராசாமி முதலியோ திருவுள்ளம் இரங்கவில்லை! வெறுங்கைக்கு முழம் ஏது!
தமிழ்நாடு முழுவதிலும் பொருளதிகார ஏடு ஒரு சிலவாய், அவையும் நெரிந்தும் முரிந்தும் சிதல்வாய்ப் பட்டும் சிதைந்து, இறுதி மூச்சு விடுவதைத் தமிழ்மகன் ஒரே ஒரு தாமோதரன் தான் கண்ணுற்றான்@ கண்ணீர் சொரிந்தான். 1885-ம் ஆண்டு பொருளதிகாரம், முதல் ஐந்தியல்கள் நச்சினார்க்கினியர் உரையோடும். பின்னான்கியல்கள் போராசிரியர் உரையோடும் அச்சுவாகனம் இவர்ந்து, தாமோதரம்பிள்ளை பதிப்புத் தமிழ்நாட்டில் பவனி வந்தது.
“பல்காற் பழகினுந்தெரியா உளவேல்
தொல்காப் பியந்திரு வள்ளுவர் கோவையார்
மூன்றினும் முழங்கும்”
அன்றோ!
நாவலர் பதிப்புக்களான திருவள்ளுவர் கோவையார் என்பவைகளோடு, தொல்காப்பியம் முழு உருத் தரித்துக், கைகோத்துக் குதூகலித்தது. தமிழ் அன்னை புன்னகை பூத்தாள்.
1891-ம் ஆண்டில் பலருடைய வேண்டுகோளின்படி. மழைவை மகாலிங்கையர் பதித்த எழுத்து நச்சினார்க்கினியத்தை மிக அருகினமையால் திருப்பிப் பிள்ளை அச்சிட்டார். அடுத்த ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம் பிள்ளையால் முதன்முதல் அச்சிடப்பட்டது. எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் தவிர, சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்பெல்லாம். மற்றொருவர் பதியாத புத்தம் புதிய பதிப்புக்களே.
“ஒருமுறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களை மீள அச்சிடுவிக்காத எனக்கு இவ்வெழுத்ததிகாரம் ஒரு விலக்காயிற்று. அன்றியும் ஒரு பெருநூலின் முதலிலேயுள்ளதோர் சொற்ப பாகத்தை மாத்திரம் ஒருவர் பிரசுரஞ் செய்து காலகதியடைந்து விட்டால், பின்னர் அந்நூல் முழுவதையும் அச்சிடுவோர் முதற் பாகத்தையுஞ் சேர்த்து அச்சிடுதல் தவறன்றாகும். உலக வழக்கும் அதுவே”
என்ற பிள்ளையவர்கள் கூற்றுங் கரிபோக்கும்.
1881-ல் வீரசோழியமும், 1883-ல் தொல் - பொருளதிகாரத்துக்குத் திறவு கோலான இறையனார் களவியல் உரையும், அவ்வாண்டில்தானே, சிவஞான சுவாமிகளின் மாணவரான கச்சியப்ப முனிவர் இயற்றிய தணிகைப் புராணமும், 1887-ல் குட்டித் தொல்காப்பியமாகிய இலக்கண விளக்கமும், சூளாமணியும் பிள்ளை அவர்கள் அச்சிட்ட புத்தம் புதிய பதிப்புக்களே.
திரு நா. பொன்னையா அவர்கள், மகா வித்துவான் கணேசையர் அவர்களின் மரபு நெறிப்பட்ட ஆன்ற அறிவைப் பயன்படுத்தி, சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் ஞாபகமாக, தற்காலத்துச் சனநாயகத் தமிழுக்குத் தலைக்கெட்டாத “கூடலினாய்ந்த ஓண்டீந்தமிழ்வாய்” நுழைவார்க்கு அரியதொரு சாதகமாக, பிள்ளையவர்கள் பதித்த தொல்காப்பியம் முழுவதையும் நாற் பெருங்கூறிட்டு, அழகிய முறையில் அச்சிட்டுபகரித்தது. பழந் தமிழறிஞர்கள் பாராட்டியமையாது.
திரு. பொன்னையா அவர்கள் தேச கைங்கரியங்கள் செய்து வருவதையிட்டு அரசாங்கம் ‘ஜே.பி’யாக நியமித்திருக்கிறது. நான் அவர்களுடைய சாஸ்திர கைங்கரியங்கள் குறித்து, ‘வராகம்’ என்கின்ற பட்டத்தை வழங்க விரும்புகின்றேன்.
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில், ‘கற்கி’ (கல்கி) அவதாரம் போல, ‘வராகம்’ என்பதும் ஒரு விஷ்ணு அவதாரம், அறிவுப் பொக்கிஷங்களாகிய தொல்காப்பியம் போன்ற நூல்களை அசுரர்கள் சிதைத்து ஆழ்த்துங் காலங்களிலே, விஷ்ணு வராக மாய்த் தோன்றித், தனது வக்கிர தந்தங்களில், ஆழ்த்திய அறிவுப் பொக்கிஷங்களைத் தேடி எடுத்து ஏந்தி உபகரிப்பது புராணப் பிரசித்தம்.
தொல்காப்பியம் சிதைந்து மறையுங் காலத்தில் அதனைத்தேடி எடுத்து ஏந்திப் பரமோபகாரஞ் செய்த சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் ஆதிவராகம். பிறகு தாமோதரம்பிள்ளை எடுத்து ஏந்திய தொல்காப்பியம் மறைகிற சமயத்திலே, நன்றிமறவாமல் அதனை எடுத்துத் தாங்கி;ப் பயன்படுமுறையில் உபகரித்த திரு. பொன்னையா அவர்கள் ‘உத்தரவராகம்’
திரு. நா. பொன்னையா ஜே.பி. அவர்கள் செய்த புண்ணியத்தோடு புண்ணியமாக, சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்புக்களில், பிள்ளை அவர்கள் எழுதிய பதிப்புரைகளை ஒன்றுசேர்த்து, ஒரு தக்க முன்னுரையோடும் அடிக் குறிப்புக்களோடும் வெளியிடவேண்டு மென்று கேட்டுக் கொள்ளுகிறேன். பிள்ளை அவர்களின் மதிப்புரைகள், தமிழ் வரலாறு தமிழ்நாட்டு வரலாறுகளையும், அவற்றில் பிள்ளை அவர்களின் பங்கையும் புலப்படுத்துவதேயன்றி, உயரிய வகுப்புக்களுக்கு வரலாற்றுப் படலமும் தமிழ் இலக்கியமுமாய் அமைந்து பயன்படுமென்பதைச் சொல்லவேண்டியதில்லை.
இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு 1948-ம் ஆண்டு ஒரு சந்தர்ப்பம் திடீரென்று தோன்றியது. ஆனால் கரு உருவெடுக்கவில்லை. இத்தனை காலங்கழித்துக் குழந்தை பிரசவித்திருக்கிறது. தொல்காப்பிய பராமரிசகர்கள், இந்தக் குழந்தையையும் பிரிசித்துக் கொஞ்சிக் குலாவுவார்களாக.
சி. வை. தா. இவ்வுலகவாழ்வை நீத்தபொழுது அன்பர்கள் பாடிய பாடல்கள்சில
வெண்பா
தொல்காப் பியமுதலாந் தொன்னூல்க ளைப்பதிப்பித்
தொல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பி – னல்காத
தாமோ தரசசெல்வன் சட்டகநீத் திட்டதுன்பை
யாமோ தரமியம்ப வே.
- பிரமஸ்ரீ டாக்டர் உ. வே. சாமிநாதஐயரவர்கள்.
தரவு கொச்சகக்கலிப்பா
காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல்போ
னாமோது செந்தமிழி னன்னூல் பலதொகுத்த
தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றவௌர்
தாமோ தரமுடையார் தண்டமிழ்ச்செந் நாம்புலவீர்
- பிரமஸ்ரீ வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரவர்கள்
கட்டளைக்களித்துறை
ஏட்டி லிருந்த வருந்தமிழ் நூல்க ளெனைப்பலவுந்
தீட்டி வழுக்களைத் தச்சினி லாக்குபு செந்தமிழ்சேர்
நாட்டி லளித்துயர் தாமோ தரேந்திர னண்ணுபுகழ்
பாட்டி லடங்குந் தகைத்தோ புலவர்கள் பாடுதற்கே.
- சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவரவர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக