தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை - இரண்டாம் பகுதி
பக்தி நூல்கள்
Back
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள் ( 714- 1347 ) & பிற்சேர்க்கை பாடல்கள் (1 - 33)
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்726 வாளவரி கோளபுலி கீளதுரி தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில கோளகளி றாளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ மீளிமிளிர் தூளிவளர்பொன்
காளமுகில் மூளுமிருள் கீளவிரி தாளகயி லாயமலையே.3.68.1 727. புற்றரவு பற்றியகை நெற்றியது மற்றொருகண் ஒற்றைவிடையன்
செற்றதெயில் உற்றதுமை யற்றவர்கள் நற்றுணைவன் உற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு குற்றமில தெற்றெனவினாய்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி பெற்றகயி லாயமலையே.3.68.2 728. சிங்கவரை மங்கையர்கள் தங்களன செங்கைநிறை கொங்குமலர்தூய்
எங்கள்வினை சங்கையவை இங்ககல வங்கமொழி யெங்குமுளவாய்த்
திங்களிருள் நொங்கவொளி விங்கிமிளிர் தொங்கலொடு தங்கவயலே
கங்கையொடு பொங்குசடை யெங்களிறை தங்குகயி லாயமலையே.3.68.3 729. முடியசடை பிடியதொரு வடியமழு வுடையர்செடி யுடையதலையில்
வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி நொடியமகிழ் அடிகளிடமாங்
கொடியகுர லுடையவிடை கடியதுடி யடியினொடு மிடியினதிரக்
கடியகுரல் நெடியமுகில் மடியவத ரடிகொள்கயி லாயமலையே.3.68.4 730. குடங்கையி னுடங்கெரி தொடர்ந்தெழ விடங்கிளர் படங்கொளரவம்
மடங்கொளி படர்ந்திட நடந்தரு விடங்கன திடந்தண்முகில்போய்த்
தடங்கடல் தொடர்ந்துட னுடங்குவ விடங்கொள மிடைந்தகுரலாற்
கடுங்கலின் முடங்களை நுடங்கர வொடுங்குகயி லாயமலையே.3.68.5 731. ஏதமில பூதமொடு கோதைதுணை யாதிமுதல் வேதவிகிர்தன்
கீதமொடு நீதிபல வோதிமற வாதுபயில் நாதன்நகர்தான்
தாதுபொதி போதுவிட வூதுசிறை மீதுதுளி கூதல்நலியக்
காதன்மிகு சோதிகிளர் மாதுபயில் கோதுகயி லாயமலையே.3.68.6 732. சென்றுபல வென்றுலவு புன்றலையர் துன்றலொடும் ஒன்றியுடனே
நின்றமரர் என்றுமிறை வன்றனடி சென்றுபணி கின்றநகர்தான்
துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை தென்றலொடு சென்றுகமழக்
கன்றுபிடி துன்றுகளி றென்றிவைமுன் நின்றகயி லாயமலையே.3.68.7 733. மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு செருச்செய்த பருத்தகளிறின்
பொருப்பிடை விருப்புற விருக்கையை யொருக்குடன் அரக்கனுணரா
தொருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கென நிருத்தவிரலாற்
கருத்தில வொருத்தனை யெருத்திற நெரித்தகயி லாயமலையே.3.68.8 734. பரியதிரை பெரியபுனல் வரியபுலி யுரியதுடை பரிசையுடையான்
வரியவளை யரியகணி யுருவினொடு புரிவினவர் பிரிவில்நகர்தான்
பெரியஎரி யுருவமது தெரியவுரு பரிவுதரும் அருமையதனாற்
கரியவனும் அரியமறை புரியவனும் மருவுகயி லாயமலையே.3.68.9 735. அண்டர்தொழு சண்டிபணி கண்டடிமை கொண்டவிறை துண்டமதியோ
டிண்டைபுனை வுண்டசடை முண்டதர சண்டவிருள் கண்டரிடமாங்
குண்டமண வண்டரவர் மண்டைகையில் உண்டுளறி மிண்டுசமயங்
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டுமறி யாதகயி லாயமலையே.3.68.10 736. அந்தண்வரை வந்தபுனல் தந்ததிரை சந்தனமொ டுந்தியகிலுங்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை நைந்துபர லோகமெளிதே.3.68.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.69 திருக்காளத்தி - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்737 வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடந்
தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில்
ஏனமின மானினொடு கிள்ளைதினை கொள்ளஎழி லார்க்கவணினாற்
கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே.3.69.1 738. முதுசினவில் அவுணர்புரம் மூன்றுமொரு நொடிவரையின் மூளவெரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர் விரும்புமலை தன்னைவினவில்
எதிரெதிர வெதிர்பிணைய எழுபொறிகள் சிதறஎழி லேனமுழுத
கதிர்மணியின் வளரொளிகள் இருளகல நிலவுகா ளத்திமலையே.3.69.2 739. வல்லைவரு காளியைவ குத்துவலி யாகிமிகு தாருகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன் மேவுமலை கூறிவினவில்
பல்பல இருங்கனி *பருங்கிமிக வுண்டவை நெருங்கியினமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை யாடுகா ளத்திமலையே.
( * பருகி எனச்சொல்வது விகாரவகையாற் பருங்கியென நின்றது.)3.69.3 740. வேயனைய தோளுமையோர் பாகமது வாகவிடை யேறிசடைமேற்
தூயமதி சூடிசுடு காடில்நட மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெயும் வேடன்மல ராகுநயனங்
காய்கணையி னாலிடந் தீசனடி கூடுகா ளத்திமலையே.3.69.4 741. மலையின்மிசை தனில்முகில்போல் வருவதொரு மதகரியை மழைபோலலறக்
கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன் மேவுமலை கூறிவினவில்
அலைகொள்புனல் அருவிபல சுனைகள்வழி யிழியவயல் நிலவுமுதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை சிந்துகா ளத்திமலையே.3.69.5 742. பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்றபணிகண்
டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை யேற்றஅரன் மலையைவினவில்
வாரதர் இருங்குறவர் சேவலின் மடுத்தவர் எரித்தவிறகிற்
காரகில் இரும்புகை விசும்புகமழ் கின்றகா ளத்திமலையே.3.69.6 743. ஆருமெதி ராதவலி யாகியச லந்தரனை ஆழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவன் இருந்தமலை தன்னைவினவில்
ஊரும்அர வம்மொளிகொள் மாமணியு மிழ்ந்தவையு லாவிவரலாற்
காரிருள் கடிந்துகன கம்மெனவி ளங்குகா ளத்திமலையே.3.69.7 744. எரியனைய சுரிமயிர் இராவணனை யீடழிய எழில்கொள்விரலாற்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன் மேவுமலை பெற்றிவினவில்
வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடுவரை யூடுவரலாற்
கரியினொடு வரியுழுவை அரியினமும் வெருவுகா ளத்திமலையே.3.69.8 745. இனதளவி லிவனதடி யிணையுமுடி யறிதுமென இகலுமிருவர்
தனதுருவம் அறிவரிய சகலசிவன் மேவுமலை தன்னைவினவிற்
புனவர்புன மயிலனைய மாதரொடு மைந்தரும ணம்புணரும்நாள்
கனகமென மலர்களணி வேங்கைகள் நிலாவுகா ளத்திமலையே.3.69.9 746. நின்றுகவ ளம்பலகொள் கையரொடு மெய்யிலிடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன் மேவுமலை நாடிவினவிற்
குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர் சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை யாடுகா ளத்திமலையே.3.69.10 747. காடதிட மாகநட மாடுசிவன் மேவுகா ளத்திமலையை
மாடமொடு மாளிகைகள் நீடுவளர் கொச்சைவயம் மன்னுதலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம் பந்தனுரை நல்லதமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்கள் நல்லர்பர லோகமெளிதே.3.69.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.70 திருமயிலாடுதுறை - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்748 ஏனவெயி றாடரவோ டென்புவரி யாமையிவை பூண்டிளைஞராய்க்
கானவரி நீடுழுவை யதளுடைய படர்சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட மூசுமயி லாடுதுறையே.3.70.1 749. அந்தண்மதி செஞ்சடையர் அங்கணெழில் கொன்றையொ டணிந்தழகராம்
எந்தம்அடி கட்கினிய தானமது வேண்டில்எழி லார்பதியதாங்
கந்தமலி சந்தினொடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்துமயி லாடுதுறையே.3.70.1 750. தோளின்மிசை வரியரவம் நஞ்சழல வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்டலையி லுண்டுமுது காடுறையும் முதல்வரிடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி யுதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமணம் நாறுமயி லாடுதுறையே.3.70.3 751. ஏதமிலர் அரியமறை மலையர்மக ளாகியஇ லங்குநுதலொண்
பேதைதட மார்பதிட மாகவுறை கின்றபெரு மானதிடமாங்
காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை கூடிவரு காவிரியுளான்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி கமழுமயி லாடுதுறையே.3.70.4 752. பூவிரி கதுப்பின்மட மங்கையர கந்தொறும் நடந்துபலிதேர்
பாவிரி யிசைக்குரிய பாடல்பயி லும்பரமர் பழமையெனலாங்
காவிரி நுரைத்திரு கரைக்குமணி சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி கொள்ளுமயி லாடுதுறையே.3.70.5 753. கடந்திகழ் கருங்களி றுரித்துமையும் அஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழும் மூவிலைநல் வேலுடைய வேதியர் விரும்புமிடமாந்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு தொண்டையெழில் கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக நாறுமயி லாடுதுறையே.3.70.6 754. அவ்வதிசை யாரும்அடி யாருமுள ராகஅருள் செய்தவர்கள்மேல்
எவ்வமற வைகலும் இரங்கியெரி யாடுமெம தீசனிடமாங்
கவ்வையொடு காவிரிக லந்துவரு தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவிம யங்கிமணம் நாறுமயி லாடுதுறையே.3.70.7 755. இலங்கைநகர் மன்னன்முடி யொருபதினோ டிருபதுதோள் நெரியவிரலால்
விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ ரிருந்தவிடம் வினவுதிர்களேற்
கலங்கல்நுரை யுந்தியெதிர் வந்தகயம் மூழ்கிமலர் கொண்டுமகிழா
மலங்கிவரு காவிரிநி ரந்துபொழி கின்றமயி லாடுதுறையே.3.70.8 756. ஒண்டிறலின் நான்முகனும் மாலுமிக நேடியுண ராதவகையால்
அண்டமுற அங்கியுரு வாகிமிக நீண்டஅர னாரதிடமாங்
கெண்டையிரை கொண்டுகெளி றாருடனி ருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டல்மணல் கெண்டிமட நாரைவிளை யாடுமயி லாடுதுறையே.3.70.9 757. மிண்டுதிறல் அமணரொடு சாக்கியரும் அலர்தூற்ற மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு மானதிட மென்பரெழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை கிளைக்கமது வந்தொழுகு சோலைமயி லாடுதுறையே.3.70.10 758. நிணந்தரும யானநில வானமதி யாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலிகழ லேத்திமிக வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம் பந்தன்மயி லாடுதுறையைப்
புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய் வார்பெறுவர் பொன்னுலகமே.3.70.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.71 திருவைகாவூர் - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்759 கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடுவகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாந்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே.3.71.1 760. அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகஎழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடஅழ கார்குயில்மி ழற்றுபொழில் வைகாவிலே.3.71.2 761. ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவையு ணர்ந்தஅடியார்
ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்கள் தோறுமழகார்
வானமதி யோடுமழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே.3.71.3 762. இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவுந்
தன்னவுரு வாமெனமி குத்ததவன் நீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போம்வகையி னால்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னஇரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே.3.71.4 763. வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகான்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே.3.71.5 764. நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை யாளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல் கரந்தசிவ லோகனமர் கின்றஇடமாம்
அஞ்சுடரொ டாறுபத மேழின்இசை யெண்ணரிய வண்ணமுளதாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே.3.71.6 765. நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையாற்
தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறும் நாளிபல துன்றுகனி நின்றதுதிர
வாளைகுதி கொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே.3.71.7 766. கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடன் நெரித்தஅழ கன்றனிடமாங்
கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்
வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே.3.71.8 767. அந்தமுதல் ஆதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்
எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ நின்றருள்செ யீசனிடமாஞ்
சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே.3.71.9 768. ஈசனெமை யாளுடைய எந்தைபெரு மானிறைவ னென்றுதனையே
பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடந்
தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே.3.71.10 769. முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்திருவை காவிலதனைச்
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனுரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவர் உருத்திரரெனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே.3.71.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வில்லவனேசர், தேவியார் - வளைக்கைவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.72 திருமாகறல் - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்770 விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.3.72.1 771. கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.3.72.2 772. காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.3.72.3 773. இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே.3.72.4 774. துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானோர்மழு வாளன்வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.3.72.5 775. மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே.3.72.6 776. வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.3.72.7 777. தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே.3.72.8 778. தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே.3.72.9 779. காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.3.72.10 780. கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே.3.72.11
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அடைக்கலங்காத்தநாதர், தேவியார் - புவனநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.73 திருப்பட்டீச்சரம் - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்781 பாடன்மறை சூடன்மதி பல்வளையோர் பாகமதில் மூன்றோர்கணையாற்
கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடுமவரே.3.73.1 782. நீரின்மலி புன்சடையர் நீளரவு கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது ஏந்தியுடை கோவணமும் மானின்உரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள் காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர மேத்தவினை பற்றழியுமே.3.73.2 783. காலைமட வார்கள்புன லாடுவது கௌவைகடி யார்மறுகெலாம்
மாலைமணம் நாறுபழை யாறைமழ பாடியழ காயமலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பனுறை பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போற்பெருகி விண்ணுலகம் ஆளுமவரே.3.73.3 784. கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக மேத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட ஆடவல பால்மதியினான்
மண்ணின்மிசை நேரில்மழ பாடிமலி பட்டிசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுட னாதலது மேவலெளிதே.3.73.4 785. மருவமுழ வதிரமழ பாடிமலி மத்தவிழ வார்க்கஅரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை அஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கள்தொழ உள்ளமுடை யாரையடை யாவினைகளே.3.73.5 786. மறையின்ஒலி கீதமொடு பாடுவன பூதமடி மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர் பட்டிசரம் மேயபனிகூர்
பிறையினொடு மருவியதோர் சடையினிடை யேற்றபுனல் தோற்றநிலையாம்
இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர்மிகவே.3.73.6 787. பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார்
துறவியெனும் உள்ளமுடை யார்கள்கொடி வீதியழ காயதொகுசீர்
இறைவனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நறவவிரை யாலுமொழி யாலும்வழி பாடுமற வாதவவரே.3.73.7 788. நேசமிகு தோள்வலவ னாகியிறை வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண ராதநிரம் பாமதியினான்
ஈசனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நாசமற வேண்டுதலின் நண்ணலெளி தாம்அமரர் விண்ணுலகமே.3.73.8 789. தூயமல ரானும்நெடி யானும்அறி யாரவன தோற்றநிலையின்
ஏயவகை யானதனை யாரதறி வாரணிகொள் மார்பினகலம்
பாயநல நீறதணி வானுமைத னோடுமுறை பட்டிசரமே
மேயவன தீரடியு மேத்தஎளி தாகுநல மேலுலகமே.3.73.9 790. தடுக்கினையி டுக்கிமட வார்களிடு பிண்டமது வுண்டுழல்தருங்
கடுப்பொடியு டற்கயவர் கத்துமொழி காதல்செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல்வ யல்கொள்மழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர மேத்தவினை பற்றறுதலே.3.73.10 791. மந்தமலி சோலைமழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர மேயபடர் புன்சடையனை
அந்தண்மறை யோரினிது வாழ்புகலி ஞானசம் பந்தன்அணியார்
செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல தொண்டர்வினை நிற்பதிலவே.3.73.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பட்டீச்சரநாதர், தேவியார் - பல்வளைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.74 திருத்தேவூர் - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்792 காடுபயில் வீடுமுடை யோடுகலன் மூடுமுடை யாடைபுலிதோல்
தேடுபலி யூணதுடை வேடமிகு வேதியர் திருந்துபதிதான்
நாடகம தாடமஞ்ஞை பாடவரி கோடல்கைம்ம றிப்பநலமார்
சேடுமிகு பேடையனம் ஊடிமகிழ் மாடமிடை தேவூரதுவே.3.74.1 793. கோளரவு கொன்றைநகு வெண்டலையெ ருக்குவன்னி கொக்கிறகொடும்
வாளரவு தண்சலம கட்குலவு செஞ்சடைவ ரத்திறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள் குங்குமம்வி ரைக்குமணமார்
தேளரவு தென்றல்தெரு வெங்கும்நிறை வொன்றிவரு தேவூரதுவே.3.74.2 794. பண்தடவு சொல்லின்மலை வல்லியுமை பங்கன்எமை யாளும்இறைவன்
எண்தடவு வானவரி றைஞ்சுகழ லோன்இனிதி ருந்தஇடமாம்
விண்தடவு வார்பொழிலு குத்தநற வாடிமலர் சூடிவிரையார்
*செண்தடவு மாளிகைசெ றிந்துதிரு வொன்றிவளர் தேவூரதுவே.
(* சேண் என்பது செண் எனக் குறுகிநின்றது. )3.74.3 795. மாசில்மனம் நேசர்தம தாசைவளர் சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி ஆடிமிகு பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமும் மாதரவர் பூவைமொழியுந்
தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூரதுவே.3.74.4 796. கானமுறு மான்மறியன் ஆனையுரி போர்வைகன லாடல்புரிவோன்
ஏனஎயி றாமையிள நாகம்வளர் மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ் மாதவிப லாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள் பாடிவரு தேவூரதுவே.3.74.5 797. ஆறினொடு கீறுமதி யேறுசடை யேறன்அடை யார்நகர்கள்தான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன்நமை யாளும்அரனூர்
வீறுமலர் ஊறுமது ஏறிவளர் வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல்வி ளிப்பஇள வாளைவரு தேவூரதுவே.3.74.6 798. கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம் அன்றவிய நின்றுநகைசெய்
என்றனது சென்றுநிலை யெந்தைதன தந்தையமர் இன்பநகர்தான்
முன்றின்மிசை நின்றபல வின்கனிகள் தின்றுகற வைக்குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி ஒன்றவிளை யாடிவளர் தேவூரதுவே.3.74.7 799. ஓதமலி கின்றதென் இலங்கையரை யன்மலிபு யங்கள்நெரியப்
பாதமலி கின்றவிர லொன்றினில டர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கள்நட மாடலொடு பொங்குமுரவஞ்
சேதமலி கின்றகரம் வென்றிதொழி லாளர்புரி தேவூரதுவே.3.74.8 800. வண்ணமுகி லன்னஎழில் அண்ணலொடு சுண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன் நலங்கொள்பதிதான்
வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய அன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகைசெ றிந்தஇசை யாழ்மருவு தேவூரதுவே.3.74.9 801. பொச்சமமர் பிச்சைபயில் அச்சமணு மெச்சமறு போதியருமா
மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு நச்சரவன் மொச்சநகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்... ... ... ... ... ..
... ... ... ... .. ... ... ... ...
( இச்செய்யுளின் மற்றையஅடிகள் சிதைந்துபோயின )3.74.10 802. துங்கமிகு பொங்கரவு தங்குசடை நங்களிறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு பங்கனமர் தேவூரதன்மேல்
பைங்கமல மங்கணிகொள் திண்புகலி ஞானசம் பந்தனுரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை வல்லவர்கள் சங்கையிலரே.3.74.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.75 திருச்சண்பைநகர் - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்803 எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானெனஇ றைஞ்சியிமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே.3.75.1 804. அங்கம்விரி துத்தியர வாமைவிர வாரமமர் மார்பிலழகன்
பங்கயமு கத்தரிவை யோடுபிரி யாதுபயில் கின்றபதிதான்
பொங்குபர வைத்திரைகொ ணர்ந்துபவ ளத்திரள்பொ லிந்தவயலே
சங்குபுரி யிப்பிதர ளத்திரள்பி றங்கொளிகொள் சண்பைநகரே.3.75.2 805. போழுமதி தாழுநதி பொங்கரவு தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை துன்னுபொழில் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென உந்துதகு சண்பைநகரே.3.75.3 806. கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்டமது வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை எட்டுமரு வெட்டும்வளர் தத்தைபயில் சண்பைநகரே.3.75.4 807. பணங்கெழுவு பாடலினோ டாடல்பிரி யாதபர மேட்டிபகவன்
அணங்கெழுவு பாகமுடை ஆகமுடை யன்பர்பெரு மானதிடமாம்
இணங்கெழுவி யாடுகொடி மாடமதில் நீடுவிரை யார்புறவெலாந்
தணங்கெழுவி யேடலர்கொள் தாமரையில் அன்னம்வளர் சண்பைநகரே.3.75.5 808. பாலனுயிர் மேலணவு காலனுயிர் பாறவுதை செய்தபரமன்
ஆலுமயில் போலியலி ஆயிழைத னோடுமமர் வெய்துமிடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர் கெண்டிநற வுண்டிசைசெய
சாலிவயல் கோலமலி சேலுகள நீலம்வளர் சண்பைநகரே.3.75.6 809. விண்பொய்அத னால்மழைவி ழாதொழியி னும்விளைவு தான்மிகவுடை
மண்பொய்அத னால்வளமி லாதொழியி னுந்தமது வண்மைவழுவார்
உண்பகர வாருலகி னூழிபல தோறும்நிலை யானபதிதான்
சண்பைநகர் ஈசனடி தாழுமடி யார்தமது தன்மையதுவே.3.75.7 810. வரைக்குல மகட்கொரு மறுக்கம்வரு வித்தமதி யில்வலியுடை
யரக்கனது ரக்கரசி ரத்துறவ டர்த்தருள் புரிந்தஅழகன்
இருக்கையத ருக்கன்முத லானஇமை யோர்குழுமி யேழ்விழவினிற்
தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே.3.75.8 811. நீலவரை போலநிகழ் கேழலுரு நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானும்அறி யாமைவளர் தீயுருவ மானவரதன்
சேலும்இன வேலும்அன கண்ணியொடு நண்ணுபதி சூழ்புறவெலாஞ்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பைநகரே.3.75.9 812. போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரைகொ ணர்ந்துவயல் புகஎறிகொள் சண்பைநகரே.3.75.10 813. வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு சங்கரன்ம கிழ்ந்தமருமூர்
சாரின்முரல் தெண்கடல்வி சும்புறமு ழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியே.3.75.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.76 திருவேதவனம் - திருவிராகம்
(வேதவனம் என்பது வேதாரணியம்)
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்814 கற்பொலிசு ரத்தினெரி கானினிடை மாநடம தாடிமடவார்
இற்பலிகொ ளப்புகுதும் எந்தைபெரு மானதிடம் என்பர்புவிமேல்
மற்பொலிக லிக்கடன்ம லைக்குவடெ னத்திரைகொ ழித்தமணியை
விற்பொலிநு தற்கொடியி டைக்கணிகை மார்கவரும் வேதவனமே.3.76.1 815. பண்டிரைபௌ வப்புணரி யிற்கனக மால்வரையை நட்டரவினைக்
கொண்டுகயி றிற்கடைய வந்தவிட முண்டகுழ கன்றனிடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல்வெறியார்
வெண்டிரைகள் செம்பவளம் உந்துகடல் வந்தமொழி வேதவனமே.3.76.2 816. காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார்
நாரியொரு பால்மகிழும் நம்பருறை வென்பர்நெடு மாடமறுகில்
தேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால்
வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே.3.76.3 817. நீறுதிரு மேனியின் மிசைத்தொளி பெறத்தடவி வந்திடபமே
ஏறியுல கங்கடொறும் பிச்சைநுகர் இச்சையர் இருந்தபதியாம்
ஊறுபொரு ளின்தமிழி யற்கிளவி தேருமட மாதருடனார்
வேறுதிசை யாடவர்கள் கூறஇசை தேருமெழில் வேதவனமே.3.76.4 818. கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே.3.76.5 819. மாலைமதி வாளரவு கொன்றைமலர் துன்றுசடை நின்றுசுழலக்
காலையி லெழுந்தகதிர் தாரகைம டங்கஅன லாடும்அரனூர்
சோலையின் மரங்கடொறும் மிண்டியின வண்டுமது வுண்டிசைசெய
வேலையொலி சங்குதிரை வங்கசுற வங்கொணரும் வேதவனமே.3.76.6 820. வஞ்சக மனத்தவுணர் வல்லரணம் அன்றவிய வார்சிலைவளைத்
தஞ்சக மவித்தஅம ரர்க்கமர னாதிபெரு மானதிடமாங்
கிஞ்சுக விதழ்க்கனிகள் ஊறியசெவ் வாயவர்கள் பாடல்பயில
விஞ்சக இயக்கர்முனி வக்கணம் நிறைந்துமிடை வேதவனமே.3.76.7 821. முடித்தலைகள் பத்துடை முருட்டுரு வரக்கனை நெருக்கிவிரலால்
அடித்தலமுன் வைத்தலம ரக்கருணை வைத்தவ னிடம்பலதுயர்
கெடுத்தலை நினைத்தற வியற்றுதல் கிளர்ந்துபுல வாணர்வறுமை
விடுத்தலை மதித்துநிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே.3.76.8 822. வாசமலர் மேவியுறை வானும்நெடு மாலுமறி யாதநெறியைக்
கூசுதல்செ யாதஅம ணாதரொடு தேரர்குறு காதஅரனூர்
காசுமணி வார்கனகம் நீடுகட லோடுதிரை வார்துவலைமேல்
வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில் வேதவனமே.3.76.9 இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 3.76.10 823. மந்தமுர வங்கடல் வளங்கெழுவு காழிபதி மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவனம் மேவுசிவன் இன்னருளினாற்
சந்தமிவை தண்டமிழின் இன்னிசை யெனப்பரவு பாடலுலகிற்
பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில் வார்களுயர் வானுலகமே.3.76.11
வேதவனம் என்பது வேதாரணியம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.77 திருமாணிகுழி - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்824 பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர்புனல் தங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்துறைவிடங்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள வள்ளைபடர் அள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை சேருதவி மாணிகுழியே.3.77.1 825. சோதிமிகு நீறதுமெய் பூசியொரு தோலுடை புனைந்துதெருவே
மாதர்மனை தோறும்இசை பாடிவசி பேசும்அர னார்மகிழ்விடந்
தாதுமலி தாமரைம ணங்கமழ வண்டுமுரல் தண்பழனமிக்
கோதமலி வேலைபுடை சூழுலகில் நீடுதவி மாணிகுழியே.3.77.2 826. அம்பனைய கண்ணுமை மடந்தையவள் அஞ்சிவெரு வச்சினமுடைக்
கம்பமத யானையுரி செய்தஅர னார்கருதி மேயவிடமாம்
வம்புமலி சோலைபுடை சூழமணி மாடமது நீடியழகார்
உம்பரவர் கோன்நகர மென்னமிக மன்னுதவி மாணிகுழியே.3.77.3 827. நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவுஞ்
சித்தமதொ ருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாங்
கொத்தலர் மலர்ப்பொழிலின் நீடுகுல மஞ்ஞைநடம் ஆடலதுகண்
டொத்தவரி வண்டுகளு லாவியிசை பாடுதவி மாணிகுழியே.3.77.4 828. மாசில்மதி சூடுசடை மாமுடியர் வல்லசுரர் தொன்னகரமுன்
நாசமது செய்துநல வானவர்க ளுக்கருள்செய் நம்பனிடமாம்
வாசமலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னியழகார்
ஊசல்மிசை யேறியினி தாகஇசை பாடுதவி மாணிகுழியே.3.77.5 829. மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாஞ்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே.3.77.6 830. எண்பெரிய வானவர்கள் நின்றுதுதி செய்யஇறை யேகருணையாய்
உண்பரிய நஞ்சதனை உண்டுலகம் உய்யஅருள் உத்தமனிடம்
பண்பயிலும் வண்டுபல கெண்டிமது உண்டுநிறை பைம்பொழிலின்வாய்
ஒண்பலவின் இன்கனி சொரிந்துமணம் நாறுதவி மாணிகுழியே.3.77.7 831. எண்ணமது வின்றியெழி லார்கைலை மாமலை யெடுத்ததிறலார்
திண்ணிய அரக்கனை நெரித்தருள் புரிந்தசிவ லோகனிடமாம்
பண்ணமரும் மென்மொழியி னார்பணைமு லைப்பவள வாயழகதார்
ஒண்ணுதல் மடந்தையர் குடைந்துபுன லாடுதவி மாணிகுழியே.3.77.8 832. நேடும்அய னோடுதிரு மாலும்உண ராவகை நிமிர்ந்துமுடிமேல்
ஏடுலவு திங்கள்மத மத்தமித ழிச்சடையெம் ஈசனிடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்திகுரவின்
ஊடுலவு புன்னைவிரி தாதுமலி சேருதவி மாணிகுழியே.3.77.9 833. மொட்டையமண் ஆதர்முது தேரர்மதி யில்லிகள் முயன்றனபடும்
முட்டைகள் மொழிந்தமொழி கொண்டருள்செய் யாதமுதல் வன்றனிடமாம்
மட்டைமலி தாழையிள நீர்முதிய வாழையில் விழுந்தஅதரில்
ஒட்டமலி பூகம்நிரை தாறுதிர வேறுதவி மாணிகுழியே.3.77.10 834. உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி மாணிகுழிமேல்
அந்திமதி சூடியஎம் மானையடி சேருமணி காழிநகரான்
சந்தம்நிறை தண்டமிழ் தெரிந்துணரும் ஞானசம் பந்தனதுசொல்
முந்தியிசை செய்துமொழி வார்களுடை யார்கள்நெடு வானநிலனே.3.77.11
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கமேனியீசுவரர், தேவியார் - மாணிக்கவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.78 திருவேதிகுடி - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்835 நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்தவிடமாந்
தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே.3.78.1 836. சொற்பிரி விலாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமுன் அயின்றவரி யன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே.3.78.2 837. போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நூலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே.3.78.3 838. காடர்கரி காலர்கனல் கையரனல் மெய்யருடல் செய்யர்செவியிற்
தோடர்தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கள்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே.3.78.4 839. சொக்கர்துணை மிக்கஎயில் உக்கற முனிந்துதொழும் மூவர்மகிழத்
தக்கஅருள் பக்கமுற வைத்தஅர னாரினிது தங்கும்நகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலா
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே.3.78.5 840. செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்
தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியும் அண்ணலிடமாம்
வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழிவி லாதவகையார்
வெய்யமொழி தண்புலவ ருக்குரை செயாதஅவர் வேதிகுடியே.3.78.6 841. உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்
கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே.3.78.7 842. உரக்கர நெருப்பெழ நெருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்
அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணனிடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்தகலவை
விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே.3.78.8 843. பூவின்மிசை அந்தணனொ டாழிபொலி அங்கையனும் நேடஎரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்கள் ஓசையியல் கேள்வியத றாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே.3.78.9 844. வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்ம னத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென என்றுமுண ராதஅடி யார்கருது சைவனிடமாம்
அஞ்சுபுலன் வென்றறுவ கைப்பொருள் தெரிந்தெழு இசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே.3.78.10 845. கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது வேசரதம் ஆணைநமதே.3.78.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர், தேவியார் - மங்கையர்க்கரசியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.79 திருக்கோகரணம் - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்846 என்றுமரி யானயல வர்க்கியலி சைப்பொருள்க ளாகியெனதுள்
நன்றுமொளி யானொளிசி றந்தபொன்மு டிக்கடவுள் நண்ணுமிடமாம்
ஒன்றிய மனத்தடியர் கூடியிமை யோர்பரவும் நீடரவமார்
குன்றுகள் நெருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் கோகரணமே.3.79.1 847. பேதைமட மங்கையொரு பங்கிட மிகுத்திடப மேறியமரர்
வாதைபட வண்கடலெ ழுந்தவிட முண்டசிவன் வாழுமிடமாம்
மாதரொடும் ஆடவர்கள் வந்தடியி றைஞ்சிநிறை மாமலர்கள்தூய்க்
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே.3.79.2 848. முறைத்திறம் உறப்பொருள் தெரிந்துமுனி வர்க்கருளி யாலநிழல்வாய்
மறைத்திறம றத்தொகுதி கண்டுசம யங்களைவ குத்தவனிடந்
துறைத்துறை மிகுத்தருவி தூமலர் சுமந்துவரை யுந்திமதகைக்
குறைத்தறையி டக்கரி புரிந்திடறு சாரல்மலி கோகரணமே.3.79.3 849. இலைத்தலை மிகுத்தபடை யெண்கரம் விளங்கஎரி வீசிமுடிமேல்
அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில் வைத்தஅழ கன்றனிடமாம்
மலைத்தலை வகுத்தமுழை தோறும்உழை வாளரிகள் கேழல்களிறு
கொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளை யாடிநிகழ் கோகரணமே.3.79.4 850. தொடைத்தலை மலைத்திதழி துன்னிய எருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சிய தபோதனன் எமாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே.3.79.5 851. நீறுதிரு மேனிமிசை யாடிநிறை வார்கழல்சி லம்பொலிசெய
ஏறுவிளை யாடவிசை கொண்டிடு பலிக்குவரும் ஈசனிடமாம்
ஆறுசம யங்களும் விரும்பியடி பேணியரன் ஆகமமிகக்
கூறுவனம் வேறிரதி வந்தடியர் கம்பம்வரு கோகரணமே.3.79.6 852. கல்லவடம் மொந்தைகுழல் தாளமலி கொக்கரைய ரக்கரைமிசை
பல்லபட நாகம்விரி கோவணவர் ஆளுநகர் என்பரயலே
நல்லமட மாதரரன் நாமமும் நவிற்றிய திருத்தமுழுகக்
கொல்லவிட நோயகல்த ரப்புகல்கொ டுத்தருளு கோகரணமே.3.79.7 853. வரைத்தலம் நெருக்கிய முருட்டிருள் நிறத்தவன வாய்கள்அலற
விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு மானினிது மேவுமிடமாம்
புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி வாகிவினை தீரஅதன்மேல்
குரைத்தலை கழற்பணிய ஓமம்வில கும்புகைசெய் கோகரணமே.3.79.8 854. வில்லிமையி னால்விறல ரக்கனுயிர் செற்றவனும் வேதமுதலோன்
இல்லையுள தென்றிகலி நேடஎரி யாகியுயர் கின்றபரனூர்
எல்லையில் வரைத்தகடல் வட்டமும் இறைஞ்சிநிறை வாசமுருவக்
கொல்லையில் இருங்குறவர் தம்மயிர் புலர்த்திவளர் கோகரணமே.3.79.9 855. நேசமில் மனச்சமணர் தேரர்கள்நி ரந்தமொழி பொய்கள்அகல்வித்
தாசைகொள் மனத்தையடி யாரவர் தமக்கருளும் அங்கணனிடம்
பாசமத றுத்தவனி யிற்பெயர்கள் பத்துடைய மன்னன்அவனைக்
கூசவகை கண்டுபின் அவற்கருள்கள் நல்கவல கோகரணமே.3.79.10 856. கோடலர வீனும்விரி சாரல்முன் நெருங்கிவளர் கோகரணமே
ஈடமினி தாகவுறை வானடிகள் பேணியணி காழிநகரான்
நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய் ஞானசம் பந்தன்மொழிகள்
பாடவல பத்தரவர் எத்திசையும் ஆள்வர்பர லோகமெளிதே.3.79.11
இத்தலம் துளுவதேசத்திலிருப்பது.
அந்தத்தேயத்தில் இது ஒரேதலம்.
சுவாமிபெயர் - மாபலநாதர், தேவியார் - கோகரணநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.80 திருவீழிமிழலை - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்857 சீர்மருவு தேசினொடு தேசமலி செல்வமறை யோர்கள்பணியத்
தார்மருவு கொன்றையணி தாழ்சடையி னானமர்ச யங்கொள்பதிதான்
பார்மருவு பங்கயமு யர்ந்தவயல் சூழ்பழன நீடஅருகே
கார்மருவு வெண்கனக மாளிகை கவின்பெருகு வீழிநகரே.3.80.1 858. பட்டமுழ விட்டபணி லத்தினொடு பன்மறைகள் ஓதுபணிநற்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்யவருள் செய்தழல்கொள் மேனியவனூர்
மட்டுலவு செங்கமல வேலிவயல் செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்
விட்டுலவு தென்றல்விரை நாறுபதி வேதியர்கள் வீழிநகரே.3.80.2 859. மண்ணிழி சுரர்க்குவளம் மிக்கபதி மற்றுமுள மன்னுயிர்களுக்
கெண்ணிழிவில் இன்பநிகழ் வெய்தஎழி லார்பொழில் இலங்கறுபதம்
பண்ணிழிவி லாதவகை பாடமட மஞ்ஞைநட மாடஅழகார்
விண்ணிழி விமானமுடை விண்ணவர் பிரான்மருவு வீழிநகரே.3.80.3 860. செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நன்கலை தெரிந்தவவரோ
டந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅரனூர்
கொந்தலர் பொழிற்பழன வேலிகுளிர் தண்புனல் வளம்பெருகவே
வெந்திறல் விளங்கிவளர் வேதியர் விரும்புபதி வீழிநகரே.3.80.4 861. பூதபதி யாகிய புராணமுனி புண்ணியநன் மாதைமருவிப்
பேதமதி லாதவகை பாகமிக வைத்தபெரு மானதிடமாம்
மாதவர்கள் அன்னமறை யாளர்கள் வளர்த்தமலி வேள்வியதனால்
ஏதமதி லாதவகை இன்பம்அமர் கின்றஎழில் வீழிநகரே.3.80.5 862. மண்ணின்மறை யோர்மருவு வைதிகமும் மாதவமும் மற்றுமுலகத்
தெண்ணில்பொரு ளாயவை படைத்தஇமை யோர்கள்பெரு மானதிடமாம்
நண்ணிவரு நாவலர்கள் நாடொறும் வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்
விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர் நீள்புரிசை வீழிநகரே.3.80.6 863. மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை மிக்கபுகைபோய்
அந்தர விசும்பணவி அற்புத மெனப்படரும் ஆழியிருள்வாய்
மந்தரநன் மாளிகை நிலாவுமணி நீடுகதிர் விட்டஒளிபோய்
வெந்தழல் விளக்கென விரும்பினர் திருந்துபதி வீழிநகரே.3.80.7 864. ஆனவலி யிற்றசமு கன்றலைய ரங்கவணி யாழிவிரலால்
ஊனமரு யர்ந்தகுரு திப்புனலில் வீழ்தரவு ணர்ந்தபரனூர்
தேனமர் திருந்துபொழில் செங்கனக மாளிகை திகழ்ந்தமதிலோ
டானதிரு உற்றுவளர் அந்தணர் நிறைந்தஅணி வீழிநகரே.3.80.8 865. ஏனவுரு வாகிமண் இடந்தஇமை யோனுமெழி லன்னவுருவம்
ஆனவனும் ஆதியினொ டந்தமறி யாதஅழல் மேனியவனூர்
வானணவும் மாமதில் மருங்கலர் நெருங்கிய வளங்கொள்பொழில்வாய்
வேனலமர் வெய்திட விளங்கொளியின் மிக்கபுகழ் வீழிநகரே.3.80.9 866. குண்டமண ராகியொரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடித்
தெண்டிசையு மில்லதொரு தெய்வமுள தென்பரது வென்னபொருளாம்
பண்டையய னன்னவர்கள் பாவனை விரும்புபரன் மேவுபதிசீர்
வெண்டரள வாள்நகைநன் மாதர்கள் விளங்குமெழில் வீழிநகரே.3.80.10 867. மத்தமலி கொன்றைவளர் வார்சடையில் வைத்தபரன் வீழிநகர்சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்புதமிழ் மாலைகள்வலார்
சித்திர விமானம்அமர் செல்வமலி கின்றசிவ லோகமருவி
அத்தகு குணத்தவர்க ளாகியனு போகமோடி யோகவரதே.3.80.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.81 திருத்தோணிபுரம் - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்868 சங்கமரு முன்கைமட மாதையொரு பாலுடன் விரும்பி
அங்கமுடல் மேலுறவ ணிந்துபிணி தீரஅருள் செய்யும்
எங்கள்பெரு மானிடமெ னத்தகுமு னைக்கடலின் முத்தந்
துங்கமணி இப்பிகள் கரைக்குவரு தோணிபுர மாமே.3.81.1 869. சல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்பக்
கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து
அல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே.3.81.2 870. வண்டரவு கொன்றைவளர் புன்சடையின் மேல்மதியம் வைத்துப்
பண்டரவு தன்னரையி லார்த்தபர மேட்டிபழி தீரக்
கண்டரவ வொண்கடலின் நஞ்சமமு துண்டகட வுள்ளூர்
தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு தோணிபுர மாமே.3.81.3 871. கொல்லைவிடை யேறுடைய கோவணவன் நாவணவு மாலை
ஒல்லையுடை யான்அடைய லார்அரணம் ஒள்ளழல் விளைத்த
வில்லையுடை யான்மிக விரும்புபதி மேவிவளர் தொண்டர்
சொல்லையடை வாகஇடர் தீர்த்தருள்செய் தோணிபுர மாமே.3.81.4 872. தேயுமதி யஞ்சடை யிலங்கிட விலங்கன்மலி கானிற்
காயுமடு திண்கரியின் ஈருரிவை போர்த்தவன் நினைப்பார்
தாயெனநி றைந்ததொரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு
தூயமறை யாளர்முறை யோதிநிறை தோணிபுர மாமே.3.81.5 873. பற்றலர்தம் முப்புரம் எரித்தடி பணிந்தவர்கள் மேலைக்
குற்றம தொழித்தருளு கொள்கையினன் வெள்ளின்முது கானிற்
பற்றவன் இசைக்கிளவி பாரிடம தேத்தநட மாடுந்
துற்றசடை அத்தனுறை கின்றபதி தோணிபுர மாமே.3.81.6 874. பண்ணமரு நான்மறையர் நூன்முறை பயின்றதிரு மார்பிற்
பெண்ணமரு மேனியினர் தம்பெருமை பேசும்அடி யார்மெய்த்
திண்ணமரும் வல்வினைகள் தீரஅருள் செய்தலுடை யானூர்
துண்ணென விரும்புசரி யைத்தொழிலர் தோணிபுர மாமே.3.81.7 875. தென்றிசை யிலங்கையரை யன்திசைகள் வீரம்விளை வித்து
வென்றிசை புயங்களை யடர்த்தருளும் வித்தக னிடஞ்சீர்
ஒன்றிசை யியற்கிளவி பாடமயி லாடவளர் சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுரல் தோணிபுர மாமே.3.81.8 876. நாற்றமிகு மாமலரின் மேலயனும் நாரணனும் நாடி
ஆற்றலத னால்மிக வளப்பரிய வண்ணம்எரி யாகி
ஊற்றமிகு கீழுலகும் மேலுலகும் ஓங்கியெழு தன்மைத்
தோற்றமிக நாளுமரி யானுறைவு தோணிபுர மாமே.3.81.9 877. மூடுதுவ ராடையினர் வேடநிலை காட்டும்அமண் ஆதர்
கேடுபல சொல்லிடுவ ரம்மொழி கெடுத்தடை வினானக்
காடுபதி யாகநட மாடிமட மாதொடிரு காதிற்
தோடுகுழை பெய்தவர் தமக்குறைவு தோணிபுர மாமே.3.81.10 878. துஞ்சிருளின் நின்றுநட மாடிமிகு தோணிபுர மேய
மஞ்சனை வணங்குதிரு ஞானசம் பந்தனசொன் மாலை
தஞ்சமென நின்றிசை மொழிந்தஅடி யார்கள்தடு மாற்றம்
வஞ்சமிலர் நெஞ்சிருளும் நீங்கியருள் பெற்றுவளர் வாரே.3.81.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.82 திருஅவளிவணல்லூர் - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்879 கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடு குலாவித்
தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாக
அம்பெரிய வெய்தபெரு மானுறைவ தவளிவண லூரே.3.82.1 880. ஓமையன கள்ளியன வாகையன கூகைமுர லோசை
ஈமம்எரி சூழ்சுடலை வாசமுது காடுநட மாடித்
தூய்மையுடை அக்கொடர வம்விரவி மிக்கொளி துளங்க
ஆமையொடு பூணும்அடி கள்ளுறைவ தவளிவண லூரே.3.82.2 881. நீறுடைய மார்பில்இம வான்மகளோர் பாகம்நிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடியழ காயதொரு கோலம்
ஏறுடைய ரேனுமிடு காடிரவில் நின்றுநட மாடும்
ஆறுடைய வார்சடையி னான்உறைவ தவளிவண லூரே.3.823 882. பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமிலர் என்றுலகு பேணிப்
பணியும்அடி யார்களன பாவம்அற இன்னருள் பயந்து
துணியுடைய தோலுமுடை கோவணமும் நாகமுடல் தொங்க
அணியுமழ காகவுடை யானுறைவ தவளிவண லூரே.3.82.4 883. குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு ளென்றமரர் கூடித்
தொழலும்வழி பாடுமுடை யார்துயரு நோயுமில ராவர்
அழலுமழு ஏந்துகையி னானுறைவ தவளிவண லூரே.3.82.5 884. துஞ்சலில ராயமரர் நின்றுதொழு தேத்தஅருள் செய்து
நஞ்சுமிட றுண்டுகரி தாயஎளி தாகியொரு நம்பன்
மஞ்சுற நிமிர்ந்துமை நடுங்கஅக லத்தொடு வளாவி
அஞ்சமத வேழவுரி யானுறைவ தவளிவண லூரே.3.82.6 885. கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி னோடும்இசை செய்யப்
பீடரவ மாகுபட ரம்புசெய்து பேரிடப மோடுங்
காடரவ மாகுகனல் கொண்டிரவில் நின்றுநட மாடி
ஆடரவம் ஆர்த்தபெரு மானுறைவ தவளிவண லூரே.3.82.7 886. ஒருவரையும் மேல்வலிகொ டேனென எழுந்தவிற லோன்இப்
பெருவரையின் மேலோர்பெரு மானுமுள னோவென வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்னதிறல் கைகளுடை யோனை
அருவரையி லூன்றியடர்த் தானுறைவ தவளிவண லூரே.3.82.8 887. பொறிவரிய நாகமுயர் பொங்கணைய ணைந்தபுக ழோனும்
வெறிவரிய வண்டறைய விண்டமலர் மேல்விழுமி யோனுஞ்
செறிவரிய தோற்றமொடு ஆற்றல்மிக நின்றுசிறி தேயும்
அறிவரிய னாயபெரு மானுறைவ தவளிவண லூரே.3.82.9 888. கழியருகு பள்ளியிட மாகவடு மீன்கள்கவர் வாரும்
வழியருகு சாரவெயில் நின்றடிசி லுள்கிவரு வாரும்
பழியருகி னாரொழிக பான்மையொடு நின்றுதொழு தேத்தும்
அழியருவி தோய்ந்தபெரு மானுறைவ தவளிவண லூரே.3.82.10 889. ஆனமொழி யானதிற லோர்பரவும் அவளிவண லூர்மேல்
போனமொழி நன்மொழிக ளாயபுகழ் தோணிபுர வூரன்
ஞானமொழி மாலைபல நாடுபுகழ் ஞானசம் பந்தன்
தேனமொழி மாலைபுகழ் வார்துயர்கள் தீயதிலர் தாமே.3.82.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிநாயகர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.83 திருநல்லூர் - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்890 வண்டிரிய விண்டமலர் மல்குசடை தாழவிடை யேறிப்
பண்டெரிகை கொண்டபர மன்பதிய தென்பரத னயலே
நண்டிரிய நாரையிரை தேரவரை மேலருவி முத்தந்
தெண்டிரைகள் மோதவிரி போதுகம ழுந்திருந லூரே.3.83.1 891. பல்வளரு நாகமரை யார்த்துவரை மங்கையொரு பாகம்
மல்வளர் புயத்திலணை வித்துமகி ழும்பரம னிடமாஞ்
சொல்வளரி சைக்கிளவி பாடிமட வார்நடம தாடச்
செல்வமறை யோர்கள்முறை யேத்தவள ருந்திருந லூரே.3.83.2 892. நீடுவரை மேருவில தாகநிகழ் நாகம்அழ லம்பாற்
கூடலர்கள் மூவெயி லெரித்தகுழ கன்குலவு சடைமேல்
ஏடுலவு கொன்றைபுனல் நின்றுதிக ழுந்நிமல னிடமாஞ்
சேடுலவு தாமரைகள் நீடுவய லார்திருந லூரே.3.83.3 893. கருகுபுரி மிடறர்கரி காடரெரி கைஅதனி லேந்தி
அருகுவரு கரியினுரி யதளர்பட அரவரிடம் வினவில்
முருகுவிரி பொழிலின்மணம் நாறமயி லாலமர மேறித்
திருகுசின மந்திகனி சிந்தமது வார்திருந லூரே.3.83.4 894. பொடிகொள்திரு மார்பர்புரி நூலர்புனல் பொங்கரவு தங்கும்
முடிகொள்சடை தாழவிடை யேறுமுத லாளரவ ரிடமாம்
இடிகொள்முழ வோசையெழி லார்செய்தொழி லாளர்விழ மல்கச்
செடிகொள்வினை யகலமனம் இனியவர்கள் சேர்திருந லூரே.3.83.5 895. புற்றரவர் நெற்றியொர்கண் ஒற்றைவிடை யூர்வரடை யாளஞ்
சுற்றமிருள் பற்றியபல் பூதம்இசை பாடநசை யாலே
கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கள் முற்றும்எயில் மாளச்
செற்றவர் இருப்பிடம் நெருக்குபுன லார்திருந லூரே.3.83.6 896. பொங்கரவர் அங்கமுடன் மேலணிவர் ஞாலமிடு பிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய் துலங்கியவெண் ணீற்றர்
கங்கையர வம்விரவு திங்கள்சடை யடிகளிடம் வினவிற்
செங்கயல் வதிக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே.3.83.7 897. ஏறுபுகழ் பெற்றதென் இலங்கையவர் கோனையரு வரையிற்
சீறியவ னுக்கருளும் எங்கள்சிவ லோகனிட மாகுங்
கூறும்அடி யார்களிசை பாடிவலம் வந்தயரும் அருவிச்
சேறுகம ரானவழி யத்திகழ்த ருந்திருந லூரே.3.83.8 898. மாலுமலர் மேலயனும் நேடியறி யாமையெரி யாய
கோலமுடை யானுணர்வு கோதில்புக ழானிடம தாகும்
நாலுமறை யங்கமுத லாறுமெரி மூன்றுதழ லோம்புஞ்
சீலமுடை யார்கள்நெடு மாடம்வள ருந்திருந லூரே.3.83.9 899. கீறுமுடை கோவணமி லாமையிலோ லோவியத வத்தர்
பாறுமுடன் மூடுதுவ ராடையர்கள் வேடமவை பாரேல்
ஏறுமட வாளொடினி தேறிமுனி ருந்தவிட மென்பர்
தேறுமன வாரமுடை யார்குடிசெ யுந்திருந லூரே.3.83.10 900. திரைகளிரு கரையும்வரு பொன்னிநில வுந்திருந லூர்மேல்
பரசுதரு பாணியை நலந்திகழ்செய் தோணிபுர நாதன்
உரைசெய்தமிழ் ஞானசம் பந்தனிசை மாலைமொழி வார்போய்
விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி பேறுபெறு வாரே.3.83.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.84 திருப்புறவம் - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்901 பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறைக்
கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர்
நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதி
புண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே.3.84.1 902. கொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்குடை வடமுமோர் அரவமு மலரரை மிசையினிற்
திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும்
புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ் புறவமே.3.84.2 903. கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை உமையொரு
பங்கியல் திருவுரு வுடையவர் பரசுவொ டிரலைமெய்
தங்கிய கரதல முடையவர் விடையவர் உறைபதி
பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் புறவமே.3.84.3 904. மாதவ முடைமறை யவனுயிர் கொளவரு மறலியை
மேதகு திருவடி யிறையுற வுயிரது விலகினார்
சாதக வுருவியல் கானிடை உமைவெரு வுறவரு
போதக உரியதள் மருவினர் உறைபதி புறவமே.3.84.4 905. காமனை யழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில்
தூமம துறவிறல் சுடர்கொளு வியஇறை தொகுபதி
ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ டொளிகெழு
பூமகன் அலரொடு புனல்கொடு வழிபடு புறவமே.3.84.5 906. சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னைய நடுவுணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறஅரு ளினருறை முதுபதி
புன்னையின் முகைநெதி பொதியவிழ் பொழிலணி புறவமே.3.84.6 907. வரிதரு புலியத ளுடையினர் மழுவெறி படையினர்
பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர்
எரிதரு முருவினர் இமையவர் தொழுவதோ ரியல்பினர்
புரிதரு குழலுமை யொடுமினி துறைபதி புறவமே.3.84.7 908. வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை வலிசெயும்
நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிவுற
ஒசிதர வொருவிரல் நிறுவினர் ஒளிவளர் வெளிபொடி
பொசிதரு திருவுரு வுடையவர் உறைபதி புறவமே.3.84.8 909. தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்
ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும்
வானகம் வரையக மறிகடல் நிலனெனு மெழுவகைப்
போனக மருவின னறிவரி யவர்பதி புறவமே.3.84.9 910. கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர்
நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த முறைபதி
பூசுரர் மறைபயில் நிறைபுக ழொலிமலி புறவமே.3.84.10 911. போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனை
வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்
ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள வுரைசெயும்
நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு பிறவியே.3.84.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.85 திருவீழிமிழலை - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்912 மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரல்
பட்டொளி மணியல்குல் உமையமை யுருவொரு பாகமாக்
கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை முடிமிசை
விட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழி மிழலையே3.85.1 913. எண்ணிற வரிவளை நெறிகுழல் எழில்மொழி யிளமுலைப்
பெண்ணுறும் உடலினர் பெருகிய கடல்விட மிடறினர்
கண்ணுறு நுதலினர் கடியதோர் விடையினர் கனலினர்
விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி மிழலையே.3.85.2 914. மைத்தகு மதர்விழி மலைமகள் உருவொரு பாகமா
வைத்தவர் மதகரி யுரிவைசெய் தவர்தமை மருவினார்
தெத்தென இசைமுரல் சரிதையர் திகழ்தரும் அரவினர்
வித்தக நகுதலை யுடையவர் இடம்விழி மிழலையே.3.85.3 915. செவ்வழ லெனநனி பெருகிய வுருவினர் செறிதரு
கவ்வழல் அரவினர் கதிர்முதிர் மழுவினர் தொழுவிலா
முவ்வழல் நிசிசரர் விறலவை யழிதர முதுமதில்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி மிழலையே.3.85.4 916. பைங்கண தொருபெரு மழலைவெ ளேறினர் பலியெனா
எங்கணு முழிதர்வர் இமையவர் தொழுதெழும் இயல்பினர்
அங்கணர் அமரர்கள் அடியிணை தொழுதெழ ஆரமா
வெங்கண அரவினர் உறைதரு பதிவிழி மிழலையே.3.85.5 917. பொன்னன புரிதரு சடையினர் பொடியணி வடிவினர்
உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தரு மார்பினில்
மின்னென மிளிர்வதோர் அரவினர் பதிவிழி மிழலையே.3.85.6 918. அக்கினோ டரவரை யணிதிகழ் ஒளியதோ ராமைபூண்
டிக்குக மலிதலை கலனென இடுபலி யேகுவர்
கொக்கரை குழல்முழ விழவொடு மிசைவதோர் சரிதையர்
மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.3.85.7 919. பாதமோர் விரலுற மலையடர் பலதலை நெரிதரப்
பூதமோ டடியவர் புனைகழல் தொழுதெழு புகழினர்
ஓதமோ டொலிதிரை படுகடல் விடமுடை மிடறினர்
வேதமோ டுறுதொழில் மதியவர் பதிவிழி மிழலையே.3.85.8 920. நீரணி மலர்மிசை உறைபவன் நிறைகடல் உறுதுயில்
நாரண னெனஇவர் இருவரும் நறுமல ரடிமுடி
ஓருணர் வினர்செல லுறலரு முருவினோ டொளிதிகழ்
வீரணர் உறைவது வெறிகமழ் பொழில்விழி மிழலையே.3.85.9 921. இச்சைய ரினிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்
பிச்சையர் பெருமையை யிறைபொழு தறிவென வுணர்விலர்
மொச்சைய அமணரும் முடைபடு துகிலரும் அழிவதோர்
விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.3.85.10 922. உன்னிய அருமறை யொலியினை முறைமிகு பாடல்செய்
இன்னிசை யவருறை யெழில்திகழ் பொழில்விழி மிழலையை
மன்னிய புகலியுள் ஞானசம் பந்தன வண்டமிழ்
சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி பெறுவரே.3.85.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.86 திருச்சேறை - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்923 முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த விறலினர்
நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.3.86.1 924. புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதோர் புரிவினர்
மனமுடை அடியவர் படுதுயர் களைவதோர் வாய்மையர்
இனமுடை மணியினோ டரைசிலை யொளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை யடிகள்தம் வளநகர் சேறையே.3.86.2 925. புரிதரு சடையினர் புலியதள் அரையினர் பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் இடபம தேறுவ ரீடுலா
வரிதரு வளையின ரவரவர் மகிழ்தர மனைதொறுந்
திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே.3.86.3 926. துடிபடும் இடையுடை மடவர லுடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர்
பொடிபடும் உருவினர் புலியுரி பொலிதரும் அரையினர்
செடிபடு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.3.86.4 927. அந்தர முழிதரு திரிபுர மொருநொடி யளவினில்
மந்தர வரிசிலை யதனிடை யரவரி வாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி மிடறினர்
செந்தழல் நிறமுடை யடிகள்தம் வளநகர் சேறையே.3.86.5 928. மத்தர முறுதிறன் மறவர்தம் வடிவுகொ டுருவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை அசைவுசெய் பரிசினால்
அத்திரம் அருளும்நம் அடிகள தணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.3.86.6 929. பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம்
ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய
வாடினர் படுதலை யிடுபலி யதுகொடு மகிழ்தருஞ்
சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.3.86.7 930. கட்டுர மதுகொடு கயிலைநல் மலைநலி கரமுடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி யொருபதும் நெரிசெய்தார்
மட்டுர மலரடி யடியவர் தொழுதெழ அருள்செயுஞ்
சிட்டர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.3.86.8 931. பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
அன்றிய அவரவர் அடியொடு முடியவை யறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி நடுவெயோர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட அருளிய அவர்நகர் சேறையே.3.86.9 932. துகடுறு விரிதுகில் உடையவர் அமணெனும் வடிவினர்
விகடம துறுசிறு மொழியவை நலமில மெனவிடன்
முகிழ்தரும் இளமதி யரவொடும் அழகுற முதுநதி
திகழ்தரு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.3.86.10 933. கற்றநன் மறைபயில் அடியவர் அடிதொழு கவினுறு
சிற்றிடை யவளொடு மிடமென வுறைவதோர் சேறைமேற்
குற்றமில் புகலியுள் இகலறு ஞானசம் பந்தன
சொற்றக வுறமொழி பவரழி விலர்துயர் தீருமே.3.86.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சென்னெறியப்பர், தேவியார் - ஞானவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.87 திருநள்ளாறு - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்934 தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தம் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.3.87.1 935. போதமர் தருபுரி குழலெழின் மலைமகள் பூணணி
சீதம தணிதரு முகிழிள வனமுலை செறிதலின்
நாதம தெழிலுரு வனையநள் ளாறர்தந் நாமமே
மீதம தெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.3.87.2 936. இட்டுறு மணியணி யிணர்புணர் வளரொளி யெழில்வடங்
கட்டுறு கதிரிள வனமுலை யிணையொடு கலவலின்
நட்டுறு செறிவயல் மருவுநள் ளாறர்தந் நாமமே
இட்டுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.3.87.3 937. மைச்சணி வரியரி நயனிதொன் மலைமகள் பயனுறு
கச்சணி கதிரிள வனமுலை யவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை யடிகள்நள் ளாறர்தந் நாமமே
மெச்சணி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.3.87.4 938. பண்ணியல் மலைமகள் கதிர்விடு பருமணி யணிநிறக்
கண்ணியல் கலசம தனமுலை யிணையொடு கலவலின்
நண்ணிய குளிர்புனல் புகுதுநள் ளாறர்தந் நாமமே
விண்ணிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.3.87.5 939. போதுறு புரிகுழல் மலைமகள் இளவளர் பொன்னணி
சூதுறு தளிர்நிற வனமுலை யவையொடு துதைதலின்
தாதுறு நிறமுடை யடிகள்நள் ளாறர்தந் நாமமே
மீதுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.3.87.6 940. கார்மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவினுறு
சீர்மலி தருமணி யணிமுலை திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை யுடையநள் ளாறர்தந் நாமமே
ஏர்மலி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.3.87.7 941. மன்னிய வளரொளி மலைமகள் தளிர்நிற மதமிகு
பொன்னியல் மணியணி கலசம தனமுலை புணர்தலின்
தன்னியல் தசமுகன் நெறியநள் ளாறர்தந் நாமமே
மின்னிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.3.87.8 942. கான்முக மயிலியன் மலைமகள் கதிர்விடு கனமிகு
பான்முக மியல்பணை யிணைமுலை துணையொடு பயிறலின்
நான்முகன் அரியறி வரியநள் ளாறர்தந் நாமமே
மேன்முக வெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.3.87.9 943. அத்திர நயனிதொன் மலைமகள் பயனுறு மதிசயச்
சித்திர மணியணி திகழ்முலை யிணையொடு செறிதலின்
புத்தரொ டமணர்பொய் பெயருநள் ளாறர்தந் நாமமே
மெய்த்திர ளெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.3.87.10 944. சிற்றிடை அரிவைதன் வனமுலை யிணையொடு செறிதரு
நற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தன
கொற்றவன் எதிரிடை யெரியினி லிடஇவை கூறிய
சொற்றெரி யொருபதும் அறிபவர் துயரிலர் தூயரே.3.87.11
இது சமணர் வாதின்பொருட்டுத் தீயிலிடுதற்கு போகமார்த்த பூண்முலையாளென்னும்
பதிகம் உதயமாக இது தீயில் பழுது படாது என்னுந் துணிவுகொண்டு அருளிச்செய்த பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.88 திருவிளமர் - திருவிராகம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்945 மத்தக மணிபெற மலர்வதோர் மதிபுரை நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதோர் அரவினர் ஒளிகிளர்
அத்தக வடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.3.88.1 946. பட்டில கியமுலை அரிவையர் உலகினில் இடுபலி
ஒட்டில கிணைமர வடியினர் உமையுறு வடிவினர்
சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர்
விட்டில கழகொளி பெயரவர் உறைவது விளமரே.3.88.2 947. அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதோர் அரவொடு
செங்கதி ரெனநிற மனையதோர் செழுமணி மார்பினர்
சங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர்
வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே.3.88.3 948. மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர் விரவுசீர்ப்
பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல் சரிதைகள்
பாடலர் ஆடிய சுடலையில் இடமுற நடம்நவில்
வேடம துடையவர் வியன்நக ரதுசொலில் விளமரே.3.88.4 949. பண்டலை மழலைசெய் யாழென மொழியுமை பாகமாக்
கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை குறுகிலர்
விண்டலை யமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்
வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே.3.88.5 950. மனைகள்தோ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர்
கனைகடல் அடுவிடம் அமுதுசெய் கறையணி மிடறினர்
முனைகெட வருமதில் எரிசெய்த அவர்கழல் பரவுவார்
வினைகெட அருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.3.88.6 951. நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல்
செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பயில்பவர்
பொறிகமழ் தருபட அரவினர் விரவிய சடைமிசை
வெறிகமழ் தருமலர் அடைபவர் இடமெனில் விளமரே.3.88.7 952. தெண்கடல் புடையணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப்
பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல் வடிவினர்
திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதோர் சேர்வினார்
விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர் விளமரே.3.88.8 953. தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுற
அண்டல்செய் திருவரை வெருவுற ஆரழ லாயினார்
கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனில் அளியினம்
விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.3.88.9 954. ஒள்ளியர் தொழுதெழ வுலகினில் உரைசெயு மொழிபல
கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவம் அறிகிலார்
பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே.3.88.10 955. வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச்
சிந்தையுள் இடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகமர் அருமறை ஞானசம்
பந்தன மொழியிவை உரைசெயு மவர்வினை பறையுமே.3.88.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பதஞ்சலிமனோகரேசுவரர், தேவியார் - யாழினுமென்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.89 திருக்கொச்சைவயம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்956 திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே.3.89.1 957. ஏலமார் இலவமோ டினமலர்த் தொகுதியா யெங்கும்நுந்திக்
கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையுங் கொண்டுகோட்டா
றாலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சிமேவும்
நீலமார் கண்டனை நினைமட நெஞ்சமே அஞ்சல்நீயே.3.89.2 958. பொன்னுமா மணிகொழித் தெறிபுனற் கரைகள்வாய் நுரைகளுந்திக்
கன்னிமார் முலைநலம் கவரவந் தேறுகோட் டாறுசூழ
மன்னினார் மாதொடும் மருவிடங் கொச்சையே மருவின்நாளும்
முன்னைநோய் தொடருமா றில்லைகாண் நெஞ்சமே அஞ்சல்நீயே.3.89.3 959. கந்தமார் கேதகைச் சந்தனக் காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையின் பவரளிக் குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட் டாறுசூழ் கொச்சைமேய
எந்தையார் அடிநினைந் துய்யலாம் நெஞ்சமே அஞ்சல்நீயே.3.89.4 960. மறைகொளுந் திறலினார் ஆகுதிப் புகைகள்வான் அண்டமிண்டிச்
சிறைகொளும் புனலணி செழுமதி திகழ்மதிற் கொச்சைதன்பால்
உறைவிட மெனமன மதுகொளும் பிரமனார் சிரமறுத்த
இறைவன தடியிணை இறைஞ்சிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே.3.89.5 961. சுற்றமும் மக்களுந் தொக்கவத் தக்கனைச் சாடியன்றே
உற்றமால் வரையுமை நங்கையைப் பங்கமா உள்கினானோர்
குற்றமில் லடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சைமேவி
நற்றவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும்நெஞ்சே.3.89.6 962. கொண்டலார் வந்திடக் கோலவார் பொழில்களிற் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித் தேறிமாமுகில்தனைக் கதுவுகொச்சை
அண்டவா னவர்களும் அமரரும் முனிவரும் பணியஆலம்
உண்டமா கண்டனார் தம்மையே உள்குநீ அஞ்சல்நெஞ்சே.3.89.7 963. அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா மலையெடுத் தார்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிரல் ஊன்றினார் உறைவிடம் ஒளிகொள்வெள்ளி
மடலிடைப் பவளமும் முத்தமுந் தொத்துவண் புன்னைமாடே
பெடையொடுங் குருகினம் பெருகுதண் கொச்சையே பேணுநெஞ்சே.3.89.8 964. அரவினிற் றுயில்தரும் அரியும்நற் பிரமனும் அன்றயர்ந்து
குரைகழற் றிருமுடி யளவிட அரியவர் கொங்குசெம்பொன்
விரிபொழி லிடைமிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரியநன் மிடறுடைக் கடவுளார் கொச்சையே கருதுநெஞ்சே.3.89.9 965. கடுமலி யுடலுடை அமணருங் கஞ்சியுண் சாக்கியரும்
இடுமற வுரைதனை இகழ்பவர் கருதுநம் ஈசர்வானோர்
நடுவுறை நம்பனை நான்மறை யவர்பணிந் தேத்தஞாலம்
உடையவன் கொச்சையே உள்கிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே.3.89.10 966. காய்ந்துதங் காலினாற் காலனைச் செற்றவர் கடிகொள்கொச்சை
ஆய்ந்துகொண் டிடமென இருந்தநல் லடிகளை ஆதரித்தே
ஏய்ந்ததொல் புகழ்மிகு மெழில்மறை ஞானசம் பந்தன்சொன்ன
வாய்ந்தஇம் மாலைகள் வல்லவர் நல்லவா னுலகின்மேலே.3.89.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.90 திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்967 ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனற் கங்கையை ஒருசடைமேற்
தாங்கினார் இடுபலி தலைகலனாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.3.90.1 968. தூறுசேர் சுடலையிற் சுடரெரி யாடுவர் துளங்கொளிசேர்
நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண் பிறைமல்கு சடைமுடியார்
நாறுசாந் திளமுலை யரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.3.90.2 969. மழைவளர் இளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேற்
கழைவளர் புனல்புகக் கண்டவெங் கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்குல் அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.3.90.3 970. கரும்பன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவினழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க் கொன்றையஞ் சுடர்ச்சடையார்
அரும்பன வனமுலை அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
விரும்பிடந் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.3.90.4 971. வளங்கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாளரவுங்
களங்கொளச் சடையிடை வைத்தஎங் கண்ணுதற் கபாலியார்தாந்
துளங்குநூல் மார்பினர் அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
விளங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.3.90.5 972. பொறியுலாம் அடுபுலி யுரிவையர் வரியராப் பூண்டிலங்கும்
நெறியுலாம் பலிகொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பரியார்
மறியுலாங் கையினர் மங்கையோ டொருபகல் அமர்ந்தபிரான்
வெறியுலாந் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.3.90.6 973. புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடியணிந்து
திரிதரும் இயல்பினர் திரிபுர மூன்றையுந் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையோ டொருபகல் அமர்ந்தபிரான்
விரிதரு துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.3.90.7 974. நீண்டிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்இந் நீள்வரையைக்
கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ னாள்வினைக் கீழ்ப்படுத்தார்
பூண்டநூல் மார்பினர் அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
வேண்டிடந் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.3.90.8 975. கரைகடல் அரவணைக் கடவுளுந் தாமரை நான்முகனுங்
குரைகழ லடிதொழக் கூரெரி யெனநிறங் கொண்டபிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில்சூழ்
விரைகமழ் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.3.90.9 976. அயமுக வெயினிலை அமணருங் குண்டருஞ் சாக்கியரும்
நயமுக வுரையினர் நகுவன சரிதைகள் செய்துழல்வார்
கயலன வரிநெடுங் கண்ணியோ டொருபகல் அமர்ந்தபிரான்
வியனகர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.3.90.10 977. விண்ணுலாம் விரிபொழில் விரைமணல் துருத்திவேள் விக்குடியும்
ஒண்ணுலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவையோ டுறைபதியை
நண்ணுலாம் புகலியுள் அருமறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணுலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார் பழியிலரே.3.90.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.91 திருவடகுரங்காடுதுறை
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்978 கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளா ரிடமென விரும்பினாரே.3.91.1 979. மந்தமா யிழிமதக் களிற்றிள மருப்பொடு பொருப்பின்நல்ல
சந்தமார் அகிலொடு சாதியின் பலங்களுந் தகையமோதி
உந்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
எந்தையார் இணையடி இமையவர் தொழுதெழும் இயல்பினாரே.3.91.2 980. முத்துமா மணியொடு முழைவளர் ஆரமும் முகந்துநுந்தி
எத்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகள்தம்மேற்
சித்தமாம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே.3.91.3 981. கறியுமா மிளகொடு கதலியின் பலங்களுங் கலந்துநுந்தி
எறியுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி தொழுதெழ மருவுமுள்ளக்
குறியினா ரவர்மிகக் கூடுவார் நீடுவா னுலகினூடே.3.91.4 982. கோடிடைச் சொரிந்ததே னதனொடுங் கொண்டல்வாய் விண்டமுன்னீர்
காடுடைப் பீலியுங் கடறுடைப் பண்டமுங் கலந்துநுந்தி
ஓடுடைக் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
பீடுடைச் சடைமுடி யடிகளா ரிடமெனப் பேணினாரே.3.91.5 983. கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே.3.91.6 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 3.91.7 984. நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே.3.91.8 985. பொருந்திறல் பெருங்கைமா வுரித்துமை யஞ்சவே யொருங்குநோக்கிப்
பெருந்திறத் தனங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறற் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
அருந்திறத் திருவரை யல்லல்கண் டோ ங்கிய அடிகளாரே.3.91.9 986. கட்டமண் தேரருங் கடுக்கடின் கழுக்களுங் கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் அறவுரை கொள்ளலும் பெருவரைப் பண்டமுந்தி
எட்டுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைச்
சிட்டனா ரடிதொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே.3.91.10 987. தாழிளங் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்
காழியான் அருமறை ஞானசம் பந்தன கருதுபாடல்
கோழையா அழைப்பினுங் கூடுவார் நீடுவா னுலகினூடே.3.91.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குலைவணங்குநாதர், தேவியார் - சடைமுடியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.92 திருநெல்வேலி
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்988 மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதர துன்றுபைம்பூஞ்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.3.92.1 989. என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச்
சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே
துன்றுதண் பொழில்நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.3.92.2 990. பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலுஞ்
செறிபொழில் தழுவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.3.92.3 991. காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந்
தீண்டிவந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.3.92.4 992. ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளஅரவுங்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனின்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில்வண் டமர்பொழில் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.3.92.5 993. வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதள் ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வே லியுறை செல்வர்தாமே.3.92.6 994. அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.3.92.7 995. முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.3.92.8 996. பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்சநின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர்தாமே.3.92.9 997. துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அண்ணலார்தாங்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத்
திவருறு மதிதவழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.3.92.10 998. பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே.3.92.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.93 திருஅம்பர்மாகாளம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்999 படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்
பொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்
கடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந் திருப்பிடம் அம்பர்மா காளந்தானே.3.93.1 1000. கையின்மா மழுவினர் கடுவிடம் உண்டவெங் காளகண்டர்
செய்யமா மேனியர் ஊனமர் உடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.3.93.2 1001. பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும்
இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும்
அரவினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.3.93.3 1002. நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளை
ஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரைவவ்வுங்
கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கை
ஆற்றினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.3.93.4 1003. புறத்தினர் அகத்துளர் போற்றிநின் றழுதெழும் அன்பர்சிந்தைத்
திறத்தினர் அறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்ற
மறத்தினர் மாதவர் நால்வருக் காலின்கீழ் அருள்புரிந்த
அறத்தினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.3.93.5 1004. பழகமா மலர்பறித் திண்டை கொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்த
குழகனார் குணம்புகழ்ந் தேத்துவா ரவர்பலர் கூடநின்ற
கழகனார் கரியுரித் தாடுகங் காளர்நங் காளியேத்தும்
அழகனார் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.3.93.6 1005. சங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளே
எங்குமா யிருந்தவர் அருந்தவ முனிவருக் களித்துகந்தார்
பொங்குமா புனல்பரந் தரிசிலின் வடகரை திருத்தம்பேணி
அங்கமா றோதுவார் இருப்பிடம் அம்பர்மா காளந்தானே.3.93.7 1006. பொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர் பொழிலிலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழுற அடர்த்தவர் கோயில்கூறிற்
பெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும்
அரசிலின் வடகரை அழகமர் அம்பர்மா காளந்தானே.3.93.8 1007. வரியரா அதன்மிசைத் துயின்றவன் தானுமா மலருளானும்
எரியரா அணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும்
பிரியராம் அடியவர்க் கணியராய்ப் பணிவிலா தவருக்கென்றும்
அரியராய் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.3.93.9 1008. சாக்கியக் கயவர்வன் றலைபறிக் கையரும் பொய்யினால்நூல்
ஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர்
வீக்கிய அரவுடைக் கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம்
ஆக்கிய அரனுறை அம்பர்மா காளமே யடைமின்நீரே.3.93.10 1009. செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுனல் அரிசில்சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா அணங்கினோ டிருந்தகோனைக்
*கம்பினார் நெடுமதிற் காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன
நம்பிநாள் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே.3.93.11
* கம்பினார் நெடுமதில் என்பது ஆகாயம் பின்னிடும்படி மேலோங்கிய மதிலெனப்
பொருள்படுகின்றது. கம் என்பது ஆகாயம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.94 திருவெங்குரு - திருமுக்கால்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்1010 விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல் லாரிட ரிலரே.3.94.1 1011. வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆதிய அருமறை யீரே
ஆதிய அருமறை யீருமை யலர்கொடு
ஓதிய ருணர்வுடை யோரே.3.94.2 1012. விளங்குதண் பொழிலணி வெங்குரு மேவிய
இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீரும திணையடி
உளங்கொள உறுபிணி யிலரே.3.94.3 1013. விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய
வண்டமர் வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
தொண்டர்கள் துயர்பிணி யிலரே.3.94.4 1014. மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினோ டரவசைத் தீரே
அக்கினோ டரவசைத் தீரும தடியிணை
தக்கவர் உறுவது தவமே.3.94.5 1015. வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
அந்தமில் பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே.3.94.6 1016. விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அழன்மல்கும் அங்கையி னீரே
அழன்மல்கும் அங்கையி னீருமை யலர்கொடு
தொழஅல்லல் கெடுவது துணிவே.3.94.7 1017. வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்தநன் மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
சித்தம துடையவர் திருவே.3.94.8 1018. மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆலநன் மணிமிடற் றீரே
ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்
சீலம துடையவர் திருவே.3.94.9 1019. விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அரைமல்கு புலியத ளீரே
அரைமல்கு புலியத ளீரும தடியிணை
உரைமல்கு புகழவர் உயர்வே.3.94.10 இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 3.94.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.95 திருஇன்னம்பர் - திருமுக்கால்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்1020 எண்டிசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய
வண்டிசைக் குஞ்சடை யீரே
வண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார்
தொண்டிசைக் குந்தொழி லோரே.3.95.1 1021. யாழ்நரம் பின்னிசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை யிலரே.3.95.2 1022. இளமதி நுதலியோ டின்னம்பர் மேவிய
வளமதி வளர்சடை யீரே
வளமதி வளர்சடை யீருமை வாழ்த்துவார்
உளமதி மிகவுடை யோரே.3.95.3 1023. இடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய
கடிகமழ் சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீரும கழல்தொழும்
அடியவர் அருவினை யிலரே.3.95.4 1024. இமையவர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
உமையொரு கூறுடை யீரே
உமையொரு கூறுடை யீருமை உள்குவார்
அமைகில ராகிலர் அன்பே.3.95.5 1025. எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய
தண்ணருஞ் சடைமுடி யீரே
தண்ணருஞ் சடைமுடி யீருமைச் சார்பவர்
விண்ணவர் அடைவுடை யோரே.3.95.6 1026. எழில்திக ழும்பொழில் இன்னம்பர் மேவிய
நிழல்திகழ் மேனியி னீரே
நிழல்திகழ் மேனியி னீருமை நினைபவர்
குழறிய கொடுவினை யிலரே.3.95.7 1027. ஏத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவுசெய் தீரே
தூர்த்தனைத் தொலைவுசெய் தீருமைத் தொழுபவர்
கூர்த்தநற் குணமுடை யோரே.3.95.8 1028. இயலுளோர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
அயனுமால் அறிவரி யீரே
அயனுமால் அறிவரி யீரும தடிதொழும்
இயலுளார் மறுபிறப் பிலரே.3.95.9 1029. ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய
தேரமண் சிதைவுசெய் தீரே
தேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவ
ராழ்துயர் அருவினை யிலரே.3.95.10 1030. ஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை
நாடமர் ஞானசம் பந்தன்
நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்
பாடவல் லார்பழி யிலரே.3.95.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர், தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.96 திருநெல்வெண்ணெய் - திருமுக்கால்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்1031 நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறுஞ்
சொல்வணம் இடுவது சொல்லே.3.96.1 1032. நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள அரவசைத் தீரே
கச்சிள அரவசைத் தீருமைக் காண்பவர்
அச்சமொ டருவினை யிலரே.3.96.2 1033. நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரைவிரி கோவணத் தீரே
அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு
உரைவிரிப் போருயர்ந் தோரே.3.96.3 1034. நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர்மல்கி உறையவல் லீரே
ஊர்மல்கி உறையவல் லீருமை யுள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே.3.96.4 1035. நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய
ஆடிளம் பாப்பசைத் தீரே
ஆடிளம் பாப்பசைத் தீருமை அன்பொடு
பாடுளம் உடையவர் பண்பே.3.96.5 1036. நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே.3.96.6 1037. நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
கறையணி மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர்
உறைவதும் உம்மடிக் கீழே.3.96.7 1038. நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
றரக்கனை யசைவுசெய் தீரே
அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே.3.96.8 1039. நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்
றிருவரை யிடர்கள்செய் தீரே
இருவரை இடர்கள்செய் தீருமை யிசைவொடு
பரவவல் லார்பழி யிலரே.3.96.9 1040. நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண்கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே.3.96.10 1041. நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை
நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலமல்கு வார்துய ரிலரே.3.96.11
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெண்ணையப்பர், தேவியார் - நீலமலர்க்கண்ணம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.97 திருச்சிறுகுடி - திருமுக்கால்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்1042 திடமலி மதிலணி சிறுகுடி மேவிய
படமலி அரவுடை யீரே
படமலி அரவுடை யீருமைப் பணிபவர்
அடைவதும் அமருல கதுவே.3.97.1 1043. சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
உற்றவர் உறுபிணி யிலரே.3.97.2 1044. தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய
துள்ளிய மானுடை யீரே
துள்ளிய மானுடை யீரும தொழுகழல்
உள்ளுதல் செயநலம் உறுமே.3.97.3 1045. செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரமெரித் தீரே
ஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார்
சொன்னலம் உடையவர் தொண்டே.3.97.4 1046. செற்றினின் மலிபுனல் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ்
சற்றவர் அருவினை யிலரே.3.97.5 1047. செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய
மங்கையை இடமுடை யீரே
மங்கையை இடமுடை யீருமை வாழ்த்துவார்
சங்கைய திலர்நலர் தவமே.3.97.6 1048. செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறிகமழ் சடைமுடி யீரே
வெறிகமழ் சடைமுடி யீருமை விரும்பிமெய்ந்
நெறியுணர் வோருயர்ந் தோரே.3.97.7 1049. திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரநெரித் தீரே
தசமுகன் உரநெரித் தீருமைச் சார்பவர்
வசையறும் அதுவழி பாடே.3.97.8 1050. செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவுசெய் தீரே
இருவரை அசைவுசெய் தீருமை யேத்துவார்
அருவினை யொடுதுய ரிலரே.3.97.9 1051. செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
புத்தரோ டமண்புறத் தீரே
புத்தரோ டமண்புறத் தீருமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடைப் பரிசே.3.97.10 1052. தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய
மானமர் கரமுடை யீரே
மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய
ஞானசம் பந்தன தமிழே.3.97.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மங்களேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.98 திருவீழிமிழலை - திருமுக்கால்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்1053 வெண்மதி தவழ்மதில் மிழலையு ளீர்சடை
ஒண்மதி அணியுடை யீரே
ஒண்மதி அணியுடை யீருமை உணர்பவர்
கண்மதி மிகுவது கடனே.3.98.1 1054. விதிவழி மறையவர் மிழலையு ளீர்நடம்
சதிவழி வருவதோர் சதிரே
சதிவழி வருவதோர் சதிருடை யீருமை
அதிகுணர் புகழ்வதும் அழகே.3.98.2 1055. விரைமலி பொழிலணி மிழலையு ளீரொரு
வரைமிசை உறைவதும் வலதே
வரைமிசை உறைவதோர் வலதுடை யீருமை
உரைசெயும் அவைமறை யொலியே.3.98.3 1056. விட்டெழில் பெறுபுகழ் மிழலையு ளீர்கையில்
இட்டெழில் பெறுகிற தெரியே
இட்டெழில் பெறுகிற தெரியுடை யீர்புரம்
அட்டது வரைசிலை யாலே.3.98.4 1057. வேணிகர் கண்ணியர் மிழலையு ளீர்நல
பானிகர் உருவுடை யீரே
பானிகர் உருவுடை யீரும துடனுமை
தான்மிக உறைவது தவமே.3.98.5 1058. விரைமலி பொழிலணி மிழலையு ளீர்சென்னி
நிரையுற அணிவது நெறியே
நிரையுற அணிவதோர் நெறியுடை யீரும
தரையுற அணிவன அரவே.3.98.6 1059. விசையுறு புனல்வயல் மிழலையு ளீர்அர
வசைவுற அணிவுடை யீரே
அசைவுற அணிவுடை யீருமை அறிபவர்
நசையுறு நாவினர் தாமே.3.98.7 1060. விலங்கலொண் மதிலணி மிழலையு ளீரன்றவ்
இலங்கைமன் இடர்கெடுத் தீரே
இலங்கைமன் இடர்கெடுத் தீருமை யேத்துவார்
புலன்களை முனிவது பொருளே.3.98.8 1061. வெற்பமர் பொழிலணி மிழலையு ளீருமை
அற்புதன் அயனறி யானே
அற்புதன் அயனறி யாவகை நின்றவன்
நற்பதம் அறிவது நயமே.3.98.9 1062. வித்தக மறையவர் மிழலையு ளீரன்று
புத்தரோ டமணழித் தீரே
புத்தரோ டமணழித் தீருமைப் போற்றுவார்
பத்திசெய் மனமுடை யவரே.3.98.10 1063. விண்பயில் பொழிலணி மிழலையுள் ஈசனைச்
சண்பையுள் ஞானசம் பந்தன்
சண்பையுள் ஞானசம் பந்தன தமிழிவை
ஒண்பொருள் உணர்வதும் உணர்வே.3.98.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.99 திருமுதுகுன்றம் - திருமுக்கால்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்1064 முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய
பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்கள் உலகில்ஆ வாரே.3.99.1 1065. மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய
பையர வம்மசைத் தீரே
பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்
நைவிலர் நாடொறும் நலமே.3.99.2 1066. முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
மழவிடை யதுவுடை யீரே
மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே.3.99.3 1067. முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
உருவமர் சடைமுடி யீரே
உருவமர் சடைமுடி யீருமை யோதுவார்
திருவொடு தேசினர் தாமே.3.99.4 இப்பதிகத்தில்5,6,7-ம்செய்யுட்கள்மறைந்து போயின. 3.99.5-7 1068. முத்தி தருமுயர் முதுகுன்ற மேவிய
பத்து முடியடர்த் தீரே
பத்து முடியடர்த் தீருமைப் பாடுவார்
சித்தநல் லவ்வடி யாரே.3.99.8 1069. முயன்றவர் அருள்பெறு முதுகுன்ற மேவியன்
றியன்றவ ரறிவரி யீரே
இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார்
பயன்றலை நிற்பவர் தாமே.3.99.9 1070. மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
கட்டமண் தேரைக்காய்ந் தீரே
கட்டமண் தேரைக்காய்ந் தீருமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறு வாரே.3.99.10 1071. மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை
நாடிய ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி யிலரே.3.99.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.100 திருத்தோணிபுரம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்1072 கரும்பமர் வில்லியைக் காய்ந்துகாதற் காரிகை மாட்டருளி
அரும்பமர் கொங்கையோர் பால்மகிழ்ந்த அற்புதஞ் செப்பரிதாற்
பெரும்பக லேவந்தென் பெண்மைகொண்டு பேர்ந்தவர் சேர்ந்தஇடஞ்
சுரும்பமர் சோலைகள் சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே.3.100.1 1073. கொங்கியல் பூங்குழற் கொவ்வைச்செவ்வாய்க் கோமள மாதுமையாள்
பங்கிய லுந்திரு மேனியெங்கும் பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோரவந்தென் சாயல்கொண் டார்தமதூர்
துங்கியன் மாளிகை சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே.3.100.2 1074. மத்தக் களிற்றுரி போர்க்கக்கண்டு மாதுமை பேதுறலுஞ்
சித்தந் தெளியநின் றாடியேறூர் தீவண்ணர் சில்பலிக்கென்
றொத்தபடி வந்தென் னுள்ளங்கொண்ட ஒருவர்க் கிடம்போலுந்
துத்தநல் லின்னிசை வண்டுபாடுந் தோணி புரந்தானே.3.100.3 இப்பதிகத்தில் 4,5,6,7-ம்செய்யுட்கள்மறைந்துபோயின. 3.100.4-7 1075. வள்ள லிருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையென
உள்ளங் கொள்ளாது கொதித்தெழுந்தன் றெடுத்தோன் உரம்நெரிய
மெள்ள விரல்வைத்தென் உள்ளங்கொண்டார் மேவு மிடம்போலுந்
துள்ளொலி வெள்ளத்தின் மேல்மிதந்த தோணி புரந்தானே.3.100.8 1076. வெல்பற வைக்கொடி மாலும்மற்றை விரைமலர் மேலயனும்
பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய தாய்ப்பணிந்துஞ்
செல்வற நீண்டெஞ் சிந்தைகொண்ட செல்வ ரிடம்போலுந்
தொல்பற வைசுமந் தோங்குசெம்மைத் தோணி புரந்தானே.3.100.9 1077. குண்டிகை பீலிதட் டோ டுநின்று கோசரங் கொள்ளியரும்
மண்டைகை யேந்தி மனங்கொள்கஞ்சி யூணரும் வாய்மடிய
இண்டை புனைந்தெரு தேறிவந்தென் எழில்கவர்ந் தாரிடமாந்
தொண்டிசை பாடல றாததொன்மைத் தோணி புரந்தானே.3.100.10 1078. தூமரு மாளிகை மாடம்நீடு தோணிபுரத் திறையை
மாமறை நான்கினொ டங்கமாறும் வல்லவன் வாய்மையினால்
நாமரு கேள்வி நலந்திகழும் ஞானசம் பந்தன்சொன்ன
பாமரு பாடல்கள் பத்தும்வல்லார் பார்முழு தாள்பவரே.3.100.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.101 திருஇராமேச்சுரம்
- பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்1079 திரிதரு மாமணி நாகமாடத் திளைத்தொரு தீயழல்வாய்
நரிகதிக் கவெரி யேந்தியாடும் நலமே தெரிந்துணர்வார்
எரிகதிர் முத்தம் இலங்குகானல் இராமேச் சுரமேய
விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி விமலர் செயுஞ்செயலே.3.101.1 1080. பொறிகிளர் பாம்பரை யார்த்தயலே புரிவோ டுமைபாடத்
தெறிகிள ரப்பெயர்ந் தெல்லியாடுந் திறமே தெரிந்துணர்வார்
எறிகிளர் வெண்டிரை வந்துபேரும் இராமேச் சுரமேய
மறிகிளர் மான்மழுப் புல்குகையெம் மணாளர் செயுஞ்செயலே.3.101.2 1081. அலைவளர் தண்புனல் வார்சடைமேல் அடக்கி யொருபாகம்
மலைவளர் காதலி பாடஆடி மயக்கா வருமாட்சி
இலைவளர் தாழை முகிழ்விரியும் இராமேச் சுரமேயார்
தலைவளர் கோலநன் மாலைசூடுந் தலைவர் செயுஞ்செயலே.3.101.3 1082. மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத்
தேதெரி அங்கையில் ஏந்தியாடுந் திறமே தெரிந்துணர்வார்
ஏதமி லார்தொழு தேத்திவாழ்த்தும் இராமேச் சுரமேயார்
போதுவெண் டிங்கள்பைங் கொன்றைசூடும் புனிதர் செயுஞ்செயலே.3.101.4 1083. சூலமோ டொண்மழு நின்றிலங்கச் சுடுகா டிடமாகக்
கோலநன் மாதுடன் பாடஆடுங் குணமே குறித்துணர்வார்
ஏலந றும்பொழில் வண்டுபாடும் இராமேச் சுரமேய
நீலமார் கண்ட முடையவெங்கள் நிமலர் செயுஞ்செயலே.3.1015 1084. கணைபிணை வெஞ்சிலை கையிலேந்திக் காமனைக் காய்ந்தவர்தாம்
இணைபிணை நோக்கிநல் லாளொடாடும் இயல்பின ராகிநல்ல
இணைமலர் மேலனம் வைகுகானல் இராமேச் சுரமேயார்
அணைபிணை புல்கு கரந்தைசூடும் அடிகள் செயுஞ்செயலே.3.101.6 1085. நீரினார் புன்சடை பின்புதாழ நெடுவெண் மதிசூடி
ஊரினார் துஞ்சிருள் பாடியாடும் உவகை தெரிந்துணர்வார்
ஏரினார் பைம்பொழில் வண்டுபாடும் இராமேச் சுரமேய
காரினார் கொன்றைவெண் டிங்கள்சூடுங் கடவுள் செயுஞ்செயலே.3.101.7 1086. பொன்றிகழ் சுண்ணவெண் ணீறுபூசிப் புலித்தோ லுடையாக
மின்றிகழ் சோதியர் பாடலாடல் மிக்கார் வருமாட்சி
என்றுநல் லோர்கள் பரவியேத்தும் இராமேச் சுரமேயார்
குன்றினா லன்றரக் கன்றடந்தோள் அடர்த்தார் கொளுங்கொள்கையே.3.101.8 1087. கோவலன் நான்முகன் நோக்கொணாத குழகன் அழகாய
மேவலன் ஒள்ளெரி ஏந்தியாடும் இமையோர் இறைமெய்ம்மை
ஏவல னார்புகழ்ந் தேத்திவாழ்த்தும் இராமேச் சுரமேய
சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம் மிறைவர் செயுஞ்செயலே.3.101.9 1088. பின்னொடு முன்னிடு தட்டைச்சாத்திப் பிரட்டே திரிவாரும்
பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள் புறங்கூறல் கேளாதே
இன்னெடுஞ் சோலைவண் டியாழ்முரலும் இராமேச் சுரமேய
பன்னெடு வெண்டலை கொண்டுழலும் பரமர் செயுஞ்செயலே.3.101.10 1089. தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணும் இராமேச் சுரத்தாரை
நாவியன் ஞானசம் பந்தன்நல்ல மொழியான் நவின்றேத்தும்
பாவியன் மாலைவல் லாரவர்தம் வினையாயின பற்றறுமே.3.101.11
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் -இராமநாதேசுவரர், தேவியார் - பர்வதவர்த்தனி.
இது மலைவளர்காதலியென்று தமிழிற்சொல்லப்படும்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.102 திருநாரையூர்
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1090 காம்பினை வென்றமென் தோளிபாகங் கலந்தான் நலந்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடுவின் திருநாரை யூர்மேய
பூம்புனல் சேர்புரி புன்சடையான் புலியின் னுரிதோன்மேற்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.3.102.1 1091. தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான்
பூவினை மேவு சடைமுடியான் புடைசூழப் பலபூதம்
ஆவினில் ஐந்துங்கொண் டாட்டுகந்தான் அடங்கார் மதில்மூன்றும்
ஏவினை யெய்தழித் தான்கழலே பரவா எழுவோமே.3.102.2 1092. மாயவன் சேயவன் வெள்ளியவன் விடஞ்சேரும் மைமிடற்றன்
ஆயவ னாகியோர் அந்தரமும் மவனென்று வரையாகந்
தீயவன் நீரவன் பூமியவன் திருநாரை யூர்தன்னில்
மேயவ னைத்தொழு வாரவர்மேல் வினையாயின வீடுமே.3.102.3 1093. துஞ்சிரு ளாடுவர் தூமுறுவல் துளங்கும் உடம்பினராய்
அஞ்சுட ராரெரி யாடுவர்ஆர் அழலார் விழிக்கண்ணி
னஞ்சுமிழ் நாகம் அரைக்கசைப்பர் நலனோங்கு நாரையூர்
எஞ்சிவ னார்க்கடி மைப்படுவார்க் கினியில்லை யேதமே.3.102.4 1094. பொங்கிளங் கொன்றையி னார்கடலில் விடமுண் டிமையோர்கள்
தங்களை ஆரிடர் தீரநின்ற தலைவர் சடைமேலோர்
திங்களை வைத்தனல் ஆடலினார் திருநாரை யூர்மேய
வெங்கனல் வெண்ணீ றணியவல்லார் அவரே விழுமியரே.3.102.5 1095. பாருறு வாய்மையி னார்பரவும் பரமேட்டி பைங்கொன்றைத்
தாருறு மார்புடை யான்மலையின் தலைவன் மலைமகளைச்
சீருறு மாமறு கிற்சிறைவண் டறையுந் திருநாரை
யூருறை யெம்மிறை வர்க்கிவை யொன்றொடொன் றொவ்வாவே.3.102.6 1096. கள்ளி இடுதலை யேந்துகையர் கரிகாடர் கண்ணுதலர்
வெள்ளிய கோவண ஆடைதன்மேன் மிளிரா டரவார்த்து
நள்ளிருள் நட்டம தாடுவர்நன் னலன்ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்திலெம் மேல்வருவல் வினையாயின வோடுமே.3.102.7 1097. நாமம் எனைப்பல வும்முடையான் நலனோங்கு நாரையூர்
தாமொம் மெனப்பறை யாழ்குழ றாளார் கழல்பயில
ஈம விளக்கெரி சூழ்சுடலை யியம்பு மிடுகாட்டிற்
சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே.3.102.8 1098. ஊனுடை வெண்டலை கொண்டுழல்வான் ஒளிர்புன் சடைமேலோர்
வானிடை வெண்மதி வைத்துகந்தான் வரிவண்டி யாழ்முரலத்
தேனுடை மாமலர் அன்னம்வைகுந் திருநாரை யூர்மேய
ஆனிடை யைந்துகந் தானடியே பரவா அடைவோமே.3.102.9 1099. தூசு புனைதுவ ராடைமேவுந் தொழிலா ருடம்பினிலுள்
மாசு புனைந்துடை நீத்தவர்கள் மயல்நீர்மை கேளாதே
தேசுடை யீர்கள் தெளிந்தடைமின் திருநாரை யூர்தன்னில்
பூசு பொடித்தலை வர்அடியார் அடியே பொருத்தமே.3.102.10 1100. தண்மதி தாழ்பொழில் சூழ்புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர்சடை யான்உறையுந் திருநாரை யூர்தன்மேற்
பண்மதி யாற்சொன்ன பாடல்பத்தும் பயின்றார் வினைபோகி
மண்மதி யாதுபோய் வான்புகுவர் வானோர் எதிர்கொளவே.3.102.11
சுவாமிபெயர் - சௌந்தரேசர், தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.103 திருவலம்புரம்
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1101 கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கி
இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்தேத்தத்
துடியிடை யாளையோர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.3.103.1 1102. கோத்தகல் லாடையுங் கோவணமுங் கொடுகொட்டி கொண்டொருகை
தேய்த்தன் றனங்கனைத் தேசழித்துத் திசையார் தொழுதேத்தக்
காய்த்தகல் லாலதன் கீழிருந்த கடவுள் ளிடம்போலும்
வாய்த்தமுத் தீத்தொழில் நான்மறையோர் வலம்புர நன்னகரே.3.103.2 1103. நொய்யதோர் மான்மறி கைவிரலின் நுனைமேல் நிலையாக்கி
மெய்யெரி மேனிவெண் ணீறுபூசி விரிபுன் சடைதாழ
மையிருஞ் சோலை மணங்கமழ இருந்தா ரிடம்போலும்
வைகலும் மாமுழ வம்மதிரும் வலம்புர நன்னகரே.3.103.3 1104. ஊனம ராக்கை யுடம்புதன்னை யுணரின் பொருளன்று
தேனமர் கொன்றையி னானடிக்கே சிறுகாலை யேத்துமினோ
ஆனமர் ஐந்துங்கொண் டாட்டுகந்த அடிகள் இடம்போலும்
வானவர் நாடொறும் வந்திறைஞ்சும் வலம்புர நன்னகரே.3.103.4 1105. செற்றெறி யுந்திரை யார்கலுழிச் செழுநீர்கிளர் செஞ்சடைமேல்
அற்றறி யாதன லாடுநட்ட மணியார் தடங்கண்ணி
பெற்றறி வார்எரு தேறவல்ல பெருமான் இடம்போலும்
வற்றறி யாப்புனல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே.3.103.5 1106. உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு வுமையோ டுடனாகிச்
சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச் சுடர்ச்சோதி நின்றிலங்கப்
பண்ணவண் ணத்தன பாணிசெய்யப் பயின்றா ரிடம்போலும்
வண்ணவண் ணப்பறை பாணியறா வலம்புர நன்னகரே.3.103.6 1107. புரிதரு புன்சடை பொன்றயங்கப் புரிநூல் புரண்டிலங்க
விரைதரு வேழத்தின் ஈருரிதோல் மேல்மூடி வேய்புரைதோள்
அரைதரு பூந்துகில் ஆரணங்கை யமர்ந்தா ரிடம்போலும்
வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா வலம்புர நன்னகரே.3.103.7 1108. தண்டணை தோளிரு பத்தினொடுந் தலைபத் துடையானை
ஒண்டணை மாதுமை தான்நடுங்க ஒருகால் விரலூன்றி
மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல விகிர்தர்க் கிடம்போலும்
வண்டணை தன்னொடு வைகுபொழில் வலம்புர நன்னகரே.3.103.8 1109. தாருறு தாமரை மேலயனுந் தரணி யளந்தானுந்
தேர்வறி யாவகை யால்இகலித் திகைத்துத் திரிந்தேத்தப்
பேர்வறி யாவகை யால்நிமிர்ந்த பெருமான் இடம்போலும்
வாருறு சோலை மணங்கமழும் வலம்புர நன்னகரே.3.103.9 1110. காவிய நற்றுவ ராடையினார் கடுநோன்பு மேற்கொள்ளும்
பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் பழந்தொண்டர் உள்ளுருக
ஆவியுள் நின்றருள் செய்யவல்ல அழகர் இடம்போலும்
வாவியின் நீர்வயல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே.3.103.10 1111. நல்லியல் நான்மறை யோர்புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
வல்லியந் தோலுடை யாடையினான் வலம்புர நன்னகரைச்
சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல வல்லவர் தொல்வினைபோய்ச்
செல்வன சேவடி சென்றணுகிச் சிவலோகஞ் சேர்வாரே.3.103.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலம்புரநாதர், தேவியார் - வடுவகிர்க்கணம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.104 திருப்பருதிநியமம்
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1112 விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப் பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலோ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பருதிந் நியமமே.3.104.1 1113. அரவொலி வில்லொலி அம்பினொலி அடங்கார் புரமூன்றும்
நிரவவல் லார்நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதிசூடி
இரவில் புகுந்தென் னெழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பருதிந் நியமமே.3.104.2 1114. வாண்முக வார்குழல் வாள்நெடுங்கண் வளைத்தோள் மாதஞ்ச
நீண்முக மாகிய பைங்களிற்றின் உரிமேல் நிகழ்வித்து
நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பாண்முக வண்டினம் பாடியாடும் பருதிந் நியமமே.3.104.3 1115. வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத்
துஞ்சிருள் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பஞ்சுரம் பாடிவண் டியாழ்முரலும் பருதிந் நியமமே.3.104.4 1116. நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித்
தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பார்புல்கு தொல்புக ழால்விளங்கும் பருதிந் நியமமே.3.104.5 1117. வெங்கடுங் காட்டகத் தாடல்பேணி விரிபுன் சடைதாழத்
திங்கள் திருமுடி மேல்விளங்கத் திசையார் பலிதேர்வார்
சங்கொடு சாயல் எழில்கவர்ந்த சைவர்க் கிடம்போலும்
பைங்கொடி முல்லை படர்புறவிற் பருதிந் நியமமே.3.104.6 1118. பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும் பருதிந் நியமமே.3.104.7 1119. ஆசடை வானவர் தானவரோ டடியார் அமர்ந்தேத்த
மாசடை யாதவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
காசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பாசடைத் தாமரை வைகுபொய்கைப் பருதிந் நியமமே.3.104.8 1120. நாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமால் நயந்தேத்தக்
கூடலர் ஆடலர் ஆகிநாளுங் குழகர் பலிதேர்வார்
ஏடலர் சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பாடலர் ஆடல ராய்வணங்கும் பருதிந் நியமமே.3.104.9 1121. கல்வளர் ஆடையர் கையிலுண்ணுங் கழுக்கள் இழுக்கான
சொல்வள மாக நினைக்கவேண்டா சுடுநீ றதுவாடி
நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப் பருதிந் நியமமே.3.104.10 1122. பையர வம்விரி காந்தள்விம்மு பருதிந் நியமத்துத்
தையலொர் பாகம் அமர்ந்தவனைத் தமிழ்ஞான சம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்தபத்தும் பரவிப் புகழ்ந்தேத்த
ஐயுற வில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே.3.104.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பருதியப்பர், தேவியார் - மங்களநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.105 திருக்கலிக்காமூர்
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1123 மடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ்ந் தழகாருங்
கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர்
உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய ஒருவன் கழலேத்த
இடர்தொட ராவினை யானசிந்தும் இறைவன் னருளாமே.3.105.1 1124. மைவரை போற்றிரை யோடுகூடிப் புடையே மலிந்தோதங்
கைவரை யால்வளர் சங்கமெங்கு மிருக்குங் கலிக்காமூர்
மெய்வரை யான்மகள் பாகன்தன்னை விரும்ப உடல்வாழும்
ஐவரை ஆசறுத் தாளுமென்பர் அதுவுஞ் சரதமே.3.105.2 1125. தூவிய நீர்மல ரேந்திவையத் தவர்கள் தொழுதேத்தக்
காவியின் நேர்விழி மாதரென்றுங் கவினார் கலிக்காமூர்
மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.3.105.3 1126. குன்றுகள் போற்றிரை உந்தியந்தண் மணியார் தரமேதி
கன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர்
என்றுணர் ஊழியும் வாழுமெந்தை பெருமான் அடியேத்தி
நின்றுணர் வாரை நினையகில்லார் நீசர் நமன்தமரே.3.105.4 1127. வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங்
கானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர்
ஆனிடை ஐந்துகந் தாடினானை அமரர் தொழுதேத்த
நானடை வாம்வண மின்புதந்த நலமே நினைவோமே.3.105.5 1128. துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கட லோதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர்
மறைவள ரும்பொரு ளாயினானை மனத்தால் நினைந்தேத்த
நிறைவள ரும்புக ழெய்தும்வாதை நினையா வினைபோமே.3.105.6 1129. கோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர் மங்கிலியத்திற்
காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர்
ஞாலமுந் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி
ஓலமி டாதவர் ஊழியென்றும் உணர்வைத் துறந்தாரே.3.105.7 1130. ஊரர வந்தலை நீண்முடியான் ஒலிநீர் உலகாண்டு
காரர வக்கடல் சூழவாழும் பதியாம் கலிக்காமூர்
தேரர வல்குல்அம் பேதையஞ்சத் திருந்து வரைபேர்த்தான்
ஆரர வம்பட வைத்தபாதம் உடையான் இடமாமே.3.105.8 1131. அருவரை யேந்திய மாலும்மற்றை அலர்மேல் உறைவானும்
இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர்
ஒருவரை யான்மகள் பாகன்றன்னை உணர்வாற் றொழுதேத்தத்
திருமரு வுஞ்சிதை வில்லைசெம்மைத் தேசுண் டவர்பாலே.3.105.9 1132. மாசு பிறக்கிய மேனியாரும் மருவுந் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர்தோற்றங்
காசினி நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்
ஈசனை யெந்தை பிரானையேத்தி நினைவார் வினைபோமே.3.105.10 1133. ஆழியுள் நஞ்சமு தாரவுண்டன் றமரர்க் கமுதுண்ண
ஊழிதோ றும்முள ராவளித்தான் உலகத் துயர்கின்ற
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன தமிழாற் கலிக்காமூர்
வாழியெம் மானை வணங்கியேத்த மருவா பிணிதானே.3.105.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுந்தரேசுவரர், தேவியார் - அழகுவனமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.106 திருவலஞ்சுழி
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1134 பள்ளம தாய படர்சடைமேற் பயிலுந் திரைக்கங்கை
வெள்ளம தார விரும்பிநின்ற விகிர்தன் விடையேறும்
வள்ளல் வலஞ்சுழி வாணனென்று மருவி நினைந்தேத்தி
உள்ளம் உருக உணருமின்கள் உறுநோ யடையாவே.3.106.1 1135. காரணி வெள்ளை மதியஞ்சூடிக் கமழ்புன் சடைதன்மேற்
தாரணி கொன்றையுந் தண்ணெருக்குந் தழையந் நுழைவித்து
வாரணி கொங்கை நல்லாள்தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த உவகை அறியோமே.3.106.2 1136. பொன்னிய லுந்திரு மேனிதன்மேற் புரிநூல் பொலிவித்து
மின்னிய லுஞ்சடை தாழவேழ உரிபோர்த் தரவாட
மன்னிய மாமறை யோர்கள்போற்றும் வலஞ்சுழி வாணர்தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க் குயர்வாம் பிணிபோமே.3.106.3 1137. விடையொரு பாலொரு பால்விரும்பு மெல்லியல் புல்கியதோர்
சடையொரு பாலொரு பாலிடங்கொள் தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பாலொரு பால்சிலம்பு நாளும் வலஞ்சுழிசேர்
அடையொரு பாலடை யாதசெய்யுஞ் செய்கை அறியோமே.3.106.4 1138. கையம ரும்மழு நாகம்வீணை கலைமான் மறியேந்தி
மெய்யம ரும்பொடிப் பூசிவீசுங் குழையார் தருதோடும்
பையம ரும்மர வாடஆடும் படர்சடை யார்க்கிடமாம்
மையம ரும்பொழில் சூழும்வேலி வலஞ்சுழி மாநகரே.3.106.5 1139. தண்டொடு சூலந் தழையவேந்தித் தைய லொருபாகங்
கண்டிடு பெய்பலி பேணிநாணார் கரியின் உரிதோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்துநின்ற தொடர்பைத் தொடர்வோமே.3.106.6 1140. கல்லிய லும்மலை யங்கைநீங்க வளைத்து வளையாதார்
சொல்லிய லும்மதில் மூன்றும்செற்ற சுடரான் இடர்நீங்க
மல்லிய லுந்திரள் தோளெம்மாதி வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கிஏத்தி யிருப்பவர் புண்ணியரே.3.106.7 1141. வெஞ்சின வாளரக் கன்வரையை விறலா லெடுத்தான்றோள்
அஞ்சுமோ ராறிறு நான்குமொன்றும் அடர்த்தார் அழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதரென்றும் நணுகும் இடம்போலும்
மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும் வலஞ்சுழி மாநகரே.3.106.8 1142. ஏடியல் நான்மு கன்சீர்நெடுமா லெனநின் றவர்காணார்
கூடிய கூரெரி யாய்நிமிர்ந்த குழகர் உலகேத்த
வாடிய வெண்டலை கையிலேந்தி வலஞ்சுழி மேயஎம்மான்
பாடிய நான்மறை யாளர்செய்யுஞ் சரிதை பலபலவே.3.106.9 1143. குண்டரும் புத்தருங் கூறையின்றிக் குழுவார் உரைநீத்துத்
தொண்டருந் தன்றொழில் பேணநின்ற கழலான் அழலாடி
வண்டம ரும்பொழில் மல்குபொன்னி வலஞ்சுழி வாணன்எம்மான்
பண்டொரு வேள்வி முனிந்துசெற்ற பரிசே பகர்வோமே.3.106.10 1144. வாழியெம் மானெனக் கெந்தைமேய வலஞ்சுழி மாநகர்மேல்
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன கருத்தின் தமிழ்மாலை
ஆழியிவ் வையகத் தேத்தவல்லார் அவர்க்குந் தமருக்கும்
ஊழி யொருபெரும் இன்பமோர்க்கும் உருவும் உயர்வாமே.3.106.1
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.107 திருநாரையூர்
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1145 கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள் விடையேறி
உடலிடை யிற்பொடிப் பூசவல்லான் உமையோ டொருபாகன்
அடலிடை யிற்சிலை தாங்கியெய்த அம்மான் அடியார்மேல்
நடலைவி னைத்தொகை தீர்த்துகந் தானிடம் நாரையூர்தானே.3.107.1 1146. விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம் விரிபூ மலர்க்கொன்றை
பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த பெருமான் எரியாடி
நண்ணிய தன்னடி யார்களோடுந் திருநாரை யூரானென்
றெண்ணுமின் நும்வினை போகும்வண்ணம் இறைஞ்சும் நிறைவாமே.3.107.2 1147. தோடொரு காதொரு காதுசேர்ந்த குழையான் இழைதோன்றும்
பீடொரு கால்பிரி யாதுநின்ற பிறையான் மறையோதி
நாடொரு காலமுஞ் சேரநின்ற திருநாரை யூரானைப்
பாடுமின் நீர்பழி போகும்வண்ணம் பயிலும் உயர்வாமே.3.107.3 1148. வெண்ணில வஞ்சடை சேரவைத்து விளங்குந் தலையேந்திப்
பெண்ணில மர்ந்தொரு கூறதாய பெருமான் அருளார்ந்த
அண்ணல்மன் னியுறை கோயிலாகும் அணிநாரை யூர்தன்னை
நண்ணல மர்ந்துற வாக்குமின்கள் நடலை கரிசறுமே.3.107.4 1149. வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும்
ஊனமர் இன்னுயிர் தீங்குகுற்ற முறைவாற் பிறிதின்றி
நானம ரும்பொரு ளாகிநின்றான் திருநாரை யூரெந்தை
கோனவ னைக்குறு கக்குறுகா கொடுவல் வினைதானே.3.107.5 1150. கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடி
அக்கர வோடரை யார்த்துகந்த அழகன் குழகாக
நக்கம ருந்திரு மேனியாளன் திருநாரை யூர்மேவிப்
புக்கம ரும்மனத் தோர்கள்தம்மைப் புணரும் புகல்தானே.3.107.6 1151. ஊழியும் இன்பமுங் காலமாகி உயருந் தவமாகி
ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
நாழிகை யும்பல ஞாயிறாகி நளிர்நாரை யூர்தன்னில்
வாழியர் மேதகு மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே.3.107.7 1152. கூசமி லாதரக் கன்வரையைக் குலுங்க எடுத்தான்றோள்
நாசம தாகி இறஅடர்த்த விரலான் கரவாதார்
பேசவி யப்பொடு பேணநின்ற பெரியோன் இடம்போலுந்
தேசமு றப்புகழ் செம்மைபெற்ற திருநாரை யூர்தானே.3.107.8 1153. பூமக னும்மவ னைப்பயந்த புயலார் நிறத்தானும்
ஆமள வுந்திரிந் தேத்திக்காண்டல் அறிதற் கரியானூர்
பாமரு வுங்குணத் தோர்கள்ஈண்டிப் பலவும் பணிசெய்யுந்
தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த திருநாரை யூர்தானே.3.107.9 1154. வெற்றரை யாகிய வேடங்காட்டித் திரிவார் துவராடை
உற்றரை யோர்கள் உரைக்குஞ்சொல்லை உணரா தெழுமின்கள்
குற்றமி லாததோர் கொள்கையெம்மான் குழகன் தொழிலாரப்
பெற்றர வாட்டி வரும்பெருமான் திருநாரை யூர்சேர்வே.3.107.10 1155. பாடிய லுந்திரை சூழ்புகலித் திருஞான சம்பந்தன்
சேடிய லும்புக ழோங்குசெம்மைத் திருநாரை யூரான்மேற்
பாடிய தண்டமிழ் மாலைபத்தும் பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையி னார்க்குநீங்கும் அவலக் கடல்தானே.3.107.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.108 திருஆலவாய் - நாலடிமேல் வைப்பு
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1156 வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.3.108.1 1157. வைதி கத்தின் வழியொழு காதவக்
கைத வமுடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.3.108.2 1158. மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாங்கையில் மாமழு வாளனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.3.108.3 1159. அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ்
செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.3.108.4 1160. அந்த ணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.3.108.5 1161. வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை உரித்தஎங் கள்வனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.3.108.6 1162. அழல தோம்பும் அருமறை யோர்திறம்
விழல தென்னும் அருகர் திறத்திறங்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழல்இ லங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.3.108.7 1163. நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாளரக் கற்கும் அருளினாய்
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.3.108.8 1164. நீல மேனி அமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலும் நான்முக னுங்காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.3.108.9 1165. அன்று முப்புரஞ் செற்ற அழகநின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.3.108.10 1166. கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.3.108.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.109 திருக்கயிலாயமும் - திருஆனைக்காவும்
திருமயேந்திரமும் - திருஆரூரும் - கூடச்சதுக்கம்
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1167 மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரருங்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.3.109.1 1168. வந்துமா லயனவர் காண்பரியார்
வெந்தவெண் ணீறணி மயேந்திரருங்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தண்ஆ ரூராதி யானைக்காவே.3.109.2 1169. மாலயன் தேடிய மயேந்திரருங்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
ஆலைஆ ரூராதி யானைக்காவே.3.109.3 1170. கருடனை யேறரி அயனார்காணார்
வெருள்விடை யேறிய மயேந்திரருங்
கருடரு கண்டத்தெம் கயிலையாரும்
அருளன்ஆ ரூராதி யானைக்காவே.3.109.4 1171. மதுசூதனன் நான்முகன் வணங்கரியார்
மதியது சொல்லிய மயேந்திரருங்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியன்ஆ ரூராதி யானைக்காவே.3.109.5 1172. சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர் கயிலை மயேந்திரருந்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவராரூர் ஆனைக்காவே.3.109.6 1173. கண்ணனும் நான்முகன் காண்பரியார்
வெண்ணாவல் விரும்பு மயேந்திரருங்
கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.3.109.7 1174. கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
தடவரை யரக்கனைத் தலைநெரித்தார்
விடமது வுண்டவெம் மயேந்திரரும்
அடல்விடை யாரூராதி யானைக்காவே.3.109.8 1175. ஆதிமால் அயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரருங்
காதிலோர் குழையுடைக் கயிலையாரும்
ஆதிஆ ரூரெந்தை யானைக்காவே.3.109.9 1176. அறிவில் அமண்புத்தர் அறிவுகொள்ளேல்
வெறியமான் கரத்தாரூர் மயேந்திரரும்
மறிகட லோன்அயன் தேடத்தானும்
அறிவரு கயிலையோன் ஆனைக்காவே.3.109.10 1177. ஏனமா லயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனஆ ரூராதி யானைக்காவை
ஞானசம் பந்தன தமிழ்சொல்லுமே.3.109.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.110 திருப்பிரமபுரம் - ஈரடி
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1178 வரம தேகொளா உரம தேசெயும்
புரமெ ரித்தவன் பிரம நற்புரத்
தரன்நன் நாமமே பரவு வார்கள்சீர்
விரவு நீள்புவியே.3.110.1 1179. சேணு லாமதில் வேணு மண்ணுளோர்
காண மன்றலார் வேணு நற்புரத்
தாணு வின்கழல் பேணு கின்றவ
ராணி யொத்தவரே.3.110.2 1180. அகல மார்தரைப் புகலும் நான்மறைக்
கிகலி யோர்கள்வாழ் புகலி மாநகர்ப்
பகல்செய் வோனெதிர்ச் சகல சேகரன்
அகில நாயகனே.3.110.3 1181. துங்க மாகரி பங்க மாவடுஞ்
செங்கை யானிகழ் வெங்கு ருத்திகழ்
அங்க ணானடி தங்கை யாற்றொழத்
தங்கு மோவினையே.3.110.4 1182. காணி யொண்பொருட் கற்ற வர்க்கீகை
யுடைமை யோரவர் காதல் செய்யுநற்
றோணி வண்புரத் தாணி யென்பவர்
தூமதி யினரே.3.110.5 1183. ஏந்த ராவெதிர் வாய்ந்த நுண்ணிடைப்
பூந்த ணோதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்த ராய்தொழும் மாந்தர் மேனிமேற்
சேர்ந்தி ராவினையே.3.110.6 1184. சுரபு ரத்தினைத் துயர்செய் தாருகன்
துஞ்ச வெஞ்சினக் காளி யைத்தருஞ்
சிரபு ரத்துளா னென்ன வல்லவர்
சித்தி பெற்றவரே.3.110.7 1185. உறவு மாகியற் றவர்க ளுக்குமா
நெதிகொ டுத்துநீள் புவியி லங்குசீர்ப்
புறவ மாநகர்க் கிறைவ னேயெனத்
தெறகி லாவினையே.3.110.8 1186. பண்பு சேரிலங் கைக்கு நாதன்நன்
முடிகள் பத்தையுங் கெடநெ ரித்தவன்
சண்பை யாதியைத் தொழும வர்களைச்
சாதியா வினையே.3.110.9 1187. ஆழி யங்கையிற் கொண்ட மாலயன்
அறிவொ ணாததோர் வடிவு கொண்டவன்
காழி மாநகர்க் கடவுள் நாமமே
கற்றல் நற்றவமே.3.110.10 1188. விச்சை யொன்றிலாச் சமணர் சாக்கியப்
பிச்சர் தங்களைக் கரிச றுத்தவன்
கொச்சை மாநகர்க் கன்பு செய்பவர்
குணங்கள் கூறுமினே.3.110.11 1189. கழும லத்தினுட் கடவுள் பாதமே
கருது ஞானசம் பந்த னின்றமிழ்
முழுதும் வல்லவர்க் கின்ப மேதரும்
முக்கண் எம்மிறையே.3.110.12
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.111 திருவீழிமிழலை ஈரடி
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1190 வேலி னேர்தரு கண்ணி னாளுமை
பங்க னங்கணன் மிழலை மாநகர்
ஆல நீழலின் மேவி னானடிக்
கன்பர் துன்பிலரே.3.111.1 1191. விளங்கு நான்மறை வல்ல வேதியர்
மல்கு சீர்வளர் மிழலை யானடி
உளங்கொள் வார்தமை உளங்கொள் வார்வினை
ஒல்லை யாசறுமே.3.111.2 1192. விசையி னோடெழு பசையு நஞ்சினை
யசைவு செய்தவன் மிழலை மாநகர்
இசையு மீசனை நசையின் மேவினான்
மிசை செயாவினையே.3.111.3 1193. வென்றி சேர்கொடி மூடு மாமதில்
மிழலை மாநகர் மேவி நாடொறும்
நின்ற ஆதிதன் அடிநி னைப்பவர்
துன்ப மொன்றிலரே.3.111.4 1194. போத கந்தனை யுரிசெய் தோன்புயல்
நேர்வ ரும்பொழில் மிழலை மாநகர்
ஆத ரஞ்செய்த அடிகள் பாதம
லாலோர் பற்றிலமே.3.111.5 1195. தக்கன் வேள்வியைச் சாடி னார்மணி
தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்க னாரடி தொழுவர் மேல்வினை
நாடொ றுங்கெடுமே.3.111.6 1196. போர ணாவுமுப் புரமெ ரித்தவன்
பொழில்கள் சூழ்தரு மிழலை மாநகர்ச்
சேரு மீசனைச் சிந்தை செய்பவர்
தீவி னைகெடுமே.3.111.7 1197. இரக்க மிற்றொழில் அரக்க னாருடல்
நெருக்கி னான்மிகு மிழலை யானடி
சிரக்கொள் பூவென ஒருக்கி னார்புகழ்
பரக்கும் நீள்புவியே.3.111.8 1198. துன்று பூமகன் பன்றி யானவன்
ஒன்று மோர்கிலா மிழலை யானடி
சென்று பூம்புனல் நின்று தூவினார்
நன்று சேர்பவரே.3.111.9 1199. புத்தர் கைச்சமண் பித்தர் பொய்க்குவை
வைத்த வித்தகன் மிழலை மாநகர்
சித்தம் வைத்தவர் இத்த லத்தினுள்
மெய்த்த வத்தவரே.3.111.10 1200. சந்த மார்பொழில் மிழலை யீசனைச்
சண்பை ஞானசம் பந்தன் வாய்நவில்
பந்த மார்தமிழ் பத்தும் வல்லவர்
பத்த ராகுவரே.3.111.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.112 திருப்பல்லவனீச்சரம் - ஈரடி
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1201 பரசு பாணியர் பாடல் வீணையர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தரசு பேணிநின் றாரி வர்தன்மை
யறிவா ரார்.3.112.1 1202. பட்ட நெற்றியர் நட்ட மாடுவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
திட்ட மாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.3.112.2 1203. பவள மேனியர் திகழும் நீற்றினர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தழக ராயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.3.112.3 1204. பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தண்ண லாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.3.112.4 1205. பல்லி லோட்டினர் பலிகொண் டுண்பவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தெல்லி யாட்டுகந் தாரி வர்தன்மை
யறிவா ரார்.3.112.5 1206. பச்சை மேனியர் பிச்சை கொள்பவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
திச்சை யாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.3.112.6 1207. பைங்கண் ஏற்றினர் திங்கள் சூடுவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தெங்கு மாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.3.112.7 1208. பாதங் கைதொழ வேத மோதுவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தாதி யாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.3.112.8 1209. படிகொள் மேனியர் கடிகொள் கொன்றையர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தடிக ளாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.3.112.9 1210. பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
திறைவ ராயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.3.112.10 1211. வான மாள்வதற் கூன மொன்றிலை
மாதர் பல்லவ னீச்ச ரத்தானை
ஞான சம்பந்தன் நற்ற மிழ்சொல்ல
வல்லவர் நல்லரே.3.112.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.113 திருக்கழுமலம் திருஇயமகம்
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1212 உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே.3.113.1 1213. சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனே
அதிரொளி சேர்திகி ரிப்படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே மருவிட மேற்பது கைச்சிலையே
விதியினி லிட்ட விரும்பரனே வேணு புரத்தை விரும்பரனே.3.113.2 1214. காதம ரத்திகழ் தோடினனே கானவ னாய்க்கடி தோடினனே
பாதம தாற்கூற் றுதைத்தனனே பார்த்தன் உடலம் புதைத்தனனே
தாதவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினைய தரித்தனனே
போத மமரு முரைப்பொருளே புகலி யமர்ந்த பரம்பொருளே.3.113.3 1215. மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே மகிழ்ந்தரை சேர்வது மாசுணமே
மெய்த்துடல் பூசுவர் மேன்மதியே வேதம தோதுவர் மேன்மதியே
பொய்த்தலை யோடுறு மத்தமதே புரிசடை வைத்தது மத்தமதே
வித்தக ராகிய வெங்குருவே விரும்பி யமர்ந்தனர் வெங்குருவே.3.113.4 1216. உடன்பயில் கின்றனன் மாதவனே யுறுபொறி காய்ந்திசை மாதவனே
திடம்பட மாமறை கண்டனனே திரிகுண மேவிய கண்டனனே
படங்கொள் அரவரை செய்தனனே பகடுரி கொண்டரை செய்தனனே
தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே தோணி புரத்துறை நஞ்சிவனே.3.113.5 1217. திகழ்கைய தும்புகை தங்கழலே தேவர் தொழுவதுந் தங்கழலே
இகழ்பவர் தாமொரு மானிடமே யிருந்தனு வோடெழில் மானிடமே
மிகவரு நீர்கொளு மஞ்சடையே மின்னிகர் கின்றது மஞ்சடையே
தகவிர தங்கொள்வர் சுந்தரரே தக்கத ராயுறை சுந்தரரே.3.113.6 1218. ஓர்வரு கண்கள் இணைக்கயலே உமையவள் கண்கள் இணைக்கயலே
ஏர்மரு வுங்கழ னாகமதே யெழில்கொ ளுதாசன னாகமதே
நீர்வரு கொந்தள கங்கையதே நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோகதி யம்பகனே சிரபுர மேயதி யம்பகனே.3.113.7 1219. ஈண்டு துயிலம ரப்பினனே யிருங்கணி டந்தடி யப்பினனே
தீண்டல ரும்பரி சக்கரமே திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத்தலையே மிகைத்தவ ரோடுந கைத்தலையே
பூண்டனர் சேரலு மாபதியே புறவம் அமர்ந்த வுமாபதியே.3.113.8 1220. நின்மணி வாயது நீழலையே நேசம தானவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே யொளியத னோடுறு சங்கமதே
கன்னிய ரைக்கவ ருங்களனே கடல்விட முண்ட கருங்களனே
மன்னி வரைப்பதி சண்பையதே வாரி வயன்மலி சண்பையதே.3.113.9 1221. இலங்கை யரக்கர் தமக்கிறையே யிடந்து கயிலை யெடுக்கிறையே
புலன்கள் கெடவுடன் பாடினனே பொறிகள் கெடவுடன் பாடினனே
இலங்கிய மேனி யிராவணனே யெய்து பெயரும் இராவணனே
கலந்தருள் பெற்றது மாவசியே காழி யரனடி மாவசியே.3.113.10 1222. கண்ணிகழ் புண்டரி கத்தினனே கலந்திரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரி சேனமதே வானக மேய்வகை சேனமதே
நண்ணி யடிமுடி யெய்தலரே நளிர்மலி சோலையில் எய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே பசுமிக வூர்வர் பசுபதியே.3.113.11 1223. பருமதில் மதுரைமன் அவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே
கருதலில் இசைமுரல் தருமருளே கழுமலம் அமரிறை தருமருளே
மருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே.3.113.12
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.114 திருவேகம்பம் - திருஇயமகம்
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1224 பாயுமால்விடை மேலொரு பாகனே பாவைதன்னுரு மேலொரு பாகனே
தூயவானவர் வேதத் துவனியே சோதிமாலெரி வேதத் துவனியே
ஆயுநன்பொருள் நுண்பொரு ளாதியே ஆலநீழல் அரும்பொரு ளாதியே
காயவின்மதன் பட்டது கம்பமே கண்ணுதற்பர மற்கிடங் கம்பமே.3.114.1 1225. சடையணிந்ததும் வெண்டலை மாலையே தம்முடம்பிலும் வெண்டலை மாலையே
படையிலங்கையிற் சூலம தென்பதே பரந்திலங்கையிற் சூலம தென்பதே
புடைபரப்பன பூத கணங்களே போற்றிசைப்பன பூத கணங்களே
கடைகடோ றும் இரப்பது மிச்சையே கம்பமேவி யிருப்பது மிச்சையே.3.114.2 1226. வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சியே வேறுமுன்செலத் தும்பை மிலைச்சியே
அள்ளிநீறது பூசுவ தாகமே யானமாசுண மூசுவ தாகமே
புள்ளியாடை யுடுப்பது கத்துமே போனவூழி யுடுப்பது கத்துமே
கள்ளுலாமலர்க் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.3.114.3 1227. முற்றலாமை யணிந்த முதல்வரே மூரியாமை யணிந்த முதல்வரே
பற்றிவாளர வாட்டும் பரிசரே பாலுநெய்யுகந் தாட்டும் பரிசரே
வற்றலோடு கலம்பலி தேர்வதே வானினோடு கலம்பலி தேர்வதே
கற்றிலாமனங் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.3.114.4 1228. வேடனாகி விசையற் கருளியே வேலைநஞ்ச மிசையற் கருளியே
ஆடுபாம்பரை யார்த்த துடையதே யஞ்சுபூதமு மார்த்த துடையதே
கோடுவான்மதிக் கண்ணி யழகிதே குற்றமின்மதிக் கண்ணி யழகிதே
காடுவாழ்பதி யாவது மும்மதே கம்பமாபதி யாவது மும்மதே.3.114.5 1229. இரும்புகைக்கொடி தங்கழல் கையதே இமயமாமகள் தங்கழல் கையதே
அரும்புமொய்த்த மலர்ப்பொறை தாங்கியே ஆழியான்றன் மலர்ப்பொறை தாங்கியே
பெரும்பகல்நட மாடுதல் செய்துமே பேதைமார்மனம் வாடுதல் செய்துமே
கரும்புமொய்த்தெழு கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.3.114.6 1230. முதிரமங்கை தவஞ்செய்த காலமே முன்புமங்கை தவஞ்செய்த காலமே
வெதிர்களோடகில் சந்த முருட்டியே வேழமோடகில் சந்த முருட்டியே
அதிரவாறு வரத்தழு வத்தொடே ஆன்நெய்ஆடு வரத்தழு வத்தொடே
கதிர்கொள்பூண்முலைக் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.3.114.7 1231. பண்டரக்க னெடுத்த பலத்தையே பாய்ந்தரக்க னெடுத்த பலத்தையே
கொண்டரக்கிய துங்கால் விரலையே கோளரக்கிய துங்கால் விரலையே
உண்டுழன்றது முண்டத் தலையிலே யுடுபதிக்கிட முண்டத் தலையிலே
கண்டநஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே.3.114.8 1232. தூணியான சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே
பேணியோடு பிரமப் பறவையே பித்தனான பிரமப் பறவையே
சேணினோடு கீழூழி திரிந்துமே சித்தமோடு கீழூழி திரிந்துமே
காணநின்றனர் உற்றது கம்பமே கடவுள்நீயிடம் உற்றது கம்பமே.3.114.9 1233. ஓருடம்பினை யீருரு வாகவே யுன்பொருட்டிற மீருரு வாகவே
ஆருமெய்தற் கரிது பெரிதுமே ஆற்றலெய்தற் கரிது பெரிதுமே
தேரரும்மறி யாது திகைப்பரே சித்தமும்மறி யாது திகைப்பரே
கார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே.3.114.10 1234. கந்தமார்பொழில் சூழ்தரு கம்பமே காதல்செய்பவர் தீர்த்திடு கம்பமே
புந்திசெய்து விரும்பிப் புகலியே பூசுரன்றன் விரும்பிப் புகலியே
அந்தமில்பொரு ளாயின கொண்டுமே அண்ணலின்பொரு ளாயின கொண்டுமே
பந்தனின்னியல் பாடிய பத்துமே பாடவல்லவ ராயின பத்துமே.3.114.11
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர், தேவியார் -காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.115 திருஆலவாய் - திருஇயமகம்
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1235 ஆலநீழ லுகந்த திருக்கையே யானபாட லுகந்த திருக்கையே
பாலின்நேர்மொழி யாளொரு பங்கனே பாதமோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு பூதனே கோதிலார்மனம் மேவிய பூதனே
ஆலநஞ்சமு துண்ட களத்தனே ஆலவாயுறை யண்டர்கள் அத்தனே.3.115.1 1236. பாதியாயுடன் கொண்டது மாலையே பாம்புதார்மலர்க் கொன்றைநன் மாலையே
கோதில்நீறது பூசிடு மாகனே கொண்டநற்கையின் மானிட மாகனே
நாதன்நாடொறும் ஆடுவ தானையே நாடியன்றுரி செய்ததும் ஆனையே
வேதநூல்பயில் கின்றது வாயிலே விகிர்தனூர்திரு ஆலநல் வாயிலே.3.115.2 1237. காடுநீட துறப்பல கத்தனே காதலால்நினை வார்தம் அகத்தனே
பாடுபேயொடு பூத மசிக்கவே பல்பிணத்தசை நாடி யசிக்கவே
நீடுமாநட மாட விருப்பனே நின்னடித்தொழ நாளும் இருப்பனே
ஆடல்நீள்சடை மேவிய அப்பனே ஆலவாயினின் மேவிய அப்பனே.3.115.3 1238. பண்டயன்றலை யொன்று மறுத்தியே பாதமோதினர் பாவ மறுத்தியே
துண்டவெண்பிறை சென்னி யிருத்தியே தூயவெள்ளெரு தேறி யிருத்தியே
கண்டுகாமனை வேவ விழித்தியே காதலில்லவர் தம்மை யிழித்தியே
அண்டநாயக னேமிகு கண்டனே ஆலவாயினின் மேவிய கண்டனே.3.115.4 1239. சென்றுதாதை யுகுத்தனன் பாலையே சீறியன்பு செகுத்தனன் பாலையே
வென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையே வீடவெட்டிடக் கண்டுமுன் காலையே
நின்றமாணியை யோடின கங்கையால் நிலவமல்கி யுதித்தன கங்கையால்
அன்றுநின்னுரு வாகத் தடவியே ஆலவாயர னாகத் தடவியே.3.115.5 1240. நக்கமேகுவர் நாடுமோர் ஊருமே நாதன்மேனியின் மாசுணம் ஊருமே
தக்கபூமனைச் சுற்றக் கருளொடே தாரமுய்த்தது பாணற் கருளொடே
மிக்கதென்னவன் தேவிக் கணியையே மெல்லநல்கிய தொண்டர்க் கணியையே
அக்கினாரமு துண்கல னோடுமே ஆலவாயர னாருமை யோடுமே.3.115.6 1241. வெய்யவன்பல் உகுத்தது குட்டியே வெங்கண்மாசுணங் கையது குட்டியே
ஐயனேயன லாடிய மெய்யனே அன்பினால்நினை வார்க்கருள் மெய்யனே
வையமுய்யவன் றுண்டது காளமே வள்ளல்கையது மேவுகங் காளமே
ஐயமேற்ப துரைப்பது வீணையே ஆலவாயரன் கையது வீணையே.3.115.7 1242. தோள்கள்பத்தொடு பத்து மயக்கியே தொக்கதேவர் செருக்கை மயக்கியே
வாளரக்கன் நிலத்து களித்துமே வந்தமால்வரை கண்டு களித்துமே
நீள்பொருப்பை யெடுத்தவுன் மத்தனே நின்விரற்றலை யான்மத மத்தனே
ஆளுமாதி முறித்தது மெய்கொலோ ஆலவாயர னுய்த்தது மெய்கொலோ.3.115.8 1243. பங்கயத்துள நான்முகன் மாலொடே பாதம்நீண்முடி நேடிட மாலொடே
துங்கநற்றழ லின்னுரு வாயுமே தூயபாடல் பயின்றது வாயுமே
செங்கயற்கணி னாரிடு பிச்சையே சென்றுகொண்டுரை செய்வது பிச்சையே
அங்கியைத்திகழ் விப்பதி டக்கையே ஆலவாயர னாரதி டக்கையே.3.115.9 1244. தேரரோடம ணர்க்குநல் கானையே தேவர்நாடொறுஞ் சேர்வது கானையே
கோரமட்டது புண்டரி கத்தையே கொண்டநீள்கழல் புண்டரி கத்தையே
நேரிலூர்கள் அழித்தது நாகமே நீள்சடைத்திகழ் கின்றது நாகமே
ஆரமாக வுகந்தது மென்பதே ஆலவாயர னாரிட மென்பதே.3.115.10 1245. ஈனஞானிகள் தம்மொடு விரகனே யேறுபல்பொருள் முத்தமிழ் விரகனே
ஆனகாழியுள் ஞானசம் பந்தனே ஆலவாயினின் மேயசம் பந்தனே
ஆனவானவர் வாயினுள் அத்தனே அன்பரானவர் வாயினுள் அத்தனே
நானுரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே.3.115.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.116 திருவீழிமிழலை - திருஇயமகம்
- பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்1246 துன்று கொன்றைநஞ் சடையதே தூய கண்டம்நஞ் சடையதே
கன்றின் மானிடக் கையதே கல்லின் மானிடக் கையதே
என்று மேறுவ திடவமே என்னி டைப்பலி யிடவமே
நின்ற தும்மிழலை யுள்ளுமே நீரெனைச் சிறிதும் உள்ளுமே.3.116.1 1247. ஓதி வாயதும் மறைகளே உரைப்ப தும்பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே பணிகின் றேன்மிகு மாதையே
காது சேர்கனங் குழையரே காத லார்கனங் குழையரே
வீதி வாய்மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா.3.116.2 1248. பாடு கின்றபண் டாரமே பத்த ரன்னபண் டாரமே
சூடு கின்றது மத்தமே தொழுத என்னையுன் மத்தமே
நீடு செய்வதுந் தக்கதே நின்ன ரைத்திகழ்ந் தக்கதே
நாடு சேர்மிழலை யூருமே நாகம் நஞ்சழலை யூருமே.3.116.3 1249. கட்டு கின்றகழல் நாகமே காய்ந்த தும்மதனன் ஆகமே
இட்ட மாவதிசை பாடலே யிசைந்த நூலினமர் பாடலே
கொட்டு வான்முழவம் வாணனே குலாய சீர்மிழலை வாணனே
நட்ட மாடுவது சந்தியே நானுய் தற்கிரவு சந்தியே.3.116.4 1250. ஓவி லாதிடுங் கரணமே யுன்னு மென்னுடைக் கரணமே
ஏவு சேர்வுநின் னாணையே யருளி நின்னபொற் றாணையே
பாவி யாதுரை மெய்யிலே பயின்ற நின்னடி மெய்யிலே
மேவி னான்விறற் கண்ணனே மிழலை மேயமுக் கண்ணனே.3.116.5 1251. வாய்ந்த மேனியெரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடுந டஞ்செயுங் காலனே
போந்த தெம்மிடை யிரவிலே உம்மி டைக்கள்வ மிரவிலே
ஏய்ந்த தும்மிழலை யென்பதே விரும்பி யேயணிவ தென்பதே.3.116.6 1252. அப்பி யன்றகண் ணயனுமே அமரர் கோமகனு மயனுமே
ஒப்பி லின்றமரர் தருவதே ஒண்கை யாலமரர் தருவதே
மெய்ப்ப யின்றவ ரிருக்கையே மிழலை யூரும திருக்கையே
செப்பு மின்னெருது மேயுமே சேர்வுமக் கெருது மேயுமே.3.116.7 1253. தானவக் குலம் விளக்கியே தாரகைச் செல விளக்கியே
வான டர்த்தகயி லாயமே வந்து மேவுகயி லாயமே
தானெ டுத்தவல் லரக்கனே தடமு டித்திர ளரக்கனே
மேன டைச்செல விருப்பனே மிழலை நற்பதி விருப்பனே.3.116.8 1254. காய மிக்கதொரு பன்றியே கலந்த நின்னவுரு பன்றியே
ஏய விப்புவி மயங்கவே யிருவர் தாமன மயங்கவே
தூய மெய்த்திரள் அகண்டனே தோன்றி நின்றமணி கண்டனே
மேய வித்துயில் விலக்கணா மிழலை மேவிய விலக்கணா.3.116.9 1255. கஞ்சி யைக்குலவு கையரே கலக்க மாரமணர் கையரே
அஞ்ச வாதிலருள் செய்யநீ யணைந்தி டும்பரிசு செய்யநீ
வஞ்ச னேவரவும் வல்லையே மதித்தெ னைச்சிறிதும் வல்லையே
வெஞ்ச லின்றிவரு வித்தகா மிழலை சேரும்விறல் வித்தகா.3.116.10 1256. மேய செஞ்சடையின் அப்பனே மிழலை மேவியவெ னப்பனே
ஏயுமா செய விருப்பனே இசைந்த வாசெய விருப்பனே
காய வர்க்கசம் பந்தனே காழி ஞானசம் பந்தனே
வாயு ரைத்ததமிழ் பத்துமே வல்லவர்க் குமிவை பத்துமே.3.116.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.117 சீகாழி - திருமாலைமாற்று
- பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்1257 யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.3.117.1 1258. யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.3.117.2 1259. தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.3.117.3 1260. நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.3.117.4 1261. யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.3.117.5 1262. மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.3.117.6 1263. நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண.3.117.7 1264. நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.3.117.8 1265. காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.3.117.9 1266. வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.3.117.10 1267. நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.3.117.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.118 திருக்கழுமலம்
- பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்1268 மடமலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியும் மத்தமுஞ் சடைமேற்
படலொலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார் தம்மிடம் பகரில்
விடலொலி பரந்த வெண்டிரை முத்தம் இப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடலொலி யோதம் மோதவந் தலைக்குங் கழுமல நகரென லாமே.3.118.1 1269. மின்னிய அரவும் வெறிமலர் பலவும் விரும்பிய திங்களுந் தங்கு
சென்னிய துடையான் தேவர்தம் பெருமான் சேயிழை யொடும்உறை விடமாம்
பொன்னியன் மணியும் முரிகரி மருப்புஞ் சந்தமும் உந்துவன் றிரைகள்
கன்னிய ராடக் கடலொலி மலியுங் கழுமல நகரென லாமே.3.118.2 1270. சீருறு தொண்டர் கொண்டடி போற்றச் செழுமலர் புனலொடு தூபந்
தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார் தங்கிட மெங்கும்
ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி யொலிபுனல் கொளவுடன் மிதந்த
காருறு செம்மை நன்மையான் மிக்க கழுமல நகரென லாமே.3.118.3 1271. மண்ணினா ரேத்த வானுலார் பரச அந்தரத் தமரர்கள் போற்றப்
பண்ணினா ரெல்லாம் பலபல வேட முடையவர் பயில்விட மெங்கும்
எண்ணினான் மிக்கார் இயல்பினா னிறைந்தார் ஏந்திழை யவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பங் கண்டொளி பரக்குங் கழுமல நகரென லாமே.3.118.4 1272. சுருதியான் றலையும் நாமகள் மூக்குஞ் சுடரவன் கரமுமுன் னியங்கு
பருதியான் பல்லும் இறுத்தவர்க் கருளும் பரமனார் பயின்றினி திருக்கை
விருதினான் மறையும் அங்கமோ ராறும் வேள்வியும் வேட்டவர் ஞானங்
கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர் கழுமல நகரென லாமே.3.118.5 1273. புற்றில்வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனிமலர்க் கொன்றை
பற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த படிறனார் பயின்றினி திருக்கை
செற்றுவன் றிரைகள் ஒன்றொடொன் றோடிச் செயிர்த்துவண் சங்கொடு வங்கங்
கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங் கழுமல நகரென லாமே.3.118.6 1274. அலைபுனற் கங்கை தங்கிய சடையார் அடல்நெடு மதிலொரு மூன்றுங்
கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட குழகனார் கோயில தென்பர்
மலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு மற்றுமற் றிடையிடை யெங்குங்
கலைகளித் தேறிக் கானலில் வாழுங் கழுமல நகரென லாமே.3.118.7 1275. ஒருக்கமுன் நினையாத் தக்கன்றன் வேள்வி யுடைதர வுழறிய படையார்
அரக்கனை வரையால் ஆற்றலன் றழித்த அழகனார் அமர்ந்துறை கோயில்
பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப் பலபல அறங்களே பயிற்றிக்
கரக்குமா றறியா வண்மையால் வாழுங் கழுமல நகரென லாமே.3.118.8 1276. அருவரை பொறுத்த ஆற்றலி னானும் அணிகிளர் தாமரை யானும்
இருவரும் ஏத்த எரியுரு வான இறைவனார் உறைவிடம் வினவில்
ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல் வெள்ளமுன் பரப்பக்
கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமல நகரென லாமே.3.118.9 1277. உரிந்துயர் உருவில் உடைதவிர்ந் தாரும் அத்துகில் போர்த்துழல் வாருந்
தெரிந்து புன்மொழிகள் செப்பின கேளாச் செம்மையார் நன்மையால் உறைவாங்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
கருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங் கழுமல நகரென லாமே.3.118.10 1278. கானலங் கழனி யோதம்வந் துலவுங் கழுமல நகருறை வார்மேல்
ஞானசம் பந்தன் நற்றமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே.3.118.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.119 திருவீழிமிழலை
- பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்1279 புள்ளித்தோ லாடை பூண்பது நாகம் பூசுசாந் தம்பொடி நீறு
கொள்ளீத்தீ விளக்கு கூளிகள் கூட்டங் காளியைக் குணஞ்செய்கூத் துடையோன்
அள்ளற் காராமை அகடு வான்மதியம் ஏய்க்கமுட் டாழைக ளானை
வெள்ளைக்கொம் பீனும் விரிபொழில் வீழி மிழலையா னெனவினை கெடுமே.3.119.1 1280. இசைந்தவா றடியா ரிடுதுவல் வானோர் இழுகுசந் தனத்திளங் கமலப்
பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய் கரப்பாய் பத்திசெய் யாதவர் பக்கல்
அசும்புபாய் கழனி யலர்கயன் முதலோ டடுத்தரிந் தெடுத்தவான் சும்மை
விசும்புதூர்ப் பனபோல் விம்மிய வீழி மிழலையா னெனவினை கெடுமே.3.119.2 1281. நிருத்தனா றங்கன் நீற்றன் நான்மறையன் நீலமார் மிடற்றன்நெற் றிக்கண்
ஒருத்தன்மற் றெல்லா வுயிர்கட்கும் உயிராய் யுளனிலன் கேடிலி யுமைகோன்
திருத்தமாய் நாளும் ஆடுநீர்ப் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க
விருத்தரை யடிவீழ்ந் திடம்புகும் வீழி மிழலையா னெனவினை கெடுமே.3.119.3 1282. தாங்கருங் காலந் தவிரவந் திருவர் தம்மொடுங் கூடினா ரங்கம்
பாங்கினால் தரித்துப் பண்டுபோ லெல்லாம் பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமா செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி மிழலையா னெனவினை கெடுமே.3.119.4 1283. கூசுமா மயானங் கோயில்வா யிற்கண் குடவயிற் றனசில பூதம்
பூசுமா சாந்தம் பூதிமெல் லோதி பாதிநற் பொங்கர வரையோன்
வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர் மலரணைந் தெழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழில்தேன் துவலைசேர் வீழி மிழலையா னெனவினை கெடுமே.3.119.5 1284. பாதியோர் மாதர் மாலுமோர் பாகர் பங்கயத் தயனுமோர் பாலர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட் கமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய் பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத் தொலியறா வீழி மிழலையா னெனவினை கெடுமே.3.119.6 1285. தன்றவம் பெரிய சலந்தர னுடலந் தடிந்தசக் கரமெனக் கருளென்
றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத் திறையவன் பிறையணி சடையன்
நின்றநாட் காலை யிருந்தநாள் மாலை கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவே தியர்கள் விழாவறா வீழி மிழலையா னெனவினை கெடுமே.3.119.7 1286. கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த கரமுரஞ் சிரநெரிந் தலற
அடர்த்ததோர் விரலால் அஞ்செழுத் துரைக்க அருளினன் தடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள் பதங்களை யோதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி மிழலையா னெனவினை கெடுமே.3.119.8 1287. அளவிட லுற்ற அயனொடு மாலும் அண்டமண் கிண்டியுங் காணா
முளையெரி யாய மூர்த்தியைத் தீர்த்த முக்கண்எம் முதல்வனை முத்தைத்
தளையவிழ் கமலத் தவிசின்மேல் அன்னந் தன்னிளம் பெடையோடும் புல்கி
விளைகதிர்க் கவரி வீசவீற் றிருக்கும் மிழலையா னெனவினை கெடுமே.3.119.9 1288. கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக் கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித்தே விரிய எழுந்தநஞ் சதனை யுண்டம ரர்க்கமு தருளி
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின் குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி மிழலையா னெனவினை கெடுமே.3.119.10 1289. வேந்தர்வந் திறைஞ்ச வேதியர் வீழி மிழலையுள் விண்ணிழி விமானத்
தேய்ந்ததன் றேவி யோடுறை கின்ற ஈசனை யெம்பெரு மானைத்
தோய்ந்தநீர்த் தோணி புரத்துறை மறையோன் தூமொழி ஞானசம் பந்தன்
வாய்ந்தபா மாலை வாய்நவில் வாரை வானவர் வழிபடு வாரே.3.119.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.120 திருஆலவாய்
- பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்1290 மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.3.120.1 1291. வெற்றவே யடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவி நின்றேத்தும்
ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை யொழிந்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவா யாவதும் இதுவே.3.120.2 1292. செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்திரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவுஞ்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.3.120.3 1293. கணங்களாய் வரினுந் தமியராய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியுங் குலச்சிறை பரவுங் கோபுரஞ் சூழ்மணிக் கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம் வன்னிவண் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.3.120.4 1294. செய்யதா மரைமேல் அன்னமே யனைய சேயிழை திருநுதற் செல்வி
பையர வல்குற் பாண்டிமா தேவி நாடொறும் பணிந்தினி தேத்த
வெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான் விரிகதிர் மழுவுடன் தரித்த
ஐயனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே.3.120.5 1295. நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத் தவம்பணி குலச்சிறை பரவுங்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.3.120.6 1296. முத்தின்தாழ் வடமுஞ் சந்தனக் குழம்பும் நீறுந்தன் மார்பினின் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே.3.120.7 1297. நாவணங் கியல்பாம் அஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகுங்
கோவணம் பூதி சாதனங் கண்டால் தொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பாம் இராவணன் திண்டோ ள் இருபதும் நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.3.120.8 1298. மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்பரி தாம்வகை நின்ற
அண்ணலார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே.3.120.9 1299. தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந் தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டுநா டோ றும் இன்புறு கின்ற குலச்சிறை கருதிநின் றேத்தக்
குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்கண் நெறியிடை வாரா
அண்டநா யகன்றான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவா யாவதும் இதுவே.3.120.10 1300. பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன் திருவடி யாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
டின்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.3.120.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.121 திருப்பந்தணநல்லூர்
- பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்1301 இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக்
கடறினா ராவர் காற்றுளா ராவர் காதலித் துறைதரு கோயில்
கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க் கோவணங் கொண்டு கூத்தாடும்
படிறனார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.3.121.1 1302. கழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங் காட்டுளார் நாட்டுளா ரெனவும்
வழியுளா ரெனவும் மலையுளா ரெனவும் மண்ணுளார் விண்ணுளா ரெனவுஞ்
சுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார் தொண்டர்வாய் வந்தன சொல்லும்
பழியுளார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.3.121.2 1303. காட்டினா ரெனவும் நாட்டினா ரெனவுங் கடுந்தொழிற் காலனைக் காலால்
வீட்டினா ரெனவுஞ் சாந்தவெண் ணீறு பூசியோர் வெண்மதி சடைமேற்
சூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார் சொல்லுள சொல்லு நால்வேதப்
பாட்டினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.3.121.2 1304. முருகினார் பொழில்சூழ் உலகினா ரேத்த மொய்த்தபல் கணங்களின் றுயர்கண்
டுருகினா ராகி உறுதிபோந் துள்ளம் ஒண்மையால் ஒளிதிகழ் மேனி
கருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக் கடலுள்நஞ் சமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.3.121.4 1305. பொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து பொறிகிளர் பூணநூல் புரள
மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவம் மேவுவெண் ணீறுமெய் பூசித்
துன்னினார் நால்வர்க் கறமமர்ந் தருளித் தொன்மையார் தோற்றமுங் கேடும்
பன்னினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.3.121.5 1306. ஒண்பொனா ரனைய அண்ணல்வாழ் கெனவும் உமையவள் கணவன்வாழ் கெனவும்
அண்பினார் பிரியார் அல்லுநண் பகலும் அடியவர் அடியிணை தொழவே
நண்பினார் எல்லாம் நல்லரென் றேத்த அல்லவர் தீயரென் றேத்தும்
பண்பினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.3.121.6 1307. எற்றினார் ஏதும் இடைகொள்வா ரில்லை இருநிலம் வானுல கெல்லை
தெற்றினார் தங்கள் காரண மாகச் செருமலைந் தடியிணை சேர்வான்
முற்றினார் வாழும் மும்மதில் வேவ மூவிலைச் சூலமும் மழுவும்
பற்றினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.3.121.7 1308. ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப வோசையால் ஆட லறாத
கலிசெய்த பூதங் கையினா லிடவே காலினாற் பாய்தலும் அரக்கன்
வலிகொள்வர் புலியின் உரிகொள்வ ரேனை வாழ்வுநன் றானுமோர் தலையிற்
பலிகொள்வர் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.3.121.8 1309. சேற்றினார் பொய்கைத் தாமரை யானுஞ் செங்கண்மா லிவரிரு கூறாத்
தோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார் துணைமையும் பெருமையுந் தம்மில்
சாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச் சரண்கொடுத் தவர்செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதியாரே.3.121.9 இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 3.121.10 1310. கல்லிசை பூணக் கலையொலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்
நல்லிசை யாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம் பந்தன்
பல்லிசை பகுவாய்ப் படுதலை யேந்தி மேவிய பந்தண நல்லூர்
சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல் தொல்வினை சூழகி லாவே.3.121.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.122 திருஓமமாம்புலியூர்
- பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்1311 பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.3.122.1 1312. சம்பரற் கருளிச் சலந்தரன் வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெரு மானார் இமையவ ரேத்த இனிதினங் குறைவிடம் வினவில்
அம்பர மாகி அழலுமிழ் புகையின் ஆகுதி யான்மழை பொழியும்
உம்பர்க ளேத்தும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.3.122.2 1313. பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்துத் தராதலத் திழித்த தத்துவன் உறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்றும் அமர்ந்துட னிருந்த அங்கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.3.122.3 1314. புற்றர வணிந்து நீறுமெய் பூசிப் பூதங்கள் சூழ்தர வூரூர்
பெற்றமொன் றேறிப் பெய்பலி கொள்ளும் பிரானவன் உறைவிடம் வினவிற்
கற்றநால் வேதம் அங்கமோ ராறுங் கருத்தினார் அருத்தியாற் றெரியும்
உற்றபல் புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.3.122.4 1315. நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர்கெட நெடியமாற் கருளால்
அலைத்தவல் லசுரர் ஆசற வாழி யளித்தவன் உறைவிடம் வினவிற்
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையான் மிக்க
உலப்பில்பல் புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.3.122.5 1316. மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியுமா றங்கம் ஐவேள்வி
இணைந்தநால் வேதம் மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணருங்
குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம் மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.3.122.6 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 3.122.7 1317. தலையொரு பத்துந் தடக்கைய திரட்டி தானுடை அரக்க னொண்கயிலை
அலைவது செய்த அவன்றிறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில்
மலையென வோங்கும் மாளிகை நிலவும் மாமதில் மாற்றல ரென்றும்
உலவுபல் புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.3.122.8 1318. கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ னென்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி யுருவர் உமையவ ளோடும் உகந்தினி துறைவிடம் வினவிற்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனி பனிமலர்ச் சோலைசூ ழாலை
ஒள்ளிய புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.3.122.9 1319. தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர் தடுக்கொடு சீவரம் உடுக்குங்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக் கடவுளார் உறைவிடம் வினவில்
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.3.122.10 1320. விளைதரு வயலுள் வெயில்செறி பவளம் மேதிகள் மேய்புலத் திடறி
ஒளிதர மல்கும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யரனைக்
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக் காழியுள் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும்வல் லார்கள் அமரலோ கத்திருப் பாரே.3.122.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.123 திருக்கோணமாமலை
- பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்1321 நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவும் அளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.3.1232.1 1322. கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடும் உடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமுன் நித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே.3.1232.2 1323. பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேற்
தனித்தபே ருருவ விழித்தழல் நாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.3.1232.3 1324. பழித்திளங் கங்கை சடைமுடி வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர்
தெழித்துமுன் அரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனும் இப்பியுஞ் சுமந்து
கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமா மலையமர்ந் தாரே.3.1232.4 1325. தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலங்
கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.3.1232.5 1326. பரிந்துநன் மனத்தால் வழிபடும் மாணி தன்னுயிர் மேல்வருங் கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா ளுடையார்
விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ் கோணமா மலையமர்ந் தாரே.3.1232.6 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 3.1232.7 1327. எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலால் ஏத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பும் இறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வுங்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புக ழாளர் கோணமா மலையமர்ந் தாரே.3.1232.8 1328. அருவரா தொருகை வெண்டலை யேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையும் நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரும் அறியா வண்ணம்ஒள் ளெரியாய் உயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்குங்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே.3.1232.9 1329. நின்றுணுஞ் சமணும் இருந்துணுந் தேரும் நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லிய லொடும்உட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே.3.1232.10 1330. குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலை யீரைந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.3.1232.11
இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோணீசர், தேவியார் - மாதுமையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.124 திருக்குருகாவூர் - வெள்ளடை
- பண் - அந்தாளிக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்1331 சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந்
தெண்ணரும் பல்கணம் ஏத்தநின் றாடுவார்
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.3.124.1 1332. திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து
வரைமக ளோடுடன் ஆடுதிர் மல்கு
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரை மல்கு வாளர வாட்டுகந் தீரே.3.124.2 1333. அடையலர் தொன்னகர் மூன்றெரித் தன்ன
நடைமட மங்கையோர் பாகம் நயந்து
விடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே.3.124.3 1334. வளங்கிளர் கங்கை மடவர லோடு
களம்பட ஆடுதிர் காடரங் காக
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே.3.124.4 1335. சுரிகுழல் நல்ல துடியிடை யோடு
பொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்க
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரிமழு வாட்படை எந்தை பிரானே.3.124.5 1336. காவியங் கண்மட வாளொடுங் காட்டிடைத்
தீயக லேந்திநின் றாடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்துகொண் டாட்டுகந் தீரே.3.124.6 3.124.7
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.125 திருநல்லூர்ப்பெருமணம்
- பண் - அந்தாளிக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்1337 கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.3.125.1 1338. தருமண லோதஞ்சேர் தண்கடல் நித்திலம்
பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்
வருமணங் கூட்டி மணஞ்செயும் நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்ணோர் பாகங்கொண் டானே.3.125.2 1339. அன்புறு சிந்தைய ராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்
றின்புறும் எந்தை இணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.3.125.3 1340. வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது
கொல்லியல் வேழத் துரிவிரி கோவணம்
நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே.3.125.4 1341. ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்
ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீருமை கூறுகந் தீரே.3.125.5 1342. சிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப்
பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது
நட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்
திட்டப்பட் டாலொத்தீ ராலெம்பி ரானீரே.3.125.6 1343. மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல
போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே.3.125.7 1344. தக்கிருந் தீரன்று தாளால் அரக்கனை
உக்கிருந் தொல்க உயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே.3.125.8 1345. ஏலுந்தண் டாமரை யானும் இயல்புடை
மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்
போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே.3.125.9 1346. ஆதர் அமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன தாள்தொழ வீடெளி தாமே.3.125.10 1347. நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவம் அவலம் இலரே.3.125.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவலோகத்தியாகேசர்,
தேவியார் - நங்கையுமைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பிற்சேர்க்கை 1. திருவிடைவாய்
- (இப்பதிகம் 1917 இல் திருவிடைவாய்க் கல்வெட்டினின்று எடுக்கப்பட்டது.)
திருச்சிற்றம்பலம்1 மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.1.1 2. ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்
செவ்வான்மதி வைத்தவர் சேர்விட மென்பர்
எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது
வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே.1.2 3. கரையார்கடல் நஞ்சமு துண்டவர் கங்கைத்
திரையார்சடைத் தீவண்ணர் சேர்விட மென்பர்
குரையார்மணி யுங்குளிர் சந்தமுங் கொண்டு
விரையார் புனல்வந் திழியும் விடைவாயே.1.3 4. கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்
பாசத் தொடும்வீழ உதைத்தவர் பற்றாம்
வாசக் கதிர்ச்சாலி வெண்சா மரையேபோல்
வீசக் களியன்னம் மல்கும் விடைவாயே.1.4 5. திரிபுரம் மூன்றையுஞ் செந்தழல் உண்ண
எரியம்பு எய்தகுன்ற வில்லிஇட மென்பர்
கிரியுந் தருமாளிகைச் சூளிகை தன்மேல்
விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே.1.5 6. கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத்
தள்ளித் தலைதக்கனைக் கொண்டவர் சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே.1.6 7. பாதத் தொலி பாரிடம் பாடநடஞ்செய்
நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்
கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே.1.7 8. எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்
பண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம்
கண்ணார் விழவிற் கடிவீதிகள் தோறும்
விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே.1.8 9. புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்
ஒள்வான் நிலந்தேடும் ஒருவர்க் கிடமாந்
தெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்
விள்வாய் நறவுண்டு வண்டார் விடைவாயே.1.9 10. உடையேது மிலார் துவராடை யுடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார் புரம்வேவ மூவர்க் கருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே.1.10 11. ஆறும் மதியும்பொதி வேணியன் ஊராம்
மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை
நாறும் பொழிற்காழியர் ஞானசம் பந்தன்
கூறுந் தமிழ்வல்லவர் குற்றமற் றோரே.1.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2. திருக்கிளியன்னவூர்
- பண் - கௌசிகம்
[சித்தாந்தம்-மலர் 5 இதழ் 11 (1932) தலைப்பு ஏட்டிலிருந்து எடுக்கப்பட்டது.]
திருச்சிற்றம்பலம்12 தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின்
சீர்சி றக்கும் துணைப்பதம் உன்னுவோர்
பேர்சி றக்கும் பெருமொழி உய்வகை
ஏர்சி றக்கும் கிளியன்ன வூரனே.2.1 13. வன்மை செய்யும் வறுமைவந் தாலுமே
தன்மை யில்லவர் சார்பிருந் தாலுமே
புன்மைக் கன்னியர் பூசலுற் றாலுமே
நன்மை யுற்ற கிளியன்ன வூரனே.2.2 14. பன்னி நின்ற பனுவல் அகத்தியன்
உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்
மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்
முன்னில் நின்ற கிளியன்ன வூரனே.2.3 15. அன்பர் வேண்டும் அவையளி சோதியான்
வன்பர் நெஞ்சில் மருவல்இல் லாமுதற்
துன்பந் தீர்த்துச் சுகங்கொடு கண்ணுதல்
இன்பந் தேக்குங் கிளியன்ன வூரனே.2.4 16. செய்யும் வண்ணஞ் சிரித்துப் புரம்மிசை
பெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர்
உய்யும் வண்ணமிங் குன்னருள் நோக்கிட
மெய்யும் வண்ணக் கிளியன்ன வூரனே.2.5 17. எண்பெ றாவினைக் கேதுசெய் நின்னருள்
நண்பு றாப்பவம் இயற்றிடில் அந்நெறி
மண்பொ றாமுழுச் செல்வமும் மல்குமால்
புண்பொ றாதகி ளியன்ன வூரனே.2.6 18. மூவ ராயினும் முக்கண்ண நின்னருள்
மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
தாவு றாதுன தைந்தெழுத் துன்னிட
தேவ ராக்குங் கிளியன்ன வூரனே.2.7 19. திரம் மிகுத்த சடைமுடி யான்வரை
உரம் மிகுத்த இராவணன் கீண்டலும்
நிரம் மிகுத்து நெரித்தவன் ஓதலால்
வரம் மிகுத்த கிளியன்ன வூரனே.2.8 20. நீதி யுற்றிடும் நான்முகன் நாரணன்
பேத முற்றுப் பிரிந்தழ லாய்நிமிர்
நாதன் உற்றன நன்மலர் பாய்இருக்
கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே.2.9 21. மங்கை யர்க்கர சோடுகு லச்சிறை
பொங்க ழற்சுரம் போக்கெனப் பூழியன்
சங்கை மாற்றிச் சமணரைத் தாழ்த்தவும்
இங்கு ரைத்த கிளியன்ன வூரனே.2.10 22. நிறைய வாழ்கிளி யன்னவூர் ஈசனை
உறையும் ஞானசம் பந்தன்சொல் சீரினை
அறைய நின்றன பத்தும்வல் லார்க்குமே
குறையி லாது கொடுமை தவிர்வரே.2.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3. திருமறைக்காடு
- பண் - கொல்லி
(பின்னர் கிடைக்கப் பெற்ற திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்.)
திருச்சிற்றம்பலம்23 விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனிய வாங்கிப்
படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே பரம யோகீ
கடைத்தலை புகுந்து நின்றோம் கலிமறைக் காட மர்ந்தீர்
அடைத்திடுங் கதவு தன்னை யப்படித் தாளி னாலே.3.1 24. முடைத்தலைப் பலிகொள் வானே முக்கணா நக்க மூர்த்தி
மடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல்மறைக் காட மர்ந்தாய்
அடைத்திடுங் கதவை என்றிங் கடியனேன் சொல்ல வல்லே
அடைத்தனை தேவி தன்னோ டெம்மையாள் உகக்கு மாறே.3.2 25. கொங்கண மலர்கள் மேவுங் குளிர்பொழில் இமயப் பாவை
பங்கணா வுருவி னாலே பருமணி யுமிழும் வெம்மைச்
செங்கணார் அரவம் பூண்ட திகழ்மறைக் காட மர்ந்தாய்
அங்கணா இதுவன் றோதான் எம்மையாள் உகக்கு மாறே.3.3 26. இருளிடை மிடற்றி னானே எழில்மறைப் பொருட்கள் எல்லாந்
தெருள்பட முனிவர்க் கீந்த திகழ்மறைக் காட மர்ந்தாய்
மருளுடை மனத்த னேனும் வந்தடி பணிந்து நின்றேர்க்
கருளது புரிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே.3.4 27. பெருத்தகை வேழந் தன்னைப் பிளிறிட உரிசெய் தானே
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காட மர்ந்தாய்
கருத்தில னேனும் நின்றன் கழலடி பணிந்து நின்றேன்
அருத்தியை அறிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே.3.5 28. செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளுந் தேசோ
டொப்பமர் பலிகொள் வானே ஒளிமறைக் காட மர்ந்தாய்
அப்பமர் சடையி னானே அடியனேன் பணியு கந்த
அப்பனே அளவிற் சோதீ அடிமையை உகக்கு மாறே.3.6 29. மதிதுன்றும் இதழி மத்தம் மன்னிய சென்னி யானே
கதியொன்றும் ஏற்றி னானே கலிமறைக் காட மர்ந்தாய்
விதியொன்று பாவின் மாலை கேட்டருள் வியக்குந் தன்மை
இதுவன்றோ உலகின் நம்பி எம்மையாள் உகக்கு மாறே.3.7 30. நீசனாம் அரக்கன் றிண்டோ ள் நெரிதர விரலால் ஊன்றுந்
தேசனே ஞான மூர்த்தீ திருமறைக் காட மர்ந்தாய்
ஆசையை யறுக்க உய்ந்திட் டவனடி பரவ மெய்யே
ஈசனார்க் காள தானான் என்பதை அறிவித் தாயே.3.8 31. மைதிகழ் உருவி னானும் மலரவன் றானும் மெய்ம்மை
எய்துமா றறிய மாட்டார் எழில்மறைக் காட மர்ந்தாய்
பொய்தனை யின்றி நின்னைப் போற்றினார்க் கருளைச் சேரச்
செய்தனை யெனக்கு நீயின் றருளிய திறத்தி னாலே.3.9 32. மண்டலத் தமணர் பொய்யுந் தேரர்கள் மொழியும் மாறக்
கண்டனை யகள என்றும் கலிமறைக் காட மர்ந்தாய்
தண்டியைத் தானா வைத்தான், என்னுமத் தன்மை யாலே
எண்டிசைக் கறிய வைத்தாய் இக்கத வடைப்பித் தன்றே.3.10 33. மதமுடைக் களிறு செற்ற மாமறைக் காட்டு ளானைக்
கதவடைத் திறமுஞ் செப்பிக் கடிபொழிற் காழி வேந்தன்
தகவுடைப் புகழின் மிக்க தமிழ்கெழு விரகன் சொன்ன
பதமுடைப் பத்தும் வல்லார்
பரமனுக் கடியர் தாமே.3.11
திருச்சிற்றம்பலம்
மூன்றாம் திருமுறை முற்றும்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள் மூன்று திருமுறையும் முற்றுப்பெற்றது.
- பண் - சாதாரி
சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை முதல் பகுதிக்கு செல்ல
இரண்டாம் பகுதி - உள்ளுறை
3.067 | திருப்பிரமபுரம் | (714- 725) | மின்பதிப்பு |
3.068 | திருக்கயிலாயம் | (726-736) | மின்பதிப்பு |
3.069 | திருக்காளத்தி | (737-747) | மின்பதிப்பு |
3.070 | திருமயிலாடுதுறை | (748 -758) | மின்பதிப்பு |
3.071 | திருவைகாவூர் | (759 - 769) | மின்பதிப்பு |
3.072 | திருமாகறல் | (770 - 780) | மின்பதிப்பு |
3.073 | திருப்பட்டீச்சரம் | (781 - 791) | மின்பதிப்பு |
3.074 | திருத்தேவூர் | (792-802) | மின்பதிப்பு |
3.075 | திருச்சண்பைநகர் | (803-813) | மின்பதிப்பு |
3.076 | திருவேதவனம் | (814-823) | மின்பதிப்பு |
3.077 | திருமாணிகுழி | (824-835) | மின்பதிப்பு |
3.078 | திருவேதிகுடி | (835-846) | மின்பதிப்பு |
3.079 | திருக்கோகரணம் | (847-856) | மின்பதிப்பு |
3.080 | திருவீழிமிழலை | (857-867) | மின்பதிப்பு |
3.081 | திருத்தோணிபுரம் | (868-878) | மின்பதிப்பு |
3.082 | திருஅவளிவணல்லூர் | (879-889) | மின்பதிப்பு |
3.083 | திருநல்லூர் | (890-900) | மின்பதிப்பு |
3.084 | திருப்புறவம் | (901-911) | மின்பதிப்பு |
3.085 | திருவீழிமிழலை | (912-922) | மின்பதிப்பு |
3.086 | திருச்சேறை | (923-933) | மின்பதிப்பு |
3.087 | திருநள்ளாறு | (934-944) | மின்பதிப்பு |
3.088 | திருவிளமர் | (945-955) | மின்பதிப்பு |
3.089 | திருக்கொச்சைவயம் | (956-966) | மின்பதிப்பு |
3.090 | திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் | (967-977) | மின்பதிப்பு |
3.091 | திருவடகுரங்காடுதுறை | (978-988) | மின்பதிப்பு |
3.092 | திருநெல்வேலி | (989-998) | மின்பதிப்பு |
3.093 | திருஅம்பர்மாகாளம் | (999-1009) | மின்பதிப்பு |
3.094 | திருவெங்குரு | (1010-1019) | மின்பதிப்பு |
3.095 | திருஇன்னம்பர் | (1020-1030) | மின்பதிப்பு |
3.096 | திருநெல்வெண்ணெய் | (1031-1041) | மின்பதிப்பு |
3.097 | திருச்சிறுகுடி | (1042-1052) | மின்பதிப்பு |
3.098 | திருவீழிமிழலை | (1053-1063) | மின்பதிப்பு |
3.099 | திருமுதுகுன்றம் | (1064-1071) | மின்பதிப்பு |
3.100 | திருத்தோணிபுரம் | (1072-1078) | மின்பதிப்பு |
3.101 | திருஇராமேச்சுரம் | (1079-1089) | மின்பதிப்பு |
3.102 | திருநாரையூர் | (1090-1100) | மின்பதிப்பு |
3.103 | திருவலம்புரம் | (1101-1111) | மின்பதிப்பு |
3.104 | திருப்பருதிநியமம் | (1112-1122) | மின்பதிப்பு |
3.105 | திருக்கலிக்காமூர் | (1123-.1133) | மின்பதிப்பு |
3.106 | திருவலஞ்சுழி | (1134-1144) | மின்பதிப்பு |
3.107 | திருநாரையூர் | (1145-1155) | மின்பதிப்பு |
3.108 | திருஆலவாய் | (1156-1166) | மின்பதிப்பு |
3.109 | கூடச்சதுக்கம் | (1167-1177) | மின்பதிப்பு |
3.110 | திருப்பிரமபுரம் | (1178-1189) | மின்பதிப்பு |
3.111 | திருவீழிமிழலை | (1190-1200) | மின்பதிப்பு |
3.112 | திருப்பல்லவனீச்சரம் | (1201-1211) | மின்பதிப்பு |
3.113 | திருக்கழுமலம் | (1212-1223) | மின்பதிப்பு |
3.114 | திருவேகம்பம் | (1224-1234) | மின்பதிப்பு |
3.115 | திருஆலவாய் | (1235-1245) | மின்பதிப்பு |
3.116 | திருவீழிமிழலை | (1246-1256) | மின்பதிப்பு |
3.117 | சீகாழி | (1257-1267) | மின்பதிப்பு |
3.118 | திருக்கழுமலம் | (1268-1278) | மின்பதிப்பு |
3.119 | திருவீழிமிழலை | (1279-1289) | மின்பதிப்பு |
3.120 | திருஆலவாய் | (1290-1300) | மின்பதிப்பு |
3.121 | திருப்பந்தணநல்லூர் | (1301-1310) | மின்பதிப்பு |
3.122 | திருஓமமாம்புலியூர் | (1311-1320) | மின்பதிப்பு |
3.123 | திருக்கோணமாமலை | (1321-1330) | மின்பதிப்பு |
3.124 | திருக்குருகாவூர் | (1331-1336) | மின்பதிப்பு |
3.125 | திருநல்லூர்ப்பெருமணம் | (1337-1347) | மின்பதிப்பு |
பிற்சேர்க்கை | |||
1 | திருவிடைவாய் | (1-11) | மின்பதிப்பு |
2 | திருக்கிளியன்னவூர் | (12-22) | மின்பதிப்பு |
3 | திருமறைக்காடு | (23-33) | மின்பதிப்பு |
3.67 திருப்பிரமபுரம் - வழிமொழித்திருவிராகம்
திருப்பிரமபுரம் - வழிமொழித்திருவிராகம்பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
714 |
சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம் முரணழிய அரணமதில்முப் புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம் வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற் பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே. | 3.67.1 | 715. | தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர் பேணுமது காணுமளவிற் கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையே ஏணுகரி பூணழிய வாணியல்கொள் மாணிபதி சேணமரர்கோன் வேணுவினை யேணிநகர் காணிறிவி காணநடு வேணுபுரமே. | 3.67.2 | 716. | பகலொளிசெய் நகமணியை முகைமலரைநிகழ்சரண வகவுமுனிவர்க் ககலமலி சகலகலை மிகவுரைசெய் முகமுடைய பகவனிடமாம் பகைகளையும் வகையில்அறு முகஇறையை மிகஅருள நிகரிலிமையோர் புகவுலகு புகழஎழில் திகழநிக ழலர்பெருகு புகலிநகரே. | 3.67.3 | 717. | அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர வங்களெழில் தங்குமிதழித் துங்கமலர் தங்குசடை யங்கிநிகர் எங்களிறை தங்குமிடமாம் வெங்கதிர்வி ளங்குலகம் எங்குமெதிர் பொங்கெரிபு லன்கள்களைவோர் வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர ணங்கள்பணி வெங்குருவதே. | 3.67.4 | 718. | ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர் தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன் பாணியமர் பூணவருள் மாணுபிர மாணியிட மேணிமுறையிற் பாணியுல காளமிக வாணின்மலி தோணிநிகர் தோணிபுரமே. | 3.67.5 | 719. | நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென் றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம் அராமிசை யிராதெழில் தராயர பராயண வராகவுருவா தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே. | 3.67.6 | 720. | அரணையுறு முரணர்பலர் மரணம்வர விரணமதி லரமலிபடைக் கரம்விசிறு விரகனமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம் பரவமுது விரவவிடல் புரளமுறு மரவையரி சிரமரியவச் சிரமரன சரணமவை பரவவிரு கிரகமமர் சிரபுரமதே. | 3.67.7 | 721. | அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரன்மா மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற னுறஅருளும் இறைவனிடமாங் குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் நிறையருள முறையொடுவரும் புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே. | 3.67.8 | 722. | விண்பயில மண்பகிரி வண்பிரமன் எண்பெரிய பண்படைகொண்மால் கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டனிடமாம் மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படரவச் சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே. | 3.67.9 | 723. | பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங் கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக் காழியசில் காழிசெய வேழுலகில் ஊழிவளர் காழிநகரே. | 3.67.10 | 724. | நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான் மெய்ச்சிர மணைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம் மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரதக் கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள் நச்சிமிடை கொச்சைநகரே. | 3.67.11 | 725. | ஒழுகலரி தழிகலியில் உழியுலகு பழிபெருகு வழியைநினையா முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத் தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப் பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழிதகையவே. | 3.67.12 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
கருத்துகள்
கருத்துரையிடுக