வேப்ப மரத்தடிப் பேய்
சுட்டி கதைகள்
Backவரதர் கதை மலர்-4
வேப்ப மரத்தடிப்
பேய்
சி.சிவதாசன்
சிறுவர்களுக்கு ஒரு சுவையான கதை
வரதர் கதை மலர் -4
நு}ல் : வேப்ப மரத்தடிப் பேய்
எழுதியவர் : சி. சிவதாசன்
முதற் பதிப்பு: டிசம்பர் 1993
வெளியீடு : வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்
அச்சுப்பதிப்பு : ஆனந்தா அச்சகம்,
226, காங்கேசன்துறைச் சாலை, யாழ்ப்பாணம்
விலை ரூபா 12ஃ-
இந்தக் கதை ‘அமிர்த கங்கi’ 1985 அவணி இதழில் முதன் முதலாக வெளிவந்தது.
வேப்ப மரத்தடிப் பேய்.
1. கள்ளனுக்கு விழுந்த அடி
பவளத் தீவினுள் வடக்கு நோக்கி பத்து மைல் து}ரம் உள் நோக்கிச் செல்வோமானால் பசுமை நிறைந்த வயல்கள் கண்ணுக்கு குளிர்மை தரும் அழகான காட்சியை நாம் காணலாம்.
அந்த வயல் வெளிக்கூடாகச் செல்லும் மண் பாதையில் மேலும் ஒரு மைல் து}ரம் செல்லின் பாரிய வேப்ப மரங்கள் எங்கள் கண்களுக்கு தென்படும். அந்த வேப்பங் கூடலுக்கு மத்தியில் கண்கள் முழிபிதுங்க நாக்கை வெளியே நீட்டிய வண்ணம் கையிலே சூலாயுதம் தாங்கி நிற்கும் காளியம்மனின் சிலை அமைதியான அந்தச் சூழ்நிலையில் பார்ப்போர் உள்ளத்தை பயங்கரம் கொள்ளச் செய்யும்.
இக் காளியம்மன் சிலைக்குப் பின் புறமாக சிறிய கேணியொன்று உண்டு.
வேம்பும் கேணியும் அருகருகே இருப்பதனால் இச் சுற்றாடலைக் கொண்ட கிராமத்துக்கு “வேப்பம் கேணிக் கிராமம்” என்ற பெயர் வழங்கலாயிற்று. இக் கிராமத்தில் வாழும் மக்கள் விவசாயம் செய்து வாழ்பவர்கள். இவ் உழைப்பாளிகளின் உதிரத்தை உறிஞ்சி ஏப்பமிடும் சில கள்வர் கூட்டமும் அக்கிராமத்தில் இருக்கத்தான் செய்தார்கள். அப்படியான கள்வர்களுள் ஒருவர்தான் ‘சங்கிலிக் கறுப்பன்’.
பெயருக்கேற்ற கறுப்பும், நல்ல உடற் பலமும் கொண்ட இவன் அந்த கிராம மக்களின் பொருள் வளத்தைச் சிறுகச் சிறுகச் சூறையாடிக் கொண்டிருந்தான். தோட்டங்களில் காய்க்கும் காய்கறிகளை இரவோடிரவாகப் பிடுங்குவதும், ஆடு மாடு, கோழிகளைத் திருடுவதும் இவன் வழக்கமாயிற்று. சங்கிலிக் கறுப்பன்தான் இவற்றையெல்லாம் செய்கிறான் என்பதைத் தெரிந்திருந்தும் அவன் தோற்றத்தைக் கண்டு அஞ்சும் வேப்பங்கேணிக் கிராம மக்கள் எதுவும் பேசாது மனதுக்குள் வேதனைப்பட்டு வாழ்ந்து வந்தார்கள்.
இதனால் மேலும் துணிவு கொண்ட சங்கிலிக் கறுப்பன் தன் களவுத் தொழிலை விருத்தி பண்ணலானான். இரவில் கிராம மக்கள் துயில்கின்ற நேரம் வீடுகளுக்குள் புகுந்து அவர்களின் தங்க நகைகளையும் சேமித்து வைத்த பணங்களையும் திருடிக் கொள்வதால் தினமும் ஒரு வீட்டிலாவது அல்லோல கல்லோலப் படுவது வழக்கமாகப் போய் விட்டது.
ஒரு நாள் சங்கிலிக் கறுப்பன் அக்கிராமத்தின் பெரிய பணக்காரரான மாணிக்கம்பிள்ளை வீட்டின் கொல்லைப் புறம் திருடும் நோக்குடன் உட்புகுந்தான். இவன் உட் சென்றதை அவதானித்த வீட்டு வேலைக்காரன் அவன் பின்னால் பதுங்கிப் பதுங்கிச் சென்று கையில் வைத்திருந்த பொல்லினால் ஒதுங்கி அவன் மண்டையில் அடித்தான்.
இத் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத சங்கிலிக் கறுப்பன் ஐயோ! எனக் கூக்குரலிட்டுக் கீழே மயங்கி விழுந்தான்.
2. சங்கிலிக் கறுப்பன் எங்கே?
சங்கிலிக் கறுப்பனின் அலறல் கேட்டு அயலில் உள்ளவர்கள் எல்லோரும் மாணிக்கம் வீட்டிற்கு ஓடி வந்தார்கள். நித்திரையில் இருந்த மாணிக்கம் பிள்ளையும் சத்தம் கேட்டுக் கொல்லைப் புறத்துக்கு வந்து சேர்ந்தார். என்ன நடந்தது என்பதை வேலையாள் ஒன்றும் விடாமல் சொன்னான்.
கோபங் கொண்ட மாணிக்கம் பிள்ளை தன் மற்ற வேலைக்காரர்களைப் பார்த்து ‘டேய்! என்னடா, பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? இந்தக் கள்ளக் கழுதையை இழுத்துச் சென்று ஊர் எல்லையில் போட்டு விட்டு வாருங்கள்” என்று உத்தரவிட்டார்.
மாணிக்கம் பிள்ளையின் உத்தரவைக் கேட்ட வேலையாட்கள் சங்கிலிக் கறுப்பனைத் து}க்கிச் சென்று ஊர் எல்லையில் அமைந்திருக்கும் காளியம்மன் சிலைக்கருகேயுள்ள வேப்பமரத்தடியில் து}க்கி எறிந்து விட்டு ஊருக்குச் சென்றார்கள்.
அன்றிரவு நடந்த இந்நிகழ்ச்சி அந்த ஊர் மக்களை மிகவும் சந்தோஷம் கொள்ள வைத்த தாயினும் சங்கிலிக் கருப்பன் மயக்கம் தீர்ந்து எழுந்து விட்டால் ஊரில் நடக்கப் போகும் பெரும் கலவரத்தை எண்ணி வேதனை கொள்ளவும் செய்தது. ஏனென்றால் எதனையும் அஞ்சாது செய்யக் கூடிய கொடூரமானவன் சங்கிலிக் கருப்பன்.
நேரம் செல்லச் செல்ல எல்லோரும் நித்திரைக்குச் சென்று விட்டார்கள். வேப்பங்கேணி கிராமம் அமைதியடைந்தது. அந்த அமைதியைச் சீர்குலைக்கும் நோக்குடன் கோழிகள் கூவின. பறவைகள் சத்தமிட்டுப் பறந்தன. கிழக்கு வானம் வெளுத்தது.
விடிந்து விட்டதை உணர்ந்த மக்கள் ஆரவாரம் எங்கும் ஒலித்தது. ஒரு சில பெரியவர்கள் வேப்பங்கேணிக்கு அருகே சங்கிலிக் கறுப்பன் என்ன செய்கிறான் என்பதைப் பார்க்கச் சென்றார்கள். என்ன அதிசயம்!! இரவு சங்கிலிக் கறுப்பன் வீசி எறியப்பட்ட இடத்தில் அவனைக் காணவில்லை!
வேப்பமரத்தின் கீழே இரத்தம் ஆங்காங்கே சிதறிக் காய்ந்து போய் இருந்தது. அப்படியென்றால் சங்கிலிக் கறுப்பன் எங்கே போயிருப்பான் என மக்கள் தங்களுக்குள் பலவாறு சிந்தித்துக் கொண்டு ஊருக்குள் நுழையலானார்கள். நுழைந்து செல்லும் அவர்களை நோக்கி ஒருவன் களைக்க களைக்க ஓடி வந்தான்.
அவன் ஏன் இப்படி ஓடிவருகிறான் என்பதைக் கேட்டு முன்பே அவன் “சங்கிலிக் கறுப்பன் வசித்த வீடு முற்றாக எரிந்து விட்டதையும், வீட்டினுள் இருந்த அவனின் மனைவியும் பிள்ளையும் வீட்டோடு எரிந்து போனார்கள் என்றும் சொன்னான்.
எல்லோருமாக சங்கிலிக் கறுப்பன் வசித்த வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைப் பார்த்து அவன் மனைவிக்கும் பிள்ளைக்கும் ஏற்பட்ட நிலையை எண்ணிக் கவலைப்பட்டார்கள். கவலைப்பட்டு என்ன செய்வது? நாட்கள் பல கடந்தன.
சங்கிலிக் கறுப்பனை எங்குமே காணமுடியவில்லை. அவன் இறந்து விட்டானா? அல்லது வெட்கத்தினால் ஊரை விட்டே ஓடி விட்டானா? என வேப்பங்கேணிக் கிராம மக்கள் பலவாறு எண்ணலாயினர். அக்கிராம மக்களுக்குச் சங்கிலிக் கறுப்பன் இல்லாமல் போனது உள்@ர மகிழ்ச்சியாக இருந்தாலும் இனி என்னென்ன நடக்குமோ எனப் பயமாகவும் இருந்தது.
3. ஐயர் கண்ட பேய்
இவ்விதம் நாளுக்கு நாள் பயந்து பயந்து வாழ்ந்த அவர்கள் நாளடைவில் சங்கிலிக் கறுப்பன் நினைவை மறந்து மிக்க சந்தோஷத்துடன் வாழ்ந்து வரும் நாளில் ஒரு நாள்
அயல்கிராம மொன்றில் நடைபெற்ற திருமணச் சடங்கில் கலந்து விட்டு அங்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட பொருட்களோடு ஒற்றை மாட்டு வண்டியில் தனது கிராமமான வேப்பங்கேணிக் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டார் சின்னக்கிளி ஐயர்.
அந்நேரம் மேற்கு வானில் சூரியன் மறைந்து எங்கும் இருள் பரவத் தொடங்கியது. அந்த இருளிலும் கரடு முரடான மண்பாதையில் மிக அவதானமாக தனது ஒற்றை மாட்டு வண்டியைச் செலுத்திக் கொண்டு கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். சின்னக் கிளி ஐயர்.
அப்பொழுது அவர் எங்கும் கண்டிராத அதிசயம் அவர் கண்களுக்கு தெரிந்தது. அது எங்கே நடைபெறுகிறது என்பதை அவதானித்தார் ஐயர். என்ன அதிசயம்! காளியம்மனின் சிலைக்கு மிக அருகில் இருக்கும் வேப்பமரத்திலல்லவா அது தெரிகிறது?
“எங்கும் யாரும் நடமாடாத அந்த நேரத்தில் இந்த வெளிச்சம் அதுவும் வேப்ப மரத்தில் எப்படித் தோன்றும்.” இவ்வாறு தனது உள்ளத்தில் கேள்வியெழுப்பியவாறு மேலும் கிராமத்தை நோக்கி வண்டியில் முன்னேறிக் கொண்டிருந்தார் சின்னக்கிளி ஐயர்.
வேப்ப மரத்தில் தோன்றிய வெளிச்சம் இப்பொழுது மறைந்து மறைந்து இடையிடையே பிரகாசமாகத் தோன்றியது. சின்னக் கிளி ஐயரின் உடல் இலேசாக நடுக்கம் கொண்டது. வியர்வை உடலை நனைத்தது. வண்டியை மேலும் செலுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது மீண்டும் வேப்பமரத்தில் வெளிச்சமொன்று பிரகாசமாகத் தோன்றியது. அந்த வெளிச்சத்திலே உருவமொன்று மங்கலாகத் தெரிந்தது. வெளிச்சம் மங்கி அணைந்தது. அதைத் தொடர்ந்து பயங்கரச் சத்தமொன்று இடியோசை போல முழங்கியது.
சின்னக்கிளி ஐயர் வண்டியை விட்டுப் பாய்ந்தார். வேப்பமரத்தை மீண்டும் அண்ணார்ந்து பார்த்தார். அங்கே சரசர என்ற ஓவையோடு ஏதோ ஒன்று கீழே நோக்கி வருவது தெரிந்தது. மேலும் அவர் தாமதிக்கவில்லை. வயல் வெளியினு}டாக ஓடத் தொடங்கினார்.
அவர் ஓடும் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அவரின் பின்னால் மிக வேகமாக சத்தமொன்று தொடர்ந்து வருவதை ஐயர் உணர்ந்தார்.
“ஐயோ! பேய்! பேய்! வேப்பமரத்துப் பேய்! காளித் தாயே! என்னைக் காப்பாற்று! என்னைக் காப்பாற்று!” எனச் சத்தமிட்டவாறே மிக மிக வேகமாக கிராமத்திற்குள் ஓடலானார்.
இப்பொழுது அவர் பின்னால் கேட்ட சத்தம் அடங்கி விட்டது. ஐயர் தப்பினேன் பிழைத்தேன் என ஒருவாறு தனது வீட்டை நெருங்கி வந்து கொண்டிருந்தார்.
4. பேயைக் கண்ட இளைஞன்
ஐயர் பரக்க பரக்க உடலெல்லாம் வியர்க்க வருவதைக் கண்டோர் “ஐயோ, என்னையா! ஏன் ஓடி வருகிறீர்கள்? உங்கள் வண்டில் எங்கே?” எனத் தொடர்ந்து கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்.
அதற்கு ஐயர், “மிகப் பயங்கரமான சத்தம்! விகாரமான உருவம், அது பேய் தான்! பேயேதான்! மரத்தின் உச்சியிலிருந்து எவ்வளவு வேகமாக அது இறங்கியது. நினைக்கவே நெஞ்சம் பதறுகின்றது” என்றார்.
ஐயரின் இந்தக் கூற்றை அங்கு நின்றவர்கள் யாரும் நம்பத்தயாராக இருக்கவில்லை. “பொய்! முழுப் பொய்! பேயா! எங்கள் கிராமத்திலா! நீங்கள் கூறுவதை எங்களால் நம்ப முடியாது” என அங்கிருந்த ஒருவன் சத்தமிட்டுக் கூறினான்.
நீங்கள் நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் விடுங்கள். அதையிட்டு நான் கவலை கொள்ளவில்லை. ஆனால் இந்தக் கிராமத்திற்கு ஏதோ கெடு காலம் வந்து விட்டது. இன்னும் என்னென்ன நடக்குமோ நானறியேன். இப்படியான பயங்கரத்தை நான் என்றுமே சந்தித்ததில்லை, என மேலும் சின்னக்கிளி ஐயர் சொல்லிக் கொண்டே போனார்.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் கடகட வெனச் சிரித்தான். ஐயர் அவனைப் பார்த்து, “ஏன் சிரிக்கிறாய்! பேயென்றதும் உனக்கு ஏளனமாக இருக்கின்றதோ? உனக்கு துணிவிருந்தால் எல்லையில் நான் விட்டுவிட்டு ஓடிவந்த மாட்டுவண்டியைக் கொண்டுவர உன்னால் முடியுமா?” என சவால் விட்டார்.
“சரி. நான் போகிறேன். உங்கள் வண்டியைக் கொண்டு வருகிறேன். அந்தப் பேய் என்னை என்ன செய்துவிடும் என்று பார்க்கிறேன்” எனக் கூறியவாறு மிக வேகமாக அந்த இடத்தை விட்டு, கிராமத்தின் எல்லைப் புறத்தை நோக்கி கிளம்பினான் அந்த இளைஞன்.
அந்நேரம் வானமெங்கும் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. இருள் என்னும் போர்வையிலே கிராமம் ழுழ்கிக் கிடந்தது. அந்த இருளிலும் கிராமத்தின் எல்லையிலே இருக்கும் பாரிய வேப்பமரங்கள் பெரு மலை போலத் தோன்றின.
இத்தனைக்கும் மத்தியில் அஞ்சா நெஞ்சும், எதனையும் எதிர் நோக்கும் துணிச்சலும் கொண்ட வீரனைப் போல் கம்பீரமாக அவ்விளைஞன் சென்று கொண்டிருந்தான். ஐயரின் வண்டியைத்தேடி அந்த கரடு முரடான மண்பாதையிலே முன்னேறிச் சென்று கொண்டிருந்த இளைஞன் ஒரு கணம் அசந்தே போய்விட்டான்.
பாதையின் நடுவிலே பெருநெருப்பு எரிந்த கொண்டிருந்தது. அந்த நெருப்பு எரியும் இடத்தை நோக்கி இளைஞன் நெருங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது ‘கீச்! கீச்!’ என்ற சத்தத்தோடு ஏதோவொன்று அவன் தோளிலே உரசிச் சென்றது.
அது வெளவால்!
இதைத்தான் சின்னக்கிளி ஐயர் கண்டு பயந்திருக்கிறார் எனத் தனது மனதிற்குள் எண்ணியவாறு மேலும் இரண்டடி முன்னோக்கிச் சென்றான் அவ்விளைஞன். கண்ணுக்கு இப்பொழுது மிக அருகே நெருப்ப எரிந்து கொண்டிருந்தது. அந்த நெருப்பை உற்று நோக்கினான் இளைஞன். அங்கே ஐயரின் வண்டி எரிந்து கொண்டிருந்தது. யார் வண்டிக்குத் தீ வைத்திருப்பார்கள் என்று அறியும் நோக்குடன் அவ்விடத்தை நோட்டமிட்டான் இளைஞன்.
அத்தருணம் காத செவிடு படும்படியாக பயங்கரச் சத்தமொன்று எங்கிருந்தோ கேட்டது. அச்சத்தத்தின் ஒலி நான்கு திக்கிலும் எதிரொலித்தது. இளைஞன் திடுக்கிட்டான். சத்தம் முதலில் வந்த திசையை நோக்கினான்.
வேப்பமரம்! ஐயர் சொன்ன அதே வேப்பமரம்! காளியம்மன் சிலைக்கு மிக அருகேயுள்ள வேப்பமரம்! என வாய் முணுமுணுத்தது.
காளியம்மன் சிலையைப் பார்த்தான் இளைஞன். அங்கே எதுவிதமாற்றமும் தென்படவில்லை. அவ்விளைஞன் அஞ்சவில்லை. வருவது வரட்டும் என்ற மனத்துணிவோடு வேப்பமரத்தை நோக்கி ஓடிச்சென்றான்.
அப்பொழுது வேப்பமரத்தின் அடியிலே பிரகாசமாகத் தீப்பிளம்பு தோன்றியது. அது குபீர் குபீரென தோன்றுவதும் மறைவதுமாக இருந்தது.
அந்த தீப்பிளம்பின் ஒளியிலே ஐயர் கூறியது போன்ற விகாரமான உருவம் ஒன்று தோன்றியது. இளைஞனின் துணிவெல்லாம் பறந்தது. நெஞ்ச டிக், டிக்கென வேகமாக அடித்தது. உடல் வியர்வையால் நனைந்தது. “பேய்! ஐயோ பேய்!! என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் காப்பாற்றுங்கள்!!” எனச் சத்தமிட்டவாறே கிராமத்தை நோக்கி ஓடலானான் அவன்.
அவனின் ஓட்ட வேகத்தில் கல்லொன்றில் தடக்கிக் கீழே விழுந்தான். முகம் நிலத்தில் மோதியது. மேலும் ஏதொவொன்று அவனைத் தாக்கியது. அவன் மூக்காலும் வாயாலும் இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. அதைத் தொடர்ந்து அம்மா! அம்மா!! என்ற முனகல் சத்தம். அவ்வளவுதான். இளைஞன் எழுந்திருக்கவே இல்லை!
5. பேய் பலி கொண்டது
அந்த இளைஞன் இறந்தே விட்டான். அந்த இளைஞன் இறந்தமையைப் பொறுக்க முடியாமலோ, என்னவோ வானத்தில் இருந்த நட்சத்திரங்கள் யாவும் மறைந்தன. கருமை படர்ந்த வானத்தில் இடி முழங்கியது. பேரிரைச்சலோடு மழை கொட்டியது.
இந்த மழையிலும் வேப்ப மரத்தடியில் பேயின் அட்டகாசச் சிரிப்பொலி அடங்கவில்லை. சிரித்துக்கொண்டேயிருந்த பேய் மிகவம் விரைவாக அந்த கரடு முரடான பாதை வழியே போய் மீண்டும் வயல் வெளியூடாக விரைந்து கொண்டிருந்தது. அதன் அகோரப்பசி தீரவில்லையா? அது மீண்டும் எங்கே போகிறது?....
மறுநாட்காலை வேப்பமரத்தடியைச் சுற்றி ஏகப்பட்ட சனங்கள் கூடிநின்றார்கள். அங்கே இளைஞனின் உயிரற்ற உடல் மழையில் நனைந்த நிலையில் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் வெளியேறிக் காய்ந்து போய் கிடந்தது.
“இது பேயின் வேலைதான். பேய் அடித்தபடியால் தான் இரத்தம் கக்கியிருக்கிறது.” இப்படிக் கூறுவோரும், “இது காளியம்மனின் திருவிளையாடல், ஐயரைத் துரத்தி இளைஞனைச் சாகடித்திருக்கிறது. அம்மனுக்குப் பொங்கி விட்டால் எல்லாம் சரியாகி விடும” என்று சொல்வோரும், வேறு வேறு கதைகள் அளப்போரும், ஒருபுறம் இருக்க, இளைஞனின் சடலத்தை உறவினர்கள் எடுத்துச் சென்றார்கள்.
இளைஞனின் இறுதிக்கடன்கள் முடிந்து நாட்கள் பல கடந்தன. வேப்பங்கேணிக் கிராம மக்கள் மாலையானதும் கிராமத்து எல்லைக்கு வர அஞ்சினார்கள். எல்லோரையும் பயம் ஆட்கொண்டது. பேய்! வேப்பமரத்துப் பேய்! இதுவே எங்கும் பேச்சாக இருந்தது. பெரியோர் முதல் சிறுவர் வரை வேப்பமரத்துப் பேயென்றால் உடலே நடுங்கும் நிலையில் காண்பபட்டார்கள்.
பேயை எப்படித் துரத்துவது? கிராமமே கூடி ஆராய்ந்தது. காளியம்மனுக்குப் பொங்கி விட்டார்கள். மந்திரவாதிகளை அழைத்துக் கிராமத்திற்குக் காவலிட்டார்கள்.
இவை யாவும் பேயை ஒன்றும் செய்து விடவில்லை. அதன் நடமாட்டம் அதிகரித்தே வந்தது. உயிர்ப்பலிகள் கூடிக்கொண்டே வந்தன. இப்பொழுது இருண்டு விட்டால் மக்கள் வீட்டுக்குள்ளேயே அடங்கி விடுவார்கள். இதனால் பேயின் அட்டகாசம் மேலும் அதிகரித்தது. இப்படியாக அக்கிராம மக்கள் துன்பத்தில் திளைத்து வரும் நாளில் அன்றொரு நாள் -
6. மந்திரவாதி வருகிறான்!
பெரியதம்பி. நீண்ட முறுக்கு மீசை. வெற்றிலைக் காவி படிந்த பற்கள். தலையில் கொட்டைப் பாக்களவு குடும்பி, பருத்தவண்டி, கருத்தமேனி. இத்தனை அமைப்புங்கொண்ட மொத்த உருவத்திற்குச் சொந்தமானவர் பெரியதம்பி.
இவர் மாந்திரிகத்தில் கை தேர்ந்தவர். இவரைக் கண்டால் பேய்களே நடுங்கி ஒளிந்துவிடும். அந்த அளவுக்கு அவர் புகழ் எங்கும் பரவி இருந்தது.
வேப்பங்கேணிக் கிராமத்தின் அயற் கிராமமொன்றில் வசிக்கும் இவரது காதிலும் வேப்பமரத்துப் பேய் பற்றிய செய்தி எட்டியது. இதனைக கேள்வியுற்ற பெரியதம்பி தனது புகழை மேலும் ஓங்கச் செய்ய இது ஒரு சந்தர்ப்பம் என எண்ணிக் கொண்டான்.
வேப்பங்கேணிக் கிராம தலைமைக்காரருக்கு, தன்னால் பேயைத் துரத்த முடியும் எனத் தகவல் அனுப்பினான். இந்தச் செய்தியைக் கிராமத் தலைவர் மூலம் அறிந்த மக்கள் ஆனந்தம் அடைந்தார்கள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. பெரியதம்பி மாந்திhPகனரின் வருகைக்காக கிராம மக்கள் யாவரும் காத்திருந்தார்கள். ஆனால் பெரியதம்பியரோ வரவில்லை. நேரம் மாலையாகிக் கொண்டிருந்தது. கிராம மக்கள் ஏமாற்றத்தோடு மேலும் அங்கு நிற்க முடியாமல் அச்சத்தில் தத்தமது வீடுகளை நோக்கிச் சென்று விட்டார்கள்.
அக்கிராமமே அமையில் மூழ்கியிருந்தது. எங்கும் யாரும் நடமாட முடியாத நேரம் பெரியதம்பியரும், அவரது உதவியாளனும் மாட்டுவண்டியில் வந்து கொண்டிருந்தனர்.
எதற்கும் அஞ்சாத நெஞ்சம் படைத்த பெரியதம்பி மாட்டு வண்டியின் பின்பக்கம் அமர்ந்திருக்க, அவரின் உதவியாளன் வண்டியை ஓட்டி வந்தான். மாடுகளின் கழுத்திலே தொங்கிய கிங்கிணி மணியோசையும், மாட்டுவண்டியின் கடகட சத்தத்தையும் தவிர அங்கே வேறு சத்தங்கள் எதுவும் கேட்கவில்லை.
வண்டி கிராமத்து எல்லையை நெருங்கியது. அப்போது வேப்பமரத்தின் உச்சியில் தீப்பிழம்பு தோன்றியது. மாடுகள் வெருண்டன. வண்டியைச் செலுத்திய உதவியாளன் ஒரு கணம் திகைத்தே போனான். வண்டி மேலும் செல்ல முடியாது மாடுகள் நிலையாக நின்றன.
மாட்டு வண்டி நிலையாக அசையாது நிற்பதைக் கண்ட பெரியதம்பி வண்டியை விட்டு ஓடிவரவும் வேப்பமரத்தில் திரும்பவும் தீப்பிழம்பு தோன்றவும் சரியாக இருந்தது!
பெரியதம்பியின் உதவியாளன் உடல் உதறல் எடுத்தது. பேயின் அட்டகாசச் சிரிப்பொலி எங்கும் எதிரொலித்தது. பெரியதம்பியர் தனது மந்திரக் கோலை கையில் எடுத்தார். பேய் மிக விரைவாக மரத்திலிருந்து கீழ் நோக்கி வருவது மிக துலக்கமாகத் தெரிந்தது. மேலும் அங்கு நிற்க முடியாமல் பெரிய தம்பியின் உதவியாளன் ஓட முற்பட்டான்.
7. மந்திரவாதி பலியானான்
ஓட முற்பட்ட பேயோட்டி பெரியதம்பியின் உதவியாளனை வேப்பமரத்தடிப்பேய் பயங்கரமாகத் தாக்கியது. அதனால் அவன் பெரும் சத்தமிட்டான். அந்தச் சத்தம் அவ்விடத்தையே ஆக்கிரமித்தது. மீண்டும் பேய் அவனின் முகத்தைத் தாக்கியது. இப்பொழுது அவனால் கத்த முடியவில்லை. தரையில் வீழ்ந்து வேதனையால் முனகினான். அவன் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் வெளியேறியது. பேய் அவனின் அவலநிலை கண்டு அட்டகாசமாகச் சிரித்தது. சிரித்துக் கொண்டே அது பெரியதம்பியரை நோக்கிப் பாய்ந்தது.
பெரியதம்பியர் சற்று விலகிக் கொண்டார். பேய் நிலத்தில் வீழ்ந்து எழும்பியது. அதன் முகம் கோபத்தால் விகாரம் அடைந்தது. பற்கள் அகோரமாக காட்சியளித்தது. பெரியதம்பியர் அஞ்சவில்லை. எத்தனையோ பேய்களை விரட்டியடித்தவரல்லவா? அவர் பேய்களைக் கண்டு என்றுமே அஞ்சியதில்லை. துணிச்சலோடு பேணை அணுகினார்.
பேய் மீண்டும் தன் அகோரப் பற்களைக் காட்டி சிரித்தது. பெரியதம்பியர் முந்திக் கொண்டார் கைகளில் இருந்த மந்திரக் கோலால் தாக்கினார்: மந்திரக்கோல் இரண்டாக முறிந்தது. பேய் மீண்டும் ஆத்திரமடைந்தது. பெரியதம்பியின் கொட்டைப் பாக்களவு குடும்பியைப் பிடித்தவாறே அவரை அங்கும் இங்குமாக சுழற்றியது பெரியதம்பியர் வேதனையால் கூச்சலிட்டார்!
பேயின் பிடி தளருவதாக இல்லை. பெரியதம்பியின் துணிச்சலெல்லாம் எங்கோ பறந்து போய் விட்டது.
பேயை விரட்டும் மந்திரமே மறந்து போகுமளவிற்கு பெரியதம்பியரின் நிலை கலங்கிப் போய் விட்டது@ செய்வதறியாது தவித்தார். அவ்வளவுதான், பேய் அவரைத் து}க்கி வீசியது அவர் வீசிய பந்துபோல் நிலத்தில் வந்து வீழ்ந்தார்.
அவ்வளவுதான். அவரின் உயிர் அடங்கியது. இரத்தம் வாயாலும் மூக்காலும் வெளியேறியது. பேய் வெற்றிக் களிப்பில் வயல் வெளியினு}டாக கூச்சலிட்டவாறு மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
கிராமத்தின் எல்லைப்புறத்திலிருக்கும் அந்த மயானத்தை அடைந்த பேய் நாலாபக்கமும் பார்வையைச் செலுத்தி விட்டு இப்பொழுது மிக அமைதியாக அருகேயுள்ள காட்டினுள் சென்று மறைந்தது.
இரவிலே வேப்பமரத்தில் வாசம் செய்யும் பேய் பகலிலே ஏங் அங்கிருப்பதில்லை? அது மர்மமாகவே இருந்தது.
மயானத்தை அடுத்துள்ள அந்தப் பற்றைக் காட்டினுள் பேய் சென்று மறைவதென்றால் அதன் இருப்பிடம் அந்த சூழலில் எங்காவதுதான் இருக்க வேண்டும். அதனைக் கண்டு பிடிக்கும் அளவிற்கு அக்கிராம மக்கள் துணியவில்லை.
ஏனென்றால் பேயை அதன் நடமாட்டத்தைக் கண்டு அவர்கள் அஞ்சினார்கள். அதுவே பேயின் அக்கிரமச் செயலுக்கு அத்திவாரமாக அமைந்தது.
மறுநாட் காலை பேயயோட்டி பெரியதம்பியரினதும் அவரின் உதவியாளரினதும் மரணங்கள் காட்டுத்தீ போல் எங்கும் பரவியது. இதனால் நாட்கள் செல்லச் செல்ல வேப்பங்கேணிக் கிராமத்திற்கே அயல் கிராம வாசிகள் வர அச்சம் கொண்டார்கள்.
இவ்வாறு வேப்பங்கேணிக் கிராம மக்கள் பேயின் நடமாட்டத்தால் மேலும் வேதனையடைந்து செய்வதறியாது துடித்துக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் அக்கிராமத்தை நோக்கி இரண்டு இளைஞர்கள் வந்தார்கள்.
8. திருக்குமார் அலறினான்
அந்த இருவர்களும் யார்? அவர்களுக்கும் வேப்பங்கேணிக் கிராமத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? அவர்கள் ஏன் அக்கிராமத்திற்கு வரவேண்டும்? அந்தக் கிராமத்தின் பெரிய பணக்காரரான மாணிக்கம் பிள்ளையின் மகனும் மருமகனும்தான் அவர்கள். பரம்பரைப் பணக்காரரான மாணிக்கம் பிள்ளை பட்டினத்துப் பாடசாலை யொன்றில் தனது மகனை படிப்பதற்காக அனுப்பியிருந்தார். பட்டினத்தில் வாழும் அவரது தங்கையின் வீட்டிலேயே மகனைத் தங்கவைத்தார். பாடசாலை விடுமுறைக் காலமாதலால் அவரின் மகன் வித்தியாபரன் கிராமத்திற்கு தன் தந்தையின் சகோதரி மகன் திருக்குமாருடன் புறப்பட்ட வந்தான்.
தனது மாமனார் வசிக்கும் கிராமத்தை நோக்கிப் புறப்பட்ட திருக்குமாருக்கு அந்த அழகிய கிராமத்தின் அமைதியான சூழல் நன்கு பிடித்து விட்டது. பார்க்கும் இடமெல்லாம் பச்சை படர்ந்து காட்சி தரும் அக்கிராமத்தின் எழில் தோற்றம். பரந்து வளர்ந்திக்கும் பாரிய வேப்பமரங்கள். அதனருகே பசுமையாக தோற்றமளிக்கும் பேணி. பார்ப்போர் நெஞ்சங்களை திகில் கொள்ளச் செய்யும் காளியம்மனின் பயங்கரத் தோற்றம் கொண்ட உருவச்சிலை.
இவை யாவற்றையும் முதன் முதற் கண்ட திருக்குமாரின் நெஞ்சில் மகிழ்ச்சி கொப்புளித்தது. பட்டினத்து மண்ணிலே, பிறந்து வளரும் அவனுக்கு வேப்பங்கேணிக் கிராமத்தில் பாதம் பதிந்தது முதல் தானும் இந்த அழகிய கிராமத்தில் பிறந்திருக்கக் கூடாதா என்ற எண்ணமும் தோன்றியது.
பட்டினத்திலிருந்து பலமைல் தொலைவிலுள்ள அக்கிராமத்தை நோக்கி படகிலும் பின் வில்லுவண்டியிலும் பிரயாணத்தை மேற்கொண்டு வந்த திருக்குமார் மாமன் மாணிக்கம் பிள்ளையின் வீட்டையடைந்தான்.
அந்தக் கிராமத்தில் எழிலில் தன்னையே மறந்து அவனுக்கு அக்கிராமத்தையே ஆட்டிப் படைக்கும் வேப்பமரத்தடிப்பேயைப் பற்றித் தெரிந்திருந்தால் கிராமத்தில் தங்கும் எண்ணமே எழுந்திருக்காது.
தன் மகன் வித்தியாபரனோடு தங்கையின் மகன் திருக்குமாரைக் கண்டதும் மாணிக்கம்பிள்ளையின் மனம் பூரித்துப் போய்விட்டது. உவகை பொங்க இருவரையும் மார்போடு அணைத்துக் கொண்டார். அவர்கள் வருகையால் மாணிக்கம் பிள்ளையின் வீடு கலகலப்பாக இருந்தது: விருந்து அமர்க்களமாக நடந்தது.
வேப்பங்கேணிக் கிராமத்திலேயே வசதிகள் பல கொண்ட ஒரே மாடி வீடு மாணிக்கம் பிள்ளையினுடையது தான். அந்த வீட்டின் மேலு; மாடியில் மகன் வித்தியாபரனுக்கென ஒதுக்கப்பட்ட அறையிலேயே திருக்குமாரும் தங்கினான்.
காலைக் கதிரவன் பகற்பொழுதெல்லாம் நர்த்தனம் புரிந்து விட்டு மேலைத்திரைவானை நோக்கி பள்ளி கொள்ளச் சென்று கொண்டிருந்தான். அதனைக் கண்ட ஆனந்தத்தால் உந்தப்பெற்று வானத்தில் நட்சத்திரங்களுக்கு மத்தியில் அம்புலி தன்னெழில் காட்டி நின்றான்.
சிறுவர்கள் இருவரும் காற்று வசதிக்காக யன்னல்களைத் திறந்து விட்டு நித்திரையில் ஆழ்ந்தனர். ஊரே அமைதி கொண்டு அடங்கி விட்டது.
அந்த நேரம் வேப்பமரத்தை நோக்கி பேய் விரைந்து வந்தது. மரத்தின் மீது தாவியேறி உச்சிக் கிளையை அடைந்தது. அங்கிருந்தவாறே உரத்துச் சத்தமிட்டது!
அமைதியான அந்தச் சூழ்நிலையில் வேப்பங்கேணிக் கிராமத்து எல்லைக்கு மிக அண்மையாக இருக்கும் மாணிக்கம்பிள்ளை வீட்டிற்கு மிகத் தெளிவாகக் கேட்டது.
அந்தப் பேயின் சத்தம் அந்தச் பயங்கரச் சத்தம் நித்திரையில் இருக்கும் திருக்குமாரின் காதுகளில் எதிரொலித்தது.
திருக்குமார் திடுக்கிட்டு எழுந்தான். பேயின் சத்தம் மீண்டும் கேட்டது. திருக்குமார் அச்சத்தால் அலறினான். அவன் போட்ட அலறல் சத்தத்தால் வித்தியாபரனும் துள்ளிக் குதித்து எழுந்தான். அப்போது….
9. திருக்குமாரின் திட்டம்
படுக்கையிலிருந்து எழுந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே உடல் உதறலெடுக்க திகைப்புற்று மௌனமாக நின்றார்கள். அவர்களின் மௌனம் கலைந்தது திறந்து கிடந்த அந்த அறை வாசலில் மாணிக்கம் பிள்ளை கைத்துப்பாக்கியோடு நின்றார். எதற்காகச் சத்தமிட்டீர்கள். எனத் திருக்குமாரையும் வித்தியாபரனையும் பார்த்துக் கேட்டார்.
அதற்கு திருக்குமார் “மாமா, விட்டு விட்டு பயங்கரமாகக் கேட்கிறதே, அந்தச் சத்த மென்ன? அதனைக் கேட்டே நான் கூச்சலிட்டேன். எனது சத்தம் கேட்டே வித்தியாபரனும் எழுந்தள்ளான்” எனக் கூறினான்.
“ஆ!... அதுவா… அந்தச் சத்தம் கேட்டு வீட்டினுள் இருக்கும் நீங்கள் பயப்படத் தேவையில்லை. அறைக்கதவுகளையும், யன்னல்களையும் பூட்டி வி;ட்டு நித்திரை செய்யுங்கள்” என மாணிக்கம்பிள்ளை கூறினார்.
அவரின் பதில் திருக்குமாருக்குத் திருப்தியைத் தரவில்லை. “மாமா, என்ன மாமா? அந்த பயங்கரச் சத்தம் என்னவென்று நீங்கள் கூறவில்லையே?” என்றான் திருக்குமார்.
“அது…. அது…. பேயின் சத்தம்” என்றார் மாணிக்கம்பிள்ளை.
“பேயா?.... எங்கேயிருக்கிறது மாமா பேய்? அப்படியொன்று இந்தக் கிராமத்தில் நடமாடுகின்றதா? அதை நீங்களும் நம்புகறீர்களா?” எனத் திருப்பிக் கேட்டான் திருக்குமார்.
அவன் பயமெல்லாம் எங்கோ பறந்து விட்டது. அவன் பேயயென்ற வார்த்தையே என்றும் நம்பியதில்லை அதனால் மாமனின் பதிலைக் கேட்ட அவனுக்கு ஆச்சரியம் மேலிட்டது.
குமார், “அந்த பேய் இந்தக் கிராமத்து மக்களைத் தினம் தினம் வழிவாங்குகின்றது. நாளுக்கு நாள் அதன் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. மிகப் புகழ் வாய்ந்த பேயோட்டி பெரியதம்பியையம் அவன் உதவியாளனையும் பழி வாங்கி இன்னும் ஐந்து நாட்கள் கூட ஆகவில்லை. நானே அதற்கு அஞ்சுகின்றேன். பேயை வெல்ல மனிதரால் முடியாது. கிராம மக்கள் அனைவருமே மாலையானதும் வீட்டுக்குள் ஒதுங்கி விடுகிறார்கள். என்ன செய்வது, விதியை நொந்தவாறு காலத்தைக் கடத்துகிறார்கள், இக் கிராமத்து மக்கள்” என மிக மனம் வெதும்பக் கூறினார் மாணிக்கம்பிள்ளை.
“மாமா, எமது பட்டணத்தில் சிறுவர்கள் கூட தனியாகச் செல்வார்கள். நான் கூட எத்தனையோ தடைவ தனியாகச் சென்றுள்ளேன்” என்றான் திருக்குமார்.
“சரி! சரி! உன்னோடு கதைக்க முடியாது. விடிந்ததும் பேயின் அட்டகாசம் பற்றி விபரமாகச் சொல்கிறேன். இப்போ படுங்கள்” என்று கூறிவிட்டு வெளியேறினார் மாணிக்கம்பிள்ளை.
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட இருந்த வித்தியாபரன் திருக்குமாரைப் பார்த்து “காலையிலிலேயே உங்கள் பட்டணத்துக்கு போய் விடுவோம். இங்கிருக்க எனக்கும் பயமாக இருக்கிறது” எனக் கூறினான்.
அப்பொழுதும் அந்தப் பயங்கரச் சத்த் கேட்டுக் கொண்டேயிருந்தது.
“வித்தியாபரா, இதிலேதோ மர்மம் தங்கியிருக்கிறது. நீ பயப்படாதே! நாம் இருவரும் அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு உன்னுடைய உதவி எனக்குத் தேவை. உன்னால் உதவ முடியுமா?” என்றான் திருக்குமார்.
அதற்கு வித்தியாபரன் பின்வருமாறு கூறினான்: திருக்குமார்! அப்பா எதற்கும் அஞ்சாதவர். எதையும் துணிந்து செய்யக் கூடியவர். அவரே பேயைக் கண்டு அஞ்சுகின்றார் என்றால் சிறுவர்களாகிய நாம் எம்மாத்திரம்?
“அங்கே தான் பெரியதவறு இருக்கிறது. எல்லா மக்களும் பயந்து ஒதுங்குவதால் தான் பேய்க்கும் வாய்ப்பேற்பட்டுள்ளது. நீ விஞ்ஙானம் படிக்கவில்லையா? விஞ்ஞானம ஆசிரியர் கூறுவதைக் கேட்கவில்லையா? “பேய் பிசாசு. முனி என்று எதுவும் உலகிலில்லை. அவ்விதம் எண்ணுவதே முட்டாள் தனம் என்று அவர் அடித்துச் சொல்வதை நீ கேட்டகவில்லையா? அதுவும் பொய்யா? துணிவு நமக்குத் துணையிருந்தால் நாம் இந்தப் பலப் பாPட்சையில் வெற்றிகொள்ள முடியும். அதற்கு உன் தந்தையின் கையில் உள்ள கைத்துப்பாக்கி எம் கைக்கு வரவேண்டும். அதனை எடுத்துத் தர உன்னால் முடியுமா?” எனக் கேட்டான் திருக்குமார்.
“என் தந்தையிடம் அந்த துப்பாக்கியை விட மேலும் இரண்டு துப்பாக்கிகள் உண்டு. அதில் ஒன்றை நான் கட்டாயம் எடுத்துத் தருவேன்” என்றான் வித்தியாபரன்.
சபாஷ்….. வித்தியாபரா!... இனிமேல் பயப்படாது நித்திரை செய்! எனக் கூறிவிட்டுச் சிந்தனையோடு படுத்துக்கொண்ட திருக்குமாரின் நெஞ்சத்தில் பெருந்திட்டமொன்று உருவாகிக் கொண்டிருந்தது. அந்தத் திட்டம் என்ன?....
10. அது என்ன?
இரவிரவாக வேப்பமரத்தடிப் பேயின் மர்மத்தைக் கண்டி பிடிப்பதற்காக திட்டங்களைத் தன் நெஞ்சத்தே வகுத்தக் கொண்டிருந்த திருக்குமார் விடியுமுன்பே படுக்கையை விட்டு எழுந்தான். எழும்பியவன் தன்னருகே மெய்மறந்து நித்திரை செய்த வித்தியாபரனை எழுப்பினான். எழும்பிய வித்தியாபரனுக்கு தன் திட்டத்தை விளக்கிக் கூறினான்.
அத்திட்டத்தின் படி வித்தியாபரன் தன் தந்தைக்குத் தெரியாமல் அவரின் கைத்துப்பாக்கியை எடுக்க வேண்டும். இரவு கிராமத்து மக்கள் நடமாட்டம் இல்லாத வேளையில் யாருக்கும் தெரியாமல் இருவரும் வேப்பங்கேணிக் கிராமத்தினுள் எல்லைப் புறத்தையடைந்து மறைந்திருந்து பேயின் நடமாட்டாத்தை அவதானிக்க வேண்டும்.
இந்த விபரங்களை வித்தியாபரனுக்கு விளக்கிய திருக்குமார் வித்தியாபரனோடு காலைக் கடன்களை முடித்தபின் மாமனாருடன் அமர்ந்து காலை உணவை உண்ண ஆயத்தமானார்கள். வித்தியாபரனும் உடனிருந்து உணவை உண்ணலானான்.
திருக்குமார் மாமனாரிடம் வேப்பமரத்தடிப் பேயைப் பற்றித் துருவித் துருவி ஆராய்ந்தான். மாமனார் கூறியவற்றைக் கேட்டுத் திருக்குமார் ஆச்சரியமடைந்தான். ஆனால் இவற்றை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த வித்தியாபரனோ எதுவும் பேசவில்லை. அவனுக்குத் தந்தையின் முற்கோபத்தைப் பற்றி நன்கு தெரியும். தான் ஏதாவது கேள்விகளைக் கேட்டால் தந்தையார் கோபப் பட்டு விடுவார் என அவன் பயந்தான். எல்லோரும் காலையுணவை முடித்தக் கொண்டனர்.
சிறுவர்கள் இருவரும் வெளியே சென்றுவர மாணிக்கம்பிள்ளையிடம் அனுமதி பெற்றனர். பகல் நேரமாதலால் மாணிக்கம்பிள்ளை அவர்களைத் தடுக்கவில்லை. இருவரும் வேப்பங்கேணிக் கிராமப்புற எல்லைக்கு வந்து சேர்ந்தனர்.
வித்தியாபரனும் திருக்குமாரும் தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற கிராமப்புற எல்லையிலுள்ள வேப்பமரங்களையம் அதன் அருகே கம்பீரமாக வீற்றிருக்கும் காளியம்மன் சிலையையும் சிலைக்கருகேயிருக்கும் சிறு கேணி உட்பட அச்சுற்றாடல் முழுவதையும் தீவிரமாக ஆராய்ந்த பார்த்தார்கள்.
முதல் நாள் இரவு அங்கு யாரும் நடமாடியதற்கான அடையாளங்கள் தென்படவில்லை. அப்போது “அட திருக்குமாரா! கீழே பார்த்து என்னடா பிரயோசனம்? பேய்க்குக் காலில்லையல்லவா! அது பறந்து வந்திருக்கலாமல்லவா!” எனக் கூறினான் வித்தியாபரன்.
அவன் கூறிய இக்கூற்றினைக் கேட்டு திருக்குமார் கடகடவெனச் சிரித்தான். வித்தியாபரனை அழைத்து வேப்பமர வேர்ப்பாக மொன்றில் அமரச்செய்து தானும் அருகே அமர்ந்து “வித்தியாபரா! உனக்கு இன்னும் பேய் இந்த உலகத்தில் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது. உன் உள்ளத்தில் இந்தப்பேயின் மர்மத்தைக் கண்டு பிடிப்போம் என்ற நம்பிக்கை துளியளவுமில்லை. அது எனக்கு நன்றாகப் புரிகிறது. இருந்தாலும் நான் கூறுவதைக் கவனமாகக்கேள். வெளிநாடுகளில் வாழ்ந்த வீரச் சிறுவர்களின் வரலாறுகளை நீ நன்கு அறிந்திருந்தும்@ அவர்களனி; வீரதீரச் செயல்களை தெரிந்திருந்தும் எதற்காகப் பயப்படுகிறாய்? உனது கிராம மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் உனக்கிருந்தால் நெஞ்சிலே துணிவோடு இன்றிரவு கட்டாயம் நீ என்னோடு வந்தே தீரவேண்டும். வருவாயா, வித்தியாபரா?”
“திருக்குமாரா, உன்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். நான் உனக்கு உதவியாக நிச்சயம் வருவேன். ஆனால் என்னை எந்த ஆபத்திலிருந்த் நீ காப்பாற்றுவாயா?”
திருக்குமார் மீண்டும் சிரித்தான். “வித்தியாபரா! நீ என் மாமன் மகன், உனக்கு எந்த ஆபத்து வந்தாலும் அது எனக்கு ஏற்பட்டது போலவே நான் கருதுவேன். உன்னைக் காப்பாற்ற வேண்டியது எனது கடமையுமல்லவா? இனிமேலும் தாமதமேன்? வா! நாமிருவருமாக இரவு இங்கு வருவதற்கான ஆயத்தங்களைச் செய்வோம்” எனத் திருக்குமார் கூறியதும் இருவரும் அவ்விடத்தை விட்டு அகல ஆயத்தமானார்கள்.
அந்த நேரம் வித்தியாபரன் பாதையில் ஏதோ ஒன்றைத் திருக்குமாருக்குச் சுட்டிக் காட்டினான். அது….. என்ன?.....
11. கறுத்த உருவம்
திருக்குமார் பாதையை நோக்கினான். அங்கே மாமன் மாணிக்கம்பிள்ளை பயணம் செய்யும் மாட்டு வண்டி வந்து கொண்டிருந்தது. அந்த அழகான வண்டியை மீசைக்கார மணியம் ஓட்டி வந்தான்.
திருக்குமாரும் வித்தியாபரனும் நின்ற இடத்தை வண்டி நெருங்கியதும் நின்றது. வண்டியின் பின்புறத்தே கம்பீரமாக வீற்றிருந்த மாணிக்கம்பிள்ளையைச் சிறுவர்களிருவரும் நெருங்கினர். “மாமா, எங்கே மாமா போகிறீர்கள்? நாங்களும் உங்களுடன் கூட வரலாமா?” எனத் திருக்குமார் கேட்டான்.
அதற்கு மாணிக்கம்பிள்ளை அவனைப் பார்த்து “நான் அவசர அலுவல் காரணமாக அயல் கிராமத்திற்கு செல்கிறேன். வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் செல்லலாம். எனவே நீங்கள் கவனமாக இருங்கள். அநாவசியமாக எங்கும் செல்லாதீர்கள்” எனக் கூறினார்.
அவர் கூறிய வார்த்தைகள் திருக்குமாரின் நெஞ்சத்திலே மகிழ்ச்சியை ஊட்டியது. வித்தியாபரன் தந்தையை எட்டி முத்தமிட்டான். அதைப் பார்த்த திருக்குமாரும் மாமனுக்கு கைகாட்டி வழியனுப்பி வைத்தான். அதைத் தொடர்ந்து மீசைக்கார மணியம் மாடுகளுக்கு மாறிமாறித் தடியால் அடித்தான். அவை வேகமாக ஓடத் தொடங்கின. மாடுகளில் கட்டியிரந்த மணிகளின் கிங்கிணிச் சத்தம் ஓய்ந்தது. வண்டி து}ரச் சென்று மறைந்து விட்டது.
வித்தியாபரன் திருக்குமாரைப் பார்த்து “அப் பா போய் விட்டார். இந்தச் சந்தர்ப்பம் எமக்கு ஓர் நல்ல வாய்ப்பு. இன்றிரவு நாம் வேப்பமரத்துப் பேயைப் பார்த்து விடலாம்!” என்றான்.
திருக்குமார் மைத்துனன் வித்தியாபரனின் துணிச்சலைக் கண்டு மனதுக்குள் சிரித்ததோடு, “வா, நாம் இப்போ வீடு சென்று இரவு பேய் வேட்டைக்குச் செல்வோம்” என்றான்.
இருவரும் வீட்டை அடைந்தனர். வித்தியாபரன் தாயிடம் சென்று ‘எமக்கு பசிக்கிறது’ என்றான். தயாhர் சிறுவாகள் இருவரையும் அழைத்துச்சென்று மதிய உணவு பரிமாறினாள. இருவரும் நன்றாகச் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடிந்ததும் மிகவும் இரகசியமாக யாருக்கும் தெரியாமல் தமது பேய் வேட்டைக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்தார்கள்.
வித்தியாபரன் தந்தையின் அறைக்குள் சென்று துப்பாக்கியைத் தேடினான் அங்கே ஒரு துப்பாக்கியே இருந்தது. அதனைக் கையிலே எடுத்தான். தோட்டாக்கள் இருக்கும் பெட்டியைத் திறந்தான். அதனுள் காணப்பட்ட தோட்டாக்களில் பன்னிரண்டினை பையொன்றினுள் திணித்தான். அவன் கையில் எடுத்த துப்பாக்கி சுழல் துப்பாக்கி.
ஏற்கனவே தந்தையார் அத் துப்பாக்கியினுள் தோட்டாக்களை எப்படிச் செலுத்துவார் என்பதை அறிந்திருந்தமையாலும்@ அதனை எவ்வாறு சுடுவதற்கு இயக்குவார் என்பதனை நன்கு கவனித்தமையாலும் வித்தியாபரனுக்கு துப்பாக்கியை இயக்கப் பழகவேண்டுமென்ற எதுவித சிரமமும் இருக்கவில்லை.
திருக்குமாரின் உதவியோடு மற்றும் தேவையான நீண்ட தேடாக் கயிறு, கத்தி, டோச்லைற் இவையெல்லாவாற்றையும் ஆயத்தமாக எடுத்துத்தம் அறையினுள் மறைத்து வைத்தான். அவர்களைப் பொறுத்தவரை இப்பொழுது எதைக் கண்டும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற எண்ணம் உள்ளத்தில் மேலிட்டது.
தானே துப்பாக்கியை வைத்திருப்பதாக வித்தியாபரன் சொன்னதும் திருக்குமார் ஆச்சரியடைந்தான். முன்பெல்லாம் பேயென்றதும் அஞ்சியொடுங்கிய இவனா இப்பொழுது துணிச்சலுடன் எல்லாவற்றையும் செய்ய முன்வந்துள்ளான் எனத் தனது மனதுக்குள் ண்ணினான். அதனால் அவன் உள்ளம் பூரிப்படைந்தது.
ஒரு கிராமத்தையே கலக்கும் அந்த பயங்கர வேப்பமரத்தடிப் பேயை ஒழித்துக் கட்டி வேப்பங்கேணிக் கிராம மக்களின் சுபீட்சமான எதிர் கால வாழ்விற்கு ஒளிவிளக்கேற்றப் போகும் தமது பணி வெற்றியடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை அந்த சிறுவர்கள் இருவரும் கொண்டு செயற்பட்டார்கள்.
இரவு நெருங்கியது. வேப்பங்கேணி கிராமமே இருளில் மூழ்கியது. எங்கும் மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை. எல்லோரும் உறக்கத்திற்குச் சென்று விட்டார்கள். ஆனால் அந்தச் சிறுவர்களான திருக்குமாரும் வித்தியாபரனும் அந்த இருளிலே ஒரு புதிய போரட்டத்தை எதிர் நோக்க ஆயத்தமானார்கள்.
திருக்குமாரின் கையிலே தேடாக் கயிறும், கூரிய கத்தியும், டோச்சும் இருந்தது. வித்தியாபரனின் கையிலே துப்பாக்கியும் தோட்டாப் பையும் இருந்தது. மாணிக்கம் பிள்ளை அயல் கிராமம் சென்றது சிறுவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது.
மெல்ல மெல்ல மாடியிலிருந்து கீழே இறங்கிய சிறுவர்கள் இருவரும் முற்றத்தைக் கடந்து மதிலால் ஏறி பாதைக்கு வந்தார்கள். நல்ல வேளை. அவர்களை வேலையாட்கள் யாரும் காணவில்லை. பின் மிக விரைவாக பாதையோரமாக நடந்து வேப்பங்ககேணிக் கிராமப் பற எல்லையை அடைந்தார்கள். அவர்கள் அங்கு வரவும் கறுத்த உருவமொன்று வேப்பமரத்தையடையவும் சரியாக இருந்தது. அதனைக் கண்ட வித்தியாபரன்….
12. மர்மம் துலங்கியது.
தன் கைத்துப்பாக்கியால் அந்தப் பயங்கர உருவத்தை நோக்கிச் சுட ஆயத்தமானான் வித்தியாபரன், அதனைக் கண்ட திருக்குமார் அவன் கையைப் பற்றித் துப்பாக்கியைப் பறித்தான். வித்தியாபரனுக்கு ஆத்திரம் மேற்பட்டது. கண்கள் கோபக்கனலைக் கக்கின@ அவனுடைய மெல்லிய கரங்கள் திருக்குமாரின் கன்னத்தைப் பதம் பார்த்தன.
“திருக்குமார் துடித்துப் போனான். கோபம் அவனுக்கு ஏற்பட்ட போதும் அவன் அறிவு மழுங்கி விடவில்லை. வித்தியாபரா! அவசரப்படாதே. நீ அவசரப்பட்டாயானால் எமது நோக்கம் பிழைத்து விடும். அதோ பார் அந்த உருவம் ஏதோவொன்றைக் கையிலெடுக்கிறது. அது பேய்தானா என்பதை சற்று ஆராய்ந்து பார்ப்போம். அதுவரை பொறுத்திரு” எனத் திருக்குமார் கூறினான்.
அப்பொழுது அந்தப் பயங்கர உருவத்தின் முன்னால் தீப்பிழம்பு தோன்றுவதும் மறைவதுமாக இருந்தது. தீப்பிழம்பு மறையும் நேரங்களில் அந்த உருவம் வாயில் ஏதோவொன்றை வைத்திருப்பது சிறுவர்களுக்கு நன்றாகத் தெரிந்தது.
அந்த உருவம் இப்பொழுது வேப்பமரத்தில் தாவியேறியது. மரத்தின் உச்சிக்கிளைக்கு வந்தது. மேலே சென்றதும் பயங்கரச் சத்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது. துணிவு மிக்க திருக்குமாரே ஒரு தடைவ திகைத்துப் போனான். வித்தியாபரனைச் சொல்லவும் வேண்டுமா? மைத்துனன் திருக்குமாரை அப்படியே கட்டிப் பிடித்தான்.
திருக்குமாரின் மனதிலே திகில் நிறைந்திருந்த போதும் அவன் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. மைத்துனனுக்கு தைரியத்தை வரவரழைப்பதற்காக “டேய்! வித்தியாபரா! உன் துப்பாக்கியை ஆயத்தமாக வைத்திரு அந்த உருவம் கீழே இறங்கியதும் தயங்காமல் அதனை நோக்கிச் சுடு. உன் வீரத்தில்தான் எமது வெற்றியே தங்கியிருக்கிறது” என்று காதில் மெதுவாகச் சொன்னான், அந்த வார்த்தைகள் வித்தியாபரனுக்குத் தேனாக இனித்தன.
இருவரும் இப்பொழுது வேப்பமரத்திற்குச் சமீபமாக யாரும் காணாத வகையில் மறைந்திருந்தார்கள்.
மீண்டும் பயங்கரச் சத்தம் எங்கும் எதிரொலியோடு கேட்டது. அதைத் தொடர்ந்து பிரகாசமான வெளிச்சம்.
இப்படியே சில மணித்தியாலங்கள் கழிந்தன. வித்தியாபரன் மீண்டும் சலிப்படைந்து விட்டான். அவனை நித்திரை ஆட்கொண்டது. கண்களைக் கசக்கியவாறு அவன் திருக்குமாரைப் பார்த்துப் “பேய் கீழே வராதா?” என்று கேட்டான். அதற்குத் திருக்குமார் “எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றான். இருவரும் நீண்ட நேரமாக அங்கே இருந்தனர். வெளிச்சம் அடங்கியது பயங்கரச் சத்தமும் ஒய்ந்தது.
வானத்திலி; விடிவெள்ளி தோன்றியது. கோழிகள் கூக்குரலிடத் தொடங்கின. அந்தக் கூக்குரல் ஒலியைத் தவிர வேறெதுவித ஒலியும் அங்கே கேட்கவில்லை. விடிவதற்கான அறிகுறிகள் அவை.
பல மணி நேரமாக தாம் விழிப்பாக இருப்பதை யெண்ணிச் சிறுவர்கள் இருவரும் மெதுவாகத் தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்த போது வேப்பமர உச்சிக் கிளையிலிருந்து அந்தப் பயங்கர உருவம் கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. வித்தியாபரனின் கண்கள் அதனைக் கண்டு விட்டன.
அவன் துப்பாக்கியை கையில் இறுகப் பற்றியவாறு அந்த உருவத்தை நோக்கிச் சுட்டான் அவன் குறி தவறியது வேப்பமரத்திலே தோட்டாக்கள் துளைத்தன.
உருவம் உசாரடைந்தது. சுற்று முற்றும் பார்த்தது. எவரையும் காணவில்லை. மெல்ல மெல்ல நடந்து சுற்றும் புறத்தை மீண்டும் நோட்டம் விட்டது.
மைத்துனனின் குறி தவறியதைக் கண்ட திருக்குமார் தன் கைகளிலே இருந்த தேடாக் கயிற்றில் சுருக்கு வளையமிட்டு உருவத்தை நோக்கி வீசினான். அந்தச் சுருக்கு வளையத்தினுள் பயங்கர உருவம் சிக்கிக் கொண்டது. பலங் கொண்டு அதிலிருந்து விடுபட அந்த உருவம் எத்தனித்தது.
வித்தியாபரன் துணிச்சலுடன் உருவத்தின் முன் பாய்ந்தான்!
திருக்குமாரோ தன் கையிலிருந்த தேடாக் கயிற்றினைக் கைவிடவில்லை. தனக்கருகேயிருந்த மரத்தோடு அதனைச் சுற்றிப் பிடித்தான். உருவத்தால் அச் சுருக்குத் தடத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. முன்னே பாய்ந்த வித்யாபரன் கைத்துப்பாக்கியால் ஓங்கி உருவத்தின் தலையில் அடித்தான் மறுகையால் அதன் முகத்தைப் பற்றிப்பிடித்தான். அவன் கைகளுக்குள் ஏதோ வொன்று தட்டுப்பட்டது. அதை அவன் பலங்கொண்ட மட்டும் பற்றி இழுத்தான். கைகளுக்குள் அது சிக்கிக் கொண்டது அது!... அது!... முகமூடி! அப்படியென்றால் இதுவரை அந்த முகமூடிக்குள் மறைந்திருந்தது யார்?...
வித்தியாபரனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அவன் மீண்டும் அந்த உருவத்தின் உடலில் பற்றி இழுத்தான் உடலை மறைத்திருந்த கறுத்தத் துணி கிழிந்து கீழே விழுந்தது. துணி கீழே விழவும், அதனோடு சேர்ந்து போத்தல் ஒன்றும் கீழே விழுந்தது. அப் போத்தலை வித்தியாபரன் எடுத்து முகர்ந்து பார்த்தான். மண்ணென்னை! அதுவே பயங்கரத் தீப்பிழம்பு தோன்றுவதற்கு காரணமாய் இருந்தது என அறிய அவனுக்கு நேரமெடுக்கவில்லை.
உருவத்தின் முகமூடி கிழிந்தது. உடலைப் போர்த்தியிருந்த கறுத்தத்துணி கிழிந்தது. அங்கே –
இதுவரை வேப்பங்கேணிக் கிராமத்தையே பெரும் கலக்கம் கலக்கிய பயங்கரப் பேயின் தோற்றம் தெரிந்தது!
அது வேறு யாருமில்லை. வேப்பமரத்தடியில் மபணிக்கம்பிள்ளையின் வேலைக்காரர்களால் அடித்துப் போடப்பட்ட சங்கிலிக் கறுப்பன்தான். திருக்குமாருக்கு அவனைத் தெரியாவிட்டாலும் அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த வித்தியாபரன் அவனை அடையாளம் கண்டு கொண்டான்.
திருக்குமாரும் வித்தியாபரனும் அந்தச் சங்கிலிக்கறுப்பனை வேப்பமரமொன்றுடன் சேர்த்துக் கட்டினார்கள்.
சங்கிலிக் கறுப்பனால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அந்தச் சிறுவர்களிடம் அகப்பட்டுக் கொண்டதை எண்ணி வெட்கப்பட்டான்.
வித்தியாபரன் அவ்விடத்தே கிடந்த மரக்கொம்பால் சங்கிலிக் கறுப்பனைத் தாக்கினான். திருக்குமார் வித்தியாபரனைத் தடுத்து நிறுத்தினான். அதன் பின் சங்கிலிக் கறுபனைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு எதற்காக இவ்வாறு நடந்து கொண்டாய் என வினாவினான்.
அதற்கு அவன் பின்வருமாறு கூறலானான்: “நான் செய்த தவறுக்காக என்னைத் தாக்கியதோடு இந்தக் கிராமத்தின் பெரிய பணக்காரர் மாணிக்கம்பிள்ளை நிறுத்தியிருக்கலாம். ஆனால்…. அவரால் என் குடும்பமே அழிந்து விட்டது. மாணிக்கம்பிள்ளையின் வேலையாட்கள் என்தை; தாக்கிய பின் இந்த வேப்பமரத்தின் கீழே போட்டுவிட்டுச் சென்றார்கள். நான் மயக்கம் தீர்ந்து எழுந்து பார்த்தால் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. கண்கள் இருண்டு கொண்ட வந்தன. மெல்ல மெல்ல அடி எடுத்து கேணிக் கரையையடைந்து முகத்தைக் கழுவிக்கொண்டேன். கேணி நீரைப் பருகி தாகத்தைத் தீர்த்தேன். பின் தள்ளாடித் தள்ளாடி எனது வீட்டை நோக்கிச் சென்றேன். அங்கு நான் கண்டகாட்சி… எனது வீடு எரிந்த கொண்டிருந்தது, மனைவியும் பிள்ளையும் அந்தத் தீயில் கருகி மாண்டனர். அந்த வேதனை என்னை வாட்டியது. அதுவே இத்தனைக்கும் என்னைத் து}ண்டியது. என் குடும்பத்தை அipத்த அந்த மாணிக்கம் பிள்ளையையும்@ என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றாது விட்ட இந்தக் கிராம மக்களையும் பழி வாங்கத் திட்டமிட்டேன். அதன் முடிவே நான் எடுத்த இந்தப் பயங்கரப் பேய் வேடம். இதனால் எனது லட்சியத்தையும், அதனோடு என்னால் வழிவாங்ப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்களையம் கொண்டு உணவுத் தேவையையும் பூர்த்து செய்தேன்.
அவன் கூறியவற்றைத் திருக்குமாரும், வித்தியாபரனும் ஆவலோட கேட்டுக் கொண்டிருந்தார்கள். விடிந்ததே அவர்களுக்குத் தெரியவில்லை.
இரவுவரை பயத்தோடு வீடுகளில் பதுங்கியிருந்த அக்கிராம மக்கள் விடிந்ததும் வெளியே வந்தார்கள். அவர்களுக்கு வேப்பமரத்தடிப் பேயின் மர்மம் தெரிந்தது. முழுக் கிராமத்தவர்களுமே வேப்ப மரத்தடியை நோக்கிப் படை எடுத்தார்கள். தங்களைக் காப்பாற்ற சிறுவர்களான வித்தியாபரனும், திருக்குமாரும் தங்கள் உயிரையே பொருட்படுத்தாது கஷ்டப்பட்டதை யெண்ணி வியந்தார்கள்.
சங்கிலிக் கறுப்பனைக் கிராமத் தலைவர் விசாரணைக்காகக் கூட்டிச் சென்றார். பக்கத்து கிராமத்திலிருந்து வந்த மாணிக்கம்பிள்ளை சந்தோஷ மிகுதியால் மகனையும், மருமகனையும் கட்டியணைத்து முத்தமிட்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக