Childrens

Children's Stories
Genres in Children's Literature.!
CHILDREN'S BOOKS
பாட்டி வடை சுட்ட கதை

தமிழ்ச் சூழலில் மிகப்பரவலாக வழங்கிவரும் செவிவழி நீதிக்கதையாகும். தலைமுறை தலைமுறையாக வளர்ந்தவர்களால் சிறுவர்களுக்கு இக்கதை சொல்லப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதலில் கேட்கும் கதையாக பெரும்பாலும் இக்கதையே அமைவது இதன் சிறப்பு. சில சிறுவர் இலக்கிய நூல்களில் இக்கதை அச்சுவடிவத்திலும் காணக்கிடைகிறது. ஒரு பாட்டி மற்றும் குழந்தைகள் அறிந்த சில விலங்குகள் இக்கதையின் பாத்திரங்களாக வருகின்றனர். பல்வேறு சிறு சிறு திரிபுகளுடன் இக்கதை எல்லா இடங்களிலும் பொதுவானதாக காணப்படுகிறது.

டோரா தி எக்ஸ்புளோரர்

டோரா தி எக்ஸ்புளோரர் என்னும் ஆங்கிலத் தொடர், குழந்தைகளுக்கான சாகசத் தொடராகும். இது கிரிஸ் கிஃபோர்டு, வலேரி வல்ஷ், எரிக் வெய்னர் ஆகியோரால் கூட்டாகத் தயாரிக்கப்பட்டது. இது பல பாகங்களாக வெளொயாகியது. இது நிக்கலோடியன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடருக்கு பீபாடி விருது வழங்கப்பட்டது. பள்ளிக்கு போகவிருக்கும் குழந்தைகளுக்கு இனிமையாக கற்பித்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

சிண்ட்ரெல்லா; அல்லது தி லிட்டில் கிளாஸ் ஸ்லிப்பர்

"சிண்ட்ரெல்லா; அல்லது தி லிட்டில் கிளாஸ் ஸ்லிப்பர்" என்பது அனைவராலும் அறியப்பட்ட பாரம்பரியமிக்க கதை ஆகும். இதன் ஆயிரக்கணக்கான பதிப்புகள் உலகெங்கிலும் வலம் வந்துள்ளது. தலைப்பின் கதாநாயகி ஒரு இளம் பெண். இக்கட்டான சூழ்நிலையில் வாழும் அவள் வாழ்வில் ஏற்படும் திடீர் அதிர்ஷடத்தைப் பற்றியதே இந்தக் கதை. "சிண்ட்ரெல்லா" என்ற வார்த்தையின் பொருள், அறிந்துகொள்ள முடியாத ஒருவரின் பண்புகள் என்பதாகும் அல்லது வாழ்க்கையின் பெரும் துன்பங்களைச் சந்தித்த ஒருவர் அதையெல்லாம் வெற்றிகொண்டு மீண்டு வந்ததையும் குறிக்கும். மீடியாவில் ஒரு கதைக்கு உண்டான அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமையப்பெற்ற இன்னும் சொல்லப்போனால் சர்வதேச அளவில் ஒரு புகழ்பெற்ற நாடகமாக சிண்ட்ரெல்லா இன்னும் இருந்துகொண்டிருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்